கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஸ்ரீ கருட பகவான்

Page 1
| Fló)|53|5:fsTöll[]
պլլոնiեlեIIMi
፲ - நி
 

ந்த
iன்ரே
திதந்தக்குருக்களது
2றி 巧TU岳顶题盟
T

Page 2

ரீ வல்லிபுரேசன் துணை *
பறிகருட பவான்
(b) தொகுப்பாசிரியர் பிரம்மறுநீ. ச. க. சுதர்சனக்குருக்கள்
பிரதமகுரு முறிவல்லிபுராழ்வார் சுவாமி கோவில் துன்னாலை வடக்கு, புலோலி
éHILoif சிவறிBசா.சொக்கநாதக்துருக்களின் 20வதுசிரார்த்ததின தாபகார்த்த ഖണീ
ഖണീ
மீஆழ்வார் பீடம்
l

Page 3
r நூல் றி கருட பகவான்
Ugi Mraffuusi
பிரம்மறி ச.க. சுதர்சனக்குருக்கள் பிரதமகுரு, ரீவல்லிபுராழ்வார் சுவாமி கோவில் துன்னாலை வடக்கு, புலோலி
பதிப்பு - 2ம் பதிப்பு 2004 Dec.
பிரதிகள் - 500
கணனி வடிவமைப்பு சுதன்ஸ் டிசைனர்ஸ், சிவன்கோவிலடி, ஆவரங்கால்.
அச்சப்பதிப்பு
சிவரஞ்சனம் ஒவ்செற் பிறிண்டேன்ஸ், பலாலி வீதி, கோண்டாவில், TP: 222 6722 இக்கைநூலை பிரதியாக்கம் செய்து
வெளியிட எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
الصـ ܢܠ .

asFIDíriLeavTib அவனருளாலே அவன்தாள் வணங்கி
சிவபெருமானுக்கு ரிஷப வாகனம் போல விஷ்ணுவிற்கு கருடவாகனமும், ஆதிஷேஷனுமாகும். எனவே *கருட பகவான்” தோன்றிய வரலாறு பற்றிய கைந்நூல் ஒன்றை, எனது இரண்டாவது வெளியீடாகத் தருகின்றேன்.
ஆவரங்காலைச் சேர்ந்த எனது மாமனாராகிய காலஞ் சென்ற சிவறி சோ. சொக்கநாதக்குருக்கள் அவர்கட்கு இந்நூலை சமர்பப்னம் செய்கிறேன்.
“கற்றது கைமண்ணளவு” நன்றிகள்
இந்நூலை வெளியிடுவதற்கு உதவிகள் புரிந்த மகன்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் குறிப்பாக எனது இளையவரான சு. கிரிதரசர்மா அவர்கள் பதிப்பு வேலைகளைக் கவனித்தார் அவள் பாராட்டப்பட வேண்டியவர்.
ரீவல்லிபுரஆழ்வார் சுவாமி கோவில் அறங்காவலர் சபையினரும் இதனை வெளியிடுவதற்கு மிகுந்த அக்கறை காட்டினர்கள். அவர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
மாணி புமிகு இந்துகலாச்சார அமைச்சர் திரு.தி.மகேஸ்வரன் அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் சிவரஞ்சனம் பதிப்பகத்தாருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் perpassy
சர்வம் கிருஸ்ணார்ப்பணம்
ரீ ஆழ்வார் பீடம், றி வல்லிபுர ஆழ்வார் கோவில், துன்னாலை வடக்கு, புலோலி
3

Page 4
வாழ்த்துரை
அறங்காவலர் சபை, ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி கோவில், துன்னாலை வடக்கு, புலோலி.
сыeb sбчr tourusalet sepшпейtaьеват!
எமது ஆலயத்தின் மதிப்பிற்கும் பெருமைக்குமுரிய ஒருவராகிய பிரம்மறி ச.க.சுதர்சனக்குருக்கள் ஐயா அவர்கள் தனது சுயமுயற்சியாக “கருட பகவான்” என்னும் அரியதொரு கைந்நூலை வெளியிடுகின்றார், கருடபகவானது வரலாற்றை எவரும் இன்னமும் அறிந்திராத நிலையில் இந்நூலை வெளியிடுவது எமக்கு கிடைத்த பெரும் பேறாகும். சென்றமுறை குருக்கள் அவர்கள் “ஏகாதசி துவாதசி விரத மகத்துவம்” எனும் அரிய நூலை வெளியிட்டிருந்தார். இந்த வருடம் “கருட பகவான்” தோன்றிய வரலாறு குறிக்கும் நூலை வெளியிடுவது எமது தேவஸ்தானத்திற்கு கிடைத்த பெரும் பெருமையாகும். குருக்கள் அவர்களின் சேவை மேன்மேலும் தொடர எல்லாம் வல்ல வல்லிபுரேசனை வணங்கி
வாழ்த்துகின்றோம்.
தானங்களில் சிறந்ததானம் கல்விதானம் தலைவர்/செயலாளர் அறங்காவலர் சபை, றி வல்லிபுர ஆழ்வார் கோவில், துன்னாலை வடக்கு, புலோலி.

சிவன்கோவிலடி
ஆவரங்காலை சேர்ந்த சிவபூநீ சோ. சொக்கநாதக்குடுக்களின் 20 வது சிரார்த்ததின ஞாபகார்த்த
ص 29 ܥܬ

Page 5

LLSSTLLL S LLLLL LLLLLMLTMLLLLLL LLLLLL TAATLLLLLLL LLSL LALALLLL LLLLLL
LTTMT TTLL TTTALL LLSSMLL LL LL LMTALL LMSMLMLSSLS S
Ma poja se pian "sota - au4 as maa on me
SLMALSLMLMS S L0LS L0ALS LGSM SLLLLLLSS LLL0LLS SLLMLLLLLL
STSLLMATMLLLLLSLS LSL SLL LCTTMLL LLLLLL TMALAMAMLL LL LGGGGLLMTS S L0L LMLLLLLL LSLSLSLLTLSL LSLSLS LL LCLLLL LSL
Istwa
L00L LMMSL LTMLLLLLL LL LLL LLGLGLL LLLLLLLALS LALALL qM
S L 00LML0 TLqL HLLS LLL LLTL LMLLLLLL LLLL SLMeLS SLMS
it as gear மூன.
« S : 3 శ4*
A tally, tra இது  ைவிவர அங்கள் அவர்
జూ
szélete §:අ*:$ඝ”

Page 6
கருட பகவான்
பிரம்ம தேவரின் மகனான மரீசி
முனிவருக்கு கசியபர் என்றொரு புதல்வர்
இருந்தார். இக்கசியபருக்கு தச்சப்பிரஜாபதி
என்பவர் தமது புதல்வியர் பதின்மூவரை
திருமணம் செய்து கொடுத்தார். கசியபரின்
பதின்மூன்று மனைவியருள் ஒருத்தியின் பெயர்
கத்ரு, மற்றொரு மனைவியின் பெயர் விநதை.
ஒரு நாள் கத்ரு கசியப முனிவரிடம்
வந்து தனக்கு “ஆயிரம் புதல்வர்கள் வேண்டும்
அதற்கு தாங்கள் உதவ வேண்டும்” என்று
பணிந்து நின்றாள். முனிவரும் உடனடியாக
ஆயிரம் முட்டைகளைத் தோற்றிவித்து
6

கத்ருவிடம் கொடுத்து இவற்றை அன்புடன் பாதுகாத்து வா என்று கூறினார். மற்றொரு
மனைவியான விநதை என்பவள் முனிவரிடம்
“சுவாமி எனக்கு இரு புதல்வர்கள் போதும்,
ஆனால் அவர்கள் ஆற்றலிலும் வலிமையிலும்
சிறந்து விளங்கவேண்டும்” என்று வரங்கேட்டாள்.
முனிவரும் இரு முட்டைகளை தோற்றுவித்து
விந்தையிடம் கொடுத்து “சூரியனுக்கு நிகரான
பிள்ளைகள் உனக்கு கிடைப்பார்கள்.இவற்றைப்
பாதுகாத்து வா’ என்று கூறினார்.
ஐந்தாறு ஆண்டுகள் சென்றன. கத்ருவின்
ஆயிரம் முட்டைகளும் வெடித்து ஆயிரம்
நாகர்கள் பிறந்தனர். கத்ரு மிக மகிழ்ச்சி
அடைந்தாள். அற்புத சக்தியினால் ஆயிரம்
7

Page 7
நாகர்களும் ஓடி விளையாட ஆரம்பித்து
விட்டனர்.
இதனைக் கண்ட விநதையின் மனதில் கெட்ட எண்ணம் தோன்றியது. இன்னமும் எவ்வளவு காலம் இந்த இரு முட்டைகளையும் பாதுகாப்பது என்று எண்ணியவாறு ஒரு முட்டையை எடுத்து உடைத்துப் பார்த்தாள். அப்போது அங்கே ஓர் அற்புதம் நிகழ்ந்தது. உடைந்த முட்டையினுள்ளிருந்து கால்கள் இரண்டும் இல்லாத அற்புத உருவம் தோன்றி "அம்மா என்னை ஊனமுற்றவனாக்கி விட்டாயே..! என் கால்கள் வளருமுன் அவசரப்பட்டு விட்டாயே..! நீ கத்ருவிடம்
பொறாமைப் பட்டதால் அவளுக்கு
8

அடிமையாவாய்...! என் தம்பி வளரும்
வரையாவது பொறுமையாகவிரு!” என்று
கூறியபடி விநதையின் மகன் செந்நிறமாக
மாறியபடி ஆகாயத்தில் கிளம்பினான்.
அப்படியே சென்று சூரியனை
அடைந்தான். சூரியபகவானும் அவனை
அனைத்து “எனக்கு நிகரானவனாக
காந்தியுடைய நீ, எனது தேர்ப்பாகனாக இரு.
அருணன் என்ற பெயரோடு நீ புகழ் பெறுவாய்”
என்று ஆசீர்வதித்து தனது தேர்பாகனாக்கிக்
கொண்டார்.
நாட்கள் சென்றுகொண்டிருந்தன. ஒரு
நாள் கத்ரு என்பவள் விநதையைக் கண்டு
9.

Page 8
“விந்தா! தேவேந்திரனின் குதிரையான உச்சை சிரவம் என்ன நிறம்?” என்று கேட்டாள். “சந்தேகம் ஏன் சுத்த வெண்மை” என்றாள் விந்தை. இல்லையில்லை அதன் வால் கறுப்பு நிறம், எனவே சுத்த வெண்மையென கூறமுடியாது, சுத்த வெண்மையானால் நான்
உனக்கு அடிமை என்றாள் கத்ரு.
கத்ருவின் சவாலை விநதை ஏற்றாள்.
அதன் வால் கருமையாக இருந்தால் நான் உனக்கு அடிமையாகிப் பணிவிடை செய்கிறேன்
என்றாள் விநதை. கத்ருவானவள் தனது நாகப் பிள்ளைகளான தக்ஷகன் கார்க்கோடகன், குளிகன், காளியன் ஆகியோரை அழைத்து “நாளை உச்சைசிரவம், வரும்போது அதன்
10

வாலில் ஒட்டிக்கொண்டு கறுப்பு நிறமாகத்
தெரியும்படி செய்யவேண்டும் என்றாள்.
பிள்ளைகளும் அதற்கு உடன்பட்டனர்.
மறுநாள் உச்சைசிரவம் மேய வந்தபோது விநதையும் கத்ருவும் சென்று பார்த்தனர்.
தாயின் கட்டளைப்படி நாகபிள்ளைகள் உச்சை
சிரவத்தின் வாலில் ஒட்டிக்கொண்டனர்.
அப்போது விநதையின் கண்களுக்கு வால்
கறுப்பாகத் தெரிந்தது. மனதுக்குள் இது ஏதோ
மாயம் என்று நினைத்துக்கொண்டவளாக,
விநதை கத்ருவிடம் அடிமையானாள். “இன்று
முதல் நீயும் உனக்குப் பிறக்கும் மகனும்
எனக்கும், என் பிள்ளைகளுக்கும் அடிமையாக
இருக்கவேணி டும்” என்று மேலும்
கட்டளையிட்டாள் கத்ரு.

Page 9
இப்படியே விநதை கத்ருவுக்கு அடிமையாகிப் பல நூற்றாண்டுகளாகின. 305
நாள் விநதையின் மற்ற முட்டை உடைந்து
அதிலிருந்து கருடன் தோன்றினான். பிறந்த
மறுகணமே சூரியனை மறைக்கும் முகிலைப்
போல வளர்ந்தான். வளர்ந்து பணிந்து நின்ற கருடனை கட்டித்தழுவிய விநதை ஆற்றலும்
பலமும் பெற்று நீடூழி வாழ்வாயனெ
ஆசிர்வதித்தாள்.
இதனைக் கேள்விப்பட்டவுடனேயே கத்ரு
அங்கே வந்தாள். வந்து விநதையைப் பார்த்து “என்ன நினைவிருக்கிறதா நீங்கள் இருவரும்
எனக்கு அடிமைகள்” என்ற கூறினாள்.

“என்ன செய்யவேண்டும்?” என்று
விந்தை கத்ருவிடம் பணிவாகக் கேட்டாள். “என்
பிள்ளைகள் அனைவரும் விளையாட ஏழு
கடல்களுக்கும் நடுவிலுள்ள பெரிய தீவுக்கு எங்களைக் கொண்டு செல்லவேண்டும் என்று
கட்டளையிட்டாள் கத்ரு.
உடனேயே தன் ஆயிரம் சகோதரர்
களையும் ஏற்றிக்கொண்டு கருடன் பறக்க
ஆரம்பித்தான். தன் கற்பின் சக்தியால்
விந்தையும் கத்ருவை சுமந்து கொண்டு பறக்க ஆரம்பித்தாள். பறந்து சென்று ரமணியகம் என்ற
தீவையடைந்தனர்.
கத்ருவும் நாகரும் விளையாட்டில்
ஈடுபட்ட சமயம் கருடன் தனது தாயாரான
13

Page 10
விந்தையிடம் “அம்மா! நாம் இவர்களிட்ட
ஏவலையெல்லாம் நிறைவேற்றுவதேன்?’ என்று
கேட்டான்.
நடந்ததனைத்தையும் ஒன்றும் விடாமல்
விந்தை கருடனுக்கு கூறினாள். “பறவைகளுக்கு
அரசனான நீ என்னால் பிறக்கும் போதே
அடிமைப்பட்டுப் போனாய்! என்னால் தான்
உனக்கு இந்தக் கதி’ என்று கூறி அழுதாள்.
தாயின் கண்ணிரைத் துடைத்த கருடன் “ebLDт கவலைப்படாதே எப்படிய்ம் இந்த
அடிமைத்தனத்தை விடுவிக்க நான் வழி
தேடுவேன்” என்று ஆறுதல் கூறித் தாயாரைத்
தேற்றினான்.
14

பின் கருடன் நாகர்களிடம் சென்று
“நானும் என் அம் மாவும் இவி அடிமைத்தனத்தில் இருந்து விடுபட என்ன
செய்ய வேண்டும்? என்று கேட்டான்.
நாகர்கள் அனைவரும் கருடனைக் கேலி
செய்து முடியுமானால் “தேவருலகம் சென்று
அங்குள்ள அமுதகலசத்தை கொண்டு
9
வந்தால், உங்களுக்கு விடுதலையளிக்கிறோம்"
என்றார்கள்.
கருடன் எதுவும் கூறாமல் தாயை
வணங்கிக் கொண்டு “அம்மா நீ மிகவும் தைரியமாகவிரு அமிர்தகலசத்தை கொண்டு
வரப் போகிறேன்” என்று சூறினான்
15

Page 11
தாயும் கருடனை “அப்படியே உனக்கு
வெற்றி உண்டாகட்டும்” என்று வாழ்த்தினாள். அதன்பின் கருடன் தன் பிதாவான காசியப
முனிவரிடம் சென்று என் அண்ணன்மார்களின்
விருப்பத்தை நிறைவேற்றச் செல்கிறேன் எனக்கு
சக்தியுண்டாக ஆசி கூறுங்கள் என்று பணிந்து
நின்றான் . கசியபரும் “மங் களம்
உண்டாகட்டும்” என்று பல உபாயங்கள் கூறி
ஆசிர்வதித்தார்.
தந்தை தாயிடமிருந்து விடைபெற்ற கருடன் ஆகாயமார்க்கத்தில் சென்று தந்தை
குறிப்பிட்ட ஏரிக்கரையொன்றில் சுப்ரதீகன்
என்னும் பெரியதொரு யானையையும், விபாவசி
எனும் பெரிய ஆமையையும் தனது கால்களால்
16

தூக்கிக் கொண்டு பறந்தான். “உங்களுக்கு சாபம் நீங்கும் காலம் நெருங்கிவிட்டது” என்று கருடன் அவர்களிடம் கூறினான்.
கருடன் பறக்கும் வேகத்தில் காற்று புயல்போல வீசியது கருடன் தேவலோகத்தை நெருங்க நெருங்க கற்பக விருட்ஷங்களின் இலைகள் உதிர்ந்தன.
கடைசியாக ஒரு ஆலமரத்தை கருடன் அணுகவும் அது கருடனுக்கு “என் நீண்ட கிளையில அமர்ந்து உணவைச் சாப்பிடு” என்று கூறியது. கருடன் அவ்வாறே கிளையில் இறங்கியதும் அந்த மரக்கிளையில் தலைகீழாக தொங்கியபடி பிரம்ம ரிஷிகள் தவம் செய்து
17

Page 12
கொண்டு இருப்பதைக் கண்டு மனங்கலங்கி
ಹಯ್ನಹ6ುಖLIDSು அந்தக் கிளையை விட்டுப் பறப்பதற்கு முன் கிளை நற நறவென முறிய ஆரமயித்தது. “என் பாரந் தாங்காது கிளை முறிகிறது" என எண்ணிய கருடன் கிளை கீழே
விழுமுன் அலகில் கொத்திக்கொண்டு பறந்தான்.
இந்த ரிஷிகளுக்கு எந்தத் துன்பமும்
நிகழக்கூடாது என எண்ணிய கருடன் தன்
தகப்பனாரின் இருப்பிடம் வந்துசேர்ந்தான்.
தன் மகனை எச்சரித்து முனிவர்களிடம் மன்னிப்புக் கேட்குமாறு கசியப் முனிவர் பணித்தார். சூரிய கிரகணங்களையே உண்டு
தவஞ் செய்யும் மகரிஷிகள் என்பதால் கருடன்
18

மிகவும் பயந்து நடுங்கி தவமுனிவர்களை வணங்கி “முனி கிரேஷ்டர்களே! நான் அறியாமல் செய்த பிழையை மன்னித்து எனக்கு அருள் புரியுங்கள்” என்று வேண்டினன்.
கருடா! உன்னை மன்னித்தோம் உன் பலம் மேலும் அதிகரிக்கும். நீ எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவாய் இனி நாங்கள் அனைவரும் இமயமலைச்சாரலுக்கு சென்று தவம் செய்யப்போகிறோம்! வருகிறோம்! நீ சுகமடைவாய்! என்று கருடனை ஆசிர்வதித்து அங்கிருந்து விடைபெற்றுச் சென்றனர்.
கசியப முனிவரிடம் கருடனி விடைபெறச் சென்றபோது, கசியப முனிவர்
19

Page 13
கருடனிடம் “நீ கொண்டு வந்த இக்கிளையை
மனித சஞ்சாரமற்ற பனியால் மூடப்பட்ட மலைப் பகுதியில் போட்டுவிடு” என்று கட்டளையிட்டார்.
கிளையைப் போட்டதும், மலைச்சிகரங்கள்
வெடித்துச் சிதறி பள்ளத்தாக்கில் விழுந்தன.
தேவலோகத்தில் இருந்த தேவர்கள்
அனைவரும் திகைத்துப் போனார்கள். “என்ன இது தேவலோகத்தில்கூட பூகம்பமா?” என்று
தேவேந்திரன், தேவகுரு பிரகஷ்பதியிடம்
கேட் டான் . கருடன் யானையையும் ,
ஆமையையும் பூசித்து மேலும் பலத்தைப் பெற்று தேவலோகம் நோக்கிப் பறந்தான். தேவலோகத்தில் இந்திரனுக்குப் பிரகஷ்ப்பதி
20

“கருடன் வரும் முன் உருவாகும் நடுக்கம் தானிது உன்னால் முடியுமாயின் அமிர்த கலசத்தை அவனிடமிருந்து பாதுகாத்துக்கொள்” என்று கூறினார்.
இதையுணர்ந்த தேவர்கள் கருடனுடன் போரிட ஆரம்பித்தனர். தன்னை எதிர்த்த தேவர்களை அலகினால் கொத்தியும், நகங்களால் கிறியும், சிறகுகளால் அடித்தும் கருடன் காயப்படுத்தினான். தேவர்கள் அனைவரும் பயந்து ஓடினார்கள். கருடன் அமிர்த கலசம் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்ததும், அவன் மனதில், தாயின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும் எண்ணம் ஈடேறுவதையிட்டு மகிழ்வு கொண்டான். ஆனால்
21

Page 14
அமிர்த கலசத்தை நெருங்க முடியாதபடி
பலமாக காவலிடப்பட்டிருந்தது.
காவலர்களிடம் நெருங்கிச் சென்று “என்
தாயின் அடிமைத்தனம் விலகவேண்டுமானால் இந்த அமிர்தகலசம் எனக்கு வேண்டும்” என்று
கேட்டான். காவலர்களின் தலைவன் பெளமன்
என்பவன் அதற்கு உடன்பட மறுத்துவிட்டான்.
கருடன் உடனே தன் சிறகைப் பலமாக
அசைத்து பெரும் புழுதிப் புயலைக்
கிளப்பினான். காவலர்களின் கண்கள் எல்லாம்
மண்ணால் மூடுபட கருடனும் அமிர்தகலசத்தை
எடுப்பதற்கு நெருங்க அதனைச் சுற்றிப் பலமான
அக்கினிச் சுவாலை எழுந்தது. அது கருடனை
நெருங்க விடாமல் தடுத்தது. கருடனும் தாய்
2

தந்தையரைத் தியானித்து எண்ணாயிரம் வாய்களைப் பெற்று நதி நீரைப் பெறும் நோக்குடன் வாயுவேகத்தில் பறந்து திரும்பி வந்து எண்ணாயிரம் வாய்களினால் அள்ளிய நீரினால் நெருப்பை அணைத்தான். நெருப்பு அணைந்ததும் புகை சூழ்ந்தது.
மேலே உயரக்கிளம்பிய கருடன், மேலே பறந்தவாறே புகையினூடே அமிர்த கலசத்தை
சுற்றி நாகங்கள் காவலிருப்பதைக் கண்டான்.
கண்ணில் விஷமுள்ள பாம்புகளின் கண்ணில் படாதவாறு கருடன் தனதுடலை மிகவும் சுருக்கிக்கொண்டு புகைகளினூடே சுழலுகின்ற ராட்டினத்தின் நடுவே அமிர்தகலசம்
23

Page 15
வைக்கப்பட்டிருக்கும் மண்டபத்தையடைந்தான்.
பறந்தபடியே அமிர்த கலசத்தை எடுத்துக்
கொண்டு, தாயிடம் அன்பும் பாசமும் மேலிட
கலசத்துடன் பறந்து சென்றான்.
கருடன் எவ்வித களைப்புமின்றி
பறப்பதைக் கண்ட மகாவிஷ்ணுமூர்த்தியானவர்
கருடனை மறித்து “உனக்கு நான்
வரமளிக்குகிறேன், நீ விரும்பியதைக் கேள்!”
என்று கூறினார்.
கருடனும் விஷ்ணுவைப் பணிந்து
மிகவும் மகிழ்ந்து தேவரீரைக் கண்டது என்
பாக்கியம் சுவாமி! “உங்களுக்கு மேலே நான்
எப்பவும் இருக்கவேண்டும்” என்று வேண்டினான்.
24

விஷ்ணுபகவானும் மிக மகிழ்ந்து "அப்படியே ஆகட்டும்” என்றும் என் கொடியில் நீ இடம்பெறுவாய் அமிர்தம் உண்ணாமலேயே சாகாவரம் பெறுவாய்! என்று வரமளித்தார். பகவானிடம் வரம் பெற்றுக்கொண்ட கருடன் மேலும் பகவானிடம் “சுவாமி! தாங்களும் பதிலுக்கு என்னிடமிருந்து ஏதாவது பெற்றுக் கொள்ளவும்” என்று பணிந்து வேண்டினான். “அப்படியே ஆகட்டும் கருடா! நீ என் வாகனமாக இருக்கவேண்டும்” என்று மகாவிஷ்ணு கருடனைப் பணித்தார். “ஆகா! எல்லாம் என் பாக்கியம்” என்று கருடன் விஷ்ணுவைப் பணிந்து தன் தாயிடம் செல்வதற்கு எண்ணியபடி விஷ்ணுவிடம் விடைபெற்று பறக்க ஆரம்பித்தான்.

Page 16
அமிர்த கலசத்தை தேடிவந்த இந்திரன்
கருடன் கவர்ந்து போவதைக் கண்டதும், கருடனை அழிக்கும் நோக்கில் தனது
வஜ்ஜிராயுதத்தை ஏவினான். கருடன் சிரித்தபடியே வஜ்ஜிராயுதம் தசீசி முனிவர்
அளித்தது அவருக்கு மரியாதை செலுத்தும்
முகமாக ஒரே ஒரு இறக்கையை உதிர்க்கிறேன்
என்று கூறி ஒரு இறக்கை உதிர்த்துவிட்டான்.
வஜ்ஜிராயுதத்தாலும் கருடனை வீழ்த்த முடியாததைக் கண்ட இந்திரன் கருடனிடம்
நட்புக்கரம் நீட்டினான். “அப்படியே ஆகட்டும்!”
என்றும் “தேவர்களுக்கு நான் நன்மை
செய்வேன்” என்று கருடனும் இந்திரனிடம்
கூறினான், “ஆனாலும் ஒரு கவலை உள்ளது,
26

அமிர்த கலசத்தை நாகர்கள் உண்டால் சாகாவரம் பெற்றுத் தேவர்களை துன்புறுத்து வார்கள்”, என்று இந்திரன் கருடனிடம் கூறினான். அதைக் கேட்ட கருடன் இந்திரனிடம் "நான் இதை என் தாயாரிடம் காட்டியதும் ஓரிடத்தில் வைப்பேன் உடனடியாக நீங்கள் அதை எடுத்துக்கொண்டு போய்விடுங்கள்” என கருடன்
கூறினான்.
இந்திரன் தொடர்ந்து மறைந்தபடி வர கருடனும் தன் தாயினிருப்பிடம் வந்தடைந்தான், தாயிடம் “இதோ அமித கலசம் இனி உனக்கு விடுதலை” என்று கூறி தர்ப்பையைப்பரப்பி அமிர்த கலசத்தை அதன்மீது வைத்தான்.
தாயும் மிகமகிழ்ந்து “உன்னை மகனாக
27

Page 17
அடைந்தது நான் செய்த பாக்யம்” என்று
போற்றினாள்.
நாகர்களும் விடயமறிந்து அவ்விடம்
வந்து மகிழ்ந்து “தம்பி நீ வாழ்க!” என்று
கூறியபடி அமிர்த கலசத்தை எடுக்க வந்தனர்.
உடனே கருடன் அவர்களைத் தடுத்து “விழ்நாநம்
செய்து அந்தரங்க சுத்தியுடன் சாப்பிடுங்கள்!
அத்துடன் என்னன்னையை அடிமைத்தனத்தில்
இருந்து விடுவித்ததாய் கூறுங்கள்” என்று
வேண்டினான்.
நாகர்கள் அனைவரும் ஒரே குரலில்
“விடுவித்தோம்! விந்தைக்கு விடுதலை” என்று
கூறினார்கள்.
குளித்துவிட்டுத் திரும்பிய நாகர்கள்
28

அமிர்த கலசம் இல்லாதிருப்பதைக் கண்டு துக்கப்பட்டு “ஐயோ! மோசம் போனோம்
கலசத்தைக் காணோம்” என்று புலம்பி தர்ப்பையில் அமிர்தம் சிந்தியிருக்கும் என்றெண்ணி தள்ப்பையை நாக்கினால் நக்கினர். நக்கியதால் அவர்களின் நாக்கு இரண்டாகப்
பிளந்தது. மேன் மேலும் நாகர்கள் கலக்கமடைந்து “நம் தாயாருக்காக குதிரை
வாலில் தொங்கி அதைக் கறுப்பாகக் காட்டி மோசம் செய்தோம். இப்பொழுது நாங்கள்
மோசம் போனோம்” என்று கதறினார்கள்.
நாகாகளின் ஒருவரான ஆதிஷேஷன் மனம் மிக வருந்தி “நான் தீர்த்த யாத்திரை
போய் இப்பாவத்தைப் போக்கிக்கொள்வேன்”
2O

Page 18
என்று கூறி தீர்த்த யாத்திரை செய்து பல
நதிகளில் ஷநாநம் செய்து இமயத்தை
அடைந்து கடும் தவம் செய்தான். அவனது
தவத்தை மெச்சிய பிரம்மதேவன் அவன் முன்
தோன்றி “சேஷனே என்ன வரம் வேண்டும்
கேள்!” என்று கூறினார். “சுவாமி என்தாயும்,
என்னுடைய சகோதரர்களும், கருடனுடனும்
பகைமை கொண்டுள்ளார்கள். அவர்கள்
தொடர்பு இல்லாமல் எனக்கு இன்னொரு பிறவி
வேண்டும்” என்று பணிந்து கேட்டான். “சேஷனே
உன் மனம் தூய்மையானது இவ்வுடலை நீ விடவேண்டாம். இப்பிறவியிலேயே நீவிரும்புவது
கிடைக்கும்! கடல் சூழ்ந்த இப்பூமியை நீ உன் தலையில் தாங்கிக்கொண்டிரு” என்று பிரம்மதேவன் கூறிக்கொண்டிருக்கும்போது
30

கருடனும் அங்கே வந்தான். பிரம்மாவும் கருடனைப் பார்த்து “கருடா! உன் சகோதரர்களில் சேஷன் உன்னிடம் மிகப் பிரியம் கொண்டுள்ளான், நீயும் அவனிடம் மட்டில்லா அன்பு வைக்க வேண்டும்” என்று கட்டளையிட்டு மறைந்தார்.
பிரம்மா மறைந்ததும் ஆதிசேஷனும் கருடனும் இருவருமாக நாராயணனைப் பிரார்த்தித்தனர்.
அன்றுமுதல் ஆதிசேஷன் தனது ஆயிரம் தலைகளால் இப் பூவுலகை தாங்குகிறார், கருடனும் விஷ்ணுவின் வாகனமாக விளங்கி வருகிறார்.
ன் ந só ... சுபம்
31

Page 19


Page 20
-
இடபுத்தாத்திவி
LTI III I fil II IiiiiiiiiiiiiTii
 

ந்து பிரதிபார்
ஆபதிப்