கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கையின் இந்துசமய கலாசாரமும் இந்துசமய கலாசார அமைச்சரின் பங்கு பணிகளும்

Page 1
国〔 பிரிக்காற்றியல் பிராந்தி பி SEM VIR ONTAML'L1
புதுப்பம் E
ए " "
 


Page 2

இலங்கையின் இந்துசமய கலாசாரமும், இந்துசமய கலாசார அமைச்சரின் பங்கு பணிகளும்
சுபாஷிணி பத்மநாதன்

Page 3

ஆசிரியர் Φ 60)
இலங்கையின் இந்துக் கலாசார அமைச்சர் திரு. பி. பி. தேவராஜ், தன் பதவிக் காலத்தில் நாடளாவிய ரீதியில் இந்து மதத்திற்கும், தமிழ் மொழிக்கும், தமிழரின் பண்பாட்டுக் கலை வடிவங்களுக்கும் ஆற்றிய சேவைகள் எண்ணிலடங்கா. சாதாரண எந்த ஒரு அரசியல்வாதியின் அடிப்படைப் போக்கிலும் நோக்கிலுமிருந்து இவரது மனப்பாங்கு சற்று மாறுபட்டதாகவும் வேறுபட்டதாகவும் அமைந்திருந்தது. வெறும் அரசியல் தளத்தைத் தேர்தல் களத்தை அடிப்படையாகக் கொண்ட வெறும் அரசியல் வாழ்வாக அமையாது, அரசியல் மூலம் சமூகப் பணியினை சமயக் கலை கலாசாரத் தொண்டினை வளர்க்க முற்பட்ட ஒரு உயர்ந்த உள்ளம் படைத்த மனிதராகத் திகழ்ந்தார். இன்று எத்தனையோ ஆயிரக்கணக்கான மக்களின் ஏகோபித்த பாராட்டுதல்களைப் பெற்று, நன்றி உணர்வுடன், நினைவு கூறும் ஒரு தனி மனிதராகத் திகழ்கின்றார்.
மக்களின் பலதரப்பட்ட தேவைகளை அணுகி அலசி ஆராய்ந்து தன் சேவைகளை மக்களின் தேவைகளுக்காக அள்ளி வழங்கினார். இவரது சேவைகள் பற்றியதான குறிப்புக்களைத் தொகுத்து யாவருக்கும் அறியத்தரும் வகையிலும் என்றும் நிலைத்து நிற்கும் முறையிலும், சகலருக்கும் எதிர்காலத் திட்டங்களுக்கு பயன்படும் வகையிலும், ஒரு முன்னோடியாகத் திகழ வேண்டும் என்பதற்காக இவரது சேவைகள் பற்றியதான குறிப்புக்களை ஒரு நூல் வடிவில் தொகுத்து வெளியிடச் சில தாலங்களுக்கு முன் முயன்றேன். இன்று எத்தனையோ அறிஞர்கள்,

Page 4
கலைஞர்கள், ஆகியோரின் பங்கு பணிகள், நூல் வடிவம் பெற்று விளங்குவதால் மட்டுமே இன்று எமக்கு அவர்களது ஆக்கத்திறன் பற்றி அறிய முடிகிறது. ஆயினும் எனது முயற்சி பலதரப்பட்ட நடைமுறைக் கஷ்டங்களாலும் உயர் அச்சகச் செலவு போன்ற நிலைப்பாடுகளாலும், காலச் சக்கரத்தில் சிக்குண்டு காலதாமதமாகிப் போயிற்று. ஆயினும் என்னால் எதிர்பார்த்து முயன்ற அளவு அவரது பாரிய பணிகளைச் சீரிய வகையில் தமிழ்க்கூறும் நல்லுலகிற்கு அச்சிட்டு வெளியிட முடியாதவிடத்துங்கூட அவரது முயற்சிகள், சேவைகள், அவரது தனித்துவநிலைப்பாடுகள், பற்றியதான சில குறிப்புக்களைத் தொகுத்து ஒரு சிறு கைநூல் வடிவமாவது அவை பெறவேண்டும் என்னும் நோக்கில், ஒரு சிறு கைநூல் வடிவமைப்பில் இதனை வாசகர்களுக்கு எழுதி வெளியிட்டு வழங்குவதில் மிக்கமகிழ்ச்சி அடைகிறேன்.
சுபாஷிணி பத்மநாதன்

இலங்கையின் இந்துசமய கலாசாரமும், இந்துசமய கலாசார அமைச்சரின் பங்கு பணிகளும்
அரசியல் என்னும் பொதுப்படை வரைவிலக்கணம் கடினமானதும் நெகிழ்வுற்றதும், நிலையற்றதும், கொந்தளிப்பு நிறைந்ததுமாகும். இந்த வகையில் இன்று உலகின் எந்தவொரு நாட்டிலும் ஸ் திர மற்ற அரசியல் வானையும் தான் தோன் றித்தனமான நெறிப்பாட்டினையும் , கொள் கையற்ற போக்கினையும் , சந்தர்ப்பவாத நோக்கினையுமே எங்கும் காணக்கூடியதாக உள்ளது. ஆயினும் அரசியல் வானில் நிதானமான போக்கு, தன்னிகரில்லாச் சேவை மனப்பாங்கு, அர்ப்பண மனப்பாங்கு, அயராத உழைப்பு, திடசங்கற்பம், எதிலும் சமத்துவ நோக்கு, சகோதரத்துவப்போக்கு, திறமையான திட்டமிடலும் வழிநடத்தலும், நெறியாக்கமும் செயற்திறனும், ஒருங்கே கொண்ட சேவை மனப்பான்மை செறிந்த சேவைகளை, இலங்கையின் சிறுபான்மைத் தமிழினத்துக்கு பெரும் பணி புரிந்து அருந்தொண்டாற்றிய, ஆன்மீக உணர்வுமிக்க தலைவராக அயராது உழைத்தவர், இலங்கையின் இந்து கலாச்சார இராஜாங்க அமைச்சர் மாண்புமிகு திரு. பி. பி. தேவராஜ் என்றால் அது மிகையாகாது.
இந்துசமய கலாசார இராஜாங்க அமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து அரசியல் பற்றற்ற சிந்தனை உணர்வு மிக்க சந்தர்ப்பவாதப் போக்கற்ற சிரமதான உணர்வுமிக்க பிரதேச அடிப்படையிலோ, அன்றிப் பிராந்திய அடிப்படையிலோ,

Page 5
தன் சேவையினை நிறைவேற்றாத, காரூனியமிக்க கடமையுணர்வுள்ள கட்டுப்பாடு நிறைந்த கலாசார மொழியியல் பாதுகாவலராக, இலங்கையின் ஆலயங்கள் அனைத்துக்கும் அறங் காவலராக, தமிழ் மொழி அமுலாக்கலுக்கு உற்ற துணையாக சேவை புரிந்தவர் மாண்புமிகு அமைச்சராவார். அவரது ஐந்து ஆண்டுகால அமைச்சர் பதவிக் காலத்தில் இலங்கையின் கலை கலாசார நிலைப்பாட்டில், தமிழ்மொழி வரலாற்றுப் பின்னணியில், இந்துமத வளர்ச்சிப் படி நிலையில் அடைந்த அபிவிருத்திகள், முன்னேற்றங்கள் என்பன எண்ணிலடங்காதவை.
இலங்கைத் தமிழர் வரலாற்றில் இக்கட்டான கால கட்டத்தை நாடு எதிர் நோக்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அவரது செயற்திட்டங்கள் வெறும் கொள்கையளவிலான செயற்திட்டங்களாக அமையாது நடைமுறையில், நாளாந்தம், நாடளாவிய ரீதியில் எடுத்துச் செல்லப்பட்டன. இன்று இலங்கையில் பல்வேறு கஷ்டங்களுக்கும், நஷ்டங்களுக்கும் மத்தியில் தமிழ்க்கலையுலகம் தலைதுாக்கி நிற்பதற்கு மூலகாரணமாகத் திகழ்பவர் மாண்புமிகு அமைச்சர் திரு. பி. பி. தேவராஜ் என்றால் அது என்றும் மிகையாகாது.
பொதுப்படையில் கடந்த காலங்களில் தமிழ் மக்களிடையே காணப்பட்ட தயக்கப் போக்கினைக் களைந்தெறிந்து, தமிழ் கலாசாரத்தினை, தமிழ்க் கலாசார பாணியினை, பாங்கினைத் தமிழினம் தவிர்ந்த இலங்கையின் ஏனைய சமூகங்களும் பின்பற்றித் தழுவ முயல்வதற்கு அடித்தளத்தில் தமிழ்க் கலாசாரப் பெருமைகளை உலகறியச் செய்தவர் அமைச்சராவார். கைமாறாக எதையுமே மற்றவர்களிடமிருந்து
2

எதிர்பாராத மகத்தான பண்பு, அவரிடம் காணப்படும் மனித நேயப் பண்பாட்டின் சிகரமெனலாம். பல்வேறு இக்கட்டான காலகட்டங்களில் தமிழ்மொழி மற்றும் இந்துக்கலைக் கலாசாரத்தின் உயர்ச்சிக்கும், வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும், மறுமலர்ச்சிக்கும் வித்திட்டு வழி வகுத்தவர் அமைச்சராவர்.
திரு. தேவராஜ் அவர்கள் அமைச்சர் பதவியேற்ற காலகட்டம் இருண்ட காலமாகவும், வரண்ட காலமாகவும் இலங்கையின் அரசியல் வானில் வரலாற்றில் காணப்பட்டது. இக்காலகட்டத்தில் கலை, கலாசார முயற்சிகள் ஒளியிழந்து, நலிவுற்றுக் காணப்பட்டன. இக்காலகட்டத்தில் தான் இப்பாரிய பொறுப்பு அமைச்சர் அவர்களுக்கு அளிக்கப்பட்டது. அவரிடம் காணப்பட்ட கடமையுணர்வும், கண்ணியப் போக்கும், காருண்ய மனப்பாங்கும் அவருக்கு அக்காலத்தில் உறுதுணை அளித்தன.
அவரது கலைப்பணியும், இந்துசமயப் பணிகளும் பொதுப் படையில் இலங்கை மண் ணிற்கு அளிக்கப்பட்டனவேயொழிய அரசியல் இலாபம் கருதும் வெறும் அரசியல் வாதியின் செயற்திட்டங்களுக்கு அமைய பிராந்திய ரீதியிலோ, அன்றிப் பிரதேச அடிப்படையிலோ அமையவில்லை. தனது ஐந்து ஆண்டுகால அமைச்சர் பதவியில் அவரது அயராத சேவைகள் தனித்துவக் கொள்கைத்திட்டமிடலும் அமுலாக்கல் போக்கும், எத்தனையோ தசாப்தங்களுக்கு ஈடான சேவைகள் எனலாம். அவர் எதிர்காலத் தேர்தலை அடிப்படையாகக் கொண்ட ஒரு வெறும் அரசியல்வாதியாகத் திகழ்ந்திருந்தால் குறுகிய காலகட்டத்தில் இத்தனை சாதனைகளையும் தனித்துவமாக
3

Page 6
நின்று சாதித்து இருக்க முடியாது என்பது திண்ணம். மனித நேயத்துடன், மனிதாபிமானத்துடன், சேவை மனப்பாங்கு நிறைந்த ஒரு சமூக சேவகனாய்த் திகழ்ந்ததினால் மாத்திரமே இத்தகைய அரிய சாதனைகள் சேவைகள் அனைத்தையும் சமூக மேம்பாட்டிற்காக, தன் இனத்தின் உயர்வுக்காக அள்ளி வழங்கியிருக்க முடிந்தது என்பதற்கு அமைச்சரின் நிலைப்பாடு ஓர் எடுத்துக் காட்டாக விளங்குகின்றது.
தனது திட்டங்களும் கொள்கைகளும் சமூகத்தில் ஒவ்வொரு தரப்பினரையும் சென்றடைய வேண்டும், அவர்களுக்குப் பயனுள்ளதாய் அமைய வேண்டும் என்பதற்காக செயற்திட்டங்களை நேரிலும், பலதரப்பட்ட சமூக வர்க்கத்தினரோடு கலந்தாலோசித்தும், . கருத்துப் பரிமாற்றங்களை ஒழுங்கு செய்தும், வழி நடாத்தினார். அவரது அரசியல் வாழ்வு அர்ப்பண மனப்பாங்கு தோய்ந்ததாகவும் புரிந்துணர்வும் பகிர்ந்தளிப்பும் நிறைந்ததாகவும், சமத்துவக் கண்ணோட்டம், சகோதரத்துவ மனப்பாங்கு, சமயோசித நிலைப்பாடு மற்றும் சகிப்புத் தன்மையுடன் கூடியதாகவும் காணப்பட்டது. அரசியல் வாழ்வை வெறுமனே குடும்ப சுகத்திற்கும் சுயநல நோக்கிற்கும் சுகபோகத்திற்கும் அவர் பயன்படுத்தவில்லை என்பதனை யாவரும் அறிவர்.
இந்துசமய கலாசார அமைச்சிற்கு வரவு செலவுத் திட்டத்தின் கீழ்ப் பகிர்ந்தளிக்கப்படும் நிதி உதவியானது அமைச்சர் அவர்களின் பங்கு பணிகளுக்கு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே காணப்பட்ட போதிலும் இந்துக் கலாசார நிதியம் என்னும் ஒரு தனித்துவ நிதித்திட்டத்தை

வகுத்து கலாசார அபிவிருத்திக்கு வழி வகுத்தார். இது தவிர தனது கொள்கைத் திட்டங்களைத் தனவந்தரிடமும் பொருள்படைத்த பிரமுகர்களிடமும் துல்லியமாக எடுத்தியம்பி பலதரப்பட்ட பொருளாதாரத் திட்டங்களுக்கும், அமைச்சின் செயல் திட்டங்களுக்கும் நிதி உதவி பெற்றுக் கொடுத்தார். இனங்களுக்கு இடையே கலாசார ஒருமைப் பாட்டிற்கும் கலாசார பரிவர்த்தனைக்கும் சீரிய பல திட்டங்களை வகுத்தளித்தார்.
இந்து மதத்தில் இதுவரை காலமும் சமயக் கல்வியினைப் போதிக்கும் ஞாயிறு பாடசாலை இல்லையே என்ற ஏக்கத்தினை, தாக்கத்தினை, தாகத்தினை அறநெறிப் பாடசாலை என்னும் ஆன்மீகக் கல்விக் கூடங்களை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாகங்களிலும் நிறுவிச் சமயக் கல்விக்கு வழி வகுத்தார். இத்தகையதான சமயசார் கல்வியானது, சமயசார் கலாசார பண்பாட்டு விழுமியங்களை, கலாசாரக் கருவூலங்களைச் சிறார்களின் உள்ளங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் வித்திட்டு வளர்க்க வழிவகுத்தது. அறநெறிப் பாடசாலை சம்பந்தமான கல்வித்துறையானது இன்று பொதுப்படையில் ஒரு விழிப்புணர்ச்சியைப் பெற்றுக் கொண்ட அதே வேளையில் துரித வளர்ச்சிப் பாதையினைப் பெற்று கணிசமான வளர்ச்சிப் பெருக்கினைப் பெற்று விளங்குகின்றது. அரிய சமய சார்பான நூல்கள் பல அச்சேற்றி இலவசமாக அமைச்சு மட்டத்தில் அறநெறிக் கல்விக் கூடங்களுக்கு விநியோகிக் கப்படுகின்றது. மேலும் மாணவர் சமூகத்தினரிடையே நன்நெறி சமயக் கல்வியினைப் பரப்பும் நோக்குடன் பலதரப்பட்ட போட்டிகள், பரீட்சைகள், என்பன நடத்தப்பட்டு, வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வெகுமதி
5

Page 7
மிக்க சான்றிதழ்கள் பரிசளிக்கப்படுகின்றன. மேலும் அமைச்சர் அவர்களின் விருப்பின் பேரில் சமய சார்பான பொதுப்படையான அறிவினைச் சமூக மட்டத்தில் மேம்படுத்தும் நோக்குடன் அமைச்சர் அவர்கள், கல்விமான்களினதும், சமய விற்பன்னர்களினதும் நாடளாவிய சமய சொற்பொழிவுகளை நடாத்தியும் சமயக் கல்வியினை ஆங்காங்கே அபிவிருத்தி செய்தும் பரப்பியும் வளர்த்தும் வருகின்றார்.
மேலும் அவரது அரிய முயற்சியின் விளைவாக மாதாந்தம் இடம் பெறும் இந்துசமய விழாக்கள், உற்சவங்கள் என்பன சீரிய முறையில் அமைச்சு மட்டத்தில் அனுசரிக்க ஒழுங்குகள் செய்யப்பட்டமையும், அவற்றின் மகத்துவத்தினை, மகிமையினைப் பெருமையினை நாடளாவிய ரீதியில் மக்கள் தொலைத் தொடர்பு சாதனங்கள் மூலம் வெளிக் கொணர்ந்து பரப்புதலும், போன்ற முயற்சிகள் அவரது பங்கு பணிகளில் சிறப்பிடம்பெற்ற நிகழ்வுகள் ஆயின. இது இலங்கையின் இந்துமத வரலாற்றுக் குறிப்பில் ஒரு திருப்பு முனை எனலாம். இந்து ஆலய நிர்வாகப் பிணக்குகளை அறநெறிக் காவலன் என்ற வகையில் சுமூகமான ரீதியில், யாவரையும் பாதிக்காத வகையில், அமைச்சு மட்டத்தில் தீர்த்து வைக்க ஆக்கபூர்வமான ஒழுங்குகள் பல செய்து கொடுத்தார். இந்து ஆலய அர்ச்சகர்களின் தனித்துவ நிலைப்பாட்டினை கெளரவத்தினை மற்றைய சமய சமூகக் குருமார்களின் அந்தஸ்துக்கு ஈடாக, இணையாக, அமைதற் பொருட்டு அடையாள அட்டைத் திட்டத்தை வகுத்து நடைமுறைப்படுத்தி சமய சமத்துவ அந்தஸ்த்தைப் பேணிப் பாதுகாக்க வழி வகுத்தார்.

சிறந்த கருங்கல் வழிபாட்டுச் சிற்பங்களை உள்ளூர் 1.லைஞர்களின் கலை வனப்பில் உருவாக்கி அவற்றை ஆங்காங்கு நாடெங்கும் இடம்பெறும் ஆலயப் புணருத்தாரணப் பணிகளுக்கு அமைச்சு மட்டத்தில் அளித்து உதவியும், காலவரையறையற்ற கதிர்காமப் புனித ஸ்தலத்திற்கு யாத் திரிகர்கள் தங்கும் விடுதி வசதிகளைக் காலக்கிரமத்திற்கேற்ப விஸ்தரித்துக் கொடுத்ததுவும் அமைச்சரின் தனித்துவக் கொள்கை நெறியாக்கல் திட்டங்களுக்கு ஒரு எடுத்துக் காட்டாகும்.
துரதிஷ்டவசமாக வட மாகாணத்தில் எத்தகைய அரிய பணியினையும் அமைச்சர் அவர்களால் செவ்வனே செய்ய முடியவில்லை எனினும் கூட, ஆலய அறங்காவலர், ஆலயப் பாதுகாவலர், என்ற அடிப்படையில் பல தரப்பிலும் பாதிப்படைந்த இந்து ஆலயங்கள் பற்றியதான செய்தித் திரட்டினைத் திரட்டி எடுத்துக் கொண்டமையும், இதற்கு அப்பால் அவரால் எத்தைகய ஓர் அரிய முயற்சியினையும் நடைமுறைப்படுத்தி வழி நடத்த சந்தர்ப்ப சூழ்நிலை இடமளிக்கவில்லை. ஆயினும் நல்லை ஆதின முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க ஜனாதிபதி நிதியத்திலிருந்து ஆதீன அபிவிருத்தித் திட்டங்களுக்கு 2" இலட்சம் ரூபா பெற்றுக் கொடுத்தார். கிழக்கு மாகாணம் ஆங்காங்கே பல தரப்பட்ட நெருக்கடிகளை எதிர்நோக்கிய போதும், இயலுமான அளவு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டார். குறிப்பாக 1989 ஆம் ஆண்டு தேவாரப் புகழ் பெற்ற ஸ்தலங்களுள் ஒன்றும், புராதன வரலாற்றுடன் பிண்ணிப்பிணைந்த ஸ்தலங்களில் ஒன்றுமான கோணேஸ்வரர் ஆலயம் பாதிப்படைந்த நிலையில் நீண்ட காலமாகக் காணப்பட்டது. அமைச்சர் அவர்களின் கால கட்டத்திலேயே இக்கோயில் குட முழுக்குச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Page 8
பல ஆண்டு காலமாகக் கொழும்பில் இடம்பெறாத ஆடிவேல் விழா குறிப்பாக இந்துப் பக்தர்களிடையே ஏற்பட்ட தயக்கப் போக்கினால் சோபை இழந்து காணப்பட்டது. ஆயினும் அமைச்சரின் விடாமுயற்சியின் விளைவாக இவ்விழா கொழும்பில் மீண்டும் இடம்பெற்று வருகின்றது. பல்வேறு இந்துக் கோயில்கள் அதாவது தமிழ் பேசும் பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் நீண்டகாலமாகப் பாதிப்புற்று, பல்வேறு காரணங்களால் கவனிப்பாரற்று இருந்த இந்து ஆலயங்களை நேரில் சென்று பார்வையிட்டு அவற்றின் நாளாந்த நித்திய நைமித்திய கிரிகைகள் நடைபெற செவ்வனே ஒழுங்குகள் செய்து கொடுத்தமை போன்றன அவரது உண்மையான ஆன்மீகத் தொண்டினைப் பறை சாற்றுகின்றது
தமிழ் மொழியின் தமிழ்ப்பற்றை அம்மொழி சார்ந்த பலதரப்பட்ட அம்சங்களை வளர்ப்பதற்கு பிரதேச அடிப்படையில், மாவட்ட மாகாண ரீதியில் கருத்தாழம் மிக்க கருத்தரங்குகளையும், பண்பாட்டுக் கருவூலங்கள் பற்றிய ஆய்வுகளையும், பலதரப்பட்ட அறிஞர்கள் மூலம் நடத்தி வெளியுலகிற்கு வெளிக்கொணர்ந்துள்ளார். சாகித்திய விழாவுடன் கூடிய தமிழரின் சம்பிரதாய கலாசார வடிவங்களின் பிரதிபலிப்புக்களை இலங்கையின் மற்றைய சமூகங்களும் தமிழரின் கலாசார பெருமைகளை உணரும் வண்ணம் கலாசாரப் பவனியினை அமைச்சரின் தனித்துவ விருப்பத்தின் பேரில் வழிநடத்தி விழாக்களை வளம்பெற வழிவகுத்தார். இவ்விழாக்களின் போது உள்நாட்டு எழுத்தாளர்களின் பலதரப்பட்ட ஆக்கங்கள், பல துறைகளைச் சார்ந்த ஆக்கங்கள், தரமான வெளிநாட்டுப் படைப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய புத்தகக் கண்காட்சிகளை நடத்த
8

ஆங் காங் கே ஒழுங்கு செய்யப் பட்ட மையும் (குறிப்பிடத்தக்கவையாகும். இவை தவிர சாகித்திய விழாக்களின் போது தமிழரின் சாஸ்திரீக, சம்பிரதாயக் கலை வடிவங்களை ஒரு புறமாகவும், பிரதேச மட்டத்தில் பிராந்திய ரீதியில் பலதரப்பட்ட வாழ்க்கை முறைகளுடன் ஒட்டி வளர்ந்த நாடோடிக் கலை அம்சங்களைக், கிராமியக் கலை வடிவங்களை, விழாக்களில் பங்குபற்ற பலதரப்பட்ட ஆக்கபூர்வமான உதவிகளை அக்கலைஞர்களுக்கு அளித்து ஊக்குவித்தமை பாரம்பரிய கலை வடிவங்களைப் பாதுகாப்பதற்கு ஒப்பான அமைச்சரின் செயற்திட்டமாகும். இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் ஆக்கங்கள் உலகில் எப்பகுதியில் எழுதி வெளியிடப்பட்டாலும், அவை இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் ஆக்கங்கள் என்ற வகையில் அவை கணிப்பிடப்பட்டு, கெளரவிக்கப்பட வேண்டுமேயன்றி, அவை எங்கு அச்சிடப்பட்டவை எங்கு வெளியிடப்பட்டவை என்பது முக்கியமானதல்ல என்ற கருத்தோட்டத்தினை அமைச்சர் அவர்கள் எடுத்து விளக்கினார்கள்.
நுண்கலையினைப் பொறுத்தவரையில் அவரது பதவிக்காலத்தில் இலங்கையில் தமிழ் நுண்கலைப் பிரிவானது ஓர் நிறைவான சீரிய வளர்ச்சிப் பாதையினைப் பெற்றுக் கொண்டது என்றால் அது அமைச்சரவர்களின் ஆக்க பூர்வமான முயற்சி என்றே குறிப்பிடலாம். பாடசாலை சிறார்களின் கலை வாழ்க்கை முதல், தரம்மிக்க உயர் தனித்துவக் கலைஞர்கள் ஈறாக ஒவ்வொருவரின் கலைத்திறன்களையும் இனங்கண்டு, ஊக்குவித்து உற்சாகமளித்தார். பலதரப்பட்ட ஆடற்கலைஞர்களை, இசைக்கலைஞர்களை, மற்றும் நுண்கலைப் பிரிவினரை,
9

Page 9
பல்துறை அறிஞர்களைத் தமிழகத்திலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வரவழைத்து இலங்கைக் கலை வளத்திற்கு, கலையுலகத்திற்கு ஒரு முன்னோடியாகத் திகழ்வதற்கு ஆக்க பூர்வமான பல முயற்சிகளைத் தன் பதவிக் காலத்தில் மேற்கொண்டார். மேலும் அவரது இத்தகைய முயற்சிகள் இலங்கை கலைவளத்துக்கு ஒரு முன்னோடியாக மெருகுற அமைய வேண்டுமேயன்றி இலங்கைக் கலை வளத்தை எந்த வகையிலும் இம் முயற்சிகள் பாதிக்கக்கூடாது என்பதில் மிகுந்த கண்டிப்பு உடையவராக அமைச்சர் அவர்கள் காணப்பட்டார்.
வடமாகாணம் போல் அன்றி, கிழக்கு மாகாணம் கலை நிலைப்பாடுகளில் சற்றுப் பின்தங்கியதாகவே காணப்பட்டது. விபுலானந்த இசை நடனக் கல்லூரி அங்கு நிறுவப்பட்டிருந்த போதிலும் கூட, பல தரப் பட்ட நடைமுறைக் குறைபாடுகளினால் அதன் தரம் பாதிப்படைந்திருந்தது. அமைச்சர் அவர்களின் தனித்துவ முயற்சியினால், அந்நிறுவனம் மறு சீரமைக்கப்பட்டு இன்று இலங்கையில் ஒரு தலைசிறந்த கலைக்கூடமாகத் திகழ்கின்றது. இந்த நிறுவனத்தினால் வழங்கப்படும் டிப்ளோமா சான்றிதழ்கள் நாடளாவிய ரீதியில் ஆசிரிய நியமனங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களாகக் கருதப்படுகின்றன. நீண்டகாலமாகப் பின்தங்கிய நிலையில் காணப்பட்ட மட்டக்களப்பு கலாசார நிலையத்தின் நிர்மாண வேலைகள் மாவட்டக் கட்டிடத் திணைக்களகத்தின் உதவியுடன் அமைச்சர் அவர்களின், விடாமுயற்சியினால் 10 இலட்சம் ரூபா நிர்மாணத் திட்டத்தின் கீழ் மெருகு பெற்று வளம் பெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது. மலையக
O

11வட்டங்களில் ஒன்றான பண்டாரவளையிலும் கூட ஓர் அரிய கலாசார மண்டபத்தைப் பெற்றுக் கொடுத்ததும் அமைச்சரின் அரிய கலைப் பணிகளில் ஒன்றாகும்.
இந்துக் கலைக்களஞ்சியத்தை இரண்டு தொகுதிகளாகத் தொகுக்கப்பெற்று வெளியிடப்பட்டமையும், அவரது பதவிக்காலத்தில் பெரும்பாலான பரத நாட்டிய அரங்கேற்றங்களுக்கு பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்துக் கொண்டமையும் அந்நிகழ்ச்சிகள் பற்றிய பல அரிய கருத்துக்களை வெறும் பாராட்டுதல்களாக மட்டும் அமையாது விமர்சன நோக்கில், விரிந்து உரைத்தலும், இளம் கலைஞர்களைச் சரியான பாதையில் ஊக்குவித்தலும் போன்ற பல நடவடிக்கைகள் மூலம் ஒரு கடமை உணர்வுமிக்க கலைவளம் பேணும், ஒரு கலாசார அமைச்சராக தன் பதவிக்காலத்தில் சேவையாற்றினார். அண்மைக்காலங்களில் இலங்கையில் நாடகக் கலை வளம் குறிப்பாக சிறப்புற்று புத்துயிர் பெறவேண்டும் என்ற நோக்குடனும், நாடகக்கலை ஒரு அரங்குக் கலையாக மலர வேண்டும் என்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இலங்கையைப் பொறுத்த மட்டில் நாடகவியலானது வெறும் பேச்சுக்கலை வடிவமாகவும், எழுத்துக்கலை வடிவமாகவுமே நாடக உருவம் பெற்றுள்ளது. நாடகவியலைச் சார்ந்து வளர்ந்து வரும் நவீன கலைவடிவம் திரைப்படத்துறையாயினும், இது இலங்கையில் ஒரு சீரிய வளர்ச்சிப்படி நிலையினைப் பெறவெண்டும் என்பதிலும், அண்மைக்காலத்தில் இலங்கையின் தமிழ் திரைப்படத் துறையின் பின்தங்கிய நிலை, மறுசீர் அமைக்கப்பட வேண்டும் என்பதிலும், மிகுந்த ஆர்வம் கொண்டவராக அமைச்சர் அவர்கள் விளங்குகின்றார்.
11

Page 10
இந்து கலாசார அமைச் சுக்கு ஓர் உயl நூலகமொன்றினையும், அந்நூலகம் ஓர் ஆய்வகமாகத் திகழ வேண் டும் , என் பதற்காக உலகின் நாலாபக்கங்களிலிருந்தும் அறிவியல் சொத்துக்களை அஃதாவது அரிய நூல் வடிவங்களைப் பெற்றுத் தந்ததுமட்டுமல்லாது தன் சொந்த மேற்பார்வையின் கீழும், வழிகாட்டலின் கீழும், காலத்துக்குக் காலம் புதிய நூல்களை தேவைக்கமைய கொள்வனவு செய்து நூலகத்தைத் ஓர் அறிவியல் கழகமாக மாற்றிய பெருமையும் பல்வேறு குறிப்பு ஒளிப்பதிவு நாடாக்களை ஆதார மூலங்களாகத் தொகுத்து, அமைச்சின் எதிர்கால வளர்ச்சிக்கு வித்திட்டுப் பாதுகாத்து வந்தமை போன்றன அவரது அரிய சேவைகளுக்கு எடுத்துக்காட்டாகும்.
இந்த வகையில் இலங்கையின் எந்த ஒருவரும் செய்யாத அத்தனையையும் தமிழ் மக்களின் உயர்வுக்காக, தமிழ் கலாசாரத்தின் வளமான வாழ்விற்காக தனது குறுகிய கால அமைச்சர் பதவிக்காலத்தில் இன, மத, மொழி வேறுபாடற்ற சமூக மேம்பாடே தனது உயிர்நாடியாகக் கொண்டு சேவையாற்றியவர் இலங்கையின் இந்துகலாசார இராஜாங்க அமைச்சர் மாண்புமிகு திரு. பி. பி. தேவராஜ் ஆவார்.
சுபாஷிணி பத்மநாதன்
12


Page 11
SERENE OFFSET

OLOMBO. 8 T'P: 687800