கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானத்தந்தை (ஸ்ரீமத் சபாரத்தினம் சுவாமிகள்)

Page 1
ஞானத்
பூர்மத் சபாரத்தி
HEP Bhulgi 24L
l6I6ol
靛 28. O3
ஆக்கியோன் :-
 
 
 
 

"ஆழ்கடலான்'

Page 2

ஞானத்தந்தை
நீமத் சபாரத்தினம் சுவாமிகள்
92ஆவது ஐயந்தி நினைவு வெளியீடு
28.03.1996
9
ஆக்கியோன் ;~ ஆழ்கடலான்
35590
லகழ்மி அச்சகம் 195, ஆட்டுப்பட்டித் தெரு, கொழும்பு-13.

Page 3
BIBILIO GRAPHICAL DATA
TITLE OF THE BOOK AUTHER
EITT) ER
EITTIN
T) 'TE () 'LELICATIN ;
NUMBER JE PAUL PRIE
PRINTER
PUTEBLISHEER
sit - It litfits (Litfi.
Alzfil k. 4d.:4[[41 Ka' in jar - in urugul Eu Prth (l.if ( . , "TfLoop L I [" L'in [{lip Li rich nr 1 , Plu [o[u. Mi ris. Cfitr (4. Rcti1 C jotfu, КП ти! u.
Fitr 5 f.
2. O3. It
4. Tfi ir tų Rupees ( 3 ) w = } CUTTıp (en 1 chts Du: L lx III i Priftigt S 195 k'offeil diflaf Street, СпLD TILL Lj = 13.
T. Tf LLT II í ra jafi 1 1 Wii R. b. 11. Peris NL14* titfı çL, TOE fuit." ELL.
l :
சமர்ப்பணம்
அடியே00 அன்பு வந்து ஆட்கொண்ட
சபாரத்தின வள்ளலது நினைவாகத்
தில்லே நடராஜனின் பொன்ாடிகளில்
இம்மலர் சமன்ப்பிக்கப்பட்டது
ஆழ்கடனாள்
 

பீடியார்
ஞானத்தந்தை சபாரத்தினம் சுவாமிகள்
உருகாத மனத்தவியும் ரெக்துருக்கி
:ITர சிவபிரானின் பதமே சேர்க்கும் பேருவாசகத் தோய் போழிந்து மாந்தர் பேiன்ப வாரிதியில் ஒன்று சேரத் தருமசபாரத்ள சேம்மல் சோவ
தாரணியில் மாந்தரது நேஞ்சில் என்றும் திருவாசகம் போலதித்தித்தன்பாய்
திகழ்ந்திடுமே சபாரத்தினம் வழி வாழி!
-சுவிடாமணி வீரபாணி ஐயர்

Page 4

Bமானப் புதல்வன்
JAWA
AWA
ஆழ்கடலான்

Page 5

GluTjETLidhjLib
** ---تعحسستی یحیحییہ۔---
உபோத்காதம்
பதிப்புரை
மதிப்புரை
1. திருக்கேதீச்சரத்தைத் தேடி 2. மணிக் கொடி நீழலிலே 3. பத்தாகிய தொண்டர் 4. திருவாசக முனிவர் அப்புஜி 5. திப்பிய தேனும் எய்ப்பில் வைப்பும் 6. எங்கள் ஞானகுரு தேசிகன் 7. அடியார்க்கு நல்லார் வாசகத்தில் வல்லார் 8. அவர்கள் அளித்த பிச்சை 9. பாதச் சுவடுகள்
எழுத்தெண்ணிப் படித்த தபோதனர்
. சுவாமிகளைப் பற்றி சரவணமுத்து சுவாமிகள்
கைவண்ணமும் கறிவண்ணமும் திருவாசக வீச்சு தேனருவி மூச்சு
. ஆத்ம ஜெயம் ஆனந்த வயம்
ஞானாசிரியரின் திருவாக்குகள்
. ஓடும் செம்பொனும்
அநுபந்தம்
வணக்கம்
பக்தனும் பரமனும் சுவாமிகள் பற்றி திரு.வே. சிவஞானம்
திரு. வே. சதாசிவம் அவர்களின் உரை
சபாரத்தின சுவாமிகள்

Page 6
சர்வம் விஷ்ணுமயம்
உபோத்காதம் (சிலவார்த்தைகள்)
வேண்டேன் புகழ் வேண்டேன் செல்வம் வேண்டேன் மண்ணும் விண்ணும் வேண்டேன் பிறப்பிறப்புச்சிவம் வேண்டார்தமை நாளும் தீண்டேன் சென்று சேர்ந்தேன்மன்னு திருப்பெருந்துறை இறைதாள் பூண்டேன்புறம் போகேன் இனிப் புறம்போக லொட்டேனே.
அடியேன் பரமேஸ்வரா ஆசிரிய கலாசாலையிற் கல்விபயின்ற காலம் (1944 - 1945) அதன் அதிபர் இலக்கணச் சொண்டர் குமாரசுவாமிப் புலவரின் மகன் டாக்டர். சிவப்பிரகாசம் அவர்கள். பி.எஸ்.ஸி. சிதம்பரப்பிள்ளை மாஸ்டர் கல்வித்துறை விரிவுரையாளர். தமிழ்ப் பேராசான்களாக இளமுருகனாரும், உலகியல் விளக்கம் தந்த நவநீத கிருஷ்ணபாரதியாரும் இருந்தார்கள். அக்கால கட்டத்திற் பின்னவர் திருவாசகத்திற்கு உரை எழுதிக்கொண்டிருந்தார். அவ்வுரை வளத்தை எமக்கு விளக்கிக் கூறுவார். எம்மை வாசிக்கும்படி பிரதிகளைத்தருவார். அவற்றைப்படி எடுக்கும் பணியில் நானும் ஈடுபட்டிருந்தேன். எனது நல்வினைப் பயனால் திருவாசம் என்னைக் கொள்ளை கொண்டது மட்டுமன்றி என்மன உரசல்களுக்கு அது ஒத்தடமாகவும் அமைந்தது.
சரியாக மூன்றாண்டுகட்குப் பின்னர் கண்டிமாநகரில் எனக்குத் தொழில் கிடைத்தது. நான் என் அயலூரவரான தியாகராஜா என்பவருடன் உறையும் வாய்ப்புக் கிடைத்தது. அவரை யான் அண்ணை என்றே அழைப்பேன். அவர்கள் மாலையிற்கை கால் முகம் கழுவி, விபூதி அணிந்து, விளக்கேற்றுவார். ஊதுவர்த்தி கொளுத்தி வைத்து திருவாசகம் நாள் தவறாமற் படிப்பார். ஆங்கிலமும், தமிழும் துறை போகிய அறிஞர் அவர். சிலபாடல்களின் செவ்வியை, அருமையை எனக்கும் கூறுவார். எனக்குத் திருவாசகத்தில் ஆழமான ஈடுபாடு வந்தது. நானும் ஒரு பொத்தகம்
வேண்டித் தினமும் வைகறையிற் படித்து, குறைந்தது ஒரு வாசகமேனும் மனனம் பண்ணுவேன் ஒருநாளைக்கு. பலபாடல்கள் என்னோடு ஒட்டிக் கொண்டன.
இச்சூழ்நிலையில் ஒரு முறை திருக்கேதீஸ்வரம் போகும் வாய்ப்புக்கிட்டியது. போன போது சபாரத்தினம் சுவாமிகளை முதன் முறை சந்தித்தேன். இதுவும் என் நல் ஊழ் என்பதைப்பின்னர் உணர்ந்தேன். சுவாமிகளை இரண்டாவது முறை சந்தித்தது சோதி அம்மா வீட்டில் இச்சங்கமமே எனக்கு ஞானசிரியனைக் கூட்டி வைத்தது நிழல்போற் றொடர்ந்தேன். திருவாசகம் என்னை விழுங்கியது, தொடர்ந்தேன் என்
(i)

யாத்திரையைத் திருக்கேதீஸ்வரம் வரை ஸ்வாமிகளின் பூர்வாங்க வரலாறு களையும் அறிந்து வைத்திருந்தேன். இதுவே இந்நூலிற் கானமூலக் கதையும், கருவும். என்னுடைய ஆத்மீகதாகம் இன்னும் அடங்கவில்லை. ஞானவள்ளலைப் பற்றிய சிந்தனைகள் கொப்பளிக்கின்றன. கொப்பளித்தன. அந்தப் புனிதமான வாசனைகள் காற்றோடு கலந்து அந்தர்யாமியாய்ப் போகாமல் இருக்க இதுவே வழியென ஒரு உந்துசக்தி என்னை எழுது எனப்பணித்த போதெல்லாம் உறக்கம் இன்றி எழுதிய பொன்னெழுத்து க்களே இதுவரை வெளியான ஒவியங்கள். இவ்வெளியீட்டிலே இலைமறை காயாகக் காணப்படும் குற்றங்குறைகட்கு இந்த ஊழியனே முற்றமுழுக்கப் பொறுப்பாளி என்பதை வாசகர்கட்கு அப்பட்டமாகவே சொல்வது என் கடமை என உணர்கிறேன். அடுத்த பயணம் செவ்விதானால் அவை திருத்தப்படும் திருந்தும். திருத்துவான் திருமால்.
எனவே வெளியீட்டாளர்க்கும் படிப்பவர்கட்கும் எனது நன்றி.
உங்கள் பிரார்த்தனைகள் எதற்காக இன்று அமையவேண்டுமோ அதற்காகப் பிரார்த்தியுங்கள் என விநயமாக வேண்டும்.
தெரியேன் பாலகனாய்ப், பலதீமைகள் செய்துமிட்டேன் பெரியே னாயினபின் பிறர்க்கேயுழைத் தேழையானேன் கரிசேர் பூம் பொழில்சூழ், கனமாமலை வேங்கடவா அரியே! வந்தடைந்தேன் அடியேனையாட் கொண்டருளே.
ஆழ்கடலான் 40, பேராதனைவிதி, (முருகவே பரமநாதனி) கண்டி
30.01.1996
SSLiLTLLMTeJsSiTLLTLCeSLTSMLSiLLLTLLLLLTMLMeSTLLLLLTLLLLLTLLJLTLLMLLLTLLTMLMLeLLLMLLTLLTLMe
() ~سے البہ
(ii)

Page 7
சிவமயம்
பதிப்புரை
11/6, றுபன் பீரிஸ் மாவத்தை, த. துரைராசா (செயலாளர்)
களுபோவில, தெகிவளை. திருவாசகம் பூரீ சபாரத்தின சுவாமிகள்
தொண்டர் சபை.
“ஞானத்தந்தை” எனும் இந்த ஞானக்களஞ்சியம் வெளிவருவது எல்லாம் வல்ல இறைவனது கருணையும், திருமிகு சுவாமி சபாரத்தின அடிகளாரின் ஆத்மானுபூதியின் பிரவாகமும், லக்ஷமி அச்சகத்தின் உரிமையாளர் திரு.வே.திருநீலகண்டன் அவர்களது சிவதரும சிந்தையுமே என்றால் அது மிகையாகாது. "அனுபவம்” என்பது பிறருக்கு வழங்கப்படும் பொழுது அது அறிவு வழங்கல் ஆகின்றது. எல்லோருக்கும் எல்லா அனுபவங்களையும் பெறுதல் அரிது. அதிலும் அநுபூதி மகான்களது ஞானானுபவம் அனைவர்க்கும் புரிந்து கொள்ளும் தகைமையதல்ல. உலக மாந்தரிடையே சிற்சில ஞானிகள் அவதரித்தார்கள். அவர்களது தீட்சண்யமிக்க சிந்தனைகள் என்றும், எல்லோருக்கும், எக்காலத்திற்கும் உகந்ததாகவும், ஏற்புடையதாகவும், பொருந்தியமைவதாகவும் விளங்குகின்றன.
திருநாவுக்கரசு நாயனார், “ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள்; ஞானத்தால் தொழுவேன் உனை நானல்லேன்” என்று திருமுறையில் அருளுகின்றார். “சிக்கெனப் பிடித்தேன்” என்பது மணிவாசகம். அடியவர்கள் இறைவனைச் சிக்கெனப் பிடித்து அவனை முழுவதும் அனுபவிக்க விரும்புகின்றனர். பூரீமத் சபாரத்தின அடிகள் தென்னாடுடைய சிவனையே இறைஞ்சியனுபவித்துப் பேரின்பத்துடன் உறவாடியிருந்தவர். அவர் உலகுக்களித்த அருளமுதம் “திருவாசகத் தேன் பற்றிய விளக்க விரிவுரை” அது இன்று “ஞானத்தந்தை ” எனும் இந்நூலினாலே பிரபலப்படுகிறது; ஒளிவீசுகிறது.
இருப்பதைக் கொடுப்பது என்பது ஒர் அரிய செயல். அதிலும் ஞானச்சிந்தனைகளை உலகுக்கு வழங்குவது பெரிதும் புண்ணியம் நல்குவது. சிந்தனை வளம் நிறைந்த கட்டுரைகளையும், கருத்துக்களையும் தாங்கி வெளிவருகின்றது இந்நூல். நாம் எதிர்பார்த்ததனை விடவும் மிகமிகப் பெருமதிப்பும், மாண்புமுடையதாக மிளிரும் வகையில் பிரசுரமாகியுள்ளமை கண்டு ஞானத்தந்தையின் “ஞானவீச்சு” பற்றி வியக் காதிருக்க முடியாதுள்ளது. மகான்களது சிந்தனை, சொல், செயல், உபதேசம்
(iii)

அனைத்தும் பிரபஞ்சத்தைத் தூய்மை செய்வதல்லவா? அதற்கும் ழரீமத். சபாரத்தின சுவாமிகள் விதிவிலக்கல்ல. அவரது உள்ளத்தின் ஞான வெளிப்பாடும் அறிவுப்பெருங்கனலும் பீறிட்டுப்பாயும் தேனருவியே இந்நூல்; ஞானானந்த சித்தாந்தச் செழும்புதையல்.
எதை? எப்போது? அச்சிட்டு வெளியிட வேண்டும் என்று துணிவதே தனித்துவமான ஞானமாகும். அதாவது தமிழினமும், சைவசமயத்தவர்களும் செய்வதறியாது திகைக்கும் துன்பச் சூழலிலே மன அமைதியும், விடிவும், வாழ்வில் நம்பிக்கையையும் தரும் திருவாசகம் பற்றியும் அத்திருவாசக அமுதப்பெருங்கடலைக் கலக்கிய திருக்கேதீச்சரம் பூரீமத் சபாரத்தின சுவாமிகளையும் கலங்கரை விளக்காகக் காட்டி நிற்கின்றார். திரு.வே. திருநீலகண்டன் அவர்கள் அன்பர்களது தெய்வீகப்பணி போற்றுதற்குரியது. இந்நூலை அச்சிட்டு வெளியிடும் பெரும் பேறு தவப்பேறே. வாழ்க.
நிலையான திருவாசகம் பிறப்பறுக்க வழிகூறுகின்றது. உலகநிலையாமையை எடுத்தியம்புகின்றது. பிறவிப் பெருங்கடலை நீந்துவதற்குகந்த பற்றுக்கோடு திருவாசகம். திருவாசகம் ஐம்பத்தொரு திருப்பதிகங்களுடன் திகழ்கிறது. அறுநூற்றி ஐம்பத்தாறு பாடல்களைக் கொண்டது. மாயாதத்துவம், முப்பொருளுண்மை, மும்மலங்கள், வேதாந்த, ஆகம, சித்தாந்தத் தெளிவுகளனைத்தையும் திருவாசகமெங்கும் பரக்கக் காணலாம். நாயக நாயகி பாவத்தின் கொடுமுடிதிருவாசகம். வேதத்திலும் உயர்ந்தது. நமச்சிவாய வாழ்க என்பது மந்திரமொழி. உச்சரிப்பில் நமச்சிவாய என்பதே சைவசித்தாந்த வடமொழிப் புணர்ச்சித் தத்துவ விதியென்பார் பணிடிதர் ஏழாலை மு.கந்தையா பி.ஏ. அவர்கள். “நமப்பார்வதிபதயே” என்பதுபோலவே "நமச்சிவாய வாழ்க" என்பதுமாகும். தெய்வநினைப்பு நெறி தமிழரிடையேதான். ஏன் தமிழிலே தான் தோன்றியது என்ற பொருளிலே “தென்னாடுடைய சிவனே போற்றி, என்னாட்டவர்களுக்குமிறைவா போற்றி” என்கின்றார் மணிவாசகர். இத்தகு கருத்துக்களையெல்லாம் “ஞானத்தந்தை” என்னும் இந்நூலிலே நயம்பட, சிறப்புற எடுத்தாண்டு எழுதியுள்ளனர் இலங்கையின் ஞானப்பரம்பரையினர்.
அருளாளா, பெரியார், கவிஞர் முருக.வே.பரமநாதன் அவர்கள் உள்ளத்தில் உறையும் தெய்வம் பூரீமத் சபாரத்தின அடிகள். அவரது சொற்கள் ஒவ்வொன்றும் அனுபவப்பிழிவு. வாசிக்கும் தோறும் உணர்வு நலன் பெருக்குகின்ற தன்மையிலமைவது. இத்தொகுப்பில் இடம்பெறும் தகைமையும், பெருமையும், அருட்சுவை நிரம்பிய கருத்துக்கள் பிரபஞ்சமக்களது இரத்தத்துடன் ஒன்றித்துச் சாத்வீக நற்குணத்தையும், நற்செய்கையையும் விளக்க வேண்டும் என்பது எம்பேரவா. அத்தகு பயன்பாட்டை இந்நூல் வழங்கும் என்பதிலே சிறிதும் ஐயமில்லை.
(iv)

Page 8
உள்ளத்தால் செம்மைசான்ற பெரியார்களது திருவுள்ளத்திலே உதித்த சமயக்கருத்துக்களும், தத்துவங்களும் இந்நூலைப் பெரிதும் அரிேசெய்து நிற்கின்றன. நயினை பூரீ நாகபூஷணி அம்மன் தேவஸ்தானத்தின் பரம்பரை அறங்காவலரும், “செஞ்சொற்கொண்டல்”, "நவரசக் கலைஞானி”, “சைவசித்தாந்த பண்டிதர்”, “சொற்பேராளி", "இன்னிசைச் சொல் வேந்தன்", “அருள் மொழிச் செல்வர்”, "மனிமொழிவாரி","வாகீசகலாநிதி" என்னும் பல கெளரவ விருதுகளையும் GLpdren தமிழ் விரிவுரையாளர் கனகசபாபதி நாகேஸ்வரன் எம். ஏ அலிர்கள் சுவைபட எழுதியுள்ள "பக்தனும் பரமனும்” என்னும் கட்டுரை இந்நூலுக்குப் பெரும் தகைமையையளித்துள்ளது.
தேனருவி உயர்திரு வே.சிவஞானம் அவர்கள் திருவாசகத்தை *இருகப்பாடும் திருவாயார். நெக்குருக்கும் திருவாசக அனுபவத்தின் *வயை நமக்கும் எழுத்தில் வடித்துத் தந்து சிவப்பணி புரிந்துள்ளமை இந்நூலின் மற்றோர் தனிச்சிறப்பு எனலாம்.திருவாசக மடத்தின் தலைவர் உ-புர்திரு.சி.சரவணமுத்துச் சுவாமிகள் அருளியுள்ள வசனங்கள் தத்துவஞான முத்துக்களாய் அமைந்து சிறந்துள்ளன. தோற்றமும், திருவும், STSனமும், அழகும், அன்பும், குழைவும் ஒருசேர விளங்கும் இப்பெரியாரின் எழுத்துக்களினூடே அவரின் அருட்திருவையும் நினைக்கத் தோன்றும் "த்ேதுவளம் நீங்கள் காணத்தக்கதொரு அருளணுபவமாகலாம்.
சைவப்பெரியார் வே.சதாசிவம் அவர்கள் பல கருத்துக்களைத் தொகுத்துள்ளார்கள். “பழுத்த அனுபவம்” என்று பேசுவார்களே! அவற்றுக்கு *-இாரணமாகத் திகழ்வன இவரது கருத்துக்கள்.இன்னும் பல அற்புத முத்துக் குவியல்களையெல்லாம் “ஞானத்தந்தை” என்னும் இந்நூல் தன்னகத்தே கொண்டு மிளிர்கின்றது. மனிதமனத்தின் வேதனை தீர, துன்பம்விலக, அன்புபெருக, பண்பு வளர, பணிவுண்டாக, பக்தர்களின் பெயர் விளங்க, பரமனான சிவனின் நினைப்பே என்றென்றும் நிலவ வெளிவருவது “ஞானத்தந்தை” என்னும் இந்தச் சிவம் பெருக்கும் நூல்.
இவ்வரிய பக்திப் பனுவலுக்குப் பொருத்தமான மதிப்புரை எழுதி ?-$விய பேராதனைப்பல்கலைக் கழகத்தமிழ் விரிவுரையாளர் உயர் திரு வி. ஸ்கேஸ்வரன் அவர்கட்கும் எமது நன்றி என்றும் உரித்து.
உலகில் வாழ்வில் நடப்பவை, நிகழ்பவை அனைத்தும் சிவனது திTSண்டவமே. திருவருட்பயன் இதனை விளக்கும். பொருள்முதல்வாதம் கோலோச் சும் அறிவுடையார் மத்தியில் ஆன்மீகம் சொல்லும் ?-1ற்கைத்தரும் பொற்கை” எந்தளவு தூரம் கணிப்பைப் பெறும? எனினும் மிலி இன்பமும், தெளிந்த அறிவும் ஞானவழிகாட்டுதலும் கொண்டவர்களது STSனப்பாதையே பெரும்பான்மையோரை நன்னெறி காட்டி வழிநடத்தும். STSனவான்கள், சித்தமழகியார், சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு
(v)

சிவஞானம் பிறவியிலேயே வாய்க்கப் பெற்றவர்கள். இவர்கள் கலங்குவதுமில்லை, பிறரைக் கலக்கியடிப்பதுமில்லை. ஞானிகளுக்குரிய நிலை தெளிவு. தெய்வசங்கற்பம் என்ற உறுதிப்பாடு. அதுவே திருவாசகமெனும் உயரிய ஞானப்பனுவல் கற்பிப்பது. மணிவாசகரே பணமுதல்வாதிகளைச் சாடும அருளமைச்சர். இறையின்பமே பெரிது என உணர்த்திய உத்தம தெய்வச்சான்றோன். ஆணவம் அகற்றும் அருள்வடிவே பரமாசாரிய நிலை. எனவே “ஞானத்தந்தை” எனும் இந்நூலைக் கற்றால் பணம் பெரிதல்ல, பதவிபெரிதல்ல, அகந்தை, ஆணவம் அடங்கவேண்டியவை. பதிஞானமே உண்மையானது; பேரின்ப நிலையையே மாந்தர் சேர்க்க வேண்டியது என்னும் தெளிவு பிறக்கும் என்பது உறுதி.இந்நூல் வெளியீட்டின் பயனும் இ.தே.
AeAeAeAeAeAeAeAeAeAeAeAeAeAeAeAeAeAeAeAeAeAeueAeAeAeAeAeAeeAeAeAeAeueAeAeAeAeAeAeAeAe
மதிப்புரை
“சிவபூமி” எனச் சிறப்பித்துப் பேசப்படுகின்ற ஈழநாடு தொன்மையான சமய மரபுகளைத் தன்னகத்தே கொண்டது. ஆதிகாலந்தொடக்கம் இம்மரபு இங்கு வேர் கொண்டிருந்தது என்பதற்கு வரலாற்று மூலாதாரங்கள் அளவிறந்தவை உண்டு. அருள்பாலிக்கும் ஆலயங்களும், அதனைச் சார்ந்த கலாச்சாரங்களும், மக்கள் வாழ்வுடன் ஒன்றிணைந்த சமயவிழுமியங்களும், அனுபூதி பெற்ற அருளாளர்களும், அவர்களது ஞானபரம்பரையினரும், சமய இலக்கிய வெளிப்பாடுகளும் இந்துமதத்தின் அடிநாதமாக விளங்கி வந்தமை ஈழத்து இந்துப் பாரம்பரியத்துக்குரிய சிறப்பம்சங்களாகும்.
ஆலயச் சூழல்களிலும், பிற இடங்களிலும் “திருமடங்கள்” அமைத்துச் சமயத்தொண்டும், சமூகத்தொண்டும் ஆற்றும் மரபும் இந்து மதத்துக்கு முண்டு. ஞானசம்பந்தர் பாண்டிநாட்டிற் தங்கியருந்த திருமடமும், சித்தவடமாடமடமும், அப்பூதியடிகள் திருமடங்கள் அமைத்ததும் தேவார காலத்துச்சான்றுகள். பின்னர் அகப்புறச் சந்தனாசாரியர்களது மரபுகளில் மடாலயங்கள் அமைத்ததும் அவை சமய தத்துவத் தொண்டுகள் புரிந்ததும் நாம் அறிந்ததே. இன்றும், தமிழகத்திற் பல மடங்கள் அமைந்துள்ளன. அவை சமயப்பணியையும் சமூகப் பணியையும் ஒருநேரச் செய்து வருகின்றன. இத்தகைய தொரு பராம்பரியம் ஈழநாட்டிற்கும் உண்டு. மாவிட்டபுரம் முதலாகக் கதிர்காமம் வரையாக இவ்வாறான மடங்கள் அமைந்திருந்தன, அமைந்துள்ளன. く
(vi)

Page 9
ஈழநாட்டிலே வங்கம்மலிக்கின்ற கடல்மாதோட்ட நன்நகரிலே பாலாவியின் கரையில் அமைந்துள்ள கேதீச்சரம் ஈழநாட்டின் மிகத்தொன்மையான ஈச்சரங்களில் ஒன்று. அவ்வாலயத்தின் சூழலிலே அருள் வளர்க்கும் மடாலயங்கள் பலநிறைந்துள்ளன. அவற்றுள் ஒன்று திருவாசக மடம், இம்மடத்தினை அமைத்த தலைவர் சிவன்கழலே சிந்திப்பதுடன் அமையாது திருவாசகம் என்னும் தேனிலும் ஒன்றித்தவர். அதனால் ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கும் உலப்பிலா ஆனந்தத் தேனினைப்படித்தும், சிந்தித்தும், வியாக்கியானம் செய்தும்,உபதேசித்தும் ஈறிலாப்பதங்கள் யாவையும் கடந்த இன்பம் பெற்றார். ஆகையினால் அவர் "திருவாசக சுவாமிகள்” என்ற பெரும் பெயர்ப் பேறுபெற்றார்.
இத்தகைய சிறப்புகள் நிரம்பிய திருவாசக சுவாமிகளைத் தமது ஞானகுருவாக வரித்துக் கொண்டவர் முருக.வே.பரமநாதன் அவர்கள. சிவதீட்சைகள் எழினுள் ஒன்றான “வாசகதீட்சை” யானது இவருக்குத் திருவாச தீட்சையாகக் கிடைத்தது. இதனால் ஆனந்த வெள்ளத்துட் திளைத்த திரு. பரமநாதன் அவர்கள் தமது ஞானகுருவின் அருளாளு மையையும், திருவாசக ஆளுமையையும், சமூகத் தொண்டின் சிறப்புகளையும் மனங்கொண்டு பலதலையங்கங்களில் திருவாசக சுவாமிகள் பற்றிப் பேசுகின்றார்.
நூலாசிரியர் உடைய கட்டுரைகளை வாசிக்கும்போது அவருள்ளே சுடர் விடும் குருபக்தியினையும், குருவினது அரிய திருவாசக விளக்கங்களாற் கிடைத்த "யார் பெறுவார் அச்சோவே" என்ற ஆனந்தக் களிப்பையும் ஒருசேரக் காணலாம். மேலாக நூலாசிரியது பரந்த இலக்கியப் பரிச்சயமும், புலமையும் வெளிப்படுவதையும் அறியலாம். தம் குருநாதனைக் கூறவந்த ஒவ்வொரு தலைப்பிலும் ஆசிரியர் தமது ஆளுமையையும் நிலை நிறுத்தியுள்ளார்.
நூலாசிரியர் அனுபவம் வாய்ந்த எழுத்தாளர், பத்தராய்ப் பரமனடி பணிதல் மாத்திரமன்றிச, செடியாய வல்வினைகள் தீர்க்கும் பெருமா ளையும், உள்ளத்திருத்தியவர் பல நூல்களின் ஆசிரியர், அவரது அனுபவத்தி லிருந்து தமது ஞானகுருவின் வரலாறும் வெளிவருகின்றது. இவ்வாறான முயற்சிகள் இன்றைக்கும் எழேழ் பிறவிக்கும் அவசியமானவை. திருக்கேதீஸ்வரத்தில் “தேன் பொந்து” தேடிய நாவலரது பணி இனிவரும் சமூகத்துக்கும் ஏற்படலாம். எனவே இத்தகைய சூழலை அறிந்து ஆசிரியர் எழுதியிருக்கும் இந்நூல் இந்து மக்கள் யாவரும் ஆவணப்படுத்தி வைத்திருக்க வேண்டிய தொன்றாகும்.
100 3, 1996 தமிழ்த்துறை வ. மகேஸ்வரன் பேராதனைப் பல்கலைக்கழகம், விரிவுரையாளர்
பேராதனை.
(vii)

திருக்கேதீச்சரத்தைத் தேடி பண் சுமந்த பாட்டினிற்கும் பாவை தந்த பிட்டினிற்கும் மண் சுமந்த சோதி மணிமுடியும் - தமிழ்விடுதூது நாற்பதுகளும் ஐம்பதுகளும் சங்கமமான காலகட்டம். சரியாக நாற்பத்தாறு ஆண்டுகட்குமுன்பு அடியேன் ஆசிரியனாய்க் கடமையாற்றிய வேளை கண்டி மாநகரம் எழிலோடு எம்மை வளமாக்கி வாழ்வளித்த பூமி அதை எப்படி மறப்பது. கட்டுக்கலைக் கற்றளியில் எழுந்தருளி அருள்மாரி பொழியும் செல்வ விநாயகன் அருளாற் பல சான்றோர்களின் அறிமுகம் கிட்டியது. இன்றும் அப்பெருமானின் சந்நிதானம் அடைந்து, வழிபடும் வாய்ப்பும், வசதியும் எம்மோடு கலந்து இருப்பதும் நாம் அல்ல. எம்மைஈன்ற அன்னையும், அப்பனும் ஈட்டிய பெருந்தவப்பேறே.
நம் மோடு ஒட்டிஉறவாடிய மாமனிதர்களில் ஒருவர் தென்புலோலியூர்ச் சிற்றம்பலம் கிருஷ்ணபிள்ளை அவர்கள். குகனொடும் ஐவரானோம் என்ற கம்பன் பாடலுக்கு இலக்கிதம் அவரேதான். பலராமனின் இளங்கன்று கண்ணன் எனப்பாடினாள் கோதை, இராமனின் அனுஷன் இளைய பெருமாள். அடியேனை அப்பெருமகனார் அன்போடு தம்பி, பரம் என உள்ளத்தால் அழைப்பார். யானும் ஆராமையோடு அண்ணை, அண்ணா எனப் பணிவுடன் கூப்பிடுவேன். அவ்வளவுதான். அவர் திருவுடைய தெள்ளியார்.
அவருக்கு ஒரு தமையன் வெற்றிவேலு. அவர் தன்பெற்றோரையும், உடன்பிறப்புகளையும் விட்டுப்பிரிந்து நீண்டகாலம்,திரும்பிவரவேயில்லை எல்லோர்க்கும் ஒரு புதிர். எதிர்பாராமல் அவர் திருக்கேதீஸ்வரத்தில் நடமாடுவதாக ஒரு செய்தி கிடைத்தது அண்ணைக்கு. நானும் அண்ணையும் பாடல்பெற்ற அப்பழம் பெரும்பதியை நோக்கிப்புறப்பட்டோம். அங்கே திருப்பணிக் கைங்கரியங்கள் துரிதமாய் நடந்து கொண்டிருந்தவேளை. நாம் போய்ச்சேர மத்தியானம் ஆயிற்று. குறிப்புகளை விளக்கி அந்த அங்க அடையாளம் உள்ளவரை அந்த வளாகத்தில் கண்டீர்களா என விசாரித்தோம். எல்லோரும் கெளரிவாசல் மடத்தில் ஒருவர் இருக்கிறார். அவரின் பெயர் சபாரத்தினசாமி. அவர் இந்த இடத்திற்கு ரொம்பப் பழமையானவர். அவரிடம் விசாரித்தால் தெரியும் என்றார்கள். அங்கே போய்க் கேட்டோம். அவர் வயலுக்குப் போய்விட்டார் வரும்நேரம் நெருங்கிவிட்டது, "இப்ப வருவார்” என்று அன்புடன் வரவேற்று ஆசனத்தில் அமரச் சொன்னார்கள். சிறிதுநேரம் பார்த்தோம். வரவை நோக்கி காணவில்லை. எனவே வெளியே சென்று அரசநிழலில் அமர்ந்து விச்சிராந்தியாய்ப் பேசிக்கொண்டிருந்திேக்ாஜர்களில்,இருந்து ԶԱbg நறுமணம் எங்கும் ஜமாய்த்துக் கொண்டிருந்தது. அமைதி 'நீலவீt அப்பரவெளி நமக்கு மிக்க இதமாயும் இருந்தது.
1.

Page 10
இரட்டைமாட்டு வண்டியொன்று வந்து அரசின் கீழ் நின்றது. வண்டியிலே சாமான்கள். ஆசனப்பலகையில் இருந்து இறங்கினவர். “என்னிடமா வந்தீர்கள்?” எனத் தொலைவில் உணர்வோடு கேட்டார். ஒம் என்றோம். இடுப்பிலே வெண்மையான எட்டுமுழ வேட்டி, மடியாய்க் கட்டி இருந்தார். தலையிலே தலைப்பா. மடியிலே ஏதோ சரை. (வெற்றிலைச் சரை என்பது பின்பு தான் தெரிந்தது) மாடுகளை அவிழ்த்து வேலியிற் கட்டிக்கொண்டே உள்ளே போய் இருங்கள், வருகிறேன் என்றார். மாடுகளுக்குத் தண்ணிர்காட்டி, சாமான்களையும் இறக்கிக் கொட்டிலிலே வைத்தார். கை கால் முகம் அலம்பி, விபூதி அணிந்து கொண்டு இரு வெள்ளித்தம்ளர்களில் மோருடன் வந்து எம்மை அருந்தும்படி சொன்னார். மத்தியான உணவு இங்கே சாப்பிடலாம் என்று கூறியபின், நீங்கள் வந்த விஷயம் என்ன என்று விசாரித்தார்.நாம் விபரமாக விளக்கிச் சொன்னோம். அப்படியான புதுஆளை நான் கண்டதில்லை. எதற்கும் இரண்டு கிழமை கழித்து வாருங்கள் என்று கூறிச் சாப்பாட்டிற்கு அழைத்தார். நாமும் ஆயத்தமானோம். சிறந்த உணவு பக்குவமாகப் பரிமாறப்பட்டது. உணவு அருந்தியதும், முன் இடைகழியில் ஒரு வாங்கிலில் அமர்ந்தோம். அவரும் வந்து ஒரு ஆசனத்தில் இருந்து அன்பாய் அளவளாவினார்.
அவர்களின் பெருந்தன்மையும், கருணையும், ஒளியும், தேசும், வசீகரமும், சால்பும் எம்மைப் பெரிதும் ஈர்த்தன. ஆனால் அவரை அளவிட நாம் யார்? அந்த ஞானப்பேழையின் உள்ளொளியும், நாவண்ணமும், வன்மையும் எம்மை மெய்மறக்கச் செய்தன. அவர் ஒரு பெரியவர் என்பதை அன்னாரின் நடைமுறைகள் படம் பிடித்துக்காட்டின. அன்றிரவு அங்கே தங்கி, மறுநாட்காலை பாலாவியில் நீராடி, கெளரீசரை வணங்கி வந்தோம். காலை ஆகாரம் சுடச்சுடக் கிடைத்தது. உத்தரவு பெற்று கண்டியை நோக்கிப் புறப்பட்டோம். சுவாமிகளின் ஆசியுடன்.
நாட்கள் ஓடின, மாசம் ஒன்று சொல்லாமலே ஒடிவிட்டது. தொடர்ந்தோம். எமதுதேடுதலை கேதீச்சரம் சென்றடைந்தோம். மோட்டார் வண்டி ஒன்றில் இன்னுமாரோ கூட வந்தவர். வேலாயுதண்ணன் என்ற நினைவு, ஸ்வாமிகளை சந்தித்தோம். அந்த வட்டாரத்திலே அப்படி ஒருவர் இல்லை என்று பணிவுடன் சொன்னார்கள். அன்றிரவும் அப்புனிதபூமியிலே தங்கி, அவர்கள் வாக்கிலே திருவாசகம் கங்கைபோற் பிரவாகித்ததை அன்றுதான் கண்டு ஆரப்பருகினோம். நாம் மறுநாட் புறப்படும் போது வெறுங்கையோடு புறப்படவில்லை. திருவாசகச் சுமையுடனே கண்டி சேர்ந்தோம். கேதீஸ்வரத்தில் நமக்கு நன்கு பரீச்சயமான இலட்சுமணன் என்னும் ஐயரின் உபசாரம் இன்றும் நெஞ்சினில் இருக்கிறது. குருவித்தலைப் பாகற்காய்க் குழம்புநாவிலே சொட்டுகிறது.
சில வருடங்கள் காற்றாய்ப் பறந்தன. நான் புகுந்தமண் செழிப்பான செம்பாட்டுப் பாங்கான ஊரெழு, எமது துணைவியார் பேர்பெற்ற சரவண
2

முத்துப் புலவரின் மருமகளின் மகள். அவருடைய சொந்த மச்சாள் முறையானவர் சோதியக்கா. இவர் ஒரு இல்லற ஞானி. அவருக்குச் சபாரத்தினம் சுவாமிகளில் மிக்க ஈடுபாடு. என்னிடம் அவர்களைப் பற்றி அடிக்கடி எடுத்துச் சொல்வார். சோதியக்கா வீட்டுக்கு சுவாமிகள் அடிக்கடி வருகை தருவார்கள். ஒரு தினம் ஸ்வாமிகளை சோதியக்கா வீட்டிற் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. இவர்தான் “நான் சொன்ன வாத்தியார்” என என்னை அறிமுகம் செய்தார். சுவாமிகள் என்னைத் தனது ஆசனத்திலேயே (நீண்டவாங்கு) இருக்கச் செய்து திருவாசகம் படிக்கும்படி பணித்தார்கள். அடியேன் கோயில் மூத்த திருப்பதிகத்தில் இருந்து பின்வரும் பாடல்களை மிகச் சிறப்பாகக் குழைவுடன் பாடினேன்.
அரைசே பொன்னம்பலத்தாடும் அமுதே
என்றுன் அருள்நோக்கி இரைதேர் கொக்கொத் திரவுபகல் ஏசற்
றிருந்தே வேசற்றேன் கரைசேர் அடியார் களிசிறப்பக் காட்சி
கொடுத்துன் அடியேன்பால் பிரைசேர் பாலின் நெய்போலப் பேசா
திருந்தால் ஏசாரோ.
அருளா தொழிந்தால் அடியேனை அஞ்சேல்
என்பார் ஆர்இங்குப் பொருளா என்னைப் புகுந்தாண்ட பொன்னே
பொன்னம் பலக்கூத்தா மருளார் மனத்தோடு உனைப்பிரிந்து வருந்து
வேனை வாவென்றுன் தெருளார் கூட்டம் காட்டாயேல் செத்தே
போனால் சிரியாரோ.
நிறையத் திருவாசங்கள் இருக்க இவ்விரண்டு பாடல்களை மட்டும் தெரிந்தெடுத்துப் பாடிய தேன் பிள்ளை என்று என்னை வினவினார்கள். எல்லாப்பாடல்களும் என் நெஞ்சைக் கொள்ளை கொண்ட பாடல்கள்தான். இவ்விருவாசங்களின் அழுத்தம் என் நெஞ்சிற் படிந்து விட்டன. அதற்கான காரணங்களையும் கூறின்ேன். சுவாமிகள் என்னை ஆட்கொண்டு ஆசிவழங்கினார்கள். அன்றுதொட்டு அந்தச் சிவநாத சித்தரை நிழல்போலத்
இவ்வரிய சந்திப்புகளால் ஏழையேன் கேதீச்சரத்தைத் தேடி நாடி ஒடினேன். குருதேவர் இருக்கும் இடங்களில் எல்லாம் நானும் இருப்பேன். அவ்வொன்று கூடலிற் திருவாசகம் கமழும், மறுவன்புலோ, நல்லூர், ஆனந்தா ஆச்சிரமம், சோதியக்காவீடு, துரைராசா இல்லம் இவ்வண்ணம்
3

Page 11
ஸ்வாமிகள் எங்கெங்கே வருகை தருவார்களோ அங்கெல்லாம் சென்று திருவாசக ஞானத்தைப் பருகுவேன். என் நெஞ்சும் வாழ்வும் ஆத்மீக மயமானது. வாசகம் உயிர்தொறும் ஊடுருவிப்பாய்ந்தது இப்புத்துணர்வே ஞானத்தந்தையின் பெரும்புகழை அழியாத ஒவியமாகத் தீட்டித் தமிழன்னையின் அணிகலன்களில் ஒன்றாக வார்த்து வடித்தது. எல்லாம் குருவருளும் திருவருளும் தான். “வந்த வேலையைப் பார்” என்ற சற்குரு நாதனின் ஆப்த வாக்கியம். எவ்வளவு விசாலமானது. ஆழமானது, அழகானது, அர்த்த புஷ்டியுள்ளது.
ஞானத்தந்தையின் திருவடிகளே சரணாலயம். என்பாலைப் பிறப்பறுத்திங் கிமையவர்க்கும் அறியவொண்ணாத்
தென்பாலைத் திருப்பெருந் துறையுறையுஞ் சிவபெருமான் அன்பால் நீ அகம் நெகவே புகுந்தருளி ஆட்கொண்ட
தென்பாலே நோக்கியவாறு அன்றே எம் பெருமானே - திருவேசறவு என்புள் ளுருக்கி இருவினையை ஈடழித்துத்
துன்பங்களைந்து துவந்துவங்கள் தூய்மை செய்து முன்புள்ளவற்றை முழுதழிய உள்புகுந்த
அன்பின் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே - குலாப்பத்து. (துவந்துவம் - பழைய பற்று)
மணிக் கொடி நீழலில்
ஏதஷ்பூர் தாங்காத வாதவூர் எங்கோவின் இன்சொல் மணி அணியும் பதம்
S SS SSS S SSS S LLLLLL LLSLCLS LLLSS LLLLLLLrLLL LSL0SL LL SLS LL0 0LL0LLLLSSSL SLLLLLLSLL 0 LL ஆயதுயர மாவகஞ்சேர் மாணிக்க வாசகருக் காய்க்குதிரைச் சேவகன் போல் வீதிதனிற் சென்றனையே - வள்ளலார்
ஒரு நாட்டின் தேசியக்கொடி பட்டொளி விட்டுப் பறக்கும்வேளை ஒவ்வொரு பிரஜையின் உள்ளமும் பூரிப்படைகிறது. நாடு மட்டும் என்ன பிறதேசங்களும் அதற்கு அதி கெளரவம் கொடுக்கின்றன. இதை உணர்த்தவே பாரதியார்.
"தாயின் மணிக்கொடி பாரீர் - அதைத்
தாழ்ந்து பணிந்து வணங்கிடவாரீர்” என்று அறைகூவினார். நாட்டுக்கு மட்டுமன்றி மொழி, மதம், கலை, கலாச்சாரம், அரசு, விளையாட்டு, தொழில் இயக்கம், கட்சி, சமாதானம், துக்கம், மகிழ்வு போன்ற பல்திறப்பட்ட அமைப்புகட்கும் கொடியுண்டு.
4

மூவேந்தர்கள், நூற்றுவர்கள், பாண்டவர்கள், இராமன், இராவணன் எல்லோருமே கொடியுடை மன்னவர்களே. கொடிக்கு அவ்வளவு மெளசு. அரைக்கம்பத்திலே கொடி பறந்தாற்கூட ஒரு செய்தியின் அடையாளமாகும். இலக்கியங்களிலே கொடிமேல் சம்பவங்களை ஏற்றிக் கவிபுனைவார்கள். முருகனுக்குச் சேவற்கொடி, சிவனுக்கு நந்திக்கொடி என்று சமயநூல்கள் கூறும். ஸோடச உபசாரங்களிற் கொடியும் ஒன்று மாணிக்கவாசகர் தசாங்கத்திற் கொடியின் பெருமை பேசுகிறார். இவ்வண்ணம்,
சோலைப் பசுங்கிளியே தூநீர்ப் பெருந்துறைக்கோன் கோலம் பொலியும் கொடிகூறாய் - சாலவும் ஏதிலார் துண்ணென்ன மேல்விளங்கி ஏர்காட்டும் கோதிலா ஏறாங் கொடி. இந்த சகாப்தத்து இலக்கிய விமர்சகர்கள் மணிக்கொடி எழுத்தாளர்களுக்கு ஒரு காத்திரமும், கனதியும் கொடுப்பதும், இலக்கிய வரலாற்று ஏடுகள் அக்கால கட்டத்தைப் போற்றுவதும் கண்கூடு. இந்த வழியிலே திருவாசகம் மாதோட்ட நன்னகரில் பட்டொளி விட்டுப்பறந்தது. மணல் ஆறுதான் மன்னார் என்றாயிற்று. இதையடுத்த மாதோட்டத்தில் ஒரு ஈஸ்வரம், அதுவே திருக்கேதீச்சரம். இங்கேயோர் சிறுகுடில் அமைத்து ஆடம்பரமும், விளம்பரமும் இன்றி வாழ்ந்ததபோதனர் திருவாசக சுவாமிகள் வாசகத்தையே ஒதியுணர்ந்து, மெய்யுணர்வு பெற்ற அருளாளரின் ஆழ்ந்த சிந்தனைகளும், சாதனைகளும் திருவாகம் ஒன்றிலே குவிந்து இருந்தது. திருவாசம் ஒன்றே ஆத்மீக சாதனைக்கு ஊன்றுகோல் என்பதை உணர்ந்து உணர்த்திய செம்மல் அவர்கள்.
வன்பராய் முருடு, இரும்பு, கல், மரம் என்றெல்லாம் திருவாசகம் வர்ணிக்கும் மனதை மென்கனியாக்க வல்லது திருவாசகம் ஒன்றேதான் என்பதை யாவர்க்கும் இடித்துரைத்தார். நாயின் மேற்பொற்றவிசிடல், நாய்க்குத் தவிசிடல், நாய் சிவிகை ஏற்று வித்தல் என்றெல்லாம் வரும் பாசுரங்களையும், எறும்பிடை நாங்கூழ், ஆனைவெம்போரிற் குறுந்துாறு போன்ற பிரயோகங்களையும், தன் நுண்மான நுழை புலங் கொண்டும், இறை உணர்வு மூலமும் விளக்கினார்கள். இவ்வாறு எம்பெருமான் உணர்த்திய மாணிக்கமணிகளைக் கோவை செய்து மாலையாக்கி அணிந்த அவர்களின் திருவாசக நோக்கு ஒரு புதுமையானது, பழமையானது, பொதுமையானது, சிறப்பானது. அன்னாரின் மண்குடிசையிலே வாசகம் பட்டொளி விட்டுப் பறந்தது. அந்த மணிக்கொடியைத் தாழ்ந்து பணிந்து வணங்கியோர் பலர்.
சிந்தனைநின் தனக்காக்கி நாயினேன்தன் கண்ணிணைநின் திருப்பாதப் போதுக்காக்கி வந்தனையும் அம்மலர்க்கே யாக்கி வாக்குன் மணிவார்த்தைக் காக்கிஎன்று பாடிய அவரே.
5

Page 12
பேசும் பொருக் கிலக்கிதமாம் பேச்சிறந்த மாசில் மணியின் மணிவார்த்தை - பேசிப் பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல மருந்தினடி என்மனத்தே வைத்து என்று அருளிப்போந்தார்கள். ஜால் அடிக்கும் இரத்தினக்கற்கள் போன்று இறை ஒளிகாலும் திருவாசகம் தந்த வாதவூரரும் மாணிக்கவாசகர் என்று போற்றப்படுகிறார். சபாரத்தினம் என்னும் அருட் செல்வர் சென்ற பாதை ஒரு இராஜபாட்டை, அவரின் கொடியேற்ற நிழலிலே மெய்யன்பர்கள் இறையனுபவம் பெறுகிறார்கள். இது திருவாசகத்தாற் கிடைத்த பெரும் பேறு எனலாம்.
மத்துறு தண்தயிரிற் புலன் தீக்கதுவக் கலங்கி வித்துறு வேனை விடுதி கண்டாய் - திருவாசகம்.
ܛܒܐ- ܫܳܓܝܡܣܗ
பத்தாகிய தொண்டர்
பத்தாகிய தொண்டர்தொழு பாலாவியின் கரைமேல் செத்தாரெலும் பணிவான்திருக் கேதீச்சரத்தானே - சுந்தரர்
பத்தில னேனும் பணிந்தில னேனும்உன்
உயர்ந்த பைங்கழல் காணப் பித்தில னேனும் பிதற்றில னேனும்
பிறப்பறுப் பாய்எம் பெருமானே முத்தனையானே மணியனை யானே முதல்வனே முறையோ என்று எத்தனை யானும் யான் தொடர்ந்துன்னை
இனிப்பிரிந்து தாற்றேனே. - யாத்திரைப்பத்து / ஒன்பது ஒரு பூரண எண் இறைவன்பூரணன்,பரிபூரணன் தாயுமானார் “பரிபூரணானந்தமே” எனப்பாடியருளினார். பூரண எண்போலே இறைவன் ஒன்பதின் பெருக்கங்கள், கூட்டல்கள், குறைத்தல்கள், வகுத்தல்கள் எல்லாமே சேர்க்கும் போது விடை ஒன்பதே.
6
 

o + tb:
1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 + 8 + 9 = 45, 4 + 5 9
9 + 8 + 7 + 6 + 5 + 4 + 3 + 2 + 1 = 45, 4 + 5 - 9
9 x 9 = 81, 8 + 1 = 9, 12 x 9 = 108, 1 + 8 = 9, 6 x 9 = 54, 5 + 4 = 9
81 + 9 = 9, 162 + 9 = 18, 1 + 8 = 9, 6561 + 9 = 729, 7 + 2 + 9 = 18, 1 + 8 - 9 எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பது போல் ஒன்பதும் மாற்றமடையாத தானம். பிரபஞ்சத்தினின்றும் வேறாகாத இறைவனைப் போலே இவ்வெண்ணுக்கு மாற்றமே இல்லை. நவகோள், நவமணி, நவலோகம், நவரசம் ஒன்பதாலமைந்தவை. இவ்வண்ணமே பத்து என்னும் எண்ணும் எண் சோதிடத்தில். பத்துக்குத் தனியான விழுமியம் உண்டு. பூஜ்யத்தை நீக்கினால் ஒன்றேமிதம். ஒன்றே குலம் ஒருவனே தேவன். இது திருமூலர்வாக்கு. ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு என்பது பட்டினத்தார் வாக்கு ஒன்று பரம்பொருள் நாமதன் மக்கள். பாரதி கூற்று. திருமுறைகளைப் புரட்டினால் ஒன்றின் பேருண்மை மலையிலக்காகும். ஒன்று தான் இரண்டாவது ஒன்றில்லை. ஒன்று இறைவன், இரண்டவன் இன்னருள், பூஜ்யம் வெட்டவெளி. பூஜ்யத்தில் இருந்து இந்த இராச்சியத்தை ஆள்கிறான் இறைவன். எண்ணிலடங்காததை (INFINITY) அநந்தம் என்கிறோம்.அவ்வண்ணமே இறைதத்துவமும் வெறும்பாழ், முப்பாழும் பாழ் என்பர் மருதவாணர். எனவே பத்து என்பது குறியீடு மட்டுமல்ல. அன்பு, காதல், தேசம் என்றெல்லாம் (பத்தூர்=தலம்) பொருள்படும். எனவே திருநாலாயிரம், திருமுறைகள் பத்தாகிய தொண்டர் பற்றிப் பேசும் கருத்து யாது? இதை உணர்ந்து, உணர்த்திய பத்தாகிய தொண்டர்களிற் தவத்திரு சபாரத்தினம் அடிகளாரும் ஒருவர். பத்துக் கொல்லாம் அடியார் தம் செய்கைதானே - அப்பரடிகள் பத்துடையீர் ஈசன்பழவடியிர் பாங்குடையீர் பத்திலனேனும் பணிந்தில னேனும் - வாதவூரடிகள் பத்தாம் அடியார்க்கோர் பாங்கனுமாய் - நாவுக்கரசர் பத்தாகிய தொண்டர்தொழு பாலாவியின் கரைமேல் -ஆளுடைநம்பி பத்துடை யடியவர்க் கெளியவன் பிறர்க்கரிய வித்தகன் - சடகோபர்
பத்து - பக்தி, அன்பு, பழகியவர், வழிவழி இறைவனுக்குத் தொண்டு செய்யும் அடியவர். அப்பாலுமடிசார்ந்த அடியார்க்கு மடியேன் எனப்பேசியவர் வன்றொண்டர். தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே - மூதாட்டி மெய்யடியார்கள் விரைந்துவம்மின்-சேந்தனார். இவ்வண்ணமான பொருட் செறிவுடன் - இன்னும் சிறந்த அர்த்தமும் உண்டு என்று சிந்தித்தவர் திருவாசக சுவாமிகள்.
உயர்வற உயர்நலம் உடையவன் திருமால், மயர்வற மதிநலம் உடையவர்கள் ஆழ்வார்கள். ழரீமந் நாராயணனிலே ஆழ்ந்த பிரேமை உள்ளவர்கள் அவர்கள் பெருமாளும் அவ்வண்ணமே. இவ்வண்ணமே
7

Page 13
நாயன்மார்கள், அடியவர்கள், சாதுக்கள், தொண்டர்கள், துறவிகள் இறைவனிலே ஆழ்ந்த பக்தி உள்ளவர்கள். எல்லாருமே ஒவ்வொரு விதத்திற் தொண்டால் மேம்பட்டவர்களே. பக்தியால் பரந்தோர், மனதால் பணிந்தோர் எனவே பத்தாகிய தொண்டர் என்பதற்கு, புறஇலக்கணம் பத்து உடையவர் என்றும் பொருள் கொள்வர். அவ்வம்சங்கள் வருமாறு, 1. விபூதி உருத்திராட்சம் அணிதல், சிவசின்னங்களைப் போற்றுதல். 2. குருபக்தியாய் இருத்தல், குருவை வழிபடல், தொண்டு செய்தல்,
அவர் உபதேசங்களைப் பின்பற்றல் 3. பக்திப்பாடல்களைப் பாடுதல், பாராயணம் பண்ணுதல், திருமுறைகள்,
திருநாலாயிரம் ஒதுதல், அநுஸந்தித்தல் 4. ஐந்தெழுத்து, ஆறெழுத்து, எட்டெழுத்து, மந்திரங்களைச் செபித்தல் 5. பூஜை, ஆராதனை பண்ணுதல் உபகரித்தல் 6. சக்திக்கேற்றபடி தானதர்மம் செய்தல் 7. இறைவன் திருவிளையாடல்களைக் கேட்டல், திருமால் லீலைகளைப்
படித்தல், அறிதல். 8. திருக்கோயில்களைப் போற்றுதல், பராமரித்தல், பணி செய்தல், வலம்
வருதல. 9. பழ அடியார் கூட்டத்தை ஆதரித்தல், அவர்களுடன் இருந்து
g) 600T6) 600T600T6). 10.இறையடியவர்களை வணங்குதல், அறிவை வளர்த்தல், ஆஸ்ரமத்
தொண்டு செய்தல்.
இராவணன் சிவபக்தன், நாவுக்கரரும், ஞானசம்பந்தரும் பதிகந்தோறும் அவனைப்போற்றியுள்ளனர். பத்துத் தலைகளை உடையவன், பற்றுதலையும் உடையவன். அவன் திறமை நோக்கி பத்துத்தலை பேசப்படுகிறது. பத்துத்திசைகளை வென்றவன் பத்துத்திறமை மிக்கவன், பக்திஉடையவன் என்று பட்டியல் போடுவதற்கு மேலே அவன் 10 கலைகளிலும் வல்லவன். அவன் 10 விதமான பாண்டித்யம் நிறைந்தவன். அதனாலவன் பத்துக்கலைகளுக்கும் அதிபதியாக விளங்கினான்.
வைத்தியன், வைத்தியநிபுணன், ஆவியுலகத்தோடு பேசுபவன், சங்கீத மேதை ஒவியன், விண்ணிற் பறப்பவன், வானசாஸ்திரி, நிலவியலாளன், தேசியவாதி, கட்டிடக்கலை வல்லுனன். இவன் வாழ்ந்த தேசம் சிவபூமி, அதுவே இலங்கை இவனுமொரு பத்தாகிய தொண்டனே. அவன் மனைவி ஐந்து சிறந்த மங்கையரில் ஒருத்தி. அவளைப் பாடியவர் மாணிக்கவாசகர்,

ஏர்தரும் ஏழுலகேத்த எவ்வுரு
வும்தன் னுருவாய் ஆர்கலி சூழ்தென் னிலங்கை அழகமர்
வண்டோத ரிக்குப் பேரருளின்பமளித்த பெருந்துறை
மேய பிரானைச் சீரிய வாயாற் குயிலே தென்பாண்டி
நாடனைக் கூவாய் - குயிற்பத்து
திருக்கேதீஸ்வரத்தைப் பாடிய சுந்தரர் "பத்தாகிய தொண்டர் தொழு பாலாவி” எனப்பாடியதில் உள்ள பொருள் பொதிந்த அர்த்தத்தைத்தினமும் காத்தவர் திருவாசக சுவாமிகள். அவர்கள் பாலாவியின் கரையோரமாய் ஜாகை அமைத்துத் திருவாசத்துக்கென்றும் புதுப்புது பொருள் கண்டு சொல்வார்கள். அவருமோர் பத்தாகிய தொண்டர் அணியின் உறுப்பினரே. கேதீச்சரத்தில் அவர்கண்டு காட்டிய உண்மைகள் உள்ளத்தில் உறைப்பாய் நிற்பவை அவையே அம்மண்ணின் வாசனையும், சுவாஜியின் அவதார 6) ITU-60)6OTULDITLD.
"பக்தி செய்யடியரைப் பரம்பரத் துய்ப்பவன்”
- கீர்த்தித்திருஅகவல் -
لسۓ&
சாவாமல் கற்பதே கல்வி தன்னைப் பிறர் ஏவாமல் உண்பதே ஊண் - ஒளவையார்
வைணவ ஆச்சாரியர்களில் நாதமுனிக்கென்றே ஒர் தனிக்கியாதி உண்டு. நம்பியாண்டார் நம்பி திருமுறைகளைத்தேடி எடுத்தது போல, திருநாலாயிரத்தைத் திருக்குருகூரிற் பெற்று, தனது மருமக்களான கீழையகத்தாழ்வான், மேலையகத்தாழ்வான் என்பவர்களைக் கொண்டு, தமிழ்மறையான திவ்வியப்பிரபந்தத்திற்குச் சிறந்த பண்ணும் அமைப்பித்தார். நாதமுனிகளுடைய பேரர் ஆளவந்தார். பிஞ்சு வயதிலேயே அறிவுஜீவியாகத் திகழ்ந்தவர் இவருக்குயமுனைத் துறைவர். யமுன முநிவர் என்றெல்லாம் திருநாமங்கள் உண்டு. நெடுங்காலமாகப் பிறந்து பிறந்து, சம்ஸார சாகரத்தில் வீழாமல் மீள வழிகாட்டியவர். கரம் கூப்புதலின் இரகசியத்தைச்
9

Page 14
சொன்னவர் இவர், ஆளவந்தாரின் உபகாரத்தை உலகுக்குணர்த்தினார் ழரீவேதாந்த தேசிகர்.
நீளவந்தின்று விதிவகை யானினை வொன்றியநா மீளவந் தின்னும் வினையுடம் பொன்றி வீழ்ந்துழலா தாளவந்தாரென வென்றரு டந்து விளங்கியசீ ராளவந்தாரடி யோம்படி யோமினி யல்வழக்கே
அதிகார சங்கிரகம் - 5
கண்ணன் கழறொழக் கூப்பிய கையின் பெருமைதனை யெண்ணங் கடக்க வெமுனைத் துறைவ ரியம்புதலாற் றிண்ண மிதுவென்று தேறித் தெளிந்தபின் சின்மதியோர் பண்ணும் பணிதிகள் பாற்றிப் பழந்தொழில் பற்றினமே
அமிருதா சுவாதினி - 119
எல்லா நிலையிலும் சிறந்த முநிவர்கள், புலனை வென்று, ஆசைகளை முனிந்து, இரு நிலைகளையும் ஒன்றாக நோக்கி, உள்ளத்துறு பொருளை அகக்காட்சியிற் கண்டு தம்மனுபவங்களை மன்பதைமுன் நிவேதித்து, உய்திக்கு நெறி வகுத்தவர்கள் முநிவர்கள். அவர்களின் கையிலேதான் இவ்வுலகம் என்றவர் பொய்யாமொழி. அவர்களே நிறைமொழியாளர் மறைமொழிப் புலவர், புரவலர். இவ்வழியிலே சென்று தமது இறை அனுபவங்களை வெளிக்கொணர்ந்தவர்களில் ஒருவர் சபாரத்தினம் அவTகள.
திருவாதவூர்ச் செழுமறை முனிவராகிய மாணிக்கவாசகப் பெருந்தகையார் அருளிச் செய்த திருவாசம் என்னுந் திப்பிய தேனை உணர்ந்து, உள்ளக்கிளியில் இறைவன் உருவெழுதி உபாசனை புரிந்தவர் சுவாமிஜி அவர்கள். காரணம் எம்பெருமானே மாணிக்கவாசகன் என்று திருநாமம் வழங்கிய அப்பெருந்தகையாரின் திருவாசக நோக்கும் சபாரத்தினத்தின் உள்ளத்தைக் கவர்ந்தது. இறைவனுக்குப் பேராயிர முண்டேனும் - ஒரு பெயர் கள்வன் (உள்ளங்கவர் கள்வன் எனப்பேசியவர் ஞானக்குழந்தை) இன்னொன்று கவிஞன். பரம்பொருள் வார்த்து வடித்த கவிதைதான் இப்பிரபஞ்ச இயக்கமும் உயிர்ப்பும். இப்பாவம் நிறைந்த கவிதையைப் படிக்கத் தெரிந்தாலே போதும். நயம் தானாகவே சுவைஞனை விழுங்கிவிடும். இவ்வண்ணம் இறைவனைக் கவிதையாகவும் , உட்பொருளாகவும், செம்பொருளாகவும், மெய்ப்பொருளாகவும் காட்டுவது திருவாசகம். இதை வடித்தவர் திருவாதவூர்ச் செழுமறை முனிவர். அவரே சொற்கோ, மணிமொழியார். “திருந்துறு வேதச் சிரப்பொருள் முழுதும் - குருந்துறு நிழலிற் கொள்ளை கொண்டவர்”. இவர் குருந்தின் கீழ்ப்பெற்ற வாச்சியம், வாசகமாயிற்று. ஆசானைக் கண்டதும் - அவரின் அருட்குறிப்பு உள்ளத்தில் உணர்த்த மன்றுளாடிய ஆனந்த வடிவமும், வடவால் ஒன்றி
10

நால்வர்க் கசைவற உணர்த்திய உருவும், இன்று நாயினேற் கெளிவந்த உருவமே என்றுணர்ந்து முன்பணிந்து, அஞ்சலி முடிமேலணிந்து, என்பு நெக்கிட உருகித், துன்ப வெம்பவவலை அறுத்திட வலையிற்பட்டனர். அன்பெனும் வலையில் அகப்படும் இறைவனல்லவா அவன். ஆண்டவனாகிய அருட்குரவன், உடல் பொருள் ஆவி மூன்றையும் வாங்கிக் கொண்டு, அருள் நயனத்தால் மும்மலம் போக்கி, திருவடியை முடியிற் சூட்டி, செங்கரத்தைச் சென்னியில் வைத்து, சூக்குமமான திருவைந்தெழுத்தை உபதேசித்துப் பார்த்த பார்வையால் இரும்புண்டநீரானார். இந்த இன்பமாகிய ஆறு உள்ளமென்னும் பெருந்தடாகத்தில் நிறைந்து புறத்திற் பாய்ந்தது. அதுவே திருவாசகம்.
இணையார் திருவடி என்றலைமேல் வைத்தலுமே துணையான சுற்றங்கள் அத்தனையுந் துறந்தொழிந்தேன் அணையார் புனற்றில்லை அம்பலத்தே ஆடுகின்ற புணையாளன் சீர்பாடிப் பூவல்லி கொய்யாமே.
பூவல்லி-1
கள்வன் கடியன் கலதியிவன் என்னாதே வள்ளல் வரவர வந்தொழிந்தான் என்மனத்தே உள்ளத் துறுதுயர் ஒன்றொழியா வண்ணமெல்லாம் தெள்ளும் கழலுக்கே சென்றுTதாய் கோத்தும்பீ
கோத்தும்பி -19
இறைவனின் கரந்துறை நிலையை உள்ளங்கவர் கள்வன் என்றார், சீகாழிச்செல்வர். மாணிக்கரோதன்னையே கள்வர் என்றார். தாம் பெற்ற இன்பம் வையகமெலாம் பெற வேண்டுமென்ற கருதுகோளினால், எக்காலத்தும், எல்லார்க்கும் பொதுவுடைமை ஆகிய வாதவூரரின் வாக்கு வெள்ளையரின் இதயத்தையே உருக்கியது. எனின் திருவாசகச் செவ்வி. சொல்லுந்தரமன்று. போப் அவர்களே அதிலே கரைந்து கண்ணிர் பெருக்கினார்கள். அக்கண்ணிர் திருவாசகநூலையே நனைத்தது என்பர். இவ் வண்ணமே அப்பு எனப்பல்லோராலும் அழைக்கப்பட்ட சபாரத்தினமவர்களும், வாசகத்தோடு கலந்து, இறைவனோடு இரண்டறக் கலந்தார். எனவே தான் அவரைத் திருவாசக முநிவர் என்பர். இதையவர் தினம் போற்றும் பாடலே உரைத்துக்காட்டும்.
பழுதி லாதசொன் மணியினைப் பக்தி செய்தன்பு
முழுது மாகிய வடத்தினான் முறைதொடுத்தலங்கல் அழுது சாத்து மெய்யன்பருக் ககமகிழ்ந் தையர் வழுவி லாதபேர் மாணிக்கவா வாசக னென்றார்.
11

Page 15
இவ்விதம் மணிமொழியார் ஆண்டவனாலே ஆட்கொள்ளப்
பட்டதனாலும், திருவாசகதி செழுந் தேனையூட்டி ஸ்வாமிகள் போன்றோரையும் நம்மனோரையும் ஆட்கொண்டதனாலும் ஆளுடை அடிகள் என்னும் பெயரையும் பெற்றார்கள் எனலாம். இறைவனிடமும் பாகவதரிடமும், பகவரிடமும் தம்மையர்ப்பணித்த யமுனை முநிவர்போன்று ஊசிகாந்தத்தினைக் கண்டணுகல் போல், சபாரத்தினம் என்னும் மேதகை, வாசகத்திலும், வாதவூரரிலும், வாச்சியமான கூத்தப்பிரானிலும் ஈடுபாடு கொண்டு உய்தி பெற்றார்கள்.
நல்லதொரு வாழ்விற்கும் சாவிற்கும்
நமக்குவழி காட்டுமொரு வாசகத்தை
எல்லவரும் இடையறா தோதி வந்தால்
எம்பெருமான் திருவடிக்கே செல்வோமென்றே.
வல்லவராம் சபாரத்ன விரதி சொல்வார் வருபவரை ஆதரித்தே வகை வகையாய் நல்லவொரு போசனமும் சமைத்தே நல்கி நாளெல்லாம் வாசகத்தை உணர்த்துவாரே
- சிங்கையாழியான் -
கடவுளைத் தாயாகவும், தந்தையாகவும் வழிபாடியற்றுவது சைவநான்கு நெறிகளில் ஒன்று. இதன்னச் சற்புத்திர மார்க்கம் என்பர். இறைவனை அம்மையே அப்பா என்று ஆனந்தமாய்க் கசிந்து உருகிப்பாடினார். வாதவூரண்ணல், இறைவனை வாத்ஸல்ய நோக்கிற் காண்பது போல, பெற்றோர்களைத் தெய்வமாகவும் பேணுவது சைவ மரபு. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பது தமிழ்மூதாட்டி வாக்கு. எமது ஞானகுரவராகிய திருவாசக ஸ்சுவாமிகளையும் அப்பு என்றும் அழைப்பர். அப்பு என்னும் பதம் யாழ்வழக்கில் தகப்பனையே சுட்டும். மாணிக்கரே இதை உணர்த்தியுள்ளார். பிள்ளையை அப்பிநிற்பவன் அப்பன்.
அரைசனே அன்பர்க் கடியனே லுடைய
அப்பனே ஆவியோ டாக்கை புரைபுரை கனியப் புகுந்துநின்றுருக்கிப்
பொய்யிருள் கடிந்தமெய்ச் சுடரே திரைபொரா மன்னும் அமுதத்தெண்கடலே
திருப்பெருந் துறையுறை சிவனே உரையுணர் விறந்துநின் றுணர்வதோர் உணர்வே
யானுன்னை உரைக்குமா றுணர்த்தே.
கோயில் மூத்த திருப்பதிகம் - 3
12

அப்பிலே போட்ட உப்புப் போன்று சுவாமியும் வாசகத்திற் கரைந்து வளர்ந்தார். எம்மையும் வளர்த்தார். எனவே வாகீசர் சம்பந்தர்க்கு அப்பரானது போன்று பழவடியார் கூட்டத்திற்கு அப்புவானார். சோதியக்கா என்னும் அம்மையார்தான் முதன்முதல் (திருக்கேதீஸ்வரம்) அப்பு என அழைத்தவர். விநோபாஜி, காந்திஜி, ரமணஜி, மாதாஜி, ழரீராம்ஜி, பப்பாஜி (ராமதாசர்) போல எமக்கும் அப்புஜி ஆனார் திருக்கேதீஸ்வரம் பத்தாகிய தொண்டர். இறைவனின் செல்லப்பிள்ளைகள் திருத்தொண்டர்கள் தாய்ப்பாசமும், தந்தை அன்பும் நிறைந்த சுவாமிகளை வேறு எவ்வண்ணம் அழைப்பது நாம். நம்மை விட்டுப்பிரியாத ஞானத்தந்தை அல்லவா அவர்கள்.
அப்பென்றும் வெண்மைய தாயினும் ஆங்கந் நிலத்தியல் பாய்த் தப்பின்றி யேகுண வேற்றுமை தான்பல சார்தலினால் செப்பில் அபக்குவம் பக்குவ மாயுள்ள சீவரிலும் இப்படியே நிற்பன் எந்தை பிரான் கச்சி ஏகம்பனே
- பட்டினத்தடிகள - கண்ணை இடந்தப்பியவன் கண்ணப்பன். அன்பே சொரூபமானவன். எம்மை அப்பி நிற்பவர் அப்பு ஆனார். அன்பிற்கு முண்டோ அடைக்கும் தாழ் கண்ணப்பனின் அன்பே சிறந்த உரைகல்.
கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச் சுண்ணப் பொன் நீற்றற்கே சென்றுதாய் கோத்தும்பீ.
கோத்தும்பி - 4
الخسا
13

Page 16
திப்பியதேனும் எய்ப்பில்வைப்பும்
கொம்பரில் லாக்கொடி போல் அலமந்தனன் கோமளமே வெம்புகின் றேனை விடுதிகண்டாய் மெலிகின்ற என்னை விடுதி கண்டாய் சடையவனே தளர்ந்தேன் எம்பிரானென்னைத் தாங்கிக் கொள்ளே - நீத்தல் விண்ணப்பம்
காவிக் கமலக் கழலுடன் சேர்த்தென்னைக் காத்தருள்வாய் தூவிக் குலமயில் வாகன னேதுணை யேதுமின்றித் தாவிப் படரக் கொழுகொம் பிலாத தனிக்கொடிபோற் பாவித் தனிமனந் தள்ளாடி வாடிப் பதைக்கின்றதே
- கந்தரலங்காரம் -
விஞ்ஞான கண்ணோட்டத்தில் மனிதனை இன்று வெவ்வேறுவிதமாக வர்ணிக்கிறார்கள். அவனொரு சமுகப்பிராணி, பொருளாதார உயிரி, தெய்வப்பிறவி, அரசியல்வாதி, சிந்தனைச்சுடர், புத்திஜீவி, அறிவுஜீவி, பகுத்தறிவாளன் என்பன அவை. மனித விழுமியங்கள், மனிதப் பண்புகள் இன்றைய உலகில் எவ்வளவோ, வியாபித்திருந்தும், வாழ்வியலை விட்டு அவை தூரப் போவதையும் அவதானிக்க முடிகிறது. இதனாற்றான் போர் மூட்டங்கள், சண்டை சச்சரவுகள், இனப்பாகுபாடுகள், மனக்குரோதங்கள், கோபதாபங்கள், பகைமைக் காழ்ப்புகள் உலகெங்கும் மன்பதையை எறும்பிடை நாங்கூழாய் அரிக்கின்றன. மனிதநேயம், உறவு நிலைகள், பக்குவங்கள், உரிய பாரம் பரியங்கள், சமயக்கோட்பாடுகள் புறக்கணிக்கப்படுகின்றன.
போரிலா அமைதி உலகைக்காண எத்தனையோ அரசியல் ஞானிகளும், விஞ்ஞானிகளும், மெய்யியலாளர்களும், பேரறிஞர்களும், சமயச்சான்றோர்களும், உலக ஸ்தாபனங்களும் முயல்கிறார்கள். போரிலா உலகைக்காண பாரதிதுடியாத்துடித்தார். இப்படியான காலகட்டத்திற்றான் ஆத்மீகஞானிகள் எங்கோ ஒர் மூலையில் இருந்துகொண்டு, ஒரு பேரமைதிக்காக ஆண்டவனை இரந்து கேட்டு, அவலப்படும் உள்ளங்களிலே அமைதியை, சாந்தியை, சமாதானத்தை, சமநிலையை, சந்துஷடியை, சந்தோஷத்தை நிலைநாட்ட உழைக்கிறார்கள். நிலைநாட்டுகிறார்கள். சின்னக்கவலைகள் நம்மைத்தின்னக் கூடாதென்று இறைவனைச் சரணடைகிறார்கள், பிரார்த்திக்கிறார்கள், உழைக்கிறார்கள். இந்தச் சரணாகதித் தத்துவம் கீதையில் மட்டுமல்ல. திருமுறைகளிலும் பீறிட்டுப் பாய்கிறது.
14

வழங்குகின் றாய்க்குன் அருளார்
அமுதத்தை வாரிக் கொண்டு விழுங்குகின் றேன்விக்கினேன்வினை யேன்என் விதிஇன் மையால் தழங்கருந் தேனன்ன தண்ணிர்
பருகத்தந் துய்யக் கொள்ளாய் அழுங்குகின் றேன் உடை யாய்அடி
யேன்உன் அடைக்கலமே.
- அடைக்கலப்பத்து - கொண்ட மருந்தும் கடைவாய் வழியுக கோழைவந்து கண்டம் அருந்துயராம்போது நின்பாதம் கருதநியேன் வண்ட மருந்துளவோனே தென்சோலை மலைக்கரசே அண்ட மருந்தும் பிரானே இன்றே உன்னடைக்கலமே
- அஷ்டப்பிரபந்தம் - மனித இனம் தேனிக்கள் போன்று கூடிவாழும் உயிர்ப்புள்ளவர்கள். தேன்.அடை போன்றது சமயம். ஒரு பருவகாலத்துக்குப் பயன்படும் எனத் தேனீக்கள் தேடிவைக்கும் சேமநிதிதான் தேனி. ஆத்மீகப் பாஷையிற் சொன்னால் எய்ப்பில் வைப்பு எனலாம். வங்கி உண்டியல்கள், நிரந்தர வைப்புகள், சேமப் பங்குகள் பத்திரங்கள் உதவுவது போல, ஒவ்வொருவர்க்கும் மாபெரிய எய்ப்பில் வைப்பு இறைவன்தான் என்பதை உணர்த்தினர். உண்மையாளர்கள்.
தெப்பக் குளங்கண்டேன் தேரோடும் வீதி கண்டேன் எய்ப்பில் வைப்பாமவனை எங்கெங்கு தேடியும் கண்டிலனே
உள்ளத்திற் காண்பாயெனில் கோயில் உள்ளேயுங் காண்பாயடி - கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை
தாயின் நிழலிலே குழந்தை உறங்குகிறது, தந்தையின் உழைப்பிலே குடும்பம் நடக்கிறது. எரிபொருளின் சக்தியிலே இயந்திரங்கள் இயங்குகின்றன. ஆசானை அண்மிமாணவனும், குருவை அண்டிச் சீடனும், கணவனைச் சார்ந்து மனைவியும், தொழிலாளர்களின் கரங்களை நம்பி முதலாளியும், இடித்துரைக்கும் அமைச்சனை நம்பி அரசனும், சட்ட வல்லுனனின் உறுதுணையை நம்பி ஆட்சியும் நடக்கிறது என்றால், ஒன்று இன்னொன்றைப் பற்றிப் பிடித்தே வாழ்கிறதென்பது வெளிப்படை பாரி முல்லையின் பரிதாபம் கண்டு தேரீந்தான். உட்யிரும் இறைவனைப் பற்றிப் படர்ந்தால் அதுவே எய்ப்பில் வைப்பு நோய், வயோதிபம், இளைப்பு, தேய்வு, மரணம், தளர்வு, காலப்போக்கில் மனித வாழ்விற் சகசம். ஆக இறைவனையே எய்ப்பில் வைப்பு என்றனர் ஞானிகள்.
15

Page 17
தனித்துணை நீ நிற்க யான்தருக்
கித்தலை யால்நடந்த வினைத்துணை யேனை விடுதிகண்
டாய்வினை யேனுடைய மனத்துணை யேயென்தன் வாழ்முத
லேயெனக் கெய்ப்பில் வைப்பே தினைத்துணை யேனும் பொறேன் துயர்
ஆக்கையின் திண்வலையே.
ஒப்புனக் கில்லா ஒருவனே அடியேன்
உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே மெய்ப்பதம் அறியா வீறிலி யேற்கு
விழுமிய தளித்ததோர் அன்பே செப்புதற்கரிய செழுங்சுடர் மூர்த்தி
செல்வமே சிவபெரு மானே எய்ப்பிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே - பிடித்தபத்து எனவேதான் திருவாசக சுவாமிகளும் மணிமொழியார் வழிநின்று இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எனப்பாடியாடிக் களித்தார். இப்பிறவி நிதர்சனம் இந்த ஜனம் நிட்சயம் என்பதை உணர்ந்தவர் ஸ்சுவாமிகள். தர்மம் நாளைக்கு என்று வைப்பதில்லை. இன்றே இப்பொழுதே செய்ய வேண்டும். நாளை நமன் கையில் இருக்கிறது அல்லவா? மனிதன் என்றோ சாவை அணைந்தே தீரவேண்டும். உயிரோடு ஊசலாடும் போது எய்ப்பிலே உணர்விழந்த வேளையில், புலனைந்தும் பொறிகலங்கி, அறிவழித்து ஐமேலுந்தி அலமந்த நிலையிலே எப்படி இறை நினைப்பு வரும்? என்று ஏங்கிய பெரியாழ்வார் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் எனப் பாடியருளினார்.
துப்படை யாரை யடைவ தெல்லாம்
சோர்விடத் துத்துணை யாவ ரென்றே ஒப்பிலே னாகிலும் நின்ன டைந்தேன்
ஆனைக்கு நீயருள் செய்த மையால் எய்ப்பென்னை வந்து நலியும் போதங்
கேதும்நா னுன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக் கிப்போதே சொல்லி வைத்தேன்
அரங்கத் தரவனைப் பள்ளியானே.
திருநாலாயிரம் 423 மொழிக்கு மொழிதித்தித்து, என்பினை உருக்கி அன்பராக்க வல்ல கருவாசம் போக்கும் திருவாசகமென்னும் ஒப்புயர்வில்லாத் திப்பியதேனைத்
16

தன்மலர் வாயினின்றும் வழியச் செய்தவர் மாணிக்க வாசகர். அந்தத் தேனையே பிறவிப் பிணிக்கு மருந்தாக்கி, தனது எய்ப்பில் வைப்பான இறைவனைச் சேர முயன்று, பலச்சுருதியாய்த் திகழ்ந்தவர் திருவாசக சுவாமிகள். எய்ப்பு வயோதிபம், திப்பிய தேன் - தித்திக்கும் தேன். தேன் இங்கே திருவாசகம் எய்ப்பில் வைப்பு - இறைவன் சிவன் (சேமநிதி மூலபணடாரம்) பாம்பறியும் பாம்பின்கால் என்பது போல புலவனைப் புலவனறிவான். அன்பனை அன்பனறிவான் - யோகியை யோகி அறிவான். ஞானியை ஞானி அறிவான். ஏனையோர் அறிந்தோம் என்பது பேதமையன்றோ. அங்ங்ணம் அறியினும் அது ஒரு பகுதி ஆகும். திருவாசகப் பெருமையை அறிந்தார் யார்? துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் அறிந்தார். அன்பே மயமான வள்ளலார் அறிந்தார். தாயுமானார், மேலைத்தேயத்தவரான ஜி.பு.போப் சுவாமிகள் அறிந்தார் என்பர் ஆய்வாளர். இன்னும் பலர் அறிந்தனர், அறிகின்றனர், அறிவர். ஆறு மேலாந்தரமான நூல்களிலே திருவாசகமும் ஒன்றெனப் பாடியவர் உமாபதிசிவம்.
வள்ளுவர் நூல் அன்பர் மொழி வாசகம் தொல் காப்பியமே தெள்ளுபரி மேலழகர் செய்தவுரை - ஒள்ளிய சீர்த் தொண்டர் புராணம் தொகுசித்தி ஓராறும் தண்டமிழின் மேலாந்தரம்.
தாயுமான சுவாமிகள் தம் அனுபவத்தை அனுபவித்ததை எடுத்துப் பேசுகிறார். திருவாசகத்தில் அவர் தோய்ந்து எழுந்தபோது பெற்ற பிடிப்பு குறிப்பிட்ட சில பாடல்களின் வாயிலாக வெளிப்படுத்துமாறு இவை,
நினைப்பு அறவே தான்நினைத்தேன் என்றநிலை நாடி அனைத்தும்ஆம் அப்பொருளில் ஆழுநாள் எந்நாளோ சென்றுசென் றேஅவையாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாகி நின்றுவிடும் என்ற நெறி நிற்குநாள் எந்நாளோ
ஆதிஅந்தம் இல்லா அரியபரஞ் சோதி என்ற நீதிமொழி கண்டு அதுவாய் நிற்குநாள் எந்நாளோ நமது மதிப்புக்குரிய சபாரத்தின அடிகளார் வாசகத்தை அறிந்து அனுபவித்துப்போற்றியமையாற் பாவலர்கள், நாவலர்கள், நாவில் திருவாசகசாமி என நடை பயின்றார். எனவேதிப்பிய தேனையும், எய்ப்பில் வைப்பையும் கலவையாக்கிப் பேரின்பப் பெருவாழ்வு பெற்றார்கள்.
இன்பம் பெருக்கி இருளகற்றி எஞ்ஞான்றும் துன்பத் தொடர்வறுத்துச் சோதியாய் - அன்பமைத்துச் சீரான் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே ஊராகக் கொண்டானுவந்து - திரு வெண்பா
17

Page 18
என்னை நான் அறியேன் ஐயகோ பகலோ டிரவெனப் படுவதும் அறியேன் அன்னையே அப்பா ஒப்பிலா மணியே அடியவர்க் கெய்ப்பினில் வைப்பே கொன்னைமா மதில்சூழ் திருப்பெருந்துறையில் குருந்தடி யிருந்தருள் பரனே.
- மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை -
مسس سصیحیحیرعکس سےصحیہ۔--
எங்கள் ஞானகுரு தேசிகன்
நிணங் காட்டும் கொட்டிலை விட்டொருவீ டெய்தி நிற்குங் குணங் காட்டி யாண்ட குருதே சிகனங் குறச்சிறுமான் பனங் காட்டு மல்குற் குருகுங் குமரன் பதாம்புயத்தை வணங்காத் தலைவந்தி தெங்கே யெனக்கிங்ங்ண் வாய்த்ததுவே
-கந்தரநுபூதி
தகப்பன் சாமி என்பது முருகனை. தந்தைக்கே உபதேசம் செய்த குமரகுருபரன் சுவாமிநாதன் ஆனான். தந்தைக்கோ பலதிருநாமங்கள்.
ஒருநாமம் ஒருருவம் ஒன்றுமிலாற்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ
என்பது வாதவூரர் வாக்கு ஆயிரமாயிரம் திருநாமங்களுள் ஒன்று குதிரைச் சாமி. தமிழகத்துச் சிற்பங்களிலே இக் காட்சி வடிக்கப்பட்டிருக்கிறது. நரியைப் பரியாக்கிய சிவன் அதை நடத்தியும் வந்தான். அவனே பரிமேலழகன். குறளுக்கு உரைவகுத்த ஆசிரியர்களுள் பரிமேலழகரும் ஒருவர். தந்தைக்கு உபதேசம் செய்த சற்குருநாதனை, குமரகுரு, குருசாமி, என்றெல்லாம் போற்றினர். முருகனையே குருவாய்க் கொண்டவர்ள அருணகிரியார் சிவனையே குருமணி என்றார் அப்பர். கூடல் இலங்கு குருமணி போற்றியென வழுத்துகிறார் சொற்கோ. அவரளித்ததே திருவாசகம். மிகச் சிறந்த பக்திப் பனுவல் அது. குருந்தமர நிழலிலே சிவஞானபோதப் பேருரையைச் சிவபெருமானிடம் கேட்டார் ஒரு மடைமாற்றம் ஏற்பட்டது. திருவாசகத்தை அருளிச் செய்தார். அது பலருக்கு திருப்பு முனையானது. அவர்களிலே ஒருவர்தான் திருவாசக ஸ்வாமிகள். அவர் பலரது ஞானகுரு தேசிகனாய் விளங்கினார்.
18
 

ஆச்சாரிய பரம்பரை சைவத்தின் தொன்மையான மரபு. நால்வர்க்கற முரைத்ததில் இருந்து எத்தனையோ மகான்கள் நம்மண்ணையும், மக்களையும் வளமாக்கிக் கொண்டே வருகிறார்கள். லீலை இவ்வுலகு என்பது மகாகவி வாக்கு. நாம் பிரபஞ்ச வாழ்க்கை என்னும் நீரோட்டத்தினின்றும் நம்மைக் கரையேற்றி, ஒரு புனிதமான வாழ்வின் இலக்கை அடையவேண்டும். இந்நிலை அகத்திலும், புறத்திலும் கால்பதிக்க வேண்டும். இதைக் குறிக்கோளிலாது கெட்டேன் என்கிறார் அரசர்.
ஒரு மனிதன் பத்து ஆண்டுகள் முன்னே இறந்தாலென்ன பத்து ஆண்டுகள் கழித்து இறந்தாலென்ன இவன் செய்தது என்ன? பத்து வருடங்களாக மரணித்தவர்களின் சடங்குகளிற் பங்கு பற்றியதுதான் கண்டமிச்சம். செத்துக்கிடக்கும் பிணத்தருகே இனிச்சாம்பிணங்கள் கத்தும் கணக்கென்னகாண் என்று பாடினார் பட்டினத்தார். இதை விஞ்சி நமக்குநாம் அழாததென்னை என்றோர் வினா எழுப்பினார் இன்னோர் சித்தர்.
பாளையாந் தன்மை செத்தும் பாலனாந் தன்மை செத்தும் காளையாந் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும் மீளும்இவ் வியல்பும் இன்னே மேல்வரும் மூப்பும் ஆகி நாளுநாள் சாகின்றோமால் நமக்கு நாம் அழாத தென்னே. இப்படியான சிந்தனையலைகள் ஒருவரைத்தட்டி எழுப்பியது. மரணமிலாப் பெருவாழ்வு காணத்துடித்தார். அவர்களே சபாரத்தினம். பிணமெனப் படுத்தியாம் புறப்படும்பொழுது நின் அடிமலர்க் கமலத்துக் கடியநின் அடைக்கலம் என உரக்கக்கூவி - சரணாகதித் தத்துவப் பாதையிலே நடந்தார். இதற்குத் திருவாசகம் கைகொடுத்தது. வேதாந்த தேசிகர் இதைப் பாடியுள்ளார்.
உமதடிக ளடைகின்றே னென்றொருகா லுரைத்தவரை யமையுமினி யென்பவர்போ லஞ்சலெனக் கரம்வைத்துந் தமதனைத்து மவர்தமக்கு வழங்கியுந்தா மிகவிளங்கு மமைவுடைய வருளாள ரடியிணையை யடைந்தேனே. வாதவூரடிகளின் பக்குவநிர்ணயத்தில் (அடைக் கலப்பத்து) சொக்கிப்போன குருநாதன் இறைவனிடம் தன்னையே ஒப்புக்கொடுத்து அவன் காலடியிகளிற் சுமைகளையெல்லாம் இறக்கி வைத்துவிட்டு நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே என விச்சிராந்தி பெற்று சுதந்தரபுருடராக வாழ்ந்தார்கள்.
19

Page 19
ஒருவனென்றே தெய்வத்தை வணங்க வேண்டும் உத்தமனாய்ப் பூமிதனில் இருக்க வேண்டும் பருவமதில் சேறுபயிர் செய்யவேண்டும் பாழிலே மனதைவிடான் பரமஞானி.
திரிவார்கள் திருடரப்பா கோடா கோடி தேசத்தில் கள்ளரப்பா கோடா கோடி வருவார்கள் அநேகம் கோடி வார்த்தையினால் பசப்புவார் திருடர்தாமே.
என்னும் சிந்தனைச் சிறகுகள் கொண்டு பரவெளியில் உயரப்பறந்தார். இந்தக் கூட்டினின்றும், விட்டு விடுதலையாகப் புறப்பட்டுச் சித்தியும் பெற்றார்கள். திருவாசகமே அவரின் மோனஞானச் செல்வம். அவரின் வழிபடு தெய்வம் சிவன், வழிபடுகுரு மாணிக்கவாசகர் வழிபடு நூல்திருவாசகம்.
மருவாகக் கொண்டவர் மாணிக்க வாசகர் வாழ்த்தியநல் திருவா சகந்தனை ஒதாத நாவும் செவியுறக் கேட்டு உருகாத நெஞ்சமும் ஏன்படைத்தார்? இவ்வுலகத்தவரே? இவ்வண்ணம் திருவாசகத்தை அனுப்வித்தவர்களின் திருவாக்குகள் சுவாமிகளின் உள்ளத்திலே அமிர்த தாரையாகம் பாய்ந்தன. ஜெகமெலாந் திருவாகக் காட்டிய (செகமே யெனுந்திரு) வாசகத்தின் உயர்வுக்குக் காரணம் தேனினும் இனிய மதுரமும், கனிவும், கருத்தாழமும், பொருண்மையும், தெளிவும், உருக்கமும் - உணர்வும் - உயிர்பும் தெய்வீகமே எனப்புரிந்தார்கள். அள்ளிப் பருகினார்கள். ஆத்மீகம் கைவரப்பெற்றார்கள். அன்னாரின் திருவாசக ஈடுபாட்டைக் கண்ட, நுண்மாண் நுழைபுலமுள்ள அறிஞர்கள். அடிகளாரைத் திருவாசகச்சாமி என்றே போற்றினர். திருவாசகமணி, திருப்புகழ்மணி எனத் தீந்தமிழ் நாட்டில் இருவர் பேசப்படுவது பிரசித்தம். ஸ்வாமிகளுக்குத் தெரியாமலே அத்திருநாமம் தானாகவே அமைந்துவிட்டது.
துரந்தரர் என்றால் முன்னெடுத்துச் செல்பவர் என்று பொருள். மன்றிலே நியாயத்துக்காக வாதிடுவர் நியாயந்துரந்தரர். சிவபூஜையை நியமந்தவறாது செய்பவர் சிவபூஜாதுரந்தரர். துரந்தரர் என்பதற்கு ஒருபடி மேலே விழுமிய அர்த்தமும் உண்டு. வேதாந்த தேசிகரை தூப்புல் துரந்தரன் எனப் பிள்ளையந்தாதியில் ழரீநயினாச்சாரியார் பாடியுள்ளார்.
சென்னி வணங்கச் சிறுபனி சோரவெங் கண்ணிணைகள் வெந்நர கங்களும் வீயவியன்கதி யின்ப மேவத் துன்னு புகழுடைத் தூப்புற் றுரந்தரன் றுமலர்த்தாண் மன்னிய நாள்களுமாகுங் கொன் மாநிலத்தீர் நமக்கே.
20

(தூப்புல் - தேசிகர் அவதரித்த இடம்) தூப்புல் துரந்தரன் - தூப்புல் ஸ்வாமியான பூரீ தேசிகனது எனப் பொருள் தந்துள்ளார் பூரீராம தேசிகாச்சாரிய ஸ்வாமிகள்.
எம்பெருமானது திவ்யமான உயர்ந்த குணங்களை எட்டாகவும், நான்காகவும் சொல்வதுண்டு. வாத்ஸல்யம், ஸ்வாமித்துவம், ஸொசீல்யம், ஸெளலப்பியம் என்பன நான்கு குணங்கள் இவற்றிலே ஸ்வாமித்வம் என்பது நம்மைப்பற்றி எம்பெருமானுக்குள்ள தொடர்பு இறைவனைக்காட்டிலும் சிறந்தது ஒன்றுமில்லை.
சபாரத்தினம் என்னும் மெய்ஞ்ஞானி, தனக்கென்றே ஒரு பாதை சமைத்துக் கொண்ட சித்தர். இவர்கள் இறையுடன் ஐக்கியப்படத் திருவாசகம் உறுதுணையாயிற்று. அவருக்கும் வாசகத்துக்கும் இடைவெளியே இல்லை. அவர்களின் திருவாசக் கலப்பு எம்பெருமானோடுள்ள அணுக்கப்பாட்டினால் அவர்களின் அநந்நிய நிலை அவர்க்கு ஒரு சிறப்புநிலையை அளித்தது என்றால் அதுவே திருவாசகச்சாமி என்பதாம். மிகப் பெரியோர், மிக அற்பர்களோடும் ஒரு நீர்மைந்தாய் (நீர்மையராய்க்) கலந்து நிற்கும் பெருந்தன்மை அவரிடத்தே பீறிட்டது. ஏழைப்பங்காளனாயும், பிட்டுக்கு மண்சுமந்தவராயும், ஞானாசிரியனாகவும் ஒப்புயர்வற்ற சேவகனாகவும், ஆசானாகவும், ஆணையாளனாகவும், (வேண்டுமிடமெங்கும், எப்போதும்) நிகழ்கின்ற பெருங்கருணையன் ஆன தலைவனே இறைவன். அநந்த கல்யாண குணங்களிலே ஈடுபட்ட சுவாமிகளும் தன்னை ஒரு தன்மைத்தாய் வழிநடத்தி, நல்ல நெறியாள்கையாளனாக எல்லார் உள்ளங்களிலம் அழியா இடம் பெற்றார்.
உண்டுறங்கி இடர் செய்து செத்திடும் கலகமானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர் கனவிலுங்கனவாகு மென்பதை மக்களுக்குத் திருவாசக நெறியில் உணர்த்தி உய்திக்கு வழிவகுத்தவர் ஸ்வாமிகள்.
21

Page 20
அடியார்க்கு நல்லார் வாசகத்தில் வல்லார்
அடியார் உள்ளத்து அன்புமீ தூரக் குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும்-கீர்த்தித்திருஅகவல்
உடையாள் உன்றன் நடுவிருக்கும் உடையாள்
நடுவுள் நீயிருத்தி அடியேன் நடுவுள் இருவீரும் இருப்ப
தானால் அடியேன்உன் அடியார் நடுவுள் இருக்கும்அரு ளைப்புரி
யாய்பொன் னம்பலத்தெம் முடியா முதலே என்கருத்து முடியும்
வண்ணம் முன்னின்றே - கோயில் மூத்த திருப்பதிகம்
வன்றொன் டார் தமது திருத்தொண்டர் தொகையில் அறுபத்துமூவரின் சரிதத்தைத் தொகுத்துச் சொன்னார். நம்பியாண்டார் நம்பி அதை வகுத்துச் சொன்னார். தெய்வச் சேக்கிழார் அதனை விரித்துச் சொன்னார். அதுவே பன்னிரண்டாம் திருமுறை பெரியபுராணம். சிந்தாமணியில் ஆழ்ந்திருந்த மன்னனை மடைமாற்றி, சிவனடியார்களின் பெருமையிலே ஈடுபடச் செய்தார் அருள் மொழியார். பக்திச் சுவை நனி சொட்டப்பாடிய கவிவலார் என மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவரைப் புகழ்ந்துள்ளார். தொகை, வகை விரிதந்த சிவநேயச்செல்வர்களின் மாக்கதை சைவத்துக்குக் கிடைத்த பெருஞ் செல்வமாகும்.
திருத்தொண்டர் புராணத்தில் வரும் யாவரும் பக்தர்களாகவும், தொண்டர்களாகவும் துலங்குகிறார்கள். அவர்களில் எவரும் தம் கடமையை மறந்து வெறும் பஜனை பண்ணிக் கொண்டு உலாவவில்லை. துறவு, சந்நியாசம் என்று எங்கும் ஒடிப்போகவும் இல்லை. இல்லறம் நடத்திக் கொண்டே தம்தம் கடமைகளையும் ஒழுங்காக மேற்கொண்டார்கள். தவம் செய்வார் தம் கருமம் செய்வாரென்று கடமையே கண்ணாயினார். அதேவேளை பிறர்நலத்தை முன்னணியிலும், சுயநலத்தைப் பின்னணியிலும் வைத்தனர். நான் எனது எனும் விவகாரங்களை அறவே துடைத்து எறிந்தனர். ஜீவ சேவையே, சிவன் சேவை என்ற எண்ணத்தில் இம்மியும் பிசகாமல் இடையீடின்றிஉழைத்தார்கள். எல்லா உயிரும் சுத்த சிவசக்தியே எனப் பணிபுரிந்தனர். சிவவேடம், சிவனடியார், திருக்கோயில் இவற்றை மதித்துப் போற்றிப் பணிந்த பக்தசிரோன்மணிகள் இவர்கள். இவர்களின் பாதையிலே வாழ்ந்த சுவாமிகளும் அடியார்க்கு நல்லவர் ஆனார். இறைவன் கூட அடியார்க்கு நல்லவன் அல்லவா?.
22

செம்மலர் நோன்தாள் சேரல்ஒட்டா அம் மலம்கழிஇ அன்பர்ஒடு மரீஇ மால் அற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயந் தானும் அரன்எனத் தொழுமே -சிவஞானபோதம்இதை உணர்ந்த சபாரத்தினம் சுவாமிகளும் தொண்டர் சீர் பரவி அவர்களுக்கு அடித்தொண்டு ஆற்றினார். துறவிகளுள் ஒரு வித்தியாசமான துறவி அவர். அடியார் உறவும் அரன் பூசை நேசமும் அவரின் மலர்விழிகள் எனலாம். இணையற்ற இறைவனுபவத்தைத் திருவாசக வாயிலாகப் பெற்றார். எனவே அதில் சிறப்புப் பட்டம்(Hon) பெற்று வல்லவரானார். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குச் சற்றுக்குறைந்த காலம் அங்கே தங்கியிருந்து தொண்ட்ாற்றினார்கள்.(கேதீச்சரத்தில்)
நன்செய், புன்செய்நிலங்களைப் பேணி, பூமிதிருத்தி, உழுது பயிரிட்டு, நீர்ப்பாய்ச்சி, களைகட்டி, வரும் அறுவடையில் நெல்மணிகளைப் பாதுகாத்து, தோட்டத்தில் மரக்கறிவகைகளை வளர்த்து, உணவு போட்டார். பசுவைப் பேணி வளர்த்து மோர், த்யிா, நெய்யுடன் அறுசுவை உண்டி வழங்கினார். கைகாய்க்கக் கொத்தினார். விறகுகளை உடைத்தார். தனது ஆத்மீகப் பயணத்துக்கு அப்பூமியை ஒரு தளமாகவும் ஆக்கிக் கொண்டார்.
காராரு மாணவக் காட்டைக் களைந்தறக்
கண்டகங் காரமென்னும் கல்லைப் பிளந்துநெஞ் சகமான பூமிவெளி
காணத் திருத்தி மேன்மேல் பாராதி யறியாத மோனமாம் வித்தைப்
பதித்தன்பு நீராகவே பாய்ச்சியது பயிராகு மட்டுமாமாயை வன்
பறவையணு காதவண்ணம் நேராக நின்றுவிளை போகம் புசித்துய்ந்த
நின்னன்பர் கூட்டமெய்த நினைவின் படிக்குநீ முன்னின்று காண்பதே
நின்னருட் பாரமென்றும் ஆராரு மறியாத சூதான வெளியில் வெளி
யாகின்ற துரியமயமே அண்டபதி ரண்டமு மடங்க வொரு நிறைவாகி
யானந்த மானபரமே -g|TULDIT
வெண்ணிற ஆடையே அணியும் சுவாமிகள் மாதோட்டம் வந்தடைந்த காலம் சிந்தனைக்கு உரியது. மனிதநடமாற்றம் அற்ற அந்நாளிலே மடங்கள், கடைகள் எதுவுமே இல்லை. அர்ச்சகர், கணக்கர், பூமாலை தொடுப்போர் மட்டும் நடமாடினர். இப் பொற்காலத்தைப் பயன்படுத்தி அவர் செய்த
23

Page 21
அறுவடை ஆத்மீகத்தில் பெரும் ஊதியத்தை அளித்தது. சேர். கந்தையா வைத்தியநாதன் ஆலயத் திருப்பணிகளை மேற்கொண்டபோது தன் பங்களிப்பையும் சலியாது நல்கினார்கள். திருவாசக மடத்தைக் கட்டிப் பூர்த்தியாக்கி அங்கேயோர் கிணறும் வெட்டுவித்தார்கள். கெளரீசர் கல்விக்கூடம், நெசவுநிலையம் நிறுவ முன்னின்று உழைத்தார்கள். எனினும் தனது கொட்டிலிலே தங்கியிருந்துநிறையப்பணிசெய்தார்கள். உண்டியும், உறையுளும் வழங்கி திருவாசகத்தையும் எல்லார் உள்ளங்களிலும் பாய்ச்சினார்கள்.
அடியேன் அல்லேன் கொல்லோ தானெனை
ஆட்கொண் டிலைகொல்லோ அடியா ரானா ரெல்லாரும்
வந்துன் தாள்சேர்ந்தார் செடிசேர் உடல மதுநீக்க மாட்டேன்
எங்கள் சிவலோகா கடியேன் உன்னைக் கண்ணாரக்
காணுமாறு காணேனே - ஆனந்த பரவசம்
திருவாசக ஆய்விலே தன்னை ஈடுபடுத்திய இவர்கள் சுமார் 4898 அடிகளை, திருவாசகம் முழுவதையும் வெகு சிரமமின்றி மனனஞ் செய்துள்ளார்கள். எல்லாம் இறைவனின் கடாட்சமே. முழுத் தலையங்கங்களையும் ஒழுங்குபடுத்தி அன்பர்கட்கு அறிமுகம் செய்வார்கள். 1. அநுபவா தீதம் உரைத்தல், அநுபோக சுத்தி, அநுபோக இலக்கணம்,
அநுபவம் இடைவிடாமை, அநுபவம் ஆற்றாமை. 2. ஆனந்தத் தழுங்கல், ஆனந்த பரவசம், ஆனந்தாதீதம், ஆனந்தக் களிப்பு,
ஆனந்த மனோலயம், ஆனந்தம் உறுதல். 3. ஆத்ம சுத்தி, அநுபோக சுத்தி, பிரபஞ்ச சுத்தி, அருட் சுத்தி, திரோதான
சுத்தி, மகாமாயா சுத்தி. 4. அநுபவத்துக்கு ஐயமின்மை உரைத்தல், அநுபவமழியாமை. 5.சிவனோடைக்கியம், சிவனோடடைவு, சிவனோடு காருண்யம், சிவானந்த
விளைவு, சிவானந்த முதிர்வு, சிவ விளைவு, சிவோபாதி ஒழிதல், சிவானுபோக விருப்பம். 6. குரு தரிசனம், நிருத்த தரிசனம், ஆத்ம தரிசனம். 7. ஆத்ம பூரணம், ஆத்ம இரக்கம், ஆத்ம இலக்கணம். 8. சுட்டறுத்தல், சுட்டறிவு தெளிதல். 9.முத்தி இலக்கணம், முத்தி உபாயம், முத்திக் கலப்புரைத்தல், சதா முத்தி. 10. அநாதிமுறையான பழமை, அநாதியாகிய சற்காரியம். 11. பிரபஞ்ச வைராக்கியம், பிரபஞ்சப் போர். 12. அறிவுறுத்தல், அறிவித்து அன்புறுத்தல். 13. அத்துவித இலக்கணம்
24

இவ்வகையில பாசுரங்களை, பதிக இனம் தெரிந்து சேர்த்து, தொகுத்தும், வகுத்தும், ஒப்பிட்டும், இழையோடும் தத்துவ மேன்மைகளை மற்றையோர் புரியும் வண்ணம் கூறும் பாணியும், வெளிப்பாடும், உத்திகளும் அவருக்கே உரித்தான தனிப்பண்பும் திறமையுமாகும். முற்றமுழுக்க வாய்ப்பாடம் அவர்களுக்கு. திருவாசகத்தில் நிரம்பஈடுபாடுள்ள சிவத்தமிழ்ச் செல்விதங்கம்மா அப்பாக்குட்டி, வித்துவான் ஆறுமுகம், வ.சிவராஜசிங்கம், ந.சிவராஜா, பெரும் புலவர் சதாசிவம்பிள்ளை, விநாயகமூர்த்தி, ஆத்ம ஜோதி முத்தையா, கவிஞர் பரமநாதன், தாளையன், அருணாசல சுவாமிகள்,க.சி.குலரத்தினம் போன்றபலர் சுவாமிகளை மதித்து அளவளா வுவார்கள்.சுவாமிகளின்நோக்கும் வாக்கும்பிரத்தியேகமானவை. அடியேன் அல்லல் எல்லாம்முன் அகல ஆண்டாய் என்றிருந்தேன் கொடியே ரிடையாள் கூறா எங்கோவே
ஆஆ என்றருளிச் செடிசேர் உடலைச் சிதையாத தெத்துக்கு
எங்கள் சிவலோகா உடையாய் கூவிப் பணிகொள்ளா தொறுத்தால்
ஒன்றும் போதுமே. -குழைத்த பத்துவல்லவராயும், நல்லவராயும் திகழ்ந்தவர் வாசக விற்பன்னர்.
அவர்கள் அளித்த பிச்சை
ஐயம் இட்டுண் என்ற மூதாட்டியே ஏற்பது இகழ்ச்சி என்றார். இரவச்சம் என்றோர் அதிகாரமே தந்த வள்ளுவர் ஏற்பது இழிவானது என்பதை இடித்துரைத்தார். ஏற்பது இழிவானது. அதனிலும் இழிவானது பிச்சை கேட்பவருக்கு கொடுக்காமல் இருப்பது. பிச்சை தாருங்கள் என்று இரக்காமல் இருப்பது அதனிலும் உயர்வானது. அதனிலும் உயர்ந்தது ஏற்பவனுக்கு இன்முகத்தோடு இடுவது. இதையே அறஞ்செய்ய விரும்பு என்றார் ஒளவை. தர்மம் உயர்ந்தது, மேலானது, புண்ணியத்துக்கும் பிராயச்சித்தம் ஏது? பாவத்துக்கும் பிராயச்சித்தம் ஒரு மனச்சாந்தி. அவ்வளவுதான்.
பிட்சை என்ற பிரயோகம் பிட்சு என்ற வேரினின்றுவந்தது. ஒருவனைப் பார்த்து அந்தப் பிச்சைக்காரனை விடு என்று இழிவாகப் பேசுகிறோம். இறைவனே உலகத்துக்காகப்பிச்சை ஏற்றானென்றால் நாம் எம்மாத்திரம்?
25

Page 22
அப்பிச்சைக்காரத்தனம் சமுதாயத்தின் மத்தியில் இன்றுமெத்தனம். பிச்சை என்பதில் இருந்து வந்தது பயிக்கம். இப்பிரயோகத்தை அப்பரடிகள் மிக இலாவகமாக ஆண்டிருக்கிறார். “பூவையாய்ப். பாவியேனறியாதே பாழுரிற் பயிக்கம் புக் கெய்த்தவாறே” என்பது அப்பாடல்.(திருவாரூர்ப் பதிகம்) பாழுர்- பாழடைந்த கிராமம், எய்த்தல்-இளைத்தல், இறைவனை எய்ப்பினில் எனப்பேசுவார்கள் அருளாளர்கள். பயிக்கத்தனம் மருவா இயற்கை நல் வாழ்வு உயர்ந்தது. பிச்சைக்காரப் புத்தி மிக இழிந்தது.
பாம்பணையாற்கே ஒம்படைநல்கிப்
பயிக்கத் தனமருவா இயற்கை நல் வாழ்வொளிர் வல்லிபுரத்தெம்
பாலா நின்னருள் தக் கோம்பழி மலையக் குதூகல மலையக்
கொட்டுக சப்பாணி கோமளத் திருவே சாமளத்துருவே
கொட்டுக சப்பாணி - வல்லிபுரமாயவன் பிள்ளைத்தமிழ் எனவேபயிக்கத்தனம் என்பது பிச்சைக்காரத்தனம் எனப் பொருள்படும் ஆதலின் இயற்கையின் அருமையைப் பேணித் தமது சூழல் வளங்களை அபிவிருத்தி செய்து வாழத்தெரியாமல், கானலுக்குப் பின் செல்லும் மான்போல நாற்றிசையும் திரிதலையும் பண்பு பயிக்கத்தனம் என்றாகும்.
இறைவன் ஒருதத்துவத்தை விளக்கப்பிக்ஷாடனாராகத்திருக்கோலம் கொண்டார். தாருகாவனத் திருவிகளின் இறுமாப்பை அடக்க, யதேச்சையாக, திகம்பரனாக, வெகு லாவண்யமான இத்தோற்றத்தினில் ரிஷிபத்தினிகளே மானமழிந்து மதியிழந்தனர். இறைவன் பெருமையையும் தமது தவறையும் உணர்ந்து, இலிங்கம் நிறுவி, இறைவனைப் பூசித்தனர் தாருகாவனத்துரிஷிகள். இப்பிச்சாடனர் திருக்கோலத்தைப் பாடல் சான்ற தலமான கேதீச்சரத்தில் தரிசித்து, அனுபவித்த திருவாசக சுவாமிகள்தாம் பெற்ற இன்பத்தை மெய்யன்பர்கட் கெல்லாம் வழங்கி, அவர்களையும் உய்தியடைய நெறிப்படுத்தினார். சுவாமிஜி தந்த பிச்சைதான் திருவாசகம். பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்பதற்கு அமைய அவரவர் பரிபக்குவ நிலைக்கேற்ப வாசகத் தேனை வாரியிறைத்தார்கள். திருமால் பிச்சாபாத்திரத்தில் இட்ட பொருளால் பிரமகபாலம் கைநெகிழ்ந்தது. அதேபோல ஸ்வாமிகளின் திருவாசக அமிர்தம் துவந்துவங்களை விட்டோடச் செய்து, பிறவியைவேரறுத்தது. நாம் இன்புற்றிட அடியவர்களின் வீடு வீடாகச் சென்று வாதவூரரின் வாக்குகளை விளக்கி திருவாசக ஒசையை நிறைத்து, தெய்வ மணங்கமழச் செய்தார். பிச்சாடனராகக் காட்சிதரும் அதேவேளை, அன்னையோ அன்னபூரணியாகத் திகழுகிறாள். ஒருநாழிநெல்லாலே உலகைப்புரக்கும் அன்னையோடிணைந்த அப்பனைப் பாடுகிறார் மணிவாசகர்.
26

தையலோர் பங்கினர் தாபத வேடத்தர் ஐயம் புகுவரால் அன்னே என்னும் ஐயம் புகுந்தவர் போதலும் என்னுள்ளம் நையும் இது என்னே அன்னே என்னும்
விச்சுக் கேடுபொய்க் காகா
தென்றிங் கெனைவைத்தாய் இச்சைக் கானா ரெல்லாரும்
வந்துன் தாள் சேர்ந்தார் அச்சத்தாலே ஆழ்ந்திடு கின்றேன் ஆரூரெம் பிச்சைத் தேவா என்னான் செய்கேன் பேசாயே. மணிவாசகப் பெருந்தகை தமது அனுபவங்களை, சமுதாயத்தின் பொது உடைமையாக்கித் தான் பெற்ற இன்பம் இவ்வையகம் எல்லாம் பெற வைத்தார். அ.தே போல திருவாசகத்தில் துறைபோகிய சுவாமிகள் கொண்டும், கொடுத்தும் வாழ்ந்தார்கள். சுவாமிகளின் பக்தியும், ஞானவளமும் உரைத்துப்பார்க்க முடியாதவை. அவர்களின் துறவு வாழ்க்கை மிகப்புனிதமானது. கதிர்காமத்திலே உடற்கூற்றை எரித்து விட்டதற்கு அறிகுறியாக அக்கினியின் வடிவமாகிய காவியுடையை ஒருவர் கொடுக்க ஏற்று அணிந்த கோலம் பிற்காலத்திலே வந்தது. தனித்துவமான ஒரு அம்சம் சுவாமிகளிடத்தே காணப்பட்டது. அதுவே வாசகத்துக்குச் சுவாமிகள் தந்த விளக்கங்கள். அவைகள் இறைவனால் தமக்கு உணர்த்தப்பட்டவைஎன்றுஅவர்களே கூறுவார்கள். நிகண்டு+அகராதியைப் புரட்டி, வேதாந்த சித்தாந்தங்களைத் துருவி ஆராய்ந்து திருவாசகத்துக்கு எழுந்த உரைகளை அணுகிச் சொன்னவை அன்று, இறைவனால் தமக்கு உணர்த்தப்பட்டவை என்பார். அப்படி வந்தவை என்பது அவர் தருகின்ற அரும்பொருள் விளக்கங்களின் பொருத்தங்களில் இருந்து காணமுடிகிறது. வேறு எவரும் சொல்லாதவை, சொல்லமுடியாதவை. அனுபவத்தின் அறுவடைகளே அவர்கள் தந்த பிச்சை. அது மட்டுமன்று, தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் இவ் ஜகத்தினையே அழித்திடுவோம் என்றார் பாரதி. இதை நன்கு உணர்ந்த சுவாமிகள் பரந்த அடிப்படையில் வேளாண்மை செய்து திருக்கேதீச்சரத்தில் உண்டியும், உறையுளும் இன்முகத்தோடு வழங்கி, உபசரித்து, திருவாசகம் என்னும் திவ்விய தேனையும் ஊட்டினார்கள். வாழ்க அவர்கள் திருநாமம். W
ஞாலமே விசும்பே இவை வந்து போம் காலமே உனையென்று கொள் காண்பதுவே.
س--- بسیعی حسرت حسیحییست.
27

Page 23
பாதச்சுவடுகள்
ஆடிநிற்கும் சேவடியைப் பாடிநிற்க வேண்டும் ஆடல் செய்யும் திருவடிக்கே பாடல் செய்யப் பணித்தார்-வள்ளலார்.
يصنشيستينات".
ாதவூரண்ணலின் அனுபவப் பிழிவே திருவாசகம். அப்பாமாலை எண்ணி, எண்ணித் திட்டம் போட்டு எழுதியது அன்று. இலக்கிய மரபுவழிப் பாடலாய் அமைந்திருப்பினும் இது தம்மை மறந்த நிலையில் பொள்ளென எழுந்த பாடல்களாகும். பாமாலை வாடும், பூமாலை தேம்பாவணி அர்ச்சனை பாட்டேயாதலின் சொற்றமிழ் சொன்னவர் சுந்தரர். தாயுமானவர் மகாபாவனையில் நின்று பாடிய ஒர் பாடல் இதனை நன்கு புலப்படுத்துகிறது.
பன்மாலைத் திரள் இருக்கத் தமையுணர்ந்தோர்
பாமாலைக் கேதான் பக்ஷம் என்று நன்மாலையா எடுத்துச் சொன்னார் நல்லோர்
நலம் அறிந்து கல்லாத நானும் சொன்னேன் சொல்மாலை மாலையாய்க் கண்ணிர் சோரத்
தொண்டனேன் எந்நாளும் துதித்து நிற்பேன் என்மாலை அறிந்து இங்கே வாவா என்றே
எனைக்கலப்பாய் திருக்கருணை எம்பிரானே.
பன்மாலை- பூமாலை, தமை உணர்ந்தோர்-ஆத்ம ஞானிகள், பாமாலைக்கே-பாவாகிய மாலைகள் இடத்திலே, பகூம்-விருப்பம், நன்மாலை-சிறந்தமாலை, மாலையாய்-தாரைதாரையாய், என்மாலை அறிந்து-என் விருப்பத்தை அறிந்து.
வாதவூரடிகள் திருப்பெருந்துறையில் பெற்ற ஒரு திடீர் மாற்றம். பல ஆற்றல் நிறைந்த பாசுரங்களாய் வீறிட்டு எழுந்தன. கவிதை வடிவிலே அவர் சொல்லும் வாய்ப்பையும், திறமையையும், கவிதா சக்தியையும் பெற்றிருந்தமையால் உலகம் உள்ளவரை நின்று நிலைக்கக் கூடிய திருவாசகம் நமக்குக் கிட்டியது. திருவாசக வல்லுனர்கள், உரைவளம் கண்டோர், ஆய்வாளர்கள், சொற்பொழிவாளர்கள், பலர் இருந்தபோதும் ஒரு சிலரே அதன் அடிச்சுவட்டிலே ஆத்மீகம் கண்டனர். அவர்களில் ஒருவர் தான் ஈழம் தந்த திருவாசக சுவாமிகள். அவரின் பாதச்சுவடுகளை அடியொற்றி நாம் நடந்தால் கடைத்தேறலாம். அதற்கான நிலைக்களம் அமைத்துத் தந்தவர் அவர்களே. திருமுறைகள் ஆழ்வார்களின் அருளிச் செயல்கள், பெரிய புராணம் போல்பவை இலக்கியக் கண்ணோட்டத்திற் படைக்கப்பட்டவையன்று.உயிர்கள் உய்தி பெறவேண்டி உபகரித்தவர்களே
28
 
 
 

இவற்றை அருளியவர்கள். இவை நேரடி அனுபவங்களே. அறிஞர் அண்ணாவே திருவாசகத்தை மதித்துள்ளார்.திருவாசகத்திற்குப்பதவுரை, பொழிப்புரை,விளக்கவுரை, இலக்கணக்குறிப்புநிறைய எழுதப்பட்டிருப்பினும் உரைபடித்துத் திருவாசகத்தைப் புரிந்த கொள்ள முடியாது. (இதை உணர்ந்தே தியாகராஜ செட்டியார் அவர்களிடம் திருவாசகத்துக்கு உரைவகுத்துத் தரும்படி சிலர் கேட்டபோது அவரதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பர்). பொருளை, கருத்தை அறியலாம் ஆயின் அனுபவத்தைப் பெறமுடியாது. எனவே படிப்போர் உள்ளம் அவ் அனுபவத்தை ஏற்றுக் கொள்ளும் தகுதி உடையதாய் இருந்தால் மட்டும் உரிமையாக்கினால் திருவாசக அனுபவம் கைவரும். ஆக மனதைச் சுருதி சேர்க்காவிட்டால் இனிக்காது. இவ்வண்ணம் சுருதி சேர்த்து, இறைவனுடைய செளலப்பியத்திலும், திருவாசகத்திலும் ஈடுபாடுகொண்டு அனுபவித்தவர் திருவாசக சுவாமிகள். இறைவனுடைய எளிவந்த தன்மையைக் கூறுவதிலும் ஒரு தனிச் சிறப்புடைய மாணிக்கவாசகரைப் புரிந்து குழைந்து போன சுவாமிகளின் எற்புத் துளை தொறும் அமிர்ததாரைகள் பாய்ந்தன. ஆத்ம பலத்தால் சரீரத்தைக் கட்டுப்படுத்தும் ஆத்ம பலத்தால் பஞ்சப்புலன்களையும் எம்பெருமானின் லயிப்பி லேயே செலுத்தினர் என்பதற்குச் “சிந்தனை நின் தனக்காக்கி” என்ற திருவாசகமொன்றே உதாரணம்.
பெருந்துறையிலே மணிவாசகருக்கு ஏற்பட்ட திடீர்த் திருப்பம் போன்று சபாரத்தினம் எனும் அதி மானிடனுக்கும் ஒரு மடைமாற்றம் நிகழ்ந்தது. அதனாற் திருவாசகம் அவரைத் தொட்டுக் கொண்டது. அதனாலே மின் காந்த அலை யோட்ட மொன்று உடம்பு முழுவதும் ஒடி உள்ளத்தில் பாய்ந்தது. அதுவே அணுப் பிளவை போன்று அவருள்ளே ஓர் ஜோதியாய்த் தோன்றிற்று. அவ்வெளிச்சத்தில் அவர் நடந்தார். நடந்து நடந்து சென்றார். அவர் நடந்த பாதையின் அடிச்சுவடுகள் என்றும் அழியாதவை. பாதை இல்லாத பாதைக்கு உய்க்கும் கலங்கரை விளக்கமே அவை, மனதிலே ஆற்றலைப்பெருக்கி சித்து எனும் முத்துகளைச் சிந்தாமற் காத்த சித்தர் அவர்.
கொல்லப் பயன்படும் கரும்பு என்பர். கரும்பை ஆலையிலே போட்டுப் பிழிந்தாற்தான் தித்திப்பான சாறு வரும். அது நம் நாவிலே அண்ணிக்கும். பிழியாமற் கருப்பஞ்சாறு கிட்டாது.எனவே கரும்பு ஆலையில் அகப்பட்டு நசியத்தான் வேண்டும். (இதையே கம்பர் ஆலைவாய்க் கரும்பின் தேனும் எனப்பாடினார்) திருவாசகம் எனும் கருப்பஞ்சாற்றை இவ்வுலகம் பெறுவதற்கு மணிவாசகர் எனும் கரும்பு பிழியப் படுகிறது. இரும்பும் கரும்பாகிறது.
29

Page 24
இரும்புதரு மனத்தேனை ஈர்த்தீர்த் தென் என்புருக்கிக் கரும்புதரு சுவை எனக்குக் காட்டினை உன்கழலிணைகள் ஒருங்குதிரை உலவு சடையுடையானே நரிகளெல்லாம் பெருங்குதிரை ஆக்கியவாறு அன்றே உன் பேரருளே. இறைவனே திருவாதவூரரை இங்கு இருக்க எனப் பணித்தார் என்பது வரலாறு. இப்படிக் கூறியதனாற்தான் திருவாசகம் எமக்குக் கிடைத்ததுஇவ்வொப்பற்ற நூலைப் பயன்படுத்தி சுவாமிகள் திருவாசக மயமாய் வாழ்ந்தார்கள். இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ எது வருமோ தெரியாது. நமக்குச் சுவாமிகள் விட்டுச் சென்றமுதுசொம் திருவாசக நுண்பொருள்களும், நடந்தபாதச்சுவடுகளும். ஞானாசிரியர் வைத்த மாநிதி, பெரிய சம்பத்து என்போம் இதை.
அண்ணா எண்ணக் கடவேனோ சால அழகுடைத்தே வாழி என்னாதன் மலர்ப்பதங்கள்.
ہچصے تک تحصی
எழுத்தெண்ணிப்படித்த தபோதனர்
Af சிவமே பெறுந்திரு எய்திற்றி லேன்நின் திருவடிக்காம்
ஆ* பவமே அருளுகண் டாய்அடி யேற்கெம்ளபரம் பரனே.
-சதகம் மெய்யுணர்தல் இறைவன் மனிதனுக்கு உரைத்தது பகவத்கீதை, மனிதன் மனிதனுக்கு உரைத்தது திருக்குறள். இறைவன் இறைவனுக்கு உரைத்தது மிரணவத்தின் உட்பொருள் (பிராணன் + நவம் = பிரணவம்) மனிதன் இறைவனுக் குரைத்தது திருவாசகம். உத்தர கோசமங்கைத்தல வரலாற்றிலே முனிவ்ராய் ஆகமங்காத்துப் பின் திருவாசகம் அருளிய செம்மல் என திருவாதவூரர் பேசப்படுகிறார்.திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்னும் சிறப்புப் பெற்றது திருவாசகம். மணிவாசகர் பூர்வஜனமத்தில் இறைவனிடம் ஆகமப்பொருள் கேட்ட ஆயிரம் முனிவருள் ஒருவர். மண்டோதரியின் வேண்டுகோட்கமைய, இறைவன், தரிசனம் கொடுக்கச் சென்றபோது குழந்தையானார்
30
 
 
 

குழந்தையை இராவணன் தீண்டினான். எனவே இறைவன் முற்கூறிச் சென்றவண்ணம் உத்தரகோச மங்கையின் ஆதிகங்கைத் தீர்த்தத்தில் அனற் பிழம் பெழுந்தது இறைவனுக்கேதோ தீங்கு ஏற்பட்டதென்று கருதி 999 பேரும் அக்கினிப்பிழம்பில் வீழ்ந்து உயிர்த்தியாகம் செய்தனர். ஆனால் ஒருவர் மட்டும் அவ்வாறு செய்யாமல், இறைவன் கட்டளைப்படி, ஆகமங்களைக் காக்க முடியாதே என்றெண்ணி வருத்தமுடன் இருந்தார். அச்சமயம் அங்கு எழுந்தருளிய ஈசன் தீயில் மூழ்கியமுனிவர்களை, நீங்களத்தனை பேரும் இலிங்கங்களாகத் திகழ்வீர்கள். உங்கள் நடுவணாக ஆயிரமாவது இலிங்கமாக நாமிருப்போம். நம்மைச் சகஸ்ர இலிங்கமாக மக்கள் வழிபடுவார்கள் என்றார்கள். பின்பு கரையில் இருந்த முனிவரை நோக்கி முத்திப்பேற்றையும் விரும்பாது, யான் சொன்னதற்குக் கட்டுப்பட்டு ஆகமங்களைக் காத்தநின் செயல் எமக்கு மகிழ்ச்சிக்குரியது. நீர் அடுத்த பிறவியில் பாண்டியநாட்டிற் பிறந்து, மாணிக்கவாசகர் என்ற பெயர் பெற்று, திருவாசகம் பாடி ஈற்றில் எம்மாற்தடுத்தாட் கொள்ளப்படுவீராக என்றருளினார் இவ் நியதியிலேயே திருவாசகம் நமக்குக் கிடைத்தது என்றும் ஒர் வரலாறு வருகிறது. உத்தரகோசமங்கையூராகவும் எனப்பாடிய சுவாமிகள் பல இடங்களிலே அப்பதியை எடுத்தாண்டுள்ளார்.
தமிழிலே சிறந்த கல்வி வல்லார்களை எழுத்தெண்ணிப் படித்தவர்கள் என்று, அவர்களின் ஆழ்ந்தகன்ற புலமையை எண்ணிப் போற்றுவது ஒரு மரபு. நமது காலத்திலே வாழ்ந்த பண்டிதமணி, இலக்கியகலாநிதி சி. கணபதிப்பிள்ளை, புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை இருவரும் எழுத்தெண்ணிப் படித்த பேரறிஞர்களே. இவர்கள் தமிழை எழுத்தெண்ணிப் படித்தவர்கள். ஸ்வாமிகளோ திருவாசகத்தை எழுத்தெண்ணிப்படித்த மேதை மட்டுமன்றி தபோதனருமாவார்.
மற்றவர்கள் தமக்குச் செய்யும் தீமைகளைப் பொறுத்தலும், ஒறுக் காதிருத்தலும் தாம் மறந்தும் பிறருக்குக் கேடு செய்து துன்புறுத்தாதிருப்பதும், பகைவனுக்கருள்வதும் தவத்தின் மேன்மையாகும். தவமென்பது உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை என்பது குறள்வாக்கு.
அறிவிலான நெஞ்சுவந்திதல் ரீதீயீாது மில்லை பெறுவான்தவம்.
தவம் கைவருமாயின், அறிவில்லாதவர்ைநன்டிை இகழ்வான் என்பது இதன் அர்த்தம்.
கவலையின்றி வாழ்வதற்கு ஒரேவழி தவம் செய்வதே ஆகும். தவசாலிகளே இதற்குச் சான்றாகும். திருவாசக சுவாமிகளை விரதி என்று பாடினார்கள், கவிஞர்களே. திருவாசக சுவாமிகளின் விரதமெலாம் திருவாசக வழி இறைவனை அடைவதாகும். விரதமெலாம் மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய் என்பது அப்பர் வாக்கு. திருவாசகம்
31

Page 25
வேறு, சிவம் வேறு என்று பிரித்துப் பார்க்கமுடியாதபடி ஒன்றிப் போன ஸ்வாமிகளின் இலட்சியம் திருவாசகத்தை ஊடுருவுகின்றது. திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதியைக் குட்டித்திருவாசகம் என்பர். திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி, திருக்கருவைக் கலித்துறையந்தாதி, திருக்கருவை வெண்பாவந்தாதி என்பவற்றை நாவினிக்க, செவியினிக்க, மனமினிக்கப் பாடியவர் ஒரு மன்னன்.
சிறக்கத்தக்கது கருவையான் திருவடிநேய மறக்கத் தக்கதுமற்றுள சமயத்தின் மயக்கந் துறக்கத்தக்கதிவ் வுடம்பையா னென்றுறு தொடர்பு பிறக்கத்தக்கது சிவானந்த வாரியின் பெருக்கே
- கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி - திருவாசகத்திலே நன்கு தோய்ந்தெழுந்த பக்திப்பிரவாகமே அப்பாடல், பாடல்கள் திருவாசகசாயல் கனிந்து நிறைந்திருந்தமையாற்போலும் இதனைக் குட்டித்திருவாசகம் என்றனர் சுவைஞர். ஸ்வாமிகளிடம் இப்படி ஒரு பிரபந்தம் இருக்கிறதென்று அறிமுகம் செய்தபோது திருவாசகத்துக்கு ஈடாக எதுவுமே இல்லை என்பார். திருவாசகத்தின் எழிலையும், இயல்பையும் மனதை உருக்கும் மாண்பையும், இறைமாட்சியையும் எடுத்து விளக்கி திருவாசகத்துக்கு நிகர்திருவாசகமே என்பார். காரணம் திருவாசகத்தில் அவர் நுழையாத இடங்களே இல்லை அவ்வளவு பிடிப்பு அதில். தவமும் தவமுடையார்க்கே. “தவத்தால் அருள்வழிப்பட்டவர்களே வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் அவர்கள். வையத்தவர்களே ஆயினும் வானுறையும் தேவவர்க்கத்தவர்களே” ஆவர்.இலக்கிய கலாநிதி சி. கணபதிப்பிள்ளை.
வருவா சகத்தினில் முற்றுணர்ந் தோனைவண் தில்லை மன்னைத் திருவாத வூர்ச்சிவ பாத்தியன் செய்திருச் சிற்றம்பலம் பொருளார் தருதிருக் கோவைகண் டேயுமற்றப்பொருளைத் தெருளாத வுள்ளத் தவர்கவி பாடிச்சிரிப்பிப்பரே.
-கோயில் திருப்பண்ணியார் விருத்தமட்
عند
32

சுவாமிகளைப் பற்றி ழரீமத் சரவணமுத்துச்சாமிகளின் வாக்கில் இருந்து
உயர்திரு. திருவாசகம் சபாரத்ன சுவாமிகள் ஒரு தீர்க்கதரிசி, கர்மவீரர் இவர்கள் திருக்கேதீஸ்வரத்தில் வெறுமனே திருவாசகத்தைப் பாராயணஞ் செய்தும், மற்றவர்களை திருவாசகத்தில் ஈடுபடுத்தியது மட்டுமல்ல அடியார்களை உபசரித்து அமுது வழங்கியவர். சேர் கந்தையா வைத்தியநாதன் ஐயாவுக்கு வலது கையாக இருந்துபலபணிகள் செய்துள்ளார்கள். திருவாசகமடம் நிறுவி விழா நடத்த ஏற்பாடு செய்தார். வைத்தியநாதன் ஐயா ஏற்பாட்டில் கெளரீசர் பாடசாலைகட்டி முடித்தார். நெசவுசாலை கட்டி முடித்தார். தனித்து நின்று திருவாசகமடத்தில் 35 அடி நீள கிணறு உண்டு பண்ணினார். அதுமட்டுமல்ல அவர்கள் நல்லூர்த் திருவிழாவுக்கு விசேடமாக தேர்த்திருவிழாவுக்கு திருக்கேதீச்சரத்தில் இருந்து கால் நடையாகவே வருவார். ஒரு நாள் வெள்ளாங்குளத்தில் ஒர் காட்டுயானை இவரை மறித்தது. உடனே உன்னிடத்தில் இருப்பதுதான் என்னிடத்தில் இருக்கிறது என்று நின்று விட்டார். யானை வணக்கம் செய்து திரும்பிவிட்டது. என்னே அற்புதம்.
திருக்கேதீச்சரம் குடிசையில் சுவாமிக்குத் தொண்டு செய்துவந்த பஞ்சாட்சரஅம்மா மரணப்படுக்கையில் இருந்தபோது சுவாமிகள் யாழ்ப்பாணத்தில் இருந்தார்கள். நாங்கள் சுவாமிகள் இல்லை என்று ஏங்கிச் கொண்டிருந்த போது சுவாமிக்குத் திருவருள் உணர்த்த திடீரென சுவாமிகள் திருக்கேதீஸ்வரம் வந்து சேர்ந்தார். சுவாமி வந்தபின்தான் அம்மா இறைவனடி சேர்ந்தார். அவர்கள் ஒர் அற்புத சுவாமிகள். அவரின் பெருமையை எழுதிமுடியாது. சிதம்பரம் நடராசருடன் நந்தனார் மாணிக்கவாசகர் போல சேர்ந்திருப்பார். இந்திய யாத்திரை கால்நடையாகச் செய்வார். சிதம்பரத்தைக் கண்டு அந்த எல்லையைக் கடவாமல் அங்கேயே இருப்பார். அவர் எனக்கு முன்னரே திருக்கேதீச்சரத்தை அடைந்து திருப்பணிகள் முற்றுவிக்க உறுதுணையாய் இருந்து கும்பாபிடேகம் கண்டு ஆனந்த மடைந்தவர். அவர் திருவடிக்கு நாம் வணக்கம் செய்து அவரின் திருவுருவத்தை மனநிலை மதித்து வணங்குவோமாக. சுவாமிகள் திருக்கேதீச்சரத்தில் இருந்திருந்தால் கோயில் மூடப்படாது நாமும் அனாதைகளாக வெளியேறி இருக்கமாட்டோம். ஏதோ இருவினைப்பாசக்கயிற்றின் வழி ஆட்டுவிப்பானுடைய செயலை யார் அறிய
(tpւգեւյմ).
جسے “یحی
33

Page 26
கைவண்ணமும் கறிவண்ணமும்
கறி என்பது மிளகைக் குறிக்கும். சமையற் கூட்டுவகை எல்லாமே கறி என்றே பொதுவாக அழைக்கப்படும். மரக்கறி மரக்கறி என்றெல்லாம் மக்கள் பேச்சுவழக்கில் வரும் பிரயோகம் கறி சமைப்பதற்கான பொருள்களைக் குறிக்கும். சைவக்கறியை ஆரதம் என்பர். இது அருகதம் என்ற சொல்மருவி வந்தவழக்கு(அருகதம்-ஆரதம் ஆயிற்று மாந்தையிலே கறி, முத்து, தந்தம், யானை, உணவுவகை, வாசனைத்திரவியங்கள் ஏற்றுமதியாயின. பட்டும், குதிரையும் இறக்குமதி செய்யப்பட்டன. மாந்தை பழைய துறைமுகம். இதுவேபெருந்துறை என்றும் கருதப்படுகிறது. மாந்தை மாதோட்டம், கேதீஸ்வரம் ஒரு நிலப்பரப்பே. இங்கேயொரு காந்தக் கோட்டை இருந்தது. இதன் சூட்சுமத்தை ஒற்றர்மூலம் அறிந்த பகைவர். வரகுவைக் கலை எரித்து அழித்ததாகவும் ஒரு வரலாறு உண்டு. திருக்கேதீஸ்வரம் பாடல் பெற்ற தலம். மாதோட்டத்தில் நீண்டகாலம் வாழ்ந்த சுவாமிகள் சமய உணர்வுநிறைந்தவர். மறுபுறம் சமையற் கலையிலும் சிறந்தவர்.
ஒரு தினம் ஆச்சிரமத்துக்கு வந்தவர்களுக்குப் போசனம் வழங்க வேண்டும். அதுவும் மதிய உணவு. எல்லாரையும் பாலாவியில் நீராடி ஆலயதரிசனம் செய்து வரும்படி அனுப்பிவிட்டார். சோறும் உலையிலே அவிகிறது. கடைகளிற் தேடியும் மரக்கறிவகை கிடைக்கவில்லை. ஒரு கணம் யோசித்தார். ஒருவரை அழைத்து (அங்கு நின்ற தொண்டர் நடராஜாவை) கெளரிவாசலிலே அபிடேகமானபின் விசிய இளநீர்க் கோம்பைகள் இருக்கும் அவற்றில் மூன்று, நாலு எடுத்தவா என்றார். அவரோ ஐந்தாறு தூக்கிவந்தார். எல்லாவற்றையும் இரண்டாகப் பிளந்து, பருவமான வழுவலை, சூண்டு எடுத்து நறுக்கிக் கணக்கான துண்டுகளாக வெட்டினார். எல்லாவற்றையும் சமையற் கட்டுக்கு எடுத்துச் சென்றார். அவ்வளவு தான் தெரியும் ஒரு குழம்பு வைத்தார். இரசம் தயாரித்தார். எல்லார்க்குமே உணவு பரிமாறினார். குழம்பு எப்படி என்று கேட்டார். நல்லாய் இருக்கிறது. நல்லாய் இருக்கிறது என்றுபதில் வந்தது. ஆனால் என்னத்திலே குழம்பு தயாரானது என்று எவருக்குமே இனங்கண்டு சொல்ல முடியவில்லை.
இவ்வண்ணம் சூழலைப் பயன்படுத்திப் பக்குவமாகச் சமைக்கும் அவர்களின் கைவண்ணம் மேலானது. மொசு மொசுக்கை, கொவ்வை இவற்றிலே அரையல். தூதுவளையில் ஒரு பச்சடி. கரிசலாங்கண்ணி, தேங்காய்ப்பூக்கீரை, வாதநாராயணி, சண்டி இவற்றிற் சுண்டல். குறிஞ்சா, முசுட்டை, வாழைப்பூ, பூசனிப்பூ வறுவல், குருவித் தலைப் பாகற்காயிற்துவட்டல், சாறணை அரைத்துச் சரக்குக் குழம்பு வைப்பார். கறிமுருங்கை, முள்முருங்கை இலையை அரிந்து சுண்டுவார். எல்லாமே அவர் கைப்பட்டு பக்குவச் சமையல் ஆகும்போது தனிச்சுவை பேசும். பிட்டு,
34

இடியப்பம்,றொட்டி,தோசை செய்தும் வழங்குவர்.எல்லாம் அவர் கைப்படவே நடக்கும். வயோதிப காலத்திலும் விறகு கொத்தி வைப்பார். எவரையும் கோடரி எடுக்கவிடார் தானே செயவார். பைப்பிலே நீர்பிடித்து வாளி, பானை, அண்டா, வக்கு இவற்றில் நிறைத்து வைப்பார்.
கூட்டுவார், பெருக்குவார், மெழுகுவார், சாணி தெளிப்பார், துப்புரவு பண்ணுவார் சுற்றாடலை. பிற்காலத்தில் வீட்டுத்தோட்டம் போட்டு தண்ணிர் அள்ளி ஊற்றுவார். (தொட்டியில் இருந்து) இப்படிப் பாடுபட்டு வேலைகள் செய்து அடியார்களை ஆதரித்தார்கள். இறைத்த கிணறு ஊறுவதுபோன்று அவரும் வாரி வழங்குவார். நல்அன்பர்களும் பொருளுதவி செய்வர். முழுவதும் அடியார்களின் தொண்டுக்கே பயன்படுத்தப்படும். இவ்வண்ணம் தொண்டு கிழமான சுவாமிகள் ஒரு கர்ப்பதாசரேதான். காலம்பூராகவும் திருக்கேதீஸ்ச்சர மண்ணின் பெருமையை நிலைநாட்டவும், அவர்கள் தவறவில்லை. வருவோர் போவோர்க்கெல்லாம் பெரியபுராணம் மூவர்மொழி திருவாதவூரடிகள் புராணம், திருவிளையாடற் புராணம் போன்ற அருள் நூல்களில் இருந்து பாடல்களை மேற்கோள்காட்டி அவர்களது உள்ளங்களைத் திருக்கேதீஸ்வர மயமாக்கினார்கள். திருப்பணிக்கும் வழிப்படுத்தினார்கள். வாழ்க அவர் திருநாமம்.
கம்பன் பாடிய கைவண்ணமும், கால்வண்ணமும் இராமபிரானின் தெய்வீகத்துக்கு ஒரு எடுத்துக் காட்டு. அதேபோன்று கனகசுப்புரத்தினம் (பாரதிதாசன்) அவர்கள் பூசினிக்காயின் பெருமையைப் பாட்டாக்கினார். ووالانا9
மெய்வண்ண வீடுகட்ட உனைத்தொங்க விடுகின்றார்கள் செய்வண்ண வேலைசெய்து திருமாடம் முடிக்கின்றார்கள் நீ பொய்வண்ணப் பூசணிக்காய் கறியுனைச் செய்துண்டேன் உன் கைவண்ணம் அங்குக்கண்டேன் கறிவண்ணம் இங்குக் கண்டேன். ’ஸ்வாமிகளின் கைவண்ணத்தெழுந்த கறி வண்ணத்தையும், சமையற் பாகச் செவ்வியுைம், விருந்து வழங்கும் மாண் பையும், கவிஞர் சிங்கையாழியான் (முருகவேபரமநாதன்) இப்படிப் பாடியுள்ளார். கீர்த்திமிகு கேதீஸ்வரத் தண்ணல்பாதம்
கிழமையொடும் காலையிலே வேண்டிப் பின்னர் சீர்த்திமிகு திருவாசகந்தன்னை யோதி
சிறப்புடனே வருவோர்க்கு மெடுத்துச் சொல்லி நேர்த்திமிகு அறுசுவையோ டன்னமாக்கி நேயமிகு அடியார்க்கு மளித்துமீதம் பூர்த்திமிகு உள்ளமுடன் புசித்தேயென்றும்
புண்ணியனார் திருவடிக்கே குழைவார் என்றும்.
e-O-O e-Oo
35

Page 27
திருவாசக வீச்சு தேனருவி மூச்சு
கரும்பினிற் கட்டியுங் காய்பாலி னெய்யும் இரும்புண்ட நீரு மியல்பு -ஒளவைக் குறள் 143
வீச்சு என்றாலே ஒரு உந்து சக்தியான விசையையும், அதனால் ஏற்படும் உறாய்ப்பான திடீர்தாக்கத்தையும் குறிக்கிறது. இன்றைய உலகில் அம்பு வீச்சு, கதிர் வீச்சு, பந்து வீச்சு, கவிதை வீச்சு, விமர்சகர்களின் பேச்சிலக்கு, பண்டைய பாணியில் கல்வீச்சு, சொல்வீச்சு, கவண்வீச்சு, இன்று எடுபடமாட்டா(வீச்சு-விசை). பாரதிக்குப் பின்னால் எழுந்த புதுமை இலக்கியப் படைப்பின் வீச்சுக்கள் ஒரு வீறாப்பானவை, விரசமானவை, புத்தொளியானவை, நெஞ்சைச் சுடுபவை, சமகாலத்தாக்க வெளிப்பாடானவை. ஆயின் தொன்மையான இலக்கியங்கள் நெஞ்சையள்ளி என்றும் நிலைப்பவை. நினைவில் நீங்காதவை. மனிதனை வாழவைப்பவை. அழியாதவை, அழிக்கமுடியாதவை, வெளிநாட்டார் மதிப்பவை, எது தவிர்க்கப்பட வேண்டுமோ அது தவிர்க்கப்பட்டவை. (STENDHAL SAID THAT LITERTURE IA THE ART OF LEAVING OUT
அன்று எழுத்தாணி முனையில் எழுந்தவை இன்றோ பேனா முனையில் எழுபவை.வர்த்தமானங்கட்கமைய இவற்றின் வீச்சும், பாணியும், பாவமும், சுவையும், நயமும் கவித்துவமும், நடையும் வளமும் வெவ்வேறானவை. அழியா இலக்கியங்களைப் படைத்தவர்களில், பக்தித்துறையைச் செழிக்கச் செய்து, மனிதப் பண்பாட்டியலை உருவாக்கி, உலகின் மேம்பாட்டைக் கட்டிக்காத்த அவர்களின் பகைப்புலம் உத்தி புதிதானது. அவ்வாறே கவிதா வீச்சும் அன்றைய செய்யுள் நடையும், வகையும் வேறு. பாரதிதாசன் வரை மரபுவழி பேணிக் காக்கப் பட்டிருக்கின்றது. பல்லவர் காலம் பக்தி இலக்கிய காலம் என்பர். பக்திச் சுவை நிரம்பிவழியும் பாடல்கள் காலத்தையும் கடந்தவை. காலவோடத்தால் அழியாதவை, அழிக்கமுடியாதவை. அருணகிரியார், வள்ளலார், தாயுமானார், திருமூலர் திருவாதவூரர், ஆழ்வார்கள், மஸ்தான்சாகிபு, பாம்பன் சுவாமிகள்,பிள்ளைப் பெருமாளையங்கார் போன்றவர்களின் கவிதா சமார்த்தியம் ஒப்பீடு செய்யும் போது ஒரு தனித்துவம் வீறிட்டு நிற்கக் காணலாம். வெறுஞ் சுலோகங்கள் கவியாகுமா? பாரதியாரின் ஞானப்பாடல்கள் சிறந்தவை, துடிப்பானவை. சந்த வீச்சும் மொழி வீச்சும் திருப்புகழிலே கெம்பி எழுந்து சிந்தைக்கே வலுவூட்டுகின்றன. இந்நோக்கிலே திருவாசகம் தண்டமிழின் மேலாந்தரமுடையது. இதன் வீச்சை நுகர்ந்து, அனுபவித்துப் பேசுகிறார் கற்பனைக் களஞ்சியம் துறை மங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்.
36

விழைங்கிழை பகிர்ந்த மெய்யுடை முக்கட் காரண னுரையெனு மாரண மொழியோ ஆதிசீர் பரவும் வாதவூ ரண்ணல் மலர்வாய்ப் பிறந்த வாசகத் தேனோ,
யாதோ சிறந்த தென்குவீ ராயின் வேத மோதின் விழிநீர் பெருக்கி நெஞ்சநெக் குருகி நிற்பவர்க் காண்கிலேம் திருவா சகமிங் கொருகா லோதிற் கருங்கன் மனமுங் கரைந்துகக் கண்கள் தொடுமணற் கேணியிற் சுரந்துநீர் பாய மெய் மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப் பெய்தி அன்ப ராகுந ரன்றி மன்பதை யுலகின் மற்றைய ரிலரே.
வலமழுவுயரிய நவமலி கங்கை நதிதலை சேர்ந்த நற்கருணைக் கடல் முகந்துல குவப்ப வுகந்த மாணிக்க வாசக னெனுமொரு மாமழை பொழிந்த திருவா சகமெனும் பெருநீரொழுகி ஒதுவார் மனமெனு மொண்குளம் புகுந்து நாவெனு மதகி னடந்து கேட்போர் செவியெனும் நிலம்புக வுன்றிய வன்பாம் வித்திற் சிவமெனு மென்முளை தோன்றி வளர்ந்து கருணை மலர்ந்து விளங்குறு முத்தி மெய்ப்பயன் தருமே.
நவமலி வாதவூர் நல்லிசைப் புலவ! மனநின்றுருக்கு மதுரவாசக!
வலம்புரி கிடக்கும் வாதவூர் அன்ப! செய்யவார் சடைத் தெய்வ சிகாமணி
பாதம் போற்றும் வாதவூர் அன்ப! - நால்வர் நான் மணிமாலை.
அன்பின் வெளிப்பாட்டுக்கு நிலைக்களமாகி, உள்ளத்தை உருக்கும் வீறொடு பாயும் வான்யாறான திருவாசக வீச்சிலே ஒருவர் தன்வசம் இழநது சிவமயமானார். அவர்களே திருவாசக சுவாமிகள். சுவாமிகளின் பக்கல் அமர்ந்து வாசகம் மடுத்தவர் சிவஞானம் இசைஞானி, யாழை மீட்டி (யாழிங்கேவயலின்) செவியினிக்கப் பாடும் வன்மையரான அவர்கள் தேனருவி எனச்சிறப்பிக்கப்பட்டார்). ஒளிமயமான அவர்களின் நாவினின்று எழும் ஒலிமயமான நாதப்பிரம்மம் (வாத்தியத்தோடு குழைந்து, கலந்து)
37

Page 28
இசையும் போது பேரின்பமயமான இலயத்தைச் சொரியும். கேட்போருக்கு இதம் அளிக்கும். அதேபோல சுவாமிகள் திருவாசகத்துக்குச் சொன்ன எவரும் சொல்ல முடியாத விளக்கங்களை எல்லாம், பொருத்தமான கட்டங்களில் இசைவான தொனியோடு எல்லாரும் புரியக்கூடிய குழை தமிழில் சொல்வார்கள். சபையோர் திருவாசகமாகக் காட்சிதருவர். புதிய, புதிய மெட்டிலே வாசகங்களை மதுரமாகப் பாடுவதும் இசைகாண்பதும் , மென்விரல்நுனிகளிலே அவற்றை வயலினில் வாசிப்பதும் ஒரு கலைப்புதுமை எனலாம். சுவாமிகளின் வாசக வீச்சு சிவஞானத்தின் உயிர்மூச்சாகவும் பேச்சாகவும் அமைவதே ஒரு தனிப்பாவம். தேனருவியாய்ச் சலசலத்தோடும் அந்த வாத்தியத்தின் நாதமே அமிர்த கானம்.
நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய் வல்லமை தாராயோ - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
ہجیسے شد تحسیسی
ஆத்ம ஜெயம் ஆனந்தவயம் கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்
கவர்ந்திட மாட்டாவோ? அட மண்ணில் தெரியுது வானம், அது நம்
வசப்பட லாகாதோ எண்ணி எண்ணிப்பல நாளுமுயன்றிங்
கிறுதியிற் சோர்வோமோ? - அட விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும்
மேவு பராசக்தியே எண்ணிலும் என்ன வரங்கள் பெருமைகள் வெற்றிகள்
எத்தனை மேன்மைகள் தன்னை வென்றாலவை யாவும் பெறுவது
சத்திய மாகு மென்றே முன்னை முனிவர் உரைத்த மறைப் பொருள்
முற்றுமு ணர்ந்த பின்னும் தன்னை வென்றாலும் திறமை பெறாதிங்கு
தாழ்வுற்று நிற்போமா? -மஹாகவி
38

வாழ்வின் இனிமையான ஓட்டத்தைக் காணவும், அனுபவிக்கவும் ஒவ்வொரு மனிதனும் துடிக்கிறான். இத்துடிப்பு இன்றுநேற்றல்ல என்றுமே உள்ளதுதான். இனியும் இருக்கத்தான் செய்யும். புனிதமான வாழ்வியல் வரைபடம் இது தான் என்று சொல்ல முடியாது. அனுபவார்த்தமாகக் கண்ட உண்மைகள் அவனுக்குக் கிடைத்த சொத்து எனலாம். அவ்வழியில் எழுந்த சமுதாயக் கோட்பாடுகள் மனிதனை நீதி, தர்மம், உண்மை, நேர்மை, கண்ணோட்டம், சான்றாண்மை, ஒப்புரவு, மனச்சாட்சி போன்ற நேரிய பாதைக்கு நெறிப்படுத்தின. நீதிக்குத் தண்டனையேது? புண்ணியத்துக்குப்பிராயச்சித்தம் வேண்டாம். தெய்வீகத்துக்கு மேலாணை கிடையாது. எனவே இன்னோர் மூலையில் நின்று அவதானித்தால் புண்ணியம் செய்தாலும், பாவம் செய்தாலும் விலங்கு தான் மனிதனுக்கு. ஒன்று பொற்காப்பு எனின் மற்றையது இரும்புக் காப்புஎனலாம். எனவே ஒழுங்கான பாதையில் மனிதனை இட்டுச் செல்லும் சமயங்கள் பல. அவை ஆறுகள் போல்வன. எல்லா ஒடைகளும் சிற்றாறாகி, நதியாகி, பேராறாய்க் கடலில் சங்கமம் ஆவது போன்றே மதங்களும் ஆன்மாக்களை இறைவனிடம் சேர்ப்பன. நதிக்கு இரு கரைகள் உண்டு. கடலின் கரை காணமுடியாதது. அதன் எல்லை எது கடலை அளந்து சொன்னவர்கள் எவரும் இல்லை. விஞ்ஞானம் இன்று முயல்கிறது முற்றுப்பெறவில்லை. இறைவனும் அங்கிங்கெனாது எங்கும் நிறைந்தவன். இதை மணிமொழியார் "ஈசனே நீயல்லதில்லை இங்குமங்கும் என்பது பேசினேன்” ஒரு பேதமின்மை என்று பாடினார்.பிரகலாதன் என்னைவிடப் பிரமம் இல்லை என்ற தந்தைக்குச் சொன்ன பதில் இது.
சானிலும் உளன்ஒர் தன்மை
அணு வினைச் சதகூறு இட்ட கோணிலும் உளன்மா மேருக் குன்றிலும் உளன்இந் நின்ற தூணிலும் உளன் நீ சொன்ன
சொல்லிலும் உளன்இத் தன்மை காணுதி விரைவி னென்றான் -கம்பன்(ஆதி சங்கரர் சொன்னார் பிரமத்தைத் தவிர ஒன்றுமில்லை என. இரணியன் சொன்னான் என்னைத் தவிர பிரம்மம் இல்லை என - சிந்திக்கற்பாற்று)ஆறுகள் சங்கமமானதும் கடல் வேறு, ஆறு வேறு என்று பிரிக்கவும் முடியாது, பிரிவதும் இல்லை. இவ்வுண்மையைக் கம்பர் உருசுப்படுத்தினார்.
கல்லிடைப் பிறந்து போந்து கடலிடைக் கலந்த நீத்தம் எல்லையில் மறைகளாலும் இயம்பரும் பொருளி தென்னத்
39

Page 29
தொல்லையில் ஒன்றே யாகி துறை தொறும் பரந்த சூழ்ச்சிப் பல்பெரும் சமயம் சொல்லும் பொருளும் போல் கரந்ததன்றே. இறைவன் சமயாதீதப் பழம்பொருள். அவனை இப்படியன், இந்நிறத்தன், இவ்வண்ணத்தன், இவனிறைவன் என்றெழுதிக் காட்டொணாதே என அப்பர் பெருமான் கூறினார். எனவே அவனருளாலே அவன்தாள் வணங்கு என்கிறார் மாணிக்கவாசகப் பெருமான். அவர்களின் பின் தொடர்ந்தவர்தான் சபாரத்தின சுவாமிகள்.
இமைப்பொழுதும் நீங்காதபடி, இடைவிடாது இறைவனைச் சிக்கெனப் பிடித்து வாழ்ந்தவர். எனவே பதினாறும் பெற்றுப் பிறப்பறுத்தார். உலகியலிலே செல்வங்கள் பதினாறு. புதுமணத்தம்பதிகளைப் பதினாறும் பெற்று வாழ்க என வாழ்த்துவர். பதினாறு குழந்தைகள் எனத் தப்பர்த்தம் செய்யக்கூடாது. பதினாறு வகைப்பட்ட செல்வங்களே அவை.
துதிவாணி, வீறு, விசயம், சந்தானம், துணிவு, தனம், மதி, தானியம், சௌபாக்கியம், போதம், அறிவு, அழகு, புதிதாகு பெருமை, அறம், குலம், நோயகல் பூண்வயது பதினாறு பெறும் தருவாய் மதுரைப் பராபரனே.
இவற்றைப் பெரும் பேறு என்கிறோம். பெறப்படுவது பேறு. இறைவனாகத் தருவதைவிட நாமாக முயற்சி செய்து பெறவேண்டியனவும் உண்டு. சகல சம்பத்துக்காகவும் பூஜை செய்வதும் ஒரு பிரார்த்தனை தான். ஆனால் ஆத்மீக யாத்திரையில் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு படிகள் உண்டு. ஒவ்வொன்றுடனும் மற்றவற்றைக் கூட்டிப்பார்த்தால் 4x4=16 ஆகும். உ+ம்: சரியையிற் சரியை- சரியையிற் கிரியை - சரியையில் யோகம் - சரியையில் ஞானம்.
இறுதி ஞானத்தில் ஞானம் வாதவூரடிகள். ஞானத்தில் ஞானம் கண்டவர்கள். அவ்வழியொன்றையே திருவாசக சுவாமிகளும் மேற்கொண்டார். இவையும் 16 செல்வங்களே.மேலும் சாக்கிரம்,சொப்பனம், சுழுத்தி, துரியம் என்னும் நான்கு நிலையிலும் துரியத்திற் துரியம் பதினாறாவது நிலை. திருவாசக சுவாமிகள் தற்போதமிழந்து ஆத்ம ஜெயம் பெற்றார். அதன் பயன் ஆனந்த மயமாகவே வாழ்ந்து பேரானந்தப் பெருவாழ்வு பெற்றமை,
( ; )
40

ஞானசிரியரின் திருவாக்குகள்
பண்ணின் இசையாய் நின்றாய் போற்றி பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி - மருணிக்கியார்
இறைவனின் உணர்த்து கைக்கு ஆளான சுவாமிகளின் திருவாக்குகளை தேனருவி சிவஞானம் அவர்களின் பதிவுகளில் இருந்து இங்கே எடுத்தாளப்படுகிறது. 30.12.86 ஆம் தேதிழரீசபாரத்தினம் சுவாமிகள் அருளிய விளக்கங்கள்.
உபதேசம் செய்பவர் திருப்பெருந்துறையான் இருதயஸ்தானம் உள்ளத்தில் இருந்து உபதேசம் செய்பவர் - அருவக்குரு. மெய்யர் மெய்யனே ஊனக்குரு - வழிகாட்டிக்குரு
ஆத்ம பரிபூரணம் பெற அருவக்குரு - இதயஸ்தானத்தில் இருந்து பேசுங்குரு உடையாள் - இறைவனுக்குள் இறைவி, இறைவிக்குள் நான் - சக்தி : வேலை இயக்கம். ஒருதரம் கேட்டாற் கொடுப்பரோ தகப்பன். நைந்து நைந்து உருகிக் கேட்பவர்க்குக் கொடுக்கப்படும் "ஒயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானை .
ஒதுதல் வாயினாற் சொல்லல் - சொல்லாமல் கிட்டாது காயம் - வாக்கு - மனம் - கர்மபலன் இவ்வுடல் சரியை, கிரியை, யோகம், ஞானம் - நான்கு
யோகம் - சத்தியின் ஒளித்தோற்றம், ஞானம் - குருபேசும், ஆத்மா பேசும் - ஆத்மாதான் திருவடி, காலாட திருவடியாட - உடல் உயிர் ஆட மாணிக்கர் 7 தலங்களைத் தரிசித்தவர் - சிற்றம்பலவன் எழுதியது மணிவார்த்தை.
ந - கால், ம - வயிறு, சி - தோள், வ - வாய், ய - முகம் அவன் திரு உரு - அவன் இருக்க வீடுகட்டினான் (அது) இந்த உடல் கடவுளை வணங்கினாற் பிச்சேற்றிப் பிறப்பறுக்கும். மெய் - உடம்பு; அவனைக் கண்டால் உடம்பு மெய்.
நமசிவாய - நான் அது என்ற பாவனையில் - அதாவது - சிவாயநம எனப் பெற்றேன்.
உடலோடு கூடிய தூலமந்திரம் - நமசிவாய கீழே இருந்து மேலே போவது - சூக்குமம் - ஆன்மா அதேவடிவாய் இருந்து “சிவாயநம” சிவனாய் இருந்து பார்த்தல் விரவியதீவினை . திருவாசகம், முந்நீர் - ஆணவம், கன்மம், மாயை ஆன்மாக்களுக்கு - கன்மம் இருப்பதனால் கனவில் தோன்றும் பணிவார் - திருவாசகம் (ஆனந்தபரவசம்) பத்திநெறி - ஐம்புலன்களும் அகத்தடக்கி வைத்தல்
41

Page 30
யானை - யான் + ஐ, ஐம்புலன்களாற் கட்டுண்ட யானை நான் பாவியன்-நான் இறைவனைப்பாவித்துத் தொழமாட்டேன் பாவித்தல் - தியானித்தல் - சிரிப்பார்களிப்பார் தேனிப்பார் . மேற்கோள்
பாவியேன் உன்னையல்லால் பாவியேன் பாவியேனே
-தொண்டரடிப் பொடிநண்பனோடு மனம் விட்டுப் பேசலாம். ஒளிவுமறைவு இன்றி வேறெவருடனும் பேசமுடியாத இரகசியங்களைப் பேசும் இடம் நண்பன். இறைவனை நண்பனாகக் காண்பதன் பெருமை இதுதான்.
"குருநாதன் திருவடிகளே சரணம் கண்ணனின் பத்மபாதங்களே தஞ்சம் பூர்த்தி 31.12.94.
இராஜாஜி பஜ கோவிந்தத்தில் "......... பக்தி இன்றி உள்ளத்திற் துறவு ஏற்படாது. மாணிக்கவாசகர் பாட்டுகளைப் படித்துப் பார்த்தால் இது தெரியும். அவர் அறியாத வேதாந்த தத்துவம் இல்லை. அவர் அழுது, அழுது பாடியிருக்கிறார். பகவானைத் தன்னைப் பெற்ற தாயாக, தகப்பனாக, அதைவிட நெருங்கிய உறவினனாக மாணிக்கவாசகரைப் போல் நாமும் உருகி அன்பு செலுத்த வேண்டும். செலுத்தினால் ஒரளவு அறிவு பெறுவோம். ஆசைகளை அகற்றும் சக்தி ஒரளவு பெறுவோம். பக்திஇன்றி வெறும்படிப்பினால் துறவுநிலை உண்டாகாது.
ஒம் சாந்தி சாந்தி சாந்தி
ଖୁଁ
SRe, ஆ
42

ஒடும் செம்பொனும்
சிந்தாமணி என்பவர் ஸ்வாமிகளோடு கேதிச்சரத்தில் நெடுங்காலம் வாழ்ந்தவர். இல்லறம் மேற்கொண்டார். விதிவிளையாடியது. வறுமையும், மழலைச் செல்வங்களும் உறவாடின. அவரது சொந்த ஊர் மண்டைதீவு. சுவாமிகளுக்கு அவரிலே நல்ல அன்பு ஒருதினம் மண்டைதீவு போய் அவரைச் சந்தித்து, குடும்ப சம்ரட்சணைக்காகப் பணமும் உதவி, அவரையும் கூட்டிக்கொண்டு சோதியக்கா வீட்டுக்கு வந்தார். ஒருவாரமாகக் சற்சங்கம் அங்கே. சிந்தாமணிய வாசகம் திருப்புகழ் பட்டினத்தார் பாடல்கள் உருகிப்பாடுவார். பலர் இதிலே கலந்து கொண்டனர். நாட்போனது தெரியவில்லை. கடைசிநாள் காலையில் இருவரும் புறப்பட ஆயத்தமானார். ஸ்வாமிகள் சோதியம்மாவிடம் இவனுக்கேனும் தூணிமணி குடு என்றார். அவவும் முக்கிய உடுப்புகள் கொண்டுவந்து அப்புவிடம் (சுவாமிகளை அவர் அப்பு என்றே அழைப்பார்) கொடுத்தார். அவர் எல்லாவற்றையும் பேப்பரிலே கட்டி, சிந்தாமணியின் கையில் கொடுத்தார். காலைப் போஜனம் முடித்துக்கொண்டு அவரவர்தம்பாட்டிலே புறப்பட்டுப் போனார்கள். ஸ்வாமி பஸ் ஏறி நல்லூர்ப்பக்கம் போனார். சிந்தாமணியும் யாழ்ப்பாணம் மார்க்கமாக மண்டைதீவு போய்ச் சேர்ந்தார். போனதும் வீட்டில் பார்சலை அவிழ்த்து விரித்தார். என்ன அதிசயம் சிந்தாமணியரின் மனைவிக்கு என சோதிஅம்மா கொடுத்த சேலை மடிப்புள் ஒரு தாலிக்கொடி இருப்பதைக் கண்டுவோர்த்து விறுவிறுத்துப் போனார். உடனடியாக அதை எடுத்துக்கழுத்திலே போட்டு, மேலே சேட் போட்டுக் கொண்டு அடுத்த பஸ்ஸில் ஏறி உரெழு வந்தார். சிந்தாமணியைக் கண்டதும் சோதியம்மா என்ன மணியண்ணே போனதும் வந்ததுமாக வந்துவிட்டீர்கள். எதையோ விட்டிட்டுப் போட்டீர்களோ என்று கேட்டார். அவர் உடனே தாலிக்கொடியை எடுத்து நீட்டினார். சோதியம்மா திகைத்துப் போனார். உண்மையிலே 15 தங்கம் பவுணுக்குக் குறையாத தங்கக் கொடியது. அவர் பேசாமல் வேண்டி உள்ளே வைத்துவிட்டு, 100 ரூபாவுடன் வந்தார். சிந்தாமணியர் அதை வேண்ட மறுத்துவிட்டார். கெஞ்சியபின் வேண்டிக்கொண்டு வீடு திரும்பினார். இச்சம்பவம் அடுத்த முறை அப்பு சோதியம்மா வீடு வந்தபின்தான் தெரியும். எப்படி இருக்கிறது. திருவடியார் சிறப்பு சேக்கிழார் பாடிய ஒடும் செம்பொனும் ஒக்க நோக்குவார் என்னும் பாடலின் பொருள் திருவாசக சுவாமிகளின் திருக்கூட்டத்தைச் சேர்ந்த அடியாரான ஒருவரிலே பிரத்தியட்சமாகக் காணமுடிந்தது. அடியார் பெருமை அறைதற்கரிது அறிதற்கரிது.
"குருநாதன் மலரடிகளே சரணாலயம்”
k****************************
43

Page 31
சிவமயம்
வணக்கம் 一会令一尝一 அருமறைப் பொருளே போற்றி ஆனந்த வடிவே போற்றி இறைவனே ஈசா போற்றி ஈசனே இறைவா போற்றி உத்தமக் குருவே போற்றி ஊழ்வினை களைவாய் போற்றி எழிலுடை அரசே போற்றி ஏந்தலே குருவே போற்றி ஐந்தெழுத் தானாய் போற்றி
ஒன்றென நின்றாய் போற்றி ஒசையே ஒலியே போற்றி ஒளடதம் ஆனாய் போற்றி கண்ணுதற் பொருளே போற்றி காத்திடு குருவே போற்றி கிருபையே செய்வாய் போற்றி கீரனை வென்றாய் போற்றி குருபரன் ஆனாய் போற்றி கூத்தனே குருவே போற்றி
கெங்கையின் சடையாய் போற்றி
கேண்மையின் குருவே போற்றி கைப்பொருள் ஆனாய் போற்றி கொன்றையை அணிவாய் போற்றி
கோபியர் தலைவா போற்றி கெளதமற் கருளினை போற்றி சற்குரு பரனே போற்றி சாமந்தி மலரே போற்றி சிவசிவ குருவே போற்றி சீவரைப் புரப்பாய் போற்றி சுப்பிர மணியா போற்றி
சூரனைத் துடைத்தாய் போற்றி சூக்குமப் பொருளே போற்றி செண்பக மலரே போற்றி
(1)

சேவலங் கொடியாய் சைகையின் மொழியே சொற்ெெபாருளானாய் சோமனே குருவே செளமிய மூர்த்தி
போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
தனிப்பெருங் கருணையே போற்றி
தாமரை நிறத்தாய்
திவ்விய குருவே தீனரின் துணையே தும்பையை அணிவாய் தூதனாய் நடந்தாய் தூமலர்த் தொடையாய் தெண்ணிலா முடியாய் தேவரின் தேவே தையலோர் பங்கா தொல்வினை களைவாய் நம்பரின் நம்பா
நம்பினர்க் கருள்வாய் நால்வேதப் பொருளே நிர்மல வடிவே நிர்த்தன வடிவே நீதியின் வடிவே நுண்ணிய குருவே நூலெலா முணர்ந்தாய் நெற்றியிற் கண்ணாய் நேத்திர மானாய் நைந்தவர்க் காப்பாய்
நொந்தவர் துணையே நோன்மதி யணிந்தாய் நோயினைக் களைவாய் பக்குவக் குருவே பாவனா தீதனே பாடலின் கருத்தே பிஞ்ஞகன் பிள்ளாய் பீடுடைப் பொருளே புனிதனே குருவே பூதலத் தொருவனே
(2)
போற்றி
போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

Page 32
பெண்மையின் அழகே பேதமை களைவாய் பையர வணிந்தாய் பொற்பதமுடையாய் பொற்குவை தருவாய் போதென மலர்ந்தாய் பெளவமே மலையே மன்னிய குருவே மாதொரு பாகா மின்னலின் ஒளிர்வாய்
மும்மல மறுப்பாய் முப்புர மெரித்தாய் மூவரும் ஆனாய் மெல்லென வருவாய் மேதகு குருவே மையலை ஒழிப்பாய் மொய்குழலிடையாய் மோகன சுந்தர மெளவலின் அழகே வந்தனைக் குருவே
வாதனை தீர்ப்பாய் வித்தகக் குருவே விடுதலை அளிப்பாய் வீணையின் ஒலியே வெற்பினிலுறைவாய் வேதமே வடிவாய் வையகம் காப்பாய் அரஹர குருவே ஆத்ம குருவே இணையடி தருவாய்
ஈங்கோய் இறையே உன்னடி தொழுதேன் ஊனையும் துறந்தேன் எமையாள் குருவே ஏழ்மையும் தொடர்வாய் ஐயனே குருவே ஆரமு தானாய்
(3)
போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

ஒருவனே குருவே போற்றி ஒமெனும் பொருளே போற்றி
தத்துவ முதலே போற்றி
தயாபரன் ஆனாய் போற்றி குருவென வந்தாய் போற்றி அருவமே அருளே போற்றி
பெருநெறி அருள்வாய் போற்றி
இருவினை அழித்தே எனக்குத் திருவடித் தீட்சை நல்கிய ஒருவனே காப்பாய் என்றும் உத்தமக் குருவே போற்றி சித்திகள் தந்தே என்னை ஆண்டருள் குருவே போற்றி
போற்றி போற்றி நின்னுடைப் பொற்பதம் போற்றி போற்றி.
--seek ocese-e-
முருகுப்பிள்ளை சுவாமிகள்
முருகுப்பிள்ளைச் சுவாமியோ, அல்லாயிற் பிறந்து ழரீரமண மகரிஷியின் ஆசியைப் பெற்றவர். சின்னத்தம்பிச் சுவாமிகளின் சீடர்களுள் முதல்வரான இவர் செல்வச்சந்நிதியில் ஆத்மிக பேரொளி பரப்பி “கடவுள் சுவாமி” “மெளன சுவாமி” போன்ற பெயர்களைப்
Se N JY Gs2S
(4)

Page 33
9சிவமயம்
பக்தனும் பரமனும்
செஞ்சொற் கொண்டல், சைவசித்தாந்த பண்டிதர், வாகீச கலாநிதி, கனகசபாபதி, நாகேஸ்வரன் (செயலாளர், திருநெறிய தமிழிசைச் சங்கம்)
மறவன் புலவிலே உதித்த இந்த இருவரை உணரும் பேறு இவ்வுலக வாழ்விலே அடியேனுக்குக் கிடைத்தமைந்ததுவும் தவப்பயனேயாம். இருபெரும் தமிழ் இலக்கியங்களினூடே தரிசிக்கும் பேறும் தவவலியின் தனித்துவப் பேறே.
திருக்குறளை முற்றிலும் மனனஞ் செய்த பண்டிதர் நா. ஆறுமுகம் அவர்கள் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் நீண்டகால நல்லாசிரியர். இலக்கிய இலக்கண சமயத்துறைகளிலே துறைபோன ஞானாசிரியர். இன்றைய வீரேகசரி பத்திரிகையின் நல்லாசிரியராகவும்,
அன்பும் பாசமுமிகும் அருமைத்தந்தையார் பண்டிதரவர்களும் பேராசானும் என் தவப்பயனாகக் கிடைத்த மதுரக் கனிகள், மாந்தருள் மாணிக்கங்கள். திருக்குறளைத் தாடனமாக, வரியோ, எழுத்தோ பிழைவிடாதவகையில் பொருளொடு, தெளிவும் மிளிர எடுத்துக் கூறும் புலமைத்துவம், மேதாவிலாசம் பண்டிதர் ஆறுமுகனாருக்குக்கேயுரியது. அவர் மறவன் புலவிலே வந்துதித்த ஞானக் கொழுந்து. மாணவ பரம்பரையை விட்டுச்சென்ற நல்லாசான். திருக்குறளை நயப்பதற்கும் மனனஞ் செய்வதற்கும் பயிற்றிய முன்னோடி. மற்றவர் திருவாசகம் சபாரத்தினம் சுவாமிகள் பற்றிப் பலரும் அறியமாட்டார்கள். ஆனால் அவரது ஞானப்பரம்பரை என விளங்கும் மாணவர்களே இன்றும் வியந்து, உள்ளம் நெக் குருகும் இயல்பினராயுள்ளனர். திருக்கேதீஸ்வரத்திலே திருவாசகசுவாமிகள் பூரீ சபாரத்தினம் அடிகளை அடியேன் தரிசித்தது கிடையாது. கண்களாலேயே காணத்தகும் பேறு கிட்டவில்லை. ஆயினும் சுவாமிகளது ஈர்ப்பினாலே கட்டுண்ட மெய்யடியார்களது தொடர்பு பிற்காலத்தில் அடியேனுக்கும் கிடைக்க வாய்ப்புண் டாயிற்று. அத்தகையோரில் குறிப்பிடத்தக் கவர்கள் : செங்கையாழியான், ஆழ்கடலான், கவிஞர் முருக.வே.பரமநாதன், அறிஞர் க.சி.குலரத்தினம், சிவதர்ம வள்ளல் க.கனகராசா, கவிமாமணி இணு வில் வீரமணி ஐயர், தொண்டர் சபைச் செயலாளர் உயர்திரு துரைராஜா, திருவாசகம்
(5)
 
 

வே.சிவஞானம், ஆத்மஜோதிநா.முத்தையா, சிவத்தமிழ்ச்செல்விதங்கம்மா அப்பாக்குட்டி, அருட்கவி சீ. விநாசித்தம்பிப் புலவர், புலவர் ஈழத்துச் சிவானந்தன் ஆகியோரைக் குறிப்பிடலாம். திருவாசக சுவாமிகளைக் கண்டவர்களைக் கண்டவன் என்னும் தகுதிப்பாட்டாலும், 1995 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி வசித்து வந்த யாழ்மண்ணை விட்டுக்குடும்பத்தோடு புலம்பெயர்ந்தபோது கையிலும், பையிலும் எடுத்துவந்த நூல் திருவாசகம் ஒன்று மட்டும் தான் என்ற தனித்தன்மையினாலும் இக்கட்டுரையில் "பக்தனும் பரமனும்” என்ற பொருளில் அணிந்துரை உரைக்கும் தகமையையானே கிளர்த்தி உருவாக்கிக் கொண்டு ஆன்ம ஈடேற்றம் நல்கும் திருவாசகம் பற்றியும் திருவாசக சுவாமிகள் பூரீ சபாரத்தினம் அவர்களைப் பற்றியும் முருக.வே.பரமநாதன் அவர்கள் எடுத்துரைக்கும் நூற்கருத்துக்களது நயப்பினால் சில கூறலாம் என்று எண்ணுகிறேன்.
பக்தன் திருவாசக சுவாமிகள் பூரீ சபாரத்தினம் அடிகளார். பரமன் திருவாசகத்தைத் தமது திருக்கரங்களினால் எழுதிய சிவபிரான். பக்தனின்றேல் பரமனில்லை. பரமனைக் கண்டு காட்டுபவன் பக்தனே. ஆதலினால் பக்தியினாலும் அப்பக்தியினால் உயர்ந்து நிற்கும் பக்தனினாலுமே உயர் பொருளான பரமனை அடையலாம் என்பதற்குத் திருவாசகமும், சுவாமிகளும், சிவனருளுமே பிரத்தியட் சமான சாட்சிகளாகும். இன்னுமொன்று பரமநாதன் அவர்களது உள்ளத்தெழுந்த ஞானக்கருத்துக்களும் படிப்போரைப்பக்தனாக்கும் பக்குவத்தன்மையினால் "பக்தனும் பரமனும்” என்னும் தொடர் வழிபடும் நெறி அறிந்து ஒழுகவேண்டும் எனவிரும்பும் ஆன்மாவுக்குத் திருவாசக நெறிநின்று, நெக் குருகிக், குழைந்து, அருவி கண்ணிலே சொரிய உடல் புளங்காகிதமடைய,உணர்வு மேலிடவாழும் முருக.வே.பரமநாதன் அவர்கள் காட்டும் நெறிகள் என்றும் இன்னொரு பொருத்தப்பாடுமிக்க பொருளையும் காணலாம். இவ்விரு நோக்கிலும் எதனை வேண்டுமானாலும் உளத்திருத்திப் படிப்போருக்கு இனி வரும் மெய்ஞான தத்துவக் கருத்துக்கள் தெற்றென விளங்கும்.
தூரதேசத்திலுள்ள ஒருவருடன் இங்கிருந்து தொடர்பு கொள்ள, நேர்முகமாக நேருக்குநேர் தொடர்பு கொள்ள, உறவு கொள்ளத் தொலைபேசி இருப்பது போல் பக்தனுக்கும் பரமனுக்கும் நேரடியாகத் தொடர்பு கொள்ளத் தக்க சாதனமாயமைவது திருவாசகம். திருவாசகம் தொடர்புச் சாதனம். உள்ளத்தோடு உள்ளம் தொடர்பு கொள்ள, இறைவனோடு ஆன்மா உறவுகொள்ள, இன்பத்தோடு இன்பம் சங்கமிக்க உதவும் ஞானக்களஞ்சியம் திருவாசகம். நேரடியாகவே இறைவன் லயிப்பில் ஆழ்த்தும் மகத்துவ சக்தி திருவாசகத்திற்கு உண்டு. திருவாசகம் மதுரவாசகம். தமிழ் வாசகங்கள் எல்லாவற்றிற்கும் மகுடமாயமைந்து
(6)

Page 34
இயங்குவது திருவாசகம். திருவாசகம் என்னும் ஞானச்சுரங்கத்துள் மூழ்கினால் எத்தனையோ பெறுமதிமிக்க அற்புதக் கருத்துக்களான முத்துக்களையும் இரத்தினங்களையும் பெறலாம். பாடல்கள் அல்ல அவை. சிவனென்னும் செம்பொருளோடு சேர்த்து சுகானுபவம் காணும் அகத்துறையின் கொடுமுடி அன்பு பழுத்தநிலையில் அறிவு கலங்கி ஆனந்த வெள்ளத்தழுத்தும் அமுதத்தமிழ்ஞானம் பேரிலக்கியம்.பக்தி சுரந்து உள்ளம் ஒளிபெற்றுத் திகழ உதவும் பனுவல். ஆதலினால் திருவாசகத்தை உள்நெக்கு நின்றுருகிப் படிப்போரே அதன் அருளமுதச் சுவையினை மாந்தி இன்புறுவர். அன்புறு சிந்தையரே இன்புறு சிந்தையராகப் பண்புறும் தகைமையை நல்குவது திருவாசகம்.
"வாசகங்கள்” எல்லாவற்றுள்ளும் மணிமகுடமாக மிளிரும் வாசகமே திருவாசகம். திருவாசகச் சுவையறிவதற்குத் தகைமை வேண்டியதில்லை. "உணர்வு” ஒன்றே திருவாசகத்தினை நெருங்குவதற்குப் போதுமானது. உணர்விலே உயர்வானதாகக் கருதப்படுவது "பக்தியுணர்வு” பக்தி உணர்வே பணிவுணர்வைத் தரும். பழுத்த ஞானிகள் யாரென்றால் என்றும்பணிவு உடையவர்களே. எனவே பண்பும், பணிவும் பக்தியும், அருளும், அன்பும், அரவணைப்பும், தெளிவும், தேற்றுதலும் என்னும் அதிஉத்தம, அதிமானுடப் பண்புகளனைத்துங் கொண்ட ஞானத்திருவுரு வடிவமே திருக்கேதீஸ்வரம் பூரீமத் சபாரத்தின சுவாமிகள். எழுத்தாளரும் சுவாமிகளின் பேரன்புக்குப் பாத்திரமான கவிஞர் முருக.வே.பரமநாதன் அவர்கள் சுவாமிகள் பற்றிய தோற்றப்பாடுகளையும் திருவாசகத்திற்கு சுவாமிகளுரைக்கும் மறைஞானத்தத்துவ விளக்க விசாரங்களையெல்லாம் இந்நூலிலே சுவைபட அருளொடு கலந்த கலவையாக எழுதியுள்ளார். உயர்ந்த சிந்தனைதான் ஞானிகளினது நோக்கம். உயர் ஞானத்துச்சியிலே தான் அருள்ஞானம் பழுத்துச்சிவஞானம் கனியும். அத்தகு புலமை, அறிவாழம், சிந்தனை வீச்சு, மேதாவிலாசம், ஞான நோக்குடையவர்ழரீமான் சபாரத்தினம் சுவாமிகள். பழுத்த ஞானப்பழம் சுவாமிகள். புலன்களால் காணாத ஞானலயிப்பு இன்பம் கொண்ட தன்னடக்க சீலர். தவச்செல்வர், தனக்கென்று வாழாதவர், தரணியில் உதித்த ஞானச் செல்வர்.பக்திக்கனி அமுதமாக மிளிரும் திருவாசகத்தினை உடல், உயிர், உள்ளம் மூன்றினாலும் முறையாகச் சீண்டி அதிலுதிர்ந்த அனுபவ அருள் ஞானவெளிப்பாடுகளையெல்லாம் அபரிமிதமாக அள்ளியள்ளி உலகுக்கு உணர்த்திய ஞானப்பேரூற்று.
பண்சுமந்த பாடல்கள் திருமுறைகள் அதிலும் திருவாசகம் தேனின் சுவையெனச் சுவைப்பது.பக்தி ஊற்றைத்திறப்பது. இப்படியாக பரமனுடைய பெருங் கருணையினாலேயே பூரீ சபாரத்தின சுவாமிகளின் குருநிலைத் தொடர்பு முருக.வே.பரமநாதன் அவர்களுக்குக் கிடைத்தமை பற்றிய பிறரறியாச் செய்திகளை விரித்து, விபரித்து இங்கு அழகாகவும்,
(7)

ஆழமாகவும், அருமைப்பாட்டுடனும் அற்புதமான சொற்களினாலே எடுத்துரைக்கின்றார் ஆழ்கடலான். சுனை, ஊற்று, ஞானச்சுரங்கம் போன்றவர்கள் ஞானிகள். சுனை, ஊற்று உலகின் சிற்சில இடங்களில்தான் உண்டு. அவற்றை அறியும் பெரும்பேறும் சிற்சிலருக்கு மட்டும்தான் வாய்க்கும் ஆனால் இம்மண்ணில் சுனைகள் ஞான ஊற்றுக்கள் வற்றிவிடுவதில்லை. ஆதலினால் ஞானவான்களாகிய ஞானஊற்றுக்கள் காலத்துக்குக் காலம் அவதாரெமடுத்துக் கருத்து வளத்தை, புதிய தத்து வத்தை நல்கி உயர்நெறியிற் சென்று வாழ உபதேசம் அருளுகின்றனர். அத்தகு புனிதர், சீலர் சிவயோகிதவசீலரே திருக்கேதீச்சரம்பூரீசபாரத்தினம் சுவாமிகள் என்பதனைக் கட்டுரை யாசிரியர் முருக.வே. பரமநாதன் அவர்கள் செப்பமுடன் உரைக்கிறார்கள். இன்பமே சூழ எல்லோரும் வாழ அருளப்பட்டதே திருவாசகம். அப்படி வாழ்விப்பதற்காகவே அருட்குரு வடிவில், ஞானாசிரிய வடிவில் மானுடச்சட்டை தாங்கிவந்த பரமாச்சாரிய சுவாமிகளே பூரீமத் சபாரத்தின சுவாமிகள் என்றால் அது பொருத்தமானதொன்றாகும்.
ஞானசம்பந்தப் பெருமான் தமது ஞானசம்பந்தம் என்னும் பேருணர்வினால் அகக்கண்கொண்டு திருக்கேதீஸ்வரத்தை மறுகரையிலே நின்றுதான் திருமுறையிற் பாடியருளினார். திருக்கேதீஸ்வரத்தை மனக்கண்ணினால் ஞானதீட்ஷண்யத்தினால், உள்ளூர,உணர்வுநிலையில் தரிசித்து அருளப்பட்டவையே சம்பந்தர் பதிகங்களாகும். எனவே சம்பந்தர் கற்பனைக்களஞ்சியம். உள்ளொளி கிளர்ந்து பக்தியால் பழுத்து தெய்வீகத் திருத்தலத்திலே சிவனைக்கண்டு காட்டியவர். அம்மரபிலே பரம்பரைப் பாரம்பரியத்தின் வளர்ச்சியும் தொடர்ச்சியுமாக அவதாரம் செய்து உய்யுநெறி காட்டிய உத்தம தத்துவ மேதையே பூரீமத் சபாரத்தின சுவாமிகள். எங்கள் குருநாதன் பூரீமத் சபாரத்தின சுவாமிகள் ஒரு ஞானப்பழம் முருகப்பெருமானும் உபதேசம் செய்தருளிய ஞானப்பழம். முருகப் பெருமானுடன் உபதேசம் செய்தருளிய ஞானப்பழம் . அது போல புதிய திருவாசகச் செய்யுட்பொருளைச் சுரந்தளித்த சுவாமிகளும் ஞானப்பழம். மாறா உருவான ஞானப்பழம் முருகன். என்றும் இளமையானவன். முதிர்ந்த மானிடஞானப்பழமாகத் திகழ்ந்தோங்கியவர். சுவாமிகளாகிய ஞானப்பழம் . இத்தகு திருவேறு கருத்துக்களை நயம் படவும், படிப்போர் மனத்திலே பக்தி கனன்று எழும்படியும் எழுதியருளியுள்ளார் முருகவே பரமநாதன் அவர்கள். அருளமுதச சுவையான கருத்துக்களை அச்சிட்டு உலகினர்க்கு உவந்தளிக்கும் திருவாசக சுவாமிகள் தொண்டர் சபையின் செயலாண்மையாளர்கள் என்றென்றும் பாராட்டுக்குரியவர்கள்ளு, எல்லோராலும் செய்யமுடியாததை எல்லோரும் உணரமுடியாததை அறிவினாலும், பணத்தினாலும், பதவியாலும், பட்டத்தாலும், அகந்தையாலும், அறியாமையாலும்,
(8)

Page 35
அறியப்படமுடியாத அமிர்த மெய்ஞ்ஞானத் தத்துவார்த்த விளக்கங்களைப் பிரசுரிப்பதே திருவருள் ஆணைதான். ஆதலினால் நமது செயல்வலிகெட நம்பன்நாதன் சிவன் செயலே மேலோங்கிநின்றருளுகின்றது. அதன்பயனே இந்நூல். மூல காரணர் சிவன், துணைக்காரணர் துரைராசர்.
அன்று இந்து சமயத் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. க.சண்முகலிங்கம் அவர்களது அழைப்பின் பேரில் நடைபெற்ற“பண்ணிசை” பற்றிய தெய்வீகப் பேருரையிலே கலந்துகொண்ட தொண்டர் துரைராஜா அவர்கள் சிறியேனைச்சந்தித்து ஒருரை நல்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொண்டார்கள். “முத்தி’க்கு இப்பொழுது எவருமே தயாராக இல்லை. ஆன்ம முத்தி, ஆன்ம ஈடேற்றம் தரும் திருவாசகத்தினைப் பற்றிச் சிந்திப்பதற்கும் திருக்கேதீஸ்வரம். பூரீ சபாரத்தின சுவாமிகள் பற்றி அறிவதற்கும் அதன்மூலம் துன்பத்தைத்தந்து இன்பத்தைக் காட்டும் சிவப்பரம்பொருளைச் சிந்திப்பதற்கும் கிடைத்ததொருபொருளாக இச்சிறு கருத்துரையை எழுதிக்கொள்ளத் திருவருள் கருணைபுரிந்துள்ளது. எனவே சற்குரு, ஞானகுரு, அருட்குரு, சபாரத்தின சுவாமிகளது திருவடிவத் தாமரைகளுக்கு வணக்கம். இப்போதுநீங்களே சொல்லுங்கள்? பக்தனின்றேல் பரமனருள் இல்லையல்லவா? சூரியனின் கிரகணங் களினால் கதிர்களினால் நிலத்தில் வெப்பம் தங்கிப்பின் காய்ந்து உதவுவது போலச் சிவனருள் நிறையத்தேக்கி வைக்கத்தக்கவர்களே பக்தர்கள்.
வாழ்வில் இன்பப் பேறுகள் பெற்றுப் பின் முத்தி நிலை எய்துவதே உயிரின் பெருங்கடன். திருவாசகமே அத்தொடர்பு சாதனம்.
திருக்குறளும் திருவாசகமும் இருகண்கள். -வணக்கம்
10. O2, 1996
(9)
 

சுவாமிகளைப்பற்றி தேனருவி வே. சிவஞானம் அவர்கள் வாக்கில் இருந்து
திருவாசகம் பூரீ சபாரத்தினம் சுவாமிகளின் தொடர்பினால், அவரின் அரிய கருத்துக்களினால் மிகவும் ஈர்க்கப்பட்டவன் நான். எனது ஆங்கிலக்கல்வி மூலம் பெற்ற வேதாந்த அறிவை மிகவும் இலகுவாக தெளிவாக துலக்கமாக திருவாசக மூலம் ஊட்டி மேன்மையுறச் செய்தவர் சுவாமிகள். அவருடைய ஆழ்ந்த ஞானம் என்னைப் பிரமிக்க வைத்தது. அடிபணிய வைத்தது. திருவாசகத்தில் பித்தேற்றியது. இன்னும் இன்னும் படிக்கப்படிக்கப் பிந்தேற்றுவது, புதியகருத்துக்களை உணர்த்துவது, எல்லாம் சுவாமிகள் கொண்ட அன்பினாலும் ஆழ்ந்த புலமையினாலுமேயாகும். எவ்வளவு வியந்து போற்றினாலும் போதாது.
1986இல் கூறிய கருத்துக்களை வாசிப்பேன் ராஜாஜியின் கருத்து அப்படியே, வேதாந்தக் கருத்துக்குள் எப்படி எங்கள் சுவாமியின் மனத்தில் உணர்த்தப்பட்டிருக்கின்றன என்று எண்ணிவியப்பேன், மகிழ்வேன், ராஜாஜியைப் போலப் படித்தவரல்லர் சுவாமி, ஆனால் இறைவனின் உணர்த்தலுக்கு ஆளானவர். கல்வியும், உணர்வும், சொல்லாத நுண்ணுணர்வும் எப்படி ஒன்றாகவே இருக்கிறது என்பதைக்கண்டு இன்புறுகின்றேன். இதை நினைக்க நினைக்க பலமும், பெற்றுக்கொண்ட உள்ளத்தெளிவும் (சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று) என்னை, அவர் எவ்வளவு உயர்ந்த தவ சிரேஷ்டர் என்று வியக்கவும் வணக்கம் செலுத்தவும் செய்கின்றது.
அவரின் அரிச்சுவட்டைப் பின்பற்றி பண்புடனும் பணிவுடனும் எழுதிய எழுதும் நூல்கள் பக்தர்களுக்கு வரப்பிரசாதமாகும். பாவி - என்ற சொல்லுக்கு சுவாமியின் கருத்து, இறைவனைப் பாவிக்கமாட்டேன் என்பதாகும். எவ்வளவு பொருத்தம்! உண்மையும் ஆகிறது.
சுவாமினுடைய முக்கிய கருத்து உள்ளத் துளிருந்து உணர்த்தப்படுவதாகும். இவ்வுணர்த்தல் பாவிப்பதினால் கிடைப்பதாகும் என்று கொள்ள வேண்டும். எல்லோருக்கும் திருவாசகம் உய்வு அளிக்கவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.
சுவாமியின் தனி விசேஷம், எனக்கு மிகவும் பிடித்தது என்னவென்றால் திருவாசகத்துக்கு அவர் தந்த விளக்கங்கள். அவை தனக்கு உணர்த்தப்பட்டவை என்று கூறுவார். அகராதி பார்த்து வேதாந்த சித்தாந்த கருத்துக்களைப் பார்த்துச் சொன்னவை அல்ல. இறைவனால் உணர்த்தப்பட்டவை என்பார். அவைகள் அப்படி வந்தவை என்பது
(10)

Page 36
அக் கருத்துக்களின் பொருத்தத்திலிருந்தும் வேறெருவரும் சொல்லமுடியாதவை என்பதும் அனுபவ விளைவில் வந்தவை என்பதுமே உண்மையுமாகும்.
அவர் தந்த பிச்சை - எங்கு திருவாசகம் பாடி விளக்கமளிக்கும் போதும் அவரின் பெயரையும் சொல்லி விளக்கத்தையும் சொல்லி வருகிறேன். அவரை திருவாசகத்திலிந்து பிரிக்க முடியாது. அவர் திருவாசகம் சிவம் என்பதே உண்மையானதாகும்.
சுவாமியின் தொடர்பால் திருவாகம், தோத்திரம், சாத்திரம், பக்திக்குரியது, ஞானவிளக்கம், தெளிவானது, எளிமையானது, வேறெந்த நூலும் ஆன்ம ஈடேற்றத்திற்கு தேவைப்படாது என்பது எனது விளக்கமாகிவிட்டது.
வே. சிவஞானம், 14, கோபால் ஒழுங்கை,
6600606TTT 60060600T
12.12.94.
一姜咤>旁一
சின்னத்தம்பி சுவாமிகள்
அருள்மிரு சின்னத்தம்பி சுவாமிகள் மறவன்புலவில் பிறந்து, கடையிற் சுவாமிகளது குழந்தைவேற் சுவாமிகளின் சீடராக இருந்தவர். மறவன்புலவில் திருமடம் அமைத்து அருள் உபதேசம் செய்து வந்தவர். இதற்கு முன்பே செல்வச்சந்நிதியில் புளியடித் திருமடத்தை அமைத்து ஞான உபதேசம் செய்து வந்தபோது 96 அடியவர்கள் அவருக்கு சீடரானார்கள். இவர் 1939 இல் மகாசாதி அடைந்தார்.
专
(11)

திரு.வே. சதாசிவம் அவர்கள் 27.01.96ம் திகதி திருவாசகம் சபாரத்தினம் சுவாமிகளின்
8 வது ஆண்டு குருபூசையில் ஆற்றிய உரையின் ஒர் பகுதி.
சுவாமிகள் தொடக்கத்தில் தனது ஆச்சிரமத்தை கெளரி அம்மன் சன்னிதானத்திற்கு முன்பே அமைத்து அடியார்களுக்கு உடல்பசியை தீர்த்ததுமல்லாமல் உள்ளப்பசியையும் திருவாசகம்பாடி உள்ளம் உருகி, கண்ணிர் பெருக்கி, உள்ளத்தில் இருக்கும் அற்பசொற்ப கள்ளமும் கண்ணிர் மூலம் வெளியாகிபின் பேரறிஞர்களுக்கும் புரியாத கருத்துக்களை அடியார்களுக்கு வழங்கி அவர்களின் உள்ளப் பசியையும் அருள்தாகத்தையும் மெய்யடியார்களுக்கு திருவாசகத்தேன் மூலம் தீர்த்து வைத்தார்.
தன்னை மறந்து இறைவன் புகழைப்பாடும் போது ஏற்படும் நிலை அவருக்கு அப்போதே உருவாகிவிட்டது. இந்தநிலை தொடர, திருவாசகத்தைப் படிக்க, படிக்க அந்த உள்ளொளி வெளிப்பட்டு திருவாசத்தின் உட்பொருளை அடியார்களுக்கு விளங்க வைத்தார். அவர்கள் முன்னிலையில் இருந்து அவர்படிக்கும் போது அடியார்களுக்கும் அந்தநிலை ஏற்பட்டிருக்கிறது. அவர்களில் ஒருவர்தான் எங்கள் தலைவர் சரவணமுத்து சுவாமியார். சபாரத்தின சுவாமியாரிடம் அருள் நிறையப் பெற்றிருந்தார்.
சுவாமிகளின் திருவாக்கு
சுவாமி அவர்கள் இறை அருளில் திழைத்து நின்றார் என்பதை நான் கண்ட அனுபவம் 1963ம் ஆண்டு நவாலிப்பிள்ளையார் கோவிலில் அடியேன் வணங்கி நிற்கும்போது தூரத்தில் சுவாமிகளைக் கண்டேன். கையை காட்டி வீட்டேபோகும் படியும் நீ வேண்டுவதின் முடிவு வந்து கொண்டிருக்கிறது என்று எனக்கு கேட்கக்கூடியதாக சொல்லிவிட்டு தொடர்ந்து போனார். வழக்கமாக சுவாமிகள் இப்படித்தான் பேசுவது ஆனபடியால் நான் அவ்வளவு பொருட்படுத்தவில்லை. நான் அப்போ மானிப்பாய் பட்டின சபையில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். சுவாமிகள் வீட்டே போகும்படி சொன்னார் என்பது ஞாபகம் வரவும் எனது மேசையைப் பூட்டிவிட்டு வீட்டிற்குப் போய் சிறிது நேரத்திற்குள் நான் எதிர்பார்த்த பரீட்சை முடிவு சாதகமாக வந்துள்ளது. சுவாமியின் ஞான வாக்கை நினைத்து வியந்தேன்.
எனது கண் வருத்தத்திற்கு சுவாமிகள் சொல்லிய மருந்து எனது கண்ணில் அமுக்கம் (Preasure) இருக்கிறதாகவும், அது வரவர ஒழியை
(12)

Page 37
மழுங்கச்செய்யும் என்று வைத்தியர் கூறி ஒரு மருந்தும் போடும்படி சொன்னார். அம்மருந்து யாழ்ப்பாணத்தில் கிடைக்கவில்லை. அப்போது சுவாமி சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. "அருளா தொழிந்தால்.” என்ற திருவாசத்தைப்படித்து மனமுருகி கண்ணிர்விடுவது தான் வேறு மருந்து எதுவும் போடவில்லை. கண் வைத்தியர் கண்ணை சோதித்துப்பார்த்துவிட்டுதிகைத்தார். கேட்டபோது சொன்னார்"Preasure" எவ்வளவோ குறைந்துவிட்டதே என்றார். சுவாமிகளின் கடைசிகாலத்தில் அவருடைய திருவாசக விளக்கம் சாதனையில் தூண்டியது. என்ன அல்லல் ஏற்பட்டாலும், மனஉறுதியோடு இறைவன் புகழைப்பாடி கண்ணிர் விட்டால் எந்துன்பத்தையும் அது துடைத்துவிடும்.
மெய்யடியார்களின் பெருமையை உணர்ந்துஅவர்கள் காட்டிய வழியே நாங்கள் நடப்போமாகில் அல்லலும் ஒன்று செய்யாது. அருவினையும் ஒன்றும் செய்யாது.
660Tg).
SAAAAKKSAAYKKKYSASAShYSiASAKSKKSyAAAAKAKSAKSAKSAKSAKASAAKASAASAAY
சபாரத்தினம் சுவாமிகள்
திருக்கேதீஸ்வரத்தில் திருத்தொண்டுகள் செய்து திருவாசகமடத்தை அமைத்து திருவாசகத்தை அனைவருக்கும் தெளிவுபடுத்தியதால் திருவாசகம் சுவாமிகள் என்ற பெயரினைப் பெற்றவர் சபாரத்தினம் சுவாமிகள். இவர் 1988 ஆம் ஆண்டு மகாசமாதி அடைந்தார். இவரது சமாதியும் சினனத்தம்பிசுவாமிகளின் அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளது. மறவன்புலவில் உள்ள முப்பெரும் ஞானியர் சமாதி ஆலயம் பல திருப்பணிகளை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றது. இறையருள் பெற்ற ஞானசித்தர்களின் வழிவந்தவர்களான சின்னத்தம்பி சுவாமிகள், முருகுப்பிள்ளை சுவாமிகள், சபாரத்தினம் சுவாமிகள் ஆகிய முப்பெரும் ஞானிகளின் திருச்சமாதிகள் தான் இங்கு அமைந்துள்ளன.வள்ளி அம்மன் முருகன் ஆலயத்திற்கு தென்மேற்கு திசையில் இவ்வாலயம் அமைந்திருக்கிறது. இத்தகைய சிறப்புப் பொருந்தியவர்களின் இவ்வாலயத்தில் தினசரிபூஜைகள், குருபூசைகள் நடைபெற்றுவருகின்றன. க. வே. சரவணமுத்து.
(13)

சபாரத்தினம் சுவாமிகள் திருவாசகத்தின் பொருளை தெளிவுபடுத்தியவர்
"திருக்கேதீச்சரத்தில் திருவாசக மடம் நிறுவி விழாக்கள் நடத்த ஏற்பாடு செய்தவர் திருவாசகம் சபாரத்தினம் சுவாமிகள். இவர் ஒரு தீர்க்கதரிசி, கர்மவீரர் என திருவாசக மடத்தலைவர் சரவணமுத்து அடிகளார் கூறினார்.தெகிவளையில் நடைபெற்ற சபாரத்தினம் சுவாமிகள் 8 ஆவது அண்டு குருபூசை வைபவத்திற்கு தலைமை வகித்து இவர் உரையாற்றினார்.அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், சுவாமிகள் திருவாசகத்தின் பொருளை திருவருள்துணைகொண்டு மற்றவர்களுக்கும் தெளிவுபடுத்தினார். சேர். கந்தையா வைத்தியநாதன் அவர்களுடன் சேர்ந்து பல பணிகள் ஆற்றியுள்ளார். கெளரீசர் பாடசாலையைக் கட்டி முடித்ததுடன் நெசவு சாலையையும் நிறுவினார். சுவாமிகள் சமாதியடைந்த பின் திருக்கேதீச்சரமும் மூடப்பட்டுவிட்டது. நாமும் அநாதைகளாக வெளியேறி விட்டோம் என்றார்.
சமய மாற்றத்தை விரும்பாதவர்
இந்த கலாசார திணைக்கள பிரதிப்பணிப்பாளர் திருமதி. சாந்தி நாவுக்கரசன் சிறப்புரையாற்றுகையில் சுவாமிகளை ஆசிரியர் பயிற்சி பெற கொழும்புத்துறையிலுள்ள கத்தோலிக்க கலாசாலை அழைத்தபோது சமய மாற்றத்தை விரும்பாத சுவாமிகள் அந்த அழைப்பை மறுத்துவிட்டார். இதனால் கல்வி உலகுக்கு ஈடு செய்ய முடியாத நஷ்டம். எனினும் இறையருள் பெற்ற ஆத்மீக ஞானியாகவும் திருவாசக சுவாமிகளாகவும் சிறப்படைந்துள்ளார்.எவ்வித தகுதிப்பாடும் இல்லாத என்னை குறைந்தது ஒர சராசரி மனிதனாகவேனும் வாழ வழிகாட்டி என்னுள்ளே கலந்திருந்த தெய்வீகத்தை எனக்குத் தெரியக்காட்டிய குருமணி திருவாசக சுவாமிகள் என கண்கலங்க கூறினார்.முருகவே பரமநாதன், ஏ. இரத்தினவடிவேல், ஏ.ஜீவரத்தினம் ஆகியோரால் திருவடி அபிஷேகம், பூசை என்பன நடைபெற்றன. சுவாமிகள் திருநாமப் பாடல்கள் கூட்டுப்பிரார்த்தனை என்பனவும் அங்கு இடம்பெற்றன.தொண்டர் சபை செயலாளர் த. துரைராஜா நன்றியுரை வழங்கினார்.
நன்றி --வீரகேசரி. 1996.02.01
திரு.ஏ.ஜீவரத்தினம் அவர்கள் குடும்பத்தினரால் உணவு வழங்கப்பெற்றது.
(14)

Page 38
நூல் கிடைக்குமிடங்கள்
லக்சுமி பிரிண்டர்ஸ் 195 ஆட்டுப்பட்டித் தெரு, கொழும்பு 13.
வே. பரமநாதன் 40, பேராதனை வீதி, கண்டி.
அவர்டலக்சுமி பதிப்பகம் 320, செட்டித்தெரு, கொழும்பு-11.
த.துரைராஜா 11/6 றுாபன் பீரீஸ் மாவத்தை, தெஹிவளை.
Luxmi Printers 195. Wolfendhal Street, Colomo-13.


Page 39
TI