கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுவாமி விபுலாநந்தர்

Page 1
܀
 


Page 2


Page 3
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபை (கொழும்பு)
தலைவர் துணைத்தலைவர்கள்
பொதுக் செயலாளர் துணைச் செயலாளர்கள்
பொருளாளர்
துணைப்பொருளாளர் செயற்குழு உறுப்பினர்
ஆசிரியர்
பதிப்பு
பிரதிகள்
வெளியீடு
அச்சகம்
திரு க. செல்வரெத்தினம். திருமதி. பூமணி குலசிங்கம் திரு. கே. வி. சோமசுந்தரம் திரு. எஸ். தாமோதரம்பிள்ளை திரு. வி. பத்மநாதன் திரு. ஆ. தேவராசன்
திரு. அந்தனி ஜீவா
திரு. கே. மாரிமுத்து திரு. வி. றெ. வேதநாயகம்.
மாண்புமிகு எம். ஏ. அப்துல் மஜீது ஜனாப் எஸ். எம். கமாலுத்தீன் திரு. ஏ. எஸ். யோகராஜா திரு. இரா. மயில்வாகனம். திரு. குமார் வடிவேல் ஜனாப் ஏர். எம். நஹியா திரு. இ. சிவகுருநாதன் திரு. ஆ. சிவநேசச் செல்வன் ஜனாப் மேமன்கவி திரு. த. ஈஸ்வரராஜா
அந்தனி ஜீவா
முதலாவது மே 1992
SOOO
சுவாமி விபுலாநந்த நூற்றாண்டு விழிச்சபை கொழும்பு
லக்சு கிரபிக், 253, யோச் ஆர். த. டி. சில்வா
மாவத்தை கொழும்பு-13.

O
பொருப்பிலே பிறந்து வின்ேனன் புகழிலே கிடந்து சங்கத்திருப்பிலே இருந்து வைகை ஆற்றிலே தவழ்ந்த பேதை-இத்தொடரில் வித்தகர் விபுலாநந்தரின் முத்தமிழ் பணிகளும் இடம் பெறுகின்றன. "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்பதை விபுலாநந்தர் தான்இயன்றவரை நடைமுறைப்படுத்தியுள்ளார். தான் கசடறக் கற்ற கல்வியை முடிந்த மட்டும் முடிந்த வரையில் பரப்பி வளர்த்தார். காலத்தால் அழியாக் கல்விக் கூடங்களையும் தொண்டாற்றும் தாபனங்களையும் தொடக்கி வைத்தார். தொடர்ந்தும் அவை இயங்கி பணியாற்ற வழிவகுத்தார்.
இயற் தமிழுக்கு அவர் எழுதிக் குவித்த எழுத்தாக்கங்களும் கவிதைகளும், பொழிந்த சொற்பொழிவுகளும் என்றும் அழியா கருவூலங்களாக விளங்குகின்றன. இசைத்துறையில் தாம் தகுந்த அறிவைப் பெற்று பல ஆராச்சிக் கட்டுரைகளை எழுதிய தோடல்லாமல் தன் வாழ்க்கையின் இறுதிச் சிகரமாக யாழ்நூல் என்ற அரியதோர் நூலை ஆக்கிப் படைத்தார்.
இயலும் நாடகமும் ஒருங்கே தொனிக்க சிறந்த நாடகங்களை ஆக்கித் தந்ததோடு தன் ஆங்கில அறிவைப் பயன்படுத்தி பல ஆங்கில நாடகங்களையும் தமிழில் மொழிபெயர்த்தார். அத்தோடு சமுக நாடகங்களையும் நாட்டுக் கூத்து மரபினையும் ஊக்குவித்து ஆக்கமளித்தார். -
உயிரான தமிழையும் உலக மொழி ஆங்கிலத்தையும் சமய மொழி ஆரியத்தையும் நலமே கற்று பாண்டித்தியம் பெற்றார். தமிழ் மொழியின் இயல் இசை நாடகமென முத்தமிழும் கற்றுத் தெரிந்து அவற்றின் சிறப்புகளையும் மிளிர்வையும் அங்காங்கே எடுத்து இயம்பினார். ஆங்கிலம் தந்த இலக்கியங்களைக் கற்று ஆங்கிலப் பாரம்பரியத்தில் நுழைந்து மேலும் நிறைவு பெற்றார். வட மொழி தந்த தத்துவங்களையும் மத சார்பு நூல்களையும் கற்று உயர்வு பெற்றார்.
அவரது வாழ்க்கை முறை அவர் பெற்ற கல்விவளம் அவரது ஆய்வுத்திறன் முயற்சிப்பயன் ஆகியவை அடிகளாரின் அரும் பணிக்கு வித்திட்டன. இவை எவ்வாறு இடம் பெற்றதென. கொழும்பு நூற்றாண்டு விழாச்சபையின் துணைச் செயலாளர் அந்தனிஜீவா, வளர்வோரும் வளர்ந்தோரும் விளங்கி அறிந்து உணரும் வகையில் விளக்கமாகவும் சுருக்கமாகவும் எடுத்து இயம்புகிறார். தினகரன் பிரதமதுசிரியர் இ. சிவகுருநாதன் வீரகேசரி பிரதம ஆசிரியர் ஆ. சிவநேசச்செல்வன் கொழும்பு பல்கலைக்கழக கல்விப்பீட விரிவுரையாளர் பூமணிகுலசிங்கம் ஆகியோர் ஆங்காங்கே ஆலோசனை வழங்கினர். வெளியீட்டுக் குழுத் தலைவர் எஸ். தாமோதரம்பிள்ளை முன்னின்று உழைத்தார்.
எமது சபையின் உறுப்பினர்களாகிய சமாதான நீதவான்கள் எஸ். சுப்பிரமணியாசெட்டியார் விடிவி தெய்வநாயகம் பிள்ளை ьпђ. மாணிக்க வாசகம் ஆகியோரும் நிதி உதவி செய்தனர். அவர்களுக்கு எமது நன்றிகள்.

Page 4
முத்தமிழ் வேந்தர் விபுலாநந்த அடிகளாரின் நூற்றாண்டு விழா சார்பாக காரைதீவு மட்டக்களப்பு, திருமலை, யாழ்ப்பாணம், கண்டி, கொழும்பு ஆகிய இடங்களில் செயற் குழுக்கள் அமைக்கப்பட்டன. கொழும்பு செயற்குழு பல பணித் திட்டங்களை ஏற்ப்படுத்த ஆலோசனை கூறப்பட்டன. 1. பெயர் பொறித்தல்:
கொழும்பு தெமட்டகொட தமிழ்ப் பாடசாலை 1.03.1992 சுவாமி விபுலாநந்தர் மகா வித்தியாலயமாக பல பிரமுகர்கள் முன் பெருவிழாவாக பெயர் பொறிக்கப்பட்டது. கொழும்பில் ஒரு வீதியில் பெயர் பொறிக்க வேண்டுகோள் செய்யப்பட்டுள்ளது. 2. திருவுருவம் அமைத்தல்
சுவாமி விபுலாநந்த மகாவித்தியாலயத்தில் அமர்ந்த படி உருவம் முதல் தடவையாக அமைத்துள்ளோம். வேறு பல உருவங்களும் நிறுவப்பட முயற்சி செய்கின்றோம். 3. ஆவணப்படம்
இந்து கலாசார அமைச்சர் கெளரவ , பி , பி , தேவராஜ் அவர்கள் மூலமும் அவரது அமைச்க நிர்வாகிகள் மூலமும் மூலமும் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துடன் தொடர்பு கொண்டுள்ளோம். 4 நிதியமைப்பு
தேசிய மட்டத்தில் நிர்வாக நிதி அமைப்பு ஏற்ப்படுத்தல். இதற்கு அரச சலுகைகளும், சமூக ஆதரவும் கோர நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 5. நிறைவாண்டுக் கொண்டாட்டம் தகுந்த பிரசாரத்துடன் இயல் இசை
நாடக நிகழ்ச்சியாக நடத்த ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. 6. இத்திட்டங்களிலொன்றாக இப்பிரசுரம் வெளிவருகிறது. இவை பாடசாலைகள், நூல் நிலையங்கள், மற்றும் இலக்கிய கலாசார நிலையங்கள் மாணவர் இளைஞர் குழுக்கள் ஆகிய தாபனங்களுக்கு விநியோகிக்க ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிழக்கிழங்கை, காரைதீவு சாமித்தம்பி மகன் மயில்வாகனம் தமிழ் மாணவனாகி பண்டிதராகி சுவாமி விபுலாநந்தராகி, தமிழ்ப் பேராசிரியராகி, அறிவுக்கடலாகி, கலைக்கல்வி பணிபுரிந்து முத்தமிழ் வேந்தராகி, தமிழன்னையின் நற்புதல்வராகி, அமரராகிய கதையை தமிழ் கூறும் நல்லுகம் குறிப்பாக இளம் சந்ததியினர் அறிந்து கொள்வது அவசியம். அவரது கருத்துக்களும் தத்துவங்களும் குறிக்கோள்களும் மேலும்
பரப்பி அவற்றை ம் நடவடிக்கைக்கென வரும் சந்ததியினரிடம் சமர்ப்பிக் ஆ இவர் ம் உங்கிள் உதவி ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றுேந்' சீழ்ச் 4,
α με " வாழ்க தமிழ்,
க. செல்வரெத்தினம், నీ தலைவர், விரிமி விபுலாநந்தர் விழா சபை, கொழும்பு
;* چd.لها *

சுவாமி
விபுலாநந்தர். தமிழ்மொழி வளர்ச்சிக்கு இலங்கை திருநாட்டைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள் பெரும் தொண்டாற்றியிருக்கிறார்கள். அத்தகைய தமிழ்ப் பணியாற்றிய அறிஞர்களில் கிழக்கு இலங்கை தந்த தவப்புதல்வர் சுவாமி விபுலாநந்தர் பெரிதும் போற்றி புகழப்பட வேண்டியவர். இலங்கை முதல் இமயம் வரை இன்றமிழில் இசை கண்ட தமிழ் முனிவர், முத்தமிழும் கற்றுத்துறை போன முது தமிழ்ப் புலவர். ஊனையும் , உயிரையும் உருக்கவல்ல பக்திரசத். தேனொழுகும் பாக்களையும், கற்பனை வளம்பொங்கும் கவிதைகளையும் வளமுற வடித்து தந்த வரகவி. மறைந்து கிடந்த தமிழிசையினை இம் மண்ணுலகுக்கு கொடுத்து இன்புறல் காட்டிய இன்னிசைப்புலவர். உலகின் முதல்ப்பேராசிரியர் என்ற பெருமையைப் பெற்றவர். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுக்கும் அரும்பணியாற்றியவர்.
சுவாமி விபுலாநந்தர் தமிழ்நாட்டில் தோன்றிய தமிழிசை இயக்கத்திற்கு புத்துயிர் ஊட்டியவர். சுவாமிகளிஜ் இசை ஆராச்சியால் தமிழிசை மீண்டும் பலம் பெற்று வேற்ரின்றியது. சுவாமியவர்கள் உள்ளத்தே பொங்கியெழும் உயர்ந்த கருத்துக்களையும், நீதி நெறிகளையும், தெய்வீக ஞானத்தையும் கேட்டார் பிணிக்கவும், கேளார் வேட்பவும் வாரி வழங்கிய வள்ளலார். செந்தமிழ், சிங்களம், சமஸ்கிருதம், வங்கம், ஆங்கிலம், இலத்தீன், யவனம், அரபி முதலிய பல் மொழிகளையும் கற்ற பண்டிதர்.
இவரின் புலமையைக் கண்டு தமிழ் அறிஞர்கள் “முத்தமிழ் வித்தகர்” என வியந்து பாராட்டியுள்ளனர். மகாகவி பாரதியாரின் கவிதையின் சிறப்புகளையும் அது வெளிப்படுத்தும் சத்திய தரிசனங்களையும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எடுத்து இயம்பியது மாத்திரமன்றி, பாமர மக்களிடையேயும் அவற்றின் பெருமைகளை எடுத்துக் கூறி பாரதியை மக்களுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடியுமாவார்.
கீழைத்தேசத்து பண்புாட்டு பெருமைகளை இந்திய தத்துவ ஞானத்தின் ஊடாக எடுத்தியம்பிய பெருமை சுவாமி விபுலாநந்தர் அவர்களையும், கலாயோகி ஆனந்தகுமாரசுவாமி அவர்களையுமே சேரும். சுவாமி அவர்களின் தன்னலமற்ற வாழ்வும், தமிழ்ப்பணியும் ஒவ்வொருவருக்கும் வழிகள்ட்டும் ஒளிவிளக்காகும்.
5

Page 5
2
இந்து சமுத்திரத்தின் எழில்முத்து என கூறப்படும் இலங்கை திருநாட்டில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்புக்கு தென் திஐசயில் கல்முனைக்கு அருகில் காரைத்தீவு என்னும் சிற்றுாரில் 1882 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் தேதி சாமித்தம்பி, கண்ணமையார் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்த மயில்வாகனம் என்ற இயற்பெயர் கொண்ட சிறுவன் தான் பிற்காலத்தில் துறவறம் பூண்டு முத்தமிழ் வளர்த்த வித்தகராக விளங்கிய சுவா விபுலாநந்தராவார்.
சின்னஞ்சிறு பிஞ்சு வயதில் கல்வி கற்பதில் ஆர்வமிக்கவராக திகழ்ந்த மயில்வாகனத்துக்கு உறுதுணையாயிருந்தவர் அவரது தந்தையார் அவர்களே. வளர்ந்து பள்ளிப் பருவத்தை அடைந்திருந்த மயில்வாகனாரை அவரது தந்தையார் சாமித்தம்பி அவர்கள் திரு. நல்லரெத்தினம் அவர்களிடம் கூட்டிச் சென்று ஏட்டுக் கல்வியைத் தொடக்கி வைத்தார். அத்துடன் திரு. குஞ்சித்தம்பி ஆசிரியர் அவர்களிடத்திலும் மயில்வாகனம் கல்வி கற்றார். இவ்வாசிரியர் இட்ட கல்வி அத்திவாரமே மயில்வாகனாரின் கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக அமைந்தது.
கல்வி கற்பதில் பெரும் ஆர்வம் காட்டியது போன்று, கல்வி புகட்டிய நல்லாசிரியரான திரு. குஞ்சித்தம்பி அவர்களிடத்திலே மாணவனாகிய மயில்வாகனார் பெரும் மதிப்பும், பக்தியும், நன்றியுணர்வும் கொண்டிருந்தார்.
மயில்வாகனார் திருக்குறள், பாரதம், நன்னூல், சூடாமணி, நிகண்டு, வடமொழி என்பவற்றை காரைத்தீவு சைவ பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக இருந்த வைத்திலிங்க தேசிகரிடம் கற்றார்.
பத்து வயதிற்கு முன்னரே ஊர் வழமைக்கு விதிவிலக்காக மயில்வாகனார் ஆங்கிலத்தையும் உறவினர் ஊடாக கற்கத் தொடங்கினார். தாய் மாமன்மாராகிய சிவகுருநாதப்பிள்ளை, வசந்தராசப்பிள்ளை என்போரிடத்திலும் கந்தபுராணம், பாரதம் முதலியவைகளையும் படித்துக்கொண்டார். அஸ்வமேத பர்வதம், பெரியபுராணவசனம், பஞ்சதந்திரம், விநோதரசமஞ்சரி, வில்லிபாரதம், நைடதம், கந்தபுராணம் , காசிகாண்டம் முதலிய நூல்கள் ஒன்றின் பின் ஒன்றாக எனது கைக்கு தரப்பட்டன. ஒரு நூலினை முற்றாக முடிக்கும் வரை மற்றொரு நூலினுல் பிரவேசிக்கக் கூடாதென்று எனது தந்தையார் எனக்கிட்ட கட்டளை
6

எனது கல்விப் பயிற்சிக்கு பெரிதும் உதவியாயிருந்தது என்பதை மயில்வாகனார் ஓரிடத்தில் கூறியுள்ளார். இச்சம்பவம் சிறுவயதிலிருந்தே மயிவாகனார் பெற்ற முழுமையான -முறையான கல்வியைப் புலப்படுத்துகின்றது.
கல்வியில் ஈடுபாடு கொண்ட மயில்வாகனார் 1902 ஆம் ஆண்டு அதாவது பத்தாவது வயதில் கல்முனை மெதடிஸ்த கல்லூரியில் ஆங்கிலம் கற்கும் பொருட்டு சேர்க்கப்பட்டார். இங்கு நான்கு ஆண்டுகள் கல்வி கற்றபின்னர் மேற்கொண்டு கல்வி கற்கும் பொருட்டு 1906 ஆம் ஆண்டில் மட்டக்களப்பிலுள்ள சென் மைக்கல் கல்லூரியில் சேர்க்கப் பட்டார். இப்பாடசாலையில் மயில்வாகனனார் காட்டிய ஆர்வத்தையும், அவரது திறமையையும் கண்டு மகிழ்ச்சியடைந்த ஆசிரியர்கள் அவரைப் பெரிதும் பாராட்டினார்கள். இவ்வாறு ஆசிரியர்களின் நன்மதிப்பையும், அன்பையும் பெற்றுக்கொண்ட மயில்வாகனனார், சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஓய்வு நேரங்களில் கூட சோம்பியிராமல் ஆசிரியர்களிடம் சென்று தெரியாத விடயங்களைக் கேட்டுத் தெரிந்து அறிவை வளர்க்கலானTர்.
இளமையிலேயே தமிழ்மொழி மீது அளவிலாத பற்றும் பாசமும் உள்ள மயில்வாகனனார், பழந்தமிழ் இலக்கியங்களை
படித்தறிவதில் காலத்தை செலவிட்டார். ஆசிரியர் குஞ்சித்தம்பி
அவர்களிடம் சென்று பழைய இலக்கியங்களை பயின்றார். மயில்வாகனனார் நன்னூல் கற்கும் போது தான் செய்யுகளின்
தன்மைகளை உணரலாானார். தாமாகவே செய்யுள் இயற்றும்
திறமையைப் பெற்றார். பிறரின் துணையின்றி அணியாப்பு வகைகளையும் கற்றார்.தனது பன்னிரண்டாவது வயதில் செய்யுள் இயற்றுவதில் திறமைமிகுந்தவராக திகழ்ந்தார். மயில்வாகனனார் தனது கல்விக்கு வித்திட்ட தன் ஆசிரியர், குஞ்சித்தம்பி அவர்கள் தனது செய்யுள் திறத்தினால் வாழ்த்தினர்.
"அம்புவியிற் செந்தமிழோ டாங்கிலமும் எனக்குணர்த்தி அறிவுதீட்டி வம்பு செறி வெண்கமல வல்லியருள் எனக்கூட்டி வைத்த குஞ்சுத் தம்பியென்னும் பெயருடையோன் தண்டமிழின் கரைகண்டட் தகைமையோன்றன் செம்பதும மலர்ப்பதத்தைக்ச்
சிரத்திருத்தி எஞ்ஞான்றும் சிந்திப்பேனே"
7

Page 6
மயில்வாகனனார் தமது இளம் பிராயத்தில் "நாம் கல்விகற்ற
முறையைப்பற்றி கூறியிருப்பது இளஞ்சந்ததியினர்க்குப் பிரயோ
சனமாக இருக்கும். பள்ளிக்கூடப் பாடங்களுக்கு காலைப்பொழுதும் பாரதவசனம் வாசிப்பதற்கு மாலைப் பொழுதுமாக இளமையிற் பழகிய பழக்கப்படியே நான் பின்னாளிலும் தமிழையும் ஆங்கிலத்தையும் ஒருங்கு கற்று வந்தேன். சிறுவயதிலேயே பாரத வசனம் நான்கு புத்ததங்களை முதனின்று இறுதிவரை இரண்டு முறை வாசித்தேன்". -என்கிறார்.
அக்காலத்தில் சென் மைக்கல் கல்லூரியில் அதிபராக இருந்தவர் பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த வண. பொனேல் என்பவராவர். இவர் கணித பாடத்தை போதிப்பதில் ஆற்றல் மிகுந்தவர். மயில்வாகனனாரின் கணித திறமைக்கு வித்திட்டவர் இக் குருவானவராவர். இக்கல்லூரியிலிருந்து பதினாறாவது வயதிலே கேம்பிரிட்ஜ் சீனியர் பரீட்சையில் முதன்மையாக தேறினார். இவ்வாறு தமது திறமையை வெளிப்படுத்தியபோது தாம் கற்ற கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. பின்னர் கல்முனை மெதடிஸ்த பாடசாலையிலும் ஆசிரியராகவிருந்தார். கல்விப்போதிக்கும் பணியினை மயில்வாகனனார் பெரிதும் விரும்பினார். கல்விழ்போதிக்கும் காலத்தில் அவரது அன்னையார் இயற்கையெய்தினார். அன்னையாரின் இறுதிக் கடனைச்செய்ய காரைத்தீவிற்கு வந்தார் வந்த மயில்வாகனனார் அன்னையாரின் மீது அளவற்ற அன்பு வைத்திருந்ததினால் அன்னையின் மறைவின் சோகம் அவரை வாட்டியது. அதன் காரணமாக சிலகாலம் வீட்டிலேயே இருந்தார்.
சிறிது காலத்திற்கு பின்னர் ஆசிரியர் பணியை ஏற்றார். அத்துடன் நின்று விடாமல், பயிற்றப்பட்ட ஆசிரியராகவேண்டும் என்ற ஆர்வத்தினால், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் இரண்டாண்டு காலம் பயிற்சி பெறுவதற்காக 1911ஆம் ஆண்டு கொழும்பு மாநகரம் வந்தார். மயில்வாகனனார் கொழும்பில் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் கழித்த இவ்வருடங்கள் அவர் வாழ்க்கையில் முக்கிய காலகட்டமாகும். இக்காலத்தில் தனது பாடங்களோடு ஆங்கிலத்தையும் தமிழையும் நன்றாக கற்பதில் மிகுந்த கவனம் செலுத்தினார். கல்லூரி நூல் நிலையத்திலிருந்து ஆங்கில நூல்களை ஆர்வத்தோடு வாசித்து வந்தார். அத்தோடு அங்கு விரிவுரையாளராகவிருந்த தென்கோவை கந்தையா பிள்ளையிடம் சிந்தாமணி முதலிய நூல்களை பாடங்கேட்டார்.
8

அத்துடன் மாலை வேளைகளில் தமிழறிஞர்களான வித்துவான் சி.தமோதரம்பிள்ளை, வித்துவான் கைலாயப்பிள்ளை ஆகியோரிடம் சங்க இலக்கியங்களையும் முறையாகப் பாடங்கேட்டுத் தமிழ்ப் புலமையை விருத்திசெய்தார். இந்த காலத்தில் தான் கொழும்பு விவேகானந்த சபையாருடன் தொடர்பு உண்டாயிற்று. இந்த தொடர்பு தான் ஆன்மீகத்துறையில் ஈடுபாடுகொள்ள ஆர்வமூட்டியது.
ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் 1912 ஆம் ஆண்டு பயிற்றப்பட்ட ஆசிரியர் என்ற சான்றிதழுடன் மீண்டும் மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரி ஆசிரியர்களின் வேண்டுகோளின்படி ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். மொழித்துறையிலும் இலக்கியத்துறையிலும் மட்டுமன்றி விஞ்ஞானத்துறையிலும் தனது திறமையை வெளிக்காட்ட மயில்வாகனனார் பின்னிற்கவில்லை.
1915 ஆம் ஆண்டு கொழும்பு அரசினர் பொறியியற் கல்லூரியில், சேர்ந்து விஞ்ஞானம் பயின்று 1916 ஆம் ஆண்டு விஞ்ஞானத்தில் டிப்ளோமா பட்டத்தையும் பெற்றார்.
3
விஞ்ஞான கல்வியை ஆங்கிலத்தில் கற்றாலும், தமிழ் மொழியின் இலக்கண இலக்கியங்களை மேலும் கற்பதில் ஆர்வம் காட்டினார். அந்நாளில் ஆங்கில நாகரீக மோகத்தால் தமிழர் தமிழைப் புறக்கணித்திருப்பது கண்டு மயில்வாகனனார் மனம் வருந்தினார். மதுரை தமிழ்ச்சங்கம் நடத்திய தேர்வில் முதன்மையாக தேர்ச்சி யடைந்து பண்டிதர் பட்டத்தைப் பெற்றார். இலங்கையிலிருந்து இப்பட்டத்தை முதன்முதல் பெற்றவர் இவரே. மயில்வாகனனாரின் பரந்த அறிவு தமிழ் இலக்கிய பயிற்சியோடு நின்றுவிடவில்லை. அறிவியல் துறையில் (Science) அவருடைய ஆர்வம் சென்றது.
அரசினர் பொறியியற் கல்லூரியில் இரசாயன உதவி விரிவுரையாளராக பணியாற்றினார். எதையும் தேடிச்சென்று கற்கவேண்டுமென ஆர்வம் கொண்ட மயில்வாகனனார், விஞ்ஞான ஆய்வுக்கூடத்தில் புத்தம் புதிய பரிசோதனைகளை மேற்கொண்டு எளிய நடையில் அனைவருக்கும் விளங்கக்கூடிய வகையில் விரிவுரைகள் நடத்தினார். மயில்வாகனனாரின் அணுகுமுறைகளும், அவர் நடத்தும் விரிவுரைகளும் மாணவர்கள் மத்தியில் பெரும்
9

Page 7
சிறப்பை தேடிக்கொடுத்தன. அதனால் 1917 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சம்பத்தரசியர் (சென் பற்றிக்ஸ்) கல்லூரிக்கு விஞ்ஞான ஆசிரியராக் விரும்பி அழைத்தனர். அதனை பெருவிருப்புடன் ஏற்றுக் கொண்டார்.
இக்கல்லூரியில் மாணவர்களுக்குக் கல்விபுகட்டி வந்த வேளையில் 1917 ஆம் ஆண்டில் மயிலாப்பூர், இராமகிருஷ்ண மடத்துத் தலைவர் சுவாமி சர்வானந்தர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். சுவாமியுடன் மனம்விட்டு கலந்துரையாடிய பொழுது, மயில் வாகனனாரின் எண்ணம் துறவறத்தில் நாட்டங்கொள்ளவாரம்பித்தது. ஆயினும் மாணவர்களுக்கு சிறப்பான முறையில் விரிவுரைகள் நடத்தி கல்வி புகட்டுவதில் காலம் கரைந்தது. அத்துடன் பிறர் உதவியின்றி தாமாகவே முயன்று படித்து இலண்டன் பல்கலைக்கழகம் நடத்திய பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்றார். எத்தகைய பணிகள் இருந்தாலும் நித்திரைக்குப் போகுமுன் இரண்டு மணிநேரம் படிப்பது என்ற நியதியை வைத்திருந்தார். இதனால், சில வேளைகளில் நள்ளிரவில் படிக்கத் தொடங்கி, காலை இரண்டு மணிவரை படிக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டதுண்டு. பி.எஸ்.சி பரீட்சையில் தேறிய பின்னர் மயில்வாகனனாரின் மொழிப்புலமையையும், ஆற்றலையும் அறிந்த மானிப்பாய் இந்துக்கல்லூரி முகாமையாளரும், திருப்புகழ் நூலுக்கு உரை எழுதியவருமான வழக்கறிஞர் திருவிளங்கத்தாரின் வேண்டுகோளுக்கிணங்கி 1920 ஆம் ஆண்டு மானிப்பாய் இந்துக்கல்லூரியின் அதிபர்பதவியை ஏற்றுக்கொண்டார். அங்கு விஞ்ஞான ஆய்வுகூடத்தை நிறுவி, அங்கு கிடைக்கக்கூடிய பொருள்களைக் கொண்டு விஞ்ஞான விரிவுரைகளை சிறப்பாக நடத்தினார். அத்துடன் தமது தமிழ் அறிவை மேலும் விருத்தி செய்து கொள்வதற்காக சுன்னாகம் குமாரசுவாமி புலவரிடம் சென்று பாடங்கேட்டார்.
4
இலங்கையில் தமிழ்மொழியைப் போற்றி வளர்க்க Afi அமைப்பு இல்லாததைக்கண்டு, தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அறிஞர்கள் பலரையும் கலந்து ஆலோசித்து, தனது அயராத
10

முயற்சியின் பயனாக “யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச்சங்கம்” என்றதொரு கழகத்தை அமைத்து தமிழை வளர்க்கலானார். இந்த சங்கத்தின் மூலம் பிரவேசப் பண்டிதர், பாலபண்டிதர், பண்டிதர் மூன்று தேர்வுகளை ஏற்படுத்தினார். மயில் வாகனனார் தேர்வு முதல்வராகவும் முதன்மை உறுப்பினராகவும் விளங்கினார். மயில்வாகனனாரின் இந்த முயற்சி எத்தனையோ பண்டிதமணிகளை நாட்டிற்கு அளித்துள்ளது.
1922 ஆம் ஆண்டு மயில்வாகனனாரின் வாழ்வில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. நெடுங்காலமாக துறவு வாழ்வில் இருந்த ஆர்வம் அதிகமாகியது. அதனால் அதிபர் பதவியை துறந்து, சென்னையில் மயிலாப்பூரில் இருந்த இராமகிருஷ்ண மிஷனில் சேர்ந்தார். மயில்வாகனனாருக்கு பிரமச்சரிய தீட்சையும், சந்நியாச தீட்சையும் வழங்கியவர் இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர்களில் ஒருவரும், அக்காலத்தில் இராமகிருஷ்ண மிஷனுக்கு தலைவராகவும் இருந்த சுவாமி சிவானந்தர் ஆவார். துறவு வாழ்க்கையை மேற்கொண்ட காலத்தில் மயில்வாகனனாருக்கு "பிரபோதசைதன்யா" என்ற தீட்சா நாமத்தை வழங்கினார்கள். -
சென்னை மயிலாப்பூர் இராமகிருஷ்ண மிஷனில் இருந்த காலத்தில் இராமகிருஷ்ண மிஷன் நடத்திய “இராமகிருஷ்ண விஜயம்” என்ற தமிழ்ச் சஞ்சிகைக்கும், "வேதாந்த கேசரி" என்னும் ஆங்கில சஞ்சிகைக்கும் ஆசிரியராகவிருந்து பல அரிய கட்டுரைகள் எழுதினார். இந்த காலகட்டத்தில் டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர், தமிழ்க்கடல் திரு. வி. க. போன்ற பெரும் தமிழறிஞர்களின் நட்பும் கிடைத்தது. இக்காலத்தில் மதுரை தமிழ்ச்சங்கத்தோடு தொடர்புகொண்டு, அச்சங்க ஆண்டு விழாக்களில் கலந்துகொண்டு பல இலக்கிய ஆய்வுரைகளை நிகழ்த்தினார். மதுரைத்தமிழ்ச்சங்கம் நடத்திய பண்டித பரிட்சையின் பரீட்சார்த்தகராக நியமிக்கப்பட்டார். தமிழ்ச்சங்க வெளியீடான "செந்தமிழ்" எனும் சஞ்சிகையில் இலக்கிய கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வந்தார்.
மயில்வாகனனராகிய பிரபோதசைதன்யர் துறவியாக தம்மை ஆயத்தம் செய்துகொண்டிருந்த காலத்தில்சித்தாந்த நூல்களுடன், காவியங்களும், ஆங்கில இலக்கிய நூல்களையும் படித்து மகிழ்ந்தார். தாம் படித்த்துச் சுவைத்த ஆங்கில கவிதைகளை ஆங்கிலவாணி,
11

Page 8
பூஞ்சோலை காவலன் என்ற இரு இலக்கியப் படைப்பாக வழங்கினார்.
துறவறத்துக்குரிய கடமைகளை ஒழுங்காகப் பூர்த்திசெய்திருந்த பிரபோதசைதன்யருக்கு 1924 ஆம் ஆண்டு சித்திரை மாதம் பெளர்ணமி தினத்தில் சுவாமி சிவானந்தரால் "சுவாமி விபுலாநந்தர்” என்ற துறவறப்பெயர் வழங்கப்பட்டது.
5
"பூரீ இராமகிருஷ்ண விஜயம்" என்னும் வெளியீட்டிற்கு சுவாமி விபுலாநந்தர் அவர்கள் ஆசிரியபிடத்தில் இருந்தபொழுது தான் அரிய பல நூல்களை படிக்கும் வாய்ப்பு கிட்டியது. ஆங்கிலக் கவிதைகளைப் படித்துச் சுவைத்தார். ஆங்கில இலக்கியத்தில் பெரும்புகழ்பெற்ற ஷேக்ஸ்பியரின் நாடகங்களை விரும்பி கற்றார். தமிழ்மொழியில் நாடகக்கலை செழித்துவளர வேண்டும் என கனவு கண்டார். அதை நனவாக்கும் நோக்குடன் 1924 ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்க ஆண்டு விழாவில் கலந்துகொண்டு "நாடகத்தமிழ்” என்னும் தலைப்பில் அற்புதமான உரை ஒன்றினை நிகழ்த்தினார். மதுரைத்தமிழ்ச் சங்கத்தின் செயலாளரான டி.சி.சீனிவாசஐயங்கார் அவர்கள் சுவாமி அவர்களின் உரையினை நூலாக எழுதித்தரும்படி கேட்டுக்கொண்டார். அவரின் வேண்டுகோளை ஏற்று "மதங்கசூளாமணி" எனும் நூலை சுவாமி அவர்கள் எழுதினார்.
1925 ஆம் ஆண்டு சுவாமி விபுலாநந்தர் தமிழ்நாட்டிலிருந்து தாயகம் திரும்பினார். இங்கு வந்த சுவாமிகளுக்கு இலங்கையிலுள்ள இராமகிருஷ்ண மிஷண் பாடசாலைகளை பராமரிக்கும் முகாமையாளர் பொறுப்பை கொடுத்தனர். அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் வைத்தீஸ்வரா வித்தியாலயமும், திருகோணமலையில் இந்துக் கல்லூரியுமே இராமகிருஷ்ண மிஷன் ஆங்கிலப் பாடசாலை களாயிருந்தன. இவற்றோடு மட்டக்களப்பு, திருக்கோணமலை, யாழ்ப்பாணம் முதலிய இடங்களில் பல தமிழ்ப்பாடசாலைகள் இராமகிருஷ்ண மிஷன் முகாமைத்துவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன.
12

“என் கடன் பணி செய்வதே" என்பதற்கிணங்க சுவாமிகள் மக்கள் பணியே மகேசன் ப்னி எனக்கருதி சமூகத்தொண்டுகளிலும் ஈடுபட்டார். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு என்றில்லாமல், கண்டி, ‘மாத்தளை, அட்டன், லுணுகலை, பதுளை என்ற மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் வாழும் பகுதிகளுக்கும் சென்றுள்ளார்.
மற்றும் மட்டக்களப்பில் அக்கரைப்பற்று, மண்டூர், சித்தண்டி, பழுகாமம், கல்முனை, கொக்கட்டிச்சோலை, மலையகத்தில் லுணுகலை ஆகிய இடங்களில் பாடசாலைகளை ஆரம்பித்துள்ளார். கல்வியின் மூலமே சமூகத்தில் விழிப்புணர்வை உணர்த்தமுடியும் என்பதில் சுவாமி அவர்கள் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார்.
அந்தக் காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் உள்ள மாணவர்கள் மகாநாடு ஒன்றை நடத்துவதற்குரிய முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். மகாநாட்டிற்கு தலைமை தாங்குவதற்குரிய ஒருவரைத் தேடிக்கொண்டிருந்தனர். சுவாமி அவர்களின் இலங்கை வருகை அவர்களுக்கு உற்ச்சாகமூட்டியது. மாணவர்களின் வேண்டு கோளுக்கிணங்க சுவாமி அவர்கள் யாழ்ப்பாண மகாநாட்டிற்கு தலைமை வகித்தார்கள். சுவாமி அவர்கள் தமது தலைமையுரையில் மாணவர்களின் வருங்கால முன்னேற்றத்தை சுட்டிக்காட்டினார். சுவாமிகள் அதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் பல இடங்கள்ல் நடைபெற்ற கூட்டங்களில் சொற்பொழிவாற்றினார். அவரது சொற்பொழிவில் நல்லைநகர் தந்த ஆறுமுக நாவலர் பெருமானின் கல்விப்பணிகளை சிலாகித்து கூறினார்.தாம் யாத்த கவிதை ஒன்றில் நாவலர் பற்றி குறிப்பிடுகையில்:
"பாவலர் போற்றும் ஞான தேசிகரை * பணிந்தவ ராணையின் வண்ணம்
பூவலர் கொன்றை புனைந்தவர் புகழைப் புலமிகு மறிவர் கூட்டுண்ணக் காவலர் வியப்ப உரைத்திடல் கேட்டுக் கருணைகூர் தேசிகர் இவர்க்கு நாவலரெனும் பேர்தகுமென அளித்தார் ஞாலத்தார் தகுந்தகும் என்ன-? நாவலரைப் பற்றி கவிதா பாமாலை சூட்டுகிறார்.
13

Page 9
கிழக்கிலங்கையின் வரலாற்றில் மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் சுவாமி விபுலாநந்தரின் கல்விப்பணி தொடர்ந்தது. நாவலர் பெருமான் எவ்வாறு வட இலங்கையில் பல கல்வி நிலையங்களை நிறுவி இதன் மூலம் சைவமும், தமிழும் தழைத்தோங்க வழி அமைத்தாரோ, அதுபோன்று கிழக்கிலங்கையின் கல்வி வளர்ச்சிக்கு அரும் பணியாற்றியுள்ளார். சுவாமி விபுலாநந்தர் இராமகிருஷ்ண மிஷனின் உதவியுடன் கல்வி கூடங்கள் இல்லாத கிராமங்களில் எல்லாம் பாடசாலைகளை நிறுவினார்.
இன்றைய மாணவர்கள் நாளைய சமூகத்தின் வழிகாட்டிகள் என்பதை உணர்ந்து மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அதிக அக்கறைகாட்டி, திட்டமிட்டு சில நடைமுறைகளை புகுத்தினார். தேசப்பற்று, சமயப்பற்று, மொழிப்பற்று என்பவைகளை மாணவர்களிடையே ஏற்ப்படுத்துவதற்காக மகாகவி பார்தியாரின் சுதந்திர உணர்வூட்டும் பாடல்களையும், சுவாமி விவேகானந்தரின் வீர உரைகளையும் அடிக்கடி மாணவர்களிடையே எடுத்துக்கூறுவார். "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்பதை அடிப்படையாகக் கொண்ட மகாத்மா காந்தி அடிகளாரின் ஆதாரக் கல்வி முறையை பரீட்சித்துப் பார்த்த பெருமை சுவாமி விபுலாநந்தரையேல் சாரும்.
கவியரசர் ரவிந்திரநாத் தாகூரின் கலைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சர்வதேச கல்வி முறையிலும் நமது சுவாமி அவர்களுக்கு நம்பிக்கை இருந்தது. இவற்றுடன் விஞ்ஞானத்திற்கு சிறப்பிடம் கொடுத்து செயல்படுத்தினார்.
சுவாமி அவர்கள் பிறந்து வளர்ந்த காரைதீவு மூதூரில் ஓர் இராமகிருஷ்ண மிஷ்ன் பாடசாலை இருந்தது. இதில் ஆண்களும், பெண்களுமாகப் படித்துக் கொண்டிருந்தனர். நாளடைவில் மாணவர்களின் தொகை அதிகரித்ததால், பாடசாலை கட்டிடங்கள் போதாமல் இருந்தன. இக்குறைப் பாட்டை நீக்க சுவாமி அவர்கள் முயற்சிகள் மேற்கொண்டார்.
14

சுவாமி அவர்களின் விடுதிக்கு அருகில் ஓரிடம் வெறுமையாக கிடந்தது. இக்காணி சுவாமி அவர்களின் உறவினரான இராமநாதபிள்ளை அவர்களுக்கு உரியதாகும். சுவாமியின் எண்ணத்தை அறிந்து அந்தக் காணியை தந்துதவியதுடன் பாடசாலையைக் கட்டித்தரும் பொறுப்பையும் அவரே ஏற்றுக் கொண்டார். இக்காணியில் கட்டப்படும் பாடசாலை பெண்களுக்கென தீர்மானிக்கப் பட்டது. இராமகிருஷ்ண பரம உறம்சரின் துணை வியாரான சாரதாதேவியாரின் பெயரையே "சாரதா வித்தியாலயம்" என அப் பாடசாலைக்கு சூட்டினார். அன்னை சாரதாதேவியை பெண்மணிகள் மறவாதிருக்கும் பொருட்டு இப்பெயர் சூட்டப்பட்டது,
கிழக்கிலங்கையின் தலைநகரான மட்டக்களப்பில் ஆங்கிலக் கல்வியை வளர்க்க சில கல்லூரிகள் இருந்தன. சைவசமயத்தவர்கள் அதிகமாக வாழும் மட்டக்களப்பில் சைவசமய நெறிகளைப்பரப்ப ஆங்கிலக் கல்லூரி இல்லாதது ஒரு பெறும் குறையென சுவாமி அவர்கள் கருதினார்கள். இக்குறையினைப்போக்க தாமே முன்னின்று G)4FuaivuLaunulaotsiss.
மட்டக்களப்பு நகரத்தில் அச்சமயம் கல்லூரி ஆரம்பிக்கக்கூடிய இடம் இருக்கவில்லை. அதனால் சுவாமி அவர்கள் மட்டக்களப்புக்கு சிறிது தொலைவில் இருந்த கல்லடி உப்போடை எனும் ஊரில் காடாகக் கிடந்த பரந்த இடம் சுவாமி அவர்களின் கண்ணில் பட்டது. ஒரு கல்லூரி நிறுவுவதற்கு தகுந்த இடம் எனக் கண்டார்.
காணியை வாங்கி கல்லூரி அமைப்பதற்கு பெரும் தொகையான பணம் தேவைப்படும் எனக் கண்ட சுவாமி அவர்கள் திரு. கதிர்காமத்தம்பி உடையார் , திரு. சபாபதிபிள்ளை உடையார் ஆகியோரின் உதவியுடன் கல்லூரி அமைக்கும் பணியினை தொடங்கினார். மூன்றாண்டுகள் கட்டிட வேலைகள் நடைபெற்று, 1929 ஆம் ஆண்டில் கல்லூரி தலை நிமிர்ந்தது. சுவாமி அவர்களை துறவற பணியில் ஈடுபடுத்திய பெருமை சுவாமி சிவானந்தரையே* சேரும். ஆதலால் தமது குருவை மறவாமல் தாம் நிறுவிய கல்லூரிக்கு "சிவானந்த வித்தியாலயம்" என்ற நாமத்தைச் சூட்டினார். அன்று பதினெட்டு மாணவர்களுடன் ஆரம்பமான சிவானந்த வித்தியாலயம், இலங்கையில் இன்று தலைசிறந்த கல்விக்கூடமாக
15

Page 10
திகழ்கிறது. சுவாமி அவர்கள் தாம் பெற்ற மகவைப் போல அதன் வளர்ச்சியில் பெரிதும் அக்கறை காட்டி உழைத்தார்கள்.
இலங்கையின் தலைநகரமான கொழும்பில் விவேகானந்த சபை இயங்கி வந்தாலும் தலைநகரில் தமிழ்ப்பள்ளிக்கூடம் இல்லாதது பெரும் குறையாகவே இருந்தது. அதற்கு அரிய ஆலோசனைகளை கூறி உதவினார். அவரது ஆலோசனைப்படி புதிதாக "விவேகானந்தா வித்தியாலயம் " தொடங்கப்பட்டது. இன்று விவேகானந்தா வித்தியாலயம் தலைநகரில் தமிழ் போதிக்கும் தரமான கல்லூரியாக தலை நிமிர்ந்து நிற்கிறது.
கல்வித்துறையில் அனைவரும் தமிழ், ஆங்கிலம், சிங்களம் என்ற மூன்று மொழிகளையும் கற்க வேண்டிய அவசியத்தை முதன் முதலாக உணர வைத்த்து அதைச் சிவானந்தா விததியாலயத்தில் செயல்படுத்தி காட்டிய பெருமை சுவாமிகளுக்கே உரியதாகும்.
7
தமிழ் நாட்டில் சிதம்பரத்தில் ஒரு பல்கலைக்கழகம் நிறுவும் முகமாக 1927 ஆம் ஆண்டு மதுரை மாநகரில் இராமநாதபுரத்து அரசர் தலைமையில் ஒரு சபை நிறுவப்பட்டது. நாட்டின் பல பாகங்களிலும் உள்ள அறிஞர்களின் ஆலோசனைகள் கேட்கப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகத்தாரும் இம்முயற்சியினை ஆதரித்தார்கள். இந்தப் பல்கலைக்கழக முயற்சிக்கு சுவாமி அவர்களின் ஆலோசனையை மிக முக்தியமானதென முடிவு செய்தார்கள். அவரை மதுரை மாநகர் வந்தி ஆலோசனை நல்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். சுவாமி அவர்களின் கல்விப்பணி காரணமாக அவர் கூறும் கருத்தே எல்லா வகையிலும் சிறந்ததென கருதினார்கள்.
சென்னைப் பல்கலைக்கழகத்ததின் அழைப்பை ஏற்று மதுரை சென்று இராமநாத புரத்து அரசர் முன்னிலையில் சிதம்பரத்தில் பல்கலைக்கழகம் கட்டாயம் தேவையானதென தக்க சான்றுகளுடன் எடுத்துக் கூறினார். இவ்விசாரனைக்குழுவில் முதன் முதல் சான்றுகளுடன் எடுத்தக்கூறிய பெருமை சுவாமி விபுலாநந்தருக்கே
16

உரியது. இந்த விசாரண்ைக்ளின் பின்னர் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டுமென தீர்மான்க்கப்பட்டது. அதன் விளைவாக சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம் தோன்றியது. அப்ப்ல்கலைக்கழகம் உருவாகுவதற்கு இன்றியமையாதவராக இருந்த செட்டிநாட்டரசரான அண்ணாமலைச்செட்டியார் பல்கலை க்கழகத்தின் முதன் முதல் தமிழ்ப் பேராசிரியராக பதவி ஏற்கும்படி சுவாமி அவர்களை கேட்டுக்கொண்டார். அதற்கிணங்க 1931 ஆம் ஆண்டு சுவாமி அவர்கள் தமிழ் பேராசிரியர் பணியை ஏற்றுக்கொண்டார். சென்னை பல்கலைக்கழகத்தில் கூட அக்காலத்தில் தமிழ்த்துறைக்கு பேராசிரியர் பதவி இருக்கவில்லை. எனவே, தமிழ்நாட்டின் முதல் தமிழ்ப் பேராசிரியர் என்ற பெருமையும் புகழும் நம் நாட்டைச் சேர்ந்த சுவாமி விபுலாநந்தரையேச் சேரும். s
சுவாமி அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பதவியை ஏற்றுக்கொண்டமையால் தமிழ் மொழிக்கு ஒரு புதிய சகாப்தம் ஏற்ப்பட்டது. இதன் பின்பு தான் தமிழ்மொழியில் ஒப்பியலாய்வுகள், விமர்சன நூல்கள், இலக்கிய வரலாற்று நூல்கள் மொழி ஆராச்சி நூல்கள் வெளிவரத்தொடங்கின. சுவாமி அவர்கள் தமது விரிவுரைகளில் எல்லாம் தமிழ்மொழிக்கும், தாய்நாட்டுக்கும் தாம் கற்ற கல்வியின் மூலம் தொண்டு செய்ய வேண்டுமென வற்புறுத்தி வந்தார்.
சுவாமி அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பொழுது, நடைபெற்ற சம்பவம் ஒன்றை குறிப்பிட வேண்டும். 1933 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவுக்காக மண்டபங்களும், விடுதிகளும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்களின் விடுதிகளிலெல்லாம் ஆங்கில நாட்டுக் கொடி பறந்தது. ஆனால், சுவாமி அவர்களிக் விடுதியில் மட்டும் இந்தியாவின் தேசிய கொடியான காங்கிரசின் மூவர்ண கொடி பறந்தது. இதனைக் கண்டு பலரும் அச்சங் கொண்டனர். பட்டமளிப்பு விழாவிற்கு கலந்து கொள்வதற்காக கவர்னர் அங்கு வர சில நிமிடங்களே இருந்தன.
17.

Page 11
சுவாமியவர்களின் விடுதியில் பறக்கும் தேசிய கொடியைக் கண்டு விட்டால், கவர்னர் என்ன நினைப்பாரோ என்று காவல்ப்படையினர் அச்சம் அடைந்தனர். அத்துடன் காவலர்கள் சந்தேகத்துடன் சுவாமி அவர்களின் விடுதியை சோதனையிட்டனர். சுவாமி அவர்கள் எந்தவித கலக்கமுமின்றி விடுதியின் முன்னால் கதிரை ஒன்றில் அமர்ந்தவாறு திருக்குறளைப் படித்துக் கொண்டிருந்தார். காவலர்கள் தேசிய கொடியை அகற்றாமல் அங்கிருந்து சென்றனர். சுவாமி அவர்களின் சுதந்திர உணர்வைக் கண்டு அனைவரும் அகமகிழ்ந்தனர்.
1934 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் கலைச்சொற்கள் ஆக்கவேண்டுமெனத் தீர்மான்ம் எடுக்கப்பட்டது. அதன் பயனாக தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகரில் அறிஞர்கள் ஒன்றுகூடி மேலை நாட்டு விஞ்ஞான நூல்கள் முதலியவற்றைத் தமிழில் ஆக்குவதற்காக சொல்லாக்கக் கழகம் ஒன்றைச் சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் கூட்டினார்கள். அம்மகாநாட்டில் சுவாமி விபுலாநந்தரையே பொதுத் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள்.
தமிழ் மொழியில் கலைச்சொற்கள் பிறப்பதற்கு வித்திட்ட பெருமை சுவாமி அவர்களையே சாரும். விஞ்ஞான esses தமிழ் மொழியில் தமிழர்களுக்கு அளிப்பதற்கு விஞ்ஞான சொற்களுக்கேற்ற தமிழ் சொற்களைத் தெரிவுசெய்து ஒரு நூலை உருவாக்குவதற்கு "சொல்லாக்க கழகம் " என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இக்கழகத்தில் பல அறிஞர்கள் ஒன்றுகூடி கலைச்சொற்களை ஆக்கினார்கள். சொல்லாக்கக் கழக அங்கத்தவருக்கு பயன் தரும் வகையில் சுவாமி அவர்கள் பல விரிவுரைகளை நிகழ்த்தினார். இதன் பயனாக “கலைச்சொற்கள்” என்ற அகராதி நூல் வெளிவந்தது. இவ்வாறு சுவாமி அவர்கள் தொடக்கி வைத்த நன்முயற்சியால் விஞ்ஞான கலை இவ்வாறு தமிழில் விரைவாக வளர்ந்து வந்தது.

L]
மகாகவி பாரதியாரின் கவிதைகளில் சுவாமி அவர்களுக்கு அதிக ஈடுபாடு உண்டு. பல்கலைக்கழக மாணவர்கள் பாரதியாரின் கவிதைகளை படிக்க வேண்டும் என்று வற்புறுத்துவார். பாரதியாரின் கவிதைகளிலுள்ள எளிமையினையும், அழகினையும் விட, அவைகளில் பீறிட்டெழும் நாட்டுணர்ச்சியை சிலாகித்துப் பேசுவார். பாரதியாரின் கவிதைகளை மாணவர்கள் நல்ல முறையில் படித்துணர 1932 ஆம் ஆண்டு அண்ஸ்ணமலைப் பல்கலைக்கழகத்தில் பாரதியார் கழகம் (Bharthi Study Circle) 6T657 D 9 audiaou fig6.560TITs.
மகாகவி பாரதியார் மீது சுவாமி அவர்களுக்கு பெரும் மதிப்பு உண்டு. பாரதியாரைப் பற்றி பேசும் போது அவர் உள்ளத்தில் புத்துணர்வு பொங்கியெழும். "அவன் தான் தமிழன்” “வீரத் தமிழன்” “தேசியக் கவிஞன்” தமிழகத்தை தட்டியெழுப்பிய வீரன்" என வீர முழக்கம் செய்வார். மகாகவி பாரதியாரைப்பற்றித் தமிழில் மாத்திரமல்ல, ஆங்கிலத்திலும் சிறந்த கட்டுரைகள் எழுதியுள்ளார்.
அவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ள கட்டுரையின் ஒரு பகுதி: “பாரதியாரின் மீது மக்கள் அன்பு மழை பொழியக் காரணம், கவிஞனுடைய பாடல்களில் அழகுணர்ச்சியும், பெருமிதமும், அவற்றில் ததும்பும் தேச உணர்ச்சியுமே. வாழ்க்கையைப் பற்றி அவருடைய கவிதைகளில் காணப்படும் பரந்த நோக்கம் எல்லா மக்களையும் கவருவதாயிருக்கின்றன.
ஒரு மகத்தான நாகரீகத்தை தொன்று தொட்டு வழிவழியாகப் பெற்றுள்ள தமிழர்கள் தங்களுடைய நவீனகால வரகவியான பாரதியாரின் பார்வை கொண்டு உலகத்தை நோக்குவதுடன், குறுகிய வகுப்புவாதங்களையும், அற்ப சம்பிரதாயங்களையும் உதறியெறிந்து விட்டு சகல நன்மைகளுக்கும், எழிலுக்கும், உண்மைக்கும் மூலதனமாக விளங்கும் தெய்வீகத்தை நோக்கி அதன் பாதையில் முன்னேறி செல்வாராக."
பாரதியாரின் பாடல்கள் தமிழகத்திலும், இலங்கையிலும் Dahl காரணமாயிருந்த முன்னோடிகளில் முக்கியமானவர்
19

Page 12
சுவாமி விபுலநந்தர். கற்றறிந்தோர் பலர் பாரதியாரின் கவிதைகளை ஒதுக்கிய காலத்தில் சிலப்பதிகாரத்தின் சிறப்பையும், ஷேக்ஸ்பியரின் திறத்தையும் எடுத்துக் கூறிய சுவாமிகள், கற்றறிந்தோருக்கு ஏற்றது கலித்தொகை மாத்திரமல்ல, பாரதியாரின் கண்ணன் பாட்டு என்று துணிந்து கூறினார்.
"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே-அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை சொல்லவுங் கூடுவது இல்லை - அதைச் சொல்லுந்திறமை தமிழ்மொழியில் இல்லை என்றந்தப் பேதை யுரைத்தான்."
என்று மகாகவி பாரதியார் உள்ளம் நொந்து வேதனையுடன் பாடியதை சுவாமி அவர்கள் சுட்டிக்காட்டி விஞ்ஞான நூல்களை தமிழில் எழுதும்படி வேண்டினார். தனது சொற்பொழிவுகளில் எல்லாம் பாரதியின் பாடல்களை மேற்கோளாக எடுத்துக் காட்டினார். இதன் பின்னரே கற்றவர்களின் பார்வை பாரதியின் கவிதைகளில் ஈடுபாடு கொள்ள வைத்தது. இலங்கையில் பாரதியாரின் பாடல்களை பரப்பிய முன்னோடிகளாக சுவாமி விபுலாநந்தரையும், முதல் தமிழ் நாளிதழின் ஆசிரியரான கோ. நடேசய்யரையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்,
1937 ஆம் ஆண்டில் இமயமலை காண வேண்டும் என்ற ஆவலால் தூண்டப்பட்டு சுவாமி அவர்கள் இமயமலையை காணச் சென்றார். அவர் இமயமலைச் சாரலில் இராகிருஷ்ண மிஷன் நடத்தும் "மயாவதி” ஆசிரமத்தில் தங்கினார். அங்கு வெளிவந்த “பிரபுத்தபாரதா" எனும் ஆங்கிலத் திங்கள் இதழில் ஆசிரியர் பணியை ஏற்று அதனை சிறப்பாக நடத்தினார். தமிழ் மொழியின் சிறப்புப் பற்றியும், தமிழ் பண்பாட்டின் உயர்வு பற்றியும் பல கட்டுரைகள் எழுதின்ார். இமயமலையின் இயற்கை கொஞ்சும் அமைதியான சூழ்நிலையில் “யாழ் நூல்" பற்றிய ஆராச்சியில் ஈடுபடலானார். இந்த ஆராச்சிக்காக பல தகவல்களை சேகரிக்க வேண்டியிருந்தது. அதனால் சுவாமி அவர்கள் " பிரபுத்த பாரதா" ஆசிரியர் பணிளை துறந்தார்கள்.
20

யாழ் நூல் ஆராச்சிக்காக தமிழ் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்றார். சுவாமி அவர்கள் சென்ற இடமெல்லாம் வரவேற்பு அளிக்கப்பட்டு, இலக்கிய சமய சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சென்றவிடமெல்லாம் சிறப்புப் பெற்ற சுவாமி அவர்கள் இயல்,இசை, நாடகம் ஆகிய முத்தமிழ் சிறப்பியல்களை எடுத்தியம்பினார். ஆராய்ச்சி தகவல்களுடன் கூடிய பல இலக்கிய கட்டுரைகளை ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதினார். உரைநடையில் இயல் தமிழுக்கு அழகு சேர்த்தார். நாடகத் தமிழுக்கு புத்துயிர் ஊட்டக் கூடியதுமான "மதங்கசூளாமணி" என்னும் ஒப்புயழர்வற்ற நூலைப் படைத்தார்.
தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மொழிகளில் அவருக்கிருந்த புலமை காரணமாக அம்மொழிகளிலுள்ள நாடகங்களில் காணப்படும் இலக்கண இயல்புகளை ஆராய்ந்து இந்நூலில் தெளிவாக எடுத்துக் காட்டினார். தமிழ்மொழியில் தலை சிறந்த காப்பியமான சிலப்பதிகாரம், வடமொழியில் உள்ள "தசரூபம்” ஆகியவற்றில் காணக் கிடைக்கும் நாடகவமைதிகளையும், ஆங்கில மொழியில் அமர நாடகங்களை சிருஷ்டித்த ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் கையாளப்பட்டிருக்கும் சிறப்பியல்களையும் தமது நூலில் சுவாமி அவர்கள் எடுத்துக் காட்டியுள்ளார். “மதங்கசூளாமணி" சுவாமிகளின் ஆளுமையை எடுத்துச் சொல்லும் சிறந்த படைப்பாகும்.
யாழ் நூல் ஆய்வுக்காக தமிழ் நாட்டில் சுற்றுப்பிரயாணம் செய்து கொண்டிருந்த காலத்தில் ஈழத்து தமிழறிஞர்கள், பெரியோர்கள் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ் பேராசிரியர் பதவியை ஏற்கும்படி வேண்டினார்கள். ஆனாலும் சுவாமி அவர்கள் தமது யாழ்நூல் ஆராச்சியில் முழு மூச்சாக ஈடுபட்டிருந்தார். பின்னர் பலரின் வேண்துகோளுக்கிணங்க 1943 ஆம் ஆண்டு இலங்கைச் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பீடத்தை சுவாமி அவர்கள் அலங்கரித்தார்.
முதல் தமிழ்ப் பேராசிரியர் பதவியை சுவாமி அவர்கள் ஏற்றார்கள் என அறிந்த இராமகிருஷ்ண மிஷன், கொழும்பு விவேகானந்த சபை, கதிர்காமம் தொண்டர் சபை, தெகிவளை சைவ சித்தாந்த மன்றம், இலங்கை பல்கலைக்கழக தமிழ்ச்சங்கம்,
21

Page 13
கொம்பனித்தெரு தமிழர் சங்கம், வெள்ளவத்தை தமிழர் பயிற்சிக்கழகம் முதலியன ஒன்று சேர்ந்து சுவாமி அவர்களுக்கு மாபெரும் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தினார்கள்.
சுவாமி விபுலாநந்தர் பேராசிரியர் பதவியுடன், கல்விப்ப்குதி பாடநூற்சபை, தேர்வுசபை,கல்வி ஆராய்ச்சி சபை ஆகியவற்றில் கெளரவ உறுப்பினராகத் திகழ்ந்தார். இலங்கை அரசாங்கம் பாடசாலை கல்விக்காக ஒரு திட்டத்தை வகுத்தபோது, சுவாமி அவர்கள் சங்கீத பாடத்திற்கான ஒரு திட்டத்தை ஒவ்வொரு வகுப்பிற்கும் வகுத்துக் கொடுத்தார். பாடசாலைகளில் சைவ சமயம் படிப்பிக்க வேண்டும் என்ற திட்டம் ஏற்பட்ட போது, சமயத்திற்காக ஒரு திட்டத்தை சுவாமியவர்கள் வகுத்துக் கொடுத்தார். இலங்கை அரசு நடத்திய தேர்வுகளுக்கெல்லாம் ஓர் தேர்வாளராக பணிபுரியலானார். கல்வி வளர்ச்சிக்காக தன் உடல் நலனையும் பாராது அயராது உழைத்தார்.
9
சுவாமி அவர்களின் தமிழ் தொண்டால் தலை சிறந்து விளங்குவது அவருடைய "யாழ்நூல்" ஆராச்சியாகும். சுவாமி அவர்கள் பதினைந்து ஆண்டு காலம் ஆராய்ந்து கண்டுணர்ந்த யாழ்நூலினைக் கரந்தை தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன் திருக்கொள்ளம் பூதூர்த் திருக்கோயிலில் நாளும் செந்தமிழ் இசைப்பரப்பிய ஞானசம்பந்தனின் சந்நிதானத்தில் இசை விற்பன்னர்கள் வியக்க, கற்றோரும், மற்றோரும் பாராட்ட தேவாரப்பண்களை தாமே அமைத்து 1947 ஆம் ஆண்டு ஆணித் திங்களில் அரங்கேற்றினார்.
முதல் நாள் விழாவில் திருக்கோயில் வரிசைகளுடன் இயற்றமிழ்ப்புலவர்கள், அறிஞர்கள் சூழ்ந்து வர சுவாமி அவர்களை தெற்கு கோபுர வாயிலின் வழியாக திருக்கோயிலுக்கு அழைத்து வந்தார்கள். சுவாமி அவர்கள் ஆராய்ந்து கண்டு பிடித்த வரைபடத்துடன் விளக்கிய பின்னர், தான் தயாரித்த முளரியாழ், சுருதி வீணை பாரிசாதவீணை, சதுர்த்தண்டி வீணைகளைத் தாங்கி சிலர் சென்றார்கள். நாச்சியார் முன்னிலையில் சுவாமி அவர்கள் இயற்றிய "நாச்சியார் நான்மணிமாலை"சைவித்துவான்
22

ஒளவைதுரைசாமிப்பிள்ளை அவர்களால் படிக்கப்பட்டு அரங்கேறியது. பாராட்டுரைகளுக்குப் பின்னர் சங்கீதபூஷணம் க.பெ. சிவானந்தம் பிள்ளை சுவாமிகளால் கண்டுணர்ந்த யாழ்களை மீட்டி இன்னிசை பொழிய முதல் நாள் விழா இனிதாக நிறைவேறியது.
இரண்டாம் நாள் விழாவில் நாவலர் சோமசுந்தரப் பாரதியார் "குமரன்” ஆசிரியர் சொ. முருகப்பா, தமிழ்ப்பேராசிரியர் தெ. பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை, சென்னைப் பல்கலைக்கழக சாம்பமூர்த்தி ஐயர் ஆகியோர் ஆய்வுரை நிகழ்த்தினார்கள். பின்னர் சுவாமி விபுலாநந்தர் யாழ் பற்றிய அரிய தகவல்களை எடுத்து விளக்கினார். வித்துவான் வெள்ளைவாரணார் யாழ்நூலின் பெருமைகளை எடுத்து விளக்கினார். பின்னர் "யாழ்நூல்" அரங்கேற்றப்பட்டது.
யாழ்நூல் அரங்கேற்ற விழாவில் கலந்து கொள்வதற்கு புறப்படும் முன்னர் சுவாமி அவர்கள் உடல் நலம் குன்றி இருந்தார். பயணம் செய்யக் கூடாதென்ற வைத்தியர்களின் ஆலோசனைகளையும் கேளாது நீண்ட நெடும் நாட்களாக தாம் கண்ட இலட்சியக்கனவை நனவாக்க தமிழர்களின் பழம் பெருமையை எடுத்தியம்ப, மறைந்து போன யாழிசையைப் பரப்ப பயணமானார். ஓய்வு உறக்கமின்றி செயல்பட்டதால், உடலும் உள்ளமும் பாதிக்கப் பட்டிருந்தது. ஆனாலும் தளராத தன்னம்பிக்கையே அவரை வழிநடத்தியது. அதனால் கடுமையான நோயின் பாதிப்புக்கு
D 667 not ITT.
யாழ்நூல் அரங்கேற்றத்துக்கு பின்னர் பாதிக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பினழர். கொழும்பில் மருத்துவ விடுதி ஒன்றில் தங்கி சிகிச்சை பெறவானார். 1947 ஆம் ஆண்டு ஆடித்திங்கள் 19ம் நாள் (19.07.1947) சனிக்கிழமை இரவு சுவாமி விபுலாநந்தர் அமரத்துவம் அடைந்து விட்டார்.
வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷனில் இறுதி மரியாதைக்காக சுவாமி அவர்களின் பூதவுடல் வைக்கப்பட்டு, மறுநாள் காலைப்பொழுதில் சுவாமி அவர்கள் பிறந்த பூமியாம் மட்டக்களப்புக்கு
23

Page 14
எடுத்துச் செல்லப்பட்டு, சுவாமி அவர்கள் கண்ணும் கருத்துமாக
உருவாக்கிய சிவானந்த வித்தியாலயதின் முன்னாலுள்ள மரத்தின்
கீழ் அமைக்கப்பட்ட கல்லறையில் சுவாமி அவர்களுடைய பூதவுடல்
அடக்கம் செய்யப்பட்டது.
f.
சுவாமி அவர்கள்ை அடக்கம் செய்யப்பட்ட கல்லறை மேல்
சமாதி ஒன்று எழுப்பப்பட்டது. அதில் சுவாமி அவர்கள் யாத்த:
வெள்ளைநிற மல்லிகையோ வேறெந்த மர்மலரோ வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலர் எதுவோ வெள்ளைநிறப் பூம்ல்ல வேறெந்த மலருமல்ல உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது
என்ற உயிர்த்துடிப்புமிக்க கவிதா வரிகள் பொறிக்கப் பட்டுள்ளன.
சுவாமி விபுலாநந்தர் அவர்களின் நூற்றாண்டை நாம் இப்பொழுது நினைவு கூறுகின்றோம். முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் இம்மண்ணில் பிறந்து ஒரு நூற்றாண்டு நிறைவு பெறுகிறது. நாடெங்கும் உள்ள தமிழ் நெஞ்சங்கள் அவருக்கு விழா எடுத்து மகிழ்கின்றது. சுவாமி விபுலாநந்தரின் கல்விப் பணியும் அவர் விட்டுச் சென்ற எழுத்துச் செல்வங்களும் அவரை நமக்கு நினைவு படுத்திக் கொண்டே இருக்கின்றன. சுவாமி அவர்கள் ஆற்றிய தமிழ்ப்பணியும், அவர் உருவாக்கிய தாபனங்களும் காலத்தால் மறையாது. இயல்,இசை,நாடகம் என்ற முத்தமிழ் இருக்கும்வரை முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தரின் திரு நாமமும் வாழ்ந்து கொண்டே இருக்கும்.
24


Page 15