கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நினைவு மலர் (வேலுப்பிள்ளை வாமதேவன்)

Page 1
ம்உ ந. வேலுப்பிள்ளை IPR lsig), 5
 

J40L/Lň
ள்
ன் இவர்க
வாமதேவ குறித்த
Ꭷ[ uᎠᏍuᏚᏁᏤ
|-2003

Page 2


Page 3

? ساسYYY స్త్రSH్య వ్లో ܐܠ
Z= ཛོད༽
அளவெட்டியைப் பிறப்பிடமாகவும் வட்டுக்கோட்டை மேற்கை வாழ்விடமாகவும் வத்தளையைத் தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை வாமதேவன் அவர்களின்
மறைவு குறித்த -
நினைவு மலர்
09 - 11 - 2003 لـــــــــــــــــــ ܠ

Page 4
ஈசன் உவக்கும் இன்மலர் மூன்று
வெள்ளைநிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ வெள்ளை நிறப்பூவுமல்ல வேறெந்த மலருமல்ல உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது.
காப்பவிழ்ந்த தாமரையோ கழுநீர் மலர்த் தொடையோ மாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலரெதுவோ காப்பவிழ்ந்த மலருமல்ல கழுநீர்த் தொடையுமல்ல கடப்பியகைக் காந்தளடி கோமகனார் வேண்டுவது.
பாட்டளிசேர் பொற்கொன்றையோ பாரிலில்லாக் கற்பகமோ வாட்டமுறாதவர்க்கு வாய்த்த மலரெதவோ பாட்டளிசேர் கொன்றையல்ல பாரிலில்லாப் பூவுமல்ல நாட்டவிழி நெய்தலடி நாயகனார் வேண்டுவது.
- சுவாமி விபுலானந்தர்


Page 5

-
SS
LLL S AAS S SSLSS L S S S SL SSASrSr S SSSS S L L S LSL S SeSeYSrr SLA S 王、
A.
அமரத்துவமடைந்த
திரு. வேலுப்பிள்ளை வாமதேவன் அவர்கள்
மலர்வு : உதிர்வு : O7-09-1939 10-10-2003
திதி நிருணய வெண்பா சீராரும் கபானு சேர்புரட்டாதி இருபத்துமூனர்றில் பேராரும் பெளர்ணமித் திதியதனில் - ஏராரும் போற்றும் ஏந்தல் வாமதேவன் எம்பிராண்தாள் போந்தார் புவி யகன்று.

Page 6

திருமுறையமுதம்
திருச்சிற்றம்பலம்
விநாயகர் துதி விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கைதனி விப்பான் - விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாந் தன்மையினாற் கண்ணிற் பணிமின் கனிந்து.
தேவாரம் - சம்பந்தர் வண்ண மலரானும் வைய மளந்தானும் நண்ண லரியானை நல்லூர்ப் பெருமானைத் தண்ண மலர்தூவித் தாள்க டொழுதேத்த எண்ணு மடியார்கட் கில்லை யிடுக்கணே.
திருத்தாண்டகம் - அப்பர்
வடிவேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும் வளர்சடைமேல் இளமதியந் தோன்றுந் தோன்றும் கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும் காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும் இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும் எழில்திகழும் திருமுடியு மிலங்கித் தோன்றும் பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.
தேவாரம் - சுந்தரர் திகழும் மாலவன் ஆயிர மலரால் ஏத்து வான்ஒரு நீள்மலர் குறையப் புகழி னால்அவன் கண்இடந் திடலும் புரிந்து சக்கரங் கொடுத்தல்கண் டடியேன் திகழும் நின்திருப் பாதங்கள் பரவித் தேவ தேவநின் திறம்பல பிதற்றி அகழும் வல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன் ஆவ டுதுறை ஆதிலம் மானே.

Page 7
.திருவாசகம் பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும் பெண் சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான் விண்சுமந்த கீர்த்தி வியன் மண்டலத் தீசன் கண் சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை மண்சுமந்து கூலிகொண் டக்கோவான் மொத்துண்டு புண் சுமந்த பொன்மேனி பாடுதுங் காண் அம்மானாய்.
திருவிசைப்பா இவ் அரும் பிறவிப் பெளவநிர் நீந்தும் ஏழையேற் கென்னுடன் பிறந்த ஐவரும் பகையே யார்துணை யென்றால் அஞ்சலென்றருள் செய்வான் கோயில் கைவரும் பழனங் குழைத்த செஞ்சாலிக் கடைசியர் களைதரு நீலஞ் செய்வரம் பரும்பும் பெரும் பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம்பலமே,
திருப்பல்லாண்டு
மன்னுக தில்லை வளர்க நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல பொன்னின்செய் மண்டபத்துள்ளே புகுந்து புவனியெல்லாம் விளங்க அன்னநடை மடவாள் உமைகோன் அடியோ முக்கருள் புரிந்து பின்னைப்பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்க்குப் பல்லாண்டு கூறுதுமே.
திருப்புராணம் ஐந்துப்பே ரறிவும் கண்களே கொள்ள அளப்பருங் கரணங்கள் நான்கும் சிந்தையே யாக குணமொரு மூன்றும் திருந்து சாத்துவீகமே யாக இந்துவாழ் சடையான் ஆடும்ஆ னந்த எல்லையில் தனிப்பெருங் கூத்தின் வந்தபேரின்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்.
வாழ்த்து வான்முகில் வழாதுபெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை யரசுசெய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான்மறை யறங்களோங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
திருச்சிற்றம்பலம்
2

D
கற்பகவிநாயகர் துணை.
எல்லோருக்கும் நல்லவர்.
அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் நீர்ப்பாசனத் திணைக்கள ஓய்வுபெற்ற உத்தியோகத்தருமான திரு.வேலுப்பிள்ளை வாமதேவன் அவர்கள் சிவபதமெய்திய செய்தியறிந்து யான் அளவிலாக் கவலையடைந்தேன்.
அன்பர் வாமதேவன் சைவஅனுஷ்டானம், கடவுள் பக்தி, குருபக்தி நிரம்பியவர். பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர். நற்குணசீலர்.
இவர் தமது குடும்பத்தைப் பேணிக் காத்ததோடு தந்தை மகற்காற்றும் பணியனைத்தையும் நிறைவுறச் செய்தவர். சிறந்த பண்பாடும், சீரிய ஒழுக்கமும், உயர்ந்த கடவுள் பக்தியும் இவர்தம் குடும்பத்திற்கே உரித்தானவையாகும். சற்புத்திர, புத்திரிகளைப் பெற்றெடுத்த பெருமைக்குரியவர். பிள்ளைகள் அனைவரையும் நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் வாழ வழிகாட்டியவர். எல்லோருக்கும் நல்லவராக வாழ்ந்தவர். என்றும் மறக்க முடியாதவர்.
வையத்து வாழ்வாங்கு வாழ்ந்த இப்பெரியாரின் மறைவு ஈடு செய்யமுடியாதது. அன்னாரைப் பிரிந்து கலங்கி நிற்கும் மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், சுற்றத்தார் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல வரத் தலம் கற்பகவிநாயகப் பெருமானைப் பிரார்த்திக்கின்றேன். W
ஓம் சாந்தி சாந்தி!! சாந்தி!!! ‘நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு - திருவள்ளுவர் -
இல.290, ஹெந்தல வீதி, சிவபூரீ இ.சபாரத்தினக்குருக்கள், வத்தளை. ஆதீன கர்த்தா, பூரீலங்கா. வரத்தலம் கற்பகவிநாயகர்
தேவஸ்தானம். 19.10.2003. : பன்னாலை - தெல்லிப்பழை.
3

Page 8
இருந்தார்.
வாமதேவன் மிகமிக இனியவர்
இவ்வுலகம் இனியது. இதில் உள்ள வான் இனிமையுடைத்து. காற்று இனிது.
தீ இனிது.
நிலம் இனிது.
ஞாயிறு நன்று.
திங்களும் நன்று. வானத்து சுடர்களெல்லாம் மிக இனியன. மழை இனிது.
கடல் இனிது.
மலை இனிது.
காடு இனிது.
ஆறுகள் இனியன. உலோகமும், மரமும், செடியும் கொடியும், மலரும், காயும் கனியும் இனியன. ஊர்வனவும் நல்லன. விலங்குகள் எல்லாம் இனியவை. நீர்வாழ்வனவும் நல்லன. மனிதர் மிகவும் இனியர். வாமதேவன் மிகமிக இனியவர்.
‘நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு".
நேற்று இருந்தவன் இன்று இல்லையென்பது நாம்
அறிந்ததே. எனது அன்பிற்குரிய நண்பர் வாமதேவன் நேற்று இன்றைக்கு இல்லைத்தான். ஆனால் அவர் இருந்தபோது செய்த பணிகள் அதனுடைய நல்ல நினைவுகள்
என்றைக்கும் உயிர் வாழும்.
வாமதேவன் மிகவும் இனிய நண்பர். எல்லோருடனும், எப்பொழுதும் சிரித்த முகத்தோடு பேசுவார்.
என்னவென்று இருக்காமல் எல்லோருடைய பிரச்சினைகளையும் தன்னுடைய தலையிலே போட்டுக்கொண்டு அலைந்து
4.

திரிவார். இடதுசாரியாகவே பிறந்து இடதுசாரியாகவே மரித்தவர் வாமதேவன். எப்பொழுதும் சிறுமை கண்டு பொங்கியவர். மரணப்படுக்கையில் அமைதியாகத் துயில் கொள்வதுபோல் காட்சியளித்தார். எல்லோரையும்போல் அல்லாது அவரது இழப்பு எனக்குத் தனிப்பட்ட முறையிலே பெரும் நஷ்டம். மற்றவர்களுக்கும் அப்படியே.
எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொரு
வருடையது ஆகின்றது. மற்றொருநாள் அது வேறொரு வருடையது ஆகும். இதுவே உலக நியதியும், எமது படைப்பின் சாராம்சமும் ஆகும் என்ற பகவானுடைய வார்த்தைகளே எமக்கு ஆறுதல் தருகின்றது.
அன்பன்
தா. சண்முகநாதன்
(சோக்கெல்லோ சண்முகநாதன்)

Page 9
அமரத்துவமடைந்த திரு. வேலுப்பிள்ளை வாமதேவன் அவர்களின்
வாழ்க்கைக் குறிப்புகள்
புன்னகை தவழும் திருமுகம். அன்பு தவழும் வார்த்தைகள், கம்பீரமான தோற்றம். காண்போரைத் தன்பாற் கவர்ந்திடும் பார்வை. அனைவரையும் அன்பு பொங்க வரவேற்று உபசரிக்கும் பண்பு. அமைதியின் வடிவம். பிறர் மனம் நோகாது நடந்து கொள்ளும் பெருங்குணம்.
இவை அத்தனையும் ஒருங்கமைந்த உருவமே வாமதேவன். அவர் பெயருக்கேற்ற பெருந்தன்மை கொண்டவர். கடமையே கண்ணெனக் கருதிப் பணியாற்றியவர். அவர் எல்லோருக்கும் நல்லவர். நல்ல சிந்தனையாளர். பணியாற்றிய இடங்கள் எங்கும் பாராட்டுதல்களைப் பெற்றவர். பழகுதற்கு இனியவர். பிறர் நலம் பேண முன்னிற்பவர்.
அன்னாரின் திடீர் மறைவினை எண்ணும்போது எல்லார் உள்ளங்களிலும் எழுவது;
'உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு என்னும் திருவள்ளுவர் வாக்கேயாகும். இறப்பு என்பது உறங்குவதைப் போன்றது என்றார் வள்ளுவர். வாமதேவன் அவர்களது மறைவும் உறக்கத்திலேயே முடிந்தது.
எவரும் எதிர்பாராத வகையில் அவரது ஆன்மா இறையடி சேர்ந்தமையே அன்னாரின் தூய சிந்தனையின் சிறப்பினைத் துலக்குவதாயமைந்தது எனலாம். வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த அவரது வாழ்க்கை அனைவருக்கும் ஒரெடுத்துக் காட்டாகும். அன்னாரின் வாழ்க்கைச் சுவடுகளை ஒருகணம் மீட்டு நோக்குவோம்.
ஈழத்திருநாட்டின் வடபால் அமைந்துள்ள கிராமம் அளவெட் டி. அழகியசோலைகளும் கழனிகளும் கல்விச்சாலைகளும் கோயில்களும் சூழ்ந்த அழகிய கிராமம் அது. முத்தமிழ் வல்ல அறிஞர்களும் இசையாளர்களும் கவிஞர்களும் கலைஞர்களும் நிறைவாகக் கொண்ட கிராமம்.
இக்கிராமத்தில் வாழ்ந்த பெரியார் வேலுப்பிள்ளை - நாகபூஷணி தம்பதிகளின் செல்வப் புதல்வராக 07.09.1939 இல்
6

பிறந்தார் வாமதேவன். இவரின் உடன்பிறப்பு யோகேஸ்வரி. இவர் 1990 இல் இறைவனடி சேர்ந்துவிட்டார்.
விளையும் பயிரை முளையிலே தெரியும் என்னும் முதுமொழிக்கிணங்க வாமதேவன் இளமையிலேயே விவேகமும் வீரமும் மிக்கவராக விளங்கினார். தமது பத்தாவது வயதில் பேரிழப்பொன்றுக்கு இலக்கானார். அன்புமிகு அன்னையை இழந்தார். தாயாரின் மறைவு அவருக்கு ஆறாத்துயரை அளித்தது. எனினும் தமது சிறிய தந்தையார் திரு.எஸ். பரநிருபசிங்கம் (ஆசிரியர், யா/அருணோதயாக் கல்லூரி) அவர்களின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். அளவெட்டி அருணோதயாக் கல்லூரியில் தமது கல்வியைத் தொடர்ந்தார். தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும் நன்கு பயிற்சி பெற்றிருந்தார். 1.11.60 இல் நோர்த் சிலோன் றேடிங் கம்பனியில் எழுதுவினைஞராகச் சேர்ந்த திரு.வாமதேவன் 1966ஆம் ஆண்டுவரை அங்கு பணியாற்றினார். பின்னர் குருநாகல் மாவட்டத்தில் உள்ள தொடங்களில்லந்த எல்வலப்பிற்றியா தோட்டத்தில் உதவித் தோட்டத்துரை பதவியில் (1966ல்) அமர்ந்தார். 5.2.72 வரை அப்பதவியில் இருந்தார்.
இங்கு பணியாற்றிய காலத்திலேயே இவருக்குத் திருமண ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. ‘செந்தமிழும் ஆங்கிலமும் திருநடனம் புரியும் வட்டுக்கோட்டை மேற்கில் வாழ்ந்த பெரியார் நாகலிங்கம் - அம்பிகாபதி தம்பதிகளின் செல்வப் புதல்வி செல்வராணி என்னும் சீர்மிகு செல்வியே இவருக்கு ஏற்ற மனையாள் எனத் தக்கோர் தெரிந்துரைத்தனர். வாமதேவன் - செல்வராணி இருவரினதும் திருமணம் 29.10.69 இல் இனிது நிகழ்ந்தது. வட்டுக்கோட்டையில் நல் மனையறம் கண்ட இத்தம்பதிகளுக்கு 12.08.1970 இல் இரு புதல்விகள் பிறந்தனர். இக்குழந்தைகளுக்கு நேசவதனி, நேசறஜனி எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தனர் பெற்றோர். இவ்விரு புதல்விகளையும் தொடர்ந்து 01.03.1973இல் மணிவண்ணன் என்னும் மகன் பிறந்தார்.
இணைபிரியா இரட்டையர்களான இரு புதல்விகளும் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் உயர்கல்வி பயின்றனர். அருமைப் புதல்வர் மணிவண்ணன் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் உயர் கல்விதனைப் பயின்றார்.
13.10.1978 முதல் வாமதேவன் புத்தளத்தில் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் மேற்பார்வையாளராகப் பதவியேற்றார். அங்கு
7

Page 10
ஒய்வு பெறும் வரை 21 வருடங்கள் தமது சேவையினைத் தொடர்ந்தார். அனைவரினதும் பாராட்டுக்கும் மதிப்புக்கும் உரிய வகையில் பணியாற்றினார்.
நாட்டு நிலைமை காரணமாக மகன் மணிவண்ணன் 1996இல் ஜேர்மனி சென்றார். அங்கு மூன்றாண்டுகள் வாழ்ந்தார். பின்னர் 1999இல் கனடா சென்றார். தற்போது கனடாவில் இவர் பணிபுரிந்து வருகிறார்.
அன்புமகள் நேசறஜனி 1991இல் தந்தை வழி உறவினர் திரு. இ. குமாரசாமி தம்பதிகளின் புதல்வன் சிந்தைக்கினிய சிவராசா அவர்களைத் திருமணம் செய்துகொண்டார். சிவராசா - நேசறஜனி திருமணம் ஜேர்மனியில் இனிது நடைபெற்றது.
நேசமொழி பேசும் நேசவதணியும் யாழ்/பல்கலைக் கழகத்தில் சங்கீத கலைமாணிப் பட்டப் படிப்பைத் தொடர்ந்தபோது தாயின் பிறப்பிடமாம் வட்டுக்கோட்டை மேற்கில் வாழும் ஓய்வு பெற்ற அதிபர் திரு. ச. மகேசு - பரமேஸ்வரி தம்பதிகளின் செல்வப் புதல்வன் சிவகுமார் அவர்களைக் கரம் பற்றினார். 1992இல் இவர்களது திருமணம் கொழும்பில் நிகழ்ந்தது. தற்போது இத்தாலியில் வதியும் இவர்களுக்குச் சித்தம் குளிரப் பேசும் சந்தோஷா, சாருகா, சிவானி என மூன்று முத்துக்கள் உள்ளனர். புத்தளம்நீர்ப்பாசனத் திணைக்களத்தில் மேற்பார்வையாளர் பதவியிலிருந்து (1999 பங்குனியில்) ஓய்வுபெற்ற திரு.வாமதேவன் 01.9.1999 முதல் தற்காலிகமாக வத்தளையில் வாழ்ந்து வந்தார். ஜேர்மனியில் வாழும் நேசறஜனி குடும்பத்தினர் பத்தாண்டுகளுக்குப் பின்னர் 2001 இல் கொழும்பு வந்து பெற்றோரைப் பார்த்து மகிழ்ந்தனர். அவர்களின் வருகை திரு. வாமதேவன் தம்பதிகளுக்குப் பெரு மகிழ்வை அளித்தது.
இத்தாலியில் வதியும் மகள் நேசவதனியும் தமது கணவர் பிள்ளைகளுடன் 2002 ஜூனில் கொழும்பு வந்தனர். பெற்றோரைக் கண்டு மகிழ்ந்தனர். மீண்டும் 2003 சித்திரையில் இத்தாலியிலிருந்து இவர்கள் வந்தனர். கொழும்பிலும் வட்டுக்கோட்டையிலும் தமது பேரப்பிள்ளைகளுடன் அளவளாவி மகிழ்ந்தார் திரு.வாமதேவன். அன்பு மகன் மணிவண்ணன் அருமைப் பெற்றோரைத் தனது இருப்பிடத்துக்கு - கனடாவுக்கு அழைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார். பயண ஒழுங்குகள் பெரும்பாலும் கைகூடும் நிலையினை நெருங்கியிருந்தன. அதற்கிடையில்
8

எதிர்பாராத விதமாக 10.10.2003 அன்று இரவு 10 மணியளவில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் திடீரென நெஞ்சுவலிக்கு உள்ளானார். அண்மையில் உள்ள வைத்திய நிலையத்திற்குக் கொண்டுசென்றனர். அங்கு நிலைமை மோசமாகவே றாகம வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறு வலியுறுத்தினர். வைத்தியரின் ஆலோசனைப்படி றாகம வைத்தியசாலைக்குச் செல்லும் வழியிலேயே காலன் அவர் உயிரைக் கவர்ந்து கொண்டான்.
ஒருவேளையேனும் ஓய்ந்து கிடக்காமல், நோய் என்று எதுவுமில்லாமல் இறுதிவரை வாழ்ந்த திரு.வாமதேவன் கணநேரத்தில் கண்மூடி விட்டமையை நினைக்கும்போது நெஞ்சம் வேகின்றது. நோயென்று நொந்து மனம் வாடாமல், படுக்கையில் கிடந்து துயருறாமல் புகழுடம்பு வியாபகமுறப் பூதவுடம்பை நீக்கிக் கொண்டார்.
பெறலரும் பேறாகக் கிடைத்த வாமதேவன் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். நம்பவே முடியவில்லை!
‘நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு". நேற்றிருந்தார் இன்றில்லை என்னும் பெருமையுடையது இவ்வுலகு என்னும் வள்ளுவர் வாக்கு நிதர்சனமாகிவிட்டது. ‘இன்னொருகால் காணமுடியாது இப்படியாயிற்றே" என்று எல்லோரும் இரங்கினர். கண்கண்ட கடவுளெனக் கணவரைப் போற்றிக் காத்த மனைவியும், பிள்ளைகளும். உற்றாரும் உகுத்த கண்ணிர் ஆறாகப் பெருகியது. நல்லவர் ஒருவரை இழந்துவிட்டோம் என நண்பர்கள் பலர் கண்ணிர் வடித்தனர். வாமதேவன் வான் உறையும் தெய்வமாகிவிட்டார். அவரது ஆன்மா சாந்தி பெறப் பிரார்த்திப்போமாக!
ஓம் சாந்தி சாந்தி!! சாந்தி!!!
- பூங்குன்றன் -

Page 11
மரணம் என்பதே முடிவுரை
சீரிய நெற்றி எங்கே?
சிவந்த நல் இதழ்கள் எங்கே? கூரிய விழிகள் எங்கே?
குறுநகை போன தெங்கே? நேரிய பார்வை எங்கே?
நிமிர்ந்த நன் நடைதா னெங்கே? நிலமெல்லாம் வணங்கும் தோற்றம் நெருப்பினில் வீழ்ந்த திங்கே.
-() () () () ()
ஐயையோ! காலமே! ஆண்டவனே எங்கள் துயர் ஆறாதே ஆறாதே அழுதாலும் தீராதே கைகொடுத்த நாயகனைக் கைப்புறத்தே மறைத்தாயே கண்கொடுத்த காவலனைக் கண்மூட வைத்தாயே.
-> <> <> <) ()
சிறந்தவர்கள் மரணத்தால் மறைந்த போதும் செத்தாரோ டவர்களைநாம் சேர்ப்பதில்லை மறைந்தாலும் அவர்களைநாம் மறப்பதில்லை மரணத்தை வென்றவர்கள் என்பதாலே.
+ + + + +
பிறந்தோம் என்பதே முகவுரையாம் பேசினோம் என்பதே தாய் மொழியாம் மறைந்தோம் என்பதே நித்திரையாம் மரணம் என்பதே முடிவுரையாம்.
- - - - -->
பொய்யுடலைக் கொண்டு புகழுடலைக் கண்டஞ்சி வையகம் விட்டோடும் மறலியே - ஐயமறக் கற்றுத் தெளிந்த கவிவாணர் சொல்வீர வெற்றி உனக்குண்டோ? விளம்பு
-> <> < 10 ->

Ļ91;f(9ự
IUg?@1] © IIbC91|gsg)ąÍg 1831] [109]+?* æ十十 19910091ț¢919,9ơiĻ983/194íg)lự99ÉRoggig) 之†† \/ II e II/1998 UJ1g) (§ 9ÍLIO 9q3 Ļ99Ếg)Ļ9 gığrı Ųf(9q1910093),Ð Ļ99Ếg)upo qo Ugi (mouto's) įs&nrıçayırıg) (HSN) 19110f09ņ9 etc)UITGQ199Đg) III ng)
|Usos:91] [1909 GG)| —— Usogg) Josiqif@ 十 qī£IĘ199q3LQÍ
|1991(99Ğg)ơılır(9| —1– UspostīsfiguqÍ
十 11909ų9ÇILIĞftsgyro

Page 12
எங்கள் குடும்பத் தலைவரின் பிரிவுச் செய்தி கேட்டதும் எமதில்லம் வந்து ஆறுதல் அளித்த அன்பினர்க்கும், அன்னாரின் பூதவுடலைத் தரிசித்து அஞ்சலி செலுத்தி யோர்க்கும், மலர் வளையம் வைத்தும் மலர் மாலை சூட்டியும், மலர்கள் தூவியும் அன்பினை வெளிப்படுத்திய அன்பர்களுக்கும், வானொலி, தொலைபேசி, தொலைக்காட்சி முதலாம் ஊடகங்கள் மூலம் பிரிவுச்செய்தியையும் அனுதாபச் செய்திகளையும் வெளிப்படுத்தியோருக்கும் இரங்கற் செய்தி அனுப்பிய உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும், அந்தியேட்டி, வீட்டுக்கிருத்திய நிகழ்வுகளில் பங்கு கொண்டோருக்கும் மற்றும் பலவழிகளில் உதவிகள் புரிந்த அனைவருக்கும் எங்கள் உளமார்ந்த நன்றி உரித்தாகுக.
320, ஹெந்தல வீதி, - குடும்பத்தினர் - வத்தளை.
09.11.2003. J -ܓܠܠ
(பின்னிணைப்பு: பிள்ளையார்கதை, விநாயகர் அகவல்)

=_vg
绥※Kবস্ত্ৰS
షెడAARNసనో
விநாயகர் ததி
ஓம் கஜானனம் பூதகணாதி ஸேவிதம் கபித்த ஜம்பு பலஸார பசவிதம் உமா கதம் சோகவிநாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலு மெயிற்றனை நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.
மண்ணுல கத்தினிற் பிறவி மாசற எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக் கண்ணுத லுடையதோர் களிற்று மாமுகப் பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவாம்.
வானுலகும் மண்ணுலகும் வாழ மறைவாழப் பான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க ஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வா யானைமுக னைப்பரவி அஞ்சலி செய்கிற்பாம்.

Page 13
垒_
பிள்ளையார் கதை - ஒரு நோக்கு
"வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்” என்பது ஆன்றோர் வாக்கு
விநாயகனே வெவ்வினையை வேரறுத்து நம்மை வாழவைப்பவன். அவனே எக்கருமங்களும் முட்டின்றி நிறைவேறுவதற்கு முன்னின்று உதவுபவன். ஓங்கார வழவினனான அவனை நாளும் தொழுதிடல் நம் கடனாகும்.
விநாயக வழிபாடு தொனிறுதொட்டு நம் மக்களிடையே நிலைபெற் றுள்ளது. வேண்டுவார் வேண்டுவதை ஈந்தருளும் விநாயகனின் அவதாரம் குறித்துப் பல்வேறு கதைகள் உள. அவற்றைப் பிள்ளையார் கதை விளக்கமாக எடுத்துக் கூறுகிறது. பிள்ளையார் விரதங்கள் பல உள்ளபோதிலும் அவற்றில் இரண்டு விரதங்கள் பிரசித்தி பெற்றனவாகும். ஒன்று கஜமுக சங்காரம் செய்த பிள்ளையார் திருச்செங்காட்டம் குழயில் தங்கியிருந்தபோது தேவர்களால் அனுட்டிக்கப்பட்டதும் கிருஷ்ண பகவானின் அறிவுரைப்படி பஞ்சபாண்டவர்களால் அனுட்டிக்கப்பட்டது மான ஆவணிச் சதுர்த்தி விரதம்.
மற்றையது தேவர்கள் ஒன்றுகூழ அனுசரித்ததும் தேவகன்னியர் எழுவர் பூமிக்கு வந்து அனுட்டித்துக் காட்டியதும் நாரத முனிவரால் வச்சிரமாலிக்கும் விக்கிரமாதித்தனுக்கும் உணர்த்தப்பட்டதும் ஒளவையா ரால் இலக்கணசுந்தரியைக்கொண்டு அனுட்டிக்கப்பட்டதுமானமார்கழிச் σ6ήρ 6ύJΦιό.
இந்த இரு விரதங்களும் விநாயகர் அழயவர்களினால் ஆண்டுதோறும் அனுட்டிக்கப்பட்டு வருகின்றன. இவ்விரதங்களினர் சிறப்பினை பிள்ளையார் கதையில் நாம் காணலாம். குறிப்பாக மார்கழிச் சஷ்டி விரதமானது கார்த்திகைக் கார்த்திகைக்கும் மார்கழிச் சப்தமிக்கும் இடைப்பட்ட இருபத்தொரு நாட்களும் அனுட்டிக்கப்படுகிறது.

இதனையே
“கார்த்திகைக் கார்த்திகை கழிந்த பின்னாளில் ஆர்த்த கலிங்கத்து அணியிழை வாங்கி இருபத் தோர்இழை இன்புறக் கட்டி ஒருபோது உண்டி உண்டு ஒரு மனமாய் .
sy
அனுட்டித்தனர் என இந்நூலில் கூறப்படுகிறது.
எண்ணிலாத மக்கள் இருபத்தொருநாளும் இந்நூலைப் பாராயணம் செய்கிறார்கள்; கோயில்களில் பழக்கிறார்கள்.
பிள்ளையார் கதை பிள்ளையார் பெருங்கதை எனவும் அழைக்கப் படுகிறது. விநாயக சஷ்டி விரதத்தை இன்றும் கூட மக்கள் பிள்ளையார் பெருங்கதை என்றே அழைக்கிறார்கள்.
“வெள்ளை எருதேறும் விரிசடையோன் பெற்றெடுத்த பிள்ளையார் நோன்பின் பெருங்கதையை - உள்ளUழ நோற்றோர் மிக வாழ்வார் நோலா தருகிருந்து கேட்டோர்க்கும் வாராது கேடு”
இந்நூலைக் கற்பதன் பயனைக்கூறும் இவ்வெண்பாவும் பிள்ளையார் நோன்பினைப் பெருங்கதை நோற்பதாகவே கூறியுள்ளமை நோக்கத் தக்கது. பிள்ளையார் பெருங்கதையினைச்
“செந்தமிழ் முனிவன் செப்பிய கதையும் கந்த புராணக் கதையில் உள்ளதுவும் இலிங்க புராணத் திருந்தநற் கதையும் உபதேச காண்டத்துரைத்தனற் கதையும் தேர்ந்தெடுத் தொன்றாய்த் திரட்ழ.”
ஆக்கியதாக நூலின் சிறப்புப்பாயிரம் கூறுகிறது.
எழுநூற்று நாற்பத்தைந்து அழகளைக்கொண்ட ஆசிரியப்பாவால் அமைந்த சிறிய நூல் இதுவெனினும் இதன் சிறப்புணர்ந்து இந்துக்கள் அனைவரும் இதனைப் பாராயணம் செய்கின்றனர்.
நூலாசிரியர்:
இந்நூலை ஆக்கியவர் சுன்னாகத்தைச் சேர்ந்த வரதபண்டிதர் என்பவராவார். இவரை வரதராச பண்டிதர் எனவும் கூறுவர். இவரது தந்தையார் அரங்கநாதர் என்னும் அந்தணராவார். இவர் பிள்ளையார்

Page 14
கதையை மட்டுமன்றிப் பிள்ளையார் புராணம், சிவராத்திரி புராணம், ஏகாதசிப் புராணம் என்னும் புராண நூல்களையும் குருநாதசுவாமி கிள்ளைவிடுதூது (தூது நூல்), அமுதாகரம் (வைத்தியநூல்) என்னும் நூல்களையும் ஆக்கியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற புலவர்களான சின்னத்தம்பிப் புலவர், மயில்வாகனப் புலவர் ஆகியோர் வரத பண்டிதரைப் பெரிதும் பாராட்டியுள்ளமை அவரது புலமைத் திறனுக்கு ஏற்ற சான்றுகளாகும். பண்டிதன், முத்தமிழ் வல்லோன் என்றும் மிகு மதுர ஆசுகவிராசன் என்றும் பாராட்டுப் பெற்ற இப்பண்டிதன் ஆக்கிய பிள்ளையார் கதையை அனைவரும் பாராயணம் செய்து ஐங்கரன் அருள் பெறுவார்களாக,
- கவிஞர் த. துரைசிங்கம்.
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொற் பெருவாக்கும் பீடும்பெருக்கும் உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக் காதலால் கூப்புவர்தம் கை
- கபிலதேவ நாயனார்
“வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழத் தள்ளியோடும் தொடர்ந்து வினைகளே’
“அப்பம் முப்பழம் அமுதுசெய் தருளிய தொப்பை யப்பனைத் தொழுவினை யறுமே”

விநாயகள் அவதாரம்
ஒருகாலத்தில் அசுரர்கள் தேவர்களிடம் தோல்வியடைந்து, தம் குலக்குருவான சுக்கிராச்சாரியாரிடம் சென்று முறையிட்டனர்.அவர் அவர்களுக்கு ஆறுதல் கூறி, ‘உங்கள் குலத்தில் உள்ள பெண் ஒருத்தியை ‘மாகதரிஷி' என்பவரிடம் சேருமாறு செய்தால் ஒரு மகன் உண்டாவான். அவன் தேவர்களை வெல்வான்’ என்று கூறினார்.
அவ்விதம் அசுர மன்னன் விபுதை’ என்னும் பெயருடைய ஒரு பெண்ணை அம்முனிவரிடம் அனுப்ப, இருவரும் மணந்துகொள்ள, அதனின்றும் யானை முகத்துடன் ஓர் அசுரன் பிறந்தான். யானை முகத்துடன் அவன் இருந்ததால் ‘கஜமுகாசூரன்’ என்னும் பெயர் பெற்றான். அவன் சுக்கிராச்சாரியாரின் அறிவுரைப்படி பரமசிவனைக் குறித்துத் தவம் இருந்து, யாராலும், எந்த ஆயுதத்தாலும் கொல்லப்படா திருக்க வரம் பெற்று, தேவர்களை வென்று, அவர்களைத் தனக்கு ஊழியம் செய்யவும் தினம் தனக்கு எதிரில் வந்து நின்று மூன்று குட்டுகள் தலையில் போட்டுக்கொள்ள வேண்டுமென்றும் கட்டளை இட்டான்.
அவன் கொடுமைகளைத் தாங்காது இந்திரன் முதலிய எல்லாத் தேவர்களும் சிவபிரானிடம் முறையிட, அவர் ‘எமக்கு ஒரு பிள்ளை பிறந்து அவனை அடக்குவான்’ என்று கூறி அபயம் அளித்தார்.
சிலகாலத்திற்குப் பின் பார்வதியும் பரமசிவனும் நந்தவனத்திற்குச் சென்றனர். அங்குள்ள ஒரு சித்திர மண்டபத்தில் ஒரு பிரணவ வடிவில் ஓர் ஓவியம் இருந்தது. பார்வதி அப்படத்தைப் பார்க்க, அதிலிருந்து ஒரு பெண் யானையும் ஆண் யானையும் தோன்றி அவை மணந்து கலந்து பிரணவத்தில் அடங்கின.
உடனே தந்தங்கள், துதிக்கையுடன் பருத்த வயிறும் குறுகிய தாள்களுடன் பிள்ளையார் அவதரித்தார். அவர் பராசக்தியையும் பரமசிவத்தையும் வணங்கி நிற்க, அவர்கள் அவரைக் கையிலெடுத்துத் தழுவி முத்தமிட்டு யாவராயினும் முதலில் உன்னை நினைந்து எந்தக் காரியம் செய்யத் தொடங்கினாலும் அதை விக்கினமின்றி முடித்து வைத்தும், அவ்விதம் நினையாதவர் முயற்சியை விக்கினம் செய்தும் பிரமா, விஷ்ணு முதலியோரால் போற்றப்படும் நாயகராய் இருப்பாய்’ என வாழ்த்தினர். அத்துடன் கஜமுகாசூரனை அழித்து, தேவர்களின் துயரத்தை நீக்குவாய்' எனவும் கட்டளையிட்டனர்.

Page 15
கணேசர் அவதரித்த செய்தி அறிந்த தேவர்கள் அனைவரும் வந்து வணங்கி, தங்கள் துன்பத்தை நீக்க வேண்டும் என்று வேண்டினர். விநாயகரும் படையுடன் புறப்பட்டு வந்து கஜமுகனுடைய மதங்கபுரம் வந்ததும் அசுரன் வந்து எதிர்த்தான். பல படைக்கலங்களை ஏவியும் அவன் வர பலத்தால் அழியாமல் இருப்பதை அறிந்த பிள்ளையார், தம் தந்தங்களில் ஒன்றை ஒடித்து எறிந்தார். அது அசுரனை இரண்டாய்ப் பிளந்தது. பிறகு அவன் பெருச்சாளியாய் வந்து எதிர்த்தான். அதை அவர் அடக்கி வாகனமாகக் கொண்டார்.
தேவர்கள் அனைவரும் மகிழ்ந்து இதுவரை அசுரனுக்கு முன்னால் மூன்று குட்டுக்கள் தலையில் போட்டு வந்ததை, அன்று முதல் விநாயகருக்கு முன்னால் போட்டனர்.
விநாயகர் அவதாரம் பற்றிய ஆதாரபூர்வமான பாடல் இதோ:
பிடியதன் உருஉமை கொள, மிகுகரியது வடிகொடு, தனதடி வழிபடும் அவரிடர் கடி, கணபதி வர அருளினன் மிகு கொடை, வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே
- திருஞானசம்பந்தர் தேவாரம்
(பிடி - பெண்யானை, கரி - ஆண்யானை; இடர்கடி - துன்பத்தை நீக்கும்; வலிவலம் - திருவலிவலம் என்னும் திருத்தலம்; இறை சிவபிரான்.)

விநாயகர் விரதங்கள்
‘கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்ற பழமொழிக்கேற்ப விநாயகர் கோவில்கள் இல்லாத கிராமங்கள் ஒன்று கூட இல்லை என்பது நமக்குத் தெரியும். ஆலமரத்தடியிலும், அரசமரத்தடியிலும், ஆற்றங்கரைகளிலும் தெரு முனைகளிலும் விநாயகருக்குக் கோவில்கள் இருக்கின்றன.
விநாயகரை முழு முதற் கடவுளாக ஏற்றுக் கொணி டு வணங்குகின்றோம். விநாயகரின் சன்னிதியில் தலையில் குட்டிக் கொண்டும் , தோப்புக் கரணம் போட்டும் வணங்குகின்றோம். அதைப்போலவே விநாயகருக்கான விரதங்கள் என்ன என்பதையும் அவைகளை எப்படி அனுஷ்டிக்க வேண்டும் என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
விநாயகர் விரதங்களில் கீழ்க் கண்ட ஆறு விரதங்கள் முக்கியமானவையாகும். அவை:
சதுர்த்தி விரதம்.
குமார சஷ்டி விரதம்.
சித்திவிநாயக விரதம்.
செவ்வாய்க்கிழமை விரதம்.
வெள்ளிக்கிழமை விரதம்.
. சங்கடஹர சதுர்த்தி விரதம்.
சதுர்த்தி விரதம்
ஆவணி மாதம் சதுர்த்தியில் தொடங்கி, புரட்டாதி மாதம் சுக்கிலபட்ச
சதுர்த்தி வரை அனுஷ்டிக்கப்படும் விரதம் ஆகும். இவ்விரதத்தை
அனுஷ்டித்து முருகன், உமாதேவி, நளன், சந்திராங்கதன், மன்மதன், ஆதிசேஷன் ஆகியோர் நன்மை அடைந்தனர்.
குமார சஷ்டி விரதம்
குமார சஷ்டி விரதத்தை பிள்ளையார் நோன்பு என்றும் கூறுவார்கள். கார்த்திகை மாதம் கிருஷ்ண பட்சப் பிரதமை முதல் மார்கழி மாதம் சுக்கில பட்ச சஷ்டி திதி வரை 21 நாட்கள் அனுஷ்டிக்கப்படும் விரதம் ஆகும். விரதம் இருப்பவர் 21 இழையினால் ஆன நூலைக் காப்பாக
viii

Page 16
அணிவார்கள். ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் அணிந்து கொள்ள வேண்டும். 21 நாட்களிலும் ஒரு நாளைக்கு ஒன்று வீதம் 21 வித பலகாரங்கள் செய்து விநாயகருக்குப் படைத்து பூஜை செய்ய வேண்டும்.
ழரீ ராமநவமிக்கு இராமாயணம் பாராயணம் செய்வதைப்போல, இவ்விரதத்தின் ஒவ்வொரு நாளும் விநாயகர் அகவல், விநாயகர் புராணம் கேட்க வேண்டும். ஒவ்வொரு நாளும் 21 வித இலைகளால் விநாயகரை அர்ச்சனை செய்ய வேண்டும்.
சித்தி விநாயக விரதம்
புரட்டாதி மாதம் சதுர்த்தியில் அனுஷ்டிக்கப்படும் விரதத்திற்கு சித்தி விநாயக விரதம் என்று கூறப்படுகின்றது. இந்த விரதத்தைப் பற்றி பிரகஸ்பதி என்ற முனிவர் கூறியுள்ளார். பஞ்ச பாண்டவர்களின் மூத்தவரான தரும புத்திரரால் அனுஷ்டிக்கப்பட்ட விரதம் ஆகும். இங்கு சுக்கில பட்ச சதுர்த்தியில் சந்திர தரிசனம் செய்யக் கூடாது. இந்த விரதத்தின் போது விநாயகர் அகவல், விநாயகர் அஷ்டோத்திரம் படிக்க வேண்டும். முடியாதவர்கள் “ஓம் கம் கணபதி நம என்ற விநாயகரின் மந்திரத்தையோ அல்லது 'ஓம் விக்னேஷ்வராய நம' என்னும் விநாயகரின் மந்திரத்தையோ 18 அல்லது 108 முறை சொல்லி வழிபட வேண்டும்.
செவ்வாய்க்கிழமை விரதம்
இநீ த விரதம் தை மாதமி அலி லது ஆடி மாதமி செவ்வாய்க்கிழமைகளில் தொடங்கி ஒரு வருடம் வரை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அனுஷ்டிக்கப்படும் விரதமாகும்.
பரத்துவாச முனிவர் விநாயகப் பெருமானின் பரம பக்தர். அவர் நர்மதை நதியில் நீராடும் பொழுது தேவ மங்கை ஒருத்தியின்பால் காதல் கொண்டார். அதன் காரணமாகச் செந்தணல் போன்ற ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையைப் பூமாதேவி எடுத்து வளர்த்ததால் ‘பூமி குமாரன்’ என்றழைக்கப்பட்டான். குழந்தை செந்நிறமாக இருப்பதால் ‘அங்காரகன்’ என்று பெயர் வந்தது.
பரத்துவாச முனிவரைப் போலவே மகன் அங்காரகனும் விநாயகர் மீது பக்தி கொண்டான். விநாயகரிடம் வேண்டிக்கொண்டு தேவர்களுடன் சேர்ந்து உணவு உண்ணக் கூடிய தகுதியும், கோள்களில் ஒருவனாகத் திகழும் பேறும் அருளுமாறு இரண்டு வரங்கள் பெற்றான். அத்துடன
ix

செவ்வாய்க்கிழமை, தன்னுடைய நாளில் வரும் சதுர்த்தி திதியில் விநாயகரை வழிபடுவோரின் பிணிகளைத் தீர்க்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டான். அதன் காரணமாகத்தான் செவ்வாய்க்கிழமை விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை விரதம்
வெள்ளிக்கிழமை விரதத்தை வைகாசி மாதம் சுக்கில பட்சம் முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் ஓர் ஆண்டு வரை அனுஷ்டிக்கவேண்டும்.
சங்கடஹர சதுர்த்தி விரதம்
ஒவ்வொரு மாதமும் தேய்பிறையில் வரும் கிருஷ்ண பட்ச சதுர்த்தி அன்று இருக்கும் விரதத்தைத்தான் சங்கடஹர சதுர்த்தி விரதம் என்றும் சங்கஷட ஹரண சதுர்த்தி விரதம் என்றும் கூறுகின்றார்கள். சங்கடம் என்றால் துன்பம் என்றும், ஹர என்றால் ஒழிப்பது என்றும், சங்கடஹர என்றால் சங்கடங்களில் இருந்து விடுதலை அல்லது துன்பங்களிலிருந்து விடுதலை என்பதாகும்.
சிவபெருமான் விநாயகரைக் கணங்களுக்குத் தலைவராக்கினார். அதனால்தான் கணநாதன் என்றழைக்கப்பட்டார். நான்முகன் அஷ்ட சித்திகளையும் விநாயகரிடம் ஒப்படைத்து, சித்திவிநாயகர் என்ற சிறப்புப் பெயரும் சூட்டினார். இதன் காரணமாக விநாயகப் பெருமான் நவக்கிரகங்களில் பார்வையிட்டு, சந்திரனைப் பார்வையிடச் சென்றார். கிரகங்களில் சந்திரன் அழகானவன்; அழகோடு கவர்ச்சியும் இருந்ததால் சந்திரனுக்கு ஆணவம் ஏற்பட்டது.
ஆணவத்தால் யாரும் அறிவிழப்பர்; கண்ணிழப்பர். ஆணவத்தை வேரோடு ஒழிக்க வேண்டும் என்பதை அறியாதவன் சந்திரன். எனவே விநாயகப் பெருமானின் வேழமுகத்தையும், பானை வயிற்றையும் கண்டு, சந்திரன் பரிகாசமாக வாய்விட்டுச் சிரித்தான். இதனால் விநாயகருக்குக் கோபம் வந்து, சந்திரனின் அழகை யாரும் காணமுடியாதபடி சபித்து விட்டார். ‘என் சாபத்தை மீறி உன்னை யார் பார்த்தாலும் பழிபாவங்களுக்கு ஆளாவார்கள்’ என்று கூறினார்.
‘நல்லவன் தீயவன் ஆவான்; தர்மவான் பாவியாவான்; பத்தினிப் பெண்கள் வேசி ஆகிவிடுவார்கள். உன்னைக் காண்பவர்கள் தூற்றப்படுவார்கள்’ என்று விநாயகர் சாபம் இட்டார்.

Page 17
நான்முகன் கூறியபடி, பிரகஸ்பதி முனிவர் சந்திரனிடம் சென்று, சங்கடஹர சதுர்த்தி விரதம் இருக்க வேண்டிய காலத்தையும் விவரத்தையும் கூறினார். அதன் படி தேயப் பிறைக் காலத்தில், கிருஷ்ணபட்சம் நான்காவது நாள் சதுர்த்தி திதியில் வழிபட்டு தனது சாபத்தைப் போக்கிக் கொண்டான்.
சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பதனால் ஏற்படும் பலன்கள்:
மனச்சுமை நீங்கும். எல்லா தோஷங்களும் நீங்கும்.
1. நினைத்த காரியம் கூடும். 2. வீண்பழி அகலும். 3. பகைவர்களும் நண்பர்கள் ஆவார்கள். 4. தீவினை அகலும்.
5.
6.
பஞ்சவர் தூதுவனாக வந்த அஞ்சனவண்ணன், யசோதையின் சிங்கம் கண்ணன் ஸ்யமந்தகமணியை எடுத்துக்கொண்டான் என்ற வீண்பழிக்கு ஆளானான். அப்போது நாரத முனிவரின் ஆலோசனைப்படி கண்ணன் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து தனது பழியைப் போக்கிக் கொண்டான்.
சங்கடஹர சதுர்த்தி அன்று எந்தக் காரணத்தைக் கொண்டும் சந்திரனைப் பார்க்கக்கூடாது என்பதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். இதன் காரணமாகத்தான் சங்கடஹர சதுர்த்தி அன்று சந்திரன் வெகுநேரம் கழித்துதான் வானத்தில் தோன்றுகிறான் என்பதையும் நாம் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். மேல் இருந்தும் மேல் அல்லார் மேல் அல்லர் கீழ் இருந்தும் கீழ் அல்லார் கீழ் அல்லர் - என்ற வள்ளுவரின் வாய்மொழிப்படி எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் கீழே இருப்பவர்களைப் பார்த்து இகழக்கூடாது என்பதுதான் இந்தச் சங்கடஹர சதுர்த்தியின் தத்துவமாகும்.
xi

வரத பண்டிதர் இயற்றிய பிள்ளையார் கதை
காப்பு
கரும்பும் இளநீருங்காரெள்ளுந்தேனும் விரும்பும் அவல்பலமும் மேன்மேல் - அருந்திக் குணமுடைய னாய்வந்து குற்றங்கள் தீர்க்குங் கணபதியே இக்கதைக்குக் காப்பு.
திருவிளங்கு மான்மருகா சேவதனில் ஏறி வரும்அரன்றாள் ஈன்றருளு மைந்தா - முருகனுக்கு முன்பிறந்த யானை முகவா உனைத்தொழுவேன் என்கதைக்கு நீயென்றுங் காப்பு.
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு துப்பார் திருமேனித்தும்பிக்கையான் பாதம் தப்பாமற் சார்வார் தமக்கு.
விநாயகர் துதி திருவாக்குஞ் செய்கருமங் கைகூட்டுஞ் செஞ்சொற் பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக் காதலாற் கூப்புவர்தம் கை.
ஒற்றை மருப்பும் ஓரிரண்டு கைத்தலமும் வெற்றி புனைந்த விழிமூன்றும் - பெற்றதொரு தண்டைக்கால் வாரணத்தைத் தன்மனதில் எப்பொழுதுங் கொண்டக்கால் வாராது கூற்று.
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீஎனக்குச் சங்கத் தமிழ்மூன்றுந்தா.
01

Page 18
சப்பாணி
எள்ளுப் பொரிதேன் அவல் அப்பமிக்கும் பயறும் இளநீரும் வள்ளிக் கிழங்கும் மாம்பழமும், வாழைப்பழமும், பலாப்பழமும், வெள்ளைப்பாலும், மோதகமும் விரும்பிப் படைத்தேன் சந்நிதியில்
கொள்ளைக் கருணைக் கணபதியேகொட்டி அருள்கசப்பாணி.
சண்டப் பெருச்சாளி ஏறிச் சடைகொண்டு வையத் துலாவி, அண்டத்தமரர் துதிக்க அடியார்க்கு அருளும் பிரானே, எண்திக்கும் அன்பர்கள் பார்க்க இணையற்ற பேரொளி வீசக்,
குண்டைக் கணபதி நம்பிகொடுங்கையாற் சப்பாணி கொட்டே.
சரஸ்வதி துதி
புத்தகத்து உள்ளுறை மாதே பூவில் அமர்ந்திடு வாழ்வே வித்தகப் பெண்பிள்ளை நங்காய் வேதப் பொருளுக்கு இறைவீ முத்தின் குடைஉடை யாளே மூவுலகுந்தொழுது ஏத்துஞ் செப்புக் கவித்த முலையாய் செவ்வரி ஓடிய கண்ணாய் தக்கோலந்தின்னும் வாயாய் சரஸ்வதி என்னுந் திருவே எக்காலமும் உன்னைத் தொழுவேன் இயல்இசை நாடகம் என்னும் முத்தமிழ்க் கல்விகள் எல்லாம் முழுதும் எனக்கருள் செய்துஎன் சித்தந்தனில்நீ இருந்து திருவருள் செய்திடு வாயே.
அதிகாரம்
பொன்னிறங் கடுக்கும் புனற்சொறி குடுமித் தென்மலை இருந்த சீர்சால் முனிவன் கந்த மும்மதக் கரிமுகன் கதைத்னைச் செந்தமிழ் வகையாற் தெளிவுறச் செப்பினன் அன்னதிற் பிறவில் அரிறபத் திரட்டித் தொன்னெறி விளங்கச் சொல்லுவன் கதையே.
O2

கதை
மந்திர கிரியில் வடபால் ஆங்கோர் இந்துதவழ்சோலை இராசமா நகரில் அந்தணன் ஒருவனும் ஆயிழை ஒருத்தியுஞ் சுந்தரப் புதல்வரைப் பெறுதல் வேண்டிக் கடவுள் ஆலயமுங் கடிமலர்ப் பொய்கையும் தடநிழற் பள்ளியுந் தாம்பல சமைத்துப் புதல்வரைத் தருகெனப் பொருப்பரசு ஈன்ற
மதர்விழி பாகனை வழிபடு நாளின்
மற்றவர் புரியு மாதவங் கண்டு 'சிற்றிடை உமையாள் சிவனடி வணங்கிப் O
பரனே சிவனே பல்லுயிர்க்கு உயிரே அரனே மறையவர்க்கு அருள்புரிந்து அருளென அந்தஅந்தணனுக்கு இந்தநற் பிறப்பில் மைந்தரில் லைஎன்று மறுத்துஅரன் உரைப்ப எப்பரி சாயினும் எம்பொருட்டு ஒருசுதன் தப்பிலா மறையோன் தனக்குஅருள் செய்கென எமையாளுடைய உமையாள் மொழிய இமையா முக்கண் இறைவன் வெகுண்டு பெண்சொற் கேட்டல் பேதமை என்று பண்சொற் பயிலும் பாவையை நோக்கிப் 2O
பேதாய் நீபோய்ப் பிறவென மொழிய மாதுமை அவளும் மனந்தளர்வு உற்றுப் பொன்றிடும் மானிடப் புன்பிறப்பு எய்துதல் நன்றல என்றே நடுக்கமுற்று உரைப்பக் கறைமிடற்று அண்ணல் கருணை கூர்ந்து பிறைநுதல் அவட்குநீ பிள்ளையாகச் சென்றவண் வளர்ந்து சிலபகல் கழித்தால் மன்றல்செய்து அருள்வோம் வருந்தலை என்று விடைகொடுத்து அருள விலங்கன்மா மகளும் பெடைமயிற் சாயற் பெண்மகவாகித் 3O
03

Page 19
தார்மலி மார்பன் சதுர்மறைக் கிழவன் சீர்மலி மனைவி திருவயிற்று உதித்துப் பாவையுஞ் சிற்றிலும் பந்தொடு கழங்கும் யாவையும் பயின்ற இயல்பினள் ஆகி ஐயாண்டு அடைந்தபின் அன்னையும் அத்தனும் மையார் கருங்குழல் வாணுதல் தன்னை மானுட மறையோர்க்குவதுவை செய்திடக் கானமர் குழலியைக் கருதிக் கேட்பப் பிறப்புஇறப்பு இல்லாப் பெரியோற்கு அன்றி அறத்தகு வதுவைக்கு அமையேன் யான்என 40
மற்றவன் தன்னைஉன் மணமகனாகப் பெற்றிடல் அரிதெனப் பெயர்த்தவர் பேச அருந்தவ முயற்சியால் அணுகுவேன் யான்எனக் கருந்தட நெடுங்கண் கவுரியங்கு உரைப்ப மருமலி கமல மலர்த்தடத்து அருகிற் தருமலி நிழல்தவச் சாலையது அமைத்துப் பணியணி பற்பல பாங்கியர் சூழ அணிமலர்க் குழல்உமை அருந்தவம் புரிதலும் அரிவை தன் அருந்தவம் அறிவோம் யான்என இருவரும் அறியா இமையவர் பெருமான் 5O
மானிடம் ஏந்தும் வண்ணமது ஒழிந்து மானிட யோக மறையவன் ஆகிக் குடையொடு தண்டுநற் குண்டிகை கொண்டு மடமயில் தவம்புரி வாவிக் கரையிற் கண்ணுதல் வந்து கருணை காட்டித் தண்நறுங் கூந்தல் தையலை நோக்கி மின்பெறு நுண்ணிடை மெல்லிய லாய்நீ என்பெறத் தவம்இங்கு இயற்றுவது என்றலுங் கொன்றைவார் சடையனைக் கூடஎன்று உரைத்தலும் நன்றுஎனச் சிரித்து நான்மறை யோனும் 6O
04

மாட்டினில் ஏறி மான்மழுத்தரித்துக் காட்டினிற் சுடலையிற் கணத்துடன் ஆடிப் பாம்பும் எலும்பும் பல்தலை மாலையுஞ் சாம்பரும் அணிந்து தலையோடு ஏந்திப் பிச்சைகொண்டு உழலும் பித்தன் தன்னை நச்சிநீர் செய்தவம் நகைதரு நுமக்கெனப் பூங்கொடி அருந்தவம் பூசுரன் குலைத்தலும் ஆங்கவள் நாணமுற்று அணிமனைப் புகுதச் சேடியர் வந்து செழுமலர்க் குழலியை வாடுதல் ஒழிகென மனமிகத் தேற்றிச் 7Ο
சிந்துர வாள்நுதற் சேடியர் சிலர்போய்த் தந்தைதாய் இருவர் தாளினை வணங்கி வாவிக் கரையில் வந்தொரு மறையோன் பாவைதன் செங்கையைப் பற்றினன் என்றலுந் தோடலர் கமலத் தொடைமறை முனியை ஆடக மாடத் தனிமனை கொணர்களன மாடக யாழ்முரல் மங்கையர் ஒடி
நீடிய புகழாய் நீஎழுந்து அருள்ளன மைமலர்க் குழலி வந்துஎனை அழைக்கில் அம்மனைப் புகுவன்என்று அந்தணன் உரைத்தலும் 8O
பொற்றொடி நீபோய்ப் பொய்கையில் நின்ற நற்றவ முனியை நடாத்திக் கொணர்கென சிவனை இகழ்ந்த சிற்றறிவு உடையோன் அவனையான் சென்றிங்கு அழைத்திடேன் என்று சிற்றிடைமடந்தையுஞ் சீறின ளாகி மற்றைய மாதர் மதிமுகம் நோக்கி நெற்றியிற் கண்ணுடை நிமலனுக்கு அல்லவென் பொற்பமர் கொங்கை பொருந்துதற்கு அரிதால் மானிட வேட மறையவன் தனக்கு யான்வெளிப் படுவதில்லைஎன்று இசைப்ப 9 O
05

Page 20
மனையிடை வந்த மாமுனி தன்னை இணையடி தொழுதல் இளையோர்க்கு இயல்பென தந்தையுந்தாயுந்தகைபெற மொழியச் சிந்தை குளிர்ந்து சீறுதல் ஒழிந்து தாய்சொல் மறுத்தல் பாவம்என்று அஞ்சி ஆயிழை தானும் அவன்எதிர் சென்று
சுற்றிவந்து அவனடி சுந்தரி வணங்கி மற்றவன் தன்னை மனையிற் கொணர்ந்து ஆதியம் பகவற்கு அன்பன் ஆகும் m வேதியன் பழைய விருத்தன்என்று எண்ணி OO
ஆசனம் நல்கி அருக்கிய முதலாப் பாதழ் சனைகள் பண்ணிய பின்னர்ப் போனகம் படைத்துப் பொரிக்கறி பருப்புநெய் ஆன்பால் மாங்கனி அழகிய பலாச்சுளை தேன்கத லிப்பழஞ் சீர்பெறப் படைத்து அந்தணன் தன்னை அமுது செய்வித்துச் சந்தனங் குங்குமச் சாந்திவை கொடுத்துத் தக்கோ லத்தொடு சாதிக் காயும் கற்பூரத் தொடு கவின்பெறக் கொண்டு வெள்ளிலை அடைக்காய் விளங்கிய பொன்னின் 11 Ο
ஒள்ளிய தட்டில் உவந்துமுன் வைத்துச் சிவன்எனப் பாவனை செய்து நினைந்து தவமுறை முனிவன்னத்தாளினை வணங்கத் தேனமர் குழலி திருமுகம் நோக்கி மோனமாமுனிபுன் முறுவல் காட்டிக் கற்றைச் சடையுங் கரமொரு நான்கும் நெற்றியில் நயனமும் நீலகண்டமும் மானும் மழுவும் மலர்க்கரத்து இலங்கக் கூன்மதி நிலவுங் கொழித்திட முடிமேல் வரந்தரு முதல்வன் மடமயில் காணக் 12O
O6

கரந்ததன் உருவங்காட்டிமுன் நிற்ப
மரகத மேனி மலைமகள் தானும் விரைவொடுஅங் கவன்அடி வீழ்ந்துஇறைஞ் சினளே அரிஅயன் இந்திரன் அமரர் விஞ்சையர் கருடர்கின்னரர் காய வாசியர்
ஏதமில் முனிவர் அவுணர் இராக்கதர் பூதர் இயக்கர்கிம் புருடர் அலகை சித்தர் தாரகைக்கந் தருவர்கள் முதலாய்க் கணிக்கரும் பதினெண் கணத்தில்உள்ளவரும் மணிக்கருங் களத்தனை வந்தடைந்து அதன்பின் 3O
மன்றலங் குழலிக்குவதுவுைநாள் குறித்துத் தென்றல்வந்து இலங்கு முன்றில் அகத்துப் பொன்திகழ் பவளப் பொற்கால் நாட்டி மாணிக் கத்தால் வளைபல பரப்பி ஆணிப்பொற் தகட்டால் அழகுற வேய்ந்து நித்தில மாலை நிரைநிரை தூக்கிப் பத்திகள் தோறும் பலமணி பதித்துத் தோரணம் நாட்டித்துகில்விதா னித்துப் பூரணப் பொற்குடம் பொலிவுற வைத்துத் திக்குத் தோறுந் திருவிளக்கு ஏற்றிப் 14O
பக்திப் படர்முளைப் பாலிகை பரப்பிக் கன்னலுங் கமுகுங் கதலியும் நாட்டிப் பன்மலர் நாற்றிப் பந்தர்சோ டித்து நலமிகு கைவலோர் நஞ்சுஅணி மிடற்றனைக் குலவிய திருமணக் கோலம் புனைந்தார் வருசுரர் மகளிர் மலைமகள் தன்னைத் திருமணக் கோலஞ் செய்தனர் ஆங்கே எம்பிரானையும் இளங்கொடி தன்னையும் உம்பர் எல்லாம் ஒருங்குடன் கூடிக் கடல்என விளங்குங் காவணந் தன்னிற் 15O
O7

Page 21
சுடர்விடு பவளச் சுந்தரப் பலகையின் மறைபுகழ்ந்து ஏத்த மகிழ்ந்துஉடனிருத்திப் பறைஒலியோடு பனிவளை ஆர்ப்ப வதுவைக்கு ஏற்ற மறைவிதி நெறியே சதுர்முகன் ஒமச் சடங்குகள் இயற்றத் தறுகலன் ஒளிபொற் தாலி பூட்டிச் சிறுமதி நுதலியைச் சிவன்கைப் பிடித்தபின் அரிவ்லஞ் சூழ எரிவலம் வந்து
பரிவுடன் பரிமளப் பாயலில் வைகிப் போதணி கருங்குழற் பூவைதன்னுடனே 160
ஒதநீர் வேலைசூழ் உஞ்சைஅம் பதிபுக ஏரார் வழியின் எண்திசை தன்னைப்
பாரா தேவா பனிமொழி நீஎன வரும்கருங் குழலாள் மற்றும்உண்டோஎனத் திருந்திழை மடந்தை திரும்பினள் பார்க்கக் களிறும் பிடியும் கலந்துவிளையாடல்கண்டு ஒளிர்மணி பூணாள் உரவோன் உடனே இவ்வகையாய்விளையாடுவோம் ஈங்கென அவ்வகை அரனும் அதற்குஉடன் பட்டு மதகரி உரித்தோன் மதகரியாக 17Ο
மதர்விழி உமைபிடி வடிவம தாகிக் கூடிய கலவியிற் குவலயம் விளங்க நீடிய வானோர் நெறியுடன் வாழ அந்தணர் சிறக்க வானினம் பெருகச் செந்தழல் வேள்விவேத ஆகமஞ் சிறக்க அறம்பல பெருக மறம்பல சுருங்கத் திறம்பல அரசர் செகதலம் விளங்க வெங்கரி முகமும் வியன்புழைக் கையோடு ஐங்கர தலமும் மலர்ப்பதம் இரண்டும் பவளத்து ஒளிசேர் பைந்துவர் வாயுந் 18O
08

தவளக் கிம்புரித் தடமருப்பு இரண்டுங் கோடிசூரியற்போய் குலவிடு மேனியும் பேழைபோல் அகன்ற பெருங்குட வயிறும் நெற்றியில் நயனமும் முப்புரி நூலுங் கற்றைச் சடையுங் கனகநீண் முடியுந் தங்கிய முறம்போல் தழைமடிச் செவியுமாய் ஐங்கரத்து அண்ணல் வந்துஅவதரித்தலும் பொங்கர அணிந்த புண்ணிய மூர்த்தியும் மங்கை மனமிக மகிழ்ந்துடன் நோக்கி விண்ணுளோர்களும் விரிந்தநான் முகனும் 190
மண்ணுளோர்களும் வந்துனை வணங்க ஆங்கவர் தங்கட்கு அருள்சுரந்து அருளித் தீங்கது தீர்த்துச் செந்நெறி அளித்துப்
பாரன மாகப் பலகணி யருந்தி
ஏரணி ஆலின்கீழ் இனிதிரு என்று பூதலந் தன்னிற் புதல்வனை இருத்திக் காதல்கூர் மடநடைக் கன்னியுந்தானும் மைவளர்சோலை மாநகர் புகுந்து தெய்வ நாயகன் சிறந்தினிது இருந்தபின் வானவராலும் மானுட ராலுங் 2OO
கானமர் கொடிய கடுவிலங்காலுங் கருவிகளாலும் கால னாலும் ஒருவகையாலும் உயிர்அழியாமல் திரம்பெற மாதவஞ்செய்துமுன்னாளில் வரம்பெறுகின்ற வலிமையினாலே ஐமுகச் சீயமொத்தடற்படை சூழக் கைமுகம் படைத்த கயமுகத்து அவுணன் பொன்னுலகு அழித்துப் புலவரை வருத்தி இந்நிலத்தவரை இடுக்கண் படுத்திக் கொடுந்தொழில் புரியுங் கொடுமைகண்டு ஏங்கி 21 O
09

Page 22
அடுந்தொழிற் குலிசத்து அண்ணலும் அமரரருங் கறைபடு கண்டக் கடவுளைப் போற்றி முறையிடக் கேட்டு முப்புரம் எரித்தோன் அஞ்சலீர் என்றுஅவர்க்கு அபயங் கொடுத்தே அஞ்சுகைக் கரிமுகத்து அண்ணலை நோக்கி ஆனை மாமுகத்து அவுணனொடு அவன்தன் சேனைகள் முழுவதுஞ் சிந்திடப் பொருது குன்றுபோல் வளர்ந்த குறட்படை கூட்டி வென்றுவா என்று விடைகொடுத்து அருள ஆங்கவன் தன்னோடு அமர்பல உடற்றிப் 22O
பாங்குறும் அவன்படை பற்றறக் கொன்றபின் தேர்மிசை ஏறிச் சினங்கொடு செருவிற் கார்முகம் வளைத்த கயமுகாசுரன்மேல் ஒற்றை வெண்மருப்பை ஒடித்தவன் உரத்திற் குற்றிட எறிந்தான் குருதிசோர்ந்திடவே சோர்ந்தவன் வீழ்ந்து துண்ணென எழுந்து
வாய்ந்தமூ டிகமாய் வந்துஅவன் பொரவே வந்த மூடிகத்தை வாகனம் ஆக்கி எந்தை விநாயகன் ஏறினன் இப்பால் ஏறிந்தவெண் மருப்புஅங்கு இமைநொடி அளவிற் 23O
செறிந்தது மற்றவன் திருகரத்தினிலே வெல்லவைக் கதிர்வேல் விழிபடைத்து அருளும் வல்லவை தனைத்தன் மனைஎன மணந்தே ஒகையோடு எழுந்தாங்கு உயர்படை சூழ வாகையும் புனைந்து வரும்வழி தன்னிற் கருச்சங் கோட்டிற் கயல்கமுகு ஏறுந் திருச்செங் காட்டிற் சிவனைஅர்ச் சித்துக் கணபதீச்சரம்எனுங் காரண நாமம் பணபதி புகழ்தரு பதிக்குஉண்டாக்கிச் சங்கரன் பார்ப்பதி தனிமன மகிழ 24 Ο
10

இங்குவந்து அன்புடன் எய்திய பின்னர்க் கணங்களுக்கு அரசாய்க் கதிர்முடி சூட்டி இணங்கிய பெருமைபெற்று இருந்திட ஆங்கே தேவர்கள் முனிவர் சித்தர்கந் தருவர் யாவரும் வந்திவன் ஏவல்செய்திடுநாள் அதிகமாய் உரைக்கும் ஆவணித் திங்களின் மதிவளர் பக்கம் வந்திடு சதுர்த்தியில் விநாயர்க்கு உரிய விரதம் என்றுஎண்ணி மனாதிகள் களித்து மரபொடு நோற்றார் இப்படி நோற்றிட்டு எண்ணிய பெருநாள் 25O
ஒப்பரும் விரதத்து உறுமொரு சதுர்த்தியில் நோற்றுநற் பூசை நுடங்காது ஆற்றிப் போற்றிசெய்திட்டார் புலவர் ஐங்கரனை மருமலர் தூவும் வானவர் முன்னே நிருமலன் குமரன் நிருத்தம் புரிந்தான் அனைவரும் கைதொழுது அடிஇணை போற்ற வணைகழற் சந்திரன் மனச்செருக்கு அதனால் பேழைபோல் வயிறும் பெருத்தகாத்திரமும் தாழ்துளைக் கையுந் தழைமுறைச் செவியுங் கண்டனன் நகைத்தான் கரிமுகக் கடவுளுங் 26O
கொண்டனன் சீற்றங் குபேரனை நோக்கி என்னைக் கண்டிங்கு இகழ்ந்தனை சிரித்தாய் உன்னைக் கண்டவர் உரைக்கும் இத் தினத்திற் பழியொடு பாவமும் பலபல விதனமும் அழிவும்எய்துவரென்று அசனிபோற் சபித்தான் விண்ணவர் எல்லாம் மிகமனம் வெருவிக் கண்ணருள் கூருங் கடவுள்இத்தினத்திற் கோரவெஞ் சினம்மிகக் கொண்டனன் அந்நாள் மார்கழித் திங்கள் மதிவளர் பக்கஞ் சதயந் திொட்ட சட்டிநல் விரதமென்று 27O 11

Page 23
இதயத்து எண்ணி யாவரும் நோற்றார் இப்புவி மாந்தர் இயம்பிய விரதம் வைப்புடன் நோற்ற வகைஇனிச் சொல்வாம் குருமணி முடிபுனை குருகுலத் துதித்த தருமனும் இளைய தம்பியர் நால்வரும் தேவகி மைந்தன் திருமுகம் நோக்கி எண்ணிய விரதம் இடையூறு இன்றிப் பண்ணிய பொழுதே பலிப்பு உண்டாகவுஞ் செருவினில் எதிர்த்த செறுநரை வென்று மருமலர்ப் புயத்தில் வாகை சூடவும் 28O
எந்தத் தெய்வம் எவ்விரதத்தை
வந்தனை செய்யில் வருநமக்கு உரையெனப் பாட்டளிதுதையும் பசுந்துழாய் மார்பனுங் கேட்டருள் வீர்எனக் கிளர்த்துதல் உற்றான்
அக்குநீ றணியும் அரன்முதல் அளித்தோன் விக்கினந் தீர்க்கும் விநாயக மூர்த்தி ஓடவைத் திடும்பொன் ஒத்தஒளி விளங்குங் கோடி சூரியற்போற் குலவிய மேனியன் கடகரி முகத்தோன் காத்திரம் பெருத்தோன் தடவரை போலுஞ் சதுர்ப்புயம் உடையோன் 29O.
சர்வ ஆபரணமுந்தரிக்கப் பட்டவன் உறுமதிக் குழவிபோல் ஒருமருப்புடையோன் ஒருகையிற் தந்தமும் ஒருகையிற் பாசமும் ஒருகையில் மோதகம் ஒருகையிற் செபஞ்செய் உத்தம மாலையோன் உறுநினைவின்படி சித்திசெய்வதனாற் சித்திவிநாயகன் என்றுஇமையவரும் யாவருந்துதிப்ப நன்றி தருந்திரு நாமம் படைத்தோன் புரவலர் காணப் புறப்படும் போதுஞ் செருவினில் யுத்தஞ் செய்திடும் போதும் 3OO
12

வித்தியா ரம்பம் விரும்பிடும் போதும் உத்தியோகங்கள் உஞற்றிடும் போதும் ஆங்கவன் தன்னை அருச்சனை புரிந்தால் தீங்குறாது எல்லாஞ் செயம்உண்டாகும் கரதலம் ஐந்துடைக் கணபதிக்கு உரிய விரதம்ஒன்றுளது.அதை விரும்பிநோற்றவர்க்குச் சந்ததி தழைத்திடுங் சம்பத்து உண்டாம் புந்தியில் நினைந்த பொருள்கை கூடும் மேலவர் தம்மையும் வென்றிடலாம்எனத் தேவகி மைந்தன் செப்பிடக் கேட்டு 3O
நுவலரும் விரதம் நோற்றிடும் இயல்பும் புகர்முகக் கடவுளைப் பூசைசெய் விதமும் விரித்தெமக்கு உரைத்திட வேண்டுமென்று இரப்ப வரைக்குடை கவித்தோன் வகுத்துரை செய்வான் தேருநீர் ஆவணித் திங்களின் மதிவளர் பூர்வ பக்கம் புணர்ந்திடு சதுர்த்தியின் முந்தும் புலரியின் முறைநீர் படிந்து
சந்தி வந்தனந் தவறாது இயற்றி அத்தினம் அதனில் ஐங்கரக் கடவுளைப் பத்தியோடு அர்ச்சனை பண்ணுதல் வேண்டும் 32O
வெள்ளியாற் பொன்னால் விளங்கும் அவன்றன் ஒள்ளிய அருள்திரு உருஉண்டாக்கிப் பூசனை புரியப் புகன்றனர் பெரியோர் ஆசிலாமண்ணால் அமைத்தலும் தகுமால் பூசைசெய்திடும்இடம் புனிதமது ஆக்கி வாசமென் மலரின் மஞ்சரி தூக்கிக் கோடிகங் கோசிகங் கொடிவிதா னித்து நீடிய நூல்வளை நிறைகுடத்து இருத்தி விந்தைசேர் சித்தி விநாயகன் உருவைச் சிந்தையின் நினைந்து தியானம் பண்ணி 33O
13

Page 24
ஆவாகனமுதல் அர்க்கிய பாத்தியம்
வாகா ராச மனம்வரை கொடுத்து
ஐந்துஅமிர் தத்தால் அபிடே கித்துக் கந்தஞ் சாத்திக் கணேசமந்திரத்தால் ஈசுர புத்திரன் என்னுமந்திரத்தால் மாசகல் இரண்டு வத்திரஞ் சாத்திப் பொருந்துஉமை சுதனாப் புகலுமந்திரத்தாற் திருந்தும் பளிதத் தீபங் கொடுத்துப் பச்சறுகு உடன்இருபத்தொரு விதமாப் பத்திர புட்பம் பலபல கொணர்ந்தே 34O
உமாசுதன் கணாதிபன் உயர்கரி முகத்தோன் குமார குரவன் பாசாங் குசகரன்
ஏக தந்தன் ஈசுரன் புத்திரன்
ஆகு வாகனன் அருள்தரு விநாயகன் சர்வகாரியமுந் தந்தருள் புரிவோன் ஏரம்ப மூர்த்தி என்னுநாமங்களால் ஆரம்பத்துடன் அர்ச்சனை பண்ணி மோதகம் அப்பம் முதற்பணி காரந்
தீதகன் மாங்கனி தீங்கத லிப்பழம் வருக்கை கபித்த மாதுளங் கனியொடு 35O
தரித்திடு நெட்டிலைத் தாழைமுப் புடைக்காய் பருப்புநெய் பொரிக்கறி பால்தயிர் போனகம் விருப்புள சுவைப்பொருள் மிகவும்முன் வைத்து உருத்திரம் பிரியளன்று உரைக்குமந்திரத்தால் நிருத்தன் மகற்கு நிவேதனங் கொடுத்து நற்றவர் புகன்றநா னான்குஉப சாரமும் மற்றவன் திருவுளம் மகிழ்ந்திடச் செய்து எண்ணுந் தகுதி இருபிறப்பாளர்க்கு உண்அறுசுவைசே ரோதன நல்கிச் சந்தன முத்துத் தானந்தக்கிணை 36O
14

அந்தணர்க்கு ஈந்திட்டு அருச்சகன் தனக்குத் திருத்தகு விநாயகத் திருஉருவத்தைத் தரித்தவத்திரத்துடன் தானமாக் கொடுத்து நைமித் திகம்என நவில்தரு மரபால் இம்முறை பூசனை யாவர்செய்தாலும் எண்ணிய கருமம் யாவையு முடிப்பர் திண்ணிய செருவிற் செயமிகப் பெறுவர் அரன்இவன் தன்னைமுன் அர்ச்சனை பண்ணிப் புரமொரு மூன்றும் பொடிபட எரித்தான்
உருத்திரன் இவனை உபாசனை பண்ணி 37Ο
விருத்திரா சுரனை வென்றுகொன்றிட்டான் அகலிகை இவன்தாள் அர்ச்சனை பண்ணிப் பகர்தருங் கணவனைப் பரிவுடன் அடைந்தாள் தண்ணார் மதிமுகத் தாள்தம யந்தி அன்னாள் இவனை அர்ச்சனை பண்ணி நண்ணார் பரவு நளனை அடைந்தாள் ஐங்கரக் கடவுளை அர்ச்சனை பண்ணி வெங்கத நிருதரை வேர்அறக் களைந்து
தசரதன்-மைந்தன் சீதையை அடைந்தான் பகிரதன் என்னும் பார்த்திவன் இவனை 38O
மகிதலந் தன்னின் மலர்கொடுஅர்ச்சித்து வரநதி தன்னை வையகத்து அழைத்தான் அட்டதேவதைகளும் அர்ச்சித்து இவனை அட்ட போகத்துடன் அமிர்தமும் பெற்றார் உருக்குமணி என்னும் ஒண்டொடி தன்னைச் செருக்கொடு வவ்விச் சிசுபாலன்றான் கொண்டுபோம் அளவிற் குஞ்சர முகவனை வண்டுபாண் மிழற்றா மலர்கொடுஅர்ச் சித்துத் தாரியின் மறித்தவன் தன்னைப்புறங் கண்டு யாமும்அங் கவளை இன்புறப் பெற்றோம் 39 O
15

Page 25
புகர்முகக் கடவுளைப் பூசனை புரிந்து மிகமிக மனத்தில் விழைந்தன பெற்றார் இப்புவி தன்னில் எண்ணுதற் களிதால் அப்படி நீவிரும் அவனைஅர்ச் சித்தால் எப்பொருள் விரும்பினி அப்பொருள் பெறுவீர் என்றுகற்று அறிந்தோன் எடுத்திவை உரைப்ப அன்றுமுதற் தருமனும் அனுசரும் இவனைப் பூசனை புரிந்து கட் புலன்இலான் மைந்தரை நாசனம் பண்ணி நராதிபராகிச் சிந்தையில் நினைந்தவை செகத்தினிற் செயங்கொண்டு 4 OO
அந்தமில் செல்வத்து அரசியல் பெற்றார் ஈங்கிது நிற்க இவ்விரதத்தியல் ஓங்கிய காதைமற்று ஒன்றுஉரை செய்வாம் கஞ்சநான் முகன்தருங் காசிபன் புணர்ந்த வஞ்சக மனத்தாள் மாயைதன் வயிற்றிற் சூரன் என்று ஒருவனுந் துணைவருந் தோன்றி ஆர்கலி சூழ்புவி அனைத்தையும் அளித்தே சீருடைச் சுவர்க்கத் திருவளங்கெடுத்தும் புரந்தரன் முதலிய புலவரை வருத்தியும் நிரந்தரந் தீய நெறிநடத்துதலால் 41 O
ஆயிரங் கண்ணனும் அமரரும் முனிவரும் நீஇரங்கு எமக்கென நெடுங்கரங் கூப்பி இரசத கிரிஉன்ற இறைவனை வணங்கி வரமிகுஞ் சூரன் வலிமைகள் உரைக்கச் சுடர்விடு மணிமுடிச் சூரனை வெல்லக் கதிர்விடு வடிவேல் கரதலத்து ஏந்தும் புதல்வனைத் தருவோம் போமின் நீரென அமரர் கோனுக்கு அரன்விடை கொடுத்துச் சமரவேல்விழித் தையலுந் தானுங் - கூடிய கலவியிற் கூடாது ஊடலும் - 42O
16

ஒடிய வானோர் ஒருங்குடன் கூடிப் பாவகன் தன்னைப் பரிவுடன் அழைத்துச் சூரன் செய்யுந் துயரம் எல்லாம் ஊரரவு அணிந்தோற்கு உரையென உரைப்பக் காமனை எரித்த கடவுள்என்று அஞ்சிப் பாவகன் பயமுறப் பயமுனக்கு ஏதென உற்றிடுங் கரதலத்து உன்னையே தரித்தான் நெற்றியின் நயனமும் நீயே ஆதலிற்
குற்ற மடாது கூறுநீசென்றென
வானவர் மொழிய மற்றவன் தானுந் 43O
தானுமச் சபையிற் தரியா தேகி
எமையாளுடைய உமையாளுடனே அமையா இன்பத்து அமர்ந்துஇனி திருந்த பள்ளி மண்டபம் பாவகன் குறுகலும் ஒள்ளிய மடந்தை ஒதுங்கிநாணுதலுந் தெள்ளிதிற் பரமனுந் தேயுவைக் கண்டே அறுமுகப் பிள்ளையை அவன்கையில் ஈதலும் வறியவன் பெற்ற வான்பொருள் போலச் சோதி நீண்முடிச் சுடரோன் கொணர்ந்து வாத ராசன் மலர்க்கையிற் கொடுப்ப 44O
நீதியோடு நின்றுகையேந்திப் போதரீள் வாயுவும் பொறுக்கஒண்ணாமற் தரும்புனற் கங்கை தன்கையிற் கொடுப்பத் தரும்புனற் கங்கையும் தாங்கஒண்ணாமற் பொருந்திரைச் சரவணப் பொய்கையில் வைப்பத் தண்ணார் வதனத் தாமரை ஆறுங் கண்ஆறிரண்டுங் கரம்ஈ ராறும் தூண்எனத் திரண்ட தோள் ஈராறும் மாணயி லாதி வான்படை யுங்கொண்டு அறுமுகக் கடவுள்அங்கு அவதரித் திடலும் 45O
17

Page 26
மறுகிய உம்பர் மகிழ்வுடன் கூடி அறுமீன் களைப்பால் அளித்திர்என்று அனுப்ப ஆங்கவர் முலையுண்டு அறுமுகன் தானும் ஓங்கிய வளர்ச்சி உற்றிடு நாளில் விமலனும் உமையும் விடையுகந் தாறு தலைமகன் இருந்த சரவணத்தடைந்து முருகலர் குழலுமை முலைப்பால் ஊட்ட இருவரும் இன்பால் எடுத்தெடுத்து அணைத்துத் தேவர்தம் படைக்குச் சேனா பதியெனக்
காவல் கொண்டு அளிக்கக் கதிர்முடி சூட்டி - 46O
அயில்வேல் முதற்பல ஆயுதங் கொடுத்துத் திசைஎலாஞ் செல்லுந் தேரும்ஒன்று உதவிப் பூதப் படைகள் புடைவரப் போய்நீ ஒதுறும் அவுணரை ஒறுத்திடுஎன்று அனுப்ப இருளைப் பருகும் இரவியைப் போலத் தகுவரென்று அவரைச் சமரிடை முருக்கிக் குருகுப் பேர்பெறுங் குன்றமுஞ் சூரன் மருமமுந் துளைபட வடிவேல் விடுத்தே யாவரும்வியப்புற இந்திரன் மகளாந் தேவகுஞ் சரியைத் திருமணம் புணர்ந்திட்டு 47Ο
அமரர் கோனுக்கு அமருலகு அளித்துக் குமரவேளுங்குவலயம் விளங்க அமராவதியில் அமர்ந்தினிது இருந்தான் சமர வேலுடைச் சண்முகன் வடிவுகொண்டு அமரர் மாதர் அனைவரும் மயங்கி எண்டருங் கற்பினை இழந்தது கண்டே அண்டர் எல்லாம் அடைவுடன் கூடி மாதொரு பாகனை வந்தடி வணங்கி மருமலர்க் கடம்பன்எம் மாநகர் புகாமல் அருள்செய வேண்டுநீஅம்பிகா பதியென 48O
18

இமையவர் உரைப்ப இறையவன் தானுங் குமரனைக் கோபங் கொண்டுமுன் முனியக் காவல்கொண்டு எம்வினை கட்டறுத்து அருளுஞ் சேவலங் கொடியோன் தேசம் போகத் திருந்திழை உமையாள் அருந்துயர் எய்தி வருந்திமுன் நின்ற மங்கையைப் பார்த்து மங்கை நீதான் வருந்துதல் ஒழிகுதி அங்கையாற் சூதெறிந்து ஆடுவோம் வாவென வென்றதுந் தோற்றுதும் விளம்புவார் யாரெனக்
குன்றமென் முலையாள் கூறிய சமயம் 490
புற்றரவு அணிந்த புனிதனைக் காணஅங்கு உற்றனன் திருமால் ஊழ்வினை வலியாற் சக்கிர பாணியைச் சான்றெனக் குறித்து மிக்கதோர் சூது விருப்புடன் ஆடச் சாயக நேருந் தடநெடுங் கருங்கண்
நாயகி வெல்ல நாயகன் தோற்ப இன்பவாய் இதழ்உமை யான்வென் றேனென எம்பெரு மானும் யான்வென்றேனென
ஒருவர்க் கொருவர் உத்தரம் பேசி இருவரும் சாட்சி இவனைக் கேட்ப 5OO
மாமனை வதைத்த மான்முக நோக்கிக் காமனை எரித்தோன் கண்கடை காட்ட வென்ற நாயகி தோற்றாள் என்றுந் தோற்ற நாயகன் வென்றான் என்றும் ஒன்றிய பொய்க்கரி உடன்அங்கு உரைப்பக் கன்றிய மனத்தொடு கவுரியங்கு உருத்து நோக்கிநீ இருந்தும் நுவன்றிலை உண்மை வாக்கினில் ஒன்றாய் மனத்தினில் ஒன்றாய் மைக்கரி உரித்தோன் வதன நோக்கிப் பொய்க்கரி உரைத்த புன்மையினாலே 51. O
19

Page 27
கனல்என வயிற்றிற் கடும்பசி கணற்ற நிலமிசைக் குருட்டு நெட்டுடற் பாம்பாய்க் கடகரி முகத்துக் கடவுள்வீற்று இருக்கும் வடதரு நீழலிற் கிடவெனச் சபித்தாள் முளரிகள் பூத்த முகில்நிறத்து உருப்போய்த் துளவணி மருமனுந்துணைவிழி இழந்தே ஆண்டரைக் கணத்தில் ஆயிரம் யோசனை நீண்டபைப் பாந்தள் நெட்டுடல் எடுத்து வளர்மருப்பு ஒன்றுடை வள்ளல்வீற்று இருக்குங் கிளர்சினை ஆலின் கீழ்க்கிடந்தன்னால் 52O
திரிகடக் கரியின் திருமுகக் கடவுளும் வழிபடும் அடியார் வல்வினை தீர்த்தே எழில்பெறு வடமரத்தின்கீழ் இருந்தான் கம்பமா முகத்துக் கடவுள்தன் பெருமையை அம்புவியோருக்கு அறிவிப் போம்என உம்பர் உலகத்து ஒரெழு கன்னியர்
தம்பநூல் ஏணியிற் தாரணி வந்து கரிமுகக் கடவுளைக் கைதொழுது ஏத்திக் கார்த்திகைக் கார்த்திகை கழிந்தபின் நாளில் ஆர்த்த கலிங்கத்து அணியிழை வாங்கி 5
இருபத்தோர்இழை இன்புறக் காட்டி ஒருபோது உண்டி உண்டுஒரு மனமாய் வேதத்தாதியும் பூமியில் எழுத்தும் ஆதிவிநாயகற்கு ஆன எழுத்தும் மூன்றுஎழுத்ததனான் மொழிந்தமந்திரமும் தேன்தருங் குழலியர் சிந்தையுட் செபித்தே உரைதரு பதினாறு உபசாரத்தால் வரைமகன் மதலையை வழிபாடு ஆற்றி இருபது நாளும் இப்படி நோற்று மற்றநாள் ஐங்கர மாமுகன் பிறந்த 54O
20

தற்றைநாட் சதயமும் ஆறாம் பக்கமுஞ் சேரும்அத்தினத்திற் தெளிபுனல் ஆடி வாரண முகத்தோன் வருபெருங் கோயில் சீர்பெற மெழுகித் திருவிளக்கு ஏற்றிக் குலவுபொற் கலைகள் கொடுவிதானித்து மலர்பல தொடுத்திடு மாலைகள் ஆற்றிக் கொலைபுரி வடிவேற் குகற்குமுன் வருகை மலைமுகக் கடவுளை மஞ்சனம் ஆட்டிப் பொற்கலை நன்னூற் பூந்துகில் சாத்திச் சொற்பெறு சந்தனச் சுகந்தம் பூசிச் 55O
செருந்தி சண்பகஞ் செங்கழு நீரொடு குருந்து மல்லிகை கோங்கொடு பிச்சி கருமுகை புன்னை கடிகமழ் பாதிரி
மருவிரி ஞாழன் மகிழ்இரு வாட்சி தாமரை முல்லை தளையவிழ் கொன்றை பூமலர் நொச்சி பூத்தமைக் குவளை
காந்தள் ஆத்தி கடம்புசெவ் வந்தி
வாய்ந்தநல் எருக்கு மலர்க்கர வீரம் பச்சிலை நொச்சி படர்கொடி அறுகு முத்தளக் கூவிள முதலிய சாத்தித் 56O.
தூபதீபங்கள் சுகம்பெறக் கொடுத்தே அப்பம் மோதகம் அவல்எள்ளுண்டை முப்பழந் தேங்காய் முதிர்மொளிக் கரும்பு சீனிதேன் சர்க்கரை செவ்விள நீருடன் பால்நறு நெய்தயிர் பருப்புடன் போனகங் கற்பகக் கடவுள்களித்திடத் திருமுன் பொற்புறப் படைத்துப் பூசனை பண்ணி நோற்பது கண்டு நோலா திருந்த பாப்புருவாகிய பஞ்சா யுதனும் யாப்புறு கொங்கையீர் யானும்நோற் பேனென 57Ο 21

Page 28
ஆங்கவன் தனக்கும் வேண்டுவது அளித்துப் பாங்கொடுஇவ் விரதம் பரிந்துநோற் பித்தார் அண்டர்நாயகனாம் ஐங்கர னருளால் விண்டுவும் பண்டுள வேடம் பெற்றே உஞ்ஞைமா நகர்புகுந்து உமையொடு விமலன் கஞ்சநாண் மலர்ப்பதங் கைதொழு திடலும் பஞ்சிமென் சீறடிப் பார்ப்பதி நெஞ்சின் வெஞ்சின மிகுந்து விமலனை நோக்கி யான்இடுஞ் சாப நீங்கியது ஏனென மாநெடுங் கண்ணி மணிக்கதவு அடைப்ப 58O
இறையவன் இதற்குக் காரணம் ஏதென மறிகடல் துயிலும் மாயவன் உரைப்பான் பிறைமருப்பு ஒன்றுடைப் பிள்ளையன்று எனக்குத் தந்தருள் புரிந்த தவப்பயன் ஈதெனச் சிந்தை மகிழ்ந்து தேவர் தேவனும் பூங்கொடி அடைத்த பொற்றாழ் நீங்கச் சாங்குமுன் உரைத்த சக்கர பாணி இக்கதை சொல்ல அக்கணி சடையனும் மிக்க நல் விரதம் விருப்புடன் நோற்றபின் மாதுமை அடைந்தவன்றாழ் நீக்கி 590
நாதனை நணுகிட நம்பனும் நகைத்தான் நானோ வந்து நகையானதுவெனத் தேனேர் மொழியாள் தெளியக் கூறென நன்மதி நுதலாய் நானிலந் தன்னில் உன்மகன் நோன்பின் உறுதி அறிந்து சிந்தை மகிழ்ந்து சிரித்தேன் யானென அந்தமில் அரனை ஆயிழை வணங்கிப் பொருஞ்சூரறவேல் போக்கிய குமரன் வரும்படி யானும் வருத்திநோற் பேனென இறையவன் கதைசொல ஏந்திழை நோற்றபின் 6OO
22

குறமட மகளைக் குலமணம் புணர்ந்தோன் சுடர்வடி வேலோன் தொல்வினை தீர்ந்து தாதுமை வண்டுழுந் தாமத்தானனை மாதுமை யாளை வந்துகண் டனனே கண்ணநீ கண்ணிலாக் கட்செவியாகெனத் தண்ணறுங் குழலுமை சாபம்இட்டதுவும் அக்குநீறணியும் அரன்முதல் அளித்த விக்கின விநாயக விரதநோற்று அதன்பின் சுடர்க்கதை ஏந்துந் துளவமாலையன் விடப்பணி உருவம் விட்டுநீங்கியதும் 61O
பரிவுகொள் கூத்துடைப் பரமனு நோற்றுக் கவுரிஅன்று அடைத்த கபாடந் திறந்ததும் வாசமென் குழலுடை மாதுமை நோற்பத் தேசம் போகிய செவ்வேள் வந்ததும் வானவர் நோற்று வரங்கள் பெற்றதும் நாரத முனிவன் நவின்றிடக் கேட்டே இந்நிலத் தன்னில் இவ்விரதத்தை மன்னவன் வச்சிர மாலிமுன் நோற்றுக் காயத் தெழுந்த கடும்பிணிதீர்ந்து மாயிரும் புவியின் மன்னனாய் வாழ்ந்து 62O
தடமுலைத்திலோத்தமை தனைமணம் புணர்ந்து மழவிடை போற்பல மைந்தரைப் பெற்றுக் கடைமுறை வெள்ளியங் கயிலையில் உற்றான் பரிவொடிவ் விரதம் பாரகந் தன்னில் விரைகமழ் நறுந்தார் விக்கிரமாதித்தன் மறிகடற் புவிபெற வருந்தி நோற்றிடுநாள் மற்றவன் காதன் மடவரல் ஒருத்தி இற்றிடும் இடையாள் இலக்கண சுந்தரி மெத்தஅன்புடன்இவ் விரதநோற் பேனென அத்தந் தன்னில் அணியிழை செறித்துச் 63 ۔۔۔۔O
23

Page 29
சித்த மகிழ்ந்து சிலநாள் நோற்றபின்
உற்ற நோன்பின் உறுதி மறந்து கட்டிய விழையைக் காரிகை அவிழ்த்து
வற்றிய கொவ்வையின் மாடே போட ஆங்கது தழைத்தே அலருந்தளிருமாய்ப் பாங்குற ஓங்கிப் படர்வது கண்டு வேப்பஞ்சேரியிற் போய்ச்சிறை இருந்த பூப்பயில் குழல்சேர் பொற்றொடி ஒருத்தி அவ்வியம் இல்லாள் அவ்இடந்தன்னிற் கொவ்வை அடகு கொய்வாள் குறுகி 64 O
இழையது கிடப்பக் கண்டவள் எடுத்துக் குழைதவிழ் வரிவிழிக் கோதைகைக் கட்டி அப்பமோடு அடைக்காய் அவைபல வைத்துச் செப்ப முடனே திருந்திழை நோற்றிடக் கரிமுகத் தண்ணல் கருணை கூர்ந்து பண்டையில் இரட்டி பதம்அவளுக்கு அருளக் கொண்டுபோய் அரசனுங் கோயிலுள் வைத்தான் விக்கிரமாதித்தன் விழிதுயில் கொள்ள உக்கிரமானஉடை மணி கட்டித்
தண்டையுஞ் சிலம்புந் தாளினின்று ஒலிப்பக் 65O
கொண்டல் போல்வருங் குஞ்சர முகத்தோன் மனமிகக் கலங்கு மன்னவன் தன்னிடங் கனவினில் வந்து காரணமாக இலக்கண சுந்தரி இம்மனை இருக்கிற் கலக்கம் வந்திடுங் கழித்திடு புறத்தெனத் துண்ணென எழுந்து துணைவியை நோக்கிக் கண்ணுறக் கண்ட கனவின் காரணம் அண்ணல் உரைத்திடும் அவ்வழி தன்னில் ஆனை குதிரை அவைபல மடிவுற மாநகர் கேடுறும் வகையது கண்டு 66O
24

இமைப்பொழுது இவளிங்கு இருக்கலாகாதுஎன அயற்கடை யவனும் அகற்றிய பின்னர் வணிகன் தனது மனைபுகுந்து இருப்ப மணியும் முத்தும் வலியகல் லாய்விட அணியிழை தன்னை அவனும் அகற்ற உழவர்தம் மனையில் உற்றவள் இருப்ப வளர்பயிர் அழிந்து வளம்பல குன்ற அயன்மனை அவரும் அகற்றிய பின்னர்க் குயவன் மனையிற் கோற்றொடி செல்லக்
குயக்கலம் உடைந்து கொள்ளை போக 67Ο
அயற்கடை அவனும் அகற்றிய பின்னர்த் தூசுதூய தாக்குந் தொழிலோர் மனைபுகத் தூசுகள் எல்லாந்துணிந்துவே றாகத்
தூசரு அவளைத் தூரஞ் செய்ய
மாலைக் காரன் வளமனை புகலும்
மாலை பாம்பாம் வகையது கண்டு ஞால மெல்லா நடுங்கவந்து உதித்தாய் சாலவும் பாவிநீதான்யார் என்ன
வெம்மன மிகவும் மேவி முனிவுறா அம்மனை அவனும் அகற்றிய பின்னர் 68O
அவ்வை தன்மனை அவள் புகுந்திருப்ப அவ்வை செல்லும் அகங்கள் தோறும் வைதனர் எறிந்தனர் மறியத் தள்ளினர் கைகொடு குற்றினர் கண்டோர் பழித்தனர் அவ்வை மீண்டுதன் அகமதிற் சென்று இவ்வகைக் கன்னிநீ யாரென வினாவக் காத்தாண்டு உலகு கருணையோடு ஆண்ட மார்த்தாண்ட ராசன் மாமகள் ஒருத்தி எல்லார்க்கு மூத்தாள் இலக்கண சுந்தரி சொல்லுவிக்கிரம சூரியன் மனையெனச் 69 O.
25

Page 30
சீர்கெட இருந்த தெரிவையை நோக்கி நீரது கொண்டு நிலமெழு கிடுகெனச் சாணி எடுக்கத் தையலுஞ் சென்றாள் சாணியும் உழுத்துத் தண்ணிர் வற்றிப் பேணிய புழுவாய்ப் பெரிது தோன்ற மானேர் விழியாள் வருந்துதல் கண்டு
தானே சென்று சாணி எடுத்துத் தண்ணி கொணர்ந்து தரைமெழுக் கிட்டு மண்ணிய வீட்டின் மணிவிளக்கேற்றிப் புத்தகம் எடுத்து வாவெனப் புகலப் . 7OO
புத்தகம் பாம்பாய்ப் பொருந்திநின்று ஆட மெத்தவுள் நடுங்கி வீழ்ந்தவள் கிடப்பக் கொவ்வையங் கனிவாய்க் கோதையை விலக்கி அவ்வை தானே அகமதிற் சென்று புத்தகம் எடுத்துப் பொருந்தப் பார்த்து
வித்தக நம்பி விநாயகமூர்த்தி கற்பகப் பிள்ளைசெய் காரியம் இதுவென உத்தமி அவ்வை உணர்ந்துமுன் அறிந்து தவநெறி பிழைத்த தையலை நோக்கி நுவலரும் விநாயக நோன்புநோற்றிடுகெனக் 71O
கரத்து மூஏழுஇழைக் காப்புக் கட்டி அப்பமும் அவலும் மாம்பல பண்டமுஞ் செப்பம தாகத் திருமுன் வைத்தே அவ்வை கதைசொல ஆயிழை கேட்டு மத்தகக் களிற்றின் மகாவிரதத்தை வித்தகமாக விளங்கிழை நோற்றுக் கற்பக நம்பி கருணைபெற்று அதன் பின் சக்கரவாள சைனியத் தோடு விக்கிரமாதித்தன் வேட்டையிற் சென்று தானுஞ் சேனையுந் தண்ணிர் விரும்பி 72O
26

எவ்வகை செய்வோம் எனஉளம் மெலிந்தே அவ்வை தன்மனை அங்கவர் அணுக எய்துந் தாகமும் இளைப்புங் கண்டு செவ்வே அவற்றைத் தீர்க்க எண்ணி இலக்கண சுந்தரி என்பவள் தன்னை அப்பமும் நீரும் அரசற்கு அருளெனச் செப்பிய அன்னை திருமொழிப் படியே உண்ணிர்க் கரகமும் ஒருபணி காரமும் பண்ணேர் மொழியார் பார்த்திபற்கு உதவ ஒப்பறு படையும் உயர்படை வேந்தனும் 73O
அப்பசி தீர அருந்திய பின்னர்
ஆனை குதிரை அவைகளும் உண்டுந் தானது தொலையாத் தன்மையைக் கண்டே இவ்வகை சமைத்தநீ யாரென வினவ மல்வலங் குழலாள் மெளனமாய் நிற்ப அவ்வை தான்சென்று அரசர்க்கு உரைப்பாள் கணபதி நோன்பின் காரணங் காணிது குணமுடை இவளுன் குலமனை யாட்டி இலக்கண சுந்தரி என்றுஅவ்வை கூற மங்கையை நோக்கி மனமிக மகிழ்ந்து ፲4O
திங்கனேர் வெள்ளிச் சிவிகையில் ஏற்றிக் கொண்டூர் புகுந்தான் கொற்ற வேந்தனும் ஒண்டொடி யாரில் உயர்பதம் உதவினன் சிந்துர நுதலார் சென்றுஅடி பணியச் சுந்தரி யிருந்தாள் சுகத்துடன் மகிழ்ந்தே. 745
27

Page 31
நூற் பயன்
பொன்னுமிகும் கல்விமிகும் புத்திரரோடு எப்பொருளும் மன்னு நவமணியும் வந்துஅணுகும் - உன்னி ஒருக்கொம்பின் யானைமுக உத்தமனார் நோன்பின்
திருக்கதையைக் கேட்கச் சிறந்து.
பொற்பனைக்கை முக்கண் புகர்முகத்துப் பொன்மவுலிக் கற்பகத்தின் நோன்பின் கதைதன்னைச் - சொற்பெருகக் கற்றவரும் நோற்றவரும் காதலித்துக் கேட்டவரும் பெற்றிடுவர் கற்பகத்தின் பேறு.
வெள்ளை எருதுஎறும் விரிசடையோன் பெற்றுஎடுத்த பிள்ளையார் நோன்பின் பெருங்கதையை - உள்ளபடி நோற்றார் மிகமகிழ்வார் நோலாது அருகிருந்து கேட்டோர்க்கும் வாராது கேடு.
சூலிலால் நோற்கிற் சுதரை மிகப்பெறுவார் சாலமிகும் வெங்கலியார் தாம்நோற்கில் - மேலைப் பிறப்பெல்லா நல்ல பெருஞ்செல்வம் எய்திச் சிறப்பிலே வாழ்வார் சிறந்து.
பிள்ளையார் கதை முற்றுப் பெற்றது.
 

ஒளவையார் அருளிய விநாயகர் அகவல்
சீதக் களபச் செந்தாமரைப்பூம் பாதச் சிலம்பு பலஇசை பாடப் பொன்அரைஞாணும் பூந்துகி லாடையும் வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்குசிந்துரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும், இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் சொற்பதங் கடந்த துரியமெய்ஞ் ஞான அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே! முப்பழம் நுகரும் மூடிக வாகன! இப்பொழு தென்னை யாட்கொள வேண்டித் தாயாய் எனக்குத் தானெழுந்தருளி மாயாப் பிறவி மயக்க மறுத்தே திருந்திய முதல்ஐந்தெழுத்துந் தெளிவாய்ப் பொருந்தவே வந்தென் உளந்தனிற் புகுந்து, குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திறம்இது பொருள்என வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக், கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில்
29

Page 32
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி,
ஐம்புலன் றன்னை அடக்கு முபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்,
கருவிக ளொடுங்குங் கருத்தறி வித்து இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து தலமொரு நான்குந் தந்தெனக் கருளி மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே, ஒன்பது வாயில் ஒருமந்திரத்தால் ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி ஆறாதாரத் தங்கிசை நிலையும் பேறா நிறுத்திப் பேச்சுரையறுத்தே, இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக், கடையிற் சுழுமுனைக் கபாலமுங் காட்டி, மூன்றுமண்டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக், குண்டலியதனிற் கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து, மூலாதாரத்து மூண்டெழு கனலைக் காலால் எழுப்புங் கருத்தறி வித்தே அழுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் குமுத சகாயன் குணத்தையுங் கூறி இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும் உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச், சண்முகத் தூலமுஞ் சதுர்முகச் சூக்குமமும் எண்முகமாக இனிதெனக் கருளிப்,
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்,
கருத்தினிற் கபால வாயில் காட்டி,
30
3O
35
4O
45
50

இருத்தி முத்தி இனிதெனக் கருளி, என்னை அறிவித்து, எனக்கருள் செய்து முன்னை வினையின் முதலைக் களைந்தே, வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து இருள்வெளி யிரண்டிற்கு ஒன்றிடம் என்ன அருள் தரும் ஆனந்தத்து அழுத்தி, என்செவியில் எல்லை இல்லா ஆனந்தமளித்து அல்லல் களைந்தே, அருள்வழி காட்டிச், சத்தத்தினுள்ளே சதாசிவம் காட்டிச், சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காட்டி, அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்க் கணுமுற்றிநின்ற கரும்புள்ளே காட்டி, வேடமும் நீறும் விளங்க நிறுத்திக், கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி, அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத், தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட வித்தக விநாயக விரைகழல் சரனே.
விநாயகர் அகவல் முற்றிற்று.
திருமந்திரம்
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்திணிளம்பிறை போலும் எயிற்றினை நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
31
55
6O
65
7Ο
72

Page 33


Page 34
இறவாத இன்ப அன்பு வேன பிறவாமை வேண்டும் மீண்டு மறவாமை வேண்டும் இன்னு அறவா நீ ஆடும்போதுன் அ
 

ன்டிப் பின் வேண்டுகின்றார்
ம் பிறப்புண்டேல் உன்னையென்றும் ம் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
டியின் கீழ் இருக்க என்றார்.