கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுவாமி விபுலாநந்தரின் தொல்லியலாய்வுகள்

Page 1
சுவாமி விபுலா 65T66 IIG, Til
ஆசிரி செல்வி தங்கேள் B.A. (Hons
臀 חחJ, וחנה Til ILL HEהחL
 

LT :
வரி கதிராமன் ) (Arch.)
உத்தியோகத்தர்.

Page 2

சுவாமி விபுலாநந்தரின் தொல்லியல் ஆய்வுகள்
தரும் உண்மைகள்
செல்வி தங்கேஸ்வரி கதிராமன் B. A. Hons. (Arch.) மாவட்ட கலாசார உத்தியோகத்தர்.
வெளியீடு :
அன்பு வெளியீடு
*தவபதி", ஆரையம்பதி. 1992

Page 3
அன்பு வெளியீடு -
இல: 2.
பதிப்புத் தரவுகள்
நூல்
ஆசிரியர்
வகை
பக்கங்கள் வெளியீடு வெளியீட்டுத் தேதி: அச்சுப் பதிவு
உரிமை 8 : விலை
சுவாமி விபுலாநந்தரின் தொல்லியல் ஆய்வுகள் தரும் உண்மைகள். செல்வி தங்கேஸ்வரி கதிராமன், B. A. Hons. (Arch.) .
: வரலாற்று ஆய்வு,
26 -- ιν. அன்பு வெளியீட்டகம்.
2-10-92. புனித வளனார் கத்தோலிக்க அச்சகம், மட்டக்களப்பு.
ஆசிரியை
: - e3urt 40/-
Bibiliographical Data
Title
: *Swami Vipułanandarin Tholiyai
Aivukal Tharum Unmaikal”
Author
Category Pages · · Publishers .
Printers
Date of Publicate : Copyright
Price
(Foets revealed by the Archeological research of Swami Vipulananda)
Miss Thangeswary Kathiraman,
B. A. Hons. (Arch.) Archeological research.
26 + ιν. . Anbu Publishers, Arayampathy. St. Joseph's Catholic Press, Batticaloa. 2-10-92.
Author.
Rs... 10

முகவுரை
விபுலாநந்தர் நூற்றாண்டை ஒட்டி ஏற்பட்ட விழிப்புணர்வின் காரணமாக, அவரது விஸ்வரூப தரி சனம் வெளிப்பட ஆரம்பித்துள்ளது. தனி மனிதனாக
அவர் ஆற்றியுள்ள பல்துறைச் சாதனைகளும் மக்க
ளுக்கு அறிமுகமாகிவருகின்றன. இராமகிருஷ்ண சங்கத் துறவியான அவர், துறவு நிலை கடந்து ஆற்றியுள்ள பன்முகப்பட்ட பணிகள், கலை, இலக்கியம், சமயம்,
சமூகம், இசை, தமிழ் என்பவற்றுடன் நின்றுவிட
வரலாற்று ஆய்வு, தொல்லியல் ஆய்வு முதலிய துறைகளிலும் அவர் காத்திரமான பங்களிப்பைச் செய் துள்ளார். ஆனால்.இத்துறைபற்றி இதுவரை யாரும் எழுத் முற்படவில்ல்ை. இதற்கான ஆற்றல் இன்மை அல்லது ஆர்வம் இன்மை இதற்குக் காரணமாகலாம். ,
எனவே, இத்துறைபற்றி மக்களுக்கு அறிமுகம் செய்துவைக்கவேண்டியது அவசியம் எனக் கருதி, சுவாமி விபுலாநந்தர் தொல்லியல் தொடர்பாக எழு திய கட்டுரைகளை ஆய்வு செய்ய எண்ணினேன். தொல்லியல் பட்டதாரியான எனக்கு, இயல்பாகவே இதில் ஈடுபடும் ஆர்வம் ஏற்பட்டன. சுவாமி விபுலா நந்தர் வெளியிட்டுள்ள தொல்லியல் கருத்துக்களைத் துருவித் துருவி ஆராய்ந்தபோது, அவருடைய ஆய்வுத் திறனும், தனது கருத்துக்களை நிறுவ அவர் சமர்ப் பித்துள்ள சான்றாதாரங்களும் என்னை வியப்பில் ஆழ்த்தின.
சிலப்பதிகார ஆய்வில் ஈடுபட்ட சுவாமி விபுலா நந்தரை யாழ் நூழ் ஆராய்ச்சி என்னும் நீரோட்டம் இழுத்துச் சென்றதுபோல, என்னையும் இவ்வாய்வு மிகவும் ஆழத்திற்கு இழுத்துச்சென்றது. அதன் பய னாக, பாபிலோனிய நாகரீகம், அசுரேனிய நாகரிகம், எபிரேய நாகரிகம், எகிப்திய நாகரிகம், யவனபுர நாக

Page 4
ரிகம், தமிழர் நாகரிகம், சுமேரிய நாகரிகம் என ஆய்வு எல்லை விரிந்து ஏராளமான தகவல்கள் சேர்ந் தன. இவை எல்லாவற்றையுமே தொகுத்து வெளியிடு வது என்றால், அதுவே ஒரு பெரிய நூலாகிவிடும். எனவே அதற்கு முன்னோடியாக் - முன்னுரையாக இக்கட்டுரையை வெளியிடுகிறேன். - -
சுவாமி விபுலாநந்தர் ஜீவியதந்தராக இருந்திருந் தால் “மதங்க சூளாமணி' யை விரித்து எழுத எண்ணி யதுபோல, தொல்லியலையும் விரித்து எழுதியிருப்பார். இத்துறையிலும் “யாழ்நூல்' போன்ற ஒரு பாரிய நூல் கிடைத்திருக்கும். பண்டைய நாகரிகங்கள் பல வற்றுக்கும், தமிழர் நாகரிகமே மூலவேர் என அவர் நிறுவியுள்ள உண்மைக்கு மேலும் பல சான்றாதாரங் களைச் சேர்த்திருப்பார்.'
தொல்லியல் துறையில் துறைதோய்ந்தவர்கள் இவ்வாராய்ச்சியைத் தொடர்வது பயனுள்ளது. எனது ஆற்றலுக்கு எட்டியவாறு இக்கட்டுரையில் முடிந்த அளவு சில தகவல்களைத் தொகுத்துள்ளேன். இக் கட்டுரை இத்துறையில், மேலும் ஆராய்ச்சிக்கு வழி வகுக்கிறது. அத்தகைய ஆய்வுக்கு எனது இச்சிறிய கட்டுரை, தெள்ளிய ஆலின் சிறு பழத்தொரு விதை யாக அமையும் என நம்புகிறேன்.
தங்கேஸ்வரி கதிராமன் மாவட்ட கலாசார உத்தியோகத்தர்
கச்சேரி, மட்டக்களப்பு.
0-9-92.

சுவாமி விபுலானந்தரின்
தொல்லியல் ஆய்வுகள் தரும்
உண்மைகள்.
1. முன்னுரை:
கிரேக்கர்களால் தப்பிரபேன் (தாமிரபரணி) எனவும், அரேபியர்களால் "செரண்டிப்” (சேரன் தீவு) எனவும், பழந் தமிழ் இலக்கியங்களில் "ஈழம்" (ஏழ்பனை நாடு) எனவும், இன் னும் இலங்காபுரி, சைலோன் என்றெல்லாம் பண்டை நாளில் அழைக்கப்பட்டது இலங்கை நாடாகும்
இந்த இலங்கை நாட்டின் வரலாறு பல்லாயிரம் ஆண்டு புழமை வாய்ந்தது. ஏறக்குறைய 6000 ஆண்டுகட்கு முன்பு இன் றுள்ள இலங்கைத்தீவு இருக்கவில்லை. பதிலாக இலங்கையும் ஏனைய தீவுகளும் சேர்ந்த ஒரு பரந்த நிலப்பரப்பு காணப்பட் டது என்பது ஆராய்ச்சியாளர்கள் கூற்று. அந்நிலப்பரப்பே குமரிக்கண்டம் எனவும், லெமூரியா எனவும், மூநாடு எனவும் வழங்கப்பட்டது என்பது அவர்கள் கருத்தாகும்.
இத்தகைய பழம்பெருமை வாய்ந்த இலங்கைத் தீவின் கிழக்குக் கரையிலே அமைந்துள்ளது மட்டக்களப்பு. மட்டக் களப்பின் வரலாறும் பழம்பெருமை வாய்க்கப்பெற்றதேயாகும். கிழக்கு மாகாணத்தின் வரலாற்றிலே ஆதியில் குபேரனும், பின்பு இராவணனும், பின்பு நாகர்களும் தொடர்புடையவர்களாகக் காணப்படுகின்றனர்.2 இராவணன் காலத்தில் தென் இலங்கா புரி என அழைக்கப்பட்ட மட்டக்களப்பிற்கு பின்பு ஏற்பட்ட பெயர். புளியன்தீவு என்பதாகும். எனினும் இப்பெயர் தற்போது ஒரு சிறிய நிலப் பகுதியையே குறிக்கின்றது.*
இவ்விதம் பண்டைய வரலாற்று மூலாதாரங்களைத் தன் னுள்ளே மூடி மறைத்துக்கிடக்கும் மட்டக்களப்பிலே பண்டைய நாட்களில் சிறந்தோங்கி இருந்தது ஒரு இராட்சியப் பிரிவு. அது “சிங்காரவத்தை" என்ற அழகிய பெயரால் அழைக்கப் பட்டது. அதன் அயலிலே அமைந்துள்ள அழகிய கிராமமே
- 1 -

Page 5
காரைதீவு என்பது. இப்படிப் பண்டைய சிறப்புவாய்ந்த காரை தீவிலே பிறந்த அடிகளார்க்கு பண்டைய நூல்களின் ஆராய்ச் சித் திறமையும், வரலாற்று ஆய்வு விருப்பும், தொல்லியல் அறி வும் இயற்கையாகவே இருந்தது எனலாம்.
2. அடிகளாரின் ஆய்வு நோக்கு:
அடிகளார் சமூகப் பணி, இலக்கியப் பணி, கல்விப் பணி, நாடகப் பணி, சமயப் பணி, விஞ்ஞானப் பணி எனப் பல வகையில் தமிழ்ப் பணி ஆற்றியுள்ளார். அத்தோடு அவர் வர லாறு, தொல்லியல் ஆய்வுகளையும் விட்டுவைக்கவில்லை. ஆனால் அவரது வரலாற்று ஆய்வினையோ, தொல்லியல் ஆய்வினையோ எவரும் உள்ளார்ந்து நோக்காமல் விட்டது ஆச்சரியமே.
அடிகளார் வரலாறு சம்பந்தமாகவும், தொல்லியல் சம் பந்தமாகவும் மேற்கொண்ட பணிகள், ஏனைய பணிகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவானவை என்பது உண்மையே. ஆனால் அவற்றை ஆழ்ந்து நோக்குமிடத்து அவர் தமது ஆய் வின்மூலம் பழந்தமிழ் வரலாற்றிற்கும், தமிழர் நாகரிகத்திற்கும் ஆற்றியுள்ள அருந்தொண்டின் முக்கியத் துவம் தெற்றென விளங்குகிறது.
பண்டைத் தமிழரின் வரலாறு தொல்லியல் சம்பந்தமாக ஆராயப் புகுந்த அடிகளார் அப்பணியினை பல்வேறு அணுகு முறையில் செய்துள்ளார். மேலைத்தேய நாகரீகங்களான பாபி லோனிய, எகிப்திய, அசுரேய, யவனபுர, பினிசிய, கிறீட் முத லியவற்றின் தொல்லியல் வரலாறுகளைத் தொட்டுக்காட்டி அவற்றைச் சுருக்கியும், விளக்கியும், ஒப்பிட்டும் ஆராய்ந்துள் ளார். அவற்றைப் பின்வருமாறு தொகுக்கலாம்.
(அ) மேலைத்தேய நாகரீகங்களின் வரலாறுகளை எடுத்துக் காட்டி, அவற்றைப் பண்டைத் தமிழ் நாகரீகங்க ளோடு ஒப்பிட்டு, தமிழர் நாகரீகத்தின் சிறப்பையும்
தொன்மையையும் விளக்கியுள்ளமை. سمي
(ஆ) மறைந்துபோன தமிழ் நூல்களின் விபரங்களையும், அவற்றிடையுள்ள வரலாற்றுத் தகவல் களையும் ஆராய்ந்து தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையை நிறுவியமை.
ツ -س- 2: سسه،

(இ) பழந்தமிழ் நூல்களை ஆராய்ச்சி செய்து, தமிழர் வாழ்வின் அகத்திணை, புறத்திணைச் சிறப்புகள், அவர்கள் போற்றி வளர்த்த அருங் கவின் கலைகள், அவற்றின் பின்னணியில் உள்ள நாகரீகச் சிறப்பு முத லியவற்றை நிறுவியமை.
3. தொல்லியல் பின்னணி :
தொல்லியல் ஆய்வுக்கு, இலக்கிய நூல்கள், மரபுக் கதை கள், கல்வெட்டுகள், செப்பேடுகள், அகழ்வுச் சான்றுகள் முதலி யன உதவுகின்றன. இவற்றின் துணைகொண்டு கால வரை யறை, சரித்திர வரலாறு, புவியியல் வரலாறு, அரசியல் வரலாறு, மொழி வரலாறு, கலாசார, பண்பாட்டு வரலாறு, சமய வரலாறு, பொருளாதார, சமூக வரலாறு முதலியவற்றை உள்ளார்ந்து நோக்கலாம்.
தொல்லியல் ஆய்வை வரலாற்றுக்கு முற்பட்ட காலம் (Pre - History), 6 into Tibade gol-liull- as rob (ProtoHistory), வரலாற்றுக் காலம் (History) எனப் பகுத்துக்கொள்
வது மரபு. ፭፻
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட, பூரணமான சான் றுகளில்லாத காலம் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் எனவும், கல்வெட்டுக்கள், கட்டிடம், சிற்பம், செப்பேடுகள், ஒவியம், நூல்கள் முதலாம் ஆதாரங்களைக் கொண்ட காலம் வரலாற் றுக் காலம் எனவும், இவை இரண்டிற்கும் இடைப்பட்ட காலம் வரலாற்று இடைக்காலம் எனவும் கொள்ளப்படும். அடிகளார் இவற்றின் அடிப்படையிலேயே தன் ஆய்வுகளை மேற்கொண் டுள்ளார்.
தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ள ப் பட்டு அகழ் வாராய்ச்சியின்மூலம் நிறுவப்பட்ட நாகரீகங்கள் சில வருமாறு: யூப்பீரட்டீஸ்-தைக்கிரிஸ் நதிக்கரையிலே செழித்தோங்கி இருந்த சுமேரிய நாகரீகம், சிந்துவெளிக் கரையிலே சிறப்புற்றிருந்த சிந்துவெளி நாகரீகம், குவாங்கோ நதிக்கரையிலே காணப்பட்ட சீன நாகரீகம், நைல் நதிக் கரையிலே காணப்பட்ட எகிப்திய நாகரீகம். இந்நாகரீக வரலாற்றினை அடிகளார் துருவி ஆராய்ந் துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அசுரேனிய, பாபிலோனிய, எகிப்திய, பினிசிய, யவன, கிறீட் முதலாம் நாகரீகங்களை ஆராய்ந்த அடிகளார் அவற்
- 3 -

Page 6
றைத் தமிழரின் பண்டைய நாகரீகத்தோடு தொடர்புபடுத்தும் ஒப்பீட்டு முறை சிறப்பானது. அடிகளாரால் ஆராயப்பட்டுள்ள இந்த மேற்கத்தைய பண்டைய நாகரீகங்கள் எல்லாமே கிறிஸ்து வுக்கு முற்பட்டவை. பெரும்பாலானவை வரலாற்று இடைக் காலப் பகுதியைச் சேர்ந்தனவாகும்.
அடிகளார் தமது ஒப்பீட்டு ஆய்வின்மூலம் பண்டைய மேற்கத்திய நாகரீகங்கள் அனைத்துக்கும் முன்னோடியானது பண்டைய தமிழர் நாகரீகமே என்பதை நிறுவுகிறார். காலத் தால் முற்பட்டதான சுமேரிய நாகரீகம் பண்டைத் தமிழர் நாக ரீகத்துடன் தொடர்புடையது என்றும், திராவிடராலே தோற்று விக்கப்பட்டது என்றும் அவர் நிறுவ முயன்றுள்ளதைப் பல இடங்களில் காணக்கூடியதாக உள்ளது. இவர் இதற்குத் தகுந்த ஆதாரங்களும் காட்டி விளக்கியுள்ளார்.
4. பாபிலோனிய நாகரீகம் :
பாரசீக வளைகுடா முதல் மத்தியதரைக் கடல் வரை யுள்ள பிரதேசமே பாபிலோனியா எனக் கருதப்பட்டது என் றார் அடிகளார். இந்நாட்டை சுமேனிய அக்கேடியம் எனக் குறிப்பிட்டுள்ளார். இதன் எல்லைகள் கிழக்கே ஏலம் எனும் தேசமும், மேற்கே அமோர் எனும் தேசமுமாகும். பிற்காலத்தில் அமோரியர் பாபிலோனியத்தை ஸ்தாபித்தனர். இவர்களது அரசன் பெயர் ஹம்முறா பி. இவனது காலம் கி. மு. 2100க்கு முற்பட்டதெனவும், இவன் உருவாக்கிய சட்டங்கள் மிகப் பழை யவை எனவும் ஆராய்ச்சியாளர் கருதுவர். f
யூப்பிரட்டீஸ் - தைக்கிரீஸ் என்னும் நதிகளின் கரையில் வளர்ந்தவை சுமேரிய, அக்கேடிய, பாபிலோனிய, அசுரேய நாக ரீகங்கள் என விபுலானந்தர் கூறியுள்ளார். ஆனால் இன்று பாபிலோனிய நாகரீகம் என்று கருதப்படுவது சுமேரியாவையும் உள்ளடக்கிய பெரிய நாகரீகமே. யூப்பிரட்டீஸ் - தைக்கீரீஸ் நதி கள் பாயும் பிரதேசமே பாபிலோனியா என்பதாகும். இந்நதிக் கரையில் அமைந்த பாபிலோன் என்னும் பட்டணத்தின் பெயரி லிருந்தே ‘பாபிலோனியா" என்னும் தேசப் பெயர் உண்டா யிற்று. இதுவே பிற்காலத்தில் மெசப்பத்தேமியா என மாற்றம் பெற்றது. இது தற்போது “ஈராக்” என வழங்கப்படும் இட Ldress.
கி. மு. 3500 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு முதல் முதல் குடியேறிய மக்கள் சுமேரியர் ஆவர். பாபிலோனிய நகரத்தை
- 4 - 擎

யும், நாகரீகத்தையும் கட்டியெழுப்பியவர்கள் அவர்கள்தான். இவர்கள் தமிழர்களின் மூதாதையர்கள் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.7 இக்கருத்தினை சுவாமி அன்றே வலியுறுத்தி உள்ளதோடு அதனை விளக்க பல ஆதாரங்களையும் தந்துள் வார். சுமேரியர் என்னும் சாதியினரே முதன் முதல் கட்டிடங் களையும், பட்டினங்களையும் அமைத்தவர் எனவும், அவர்கள் யூத ஆரியர் அல்ல எனவும், இவர்கள் பாஷை திராவிட மொழி யோடு தொடர்புடையது எனவும் பிஷப் கால்டுவெல் கூறியுள்
аттrѓ.8
இங்கு அரசுபுரிந்த அரச பரம்பரையினர்பற்றிய விபரங்கள் (ஹம்முறவி வம்சம் மட்டும் ஓரளவு கூறப்பட்டுள்ளது.) ஆராயப் படாவிட்டாலும் இக்காலத்து இங்கு நிலவிய சமயநிலைபற்றி அறியத்தந்துள்ளார் அடிகளார். இங்கு சூரியன் முக்கிய தெய்வ மாகக் கொள்ளப்பட்டான். சூரியனது பெயர் எல்-வில் எனக் குறிக்கப்பட்டுள்ளது. சூரியனுக்கு நிப்பூரில் பல கோயில்கள் கட்டப்பட்டிருந்ததாக அறியமுடிகிறது. “எரிது’ எனப்படும் பழம்பதி பாபிலோனியர்களின் விசேட ஸ்தலமாக இருந்தது. மேலும் “எயா”, “மார்துக்”, “வேல்”, “மெரொடக்” போன்ற கடவுளர்பற்றிய விபரங்களையும் அறியமுடிகின்றது. பாபிலோ னிய நாகரீகம் காணப்பட்ட இடமெங்கும் படைத்தற் கடவு ளுக்கு “வேல்" எனும் பெயர் வழங்கி இருந்ததையும், இவை அனைத்திலும் சூரியன் கடவுளாக வணங்கப்பட்டதையும் அடிக ளார் குறிப்பிட்டுள்ளார்.
5. அசுரேனிய நாகரீகம்:
ஆசுர் என்னும் பட்டணத்தைத் தலைநகராகக் கொண் டது அசுரேனிய நாகரீகம்.? இது எகிப்திய நாகரீகத்திற்கு முந்தியது எனவும், பாபிலோனியாவுக்கு வடக்கே தைக்கீரிஸ் நதிக்கரையிலே உள்ள ஆசுர், நினிவே என்னும் நகரங்கள் சிறப் புற்று இருந்ததாகவும் அடிகளார் கூறுகிறார். அசுரேனியர் செமித்திய குலத்தவர். மேற்கே கித்தியரும் (இவர்கள் ஆரிய மொழியும், ஆரிய மதக் கொள்கையும் உடையவர்கள்), தெற்கே பாபிலோனியரும் வாழ்ந்தனர்.
ஒரு காலத்தில் பாரசீகம், மீதியம், பாபிலோனியம், ஆர் மீனியம், சீரியம், பலஸ்தீனம், எகிப்தின் சில பகுதிகள் என்பன அசுரேய சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்தன எனவும், அதன் ஆதி பத்தியம்பற்றியும் அடிகளார் ஆராய்ந்துள்ளார்.
- 5 -

Page 7
இங்கும் வரலாறு போன்ற விடயங்கள்பற்றித் தெளிவுற ஆராயாவிட்டாலும் அசுரேனிய சமயநிலைபற்றித் தெளிவாக அறியக்கூடிய விதத்தில் தகுந்த சான்றுகளைக் காட்டியுள்ளார் அடிகள். இங்கும் சூரியனே முக்கிய கடவுளாகக் கொள்ளப்பட் டான்." "மார்துக” என்னும் பெயர் இங்கு சூரியனுக்கு வழங் கப்பட்டதாக அடிகளார் குறிப்பிடுகிறார்.
அக்காலத்து வழக்கிலிருந்த ஏனைய தெய்வங்கள் அனு, வேல், எயா, சின், ஸாமஸ், உல் முதலியனவாம். இங்கு “சின்" கடவுளுக்கு, ஊர், பேர்சிப்பா, பாபிலோன், கலா, துர்சினா போன்ற இடங்களில் பெரிய கோயில்கள் இருந்தன. ஆண்டின் மூன்றாம் மாதம் ‘சிவன்" என்னும் மாதமாகும். இம்மாதம் "சின் கடவுளுக்கு உரியது. இளம் பிறை இவரது சின்னமாகும். இவர் பிறைச் சந்திரனைச் சூடி இருப்பதில் இருந்து இத்தெய்வம் “சிவன்" எனக் கொள்ளலாம். இது மேலும் ஆராயப்படவேண் டியதாகும்.
படைத்தற் கடவுளுக்கு "வேல்" என்றும் பெயர் வழங்கப் பட்டது. பாபிலோனிய நாகரீகத்திலும் இதே விடயம் கூறப் பட்டுள்ளது. பெரும்பாலும் பாபிலோனிய நாகரீகம் எங்கும் படைத்தற் கடவுளுக்கு “வேல்” என்ற பெயர் வழங்கியிருந்ததை அறியமுடிகிறது. மேலும் இங்கு குறிப்பிடப்படும் எல், வேல், ஆசுர், ஊர் போன்ற பெயர்கள் மேலும் ஆராயப்படவேண்டி யவை. இவை எல்லாம் தமிழ் பெயர்கள் என்பது தெளிவுறத் தெரிகிறது. இங்கும் சமய நிலைபற்றி மட்டுமே ஆராய்ந்த அடிக ளார் ஏனைய விபரங்களை ஆராயவில்லை.
6. எபிரேய நாகரீகம் :
எபிரேய மக்கள் எகிப்தியராலும், பாபிலோனிய அசுரேயர் களாலும் அடிமைப்படுத்தப்பட்டமையினால் தம்மை அடிமைப் படுத்திய சாதியினரிடமிருந்தே நாகரீகத்தைப் பயின்றுகொண்ட னர் என அடிகளார் காட்டியுள்ளார். இக்காலத்தில் புகழ் பெற் றிருந்த அரசனை மட்டும் அவர் குறிப்பிடுகிறார். இவர்கள் தமிழ்நாட்டவரோடு கொண்டிருந்த தொடர்பு ஆராயப்படுகிறது. பினிசியர்களின் அரசன் "ஹிராம்" என்பவன். இவன் “தயர்" என்னும் நகரத்தில் வசித்தவன். இவனது துணையுடன் எபிரேய அரசராகிய சொலமேனின் கப்பல்கள் மூன்றாண்டுக்கொருமுறை கிழக்கு தேசங்கட்குச் சென்று ‘ஒபிர்’ என்னும் துறைமுகத்திலே பொன், வெள்ளி, யானைத் தந்தம், மயில், குரங்கு, நவமணி போன்றவற்றை ஏற்றிச்சென்றன. இந்த “ஒபிர்” என்பது
صسست 6 ---

இலங்கைத் தீவாக இருக்கலாம் என்பது அடிகளாரின் கருத்து. இலங்கை பண்டை நாளில் சிறந்த துறைமுகமாக விளங்கியமை யும், இங்கு குறிப்பிட்டுள்ள பொருட்கள் இலங்கைத் தீவிற்கு
உரியன என்பதும் ஈண்டு கவனிக்கத்தக்கது.
7. எகிப்திய நாகரீகம் :
அடிகளார் எகிப்தின் புவியியல் தன்மைபற்றிக் கூறுமிடத்து ஆபிரிக்க கண்டத்தின் வடகிழக்குக் கோடியிலே, நீலநதி பாயு மிடத்தில் அது உள்ளது எனவும், அரபு நாட்டினையும், எகிப்து நாட்டினையும் பிரிப்பது செங்கடலும், சுவெஸ் கால்வாயும் எனவும் குறிப்பிடுகின்றார். மேற்றிசைச் செல்வமும், கீழ்த் திசைச் செல்வமும் ஒன்று சேர்வதற்குரிய நாடாக எகிப்து விளங்கியது என்று அடிகளார் கூறுவது, எகிப்தின் வர்த்தக, கேந்திர நிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறது.
நைல் நதியை சுவாமி "நீலநதி’ என்று குறிப்பிட்டிருப் பது கவனிக்கத்தக்கது. தமிழ் நாட்டிற்கும் எகிப்து நாட்டிற்கும் உள்ள தொடர்பினை இது வலியுறுத்துகிறது எனலாம். எகிப்தி யர் நீலநதிக் கரையை அடைவதற்கு முன்பு கிழக்கிலிருந்து கரை வழியாக வந்ததாக அவர்களது பூர்வ சரித்திரம் கூறுவ தாக அடிகளார் குறிப்பிடுகின்றார்.? ஆகவே இங்கு ஆதியில் தமிழர் நாகரீகம் இருந்திருக்கவேண்டும், அல்லது கீழைத்தேயங் களிலிருந்து சென்ற தமிழர்களால் தமிழ் நாகரீகம் ஸ்தாபிக்கப் பட்டிருக்கவேண்டும் என்பது இவரது கருத்தாகும். இதனையே இன்றைய ஆய்வாளரும் கூறுகின்றனர். தமிழர்களால் நீலநதி என வழங்கிய பெயர் பின்பு 'நீல்" என மாறி, மொழி மாற்றத் திற்கேற்ப "நைல்’ என மாற்றமடைந்தது என்று கருதமுடிகிறது.
இவ்வாறே எகிப்து நாட்டின் பெயரும் ஆராயப்படவேண் டும். எகிப்து நாட்டின் பெயர் "பண்டு” என்றும், பண்டு தாம் இருந்த நாட்டினைப் ‘பண்டு" என வழங்கினரோ எனவும் அடிக ளார் கூறுகிறார்.19 “பண்டு" என்பது பழமையைக் குறிக்கும் தமிழ் சொல்லாகும். எனவே ஆதியில் பண்டு என வழங்கிய பெயர் காலப்போக்கில் மொழி மாறுபட எகிப்து என நிலைத் ததோ எனவும் கருத இடமுண்டு.
ஆதி காலத்தில் உணவுக்காக நாடோடி வாழ்க்கையை மேற்கொண்ட மனிதன் ஓரிடத்தில் தங்கி நிலையான வாழ்க்
- 7 -

Page 8
கையை ஏற்படுத்தியபோது நதிக்கரைகளை அண்டி இருப்பிடம் அமைத்துக்கொண்டான். இப்படி ஏற்பட்ட மனித நாகரீக வளர்ச்சியே சிந்துவெளி, சுமேரியா போன்ற நதிக்கரை நாக ரீகங்களாகும். நைல் நதிக் கரையில் குடியேறிய மக்களும் ஆதியில் நாடோடிகளாக இருந்தனர்போலும். எனவேதான் ஷேக்ஸ்பியர் கூட எகிப்தினை 'ஜிப்சி" எனக் குறிப்பிட்டுள்ளார்."
ஆங்கிலத்தில் "ஜிப்சி" என்றால் நாடோடி எனப் பொருள் படும். இந்த 'ஜிப்சி" என்பதே “ஈஜிப்ற்” என வழங்கப்பட்டு தமிழில் எகிப்து என வழங்கப்பட்டதாகச் சொல்லலாம். அக் காலத்தில் "ஜிப்சி” என வழங்கப்பட்ட இச்சொல் ஹீப்ரு மொழி யில் இருந்து தோன்றியிருக்கவேண்டும். எனவே நாகரீகம் ஆரம் பிக்கும்போது “பண்டு” என வழங்கப்பட்ட பெயர் காலப்போக் கில் எகிப்து என வழங்கப்படலாயிற்று எனவும் கொள்ளலாம். இதுவும் ஆராயப்படவேண்டிய தொன்றாகும்.
அடிகளார், எகிப்தியருடைய அரசியல் பற்றியும் சிறிது ஆராய்ந்துள்ளது கவனிக்கத்தக்கது. அரசியல் வரலாறுபற்றி விபரமாக ஆராயப்படாவிட்டாலும் முக்கியமான சில அரசர் களது பெயர்கள், அவர்களது காலத்து கலை, கலாசாரம், மொழி வளர்ச்சி சம்பந்தமான விடயங்கள் ஆரா யப் பட் டு ஸ் ளன. துத்தங்காமன் என்னும் பூர்வீக அரசனுடைய சமாதி கண்டு பிடிக்கப்பட்டதுபற்றியும், அதனுள் காணப்பட்ட விலை உயர்ந்த ஆபரணப் பொருட்கள்பற்றியும் அடிகளார் குறிப்பிட்டுள்ளார். ஒரு சிறு வழிகாட்டிபோல நின்று அடிகளார் குறிப்பிட்டுள்ள இவ்விடயம்பற்றி இன்று எவ்வளவோ அறியமுடிகின்றது.
தொல்லியல் என்பது இன்று விஞ்ஞானம் சேர்ந்த ஒரு கலையாக மாறியுள்ளது. எத்தனையோ கோடி வருடங்கட்கு முற்பட்ட விடயங்கள் எல்லாம் விஞ்ஞானத்தின் துணைகொண்டு ஆராயப்படுகின்றன. அப்படியான ஒரு குறிப்பிடத்தக்க ஆய்வு இந்தத் துத்தங்காமன் அரசனின் கல்லறைபற்றியது. அடிகளார் இக்கட்டுரை எழுதியதோ 1922ம் ஆண்டு. ஆனால் 1921ம் ஆண்டு பிரபல பிரிட்டிஷ் தொல்பொருளியலாளரான ஹாவக்கு காட்டர் துத்தங்காமனின் புதையலைத் தேடி வெளிக்கொண ரும் முயற்சியில் ஈடுபட்டார்.18 ஆறு ஆண்டுகள் தேடி 1926ம் ஆண்டு இப்பொக்கிஷத்தைக் கண்டுபிடித்தார். இப்பொக்கிஷங் கள் 41 பெரிய பெட்டிகளில் பிரிட்டிஷ் மியூசியத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டன. மேலும் பல விட பங்கள் ஆராய்ச்சியின் பயனாகக் கண்டுபிடிக்கப்பட்டன.
- 8 -

இவ்வாராய்ச்சியின் பயனாக இவன் கி. மு. 1361-1352 வரை எகிப்தை ஆண்ட இளஞ்சக்கரவர்த்தி பராவான் துத்தங் காமன் என்பதும், தனது 18வது வயதிலே அவன் இறந்தவன் என்பதும் பெறப்பட்டன. 22 ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து பல உயிர் களைப் பலிகொடுத்தபின் துத்தங்காமன் சமாதி கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
எகிப்து நாட்டின் செல்வச் செழிப்பினையும், சிறந்த நாக ரீகத்தினையும் காட்ட இந்த துத்தகாமனின் பொக்கிஷம் ஒன்றே போதுமானது. செல்வச் செழிப்பின் காரணமாகப் பல கட் டிடங்கள், கலைகள் உருவாகும் என்பதற்கு எகிப்து நாகரீகம் சிறந்த உதாரணமாகும்.
இங்கு காணப்பட்ட கூர்நுதிக் கோபுரங்கள் (Pyramids) பற்றியும் சுவாமிகள் கூறியுள்ளார். எகிப்திய சரித்திரத்தை ஆராய்வோருக்கு இவை முக்கியமானது எனக் குறிப்பிடுகின் றார்.18 பண்டைய எகிப்தின் நாகரீக வளர்ச்சிக்கு அறிகுறியாக இவை இன்றும் நிலைத்து நிற்கின்றன. பிரேதங்களை அடக்கம் செய்யப் பயன்பட்ட இக்கட்டிடங்கள் பற்றி அடிகளார் விளக்க மாகக் கூறாவிட்டாலும், சுருக்கமாக அவைபற்றிக் கூறியிருப்பது அவரது ஆய்வு நோக்கைப் புலப்படுத்துகின்றது.
பிரமிட்டுகள் பற்றிய மேலும் சில தகவல்கள் வருமாறு:" எகிப்து நாட்டின் இன்றையத் தலைநகரான கெய்ரோவிற்குக் கிழக்கே சுமார் 10 மைல் தூரம் சென்றால் வான் உயர கூம்பு வடிவான இக்கட்டிடங்களைக் காணமுடியும். மூவாயிரம் ஆண்டு களுக்கு முன் இறந்துபோன எகிப்திய அரசர்களுக்குக் கட்டப் பட்ட சமாதிகளே இக்கூர்நுதிக் கோபுரங்கள். இறந்தவர்களின் உடல்களைத் தைலங்கள் இட்டு, வழக்கமாக உண்ணும் உணவு வகை, உடுதுணிகள், படுக்கைகள், பணம், நகை முதலாம் பல வும் நிரப்பி இக்கல்லறைகளை உருவாக்கினர். இன்று இவை "மம்மி" என்ற பெயருடன் வானளாவும் பிரமிட்டுகளாக உயர்ந்து நிற்கின்றன.
எகிப்தினை ஆண்ட பல மன்னர்கள் பற்றி அடிகளார் குறிப்பிடுகின்றார். உசேர்தசன், மோசாஸ், இராமேசு, பெப்பி, ஹைக்ஸோஸ் போன்ற மன்னர்கள் பற்றியும், அவர்களது ஆட்சி பற்றியும் சில தகவல்கள் தரப்பட்டுளளன. மேலும் எகிப்துக் கும், பண்டைய பரத கண்டத்திற்குமிடையே இருந்த பல தொடர்புகள் பற்றியும் அவர் அறியத்தருகிறார்.8
எகிப்திய காலவரையறையில் அடிகளார் கலியாப்த ஆண் டுக் கணக்கையே கையாண்டுள்ளார். பூர்வ எகிப்தியர் ஏழாயி
. مسے 9 ح۔

Page 9
ரத்துச் சில்வானம் வருஷங்களுக்கு முன்னர் இருந்தனர் என்று கூறுகின்றார்.? வேறோர் இடத்தில் "பிரமிட்டுக்கள் ஆறா யிரத்துச் சில்வானம் ஆண்டுகட்கு முற்பட்டது என்கிறார். இவர் சில்வானம் வருஷம் என்று குறிப்பிட்டிருப்பது "ஏறக்குறைய" என்று பொருள்படும்.
8. யவனபுர நாகரீகம் :
எகிப்திய நரகரீகத்திற்குப் பின்பு, யவன நாகரீகம் பற்றி ஆராயப்படுகிறது. இங்கும் பல விடயங்கள் சுருக்கமாகவே ஆராயப்பட்டுள்ளன. இப்பிரதேசங்களின் புவியியல் அமைப் பினை விளக்கும்போது, இந்நாகரீகம் பரவி இருந்த முழுப் பிரதேசம் பற்றியும் சுருக்கமாக விபரிக்கப்பட்டுள்ளது.
"அத்தேனா" நகரம் மேலை நாட்டனைத்துக்கும் அறி வுச் சுடர் பரப்பும் நகரம் எனவும், அதனை அம்மக்கள் " "ஹெல் லோஸ்" என வழங்கினர் எனவும் அடிகளார் குறிப்பிட்டுள் ளார். கலி இரண்டாயிரம் ஆண்டில் அதாவது கி. மு. 1000 ஆண்டளவில் யவனபுரத்தின் வடக்கிலுள்ள அயற் தேசங்களி லிருந்து வந்து குடியேறியவர்கள் இவர்கள் என குறிப்பிட்டுள் ளார் அடிகளார். அவர்கள் வருவதற்கு முன்பு இருந்த மக்கள் "எஜியர்கள்" எனவும், அவர்கள் உயர்ந்த நாகரீகம் உடைய சாதியினர் எனவும் இவர்களும் கிரேத (கீரீட்) தீவாரும் திரா விட வகுப்பினர் எனவும் கூறியுள்ளார்.20 யவனர்களின் பூர்வ தேசம் ஆசியாக் கண்டத்திலிருந்தது எனவும் வலியுறுத்துகிறார். இங்கு பூர்வ யவனர், அக்கேயர், டோறியர், அயோனியர் எனப் பல வகுப்பினர் இருந்தனர் எனவும், இவர்கள் ஒன்று சேர்ந்த பின் 'ஹெல்லோனியர்' என்ற பெயர் ஏற்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார். இவர்களில் ஒரு பகுதியினரான அயோனியர்களே தமிழ் நூல்களிலே யவனர் என்று கூறப்பட் டிருப்பது என்பது அடிகளாரின் கருத்து. இங்கு குறிப்பிட்ட "அத்தேனா" (Athena) நகரமே யவணபுரம் என்றும் கருது கிறார் அடிகளார்.
அதனை மேலும் ஆராயும்போது உள்ளே புதைந்து கிடக் கும் ஆழமான கருத்துகளை நாம் காணமுடியும். ஏஷியர்கள் என்று சுவாமி குறிப்பிட்டுள்ளவர்கள் ஆசியாவில் இருந்து வந்த வர்கள் என்பதனால் அப்பெயர் வழங்கப்பட்டிருக்கலாம். ஆசி யாவில் இருந்து சென்று குடியேறியவர்கள் என்ற கருத்துப் பின்பும் பலரால் முன்வைக்கப்பட்டுள்ளது. "அயோனியர்" என் பது 'யவனர்' ஆனது என்பதை ஆராய்ந்து பார்க்குமிடத்து
- 10 -

பின்வருமாறு கருத்திற்கொள்ள முடியும். அயோனியர் - முன்னே வரும் 'அ' விடுபட்டு "யோனியர்' என்றாகி காலக்கிரமத்தில் "யவனர்' ஆகியிருக்கலாம். இது போன்றே "அதேனா’ என்பது பின்னால் "எதென்ஸ்" ஆகியதோ எனலாம்.
யவனர் வரலாறு பற்றி அடிகளார் அதிகம் ஆராய்ச்சி செய்யவில்லை. அரசர்கள் பற்றியும் தெளிவாகக் கூறவில்லை. ஆனால் கலை, கலாசாரம், சமயம் போன்ற விடயங்களை விபரமாகவும், தெளிவாகவும் விளக்கியுள்ளார். மொழி-பெரும் பாலும் வளர்ச்சியடைந்த ஒரு சமுதாயத்திற்குரிய ஒரு குறியீ டாகும். யவணபுரத்தின் மொழி வளர்ச்சியும், அதன் காரணமாக எழுந்த சிறப்பான நூல்களும் குறிப்பிடத்தக்கன. எழுத்துக்கள் பழந்தமிழ் எழுத்துக்களோடு தொடர்பு உடையன எனவும் ப. க. த. ல. ம. ந. ர. ச. என்னும் எட்டு எழுத்துக்கள் இரு மொழிக்கும் பொதுவானவை எனவும் அடிகளார் விளக்கியுள்ளார்.
தமிழ் மொழி, வட மொழி, யவணபுர மொழி ஆகியவற் றின் வரி வடிவங்களை தெளிவுற ஆராய்ந்து, இவர்கள் எழுத்து வரி வடிவங்களை பினிசியரிடமிருந்து பெற்றதாகவும் அதற் குரிய காலம் கி. மு. 7ம் நூற்றாண்டு எ ன வும் அடிகளார் குறிப்பிட்டுள்ளார்.2 பிணிசிய எழுத்து எகிப்தின் சித்திர எழுத் துக்கு வழி வந்தது என்று நிறுவி மொழியியலிலே பெரிய தொரு ஆராய்ச்சியை அடிகளார் நடாத்தியுள்ளார்.
ஒரு நாட்டின் நாகரீகத்தினை முழுமையாக உணர்ந்து கொள்வதற்கு அக்காலத்து எழுந்த நூல்களை ஆராய வேண் டும். யவணபுரத்திலே எழுந்த தத்துவ நூல்கள், வானசாஸ்திர நூல்கள், சமய நூல்கள், பூகோள, விஞ்ஞான நூல்கள், இலக் கிய நூல்கள் முதலியன பற்றி விளக்கமாகக் கூறுகிறார் அடிக ளார். கிரேக்க நாட்டின் பெரும் புலவர்களுள் ஹோமர் என் பவர் உலகப் புகழ்பெற்ற மகாகவி. இவர் எழுதிய இலிய்ட் (Iiod), ஒடிசி (Odyssy) என்பன இன்றும் புகழ் மணம் பரப்பும் காவியங்களாகும். w
யவணபுரத்து மக்களின் கடவுள் பற்றிக் கூறும் அடிகளார் பூர்வ யவனர் பல தெய்ய வணக்கம் உடையவர் என அறியத் தருகிறார். இவர்கள் வானம், மண் என்பவற்றை தெய்வமாக வணங்கினர். யுராணாஸ் (Uranus) வானத்தையும், கே (ke) என்பது மண்ணையும் குறிக்கும் பெண் தெய்வங்களாகும். இது தமிழர்களின் பெண் தெய்வ வணக்கமான பூமாதேவியை வழி படுவதையும், சிந்துவெளிக் கடவுட் கொள்கையையும் ஒத்திருக்
- 11 -

Page 10
கிறது. சிந்துவெளியில் காணப்பட்ட தாய்த் தெய்வ வழிபாட் டுக்கும் இதற்கும் தொடர்பு இருந்திருக்கலாம்.
வேறும் பல தெய்வங்கள் குறிப்பிடப்படுகின்றன. நீருலகத் திற்குத் தலைவனாக பொசெயிடோ (Posewido) இருளுலகத் தலைவனாக புளுட்டோ (Pluto) தேவலோகத்திற்கு அதிபதியாக ஜீனோ (Juno) தானியத்திற்கு அதிபதியாக சீறஸ் (Ceres) அக் கினிக்கு அதிபதியாக வெஸ்டா (Vesta) அறிவுக் கடவுளாக அப்பலோ (Apollo) ஞானத்திற்கும், வீரத்திற்கும் தெய்வமான பெண் தெய்வம் அத்தேனா (Athena) முதலிய தெய்வங்கள் யவனர் வணக்கத்தில் இடம் பெறுகின்றன. இவை அனைத்தும் யவணபுர சமய நிலையை மட்டுலல்லாது தமிழர் சமயத்துடன் அதற்கு இருந்த தொடர்பினையும் காட்டுகின்றன.
இங்கு காணப்பட்ட தெய்வங்கள் பலவற்றின் பெயர்கள் இருக்கு வேதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனை அடிக ளார் காட்டியிருக்கிறார். “ஐப்பிற்றர்" என்பது ‘த்யாஉஸ்பிற்” (Dyaus Pitar) என்ற வடமொழிச் சொல்லில் சிதைபாகும். இது "த்யாஉஸ்" என்னும் மொழியினது சிதைவாகிய Zeus என்பதாகும். யுராணஸ் என்பது "உராணஸ்" எனவும், இது வட மொழியில் "வருண" எனப்படும் என்றும் குறிப்பிடுகிறார் அடி களார்.2 இவைகள் இருக்கு வேதத்திலும் குறிப்பிடப்பட்டுள் ளன. யவணபுரத்தின் காலம் சம்பந்தமாகவும் ஆராய்ந்த அடிக ளார் கலி 2000 ஆண்டு அளவில் யவணபுரத்திற்கு அயற் தேசங்களிலிருந்து யவனர் குடியேறினர் எனவும், அதற்குமுன்பு ஏஷியாவிலிருந்து வந்தோர் இருந்ததகவும் கூறியிருக்கிறார். கலி ஆண்டு கி. மு. 3102 ஆகும். எனவே கலி 2000 ஆண்டு கள் என்பது கி.மு. 1102 ஆகும். அதேபோன்று ஹோமருடைய காலம் 2057 என்னும்போது, அது கி. மு. 1095 ஆகிறது. அடி களாருடைய இக்காலக் கணிப்பு முறையானது இன்று வரலாற் றாசிரியர்களால் நிறுவப்பட்ட காலத்துடன் ஒத்துப்போவது குறிப்பிடத்தக்கது.
மேலே ஆராயப்பட்ட நாகரீகங்களை விட "கிறீட்" தீவின் நாகரீகம், எழுத்து மொழி பற்றியும் பினீசியருடைய நாகரீகம் பற்றியும் ஏனைய நாகரீகங்களுடன் ஒப்பு நோக்கி அடிகளார் ஆய்வு செய்துள்ளார். இவை கிறீஸ்துவுக்கு முற்பட்ட கால நாகரீகங்களாகும்.
9. தமிழர் நாகரீகம் :
மேற்கத்திய நாகரீகங்களைப் பற்றி ஆராய்ந்த அடிகளார் இறுதியில் தமிழரின் நாகரீகம் பற்றியும், தமிழர் நாகரீகத்தின்
- 12 -

பூர்வீகம் பற்றியும் ஆராய்ந்துள்ளார். ஏனைய எல்லா நாகரீகங் கட்கும் பிறப்பிடம் தமிழர் நாகரீகம் என்பது அவரது கருத்தா கும். மேலும் அவரது சில கருத்துக்கள் வருமாறு:
(அ)
(-2)
(g))
(FqF)
(a)
- (рап)
யவனர்களது பூர்வதேசம் ஆசியாக் கண்டத்திலிருந்
ق . این
யவணபுரத்தில் வசித்தவர்கள் ஏஜியர்கள். இவர்கள் உயர்ந்த நாகரீகம் உடையவர்கள். இவர்களும் கிரேத தீவாரும் திராவிடர்கள்.24
யவண எழுத்துக்கும் பழந்தமிழ் எழுத்துக்கும் ஒற் றுமை உள்ளது.*
எகிப்தியரும் திராவிடரும் ஒரே குல முறையில் வந்த வர்கள். பல்லாயிரம் வருடங்கட்கு முன்பு பண்டு (மலையாள தேசம்) என்னும் நாட்டிலிருந்து வந்தவர் களே எகிப்தியர். யவணபுரத்தார் இவர்களுக்கு மாணாக்கர்.26
கரு நிறமும் நீண்ட மயிரும் நேரிய மூக்கும் உடைய ஒரு சாதியினர் பூர்வ எகிப்திலும் பாபிலோனியாவி லும் வசித்தனர். அவர்கள் இந்தியா முழுவதும் - விசேடமாக இந்தியாவின் தெற்குப் பக்கத்தில் வசித் தனர். இவர்கள் திராவிடர்கள்.?
பாபிலோனிய நாகரீகம் சுமேரிய அக்கேடிய நாகரீகத் திற்கு வழி வகுத்தது. இவைகள் ஸ்தாபிக்கப்பட்ட உண்மைகள், சுமேரிய அக்கேடிய நாகரீகத்திற்கும் தமிழ்நாட்டு பூர்வீக நாகரீகத்திற்கும் ஒற்று மை காணப்படுகிறது. இதற்கு சேர் ஜோன்ஸ்ரன், எச். ஜி. டாவல்ஸ், உவில் ஹட்ஸ்காவென், பிளி ன் ற் ஹிக்ஸ்லி ஆகியோரது கூற்றுக்கள் ஆதாரம்.*
இவ்விதம் தமிழரின் தொன்மையை மேலும் விளக்கியுள்ள அடிகளார் தமிழரது நாகரீகமே உலகின் முதல் நாகரீகம் என நிறுவுகிறார். இதற்குச் சான்றாக பல ஆய்வாளர்களது முடிவு களை அவர் எடுத்துக் காட்டுகிறார்.
திராவிடர் நாகரீகம் என ஆய்வாளர்களால் நிறுவப்பட்ட சிந்துவெளி நாகரீகம் பற்றிய ஆராய்ச்சிக்கு முன் அடிகளார்
--سے 13 سے

Page 11
சங்க காலத்தின் முச்சங்கங்களையும் பற்றி விரிவாக ஆராய்ந் துள்ளார். அவர் தமது ஆய்வில் -
முதற்சங்கம் கி. மு. 4440 எனவும் இடைச்சங்கம் கி. மு. 3700 எனவும் கடைச்சங்கம் கி. மு. 1850 எனவும் கூறுகிறார். அதன் விபரம் பின்வருமாறு:-
தலைச்சங்கம், காஞ்சின வழுதி முதல் கடுங்கோன் வரை 89 பாண்டிய மன்னர்கள் ஆட்சிபுரிந்த காலம். இடைச்சங்கம், வெண்டேர்ச் செழியன் முதல் முடத்திருமாறன் வரை 59 மன்னர் ஆட்சி புரிந்த காலம். கடற்கோளின் பின் முடத்திரு மாறன் கடைச்சங்கத்தை நிறுவினான். இக்கடைச்சங்கம் உக் கிரப் பெருவழுதி காலத்தில் மறைந்தது. இது கிறீஸ்து சகாப்தத் திற்கு சமமான காலம். இறுதிக் கடற்கோள் கி. மு. 7000 ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.?
சிந்துவெளி நாகரீகம் பற்றிய ஆய்வில் அடிகளார் தமது கருத்துக்களைவிடப் பிரபல ஆய்வாளரது முடிவுகளையே முன் வைக்கிறார்.30 அ வை வருமாறு:- மொகஞ்சதாரோவானது மீனாடு, பறவை நாடு, மரங்கொத்தி நாடு, ஏழ்பனை நாடு என் னும் நான்கு பிரிவுடையதாக இருந்தது. "சிவலிங்கம்", "மூவிலை” “வேல்”, “வேளிர் யாழ்” போன்றவை மொகஞ்சதாரோவில் வழங்கின. பிற்கால ஆராய்ச்சிகள் மூலம் சிவவழிபாடு, திரிசூல வழி பாடு, பெண் தெய்வ வழிபாடு போன்றவை நிரூபிக்கப்பட்டுள் ளன. சூரிய வணக்கமும் இன்றைய ஆய்வாளர் மூலம் நிரூபிக் கப்பட்டுள்ளது. ஏனைய வழிபாடுகளான நதி வணக்கம், பலியிடு தல் முதலியன பிற்கால ஆய்வுகள் மூலம் மேலும் வலியுறுத்தப் படுகின்றன. இவை இன்றைய இந்துக்களின் வழிபாட்டுடன் தொடர்புடையன. அத்துடன் இவை பண்டைய சுமேரிய நாக ரீகத்திலும் காணப்பட்டன. எனவே இடம்பெயர்ந்து சென்ற சுமேரிய மக்கள் அங்கும் தமது மூதாதைகளின் வணக்க முறை களையே கைக்கொண்டுள்ளனர் என்பது தெளிவு.
சுமேரியாவுடன் பண்டைய தமிழர்கள் கொண்டிருந்த தொடர்பினைக் காட்ட அடிகளார் காட்டும் ஆதாரங்களை இங்கு தனித்தனியே தொல்லியல் அடிப்படையில் ஆராய்தல் தகும்.
- 14 -

0. பண்டைய தமிழர் நாகரீகத்திற்கும், சுமேரிய நாக
ரீகத்திற்கும் இடையே காணப்பட்ட ஒற்றுமைகள்:
(J)
(4)
(3)
(ஈ)
(2)
(eam)
கட்டிடம், சிற்பம், ஓவியம் ஆகியவற்றில் காணப் பட்ட ஒற்றுமைகள் சிந்துவெளி நதிக்கரையிலே செங் கல்லாலே வீடுகள் கட்டி, வீதிகள் அமைத்து சிறப் புடன் வாழ்ந்த திராவிட மக்கள் தாம் இடம் பெயர்ந்தபோது (இடம்பெயர்ந்ததற்கான காரணம் பின்னே ஆராயப்படும்) தாம் குடியேறிய சுமேரி யாவிலும் செங்கல் கட்டிடங்களையே அமைத்தனர்; இது ஆதியாகமத்திற் குறிப்பிடப்பட்டுள்ளது என ஹோரஸ் சுவாமிகள் குறிப்பிடுவதாக அடிகளார் ஆதாரம் காட்டுகிறார்.*
சுமேரியரது உருவச் சாயல் அவர்களது ஒ வி யங் களிலே புலனாகிறது. R. H. Hall என்பவர் கூறுவ தாவது, 'இக் காலத்து இந்தியரின் உருவச் சாயல் பல்லாயிரம் ஆண்டுகட்டு முன் வாழ்ந்த சுமேரியனின் முகச் சாயலை ஒத்தது”.*
அக்கேதிய நாட்டிலே தெல்லோ நகரத்தில் கண் டெடுக்கப்பட்ட தலைப்பாகை அணிந்த திராவிட னது சிலை, அங்க திராவிட நாகரீகம் பரவியிருந் தது என்பதற்குச் சான்றாகின்றது.
ஊர் என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்ட தேக்கு மரத்துண்டு. இது கி. மு. 5000 ஆண்டளவில் இருந்த வணிகத் தொடர்பைக் காட்டுகிறது.
எழுத்து வடிவ ஒற்றுமை சுமேரியாவில் கண்டெடுக் கப்பட்ட ஆப்பெழுத்து (Cuneiform)* இவை சிந்து வெளியிலே காணப்பட்ட சித்திர எழுத்துக்களை ஒத்தவை. பூர்வ எகிப்தியர்கூட சித்திர எழுத்துக் களையே பாவித்தனர். இக்களிமண் தகடுகள் எகிப் தியரின் கல்லறைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.*
சோதி வட்டம் என்னும் காலக் கணிப்பீட்டு முறை, பாபிலோனியத்தில் உள்ள சாலதேயசம் என்னும் ஊரில் வாழ்ந்த மக்கள் சோழ நாட்டவர் என்பதைக் காட்டுகிறது. இவர்கள் கையாண்ட சோதி வட்டம்
என்னும் காலக் கணிப்பினெஜஇவர்களுக்கு முன்பே
- 15 -

Page 12
தலைச்சங்க காலத்தில் குறிப்பிடப்படுவதனால் இது பண்டைய தமிழ் நாட்டிலிருந்தே அங்கு சென்றி ருக்க வேண்டும்.
இவ்விதம் பல்வேறு ஆதாரங்களைக் காட்டித் தமிழரது நாகரீகத்தின் தொன்மையை நிறுவ முயன்றுள்ளார் அடிகளார்.
11. பழந்தமிழ் நாகரீகத்தின் தொன்மையைக் காட்டும்
பிற ஆதாரங்கள்:-
(1)
(2)
யாழ் வரலாறு:
இசை வரலாற்றுக்கு முன்னேர்டியான யாழ் வரலாற் றினை சு மே ரிய காலத்துடன் தொடர்புபடுத்தி
ஆராய்ந்துள்ள அடிகளார் பண்டைய இசை நூல் ஆராய்ச்சியில் ஈடுபட்டதும் யாழ்நூலை ஆக்கியதும்
குறிப்பிடத்தக்கது. மொகஞ்சதாரோவில் வாழ்ந்த மக்கள் மிதுன ராசியினை "யாழ்' என்னும் பழந் தமிழ் பெயரினாலே வழங்கினார்கள் எனவும் யாழ் உருவத்திலே குறிப்பிட்டார்கள் என்றும் அவர் விளக்கி யுள்ளார். யாழ் வரலாறு காலத்தால் முற்பட் டது. அது திராவிடற்குரியது.
சோதி வட்ட முறை:
காலத்தோடு தொடர்பான சோதிவட்டம் என்னும் முறையை பண்டைத் தமிழர் பாவித்து கால க் கணிப்பு செய்துள்ளனர். இதனை சுவாமி ஆதாரங் களுடன் விளக்கியுள்ளார். இம்முறை, தமிழர் வேறு நாட்டிற் குடிபெயர முன்பே தமிழ் நாட்டில் வழங் கப்பட்ட ஒரு முறையாகும். தலைச்சங்க காலம் மூன்று சோதி வட்டம் எனவும், இடைச்சங்க காலம் இரண்டரைச் சோதி வட்டம் எனவும், கடைச்சங்க காலம் ஒன்றே கால் சோதி வட்டம் எனவும் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.
சாலதேயம் என்பது பாபிலோனியாவில் உள்ள ஒர் இட மாகும். இதன் தலைநகரம் 'ஊர்' என்பதாகும். இங்கு குடி யேறியவர் சோழ நாட்டவர் என்பது ஆய்வாளர்களது முடிபு. இவர்கள் கி. மு. 1400 ஆண்டளவில் குடியேறி இருக்கவேண் டும் என்பர். இங்கு வான நூல் வல்லோர் பலர் இருந்தனர்.
- 16 -

சீரியஸ் (Sirius) விண்மீன் சூரியனோடு சேர்ந்து உதிப்பது 1480 வருடங்கட்கு ஒரு முறையாகும். இதுவே ஒரு சோதி வட்டம் ஆகும். இவ்விதம் கணக்கிடும்போது
தலைச்சங்க காலம் 3 சோதிவட்டம் என்பது (3X1480)
4440 வருடங்களாகும். இடைச்சங்க காலம் 2த் சோதிவட்டம் (24 X 1480)
3700 வருடங்கள் எனலாம். கடைச்சங்க காலம் 14 சோதிவட்டம் (14X 1480)
1850 ஆண்டுகள் ஆகும்.
இதனை அடிகளார் மேலும் ஆராயுமிடத்து சீரியஸ் நட் சத்திரம் உதித்த நாளிலே கடற்கோளினால் தலைச்சங்கம் அழிந்தது எனக் கொள்ளின் அடுத்த சீரியஸ் உதயத்தின்போது கபாடபுரத்து பாண்டிய மன்னன் இடைச்சங்கத்தை தொடக் கினான் என்பது பொருத்தமுடைத்து. அவ்வாறு கொள்ளின் கடுங்கோனுக்கும் வெண்டேர்ச் செழியனுக்கும் இடைப்பட்ட காலம் 1480 வருடங்கள் ஆதல் வேண்டும். இதனுடன் 5550 ஐக் கூட்ட 7030 வருடங்கள் ஆகிறது. இவ்வாண்டளவில்தான் தலைச்சங்கத்தின் இறுதியிலே கடற்கோள் ஏற்பட்டது. இது கி. மு. 7000 ஆணடு வரையில் ஆகும் என்று தெளிவுற விளக்கி யுள்ளார் அடிகளார்.
சதபதப் பிராம்மணத்திலே குறிப்பிட்டுள்ள மனுவந்தரச் சலப்பிரளயம் இதுவே என்கிறார். இப்பிரளயத்தினை கி. மு. 7500க்கு பிந்தியது என்றே அவிநாஸ் சந்திரதாஸ் தனது "இருக்கு வேத இந்தியா' எனும் நூலிலே கூறியுள்ளார். 38 எனவே சதபதப் பிராம்மணத்திலே குறிப்பிட்டுள்ள மனுவந்தரச் சலப்பிரளயமும் மேலே குறிப்பிட்டுள்ள கி. மு. 7000 ஆண்டில் ஏற்பட்ட கடற்கோளும் ஒன்றே என அடிகளார் தெளிவாக விளக்கம் அளிக்கிறார். இக்காலப்பகுதியில்தான் தெற்கே நிலம் கடலில் அமிழ்ந்தது. விந்தியத்திற்கு வடக்கே இருந்த இராஜ புத்தானக் கடல் வற்றியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே இங்கு மேலே விளக்கப்பட்டுள்ள சோதிவட்ட முறையானது பரத கண்டத்திலிருந்து இடம்பெயர்ந்த பண் டைய தமிழர்மூலம் சாலதேயத்தில் சிறப்புற்றிருக்கவேண்டும் என்பது தெளிவுற விளங்குகிறது.
இந்த சோதிவட்ட முறைக்கு ஒப்பானதே தற்போதைய தொல்லியல் கல்வியில் இடம்பெறும் காலக் கணிப்பு முறையான
- 17 -

Page 13
ஆண்டு வட்டம் என்பது. அதாவது சூரியப் புள்ளி (Sunspot) என்பது 11 வருடங்களுக்கு ஒரு தடவை ஏற்படுவது. அப்போது காலநிலையில் மாற்றங்கள் ஏற்படும். சென்ஸ்ரீவ் (Sensitive) எனப்படும் ஒருவகை மரங்கட்கு ஆண்டு வட்டம் உண்டு. ஒவ் வொரு ஆண்டுக்கும் குறிப்பிட்ட ஒரு வட்டத்தினை இம்மரங் களிலே காணலாம். சூரியபுள்ளி ஏற்படும்போது உண்டாகும் காலநிலை மாற்றங்கள் இவ்வட்டங்களிலே பிரதிபலிக்கும். இத் 56)45 U Jü6, g670) al"Lä as6ofüll (Free Ring Date) எனப்படும்.9
12. புராணக் கதைகள் கூறும் உண்மைகள் :
சலப் பிரளயம் சம்பந்தமாக மேற்கத்தைய இலக்கியங் களில் குறிப்பிட்டுள்ள கதையும் தமிழ் நாட்டிலிருந்தே சென் றிருக்கவேண்டுமென்பதே அடிகளாரது கருத்தாகும். இக்கதை கள் தென்நாட்டிலிருந்து வடநாட்டிற்குச் சென்றபின் யூப்பிரட் டீஸ் - தைக்கிரிஸ் நதிக் கரைப் பகுதிக்குச் சென்றன என்பதனை பின்வருமாறு அடிகளார் விளக்கியுள்ளார்."
சத்திய விரதன் என்னும் திராவிட மன்னன் மலையகத் தில் (மலையாளத்தில்) ஒடுகின்ற “கிருதமாலா" என்னும் நதிக் கரையிலே முன்னோர்க்கு நீர்க் கடன் செய்யும்போது மாயோன் சிறு மீனாக வந்து, அவன் கையில் சேர்ந்து, சத்திய விரதனால் வளர்க்கப்பட்டுப் பின்பு கடலைச் சென்றடைகிறான். பிரளய காலம் ஏற்பட்டபோது நாவாய் ஒன்று செய்து சத்திய விரதன் அதிலிருக்க இம்மீன் இழுத்துக்கொண்டு செல்ல இமயமலையில் நெள பந்தனம் என்னும் சிகரத்தையடைகிறான். இவனே மறு பிறப்பிலே மனுவானான் என்பதை H. R. Hal குறிப்பிடுகின் றார்,41
இம்மனு சோழகுலத்து மன்னன், சத்தியம் தவறாதவன். மனுநீதி கண்ட சோழன் என வரலாற்றால் அறியப்படுபவன். இக்குலத்து மன்னன் மனு என்னும் இயற் பெயரையும், சத்திய விரதன் என்னும் சிறப்புப் பெயரையும் உடையோனாய் இருக்க லாம். இவன் கடுங்கோன் என்னும் பண்டைய மன்னன் காலத் தவனாக இருக்கவேண்டும். இக்கதையே பின்பு சுமேரியா சென் றது எனக் குறிப்பிடுகிறார் அடிகளார்.
ஆதாம், ஏவாள் சம்பந்தமான கதையும் இதன் அடிப் படையிலேதான் தோன்றியது எனக் கூறியுள்ளார். ஆதித் தந்தை யாகிய ஆதாம் - ஏவாள் படைத்த வரலாறும், பின்பு இவரது
- 18 -

சந்ததியினர் வரலாறும், அவர்களிலே நீதிமானாக விளங்கிய நோவா (Noah) வின் வரலாறும், அவன் குடும்பத்தினர் சலப் பிரளயத்திலே காக்கப்பட்ட வரலாறும் கிறிஸ்தவ வேதத்திற் கூறப்படுவன. இதிலே கூறப்படும் "நோவா’ என்பதன் நோ" என்னும் பொருளாகிய மநோ என்னும் பெயர் மனு என்பதை ஒத்திருக்கிறது. எனவே சலப்பிரளயக் கதையை எபிரேயர் பாபிலோனியரிடம் பெற்றனர் என்பது அடிகளாரது வாதம். பாபிலோனியர் அதனைத் தமது தாய் நாடான இந்தியாவி லிருந்து கொண்டுசென்றனர் என நாம் கருதலாம்.?
பாபிலோனியத்தில் குறிப்பிட்டிருக்கும் இன்னோர் பழம் வரலாற்று மன்னர் பரம்பரை ஒன்று மிக நீண்ட காலம் அர சோச்சினர் எனக் குறிப்பிடும் புராணக் கதை.8 இதே வரலாறு எகிப்து நாட்டிலும் உண்டு. ஏரோசஸ் எழுதிய கட்டுரையி லிருந்து அலோரஸ் (Aloros) என்னும் மன்னன் 36,000 ஆண்டு கள் அரசுபுரிந்தான் என அறிகிறோம். இவனது வம்சத்தவ னான கிசுத்திரோஸ் (Xisuthros) காலத்தில் சலப் பிரளயம் நிகழ்ந்தது. அப்போது பாரசீகக் கடலில் இருந்து பாதி மீனா கவும், பாதி மனிதனாகவும் உள்ள உவண்ணஸ் தோன்றி மனித னுக்கு எழுத்து முறையையும், நாகரீகத்தையும் கற்பித்தார். இவர்கள் இசுத்திரோஸ் சசிசதிரேன் ஆக இருக்கலாம் என்கி றார். சித்நவிஸ்தீன் என்பான் பேழையினுள் புகுந்து சலப்பிரள பத்தில் காக்கப்பட்டான் எனப்படுகிறது. இக்கதையானது எபி ரேயர் வழிவந்த கதையல்ல. இது தமிழ்நாட்டின் முன்னோர் வழிவந்த பரம்பரைக் கதையே என்கிறார் அடிகளார். அத்துடன் இசுத்திரோஸ் என்பது கசிசத்திரன் ஆக இருக்கலாம் எனவும், கிசுத்திரோஸ், கசிசத்திரன் என்னும் பெயர்களுக்கும் சத்திய விரதன் என்னும் பெயருக்குமுள்ள ஒற்றுமை யையும் அவர் காட்டியுள்ளார்.
அலோறஸ் மன்னன் 36,000 வருடம் ஆட்சிபுரிந்தான் என்பது தொல்காப்பியவுரையிலே ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறிய குறிப்பு ஒன்றினை நினைவூட்டுகிறது.* "நிலத்திருவின் நெடியோனாகிய பாண்டியன் மாகீர்த்தி இருபத்து நாலாயிரம் ஆண்டு வீற்றிருந்தானாதலின் அவனும் அவன் அவையிலுள்ளோ ரும் அறிவுமிக்கிருத்தலின் அவர்கள் கேட்டிருப்ப" என்றலின் தமிழ் மன்னரது அவைக் களந்தாரின் அறிவு மிகுதி தெளிவா கிறது.
கடற்கோளுக்கு முன்பிருந்த இம்மன்னன் 24,000 ஆண்டு வீற்றிருந்தான் என்பது வியப்பைத் தருகிறது. இதே செய்தியே மேலே கூறப்படுவதற்கு ஆதாரமாக அமைந்தது போலும்,
- 19 -

Page 14
மேலும் சுமேரிய மன்னர் எண்மருள் ஒவ்வொருவரும் 18,800 முதல் 43,200 வரையுள்ள ஆண்டுகள் வீற்றிருந்தார்கள் என் னும் செய்தியும் ஈண்டு நோக்கற்பாலது. இதனாலே பண்டு தமிழ் நாட்டில் கூறப்பட்ட அதே வரலாறு தாம் சென்று குடி யேறிய இடங்களிலும் உருவாகி உள்ளது என்ற உண்மை புல னாகிறது.
இங்கு கூறப்படும் வரலாறு ஒன்றிலே உவண்னஸ் (Ovannes) என்பவன் கடலில் இருந்து புறப்பட்டு எழுத்து முறையை யும் நாகரீகத்தையும் கற்பித்ததாகக் கூறப்படுகிறது. இத் தொடர் பில் ஹிரோஸ் அவர்கள் ஸ்பெயின், இந்தியாவில் செய்த ஆராய்ச்சிமூலம் தரும் உண்மைகள் கவனிக்கத்தக்கவை.
இது (News Review 1941ல்) வெளிவந்தது. "கேணஸ்’ (Gannes) என்னும் பெயரையுடைய 'உவனா' (Uvanna) என அவர் குறிப்பிடுகிறார். இது காவற் கடவுளின் பெயராகிய "உவன்ன" ஆக இருக்கலாம். மற்றொரு தலைவன் பெயர் "ஒடகன்" (Odakan). இது தமிழ் 'ஒதக்கோன்' என்பதில் ஐய மில்லை என்கிறார். எனவே பழைய திராவிட மக்கள் இந்தியா வினின்றும் புலம் பெயர்ந்தபாேது இவ்விருவரும் தலைவர் களாக இம்மக்களை அழைத்துச்சென்றனர் எனலாம்.
13. தமிழ் நாட்டவர் இடப்பெயர்வு:-
புராதன குமரிக் கண்டம் கடற்கோளினால் தாக்கப்பட்ட பொழுது (அதாவது சுமார் 6000 ஆண்டுக்கு முன்பு) இடையி டையே ஏற்பட்ட கடற்கோளினால் குமரிக் கண்டத்தின் பரந்த நிலப்பரப்பு தாக்குண்டு சின்னாபின்னப்பட்ட போது அங்கிருந்த மக்கள் இடம்பெயர்ந்திருக்கவேண்டும். மாண்டோ ர் போக எஞ்சியோர் வடக்கே சென்று குடியேறினர். நதிக்கரை ஓரங் களிலே வாழ்ந்து பழக்கப்பட்ட காரணத்தினால் இடம்பெயர்ந்து சென்ற இடமெல்லாம், ஆற்றோரமாகவே அவர்கள் குடியேறி யுள்ளனர். வடக்கே சிந்து நதிக் கரையிலே அவர்கள் நிலைபெற்று சிந்துவெளி நாகரீகத்தைத் தோற்றுவித்தனர். சிலர் அங்கிருந்த படியே மேலும் வடக்கே சென்று யூப்பிரட்டிஸ் - தைக்கிரிஸ் நதிக்கரையிலே நிலைபெற்று பாபிலோனிய நாகரீகம் வளர்த் வனர். இதனையே சிலப்பதிகாரம் கூறுவதாக அடிகளார் குறிப் பிட்டுள்ளார்.46
“மஃதுளியாற்றுடன் பன்மலையடுக் கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி' என்பது சிலப்பதிகாரப் LunTilldåd
- 20 --

ممبر
இதிலிருந்து ஒரு பகுதியினர் வடதிசைக் கங்கையும் இமய மும் கொண்டு சிந்து நதிக்கரையிலே தாம் குடியேறிய நாட் டுக்கு மீனாடு எனப் பெயரிட்டு வாழ்ந்தனர் எனவும், பின்பு கரை வழியாகவும் சுமேரியா சென்றனர் எனவும் அறிய முடி கிறது.
இவ்வாறு இடம்பெயர்ந்த மக்களே சுமேரியாவில் குடி யேறினர் என்பதற்குப் பல ஆதாரங்கள் பிற்காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அண்மையில் சுமேரியாவில் (இன்றைய ஈராக்) 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கலைப் பொருட் களும், மட்பாண்டங்களும், எலும்புக் கூடுகளும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. பிரிட்டிஷ் புதைபொருள் ஆய்வுக் குழுவொன்று நினெவே என்னுமிடத்தில் கண்டுபிடித்த பாத்திரம் அழகான தும் பளபளப்பானதும் மேசையில் வைக்கக்கூடியதுமான ஒன்று. இது 5000 ஆண்டு பழமை வாய்ந்தது எனப்படுகிறது. இதனைச் செய்தவர் வெளிநாட்டவராய் இருக்க வேண்டுமெனச் சிலர் அபிப்பிராயப்படுகின்றனர். ஆனால் வார்சோ பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் பயோடியர் பியலியன்சி, பிரிட்டிஷ் பேரா சிரியர் மக்ஸ் மெலோவன் போன்றோர் இவ்வகையில் செய்துள்ள ஆய்வுகள் குறிப்பிடத்தக்கன.7
அடிகளார் குறிப்பிடுவதுபோல தமிழ் நாட்டிலிருந்து சென்ற குழுவினராலே பாபிலோனியா ஸ்தாபிக்கப்பட்டிருக்க வேண்டுமென்பதே பெரும்பாலானோர் கருத்தாகும்.
பழந்தமிழரின் குடியேற்றம் சுமேரியாவில் மட்டும் நடை பெறவில்லை. ஆரிய குலத்தவராகிய யவனர் கிரேக்க நாட்டை கைப்பற்று முன் அங்கு வாழ்ந்த திராவிட குல மீனவர் (Minoans) கிரேதத் (Greet) தீவிலே குடியேறி உள்ளனர். திராவிட குலத் தின் மற்றொரு பகுதியினர் அரபு நாட்டின் தென் திசையாகிய யேமன் (Yemen) நாட்டிலே குடியேறி அந்நாட்டுக்குப் 'பண்டு' எனப் பெயரிட்டு வாழ்ந்து நீல நதிக்கரையிலுள்ள எகிப்திலே சிறந்த நாகரீகத்தைத் தோற்றுவித்துள்ளார்கள். (கடற்கோளின் போது அரேபியரும் இடம்பெயர்ந்ததாக அறிய முடிகிறது.)
பின்பு ஆபிரிக்காவின் வட பாகத்திலே நு மித் தி யர் (Numidos) பேர்பெரியர் (Bereberians) என்னும் பெயரோடு வாழ்ந்து பின்னர் ஸ்பெயின் தேச ஐபிரியக் குடா நாட்டை அடைந்து வாழ்ந்தனர். பின்பு பிரித்தானிய தீவுகளை அடைந்து துருயிதர் (Druids) என்னும் பெயருடன் வாழ் கி ன் றனர். இவற்றை எல்லாம் ஹேரோஸ் சுவாமிகள் வலியுறுத்துவதாக அடிகளார் விளக்கியுள்ளார்.49
- 2 -

Page 15
இற்றைக்கு ஐந்து சோதி வட்டத்திற்கு முன்னே (கி. மு. 9400 ஆண்டு) உலகம் இருந்த நிலைமை பற்றி அடிகளார் கூறு வது: பாரசீகத்தின் தென்பாகம், மெசப்பத்தேமியா, அரே பியா, சீரியா, எகிப்து ஆபிரிக்காவின் வட பாகம், கிரேததீவு, கிரேக்க நாடு (யவனபுரம்), இத்தாலிய நாடு (ரோமாபுரம்), ஸ்பெயின் நாடு ஆகிய இடங்களில் தமிழ் குடியேற்றங்கள் இருந்தன. சீனத்திலே மஞ்சள் நிற மங்கோலியர் வாழ்ந்தனர். ஆபிரிக்காவின் நடுப் பாகத்திலும், தென் பாகத்திலும், இந்தியா விற் சில இடங்களிலும், கிழக்கிந்திய தீவுகளிலும், லெமூரியா விலிருந்து பெயர்ந்த கருமை நிற நீக்ரோவர் காணப்பட்டனர் பாலஸ்தீனத்திலும், அயல் நாடுகளிலும் செமித்திய குல மக்கள் வாழ்ந்தனர். பாரசீகத்திலும் மத்திய ஆசியாவிலும் மத்திய ஐரோப்பாவிலும் வட துருவ நாடுகளிலும் வெள்ளை நிறமும், நீலக் கண்ணும் செம்பட்டை மயிருமுடைய ஆரிய மக்கள் வாழ்ந்தனர். இவ்வாறு கி. மு. 9400 ஆண்டுகளுக்கு முன் உல கம் இருந்த நிலை பற்றி அடிகளார் ஆய்வுக் கண்ணோட்டத் துடன் கூறியுள்ளனர் 5 சோதி வட்டம் என்பது 5 x 1480 - 9400 ஆண்டுகளாகும். இற்றைக்கு 9400 ஆண்டுகளுக்கு முன்பு உலக நிலை பற்றிய அடிகளாரின் இக்கூற்று மேலும் ஆராயப் பட வேண்டிய விடயமாகும். 玺
14. வரலாற்றுக் கால ஆய்வு:-
அடிகளார் வரலாற்றுக் காலத்து மேற்கத்தைய நாகரீகங் களை ஆராய்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும். பிரித்தானியா, உவெல்ஸ், ஸ்கொட்லாந்து, ஐஸ்லாந்து முதலிய நாடுகளைப்
AMRA பற்றியும் இங்கிலாந்தின் பண்டைய பெயர் வரலாறு பற்றியும் அவர் விளக்கியுள்ளார். இத்தாலி நாட்டினது பண்டைய புகழ் பெற்ற மன்னர்களது வரலாறு முதலியவற்றைக் குறிப்பிடுவ தோடு, ரோமன் வரலாற்றிலே முக்கிய இடம் வகிக்கும யூலி யஸ் சீசரின் வரலாறு பற்றியும் அக்காலத்திலே இயற்றப்பட்ட சிறப்பான இலக்கியங்கள் பற்றியும் விளக்கி அக்கால வரலாற் றினை அறியச்செய்திருக்கிறார் அடிகளார், எலிசபெத் அரசி யரின் தந்தையாகிய 8ம் ஹென்றி மன்னன் காலத்திலே ஆங்கில நாட்டு மதக் கெரள்கையில் ஏற்பட்ட மாற்றம், அம்மன்னன் 6 மனைவியரை மணந்தமை கத்தோலிக்க திருச்சபை இதனை ஏற்றுக்கொள்ளாதபடியினால் அவன் ஆங்கில திருச்சபையை ஏற்படுத்தியமை போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிம்பவங்களை இவர் ஆய்வுரையில் காண்கிறோம்.
سسے 22 سس۔

கிறிஸ்தோபர் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித் தமை போன்ற வர்த்தகம் சம்பந்தமான விடயங்களும் இதில் அடங்கியுள்ளள. 1492ல் கொலம்பஸ் இந்தியாவை கண்டு பிடிப் பதாகக் கூறி அமெரிக்காவை அடைந்த செய்தி நாம் அறிந்ததே. பண்டைக் காலத்திலே அமெரிக்காவிலுள்ள பீரு, மெக்சிக்கோ ள்ன்னும் நாடுகளிலே சிறப்பான நாகரீகம் காணப்பட்டது என வும், இவை மிகப் பழைய காலத்திலே கிழக்கு நோக்கிப் பயணம் செய்த தமிழ் வணிகராலே ஏற்பட்டது எனவும் நிறுவ முயன்ற அடிகளார் இதற்கு சாமான்லால் எழுதிய "இந்து அமெரிக்கா" என்னும் நூலிலிருத்து ஆதாரம் காட்டி விளக்கியுள்ளார்:
சமயக்குரவருள் ஒருவரான திருநாவுக்கரசு சுவாமிகள் எமது நாட்டிலே அவதரித்த காலத்திலே மக்கமா நகரிலே முகமது நபிகள் அவதரித்ததாக குறிப்பிடுகிறார். அத்தோடு வரலாற்றுக் காலம் சம்பந்தமான ஆராய்ச்சியிலே ஆங்கில நாட்டின் பல இராச்சியங்களிலும் எழுந்த சிறப்பான இலக்கியங்கள் பற்றிய வரலாற்றைக் குறிப்பிட்டு விளக்கியுள்ளார். செகசிற்பியர் என் னும் ஆங்கிலக் கவியும் அவரது நாடகங்களும் அடிகளாரை மிக வும் ஈர்த்துள்ளன. செகசிற்பியர் எழுதிய யூலியசீசர் என்னும் நாடகத்தின் சில பகுதிகளின் மொழிபெயர்ப்பை அவர் ஒரு கட்டுரையில் தந்துள்ளார்.
பன்மொழிப் புலமை வாய்ந்த அடிகளார் மேற்கத்திய இலக்கியங்களை தமிழ் மக்களும் படித்து இன்புற வேண்டும் என விரும்பினார். அதனால்தான் அவர் 'மதங்க சூளாமணி" என் னும் நூலில் ஷேக்ஸ்பியரின் நாடகங்களின் மொழிபெயர்ப்பைச் சேர்த்துள்ளார். அத்துடன் செகசிற்பியர், மில்தனார், றைடன் முதலிய ஆங்கிலக் கவிதைகளின் காலம் பற்றியும் அவர் குறிப் பிட்டுள்ளார். இதிலிருந்து அரசியல் வரலாற்றைவிட இலக்கிய, கலை வரலாற்றிலே அவர் ஆர்வம் காட்டுவதைக் காணமுடி கிறது. அவைகளிலே காணப்படும் பண்புகளைப் பழந்தமிழ் நாட்டின் பண்புகளுடன் ஒப்பிட்டுக் காட்டியுள்ளமையும் குறிப் பிடத்தக்கது.
ஆங்கிலக் கவிகளான ஷெல்லி, உவால்டர்ஸ்கோட், உவேட் சுவேத், பைரன், கீத்சு, தெனிசன், றொபர்ட் பிறெளனிங் முதலிய பல கவிஞர்களின் கவிதைகளைப் போற்றியதுடன் தகுந்த விமர் சனமும் செய்துள்ளார். இதனால் அக்காலத்து கவி வளம் பற்றி யும், பொருளாதார வளம் பற்றியும் நன்கு அறிய முடிகிறது. இலக்கிய வரலாறு மட்டுமல்லாது பிரான்சுப் புரட்சிபற்றியும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று, பிற்காலத்து எழுந்த
- 23 -

Page 16
இலக்கியங்கள் பற்றியும், பெர்னாட்ஷோ போன்றோர்பற்றியும் கூறியுள்ளார். இவர் எழுதியுள்ள கிறிஸ்துவுக்குப் பிற்பட்ட கால வரலாறு பெரும்பாலும் இ லக் கி ய சம்பந்தமுடையன வாகவே காணப்படுகின்றது.
இவ்வாறு அடிகளார் கிறீஸ்துவுக்கு முற்பட்ட, கிறிஸ்து வுக்குப் பிற்பட்ட மேற்கத்திய கீழைத்தேய நாகரீக வரலாற் றினை ஆராய்ந்துள்ள முறையில் நம் மேல்நாட்டு நாகரீகங்கள் பற்றி அறிவதோடு அவை எல்லாவற்றிற்கும் முன்னோடியாக தமிழ் நாகரீகம் இருந்தது என்பதையும் ஆதாரங்கள் மூலம் அறிய முடிகிறது.
15. தொகுப்புரை:
அடிகளாரது தொல்லியல் வரலாற்று ஆய்வின் பெறுபேறு களைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்:
(1) தொன்மைமிக்க நாகரீகங்கள் பலவற்றுள் திராவிடர்
(தமிழர்) நாகரீகம் முதலிடம் வகிக்கிறது.
(2) பல மேற்கத்திய நாகரீகங்களின் மூல வேர்கள் தமிழர் நாகரீகத்தில் உள்ளன. அதனால் தமிழர் நாகரீகமே இவற்றுக்கு முன்னோடி ஆகிறது.
(3) தமிழ் நாகரீகத்தின் தொடர்பு அல்லது செல்வாக்கு
மேற்கத்திய நாகரீகங்களில் படிந்துள்ளன.
(4) இவரது வரலாற்று ஆய்வில் மேற்கத்திய இலக்கியங் களின் ஆய்வும் இடம்பெறுகிறது. இம்மேற்றிசைச் செல்வங்களைக் கீழ்த்திசை மக்களும் அறிய வேண்டும் என்பது அவர் விருப்பமாகும்.
(5) பண்டைய நாகரீக மேம்பாட்டுக்கு அவ்வக் காலத்து
இலக்கியங்களும் சான்றுகளாகும்.
f
• Assy 1:1, in 4
32
 
 

3.
4.
15.
6.
7.
18.
9.
20.
ஆதார விளக்கம்
- திராவிடர் தோற்றமும் மேற்கும் - எழுதியவர் டாக்டர் என். லகோவரி த்ரோனோ - லண்டன் மியூசியத்தில் உள்ள
கையெழுத்துப் பிரதி 3500 ஆண்டுகட்கு முற்பட்டது - ஆசிரியர் ஸ்கொட் எரியட். "மட்டக்களப்பு மான்மியம்" - பக், 4, 12, 15. மகாவித்து வான் F. X, C. நடராசா பதிப்பாசிரியர். மட்டக்களப்பு தமிழாராய்ச்சி மகாநாட்டு மலர். (1976) Lu&: 82 - 90. விபுலானந்த ஆராய்வு (பக். 44) தொகுப்பாசிரியர் அருள் செல்வநாயகம்: - வீரகேசரி - கட்டுரை - 8.12.91, 15.9.91.
வீரகேசரி - கட்டுரை - 8.12.91.
history of Ceylon by Dr. G. C. Mendis (P.68) விபுலானந்த ஆராய்வு தொகுப்பாசிரியர் அருள் செல்வநாயகம் பக். 44. பக். 45.
9 y9 பக்தி 51. 99 , Ludi. 54. 罗莎 up ud. 55.
99 Liá. 56. வீரகேசரி கட்டுரை - 8.12.91
r 26.02.78 விபுலானந்த ஆராய்வு தொகுப்பாசிரியர் அருள் செல்வ நாயகம் பக். 58, வீரகேசரி - கட்டுரை - 18.06.1985. செந்தமிழ் தொகுதி 20 பக். 381 - 390 வைகாசி 1922 Luis. 63. விபுலாநந்த ஆராய்வு தொகுப்பாசிரியர் அருள் செல் நாயகம் பக். 56.
விபுலானந்த வெள்ளம் தொகுதி 20, 1922 வைகாசி பக். 56.
- 25

Page 17
、、25.
21. செந்தமிழ் தொகுதி 21, 1923 புரட்டாதி பக். 501-507. 22. ออ yg 23。 gs sy • og
。24。 9 . s by
' ''
26. 泰贸 s
27. 99 s 28. விபுலானந்த ஆராய்வு - அருள் செல்வநாயகம் 44-45. 29. செந்தமிழ் தொகுதி 21, 1923 புரட்டாதி. : 30. Indian Culture (1937) - By Rev. Fr. H. Heros 31. (a) Survey Reports - By Sir John Marshal.
(b) தொல்பொருள் இயலும் தமிழர் பண்பாடும் By
குருமூர்த்தி. (c) Archeology from the Earth - By Morrim. Wheeler. 32. செந்தமிழ் தொகுதி - 1941 - 1942 பக். 193 - 200. 33. Ancient History of the Near East - By H. R. Hall. 34. செந்தமிழ் தொகுதி 39, 1941, 1942 பக். 193 - 200. 35. விஞ்ஞானமும் நாகரீகமும் டாக்டர் ஜோசப் றீட் ஹம் 36. செந்தமிழ் தொகுதி 39, 1941, 1942 பக். 193 - 200. 37. Rig Vedic India - By Abivash Chandra Das. 38. செந்தமிழ் தொகுதி 39, 1941, 1942 - மார்கழி. 39. Archeology. By Sankalya. 40. செந்தமிழ்த் தொகுதி 39, (1941, 1942) பக். 19 - 31.
பக். - 2. பக். wo 3. 警象 Léš. - 4. தொல்காப்பியம் நச்கினார்க்கினியனார் உரை பக். - 15. செந்தமிழ்த் தொகுதி 39, (1941, 1942) பக். - 16. சிலப்பதிகாரம் பக். -- 47. நமது நாடு - பொ சங்கரப்பிள்ளை. uá. - News Review 1941. w Lمسسیس۔ • نقل”
- 26 -


Page 18


Page 19
திருக்கோயில்" என்ற பெயரில் சார்ப்பித்த ஆப்வுக் கட்டுரை கு! ால rற பhறிய புகிட தகவல் ாே 1 து நீண்ட காலம் இந்த ғғ. IIII உத்தியே ாகத்தராகப் பணி புரி மட்டக்களப்பு மாவட்ட கலாசார கிறார். மட்டக்களப்பில் நடைபெ களில் பங்களிப்புச் செய்பவர், னிருந்து உதவுபவர். (மட்டக்கா *յT 3.1- பாக்கத்துச் சால்வை
மட்டக்களப்பு மாவட்ட க கான்ற முறையில் பல கலை நி: கருத்தாங்குகள் முதலியவற்றை செய்தவர். இந்து சமய, கட்ச சாலை, இந்து சமயப் போட்டி பங்குகொண்டு உழைத்து வருபவ
இந்து சமய, கலாசார அை நடாத்திய சாகித்ய விழா, நூல் வான பங்களிப்புச் செய்தவர். பகீரத முயற்சிகளை மேற்கோ கட்டுரைகளை அவ்வப்போது கானா ஆய்வு செய்வதிலும், ே லும் தீவிர அக்கறை கொண்ட
சென், ஜோசப் கத்தோலி
 

உரையாசிரியை
மட்டக்களப்பு. கன்னங் ாடாவைப் பிறப் பி டமாகக் கொண்ட துெ ஸ்ரீ தங்கேஸ் வரி கதிராமன், தொல்வியல் பிறப்புப் பட்டதாரி (காணிப் பல்கலைக் கழகம்). பிரபல தொல்வி பாஸ் பேராசிரியர்க T Gg iTA. பண்டார நாயகி, திருமதி தனபாக்கி பம் குனபாலசிங்கம், திரு. மா க்க ஸ்' பேர்னாண்டோ, திரு. P. சிற்றம்பலம் முதவி யோரிடம் பல்கலைக்கழகக் கல்வி யைப் பெற்றவர். தனது பட்டப்படிப்புக்காக இவர் ளக்கோட்டன் என்றும் மன்னனின் களையும், நிரு பனங் களையும் து சமய, கலாசார அமைச்சில் கலா ந்து தற்போது அவ்வமைச்சின்கீழ் உத்தியோகத்தராகக் கடமையாற்று றும் பல கலை, இலக்கிய நிகழ்ச்சி பல நூல்களின் பதிப்பில் உட ாப்பு ஈசாக் கோயில்கள்-2, தத்தை
முதலியன்)
ாசாரப் பேரவையின் செயலாளர் கழ்ச்சிகள், இலக்கிபக் கூட்டங்கள்,
மிகச் சிறப்பான முறையில் ஒழுங்கு ார அமைச்சின், அறநெறிப் பாட முதலிய நடவடிக்கைகளில் தீவிர II,
மச்சு கண்டியிலும், கொழும்பிலும் கண்காட்சி முதலியவற்றில் நிற்ை ஈழத்து நூல்கள் விநியோகத்தில் ாள்பவர். பல கலை, இலக்கியக் எழுதிவருபவர். கிராமியக் கலை பணுவதிலும், அறிமுகப்படுத்துவதி பர்,
- அன்புமணி.
க்க அச்சகம், மட்டக்களப்பு.