கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுவாமி விபுலாநந்தரின் அடிச்சுவட்டில் கல்வி

Page 1
பேராசிரியர்
பீடாதி
தை
சுவாமி விபுலாநந்

ஈவாமி விபுலாநந்தரின் டிச்சுவட்டில்.கல்வி.
ப. வே. இராமகிருஷ்ணன் பதி / கலை, பண்பாட்டுப் பீடம் லவர் சமூக விஞ்ஞானத் துறை
கிழக்குப் பல்கலைக் கழகம்
தர் நினைவுப் பேருரை - 2
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபை,
மட்டக்களப்பு

Page 2

சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபை மட்டக்களப்பு.
சுவாமி விபுலாநந்தர் நினைவுப் பேருரை - 2 1992 - 02 - 02
சுவாமி விபுலாநந்தரின் அடிச்சுவட்டில். கல்வி
பேராசிரியர். ப. வே. இராமகிருஷ்ணன் பீடாதிபதி / கலை, பண்பாட்டுப் பீடம் தலைவர் / சமூக விஞ்ஞானத் துறை கிழக்குப் பல்கலைக் கழகம்.
தொகுப்பு: STJFL S BLTTg. T. B.A. (Cey) துணைச் செயலாளர். சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் F60), மட்டக்களப்பு.

Page 3
Dr. P. V. Ramakrishnan Dean I Faculty of Arts & Culture Head | Dept. of Philosophy Eastern University.
Swami Vipulamanda and Contemporary Education.
Swami Vipulananthar memorial Lecture - 2 1992 - 02 - 02
Compiled by Kasupathy Nadarajah
w Asst. Secretary. Published by: Swami Vipulamanthar Centinary Committee,
Batticaloa.

தலைமையுரை
35. Su T35 JIT& T, B. A., Dip in Ed., SLEAS. மட் / சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபைத் தலைவர்
மட்டக்களப்பு சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபையினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள சுவாமி விபுலாநந்தர் நினைவுச் சொற்பொழிவுத் தொடரில் இன்று இரண்டாவது நினைவுப் பேருரை இடம் பெறுகின்றது. நினைவுச் சொற்பொழிவின், பொருள்-'சுவாமி விபுலாநந் தரின் அடிச்சுவட்டில் கல்வி.’ நினைவுப் பேருரையை வழங் கவுள்ளார் பேராசிரியர் பி.வி. இராமகிருஷ்ணன் அவர்கள். முதலாவது பேருரையைக் கிழக்குப் பல்கலைக் கழக நுண் கலைத் துறைத் தலைவர் கலாநிதி சி. மெளனகுரு அவர் கள் ஆற்றிய நினைவுச் சொற்பொழிவுத் தொடரினைச் செம்மையும், சிறப்புமுற ஆரம்பித்து வைத்தார்கள். இன்று இடம்பெறவுள்ள 2வது நினைவுச் சொற்பொழிவை அதே பல்கலைக்கழகத்தின் க  ைல த் துறை ப் பீடாதிபதியும், சமூக விஞ்ஞானத்துறைத் த  ைல வருமான பேராசிரியர் வேலுப்பிள்ளை இராமகிருஷ்ணன் அவர்கள் ஆற்றவுள்
ளார்கள் ,
சுவாமி விபுலாநந்த அடிகளாரின் சமூக, கலை, இலக் கிய நோக்குப் பற்றியதாக அமைந்தது கலாநிதி சி. மெளன குரு அவர்கள் பேருரை. அவை ஒவ்வொன்றும் தனித்தனி யாக ஆராயப்பட வேண்டிய துறைகளாகும். இருந்தும் புதுமை நோக்கில் அம் முத்துறைகளில் அ டி க ளா ர து நோக்குபற்றிய அருமையான ஆய்வுக் கண்ணோட்டமாக அமைந்து விட்டிருந்தது முதலாவது நினைவுப் பேருரை. இன்று அடிகளாரது வாழ்வின் பணியாக பரிணமித்திருந்த
i

Page 4
கல்விப் பணியினைப் பொருளாகக் கொண்டு உரை நிகழ்த்து கின்றார் பேராசிரியர் இராமகிருஷ்ணன் அவர்கள்.
கல்வித்துறையினைப் பொறுத்த வரையில் அடிகளார் அன்னாரது ஆசிரியர்களின் பாராட்டைப் பெற்ற மாண வனாக, சிறந்த ஆசிரியராக, ஒப்பற்ற அதிபராக, இராம கிருஷ்ண சங்க ப் பாடசாலைகளின் முகாமையாளராக, தமிழ் நாட்டிலும், ஈழத்திலும், முதல் தமிழ்ப் பேராசிரி யராக, ஈழம் கண்ட தலை சிறந்த கல்வியாளராக, கல் விச் சிந்தனையாளராக விளங்கியவர். கல்வித் துறையில் அடிகளாருக்கு 37 வருட அனுபவமும் ஆக்கப்பாடுகளும் உண்டு.
அடிகளாரது கல்வி முறை எளிமையானது. ஆயினும் முழுமையானது. அவரது அணுகு முறை தாராளத்தன்மை வாய்ந்தது. அது யதார்த்தமானது, அது அடிப்படையா னது, அதில் எதுவும் புறக்கணிக்கப்படவில்லை, எதுவும் மறைக்கப்படவில்லை. மாணவனின் வளர்ச்சியின் ஒவ்வோர் அம்சமும் - உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி, ஆன்மீக வளர்ச்சி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது. ஒழுக் கம், கட்டுப்பாடு, உடற்பயிற்சி, இறைவழிபாடு இவை அடிகளாரது கல்வி முறையில் முக்கிய இடம் பெற்றிருந் தன. சுவாமி விவேகானந்தரது "மனிதனை மனிதனாக் கும்' கல்வி அடிகளாரது கல்வித் தத்துவம், கல்வியுடன் சம்பந்தப்பட்ட முறைகளான கல்வித் தத்துவம், கல்விச் செயன் முறை, தொழிற்கல்வி, உடற்கல்வி, விஞ்ஞானக் கல்வி, பெண்கல்வி, சமயக்கல்வி, பல்கலைக் கழகக்கல்வி, போதனாமொழி, கற்றல், கற்பித்தல் முறைகள் ஆகியவை பற்றி மிகத் தெளிவான, ஆணித்தரமான கருத்துக்களை அடிகளார் கொண்டிருந்தார். அவரது சிந்தனைத் தெளி 6 fig, (I), Soju a gift grgoth 'Education of the whole man' பற்றி அடிகளார் கூறுகிறார்.
e 8

''This is an important topic, where some of the Western Educationists are engaged. Some of their writings exhibit a poverty of conception. Education of the present may pay attention out to the mind and that too do the congnitive aspect of it. The soul has no place at all The existing system of Education both in the West and in the East at its best a mere patch work.
இன்றைய நினைவுப் பேருரையை வழங்குபவர் பேரா சிரியர் வேலுப்பிள்ளை இராமகிருஷ்ணன் மட்டக்களப் புக்குப் புதியவரல்ல. 56 ஆண்டுகளுக்கு முன், விபுலாநந்த அடிகளாரது கல்விச் சிந்தனையின் செயல் வடிவம், செல்லப் பிள்ளை, ஈழத்துச் சாந்தி நிகேதனமாக அவர் உருவாக் கிய சிவாநந்த வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணிபுரிந் தவர். அன்று ஒரு தீவிர பொதுவுடைமைவாதி. இன்று ஒரு தீவிர போக்குள்ள தத்துவாசிரியர்
இவர் பிறந்தது மலேசியாவில். குடும் பத்தொடர்புயாழ்ப்பாணம்- காரைதீவு. கல்வித்துறையில் 35 ஆண்டு காலத் தொடர்பும் பணியும் இவரது சிறப்பாகும். கல்வித் தகைமைகளைப் பொறுத்த வரையில் இவர் முதலில் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் பீ. ஏ. பட்டமும், இலங்கை (1956) - லண்டன் (1967) பல்கலைக் கழகங்களில் கல்வித் துறையில் டிப்ளோமாவும், லண்டன் பல்கலைக் கழகத்தில் M.phil. பட்டமும், லங்காஸ்டர் பல்கலைக் கழகத் தில்(1973)Ph.D. பட்டமும் பெற்றுள்ளார். இவர் தொழில் சார் சேவையினைப் பொறுத்த வரையில் Tribune பத்தி ரிகையின் துணைப் பத்திராசிரியராகவும், 1956 ஆண்டு முதல் 1958 வரை மட்டக்களப்பு சிவாநந்த வித்தியால யத்திலும் 1959 முதல் 1963 வரை திருகோணமலை இந் துக் கல்லூரியிலும் ஆசிரியராகவும் பணிபுரிந்தவர். இவை இரண்டு பாடசாலைகளும் சுவாமி விபுலாநந்த அடிகளா ரினால் ஆரம்பிக்கப்பட்டு அன்னாரைச் சிலகாலம் அதிபரா கக் கொண்டு விளங்கிய கலைக் கல்லூரிகள்,

Page 5
1967 முதல் பல்கலைக் கழகங்களில் இவரது சேவை அமைந்துள்ளது. பேராதனைப் பல்கலைக் கழகத்தில் விரிவு ரையாளராகவும், யாழ் பல்கலைக் கழகத்தில் தத்துவத் துறைத் தலைவராகவும், த ஞ் சா வூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் சைவசித்தாந்தத்துறைப் பேராசிரியராகவும், Benares இந்துப் பல்கலைக் கழகத்தில் ஒப்பீட்டு சமயத் துறை (Comparetive Religion) பேராசிரியராகவும் கடமை யாற்றியுள்ளார். 1986-87 ஆண்டுகளில் பிராந்திய அபிவி ருத்தி அமைச்சில் ஆய்வுப்பகுதியின் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது கிழக்குப் பல்கலைக் கழ கத்தில் சமூகவிஞ்ஞானத்துறைத் தலைவராகவும் கலைத் துறைப்பீடாதிபதியாகவும் பொறுப்பேற்றுள்ளார்.
முன்பு குறிப்பிட்டது போல் இவர் முன்பு பல ஆண் டுகள் இடதுசாரி இயக்கத்தில் தீவிர பங்கு கொண்டிருந் தவர். ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் இத்துறையில் தீவிரபங்கு கொண்டு உழைத்தவர். பார்வைக்கு எளியவர். பழகுவதற்கு இனியவர். மட்டக்களப்புப் பிராந்தியத்தின் கலை கலாசார வரலாற்று ஆய்வில் பெ ரு ம் அக்கறை கொண்டவர். கிழக்குப் பல்கலைக் கழகமும் மட்டக்களப்பு மாவட்டமும் பேராசிரியரும், எனது இனிய நண்பருமான இராமகிருஷ்ணன் அவர்களிடமிருந்து பாரிய எதிர்பார்ப்புக் களைக் கொண்டிருக்கிறது என்று கூறிக்கொண்டு அன் னாரை சுவாமி விபுலாநந்தரின் அடிச்சுவட்டில் . கல்வி எனும்பொருள் பற்றி உரையாற்றுமாறு அ ன் புட ன் அழைக்கின்றேன்.
க. தியாகராசா
தலைவர். சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு
1992 - 02 - 03. விழாச் சபை, மட்டக்களப்பு.
Iv

சுவாமி விபுலாநந்தரின் அடிச்சுவட்டில். கல்வி
பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலுங் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்கு சங்கத் தமிழ்மூன்றுந் தா.
சபைத்தலைவர் அவர்களே, பெரியோர்களே, நண்பர்களே! பேரறிஞராய், சமூகத்தில் நலன் தரும் பெருந்தாக்கத் தையே ஏற்படுத்தி மறைந்த விபுலாநந்த அடிகளாரது நினைவுப் பேருரையையாற்றும்படி வேண்டிக் கொண்ட பெரியார்களுக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், இத் தகையதொரு துறவி, பன்மொழிப் புலமை வாய்ந்த ஆழ்ந்த சிந்தனையாளன், சமூகத்திலேயே பெரும் மாற்றங் களுக்கு வித்திட்டுச் சென்ற விவேகி, - அதனைவிட, நல்ல வரென அழியாப் புகழைத் தேடிக்கொண்ட பெரியார் ஒருவர், கல்வியைப் பற்றிக் கொண்டிருந்த கருத்துக்களை ஆராய்ந்து விளக்க முன்வருவது; பெருந்தயக்கத்தையே ஏற்படுத்துகின்றதென்பதை முற்கூட்டியே கூற விரும்பு கின்றேன்.
துறவிக்கும் புகழ் விரும்பத்தக்கதென்பது அடிகளார் வாயிலாகவே அறிகிறேன். "பொருள் அழிந்து போவது; புகழ் நிலவுவது' என்று கூறுகிறார். நிலையற்ற இவ்வுலக வாழ்க்கையிலே விளைவதற்குரியன இரண்டு: இம்மைப் புகழ், மறுமையின்பம்' எ ன் ற ர ரீர் அடிகளார். இல்லற வாழ்க்கையைப் போற்றிய வள்ளுவரும் "தோன்றிற் புகழு டன் தோன்றுக’ என்றார். புகழைத்தேடிப் புகழைப் பெற முடியாது சிந்தனைத் தெளிவு, வாயால் அடையும் சாத னைத் திறன், அதனைத் தேடித தரும். கரும ஈட்டம்.
O1

Page 6
செயலின் மதிப்பை உணர்ந்தோரும், பயனையடைந்தோ ரும் நன்றி கூறுவதாய் அமையும். இவ்விதமாக புகழைப் புகழ்ந்தவரும், அழியாப் புகழையே பெற்றவருமாகிய ஞானியொருவர், கற்றறிந்தோர் நிரம்பிய சமூகத்தை ஆக்க முயன்ற தத்துவப் பின்னணியைப் புரிந்துகொள்ளும் முயற் சியில் என்னுடன் சேர்ந்து வாருங்களென உங்களை அழைக்கின்றேன்.
புலவர் கோமானென அடிகளார் போற்றும் ஷேக்ஸ்பி யரெனும் நாடகப் புலவனூடாகவே விபுலாநந்தரிடம் செல்வோம்.
'Love's Labour's Lost' 67 glib sldg., p.655dia,606), 15ft Lகத்தில் இப்புலவர் Hotofernes எனும் பேராசிரியரை ஒரு பாத்திரமாக அறிமுகஞ் செய்கின்றார். இப்பேராசிரியர் தமது படித்தறிந்த திறமையை இடம், காலம், சந்தர்ப்ப மென்பவற்றையெல்லாம் பொருட்படுத்தாது, தேவையற்ற வ்கையில் வெளிப்படுத்திக் காட்ட முயல்வது, பிறரை ந்கைக்க வைக்கும் என்பதை விளக்கவே நாடகத்தில் பாத் திரமாக அமைக்கப்படுகின்றார்.
இந்நகைச்சுவை யுணர்த்தும் நாடகத்தை தமிழ் மரபிற் கேற்ப மொழிபெயர்த்துத் தந்தஅடிகளார் இதனைக் காதில் கைம் மிக்க காவலன் சரிதை” என்றும் பேராசிரியரா கிய அப் பாத்திரத்தை "ஒலிவாணன்' எனும் "சட்டாம் பிள்ளை" யென்றும் தமிழாக்கஞ் செய்து திருகின்றார்.
"சட்டாம்பிள்ளை தமது கல்வியை விரித்துக் கூறும் தடபுடலான வாசகங்களெல்லாம் ந்கைக்கிடமாவன’’
எனும் அடிகளாரது வசனம் அழகானதென்பது மட்டுமன்று குட்டியுணர்த்தவும் வல்லது. -
ஷேக்ஸ்பியர் படித்தவரெல்லோர்க்கும் இது இயல்பா
02

கவே உளதெனக் கூறினாரோ அல்லது அவர்களுள் ஒரு சிலருக்கு மட்டுமே இது பொருந்துமெனக் கொண்டாரோ என்பது தெளிவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெளிவு. தடபுடலான வாசகங்களை அவிழ்த்துக் கொட்டுவது ஒரு வரை நகைக்கிடமாக்க வல்லது. இக்கருத்துக்கு அடிகளா ரும் உ ட ன் பாடென்பது, "விரிவஞ்சியவற்றை மொழி பெயர்க்காதுவிடுகின்றோம்" எனக் கூறுவதிலிருந்தே அனு மானித்துக் கொள்ளலாம்.
இத்தகைய ஞானிகளது முன்னெச்சரிக்கையை மனதில் கொண்டு அச்சம் கலந்த நிலையில் நானும் எனது பேரு ரையைத் தொடருகிறேன்.
வேறொரு கட்டத்தில், கற்றறிந்தவரெனத் தன்னைத் தானே அளவிட்டுக் கொண்ட அதே சட்டாம்பிள்ளையின் பக்குவமின்மையை மேலும் விரித்துக் கூறுகின்றார் அடிகளார், ஷேக்ஸ்பியரூடாக, தடபுடலான வசனங்கள் அள்ளி வீசப்படுகின்றன. அதன் பின் ..."இக்காலத்துப் பாட்டும் ஒரு பாட்டா?’ ‘அவர் கவியும் ஒரு கவியா?" என்பதாயுளது சட்டாம்பிள்ளையின் அடுக்கு மொழி. இவை அடிகளாரது மொழி பெயர்ப்பு நடை "பிறர்பாற் குற்றங் காண்பதே தன்னைக் கல்விமானென உலகத்தார் மதிக்கும்படி செய்வதற்குத் தகுந்தவழி யென்றெண்ணிச் சொல்கிறான்" என்கிறார். பயனற்ற கல்வி விளைவிக்கும் போக்கு இது. இதனால் மேலைநாட்டு ஞானி கண்டு அகற்ற விரும்பியது எமது நாட்டு ஞானியின் அங்கீகாரத் தையும் பெறுகின்றது.
அறிவல்லாதது எதுவெனக் காட்ட முயன்ற கிரேக்க ஞானி பிளேட்டோ, பயனற்ற கல்வியெதுவெனவும் தமது "குடியரசு" எனும் நூலில் விளக்குகின்றார். எதிர்மறை வாயிலால் உண்மை நிலையை தரிசிக்க வைக்கும் மார்க்கம் இது. மறுபுறத்தில் ‘கற்பவை எதுவென பிரான்சிய
03

Page 7
சிந்தனையாளனாகிய ரூசோ எ மில்" எனும் தனது நூலில் விரிவாகக் கூறுகின்றார். மாறுபட்ட திசைகளி' னின்றும் உண்மையெனும் ஒரே குறிக்கோளை gy 65) l-ll முயலும் இரு மார்க்கங்கள் சுட்டும் தத்துவங்கள் இவை, அடிகளாரைப் பொறுத்த வரை,இரண்டினையும் இணைக்கு முகமாக, பயனற்றது இதுவென்றும் பயனுள்ளது இது வெனவும் கூறுவதாயுளது எழுத்துக்களும் பணிகளும் மனதைப் பக்குவப்படுத்தி உண்மையை உணர வைப்பதே கல்வியின் தலையாய நோக்கமென்பதை விளக்க பதஞ்சலி முனிவர் யோக சாஸ்திரத்தில் கூறியது மேற்கோளாகின் றது. அவர், உலகில் வஞ்சகத்தைக் காண விரும்பவில்லை என்றும், நற் பண்புகள் இல்லாதிருப்பதையே sGirlst ரென்றும் கூறுகிறார். இங்கு, இனிமேலாகுதல் நற்பண்பு களை அடையவைக்கும் வாய்ப்புண்டு எனும் நம்பிக்கை உருவாகின்றது. (பாத்திரத்தில் நீர் அரைமட்ட மா யு ள் ள தென்றோ அரை மட்டம் வெற்றிடமாய் இருக்கிறதென்றோ காண்பதுவும் காண்பானைப் பொறுத்துள்ளது. ஆசிரிய னும், மாணவனது குறைகளை மேம்படுத்தாது நிறை களை வளப்படுத்த இடமுண்டெனக் கொள்வதே கடமை
யாகும் எனும் நற்செய்தி இது )
கெட்டிக்காரன் ஒருவனுக்கும் சுெட்டித்தனங் காட்ட முயலுபவனுக்குமிடையே பாரதூரமான வேறுபாடுண்டு. ஒருவன் போற்றப்படுகின்றான். மற்றவன் தன்னைத்தானே நகைக்கிடமாக்குகின்றான். ஒன்று புகழ். மற்றது இகழ் முன்னையது நிறை. மற்றது அரைகுறை.
கல்வியின் வாயிலால் நிறைவை அடைபவனென்றால் எல்லாம் அறிபவன் என்பதற்கில்லை. கல்வியோ கரையற் றது; கற்பவரோ சில்வாழ்நாள் பல்பிணிச் சிற்றறிவின் மாந்தர்கள்." என "பயனுள்ள கல்வி யெனும் தனது கட்டுரையொன்றில் கூறுகின்றார் அடிகளார் (செந்தமிழ் 1933 | 34). பெரும் பயண முயற்சியையே கல்வி தன்
04

பொருளாகக் கொண்டு நிற்கும். ஆகவே நிறை என்பது நிறையை இங்கு குறிப்பதாயிராது. நிறையை நாடி நிற் பதையே இது சுட்டும். நிறையை நாடி நிற்பதுவும் தன் குறையைக் கண்டதனால். தன் குறைகளைக் கண்டு உணராதவனிடம் நிறைவு நாட்டமிராது. சோக்கிறடீஸெ னும் கிரேக்க ஞானி தானொரு ஞானஸ்தன் எனக் கூறித் திரிந்தார். ஏனென்று வினாவியபோது தன் குறைகளை உணர்ந்து விட்டதாகக் கூறினாராம்.
குறையென்பது நிறைவின்மை. இதனை உணர்ந்த மாத்திரத்தே ஒருவன் தன் குறைகளை அகற்றிவிட முய லுவான். குறைகளுண்டு எனும் வெட்க உணர்வு. ஒரு வகை அமைதியின்மை. இதனால் எழும் அடக்கம்.
ஒருவன் தன் அறியாமையை அறிவது கடினம். "தம் மையுணரார் உணரார்." இது மெய்கண்ட தேவரது புனித வாக்கு. உணர முயலுவது என்பது வாழ்க்கையில் ஏற்படும் மாபெருந் திருப்பம். மிட்டாய் கொடுத்துத் திருப்ப முடி யாது. இது போலி, வேரறுந்த நிலைக்கே இழுத்துச் செல்லும். இதனையே அரைகுறைக் கல்வியென்கிறேன். போலிகளைப் பெருக்கிக் கொள்வதனால் ஷேக்ஸ்பியர் குறிப்பிடும் சட்டாம் பிள்ளைகளே பெருகிக் கொள்வார்கள். தடபுடலான வார்த்தைகள் - பிறரில் குறை கா ன் பது. நாட்டுப்புற கொச்சையிலே ‘அழகு புழகு, சுளகு பீத்தல்.”
திருப்பமென்பது தானாகவே திரும்புவதாய் இருக்கும். இங்குதான் தவம் ஆரம்பமாகிறது. பரிபக்குவ நிலையைக் குறிக்கும். இன்றோ, பரிபக்குவமென்பதற்கு ‘ஓ’ லெவல் என்பார்கள், "ஏ" லெவல் என்பார்கள். பல்லாயிரக் கணக் கில் பரிபக்குவ நிலை மதிப்பிடப்படுகின்றது. "ஒ"லெவலென் றால் ஆசிரியப் பயிற்சிக் கழகம். "ஏ" லெவல் என்றால் பல்கலைக் கழகம். ஆசிரியப் பயிற்சி யென்றால் - மாத்ஸ், பிசிக்ஸ் என்றெல்லாம் - யந்திரங்களை இயக்குவிக்கும்
OS

Page 8
பயிற்சியையொத்தது. இளம் பிஞ்சுகளையும் இயந்திரங்க ளாக்குவதற்கு. "ஏ" லெவலென்பதற்கு தெருவோரங்க வில் சுவரொட்டிகள், பல்கலைக் கழகங்களுக்குக் குறுக்குப் பாதை காட்டும் ரியூட்டறிகளது விளம்பரங்கள்.
மாணவன் தானாகவே அறிய முயல வேண்டும்- மூயல முடியுமென்பதால், அவனுளடங்கியிருப்பது மாபெரும் ஆன்மசித்சக்தி. மறைபொருளாய் நிற்பதை அறிவதற்குரி யவன். இதனை அருட்டி உரிய திசையில் திருப்ப வைப் பதே ஆசிரியரது பணியாகும். அவரொரு வழிகாட்டி. விமோசனத்திற்குரிய பாதையைக் காட்டுகிறார்.இதனையே அருளுதலெணலாம். பீசுக்காகவல்ல, அன்பின் காரணத்தால். இருளுக்கு மாறு அருள் என்பதும் மனித உருவத்தில் இதுவே. இதனால்தான் தாரத்தோடு குருவும் தலைவிதிப்படி Grasrunt rigssit.
விதியென்பதும் தலையிலடித்து ஒப்பாரி வைக்கும் அளவுக்கு ஏதோ புறத்தே நின்று இயக்குவிக்கும் உந்து சக்தியல்ல. விதி வினையை அடியாகக் கொண்டது. தன் வினை தன்னைச் சுடும். விதித் த ல், தான் ஆணை யிட்ட காரணத்தால் செயல் உருவாகின்றது. அதன் பலா பலன்களை அவரே அனுபவித்தால் அதனை அநியாயமெ னக் கூறயியலாது. நாம் ஆக்கிக்கொள்வதே நாம் கண்ட னுபவிக்கும் உலகம், குயவன் பானையை உருவாக்குவதை யொத்தது. நாம் கூட்டாக ஆக்குவதே சமூகக்தின் வர லாறு, கலை, கலாசாரமென்பவை எனலாம். உணராத நிலையில் வரலாற்றைப் படைக்க முயலுவோர் செயற்படு பொருளாக மாறுவார். விளம்பரங்கள், பிரச்சாரங்களென் பவற்றுக்கும் பலியாகுவர். இது தெய்வீக சக்தியை அருட் டாது. மாறாக, அதனை மறைத்து, வெறுமனே அசுர வேகத்தைக் கிழப்பவல்லது. இதற்கு நாம் சரணாகதிய டைகின்றோம். இத்தகைய போக்குகளைத் தடுத்து நிறுத்தி எம்மையே எம்மை உணர வைப்பவர். பெரியார் - தலை
06

இர், வழிகாட்டி சூழலுக்கு மாறாக எதிர் நீச்சல் போடும் பற்றற்றவர். அத்தகைய நல்லாரொருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை. இத்தகைய நல்ல வரொருவர் இந்த மண்ணிலும் தோன்றினார். பெற்றோ ரிட்ட பெயர் மயில்வாகனம். (முருகன் வள்ளியை விரும்பி வந்த பிரதேசமல்லவா.) தீட்சா நாமம் விபுலாநந்தர். அவரது வாழ்க்கை வரலாறும் நல்லதோர் குருவானவருக் குரிய இலக்கணமாய் அமைந்தது. பாரம்பரிய ஆசான்கள் வாயிலாகவும் மேலைத்தேய சமய துறவிகள் வாயிலாகவும் கல்வி, கேள்விகளால் தாய் மொழி, பிற மொழிகளுடாக இலக்கியங்கள், தத்துவங்கள், கணித, விஞ்ஞானமாகிய துறைகளில் முதன்மை பெற்ற நிலையில், துறவு பூண்டு அறிவுப் பணியாற்றி, புதியதோர் கற்றறிந்த சமுதா யத்தை ஆக்க முயன்ற பெரியார், வழிகாட்டி.
ஆரம்பத்தில் இத்தகைய பெரியாரது கல்வித் தத்து வத்தை விளக்கத் தயங்குகிறேனென்று கூறியிருந்தேன். அதே வேளை என்னிடம் தகைமையுண்டென்றும் கூறுகி றேன். இது தத்துவத்துறையில் ஆராய்ச்சி செய்து கலக லப்பான மேனாட்டுப் பல்கலைக் கழகங்களில் பட்டங்கள் பெற்றதனாலென்று கூறவில்லை. கடந்த கால் நூற்றாண் டாக அதனைக் கற்றும் கற்பித்தும் வருகிறேன் என்பதா னாலுமல்ல. நிலைமை அவ்வாறு இருக்குமாயின் இத்தகைய உறுதி ஏற்பட்டது எதனால்? அடிகளாரே படைத்துக் கண்ணும் கருத்துமாக நிருவகித்து வளர்த்து வந்த கல் விக் கூடத்தில் அன்னாரது தத்துவம் நடமாடிக் கொண்டி ருப்பதை நேரில் கண் டு அனுபவித்த காரணத்தினா லென்றே பதில் கூறுவேன். சிவாநந்த வித்தியாலயமென அவர் பெயரிட்ட அறிவாலயத்தையையே இங்கு குறிப்பி டுகின்றேன்.
அடிகளாரை நேரில் தரிசிக்கும் பாக்கியம் எட்டாது போயிருந்தும், அவர் அடங்கி பத்தாண்டுகளுக்குப் பின்
07

Page 9
அவர் மிதித்த மண்ணில் சில ஆண்டுகள் கடமையாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. இ ள ம் பட்டதாரி. பத்திரிகை ஆசிரியர் தொழிலை வி ட் டு, ப ள் விரி ஆசிரியராக வந்து சேர்ந்தேன். முப்பது ஆண்டுகளுக்குப்பின், இன்று மீண்டும் திரும்பிப் பார்க்கையில், முனிவன் கண்ட கனவு நனவாகி வருவதை நேரி ல் கண்டேனென்றே சொல்லவேண்டும். சாட்சி நிலை. ஏடுகள் வாயிலாகப் பெற்றவையல்ல. வேறு 'யாரோ கூறியதுமல்ல. சற்று அனுபவம் பெற்றுள்ள இன்றைய நிலையில், ஏனைய தத்துவங்கள் நடைமுறைப் படுத்தப்படும் கல்வி நிலையங்களிலும் சாட்சியாய் நின்று கண்ட காரணத்தாலும், அடிகளாரது கருத்துக்களும் பணி களும் தனிச்சிறப்பு வாய்ந்தவையென்றே கூறுவேன்
சற்று ஒதுங்கிய இடத்தில் பள்ளிக்கூடம். பரந்த நிலப் பரப்பில் வேம்பென்றும் ம7 வென்றும் பல தரப்பட்ட தாவர விருட்சம். இடையிடையே சிறு கட்டடங்கள். சிவாலயம், கமலாலயமெனும் மாணவ விடுதிகள். ஆசிரி பர்களுக்கென ஒரு ஆச்சார்ய மந்திர். இவை யாவற்றுக் கும் நடுவே சிவபுரி. இதனுள் அடிகளார் நூல் வாசிப் பதற்கும், தியானிப்பதற்கும், இலக்கியம் படைப்பதற்கு மென ஒரு தனி அறை, புனிதமானதோர் இடத்தில் பரமஹம்சருக்கு ஒரு ஆலயம். அதனைச் சுற்றி வளைத்துப் பூந்தோட்டம் , இயற்கை அழகும் அமைதியும் ஒன்றிணைந்த இச் சூழலில் இளம தலைமுறையினர் சிலர் நெறிப்படுத் தப்படுகின்றனர், (அடிகளாரது சாதனைத் திறனை மிக அழகாக விரித்துக் கூறுகிறார். அவருடன் பணியாற்றிய பெரியார் K. கணபதிப்பிள்ளை அவர் க ள் , த னது Vipulananda a literary biography 67 glib griisa) DIT656)
பட்டின கலாசாரத்தில் தோய்ந்தெழாத கிராமத்துப் பிள்ளைகள். ஒரு சில தேயிலைத் தோட்டத்துப் பிள்ளை களும் வந்து சேர்ந்தார்கள். காலை 5 மணி தொடக்கம் இரவு 10 மணிவரை சிறார்களைச் சலிப்படையாது ஈர்த்து
08

வைக்கும் வேலைத் திட்டம். பல சமயத்துப் பிள்ளைக ளாகையால் அதிகாலையில், உடலைத் தூய்மைப்படுத்திய நிலையில், "எல்லாரும் வாருங்கள், எல்லாரும் சேருங்கள் ஈசனையன்பு செய்வோம். ’ என துதிப்பாடல் ஆரம் பமாகும். நாளுக்குரிய பள்ளிப் பயிற்சி தொடங்குமுன், சுதந்திர நாட்டில் அறிவைத் தேடும் நோக்கம் இதுவென நினைவுறுத்துமுகமாக, வங்கதேசத்து ஞானி இரவீந்திர நாத் தாகூரின் ஆங்கில கீதம் ஒதப்படும்:
மனதில் அச்சமின்றி
தலையும் நிமிர்ந்து நிற்க அறிவும் தடையற்றதாகி நானெனதென்று உலகும் கூறுபடாததாகி சத்தியமே நாவில் நடனமாட மெய்வருத்தும் முயற்சிதன்னும் நிறைவையேநாட பழகிய பழக்கமென்றே பயனிலா மண்வெளியில் தெளிந்த நிதானத்தொரு பதறா நிலையதாய் விரிவடை சித்தினொடு செயலுமென்றே மனதை நீ நெறிப்படுத்தியதாய் விடுபடும் நல்லுலகில், - எந்தையே! என்னாடும் மீள்வதாக.
*தியாக சிந்தையுடைய முதியோர் முன்மாதிரியாயிருப்ப, அவரைப் பின்பற்றியொழுகும் இளையோர் தேசத் திருப் பணியியற்றுவாரெனின் நாடு நலமடையும் என்பதற்கை யமில்லை" என்றார் அடிகளார். கற்பவை கற்ற மாணவ சமுதாயமும் முன்மாதிரியாய் இருக்கவல்ல முதியோராகுவ ரெனும் நம்பிக்கை கொண்டு அதற்கேற்ப பணி புரிந்தார் விபுலாநந்த அடிகள்.
பிள்ளைகள் காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து தம்மைச் சுத்தஞ் செய்ய அதே கிணற்றுக்கு வர இருப்ப தால், நானும் அதற்கு முன்பாகவே அதனைப் பயன் படுத்தும் அவசியம் ஏற்பட்டதாயிற்று இதனைப் போன்று
09

Page 10
கட்டுப்படுத்தும் பல செயல் முறைகளையும் எனதாக்கிக் கொள்ள வேண்டியிருந்தது. நாட் செல்லச் செல்ல நானும் மாணவருக்குரிய வளர்ச்சித் திட்டத்தில்ஒரளவு ஒன்றுபட நேரிட்டது. என்னில் ஏதேனும் வளர்ச்சியை நான் காணக் கூடியதாகவிருந்தால் அது அன்று தொட்டுத்தான் வலுவ டைந்ததென்பேன். ஆசிரியர்கள் பாடத்திட்டங்கள் என்ப வற்றோடு தகுதி வாய்ந்த சூழலும் கல்விக்கு அவசியமென் பதும் உணர்த்தப்பட்டதாயிருந்தது.
ஆன்மீக வளர்ச்சி சம்பந்தமான தொழிற்பாடாகை யால், ஒரு கல்வி நிறுவனத்துக்கு ஞானி யொருவர் கண்ட தத்துவம் அருவமாய் நின்று நெறிப்படுத்த, அதனைச் சாத்தியமாக்கும் கல்விமான்களது தொடர் பணியும் முக்கி யத்துவம் வாய்ந்ததென்பேன். இதன் விளைவுதான் அத னது பரம்பரியமாகும் (tradition). ஏட்டில் வரைபடாத சட்டங்கள். ஆனால் பணிகளில் ஈடுபடுவோர் யாவரும் மதித்துப் பணிவதாயிருக்கும். இதற்கு உறுதுணையாய் நிற்பவரையே குரு சந்தான மென்போம் சுருதியாக உண் மைகளையுணர்ந்து இலட்சியங்களை சிருட்டித்த ஸ்தாபக ஞானியின் பரிபாஷையை புரிந்து கொண்ட சிஷ்ய பரம் பரை குருவானவர் மறைந்ததும் கடமையுணர்வுடன் பணி களைத் தொடருபவர்கள். மாறிவரும் சூழலுக்கேற்ப ஆக் கபூர்வமாக புத்துயிரூட்டுபவர்கள். (இதனால் குரு சந்தா னமில்லா வித்தைக் குளறுபடியை ஏற்படுத்தவல்லதென லாம்.) இதற்காக வேண்டியே தகுதி வாய்ந்த பல கல்வி மான்களை அடிகளாரும் தேர்ந்தெடுத்தார்.அவர்களும் அன் னாரது நம்பிக்கையையிழந்தவராக இருக்கவில்லை. பணி கள் தொடரப்பட்டன. பல பக்குவப்பட்ட இளந் தலைமு றையினர் ஒவ்வொரு வருடமும் விடைபெற்றுச் செல்வதாய் இருந்தது. பல துறைகளில் தலைமைதாங்கிப் பணியாற் றினார்கள். இன்றும் பணியாற்றி வருகிறார்கள். குடும்பத் துக்கும் தலைவரானார்கள்.இதனால் சமூகமும், ஒரளவு பண் படுத்தப்பட்ட நிலையில் புத்துயிர் பெறுவதாயும் இருந்தது*
10 "في

கல்வி சம்பந்தமான அடிகளாரது கருத்துக்கள், பணி கள் பற்றிய ஆய்வுகள் நடத்தத் தயங்குகிறேன் என்றேன். பின்பு, அதற்குரிய தகைமையுண்டென்னும் துணிச்சல் பிறந்தது. இப்பொழுது, தவிர்க்கமுடியாத காரணத்தா லும் ஆய்வை நடத்துகிறேன் எனும் கட்டம் உருவாகி யுள்ளது.
தவிர்க்க முடியாத நிலையென்பது சற்று விளக்க வேண் டியதாய் இருக்கின்றது. ஆய்வுப் பணி தவிர்க்க முடியாது எனக் கூறும் கட்டம் வந்துள்ளது என்பதொன்று கருத்துத் தொடர் அவ்வாறு கூற வைக்கின்றது.உண்மை நிலை,மறுக்க முடியாதிருப்பதால் அதனை யடையும் மார்க்கமும் தவிர்க்க முடியாத முயற்சியாகின்றது என்பது மற்றொன்று. பெறு மதியுள்ளது. ஆகவே, அத்னை அடைவதும் அர்த்தமுள்ள வாழ்க்கைக்குத் தவிர்க்க முடியாததாகின்றது. வாழ்க்கை நிறைவடைவதற்கும் அழகு பெறுவதற்கும் தேவைப்படும் இலட்சியங்களாய் இருப்பன.
பெறுமதியும் அளவிடத்தக்கது நுகர் பண்டங்களைப் போன்று, நெல் சர்க்கரை முதலியவற்றைப் பொறுத் தவரை பண்டமாற்ற மென்பதையும் கடந்து நாணய அளவைக்கொண்டு பெறுமதி வழங்குகிறோம். மனிதரது பசி, போர்வை, உறைவிடம் முதலியவற்றைப் பூர் த் தி செய்வன. பணம் கொடுத்து வாங்கிக்கொள்ளலாம். இவற் றுக்குரிய பணத்தை உழைத்துப்பெற்றுக் கொள்ளலாம். இவ்வித தேவைகள் மட்டுந்தான் பெறுமதியுள்ளவையெனக் கொண்டால், சமூகமும் சீர்குலைந்து நிற்கையில், உழைப் பும் தேவைகளின் எல்லையைத் தாண்டி எல்லையற்ற ஆசை களையடைய விரும்புவதாய் இருக்கும். இங்கு மனிதன் தன் தெய்வீகத் தன்மைகளை யிழந்தவனாய் அசுர கோலங் கொள் வான். இவ்வித உழைப்புக்குரிய கணிதம், விஞ்ஞா னம், மொழி-குறிப்பாக ஆங்கில மொழி முதலிய பயிற்சி யும் தேவைப்படுகின்றது. இன்று, இவ்வித பயிற்சி கல்வி
1

Page 11
கட்டுப்படுத்தும் பல செயல் முறைகளையும் எனதாக்கிக் கொள்ள வேண்டியிருந்தது. நாட் செல்லச் செல்ல நானும் மாணவருக்குரிய வளர்ச்சித் திட்டத்தில்ஓரளவு ஒன்றுபட நேரிட்டது. என்னில் ஏதேனும் வளர்ச்சியை நான் காணக் கூடியதாகவிருந்தால் அது அன்று தொட்டுத்தான் வலுவ டைந்ததென்பேன். ஆசிரியர்கள் பாடத்திட்டங்கள் என்ப வற்றோடு தகுதி வாய்ந்த சூழலும் கல்விக்கு அவசியமென் பதும் உணர்த்தப்பட்டதாயிருந்தது.
ஆன்மீக வளர்ச்சி சம்பந்தமான தொழிற்பாடாகை யால், ஒரு கல்வி நிறுவனத்துக்கு ஞானி யொருவர் கண்ட தத்துவம் அருவமாய் நின்று நெறிப்படுத்த, அதனைச் சாத்தியமாக்கும் கல்விமான்களது தொடர் பணியும் முக்கி யத்துவம் வாய்ந்ததென்பேன். இதன் விளைவுதான் அத னது பாரம்பரியமாகும் (tradition). ஏட்டில் வரைபடாத சட்டங்கள். ஆனால் பணிகளில் ஈடுபடுவோர் யாவரும் மதித்துப் பணிவதாயிருக்கும். இதற்கு உறுதுணையாய் நிற்பவரையே குரு சந்தான மென்போம். சுருதியாக உண் மைகளையுணர்ந்து இலட்சியங்களை சிருட்டித்த ஸ்தாபக ஞானியின் பரிபாஷையை புரிந்து கொண்ட சிஷ்ய பரம் பரை குருவானவர் மறைந்ததும் கடமையுணர்வுடன் பணி களைத் தொடருபவர்கள். மாறிவரும் சூழலுக்கேற்ப ஆக் கபூர்வமாக புத்துயிரூட்டுபவர்கள். (இதனால் குரு சந்தா னமில்லா வித்தைக் குளறுபடியை ஏற்படுத்தவல்லதென லாம்.) இதற்காக வேண்டியே தகுதி வாய்ந்த பல கல்வி மான்களை அடிகளாரும் தேர்ந்தெடுத்தார்.அவர்களும் அன் னாரது நம்பிக்கையையிழந்தவராக இருக்கவில்லை, பணி கள் தொடரப்பட்டன. பல பக்குவப்பட்ட இளந் தலைமு றையினர் ஒவ்வொரு வருடமும் விடைபெற்றுச் செல்வதாய் இருந்தது. பல துறைகளில் தலைமைதாங்கிப் பணியாற் றினார்கள். இன்றும் பணியாற்றி வருகிறார்கள், குடும்பத் துக்கும் தலைவரானார்கள்.இதனால் சமூகமும், ஒரளவு பண் படுத்தப்பட்ட நிலையில் புத்துயிர் பெறுவதாயும் இருந்தது"
O

கல்வி சம்பந்தமான அடிகளாரது கருத்துக்கள், பணி கள் பற்றிய ஆய்வுகள் நடத்தத் தயங்குகிறேன் என்றேன். பின்பு, அதற்குரிய தகைமையுண்டென்னும் துணிச்சல் பிறந்தது. இப்பொழுது, தவிர்க்கமுடியாத காரணத்தா லும் ஆய்வை நடத்துகிறேன் எனும் கட்டம் உருவாகி யுள்ளது.
தவிர்க்க முடியாத நிலையென்பது சற்று விளக்க வேண் டியதாய் இருக்கின்றது. ஆய்வுப் பணி தவிர்க்க முடியாது எனக் கூறும் கட்டம் வந்துள்ளது என்பதொன்று கருத்துத் தொடர் அவ்வாறு கூற வைக்கின்றது.உண்மை நிலை,மறுக்க முடியாதிருப்பதால் அதனை யடையும் மார்க்கமும் தவிர்க்க முடியாத முயற்சியாகின்றது என்பது மற்றொன்று. பெறு மதியுள்ளது. ஆகவே, அத்னை அடைவதும் அர்த்தமுள்ள வாழ்க்கைக்குத் தவிர்க்க முடியாததாகின்றது. வாழ்க்கை நிறைவடைவதற்கும் அழகு பெறுவதற்கும் தேவைப்படும் இலட்சியங்களாய் இருப்பன.
பெறுமதியும் அளவிடத்தக்கது நுகர் பண்டங்களைப் போன்று, நெல் சர்க்கரை முதலியவற்றைப் பொறுத் தவரை பண்டமாற்ற மென்பதையும் கடந்து நாணய அளவைக்கொண்டு பெறுமதி வழங்குகிறோம். மனிதரது பசி, போர்வை, உறைவிடம் முதலியவற்றைப் பூர் த் தி செய்வன. பணம் கொடுத்து வாங்கிக்கொள்ளலாம். இவற் றுக்குரிய பணத்தை உழைத்துப்பெற்றுக் கொள்ளலாம். இவ்வித தேவைகள் மட்டுந்தான் பெறுமதியுள்ளவையெனக் கொண்டால், சமூகமும் சீர்குலைந்து நிற்கையில், உழைப் பும் தேவைகளின் எல்லையைத் தாண்டி எல்லையற்ற ஆசை களையடைய விரும்புவதாய் இருக்கும். இங்கு மனிதன் தன் தெய்வீகத் தன்மைகளை யிழந்தவனாய் அசுர கோலங் கொள்வான். இவ்வித உழைப்புக்குரிய கணிதம், விஞ்ஞா னம், மொழி-குறிப்பாக ஆங்கில மொழி முதலிய பயிற்சி யும் தேவைப்படுகின்றது. இன்று, இவ்வித பயிற்சி கல்வி

Page 12
யொன்றே பரவலாக விநியோகிக்கப்படுகின்றது.அதனையும் சந்தையில் (ரியூட்டறிகளில்) பண ங் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். இவ் வித கல்விதன்னும் தேவைப்படாது எனும் அளவுக்கு நிலைமை மாறுகின்றது.
தட்டுப்பாடான நுகர் பண்டங்களை பங்கிட்டுக்கொள் வதிலோ பிரச்சினைகள் அதிகம். பொதுவாகவே மனித உறவுகளில் பிரச்சினைகள். அவை ஏமாற்றுவது, துரோகம், பொறாமை முதலியன்வ. சமூகமும் ‘'நீ என்னை நம்பி னால் நான் உன்னை நம்புவேன்’ எனும் சீர் குலைந்த நிலை. இங்குதான் பெறுமதியென்பதும் தவிர்க்க முடியாத ஆய்வுக்குட்படுவதாயுள்ளது. சிற்றறிவின் மாந்தர்களாகை யால் ஞானியின் வழிகாட்டலை நாடுகிறோம். சமூகத்தில் சச்சரவுகள், அகம் நோக்கிப் பார்க்கையில் அதிருப்தி, அமை தியின்மை, வெட்கம், குற்றவுணர்வு. ஆகவேதான் ஞான முள்ள வரை நாடிச் செல்கிறோம்
மனித உறவுகளில், இது சரி இது பிழையென்கிறோம் இது அழகானது இது அழகற்றது; இது நல்லது இது கூடாதது; இது செய்யத்தக்கது இது செய்யத்தகாதது; இது ஏற்கத்தக்கது இது ஏற்கத்தகாதது என்றெல்லாம் நமது சாதாரண உரையாடலில் பயன்படுத்திப் பழகிக் கொண்டோம். மதிப்பிடுகிறோம். பெறுமதி வழங்குகின் றோம். இங்கும் அளவுகோல்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இவை, நுகர் பண்டங்களையோ ஏனைய சட பொருட்களையோ அளவிடும் அளவை நிலுவை பணப் பெறுமதி போன்று தெளிவானதும் திட்டவட்டமானதும்
உடன்பாட்டிற்குரியதும் என்பதற்கில்லை.
2 + 2 = 4 இது சரி. சந்திர மண்டலத்திலும் இதனைச் சரியென்றே கூறவேண்டும். ஆனால் மனித உறவுகளில் சரி பிழையென்பது வேறு ரகங்கொண்டது. ஆய்வுமுறை களும் சற்று நுட்பமானதாய் இருத்தல் வேண்டும் நடை
2

முறையில் அவற்றை அனுஷ்டிக்க, தகுந்த பக்குவமுந் தேவை.
நண்பர் ஒருவர் தான் சோதனையில் காப்பியடித்து எல்லாக் கேள்விகளுக்கும் சரிகிடைத்தாகக் கூறி பெருமைப் பட்டார். எழுதிய விடயம் சரியுாக இருக்கலாம். ஆனால் சோதனை எழுதிய முறையைப் பிழையென்கிறோம். ஒரே விடயம் ஒரே சமயத்தில் சரியாகவும் பிழையாகவும் இருக் கமுடியாதல்லவா. இங்கு சரியென்பதும் பிழையென்பதும் வெவ்வேறு துறைகளைச் சுட்டுவனவாக இருக்கின்றன. நண்பர் சோதனைuல் கையாண்ட முறையை ஏனைய அனுபவ சம்பவங்களோடு ஒப்பிட்டுப் பிழையென தீர்ப்ப ளிக்கிறோம். ஏதோவொரு கட்டாயத் தன்மை இதுவே நியமமென்கிறது. இங்கும் சமூகத்துக்குச் சமூகம் நியமமென கருதப்படுபவை சில விடயங்களில் வேறுபடுகி ன் ற ன. இதனால் மோதல்கள் ச்ச்சரவுகள். ஆகவே அனுதாபம், விட்டுக்கொடுக்கும் தாராள மனப்பான்மை என்பனவ யெல்லாம் வலியுறுத்தப்பட வேண்டியனவாக இருக்கின் றன.
அன்றாடவுலகில், இரண்டும் இரண்டும் நான்காகும் என்பது சரியென்பதைப் போன்று வேறு பலவற்றை உண்மையென ஏற்கிறோம். நாட்பொழுது கழிவதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பதனால், அ டி ப் ப  ைட க் கேள்விகளைக் கேட்பதில்லை. சூரியன் நாளைக்கும் கிழக் கில் உதிக்குமென எதிர்பார்த்த வண்ணமே இருப்போம். (சூரியன் நாளைக்கும் கிழக்கில் உதியாதுவிட்டால், அல்ல உதியாமலே விட்டால் - இங்குதான் பிரச்சினை ஏற்படுமே யொழிய வேறு வகைத் தகராறுக்கே இடமிராது. அல்ல, சூரியன் எங்குதான் உதித்தாலும் அதுவே கிழக்கென்போம் உதியாமலே விட்டால் மணிக்கூடு பிழையென்று சொல்லி சற்று அட்ஜஸ்ட் டண்ணிக் கொள்வோம். ) பூமி தன்னைத் தானே சுற்றிவந்தால் ஒருநாட் பொழுது. சூரியனைச்
13

Page 13
சுற்றிவரும் போது ஒரு வருடமென்போம். இது பூமியில் வதியும் எம்மைப் பொறுத்தவரை, எமக்குத் தான் தை பிறந்தால் வழி பிறக்கும். வேறு கிரகங்களில் வாழும் உயிர்களுக்கு இது பொருந்தாது. இவ்விதமான விதிகளை யே அறிவெனச் சொல்விப் பழகிக்கொண்டோம். உலக விவகாரமென்பது இதனினும் குறுகியது. பொருளாதாரத் துறையில் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான விதிகளென் றும் கூறுவார்கள். இவையாவும் அன்றாட வாழ்க்கைக் குரியவை - பொதறிவு, விஞ்ஞானமெனக் கூறுவர். இதற் கேற்ப வாழத்தெரிந்தவர் வாழத்தெரிந்தவராவார். இதற் குரிய வகையில் பயிற்சி - படிப்பதென்றால் "சயின்ஸ்’ என்பார்கள். தொழிற் சந்தைக்கு இளைஞர்களை தயா ராக்குவிக்கும் பயிற்சி. சந்தை நிலையே பள்ளிப் பயிற்சியை நிர்ண யி ப் ப த ரீ க இருக்கும். "சயின்ஸ் தவறினால் *கொம்மர்ஸ் " ஒதுக்கப்பட்டவருக்கென சில பாடங்கள் பள்ளிப் பாடங்களுக்கென வழங்கப்படும் அந்தஸ்த்துக் கேற்ப அவற்றைக் கற்பிக்கும் ஆசிரியர்களது அந்தஸ்தும் வருவாயும்.
资 ఇ
சரி, பிழை ; நல்லது தீயது என்னும் ஒழுக்கத் துறை யிலும் ஒரு வகை மயக்கம் குடிகொண்டுள்ளது. நல்லவ னைக் கெட்டவனென்றும்; கெட்டவனை நல்லவனென்றும் சில கட்டங்களில் வகைப்படுத்திக் கொள்ள முயலுகி றோம். ( இவை சமூகத்தில் பெறுமானங்கள் எத்த கையவை யென்பது மறைமுகமாகக் காட்டுவதாய் இருக் கும். ) வீடு, நிலம், வங்கியிருப்பு எனத் திடீரென சம்பா தித்தவரைப் பார்த்து இப்போது நல்லா யிருக்கிறான் என் போம். (இத்தகையவர் இருப்பதனால் தான் ஏனையோ ருக்கும் மழை யென்பதற்கில்லை ) சில  ைர ப் பார்த்து நொந்துகெட்டுப் போனான் என்கிறோம். நொந்த நிலை யில் அவஸ்தைப்படுகிறவனைக் கண் டு கெட்டவனென முடிவு கொள்கிறோம். ஒழுக்கத் துறையிலும் மதிப்பீடுகள் பெறுமதிகள் குளறுபடியடைந்த நிலை:
器 警 安
14

இத்தனை விளக்கமும் ஏதோ ஒரு காரணத்தினால் தான் எழுப்புகின்றேன். விபுலாநந்தர் - அடங்கி 45 வருட காலமான பின்னும், இன்று இங்கு விபுலானந்தர் எதற்கு? பிறந்து நூற்றாண்டுகளாகின்றன - உயிருடன் இருந்தால் நூறாவது பர்த்டே அதுவா? இல்லை. இந்த மண்ணில் பிறந்தவர். அவரடைந்த புகழ் காரணத்தினால் நாமும் பெருமைப்படுவதற்கு இடமுண்டு. மறுக்கவில்லை, ஆனால் புகழைப் பங்கு போட முடியாது. இயற்றிய நூல்களிலோ அழகான தமிழ் நடை. ஆனால் இது படித்துச் சுவைப்பவர் அனுபவிக்கும் தனிப்பட்டவரது இன்பம். எழுத்தறிவித்த வர். ஆகவே நன்றிக்கடன் ஆனால் அவரிடம் கல்வி கற்ற வரெல்லாம் இ ன் று அறுபதைத் தாண்டிவிட்டார்கள். பள்ளிக்கூடங்கள் எங்கும் நிறுவி ஒரு குருசந்தானத்தையே ஏற்படுத்தித் தந்தவர். ஆனால் 1960 ம் ஆண்டோடு அர சாங்கம் இதற்கும் முற்றுப் புள்ளி போடத் தொடங்கிற்று நிலைமைதான் இவ்வாறு இருக்கையில் 'இன்று' இங்கு விபுலாநந்தர் எதற்கு?
வழிகாட்டி. இதற்கும் மறுப்புத் தெரிவிக்க முயலலாம்: உயிருடன் இருந்தால் வயது நூறாகி விடுமென்றேன். இந்த நூறு வயதுத் தாத்தாவா வழிகாட்டி - அவர் பழங்கால மல்லவா? ஆம், வதியும் வீடு, உடுக்கும் உடை, காலணி, போக்குவரத்து வாகனம், சினிமா இசை முதலியவைஇவற்றோடு நமது உடலும் - வந்து, நின்று போவதெனும் மூவினைக்குரியன. இளந் தலைமுறை இதனைப் பழங்கால மென்றே அழைக்கும். இங்கு பழசுக்குப் பெறுமதியில்லை. பழசை விளம்பரப்படுத்துவதில் இலாபமேதேனும் இருக் காது. ஆகவே காலத்தோடு அழியவிட வேண்டியது தான்.
தோற்றம் நாசம் என்பதற்குரிய அனுபவம் தரும் உலகையும் காரண காரிய முறைகொண்டே விளக்கந்தர முயலுகின்றது இன்றைய விஞ்ஞானம் - பொது விதிகளின் அடிப்படையில், முன்னைய நிகழ்வு பின் தொடர்வதோடு
15

Page 14
ஒரு கட்டாயத் தொடர்பு கொண்டிருப்பதாகக் கருது கிறோம் - பல இவ்வகைச் சம்பவங்களைக் கண்டனுபவித்த காரணத்தால். இதுவரை இவை பிழைபோகவில்லை. இனி மேலும் அவ்வாறே இருக்கலாமெனும் அளவுக்கு நிச்சயத் தன்மையை உறுதிப்படுத்துவதாக இல்லை. உதாரணமாக, வான் நிலை ஆராய்ச்சியாளரும் மழை நிச்சயமாகப் பெய்யும் என்று கூறமாட்டார்கள். பெய்யலாமென்றே சொல்வார்கள். இதனால் விஞ்ஞான விதிகளும் நிகழ்தக வுத் தன்மை கொண்டதாகவே இருக்கின்றன. இவையா வும் உலகம் இவ்வாறுதான் இயங்குகின்றது எ ன் ப ைத விளக்க உதவுவனவேயொழிய, உலகம் எவ்வாறு இயங்க வேண்டுமெனக் கூற முயலுவதில்லை. விஞ்ஞான ஆய்வு முறை இதற்கு இடமளிப்பதாகவில்லை. உலகம் இவ்வாறு தான் இயங்குகின்றது எனக் கருதுவதற்குத் தன் னு ம் நிகழ்வுகளில் ஏதோ ஒரு ஒழுங்கு இருக்கத்தான் வேண்டும் எனும் நம்பிக்கை பின்னணியாக இருக்கின்றது.
நிகழ்வுகளுக்கு அடிப்படையாக ஒரு ஒழுங்குண்டு எனும் நம்பிக்கை வெறும் பிடிவாதமாக மாறக்கூடும். மறுபுறத்தில் இத்தகைய நம்பிக்கையிலேயே நம்பிககையிழந் ததாகவும் நிலைமை மாறக் கூடும். நம்பிக்கைதான் தொட ருமாகில், மனித வாழ்க்கை முழுவதுமே நிர்ணயிக்கப்ப டுவதாய் கருதப்படும். தாமாகச் சிந்தித்து செயலாற்றும் திறன் மறுக்கப்படுவதாய் அமையும். சமூகத்தையும் தனி யார் வாழ்க்கையையும் நெறிப்படுத்தும் தர்மத்திற்கு இட மில்லாது போய் விடும்.
தர்மமென வாழ்க்கை நியமங்களுக்கு கால அளவைக் குட்படாது ஆதாரமாய் நின்று முண்டுகொடுக்கும் சக்தி யுண்டு என்பதில் நம்பிக்கை யிழந்த காலம் இது அதே வேளை, தர்மத்தை ஏற்காது எதிர்மறையான போக்கு உருவாகும் வேளை அவதார புருஷர் தோன்றுவார் எனும்
16

நம்பிக்கையும் எமது பாரம்பரியத்திலுண்டு நழுவிடும் போக் குகளுக்கு எதிராக எதிர் நீச்சல் போடுபவர்களையே அவ த7ர புருஷர் என்பது வழக்கு. பல நூற்றாண்டுகளாக அந்நியர் ஆட்சி. மக்களும் தன்னம்பிக்கை யிழந்த காலம் அக்கட்டத்தில் நிலை தளராது சிந்தனைத் தெளிவுடன் ஆண்மைமிக்க ஞானி ஒருவர் பணி புரிந்து வைதிக தர் மத்தை மீண்டும் நிலைநாட்ட முயன்றார். முயற்சியின் பயனாக வெற்றியும் கண்டார். எத்தகைய மனிதன்? எத் தகைய சமூகம்? அதற்கு இளந் தலைமுறையினரைப் பக் குவப்படுத்த எத்தகைய கல்விமுறை? இதற்கு மூலமாயுள்ள தத்துவக் கருத்துக்கள் யாலை? இத்தகைய விசாரணை தான் அன்னாரை நினைவுறுத்திக்கொள்ளும் பேருரையாக இப்போது நடைபெறுகின்றது. "விழுப்பத்தைத் தருகின்ற ஒழக்கத்தை விருத்தி செய்யுங் கல்வியே கல்வி; ஏனைய கல்வி கல்வியெனப்படமாட்டாது ' என்றார் அடிகளார். ஆகவேதான் ஆய்வும், உலகம் எவ்வாறு இயங்குகின்றது என்பதிலிருந்து விலகி எவ்வாறு இயங்க வேண்டுமென்ப தைத் தொடுவதாய் இருக்கின்றது. "ஆண்மைதரும் கல்வி' என்றார் விவேகானந்தர். அக்குரு சந்தானத்தைச் சேர்ந்த தமது அடிகளார் “ஆண்மை" க்கு 'ஆளுந்தன்மை' என்றே பொருள் வழங்குகின்றார். தன்னைத் தானே ஆளுந் தன் மையே பூரண சுதந்திர நிலையாகும். விடுபட்ட நில்ை. தளர்ச்சியுற்று விரக்தியடையுங் காலங்களில் நிலைதளராது நிற்க உறுதிப் பொருளாய் நின்று உயிரூட்ட வல்லது. இவ்வித சுதந்திர புருஷர்களேவரலாறறைப் படைக்க வல்லவர். இவர்கள் ஏற்பது ம் ஏற்று நடப்பது மே ஒழுக்கமாகும். "இன்று, இங்கு விபுலாநந்தர் எதற்கு?" எனும் கேள்விக்கு இதுவே நான் தரும்விளக்கமாகும். ஆய்வு ம் தொடருகிறது. தொடர்ந்து கொண்டே போக வும் வேண்டும்
எத்தகைய மாணவருக்கு எத்தகைய கல்வியெனும் ஆய்வினுள் எத்தகைய ஆசிரியரென்பதும் உள்ளடங்கும்.
7

Page 15
ஆசிரியரும் தன் ஆண்மையை மீட்டுக் கொண்டவராக இருத்தல் வேண்டும். சுதந்திரம் பெற்று அரை நூற்றாண் டாகின்றது. ஆனால் அடிப்படை நோக்கங்களில் தெளி வில்லை, சந்தைக்குரிய மாணவ பயிற்சிக்கென்றே ஆசிரிய னும் விசேட பயிற்சி பெறுகின்றான். இதற்கிடையில் - எத்தனையோ கல்வி அறிக்கைகள், சீர்திருத்தங்கள், சட் டங்கள், அதிகாரிகள், இடமாற்றங்கள், பல திட்டுகள் மிரட்டல்கள். இவையாவும் கல்விப் பணிக்கு வந்தடையும் குறுக்கீடுகள். இவையெல்லாம் ஒன்று சேர்ந்து ஆசிரியனை அஃறிணைப் பண்டமாக்க முயலுகின்றன. தன் சுயாதீன சித்தத்துக்குப் பங்கம் ஏற்படுவது கண்டு ஆசிரியனும் தளர்ச் சியடைகிறான். ஒரு புறத்தில் சூழல், வாழத்தெரிய வேண் டுமானால் வளைந்துகொடு என்கிறது. பொருளில்லாருச்கு இவ்வுலகில்லை யென்பதும் தனியார் மயப்படுத்தலால் நினைவுறுத்தப்படுகின்றது. இங்கு தான் ஆசிரியனும் சட சத்தாகிறான். அசத்துடன் சார்ந்த நிலையில் மாட மாளி கைகள், பணக் குவியல்கள், ஏனைய வா ய் ப் புக் க ள். ஆனால், ஆசிரியனும் சார்ந்ததன் வண்ணம் அசத்தாகி விடுகிறான். சத்துடன் சார்ந்து நிற்பது கடினம். அவ்வாறு துணிந்து விட்டால் ஆண்டியின் கதி. ஆனால் அங்கு ஆசிரியன் சத்து. இந்நிலையைப டைய மன வைராக்கியம் அவசியம் . அடிகளார் கூறுவதும் இங்கு அவசியம் பொருட் படுத்தத் தக்கது. "உடுக்க நான்கு முழத் துணியும் உண்ண அளவான அன்னக் கறியும்; பெரியோருடைய கூட்டுறவுமே நமக்கு இவ்வாழ்க்கையில் வேண்டற்பால' என்கிறார். கூறியதுக்கு ஏற்பவே துறவும் பூண்டார். குரு லட்சணத் துக்கு விசேட எடுத்துக்காட்டு. ஆயிரம் போதனைகளை யும் மிஞ்சுவது.
"அச்சங்களுள் மிக்கது மரணபயமென் ப' என்பார் துறவி. தேகத்தைப் பொய்யெனவுணர்ந்து, ஆன்ம ஞானத் தில் நிலைபெறுகின்ற ஞானி தேகத்தை விட்டகலும் போது துன்புறுவதில்லை, தேகமே தானென்றெண்ணிய
18

துடன் துன்புறாதிருப்பதில்லை. உடல மூப்புறினும் உள் ளம் இளமை மாறாதிருக்குமியல்பு ஞானிக்கு உண்டு. உடலம் நோய்வாய்ப்படினும் உளங் கலங்காது ஆனந்தத் தில் நிலை பெற்றிருக்கும் ஞானி நோயினால் ஏற்படுந் துன் பத்  ைத ய  ைட வதில்லை யென்றும் கூறுகிறார். வேறொரு கட்டத்தில் "உலகம் இருளடர்ந்த கானகத்தை நிகர்த்தது" என்று கூறி, ஞானவான் உண்மையுணர்வாகிய ஒளி விளக்கத்தினால் கரும நிகழ்ச்சிகளின் காரணங்களை உள்ளவாறுணர்ந்து அஞ்சுவது யாதொன்றுமில்லை, அஞ்ச வருவதுமில்லை என்று திட சித்தத்தோடு வாழ்க்கை யாகிய வழியைத் தொலைப்பான். அச்சத்துக்குக் கார ணம் அஞ்ஞானம், என்பதாயுள்ளது எமது துறவியின் உலகநோக்கு. துறவி அறிவுக்கு பரந்ததோர் இலக்கணம் வகுக்கிறார். s
வாழ்க்கைக்கு மூலமாயுள்ளது அறிவு "அறிவைப் பெறின் அறியாமையும் அதன்வழி வந்த துன்பமும் உடன் கலவா வாதலின், எப்பொருளினும் மிக்க அறிவுப் பொருளை விழைந்து தேடுதல் வேண்டும். மூலமாயுள்ளதுவே மிகவும் பெறுமதியுள்ளதாகையால் அதனை நாடல் வேண்டும். அறிவெனப்படுவது தகவலின் 'தொகுப்பல்ல. அறிபவ னின்றி அறிவில்லை. அறிவைப் பெறுவதும் அறியா மையை அகற்றுவதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்க ளாகையால் துன்பம் நீங்கியவழி ஆனந்தமே உருவாகும் இதனால் அறிவுடையவன் அல்லது அறியாமையை அகற் றியவன் விரும்பத்தக்க வகையில் மாற்றமடைந்தவனா வான். அவனது அகத்தின் அழகு முகத்தில் தெரியும். இந்த மாற்றத்தை ஏற்படுத்தித் தருவது ஒருவகை கட்டுப் பாடு - ஒழுக்கம். இவ்வித ஒழுக்கத்தை விருத்தி செய்து தருவதே கல்வியாகும் எனக் கருத்துக் கொண்டவர் அடிகளார் அறியாமை நிலையிலிருந்து அறிவு நிலைக்கு செல்லுவிக்கும் பாதை கட்டுப்பாடு பற்றற்ற நிலை (Objective) - உள்ளதை உள்ளவாறே அறியவைப்பிக்கும் துறவு நிலை துறவுக்கும் துற பியே வழி காட்டுவார்
19

Page 16
துறவு என்றதும் நிலையான இன்பத்தை நாடுவதையே குறிக்கும். அறிவு ஆராய்ச்சித் துறையில் நாம் சாதாரண நிலையில் முற்கற்பிதங்களாகக் கொண்டவற்றை (ASSumptiO ns - Categories of understanding) 35 ògpaí?ÜLuGM353 (35 JÚői கும். உணர்வு நிலையும் சம்பந்தப்படுவதால் பாசங்களும் அகற்றப்படுவதாய் இருக்கும். ஒரு புறத்தில் பதி அறிவிக்கப் பக்குவ நிலையைக் காத்து நிற்கும் மறுபுறத்தில் பாசம் உண்மையைத் தடைசெய்வதாய் ஆசாபாச வாழ்வில் மூழ் கிடச் செய்யும், இதுவே எமது கல்வி உளவியல் (Educational Psychology.) இதனை, கதா உபநிடத்திலுள்ள நசிகேதசு வின் கதை தெளிவாக விளக்கும்.
* மரணத்துக்குப் பின் என்ன?" எனக் காலனிடம் நசிகேதசு வினாவுகின்றான்.நிலையானது எதுவென அறியும் ஆவல் நசிகேதசுவிடம் ஏற்பட்டது. கிழட்டுப் பசுக்களைத் தானமாகத் தந்தை வழங்கிக் கொண்டிருக்கையில், தன்னை யும் தானமாகத் கொடுக்கும்படி வேண்டியபோது, தகப்ப னார் கோபமுற்றவராய் யமனுக்கே தானமாகக் கொடுப் பதெனக் கூறியதும், காலனார் முன் நின்று இக்குறித்த கேள்வியைக் கேட் கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. பந்த பாசங்களுக்குட்பட்டதெல்லாம் பொய்ப் பொருள் என் பதை உணர்ந்த நிலையையே இது சுட்டும். பக்குவ நிலை. அறிவு நாட்ட ம் ஏற்பட்டுவிட்டது. முற்கற்பிதங்களை அகற்றி பற்றற்ற நிலையில் யதார்த்த ' வுலகைக் காணும் ஆவல்.
காலன் (யமன்) என்றதும் மரணமென்றே பொருள் கொள்வோம். ஆனால் காலனை ஆசானாகக் கொள்வது என்பது காலம் (Time) வெளி (Space) எனும் அளவைகளுக் கும் அப்பாலுள்ள விடயங்களை உணர விரும்புதலையும் உணர்த்துவித்தலையும் குறிப்பதாய் இருக்கும். இதுவே குரு சிஷ்ய உறவு. இதுவே வள்ளுவர் கூறும் அவ்வுலகும் அரு
20

ளுமாகும், நிலையான விடயங்களைக் கற்பதும் கற்பித்த லும். கால தேச (வெளி) அளவைகள் கொண்டே விஞ் ஞானம் காரண காரிய விதிகளை அறிந்து கொள்ள முய லுகிறது. தோற்றம் நாசம் என்பவற்றுக்குரிய இவ்வுலகு இந்த எல்லைக்குள்ளேயே எவ்வாறு இயங்குகிறது என்பதே அதனது விசாரணை, வாழ்க்கையைப் பொறுத்தவரை, ஒரு வர் தோன்றி மறைவதுக்குட்பட்டது. ஏன் தோற்றம்? வாழ்க்கையின் அர்த்தமென்ன? மரணத்துக்குப் பின் அல் லது மரணத்தை மிஞ்சியது எது? இலட்சியங்கள், மதிப்பீ" டுகள், பெறுமதிகள் (Values)என்பனவெல்லாம் இவ்விசா ரணைக்குள் அடங்காது. இவையாவும் காலம் அழிவு என் பவற்றுக்கு உட்படாதவை. அவ்வுலகைச் சார்ந்தவை நிலையானவை. ஆகவே எவ்வாறு இயங்க வேண்டுமென் பதை உணர்த்துபவை. உண்மையை உணர்ந்ததும் அவ் விாறே இயங்க வேண்டும் என்பதும் இயல்பாகிவிடும்.
கால தேச அளவையென்றதும் ஆசாபாசங்குட்பட்டதும் கூட. இது உண்மையை மறைப்பதாயுள்ள மலங்கள் இயங் கும் துறையாகும். காலதேச அளவையை மிஞ்சியவரே துறவி. மிஞ்சுவதும் தவத்தினால் கட்டுப்பாட்டுடன் குறிக் கோளை நாடுதலும். எமது பாரம்பரியத்தில் பிரமச்சரிய வாழ்க்கையின் உன்னத குறிக்கோள்.
மேலைத் தேய ஆய்வு, பிரபஞ்சம் ஒரு ஒழுங்குக்குரிய தென்றும் அவற்றின் விதிகளை அறிந்து கொள்ளுமுகமாக முழுவதையும் அறிந்துவிடுவதாகக் கூறும். அவர் க ள் இயற்கை (Nature)யில் வி தி க  ைள அறிந்துவிட்டால் அதனை அடக்கி ஆளலாமென் பார்கள். அதிகாரம் (Power) பலம் என்பவையே அடைவதற்குரியன என்பதுவே குறிக் கோள். நாமே 7, இயற்கை என்றதும், சறுக்கி விழுத்த வல்லது எனக் கருதுவோம் - பாச ஞானம் தென்னை மரம் ஏறுவதைப் போன்றது. முயற்சியின்றேல் சறுக்கிய வண் ணம் கீழே செல்வோம். ஆகவேதான் "முயற்சி தன் மெய் வருந்தக் கூலிதரும்’ என்றார் புலவர். 'கருதிய பொரு
2

Page 17
ளெல்லாவற்றையும் எதனாற் பெறலாம்? எனக் கேள்வி எழுப்பி தவத்தினாற் பெறலாமென தானே விடை தருகி றார் எமது முனிவர். இடையறாத முயற்சி. மேலைத்தேய அறிவு ஆராய்ச்சி ஆராய்பவனை ஆராய்வதில்லை. நாமோ, ஒருபுறத்தில் மறைக்க கங்கணம் கட்டிக்கொண்ட மலங்கள் என்றும், மறுபுறத்தில் இவற்றின் பிடியினின்றும் விடுபட் டால் அருட்சக்தியின் திருவிளையாடலென்றும் கூறுவோம். மணிமேகலை. புத்த பிரானை அராகம், துவேஷம், மோகம் என்பவற்றை பிரதிபலிக்கும் மாறனை", வென்ற வீரன் என வர்ணிக்கும். காலம் எனும் பிடியினின்றும் விடுபட்டதும் தீர்க்க த ரி சி யா கி றா ன். நாமார்க்கும் குடியல் லோம் நமனை யஞ்சோம் எனும் விடுபட்ட வீர உணர்வு. இந்நிலையை அடைவது கடினம். நசிகேதசு வைப் பொறுத்தவரை, தன்னைத்தானே அவன் பலியாக் கிக் கொண்டதனால், காலனாரது மருட்சித் தந்திரங்களுக்கு இடங்கொடாது, கருதிய பொருளையே அடைய திடசங் கற்பம் செய்துகொண்டான்.
கல்வியென்பது ஆசிரியனுக்கும் மாணவனுக்கு மிடையே வளர்ந்து வரும் உறவு செயற்பாட்டைக் குறிப்பதாய் இருக் கும். மாணவனது ஆளுமை பண்படுத்தப்பட்டதாகி அவ னுளடங்கிய ஆற்றலனைத்தும் வெளிக்கொணரப்படுவ தாய் இருக்கும். முயற்சி மாணவனது, ஆசிரியன் வழி காட்டி. வாழ்க்கை முழுவதும் முயற்சித் தொடராய் இருக்க விருப்பதால் மாணவன் பக்குவப்படுத்தப்படுகிறான். ஏனை யவை, தகவல் சேர்க்கும் பயிற்சி. சிறு சிறு நுட்பங்களை இங்குமங்குமாகப் பொறுக்குவது. தபால் கந்தோரில் முத் திரை விற்க, கந்தோரில் தட்டச்சைத்தட்ட, யந்திரத்தை இயக்க, புண்ணுக்கு மருந்துபோட - யந்திரத்தைப்போல, தொழில் திறனடையும் மாணவனும் யந்திரமயமாகி விடு கின்றான். குறித்த ஒரு தொழிலைச் செய்ய அதன் பெறு மதிக்கும் குறைவாகவே கூலி கொடுக்கப்படுகின்றது. ‘இதற்
22

கும் ஒரு பள்ளிக்கூடமா, வித்தியாசாலையா?" எனும் அளவுக்கு, சந்திக்குச் சந்தி ரியூட்டறிகளும் முளைத்து விட் டன. சந்தையில் கல்வியைப் பண்டமாக வாங்கியவன் "நிற்க அதற்குத் தக' என்றவாறு வருவாயிலேயே கண் ணும் கருத்துமாக இருப்பான், பொறுப்புள்ள தன்மையை இழந்ததனால் சமூகமும் அவனுக்கு அந்நியமாகி விடும்.
மறுபுறத்தில், கற்றறிந்தவன் என்பவனும் தன்னுள் மாற்றமடைந்தவனாகவே இருப்பான். தன் குறைகளை உணர்ந்தவனாய் இருப்பான் என முன்னமே கூறியிருந் தேன். ஒழுக்க நெறிகளை மீறினாலும் குற்றவுணர்வும் வெட்கமும் ஏற்படும். இதனால் ஒருவகை அடக்கம். ஷேக்ஸ்பியரது சட்டாம்பிள்ளையையொத்த தடயுடலான பேச்சுக்களாய் இராது. கற்கும் ஆவல் மேலும் வலுவ டைந்த வண்ணமே இருக்கும். அறிவையே உருவாகக் கொண்ட வாலறிவன் முன்னிலையில் பணி ந் த நிலை. இதனால் தன்னை மறந்த நிலை மறுக்க முடியாத உண் மையை நாடுப் விஞ்ஞானி ஆய்வு கூடத்தில் பரிசோதனை நடத்திக் காட்டுவான். அறிவு நாட்டங்கொண்டவனுககு வாழ்க்கையே பரிசோதனைக் கூடம் ஒவ்வொரு செயலும் ஒரு படைப்பு. மெய்ப்பொருளை உண்மையென்றும் நல்ல தென்றும் அழகானதென்றும் கண் ட கி ரே க் க ஞானி பிளேட்டோ, அறிவைப் பெற்றவன் இம்மூன்றினோடும் இரண்டறக் கலந்தவனாவான் என்பார். அடிகளார் இவற் றோடு சக்தியும் நாலாவதாய் அமையும் என்பார். கற்றவன் செய்து காட்டுவான். சக்தி அர்த்தமுள்ள செயலாய் மலர் வதற்கு உண்மையும், நல்லதும், அழகும் கலந்ததாய் இரு த் தல் வேண்டும். படைப்பென்றேன். ஒவ்வொரு செயலும் புதுமை வாய்ந்தது. காலம் வெளியெனும் இவ்வுலகில் மணி தன் செயல்படுகின்றான, வரலாறும் படைக்கப்படுகின் றது. வாழ்க்கையென்பது அரிய ஒரு சந்தர்ப்பம். நாடக மாகக் கர், பித்துக் கூறுகிறார் ஷேக்ஸ்பியர்:
23

Page 18
"அங்கணுல கனைத்தினையும் ஆடரங்க மெனலாகு மவனி வாழும் மங்கையரை யாடவரை நடம் புரியு மக்களென
மதித்தல் வேண்டும். '"
என்பதாயுள்ளது அடிகளாரது மொழிபெயர்ப்பு. இங்குதான் தில்லைக் கூத் தன் பேராசனாகின்றான். பலனை எதிர்பார்க்கும் நிலை யல்ல (நிஷ்காம கர் ம). ஆகவே, செயல் யாவும் அறிவுருவ னிடமே சமர்ப்பணம் என்கிறது பகவத் கீதை (செயல் அல்லது கூலி - Labour - என்பதுவே பெறுமதியை நிர்ண யிக்கும் எனும் கார்ல் மார்க்ஸினது அறிவுரை இதனை அணுகுவதாய் இருந்தாலும் இத் த  ைக ய முழுமையைப் பெறுவதாயில்லை யென்பது வரலாற்று நிகழ்ச்சிகளால் உறுதிப்படுத்தப்படுவதாய் இருக்கின்றது.) செயல் யாவும் பரம்பொருளுக்கே சமர்ப்பணமாகையால் கடமையே வலி யுறுத்தப்படுகின்றது. கடமையென்றதும் செயல் திறனே முழுநோக்கமாய் இருக்கும். (Efficiency of Action )
தமிழர் பாரம்பரியத்தில் முதன்மைப் படுத்தப்படும் இயல், இசை கூத்து என்பதும் இதனையே பொருளாகக் கொள்ளுமென கருத்துக் கொள்கிறேன். இயல் சிந்தித்த லைக் குறிச்கும். உண்மையே குறிக்கோள். செயலின் உந்து சக்தி, வைராக்கியம் மன உறுதி முதலிய ஒழுக்கப் பண்பு கள் உள்ளடங்கும். கேட்டு, தெளிவு படுத்தியபின் சிந் தித்தல் தமிழரது கல்விமுறையாகும்(Educational Method) இசை நாம் எழுப்பும் ஒலியோடு சம்பந்தப்பட்டது. பேச்சு பாடல் யாவும் இசைவுபட - ஆகவே அமைதி கலந்ததாய் இனிமையாய் இருத்தல் வேண்டும். கூத்து செயலைச் சுட் டும். என்ன கூத்துக் காட்டுகிறாய் என்போம். அழகற்ற செயல் என்போம். இதன் எதிர்மறை அழகுடையதாகவே இருத்தல் வேண்டும். நல்ல செயல். மனம், வாக்கு, காயம் எனும் மூன்றுக்கும் உரிய தொழிற்பாடுகள் இவை.
24

மேற் குறித்த ஒழுக்க நெறிக்குரிய கல்வி நிலையம் பற்றியும் அடிகளார் பாரம்பரியத்தோடு இணைந்த கருத் துக் கூறுகிறார். "ஒழுக்கம் நூற்கல்வியாய் மாத்திரம் எய்தப்படுவதொன்றல்ல. நல்லாசிரியரும் நல்மாணாக் கரும் ஒன்று சேர்ந்து உடனுறையுங் குருகுல வாசங்களில் நித்திய கர்மானுஷ்டானம் பிரமச்சரியம் முதலிய ஏற்பாடு களினால் நல்லொழுக்கம் வளர்ச்சியெய்துகின்றது. அத்த கைய குருகுல வாசங்களே உண்மை கல்வி நிலையங்களாகக் கருதப்படத்தக்கன. நல்லர்ரைக் காண்பதுவும், சொற் கேட்பதுவும் அவரோடு இணங்கியிருப்பது வுமே இங்கு கல்விக்கு வரைவிலக்கணமாகத் தரப்படுகின்றன.
இவ்வித கல்வித் தத்துவத்தினூடாகக் கல்வி கற்றவர் துறவிகளாக வேண்டுமென்பதற்கில்லை. (துறவு பூணுத லென்பது வெறுமனே வெளித் தோற்றத்தோடு நிறுத்தப் படுவதில்லை. உலகம் பழிப்பதை ஒழித்து விடுவதும் அத னுளடங்கும்.) சாத்தானை, மாறனை, ஆணவமெனும் மூல மலத்தை வெல்ல முயன்றுகொண்டிருக்கும் வீர நிலை. தவம், வைராக்கியம் அதற்கு அடிப்படை. அதனை எல்லா ரும் அடைய முடியாது. ஆனால் அத்தகைய இலட்சியங் களைக் குறிக்கோளாகக் கொண்டு கல்வி பயின்றுமுதிர்ச்சியை நோக்கிச் செல்பவன் எவ்வித தொழில் செய்பவனாக இருந் தாலும் தன்னலமற்ற சமூகவுணர்வுடையவனாகவே இருப் பான். ஒழுக்கம் வேறு தொழிற் பயிற்சி வேறு என்ப தற்கே இடமில்லை. இங்கு அருளும் பொருளும் கலந்த நிலை, செய்வன திருந்தச் செய்ய முயல்பவனாக இருப் பான். மனித உறவிலும், நிறைவேற்றும் பணிகளிலும், அன்பும் சிந்தனைத் தெளிவும் கடமையுணர்வும் கலந்த பக்குவமுடையதாய் இருக்கும். தொழிலில் ஆர்வம். இத னால் செயல்திறன். சமூக அபிவிருத்தி முன்னேற்றம் என் பவற்றுக்கெல்லாம் இவையே மூலமாய் இருக்கும். ஏனை யோருக்கு முன்மாதிரியாய் இருப்பான். செயல் வாயிலால்
25

Page 19
தன் திறமையைக் காட்டி நிரூபித்ததனால், அவனது சொல் லுக்கும் மதிப்பிருக்கும். வாச்கு அறிவுக்குரிய பிரமாணம் இது, இத்தகைய ஒருவர் சொன்ன காரணத்தால் அது உண்மையாகவே இருக்குமென சமூகம் அதனை ஏற்கும். இவனே தலைவன் - சமூகத்துக்கு வழிகாட்டி,
“இந்நாளில் எமது சாகியத்தாருக்கு நேரிட்டிருக்கின்ற துன்பங்களோ மிகப்பல . எஞ்சாகியத்தாரது நிலை சிறைவாய்ப்பட்டு, இழி தொழில் புரிந்த தேவர் நிலைக்கு ஒப்பrவதென தேசாபிமானிகள் பலர் பேசுகின்றனர்". இது அடிகளார் தனது கால சமூக நிலை பற்றிக் கூறி வருந்திய வசனங்கள். மக்களைத் தட்டியெழுப்புவதற் குரிய மூல விடயத்தை சக்தியிலே கண்டார். சம காலத்து மூத்தோராகிய விவேகானந்த அடிகளாரும் சுப்பிரமணிய பாரதியும் சக்திக்கே முதலிடம் கொ டு த் த வர் க ள்தத்துவ வரலாற்றை ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க முயன்ற அடிகளார், அஞ்ஞானத்தை அகற்ற முயன்ற அத்துவிதத்தையும்,ஒழுக்கசீலத்தை வலியுறுத்திய பெளத்த சமண சமயங்களையும், அழகுக்கு உறைவிடமாகவுள்ள இறைவன் மீது அன்பு செலுத்தச் செய்யும் துவித விஸிஷ் டாத்துவித தத்துவங்களையும் விளக்கியபின், தமது குருவின் குருவாகிய விவேகானந்த சுவாமிகள் சக்தியில் காணும் பலத்தை தெளிவுபட விளக்குகிறார், "சிங்கங் களே! வாருங்கள். உங்களை நீங்கள் செம்மறியாடுக ளெனக் கருதிக் கொள்ளும் மயக்க நிலையை தகர்த் தெறியுங்கள்; நீங்கள் அழிவில்லா உயிர்கள், முத்தர்கள், சிவமாக்கப் பட்டவர்கள், காலனை வென்றவர்கள். நீங்கள் சடப் பொருட்களல்ல, வெறுமனே உடலல்ல, சடம் உங்களது அடிமை, நீங்கள் சடத்துக்கு அடிமையல்ல, எனும் சுவாமிகளது அறைகூவலை, பிரபுத்த பாரதத்தில் நவீன வைதீகத்தின் மூலச் செய்தியாகத் தர முயலுகின் றார். மேலைநாட்டு சாஸ்திர ஞானத்தின் நல்லம்சங் களை ஏற்றுக்கொண்டு, வீறிட்டெழும் புதிய உலகினைத்
26

தட்டியெழுப்பவல்ல பண்பாடு உருவாகின்றது என்கிறார் அடிகளார். தேசியத்தைக் கைவிடாத சர்வதேசம். குறுகிய போக்குக்கு இங்கு இடமில்லை. குலம், சாதி, சமயம், நாடு எனும் பாகுபாடில்லாத தத்துவத்தையே அன்னாரது அணுகுமுறை, கல்வித்துறையிலும் பணியாற்றத் தூண்டி யது. பரந்த நோக்கம். அதே வேளை தலை குனியாத் தன்மை
கல்வியென்பது யாரோ எவர்மீதோ எதனையோ திணிப்பதல்ல - indoctrination. மாணவன் ஒரு சடப்பொரு ளல்ல. வெற்றுப்பானையல்ல ஊற்றி நிரப்புவதற்கு. அவ் வித அணுகுமுறை மாணவர்களை தகவலால் நிரப்பப் பட்ட மண்பானைகளாக்கிவிடும். குறுகிய விடயம்பற்றி நிரம்பிய தகவல். பிரச்சினைகள் ஏற்படும்போது தீர்த்து வைக்கும் வழி தெரியாது தடுமாற்றம், தளர்ச்சி, நிலை குலைவு. இவர்களைத்தான் படித்தாரென ஒரு சமூகம் மதிக்குமேயாகில் அச்சமூகத்துக்கு வழிகாட்ட படிக்காத வர்கள் தான் முன் வர வேண்டுவதாகி விடும். மஹாத்மா காந்தி ஒரு சீனக் கதையூடாக இதனை உணர்த்திவைக்க முயன்றார். பேராசிரியர் ஒருவர் யாங்சீ நதியைக் கடக் கும்போது, ஒடக்காரனைப் பார்த்து சந்திரனுக்கும் பூமிக்கு மிடையேயுள்ள தூர அளவையைக் கேட்டாராம். தெரியா தென அவன் கூறியபோது உன் வாழ்நாளில் கால்பங்கு வீண்போயிற் றென்று கூறி மனம் வருந்தினார் பேராசிரி யர். அடுத்து சூரியனுக்கிடையில் இருக்கும் தூரம். அதுவும் தெரியாதென ஒடக்காரன் கூற மேலும் கால்பங்கு வீணாகி விட்டதென்றாராம் பேராசிரியர். பேராசிரியரது கணிப் பில் காலும் காலும் சேர்ந்து ஒடக்காரனது வாழ்நாளில் அரைப்பங்கு வீண்போய்விட்டது. சிறிது நேரத்துள் நதி யில் பெருக்கும் கொந்தளிப்பும் இப்போது ஓடக்காரன் கேட்கிறான். பேராசிரியரே! நீந்தத் தெரியுமா? தடுமாற் றம், தளர்ச்சி, நிலை குலைவு. தெரியாதென பேராசிரியர் கூற, இனி ஒட க் கா ர னது விரிவுரை ஆரம்பமாகிறது.
27

Page 20
பேராசிரியரே, உங்களது வாழ்நாளில் கால் பங்கல்ல, அரைப்பங்கல்ல, அதன் முழுப்பங்குமே வீணாகப்போ கின்றதே என்றானாம். இது போன்ற கதைகளினூடாகக் காந்தியடிகளது அணுகுமுறையைக் காணலாம். சிந்தனைத் தெளிவு, மனித உறவின் அன்பு, செயல் திறன் என்பன வற்புறுத்தப்படுகின்றது. இவ்வித அணுகுமுறையை அடி களாரிடத்தும் காணலாம். முழுமை வாய்ந்த மனிதனைப் படைக்க முயன்றார், ஏட்டுச் சுரக்காயையல்ல.
எத்தகைய விடுதலை தந்து உதவத்தக்க தத்துவம்? எத்தகைய சமூக கலாசாரம்? எத்தகைய மனிதன்? இத் தகைய பரந்த பின்னணியில் ஞானி ஒருவர் கல்வியைப் பற்றிச் சிந்திக்கிறார், செயலாற்றுகிறார். குறுகிய துறை யில் நிபுணத்துவம் பெற்றுக்கொடுப்பதற்காகவல்ல. அது வாக இருந்தால், யாங்சீ நதியைக் கடக்க முயன்ற பேரா சிரியரது கதி ஏற்படலாம். தென்னம்பிள்ளைக்கு நோய் ஏன் ஏற்படுகின்றது எனக் கற்றால், நோய் இல்லாவிடின் அல்லது அகற்றப்பட்டால் செடி செழிப்பாக வளர்ந்து தான் உண்ட நீரைத் தலையாலே தரும். சமூகம் பயன டையும். திருக்கோயிலில் ஆதி காலத்தில் கட்டப்பட்டிருந்த கோயில் எத்தகையது என ஆராய்ந்தால், வெறுமனே கட் டுக்குரிய கணிப்பு முறைமட்டுமல்ல அகழாய்வு வாயிலாக பெற்ற சில தகவல்களைக் கொண்டு இன்று நிலையாக நிற் கும் அன்றைய சம காலத்து கட்டிடக்கலையோடு ஒப்பிட்டு கற்பனா ரீதியாக அனுமானிக்கும் முயற்சி சிந்தனாசக்தி யைப் பண்படுத்துவதாக இருக்கும். அக்காலத்து மக்கள் இறைவனது உறைவிடமென எதனைக் கருதினார்கள். கட்ட டக்கலையழகை எவ்வாறு ரசித்திருப்பார்கள். இங்கு எமது பாரம்பரியமெனும் உணர்வு உருவாகிறது. அதனுள் எமது விஞ்ஞான வரலாறு அடங்கும். அழகை ரசிக்கத்தக்க பக் குவமடைந்துள்ள பயிற்சி அடங்கும். வாழும் மண் மீது பற்று, அபிமானம் தான் மட்டுமல்ல. தன்னுடன் வாழும்
28

மக்கள் எனும் பொறுப்புணர்ச்சி தோன்றும். நான் என் பது மறைந்து நாம் வாழும் நாடு எனும் உணர்வு. "நாமி ருக்கும் நாடு நமதென்பதறிந்தோம் எ ன் று பாடினான் சுப்பிரமணிய பாரதி,
விடா முயற்சி காரணத்தால் அறிவொளியைத் தேடிக் கண்டு கொண்டவனுக்கு பரந்ததோர் உலகம் அவன்முன் காட்சியாகின்றது என்கிறார் பிரபுத்த பாரதத்தில். (PB 15 Aug 1941) மனிதகுல சாதனைகளின் வரலாற்றை ஞானி கண்டார். ஊனக்கண்களுக்கு இது தென்படாது yே patient endeavour man takes possession of the lamp of learning. This reveals to him a wider world. Gudgy b. Cogsit Litigil He sees behind him the path which the race has travelled. இங்கு அவர் குறிச்சியையோ, பி ர தே ச த் தையோ, இன த்  ைத யோ, நாட்டையோ குறிப் பாகக்கொள்வதில்லை. மனித குலம் - வாசுதேவ குடும்பம் The Human family என்கிறார் அதிபர் கணபதிப்பிள்ளை அவர்கள். ஆயிரம் வருடங்களுக்கும் மேலால் மனித குலம் தேடிய அறிவுத் தேட்டம் சொற்ப கால எல்லைக்குள் கற்றறிந்தவனுடையதாகின்றது. இன்று வரலாறு இது வென எழுதித்தள்ளுகிறார்கள் பத்திரிகைகளில். உண்மை கூறுவதற்கு எம்மிடையே தகுதிவாய்ந்தோர் எவருமில்லை. பயிற்சியளிக்கவும் வாய்ப்பில்லை. அடிகளார் கூறும் பரந்த உலகம் (Wider World) எமக்கு ஒருக்காலும் எட்டாது போலும்,
அறிவுலகம் சுட்டும் வினோதங்களைப் பண்புடைய ஒரு வன் தனது பின் தலைமுறைக்கு அறிமுகஞ் செய்துவைக்க விரும்புகிறான். தனது முன்னோர் தவமிருந்து தேடித்தந்த அரும்பெருஞ் செல்வத்தை அவனிடம் ஒப்படைக்கிறான். கலைகள் நூல்பயிலுதல் என்பன விருத்தியடைவதோடு கட்டுப்பாடு அடக்கம் என்பனவும் மதிப்புடன் வாழ்வதற்கு அவசியமென்பதையும் உணருகின்றான் மனிதன். சட்டம்
29

Page 21
ஒழுக்கம் என்பனவற்றின் அவசியத்தோடு அவை குறிப்ப வையும், சக மனிதரோடு உறவு கொள்ளும்போது அவசிய மென்பதும், உணர்த்தப்படுகின்றது. இவை, தனது சமூகம் மட்டுமல்ல ஏனைய சமூகத்தவரோடு தொடர்புகொள்ளும் போதும் அவசியமென்பதும் வெளிப்படையாகிவிடும். இது முனிவன் வரலாறு, கலாசாரம் எனும் பரந்த பின்னணியில் கல்வி குக் கொடுக்கும் பங்கு.
அறிவுத் தேட்டம் என்பதும் ஒரு வகைச் சொத்து. வீடு, வாசல், தோட்டம், வயல், தோணி, வலை, தொழிற் கருவிகள், வியாபார நிறுவனம் போன்று. சொத்து என்ற தும் தனி உடைமையல்ல. எவ்விதப்பட்டும் லாபம் என்ப தல்ல. லாபமும் குடித்துக் கும்மாளம் போடுவதற்கல்ல. மரம் இருப்பது வெட்டி பலகையாக்கிக் கொள்ள, காட்டை வெட்டினால் பலகையோடு விறகுங்கூட, என்றே நினைத் தால் ஒரு சந்ததி மட்டும் அனுபவிக்கலாம். காட்டை அழித்தால் நாடென்பதற்கில்லை. வனாந்தரமாகிவிடும். மேட்டு நிலத்தின் காட்டை யழித்தால், மாரி காலத்தில் கரையோரப் பகுதிகளில் வெள்ளம் தவிர்க்க முடியாது போகும். இவ்விதமாகச்' சொத்து’’ என்பதை அணுகினால் அது பொறுப்பற்ற தன்மையையே வெளிப்படுத்திக் காட் டுவதாக இருக்கும். சொத்து என்பது தனியுடைமைக் குரியதன்று (Private Property)தனியுடைமைக்கு எதிர்மறை பொதுவுடைமை. பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவ ருக்கும் செல்வமன்றோ? பொதுவுடைமையென்றால் எல் லோருக்கும் சரிசமமாகப் பிரித்துக்கொடுத்துக் கும்மாளம் போடுவதல்ல. சொத்து, ஒருவரிடம் பொறுப்புள்ள வகை யில் வைத்திருக்கும்படி கொடுக்கப்பட்டிருக்கிறது. (Trust Trustgeship) அதைப் பேணிப் பாதுகாப்பதோடு விருத்திய ண்டயச் செய்து அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைப் பதே இங்கு பொறுப்பென்பதாகும். அறிவென்பதும் ஒரு வகைச் சொத்தாகையால் இதே விதி அதற்கும் பொருந்தும்.
30

இன்று கல்வி பரந்த அடிப்படையில் வினியோகிக்கப் படுகின்றது - இலவசமாக, நிறுவன ரீதியாக, முன்பு திண் ணைப்பள்ளி குருகுலவாசம். மாணவன் ஆசிரியருடன் வாழ்ந்த காரணத்தால் பணி செய்து குரு பக்தியுடன் கேட் இத் தெளிந்து சிந்திக்கலானான். ஆசிரியர் வாழ்ந்து காட்டிய தற்கேற்ப அவன் தனதாக கிக் கொண்ட அறியும் முறையும்; அறியும் ஆவலும், இதனால் அறிவைப் பெருக்கும் முயற் சியும், ஒழுக்க நெறிகளும் ஸ்திரப்படுத்தப்படுகின்றன, நல்லாரோடு இணங்கியிருப்பதுவும் நன்றே. முன்பு குடிசை இயற்கைச் சூழல் இன்றோ பெரும் கட்டடங்கள். அபிவி ருத்தியெனும் வரைவிலக்கணத்துக்கேற்ப, யா  ைவ யு ம் செயற்கை மர நிழலுக்குப் பதிலாக மின் விசிறி. தாவரம் பற்றிய அறிவுதன்னும் ஆய்வுக் கூடத்தில் அறிவும் கூறு Glut Li'l uGaug, TS Science trained, Maths trained, English trained எனும் பயிற்சியில் முடிவு பெறுகின்றது. இங்கு அடிகளார் கூறும் உண்மை, அழகு, நன்மை என்பனவற்றை எவ்வகையில் பகிர்ந்து கொடுக்கலாமென்பது கடிமான ஆராய்ச்சியாகவே இருக்கின்றது. இவ்வித கல்வியின் மறு புறத்தில் உழைப்புக்கு உறுதுணையாக நிற்கும் விவசாயம், மீன்பிடி, கைத்தொழில் என்பன கைவிடப்பட்ட நிலை யில் தரமும் குறைந்ததென நிராகரிக்கப்பட்டதாகிவிட்ட. கல்வி கற்றவன் இப்பொழுது ஒரு ஏற்றுமதிப் பண்டமாக மாறுகிறான். கிராமத்திலிருந்து பட்டணம், பட்டணத்திலி ருந்து தலைப்பட்டணம். பின்பு கனடா, அவுஸ்திரேலியா முதலிய நாடுகளை நோக்கி,
உபநிடதக் கதையொன்றுண்டு மாணவன் குருவிடம் சென்று பாடங்கேட்க முயல்கின்றான். ஒதல் என்பதுவேதி யருக்குரியதல்லவா? ஆகவே குலம் கோத்திரம் விசாரிக்கப் படுகின்றது. அது தானே தெரியாது. அப்போ தாயாரை கேட்டு வரும்படி குரு அனுப்பிவைக்கிறார். தாயிடம், மகன் தந்தையின் குலக் கோத்திர விபரங்கள் கேட்டறிய முயன்ற போது, தாயும் 'மகனே! பல தரப்பட்ட மனை
3

Page 22
களில் கடமைபுரிந்து குடும்பத்தைக் காப்பாற்ற முயன்றேன். தந்தை இன்னாரெனக் கூற முடி யா த நி  ைல என்றாள். சிறுவனும் குருவிடம் சென்று அவ்வாறே கூறி னான். வேதியர் குலத்தையே சேர்ந்தவனென்று குருவும் முடிவுகொண்டார். "அந்தணர் என்போர் அறிவோர்." உண்மை பேசினான். ஆகவே உண்மையை மேலும் அறிந்து கொள்ள முயலுவான் - Admission test, டொனேஷன் கிடையாது. அறிமுகக் கடிதம் கிடையாது. இதன்பின் குருவானவரும் ஆரம்ப முயற்சியின் பின் வேறொன்றும் கற்பிக்க முன்வரவில்லை - இன்றைய சில ஆசிரியர் க ள் போல (எல்லாம் நன்மைக்கே. பிழையானவற்றை சொல்லி கொடுத்து பல ஆபத்துக்களை விளைவிப்பதைவிட சொல் லிக் கொடுக்காது விடுவதும் ஒரு வகைக் கல்விப் பணி. *செலவு தந்தைக்கோராயிரம்' என்றான் சுப்பிரமணிய பாரதி தீது தனக்குப் பல்லாயிரம்’ என்று கூறி, ஆங்கி லேயன் பாரத நாட்டில் திணித்த கல்வி முறையைப் பார்த்து 'மண்படு கல்வி யெனத் திட்டினான்.)
உபநிடதக் கதை குறிப்பிடும் குருவானவர், மாணவ னிடம் சில எருதுகளையும் பசுக்களையும் கொடுத்து ஆயி ரம் கால் ந  ைட களாகப் பெருக்கிக் கொண்டு வரும்படி பணித்தார். மாணவனும் குரு சொல்லைத் தட்டாது மாடுகளோடு காட்டுக்குச் சென்றான். பல ஆண்டுகள் கழிந்தபின் ஆயிரம் மாடுகளுக்கும் மேலாகவே பெருக்கிக் கொண்டு குருவிடம் திரும்பி வந்து நன்றி கூறி விடை பெற்றான். விடைபெற்றானென்று சொன்னால் பட்ட தாரியானான். ஆனால், ஒன்றும் சொல்லிக் கொடுக்காத குருவுக்கு ஏன் நன்றி சொல்லவேண்டும்? ஏதோ பெரு மளவு நன்மை பெற்றதனாலல்லவா நன்றி கூறினான். அது என்ன?
பல ஆண்டுகள் சுதந்தரமாக காட்டில் திரிந்ததனால் பல வகை தாவரங்களை வகைப்படுத்தி அவை வித்திலி
32

ருந்து, முளையாகிச் செடி பாகி, மரமாகும் வரை அவ தானித்தறிந்தான் இயற்கையெனும் ஆய்வுக் கூடத்தில்: இதுவும் ஒருவகை உண்மை. செடிகள் வளர்ந்து வருவதையும் மொட்டு விரிந்து பூவாகி, கனியாகி பழமாகும் அழகையும் கண்டு ரசித்தான். பரத நாட்டியத்தின் அபிநயம் இங்கு தேவைப்பட வில்லை, பல வகை பட்சிகள் . மிருகங்கள் இன்னோரன்ன உயிரினங்கள் தத்தம் சூழலிலே வாழ்ந்து பெருகுவதை நேரில் கண்டான் தாவரவியல், உயிரியல், நுண்கலை முதலிய அாடங்கள். மா டு களும் கன்றுகள் ஈண்டு பெருகிக்கொண்ட படியால் ஒப்ஸ்டி றக்டிஸ்மும் கைனொகொலொஜியும் படித்ததாயிற்று. இவற்றை விட அவதானிக்கும் சக்தியும் அனுமானிக்கும் திறனும் பக்குவப்ப டுத்தப்பட்டன. அளவையியலும் விஞ்ஞான ஆய்வுமுறை களும் இவையிரண்டும் கலந்த நிலையில் மூலிகைகள் மணி தனுக்கும் மிருகத்துக்கும். பொதுவாகவே வைத்தியம் மிருக வைத்தியமும். இதற்குமேலால் அவனுக்கு உணவு உறை விடமாகிய பிரச்சினைகளும் இருந் திருக்குமல்லவா? அங் குள்ள மூலகங்களையே நம்பியே அவன் வாழ்ந்திருப்பான் -சுய தேவையைப் பூர்த்தி செய்யும் நிலை Self-Sufficiency. வேறெவரது துணையுமின்றி தானாகவே மாணவ பருவத் திலிருந்து தன் உழைப்பையே நம்பிச் சீவித்தான் - Self ாeliant. கையேந்த அவசியம் ஏற்படவில்லை. சுற்றாட லுக்கேற்ப வாழ்க்கையை பக்குவப்படுத்திக் கொண்ட காரணத்தினால், இங்கு அடிகளாரது வாக்கு பொருட் படுத்தத் தக்கது. " "ஈதல் நமக்குரியதேயன்றி இரத்த லல்ல. துறவியாகியும் நான் பிறரையிரந்தது சிடையாது' என் கிறார். இது சுதந்தர உணர்வினால் ஏற்படும் ஒருவகை மிடுக்கு. இவ்வித பயிற்சிபெற்ற மாணவனும் இயற்கைச் சூழலினின்றும் அந்நியப்படுத்தப்படாதவனாய் இரண்ட றக்கலந்து அறிவுத்துறையில் முதிர்ச்சி பெற்றதன் காரணத் தால் குருவிடம் திரும்பிச்சென்று நன்றிகூறி ஆசிகள் பெற்று விடைபெறுகிறான். இவன்தான் பட்டதாரி.
33

Page 23
ஆனால் இவ்வித இயற்கைப் பல்கலைக் கழகத்தில் பயிற்சி பெற்று வெளியேறிய பட்டதாரிக்கு, இன்றைய சூழலில், உத்தியோகம் வழங்குவார்களா? பல கலைகளில் பொதுப் Lul” lub (General Degree) Guibsp 31 Gör. Bio Science Giv 6?39. L-l LIL L-lb (Special Honurs Degree) QLi) palair. ஆளைப் பொறுத்தமட்டில் விஷயமுண்டு. ஆனால் பட்டம் பெற்ற தராதரப் பத்திரம் கிடையாது இதனால் தொழி லுக்குரிய நேர்முகப் பரீட்சைக்குத்தன்னும் அழைப்புக்கிடைத் திருக்காது. பல ஆண்டுகள் காட்டிலே வாழ்ந்த காரணத் தால் உயர்மட்டத் தொடர்பும் எட்டியிராது. அவன் கதி யென்னாகும்? பையோ சயின்ஸிலை கரைத்துக் குடித்தவ னெனும் காரணத்தால் தெருவோரங்களில் விளம்பர சுவ ரொட்டிகளை ஏற்றுவித்து ரியூஷன் கொடுக்க முயலலாம். விஷயமுள்ளவர்களிடம் இயல்பாகவே மிடுக்கு உண்டு என ஏற்கனவே கூறியிருந்தேன், அறிவுக்கோ விலை பேசமாட் டார்கள். அறிவு சந்தைப்படுத்தப்படும் பண்டமல்ல, அது புனிதமானது, பக்குவமடைந்த மாணவன் அதனை நாடி வரும்போது அள்ளிக் கொடுக்க வேண்டும். இதனால் ஒரு நஷ்டமும் ஏற்படாது. இலாபம் ஆத்ம-திருப்தி. இது சம் பந்தமாக "அடிகளார் என்ன கூறுகிறார் என்பதை அவதா னிப்போம். யாழ்பாணத்து தண் ரொருவரிடம் கடிதம் செல்கின்றது.
"உலக மாதாவின் திருவருளை முன்னிட்டு பிரியநண்பர் நல்ல தம்பி பவர்கட் த எழுதுவது." எனக் கடிதம் ஆரம் பிக்கிறது. இடையில், "தமிழறியாதரிடத்துச் செல்லுந்தரத் ததாக ஆங்கிலத்திலே ஓர் உரையெழுதித் தரவேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். அ த ற் த மறுமொழியாகத் தமிழருமை அறியாதவர்களிடத்து வேலைக்குப்போக வேண் ட்ாம் என்று நான் கூறுவேன்' என்று கூறி விட்டு, "நீங் கள்:எந்நாளும் தமிழ்த் தொண்டு புரிய வேண்டும். கூழுணவு தான் கிடைத்தாலும் தமிழ்த்த பின் அருளெனக் கருதி ஏற்றுக்கொண்டு விரிந்த முறையிலே தொண்டாற்ற வேண்
34

டும். எனது வாழ்க்கையிலே பொருள் வருவாய் பெரிதாக விருந்த உயர்ந்த உத்தியோகங்கள் பலவற்றை ஏற்று நடத் தினேன். ஒன்றுக்காவது கேள்விக் கடிதமோ பிறருடைய நற்சான்றோ நான் விடுத்தது கிடையாது.
"இருக்கு மிடந்தேடி என்பசிக்கே யன்னம்
உருக்கமுடன் கொண்டுவந்தா லுண்பேன்’’
என்றபடி என் பின்னின்று பன்முறை விருப்பி யழைத்த இடங் களையே நான் நாடினேன். செட்டிநாட்டரசர் தாமும் அண்ணா மலைப் பல்கலைக் கழகத்துக்கு வரவேண்டும் என் பதாக என்னிடம் வந்து என்னைக் கேட்டபின்பு தான் அவரது கேள்விக்கு நான் ஒருவாறாக இயைந்தேன்' என் கிறார். மேலும், 'தொண்டு புரிவதையே குறிக்கோளா கக்கொண்டு இரவுபகல் ஒய்வற்றுக் கல்வியைப் பெருக்கிப் பொதுக்கழகங்களில் விரிவுரையாற்றுதல், நூலெழுதுதல், திங்கள் வெளியீடுகளிலே ஆராய்ச்சி முடிபுகளை வெளி யிடுதல் என்றித்தகைய தமிழ்த் தொண்டுகளைச் செய்து கொண்டு வந்தால் வேண்டிய உயரிடமெல்லாம் தானா கவே வரும், வராவிட்டாலும் குறைவொன்றுமில்லை. உடுக்க நான்கு முழத்துணியும் உண்ண அளவான அன்னங் கறியும் பெரியோருடைய கூட்டுறவுமே நமக்கு இவ்வாழ் கையிலே வேண்டற்பால’. இதைக் கவனியுங்கள் - "தமிழ்ப் புலவராகிய நாம் கம்பனுடைய வழித்தோன் றல்களென்பதையறிய வேண்டும். அவனைப்போல நாமும் மன்னன் முன்னிலையிலே ஏமாப்போடு (அவதானியுங்கள்) ஏமாப்போடு நின்று.
"மன்னவனும் நீயோ வளநாடு முன்னதோ
உன்னையறிந்தோ தமிழை ஒதினேன்" என்று துணிவாகச் சொல்ல வேண்டும்.
o
35

Page 24
இதே வேளை சற்றுக் கவலைப்பட்டவராய், "ஈழ நாட்டிலே (ஈழநாட்டிலே) உயர்ந்த தமிழறிவு குறைவெய்தி வருகிறது’’ என்கிறார். (ஆங்கிலம்) தந் தாய்மொழியிலே அறிவு நூலைக் கற்கவேண்டுமென்பது அறிஞரனைவருக்கு மொப்ப முடிந்த முடிவு.
இத்தனையையும் கூறியது எத்தகைய மனிதன் என் பதை விளக்குவதற்கு. இவ்வித பெருந்தகை, மாணவனை எத்தகைய மனிதனாக்க முயன்றார் என்பதும் இயல்பா கவே ஊகிக்கத்தக்கது.
செட்டி நாட்டரசரைப் போன்று இலங்கைப் பல்கலைக் கழகத்திலும் அழைப்புக்கு இணங்கவே தமிழ்ப் பேராசிரியர் பதவியை ஏற்றார். இதன் வரலாற்றை பெளதிகப் பேரா சிரியராகவிருந்த எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய காலஞ் சென்ற திரு. மயில்வாகனம் அவர்கள் என்னிடம் ஒரு தடவை விவரித்தார். அன்றைய துணைவேந்தர் சர் பட்டம் பெற்ற உயர் கல்விமானாகிய ஐவோர்ஜெனிங்ஸ் எனும் ஆங்கிலேயன் ஆவார். தமிழ்த்துறைப் பேராசிரியர் பதவி வெற்றிட மாகியதும் தகுதிவாய்ந்த ஒரு கல்விமா னையே நியமிக்க வேண்டுமெனும் ஆவல்கொண்டவராக இருந்தார். மயில்வாகனம் அவர்களிடம் கலந்தாலோசித்த போது, தகுதிவாய்ந்தவர் ஒருவர் இருக்கிறாரென்றதும் பதவிக்கு விண்ணப்பிக்கும் படி வேண்டினார் ஜெனிங்ஸ் அவர்கள். அவர் ஒரு துறவி. விண்ணப்பிக்க மாட்டார். அழைக்க வேண்டு மென்றதும், துணைவேந்தரும் உடன் பட்டு அடிகளாருக்கு அழைப்புவிடுத்தார். அனுபவமுள்ள பொறுப்புள்ள பேராரியர் ஒருவர் கருத்துக் கூறியதும் அதிக ரப்பீடத்திலுள்ளோர் தட்டிக் கழிக்காது அதனை ஏற்பது பல்கலைக் கழகப் பண்பு.
சர் ஐவோர் ஜெனிங்ஸ் அவர்கள் பேரறிஞர். நிருவா கத் திறைமை கொண்டவர். முதிர்ச்சி பெற்ற பேராசிரி யர்களை மதித்து அவர்களது பூரண ஒற்றுழைப்பைப்
36

பெற்று பேராதனை கொழும்பு பல்கலைக் கழகங்கள் உயர் கல்வி நிறுவனங்களாக வளர்ந்து வருவதற்கு வித்திட்ட வர். அன்னார் துணைவேந்தராக இருந்த இறுதிக் கட்டத் தில் நானும் மாணவனாக இருக்கும் பாக்கியத்தைப் பெற் றிருந்தேன். அவரது ஆழ்ந்த அறிவையும், நிருவாகத் திறனையும் பரந்த மனப்பான்மையையும் நேரில் கண்டு அனுபவித்த காரணத்தினால்ே யே இவ்வாறு கூறுகிறேன். அத்தகைய பெரியார் எமது துறவியை தமிழ்த்துறைத் தலைவராக அழைத்தது வியப்புக்குரிய காரியமல்ல. கற் றாரைக் கற்றார் காமுறுவர் அல்லவா! அன்பொடு ஒருவர் மற்றொருவரை மதிக்கும் பண்பும் கலந்த மனித உறவு.
பட்டினத்தடிகளோடு இரத்தலை நிராகரித்ததும், கம் பனைப் போன்று தன் சாதனைத் திறனையுணர்ந்தவராய் மிடுக்கு ஏமாப்பு மட்டுமல்ல. ஏனைய இலட்சியங்களையும் தனதாக்கிக்கொண்ட நிலை. ஷேக்ஸ்பியரது நாடகங்கள் முழுவதும் மொழிபெயர்க்கவில்லை - தன் சாகியத்தாருக்கு உணர்த்த வேண்டிய பகுதிகளை மட்டும் தமிழில் தந்து உதவினார் என்பது என் கருத்து. போர்க்களத்து வீரனுக்கு மிகவும் வெறுக்கத்தக்கது கோழைத்தனம். இங்கு, அடி களாரும் சொற்ப காலம் தொண்டர் இராணுவ படை யில் சேர்ந்திருந்தார் என்பதும் நினைவுறுத்தத் தக்கதுவெள்ளையத்தேவனது மனைவிபோன்று யூ லிய சீச ர து மனைவி கல்பூர்ணியாவும் முதலிரவு 'பொல்லாத சொற் பனங் கண்டு;
"அகத்திடையின் றிருந்திடுக அவை புகுத லொழிக’
(You shall not stir out of your house to-day) எனக் கெஞ்சியபோது - புன்னகை புரிந்து, சீசரும்,
"அஞ்சினர்க்குச் சதமரண மஞ்சாத நெஞ்சத்
தாடவனுக் கொரு மரண மவனிமிசைப் பிறந்தோர்
37

Page 25
துஞ்சுவரென் றறிந்திருந்தும் சாதலுக்கு நடுங்குந்
துன்மதிமூ டரைக் கண்டாற் புன்னகைசெய் பவன்
له 9ا سه .
TGÖT
"பொய் யு  ைரக்கு இரங்கு வீணர்" கூட்டத்தைச் சேராதவர் - "ஆழ்ந்து செய்வன செய்யும்யானவர்நெறி யனைய்ேன்". வேறொரு கட்டத்தில் "மலைவீழ் வெய் திலு மனம்வீழ் விலனே' என்கிறார். இது, தளராது எத்தகைய இன்னல் துன்பம் ஏற்படினும் "நிமிர்ந்து நிற் கும் பக்குவநிலை. "அச்சம் தவிர்" என்றார் சுப்பிரமணிய பாரதியார். அதற்கு வழிகாட்டுகிறார் அடிகளார் - அறி வாகிய விளக்கைக் கொண்டு. . .
கையில் விளக்கில்லாதவன் மழைக்காலிருட்டில் காண்க வழியாக நடந்து செல்லும்போது "சர சர" என்பதோர் அரவங் கேட்டால் - பேயோ, பிசாசோ, புலி கரடியோ தன்னைப் பிடிக்க வருவதாக நினைத்து அச்சமுறுவான். கையில் விளக்கிருப்பவன் அதன் கிரணங்களை அரவம் எழுந்த திசையை நோக்கி நீட்டி உண்மையை உணர்ந்து கொள்ளுவான். "சரசர" என்னுஞ் சத்தமுண்டானது பேய் பிசாசினாலல்ல, புலி கரடியினாலல்ல, தன்னைக்கண்டஞ் சியோடுகின்ற ஒரு குள்ள நரியின் காலடியினாலென்பதை யுணர்ந்து தன்னுள்ளே நகைப்பான் - நரியைப் புலியென் றெண்ணிய மயக்கவுணர்வினால் அச்சமுண்டாயிற்று: நரியை நரியென்றுணர்ந்த உண்மையுணர்வினால் அச்சம் நீங்கிற்று. உண்மையுணர்விற்குத் தீபத்தினொளி காரண மாயிற்று அஞ்சவைப்பதற்குத் தப்பியோடும் நரி மிகவும் பொருத்தமானதோர் உவமையாகும். ܀
போர்க்களத்தில் அஞ்சுவதென்பது கோழைத்தனத்தை ஒத்தது. நள்ளிருளில் கானகத்தில் அஞ்சுவதெனும் உவமை "ஞானமில்லாதவன் விளக்கில்லாது வழி செல்லுகின்ற மூடனைப்போல அஞ்ச வேண்டாதனவற்றுக்கெல்லாம் அஞ்சுவது" என விளக்கம் தருகிறார் நமது அடிகளார்:
38

இரண்டின் விசேடத் தன்மைகளும் அவரால் வற்புறுத்தப் படுகின்றன. ஒன்று யூலியசீசர் வாயிலாகவும் மற்றது முடன் வாயிலாகவும், க்ஷத்திரிய தர்மமும் போற்றப்படு கின்றது. இதனாலேயே போர்க்களத்தில், அசோகன், அகிம்சையை கையாள முயன்றது மாபெருந் தவறென அடிகளார் முடிவுகொள்கிறார். அடுத்தடுத்து வந்த அந் நியர் படையெடுப்பு தவிர்க்க முடியாததாயிற்று என்கி றார். பட்டினியிருந்த கழுகெ 1 ன்று செத்த உடலை ஆவே சங்கொண்டு கொத்தித் தின் பது போல நிமிர்ந்து நின்று போராட இயலாத மக்களை எதிரிகள் கொள்ளையடித் தும் கொலை செய்தும் அடிமைகளாக 1 க்கியும் சென்றார் கள் என, தனது கருத்துக்காை வெளிப்படுத்துகிறார்.
அவர் போற்றிய இலட்சியங்கள் சிலவற்றை ஆராய்ந் தோம். இதனால் ஒழுக்கத்துக்கு கல்வியில் முதலிடம் கொடுத்தாரென்பதையும் கண்டோம் அறிவு என்றதும் பரந்த பொருள் பெற்றதாகி வாழ்க்கையில் ஒளி விள $. காக அமையுமெனக் கொண்டாரென்பதையும் கண்டோம் மேலும் விவரமாகக் கூறின், 'உலகம் இருளடர்ந்த கான கத்தை நிகர்த்தது. மானிடராகிய யாமெல்லாம் அங்கு வழிச் செல்லுகின்ற பிரயாணிகளுக்கு ஒப்பா வோ ம்' என்கிறார். மெய்யறிவு தீபத்தை நிகர்த்தது.
இருளடர்ந்தது, வழிச் செல்லும் பிரயாணிகள் என் றெல்லாம் கூறும்போது இதன் தத்துவப் பின்னணியையும் குறிப்பிடுவது அவசியம். இதனைப் புரிந்து கொண்டால் தான் எதற்காக மனிதன் வாழ்கிறான் - வாழ்க்கையின் அர்த்தம் என்பதெல்லாம் தெளிவாகும். இற ப் பதும் பிறப்பதும் எடுத்த ஜன்மத்தின் கடன்-'தோற்றம் மறைவு' என பத்திரிகை மரண அறிவித்தல்கள் புகட்டுவனவாக இருக்கின்றன. இதற்குள் எமது அட்டகாசங்கள். கண்ட் சுகமென்ன? சாதித்தது என்ன? விட்டுச் செல்வது என்ன? சரித்திரத்தை ஆக்கிக் கொள்வதில் எமது பங்கென்ன?

Page 26
ஆக்கப் படைப்பு வேலைகளிலல்லவா ஒருவன் தன்னிறை வையும் காணலாம். உடல் அழிவது ஆன்மா அழிவதில்லை என்கிறது பகவத் கீதை. இதனால்தான் இருள டர் ந் த உலகில் எம்மை பிரயாணிகளுக்கு ஒப்பிடுகிறார் அடிகளார்.
இந்திய தத்துவங்களுக்கு (பெளத்தம் உட்பட) பொது வாகவுள்ளது சாங்கியம் - புருடன் பிரகிருதியெனும் மூல உறுப்புக்கள். ஒன்று நிலையாக சாட்சியாய் நிற்பது-மற்றது முக்குணங்களாகிய சத்துவ, ரஜஸ், தமஸ், குணங்கள் இசைவு குலைந்த நிலையில் உலகம் பரிணமிக்கிறது - சூக்குமமாக நின்ற விடயங்கள் எமக்கு எட்டக் கூடிய வகையில் தூலமாகின்றது. (கிரேக்க ஞானி அரிஸ்டோடில் உள்ளடங்கியது வெளிப்படுகின்றது எனுமாப்போல்) சாங் கியமே யோகமார்க்கத்துக்கும் அடித்தளமாகும்.
மூலமாயுள்ள பிரகிருதியே இறுதிக் கட்டத்தில் பஞ்ச பூதங்களாகி உடலாகவும் உடல் கண்டு அனுபவிக்கும் உலகமாகவும் பரிணமிக்கிறது. கண்களூடாக பார்க்கக் கூடியதும், காதுசஞடாக கேட்கக்கூடியதும், மெய், வாய், மூக்கு என்பனவால் தொட்டு, சுவைத்து, மணந்து கொள் ளக் கூடியதாகவும் இருப்பதே நாம் காணும் உலகம். தனு, கரணம் அவை சுட்டி நிற்கும் புவனம், தொடர்பு கொள்கையில் போகம், அனுபவம் ஐம்பொறிகளைக் கட்டுப்படுத்தி கர்மேந்திரயங்களையும் எமது ஆட்சிக்குக் குட்பட்டதாக்கிக் கொண்டால் ஆக்கபூர்வமான படைப் புகள். இதன் வாயிலாகவே எமது விஞ்ஞானம் எமது உளவியல், எமது சுற்றாடலுக்கும் எமது உடலுக்கு மிடையே உடன்படும் அமைதியை ஏற்படுத்துவதே தேக சுகம். தேகம் ஒரு கருவி. அதன் மீது ஆதிக்கம் செலுத் தினால் அதனைக் கட்டுப்படுத்தி நன்கு பயன்படுத்த artib. d5m a G5s sarabad, 6061T (Space & Time) LÉdjS உள்ளதை உள்ளவாறு அறியலாம்- தீர்க்கதரிசி. எமது பொறிகளுக்கு எட்டக் கூடியது தூல உடல். அதற்குமப்
40

பால் சூக்கும உடல் - அதற்கேற்ப உடலியல். ஞானிகள் 85.67 L- a L-65ud) - Mystic Physiology GT 6i, Lu IT if 5 air ஆங்கில மொழிபெயர்ப்பில். இதுவே எமது பரம்பரை வைத்திய சாஸ்திரத்துக்கும் சோதிடத்துக்கும் மூலமா யுள்ளது. அமாவாசை பெளர்ணமி அஷ்டமி நவமி தினங் களில் கடல் கொந்தளிக்கு மென்பார்கள். அதே போல எமது உளநிலையும் கொந்தளிக்காது என் பத ற் கும். உறுதியில்லை.
இத்தகைய தத்துவப் பின்னணியின்றும் எழக்கூடிய கல்வித் திட்டமெதுவோ அவ்வாறே விபுலாநந்த அடிகளா ரது கல்வி பற்றிய சிந்தனைவேகமும் சென்றிருக்கும். நடைமுறையில் சாதித்தலை, சாதிக்க முயன்றதை, நுணுக் கமாக ஆராயப்புகும்போது தான் ஞானியினது ஆக்கபூர் வமான சிந்தனைகள், செயல்திறமை வெளிப்படும். அதற் கும் மேலாக மூலகருத்துக்களாக இருந்தவை எவை? இவற்றை மூலமாக வைத்து மேல் தட்டுகள் எவ்வாறு கட்டியெழுப்பப்பட்டன என ஆராய்ச்சி இருத்தல் வேண் டும். மேலும், செல்வாக்கிலுள்ள கருத்துக்கள், ஆட்சியா ளர் திணிக்கும் திட்டங்கள் காரணத்தால் தேசிய மணம் வீசுவதாக இருந்தாலே, எதிர்ப்பு இருக்கும். விளக்கம் போதாமையால் ஊர் மக்களும் ஆர்வம் காட்டமாட்டார் கள். வேரூன்றிக் கொண்ட நிலைமைக்கு மாறான கருத்
துக்களென்றதுமே - தாமே ஆக்கிக்கொண்ட சம்பிரதாயத்
துக்கு மாறானது . ஆகவே புரட்சிகரமானது - இதனால் இவற்றோடு எதுவித சம்பந்தமுமிருத்தலாகாது எனும் போக்கும் இருந்திருக்கலாம் இவற்றுக்கிடையேயும் பல பள்ளிக்கூடங்களை நிறுவி திறமையுடன் நிருவகித்துவந் தாரென்றால் அவரது நாமம் உண்மையில் வரலாற்றில் பதியத்தக்கது. நான் இதனைக் கூறவேண்டிய அவசிய மில்லை. அவர் அடங்கி நாற்பதாண்டுகளுக்கு மேலாகியும். இன்றும் விழா - அவர் பற்றிய ஆராய்ச்சிகளும் வளர்ந்து கொண்டே போகின்றன. நட்ட வித்து, முளை செடி தாண்டிய நிலையில் இன்று விருட்சமாகி விட்டது.
41

Page 27
மனோபலம் தேகபலம் எனும் இவ்விரண்டின் இன்றி யமையாத நிலை அடிகளாரால் வற்புறுத்தப்படுகின்றது. இவ்விரண்டினுக்கும் பிரமச்சரியம் இன்றியமையாதது எனக் கூறுகிறார். இங்குதான் உளபயிற்சியும் உடல்பயிற்சி யும் அவரால் "பயனுள்ள கல்வி’ யெனும் கட்டுரையில் விளக்கப்படுகின்றன.
" "உள்ளத்துறுதி உடலுறுதிக்கண்ணது ஆதலின் உடற் பயிற்சி தன்னளவில் நலஞ்செய்வதோடு கூட உளப்பயிற் சிக்கும் சாதனமாகின்றது' எனும் கருத்துக்கொண்டவ ராக இருக்கிறார். கருதிய பொருளெல்லாவற்றையும் உட லுறுதி வாயிலாக உள்ளத்துறுதிகொண்டு பெற வேண்டும். இங்கு பேரானந்தப் பெருவாழ்வுக்குரிய மார்க்கத்தை விளக்க கந்தபுராணத்தில் காசிப முனிவன் கூறியது குறிப்பிடப் படுகின்றது.
தவந்தனின் மிக்கதொன்றில்லைத் தாவில் சீர்த் தவந்தனை நேர்வது தானு மில்லையாற் றவந்தனி னரியதொன் றில்லை சாற்றிடிற் றவந்தனக் கொப்பது தவம தாகுமே. தவத்தின் வலிமையை மாணவன் பெறவேண்டும். இதற்கு காட்டுக்குப் போகவேண்டிய அவசியமில்லை. ஆனால் இது நல்ல நோக்கம் கொண்டதாய் இருத்தல் வேண்டும். இது அவர் வகுத்துக்காட்டும் பாடத்திட்டத் தின் வாயிலாக நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.
தவமென்பது கருதிய பொருளைப் பெறுவதற்குரிய உடல் உளக்கட்டுப்பாடு, மன உறுதி, வைராக்கியம் ஒன்றி 63)6007ögi ša)G) - absolute determination, Concentration. மாணவரது வயது நிலை சூழலென்பனவுக்கு ஏற்ப ஆசிரி யரும் தனது கற்பிக்கும் முறையை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். உளப் பயிற்சிக்கும் சாதனமாக இருப்பது உடற் பயிற்சியாகையால், அடிகளாரும் தன்காலத்து கல்வித் திட்
42

டத்திலுள் தேசியம் சார்ந்த நவீன அம்சத்தை அறிமுகஞ் செய்கிறார். "மேனாட்டு உடற் பயிற்சி முறைகளிலும் பார்க்க நமது நாட்டிற் பண்டு தொட்டிருந்து வருகிற யோகாசன முறையே சாலச்சிறந்தது' என்கிறார். இது சாங்கிய தத்துவத்தின் உடலியல் கொள்கையை மூலமா கக் கொண்டது. சில வகை உணவுக்கட்டுப்பாடு பழக்க வழக்கங்கள் நிபந்தனையாக இருப்பதால், குருகுல முறைப் படி நிறுவிய மாண வரில்லத்தில் அறிமுகஞ் செய்யப்படுகின் றது. இதனோடு தோட்ட வேலை. பரிசோதனையின் பின் அடிகளார் "தூயவுணவும், சுத்தக் காற்றும், நல்ல நீரும், யோகாசனமும் இச்சிறுவர்க்கு முகப்பொலிவையும், உடலு றுதியையும், உற்சாகத்தையும் கல்வியில் விருப்பையும் தந்து விட்டன" என்கிறார். பரிசோதனை வாயிலாக - தவம் - முயற்சியின் பயன் வெளிப்படையாகின்றது. இங்கு வற் புறுத்தலுக்கு இடமிராது மாணவன் தானாகவே தவஞ் செய்ய வழிகாட்ட வேண்டும். இங்குதான் அதற்குரிய சூழல் (கருகுல வாசம்) ஆசிரியரது ஆளுமை பிரதானமாகின்றது.
"பகற் கனவு காணும் நிலையிலே என்றும் உண் ணோக்கிய சிந்தையொடு புறத்தே நிகழ்பவற் றை க் கருதாதிருப்பது யோக சாதனையென்றும் வேதாந்த நிஷ்டையென்றுஞ் சிலர் தவறாக நினைக்கின்றனர். . தூங்காமையே யோக மென்பது யோகநூற்றுணிபு' என்கி றார் மூளையிலே சுத்தரத் தம் செறிந்து கரு பி கரணங் களெல்லாம் பூரண விழிப்பு நிலையிலிருக்கும் பொழுது நம்மைச் சூழவிருக்கும் பிரபஞ்சம் என்னும் ஏட்டினைப் பிடித்து நாம் அறிவினைப் பெறுதல் கூடும். பூதபெளதி கங்களைப் பற்றிய ஆராய்ச்சியே மேனாட் டா ரு க் கு உயர் நிலையையளித்த விஞ்ஞான சாஸ்திரமாகும்-எனும் இரகசியத்தையும் எம்மை அவதானிக்கும்படி வேண்டுகி றார். மேற்கோளாக,
சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிாான் கட்கே யுலகு =
43

Page 28
வள்ளுவர் கூற்றையும் கவனிக்கும்படி வேண்டுகிறார் "சண்ணிருந்தும் காணாத மாந்தர் பலருளர். செவியிருந் துங் கேளாத மாந்தர் பலருளர். ஆகவே, "உளப்பயிற்சிக் குச் சாதனமாகக் கட்புலனையுஞ் செவி ப் புல  ைன யுங் கூர்ந்தவதானிக்கு முறையிற் பயிற்றுதல் வே ண் டு ம்,' என்பதற்காக, "ஓவியக் கலையையும் இசைக் கலையையும் ஒரு சிறிதாவது அறிவுறுத்தல் நலமாகும்" எனும் கருத் தைக் கொண்டவராக இருந்த ர்.
இதன்பின் பதினாறு வயதினை அடைவதற்கு முன் கற்கவேண்டிய எண்ணுரல், இலக்கண நூல், புவியியல், வரலாறு, பூதபெளதிகவியல், இசைநூல் முதலியவற்றோடு கற்குத்திறமும் ஆராயப்படுகிறது. எண்ணுரல் கடல்போன்று பரந்த நீர்மையது எனும் அதே வேளை, குறித்த வயது எல்லைக்குள் கற்கவேண்டியவை மட்டும் இங்கு குறிப்பி டப்படுகின்றது.
அடுத்து பூதபெளதிகங்கள் - இதனை அறிவு நூல் என்கிறார். இதில் ஒரு துறையாகுதல் முற்றக் கற்றற்கு ஒர் ஆயுட்காலமே போதாது விடுமெனும் கருத்து. இதனுள் அனைவர்க்கும் இன்றியமையாப் பாகம் "உயிர்நூல்' என்பதனால் இளைஞர்க்கு இது அறிவுறுத்துதல் பயனுள்ள கல்வியின் பாற்படும் என்பார். 'தாவரங்களிலும் விலங்கி னங்களிடத்தும் மக்களிடத்தும் தோன்றும் உயிர்ச்சக்தி ஒரு தன்மையதே. பிறப்பதும், உணவுட்கொள் வ தும், வளர்ச்சியடைவதும், இனத்தைப் பெருக்குவதும், கால வெல்லையிலே இறப்பதும் எல்லாவுயிர்க்குமைந்த பொது விலக்கணமாகும்" என்பதை உடலியுறுத்துகிறார் அடிகளார். இது எமது தத்துவ பாரம்பரியத்தின் பல பிறப்புகள் கன்ம பலாபலன் என்பவற்றையெல்லாம் உள்ளடக்கும் கண்ணோட்டம் , " அன்பின் வழிபது பிர் நிலை" - எல்லா உயிரும் அன்பினால் நிலை பெறுவன. அன்பினால் வளர்ச்சி யெய்துவன. தாவர உயிர் மீதும் அன்பு செலுத்தினால்
44

அது செவ்விதின் வளர்ந்து மலர், கனி முதலிய பயனைத் தரும். இவ்வுண்மையை இளைஞர்க் கறிவுறுத்துவது உயிர் நூற் கல்வியின் முதற்படியாகும் (இது 50 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கட்டுரை. அக்காலத்திலும் இளைஞர்கள் மாற்றான் தோட்டத்து தென்னையின் குரும்பைகளை கள்ளமாக பறித்திருப்பார்கள். குருத்துக்களை சோடிப் பதற்கு வெட்டி யெடுத்திருப்பார்கள் போலும்). மன்னுயி ரனைத்தினையும் தன்னுயிர் போலக் கருதுகின்ற நற் குணத்தை இளம் பிராயத்திலேயே நிலை பெறச்செய்தல் வேண்டும்.
இத்தகைய சிந்தனைகள் உத்தியோக பூர்வமான கல் விக் கொள்கைகளோடு போராடுவதை சிவாநந்த வித்தி யாலயத்தில் கடமையாற்றும்போது நான் காணக் கூடிய தாக இருந்தது. அது ஒருவகை எதிர்நீச்சல் போட்ட வண்ணம் இருந்தது. எனது அன்பிற்கும் மதிப்புக்கும் உரிய திரு. கணபதிப்பிள்ளை அவர் க ள் அன்று அதிபராக இருந்து அத்தேசியப் போராட்டத்தை நடத்தி வருவதை நேரில் கண்டேன். (இன்று சபைத் தலைவராய் இருந்து இக்கூட்டத்தைக் கெளரவப்படுத்தும் திரு, தியாகராசா அவர்களும் அந்த குரு ச ந் த ரா ன த் தையே சேர்ந்தவர். இன்று இந்த மாவட்ட கல்வி நிருவாகத்தின் முழுப் பொறுப்புமே அவர் கையில் - பொறுப்பு பாரமானதாகை யால் "கையில்" என்று சொல்வதா தலையில்' என்று சொல்வதா தெரியாது )
வரலாற்றில் 30 ஆண்டுகளென்பது மிகச் சொற்ப காலம். இச்சிறு கால எல்லைக்குள், காலத்தால் அழியாது நிலைத்து நிற்கும் தேசிய தத்துவத்துக்கு, நவீனத்திற் கேர், ப ஆக்கபூர்வமான வகையில் அடிகளார் அடியெடுத் துக் கொடுக்க முயன்றார். வெற்றியும் கண்டார். பாரம் பரிய கல்வித் தத்துவத்தோடு மேல் நாட்டவரது நல்லம் சங்களும் கலந்திருந்தது. காலனி ஆட்சியின் கல்விக்
45

Page 29
கொள்கைகளுக்குப் பின்னணியாக ஆழமற்ற தத்துவம். பிரான்சிய நாட்டு நெ ப் போ லிய ன் இங்கிலாந்தைக் '#60 L did, it giggi Gag ib' grait prTrf. (Nation of shop keepers) இக்குறைகளை நிவர்த்தி செய்யுமுகமாக பல கல்விமான் கள் மேல்நாடுகளிலிருந்து வந்து அரும்பணியிலீடுபட்டதை நாம் மறுக்க முடியாது. காலனி ஆட்சியாளரோ ஐரோப் பிய தத்துவத்தை இங்கு அறிமுகஞ் செய்தார்கள் என்ப தற்கில்லை. மொழிகாரணத்தால் எமக்கு அது எட்டாது போயிற்று. ஆனால் சில கிறிஸ்தவ துறவிகளது முயற்சி யினால் சிற்சில இடங்களில் மட்டும் பதிந்திருந்தன. அத் தகைய துறவிகளுள், வணக்கத்துக்குரிய எவாணல் பாதி யார் செயின் மைக்கேல் கல்லூரியில் அடிகளாரைத் தன் இளம் வயதில் நெறிப்படுத்தியிருக்கிறார். ஆங்கிலத்தோடு இத்தீன் மொழிப் பயிற்சியும், பின்பு கொழும்பில் எவன்ஸ் றொபின் சன் முதலிய ஆச ன்கள். முடிவில், இரு தரப் பட்ட பாரம்பரியங்கள், அடிகளாரது கல்வித்துறைக்குரிய கருத்துக்களை நெறிப்படுத்துவனவாக இருந்தன. இருந்தும், தனது பூர்வீகத்தார் அருளிச் செய்த அடி அத்திவாரத்தி னின்றும் நிலை தளராது, மேல் நாட்டின் நல் அம்சங் களை ஏற்றுக்கொண்டவராகவே இருந்தார் அடிகளார். இது எமது வரலாற்றுக்கு புத்துயிர் ஊட்டும் பணியில் ஈடுபட வைத்தது
அடிகளார் கலாசாரத்தை சோத்தி வைரமென இரு வகைப்படுத்துகிறார். இவற்றுக்கிடையேயுள்ள வேறுபாடு, இலட்சியங்களுக்கு ஏற்ப ஒரு நாட்டினரை இயங்க வைப் பதைப் பொறுத்துள்ளது. தீவிரத் தன்மையடையும்போது படையெடுக்கச் செய்யும். சோர்வடைந்த நிலையில் எதி ரியை வரவழைக்கும். நிதானமாயிருக்கையில் பாதுகாப் பாய் இருந்தால் போதும் எனும் மனப்பான்மை. அடிக ளாரே இவ்வாறு வகைப்படுத்திக் கட்டுவதனால், நிதா னமாய் நின்று நாட்டையும் கலாசாரத்தையும் காப்பாற் றுவதேமேல் எனும் கொள்கையைக் கையாண்டாரென corrib,
46

"நலனில்லாச் சிலையுருவை உளியாற் செதுக்கி நலனி , றைந்த திருவுருவாக்குவோன் கைவல்ல சிற்பியெனப்படு வானன்றோ? அங்ங்னமாதலின், அயன் படைத்த படைப் பினும்பார்க்க நயன்படைத்த மெல்லிநல்லாரையும் ஆட வரையும் உருப்படுத்தியுதவும் நாடகக்கவியை யென் னென்று புகழ்ந்தேத்துவதென உன்னுமிடத்துச் "செக சிற்பியர்' ரெனப் புகழ்ந்து போற்றுதல் சிறப்புடையதா மெனப் புலப்படுகின்றது." இது ஷேக்ஸ்பியரைப் பற்றி அடிகளார் கூறுவது. கல்வித்துறையிலோ, கிறேக்க நாட்டு சிந்தனையாளராகிய பிளேட்டோ "பயனற்றது எது" என இனங்கண்டு, அதனை விலக்கினார். பிரான்சின் றுசோ என் பார் "பயனுள்ளது இது’’வெனக் கூறினார். அடிகளாரோ பயன ந் றது ம் பயனுள்ளதும் என்பவற்றை இனங் கண்டு, கற்றறிந்த சமுதாயத்தைச் செதுக்கித்தர முயன் றார். இவரையும் "செகசிற்பியா'ரென அழைத்தா
லென்ன.?
47

Page 30


Page 31

ـــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــےسےہے۔
அச்சகம், மட்டக்களப்பு.