கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விநாயகர் துதிப்பா (தாமோதரி வயிரவப்பிள்ளை)

Page 1


Page 2

姆、魏 :#نیز سے پ
”چینی: * *ܣܛܔ
** 8 *్మణి * வையததுள வாழவாங்கு வாழ இ% வழிகாட்டி வளர்த்த அன்புத் தந்தையின் பாதக்கமலங்களுக்கு இந்நூலைச் சமர்ப்பிக்கிறோம்.
அன்பு மனைவி, பிள்ளைகள் மருமக்கள், பேரப்பிள்ளைகள்
1

Page 3
பொருளடக்கம்
முகவுரை
விநாயகனை வழிபடுவோம்
பஞ்சபுராணம்
விநாயகர் வணக்கம்
விநாயகரகவல்
விநாயகர் போற்றித் திரு அகவல்
விநாயகர் காரிய சித்தி மாலை
விநாயகர் திருவகவல்
பிள்ளையார் கதை
முக்தி அகவல்
மாவை சித்தி விநாயகர் ஆலயம் வளர்ந்த வரலாறு
திருக்கோயிலிலும் திருவீதியிலும் செய்யத்தகாத குற்றங்கள்
மாவையூர் தாமோதரி வயிரவப்பிள்ளை ஞாபகார்த்தப் புலமைப் பரிசில் நிதி
எங்கள் பிதா பற்றிய. (குடும்ப விளக்கம்)
10
13
15
17
9
22
27
51
54
61
63
64
2

முகவுரை
மாவை விநாயகப் பெருமான அருள் நிழலில் மாவைப்பதி இராமு பார்வதி தம்பதிகளுக்கு ஏக புத்திரனாக அவதரித்து வளர்ந்து எமக்கெல்லாம் முன்னறி தெய்வமாக விளங்கியவர் எங்கள் அன்புத்தந்தை அமரர். வயிரவிப்பிள்ளை அவர்கள் நாமெல்லாம் ஒழுக்கத்தால், பண்பால், மனிதநேயத்தால், கடவுள் பக்தியால், உயர்ந்த மனிதர்களாக வாழவேண்டும்; கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் வாழவேண்டும்; இல்லறச் சிறப்போடும் செல்லச் சிறப்போடும் வாழ வேண்டும்; பிறர் தயவில் வாழாது சுயநம்பிக்கை, சுயபலம், சுயமுயற்சி ஆகியவற்றை மூலதனமாக்கி வாழவேண்டும் என்ற இலட்சியக் கனவோடு தன்னையே உருக்கி பாசத்தையும் பண்பையும் ஊட்டி வளர்த்த அன்புத் தந்தையின் ஆத்மா சாந்தியடைய வேண்டியும் அவரின் ஞாபகார்த்தமாகவும் எதைச் செய்யலாம் என யோசித்தோம்! மாவை விநாயகப் பெருமானின் அருள் நிழலில் பிறந்து வளர்ந்த அப்பெருமானின் தொண்டனுக்கு "விநாயகப் பெருமானைப் பற்றிய துதிப் பாடல்களைத் தொகுத்து' வெளியிடுவதுடன் அவ்வெளியீட்டில் மாவை விநாயகப் பெருமான் ஆலய வரலாற்றுக் குறிப்பையும் சேர்ப்பது பொருத்தமாக இருக்குமெனத் தந்தையார் அவர்களின் அன்பிற்கும் விசுவாசத்திற்கும் பாத்திரமான அவரது சிறிய தந்தையார் புத்திரரான அகில இலங்கை சமாதான நீதிபதி உயர்திரு ஆர். எம். நாகலிங்கம் அவர்களின் உபதேசத்தை" மதித்து விநாயகர் துதிப்பாக்களைத் திரட்டி" இந்நூல் வெளிவர விநாயகப் பெருமான் திருவருள் பாலித்துள்ளது.
'விநாயனை வழிபடுவோம் பெருமானை வணங்குவோம் எனும் தலைப்பிலான பயன்மிக்க கட்டுரையினைப் பண்டிதர் சி. அப்புத்துரை அவர்கள் வழங்கி நூலைச் சிறப்பித்துள்ளார். மாவையூர் எம். நாகலிங்கம் அவர்கள் உயர்திரு மாவை விநாயகர் ஆலயம் வளர்ந்த வரலாற்றுக் கட்டுரையை வழங்கியுள்ளார். மயூரி அச்சகத்தார் கடமை பக்தியுணர்வோடு செயற்பட்டு மிகக் குறுகியகால அவகாசத்தில் இந்நூல் வெளிவரத்துணை புரிந்துள்ளனர். இவ்வெளியீட்டுக்குப் பங்களித்த அனைவருக்கும் எமது நன்றியறிதலைப் பதிவு செய்து கொள்கிறோம்.
3.

Page 4
இச்சந்தர்ப்பத்தில் எமது தந்தையாரின் நல்வாழ்வுக்குத் துணை புரிந்த உற்றார், உறவினர்கள், நண்பர்கள், ஏனைய அனைவருக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். இறுதிக் காலத்தில் தந்தையார் நோய்வாய்ப்பட்டு வெள்ளவத்தை டெல்மன் வைத்திய சாலையிலும் யாழ்ப்பாணம் அரசினர் வைத்திய சாலையிலும் சிகிச்சை பெற்ற காலப்பகுதியில் மனிதநேய உணர்வோடு உதவி வழங்கிய அனைவருக்கும் நன்றி கூறுகிறோம். தம்பி ச. மயூரன் அவர்கள் இரவு பகல் பாராது சலியாது பாச உணர்வோடு செய்த பணிவிடைகளுக்குச் சிறப்பித்து நன்றி கூறுகிறோம். மரணச் சடங்கு நிகழ்வுகள் செவ்வனே நடைபெற உதவியோர்க்கும் அஞ்சலி செலுத்தியோருக்கும் அனுதாபம் தெரிவித்து துக்கம் பகிர்ந்தோருக்கும் ஏனைய ஒத்தாசைகள் வழங்கி உதவியோர்க்கும் நன்றி கூறுகிறோம்.
இங்ங்ணம் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
4

விநாயகனை வழிபடுவோம்
கணபதி, சுமுகன், இலம்போதரன், ஆனைமுகன், மூஷிகவாகனன், கஜமுகன், விக்நேஸ்வரன், தும்பிமுகன், மூத்தநாயனார் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் பிள்ளையார் விநாயகர் என்பதொரு பெயரையும் உடையவராகின்றார். சிவனுக்கு விமலன் என்றொரு பெயருணடு. வி+மலன் விமலன் என்றாகும். மலன் - மலத்தை உடையவன். விமலன் - மலன் இல்லாதவன் என்னும் எதிர்மறைக் கருத்தைத் தருவது. நீதி - அநீதி, மலன் - நிமலன், நியாயம் - அநியாயம் என்பவை போன்றதொரு அமைதியை உடையது விமலன் என்பதும் எனக் கொள்ளல் வேண்டும். அஃதே போன்று விநாயகன் என்னுந் தொடரும் வி - நாயகன் என்று பிரிக்கப்பட்டுத் தனக்கு மேலே நாயகன் ஒருவன் - தலைவன் ஒருவன் - இல்லாதவன் என்பது புலப்பட நிற்கின்றது. இந்தப் பெயர் விநாயகனின் முதன்மையை உணர்த்துவது தெரிகின்றது "மேலொருவன் இல்லாதானெங்கள் இறை" என்பதொரு தொடரினையும் அறிந்துள்ளோம். இது சிவனைக் குறித்து நிற்பது எனவே சிவன் வேறு சுமுகன் வேறு என்ற சிந்தனை நீங்கி இருவரும் ஒருவரே என்று காண முடிகின்றது. இந்த வழியில் விநாயகனுக்கான முதல் வணக்கத்தை நூல்களிற் பெரும்பான்மையாகச் சந்திக்கின்றோம்.
நற்குஞ் சரக்கன்று நண்ணிற் கலைஞானம்
கற்குஞ் சரக்கன்று காண். என்பது சித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றாய திருவருட்பயன் என்னும் நூலின் காப்புச் செய்யுளாய் அமைந்தது. குஞ்சரக்கன்று எம் உள்ளத்தை இடமாகக் கொண்டுவிட்டால் கலைகள் கற்பதற்குரியனவாகித்தான் பதிவாகுமென்றில்லை என்னும் பொருளினை இங்கே பெறுகின்றோம். அதாவது பிள்ளையார் எம் உள்ளத்தில் உறையக்கூடியதொரு வாய்ப்பினை நாம் உருவாக்கினாற் கலைகள் எளிதாக விளங்குவனவாகும் என்பது அது. கற்குஞ் சரக்கன்று என்னுந் தொடர் தரும் விளக்கம் அதுவே. எந்தவித இடரோ, பிரயாசையோ இருக்காது என்பது உணரத்தகும்.
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு. தும்பிக்கையான் மலர்ப்பாதத்தில் தினமும் பூ வைத்து உள்ளன் போடு வழிபடுபவர்களுக்கு கல்விநலஞ் சிறப்பாக அமையும், நல்ல தெளிந்த மனமுண்டாகும், இலக்குமி தேவியின் கடாட்சம் கிடைக்கும். உடம்பு நோய்களாற் துன்பமடைய
.*
- 5
ls
*

Page 5
மாட்டாது, என்று ஒளவையார் தந்த மூதுரை செய்யுளிலே குறிப்பிடுகின்றார்கள். குஞ்சரக்கன்று உள்ளத்தை இடமாகக் கொண்டுவிட்டாற் கலைஞானம் கற்கும் சரக்கன்று என்பது கொண்டு வேண்டியனவெல்லாம் வந்தடையும் என்பதும் பெறப்படும். வாக்குண்டாம், நல்ல மனமுண்டாம், மலரவள் நோக்குண்டாம், உடம்பு நோயினாற் பாதிப்படைய மாட்டாது என்று ஒளவையார் ஒவ்வொன்றாக ஒரு பட்டியல் போட்டுக் காட்டுகின்றார்கள். மாணவர்களாயுள்ளவர்களும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்னும் கருத்தினால் அப்படிச்செய்யப்பட்டது எனலாம் - உமாபதிசிவாசாரியாரோ "கலைஞானம் கற்குஞ் சரக்கன்று என்று ஒரு சிறிய தொடர்கொண்டு அருமையான கருத்துத் தெளிவை மாணவப் பருவத்தின் மேனிலையில் உள்ளோரிலிருந்து அனைவரும் தெரிந்துகொள்ளும் வகை சொல்லியுள்ளார்கள்.
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினாற் கண்ணிற் பணிமின் கனிந்து. என்பது மூத்தநாயனார் திருவிரட்டைமணிமாலை என்னும் நூலிற் கபிலதேவ நாயனார் தத்துள்ளதொரு பாடல், கொடிய வினைகளை வேரொடு களைய வல்லவன் விநாயகன். விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமானவன். எனவே சகல அண்டங்களுக்கும் முதல் என்றாகிவிடுகின்றான். ஆகவே சிவனினின்றும் வேறாகாதவன் என்பது தெளியப்படும். ஆனகாரணத்தினாலே கண்ணிற் பணிமின் என்கின்றார்கள்.
உறுப்புகளுள்ளே முதன்மை பெறுவது கணி. " கண்ணிற் சிறந்த உறுப்பில்லை", என்பது ஒரு அறிவுறுத்தல். அத்தகு சிறப்பினையுடைய கண் மிகுந்த அவதானத்துடன் பேணப்பட வேண்டியதுதான் விநாயகர் வழிபாடும் அவ்வண்ணம் போற்றப்பட வேண்டியதே இல்லை, அதற்கும் மேலானதாகச் சிந்திக்கப்பட வேண்டியது.
ஒளியான திருமேனி உமிழ்தான மிகமேவு களியார வருமானை கழல்நாளும் மறவாமல் அளியாளும் மலர்தூவும் அடியார்கள் உளமான வெளியரகும் வலிதாய வினைகூட நினையாவே. என்பது சித்தாந்த சாஸ்திரங்களுள் மற்றொரு நூலாய் சிவப்பிரகாசத்துக் காப்புச் செய்யுளாக உள்ளது. மறதி முதலான குழப்பங்களுக்கு இடமில்லாமல், விநாயகன் திருவடிகளை நாளும் புத்தம் புது மலர்கள் கொண்டு நிறைவான சிந்தனைகளுடன்
6

பூசனை செய்தால் அவன் அவர்கள் உள்ளத்தை இடமாகக் கொண்டு விடுவான். வலிவு பெற்ற வினைகள்கூட அவனை நினைத்துப் பார்க்கவும் முடியாது என்கின்றது இச்செய்யுள். எனவே அவன் எந்தவொரு துன்பத்திற்கும் ஆளாக வேண்டியதில்லை என்பது புலப்படுகின்றது. விநாயகனின் சந்நிதியில் அமைதி நிலவும் என்பது தெளிவு.
வெவ்வினையின் மூலத்தையே இல்லாமற் செய்ய வல்லவன் என்று கபிலதேவ நாயனார் குறிப்பிடுகின்றார். அதாவது, அடியவர்களின் அன்பான பூசனையின்பின் அவர்கள் வேண்டுதலை அவ்வண்ணம் நிறைவு செய்து வைப்பான் என்று உணர வைப்பது"விநாயகனே வெவ்வினையை வேரனுக்க வல்லான்” என்னும் பகுதி. அதே வேளை, விநாயகன் திருவடிகளில் தூயமலர்களைத் தூவி நாளும் வழிபாடு செய்பவர்களைக் கொடிய வினைகள் எட்டிப்பார்க்கவும் நினைக்கமாடட்டா என்று கூறுவர் சந்தான குரவர்களுள் ஒருவராய உமாபதிசிவாச்சாரியார்.
ஞானத் திருவுரு வாகிநற் சீரரு வீந்துநித்தம்
வானத் துலவிடு மாதவன் வல்லிருள் நீக்குதல்போல்
ஈனத் தனந்திகழ் ஆணவ மாய விருளகற்றும்
மோனத் திருவே குருகட் டரசே முறையுனக்கே. என்பது ஈழநாட்டின் வடபாலுள்ள குருகட்டுச் சித்திவிநாயகர் அந்தாதியில் உள்ளதொரு பாடல். ஈனத் தனந் திகழ் ஆணவ இருளைப் போக்குபவன் விநாயகன் - குருக்கட்டு விநாயகன் - என்கின்றார் ஆசிரியர். ஞானமே வடிவானவன், அடியவர்க்கு நல்லருள் ஈபவன். உலகியலில் நிலவும் இருளை நீக்குகின்ற வானத் துலவும் ஆதவனைப் போன்று ஆணவ இருளை நீக்குபவன் ஞானத் திருவுரு என்று காட்டுகின்றார்கள். எந்தவித எதிர்பார்ப்புமின்றி உலகில் நிலவும் இருளை ஆதவன் நீக்குவான் என்னும் உவமையைக் கொடுத்து விநாயகருக்கு கடவுளின் அருட்டிறம் வெளிக் கொணரப்பட்டுள்ளமை இன்பந் தருவது. அல்லாமலும் மாயத்தைச் செய்வதாகிய ஆணவ இருளைப் போக்கும் மோனத் திருவுரு குருக்கட்டு விநாயகர் என்பதொரு கருத்தையும் பெறக்கூடிய வகை "ஈனத் தனந்திகழ் ஆணவ மாய விருளகற்றும்" என்னுமடி நிற்கின்றது.
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொற் பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக் காதலாற் கூப்புவர்தங் கை
Z

Page 6
மூத்தநாயனார் திருவிரட்டை மணிமாலை என்னும் நூலிலுள்ள மற்றொரு திருப்பாடலிது. "ஆதலால் வானோரும் காதலாற் கூப்புவர் தங்கை", எனவே தேவர்களைப் பொறுத்தவரை வழிபாடு தேவையுடனானது என்று தெரிகின்றது. "புவனியிற் போய்ப் பிறவாமையில் நாள்நாம் போக்குகின்றோம் அவமே' என்னும் மணிவாசக சுவாமிகள் திருப்பாடற்கண்ணும் அவ்வண்ணமாகிய எதிர்பார்ப்புத் தொக்கு நிற்பது கவனிப்பிற்குரியது. உலகியலிற் பயனை எதிர்பார்ப்பது சகசமாகிவிட்டமையை உணர்ந்து கொண்ட நாயனார் செல்வம் பெருகும் முயற்சிகள் பலிதமாகும், கல்வியுடனான ஆற்றல்கள் வளரும் பெருமை பெருகும் என்பனவாகிய அடைவுகளை விநாயகனை காதலுடனாகி வழிபடுபவர்கள் சந்திக்க முடியும் என்கின்றார்கள். காலநிலை, சூழ்நிலை, வேண்டுதற்கண் உள்ள உறுதி என்பனவெல்லாம் இப்பாடற் கருவிலே தொக்கு நிற்பது தெரிகின்றது.
திருவுங் கல்வியுஞ் சீருந் தழைக்கவும் கருணை பூக்கவுந் தீமையைக் காய்க்கவும் பருவ மாய்நம துள்ளம் பழுக்கவும்
பெருகு மாழத்துப் பிள்ளையைப் பேணுவாம் என்னும் விருத்தாசலபுராணச் செய்யுளும் மூத்தநாயனார் திருவிரட்டை மணிமாலைச் செய்யுட் கருத்தை ஒட்டி நிற்பது கருதத்தக்கது. திருவும் கல்வியும் சிறப்புக்களும் பெருகும் இரக்கம் அன்பு மலரும். தீமைகள் இல்லாதொழியும் பருவமுடையதாகி உள்ளம் பக்குவமடையும் இச்சிறப்புக்கலெல்லாம் பிள்ளையாரை நாளும் வழிபடுவதால் வந்தடையும் என்கின்றார் ஆசிரியர்.
ஒரு கோட்டன் இருசெவியன் மும்மதத்தன் நால்வாய் ஐங்கரத்தன் ஆறு தருகோட்டம் பிறையிதழித் தாழ்சடையன் தருமொரு வாரணத்தின் தாள்கள் உருகோட்டன் போடும்வணங்கி ஒவாதே இரவுபகல் உணர்வோர் சிந்தைத் திருகோட்டும் அயன்திருமால் செல்வமுமொன் றோவென்னச் செய்யும் தேவே.
சாஸ்திரத் தொகுதியில் இரண்டாவதாய சிவஞானசித்தியார் தரும் பாடல் இது. இடையீடின்றி இரவுபகல் அன்போடு வணங்கி உள்ளத்தால் விநாயகனை உணர்பவர்களது சிந்தனைத் திருகுதாளங்களையெல்லாம் அவன் அகற்றுவான் என்கின்றது பாடல். சிந்தையைத் திருவுபடுத்தி மறுதலையாக உணரவைப்பது ஆணவம், அதனை ஒட்டுபவன் ஆனைமுகன். அவன் தாள்களைப் பற்றி நிற்போருக்கு அவை பெருஞ் செல்வம். திருமால் பிரமன் பதவிகளாகிய செல்வம் விநாயகன் திருவடிச் செல்வத்தின் முன் செல்வம் என்று எண்ணப்படக் கூடியவையா? என்று
e
8 -

கேட்கின்றார் ஆசிரியர். எண்ணப்படுதற்கே இடமில்லாதவை என்னும் பொருள் தந்து நிற்கின்றன. விநாயகனின் உயர்வை உணர்த்தும் வகையில் ஒரு கோட்டன், இரு செவியன், மும்மதத்தன் என்பது வரை ஒன்று இரண்டு மூன்று என்ற எண்களை முறைப்படி நினைய வைத்த ஆசிரியர், அடுத்து வரவேண்டிய நான்கு என்னும் எண்ணால் ஒவரு பெயர் குறிக்கப்பட வேண்டிய இடத்தில் அந்த எண்ணுணர்வைத் தரக் கூடியதும் தொங்கும் வாய் என்று பொருள் தருவதுமாகிய நால்வாய் என்னுந் தொடரை அமைத்துள்ளமை நினைந்து நினைந்து சுவைத்தற்குரியது.
எடுக்கு மாக்கதை இன்தமிழ்ச் செய்யுளாய் நடக்கு மேன்மை நமக்கருள் செய்திடத் தடக்கை யைந்துடைத் தாழ்செவி நீண்முடிக் கடக்க ளிற்றைக் கருத்து விருத்துவாம். சேக்கிழார் சுவாமிகளாற் பாடப்பட்ட பெரியபுராணத்துள்ளதொரு பாடல் இது. தொடங்கிய, சிறப்புப் பொருந்திய நூல், இனிய தமிழ்ச் செய்யுளால் நிறைவு பெறவேண்டும், அதற்காகிய அருள் கிடைக்கவேண்டுமென விநாயகனைக் கருத்தில் நிறைக்கின்றார் ஆசிரியர். விசாலம் பொருந்திய ஐந்து கரங்களையும் தாழ்ந்துள்ளனவாகிய செவிகளையும், நீண்ட முடியையும் உடைய மதம் சொரிகின்ற யானைக்கன்று போன்றவனாகிய விநாயகன் என்று அவன் காட்டப்படுகின்றான். கருணைப்பொழிவின் விசாலத்தை, அமைதியாக அறிந்துகொள்ளும் இயல்பு நிலையை, அருளுடமையை, அன்புப் பிரவாகத்தை அறிவுறுத்தும் உறுப்புக்கள், அவன் அருளுவான் என்பதை உறுதி செய்கின்றன.
பாலுந் தெளிதேனும் பாகும் பருப்பும் நிவேதித்து விநாயகனைப் பணிந்து சங்கத்தமிழ் மூன்றையுந் தரும்படி கேட்டவர் ஒளவை. கொழும்பு கொட்டாஞ்சேனை வரதராஜ விநாயகனைப்
பணிந்து பருப்பமுது பால்தெளிதேன் பாகு துணிந்த கரும்புகனி தூபம் - திணிந்தவிருள் சிந்துமொளித் தீபம் சிறக்கவமைத் தேன்திருமுன் வந்தேய ருள்புரிகு வாய் என்று இரட்டை மணிமாலை ஆசிரியர் வேண்டுகின்றார். பால், தெளிதேன், பாகு, பருப்பு என்பவற்றுடன் தூப தீபங்களையும் நிவேதனமாக்கி நல்ல கந்தம் ஒளிப்பிரவாகம் வேண்டுதலுக்கு என்பவற்றை வேண்டுதலுக்கு அனுசரணையாக்கி நிற்கின்றார் ஆசிரியர். அவருடனாகி நாமும் தெய்வீக உணர்விற் திளைப்போமாக.
- பண்டிதர் சி. அப்புத்துரை

Page 7
象一 திருச்சிற்றம்பலம்
விநாயகர் துதி
“திருவாக்குஞ் செய்கருமங்கை கூட்டுஞ் செஞ்சொற் பெருவாக்கும் பீடும் பெருக்கும் / உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலாற் கூப்புவர் தம்கை”
“ஒற்றை மருப்பும் ஓரிரண்டு கைத்தலமும் வெற்றி புனைந்த விழி மூன்றும் பெற்றதொரு தண்டைக்கால் வாரணத்தைத் தன் மனதில் எப்பொழுதுங்
கொண்டக்கால் வாராது கூற்று”
தேவாரம்
புலனைந்தும் பொறிகலங்கி தெறிகலங்கி
யறிவழிந்திட் டைம்மே லுந்தி அலமந்த போதாக வஞ்சேலென்
றனுள் செய்வா னமருங்கோயில் வலம் வந்த மடவார்கள் நடமாட
. முழவதிர மழையென்றஞ்சிச் சிலமந்தி யவமந்து மரமேறி
முகில் பார்க்குந் திருவையாறே.
10)
 

திருவாசகம்
பால்நினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப்
பரிந்து நீ பாவியேனுடைய ஊனினை உருக்கி உள்ளொலி பெருக்கி
உவப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து புறம் புறந்திரிந்த
செல்வமே சிவபெருமானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவதினியே.
திருவிசைப்பா
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே! தெளிவளர் பளிங்கின் திரள்மணிக்குன்றே!
சித்தத்துள் தித்திக்கும் தேனே! அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே அம்பலம் ஆடரங்காக வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே.
திருப்பல்லாண்டு
பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்
பாற்கடல் ஈந்தபிரான் மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்
மன்னிய தில்லைதன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற
சிற்றம்பலமே இடமாகப் பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
11

Page 8
திருப்புராணம்
ஐந்துபே ரறிவுங் கண்களே கொள்ள வளப்பருங் கரணங்க ணான்குஞ் சிந்தையே யாகக் குணமொரு மூன்றுந் திருந்துசாத் துவிகமே யாக இந்துவாழ் சடையா னாடுமா னந்த வெல்லையில் தனிப்பெருங் கூத்தின் வந்தபே ரின்ப வெள்ளத்துட் டிளைத்து மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்.
திருப்புகழ்
இறவாமற் பிறவாமற் எனையாள்சற் குருவாகிப் பிறவாகித் திரமான பெருவாழ்வைத் தருவாயே குறமாதைப் புணர்வோனே குகனேசற் குமரேசா கறையானைக் கிளையோனே கதிர்காமப் பெருமாளே.
வாழ்த்து
வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை யரசு செய்க குறைவிலாதுயிர்கள் வாழ்க நான்மறை யறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
12
 

சிவமயம்
விநாயகர் வணக்கம்
எடுக்கும் மாக்கதை யின்றமிழ்வ் செய்யுளாய் நடக்கு மேன்மை நமக்கருள் செய்திட தடக்கை யைந்துடைத் தாழ் செவி நீண்முடிக் கடக்க ளிற்றைக் கருத்துளி ருத்துவாம்.
- பெரிய புராணம்
திகட சக்கரச் செம்முக மைந்துளான் சகட சக்கரத் தாமரை நாயகன் அகட சக்கர வின்மணி யாவுரை விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்
- கந்தபுராணம்
வானுலகும் மண்ணுலகும் வாழமறை வாழப் பான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க ஞானமதம் ஐந்துகர மூன்றுவிழி நால்வாய் யானைமுக னைப்பரவி யஞ்சலிசெய் கிற்பாம்.
- சேக்கிழார் நாயனார் புராணம்
திருவும் கல்வியுஞ் சீரும் தழக்ைகவும் கருணை பூக்கவுந் தீமையைக் காய்க்கவும் பருவ மாய்நம துள்ளம் பழுக்கவும் பெருகு மாழத்துப் பிள்ளையைப் பேணுவாம்
விருத்தாசல புராணம்
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொற் பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக் காதலாற் கூப்புவர்தங் கை.
- மூத்தநாயனார் திருவிரட்டை மணிமாலை
13

Page 9
ஒருகோட்டன் இருசெவியன் ஓம்மதத்தன் நால்வாய் ஐங்கரத்தன் ஆறு தருகோட்டம் பிறைதமிழ்த் தாழ்சடையன் தருமொரு வாரணத்தின் தாள்கள் உருகோட்டன் பொடும்வணங்கி ஒவாதே இரவுபகல் உணர்வோர் சிந்தைத் திருகோட்டும் அயன்திருமால் செல்வமொன் றோவென்னச் செய்யுந் தேவே.
- சிவஞான சித்தியார்
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான்பாதம் தப்பாமற் சார்வார் தமக்கு - மூதுரை
வாழ்த்த வணங்க அறியா வறியனைப் பாழ்த்த நரகப் படுமிக்கண் - ஆழ்த்திவிடா வண்ண மணைப்பான் வரதரா சைங்கரனென் எண்ணத் தினிக்கு மிறை
- வரதராஜ விநாயகர் இரட்டைமணிமாலை
ஞானத் திருவுரு வாகிநற் சீரரு வீந்துநித்தம் வானத் துலவிடு மாதவன் வல்லிருள் நீக்குதல்போல் ஈனத் தனந்திகழ் ஆணவ மாய விருளகற்றும் மோனத் திருவே குருகட் டரசே முறையுனக்கே
- குருக்கட்டுச் சித்திவிநாயகர் அந்தாதி
பதியும் முளத்து பரநின் னுருவம் நிதியும் மதுவே நினைவு முனதே பொதியா கியமால் பொடியா வினைதீய் வீதியாய் எமையாள் விளைவாந் தவமே
Ᏹ - வரதராஜ விநாயகர் சதகம்
துங்கநல் வங்கக் கடலுடன் பாக்குநல் நீரிணையுந் தங்கி அரண்செயு நல்லெழில் யாழ்குடா நாட்டினிலே எங்கும் புகழ்சேர் வடமராட் சிப்பதித் துன்னையிலே பொங்கும் புளியங் கியானருட் சிதம்பரத்து விநாயகனே
- துன்னை புளியங்கியான் பதிகம்
14

ஒளவையார் அருளிய விநாயகரகவல்
சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப் பொன்னரை ஞாணும் பூந்துகி லாடையும் வண்ணம ருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் இரண்டு செவியு மிலங்குபொன் முடியுந் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் சொற்பதங் கடந்த துரிய மெய்ஞ் ஞான அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே முப்பழம் நுகரும் மூஷிக வாகன இப்பொழு தென்னை யாட்கொள வேண்டித் தாயா யெனக்குத் தானெழுந் தருளி மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத் திருந்திய முதலைந் தெழுத்துந் தெளிவாய்ப் பொருந்தவே வந்தெ னுளந்தனிற் புகுந்து குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திறமிது பொருளென வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக் கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி ஐம்புலன் தன்னை யடக்கு முபாயம் இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் கருவிக ளொடுங்கும் கருத்தறி வித்து இருவினை தன்னை யறுத்திருள் கடிந்து தலமொரு நான்குந் தந்தெனக் கருளி மலமொரு மூன்றின் மயக்க மறுத்தே ஒன்பது வாயி லொருமந் திரத்தால் ஐம்புலக்கதவை யடைப்பதுங் காட்டி ஆறா தாரத் தங்கிசை நிலையும்
15

Page 10
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே இடைபிங் கலையி னெழுத்தறி வித்துக் கடையிற் சுழிமுனைக் கபாலமுங் காட்டி மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பி னாவி லுணர்த்திக் குண்டலி யதனிற் கூடிய வசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட வுரைத்து மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக் காலா லெழுப்புங் கருத்தறி வித்தே அமுத நிலையு மாதித்த னியக்கமுங் குமுத சகாயன் குணத்தையுங் கூறி இடைச்சக் கரத்தி னிரெட்டு நிலையும் உடற்சக் கரத்தி னுறுப்பையுங் காட்டிச் சண்முக தூலமுஞ் சதுர்முக சூட்சமும் எண்முக மாக வினிதெனக் கருளிப் புரியட்ட காயம் புலப்பட வெனக்குத் தெரியெட்டு நிலையுந் தெரிசனப் படுத்திக் கருத்தினிற் கபால வாயில் காட்டி இருத்தி முத்தி யினிதெனக் கருளி என்னை யறிவித் தெனக்கருள் செய்து முன்னை வினையின் முதலைக் களைந்தே வாக்கும் மனமும் இல்லாமனோலயம் தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து இருள்வெளி இரண்டிற்கும் ஒன்றிடம் என்ன அருள்தரும் ஆனந்தத்து அழுத்தி என்செவியில் எல்லை யில்லா ஆனந்தம் அளித்து அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச் சத்தத் தினுள்ளே சதாசிவம் காட்டிச் சித்தத் தினுள்ளே சிவலிங்கம் காட்டிச் அணுவிற்கு அணுவாய் அப்பாலுக் கப்பாலாய் கணு முற்றி நின்ற கரும்புள்ளே காட்டி வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடும் மெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி அஞ்சக் கரத்தின் அரும் பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத் தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட வித்தக விநாயக விரைகழல் சரணே.
- முற்றிற்று -
16

விநாயகர் போற்றித் திரு அகவல்
அருள்புரிந்து அருளும் அரசே போற்றி இருவினை துடைக்கும் இறைவா போற்றி மறைமுனி ஒருவன் மாங்கனி கொணர்ந்து கறைமிடற்று இறைவன் கையில் கொடுப்ப வேலனும் நீயும் விரும்பி முன் நிற்ப ஒருநொடி அதனில் உலகெலாம் வலமாய் வரும் அவர் தமக்கு வழங்குவோம் யாம் என வரைவுடன் மயில்மிசை வேலோன் வருமுனர் அரனை வலம்வந்து அக்கினி வாங்கிய விரகுள விக்கின விநாயக போற்றி முன்னடி தெரியாப் பெருங்கவிப் பெருமான் மண்மிசை வைத்து உனை வாவியில் செல்வக் கண்ணிலான் இவனென்க் கரந்து அவன் போகக் கரமிசை ஏறிக் காணாது இரங்கி உரை தடுமாறி உள்ளம் கலங்கிக் கூகூ கணபதி கூகூ என்னக் கூகூ என்றருள் குன்றே போற்றி அப்பணி சடையோன் முப்புரம் எரிக்க இப்புவி அதனை இரதம் ஆக்கித் தினகரன் மதிதேர்ச் சில இலதாகப் பொருவரு மறைகளே புரவி யாகச் சங்கைசேர் நான்முகன் சாரதி யாகப் பங்கயக் கண்ணன் பகழி யாக மலை சிலையாக வாசுகி நாணா நிலைபெற நிற்கும் தெடுந்தேர் தன்னில் விக்கினம் தீர்க்கும் விநாயக நம எனச் சிக்கென இறைவன் செப்பா தேறலின் தச்சுறச் சமைத்த தகைமணி நெடுந்தேர்

Page 11
அச்சறுத்து அருளும் அரசே போற்றி வேதப் பொருளாம் விமலா போற்றி பூதப் படையுடைப் புனிதா போற்றி கரமைந்து உடைய களிறே போற்றி பரமன் பயந்த பாலா போற்றி அகிலம் ஈன்ற அருளும் அம்மை தமக்குத் திருமகன் ஆகிய செல்வா போற்றி அற்றவர்க்கு அருள்புரிஅரசே போற்றி கற்றவர் மனதிற் காண்பாய் போற்றி பாசாங்குசம் கை பரித்தாய் போற்றி தேசார் மணிமுடித் தேவே போற்றி ஏழுநரகு எழுபிறப்பு அறுப்பாய் போற்றி எழுமையும் எமக்கு இங்கு இரங்குவாய் போற்றி துளைசெறி வக்கிர துண்டா போற்றி வளநிகர் ஒற்றை மருப்பா போற்றி சுரர்தொழும் முருகன் துணைவா போற்றி நல்லவர் புகழும் நம்பா போற்றி வல்லபைக்கு உரிய மணாளா போற்றி கயமுகத்து அவுணனைக் காய்ந்தாய் போற்றி வயதுக மூசஷிக வாகனா போற்றி ஓங்காரத் தனி உருவே போற்றி நீங்காக் கருணை நிமலா போற்றி துறவர் தமக்கு ஒரு துணைவா போற்றி முறநிகர் தழைசெவி முதல்வா போற்றி துண்டமா மதிபோல் துலங்கிய கோட்டைக் கண்டகம் ஆகக் கைதனில் பிடித்துப் பண்டு பாரதப் பழங்கதை பசும்பொன் விண்டுவில் வரைந்த விமலா போற்றி போற்றி போற்றியுன் பொற்பதம் போற்றி
18

காசிப முனிவர் அருளிச் செய்த விநாயகர் காரிய சித்தி மாலை
பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ சந்த மறைஆ கமலங்கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம்.
உலகம் முழுதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும் பொருளெவனவ் வுலகிற் பிறக்கும் விகாரங்கள் உறாத மேலாம் ஒளியாவன் ? உலகம் புரியும் வினைப்பயனை ஊட்டுங் களைகண் எவன்அந்த உலகு முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றோம்
இடர்கள் முழுதும் எவனருளால் எரிவீ மும்பஞ் செனமாயும் தொடரும் உயிர்கள் எவனருளால் சுரர்வாழ் பதியும் உறச்செய்யும் கடவுள் முதலோர்க் கூறின்றிக் கருமம் எவனால் முடிவுறும்அத் தடவு மருப்புக் கணபதிபொன் சரணம் சரணம் அடைகின்றோம்
மூர்த்தி யாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான தீர்த்த மாகி அறிந்தறியாத் திறத்தி னானும் உயிர்க்குநலம்
19 USZ

Page 12
ஆர்த்தி நாளும் அறியாமை அகற்றி அறிவிப் பான்எவன்அப் போர்த்த கருணைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.
செய்யும் வினையின் முதல்யாவன் செய்யப் படும்அப் பொருள்யாவன் ஐயம் இன்றி உளதாகும் அந்தக் கருமம் பயன்யாவன் உய்யும் வினையின் பயன்விளைவில் ஊட்டி விடுப்பான் எவன் அந்தப் பொய்யில் இறையைக் கணபதியைப்
புரிந்து சரணம் அடைகின்றோம்.
வேதம் அளந்தும் அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகைய வேத முடிவில் நடம்நவிலும் விமலன் யாவன் விளங்குபர நாத முடிவில் வீற்றிடுக்கும் நாதன் எவன எண் குணன் எவன்அப் போத முதலைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம்
மண்ணின் ஓர்ஜங் குணமாகி வதிவான் எவன்நீர் இடைநான்காய் நண்ணி அமர்வான் எவன்தீயின் மூன்றாய் நவில்வான் எவன்வளியின் எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன்வான் இடைஒன்றாம் அண்ணல் எவன்அக் கணபதியை
அன்பிற் சரணம் அடைகின்றோம்

பாச அறிவில் பசு அறிவில் பற்றற் கரிய பரன்யாவன்
பாச அறிவும் பசு அறிவும்
பயிலப் பணிக்கும் அவன்யாவன் பாச அறிவும் பசு அறிவும் பாற்றி மேலாம் அறிவான தேசன் எவன்அக் கணபதியைத்
திகழச் சரணம் அடைகின்றோம்
இந்த நமது தோத்திரத்தை யாவன் மூன்று தினம்மும்மைச் சந்தி களில்தோத் திரஞ்செயினும் சகல கரும சித்திபெறும் சிந்தை மகிழச் சுகம் பெறும்எண் தினம்உச் சரிக்கின் சதுர்த்தியிடைப் பந்தம் அகல ஓர்எண்கால் படிக்கில் அட்ட சித்தியுறும்
திங்கள் இரண்டு தனிம்தோறும் திகழ் ஒருபான் முநையோதில் தங்கும் அரச வசியமாம் தயங்க இருபத் தொருமுறைமை பொங்கும் உழுவ லால்கிளப்பின் பொருவின் மைந்தர் விழுக்கல்வி துங்க வெறுக்கை முதற்பலவும் தோன்றும் எனச்செப் பினர்மறைந்தார்.
- முற்றிற்று -

Page 13
நக்கீரதேவர் அருளியது விநாயகர் திருவகவல்
சீர்தரு மூலச் செழுஞ்சுடர் விளக்கே கார்நிற மேனிக் கற்பகக் களிறே அல்லல் வினையை யறுத்திடு ஞான வல்லபை தன்னை மருவிய மார்பா ! பொங்கர வணிந்த புண்ணிய மூர்த்தி ! சங்கர னருளிய சற்குரு விநாயக ஏழை யடியே னிருவிழி காண வேழ முகமும் வெண்பிறைக் கோடும் பெருகிய செவியும் பேழை வயிறுந் திருவளர் நுதலில் திருநீற் றழகுஞ் சிறுத்த கண்ணுஞ் சீதளப் பார்வையுந் நறுந்திகழ் நாசியும் நாண்மலர்ப் பாதமும் நவமணி மகுட நல்மலர் முடியும் கவச குண்டலக் காந்தியும் விளங்கச் சிந்துரத் திலகச் சந்தனப் பொட்டும் ஐந்து கரத்தி னழகும் வீற்றிருக்க பாச வினையைப் பறித்திடு மங்குச பாசத் தொளியும் பன்மணி மார்பும் பொன்னா பாணமும் பொருந்து முந்நூலும் மின்னா மெனவே விளங்கு பட்டழகும் உந்திச் சுழியு முரோமத் தழகுந் தொந்தி வயிறுந் துதிக்கையுந் தோன்ற வேதனு மாலும் விமலனு மறியாப் பாதச் சதங்கை பலதெனி யார்ப்பத் தண்டைச் சிலம்புத் தங்கக் கொலுசும் எண்டிசை மண்டல மெங்கு முழங்கத் தொகுது துந்துமி தொந்தோ மெனவே தகுகு திந்திமி தாள முழங்க ஆடிய பாத மண்டர்கள் போற்ற நாடிமெய் யடியர் நாளுந் துதிக்கக் கருணை புரிந்து காசவிதந் தருள இருளைக் கடிந்து யெங்கும் நிறையப்
22

பொங்குபே ரொளியாய்ப் பொன்மலை போலத் திங்கள் முடியான் றிருவுள மகிழ வந்த வாரண வடிவையுங் காட்டிச் சிந்தை வளர்ந்த சீரடி யார்க்கு இகபர சாதன மிரண்டு முதவி அகவினைத் துன்ப மகந்தை யறுத்து மூலா தார முச்சுடர் காட்டி வாலாம் பிகைதன் வடிவையுங் காட்டி மாணிக்க மேனி மலர்ப்பதங் காட்டிப் பேணி பணியப் பீஜா கூடிரமும் ஒமென் றுதித்த ஓங்காரத் துள்ளே ஆமென் றெழுந்த அக்ஷர வடிவும் இடைபிங் கலைக ளிரண்டின டுவே கடைமுனை சுழிமுனைக் கபாலமுங் குறித்து மண்டல மூன்றும் வாயுவோர் பத்துங் குண்டலி யசபை கூறிய நாடியும் பூதமும் பொறியும் புகழ்குண மூன்றும் வாதனை செய்யு மறிவையுங் காட்டி ஆறா தார அங்குச நிலையைப் பேறாகி நின்ற பெருமையுங் காட்டிப் பஞ்ச மூர்த்திகள் பாகத் தமர்ந்த பஞ்ச சக்திகளின் பாதமுங் காட்டி நவ்வொடு மவ்வும் நடுவணை வீட்டில் அவ்வு மாக்கினை அனாதி சதாசிவம் மைவிழி ஞான மனோன்மணி பாதமும் நைவினை நணுகா நாத கீதமும் கண்டு வணங்கக் கண்ணைத் திறந்து விண்டல மான வெளிவையுங் காட்டி ஐம்பத்தோ ரெழுத் தட்சர நிலையை இன்ப சக்கர விதிதனைக் காட்டிப் புருவ நடுவணை பொற்கம லாசான் திருவிளை யாடலுந் திருவடி காட்டி நாதமும் விந்தும் நடுநிலை காட்டிப் போத நிறைந்த பூரணங் காட்டி உச்சி வெளிதனி லுள்ளொலி காட்டி
23

Page 14
வச்சிரம் பச்சை மரகத முத்துப் பவளம் நிறைந்த பளிங்கொளி காட்டிச் சிவகயி லாயச் சேர்வையுங் காட்டிச் சத்தம் பிறந்த தலத்தையுங் காட்டித் தத்துவந் தொண்ணுாற் றாறையும் நீக்கிக் கருவி கரணங் களங்க மறுத்து மருவிய பிறவி மாயைநீக்கி உம்பர்கள் ரிஷிகள் ஒருவருங் காணா அம்பர வெளியி னருளையுங் காட்டி சத்தி பராபரை சதாநந்தி நிராமய நித்திய ரூபி நிலைமையுங் காட்டி அடியவர் ஞான வமிர்தமா யுண்ணும் வடிவை யறியும் வழிதனைக் காட்டி நாசி நுனியில் நடக்குங் கலைகள் வாசிவா வென்று வாங்கிப் பிடித்து நின்மல வடிவாய் நிறுவித் தப்புறம் விண்மய மான விதத்தையுங் காட்டித் தராதல முழுதுந் தானாய் நிறைந்த பராபர வெளியைப் பணிந்திடக் காட்டி என்னுட லாவி யிடம்பொரு வியாவுந் தன்னுடை வசமாந் தவநிலை காட்டி நானெனு மாணவம் நாசம தாகத் தானென வந்து தயக்கந் தீர ஆன குருவா யாட்கொண் டருளி மோன ஞான முழுது மளித்துச் சிற்பரி பூரண சிவத்தைக் 岳爪6况T நற்சிவ நிட்கள நாட்டமுந் தந்து குருவுஞ் சீடனுங் கூடிக் கலந்து இருவரு மொருதனி யிடந்தனிற் சேர்ந்து தானந்த மாகித் தற்பர வெளியில் ஆனந்த போத அறிவைக் கலந்து புவனத் தோழிலைப் பொய்யென் றுணர்ந்து மவுன முத்திரையை மனத்தி லிருத்திப் பெண்டு பிள்ளை பண்டு பதார்த்தங்
24

கண்டது மாயை கனவெனக் காட்டிப் பாச பந்தப் பவக்கடல் நீக்கி ஈச லிணையடி யிருத்தி மனத்தே நீயே நானாய் நானே நீயாய்க் காயா புரியைக் கனவென வுணர்ந்து எல்லா முன்செய லென்றே யுணர நல்லா யுன்னருள் நாட்டந் தருவாய் காரண குருவே கற்பகக் களிறே வாரண முகத்து வள்ளலே போற்றி ! நித்திய பூசை நைவேத் தியமும் பத்தியாய்க் கொடுத்துப் பரமனே போற்றி ஏத்தி யனுதின மெளியேன் பணியக் கூற்றினை யுதைத்த குளிர்பதந் தந்து ஆசு மதுர வமிர்த மளித்துப் பேசு ஞானப் பேறெனக் கருளி மனத்தில் நினைத்த மதுர வாசகம் நினைவிலுங் கனவிலுங் நேசம் பொருந்தி அருண கிரியா ரவ்வை போலக் கருத்து மிகுந்த கவிமழை பொழிய வாக்குக் கெட்டா வாழ்வை யளித்து நோக்கரு ஞான நோக்கு மளித்து இல்லற வாழ்க்கை யிடையூற கற்றிப் புல்ல ரிடத்திற் புகுந் துழலாமல் ஏற்ப திகழ்ச்சி என்ப தகற்றிக் காப்ப துனக்குக் கடன்கண் டாயே ! நல்வினை தீவினை நாடிவருகினுஞ் செல்வினையெல்லாஞ் செயலுன தாமால் தந்தையும் நீயே தாயும் நீயே எந்தையும் நீயே ஈசனும் நீயே போத ஞானப் பொருளும் நீயே நாதமும் நீயே நான்மறை நீயே அரியும் நீயே அயனும் நீயே திரிபுரு தகனஞ் செய்தவன் நீயே சத்தியும் நீயே சதாசிவம் நீயே புத்தியும் நீயே புராந்தகன் நீயே
25

Page 15
பத்தியும் நீயே பந்தமும் நீயே முத்தியும் நீயே மோகூடிமும் நீயே ஏகமும் நீயே என்னுயிர் நீயே தேகமும் நீயே தேவனும் நீயே உன்னரு ளன்றி யுயிர்த்துணை காணேன் பின்னொரு தெய்வம் பேசவு மறியேன் வேதன் கொடுத்த மெய்யிது தன்னில் வாத பித்தம் வருத்திடு சிலேட்டுமம் மூன்று நாடியு முக்குண மாகித் தோன்றும் வினையின் துன்ப மறுத்து நாலா யிரத்து நானூற்று நாற்பத்தெட்டு மேலாம் வினையை மெலியக் களைந்து அஞ்சா நிலைமை யருளியே நித்தம் பஞ்சா கூடிரநிலை பாலித் தெனக்குச் செல்வமுங் கல்வியுஞ் சீரும் பெருக நல்வர மேதரும் நான்மறை விநாயக ! சத்திய வாக்குச் சத்தா யுதவிப் புத்திர னேதரும் புண்ணிய முதலே வெண்ணி றணியும் விமலன் புதல்வா பெண்ணா முமையாள் பெற்றிருந் தேவே அரிதிரு மருகா அறுமுகன் றுணைவா கரிமுக வாரணக் கணபதி சரணம் ! குருவே சரணம் குணமே சரணம் பெருவயிற் றோனே பொற்றாள் சரணம் கண்ணே மணியே கதியே சரணம் விண்ணே யொளியே வேந்தே சரணம் மாணத வாவி மலர்த்தடாகத் தருகிற் றானத்தில் வாழுந் தற்பரா சரணம் ! உச்சிப் புருவத் துதித்துல களிக்குஞ் சச்சி தானந்த சற்குரு சரணம் ! , விக்கின விநாயகா தேவே ஒம் ! அரகர சண்முக பவனே ஓம் ! சிவசிவ மஹாதேவ சம்போ ஓம் !
முற்றிற்று
26

யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் அ. வரதபண்டிதர் அவர்கள் இயற்றிய பிள்ளையார் கதை
காப்பு
கரும்பும் இளநீருங் காரெள்ளுந் தேனும் விரும்பும் அவல்பலவும் மேன்மேல் - அருந்திக் குணமுடைய னாய்வந்து குற்றங்கள் தீர்க்குங் கணபதியே இக்கதைக்கு காப்பு.
திருவிளங்கு மான்மருகா சேவதனில் ஏறி வரும்அரன்றான் ஈன்றருளும் மைந்தா - முருகனுக்கு முன்பிறந்த யானை முகவா உனைத்தொழுவேன் என் கதைக்கு நீஎன்றும் காப்பு.
விநாயகள் துதி
திரவாக்குஞ் செய்கருமங் கைகூட்டுஞ் செஞ்சொற் பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனைமு கத்தானைக் காதலாற் கூப்புவர் தம் கை
ஒற்றை மருப்பும் ஓரிரண்டு கைத்தலமும் வெற்றி புனைந்த விழிமூன்றும் - பெற்றதொரு தண்டைக்கால் வாரணத்தைத் தன்மனதில் எப்பொழுதும் கொண்டக்கால் வாராது கூற்று.
பாலுந் தெளிதேனும் பாகும் பருப்பு:மிவை நாலும் கலந்துஉனக்கு நான்தருவேன் - கோலம்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீஎனக்கு சங்கத் தமிழ்மூன்றும் தா.
சப்பாணி
எள்ளு பொரிதேன் அவல்அப்பமிக்கும் பயறும் இளநீரும் வள்ளிக் கிழங்கும் மாம்பழமும, வாழைப்பழமும், பலாப்பழமும்
வெள்ளைப்பாலும், மோதகமும் விரும்பிப்படைத்தேன் சந்நிதியில் கொள்ளைக் கருணைக் கணபதியே கொட்டி அருள்க சப்பாணி.
27.

Page 16
சண்டப் பெருச்சாளி ஏறிச் சடைகொண்ட வையத் துலாவி, அண்டத்து அமரர் துதிக்க அடியார்க்கு அருளும் பிரானே, எண்திக்கும் அன்பர்கள் பார்க்க இணையற்ற பேரொளி வீசக், குண்டைக் கணபதி நம்பி கொடுங்கையாற் சப்பாணி கொட்டே,
சரஸ்வதி துதி
புத்தகத் துள்ளுறை மாதே பூவில் அமர்ந்திடு வாழ்வே வித்தகப் பெண்பிள்ளாய் நங்காய் வேதப் பொருளுக்கு இறைவீ முத்தின் குடைஉடை யாளே மூவுல குந்தொழுது ஏத்துஞ் செப்புக் கவித்த முலையாய் செவ்வரி ஓடிய கண்ணாய் தக்கோலந் தின்னும் வாயாய் சரஸ்வதி என்னுந் திருவே எக்காலமும் உன்னைத் தொழுவேன் இயல்இசை நாடகம் என்னும் முத்தமிழ்க் கல்விகள் எல்லாம் முழுதும் எனக்கருள் செய்துஎன் சித்தந் தனில்நீ இருந்து திருவருள் செய்திடு வாயே.
அதிகாரம்
பொன்னிறங் கடுக்கும் புனற்செறி குடுமித் தென்மலை இருந்த சீர்சால் முனிவன் கந்த மும்மதக் கரிமுகன் கதைதனைச் செந்தமிழ் வகையால் தெளிவுறச் செப்பினன் அன்னதிற் பிறவில் அரில்தபத் திரட்டித் தொன்னெறி விளங்கச் சொல்லுவன் கதையே
கதை
மந்திர கிரியில் வடபால் ஆங்குஓர் இந்துவழி சோலை இராசமா நகரியில் அந்தணன் ஒருவனும் ஆயிழை ஒருத்தியுஞ் சுந்தரப் புதல்வரைப் பெறுதல் வேண்டிக் கடவுள் ஆலயமுங் கடிமலர்ப் பொய்கையும் தடநிழற் பள்ளியுந் தாம்பல சமைத்துப் புதல்வரைத் தருகெனப் பொருப்புஅரசு ஈன்ற மதர்விழி பாகனை வழிபடும் நாளில் மற்றவர் புரியும் மாதவங் கண்டு சிற்றிடை உமையாள் சிவன்அடி வணங்கிப்
函一

பரனே சிவனே பல்லுயிர்க்கு உயிரே அரனே மறையவர்க்கு அருள்புரிந்து அருளென அந்தஅந் தணனுக்கு இந்தநற் பிறப்பில் மைந்தரில் லைஎன்று மறுத்துஅரன் உரைப்ப எப்பரிசு ஆயினும் எம்பொருட்டு ஒருசுதன் தப்பிலா மறையோன் தனக்குஅருள் செய்கென எமைஆ ளுடைய உமையாள் மொழிய இமையா முக்கண் இறைவன் வெகுண்டு பெண்சொற் கேட்டல் பேதமை என்று பண்சொற் பயிலும் பாவையை நோக்கிப் பேதாய் நீபோய்ப் பிறன்ன மொழிய மாதுமை அவளுள் மனந்தளர்வு உற்றுப் பொன்றிடும் மானிட புன்பிறப்பு எய்துதல் நன்றல என்றே நடுக்கமுற்று உரைப்பக் கறைமிடற்று அண்ணல் கருணை கூர்ந்து பிறைநுதல் அவட்குநீ பிள்ளை யாகச் சென்றுஅவண் வளர்ந்து சிலபகல் கழித்தால் மன்றல் செய்து அருள்வோம் வருந்தலை என்று விடைகொடுத்து அருள விலங்கல்மா மகளும் பெடைமயிற் சாயற் பெண்மக வுஆகித் தார்மலி மார்பன் சதுர்மறைக் கிழவன் சீர்மலி மனைவி திருவயிற்று உதித்துப் பாவையுஞ் சிற்றிலும் பந்தொடு கழங்கும் யாவையும் பயின்ற இயல்பினள் ஆகி ஐயாண்டு அடைந்தபின் அன்னையும் அத்தனும் மையார் கருங்குழல் வாணுதல் தன்னை மானுட மறையோர்க்கு வதுவை செய்திடக் கான்அமர் குழலியைக் கருதிக் கேட்பப் பிறப்புஇறப்பு இல்லாப் பெரியோற்கு அன்றி அறத்தகு வதுவைக்கு அமையோன் யான்என மற்றவன் தன்னைஉன் மணமக னாகப் பெற்றிடல் அரிதெனப் பெயர்த்துஅவர் பேச அருந்தவ முயற்சியால் அணுகுவேன் யான்எனக் கருந்தட நெடுங்கண் கவுரிஅங்கு உரைப்ப மருமலி கமல மலர்த்தடத்து அருகில்
29

Page 17
தருமலி நிழல்தவச் சாலையது அமைத்துப பணியணி பற்பல பாங்கியர் சூழ அணிமலர்க் குழல்உமை அருந்தவம் புரிதலும் அரிவை தன்அருந்தவம் அறிவோம் யாம்என இருவரும் அறியா இமையவர் பெருமான் மான்இடம் ஏந்தும் வண்ணமது ஒழிந்து மானிட யோக மறையவன் ஆகிக் குடையோடு தண்டுநற் குண்டிகை கொண்டு மடமயில் தவம்புரி வாவிக் கரையிற் கண்ணுதல் வந்து கருணை காட்டித் தணிநறுங் கூந்தல் தையலை நோக்கி மின்பெறு நுண்இடை மெல்லிய லாய்நீ என்பெறத் தவமஇங்கு இயற்றுவது என்றலுங் கொன்றைவார் சடையனைக் கூடஎன்று உரைத்தலும் நன்று எனச் சிரித்து நான்மறை யோனும் மாட்டினிற் ஏறி மான்மழு தரித்துக் காட்டினில் சுடலையிற் கணத்துடன் ஆடிப் பாம்பும் எலும்பும் பல்தலை மாலையுஞ் சாம்பரும் அணிந்து தலையோடு ஏந்திப் பிச்சைகொண்டு உழலும் பித்தன் தன்னை நச்சிநீர் செய்தவம் நகைதரும் நுமக்கெனப் பூங்கொடி அருந்தவம் பூசுரன் குலைத்தலும் ஆங்குஅவள் நாணமுற்று அணிமனை புகுதச் சேடியர் வந்து செழுமலர்க் குழலியை வாடுதல் ஒழிகென மனம்மிகத் தேற்றிச் சிந்துர வாள்நுதற் சேடியர் சிலர்போய்த் தந்தைதாய் இருவர் தாளிணை வணங்கி வாவிக் கரையில் வந்துஒரு மறையோன் பாவைதன் செங்கையைப் பற்றினன் என்றலுந் தோடுஅலர் கமலத் தொடைமறை முனியை ஆடக மாடத்து அணிமனை கொணர்களன
f)L- யாழ்முரல் மங்கையர் ஓடி நீடிய புகழாய் நீஎழுந்து அருள்என மைமலர்க் குழவி வந்துஎனை அழைக்கில் அம்மனைப் புகுவன்என்று அந்தணன் உரைத்தலும்
30

பொற்றொடி நீபோய்ப் பொய்கையில் நின்ற நற்றவ முனியை நடாத்திக் கொணர்கென சிவனை இகழ்ந்த சிற்றறிவு உடையோன் அவனையான் சென்றுஇங்கு அழைத்திடேன் என்று சிற்றிடை மடந்தையுஞ் சீறின ளாகி மற்றைய மாதர் மதிமுகம் நோக்கி நெற்றியிற் கண்ணுடை நிமலனுக்கு அல்லவென் பொற்அமர் கொங்கை பொருந்துதற்கு அரிதால் மானிட வேட மறையவன் தனக்கு யான்வெளிப் படுவதில்லைஎன்று இசைப்ப மனையிடை வந்த மாமுனி தன்னை இணைஅடி தொழுதல் இளையோர்க்கு இயல்பெனத் தந்தையுந் தாயுந் தகைபெற மொழியச் சிந்தை குளிர்ந்து சீறுதல் ஒழிந்து தாய்சொல் மறுத்தல் பாவம்என்று அஞ்சி ஆயிழை தானும் அவன் எதிர்சென்று சுற்றிவந்து அவனடி சுந்தரி வணங்கி மற்றவன் தன்னை மனையிற் கொணர்ந்து ஆதியம் பகவற்கு அன்பன் ஆகும் வேதியன் பழைய விருத்தன்என்று எண்ணி ஆசனம் நல்கி அருக்கியம் முதலாப் பாதழ சனைகள் பண்ணிய பின்னர்ப் போனகம் படைத்துப் பொரிக்கறி பருப்புநெய் ஆண்பால் மாங்கனி அழகிய பலாச்சுளை தேன்கத லிப்பழஞ் சீர்பெறப் படைத்து அந்தணன் தன்னை அமுது செய்வித்துத் சந்தனங் குங்குமச் சாந்திவை கொடுத்துத் தக்கோ லத்தோடு சாதிக் காயும் கற்பூரத் தொடு கவின்பெறக் கொண்டு வெள்ளிலை அடைக்காய் விளங்கிய பொன்னின் ஒள்ளிய தட்டில் உவந்துமுன் வைத்துச் சிவன்எனப் பாவனை செய்து நினைந்து தவமுறை முனிவனைத் தாளிணை வணங்கத் தேன்அமர் குழலி திருமுகம் நோக்கி மோனமா முனிபுன் முறுவல் காட்டிக்
-31

Page 18
கற்றைச் சடையுங் கரமொரு நான்கும் நெற்றியில் நயனமும் நீல கண்டமும் மானும் மழுவும் மலர்க்கரத்து இலங்கக் கூன்மதி நிலவுங் கொழித்திட முடிமேல் வரந்தரு முதல்வன் மடமயில் காணக் கரந்ததன் உருவங் காட்டிமுன் நிற்ப மரகத மேனி மலைமகள் தானும் விரைவாடுஅங்கு அவன்அடி வீழ்ந்துஇறைஞ் சினளே அரிஅயன் இந்திரன் அமரர் விஞ்சையர் கருடர் கின்னரர் காய வாசியர் ஏதமில் முனிவர் அவுணர் இராக்கதர் பூதர் இயக்கர்கிம் புருடர் அலகை சித்தர் தாரகைகந் தருவர்கள் முதலாய்க் கணிக்கரும் பதினெண் கணத்தில்உள் ளவரும் மணிக்கருங் களத்தனை வந்தடைந்து அதன்பின் மன்றல்அங் குழலிக்கு வதுவைநாள் குறித்துத் தென்றல்வந்து இலங்கு முன்றில் அகத்துப் பொன்திகழ் பவளப் பொற்கால் நாட்டி மாணிக் கத்தால் வளைபல பரப்பி ஆணிப்பொன் தகட்டால் அழகுற வேய்ந்து நித்தில் மாலை நிரைநிரை தூக்கிப் பக்திகள் தோறும் பலமணி பதித்துத் தோரணம் நாட்டித் துகில்விதா னித்துப் பூரணப் பொற்குடம் பொலிவுற வைத்துத் திக்குத் தோறுந் திருவிளக்கு ஏற்றிப் பத்திப் படர்முளைப் பாலிகை பரப்பிக் கன்னுலுங் கமுகுங் கதலியும் நாட்டிப் பன்மலர் நாற்றிப் பந்தர்சோ டித்து நலமிகு கைவலோர் நஞ்சுஅணி மிடற்றனைக் குலவிய திருமணக் கோலம் புனைந்தார் வருசுரர் மகளிர் மலைகள் தன்னைத் திருமணக் கோலஞ் செய்தனர் ஆங்கே எம்பிரா னையும் இளங்கொடி தன்னையும் உம்பர் எல்லாம் ஒருங்குடன் கூடிக் கடல்என விளங்குங் காவணந் தன்னிற்
32

சுடர்விடு பவளச் சுந்தரப் பலகையில் மறைபுகழ்ந்து ஏத்த மகிழ்ந்துஉட னிருத்திப் பறைஒலி யோடு பனிவளை ஆர்ப்ப வதுவைக்கு ஏற்ற மறைவிதி நெறியே சதுர்முகன் ஒமச் சடங்குகள் இயற்றத் தறுகலன் ஒளிபொன் தாலி பூட்டிச் சிறுமதி நுதலியைச் சிவன்கைப் பிடித்தபின் அரிவலஞ் சூழ எரிவலம் வந்து பரிவுடன் பரிமள மாமளப் பாயலில் வைகிப் போதுஅணி கருங்குழற் பூவைதன் உடனே ஒதநீர் வேலைசூழ் உஞ்சைஆம் பதிபுக ஏரார் வழியின் எண் திசை தன்னைப் பாரா தேவா பனிமொழி நீஎன வருங்கருங் குழலாள் மற்றும்உண் டோஎனத் திருந்து இழை மடந்தை திரம்பினள் பார்க்கக் களிறும் பிடியும் கலந்து விளை யாடல்கண்டு ஒளிர்மணி பூணாள் உரவோன் உடனே இவ்வகை யாய்விளை யாடுவோம் ஈங்கென அவ்வகை அரனும் அதற்குஉடன் பட்டு மதகரி உரித்தோன் மதகரி யாக மதர்வழி உமைபிடி வடிவம் தாகிக் கூடிய கலவியிற் குவலயம் விளங்க நீடிய வானோர் நெறியுடன் வாழ அந்தணர் சிறக்க ஆணினம் பெருகச் செந்தழல் வேள்விவேத ஆகமஞ் சிறக்க அறம்பல பெருக மறம்பல சுருங்கத் திறம்பல அரசர் செகதலம் விளங்க வெங்கரி முகமும் வியன்புழைக் கையோடு ஐங்கர தலமும் மலர்ப்பதம் இரண்டும் பவளத்து ஒளிசேர் பைந்துவர் வாயுந் தவளக் கிம்புரித் தடமருப்பு இரண்டுங் கோடிகு ரியர்போற் குலவிடு மேனியும் பேழைபோல் அகன்ற பெருங்குட வயிறும் நெற்றியில் நயனமும் முப்புரி நூலுங் கற்றைச் சடையுங் கனகநீள் முடியுந்
33

Page 19
தங்கிய முறம்போல் தழைமடிச் செவியுமாய் ஐங்கரத்து அண்ணல் வந்துஅவ தரித்தலும் பொங்கரவு அணிந்த புண்ணிய மூர்த்தியும் மங்கை மனமிகு மகிழ்ந்துஉடன் நோக்கி விண்ணு ளோர்களும் விரிந்தநான் முகனும் மண்ணு ளோர்களும் வந்துஉனை வணங்க ஆங்குஅவர் தங்கட்கு அருள்சுரந்து அருளித் தீங்கது தீர்த்துச் செந்நெறி அளித்துப் பாரண மாகப் பலகனி அருந்தி ஏரணி ஆலின்கீழ் இனிதிரு என்று பூதலந் தன்னிற் புதல்வனை இருத்திக் காதல்கூர் மடநடைக் கன்னியுந் தானும் மைவளர் சோலை மாநகள் புகுந்து தெய்வ நாயகன் சிறந்துஇனிது இருந்தபின் வானவ ராலும் மானுட ராலுங் கான் அமர் கொடிய கடுவிலங் காலும் கருவிக ளாலும் கால னாலும் ஒருவகை யாலும் உயிர்அழி யாமல் திரம்பெற மாதவஞ் செய்துமுன் னாளில் வரம்பெறு கின்ற வலிமையி னாலே ஐமுகச் சீயமொத்து அடற்படை சூழக் கைமுகம் படைத்த காயமுகத்து அவுணன் பொன்னுலகு அழித்துப் புலவரை வருத்தி இந்நிலத் தவரை இடுக்கண் படுத்திக் கொடுந்தொழில் புரியுங் கொடுமைகண்டு ஏங்கி அடுந்தொழிற் குலிசத்து அண்ணலும் அமரருங் கறைபடு கண்டக் கடவுளைப் போற்றி முறையிடக் கேட்டு முப்புரம் எரித்தோன் அஞ்சலீர் என்றுஅவர்க்கு அபயங் கொடுத்தே அஞ்சுகைக் கரிமுகத்து அண்ணலை நோக்கி ஆனை மாமுகத்து அவுணனோடு அவன்தன் சேனைகள் முழுவதுஞ் சிந்திடப் பொருது குன்றுபோல் வளர்ந்த குறட்படை கூட்டி வென்றுவா என்று விடைகொடுத்து அருள ஆங்குஅவன் தன்னோடு அமர்பல உடற்றிப்
-34

பாங்குறும் அவன்படை பற்றுஅறக் கொன்றபின் தேர்மிசை ஏறிச் சினங்கொடு செருவிற் கார்முகம் வளைத்த கயமுகா சுரன்மேல் ஒற்றை வெண் மருப்பை ஒடித்துஅவன் உரத்திற் குற்றிட எறிந்தான் குருதிசோர்ந் திடவே சோர்ந்து அவன் வீழ்ந்து துண்ணென எழுந்து வாய்ந்தமூ டிகமாய் வந்துஅவன் பொரவே வந்த மூடிகத்தை வாகனம் ஆக்கி எந்தை விநாயகன் ஏறினன் இப்பால் எறிந்தவெண் மருப்புஅங்கு இமைநொடி அளவிற செறிந்தது மற்றவன் திருக்கரத் தினிலே வெல்லவைக் கதிர்வேல் விழிபடைத்து அருளும் வல்லவை தனைத்தன் மனைஎன மணந்தே ஒகையோடு எழுந்துஅங்கு உயர்படை சூழ வாகையும் புனைந்து வரும்பழி தன்னிற் கருச்சங் கோட்டிற் கயல்கமுகு ஏறுந் திருச்செங்கோட்டிற் சிவனைஅர்ச் சித்துக் கணபதீச் சரம்எனுங் காரண நாமம் பணபதி புகழ்தரு பதிக்குஉண் டாக்கிச் சங்கரன் பார்ப்பதி தனிமனம் மகிழ இங்குவந்து அன்புடன் எய்திய பின்னர்க் கணங்களுக்கு அரசாய்க் கதிர்முடி சூட்டி இணங்கிய பெருமைபெற்று இருந்திட ஆங்கே தேவர்கள் முனிவர் சித்தர்கந் தருவர் யாவரும் வந்துஇவண் ஏவல்செய் திடுநாள் அதிகமாய் உரைக்கும் ஆவணித் திங்களின் மதிவளர் பக்கம் வந்திடு சதுர்த்தியில் விநாயகர்க்கு உரிய விரதம் என்றுஎண்ணி மனாதிகள் கழித்து மரபொடு நோற்றார் இப்படி நோற்றிட்டு எண்ணிய பெருநாள் ஒப்பரும் விரதத்து உறும்ஒரு சதுர்த்தியில் நோற்றுநற் பூசை நுடங்காது ஆற்றிப் போற்றிசெய் திட்டார் புலவர் ஐங்கரனை மருமலர் தூவும் வானவர் முன்னே நிருமலன் குமரன் நிருத்தம் புரிந்தான்
Lws

Page 20
அனைவரும் கைதொழுது அடிஇணை போற்ற வணைகழற் சந்திரன் மனச்செருக்கு அதனால் பேழைபோல் வயிறும் பெருத்தகாத் திரமும் தாழ்துளைக் கையுந் தழைமுறச் செவியுங் கண்டனன் நகைத்தான் கரிமுகக் கடவுளுங் கொண்டனன் சீற்றங் குபேரனை நோக்கி என்னைக் கண்டுஇங்கு இகழ்ந்தனை சிரித்தாய் உன்னைக் கண்டவர் உரைக்கும்இத் தினத்திற் பழியொடு பாவமும் பலபல விதனமும் அழிவும்எய் துவரென்று அசனிபோற் சபித்தான் விண்ணவர் எல்லாம் மிகமனம் வெருவிக் கண்ணருள் கூருங் கடவுள்இத் தினத்திற் கோரவெஞ் சினமிகக் கொண்டனன் அந்நாள் மார்கழித் திங்கள் மதிவளர் பக்கஞ் சதயந் தொட்ட சட்டிநல் விரதமென்று இதயத்து எண்ணி யாவரும் நோற்றார் இப்புவி மாந்தர் இயம்பிய விரதம் வைப்புடன் நோற்ந வகைஇனிக் சொல்வாம் குருமணி முடிபுனை குருகுலத் துதித்த தருமனும் இளைய தம்பியர் நாலவருந் தேவகி மைந்தன் திருமுகம் நோக்கி எண்ணிய விரதம் இடையூறு இன்றிப் பண்ணிய பொழுதே பலிப்பு உண்டாகவுஞ் செருவினில் எதிர்த்த செறுநரை வென்று மருமலர்ப் புயத்தில் வாகை சூடவும் எந்தத் தெய்வம் எவ்விர தத்தை வந்தனை செய்யில் வருநமக்கு உரையெனப் பாட்டுஅளி துதையும் பசுந்துழாய் மார்பனுங் கேட்டருள் வீர்எனக் கிளத்துதல் உற்றான் அக்குநீ றணியும் அரன்முதல் அளித்தோன் விக்கினந் தீர்க்கும் விநாயக மூர்த்தி ஓடவைத் திடும்பொன் ஒத்துஒளி விளங்குங் கோடி சூரியர்போற் குலவிய மேனியன் கடகரி முகத்தோன் காத்திரம் பெருத்தோன் தடவரை போலுஞ் சதுர்ப்புயம் உடையோன்
36

சர்வ ஆபரணமுந் தரிக்கப் பட்டவன் உறுமதிக் குழவிபோல் ஒரு மருப்பு உடையோன் ஒருகையில் தந்தமும் ஒருகையிற் பாசமும் ஒருகையில் மோதகம் ஒருகையிற் செபஞ்செய் உத்தம மாலையோன் உறுநினை வின்படி சித்திசெய் வதனாற் சித்திவி நாயகன் என்றுஇமை யவரும் யாவருந் துதிப்ப நன்றி தருந்திரு நாமம் படைத்தோன் புரவலர் காணப் புறப்படும் போதுஞ் செருவினில் யுத்தஞ் செய்திடும் போதும் வித்தியா ரம்பம் விரும்பிடும் போதும் உத்தியோ கங்கள் உஞற்றிடும் போதும் ஆங்குஅவன் தன்னை அருச்சனை புரிந்தால் தீங்குஉறாது எல்லாஞ் செயம்உண் டாகும் கரதலம் ஐந்துடைக் கணபதிக்கு உரிய விரதம்ஒன் றுஉளதுஅதை விரும்பிநோற் றவர்க்குச் சந்ததி தழைத்திடுஞ் சம்பத்து உண்டாம் புந்தியில் நினைந்த பொருள்கை கூடும் மேலவர் தம்மையும் வென்றிட லாம்எனத் தேவாகி மைந்தன் செப்பிடக் கேட்டு நுவலரும் விரதம் நோற்றிடும் இயல்பும் புகள்முகக் கடவுளைப் பூசைசெய் விதமும் விரித்து எமக்கு உரைத்திட வேண்டும் என்று இரப்ப வரைக்குடை கவித்தோன் வகுத்துஉரை செய்வான் தேருநீர் ஆவணித் திங்களின் மதிவளர் பூர்வ பக்கம் புணர்ந்திடு சதுர்த்தியின் முந்தும் புலரியின் முறைநீர் படிந்து சந்தி வந்தனந் தவறாது இயற்றி அத்தினம் அதனில் ஐங்கரக் கடவுளைப் பக்தியோடு அர்ச்சனை பண்ணுதல் வேண்டும் வெள்ளியாற் பொன்னால் விளங்கும் அவன்றன் ஒள்ளிய அருள்திரு உருஉண் டாக்கிப் பூசனை புரியப் புகன்றனர் பெரியோர் ஆசுஇலா மண்ணால் அமைத்தலும் தகுமால்
பூசைசெய் திடும்இடம் புனிதமது ஆக்கி
37

Page 21
வாசமென் மலரின் மஞ்சரி தூக்கிக் கோடிகங் கோசிகங் கொடிவுதா னித்து நீடிய நூல்வளை நிறைகுத்து இருத்தி விந்தைசேர் சித்தி விநாயகர் உருவைச் சிந்தையின் நினைந்து தியனம் பன்னி ஆவா கணம்முதல் அர்க்கிய பாத்தியம் வாகா ராச மனம்வரை கொடுத்து ஐந்துஅமிர் தத்தால் அபிuே கித்துக் கந்தஞ் சாத்திக் கணேசமந் திரத்தால் ஈசர புத்திரன் என்னும்மந்திரத்தால் மாசுஅகல் இரண்டு வத்திஞ் சாத்திப் பொருந்துஉமை சுதனாப் புகலுமந்திரத்தால் திருந்தும் பளிதத் தீபங் கொடுத்துப் பச்சறுகு உடன்இரு பத்தொரு விதமாப் பத்திர புட்பம் பலபல கொணர்ந்தே உமாசுதன் கணாதிபன் உர்கரி முகந்தோன் குமார குரவன் பாசஅங் இசகரன் ஏக தந்தன் ஈசுரன் புத்திரவு ஆகு வாகனன் அருள்தரு விநாயகன் சர்வகா ரியமுந் தந்துஅருள் புரிவோன் ஏரம்ப மூர்த்தி என்னும்நா மங்களால் ஆரம் பத்துடன் அர்ச்சனை பண்ணி மோதகம் அப்பம் முதற்பவிரி காரந் தீதகல் மாங்கனி தீங்கத லிப்பழம் வருக்கை கபித்த மாதுளN கனியொடு தரித்திடு நெட்டிலைத் தாழமுப் புடைக்காய் பருப்புநெய் பொரிக்கறி பால்தயிர் போனகம் விருப்புள சுவைப்பொருள் மிகவும்முன் வைத்து உருத்திரப் பிரியனன்று உரைக்கும்மந்திரத்தால் நிருத்தன் மகற்கு நிவேதவுங் கொடுத்து நற்றவர் புகன்றநா னான்குஉப சாரமும் மற்றவன் திருவுளம் மகிழ்ந்திடச் செய்து எண்ணுந் தகுதி இருபிறழ் பாளர்க்கு உண்அறு சுவைசேர் ஒதினேம் நல்கிச் சந்தனம் முத்துத் தானந் தக்கிணை
N38

அந்தணர்க்கு ஈந்திட்டு அருச்சகன் தனக்குத் திருத்தகு விநாயகத் திருவுரு வத்தைத் தரித்தவத் திரத்துடன் தானமாக் கொடுத்து நைமித் திகம்என நவில்தரு மரபால் இம்முறை பூசனை யாவர்செய் தாலும் எண்ணிய கருமம் யாவையும் முடிப்பர் திண்ணிய செருவிற் செயம்மிகப் பெறுவர் அரன்இவன் தன்னைமுன் அர்ச்சனை பண்ணிப் புரம்ஒரு மூன்றும் பொடிபட எரித்தான் உருத்திரன் இவனை உபாசனை பண்ணி விருத்திரா சுரனை வென்றுகொன் றிட்டான் அகலிகை அவன் தாள் அர்ச்சனை பண்ணிப் பகள்தருங் கணவனைப் பரிவுடன் அடைந்தாள் தண்ஆர் மதிமுகத் தாள்தம யந்தி அன்னாள் இவனை அர்ச்சனை பண்ணி நண்ணார் பரவும் நளனை அடைந்தாள் ஐங்கரக் கடவுளை அர்ச்சனை பண்ணி வெங்கத நிருதரை வேர்அறக் களைந்து தசரதன் மைந்தன் சீதையை அடைந்தான் பகிரதன் என்னும் பார்த்திவன் இவனை மகிதலந் தன்னில் மலர்கொடுஅர்ச் சித்து வரநதி தன்னை வையகத்து அழைத்தான் அட்டதே வதைகளும் அர்ச்சித்து இவனை அட்ட போகத்துடன் அமிர்தமும் பெற்றார் உருக்குமணி என்னும் ஒண்டொடி தன்னைச் செருக்கொடு வவ்விச் சிசுபா லன்றான் கொண்டுபோம் அளவிற்குஞ்சர முகவனை வண்டுபாண் மிழற்றா மலர்கொடுஅர்ச் சித்துத் தாரியின் மறித்தவன் தனைப்புறங் கண்டு யாமும் அங்கு அவளை இன்புறப் பெற்றோம் புகள்முகக் கடவுளைப் பூசை புரிந்து மிகமிக மனத்தில் விழைந்தன பெற்றார் இப்புவி தன்னில் எண்ணுதற்கு அரிதால் அப்படி நீவிரும் அவனைஅர்ச் சித்தால் எப்பொருள் விரும்பினீர் அப்பொருள் பெறுவீர்
39

Page 22
என்றுகன்று எறிந்தோன் எடுத்திவை உரைப்ப அன்றுமுதல் தருமனும் அனுசரும் இவனைப் பூசனை புரிந்துகட் புலன் இலான் மைந்தரை நாசனம் பண்ண நராதிபர் ஆகிச் சிந்தையில் நினைந்தவை செகத்தினிற் செயங்கொண்டு அந்தமில் செல்வத்து அரசியல் பெற்றார் ஈங்குஇது நிற்க இவ்விர தத்துஇயல் ஓங்கிய காதைமற்று ஒன்றுஉரை செய்வாம் கஞ்சநான் முகன்தருங் காசிபன் புணர்ந்த வஞ்சகமனத்தாள் மாயைதன் வயிற்றிற் சூரன் என்று ஒருவனுந் துணைவருந் தோன்றி ஆர்கலி சூழ்புவி அனைத்தையும் அழித்தே சீருடைச் சுவர்க்கத் திருவளங் கொடுத்தும் புரந்தரன் முதலிய புலவரை வருத்தியும் நிரந்தரத் தீய நெறிநடத் துதலால் ஆயிரங் கண்ணனும் அமரரும் முனிவரும் நீஇரங்கு எமக்குஎன நெடுங்கரங் கூப்பி இரசத கிரிஉறை இறைவனை வணங்கி வரமிகுஞ் சூரன் வலிமைகள் உரைக்கச் சுடர்சி மணிமுடிச் சூரனை வெல்லக் கதிர்விடு வடிவேல் கரதலத்து ஏந்தும் புதல்வனைத் தருவோம் போமின் நீர்என் அமரர் கோனுக்கு அரன்விடை கொடுத்துச் சமர வேல்விழித் தையலுங் தானுங் சூடிய கலவியிற் கூடாது ஊடலும் ஒடிய வானோர் ஒருங்குஉடன் கூடிப் பாவகண்தன்னைப் பரிவுடன் அழைத்துச் சூரன் செய்யுந் துயரம் எல்லாம் ஊர்அரவு அணிந்தோற்கு உரையென உரைப்பக் காமனை எரித்த கடவுள்என்று அஞ்சிப் பாவகள் பயமுறப் பயம்உனக்கு ஏதென உற்றிடுங் கரதலத்து உன்னையே தரித்தான் நெற்றியின் நயனமும் நீயே ஆதலிற் குற்றம் அடாது கூறுநீ சென்றென வானவர் மொழிய மற்றவன் தானுந்
40

தானும்அச் சபையில் தரியாது ஏகி எமைஆ ளுடைய உமையா ஞடனே அமையா இன்பத்து அமர்ந்துஇனிது இருந்த பள்ளி மண்டபம் பாவகன் குறுகலும் ஒள்ளிய மடந்தை ஒதுங்கிநா னுதலுந் தெள்ளிநிற் பரமனுந் தேயுவைக் கண்டே அறுமுகப் பிள்ளையை அவன்கையில் ஈதலும் வறியவன் பெற்ற வான்பொருள் போலச் சோதி நீள்முடிச் சுடரோன் கொண்ர்ந்து வாத ராசன் மலர்கையிற் கொடுப்ப நீதி யோடு நின்றுகை யேந்திப் போதநீள வாயுவும் பொறுக்கஒண் ணாமல் தரும்புனற் கங்கை தன்கையிற் கொடுப்பத் தரும்புனற் கங்கையும் தாங்க ஒண்ணாமற் பொருந்திரைச் சரவணப் பொய்கையில் வைப்பத் தண்ஆர் வதனத் தாமரை ஆறுங் கண்ஆ றிரண்டுங் கரம்ஈ ராறும் தூண்எனத் திரண்ட தோள் ஈராளும் மாண்அயில் ஆதி வான்படை யுங்கொண்டு ஆறுமுகக் கடவுள்அங்கு அவதரித் திடலும் மறுகிய உம்பர் மகிழ்வுடன் கூடி அறுமீன் களைப்பால் அளித்திர் என்று அனுப்ப ஆங்கவர் முலைஉண்டு அறுமுகன் தானும் ஓங்கிய வளர்ச்சி உற்றிடு நாளில் விமலனும் உமையும் விடையு கைத்து ஆறு தலைமகன் இருந்த சரவணத்து அடைந்து முருகுஅலர் சூழல்உமை முலைப்பால் ஊட்ட இருவரும் இன்பால் எடுத்துஎடுத்து அணைத்துத் தேவர்தம் பட்ைக்குச் சேனா பதியெனக் காவல் கொண்டு அளிக்கக் கதிர்முடி சூட்டி அயில்வேல் முதற்பல ஆயுதங் கொடுத்துத் திசைஎலாஞ் செல்லுந் தேரும்ஒன்று உதவிப் பூதப் படைகள் புடைவரப் போய்நீ ஒதுறும் அவுணரை ஒறுத்திடுஎன்று அனுப்ப இருளைப் பருகும் இரவியைப் போலத்
41

Page 23
தகுவரென்று அவரைச் சமரிடை முருக்கிக் குருகுப் பேர்பெறுங் குன்றமுஞ் சூரன் மருமமுந் துளைபட வடிவேல் விடுத்தே யாவரும் வியப்புற இந்திரன் மகளாந் தேவகுஞ் சரியைத் திருமணம் புணர்ந்திட்டு அமரர் கோனுக்கு அமருலகு அளித்துக் குமர வேளுங் குவலயம் விளங்க அமரர் வதியில் அமர்ந்துஇனித இருந்தான் சமர வேலுடைச் சண்முகன் வடிவுகண்டு அமரர் மாதர் அனைவரும் மயங்கி எண்டருங் கற்பினை இழந்தது கண்டே அண்டர் எல்லாம் அடைவுடன் கூடி மாதொரு பாகனை வந்துஅடி வணங்கி மருமலர்க் கடம்பன்எம் மாநகள் புகாமல் அருள்செய வேண்டும்நீ அம்பிகா பதியென இமையவர் உரைப்ப இறையவன் தானுங் குமரனைக் கோபங் கொண்முன் முனியக் காவல் கொண்டு எம்வினை கட்டறுத்து அருளுஞ் சேவலங் கொடியோன் தேசம் போகத் திருத்திழை உமையாள் அருந்துயர் எய்தி வருந்திமுன் நிற்க மங்கையைப் பார்த்து மங்கை நீதான் வருந்துதல் ஒழிகுதி அங்கையாற் சூதெறிந்து ஆடுவோம் வாவென வென்றதுந் தோற்றதும் விளம்புவார் யாரெனக் குன்றமென் முலையாள் கூறிய சமயம் புற்றுஅரவு அணிந்த புனிதனைக் காணஅங்கு உற்றனன் திருமால் ஊழ்வினை வலியாற் சக்கிர பாணியைச் சான்றெனக் குறித்து மிக்கதோர் சூது விருப்புடன் ஆடச் சாயக நேருந் தடநெடுங் கருங்கண் நாயகி வெல்ல நாயகன் தோற்ப இன்பவாய் இதழ்உழை யான்வென் றேன்என எம்பெரு மானும் யான்வென் றேன்என ஒருவர்க் கொருவர் உத்தரம் பேசி இருவரும் சாட்சி இவனைக் கேட்ப
42

மாமனை வதைத்த மால்முகம் நோக்கிக் காமனை எரித்தோன் கண்கடை காட்ட வென்ற நாயகி தோற்றாள் என்றுந் தோற்ற நாயகன் வென்றான் என்றும்
ஒன்றிய பொய்க்கரி உடன்அங்கு உரைப்பக் கன்றிய மனத்தோடு கவுரிஅங்கு உருத்து நோக்கிநீ இருந்தும் நுவன்றிலை உண்மை வாக்கினில் ஒன்றாய் மனத்தினில் ஒன்றாய் மைக்கரி உரித்தோன் வதனம் நோக்கிப் பொய்க்கரி உரைத்த புன்மையி னாலே கனல்என வயிற்றிற் கடும்பசி கணற்ற நிலமிசைக் குருட்டு நெட்டுடற் பாம்பாய்க் கடகரி முகத்துக் கடவுள்வீற்று இருக்கும் வடதரு நீழலிற் கிடவெனச் சபித்தாள் முளரிகள் பூத்த முகில்நிறத்து உருப்போய்த் துளவு அணி மருமனுந் துணைவிழி இழந்தே ஆண்டுஅரைக் கணத்தில் ஆயிரம் யோசனை நீண்டபைப் பாந்தள் நெட்டுடல் எடுத்து வளர்மருப்பு ஒன்றுடை வள்ளல்வீற்று இருக்குங் கிளர்சினை ஆலின் கீழ்க்கிடந் தனனால் திரிகடக் கரியின் திருமுகக் கடவுளும் வழிபடும் அடியார் வல்வினை தீர்த்தே எழில்மெறு வடமரத்தின் கீழ் இருந்தான் கம்பமா முகத்துக் கடவுள்தன் பெருமையை அம்புவி யோருக்கு அறிவிப் போம்என உம்பர் உலகத்து ஒரெழு கன்னியர் தம்பநூல் ஏணியில்தாரணி வந்து கரிமுகக் கடவுளைக் கைதொழுது ஏத்திக் கார்த்திகைக் கார்த்திகை கழிந்தபின் நாளில் ஆர்த்த கலிங்கத்து அணியிழை வாங்கி இருபத் தோர்இழை இன்புறக் கட்டி ஒருபோது உண்டி உண்டுஒரு மனமாய் வேதத்து ஆதியும் பூமியில் எழுத்தும் ஆதிவி நாயகற்கு ஆன எழுத்தும் மூன்றுஎழுத் ததனால் மொழிந்தமந்திரமும்
43

Page 24
தேன்தருங் குழலியர் சிந்தைதயுட் செபித்தே உரைதரு பதினாறு உபசா ரத்தால் வரைமகள் மதலையை வழிபாடு ஆற்றி இருபது நாளும் இப்படி நோற்று மற்றநாள் ஐங்கர மாமுகன் பிறந்த அற்றைநாட் சதயமும் ஆறாம் பக்கமுஞ் சேரும்அத் தினத்தில் தெளிபுனல் ஆடி வாரண முகத்தோன் வருபெருங் கோயில் சீர்பெற மெழுகித் திருவிளக்கு ஏற்றிக் குலவுபொற் கலைகள் கொடுவி தானித்து மலர்பல தொடுத்திடு மாலைகள் ஆற்றிக் கொலைபுரி வடிவேற் குகற்குமுன் வருகை மலைமுகக் கடவுளை மஞ்சனம் ஆட்டிப் பொற்கலை நல்நூற் பூந்துகில் சாத்திச் சொற்பெறு சந்தனச் சுகந்தம் பூசிச் செருந்தி சண்பகஞ் செங்கழு நீரொடு குருந்து மல்லிகை கோங்கொடு பிச்சி கருமுகை புன்னை கடிகமழ் பாதிரி மருவிரி ஞாழல் மகிழ்இரு வாட்சி தாமரை முல்லை தளைஅவிழ் கொன்றை பூமலர் நொச்சி பூத்தமைக் குவளை காந்தள் ஆத்தி கடம்புசெவ் வந்தி வாய்ந்தநல் எருக்கு மலர்க்கர வீரம் பச்சிலை நொச்சி படர்கொடி அறுகு முத்தளக் கூவிளம் முதலிய சாத்தித் தூபதீ பங்கள் சுகம்பெறக் கொடுத்தே அப்பம் மோதம் அவல்எள் ஞருண்டை முப்பழந் தேங்காய் முதிர்மொளிக் கரும்பு சீனிதேன் சர்க்கரை செவ்விள நீருடன் பால்நறு நெய்தயிர் பருப்புடன் போனகங் கற்பகக் கடவுள் களித்திடத் திருமுன் பொற்புறப் படைத்துப் பூசனை பண்ணி நோற்பது கண்டு நோலாது இருந்த பாப்புரு வாகிய பஞ்சா யுதனும் யாப்புறு கொங்கைமீர் யானும்நோற் பேனென
44

ஆங்குஅவன் தனக்கும் வேண்டுவது அளித்துப் பாங்கொடுஇவ் விரதம் பரிந்துநோற் பித்தார் அண்டர்நா யகனாம் ஐங்கரன் அருளால் விண்டுவும் பண்டுஉள வேடம் பெற்றே உஞ்ஞைமா நகர்புகுந்து உமையொடு விமலன் கஞ்சநாள் மலர்ப்பங் கைதொழு திடலும் பஞ்சிமென் சீறடிப் பார்ப்பதி நெஞ்சின் வெஞ்சினம் மிகுந்து விமலனை நோக்கி யான்இடுஞ் சாபம் நீங்கியது ஏனென மானெடுங் கண்ணி மணிக்கதவு அடைப்ப இறையவன் இதற்குக் காரணம் ஏதென மறிகடல் துயிலும் மாயவன் உரைப்பான் பிறைமருப்பு ஒன்றுடைப் பிள்ளைஅன்று எனக்குத் தந்துஅருள் புரிந்த தவப்பயன் ஈதெனச் சிந்தை மகிழ்ந்து தேவர் தேவனும் பூங்கொடி அடைத்த பொன் தாழ் நீங்கச் சாங்குமுன் உரைத்த சக்கர பாணி இக்கதை சொல்ல அக்கணி சடையனும் மிக்கநல் விரதம் விருப்புடன் நோற்றபின் மாதுமை அடைந்த வன்தாழ் நீக்கி நாதனை நணுகிட நம்பனும் நகைத்தான் நானோ வந்து நகையா னதுஎனத் தேன்நேர் மொழியாள் தெளியக் கூறென நன்மதி நுதலாய் நானிலந் தன்னில் உன்மகன் நோன்பின் உறுதி அறிந்து சிந்தை மகிழ்ந்து சிரித்தேன் யானென அந்தமில் அரனை ஆயிழை வணங்கிப் பொருஞ்சூர் அறவேல் போக்கிய குமரன் வரும்படி யானும் வருந்திநோற் பேனென இறையவன் கதைசொல்ல ஏந்திழை நோற்றபின் குறமட மகளைக் குலமணம் புணர்ந்தோன் சுடர்வடி வேலோன் தொல்வினை தீர்ந்து தாதுமை வண்டுஉழுந்த தாமத் தாமனை கண்ணநீ கண்ணிலாக் கட்செவி யாகெனத் தணிநறுங் குழல்உமை சாபம்இட் டதுவும்
45

Page 25
அக்குநீறு அணியும் அரன்முதல் அளித்த விக்கின விநாயக விரதம்நோற்று அதன்பின் சுடர்கதை ஏந்துந் துளவ மாலையன் விடப்பணி உருவம் விட்டுநீங் கியதும் பரிவுகொள் கூத்துடைப் பரமனும் நோற்றுக் கவுரிஅன்று அடைத்த கபாடந் திறந்ததும் வாசமென் குழலுடை மாதுமை நோற்பத் தேசம் போகிய செவ்வேள் வந்ததும் வானவர் நோற்று வரங்கள் பெற்றதும் நாரத முனிவன் நவின்றிடக் கேட்டே இந்நிலந் தன்னில் இவ்விர தத்தை மன்னவன் வச்சிர மாலிமுன் நோற்றுக் காயத் தெழுந்த கடும்பிணி தீர்ந்து மாயிறும் புவியின் மன்னாய் வாழ்ந்து தடமுலைத் திலோத்தமை தனைமணம் புணர்ந்து மழவிடை போற்பல மைந்தரைப் பெற்றுக் கடைமுறை வெள்ளியங் கயிலையில் உற்றான் பரிவொடுஇவ் விரதம் பாரகந் தன்னில் விரைகமழ் நறுந்தார் விக்கிரமா தித்தன் மறிகடற் புவிபெற வருந்தி நோற்றிடுநாள் மற்றவன் காதன் மடவரல் ஒருத்தி இற்றிடும் இடையாள் இலக்கண சுந்தரி மெத்தஅன் புடன்இவ் விரதம்நோற் பேனென அந்தந் தன்னில் அணியிழை செறிந்து சித்தம் மகிழ்ந்து சிலநாள் நோற்றபின் உற்ற நோன்பின் உறுதி மறந்து கட்டிய இழையைக் காரிகை அவிழ்த்து வற்றிய கொவ்வையின் மாடே போட ஆங்குஅது தழைத்தே அலருந் தளிருமாய்ப் பாங்குற ஓங்கிப் படர்வது கண்டு வேப்பஞ் சேரியிற் போய்ச்சிறை இருந்த பூப்பயில் குழல்சேர் பொற்றொடி ஒருத்தி அவ்வியம் இல்லாள் அவ்விடந் தன்னிற் கொவ்வை அடகு கொய்வாள் குறுகி இழையது கிடப்பக் கண்டுஅவள் எடுத்துக்
46

குழைதவிழ் வரிவிழிக் கோதைகைக் கட்டி அப்பமோடு அடைக்காய் அவைபல வைத்துச் செப்பமுடனே திருந்திழை நோற்றிடக் கரிமுகத்து அண்ணல் கருணை கூர்ந்து பண்டையில் இரட்டி பதம்அவட்கு அருளக் கொண்டுபொய் அரசனுங் கோயிலுள் வைத்தான் விக்கிரமா தித்தன் விழிதுயில் கொள்ள உக்கிர மானஉடை மணிகட்டித் தண்டையுஞ் சிலம்புந் தாளின்று ஒலிப்பக் கொண்டல் போல்வருங் குஞ்சர முகத்தோன் மனமிகக் கலங்கும் மன்னவன் தன்னிடங் கனவினில் வந்து காரண மாக இலக்கண சுந்தரி இம்மனை இருக்கிற் கலக்கம் வந்திடுங் கழித்திடு புறத்தெனத் துண்ணென எழுந்து துணைவியை நோக்கிக் கண்ணுறக் கண்ட கனவின் காரணம் அண்ணல் உரைத்திடும் அவ்வழி தன்னில் ஆனை குதிரை அவைபல மடிவுற மாநகர் கேடுறும் வகையது கண்டு இமைப்பொழுது இவள்இங்கு இருக்கலா காதுஎன அயற்கடை அவனும் அகற்றிய பின்னர் வணிகன் தனது மனைபுகுந்து இருப்ப மணியும் முத்தும் வலியகல் லாய்விட அணியிழை தன்னை அவனும் அகற்ற உழவர்தம் மனையில் உற்றுஅவள் இருப்ப வளர்பயிர் அழிந்து வளம்பல குன்ற அயன்மனை அவரும் அகற்றிய பின்னர் குயவன் மனையிற் கோற்றொடி செல்லக் குயக்கலம் உடைந்து கொள்ளை போக அயற்கடை அவனும் அகற்றிய பின்னர் தூசுதூய் தாக்குந் தொழிலோர் மனைபுகத் தூசுகள் எல்லாந் துணிந்துவே றாகத் தூசரும் அவளைத் தூரஞ் செய்ய மாலைக் காரன் வளமனை புகலும் மாலை பாம்பாம் வகையது கண்டு

Page 26
ஞாலங் எல்லாம் நடுங்கவந்து உதித்தாய் சாலவும் பாவிநீ தான்யார் என்ன வெம்மணம் மிகவும் மேவி முனிவுறா அம்மனை அவனும் அகற்றிய பின்னர் அவ்வை தன்மனை அவள் புகுந்திருப்ப அவ்வை செல்லும் அகங்கள் தோறும் வைதனர் எறிந்தனர் மறியத் தள்ளினர் கைகொடு குற்றினர் கண்டோர் பழித்தனர் அவ்வை மீண்டுதன் அகமதிற் சென்று இவ்வகைக் கன்னிநீ யாரென வினாவக் காத்தாண்டு உலகு கருணையோடு ஆண்ட மார்த்தாண்ட ராசன் மாமகள் ஒருத்தி எல்லார்க்கும் மூத்தாள் இலக்கண சுந்தரி சொல்லுவிக் கிரம சூரியன் மனையெனச் சீர்கெட இருந்த தெரிவையை நோக்கி நீரது கொண்டு நிலம்மெழு கிடுகெனச் சாணி எடுக்கத் தையலுஞ் சென்றாள் சாணியும் உழுத்துத் தண்ணீர் வற்றிப் பேணிய புழுவாய்ப் பெரிது தோன்ற மான்நேர் விழியாள் வருந்துதல் கண்டு தானே சென்று சாணி எடுத்துத் தண்ணீர் கொணர்ந்த தரைமெழுக் கிட்டு மண்ணிய வீட்டில் மணிவிளக்கு ஏற்றிப் புத்தகம் எடுத்து வாவெனபட புகலப் புத்தகம் பாம்பாய்ப் பொருந்திநின்று ஆட மெத்தஉள் நடுங்கி வீழ்ந்துஅவள் கிடப்பக் கொவ்வையங் கனிவாய்க் கோதையை விலககி அவ்வை தானே அகமதிற் சென்று புத்தகம் எடுத்துப் பொருந்தப் பார்த்து வித்தக நம்பி விநாயக மூர்த்தி கற்பகப் பிள்ளைசெய் காரியம் இதுவென உத்தமி அவ்வை உணர்ந்துமுன் அறிந்து தவநெறி பிழைத்த தையலை நோக்கி நுவலரும் விநாயக நோன்புநோற் றிடுகெனக் கரத்து மூஏழுஇழைக் காப்புக் கட்டி
48 1 =sष्ण

அப்பமும் அவலும் மாம்பழ பண்டமுஞ் செப்பம தாகத் திருமுன் வைத்தே அவ்வை கதைசொல ஆயிழை கேட்டு மத்தகக் களிற்றின் மகாவிர தத்தை வித்தக மாக விளங்குஇழை நோற்றுக் கற்பக நம்பி கருணைபெற்றதன் பின் சக்கர வாள சைனியத் தோடு விக்கிரமா தித்தன் வேட்டையிற் சென்று தானுஞெ சேனையுந் தண்ணீர் விரும்பி எவ்வகை செய்வோம் எனஉளம் மெலிந்தே அவ்வை தன்மனை அங்கு அவர் அணுக எய்துந் தாகமும் இளைப்புங் கண்டு செவ்வே அவற்றைத் தீர்க்க எண்ணி இலக்கண சுந்தரி என்பவள் தன்னை அப்பமும் நீரும் அரசற்கு அருளெனச் செப்பிய அன்னை திருமொழிப் படியே உண்நீர்க் கரகமும் ஒருபணி காரமும் பண்நேர் மொழியாள் பார்த்திபற்கு உதவ ஒப்பறு படையும் உயர்படை வேந்தனும் அப்பசி தீர அருந்திய பின்னர் ஆனை குதிரை அவைகளும் உண்டுந் தானது தொலையாத் தன்மையைக் கண்டே இவ்வகை சமைத்தநீ யாரென வினவ மவ்வல்அம் குழலாள் மெளனமாய் நிற்ப அவ்வை தான்சென்று அரசற்கு உரைப்பாள் கணபதி நோன்பின் காரணங் காண்இது குணமடை இவள்உன் குலமனை யாட்டி இலக்கண சுந்தரி என்றுஅவ்வை கூற மங்கையை நோக்கி மணமிக மகிழ்ந்து திங்கள்நேர் வெள்ளிச் சிவிகையில் ஏற்றிக் கொண்டுஊர் புகுந்தான் கொற்ற வேந்தனும் ஒண்தொடி யாரில் உயர்பதம் உதவினன் சிந்துர நுதலார் சென்றுஅடி பணியச் சுந்தரி யிருந்தாள் சுகத்துடன் மகிழ்ந்தே
49

Page 27
காப்பு
கரும்பும் இளநீருங் காரெள்ளும் தேனும் விரும்பும் அவல்பலவும் மேன்மேல் - அருந்திக் குணமுடைய னாய்வந்து குற்றங்கள் தீர்க்குங் கணபதியே இக்கதைக்கு காப்பு திருவிளங்கு மான்மருகா சேவதனில் ஏறி வரும்அரன்றான் ஈன்றருளு மைந்தா - முருகனுக்கு முன்பிறந்த யானை முகவா உனைத்தொழுவேன் என்கதைக்கு நீயென்றுங் காப்பு
நூற்பயன்
பொன்னுமிகும் கல்விமிகும் புத்திரரோடு எப்பொருளும் மன்னும் நவமணியும் வந்து அணுகும் - உன்னி ஒருக்கொம்பின் யானைமுக உத்தமனார் நோன்பின் திருக்கதையைக் கேட்கச் சிறந்து.
பொற்பணைக்கை முக்கண் புகர்முகத்துப் பொன்மவுலிக் கற்பத்தின் நோன்பின் கதைதன்னைச் - சொற்பெருகக் கற்றவரும் நோற்றவருங் காதலித்துக் கேட்டவரும் பெற்றிடுவர் கற்பகத்தின் பேறு.
வெள்ளை எருதுஏறும் விரிசடையோன் பெற்றுஎடுத்த பிள்ளையார் நோன்பின் பெருங்கதையை - உள்ளபடி நோற்றார் மிகவாழ்வார் நோலாது அருகுஇருந்து கேட்டோர்க்கும் வாராது கேடு.
சூலிலார் நோற்கிற் சுதரை மிகப்பெறுவார் சாலமிகும் வெங்கலியார் தாம்நோற்கில் - மேலைப் பிறப்புஎல்லாம் நல்ல பெருஞ்செல்வம் எய்திச் சிறப்பிலே வாழ்வார் சிறந்து.
பிள்ளையார் கதை முற்றுப்பெற்றது
50

அருணகிரிநாதர் அருளிச் செய்த முக்தி அகவல்
பிரணவப் பொருளாம் பெருந்தகையைங்கரன்
சரவணற்பதமலர் தலைக்கணிவோம்
அரகர சிவ சிவ ஆகு வாகனனே இபமுகத் தோனே ஈசுவரன் மகனே உமையாள் சுதனே ஊனிற் பெரியோய் எமையாள் பவனே ஏழை பங்காளாய் ஐயா துய்யாய் ஒற்றை மருப்பாய் ஒதிய மறையே ஒளவைக் கினியாய் அஃகரப் பொருளே கணநா யகனே கிருபைக் கடலே கீதகிண் கிணியாய் குஞ்சரக் கன்றே உறும் பரனே கெதியளிப் பவனே கேள்வி விலாசா கையைந் தவனே கொழுந்திடு முதலே கோவே தேவே கெளவைத் துணையே சதுர்மறைப் பொருளே சாய்மறைச் செவியாய் சிவன் கண்மணியே சீவ சஞ்சிதமே
நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ
நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ
நமோ நமோ நமோ 56 DIT நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ
51

Page 28
சுருதி விளக்கே
சூர சங்காரா ஜெய ஜெய விநாயகர் சேய்நூற் கரசே சைவக் குருவே சொல்லும் பொருளே சோக விநாசா செளகரியக் களிரே தண்டைக் காலாய் தாமரைக் கரத்தாய் திருமால் மருகா தீங்கு தீர்ப்பவனே தும்பிக் கையாய் தூல சூக்குமத்தோய் தெய்வ சிகாமணி தேவர்கள் தேவே தையல் வல்லபையாய் தொண்டர்க் கிதமே தோத்திரப் பிரியாய் தெளவை தீர்ப்பவனே நம்புந் துணையே நாக பூஷணனே நித்தன் மதலாய் நீறணி பவனே நுகருமா யமுதே நூறாப் பேரே நெற்றிக் கண்ணாய் நேமியந் திரத்தாய் நைவளத் துரந்தோய் நொந்தார்க் காவாய் நோய்தீர்ப் பவனே நெளவி தர்த்தோய் பதினோ ருகையாய் பாத விநாசா பிணிக்கு மருந்தே
நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ
நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ
நமோ
நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ 56 DIT நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ
52

பீடை தீர்ப்பவனே புத்தி தந்தவனே பூமகள் மருகா பெற்றோர் மகிழே பேழை வயிற்றாய் பையர வணிந்தாய் பொன்றாக் குன்றே போதப் பொருளே பௌவ வணத்தோய் மதியளிப் பவனே மாதையில் வாழ்வே மிகுதி யானவனே மீதோர் வேந்தே முக்கண் ணுடையாய் மூவரின் முதலாய் மெய்பொருட் கிரியே மேலாம் பதமே மைநிற மணியே மொழிவார்க் கருளே மோதகக் கையாய் மெளலி தரித்தோய் வல்லயை மணாளா
வாமன ரூபா வித்தைக் கிறைவா வீரதண் டையனே உத்தட தேவே ஊனத் துறப்பாய் வெயிலவற் கினியாய் வேண்டிலி நாயகா வையம் புரந்தோய் வெளதர் பரனே ஒப்பிலா மணியே அம்பொரு ளாளா மகா கணபதியே
முற்றிற்று
நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ μ56ιΟΠ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ
நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ நமோ
53

Page 29
சிவமயம்
மாவை சித்தி விநாயகர் ஆலயம் வளர்ந்த வரலாறு
தோற்றம் :
சுமார் ஒரு நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்டது மாவை சித்திவிநாயகர் ஆலயம். புனித பூமியாகிய மாவிட்டபுரத்தின் தென்மேற்கில் அமைந்த ஆலயச் சூழலில் அன்றுவாழ்ந்த மக்களின் மனதில் நிழலுருவாகி பலபேறுகள் பெறுவதற்கு வழிசமைத்தவர் இந்த விநாயகர். அதனால் மாவை விநாயகர் என்ற பெயருடன் வழிபட்டுவந்த இவ்வாலயம் இப்பொழுது மாவை சித்தி விநாயகர் எனும் பெயருடன் நிலைபெற இந்தப் பரிமளிப்புக்கள் காரணிகளாகி விட்டன.
அன்று வாழ்ந்த பெரியார் சிதம்பரி சின்னத்தம்பி என்பவர் தான் வசித்துவந்த " குட்டியந்தாவுடை" எனப்பெயர்கொண்ட காணியின் முன்றலில் ஒரு கிணற்றைக் தோண்டும் முயற்சி தொடர்ந்தவேளை விநாயகர் உருவமைந்த ஒரு கல்லைப் பெற்றார். விநாயகர் உருவுடனான கல்லை அவ்வளவில் வளர்ந்த வேப்பமரத்தடியில் வைத்து வழிபாட்டைச் செய்யுமாறு குறிப்பிட்ட பெரியார் சின்னத்தம்பியின் கனவில் ஒரு அறிகுறி தோன்றியதுண்டு. அந்தச் செய்தியைச் சிரமேற்கொண்ட சின்னத் தம்பி அவர்கள் அச்செய்தியை அயலவர்களுக்கும் கூறியதோடு, அந்த வளவில் நின்றதொரு கொழுத்து வளர்ந்த வேப்ப மரச்சூழலினைத் தூய்மைப்படுத்தி அந்த மரத்தடியிலேயே பிள்ளையார் உருவமைந்த கல்லை வைத்து வழிபடத் தொடங்கினார். சுற்றாடலில் உள்ளவர்களும் அவ்வழிபாட்டை மிக விருப்போடு பின்பற்றலாயினர். பெரியார் சின்னத்தம்பியைத் தொடர்ந்து அவர்மகள் பூதாத்தை பண்டாரம் என்பவர் வழிபாட்டு முயற்சியைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அத்துடன் பெரியார் சின்னத்தம்பியின் மற்றொரு மகளான நாகமுத்துவின் கணவன் பெரியார் கந்தர் கார்த்தி என்பவர் இவ்விநாயகர் வழிபாட்டில் மிக ஈடுபாடு உடையவராகியதுடன் அயலவர்களையும் நிறைவாக அணைத்துக் கொண்டார்.
அமைவிடம் :
யாழ்-தெல்லிப்பழைச் சந்திக்கும், மாவிட்டபுரம் சந்திக்கும் இடையே யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் இருந்து மேற்கு நோக்கிச் சென்று கொண்டிருக்கும் மாவைபாரதி வாசிகசாலை ஒழுங்கையில், யாழ்ப்பாணம் காங்கேசன் துறை வீதியில் இருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள "குட்டியந்தாவுடை" எனப் பெயர்கொண்ட வளவின் வடகிழக்குப் பக்கமாக இந்த ஆலயம் அமைந்துள்ளது.
54

ஆலயம் அமைந்துள்ள வளவின் ஆதிச் சொந்தக்காரர் பெரியார் சிதம்பரி சின்னத்தம்பி ஆவார் பின்னர் தமது மகளவையான பூதாத்தை பண்டாரத்துக்கும் நாகமுத்து கார்த்திக்கும் இவ்வளவு மாற்றப்பட்டது. தொடர்ந்து பூதாத்தைக்குரிய காணிப் பங்கு அவரது மகள் மாணிக்கத்துக்கு மாற்றப்பட்டது. நாகமுத்து கார்த்திக்குரிய காணி பூதாத்தையின் மகன் கந்தையாவுக்கு மாற்றப்பட்டது. மாணிக்கத்துக்குரிய கோயில் காணிப் பங்கு பூதாத்தையின் மகன் சிதம்பரிப்பிள்ளைக்கு மாற்றப்பட்டது. ஈற்றில் ஆலயத்துக்குரிய காணிப்பங்கின் உரிமையாளர்களாக பூதாத்தை அம்மையின் பிள்ளைகளான சிதம்பரப்பிள்ளைக்கும், கந்தையாவுக்கும் சொந்தமானது. அந்த நிலத்தில் கொழுத்து வளர்ந்திருந்த வேம்பின் அடி விநாயகள் வணக்கத்துக்கு உரிய இடமாயிற்று. குறிப்பிட்ட அந்தக்கல் விநாயகர் வணக்கத்துக்குப் பாத்திரமாக இருந்துள்ளது.
ஆலயவளர்ச்சி :
வேப்பமரத்தடி வழிபாட்டிற்கு உரியவராகி இருந்த விநாயகருக்கு ஒலையால் ஒருகுடிசை அமைக்கப்பட்டது. பெரியார் கந்தர் கார்த்தி அவர்களுக்கு விநாயகப் பெருமான் கனவில் உணர்த்தியதன் பயனாக இக்குடிசை பெரியார் கார்த்தி அவர்களால் அமைக்கப்பட்டு அங்கு மூலமூர்த்தி விநாயகன் இடத்தைப் பரிசுத்தம் செய்யப்பட்ட அந்தக்கல் நிறைவு செய்தது. வேம்பினைச் சுற்றியுள்ள நிலப்பரப்பு, கோயில் குடிசைச் சுற்றாடல் என்பன தூய்மை செய்யப்பட்டு சுவாமிக்கான அபிஷேகத்தை நிறைவேற்றிப் பூவைத்து கற்பூரதீபம் காட்டி வழிபடும் பணிகளை பெரியார் சின்னத்தம்பியை தொடர்ந்து பூதாத்தை அம்மையாரும், பெரியார் கார்த்தியும் மிகவும் பயபக்தியுடன் செய்து வந்ததைப் பலரும் பேசக் கேட்டுள்ளோம்.
காலப்போக்கில் சூழஉள்ளவர்களது பங்களிப்பும் பெருகத் தொடங்கியது. பூசைமுறைகளும் வளர்ச்சி கண்டன. பெரியார் கார்த்தி அவர்களின் முயற்சியால் ஆலயக்குடிசை சிறிய கட்டிடமாக மாறியது. மூலமுர்த்தியாக வழிபட்டுவந்த விநாயகர் வடிவிலான கல் சிற்பிகளால் வடிக்கப்பட்ட தங்கமுலாம் பூசிய வெண்கலச் சிலை ஆகியது. இன்றும் அச்சிலையே பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது. இச்சிலையும் பெரியார் கார்த்தியின் உபயமாகும். பெரியர் கார்த்தி தம்பலகாமம் நெல் வாணிபத்துடனான செல்வந்தர் ஆகினார். அவ்வர்த்தகம் கோயிலை வளர்க்க உதவியது. கோயில் அவரின் ஆன்மீக வளர்ச்சிக்கு உறுதுணையாகியது. சூழலில் வாழ்ந்தவர்கள் எல்லோரும் பக்தியுணர்வோடு விநாயகப் பெருமான் அருள்பெற்று உயர்ந்தனர்.
ஆலயத்திற்கு முதல் முதலாக ஆறுமுகம் எனும் பெருடைய அர்ச்சகள் நியமனமாகினார். வாராந்தம் செவ்வாய், வெள்ளி நாட்களில் பூசைகள் ஒழுங்காக நடைபெற்றுவந்தன. தைப்பொங்கல் தினம், சித்திராப் பெளர்ணமி தினம், தீபாவளித்தினம்,
-55

Page 30
ஆடியமாவாசை ஆகிய தினங்களில் விசேட பூசைகளும் இடம்பெறத் தொடங்கின. திருவெம்பாவை வருடா வருடம் பத்து நாட்களும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
1966ம் ஆண்டில் மடப்பள்ளிக்கென ஒருகட்டிடம் அமைக்கும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டு அவ்வாண்டிலேயே நிறைவுசெய்யப்பட்டது.
ஆகமவிதிப்படி அமைந்த நல்லதோர் புதிய கட்டிடத்தில் விநாயகப் பெருமானைப் பிரதிஷ்டை செய்து வழிபடவேண்டுமென வழிபடுவோர் - பூசை உரிமையாளர்கள் பெருவிருப்புக் கொண்டனர். அவர்களின் உள்ளத்து நிறைந்த அவாவை நிறைவு செய்யும் வகையில் கடந்த 1969ம ஆண்டு தைமாதத்தில் சித்திவிநாயகர் பாலஸ்தானம் செய்யப்பட்டார். அத்தினத்திலேயே அடிக்கல் நாட்டு வைபவமும் இடம்பெற்றது. புதிய கட்டிடமும் வளரத்தொடங்கிப் பத்துமாதங்களுள் நிறைவுகண்டது. 1969ம் ஆண்டு ஐப்பசி மாதத்தில் மாவைசித்தி விநாயகர் ஆலயத்தின் பெரும் சாந்தி விழா எனும் கும்பாபிஷேகம் நிறைவு கண்டது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 40 நாள் மண்டலாபிஷேகமும் நடந்தது.
புதிய கட்டிடம் அமைக்கப்பட்டதைத் தெர்டர்ந்து காண்டாமணிக் கோபுரம் அமைக்கும் பணி தொடங்கி நிறைவுகண்டது. கணிரென்று ஒசையசையப் பரப்ப வல்ல காண்டாமணியும் இணைக்கப்பட்டது. கோயிலைச் சுற்றிக் கல் மதில் அமைக்கப்பட்டது. ஆலயமுன்றலில் அமைந்திருந்த கிணறு, சித்திவிநாயகர் ஆலயத் தோற்றத்துக்குக் காரணமாய் அமைந்த கிணறு, ஆலயவளர்ச்சித் தேவைகளுக்கு உதவுவதாக இருந்திருக்கிறது. கட்டிடவேலைகள் நிறைவாகிய பின் அக்கிணற்றின் இருப்பு ஓரளவு இடையூறு கொடுப்பதாகக் காணப்பட்டது. போக்குவரத்திற்கு, விழாக்களுடனான உபயோகத்திற்கு அக்கிணறு ஓரளவு ஆபத்து உண்டாக்க வல்லதென்றும் கருதப்பட்டது. அதனால் கிண்ற்று உரிமையாளர்களினதும் வழிபடுவோரினதும் உடன்பாட்டுடன் அக்கிணறு மூடப்பட்டது. ஆலயத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள மாவைபாரதி மறுமலர்ச்சி மன்றத்துக்குச் சொந்தமான நிலத்தின் தென்மேற்குப் பகுதியில் மன்றத்தின் பெருமன விருப்புடன் 1980.09.10இல் ஆலயத்திற்கான கிணறு தோண்டப்பட்டு நிறைவாக்கப்பட்டது. இந்தக் கிணறு 12.09.1980ல் நடைபெற்ற மாவை பாரதி மறுமலர்ச்சி மன்றத்தின் வெள்ளிவிழா நினைவாக நின்று நிலவுகிறது.
ஆலய நிர்வாகம் :

பெரியார் சிதம்பரி சின்னத்தம்பியினால் ஆரம்பிக்கப்பட்டு பெரியார் கந்தர் காந்தியினாலும் பூதாத்தை அம்மையாராலும் வளர்க்கப்பட்டுப் பலரது வழிபாட்டிற்குரியதாகிப் பரிபாலிக்கப்பட்டு வந்த மாவை சித்தி விநாயகர் ஆலயமானது பெரியார் கார்த்தி அவர்கள் 1935ம் ஆண்டில் மலேசியா சென்று குடியேறியதைத் தொடர்ந்து ஆலயத்தை முன்னின்று முகாமை செய்யும் பொறுப்பை பூதாத்தை அம்மையார் தனது பிள்ளைகளான மாரிமுத்து, சிதம்பரப்பிள்ளை, கந்தையா, நடேசு, மாணிக்கம் ஆகியோருடைய ஒத்துழைப்புடனும் வழிபடுவோரின் ஒத்தாசையுடனும் ஏற்றுச்செயற்பட்டார்.
நிர்வாகம் தளம்பலின்றித் தொடரவேண்டும் என்ற உணர்வோடு இன்று பாரதிமறுமலர்ச்சி மன்றம் என்று பெயர்மாற்றம் பெற்றுள்ள அன்றைய மாவை பாரதி வாசிகசாலையின் நிர்வாகத்திடம் 1961ம் ஆண்டு இந்த ஆலயத்தின் நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டது. மன்ற நிர்வாகத்தின் கீழ் ஆலயத்தினை மத்திய நிலையமாகக் கொண்டு அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. தேவாரப்பயிற்சி வகுப்பு, தேவாரப்போட்டி, கூட்டுப்பிரார்த்தனை வழிபாடு, விரத அனுட்டானங்கள் என்றெல்லாம் ஊக்குவிக்கப்பட்டன. மன்றத்தின் நிர்வாகத்தின் கீழ் 1966ம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்ட ஆலயமடப்பள்ளியும், 1969ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட ஆலயக் கட்டிடமும், 1980ம் ஆண்டு அமைக்கப்பட்ட ஆலயத்துக்கான கிணறும் மன்றத்தின் முகாமைத்துவ தலைமையின் சிறப்பிற்கு சான்றாக நிலவுகின்றன. மன்றத்தினால் 1969இல் நிறைவு செய்யப்பட்ட கும்பாபிஷேகத்தை தொடர்ந்து ஆலயக் கிரியைகளைக் கவனிக்க என மூன்று பெரியர்களைத் தெரிந்து பயிற்சி வழங்கப்பட்டது. அவர்களுக்கு சைவசமயத் தீட்சையும் அளிக்கப்பட்டது. சிவத்திரு சின்னத்தம்பி செல்லத்துரை, சிவத்திரு சின்னட்டி சரவணமுத்து, சிவத்திரு மயில்வாகனம் சிவபாலசிங்கம் என்போரே ஆலயக் கிரியைகளுக்கெனப் புனிதப்படுத்தப்பட்டவர்களாவார். மாவைபாரதி மறுமலர்ச்சி மன்றத்தின் கீழ் ஆலயம் பலதுறைகளிலும் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.
இப்படியானதொரு வளர்ச்சி நிலையில் ஆலய நிர்வாகத்தை சுதந்திரமான ஒரு அமைப்பிடம் ஒப்படைப்பது நல்லதென்று தீர்மானித்த மாவைபாரதி மறுமலர்ச்சி மன்றத்தினர் 1969ம் ஆண்டிலிருந்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். 15 ஆண்டுகள் தொடர்ந்த முயற்சியின் பயனாக தர்மகார்த்தாசபையொன்று அமைக்கப்பட்டது. 1984.08.11இல் மாவை சித்தி விநாயகர் ஆலய தர்மகத்தா சபை அமைக்கப்பட்டு ஆலயத்தின் நிர்வாகப்பொறுப்பு முழுமையாக அச்சபை ஏற்றுக்கொண்டது. ஆலயத்துக்குரிய அனைத்துச் சொத்துக்களும் அச்சபையால் பொறுப்பேற்கப்பட்டது.

Page 31
சிறப்பு நன்கொடைகள் அன்பளிப்புகள் வழங்கியோர் :
ஆலயக் காணி ஆலயத்தின நிலத்திற்கான ஆதிச் சொந்தக்காரர் பெரியார் சிதம்பரி சின்னத்தம்பி ஆவார். அவரின் பிள்ளைகளான திருமதி பூதாத்தை, திருமதி நாகமுத்து ஊடாக பெரியார் சின்னத்தம்பியின் பேரர்களான சிதம்பரப்பிள்ளைக்கும் கந்தையா அவர்களுக்கும் சென்றடைந்து ஈற்றில் மாவை சித்திவிநாயகர் ஆலயத்தின் தர்மகர்த்தா சபையிடம் இவ்வாலயத்தின் காணிப்பங்கு 11.08.1984ல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆலயக் கட்டிடம் ஆரம்பத்தில் குடிசையமைக்கப்பட்டதும் பின்னர் தற்காலிகக் கட்டிடம் அமைக்கப்பட்டதும் பெரியார் கார்த்தியின் உபயமாகும். 1969ம் ஆண்டு அமைக்கப்பட்ட நிரந்தர ஆலயக் கட்டிடத்துக்கு முதன்மையான நிதிப்பங்களிப்பைச் செய்தமைக்காக மலேசியா வாழ் பெரியார் கார்த்தி அவர்களின் பெயர் கர்ப்பக்கிரக மண்டபச் சுவரில் பொறிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் நிரந்தர பூசை உரிமையாளர் ஒவ்வொருவரும் வழிபடுவோரும் இக்கட்டிடப் பணிக்குத் தாராளமாக உதவியுள்ளார்கள்.
Lo ülu66rf தற்போதிருக்கும் மடப்பள்ளி 1966ம் ஆண்டில் மாவைபாரதி மறுமலர்ச்சி மன்றத்தினால் வழிபடுவோரின் நிதிப்பங்களிப்போடு நிறைவேறியது.
மணிக்கோபுரம் 1969ம் ஆண்டு அமைக்கப்பட்ட மணிக்கோபுரமும் அதில் பூட்டப்பட்ட காண்டாமணியும் திரு. பண்டாரம் நடேசு அவர்களின் உபயமாகும்.
கிணறு 1980ம் ஆண்டு அமைக்கப்பட்ட கிணறு பெரியார் கார்த்தி அவர்களாலும் பண்டாரம் மரிமுத்து அவர்களாலும் நிதியுதவி வழங்கப்பட்டு மாவைபாரதி மறுமலர்ச்சி மன்றத்தால் அம்மன்றத்தின் காணியில் கட்டப்பட்டது.
ஆலயத்தைச் சுற்றிய கல் மதில் திரு பண்டாரம் நடேசு அவர்களின் உபயமாக ஆலயச் சுற்றுமதில் கட்டப்பட்டது.
விநாயகர் சிலை தங்கமுலாம் பூசிய வெண்கலத்தில் வடிக்கப்பட்ட விநாயகர் சிலை பெரியார் கார்த்தி அவர்களின் உபயமாக வழங்கப்பட்டது.
58

தர்மகர்த்தா சபை
1984.08.11இல் அமைதி கண்ட முதலாவது சபை உறுப்பினர்கள்
01. திரு. பண்டாரம் சிதம்பரபிள்ளை - தலைவர் 02. திரு. சின்னட்டி சரவணமுத்து - செயலாளர் 03. திரு. வேலுப்பிள்ளை செல்லையா - பொருளாளர் 04. திரு. பண்டாரம் கந்தையா 05. திரு. சின்னத்தம்பி செல்லத்துரை 06. திரு. பொன்னர் கந்தையா 07. திரு. தாமோதரி வயிரவப்பிள்ளை 08. திரு. அப்புக்குட்டி ஆனந்தரர்சா 09. திரு. மயில்வாகனம் சிவபாலசிங்கம் 10. திரு. பொன்னர் சுப்பிரமணியம் 11. திரு. தில்லையம்பலம் இராசதுரை
திருவாளர்கள் பண்டாரம் சிதம்பரப்பிள்ளையும் பண்டாரம் கந்தையா ஆகிய இருவரும் ஆயுட்கால அங்கத்தவர்களாவர். ஏனையவர்களின் இடங்களிற்கு அங்கத்தவர்களைத் தெரிவு செய்யும் உரிமை வழிபடுவோர் சபைக்கு உண்டு.
பொன்னர் கந்தையா, தாமோதரி வயிரப்பிள்ளை ஆகிய இருவரும் மரணமடைந்துள்ளார்கள். ஏனையோர் தொடர்ந்தும் இச்சபையில் அங்கத்தவர்களாக
இருந்து வருகிறார்கள்.
ஆர். எம். நாகலிங்கம் அகில இலங்கை சமாதான நீதிபதி மாவை, சித்திவிநாயகர் ஆலய முன்னோடித் தொண்டர் 22.08.2004
குறிப்பு : மாவை, சித்தி விநாயகர் ஆலயத்தின் வரலாறு தொடர்பான மேலதிக தகவல்களை தெரிந்தவர்களும், ஆவணங்களை வைத்திருப்பவர்களும் இக்கட்டுரை ஆசிரியருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Page 32
மாவை, சித்தி விநாயகர் ஆலயக் கட்டிடம்
ჯXXXXXXXXXX23;& xxxSX
 

திருக்கோயிலிலும் திருவீதியிலும் செய்யத்தகாத
ஸ்நானம் செய்யாது போதல் தோய்த்துலராத வேட்டி தரித்துக்கொண்டு போதல் கால்கழுவாது போதல் ஆசௌசத்துடன் போதல் தலையில் வஸ்திரம் தரித்துக் கொள்ளுதல் சட்டை இட்டுக்கொள்ளுதல் போர்த்துக் கொள்ளுதல் மேல் வேட்டி போட்டுக்கொள்ளுதல் பாதரசைவு இட்டுக்கொள்ளுதல் வாகனமேறிக் கொள்ளுதல் குடை பிடித்துக் கொள்ளுதல் வெற்றிலை பாக்கு உண்ணல்
துப்புதல்
மலசலங் கழித்தல்
மூக்குநீர் சிந்துதல்
மயிர்கோதி முடித்தல்
சூதாடுதல்
சிரித்தல்
சண்டையிடுதல்
வீண்வார்த்தை பேசுதல் காமப்பற்று வைத்தல் காலை நீட்டிக் கொண்டிருத்தல் சயனித்தல்
ஆசனத்திருத்தல் சுவாமிக்கும் பலிபீடத்துக்கும் குறுக்கே போதல்
குற்றங்கள்
சுவாமிக்கும் பலிபீடத்துக்கும் இடையிலே நமஸ்காரம் பண்ணுதல்
. சுவாமிக்குக் காலை நீட்டி நமஸ்காரம் பண்ணுதல்
சுவாமிக்குக் காலை நீட்டி அங்கப் பிரதசஷிணம் பண்ணுதல்
. நிரு மாலியத்தை கடத்தல்
61

Page 33
30. நிரு மாலியத்தை மிதித்தல்
31. தூபி, துவசத்தம்பம், பலிபீடம், விக்கிரகம் என்னும் இவைகளின் நிழலை
மிதித்தல்
32. விக்கிரகத்தைத் தொடுதல்
இந்தக் குற்றங்களைச் செய்தவர்கள் நரகத்திலே தண்டிக்கப்படுவார்கள் என்று ஆகமங்களும் புராணங்களும் சொல்லுகின்றன. குளிக்கப்போய்ச் சேறு பூசிக்கொள்வது போலச் சுவாமி தரிசனமாகிய புண்ணியம் செய்யப்போய்ப் பாவத்தைத் தேடிக் கொள்வது புத்தியன்று. எல்லாரும், இந்தக்குற்றங்களை விட்டு, விதிப்படி சுவாமி தரிசனஞ்செய்து, திருவருளைப் பெற்று உய்யக் கடவார்கள்.
செய்ய வேண்டியன: கொள்ள வேண்டியன
1. இறைவனை வணங்குக. 1. ஏழ்மையில் நேர்மை. 2. இனிமையாகப் பேசுக. 2. தோல்வியில் விடாமுயற்சி. 3. உண்மையே பேசுக. 3. துன்பத்தில் துணிவு. 4. அன்பாகப் பேசுக. 4. செல்வத்தில் தியாகம். 5. நன்மையே பேசுக. 5. பதவியில் பணிவு. 6. மெதுவாகப் பேசுக. 6. கோபத்தில் பொறுமை. 7. சிந்தித்துப் பேசுக. 7. அன்பில் தூய்மை. 8. சபையறிந்து பேசுக. 8. அடக்கத்தில் எளிமை. 9. சமயமறிந்து பேசுக. 9. உழைப்பில் விருப்பம். 10. பேசாதிருந்தும் பழகுக. 10. பேச்சில் சிக்கனம். 11. சொல்வதையே செய்க. 11. கல்வியில் ஆர்வம். 12. சோம்பலை அகற்றுக. 12. கடமையில் பற்று. 13. கோபத்தை நீக்குக.
14. யோசித்துச் செய்க.
15. செருக்கை அடக்குக.
16. உயர்வையே எண்ணுக.

மாவையுர் தாமோதரி வயிரவப்பிள்ளை ஞாபகார்த்தப் புலமைப் பரிசில் நிதி
புனர்வாழ்வு - கல்வி அபிவிருத்தி நிதியத்தின் அங்கத்தவராகவும் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசத்தின் பற்றுள்ள ஆதரவாளனாகவும் இருந்த அமரர் தாமோதரி வயிரவப்பிள்ளை ஐயா அவர்கள் எமது சமூகத்தின் சமூக, கல்வி, கலாச்சார மேம்பாட்டுக்கு ஆதரவு தந்து சமூகத்தின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் சிறந்த பங்களிப்பு வழங்கியுள்ளமையை மிக்க நன்றியுணர்வுடன் நினைவு கூருகிறோம் அவரின் பிள்ளைகளான வ. சரவணமுத்து, வ மகேந்திரன், வ. பாலச்சந்திரன், சசிகலா சந்திரகுமார், வ. நகுலேஸ்வரன் (ஈசன்), சுசிகலா புஸ்பராசா ஆகியோர்களின்
சிறந்த சமூகப்பணிகளும் பாராட்டுக்குரியதாகும்.
சமூகத் தொண்டனாகவும், ஒழுக்க சீலராகவும், உயர்ந்த பண்பாளராகவும் திகழ்ந்த வயிரவப்பிள்ளை பெரியாரின் நினைவாகவும் அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டியும் அவர் ஆதரித்து வந்த புனர்வாழ்வு - கல்வி அபிவிருத்தி நிதியத்தின் கீழ் "மாவையூர் தாமோதரி வயிரவப்பிள்ளை நினைவுப் புலமைப் பரிசில் நிதி ஒன்றை 2004.08:22ம் திகதி அன்று அன்னாரது ஞாபகார்த்த விழாவில் தாபிக்க முன்வந்த திருமதி சின்னத்தங்கம் வயிரவப்பிள்ளை அவர்களுக்கும் அவரது பிள்ளைகளின் குடும்பத்தினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அமரர் வயிரவப்பிள்ளை ஐயா அவர்களின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம்.
ví இங்ங்ணம்
馨 சமூகமுன்னேற்றக் கழகங்களின் சமாசமும்
புனர்வாழ்வு - கல்வி - அபிவிருத்தி நிதியமும்
22.08.2004
63

Page 34
பெயர்
தந்தை தாய்
மனைவி
சகோதரர்
மைத்துனர்
பிள்ளைகள் மருமக்கள்
பேரர்கள்
சமயப்பணி
சமூகப்பணி
தொழிலிடம்
வதிவிடம்
பிறப்பு
; கந்தர் காத்தி - மினாயர் கதிராசி தம்பதிகளின்*
எங்கள் பிதா .
மாவைப்பதி இராமு தாமோதரி * மாவைப்பதி சிதம்பரி இராமு?
மாவைப்பதி கந்தர் பார்வதி*
புதல்வி சின்னத்தங்கம் (இராசம்மா)
க.மாணிக்கம்* மா. அன்னமுத்து (மலேசியா) ம.நாக்ம்மா
மு.கந்தையா? ப. மாரிமுத்து* } நா. மயில்வாகனம்* சரவணமுத்து (தேவன்)* இராசமலர் (ராணி) 56 மகேந்திரன் (இராசன்) } s அன்னராணி (பாமினி) பாலச்சந்திரன் (ராசா) } பாமினி } சுவிஸ் சசிகலா (சசி) சந்திரகுமார் (தம்பி) } கவிஸ் நகுலேஸ்வரன் (ஈசன்)
றெஜினா s சுசிகலா (சுசி) } பிரான்ஸ்
புஷ்பராசா (இராசா) சரமேஷ், ச. ராதிகா, சரஜீவ், ம. யதுர்ஷா, ம. தேனுஜா, பா. மெல்வினா, ச. அபிவர்ணா, ச. அபிராம் மாவை விநாயகர் ஆலய தர்மகர்த்தா சபையின் அங்கத்தவரும் மாவை அம்பாள் ஆலயம், மாவைக்கந்தன் தண்ணிர்ப்பந்தற் சபை ஆகியவற்றின் முன்னணித் தொண்டர்களில் ஒருவருமாவார். சமூகமுன்னேற்றக் கழகங்களின் சமாசத்தினதும், புனர்வாழ்வு-கல்வி அபிவிருத்தி நிதியத்தினதும் சமூக, கல்வி, கலாச்சாரப் பணிகளுக்குத் துணைபுரிந்துள்ளார். இப் பொதுப்பணிகளுக்குத் தனது பிள்ளைகளின் பங்களிப்பையும் ஊக்குவித்த பெருமைக்கு உரியவர். மாவை பாரதி மறுமலர்ச்சி மன்றத்தின் முன்னோடியுமாவார்.
மலேசியா, மொறட்டுவ, பம்பலப்பிட்டி, மாவிட்டபுரம்
மாவிட்டபுரம், மட்டுவில் குணசிங்கபுரம், இறுதியில் அரியாலை
19.10.1932; இல்லறம் : 08.1953; மறைவு : 26.07.2004
* காலமானோரைக் குறிக்கிறது
-64
 


Page 35
娜娜娜 - 随珊蒜”辆『A_*“圈”。 珊珊 玉*引 娜娜姆疆 玉팔 파 "합娜娜娜 历 → 那 翡 *腳* 劍 娜娜
娜娜 副.娜娜期 娜娜娜。 國)引 见
 
 
 
 
 
 
 

ள மற்றொருவருடையதா மற்றொரு நாள் அது றொருவருடையதாகும்.
துவே உலக நியதியும் is List சாராம்சமுமாகும்