கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிவசுப்பிரமணியம் கண்ணன் (30ம் நாள் நினைவு மலர்)

Page 1
நயினாதீவை தாயகமாக பிறப்பிடமாகவும், வாழ்க
சிவசுப்பிரமணி
அவர்க
0ம் நாள் நி
 
 
 
 

பம்
க்கொண்டு கொழும்பை விடமாகவும் கொ
ண்ட
SOD6ÕIGO LADGONDIT
Sgriigi
பம் கண்ணன்
ਹੈ।
1999

Page 2

நயினாதீவை தாயகமாக கொண்டு
கொழும்பில் வர்த்தகத்தோடு வாழ்வை சிறப்பாக நடாத்திய திருமிகு சிவசுப்பிரமணியம் நாகேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு புதல்வனும் வவுனியா வைரவர் புளியங்குளத்தை சேர்ந்த இறைபணிச் செம்மல் திருவாசகச் செல்வர் வை.செ.தேவராசா பாலாம்பிகை தம்பதியினரின் அன்பு மகள் கலைவதனியின் அன்புக் கணவருமான உயர்திரு. சிவசுப்பிரமணியம் கண்ணன்
அவர்கள் 26.01.1999 கொழும்பில் அன்னாரது இல்லத்தில் சிவபதமடைந்தார் அவர்களின் 30ம் நாள் நினைவாக திருமுறைகள் அடங்கிய இம்மலரை ஞபாகார்த்தமாக வெளியிடுகிறோம்.
தொகுப்பு:
இறைபணிச் செம்மல் திருவாசகச் செல்வர்
வை. செ. தேவராசா 59, தந்தை செல்வா வீதி, வவுனியா.
A ܥܬ

Page 3

ls). It
இறப்பு
26
O1
1999
சிவசுப்ரமணியம் கண்ணன்
அவர்கள்
3.

Page 4

df6)JLDu JLD
ས།
உயர் திரு. சிவசுப்பிரமணியம் கண்ணன்
அவர்களின்
வாழ்க்கை வரலாறு
ஈழத்தின் வரலாற்றுப் பெருமை மிக்க திருத்தலங்களில் உயர்ந்த ஸ்தானத்தை பெற்றுக் கொண்ட நயினைதீவு நாகபூஷணி அம்மனின் உறைவிடமான நயினாதீவை பிறப்பிடமாக கொண்ட இராமநாதன் சிவசுப்பிரமணியம் அவர்கள் நயினாதீவு 3ம் வட்டாரத்தை சேர்ந்தவர். இவர் நயினாதீவு நடராசா இராசம்மா அவர்களின் புதல்வி நாகேஸ்வரி அவர்களை திருமணம் செய்து வர்த்தகம் காரணமாக கொழும்பில் தமது இல்லறத்தை நடாத்தினார் அகில இலங்கை ரீதியாக புகழ்பெற்ற வர்த்தக ஸ்தாபனமாக “கிளேப்ஸ் மணியம்” என செல்லப் பெயரால் அழைக்கப்பட்ட மணியம் ஸ்ரோர்ஸ் என்னும் பெயரில் கிறேப்ஸ், அப்பிள் மற்றும் பழவகைகளை இறக்குமதி செய்து வியாபாரம் நடைபெற்ற காலத்தில் அன்னாரின் இல்லறத்தில் மணிவண்ணன், சிவபாலன், சந்திரிகா, மேனகா, ரஞ்சினி, கண்ணன், ஜானகி, பாலசுப்பிரமணியம், ரமணா ஆகிய பிள்ளைச் செல்வங்களை சிறப்பாக பெற்று வளர்த்தார்கள். இவர்களில் ஆறாவது பிள்ளையான திரு. கண்ணன் அவர்கள் (காலம் சென்றவர்) தனது ஆரம்பக் கல்வியை கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியில் பெற்று மேற்படிப்பை குருத்தலாவையில் உள்ள சென். தோமஸ் கல்லூரியில் பெற்று வந்த காலத்தில் வெளிநாடு ' செல்லும் ஆசையினால் உந்தப்பட்டு 1983 தொடக்கம் 1989ம் ஆண்டுவரை அமெரிக்க நாட்டிலும் கனடா நாட்டிலும் تشتقة
மீண்டும் தந்தையாருடைய வர்த்தக நடவடிக்கையை தொடர்ந்த يدان

Page 5
霄一 ──────ཡབ་
இக்காலத்தில்தான் இவரின் திருமண பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டது. வவுனியா வர்த்தகரும், கட்டிட ஒப்பந்தகாரரும் சமூக சேவையாளருமான இறைபணிச் செம்மல், திருவாசகச் செல்வர், வை.செ.தேவராசா என்பவரின் ஐந்தாவது பிள்ளையான மட்டக்களப்பு விபுலாந்த இசை நடனக்கல்லூரி மாணவியும் சென்னை அடையாறு லக்ஷ்மண ஐயர் அவர்களின் நடனக் கல்லூரியில் நடனத்துக்காக டிப்ளோமா பட்டத்தை பெற்ற வருமான தேவராசா கலைவதனியை 29.01.95ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் 4வது திருமண நாளுக்காக வவுனியா அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் விசேட பூசைக்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வேளை 26.01.99 அதிகாலை மாரடைப்பு நோயினால் பாதிப்புற்று இறைவனடி சேர்ந்தார். இவர்களுக்கு “கோகுலன்” என்னும் பொருளுடன் ஆண் குழந்தையும், அபிராமி என்னும் பெயருடன் பெண் குழந்தையும் இருவர் உள்ளனர்.
இளவயதிலேயே தந்தையை இழந்து இருக்கும் குழந்தைகளுக்கு நல்ல கல்வி, வாழ்க்கை, நலன்களையும் எல்லாம் வல்ல நாகபூஷணி அம்பாள் வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கும்.
தாயார், மனைவி, சகோதர, சகோதரிகள், குழந்தைகள், மைத்துணி, மைத்துனர்கள், 88, తోపోuరealuatin14,
கொழும்பு 4.
75, 77, குமாரவிதி, கொழும்பு - 11.

சம்பந்தர் தேவாரம்
திருச்சிற்றம்பலம்
உண்ணாமுலை யுமையாளொடு முடனாகிய வொருவன் பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன வருவித்திரண் மழலைம்முழ வதிரும் அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே.
அங்கமும்வேதமு மோதுநாவர் அந்தணர்நாளு மடிபரவ மங்குன்மதிதவழ் மாடவீதிமருக னரிலாவிய மைந்தசொல்லாய் செங்கய லார்புனற் செல்வமல்கு சீர்கொள்செங் காட்டங் குடியதனுள கங்குல் விளங்கெரி யேந்தியாடுங் கணபதியீச்சரங் காமுறவே.
அவ்வினைக்கு இவ்வினை யாமென்று சொல்லும் அ.தறிவீர் உய்வினை நாடாது இருப்பதும் உந்தமக்கு ஊனம் அன்றே கைவினை செய்தெம்பிரான்கழல் போற்றுதும் நாம் அடியோம் செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
பிறந்த பிறவியிற் பேணிஎம் செல்வன் கழலடைவான் இறந்த பிறவியுண் டாகில் இமையவர் கோனடிக்கண் திறம்பயின் ஞானசம் பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார் நிறைந்த உலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே.
இடரினுந் தளரினும் எனது றுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோஎமை ஆளுமா றிவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுனதின் னருள் ஆவடுதுறை அரனே.
ہوگئے۔

Page 6
Ն དགའ་ 『ー 약
திருநீற்றுப்பதிகம் திருச்சிற்றம்பலம்
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே.
வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு ஓதத் தகுவது நீறு உண்மையி லுள்ளது நீறு சீதப் புனல்வயல் சூழ்ந்த திருவால வாயான் திருநீறே.
முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு பத்தி தருவது நீறு பரவ வினியது நீறு சித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே.
காண வினியது நீறு கவினைத் தருவது நீறு பேணி யணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு சேணந் தருவது நீறு திருவால வாயான் திருநீறே.
பூச வினியது நீறு புண்ணிய மாவது நீறு பேச வினியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம் ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு தேசம் புகழ்வது நீறு திருவால வாயான் திருநீறே.
அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு வருத்தந் தணிப்பது நீறு வான மளிப்பது நீறு பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணிறு
3.
s திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வாயான் திருநீே
ܥܬ

臀一 གང་ལ་
எயிலத வட்டது நீறு இருமைக்கு முள்ளது நீறு பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு அயிலைப் பொலிதரு சூலத் தாலவாயான் திருநீறே.
இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு அராவணங் குந்திரு மேனி யால வாயான் திருநீறே.
மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு மேலுறை தேவர்க டங்கண் மெய்யது வெண்பொடி நீறு ஏல வுடம்பிடர் தீர்க்கு மின்பந் தருவது நீறு ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் திருநீறே.
குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூடக் கண்டிகைப் பிப்பது நீறு கருத வினியது நீறு எண்டிசைப் பட்ட பொருளா ரேத்துந் தகையது நீறு அண்டத் தவர்பணிந் தேத்து மால வாயான் திருநீறே.
ஆற்ற லடல்விடை யேறு மாலவா யான்திரு நீற்றைப் போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன் தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர்தாமே.
திருச்சிற்றம்பலம்
%التالي
YA

Page 7
ܥܬ
臀一
9கோளறு பதிகம் திருச்சிற்றம்பலம்
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேலனநதென்
உளமே புகுந்த வதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம்பிரண்டுமுடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே
என்பொடு கொம்பொ டாமை யிவைமார் பிலங்க
எருதேறி ஏழையுடனே பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த வதனால் ஒன்பதொ டொன்றொ டேழுபதினெட்டொ டாறும்
உடனாய நாள்க ளவைதாம் அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
உருவளர் பவள மேனி ஒளிநீ றணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல் முருகலர் கொன்றை திங்கள் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த வதனால் திருமகள் கலைய தூர்தி செயமாது பூமி
திசைதெய்வ மான பலவும் அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
மதிநுதல் மங்கை யோடு வடபாலிருந்து
மறையோதும் எங்கள் பரமன் நதியொடு கொன்றை மாலை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த வதனால் கொதியுறு கால னங்கி நமனோடு தூதர் கொடுநோய்க ளான பலவும் அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
གང་ལ་
لوگئے۔
10

நஞ்சணி கண்ட னெந்தை மடவாள்த னோடும்
விடையேறு நங்கள் பரமன் துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்தென்
உளமே புகுந்த வதனால் வெஞ்சின அவுண ரோடும் உருமிடியு மின்னும்
மிகையான பூத மவையும் அஞ்சிடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
வாள்வரி யதள தாடை வரிகோ வணத்தர் மடவாள்த னோடும் உடனாய் நாண்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த வதனால் கோளரி யுழுவை யோடு கொலையானை கேழல்
கொடுநாக மோடு கரடி ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
"; செப்பிள முலைநன் மங்கை யொருபாக மாக
விடையேறு செல்வ னடைவார் ஒப்பிள மதியும் அப்பும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த வதனால் / வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும்
வினையான வந்து நலியா அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
வேள்பட விழிசெய் தன்று விடைமேல் இருந்து
மடவாள்த னோடும் உடனாய் வாள்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த வதனால் ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும்
இடரான வந்து நலியா ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
གདའ།

Page 8
பலபல வேட மாகும் பரன்நாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன் சலமக களோடெருக்கு முடிமே லணிந்தென்
உளமே புகுந்த வதனால் ۔۔۔۔بر மலர்மிசை யோனும் மாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும் அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
கொத்தலர் குழலி யொடு விசயற்கு நல்கு
(560TLDTu (86)IL 6ilasi 56i மத்தமு மதியு நாக முடிமே லணிந்தென்
உளமே புகுந்த வதனால்
புத்தரொ டமனை வாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீரு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
தேனமர் பொழில்கொ ளாலை விளைசெந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமாபு ரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே.
திருச்சிற்றம்பலம்
\التالي
SS
美
YN
ܥܬ
གང་
 
 

நாவுக்கரசர் தேவாரம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
அரியானை அந்தணர்தம் சிந்தை யானை
அருமறையின் அகத்தானை அணுவை யார்க்குந் தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக் கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற பெரியானைப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும்
அருமருந்தை அகன்ஞாலத் தகத்துள் தோன்றி வருந்துணையும் சுற்றமும் பற்றும் விட்டு
வான்புலன்கள் அகத்தடக்கி மடவா ரோடும் பொருந்தணைமேல் வரும்பயனைப் போக மாற்றிப்
பொதுநீக்கித் தனைநினைய வல்லோர்க் கென்றும் பெருந்துணையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
மனத்தகத்தான் தலைமேலான் வாக்கி னுள்ளான்
வாயாரத் தன்னடியே பாடுந் தொண்டர்
இனத்தகத்தான் இமையவர்தஞ் சிரத்தின் மேலான் ஏழண்டத் தப்பாலான் இப்பாற் செம்பொன்
புனத்தகத்தான் நறுங்கொன்றைப் போதினுள்ளான்
பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றினுள்ளான்
bனத்தகத்தான் கயிலாயத் துச்சியுள்ளான்
காளத்தி யான்அவனென் கண்ணு ளானே.
གཞན་རྒྱུ་
th.
13
الھم

Page 9
ရြ႕ அடியாரை நைய வைத்தார் یہ سمجھ سکتا
நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார் சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார்
செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர் இனந்துருவி மணிமகுடத் தேறத் துற்ற
இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி நனைந்தனைய திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.
முளைத்தானை யெல்லார்க்கும் முன்னே தோன்றி
முதிருஞ் சடைமுடிமேல் முகிழ்வெண் திங்கள் வளைத்தானை வல்லசுரர் புரங்கள் மூன்றும்
வரைசிலையா வாசுகிமா நாணாக் கோத்துத் துளைத்தானைக் சுடுசரத்தால் துவள நீறாத்
தூமுத்த வெண்முறுவ லுமையோ டாடித் திளைத்தானைத் தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
தூண்டு சுடரனைய சோதி கண்டாய்
தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய் காண்டற் கரிய கடவுள் கண்டாய்
கருதுவார்க் காற்ற எளியான் கண்டாய் வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் மெய்ந்நெறி கண்டாய் விரத மெல்லாம் மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.
முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள் பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள் அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத் தன்னை மறந்தாள்தன் னாமங் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.
གང་ཡིན་
ܥܬ
14

(p” གནའ་
A.
மாணிக்கவாசக சுவாமிகள் பாடியருளிய
திருவாசகம்
திருச்சிற்றம்பலம்
தொல்லையிரும் பிறவிச் சூழுந்தளைநீக்கி அல்லலறுத் தானந்த மாக்கியதே - எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூ ரெங்கோன் திருவாசகம் எனும் தேன்
நமச்சிவாய வாஅழ்க! நாதன்றாள் வாழ்க! இமைப்பொழுது மென்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! கோகழி யாண்ட குருமனிதன் தாள்வாழ்க! ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க! ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க!
வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க! பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க! புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க! கரங்குவிவா ருண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க! சிரங்குவிவா ரோங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க!
ஈசனடி போற்றி எந்தை யடிபோற்றி தேசனடி போற்றி சிவன்சே வடிபோற்றி நேயத்தே நின்ற நிமலனடி போற்றி மாயப் பிறப்பறுக்கு மன்னனடி போற்றி சீரார் பெருந்துறைநந் தேவனடி போற்றி
ஆராத இன்பம் அருளுமலை போற்றி சிவனவனென் சிந்தையுள் நின்ற அதனால் அவனருளாலே அவன்றாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுராணந் தன்னை முந்தை வினைமுழுதும் ஒய வுரைப்பன்யான் لی۔
l
\
NË
15

Page 10
ܥܬ
கண்ணுதலான் தன்கருணை கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறந் தெல்லை இலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றவித் தாவர சங்கத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தே னெம்பெருமான் மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் உய்யவென் னுள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா வெனவோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே!
வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞான மில்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானந் தன்னை அகல்விக்கும் நல்லறிவே
ஆக்க மளவிறுதி யில்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பா யழிப்பாய் அருள்தருவாய் போக்குவா யென்னைப் புகுவிப்பாய் நின்றொழும்பில் நாற்றத்தி னேரியாய் சேயாய் நணியானே மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே
16

கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேனுாறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த
மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவமென்னும் அருங்கயிற்றாற் கட்டிப் புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி மலங்சோரு மொன்பது வாயிற் குடிலை மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய
விலங்கு மனத்தால் விமலா வுனக்குக் கலந்தவன் பாகிக் கசிந்துள் ளுருகும் நலந்தா னிலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி நாயிற் கடையாயக் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலந்த மலர்ச்சுடரே தேசனே தேனா ரமுதே சிவபுரனே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சங்கெடப்
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா வமுதே அளவிலாப் பெம்மானே ஓராதா ருள்ளத் தொளிக்கும் ஒளியானே நீரா யுருக்கியென் னாருயிராய் நின்றானே இன்பமுந் துன்பமு மில்லானே உள்ளானே
மறைந்திருந்தா யெம்பெருமான் வல்வினையேன் தன்னை
གང་ལ་
17

Page 11
們一 ཕཁ་་་་་་་་་་་་
அன்பருக் கன்பனே யாவையுமா யல்லையுமாம் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி யல்லானே ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுனர்வார் தங்கருத்தின்
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவேயென் சிந்தனையுள் ஊற்றான வண்ணா ரமுதே உடையானே வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப ஆற்றேனெம் மையா அரனேயோ என்றென்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார் மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லற் பிறவி அறுப்பானே ஓவென்று சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரு மேத்தப் பணிந்து.
திருச்சிற்றம்பலம்.
18
ܥܢܐ

1.
- פ$ மாணிக்கவாச சுவாமிகள்
அருளிச் செய்த திருப்பள்ளியெழுச்சி
திருச்சிற்றம்பலம் போற்றிஎன் வாழ்முத லாகிய பொருளே
புலர்ந்ததுழங்கழற் கிணைதுணை மலர்கொண்டு ஏற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம் சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே ஏற்றுயர் கொடியுடை யாய்எமை யுடையாய்
எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே.
அருணன்இந் திரன்திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின் கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர் மலரமற் றண்ணல் அங்கண்ணாம் திரள்நிரை யறுபதம் முரல்வன இவையோர் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகட லேபள்ளி எழுந்தருளாயே.
கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பினசங்கம் ஒவின தாரகை ஒளியொளி உதயத்து
ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத் தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே யாவரும் அறிவரியாய்எமக் கெளியாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தருளாயே.
གཞའ་།
19

Page 12
4. இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே என்னையும் ஆண்டுகொண்டின்னருள் புரியும் எம்பெரு மான்பள்ளிஎழுந்தரு ளாயே.
5. பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம்உனைக் கண்டறிவாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
சிந்தனைக் கும்அரி யாய்எங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
6. பப்பற வீட்டிருந் துணரும்நின் அடியார்
பந்தனை வந்தறுத் தாரவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்
வணங்குகின் றார்அணங் கின்மண வாளா
செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
7. அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார் இதுஅவன் திருவுரு இவனவன் எனவே
எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந் தருளும்
གལ་
20

மதுவளர் பொழில்திரு வுத்தர (8.5FIf
மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார் பந்தணை விரலியும் நீயுநின் னடியார்
பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி அந்தண னாவதும் காட்டிவந் தாண்டாய் ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே.
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொரு ளேஉன தொழுப்படி யோங்கள் மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம் கண்ணகத் தேநின்று களிதரு தேனே
கடலமு தேகரும் பேவிரும் படியார் எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
புவனியிற் போய்ப்பிற வாமையில் நாள்நாம்
போக்குகின் றோம்அவ மேஇந்தப் பூமி சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித் திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம் அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும் அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே.
திருச்சிற்றம்பலம்
حيح
21

Page 13
*
திருச்சிற்றம்பலம்
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயம் வாள்தடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே, விம்மிவிம்மி மெய்மறந்து
போதார் அம6யின்மேல் நின்றும் புரண்டிங்ங்ண் ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே யென்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்.
பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போ திப்போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையைாடி ஏசும் இடமீதோ விண்ணோர்கள் ஏத்துதற்குத்
கூசு மலர்பாதம் தந்தருள வந்தருளும் தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்.
முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதனென் றள்ளுறித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர் புத்தடியோம் புன்மைதீர்ததாட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ? சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்.
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ? எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம் உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.
མཁའ་
لهم
22

6.
மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும் பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான் கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று ஒலம் இடினும் உணராய் உணராய்காண் ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்.
மானேநீ நென்னலை நாளைவந் துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான் தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும் வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய் ஊனே உருகாய் உனக்கே உறுமெமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்.
அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான் சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய் என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோரும்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால் என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.
கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய்.
གལ་
23

Page 14
S2
ܝܡܬ
9. முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எங்கணவ ராவார் அவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையேயெமக் கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையுமிலோ மேலோர் எம்பாவாய்.
10. பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும் ஒதஉலவா ஒருதோழன் தொண்ட ருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்
ஏதவனுார் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.
11. மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போல்
செய்யாவெண் ணிறாடி செல்வா சிறுமருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநி ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகை யெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமை யேலோர் எம்பாவாய்.
12. ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடுங் கூத்தன்இவ் வானுங் குவலயமும் எல்லோமுங்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப பூத்திகழும் 'பொய்கை குடைந்துடையான் பொற்பாதம் ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய்.
ལག་ཁང་
24

த
13. பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
མཁའ་
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து நம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்.
14. காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதிதிறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.
ஒரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஒவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வநதனையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையற் கிங்ங்னே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகள்தாள்
வாருருவப் பூண்முலையிர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்.
முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்.
25
لوگئے۔

Page 15
20.
ܥܬ
臀一
17. செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
18.
19.
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக் கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதந் தந்தருளும் சேவகனை
அங்ங்ண் அரசை அடியோர்கட் சாரமுதை நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்.
அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவி றற்றாற்போல் கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப் பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக் கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்.
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
அங்கு அப்பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால் எங்கள் பெருமான் உனக்கொன்று றுரைப்போம்கேள்
எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகலலெங்கண் மற்றொன்றுங் காணற்க இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறெமக் கேலோர் எம்பாவாய்.
போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள் போற்றியெல் லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றியெல்லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றியெல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்மகனுங் காணாத புண்டரிகம் போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீர் சூடேலோர் எம்பாவாய்.
திருச்சிற்றம்பலம்.
གང་ལ་
26

sp མཁའ་ 2
மாணிக்க வாசக சுவாமிகள் திருத்தில்லையில் அருளிய திருப்பொற்சுண்ணம் திருச்சிற்றம்பலம் l முத்துநல் தாமம்பூ மாலைதூக்கி
முளைக்குடந் தூபம்நல் தீபம்வைம்மின் சத்தியுஞ் சோமியும் பார்மகளும்
நாமக ளோடுபல் லாண்டிசைமின் சித்தியுங் கெளரியும் பார்ப்பதியும்
கங்கையும் வந்து கவரிகொண்மின் அத்தன்ஐ யாறன்அம் மானைப்பாடி
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே.
பூவியல் வார்சடை எம்பிராற்குப்
பொற்றிருச் சுண்ணம் இடிக்கவேண்டும்
மாவின் வடுவகி ரன்னகண்ணிர்
வம்மின்கள் வந்துடன் பாடுமின்கள்
கூவுமின் தொண்டர் புறம்நிலாமே
குனிமின் தொழுமின்னங் கோன்னங்கூத்தன்
தேவியுந் தானும்வந் தெம்மையாளச்
செம்பொன்செய் சுண்ணம் இடித்துநாமே.
சுந்தர நீறணிந் தும்மெழுகித்
தூயபொன் சிந்தி நிதிபரப்பி இந்திரன் கற்பகம் நாட்டியெங்கும்
எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின் அந்தரர் கோன்அயன் தன்பெருமான்
ஆழியான் நாதன்நல் வேலன்தாதை எம்தரம் ஆளுமை யாள்கொழுநற்கு \ ஏய்ந்தபொற் சுண்ணம் இடித்துநாமே. لوگئے۔ ܫܬ܂ 11
27

Page 16
臀一
காசணி மின்கள் உலக்கையெல்லாம்
காம்பணி மின்கள் கறையுரலை நேச முடைய அடியவர்கள்
நின்று நிலாவுக என்றுவாழ்த்தித் தேசமெல் லாம்புகழ்ந் தாடுங்கச்சித்
திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடிப் பாச வினையைப் பறித்துநின்று
பாடிப்பொற் சுண்ணம் இடித்துநாமே.
அறுகெடுப் பார்அய னும்மரியும்
அன்றிமற் றிந்திர னோடமரர் நறுமுறு தேவர்க ணங்களெல்லாம்
நம்மிற்பின் பல்லதெ டுக்கவொட்டோம் செறிவுடை மும்மதில் எய்தவில்லி
திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடி முறுவற்செவ் வாயினி முக்கண் அப்பற்கு
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே.
உலக்கை பலஓச்சு வார்பெரியர்
உலகமெ லாம்உரல் போதாதென்றே கலக்க அடியவர் வந்துநின்றார்
காண உலகங்கள் போதாதுதென்றே நலக்க அடியோமை ஆண்டுகொண்டு
நாண்மலர்ப் பாதங்கள் சூடத்தந்த மலைக்கு மருகனைப் பாடிப்பாடி
மகிழ்ந்துபொற் சுண்ணம் இடித்துநாமே.
சூடகந் தோள்வளை ஆர்ப்பஆர்ப்பத்
, தொண்டர் குழாமெழுந்து தார்ப்பஆர்ப்ப நாடவர் நந்தம்மை ஆர்ப்பஆர்ப்ப
நாமும் அவர்தம்மை ஆர்ப்பஆர்ப்ப
གཞའ་།
ܚܡܬ
28
தீ

()
பாடக மெல்லடி யார்க்கும்மங்கை
பங்கினன் எங்கள் பராபரனுக்கு
ஆடக மாமலை அன்னகோவுக்கு
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே.
வாட்டடங் கண்மட மங்கைநல்லீர்
வரிவளை ஆர்ப்பவண் கொங்கைபொங்கத் தோட்டிரு முண்டந் துதைந்திலங்கச்
சோத்தெம்பி ரான்என்று சொல்லிச்சொல்லி நாட்கொண்ட நான்மலர்ப் பாதங்காட்டி
நாயிற்க டைப்பட்ட நம்மையிம்மை ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே.
வையகம் எல்லாம் உரலதாக
மாமேரு என்னும் உலக்கைநாட்டி மெய்யெனும் மஞ்சள் நிறையஅட்டி
மேதகு தென்னன் பெருந்துறையான் செய்ய திருவடி பாடிப்பாடிச்
செம்பொன் உலக்கை வலக்கைபற்றி ஐயன் அணிதில்லை வாணனுக்கே
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே.
முத்தணி கொங்கைகள் ஆடஆட
மொய்குழல் வண்டினம் ஆடஆடச் சித்தஞ் சிவனொடும் ஆடஆடச்
செங்கயற் கண்பனி ஆடஆடப் பித்தெம் பிரானொடும் ஆடஆடப்
பிறவி பிறரொடும் ஆடஆட அத்தன் கருணையொ டாடஆட
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே.
གནའ་
29
الھم

Page 17
12.
13.
14.
-ܥܬ
மாடு நகைவாள் நிலாவெறிப்ப “፳
வாய்திறந் தம்பவ ளந்துடிப்பப் பாடுமின் நந்தம்மை ஆண்டவாறும்
பணிகொண்ட வண்ணமும் பாடிப்பாடித் தேடுமின் எம்பெரு மானைத்தேடிச்
சித்தங் களிப்பத் திகைத்துத்தேறி ஆடுமின் அம்பலத் தாடினானுக்கு
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே.
மையமர் கண்டனை வானநாடர்
மருந்தினை மாணிக்கக் கூத்தன்தன்னை ஐயனை ஐயர்பி ரானைநம்மை
அகப்படுத் தாட்கொண் டருமைகாட்டும் பொய்யர்தம் பொய்யனை மெய்யர்மெய்யைப்
போதரிக் கண்ணிணைப் பொற்றொடித்தோள் பையர வல்குல் மடந்தைநல்லீர்
பாடிப்பொற் சுண்ணம் இடித்துநாமே.
மின்னிடைச் செந்துவர் வாய்க்கருங்கண்
வெண்ணகைப் பண்ணமர் மென்மொழியீர்
என்னுடை ஆரமுது எங்கள் அப்பன்
எம்பெரு மான்இம வான்மகட்குத்
தன்னுடைக் கேள்வன் மகன் தகப்பன்
தமையன்எம் ஐயன் தாள்கள்பாடிப் பொன்னுடைப் பூண்முலை மங்கைநல்வீர்
பொற்றிருச் சுண்ணம் இடித்துநாமே.
சங்கம் அரற்றச் சிலம்பொலிப்பத்
தாழ்குழல் சூழ்தரு மாலையாடச் نی செங்கனி வாய்இதழுந் துடிப்பச்
சேயிழை யீர்சிவ லோகம்பாடிக்
30

கங்கை இரைப்ப அராஇரைக்கும்
கற்றைச் சடைமுடி யான்கழற்கே
பொங்கிய காதலிற் கொங்கை பொங்கப்
பொற்றிருச் சுண்ணம் இடித்து நாமே.
ஞானக் கரும்பின் தெளியைப்பாகை
நாடற் கரிய நலத்தைநந்தாத் தேனைப் பழச்சுவை ஆயினானைச்
சித்தம் புகுந்து தித்திக்கவல்ல கோனைப் பிறப்பறுத் தாண்டுகொண்ட
கூத்தனை நாத்தழும் பேறவாழ்த்திப் பானல் தடங்கண் மடந்தைநல்லீர்
பாடிப்பொற் சுண்ணம் இடித்துநாமே.
ஆவகை நாமும்வந் தன்பர்தம்மோடு
ஆட்செய்யும் வண்ணங்கள் பாடிவிண்மேல் தேவர்க னாவிலுங் கண்டறியாச்
செம்மலர்ப் பாதங்கள் காட்டுஞ்செல்வச் சேவகம் ஏந்திய வெல்கொடியான்
சிவபெரு மான்புரஞ் செற்றகொற்றச் சேவகன் நாமங்கள் பாடிப்பாடி
செம்பொன்செய் சுண்ணம் இடித்துநாமே.
தேனக மாமலர்க் கொன்றைபாடிச்
சிவபுரம் பாடித் திருச்சடைமேல் வானக மாமதிப் பிள்ளைபாடி
மால்விடை பாடி வலக்கையேந்தும் ஊனக மாமழுச் சூலம்பாடி
உம்பரும் இம்பரும் உய்ய அன்று போனக மாகநஞ் சுண்டல்பாடிப்
பொற்றிருச் சுண்ணம் இடித்து நாமே.
གཞས་
31

Page 18
18.
19.
20.
s
அயன்தலை கொண்டுசெண் டாடல்பாடி
அருக்கன் எயிறு பறித்தல்பாடிக் கயந்தனைக் கொன்றுரி போர்த்தல்பாடிக்
காலனைக் காலால் உதிைதல்பாடி இயைந்தன முப்புரம் எய்தல் பாடி
ஏழை அடியோமை ஆண்டுகொண்ட நயந்தனைப் பாடிநின் றாடியாடி
நாதற்குச் சுண்ணம் இடித்துநாமே.
வட்டமலர்க் கொன்றை மாலைபாடி
மத்தமும்பாடி மதியும் பாடிச் சிட்டர்கள் வாழுந்தென் தில்லைபாடிச்
சிற்றம்ப லத்தெங்கள் செல்வம்பாடிக் கட்டிய மாசுணக் கச்சைபாடிக்
கங்கணம் பாடிக் கவித்தகைம்மேல் இட்டு நின்றாடும் அரவம்பாடி
ஈசற்குச் சுண்ணம் இடித்து நாமே.
வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு
மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்குச் சோதியு மாய்இரு ளாயினார்க்குத்
துன்ப்மு மாய்இன்பம் ஆயினார்க்குப் பாதியு மாய்முற்றும் ஆயினார்க்குப்
பந்தமு மாய்வீடும் ஆயினாருக்கு ஆதியும் அந்தமும் ஆயினாருக்கு
ஆடற்பொற் சுண்ணம் இடித்துநாமே.
திருச்சிற்றம்பலம்
المالي
32
 

臀一
D -
மாணிக்க வாசக சுவாமிகள் அருளிச் செய்த
திருவாசகம் கோயில் திருப்பதிகம்
திருச்சிற்றம்பலம்
மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப்
புலனைந்தின் வழியடைத் தமுதே ஊறிநின் றென்னுள் எழுபரஞ் சோதி
உள்ளவா காணவந் தருளாய் தேறலின் தெளிவே சிவபெரு மானே
திருப்பெருந் துறையுறை சிவனே ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த
இன்பமே என்னுடை அன்பே.
அன்பினால் அடியேன் ஆவியோ டாக்கை
ஆனந்த மாய்க்கசிந் துருக என்பரம் அல்லா இன்னருள் தந்தாய் யானிதற் கிலனொர்கைம் மாறு முன்புமாய்ப் பின்பும் முழுதுமாய்ப் பரந்த முத்தனே முடிவிலா முதலே தென்பெருந் துறையாய் சிவபெரு மானே
சீருடைச் சிவபுரத் தரைசே,
அரைசனே அன்பர்க்கு அடியனே னுடைய
அப்பனே ஆவியோ டாக்கை புரைபுரை கனியப் புகுந்துநின் றுருக்கிப்
பொய்யிருள் கடிந்த மெய்ச்சுடரே திரைபொரா மன்னும் அமுதத்தெண் கடலே திருப்பெருந் துறையுறை சிவனே உரையுணர் விறந்துநின் றுணர்வதோர் உணர்வே யானுன்னை உரைக்குமா றுணர்ந்தே.
མཁའ་
لهم
33

Page 19
臀一
உணர்ந்தமா முனிவர் உம்பரோ டொழிந்தார்
உணர்வுக்குந் தெரிவரும் பொருளே
இணங்கிலி எல்லா வுயிர்கட்கும் உயிரே
எனைப்பிறப் பறுக்கும்எம் மருந்தே திணிந்ததோர் இருளில் தெளிந்தது வெளியே
திருப்பெருந் துறையுறை சிவனே குணங்கள்தாம் இல்லா இன்பமே உன்னைக்
குறுகிைேற் கினியென்ன குறையே.
குறைவிலா நிறைவே கோதிலா அமுதே
ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென்
மனத்திடை மன்னிய மன்னே சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப் பாயும்
திருப்பெருந் துறையுறை சிவனே இறைவனே நீஎன் உடலிடங் கொண்டாய்
இனியுன்னை என்னிரக் கேனே.
இரந்திரந் துருக என்மனத் துள்ளே
எழுகின்ற சோதியே இமையோர் சிரந்தனிற் பொலியுங் கமலச்சே வடியாய்
திருப்பெருந் துறையுறை சிவனே நிரந்தஆ காயம் நீர்நிலம் தீகால்
ஆய்அவை அல்லையாய் ஆங்கே கரந்ததோர் உருவே களித்தனன் உன்னைக் கண்ணுறக் கண்டுகொண் டின்றே.
இன்றெனக் கருளி இருள்கடிந் துள்ளத்து
எழுகின்ற ஞாயிறே போன்று
நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன்
நீயலால் பிறிதுமற் றின்மை
གང་ལ་
གླིང་།
34
 

ஒ
b.
சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாம்
திருப்பெருந் துறையுறை சிவனே
ஒன்றும்நீ யல்லை அன்றியொன் றில்லை யாருன்னை அறியகிற் பாரே.
பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப்
பரந்ததோர் படரொளிப் பரப்பே நீருறு தீயே நினைவதேல் அரிய
நின்மலா நின்னருள் வெள்ளச் சீருறு சிந்தை யெழுந்ததோர் தேனே
திருப்பெருந் துறையுறை சிவனே யாருறவு எனக்கிங்கு ஆர்அய லுள்ளார் ஆனந்த மாக்குமென் சோதி
சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம்
ஒருவனே சொல்லுதற் கரிய ஆதியே நடுவே அந்தமே பந்தம்
அறுக்கும் ஆனந்தமா கடலே தீதிலா நன்மைத் திருவருட் குன்றே
திருப்பெருந் துறையுறை சிவனே யாதுநீ போவதோர் வகையெனக் கருளாய்
வந்துநின் இணையடி தந்தே.
தந்ததுன் தன்னைக் கொண்டதென் தன்னைச்
சங்கரா ஆர்கொலோ சதுரர் அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன்
யாதுநீ பெற்றதொன் றென்பால் சிந்தையே கோயில் கொண்டஎம் பெருமான் திருப்பெருந்துறை யுறை சிவனே எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய்
யான்இதற் கிலன் ஓர்கைம் மாறே.
திருச்சிற்றம்பலம்
ଝୁଡ଼ୁ
35

Page 20
திருவிசைப்பா
திருச்சிற்றம்பலம்
ஒளிவளர் விளக்கே உலப்பிலா வொன்றே
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே!
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே!
சித்தத்துள் தித்திக்கும் தேனே!
அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே!
அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே
நையாத மனத்தினனை நைவிப்பான் இத் தெருவே ஐயாநி உலாப்போந்த அன்று முதல் இன்று வரை கையாரத் தொழுதருவி கண்ணாரச் சொரிந்தாலும் செய்யாயோ அருள்? கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
அற்புதத் தெய்வம் இதனின் மற் றுண்டே?
அன்பொடு தன்னைஅஞ் செழுத்தின் சொற்றபதத் துள்வைத் துள்ளம்அள் ஞறும்
தொண்டருக் கெண்டிசைக் கனகம் பற்பதக் குவையும் பைம்பொன்மா விரிகையும்
பளவா யவர்பனை முலையும் கற்பகப் பொழிலும் முழுதுமாங் கங்கை
கொண்டசோ ளேச்சரச் தானே.
-ܥܬ
36

ஏகநா யகனை இமையவர்க் கரசை என்னுயிர்க் கமுதினை எதிரில் போகநா யகனைப் புயல்வணற் கருளிப்
பொன்னெடுஞ் சிவிகையா வுர்ந்த மேகநா யகனை மிகுதிரு வீழி
மிழலைவிண் ணிNசெழுஞ் கோயில் யோகநா யகனை யன்றிமற் றொன்றும் உண்டென உணர்கிலேன் யானே.
கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியைக் கரையிலாக் கருணைமா கடலை மற்றவர் அறியா மாணிக்க மலையை மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்றனம் சிவனைத்
திருவீழி மிழலைவிற் றிருந்த கொற்றவன் தன்னைக் கண்டுகண் டுள்ளம்
குளிரளன் கண்குளிர்ந் தனவே.
蔑
N s チ
37

Page 21
『ー
ܥܬ
திருப்பல்லாண்டு திருச்சிற்றம்பலம்
மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்
வஞ்சகள் போயகல பொன்னின் செய் மண்டபத்துள்ளே புகுந்து
புவனி யெல்லாம் விளங்க அன்னநடை மடவாள் உமைகோன் அடியோ
முக்கருள் புரிந்து பின்னைப் பிறவி அறுக்க நெறிதந்த பித்தற்குப்
பல்லாண்டு கூறுதுமே.
மிண்டு மனத்தவர் போமின் கள்
மெய்யடியார்கள் விரைந்து வம்மின் கொண்டும் கொடுத்தும் குடிகுடி ஈசற்கு
ஆட்செய்மின் குழாம் புகுந்து அண்டங் கடந்த பொருள் அளவில்லாததோர் ஆனந்த வெள்ளப் பொருள் பண்டும் இன்றும் என்றும் உள்ள பொருள் என்றே
பல்லாண்டு கூறுதுமே.
ஆரார் வந்தார்? அமரர்
குழாத்தில் அணியுடை ஆதிரைநாள் நாரா யணனொடு நான்முகன்
அங்கி இரவியும் இந்திரனும் தேரார் வீதியில் தேவர்
குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து பாரார் தொல்புகழ் பாடியும்
ஆடியும் பல்லாண்டு கூறுதுமே.
38

சீருந திருவும் பொலியச் சிவலோக
நாயகன் சேவடிக் கீழ் ஆரும் பெறாத அறிவு பெற்றேன; பெற்றதார்
பெறுவா ருலகில் ஊரும் உலகுங் கழற உழறி
உமை மணவாளனுக் காட் பாரும் விசும்பும் அறியும் பரிசு நாம்
பல் லாண்டு கூறுதுமே.
தாதையைத் தாளற வீசிய சண்டிக்கிவ்
வண்டத்தொடுமுடனே பூதலத்தோரும் வணங்கப் பொற்கோயிலும்
போனகமுமருளிச் சோதிமணி முடித்தாமமுந் தொண்டர்க்கு
நாயகமும் பாதகத்துக்குப் பரிசுவைத்தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
திருச்சிற்றம்பலம்
39

Page 22
9) திருப்புராணம் . . " திருச்சிற்றம்பலம் உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன் நிலவு லாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.
ஐந்துபேர் அறிவும் கண்களே கொள்ள அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆகக் குணம்ஒரு மூன்றும்
திருந்துசாத் துவிகமே ஆக இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த எல்லையில் தனிப்பெருங் கூத்தின் வந்தபேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்.
தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன்
திருநடம் கும்பிடப்பெற்று
மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பம்ஆம் என்று
கண்ணில் ஆனந்த அருவிநீர் சொரியக்
கைமலர் உச்சிமேற் குவித்துப்
பண்ணினால் நீடி அறிவரும் பதிகம்
பாடினார் பரவினார் பணிந்தார்.
வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப் பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர் பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்
மண்ணி னிற்பிறந் தார்பெறும் பயன்மதி சூடும் அண்ண லார்அடி யார்தமை அமுதுசெய் வித்தல் கண்ணி னால்அவர் நல்விழாப் பொலிவுகண் டார்தல் உண்மை யாமெனில் உலகள்முன் வருகென உரைப்பார்.
-ܥܬ
40

ĝO —
திருப்புகழ்
திருச்சிற்றம்பலம் உம்பர்தருத் தேனுமணிக் ஒண்கடலிற் றேனமுதத் இன்பரசத்தே பருகிப் என்றனுயிர்க் காதரவுற்
தம்பிதனக்காகவனத் தந்தை வலத்தாலருள் கைக் அன்பர் தமக்கான நிலைப் ஐந்துகரத்தானை முகப்
அதிருங்கழல் பணிந்து அபயம் புகுவதென்று இதயந் தனில் இருந்து இடர் சங்கைகள் கலங்க
எதிரெங் கொருவரின்றி இறைவன் தனது பங்கின் பதியெங்கிலும் இருந்து பல குன்றிலும் அமர்ந்த
இருவினையின் மதிமயங்கித் எழுநரகிலுழலு நெஞ்சுற் பரம குரு அருள் நினைந்திட்டு பரவு தரிசனையை என்றெற்
தெரிதமிழையுதவு சங்கப் சிவனரருளு முருக செம்பொற் கருணை நெறி புரியு மன்பர்க் கனக சபை மருஷகந்தப்
திருச்சிற்றம்பலம்
கசிவாகி துணர்வூறி L61)85TQ)Lib றருள்வாயே
தணைவோனே கனியோனே பொருளோனே பெருமாளே
அடியேனுன் நிலைகாண
disc(b60LJuT35 அருள்வாயே
நடமாடும்
9d 60). LT6) விளையாடி பெருமாளே
திரியாதே றலையாதே உணர்வாலே கருள்வாயே
புலவோனே கழலோனே கெளியோனே பெருமாளே.
གང་བ་
41

Page 23
ܥܬ
அபிராமி அந்தாதி
காப்பு தாரமர் கொன்றையும் சண்பக
மாலையும் சாத்தும் தில்லை ஊரர்தம் பாகத்(து) உமைமைந்த
னேஉலகே மும் பெற்ற சீரபி ராமி அந்தாதிஎப்
போதும்என் சிந்தையுள்ளே காரமர் மேனிக் கணபதி
யேநிற்கக் கட்டுரையே.
நூல்
உதிக்கின்ற செங்கதிர் உச்சித்
திலகம் உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன விதிக்கின்ற மேனி அபிராமி
என்றன் விழுத்துணையே.
துணையுந் தொழுந்தெய்வ மும்பெற்ற
தாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட
வேரும் பனிமலர்ப்பூங்
கணையும் கருப்புச் சிலையுமென்
பாசாங்குசமும் கையில்
* அணையும் திரிபுர சுந்தரி
யாவ(து) அறிந்தனமே.
42

r
அறிந்தேன் எவரும் அறியா
மறையை அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்
கேதிரு வேவெருவிப்
பிறிந்தேன் நின் அன்பர் பெருமைஎண்
ணாத கருமநெஞ்சால்
மறிந்தே விழும்நர குக்குற
வாய மனிதரையே.
மனிதரும் தேவரும் மாயா
முனிவரும் வந்துசென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும்
பகீரதி யும்படைத்த புனிதரும் நீயும்என் புந்தினந்
நாளும் பொருந்துகவே.
பொருந்திய முப்புரை செப்புரை
செய்யும் புணர்முலையால் வருந்திய வஞ்சி மருங்குல்
மனோன்மணி வார்சடையோன் அருந்திய நஞ்(சு)அமு தாக்கிய
அம்பிகை அம்புயமேல் திருந்திய சுந்தரி அந்தரி
பாதம்என் சென்னியதே.
சென்னிய(து) உன்பொற் திருவடித் தாமரை சிந்தையுள்ளே மன்னிய(து) உன்திரு மந்திரம்
சிந்துர வண்ணப்பெண்ணே முன்னிய நின்அடி யாருடன்
கூடி முறைமுறையே பன்னிய(து) என்றும்உன் றன்பர மாகம பத்ததியே.
མཁའ་
43

Page 24
ܥܬ
ததியுறு மத்திற் சுழலும்என்
ஆவி தளர்விலதோர் கதியுறு வண்ணம் கருதுகண்
LATUJ&bLD 6\)PT6\)uu99)JLíD மதியுறு வேணி மகிழ்நனும்
மாலும் வணங்கிஎன்றும் துதியுறு சேவடியாய் சிந்து
ரானன சுந்தரியே.
சுந்தரி எந்தை துணைவிஎன்
பாசத் தொடரைஎல்லாம் வந்தரி சிந்துர வண்ணத்தி
னாள்மகி டன்தலைமேல் அந்தரி நீலி அழியாத
கன்னிகை ஆரணத்தோன் கந்தரி கைத்தலத் தாள்மலர் தாள்என் கருத்தனவே.
கருத்தன எந்தைதன் கண்ணன்
வண்ணக் கணகவெற்பிற் பெருத்தன பால்அழும் பிள்ளைக்கு
நல்கின பேரருள்கூர் திருத்தன பாரமும் ஆரமும்
செங்கைச் சிலையும் அம்பும் முருத்தன முரலும் நீயும்அம்
மேவந்தென் முன்நிற்கவே.
நின்றும் இருந்தும் கிடந்தும்
நடந்தும் நினைப்ப(து) உன்னை என்றும் வணங்குவ(து) உன்மலர்த் தாள்எழு தாமறையின் ஒன்றும் அரும்பொரு ளேஅரு
ளேஉமை யேஇமயத்(து) அன்றும் பிறந்தவ ளேஅழி
யாமுத்தி ஆனந்தமே.
1 O
ཡོང་རྒྱུ་
<ീ
44

ஆனந்த மாய்என் அறிவாய்
நிறைந்த அமுதமுமாய் வானந்த மான வடி(வு)உடை
யாள்மறை நான்கினுக்கும் தானந்த மான சரணார
விந்தம் தவளநிறக் கானந்தம் ஆடரங் காம்எம்பி
ரான்முடிக் கண்ணியதே.
கண்ணிய(து) உன்புகழ் கற்ப(து) உன்
நாமம் கசிந்துபத்தி பண்ணிய(து) உன்இரு பாதாம்
புயத்தில் பகல்இரவா நண்ணிய(து) உன்னை நயந்தோர்
அவையத்து நான்முன் செய்த புண்ணியம் ஏ(து) என்அம் மேபுவி ஏழையும் பூத்தவளே.
பூத்த வளேபுவ னம்பதி
னான்கையும் பூத்தவண்ணம் காத்தவ ளேபின் கரந்தவ
ளேகறைக் கண்டனுக்கு முத்தவளே என்றும் மூவா
முகுந்தற்(கு) இளையவளே மாத்தவ ளேஉன்னை அன்றிமற் றோர்தெய்வம் வந்திப்பதே.
வந்திப்பவர் உன்னை வானவள்
தானவர் ஆனவர்கள் சிந்திப் பவர்நல் திசைமுகள்
நாரணர் சிந்தையுள்ளே பந்திப் பவர்அழி யாப்பர
மானந்தார் பாரில்உன்னைச் சந்திப் பவர்க்(கு) எளிதாம்
எம்பிராட்டி நின்தண்ணளியே.
11
12
13
14
45

Page 25
臀一
ܥܬ
தண்ணளிக் கென்றுமுன் னேபல கோடி தவங்கள் செய்வார் மண்ணளிச் கும்செல்வ மோபெறு வார்மதி வானவர்தம் விண்ணளிக் கும்செல் வமும்அழி
யாமுத்தி வீடுமன்mோ பண்ணளிக் கும்சொல் பரிமள
யாமளைப் பைங்கிளியே.
கிளியே கிளைஞர் மனத்தே
கிடந்து கிளர்ந்தொளிரும் ஒளியே ஒளிரும் ஒளிக்கிட
மேஎண்ணில் ஒன்றுமில்லா வெளியே வெளிமுதல் பூதங்க
ளாகி விரிந்தஅம்மே அளியேன் அறிவள விற்(கு)அள
வான(து) அதிசயமே.
அதிசய மாணவடி(வு) உடை
யாள்அர விந்தமெல்லாம் துதிசய ஆனன சுந்தர
வல்லி துணைஇரதி 85ğlgu, LDT6ÖT(gbi) 39UöFu
மாகமுன் பார்த்தவர்தம் மதிசய மாகவன் றோவாம
பாகத்தை வவ்வியதே.
வவ்விய பாகத்(து) இறைவரும்
நீயும் மகிழ்ந்திருக்கும் செவ்வியும் உங்கள் திருமணக்
கோலமும் சிந்தையுள்ளே அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற்
பாதமும் ஆகிவந்து வெவ்வியும் காலன் என் மேல்வரும்
போது வெளிநிற்கவே.
15
16
17
18
46

ܥܢܐ
வெளிநின்ற நின்திரு மேனியைப்
பார்த்தென் விழியும் நெஞ்சும் களிநின்ற வெள்ளம் கரைகண்ட
தில்லை கருத்தினுள்ளே தெளிநின்ற ஞானம் திகழ்கின்ற
தென்ன திருவுளமோ ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.
உறைகின்ற நின்திருக் கோயில்நின்
கேள்வர் ஒருபக்கமோ அறைகின்ற நான்மறை யின்அடி
யோமுடி யோஅமுதம் நிறைநின்ற வெண்திங்க ளோகஞ்ச
மோஎன்றன் நெஞசகமோ மறைகின்ற வாரிதி யோயூர ணாசல மங்கலையே.
மங்கலை செங்கல சம்முலை
யாள்மலை யாள் வருணச் கங்கலை செங்கைச் சகல
கலாமயில் தாவுகங்கை பொங்கலை தங்கும் புரிசடை
யோன்புடை யாள உடையாள் பிங்கலை நீலிசெய் யாள்வெளி
யாள்பசும் பெண்கொடியே.
கொடியே இளவஞ்சிக் கொம்மே
எனக்குவம் பேபழுத்த படியே மறையின் பரிமள
மேபனி மால்இமயப் பிடியே பிரமன் முதலாய
தேவரைப் பெற்றஅம்மை அடியேன் இறந்(து) இங்(கு) இனிப்பிற வாமல்வந்(து) ஆண்டுகொள்ளே.
19
20
21
གང་ལ་
47

Page 26
臀一
ܥܬ
கொள்ளேன் மனத்தில்நின் கோலம்அல்
லா(து) அன்பர் கூட்டந்தன்னை விள்ளேன் பரசம யம்விரும்
பேன்வியன் மூவுலகுக்(கு) உள்ளே அனைத்தினுக் கும்புறம்
பேஉள்ளத் தேவிளைந்த கள்ளே களிக்கும் களியே
அளியளன் கண்மணியே.
மணியே மணியின் ஒளியே
ஒளிரும் மணிபுனைந்த
அணியே அணியும் அணிக்கழ
கேஅணு காதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே
அமரர் பெருவிருந்தே பணியேன் ஒருவரை நின்பத்ம
பாதம் பணிந்தபின்னே.
பின்னே திரிந்துஉன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க முன்னே தவங்கள் முயன்றுகொண்
டேன்முதல் மூவருக்கும் அன்னே உலகுக்(கு) அபிராமி
என்னும் அருமருந்தே என்னே இனிஉன்னை யான்மற
வாமல்நின்(று) ஏத்துவனே.
ஏத்தும் அடியவர் ஈரே
ழுலகினை யும்படைத்தும் காத்தும் அழித்தும் திரிபவ
ராம்கமழ் பூங்கடம்பு சாத்தும் குழல்அணங் கேமணம்
நாறும்நின்தாள் இணைக்(கு)என் நாத்தங்கு புன்மொழி ஏறிய
வாறு நகையுடைத்தே.
23
24
25
26
48

உடைத்தனை வஞ்சப் பிறவியை
உள்ளம் உருகும்.அன்பு படைத்தனை பத்ம பதயுகம்
சூடும் பணிஎனக்கே அடைத்தனை நெஞ்சத்(து) அழுக்கைஎல்
லாம்நின் அருட்புனலால் துடைத்தனை சுந்தரி நின்னருள்
ஏதென்று சொல்லுவதே.
சொல்லும் பொருளும் எனநட
மாடும் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடி
யேநின் புதுமலர்த்தாள் அல்லும் பகலும் தொழும்அவர்க்
கேசுழி யாஅரசும் செல்லும் தவநெறி யும்கிவ
லோகமும் சித்திக்குமே.
சித்தியும் சித்திதரு ந்தெய்வ
மாகித் திகழும்பரா
சத்தியும் சத்தி தழைக்கும்
சிவமும் தவம்முயல்வார்
முத்தியும் முத்திக்கு வித்தும்வித்
தாகி முளைத் தெழுந்த புத்தியும் புத்தியின் உள்ளே
புரக்கும் புரத்தையன்றே.
அன்றே தடுத்(து) என்னை ஆண்டு கொண்
டாய்கொண்ட(து) அல்லவென்கை நன்றே உனக்(கு) இனி நான்என்
செயினும் நடுக்கடலுள் சென்றே விழினும் கரையேற்
றுகைநின் திருவுளமே ஒன்றே பலவுரு வேயரு
வேஎன் உமையவளே.
གང་ལྟ་
27
28
29
3O
49

Page 27
ܥܬ
உமையும் உமையொரு பாகனும்
ஏக உருவில் வந்திங்(கு) எமையும் தமக்கன்பு செய்யவைத்
தார்.இனி எண்ணுதற்குச் சமையங் களுமில்லை ஈன்றெடுப்
பாள்ஒரு தாயும் இல்லை அமையும் அமையுறு தோளியர்
வேல்வைத்த ஆசையுமே. 31
ஆசைக் கடலில் அகப்பட்டு)
அருளற்ற அந்தகன்கைப் பாசத்தில் அல்லல் படஇருந்
தெனைநின் பாதம்என்னும் வாசக் கமலம் தலைமேல்
வலியவைத்(து) ஆண்டுகொண்ட நேசத்தை என்சொல்லு வேன்ஈசர்
பாகத்து நேரிழையே. 32
இழைக்கும் வினைவழி யேஅடும் காலன் எனைநடுங்க அழைக்கும் பொழுது வந்(து) அஞ்சல்என்
பாய்அத்தர் சித்தம்எல்லாம் குழைக்கும் களபக் குவிமுலை
யாமளைக் கோமளமே உழைக்கும் பொழு(து) உ(ள்)னை யேஅன்னை
யேளன்பன் ஓடிவந்தே. 33
வந்தே சரணம் புகும்.அடி
யாருக்கு வான்உலகம் தந்தே பரிவொடு தான்போய்
இருக்கும் சதுர்முகமும் பைந்தேன் அலங்கல் பருமனி ஆகமும் பாகமும்பொன் செந்தேன் மலரும் அலர்கதின்
ஞாயிறும் திங்களுமே. 34
ས།
50

திங்கட் பகலின் மணம்நாறும்
சீறடி சென்னிவைக்க எங்கட்(கு) ஒருதவம் எய்திய
வாஎண் ணிறந்தவிண்ணோர் தங்கட் கும்இந்தத் தவமெய்து
மோதரங் கக்கடலுள் வெங்கட் பணியணை மேல்துயில்
கூரும் விழுப்பொருளே.
பொருளே பொருள்முடிக் கும்போக
மேஅரும் போகம்செய்யு மருளே மருளில் வருந்தெரு
ளேனன் மனத்துவஞசத்(து) இருளே தும்இன்றி ஒளிவெளி யாகி இருக்கும்உன்றன் அருளே(து) அறிகின் றிலேன்அம்பு
யாதனத்(து) அம்பிகையே.
கைக்கே அணிவது கன்னலும்
பூவும் கமலம்அன்ன மெய்க்கே அணிவது வெண்முத்து
மாலை; விடஅரவின் பைக்கே அணிவது பன்மணிக்
கோவையும் பட்டும்; எட்டுத் திக்கே அணியும் திருவுடை
யான் இடம்சேர்பவளே.
பவளக் கொடியில் பழுத்த
செவ்வாயும் பணிமுறுவல் தவளத் திருநகை யும்துணை யாஎங்கள் சங்கரனைத் துவளப் பொருது துடியிடை
சாய்க்கும் துணைமுலையாள் அவளைப் பணிமின் கண்டீர்அம
ராவதி ஆளுகைக்கே.
བ་
35
36
37
38
51

Page 28
臀
ܥܬ
ஆளுகைக்(கு) உன்றன் அடித்தா
மரைகள்உண்டு); அந்தகன்பால் மீளுகைக்(கு) உன்றன் விழியின்
கடையுண்டு, மேல்இவற்றின் மூளுகைக்(கு) என்குறை நின்குறை யேஅன்று; முப்புரங்கள் மாளுகைக்(கு) அம்பு தொடுத்தவில்
லான்பங்கில் வான்நுதலே.
வாணுதல் கண்ணியை விண்ணவர்
யாவரும் வந்திறைஞ்சிப் பேணுதற்(கு) எண்ணிய எம்பெரு மாட்டியைப் பேதைநெஞ்சில் காணுதற்(கு) அண்ணியள் அல்லாத
கன்னியைக் காணும்அன்பு பூணுதற்(கு) எண்ணிய எண்ணம் அன்றோ?
முன்செய் புண்ணியமே.
புண்ணியம் செய்தன மேமன மேபுதுப் பூங்குவளைக் கண்ணியும் செய்ய கணவரும்
கூடிநம் காரணத்தால் நண்ணிஇங் கேவந்து; தம்மடி
யார்கள் நடுவிருக்கப் பண்ணிநம் சென்னியின் மேல்பத்ம
பாதம் பதித்திடவே.
இடங்கொண்டு விம்மி இணைகொண்டு)
இறுகி இளகிமுத்து வடங் கொண்ட கொங்கை மலைகொண்டு)
இறைவா வலியநெஞ்சை நட்ங்கொண்ட கொள்கை நலங்கொண்ட
நாயகி நல்லரவின் படங்கொண்ட அல்குல் பனிமொழி
வேதப் பரிபுரையே.
39
41
42
གང་ཡིན་
52

பரிபுரச் சீறடி பாசாங்
குசைபஞ்ச பாணிஇன்சொல் திரிபுர சுந்தரி சிந்துர
மேனியள் தீமைநெஞ்சில் புரிபுர வஞ்சரை அஞ்சக் ls) குனிபொருப் புச்சிலைக்கை எரிபுரை மேனி இறைவர்செம்
பாகத்(து) இருந்தவளே.
தவளே இவள்ளங்கள் சங்கர
6OTATÍTLD60D60T LDsħl856MD DITLD
அவளே அவர்தமக்(கு) அன்னையும் ஆயினள் ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும்
மேலை இறைவியும்ஆம் துவளேன் இனியொரு தெய்வமுண்
டாகமெய்த் தொண்டுசெய்தே.
தொண்டுசெய் யாதுநின் பாதம்
தொழாது துணிந்திச்சையே பண்டுசெய் தார்உள ரோஇல
ரோஅப் பரிசடியேன் கண்டுசெய் தால்அது கைதவ
மோஅன்றிச் செய்தவமோ மிண்டுசெய் தாலும் பொறுக்கைநன்
றேபின் வெறுக்கையன்றே.
வெறுக்கும் தகைமைகள் செய்யினும்
தம்மடி யாரைமிக்கோர் பொறுக்கும் தகைமை புதியதன்
றேயுது நஞ்சைஉண்டு கறுக்கம் திருமிடற் றான்இடப்
பாகம் கலந்தபொன்னே மறுக்கும் தகைமைகள் செய்யினும்
யான்உன்னை வாழ்த்துவனே.
43
44
45
46
äł
l
گئے۔
53

Page 29
வாழும் படியொன்று கண்டுகொண்
டேன்மனத் தேயொருவர் வீழும் படியன்று விள்ளும்
படியன்று வேலைநிலம் ஏழும் பருவரை எட்டும்எட்
டாமல் இரவுபகல் சூழும் சுடர்க்கு நடுவே
கிடந்து சுடர்கின்றதே.
சுடரும் கலைமதி துன்றும்
சடைமுடிக் குன்றில் ஒன்றிப் படரும் பரிமளப் பச்சைக்
கொடியைப் பதித்துநெஞ்சில் இடரும் தவிர்த்திமைப் போதிருப்
பார்ப்பின்னும் எய்துவரோ குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே.
குரம்பை அடுத்துக் குடிபுக்க
ஆவிவெங் கூற்றுக்கிட்ட வரம்பை அடுத்து மறுகும்அப்
போதுவளைக்கை அமைத்(து) அரம்பை அடுத்து அரிவையர்
சூழவந்(து) அஞ்சல்என்பாய் நரம்பை அடுத்த இசைவடி
வாய்நின்ற நாயகியே.
நாயகி நான்முகி நாரா
யணிகை நளினபஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி
சாமளை சாதிநச்சு
, வாயகி மாலினி வராகி
சூலினி மாதங்கிஎன்
றாயகி யாதி உடையாள்
சரணம் அரண்நமக்கே.
47
48
49
50
54

அரணம் பொருள்என்று அருள்ஒன் றிலாத அசுரர்தங்கள் முரண்அன்(று) அழிய முனிந்தபெம் மானும் முகுந்தனுமே சரணம் சரணம் எனநின்ற நாயகி தன்னடியார் மரணம் பிறவி இரண்டும் எய்
தார் இந்த வையகத்தே.
வையம் துரகம் மதகரி
மாமகு டம்சிவிகை பெய்யும் கனகம் பெருவிலை
ஆரம் பிறைமுடித்த ஐயம் திருமனை யாள்அடித்
தாமரைக்(கு) அன்புமுன்பு செய்யும் தவம்உடை யார்க்குள
வாகிய சின்னங்களே.
சின்னஞ் சிறிய மருங்கினில்
சாத்திய செய்யப்பட்டும் பென்னம் பெரிய முலையும்முத்
தாரமும் பிச்சிமொய்த்த கன்னங் கரிய குழலும்கண்
மூன்றும் கருத்தில்வைத்துத் தன்னந் தனியிருப் பார்க்கிது
போலும் தவமில்லையே.
இல்லாமை சொல்லி ஒருவர்தம்
பால்சென்(று) இழிவுபட்டு நில்லாமை நெஞ்சில் நினைகுவி
ரேல்நித்தம் நீடுதவம் கலலாமை கறற கயவாதம பால்ஒரு காலத்திலும் செல்லாமை வைத்த திரிபுரை
பாதங்கள் சேர்மின்களே.
51
གདའ།
52
53
54
55

Page 30
மின்னா யிரம்ஒரு மெய்வடி
வாகி விளங்குகின்ற தன்னாள் அகமகிழ் ஆனந்த
வல்லி அருமறைக்கு முன்னாய் நடுவெங்கு மாய்முடி
வாய முதல்விதன்னை உன்னா(து) ஒழியினும் உன்னினும்
வேண்டுவ(து) ஒன்றிலையே.
ஒன்றாய் அரும்பிப் பலவாய்
விரிந்(து)இவ் வுலகெங்குமாய் நின்றாய் அனைத்தையும் நீங்கிநிற் பாள்என்றன் நெஞ்சினுள்ளே பொன்றாது நின்று புரிகின்ற
வாஇப் பொருள்அறிவார் அன்றா லிலையில் துயின்றபெம்
மானும்என் ஐயனுமே.
ஐயன் அளந்த படியிரு
நாழிகொண்டு) அண்டம்எல்லாம்
உய்ய அறம்செயும் உன்னையும்
போற்றி ஒருவர்தம்பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலை
யுங்கொண்டு சென்றுபொய்யும்
மெய்யும் இயம்பவைத் தாய்இது வோஉன்றன் மெய்யருளே.
அருணாம் புயத்தும் என்சித்தாம் புயத்தும் அமர்ந்திருக்கும் தருணாம் புயமுலைத் தையல்நல்
லாள்தகை நேர்நயனக் கருணாம் புயமும் வதனாம் புயமும் காரம்புயமும் சரணாம் புயமும்அல் லாற்கண்டி
லேன்ஒரு தஞ்சமுமே.
55
56
57.
58
གནའ་
56

p
தஞ்சம் பிறிதில்லை ஈதல்ல
தென்றுன் தவநெறிக்கே நெஞ்சம் பயில நினைக்கின்றி
லேன்ஒன்றை நீள்சிலையும் அஞ்சம்பும் இக்கு) அலர் ஆகநின் றாய்அறி யார்எனினும் பஞ்சஞ்சும் மெல்லடி யார்அடி
யார்பெற்ற பாலரையே.
பாலினும் சொல்இனி யாய்பணி
மாமலர்ப் பாதம்வைக்க மாலினும் தேவர் வணங்கநின்
றோன்கொன்றை வார்சடையின் மேலினும் கீழ்நின்று வேதங்கள்
பாடும்மெய்ப் பீடம்ஒரு நாலினும் சாலநன் றோஅடி
யேன்முடை நாய்த்தலையே.
நாயே னையும்இங்(கு) ஒருபொரு
ளாக நயந்துவந்து நீயே நினைவின்றி ஆண்டுகொண்
டாய்நின்னை உள்ளவண்ணம் பேயேன் அறியும் அறிவுதந்
தாய்என்ன பேறுபெற்றறேன் தாயே மலைமக ளேசெங்கண் மால்திருத் தங்கச்சியே.
தங்கச் சிலைகொண்டு தானவர்
முப்புரம் சாய்த்துமத வெங்கண் கரியுரி போர்த்தசெஞ்
சேவகன் மெய்யடையக் கொங்கைக் குரும்பைக் குறிப்பிட்ட
நாயகி கோகனகச் செங்கைக் கரும்பும் அலரும்எப்
போதும்என் சிந்தையதே.
61
59
60
62
57

Page 31
தேறும் படிசில ஏதுவும்
காட்டிமுன் செல்கதிக்குக் கூறும் பொருள்குன் றில்கொட்டும்
தறிக்குறிக் கும்சமயம் ஆறும் தலைவி இவளாய்
இருப்ப(து) அறிந்திருந்தும் வேறும் சமயம்உண் டென்றுகொண்
டாடிய வீணருக்கே.
வீணே பலிகவர் தெய்வங்கள் பாற்சென்று மிக்கஅன்பு பூணேன் உனக்(கு) அன்பு பூண்டுகொண்
டேன்நின் புகழ்ச்சியன்றிப் பேணேன் ஒரு பொழு தும்திரு
மேனிப்ர காசமன்றிக் காணேன் இருநில மும்திசை
நான்கும் ககனமுமே.
ககனமும் வானும் புவனமும்
காணவிற் காமன்அங்கம் தகனமுன் செய்த தவப்பெரு
மாற்குத் தடக்கையும்செம் முகனுமந் நான்கிரு மூன்றெனத்
தோன்றிய மூதறிவின் மகனுமுண் டாயதன் றோவல்லி நீசெய்த வல்லபமே.
வல்லபம் ஒன்றறி யேன்சிறி யேன்நின் மலரடிசெம் பல்லவம் அல்லது பற்றொன்றி
லேன்பசும் பொற்பொருப்பு வில்லவர் தம்முடன் வீற்றிருப்
பாய்வினை யேன்தொடுத்த சொல்அவ மாயினும் நின்திரு நாமங்கள் தோத்திரமே.
63
64
65
66
58

தோத்திரம் செய்து தொழுதுமின்
போலும்நின் தோற்றம்ஒரு மாத்திரைப் போதும் மனத்தில்வை
யாதவர் வண்மைகுலம் கோத்திரம் கல்வி குணம்குன்றி
நாளும் குடில்கள் தொறும் பாத்திரம் கொண்டு பலிக்குழ
லாநிற்பர் பாரெங்குமே.
பாரும் புனலும் கனலும்வெங்
காலும் படர்விசும்பும் ஊரும் முருகு சுவையொளி
யூறொலி ஒன்றுபடச் சேரும் தலைவி சிவகாம
சுந்தரி சீரடிக்கே சாரும் தவமுடை யார்படை யாத தனமில்லையே.
தனந்தரும் கல்வி தரும்ஒரு
நாளும் தளர்வறியா மனந்தரும் தெய்வ வடிவுந்
தரும்நெஞ்சில் வஞ்சமில்லா இனந்தரும் நல்லன எல்லாம்
தரும் அன்பர் என்பவர்க்கே கனந்தரும் பூங்குழ லாள்அபி ராமி கடைக்கண்களே.
கண்களி கும்படி கண்டுகொண்
டேன்கடம் பாடவியல்
பண்களிக் குங்குரல் வீணையும்
கையும் பயோதரமும்
மண்களிக் கும்பச்சை வண்ணமும்
ஆகி மதங்கள்குலப்
பெண்களிற் றோன்றிய எம்பெரு மாட்டிதன் பேரழகே.
A.
میری(.\\ را
59

Page 32
ܥܬ
அழகுக்(கு) ஒருவரும் ஒவ்வாத
வல்லி அருமறைகள் பழகிச் சிவந்த பதாம்புயத் தாய்பணி மாமதியின் குழவித் திருமுடிக் கோமள
யாமளைக் கொம்பிருக்க இழவுற்று நின்றநெஞ் சேயிரங்
கேலுனக்(கு) என்குறையே.
என்குறை தீரநின்(று) ஏத்துகின்
றேன்இனி யான்பிறக்கின் நின்குறை யேஅன்றி யார்குறை
காண்இரு நீள்விசும்பின் மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய் தன்குறை தீரளங் கோன்சடை
மேல்வைத்த தாமரையே.
தாமம் கடம்பு படைபஞ்ச
பாணம் தனுக்கரும்பு யாமம் வயிரவர் ஏத்தும்
பொழு(து) எமக் கென்றுவைத்த சேமம் திருவடி செங்கைகள்
நான்(கு) ஒளி செம்மையம்மை நாமம் திரிபுரை ஒன்றோ
டிரண்டு நயனங்களே.
நயனங்கள் மூன்றுடை நாதனும்
வேதமும் நாரணனும் அயனும் பரவும் அபிராம
வல்லி அடியிணையைப் புயன்என்று கொண்டவர் பாவையர் ஆடவும் பாடவும்பொன் சயனம் பொருந்து தமனியக்
காவினில் தங்குவரே.
-མཛའ་
7
72
73
7 ایصی

ჩრუკა y
தங்குவர் கற்பகத் தருவின்
நீழலில் தாயரின்றி மங்குவர் மண்ணில் வழுவாப்
பிறவியை மால்வரையும் பொங்குவர் ஆழியும் ஈரேழ்
புவனமும் பூத்தஉந்திக் கொங்கிவர் பூங்குழ லாள்திரு
மேனி குறித்தவரே.
குறித்தேன் மனத்தில்நின் கோலம்எல்
லால்நின் குறிப்பறிந்து மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி வண்டுகிண்டி வெறித்தேன் அவிழ்கொன்றை வேணிப்
பிரா(ன்)ஒரு கூற்றைமெய்யில் பறித்தே குடிபுகு தும்பஞ்ச
பாண பயிரவியே.
பயிரவி பஞ்சமி பாசாங்
குசைபஞ்ச பாணிவஞ்சர் உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிரும்கலா வயிரவி மண்டலி மாலினி
சூலி வராகியென்றே செயிரவி நான்மறை சேர்திரு
நாமங்கள் செப்புவரே.
செப்பும் கனக கலசமும்
போலும் திருமுலைமேல் அப்பும் களப அபிராம
வல்லி அணிதரளக் கொப்பும் வயிரக் குழையும்
விழியின் கொழுங்கடையும் துப்பும் நிலவும் எழுதிவைத்
தே(ன்)என் துணைவிழிக்கே.
75
76
77
78
མཁའ་རྒྱུ་
\-
6

Page 33
ger
ܥܬ
விழிக்கே அருளுண்டு) அபிராம வல்லிக்கு வேதம்சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சுண்டு)
எமக்(கு)அவ் வழிகிடக்கப் பழிக்கே சுழன்றுவெம் பாவங்க
ளேசெய்து பாழ்நரகக் குழிக்கே அழுந்தும் கயவர்தம்
மோடென்ன கூட்டிலியே.
கூட்டிய வாஎன்னைத் தன்னடி
யாரில் கொடியவினை ஒட்டிய வாஎன்கன் ஓடிய
வாதன்னை உள்ளவண்ணம் காட்டிய வாகண்ட கண்ணும்
மனமும் களிக்கின்றதால் ஆட்டிய வாநடம் ஆடகத்
தாமரை ஆரணங்கே.
அணங்கே அணங்குகள் நின்பரி
வாரங்கள் ஆகையினால் வணங்கேன் ஒருவரை வாழ்த்துகி
லேன்நெஞ்சில் வஞ்சகரோடு) இணங்கேன் என(து)உண்(து) என்றிருப்
பார்சிலர் யாவரொடும் பிணங்கேன் அறிவொன் றிலேன்என்கண்
நீவைத்த பேரளியே.
அளியார் கமலத்தில் ஆரணங் கேஅகி லாண்டமும்நின் ஒளியா நின்ற ஒளிர்திரு
மேனியை உள்ளுந்தொறும் களியாகி அந்தக் கரணங்கள்
விம்மிக் கரைபுரண்டு வெளியாய் விடின்எங்ங் னேமறப்
பேன்நின் விரகினையே.
79
80
81
82
གང་ལ་
-ഭ
ቸ÷ረ* )
62

விரவும் புதுமலர் இட்டுநின்
பாத விரைக்கமலம் இரவும் பகலும் இறைஞ்சவல் லார்இமை யோர்எவரும் பரவும் பதமும் அயிரா
வதமும் பகீரதியும் உரவும் குலிசமும் கற்பகக்
காவும் உடையவரே.
உடையாளை ஒல்கு செம்பட்டு)
உடையாளை ஒளிர்மதிசெஞ் சடையாளை வஞ்சகர் நெஞ்சடை
யாளைத் தயங்குநுண்ணுால் இடையாளை எங்கள்பெம் மானிடை யாளைஇங்(கு) என்னைஇனிப் படையாளை உங்களை யும்படை
யாவண்ணம் பார்த்திருமே.
பார்க்கும் திசைதொறும் பாசாங்
குசமும் பணிச்சிறை வண்டு) ஆர்க்கும் புதுமலர் ஐந்தும்
கரும்பும்என் அல்லல்எல்லாம் தீர்க்கும் திரிபுரை யாள்திரு
மேனியும் சிற்றிடையும் வார்க்குங் குமமுலை யும்முலை
போலும் பணிமொழியே.
நின்திரு மூர்த்தினன்றன் விழிக்கும் வினைக்கும் வெளிநின்ற தால்விழி யால்மதனை அழிக்கும் தலைவர் அழியா
விரதத்தை அண்டமெல்லாம் பழிக்கும் படியொரு பாகம்கொண் டாளும் பராபரையே.
གང་ལ་
83
84
86
لوگئے۔ ”
63

Page 34
臀
- حت
ܝܡܬ
பரமென்று உனையடைந் தேன்தமி
யேனும்உன் பத்தருக்குள் தரமென்று இவன்என்று தள்ளத் தகாது தரியலர்தம் புரம்அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய போதில் அயன் சிரம்ஒன்று செற்றகை யான்இடப் பாகம் சிறந்தவளே.
சிறக்கும் கமலத் திருவேநின்
சேவடி சென்வைக்கத்
துறக்கம் தரும்நின் துணைவரும்
நீயும் துரியம்அற்ற
உறக்கம் தரவந்(து) உடம்போ(டு)
உயிர்உற வற்றறிவு மறக்கும் பொழுதென்முன் னேவரல் வேண்டும் வருந்தியுமே.
வருந்தா வகைஎன் மனத்தா
மரையினில் வந்துபுகுந்(து) இருந்தாள் பழைய இருப்பிட
மாக இனிஎனக்குப் பொருந்தா தொருபொருள் இல்லைவிண்
மேவும் புலவருக்கு விருந்தாக வேலை மருந்தா
னதைநல்கும் மெல்லியலே.
மெல்லிய நுண்ணிடை மின்அனை
யாளை விரிசடையோன் புல்லிய மென்முலை பொன்அனை
யாளைப் புகழ்ந்துமறை சொல்லிய வண்ணம் தொழும்அடி
யாரைத் தொழுமவர்க்குப் பல்லியம் ஆர்த்தெழ வெண்பக(டு)
ஊரும் பதம்தருமே.
མཛའ་
88
89
90
64

பதத்தே உருகிநின் பாதத்தி
லேமனம் பற்றிஉன்றன் இதத்தே ஒழுக அடிமைகொண்
டாய்இனி யான்ஒருவர் மதத்தே மதிமயங் கேன்அவர்
போன வழியும் செல்லேன் முதத்தேவர் மூவரும் யாவரும்
போற்றும் முகிழ் நகையே.
நகையே இ.திந்த ஞாலமெல்
லாம்பெற்ற நாயகிக்கு முகையே முகிழ்முலை மானே
முதுகண் முடிவில் அந்த வகையே பிறவியும் வம்பே
மலைகள் என்பதுநாம் மிகையே இவள்தன் தகைமையை
நாடி விரும்புவதே.
விரும்பித் தொழும்அடி யார்விழி
நீர்மல்கி மெய்புளகம் அரும்பித் ததும்பிய ஆனந்த
மாகி அறிவிழந்து சுரும்பிற் களித்து மொழிதடு
மாறிமுன் சொன்னதெல்லாம் தரும்பித்தர் ஆவரென் றால்அபி ராமி சமயம்நன்றே.
நன்றே வருகினும் தீதே |
விளைகினும் நான்அறிவ(து) ஒன்றேயு மில்லை உனக்கே
பரம்எனச்(கு) உள்ளம்எல்லாம் அன்றே உனதென்(று) அளித்துவிட்
டேன்அழி யாதகுணக் குன்றே அருட்கட லேஇம
வான்பெற்ற கோமளமே.
92
93
94
بھیص’’
65

Page 35
ܥܬ
கோமள வல்லியை அல்லியந்
தாமரைக் கோயில்வைகும் யாமள வல்லியை ஏதம்
இலாளை எழுதரிய சாமள மேனிச் சகலக
லாமயில் தன்னைத்தம்மால் ஆமள வும்தொழு வார்எழு
பாருக்கும் ஆதிபரே.
ஆதித்தன் அம்புலி அங்கி
குபேரன் அமரர்தங்கோன்
போதிற் பிரமன் புராரி
முராரி பொதியமுனி
காதிப் பொருபடைக் கந்தன்
கணபதி காமன்முதல் சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே.
தைவந்த நின்னடித் தாமரை
சூடிய சங்கரர்க்குக்
கைவந்த தீயும் தலைவந்த
ஆறும் கரந்ததெங்கே மெய்வந்த நெஞ்சின்அல் லால்ஒரு
காலும் விரகர்தங்கள் பொய்வந்த நெஞ்சில் புகஅறி
uJTLDLü 14Él(35u136).
குயிலாய் இருக்கும் கடம்பா
டவியிடைக் கோலஇயல்
மயிலாய் இருக்கும் இமயா
சலத்திடை வந்துதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில் لايو
கமலத்தின் மீதன்னமாம் கயிலா யாருக்(கு) அன்(று) இமவான் அளித்த கணங்குழையே.
96
97
98
99
66

குழையைத் தழுவிய கொன்றையந்
தார்கமழ் கொங்கைவல்லி கழையைப் பொருத திருநெடுந் தோளும் கருப்புவில்லும் விழையப் பொருதிறல் வேரியம்
பாணமும் வெண்ணகையும் உழையைப் பொருகண்ணும் நெஞ்சில்எப்
போதும் உதிக்கின்றவே.
நூல் பயன்
ஆத்தாளை எங்கள் அபிராம
வல்லியை அண்டம்எல்லாம் பூத்தாளை மாதுளம் பூநிறத் தாளைப் புவிஅடங்கக் காத்தாளை ஜங்கணை பாசாங்
குசமும் கரும்பும்அங்கை சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழு
வார்க்(கு) ஒரு தீங்கில்லையே.
100
གསལ་
67

Page 36


Page 37
திரு.கண்ணன் அவள்
|Gill. --i உறவினர்கள்
தொடக்க
இறுதிக்
5.I.T.T.
| IEll:
| Lill
i L[LL
TInfTIFF, i LLO இருந்தும் தொை அனைவருக்
வணக்க
வவுனியாவில் இ
ஆறுதல்
骷|
38, fascull" (ETE கொழும்பு - 4.
Atha FET PITri
 

களின் மரணச்செய்தி கேட்டவுடன் பிய நண்பர்கள் அயலவர்கள்,
எல்லோருக்கும் 36.01.1999 ம் 30.01.1999 அவரது கிரியை நடைபெற்றது
ஒன்றாக இருந்து
il):ELLUMIL: L3)
உதவிகள் 1 அன்பர்களுக்கும் லுேம் அதன் நடைபெற்ற கிலும் பங்கு கொண்டு, உதவிய 1ச்செய்தி கேட்டு பல இடங்களில் எப்பேசி மூலம் ஆறுதல் கூறிய கும் எமது நன்றி கலந்த கங்கள் உரித்தாகுக.
ருந்து வந்து கலந்து கொண்டு கூறிய அனைவருக்கும் மது நன்றிகள்
இப்படிக்கு
ரு .טה
கண்னன் குடும்பத்தினர்
Inter, 39 Mi|| Road, Waw Luniya.