கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நினைவு மலர் (வேலாயுதம் சிவசுந்தரம்)

Page 1
அI
திரு. வேலாயுத
9IG) sid
சிவபதப்பேறு குறித்
நினைவு
20.12.
 

ம் சிவசுந்தரம் 5ளின்
து வெளியிடப்பட்ட வு மலர்
2008

Page 2

யாழ். வடமராட்சி ஆத்தியடியைப் பிற ப்பிடமாகக் கொண்ட 9IOTf திரு. வேலாயுதம் சிவசுந்தரம் அவர்களின் சிவபதப்பேறு குறித்து வெளியிடப்பட்ட நினைவு மலர்
20.12.2008

Page 3

ஓம் த்ரியம்பகம் பஜா மஹே ஸசகந்திம் புஸ்டி வர்த்தனம் உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முகூர்ய மாம்ருதாத் ஓம் சாந்தி சாந்தி சாந்தி

Page 4

' \ો(ક RŠ
சமர்ப்பணம்
அரவணைப்போடு நேசமும் கொண்டு ஆதரவோடு அறிவும் தந்து திறம்பட கடமைகள் புரிந்து அன்போடு பண்பும் உணர்த்தி அகமதில் ஆழப் பதிந்திட்ட எம் அன்புத்தந்தையின் பாதக்கமலங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்.
இங்ங்ணம் மனைவி, மகள்
ܡܸܬܬܵܐ ÀDIQ

Page 5

ܥܼܐ
-
ട}ഗ്ഗി~ కా
深3
郡 அமரர். உயர்திரு.
வேலாயுதம் சிவசுந்தரம் அவர்கள்
வாழ்க்கை வரலாறு
யாழ். வடமராட்சி ஆத்தியடியில் உயர்சைவவேளாளர் குலத்துதித்த வேலாயுதம் (சங்கரநாதன்) மனோன்மணி தம் பதியினரின் ஏக புதல்வனாகவும், மங்கையற்கரசி, தனலக்சுமி எனும் இருவருக்கு சகோதரனாகவும் 1947 ம் ஆண்டு மார்கழி மாதம் 12 ம் நாள் சிவசுந்தரம் இப்பூவுலகில் உதித்தார்.
சிறு வயது முதற்கொண்டு கல்விகேள்விகளில் மட்டுமன்றி விளையாட்டுத் துறையிலும் சிறந்து விளங்கினார். தனது ஆரம்ப கல்வியை யாழ்ப்பாணம் தம்பசிட்டி மெ.மி.த.க பாடசாலையிலும் பின்னர் யா/ஹாட்லிக் கல்லூரியிலும் பயின்றார். பாடசாலையில் சிறந்த மாணவ தலைவராகவும், கால்பந்தாட்ட வீரராகவும், சாரணர் குழுவிலும் அங்கத்துவம் வகித்தார்.
தனது பன்னிரெண்டாவது வயதிலே ஜோதிடத் துறை" யின் மேலே இயல்பான நாட்டம் கொண்டவராய் அவர் சுயமாக கற்க ஆரம்பித்தார். இதன் பயன் இறையருளின் கிருபையால் ஜோதிடத்துறையிலும் சிறந்து விளங்கினார்.
உயர்கல்வியை முடித்துக்கொண்டு தொழில் நிமித்தம் 1966ம் ஆண்டு கொழும்பிற்கு வந்து இலங்கை அச்சகக் கூட்டுத் தாபனத்தில் நியமனம் பெற்று 10 வருடங்கள் கடமையாற்றினார். பின்பு இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையில் (1.D.B. Katubedda) -93.5F3, GSLDGIT67 TITui (Superintendent of Printing) பதவி வகித்தார். 27 வருடகால சேவையின் பின் 12.12.2007ல் ஒய்வுபெற்றார்.
1984ம் ஆண்டு ஆவணி மாதம் 22ம் திகதி முல்லைத்தீவு S கரைச்சிக்குடியிருப்பைச் சேர்ந்த
కె,

Page 6
ട}റ്റ്രി - \ો(ક 魏 கணபதிப்பிள்ளை முருகேசு (தபால் அத்தியட்சகர்) R சிவக்கொழுந்து தம்பதியினரின் ஐந்தாவது புதல்வியும் தற்போது C.W.Mackie PLC 65 5600135T 6TD (Tui (Accountant) Lugoofurfullb லலிதாகுமாரி என்பரை திருமணம் செய்தார்.
மனமொத்த தம்பதியினரின் இனிய இல்லற வாழ்வின் பயனாக சிவலதா என்பவரை ஏக புத்திரியாகப் பெற்று மகிழ்ந்தனர். கல்வியில் சிறந்து விளங்கிய சிவலதா தற்போது Nations Turst Bank American Express Card Centreas o g565 முகாமையாளராக (ASSt.Manager) கடமையாற்றுகிறார்.
தனது ஒய்வு காலத்தினிலே, Shiva Astro Vision என்னும் ஜோதிட நிலையத்தினை ஸ்தாபித்து, ஜோதிடத்துறையிலே மென்மேலும் விருத்தியடைய வேண்டுமென்ற அவாவுடனும், சேவை மனப்பாங்குடனும் தொழில் புரிந்து வந்தார்.
சிறந்த ஆன்மிகவாதியான அமரர் சிவசுந்தரம் அவர்கள் நித்தம் கோவிலுக்குச் சென்று வழிபடுவதை வழமையாக கொண்டிருந்தார். அத்துடன் அவதார புருஷனான பகவான் பூரீ சத்யசாயி பாபாவின் தீவிர பக்தனுமாவார்.
இல்லறத்திலும் ஆன்மீகத்திலும் நிறைவான வாழ்க்கையை அனுபவித்த அமரர் சிவசுந்தரம் அவர்கள் 2008-11-19ம் திகதி அதிகாலை ஸப்தமிதிதியில் பரம்பொருளுடன் ஐக்கியமானார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக.
ஓம் சாந்தி சாந்தி!! சாந்தி!!!
i.
*NYA MK
器

ܠܗ̄
波加
منكم
家
2. சிவமயம்
பஞ்ச புராணத் திரட்டு
திருச்சிற்றம்பலம்
விநாயகர் துதி
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனிநுடங்காது-பூக்கொண்டு துப்பார் திருமேனித்தும்பிக்கை யான்பாதம் தப்பாமற் சார்வார் தமக்கு.
தேவாரம்
சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன் நலந்தீங்கிலுமுன்னை மறந்தறியேன்
உன்நாமம் என்னாவில் மறந்தறியேன் உலர்தார்தலை யிற்பலிகொண்டுழல்வாய்
உடலுள்ளுறு சூலை தவிர்த்தருள்வாய் அலந்தேனடியேனதிகைக் கெடில
வீரட்டானத்துறையம்மானே
திருவாசகம் பால்நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்
பரிந்து நீபாவியேனுடைய ஊனினை உருக்கி உள் ஒளிபெருக்கி உலப்பு இலா ஆனந்தம் ஆய
器
?

Page 7
s
盟吻
۔۔۔۔
ూ
\ો
魏 தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த 愿 செல்வமே சிவபெருமானே 2
யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கு எழுந்தருளுவது இனியே
திருவிசைப்பா ஒளிவளர் விளக்கே உலப்பிலா வொன்றே
உணர்வு சூழ் கடந்ததோ ருணர்வே தெளிவளர் பளிங்கின் திரன்மணிக் குன்றே
சித்தத்துள் தித்திக்கும் தேனே அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே
அம்பலம் ஆடரங்காக வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே.
திருப்பல்லாண்டு பாலுக்குப் பாலகன் வேண்டி யழுதிடப்
பாற்கடல் ஈந்த பிரான் மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்
மன்னிய தில்லை தன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்றதில்லைச்
சிற்றம்பலமே இடமாகப் பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
திருப்புராணம் இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டுகின்றார் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல்
உன்னைஎன்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி அறவா நீஆடும் போதுன் அடியின் கீழ் இருக்க என்றார்.
墓 -قلع Sy 1్య

雷· *\{ திருப்புகழ் பத்தியால் யானுனைப் பலகாலும் பற்றியே மாதிருப்புகழ்பாடி முத்தனா மாறெனைப் பெருவாழ்வின் முத்தியே சேர்வதற்
கருள்வாயே உத்தமாதானசற் குணநேயா ஒப்பிலா மாமணிக் கிரிவாசா வித்தகா ஞானசத் திணிபாதா வெற்றிவேலாயுதப் பெருமாளே.
கந்தரனுபூதி உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
வாழ்த்து வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசுசெய்க குறைவிலாதுயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்விமல்க மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
திருச்சிற்றம்பலம்
ܘܬ݀ 

Page 8
ܠܗ
s
s சிவமயம்
இரங்கற் பாக்கள்
வருநாள் வரும்வரை வாழ்ந்திசன் பொன்னடி சேர்ந்தனனே
வள்ளுவம் கூறிடும் வாழ்வின் அறம்பல வாழ்க்கைமுற்றும் எள்ளளவும்வழு வாது நடந்தவன் ஏழைகட்கு அள்ளிக் கொடுத்தவன் ஆத்தியடியினில் அன்பருள்ளம் கொள்ளை கொள் பண்பன் சிவசுந்தரம் கைலை கண்டனனே
முல்லையிற் பூத்த புதுமலர் லலிதகுமாரிதனை இல்லத்தரசியாய் கைப்பிடித்தேயின்ப வாழ்வு கண்டு சொல்லில் அடங்கிடாப் பேரெழிற் கண்மணிச் செல்வத்தினை கல்லு முருகக் கதறிட விட்டுவிண் கண்டனனே
இருபானேழ் ஆண்டரசாங்கப் பணியில் அமர்ந்தவரின் பெருமதிப்பைப்பெற்று ஒய்வுடன் கைவந்த சோதிடத்தில் வருவாய் கருதாது மக்களுக்குப்பெரும் சேவை செய்து வருநாள் வரும்வரை வாழ்ந்தீசன் பொன்னடி சேர்ந்தனனே.
வேறு
கற்றறிந்த மனைவி கண்ணில் காட்டாறு ஊற்றெடுக்க பெற்றமகள் கண்களிலே பெருமழையே கொட்டிநிற்க உற்றவர்கள் ஊரவர்கள் உருகிவெம்பித் தேம்பியழ நற்றவத்துச் சிவசுந்தரம் நாதனடி சேர்ந்தனனே.
ஆசைக்கோர் மகளென்று ஆனைமுகன் தந்த செல்வம் வாசமலர் சிவலதா வாய்குழறி ஒலமிட்ட ஒசைவான் முகட்டைத்தொட்டு வானவரும் நெஞ்சுருகி
i பாசக்கயிற் றெமனை பாவியென்றேசினரே.

影
ਬੰਦ
ar Α *VKA.
அன்புடையார் ஆற்றாது அழுத கண்ணிர்
அன்பு மனைவி
என்னை நீகைப்பிடித்த நாள்முதலாய் என்னுயிரே
என்குல தெய்வத்தையே ஆலயத்தில் காணேன்உன் புன்னகையில் பூமுகத்தில் புரிந்துணர்வில் பேச்சழகில்
புருடத்துவத்தில் பொலிந்தசெழும் தோழழகில் தன்னலமில்லா சேவைதனில் சாயாத நீதிதனில்
தலைநிமிர்ந்த நடையழகில் கண்டேன் அன்பே இன்று நீஎன்னைவிட்டுத் தேவுலகில் கண்டதென்ன
இருட்டினிலே உனைத்தேடி ஒலமிட்டுக்குளறுகின்றேன்.
அன்பு மலையினிலே இருவருமே ஏறுங்கால்
இன்பச் சிகரத்தை எட்டுகின்ற வேளைதனில் துன்பப் புயல்வீசி துவண்டுநீவீழ்ந்திடவே
துடித்தேன் உருண்டேன் துயரென்னும் மூச்சு நின்று விழுந்துவிட்டேன் நித்திலமே நீபோன
நெஞ்சதிரும் செய்தியினை நினைக்க என்னுயிரே உன்னிடத்தில் வருவதுபோல் உணருகிறேன் தெய்வமே
உன்னருமைச் செல்வமகள் கண்மணிக்காய்வாழ்கின்றேன்
தனிமகள் லதா (கண்மணி)
முன்னுக்கு வந்த முத்து முழுமதியென்றென்னை முத்தாட்டிக் கனிமழலை கேட்டு மகிழ்ந்து அன்புத்தேன் அமுதூட்டி தூக்கி வளர்த்து
ஆளாக்கிப் பள்ளிக்குச் செல்ல வைத்து கன்னிப் பருவத்தில் உயர்கல்வி கற்க வைத்து
கணிப்புயர்ந்த சேவையிலே பணிபுரியக்கண்டாய் என்வாழ்வின் சிறப்புகளை காண முன்னம்
எமன் கண்ணில் பட்டு விட்டாய் இனி எனக்கேன் வாழ்வு
ട്

Page 9
s9QAl2Vi
س
i.
வண்ண மடிமீது எனைப்படுத்தி
வான்மதியே தேனமுதே என்று பாடி கண்ணுறங்க வைத்தவப்பா கைமாறாக
காலன்செய்சூட்சியினால் உன்னையின்று என் மடியில் உறங்கவைத்து மயக்கி உந்தன்
இன்னுயிரைக் கவர்வதற்குக் காலாய் நின்றேன் இன்னுமிந்த உலகத்தில் வாழ்கின்றேனே
இரக்கமற்ற கொடியவளாய் ஆனேன் அப்பா
சகோதரிகள்
பொன் வயிற்றில் பிறந்த மூன்று நித்திலங்கள் என்றெம்மை
போற்றிப் புகழ்ந்திடவே வாழ்ந்தோ மண்ணா உன் கண்ணில் நீர் வழிந்தால் எம்நெஞ்சில் ரத்தம்
ஊற்றாக பாயுமண்ணா உடல்மூன்று உயிரொன்று என்று சொல்ல வாழ்ந்த எமை விதி வந்து பிரித்ததுவோ உடலால் பிரிந்தாலும் நினைவில் நீவாழ்கின்றாய் எம்மாவிபோகும் வரை எம்முடன் நீவாழ்கின்ற
உணர்வுடனே வாழ்வோம் அடைகநிசாந்தி
சுற்றத்தார் - நண்பர்கள்
சுற்றத்தின் மூத்தோரைக் கணஞ்செய் பாங்கும்
சுகதுக்க வேளைகளில் பங்கு பற்றி பற்றுடனே உணவுண்டு பாசம் கொட்டும்
பக்குவமும் இனத்தோடு கூடி வாழும் நற்குணமும் நண்பர்களோடளவளாவி
நாகரிகமாய் நடக்கும் நல்ல போக்கும் வற்றாத வாஞ்சையுடன் ஊரா ரோடு
வாழ்ந்த சிவ சுந்தரத்தைக் காண்பதெப்போ
དབྱེ་

艷
写
தேற்றம்
எதைநாம் கொண்டு வந்தோம் இழப்பதற்கு
எதைநாம் இழந்தோம் அழுவதற்கு இதையே பூரீபரந்தாமன் பார்த்தனுக்கு
எடுத்துரைத்தார் அவன்தடு மாற்றம் தீர கதையல்ல இதுவுண்மை சிவசுந்தரனார்
கடவுள் சொத்து உடையவனே எடுத்துக் கொண்டான் பதைபதைத்து அழவேண்டாம் நமக்கும் அப்படியே
படி மீது கடமை செய்வோம் அந்நாள் வரைக்கும்
གྷི་
ஆக்கம் யதார்த்தன்

Page 10
弓公
ஏன் பிரிந்திர் எம்மை விட்டு
சுந்தர முகத்தழகன், சிரித்த முகவழகன் சுகமான கனவுகளை சுமந்தவன் எங்கே சங்கரி மாமாவின் தவப்புதல்வன் அவன் சங்கடங்களை வெல்ல வழிசொன்னவன் எங்கே
அவசரமென்ன வந்தது உங்களுக்கு அந்தரிக்க விட்டுப்போக மனம் எப்படி துணிந்தது அவதார சோதிடர் நீங்கள் - அவனியில் அன்பே வடிவான மென்னுள்ளம் நீங்கள்
காலம் எப்படியென்று கேட்பேனே அத்தான் கவலைப்படாதே காலம் வெளிக்கும் என்பீர்களே எதிர்காலம் கூறும் உங்களுக்கா - காலன் எதிரில் வருவது தெரியவில்லை - அல்ல காவலை மீறி கட்டவிழ்த்து விட்டான் - உம்மை கண்டவுடன் காலன் இணைத்துவிட்டான்
லலிதமான பெண்ணை கரம் பிடித்தவன் என்பீர்கள் இல்லறத்தை கனவாக்கிப் போகலாமா லதா தான் என் இலட்சியம் என்பீர்கள் இலட்சிய வெற்றியைப் பார்க்காமல் போகலாமா
இறுதிக்காலம் அணுகியதை அறிந்தா இறுமாப்புடன் தாயகம் சென்றீர்கள் மங்கை தனத்துடன் மனம் விட்டுப் பேசி பாசமுள்ள மாமனாய் மருகருடன் இருந்தீர்கள்
என்ன கொடுமையிது இறைவா வையகத்தில் ஏது விடை உங்கள் பிரிவின் கொடுமைக்கு தாங்கொணா வேதனையிது தவிக்கின்றோம் நாமெல்லாம் தங்கள் ஆத்மா சாந்தியடைய ஆத்தியடியானை
பிரார்த்திக்கிறோம்.
ராஜரட்ணம் குகநாயகி, தேவகி ஜெயாகரன்
56
宗s sa ar (S=
マー

14 JUSTICE S. ANANDACOOMARASWAMY
L.L. M. (COLOMBO - SRI LANKA) JUDGE OF THE SUPREME COURT (Rtd).
sage\ 5- الخليج &
al
154/3, W.A.SILVA MAWATHA, COLOMBO - 6, SRI LANKA,
MR. VELAUTHAM SIVASUNDARAM
It is with profound Sorrow that I pen these few words about my beloved nephew Mr. Velautham Sivasundaram, whose grandfather and my father were brothers and who passed away Suddenly in the early hours of the morning of 19.11.2008, about three weeks before his 61st birthday.
Although a close relative of mine, I left our village of Arthiady when he was 2 years old, for the purpose of education and employment and since then I met him very rarely when I happened to go to my native place or in Colombo where he was employed. It is only after came permanently to Colombo in the year 1988, we moved very closely and from 1996 still more closely when he resided close to my residence.
He led a very systematic, methodical and well disciplined life. A teetotaller, non Smoker with Sober habits, he led a very clean life.
He never changed his routine of life. When he was employed he leaves home early and Comes in the evening. After retirement he goes every morning to the temple. On the fateful day too he left for the temple and came home with little uneasiness. He did not tell anybody till the evening of 18.11.2OO8 but even then we were not informed as he did not want to disturb us. Even when his uneasiness became worse by 11 p.m. too, he did not call for help but by 1.00 am it became worse and then only we rushed him to hospital but Rhe expired as he was about to enter the car. This great gentle- É
క్వే, [21(ଵି

Page 11
VINØ* کTری( 29 man with utmost consideration for others, did not trouble
anybody even when he was in danger of his life. Such was his mental state throughout his life. He did not trouble anybody for his matters and preferred to live all by himself.
He is a Sai Baba devotee. He goes for the prayers every Sunday evening at 4 o clock to Saiva Mangayar Kalaham at Rudra Mawatha. This he never forgets or avoids whether it be storm, thunder or rain. In fact he was planning to go to India to see Sai Baba, but before his plans became a reality he passed away.
His hobby was astrology and numerology but alas he did not tell us what was in store for him. He took life easily. He always said that for some reason or other we are born and we must live happily and contended and pass away when time Comes. He took pleasure in the well being of others.
Both his parents died in the same way he died and his source of strength was his beloved wife and his consolation was his only daughter, both of whom are profitably employed. He led a very successful and contended life and did help to many, more so to me and his loss is an irreparable loss to me and my family quite apart from the great loss his family has Suffered at his Comparative young age - a vacuum that Cannot be filled.
May his Soul rest in peace.
S. Anandacoomaraswamy


Page 12
(ક ' " الخليج 2 போன்றவற்றை அவற்றின் தருணங்களிற்கேற்ப ஒருவரின் y
ஜாதகம் பிரதிபலிக்க வல்லது. a.
அதே வேளை அப்பா அவற்றின் எல்லைகளையும் நன்கு உணர்ந்து அதற்கேற்பவே எதிர்வுகூறல்களை மேற்கொள்வார். உதாரணத்திற்கு ஒரு திருமணப்பொருத்தத்தில் எப்பேற்பட்ட பொருத்தம் இருப்பினும் மனப்பொருத்தம் இன்றேல் அப்பொருத்தம் பலனற்றதே என்பார்.
அவருக்கு தெரிந்த கலையின் அரிச்சுவடியினை நான்
பெறமுடிந்தது மகிழ்ச்சியேயாயினும் அவர் விருப்பப்படி அவரிடம் பயின்று பிரகாசிக்க முடியாது போனமை என் துரதிர்ஷ்டமாகும்.
இத்துடன் ஜோதிடம் சம்பந்தமான சில பொது விடயங்களை (பொதுப் பலன்களை) உங்கள் கண்ணோட்டத்திற்காக இணைத்துள்ளோம். படிக்க, ரசிக்க.
இப்படிக்கு சிவலதா (அன்பு மகள்)
ਬੋਰ - [2ଏତିଷି

s
கிழமைகளில் பிறந்த பலன்
ஞாயிற்றுக் கிழமையில் பிறந்தவன், செல்வம் உடையவனாய் இருப்பான். திங்கட்கிழமையில் பிறந்தவன், புகழ் உடையவனாய் இருப்பான். செவ்வாய்க்கிழமை பிறந்தவன், தந்திரக்காரனாய் இருப்பான். புதன் கிழமை பிறந்தவன், கல்வி உடையவனாய் இருப்பான். வியாழக்கிழமை பிறந்தவன், அறநெறியில் விருப்பம்
உடையவனாய் இருப்பான்.
வெள்ளிக்கிழமை பிறந்தவன், உயர்ந்த காரியங்களைச் செய்பவனாய் இருப்பான்
சனிக்கிழமை பிறந்தவன், பிறரை ஏமாற்றுவதில் திறமைசாலியாக இருப்பான்.
காலத்தில் பிறந்த பலன்
(ஒருநாளில் ஆறு காலம். விடியற் காலம், பகற் காலம்,
மத்தியான காலம், பிற்பகல் காலம், அஸ்தமன காலம், இரவு காலம் என ஆறு காலங்கள்: இதை வேளை என்றும் கூறுவர்.)
1. விடியற்காலம்
வெகுமானம் கிடைக்கும். செல்வம் சேரும், பாக்கியசாலி,
எல்லோரும் பிரியமாக இருப்பார்கள்.
2. பகற்காலம்
பலரைக் காப்பாற்றக் கூடியவர், பலரும் அன்பாக
இருப்பார்கள்.
کےKN
ഗ്ഗീ
ー
a
R
དཔོའི་

Page 13
2
(ક ۔۔۔۔ " الخليج 3. 盛
மத்தியான காலம்
அரசாங்க ஆதரவு பெறுபவர், பலருடைய நேசம்
உடையவர், செல்வம் இருக்கும், கடன் சுமை இல்லாதவர்.
4. பிற்பகல் காலம்
சம்பாதிக்கக் கூடியவர், உழைப்பால் ஊதியம் பெறக்
கூடியவா.
5. அஸ்தமனக் காலம்
வறுமையில் வாடுபவர், அவமானம் நேரக்கூடும்.
6. இரவுக் காலம்
அடக்கமானவர், ஆசாரங்களை கடைப்பிடிக்காதவர், புத்திரப்பேறு இல்லாதவர்.
நட்சத்திரங்களில் பிறந்த பலன்
ஒருவன் பிறந்த நேரத்துக்குத் தக்கபடி, அவனுடைய குணங்கள் அமைத்திருக்கும் என்பது ஜோதிடசாத்திரத்தின் ஒர் அடிப்படைத் தத்துவம்.
அந்த முறைப்படி, 9 அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவன் எந்தக் காரியத்தையும்
செம்மையாகச் செய்து முடிப்பான். * பரணி நட்சத்திரத்தில் பிறந்தவன்தன் பெற்றோருக்கு நல்ல
பிள்ளையாக நடப்பான். * கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவன் சாதுர்யமான
பேச்சுத் திறமையைப் பெற்று இருப்பான். 9 ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவன் பிறருக்கு உதவி
செய்வதில் விருப்பம் உடையவனாக இருப்பான். 9 மிருகசீர்ஷ நட்சத்திரத்தில் பிறந்தவன் எப்போதும்
சுறுசுறுப்பு உடையவனாய் இருப்பான்.
CáÎ( ہےاWھSہ
S
SS
a.

९ - *\\ ിട്ട* کرے (N مح۔ح選表 * N محصے۔ 2 9 திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவன் எதிலும் $ கண்ணியம் வாய்ந்தவனாக இருப்பான். a.
• பூச நட்சத்திரத்தில் பிறந்தவன் பகைவருக்குப் பயப்படமாட்டான். * புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவன் வக்கீல்களைப் போல
வல்லவனாய் இருப்பான். * ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவன் பகைவருக்குப்
பயப்படமாட்டான். * மக நட்சத்திரத்தில் பிறந்தவன் சுற்றுப் பயணங்களில்
பிரியம் உள்ளவனாய் இருப்பான். * பூர நட்சத்திரத்தில் பிறந்தவன் கல்வியில் ஆர்வம்
உடையவனாய் இருப்பான். * உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவன் பெண்களிடம் விருப்பம்
உள்ளவனாய் இருப்பான். * ஹஸ்த நட்சத்திரத்தல் பிறந்தவன் குருவினிடத்தில் பக்தி
உள்ளவனாய் இருப்பான்.
• சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவன் சிறிது முன் கோபக்காரனாய் இருப்பான். * சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவன் உணவில் பிரியம்
உள்ளவனாய் இருப்பான். * விசாக நட்சத்திரத்தில் பிறந்தவன் நல்ல நீதிமானாக
விளங்குவான். 9 அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவன் புகழைத் தேடிக்
கொள்ள ஆசைப்படுவான். * கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவன் பக்திமானாக
விளங்குவான். * மூல நட்சத்திரத்தில் பிறந்தவன் ஆத்மீகத்துறையில்
முன்னேற்றம் உடையவனாக இருப்பான். * பூராட நட்சத்திரத்தில் பிறந்தவன், தன்னை, அடுத்தவரைக்
காப்பாற்றுவதில் ஆர்வம் உடையவனாய் இருப்பான்.
废宛
ー
i
*YA
Waze.
器

Page 14
(ક برمجہ
உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவன், தன் சுற்றத்தார் நலனில் அக்கறை கொண்டவனாய் இருப்பான். a.
()
* திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவன் எப்போதும்
உற்சாகம் உடையவனாய் இருப்பான்.
* அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவன் தியாகக் குணம்
படைத்தவனாய் இருப்பான்.
* சதய நட்சத்திரத்தில் பிறந்தவன் பொய் பேச
விரும்பமாட்டான்.
* பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவன் பிறர் சொல்
பொறுக்காதவனாய் இருப்பான்.
* உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவன் நல்லவர்களுக்கு நல்லவனாகவும், பொல்லாதவர்களுக்குப் பொல்லாதவ னாகவும் விளங்குவான்.
6 ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவன் பிறர் பேச்சைக்
கேட்பவனாக இருப்பான்.
லக்னத்தில் பிறந்த பலன் சாதகக் குறிப்பில் ஒவ்வொருவருக்கும் ஒரு லக்னம் இருக்கும். இது பிறந்த நேரத்தைக் கொண்டு சோதிடர் கணிப்பதாகும். பன்னிரண்டு லக்னங்கள். இதை வீடு என்றும் கூறுவர்.
1. மேஷம்
கடைக்கண் சிவந்து உருண்டையாக இருக்கும், முழங்கால் வலிமையற்று இருக்கும், சிவப்பான நிறம் உடையவர், சபலபுத்தி உள்ளவரானதால் எந்தக் காரியத்திலும் உறுதி இல்லாதவர், பெண்களிடம் அடங்கிப் போகக்கூடிய இயல்பு உள்ளவர், நிலையான செல்வம் இருக்காது, பிராணிகளை வதை செய்யக்கூடியவர், குறைவாக உண்பவர், ஆறு, குளங்களைக் காணும் போதும் பயம் உண்டாகும், சகோதரர்களிடம்

ŠuS2 * * 2שsy 夏 ஒற்றுமை இல்லாதவர். 7, 10, 20, 22, 25, 28 வயதுகளில் சில நோய்களும் ஆபத்துகளும் உண்டு. ஜாதகத்தில் சுபக்கிரகப் பார்வை இருப்பின், நீண்ட ஆயுள் இருக்கும்.
2. ரிஷபம்
அகன்ற மார்பு, பரந்த முகம், சதைப்பிடிப்புள்ள உடல், சிறிது வெளிரான நிறம் உடையவர். பெண்களுக்குப் பிரியமானவர். பொறுமையானவர். நிலையான நண்பர்களை உடையவர். அதிகமாகச் சாப்பிடக் கூடியவர். பிறர் பொருளை அபகரிக்கக் கூடிய எண்ணம் உள்ளவர். நடுவயதில் சுகபோகம் அனுபவிக்கக் கூடியவர். இவருடைய உறவினர், மனைவி, மக்கள் முதலானோர் இவரிடம் பிரியத் தோடு இருக்கமாட்டார்கள். 5, 16, 19, 20, 27 வயதுகளில் சுரம், கண்டமாலை, நெருப்பு முதலியவற்றால் பயம் உண்டாகும். சுபக்கிரகப் பார்வை இருந்தால் 77 வயதுவரை வாழக்கூடியவர்.
3. மிதுனம்
கண்கள் சிவப்பாகவும், கேசம் சுருண்டும், உடல் உறுப்புகள் அழகாகவும் இருக்கக் கூடியவர், புலமையானவர், இனிமையாகப் பேசக் கூடியவர், யுக்தியோடு கூடிய புத்திசாலித்தனம் உள்ளவர். இங்கிதம், சூது, பரிகாசம் யாவும் அறிந்தவர், காம இச்சை அதிகமானவர். ஆனால் பெண் தன்மையற்ற பெண்களுடனே பெரிதும் சேரக்கூடியவர். தன்னுடைய சுய காரியத்துக்காகப் பிறரை அணுகக் கூடியவர். 3, 5, 8, 18, 28, வயதுகளில் ஆயத பயம், பகைவர் பயம், வாத நோய் முதலியன ஏற்படும். சுபக்கிரகப் பார்வை இருந்தால் 65 வயதுவரை வாழக் கூடியவர்.
4. கடகம்
சோதிடப் புலமையுள்ளவர், நண்பர்களுக்குப் பிரியமானவர், அன்புக்கு இணங்கி நடப்பவர், பெண்களுக்கு அடிமையாகிவிடுவார், உடல் கொழு கொழு என்று இருக்கும், பின்பகுதி பருமனாக காணப்படும். சாதுர்யமாகப் பேசி, தன் 3
\િ_ NF
i

Page 15
T* \ો(કلرشین(N 魏 காரியத்தைச் சாதிக்கக் கூடியவர், வேகமாக நடக்கக் கூடியவர். இருக்கின்ற செல்வம் சிறிது சிறிதாக குறைந்து கொண்டே போகும், இயற்கைக் காட்சிகளை ரசிக்கக் கூடிய தன்மை உண்டு. 6, 16, 20, 25, வயதுகளில் அகால மரணம் நிகழக்கூடும். சுபக்கிரக பார்வை இருக்குமானால் 90 வயது வரை வாழக் கூடியவர்.
5. Φώυρώ
கருமை நிறக் கண்கள், படர்ந்த முகம், வெண் நிறம் உள்ளவர். காரணமின்றி கோபம் கொள்ளக் கூடியவர், பெண்களுக்குப் பகைவர், உறுதியான புத்தியுள்ளவர், கர்வம் உடையவர், வலிமையுடையவர். மலை, காடு ஆகிய இயற்கைகளை ரசிக்கக் கூடியவர், புலால் உணவில் விருப்பம் உள்ளவர், தாயிடம் பக்தியுள்ளவர், தியாக சீலர், அடிக்கடி வயிற்றுவலி ஏற்படக்கூடும். 5, 10, 27, 30 வயதுகளில் நோயுண்டாகி குணமாகும். சுபக்கிரக பார்வை பெற்றால் 80 வயது வரை வாழ்வார்.
6. கன்னி
ஆசாரத்தோடு இருப்பவர், மென்மையான உடல் அமைப்புக் கொண்டவர், இனிமையாகப் பேசுவார், தர்ம சிந்தையுள்ளவர், புத்தி சாதுர்யமானவர், புலமையானவர், சுகபோக ஆசையுள்ளவர், இசை, நாட்டியம் புத்தகங்களில் பிரியம் கொண்டவர். வெளிநாட்டில் வசிக்கக் கூடியவர், பிறருடைய செல்வங்களையும், வீடுகளையும் எப்படியோ பெற்று அனுபவிக்கக் கூடிய யோகமுடையவர்,
5, 10, 18 வயதுகளில் சுரம், வைசூரி, நெருப்புக் காயம் ஏற்படும். சுபக் கிரகபார்வை இருந்தால் 77 வயதுவரை வாழக் கூடியவர்.
7. ΦΙαυτώ
சுத்தமானவர், உடல் வலிமை குறைந்தவர், 勤 உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் உதவி செய்யக் கூடியவர், 2 %)\,\. ശ്യൂട്ട

இரY  ̈ ÑՀԱWe 魏 புத்திசாலித்தனம் உள்ளவர், சபல புத்தியுண்டு, இளவயதில் மகான்களையும், ஆசார சீலர்களையும், பெரியவர்களையும் போற்றி வணங்குபவர், பெண்களால் சூழப்பட்டிருப்பவர், இரண்டு மனைவிகளையுடையவர், பிறர் பொருளை விரும்பாதவர், வியாபார நுட்பம் தெரிந்தவர்.
7, 12, 19, 28, 48 வயதுகளில் ஆபத்து ஏற்படும். சுபக்கிரக பார்வை இருக்குமானால் 85 வயது வரை வாழக்கூடியவர்.
8. விருச்சிகம்
மார்பு, தொடை, முழங்கால்கள், கண்கள் முதலியன பருமனாகவும் திரண்டும் இருக்கும். பொன் போன்ற நிறமுடையவர். பறவைகளைப் போல நகம் உள்ளவர். இளமையில் நோய்வாய்ப்படுவார், எடுத்த காரியத்தை விடாமுயற்சியோடு செய்து முடிக்கக் கூடியவர், விஷமத்தனமான சுபாவம் உள்ளவர், தகாத காரியங்களில் ரகசியமாக ஈடுபடக்கூடியவர், உறவினர்களோ, தாயோ இவரை மதிக்க மாட்டார்கள்.
5, 12, 18, 40 வயதுகளில் சுரம், சன்னி, நெருப்பு ஆகியவற்றால் ஆபத்து உண்டாகலாம். சுபக் கிரக பார்வை பெற்றால் 90 வயது வரை வாழக் கூடியவர்.
9. தனுசு
முகமும் கழுத்தும் நீண்டிருக்கும், கவிபாடும் ஆற்றல் உள்ளவர், சாமர்த்தியமாகப் பேசக்கூடியவர், வீரமான தோற்றம், பற்கள், காதுகள் பருமனாக இருக்கும். ஆயுள் குறுகலாக இருக்கும். கம்பீரமான தோற்றம் பூர்வீகச் செல்வம் இருக்கும், தர்ம சிந்தை, போகத்தை விரும்புவார், சிற்பங்கள், சித்திரங்கள் தயாரிப்பதில் வல்லவர். மத்திய வயதில் வறுமை உண்டாகும்.
12, 15, 32, 40 வயதுகளில் ஆபத்து ஏற்படும். சுபக்கிரகப் பார்வை உண்டானால் 77 வயது வரை வாழ்வார்.
နီs. ୩୪୩ଷି

Page 16
SYØ ལ་
副 10. மகரம்
Α
y
மனைவி மக்களை நேசித்து ஆதரிக்கக்கூடியவர், ஆடம்பரமானவர், இடுப்பு முதலான உறுப்புகள் பலமற்று இருக்கும். ஒரே சிந்தனை உள்ளவர், எல்லோரிடமும் பிரியமாக நடந்து கொள்ளக் கூடியவர், காரியங்களில் சிரத்தை இல்லாதவர், கண்கள் கவர்ச்சியாக இருக்கும், நறுமணப் பிரியர், தர்ம காரியங்களில் ஈடுபடக் கூடியவர்.
10, 32, 37 வயதுகளில் சுரம், கப்பல் பயணம், பாம்புக்கடி முதலியவற்றால் ஆபத்து ஏற்படலாம். சுபக்கிரக பார்வையின் மூலம் 67 வயது வரை வாழலாம்.
1. கும்பம்
பிறர் செல்வத்தையும், பிற பெண்களையும் அடைய எண்ணுபவர், உயரமான தோற்றம் உள்ளவர், ஒட்டகை போன்று கழுத்து நீண்டிருக்கும். வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் மாறி, மாறி வரும். நறுமணப் பிரியர். நண்பர்களிடத்தில் அபிமானம் உடையவர், உடலில் பின்பகுதி, தொடைகள், பருத்து பதிந்து நீண்டிருக்கும், வெகு தூரம் நடந்து செல்லக் கூடியவர். பித்த சரீரம் உள்ளவர், பிறரை நிந்தித்து தன்னையே புகழந்து கொள்ளக் கூடிய குணம் உள்ளவர்.
11, 19 வயதுகளில் ஆபத்து உண்டாகும். சுபக்கிரக பார்வையினால் 80 வயது வரை வாழ்வார்.
12. மீனம்
அழகான தோற்றம் உள்ளவர், நல்ல உடைகளை அணியக் கூடியவர். மூக்கு நீண்டிருக்கும், கருமை நிறம், அழகான கண்கள், புலமை உள்ளவர், பகைவர்களை வெற்றி கொள்பவர். இவரைப் பெண்கள் விரும்புவார்கள். பிறருடைய செல்வத்தைக் கைப்பற்ற முயற்சி செய்வார், மனைவியிடம் நேசமாக இருப்பார், கடலில் உற்பத்தியாகும் பொருள்களை விற்பனை செய்வதில் திறமை உடையவர். செல்வம் சேரும்,
a.
56.
൬(്ട

இரY \ો(ક 2 சமயம் பார்த்து தன்னுடைய காரியத்தை சாதித்துக் கொள்ளத் தெரிந்தவர், மூர்க்க குணமுள்ளவர், பலவகை உணவுகளையும் உண்ணக் கூடியவர். χ
12, 20, 28 வயதுகளில் நோயின் காரணமாக ஆபத்து ஏற்படலாம். சுபக்கிரக பார்வையினால் 95 வயது வரை வாழ கூடியவர்.
நித்திரை திசை பலன்
கிழக்கில் தலை வைத்துப் படுத்தால் செல்வம் சேரும். வடக்கில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள், செல்வ விருத்தி ஏற்படும் - 9 மேற்கில் தலை வைத்துப் படுத்தால் புகழ் ஓங்கும்
தெற்கில் தலை வைத்துப் படுத்தால் நோயும், மரணமும் ஏற்படும். * மாமியார் வீட்டில் கிழக்குத் திசையில் தலை வைத்துப்
படுக்க வேண்டும். * யாத்திரை சென்ற இடத்தில் மேற்குத் திசையில் தலை
வைத்துப் படுக்க வேண்டும்.
(இப்படி ஒரு சாஸ்திரம் கூறுகிறது)
காலையில் எழுந்ததும் பார்க்கும் பலன்
நித்திரையிலிருந்து விழித்தவுடன் முதலில் பார்க்கக்கூடியவை :
தாமரைப்பூ, பொன், தீபம், கண்ணாடி, சூரியன், புகை இல்லாத நெருப்பு, செஞ்சந்தனம், கடல், வயல், சிவலிங்கம், முகில் சூழ்ந்த மலை, கன்றுடன் கூடிய பசு, தன்னுடைய வலது உள்ளங்கை, தன் மனைவி, மிருதங்கம், இவற்றுள் ஏதேனும் S ஒன்றைப் பார்த்தால் உத்தமம். ?
fly ഗ്ഗ[$

Page 17
லுறுர- *\\{&=
முகம் பார்க்கும் கண்ணாடியில் தன் முகத்தைப் $ பார்ப்பதால் வீரிய விருத்தியும், உற்சாகமும், சர்வ வசியமும், 1 ஞானமும் அதிகரிக்கும்.
நல்ல சகுனம்
சங்கு, கணை, திரிசரணம், எக்காளம், வாங்கா ஆகிய பஞ்சமகா வாத்தியங்கள் (ஐந்து பெரிய வாத்தியங்கள்) பேரீத்வனி, வீணை, மேளம், நல்ல சொற்கள், உறவினர் வருகை, மணக்கோலம், சுபவரிசை, மங்கள திரவியம், விருது, மாங்கல்யப் பெண் (கணவனை உடைய பெண்) கன்னிப்பெண், இரண்டு பிராமணர்கள், வளையல் விற்கும் செட்டி, தாசி, பிணம், மணிஓசை, கொடி, சாமரம், வெளுத்த உடை, நவரத்னங்கள், ஆபரணம், கண்ணாடி உடை, மஞ்சள், குங்குமம், மாலை, பழங்கள், காய், பூக்கள், இலையோடு காய்கள், கரும்பு, மீன், மாமிசம், அன்னம், பாயசம், அரிசி, பொரி, சோறு, பால், தயிர், நெய், தேன், எரி நெருப்பு, தங்கம், வெள்ளி, தாமிரம், சந்தனம், குடை, பட்டு, காவடி, இரண்டு நிறைகுடம், எள்ளு, கள், யானை, குதிரை, பசு, கன்று, கயனுடன்கூடிய காளை, மான்தோல், கருங்குரங்கு, நாய், குதிரை, கழுதை கனைத்தல், நாய் காதுகளை உதறுதல், பறவைக் கூட்டம், ஆந்தைகள் கூட்டமாக கத்துதல், சுகவானம், படுக்கை, மணல், அட்சதை, வில், அம்பு, அப்பம், மூலத்திரவியங்கள், அறுகு, குசப்புல், மகிழ்ச்சி, தைரியம் இவைகளைக் கண்டால் நன்மை உண்டாகும்.
(மேற்கண்டவை தவிர பிற கெட்ட சகுனம் என்று கூறப்படுகிறது. அவற்றை இங்கே கூறவில்லை)
R
蟹
OSM. £176ŵs
-A

(ge -ی - رینیال( 影 O b O O हूँ 2 அமரர் திரு.வே. சிவசுந்தரம் அவர்களின் Ş ஒரு சில புகைப்பட பொக்கிஷங்கள்.
இளமையில்.
பள்ளிப் பருவத்தில் .
宅芯 (്ട

Page 18
ട\]() પો(ક 24 துடிப்பான பள்ளிச் சேவையில் .
PREFECTS GUD 1967
.6 ܓ)
罕芯_。 侬
 

──────- ལོ་དང་གྲུ()རྒྱ་
avn S三
§o க்கினிலே Q اکبر(Nی
లకి e e 9 A. 欧 முன்னாள் தொழில் நிலையத்தி
窓の 线 ܓ) S
Nس r
ॐ * 3:. . . 2 ジ 公猴、 দিগ্নি) ২১__

Page 19
千份
Acknowledgement
We Would like to extend our sincere thanks to all hearts for their acts of Kindness rendered to us in our hours of grief and sorrow on our irreparable loss.
The countless floral tributes and caring condolences have touched us deeply and soothened our aching hearts. The affection shown and the support we received from everyone during our bereavement will always be remembered by us with deep gratitude.
Yours gratefully
Lalithakumary (Wife)
&
Shivalatha (Daughter)
'AKP
இடி
s
器
 


Page 20
சங்கரப்பிள்ளை + கதிராசிப்பிள்ளை
மனோன்மணி சிவசுந்தரம் வேல்முருகு சிவராமலிங்கப்
அம்மா --
பொன்னம்மா
வேலாயுதம் (சங்கரநாதன்)
A -- மனோன்மணி
சிவகுமாரன் (அமரர்)
இ
மங்கையற்கரசி சிவசுந்தரம் தனலக்சுமி -- (அமரர்) -- ராதாகிருஷ்ணன் ஆறுமுககந்தவேல்
4'oો

ம்சாவளி
கைலாயர் + சின்னதங்கம்
கணபதிப்பிள்ளை
-- லட்சுமிப்பிள்ளை
முருகேசு 十 ג
சிவக்கொழுந்து
சிவகுமாரி பரதலிங்கம் மங்களகுமாரி லலிதா
(அமரர்)
-- 十 -- ரகுநாதபிள்ளை யசோதா செந்திநாயகம்
(அமரர்)
குமாரி பிறேமகுமாரி
--
தியாகராசா
பலதா (கண்மணி)

Page 21
எது நடந்ததோ, அது எது நடக்கிறதோ, அது எது நடக்க இருக்கிறதோ, அ. உன்னுடையது எதை இழந்த எதை நீ கொண்டு வந்தாய் எதை நீ படைத்திருந்தாய் எதை நீ எடுத்துக் கொண்டாயோ, ! எதைக் கொடுத்தாயோ, அது எது இன்று உன்னுடையதோ அது
மற்றொரு நாள் அது விே
"இதுவே உ5 எனது படைப் பின்
 
 
 
 
 
 
 
 
 

இதையின் உபதேசம்
நன்றாகவே நடந்தது. நன்றாகவே நடக்கிறது. துவும் நன்றாகவே நடக்கும்.
ாய், எதற்காக நீ அழுகிறாய்? ? அதை நீ இழப்பதற்கு | அது வீணாகுவதற்கு அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. இங்கேயே கொடுக்கப்பட்டது. நாளை மற்றொருவருடையதாகிறது. றொருவருடையதாகும்.
பக நியதியும்
சாராம்சமுமாகும்"
- பகவான் பூரீ கிருஷ்ணர்