கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மனநோயாளிகள்

Page 1


Page 2

இந்தப் புத்தகத்தை வாசித்து மூடுகையில் மனசாட்சியைக் கழற்றி வைத்துவிடாத ஒரு சராசரி மனிதனின் மனதில் எங்கள் சமுதாயத்தில் மனிதாபிமானம் எவ்வளவு இழிநிலை எய்திவிட்டது என்பதை எண்ணிய வேதனைதான் எஞ்சியிருக்கும். ஏனெனில் உலகின் வரலாற்றில் எந்த நாட்டிலும் கேள்விப்படாத குரூரமான சித்திரவதைக்ளை நாம் நமது சுதந்திரப்போராட்டம் என்று மகு டம் சூட்டிப் பூஜித்த "புனிதமான கோயிலின்” மூலஸ்தானத்தி லேயே தரிசிக்கும் துர்ப்பாக்கியம் பெற்றவர்களாகிவிட்டோம். "நாம் ஆயுதங்களின் மேல் மோகம் கொண்ட மனநோயாளிகளல்ல,” என்று விடுதலைப் புலிகள் தங்கள் கோஷத்தில் பொறித்துக் கொண்டாலும், பயங்கர நோய்களின் விளைவுகளை அறிந்து கொள்ள விஞ்ஞான கூடங்களில் பரிசோதனைக்காக வளர்க்கும் விலங்குகளைப் போலப் பாவித்து மனிதனின் தேகத்தில் தங்கள் கற்பனையில் உதிக்கும் வினோதமான சித்திரவதைகளையெல்லாம் நடத்தி எது மனிதனுக்கு அதிக வேதனையைத் தரக்கூடிய சித்திர வதையெனக் கண்டு பிடிக்கத் துடிக்கும் அவர்களின் வெறியும் ஒவ்வொரு அணுவும் துடிதுடிக்கும் உச்ச வேதனையின் ஈனக்குர லையும், இரத்தத்தையும், கன்றிய கதைகளில் கிளம்பும் துர்நாற்ற த்தையும் ரசிக்கின்ற குரூர ரசனையும் இவர்களைப் பீடித்துள்ள

Page 3
மனநோய் எத்தனை உச்சத்தை எய்தியுள்ளது என்பதையே வெளிச் சமிட்டுக் காட்டுகிறது. இது எமக்கும் நரமாமிசம் புசிப்போரின் சந்ததித் தொடர்பு எங்கேனும் இருந்திருக்கிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
டாக்டர் சிவகுமாரனைப் போன்ற பெரிய மருத்துவர்கள் குடாநாட்டை விட்டு வெளியேற விண்ணப்பித்தவர்களைப் பரிசோதித்து அவர்களின் உடல்நிலை குடாநாட்டினுள் சிகிச்சை பெற்று மாற்ற முடியாததுதானாவென புலிகளுக்கு மருத்துவச் சான்றிதழ்கள் வளங்கித் தம் சேவையை நல்கும் போது இங்கு வியாதிகளால் பீடிக்கப்பட்டவர்கள் எப்படிப் பராமரிக்கப்பட்டடார் கள் என்பதை மருத்துவ உலகம் அறிந்து கொள்ளக் கூடியதாயு ளளது.
சிவத்தம்பி போன்ற பேராசிரியர்கள் புலிகளின் முத்தமிழ் விழாக் களுக்குத் தலைமை தாங்கும்போது இந்த வதை முகாம்களில் தமிழ் எப்படி வாழ்கிறது என்பதை தமிழுலகம் புரிந்து கொள்ளக் கூடியதாயுள்ளது.
இருப்பினும் இப்போது கூட இந்த வதைகளுக்கு வக்கால த்து வாங்க சில புலி ஆதரவாளர்கள் தயங்காமல் முன்வருவார் கள். அவர்கள் படித்தவர்கள் பெரியவர்கள் என்ற பட்டங்களைத் தாங்கியவர்களாயும் இருப்பார்கள். இவர்கள் முதலில் இப் புத்தக த்தை முடி மறைத்து இருட்டடிப்புச் செய்ய முற்படுவார்கள். ஆனால் அதையும் மீறி இது வெளிப்படுமானால் "இவை அனை த்தும் சுத்தப் பொய்” என்று தமது வளமையான பாணியில் மறுப் பார்கள். ஆனால் அது அவர்களின் அடிவருடிகளான சிலரைத் தவிர சிந்திக்கக் கூடிய அனைவரையும் திருப்திப்படுத்தாது என் பது சில புத்திசாலிகளுக்குப் புரியும். அதனால் அவர்கள் சில வேறு வழிகளைக் கையாளுவார்கள். இப்படி வதைபட்ட அத் தனை பேரும் காட்டிக் கொடுத்த துரோகிகள்தானென்று அடித் துச் சொல்லுவார்கள். இத்தனைக்கும் அவர்கள் தாம் குற்றம் சாட்டும் ஒருவரது பெயரைக்கூட அறிந்திருக்க மாட்டார்கள். எனி னும் தாம் கண்ணால் கண்டது போல அடித்துச் சொல்லு வார்கள். ஏனெனில் கேள்வி கேட்கக் கூடிய அளவுக்கு இவர்களின்

i
வக்காலத்தை செவிமடுப்பவர்களும் இவ்வதைகளுக்குள்ளாகிய வர்கள் பற்றி முகமறியாதவர்களாகவே இருப்பார்களென்பது அவர்களின் எண்ணமாக இருக்கும்.
இருந்தும் எல்லா இடமும் இதே பதிலைச் சொல்லிச் சமா ளிக்க இயலாதேபாது இவர்கள் சில நுட்பங்களைக் கையாழுவார் கள். அதிலொன்று பிழையை ஒத்துக் கொள்வது. ஆனால் பிழை யை அதற்குரிய பரிமாணத்தில் பார்க்காமல் மிகவும் சிறிய ஒரு *விடயமாக்கி "அவர்களும் சின்னப் பிழைகள் விட்டிருக்கிறார்கள் தான்” என்னும் தட்டிக் கழிக்கும் பாணியில் ஒத்துக்கொள்வது. இதன் உள்ளார்ந்த அர்த்தம் "இதுகளையெல்லாம் கண்டு கொள் ளக் கூடாது" என்னும் கருத்தைத் தொனிக்கும். மற்றொரு வழி உடனே இந்தக் கதையை ஒதுக்கிவிட்டு மற்றவர்களும் இப்படிச் செய்திருக்கிறார்கள்தானே என்று குற்றம்சாட்டப் புறப்படுவது. கணிதத்தில் ஒரு கணியத்தை இல்லாதாக்க வேண்டுமானால் அக் கணியத்தை இன்னொன்றுக்குச் சமன் என சமன்படுத்திவிடுவது, பின் இரண்டையும் ஒரு புறத்திற்கு எடுத்து ஒன்றிலிருந்து மற்ற தைக் கழித்தால் விடை பூச்சியமாகிப் போய்விடும். அப்படி ஒரு பிழையை இல்லாது ஒழிப்பதற்கு இனங்னொரு பிழையைக் காட்டி அதனுடன் இதை சமன்செய்து கொண்டால் பிழையே பிழையில் லாததாகிவிடும் மாயஜாலம் இது.
எப்படியிருந்தாலும் இப்புத்தகத்தின் தாக்கத்தையிட்டு இவர் கள் இப்படிப் பயப்படும் அச்சமொன்றே இதில் உள்ள உண்மை யின் கனம் எத்தகையது என்பதைத் தெரிவிக்கப் போதுமானது, இன்னும் புலிகள் வதை முகாம்களில் கூறுவது போலவே உலகின் நான்காவது படையை தோற்கடித்த லேசுப்பட்டவர்களல்லாதவர்க ளாக இருக்கலாம். இப் புத்தகத்தை தனது தார்மீகக் கடமையாகக் கருதி எழுதியவர் ஒரு தனிமனிதனாக இருக்கலாம். இவர்கள் எம்மை ஒரு புழுப்போல் நடத்தலாம்.
på favši gleiv Even a worm will turn GT6örp 65 GAunt škfu முண்டு. (முதுகெலும்பில்லாத புழுக்கூட இறுதியில் திரும்பும்) இம் சையின் தாங்கமுடியாத கட்டத்தில் மெளனமாக சாவதைவிட தனது இறுதி எதிர்ப்பைக் காட்டவே செய்யும். தனிமனிதனாக

Page 4
இருந்தாலும், ஒரு அற்பனாக இருந்தாலும் தனக்கு இழைக்கப் பட்ட அநீதிக்கெதிராக ஏதாவது ஒரு எதிர்ப்பைக் காட்டத்தான் செய்வான். அந்தவகையில் இந்தப் புத்தகம் அபாயத்தின் மத்தியி லும் துணிந்து வெளிவரும் எதிர்ப்பின் சின்னமாக விளங்குகிறது.
இப்புத்தகம் புலிகளின் வதைகளைப்பற்றி தான் அனுபவி த்த அனுபவத்தைக் கூறும் ஒருவரின் எந்த மிகைப்படுத்தலு மற்ற உண்மைகளின் பதிவு. ஆனால் இதன் அர்த்தம் புலிகள் இவ்வா, றான கொடுமைகளைச் செய்கிறார்கள் என்று அம்பலப்படுத்துவ தென்பது அரசையோ மற்றய அமைப்புக்களையோ நியாயப்படுத் தும் அல்லது வக்காலத்து வளங்கும் நோக்கிலானது அல்ல. அதே வேளை தமிழ் மக்கள் பூரண உரிமைகளும் பெற்ற சமு தாயமுமல்ல. உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற சமுதாயம். இங்கு இப் போராட்டத்தை தவறான வழியில் இட்டுச் சென்று சிதைப்பதில் புலிகளின் தவறுகள் காரணமாயிருந்தாலும் இப் போராட்டத்திற்கே மூலகாரணமான உரிமைகள் மறக்கப்பட்டு ள்ள, நசுக்கப்படுகின்ற நிலமைக்கு காரணமான ஆட்சியாளர்களது தவறுகள் மறுக்கப்பட முடியாதவை. இந்தப்பக்கத்தில் இழைக்கப் பட்ட மனித உரிமை மீறல்களும் எந்தவகையிலும் குறைத்து மதிப் பிடக் கூடியவையுமல்ல. மக்களின் நலத்தின் மீது அக்கறை கொள் ளாது தம் சொந்த நலன்களுக்காகச் செயற்படும் போக்கு எது வரை தொடருமோ அதுவரை இம் மனித உரிமை மீறல்கள் தொடரத்தான் செய்யும்.

கொலைகாரப் புலிகளினால் அநியாய மாகக் கைது செய்யப்பட்டு, துணுக்காய் காட்டில் சித் திரவதை அனுபவித்துக் கொண்டிருந்தபோது, புலிக ளின் இக் கொடுமைகளை உலகத்திற்கு குறிப்பாக அவர்களை உத்தமர்களாக, விடுதலை வீரர்களாகக் கருதும் அப்பாவித் தமிழர்களுக்கு அறியத் தர வேண்டும் என பல தடவைகள் எண்ணினேன். இதை என் கடமையாகவும் கருதினேன். புலிகளின் கொடுஞ் சிறையிலிருந்து தப்பி வந்தபின் யாழ்நகரில் தலை மறைவாக இருந்தேன். புலிகளின் கண்ணுக்குள் மண் ணைத்தூவி விட்டு தமிழீழத்திலிருந்து தப்பி கொழும்பு வந்து சேர்ந்தேன். என் உடலில் ஏற்பட்ட காய வடு க்கள் மறைந்து போனாலும் போகலாம். ஆனால் இக் கொடிய புலிகளினால் என் நெஞ்சில் ஏற்பட்ட காயம் என்றுமே ஆறாதுச. ஆனால் காயம் பட்ட என் நெஞ்சுக்கு ஆறுதலாகவும், மனித நேயம் பேணப்பட நான் செய்யும் சிறு பணியாகவும் கண்ணிருடன் இதை எழுதுகிறேன்.

Page 5
1990 இன் ஆரம்பம், இலங்கையின் வடக்கு கிழகக்கில் ஒரு அரசியல் மாற்றம் ஏற்படப் போகும் அறிகுறிகள் தென்படத் தொடங்கியது. காட்டுக்குள் இருந்த கொடிய மிருகங்கள் மெல்ல மெல்ல நாட்டுக்குள் ஊடுருவத் தொடங்கிய காலம். மனித நேயம் மீண்டும் மழுங்கடிக்கப்பட்டது. அடுத்து சில நாட்களில் தமக்கு விழப்போகும் அடிமை விலங்கைப்பற்றி உணரமுடியாத வடA கிழக்கு மக்களும் யாழ்ப்பாண பத்திரிகைகளும் புலிகளின் வரவை ஒரு வகையில் வரவேற்றனர். இந்நிலையில்தான் மாகாண அரசை ஆதரித்த தமிழ் மக்கள் மீது புலிகளின் பழிவாங்கல் நட வடிக்கைகள் தொடங்கின. மாற்று இயக்கத்தினருக்கு தலைவரால் பொது மன்னிப்பு அழிக்கப்பட்டுள்ளதாகவும் தம்மிடம் சரண டையும் படியும் ஒலிபெருக்கிகள் மூலம் தெருத் தெருவாக அறிவி க்கப்பட்டது. எங்கும் பரவலாகப் பலர் கைது செய்யப்படுவதாக அறியக்கூடியதாக இருந்தது. கைது செய்யப்படுபவர்கள் எங்கு கொண்டு செல்லப் படுகிறார்கள் என்பதோ அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதோ யாருக்குமே தெரியாது. கைது செய்யப் படுபவர்களை பெற்றோரோ அல்லது உறவினர்களோ பார்ப்பத ற்கு அனுமதிக்கப்படவில்லை தமிழீழமெங்கும் கொலைகாரப் புலிகளின் கொடிய ஆட்சி ஆரம்பமாகியது. 1990 ஏப்ரல் மாதத் தில் ஒரு நாள் புலிகள் வந்து தேடிக்கொண்டு போவதாக வீட் டில் சொன்னார்கள். மனம் துணுக்குற்றது. என்னவாக இருக்கும் என சந்தேகித்தபடியே அருகில் அமைந்திருந்த புலிகளின் குகை (முகாம்) நோக்கி சென்றேன். f
முன் காப்பரணில் சீருடையில் இருந்த சிறுவன் ஒருவன் என்னை யாரென விசாரித்தான். நான் மிகமிகப் பணிவாக வந்த காரணத்தை சொன்னேன். உடனே என்னை ஒரு திருடனைப் போல் பார்த்து என் உடல் எல்லாம் தடவிப்பார்த்து சோதித்து திருப்திப்பட்டவராக உள்ளே செல்ல அனுமதித்தார். அது ஒரு வழிப்பாதை என்பதும், இந்த வழியால் உள்ளே போனவர்கள் உயிருடன் திரும்புவதில்லை என்பதையும் முன்னர் நான் அறிந் திருந்ததால் மரணபயத்துடனேயே உள்ளே சென்றேன். அங்கே

முகாம் பொறுப்பாளர் முன் போய் பவ்யமாக நின்றேன். அவர் எனது பெயர் முகவரி ஆகியவற்றை விசாரித்து விட்டு “உன்னை அழைக்கும்படி மேலிடத்திலிருந்து எமக்கு உத்தரவு வந்துள்ளது. அவர்கள் வந்துதான் உன்னை விசாரிப்பார்கள். அதுவரை இங்கு இரு எனக் கூறி ஒரு அறையினுள் விட்டுப் பூட்டினர். நேரம் இரவு பத்து மணி, அறை ஒரே இருட்டாக இருந்தது. சுமார் இரண்டு மணிநேரம் அப்படியே நின்றேன். பின்னர் சுவர் ஒரமாக உட்கார்ந்தேன். யோசித்துக்கொண்டேயிருந்து அப்படியே தூங்கி விட்டேன். மறுநாள் காலை எட்டு மணிபோல் அறை திறக்கப்பட்டது. காலைக் கடன் செய்வதற்கு அனுமதிக்கப் பட்டேன். பின் மீண்டும் அறைக்குள் அடைக்கப்பட்டேன். நண் பகல் மதியச் சாப்பாடு தந்தார்கள். சாப்பிடவில்லை. சாப்பிடச் சொல்லி ஏசினார்கள். சிறிது சாப்பிட்டேன். இரவு ஒன்பது மணிபோல் பானும், வாழைப்பழமும் தந்தார்கள். சாப்பிட்டேன். சாப்பாடு கொண்டு வந்த சீருடைச் சிறுவனிடம் "அண்ணே என்னை எப்போ விடுவார்கள்” எனக் கேட்டேன். தெரியாது எனச் சொல்லி விட்டு கதவைப் பூட்டிக் கொண்டு சென்று விட்டார். இரவு முழுவதும் யோசித்துக் கொண்டிருந்தேன். பொழுது புலர்ந்தது. கதவு திறந்தது. காலைக் கடனை முடிப் பதற்கு அனுமதித்தார்கள். அந்த நேரத்தில் முகாம் பொறுப் பாளரைக் கண்டேன் என்னை எப்போ விடுவீர்கள்? என அழுது கொண்டே கேட்டேன், “தலைமைக் காரியாலயத்திலிருந்து இன்று இரவு ஆட்கள் வந்து உன்னை விசாரித்து பிரச்சனை இல்லை என்றால் உடன் விடுதலை செய்வார்கள்." என்றார். மனதுக்கு ஓரளவு ஆறுதலாக இருந்தது. அன்றும் வழமைபோல் மதிய உணவும், இரவு உணவும் தரப்பட்டது. இரவு விசாரணைக்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் தூக்கம் வராமல் விழித்திருந் தேன்.
நடுநிசி பன்னிரண்டு மணி இருக்கும் கதவு திறக்கப்பட்டு அறைக்கு வெளியே அழைக்கப்பட்டேன். கறுத்த தடித்த புலி ஒரு வர் நின்றார். எனது பெயர் ஊர் எல்லாம் விசாரித்தார். EPRLF. உடன் என்ன தொடர்பு எனக் கேட்டார். தொடர்பு ஏதுவுமே இல்லை என மறுத்தேன். மீண்டும், மீண்டும் அதையே கேட்டார்.

Page 6
நான் இல்லை, இல்லை என மறுத்தேன். "டேய் சுத்துறியா?" (என்னை மடையனாக்குகின்றாயா?) எனக்கேட்டு அடிக்க வந்தார்.
"அண்ணே அடிக்காதீர்கள். எனக்கு இயக்கங்களுடன் தொடர்புகள் இல்லை. எனக்கு குடும்பப் பொறுப்பு அதிகம்,” எனச் சொல்லி அழுதேன். "டேய். (கெட்டவார்த்தை) எல்லோ ரும் இப்படித்தானடா சுத்துகிறீர்கள். நீ EPRLF க்கு றெக்கி (உளவுசொன்னது) கொடுத்து வந்தது எமக்கு தெரியும். பொய் சொல்லாதே," எனக் கூறினார். பின்னர் அங்கு நின்ற வேறு புலியைக் கூப்பிட்டு “இவனின் சேட்டைக் கழற்றி கண்ணைக் கட்டு" என்றார். அவ்விதமே செய்யப்பட்டேன். கைக்கு விலங்கி டப்பட்டேன். சிறிது நேரம் புலிகள் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டார்கள். என்னை இழுத்துச் சென்று ஒரு வாகனத்தில் ஏற்றினார்கள். வாகனம் எங்கு செல்கிறது என்பது தெரியாமல் வாகனத்தின் அடியில் குப்புற படுக்க வைக்கப்பட்டிருந்த நான் ஏதேதோ பயங்கர கற்பனையில் பயணப்பட்டுக்கொண்டிருந்தேன். இடைவழியில் வாகனம் நிறுத்தப்பட்டது. என்னை அழைத்துச் சென்றவர் வேறு யாருடனோ கதைப்பது கேட்டது. "யார் வானுக் குள் நல்ல கிடாய்" எனப் புதிய குரல் கேட்க "இதை சுடலையில் தட்டப்போகிறேன்" என என்னை அழைத்துச் சென்றவர் சொல் வது கேட்டது. எனக்கு மரண பயம் பிடித்துக் கொண்டது. தட் டப் போகிறேன் என்றால் அவர்கள் பாஷையில் சுடப்போகிறேன் என்று அர்த்தம். எனக்கு உடலெல்லாம் வியர்த்தது. சிறிது நேர த்தில் ஒன்றுமே தெரியாத நிலைக்கு நான் வந்து விட்டேன். வாக னம் எவ்வளவு நேரம் ஓடியது என்பதோ, எங்கு போகிற தென்பதோ எனக்கு எதுவும் தெரியவில்லை. வாகனத்தில் இருந்து இழுத்து இறக்கப்படும் போதுதான் சுய உணர்வு வந்தது.
நான் இப்போது ஒரு கும்மிருட்டான இடத்தில் நின்றிருந் தேன். அடர்த்தியான சோலை போன்ற உயர்ந்து வளர்ந்த மரங் கள். இருபத்தைந்து யார் தொலைவில் ஒரு பெரிய மாடி வீடு இருந்தது. அங்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அது ஒரு முகாம் என்பதை அறியக் கூடியதாக இருந்தது. அங்கிருந்த புலிகள் தூக் கக் கலக்கத்துடன் இருந்தார்கள். என்னை அழைத்து வந்தவர் அங்கிருந்த முகாம் பொறுப்பாளர் நசீர் என்பவரிடம் என்னை

ஒப்படைத்தார். இருபடிவங்களை நசீரிடம் கொடுத்து “பிரச்சனை இல்லை. அடிக்க வேண்டாம்” என மெதுவாக கூறியது என் காதில் விழுந்தது. இது எனக்கு மன ஆறுதலைக் கொடுத்தது.
மேல் மாடிக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஒர் அறைக்குள் தள்ளி விடப்பட்டேன். லைற் எரிந்து கொண்டிருந்தது. அறைக்குள் சுமார் இருபது பேர் வரை இருந்தார்கள். எல்லோரும் மிரண்டு போய் இருந்தார்கள். யாருமே எதுவுமே கதைக்கவில்லை. நான் ஓர் ஒரமாக உட்கார்த்தேன். ஒரிருவர் படுத்திருத்தார்கள். மற்றவர் களுக்கு படுக்க இடமில்லை. தேரம் ஓடிக்கொண்டேயிருந்தது. பக்க த்திலிருந்த கைதியிடம் பேச்சுக் கொடுக்கலாமென்றால் அவன் துரங்கி வழிந்து கொண்டிருந்தான். எங்கோ தொலைவில் கோவில் மணி ஒசை கேட்டது. எனது பக்கத்துக் கைதி துரக்கம் கலைந்து எழுந்தார். "அண்ணே எப்போது எம்மை விடுவார்கள்” என கேட்டேன். அவர் கதைக்க வேண்டாம் எனவும் சைகை செய்து காட்டினார். நான் மெளனமானேன்.
கைது செய்யப்பட்ட தாலாவது நாள் பொழுது புலர்ந்தது. காலை ஒன்பது மணிபோல் நான் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறை திறக்கப்பட்டு வெளியே எல்லோரும் அழைக்கப்பட்டோம். முகம் கழுவுவதற்கும், சிறுநீர் கழிப்பதற்கும் அனுமதிக்கப் பட்டோம். எம்மை சூழ பல புலிகள் துப்பாக்கிகளுடன் காவல் நின்றார்கள். இப்போதும் கைவிலங்கு அகற்றப்படவில்லை. அங் கிருந்த எல்லா கைதிகளுக்கும் கைவிலங்கு போடப்பட்டிருந்தது. முகாமின் முன் முற்றத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டோம். அங்கு எல்லாமாக நாற்பது கைதிகள் இருந்தார்கள். எல்லோரும் முதல் நாள் இரவு அங்கு கொண்டுவரப்பட்டவர்கள் தான். நசீர் என்ற "புலிகளின் முகாம் பொறுப்பாளர் வந்து ஒரு மேசையின் முன் அமர்ந்து கைதிகளை ஒவ்வொருவராக அழைத்து விசாரிக்கத் தொடங்கினார். எனது முறைவந்தது. எனது பெயர், முகவரி, தொழில் எல்லாம் கேட்டார். “டேய் உன்னை எதற்காக பிடித் தார்கள்” என கேட்டார். "தெரியாது" என்றேன். “நீ கம்மா இருந் தால் ஏனடா பிடிக்கிறார்கள். என்ன செய்தனி, EPRLF ஆதர வாளனா” எனக்கேட்டார். "நான் ஒரு இயக்கத்துக்கும் ஆதரவாள னல்ல" என்றேன். உடனே அவர் “நீ எல்லாம் ஏனடா தமிழனாய்

Page 7
பிறந்தாய் என” கூறி பெரிய ரீப்பை சட்டத்தால் அடித்தார். "நீ சுத்துறாய். (பொய் சொல்கின்றாய்) புலிப்படையை சாதாரண மாகவா நினைக்கிறாய். நீ சும்மா இருக்க உன்னை பிடிப்பதற்கு புலிப்படை ஒன்றும் முட்டாள்களல்ல, "எனக் கூறி மீண்டும் அடி த்து முன்னைய அறையில் அடைத்தார்.
அன்று பகல் முழுவதும் ஒரு தேர சாப்பாடு மட்டுமே தர ப்பட்டது. இரவு சுமார் முப்பது கைதிகளைத் தெரிவு செய்து இர ’ ண்டிரண்டு பேராக இணைத்து விலங்கிட்டார்கள். கண்கள் கட் டப்பட்டது. நான் முதன் முதல் முகாமுக்குப்போகும் போது அணி ந்திருத்த நீட்டுக்காற்சட்டையுடன் மட்டுமே நின்றேன். எனது சேட் எங்கென்றே தெரியவில்லை. எம்மைப் பிடித்து இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றினார்கள். வாகனம் புறப்பட்டது. சிறிய வாகன மொன்றில் முப்பது கைதிகளும் ஏற்றப்பட்டிருந்தோம். மிருகங்க ளைக் கூட அப்படி அடைத்து கொண்டு செல்ல முடியாது. நாம் மிருகங்களிலும் கேவலமாக புலிப்படைக் கொடியவர்களால் அழைத்துச் செல்லப்பட்டோம்.
சுமார் நாற்பதைந்து நிமிடம் வாகனம் ஒடி நின்றதும் எல் லோரும் இறக்கப்பட்டோம். கண்கட்டப்படடிருந்ததாலும் இரு வரிருவராக விலங்கிடப்படடிருந்ததாலும் ஒழுங்காக இறங்கமுடிய வில்லை. அவர்கள் கூட்டிச் சென்ற பாதையால் நடக்கவும் முடிய வில்லை. நான் இருதடவை விழுத்தேன். கண் கட்டுக்களை கழற்றி விட்டார்கள். ஒரு பழைய காலத்து பெரிய வீட்டின் பின் பக்கத் தில் தின்றோம். நிலத்தில் தலை குனிந்தபடி இருக்கும்படி பணிச் கப்பட்டோம். நசீர் தலைமையில்தான் நாம் இந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தோம். சாள்ஸ் என்ற முகாம் பொறுப் பாளர் அங்கு நின்றார். அவர் உதவியாளர் டிஸ்கோ என்பவரும் உடனிருந்தார். சுமார் இருபத்தைந்து புலிகள் ஆயுதபாணிகளாக நின்றார்கள். கைதிகள் ஒவ்வொருவரினதும் தனித்தனி குற்றப் பத்திரங்கள் பொறுப்பாளர் சான்சிடம் ஒப்படைக்கப்பட்டது. எம் மை ஒவ்வொருவராக அழைத்து குற்றப்பத்திரத்திலுள்ளவற்றை படித்து ஏளனமாகப் பார்த்து துரஷண வார்த்தைகளால் திட்டி னார்கள். இப்படியாக ஒவ்வொருவராக அழைத்து விசாரித்து

கேலி செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் போது பொழுது விடிந்து விட்டது.
விடிந்ததும் நாம் இருக்கும் இடத்தின் சூழல் தெரியத் தொடங்கியது. சுமார் மூன்று ஏக்கர் விஸ்தீரணமுள்ள காணியில் பழைய காலத்து மாடிவீடு ஒன்று இருந்தது. காணியின் பின் கோடியில் ஒரு பெரிய ஒலைக் கொட்டிலும் மத்திமப் பகுதியில் ஒரு சிறு ஒலைக் கொட்டிலும் காணப்பட்டது. எங்கோ பாட சாலை ஒன்றிலிருந்து எடுத்து வரப்பட்ட மேசைகளும் கதி ரைகளும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தன. காணியின் ஒரு கோடியில் மலம் கழிப்பதற்கு பாரிய கிடங்குகள் வெட்டப் பட்டு அவற்றின் மேல் தென்னங்குற்றிகள் போடப்பட்டிருந்தன. ஒரு பெரிய பாழடைந்த கிணறும் இருந்தது.
இப்புதிய சூழலில் எனது சிறை வாழ்க்கை ஆரம்ப மாகியது. அங்கு சுமார் ஆயிரம் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டி ருந்தனர். கைதிகள் ஒருவரோடு ஒருவர் கதைக்கக் கூடாது என்ற கண்டிப்பான உத்தரவு இருந்தது. அப்படி இருந்தும் எம்மை கண்காணிக்கும் புலிகள் கவனிக்காத நேரத்தில் எமது கவலை களை பரிமாறிக் கொள்வோம். நாம் தடுத்து வைக்கப்பட்டிருந்த இடம் முன்னாள் சாவகச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் நவரத் தினத்தின் சாவகச்சேரியிலுள்ள வீடு என்பது பின்னர் தெரிய வந்தது. அவ்வீட்டைச் சுற்றி நூற்றுக்கு மேற்பட்ட புலிகள் ஆயுத பணிகளாக இரவு பகல் காவலிலீடுபடுத்தப்பட்டிருந்தனர். இங்கு எமது விலங்குகள் அகற்றப்பட்டன.
சர்வகச்சேரி சாள்ஸ் முகாமுக்கு வந்த அடுத்த நாள் என் னிடம் இருந்த உடமைகள் எல்லாம் புலிகளினால் பறிமுதல் செய் யப்பட்டன. நான் கைது செய்யப்படும் போது என்னிடம் 1 பவுண் மோதிரம் ஒன்றும் பணமாக ரூபா எண்ணாயிரத்து முன்னூறும் இருந்தது. அத்துடன் எனது தேசிய அடையாள அட் டையும் இருந்தது. இவை எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டன.
இம்முகாமில் இருந்த சுமார் ஆயிரம் கைதிகளில் பலருக் பொக்கிளிப்பான் நோய்

Page 8
பின் கோடியில் அமைந்திருந்த ஒலைக் கொட்டிலில் காவல் வைப்பார்கள். அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாத காரண த்தால் பலருக்கு வாந்தி பேதி நோய் ஏற்பட்டது. அவர்களுக்கு எவ்வித வைத்தியமும் இல்லை. மலசலம் கழிப்பதற்கு போதிய இடவசதி இல்லாததுடன் தண்ணி வசதியும் இல்லாததால் கைதி களுக்கு சொறி, சிரங்கு, வாந்தி, பேதி என்பன இலகுவில் பரவ ஆரம்பித்தது. கைதிகள் நோயினால் பெரிதும் துன்புற்றார்கள்.
காலையில் முகம் கழுவ அனுமதிப்பார்கள். அதே நேரத் தில் மலமும் கழித்து முடித்துவிட வேண்டும். காலை ஆறு மணி முதல் ஏழுமணிக்கிடையில் எல்லா கைதிகளும் இந்த வேலைகளை முடித்து விட வேண்டும். சுமார் ஆயிரம் கைதிகள் காலைக்கடன் முடிப்பதற்கு போதிய வசதி இல்லாத நிலையில் 1 மணி நேரத் தில் இது எப்படி சாத்தியமாகும். செய்ய முடியாதவர்கள் அடுத்த நாள் தான் செய்யவேண்டும்.
காலை எட்டுமணிக்கு தேனீர் தருவார்கள். கைதிகளில் சிலர் தான் சமையல் கெய்வார்கள். காலை பத்து மணிபோல் கெளடபி சாப்பிடத் தருவார்கள். பின் மதியச்சாப்பாட்டுக்கும் இர வுச் சாப்பாட்டுக்கும் பதிலாக மாலை நாலு அல்லது ஐந்து மணி போல் சோறும் பருப்பு கறியும் தருவார்கள். கைதிகள் சாப்பிடு வதற்காக வாங்கும் சோறு சிறிதும் கொட்டக் கூடாது. அப்படி யாராவது குப்பையில் கொட்டியது கண்டு பிடிக்கப்பட்டால், கொட்டியவர் உண்மையை ஒத்துக் கொள்ளவேண்டும். அப்படி ஒத்துக் கொண்டால் அவருக்கு மூன்று நாட்களுக்கு சாப்பாடு இல்லை. ஒருவரும் ஒத்துக்கொள்ள வில்லையாயின் மறுநாள் ஒருவருக்கும் சாப்பாடு இருக்காது.
இங்கு விசாரணை என்ற பெயரில் ஏதேதோ நடக்கும். ஆர ம்ப விசாரணை என்பார்கள். பூர்வாங்க விசாரணை என்பார்கள். ஒரு கைதி பற்றி தனிப்பட்ட முழுவிபரங்களும் எடுக்கப்படும். அத்துடன் அவர் பெற்றார், சகோதரர்கள் அனைவரினதும் விபரங்களும் பெறப்படும். குறிப்பிட்ட கைதியின் மீது குற்றப் பத்திரம் ஒன்று வைத்திருப்பார்கள். ஆனால் அதை சொல்ல மாட்டார்கள். நீ என்ன காரணத்துக்காக பிடிக்கப்பட்டாய் என

கைதிகளையே கேட்பார்கள். சொல்லத் தெரியாத அப்பாவிக் கைதிகள் முழிப்பார்கள். விழும் அடி. விசாரணை செய்யும் போது கைதியின் கண்ணை கட்டி விடுவார்கள். எப்போ அடி விழும் என கைதிக்கு தெரியாது. அடிவிழும் போது கைதி துடிப்
T.
சில கைதிகளை விசாரிக்கும் போது அவர்கள் மீது உள்ள குற்றச்சாட்டுக்களை நானும் அறியக் கூடியதாக இருந்தது.
தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த முன்னாள் யாழ் மாவட்டசபை உறுப்பினரும், 1989ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டவருமான நடேசு என்பவர் எம்முடன் கைதியாக இருந்தார். அவர் மீது புலிகள் கூறும் குற்றம் என்னவெனில் வட்டுக் கோட்டைப் பகுதியில் தலைமறைவாக இயங்கி பல பொதுமக்களை கொலை செய்து வந்த தும்பன் என்ற புலியை இந்திய அமைதிப் படையினர் சுட்டுக் கொன்றனர். இதற்காக விருந்து வைத்துக் கொண்டாடினார் என்பதாகும். ஆனால் தான் அப்படி விருந்தொன்றும் வைக்கவில்லை என அவர் மறுத்தார்.
இன்னுமொரு கைதி ஸ்கந்தவரோதயா கல்லூரியின் உயர் தர மாணவன். இவரின் வீட்டில் இவர் துப்பாக்கியுடன் எடுத்த புகைப்படம் ஒன்று புலிகளால் கண்டெடுக்கப்பட்டது. அந்த படத் தில் உள்ள துப்பாக்கி எங்கே? அதை மறைத்து விட்டார் என்பதே குற்றச்சாட்டு. ஆனால் சம்பவம் பற்றி குறிப்பிட்ட கைதி அழுதபடி எனக்கு சொன்னார். துப்பாக்கியுடன் புகைப்படம் எடுக்கவேண்டு மென்ற ஆசையினால் ஒரு இயக்க நண்பரின் துப்பாக்கியை வாங்கி புகைப்படத்திற்கு நின்றாராம். அந்த புகைப்படம் புலிக ளிடம் சிக்கியதால் தான் இப்போ சிறையிலிருக்கிறாராம்.
ஆனைக்கோட்டைச் சந்தியில் ஒரு அமைதியான குடும்பஸ் தருக்கு மூன்று வீடுகள் சொந்தமாக இருந்தது. அதில் இரு வீடு களை அமைதிப்படையினர் பொறுப்பேற்று முகாமிட்டிருந்தனர். அவ்வீடுகளுக்குரிய மாதாந்த வாடகைப்பணத்தை இவர் பெற்று வந்துள்ளார். அந்த முகாமின் ஒரு பகுதியில் E.P.R.L.F. முகாமும்

Page 9
10
செயல்பட்டு வந்திருக்கிறது. இந்திய அமைதிப்படை வெளியேறிய போது முகாம் கைவிடப்பட்டது. அங்கு இருந்த காப்பரண்களுக் குப் பாவிக்கப்பட்ட கல், மண், இரும்புகள் போன்றவற்றை உழவு இயந்திரம் ஒன்றின் மூலம் வீட்டு உரிமையாளர் அகற்றியுள்ளார். சில நாட்களின் பின் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப் பட்டார். E.P.R.L.F. முகாமிலிருந்து ஆயுதங்கள் கடத்தி புதைத்து வைப்பதற்கு உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டார்.
பண்டத்தரிப்பு சந்தியில் சிகை அலங்காரம் செய்யும் கடை வைத்திருந்த ஏழைத் தொழிலாளி ஒருவரும் எம்முடன் சிறையி லிருந்தார். இவரின் கடை பண்டத்தரிப்பு முகாமுக்கு மிக அருகில் இருந்தது. இவரிடம் சிகை அலங்காரம் செய்வதற்கு EPRLF. உறு ப்பினர்கள் செல்வது வழக்கம். அந்த வகையால் அவர்களுடன் இவர் பழகிவந்திருக்கிறார். முகாம் கைவிடப்பட்டதும் புலிகளி னால் கைது செய்யப்பட்டு E.P.R.L.P. க்கு துப்பு கொடுத்து வந்த தாகவும் அவர்களுக்கு தனது வீட்டிலிருந்து உணவு கொண்டு சென்று கொடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு சிறை வைக்கப் பட்டுள்ளார்.
E.P.R.L.F. இயக்கம் காரைநகர் கடற்படை முகாம் மீது தாக்குதல் நடத்தியபோது குருநகர் தொடர்மாடியில் இலங்கை இராணுவம் முகாமிட்டிருந்தது. இராணுவத்தை முகாமுக்குள் முட க்கும் நோக்கத்துடன் முகாமைச் சுற்றி கண்ணி வெடிகளை E.P.R.L.F. வெடித்துக்கொண்டிருந்த சமயம் பேணாட் என்னும் பொது மகன் ஒருவர் கண்ணிவெடியில் அகப்பட்டு காலில் காயப்பட்டார். இச்சம்பவம் நடைபெற்று சில வருடங்களின் பின் புலிகளின் காட்டுத் தர்பாரின் போது பேணாட் என்பவர் கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது இராணுவத்தினரின் ஷெல் தாக்குதலினால் காயம் பட்டதாகப் பொய் கூறிவிட்டார். உண்மைச் சம்பவத்தை சொன்னால் தன்னையும் ஒரு E.P.R.L.F. உறுப்பினர் என தீர்மானித்து சுட்டுக்கொன்று வீடுவார்களோ என்ற பயத்தில் பொய் கூறிவிட்டார். ஆனால் உண்மையில் விபத்து நடந்தது எப்படி என்பதை அறிந்திருந்த புலிகள் அவரை சுட்டுக் கொன்று விட்டார்கள். இது பற்றி அவரின் மனைவிக்கு சமீபத்தில் புலிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்கங்களுடன்

11
எவ்வித தொடர்பு மில்லாத அப்பாவி பயத்தின் காரணமாக சிறியதோர் பொய் சொன்ன ஒரே காரணத்துக்காக புலிகளினால் ஈவிரக்கமின்றி கொலை செய்யப்பட்டு விட்டார்.
குருநகர் கடற் தொழிலாளருக்கு தொழிற்சங்கம் ஒன்று அமைப்பது சம்பந்தமாக E.P.R.L.F. இயக்கத்துடன் தொழிற்சங்க தொடர்புகளை மேற்கொண்டு வந்த கடற்தொழிலாளி ஒருவரும் சிறையில் வாடுகிறார். இவர் கொஞ்சம் வசதி படைத்தவர். இவரின் சொத்துக்கள் அனைத்தும் புலிகளினால் பறிமுதல் செய் யப்பட்டு விட்டது. EPRLF இயக்கத்துடன் தொடர்பு வைத்திரு ந்ததாகவும், தொழிற்சங்கம் அமைக்க முயன்றதாகவும் மேற்படி நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மக்கள் வங்கியின் பிரதேச முகாமையாளர், யாழ்ப்பாணத் தைச் சேர்ந்த இவர் இந்திய உளவுப் பிரிவான "றோ" வை சேர்ந் தவர் என குற்றஞ்சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் புலிகளினால் சீர்குலைக்கப்பட்ட வங்கிச் சேவை களை சீராக செயல்பட வைப்பதற்காக இந்திய அமைதிப்படை உயர் அதிகாரிகளை அடிக்கடி சந்தித்து வந்ததே இவர் செய்த குற்றமாகும்.
வேலணை சந்தியில் சிறு தையற்கடை வைத்திருந்த இஸ் - லாமிய சகோதரர் ஒருவரும் சிறையிலடைபட்டிருந்தார். இவரின் கடை அமைதிப்படை, EPRLF. முகாம்கள் அமைந்திருந்த பகுதி யிலேயே இருந்தது. அவர்களின் தையல் வேலைகளை இவர் செய்து வந்திருக்கின்றார். E.P.R.L.F. விற்கு சீருடை தைத்துக் கொடுத்ததாகவும் தகவல்கள் கொடுப்பதாகவும் குற்றஞ்சாட்டப் பட்டிருந்தார்.
யாழ் போதனா வைத்திய சாலையில் சவக்கிடங்கில் வேலை செய்து வந்த ஆறு சிற்றுாழியர்களை புலிகள் கைது செய்திருந்தார்கள். இந்திய அமைதிப்படையினால் கொல்லப்படும் புலிகளின் பிணங்களை வைத்தியசாலைச் சவக்கிடங்கில் வைத்திரு க்கும் போது அவற்றைத் தாம் கடத்திச் செல்வதற்கு ஒத்துழைக்

Page 10
12
காத காரணத்துக்காக மேற்படி அறுவரும் கைது செய்யப்பட் டார்கள்.
வேலணை காட்டுப் பகுதியில் கிராம அபிவிருத்திப் பணி களில் ஈடுபட்டு வந்த நாதன் என்பவர் கிராம அபிவிருத்தி சம் பந்தமான கலந்துரையாடல்களை EPRLF இயக்க மேற்படி பகுதி " அமைப்பாளர்களுடன் இணைந்து நடத்தியிருக்கிறார். இக்கலந் துரை யாடல்களின் போது புகைப்படம் எடுக்கப்பட்டது. அதை, அத்தாட்சிப் படுத்தி நீ EPRLF. ஆதரவாளன். பல புலிகளைக் காட்டிக் கொடுத்தாய் என குற்றஞ்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப் பட்டுள்ளார்.
புலிகளினால் கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண முன் னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின், உதவியாளர் நெல்லிநாதன் வயது சுமார் 65 பருத்த சரீரம் கொண்ட இவர் கடுமையான நோயாளியும் கூட. யாழ் மாவட்ட EPRLF. நாடாளு மன்ற உறுப்பினர்களுக்கு உதவியாளராக இருந்ததாக குற்றஞ் சாட்டப்பட்டிருந்தார். இவர் மூலம் பல தகவல்களைப் பெறமுடி யும் என புலிகள் நம்பியிருந்தனர்.
வடக்கு கிழக்கு மாகாண அரசின் முதலமைச்சர் வரத ராஜப் பெருமாள் அவர்கள் பதவியேற்று யாழ நகருக்கு வந்த போது பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் அவருக்கு மாலை அணிவித்ததற்காக ஒருவர் கைது செய்யப் பட்டிருந்தார். மேலே கூறப்பட்டவை ஒரு சில சம்பவங்களே” ஆனால் வெறும் ஐயப்பாட்டிலும், கோபதாபங்களிலும் கூட பலர் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.
இப்படியான குற்றச் சாட்டுக்களின் பேரில் 3000க்கு மேற் பட்ட அப்பாவிப் பொது மக்கள் வடமாகாணம் முழுவதும் கைது செய்யப்பட்டார்கள். பிள்ளை தமக்கெதிரான இயக்கத்திலிருந்தால் தந்தை கைது செய்யப்படுவார். தந்தை இல்லாவிடில் தாய் கை தாகி பெண்களுக்கான சிறையிலடைக்கப்படுவார்.

13
EPRLF, ENDLF. TELO, EROS, PLOT -fuu Su šis soupJÚ SAGIT ir சிலரும் கைதாகி சிறையிலிருந்தனர். சாவகச்சேரிப்பகுதியில் மூன்று பெரிய சிறை முகாம்கள் அச்சமயத்தில் இருந்ததாக அறி ந்தேன். நான் இருந்த சாள்ஸ் சிறைமுகாம், பொஸ்கோ சிறை முகாம், பெண்களுக்கான தனி சிறை முகாம். இப்பெண்கள் சிறை யில் மாற்று இயக்க உறுப்பினர்களின் தாய்மார், சகோதரிகள், மனைவிமார், சிறு பிள்ளைகள் ஆகியோர் அடைக்கப்பட்டிரு நதனா.
சாள்ஸ் முகாமில் நான் இருந்த போது பொறுப்பாளர் சாள்ஸ் பல தடவை என்னை அடித்தார். அவர் ஒரு மனோ வியாதி பிடித்தவர் போன்றோ அல்லது வெறி பிடித்தவர் போன் றோ தான் செயல்படுவார். யாராவது கைதியைப் பிடித்து அடித் துக் கொண்டிருப்பது தான் அவரின் வேலை, தூஷண வார்த்தை களைத் தவிர அவருக்கு வேறு பேச்சே தெரியாது. பத்து அடி நீளம் பன்னிரண்டு அடி அகலமான சிறிய அறை ஒன்றுக்குள் இருநூறு கைதிகளை வைத்து சுமார் பத்து மணித்தியாலங்கள் அடைத்துவைப்பார். ஒவ்வொரு நாளும் பத்து பத்து கைதிகளைத் தெரிந்தெடுத்து மாறுகால் மாறுகையை ஒன்றாகப் பிணைத்து வில ங்கு பூட்டுவார். அதாவது வலது காலுடன் இடது கையைப் பிணைந்து விலங்கு பூட்டுவார். அப்படிவிலங்கிடப்பட்ட கைதிகள்நடந்து திரிய விடப்படுவார்கள். அவர்கள் பெரிதும் சிரமப்பட்டு நடந்து திரிவதைப்பார்த்து சிரித்து மகிழ்வார். கைதிகளை அடித் துத் துன்புறுத்திக் கொண்டு சிரித்து கேலி பண்ணுவார். "டேய் பு:மக்களே உங்கள் அம்மாமாரை இந்திய ஆமிமாருக்கு விட்டனிங் களாடா?” எனக் கேட்டு அடிப்பார். ஒரு நாளைக்கு பத்துப் பேரு க்காவது மண்டை உடைக்காவிட்டால் தனக்குத் தூக்கம் வராது எனக் கூறி கைதிகளின் மண்டையை பீப்பர் சிலாகையால் அடித்து மண்டையை உடைப்பார். இப்படியான வெறிபிடித்த பொறுப் பாளர் ஒருவரின் கீழ் தான் சாவகச் சேரியில் நான் கைதியாக இருந்தேன்.
ஒரு நாள் எல்லாக் கைதிகளும் வரிசையாக நிறுத்தப்பட் டோம். சிறிது நேரத்தில் விசாரணைக்குப் பொறுப்பாளராக இரு ந்த சலீம் எனும் புலி ஒருவர் தனது மெய்க்காப்பாளர்கள் சகிதம்

Page 11
14
வந்து எம்மைப் பார்வையிட்டார். "உங்களைச் சந்திக்க EPRLF பிரமுகர் ஒருவர் வருகிறார். அவர் சொல்வதுபோல் நீங்கள் நட ந்துக்கொண்டால் உங்களுக்கும் நல்லது. எமக்கும் வேலைகள் எளி தாக இருக்கும்" என்றார்.
முகுந்தன் என்ற அந்த EPRLF. உறுப்பினர் கையிலும் காலிலும் விலங்கிடப்பட்ட நிலையில் ஆயுதம் தாங்கிய புலிகள். காவலாக வர அழைத்து வரப்பட்டார். அவர் பலமாகத் தாக்கப் பட்டிருந்ததுடன் மூளைச்சலவை செய்யப்பட்டிருந்தார். அவர் சகல கைதிகளுக்கும் முன் நிறுத்தப்பட்டு சொற்பொழிவாற்ற விடப்பட்டார்.
தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு இனி வேறு இயக்கங் கள் எதுவும் இயங்க முடியாது எனவே புலிகளுடன் ஒத்துழைக்கு ம்படியும் அப்போதுதான் உங்களுக்கு விடுதலை கிடைக்கும் என வும் சொன்னார். ஆயுதங்கள் இருந்தால் ஒப்படைக்கும்படியும், ஆயுதங்கள் புதைத்து வைத்திருந்த இடங்கள் தெரிந்தால் காட்டிக் கொடுக்கும்படியும் கூறினார். இவரின் பேச்சுக்களில் புலிகளின் மிரட்டல்களுக்காகத்தான் செயற்ப்படுகிறார் என்பதை சொல்லா மல் சொன்னார். அதன் பின் இயக்கங்களில் முக்கியப்பொறுப்புக் களில் இருந்தவர்களை அடையாளம் காட்டும்படி ஒரு அடையாள அணிவகுப்பு நடைபெற்றது. முகுந்தன்தான் கைதிகளை அடை யாளம் காட்டினார். தாங்கள் எதிர்ப்பார்த்த அளவுக்கு கைதிகளை அடையாளம் காட்டவில்லை எனக் கருதிய புலிப்பொறுப்பாளர் சலீம் முகுந்தனை சகல கைதிகளுக்கும் முன்பாக வைத்து பொல் லினால் தாக்கினார். அந்தப் பொல்லு முறிந்ததும் அருகிலிருந்த கதிரையினால் துரக்கி அடித்தார். முகுந்தனின் தலையிலும், முகத் திலும் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. அதன் பின் முகுந்தன் பல கைதிகளை அடையாளம் காட்டினார். அதில் அடையாளம் காட்டப்பட்டவர்கள் தனியாக அடைக்கப்பட்டார்கள். முகுந்தன் எங்கு கொண்டு செல்லப்பட்டாரோ தெரியாது.
சிறையில் இருக்கும் போது எமக்கு வெளி உலகில் என்ன நடக்கிறதென்பதே தெரியாது. நாள் தேதி எதுவுமே தெரியாது.

15
இன்று சிவராத்திரி எல்லாக் கைதிகளும் நித்திரை கொள் ளாமல் இருக்க வேண்டுமென பணிக்கப்பட்டனர். இரவானதும் கைதிகள் எல்லோரும் கணக்கெடுக்கப்பட்டனர். பின்னர் புலிக ளின் இயக்கப் பாடல்களை ஒலிபரப்பினார்கள் அதன் பின் ஒவ் வொரு கைதிகளாக கூப்பிட்டு சினிமாப் பாடல்களைப் பாடும் படி கேட்டார்கள். பாடமுடியாதவர்களையும் வெட்கப்பட்டவர்க ளையும் அன்று இரவு முழுவதும் முட்டுக்காலில் இருத்தினார்கள்.
விரைவில் உங்களை யெல்லாம் விடுதலை செய்யப் போகி றோம் என அங்கு காவலிற்கு நிற்கும் புலிகள் கைதிகள் மத்தியில் அடிக்கடி கூறிவந்தார்கள். ஒரு நாள் இரவு இருநூறு கைதிகளின் பெயர்கள் வாசிக்கப்பட்டது. உங்களை நாளை விடுதலை செய்யப் போகிறோம் அதனால் யாழ் நகரத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென கூறி இருவரிருவராக கால்களை சங்கிலியால் பிணைத்து அழைத்துச் சென்றார்கள். சிறிது நேரத்தில் வெளியில் கனரக வாகனங்கள் புறப்பட்டுச் செல்லும் சத்தம் கேட்டது. மறு நாளும், அதற்கு மறுநாளும் இவ்விதமாக மெத்தம் அறுநூறு பேர் விடுதலை என்ற பெயரில் கொண்டு செல்லப்பட்டார்கள். அடுத்த நாள் எனது பெயரும் வாசிக்கப்பட்டது. மனம் பெரிதும் மகிழ் வுற்றது. விடுதலை. அது எவ்வளவு இன்பமானது என்பது அந்த நேரத்தில்த்தான் தெரிந்தது.
என்னுடன் அறுபது வயது வயோதிபர் ஒருவர் பிணைக்கப் பட்டார். அவரின் வலது பக்கக் காலும், எனது இடதுபக்கக் காலும் சங்கிலியால் ஒன்றாக பிணைக்கப்பட்டு இரும்புப் பூட்டு போடப்பட்டது. அன்று பெயர் வாசிக்கப்பட்ட இருநூறு கைதிக ளும் இருவர் இருவராக அழைத்துச் செல்லப்பட்டு முகாமின் முன் பக்கம் நிறுத்தப்பட்டிருந்த மூன்று லொறிகளில் ஏற்றப்பட் டோம். சுற்றிலும் மூடி அடைக்கப்பட்ட லொறி ஒவ்வொன்றிலும் சுமார் 6க் கைதிகள் வீதம் ஏற்றப்பட்டோம். பின் கதவும் மூடப் பட்டது. காற்றுவர சிறு துவாரம் கூட இல்லாத நிலையில் பிர யாணம் ஆரம்பமாகியது. காற்று வர வழி இல்லாத படியினால் உள்ளே புழுக்கமாக இருந்தது. கைதிகள் மிக மிக நெருக்கமாக அடைக்கப்பட்டிருந்ததால் ஒரே வியர்வையாக இருந்தது. தாகம் எடுத்தது. சுமார் 45 நிமிடங்களின் பின் சற்று நேரம் வாகனம்

Page 12
16
தரித்து நின்று பின்னர் புறப்பட்டது. இவ்விடம் ஆனையிறவு இரா ணுவத் தடை முகாம் என பின்னர் அறிந்து கொண்டோன். இக் காலகட்டத்தில் புலிகளுக்கும் பூரீலங்கா இராணுவத்தினருக்கும் அந்நியோன்னியமான உறவு இருந்தது என்பதால் அவர்கள் எம்மை ஆனையிறவு ஊடாக கொண்டு போவது சுலபமாக இருந் தது. மேலும் இரு மணித்தியாலங்களின் பின் வாகனம் நிறுத்தப் பட்டு கதவு திறக்கப்பட்டது. கண்ணைப்பறிக்கும் வெளிச்சம் எம் மீது பட்டது. சுற்றிவர மின்வெளிச்சம் பாச்சப்பட்டிருந்தது. பெரிய மைதானமென்றில் இறக்கப்பட்டோம். அருகில் இரு பெரிய பழைய கட்டிடங்கள் இருந்தன. களஞ்சிய அறையாக பாவிக்கப்பட்டு கைவிடப்பட்ட கட்டிடமாக அவை எனக்கு தெரிந்தது. விடுதலை எனக் கூறி ஏன் இங்கு கொண்டு வந்திருக்கிறார்கள். என எண்ணினேன். பல புலிகள் அங்குமிங்கும் நடமாடினார்கள். ஆனால் கையில் ஆயுதம் எதுவும் இருக்க வில்லை. எம்மை ஒரு கட்டிடத்திற்குள் அழைத்துச் சென்றார்கள். அங்கு பலர் படுத்துக்கிடந்தார்கள். ஒரே துர்நாற்றம் வீசியது. எம்மையும் படுக்கும்படி கூறினார்கள். இருவர் இருவராக பிணைக்கப்பட்டிருந்ததால் பெரிய சிரமப்பட்டு இடம் தேடி படுத்துக் கொண்டோம். என்னுடன் சங்கிலியால் பிணைக்கப் பட்டிருந்த பெரியவர் அழுதுகொண்டிருந்தார். இவர் லொறியில் வரும் போது முர்ச்சையுற்றார். இப் புதிய முகாமுக்கு வந்ததும் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிவித்தோம். புதிய முகாம் இச்சூழலைப் பார்க்க எனது மனதில் பயம் சூழ்ந்தது. மரண பயம். தூக்கமே வரவில்லை.
விடிந்தது நான் இருந்த கட்டிடத்தினுள் சுற்றும் முற்றும் பார்த்தேன் சுமார் ஆயிரத்து ஐநூறு பேர் வரை இருந்தார்கள். எம்முடன் சாவகச்சேரியில் கைதிகளாக இருந்து விடுதலை என அழைத்துச் செல்லப்பட்ட எல்லோரும் அங்கு இருந்தார்கள். எவ ருமே விடுதலை செய்யப்படவில்லை. பல புதிய கைதிகளும் இருந் தார்கள். பல கைதிகள் அரைக்காற்சட்டை அணிந்திருந்தார்கள். அநேகர் தலை மொட்டை அடிக்கப்பட்டும், கண்ணிமை வழிக்கப் பட்டும் காணப்பட்டார்கள். என்னையும் இப்படித்தான் செய்வார் களோ என்ற பயம் பிடித்துக் கொண்டது.

7
காலை 7 மணிப்போல் சகல கைதிகளும் மைதானத்திற்கு அழைக்கப்பட்டு வரிசை வரிசையாக நிறுத்தப்பட்டோம். ஒவ் வொரு வரிசையாக மலசலம் கழிக்க அனுப்பப்பட்டோம். இருபது அடி நீளம், இரண்டரை அடி அகலம், பத்து அடி ஆழம் கொண்ட மூன்று மலக்குளிகள் வெட்டப்பட்டிருந்தன. அவற்றின் மேல் காட்டுத்தடிகள் போடப்பட்டிருந்தது. எவ்வித மறைப்பும் இல்லை. கைதிகள் மலம் கழிக்கும் போது காவலுக்கு நிற்கும் புலி கள் அசிங்கமாக சொற்பதங்களால் கேலி செய்தார்கள். கைதி களின் ஆணுறுப்புக்களை அசிங்கமான வர்ணணை செய்தார்கள். ஒரு சமயத்தில் நூறு கைதிகள் மலம்கழிக்க அனுமதிக்கப் படுவார்கள். இரண்டு நிமிடத்துக்குள் மலம்கழித்து விட்டு எழுந்து விட வேண்டும். தவறினால் அடி அல்லது கழுவுவதற்கு விட மாட்டார்கள். கழுவுவதற்கு பால்ரின் பேணி ஒன்றுக்குள் மட்டுமே நீர் எடுக்கலாம் ஒரு நாளைக்கு ஒரு தடவை மட்டுமே மலங் கழிக்க அனுமதி தரப்படும். சுகமீனம் ஏற்பட்டால் அதாவது மலச்சிக்கல், வயிற்றோட்டம் என்றால் மேலும் ஒரு தடவை அனுமதிப்பார்கள்,
மலங்கழித்த பின் மீண்டும் கட்டிடத்திற்குள் விடப்பட் டோம். காலை உணவு பத்து மணிபோல் வழங்கப்பட்டது. ஒரு கைதிக்கு அரை இறாத்தல் பாணும் ஒரு கோப்பை தேனீரும் தர ப்பட்டது. w
மாலை நாலு மணியாகியும் மதியச் சாப்பாடு தரப்பட வில்லை. பசி மயக்கமாக இருந்தது. ஐந்து மணிபோல் சாப்பாடு வந்தது. சாப்பாட்டு தட்டுகள் சிறிதளவே இருந்ததால் எனக்கு சாப்பாடு கிடைக்கும் போது மாலை ஆறுமணியாகி விட்டது. சோறும் பருப்புக் கறியும் மட்டுமே வழங்கப்பட்டது. ஒரு தடவை தரும் சாப்பாடுதான். பசித்தாலும் மீண்டும் கேட்க முடியாது. ஒவ்வொரு நாளும் இதே சாப்பாடுதான். ஒரு நாளைக்கு இரண்டு நேர சாப்பாடு மட்டுமே வழங்கப்படும். அதுவும் அரைகுறை யாகவே தரப்பட்டது.
எல்லாக் கைதிகளும் சாப்பிட்டு முடிந்ததும் கைதிகளை கணக்கெடுக்கும் வேலை ஆரம்பமாகியது. காவலுக்கு நின்ற ஒவ்

Page 13
18
வொரு புலியும் கணக்கெடுத்தார்கள். ஆளுக்காள் வ்ேறு வேறு தொகைகளை சொன்னார்கள். முகாம் பொறுப்பாளர் தினேஸ் என்பவர்க்கு கோபம் வந்து விட்டது. தனது தூஷண வார்த்தை களால் ஏசிக்கொண்டு தானே கணக்கெடுக்க ஆரம்பித்தார். முகா மில் இருக்கும் கைதிகளின் தொகைக்கும் அவரின் கணக்கெடு ப்புக்குமிடையே வேறுபாடுகள் வந்ததால் மீண்டும் மீண்டும் கணக் கெடுத்தார். இப்படியாக சுமார் மூன்று மணி நேரம் கணக் கெடுப்பு நடந்தது. முகாமில் இருந்த இரு கட்டிடங்களிலும் கிட்டத் தட்ட மூவாயிரம் கைதிகள் இருந்தனர். மூவாயிரம் கைதிகளை எண்ணிக்கணக்கெடுக்க மூளைகெட்ட புலிகளுக்கு மூன்று மணி நேரம் பிடித்தது. ஒவ்வொரு நாளும் இதே பல்லவி தான. ༣
அன்று இரவு படுக்கவிடும் போது இரவு மணி பதி னொன்று. கைதிகள் அனைவரும் வெறுந்தரையில்தான் படுக்க வேண்டும். கைதிகளின் உடலில் மேற்சட்டையில்லை சிலருக்கு சர மும் சிலருக்கு அரைக்காற்சட்டையும் தான். அநேக கைதிகள் பொக்குளிப்பான் வருத்தம் கொண்டிருந்தார்கள். அவர்கள் படுப் பதற்கு ஒவ்வொரு சாக்கு வழங்கப்பட்டது. பொக்குளிப்பான் வரு த்தக்காரர் சாக்கில் படுப்பதால் உஷ்ணம் கூடி நோய் அதிகரிக் கச் செய்தது.
இரவு படுத்திருக்கும் போது நாம் இருந்த கட்டிடத்திற்குள் மேலும் கைதிகள் வந்து சேர்ந்தார்கள். சாவகச்சேரியில் எம்முடன் சிறையிருந்த மிகுதிக் கைதிகள் தான் அவர்கள் என அடையாளம் காணக்கூடியதாக இருந்தது. - ۔۔۔۔۔۔۔
மறுநாள் அதிகாலை முன்று மணிக்கே தூக்கத்தால் எழுப் பப்பட்டோம். உடனே கைதிகளைக் கணக்கிடும் பணி ஆரம்ப மாகியது. காலை ஆறு மணிவரை மீண்டும் மீண்டும் கணக் கெடுத்தார்கள் அதன் பிற்பாடு மலசலங்கழிப்பதற்கு அனுமதித் தார்கள், மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது முகாம் சுற்றாடலை நோட்டம் விட்டேன்.

19
பாழடைந்த அதாவது தற்போது பாவனையில் இல்லாத இரண்டு களஞ்சிய சாலைகளை மையமாகக்கொண்டு முகாம் நிர் மாணிக்கப்பட்டிருந்தது. ஒரு களஞ்சிய அறை சுமார் 250 அடி நீளமும், 125 அடி அகலமும் கொண்டதாக விளங்கியது. இரு களஞ்சியங்களிலும் கைதிகள் வைக்கப்பட்டிருந்தனர். களஞ்சியங் களை சுற்றி சுமார் 6 அல்லது 7 ஏக்கர் நிலத்தில் காடுகள் எல் லாம் அழிக்கப்பட்டு துப்பரவு செய்யப்பட்டு இருந்தது. முகாமை சுற்றி முட்கம்பி வேலி அடிக்கப்பட்டிருந்தது. அந்த முட்கம்பி வேலியிலிருந்து வெளிப்பக்கம் பன்னிரண்டு அடி தள்ளி மேலும் ஒரு முட்கம்பி வேலி சுற்றி வர அடைக்கப்பட்டிருந்தது. இந்த இரு முட்கம்பி வேலிகளுக்குமிடையில் வளைய வடிவில் முட்கம்பி போடப்பட்டிருந்தது. அத்துடன் இரு வேலிகளுக்குமிடையில் மிதி வெடிகள் பரவலாகப் புதைக்கப்பட்டிருந்தது.
முட்கம்பி வேலிகளுக்கு அப்பால் அதாவது வெளிப்புறமாக தான் புலிகள் ஆயுதப்பாணிகளாக இரவு பகல் எந்நேரமும் காவ லுக்கு இருந்தார்கள். சுமார் முன்னுர்று பேர் கொண்ட தனி இரா ணுவ அணி ஒன்று காவலுக்காக நியமிக்கப்பட்டிருந்தது. முகாமு க்குள் எந்நேரமும் முப்பது புலிகள் ஆயுதம் இல்லாமல் காவலுக்கு நிற்பார்கள். முகாமுக்கு வெளியே உயரமாக எட்டு காப்பரண்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒவ்வொன்றிலும் இவ்விரண்டு புலிகள் வீதம் காவலுக்கு நிற்பார்கள். ஒவ்வொரு காப்பரணிலும் பாரிய நவீன துப்பாக்கிகள் முகாமை நோக்கி குறிப்பார்த்தப்படி நிறுத்தபட்டிருக்கும். அவற்றைவிட மேலும் பன்னிரண்டு காப்பர ண்கள் முகாமைச் சுற்றிவர அமைக்கப்பட்டு இருந்தன. அவற்றி லும் ஒவ்வொன்றிலும் இவ்விரண்டு புலிகள் வீதம் காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்தார்கள். அவர்களும் நவீன துப்பாக்கிகளை முகாமை நோக்கி குறிபார்த்த வண்ணம் வைத்திருந்தார்கள்.
முகாமில் இரு களஞ்சிய அறைகளில் இருக்கும் கைதிகள் மலசலம் கழித்தபின் கட்டிடத்துக்குள் விட்டு அடைக்கப்படுவார் கள். அப்படி அடைக்கப்பட்ட பின் வேறு கைதிகள் மலசலம் கழிக்கச் செல்வதைப் பார்த்து நான் ஆச்சரியப்பூட்டேன், க்
கொழும். தமிழச சிங்கஇ
等

Page 14
20
கைதிகள் எங்கு சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள் என எண்ணி னேனர். சில நாட்களின் பின்னர்தான் அதற்கு விடை கிடைத்தது.
முகாம் அமைந்துள்ள மைதானத்தின் ஒரு பகுதிக்கு கைதி கள் எவரும் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அங்கு பாரிய குழிகள் நிலத்தில் தோண்டப்பட்டு அவற்றிலும் பல கைதிகள் தடுத் வைக்கப்பட்டிருந்தனர். பங்கர் எனப்படும் அவற்றில் தனித் தனியாகவும், கூட்டமாகவும் கைதிகளைப் போட்டு வைத்திருந்தார்கள். தனி ஒரு கைதியை போடும் பங்கர் இரண் டரை அடி அகல மும், 5அடி நீளமும், 15முதல் 20அடி ஆழமும் கொண்டதாக தோண்டப்பட்டிருந்தது. கயிற்றின் மூலம் கைதியை இறக்கி விட்டு கயிற்றை மேலே தூக்கி விடுவார்கள். பங்கர் மூடப்படுவதால் காற்று வசதியோ வெளிச்சமோ இருக்காது. தினமும் காலை வேளைகளில் மட்டும் மலம் கழிப்பதற்காக மேலே ஏற்றுவார்கள். சிறுநீர் கழிப்பதற்கு ஆளுக்கு ஒரு போத்தல் வழங்கப்பட்டிருக்கும். சாப்பாட்டு நேரத்துக்கு உணவும் தண் ண்ரும் வழங்கப்படும்.
இப்படியான பங்கரில் விடப்படும் கைதி நாளாந்தம் படும் சித்திரவதை சொல்லிமாளாது. இரவில் பங்கருக்கு காவல் நிற் கும் புலிகள் மேலே நின்று பங்கருக்குள் இருக்கும் கைதியின் மேல் சிறுநீர் கழிப்பார்கள். தவளைகளைப் பிடித்து வந்து பங் கருக்குள் போடுவார்கள். கற்களால் எறிவார்கள், தண்ணிர் ஊற்று வார்கள். துரங்குவதற்கு விடமாட்டார்கள். இவற்றுக் கெல்லாம் மேலாக வெங்குணாந்தி எனும் மலைப் பாம்பு வகையைச் சேர் ந்த பெரிய பாம்பு ஒன்றை பங்கருக்குள் போடுவார்கள். இருட் டில் என்ன ஏது என தெரியாத கைதி பெரும் கூச்சலிட்டு கத்து வார்கள். அவர் படும் கஸ்ரத்தைப் பார்த்து மேலே நிற்கும் புலி கள் சிரித்து மகிழ்வார்கள். கொலைகாரப் புலிகள் எம் தமிழ்ச் சகோதரர் களுக்கு செய்யும் இம்சைகளைக் காணும் போது என் ரத்தம் கொதிக்கும்.
இப்படியான பங்கருக்குள் விடப்படும் கைதிகள் புலிகளைப் பொறுத்தவரை பெரும் குற்றம் செய்தவர்களாக கருதப்படுபவர்

2
கள். இவ்வகை பங்கருக்குள் சுமார் 100கைதிகள் வரை போடப் பட்டிருந்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்தபோது யாழ் மாவட்ட இணைப்பதிகாரியாக கச்சேரியில் இயங்கி வந்த முகுந்தன் என்பவர்.
மக்கள் வங்கியின் பிராந்திய முகாமையாளர் ஒருவர்.
யாழ் மாவட்ட சபையின் முன்னால் உறுப்பினரும் நாடா ளுமன்ற தேர்தலின் போது யாழ் மாவட்டத்தில் தழிழர் விடுதலை கூட்டணி சார்பில் போட்டியிட்டவருமான நடேசு என்பவர்.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முக்கிய தோழர் ஒருவர்.
ஈரோஸ் அமைப்பைச் சேர்ந்த யாழ் பிராந்திய முக்கிய உறுப்பினர்கள் முவர்.
பணத்துக்காக கடத்தப் பட்டு தடுத்து வைக்கப்பட்டிரு க்கும் இஸ்லாமிய சகோதரர்கள் ஐவர்.
கைது செய்யப்பட்டவர்களில் EPRLF இயக்க உறுப்பினர் கள் என அடையாளம் காணப்பட்ட அனைவரும் தனித்தனி பங் கருக்குள் போட்டு அடைக்கப்பட்டனர். ஏனைய இயக்க உறுப்பி னர்கள் என அடையாளம் காணப்பட்டவர்கள் கூட்டம் கூட்டமாக பெரிய பெரிய பங்கர்களில் போட்டு அடைக்கப்பட்டார்கள். பெரிய பங்கர் எனும்போது முப்பது அடி நீளம் பன்னிரண்டடி அகல மும் பதின்ஐந்து முதல் இருபது அடிவரை ஆழமும் கொண்ட குழியாகும். இப்படியான பங்கர் ஐந்து வெட்டப்பட்டிருந்தது. ஒவ்வொரு பங்கருக்குள்ளும் முப்பது முப்பது கைதிகள் இறக்கப் பட்டிருந்தார்கள்.
நான் இக்காட்டுக்குள் அமைந்திருந்த முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட இரண்டாம். நாள் கைதிகளின் . கால்களுக்கு தனித்

Page 15
22
தனியாக விலங்குகள் போடப்பட்டது. அதாவது இரும்புச் சங்கிலி யால் இரு க்ால்களும் பிணைக்கப்பட்டு மின்சார (Electric Welding) ஒட்டு மூலம் ஒட்டப்பட்டது. ஒவ்வொரு கைதிக்கும் தனித்தனி இலக்கம் கொடுக்கப்பட்டது. கைதிகள் நூறு நூறு ஆட்களாக பிரி க்கப்பட்டன. A பிரிவில் நூறு கைதிகள் B பிரிவில் நூறு கைதிகள் என்ற ரீதியில் வகைப்படுத்தப்பட்டன. சிறையில் எனது இலக்கம் J
18 ஆகும். அங்கிருந்த சகல கைதிகளுக்கும் தனித்தனியே விலங்கி
s
டவும், இலக்கம் கொடுக்கவும் ஐந்து நாட்கள் சென்றது. இவ் வேலை எல்லாம் பூர்த்தியானதும், ஓர் இரவு முன்னர் நான் குறிப் பிட்ட விசாரணைப் பொறுப்பாளர் சலீம் என்பவர் சகல கைதிக ளையும் மைதானத்தில் கூட்டி ஒரு பெரிய சொற் பொழிவு ஆற்றி னார். அதன் சாரத்தை கீழே தருகிறேன்.
"இங்கிருக்கும் நீங்கள் எல்லோரும் தமிழீழ விடுதலைக்கு துரோகம் செய்ததாலும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக வேலை செய்ததாலும், சமூக விரோதிகளாக கருதப்பட்டதாலும் கைது செய் யப்பட்டு உள்ளீர்கள். உங்களில் எவனாவது நான் தமிழீழ விடு தலைக்கு துரோகம் செய்யவில்லை என கூற முடியுமா?. எங்கள் தலைவர் உங்களுக்கெல்லாம் பொது மன்னிப்பு அளி த்துள்ளார். ஆனால் நீங்கள் உண்மை சொன்னால் தான் உங்களு க்கு தலைவரின் பொது மன்னிப்புக் கிடைக்கும். டேய் பு. மக்களே உங்களுக்கு எமது பலம் தெரியவில்லை. உலகின் மூன்றாவது பெரிய வல்லரசான இந்தியாவையே ஓட ஓட விரட்டிய எம்மை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. உலகத்தில் எந்த மூலை க்கு நீங்கள் ஓடினாலும் ஒளிந்தாலும் உங்களை சும்மா விட மாட்டோம். அமிர்தலிங்கத்திற்கு நடந்தது தெரியும்தானே. கொழும் பில் கைது செய்யப்பட்டு இங்கு கொண்டு வரப்பட்ட பலரும் இங்கு கைதிகளாக இருக்கிறீர்கள். விசாரணையின் போது ஒஹித்த ஆயுதங்களை காட்டித்தாருங்கள். உங்களிடமிருந்து பறித்த ஆயுத ங்கள் இலங்கை அரசாங்கம் எமக்குத் தந்த ஆயுதங்கள் எல்லாம் எம்மிடம் போதிய அளவு இருக்கிறது. நூறு வருடத்திற்கு தொடர் ந்து யுத்தம் செய்வோம். இங்கு தண்ணீர் வசதி இல்லை எனவே குடிக்க மட்டும் தண்ணீர் தரப்படும். இப்போதைக்கு முகம் கழுவ தண்ணிர் தர முடியாத நிலை உணவு மூன்று நேரம் தர முயல்கிறோம். ஆனால் சமைக்க நேரம் காணாத படியாலும்

23
பரிமாறுவதில் உள்ள சிரமங்களாலும் உங்களுக்கு இரண்டு நேர உணவு மட்டும் தருவோம். மேலும் நீங்கள் யாராவது புலிகளை சுட்டிருந்தாலும் உண்மை சொன்னால் உங்களை விடுதலை செய்வேன். எனக்கு தேவை உண்மை. உண்மை சொன்னால் உங்களுக்கு விடுதலை."
சலீம் பேசி முடித்ததும் கைதிகள் எல்லோரும் அவரவர் இடத்திற்கு அனுப்பப்பட்டோம். கைதிகள் வரிசையாக சென்று கொண்டு இருக்கும் போது ஒரு கைதி கழுத்தில் செப மாலை அணிந்திருந்ததைக் கண்ட சலீம் "டேய் வேசை மகனே அறடா செபமாலையை இங்கு நான் தானடா கடவுள் எனக்குத் தேவை உண்மை. செபமாலையாடா உனக்கு விடுதலை தரப்போகிறது. அம்மாமாரை, அக்காமாரை இந்தியன் ஆமிக்கு விட்ட உனக்கு எல்லாம் ஒரு செபமாலை" எனப் பேசினான்.
முகாம் பொறுப்பாளர் தினேஸ் என்பவருக்கு உதவியா ளராக கேடி என்பவன் இருந்தான். அவன் மகா முரடன். படு முட்டாள். அரக்கனைப்போல் காட்சியளிப்பான் பள்ளி சென்று படித்திருப்பானோ தெரியாது. “டேய் பரதேசிகளே ஆயிரம் தண் டனை இருக்கிறது. அவ்வளவும் இப்போ செய்வீர்கள்” எனக்கூறி ஒவ்வொன்றாக செய்யச் சொல்லி பணிப்பான். எந்நேரமும் பெரிய பொல்லுடன் கைதிகளைச் சுற்றி சுற்றித் திரிவான். ஒவ்வொரு நாளும் கைதிகளுக்கு அடித்தே இரண்டு மூன்று பொல்லுகளை முறித்து விடுவான். ஒரு நாள் ஒரு இல்லாமிய கைதிக்கு அடித்த அடியில் அவருக்கு மலமே போய்விட்டது. கைதிகளை ஆயிரம் தடவை தோப்புக்கரணம் போடும்படி செய்வான். எந்நேரமும் கைதிகளை கையினால் வாயைப் பொத்திக்கொண்டு இருக்கும்படி சொல்வான். GBonTonTñř சைக்கிளை கைதிகள் இருக்கும் இடத்தில் ஒட்டி வந்து கைதிக ளுடன் மோதுவான் கைதிகள் இருக்கும் களஞ்சிய அறையின் நிலத்தில் 2 அடி x 1 1/2 அடி சதுரங் களாக தீந்தையினால் கோடு கீறப்பட்டு ஒவ்வொரு சதுரத்திற்கும் ஒவ்வொரு இலக்கம் எழுதப்பட்டிருந்தது. அந்த சதுரத்திற்குள் ஒழுங்காக இருக்காத கைதிகள் கேடி என்னும் அந்த அரக்கனினால் பலமாக தாக்கப்படுவார்கள்.

Page 16
24
ஒரு நாள் காலை எழுந்தவுடன் முகாம் பரப்பரபடைந்தது. புலிகள் எல்லோரும் ஒடித்திரிந்தார்கள். சகல கைதிகளையும் அவரவர் இருக்கவேண்டிய இடத்தில் இருத்தினார்கள். முகாமில் ஊசி விழுந்தால் கேட்கக் கூடிய அளவுக்கு அமைதி நிலவியது. காலை உணவு தரும் நேரமும் தாண்டிவிட்டது. உணவு வழங்கப் படவில்லை. தலைவர் கைதிகளை பார்க்க வரப்போகிறார். அத னால் எல்லோரும் ஒழுங்காக இருங்கள் என புலிகள் கூறி னார்கள். மதிய உணவு வழங்கும் நேரமும் வந்து விட்டது தலை வர் இன்னும் வரவில்லை. எல்லோருக்கும் பசி, மதிய உணவும் வழங்கப்படவில்லை. இரவு பத்துமணிக்கும் தலைவர் வரவில்லை. பின்னர் கைதிகளை கணக்கெடுத்துவிட்டு படுக்கவிட்டார்கள். அன்று கைதிகளுக்கு ஒரு நேர உணவு கூட வழங்கப்படவில்லை. நேரம் இரவு பன்னிரண்டு மணியைத் தாண்டி விட்டது. சாவகச் சேரி முகாம் ஒன்றுக்கு பொறுப்பாளராக இருந்த பொஸ்கோ என்பவன் என்னை அழைத்து பேசிக்கொண்டிருந்தான். அந்த நேரம் ஆறு வாகனங்கள் வருவது தெரிந்தது. சாமான் வைத்திரு ந்த குடிசைக்குள் என்னை வைத்து பூட்டிவிட்டார்கள். ஒலைத் தட்டியில் துவாரத்தின் வழியாக வெளியே பார்த்தேன். வாகனங் கள் நிறுத்தப்பட்டு எல்லோரும் ஒரு உசார் நிலையில் இறங்கி தம்மை நிலைப்படுத்திக் கொண்டார்கள். புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையா வாகனத்தில் இருந்து இறங்கினார். மாத்தையாவின் முன்னால் சலீம் கைகட்டி மரியாதையாக நின்றார். “விசாரணைகள் ஆரம்பமாகிவிட்டதா? ஏன் எனக்கு ஒரு குறிப்பும் வரவில்லை? என மாத்தையா கேட்டார். தான் இரு நாட்கள் மன்னார் போய் வந்தபடியால் இன்னும் விசாரணை ஆரம்பிக்கவில்லை என சலீம் கூறினார். உடனே மாத்தையா “மன்னாருக்கு ஏனட்ா போனணி அவளோடு படுக்கவா போனணி பத்து நாளைக்குள் விசாரணை எல்லாம் முடித்து அறிக்கை எனது கைக்கு வரவேண்டும் அல்லது உன்னைத் தொலைத்து விடுவேன்” என மற்ற புலிகளுக்கு முன் கோபமாக கெட்ட வார்த்தைகளால் திட்டினார்.
பின்னர் வாகனத்தில் ஏறி முட்கம்பிகளுக்கு வெளிப்புறமாக முகாமைச் சுற்றி வந்தார். சலீமைக் கூப்பிட்டு. "அந்த வேசை

மக்களைக் கொண்டு இன்னும் காடு வெட்டு” என சலீமுக்கு உத்தரவிட்டு விட்டு தனது பரிவாரங்களுடன் புறப்பட்டு போய் οδιι πή. ❖ሩ
மாத்தையா வந்து போன மறுநாள் கைதிகளுக்கு விசா ரணை ஆரம்பமாகியது. விசாரணைக்காக தனியான பந்தல் போடப்பட்டிருந்தது. விசாரணைப் பந்தல் ஏறத்தாள பதின் ஐந்து அடி அகலம் முப்பது அடி நீளம் கொண்டது. ஒரே சமயத்தில் முப்பது கைதிகளை விசாரணை செய்வார்கள். நாள் ஒன்றுக்கு அறுபது கைதிகள் வீதம் விசாரிக்கப்பட்டார்கள். விசாரணை மேற் கொள்ளும் புலிகள் எல்லோரும் சிறு வயதினர் 18 வயதிற்கு குறை வானவர்கள். இவர்களை மேற்பார்வை செய்ய தீபன் என்ற புலியும் மஞ்சு என்ற புலியும் இருந்தார்கள். விசாரணை யின் போது அடிப்பதற்காக முரட்டுத் தோற்றம் கொண்ட பத்துப் புலிகள் வயர், கம்பி, பொல்லு, பச்சை மட்டை ஆகிய வற்றுடன் விசாரணைக் கொட்டடியில் நிற்பார்கள்.
இதற்குள் ஒரு நாள் புலிகளின் புலன் விசாரணைப் பிரி வுத் தலைவர் பொட்டம்மான் என்பவர் முகாமைப் பார்வையிட வந் தார். ஆனால் முகாமுக்குள் வரவில்லை. முட்கம்பி வேலிக்கு அப் பால் முகாமைச் சுற்றி பார்த்து விட்டு போய்விட்டார். இவர் வாரத்தில் இரு தடவை இவ்வித விஜயம் மேற்கொள்வது வழக் கம். இவர் வரும் நாட்களிலும் முகாம் உசார் நிலையில் வைக்கப் பட்டிருக்கும். இவரும் தன் பாதுகாப்பு பரிவாரங்களுடன் தான் வந்து போவார்.
புலிகளின் விசாரணை ஒரு ஒழுங்கு படுத்தப்பட்டதாக இருந்ததில்லை. ஒரு திட்டத்துடன் விசாரணையை ஆரம்பிப்பார் கள். பின் இடை நிறுத்துவார்கள். கைதிகளின் அறிக்கை ஊரில் இருந்து வரவேண்டும் என்பார்கள் ஊரில் இருந்து வரும் கடி தங்களை பெரிதாக எடுத்து அதை உண்மையாக்க குறிப்பிட்ட கைதியை சித்திரவதை செய்வார்கள். புலித்தலைவர் பொது மன்னிப்பு என அறிவித்தார் என்பார்கள் ஆனால் மன்னிப்பு என் றால் என்ன என புலிகள் எவருமே அறிந்து கொள்ளவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் தண்டணைக்கு உள்ளா

Page 17
26
னார்கள். இங்கு வேடிக்கை என்னவென்றால் புலித்தலைவர் பொது மன்னிப்பு அளித்தது யாருக்கு? குற்றவாளிகளுக்குத் தான் மன்னிப்புத் தேவை, ஆனால் இங்கிருந்த கைதிகள் தமிழுக்கு எதிராக, தமிழருக்கு எதிராக தமிழர் தம் விடுதலைக்கு எதிராக ஒரு குற்றமுமே செய்யவில்லை. புலிகளுக்கு எதிராக செயற் பட்டார்கள் என்பதே இவர்கள் செய்த குற்றம்.
கைதிகளுக்கு காலை உணவாக பாண் தரப்படும் என முன்னரே சொல்லி இருந்தேன் அல்லவா? அந்தப் பாண் கொண்டு வரப்படும் பெட்டிகளில் பேக்கரியின் பெயரும் துணுக் காய் என்று எழுதப்பட்டதையும் பார்த்து இப்பகுதி துணுக்காய்க்கு சமீபத்தில் இருக்கிறது என்பதை ஊகித்துக்கொண்டோன்.
முன்னாள் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வர אי னின் உதவியாளர் நெல்லிநாதன் என்பவர் துணுக்காய் பகுதியில் அமைந்துள்ள இக்காட்டு முகாமில் ஒரு துணியும் இல்லாமல் நிர் வாணமாக வைக்கப்பட்டிருந்தார்.
யோசனையாலும் சித்திரவதைகளாலும் மண்டையில் அடிப் பதாலும் ஐந்து கைதிகளுக்கு மனநோய் பிடித்துக்கொண்டது. இவர்கள் பைத்தியமாக நடிப்பதாக சொல்லி மேலும் மேலும் அடி ப்பார்கள். உணவு கொடுக்க மாட்டார்கள். முகாமில் ஒரு பகுதியில் இருந்த சகதிக்குள் பைத்தியம் பிடித்தவர்களை கட்டி விடுவார்கள் சில நாட்களின் பின் ஒரு நாள் அவர்களை எங்கே யோ அழைத்துச் சென்றார்கள். அழைத்துச் சென்ற சுமார் பதி னைந்து நிமிடங்களின் பின் துப்பாக்கி வெடிக்கும் சத்தங்கள் கேட்டது. பைத்தியமாக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் முகா முக்கு திரும்பவும் கொண்டுவரப்படவில்லை.
விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுபவர்கள் விசா ரணை முடிந்து திரும்பி வரும்போது நடக்க முடியாமல் தான் வருவார்கள். சிலர் பெரிய இரத்தக் காயங்களுடன் தான் வரு வார்கள். இவற்றையெல்லாம் பார்க்கும் போது எனக்குப் பயமாக இருந்தது. இது ஆரம்ப விசாரணை என்றும் மீண்டும் ஒரு விசா ரணை இருக்குமெனவும் பேசிக் கொண்டார்கள்.

27
விசாரணை ஆரம்பமாகி பத்தாவது நாள் விசாரணைக் காக எனது இலக்கமும் வாசிக்கப்பட்டது. நண்பகல் பன்னிரண்டு மணிபோல் சுமார் பதினைந்து வயது மதிக்கத்தக்க புலியின் மேசையின் முன் நிலத்தில் இருத்தப்பட்டேன். கறுத்த துணியி னால் எனது கண்களைக் கட்டினார்கள் விசாரணை ஆரம்பமா கியது. கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எதுவித தயக்கமும் இன்றி பதில் சொன்னேன். ஆனால் எல்லாக் கைதிகளுக்கும் அப்படி பதில் அளிக்க முடியாத கேள்விகளாக அவை இருந்தன. உறவு முறைகள் உறவினரின் முகவரிகள் உறவினரின் பிறந்த திகதிகள் குடும்ப விபரங்கள் போன்ற ஞாபகத்தில் இல்லாத சாதாரண விடயங்கள் எல்லாம் கேட்க்கப்பட்டன. “ஏன் உன்னைப் பிடித்தார்கள்” எனக் கேட்கப்பட்டதும் தெரியாது என்றேன். முதுகுப் பக்கமாக அடி விழுந்தது. ஏன் அடித்தார்கள் என்றோ, யார் அடித்தார்கள் என்றோ தெரியவில்லை. துடித்துப்போனேன் கொலைகாரப்புலிகள் வயரினால் பல தடவைகள் அடித்தார்கள். நீ EP க்கு உளவு வேலை பார்க்கவில்லையா? எனக்கேட்டு பச்சைமட்டையினாலும் அடித்தார்கள். (தென்னை ஓலை மட்டை) உன்னைப் பற்றி ஊரில் இருந்து அறிக்கை பெறப்பட்டுள்ளது. உண்மையைச் சொல் வரதராஜ பெருமாளை அசோகா ஹோட்ட லில் சந்தித்து என்ன பேசினாய் என்று கேட்டுக் கேட்டு அடித் தார்கள். மது அருந்துவாயா? புகைப் பிடிப்பாயா? என்று எல் லாம் கேட்டார்கள். எத்தனை பெண்களுடன் உடலுறவு செய்திருக் கிறாய்? எத்தனை காதலிகள் உண்டு? உனது காதலியுடன் உடலு றவு கொண்டு விட்டாயா? காதலியின் பெயர் என்ன? காதலியின் முகவரி என்ன? காதலி அழகா? வெள்ளையா? கறுப்பா? என்றெல் லாம் விசாரித்தார்கள். இவ்வாறாக சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நடை பெற்றது. முட்டுக்காலில் எல்லாம் அடித்ததி னால் என்னால் ஒழுங்காக நடக்கமுடியவில்லை. ஒரு வாறாக எனது இடத்திற்கு வந்து சேர்ந்தேன்.
இந்த விசாரணை விபரம் மேல் இடத்திற்கு போய் வந் ததும் மீண்டும் ஒரு விசாரணை இருக்கும் என கூறினார்கள். முதல் விசாரணை நடைபெற்று பதினைந்து நாட்களின் பின் மறு விசாரணைக்காக அழைக்கப்பட்டேன். கண்கள் கட்டப்பட்டதும்

Page 18
வேறு ஒரு புலி விசாரணை செய்தார். நீ பெரிய சுத்தல்காரன் என அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. இன்று சாகப்போகிறாய். நான் கேட்பவற்றை எல்லாம் ஒத்துக் கொண்டால் தப்புவாய் என அடித்துக்கொண்டே விசாரணையை ஆரம்பித்தார். நிமிடத்திற்கு ஒரு அடி விழுந்தது. பின் பக்கமாகவும் வேறு யாரோ அடித் தார்கள். எனது நினைவு மயங்கும் வரை அடித்தார்கள். பின்னர் கண் கட்டப்பட்ட நிலையில் ஒருவர் தடி ஒன்றை நீட்டி அதைப் பிடித்துக் கொண்டு வரும்படி என்னை அழைத்துச் சென்றார். கண் கட்டப்பட்டு இருந்ததால் எங்கு கொண்டு செல்லப்படு கிறேன் என்பது தெரியவில்லை. சுமார் ஐநூறு யார் நடந்திரு ப்பேன் கண் கட்டை நீக்கினார்கள் புதிதாக அமைக்கப்பட்டிருந்த ஒரு கூடத்தினுள் இருந்தேன். அங்கு கண் கட்டப்பட்ட நிலையில் ஒரு கைதி கிடத்தப்பட்டிருந்தார். அவரின் மீது நாலு புலிகள் சேர்ந்து ஒரு பெரிய இரும்பு றோதையை உருட்டினார்கள். அதன் கனத்தைப் பார்க்கும் போது ஐநூறு கிலோவுக்கும் மேல் இருக்கம் போல் தோன்றியது. அக் கைதி உருளையை மேலே உருட்டும் போது முதலில் பெரிய சத்தமாக அலறினார். பின்னர் சத்தமே வரவில்லை. முர்ச்சையாகி விட்டார். அவருக்கு தண்ணிர் தெளி க்கும்படி அச்சித்திரவதைக் கூடப் பொறுப்பாளர் காந்தி என்பவர் கூறினார். மூர்ச்சை தெளிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ள ப்பட்டது. சிறிது நேரத்தில் அக்கைதி வெளியே அனுப்பப் பட்
II.
ஒரு கைதி கதிரை ஒன்றுடன் சேர்த்து விலங்கிடப்பட்டி ருந்தார். அவரின் கை விரல் நகங்களுக்குள் நீளமான ஊசி ஏற் றப்பட்டது. ஒவ்வொரு விரலாக குற்றினார்கள். ஒவ்வொரு விரலு க்குள்ளும் ஊசி செருகும் போது அவரிடம் கேள்விகள் கேட்கப் பட்டன. பின்னர் நகத்தைப் பிடுங்க எத்தனித்தார்கள். அதற்குள் கேட்டதை எல்லாம் கைதி அவர்கள் சொன்னபடி ஒத்துக் கொண்டார். அவருக்கு சித்திரவதை முடிந்தது.
காஞ்சோண்டி எனப்படும் ஒருவகை சுணை இலை அப் பகுதிக் காட்டுக்குள் இருந்து கொண்டுவரப்பட்டு கைதிகளின் உடல் எங்கும் பூசப்பட்டது. நிர்வாணமாக்கி இந்த இலையினால் தடவினார்கள். மயிர்க்கொட்டி பட்டால் தடிப்பது போல் தடித்து

99
உடல் முழுவதும் சொறி ஏற்பட்டது. நாலைந்து நாட்களுக்கு உடல் அரிப்பு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இச்சித்திரவதை அங்குள்ள பல கைதிகளுக்கு செய்யப்பட்டு விசாரணை மேற்க் கொள்ளப்பட்டது.
வேறொரு கைதி கால்களும் கைகளும் கதிரைகளுடன் பிணைக்கப்பட்ட நிலையில் இருந்தார். அருகில் ஒரு சூளையில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. அதில் இரும்புக் கம்பிகள் காச்சப்பட்டிருந்தன. மேற்படி கைதியிடம் விளக்கம் நடந்து கொண்டுடிருந்தது. காச்சப்பட்டு தணல் Curraid இருந்த கம்பியினால் கைதியின் குதிக்காலில் சூடு போட்டார்கள். சித்திர வதைக் கூடம் கூச்சலால் அதிர்ந்தது. பின்னர் ஏதோ கேட்டார்கள். மீண்டும் வேறொரு கம்பியை எடுத்து துடையில் சுட்டார்கள் முதுகிலும் சுட்டார்கள். கைதி உணர்விழந்து விட்டார்.
முள்ளுக் கம்பியினால் செய்யப்பட்ட சவுக்குப் போன்ற ஆயுதத்தால் ஒரு கைதியை இரு புலிகள் மாறி மாறி அடித்தார் கள். அவர் உடல் எங்கும் காயப்பட்டு இரத்தம் வடிந்தது. காய த்துக்குள் உப்புத்துரளும், மிளகாய்த்துரளும் தடவப்பட்டது. விசா ரணை தொடர்ந்தது. அவர்கள் கேட்டப்படி எல்லாம் கைதி சொன்னார் புலிகள் திருப்திபட்டார்கள்.
ஒரு கைதிக்கு இருகால்களும் தனித்தனியே இழுத்துக் கட் டப்பட்டது இருகைகளும் உயர்த்திக் கட்டப்பட்டது. கைதியின் இரு காதுகளிலும் கிளிப் (இடுக்கி) இணைக்கப்பட்டது அதில் மின் சாரம் பாச்சப்பட்டது. கைதி புலிகளுடன் ஒத்துப் போகவில்லை. பின்னர் நிர்வாணமாக்கப்பட்டார். ஆணுறுப்பில் கிளிப் பொருத் தப் பட்டு மின்சாரம் பாச்சப்பட்டது. கைதிபட்ட வேதனை சொல்ல முடியாது புலிகள் கேட்ட கேள்விகளுக்கு அவர் ஆம் ஆம் என கூக்குரலிட்டார்.
நீ இந்திய ஆமிக்கு பத்து பெண்களை ஏற்பாடு செய்து கொடுத்தாய் அல்லவா என்றதும் கைதி ஆம் ஆம்' என கத்தி னார். அடுத்த கேள்விக்கு கைதி மெளனம் சாதித்ததும் மீண்டும் ஆணுறுப்பில் மின்சாரம் பாச்சப்பட்டது நீ ஐந்து பெண்களை கற்

Page 19
30
பழித்தாய் அல்லவா என்றதும் கைதி ஆம் ஆம் என அலறினார். புலிகள் திருப்திபட்டு கட்டுக்களை விலக்கினார்கள். கைதி பிணம் போல் சாய்ந்தார்.
என்னை அழைத்து விசாரித்தார்கள். நீ அாரில் நாலு புலி களை இந்திய இராணுவத்திற்கு காட்டி கொடுத்தாய் அல்லவா என்றார்கள். நான் இல்லை என்றேன் உடனே எனது உடல் எல் லாம் காஞ்சோண்டி பூசப்பட்டது. உடல் எல்லாம் அரிப்பு அரித் தது மீண்டும் அதையே கேட்டார்கள். நான் மறுத்தேன். முள்ளுக் கம்பி சவுக்கால் அடித்தார்கள். காயத்தில் மிளகாய்த் தூள் போட் டார்கள். உடல் எல்லாம் தடித்து விட்டிருந்தது. அத்துடன் காயத் திலிருந்து இரத்தமும் வடிந்து கொண்டிருந்தது. மிளகாய்த் துளைப்போட்டதும் என்னால் தாங்க முடியவில்லை. அம்மா அம்மா என அலறினேன். "அம்மாவை இந்தியன் ஆமிக்கு குடன்ரா” எனக் காந்தி என்ற புலி கூறிச் சிரித்தார். உனது ஊரில் நாலு புலிகளை இந்தியன் ஆமிக்கு காட்டிக் கொடுத்தாய் இதற்கு எம்மிடம் ஆதாரம் இருக்கிறது. நீ மறுத்தால் அடுத்து உனக்கு கரண்ட் பிடிக்கப்படும் என மின்சாரம் பாச்கம் இடத்திற்கு கொண்டு போய் சங்கியால் பிணைத்தார்கள் நான் அலறினேன் புலிகள் சிரித்தார்கள். எந்த ஒரு இயக்கத்திலும் சேராத தமிழ் மகனுக்கு புலிகள் செய்யும் கொடுமையை என: ணிக்கலங்கினேன். இப்படிப்பட்ட கொடியவர்களின் கைகளில் தமிழீழம் போனால் மக்கள் என்ன ஆவார்கள். இந்த நேரத்தில் என் மனதில் ஓர் வைராக்கியம் உண்டானது. என்ன சித்திரவதை செய்தாலும் நான் உண்மையைத் தவிர வேறு எதுவும் சொல்வது இல்லை என முடிவு எடுத்தேன். சித்திரவதை கூடப் பொறு ப்பாளர் அதாவது இறைச்சிக்கடை பொறுப்பாளர் காந்தி எனது பைலை படித்துப் பார்த்தான் என்ன நினைத்தானோ தெரியாது எனது விலங்குகளை அவிழ்த்து என்னை பங்கருக்குள் போகும்படி பணித்தான். பங்கருக்குள் போடப்பட்டேன் பங்கர் ஒரே இருட்டாக இருந்தது. அது மூடு பங்கர் பகல், இரவு எதுவும் தெரியவில்லை. எத்தனை நாள் பங்கருக்குள் இருந்தேனோ தெரியாது. பங்கருக்குள் இருந்தபோது கண் கட்டப்பட்டு இருந்தது. 2 நேரம் உணவு தரப்பட்டது. இரண்டு தடவை மலம்

கழிக்க அனுமதிக்ப்பட்டேன். நாலு தடவை நீர் தந்தார்கள் மூன்று நாட்கள் அந்த பங்கருக்குள் இருந்ததாக பின்னர் அறிந்தேன்.
மீண்டும் முகாமில் கொண்டுவந்து விடப்பட்டேன். இறைச்சி க்கடை என்று செல்லமாக அழைக்கப்படும் சித்திரவதைக் கூடம் TTTTT TTTLT S S LTCCLCL S YLLLLLL S LLTLLL SLLLLLLLTTTT TTTSTTTT இருந்தது. சித்திரவதை செய்யபடும் கைதிகளின் கூச்சல் ஏனைய கைதிகளுக்கு கேட்க முடியாத தூரத்தில் இறைச்சிக்கடை இருந் 551.
கைதிகள் எல்லோரையும் தனித் தனியாக பக்கவாட்டிலும் நேராகவும் புகைப்படம் எடுத்தார்கள். பெயர் என்ன, இயக்கம், கைதி இலக்கம் என்பவற்றை அட்டையில் எழுதி கழுத்தில் தொங் கவிட்டு புகைப்படம் எடுத்தார்கள். அதே நிலையில் விடியோ பட மும் எடுத்தார்கள். ஒரு கைதியை வீடியோ படம் எடுக்கும் போது அவர் பெயர், இயக்கம், தீய பழக்கங்கள் என்று எல்லாம் ஒலிப் பதிவு செய்து கொண்டார்கள்.
விசாரணையின் பின் பல கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக அறிந்தேன். முதன் முதலாக மரண தண்டனை அளிக்கப்பட்ட கைதி EPRLF ஐச் சேர்ந்த டக்ளஸ் எனும் நபர் ஆவார். இரண்டாவதாக மன்னார் பகுதியில் இயங்கிய ரெலோ இயக்க உறுப்பினர் பாலி என்பவரும் மரணதண்டனை விதிக்கப் பட்டார்கள். மரணதண்டனை கைதிகளுக்கு முன் நிறைவேற்றப் படுவது இல்லை. வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சய னட் பூசிய கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்கள்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட க்ைதிகள் தனியாக பிரிக்கப்புட்டு அவர்களின் கால் விலங்குகளுக்கு மீண்டும் மின் ஒட்டு மூலம் ஒட்டப்பட்டன. கைகளுக்கும் விலங்குகள் போடப் பட்டு வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
வேறு சில கைதிகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு அவர்களுக்கும் மேற் சொன்ன விதம் விலங்கிடப்பட்டு வேறு இட த்திற்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.

Page 20
சில கைதிகளுக்கு ஒரு வருட சிறைத்தண்டனையும் ஆறு மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் ஒரு சிலர் மட்டுமே விடுதலை ஆனார்கள். பலர் இலங்கை இராணுவத்துடன் புலிகள் புரியும் அர்த்தமற்ற யுத்தத்திற்கு காப்பரண்கள் அமைக்க அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு இராணுவத்தினரின் துப்பாக்கி வேட்டு க்கும் ஷெல் அடிக்கும் பலி ஆனார்கள். தமிழருக்கு புலிகள் தீர்ப் பளிக்க இராணுவத்தினர் தண்டனை வழங்குவதும் தமிழீழ விடு
தலைக்கு மிக மிக அவசியமானதே. எனக்கு ஆறு மாத சிறைத்
தண்டனை விதிக்கப்பட்டு கோப்பாய் முகாம் ஒன்றுக்கு மாற்றப் பட்டேன். அங்கு முகாமில் சுத்திகரிப்பு வேலைகள் செய்ய பணிக் கப்பட்டேன். ஒரு நாள் இலங்கை ஆகாயப்படையினர் நாம் இரு ந்த முகாமுக்கு விமானக் குண்டு போட்டார்கள். புலிகள் பாது காப்பான இடத்தில் பதுங்கி விட்டார்கள். அடைத்து வைத்திருந்த கைதிகளில் பலர் கொல்லப்பட்டார்கள். இச் சந்தர்ப்பத்தை பயன் படுத்தி நான் சிறையில் இருந்து தப்பி வெளியே வந்தேன். வெளி யே வந்த பின்தான் தெரிந்தது தமிழீழமே புலிகளின் சிறைக் கூட மாக மாறியிருந்தது. தமிழீழத்தில் உள்ள மக்கள் எல்லோரும்
புலிகளின் கைதிகள் என்றும் உணர்ந்தேன்.
வஞ்சகப் புலிகளினால் தமிழ்க் கைதிகள் படும் இன்னல் களில் எனக்குத் தெரிந்தவற்றை மட்டும் இங்கு எழுதி உள்ளேன் இதைவிட அட்டூழியங்களும் சித்திரவதைகளும் புலிகளினால் வேறு வேறு இடங்களில் செய்யப்பட்டது. உலகிலேயே மனித உரி மையை சிறிதேனும் அறியாத ஓர் அமைப்பு என்றால் அது புலி கள் இயக்கம் தான் என்பதை உலகமே அறிய வேண்டும். சர்வ தேச மன்னிப்புச்சபையும் மனித உரிமைக்காக குரல் கொடுக்கும் அனைத்து உலக அமைப்புக்களும் இம்மனித உரிமை மீறல்களைக் கண்டிக்க வேண்டும். அத்துடன் கொலைகாரப் புலிகளினது கொடிய சிறையில் வாழும் தமிழ் மக்களை விடுவிக்க அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும்.


Page 21
மண்றா
ஓ கடவுளே! உடலின் பிரயர்த்தனம் உயிரைக் கெஞ்சிப் பற்றிச்
இந்த மனமோ தாங்கொணா வேதனைை சாகீலாமெனத் துடிக்கிறது
பரத்த பூமியில் தர்மம் நீதி நியாயங்கள் 4 கண்களை முடிக் கொண்
|உலகம் முழுக்கப்
|பெயரை ஒட்டிக் கொண் மனித உரிமை அமைப்புக் செவிகளைப் பொத்திக் ெ
மக்களென்று எஞ்சியவர்க வாய்களைப் பொத்திக் :ெ
யாவருமாக கேள்வியற்று வதைக்கும் பூரண சுதந்திரத்தை தாரைவார்த்து விட்டதன் ஆண்டவரே, மன்றாடுகிறோம்
கதியற்ற சித்திரவதைக் கைதிகள் த. எமக்கு மரணத்தைத் தாழு
148 மாவத்தை வீதி கொழும்பு-14 இல் உ பிரின்டர்ஸ் 9 பிக்கரிங்ஸ் வீதி கொழும்பு

مقام "1"
கொள்வது.
it as a
776/Ea
Ls.
f களோ காண்டன.
காண்டனர்.
பின்னால்
FTA)
நம்!
ள்ள சிந்தன் டி சில்வாவினால் சன்னசன்
-13 உள்ள அச்சகத்தில் அச்சிடப்பட்டது.