கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விபுலானந்த அடிகள் (நூற்றாண்டு விழா)

Page 1
ஈழத்து மட்
விபுலானந்
தவத்
-- ர் தமிழ் 4:
- ஆம் -
அசமுமி
வெள்ளைநிற மல்லிகைே வள்ளல் அடியினைக்கு
வெள்ளைநிறப் பூவுமல்ல உள்ளக் கமலுமடி உத்தம
நூற்றாண்டு
 
 
 

sé 2/3
-டக்களப்பு
யா, வேறெந்த மாமலரோ வாய்த்த மலர்எதுவோ? ; வேறெந்த மலருமல்ல; 3னார் வேண்டுவது.
விழா 27.3.1992

Page 2
அடிகளாரின் வ
27.3.1892 இலங்கையின் கிழக்கு மாகாண மான மட்டக்களப்பு என்ற இடத்தில், கிழக்கே வங்காள விரிகுடாக் கடலும்,தெற்கே பசுமை நிறைந்த வயற்பரப்பும், வடக்கே சாய்ந்த மருதூரும், மேற்கே புன்செய் நிலங் களும் அஓணிசெய்கின்ற காரைத்தீவில் கர ஆண்டு பங்குனித் திங்கள் பதினாறாம் நாளன்று சாமித்தம்பியருக்கும் கண்ணம்மைக் கும் மகனாகப் பின்னாளில் விபுலானந்தர் என்ற துறவறப் பெயர் பெற்ற மயில்வாக னன் பிறந்தார். பத்து வயது வரையில் தமிழ்ப்பாடசாலையில் மயில்வாகனன் கல்வி கற்றார். பாரதம், , திருக்குறள்,நன்னூல், தடாமணி நிகண்டோடு வடமொழியையும் ஆங்கிலத்தையும் வீட்டி லேயே கற்றார். பன்னிரண்டு வயதுக்குள் ளேயே அணி, யாப்பு கற்றுத் தேர்ந்து பலரும் வியக்கும் வண்ணம் செய்யுள்களை யாத்தார்.
1903 கல்முனை மெதடிஸ்த மிஷன் பாடசாலை யில் ஆங்கிலக் கல்வி பயிலத் தொடங்கினார்.
1907 மட்டக்களப்பு அர்ச். மைக்கல் கல்லூரி யில் தனது படிப்பைத் தொடர்ந்தார்.
1908 மயில்வாகனன், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத் தகுதித் தேர்வில் முதல் மாணவனாகத் தேறினார். அதனால், தாம் படித்த கல்லூரியி லேயே ஆசிரியராக நியமனம் பெற்றார்.
1911 மயில்வாகனன் தம் அன்னையாரை இழந்தார். இதனால், மட்டக்களப்பிலிருந்து காரைத்தீவுக்குத் திரும்பினார். காரைத்தீவுக்கு அருகிலுள்ள கல்முனை கத்தோலிக்க மிஷன் பள்ளியில் மீண்டும் ஆசிரியராகப் பணி யேற்றார்.
- இரண்டு ஆண்டுகள் கொழும்பு ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்றார்.பண்டி தர் கந்தையா, வித்துவான் சி. தாமோதரம் பிள்ளை ஆகிய சான்றோர்களிடம் சங்க இலக்கியங்களை முறையாகப் பயின்றார்.அக் காலத்தில் பெருமதிப்புப் பெற்றிருந்த கலைச் செல்வரான வித்துவான் கைலாசபிள்ளை யிடம் சிலப்பதிகாரத்தைப் பாடங் கேட்டார். சிலப்பதிகாரத்தைப் பயில்கையில் இயற்றமி ழோடு, இதில் பொதிந்துள்ள இசை, நாட கச் செய்திகளையும் அறிய வேண்டுமென்ற

ாழ்க்கைக்குறிப்பு
அவா, ஒரு பொறியாக மயில்வாகனனின் மனத்தில் பற்றிக் கொண்டது.
1912 ஆசிரியப் பயிற்சியை முடித்துக் கொண் டார். மட்டக்களப்பு அர்ச். மைக்கல் கல்லூரி யில் அதிபர் ஆசிரியராக மயில்வாகனன் நியமனம் பெற்றார்.
- பொறியியல் கல்லூரியில் முதன்மையாகத் தேறி, "டிப்ளமோ' பட்டம் பெற்றார். 1916 கொழும்பு அரசினர் பொறியியல் கல்லூரியில் உதவி வேதியியல் ஆசிரியராகப் பதவியேற்றார். சிறந்த ஆசிரியரென எல்லா ராலும் பாராட்டப்பெற்றார்.
1917 யாழ்ப்பாணம் அர்ச். சம்பத்திரிசியர் கல்லூரித் தலைவரின் வேண்டுகோளை ஏற்று அக்கல்லூரியின் அறிவியல் துறைத்தலைவ ராகப் பதவியேற்றார்.
- உலகினை உலுக்கிய முதலாவது உலக மகாயுத்தத்தில் போர்வீரராகப் பணிபுரிய மயில்வாகனன் முடிவு செய்தார். ஆனால், போர் முடிவுக்கு வருகிறது. எனினும், இரத்த தானம் செய்கிறார்.
- இக்காலப் பகுதியில் பூரீ இராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சுவாமி சர்வாநந்தர் இலங் கைக்கு வருகிறார். அவருடன் மயில்வாகனன் அளவளாவி, புதிய சிந்தனையைப் பெற்றார்.
1919 பிறர் துணையின்றித் தாமாகவே படித்து இலண்டன் பல்கலைக்கழகம் நடத்திய பி.எஸ்ஸித் தேர்வில் வெற்றிபெற்றார்.
1920 மாணிப்பாய் இந்துக் கல்லூரியில் தலைமை ஆசிரியராக நியமனம் பெற்றார். அறிவியல், இலத்தீன், ஆங்கிலம், தமிழ் ஆகிய பாடங்களை மாணவர்க்குக் கற்றுக்கொடுக் கிறார். அறிவியல் என்பது ஆய்வுகளால் வலியுறுத்தப்படுவது என்ற கருத்துக்கமைய, இக்கல்லுரியிலே அறிவியல் ஆய்வுக்கூடம் ஒன்றை அமைத்தார்.

Page 3
- மானிப்பாய் இந்துக் கல்லூரி முகாமை யாளரும் சிறந்த தமிழன்பருமான மு. திரு விளங்கம், மயில்வாகனனின் உற்ற நண்ப ராகி உதவுகிறார். சான்றோரின் உன்னதத் தோழமைக்கு இவர்களின் நட்பு உதாரண மாகத் திகழ்கின்றது. - இலங்கையில் தமிழ் மொழியை வளர்க்கும் நோக்குடன் ஒரு கழகத்தினை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டார். இதன் பய னாக அறிஞர் பலரின் துணையுடன் யாழ்ப் பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்தி சங்கத்தை உருவாக்கினார். 1922 அருமை நண்பர் மு. திருவிளங்கம் இறந்து போன சம்பவம், மயில்வாகனனது மனத்தைப் பெரிதும் புண்படுத்திப் பாதிக் கின்றது. வாழ்க்கை பற்றிய கருத்தோட்டத் தில் இந்த இழப்பு அவரைப் புதிய முடிவு களை எடுக்க வைக்கின்றது.
- துறவியாகும் நோக்கத்துடன் சென்னை பூரீ
இராமகிருஷ்ண மடத்துக்குப் பறப்பட்டு வந்து, அங்கே துறவியாகும் வழிமுறைகளைக்
கடைப்பிடித்தார். மயில்வாகனனுக்கு மடத்தின
ரால் 'பிரபோதசைதன்யர்' என்னும் பிரம
சரியப் பெயர் வழங்கப்பட்டது.
- சென்னையில் பலரது முயற்சியால் ‘தமிழர் கல்விச் சங்கம் அமைக்கப்பட்டது. ஆங்கில மொழியிலுள்ள அறிவியல் கருத்துகளைத் தமிழில் எல்லாருக்கும் புரியும்படி ஆக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி அடிக் கடி இச்சங்கத்தில் உரை நிகழ்த்தினார். - பூரீ இராமகிருஷ்ண மடத்தின் திங்கள் இதழ்களான 'பூரீராமகிருஷ்ண விஜயம் (தமிழ்), ‘வேதாந்தகேசரி (ஆங்கிலம்)க்கு ஆசிரியராகக் கடமையாற்றினார். 183ை சித்தாந்த, காவிய, மேனாட்டு இலக்கி யப் பயிற்சியில் திளைக்கிறார். ஷேக்ஸ்பியர் மீது அளவிலாப் பற்றோடு அதே காவியப் பிரவாகம் தமிழிலும் ஏற்பட மொழிபெயர்ப்பு முயற்சிகள் மேற்கொண்டார். மகாகவி கீட்ஸ் நூற்றாண்டு விழாக் குழுவினருக்கு கீட்சைப் பாராட்டி இலண்டனுக்கு
நீ போய் நூறாண்டு கழிந்தன எனினும் நின்மொழி இன்றலர் நறுமலர் என்ன நின்றது

ஆங்கில மொழிசெலும் அனைத்துநாடர்க்கும் களங்கமில் களிப்பினைத் தந்து கிளர்ந்து விளங்குமாற் கீத்சுஎனும் பெயரே எனும் நீண்ட செய்யுள் அனுப்புகிறார்.
1924 பிரபோத சைதன்யருக்கு சுவாமி சிவா னந்தா ஞானோபதேசம் புரிந்து, சுவாமி விபுலானந்தா என்னும் துறவறப் பெயரை வழங்கினார்.
- மதுரைத் தமிழ்ச்சங்க ஆண்டு விழாவில் கலந்து கொண்டு 'நாடகத்தமிழ் பற்றி அடிக ளார் சொற்பொழிவாற்றினார்.
- ஷேக்ஸ்பியரின் நாடகங்களையும், தசரூ பத்தையும் முன்னுதாரணமாகக் கொண்டு, அவற்றின் நூற்பொருளையும் அமைதியையும் சிலப்பதிகார நூல் முடிவுகளோடு ஒப்பு நோக்கி ஆராய்ந்து 'மதங்கதளாமணி’ என் னும் நாடகத் தமிழ் நூலை எழுதினார். இந் நூலை மதுரைத் தமிழ்ச்சங்கம் இவ்வாண் டிலே வெளியிட்டது. 1924 அடிகளார் இலங்கை திரும்பினார். அவரை இலங்கை மக்கள் பல இடங்களிலும் வரவேற்று, பாராட்டி, கெளரவித்தனர்.
கிழக்கு இலங்கை பூரீ இராமகிருஷ்ண மடத் தின் பாடசாலைகளை நிர்வகிக்கும் பொறுப் பினை அடிகளார் ஏற்றுக்கொண்டார்.
காரைத்தீவில் பெண்களுக்கென ‘சாரதா வித்தியாலயத்தையும் கல்லடி உப்போடை யில் 'சிவானந்தா வித்தியாலயத்தையும் அடிகளார் நிறுவினார். ‘சிவானந்தா வித்தி யாலயா” என்ற இந்த ஆங்கிலக் கல்லூரியின் தலைமை ஆசிரியராக அடிகளாரே பொறுப் பேற்றார். திருகோணமலை சைவப் பாட சாலையைக் கல்லூரியாகத் தரமுயர்த்தி, அதன் அதிபராக அடிகளாரே பொறுப் பேற்றார். இலங்கை திரும்பிய அடிகளார் கண்டி , காலி, பதுளை, தொப்பித்தோட்டம், அட்டன்,

Page 4
யாழ்ப்பாணம் ஆகிய இடங்களுக்குச் சென் றார். யாழ்ப்பாணத்தில், இன்றைய தமிழ் அரசியல் கட்சிகளின் முன்னோடியான யாழ்ப்பான இளைஞர் காங்கிரஸின் முதல் மாநாட்டிற்கு அடிகளார் தலைமை தாங்கி னார். இம்மாநாட்டில் திரு.வி.க.வும் பங்கு கொண்டார்.
- செல்லுமிடமெல்லாம் ஆறுமுக நாவலரின் தமிழ்ப்பணியையும் சமயத்தொண்டையும் அடிகளார் பாராட்டி நினைவுறுத்தி அதை முன்னெடுத்துச் செல்லவேண்டிய அவசி யத்தை வலியுறுத்தினார். 1925 மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் ஏற்பாடு செய்த, மகோமகோபாத்தியாய சாமிநாதை யருக்குப் பொற்கிழி வழங்கும் விழாவில், ஈழநாட்டு அறிஞர்கள் சார்பில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
1926 வேலூரில் நடைபெற்ற பூரீ இராம கிருஷ்ண மட மாநாட்டில் இலங்கைப் பிரதி நிதியாகக் கலந்து கொண்டார். கிழக்கு இலங் கையின் கல்விநிலையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க இலங்கை அரசு நியமித்த குழு வுக்கு அடிகளார் தலைவராகப் பணிபுரிந்தார்
1927 இராமநாதபுரம் அரசர் தலைமையில் சிதம்பரத்தில் ஒரு பல்கலைக்கழகம் நிறுவும் பொருட்டு விசாரணைக்குழு அமைக்கப் பட்டது. அதன் முன்னர், அங்குப் பல்கலைக் கழகம் அவசியம் அமைக்கப்பட வேண்டும் என்று சான்று கூறும்படி அடிகளாரைச் சென்னைப் பல்கலைக்கழகம் வேண்டிற்று. அதை ஏற்று சிறந்த முறையில் - முதன் முதலில் - விசாரணைக் குழுவின்முன் எல் லாரும் போற்றும் விதத்தில் அடிகளார் சான்றளித்தார்.
- கண்டி சைவமகாசபையின் ஆண்டு விழா வுக்கு அடிகளார் தலைமையேற்றார்.
- இலங்கைக்கு வருகை தந்த காந்தியடிகளை, அடிகளார் வரவேற்றார். - மகாகவி பாரதியின் கவிச்சிறப்பை அடிக ளார் இலங்கையில் உள்ளோர்க்குப் பாராட்டி, பரப்புகிறார். 1931 சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல் கலைக்கழகம் அமைக்கப்பட்டு, அதன் முதல் தமிழ்ப் பேராசிரியராக அடிகளார் நியமிக்கப்

பெற்றார்.
- தீண்டாதார் முன்னேற்றத்துக்காகத் தம்மை அர்ப்பணிக்கிறார். அண்ணாமலை நகருக்கு வட கிழக்குப் பகுதியிலிருந்த திருவேட்களச் சேரியில் இராப்பாடசாலை அமைத்து, அடிக ளாரே அம்மாணவருக்கான பாடநூல்களை வாங்கிக் கொடுத்தார்.
1933 அண்ணாமலை நகரில் பட்டமளிப்பு விழா, பேராசிரியர்கள் வீட்டில் ஆங்கில ஏகாதிபத்தியக் கொடிகள் பறக்க விடப் பட்டிருந்தன. விபுலானந்த அடிகளாரின் வீட்டில் மட்டும் இந்திய தேசிய காங்கிரஸ் கொடி பட்டொளி வீசிப் பறந்தது. அப் போது கவர்னர். ஜோர்ஜ் பிரடரிக் ஸ்டான்லி பட்டமளிப்பு விழாவுக்கு வரவிருந்தார். இத னால், அடிகளாரின் இல்லம், காவலரின் தேடுதல் வேட்டைக்கு உள்ளாயிற்று. ஆனால், அடிகளார் அஞ்சவுமில்லை; ஏற்றிய கொடியை இறக்கவுமில்லை, - விவேகானந்தரின், 'விவேகானந்த ஞான தீபம்’, ‘கர்மயோகம்', 'பதஞ்சலியோக தத் திரம்', 'இராசயோகம்' என்பனவற்றைத் தமிழிலே அழகுற உயிர்ப்போடு மொழி பெயர்த்தார். ኳ
- கரந்தைத் தமிழ்ச்சங்க ஆண்டு விழாவுக்கு அடிகளார் தலைமை தாங்கினார்.
- யாழ்நூல் பற்றிய முழு நேர ஆராய்ச்சி யின் பொருட்டு பேராசிரியர் பதவியைத் துறந்தார்.
1935 திருவண்ணாமலையில், சைவ சித்தாந்த மகாசமாச மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார்.
1936 சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற கலைச் சொல்லாக்க மாநாட்டுக் குத் தலைமை தாங்கினார். கலைச்சொல் லாக்க முயற்சியில் கவனம் கொண்டார்.
- பழந்தமிழர் இசை, கலை, சிற்பம் ஆகிய துறைகளில் சென்னைப் பல்கலைக்கழகத்தில்

Page 5
ஆங்கிலத்தில் விரிவுரையாற்றினார். யாழின் இயல்பினைச் சங்க இலக்கியச் சான்று கொண்டு விளக்கி ஒவிய வடிவில் வெளிப் படுத்தினார். இந்த ஆய்வுகள் அனைத்தும் ‘இந்து (THE HNDU) இதழில் தொடர்ந்து வெளியாகின.
1937 கைலாசம், திபெத்நாடு ஆகிய இடங்க ளுக்குச் சென்றார். திபெத்தில் மகாயான புத்தசமயப் பள்ளிகள் தரிசனம். 1939 இலங்கை கல்முனையில் ஆசிரியர் விடு முறைக்கழகத்துக்குத் தலைமை தாங்கினார். - ‘பிரபுத்த பாரதா’ இதழாசிரியராக இமாலயச் சாரலிலுள்ள மாயாவதி ஆசிர மத்துக்குச் சென்றார். - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்தேர் விாளராய்ப் பணி.
- யாழ்நூல் ஆய்வில் முழு மூச்சுடன் ஈடு படுகிறார்.
1943 இலங்கைக்குத் திரும்புகிறார். இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரி யராய்ப் பணியேற்றார்.
- கல் த்ெதுறைப் பாடநூற்குழு, தேர்வுக்குழு, கல்வி நிலை ஆராய்ச்சிக்குழு சிறப்பு உறுப் பினர். இலங்கை அரசு நடத்தும் தேர்வு களுக்கு, தேர்வாளராகப் பணியாற்றுகிறார்.
- கொழும்பு நகர மண்டபத்தில் அடிக ளாரைப் பாராட்டி விழா எடுக்கப்பெற்றது. இலங்கைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஐவர் ஜென்னிங்ஸ், கல்விமந்திரி கன்னங் கரா, அரசாங்கசபை அங்கத்தவர் நடேச பிள்ளை, ஜனாப் டி.பி. ஜெயா, வண. பீட்டர் பிள்ளை ஆகியோர் இதில் கலந்து கொண்டு அடிகளாரைப் பாராட்டினார்கள்.
- கல்விப்பாடத் திட்டத்தில் இசையை அடிக ளார் ஒரு பாடமாக்கினார். அதற்கான பாடத்திட்டத்தை வகுத்தார். - தேர்வுகளுக்கு சமயத்தை ஒரு பாடமாக்கி, அதற்கான பாடத்திட்டத்தை வகுத்தார். 5.6.476.6.47 அடிகளாரின் பதினான்காண்டுக் கால ஆராய்ச்சியின் விளைவான இசைத் தமிழ் நூல் ‘யாழ் நூல், திருக்கொள்ளம் பூதூர்த்திருக்கோயிலில் கரந்தைத் தமிழ்ச் சங்க ஆதரவில் இசைப் பேராசிரியர் திருப்

பாம்பரம் டி.என். சாமிநாதப்பின்ளை, கரந் தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை, சென்னை மாகாண கல்விமந்திரி அவிநாசி லிங்கம் செட்டியார், சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் ரா.பி. சேதுப் பிள்ளை ஆகியோர் பாராட்ட வெளியிடப் பட்டது. அடிகளார், யாழ்நூலிற்கு விளக்க மளித்தார்.
19.7.47 அடிகளார் உடல் நோயுற்றுக் கொழும்பு மருத்துவமனையில் இறைவனடி சேர்ந்தார்.
21.7.47 சிவானந்த வித்தியாலயக் கல்லறையில் அடிகளார் திருஉடல் அடக்கம் செய்யப் பட்டது.
கல்லறையில் அடிகளாரே யாத்த பின்வரும் கவிதை பொறிக்கப்பட்டுள்ளது:
வெள்ளை நிறமல்லிகையோ,
வேறெந்த மாமலரோ வள்ளல் அடியிணைக்கு
வாய்த்த மலர்எதுவோ? வெள்ளை நிறப்பூவுமல்ல;
வேறெந்த மலருமல்ல; உள்ளக் கமலமடி
உத்தமனார் வேண்டுவது. 1974 “யாழ் நூல் இரண்டாம் பதிப்பு கரந்
தைத் தமிழ்ச் சங்கத்தினரால் வெளியிட வெளிவந்தது.
விபுலானந்த அடிகளாரின் நூல்கள் மதங்க சூளாமணி
யாழ்நூல்
நடராஜவடிவம்
மொழிபெயர்ப்பு
கர்மயோகம்
ஞானயோகம் விவேகானந்த ஞானதீபம் நம்மவர் நாட்டு ஞான வாழ்க்கை விவேகானந்த சம்பாசணை எனவும் பிறவும்

Page 6
அறிஞர் புகழுரைசு
வாழி தமிழர் வளர்புகழ் ஞால ஏழிசைதேர் யாழ்நூ லிசைபரப் வித்தகனார் எங்கள் விபுலாநந் அத்தனார் தாளெம் அரண்.
இயல்வளங் காணோம் இசைவளங் கா துயரொழிந் துவப்பா ராசுவித் தோன்ற மயர்வறத் தெளிந்தீ ராயிரம் யாண்டா துயர்தவிர்த் துவந்தான் எனத்தமி ழன்
தொகுப்பு: செ. யோகநாதன்
தயாரிப்பு: ச. சச்சிதானந்தன்
காந்தளகம் 834 Tabat T Tagu சென்னை - 600 002
விபுலானந்த அடிகள்
0 'கடவுள் என் முன் தோன்றினால் எனக்கு முத்தி தரும்படி கேட்கமாட்டேன். முத்தி என்னளவில் நின்றுவிடும். அதிலும் பார்க்க எல்லாரும் இன்புறும்படி சேவை செய்வதா னால் அதிலுள்ள இன்பமோ ஒப்பற்றது. ஆனபடியால் சேவை செய்ய வரம்தா - என்றிப்படியாகக் கேட்பேன்."
0 'எல்லாத்தானத்திலும் ஞானதானஞ் சிறந்த தென்பார். அது இம்மை மறுமைப்பயன் இரண்டினையும் கொடுப்பதாகலின் வித் யார்த்திகள் மனஞ்சோராது கல்விமுயற்சியிற் கருத்தாயிருக்கும் வண்ணம் அவருக்கு வேண்
 

ளுட் சில.
மெலாம் பி-வாழியரோ
தப்பெயர்கொள்
- சு. வெள்ளைவாரணனார்.
னோம் என்றுமுன் இரங்கிய தமிழர் ல் துறவற நெறிதலை நின்றே ய் மறைந்தொழி யாழ்திறங் கண்டென் னை தொல்லெழில் பெற்றுள முவந்தாள்.
- க. வெள்ளைவாரணனார்
அன்பளிப்பு: மு. கணபதிப்பிள்ளை
கிரந்தள்கம் மறவன்புலவு சாவகச்சேரி
ரின் மணிமொ ழிகள்
டிய அன்ன வஸ்திரம், புத்தகம் என்பன வற்றைக் கொடுத்துதவுதல் பெரியதொரு புண்ணியமாகும்'
D ' கருதிய பொருளெல்லாவற்றையும் எத னாற் பெறலாம்? தவத்தினாற் பெறலாம். இடையறாத முயற்சியே தவமெனப்படுவது. வேண்டிய பொருள் அனைத்தையும் தருத லால் முயற்சியானது காமதேனு, கற்பகதரு, சிந்தாமணி யென்னும் இந்திரச் செல்வங் சுளை நிகர்த்தது."
D ' பிறமொழி மாந்தரிடமிருந்து ஒன்றும் பெறலாகாதென்று வாதிப்பாரொரு சாரார். மேலை நாட்டாரது 'ஸயன்ஸ்' எம்மிடமிருந் தது, அழிந்து போயிற்று என்பர். அங்ங்ன மாயின் அதனைப் புதிதாக ஆக்கிக் கொள் வது அவசியந்தானே என்போம். தொல் காப்பியனாரையும் அவரனைய பெரியோரை யும் ஆசிரியராகக் கொண்ட நாம் ஹக்ஸ்லி, டார்வின், தொம்சன், கெல்வின் முதலி யோரை ஆசிரியராகக் கொள்வோமெனின் அறிவுடையோரைச் சாதிசமயபேதம் பாரா மல் ஏற்றுக் கொள்ளுதல் கடனென்போம்.