கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: முக்கனிச்சாரம்

Page 1
■
 


Page 2


Page 3

O Ꮫ ᏧᏏ Ꮷ5
( L1 ru? J ki(35rG )
来
1. பூபதிலியர்
2. அம்லெது
3. நீ விரும்பியவாறு
숨
ஆசிரியர் : அ. மரியதாசன்
率
பதிப்புரிமை : ஆசிரியருக்கே உரியது.
s
邻
கொழும்பு வீரகேசரி அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது.
兴
Copyright Reserved
景
I 953。
fi J II in

Page 4

சிரி

Page 5

FOREWORD.
Of the three poems, constituting this "Trilogy' in Tamil (if I may say so for the want of a better word) II stuf ('King Lear') appeared in the Virakesari in 1951, 9 in 63 ("Hamlet") in the Thinakaran in 1953, and f f(Sifruary ("As You Like It') appears in print now for the first time. But they were all composed some years-two of them certainly ten years-ago. Which of these was written first, I leave discerning critics to discover, if they have the patience.
SHAKE SPEARE was not only a Prince among dramatists, but also a very great poet. Apart from his "Sonnets', 'Venus and Adonis', 'Rape of Lucrece' and a few other purely poetical compositions, his very dra. mas, 37 in number, forming the bulk of his output, move mostly in verse. But for the poetic quality of his plays, they would have been as dead as pork long, long ago, like the plays of his contemporaries and successors.
Failure by Tamil writers to realise this poetic aspect of his plays more than perials a want of an equal and efficient knowledge of both English and Tamil was responsible for the few 'Translations' and Prose Tales from Shakespeare available in Tamil not having captured the imagination of the Tamil Reader-with the result that hardly any Tamil, who does not understand English knows the great writer or realises the large space he fills in World Literature.
M I hope I shall mot tread on the corns of anybody holding a contrary view, if I say that from the time

Page 6
0.
of that Aryan Hermit, Agastiar, the Tamils have shown a remarkable aptitude for injesting Aryan ideas on Grammar, Ethics, Religion, Philosophy and Literature and transforming them into "something rich and strange" of their own. The Tamil 'Ramayanam' and the several "Bharatams" are among such patent examples.
Now Shakespeare too was an Aryan although from the West. He was, however, more than that : he was a Citizen of the World, some of whose ideas at least should be known to the intelligent Tamil, who cannot understand English. This need may be taken as my excuse for attempting to “il ut over" to my people some of the ideas of Shakes eare, not mine, in Tamil verse, and in words, which, but for rare exceptions, are simple enough to the average Reader.
I must confess that I was not a little heartened by the praise of writers and poets with a standing in the Tamil Literary World, who have seen my verses published as aforesaid, and I sincerely thank then for their generosity. My thanks are also due to Messrs. K. P. Haran & V. Loganathan, the Editors of the Virakesari and Mr. V. K. P. Nathan, the Editor of the Thinakaran for publishing the first two poems as a foresaid, and to my own children for their assistance in proofreading.
120, Hultsdorp Street, A. Maria. Dason. Colombo, 8th December 1953.

'ipi 5 fij JFI J í
(வெண் செந்துறை )
* முண்முடி வேந்தன் முகத்திரு கருணை எண்ணிட யாப்பும் எளிதினில் வருமே.
பாயிரம்
- ( (35 f4)Fuurf fuIslur)
ஆங்கில கவியாம் அரியஷேக்ஸ் பியராற் பாங்குடன் பகர்ந்து பல்லா யிரராற் கண்டுங் களித்துங் கவிதையாய்ப் படித்தும் பண்டுதொட் டின்றும் பரவசப் படுத்தும் முப்பத் தேழு மூதறி வுணர்த்தும் ஒப்பின் றுயர்ந்த உசிதகா டகங்களுள் மூன்றிங் குதேர்ந்து மொழியச் சான்றேர் சமேதம் தருவது கலனே.
குறிப்பு: (1) * முக்கனிச் சாரம் 99 - மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் போன்ற "பூபதிலீபர்,” “அம் லெது,' " நீ விரும்பியவாறு’ என்னும் ஷேக்ஸ்பியர் அரு ளிய கனிகளின் சாறு எனப் பொருள்படும்.
(2) 66 முண்முடி வேந்தன் yy --முள்ளில்ை செய் யப்பட்ட கிரீடத்தைத் தரித்த (வழிபடு கடவுள்) இயேசு கிறிஸ்து நாதர், முகத்து-ஏழாம் வேற்றுமைத் தொகை; இரு-இருக்கிற (வினைத்தொகை) ; கருணை - 2-ம் வேற்று மைத் தொகை, எண்ணிட - (நூலாசிரியர்) நினைத்திட.

Page 7
I
d பூபதி லியர் (கலிவிருத்தம்) 1. சீருங் கீர்த்தியுஞ் செல்வமும் மாட்சியும் வாரு முன்பிரித் தானிய மண்டலம்
பூரு வத்தினிற் பூபதி லீயரே சாரு நாள்வரை சங்கையோ டாண்டனன்.
2. பெற்ற மூவரும் பெண்களே யானரால்
கொற்ற வன்மிகக் கூனிய போதிலும் மற்ற வர்கையில் வைக்கச்செங் கோலினை சற்று மேவிரும் பாததைத் தாங்கினன்.
3. கொனரில் இரீகனுங் கோர்திலி யாவெனுக்
தனையை மாரினுள் தன்னுயிர்த் தாபரம் அனைய வீற்றுதித் தாளினை யன்புடன் மனதி லேற்றியே முன்னவன் போற்றின்ை.
(அறுசீர் ஆசிரிய விருத்தம்)
4 எழிலினைக் கேள்வி யுற்ற இறையவ ரிருபேர் வந்து
கிழவனின் கனிட்டை தன்னை மணந்திடக் கேட்டுக்
கெஞ்சி ஒழுகிடு காளில் லீயர் உடையன கொடுத்தே ஓய்வைத் தழுவிடத் தனையை மாரைத் தன்னிடம் வரவழைத்தான்.
(எழில்=அழகு, கனிட்டை=களிஷ்டை=கடைசியா கப் பிறந்த மகள். )

பூபதி லீயர் 3
5. "வீட்டுல கெழுந்த பின்னர் விவாதமோன் றேற்ப டாமல்
காட்டினைப் பிரித்தேன் மூன்ருய் கவின்றிடு நாருக் கொப்பச் சாட்டிடு வேனின் றெ’ன்று தலைவனே விளக்கிப் பெற்ற சேட்டையை நோக்கி யன்பைச் செப்பிடக் கோனரில் சொன்னுள் ( வீட்டுலகு-மோக்ஷம், விவாதம்-தர்க்கம்; நவின்றி டும்-சொல்லிடும்; நார்-அன்ட சேட்டை-சிரேஷ்டைமூத்த மகள்.)
6. * பற்றதன் பொருளைக் கூறப் பதமிலை விழியின் பார்வை மற்றருக் திரவி யங்கள் வடிவுயிர் மகிமை சுவேச்சை பெற்றெரு பிள்ளை காட்டும் பரிவிலும் பெரிதே' யென்னக் கொற்றவன் கொடுத்தான் காட்டிற் குறித்தொரு பாகக்
தன்னை. ( பதம்-சொல்; சுவேச்சை-சுயேச்சை-சுதந்திரம்; மற்றருக். சுவேச்சை-வடிவு, உயிர், மகிமை, சுவேச்சை
ஆகிய மற்ற அரும் திரவியங்கள்.)
7. முன்னவள் வார்த்தை முற்ருய்த் தனதளி துலக்கிற்
றென்றும் இன்னுமே பெரிதே யென்ற இடைமகட் கேற்ற பாகம் மன்னவன் கொடுத்துச் சின்ன மகளினை நோக்கிச்
சொன்னுன், “என்னதான் கூறப் போற யெடுத்திடச் செழித்த
பங்கை?”
(அளி=அன்பு போரு?ய்=போகிருய்-இடைக்குறை.
8. அக்கைமா ருரைத்த பற்றி லபகட மிருக்கக் கண்ட
சொக்கவேல் விழியி னுளும், 'சொல்வதற் கிலையொன் M றெ'ன்முள்

Page 8
4. மூக்கனிச் சாரம்
மிக்கவேயதிச யித்து வேந்தனுஞ் சொன்னன், 'சொல்லத் தக்கதொன் றில்லா விட்டாற் றரவுமொன் றிலதாய்ப்
ઉંt ul ઉto.” இலை-இல்லை, போமே-போகுமே-இடைக்குறை கள் ; சொக்கவேல் விழி - அழகிய வேல்போன்ற கண் ;
வேல்விழி-உவமைத்தொகை.)
9. 'கட்டிய கணவர் மார்க்குக் கனிவிலா துமக்கு முற்றுங் கொட்டிய வக்கை மார்போற் கொடுத்திட வியலா
தென்னல் கிட்டிய கொழுக லுக்குக் கிடைக்குமென் பரிவிற் பாதி நட்டென வளர்த்து காரைக் காட்டிய வமக்கு மீதி.” 1 கொழுநன்-காதலன், நார்-அன்பு; கனிவு-உருக் கம்.)
10. என்று கோர் திலியா சாற்ற ஈன்றவன் கொதித்துப் பொங்கி, * இன்றுமே தொடங்கி யெம்முள் எவ்வித வுரித்து மில்லை ஒன்றுமே கொடுக்கப் பாகம் உனக்கிலை யேமது நாட்டில் மன்றலில் விரும்பு வோன மணந்துபோ” வென்றே
.6)GalT660 ܫ ( மன்றல்-கலியாணம்.)
... ( 65 rł 3 sifńII r ) 11. சினமிகுந்தோ னுண்மையினைத் தெரிகிலனுய்ப் பொய்யு ரைதத கொனரிலிற்கும் இரீகனிற்குங் கொடுத்தான்க னட்டை பங்கும், இனிமாறி மாதமொன்(ர மிவர்ம%னயில் வாழ்வதற்குக் தனதுபரி வாரமதாய்ச் சதவிர ருங்கேட்டான்.
[ ۰ الله اطل جهت را الهه |

பூபதி லியர் 5 ܗܝ
12. இந்தமதி யீனமேல்லாம் எதிர்த்தகற்கெண் டின்பிரபை அந்தநகர் காட்டிலில்லா தகன்றிடவே ஆணையிட்டான்; வந்தவிரு காதலரை வரவழைத்'தென் னன்பொழிந்த எந்தவொரு சீதனமில் லாதிவளை யேற்பீரோ ? ( இது முதல் இரு பாக்கள் ஒரு தொடர். சீதனம் =
ஸ்திரி தனம். )
13. என்றதற்குப் பர்கண்டி இழியிறைவன் 'இல்லை'யென அன்றுமங்கை செய்பிழையை யறிந்தபிரான்ஸ் பேரரையன் நன்றவளைக் காதலித்து நாரிறைவி நாட்டிறைவி என்றவளை யேற்றவளோ டேகின்ை தன்தேசம். (இழி-இழிந்த, கீழ்த்தரமான, செய்=செய்த-வினைத் தொகைகள், நாரிறைவி நாட்டிறைவி=uெeenothisheart and of his country. G5d li=G,53,55pg5 (4-in Gap) றுமைத் தொகையில் செய்யுள் முடிவது இலக்கியத்திற்கு மாருனதன்று.)
14. சிலநாட்க Nத்ததுவும் செருக்கடைந்த மூத்தமகள்
பலமிழந்த பார்த்திபன்றன் பரிவாரத் தைச்சுருக்க கலகங்கள் செய்தரென்று கடத்திவிட வெண்ணியவள் குலமகளுக் கேராத கூதறைக ளே விவிட்டாள்.
கூதறைகள் = கீழ்த்தரமான செயல்கள்; கலகங்கள் செய்தர் - (இலீயருடைய பரிவாரமாகிய நூறு வீரர் கல கங்களைச்) செய்தார்.)
15. கட்டளைகள் லீயரிட்டாற் கவனியா தேயிருக்கத்
துட்டவிந்தச் சூர்ப்பணகி தூண்டியதாற் முசர்களும் மட்டுமரி யாதையின்றி மன்னவனை நிந்தையினுல் கட்டப்ப டுத்திவரும் காலமதி லங்கொருகாள். ( இதுமுதல் இரு பாக்கள் ஒரு தொடர்; சூர்ப்பணகிகுர்ப்பணகி போன்றவள்; தாசர்கள்=அடிமையூழியர்)

Page 9
16.
17.
18.
19.
20.
முக்கனிச் சாரம்
கிட்டவி ருக்கவெண்ணிக் கேண்மையினுற் கீழ்வேடம் இட்டுவந்த கெண்ட்பிரபே யெதிருரைகள் பேசிநின்ற துட்டவோஸ்வால் டென்பவனை துரிதமாய்த்தன்
காலாலே தட்டிவி ழுத்திவிட்டான் தரைமணலைக் கவ்விடவே.
[ துரிதம்-விரைவு.)
முடனென்ற பேர்வகித்த மூதறிவுப் பையலொன்றும் கூடவன்பா லேதொடர்ந்து கொற்றவனுர் குற்றமெல்லாம் பாடன்மு கத்தாலும் பகடி மு கத்தாலும் வாடவிடாப் பாடமதாய் மன்னனுக்குச் சாற்றிவந்தான்.
வஞ்சகியின் வாயினின்று மண்டுகங் கள் போல ஒஞ்சியா தேவிழுந்த வரைகடமைக் கேட்டமன்னன் எஞ்சிய பற்றுரைத்த விடைமகளி னில்லமதில் தஞ்சம டையவேண்ணி தன்று தாய்க் கெண்டை
விட்டான்.
தூதனங்கு சேர்ந்தகணம் துட்டகொன ரீல்கடிதம் ஏதுவாய் ஈன்றவனை ஏற்காதி ருக்கவேண்ணி பாதகி இரீகனென்பாள் பத்தாவு டன்கிளாஸ்தர் போதனை கேட்பாள்போல் போனுளி வன்மனைக்கு. (கிளாஸ்தர்-ஒரு பேர்பெற்ற பிரபுவின் பெயர்.)
அந்தமன நீங்கிவரும் ஆகடியங் கொற்றவற்குத் தந்தகோடு மூழியனைத் தாக்கிய டித்தகேண்டை வந்துகண்ட இரீகனென்பாள் வன்கணவன் கொற்றவற்கு நிந்தையெனப் பாராமல் கேரேவி லங்கிலிட்டார்.
இfகனென்பாள் வன்கணவன்-இர்கன் என்பாளும்
அவள் நாயகனுகிய வன் கணவனும் (உம்மைக் கொகை)

பூபதி லியர் 7
( சந்தக் கலிவிருத்தம் ) 21. மனைமுன்வரு முதுமன்னவ னிதுகண்டதும் 'உனையார் எ?னயாரென மதியாமலே யிடுவித்தவ னிதனில்?” எனதும்மகள் மணவாளனு மிதுசெய்தன ரெனவே சினமிக்கவ னவளேங்கெனத் தெரிவித்தனன் பிரபே.
( மகள்=மகளும் (உம்மை, செய்யுள் விகாரத்தால் தொக்கது.) )
22. இறைவந்தது தெரிவித்தது மிடைபத்திரி வழியால்
உறுதன்களை யுரையாடிட விடுபான்மைய திலதென் றறிவித்தது மரையன்வெகு கொதிகொண்டவ ளயர்வு குறையென்றவள் சமுகம்தர நிலைநின்றனன் குமிறி.
அயர்வு - (கள்ள) வருத்தம், குமிறி - (கொதி நீர் போல) ஒலித்து. )
23. சமுகங்கொடு மகடன்னெடு சனியன்பொலக் கொனரில்
குமிறும்முது தலைவன்முனே எமன்வந்தெனக் குறுக, அமுதூட்டிட மிககஞ்சினை யுமிழ்பாம்பிதென் றரையன், 'நமதிக்கரை தனநோக்கிட ஒருகாணமு மிலையோ?”
எமன்-சாக்கடவுள்.)
24. எனவன்னவள் பிழையென்னேன இடைபத்திரி முனவள் மனமொத்தவள் மனவன்றனைக் கொனரில்பதி செலவும் தனதில்இரு தசவீரரும் இனும்ஐவரில் அதிகம் முனிவில்கொள முடியாதென முதுமன்னவன்
சொலுவான். (பதி-இடம், சசம்-பத்து; முனிவில்-முனிவு+இல் -Lகையில்லாமல்; தனதில்-தனது மனை, சொலுவான் = சொன்னன் (கால வழுவமைதி) - சொலுவான் (இடைக் குறை) )

Page 10
8 முக்கனிச் சாரம்
25. " தொகையின்படி உனதன்பினிற் கொனரில்அளி
இருமைத் தகைமைத்ததே அதனுலினி அவளே கதி' எனவே, 'மிகையேமிகை தசகஞ்சுகர்! நமதேவலர் வினைமேல் வகைவேறேதும் வடிவோவினி' எனமாறினள்
கொனரில். (கஞ்சுகர்-மெய்க்காப்பாளர்; வினை-பணிவிடையா கிய வினை; அன்பினின்-அன்பு + இன் (சாரிபை) + இன் (ஐந்தனுருபு ஒப்புப் பொருளில் வந்தது ) = அன்பினைப் போல். )
(அறுசீர் ஆசிரிய விருத்தம்) 26. கொதித்தான் புலந்தான் சுரர்முன் கொடிமையைக் கூறிப் பாம்பாய் உதித்தார் இருவர் தம்மை ஒறுத்திட வேஞ்சக் நேர்ந்தான் விதித்தான் வெளிதான் ஏக வருமழை புயலை நோக்கான் மதித்தான் இருளில் சேர்தல் இழிவில தென்றே மன்னன். ( சுரர்-தேவர்; ஒறுத்திட-அழிக்க, தண்டிக்க, வெஞ் சம்= சபதம். )
(டிெ வேறு) - 27. மையினை விழைந்து லாவும் வலியுடை விலங்கு தாமும் பெய்யுமிம் மழையிற் சேக்கை பிரிந்திட விரும்பா ராவில் ஐயனை வெளியிற் போக ஐயையோ விடுத்தார் பாபம் செய்வதைத் தலைமேற் கொண்டு சேயெனப் பிறந்த
பேய்கள். ( மை-இரா (மை நிறமானது அக்குணத்தினையுடைய இராவுக்கானபடியால் பண்பாகுபெயர்); விழைந்து-விரும்பி; வலியுடை விலங்கு-சிங்கம்போன்ற வலிமை பொருந்திய மிருகங்கள் (விலங்கு-பால்பகா அஃறிணைப் பெயர் பன் மைப் பொருளில் வந்தது); ஐயனே=தந்தையை.)

பூபதி லீயர் 9
28. போனவன் மழையிற் ருேய்ந்து புகலிட மில்லா தலைந்து
வானினு முயர்ந்த சீற்ற வலியினுற் பித்த கை கானிடை யிருந்து கோனைக் கரைநகர் உடோவர்க்
கோட்டை தானதிற் சேர்த்தான் கெண்டின் தயையுடை பிரபு தானே. (கோ-அரசன், உடோவர்=இங்கிலாந்தின் தென்கரை யில் உள்ள ஒரு துறைமுகம் ; கெண்ட் - இங்கிலாந்தின் கென் கிழக்குக் குறிச்சி, கோ+ன்+ஐ=கோனை (கோ' என்னும் பெயர் 'ன்' சாரியை பெற்று 2-ம் வேற்றுமை உருபேற்றது.)
29. சேர்த்தபின் வங்க மேறிச் சிறப்புறப் பிராஞ்சை யாளும்
பார்த்திபன் றேவி யான பரிவுள கனிட்டை காதில் வார்த்தனன் சேட்டை மாரின் வஞ்சகச் செயல்கள் யாவும் போர்த்தொழில் செய்தால் நாடு பூபதிக் காகு மென்றன். (பார்த்திபன்-அரசன்; வங்கம்-கப்பல்; பரிவு=தர் தைமேல் உண்மை அன்பு: 'காதில் வார்த்தனன்' - இலக் ఈఓar.
30. அக்கைமார் கொடிமை யாவு மறிக்தகோர் திலிய தைத்துத் தக்கவோர் படையி ைேடு தருக்குற்றேர் வலிச வட்டித் திக்கிலான் வசமே யாட்சி திருப்பிட வேண்ணி உடோவர்ப் பக்கலி லிறங்கிப் பிதாவைப் பரிவுடன் தேடலுற்ருள். ( தருக்கு-செருக்கு, சவட்டி=கொன்று, அழித்து;
பக்கல்=அருகு அயல்.)
(கலி விருத்தம் )
31. கஞ்சுகர் காவலைத் தாண்டிய காவலன்
விஞ்சிய வீற்றில்ை ஆடையுந் நீங்கியே கெஞ்சிலே தான்பதி யென்னுக்கி னைவினுல் துஞ்சுவ யல்மலர் சூடிய லைந்தனன்.

Page 11
10 முக்கனிச் சாரம் (விஞ்சிய வீறு-பைத்தியத்தின் மேலீடு; பதி-அரசன்;
துஞ்சுவயல் மலர்-வயல்களில் வாடும் பூக்கள்.)
32. காரிகை யேவலர் கண்டவிக் காட்சியை
சோரும வள்வயின் சொன்னதுஞ் சிந்தையை நேரிது வாகங் மிர்த்திடு வோர்தமைக் கோரினள் சீர்செயக் கோர்திலி பொன்னுடன்,
காரிகை-அழகிய கரிய கூந்தலையுடைய பெண் (கோர்
திலியா); வயின் =இடம்; கோரினள்=வேண்டினள்.)
33. சொன்னம ருத்துவர் சொஸ்தம விரித்ததும்
பொன்னினி யல்பினள் பூசனை செய்கையில் மன்னனி வள்மக ளேன்றுமன் னிப்பினே தன்முழந் தாள்களில் தாழ்ந்துமி ரக்திட t
(இது முதலிரு பாக்கள் ஒரு தொடர்.)
34. தன்முழந் தாள்களில் தக்தையின் ஆசியை
அன்னவ ளங்ங்ணம் வேண்டிடத் தாழ்ந்தளால் இன்னலத் தீர்த்திட வீற்றினள் ஈன்றவன் சென்னியைத் தாவிமுத் தம்பல செய்தனள்,
(பொன் = இலக்குமி, காழ்ந்தள் - (கங்தையை வணங்க) தாழ்ந்தள்; ஆல்-அசை, சென்னி=,கலை.)
35. இங்ங்ன மிவ்விரு பேர்தமை விட்டுப்போர்ச் சங்கமஞ் சென்றுகி கழ்ந்ததைச் சாற்றுமுன் பங்கமி ழைத்தமா பாதகப் பெண்களின் சங்கதி தன்னையுங் கூறுதல் தர்மமே.
போர்ச்சங்கமம்-இருபக்கப் படைகளும் கைகலக்கும்
இடம்; மாபாதகப் பெண்கள்-பெரும் பாவஞ்செய்த கொன ரிலும் இரிகனும்.)

பூபதி லியர்
( Car jFi, 3 řů )
36. கொனரிலி னைக்கொண்ட குற்றமில்லா 'ஆல்பணியை" மனதிலன்னுள் வேறுத்தாள்தன் மாசினைக்க டிக்ததல்ை இனமினத்தோ டென்றற்போல் ஈரமிலிரீ கன்றன்னை சினமுமிழுங் ' கோண்வாலே ' ன் கொடியனே
கொண்டிருந்தான்
( குறிப்பு:- கொனரில் கணவன் பெயர் ஆல்பனி, இரீ கன் கணவன் பெயர் கோண்வால்; ஈரம்இல் - இரக்கமில்
லாத, உமிழும்= கக்கும்.)
37. பிரபுகி ளாஸ்தருக்குப் பிறந்தவிரு மக்களுள்ளே
கரவிற்கா முற்றபெண்ணுற் கண்டுகொண்ட ‘எட்மண்டே' மரபின்ப டிமனந்த மங்கைபெற்ற ‘எட்காரின் உரிமையைக் கவர்ந்துகொண்டா னுருட்டுப்பு ரட்டாலே.
38. எட்மண்ட்தன் தந்தையின்மேல் இயம்பியகோ
ளாற்பிரபைக் கட்டிகாற் காலியிலே கண்ணைக்கோண் வால்சிதைக்க எட்டித்த டுத்ததன தேவலனுற் காயமுற்றுப் பட்டபதிக் கெட்மண்டைப் பதிலாய்ரீ கன்விழைந்தாள்
பட்டடதி-இறந்த கணவன் ஆகிய கோண்வால்.
த றரு ஆ
39. நிறையொன்றில் லாக்கொனரில் நிகழ்போரில் தன்பதியை மறைவினிற் கொன்றுதன்னை மணக்கும்ப டியேகடிதம் கறையிற்பி றந்தொழுகுங் கயவனேட் மண்ட்கையில் உறையத்து தாய்விடுத்தாள் ஒஸ்வால்டென் னுழியனை.
கிறை-கற்பு; கிகழ் - கிகழும் - வினைத்தொகை;
கறை-குற்றம், கயவன்-கீழ்மகன், நீசன், உறைய==சேர.

Page 12
12
40.
முக்கனிச் சாரம் அண்ணனைய கற்றிவிட்டு அப்பன்மு கத்திருந்த கண்ணையுமே யவிப்பித்த காதகனை லீயர்பெற்ற பெண்ணினுரு வேயெடுத்த பேய்களே காதலனுய் எண்ணிக டந்ததனை எவரும்போ ருத்தமென்பார்.
கண்ணை அவிப்பித்தல் - கண்களின் பார்வையைப்
போக்குவித்தல். )
41.
42.
கண்ணிழந்த கிளாஸ்தரினக் கண்டோஸ்வால்ட்
கொல்லவக்து மண்ணிழந்த எட்காரால் மாண்டானி வன்மடியிற் கொண்டுவந்த காகிதத்தை ஆல்பணிக்கெட்
கார்கொடுத்துத் தண்டிக்க வெட்மண்டைத் தான்வருவா னென்றுரைத் தான். மண்-கிலம்,
துன்னடத்தைக் காரனெட்மண்ட் துணிவாகத் தாக்கிய தால் பின்னிகழ்ந்த போரதனிற் பிரித்தனியர் தாம்வென்ருர் தன்கைதிக ளேயான தலைவனுடன் கோர்திலியை மன்னிப்பொன்றில்லாமன் மாய்விக்கச் சிறையிலிட்டான்
( பின் னிகழ்ந்தபோர்-பிரித்தானியர் படைகளுக்கும்
பிராஞ்சு தேசப் படைகளுக்கும் இடையில் கிகழ்ந்த சமர்.)
43. மக்களது மாறுமண மிவர்பாற்சா ராதிருக்கத்
தக்கம றியலிற்குத் தானிவரைப் போக்கினனேன் றிக்கொடியன் கூறியதை இவன்பிர சாநிலைக்கு மிக்கசேய லென்றுரைத்து மிரட்டினன் ஆல்பணியே.
மறியல்-சிறை.

பூபதி லீயர் 13
44. இதற்கெதி ராயிரீகன் இவன்தன்ப டைகளுக்கு
முதற்பதவி தன்பேரான் முனையில்வ கித்துவெற்றி யதற்கிறைவ ஞனதணு லால்பணிக்குத் தானுமவன் எதற்குமீ டென்றுரிமை இறுமாப்பைக் காட்டிடவே.
{ இது முதல் இரு செய்யுட்கள் ஒரு தொடர். முன
யில்-(போர்) முனையில் ; ஈடு-சமம். )
45.
46.
*தன்தகைமை யாலுயர்ந்தான் தழைக்கவில்லை
நின்பேரால், என்றுமுத் தாள்மறுக்க இதற்கிரீகன் தன்னுரிமை தன்னுலெவ் வுத்தமற்குஞ் சமமான னென்றுகிற்க, " உன் கணவ னெனினல்லோ ஒக்குமஃதென் முள்
கொனரில். மூத்தாள்-கொனரில். )
* சரசம்பண் வோர்தீர்க்க தரிசிகளு மாவதுண்டு! உரியோனே யெனவேளியா யுரைக்கின்றே னெ'னரீகன், * மருவம னதிலுண்டோ மாப்பிளையை நீதானெ'ன் றரவம்போற் சீறினளே யவளுணவில் நஞ்சையிட்டாள். ( சரசம்-கேலி; தீர்க்கதரிசி-பின் நடப்பதை முன்
காண்போன்; உரியோன்-கணவன்; கொனரில் இரீகனது உணவில் நஞ்சைச் சற்றுமுன், போட்டுவிட்டாள்.)
47.
* உன்னுடன் பாட்டினிலே யுறையவில்லை யஃதே'ன் முன் தன்மனைவி யென்றவட்குத் தலைப்பிரபா மால்பணியே. ! நின்னுடன் பாட்டிலுமே நிற்கவில்லை' யென்றெட்
மண்ட் வன்மமுடன் சாற்ற,'வம்பா, என்னிலது தங்கியதே ! இதுவுமத்ெத பாட்டும் ஒரு தொடர்.)

Page 13
4. முக்கனிச் சாரம்
该 48. உன்னேயுமென் னில்லாளேன் உரகத்தை யுந்துரோகம்
பின்னியதன் பேராலே பிடிக்கிறேன் உன் எக்காளம் தன்னையூே திங்கொருவன் தரிசனம் ஆகானேல் என்வலியை நீயறிவா யெ'னமுடித்தா னுல்பணியே.
உரகம்=நெஞ்சினல் நகரும் பாம்பு; தரிசனமாதல்= கண்ணுக்குப் புலப்பட வருதல்; ஆகானேல் = ஆகாவிட் டால்; முடித்தான் - (கூறுவதை) முடித்தான்; எக்காளம் தன்னை நீயூது=எக்காளத்தை நீ ஊது. )
49. எக்காள முதியதும் எட்காரே யெட்மண்டின்
மிக்கபழி கள் யாவும் விளம்பியவ்வின் வுையிரை தக்கபோரில் தறித்தான்நஞ் சாலொழிந்தா ளேயிரீகன் அக்கையொரு கத்தியினல் அகற்றினளே தன்னுயிரை,
( இன்ன உயிர் - துன்பம் செய்த உயிர். )
( 5' L2 i Sisi l r )
50. சொன்ன துர்ச்சனர் பட்டே தொலையுமுன்
தோல்வி யற்றுச் சிறையகம் பக்கவள் தன்னைத் தான்கொலை செய்தனள் போலவே
சாட்ட மாய்த்திட எட்மண்ட் பணித்ததால் மன்னன் வாழ்த்தி மகிழ்ந்த மகளினை
வன்கொ லைக்கையே தொங்கவே வைத்திட அன்ன பாதகம் செய்த தொழும்பன
ஆண்டே யக்கணங் கொன்ற னரையனே. (அகம் - உள்; சாட்ட - தற்கொலை செய்தாளெனச் சாட்டக்கக்க மாதிரியாக, வன்கொலை - குணவாகு பெயராகி அக்கொலையைச் செய்கவனக் குறிக்கின்றது; கொழும்பன் - அடிமை; ஆண்டே - அவ்விடத்திலேயே.)

பூபதி லியா 5
51. எங்கிப் பூவை யுடலினை யீன்றவன்
ஏக்தி யால்பணி பாசறை வந்துழி தீங்கின் வாழ்நர் தொலைந்தன ரென்பதுக்
தேரத் தானிய லாத குரிசிலே, * நீங்கள் கல்லின ரோஅழு மின்’னென
நின்ற கண்பரை கோக்கி (புரைக்கையில் தாங்கத் தான்முடி யாத கவலையால்
சாய்ந்து விண்ணுல கெய்தினன் லீயரே, ( பூவை - (உவமை ஆகுபெயராகி ) இனிய குரலின வளான கோர்திலியாவைக் குறிக்கின்றது; தீங்கின் வாழ்நர் - திங்கினல் வாழ்ந்தவர் - (கொனரில், இரீகன், எட்மண்ட்); கேர - விளங்க, குரிசில் - அரசன், நீங்கள் கல்லினரோ - ( இவ்வுடலைக்கண்டும் அழாமலிருக்க ) நீங்கள் கன்மனத்தி னரோ ? அழுமின் - ஏவல் பன்மை)
(பூபதி லியர் முற்றிற்று )

Page 14
III அம் லெ து
( Fossi herffüJür )
1. கங்கைபோ லாநிரை கர வா தமுதை
எங்கணும் பொலிவா யிரங்கும் இடென்மார்க்குத் தேயந் தன்னைச் செங்கோல் 'ஒச்சிய நாயக ைெருகாள் 3 நற்கனி வனத்தினுள் ஆசன மொன்றில் அயர்ந்தவச் சமயம் மோசமா யுயிர்க்கு முடிவுவக் தமையால் பிரசைக ளறியப் பிரசித் தமாகக் காவல ரிைறந்த காரண மரவின் விடமேன மொழிந்து வேந்தனு மாகிய தம்பி ** கிளாடியஸ் 99 தமையன் விதவையை * மதியிரண் டுள்ளே மணமுஞ் செய்த விதிக்கெதி ரான விபரீ தங்களைக் * கஸ்திக ளுடனே கண்ட அம்லெது என்றவக் காட்டின் இளவர சன்தன் அன்னையின் செயலா லளவிலா காணமுக் தந்தையின் வீவாற் ருங்கொணுத் துயரமுஞ்
(5մl1ւկ:- (1) கங்கை மாநதிபோல் பசுக்கூட்டங்கள் பாலை ஒளியாது எங்கும் தாராளமாய்ச் சுரக்கும் (உவமையணி), 'ஆனிரை' (ஆன்--கிரை) எனினும் ஒக்கும்; (2) ஒச்சியசெலுத்திய; (3) நற்கனிவனம்-Orchard; (4) மதியி
ரண்டு-இரு மாதங்கள்; (5) கஸ்தி=மனநோ; (6) வீவு-சா.

அம்லெது 17
சிக்தையைக் கலக்கச் சினேகிதன் ஒரேசியோ சோன்னவார்த் தையில்ை தோன்றிடு மாவி மன்னவ கை மாண்டவன் பசுவோ என்றறி வதற்காய் இருவருங் கூடி நின்றுகொத் தளத்தில் நெடுங்கா வல்செய கடுங்கிடுங் குளிருள கள்ளிர வினிலே *திடுங்கிட வருவம் தென்பட மகனும் தக்தையின் 3 சாயருன் சமுசய மிலையென, வந்த 4 வரவேசம் ° மகத்துவ நடையுடன் கின்றவர் வழியாய் நிலத்தினைத் தொடாது சென்றுபோ கையிலே சேயனும் அம்லெது, * அப்பனே யரசே, யாதுகா ரணமாய் இப்படித் திரிவது? இயம்புக நோக்கம்!” எனவது சைகையால் இவ?னயே யழைக்க " மற்றவ ரிவனை மறித்திட மீறிக் கொற்றவன் நிழலிடம் குறுகிட கடந்தபின், * இனிமேற் ருேடரேன்; இயம்புக கருத்தை' எனவது தரித்தே, "என்மொழி கவனிஉன்பிதா ஆவிகான் 'உத்தரிப் பிடத்தைச் சொன்முக மாகச் சொல்லிட மயிர்கள்
(1) பசு-ஆன்மா, ஆவி, (2) திடுங்கிட - திடுக்கிட (மெலிக்கல் விகாரம்); (3) சாயமுன்-சாயல்தான் - உரு வம், பிரதி; (4) ஆவேசம்=ஆவி, (5) மகத்துவ-ஒய்யா ரமான, பீடுடைய, (6) சேயன்-மகன்; (1) சைகை-குறி காட்டல்; (8) மற்றவர் = ஒரேசியோ முதலியோர், (9) கிழல்=ஆவியின் கிழல்; (10) உத்தரிப்பிடம்=கிரிஸ்தவ வழி பாட்டில் சாவானபாவத்தில் இறவாதோர் மோட்சம் சேரு முன் தம் பவக்கறை சுத்தமாம்வரையும் தங்கவேண்டிய
இடம் அல்லது நிலை, (Purgatory).

Page 15
18 முக்கனிச்சாரம்
சிலிர்சிலிர்த் துயரும் ! சிறையதன் கெந்தகச் சுவாலையிற் பவக்கறை சுத்தமாம் வரையும் அவாவுடன் நீங்க அங்கலாய்ப் பிருந்தும் அங்கியான் பகலிற் றங்கிட வேண்டும் ! இங்கர வாலே யென்னுயிர் நீங்கிய கதைதனைப் பரப்பிய * கட்செவி யெனது விதவையைக் கெடுத்த விபரீ தத்தொடு * மகுடமுந் தரித்து வாழ்கிற தறிவாய் ! பழம்மிகத் தொங்கும் பாரிய 4 படப்பையில் வழமையின் படியான் வந்துதுங் குகையில் உன்சிற் றப்பன் ஓர்கொடுங் கஞ்சை என்கா தினுள்ளே எய்திட வூற்ற ° உதிரம் திரைய உரிபுண் ணுகச் சதியா லுயிரும் சடுதியிற் பிரிக்ததே ! நெருப்பினில் வேகும் நேரமாகிறதே! உருக்கமுன் பிதாவில் உனக்கெது "முண்டேல் வன்கொலை செய்த வஞ்சகன் மீது வாங்கிடு பழியை மாதா வைத்தவிர்! ஈங்கிவள் செயலே இவள்? முள் ளாகும் !" எனவது சொல்லி ஏகிட அம்லெது சினத்துடன் கொதித்தும் சிற்றப் பனைக்கொல
குறிப்பு: (1) அங்கலாய்ப்பு - மிகவாய்ப் பரிதவித் தல், ஆவற்படுதல்; (2) கட்செவி=செவியில்லாததன் பொரு ட்டு கண்ணையே செவியாகவும் கையாளும் பாம்பு; (3) மகு டம்-முடி, (4) படப்பை-தோட்டம், (5) உதிரம்=இரத் தம், (6) உரி-தோல் ; () உண்டேல் :- இருக்கின்றது ஆனல். (8) முள்ளு=முள்ளுத் தைத்தவரை எப்படி கிதமும் அது வருத்தமோ அம்லெது தாய் செயல் அவள் மனத்தை
கிதமும் புண்ணுக்கிக்கொண்டேயிருக்கும் என்றவாறு.

அம்லேது 19
முன்னமோர் சான்று முக்கிய மாக் என்னமா திரியும் எடுத்திட வேண்ணிப் பித்தனப் போலப் பிதற்றியு முடுத்தும் தத்துவங் கவரத் தக்தையைக் கொன்றவன் இரகசி யத்தை யின்னதென் றறியா மரத்தினிற் பார்க்க ? மத்தனுய்த் திரியப் பழமொழி யநேகம் பாடமாய்ப் படித்த கிழவனு மமைச்சனுங் கேள்விச் செவியனும் ஆகிய “பொலோனியஸ் 29 அபிப்பிரா யத்தில் தன்மகள் மேலுள தவனமே 9 விசரின் உன்னத காரண மெனவு முரைத்துத் தையலைக் காணும் தருணமே அம்லெது மையலான் மயங்கிய மனமதைப் * புகல அவளை யவன்வரும் வழியினி லிருத்திப் பவமதி லாழ்ந்த பதியோடு பதுங்கி நிற்கும் நேரம் அம்லெது தன்னகம் பெற்றவெண் ணத்தைப் பேசினன் தனக்கே !
(கலிநிலைத்துறை) 'இருக்கவோ வல்லா திறக்கவோ இதுவே கேள்வி கேருக்கி வீழ் ஊறின் நிகரிலாப் "பாணம் மற்றெப் 9 பருக்கையுந் தாங்கும் பொறையது பண்போ வலது விருப்பிலா வாழ்வை விடுத்திடன் மேன்மை தானே?
குறி ດ້ຖ- (1) அறியா=அறியாத - கடைதொகுத்த
எதிர்மறைப் பெயரெச்சம், ‘மந்தன்' என்னும் பெயர்ச்சொல் ஃலக் கொண்டது; (2) மந்தன் - அறிவில்லாதவன்; (3) விசர்-பைக்தியம், (4) புகல-சொல்லி வெளியிடும் பொரு ட்டு, (5) பதி=அரசன், (6) வீழ்-விழுகிற (வினைத்தொகை); (T) பாணம்=அம்புகள்; (8) பருக்கை - (கவண்) கற்கள், பாணம், பருக்கை-பால்டகா அஃறிணைப் பெயர்கள் பன் மைப் பொருளில் வந்தன.

Page 16
20 முக்கனிச்சாரம்
( 9 jf Jr jof U afio,55Î) 3. சருவிடு தீத னைத்துஞ் சகமதி லொழிந்து போக
ஒருசிறு வூசி கொண்டே யுயிரினக் கோதக் கூடும் வருகதி யேதென் றேவர் மனிதரி லறியார் அச்சம் பருவரல் யாவுக் தாங்கிப் பணிந்திடச் செய்யும்
* ஆசான். உ ( கலிவிருத்தம் ) 4. பின்னிவன் காதலி பிரார்த்தனை சொல்கையில்
தன்பவக் தன்னையும் தாழ்குழ லெண்ணிடச் சொன்னதுஞ் சுந்தரி முன்னிவன் தக்துள கன்கொடை யாவையுங் நீட்டிக வின்றளே :-
(அறுசீராசிரிய விருத்தம்) 5 'கொடுத்தவர் கொடிய ராகக் கொழுத்த*வங்
கொடைக டானும் அடுத்திடு மற்ப கை அருகிடுக் நறையு மெ’ன்ன தடுத்திவ னவற்றைத் தானுங் கோடுத்தில னென்றே கூறி விடுத்தவள் மீதோர் பார்வை வெறித்திவன் பார்த்துச்
சென்றன். ( 82) Ir Gabriggi) it ) 6. எல்சினுேர் ஊர்க்கே எய்திய கூத்தின்
வல்லுக ரான மாக்களில் முதல்வன
குறிப்பு:- (1) பருவரல்-துன்பம்; (2) ஆசான்-நயி ந்தை, நயினர். (அச்சம் என்னும் எழுவாய்க்குப் பயனிலைகுறிப்பு வினைமுற்று); (3) தாழ்குழல்=தாழ்ந்த (நீண்ட) கூந்தலையுடைய பெண்ணுகிய ஓபிலியா (அன்மொழித் தொகை), (4) அங்கொடை-அழகிய கொடை, (5) நறை= (கொடைகளின்) வாசனை. -

அம்லேது 2
அம்லெது தன்னிடம் அழைத்து முன்னைபோல் கொடியதோர் கொலையினைக் கொண்டகா டகத்தை கடித்திட முடியுமா கவின்றிடு வாயென இயலுமென் றிவன்சொல இதுட்சில வரிகளை மயங்கிட வனைத்தரண் மயிைலே யடுத்தரா நாடக நிகழ்ச்சியை நடத்திடப் பணித்தும் * சேடனை யனைய சிற்றப் பனையதைப் பார்த்திட வழைத்தும் பாங்கணும் ஒரேசியோ சோர்விலா திவனை நோக்கிடச் சொல்லியும் தானுமே மிகவவ தானமாய்க் குறிக்கையில், தேனும் பால்போல் தேவியுங் கணவனும் நாடக மதனில் நடித்ததின் பிறகள் * வாடலிற் கணவன் அயர்ந்துபோ யினபின் தேவியு மகலத் திருடனுக் கொப்பவோர் பாவியுண் ணுழைந்து படுத்தவன் செவியுள் * கடுவதை வார்க்கக் கண்ட கிளாடியஸ் சடுதியா யெழுந்து ° தன்னறை தேட நாடகம் தரித்திட நண்பனும் ஒரேசியோக்
கூடவா வேசக் கூற்றினிற் பிழையிலை என்றிரு வருமா ? யேற்றிடும் வே%ளயில் தன்னறை யதற்குத் தாய்வரும் படியாய்ச் சொன்னதாய்ப் பொலோனியஸ் தூதினைச் சொல்லப் பின்னதா யேகிப் பெற்றவ ளறையில்
*
குறிப்பு :- (1) இதுள் = ( நடிகர் நடிக்கப்போகும்) நாடக நூலுள்; (2) சேடன்=அனந்தன், விழிப்புடைய பாம்பரசன்; (3) ஆடலில்=நாடகத்தில்; (4) கடு-நஞ்சு, (5) தன்னறை=தனது அறை, (6) ஒரேசியோக்கூட - ஒரேசியோவும் சேர்ந்து; (T) ஏற்றிடும்-ஒத்துக்கொள்ளும்;

Page 17
22
முக்கனிச்சாரம்
அன்னதன் மகனை யாராய் வதற்காய்ச் சொன்னதி லிருந்து சுதன்விடை பகரத் தன்னையுங் கொல்லத் தாமதி யானெனும் என்னவோ திகிலா லேக்கமாய்க் கீச்சிடத் * திரைபின் ஞெட்டிச் செவிகொடுத் திருந்த பொலோனியஸ் கூக்குரல் போடவே அம்லேது இவன்கிளா டியஸென எண்ணி வாளால் திரைதனைப் பீறச் செத்தனன் கிழவனே!
பரிதபித் தாலும் பார்த்திடத் தாய்க்கே இருபடங் காட்டியே, 'இவர்களு ளொருவர் * ஆரழ குடைய அருண்ணுே வெனலாம்கடந்தகா லத்திலுன் கணவனு மவரலோ ? கடக்குமிக் கால நாயகர் மற்றவர்! 8 * விரூபமே யுயிர்த்ததோ-வேறெது வெனலாம் ? * சொரூபனைக் கண்டவள் சொத்தியைப்
பார்ப்பளா ? கண்ணுனக் கிலையா காதக னனவிப் புண்ணினைக் கொஞ்சப்போக்கண மிலையா?* எனமகன் பகர ஈன்றவள் தன்பவம் கனமுள தெனவெனக் கணவனு வேசம்
அறையினுண் ணுழைந்தே அவளறி யாத
மறையுரு வாக மகனிற் கே,தென்
குறிப்பு : (1) சுதன்-மகன்; (2) திரை - (அறை
யினுட் ருெங்கும்) சித்திரம் எழுதிய ஆடை, (3) ஆர் அழகு=அருமையான வடிவு: (4) விரூபம் = அங்கக்கேடு;
döff).
(5) சொரூபன்=அழகுடையவன்; (6) போக்கணம்=வெட்

அம்லெது 23
படவவ விையைப் பார்த்து,"நும் வரலென் கடத்தலைப் பற்றிக் கடிந்திட வலவா ? எனவது, 'மறக்திடாய் என்வர லுனது மனமதி லிப்போ மழுங்கிய தாய்வரும் தீர்மா னத்தைத் தீட்டிட வாகும். பார்உன் தாய்முகம் பரதபிக் கிறதே! தேற்றிடு வாயவள் திகைப்புறு மனமென, ஆற்றுதற் காக அவள் மகன் பேச, தயங்கிய தாயும் தனையனை, "கீயேன் பயங்கர முகத்துடன் வெறுமையைப் பார்த்துச் சம்பா ஷித்தனை சாற்றிடு வாயே”ன, 'தம்முரு வோடு தரிசன மாகிய
துஞ்சிய தந்தையர் தோற்றவு மிலையா? கஞ்சில்ை மாண்டவர் கழுவுகி முரதோ!" எனவவன் கூற, ஈன்றவள் அதுமகன் மனதினு லாக்கிய மயக்கமென் றுரைக்க அவனிதைக் கடிந்தே அவளான் மாமேல் பவமிலை யெனவெனிப் பசப்பிடுந் தயிலம் தடவிடா தேயெனத் தாய்'உளம் பிளந்துதான் கிடக்கிற தே'யெனக், ***கெட்டபா தியையெறி! துட்டனத் தவிர்த்துத் தூய்மையாய் நடந்து அருளினைத் தேடினுல் ஆசியை வேண்டுவென். ஆங்கில தேயம் அனுப்புதற் கென்னை ஆயத் தங்கள் ஆகிய தறிவையா ?” என்றவன் கேட்க ஈன்றவ ளாமெனப்
குறிப்பு: (1) துஞ்சிய-இறந்த; (2) கெட்டபாதி= (உன் உள்ளம் இருபாதிகளாகப் பிளந்திருந்தால்) பழுதான
பாதியை எறி.

Page 18
24 முக்கணிச்சாரம்
பொன்றிய பொலோனியஸ் பிணத்தினை யிழுத்துச் சென்றபின் கிளாடியஸ் சீக்கிர மாக அன்றிர வேதான் அரச குமாரனைத் * தப்பிலித் தோழர் 3 சாகியத் துடனே கப்பலி லேற்றக் கட்டளை செய்து திறைகொடுத் தாளுமோர் சிற்றர சனுக்குப் பாங்கரோ டேவரும் பட்டக் குமாரனை ஆங்கில நாட்டினை அடைந்ததும் மழுவால் கொத்திடும் படியாய்க் கூறியோர் 1 நிருபம் முத்திரை யுடனே யனுப்பினன் மூடியே.
8. கடற்பிர யாணம் கண்மு டாது
தொடங்கிய பின்னர் துட்டத் தோழர் தூங்கு மறையினுள் தொனியாப் புக்கே ஆங்கில நரபதிக் "கவர்கொண் டேகும் பத்திரக் கட்டினைப் பதனமா யேடுத்துச் சத்தமில் லாமல் தன்னறை திரும்பி சதிக்கொலை யிலக்குள 8 சாதனத் திற்குப் பதிலாய் வேறெரு பத்திர மதனில்
Gi:- (1) பொன்றிய=இறந்த, (2) தப்பிலி= வஞ்சகர், சுழியர்; தப்பிலித்தோழர்-தப்பிலிகள் ஆன கோழர் (இரு பெயரொட்டுப் பண்புத் தொகை); (3) சாகியம்-சமே தம்-உடனிருக்தல்; (4) கிருபம் - தலைமையுடையவர் தம்மை அமைபவருக்கு எழுதுங் கடிதம், (5) தொனியாசப்தமிடாமல் (கடை தொகுத்த எதிர்மறை வினையெச்சம்). (6) நரபதி - அரசன்; (T) அவர் - (அம்லெதோடு கப் பலில் போகும்) தோழர்; (8) சதிக்கொலை இலக்கு உள்ள சாதனம் - நம்பிக்கைத் துரோகமாக அம்லெதைக் கொல் விக்கும் நோக்கத்தைக் கொண்ட பத்திரம்,

அம்லேது 25
அதைக்கொடுப் பவரை யக்கணங் கொன்று
புதைத்திட வெழுதிப் பொன்றிய பிதாவின்
முத்திரை யிட்டு முன்னைய தைப்போல் நித்திரை நீங்கா திருப்பவ ரிடத்தில் வைத்தான் அம்லெது மாற்றிய நிருபமே.
அடுத்தநாட் 1 சூறை யாடிடுங் கப்பல் தொடுத்திடச் சமரைத் துணிவுடன் அம்லேது கள்வரின் படகிற் கால்களை வைத்ததும், 'அள்ளினக் திரவியம் அரச குமாரனெம் கைதியாய்ப் போனதாற் கரைதனைத் தேடிச் செய்தியைச் சொல்லிச் செல்வமும் 2பெறுவம்" என்றவ ரகன்றே எளிதினில் இடென்மார்க்கு மன்னவ ஞளும் மண்டலக் கரையிலே இறக்கின ரவன. இதன்பின் அமிலேது மறக்கா கட்பு மலரும் ஒரேசியோ சாசியத் துடனே ? சவக்கா லையொன்றற் போகையிற் பிணத்தைப் புதைப்பதற் காகவே கிடங்கி%னக் கிண்டுமோர் கோமா ஸ்ரீயோடே தொடங்கிய பேச்சிற் சொற்போர் நிகழும் வேளையிற் பிரேதமும் வேந்தனும் 4 பாரியும் காஃாலேட் உஸாசம் கெளரவ குரவரும் வருவதைக் கண்டு மறைவினிற் பதுங்கி
குறிப்பு: (1) ಅಬ್ಬು=ಹ। (2) பெறுவம்-பெறு
வோம் (எதிர்காலத் தன்மைப் பன்மை ) - கடற்கள்வர் தம்முள் சொன்னது; (3) சவக்காலை-இடுகாடு, (4) பாரிமனேவி (அம்லெதுடைய தாய்) (5) காளை-வாலிபன் (இளம் கருது போன்றவன்-உவமையாகுபெயர்), காளை லேட்டீஸ்,
இரு பெயரொட்டுப் பண்புத் தொகை,

Page 19
26 முக்கனிச்சாரம்
இருக்கும் சமயம் எதோ அந்திய கருமங் குறுக்கிய காரண மாகவே குருப்பிர சாதிமேற் குற்றம் இலேட்டீஸ் கூறியக் குரவனே ? குளறும் நாளிலே மாறிச் சன்மன சாய்த்தன் மாண்ட - சகோதரி யிருப்பளே என்றவன் சாற்ற, 'ஒகோவிப் பிரேதமேன் ஒபீலி யாவதோ!" எனமண முடைக்தே அம்லேது இருக்க, 'எனது குமாரன் 3 இல்லா வாயேன கம்பிய வெண்ணம் நாசமா கியதே! இம்மையி லுனக்கும் இதுவோ கதி"யெனச் சொல்லியே யரசி * தூவிட மலர்களை *வல்லியம் அன்ன வன்மஞ் சாதிக்கக் காரண முடைய காளை யிலேட்டீஸ் ஈரமில் லாமல் ஈன்றவ ஞனதன் தந்தையைக் கொன்றும் தங்கைமேற் காட்டிய அந்தமில் லாத அன்பினை மறந்ததால் அவள்விசர் கொண்டோர் ஆறுமேற் சாய்ந்த சவுக்கினி லேறிச் சறுகியாழ்ந் திடவும் * ஏதுவா யிருந்த இளவர சானவன் மீதுதொண் ணுற்றின் மிக்கசா பங்களைக்
குறிப்பு: (1) அந்திய கருமம்-சாச் சடங்கு (தற் கொலை புரிந்தவருக்கு இது குறுக்கப்படுவது வழக்கம்); (2) குளறும் நாளிலே-(குருப்பிரசாதியும் இறந்து தன் பாவங்களின் காரணமாக நரகச் சுவாலையில் வெந்து) ஒல மிடுங் காலத்தில் ஒபீலியா மோக்ஷத்திற் சன்மனசாய் விளங் குவள் என்பதே இலேட்டீவயின் பொருள்; (3) இல் = மனைவி. (4) தூவுதல்-(சவக்குழியுள்) பரவ வீசுதல்; (5) வல்லியம்-புலி ; (6) ஈரம்=இரக்கம்; (T) ஏது-காரணம்,

27 ای روم شاط
கூறிக் கிடங்கினுட் குதித்திட அம்லேது
மீறிமுன் வந்து ? வீற்றினுன் மாண்டவள் சவக்குழிக் குள்ளே தானுங் குதித்திட அவனிவ ஞேடே அங்குமல் லிடவே மற்றவர் விலக்கிட மாண்டவள் மீதுதன் பற்றினை யளந்து பார்த்திடு மிடத்து பத்துகா லாயிரஞ் சகோதரர் பரிவிலும் மெத்தவும் மிஞ்சுமென் றுரைத்தான் அம்லெதே.
10. பின்னரண் மனையிலே பிரபினர் முன்னே
மன்னவன் சூதால் வாளுட னிருவரும் * சிலம்பப் போட்டியிற் றிறமையைக் காட்டித் தலங்குஞ் சமயம் துரோகமா யிலேட்டீஸ் * கஞ்சிஃன நக்கிய நாக்குள வாளால் வஞ்சக மில்லா "மாற்றலன் அம்லெதின் "மெய்யினிற் காயம் காட்டிய மேலவர் கையிரு வாள்கள் காத்திரா விதமாய்த் தளத்தினிற் றவறி விழவே நேர இளவர சனிலேட் டீஸ்து வாளை மாற்றமாய்ப் பற்றி மாசிறப் புடனே போற்றிடத் தக்கவோர் போரினைப் புரிய, அன்னை யிதைக்கொண் டாடுதற் பொருட்டு மன்னவன் திராட்ச மதுவினில் அம்லெது
குறிப்பு:- (1) மீறி-(தன்னைத் தடுத்த ஒரேசியோவை) மீறி, (2) வீ ற் றி ன ல் -  ைபத் திய மேலீட்டால்; (3) சிலம்பப் போட்டி-ஒருவிதக் குத்துவாள் கொண்டு இருவர் போட்டிச்சண்டையிடல், (4) நஞ்சினை நக்கிய நாக்கு-நஞ்சினில் தோய்த்த வாளின் நுனி (தற்குறிப்பேற்ற அண); (5) மாற்றலன்=எதிரி; (3) மெய்=உடம்பு

Page 20
28.
முக்கனிச்சாரம்
தாகமா கியபின் தானே குடித்துச் சாகவும் வைத்த சாற்றினைப் பருகும் நேரமே தனக்குந் நேர்ந்திடக் காயம், ஈரமில் லாத இறைவனே டொற்றுமை கொண்டகுற் றத்தினுற் கொன்றிடுங் கடுவால் தண்டனை கிடைத்ததென் றிலேட்டீஸ் சாற்றிடப் 'பருகிய மதுவிற் ‘பச்சைநா வியிட்டனர் வருவது மரணமே!" யென்றுமா தாச்சொலித் துறந்திட வுயிரைத் துரோகமப் புறமாய்ப் பறக்திட முன் க பாடம் அம்லேது பூட்டிடப் பணித்துப் பொல்லாங் கிழைத்த,கை காட்டிடா திருக்குங் காதகன் யாரென, சாகமுன் னிலேட்டீஸ் சங்கதி சொல்லி, ஆகவோ ரரைமணி மாத்திர மரச குமாரனு மிருக்கக் கூடுமென் றுரைத்துத் *தமாசிலே வாழ்ந்த தலைவனே பழிக்கு * மூலமும் முளையும் எனவே மொழிந்ததுங், * காலனுக் கிரையாய்க் காவலன் போகக் குத்தினன் அம்லேது கொடியபாதகனைஇத்துடன் கதையும் ஈற்றினை யடைந்ததே. ஒருகொலை யொன்பதாய் முடியவுங் கூடும் ! சருவிடா தேபிறர் தாரமிப் புவியிலே.
குறிப்பு: (1) தானே-(அம்லெது) தானகவே; (2) தனக்கும்-இலேட்டீஸ"மக்கும்; (3) பச்சை நாவி = ஒரு
காடிய தாவர வருக்க நஞ்சு ; (4) கபாடம்-கதவு; (5) . தமாசு-மோசடி, கள்ளம், (6) மூலமும் முளையும் = (டழி
யின்) வேரும் வளரும் பாகமும்; (T) காலன் = இயமன்.
(அம்லெது.முற்றிற்று)

III " . به நீ விரும்பியவாறு
(அறுசீர் ஆசீரிய விருத்தம்)
1. உலகெலாம் புகழும் பிராஞ்சின் உத்தர கிழக்கை யாண்ட வலவனைத் துரத்தித் தம்பி வாழ்க்தவோர் நகரின் கண்ணே
பலமிகப் படைத்த மல்லன் பகைவரை மான பங்கம் இலகுவிற் படுத்திப் பக்க லெலும்பையுக் தெறிக்க வீசும். (இதுமுதல் மூன்று விருத்தங்கள் ஒருதொடர்; வீசும்= எறியும்; உத்தரகிழக்கு-வடகிழக்கு, வலவன்-வெற்றி யாளன்; பக்கல் எலும்பு-மார்பெலும்பையும் முதுகெலும்
பையும் தொடுக்கும் எலும்புகள்).
2. செய்தியைக் கேள்வி யற்ற சீரியன் * உரோலந்
திபுவா 99
மெய்யுரு வெடுத்த மைந்தன் மேல்லியல் விரும்புங்
கேள்வன் ஐயனே யிழந்த பின்னர் அண்ணனி னழுக்காற் ருல்ே உய்யவு முதவி யில்லா “ஒருலாந் தோ?முன் வந்து, சீரியன்-தலைசிறந்தவன், பெருமாள், மெல்லியல்பெண் (1-ம் வே:); கேள்வன்-காதலன், ஐயன்-தந்தை; அழுக்காறு=எரிச்சல்; இல்லா=இல்லாத ( கடை எழுத்
துக் கெடல்) 1.
3. அண்ணனைத் துரத்தி யாள்வோ னரண்மனை முன்னே யுள்ள மண்மிசை நடக்கும் போட்டி மல்லினிற் சேரத் தேடத்

Page 21
3) முக்கனிச்சாரம்
தண்ணளி யறியா வேந்தன் தடுத்திட முயன்ற னிக்தக்
கண்ணினிற் கிணையாப் போரைக் கரிசனை யாக வன்றே.
(தண்ணளி - இரக்கம்; அறியா, இணையா - கடை கெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்; இணை-சமம்).
4. பாரிய மல்ல ைேடு பயமுறு சமரை யாடக்
கோரிய கருத்தி னின்று கொங்சமு மசைப டாத காரிய மறிந்த வேந்தன் காட்சியைப் பார்க்க வந்த காரிக ளிருவ ரையும் நம்பியைத் தடுக்கக் கேட்டான்.
(நாரிகள்=பெண்கள்; நம்பி=சிறப்புள்ள ஆடவன்).
5. இவர்களு ளொருத்தி முன்னே யிறைவன யிருந்தோன்
செல்வி
எவர்களுங் கண்ட போதே எழின்மிக வுள்ளா ளென்பர் கவர்தலை யெழுப்பும் பெண்ணின் கட்டழ குடைய
நங்கை ܖ
சுவர்தனி லெழுத வொண்ணுச் சுந்தரம் வாய்ந்த மங்கை
(எழில்-அழகு, செல்வி-மகள்; கங்கை-சிறப்புள்ள
பெண்; சுந்தரம்=அழகு, ஒண்ணு=ஒண்ணுத).
6. மற்றவ ளிப்போ தாளும் மன்னவன் மகளா லுைம்
குற்றமில் லாத நட்பைக் கொடுத்தவ ளுற்ற ளோடு சற்றுமே பிரிந்து வாழச் சகித்திடாச்'சீலி யாவேன் ஒற்றுமைக் குணத்தின் மிக்காள்; உரோசலைந்
துற்ருள் பேரே.
சகித் கிடா-கடைகெட்ட எதிர்மறைப் பெயர் எச்சம்.
த ற
1. சமமிலாச் சமரை விட்டுத் தப்பிட மகளிர் வேண்ட
“ມp@@@ போக நேர்ந்தால் யாருமே கவலை கொள்ளார்,

நீ விரும்பியவாறு 3.
சுமந்திட விழிவு வந்தாற் சுமுக மில்லேன் சுமப்பேன், உமதுள மெனது பக்கம் உண்டெனிற் போது மெ'ன்றன். (சுமுகம்-நன்முகம்; இழிவு-அவமானம்; யபனெடு போக நேர்ந்தால்-இறக்க நேர்ந்தால்).
8. பின்னராய் நிகழ்ந்த போரிற் பிரஞ்ஞையை யிழக்க
,மல்லன் - ۔۔۔۔۔ மன்னனும் மகிழ்ச்சி யோடு மகிமையை யடைந்த வீரன் என்னபே ருடையா னென்ன இவனதைக் கூறித் தாதை இன்னபே ருடைய னென்ன இறைமகன் வெறுப்புக்
கோண்டு, (இதுமுதல் இருபாக்கள் ஒரு தொடர்; பிரஞ்ஞை= உணர்ச்சி, போர்-மற்போர்; இழக்கமல்லன்-மல்லன்
இழக்க.)
9. 'உன்மிதா வுலகி னிற்கோர் உத்தம னை னேனும் என்னுட னெதிரி காட்டி யிருந்ததைக் கண்டே னென்றும், இன்னுெரு பிதாவைச் சொன்னு லெனதுவப் பதிக மாகும்" என்றிவன் கூறிப் போக இவன் மகள் வருந்தி னுளே.
(உவப்பு=மகிழ்ச்சி)
10. உயர்குணச் சீலி யாப்போய் ஒருலாங் தேர்வை வாழ்த்த அயலினில் கின்ற ரோஸ்லந் தவிழ்த்தவ ளாரந் தன்னை உயிரென வளமே சொன்ன வத்தமன் கையில் வைத்தே, இயலுமேல் இன்னுங் கூடும், இதையணி யெனக்கா யெ'ன்ருள். (ஆரம்-போன்மாலை; உயிரென-(கனக்கு இவனே) உயிர் ஆனவன் என்று; இயலுமேல்-எனக்குப் பொன்
னிருந்தால் இந்த மாலையிலும் அதிகம் அளிப்பேன்.

Page 22
32 முக்கனிச்சாரம்
11. பின்னிரு பேரும் வெற்றி பெற்றவோர் லாந்தோ மீதே இன்னமும் பேசும் வே%ள இறைமகன் உரோச லைந்தை அன்னவ ளங்கி ருந்தால் அரசினிற் கிடரென் றெண்ணித் தன்னரண் மனையை விட்டுச் சடுதியில் நீங்கச் சொன்னன்.
12. மகளிவன் மனசை மாற்ற வழுவிய பொருட்டுக்
காட்டின் அகமதில் வாழும் முன்னை யரசனைச் சேர்வ தற்காய்ச் சுகமதாய் வழிபோ தற்குச் சுயவுடை மாற்றி யாண்பெண் நகரினை யறியார் போல கடந்தனர் பிரியாப் பெண்கள். (மகள்-சீலியா; ஆண்பெண் = ஆணும் பெண்ணும் (ஆக)-உம்மைத் தொகை)
( sifggigi )
13. வீடு சேரமுன் வெற்றியுஞ் சென்றது,
காடு போகவுங் காரன மானதே, மூடு கூரையை முன்னவன் தம்பிமேல் தேடி ஞன்கொடுக் தீயிட் டெரிக்கவே
(முன்னவன் - அண்ணன்; வெற்றி - வெற்றியாற்
பிறந்த கீர்த்தி (காரணவாகுபெயர்) )
14. இத்தைச் சொல்லியவ னின்றவன் சேவையில் மெத்த காட்சேர்த்த விராகனைஞ் ஏநாற்றையும் ! தத்தம் தான்பண்ணித் தன்விருத் தாப்பியம் அத்தன் கையிற்ருன் ஆதமி றுத்தனன்.
(அவன் ஈன்றவன்=ஒர்லாந்தோவைப் பெற்றவணுகிய உரோலந்திபுவா, தத்தம் பண்ணி=(ஆதம் ஒர்லாந்கோவுக்கு அர்ப்பணஞ் செய்து; அத்தன்னை கடவுள்; இறுத்தனன் - கொடுத்தான்). - سمس

நீ விரும்பியவாறு 33
15. ஆயு ளெண்பது ஆகிய போதிலும்
வாயுட் போனது வன்மையில் லாததால் பாயும் வாலிபர் பண்பணி பார்க்கிலும் தாயம் தன்பணி என்றனன் ஆதமே.
|தாயம்=ாயமானது; பண் = பண்ணும் (வினைத் Gina) n )
18. ஒரு லாந்துவும் உத்தம வூழியன் சேரு கோமே தீவிர மாகவே பாரி லொப்பிலாப் பண்பின ைேடுமே யாருங் காணுமுன் யாத்திரை யாகினன். (பார்=பூமி, பண்பினன் - நற்குணமுடைய வன கிய ஆகிம்)
(T1 frrffui aî655ï.) 17. ஆ.வன் கனிமீ(து) அரிவை அ லியேனு
வாகிய உரோசலைன், சீல்யா காடதை யடைந்த போழுதினிற் களைப்பாற்
கால்தளிர்க் திருக்கையி லங்கோர் ஆடத னிடையன் வரவவ னிடத்தோர்
அன்னசத் திரத்தினைப் போன்ற வீடதைத் தமக்கு விரைவினிற் றயவாய்க்
காட்டிட வேண்டவே யவனும்:-
புதுகல் இரு விருத்தங்கள் ஒரு தொடர். அன்ன் சக்கிய-உண்ண உணவும், தங்க இடமும் கிடைக்கும் விடுகி.)
(டிை வேறு) 18. 'அடியெனு மீங்கதைக் கண்ட னிலையே ஆயினு மென்னை ஆள்வோன்

Page 23
34 முக்கனிச்சாரம்
குடிசையும் மந்தையும் மேயுந் தரையும்
கொள்விலைக் காக வண்டுகொடியவன் விருந்தினுல் வீடு தேடான்
கோள்வீரோ” வென்று கேட்கப் r படியுனக் கேற்றுவ மென்றே யவற்றைப்
பற்றிடச் சென்ருர் மாதர்.
(கண்டன்-கண்டேன் (இறந்தகாலத் தன்மை ஒருமை); ஆள்வோன்-எசமான்; விருந்தினுல்= விருந்தோம்புதலால்; வீடு-மோக்ஷம், படியுனக்கேற்றுவம்=(நீ எங்களுக்கு வேலை செய்தால்) உன் சம்பளத்தைக் கூட்டுவோம்; மாதர்= பெண்கள்)
(டிெ வேறு)
19. உண்ணும லோயாம லோருலாந் தோவுடன்
ஊக்கமாய்ச் சென்ற கிழவன்
புண்ணுன பாதங்கள் ஆடெனென் கானினுட்
போனபின் பெயர வியலா
எண்ணுத வோர்நிலையில் வந்ததும் தீனிலா
இன்னலைத் தீர்க்க வினிமேல்
ஒண்ணுத தன்மையாற் றன்னுயிர் போவதற்
கோய்வதே யுள்ள தென்றன்.
(பெயர-(மேலும்) நடக்க, இயலா-இயலாத (கடை
தொகுத்தல்) எண்ணுத-(இப்படி வரும் என்று) கினேயாக, ஒய்வதேயுள்ளது-தங்குவதே எஞ்சியிருக்கின்றது.)
(கலிநிலத்துறை) 20. 'திடனிழக் கலாமோ சிச்சீ யித்தி விரமாய்?
கடமளி விலங்கை யான்போய்க் கையினுற் பிடித்திவ்

献 விரும்பியவா()
3S
விடமது திரும்பு மட்டும் வீயா திருத்தல் கடனே'னப் பகர்ந்தோர் லாக்தோ, காட்டுண்
ணுழைந்தான்.
(கடம்-காடு; அளி-தருகிற (வினைத் தொகை); வியாது-சாவாது; திடன் -திடம் (இறுதிப் போலி)
பகர்ந்து-சொல்லி)
21. முன்னிறை மகனுேர் முகடுறு சேலை கீழே
என்னவோ இனிய கனிகளை நண்ப ரோடே தின்னவே தொடங்கும் செவ்வியே ஒரு லாந்தோ மின்னலை யுமிழ்வாள் வீசிய கைய ஞனுன்.
(முன் இறைமகன்-முன்பு அரசனுயிருந்த உரோச லைந்தின் பிதா, உமிழ்-கக்குகிற (வினைத்தொகை))
22. போருஞ் செய்வான் பொன்றய்ை வந்து தோன்றிய
ஒரு லாக்தோ, 'ஒன்றினிப் புசியா தீரே'ன, 'நேரு மித்துன் மாதிரி நிகழக் காரணம் ஆரு மேதாங் கொணுப்பசி யினுலா வல்லது
(இதுமுதல் இரு செய்யுட்கள் ஒருதொடர்; ஒன்று=
ஒரு (கனி); நேரும்=(அரசன்முன்) சம்பவிக்கும்; ஆரும்= யாரும் (மரூஉ))
23. சீரறி யாத சிதட ைசொல்" யெனப்பதி,
வீரகேம் பீரன் வெட்கி"இக் கோல மென்னுடன் வாரமாய் வந்த வயோதிக ஞெருவன் பசிப்பிணிக் காரணத் தாற்றன் காட்டினே னெ'ன்றன் விசனமாய் (சீரறியாக சிகடன் -நன்மாதிரி யறியாத அநாகரீகன்;
பதி=அரசன்; வீரகெம்பிரன்=மல்லனவென்று வீரத்தினு லுயர்ந்தவன்)

Page 24
36 முக்கனிச்சாரம்
24. 'அதுவேனில் நீபோ யவன யழை'யென இறைவன்,
துதிசோலி யோரு லாக்தோ துரிதமா யேகப், பதியொரு பாங்க ணுக்குப், "பார்கிகழ் காட்சி: இதிலறி நோவில் யாமும் தனித்திலேம்' என்றன்.
(அது எனில்- அப்படி என்றல்; துரிதமாய்-விரை வாய்; நோ-மனநோ.)
25. 'உலகெலாம் ஓரரங்கம் உள்ளபேர் நடிகர்
தாமே தலமதில் வருதலேகல் தவறிலை யேயி க்
கூத்தில்; நிலவுநா டகத்திலேழு நிகழ்ச்சிக ளெண்ண
லாமே; சிலர்கள மேழிலேயுந் திகழ்வது முண்மை தானே.
(இதுமுதல் ஐந்து செய்யுட்கள் பாங்கன் கூற்று. அரங்கம்-நாடக மேடை, உள்ளபேர்=(உலகத்தில்) உள்ள
மக்கள்; தலம்=பூமி, திகழ்வது=(நடிகராய்) விளங்குவது.)
26. முதலொரு முலைத்தாய் கையின்
முழங்கிவாந் தித்தே
பதமெதும் மொழியாப் பாலன்; பள்ளிநாட்
சிணுங்கி
வதனமோ ருதயம் போல வழியினில் நந்தின் விதமொரு பையைக் காவி வெறுப்புடன்
நகர்வான்.
(பதம்=சொல், நந்து-நத்தை; பள்ளிநாள்-பள்ளிக்
குப் போகும் வயதிலே; வதனம்=முகம்)

நீ விரும்பியவாறு 3:
21. பின்னரோர் சூழை போலவே பெருமூச்சிட்டுக் கன்னியின் புருவம் பாடிடும் காந்த னுவன்; பின்சப தங்க ளோடுமே குமிழாம் பெயரை மின்னிடு பீரங் கிவாயிலே தேடும் வீரன்.
(காந்தன் - காதலன்; பெயர் = புகழ், குமிழாம் =
குமிழி ஆகும்; வீரன்--குறிப்பு வினைமுற்று)
28. ஊதிய வண்டியும் உக்கிரப் பார்வையோடும் வாதியும் பிரதிவா தியும்புகல் வழக்கை
விளங்கும் நீதிபதியாயுமே மூதுரை நிகழ்திர்ஷ் டாந்தம் ஆதிய வற்றினில் நிறைந்தன னுவன் பின்னர். (வாதி-வழக்காளி; பிரதிவாதி-எதிரி; புகல்-கூறும் (வினைத்தொகை); பின்னர் - வீரனுகிய 4-ம் பருவத்தின் பின்னர்; மூதுரை-பழமொழிகள்; நிகழ் திர்ஷ்டாந்தம்= பொதுவாய் நிகழும் உதாரணங்கள்
29. அருகிய உருவம் சீழ்க்கை யாகிய பேச்சும் இருதியா றதனில் வந்து இறுதியிற் குழவிப் பருவமே ஏழ ஞகிப் பல் விழி யிதமில்ஒருவலி தானு மில்லா வுடம்பின னுவன்.9 (அருகிய - மெலிந்த, இருதி = பருவம்; இதமில்=
உருசியில்லாத)
* (9 gyfriff JJ (55)
30. என்றுமே பாங்கன் கூறும் ஏல்வையி லோரு லாக்தோ
ஒன்றுமே யுண்ணு வாத னுடலினைக் காவி வந்து நின்றவர் முன்னே வைத்து நிறுத்திய பின்னெல் லோருக் தின்றன ருள்ள தீனைத் திருப்தியை யடையா ரில்லை.
(ஏல்வை=வேளை)

Page 25
38 முக்கனிச்சாரம்
31. பச்சிலை கீழே கிடந்து பறவையின் கானம்
LITIஇச்சகம் பேரா சைதமை இடரென விலக்கி, யூணை *மிச்சமே!99 யென்று கொண்டு கூதிரின்
வினையைத் தாங்கி, அச்சமில் லாமற் காட்டில் ஐக்கிய மாக
வாழ்ந்தார். (பச்சிலை-பச்சை நிற இலையுடைய மரம் (இலை-சினை யாகுபெயர்); இச்சகம்-முகமன், ஊணை 'மிச்சமே யென்று கொண்டு-கிடைத்த உணவைத் திருப்தியோடு உண்டு)
(G3rig. 3 is stilur)
32. உண்டதுவு மோருலாந்தோ வுயிர்ப்பாங்கி யானவள்மேற்
கண்டவந்த வேளைதொட்டு கனிந்தவகக் காதலினுல் தண்டுதடிப் பட்டையெங்கும் தாழ்குழலாள் பேர்புகழை விண்டிறைவி தானறியக் கவியிலிட்டு வெட்டிவிட்டான்.
(விண்டு இறைவி=சந்திரன்; கண்ட-(காதலியைக்) கண்ணுற்ற, தாழ்குழல்-தாழ்த்து நீண்ட கூந்தல்; பேர் புகழ்-பேரும் புகழும் (உம்மைத் தொகை))
33. அருகாய குடிசையிலே யமர்ந்திருந்த வரிவையரும்
தருவுரிமேல் வரைந்திருந்த தரவுகோச்ச கமனைத்தும் உருகமனம் படித்தபின்னர் உரோசலைக்தென் பெயருடை ஒருநாளோ ருலாந்தோவை யுலுத்தனைப்போன் (யாள் மறித்துரைத்தாள்: (இதுமுதல் இரு செய்யுட்கள் குளகம், அரிவையர்= பெண்கள்; தருவுரி=மரப்பட்டை; உருகமனம்=மனமுருக; உலுத்தன்=நாணமில்லாதவன்.)

விரும்பியவாறு 39.
34 குரங்குபாய் கோம்பினிலே கொச்சகங்க டோங்கவைத்தும்
மரங்கள் பழுதாக மாதொருத்தி பேர்வரைந்தும் உரங்கொண் டொருவனிங்கே உலாவுகிற னவன்காதற் சுரங்குண மாக்குதற்குச் சுகமருந்தை யானறிவேன்.'
கொம்பு-மரக்கிளை; சுரம்-காய்ச்சல்; உரம் (உரன்):
உள்ளத்தின் மிகுதி-உரம், உசன் (இறுதிப்போலி)]
35. அக்குலைப்ப னல்வருந்தும் அதிட்டவீனன் யானுவேன்!
பக்குவத்தைப் பண்ணுமொரு பரிகாரம் தானிருந்தால் தக்கவோர் துதிதருவேன் தயவாக வதைத்தாரும் மிக்கவு மழகுடைய மெல்லியற்போற் றம்பியரே'
(குலைப்பன்-ஒருவகைச் சுரத்தில் நடுங்குதல்; மெல் வியல்-பெண்)
36. இந்தமொழிக் கேவிடையாய் இறுத்தாளே யிவ்வண்ணம். 'வந்தெங்குடிசையிலே வனிதையென வென்?னயெண்ணி உந்தம்ந சையதனை உரைத்துவந்தால் நாடோறும் அந்தமே யடைந்திடுமும் ஆர்வமது சீச்கிரமாய்', (இது முதல் நான்கு செய்யுட்கள் குளகம். நசை=
ஆசை, வனிதை=பெண்) s
31. என்றமருந் திற்கிணங்கி ஏகிவரு மோர்நாளில்
தன்வழியிற் பாழ்ந்தருக்கீழ்த் துயிலுமொரு வன்கழுத்தைப் பன்னகஞ் சூழ்ந்திருக்கப் பக்கத்தில் ஒர்பதர்க்கீழ் உன்னுமுன்னேர் பெண்ணரிமான் உசும்புதலைப்
பார்ப்பதையும், (என்ற=மேற்கூறிய; பாழ்ந்தரு-பட்ட மரம், பன்ன கம்-பாம்பு, உசும்புதல்-(ஒலிவர்) அசைதல்; பெண் அரி மான்-பெண் சிங்கம்; அரிமான்-அரியாகிய மான் (இரு பெயரொட்டுப் பண்புத் தொகை)

Page 26
40 மூக்கனிச்சாரம்
38. கண்டவுடன் ஓர்லாந்தோ கடுகிவர்க் கட்செவியும்
மண்மிசை யரைந்தோட மனிதனிவ னண்ணனென்ற திண்ணமு மேபிறக்கச் செத்தாலென் னிருந்தாலென் எண்ணந்தான் எழுந்தாலு மிரங்கியந்தக் கொல்விலங்கைத் (கடுகி-விரைந்து; கட்செவி-பாம்பு; மிசை-மேல்; செத்தாலென் னிருந்தாலென் எண்ணம்=செத்தாலென்ன இருந்தாலென்ன என்ற எண்ணம்) 39. தாக்கியே விழுத்துகையிற் றம்பிசையின் பாயுதிரம் நாக்குலரக் கண்டொலிவர் நஞ்சான பண்பொழிய ஆக்கவந்த வல்வினையும் அமையவந்த
வஞ்சினமும் போக்கிவிட்டுத் தம்பியோடு போயின னிவன்குகைக்கே. கையின் =[கையினின்று (இன், 5-ம் வேற்றுமை உருபு) உதிரம்=இரத்தம்; வஞ்சினம்-சபதம். 40. திரும்புவே னென்றுரைத்த திட்டமணி தப்புமுன்னர் வருகையெதிர் பார்த்திருக்கும் வாலிபனுக் கோர்தூதாய் ஒருலாக்தோ குட்டையுடன் ஒலிவரையே யங்கனுட்ப இருபேருள் வாலிபனே யிரத்தமதால் மெய்மறந்தான். (குட்டை=(இரத்தம் தோய்ந்த) கைக்குட்டை, மெய் மறந்தான்-மூர்ச்சித்தான்; திட்டமணி-குறித்த நேரம்; வருகை = (ஒர்லாந்தோவின்) வரவை=2ம் வேற்றுமைத் தொகை.) 41. பின்தனது மனம்போன பேண்ணினை மணக்குமுன்னர் தன்பொருள் பூமியெல்லாம் தம்பியர்க்குச் சாட்டியதும், அன்னவள் அலியேனு வாகிய விடைச்சியென்று சொன்னவுட ஞெலிவருக்குச் சுபதினமா
யோர்லாந்தோ, (இதுமுதல் இரு செய்யுட்கள் ஒரு தொடர். சுபதினம்= (திருமணத்திற்கு) நல்ல நாள்.)

கீ விரும்பியவாறு 4.
42. பின்றைநாள் நியமித்துப் பெண்ணிணக்கம் கேட்டுவரச்
சென்றிடச் சொல்லுமந்தச் செவ்வியே யங்கிருந்து போன்றுமரி மான்கிழித்த புண்ணதனைப் பார்ப்பதற்காய் என்றுமிங்கே வராக்கனிமீ(து) எய்தியே குகை நுழைந்தான். (பின்றை நாள்-அடுத்த நாள்; செவ்வி-நேரம்; அரி மான்=சிங்கம்; வரா-வராத (கடை தொகுத்த எதிர்மறைப் பெயரெச்சம்.) 43. அண்ணனுர் அதிட்டமதும் அண்ணியார் சம்மதமும்
திண்ணமாய்ச் செப்பிமணத் தினமடுத்த நாளாக்க எண்ணித்தான் இருப்பதையும் இயம்பியே தனதுமனம் புண்ணுகும் தன்மணத்தைப் புரியாவிட் டாலென்றன். (அண்ணி-சகோதரன் மனைவி; செப்பி (கனிமீதுக் குச்) சொல்லி, புரியாவிட்டால்=(தன் மணத்தைத்தானும்) செய்யாதிருந்தால்)
(வஞ்சி விருத்தம்) 44. கருணை கொண்டு கானிமீ(து)
ஒருலாங் தோமேல் உருகியே, *வருவி வாக நாளினில் அருகி லந்த அரிவையை,
(இதுமுதல் இருபாக்கள் ஒரு தொடர். ஒருலாந்தோஒருலாந்தோ (முதல் எழுந்துக் குறுக்கல் விகாரம்) ; வரு விவாகநாள்-ஒலிவருக்கு வர இருக்கிற திருமணத் தினம்) 45. தெரியு மாயத் திண்மையால்
தரிச னம்கா ஞக்கினுல் உரிமை ஆக வேற்பையோபரிவு சொல்வா யெ'ன்றனன்.
(தெரியும் = (தனக்குத்) தெரிந்த, மாயம் = மந்திரம், விக்கை, திண்மை=வலி; பரிவு=(உன்) விருப்பம்)

Page 27
42 முக்கனிச்சாரம்
46. 'நம்ப வொண்ணு நற்செயல் எம்பி ரானுக் கேயியல் வம்பர் சொல்பொய் மந்திரம் அம்பு விக்கும் ஐயமே!’
(இது முதல் இரு பாக்கன் ஒருதொடர். அம்புவி-பூமி:
ஒண்ணு-இயலாத, எம்பிரான்-கடவுள்; இயல்=சுபாவம்,
47. என்று சொல்லி இனியவள்
நின்ற கேரம் நேயமாய் மன்றல் செய்யத் தன்மனம் குன்று மோசோல் லென்றனன்
(இனியவன்=தன் மனத்திற்கு இனியவளான உசோச
(அறுசீர் ஆசிரிய விருத்தம்)
48. அருணனு முதய மாகி யங்கதி ரடுத்த நாளில்
தருமிள கேரக் தன்னில் தம்கறை மலர்கள் வீசக் குருவிகள் தேனை யுண்டு கொம்பினிற் கீதம் பாட இருசகோ தாருங் கூடி யிறையொடு வரவைப் பார்த்தார். [அருணன்-குரியன்; அங்கதிர்=அழகிய கிரணங்களை தறை-வாசனையை; கொம்பினில்-கிளையின் கண்ணே யிருந்துகொண்டு; வரவை - (மாயத்தினுல் உரோசலைங்தை விவாகம் நடக்கும் இட்டத்திற்குத் தன்னுல் வருவிக்க இயலும் என்று கனிமீது கூறிய அந்த) வருகையை பார்த்தார்= எதிர்பார்த்தார்.)
49. 'ബങ്ങഥaങr வருகை காட்ட வியம்பிய பையல் வாக்கை
உன்மன முண்மை யென்றே உன்னுதா? வென்று
மன்னன்?

* விரும்பியவாறு 43
சொன்னவவ் வேளை தானே சுந்தரக் கனிமீ(து) உற்றே மன்னனை நோக்கி, 'உந்தம் மகளினைக் கொணர்கதால்
நீரும், (இதுமுதல் இரு விருத்தங்கள் ஒருதொடர். பையல்= சிறுவன் (பையன் என்பதன் போலி); உன்னுதா = உந்து
கிறதா ; உற்றே = (அவ்விடம்) சேர்ந்தே)
50. உரிமையா யவளை யிந்த வோருலாக் தோவி னிற்குப்
புரிவிரோ?” என்று கேட்கப் பூபதி ஆமா மென்ன, சரியேனத் திரும்பித் தைய லுடையினைத் தரித்து சீல்யா அரிவையோ டங்கு மீண்டே அப்பனை வணங்கி நின்ருள். (புரிவிரோ-கொடுப்பிரோ, தையல்-பெண்; சீல்யா
அரிவை-சீலியாவாகிய அரிவை-இரு பெயரொட்டுப் பண்
புத் தொகை); பூபதி=அரசன் (உரோசலைத்தின் பிதா))
51. திருமண மாகிக் கீதத் தீமோலி பரவுங் காலை
கருவிடத் தானை யோடு, தமயனை யறுக்க வெண்ணி, வருகிற விறைவ னிற்கு வழியினில் முதிய நீத்தோன் திருவள மாகத் தோன்றித் தீவினைக் குணத்தை மாற்ற, (இதுமுதல் இருபாக்கள் ஒருதொடர். தீம்ஒலி=இனிய ஓசை; தானை - சேன; அறுக்க - வெட்ட நீத்தோன்
துறவி)
52. துறவறம் புகுதல் முன்னர் துரத்திய தமயன் நாட்டை மறுபடி யளித்த செய்தி மன்னனுக் குரைக்கத் தூதன், உறவினர் சமேத மாக வுரியவன் மகிழ்ச்சி கொள்ளத் திறமதாய் முடிந்த திந்தத் தீஞ்சுவைக் கதையித் தோடே. (உரியவன்=(நாட்டுக்குச்) சொந்தக்காரன்=நாடு جومية
வோன்; தமயன்=தமையன் (இடைப்போலி); சமேதம்=
உடன் இருத்தல்; உரைக்கத்தூதன்=தூதன் உரைக்க.)
(நீ விரும்பியவாறு முற்றிற்று)

Page 28


Page 29
|- ----
|- |-|- |- | |||-|-| - - - 量 |- |- | ||- - sa ---- |- |-|-|- |-|- |- |- |- |-|- |-|-|- |- |- |- |- | |- •
 

*
■!鬣sae};sssssssssssr,:!|----|-*圈|-*후
*_* – o·
o -– No F = F .
| –= = = = = ; , , , , , ( =...=.*— — — — —No : ( ) ---- --| – . - - 则
| |-
| orur,1m W* 『****
|-|- -!!|-「_· ■ !!!!_-■|
|-No.
■
( ), , , , * ooo !『--------------------------------
|-圈
|-|-
}, ||-
, !●|-