கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழ் வளர்த்த முஸ்லிம்கள்

Page 1

ஹாபிஸ்
')FUIU)
து அஹமது (ஆலிம்)

Page 2
-
եւ ՄելIII է
–
- 5 * 、 இலக்கிய T
॥
|-
ਜੇ
그 上 s ஒரேயொரு L、 - 、
لقي اليا دون أي وقت لا " التي يت
山( ) 口芭司=
|L ஆன்டோடி சுப்பரை நீங்கள் -、
பதின்மூன்றும்
ਸ਼ ਸੰਘ கலாநிதி"ை եւ6նա
மக்கு மாலாவின் குறும்புகள் a_ggin Tபழந்தமிழ்க் காப்பியங்கள் - .
। ք են Tւն,
★ 要叫
、 G、 °寺丐
சியைப்
T__
கு
H atti Rainbow Printer,
 

- 후
-- TILL Dra. றிவே முதன் முதலாக மறு துத் தந்தது இளம்பிறையே |-
றில் முதன் முதலாக ஒரு புத்
■
エリ去
பாதையிலிருந்து விலகி ஒரு பக்கத்தா
ஒதுக்கப்படாது ஈழத்தில் வெளிவரும் = இளம்பிறையே
====== ॥ அம் புதுமையான முறையில் եւոIվtյլն ய ஆரம்பித்து வைத்துள்ள ஒரேயொரு
றயே
இளம்பிறையில் மட்டுமே
ள் இளம்பிறையில் மட்டுமே
நீங்கள் இளம்பிறையில்
நீங்கள் இளம்பிறையில்
still in a ஆய்வுக் பிறையில் மட்டுமே வாசிக்
த் தருவதும் இளம்பிறையே
।
○cm リエ cm
திங்கள் வெளியிடு தனிப் பிரதி சதம் -30ஆண்டுர்த்த ரு 3-டு
エcm-山エリ チ岳エリ DIE GEGLI தும் இலவசமாக அனுப்பி வைக்கப்படும்) =
1. Willimh street, Clout. 13

Page 3
பதிப்
அறம் தடுமாறியது. அ நிலை கலியுகத்திற்குரிய பண்பு. பொதுவாகப் பெரியோர்கள் எஃது எவ்வாறிருப்பினும், மனி றும் எதிர்காலத்தை நோக்கி மு எதிர்கால வளர்ச்சி இலட்சியம். கள்.கடந்த கால வளம் நிலைக்க விலேயே சரித்திரத்தை நாடுகின்
நிலைக்களனை நாம் உரிய மு பொழுது தான் அறத்தை அத லுந் சாலும். தர்மத்தை மற நடப்பது ஒரு தனிப்பட்ட மனித அதர்மத்தை அறிவுப் புரட்டுக்கு சமூக விவகார மாகின்றது. தனிட தட்டிக் கேட்கவும் சமூகம் விழை
இலக்கிய வரலாற்றைச் ெ வட்டார நலனைப் பேணு வான் பாக அழிவழக்காடி எழுதுகின் ஈழத்து இலக்கியவளர்ச்சி என்னு தாளர்கள்’ என்னும் அத்தியா தமிழ் இலக்கிய வளர்ச்சி என்னு தமிழ்த் தொண்டை ஒப்பிட்டு அந்த அத்தியாயந் தந்தது. இதி எழுத்தாளர் அழிவழக்காடத் து இச் சந்தர்ப்பத்திலேதா நிறை குடமுமான ஹாபிஸ் எம். ே வளர்த்த முஸ்லிம்கள்’ என்னுங் லாற்று நூலாசிரியனுக்கிருக்க ே கிய வரலாற்று ஆசிரியர்களுக்கு களையும் இக்கட்டுரையில் இணை வில் ஒக்டோபர் 3, 4, 5 ஆம் நாட பெரு விழாவின் நிமித்தம் விெ முதலாக வெளியாயிற்று. ‘திய வேறு மதங்களைச் சார்ந்த தமிழ
இதேநேரத்தில் இளம் பாக ஒரு மறுபிரசுரத் திட்டம் வது வெளியீடாக 'தமிழ் வள ரையை வெளியிடுவது என்று ந் கே. செய்யிது அஹமது அவர்கe சுரமாக வெளியிடுவது நமது பf

LSDJ
றம் புறமாகிவிட்டது. இவ்வவல சார்ந்த மதம் எதுவாயினும், இப்படித்தான் கருதுகின் ருர்கள். த சமுதாயம் நிகழ்காலத்தினின் }ன்னேறிக் கொண்டிருக்கின்றது. நிகழ்காலச் செயல்கள் கிரியை ளன். நிலைக்களனை அறியும் அவா
ருேம். மறையில் அறிதல் வேண்டும். அப் ன சனத்தில் அமர்த்திப் பார்த்த து, அதன் துருவப் பாதையிலே னின் சுயேச்சையாக இருக்கலாம். ப் பயன்படுத்தும்பொழுது, அது பட்ட நபருடைய செயல்களைத் }கின்றது.
சால்லும்பொழுது, சிலர் குறுகிய வேண்டி, உண்மைக்குப் புறம் ன் முர்கள். இரசிகமணி அவர்கள் ந் தமது நூலில் ‘முஸ்லிம் எழுத் "யத்தையுஞ் சேர்த்துள்ளார்கள். ம் படுதாவில் முஸ்லிம்களாற்றிய ப் பார்க்கும் ஒரு சந்தர்ப்பத்தை 1னை அறியாது பல இளம் முஸ்லிம் . ணிந்தமை பேதைமையே.
ன் பழம்பெரும் எழுத்தாளரும் க. செய்யிதுஅஹமது அவர்கள் ‘தமிழ் கட்டுரையை எழுதினர்கள். வர வண்டிய நிறை பண்புகளும், இலக் ம் பயன்படத்தக்க அரிய குறிப்பு த்தார். இக்கட்டுரை, கிண்ணியா களில் நடைபெற்ற இஸ்லாமியப் ளியான "தியாகி மலரில் முதன் ாகி மலர்’ பலருக்கு-குறிப்பாக ன்பர்களுக்கு-கிடைக்க வில்லை.
பிறை' மாத வெளியீட்டின் சார் வகுக்கப்பட்டது. அதன் முதலா த்த முஸ்லிம்கள்’ என்னுங் கட்டு நீர்மானமாயிற்று. ஹாபிஸ் எம். 5 டைய கட்டுரையை முதற் பிர க்கியம் என்றே கருதுகின்ருேம்.
எம். ஏ. ரஹ்மான், இளம்பிறை நிர்வாக ஆசிரியர்.

Page 4
(சென்னைப் பேரறிஞர் டாக்டர் எ 1940-gi) GGuGrfuSull ISLAMIC தென்னகம்) என்ற நூலிலிருந்து எ
ஹாபிஸ் எம். கே. செ
2னப் செய்யிது அஹம தில் பிறந்தார். இலங்கையில் திலே அரசியல் சமுதாய சம உள்ளவர். திருநெல்வேலி மா செயலாளராக இருந்தார். ஹி, பதே அவரின் வாழ்க்கைக் குறி ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமை ஏ வகைகளையும் காணும் பொருட் டிஞர். ஆணுல் துர்ப்பாக்கிய வ மாவட்டத்திலுள்ள மக்களின் வும் சிரத்தை எடுத்தார் .சுதேசி டினர். வயது வந்தோர் கல்வி இ தார். அரபி கற்ற அறிஞர் (. வர் (ஹாபிஸ்). சரித்திர ஆய்வு சரித்திர சம்பந்தமான பல ஆய இலங்கை வேந்தன் துட்டகெ ஜவஹர்லால் நேருவின் வாழ்க் ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளா பாஹ"வின் அரசியல் நிர்வாக அக்பரின் ஆட்சியையும் ஒப்புவ ஞய்வுக் கட்டுரை சுவைமிக்க பற்றி ஒரு சிறந்த கட்டுரையும் அறிவின் ஆழத்தை இவை மெ! பற்றிய சரித்திரக் குறிப்புகளை எழுதிய வியாசம் ஒன்று இந் சுரிக்கப்பட்டுள்ளது. இஸ்லா மான நகரமாகிய காயல்பட்ட வியாசம் இதற்கு முன் வெளிவர புடன் வாசிப்பார்கள். ஜனுப் மாவட்டத்திலே பல கூட்டங் பண்டைய கால ஓடுகள், நான படங்கள் சேகரிக்கிருர்.
*26 - 3 - 1915 என்று திருத்தி வாசித்

ஸ். எம். பாஸில் அவர்கள்
SOUTH (gGiugust 5ug, டுத்த குறிப்பின் பகுதி.
ய்யிது அஹமது (ஆலிம்)
து 21.1.1916ல் காயல் பட்டணத் கல்வி பயின் ருர். தம் மாவட்டத் ய இயக்கங்களில் மிகவும் ஈடுபாடு வட்ட காங்கிரஸ் கமிட் டி துணை ச் ந்து-முஸ்லிம் ஒற்றுமையை வளர்ப் க்கோள். முட்டுக்கட்டைகள் நீங்கி ற்படச் சாத்தியமான எல்ல. வழி டு 1939- ல் ஒரு மாநாட்டைக் கூட் சமாக அது பலனளிக்கவில்லை. தம் கல்வி சமுதாய உயர்வுக்காக மிக யே வளர்ச்சியில் மிச் க அக்கறைகாட் |யக்கத்துக்குப் பெருந் துணைபுரிந் ஆலிம்). குர்ஆனை மனனம் செய்த த் துறையில் மிக ஈடுபாடுள்ளவர். ப்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். முனுவின் வாழ்க்கையை பண்டித கையுடன் ஒப்புவமை காட்டி ஓர் ர். இலங்கை வேந்தன் பராக்கிரம த்தையும் மொகலாய மாமன்னர் 1மை காட்டி எழுதிய இவரின் திற ஒன்று, ஸ்ர் வால்டர் ஸ்காட் எழுதியுள்ளார். இவரின் சரித் திர ப்ப்பிக்கின்றன. காயல் பட்டணம் மிகச் சிரமத்துடன் சேகரித்து இவர் த நூலின் பிரிதொரு பகுதியில் பிர மியத் தென்னகத்தின் மிக முக்கிய ணத்தைப்பற்றி இப்படியான ஒரு ாததால் இதை யாவரும் மிக விருப் அஹமது நல்ல பேச்சாளர். தம் களுக்கு தலைமை வகித்துள்ளார். பங்கள், கை எழுத்துப் பிரதிகள்,
துக் கொள்க. I

Page 5
என்னு
**வீடு தோறும் கலையின் விளக்கம் நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள் நகர்
9 (5 காலத்திலே கலையின் ஞர்கள் தமிழர்கள். அக்காலத்தி ஊர்களே இல்லை. கலையின் நறு களில். தமிழன் ஒரு இனம். ஒரு கள், முஸ்லிம்கள், கிறித்தவர்க எனப் பல மதத்தினர்கள் மதத்த தாலும் மொழியாலும் ஒன்றுட யாவரும் கேளிர்” என்பது தமிழ தமிழ் வளர்ச்சிக்கு ஆக்கட் தங்கியவர்கள் என்ற த வருண ஆ தமிழிலே முஸ்லிம்களுக்கு எழுத கருதி வந்தனர். முஸ்லிம்களாகி தொண்டுகளில் மற்றவர்களைவிட வர்களல்லர் என்பதை எடுத் தமிழ் இலக்கிவத்தில் இஸ்லாமிய கிறது என்பதை விளக்கிக் காட் தோறும் இரண்டொரு பள்ளிக பள்ளி'களும் நிறுவி இஸ்லாமியத் படித்துச் சுவைக்க வேண்டுமென் முஸ்லிம்கள் செய்த தொண்டுக தமிழ் வளர்த்த முஸ்லிம்கள் எ னேன்,
அகில இலங்கை இஸ்லாமி யிட்ட ‘தியாகி’ மலரில் வெளிவந் கருதி, இளம்பிறை மறு பிரசுர நூ லா கப் பிரசுரிப்பதற்காக ரைப் பாராட்டுகின்றேன். கை நீரோடி, தேடிச் சிப்பிகளைப் பெ துக்களை எடுத்துத் கோத்து, மா தாமும் மகிழ்ந்து மற்றவர்களும் 'அரசு வெளியீடு அதிபரும் 'இள தமிழ் நண்பர் - பண்பு நிறைவு ( இதன் மூலம் அன்பையும் கலைப் ரஹ்மான். என் கனவு நனவ வுண்டோ?
இச் சிறு நூலில் பல கு கைமண்ணளவு தானே! குற்றப் எமக்கு எடுத்துக் காட்டி நிை என்றென்றும் உரித்தாகுக.
112, டாம் வீதி, கொழும்பு - 12. I 5.12.64.

1ரை
திதோறும் இரண்டொரு பள்ளி ளெங்கும் பல பல பள்ளி?
-- Im Juu Tử.
கலங்கரை விளக்கமாக விளங்கி லே கலைக் கழகங்கள் இல்லாத 2ணம் கமழ்ந்தது தமிழன் வீடு நிறை. தமிழர்களிலே ஹிந்துக் ஸ், பெளத்தர்கள், ஜைனர்கள் ால் வேறுபட்டிருப்பினும்,இனத் "ட்டவர்கள். “பாதும் ஊரே னின் மூல மந்திரம். பணிபுரிவதில் முஸ்லிம்கள் பின் அபிப்பிராயம் நிலவியது. நல்ல ப் பேசத் தெரியாது என்றும் |ய நாம் தமிழன்னைக்குப்புரிந்த ட எவ்வகையிலும் பின் தங்கிய துக்காட்டும் நோக்கத்துடனும் பக் கலை எப்படிக் கலந்து கமழ் டும் நோக்கத்துடனும் ‘வீதிகள் ளும்’ ‘நகர்களெங்கும் பல பல தமிழ் இலக்கியங்களை யாவரும் ற நன்னேகத்துடனும் தமிழுக்கு ளே எடுத்துக் காட்டும் முகமாக, ன்ற இக்கட்டுரையை எழுதி
யக் கலை விழாக் குழுவினர் வெளி த இக்கட்டுரையை மக்கள் நலன் ந் திட்டத்தின் கீழ் முதலாவது
இப்பத்திரிகை நிறுவத்தின 0க் கடலிலே மூழ்கிக் குளித்து ாறுக்கி அவற்றிலிருந்து நல் முத் லயாக்கி தமிழன்னைக்குச் சூட்டித் மகிழ நமக்குத் துணை செய்கிருர் பிறை' ஆசிரியருமான அன்பர்பற்ற ஜனப் எம். ஏ. ரஹ்மான். ண்பையும் வளர்க்கிருர் அன்பர் ஞல் என் மகிழ்ச்சிக்கும் அள றைகள் இருக்கலாம். “கற்றது
நீக்கிச் சுற்றம் பருகி, குறைகளை வு செய்வோர்களுக்கு என் நன்றி
கலை அன்பன்,
. கே. செய்யிது அஹமது.

Page 6
THAMIL VALA ( Originally Published In T
Author: HAFIZ M
Reprint: ILAMPIE 231, Woli Colombo -
Copies: 1,000
Price:
கைா

SNАЛПИ). Ĝllllllllllll
மறுபிரசுர வெளியீடு: l.
( 'தி யாகி’ மலரிலிருந்து)
டிசம்பர், 1964, விலை:
ARTHA MUSLIMKAL
Thyaki Malar )
M. K. SYED AHMED
RA , fendhal Street, - 13 (Ceylon).

Page 7
தமிழ் வளர்த்த முள்
கலை விளக்கு
க்லைக்கு விழா எடுப்பது அறிவுக்கு அணி செய்வதாகும். இஸ்லாமியக் கலை ஒரு கலங்கரை விளக்கு. இருள் சூழ்ந் திருந்த உலகுக்கு ஒளி அளித்தது இஸ் லாமியக் கலை. அன்பையும் பண்ன் பயும் ” சத்தியத்தையும் சகோதரத்துவத்தையும் சமதர்மத்தையும் அபே த வாதத்தையும் போதித்த கலை இஸ்லாமியக்கலை. விண் ணையும் மண்ணையும் அளந்து, விண் - மண் உறவுபற்றி கூறுகிறது இஸ்லாமியக் கலை, அரபுநாட்டில் தோன்றிய இக்கலை ஒளி, உலகமுழுதும் இருள் போக்கி அருள் அளித்து உதவியது. அரபிவர்த் தகர்கள் உலகமுழுதும் வர்த்தக தொடர்பு கொண் டிருந்தனர். தாங்கள் சென்ற இடமெல் லாம் இந்த மணிவிளக்கையும் கொண்டு சென்றனர். இலங்கையுடனும் தமிழகத் துடனும் அரபி வர்த்தகர்களுக்குப் பன் னெடுங்கால உறவுகள் உண்டு, இலங் கையை 'ஸரந்தீப்" என்றும் தமிழகத்தை 'மாபர்’ என்றும் அரபிகள் அழைத்தனர். "மாயர்" என்ற வார்த்தைக்கு "வழி" என் பது பொருள். ஸா ந் தீபு’க்குப் போகும் நடுவழியில் அமைந்திருந்ததால் இப்படி அழைத்தனர். வர்த்தக நிமித் தம் அரபி கள் இங்கு வந்துபோய்க்கொண்டிருந்தா லும் நிரந்தரமாக குடும்பசகிதம் குடி புகுந்தது ஹிஜ்ரி 228-ல்தான். மலபார் கரை, மாபர் (தமிழ்நாடு) கரை, ஸ்ர ந் தீப் (இலங்கை) கரை, இம்முப்பகுதிகளி லும் பரந்து குடிபுகுந்தனர். எகிப்தி லிருந்து வந்தவர்கள் இவர்கள். எகிப் தின் தலைநகருக்கு 'அல்கா ஹிரு’ என்று பெயர். அரபிகள் குடிபுகுந்த காயல்பட் டணத்துக்கு இந்தப் பெயரையே வைத்
D6)

pலிம்கள்
-ஹாபிஸ் எம். கே. செய்யிது அஹமது
தனர். இஸ்லாமியக் கலை விளக்கு இங்கி ருந்துதான் தமிழ் உலகுக்கு ஒளி பரப் பிற்று.
இந்தியாவில் இஸ்லாம்
அரபி வர்த்தகர்கள் கடல்வழியாக வந்து தெற்கே இஸ் லாத் தைப் பரவச் செய்ததுபோல் வடக்கே தரைமார்க்க மாக இஸ்லாமியக் கலையை இந்திய துணைக் கண்டத்துக்குள் கொண்டு வந்தவர்கள் இஸ்லாமிய ராணுவத்தினர்கள்.
இலங்கையிலிருந்து.
கி. பி. 8-வது நூற்ரு எண்டில் இலங் கையிலிருந்து சில அரபி வர்த் தகர்கள் ஒரு கூட்டமாக சில கப்பல்களில் ஹஜ்ஜ" யாத் திரைக்காகச் சென்றனர். அரபி மன் னர் வலீதுக்கு மதிப்புமிக்க பல அன் பளிப்புகளே இவர்கள் மூலம் அனுப்பி வைத்தான் இலங்கை மன்னன். அராபிய கடலில் ஏற்பட்ட புயல் காரணமாக கப் பல்கள் ஸிந்து கரைக்கு ஒதுங்கவேண்டிய தாயிற்று. ஸிந்துவிலுள்ள கடல் கொள் ளேக் கூட்டத்தினர் கப்பல்களை மறித்து தாக்கி எல்லா பொருள்களையும் கொள்ளை யிட்டனர். அரபியர் சுளின் அரசியல் ஆதிக்கம் போர்த்துகலி(Portugal)லிருந்து கிழக்கே இமயம் வரை இருந்த காலம் அது. கிழக்கு பகுதிக்கு ஹஜ்ஜாஜ் பின் யூசுப் கவர்னராக இருந்தார். இவருக்கு இந்தத் தகவல் எட்டவே விந்து மன்னருக்கு பரி காரம் தேடி வேண்டுகோள் விடுத்தார் நொந்த புண்ணில் கோல் பாய்ச்சும் தன் மையில் நடந்துக் கொண்டார் ஸிந்து மன் னர். இது ஹஜ்ஜாஜ" க்கு வேதனையை யளித்தது. 17 வயதுகூட நிறம்பாத தம்

Page 8
மருமகன் முகம்மது பின் காஸிமின் தலை மையில் ஒரு படையை லிந்துக்கு அனுப்பி வெற்றிகொண்டார். இந்திய துணைக் கண்டத்தில் அரபியர்கள் தெற்கே கேர ளத்திலும் தமிழகத்திலும் தங்கள் குடி யேற்றப்பகுதிகளை அமைத்த விபரங்களை இந்திய யூனியன் அமைச்சர் பேராசிரி யர் ஹாமாயூன் கபீர் தமது ‘இந்திய unru buttuth' (Indian Heritage) 67 g), b நூலில் விரிவான தகவல்கள் கொடுக்
Rosyffi
யவனர்கள்
இலங்கையிலும் தமிழகத்திலும் குடி புகுந்த அரபியர்களை தமிழர்கள் 'யவ னர்கள் ** என்றனர். சிங்களவர்கள் *" போன்' என்றனர். இன்றுங் கூட கொழும்பு பழைய சோனகர் தெருவை 'பரண யோன் வீதிய" என்றும் புதிய சோனகர் தெருவை அலுத் யோன் வீதிய" என்றும் ‘யோன்" என்ற பெயராலேயே அழைக்கின்றனர். . .
*சினம் மிசிரம் யவனரகம்.
என்று கவி பாரதியார் பாடுவதும் எகிப்து முதலிய மற்றும் அரபி நாடுகளைக் குறித் துத்தான்.
'யவன ரியற்றிய வினைமாண் பாவை கையேந் தய்யக Eறைய நெய்சொரிந்து"
என "நெடுநெல் வாடை" எனும் நூலில் நக்கீரர் கூறுகிருர். தமிழக வேந்தர்களின் மாளிகைகளை யவன சிற்பிகள் செய்த பாலை விளக்குகள் அலங்கரித்தன என அறிகிருேம். 'யவனர்' என்ற வார்த் தைக்கு ‘சோனகர்" என்று நச்சிஞர்க்கினி யார் எழுதியுள்ளார். அரபிகள் ஆரம்பத் தில் குடிபுகுந்த 'காயல்பட்டணம் சோன கர் பட்டினம் என்ற பெயரால் அழைக் கப்பட்டதாகவும் சோனகர்களின் தந்தை தாடாக இது மதிக்கப்படுவதாகவும் டாக் டர் கால்ட்வெல், கர்னல் யூல், ஸர் காஸி சிட்டி, ஸர் டென்னண்ட் முதலிய வர லாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். காயல் பட்டணத்துக்கு அண்மையில் "சோனகன் விளை" என்ற ஒரு கிராமம்

இன்றும் இருந்துவருகிறது. அங்கு ஒரு பெரிய குளம் இருக்கிறது. அதற்குப் பெயர் "துலுக்கன் குளம்" சோனகர், துலுக்கர், மரக்கலராயர், (மரைக்காயர்) ராணுவ யுத்தர், (ராவுத்தர்) லெப்பை இவர்கள் எல்லோரும் தமிழ் முஸ்லிம் களே. அரபி வழி வந்தவர்களே.
அரபு - தமிழ்
இயல் இசை நாடகம் ஆகிய முத் தமிழிலும் இஸ்லாமிய புலவர்கள் பல நவீனங்களைப் படைத்துள்ளனர். தமிழை அரபி எழுத்தில் எழுதக்கூடிய ஒரு வழி யைக் கண்டுபிடித்து அதற்கு அரபு தமிழ் என்று பெயர் வைத்து பல படைப்புக வசனநடையிலும் கவிதை நடையிலும் செய்துள்ளனர். குர்ஆனை தமிழ் விரிவு ரைபடன் முதல் அரபு-தமிழ் தப்ஸிரை" கி. பி. 1884-ல் காயல்பட்டணம் ஹாபிஸ் முஹம்மது காஹிரீ என்பவர் வெளியிட் டார். இரண்டாவது அரபு - தமிழ் 'தப் ஸிர்’ 1911-ல் வெளிவந்தது. இதை வெளி யிட்டவர் காயல்பட்டணம் நூஹ் ஆலிம். அரபு தமிழில் பல பாமாலைகளை ஆக்கித் தந்துள்ளார் சாமு வலி நாயகம், "ஹத்யா மாலை "பத்ஹ"த்தையான்" "தலைபாத் தி ஹா’ போன்ற அரிய கலைச்செல்வங்களை மாப்பிள்ளை ஆலிம் அரபு தமிழிலே இயற்றி உதவியுள்ளார்.
தமிழ் வளர்த்த ஞானிகள்
தமிழ் வளர்த்தவர்களில் இஸ்லாமிய ஞானிகளும் துறவிகளும் முனிவர்களும் முக்கிய பங்குகள் எடுத்துள்ளனர். தற் கலை பீர் முஹம்மது வலி நாயகம், காயல் பட்டணம் நூஹ் வலி நாயகம், குணங்குடி மஸ்தான் சாஹிபு, கோட்டாறு ஞானி யார் சாஹிபு, பேருவிளை ஷெய்கு முஸ் தபா வலி நாயகம், காயல்பட்டணம் உமறு வலி நாயகம் இவர்களில் முக்கிய மானவர்கள்.
ஆலிப் புலவர்
நமக்கு முதன்முதல் அறிமுகமான
இஸ்லாமிய புலவர் ஹிஜ்ரி 998-ல் ‘மிஃ ருஜ்" மாலை பாடிய செவ்வல் மாநகர்
தியாகி

Page 9
ஆலிப் புலவர். அடுத்தவர் ஹிஜ்ரி 1058-ல் **கன காபிஷேக மாலை"யைப் பாடிய க்னக கவிராயர். இவர் குணங்குடி மஸ் தான் சாஹிபுவின் முன்னேர்களில் ஒருவர். தேவி பட்டினத்தில் அடங்கி இருக்கும் அறிஞர் முல்லாஹ"ஸைன் வழிவந்தவர். மூன்ருவதாக தமிழ் கூறும் முஸ்லிம் நல் லுலகம் - இல்லை தமிழ் உலகம் எங்கும் பெரும்புகழ் கொண்ட உமறுப் புலவரா өшптnf.
உமறுப் புலவர்
உமறுப் புலவரும் அரபி வழி வந்த வரே. அவரின் தந்தை ஒரு அத்தர் வர்த்தகர். உமறுபுலவர் கடிகைமுத்துப் புலவரிடம் கல்வி கற்றவர். சித்தில் வல் லவனுகிய_வாலவாரிதி புலவரை வாதில் வென்று வெற்றிமாலை சூடியவர். ஹிஜ்ரி 1052-ல் பிறந்தார். மிக இளமையிலேயே எட்டையாபுரம் அவைக்களப் புலவரா ஞர். அதே காலத்தில் கீழக்கரையில் முஸ் லிம் புரவலர் சீதக்காதி வாழ்ந்துவந்தார். உமறு புலவரைக் கொண்டு பெருமாஞர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு களைப் புராணமாக ஆக்கி பாடச் செய்ய வேண்டுமென ஆசைபட்டார். மாமன் னர் ஒளரங்கஜிபின் ஆட்சியில் வங்க கவர்னராக இருந்து ராஜினமா செய்து விட்டு திரும்பி வந்து இராமன தபுரம் சமஸ்தான முதல் அமைச்சராக இருந்த காலத்திலே எட்டையாபுரம் வர அவ ருக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அப்பொ ழுது புரவலர் சீதக்காதி, புலவர் உம றைக் கண்டார். தம் விருப்பத்தைக் கூறி ஞர். புலவரும் சம்மதித்தார். 5027 விரு த் த ப் பாக்களைக்கொண்ட ஒரு பெருங் காப்பியத்தை படைத்தார். * சீரு புராணம்" என வெளியிட்டார். "சீரு' என்பதற்கு ‘வரலாறு' என்பது பொருள். சொல் நயம் பொருள் நயம் கருத்து ஆழம் எல்லாம் ஒருங்கு கொண் டது "சீரு புராணம்’. வள்ளுவனையும் கம்பனையும் மிகைக்கும் தன்மையில் புல வர் உமறின் கவிதைகள் தமிழ் அமுதை அள்ளி அள்ளி நமக்கு ஊட்டுகின்றன. தேனினுமினிய தீந்தமிழ் கவிதைகளி
udøvå

லிருந்து ஒரு அடியை மட்டும் இவள் தருகிறேன்:-
கடவுள் வாழ்த்து
"திருவினுந்திருவாய் பொருளினும்
பொருளாய்த் தெளிவினுந் தெளிவதாய்ச்சிறந்த மருவினு மருவர் யணுவினுக்கணுவாய்
மதித்திடாப் பேரொளியனைத்தும் பொருவினும் பொருவா
வடிவினும் வடிவாய்ப் பூதலத்துறைந்த பல்லுயிரின் கருவினுங்கருவாய்ப் பெருந்தலம் புரந்த கருத்தனைப் பொருத்துதல் கருத்தே"
வள்ளல் சீதக்காதி
வள்ளல் சீதக்காதி புலவர்களுக்கெல் லாம் அள்ளி அள்ளி கொடுத்தார். “ஈந்து சிவந்தது சீதக்காதி இரு கரமே" என்று பாடினர் படிக்காசு புலவர். 'சீதக்காதி இறந்தபோதே புலமையும் செத்ததுவே" என நமசிவாயப் புலவர் பாடிஞர்: 'தினங்கொடுக்கும் கொ டை யா னே! தென்காயற் பதியானே!’ என பாடி பொன்னும் மணியும் பெற்ருள் புலமை யிற் சிறந்த பூங்கோதை . வழிதவறிய திருடன், ஒரு முரடன், ஒரு கசடன் தமிழ் புலமையில் சிறந்திருந்தான். வள் ளலை அணுகி அவர் மீது பாடி பரிசு பெற்றதோடு நேர்வழியும் பெற்ருன். திருடிய குற்றத்துக்காக கை கால் வெட் டப்பட்ட இவன், சீதக்காதி மீது ஒரு * நொண்டி நாடகம்" பாடினன். மிக அபூர்வமான கிராமிய இலக்கிய படைப்பு இது. வள்ளல் சீதக்காதி மீது உமறு புல வர் "திருமண வாழ்த்து’ பாடி இருக்கி ருர், அக்காலத்தில் முஸ்லிம்கள் மத்தி யில் காணப்பட்ட கலை அம்சங்களை எல் லாம் இதில் புகுத்தி பாடி இருக்கிறர். மணப்பந்தல் அலங்காரம், மணப் பெண்
அலங்காரம், மணமகன் அலங்காரம், வாண வேடிக்கை, ஊர்வலம், கும்மி, கோலாட்டம், மணச்சடங்கு இப்படி
யான எல்லா அம்சங்களையும் கலைக் கண்

Page 10
ஞல் பார்த்து வடிவம் கொடுத்து பாடி இருக்கிருர்.
சின்ன சீற
உமறு புலவர் "சீரு புராணத்தில் பெருமானுர் (ஸல்) அவர் சளின் இறுதி கால வரலாறுகளைக் கூருது விட்டு விட் டார். இக் குறையை நிவர்த் தி செய்தார் காயல் பட்டணம் பணி அஹமது மரைக் காயர் புலவர். ‘சின்ன சீரு" என்ற பெய ரால் 1369 விருத்தப்பாக்களைக் கொண்ட ஒரு காப்பியத்தை படைத்து "சீருவை முழுமையும் நிறைவு மாக்கிய் பெருமை இவரையே சாரும், ஹிஜ்ரி 11 15-ல் உமறு புலவர் காலமானுர் . ஹிஜ்ரி 1155ல் * சின்ன சீரு'வை பணி அஹமது புலவர் வெளியிட்டார்.
வேத புராணம்
"சீரு புராண"த்துக்கு ஒத்ததுதான் காயல் பட்டணம் நூஹ்வலி நாயகம் பாடிய வேத புராணம். வேத சம்பந்த மான எல்லா பொருள்களும் கொண்ட ஒரு கலை கொத்து இது. ஆண்-பெண் உறவு, ஊடல், கூடல் இவைபோன்ற பல பொருள்கள் பற்றியும் பாடி இருக்கிருர் . 18 மொழிகளும் 14 கலைகளும தெரிந்த கலையின் பர்வதம் இவர்.
*செப்பு மொழி பதினெட்டுடையாள் சிந்தனை ஒன்றுடையாள்'
என பாரத நாட்டுக்கு இலக்கணம் கூறி ஞர் பாரதியார். பதினெட்டு மொழி ஒரு வருக்கு தெரியுமென் ருல் உலக மாபெரும் புதுமைகளில் இதுவும் ஒன்றன்ருே! ஹிஜ்ரி 1156-ல் பூவாறில் வைத்து கால ம ஞா.
திருப்புகழ்
நூஹ்வவி நா ய க த் தி ன் பள்ளி தோழர் காஸிம் புலவர். இருவரும் திரு வடி கவிராயர் இடம் கல்வி பெற்றனர். அருணகிரி நாதா பாடிய 'திருப்புகழை வாய் நிறமப பாடி பாராட்டி இதற்கு மறுபுகழ் கிடையாது என கவிராயா கூறு
拳

வார்ாம். காவிம் புலவர் வாலப்பருவ முள்ளவராக இருந்தார். டெருமாஞர் (ஸல்) அவர்கள் மீது ஒரு திருப்புகழ் பாடி' கவிராயர் இடம் கொடுத்தார். அருணகிரி நாதரையும் மிஞ்சி விட்ட தம் மாணவன் காஸிம் படைத்த 'திருப் புகழைப் பாடிப்பாடி பரவசமாஞர் கவி ராயர். அதற்கு அவர் அளித்த சாற்றுக் கவியில் பின் வருமாறு பாடுகிறர்:-
*வடிகட்டு சங்கத் தமிழ் புலவி
ரேழுவான் கடந்த முடிகட்டழகர் திருப்புகழ்
வாரி முகந்து கொண்டு படிகட்டுலகப் பரப்பை யெல்லாஞ்
சுற்றி பார்த்து விண்மேற் கொடிகட்டித்தாவு நல்
காவலீம் புலவர் கொழுங்கவியே"
ஹிஜ்ரி 1177-ல் காயல் பட்டணத்தில் காலமாகி அங்கேயே அடங்கப்பட்டுள் ளார். . .
அபூர்வ படைப்புகள்
ஹிஜ்ரி 1167-ல் 'அலிநாமா" எனும் அருங்காப்பியத்தைப் படைத்த மதுரை செய்யிது முஹம்மது அண்ணுவியார், "நாகைக் கலம்பகம்’ ‘மதீனத்தந்தாதி "முகிய்யிதீன் ஆண்டவர் பிள்ளைத் தமிழ்” இன்னும் பல அரிய கலைச் செல்வங்களை அளித்து ஹிஜ்ரி 1202-ல் மறைந்த எம னேஸ்வரம் ஜவ்வாது புலவர், ஹிஜ்ரி 1212-ல் 'சையிதத்து படைப்போா' என்ற காப்பியத்தை ஆக்கித் தந்த தேங் காய் பட்டணம் குஞ்சு முசுப்புலவர். இமாம் கஸ்ஸாலி (ற ஹ) அவர்களின் *மனித ஆரம்பம்’ என்ற நூலை மூலமாகக் கொண்டு “நூறு நாமா" பாடிய காயல் பட்டணம் பணி அஹமது மரைக்கா யர் மகன் செய்யிது அஹமது மரைக்கா யர் புலவர், கொம் பில்லா பல வண்ணங் கள் பாடிய காலங்குடி இருப்பு மீறன் கணிபுலர், "ஞான ஒப்பாரி' பாடிய காயல் பட்டணம் தவஞானி உமறுவலி நாயகம், பல அபூர்வ ஞானனந்த கவிதைகளை இயற்றிய கோட்டாறு ஞா னி யார்
தியாகி

Page 11
சாஹிபு, மேலப்பாளையம் செய்யிது முஹி தீன் கவிராஜர், இப்படியாக இன்னும் பலர் தமிழுக்கும் சமூகத்திற்கும் ஆற்றிய கலைப்பணிகள் அனந்தம். விவரிக்க விரியு ம்ென்றஞ்சி விடுத்தன்ம்.
மஸ்தான் சாஹிபு
தமிழ் வளர்த்த இஸ்லாமிய யோகி களில் முதல் இடம் வகிப்பவர் குணங்குடி மஸ்தான் சாஹிபு, ஆழ்ந்த ஞான அறி வுள்ள மஸ்தான் சாஹிபுவின் கவிதைகள் படிக்க படிக்க அமுதைக் கொட்டுகின் றன. 47 வருட காலமே உலகில் வாழ்ந்த இவர் பல அரிய கலைப்பொக்கிஷங்களை உருவாக்கித் தந்துள்ளார். ஹிஜ்ரி 1254 ல் சென்னையில் காலமாகி ராயபுரத்தில் அடங்கப்பட்டுள்ளார்.
புலவர் நாயகம்
அதே இடத்தில் அடங்கப்பட்டுள்ள காயல்பட்டணம் ஷேக்னு லெப்பை ஆலிம் புலவர் நாயகம், மஸ்தான் சாஹிபுவின் பள்ளித் தோழர். கீழ க்கரை தைக்கா சாஹிபு நாயகம் நடத்திய பள்ளியில் ஒன் ருய்ப் பயின்றவர்கள். இருவரின் வாழ்க் கையிலும் பல ஒற்றுமைகள் உ டு. சில வேற்றுமைகளும் உண்டு. புலவர் நாயகம் தமிழ், அரபி, பாரசீகம், உர்து, சமஸ் கிருதம் ஆகிய பன்மொழி வல்லுநர். தமிழ் உலகுக்கும் தமிழ் மொழிக்கும் அவர் ஆற்றிய பணிக்கு கணக்கு வழக்கு" கூற முடியாது. விண்கலையிலும் தேர்ச்சி மிக்கவர் பல அவதானங்கள் தெரிந்த வர். நல்ல எழுத்தாளர். சிறந்த பேச்சா ளர். பரம சற்குரு. குர்ஆனை மனனம் செய்த ஹாபிஸ் 'இஸ்லாமிய மத ஞானம் நிரம்பப் பெற்ற 'ஆலிம். சிறந்த வர்த்த கர். இவரின் தமிழ் மொழிப் புலமையும் வட மொழித் திறமையும் கண்ட வட மொழி ஹிந்துப் புலவர்கள், புலவர் நாய கத்தின் புதூஹ் ஷாம் புராணத்தை அவர் வட மொழியில் விரிவுரை கூற கேட்டதும் "இவர் ஒரு அருள் கவி. அகத்திய முனி வர் இவரே" என்று வாயாற வாழ்த்திச் சென்ருர்கள். "மக்கா கலம்பகம்’ ‘நாகை
யந்தாதி "சொர்க்க நீதி' 'கோத்திர
upR

மாலை" காரண புராணம்" "குத்பு நீாயகம்" சித்திர கவி, சீட்டுக் கவி, கீர்த்தனைகள் இன்னும் பல பல இலக்கிய செல்வங் களைப் படைத்து தமிழன்னையை அரியா சனத்தில் அமர்த்தி அணிசெய்த பெருமை இவரையே சாரும், "நாகை யந்தாதி"யிலி ருந்து ஒரு அடி இதோ தருகிறேன். படிக்க எப்படி என்று பாருங்கள். இதோ அது:-
நாகையந்தாதி
"காத்திகை தே தத்த தத்தை
கொக் கொக்கக் கத்துக் கொத்தி காத்திகை தே தத்த கத்தி
தக்கீ தத்த கத்துக் கொத்துக் காத்திகைத் தே தொத்தித் தாதுகத்
தித்தித்த காதத்தைத் தெக் காத்திகை தே தத்தித் தூதத்த
நாகைக் கத்தா துதியே."
ஹிஜ்ரி 1268ல் பொன்னுலகே கிஞர்.
இலக்கிய வகைகள்
புராணம், கலம்பகம், நாயகம், அந் தாதி, திருப்புகழ், பிள்ளைத் தமிழ், மாலை, படைப்போர், அம்மானை, தாலாட்டு, கும்மி, கோவை, திரட்டு, நாடகம், ஆற் றுப்படை, நாமா, மசலா, கிஸ்ஸா, முன ஜாத் இப்படி பல தலைப்புகளில் இஸ்லா மிய தமிழ் இலக்கிய கவிதைகள் வெளி வந்துள்ளன. கீர்த்தனை, சிந்து, சித்திர கவி, சீட்டுக் கவி, கொம்பில்லா வண் னம், தாய் மகளே சல் இப்படியான இலக்கிய ப  ைட ப் புக ளு ம் இஸ் லாமிய தமிழ் இலக்கியத்தில் இடம் பெற் றுள்ளன. இ வ. ற்  ைற ப் பற்றி ய சில குறிப்புகளை புலவர்கள் வாழ்க்கையில்
56307 GTLD.
நாடகக் கல
இயல் இசை என்ன! நாடகக் கலை யிலும் இஸ்லாமிய புலவர்கள் பின் நின்ற வர்களில்லை. 'அலி பாதுஷா நாடகம்" எனும் நூலை ஆக்கித் தந்தார் மீசலை வண் ணக்களஞ்சிய புலவர். ஹிஜ்ரி 1236ல்

Page 12
'தீன் விளக்கம்" எனும் நூலை ஆக்கிய வரும் இவரே. ஹிஜ்ரி 1295 ல் காலமான காலங்குடி இருப்பு சித்தர் ஐதுரூஸ் நயி ஞர் புலவரின் "நவமணிமாலை" இன்ப ர்சம் ததும்பிய நூல். யாழ்ப்பாண மக் கள் "நாவலர்" என்று விருது சூட்டிய நாகூர் குலாம் காதிறு நாவல்ர், பிச்சை இப்ருஹிம் புலவர், கோட்டாறு சதா வதானி செய்கு தம்பி பாவலர், ஆலிம் புலவர், இன்னும் பலர் தமிழ் வளர்ச் கிக்கு புரிந்த நற்பணிகள் மிக அனந்தம். எழுதப்புகின் விரியும்.
தேம்பாவணி - புகழ்ப்பாவணி
வீரமாமுனிவர் இத் தா லி யி லே வெனிஸ் நகரிலே கி. பி. 1680ல் பிறந்த வர். தமிழ்மொழி கற்று தமிழிலே "தேம் பாவணி” எனும் ஒரு அருங்காப்பியத் தைப் படைத்தார். யாழ்ப்பாணம் அச ஞர் லெப்பை புலவர் தித்திக்கும் தேந் தமிழில் ஹிஜ்ரி 1308ல் 'புகழ்ப்பாவணி" படைத்து தமிழ் கூறும் முஸ்லிம் நல்லு லகுக்கு பெரும் பணி புரிந்துள்ளார். அருள் வாக்கி
மெய்ஞ்ஞான அருள் வாக்கி அப்துல் காதிறு புலவர் இலங்கையில் வாழ்ந்த பெரும் புலவர்கள் வரிசையில் சேர்ந்த வர். மிக அதிக தமிழ் இலக்கியங்களைப் படைத்தவர். "சந்தத்திருப்புகழ் பெரும் புகழ் பெற்ற காப்பியம். 'முகிய்யிதீன் ஆண்டவர் காரணப் பிள்ளைத் தமிழ்’ எனும் பெரும் காப்பியத்தை கி. பி. 1895ல் புலவர் வெளியிட்டார். காவி யத்தை ஒவியத்தில் தீட்டிக் காட்டிய பெரும்புலவர் இவர். புதுமொழி மாலை, திரு மதீனத்துமாலை, ஆரிபு மாலை, பேரின்ப ரஞ்சித மாலை, ஞானப்பிரகாச மாலை, பல வண்ணத்திரட்டு, ஞானமணித்திரட்டு, சித்திரகவிபுஞ்சம், பிரபந்த புஞ்சம், திரு பகுதாத ந்தாதி, கண்டிக்கலம்பகம், நவ மணிதீபம், வினுேதமஞ்சரி, மெஞ்ஞானக் குறவஞ்சி, கோட்டாற்றுப் புராணம், தேவாரப்பதிகம், கண்டி சிகாபுத்தீன் வலி யுல்லா பதிகம்,உமரொலியுல்லா பிள்ளைத் தமிழ், இப்படியான நூற்றுக் கணக்கான கலைச் செல்வங்களை நமக்கு தந்தவர்
இவர்,
够

இஸ்லாமிய புலவர்கள்
தமிழ் இ லக் கி ய படைப்புகளை படைத்து தமிழ்கூறும் முஸ்லிம் நல்லுல் குக்கு அரும்பணி புரிந்ததில் இலங்கை எவ்வகையிலும் பின்தங்கியதல்ல. ஹிஜ்ரி 1295ல் "சீரு நாடகம்" எனும் அருமை யான காப்பியத்தை ஆக்கித் தந்த யாழ்ப் பாணம் சேகு தம்பி புலவர், 'குத்பு நாய கர் நிரியாண்மான்மியம்" Lifrg Wu யாழ்ப்பாணம் சுலைமான் லெப்பை புல வர் ‘நாலிமாம்கள்” பாடிய யாழ்ப்பாணம் ஷெய்கு மஃரூப்லெப்பைபுலவர், 'ஆரண முகம்மது காரணக்கும் மி’ பாடிய யாழ்ப் பாணம் சுல்த் தான் தம்பி பாவலர் “சாது லிநாயகம்" பாடிய யாழ்ப்பாணம் முகம் மது முகி தீன் ஹாஜியார் புலவர், "மஹ்மூ திய்யா பக்திரச கீர்த்தனை" பாடிய யாழ்ப் பாணம் ஹக்கீம் மீராமுகிய்யிதீன் புலவர், "குத்பு நாயகர் பாமாலை" பாடிய யாழ்ப் பாணம் முகம்மது அப்துல்லா லெப்பை புலவர் "முகிய்யத்தீன் புராணம் பாடிய யாழ்ப்பாணம் பதுருத்தீன் புலவர் (கி.பி. 1881), 'புலவராற்றுப்படை' எனும் ஒரு அரிய காப்பியத்தை ஆக்கித்தந்த புத்த ளம் காரைதீவு செய்கு அலாவுத்தீன் புல வர், பல கீர்த்தனைகள், விருத்தங்கள் பாடிய எருக்கலம்பிட்டி பக்கீர் புலவர், "ஆசாரக் கோவை' இயற்றிய கல்பிட்டி அப்துல் மஜீத் புலவர், "சாந்த ரூபி நாட கம் அமைத்து தந்த மன்னர் பக்கீர் புல வர், "ஞானரை வென்றன்" பாடிய மருத முனை சின்ன ஆலிம் புலவர், "தீன்மாலை" பாடிய காத்தான்குடி அகமது நயினர் பாவலர், மதுரை தமிழ் சங்க செயற்குழு உறுப்பினராக இருந்து பல இஸ்லாமிய இலக்கியங்களைப் படைத்துதந்த திருக் கோணமலை செய்கு மதாறு புலவர், "நவ ரத்தின புராணம்’ பாடிய மூதூர் முகிதின் பிச்சை புலவர், "மெஞ்ஞான துதி" பாடிய பேருவிளை அகமது லெப்பை மரைக்காயர், சிங்களத்திலும் தமிழிலும் புலமைமிக்க வரும் சர்வசமய கீர்த்தனைகள் பல பாடிய வருமான மாத்தரை முகம்மது காஸிம் புலவர் காலி காதிர் சம்சுத்தீன் புலவர், "தோத்திர புஞ்சம்' பாடிய மக்கோஞ அப்துல் ஹமீது மரைக்காயர், 'நாய்ச்சி யார் பதிகம்' நாவலப்பிட்டி அப்துர் ரஹ்மான் புலவர், திருமணி மாலை பாடிய
gua

Page 13
கலகெதரை நூர் முகம்மது புலவர், "பத்ரு நாமா" தலைபாத்திஹாமாலை" பாடிய தெல் கொட்டை ஆதம் லெப்பை, *" காரண ரஞ்சித மஞ்சரி” ஆக்கிய கொழும்பு அப்துல் ரஹீம் சாஹிபு, "ஞானந்த ரத்தினம்’ பாடிய அப்துல் ஹனிபாவா சாஹிப், 'கலிமா திறவு கோல்' இயற்றிய காத்தான்குடி ஹாமீது லெப்பை ஆலிம், இன்னும் எண்ணற்ற பலர் இஸ்லாமிய தமிழ் இலக்கியங்கள் படைத்து பெரும் பணி புரிந்துள்ளார்கள்: தமிழுக்கு இவர்கள் செய்த பெருந் தொண்டை தமிழுலகம் என்றும் மறக்க (Մ)ւգաn &l:
இஸ்லாமிய இலக்கியங்கள்
கீழக்கரை மெஞ்ஞானி செய்கப்துல் காதிறு லெப்பை ஆலிம்பாடிய பன்னி ரண்டு மாலைகள் , சிந்தாமணியூர் முத்து மீரு புலவர் பாடிய 'மகுபூபுகாதல், கோட்டாறு செய்யிது அபூபக்கர் புலவர் பாடிய "அபாயஸிதுல் பிஸ்தாமீ" "சீரு கீர்த்தனம், ஐயம்பேட்டைமதார் சாஹிபு புலவர் பாடிய 'நெஞ்சொளிவு மாலை' பள்ளப்பட்டி செய்கப்துல்காதிறு புலவர் பாடிய 'அடைக்கலமாலை" புரையாறு மீருன்கணி அண்ணுவியார் பாடிய “குற மாது" மதுரை செய்யது மீருன் புலவர் штцј ш 'பப்பரத்தியார் அம்மானை' உமறு புலவர் மகன் கவிக்களஞ் சியப்புல வர் பாடிய "நபி அவதார அம்மானை' ஆரிபு நாவலர் பாடிய ‘நாகூர் ஆண்டவர் பிள்ளைத் தமிழ்" வண்ணமலை ஷெய்குபீர் மூகம்மது புலவர் பாடிய 'தீதாறுமாலை,” முகம்மது நூறுத்தின் புலவர் பாடிய "மூசாநபி புராணம்' மொன்னமுகம்மது காதிரி சத்தாரி இயற்றிய 'ஸeரு 2-வது வால்யூம்' ஜீவரத்ன கவி பாடிய "மதீன கலம்பகம்' அசஞ லெப்பை பாடிய 'நவ • ரத்னத் திருப்புகழ்' மீருன் சாஹிபு புல வர் பாடிய 'றசூல்நாயகம் பிள்ளைத் தமிழ்’ பீர்முகம்மது புலவர் பாடிய 'தபிநாயகம் பிள்ளைத் தமிழ்” சாகுல் ஹமீது புலவர் பாடிய ‘நாகூர் பிள்ளைத் தமிழ்' சொர்ணகவி நயினர் முகம்மது புலவர் பாடிய 'செய்குதாவூது வலி யுல்லா பிள்ளைத்தமிழ்" ஷெப்குமீருன்
D6)f

Lavaf Lumigu“unfé Gudm5mu8 Leh3m தமிழ்" அசனலி புலவர் (ஹிஜ்ரி 1180) பாடிய 'ஐந்து படைப்போர்’ மதார் சாஹிப் புலவர் (ஹிஜ்ரி 1160) பாடிய "மிஃருஜ் நாமா' பக்கீர் மதாறு புலவர் பாடிய'இராஜமணிமாலை" "முகிய்யிதீன் மாலை" ஞானமஸ்தான் பாடிய "ஞான வாக்கியம், செய்யிது அலி குரு மஸ்தான் பாடிய "ஞான ஒப்பாரி" ஜமாலுத்தீன் புலவர் பாடிய “சு அபுல் ஈமான்' குருவித் துறை பட்டாணி முகம்மது ஹம்ஸா லெப்பை பாடிய "அகந்தெளியு மாலை' பேட்டை அப்துல் காதிறு சாஹிபு புலவர் இயற்றிய "இரத்தின முகம்மது காரண சரித்திரம்' காயல்பட்டணம் சாமு நயி ஞர் லெப்பை ஆலிம் (ஹிஜ்ரீ 1300) பாடிய 'நெஞ்சறிவு மாலை’ ஜகவீரரா மங்கலம் கலீபா சாஹிபு புலவர் (ஹிஜ்ரீ 1312) பாடிய கீர்த்தனைகள், தென்காசி செய்யிது அனபிய்யா சாஹிபு (கி. பி. 1883) பாடிய "நபி நாயகர் பிள்ளைத் தமிழ்” காயல்பட்டணம் அகமது லெப்பை ஆலிம் பாடிய *தாய் மகளேசல்" காயல் பட்டணம் செய்யது முகம்மதுல் காதிரீ பாடிய “ஞானப்பிரசன்னு ரத்தினம்’’
காயல்பட்டணம் சின்ன உவைசுளு லெப்பை ஆலிம் பாடிய "ஹகீகத்து LDrta)'' காயல்பட்டணம் முகம்மது
லெப்பை ஆலிம் பாடிய “செய்யிது மூகம் மது புகாரி தங்கள் ஆனந்தக்களிப்பு' காயல் பட்டணம் செய்கப்துல்காதிறு லெப்பை ஆலிம் ஹாஜிபாடிய “வெள் ளாட்டி மசலா?* ஏட்டிலடங்கா G பெரும் புலவர்கள் பாடிய பல வகை பாமாலைகள் இஸ்லாமிய தமிழ் இலக்கி யத்துக்கு மெருகு கொடுக்கின்றன.
கண்ணகுமது புலவர்
பல இஸ்லாமிய தமிழ் காப்பியங்கள் கவனிப்பாரற்று செல்லரித்து குப்பை களுக்குச் சென்றுவிட்டன. எஞ்சியிருந்த நூல்களை சேகரிக்கும் பெரும் பணியை மேற்கொண்டவர் காயல்பட்டணம் கண் ண குமது மகுதூம் முகம்மது புலவர்: சென்னை பல்கலைக்கழக புத்தக பரிபால னத் தலைவராக இருந்து ஹிஜ்ரி 1270 முதல் 40 வருட காலமாக இப் பெரும் பணியிலேயே ஈடுபட்டிருந்தார் 60 க்கு

Page 14
மேற்பட்ட இஸ்லாமிய தமிழ் இலக்கிய நூல்களைப் பதிப்பித்துத் தந்த பெருமை இவரையே சாரும். ஹிஜ்ரீ 1321-ல் அவர் எழுதிய பதிப்புரையில் “இதுவரை 20 கோடி வாக்கியங்கள் மட்டில் பலவித பாடல்கள் அச்சிட்டுள்ளோம்” என குறிப் பிடுவதிலிருந்து அவரின் பொரும் பணியின் தகமை நன்கு தெரிகிறதன்ருே! இயல், இசை இவ்விரண்டிலும் நல்ல பாண்டித்ய முள்ளவர். இயலில் கெளது நாயகம் சரித் திரமும், இசையில் "நூறு மசாலா" வும் ஆக்கியுள்ளார். தமிழ் முஸ்லிம் நல்லுல
-ത്ത
ஓங்கி முழங்கு
ஓங்கி முழங்குவீர் : ஒருவனே நாம் தெ ஏங்கிப் புலம்புவ தி ஈட்டப் பிறந்தவன்
ஓங்கி முழ
d c
வாழ்வுக்கு அச்சாணி வள்ளலிமாம் நபி ே சூழ்ச்சிகள் தொல்லை சுடர் நெருப்பான வ6 ஓங்கி முழ
d
சுவனத்திற் குரியவர் சுருதியே வாழ்வியல் புவனத்தின் தொண் புகழ் கொண்டு பூத் ஓங்கி முழ
o
மானிடச் சேட்டைக மாமன்னன் அல்லாஹி வானுயர் விருட்சத்தி வாழ்ந்து சிறப்பவன் ஓங்கி முழ

கம் இவருக்கு பெரிதும் கடமைப்பட்டுள் ளது. இவரின் பணி இல்லையெனில் அனேக வெளியீடுகள் வரமுடியாமல் மூலப்பிரதி கள் குப்பைக்கு போய் இருக்கும். நூல் வெளியீடு
இஸ்லாமிய கலைக்கு விழா எடுக்கும் ஒரு உணர்ச்சியும் விழிப்பும் ஏற்பட்டிருக் கும் இச்சந்தர்ப்பத்தில் இலக்கிய ஆர்வ முள்ளவர்கள் ஒன்று பட்டு நூற்றுக்கணக் கான இஸ்லாமிய தமிழ் நூல்கள் ெ வர வழி வகுக்க வேண்டும்.
ogggab
5îİ göIîİ!
தக்பீர் - அல்லாஹ் ாழும் வல்லான் ! ல்லை - அருள்
முஸ்லிம் ! பங்குவீர் தக்பீர் !
O
என்பீர் - எங்கள் பாதம் ! கள் தூளாம் - ஈமான் ன் முஸ்லிம் ங்குவீர் தக்பீர் 1
o
என்பீர் - குர்ஆன் கொண்டோர் ! டர்களானுேர் - வானுேர்
தவன் முஸ்லிம் ! }ங்குவீர் தக்பீர் !
s ள் இல்லை - எல்லாம் ற்வின் ஆணை !
ன் வித்தாய் - வையம்
முஸ்லிம் ! ங்குவீர் தக்பீர் !
SM* புரட்சிக் கமால்.
தியாகி

Page 15
ഋ് മിഖ
தோன வே. அ. இராசரத்தினம் ரு வங்
|- சிறுகதைத் தொகுதி
வாழையடி வாழ்ைக செரெத்தினம் ஈ
墅)。
(புலவர்மனி எ GL சின்-வப் பரிசில்பெற்று
இளமை பருவித்திலே (எம் . ாஹ்மான்)
போதிபதியின் சான்றிதழ்
|- சிறுவர் இலக்கியம்
(எம். ஏ. ரஹ்மான்) - ஈழத்தில் ெ
உருவகக் கதைத் தொகுதி (வ சித்து-இலக்கிய இரசிகமணி
வரலாற்று நூல் (பல
上
கவிஞர் அண்னல்) - க
கவிதைத் தொகுதி
'பரிபாரி பரபர் (சாகு - ஈழத்தில் வெளியா
பேனும் சித்திரத் தொகுதி (
---
இலக்கிய வகம் கவிஞர் வி. ਪ இ
ਪਜਾਮੇ
 
 
 

uប្រចាំ
*寺、凸 s、
ਸੰਖੇਪ
ਪੀਏਸ 岑/-
ਘ)
விலே ரூ. 350
ਲੁ॥ பெற்ற
விலை ரு 1
பளியான முதலாவது
ண்ணச் சித்திரங்களுடன்) விலை ரூ 2.
கனக-செந்திநாதன்) =
படங்களுடன்) ਪੀ. ਹੈ।
ਸੰਤ ਹੋ ।
ਨੀਏ
T।
த்திரங்களுடன்
リエG』

Page 16
ஹாபிஸ் செய்யிது காயல்பட்டனத்திற் பிறந்தா எழுத்து-கலே கிய துறைகள் கிரஸ் கமிட்டியிலும், நெல்லே இருந்த காலத்தில் ராஜாஜி நெருங்கிப் பழகவும், [#ജ', { வாய்ப்புப் பெற்றவர். அவ்வி டுரைத் தொடர்கள் எழி தியுள் தமிழ்கூறும் முஸ்லிம் நல்லுலகம் வை. மார்க்கோ போலோவின் பா பாத்திமா நாயகி பெற்ற சீதனம் மார்க்கம் கண்ட சமதர்ம தூத ஆகிய தனிக் கட்டுரைகள் குறி மஹபூப் சுப்ஹானி, வள்ளல் துள்ளார். வான்புகழ் காயல்பட் நூல் ஓர் அரிய ஆய்வு நூலாே திலும் எழுதும் வன்மையுள் (பாண்டிய நாட்டின் அரபு ஆராய்ச்சிக் கட்டுரையைச் :ெ Hindu) என்னும் பிரபல தின் fie Farruing it gy II L 33 இரு மொழிகளிலும், விஞ்ஞ
வித் தமிழிலும் நடாத்திய களுக்கு இவரே பொறுப்ப இவற்றுடன் தொழிற் துறை இலங்கை அரசினர் நடாத்தி ாட்சியை நடத்தப் பொறுப் உறுப்பினராகவுஞ் சேவை G
எழுத்தாளரும் - ஆரா ஹாபிஸ் அவர்கள், சிறந்த முஸ்லிம் எழுத்தாளர் சங்க சின்னியாவில் நடைபெற்றி கியூ வித்தகர்களுக்குப் பொ. ஆதலம்ை தாங்கினர். 1945இ வள்ளல் சீதக்காதி விழாவி ܡܠ
இல் டாக்டர் ஹானஸன் ந பேச்சாளராகக் க يشا بقية الطاقة
- --------
== == ==
을
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LAASAAA SAAS S A A S ueS ee ee e e ee S S SSS SK S S .ܪ ܐܨܣܛܒܬܐ_ܩܨܒ̣ ---
-ూ-డాక్టోజ్ 誉。
领
அஹமது அவர்கள் 26.3.1915 {3}ảo ர், சிறு வயது முதலே அரசியல்வே ஈடுபட்டார். தமிழ் நாடு காங் ஜில்லா போர்டிலும் அங்கத்தவராக ட்ாக்டர் சுப்பார்ப்ன் ஆகியோருடன் நேருஜி போன்ருேரைச் சந்திக் |ம் ப்போது பல பத்திரிகைகளிலே கட் ஒளார். விஞ்ஞானமும் தொழில்களும், ஆகியன சமீபத்தில் பிரசுரமான த்திரை, ஜனநாயகமும் அபேதவாதமும், "லா ல்ய்ேயிது அஹமதுகான், சாந்தி ர், அல்லாஹ்முன் எல்லோரும் ஒன்றே
剪
நிப்பிட்த் தக்கவை. மாசில்லா மணி க்காதி ஆகிய இரு நூல்களைத் தந் டணம் என்னும் இவரது பிறிதொரு தம். தமிழில்மட்டுமல்ல, ஆங்கிலத் -
STG. f. An Arab King of Pandya வேந்தர்) என்ற இவரது ஆங்கில :பிலிருந்து வெளிவரும் இழிந்து சரி விரும்பிப் பிரசுரித்தது. Scientiகைஆெங்கிலம்-சிங்களம் ஆகிய ானப் பண்ணை என்னும் பத்திரிகை தோடு, ஆங்கிலம்-தமிழ் ஆகிய பகுதி ாசிரியராகவும் கடமையாற்றினூர் பிலும் ஈடுபாடுடையவர். 1956 இல் ய கைத்தொழி-விவசாயப் பொருட் 凸 函山凸击五百ü二一。Q于山血 குழ் சய்துள்ளார்.
ܩܝܡܝ--+ܬ
ப்ச்சியாளரும் - வர்த்த கரு மான் பேச்சாளருமாவர். இவர் இலங்கை த்தின் துணேத்தலேவர் அண்மையில் இஸ்லாமியக் கலேவிழாவிலே இலக் ற்பதக்கஞ் சூட்டிய கலே அரங்கிற்குத் ல் காயல்பட்டணத்தில் நடைபெற்ற bகுத் தலேமை தாங்கினூர், அவ்விழா யிஞர், சி. என். அண்ணுத்துரை ஆகி
லந்து கொண்டார்கள்.
LMMS AASA ASAAAS AAS AA A AAA A AAAA AAAA AAAA A A eeS eee eAe e e e e e e e e SS S S
જી હતા, Wolfendhal Street Colginbo-13