கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தீவகம் வளமும் வாழ்வும்

Page 1


Page 2


Page 3

தீவகம் - வளமும் வாழ்வும்
கலாநிதி கா. குகபாலன் முதுநிலை விரிவுரையாளர் - தரம் 1 புவியியற்றுறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
வெளியீடு:
தீவகக் கோட்டக் கூட்டுறவு ஒன்றியம், யாழ்ப்பாணம்.
1994.

Page 4
Title of the Book Author
Address
Edition Copy right
Publisher
Printers
Cover Print
Price
நூல் ஆசிரியர் முகவரி
பதிப்பு பதிப்புரிமை
66 facif
அச்சகம்
அட்டைப் பதிப்பு
விலை
Theevagan-Walamuna vazhvum
Karthigesu Kugabalan B. A. Hons. (Cey.), M. A., Ph. D. (Taf.) Post M. A. Diploma in Population Studies (Madras)
Champion Lane, Kokuvil East, Kokuvit. Sri Lanka.
First Edition, December 1994. To the Author.
The Island Division Co-operative Union, Jaffna.
Bharathi Pathippakam- K. K. S. Road, Jaffna. Creative Hands (PVT) Ltd., Colombo - 4.
Rs... 100 -
தீவகம் - வளமும் வாழ்வும். கலாநிதி கார்த்திகேசு குகபாலன். சம்பியன் ஒழுங்கை, கொக்குவில் கிழக்கு, கொக்குவில், இலங்கை. முதலாம் பதிப்பு, மார்கழி 1994. ஆசிரியருக்கு. مع தீவகக் கோட்டக் கூட்டுறவு ஒன்றியம். பாரதி பதிப்பகம், கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம். கிறியேற்றிவ் ஹாண்ட்ஸ், கொழும்பு - 4 ಅy೭೧r 100+

- என் அன்புத் தாயாரின்
நினைவாக -

Page 5

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
பேராசிரியர் க. குணரத்தினம் B. Sc. (Cey.), Ph. D., (Lond) D. I. C. (Lond.) Vice - Chancellor
வாழ்த்துரை
ஒரு நிலப்பரப்பின் தொன்மையையும் கலை, காலாசார பண் 4களையும் பொருளாதார வளத்தையும் ஆராய்ந்து நோக்கி எதிர் காலத்தில் அதன் வளத்துக்கு உதவக்கூடிய வகையிற் சிந்தித்தல் இன்றைய நிலையில் வேண்டப்படும் கலையாகும்.
இந்த நிலையில் நின்று கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலம் தொடக் கம் மக்கள் நடமாட்டமுடையதானதும் மேல்நாட்டார் இலங்கைத் திவைக் கைப்பற்றிய போதெல்லாம் அவர்களின் கணிசமான கவ ாைத்தை ஈர்த்ததுமான தீவகப் பகுதியின் வளத்தையும் வாழ்வையும் பொருத்தமான ஒருவர் இன்று எம்முன் வைக்கின்றார்.
புவியியல் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி கா. குகபாலன் அவர்கள் இவ்வாய்வின் மூலம் தீவகப் பகுதியின் பொருளாதார சமூக பண்பாட்டுக் கோலங்களின் வரலாற்றையும் தற்போதைய நிலையையும் அவற்றின் விருத்தியின் அவசியத்தையும் எடுத்துத் கூறி யுள்ளார். இது போன்ற ஆய்வுகள் எமது பிரதேசத்தின் தொன் மைச் சிறப்புக்களையும் இனிவரும் காலத் தேவையினையும் மக்கள் முன்னேர2றத்துக்கு வேண்டிய செயற்பாடுகளையும் கோடிட்டுக் காட் டுவனவாக அமையலாம்.
கலாநிதி கா. குகபாலன் அவர் க ளின் ‘திவகம் - வாழ்வும் வளமும்” நமக்கும் நமது மண்ணுக்கும் பெருமை சேர்க்கும் என்று நம்புகின்றேன்.
யாழ்ப்பாணம். பேராதிலுர் க. குணரத்தினம் II - I 2- 1994 துணைவேந்தர்

Page 6
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை B. A. Hons. (Cey.) Ph.D. (Durham) Dean, Faculty of Arts, University of Jaffna.
வாழ்த்துரை
யாழ்ப்பானரப் பல்கழைக்கழக புவியியற்றுறைச் சிரேஷ்டவிரிவுரை யாளர் கலாநிதி கா. குகபாலன் அவர்களால் எழுதி வெளியிடப் படும் ‘திவகம் - வளமும் வாழ்வும்” என்ற நூல் வெளிவருவதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.
தற்போது பிரிவுகள் அடிப்படையிலும் கிராம மட்ட அடிப்படை யிலும் வளங்களை இனங்கண்டு அதற்கேற்ப அபிவிருத்திக்கான உபா யங்களை முன்வைக்கவேண்டிய தேவை காணப்படுகின்றது. உதாரண மாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கான பொதுவான திட்டமானது இருக் கின்ற போதிலும் கூட தீவுப்பகுதிகள் வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், பெரியயாழ்ப்பாணம் போன்றவற்றிற்கான அபிவிருத்தித் தேவைகள் வேறுபடுவதைக் காணமுடிகின்றது. அந்த வகையில் குடாநாட்டில் தனிப்புவியியற் பண்புகளைக் கொண்ட தீவுகள் பற்றிய நூல் இன்றைய காலகட்டத்தில் மிகவும் பொருத்தமானது.
தீவுப் பகுதியில் வாழ்ந்த மக்களிற் பெரும்பகுதியினர் இன்று அகதிகளாகக் குடாநாட்டிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் வெளி நாடுகளிலும் சிதறிக்கிடந்தும் தீவகத்தை அபிவிருத்தி செய்யவேண் டும் என்ற நிலையுடன் இருக்கும் இக்காலத்தில் தீவுகள் பற்றிய இந் நூல் வெளிவருவது காலத்தின் தேவையைப் பூர்த்திசெய்வதாக அமை கின்றது .
கலாநிதி கா. குகபாலன் அவர்கள எனது மதிப்புக்குரிய மான வனும் எனது துறையில் சிரேஷ்ட விரிவுரையாளருமாவர். அவர் குடித்தொகைப் புவியியற்றுறையில் கலாநிதிப்பட்டம் பெற்றுள் ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பற்றிய ஆய்வில் கூடிய ஈடு பாடு கொண்டு உழைத்து வருகின்றார். அவரது கல்விப்பணி சிறக்க வேண்டுமென வாழ்த்துகின்றேன்.
கலைப்பீடம், பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை யாழ் பல்கலைக்கழகம். கலைப்பீடாதிபதி
1 - 12- 1994
 

ப. கனக லிங்கம் தலைவர், திவகக் கோட்டக் கூட்டுறவு ஒன்றியம்
3211, ωσoofυ υπιό ού β,
யாழ்ப்பாணம்.
வாழ்த்துரை
எமது பிரதேசத்தைச் சேர்ந்தவரும் யாழ் பல்கலைக்கழக புவியி பற்றுறைச் சிரேஷ்ட விரிவுரையாளருமான காலநிதி கா. குகபாலன் அவர்களால் எமது பிரதேசத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட 'திவகம் - வளமும் வாழ்வும்' என்னும் நூல் இன்று வெளியிடப் படுவதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்
எமது மண்ணை விட்டு அநாதைகளாக்கப்பட்ட இவ் வேளை முலும் எமது மக்களும், ரா ளைய எதிர்காலச் சந்ததியினரும் தீவகத்தின் பெருமையினையும் சிறப்பினையும் அறிந்து கொள் வதற்கு வாய்ப்பாக இன்றைய இடர் க் காலத்தில் இந் நூலினை வெளியிட்டுள்ளது காலத்தின் தேவையாகக் கருதுகின்றேன்.
எமது பிரதேசத்தின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காகப் பல வழிகளிலும் உழைத்து வரும் கலாநிதி கா. குகபாலன் அவர் கள் இந்நூலின் வாயிலாக அனைத்துத் தீவக மக்களின் மேன்மையி னையும் சிறப்பினையும் வெளிக்கொணர்ந்துள்ளார்.
இந்நூல் எமது மண்ணுக்குப் பெருமை சோக்கவேண்டும் என வாழ்த்துகின்றேன்.
அத்துடன் தீவகக்கோட்ட கூட்டுறவு ஒன்றயத்தின் மூலமாக இந் நூலை வெளியிடுவதற்கு உதவி:பாகவிருந்த தீவக்கோட்ட கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர்களான திருவாளர்கள் பொ, மாசிலாமணி, தி. சுந்தரலிங்கம், சோ. விக்கினேஸ்வரன் ஆகியோருக்கும்
எனது பாராட்டினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தீவகக்கோட்ட
கூட்டுறவு ஒன்றியம்
1 - 12- 1994
ப. கனகலிங்கம் தலைவர்

Page 7
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
பேராசிரியர் செ. பாலச்சந்திரன் B. A. Hons. (Cey.) M. Sc. (Birm
Head, Dept. of Geography, University of Jaffna.
அணிந்துரை
இப்போது நாம் என்ன சொன்னாலும் இது காலவரை இல்லாத அளவில் புத்தகங்களும், சஞ்சிகைகளும், இதர வெளியீடுகளும் வெளிக்கொணரப்படுகின்றன என்பதில் சந்தேகம் இல்லை. யாழ்ப் பாணப் பல்கலைக்கழகமும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒருசமயம் சமுக மும் பல்கலைக்கழகமும் இணைந்திருக்கவில்லை. இன்று அ  ைவ நெருக்கமாக இருக்கின்றன.
பல்கலைக்கழகத்தில் படித்தவர், தான் பிறந்த மண்ணையும் cor தேசத்தினையும் அதன் அபிவிருத்தியையும் பற்றிச் சிந்திக்க வேண் டும். அதைவிட்டு ஒடக்கூடாது. அப்பொழுது தான் அவர் பிறந்த மண் அவரால் வாழ்வும் வளமும் பெறுகிறது. இந்த வகையில் பார்க்கும் போது கலாநிதி கா. குகபாலன் அவர்களின் வளமும் வாழ்வும் ஒர் அபிவிருத்திச் சிந்தனையின் வெளிப்பாடு என்று சொல்வது முற்றிலும் பொருத்தமானது.
கலாநிதி கா. குகபாலன் அவர்கள் எமது துறையில் சிரேஷ்ட விரிவுரையாளர். தமது ஆரமபக் கல்வியை புங்குடுதீவு சித்திவிநாயக வித்தியாலயத்திலும், நுவரெலியா கொலிரிரின்றிக் கல்லூரியிலும் உயர்தரக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியிலும் பெற்றவர். புவியியல் பட்டப் படிப்பைப் பேராதனைப் பல்கலைக் கழகத்திலும்  ெத ர ட ர் ந் து முது மாணிப் பட்டத்தையும் பின்பு கலாநிதிப் பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலும் பெற்றவர். குடித்தொகைக் கல்வியில் ஈடுபாடு கொண்ட இவர் சென்னைப் ப ல் கலைக்கழகத்தில் முதுமாணிப்பட்டத்தின் பின் டிப்ளோமாப்பட்டத் தையும் பெற்றவர். இந்தவகையில் இந்நூலை எழுதுவதற்கு அவர் முற்றிலும் தகுதியானவர் எனலாம்.
 

"திவகம் - வளமும் வாழ்வும்" என்னும் இந்நூ வினை பிரதேசம் 'ya?usuasai (Regional Geography) go ay way GTago an paparab. பிரதேசத்தை இனங்கண்டு அங்குள்ள சமூகம், அங்கு அமைந்துள்ள வளத்தினை பயன்படுத்தி, வளமான வாழ்வை அமைத்திருக்கின்றதா? அல்லது அப்படி அமைக்காவிடில் எந்தவகையான பிரதேசத் திட்ட மிடலினை (Regional Planning) அறிமுகம் செய்யலாம், பலகோணங் களில் அதன் வரைவு எப்படி இருக்க வேண்டும், வளமான வாழ்வு அமைந்திருந்தால் அது எதிர்கால சந்ததிக்கு எவ்வாறு பேணப்பட வேண்டும், எப்படியான பாவனையைச் செய்ய வேண்டும (Utilization and Conservation) என்பன எல்லாம் ஒரு பிரதேசப் புவியியல் ஆய்வில் இடம்பெற வேண்டும்.
இந்த நூல் மேற்கூறிய பாணியில் அமைந்திருக்கிறது. ஆரம்பத் தில் திரு. அபேகுணவர்த்தனா என்பவர் தீவுப்பகுதிகள் பற்றிய ( Islands - West of the Jaffna Peninsula - 1949) y 69? uc5? av gö கட்டுரையை எழுதினார். அதன் பின் பல கட்டுரைகள் வெளிவந் திருக்கின்றன. ஆயினும் இன்று கலாநிதி கா. குகபாலன் இந்நூலை வெளியிடுகிறார். ஆனால் இது மிகவும் தரமானது. இன்னும் பலர் இது பற்றி எதிர்காலத்தில் எழுதலாம். ஆயினும் தீவகத்தின் வளமும், வாழ்வும் பற்றிய சிந்தனைக்கு இந்த நூல் ஒரு அடிப்படையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
இந்நூலில் உள்ள ஒன்பது அத்தியாயத்திலும் கலாநிதி கா. குகபா லன் தனக்கே உரிய பாணியில் விளக்கிச் செல்கிறார். பல ஆண்டு கால பல்கலைக்கழக அனுபவம் அதற்குப் பயன்பட்டுள்ளது. அவரு டைய சிந்தனை பிறந்த மண்ணுக்கே அளிக்கப்பட்டு பெற்றதாய்க்குச் சமர்ப்பணம் செய்யப்படுகின்றது. இது குறித்து மிகவும். சந்தோஷப் படுவதுடன், அவருடைய இந்நூலுக்கு அணிந்துரை செய்வதில் பெருமையும் அடைகிறேன்.
வளர்க அவரது சிந்தனைகள்.
பேராசிரியர் செ. பாலச்சந்திரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். தலைவர், புவியியற்றுறை
! I-12-i 994

Page 8
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
கலாநிதி கா. குகபாலன்
Mwemo B. A. Hons. Cey). M. A., Ph. D. (Jaf) Post M. A. Diploma in Population Studies (Madr.) Senior Lecturer (Grade I)
முகவுரை
யாழ்ப்பாண மாவட்டத்தில் தீவகப் பிரதேசம் ஒப்பிட்டு ரீதியாக அதன் பெளதிக நிலமைகளினால் அபிவிருத்தி குறைந்த பிரதேசமா கக் காணப்படுகின்றது. இதன் விளைவாக இப்பிரதேசத்திற்கு குடித் தொகையைத் தாங்கும் திறன் குறைவாக இருக்கின்றது. இதனால் மக்கள் காலத்துக்குக் காலம் வெ ளி யி ட ப் பெயர் வினை மேற் கொண்டு வருகின்றனர். எவ்வாறெனினும் மக்கள் வாழ்ந்து வரும் தீவுகளில் குடித்தொகை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. 1991 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி 85000 மக்கள் (காரைநகர் உட்பட) வாழ்ந்துள்ளனர்.
திவகப் பிரதேசம் தென்னிந்திய, யாழ்ப்பாணப் பெருநிலப் பிர தேசங்களுக்கிடையில் அமைந்துள்ளமையால் வரலாற்றுக் காலங்க ளில் பொருளாதார, சமூக, பண்பாட்டு ரீதியில் சிறப்பிடம் பெற்று வந்துள்ளமையைப் பல்வேறு வரலாற்று தொல்லியற் சான்றுகள் மூலம் வெளிக்கொணரபபட்டுள்ளது. இந்நூல் உருப்பெற தீவகம் சம்பந்த மாக எழுதப்பட்ட மற்றும் கிடைக்கப் பெற்ற சான்று கள் பெரிதும் உதவிப்புள்ளன.
1986 ஆம் ஆண்டு தீவக அபிவிருத்திக் கழகம் ஸ்தா பிக் கப்பட்ட போது அதன் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் தீவகத்தின் புவியியல், சமூக, பொருளாதார, பண்பாட்டுக் கோலங்களை வெளிக்கொணரக் கூடிய வகையில் பல்துறைசார் அறிஞர்களின் ஆக்கங்களைப் பெற்று வெளியிட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டு வெளியிடு வதற்கான பொறுப்பும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. பல்துறை சார் அறிஞர்களிடம் அணுகிய போதிலும் ஒரு சிலரே ஆக்கங் களைத் தந்தனர். அத்துடன் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலமை களால் அதனை முன்னெடுத்துச் செல்லமுடியவில்லை. எனவே நான் இப்பணியின் ஒரு பகுதியையாவது நிறைவேற்ற வேண்டியதாயிற்று. அதாவது இந்நூல் தீவகத்தின் சகல விடயங்களையும் உள்ளடக்கி யுள்ளது எனக் கூறமுடியாது. எனினும் முக்கியமான பல அம்சங் கள் பொதிந்துள்ளன. வரலாற்று, பெளதிக, பண்பாட்டு கோலங் களை வெளிக்கொணர்கின்ற போதிலும் எதிர்கால விருத்திக்கான வாய்ப்புக்கள் பற்றியும் விபரிக்கின்றது. அத்துடன் எதிர்காலத்தில் திவகத்தைப் பற்றி விரிவாக ஆராயவுள்ளோருக்கு இந்நூல் நிச்ச யம் துணைபுரியும் என நம்புகின்றேன்.

இந்நூல் வெளியிடுவதற்கு முன்னர் இதன் சுருக்கக் குறிப் பொன்று எனது தாயாரின் நினைவாக வெளியிடப்பட்ட மலரில் இணைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நூலை வெளியிடுவதற்கு தீவகத்தைச் சேர்ந்த நண்பர்கள் பலா உந்து சக்தியாக விளங்கியுள்ளனர். அவர்கள் என்னைச் சந் திக்கும் போதெல்லாம் முதலில் உரையாடுவது இப்புத்தக வெளியீடு பறறியேயாகும. எனவே என்னை ஊக்கப்படுத்திய நண்பர்களுககு எனது நன்றிகள் உரித்தாகுக.
இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கிப் பெருமைப்படுத்திய யாழ்ப்பா ணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் க. குணரத்தினம் அவர்களுககு எனது நன்றிகள் என்றும் உரித்தாகுக. மேலும் இந் நூலை வெளியிடுவதற்கு உளக்கம் தந்தது மட்டுமல்லாது வாழ்த் துரை வழங்கிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப் பீடாதிபதி பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை அவர்களுக்கும் இந்நூலை அச்சிட உதவிய தீவக கோட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர் திரு. ப. கனகலிங்கம் அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்திக்கும் எனது நன்றிகள். அணிந்துரையை வழங்கிய புவியியற்றுறைத் தலைவர் பேராசிரியர் செ. பாலச்சந்திரன் அவர்களுக்கும் எனது அன்பு கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்நூல் அழகுபெற அட்டைப் படத்தினை வரைந்து உதவிய எனது மாண வன் செல்வன் சி. சசிதரன் அவர்களுக்கும் அச்சுப் பிரதிகளைச் சரிபார்த்துதவிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பாலசிங்கம் விடுதி
உபதலைவர் திரு. த. அன்பான ந்தன் அவர்களுக்கும் எனது நன்றிகள்
உரித்தாகுக.
தீவகக கோட்ட ஒன்றியத்தின் அங்கத்துவ அமைப்புக்களான புங்குடுதீவு - நயினாதீவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவர் திரு ப. கனக லிங்கம், வேலணை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவர் திரு. பொ. மாசிலாமணி, ஊர்காவற்றுறைப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவர் திரு. தி. சுந்தரலிங்கம், காரைநகர் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவர் திரு. சோ. விக்கினேஸ்வரன் ஆகியோர்கள் எனது வேண்டுகோளை ஏற்றுத் தங்களைத் தலைவரா கக் கொண்ட அமைப்புக்களுடாக இந்நூலைப் 'ரசு சித்து வெளியிடு கின்ற மைக்காக அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியறிதலையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இக்கூட்டுறவு அமைப் புக்களுடன் தொடர்புடைய ஏனையவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்நூலை அழகுற அச்சிட்டுத் தந்த பாா தி பதிப்கத்தினருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
புவியியற்றுறை, கா. குகபாலன் யாழ் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம். 1 1 -- 12 - 19 9Ꮞ

Page 9
5
万
峰
தீவகம்
திவகம்
திவகம்
தீவகம்
தீவகம்
திவகம்
திவகம்
தீவகம்
பொருளடக்கம்
அமைவிடம்
வரலாற்று நோக்கு
- குடித்தொகைப் பண்புகள்
- அரசியல்
பொருளாதாரம்
- கல்வி
- போக்குவரத்து
- அபிவிருத்திக்கான உபாயங்கள்
திவகம் - இன்றைய நிலை
உசாத்துணை நூல்கள்
பேட்டிகண்டோர் விபரம்
I
7ו
32
45
58
74
98
i 8
| 29
I33

இயல் - ஒன்று
தீவகம் - அமைவிடம்
இலங்கையின் வடமேற்கே - யாழ்ப்பாணக்குடாநாட்டின் தென் மேற்கே அமைந்துள்ள தீவுத் தொகுதியே தீவகம் என அழைக்கப் படுகின்றது. வேலணைத்தீவு. புங்குடுதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, ஆனலைதீவு, எழுவைதீவு, மண்டைதீவு, காரைதீவு (காரைநகர்) ஆகிய மக்கள் குடியிருப்பினைக் கொண்டிருக்கும் எட்டுத்தீவுகளையும் கண்ணாத்தீவு, பாலைதீவு, கற்கடகத்தீவு, நரையான்பிட்டி, சிறுத் தீவு, கச்சதீவு போன்ற மக்கள் வாழாத தீவுகளையும் உள்ளடக்கிய தீவுக் கூட்டங்களைத் தீவகத்திற்குள் அடக்கலாம். யாழ்ப்பாணக் குடாநாட்டினை நான்கு பெளதீகப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். வட மராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவுப்பகுதி என்பனவே அவை யாகும். இப்பிரதேசமானது பல்லாண்டு காலமாக ப்ெதிக பண் பாட்டு ரீதியில் வேற்றுமையிலும், ஒற்றுமைத்தன்மை கொண்டிருக் கின்றது. இத்தகைய பண்புகளைக் கொண்டிருக்கும் தீவுப்பகுதிகள் மூன்று நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன.
அட்டவனை
பிரதேசச் செயலர் பிரிவில் நிலப்பரப்பின் அளவு
பிர. செ. பிரிவுகள் ക . 60 ச. கி. மீ. கெக்டேயர்
நெடுந்தீவு 18. , 48 479I。5
தீவுப்பகுதி தெற்கு
(வேலனை) 32.6 84 8443,4
தீவுப்பகுதி வடக்கு
(ஊர்காவற்றுறை) 24.7 64 639 7.3
மொத்தம் 75。3 196 19632.2
ஆதாரம்: பரிபாலனக்கிளை அறிக்கை, யாழ்ப்பாணச்செயலகம் 1993.
நெடுந்தீவுப்பிரிவு மிக நீண்ட காலமாக அந்நியர் ஆட்சிக்காலத் திலிருந்து தனியான ஒரு நிர்வாகத்தினுள் அமைந்திருந்தமையால் அங்கு மக்கள் குறைவாகவிருந்த போதிலும் தனியான பிரதேச செய லகத்தைக் கொண்டிருக்கின்றது, தீவுப்பகுதி தெற்குப்பிரிவானது புங்குடு

Page 10
தீவு, நயினாதீவு, மண்டைதீவு, வேலணைத்தீவின் கிராமங்களான அல்லைப்பிட்டி மண்கும்பான், வேலணை, சரவணை ஆகியவற்றை உள் ளடக்கியதாகவுள்ளது. தீவுப்பகுதி வடக்குப்பிரிவானது சுருவில், நாரந் தனை, சுரம்பன், ஊர்காவற்றுறை, எழுவைதீவு, அனலைதீவு, காரை நகர் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
தீவுப்பகுதிகளை சப்த தீவுகள் (ஏழுதீவுகள்) என ஒன்று சேர்த்து அழைப்பது வழக்கம். மக்கள் குடியிருக்கும் தீவுகள் எட்டாகும். அதா வது " அல்லைப்பிட்டிக்கும் மண்டைதீவுக்கும் இடையில் 300 யார் கடற்பரப்பு காணப்படுகின்றது. அதுவும் மாரி காலத்திலேயே நீரைக் கொண்டிருக்கின்றது. கோடை காலங்களில் தரவை நிலமாகவே காட்சியளிக்கின்றது. எனவே இவ்விரு பிரிவுகளை பும் ஒன்றாகச் சேர்த்த தன் விளைவாகவே சப்ததீவுகள் என அழைக்கப்படுகின்றது.
காரைதீவு (காரைநகர்) ஒரு தீவாகக் காணப்பட்ட போதிலும் நிர்வாகத்தில் சிலவற்றைப் பொறுத்து வலிகாமத்துடன் இணைந் தும் சிலவற்றில் ஊர்காவற்றுறையுடன் இணைந்தும் செயற்பட்டு வருகின்றது. உதவி அரச அதிபர் பிரிவினைப் பொறுத்த வரை ஊர் காவற்றுறையுடனும், தேர்தல் தொகுதியைப் பொறுத்த வரை வட் டுக்கோட்டையுடனும் இணைந்துள்ளது. பலநோக்குக்கூட்டுறவுச் சங் கத்தினைப் பொறுத்த வரை தனித்தும் இயங்கி வருகின்றது. எனவே இவ்வாய்வு காரைநகரைத் தவிர்த்தே மேற்கொள்ளப்படுகின்றது.
தீவுப்பகுதியில் காணப்படும் தீவுகளின் பரப்பளவினை அட்டவணை 11 தெளிவுபடுத்துகின்றது.
அட்டவணை 11
நிலப்பரப்பு - தீவுப்பகுதி
βευυυα ύς, ச. மைல் ச. கி. மீ. 63á6 utř வேலணை 26.3 68.0 681 i. 7 நெடுந்தீவு 18.5 47.8 479 II. 5 புங்குடுதீவு 11.2 28.9 2900.8 மண்டைதீவு 3.9 0. 1010. I அனலைதீவு 2.6 6.7 673.4 நயினாதீவு w 2.2 5.7 5698 எழுவைதீவு 0.8 2.0 207.2 மொத்தம் 655 169.2 6964.5
Source:- Facts and Figures, Dept. of Geography, University
of Jaffna.
2.

அட்டவணை 11 இன்படி வேலணைத்தீவே எல்லாத்தீவுகளின் நிலப்பரப்பில் ஐந்தில் இருபங்கினைக் கொண்டிருக்கின்றது. நெடுந்
தீவு, புங்குடுதீவு ஆகியன ஏறத்தாழ அரைப்பங்கு நிலப்பரப்பினைக் கொண்டிருக்கின்றன.
தீவுப்பகுதியைச் சேர்ந்த தீவுகள் யாவும் 4 பக்கமும் கடலால் குழப்பட்டிருந்த போதிலும் வேலணைத்தீவு, மண்டைதீவு, புங்குடு தீவு, காரைநகர் ஆகியன யாழ்ப்பாணக் குடாநாட்டின் பெரு நிலத் தோடு வீதிகளால் தொடர்புபடுத்தப்பட்டிருக்கின்றன. ஏனைய தீவுகள் கடற்போக்குவரத்தினூடாகவே பிரதான நிலத்தினை அடைய வேண்டியுள்ளது. புங்குடுதீவுக்கும் வேலணைத்தீவுக்குமிடையில் 1953 ஆம் ஆண்டு **வாணர் பாலம்' அமைக்கப்பட்டதன் விளைவாக புங்குடுதீவு மக்கள் தரைப் போக்குவரத்தினை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புக்கிட்டியது. இதற்கு முன்னர் சிறிய வள்ளங்களிலும் கால் நடையாகவும் புங்குடுதீவு, வேலணைத்தீவுக்கிடைப்பட்ட கடலினை கடந்து சென்றனர்.
மிக நீண்டகாலமாக தீவுப்பகுதி மக்கள் யாழ். குடாநாட்டிற்கு செல்வதற்கு ஆழம் குறைந்த அராலிப் பகுதியைப் பயன்படுத்தினர் . மண்டைதீவு, அல்லைப்பிட்டி வாசிகள் யாழ்ப்பாணக் கடல் நீரேரி யைக் கடந்து போக்குவரத்தினை மேற்கொண்டனர். 1883 ஆம் ஆண்டு சேர் வில்லியம் துவைனம் என்பவர் யாழ்ப்பாணத்தைப் பரி பாலனம் செய்து வந்தார். அவர் தீவுப்பகுதி மக்கள் அனுபவிக்கும் போக்குவரத்துப் பிரச்சினையை கவனத்திற்கெடுத்து உடனடியாக ரூபா 50000/- செலவில் தற்போது காணப்படும் பண்ணைப்பாலத்தை அமைக்க வேண்டும் என தேசாதிபதிக்கு சிபார்சு செய்தார். 1921 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீவக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திரு. வை. துரைசுவாமி அவர்கள் எல்லாத் தீவுகளின் நலன்கருதி அராலியிலேயே இப் பாலத்தை அமைக்க வேண்டும் எனச் சிபாரிசு செய்தார். அதனை மண்டைதீவு அல்லைப்பிட்டி மக்கள் கடுமையாக எதிர்த்தனர். காலப்போக்கில் யாழ்ப்பாண நகரத்தை விரைவாகச் சென்றடையக்கூடிய வகையில் பண்ணைப்பாலத்தைக் கட்டுவதற்கு அரசு அனுமதியளித்தது. இப்பால வேலை 1956 ஆம் ஆண்டு பூர்த்தி
யானதைத் தொடர்ந்து மண்டைதீவு, வேலணைத்தீவு, புங்குடுதீவு ஆகியவற்றிற்கான போக்குவரத்து சுலபமாகியது.
தீவுப்பகுதியில் பெரிய தீவான வேலணைத்தீவு 68.0 கதுரகிலோ மீற்றர் பரப்பளவினைக் கொண்டது. இத்தீவில் கிழக்கிலிருந்து மேற் காக அல் லைப்பிட்டி, மண்கும்பான், வேலணை கிழக்கு, வேலணை மேற்கு, புளியங்கூடல், சரவணை, நாரந்தனை, சுருவில், கரம்பன் ஊர்காவற்றுறை ஆகிய பெரிய கிராமங்கள் காணப்படுகின்றன. இத் தீவின் வடக்குப் பிரதேசம் தாழ்வான நிலத்தோற்றத்தினை கொண்
3

Page 11
டிருப்பதுடன் தென்பகுதி நோக்கிச் செல்லச்செல்ல நிலத்தோற்றம்
உயர்வடைந்து செல்கின்றது. குறிப்பாக அல்லைப்பிட்டி, மண்குப்
பான், வேலணை, சரவணை, நாரந்தனை ஆகியவற்றின் வடபகுதி
களில் நிலம் தாழ்ந்துள்ளதால் மாரி காலங்களில் கடல்நீர் உள்வரு கின்றது. இத்தீவின் தென்பகுதிகள் படிப்படியாக உயர்ந்து காணப் படுகின்றது. குறிப்பாக அல்லைப்பிட்டி, மண்கும்பான் பகுதிகளில் காற் றினால் கொண்டுவரப்பட்ட மணல் குன்றுகள் காணப்படுகின்றன. எனினும் கடந்த 20 வருடங்களாக தொடர்ச்சியாக மணல் வெட்டி ஏற்றப்படுவதால் மணற்குன்றுகள் அருகிவருவதுடன் கடல் நீர் உள் நுழையக்கூடிய அபாயம் உண்டு. அத்துடன் மண்கும்பான், அல் லைப்பிட்டிக் கடற்கரையோரப் பகுதிகளில் கடல் அரிப்பினைக் காண முடிகின்றது. மண்கும்பான் பள்ளிவாசலுக்கு அண்மையில் கடற்கரை யிலிருந்து 50 அடி தூரத்கில் செங்கட்டியினால் தளம் கட்டப்பட்ட கிணறு மணல் மூடிய நிலையில் காணப்படுகின்றது. எனவே ஏற்க னவே நிலப்பகுதியாகவிருந்த பிரதேசம் கடலில் அமிழ்ந்திருக்கின்றது என்றே கருத இடமுண்டு.
நெடுந்தீவுப் பிரிவானது யாழ்ப்பாண நகரத்திலிருந்து 29 மைல் தொலைவில் அமைந்துள்ளது. 18.5 சதுரமைல் பரப்பளவினைக் கொண்ட பெரிய இத்தீவானது கிழக்கு மேற்காக 5 மைல் நீளமும் வடக்குத் தெற்காக 4 மைல் அகலமும் கொண்ட நிலப்பரப்பாகும். புங் குடுதீவு, நயினாதீவில் இருந்து 7 மைல் தொலைவில் அமைந்திருப்ப துடன் இத்தீவு சுற்றிவர ஆழம் கூடிய கடற்பரப்பினையும் கொண் டிருக்கின்றது. இத்தீவின் வடகிழக்கில் மாவலித்துறையிலிருந்து வட மேற்கே குருக்கள் மடம் வரையிலான பகுதிகளை உள்ளிட்டு 5 மைல் நீளமான பிரதான வீதி செல்கின்றது.
மிகநீண்ட காலமாக படகுச் சேவையினூடாகவே போக்குவரவு நடைபெற்று வருகின்றது. 1966 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஊர்காவற் றுறைத்துறைமுகத்திற்கும் மாவலித் துறைக்குமிடையிலான கடற் போக்குவரத்து நடைபெற்று வந்துள்ளது. இவற்றிற்கிடையிலான தூரம் 21 மைல்களாகும். ஆனால் புங்குடுதீவு, குறிகட்டுவான் பாலம் பூர்த்தியானதைத் தொடர்ந்து மாவலித் துறை குறிகட்டுவான் கடற் பரப்பினுடாகப் போக்குவரத் துப் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாண நகரத்திலிருந்து புங்குடுதீவின் அமைவிடம் 15 மைல் தூரத்திலேயே உள்ளதுடன் 11.2 சதுரமைல் பரப்பினையும் கொண் டுள்ளது. இத்தீவு பாய்க்கப்பலின் உருவத்தை ஒத்ததாக விருக்கின்றது. இது வேலணைத்தீவிலிருந்து ஆழம் குறைந்த 3மைல் தூரத்தினைக் கொண்ட கடற்பரப்பினைக் கொண்டுள்ளது. வேலணைத் தீவோடும் குடா நாட்டோடும் தொடர்பு கொள்ள வேண்டுவோர் ஆழம்குறைந்த கடற்பரப்பைக் கடலில் நடத்தோ அன்றேல் சிறுவள்ளங்கள் முல
4

km

Page 12
N

ŝo) Jærp e-soo, poŝ Lisp.
«»-sorr 

Page 13

மாகவோ சென்று வந்தனர். 1953 ஆம் ஆண்டு "வாணர் பாலம்" என்றழைக்கப்படும் புங்குடுதீவு - வேலணைப்பாலம் பூர்த்தியானதைத் தொடர்ந்து தரைப் போக்குவரத்தினூடாக நாட்டின் எப்பிரதேசத்திற் கும் சென்று வரக்கூடிய வாய்ப்புக் கிடைத் துள்ளது. புங்குடுதீவின் பிரதான வீதி மடத்துவெளி, குறிச்சிக்காடு, ஆலடி, ஆஸ்பத்திரிச் சந்தி, சந்தையடி, பெருங்காடு, குறிக்கட்டுவான் - இறுப்பிட்டி ஊட-ா கச் செல்கின்றது.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் தெற்கே யாழ்ப்பாண நகரத்திலி ருந்து 3 மைல் தொலைவில் 3.9 சதுர மைல் பரப்பளவுடைய சிறிய தீவே மண்டைதீவாகும். இத்தீவானது யாழ்ப்பாண நகரத்திற்கண்மிை யில் காணப்பட்ட போதிலும் மக்கள் விவசாய "நடவடிக்கையிலேயே தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். அல் லைப்பிட்டியிலிருந்து 300 யார் தூரத்தில் அமைந்துள்ள இத்தீவானது முன்னோரு போசி வேலணைத்தீவுடன் இணைந்திருக்க வேண்டும். இவ்வாறு இனை* கப்பட்டுள்ள தீவு என்ற கருத்தினையே முன்னோர் கைக்கொண்டு சப்ததீவு என தீவகத்தை அழைத்தனர் அல்லது அட்டதீவு என அழைத்திருக்க வேண்டும். பண்ணைப் பாலத்திலிருந்து கிழக்குப் பக்க மாக செல்லும் வீதியே இத்தீவின் பிரதான வீதியாகும்.
வரலரற்றுப் பெருமை கொண்டதும் மணிபல்லவம், நாகதீவு, நாக நயினார்தீவு, நயினார்தீவு, நாகதீபம், மணிபல்லவத்தீவு எனப்பல பெயர்களைக் கொண்டதும் 2.2 சதுரமைல் பரப்பளவுள்ளதுமான தீவே நயினாதீவாகும். இத்தீவு புங்குடுதீவிலிருந்து 3 மைல் தொலை வில் அமைந்துள்ளது. இத்தீவின் பிரதான வீதி வடக்கே நயினை நாகபூசணி அம்மன் கோவிலிலிருந்து தெற்கே வங்களாவடி வரையுமுள்ள தாகும். மிக நீண்ட காலமாக இத்தீவு மக்கள் ஊர்காவற்றுறை துறைமுகத்தினூடாகவே பிரயாணம் செய்து வந்தபோதிலும் 1959 களைத் தொடர்ந்து புங்குடுதீவு, இறுப்பிட்டித் துறைமுகத்தினூடாகச் சென்றுவந்தனர். ஆனால் 1966 ஆம் ஆண்டின் குக் றிகட்டுவான் பாலம் பூர்த் தி யான  ைத த் தொடர்ந்து ஏறத்தாழ 7 நிமிட கடற்பிரயாணத்தின் மூலம் இலகுவாகவும் விரைவாகவும் ஏனைய பிரதேசங்களுடன் தொடர்பினைக் கொள்ள வழி செய்தது எனலாம்.
நயினாதீவுக்கு வடக்கே 2.6 சதுரமைல் பரப்பளவுள்ள நீள்சதுர வடிவம் சொண்ட தீவே அனலைதீவாகும். வடக்கு - தெற்காக 3 மைல் நீளமும், கிழக்கு - மேற்காக 1 மைல் அகலமும் கொண்ட இத் தீவுடன் இரு சிறு தீவுகளும் காணப்படுகின்றன. மக்கள் குடியிருப்பற் றதும் 200 யார் தூரத்திலுள்ளதுமான பருத்தித்தீவும், மக்கள் குடி யிருப்பினையும், தெய்வீகத் தன்மையையும் கொண்டதுமான 40 யார் தூரத்திலுள்ள சிறிய கடற்பரப்பால் பிரிக்கப்பட்டுள்ளதுமான புளியந்
5

Page 14
தீவுமே அவை யாகும். இத்தீவின் கிழக்குக் கரையோரத்தைச் சார்ந்து பிரதான வீதி அமைந்துள்ளது. இங்கு வாழும் மக்கள் ஏனைய பிர தேசங்களோடு தொடர்பு கொள்வது ஊர்காவற்றுறைத் துறை முகத்தினுாடாகவேயாகும்.
வேலணைத் தீவுக்கும் அனலை தீவுக்குமிடையில் 0.8 சதுரமைல் பரப்பளவுடைய மிகச்சிறியதும் மக்கள் குடியிருப்பினைக் கொண்டது மான தீவே எழுவைதீவாகும். அனலைதீவு - ஊர்காவற்றுறைப் போக் குவரத்துப் பாதையில் இது அமைந்திருப்பதால் பிரயாணிகள் படகு கள் எழுவைத்தீவுத் துறைமுகத்தினுாடாகவே செல்கின்றன. இதனால் அனலைதீவு மக்களுக்குரிய போக்குவரத்துக் கஷ்டமே இவர்களுக்கு முண்டு எனலாம்.
புவிச்சரிதவியலும், தரைத்தோற்றமும்
இப்பிரதேசங்களில் வாழும் மக்களின் பொருளாதார நிலைக்கும் புவிச்சரிதவியல் தரைத்தோற்றத்துக்குமிடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. யாழ்ப்பாணக் குடாநாட்டைப் போலவே இத்தீவுகளும் மயோசின் காலத்தில் கடலிலிருந்து சுண்ணக்கற்பாறைத் திடலாக மேலுயர்த்தப்பட்ட பிரதேசமாகும். சுண்ணக்கற்பபாறைக்குக் கீழே காணப்படும் அடித்தளப்பாறையானது இந்திய - இலங்கை அடித் தளப்பாறையை ஒத்ததாகும். மேலுயர்த்து கைக்குட்பட்ட இத்தீவுகள், காலத்துக்குக்காலம் புவிவெளியுருவவியல் மாற்றத்துக்குட்பட்டிருக்கின் றன. நெடுந்தீவினைச் சூழவுள்ள கடற்பரப்பு ஆழம் கூடியதாகவிருப் பதுடன் ஏனைய தீவுகள் சார்ந்த கடல் பரப்பானது ஆழம் குறைந் ததாகவிருக்கின்றது. மேற்படி தீவுகளின் வடிவத்தை நோக்கும் போது புங்குடுதீவு 'ப' வடிவம் கொண்ட படகு போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது. நெடுந்தீவு சாய்ந்த இணைகரவடிவத்தையும் வேல ணைத்தீவு, மண்டைதீவு, காரைநகர் ஆகிய நான்கும் அரைவட்ட ஒழுங்கிலும், நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு பருத்தித்தீவு ஆகியன நேர்கோட்டு ஒழுங்கிலும் அமைந்திருக்கின்றன.
தீவுப்பகுதியின் புவிவெளியுருவவியலைப் பொறுத்த வரை ஆக்கச் செ ய ல் மு  ைற க ள் ஒரு புறம் நிகழ்ந்து வர அழிவுச் செயல் முறைகளும் இடம் பெற்று வருகின்றன. கடலலைகளினாலும் காற் றினாலும் இயற்கையான ஆக்கச் செயல்முறை நிகழ்கின்றது. அதே வேளை கடலரிப்பினால் அழிவுச் செயல்முறைகள் நிகழ்கின்றன குறிப்பாக வேலணைத்தீவின் வடதென் பகுதிகள் கடலரிப்பினாலும் மழை காலங்களில் கடல்நீர் உள்வருவதனாலும் புவிவெளியுருவவி யல் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதேபோலவே நயினாதீவின் தென்மேற்குப்பிரதேசம் கடரிைப்புக்குட்படுத்தப்பட்டு வருகின்றது.
6

காலத்துக்குக் காலம் மனித நடவடிக்கைகளினாலும் புவிவெளியுரு வவியல் பண்புகள் மாற்றத்துக்குள்ளாகி வருகின்றன. கடலில் போ க்கு வ ரத் துப் பாதைகளை உருவாக்குதல், மணற்படிவுகளை அகற்றுதல், விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒரு புறத்து நிலங்களை பள்ளமாக்குதலுடன் வேறு இடத்தில் உயர்த்துதல், முரு கைக் கற்பாறைகளைப் பெற்றுக் கொள்வதற்காக கடற்கரை யோர நிலவுருவங்களை அகற்றுதல், வெள்ளத்தைக் கட்டுப்படுத்த வாய்க்கால்களை அமைத்தல், தாவரங்களை அகற்றுதல் போன்ற பல்வேறு மனித செயற்பாடுகளினால் புவிவெளியுருவத் தோற்றங்கள் மாற்றமுறுகின்றன.
தீவுப்பகுதியின் தரைத்தோற்றத்தினை நோக்கும் போது பொது வாக சமநிலமாகவேயுள்ளது. கடல்மட்டத்திலிருந்து 10 - 15 அடி உயரத்தினையே எல்லாத்தீவுகளும் கொண்டிருக்கின்றன. நெடுந்தீவின் தரைத்தோற்றத்தில் கடற்கரை சார்ந்த பகுதிகள் உயரத்தில் கூடிய தாகவும் உள்நாட்டுப்பகுதி தாழ்வான அமைப்பைக் கொண்டதாக வும் காணப்படுகின்றன. புங்குடுதீவினைப் பொறுத்தவரை தென் கிழக்கே வீராமலைப்பகுதி உயரம் கூடிய பிரதேசமாகவும் வடமேற்கு நோக்கி படிப்படியாகத் தாழ்ந்து செல்லும் பண்பினைக் கொண்டும் அமைந்திருக்கின்றது. மாரிகாலங்களில் வீராமலைப்பகுதியில் இருந்து மழைநீர் பருவகால ஆறான கள்ளியாற்றினூடாக கேரதீவுற்கும் இறுப்பிட்டிக்குமிடையே கடலுடன் கலக்கின்றது. எனினும் தீவின் தென்பகுதியானது வடபகுதியைவிட உயரம் குறைந்ததாக விருக்கின் றது. வேலணைத்தீவின் அல்லைப்பிட்டி, மண்கும்பான் பகுதிகளில் தென்பகுதி உயரத்தில் கூடிய மணற்றிட்டினைக் கொண்டமைந்திருப் துடன், வடபகுதி கடல் மட்டத்திலிருந்து மிகச் சிறிய உயர வேறுபாட்டைக் கொண்டிருக்கின்றது. ஏனைய தீவுப்பகுதிகள் சம தரையாகவே காணப்படினும் ஆங்காங்கே மணற்பிட்டிகளையும் உய ரத்தில் குறைந்த பள்ளநிலங்களையும் கொண்டு காணப்படுகின்றன.
காலநிலை
காலநிலை என்றால் ஒரு நீண்ட காலப்பகுதியிலே தினசரி வானிலை மூலகங்களை அவதானித்து அவற்றினடிப்படையில் இனங் கண்டு அறியப்படும் பொது நிலைமைகள் என வரைவிலக்கணம் கூற லாம். இப்பிரதேசத்தின் சராசரி வெப்பநிலை 80° ஆகவும், மழை வீழ்ச்சி 50 க்கும் குறைவானதாகவுமே காணப்படுகின்றது. பொது வாக இப்பிரதேசம் வடகீழ்ப்பருவக்காற்றினால் கிடைக்கப்பெறும் மழைவீழ்ச்சியின் பெரும்பகுதியைப் பெற்றுக்கொள்கின்றது. பங்குனி சித்திரை, வைகாசி மாதங்களில் வெப்பநிலை அதிகமாகவுள்ளது. பொதுவாக கார்த்திகை, மார்கழி, தை மாதங்களிலேயே அதிக
7

Page 15
மழைவீழ்ச்சி கிடைக்கப் பெறுகின்றது. அதாவது இப்பிரதேச
பெறும் மழைவீழ்ச்சியில் 95 சதவீதமானவை மேற்படி மூன்று மாதங் களிலே கிடைக்கப்பெறுகின்றது. குறைந்த மழைவீழ்ச்சி, நீண்டவரட் சிக்காலம், நீரினைச் சேமித்து வைக்கமுடியாத இட அமைவு, கடவின் 9;{TU LÊ Lổlo அண்மையில் இருப்பது, நன்னீர் படையானது குறுகிய தாகவிருத்தல் போன்ற பல காரணிகள் இப்பிரதேச மக்கள் நன் விசின்மையால் அவஸ்தைப்படுவதற்குரிய காரணிகளாகக் கொள்ளலாம்.
அரைகுறை வரள் வலயத்தில் அமைந்துள்ள இப்பிரதேசத்தில் முட்பு தர்கள், ஈஞ்சு நாகதாளி, ஆமணக்கு, இராவணன் மீசை
கற்றாளை, பிரண்டை, கள்ளி போன்ற தாவரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. எனவே இத்தகைய தாவரங்களைக் கொண்ட இராமப் பெயர்கள் இங்கு காணப்படுகின்றன. அதிTவது புங் குடுதீவில் ஈச்சமுனை, கள்ளியாறு, நெடுந்தீவில் பூவரசங்காடு, கள்ளிக்காடு வேலணையில் மெரிஞ்சிமுனை, ஈச்சங்காடு போன்ற பெயர்களைக் குறிப்பிடலாம்.
மண்வளம்
மண்வளத்திற்கும் பொருளாதார வளத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. மண்வளம் அதன் தாய்ப்பாறைகளின் பண்பு
களைக் கொண்டது.
பொதுவாகத் தீவுப்பகுதியில் நரை மண்ணே அதிகமாக in 657t படுகின்றது. அத்துடன் கடற்கரையோரம் சார்ந்த பகுதிகளில் சிப்பு: கலந்த மண்ணே எல்லாத் தீவுகளிலும் ஆங்காங்கே காணமுடிகிறது. ஏற்கனவே இப்பிரதேசம் கடலிலிருந்து உயர்த்துகையினாலோ அன் றேல் கடல் பின்வாங்கியதாகவோ ஏற்பட்டிருக்கலாம். அண்மைக் காலங்களில் பலரது கருத்துப்படி கடலிலிருந்து பெறப்படும் சிப்பி, சங்குகளை, இப்பிரதேசங்களில் கொட்டியதால் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர். உதாரணமாக புங்குடுதீவில் சிப்பித்தரை என்ற இடத்தினை கொள்ளலாம். இவை தவிர ஆங்காங்கே செம் மண், களிமண், ஊரி கலந்த மண், மணல்மண், கொழுக்கிக் கல் கலந்த மண் என்பவற்றையும் அடையாளம் காணமுடிகிறது.
நீர்வளம்
ஒரு பிரதேசத்தின் மக்கள் வாழ்வுக்கும் அங்கு கிடைக்கப்பெறும் நீரின் தன்மைக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின் றது. தீவுப்பகுதியானது 50" க்குக் குறைவான மழை பெறும் அதி வரள் வலயத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இப்பிரதேசம் ஏறத்தாழ
8

9 மாதங்கள் வரட்சியும் 3 மாதங்கள் மழையும் பெறும் பிரதேசமாக விருக்கின்றது. குறிப்பிட்ட சிறிய காலத்தில் பெறப்படும் மழை யினைச் சேமித்து வைக்கக்கூடிய வசதிகள் இல்லை.
பொதுவாக சுண்ணக்கற் பாறைப்பிரதேசத்தைப் போல, தரைக் கீழ் நீரையே தீவக மக்கள் பயன்படுத்துகின்றனர். குடிப்பதற்கும் நாளாந்தப்பாவனைக்கும் விவசாய நடவடிக்கைகளுக்கும் நீர் பயன் படுத்தப்படுகின்றது. இப்பிரதேசத்திலுள்ள கிணறுகள் 6 - 10 அடி வரை ஆழம் கொண்டவை. பெரும்பாலான தீவகப்பிரதேசங்களில் கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் கிணற்று நீர் நன்னீராகக் காணப்படும். ஏனைய மாதங்களில் படிப்படியாக உவர்த்தன்மை கொண்டதாக மாறிவிடுகின்றது. உவர்த்தன்மையானது பல வழிக ளில் ஏற்படலாம். நீரினை அதிகளவில் நுகர்வதனாலும் ஆவியாக் கத்தினாலும் மற்றும் நன்னீர்ப்படை குறுகியதாகவிருப்பதாலும் ஏற்பட வாய்ப்புண்டு. மேற்குறித்த மூன்று செயற்பாடுகளுடன் மழைவீழ்ச்சியினால் நீர் தேங்கி நிற்கும் வேளைகளில் கடலைச் சென்றடைவதற்கு வெட்டிவிடும் தன்மையும் உவர் நீராவதற்குரிய காரணிகளில் ஒன்றாகும்.
தீவுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் 560 குடும் பத்தவர்களின் கிணறுகள் பரீட்சித்துப்பார்க்கப்பட்டன. இதில் 442 கிணறுகள் அதிகளவிலோ அன்றேல் குறைந்தளவிலோ உவர்த்தன்மை கொண்டன என்பதைக் கண்டறிய மு டி ந் த து. மே ற் படி ஆய் வின்படி 19 சதவீதமான கிணறுகள் உவர்த்தன்மையற்றன எனவும் 24 சதவீதமான கிணறுகளில் மாரிகாலத்தில் குடிநீரைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் ஏனைய காலங்களில் குடிநீர் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்குப் பயன்படுத்தக்கூடிய, உவர்த்தன்மை குறைந்ததாக வுள்ளன எனவும் ஏனைய 57 சதவீதமான கிணறுகள் முற்றாக உவர்த் தன்மை கொண்டன எனவும் தெரிவிக்கப்படுகின்றது. (செந்தில் வடிவேல். ஆ. 1985) தீவுப்பகுதிகளிலுள்ள தீவுகளிடையே உவர்த் தன்மை வேறுபட்டுக் காணப்படுகின்றது. வேலணை (53%) புங்குடு தீவு 68%) நெடுந்தீவு (58%) மண்டைதீவு (44%) நயினாதீவு (58%) அனலைதீவு (40%) எழுவைதீவு (55%) ஆகிய தீவுகளில் உவர்த் தன்மை கொண்ட கிணறுகள் காணப்படுகின்றன எனலாம்.
தீவுப்பகுதிகளில் குறிப்பிட்ட நன்னீர்ப்பிரதேசங்களில் உள்ள கிணறுகளிலிருந்து குழாய் மூலம் நீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் காலப்போக்கில் அக்கிணறுகள் உவர்த்தன்மையைப் பெற்றுவிட்டதால் அவை கைவிடப்பட்டுள்ளன. குறிப்பாக புங்குடுதீவு கண்ணகி அம் மன் கோவிலிலிருந்தும் சுப்பிரமணிய வித்தியாசாலையிலிருந்தும் குழாய் மூலம் நீரை மக்களுக்கும், மாணவர்களுக்கும் வழங்க முயன்ற
9

Page 16
போதும் அது காலப்போக்கில் கைவிடப்பட்டது. இதேபோலவே நெடுந்தீவு, நயினாதீவு, ஊர்காவற்றுறை ஆகிய பிரதேசங்களில் குழாய் , நீர் வசதி கொடுக்கப்பட்டு இருந்த போதும் அவை இன்று கைவிடப் பட்ட நிலையிலேயே உள்ளன. வேலணைச் சந்தியிலிருந்து வேலணைப் பகுதிக்கு குழாய் நீர் வழங்கல் அண்மைக்காலம் வரை நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும் எல்லாத்தீவுகளிலும் தொட்டம்தொட்டமாக அங்குமிங்கும் நன்னீர்க் கிணறுகள் காணப்படுகின்றன. கோவில்களைச் சார்ந்த பகுதிகளில் நன்னீர் கிணறுகள் உண்டு. உதாரணமாக வேல ணையிலுள்ள சாட்டி, புங்குடுதீவு கண்ணகி அம்மன் கோவில் பகுதிகள் புளியந்தீவு ஐயனார் கோவில் பகுதிகள் போன்றவற்றில் நன்னீர்க் கிணறுகள் உண்டு. மக்கள் இவ்வாறான நன்னீர்க் கிணறுகளிலிருந்து குடிநீரைப் பெற்றுக் கொள்கின்றனர்.
யாழ்ப்பாண நகரத்தில் தீவுப்பகுதியிலிருந்து இடப்பெயர்வினை மேற்கொண்ட குடும்பத்தவர்களிடையே மேற்கொண்ட ஆய்வின் படி தாம் வாழ்ந்த பிரதேசங்களில் நன்னீர் பற்றாக்குறைவின் காரண மாக இடப்பெயர்வினை மேற்கொண்டனர் என தமது இரண்டாவது அல்லது மூன்றாவது விருப்பங்களைத் தெரிவித்திருந்தனர் (குகபாலன். கா. 1993.)
தீவுப்பகுதி மக்களின் முக்கிய பிரச்சினை நன்னீர் பற்றாக்குறை யேயாகும். இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு அரசாங்கம் வெளி நாட்டு உதவியுடன் நீர்த்தாங்கி லொறிகள் மூலம் விநியோகித்து வருகின்றது. அத்துடன் பொதுசன அமைப்புக்கள் நீரினைக் கொண்டு வந்து பணத்திற்கு விநியோகித்தும் வருகின்றனர். மேற்குறித்த தக வல்கள் 1990 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட தகவல்களே என்பதைக் கருத்திற் கொள்ளல் அவசியமாகும்.
–mm
O

இயல் - இரண்டு
தீவகம் - வரலாற்று நோக்கு"
தீவகப்பிரதேசம் புவியியல் ரீதியாகக் குடாநாட்டிலிருந்து வேறு படுத்தப்பட்ட பண்புகளைக்கொண்டிருந்த போதிலும் வரலாற்று நோக்கில் குடாநாட்டுடன் மட்டுமன்றி நாட்டின் வரலாற்றுடன் மிக நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருக்கின்றது. தீவக வரலாறு தமிழருடைய வரலாறாகவுள்ளது. இருப்பினும் சிங்களவர்கள் தமது வரலாற்றை - உண்மைத் தன்மையைப் பேணினார்களோ இல்லையோ இதிகாச வடிவில் எழுதி வைத்துள்ளனர். ஆனால் எமது பிரதேச வரலாற்றை பல்வேறு ஆதாரங்களினூடாகச் சிரமப்பட்டே பெற் றுக் கொள்ள வேண்டியுள்ளது. அதாவது இப்பிரதேசத்தினது அல்லது மக்களினது வரலாற்றை எடுத்துக் கூறக்கூடிய இலக்கியங்களோ அன் றேல் வாய்மொழி மூலம்பெறப்பட்ட தகவல்களோ மிகமிகக் குறைவாக வேயுள்ளது.
தீவகத்தின் வரலாற்றினை நோக்கின் மிக அண்மையிலுள்ள (Լյուք குடாநாட்டுடனும் தென்னிந்தியாவுடனுமே நெருங்கிய தொடர்பு கொண்டிருந்துள்ளது என்பதற்கு தீவகத்தின் அமைவிடம் சான்றா கவுள்ளது. பொதுவாக இவ்விரு பிரிவுகளிலிருந்து வர்த்தகம், மீன் பிடித்தல், ஆகியவற்றோடு தொடர்புடையவர்கள் இப்பிரதேசத்தை மையமாகக் கொண்டோ அன்றேல் இப்பிரதேசத்தினுாடாகவோ திமது நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கலாம், அது மட்டுமல்லாது தென் னிந்தியாவில் காலத்துக்குக்காலம் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும் இப்பகுதி நோக்கிய உள்ளிடப் பெயர்வினை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பாக இருந்திருக்க நியாயமுண்டு. குறிப்பாக பல்லவ, பாண் டிய, சோழ, விஜயநகர அரசுகளின் தோற்றங்களின் விளைவாக அவர்களுக்கெதிரானவர்களின் உள்வரவு நிகழ்ந்துள்ளமைக்குப் பல்வேறு சான்றுகள் உண்டு. உதாரணமாக கி. பி. 1365 ஆம் ஆண்டில் மது ரையை ஆண்ட இஸ்லாமியரைத் துரத்திவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிய
* இக்கட்டுரை பல்கலைக்கழக சமஸ்கிருதத் துறைத் தலைவர் பேரா
சிரியர் வி. சிவசாமி அவர்களால் திருமதி விநாயகமூர்த்தி மகேஸ்வரிப்பிள்ளை அவர்களின் நினைவாக வெளியிடப்பட்ட *தீவகம் - ஒரு வரலாற்று நோக்கு' என்ற நூலினை தழுவி எழுதப்பட்டுள்ளது. -
11.

Page 17
குமாரகம்பண்ணன் காலத்தில் பல நிர்வாக மாற்றங்கள் ஏற்பட்ட மையால் உயர்பதவி வகித்தவர்கள் தீவுப்பகுதி உட்பட யாழ்ப்பாணப் பகுதியில் வந்து குடியேறினர் எனத் தெரிய வருகின்றது.
மேலும் யாழ்ப்பாணத்தை ஆண்ட சிங்கை ஆரியச்சக்கரவர்த்தி யின் வேண்டுகோளின்படி செய்யூர் இருமரபும் துய்ய தனிநாயகன் என்னும் வேளாளன் நெடுந்தீவில் குடியமர்த்தப்பட்டான் என கைலாயமாலை கூறுகின்றது. இவரது வழித்தோன்றல்கள் பல்வேறு தீவுகளில் பரந்து வாழ்கின்றனர். அத்துடன் ஏற்கனவே கூறப்பட் டது போல குடநாட்டிற்கும் தென்னிந்தியாவுக்குமிடையில் குறிப் பாக வர்த்தகம், மீன்பிடித்தொழில் மேற்கொள்வதற்கு இணைப்புப் பாலமாக தீவுப்பகுதிகள் காணப்பட்டிருக்கின்றன. இத் தொழிலில் ஈடு பட்டோர் காலத்துக்கு காலம் வருகை தந்து காலப்போக்கில் அங் கேயே தங்கியிருக்கலாம். ஏனெனில் தென்னிந்திய வழக்காறுகள், பண் பாட்டு அம்சங்கள் தீவகத்திலும் பெருமளவிற்கு அவதானிக்க முடி கின்றது.
தீவுப்பகுதிகளூடாக சர்வதேச வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டிருக் கின்றது என்பதற்கு அங்கு காணப்பட்ட, காணப்படுகின்ற துறை முகங்கள் சான்றாகவுள்ளன. மிகநீண்ட காலமாக ஊர்காவற்றுறைத் துறைமுகம் சர்வதேச பிரசித்த பெற்றிருந்தது. இத் துறைமுகம் பற்றித் தமிழகத்திலுள்ள கல்வெட்டுக்களிலும் நாகபூசணி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டுக்களிலும் தெளிவாக எடுத்துக்கூறப்பட் டுள்ளது. மேற்குறித்த கல்வெட்டுக்களிலிருந்து 12 ஆம் நூற்றாண் டில் நடைபெற்ற வர்த்தகம் பற்றிய தெளிவு பெறப்பட்டுள்ளது மேலும் காரைநகரிலுள்ள களபூமித்துறைமுகம் ஒரு பெரிய துறைமுக மாக விளங்கியுள்ளது. போல் டேயஸ் என்ற ஒல்லாந்த மதகுரு இத்துறைமுகமூடாக யானைகள் ஏற்றுமதி செய்யப்பட்டது எனவும், அதனால் இதற்கு யானைப்பாலம் என வழங்கியதாகவும் தெரி வித்தார். புங்குடுதீவில் புளியடித்துறை என்ற தற்போது பயன்படுத் தப்படாத துறைமுகம் ஒன்று உண்டு. இதனருகில் பெருக்கு மரங்கள் காணப்படுகின்றன. இம்மரங்கள் அராபியரால் அறிமுகம் செய்யப் பட்டது என்பர். எனவே இத்துறைமுகத்தூடாக வெளிநாட்டு வர்த் தகம் நிகழ்ந்திருக்கலாம் எனக் கொள்ள இடமுண்டு. தீவுப்பகுதிகளுக் கும் குடாநாட்டுப்பகுதிகளுக்கும் இடையில் இடப்பெயர்வினைப் பொறுத்தவரை ஒத்த பண்புகள் காணப்படுகின்றன. உதாரணமாக கிராஞ்சி, கேரதீவு என்பன பூநகரியிலும் உயரப்புலம் என்பது கொக் குவிலிலும் காணப்படுகின்றன.
தீவுப்பகுதியின் வரலாறுபெருங்கற்பண்பாட்டுடன் தொடர் பு கொண்டது. சாட்டி புங்குடுதீவு, நெடுந்தீவு ஆகிய இடங்களில் காணப்
2

படும் மேற்படி பண்பாட்டுத் தொடர்புகள் ஆனைக்கோட்டையிலும் அவதானிக்கப்பட்டுள்ளது.
தீவுப்பகுதியுட்பட யாழ் குடாநாட்டில் திராவிடர் வந்து குடி யேறுவதற்கு முன்னர் நாகர் வாழ்ந்துள்ளனர் என்பதற்குச் சான்று கள் உள்ளன. நாகர் பாம்பினை வழிபடுபவர்கள். எனவே அவர்கள் நாகதம்பிரான், நாகபூசணி போன்ற கடவுளை வணங்கியிருந்தனர். தீவுப்பகுதியிலும் இத்தகைய வழிபாடு நிகழ்ந்திருக்க நியாயமுண்டு. அத்துடன் புராதன வரலாற்றினைக் கூறும் மகாவம்சம், தீபவம்ச இதிகாசத்தில் நாகதீபம் ஒரு பெளத்த சமயத்தின் வளர்ச்சியினைக் கொண்ட பகுதியாகவிருந்துள்ளது எனப்படுகின்றது. இங்கு நாகர் களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு புத்தர் வந்து போனார் எனவும் அவற்றில் குறிப்பிட்டுள்ளது. இந்த நாகதீபமே நயினாதீவு எனக் கொள்ளலாம்.
பியாங்கு தீபம் என்பது புங்குடுதீவினைக் குறித்துள்ளது என வல்லிபுரச்சாசனத்தில் தெரியப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் பெளத்த மரபினை அடிப்படையாகக்கொண்டெழுந்த மணிமேகலை யில் கூறப்படும் மணிபல்லவம் என்பது நயினாதீவையே குறிக்கின்றது எனவும் ஆகவே தென்னிந்திய - இலங்கைப் பெளத்த மரபுகள் தீவ கத்திலும் சங்கமித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அக்காலத்தில் தமிழர்களே பெளத்தர்களாக விருந்திருக்கின்றனர் எனவும் தென்னிந்தி யாவில் எவ்வாறு பெளத்த மதம் அழிவுற்றதோ அதேபோல தீவகத் தையுள்ளிட்ட பகுதிகளிலும் நிகழ்ந்திருக்கலாம் எனவும் கொள்ள இட மூண்டு. மேலும் நயினாதீவு எனும் பெயர் நயினப்பட்டா என்னும் பிராமணர் தமிழ்நாட்டிலிருந்து வந்து குடியேறியதால் அப்பெயர் வழங்கி வந்தது எனவும், இவரே நாகதம்பிரான் கோவில் அர்ச்சகராக இருந்துள்ளார் எனவும் தெரியவருகின்றது. நயினா ஒன்றால் பாம்பு என்றும் பொருளுண்டு,
காரைச்செடிகள் அதிகமாகக் காணப்பட்டதால் காரைதீவு என வம், பியாங்குச் செடிகள் காணப்பட்டதால் பியாங்குதீவு எனவும், பின்னர் புங்குடுதீவாக மருவியது எனவும் சிலர் கருதுவர். தமிழ்நாட் டிலுள்ள புங்கனூர், பூங்குடி முதலிய இடப்பெயர்களை இங்கும் வைத்திருக்க வாய்ப்புண்டு. இவையும் மருவி புங்குடுதீவாகியிருக்கலாம் • நெடுந்தீவானது நீண்ட தீவாகவிருக்கின்றமையால் அ வ்வாறு பெயர் பெற்றிருக்கலாம். இத்தீவுக்கு பசுத்தீவு எனவும் பெயர் உண்டு. அதிக பசுக்கள் இங்கு காணப்பட்டமையால் இராமேஸ்வரத்தில் மிடைபெறும் நாளாந்தக் கோவில் பூசைக்கு இங்கிருந்தே பால் எடுத் துச் சென்றனர் என ஆய்வாளர்கள் கருத்துத்தெரிவிக்கின்றனர்.
13

Page 18
யாழ்ப்பாணத்தை ஆரியச்சக்கரவர்த்தி ஆண்ட காலத்தில் வேலன் என்ற நாட்டுத்தலைவன் தானையுடன் (சேனை) அங்கு வாழ்ந்து வந்தமையால் அவ்விடம் வேலன் தானை என அ  ைழ க் கப் பட் டு காலப்போக்கில் வேலணை என மருவியது என்பர். இதேபோலவே நாராயணன் தானையுடன் தங்கியிருந்த இடம் நாரந்தனை என அழைக்கப்பட்டதாக ஐதீகமுண்டு. குளக்கோட்டன், வெடியரசன் ற்றிய கதைகள் நெடுந்தீவிலும், காரைநகரிலும் அல்லிராணிகள் பற்றிய கதைகள் அல்லைப்பிட்டியிலும் இன்றும் வழக்கிலுள்ளன. இவையாவும் ஐதிகமாகவிருப்பதனால் வரலாற்றாசிரியர்களால் வரண் முறையில் ஆராய வேண்டியனவாயுள்ளன.
10 ஆம் நூற்றாண்டில் எழுச்சி பெற்ற சோழப்பேரரசு 11 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கையைக் கைப்பற்றுகின்றது. இதன் தாக்கம் தீவகத்திலும் பிரதிபலிக்கின்றது. நாரந்தனையில் கண் டெடுக்கப்பட்ட முதலாம் இராசராசனின் 38 செப்பு நாணயங்கள் சேரமன்னனின் 5 வெள்ளி நாணயங்கள் சிறிய அம்பாள் சிலை என்பன சோழ நாட்டுக்கும் தீவகத்துக்குமிடையில் தொடர்பு இருந்துள்ளது என்பதைச்சுட்டிக்காட்டுகின்றது. அதுமட்டுமல்லாது புங்குடுதீவில்சோழ னோடை, சோழன்புலம் முதலிய இடப்பெயர்களும் தொடர்பினை எடுத்துக் காட்டுகிறது. அத்துடன் இத்தீவிலுள்ள பல்லதீவு சோழருக்கு முன் ஆட்சிசெய்த பல்லவத் தொடர்பினைக் காட்டுவதாக அமைய G) TLD .
பண்பாட்டு வணிகத் தொடர்புகள் தீவுப்பகுதியில் காணப்பட்டி ருக்கின்றன. இந்தியத் தொடர்புகள் மட்டுமல்லாது கிரேக்க, ரோம அராயிய, சீன வர்த்தகத் தொடர்புகளும் காணப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன, 1922 இல் வினாசிப்பிலிப்பன் என்பவர் அல் லைப் பிட்டியிலே கிடங்கு வெட்டியபோது 179 குஜராத் பொற் காசுகள் கிடைத்தன என அறியக் கிடைக்கின்றது. அதே போலவே யாழ்ப்பாண மன்னனின் சேது நாணயமும் கிடைக்கப் பெற்றுள்ளது. சீனத்தொடர்புகளும் தீவுப்பகுதிகளில் காண ப் பட் டு ஸ் ளன. வேலணை மேற்குக் கரையில் சீனன் கோவில் என்ற இடத்தில் சீனக்குடியிருப்பு இருந்ததாகத் தெரியவருகின்றது. 1936 இல் நயி னாதீவில் கண்டெடுக்கப்பட்ட பெரிய சாடி 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீனச்சாடி என அடையாளம் காட்டப்பட்டுள்ளது. இத்த கைய சாடிகளும் உடைந்த துண்டுகளும் அல்லைப்பிட்டி, நெடுந்தீவு ஊர்காவற்றுறை ஆகிய இடங்களிலும் பெறப்பட்டுள்ளன. வர்த்தகத் தொடர்பு நிலவியமைக்கு கந்தரோடையில் கண்டெடுக்கப்பட்ட சீனக் காசுகளைச் சான்றாகக் கொள்ளலாம். இவை பெரும்பாலும் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும் என்பர்.
14

கீனப்பகுதியிலுள்ள சில இடப்பெயர்கள், சாவான (ஜாவாக் காரன்) சீனன்புலம், கணக்கர் வளவு, செட்டியார் தோட்டம் செட்டிவளவு, பனிக்கன்புலம் என்பன ஜாவா, சீனா, இந்தியத் தொடர்புகளைக் காட்டுகின்றன. இவர் கள் இங்கு தங்கியிருந்து வர்த்தகம் செய்திருக்கலாம் எனக் கொள்ள இடமுண்டு. மேலும் கேரளத்திலிருந்து தீவுப்பகுதிக்கும் யாழ்குடாநாட்டுப் பகுதிக்கும் மக்கள் வந்து குடியேறியதற்குப் பல சான்றுகள் உண்டு. குறிப்பாக கேரளத்தை யும் இலங்கையின் வடக்குக் கிழக்கையும் மலபார் பிரதேசமாகவே பின்வந்தோர் குறிப்பிட்டிருக்கின்றமை இதற்குச் சான்று பகர்கின்றது. குறிப்பாக கோவளம் (காரைநகர்) கரம்பன் (வேலணை) ஆகிய பெயர் கள் கேரளாவிலும் காணப்படுகின்றன. ஆகவே தென்னிந்தியத் தொடர், புகள் பல்வேறு காலங்களில், மக்கள் உள்வரவினையோ அன்றில் அந் நாடுகளுடன் கொண்டிருந்த தொடர்பினையோ வெட்டவெளிச்சமாகக் காட்டுகின்றது. பண்ணைத்துறை தீவகத்தில் காணப்படும் ஒரு இட மாகும். இந்தியாவில் பெண்ணையாற்றுப் பகுதியிலிருந்து இடப் பெயர்வினை மேற்கொண்டோர் தமது பிரதேசம் போல் உள்ளது எனக்கருதி அப்பெயரைச் சூட்டியிருக்கலாம். அது காலப்போக்கில் மருவி பண்ணை என மாறியிருக்கலாம் என ஐதீகம் உண்டு.
ஐரோப்பியர் ஆட்சியில் போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் தீவகத்தில்
காணப்படும் தீவுகளுக்கு தங்கள் நாட்டிலுள்ள பெயர்களைச் சூட்டிக் கொண்டனர்.
போர்த்துக்கீசர் ஒல்லாந்தர் வேலணை; தனதீவ (Tanadiva) லெய்டன்
காரைநகர்: கார்டிவா (Cardiua) அம்ஸ்ரடாம்
புங்குடுதீவு கொங்கரடிவா (Congardiua) மிடில்பேரத் நயினாதீவு: நாயடடிவா (Nayadadiua) ஹார்லெம்
அனலைதீவு: ஹொட்டர்பம் நெடுந்தீவு: நெறுங்டிவா (Nerundiua)- டெல்வ்ற்
அல்லது
lo. 66Tprr6ño (Dclaras Claras)
மேற்படி அவர்களிட்ட பெயரில் லெய்டன், டெல்வ்ற் என்ற இரண்டுமே வழக்கிலிருக்கின்றன. ஊர்காவற்றுறைக்கு அவர்களது ஊர்ப்பெய
ரான கயிற்ஸ் என்று நாமம் இட்டனர். இதுவும் இன்றுவரை நிலவிவரு
கின்றது.
15

Page 19
ஜாோப்பியர் தீவகத்தில் விட்டுவிட்டு சென்ற ஞாபகச் சின்னங் கள் இன்றுமுள்ளன. போர்த்துக்கீசர், ஒல்லாந்தரை நினைவூட்டுவ தற்கு நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, காரைநகர் ஆகிய இடங்களில் கோட்டைகளுள்ளன. அத்துடன் ஒல்லாந்தர், அராபிய, பாரசீகம் முதலிய பிரதேசங்களிலிருந்து குதிரைகளைக் கொண்டு வந்து நெடுந் தீவில் வளர்த்தனர். ஆங்கிலேயரும் குதிரை வளர்ப்புடன் அதனைப் பயன்படுத்தவும் செய்தனர். அக்குதிரைகளின் வழித்தோன்றல்கள் இன்னும் அங்குள்ளன. ஆங்கிலேய அதிகாரியான நோலன் அயர்லாந் தில் காணப்படுவது போன்ற முருகைக்கற்களாலான வேலியினை அறிமுகப்படுத்தினான். இது இ ன் று வரை நெடுந்தீவில் வழக்கி லுள்ளது. ஐரோப்பியரின் வருகையினால் பெற்ற முக்கியமான அம் சம் கத்தோலிக்க புரட்டஸ்தாந்து. கிறிஸ்தவ சமயங்களாகும்.
6
 

இயல் - மூன்று
தீவகம் - குடித்தொகைப் பண்புகள்
ஒரு பிரதேசத்தின் குடித்தொகை, அவற்றின் பண்புகள், அப்பிர தேசத்தின் பொருளாதார, சமூக, பண்பாட்டியல்புகளை பிரதிபலிக் கும் எனலாம். தீவுப்பகுதியில் வரலாற்றுக் காலத்திலிருந்து மக்கள் வாழ்ந்து வந்ததற்குச் சான்றுகள் காணப்படவில்லையாயினும் அமை விடம், பண்பாட்டுக் கோலங்கள் நீண்டகாலமாக மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதைத் தெரிவிக்கின்றது. தீவுப்பகுதி யாழ்ப்பாணக் குடா நாட்டுக்கு அண்மையில் அமைந்துள்ளதுடன் தென்னிந்தியா வுக்கும் அண்மையில் அமைந்துள்ளது. இதனர்ல் தென்னிந்திய மக்கள் காலத்துக்கு காலம் வந்து குடியேறியிருக்க நியாயம் உண்டு. காலத் துக்கு காலம் தென்னிந்தியப் படை எடுப்புகளும் இலங்கையில் நிகழ்ந் துள்ளன. அவர்கள் மிக அண்மையிலுள்ள தீவுகளுடாகத் தமது போக்கு வரத்தினை மேற்கொண்டிருக்கலாம்.
இராமேஸ்வரத்திற்கும் நெடுந்தீவுக்குமிடையில் பன்னெடுங்கால மாகத் தொடர்புண்டு. நெடுந்தீவுக்குப் பசுத்தீவு எனப் பெயருண்டு. இத்தீவிலிருந்தே இராமேஸ்வரக் கோயிலுக்கு பால் கொண்டு செல் லப்படுவது வழக்கம் என வரலாறு தெரிவிக்கின்றது. அதேபோலவே புங்குடுதீவில் வரலாற்றில் மிகப்பெரியளவில் மந்தை மேய்த்தலுடன் விவசாயமும் மேற்கெள்ளப்பட்டதாக சைமன்காசிச்செட்டி என்ப வர் தெரிவிக்கின்றார். இதே போலவே ஏனைய தீவுகளும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டதற்கான சான் று க ள் கா ன ப் படுகின்றன. இவை தவிர தென்னிந்தியாவுக்கும் தீவுப்பகுதிகளுக்கு மிடையில் வர்த்தகத் தொடர்புகள் காணப்பட்டுள்ளன. தீவுப்பகுதியி லிருந்து பட்டணம் போவதென்பது சென்னைப் பட்டணத்தையே குறித்து நின்றது எனத் தீவகத்தைச் சேர்ந்த மூத்தோர் தெரிவிக்கின் றனர். கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பதற் கிணங்க தீவுகளில் சைவக் கோயில்கள் அதிகமாகவுள்ளன. கோவில்கள் சார்ந்த குடியிருப்புக்கள் காணப்பட்டிருக்க வாய்ப்புண்டு. இவ்வா றாக சிறப்பான பொருளாதார சமூகத் தேட்டத்தைக் கொண்ட தீவுப்பகுதிகளில் மக்கள் வாழ்ந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.
இப்பிரதேசத்தில் மக்கள் நீண்டகாலமாக வாழ்ந்தவரினும் எண் ணிக்கை அடிப்படையில் கருத்திற்கொள்வோமானால் போர்த்துக்கீசர் யாழ்ப்பாணத்துக்கு வந்த காலத்தில் வேலணைத்தீவு, காரைநகர், புங்
17

Page 20
குடுதீவு, ஆகியவற்றில் முறையே 1200, 600, 800 மக்களும் நெடுந் தீவு, நயினாதீவு ஆகியவற்றில் முறையே 300, 60 குடும் பங்கள் வாழ்ந்து வந்துள்ளனர் என குவைறோஸ் என்பவர் தெரிவிக்கின்றார். இதனைத் தொடர்ந்த காலங்களில் இப்பிரதேசங்களின் குடித்தொகை பற்றி முழுமையாக அறிய முடியாது போயினும் தம்மதம் மாறிய வர்களின் எண்ணிக்கைகளை தேவாலயங்களில் குறித்து வைத்திருக் கின்றனர். இதே நிலையினை ஒல்லாந்தர் காலத்திலும் தொடர்ச்சி யாகக் காணமுடிகின்றது. பிரித்தானியர் ஆட்சியில் தமது தேவைக ளைக் கருத்திற் கொண்டு காலத்துக்குக்காலம் கணிப்பினை மேற் கொண்டனர். முதன்முதலாக இலங்கையில் 1824 ஆம் ஆண்டு நாட ளாவியரீதியில் சாதியடிப்படையில் ஒழுங்குபடுத்தப்படாத வகையில் கணிப்பு மேற்செளிள்ளப்பட்டது. இக்கணிப்பினை அவ்வக் கிராமத் தலைவர்களால் மேற்கொள்ளப்பட்டு அக்காலத்திலிருந்த கவர்னருக்கு அனுப்பப்பட்டது. அதனடிப்படையில் தீவகத்தின் குடித்தொகை பின் வருமாறு காணப்படுகின்றது.
அட்டவணை
குடித்தொகை --824 1 --س
நெடுந்தீவு - 34.32 ஊர்காவற்றுறை - 294 4 அல்லைப்பிட்டி - i. 364 புங்குடுதீவு - 1802 வேலணை - 1327 காரைதீவு - 4609 அனலைதீவு -- 977 நயினாதீவு 4 l6 மொத்தம் - 1687
Source:- Return of the Population of the Inland of Ceylon 1824
தீவுப்பகுதியின் குடித்தொகை சம்பந்தமாக 1824 ஆம் ஆண்டுக் கணிப்பீட்டின்படி 16871 மக்கள் வாழ்ந்துள்ளனர் எனத்தெரியவரு கின்றது. இருப்பினும் 1871 ஆம் ஆண்டிலே தான் முதன்முதலாக நாடளாவிய ரீதியில் கணிப்பினை மேற்கொண்டதன் விளைவாக குடித்தொகை சம்பந்தமாக முழுவிபரங்களையும் பெற்றுக்கொள்ள முடிந்தது. இதனைத் தொடர்ந்து 1881, 1891, 1901, 1911, 1921 1931, 1946, 1953, 1963, 1972, 1981 ஆகிய ஆண்டுகளில் கணிப் புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதாவது 110 வருடகாலத் தரவுக ளைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாகவிருக்கின்றது. (அட்டவணை 2)
18


Page 21
அட்டவை
மொத்தக் குடித்தொகை, இடைக்க
வேலனை
மொத்தக் இடைக்கால வருடாந்த மொத்தக் ஆண்டு குடித்தொகை அதிகரிப்பு அதிகரிப்பு% குடித்தொகை
1871 11244 ы...... - 3966
1881 10504 3499 66.)(— 740 سه
1891 1220 1697 । -1.62 4098 1901 13014 813 0.67 520 1911 3859 845 0.65 588
1921 13663 -196 -0.14 5888
1946 18263 4600 1.35 949 1953 20158 1895 148 9773 1963 24929 477 2,37 2028 1971 28025 3.096 1,55 13766 1981 3155 3533 1.26 4622

döör 2 - 1
ால அதிகரிப்பு, வருடாந்த அதிகரிப்பு
புங்குடுதீவு மண்டைதீவு
இடைக்கால வருடாந்த மொத்தக் இடைக்கால வருடாந்த அதிகரிப்பு அதிகரிப்பு% குடித்தொகை அதிகரிப்பு அதிகரிப்பு'%
umor 153 - ❤
-467 -1.18 1248 95 0.82
599 1.71 1429 181 1.45
103 2.69 1890 261 1.83
-3 -0.03 1964 274 1.62
700 1.35 1874 ー90 -0.46
3261 2.22 2461 587 1.25
624 0.97 2536 75 0.44
2255 2.31 2721 85. 0.73
1738 1.81 3078 357, 1.64
856 0.62 3706 2.04
625

Page 22
அட்ட
நயினாதீவு
மொத்தக் இடைக்கால வருடாந்த மொத்தக் *" குடித்தொகை அதிகரிப்பு அதிகரிப்பு% குடித்தொகை
1871 775 error_^ 1064
1881 942 167 2.15 1296
1891 1193 251 2.67 1411
1901 1318 25 1.05 1543 1911 1460 142 1.07 1633
1921 1722 262 1.79 2042
1946 2640 918 2.13 2215 1953 318 54 2.93 2410
1963 3954 , 773 2.43 2874 1971 4090 136 0.42 3030 1981 4247 157 0.38 3853

வனை 2 - 2
எழுவைதீவு
அனலைதீவு
w இடைக்கால வருடாந்த மொத்தக் இடைக்கால வருடாந்த அதிகரிப்பு அதிகரிப்பு% குடித்தொகை அதிகரிப்பு அதிகரிப்பு%
«Wh 29) - animas
232 2.18 227 17 .2- 63-س
115 0.89 3 (, 89 3.92
132 0.94 32.4 08 0.25
90 0.58 36S, 44 1.36
409 2.50 323. -45 -1.22
173 0.34 400 77 0.95
195 1.26 40. O3 0.11
464 1.93 405 02 0.05
126 0.55 440 35 1.08
853 2.84 528 88 2.0

Page 23
அட்டவனை
நெடுந்தீவு -ಶ್ರವಣG |Ž| o: |:
1871 3025 '-
1881 2637 -386 -1.18
1891 2826 189 0.72
1901 3906 1080 3.82
1911 3728 - 178 46 ,0-س 1921 405 323 0.87
1946 6338 2287 2, 26
1953 5987 -351 -0.79
1963 5945 -42 -007
1971 5607 -338 -0571
1981 5620 13 0.02
ஆதாரம்: குடித்தொகை கணிப்பீட்டுத் திணை

3 سم 2 y
திவகம் மொத்தம்
த மொத்தக் இடைக்கால வ(டாந்த
% குடித்தொகை அதிகரிப்பு அ ரிப்பு%
21517 mens
20353 -1164
23474 312. '
26996 3552
28200 1204
29563 1363
41466 11903
44448 2982
52856 8408
58006 5150
64 134 6128
க்கள புள்ளி விபரத்
தொகுப்பு 1871 - 1981

Page 24

தீவுப்பகுதியில் 40.0 சதவீத நிலப்பரப்பினைக் கொண்ட வேல ணைத் தீவில் 1871 ஆம் ஆண்டுக்கணிப்பீட்டின்படி 1244 மக்கள் வாழ்ந்துள்ளனர். 1881 - 1891 ஆம் ஆண்டிடை வெளியினைத்தவிர 1931 ஆம் ஆண்டு வரையும் குடித்தொகை வளர்ச்சி வீதம் குறை வாகவே காணப்பட்டது. 1946 - 1963 ஆம் ஆண்டுகளில் வளர்ச்சி வீதம் அதிகரித்து அதன் பின்னர் படிப்படியாக குறைவடைந்து செல் வதைக் காணலாம். வரலாற்றில் வேலணைத்தீவில் அல்லைப்பிட்டி, ஊர்காவற்றுறை பண்ணைத்துறைகளூடாக வர்த்தகம் மேற்கொள் ளப்பட்டதற்கு சான்றுகள் உள்ளன. தீவுப்பகுதிகளில் இத்தீவே வர்த் தக மையமாக இருந்திருக்க வேண்டும். 1981 ஆம் ஆண்டுக்கணிப் பீட்டின் படி 3 1551 மக்கள் வாழ்ந்துள்ளனர். இத்தீவின் குடி அடர்த்தி யானது 1871 ஆம் ஆண்டில் சதுர மைலுக்கு 165 ஆகவிருந்தது 1981 ஆம் ஆண்டு 463 ஆக உயர்ந்துள்ளது. இப்பிரதேசத்தில் வாழும் மக்களில் பெரும்பாலானோர் விவசாயத்தையே முதன்மைத் தொழி லாகக் கொண்டிருக்கின்றனர். பொதுவாக இப்பிரதேசத்தின் குடித் தொண்கப் பரம்பலைப் பொறுத்த வரை அல்லைப்பிட்டியிலிருந்து ஊர் காவற்றுறை வரையும் தீவின் தென்பகுதியிலேயே மக்கள் பரந்து வாழ்கின்றனர். அல்லைப்பிட்டி, வேலணை கிழக்கு, வேலணைமேற்கு ,' புளியங்கூடல், சரவணை, சுருவில், கரம்பன், ஈறாக தென்பகுதிகளி லேயே மக்கள் வாழ்வதற்கு அப்பிரதேசத்தின் மண்வளம், நீர்வளம் ஆகியன உவப்பானதாகவிருக்கின்றன.
நெடுந்தீவானது பல்வேறுவழிகளில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீவா கும். சோழராட்சியில் இத் தீவு குறு நிலமன்னர்களினால் , ஆளப்பட்டதென வ ர லா று கூறுகின்றது. ஐ ரோ ப் பி ய ரு க் கு முற்பட்ட கால ப் பகு தி யா யி னு ம் சரி, போர்த் துக் கீசர் , ஒல்லாந்தர், ஆங்கிலேயரின் காலத்திலாயினும் சரி இது வளர்ச்சிப் பிரதேசமாகவே காணப்பட்டு வந்தது. இத்தீவானது இராமேஸ்வரத் திற்கு அண்மையில் அமைந்துள்ளமையால் தென்னிந்தியச் செல்வாக்கு அதிகம் இருந்துள்ளது என்பதை வரலாறு கூறும் . இத்தீவு மிக நீண்ட காலமாக தென்னஞ்சோலைகளைக் கொண்டு காட்சியளித்ததாகவும், மீன்பிடித்தொழில், மூலிகை சேகரித்தல் போன்ற முக்கிய தொழில் கள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகத் தெரியவருகின்றது.இங்கு காணப் படும் தூர்ந்து போன குளங்களைக் கருத்திற் கொள்ளின் விவசாயத் தில் விருத்தியடைந்த பிரதேசமாகவிருந்துள்ளது. 1824 ஆம் ஆண் டில் 3432 மக்கள் வாழ்ந்துள்ளனர். 1871 ஆம் ஆண்டுக்கணிப்பீட் " டின் படி 3025 மக்கள் வாழ்ந்திருக்க படிப்படியாக அதிகரித்து 1946 ஆம் ஆண்டு 6338 மக்களர்க அதிகரித்த போதிலும் அதன்பின்னர் குடித்தொகையில் வீழ்ச்சிநிலையே காணப்படுகின்றது. 1950 களில் வடஇலங்கையின் தாய்நிலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட குடியேற் றத்திட்டங்களின் விளைவாகவே மக்களில் கணிசமானோர் இடப்
9

Page 25
பெயர்வினை மேற்கொண்டதன் விளைவே இதுவாகும். அத்துடன் வசதி படைத்தவர்களும், கல்வியால் உயர்ந்தவர்களும் இப்பிரதேசத் தைவிட்டு வெளியேறி யாழ்குடாநாட்டுப் பிரதேசத்திற்கும் நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கும் சென்றுள்ளனர்.
புங்குடுதீவும் மிக நீண்டகால வரலாற்றைக் கொண்டது. கண் ணகை அம்மன், பாணாவிடை ஐயனார் கோவில், பெரியபுலம் வீர கத்தி விநாயகர் ஆலயங்களின் வரலாறு காலத்தால் முந்தியது. இத் தீவானது மேற்படி தீவுகளின் மத்தியில் அமைந்திருப்பதாலும் தென் னிந்தியத்தொடர்புகள் இருந்துள்ளதாலும் இங்கு மக்கள் நெருக்கமாக வாழ்ந்துள்ளனர் எனக்கொள்ள மு டி யு ம். இங்கு பெருமளவில் கோவில்கள் காணப்படுவதால் கோயிற்குடியிருப்புக்கள் காணப்பட் டுள்ளன. சைமன்காசிச் செட்டியின் கருத்துப்படி விவசாய உற்பத்தி யிலேயே அதிக கவனம் செலுத்தியிருந்த போதிலும் ஆடுவளர்ப்பு மீன்பிடித்தல், சிப் பிபெறுதல் போன்றவற்றிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர் என்பர். குறிப்பாக தீவுப்பகுதியில் வேலணைத்தீவிலும் புங்குடுதீவிலும் 1950 கள் வரை செம்மறியாடுகள் அதிகமாக வளர்க் கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1871 ஆம் ஆண்டுக் கணிப்பீட்டின்படி 3966 ஆக மக்கள் வாழ்ந்திருக்க 1981 ஆம் ஆண்டில் 14622 மக்கள் வாழ்ந்துள்ளனர். 1901 - 1911, 1946 - 1953 ஆம் ஆண்டுகளை தவிர ஏனைய காலங்க ளில் குடித்தொகை வளர்ச்சி கணிசமானதாகவிருந்துள்ளது. இருப்பி னும் 1950 களின் பின்னர் வளர்ச்சி வீதம் படிப்படியாகக் குறைவ டைந்து கொண்டு சென்றுள்ளதைப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மேற்படி வளர்ச்சி வீதம் குறைவடைந்து செல்கின்றமைக்கு வெளியி டப் பெயர்வே பிரதான காரணியாகவுள்ளது. இத்தீவின் குடித்தொகை அடர்த்தியானது 1871 ஆம் ஆண்டில் சதுரமைலுக்கு 137 ஆகவிருந்து 1981 ஆம் ஆண்டில் 504 ஆக அதிகரித்துள்ளது. வேலணைத்தீவி னைப் போன்று இத்தீவின் வடபகுதியில் மக்கள் குறைவாகவும் தென் பகுதியில் அதிகமாகவும் குடிப்பரம்பல் காணப்படுகின்றது. அதே வேளை நன்னீர் வளத்திற்கும் குடிப்பரம்பலுக்கும் நெருங்கிய தொடர் பினைக் காணமுடிந்தாலும் அண்மைக்காலத்தில் பெரும்பாலான கிணறுகள் கோடையில் உவர்நீராகமாறி வருவதையும் காணமுடி கின்றது.
நயினாதீவு வரலாற்றுச் சிறப்புமிக்க தீவாகவுள்ளது. புத்தர் வருகை, மணிமேகலையில் இத்தீவின் வளம் சித்திரிக்கப்பட்டுள்ளமை, கி. பி. 3 ஆம் நூற்றாண்டில் நயினாப்பட்டன் என்ற அந்தணர் இந்தியாவிலிருந்து வந்து கோவிலுக்கு பூசை செய்தமை, தூத்துக் குடி முஸ்லிம்கள் இப்பிரதேசத்திற்கு வந்து வர்த்தகம் செய்தமை. இத்
20

தீவிலிருந்து நெய் பால் போன்றவற்றை தென்னிந்தியாவுக்கு எடுத் துச் சென்று திரும்பும் போது ஆடை வகைகள், ஆ ப ர ணங்க ள் போன்றவற்றைக் கொண்டு வந்ததற்கான சான்றுகள், முத்துக்குளித் தல், சங்குகுளித்தல் போன்றவற்றால் கிடைக்கும் மணிகள் முத்துக் கள், நவரத்தினங்கள் முதலானவற்றைத் தென்னிந்தியாவிற்கு எடுத்துச் சென்று விற்பனை செய்தமை போன்ற பல வரலாற்று நிகழ்வுகள் இத்தீவில் பல்வேறு வழிகளில் சிறப்படைந்த மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதையே காட்டி நிற்கிறது.
நயினாதீவில் 1871 ஆம் ஆண்டுக்கணிப்பீட்டின்படி 775 மக்கள் வாழ்ந்துள்ளனர். இது 1981 ஆம் ஆண்டில் 4247 மக்களாக உயர்வடைந்தது. ஏனைய தீவுகளைப் போலன்றி 1963 ஆம் ஆண்டு வரையும் அதிகரித்த குடித்தொகை வளர்ச்சி வீதத்தையே கொண் டிருக்கின்றது. 1960 களின் பின்னர் வளர்ச்சி வீதம் குறைவடைந்து செல்வதற்கு வெளியிடப்பெயர்வே மு க் கி ய காரணியாக வுள்ளது. 1871 ஆம் ஆண்டு இத்தீவின் குடித்தொகை அடர்த்தி சதுரமைலுக்கு 136 ஆகவிருந்து 1981 இல் 745 ஆகவுயர்ந்துள் ளது. இத்தீவில் மக்கள் பரந்து வாழ்ந்து வருகின்றபோதிலும் தீவின் வடபகுதியில் மக்கள் நெருக்கமாக வாழ்ந்து வருவதைக் காணலாம்.
ஐயனார் வழிபாட்டில் அக்கறை கொண்ட அனலைதீவில் 1871 ஆம் ஆண்டுக்கணிப்பீட்டின் படி 1064 மக்கள் வாழ்ந்திருக்க 1981 ஆம் ஆண்டில் 3853 மக்கள் வாழ்ந்துள்ளனர். இத்தீவில் குடித் தொகை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற போதிலும் வளர்ச்சி வீதத்தைப் பொறுத்த வரை ஏற்ற இறக்கத்தைக் கொண்டு காணப் படுகின்றது. இத்தீவின் 1871 ஆம் ஆண்டு அடர்த்தியானது சதுர மைலுக்கு 158 ஆக விருந்து 1981 இல் 572 ஆக அதிகரித்துள்ளது. விவசாய உற்பத்தியில் சிறந்து விளங்கும் இத்தீவில் புகையிலைச் செய்கையே சிறப்புப் பெற்றுள்ளது. 1950 களிலிருந்து மக்கள் வெளி யிடப்பெயர்வினை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் குடியிருப்பினைக் கொண்ட தீவு களி ல் மிகச் சிறிய தீவான எழுவைதீவில் 1871 ஆம் ஆண்டில் 290 மக்களும் 1981 இல் 528 மக்களும் வாழ்ந்துள்ளனர். இத்தீவு மக்களின் பொருளா தார முயற்சி மீன்பிடித் தொழிலேயாகும். சிறியளவில் விவசாயத் தைக் கைக்கொண்டு வருவதுடன் அனலைதீவு மக்க ளைப் போல் இவர்களும் பணம்பொருட்களைக் கொண்டு சிறு தொழில்கள் மூலம் வருமானத்தைப் பெறுகின்றனர். 1871 இல் சதுரமைலுக்கு 140 மக்கள் காணப்பட்டிருக்க 1981 இல் 255 மக்களாக அதிகரித்துள் ளது.
21

Page 26
யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு அண்மையிலுள்ள மண்டைதீவில் பயிர்ச்செய்கை, மீன்பிடி ஆகியவற்றினுாடாக பொருளாதாரத் தேட் டத்தைப் பெற்றுக் கொள்கின்றனர். 1871 ஆம் ஆண்டு 1153 மக் கள் வாழ்ந்திருக்க 1981 இல் 3706 மக்களாக அதிகரித்துள்ளனர். 1871 இல் சதுரமைலுக்கு அடர்த்தியானது 114 மக்களைக் கொண் டிருக்க 1981 இல் 367 மக்களாகக் அதிகரித்துள்ளது.
இன, மதப் பரம்பல்
தீவுப்பகுதியைப் பொறுத்தவரை இலங்கைத் தமிழரே பெரும் பான்மையினராகவிருக்கின்றனர். இந்தியத் தமிழர் மிகக் குறைந்தள விலேயே வாழ்ந்து வருகின்றனர். இஸ்லாமியரைப் பொறுத்த வரை நயினாதீவிலும், மண்கும்பானிலும் சிறிய எண்ணிக்கையாகவுள்ளனர். நயினாதீவில் வாழ்ந்து வரும் இஸ் லா மியர் கள் தூத்துக்குடியிலி ருந்து வர்த்தக நோக்குடன் வந்து இங்குள்ள பெண்களை விவாகம் செய்து இத் தீவை நிரந்தரமாக்கிக் கொண்டவர்கள். மண்கும்பா னில் வாழும் இஸ்லாமியர் யாழ்ப்பாண நகரிலிருந்து இடப்பெயா வினை மேற்கொண்டவர்களாவர். குறிப்பாக நகரில் நெருக்கமான குடியிருப்பில் வாழும் வசதிபடைத்தோர் பள்ளிவாசல் சார் ந் த பகுதிகளில் தமிழரிடம் காணிகளை விலைக்கு வாங்கி குடியிருந்து வருகின்றனர். அட்டவணை 3 இனப்பரம்பலைத் தெரிவிக்கின்றது.
அட்டவணை 3
தீவகம் - இனப்பரம்பல் 1981 (சதவீதம்)
இலங்கைத்தமிழர் ems 95.8 இந்தியத்தமிழர் 3.4 இஸ்லாமியர் 0.7. சிங்களவர் W 0.1
மொத்தம் 100.0
ஆதாரம்: குடித்தொகைக்கணிப்பு அறிக்கை 1981
மதப்பரம்பலைப் பொறுத்த வரை இஸ்லாமியர் ஏற்கனவே கூறப் பட்ட நயினாதீவு, மண்கும்பான் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். பெளத்தர்கள் இத்தீவுகளில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களாயுள் ளனர். எனினும் ஆயுதப்படையில் பெளத்தர்கள் காணப்படுகின்றனர்.
இந்துக்கள் சகல தீவுகளிலும் பரந்து வாழ்ந்து வருகின்றனர். அட்டவணை 4 இல் தீவுப்பகுதியின் மதரீதியான பரம்பல் தரப்படு கின்றது.
22

அட்டவணை 4.
மதரீதியான பரம்பல் - 1981
மதம் சதவீதம் இந்துக்கள் 76 - 7 கிறிஸ்தவர்கள் , 2 1 . 5 இஸ்லாமியர் 0.6 ஏனையோர் 】。罗 மொத்தம் 100.0
ஆதாரம்: குடித்தொகைக் கணிப்பு அறிக்கை 1981
மதரீதியான பரம்பலைத் தீவுகள் அடிப்படையில் நோக்கும் போது வேலணைத்தீவில் 73.0 சதவீதமானவர்கள் இந்துக்களாகவும் 26.0 சதவீதமானவர்கள் கிறீஸ்தவர்களாகவும் காணப்படுகின்றனர். கிறீஸ்தவர்கள் பெருமளவிற்கு கரம்ப ன், நாரந்தனை, ஊர்காவற்றுறை ஆகிய பிரதேசங்களில் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். இப்பிர தேசங்களில் கிறிஸ்தவப் பாடசாலைகள் அதிகமாக உள்ளன. 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலுல் 20 ஆம் நூற்றாண்டின் முன்ைைரப் பகுதியிலும் கல்வியறிவு, சிறந்த தொழில்களைப் பெற்றவர்கள் தீவுப் பகுதியில் மேற்குறித்த பிரதேசத்தினரேயாவர்.
நெடுந்தீவில் 60.0 சதவீதத்தினர் இந்துக்களும் 40.0 சதவீதத் தினர் கிறிஸ்தவர்களுமாவர். கிறிஸ்தவர்கள் நெடுந்தீவு மத்தியிலேயே அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இங்கு ஏறத்தாழ ஐந்தில் நான்கு பங் கினர் கிறீஸ்தவர்களே. இங்கு கிறீஸ்தவர்களோடு ஒப்பிடுமிடத்து அதி களவில் இந்துக்கள் வெளியிடப்பெயர்வினை மேற்கொண்டுள்ளனர். புங்குடுதீவினைப் பொறுத்தவரை 90.0 சதவீதத்தினர் இந்துக்களாவர். இத்தீவின் மத்திய பகுதியில் கணிசமானளவில் கிறீஸ்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். சைவபாரம்பரியத்தைக் கொண்ட நயினாதீவில் 92.0 சதவீதத்தினர் இந்துக்களாவர். 5.0 சதவீதத்தினர் இஸ்லாமியர்க வாாவர். மண்டைதீவில் 72.0 சதவீதத்தினர் இந்துக்களாகவும் 28.0 சதவீதத்தினர் கிறீஸ்தவர்களாகவும் உள்ளர்ை. இந்துக்களில் பெரும் பாலானோர் விவசாயத்தில் ஈடுபட கிறிஸ்தவர்களில் பெரும்பாலா னோர் மீன்பிடித்தொழிலில் ஈடுபாடு கொண்டிருக்கின்றனர்.
அனலைதீவு கிறிஸ்தவ மதம் வளர்க்கப்படாத தீவாகும். சகல மக்களும் இந்துக்களேயாவார். எனினும் தற்காலிக உள்வரவினை மேற் கொண்டு மீன்பிடித்தொழிலை மேற்கொள்ளும் கிறிஸ்தவர்கள் வந்துபோவதுண்டு. ஆனால் பக்கத்திலுள்ள எழுவைதீவில் கிறிஸ்த வர்கள் காணப்படுகின்றனர். இங்கு 45.0சதவீத மாணவர்கள் கிறீஸ்த
23

Page 27
வர்களேயாவர். எனினும் தீவுப்பகுதிகளில் அங்குமிங்குமாக பொருளா தார ரீதியில் நலிவுற்ற மக்களை தம்மதம் சார வைப்பதில் கிறிஸ்த வர்கள் அக்கறை கொண்டிருப்பதால் பல குடும்பங்கள் மதம் மாறி யமையை அனுபவரீதியாக அறியமுடிகின்றது.
இடப்பெயர்வு
இடப்பெயர்வினை உள்நாட்டு இடப்பெயர்வு, சர்வதேச இட பெயர்வு, என இருவகைப்படுத்தலாம். இத்தகைய இடப்பெயர் வானது தள்ளுவிசைக்குட்பட்டே செயற்படுத்தப்படுகின்றது. அதாவது ஒருவனோ அன்றில் குழுவினரோ தாம் வாழும் பிரதேசம் தமக்கு ஏற்றதல்ல எனத் தள்ளுவதன் வாயிலாக ஏற்படும் இடப்பெயர்வு தள்ளுவிசைக்குட்படுத்தப்படுகின்றது. தான் வாழும் பிரதேசத்தோடு ஒப்பிடும் போது சேருமிடம் பல்வேறு வழிகளில் கவர்ச்சித் தன்மை யைக் கொடுப்பதால் இடப்பெயர்வினை மேற்கொள்ளுதல் இழுவிசைக் குட்படும். இத்தகைய அடிப்படையில் தீவுப்பகுதியின் உள்ளூர் இடப் பெயர்வு, தீவுப்பகுதியிலிருந்து வெளிப்பிரதேசங்களுக்கான இடப் பெயர்வு, சர்வதேச இடப்பெயர்வு என மூன்று பிரிவுகளாகப்பிரித்து அறியலாம்.
முதலாவதாக மிகநீண்ட காலமாக தீவுப்பகுதிக்குள்ளான இடப் பெயர்வானது பெருமளவிற்கு வரவேற்கப்பட்டதாகவில்லை. தீவுப் பகுதியில் வாழும் மக்கள் பல்வேறு ஒற்றுமைத்தன்மையிலும் வேற் றுமைப் பண்புகளைக் கொண்டவர்களாவர். அத்துடன் பொதுவாக வளம் குறைந்த பிரதேசங்களாக இருப்பதும் இத்தகைய இடப்பெயர் வுக்குத் தடையாகவுள்ளது. ஆனால் விவாகநோக்குடன் தீவுகளுக்குள் ளான இடப்பெயர்வு கணிசமானளவில் இடம்பெறுகின்றது. பெரும் பாலான தீவக மக்கள் தமது பிள்ளைகளுக்கு முதலில் தமது தீவுகளி லுள்ளவர்களைத் தான் தெரிவு செய்கின்றனர். அது கைக்கூடாத விடத்து தமது சகோதரத்தீவுகளில் தேடுகின்றனர். மூன்றாவதாக தீவுப்பகுதிக்கு வெளியில் விவாகம் செய்கின்றனர். ஆனால் காதல் விவாகங்கள் மேற்குறித்த இடத்தெரிவுக்கு அப்பாற்பட்டன என G) fTD
வரலாற்றுக்காலத்திலிருந்து தீவுப்பகுதி மக்கள் இடப்பெயர் வினை மேற்கொண்டு வந்துள்ளனர். குறிப்பாக தென்னிந்தியா மிக அண்மையிலிருப்பதால் தற்காலிகமாகவோ அன்றில் நிரந்தரமாகவோ இடப்பெயர்வு ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு. நெடுந்தீவு மக்கள் தென் னிந்தியாவுடன் வர்த்தகத் தொடர்பினை ஏற்படுத்தியிருக்க ஏனைய தீவுகளில் வாழும் மக்கள் யாழ்ப்பாணத்துடன் தொடர்பினைக் கொண்டிருந்தனர் எனலாம்.
24

தீவுப்பகுதியில் சார்பு ரீதியாக அதிகரித்த குடித்தொகை காணப் பட, வளவாய்பினை பொறுத்தவரை குறைவாகவேயுள்ளது. இதனால் மக்கள் பொருளாதாரத் தேட்டத்தை முதன்மைப்படுத்தி இடப்பெயர் வினை மேற்கொண்டிருந்தனர். கிடைக்கப்பெறும் தகவல்களை அடிப் படையாகக் கொண்டு நோக்கும் போது தீவக மக்கள் சில தொழில்க ளில் ஒறந்த தேர்ச்சி பெற்றவர்களாகவுள்ளனர். உதாரணமாக நெடுந் தீவுமக்கள் வீடுவேய்தல், வேலியடைத்தல் போன்றவற்றிலும், அனலை தீவு, எழுவைதீவு, மக்கள் பன்னவேலைகளிலும் சிறப்புற்றவர்கள். இந்நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே யாழ்ப்பாணக்குடா நாட்டிற்கு மேற்குறித்த தொழில்களை மேற்கொள்ள தற்காலிகமான இடப் பெயர்வினை மேற்கொடுைள்ளனர் எனலாம். கல்வியறிவுபெற்ற சிலர் தொழில்களைப் பெற்றுக்கொள்வதற்காக தற்காலிக இடப்பெயர் வினை மேற்கொண்டிருந்தனர். மேலும் பெருந்தோட்டப்பயிர் உற் பத்தி, தென்னிலங்கை நகரங்களின் வளர்ச்சி காரணமாக சேவைத் தொழிலை மேற்கொள்வதற்கு தீவுப்பகுதிகளிலிருந்து கணிசமான மக்கள் இடப்பெயர்வினை மேற்கொண்டிருந்தனர். இவர்களில் பலர் காலப்போக்கில் தொழில் அதிபர்களாக மாறினர். இவர்களது தொழில் நிலையங்களில் சிப்பந்தியாகத் தொழில் செய்யவும் இப்பகுதிகளிலி ருந்து தற்காலிக இடப்பெயர்வு ஏற்பட்டது. எனவே அரச தொழில் புரிபவர்கள், சேவைத்தொழிலில் ஈடுபட்டோர்கள் அங்கிருந்து மணி யோடர் மூலமாக பணத்தினை உறவினர்களுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் இப்பிரதேச பொருளாதாரத்தை ‘மணிஒடர் பொருளா தர அமைப்பு" எனக் கூறிக்கொள்ளலாம். இத்தகைய பொருளாதார அமைப்பு 1970 கள் வரை காணப்பட்டது. 1950 களிைத் தொடர்ந்து மேற்குறித்த வருமானங்களைக் கொண்டு ஒட்டினால் வேயப்பட்ட கல்வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இலங்கை சுதந்திரமடையவே நாட்டின் பொருளாதாரக் கொள் கையில் மாற்றங்களை அரசு புகுத்தியது. இதில் முக்கியமானது (5ւգ, யேற்றத்திட்டங்களாகும். அரசாங்கம் விவசாய உற்பத்தியை அதிகரிக் கவும், குடியடர்த்தியான பிரதேசங்களிலிருந்து மக்களைப் பொருளா தாரத் தேட்டமுடைய பகுதிகளுக்கு இடம்பெயர வைப்பதிலும் கவ னம் செலுத்தியது. 1953 ஆம் ஆண்டில் வட இலங்கையில் மேற் கொள்ளப்பட்ட குடியேற்றத்திட்டங்களுக்கு தீவுப்பகுதியினைச் சேர்ந் தோர் கணிசமான அளவில் சென்றனர். உதாரணமாக கணேசபுரத் தில் குடியேறியோரில் 500 சதவீதததினர் தீவுப்பகுதியைச் சேர்ந் தோராவார். இவர்களில் 24.0 சதவீதத்தினர் நெடுந்தீவு வாசிகளா வர். உருத்கிரபுரத்தில் 25.0 சதவீதத்தினர் நெடுந்தீவைச் சேர்ந்தவர் களாகவும் 19.0 சதவீதத்தினர் ஏனைய தீவுகளைச் சேர்ந்தவர்களாக வும் இருந்தனர். இராமநாதபுரத்தில் 47.0 சதவீதத்தினர் நெடுந்
25

Page 28
தீவைச் சேர்ந்தவர்களாகவும் 17.0 சதவீதத்தினர் ஏனைய தீவுகளைச் சேர்ந்தவர்களுமாவர். முல்லைத்தீவு மாவட்டத்தில் பாண்டியன்குளம் விநாயகபுரம், வவுனிக்குளம், யோகபுரம் குடியேற்றத் திட்டங்களில் பெரும்பான்மையானோர் நெடுந்தீவு மக்களே. இதேபோலவே ஏனைய குடியேற்றத் திட்டங்களுக்கும் தீவகமக்களின் இடப்பெயர்வு காணப் பட்டுள்ளது. 1965 ஆம் ஆண்டு கிளிநொச்சித் தொகுதியில் தீவகத் தைச் சேர்ந்த திரு. கா.பொ. இரத் தினம் பாரளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டதற்கு அத்தொகுதியில் தீவக மக்கள் அதிகள வில் காணப்பட்டமை ஒரு பிரதான காரணியாகும். ஏனைய தீவுப் பகுதிகளோடு ஒப்பிடும் போது நெடுந்தீவு மக்கள் அதிகமாக குடி யேற்றத் திட்டங்களுக்கு சென்றதற்கான முக்கிய காரணம் அப்பிர தேசம் தனித்த ஒரு காரியாதிகாரி பிரிவாக இருந்தமையேயாகும். தீவுப்பகுதியிலிருந்து குறிப்பாக அனலைதீவு, புங்குடுதீவினைச் சேர்ந் தவர்களில் கணிசமானவர்கள் மேற்படி பிரதேசங்களுக்குச் சென்றுள் ளனர்.
பாலர் வகுப்புத்தொட்டு பல்கலைக்கழகம் வரையிலான இலவசக்கல் வியின் விளைவாக தீவக மக்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்த னர். கல்வியைச் சிறப்பாக்கியவர்கள் தொழில்களின் நிமித்தம் யாழ் நகருக்கும் ஏனைய பிரதேசங்களிற்கும் இடப்பெயர்வினை மேற்கொள்ள வளவாய்ப்புக்குறைந்த தீவகத்திலிருந்து கல்வியில் நாட்டம் கொள்ளா த்ோர் கொழுப பிலும் ஏனைய பிரதேசங்களிலும் வர்த்தக நிலையங் களில் சிப்பந்திகளாகவும் ஏனைய தொழில்களை மேற்கொள்ளவும்செய் தனர். இத்தகைய நிகழ்வுகள் 1950 களிலிருந்து தொடர்ந்து வந்துள் ளது.
அரச தொழில்களில் ஈடுபாடு கொண்டவர்கள் குறிப்பாக கிறீஸ் தவர்கள் யாழ்ப்பாண நகரத்தில் சுண்டிக்குளி, கொழும்புத்துறை சார்ந்த பகுதிகளுக்கும் இந்துக்கள் கொட்டடி, கந்தர்மடம், திருநெல் வேலி, நல்லூர் பகுதிகளுக்கும் தற்காலிக இடப்பெயர்வினை மேற் குறித்த காலப்பகுதிகளில் செயற்படுத்தினர். அதேபோலவே வெளிமா வட்டங்களில் வர்த்தகத்தின் மூலம் வருமானத்தைப் பெற்றவர் களும் யாழ்ப்பாண நகரத்தினை நாடினர். இவ்வாறு ஆரம்பத்தில் தற்காலிகமாகவும் பி ன்ன ர் நிரந்தரமாகவும் இடப்பெயர்வுகளை மேற்கொண்டவர்கள், தாம் வாழ்ந்த பிரதேசம் பிள்ளைகளுக்கான கல்வி வாய்ப்பிற்கு வசதியற்ற இடம் என்ற எண்ணப்பாடும் நன் னிர்வளம் அருகிக்கொண்டு சென்றமை, நகரக்கவர்ச்சி போன்ற காரணிகளை முதன்மைப்படுத்தியும் வெளி இடப்பெயர்வினை மேற் கொண்டனர் எனலாம். இத்தகைய இடப்பெயர்வு தொடர்கின்றது.
26

சர்வதேச இடப்பெயர்வு
மிக நீண்ட காலமாக தீவகமக்கள் சர்வதேச இடப்பெயர்வினை மேற்கொண்டு வர்த்தகம் செய்து வந்துள்ளனர் என்பது ஏற்கனவே வரலாற்றியல் பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலக்கல்வி பெற்றவர்க்கத்தினர் பெருந் தோட்டங்களில் தொழிலாற்றினர். ஆங்கிலேயர் இடமாற்றம் பெற்று மலாயாவுக்குச் செல்லவே யாழ்ப்பாணத் தமிழர்களையும் தம்முடன் அழைத்துச் சென்றனர். அவர்களில் கணிசமானோர் புங்குடுதீவு, காரைநகர் வேலணைத்தீவுகளிலிருந்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் ஒரு தொகுதியினர் தாயகம் திரும்ப மற்றைய பிரிவினர் அங்கேயே தங்கிவிட்டனர். மேற்படி இடப்பெயர்வு 1875 - 1939 ஆம் ஆண்டுகளிடையே அதிகமாக நிகழ்ந்துள்ளது எனலாம். 1940 களைத் தொடர்ந்து சிலர் பல்கலைக்கழகக் கல்வியைப் பெறுதற்பொருட்டு இங்கி லாந்து சென்று திரும்பியுள்ளனர். 1956 இல் சிங்களமொழி அரசாங்க மொழியாக்கப்பட்டதன் பின்னர் அரச தொழில் புரிவதில் உள்ள இடர்பாடு காரணமாக பதவியைத் துறந்து இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா, போன்ற நாடுக்ளுக்கு தீவுப்பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் இடப்பெயர்வினை மேற்கொண்டு அவ்வவ் நாடுகளி லேயே தங்கி விட்டனர். குறிப்பாக ஊர்காவற்றுறை, கரம்பன், நாரந்தனை யைச் சேர்ந்தவர்கள் பலர் அங்கு வாழ்வதை அனுபவ ரீதியாகக் காணமுடிகிறது. இதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக மூளைசாலிகள் வெளியேற்றமும் தொடர்ந்து நடைபெற்றுள்ளது.
ஈழ விடுதலைப் போராட்டபம் 1974 ஆம் ஆண்டு முனைப்புப் பெறவே அப்போராட்டத்தைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு மேற் குலக நாடுகளில் தொழில்வாய்ப்பினைப் பெற்று அதிக ஊதியத்தினைப் பெறும் நோக்குடன் 1983 ஆம் ஆண்டு வரையும் இப்பிரதேச மக்கள் குறிப்பாக இளைஞர்கள் சென்றிருந்தனர் இவர்களில் பலர் மேற்கு ஜேர்மெனிக்கே இடப்பெயர்வின்ை மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் தரவு ரீதியாக எவ்வளவுபேர் சென்றுள் ளனர் என்பதைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
1983 ஆம் ஆண்டு யூலை மாதம் நடைபெற்ற பாரிய இனக்கல வரத்தினைத் தொடர்ந்து தென்னிந்தியா மற்றும் மேற்குலக நாடுக ளுக்கு இராணுவ அழுத்தங்களைக் காரணங்காட்டி தமது பொருளா தாரத் தேட்டத்தினை மேற்கொள்வதற்காக தீவகத்தின் மத்தியதர. உயர்தர வர்க்கத்தைச் சார்ந்த பலர், குறிப்பாக இளைஞர்கள் அதி களவில் இடப்பெயர்வினை மேற்கொண்டிருந்தனர். 1983 ஆம் ஆண்டி னைத்தொடர்ந்து இந்தியாவுக்கு விமானங்களிலும் படகுகளிலும்
27

Page 29
குடும்பங்களாகவும் சென்றுள்ளனர். ஆனால் மேற்குலகங்களுக்கு 15 - 40 வயதிடைப்பட்ட ஆ*நீக்ள் அதிகளவில் இடப்பெயர்விளை மேற் கொண்டிருந்தனர் எனலாம். குடாநாட்டின் ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடுமிடத்து தீவகத்தைச் சார்ந்தோர் சார்பு ரீதியாக அதிகமான வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் பெரும் செலவு செய்து செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே விருந்துள்ளது இதற்குக் காரணமாகும்.
1. தீவுப்பகுதியிலுள்ள மத்தியதர, உயர்தர, வர்க்கத்தினர் பொருளாதாரத் தேட்டம் கொண்டவர்களாகவும் சேமிக்கும் ஆற்றல் கொண்டவர்களாகவிருந்தமை.
2. யாழ்ப்பாண நகரப்பகுதிகளிலும் கொழும்பு நகரிலும் உற
வினர் நண்பர்களை அதிகம் கொண்டிருந்தமை.
3. தீவுப்பகுதியில் மாணவர் இடைவிலகல் அதிகரித்துக் காணப்
பட்டமை.
4. தீவுப்பகுதிகளில் தொழில் வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ள
முடியாதநிலை.
போன்ற காரணிகள் சர்வதேச இடப்பெயர்வைத் தூண்டிய முக்கிய மான வாய்ப்புக்களாகும். 1990 ஆம் ஆண்டு யூனில் இரண்டாவது ஈழப்போர் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தீவக மக்களில் பெரும்பான் மையானோர் தமது உடமைகளை விட்டு வெளியேறியமையால் ஏற் கனவே சர்வதேச இடப்பெயர்வினை மேற்கொண்டிருந்தவர்கள் தமது குடும்பத்தினரை தம்முடன் இணைத்துக் கொள்ளும் நிலை காணப் படுகின்றது. குறிப்பாக கனடாவில் ரொரண்டாவை “குட்டி யாழ்ப் பாணம்' என அழைப்பர். அங்கு குறித்த சில பகுதியினை 'குட்டித் தீவகம்" என அழைப்பதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின் றன.
1970 களிலிருந்து தொடர்ச்சியாக இடப்பெயர்வினை மேற்கொண் டவர்களில் பெரும்பான்மையானோர் ஆண்களாகும். அவர்கள் தாம் விவாகத்தைச் செய்ய விரும்பும் வேளை தீவகத்திலுள்ள தமது உற வுப் பெண்களை அழைத்துக் கொள்கின்றனர். மேலும் குறிப்பாக தீவகத்தைச் சேர்ந்த மத்தியதர, உயர்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பங்களில் குறைந்தபட்சம் ஒருவராவது மேற்குலக நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர் என்றால் மிகையாகாது.
28

தீவக மக்களின் இடப்பெயர்வும் இன்றைய நிலையும்
தீவக மக்கள் மிக நீண்ட காலமாக பல்வேறு மட்டங்களில் பிரச்சினைகளை அனுபவித்து வருகின்றனர். பொருளாதாரம், போக்கு வரத்து, கல்விப் பிரச்சினைகள் இவற்றுள் முதன்மை பெறுகின்றன. 1991 ஆம் ஆண்டிலிருந்து புதிய வடிவிலமைந்த பிரச்சினைகளுக்கு தவிர்க்க முடியாதபடி முகம் கொடுக்க வேண்டிய நிலைக்குள்ளாகினர். இரண்டாம் ஈழப்போர் ஆரம்பமான தைத் தொடர்ந்து இலங்கை இராணுவம் தீவுப்பகுதியினைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்தி ருத்தல் த மது பாதுகாப்புக்கு உத்தரவாதம் எ ன் ற நோக்கில் 1991 ஆம் ஆண்டு தீவுப்பகுதியைத்தம் வசப்படுத்தினர். இக்காலத் தில் வேலணை உதவி அரசாங்க அதிபர் பிரிவில் 5388 மக்களும் ஊர்காவற்றுறை உதவி அரசாங்க அதிபர் பிரிவில் 4143 மக்களும் நெடுந்தீவில் ஏறத்தாழ 4688 மக்களும் காணப்பட்டனர். இடம் பெயர்வதற்கு முன்னர் மேற்படி பிரிவுகளில் முறையே 11,950 குடும் பங்கள் காணப்பட்டிருந்தன.
இராணுவத்தின் பிடியிலிருந்து தம்மை மீட்டுக் கொள்ளும் முக மாக வேலணை உதவி அரச அதிபர் பிரிவிலிருந்து 9000 குடும்பங் களைச் சேர்ந்த 38480 மக்களும் ஊர்காவற்றுறை அரச அதிபர் பிரிவினைச் சேர்ந்த 9 191 குடும்பங்களைச் சேர்ந்த 40018 மக்களும் இடப்யெர்வினை மேற் கொண்டு யாழ்ப்பாண குடாநாட்டுக்கும் நாட்டின் ஏனையபகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளனர்" நெடுந்தீவுப் பிரிவிலிருந்து தமது தேவைகளைப் பெற்றுக் கொள்ளும் முகமாக யாழ்குடாநாட்டுக்கு வருகை தந்திருந்த 250 மக்கள் வரை மீண்டும் தம்மிடம் செல்லமுடியாது அகதிகளாயினர். எனினும் காலப்போக்கில் இவர்களில் கணிசமானோர் மீண்டும் த ம் மி டம் சென்றுவிட்டனர். -
*
இடப்பெயர்வினை மேற்கொண்ட மக்கள் தி டீ ரென தமது இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டியிருந்தமையால் தமது உடமைகள், தேட்டங்களைக் கொண்டு வர முடியவில்லை. அவர்கள் அநாதரவான நிலையில் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள் பெருமள வில் பிரவேசித்தமையால் உடனடியாக பாடசாலைகளிலும் ஏனைய பொது இடங்களிலும் கூட்டமாக வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டனர்.
பொது வாக இடப்பெயர் வினை மேற்கொண்டிருந்தவர்கள் நான்கு வகையான குடியிருப்புக்களில் வாழ்ந்து வ ரு கி ன் ற னர். 1) முகாம்களில் தங்கி வாழ்வோர். 2) அரசசார்பற்ற நிறுவனங் களால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட தற்காலிகக் குடியிருப்புக்களில்
29

Page 30
வாழ்வோர். 3) உறவினர், நண்பர்கள் வீ டு களி ல் வாழ்வோர் 4) வாடகைக்கோ அன்றில் சொந்தமாக வீட் ட்ை ப் பெற்று வாழ்வோர் என வகைப்படுத்தலாம். முதலாவது வகைக்குட்பட்டு வாழும் நிலையை இப்போது கடந்து விட்டனர். ஏனைய மூன்று குடி யிருப்புக்களிலும் மக்கள் வாழ்கின்றனர். இரண்டாம் வகைக் குடி யிருப்புக்களில் வாழ்பவர்கள் பெரும்பாலும் ஏழைமக்களேயாவார்.
இவர்கள் பெரியதும் சிறியதுமான 25 இடம்பெயர்ந்தோர் முகாம் களில் வாழ்ந்து வருகின்றனர். 2788 குடும்பங்களைச் சேர்ந்த 12577 மக் கள் வாழ்ந்து வருகின்றனர். 1991 ஆம் ஆண்டு இடப்பெயர்வினை மேற்கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கை 78498 ஆகும். இவர்களில் இரண்டாவது வகை முகாங்களில் வைத் து பராமரிக்கப்படுவர் கள் 16.0 சதவீதத்தினர் மட்டுமேயாகும். மேலும் வசதி வாய்ப் புடையோர் தென்னிலங்கை, மற்றும் வெளிநாடுகள் செல்லும் பண்பு தொடர்ந்து வருகின்றது. பெரும்பாலான இடம் பெயர்ந்தவர்கள் குடாநாட்டில் வலிகாமம் பிரிவுகளிலும் தென்மராட்சி பிரிவிலும் பரந்து வாழ்ந்து வருகின்றனர்.
தீவகத்தில் ஏற்பட்ட இராணுவ நடவடிக்கையின் பின்னர் அங் கேயே தங்கி வாழ்வோர் பின்வருமாறு காணப்படுகின்றனர். (அட்ட வணை 5)
அட்டவணை 5
வேலணை உதவி அரச அதிபர் பிரிவு
எண்ணிக்கை I. புங்குடுதீவு 857 .
2. மண்டைதீவு 43
3. நயினாதீவு 4233
4. வேலணைத்தீவு 255 .
ஊர்காவற்றுறை உதவி அரச அதிபர் பிரிவு
1. ஊர்காவற்றுறை 144
2. காரைநகர் 840 3. எழுவைதீவு 572
4. அனலைதீவு V 2587
30

நெடுந்தீவு உதவி அரச அதிபர் பிரிவு 1. நெடுந்தீவு 4688
ஆதாரம்: புனர்வாழ்வு அமைச்சின் தகவல், உதயன் 28.7 94 பக். 3
மேலும் இடப்பெயர்வினை மேற்கொண்டு முகாம் குடியிருப்புக் களில் வாழ்ந்துவரும் மக்கள் பொருளாதாரக் கஷ்டங்கள், குடிநீர் சுகாதாரப் பிரச்சினைகள், தொழில் வாய்ப்பற்ற, போ சக் கற்ற நிலை, குழந்தைகளின் கல்வி வாய்ப்பு பாதிப்புற்றநிலை, இறப்பு அதிகரித்து செல்லல் போன்றவற்றால் அவதிப்படுகின்றனர். இந்நிலை தொடருமாயின் இம் மக்கள் சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியவர்களாக மாறுவார்கள் எனக் கூறமுடியாது.
31

Page 31
இயல் - நான்கு
தீவகம் - அரசியல்
இவக மக்கள் அரசியல் விவகாரங்களில் தமிழர் பிரதேச மக்க வின் அபிலாசைகளுக்கிணங்க நீண்டகலமாகத் தம்மை இணைத்துக் இாண்டவர்கள். மிகநீண்டகால அரசியல் பாரம் பரியத்திற்குட்பட் Lவர்கள். ஐரோப்பியர் ஆட்சிக்காலங்களிலும் இலங்கை சுதந்திர மடைந்த பின்னரும் தமிழர்கள் தனித்துவமானவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டுவதில் தீவகமக்கள் என்றும் பின்நிற்கவில்லை. எக் காலங்களிலும் பூரீலங்காவின் தேசிய நீரோட்டத்திற்கு எதிராகத் தமிழர்களின் சுயநிர்ணயப் போராட்டத்திற்கு வலுக்கொடுத்துள்ள * என்றால் மிகையாகாது. 1921 - 1924 ஆம் ஆண்டுகளிடையே தேர்தல் நடைபெற்றது. அதில் 21-04-1921 இல் தீவுப்பகுதி உள் டி.ட வடமாகாணத்திற்கான பிரதிநிதியை தெரிவு செய்வதற்கான தேர்வில் திரு. எவ். துரைசாமியுடன் திரு. ஏ. கனகரத்தினம் போட் டியிட்டார். அவர்களில் திரு. எவ், துரைசாமிக்கு 5836 வாக்குகளும் Tெ கனகரத்தினத்திற்கு 4443 வா க்கு களும் கிடைக்கப்பெற்ற்றன. மொத்த வாக்காளர்களான 13937 பேரில் 10 279 வாக்குகள் பதிவா
நி.ை திரு. எவ். துரைசாமி வெற்றி பெற்றார்.
24.11.1932 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திரு. வைத்தி இங்கம் துரைச்சாமி அவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட்டார் வேறு எவரும் தேர்தல் களத்தில் நிற்காதபடியால் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டார்.
1924 - 1931 ஆம் ஆண்டுகளிடைப்பட்ட சட்டசபைக்கு வடமா கானம் 5 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. வடமாகாணம் மத்தி, வடமாகாணம் கிழக்கு, வடமாகனம் வட க் கு, வடமாகாணம் தெற்கு, வடமாகாணம் மேற்கு என்பனவே அவையாகும். இதில் வட மாகாணம் மேற்குப்பிரிவுக்குள் தீவுப்பகுதியும் அடங்கும். 12.09.1924 ஆம் திகதி நடைபெற்ற வடமாகாணம் மேற்குத் தொகுதியில் திரு. வைத்திலிங்கம் துரைச்சாமி மட்டுமே போட்டியிட்டதால் அவர் ஏக மனதாகத் தெரிவு செய்யப்பட்டார். இவர் தீவக மக்களின் நன் மதிப்பைப் பெற்றவராகவும் தேசியரீதியில் மதிக்கப்பட்டவராகவும்
5TGSL. T.
32

1931 - 1947 ஆம் ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலங்களில் நடை பெற்ற அரசாங்க சபைக்கான தேர்தல்கள் தீவுப்பகுதிகளிலும் நடை பெற்றன. 1931 ஆம் ஆண்டு 33845 வாக்காளர்கள் இருந்த போஒ லும் எவரும் தேர்தலில் போட்டியிடவில்லை. அதாவது இத்தேர்தலை வடபகுதி மக்கள் பகிஸ்கரித்தனர். 07-07-1934 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் பின்வருவோர் போட்டியிட்டனர்.
| 934-07-07 நடைபெற்ற தேர்தல்
மொத்த வாக்காளர் - 82 4 08 வாக்களித்தவர்கள் - 13 OS 4 வாக்களித்தவர்களின் வீதம் - 40, 4% அதிகப்படி வாக்குகள் - 2175 வாக்குகள் திரு. நெவின்ஸ் செல்லத்துரை - 652 1 வாக்குகள் திரு. ஜே. சி. அமரசிங்கம் - 4346 வாக்குகள் திரு. ரி. சரவணபிள்ளை - 22.27 வாக்குகள்
மேற்படி தேர்தலில் திரு. நெவின்ஸ் செல்லத்துரை வெற்றியீட்டினார்.
இதனைத் தொடர்ந்து 15-12-1936 ஆம் திகதி மேற்படி அர சாங்க சபைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது 56723 வாக்கா ளர் காணப்பட்டனர். அத் தேர்தலில் திரு. வைத்திலிங்கம் துரைச் சாமி அவர்கள் மட்டுமே போட்டியிட்டதால் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார் இக்காலத்திலேயே இவர் அரசாங்க சபையின் சபா நாயகராகக் கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
1947 - 1977 ஆம் ஆண்டுகளிடையில் நடைபெற்ற தேர்தல் விப ரங்கள் தரப்படுகின்றன. 1946 - 1972 ஆம் ஆண்டுகளில் பாராளுமன் றத் தேர்தல்களும் 1977 ஆம் ஆண்டில் தேசிய அரசப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றன. தீவுப்பகுதியில் 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் விபரம் கீழே தரப்பட்டுள்ளது."
மொத்த வாக்காளர் - 8804 வாக்களித்தோர் எண்ணிக்கை - 18404 வாக்களித்தோர் வீதம் W - 55.7% பழுதடைந்த வாக்குகள் 5 O2 அதிகப்படியான வாக்குகள் o 322
தேர்தலில் போட்டியிட்டோர். ズ திரு. அல்பிரட் தம்பிஐயா - 5552 (சுயேச்சை)
திரு. ஏ. வி. குலசிங்கம் - 5230 (தமிழ்க்காங்கிரஸ்) திரு. கே. அம்பலவாணர் - 3701 (சுயேச்சை) திரு. டபிள்யூ. துரைச்சாமி - 2438 (சுயேச்சை) திரு. ஜே. சி. அமரசிங்கம் - 981 (சுயேச்சை)
33

Page 32
அக்தேர்தலில் திரு. அல்பிரட் தம்பிஐயா 322 அதிகப்படியான வாக் குகளால் வெற்றியீட்டினார். .
1952 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் விபரம் பின்வருமாறு
மொத்த வாககாளர் 138 30 ۔۔۔ வாக்களித்தோர் எண்ணிக்கை" -- 2 2 9 (0 ܐܶ வாக்களித்தோர் வீதம் - 73.4% பழுதடைந்த வாக்குகள் -199 ' س அதிகப்படியான வாக்குகள் - 3868 திரு, அல்பிரட் தம்பிஐயா - 9517 (தமிழ்க் காங்கிரஸ்) திரு. ஏ. தியாகராசா - 5649 (சுயேச்சை) கிரு. சி. பாலசிங்கம் -- 5090 (சுயேச்சை) திரு. வி. நவரத்தினம் V - 1420 (தமிழரசுக்கட்சி) திரு. எஸ். சேனாதிராசா - 234 (சுயேச்சை)
மேற்படி தேர்தலில் 3868 அதிகப்படியான வாக்குகளால் காங்கிரஸ் வேட்பாளராக திரு. அல்பிரட் தம்பிஐயா வெற்றியீட்டி பாராளு மன்றம் சென்றார்.
சிங்களப் பெரும்பான்மை இனத்தவர்கள் 1950 களில் இருந்து தமிழ் மக்களுக்கு எதிரான அரசியல் கொள்கைகளை வலுப்படுத்தி வந்த காலமாக சுதந்திரத்தை அடுத்த காலத்தைக் கொள்ளலாம். இக்காலங்களில் தமிழ்த் தலைவர்கள் முதலில் 50 : 50 கோரிக்கையை முன்வைத்தனர். அதனைத் தொடர்ந்து வடக்கு கிழக்கு மாகாணங் கனில் சமஷ்டி அமைப்பிலான சுயாட்சியினை வலியுறுத்தினர். அக் காலங்களில் சிங்கள அரசியல் வாதிகளும் பெளத்த பீடத்தினரும் தமி ழருக்கு எதிரான இனக்குரோதத்தினை சிங்களவர்கள் ம த் தி யில் விதைந்து வந்தனர். அக்காலங்களில் ஆர். ஜி. சேனநாயக்கா, கே எம். பி. இராசரத்தினா, எஸ். டபிள்யு, ஆர். டி. பண்டாரநாயக்கா போன்றவர்கள் வெளிப்படையாக தமிழருக்கெதிரான இனக்குரோ தத்தை வளர்த்தது மட்டுமல்லாது தமிழருக்கு உரிமைகளோ அன் றில் சலுகைகளோ வழங்கக் கூடாது என்பதிலும் ஆர்வம் கொண்டு உழைத்தனர். இது அவர்களது அரசியல் எதிர்காலத்தினை உறுதிப் படுத்துவதற்கு உதவியது என்றால் மிகையாகாது.
1947, 1952 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய தேசியக் கட்சி அரசு ஆட் *' பிடத்திலிருந்தது. 1956 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக்கட்சியிலி ருந்து பிரிந்த எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா 1951 இல் ஸ்தாபித்த பூரீலங்கா சுதந்திரக் கட்சியும் போட்டியிட்டது. அக்கட்சி தமிழர்களுக்கு எதிராக தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்தது
34

அக்காலத்தில் தமிழர் பிரதேசங்களில் 1949 ஆம் ஆண்டு தோற்றுவிக் கப்பட்ட தமிழரசுக்கட்சி 1952 ஆம் ஆண்டுத் தேர்தலில் பல தொகுதிக ளில் போட்டியிட்ட போதிலும் தீவுப்பகுதியில் அக்கட்சி சார்பில்போட்டி யிட்ட திரு. வ, நவரத்தினம் தோல்வியைத் தழுவிக்கொண்டார். 1956 ஆம் ஆண்டில் சமஷ்டிக் கோரிக்கையை வலியுறுத்தி இளம் தலை வர்களை இணைத்துப் போட்டியிட்டதன் விளைவாக பல ஆசனங் களைப் பெறக்கூடியதாகவிருந்தது. தீவுப்பகுதியும் தமிழரின் அரசியல் நீரோட்டத்துடன் இணைந்து கொள்கின்றது.
1956 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் விபரம்
மொத்த வாக்காளர் வாககளித்தோர் எண்ணிக்கை வாக்களித்தோர் வீதம் பழுதடைந்த வாக்குகள் அதிகப்படியான வாக்குகள் தேர்தலில் போட்டியிட்டோர், திரு. வி. ஏ. கந்தையா திரு. அல்பிரட் தம்பிஐயா
一 324丑0
96 30 ? سسسسسه - 71.3% 89
- 97 09
- 16308 ( தமிழரசுக்கட்சி ) - 6599 (சுயேச்சை)
1960 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தல் விபரம்
மொத்த வாக்காளர் வாக்களித்தோர் எண்ணிக்கை வாக்களித்தோர் வீதம் பழுதடைந்த வாக்குகள் அதிகப்படியான வாக்குகள் தேர்தலில் போட்டியிட்டோர் திரு. வி. ஏ. கந்தையா திரு. அல்பிரட் தம்பிஐயா திரு. வீ. வ. நல்லதம்பி
一 256】6
-re 92.99 - 75.3% 86
- 3246
- 10820 (தமிழரசுக்கட்சி } - 7574 (சுயேச்சை) m 719 (ல. ச. ச. க)
1960 ஆம் ஆண்டு யூலை மாதம் நடைபெற்ற தேர்தல் விபரம்
மொத்த வாக்காளர் வாக்களித்தோர் எண்ணிக்கை வாக்களித்தோர் வீதம் பழுதடைந்த வாக்குகள் அதிகப்படியான வாக்குகள் தேர்தலில் போட்டியிட்டோர்: திரு. வி. ஏ. கந்தையா திரு. சோ. சேனாதிராசா
6 I 6 25 سسسس
933 4 Il --س ー 58.3%。 51 I سیسی۔
- 9 4 86
- 12110 ( தமிழரசுக்கட்சி ) - 2671 (தமிழ்க்காங்கிரஸ்)

Page 33
1956, 1960 மார்ச், 1960 யூலை மாதங்களில் நடைபெற்ற தேர்தல்களில் தமிழரசுக்கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற திரு. வீ. ஏ. கந்தையா 1963 ஆம் ஆண்டு மர ண மடை ய வே 1963-08-31 ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தல் விபரம் பின்வருமாறு
மொத்த வாக்காளர் - 31473 வாக்களித்தோர் எண்ணிக்கை - I 9691 வாக்களித்தோர் வீதம் 一 63.6% பழுதடைந்த வாக்குகள் ewens 143 அதிகப்படியான வாக்குகள் - 10344
தேர்தலில் போட்டியிட்டோர்:
திரு. வி. நவரத்தினம் - 14946 ( தமிழரசுக்கட்சி ) திரு. ஏ. ஜி. ராஜசூரியர் - 4602 (சுயேச்சை)
1965 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் விபரம்
மொத்த வாக்காளர்
V, -8:5 17 3 ܚ வாக்களித்தோர் எண்ணிக்கை - l9544 வாக்களித்தோர் வீதம் -- Ꮾ 1 . 5% பழுதடைந்த வாக்குகள் mana 170 அதிகப்படியான வாக்குகள் - 7742 தேர்தலில் போட்டியிட்டோர் திரு. வி. நவரத்தினம் - 13558 ( தமிழரசுக்கட்சி ) திரு. என். ரி. சிவஞானம் ட 5816 தமிழ்க்காங்கிரஸ்)
1965, 1970 ஆம் ஆண்டுகளிடையில் தமிழரசுக்கட்சி ஐ. தே. க. யின் தேசிய அரசில் அங்கம் வகித்தது. உள்ளூராட்சி அமைச்சர் பதவியினை செனட் சபையினுரடாக திரு. மு. திருச்செல்வத்திற்கு வழங்கினர். அத்துடன் ஐ. தே. கட்சி அரசினால் அறிமுகப்படுத்தப் பட்ட தேசிய அடையாள அட்டை வழங்கல் தொடர்பாகத் தமிழர சுக்கட்சியின் போக்கைக் கண்டித்த திரு. வி. நவரத்தினம் அவர்கள் கட்சியிலிருந்து விலக்கப்பட்டார். திரு. வி. நவரத்தினம் அவர்கள் புதிதாக தமிழர் சுயாட்சிக்கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித் தார். 1970 இல் நடைபெற்ற தேர்தலில் அவர் மேற் படி தமது அமைப்பின் சார்பாக சுயேச்சையாகப் போட்டியிட்டார்.
36

1970 ஆம் ஆ60ரடு நடைபெற்ற தேர்தல் விபரம்
மொத்த வாக்காளர் - 320 15 வாக்களித்தோர் எண்ணிக்கை - 26 6 12 வாக்களித்தோர் வீதம் 一 76.9% பழுதடைந்த வாக்குகள் 95 அதிகப்படியான வாக்குகள் - 806.6
தேர்தலில் போட்டியிட்டோர்
திரு. கே. பி. இரத்தினம் ட 13079 (தமிழரசுக்கட்சி ) திரு. பி. கதிரவேலு - 50 13 (சுயேச்சை) திரு. வி. நவரத்தினம் - 4758 (சுயேச்சை) திரு. என். ரி. சிவஞானம் - 1667 (தமிழ்க்காங்கிரஸ்)
திரு. கே. பி. இரத்தினம் தீவுப்பகுதியைப் பிறப் பி ட மா கக் கொண்டிருந்த போதிலும் 1965 ஆம் ஆண்டு தேர்தலில் கிளிநொச் சித்தொகுதியில் போட்டியிட்டு பாராளுமன்றம் சென்றார். தமிழரசுக் கட்சி, தீவுப்பகுதியைப் பொறுத்தவரை திரு. வ. நவரத்தினம் அவர் களின் வெளியேற்றத்தினால் அவருக் கி ருந்த செல்வாக்கினைக் குறைத்து இவ்வாசனத்தைத் தமிழரசுக்கட்சியே பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதிற்கிணங்கவே திரு. கே. பி. இர த் தினம் அவர் களைத் தேர்தலில் இறக்கினர். மீண்டும் தமிழரசுக்கட்சி அவ்வா சனத்தைப் பெற்றுக் கொண்டது. எதிர்பாராத விதமாக திரு. வி. நவரத்தினம் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார். சுயேச்சை யாகப் போட்டியிட்ட திரு. பி. கதிரவேலு மேற்படி தேர்தலில் தமிழரசுக்கட்சியின் சார்பாக போட்டியிட விண்ணப்பிந்திருந்த போதி லும் அநுமதி கிடைக்கப்பெறாததால் சுயேச்சையாகப் போட்டியிட்டு இரண்டாம் இடத்தைப்பெற்றுக் கொண்டார். வாக்காளரை அடிப் படையாகக் கொண்டு தீவகத்தினை வகைப்படுத்தும் போது வேல ணைத் தீவுக்கு அடுத்ததாக புங்குடுதீவிலேயே வாக்காளர் அதிகம். ஆனால் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் வேலணைத்தீவைச் சேர்ந்தோரே வெற்றியீட்டினர். இதனால் இத்தேர்தலில் பிரதேச வாதம் மேலெழவே புங்குடுதீவு வாக்காளரில் கணிசமானோர் திரு. பி. கதிரவேலுவுக்கு வாக்களித்ததன் விளைவாகவே இர ண் டா ம் இடத்தைப்பெற்றுக் கொண்டார் என்றால் மிகையாகாது. அத்துடன் தமிழ்க்காங்கிரஸ் கட்சியைத் தொடர்ச்சியாகத் தீவகமக்கள் புறக்கணித் துள்ளனர்,
37

Page 34
1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்
மொத்த வாக்காளர் 36372 வாக்களித்தோர் எண்ணிக்கை 673 27 -سے வாக்களித்தோர் வீதம் - 70. IX, பழுதடைந்த வாக்குகள் 32 அதிகப்படியான வாக்குகள் - 8961
தேர்தலில் போட்டியிட்டோர்:
திரு. கே. பி. இரத்தினம் - 17640 (தமிழர் விடுதலைக் கூட்டணி) திரு. வி. நவரத்தினம் - 8679 (சுயேச்சை) திரு. எம். அமிர்தலிங்கம் 661 (ஐ. தே. க.) திரு. யோகேந்திரா துரைச்சாமி --- 279 (சுயேச்சை) திரு. ரி. பரநிருபசிங்கம் Kuhnny 185 (சுயேச்சை) திரு. கே. கனகரத்தினம் r 103 (ல. ச. ச. க.)
மேற்படி தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் திரு. வ, நவரத்தினம் தலைமையிலான தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு மிடையில் பலத்த போட்டி நிலவிய போதிலும் திரு. கே. பி. இரத் தினம் அவர்கள் வெற்றியீட்டினார்.
1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஆட்சிக்கு வந்த திரு. ஜே. ஆர். ஜெயவர்த்தனா தலைமையிலான அரசு தேர்தல் தொகு திவாரியாகத் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றத்திற்கு சென்ற அங்கத்தவர்களுக்குப்பதிலாக, மாவட்ட அடிப்படையில் விகிதாசார முறையில் அங்கத்தவர்களை தெரிவு செய்யும்முறையினைப் புகுத்தியது.
இனப்பிரச்சனைக்கு பரிகாரம் காணவும் அதிகாரப்பரவலாக்கத்தை மேற்கொள்ளவும் மாவட்ட அபிவிருத்திச்சபைகள் மாவட்டம் தோறும் ஸ்தாபிப்பதென்ற அரசின் முடிவு காரணமாக யாழ்ப்பாண மாவட் டத்தில் மாவட்ட அபிவிருத்திச் சபைத்தேர்தல் 1980-6-4 ஆம் திகதி நடாத்தப்பட்டது. இத்தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணி யினரே தெரிவு செய்யப்பட்டனர். தீவுப்பகுதியைப் பிரதிநிதித்து வப்படுத்துவதற்கு புங்குடுதீவைச் சேர்ந்த திரு. வே. க. சோமசுந் தரம் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.
1982 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் முகமாக நாடளாவிய ரீதியில் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் தீவுப்பகுதி வாக்கா ளர் பின்வருமாறு வாக்களித்துள்ளனர்.
38

ஜனாதிபதி தேர்தல் - 1982
மொத்த வாக்காளர் . 3 6 485 سست
தேர்தலில் போட்டியிட்டோர்: திரு. ஜி. ஜி. பொன்னம்பலம் (ஜ"னியர்) - 8358
திரு. ஜே. ஆர். ஜெயவர்த்தனா -67 0 4 --س திரு. ஹெக்டர் கொப்பேக்கடுவா - 3393 திரு. றோகணவிஜயவீரா - 199 திரு. கொல்வின் ஆர். டி. சில்வா - 157 திரு. வாசுதேவநாணயக்கார 98 மொத்தம் - 16267 பழுதடைந்த வாக்குகள் - 943 வாக்களித்தோர் எண்ணிக்கை - 1721 0
தீவுப்பகுதி வாக்காளர்கள் ஏறத்தாழ 50.0 சதவீத வாக்குக ளைத் தமிழரான திரு. ஜி. ஜி. பொன்னம்பலத்திற்கே (ஜூனியர்) அளித்துள்ளனர்.
1982 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாராளுமன்றத்தின் ஆயுளை மேலும் ஒரு தவணைக்கு நீடிப்பது தொடர்பாக நாடாளவிய ரீதி பில் கருத்துக்கணிப்பு நடைபெற்றது. (Referendam)
இதனைத்தொடர்ந்து 1988 ஆம் ஆண்டு இரண்டு தேர்தல்கள் நடைபெற்றன. வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல் முதலாவதாகும். இத்தேர்தல் மாவட்ட ரீதியாக விகிதாசாரப்பிரதி நிதித்துவ அடிப்படையில் நடைபெற்றது. ஒரு குழுவினரே போட்டி யிட்டதால் தேர்தல் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த தே ர் த ல் ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக நடை பெற்ற தேர்தலாகும். இத்தேர்தலில் தீவப்பகுதி வாக்காளர் பின் வருமாறு வாக்களித்துள்ளனர். .
ஜனாதிபதி தேர்தல் - 1988
மொத்த வாக்காளர் - 49481 தேர்தலில் போட்டியிட்டோர்:
திரு. ஆர். பிரேமதாசா - 4628 திரு. ஒசி, அபேகுணவர்த்தன - 4503 திருமதி பூரீமாவோ பண்டாரநாயக்கா - 3264 மொத்தம் -12395 . س புழுதடைந்த வாக்குகள் - 5 96 வாக்களித்தோர் எண்ணிக்கை - 12991
39

Page 35
இறுதியாக நடந்த தேர்தல் பாராளுமன்றத்திற்கான அங்கத் தவர்களைத் தேர்தல் தொகுதி மூலமல்லாது மாவட்ட அடிப்படையில் தெரிவுசெய்யப்படுவதற்கேயாகும். இத்தேர்தலில் பல அரசியல் கட்சி கள் தமது அங்கத்தவர்களை நிறுத்தியிருந்தனர். தேர்தல் மூலம் 11 அங்கத்தவர்களைத் தெரிவு செய்ய வேண்டியிருந்தது.
பாராளுமன்றத் தேர்தல் - 1989
மொத்த வாக்காளர் - 494 01
சுயேச்சை (ஈரோஸ்) --17 سس H 0 8 தமிழர் விடுதலைக்கூட்டணி -6 370 --س ஜனநாயகமக்கள் விடுதலை முன்னணி - 572 பூரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் minn– 466 அகில இலங்கைத்தமிழ் காங்கிரஸ் 39 I ஐக்கிய தேசியக்கட்சி nurs- 3.54 மொத்தம் -2597 2 ܚ பழுதடைந்த வாக்குகள் --77 25 --س வாக்களித்தோர் எண்ணிக்கை - 25 174
இத்தேர்தலில் சுயேச்சைக்குழுவிலிருந்து நாரந்தனையைச் சேர்ந்த திரு. தம்பு லோகநாதப்பிள்ளை என்பவர் ஐந்தாவது விருப்பத்திற்கு ரியவராக தெரிவு செய்யப்பட்ட போதிலும் பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பைப் பெற்றிருக்கவில்லை.
1994 ஆம் ஆண்டு வவுனியா நகரத்திலும், கிழக்கு மாகாணத் திலும் நடைபெற்ற பிரதேச சபை மற்றும் நகர சபை, மாநகர சபைக்கான தேர்தல்கள் வடபகுதியில் நடைபெறவில்லை. இதனால் தீவுப்பகுதிக்கான பிரதேச சபைத் தேர்தல்கள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1994 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கான தேர்தல் கிராமோதய, மற்றும் பிரதேசசபைத் தேர்தல்கள்
1980 ஆம் ஆண்டு 35 ஆம் இலக்கச்சட்டபடி மாவட்டம் தோறும் மாவட்ட அபிவிருத்திச்சபையை உருவாக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி 1981 ஆம் ஆண்டு மாவட்ட அபிவிருத்திச் சபைக்கான தேர்தல் நடைபெற்றது. இத் தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணியே பெரும்பாலான ஸ்தானங் களைக் கைப்பற்றியது. இச்சபையின் உருவாக்கத்தினால் கிராமசபை, பட்டின சபைகள், பிரதேச சபைகளின் உட்பிரிவுகளாக மாறின. எனவே கிராமிய மக்களின் தேவைகள் அபிலாசைகள் ஆகியவற்றை
40

பூர்த்தி செய்யும் பொருட்டு 1981 ஆம் ஆண்டு 28 ஆம் இலக்கச் சட்டப்படி கிராமோதய சபைகளை உருவாக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. இச்சபையான்து தீவுப்பகுதி உள்ளிட்ட வடமாகா ணத்தில் உருவாக்கப்படவில்லை. இச்சபையில் அங்கம் வகிப்போர் கிராம மட்டத்தில் இயங்கும் சனசமூக நிலையங்கள், கிராம முன் னேற்றச் சங்கங்கள் போன்ற பல அமைப்புக்களின் பிரதிநிதிகளாவர். இவர்கள் ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவுக்குரியவர்கள். கிரா மோதய சபையின் தலைவராக அவ்வப்பிரதேசத்தின் விசேட சேவை அதிகாரிகள் கடமையாற்றினர். (SS O). கிராமோதய சபைகள் இயங் காமைக்கு கிராமோதய சபையின் அங்கத்தவராக வருபவர் பூரீலங்கா அரசுக்கு விசுவாசம் தெரிவித்து சத்தியப் பிரமாணம் செய்ய வேண்டியிருந்தது காரணமாகும். அதனை எமது பிரதேச மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
உதவி அரச அதிபர் பிரிவுக்குள் அமைந்துள்ள கிராமோதய சபைகளின் தலைவர்களைக் கொண்ட பிரதேச சபை அமைப்பும் உருவாக்கப்பட்டது. இவ்வங்கத்தவர்கள் மக்களால் தெரிவு செய்யப் படாது கிராமிய மட்டத்தில் நலன்புரிச்சங்க உறுப்பினர்களே தெரி வாஇனர். இது மக்களின் தீர்ப்புக்கு முரணானது என்பதை உணர்ந்து 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபைக் சட்டப்படி பிர தேச சபைகளுக்கு தேர்தல் மூலமே அங்கத்தவர்கள் தெரிவு செய்யப் _ல் வேண்டும் என அரசு அறிவித்தது. இதனை வழிநடாத்திச் செல்பவர் அவ்வப்பிரதேச செயலர்களே ஆவர். இருப்பினும் தீவுப் பகுதி உள்ளிட்ட எல்லாப் பிரிவுகளிலும் பிரதேச சபைகள் இயங்கி வரினும் தேர்தல்கள் எவையும் நடைபெறவில்லை என்பது குறிப் பிடத்தக்கது.
1994 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல்
பூரீலங்கா பாராளுமன்றத்திற்கு விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் பிரகாரம் 1994-08-16 ஆம் திகதி 22 தேர்தல் மாவட்டங் கள் 196 அங்கத்தவர்களையும் கட்சிகள் பெறும் வாக்குகளை அடிப் டயாகக் கொண்டு 29அங்கத்தவர்களையும் தெரிவு செய்யும் தேர் தல் நடைபெற்றது. இத்தேர்தல் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தவிர ஏனைய மாகாணங்களில் சிறப்பாக நடந்தேறின. கிழக்கு மாகாணத்தில் மிகக் குறைவானவர்களே வாக்களித்திருந்தனர். ஆனால் வடமாகாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப் பாட்டிலுள்ள பகுதிகளில் தேர்தல் நடைபெறவில்லை. வன்னித் தேர்தல் மாவட்டத்திலும் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்திலும் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளிலேயே தேர்தல் நடை பெற்றது.
4.

Page 36
விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின்படி யாழ்ப்பாணத் தேர் தல் மாவட்டத்தில் 10 அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படல் வேண் டும். இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள தீவுப்பகுதி வாக்களிப்புப் பிரி வில் மட்டும் 1987 ஆம் ஆண்டு கணிப்பின்படி 49504 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தனர். இவர்கள் தவிர யாழ்ப்பான மாவட்டத்தைச் சேர்ந்த இடம் பெயர்ந்தவர்கள் தற்போது அவர் கள் வசிக்கும் பிரதேசங்களில் யாழ்ப்பாண மாவட்ட தேர்தலில் வாக் களிப்பதற்கு வசதி செய்யப்பட்டிருந்தது. இருந்த போதிலும் 494480 வாக்காளர்களைக் கொண்ட யாழ்ப்பாண மாவட்டத்தில் 13831 வாக்காளர்களே வாக்களித்துள்ளார்கள். இது மொத்த வாக்காளர் களில் 2.8 சதவீதம் மட்டுமேயாகும். அதேபோல தீவுப்பகுதி வாக் காளர்களில் 22.8 சதவீதத்தினரே வாக்களித்ததாகக் கூறப்படுகிறது. இப்பிரதேசத்தில் நிகழ்ந்த வாக்களிப்பினைப் பொறுத்தவரை தாம் திருப்தி அடையவில்லையென தேர்தல் ஆணையாளரும் சர்வதேசப் பார்வையாளர்களும் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர். ஆயுதம் தாங்கிய குழுவினரின் நிர்ப்பந்தத்தின் பெயரிலும் அரசாங்கம் எவ் வழியிலாயினும் தேர்தல் நடத்திமுடிக்க வேண்டும் என்ற நிலைப் பாட்டினாலுமேயே தேர்தலில் வாக்களித்தவர்கள் விரும்பியோ, விரும் பாமலோ குறிப்பிட்ட குழுவினருக்கு வாக்களித்தனர் எனலாம். இவர்கள் தவிர இம்மாவட்டத்திலிருந்து இடம் பெயர்ந்த முஸ்லீம் களின்து வாக்குகளில் 2098 வாக்குகள் பூரீலங்கா முஸ்லீம் காங்கிரசிக்கு அளிக்கப்பட்டுள்ளன. எனவே தேர்தல் முடிவாக சுயேச்சைக்குழு 11 (ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) க்கு ஒன்பது ஆசனங்களும் முஸ்லீம் காங்கிரசிக்கு ஒரு ஆசனமும் கிடைத்தன.
இத்தேர்தலில் விசித்திரமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
1. யாழ்ப்பாண மாவட்டம் முழுவதுக்குமான தேர்தலில் வாக்க
ளித்த 13831 . வாக்காளர்களில் தீவுப்பகுதியைச் சேர்ந்தோர்
11263 வாக்காளர்களாகும்.
2 தேர்தலில் போட்டியிட்டோரில் முதலாவது அதிகப்படியான வாக்குகளைப் பெற்றவரின் வாக்குகளின் எண்ணிக்கை 2091
ஆகும்.
3. ஆசக் குறைந்த 351 வாக்குகளைப் பெற்றவரும் பாராளுமன்றத்
திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
4. தீவுப்பகுதி வாக்காளர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான பாராளுமன்ற அங்கத்தவர்களைத் தெரிவு செய்ய வேண்டியநிலை ஏற்பட்டது.
42

5
1981 ஆம் ஆண்டு கணிப்பீட்டின்படி தீவுப்பகுதியில் 77 முஸ்லீம் மக்கள் வாழ்ந்திருக்கின்றனர். ஆனால் ஊர்காவற்றுறை வாக்க ளிப்புப் பிரிவில் பூரீலங்கா முஸ்லீம் காங்கிரசிற்கு 819 வாக்காளர்
வாக்களித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
6. விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தலில் தீவுப்பகுதியுட்பட இலங்கை மக்கள் பழக்கப்பட்டவர்கள் அல்லர். இதன் விளை வாக விளக்கமில்லாது வாக்களிப்பதன் விளைவாக நிராகரிக்கப் பட்ட வாக்குகள் பொதுவாக எல்லா மாவட்டங்களிலும் அதிக மாகவே இருந்துள்ளன. உதாரணமாக கொழும்பு மத்தி வாக களிப்புப் பிரிவில் 5995 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. ஆனால் தீவுப்பகுதி வாக்களிப்பு பிரிவில் ஒரு வாக்குக்கூட நிராகரிக்கப் படவில்லை என்பதைக் கருததில் கொள்ளும் போது தேர்தல் ஒழுங்கான முறையில் நடைபெற்றதா என்பதில் சந்தேகம் உண்டு.
1994 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் தீவுப்பகுதி மக்களின் கருத்துக்கள் எவ்வாறு அமைந்திருந்தன என் பது பற்றி விரைவில் அறியவரும்.
1994 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்
1994 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் திறகான பொதுத் தேர்தலில், பொது மக்கள் ஐக்கிய முன்னணி பாராளுமன்றததில் பெரும்பால) மை ஆசனங்களைப் பெற் றுக் கொள்ளவே மேற்படி முன்னணி அங்கததவாகளுடன் பூரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், மலையக மக்கள முன்னணியும இணைந்து திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்கா அவர்களைப் பிரதம மந்திரியாகக கொண்டு அரசாங்கம் அமைக்கப்பிட்டது. f5Tl. டின் அரசியமைப்பின் பிரகாரம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் முகமாக 9-11-1994 ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் அறுவர் போட்டியிட்டனர். பாராளுமன்றத் தேர்தலைப் போலவே யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களிலேயே மக்கள் வாக்க ளித்துள்ளனர். இதனடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக் களித்த 17716 வாக்காளர்களில் 15313 வாக்காளர்கள் அல்லது, 86.5 சதவீதத்தினர் தீவுப்பகுதியைச் சேர்ந்தவர்களாவர். வேட் பாளர்களுக்குக் கிடைத்த வாக்கு விபரம் பின்வருமாறு.
43

Page 37
யாழ்ப்பாண மாவட்டம்
வேட்பாளர் (தீவுப்பகுதியுட்பட) தீவுப்பகுதி
திருமதி சந்திரிகா குமாரணதுங்கா 6934 1476.
(பொதுமக்கள் ஐக்கிய முன்னணி)
திரு. ஹட்சன் சமரசிங்க 341 291
(சுயேச்சை)
திருமதி சிறிமா திசநாயக்க 223 83
(ஐக்கியதேசியக் கட்சி)
திரு. ஹரிச்சந்திர விஜதுங்க (சிங்கள மகாசம்மத பூமி புத்திர கட்சி) 36 27
திரு. நிஹால் கலப்பதி
(பூரீலங்கா முற்போக்கு முன்னணி) 25 ‚፡ 7
திரு. ஏ. ஜே. ரணசிங்க 16 14
(சுயேச்சை)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 14 I 30
இத்தேர்தலில் ஏறத்தாழ இருபது இலட்சம் வாக்குகள் வித்தியா சத்தில் திருமதி சந்திரிகா குமாரணதுங்கா ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.
44

இயல் - ஐந்து
தீவகம் - பொருளாதாரநிலை
ஒரு நாட்டின் பெளதீக நிலையானது அந்நாட்டின் பொருளா தார, சமூக, பண்பாட்டுப் பண்புகளைத் தீர்மானிக்கும் வல்லமை கொண்டது. புவிச்சரிதவியல், தரைத்தோற்றம், காலநிலை, மண் வளம், கணிப்பொருள்வளம் போன்ற சாதகமான பெளதீகக் காரணி களுடன் பல்வேறு துறைகளில் சிறப்படைந்த மக்கள் வளம் காணப் படின் அப்பிரதேசம் பொருளாதார வளர்ச்சி அடைவதற்கான வாய்ப் பினைக் கொண்டிருக்கும் எனலாம். தீவுப்பகுதியைப் பொறுத்தவரை பெளதீக ரீதியாக தனித்தனிக் கூறுகளாகவிருப்பது மட்டுமல்லாது அரைகுறை வறள் வலையத்தில் அமைந்துள்ளதால் வருடாந்த LOGOpp வீழ்ச்சியின் அளவும் குறைவாகவேயுள்ளது. நீர்ப்பாசனத்திணைக் களத்தின் பாகுபாட்டின்படி ஏறத்தாழ 40.0 சதவீதமான நிலப்பரப்பு உப்பாறு - தொண்டமானாற்று கலப்புத் தொடராகவுள்ளதுடன், கடற் பொருட்களான சிப்பி, சங்கு, போன்ற பொருட்கள் கலந்த நரைமண் தொகுதியாகவும் காணப்படுகின்றது. மேற்குறித்த நிலப்பரப்பானது மண்டைதீவின் வட, வடமேற்குப் பகுதி, அல்லைப்பிட்டி தொட்டு தம்பாட்டி - வரையிலான வடபகுதி, சாட்டிதொட்டு, ஊர்காவற்றுறை வரையிலான தென்பகுதி, புங்குடுதீவின் வடபகுதி, அனலைதீவின் கிழக்குப்பகுதி ஆகியவற்றில் காணப்படுகின்றன. இதே போலவே பாறைத் தன்மையுடன் கூடிய மண் அமைப்பானது நெடுந்தீவில் 80.0 சதவீதத்திற்கு மேற்பட்ட பகுதிகளிலும் நயினாதீவு, அனலைதீவு ஆகியவற்றின் மேற்குப் பகுதிகளிலும் பரந்து காணப்படுகின்றது. எனவே இப்பிரதேசங்களில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள் வது கடினமானதாகும். எனினும் தீவுப்பகுதிகளின் வளமான பிர தேசங்களில் மக்கள் பயிர்ச் செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற னர். 1983 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் இப் பிரதேச மக்களது பொருளாதார நடவடிக்கைகள் பின்வருமாறு அமைந்துள்ளன. (அட்டவணை 1)
45

Page 38
அட்டவணை
பொருளாதார நடவடிக்கையில் ஈடுபாடு கொண்டோர் - 1983
தொழில்கள் சதவீதம் பயிர்ச்செய்கை 32.0 சேவைத்தொழில் I5. O வர்த்தக நடவடிக்கை 4.0 கடற்றொழில் l4.0 கள் இறக்கும் தொழில் 3.0 தச்சுத்தொழில் 2.0 பனையோடு தொடர்புடைய தொழில் 4.0 கூலித்தொழில் 12.. O பிறதொழில்கள் 4. O
மொத்தம் oo.
ിങ്ങ്.
ஆதாரம்; யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கப்பாலுள்ள தீவுப்பகுதிகளின்
சமூக பொருளாதார நிலைமைகள் 1985.
தீவுப்பகுதிகளின் பொருளாதார கட்டமைப்பானது அதன் இயற்கை வளத்துடனிணைந்து காணப்படுகின்றது. எனவே இப்பிர தேசத்தின் பொருளாதார அமைப்பினைப் பின்வரும் தலைப்புக்களில் ஆராயலாம்.
1. பயிர்ச்செய்கை
2. கால் நடைவளர்ப்பு
3. பனையோடு தொர்புடைய தொழில்
கி. கடற்றொழில்
5. கைத்தொழில்
6. சேவைத்தொழில்
46

பயிர்ச்செய்கை
தீவுப்பகுதி மக்களின் பொருளாதார முயற்சியில் 32.0 சதவீத மானவர்கள் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளிலேயே தம்மை ஈடுபடுத் தியுள்ளனர். பொதுவாகத் தானியப்பயிர்கள். உப உணவுப்பயிர்களி லும் மற்றும் புகையிலைச் செய்கையிலும் ஈடுபாடு கொண்டுள்ளனர்* அட்டவணை 2 இன் படி தீவகத்தில் 20480 ஹெக்டேயர்.
அட்டவணை 2
தீவக நிலப்பயன்பாடு - 1992 (ஹெக்டேயர்)
நிலப்பயன்பாடு நெடுந்தீவு வேலணை ஊர்காவற்றுறை * மொத். நெல் 59 1013 824 1896 உப உணவுப்பயிர்ச் செய்கை 90 730 388 I 258 பனை 688 154 769 26 தென்னை 10 1180 820 ;: Ol 6) குடியிருப்புக்களும் W
அவை சார்ந்த
நிலமும் 340 1873 1829 4042 கல்நிலங்கள் .° v மனற்றரை 356認 3460 1640 8663 பற்றைகள்
மொத்தம் 4750 94во 6270 20 480
ஆதாரம்: விவசாய அபிவிருத்தி செயற்றிட்டம், யாழ்ப்பாண மாவட்
டம் 1993 94.
* காரைநகர்ப்பகுதியும் இதனுள் அடக்கப்படுகின்றது.
நிலப்பரப்பு காணப்படுகின்றது. பொது வாக தீவுப்ப்குதிகளின் தானியப்பயிர்ச் செய்கையை பொறுத்த் வரை நெல்லே முக்கிய இடத் தினைப் பெற்றுள்ள போதிலும் வரகு, சாமை, குரக்கன், மொண்டி, தினை, எள், சணல், பயறுவகை போன்றனவும் பயிரிடப்பட்டு வரு கின்றன. எல்லாத் தீவுகளிலுமாக 1896 ஹெக்டேயர் நிலம் நெல்பயி ரிடக்கூடியதாகக் காணப்பட்டாலும் காரைநகர் தவிந்த தீவுப்பகுதி களின் பயன்படுத்தப்பட்ட விஸ்தீரண இலக்கு 168 ஹெக்டேயராகவும் பயிரிடப்படும் விஸ்தீரண இலக்கு 155 ஹெக்டேயராகவும் காணப்பட் டது. இவற்றில் அறுவடைக்குட்படும் நிலப்பரப்பரப்பளவானது 127 ஹெக்டேயராகவிருந்துள்ளது. எனவே பெரும்பாலான நிலப்பரப்புக்க
47

Page 39
ளில் நெல் உற்பத்தி மேற்கொள்ளப்படாது கைவிடப்பட்டு வருவதை ஆ காண முடிகின்றது. பொதுவாகத் தாழ்நிலங்களிலேயே இப்பயிர்ச் செய்கை நடைபெற்று வருகின்றது. அண்மைக் காலங்களில் மாற்ற முற்று வரும் பொருளாதார அமைப்பு முறையின் விளைவாக நெல் உற்பத்தி மட்டுமல்லாது தானியப்பயிர்ச்செய்கையும் கூட வீழ்ச்சிய டைந்து காணப்படுகின்றது. சர்வதேச இடப்பெயர்வின் விளைவாக *டிறாப்" பொருளாதார முறைமை உட்புகவே குறைந்த 6)) (15ւքrr னத்தை பெற்றுக் கொடுக்கக்கூடிய மேற்படி உற்பத்திகளில் மக்கள் ஈடுபாடு காட்டாமையும் இதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகும். அத்துடன் தாழ் நிலங்கள் குடியிருப்புக்களுக்காகவும் உபஉணவுப் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்காகவும் உயர்த்தப்படுவதாலும் நெல் உற்பத்திச்செய்கை பாதிப்படைந்துன்ளது . மேலும் இப்பயிர்ச் செய்கையானது வடகீழ் பருவக்காற்றினால் பெறப்படுகின்ற LD60)ip வீழ்ச்சியை நம்பியே செய்கை பண்ணப்படுகின்றது. பெரும்பாலும் காலநிலை பொய்க்கும் பண்பு அதிகமுள்ளமையால் நெல் உற்பத்தி யினை மேற்கொள்வதை மக்கள் தவிர்ப்பதும் உற்பத்தி வீழ்ச்சிக்கான காரணிகளில் ஒன்றாகும். அடுத்து தாழ், உயர் நிலங்கள் ւմ(56չյւն பயிர்ச் செய்கைக்குட்படுத்தப்படுவதால் மேய்ச்சல் நிலங்களுக்கு அண் மையிலுள்ள தாழ் நில ங் க ள் அடைப்புக்குட்படுத்தப்படவேண்டிய நிலையும் காணப்படுகின்றது. பொதுவாக தலைக்குரிய ஹெக்டேயருக்கு குறைந்த விளைவினைக் கொடுப்பதால் வேலி அடைத்தல் உட்பட அதிக செலவினைச் செய்து உற்பத்தியை மேற்கொள்ள விவசாயிகள் விருப்பம் கொள்வது குறைவாகவுள்ளது. மேலும் தொடர்ச்சியாக வெற்று நிலங்களாக பண்படுத்தாத நிலங்களில் உவர்த்தன்மை மேல் எழுவதால் நெல் உற்பத்தி செய்ய முடியாத நிலை கணிச மா ன நிலங்களில் காணப்படுகின்றது. அண்மைக் காலத்தில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வின்படி தீவகத்தில் உற்பத்தி செய்யப்படும் நெல்லானது அதன் மொத்தத் தேவையின் 10.0 - 15.0 சதவீதத்தினையே பூர்த்தி செய்வதாகவுள்ளது எனத் தெரியவருகிறது.
சிறுதானியங்களைப் பொறுத்தவரை மிக நீண்ட காலமாகவே, மாரி காலங்களில் மேட்டு நிலங்களில் செய்கை பண்ணப்பட்டு வந்துள் ளது. அண்மைக்காலங்களில் மக்கள் குரக்கன், வரகு, சாமை, தினை, பயறுவகை போன்றவற்றை செய்கை பண்ணுவதில் அக்கறை கொள் பவர்களாகவில்லை. அட்டவணை 3 இதனைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.
48

அட்டவணை 3
சிறுதானியங்கள்-பயறு வகை உற்பத்தி-1992 (ஹெக்டேயர்)
சிறுதானிய வகை நெடுந்தீவு வேலணை புங்குடுதீவு ஊர்காவற்றுறை
குரக்கன் 0, 25 ፰ 4 தினை 5 2 F65) to 5 rasa வரகு 5 O. 5 aar எள்ளு 2 2 2 6 Li uLJOJ 3 4. 5 கெளப்பி 2 3.
உழுந்து ~~~~ 2 4
ஆதாரம்: விவசாய அபிவிருத்திச் செயற்படு திட்டம் யாழ் மாவட்
Lb 1992.
1950 களுக்கு முன்னர் சிறு தானிய உற்பத்தியில் கொண்டிருந்த நாட்டம் குறைவடைந்து சென்றிருந்தமைக்குப் பிரதியீட்டுப் பொரு ளான கோதுமை மாவின் விநியோகம், மற்றும் மக்களது பொருளா தார சமூக நிலை மாற்றமுற்றுச் சென்றமை, மேட்டு நிலங்கள் குடியிருப்பு நிலங்களாக மாற்றம் பெற்றுள்ளமை, சந்தைப்படுத்துவ தில் உள்ள சிரமங்கள் போன்ற பல காரணிகளைக் குறிப்பிடலாம். எனினும் அண்மைக்காலங்களில் பிரதேச சுய பொருளாதார அமைப் பினைக் கட்டி எழுப்ப வேண்டும் என்பதற்கிணங்க இச்சிறு தானிய உற்பத்தியினை மேற்கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் கொடுக் கப்பட்டதன் விளைவாகக் கணிசமானோர் இப்பயிர்ச் செய்கையில் ஈடு படுகின்றனர். இப்பொருட்களுக்கான செயற்கையான சந்தை வாய்ப்பு காலத்துக்குக் காலம் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றது. மேற்குறித்த இறுதானியங்களின் உற்பத்திகள் சகல இஷகளிலும் மேற் கொள்ளப்படுகின்றன. அதே போலவே பயறு வகைகளைப் பொறுத்த வரை உற்பத்தி செய்வது மிகக்குறைவாகவே உள்ளது.
உப உணவுப் பயிர்ச்செய்கை
திவக மக்கள் 1970 ஆம் ஆண்டுக்கு முன்னர் உப உணவுப்பயிர்ச் செய்கையிற் பெருமளவிற்கு நாட்டம் கொண்டவர்கள் எனக் கூற முடியாது. சகல தீவுகளிலும் ஆங்காங்கே மிகச் சிலரினாலேயே மேற் கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் 1940 களில் தீவுப்பகுதிகளில் குறிப் பாக வேலணைத்தீவு, புங்குடுதீவு மற்றும் ஏனைய தீவுகளின் சில பகுதிகளிலும் வெங்காயம் அபரிதமாக விளைவிக்கப்பட்டு குட்டானில்
49

Page 40
போடப்பட்டு குடாநாட்டுக்கும் ஏனைய பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டதாகத் தெரிய வருகின்றது. ஆனால் காலப்போக்கில் கைவிடப்பட்டு ஒரு சிலராலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தது. 1970 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஐக்கிய முன்னணி அரசின் பொருளா தாரக் கொள்கையின் விளைவாக மேற்படி மிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு, மரக்கறி வகைகளைத் தீவுப்பகுதி உட்பட யாழ்ப் பாணக் குடாநாட்டு மக்கள் நாட்டின் சந்தைக்காக உற்பத்தி செய்யத் தொடங்கினர். இக்காலங்களில் தீவுப்பகுதிகளின் தாழ்நிலங்கள் பல தோட்ட நிலங்களாக மாற்றம் பெற்றன. 1973 ஆம் ஆண்டு மிள காய் உற்பத்தியானது தீவுப்பகுதிகளில் (காரைநகர், தொல்புரம் உட் பட) 433 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டு 4330 அந்தர் அறுவடை செய்யப்பட்டது. சின்ன வெங்காயத்தைப் பொறுத்த வரை 570 ஏக் கர் நிலத்தில் பயிரிடப்பட்டு 45800 அந்தர் அறுவடை செய்யப்பட் டது. 3 ஏக்கரில் விளைவிக்கப்பட்ட பம்பாய் வெங்காயத்தின் உற் பத்தி 240 அந்தராச விருந்தது. உருளைக்கிழங்கு 34 ஏக்கரில் மட் டுமே விளைவிக் சப்பட்டது என் கமநல சேவை நிலையத்தின் ஆண் டுக் குறிப்பில் தரப்பட்டுள்ளது.
பொதுவாக மிளகிாய் உற்பத்தியைப் பொறுத்த வரை வேலணைத் தீவிலேயே பெருமளவிற்குப் பயிர் செய்யப்பட்டு வருகின்றது. புங்குடு தீவு, மண்டைதீவு, நயினாதீவு, அனலைதீவு, நெடுந்தீவு ஆகிய தீவு களில் மிகச் சிறு அளவிலேயே செய்கை பண்ணப்பட்டு வருகின்றது. வெங்க்ாயத்தைப் பொறுத்த வரை நயினாதீவு, புங்குடுதீவில் கேரதீவு, குறிகட்டுவான், நடுத்துருத்தி, நெடுந்தீவில் சாரப்பிட்டி வெல்லை, வேலணைத்தீவு ஆகியவற்றில் பெருமளவிற்கு உற்பத்தி செய்யப்படு கின்றது. இவ்வுற்பத்திப் பொருடகள் குறிப்பாக குடாநாட்டுச் சந்தை களில் ‘தீவுவெங்காயம்" என்ற் பெயரில் மார்சுழி, தை மாதங்களில் சந்தைப்படுத்தப்படுகின்றன. அதிகளவு மழைவீழ்ச்சி கிடைக்கப் பெறும் காலங்களில் குடாநாட்டில் பயிர்ச்செய்கை மேற்கொள்ள முடி யாது. ஆனால் தீவுப்பகுதிகளில் கடற்கரை சார்ந்த மணற் பிர தேசங்களிலே வெங்காயம் இக்காலங்களில் அமோக விளைச்சலைத் தருகின்றது.
1977 ஆம் ஆண்டு வரையும் அதிக விளைச்சலையும் வருமானத் தையும் இவ் உப உணவுப் பயிர்ச்செய்கையால் பெற்றுக் கொள்ள முடிந்தது. இதன் விளைவாக விவசாயிகள் வீடுகளைக் கட்டியதுடன், நகை மற்றும் பொருள் பண்டங்களைச் சேமிக்க வாய்ப்பு ஏற்பட்டது. 1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்கு வந்து தாராள இறக்குமதிக் கொள்கையைப் புகுத்தியமையால் மேற்படி பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படவே தீவுப்பகுதி உட்பட
50

யாழ் குடாநாட்டு மக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர் எனலாம். எனினும் கணிசமான விவசாயிகள் தொடர்ந்தும் உபஉணவுப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டாலும், வருமானம் முன்னருள்ள காலப்பகுதி யைப் போல அதிகமாயிருக்கவில்லை.
புகையிலைச் செய்கை
தீவுப்பகுதி புகையிலைச் செய்கையைப் பொறுத்த வரை சிறப்பி டம் வகிக்கும் பிரதேசமாகும். இப்பிரதேசங்களில் உற்பத்தி செய்யப் படும் புகையிலை தென்னிலங்கையில் சந்தைப்படுத்தப்படுகின்றது. இப்பயிர்ச்செய்கையானது அனலைதீவு, வேலணைத்தீவு, மண்டைதீவு ஆகிய தீவுகளில் பெருமளவிலும் ஏனைய தீவுகளில் குறைந்தளவிலும் மேற்கொள்ளப்படுகின்றது. குறிப்பாக மண்டைதீவில் புகையிலை, மிளகாய் நாற்று மேடைகள் அதிகமாகச் செய்கை பண்ணப்பட்டு இளங்கன்றுகளாக விற்கப்படுகின்றன. ஏனைய தீவுப்பகுதி மக்கள் இத்தீவிலேயே நாற்றுகளை வாங்கிச் செல்வது வழக்கமாகும். மேற் படி உற்பத்தியானது குடாநாட்டுக்கு வெளியிலுள்ளவர்களுக்குத் தரகர் மூலமாகவே சந்தைப்படுத்தப்படுகின்றது. இப்பயிர்ச்செய்கையில் ஈடு பாடு கொண்டோர் பொதுவாக வசதியடைந்தவர்களாக இருக்கின்ற னர். புகையிலைச் செய்கையில் ஈடுபடும் கணிசமானோர் அதனை உணர்த்தாது கன்றுகளாகவே விற்கின்றனர். உணர்த்துவதற்கு பயிற்சி பெற்றவர்கள் அதனை வாங்கி உணர்த்தி சந்தைப்படுத்துகின்றனர். 1992 ஆம் ஆண்டு 26 ஹெக்டேயர் நிலப்பரப்பில் மட்டுமே இது பயிர் செய்யப்பட்டது என விவசாய அபிவிருத்திச் செயற்பாட்டு திட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.
இப்பயிர்ச் செய்கை அண்மைக் காலங்களிற் படிப்படியாகக் குறை வடைந்து செல்கின்றது. பயிற்சி பெற்ற விவசாயிகள் குறைவடைந்து செல்கின்றமை, பொருளாதார சமூக முறைமைகளில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள், உள்நாட்டு மற்றும் சர்வதேச இடப்பெயர்வு போன்றன இதற்கான முக்கிய காரணிகள் எனலாம்.
கால்நடை வளர்ப்பு
தீவக மக்கள் கடந்த பல நூற்றாண்டுகளாக கால்நடை வளர்ப் பில் ஈடுபட்டதற்கான வரலாற்றுச் சான்றுகள் காணப்படுகின்றன. இத் துறையின் மூலம் தம் வருமானத்தின் கணிசமான பங்கினைப் பெற்று வந்தனர். புவியியற் காரணிகளின் வாய்ப்பற்ற தன்மை, தொழி நுட்ப அறிவு மக்களிடத்தில் காணப்படாமை, சாதகமற்ற சந்தைப் படுத்தல் முறைகள், குடித்தொகை அதிகமாகக் காணப்படும் GELİT நாட்டுடன் ஒழுங்கான போக்குவரத்து வசதிகள் காணப்படாமை,
5

Page 41
அதிக வருமானம் ஈட்டக்கூடிய தொழில்களில் மக்கள் ஈடுபாடுகொள் ளத் தொடங்கியமை, மக்கள் இடப்பெயர்வு, பொருளாதார சமூக மாற்றங்களின் விளைவாக இத்தொழிலில் ஈடுபாடு கொள் வதை க் குறைத்து வந்துள்ளமை போன்ற பல காரணிகள் தீவக மக்கள் கால் நடை வளர்ப்பில் இருந்து படிப்படியாக வி ல கி ச் செல்வதற்குரிய காரணிகளாகக் கொள்ளலாம்.
தீவகத்தில் குடித்தொகை குறைவாகக் காணப்பட்டிருந்த காலங் களில் சுயதேவைப் பொருளாதாரத்தினடிப்படையிலேயே பெரும்பா லானோர் வாழ்க்கை நடாத்தி வந்துள்ளனர். அதனால் தங்களுக்குத் தேவையான பால், தயிர், இறைச்சி, முட்டை போன்றவற்றிற்காக சிறு அளவில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் தீவகத்தில் 50 - 100 நாட்டு இன மாடுகளைக் கொண்ட பண்ணைகள், 25 - 50 வெள்ளாடுகளைக் கொண்ட பண்ணைகள், 50 - 100 செம்மறியாடுகளைக் கொண்ட பண்ணைகள் மிகச் சிலரால் பராமரிக்கப்பட்டு வந்துள்ளன. இவ்வா றான சிறிய பண்ணைகள் மூலம் மக்கள் சில நன்மைகளைப் பெற்று வந்தனர். உற்பத்தி செய்யப்படும் நிலங்களில் கால்நடைகளுக்குப் பட்டி அமைப்பதன் மூலம் நிலம் வளமாக்கப்பட்டது. அத்துடன் தமக்குத் தேவையான கால்நடை உற்பத்திப் பொருட்களையும் பெற்று வந்த னர். மேலதிகமாகக் கிடைக்கப்பெறும் கால்நடைகள், யாழ்ப்பாணக் குடாநாட்டின் தேவைகளில் ஒரு பகுதியைப் பூர்த்தி செய்ய உதவின. இதன்மூலம் தமது வருமானத்தின் ஒரு பகுதியைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. கால்நடை உற்பத்தியாளர் தரகர்கள் மூலம் யாழ்ப்பாணக் குடாநாட்டு வர்த்தகர்களுக்கு விற்று வந்தனர்.
அட்டவணை 4
கால்நடைகளின் பரம்பல்
தீவுகள் tos ( ஆடு செம்மறியாடு பன்றி கோழி மண்டைதீவு 2100 1600 60 - 550 வேலணைத்தீவு 8670 64.30 625 5 I2700 புங்குடுதீவு 6335 865 55 moonwaraew 355 நெடுந்தீவு 54 85 9.300 330 15 6525 நயினாதீவு 600 550 150 775 அனலைதீவு 2 : 00 1200 150 2600 எழுவைதீவு 850 700 125 Na 2500 sansnavs. at rumnerauro ངག_______________
24 140 2丑645 595 18 31805
ஆதாரம்: கால்நடை அபிவிருத்திச் செயற்பாட்டுத் திட்டம் - வடபகுதி
1987.
52

தீவகப் பகுதியில் கால்நடைகள் சிறப்பாக வளர்க்கப்பட்டதென் பதற்குப் பல்வேறு சான்றுகள் உண்டு. நெடுந்தீவுக்குப் பசுத்தீவு என்ற பெயருண்டு. அத்தீவில் கால்நடைகள் வளர்க்கப்பட்டு அதிலிருந்து பெறப்படும் பால், தயிர் மற்றும் பொருட்கள் தென்னிந்தியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டன என லரலாறு கூறுகின்றது. புங்குடுதீவில் பெருமளவில் செம்மறியாடுகள் வளர்க்கப்பட்டதாக சைமன்காசிச் செட்டி தனது குறிப்பில் தெரிவித்துள்ளார். இதேபோலவே மண்டை தீவு, மண்கும்பான், வேலணை, சுருவில், ஆகிய இடங்களில் ஆடு, மாடுகளை ஒவ்வொரு குடும்பத்தினரும் வளர்ந்து வந்துள்ளனர். குறிப் பாக மேற்குறித்த இடங்களில் 1960 கள் வரை 50 - 200 செம்மறி யாடுகளைக் கொண்ட பண்ணைகள் பல காணப்பட்டிருந்தன. இவை வேலணைத் தீவின் வடக்கு, தெற்கு கடற்கரையோரங்களிலும் புங்குடுதீவின் வடக்கு பிரதேசத்திலும் நெடுந்தீவில் பரவலாகவும் வளர்க்கப்பட்டன. அதேபோலவே 25 - 100 நாட்டின மாடுகளைக் கொண்ட பண்ணைகள் பொருளாதார ரீதியில் மத்தியதர, உயர்தர வர்க்கக் குடும்பங்களால் பராமரிக்கப்பட்டுவந்துள்ளன. இவற்றை புல் தரவைகளில் கொண்டுசென்று மேய்ப்பதற்குக் கூலிகள் அமர்த்தப்பட்டி ருந்தனர். தீவுப்பகுதிகளில் மாட்டிறைச்சியை உட்கொள்பவர்கள் மிகச் சிலரேயாகும். கணிசமானவர்கள் ஆட்டிறைச்சியையும், கோழி இறைச் சியையும் உணவாக உட்கொள்கின்றனர். சுயதேவைகளுக்காகக் கோழியை வளர்த்து வருகின்றனர். திட்டமிட்ட விஞ்ஞான ரீதியிலான கோழிப்பண்ணை இல்லை என்றே கூறல்வேண்டும். அண்மைக் காலங் களில் ஒரு சிலர் திட்டமிட்ட அடிப்படையில் கோழி வளர்ப்பில் ஈடு பாடு கொண்டுள்ளபோதிலும் கோழித்தீன் கிடைப்பதிலுள்ள கஷ்ட நிலை, சந்தைப்படுத்தல் வசதிக்குறைவு, நோய்த்தடுப்பு முறை, சுகா தார வசதியின்மை போன்ற பல காரணிகளால் கோழிவளர்ப்பும் சிறப் புற்றதாகக் கொள்ளமுடியாது.
அண்மைக் காலங்களில் தீவுப்பகுதியின் கால்நடை வளர்ப்பானது படிப்படியாக அருகிக்கொண்டு வருகின்றது. குறிப்பாக செம்மறி ஆடு வளர்ப்பு குறைந்துவிட்டது. விருத்தியுற்று வரும் சமூக, பொருளா தார மாற்றங்கள், விவசாய உற்பத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றங் கள் - குறிப்பாக உழுதல், சூடடித்தல் போன்றவற்றில் இயந்திரப் பாவனை அதிகரிப்பு, தொழில்நுட்ப வசதியின்மை, வெளிநாடுக ளுக்கு மக்கள் இடம் பெயர்வு, நன்னீர்ப் பற்றாக்குறை அதிகரித்துச் செல்லல், மக்கள் மனதில் கால்நடை வளர்ப்புக் குறித்து அலட்சியம் போன்றன படிப்படியாக குறைவடைந்து செல்வத்குரிய காரணங்களா (gjLD.
53

Page 42
கால்நடை வளர்ப்பிற்கேற்ற வளவாய்ப்பினை ஏற்படுத்தக்கூடிய தீவுப்பகுதியில் இதனோடு தொடர்புடைய அபிவிருத்தித் திட்டங்களை ஏற்படுத்திக் கொடுக்கும் பட்சத்தில் பொருளாதார விருத்தியைப்பெற் றுக் கொள்ள முடியும். கால்நடை இனப்பெருக்கத்தினை மேற்கொள் ளல் அதாவது செயற்கைச் சினைப்படுத்தல், காளை நிலையங்களை அமைத்தல், இனவிருத்திப் பண்ணைகளை அமைத்தல், நல்ல இனக் கால்நடைகளைத் தருவித்தல் போன்றவற்றுடன் மேய்ச்சல் நிலங்களை அபிவிருத்தி செய்தல், வெளிக்களக் கால்நடை விரிவாக்கல். சந்தைப் படுத்தல் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், பண்ணையாளர்களுக்கு இது சம்பந்தமான கல்விப்போதனைகளை அளித்தல், பண்ணையாளர் மற்றும் உற்பத்தியாளர்களுக்கான கூட்டுறவுச்சங்கங்களை அமைத்துக் கடன் வசதிகளைப் பெற்றுக் கொடுத்தல் போன்ற பல நடவடிக்கை களும் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் இதனோடு இணைந்த பொரு ளாதார விருத்தி ஏற்படும் சாத்தியமுண்டு.
பனையுடன் தொடர்புடைய தொழில்கள்
யாழ்ப்பாண மாவட்டத்தில் 3,631,900 பனை மரங்கள் காணப் படுகின்றன. இவற்றுள் 1089500 பனைமரங்கள் தீவுப்பகுதிகளில் உள்ளன. மாவட்டத்தின் மொத்தப் பனைமரங்களில் 30, 0 சதவீத மானவை இப்பிரதேசத்திலேயே காணப்படுகின்றன. பனைமரங்கள் அதிகமாயிருந்த போதிலும் அதிலிருந்து பெறப்படும் உற்பத்திகள் குறைவு எனலாம். 1960 களுக்கு முன்னர் பொதுவாகப் பனாட்டினை மக்கள் உற்பத்தி செய்து உணவாக்கினர், ஆனால் படிப்படியாக இவ்வுற்பத்தி குறைவடைந்து சென்றுள்ளது. கெளரவக் குறைவென்று நினைப்பது, உணவுப்பொருளாகக் கருதாதது போன்றனவே இதற் கான காரணங்களாகவுள்ளது. எனினும் தற்போது பொருளாதார வசதி குறைந்தவர்களால் மிகக்குறைந்தளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது
பனையுடன் தொடர்புடைய தொழில்களில் முக்கியமானது பாய், கடகம், பெட்டி இழைப்பதாகும். குறிப்பாக அனலைதீவு, எழுவை தீவு, வேலணைத்தீவு மக்கள் மேற்படி தொழில்களில் மிக நீண்ட காலமாகவே தம்மை ஈடுபடுத்தி வருகின்றனர். உழவு இயந்திரத்தி னால் சூடு அடித்தற் செயல் முறை வருவதற்கு முன்னர் தீவுப்பகுதி மற்றும் குடாநாட்டுப் பகுதிகளுக்குத் தேவையான களப்பாய்களை மேற்குறித்த தீவுகளைச் சேர்ந்தவர்கள் உற்பத்தி செய்து சந்தைப் படுத்தினர். புங்குடுதீவு மற்றும் வேலணைத் தீவுகளில் கணிசமான அளவில் மேற்படி தீவுகளின் மக்களால் களப்பாய் இழைத்தல் நடை பெற்று வந்துள்ளது. ஆனால் சூடுமிதித்தல் இயந்திரமயமாக்கப்படவே
W, 54

இத்தொழிலும் அருகிவிட்டது. எனினும் படுக்கைக்குப் பயன்படுத் தும் பாய்வகைகள், புகையிலைச் சிப்பத்திற்கு பயன்படுத்தப்படும் பாய்வகைகள் பொதுவாக எல்லாத்தீவுகளிலும் குடிசைக்கைத்தொழி லாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் பொருளாதார, gryp 5:s மாற்றங்களின் விளைவாக இத்தொழில் சார்பு ரீதியாகக் குறை வடைந்து கொண்டு செல்கின்றது. கடகம் உற்பத்தியானது வேல ணைத்தீவு, மண்டைதீவுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதி லு: , எழுவைதீவு, அனலைதீவிலேயே அதிகளவில் உற்பத்தி செய் யப்பட்டு குடாநாட்டுச் சந்தைகளுக்கு அனுப்பப்படுகின்றன. மேலும் ஒடியல், புளுக்கொடியல் என்பன உற்பத்தி செய்யப்பட்டு வருகின்ற போதிலும் சந்தைப்படுத்துவது மிகக்குறைவு. அண்மைக்காலங்களில் பனையோடு தொடர்புடைய தொழில்களைப் பொறுத்தவரை பனை அபிவிருத்திச் சபையின் செயற்பாட்டினால் இவை சம்பந்தமாகப் பயிற்சி வகுப்புகள் வைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சித் தைப்படுத்துவதற்கு உதவியும் கிடைக்கப்பெற்றுள்ளது. குறிப்பாக விளையாட்டுப பொருட்கள், நீராகாரம், ஒடியல், பனங்கட்டி, புளுக்கொடியல் பனாட்டு, பெட்டி, கடகம் பனைநார் கூடை உற்பத் திப் பொருட்கள் கற்பகம் விற்பனை நிலையங்களூடாக சத்தைப்
படுத்தப்படுகின்றன.
கடற்றொழில்
பொதுவாக இத்தொழிலானது சாதியடிப்படையிலேே في مقاً கொள்ளப்படுகின்றது. திவுப்பகுதியின் கடற் பிராந்தியத்தில் அதிகள வில் கடல்படுதிரவியங்களை உற்பத்தி செய்யலாமெனினும் இப:பிர தேசங்களின் மீன்பிடித் தொழிலோடு இணைந்தவர்கள் மிகக் குறை வாகவே காணப்படுகின்றனர். அவர்களால் பெற்றுக்கொள்ளப்படும் உற்பத்தி உள்ளூர்ச் சந்தைக்கே போதாதுள்ளது. வடகீழ் பருவக்காற் றுக் காலங்களில் (வாடைக்காற்று பலாலி, மயிலிட்டி, கரையூர், தாளையடி, வல்வெட்டித் துறை, பருத்தித்துறை, காங்கேசன்துறை போன்ற இடங்களிலிருந்து மீனவர்கள் நெடுந்தீவில் வெல்லை, புங்குடு ' தீவு மணற்காட்டுப் பிரதேசம், அனலைதீவு, எழுவைதீவு, வேலணை யில் கெட்டில், ஊர்காவற்றுறையில் தம்பாட்டி, மெலிஞ்சி முனை போன்ற இடங்களில் வாடியமைத்து மீன்பிடிப்பது வழக்கமாகவுள்ளது. குறிப்பாக நெடுந்தீவில் மயிலிட்டி, காங்கேசன்துறை மீனவர்கள் வாடியமைத்து மீன்பிடியில் ஈடுபாடு கொண்டிருப்பதால் இப்பிர தேசங்களுக்கிடையில் அதிகளவு விவாகத் தொடர்பு காணப்படுகின் றது. அவர்களால் பிடிக்கப்படும் மீனின் பெரும்பகுதி யாழ்நகரச் சந்தைக்குக் கொண்டுவரப்படுகின்ற போதிலும் நெடுந்தீவிலும் அனலை தீவிலும் பிடிக்கப்படும் மீன்களில் அதிகமானவற்றைக் கருவாடாக்கி
55

Page 43
விடுகின்றனர். இவை குறிகட்டுவான் படகுத்துறையூடாகத் தென்னி லங்கைச் சந்தைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. போக்குவரத்துப் பிரச்சினை, ஐஸ் உற்பத்தியின்மை, போன்றவற்றால் கருவாடாக்க வேண்டிய நிர்ப்பந்த நிலை காணப்படுகின்றது. உள்ளூர் மீன்பிடியா ளர்களும் வெளியூர் மீன்பிடியாளர்களும் தமது உற்பத்தியில் மிகக் குறைந்த பங்கினையே உள்ளூர்ச் சந்தைக்கு வழங்குகின்றனர். இதனை பெட்டி வியாபாரிகள் பெற்று துவிச்சக்கர வண்டியில் சந்தைப்படுத்து கின்றனர். ஏறத்தாழ 300 பேர்வரை இவ்வாறு சந்தைப்படுத்துவ தால் நன்மை பெற்றுவருகின்றனர். கடற்றொழில் ஊடாக இப்பிர தேசத்தின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியுமாயினும் குறிக் கப்பட்ட சமூகத்திற்குள் மட்டுமே இது அமைவதால் வளர்ப்பதற் கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. இத்தொழில் மக்கள் மயப்படுத்தப்பட்டு நவீன உற்பத்தி முறைகளும் புகுத்தப்படுமாயின் விருத்தியடைய வாய்ப்புண்டு.
கைத்தொழில்
தீவுப்பகுதியில் கைத்தொழில் வளவாய்ப்புக்கள் மிகக் குறைவாக வேயுள்ளது. பாரிய கைத்தொழில்களோ அன்றில் நடுத்தரக்கை தொழில்களோ எதுவுமில்லை. சிறிய கைத்தொழில்களும் குடிசைக் கைத்தொழில்களும் ஆங்காங்கே காணப்படுகின்றன. குறிப்பாக எல்லாத்தீவுகளிலும் பாண் உற்பத்தி செய்வ த ற் கா ன பேக்கரி கள் காணப்படுகின்றன. புங்குடுதீவு, வேலணை, ஊர்காவற்றுமை ஆகிய இடங்களில் வாகனம் திருத்தும் தொழில்கள் உண்டு ஊர்கா வற்றுறையில் றேடியோ, மணிக்கூடு திருத்தும் தொழில்கள் காணப் படுகின்றன. புளியங்கூடல் பகுதியில் பொதுவாக விவசாயத்துடன் தொடர்புடைய கைத்தொழில்கள் ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடு மிடத்து அதிகமாக இருக்கின்றன. இரும்புடன் தொடர்புடைய தொழில் கள் எல்லாத்தீவுகளிலும் குடிசைககைத்தொழிலாக அதாவது பட்ட றையாக உள்ளன. அதேபோலவே உணவுப் பொருட்களை அரைத் துக் கொடுக்கும் தொழில்களும் காணப்படுகின்றன. வேலணை, புங் குடுதீவில் சிப்பி அரைக்கும் தொழில்கள் சில காணப்படுகின்றன. தச்சுத்தொழில்கள் மிகக் குறைவாகக் காணப்படுகின்றன. புங்குடுதீவில் இத்தொழிலோடு தொடர்புடையவர்கள் அதிகளவில் காணப்படுகின்ற போதிலும் அவர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் மிகக்குறைவு. எனவே தொழிலைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு குடாநாட்டிற்கும் பெரு நிலப்பரப்புக்கும் சென்றுவருவதுண்டு. இவர்களிற் கணிசமானோர் தாம் தொழில் பெறக்கூடிய இடங்களுக்கு இடப்பெயர்வினை மேற் கொண்டுள்ளனர்.
56

சேவைத்தொழில்
1983 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் சேவைத் தொழிலில் ஈடுபாடு கொண்டோர் 15.0 சதவீதத்தினராகவும், வர்த் த5 நடவடிக்கையில் ஈடுபாடு கொண்டோர் 14.0 சதவீதத்தினராக வும் காணப்பட்டனர். அரச தொழில்கள், போக்குவரத் துடன்ே தொடர் புடைய தொழில்கள், வர்த்தகத்துடன் தொடர்புடைய தொழில்கள் என்ப்ன முக்கியமான சேவைத்தொழில்களாகும். போக்குவரத்துடன் தொடர்புடைய தொழில்களில் ஈடுபாடு கொண்டோர் மிகக்குறைவே. ஏனைய இருபிரிவினரும் அதிகமாகவே காணப்படுகின்றனர். அரச தொழில்களில் ஈடுபாடு கொண்டோரில் பெரும்பாலானோர் தீவுப்பகு திக்கு வெளியிலேயே கடமை புரிகின்றனர். அதேபோலவே வர்த்தகத் தில் ஈடுபாடு கொண்டோரும் நாட்டின் பெரும்பாலான நகரங்களில் காணப்படுகின்றனர். அவர்களால் பெறப்படும் வருமானம் தீவுப்பகுதி களுக்கே 1950 களுக்கு முன்னர் கொண்டு வரப்பட்டது. ஆனால் காலப்போக்கில் யாழ்ப்பாண நகரத்திலும் ஏனைய வசதியான பிர தேசங்களிலும் குடியிருப்புக்களையும் வேறு தேட்டங்களையும் பெற்றுக் கொள்வதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக இந்நூற் றாண்டின் முதற் காற்பகுதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட இத்தகைய இடப்பெயர்வாளர்களில் பெரும்பாலோனோர் தாம் சென்றடைந்த பிரதேசங்களில் வசதிபடைத்தவர்களாக மாறியதுடன் காலப்போக்கில் நாட்டில் இடம்பெற்ற இனக்கலவரங்களாலும், சமூக, பொருளாதார மாற்றங்களினாலும் அவ்வவ்விடயங்களை விட்டு கொழும்பு நகரம், யாழ்ப்பாண நகரம், மற்றும் தீவுப்பகுதிகளில் வந்து குடியேறினர். இவர்களிற் பெரும்பாலானோர் எங்கெங்கு தமது வர்த்தக நிலையங் களை நிறுவினரோ அவ்விடப்பெயரினை அவர்கள் பெயருக்கு முன் அழைத்துக் கொள்வதையும் எவ்வெத்தொழில்களை மேற்கொண் டார்களோ அவ்வத்தொழில்களை பெயருக்கு முன்னால் அழைத்துக் கொள்வதையும் காணமுடிகின்றது. நுவரெலியா கார்தீதிகேசு, இரத தினபுரி செல்லையா, பொறளை நாகலிங்கம், டிக்கோயா நாக லிங்கம், பாணந்துறை நல்லதம்பி போன்றவர்களையும் பழக்கடை மாணிக்கம், வெங்கலக்கடைச் செல்லையா போன்ற வர்களையும உதார ணத்திற்குக் குறிப்பிட்டுக் கூறலாம்.
57

Page 44
இயல் - ஆறு
தீவகம் - கல்வி நிலை
மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு, உடை, உறையுள் என்பன அத்தியாவசியப்படுவது போல அவன் திருப்திகரமான வாழ்க்கை நடாத்துவதற்கு கல்வி அவசியமானது மட்டுமல்லாது மனிதனது அடிப்படை உரிமைகளுள் ஒன்றாகவுமுள்ளது. பொதுவாக் தீவக மக் களின் கல்வி வளர்ச்சியில் திண்ணைப்பள்ளி, நிலாப்பள்ளி, கோவிற் பள்ளி, பட்டறைப்பள்ளி, குருகுலக்கல்வி எனப் பல்வேறு வகைப்பட்ட கல்வி முறைகள் காணப்பட்டிருந்தன. இக்கல்வி முறைகளானது தீவகப் பகுதிக்கு மட்டுமல்லாது தமிழர் கல்வியின் வளர்ச்சியோடும் தொடர் புடையது. −
தீவுப்பகுதி கல்வி வளர்ச்சியில் குருகுலக்கல்வியும், திண்ணைப் பள்ளியும் முக்கியத்துவம் பெற்றிருந்தன. குறிப்பாக இக்கல்வியானது ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் வசதியான நேரத்தில் கற்கும் முறை யாகவிருந்தது. பெற்றோர்கள் அவ்வாசிரியருக்கு பணமாகவோ அன் றில் பொருட்களாகவோ ஊதியம் வழங்கி வந்ததாகத் தெரியவரு கின்றது. கற்றோரின் இல்லங்கள் கல்விச்சாலைகளாகக் காட்சியளித் தன. குரு - சிஷ்ய தொடர்பு முறை இறுக்கமாகப் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. திண்ணைப்பள்ளியில் முதலில் எழுத வாசிக்கக் கற்றுக் கொடுத்த பின்னர் இலக்கியம், இலக்கணம், புராணங்கள் போதிக் கப்பட்டன. குறிப்பாக நெடுந்தீவில் பிராடி, மகாவிலடி, காட்டுப் பூவரசடி, கந்தசாமி கோவிலடி, ஆஸ்பத்திரியடி போன்ற இடங்களில் திண்ணைப்பள்ளிகள் இயங்கி வந்தன எனத்தெரிவிக்கின்ற போதிலும் கல்வி கற்பித்தோரின் பெயர்களைத் தெரிவிக்கத் தவறுகின்றனர். நயினாதீவில் நாகமணிப் புலவரின் பேரன் வேலாயுதம் என்பவராலும் க. வேலுப்பிள்ளை என்பவராலும் மேற்படி திண்ணைப்பள்ளிகள் நடாத் தப்பட்டன. தற்போது நாகபூசணி வித்தியாலயம் அமைந்துள்ள இடத்தில்) திண்ணைப்பள்ளி இயங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. அனலைதீவில் குழந்தை உபாத்தியாயர் ஒரு திண்ணைப்பள்ளியை நடாத்தினார். வேலணை மேற்குப்பகுதி சைவமும் தமிழும் செழித்து வளர்ந்த பகுதியாகக் காணப்படுகின்றது. ஆறுமுகநாவலரின் கல்வி யுடன் கூடிய நண்பர்கள் இப்பகுதியில் இருந்திருக்கின்றனர். இங்கு வி. கந்தப்பிள்ளை, செ. கனகசபாபதி போனறோர் திண்ணைப்பள்ளி மூலம் மாணவர்களை உருவாக்கியவர்களில் இருவராவர். சைவம் வளர்ந்த இடமாதலால் கோவிற்பள்ளிகள் அமைத்து புராணங்கள்,
58

இராமாயணம், மகாபாரதம் போன்றவற்றைப் பாட்டும் பயனுமாக மக்களுக்கு முறைசாராக் கல்வியடிப்படையில் தம்பு உபாத்தியார்,
நாகலிங்க உபாத்தியார் போன்றோர் வழங்கிவந்தனர். வேலணை
வங்களாவடியில் வேலாயுதர் என்பவரும் வேலனை கிழக்கில் வேலுப்
பிள்ளை என்பவரும் திண்ணைப்பள்ளியினை நடாத்திவந்துள்ளனர்.
புங்குடுதீவில் திண்ணைப்பள்ளி, கோவிற்பள்ளிகள் காணப்பட்ட போதி
லும் அதனை நடாத்தியவர்கள் யார் என்பதை அறியமுடியவில்லை :
புங்குடுதீவு மேற்கிலுள்ள அமெரிக்கன் மிஷன் பாடசாலை ஆரம்" பத்தில் ஒரு திண்ணைப்பள்ளிக்கூடமாகவே இருந்துள்ளது என்பர்.
தீவுப்பகுதியில் கல்வி நிலை முனைப்பெடுத்து வளர்ந்து வந்த மைக்கு சைவ உணர்வுடன் கூடிய அறிவினை வழங்குவதன் வாயி லாக ஆசிரிபப்பரம்பரை உருவாவதற்கு பெருந்தொண்டாற்றிய சைவச் சான்றோரின் தன்னலமற்ற பணியே காரணமென்றால் மிகையாகாது. இத்தகைய முறைசாராக் கல்வியினூடாக இலக்கிய:ம், இலக்கணம், இதிகாசம், புராணங்கள் போன்றவற்றில் மிகத்திறமை வாய்ந்த பல ரைத் தீவகம் பெற்றிருந்தது.
ஐரோப்பியரின் வருகையால் முறைசார்ந்த கல்வி அமைப்பு அறி முகப்படுத்தப்பட்ட போதிலும் மேல்நாட்டுக்கல்வி, அரசதொழில், பதவியுயர்வு போன்றவற்றின் வாயிலாக மதம் மாற்றமும் வேகமாக நடைபெற்றுவந்தது. அத்து டன் அதிகாரப்பலமும் மதமாற்றத் தினைத்தூண்டியது. பொதுவாக போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் கல்விக் கான பொறுப்பினை மதகுருமாரி-ம் ஒப்புவித்ததுடன் அரசு ஆதரவும் வழங்கியது. ஆங்கிலேயர் ஆட்சியில் பல மிஷனறிமாரின் முயற்சியால் பல பாடசாலைகள் தீவுப்பகுதி உட்பட யாழ்ப்பாண மாவட்டத்தில் நிறுவப்பட்டன. தீவுப்பகுதியில் முதன்முதலாக அமைக்கப்பட்ட பாட சாலை வங்களாவடிச் சந்திக்கு அண்மையிலுள்ள பாடசாலையாகும். இது 1833 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது. 1833-1836 ஆம் ஆண்டி டைவெளியில் 5 மிஷனறிப் ஆப்ாடசாலைகள் தீவுப்பகுதியில் நிறுவப்பட்டுள்ளன.
தீவுப்பகுதியில் 16 கிறிஸ்தவப்பாடசாலைகள் நிறுவப்பட்டிருக் கின்றன. அப்பாடசாலைகள் மூன்றினைத் தவிர ஏனையவை சென்ற நூற்றாண்டின் பின்னரைப்பகுதிகளில் நிறுவப்பட்டனவாகும். நெடுந் தீவு (2), ஊர்காவற்றுறை (6), வேலணை (2), எழுவைதீவு (1), புங் குடுதீவு (3), மண்டைதீவு (3), ஆகிய கொத்தணிகளில் இப்பாடசர் லைகள் காணப்படுகின்றன. பொதுவாக இப்பாடசாலைகளின் பரம் பலுக்கும் கிறிஸ்தவர்களின் பாம்பலுக்குமிடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. ஊர்காவற்றுறை கொத்தணிப் பகுதிகளிலேயே கிறிஸ்தவ பாடசாலைகள் அதிகமுள. و خص
59
. {

Page 45
1872 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஊர்காவற்றுறை புனித அந் தோனியார் கல்லூரி ஆரம்பத்தில் ஆங்கிலப்பாடசாலையாகவே ஸ்தா பிக்கப்பட்டது. அக்காலத்தில் தீவகமக்களின் உயர்கல்வி மற்றும் ஆங் கிலக்கல்விக்கு இக்கல்லூரியே மிகப்பெரும் தொண்டினை ஆற்றியுள் ளது. தீவுப்பகுதிக்கும் யாழ்ப்பாணத்திற்குமிடையில் கடற்போக்குவரத் தினுரடாகவே செல்ல வேண்டியிருந்ததால் அந்தோனியார் கல்லூரியை மாணவர்கள் தெரிவு செய்தனர். இக்கல்லூரியில் கற்ற மாணவர்கள் தேசிய ரீதியில் மிகவுயர்ந்த நிலையில் வாழ்ந்துள்ளனர்.
புனித அந்தோனியார் கல்லூரி 1950 கள் வரை யாழ்ப்பாணத் திலுள்ள முன்னணி கிறிஸ்தவப் பாடசாலைகளுக்கிணையாக வளர்ச்சி பெற்றிருந்தது. பண்ணைப்பாலத்திறப்பு, போக்குவரத்து வசதிகளின் விரிவாக்கம், நகரில் இந்துப்பாடசாலைகளின் வளர்ச்சி, கிறிஸ்தவ மிஷனறிமார்கள் கல்வி வளர்ச்சியில் ஆர்வம் குன்றியிருந்தமை, தனி யார் பாடசாலைகள், அரசபாடசாலைகள் நிறுவப்பட்டமை போன்ற பல காரணங்கள் இக்கல்லூரி வலுவிழந்ததற்குரிய காரணிகளாகும். இருப்பினும் தற்போது இப்பாடசாலை 1 ஏபி தரத்தினைக் கொண்டி ருக்கின்றது.
தீவகத்தின் முதற்பெண்கள் பாடசாலையாக ஸ்தாவிக்கப்பட்டது ஊர்காவற்றுறை புனித மரியாள் பெண்கள் பாடசாலையேயாகும். இப்பாடசாலை தரம் 2 ஐக் கொண்டது. சிறிய புஸ்பமகளிர் கன்னி யர் மடம் வித்தியாலயமே தற்போது பெண்கள் பாடசாலைகளில் பெரி தாகும். இது 1 சி தரத்தினைக் கொண்டது. இவை தவிர ஏனைய பாடசாலைகள் தரம் 2, 3 ஐக் கொண்டவையாகும்.
வேலணை வங்களாவடிச்சந்தியில் கிறிஸ்தவ மிஸனரிமார் தற் போது வட்டுக்கோட்டையில் அமைந்திருக்கும் யாழ்ப்பாணக்கல்லூ ரியை அமைப்பதற்கு முயற்சி செய்த போதிலும் உள்ளூர் மக்களின் எதிர்ப்பினால் அது கைக்கூடாமற் போனது. அதன் பின்னரே வட்டுக் கோட்டையில் அமைக்கப்பட்டது. கல்லூரி நிறுவப்பட்டிருக்கும் பட் சத்தில் மதமாற்றங்கள் ஏற்பட வழிவகுத்திருக்குமேயாயினும் தீவக மக்களின் கல்வி வளர்ச்சிக்கு இது பெரிதும் தொண்டாற்றியிருக்கும் எனப்பலர் அபிப்பிராயப்படுகின்றனர்.
மிஷனரிப்பாடசாலைகள் இயங்கத் தொடங்கிய காலங்களில் இந் துக்களும் தமது பிள்ளைகளுக்கு அப்பாடசாலைகள் மூலமே கல்வி யைப்பெற்றுக் கொடுத்தனர். மிஷனரிப்பாடசாலைகளின் வளர்ச்சி சைவசமயத்தவர்களின் மதமாற்றத்திற்கும் கலாசாரப் பண்புகளுக்கும் பெரிய சவாலாக அமையும் எனக்கருதிய சைவப்பெரியோர்கள் சைவப் பாடசாலைகளை நிறுவினர். தீவுப்பகுதியில் வேலணையில் 1880 ஆம்
60

ஆண்டு சைவப்பிரகாச வித்தியாசாலையை திரு. வி. கந்தப்பிள்9ைள என்பவர் ஸ்தாபித்தார். இதுவே முதற் சைவப்பாடசாலையாகும்.
அக்காலச் சைவப்பெரியோர்கள் பொதுமக்களுடன் இணைந்து காணி களை வழங்கியும் கட்டடங்களைக் கட்டிக் கொடுத்தும் ஆசிரியர்க ளுக்கு சம்பளம் கொடுப்பதற்காக பிடியரிசி பெற்றும் பாடசாலைகளை இயங்க வைத்தனர். இதன் பின்னர் தீவுப்பகுதிகளில் சைவப்பாட சாலைகள் பலவற்றை நிறுவினர். சைவப்பாடசாலைகளை நிர்வகிப் பதற்கு நிதிப்பிரச்சனையால் நிர்வாகிகள் சிரமப்படவே சைவவித்தி யாவிருத்திச் சங்கம் இப்பாடசாலைகளை பொறுப்பேற்று நடாத்தி வந்தது. சைவவித்தியாவிருத்திச் சங்கம் நெடுந்தீவில் 6 பாடசாலை களையும் நயினாதீவில் 2 பாடசாலைகளையும் மண்டைதீவு, அனலை தீவு, எழுவைதீவில் தலா ஒரு பாடசாலையையும் வேலணைத்தீவில் பாடசாலைகளையும் புங்குடுதீவில் 9 பாடசாலைகளையும் நிர்வ கித்து வந்துள்ளது.
திரு. சி. டபிள்யூ. டபிள்யூ கன்னங்கரா கல்வி அமைச்சராக பணி புரிந்தபோது பாலர்கல்வி தொட்டு பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வியினைப் போதிக்க வேண்டும் என்ற கோட்பாட்டிற்கிணங்க வசதி படைத்தோர் மட்டுமல்லாது ஏழைச்சிறார்களும் தாய்மொழிக்கல்வி பையும் ஆங்கிலக்கல்வியையும், உயர்கல்வியையும் பெற்றுக்கொள்ளும் முகமாக மத்திய பாடசாலைகள் ஆரம்பிக்க வேண்டும் என்பதை வலி யுறுத்தினார். அக்காலத்தில் தீவுப்பகுதியின் பிரதிநிதியான திரு. வைத் தி லிங்கம் துரைச்சுவாமியின் முயற்சியால் 1945 ஆம் ஆண்டு வேல ணையில் மத்திய கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலையானது புலமைப்பரிசில் சித் திபெறுவோரைக் கவர்ந்திழுத்தமையால் நன் மாணாக்கரைப் பெற்றுத் தீவகத்தின் கல்வி வளர்ச்சிக்கு பெருந் தொண் டாற்றியுள்ளது. 1960 களின் பிற்பகுதியில் இருந்து தீவக மாணவர் கள் நகர்ப்பாடசாலைகளில் அநுமதியைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு அதிகரித்தமையாலும் நாட்டின் அரசியற் சூழ்நிலையாலும் சா ர் பு ரீதியாக இக்கல்லூரி தன் முதன்மைத் தன்மையை இழந்துவிட்டது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர், இக்கல்லூரியை உருவாக்குவதில் ஆர்வம் கொண்டிருந்த சேர் வைத்திலிங்கம் துரைசுவாமியின் பெயரி னைத் தாங்கி சேர் வைத்திலிங்கம் துரைசுவாமி மத்திய மகாவித்தி யாலயம் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு தீவு களின் கல்வி வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல கனிஷ்ட ஆங்கில வித்தியாலயங்கள் நிறுவப்பட்டன. புங்குடுதீவு, நயினாதீவு, மண்டை தீவு, நெடுந்தீவு ஆகிய இடங்களில் மேற்படி கனிஷ்ட மகா வித்தியா லயங்கள் 1946 ஆம் ஆண்டில் இயங்கத்தொடங்கின. இவை தவிர அரசாங்கத்தினால் பாடசாலைகள் அரிதாகக் காணப்படுமிடங்களில் கனிஷ்ட வித்தியாலயங்கள் ஆங்காங்கே நிறுவப்பட்டன.
6

Page 46
தாய்மொழிக் கல்விக் கொள்கைக்கிணங்க 1958 ஆம் ஆண்டு உயர் வகுப்புக்களில் தாய்மொழி மூலம் கல்வி கற்பிக்கப்படத் தொடங்கி யது. 1960 ஆம் ஆண்டு அரசாங்கம் சகல பாடசாலைகளினது நிர் வாகத்தையும் உரிமையினையும் பொறுப்பேற்றது. அதாவது தனியார் பாடசாலைகள், மதரீதியில் அமைந்த பாடசாலைகள் ஆகியவற்றையே பொறுப்பேற்றது.தீவுப்பகுதியில் புனித அந்தோனியார் கல்லூரி தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் யாவும் அரசின் உடமையாயிற்று. காலப்போக்கில் அக்கல்லூரியையும் அரசு பொறுப்பேற்றது.
1991 ஆம் ஆண்டு கல்வித்திணைக்கள நிர்வாக அறிக்கையின்படி
தீவகத்தில் 62 பாடசாலைகளும் 16236 மாணவர்களும் 610 ஆசிரியர் களும் கடமையாற்றினர். மாணவர் ஆசிரியர் விகிதம் 26.6:1 ஆகும்.
பாடசாலைகளை நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தலாம். 1 ஏபி 1 சி, 2, 3 தரங்கள் என்பனவே அவையாகும்.
1991 ஆம் ஆண்டு கல்வியாண்டில் 1ஏபி தரத்தினைக் கொண்ட பாடசாலைகள், அங்கு கல்வி பயின்றமாணவர்கள், கற்பித்த ஆசிரி யர்கள், ஆசிரியமாணவர் விகிதம் என்பன பின்வருமாறு:
அட்டவணை !
1 ஏ பி பாடசாலைகள்
பாடசாலைகள் மாணவர்கள் ஆசிரியர் மா/ஆ விகிதம் புனித அந்தோனியார் கல்லூரி 480 17 28, 2 சேர் வைத்திலிங்கம் துரைசுவாமி
ம. ம. வித்தியாலயம் 1094 40 27 4
புங்குடுதீவு, மகாவித்தியாலயம் 623 21 29.7
ஆதாரம்: நிர்வாக அறிக்கை, கல்வித்திணைக்களம் 1991.
மேற்படி 1 ஏபி பாடசாலைகள் க. பொ. த. (உ/த) த்தில் விஞ் ஞானம், கலை, வர்த்தகம் ஆகிய வகுப்புக்களை கொண்டமைத்தது குறிப்பிடத்தக்கது.
1சி பாடசாலைகள் க. பொ. த. (உத) வகுப்பில் கலை, வர்த் தகம் ஆகிய பிரிவுகளைக் கொண்டமைந்ததாகும். இப்பாடசாலைக
ளின் விபரங்கள் பின்வருமாறு அமைந்துள்ளது.
62

அட்டவணை 2
பாடசாலைகள் மாணவர் ஆசிரியர் மா/ஆ விகிதம்
நெடுந்தீவு மகாவித்தியாலயம் 30. 17 8.2 கரம்பன் சண்முகநாதன் ம. வி. 372 17 21, 9 சிறிய புஸ்பமகளிர் கன்னியர் மடம்
ம. வி. 383 15 25、5 நயினாதீவு மகாவித்தியாலயம் 281 - 12 23, 4 மண்டைதீவு மகாவித்தியாலயம் 406 22 I&、5
ஆதாரம்: நிர்வாக அறிக்கை, யாழ் கல்வித்திணைக்களம் 1991.
இவற்றைவிட தரம் இரண்டு, தரம் மூன்று பாடசாலைகள் கைவிடப்பட்ட கொத்தணி அமைப்பின் பிரகாரம் பின்வருமாறு அமைந்துள்ளது. &
அட்டவணை 3
தரம் 2, தரம் 3 பாடசாலைகள்
8
ഴfഖ தரம் 2 3ισώ 3 ܖ
நெடுந்தீவு O2 O7 ஊர்காவற்றுறை O3 び5 வேலணை O5 05 நயினாதீவு O3 04 புங்குடுதீவு O5 09 மண்டைதீவு O2 04
மொத்தம் o
cs=
ஆதாரம்: நிர்வாக அறிக்கை, யாழ். கல்வித்திணைக்களம் 1991.
இப்பாடசாலைகளின் தரம் 2 இல் க. பொ. த. சாதாரண தர வகுப்புக்கள்வரை உண்டு. தரம் 3 பாடசாலைகள் க. பொ. தசா தாரண தர வகுப்புகளுக்குக் குறைவான வகுப்புக்களைக் கொண்ட மைந்ததாகும்.
இன்றைய கல்விநிலை
கடந்த அரை நூற்றாண்டு காலமாக தீவகத்தின் கல்வி வளர்ச்சி இரு வழிகளிற் சிறப்படைந்து காணப்பட்டது.
S3

Page 47
1. யாழ்ப்பாண நகரத்திலும் குடாநாட்டுப் பாடசாலைகளிலும்
கல்வி பயில்வதன் வாயிலான கல்வி வளர்ச்சி.
2. தீவகப் பாடசாலைகளில் ஏற்பட்ட கல்வி வளர்ச்சி என இரு
வகைப்படும்.
அதாவது அரச ஊழியர்கள், ஆசிரியர்கள், மற்றும் வசதிபடைத்த வர்கள் தமது பிள்ளைகளின் கல்வியினை தீவுப்பகுதிக்கு வெளியி லுள்ள பாடசாலைகள் மூலம் கணிசமான பெறுபேறுகளைப் பெற்று வருகின்றனர். குறிப்பாக யாழ் இந்துக்கல்லூரி, சுன்னாகம் ஸ்கந் தவரோதயாக்கல்லூரி, யாழ் இந்து மகளிர் கல்லூரி வேம்படி மகளிர் கல்லூரி, சென் ஜோன்ஸ் கல்லூரி, மத்திய கல்லூரி, மகாஜனக் கல் லூரி, யாழ்ப்பாணக் கல்லூரி போன்ற கல்லூரிகள் தீவக மாணவர் களின் கல்வி வளர்ச்சிக்குப் பெருந் தொண்டாற்றியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மருத்துவர்களையும், பொறியியலாளர் களையும், மற்றும் கலைப் பட்டதாரிகளையும் ஏனைய துறைசார் வல்லுநர்களையும் தீவகத்திற்கு வழங்கியுள்ளன.
தீவகப் பாடசாலைகளைப் பொறுத்த வரை புனித அந்தோனி யார் கல்லாரி ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இக்கல்லூரி தீவக மக்களின் கல்விக்கும் உயர்வுக்கும் அரும்பெரும் தொண்டாற்றியுள்ளது. ஆனால் காலப்போக்கில் வேலணை மத்திய கல்லூரியின் வளர்ச்சி, யாழ் குடாநாட்டுக்குச் செல்லும் பண்பு அதிகரித்துக் காணப்படல், பிரபல்யம்மிக்க ஆசிரியர்களின் இடப்பெயர்வு போன்ற பல காரணிகள் இக்கல்லூரியின் வளர்ச்சியினைப் பாதித்துள்ளன என்றே கூறவேண் டும். 1970 கள் வரை விஞ்ஞான, மற்றும் கலைத்துறைகளுக்கு கணிசமான மாணவர்களை அனுப்பிய போதிலும் படிப்படியாக இது குறைந்து கொண்டு செல்கின்றது.
1960 களில் வேலணை மத்திய கல்லூரி விஞ்ஞான, கலைத் துறை களுக்கு மாணவர்களைத் தயார் செய்து அனுப்பி வந்தது. தற்போது இக்கல்லூரியில் இருந்து வருடம்தோறும் ஒரு சில மாணவர்களே பல் கலைக்கழகம் செல்கின்றனர், புங்குடுதீவு மகா வித்தியாலயம் விஞ்ஞா னத்துறையில் அக்கறை கொள்ளவில்லை. விஞ்ஞானக்கல்வியை கற்க விரும்பும் மாணவர்கள் யாழ் நகரில் வேறு பாடசாலைகளிற் தம்மை இணைத்துக் கொள்கின்றனர். கலைத்துறைக் கல்வி போதிக்கப்படு கின்ற போதிலும் பல்கலைக்கழகத்திற்கு மிகச் சிறிய எண்ணிக்கையி னரே நுழைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1 சி தரத்தினைக் கொண்ட நயினாதீவு மகாவித்தியாலயம் சார்பு ரீதியாக பல்கலைக்கழகத்திற்கு கூடிய மாணவர்களை அனுப்பி வரு கின்றது. குறிப்பாக வர்த்தகம், மற்றும் கலைத் துறைகளுக்கு இப்
64

பாடசாலையில் இருந்து மாணவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். மண்டைதீவு, நெடுந்தீவு மகாவித்தியாலயங்கள் 1970 களில் ஒரு சில மாணவர்களைப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிய போதிலும் தற் போது இந்நிலை குறைவடைந்து செல்கின்றது.
பொதுவாக ஒரு பாடசாலையின் வளர்ச்சி நிலையை ஆண்டு 5 க்கான புலமைப்பரிசில் பெறுபேறுகள், க. பொ. த. (SFT/35 ) Lutfu சைப் பெறுபேறுகள், க. பொ. த. (உ/த) பரீட்சை பெறுபேறுகள் என்பவற்றினூடாக வெளிப்படுகின்றன. தீவகப்பாடசாலைகள் மேற் குறித்த மூன்று பெறுபேறுகளிலும் ஏனைய கோட்டங்களோடு ஒப்பிடு மிடத்து பின்தங்கியதாகவே இருக்கின்றன. இத்தகைய நிலைக்கு பிர தான காரணிாளாக அமைவது பெளதீக , பண்பாட்டுக் காரணிகளே ஆகும். பெளதீக ரீதியாக இப்பிரதேசம் தனித்தனிக் கூறுகளாகக் காணப்படுகின்றமை கல்வி வளர்ச்சிக்கான பரந்த செயற்பாடுகளை மட்டுப்படுத்தி வைத்திருக்கின்றது. பண்பாட்டு ரீதியாக மூன்று கார ணிைகள் இப்பிரதேசக் கல்வி வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற் படுத்தி வருகின்றன.
1. பெற்றோர்
2. மாணவர்கள்
3. கல்வித்திணைக்களத்தினரும் ஆசிரியர்களும்
1. தீவுப்பகுதியில் 70 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வருகின்றனர். இவர்களால் பிள்ளைக ளின் கல்வி வளர்ச்சிக்கு ஊக்கம் கொடுக்க முடியவில்லை. இவர் கள் மாணவர்களின் கல்வி வளர்ச்சி பற்றி பெரும் சிந்தனை கொண்டவர்கள் எனக் கூறமுடியாது. வசதிபடைத்தவர்களும் அரச தொழில்களில் ஈடுபட்டவர்களும் தமது பி ஸ் ளை களை யாழ்ப்பாண நகாப்பாடசாலைகளிற் சேர்த்துவிடுகின்றனர். இவர் களில் கணிசமானோரே தீவுப்பகுதி மக்களின் கல்வி உயர்வுக்குக் காரணமாக விருந்துள்ளனர். வளவாய்ப்புக்கள் குறைந்த தீவுப்பகு திகளில் தொழில் வாய்ப்புக்கள் குறைவாகவிருப்பதால் கணிசமான குடும்பத்தலைவர்கள் வெளிமாவட்டங்களில் தொழில் புரிந்து வரு கின்றனர். இந்நிலையில் பிள்ளைகளின் கல்வியில் குடும்பத்தலைவி பெரும் அக்கறை கொண்டவர்களாகவிருக்கவில்லை என்றே கூற வேண்டும்.
2. ஏனைய கோட்டங்களோடு ஒப்பிடுமிடத்து சார்பு ரீதியாகப் பாட சாலைகள் அதிகமாகவிருந்த போதிலும் கட்டடங்கள், நூல்நிலை யங்கள், விளையாட்டுத் திடல்கள், தளபாடங்கள், கற்பித்தல்
65

Page 48
உபகரணங்கள் என்பன மிகவும் மட்டுப்படுத்தப்பட்டனவாக விரு கின்றன. இவையும் கல்வி வளர்ச்சியைப் பாதிப்பனவாகவுள்ளன. உதாரணமாக யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியும் புங்குடுதீவு மகா வித்தியாலயமும் அரசினால் வழங்கப்பட்ட தரத்தினைப் பொறுத்த வரை 1ஏ பி பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கது.
விஞ்ஞானக்கல்விக்கான அத்திவாரம் தகர்க்கப்பட்டுள்ளது என்றே கூறவேண்டும். இதன் விளைவாகத் தீவகமாணவர்கள் கலைத் துறை, வணிகத்துறைக்கற்கை நெறிகளில் ஈடுபாடு கொள்ள வேண் டியுள்ளது.
மாணவர்களைப் பொறுத்தவரை பொதுவாக தீவகப்பாடசாலை களிற் கற்பவர்கள் கல்விசார்புலமை குறைந்தவர்கள் எனத் தெரி விக்கப்படுகின்றது. கல்விசார்புலமையுள்ள மாணவர்கள் நகர் பாட சாலைகளுக்குச் சென்றுவிடுவதுதான் காரணம் என அத்துறையில் ஈடுபாடு கொண்டோர் தெரிவிக்கின்றனர். இந்நிலையாலேயே கல்வி நிலை வீழ்ச்சியடைவதாக கொள்ளப்படுகின்றது.
கோட்டங்களோடு ஒப்பிடும்போது அதிகமாகவிருக்கின்றது. பெற் றோரின் நலிந்த பொருளாதாரநிலை, பிள்ளைகள் தொழில் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம், வெளிநாட்டு மோகம் அதிகரித்து இருத் தல், மாணவர்கள் தாம் கற்கும் வகுப்புக்கேற்ப தகுதியற்றிருத் தல், வீடுகளில் கல்வி கற்பதற்கான சூழல் கா ண ப் படா மை போன்ற பல காரணங்களினால் ஆண்டு ஆறிலிருந்து படிப்படி யாக ஆண்டு 11 வரை இடைவிலகல் அதிகரித்துச் செல்கின்றது. ஆண்டு 11 இல் க. பொ. த. (சா/த பரீட்சையின் பெறுபேறா எனது க.பொ.த (உ/த) வகுப்பை கற்பதற்கு ஏற்றவகையில் கிடைக் கப் பெறாமையும் இடைவிலகல் அதிகரிப்பதற்கான காரணிகளி லொன்றாகும். உதாரணமாக யாழ்நகர பாடசாலைகளில் 75 - 90 சதவீதமானவர்கள் உயர் வகுப்பில் பயிலக்கூடியதாகவிருக்க, தீவுப் பகுதிகளில் 10 - 15 சதவீதமானவர்களே பயிலக்கூடிய வாய்ப் பினைப் பெறுகின்றனர்.
மாணவர்கள் இடைவிலகல் யாழ்ப்பாண மாவட்டத்தின் ஏனைய
தகுதியான ஆசிரியர்களைப் பெற்றுக் கொள்வதில் காணப்படும் கஷ்ட நிலைகளும் கல்விநிலை சிறப்படையாமைக்குரிய காரணிக ளில் முக்கியமானதாகும். தீவுப்பகுதி ஒரு கஷ்டப்பிரதேசமாகக் கருதப்படுகின்றது. இப்பிரதேசத்திற்கு வெளியிலிருந்து வரும் ஆசி ரியர்கள் தமது கடமைகளை முழுமையாகச் செய்யத் தவறுகின் றனர். அதாவது அவர்கள் எவ்வளவிற்குச் சலுகைகள், உரிமை
66

கள் இருக்கின்றதோ அவற்றைப் பூரணமாக அனுபவிக்கின்றனர். இந்நிலையால் மாணவர்களுக்கான கல்வி நிலை பாதிக்கப்படுகின் றது. அதுமட்டுமல்லாது உள்ளூர் ஆசிரியர்கள் யாவரும் முழுமை யாக மாணவர்களின் கல்விக்குத் தம்மை அர்ப்பணிக்கின்றனர் எனக் கொள்ள முடியாது.
7. கல்வித்கிணைக்களமும் இந்தப் பின்தங்கிய பிரதேசக்கல்வி வளர்ச் சியில் பெருமளவில் அக்கறை கொண்டவர்களாகவிருக்கவில்லை முன்னேற்றமடைந்த மற்றும் நகரப்பாடசாலைகளின் வளர்ச்சியில் செலுத்தும் அக்கறை தீவுப்பகுதி போன்ற பின்தங்கிய பாடசா லைகளிற் செலுத்துவதில்லை. வளவாய்ப்புக்களைப் பின்தங்கிய பிரதேசங்களுக்குப் பகிர்ந்தளிப்பதிலும் பெரும் அக்கறை கொண்ட வர்களாயில்லை.
இடம்பெயர்நிலையும் கல்வியும்
1991 ஆம் ஆண்டு தீவுப்பகுதி பூணூரீலங்கா இராணுவத்தின் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட வேளை குடாநாட்டுடன் தரைப் போக்குவரத்தினைக் கொண்ட வேலணைத்தீவு, புங்குடுதீவு, மண்டை தீவு ஆகிய பகுதிகளிலிருந்து 95.0 சதவீதத்திற்குமேற்பட்டோர் யாழ்ப் பாணக்குடாநாட்டிற்கும் ஏனைய பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் இடப்பெயர்வினை மேற்கொண்டுள்ளனர். நயினாதீவு, அனலைதீவு, நெடுந்தீவு, எழுவைதீவு மக்கள் அவ்வப்பிரதேசங்களில் தவிர்க்க முடி யாத நிலையில் தங்கவேண்டியேற்பட்டது. இதனால் அத்தீவுகளின் கல்விநிலை எவ்வாறுள்ளது என்பது பற்றி அறியமுடியாதுள்ளது. மக் கள் இடப்பெயர்வினை மேற்கொண்ட தீவு களி ல் எஞ்சியிருக்கும் மாணவர்களின் கல்விநிலை பரிதாபத்திற்குரியது. மேற்படி பிரதேசங் களிலுள்ள மாணவர்களை ஒன்றிணைத்து புங்குடுதீவு மகாவித்தியால யக் கட்டடத்தில் இளைப்பாறிய ஆசிரியர்களையும் ஆரசு ஊழியர்க ளையும் கொண்டு கல்வி போதிக்கப்படுவதாகத் தெரியவருகின்றது. அவர்களின் கல்வி வளர்ச்சியின் அடைவுகள் பற்றி விபரமாக எவற் றையும் அறியமுடியவில்லை.
புங்குடுதீவு, வேலணைத்தீவு, மண்டைதீவு ஆகியவற்றிலிருந்து இடப்பெயர்வினை மேற்கொண்ட மாணவர்களைப் பொறுத்தவரை அவர்கள் தம் கல்வி நிலையானதும் பரிதாபத்திற்குரியதாகவே காணப் படுகின்றது. ஏற்கனவே தீவகத்தில் அடிப்படை வசதிகள் குறைந்த நிலையிற் கல்வியைப் பெற்ற மாணவர்கள் எந்தவிதமான வ ச தி வாய்ப்பற்ற - அனாதரவாக்கப்பட்ட சூழலில் த ம து கல்வியைத் தொடர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் கல்வி
67

Page 49
கற்றுவருவதைப் பொறுத்தவரை 4 வகைகளுக்குள் உட்படுத்திப்பார்ப்
பது சிறப்பானது.
1. குடாநாட்டில் வேறு பாடசாலைகளுடன் இணைந்து, ஆனால் பெயரளவில் தனித்து இயங்குவது (வேலணை சரஸ்வதி வித்தி
யாசாலை - பெரியபுலம் மகாவித்தியாலயம்)
2. தனியார் கல்வி நிறுவனங்களில் இயங்குவது. (புங்குடுதீவு பூரீ சித்தி
விநாயகர் வித்தியா லயம் - தனியார் கல்வி நிலையம்)
3. மேலதிக வளவாய்ப்புள்ள பாடசாலைக்கட்டடங்களில் இயங்குவது (புங்குடுதீவு பூரீ சுப்பிரமணிய மகா வித்தியாலயம்-யாழ் இந்து மக ளிர் கல்லூரி விடுதி)
4. தனித்துக் கொட்டகை அமைத்து இயங்குவது. (வேலணை சேர் வைத்திலிங்கம் துரைசுவாமி ம. ம. வி. - அரசடி வீதி, யாழ்ப்பா ணம்) என நான்கு பிரிவுகளாகப் பிரித்துக் கொள்ளலாம். இவ் வாறு இயங்கும் பாடசாலைகளில் கல்விக்கான வளவாய்ப்புக்கள்
மிகக் குறைவே.
மேலும் தீவுப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மாணவர்களிடையே இடைவிலகல் மிக அதிகமாகவிருக்கின்றது. தாம் கற்ற பாடசாலை கள் இடம் பெயர்ந்து வாழும் பகுதிகளுக்கு அண்மையில் இயங்காமை மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளை பெற்றோரால் வழங்க முடியாதளவிற்கு பொருளாதாரக் கஷ்டங்கள், வெளிநாடுசெல்லல், பெற்றோரதும் மாணவர்களதும் உடல், உளத் தாக்கம் போன்ற பல் வேறு காரணிகளால் இடைவிலகல் அதிகரித்துள்ளது. மேலும் இடப் பெயாவினை மேற்கொண்டவர்கள் யாவரும் ஒரே இடத்தில் குடியிருப் பினை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. குறிப்பிட்ட சில மாணவர்கள் அவ்வப்பிரதேசப் பாடசாலைகளிலும் இணைந்துள்ளனர். 1991 ஆம் ஆண்டு இடம் பெயர்வதற்கு முன்னர் தீவுப்பகுதியில் பாடசாலைகள் இயங்கிய காலத்தில் மாணவர்களின் வரவும் இடம்பெயர்ந்த பின்னர் அவ்வப் பாடசாலைகளில் கற்கும் மாணவர்களின் வரவும் அட்ட வணை 4 இல் தரப்பட்டுள்ளது. அவற்றினைக் கவனத்திற்கெடுக் கும் போது மாணவர்கள் கணிசமான அளவில் அவ்வப் பாடசாலை களை விட்டு இடைவிலகியுள்ளனர் என்பது தெளிவாகின்றது.
68

அட்டவணை 4
இடம் பெயர்ந் து இயங்கும் தீவுப் பகுதிப் பாடசாலைகளின் விபரமும் அவற்றில் மாணவர் வரவும் 1991 - 1993
இல . பாடசாலையின் பெயர் மாணவர் தொகை
- | 99 (1 19932 01. யா/வேலணை ஆத்திசூடி வித்தியாலயம்
யா/பெரியகடை பாரதிபாஸா வித். 33 19
02. யா/வேலணை மேற்கு நடராசா வித்.
யா/முகமதியா முஸ்லிம் அ. பா. 65 303 א
03. யா/சுருவில் றோ. க. பாடசாலை
யா/பெரியகடை பாரதிபாஸா வித். &5 32
04. யா/சேர். வைத். து. ம. மகா வித்.
இல. 70/20 அரசடி வீதி, யாழ்ப்பாணம் 0.94 44 4
05. யா/சரவணை நாகேஸ்வரி மகா வித்.
யா/வைத்தீஸ்வரா கல்லூரி 475 229
06. யா/வேலணை கிழக்கு மகா வித்.
எக்கொளம் கல்வி நிலையம் , மனோகராச் சந்தி, யாழ். 47 220 .
07. யா/வேலணை சைவப்பிரகாச வித்.
பட்டப் படிப்புகள் கல்லூரி, ஸ்ரான்லி வீதி, 913 ” 383
08. யா/வேலணை சரஸ்வதி வித்.
யா/பெரியபுலம் மகா வித். 5丝7 363
09. யா/சரவணை சின்னமடு றோ. க. பாடசாலை
அரியாலை அரிசி ஆலை, அரியாலை 192 158
10. யா/வேலணை தெற்கு ஐயனார் வித்.
யா/பெரியகடை பாரதிபாஸா வித். 219 B2
ll. யா/செட்டிபுலம் 9 . ğ5. é95. ULufTL .
யா/கொழும்புத்துறை இந்து ம. வி. 83 49
69

Page 50
66.
12.
l3.
14.
5.
16.
17.
8.
19.
20.
21.
,22。
பாடசாலையின் பெயர் Cost Goor Gatsj
1991 யா/மண்டைதீவு மகாவித்தியாலயம் புதிய உயர்கலைக் கல்லூரி, ஆரியகுளம் சந்தி, யாழ். 406
யா/அல்லைப்பிட்டி பராசக்தி வித். பி. எம். சி. லேன், மணிக்கூட்டு வீதி, யாழ். 406
யா/மண்டைதீவு றோ. க. த. பாடசாலை பாரதிதாசன் கல்விநிலையம் ஸ்ரான்லி வீதி, யாழ். 286
யா/மண்டைதீவு கார்த்திகேய வித்தியாலயம் பாரதிதாசன் கல்வி நிலையம், ஸ்ரான்லி வீதி, யாழ். 175
யா/மண்கும்பான் அ. த. க. பாடசாலை யா/ஆனைப்பந்தி குருநாதசுவாமி வீதி 9 I
யா/அல்லைப்பிட்டி றோ. க. த. க. பாட பி. எம். சி. லேன், மணிக்கூட்டு வீதி யாழ். 175
யா/மண்கும்பான் அ. மு. க. பாடசாலை இயங்கவில்லை. 30
யா/புங்குடுதீவு மகா வித்தியாலயம் இல. 80 பிறவுண் வீதி, யாழ்ப்பாணம். 623
யா/புங்குடுதீவு பூரீகணேச மகா வித். யா/வண்ணார்பண்ணை மேற்கு அ. மு. பாட 397
யா/புங்குடுதீவு பூரீ சித்தி விநாயகர் மகா வித். உயர்கலைக் கல்லூரி ஆணைப்பந்தி 322
புங்குடுதீவு பூரீ கமலாம்பிகை வித்.
உயர்கலைக் கல்லூரி, ஆனைப்பந்தி 423 யா/புங்குடுதீவு பூரீ சண்முகநாத வித். பண்டிதர் குடியிருப்பு கெற்பலி 304 யா/புங்குடுதீவு பூரீ சுப்பிரமணிய மகளிர் வித். யா/யாழ் இந்து மகளிர் விடுதி 448 யா/புங்குடுதீவு அரியநாயகன் புலம் அ.த.க.வித். யா/யாழ் இந்து மகளிர் விடுதி 45
70
தொகை
19932
22
193
126
52
I 12
35
338
260
I 02
143
1026
88
16

இல.
26
27.
25。
29.
30.
31.
32。
33.
34.
35。
36.
37.
38.
U17-éa 606vucsaiv 62uui மாணவர் தொகை
I99 || 1 யா/புங்குடுதீவு இறுப்பிட்டி அ. த. க. வித். யாlயாழ் இந்து மகளிர் விடுதி 143
யா/புங்குடுதீவு பூரீ பராசக்தி வித். யா/ஆனைக்கோட்டை வைத்திலிங்கம் வித். 49
யா/புங்குடுதீவு இராஜேஸ்வரி வித். யா/யாழ் இந்து மகளிர் விடுதி 3.
யா/புங்குடுதீவு குறிகாட்டுவான் அ.த.க. வித். உயர்கலைக் கல்லூரி, ஆனைப்பந்தி ● 5
யா/புங்குடுதீவு றோ, க, த. க. வித். 80 பிறவுண் வீதி, யாழ்ப்பாணம். 350
யா/புங்குடுதீவு சேர் துரைச்சுவாமி வித். யா/யாழ் இந்து மகளிர் விடுதி 127
யா/புங்குடுதீவு திருநாவுக்கரசு வித். உயர்கலைக்கல்லூரி, ஆனைப்பந்தி 98
யா/புங்குடுதீவு மேற்கு அ. மி. த. வித். யா/செட்டித்தெரு மெ. த. க. பாட. 230
யா/கரம்பொன் சண்முகநாதன் மகா வித். அரியாலை அரிசி ஆலை, கண்டிவீதி, 魏
அரியாலை ვ72
யா/கரம்பொன் சிறிய புஸ்ப மகளிர் வித். சென்ஜோன்ஸ் அக்கடமி, சுண்டிக்குளி 383
யா/ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல். சென்ஜோன்ஸ் அக்கடமி, சுண்டிக்குளி 480
யா/கரம்பொன் சிவகுருநாத வித். சென்ஜோன்ஸ் அக்கடமி, சுண்டிக்குளி 62
யா/மெலிஞ்சிமுனை றோ. க. த. க. பாட சென்ஜோன்ஸ் அக்கடமி, சுண்டிக்குளி 109
71.
19932
58
36
22
34
16
2.
219
463
2.
168
O
15

Page 51
இல,
39.
40.
41.
42。
43.
44.
பாடசாலையின் பெயர் மாணவர் தொகை
| 99 (1 19932
யா/ஊர்காவற்றுறை புனிதமரியாள் மகளிர் வித். சென்ஜோன்ஸ் அக்கடமி, சுண்டிக்குளி 430 130
யா/ஊர்காவற்றுறை றோ. க. த. பாட , சென்ஜோன்ஸ் அக்கடமி, சுண்டிக்குளி 224 61
யா/நாரந்தனை றோ. க. மகா வித். சென்ஜோன்ஸ் அக்கடமி, சுண்டிக்குளி 696 139
யா/பருத்தியடைப்பு கதிரேசானந்த வித். சென்ஜோன்ஸ் அக்கடமி, சுண்டிக்குளி 96 17
யா/நாரந்தனை கணேச மகா வித் , இடம் பெயர்ந்தோர் முகாம், நாவற்குழி 186 446
யா/தம்பாட்டி அரசினர் த. க. வித். இடம் பெயர்ந்தோர் முகாம், நாவற்குழி 279 4五五
12977 7304
தீவுப்பகுதியில் பாடசாலை இ யங் கி ய வேளையில் மாணவர்களது எண்ணிக்கை, யாழ்ப்பாணக் கல்வித்திணைக் களத்தின் நிர்வாக அறிக்கை - 1991லிருந்து பெறப்பட் ll-ğil. w
தீவக இடம் பெயர்ந்தோர் நலன் காக்கும் கழகத்தினால் சேகரிக்கப்பட்ட தகவல்களிலிருந்து பெறப்பட்டது. எவ்வா றெனினும் மாணவர் இடை விலகல் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டு செல்கின்றன.
அடுத்து இடம்பெயர்ந்த பாடசாலைகளில் மாணவர்கள் வரவு
மிகக்குறைவாக இருந்த போதிலும் தொடர்ந்தும் அப்பாடசாலை களை இயங்க வைப்பதில் கல்வித்திணைக்களத்தினர் அக்கறை கொண் டுள்ளனர். உண்மையில் தமது ஆரம்ப இடத்தில் கல்வி பயின்றவர் களோடு ஒப்பிடுமிடத்து மிகக் குறைவான மாணவர்களே கல்வி பயில் கின்றனர். ஒரு கூரைக்குள் ஒன்றுக்கு மேற்பட்ட பாடசாலைகள் இயங் குகின்றன. இதனால் ஆசிரிய வளம் வீணடிக்கப்படுகின்றது என்றே கறவேண்டும்.
72

இடப்பெயர்வினை மேற்கொண்ட மக்கள் வாழ்ந்துவரும் பல குடியிருப்புக்களில் மாணவர்கள் மேலதிக கல்வியினைப் பெற்று க் கொள்வதற்கு வாய்ப்பினைப் பெற்றிருக்கவில்லை. நெருக்கமான குடி யிருப்புக்களாலும் கல்வி கற்பதற்கான சூழல் காணப்படாமையாலும் போசாக்கற்ற உணவினை உட்கொள்வதனாலும் மாணவர்கள் கல்வி யில் அக்கறை கொண்டவர்களாகவிருக்கவில்லை என்பதை பல்வேறு அகதிமுகாம்களுக்கும் விஜயம் செய்த போது அறியமுடிந்தது. தீவக மக்களின் கல்வி வளர்ச்சி அடைவதற்குரிய வாய்ப்புக்கள் குறைவ டைந்து கொண்டே செல்கின்றன. இதனை உணர்ந்து கல்வித்திணைக் களத்தினர், கல்விமான்கள், பொது ஸ்தாபனங்கள், பெற்றோர்கள் யாவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய கால கட்டம் இதுவென்
பது குறிப்பிடத்தக்கது.
73

Page 52
இயல் - ஏழு
தீவகம் - போக்குவரத்து
ஒரு பிரதேசத்தின் பொருளாதார, சமூக, பண்பாட்டு வளர்ச் சிக்கு, அப்பிரதேசத்திற்கும் ஏ னை ய பிரதேசங்களுக்குமிடையிலான போக்குவரத்து மிகவும் முக்கியமானது. அந்த வகையில் தீவுப்பகுதி யின் போக்குவரத்து முறைமைகள் நாட்டின் ஏ னை ய பிரதேசங்க ளோடு ஒப்பிடுமிடத்து மிகவும் பின்தங்கியதாகவே காணப்படுகின் றது. குறிப்பாகப் போக்குவரத்து முறைமைகள் காலத்துக்குக் காலம் விருத்தி பெற்று வந்துள்ளபோதிலும் சிறப்புத்தன்மையைப் பெற்று வருகின்றது எனக் கூறமுடியாது. தீவுப்பகுதியின் போக்குவரத்தினை வர்த்தக நடவடிக்கையுடன் இணைத்து ஆராய்தல் அவசியமாகின் றது. எனவே தீவகத்தின் போக்குவரத்தினை 3 பிரிவுகளாக வகைப் படுத்தல் தவிர்க்கமுடியாதுள்ளது.
அ) வரலாற்றுக்காலப் போக்குவரத்து முறைமைகள் ஆ) ஏனைய பிரதேசங்களுடனான போக்குவரத்து முறைமைகள் இ) உள்ளூர் போக்குவரத்து முறைமைகள்
என்பனவே அவையாகும். பண்ணைப் பாலமும் புங்குடுதீவு - வேல ணைப் பாலமும் அமைக்கப்படுவதற்கு முன்னர் தீவுப்பகுதிகள் யாவும் தனித்தனிக் கூறுகளாகக் காணப்பட்டிருந்தன. அதாவது நிலத்தி னுரடான போக்குவரத்து எவற்றையும் கொண்டிருக்கவில்லை. சகலரும் கடல்வழிப் போக்குவரத்தினூடாகவே பிரயாணம் செய்து வேறு பிரதேசங்களைச் சென்றடைந்தனர்.
அ) வரலாற்றுக்காலப் போக்குவரத்து முறைமைகள்
தீவுப் பகுதிகள் பல்லாண்டு காலமாக பொருளாதார, சமூக, பண்பாட்டுரீதியாக ஏனைய பிர் தேசங்களிலிருந்து வேறுபட்ட பண்பு களைக் கொண்டிருக்கின்றன. போக்குவரத்தையும் வர்த்தகத்தையும் பிரிக்க முடியாததாகவுள்ளது. எனவே அவற்றினுாடாக போக்குவரத்து எவ்வாறு காணப்பட்டது என்பதை அறிவது அவசியமாகின்றது. தென்னிந்தியாவுக்கும் நெடுந்தீவு உட்பட தீவகப் பகுதிகளுக்குமிடை யில் குடியேற்றம், வர்த்தகம், கடவுள் வழிபாடு ஆகியவற்றின் விளை வாக போக்குவரத்து தொடர்ச்சியாக நடைபெற்றுவந்துள்ளது. அது மட்டுமல்லாது இப்பிரதேசங்கள் தென்னிந்தியாவுக்கும் யாழ்ப்பாணக்
74

குடாநாட்டுக்குமிடையில் அமைவுற்றிருப்பதால் பெ ரும் பா லா ன தொடர்புகளும் இத்தீவுகளூடாக நிகழ்ந்திருக்க வாய்ப்புண்டு.
மேலும் வர்த்தக நோக்கத்தின் பொருட்டு ஒன்றில் இப்பிரதேசங் களுக்கு வர்த்தகர்கள் வந்து விற்பனைப் பொருட்களைப் பரிமாறிச் சென்றிருந்தனர் அன்றில் இப்பிரதேச மக்கள் வர்த்தகத்தில் சிறப்பு த் தேர்ச்சி பெற்றிருந்தனர் எனலாம். இவை பற்றிய பல வரலாற்று குறிப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன குறிப்பாக ஊர்காவற்றுறையைச் சார்ந்த பகுதி நாட்டில் மிக முக்கியமான வர்த்தக மையமாக இருந் துள்ளதாகத் தெரியவருகின்றது. இவை தவிர பருத்தியடைப்பு, அரா லித்துறை, வெள்ளைக் கடற்கரைப் பகுதி, வேலணைத்துறை போன் றன வேலணைத்தீவிலும், கழுதைப்பிட்டி (இறுப்பிட்டி) குறிகாட்டு வான், மடத்துவெளித் துறை, கோரியாவடி போன்றன புங்குடுதீவிலும் கோவிலடி, வங்களாவடி என்பன நயினாதீவிலும் மாவலித் துறை, பெரியதுறை என்பன நெடுந்தீவிலும் காணப்படும் முக்கியமான பட குத்துறைகளாகும். மிக நீண்டகாலமாக நயினாதீவுத் துறைகளூடாக மேல்நாட்டு, தமிழ்நாட்டு வணிகர்கள் வந்துபோனதாகத் தெரிவிக்கப் படுகின்றது. நெடுந்தீவு மருத்துவ மூலிகை வளர்ப்புக்குப் பெயர் பெற்ற பிரதேசமாகும். யாழ்ப்பாண வைபவமாலையில் இத்தீவினைப் பற்றிக் குறிப்பிடுகையில் *மருத்துவ மாமலைவனம்" எனக் குறிப்பி டப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மூலிகைகள் வெளி நாடுகளுக்கும் ஏனைய பகுதிகளுக்ரும் அனுப்பி வைக்கப்பட்டதாக இவ்வூர் மூத்தோர் தெரிவிக்கின்றனர், அதேபோலவே சீனா, யாவா, அரேபியா போன்ற நாடுகளிலிருந்து இத்தீவுகளுக்கு வர்த்தக நோக் கத்துடன் வருகை தந்துள்ளனர். பருத்தியடைப்புப் பகுதிக்கு இந்தியா, சீனா, பர்மா போன்ற நாடுகளிலிருந்து பருத்தி இறக்குமதி செய்யப் பட்டதாகவும் தென்னிந்தியாவிலிருந்து காளைமாடுகள், ஆ டு க ள் கொண்டுவரப்பட்டதாகவும் அவற்றை வாங்குவதற்காக வெளியார் இங்கு வந்து கூடுவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. தீவுப்பகுதியில் 1940 கள் வரை சங்கு குளித்தல் வருமானத்தைப் பெற்றுக்கொள் ளும் பிரதான தொழிலாகக் காணப்பட் டிருந்தது. குறிப்பாக எல்லாத் தீவுகளிலும் சங்கு குளித்தல் சாதியடிப்படையிலல்லாது வருமானத் தைத்தரும் தொழில் என்ற ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. இவ்வாறு பெறப்பட்ட சங்குகள் ஊர்காவற்றுறைக்கு அண்மையிலுள்ள சங்குமால் என்ற இடத்தில் சேமித்து, தரப்படுத்தி ஏற்றுமதி செய் யப்பட்டதாக வரலாறு தெரிவிக்கின்றது. எனவே தான் அவ்விடத் திற்கு சங்குமால் என்ற பெயர் வந்தது. ஆனால் சுதந்திரத்தையடுத்து இத்தொழில் கைவிடப்பட்டது. மேலும் கேரளாவிற்கு ஊர்காவற் றுறை, அராலித்துறை, பெரியதுறை, கழுதைப்பிட்டித் துறைகளு டாகப் புகையிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. எனவே உள்ளூர்
75

Page 53
போக்குவரத்து பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்வதில் சிரமமிருந்த போதிலும் வர்த்தகத்துடன் கூடிய கடற்போக்குவரத்துக் காணப்பட் டுள்ளதை அறியமுடிகின்றது.
ஆ) ஏனைய பிரதேசங்களுடனான போக்குவரத்து
முறைமைகள்
தீவுப்பகுதிகள் ஆழங்குறைந்த கடற்பரப்பினால் தனிமைப்படுத் தப்பட்டுள்ளது. இதன் விளைவாக தீவுகளுக்கிடையிலான போக்குவ ரத்தாயினும் சரி, நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கிடையிலாயினும் சரி வள்ளங்கள், படகுகள் மார்க்கமாகவே பயணம் செய்ய வேண்டி யது தவிர்க்கமுடியாதது. புங்குடுதீவு - வேலணைப்பாலம், பண்ணைப் பால வேலைகள் பூர்த்தியாக்கப்பட்ட பின்னர் புங்குடுதீவு, வேலணைத் தீவு, மண்டைதீவு மக்கள் தரைவழியாகப் போக்குவரத்தினை மேற் கொள்ளக் கூடியதாகவிருக்கின்றது. இதன் விளைவாக இப்பிரதேசங் களின் பொருளாதார, சமூக, பண்பாட்டுக் கோலங்களிற் பெருமள விற்கு மாற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்கலாம். வாணர்பாலம் அமைக்கப்பட முன்னர் புங்குடுதீவு மடத்து வெளித் துறையைச் சார்ந்த பகுதிகளிலிருந்து வேலணைத்துறை, சுருவில் ஐயனார் கோவிலடித் , துறை, கரம்பன் கண்ணகையம்மன் கோவிலடித் துறைகளுக்குச் சிறு வள்ளங்கள் மூலமாக போககுவரத்தினை மேற்கொண்டிருந்தனர். இத் துறைகளூடாகவே நாகபூசணி அம்மன் கோவில் திருவிழாக்களுக்கு மக்கள் சென்று வந்துள்ளனர் எனத் தெரியவருகின்றது. போர்த்துக் கீசர் வருகைக்கு முன்னர் சுருவில், கரம்பன், சங்குமால் போன்ற துறைகளையே ஏனையதீவு மக்கள் பயன்படுத்திவந்துள்ளனர். அவர் களின் வருகையின் பின்னரே ஊர்காவற்றுறை சிறப்பிடம் பெறத் தொடங்கியது எனலாம். எனினும் ஏ னை ய பிரதேசங்களுடனான போக்குவரத்தினைத் தனிததனி தீவுகளாக வகைப்படுத்தி ஆராய்தல் சிறப்புடையது.
நெடுந்திவு:
நெடுந்தீவுக்கும் குடாநாட்டுக்குமிடையிலான போக்குவரவானது ஆரம்ப காலங்களில் வத்தைகள், தோணிகள், கட்டுமரங்கள் மூல்மமாகவே நடைபெற்று வந்துள்ளது. 1933ஆம் ஆண்டிலிருந்து மேதர் இயந்திரப்படகு இத்தீவுக்கும் - ஊர்காவற்றுறைக்குமான சேவையிலீடுபட்டிருந்தது. 1934ஆம் ஆண்டில் தீவகப் போக்குவரத் துச் சங்கத்தினரால் கொள்வனவு செய்யப்பட்ட நாகபூசணி 1 நயி னாதீவு - ஊர்காவற்றுறை போக்குவரத்திலீடுபட்டது. இப்படகின் ஒட்டுனராக நெடுந்தீவைச் சேர்ந்த ஜோசேப் எட்வேட் என்பவர்
76

கடமையாற்றினார். 1937ஆம் ஆண்டு அரசாங்கம் பொதுவேலைப் பகுதியினரின் பராமரிப்பின் கீழ் சில்வர் ஸ்பிறே (Silver Spray) என்ற 40 பேர் பயணம் செய்யக்கூடிய இயந்திரப்படகு ஒன்று நெடுந்தீனஊர்காவற்றுக்றைப் பாதையில் சேவையிலீடுபடுத்தப்பட்டது. ஜோசேப் எட்வேட்டும் அவரது சகோதரங்களாலும் ஜொய்பெல் றோசரி (Joyful R(stry) என்ற இயந்திரப் படகினைக் கொள்வனவு செய்து இப்பாதையில் போக்குவரத்திற்கு அமர்த்தினர். அதேவேளை, நெடுந்தீவினைச் சேர்ந்த பத்து பேர் இணைந்து ஒரு படகினை கொள்முதல் செய்து போட்டி போட்டுச் சேவையில் ஈடுபடுத்தினர். இப்படகினை நெடுந்தீவு மக்கள். பத்துப்பேர் போட்டு ' என்று அழைத்தனர். இப்படகு சிறிது காலம் மட்டுமே சேவையில் ஈடு படுத்தப்பட்டதாகத் தெரியவருகின்றது. இக்காலங்களில் சீகுயின் (Sea Queen) என்ற படகும் கதிரவேல் கொம்பனியால் எம். எம். எல். (M. M. L.) படகும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. இருப் பினும் படகுகள் பழுதடையவே அவற்றைச் சேவையிலிருந்து விவிசி கிக் கொண்டனர் எனத் தெரிய வருகின்றது. சேவையில் ஈடுபட்டி ருந்த படகுகளில் பல பழுதடைந்தது ஒருபுறமிருக்க, அவற்றின் உரி மையாளர்கள் பல்வேறு காரணங்களினால் அத்தொழிலைக் கைவிட்டு வந்தமையால் நெடுந்தீவு மக்கள் போக்குவரத்துக் கஷ்டங்களைத் தொடர்ந்து அநுபவித்தனர் என்றால் மிகையாகாது.
1950 களின் முற்பகுதியில் தீவுப் பகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு. அல்பிரட் தம்பிஐயாவின் முயற்சியினால் சகல வசதிகளையும் கொண்ட இராஜேஸ்வரி என்று பெயரிட்ட இயந்திரப் ப-கு ஒன்று நெடுந்தீவு - ஊர் காவற்றுறை சேவையில் ஈடுபடுத்தப் பட்டது. திரு. அல்பிரட் தம்பிஐயாவின் மனைவியின் பெயரே இராஜேஸ்வரி என்பதாகும். அத்துடன் நெடுந்தீவு பொதுச்சேவை கூட்டுறவுச் சங்கத்தினாலும் படகுச் சேவைகள் நடாத்தப்பட்டுள் ளன. படகுச் சேவையின் தேவை அதிகரித்து வந்த தீால் காலத் துக்குக் காலம் அரசாங்கத்தினர் வசதியான படகுக்ளை இப்பாதை யிற் சேவையில் ஈடுபடுத்த அனுப்பிவைத்தனர். குறிப்பாக எலாறா, குமுதினி, அலையரசி, வ1.தாரகை, மணிமேகலை, வலம்புரி போன்ற படகுகளைக் குறிப்பிடலாம். இலங்கைக் கடற்படையின் காட்டுமிராண்டித்தனத்தினால் குறிகாட்டுவானிலிருந்து 1985-5-25 ஆம் திகதியன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த குமுதிணிப் படகில் இருந்தவர்களை நடுவழியில் மறித்து 30க்கு மேற்பட்டவர் களை வெட்டிக் கொன்ற சோகச் சம்பவம் இன்றும் தீவக மக்கள் மனதில் நீங்காத இடத்தினைப் பிடித்துள்ளது. அத்துடன் நெடுந் தீவிலிருந்து தனியாருக்குச் சொந்தமான மீன்பிடிப் படகுகளும்
77

Page 54
தேவையேற்படும் பட்சத்தில் பயணிகள் படகுகளாகப் பாவிக்கப் பட்டன.
நெடுந்தீவிலிருந்து 23 கி. மீ. தூரத்திலமைந்துள்ள ஊர்காவற் றுறைக்கு இயந்திரப் படகுகள் மூலமாக சராசரி 3 மணித்தியாலங்கள் வரை பிரயாணம் செய்யவேண்டியிருந்தது. வேறு படகுகள் மூல மாயின் நான்கு அல்லது ஐந்து மணித்தியாலங்கள் தேவைப்பட்டது. 1966ஆம் ஆண்டு குறிகாட்டுவான் பாலம் சேவைக்குத் திறந்து விடப் பட்ட பின்னர் நெடுந்தீவு மக்கள் 45 நிமிடங்களில் பிரயாணம் செய்யக்கூடியதாகவிருக்கின்றது. நெடுந்தீவு - ஊர்காவற்றுறை சேவை யில் நாளொன்றுக்கு ஒரு முறையே படகுச் சேவை நடைபெற்றது. குறிக்கட்டுவானுக்கு சேவை மாற்றப்படவே முதலில் இருமுறையும் காலப்போக்கில் மும்முறையுமாக விஸ்தரிக்கப்பட்டது.
இநடுந்திவிலிருந்து அலுப்பாத்தி வரையிலான பயணிகள் படகுச் சேவைகளும் நடாத்தப்பட்டு வந்துள்ளதாக மூத்தோர் தெரிவிக்கின் றனர். ஆனால் பிரயாணிகள் படகுச் சேவை மிகக்குறைவாகவே காணப்பட்டதாகத் தெரிய வருகின்றது. அலுப்பாந்தியிலிருந்து பொருட்களை ஏற்றியிறக்கும் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட lit (3 d5 ளிற் பெரும்பாலானவை நெடுந்தீவிலிருந்து புங்குடுதீவு தெற்கு மண்டைதீவுக் கடலூடாக அலுப்பாந்திக்குச் சென்று வந்தன எனத் தெரியவருகின்றது.
புங்குடுதீவு
புங்குடுதீவுக்கும் குடாநாட்டுக்குமிடையிலான போக்குவரவினை இரண்டு காலகட்டங்களாகப் பிரித்து நோக்குதல் வேண்டும்.
1. வாணர்பாலம் சேவையில் ஈடுபடுத்தப்படுவதற்கு முன்புள்ள
காலப்பகுதி w
2. அதற்குப் பின்னருள்ள காலப்பகுதி
வாணர் பாலம் சேவையில் ஈடுபடுத்தப்படுவதற்கு முன்னர் ւյfäi குடுதீவு மக்கள் இருவழிப் போக்குவரத்தினை மேற்கொண்டிருந்தனர். புங்குடுதீவு மடத்துவெளித்துறையில் இருந்து வள்ளங்களில் சுருவில் வேலணைத் துறைமுகங்களுக்குச் சென்று அங்கிருந்து வாகனங்கள் மூல மாகவோ அன்றில் நடையாகவோ அல்லைப்பிட்டி வரை சென் று பின் மீண்டும் படகுகள் மூலமாக ஆழக்கடற்பரப்பினைக் கடந்து பண் ணையிலோ அன்றில் அலுப்பாந்தியிலோ இறங்கி யாழ்ப்பாண நகரத் தினை சென்றடைவது ஒரு வழியாகும். இப்பயணம் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் ஆபத்து நிறைந்ததாகவிருந்தது.
78

மேற்குறித்த பகுதியினூடாகப் போக்குவரத்தினை மேற்கொள்வ தில் மக்கள் பெருஞ் பிரமிப் பட்டிருந்தனர். அதாவது குறைந்தபட்சம் 6 - 12 மணிக்கிய லங்களை பிரயாணத்தில் செலவுசெய்ய வேண்டி யிருந்தது. 1960 களுக்கு முன்னர் நடந்தும் மாட்டு வண்டியிலும் பிர யாணம் செய்துள்ளனர். வசதி படைத்தவர்கள் காரில் பயணம் செய் திருந்தனர். இக்காலத்தில் வேலணையைச் சேர்ந்த சுருக்கர் கந்தையா என்பவரின் w.r இச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகத் தெரியவருகின் றது. அத்துடன் ஆழம் குறைந்த அராலிக் கடற்பரப்பினைத் தாண்டி அராலி, வட்டுக்கோட்டை ஊடாகவும் குடாநாட்டுடன் தொடர்பி னைக் கொண்டிருந்தனர். இப்பாதையால் மிக நீண்டகாலமாக மக்கள் பயணம் செய்ததுடன் கால்நடைகளையும் எடுத்து வந்துள்ளதாகத் தெரியவருகின்றது.
அடுத்தது புங்குடுதீவு இறுப்பிட்டியிலுள்ள புளியடித்துறையிலி ருந்து ஊர்காவற்றுறைக்கும் அலுப்பாந்திக்கும் கடற்போக்குவர த்தின் மூலமாகப் பிரயாணம் செய்வதாகும். இந்நூற்றாண்டின் ஆரம்ப காலங் களில் பெரிய இயந்திரம் பொருத்தப்படாத பாய்ப்படகுகள் மூலமாக மக்கள் சென்றுவந்துள்ளனர். ஆனால் 1930 களிலிருந்து இயந்திரப் படகுகள் இப்பாதையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. புளியடித் துறை - அலுப்பாந்துக்கான பிரயாண காலம் 4 - 5 மணித்தியாலங் களாகும். இங்கிருந்து புறப்படும் படகு நயினாதீவு அனலைதீவு. எழுவைதீவு ஆகிய தீவுகளில் தரித்துச் சென்றுள்ளது. வேலணைத் தீவினைக் கடந்து செல்வதிலும் பார்க்க இப்போக்குவரத்து சிரமம் குறைந்ததாகவிருந்துள்ளது. இக் காலங்களில் படகுச் சேவையினை நடாத்துவதில் புங்குடுதீவு கிழக்கைச் சேர்ந்த திரு. பொன்னம்பலம் அவர்கள் முன்னின்று உழைத்தார் எனப் பலராலும் தெரிவிக்கப்படு கின்றது.
வாணர் பாலம் திறக்கப்பட்ட பின்னர் இத்தீவு மக்கள் போக்கு வரத்தில் அனுபவித்த கஷ்டம் பெருமளவிற்குத் தீர்க்கப்ப்ட்டது. அதT வது வாகனங்களிற் பண்ணை வரையும் செல்லக்கூடிய வாய்ப்பு ஏற் பட்டது. இக்காலங்களில் பண்ணைக்கும் அல்லைப்பிட்டிக்குமான கடற் பரப்பில் வீதி போடப்பட்டு வந்தபடியால் காலத்துக்குக் காலம் கடற் பிரயாணமும் குறைவடைந்து வந்துள்ளது. அத்துடன் மாருதபுரவி தாம்போதி சேவையில் ஈடுபட்டிருந்தபடியால் போக்குவரத்துப் பிரச் சினை படிப்படியாகக் குறைக்கப்பட்டது. 1956 ஆம் ஆண்டில் பண் ணைப்பாலம் பூர்த்தியாக்கப்பட்ட பின்னர் தீவுப்பகுதியின் போக்குவ ரத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஊர்காவற்றுறைப்பகுதியும் பட்டினமும் முக்கியத்துவம் இழந்து வருவ தற்கான முக்கிய காரணி பண்ணைப்பாலம் சேவைக்குத் திற கப் பட்டதேயாகும். ,

Page 55
வேலணைத்தீவு
வேலணைத்தீவு வாழ் மக்கள் ஏனைய தீவுகளைச் சேர்ந்த மக் களை விட குடாநாட்டுக்கான போக்குவரவில் பெரும் பிரச்சினைகளை அநுபவித்து வந்துள்ளனர் எனக்கூறமுடியாது. இத்தீவு வாழ்மக்கள் மூன்று பாதைகளூடாகக் குடாநாட்டுக்குச் சென்று வந்துள்ளனர். மண்டைதீவு, அல்லைப்பிட்டி மக்கள் மண்டைதீவிலிருந்து அலுப் பாந்தியூடாகக் குடாநாட்டுடன் தொடர் பு கொண்டிருந்தனர். இலங்கை இந்திய ஒப்பந்தப்படி இந்திய அமைதி காக்கும் படை வடக்கு கிழக்கு மாகாணத்தில் 1987 - 1989 வரை தரித்து நின்ற வேளை தீவக மக்கள் அலுப்பாந்தி - மண்டைதீவு கடற் போக்கு வரத்தினைப் பயன்படுத்திப் பிரயாணம் செய்து வந்துள்ளனர் என் பதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டாவதாக வேலணைத்தீவு மக்கள் குடாநாட்டுடனான போக்குவரத்தினை வேலணை வடக்கு - அராலிப் பாதையினுரடாகச் சென்று வந்துள்ளனர். இப்பிரதேச கடற்பரப்பு ஆழம் குறைந்த படியால் சிறு வள்ளங்கள் மூலமாகவும் நடந்தும் பிரயாணம் செய் துள்ளனர். குறிப்பாக வேலணைத்தீவில் வசதி படைத்தவர்கள் தங் கள் பிள்ளைகளைக் குடாநாட்டுக் கல்லூரிகளிற் கல்வி கற்பித்தனர். அவர்கள் இப்பாதையினூடாக வள்ளங்களிலும் சென்று கல்வி கற் றுள்ளனர் என்பதை இத்தீவு மக்கள் இன்றும் நினைவு கூருகின்ற னர். இப்பாதையினை புங்குடுதீவு, சரவணை, வேலணைக் கிராம மக்களும் பயனபடுத்தினர்.
மூன்றாவதாக கரம்பன், சுருவில், ஊர்காவற்றுறையைச் சேர்ந்த மக்கள் ஊர்காவற்றுறை துறைமுகத்தினூடாக காரைநகர் சென்று அங் கிருந்து வாகனங்களிலும் கால்நடையாகவும் குடாநாட்டினைச் சென் றடைந்தனர். இப்போக்குவரத்துப் பாதை யாழ்ப்பாண நக்ரத்திற்குச் சேய்மையில் காணப்பட்டபோதிலும் ஏனைய இரு போக்குவரத்துப் பாதைகளிலும் பார்க்க ஆபத்து குறைவானதாகும்.
நயினாதீவு
நயினாதீவு ஏனைய தீவுகளோடு ஒப்பிடுமிடத்து வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும். நயினை நாகபூசணி ஆலயம், பெளத்த விகாரை ஆகிய இரு சிறப்புமிக்க தலங்கள் அமைந்திருக்கின்றமையால் இத் தீவுடனான போக்குவரத்து அத்தியாவசியமாகவிருந்துள்ளது. இந்
80

துக்கள் மட்டுமல்லாது நாடளாவிய ரீதியில் பெளத்தர்களும் காலத் துக்குக் காலம் இங்கு வந்து கூடுவது வழக்கமாகும். இந்நூற்றாண் டின் முதற் காலப் பகுதிகளில்’ நயினாதீவு - ஊர்காவற்றுமை போக்கு வரத்துப் பாகையையே பெரிதும் பயன்படுத்தினர். பயணிகள் பாய் வள்ளங்கள், வத்தைகள், கட்டுமரங்கள் மூலம் பிரயாணம் செய் திருக்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 1930 களைத் தொடர்ந்து நெடுந்தீவு ஊர்காவற்றுறைப் பாதையில் இயந்திரப் படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்படவே, அப்படகுகள் நயினாதீவி னைத் தொட்டுச் செல்லத் தொடங்கவே இத்தீவின் போக்குவரத்து விரிவு பெறத் தொடங்கியது. அக்காலங்களில் புங்குடுதீவினூடாக குடாநாட்டுப் பயணத்தை நயினாதீவு மக்கள் விரும்பியேற்கவில்லை. ஏனெனில் மூன்று கடல் பிராந்தியத்தைத் தாண்டிச் செல்ல வேண்டி யிருந்ததே காரணமாகும். மேற்குறித்த காலப்பகுதிகளில் தீவுப்பகுதி மோட்டார் படகுக் கூட்டுறவுச் சங்கத்தினால் நாகபூசணி 1 சேவை யில் ஈடுபடுத்தப்பட்டது. இப்படகு புளியடித்துறையிலிருந்து நயினா தீவு, அனலைதீவு, எழுவைதீவு ஊடாக ஊர்காவற்றுறைக்கு சேவை யில் ஈடுபடுத்தப்பட்டது. இதன் விளைவாக நயினாதீவு மக்களின் போக்குவரவு ஓரளவுக்குச் சுலபமாக்கப்பட்டது எனலாம். காலத் துக்குக் காலம் நாகபூசணி 2, 3, 4, 5 என ஐந்து இயந்திரப்படகு கள் சேவையில் ஈடுபடுத்தப்படடுள்ளன.
வாணர்பாலம் சேவைக்கட்டடுத்தப்படவே நயினாதீவு மக்களிற் கணிசமானோர் ஆரம்பத்தில் புலியடித்துறையினூடாகவும், கலப் போக்கில் கழுகைப்பிட்டி துறையினூடாகவும் பயணத்தை மேற் கொண்டிருந்தனர். பண்ணைப் பாலம் பூர்த்தியானதும் இத்தீவு மக்களில் பெரும்பாலானோர் புங்குடுதீவினுாடாகவே தமது குடா நாட்டுடனான தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டனர். அவரவர் வசதிக்கேற்ற விதத்தில் ஊர்காவற்றுறையூடாகவும் மேற்கொண்டு வந்துள்ளனர். குறிகாட்டுவான் பாதை திறக்கப்பட்ட தன் பின்னர் பிரயாணம் செய்யும் கடறபரப்பு குறுக்கமடையவே * 10 நிமிடங் களில் கடற்பயணத்தைப் பூர்த்தி செய்யக்கூடியதாக அமைந்தது. இதன் விளைவாக ஏற்கெனவே பிரயாணம் செய்து கொண்டிருந்து கழுதைப்பிட்டியூடான பிரயாணம் படிப்படியாக குறைவடைந்து 1970 களில் முற்றாகக் செயலிழந்து விட்டது. .
நயினாதீவுக்கும் குடாநாட்டுக்குமிடையிலான போக்குவரத்துப் பாதையில் பல்வேறு சங்கங்களும், தனிப்பட்டவர்களும் படகுகளைச் சேவையில் ஈடுபடுத்தியுள்ளனர். புங்குடுதீவு, நயினாதீவு பலநோக் குக் கூட்டுறவுச் சங்கம், நயினை நாகபூசணி அம்மன் ஆலய நிர் வாகம், தீவுப்பகுதி மோட்டார் போக்குவரத்துக் கூட்டுறவுச் சங்கம்
8.

Page 56
போன்றனவும் திருவாளர்கள் சி. துரைசுவாமி, இ. செல்லப்பா
நா. காராளபிள்ளை, பரஞ்சோதி, சின்னமணி செல்வராசா காங்கேசு, தனபாலசிங்கம், தாஹிர், நயினை பெளத்த மதகுரு போ ன்ற நயினாதீவினைச் சேர்ந்தோரும் தி ரு வா ள ர் க ள்
பொன்னம்பலம், தம்பிஐயா ஆ. பொன்னம்பலம் போன்ற புங்குடு தீவினைச் சேர்ந்தோரும் படகுச் சேவையினை காலத்துக்காலம் நடாத்தியுள்ளனர்,
அனலைதீவு - எழுவைதீவு
அனலைதீவு, எழுவைதீவு மக்களின் போக்குவரத்தானது ஏனைய தீவுகளின் போக்குவரத்துடன் இணைந்த ஒன்றாகும். நெடுந்தீவு, நயினாதீவு, புங்குடுதீவிலிருந்து ஊர்காவற்றுறை, அலுப்பாந்திக்கான போக்குவரத்துப் பாதையில் மேற்படி இரு தீவுகளையும் போக்குவரத் துப் படகுகள் கஷ்டத்தின் மத்கியிலும் தொடர்ச்சியாகத் தொட் டுச் சென்றன. வேறு தீவுகளிலிருந்து இத்தீவுகளூடாகச் செல்லும் போக்குவரத்துக்கான படகுகளுடன் இவ்வூரைச் சேர்ந்த சிலர் படகுகளை சேவையில் ஈடுபடுத்தியிருந்தனர். திரு. சு. நாகலிங்கம் என்பவர் ஐயனார் புரவி, மகா லட்சுமி என்ற பெயரிலும் இரு. பொ. விஸ்வலிங்கம் என்பவர் சிவநாயகி, தனலட்சுமி என்ற பெயரிலும் பிரயாணிகள் படகுகளைச் சேவையில் ஈடுபடுத்தி யுள்ளனர். இவர்கள் தவிர திருவாளர்கள் சி. நாகரத்தினம், ஐ. கந்தசாமி மு. குமாரசாமி, க. குமாரசுவாமி என்பவர்களும் பட குச் சேவையினை நடாத்தி வந்துள்ளனர். இன்றும் இவ்விரு தீவு மக்களின் போக்குவரத்துப் பாதை ஏனைய வுேகளைப் போல மாற்றமுறவில்லை. தொடர்ச்சியாக ஊர்காவற்றுறை ஊடாகவே படகுச்சேவை நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்
கது. இ) உள்ளூர் போக்குவரத்து முறைமைகள்
நெடுந்தீவு
நெடுந்தீவின் அமைவிடம், மட்டுப்படுத்தப்பட்ட குடித்தொகை யின் அளவு காரணமாக உள்ளூர் போக்குவரத்தினை விருத்தி செய்ய முடியாத நிலை மிக நீண்ட காலமாக நிலவி வந்துள்ளது. இந்நூற் றாண்டின் முன்னரைப்பகுதிகளில் உள்ளூர் போக்குவரவானது மர்ட்டு வண்டி, துவிச்சக்கரவண்டி மூலமாகவும், கால்நடையாகவுமே காணப் பட்டிருந்தது. கடல்வழிப்போக்குவரத்து விருத்தி பெற்றளவுக்கு உள் ளூர் போக்குவரத்து இன்றுவரை விருத்தி பெற்றிருக்கவில்ல்ை என்று கூறினால் மிகையாகாது. 1940 களில் திரு. கந்தையா, திரு. எட்வேட் நவரத்தினசிங்கம் ஆகிய இருவரும் லொறிகள் வைத்திருந்ததாக அறி
82

யக்கிடக்கின்றது. முன்னவரின் லொறி உள்ளூருக்கும் துறைமுகத் திற்குமிடையிற் பொருட்களை ஏற்றியிறக்கியதுடன் மக்களது போக்கு வரத்திற்கும் பயன்பட்டதாகத் தெரிய வருகின்றது. திரு. எட்வேட் நவரத்தினசிங்கம் என்பவர் கனிஷ்ட மகாவித்தியாலய அதிபராகவிருந் தவர். இவரது லொறி முக்கியமாக இருவழிகளில் இத்தீவு மக்களுக்குச் சேவையாற்றியுள்ளது. குறிப்பாக இத்தீவின் :ேற்கிலும் கிழக்கிலும் உள்ள மாணவர்களைப் பாடசாலைக்கு ஏற்றியிறக்கும் பணியினைச் செய்து வந்தது. அத்துடன் மாணவர்களுக்குத் தேவையான குடிநீரை நன்னீர் பிரதேசத்திலிருந்து கொண்டுவந்து கொடுக்கிப் பயன்படுத்தப் பட்டது. திரு. இராமலிங்கம் என்பவர் ஒரு மோட்டார்கார் வைத் திருந்தார் எனத்தெரிய வருகின்றது. 1960 களைத் தொடர்ந்து ஒரு சிலரால் உழவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு விவசாய உற்பத் திக்கும் பொருட்களை ஏற்றியிறக்கவும் பயன்படுத்தப்பட்டது.
இத்தீவு மக்களின் உள்ளூர் போக்குவரத்தில் காணப்பட்ட சிர மங்களை நீக்குதற் பொருட்டு அரசினால் 1965 ஆம் ஆண்டில் இலங் கைப் போக்குவரத்துச் சபைக்குரிய பேருந்து வண்டியொன்று அனுப்பி வைக்கப்பட்டது. இப்பேருந்து வண்டி மாவலித்துறையில் இருந்து மேற்கே குருக்கள் மடம் வரையுள்ள 7.4 கி. மீ. தூரம வரை சேவை யில் ஈடுபட்டிருந்தது. ஆனால் காலப்போக்கில் இச்சேவை இத்திவின் கிழக்குப்பகுதியிலுள்ள தீர்த்தக்கரை வரையும் விஸ்தரிக்கப்பட்டது. பேருந்துவண்டிச் சேவையால் மக்கள் பல வழிகளிலும் நன்மை பெற் றுள்ளனர் என்றே கூறவேண்டும். இச்சேவை 1990 ஆம் ஆண்டு ஆணி மாதம் நிறுத்தப்பட்டுள்ளது என வடபிராந்தியப் போக்குவரத்துச் சபை நிர்வாகிகளால் தெரிவிக்கப்பட்ட போதிலும் அங்கு பிரதேசச் செயலரின் கண்காணிப்பில் சேவை நடைபெறுவதாக அறியமுடிகின்றது. இவை தவிர லான்ட்மாஸ்டர், துவிச்சக்கரவண்டிகள், மோட்டார் வண்டிகளும் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
வேலணைத்தீவு
பொதுவாக ஏனைய தீவுகளுடன் ஒப்பிடுமிடத்து வேலணைத் தீவின் உள்ளூர் போக்குவரத்து சார்புரீதியாக சிறப்பானதாகவேயி ருந்து வருகின்றது. இதற்கு மிக முக்கியமான காரணி யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு அண்மையிலிருப்பதேயாகும். 1920 களுக்கு முற்பட்ட காலத்தில் போச்குவரத்தினைப் பொறுத்தவரை மக்கள் கால்நடை யாகவே சென்றுவந்துள்ளனர். பொதுவாக யாழ்ப்பாணக் குடாநாட் டுக்குச் செல்பவர்களில் கணிசமானோர் அல்லைப்பிட்டி ஒலை ஏற்றும் துறையூடாகவே தமது பயணத்தை மேற்கொண்டிருந்தனர். ஆனால் இக்காலத்திலிருந்து போக்குவரத்துச் சாதனங்களின் உள்வரவின் கார
83

Page 57
ணமாக விருத்தி பெறலாயிற்று. ஒரு சில பேருந்து வண்டிகள், மோட்டார் கார்கள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டிருந்ததாக இந்தீவினைச் சேர்ந்தோருடனான பேட்டியின்போது அறியமுடிந் தது. அவர்களது கருத்துப்படி 1922 - 1925 ஆம் ஆண்டுகளிடையில் மேற்குறித்த போக்குவரத்துச்சேவை ஆரம்பிக்ககப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். புளியங்கூடலைச் சேர்ந்த திரு. சக்களாச் சாமி என்பவரே முதலில் மோட்டார் கார் வைத்திருந்தவராவர். இம் மோட்டார்க்காரை ஒட்டுவதற்கு நவாலியைச் சேர்ந்த திரு. சி. துரையப்பா என்பவரை அமர்த்தியிருந்தார். இவர் ஒரு சில வருடங் களில் உரிமையாளரின் மருமகளை விவாகம் செய்தார். அதன் பின் னர் முதலில் மோட்டார் கார் ஒன்றினை சொந்தமாக வாங்கி பயணி கள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தினார். 1924 ஆம் ஆண்டில் ஒரு பேருந்து வண்டியை வாங்கி ஊர்காவற்றுறை - அல்லைப்பிட்டி பாதையில் பிரயாணிகள் சேவையை நடாத்தினார். இவரது பேருந்து வண்டிக்கு அவரது மகளின் பெயரான சரஸ்வதி எனப் பெயர் வைத் திருந்தார். இவரைத்தொடர்ந்து இத்தீவினைச் சேர்ந்த திருவாளர் கள் சின்னத்துரை, கந்தையா, தர்மலிங்கம், பொன்னுத்துரை போன் றோர் பேருந்து வண்டிகளையும் மோட்டார்கார்களையும் வாங்கி இத் தீவுக்குள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தினர்.
1940 களின் முற்பகுதியில் திரு. சி. துரையப்பா அவர்களை முகா மைத்துவப் பங்காளியாகக் கொண்ட தீவுப்பகுதி மோட்டார் பேருந் துக் கம்பனி ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அக்கம் பணிக்கு ஆரம்பத்தில் நான்கு பேருந்துகள் சொந்தமாக விருந்துள்ளன. இவ்வண்டிகள் ஊர் காவற்றுறை - பண்ணை, வேலணைத் துறை - பண்ணை பா தை ச் சேவையில் ஈடுபட்டிருந்தன. இக்க பணி காலப்போக்கில் புங்குடுதீவி லும் தனது சேவையை விஸ்தரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்க து வாணர்பாலம் பூர்த்தியாக்கப்பட்டதும் இக்கம்பனி இறுப்பிட்டி - பண்ணை பாதையில் போக்குவரத்துச்சேவை புரிந்துள்ளது. 1956 ஆம் ஆண்டு பண்ணைப்பாலம் திறக்கப்படவே வேலணைத்தீவு, புங் குடுதீவு, மண்டைதீவு ஆகியவற்றிலிருந்து யாழ்ப்பாண நகரம் வரை யும் விஸ்தரிக்கப்பட்டது. -
பொதுவாக 1920 களிலிருந்து புளியங்கூடலைச் சேர்ந்த மக்கள் ஆரம்பத்தில் முறைசாரக்கல்வியினூடாகப் பெற்ற தொழில்நுட்பத்து டன் கூடிய தொழில்களில் ஈடுபாடு கொண்டிருக்கின்றனர். காலப் போக்கில் அவர்கள் தம் தொழில்களை விரிவுபடுத்தியுள்ளனர். குறிப் பாக பேருந்து, மோட்டார்கார் போக்குவரத்தினை மேற்கொள்வதி லும் ஜெனரேற்றர்களை வாடகைக்கு விடுவதிலும், வாகனங்களைத்
84

திருத்துவதிலும் றேடியோக்களைப் பழுதுபார்ப்பதிலும் இவை போன்ற பல தொழில்களிலும் இவர்கள் சிறப்புத்தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். என்றால் மிகையாகாது.
1958 ஆம் ஆண்டு நாடாளாவிய ரீதியில் தனியார் பேருந்துக் கம்பனிகளை அரசு பொறுப்பேற்றது. தீவுப்பகுதி மோட்டார் பேருந் துக்கம்பனியும் அதிலொன்றாகும். அரசு பொஐப்பேற்ற போது இக் கம்பனியிடம் 14 பேருந்துகள் சேவையிலீடுபட்டிருந்தன எனவும் நஷ்ட ஈடு தருவதாகக் கூறப்பட்ட போதிலும் அரசினால் தரப்படவில்லை எனவும் இக்கம்பனி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கைப் போக்குவரத்துச் சபை பயணிகளுக்கான போக்கு வரத்தினை பொறுப்பேற்றதும் போக்குவரத்தின் சேவை பன்முகப் படுத்தவே மக்கள் இலகுவாகவும் விரைவாகவும் தமது ஆரம்ப இடத் திலிருந்து சேரிடம் செல்ல வாய்ப்பு ஏற்பட்டது. இதன் விளைவாக வேலணை மட்டுமல்லாது தீவக மக்களின் வெளியிடப்பெயர்வு அதி கரிக்கப்பட்டது என்றால் மிகையாகாது. கம்பனி காலத்தில் பேரூந் துகள் குறைவாக இருந்தமையால் மட்டுப்படுத்தப்பட்ட சேவையையே வழங்கக்கூடியதாகவிருந்தது. ஆனால் இலங்கைப் போக்குவரத்துச் சபை அதிகளவு பேரூந்துகளை சேவையிலீடுபடுத்தியது.
வேலணைத்தீவில் பின்வரும் தடங்களூடாக பயணிகள் போக்கு வரத்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அட்டவணை !
வேலணைத்தீவு - போக்குவரத்து
தூரம் போக்குவரத்து وی ، 67 بر 6 ه ی தட. இல. (கி. மீ.) ###
777 20.8 ஊர்காவற்றுறை - யாழ்ப்பாணம்
(வடக்கு றோட்)
778 24。9 ஊர்காவற்றுறை - யாழ்ப்பாணம்
(அராலிச் சந்தி, வங்களாவடிச் சந்தி, புளியங்கூடல் சந்தி, சரவணைச் சந்தி Աեւ-ո՞&)
779 23.3 ஊர்காவற்றுறை - யாழ்ப்பாணம்
(செருக்கன் சந்தி, செபஸ்தியார் கோவில், சுருவில் வீதியூடாக)
85

Page 58
இ. பே 7. ச. தூரம் • போக்குவரத்து தட. இல. (கி. மீ.)
779 27.6 ஊர்காவற்றுறை - யாழ்ப்பாணம்
(கெட்டில், சுருவில், மெலிஞ்சிமுனை யூடாக)
780 23.5 ஊர்காவற்றுறை - யாழ்ப்பாணம்
(மண்கும்பான், சாட்டி, வங்களாவடி யூடாக. (ஆரம்பிக்கப்பட்ட வருடம்
1969).
743 33.7 ஊர்காவற்றுறை - யாழ்ப்பாணம்
அல்லைப்பிட்டியூடாக. (ஆரம்பிக்கப் பட்ட வருடம் 1978).
ஆதாரம்: வடபிராந்திய போக்குவரத்துச் சபை
மேற்குறித்த தடங்களில் மேற்படி இ. போ. ச. வண்டிகள் தமது சேவையினைச் செய்து வருகின்றன. இவை தவிர புங்குடுதீவுக்கான போக்குவரத்துப் பேரூந்துகளும் வேலணை வங்களாவடியூடாக வேல ணைத்துறைமுகம் வரை இத்தீவினுTடாகச் சேவையாற்றி வருகின் றன. இதனால் வேலணைத்தீவுக்கும் யாழ்ப்பாணத்திற்குமிடையிலான போக்குவரத்து சிறப்பானதாகவேயுள்ளது. . இ. போ. ச. பேருந்து ச் சேவை தவிர தனியார் மோட்டார் கார்களும் ஊர்காவற்றுறைக்கும் யாழ்ப்பாணத்துக்குமான சேவையில் ஈடுபட்டிருந்தன எனலாம்.
புங்குடுதீவு
வேலணைத்தீவுக்கு அடுத்து யாழ்ப்பாணக் குடாநாட்டுடனான இலகுவான போக்கு வரத்தினைக் கொண்டது புங்குடுதீவு ஆகும் , 1953 ஆம் ஆண்டினைத் தொடர்ந்து படிப்படியாகப் போக்குவரத்து இலகுவாக்கப்பட்டு வந்ததுள்ளது. வாணர்பாலம் அமைக்கப்படுவ தற்கு முன்னர் இணுவில் சோடாக் கம்பனி உரிமையாளர் திரு. சிவபாதசுந்தரம் என்பவர் 1947 இல் பேரூந்து ஒன்றை இத்தீவில் சேவையில் ஈடுபடுத்தியிருந்தார் எனத் தெரிய வருகின்றது. %( ניו பேரூந்து வண்டி மடத்துவெளியிலிருந்து இறுப்பிட்டி வரையும் சேவையிலிடுபட்டிருந்தது. காலப்போக்கில் தீவுப்பகுதி மோட்டார் பேரூந்தக் கம்பனி இதனைப் பொறுப்பேற்று நடாத்தி வந்துள்ளது.
86

மேலும் இக்காலத்தில் திருவாளர்கள் ஏகாம்பரம், ஆறுமுகம், நாக லிங்கம், தம்பையா, தம்பிஐயா போன்றோர் மோட்டார்கார்களை வைத்திருந்தனர். அத்துடன் மடத்துவெளித்துறையிலிருந்து பொருட் களை ஏற்றியிறக்குவதில் ஒருசிலரின் மாட்டுவண்டியும் "சேவையிலீடு பட்டிருந்ததாகத் தெரியவருகின்றது.
1953 ஆம் ஆண்டின் பின்னர் இத்தீவின் உள்ளூர் போக்குவரத் தில் தீவுப்பகுதி மோட்டார் பேரூந்து கம்பனி ஈடுபாடு கொண்டிருந் தது. 1958 இல் இருந்து அரச பேரூந்துகள் சேவையிலீடுபடத்தொடங்
அட்டவணை 2
புங்குடுதீவுத்- போக்குவரத்து
தூரம் போக்குவரத்து தட, இல. ; 48. (წ.)
776 32.5 இறுப்பிட்டி - யாழ்ப்பாணம்
(பெருங்காட்டுச் சந்நியூடாக இறுப் பிட்டிக்கு)
776 31, 9 குறிக்கட்டுவான் - யாழ்ப்பாணம்
776/6 85. ፤ இறுப்பிட்டி - யாழ்ப்பாணம்
(வல்லனுாடாக)
ஆதாரம் வடபிராந்தியப் போக்குவரத்துச்சபை 17 ܐܡܪܬܐ
1966 ஆம் ஆண்டுக்கு முன்னர் குறிகட்டுவானுக்கான போக்கு வரத்து நடைபெற்றிருக்கவில்லை. 1969 ஆம் ஆண்டிலிருந்து "வல்லன் பாதையால் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்ட போதிலும் நேர ஒழுங்
குப்படி சேவையில் ஈடுபடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அரச பேரூந்து போக்குவரத்துக்கு இணையாகப் பல தனிப்பட்ட வர்கள் மோட்டார்கார்களை சேவைக்கு அமர்த்தியிருந்தனர். பொது வாக அரச பேரூந்துச் சேவைக்குப் போட்டியாக சேவையில் ஈடுபட் டிருந்தது என்றால் மிகையாகாது. சோமசெற், ஒஸ்றின் ஏ 40 கார் களே அதிகம். இக்கார்களில் வசதியாகப் பிரயாணம் செய்வதாயின் 4 பேரே செல்ல முடியுமாயினும் ஏறத்தாழ 15 பேர் நெருக்கமாக
87

Page 59
விருந்து பிரயாணம் செய்துள்ளனர் என்பதை அறியமுடிகின்றது. ஏனெனில் விரைவாக சேரிடத்தினை அடையலாம் என்ற நோக்க மிருந்ததுதான் இதற்குக் காரணமாகவிருந்தது.
நயினாதீவு/மண்டைதீவு
உள்ளூர் போக்குவரத்தில் நயினாதீவு மக்கள் நீண்டகாலமாகப் பின்தங்கியவர்களாகவிருந்துள்ளனர். எனினும் சிறிய தீவானபடியால் துவிச்சக்கரவண்டி மற்றும் கால்நடையாகத் தமது போக்குவரத்தினை மேற்கொண்டிருந்தனர். பெளத்த, இந்து மக்களால் பெரிதும் போற் றப்பட்டு வந்த தீவாகவிருந்தமையால் 1980 களின் ஆரம்பத்தில் உள் ளூர் போக்குவரத்திலீடுபடுத்தும் முகமாக இலங்கைப் போக்குவரத்துச் சபை பேரூந்துவண்டி ஒன்றை அனுப்பிவைத்தது. இப்பேரூந்துச் சேவை நயினாதீவு துறைமுகத்திலிருந்து வங்களாவடி வரையும் நடை பெற்று வந்துள்ளது. இப்பேரூந்து அடிக்கடி பழு கடைந்தமையால் சேவை காலத்துக்கு காலம் தடைப்பட்டது. வேறு ஒரு பேரூந்து அனுப்பப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்ட போதும் தற்போது சேவை யிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.
மண்டைதீவுக்கும் - யாழ்ப்பாணத்திற்குமான பேரூந்துப் போக்கு வரத்து 1956 ஆம் ஆண்டிலிருந்து செயற்பட்டு வருகின்றது. இதன் தட இலக்கம் 781 ஆகும். அனலைதீவு, எழுவைதீவு ஆகியவற்றில் பேரூந்து போக்குவரத்துச் சேவை எக்காலத்திலும் நடைபெற்றிருக் க வில்லை.
1977 ஆம் ஆண்டின் பின் திவக போக்குவரத்து நிலை
1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவே தனி யார் போக்குவரத்தினை ஊக்குவிக்கத் தொடங்கினர். இதன் விளை வாக தனிப்பட்ட ரீதியில் சிறிய பேரூந்து வண்டிகள் (Mini Bus) சேவையில் ஈடுபட்டிருந்தன. இதேவேளை இலங்கைப் போக்குவரத் துச் சபையினர் தமது சேவையினைப் படிப்படியாக குறைந்து வரலா யினர். 1977 ஆம் ஆண்டுக்கு முன்னர் தனியார் மோட்டார் கார் சேவையில் ஈடுபட்டவர்கள் படிப்படியாகத் தமது சேவையினை நிறுத்திக் கொண்டனர். இ போ. சபையினர் தனியார்பேரூந்துகளுடன் போட்டிபோட முடியாதிருந்தது ஒருபுறமிருக்க வருமானம் மிகக் குறை வாகக் காணப்பட்டமையும் ஓர் காரணமாகும்.
முதலாவது ஈழப்போர் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து தமிழர் பிர தேசத்தில் காலத்துக்குக் காலம் மக்களின் போக்குவரத்து பல வழிக
88

ளிலும் பாதிக்கப்பட்டு வந்துள்ளது. 1983 ஆம் ஆண்டு முதலாக தீவக மக்களின் போக்குவரத்தில் இராணுவ அழுத்தங்கள் காணப் பட்ட போதிலும் 1985 ஆம் ஆண்டினைத் தொடர்ந்து காலத்துக்குக் காலம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். யாழ்ப்பாணக் குடாநாட்டிற் கும் வேலணைத் தீவுக்குமான தரைவழிப் போக்குவரத்துப் பாதை யாக பண்ணைப்பாலம் விளங்குகின்றது. 1985 ஆம் ஆண்டின் பிற் பகுதியிலும் 1986 ஆம் ஆண்டின் முற்பகுதியிலும் கோட்டையில் நிலை கொண்டிருந்த இலங்கை இராணுவத்தினரின் கண்மூடித்தனமான துப் பாக்கிப் பிரயோகம், எறிகணை வீசுதல் போன்றவற்றால் பண்ணைப் பாலத்தினுாடாக பிரயாணம் செய்த அப்பாவிப் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர். இதன் விளைவாக 1986 ஆம் ஆண்டின் முற் பகுதியிலிருந்து இப்பாதைப் போக்குவரத்து தடைப்படவேண்டியேற் it -- g5!.
எனவே யாழ்ப்பாணக் குடாநாட்டுடனான போக்குவரத்திற்கு புதிய பாதையைத் தேடவேண்டிய நிலை உருவானது. காரைநகரில் கடற்படைத்தளம் இருந்தபடியால் ஊர்காவற்றுறை-காரைநகர் பாதை யைப் பயன்படுத்த முடியாதிருந்தது. இதனைக் கருத்திற் கொண்டு அராலி - வேலணைப் பாதையையே பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மிக நீண்ட காலத்திற்கு முன்னர் இப்பாதையால் மிகக் குறைந்தளவில் மக்கள் பிரயாணம் செய்திருந்தனர். அண்மைக் காலங் களில் தீவக மக்கள் தமது பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வ தற்கு யாழ்ப்பாண நகரத்துடனேயே நெருக்கமான தொடர்பினை வைத்திருந்தனர். ஏறத்தாழ 65 000 மக்களைக் கொண்ட தீவகத்தி லிருந்து வசதி வாய்ப்பற்ற அராலி - வேலனைப் பாதை வழியாக 1986 ஆம் ஆண்டு முற்பகுதியிலிருந்து மக்கள் தமது போக்குவரத் தினை மேற்கொள்ளலாயினர்.
மிக நீண்ட காலமாக பாவனைக்குட்படுத் கப்படாது காணப்பட்ட அராலி - வேலணைக் கடற்பரப்பினுரடாக சிறிய பிளாஸ்ரிக் வள்ளங் கள், மர வள்ளங்களில் பிரயாணம் செய்ய முடியாதிருந்தது. அதா வது இரு பக்கங்களின் கரையோரப் பகுதிகளில் கடல்நீரின் ஆழம் குறைவாசக் காணப்பட்டபடியால் ஆழமான பகுதிகள் வரை வீதி அமைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அக்காலத்தில் தீவுப்பகுதி மக்க்ள் அனுபவித்து வந்த பிரச்சனைகளுக்குத் தம்மால் இயன்ற உதவி களைச் செய்யும் முகமாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்த தீவகத் தைச் சேர்ந்தோர் பவர் 1986-07-12 ஆம் திகதி ஒன்றுகூடித் தீவக அபிவிருத்திக் கழகம் ஒன்றை ஸ்தாபித்தனர். இக்கழகம் முதல் நட வடிக்கையாக அராலிப் பக்கத்தில் 300 அடி நீளமான வீதியையும் வேலணைப் பக்கத்தில் 100 அடி நீளமான வீதியையும் யாழ் அரச செயலத்தினதும் பொது மக்களினதும் உதவியுடன் அமைத்துக் கொடுத்
89

Page 60
தனர். வேலணைப் பக்கமாக வேலணைப் பிரதேசத்தினைச் சேர்ந்த நலன்புரிக் கழகங்கள், நலன் விரும்பிகளின் உதவியுடன் ஏறத்தாழ 750 அடி நீளமான வீதி அமைக்கப்பட்டது. இதன் விளைவாக ஒரளவு போக்குவரத்துச் சீரடைந்தது என்றே கூறவேண்டும். இக்காலங்களில் அல்லைப்பிட்டி, மண்டைதீவு மக்கள் - மண்டைதீவு கிழக்கு துறைமுக மூடாக அலுப்பாந்திக்கான போக்குவரத்து நடைபெற்ற போதிலும்பெரும்பாலானோர் அராலியூடாகவே குடநாட்டுக்கு வந்து போயினர்.
1987-7-29 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்திய அமைதிகாக்கும்படை தமிழர் பிர தேசத்திற்கு வந்ததைத் தொடர்ந்து மீண்டும் 1987-9-10 ஆம் திகதி வரையும் பண்ணைப் பாலத்தினுரடாகப் போக்குவரத்து மேற் கொள்ளப்பட்டது. விடுதலைப் புலிகளுக்கும் - இந்திய இராணுவத்திற் கும் இடையே போர் தொடங்கவே மீண்டும் பண்ணைப்பாலத்தினூ டாக நடைபெற்ற போக்குவரத்துத் தடைப்பட்டது. இதனால் மீண் டும் அராலி - வேலணை ஊடாகவே போக்குவரவு 1987 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை நடைபெற்றது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் இந்திய இராணுவம் பரவலாக நிலைகொண்டதன் பின்னர் மீண்டும் டோ ச்குவரத் தற்சாக பண்ணைப்பாலம் திறந்து விடப்பட்டது. இப் டா லம் திறந்து விடப்படுவதற்கு முன்னர் அராலி வேலணைப் போக் குவரத்து ஆபத்து நிறைந்ததாகக் காணப்பட்டது. 1989 ஆம் ஆண்டு மார்கழி மாதம் வரை இந்திய அமைதிப்படையின் சோதனைச் சாவ டியைக் கடந்து பண்ணைப் பாலத்தினுரடாகத் தீவகமக்கள் போக்குவ ரத்துச் செயதனர். இந்தியப்படை தாயகம் மீண்ட பின்னர் 1990ஆம் ஆண்டு ஜனவரி யூன் மாதங்களிடையில் எவ்வித பிரச்சனை மில்லாத போக்கு வரவு நடைபெற்றது.
இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் மீண் டும் போர் தொடங்க வே பண்ணைப்பாலம் மூடப்பபடுவது தவிர்க்கமுடியாததாகிவிட்டது. கோட்டையிலிருந்து இராணுவத்தினர் வெளியேறுவதற்காக பண்ணையைச் சார்ந்த பகுதிகளிற் தொடர்ச் சியாகப் போர் நடைபெற்று வந்தது. இராணுவத்திற்கு உதவியளிக் கும் பொருட்டு ஊர்காவற்றுறையில் நிலைகொண்டிருந்த இலங்கை இராணுவ அணி 1990-8-25 ஆம் திகதி மண்டைதீவுக்கு வந்து சேர்ந் தது அங்கு அவர்கள் மூர்க்கத்தனமாக மக்களைக் கொன்றொழித் தனர். இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என இதுவரை தெரி யவில்லை. கோட்டையில் இருந்து வெளியேறிய இராணுவத்தையும் அழைத்துக்கொண்டு மீண்டும் ஊர்காவற்றுறைக்குத் திரும்பவே மீண் டும் பண்ணைப் போக்குவரத்து நடைபெறத் தொடங்கியது. ஆனால் பண்ணைப்பாலத்தில் சில பகுதிகள் இராணுவம் உள்வராதவாறு
90

தடைப்படுத்தப்பட்டதால் தற்காலிகப் பாதைகள் இடையிடையே போடப்பட்டு மக்கள் போக்குவரத்தினை மேற்கொண்டனர். அதா வது மண்டைதீவுச் சந்தி வரையுமே வாகனப் போக்குவரத்து நடை பெற்றது. .தன் பின்னர் பண்ணை வரையும் செல்ல வேண்டு மாயின் மண்டைதீவுச்சந்தி அருகாமையில் வத்தைகளில் ஏற்றி பண் ணைக் கரையில் இறக்கி பின்னர் வாகனங்களில் சிரமத்தின் மத்தியில் கொண்டு சென்றனர்.தீவுப்பகுதி முழுவதிலும் இராணுவம் 1991-10-18ஆம் திகதி நிலைகொள்ளவே தீவுப்பகுதிக்கான குடாநாட்டினது சகல டோக்குவரத்துக்களும் முற்றாகத் துண்டிக்கப்பட்டன. தற்போது தீவுப்பகுதிக்குச் செல்ல வேண்டுமாயின் திருகோணமலை ஊடாக கப்பல் மார்க்கமாகவே செல்ல வேண்டியுள்ளது.
பண்ணைப்பால வரலாறு
தீவகத்திற்கும் குடாநாட்டுக்குமிடையே நேரடிப் போக்குவரத் தினை ஏற்படுத்த வேண்டுமென 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலிருந்து தீவக மக்கள் சிந்திக்கத் தொடங்கினர். ஆனால் சிந் தனையிலிருந்து செயலுருவாவதற்குரிய செயற்பாட்டுத் திட்டங் களை வகுக்க முடியாதிருந்தது. காரணம் இந்நாட்டை ஆண்டு வந்த ஆங்கிலேய அரசுக்கு முறைப்படி சமர்ப்பிக்க முடியாதிருந்ததேயாகும். ஏற்கனவே குறிப்பிடப்பட்டது போல ஊர்காவற்றுறை, வேலணை, பண்ணை ஆகிய படகுத்துறைகளூடாகவே மக்கள் குடாநாட்டுடன் தொடர்பு கொண்டிருந்தனர். தீவுப்பகுதியில் மாறிக்கொண்டுவந்த பொருளாதார, அரசியல், சமூக முறைமைகளானது விரைவானதும் வசதியானதுமான போக்குவரத்தினை நாடிச்சென்றது தவிர்க்க (Լpւգயாததாகவிருந்தது. இந்த வகையில் ஆழமான கடற்பரப்பினையும் மக்கள் வளம் குறைவான பிரதேசத்தினூடாகப் பண்ணையையும் அலுப்பாந்தியையும் இணைக்கும் பாலத்தினை அமைப்பதா அல்லது ஆழங்குறைந்த கடற்பரப்பினையும், மக்கள் வளம் அதிகமாகவுள்ள பிரதேசத்தினூட்ாக வேலணை - அராலியை இணைக்கும் பாலத்தினை
அமைப்ப்தா அல்லது ஊர்காவற்றுறை - 'காரைநகர் பிரதேசத்தை இணைக்கும் பாலத்தை இணைப்பதா, அல்லது இருந்தது போலவே கடல் வழிப்போக்குவரத்தினை மேற்கொண்டு குடாநாட்டுக்குச் செல் வதா எனபதில் காலத்திற்குக் காலம் தீவக மக்களிடையேயும், யாழ்ப் பாணக்குடாநாட்டு மக்களிடையேயும் கருத்து முரண்பாடுகள் காணப் பட்டிருந்துள்ளன. எனினும் தீவகமக்கள் குடாநாட்டுடன் தரைவழிப் போக்குவரத்து வாய்ப்புக்கள் ஏற்படுத்த வேண்டுமென்பதில் ஆர்வம் கொணடவர்களாக இருந்துள்ளனர். முதன்முதலாக ஆங்கிலேய அர சாங்கம் 1883 ஆம் ஆண்டில் மண்டைதீவிலுள்ள சிறுத்தீவிலிருந்து அலுப்பாந்திக்கும் சுங்கத்திணைக்களத்திற்குமிடைப்பட்ட பகுதி வரை
91

Page 61
ஒரு பாலம் அமைத்தால் தீவக மக்கள் யாழ்ப்பாண நகரத்துடஷ் தொடர்பு கொள்வது சுலபமாகவிருக்கும் என எண்ணினர். அக்காலத் தில் யாழ்ப்பாணத்தைப் பரிபாலனம் செய்து வந்த சேர் வில்லியம் துவைனம் என்பவரே முதன்முதலாக ஆர்வம் கொண்டு உழைத்தவர் எனலாம். அவரது கற்பனையில் இந்தியாவில் பம்பாய் நகரைப்போல் யாழ்ப்பாணத்தின் மண்டைதீவினை இலங்கையில் பம்பாயை ஒத்த நகரமாக உருவாக்க வேண்டுமெனவும் அலுப்பாந்தியுடன் முடிவடை யும் புகையிரதப்பாதையினை தீவகத்தோடு இணைக்க வேண்டும் என வும் நினைத்தார். அதனை நிறைவேற்ற வேண்டும் என்பதில் ஆர் வம் கொண்ட சேர் வில்லியம் துவைனம் பொறியியலாளர்களுடன் கலந்து பேசி அதற்கான மதிப்பீட்டு அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு வேண்டினார். அவர்கள் ரூபா 50000/- செலவாகும் என அறிக்கையில் தெரிவித்தனர். அவ்வறிக்கை இலங்கையின் தேசாதிபதிக்கு அனுப்பப் பட்டது. ஆனால் அதற்கான பணம் திறைசேரியில் இல்லை என அறிவிக்கப்பட்டது. பின்வந்த யாழ்ப்பாணப்பிரதேசத்தைப் பரிபால னம் செய்தவர்களும் முயற்சித்தும் பலனேதும் கிட்டவில்லை.
தீவுப்பகுதி மக்களைப் பொதுவாக நோக்கும்போது பொருளாதார சமூக, பண்பாட்டடிப்படையில் ஒத்த பண்புகளைக் கொண்டிருந்த போதிலும் தங்களுக்கிடையில் பிரதேச உணர்வு கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். சேர்வில்லியம துவைனம் அவர்களின் கருத்துக் *ளை மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் பகுதி வாழ் மக் கள் வரவேற்றிருந்தனர். 1921 ஆம் ஆண்டு சட்டநிருபண சபையில் அங்கத்தவராகவிருந்தவர் திரு. வை. துரைசுவாமி அவர்களாவர். இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியினை வழங்கச் சிபார்சு செய்யும் பொறுப்பு அச்சபைக்கே உரியதாகவிருந்தது. வேலணை, சுரு வில், நாரந்தனை போன்ற பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு விசுவாசமாக விருந்த திரு. வை. துரைசுவாமி வேலணை-அராலிப்பாலத்தினையே நிர்மாணிக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தார். இவருக்கு உதவியாக அராலியைச் சேர்ந்த வேலணை மணியகாரன் திரு. சோம *ந்தரம் என்பவரும் இருந்துள்ளார். திரு. துரைசுவாமி அவர்கள் சட்ட சபையில் யாழ்ப்பாணப் பிரதேச ஏனைய பிரநிதிகளுடன் இணைந்து வாதாடி மேற்படி பாலத்தை அமைப்பதற்கு ரூபா இரண்டரை லட் சத்தினை ஒதுக்கச் செய்தார். பாலத்தின் ஆரம்ப வேலைகள் தொடக் கப்பட்ட போதிலும் பூநகரி - யாழ்ப்பாணப்பாலம் அவசியம் எனக் கருதி பாலம் அமைக்கும்பணி கைவிடப்பட்டது.
அராலிப்பாலம் அமைக்கப்படல் வேண்டும் என்பதற்கான கார னங்களைப் பின்வருமாறு வகைப்படுத்தியிருந்துள்ளனர். அதாவது சங்கானை, அராலி, வட்டுக்கோட்டை, பண்டத்தரிப்பு போன்ற பிர தேசங்களுடன் நெருங்கிய தொடர்பினை வைத்திருக்கலாம் என்பது
92

முதலாவது காரணியாகும். தீவுப்பகுதிகளில் பனையுடன் தொடர் புடைய உற்பத்திப் பொருள்களை மிகக்குறைந்த தூரத்தினைக் கொண்ட மேற்படி பகுதிகளிற் சந்தைப்படுத்தலாம் என்பது இரண் டாவது காரணியாகும். குறுகிய தூரத்தினைக் கொண்டதும் ஆழம் குறைந்த கடற்பரப்பினைக் கொண்டதுமாகையால் பாலத்தினை நிர் மாணிப்பதும் பராமரிப்பதும் சுலபமாயிருக்கும் என்பது மூன்றாவது காரணியாகும். யாழ்ப்பாண நகரத்திற்கு மக்கள் செறிவாக உள்ள பகுதிகளால் செல்வது சிறப்பானது என்பதை நான்காவது காரணி யாகக் கொண்டு அராலிப் பாலத்தை நிர்மாணிக்க வேண்டுமெனக் கருதுவோருடைய கருத்தாகவிருந்தது.
பண்ணைப் பாலத்தினையே நிர்மாணிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டிருந்தோர் பின்வரும் கருத்துக்களை முன்வைத்தனர். தீவக மக்கள் பலவழிகளில் முன்னேறவேண்டுமாயின் நேரடியாக நகரத்தொடர்பு இருத்தல் வேண்டும் எனவும் யாழ்ப்பாண நகரத் துடன் பாலமூடாகத் தொடர்பு கொள்ளின் தீவக மக்கள் கல்வி வளர்ச் சியால் சிறப்புறுவார்கள் எனவும் தீவக மக்களின் உற்பத்திப் பொருட் களை நகரத்தில் சந்தைப்படுத்துவது சுலபமாயிருக்கும் எனவும் யாழ்ப் பாண நகரில் வளர்ச்சியடைந்து வரும் குடித்தொகையினை, குறிப் பாக குருநகர் மீனவர்களை, மண்டைதீவின் வடபகுதியில் குடியமர்த்து வதுடன் இத்தீவினை இணைப்பதன் வாயிலாக இப்பிரதேசம் விருத் தியுறும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் கொக்குவில், கோண்டாவிலைச் சேர்ந்த புகையிலை வியாபாரிகள் இலகுவாகப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கும் முஸ்லீம்கள் மண்கும் பான் பள்ளிவாசலுக்கு வந்து செல்வதற்கும் பண்ணையில் பாலம் அமைக்கின் நல்லது எனவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
திரு. துரைசுவாமி, மணியகாரன் மட்டுமல்லாது யாழ்ப்பாணப் பிரதேச அரசியல் வாதிகளும் மக்களும் எதிர்ப்புத் தெரிவிக்கத் தவற வில்லை. பண்ணைப் பாலத்தினை மறித்துக் கட்டினால் மீனவர் கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் எனவும் சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்து வத்துள்ளனர்.
1926 ஆம் ஆண்டு சேர் கிளிவ்வோட் என்பவர் பலரின் ஆலோச னையைப் பெற்று பண்ணைப் பாலத்தின் அவசியத்தினை அரசுக்குத் தெரிவித்தார். அத்துடன் மண்டைதீவு, அல்லைப்பிட்டி உடையார் மார் திரு. துரைசுவாமியை மீண்டும் அணுகிப் பண்ணைப்பாலத்தை அமைக்க உதவுமாறு கேட்டுக் கொண்டனர். முதலில் வேலணை - அராலிப்பாலம் முடிவடையட்டும் அதன் பின்னர் அரசுடன் பேசி பண்ணைப் பாலத்தினை நிர்மாணித்துத் தருவதாகத் கூறினார் எனத்
93

Page 62
தெரிய வருகின்றது. அச் சம்பவத்தை திரு. சி. அகிலேஸ்வர சர்மா அவர்கள் பண்ணைக் கும்மியில் பின்வருமாறு தெரிவிக்கின்றார்.
உங்களுக்குப் பாலம் வாங்கித்த ரலாம் உந்தவ ராலிமு டியட்டுமேன் திங்களுக் கோர்முறை பெற்றீச மெழுதுங்கள் செய்விகலா மென்றார் பாருமடி
இதனைத் தொடர்ந்து பாலத்தினை எங்கே அமைக்க வேண்டும் என்பதில் இழுபறி நிலையே காணப்பட்டு வந்தது. பாலத்தை எங்கே அமைப்பது என்பதில், மண்டைதீவு, அல்லைப்பிட்டி , மண்கும்பான் மக்கள் ஒருபுறமாகவும் சுருவில், நாரந்தனை மக்கள் மறுபுறத்திலும் நிற்பதை உணர்ந்த நடுநிலையாளர்கள் புங்குடுதீவு மக்களின் கருத்தை யும் அறிய வேண்டும் எனத் தெரிவித்தனர். பண்ணைப்பாலத்தை விரும்பி ஏற்போர் புங்குடுதீவு சென்று திரு. வ. பசுபதிப்பிள்ளையைத் தலைவராகக் கொண்ட குழுவினருடன் கலந்து பேசினர். அவர்கள் தங்களுக்கு புங்குடுதீவு - வேலணைப் பாலத்தின் அவசியத்தை வலி யுறுத்தினரேயொழிய மேற்குறித்த சர்ச்சையில் தாம் ஈடுபடப்போவ தில்லை எனத் தெரிவித்தனர். இருந்த போதிலும் காலப்போக்கில் பண்ணைப்பால அமைப்பையே விரும்பி ஏற்றனர்.
மேற்குறித்த இருபகுதியினருக்குமிடையே கருத்து முரண்பாடு காணப்பட்டிருந்த வேளை வேலணைத்தீவினைச் சேர்ந்தவர்களிடையே அச்சம் ஏற்பட்டது. அதாவது வேலணை - அராலிப்பாலம் அமைக் கப்படுமாயின். வேலணைத்தீவிலுள்ள கால் நடைகளை களவாக பாலத்தால் கொண்டு சென்றுவிடுவார்கள் என்பதே அதுவாகும். அது மட்டுமல்லாது தேசப்பற்று மிக்க இளைஞர்கள் வரட்டுக் கெளரவத் தன்மையை விட்டு யாழ்ப்பாண நகரோடு இணையக்கூடிய பாலம் வேண்டுமென்பதை வலியுறுத்தினர்.
1930 களின் ஆரம்பத்தில் திரு. துரைசுவாமி அவ்ர்கள் மண்குட் பான் விநாயகர் ஆலயத்தில் நிர்மாணிக்கப்பட வேண்டிய நான்கு பாலங்களின் பெயர்களை எழுதி திருவுளச்சீட்டின் மூலம் எந்தப் பாலத்த்ை முதலில் நிர்மாணிக்க வேண்டும் என்பதை இறைவனிடம் விட்டார். பண்ணைப்பாலத்தையே நிர்மாணிக்க வேண்டும் எனப்பதி: கிடைத்தது என்பர். இருந்த போதிலும் அராலிப் பாலத்தினையே அமைக்க வேண்டும் என்பதில் அவர் கண்ணும் கருத்துமாயிருந்து போதிலும் நிதி நெருக்கடியால் அது பின்தள்ளப்பட்டு வந்துள்ளது.
இவ்வாறான இழுபறி நிலையில் பால அமைப்பு வேலைகள் ஸ்தம் பிதம் அடைந்து காணப்பட்ட போதிலும் பகுத்தறிவுவாத இளைஞர் களினால் பண்ணைப்பால அமைப்பே சிறந்தது என்ற கருத்து தொடர்ச்சியாகத் தெரிவிக்கப்பட்டது. எனினும் பண்ணைப்பாலத்தி
94
 

னைப் பூர்த்தியாக்க வேண்டுமென்பதில் ஆங்கிலேய அரசு ஆர்வம் கொண்டதற்கு உடனடிக்காரணி ஒன்றே வலுக்கொடுத்தது எனலாம். அதாவது 1942 ஆம் ஆண்டு மண்டைதீவு பண்ணைக் கடலில் அளவுக்குமிஞ்சிய பொருட் க  ைள யும், பயணிக  ைள யும் ஏற்றிச் சென்ற படகு விபத்துக்குள்ளாகி 27 மக்கள் உயிரிழந்ததே அதுவாகும். அவ்வுயிரிழப்பானது அரசாங்கத்திற்குச் சவாலானது. இறந்தவர்களிற் பெரும்பாலானோர் பாடசாலை மாணவர்களாவர். இந்த விபத்திலிருந்து தப்பியவர்களில் சைவப்பெருமகனும், யாழ். இந்துக்கல்லூரி பிரதி அதிபராகவிருந்தவருமான திரு. க. சிவாரம லிங்கப்பிள்ளை அவர்கள் குறிப்பிடத்தக்கவராவர். எனவே இச்சம்ப வத்தினைத் தொடர்ந்து பாலவேலை விரைவு படுத்தப்பட்டு 1956 ஆம் ஆண்டு பாவனைக்காகத் திறந்துவிடப்பட்டது.
புங்குடுதீவு - வேலணைப்பால வரலாறு
இலங்கையில் மிக நீளமானது புங்குடுதீவு - வேலணைப் டால மாகும். இப் பாலத்தின் அவசியம் பற்றி மிக நீண்டகாலமாகவே உணரப்பட்டு வந்துள்ள போதிலும் அதனை முன்னெடுத்துச் செல்வ தற்கு எவருமற்ற நிலை இந்நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை காணப்பட்டது. இப்பாலம் அமைக்கப்படுமாயின் தீவுப்பகுதி மக்களில் பெரும்பாலானோர் நன்மை பெற வாய்ப்பிருந்த போதிலும் புங்குடு தீவு மக்களாலேயே முன்னெடுத்துச் செல்வது தவிர்க்க முடியாததாக விருந்தது. புங்குடுதீவு மக்கள் இப்பாலம் அமைக்கப்படாத காலத் தில் பட்ட கஷ்டங்களை வித்துவான் சி. ஆறுமுகம் என்பவர் கவிதை யில் பின்வருமாறு தெரிவிக்கின்றார்.
தோணிகளிற் கால்வைத்து ஏறின் கொஞ்சத்
தூரந்தான் மிதக்குமவை! பொறுக்கும் சேற்றில் ஆணென்ன பெண்ணென்ன! குழந்தையென்ன!
அகலாத நோய்பிடித்த கிழந்தானென்ன! நாணின்றி ஆடைகளைத் துரக்கித் தூக்கி
நடுக்கடலிற் புதைசேற்றில் நடந்த , காட்சி தோணுதையா மனப்படத்தில் துயரம் யாவும்
தொலைந்திடுமோ வாணர் வந்து தோன்றா விட்டால்?
நிறைமாதக் கர்ப்பிணியும் வயிறு நொந்தே
நெடுநேரம் தோணியிலே நின்றுகொண்டு
இறைவாஎம் விதியேதான் இதுவே என்று
ஏங்கிடுவாள்! அழுதிடுவாள்! என்னே வாழ்வு!
மறையாதோ இக்கொடுமை என்றெண்றெண்ணி
மகவுதனைப் பெற்றிடுவாள் தோணிக்குள்ளும்
கறைபடிந்த வாழ்விதுவும் கலைந்த தம்மா!
கண்ணியஞ்சார் வாணர்வந்து பிறந்த தாலே!
95

Page 63
என்ற கவிதையிலிருந்து மக்கள் அனுபவித்த கஷ்டங்கள் தெளிவா கின்றது. -
1890 ஆம் ஆண்டு திரு. க. அம்பலவாணரும் (பெரியவாணர்) 1893 ஆம் ஆண்டு திரு. ச. அம்பலவாணரும் (சின்னவாணர்) புங்குடு தீவில் பிறந்தனர். பெரியவாணர் புங்குடுதீவு அமெரிக்கன்மிசன் பாட சாலை, கோப்பாய் கிறீஸ்தவக் கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றவர். அக்காலங்களில் புங்குடுதீவு மக்கள் போக்குவரத்தில் பட்ட கஷ்டங்களை அனுபவ ரீதியாக உணர்ந்தவர். திரு. க. அம்பலவாணர் தனது பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்த பின்னர் தொழில் தேடும் பொருட்டு மலாயா சென்றார். மலேசியாவில் தான் கண்ட அனுபவங்களைத் தமது சொந்த ஊருக்குக் கிடைக்கச் செய்யவேண்டுமெனப் பேரவாக் கொண்டிருந்தார். குறிப்பாக அங்கு காணப்படும் தாம்போதிகளைப் போல புங்குடுதீவுக்கும் வேலணைக்கு மிடையில் அமைக்கப்படுதல் அவசியம் என்பதை உணர்ந்தார். இதனைச் செயற்படுத்த மலாயாவிலுள்ள புங்குநிதிவு மக்களை ஒன்று திரட்டி மலாயா - புங்குடுதீவு ஐக்கிய சங்கம் என்ற அமைப்பினை உருவாக்கி புங்குடுதீவு மக்களின் வளர்ச்சிக்கான உபாயங்களைக் கண்டறிந்தார். 1918 ஆம் ஆண்டில் புங்குடுதீவு திரும்பிய பெரியவாணர் முறைப்படி பாலத்தை அமைக்க வேண்டுமென வீடுகள் தோறும் கையொப்பங் களை வாங்கி அரசுக்குச் சமர்ப்பித்துவிட்டு மலாயா சென்றார். அரசு இதில் எவ்வித கவனமும் செலுத்தவில்லை. மலாயாவில் இயங்கி வந்த மலாயா - புங்குடுதீவு ஐக்கிய சங்கத்தைப் பலப்படுத்தி பாலம் அமைக்கப்படல் வேண்டும் என்பதில் அக்கறை கொண்டு நாடு திரும்பினார். 1924, 1926, 1930, 1934 ஆம் ஆண்டுகளில் பல்லா யிரக்கனக்கான கையொப்பங்கள் வாங்கப்பட்டு மீண்டும் மீண்டும் அரசினை வற்புறுத்தத் தொடங்கினார். புங்குடுதீவில் கையொப்பங் கள் சேர்ப்பதில் சின்னவாணர் செயற்பட கொழும்பில் அரசப் பிரதி நிதிகளுடன் சந்திப்புகள், பத்திரிகைகளுக்குக் குரல் கொடுத்தல், போக்குவரத்து அவலத்தைப் புகைப்படங்கள் மூலம் நாடு முழுவதற் கும் அறியச் செய்தல் போன்றவற்றை பெரியவாணர் செய்து வந் தார். 1922 ஆம் ஆண்டில் புங்குடுதீவு மகாஜன சேவா சங்கத்தை ஆரம்பித்த வாணர் சகோதரர்கள் 1926 இல் அகில இலங்கை மகா ஜன சேவா சங்கமாக மாற்றி தீவுப்பகுதியினை குறிப்பாக புங்குடுதீவின் அவல நிலையினை நாடறியச் செய்தனர். இவ்வமைப்பூடாக அரசப் பிரதிநிதிகள், தேசாதிபதிகள் ஆகியோரை அழைத்து வந்து பிரச்சினை களை அவர்களுக்கு எடுத்துக் கூறினார்கள். பாலம் அமைப்பது சம் பந்தமாக சட்ட நிரூபணசபை அங்கத்தவர்களுக்கு எடுத்துக் கூறுவதில் பெரியவாணர் தவறவில்லை. இதன் விளைவாக 1935 ஆம் ஆண்டு சட்டநிரூபண சபையில் பாலம் அமைக்கும் பிரேரணை விவாதத்திற்கு வந்தது. அப்போது புங்குடுதீவில் இருந்த சின்னவாணர் எண்பதிற்கு
96

மேற்பட்ட திகாைத் தேசாதிபதிக்கு பல்வேறு நிறுவனங்கள் ஊடாக அனுப்பியி| r , புங்குடுதீவு - வேலணைப் பாலம் அமைக்கப்படல் வேண்டு.ெ தில் சட்டநிரூபண சபையில் அங்கத்தவர்களாகவிருந்த கண்டி மாவட்டப் பிரதிநிதி திரு பண்டிற்பட்டுவந்துடாவை, ஆங்கி லேயப் பிரதிநிதி சேர். வில்லியம்ஸ், திரு. ஏ. ஈ. குணசிங்கா ஆகி யோர் பல்வேறு ஆதாரங்களுடன் வாதாடி இறுதியாக அநுமதியை யும் நிதியையும் பெற்றுவிட்டனர். இவ் அநுமதி பெறுவதற்கு உழைத் தவர் பெரியவாணர் என்றால் மிகையாகாது. 1935 ஆம் ஆண்டு பாலவேலை ஆரம்பமாகியது. சின்னவாணரே பால வேலையை முன் னின்று மேற்பார்வை செய்தார். இவை மட்டுமல்லாது கல்வி வளர்ச்சி, தபாற் கந்தோர், தொலைபேசி வசதி போன்ற பல்வேறு வளர்ச்சியில் பெரிதும் அக்கறை கொண்டு உழைத்தவர் பெரியவாணர்.
இவ்வாறாகப் பல்வேறு வழிகளில் சமூகப்பணி செய்த திரு. க. அம்பலவாணர் தீவக வளர்ச்சியைக் கருத்திற் கொண்டு 1947 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். மக்கள் அவரது சேவையைக் கருத்திற் கொள்ளாது தோல்வியுறச் செய்தனர். பெரிய வாணர் மனித நேயம் படைத்தவர். பொதுத் தேர்தலில் தன்னுடன் போட்டியிட்டு வெற்றியீட்டிய திரு. அல்பிரட் தம்பிஐயாவை அழைத்து பாராட்டி உபசாரம் நிகழ்த்தியது மட்டுமல்லாது பால வேலையைப் பூர்த்தி செய்து புங்குடுதீவு மக்களின் அவல நிலையைப் போக்குமாறு கேட்டுக் கொண்டார். அவரது வேண்டுகோளை ஏற்று திரு. அல்பிரட்
தம்பிஐயா அயராது உழைத்து 1953 ஆம் ஆண்டு பாலத்தினை மக் கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தார்.
பெரியவாணர் அவர்கள் முப்பது ஆண்டுகள் தன்னலம் பாராது உழைத்து, உடல் இளைத்து 1948 ஆம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு, கொழும்பு வைத் யேசாலையில் அநுமதிக்கப்பட்டு, இயற்கை எய்தி னார். அவர் நம்மிடையே தற்போது இல்லையாயினும் அவரது பெயரைக் கொண்டு விளங்கும் 'வாணர்பாலம்' இருக்கும்வரை அவ. ரது பெயரும் தொடர்ச்சியாகத் துலங்கிவரும்.
S.

Page 64
இயல் - எட்டு
தீவகம் - அபிவிருத்திக்கான உபாயங்கள்
தீவக மக்கள் பொருளாதார சமூக பண்பாட்டு ரீதியாக வ்ளர்ச் சியடைந்துள்ளரெனினும் அவ்வளர்ச்சி இப்பிரதேசத்திற்கு வெளி யிலிருந்தே பெருமளவிற்கு பெற்றுக் கொள்ளப்பட்டது என்றால் மிகையாகாது. பொருளாதாரத் தேட்டங்கள் என்றாலும் சரி நாட்டின் ஏனைய பிரதேசங்களிலிருந்தே பெருமளவில் கிடைக்கப் பெற்றன. அவ்வாறு பெற்றுக் கொள்வதற்கு இப்பிரதேச மக்களின் அபிலாசை, ஆர்வம், விடாமுயற்சி என்பனவே காரணங்களாகவிருந்து வருகின்ற்ன. குறிப்பாக வருவாய் குறைவான தீவுப்பகுதியிலிருந்து இடப்பெயர்வினை மேற்கொண்டு பொருட்தேட்டங்களைப் பெற்று வந்தனர். கல்வி வளர்ச்சியைப் பொறுத்தவரை யாழ்ப்பாணக் குடா நாட்டிலுள்ள கல்விக் கூடங்கள் பெரும் பங்காற்றியுள்ளன. எனினும் இப்பிரதேசத்திலிருந்து இடப்பெயர்வினை மேற்கொள்ள முடியாத பெரும்பாலான மக்கள் காணப்படுகின்றனர். எனவே தீவக மக்களின் பொருளாதார சமூக, பண்பாட்டு வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அவசியமாகின்றது. குடித்தொகை மீள்பரம்பல், கல்வி , விவசாயம், கடற்றொழில், கைத்தொழில், சேவைன்மயங்கள், போக்கு வரத்து, சுற்றுலா போன்ற பல்வேறு துறைகளின் விருத்தியைத் துரிதப் படுத்துவது அவசியமாகும். எனவே இவ்வத்தியாத்தில் மேற்குறித்த துறைகளில் விருத்தி செய்வதற்கான உபாயங்கள் தரப்படுகின்றன,
குடித்தொகை மீள்பரம்பல்
தீவுப்பகுதிகளிலுள்ள வளவாய்ப்புக்களுக்குமதிகமாக மக் கள் வாழ்ந்து வருகின்றனர். இதன் விளைவாக சகல தீவுகளிலும் மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர். பொதுவாக இப் பிரதேசங்களில் வாழும் பெரும்பாலான மக்கள் தமது பொருளாதார வலுவினை வெளியிடங்களிலிருந்தே பெற்றுக்கொள்கின்றனர். தீவுப்பகு தியின் மண்வளம், நீர்வளம் என்பன சிறப்புற்றிருக்கவில்லை. அதே வேளை அதிகரித்து வருகின்ற குடித்தொகையைப் போசிக்கக்கூடிய வசையில் நன்னீர்வளம் பற்றாக்குறையாகவுள்ளது. மா ரிகர் லம் தவிர்ந்த ஏர்னேயகாலங்களில் நீர் படி ப் படி யாக உவர்த்தன்மைய டைந்து வருகின்றது. இதனால் விவசாய நடவடிக்கையை விஸ்தரிக்க முடியது காணப்படுவது ஒருபுறமிருக்க, மக்களது அன்றாட தேவை களைப் பூர்த்திசெய்ய முடியாதுள்ளது. நன்னீர் வளம் அங்குமிங்கு மாக தீவுப்பகுதியில் காணப்படுகின்றது.
98

தீவுப்பகுதியில் வேலைவாய்ப்பினை அதிகரிப்பதற்கேற்ப தொழில் கள் நிறுவப்பட்டிருக்கவில்லை. தொழில்நுட்ப ரீதியில் குறிப்பிட்ட தொழில்களைச் செய்வோர் அதிகமாக வாழ்ந்து வருகின்றவேளை அத் தொழில்கள் விருத்தி பெறக்கூடிய வாய்ப்புக்கள் குறைவடைந்து காணப்படுகின்றன. குறிப்பாக தச்சுத்தொழிலினை மேற்கொள்பவர் கள் தீவுப்பகுதியில் வாழ்ந்து வருகின்ற போதிலும் தொழில் வாய்ப்பு மிக்க குறைவாக விருப்பதால் அவர்கள் குடா நாட்டிற்கும், நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் சென்று தொழில் தேடவேண்டிய நிலையி லுள்ளனர். புங்குடுதீவில் தச்சுத்தொழிலை மேற்கொள்பவர்கள் வாழ்ந்துவரினும் எல்லோரும் அங்கு தொழில்மேற்கொள்ள முடியா துள்ளது. பேர்க்குவரத்து சீராக விருந்த காலங்களில் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குத் தொழிலை மேற்கொள்ள அதிகாலை 3.00 மணிக்கு பேருந்துகளிற் சென்று விட்டு இரவு 9.00 மணிக்கு வீடு வந்து சேர்வர். இதன் விளைவாக அவர்களது உழைப்பிற் கணிசமான பங்கை போக்குவாத்துக்குச் செலவிடப்படவேண்டியிருந்தது, அதே போலவே மத்திய தரத்தினைச் சார்ந்தோரில் பலர் தமது பொருளா தாரத் தேட்டங்களைத் தீவுகளுக்கு வெளியிலிருந்து பெற்றுக்கொள்கின் றனர். இவர்களிற் கணிசமானோர் இப்பிரதேசங்களைவிட்டுத் தற்காலி கமாகவும் நிரந்தரமாகவும் வெளியிடப் பெயர்வினை மேற்கொண்டு வருகின்றனர். இப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக வாழ்ந்து வருபவர் களிற் பெரும்பாலானோர் வசதி வாய்ப்புக் குறைந்தவர்களாகவுள்ள னர். அதாவது கல்வி ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியா கவோ முன்னேற்றமடையாதவர்கள். ஆகவே பல்வகைப்பட்ட பிரச் சினைகளின் மத்தியில் வாழ்ந்து வரும் மக்களிற் கணிசமானோர் இப் பிரதேசத்திலிருந்து இடப்பெயர்வினை மேற் கொள்வதற்குத் தூண் டப்படல் வேண்டும்.
நெடுந்தீவில் 1946 ஆம் ஆண்டுக் கணிப்பீட்டின்படி 6338 மக்கள் வாழ்ந்துள்ளனர். 1981 ஆம் ஆண்டுக் கணிப்பீட்டின்டி 5620 மக்க ளாகக் குறைவடைந்துள்ளனர். இத்தீவு வாழ் மக்கள் வெளியிடப் பெயர்வில் காட்டிய அக்கறையினாலேயே குடித்தொகை வளர்ச்சி யடையவில்லை. அல்லது வளவாய்ப்புகளுக்குமதிகமான குடித்தொகை யினால் இத்தீவு பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியிருக்கும். இத்தீலினைட்போலவே ஏனைய தீவுகளிலிருந்தும் வெளியிடப் பெயர்வு காணப்பட்டிருந்த போதிலும் சார்பு ரீதியாக குறைவென்றே கூறல் வேண்டு. மேலும் வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள, தொடர்ச்சியான தொழில்வாய்ப்பைப் பெறமுடியாதவர்கள் இடப்பெயர்வினை மேற் கொள்ளவில்லை. இத்தகையோரை தொழில்வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்களுக்கு இடப்பெயர்வினை மேற்கொள்ளத்
தூண்ட வேண்டும்.
99

Page 65
அண்மைக்காலங்களில் அபிவிருத்தித்திட்டங்களை இனங் காணும் வல்லுனர்கள் வன்னிப்பிராந்தியத்தை வளர்த்தெடுப்பதன் மூலம் அதனை யாழ்ப்பாணக் குடா நாட்டுக்குச் சுமையாகவுள்ள மக்களினது கவர்ச்சிப் பிரதேசமாக்கலாம் எனக் கருதுகின்றனர். குறிப்பாக வடபகு தி யின் நிர்வாகத் தலைநகரத்தினை மாங்குளத்தில் நிர்மாணிக்கவேண் டும் எனத் தெரிவித்துள்ளனர். அதே வேளை வன்னிப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்குத் தீவுப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படல் வேண்டும். மேலும் இடப்பெயர்வாளர்கள் தமது பாரம்பரியத் தொழில்களை மேற் சொள்ளக்கூடிய வகையில் தொழிற்பயிற்சி வழங்கப்படல் வேண்டும்.
தீவுப்பகுதியின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல் லக் கூடியது கடற்தொழிலாகும். யாழ்ப்பாணக்குடா நாட்டில் இத் தொழிலோடு தொடர்புடையவர்களைத் தீவுப்பகுதியில் குடியமர்த்தும் பட்சத்தில் இத் தொழிலை விருத்தி செய்யக்கூடியதாக அமைவதுடன் இதனோடு தொடர்புடைய தொழில்கள் விருத்திபெற வாய்ப்புண்டு. எவ்வாறாயிலும் உள்வரவிலும் பார்க்க வெளியகல்வு அதிகமாக விருத்தல் அவசியமாகும்.
கல்வி விருத்தி
தீவுப்பகுதி மக்கள் மிக நீண்டகால கல்விப் பாரம்பரியத்தைக் கொண்டவர்கள். சார்பு ரீதியாக நேர்க்கும் போது ஏறத்தாழ கடந்த ஐந்து தசாப்தங்களாக தீவக மக்களின் கல்வி நிலையானது யாழ்ப் பாண நகரப்பாடசாலைகளூடாகவே செழிப்புற்றது என்றால் மிகை யாகாது. இதனால் வசதிபடைத்த, கல்வியறிவுடன் கூடிய சமூகத் தவர்களே கல்வியைத் தொடரமுடிந்தது. ஏழைமாணவர்கள் புறக் சணிக்சப்பட்டனர். தீவுப்பகுதியைச் சார்ந்த பாடசாலைகள் மிகக் குறைந்தளவிலேயே இடைத்தரக்கல்விக்கு மேல் வழங்கியுள்ளது. எனவே எதிர்காலத்தில் இப்பிரதேசக் கல்வி வளர்ச்சியிலான அக்கறை அவசியமாகின்றது. இவற்றினை முன்னெடுததுச் செல்வதற்குப் பின் வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி ய து தவிர்க்கமுடியாததாகும்.
ஆரம்ப இடைத்தரக்கல்வியைப் பொறுத்தவரை எல்லாத்தீவுக ளிலும் மாதிரிப்பாடசாலைகள் (Model Schools) நிறுவப்படல் வேண் டும். அதற்குரிய வளவாய்ப்புக்கள் க ல் வித் திணைக்களத்தினால் வழங்கப்படல் வேண்டும். குறிப்பாக நயினாதீவு, அனலைதீவு, எழு வைதீவு, நெடுந்தீவு, மண்டைதீவு ஆகியவற்றில் தலா ஒவ்வொரு பாடசாலைகளும், புங்குடுதீவு, வேலணைத் தீவுகளில் தலா இரண்டு பாடசாலைகளும், அமைதல் வேண்டும். இப்பாடசாலைகளின் கல்வி
100

வளர்ச்சியில் கல்வித்திணைக்களத்தினரும் பெற்றோரும் அக்கறையு டன் செயற்படுதல் அவசியமாகின்றது. அதே போ ல வே ஏனைய பாடசாலைகளின் விருத்தியில் மேற்குறித்த இரு பிரிவினரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.
அண்மைக் காலங்களில் இப்பிரதேசத்தைச் சேர்ந்த பெற்றோர் தமது Lள்ளைகளின் கல்வியில் அக்கறை கொள்வது படிப்படியாகக் குறைவடைந்து செல்கின்றது. நாட்டின் இனப்பிரச்சனையைச் சாட் டாகக் கொண்டு தமது பிள்ளைகளின் கல்லியை ஆரம்ப, இடைத் தரக் கல்வியுடன் நிறுத்திவிட்டு பொருளாதாரத் தேட்டம் ஒன்றை மட்டும் கருத்திற் கொண்டு வெளிநாடுகளுக்கு அனுப்பி வருகின்ற னர். அது ஒரு புறமிருக்க, பொருளாதார ரீதியில் பின் த ங் கி ய பெற்றோர்களிற் பலர் தமது பிள்ளைகளை ஆரம்ப, இடைத்தரக் கல் வியுடன் பாடசாலையிலிருந்து இடைவிலகச் செய்கின்றனர். இதன் விளைவாக கல்விப் பாரம்பரியம் தளர்ச்சியுறுவதைக் காணமுடிகின் றது. எனவே கல்வியினைத் தொடர்ச்சியாக மேற்கொள்ளுவதற்கான ஆலோசனைகளையும், உதவிகளையும் சமூக நிறுவனங்கள் வாயிலாகப் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்படல் வேண்டும்.
தற்போதைய இடம் பெயர்ந்த நிலையில், யாழ்ப்பாணக் குடா நT-4ன் பல்வேறு இடங்களில் வாழ்ந்து வரும் தீவகமக்கள் முன் எரிலும் பார்க்க பொருளாதார ரீதியில் பாதிப்புற்றுள்ளனர். இதன் விளைவாக பாடசாலையை விட்டு இடைவிலகல் அதிகரித்துச் செல் கின்றது. இடம் பெயர்ந்தோரில பெரும்பாலான குடும்பங்கள் அரசி னால் வழங்கப்படும் உலர் உணவுடனும் அரசசார்பற்ற நிறுவனங்க வி"வி வழங்கப்படும் உ - ன் தேவைப்படும் நிவாரணங்களுடனும் திருப்திப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களின் நீண்ட காலத் தேவைகள் மட்டுப்படுத்தப் படடளவிலேயே வழங்கப் படுகின்றன. அவற்றில் கல்வி வழங்கலும் ஒன்று. இடழ். பெயர்ந்த மாணவர்களின் கல்வியினைச் சீராக்கி நெறிப்படுத்தி அவர்களின் எதிர்காலத் தேவையினைப் பூர்த்தி செய்வ தி ல் அரசும் கல்வித் திணைக்களமும் பாராமுகமாகவே இருந்து வருகின்றன. இடம் பெய ருவதற்கு முன்னர் இருந்தது போ ல வே பாடசாலைகளின் எண் னிக்கை தொடர வேண்டுமென்பதிற் கொண்டுள்ள ஆர்வமும் கல்வி நிலை திகழ்ச்சியடைவதற்கு மு க் கி ய மா ன காரணியாகவுள்ளதுகுறிப்பாக ஒரு கூரைக்குள் ஆறு, ஏழு பாடசாலைகளும், அப்பாட சாலைகளின் எண்ணிக்கைக்கேற்ப அதிபர்களும் கடமையாற்றும் நிலை தற்போது காணப்படுகின்றது. எனவே கல்வி வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமாயின் இடம் பெயர்ந்த நிலையினை மீளமைப்புச் செய்தல் அவசியமாகின்றது.
101

Page 66
வேலணை சேர் துரைசுவாமி ம. ம. வித்தியாலயம், ஊர்காவற் றுறை புனித அந்தோனியார் கல்லூரி, புங்குடுதீவு மகாவித்தியாலயம் ஆகியவற்றின் தற்போதைய தரம் ஒன்றிேயாயினும் வளவாய்ப்புக் களைப் பொறுத்தவரை வேறுபட்டமைகின்றன. எனவே இப்பாட சாலைகள் சகல வளவாய்ப்புக்களையும் ஒருங்கே கொண்ட கல்லூரிக ளாக்கப்படல் வேண்டும். உதாரணமாக வலிகாமம் வடக்குப்பகுதியா னது தீவுப்பகுதியிலும் பார்க்க யாழ்ப்பாணத்துக்கு அண்மையில் உள் ளது. அப்பகுதியில் மகாஜனாக்கல்லூரி, யூனியன் கல்லூரி, நடேஸ் வராக்கல்லூரி, அருணோதயாக் கல்லூரி, ஸ்கந்தவரோயாக் கல்லூரி போன்ற வள வாய்ப்புக்களுடன் கூடிய பாடசாலைகள் காணப்படுவ தால் அப்பிரதேச மாணவர்கள் யாழ்ப்பாண நகரைநாடுவது மிகக் குறைவாகவேயுள்ளது. அதேபோலவே மேற்குறித்த மூன்று பாடசா லைகளும் தர உயர்ச்சியுடன் மட்டும் நின்று விடாது சிறப்பான கல விக்கூடங்களாக மாற்றியமைக்கப்படுமாயின் தீவுப்பகுதியைச் சார்ந்த வசதி குறைந்த மாணவர்கள் பயனடைய வாய்பபுண்டு.
பொதுவாக அண்மைக்காலங்களில் சகலதுறைகளும பன்முகப்படுத் தப்படல் வேண்டும் என்ற கோட்பாடு முன்வைக்கப்பட்ட போதிலும் தீவுப்பகுதிப் பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரித்ததாகdப காணப்படுகின்றது. இத்தகைய கல்விச்சாலைகளின் அதகரிப்புக்கு கிறிஸ்தவமிசனறிBாரினாலும், இந்துச் சபையினராலும் நிறுவப்பட்ட பாடசாலைகளே காரணமாகும். கிறிஸ்தவப் பாடசாலைகளுக்கு மிக் அண்மையில் இந்துப் பாடசாலைகள் நிறுவப்பட்டுள்ளன. இத்தகைய பாடசாலைகள் ஆரம்பிக்கபபட்ட காலங்களில் அவறறின் அமைவிடப் முக்கயம் பெற்றதாக இருந்திருக்க0ோம். ஆனாலம் தறம்பாதைய நி. ஸ் யில் கிடைக்கக்கூடிய வள் வாய்பபுக்கள் மட்டுப்படுத்தப்பட்டு வருவத னால் தூர அடிப்படையில் மிகக்கிட்டிய தூரத தல அமைந்து ள ௗ பாடசாலைகளை ஒன்றிணைப்பது அவசியமாகின்றது. உதாரணமாக புங்குடுதீவு சுப்பிரமணிய மகளிர் விததியாலததையும், புங்குடுதீவு மேற்கு அமெரிக்கன்மிசன கனிஷ்ட வித்தியாலயத்தையும் இணைக்க லாம். புங்குடுதீவு றோமன் கத்தோலிகக பாடசாலையைப் புதுகுடுதீவு மகாவித்தியாலயததுடன் இணைகக முடியும். இதே போலவே ஏனைய தீவுகளில் உள்ள பாடசாலைகள் சிலவற்றைக் குறைததுக கொள்ளக கூடிய வாய்ப்புண்டு. இவ்வாறாக இணைப்புகளை மேற கொள்ளும போது மதச் சிததனைக்கப்பால் நின்று செயற்படும் பட்சத்திய கல விககான வளவாய்ப்பினை ஒன்றிணைதது தீவகமக்களின் கல்வியினை முன்னெடுத்துச் செல்ல முடியும்.
யாழ்ப்பாணக்குடாநாட்டில் தீவுப்பகுதியானது கலவியுட்பட பல் வேறு துறைகளில் பின்தங்கிக் காணப்படுகினறது. இருப்பினும் பல்க லைக்கழக அநுமதி விடயத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள
102

ஏனைய மாணவர்கள் குறிப்பாக யாழ்ப்பாணநகரத்த வர் களைப் போலவே தீவக மாணவர்களும் இணைக்கப்படுகின்றனர். இதன் விளை வாக இப்பிரதேச மாணவர்கள் பெரிதும் பாதிப்படைந்தவர்களாக வுள்ளனர். எனவே போக்குவரத்து கஷ்டத்தினால் அவதியுற்றுள்ள தீவுப்பகுதியினை தனிமாவட்டமாக அங்கீகரித்து பல்கலைக்கழக அநுமதியில் பின்தங்கிய மாவட்டமாகக் கருதப்படவேண்டும் அத்து டன யாழ்ப்பாணக் கல்வி மாவட்டம் தற்போது இரண்டு வலயங் களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தீவுப்பகுதியைத் தனிக் கூறாக்கி மூன். றாவது வலயமாக்கப்படல் வேண்டும்.
கடந்த மூன்று தசாப்தத்திற்கு முன்னர் தீவகத்தைச் சேர்ந்த ஆசிரியர் பலர் தமது பிள்ளைகளை நகர்ப்புறப் பாடசாலைகளிற் கல்வியைத் தொடரவைத்தனர். எனினும் தாம் கற்பித்த பாடசாலை களிற் கடமைகளைத் திறம்படச் செய்துள்ளனர். அத்தகைய ஆசிரி யர்களை அவர்களிடம் கற்ற மாணவர்கள் இன்றும் நினைவு கூரு கின்றனர். அண்மைக் காலங்களில் ஆசிரியர்கள் பலர் கடமையுணர் வும், பிரதேச உணர்வும் குன்றியவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்கள் மாணவர்களின் நலனின் கூடிய அக்கறை செலுத்துவார்களா யின் கல்வி நிலையை உயர்த்த முடியும். அத்துடன் தீவுப்பகுதியைச் சாராத ஆசிரியர்களை நியமிப்பதும் கல்வி விருத்தியைத் தடை செய் வதாகவுள்ளது. முடிந்த வரை தீவுப்பகுதி சார்ந்தோரை ஆசிரியர் களாக நியமிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
விவசாய விருத்தி
விவசாய உற்பத்தியைப் பொறுத்தவரை தீவுப்பகுதி மிகவும் பின்தங்கிய பிரதேசமாகவே காணப்படுகின்றது. விவசாய உற்பத்தி அதிகரிக்காமைக்கு பாதகமான பெளதிகக்காரணிகள் மட்டுமல்லாது மாறிவரும் பொருளாதாரச் செயற்பாடுகளும் காரணங்களாக அமைந் துள்ளன. பெரு:பாலும் பருவகால மழை வீழ்ச்சி பொய்கின்றமை ஒருபுறமிருக்க, தரைக்கீழ்நீரில் உவர்த்தன்மை வருடத்தின் பெரும் பாலான காலங்களில் காணப்படுகின்றது. அத்துடன் விவசாய உற்பத் நியானது பாதகத்தன்மையையடைவதற்கான காரணிகளில் பெரும் LuTgb(T.-t aíla)JeFiriu உற்பத் இக்கான நில உடமையாள்ர்களின் வெளியிடப் பெயர்வும், .யிர்ச்செய்கையில் நாட்டம் கொள்ளாமையும் அடங்கும். இதனால் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட நிலங்களில் பெரும் பாலானவை தரிசு நிலங்களாக மாற்றம் பெற்றுவருகின்றன. இடப் பெயர்வினை மேற்கொள்ளாத சிறு அளவிலான நிலவுடமையாளர் உற்பத்தத்திறன் குறைவான நிலங்களில் உற்பத்தியை மேற் கொள் கின்றனர். குறிப்பாக புங்குடுதீவு, நெடுந்தீவு, நயினாதீவு அனலைதீவு ஆகிய இடங்களில் பெரும்பாலான நிலங்கள் தரிசு நிலங்களாக மாற்றம்
103

Page 67
பெற்று வருகின்றன. வேலணைத்தீவில் வேலணை மேற்கு, புளியங் கூடல், நாரந்தனை போன்ற இடங்களிலுள்ள மக்கள் முன்னரைப் போலல்லாதுவிடினும் ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடும்போது சார்பு ரீதியாக பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்டு வருகின்றனர் எனலாம்.
பொதுவாக தீவகத்தில் வாழ்பவர்களில் பெரும்பாலானோர் விவ ாய நிலப்பற்றாக்குறையை எதிர்நோக்குகின்றனர். இவர்கள் விவ சாயக் கூலிகளாகவும் ஏனைய தொழிலகளில் ஈடுபாடு கொண்டவர்க ளாகவுமுள்ளனர். எனவே இப்பிரதேசங்களில் பயிர்ச்செய்கை உற்பத்தி அதிகரிக்கப்படல் வேண்டுமாயின் மேற்குறித்தவர்களை பயிர்ச்செய் கையை மேற்கொள்ளத் தூண்டுதல் அவசியமாகின்றது. தற்போது தரிசு நிலங்களாக மாறிவரும் நிலங்களைக் குத்தகையாகப் பெறுவதன் மூலமாகவோ அன்றில் வேறு வழிகளின் மூலமாவோ பெற்று வழங் கப்படுதல் வேண்டும்.
1950 களுக்கு முன்னர் மேட்டு நிலங்களில் சிறு தானியங்கள் பருப்புவகைகள் பெருமளவிற்குச் செய்கை பண்ணப்பட்டு வந்துள்ளன. பொதுவாக, சிறு தானிய நுகர்வு மக்களிடையே குறைவடைந்து செல் லவே உற்பத்தியை மேற் கொள்ளாது விட்டனர். மக்கள் உணவில் தன்னிறைவினைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் மீண்டும் மேற் படி பயிர்களைப் பயிரிடுதல் அவசியமாகின்றது. இவற்றை உற்பத்தி செய்வதற்கு அரசின் கமநல சேவைப்பகுதி மக்களுக்கு உதவியும் ஊக்கமும் கொடுப்பது மட்டுமல்லாது நியாயமான விலையில் சந் தைப்படுத்துவதற்கு வசதியையும் செய்து கொடுக்க வேண்டும். சிறுதானியப் பயிர்களைப் பொறுத்தவரை நெடுந்தீவு, வேலணைத் தீவுகளிலுள்ள மேட்டுநிலங்களில் பயிரிடக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு.
தீவகத்தில் மண்வளம், நீர்வளம் என்பன வான்பயிர்களை வளர்ப் பதற்கு வாய்ப்பாக உள்ளன. குறிப்பாக புளியமரம்நல்ல பயனைத் தரக்கூடியது. இம்மரத்தினை மக்கள் வீடுகளில் வளர்ப்பதைத் தவிர்க் கின்றனர். தமிழ் நாட்டில் நெடுஞ்சாலைகளின் இரு மருங்குகளிலும் புளியமரம் நாட்டப்பட்டு அவற்றிற்கு லக்கமிட்டு வளர்த்து வரு கின்றனர். கேள்வி நடைமுறை மூலம் புளியம்பழம் பறிப்டோருக்குக் கொடுப்பதன் வாயிலாக அரசு வருமானத்தைப் பெற்று வருகின்றது. அதுபோல எல்லாத் தீவுகளிலும் வீதிகளின் இருமருங்கிலும் புளிய மரங்களை நாட்டுதல் நன்மை பயக்கும். வளரும் காலத்தில் சொட்டு நீர்ப்பாசன முறையினை நடைமுறைப்படுத்தலாம்.
மேலும் தற்போது சர்வதேசரீதியில் பல்வேறு தேவைகளுக்காக குடியிருப்புக்களைச் சார்ந்து காடு வளர்க்கும் நிலையைக் காணமுடி
04

கின்றது. வேலனைத்தீவின் வடக்கு, தெற்குப்பகுதிகள், புங்குடு தீவின் கேரதீவைச் சார்ந்த பகுதிகள், நெடுந்தீவு மேற்குப் பகுதி, மண்டைதீவின் வடக்கு, மேற்குப் பகுதிகளில் காடு வளர்ப்பினை ஊக்கப் படுத்தல் வேண்டும். இப்பிரதேசங்களில் வரட்சியைத் தாங் கக்கூடிய யூகாலிப்படஸ் இப்பிலிப்பில், விளாத்தி, இலுப்பை, ஆல மரம், சவுக்கு, வேம்பு, மஞ்சவண்ணா, புளி போன்றவற்றை வளர்த் தல் சிறப்பானது.
தீவுப்பகுதி பணம்பொருள் உற்பத்தி செய்வதற்கு வாய்ப்பான தாகவுள்ளது. ஆனால் இப்பிரதேசத்தில் இக் த கைய உற்பத்திகள் படிப்படியாக வீழ்ச்சியடைந்து கொண்டு செல்வதாக பனை அபி விருத்கிச் சபைக் குறிப்புக்களிலிருந்து தெரியவருகின்றது. 1950 களுக்கு முன்னர் பனையினைப் பெருமளவில் திட்டமிடப்பட்டே வளர்த்து வந் துள்ளனர். அதாவது மக்கள் தங்களது நிலத்தின் நான்கு பக்கங்களிலும் வரிசையாக விதைத்து வளர்த்தனர். எனினும் தாமாகவே முளைத்து வளரும் பனந்தோட்டங்களில் ஒழுங்கு முறையாக வளர்க்கப்பட வில்லை, 1960 களுக்குப் பின்னர் மக்கள் கல் வீடுகளைக் கட்டத்தொடங் கவே பனைமரங்கள் கறிக்கப்பட்டன. அவ்வாறாகத் தறிகப்பட்டதற் கேற்ப பனை மரங்கள் உற்பத்தி செய்யப்படவில்லை என்றே கூறல் வேண்டும். இப்பிரதேச பைெல மரங்கிள் உள்ளூர்த் தேவைகளுக்கு மட்டு மல்லாது, குடாநாட்டுக்கான தேவைகளிற் கணிசமான பங்கினைப் பூர்த்தி செய்துள்ளது. எனவே பனை மரங்களைத் திட்டமிட்டு வளர்த்தெடுப்பதற்கு மக்களுக்குப் பனை அபிவிருத்திச் சபையும் சமூக நிறுவனங்களும் உதவிகளைச் செய்தல் அவசியமாகின்றது.
பனை ஒரு கற்பக கரு என்பர். கள்ளு, பனம்பழத்திலிருந்து பனாட்டு, ஒலை, ஈர்க்கிலிருந்து பொருட்கள், ஒடியல், மரம் போன்ற பல பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம். பனைமரத்தில் ஏறி அதன் உற்பத்திப் பொருட்களைப் பெறுதல் சாதியடிப்படையிலமைந் துள்ளது. இதன் விளைவு மிகச் சிறுபான்மையினரே ஈடுபாடு கொண் டிருப்பதால் பெரும்பாலான உற்பத்திப் பொருட்களை உரியமுறையில் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது. தீவுப்பகுதியில் கள்ளினை முழுமை யாகப் பெற்றுக்கொள்ள முடிந்தால் அதனோடு தொடர்புடைய தொழில்கள் விருத்திபெற வாய்ப்புண்டு. குறிப்பாக கள்ளிலிருந்து சாராயம் பெறப்படும் பட்சத்தில் அதிக வருமானத்தைப் பெற்றுக் கொள்ளலாம். ஊர்காவற்றுறையிலும், புங்குடுதீவிலும் சாராய உற்பத்தி செய்யப்படும் ஆலைகள் நிறுவப்படும் பட்சத்தில் பல நூற் றுக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பினை வழங்க முடியும்.
பனம்பழத்திலிருந்து சாறினைப் பெற்று பனாட்டு உற்பத்தி செய்வது ஊக்குவிக்கப்படல் வேண்டும். மாறி வரும் பொருள
105

Page 68
தார அமைப்பினால் இத் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பனை அபிவிருத்திச்சபையால் பனாட்டினை நல்ல விலை கொடுத்து வாங்கப்படுமாயின் மீண்டும் இவ்வுற்பத்தியினை மக்கள் மேற்கொள்ளுவார்கள். அத்துடன் கிராமங்கள் தோறும் பணம்பொருள் உற்பத்திச் சங்கங்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு ஊக்கம்-கொடுத்தல் வேண்டும். பனங்கட்டி, ஒடியல்மா, போன்றவற்றைத் தரமானதாக வும், சுகாதாரமாகவும் உற்பத்தி செய்யப்படுமிடத்து தென்னிலங்கைச் சந்தைக்கு மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யக் கூடிய வாய்ப்புண்டு.
தீவுப்பகுதியில் பனம்பொருட்கள் உற்பத்தியில் மக்கள் நாட்டம் குறைவாக இருப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று பனை மரங்கள் காணப்படுகின்ற பெரும்பாலான நிலங்கள் வசதி படைத்த வர்களுக்கும் இடப்பெயர்வாளருக்கும் சொந்தமாக இருத்தலேயாகும். அதனால் பொருளாதார ரீதியில் நலிவுற்றவர்களால் இத் தொழி லைச் செய்யமுடியாதுள்ளது. எனவே அவ்வாறு தேடுவாரற்றுக் காணப்படும் பனைவளத்தினைத் தக்க முறையில் பயன்படுத்துவதற் குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுதல் அவசியமாகின்றது.
பனையிலிருந்து கட்டுமானத்திற்குப் பனைமரம் உபயோகிக்கப் படுகின்றது. இதனால் இம மரங்கள் வெட்டப்படுகின்றன. அதற்கேற்ப புதிதாக மரங்களை வளர்ப்பதில் மக்கள் அக்கறை கொண்டவர்களாக விருக்க வேண்டும். அத்துடன் இப்பிரதேசங்களில் காணப்படுகின்ற மரங்கள் வயதால் முதிர்ந்தவை. காலப்போக்கில் இவை அழிவடைவ தற்கு சந்தர்ப்பம் உண்டு. எனவே தொடர்ச்சியாகப் பனை உற்பத்திப் பொருட்களை பெறுதல் வேண்டுமாயின் புதிதாக பனை மரங்களை வளர்ப்பதில் அக்கறை எடுத்தல் வேண்டும். இதற்குப் பனை அபிவி ருத்திச் சபையும் சமூக நிறுவனங்களும் மக்களை ஊக்கப்படுத்தல் அவசியமாகின்றது.
கடற்றொழில் விருத்தி:
தீவுப்பகுதியைச் சூழவுள்ள கடற்பரப்பு ஆழம் குறைந்ததாகவும், மீன் "உணவான பிளாங்டன் உற்பத்தியாகக்கூடிய பண்புகளைக் கொண்டு காணப்படுவதால் மீன்பிடித் தொழில் வளர்ச்சி பெறக்கூடி ப தாகவிருந்தபோதிலும் இத்தொழில் மிகவும் பின்தங்கியதாகவே காணப்படுகின்றது. இத்தொழிலில் ஈடுபடுவோர் வறுமைக் கோட் டிற்குக் கீழ் வாழ்பவர்கள்ீம் பின்தங்கிய மீன்பிடிமுறைக்ளைக் கையாள்பவர்களாகவும் இருப்பதே முக்கியமான காரணிகளாகும்
106

தீவகத்தில் கடற்றொழிலில் சங்கு குளித்தல் 1940கள் வரை சிறப்புற்றிருந்தது. அவை காலப்போக்கில் கைவிடப்பட்டது. இதனை மீண்டும் செயற்பாட்டுக்குக் கொண்டுவருதல் அவசியமாகின்றது. அத்துடன் கடலட்டை சேகரித்தல் தொழிலையும் நவீனப்படுத்து வதுடன் இறால் உற்பத்தியிலும் மக்கள் ஈடுபடுவார்களாயின் இவற் றின் மூலம் வெளிநாட்டுச் செலாவணியினைப் பெற்றுக் கொள்வதுடன் மக்கள் வளமாக வாழ வழி பிறக்கும் என நம்பலாம.
மீன்பிடித் தொழிலை விருத்தி செய்யவேண்டுமாயின் நவீன மீன்பிடி உபகரணங்கள், படகுகள் என்பவற்றைப் பயன்படுத்தி ஆழ் கடல் மீன்பிடியில் ஈடுபடுதல் அவசியமாகின்றது. இதற்கான உதவி கள் அரசினால் வழங்கப்படுதல் வேண்டும். வறிய மீனவர்களின் நலன் பேணுவதில் மீன்பிடிக் கூட்டுறவுச் சங்கங்கள் பெருமளவிற்கு உதவ முன் வரவேண்டும். அத்துடன் மீன்பிடித்தொழில் சாதியடிப் படையிலல்லாது மக்கள் மயப்படுத்தப்பட்ட தொழிலாக மாற்றப்படு தல் வேண்டும். பொருளாதார வசதிபடைத்தவர்கள் இத்தொழி லில் முதலீடு செய்தால் நிச்சயமாக முதலீட்டாளர் மட்டுமல்லாது தொழிலாளர்களும் வளர்ச்சியடைய வாய்ப்புண்டு.
தீவுப்பகுதியில் மீன்பிடித்தொழில் விருத்திபெற வேண்டுமாயின் உற்பத்தி செய்யப்படும் மீன்களைப் பழுதுபடாது பாதுகாத்தல் அவ இயமாகின்றது. இதற்கு நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவுகளில் பணிக்கட்டித் தொழிற்சாலைகள் அமைக்கப்படவேண்டும். உற்பத்தி செய்யப்படும் மீனைச் சந் ைகப்படுத்துவதற்கு மீன்பிடிக் கூட்டுறவுச் சங்கங்கள் முன் வருதல் வேண்டும்.
மீன்பிடி உற்பத்தியின் வளர்ச்சிக்கு மீன்பிடித் துறைமுகங்களை உருவாக்குதல் அவசியமாகின்றது. அவ்வத் துறைமுகங்களூடாக மீன் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கு வசதியாக, பழுதில்டயாது பாது காப்பதற்கான வசதிகள், பதப்படுத்துதல் வசதிகளைச் செய்து கொடுத்தல், போன்ற பல நலத்திட்டங்கள் உருவாக்கப்படுதல் வேண்டும். குறிப்பாக நெடுந் தீவில் வெல்ன்ல, புங்குடுதீவில் கழு தைப்பிட்டி, புளியடித் துறை, கோரியாவடி, குறிகாட்டுவான், ஆகி யவற்றிலும் வேலணைத்தீவில் சாட்டி, அல்லைப்பிட்டி, ஊர்காவற் றுறை, மண்டைதீவில் கிழக்குக்கரை, நயினாதீவில் வங்களாவடி பகுதிகளில் பெரியளவிலானதும், சிறிய அளவிலானதுமான மீன் பிடித் துறைமுகங்கள் உருவாக்கப்படுதல் அவசியமாகின்றது. அத்துடன் இப்பிரதேச மீனவர்களின் நலன்கருதி மீன்பிடிப் பயிற்சிப் பள்ளி ஒன்று அமைக்கப்படல் வேண்டும்.
107

Page 69
பொதுவாக மீன்பிடித் தொழில் சாதி அடிப்படையில் அமைந்த தொழிலான படியால் யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஏனைய பகுதி களிற் செறிவாக வாழ்ந்துவரும் இத்தொழிலோடு தொடர்புடைய வர்கள் தீவுப்பகுதிகளில் வந்து குடி யேறு வ தற்கே ந் ப கவர்ச்சிப் பகுதிகளாக மாற்றப்படல் வேண்டும். அதேவேளை தீவுப்பகுதியில் வேறு தொழில்களைச் செய்வோர் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு தொழிலின் நிமித்தம் இடப்பெயர்வினை மேற்கொள்வதற்கு வாய்ப்பினை அளித்தல் வேண்டும்.
கைத்தொழில்விருத்தி
கைத்தொழில்களைப் பொறுத்தவரை தீவுப்பகுதி மிகவும் பின் தங்கிய பிரதேசமாகவேயுள்ளது. பாரியகைத்தொழில்களோ அன்றில் நடுத்தரக் கைத்தொழில்களோ இல்லை என்றே கூறல் வேண்டும். சிறுகைத்தொழில்களும் குடிசைக்கைத்தொழில்களும் மிகச் சிறியளவில் காணப்படுகின்றன. பொது வா க ஒரு பிரதேசத்தின் சாதகமான இயற்கை வளத்துடன் ஆற்றலுள்ள மனிதவளமும் காணப்படுமாயின் அப்பிரதேசம் கைத்தொழிலில் முன்னேற வாய்ப்புண்டு. தீவுப்பகுதி யில் இவ்விருவளங்களும் சிறப்புத்தன்மை பெற்றிருக்கவில்லை. எனி னும் முடிந்தளவு சிறிய, குடிசைக் கைத்தொழில்களை விருத்தி செய்ய வேண்டியது அவசியமாகின்றது. அவையாவன
1. பனையுடன் தொடர்புடைய தொழில்களை விருத்தி செய்தல். கடகம், பாய் இழைத்தல், அழகுள்ள பொருட்களை உற்பத்தி செய்தல், பனாட்டு உற்பத்தி, சாராய உற்பத்தி, மரஉற்பத்தி போன்றனவே அவையாகும். இத்தகைய தொழில்களை சகல தீவுகளிலும் விருத்தி செய்ய வாய்ப்புண்டு. இத் தொழில் விருத்தியின் பொருட்டு பயிற்சி வகுப்புக்கள், கருத்தரங்குகள் நடாத்தப்பட வேண்டும்.
2
பயிர்ச் செய்கையுடன் தொடர்புடைய  ைக த் தொழில் விருத்தி சுருட்டு உற்பத்தி, தென்னந்தும்பிலிருந்து துடைப்பம் செய் தல் என்பன விருத்தி செய்யப்படல் வேண்டும். இத்தொழில் களை வேலணை, அனலைதீவுகள்ல் விரிவுபடுத்துவதற்கேற்ற வாய்ப்புக்களுண்டு.
3. கால்நடையுடன் தொடர்புடைய தொழில் விருத்தி
பால் உற்பத்தி மற்றும் இறைச்சியுற்பத்திகளைப் பெருக்குவ தற்கு குளிரூட்டிசாதனங்களை ஏற்படுத்திக்கொடுத்தல், எலும்
08

பினைக் கொண்டு உரம் மற்றும் கோழித்தீனுக்கு அரைத்தல் தொழில் வேலணைத்தீவு, நெடுந்தீவு, புங்குடுதீவில் அமைக்க வாய்ப்புண்டு.
4. கடற்றொழிலுடன் தொடர்புடைய தொழில்கள்
மீன்களைப்பழுதுபடா வண்ணம் குளிரூட்டிப் பாதுகாத்தல், பாவனையிலிருந்து விலக்கப்பட்ட மீன்களை உலரவைத்து அரைத்து கோழித்தீனுக்குப் பயன்படுத்துதல், முருகைக்கற் களை அரைத்து கோழித்தீனுக்குப் பயன்படுத்தல், சங்கு, சிப்பி போன்றவற்றை அரைத்து சுண்ணாம்பு செய்தல், மீன்களைத் தகரத்திலடைத்தல், பனிக்கட்டி உற்பத்தி செய்தல். மேற் குறித்த தொழில்களைச் சகல தீவுகளிலும் மேற்கொள்ளலா மெனினும் நெடுந்தீவு, தம்பாட்டி, மண்கும்பான், வேலணை தெற்கு, புங்குடுதீவின் தென்பகுதிகளில் அமைப்பதற்கான வாய்ப்புக்கள் உண்டு.
5. சுண்ணாம்புக்கல்லுடன் தொடர்புடைய தொழில்கள்
வெளியரும்பிக் காணப்படும் சுண்ணாம்புக்கற்களை அகழ்ந்து தேவைகளுக்கேற்ப பயன்படுத்துதல், அதாவது கட்டுமானம், வீதிகளுக்குத் தேவையான கற்களைப் பெற்றுக் கொள்ளல், சுண்ணக்கற்களை மா வாக்கிப் பல்வேறு தேவைகளுக்குப் பயன் படுத்துதல், மேற்குறித்த தொழில்களை நெடுந்தீவு, புங்குடு தீவு, நயினாதீவு ஆகிய தீவுகளில் அமைப்பதற்கான வாய்ப் புக்கள் உள்ளன.
மேற்குறித்த சிறுகைத்தொழிலில்களையும் குடிசைக் கைத்தொழில் களையும் தீவுப்பகுதிகளில் அமைப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக விருக்கின்றன. எனவே செயற்பாட்டுக்கு வருமாயின் தீவகங்களில் இவை வேலையில்லாப் பிரச்சனைகளைக் கணிசமானளவில்-தீர்க்கலாம் என நம்பலாம். இத்தொழில்களில் அரசு மட்டுமல்லாது தனியார் துறையினரும் ஆர்வம் காட்டுதல் அவசியமாகின்றது.
சேவை மையங்களின் விருத்தி
பொதுவாக தீவுப்பகுதிகளில் விவசாயம் சாராத தொழில்களி லேயே பெரும்பாலானோர் ஈடுபாடு கொண்டிருக்கின்றனர். இப்பிர தேசங்களில் வாழும் மக்களின் பொருளாதார, சமூக பண்பாட்டு நிலைக்கும் அங்குள்ள இயற்கை வளத்திற்குமிடையில் பெருமளவி லான தொடர்பினைக்காணமுடியாது. சகல தீவுகளிலும் பெரும் பாலான மக்களது பொருளாதார, சமூக பண்பாட்டு வளங்க ள்
109

Page 70
விருத்தி பெற்றனவாகவே காணப்படுகின்றன. இத்தகைய விருத்தி நிலைக்கு போக்குவரத்துக் கஷ்டத்திற்குமப்பாலான குடாநாட்டுடன் குறிப்பாக யாழ்ப்பாண நகருடனும் நாட்டின் ஏனைய பகுதிகளுட னுமான பல்வேறு வகைப்பட்ட தொடர்புகளினாலேயேயென்றால் மிகையாகாது.
ஒரு பிரதேசம் விருத்தி பெற வேண்டுமாயின் அப்பிரதேசத்து வளங்களுடன் கூடியதான சேவை மையங்கள் விருத்தி பெறுதல் அவசியமாகின்றது. இதனால் அப்பிரதேசங்கள் விருத்தி பெறுவது டன் வேலை வாய்ப்புக்கள் அதிகரிக்கப்படவும் வாய்ப்புண்டு. தீவுப் பகுதியின் மத்திய இடமாககக் கொள்ளக் கூடியது வேலணைத் தீவி லுள்ள வங்களாவடிப் பகுதியாகும். (இப்பிரதேசத்தில் அரச சார் பற்ற நிறுவ னங்களது செயற்பாடுகளுடன் அரச சார்புடைய நிறு வனங்களும் அமைந்திருப்பதால் வேலணைத்தீவு மக்களுக்கு மட்டு மன்றி பெரும்பாலான தீவுகளில் வாழும் மக்களுக்கும் மையமாக இப் பிரதேசம் விளங்குகிறது). இம்மையம் நகராக்க வளர்ச்சியைப் பெற்றுள் ளது. இப்பிரதேசத்தினை தீவுப்பகுதி வாழ் மக்களின் மத்திய இட மாகக் கருத்திற் கொண்டு விருத்தி செய்யப்படுதல் அவசியமாகின் றது. 1981 ம் ஆண்டு கணிப்பீட்டின்படி வேலணைத்தீவில் 3 1551 மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். அத்துடன் புங்குடுதீவு, நயினாதீவு நெடுந்தீவு மக்களுக்கும் இப்பிரதேசம் நகரமாக விருத்தி பெறும் பட் சத்தில் பல வழிகளில் நன்மை கிடைக்க வாய்ப்புண்டு.
வேலணைத்திவில் தொழில் நுட்பத்துடன் கூடிய சேவை மையம் புளியங்கூடலிலே விருத்தி பெற்று வருகின்றது. வாகனங்கள் பழுது பார்த்தல், அச்சகம், மின்சாரப்பிறப்பாக்கிகள் போன்ற மக்களுக்குத் தேவையான இயந்திர வகைகள் சார்ந்த தொழில்களைக் கொண்ட வேலைமையமாக வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள. ஏனெனில் இந்நூற்றாண்டின் ஆரம்பகாலத்திலிருந்து இப்பிரதேசத் தைச் சார்ந்த பலர் இத் தொழில்களில் தொடர்ச்சியாக ஈடுபாடு கொண்டு வருவதைக் காணமுடிகின்றது. இச்சேவை மையம் விருத்தி செய்யப்படுமாயின் வங்களாவடியைச் சூழவுள்ள பிரதேச நகராக்க வளாச்சிக்கு உந்து சக்தியாக அமையவாய்ப்புண்டு. இவை தவிர நாரந்தனை, அல்லைப்பிட்டியிலும் சிறிய சேவை மையங்கள் விருத்தி பெறவாய்ப்புண்டு.
ஊர்காவற்றுறை பட்டினத்தை மீள விருத்தி செய்தல் அவசிய மாகின்றது. வெனிநாட்டு வர்த்தகத்தினை விரிவு படுத்தவும் நாட் டின் ஏனைய துறைமுகங்களுடனான கப்பல் போக்குவரத்தினை மேற் கொள்ளவும் இத்துறைமுகம் பயன்படுத்தப் படல் வேண்டும்.
110

1984ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் காக்கைதீவு சார்ந்த பகுதியில் சர்வதேச விளையாட்டரங்கு ஒன்று ஸ்தாபிக்கப்படல் வேண்டும் என அரசு தீர்மானித் திருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களைக் காட்டி அரசு அதனை நிறைவேற்றவில்லை. வேலணைத்தீவில் அல் லைப்பிட்டி, மண்கும்பான் பிரதேசத்தின் வடபகுதியில் பெருநிலப் பரப்பு தரவையாகக் காணப்படுகின்றது. அந் நிலப்பரப்பில் மேற் குறித்த விளையாட்டரங்கு அமைக்கப்படுமாயின் இப் பிரதேசங்கள் விருத்திபெற வாய்ப்புண்டு. இவ்வரங்குக்குத் தேவையான நீரினைச் சாட்டிப் பகுதியிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
1981 ஆம்ஆண்டுக் கணிப்பீட்டின்படி புங்குடுதீவில் 14622 மக் கள் வாழ்ந்து வந்துள்ளனர். இத்தீவு பல வழிகளிலும் அரசினாலும் அரசியல் வாதிகளாலும் புறக்கணிக்கணிக்கப்பட்டு வருவதாக, தமது பிரதேசத்தில் ஆர்வம் கொண்ட சிலர் எழுத்தாலும் பேச் சா லு ம் தெரிவித்து வந்துள்ளனர் எவ்வாறெனினும் இத்தீவில் நயினாதீவினை இணைத்த உதவி அரச அதிபர் பணிமனை அமைக்கப்படுதல் வேனே டும. அத்துடன் வங்களாவடியில் இயங்கும் அரச பணிமனைகளின் பிரிவுகளை இயங்க வைப்பதில் அரசு ஆர்வம் கொள்ள வ்ேண்டும். இத்தீவின் பிரதான சேவை மையமாக வளர்ச்சியடையக் கூடிய பிர தேசம் ஆஸ்பத்திரிச் சந்தியிலிருந்து பெருங்காட்டுச் சந்திவரையிலான பகுதியாகும். இந்தச் சேவை மையத்தினை விருத்தி செய்தால் இத்தீவு வாழ் மக்கள் பல வழிகளில் பயனடைய வாய்ப்புண்டு. அத்துடன் ஆலடிச்சந்தி, புளியடிச்சந்தி ஆகிய பகுதிகளில் சிறிய சேவை மையங் கள் வளர்ச்சி பெறும் பட்சத்தில் மக்களுக்கு நன்மை பயக்கும் என
G) TLD . -
நெடுந்தீவில் ஆஸ்பத்திரியடி, சாராப்பிட்டி போன்ற இடங்களிற் சேவை மையங்கள் விருத்தி பெறுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு. இத்தீவில் சுற்றுலா வளர்ச்சி ஏற்படும் பட்சத்தில் மேற்குறித்த இரு இடங்களும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பிரதேசங்களாக மாறு வதற்கான வாய்ப்புண்டு.
நயினாதீவில் நாகபூசணி அம்மன் ஆலயம், பெளத்த விகாரை சார்ந்த பகுதிகளைச் சேவை மையமாக விருத்தி செய்தல் அவசியமாகின் ற்து. இப்பகுதிகள் விருத்தி செய்யப்படுமாயின் சுற்றுலாப்பயணிக ளைக்கவரும் மையமாக வளர்ச்சி பெற வாய்ப்புண்டு. அத் துட ன் நயினாதீவின் தென்பகுதியில் வங்களாவடியில் சிறிய சேவை மையம் விருத்தி பெறும்ாயின் அப்பகுதி வாழ் மக்கள் நன்மை பெறுவர்.
இவைதவிர மண்டைதீவு, அனலைதீவு பிரதேசத்தில் துறைமுகம் சார்ந்த பிரதேசங்களில் சேவை மையங்கள் விருத்தி பெறுவதை ஊக் குவிக்கவேண்டும்.
1 11

Page 71
போக்குவரத்து விருத்தி
தீவுப்பகுதியின் தற்போதைய பிரச்சனைகளின் த லை யாய து போக் கு வ ர த் துப் பிரச்சனையாகும். இந் நூ லில் இப்பிர தேசத்தின் போக்குவரத்து பற்றி விபரமாக அத்தியாயம் ஏழில் தரப்பட்டுள்ளது. இருப்பினும் இப்பிரதேசத்தின் எதிர்கால விருத் திக்குப் போக்குவரத்தினை மேற்கொள்ளக் கூடிய வகையிற் புதிய பாதைகள் நிர்மாணிக்கப்படல் வேண்டும். 1883ஆம் ஆண்டு யாழ்ப் பாணத்தைப் பரிபாலனம் செய்து வந்த சேர் வில்லியம் துவைனம் என்பவர் அலுப்பாந்தியிலிருந்து வேலணைத்தீவுக்கு புகையிரதப் பாதை அமைக்க வேண்டும் எனக் கருத்துத் தெரிவித்திருந்தார். அக்கருத்து தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய தாகவமைகின்றது. அலுப்பாந்தியிலிருந்து பண்ணைப் பாலத்தை அகலமாக்குவதன் மூலம், மண்கும்பான், சாட்டி, வங்களாவடியூடாக ஊர்காவற்றுறைத் துறைமுகம் வரை விரிவுபடுத்தப்படின் தீவக மக் களின் இலகுவான போக்கு வரத்திற்கு வழிபிறக்கும் எனலாம். வங்களாவடியைப் புகையிரத நிலையச் சந்தியாகக் கொண்டு புங்கு டுதீவுப் பாலத்தை அகலமாக்குவதன் வாயிலாக குறிகட்டுவான் துறைமுகம் வரை புகையிரதப்பாதை அமைக்கப்படுமாயின் பயணி கள் சேவைக்கு மட்டுமல்லாது பொருளாதார விருத்திக்கும் குறிப்பாக மீன்பிடித் தொழில் வளர்ச்சிக்குப் பேருதவியாக விளங்கும் எனலாம். புங்குடுதீவில் மடத்துவெளி, வல்லன், மாவு தடை, ஆஸ்பத்திரியடி பெருங்காடு, நடுத்துருத்தியூடாகக் குறிகாட்டுவான் துறைமுகத்தைச் சென்றடையக் கூடிய வகையில் பாதை அமைக்கப்படல் வேண்டும் இவ்வாறு அமைக்கப்படுமாயின் சகல தீவுகளைச் சேர்ந்த மக்களும் நன்மையடைய வாய்ப்புண்டு.
ஏற்கனவே போக்குவரத்திற்காக அமைக்கப்பட்டுள்ள தெடுஞ் சாலைகளையும் சிறிய வீதிகளையும் மிகச் சிறப்பான முறை யில் பராமரிக்கப்படுதல் அவசியமாகின்றது. தீவுப்பகுதிகளில் பாவனைக் காகத் திறந்து விடப்பட்ட வீதியினைச் சிறந்த முறையிற் பராமரிப் பதன் மூலம் மக்களின் போக்குவரத்துக் கஷ்டங்களைப் போக்கமுடி பும். எனினும் தீவுப்பகுதியில் இரண்டு போக்குவரத்துக்கான வீதிகள் திருத்தப்பட்டு பாவனைக்கு விடப்படல் வேண்டும். மண்டைதீவு - அல் லைப்பிட்டிவீதி, புங்குடுதீவில் கேரதீவூடாக மடத்துவெளி - இறு பிட்டிவீதி என்பனவே அவையாகும். இவ்வீதிகள் தற்போது பயன் பாட்டுக்குட்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும் ம  ைழ காலங்களிற் போக்கு வரத்தினை மேற் கொள்வதிற் சிரமமுள்ளது. அத்துடன் மண் டைதீவு கிழக்குக்கரையிலிருந்து அல்லைப்பிட்டி, மண்கும்பான், சாட்டியூடாக வங்களாவடிவரை குடிநெருக்கமுள்ள பகுதிகளூடாகச் செல்லும் வீதியைத் தரமுயர்த்துதல் வேண்டும்.
12

(குடாநாடுக்கும் வேலணைத் தீவுக்குமிடையில் போக்குவரத் இவை மேற்கொள். கற்கு நீண்டகாலமாகச் சர்ச்சைக்குட்பட்டிருந்த gyi rt Jd - ' ' லmeriப்பாலத்தினை மீள நிர்மாணித்தல் அவசியமாகின் றது இசு 11: அரிைக்கும் போது சூழலியற் பண்புகள் மாறுபடாத வகையிலும் மீனவர்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய விதத்திலும் அமைத்தல் அவசியமாகின்றது. இப்போக்குவரத்துப் Lurr60) "Pol44-en" ohi திவகமக்கள் வலிகாமப் பிரதேசங்களோடு தொடர்பு கெr rவ ஆன் வாயிலாகப் பொருளாதார சமூக வளர்ச்சியினைப் பெற் றுக் கொள்ள முடியும்.
கடலினாற் சூழப்பட்டிருக்கும் தீவுகளின் போக்குவரத்துக்கு வச தியாக படகுப்போக்குவரத்து விரிவுபடுத்தப்படுதல் வேண்டும். குறிப் பாக நெடுந் தீவு - ஊர் காவற்றுறைப் போக்குவரத்து நடைபெற்ற வேளை ஒருவழிப் போக்குவரத்தே நடைபெற்றது. இதனால் பிரயா னிகள் கஷ்டப்பட்டனர். நெடுந்தீவு - குறிகட்டுவான் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்ட பின்னர் நாளொன்றுககு மு:முறை சேவை நடாத் தப்படவே ஒருநாளிலேயே நகரத்துடன் தொடர்பு கொண்டு மீண்டும் தம்மிடத்திற்குச் செல்ல முடிந் கது. அ3ே \போல அனலைதீவு, எழுவை தீவு போக்குவரத்து மார்க்கத்தில் படகுச் சேவை உள் அதிகரிக்கப்படல் வேண்டும். நயினாதீவு - குறிகட்டு வான் போக்குவரத் தினை மேலும் விருத்தி செய்ய வேண்டும்.
நெடுந்தீவு, நயினாதீவு அனலைதீவு , எழுவைதீவு மக்களின் நலன் கருதி அதிவேகக் கப்பல்கள் அறிமு ப்படுத்தப்படுமாயின் போக்கு வரத்து மிகச் சுலபமானதாக அமையும். ( Howcrcraft ) அதிவேகக் கப்பலானது செயற்கை இறப்பரினால் செய்யப்பட்டவையாகவும் தரையிலும் நீரிலும் செல்லக்கூடிய டின்மை கொண்டவையாயு முள்ளன. கடலில் ஆழம் குறைந்த பிரகேசங்களில் இதனைப் பயன்படுத்த முடி யும். இத்தகைய கப்பல் உலகில் பிரான்ஸ் - இங்கிலாந்துக்கும் சுமாத் திரா - மலாயாவுக்கு மிடையில் நாளாந்தம் போக்குங்ரத்திலீடுபட்டு வருகின்றன. இதே போலவே மேற்படி தீவுகளுக்கும், குறிகாட்டு வான், ஊர்காவற்றுறைக்கு மிடையில் சேவையிலீடுபடுத்தப்படுமாயின் பிரயாணத்தை எளிமைப்படுத்த முடியும் ,
சுற்றுலா விருத்தி:
மக்கள் ஒய்வு நேரங்களில் சந்தோசத்திற்காகவும் பொழுதினைக் கழிப்பதற்காகவும் சுற்றுலாச் செல்வது வழக்கமாகும். அதாவது வர லாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள், சந்தோஷமாகப் பொழுதினைக் கழிப்பதற்குரிய பிரதேசங்கள், தெய்வீகத் தன்மை கொண்ட இடங்
113.

Page 72
கள், வனப்பான புவியியற் பண்புகளைக் கொண்ட பிரதேசங்கள் போன்றவற்றிற்குச் சென்று பொழுதினைக் கழித்து வருவதையே சுற் றுலா எனலாம். தீவுப்பகுதியினைப் பொறுத்தவரை வரண்ட வலயப் பகுதிக்குள்ளடக்கப்பட்டாலும் பல்வேறு நிலைகளில் சுற்றுலாவினை வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. மக்களைக் கவரும் வகையில் தீவுப்பகுதி விருத்தி செய்யப்படு மாயின் வேலைவாய்ப் பற்றிருக்கும் மக்களில் கணிசமானோருக்குத் தொழில் வழங்கக்கூடியதாகவமையும். அதாவது இப்பிரதேசத்தில் சிறப்பாகக் காணப்படும் அரிய பொருட்களை உற்பத்தி செய்து சந் தைப்படுத்துவதன் மூலம் வருமானத்தையும் பெற்றுக்கொள்ள முடி யும். குறிப்பாகப் பனையுடன் தொடர்புடைய உற்பத்திப் பொருட் களைக் கவர்ச்சிப் பொருளா க் கு த ல், கடலிற் காணப்ப டுகின்ற சங்கு, சிப்பி மற்றும் அழகான முருகைக் கற்க  ைளப் பெற்று அழகு படுத்துதல், பிரதேச வளப்பினை எடுத்துக்காட்டக் ԺռւգԱյ புகைப்படங்களை எடுத்தல், சுற்றுலா விடுதிகள் அமைத்து வாடகைக்கு விடுதல், சேவைகளை வழங்கல் மற்றும் சீரான போக்கு வரத்தினைச் செய்து கொடுப்பதன் வாயிலாகவும் தொழில் வாய்ப்பி னைப் பெற்றுக் கொள்ள முடியும்.
தீவுப்பகுதியில் சுற்றுலா மையங்கள் அதிகமாகக் காணப்படுகின் றன. குறிப்பாக வரலாற்றுச் சிறப்பு மிக்க மையங்கள் அதிகமாகவுள் ளன. நெடுந்தீவு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீவாகும். இத்தீவானது ஆழ் கடலின் மத்தியில் காணப்படுவதுடன் பகைவர்களால் எளிதில் தாக்கமுடியாததை உணர்ந்து அங்கே கோட்டை கொத்தளங்களை அரசர்கள் அமைத்திருந்தனர் எனத் தெரியவருகிறது. வெடியரசன் என்பவனும் இவர்சளில் ஒருவனாகும், இவ்வரசனாற் கட்டப்பட்ட கோட்டையின் இடிபாடுகள் தற்போதும் காணப்படுகின்றன. இக் கோட்டையானது பண்டைய தகோபா ஒன்றின் அழிவுகளின் எஞ்சிய பகுதி எனத் தொல்லியல் திணைக்களத்தினர் கருதி அதன்மேல் தகோ பாவின் வடிவம் ஒன்றைக் கட்டியுள்ளனர். இதுபற்றிச் சரியான தக வல்கள் கிடைக்கப் பெறாத போதிலும் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக விருப்பதால் சுற்றுலா மையமாகக் கொள்ளப்படுகின்றது.
நெடுந்தீவின் சுற்றுலா மை:மாக 19 ஆம் நூற்றாண்டின் முற் பகுதியில் பிரித்தானிய லெப்ரினண்டின் வதி விட மா க நோலன் DIT Gf GM65 (Nolan’s Banglaw) அமைகின்றது. இம்மாளிகை மிகவும் நேர்த்தியாகக் கட்டப்பட்டுள்ளது.
இத்தீவின் கடற்கரையோரம் மிகச் சிறப் வாய்ந்ததாகும்: கடற்கரையோரத்தில் கண்களுக்கு விருந்தளிக்கக் கூடிய வெளியரும்
4

பிக் காணப்படும் முருகைக்கற்பார்கள், சுத்தமானதும், தெளிவான தும், ஆழம் குறைந்ததும் கழிவுப் பொருட்களால் பாதிக்கப்படாத துமான கடல்நீர் கரையில் அமைதியாக வந்து சங்கமமடையும் கா.சி. 16:வகைப்பட்ட பறவையினங்களின் சத்தங்கள், கால்நடை கள் - குறிப்பாக வெள்ளாடுகளின் பரம்பல், குதிரைகளின் கனைப்புக் கள் எல்லாம் ஒருங்கே நெடுந்திவில் 3: ப்ைபடுகின்றன. இத்தீவில் காணப்படு) குதிரைகளின் பரம்பரை ஐரோப்பியர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும் இக்கு திரைகள் வெடியரசன் காலத்துத் தொன்மை இனம் எனக் கருதுபவர்களும் உள்ளனர். சாராப்பிட்டியை அண் டி ய பகுதியில் குதிரை லாயங்களின் கட்டிடத் தொகுதி தற்போதும் காணப்படுகின் றது. சுற்றுலா வருபவர்கள் குதிரைச் சவாரி செய்வதற்கு வசதியாக அவற்றைப் பழக்கி  ைவ த் தி ரு ந்த 7 ல் வருமானத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன் நோலான் மாளிகையிலிருந்து 800 யாருக்கப்ப7ல் மக்கள்: கடலில் நீராடுவதற்குரிய மிகச் சிறந்த பகுதி யுண்டு. எனவே இத்தகைய சுற்றுலா மையம் மக்கள் மனதில் நீங் காத இடத்தினைப் பிடிக்க வேண்டுமாயின் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்கேற்ப ஒழுங்குபடுத்தி விரிவு படுத்தப்படல் வேண்டும்.
இங்கிலாந்தின் தென் கரையோரத்தில் உள்ள வைற் தீவு (Isle of Wight) வரலாற்றுச் சிறப்பு மிக்கதுடன் ஏறத்தாழ நெடுந்தீவினது பரப்பளவைக் கொண்டது. இத்தீவு தற்போது சர்வதேச மக்களின் சுற்றுலா மையமாக மாற்றப்பட்டுள்ளது. அத்துடன் புவியியற் பண்பு களும் சுற்றுலா மையமாக வளர்ப்பதற்கு வாய்ப்பினை அளித்துள் ளன. இத்தீவிற்குச் சுற்றுலாப் பயணியாகச் செல்லும் வாய்ப்பு இருந்ததாலேயே நெடுந்தீவினையும் சுற்றுலா மையமாக விருத்தி செய் வதற்கு வாய்ப்புண்டு என்பதை உணரக்கூடியதாக விருக்கின்றது.
தீவகத்தில் வலாற்றுக் காலத்திலிருந்து தெய்வீகத் தன்மையுடன் கூடிய சுற்றுலா பையமாக விளங்கிவருவது நயினாதீவாகும், ஈழவர லாற்றோடு இத்தீவும் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருக்கின் றது. 'அதாவது வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்துக்களின் தெய்வமான நயினை நாகபூசணி அம்மன் ஆலயம் வீற்றிருக்கின்றது. திருவிழாக் காலங்களில் மட்டுமல்லாது நாள்தோறும் இத்தெய்வத்தை வழிபடுவ தற்காக மக்கள் கூட்டம் வந்து போகின்றது. இராமேஸ்வரத்தி லுள்ள தெய்வத்தை வழிபட வட இந்தியாவிலிருந்து மக்கள் வந்து கூடுவது போல நாகபூசணி அம்மையை வழிபட வருடாந்தம் இலட் சக்கணக்கான மக்கள் வந்து கூடுகின்றனர்.
புத்தபிரான் இத்தீவிற்கு மூன்று முறை வருகை தந்தார் என இதி காசங்கள் தெரிவிக்கின்றன. பெளத்தர்கள் மத்தியில் நாகதீப என்ற
115

Page 73
ழைக்கப்படும் இத்தீவில் அமைந்துள்ள பெளத்த விகாரையை வழிபடு வதற்கு நாட்டில் உள்ள பெளத்தர்கள் வருகை தருகின்றனர். அண் மைக்காலங்களில் இவர்களின் வருகை தடைப்பட்டுள்ளது. இவற்றோடு தொடர்புடைய சுற்றுலா சேவைக்கான நிலையங்களை அபிவிருத்தி செய்வதன் மூலம் இப்பிரதேச மக்கள் பெருமளவிலான வருமானத் தைப் பெறமுடியும். 1983 ஆம் ஆண்டிற்கு முன்னர் சுற்றுலாவினை மேற்கொண்டு வருபவர்களின் நலன்கருதி விடுதி வசதிகள் அமைக்கப் பட்டிருந்தன. அத்துடன் இத்தீவின் கடற்கரையோரங்களில் காணப் பட்ட சிப்பி, சங்கு மற்றும் அழகான முருகைக்கற்கள் போன்றவற்றை எடுத்து மக்கள் விற்று வந்தனர். இப்பொருட்களை சுற்றுலாப் பயணி கள் ஞாபகச் சின்னமாக விலை கொடுத்து வாங்கிச் செல்வது வழக்க மாகும். எனவே இத்தீவில் சகல வசதிகளடங்கிய சுற்றுலா மையம் விரிவுபடுத்தப்படுமாயின் மாறிவரும் பொருளாதார முறைமைகளால் தொழில் வாய்ப்பற்றுள்ளவர்களுக்குத் தொழில் வழங்க முடியும்.
வேலணைத் தீவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பகுதிகளாக, ஊர்காவற்றுறைத் துறைமுகம், ஹெமன்கெயில்கோட்டை (Fort Hamm renhiel) goGI «1565öT iq. 5;G335ntlʻlG8)L (Urundi Fort, up6öö7 (eğ5 l bA.; ft öğT G)6)j siT G3)6ITğ; கடற்கரைப்பகுதி (சாட்டி), கும்புறுப்பிட்டி, அல்லைப்பிட்டி போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள் போன்றவற்றைக் கூறலாம். ஊர் காவற்றுறைத் துறைமுகம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. இரு பருவக் காற்றுக்காலங்களிலும் கப்பற் போக்குவரத்து, விசையான காற்றின் தாக்கத்திற்குட்படாமல் தரித்து நிற்கக் கூடிய வசதி ஆகியவற்றைக் கொண்டு விளங்கும் இயற்கைத் துறைமுகமாகவிருக்கின்றது. சொலமன் மன்னன் இத் துறைமுகத்திற்கு வந்து மயில்கள், வாலில்லாக்குரங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டுச் சென்றான் எனச் சில கற்றறிவாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும். இத்துறைமுகத்தைச் சூழவுள்ள பகுதிகள் இயற்கை அழகினைத் தருவதாகவிருக்கின்றது.
போர்த்துக்கீசரின் கைவண்ணத்தினைக் காட்டி நிற்பது ஊறுண்டிக் கோட்டையாகும். இக்கோட்டை ஒல்லாந்தரினால் கைவிடப் பட்டு அழியவிடப்பட்டுள்ளபோதிலும் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகவுள்ளது
ஹெமன்ஹெயில் கோட்டையானது ஊர்காவற்றுறை - காரை நகரினைப் பிரிக்கும் ஆழமான கடலின் மத்தியில் போர்த்துக்கீசரினால் கட்டப்பட்டுள்ளது. பின்னர் ஒல்லாந்தரினால் பெருமளவிற்கு மாற் றியமைக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சி யில் இக் கோ ட் டை சிறைச்சாலையாகவும், வைத்தியசாலையாகவும், பயன்படுத்தப்பட் டது. இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஆகாய மற்றும் கடற்
6

படையினரால் பயன்படுத்தப்பட்டது. தற்போது தொல்லியற் றிணைக்களத்தின் பொறுப்பில் விடப்பட்டுள்ளது.
எனவே ஊர்காவற்றுறை நகரத்தைச் சூழவுள்ள மேற்குறித்த மூன்று மையங்களும் 1960 களுக்கு முன்னர் கணிசமான அளவு சுற் றுலாப் பயணிகளைக் கவர்ந்திருந்தது. ஆனால் காலப்போக்கில் ஊர்கா வற்றுறைப் பட்டினத்தின் விருத்தி குறைவடைந்து செ ல் ல வே இம் மையங்களும் சிறப்புத் தன்மையை இழந்து வந்துள்ளன. எனவே சுற் றுலாச் சபையானது இம் மையங்களைக் கவர்ச்சிப் பிரதேசமாக மாற் றுவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் வரலாற்றுச் சிறப்பினையும் பேணிப் பாதுகாக்க வேண்டும். h−
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முக்கியமான கடற்கரையோரப் பகுதி வேலணை சாட்டிப் பகுதியிலுள்ள வெள்ளைக் கடற்கரையா கும். இப்பிரதேசம் வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும். அண்மைக் காலம் வரை வெண்மணற் பரப்பினைக் கொண்ட இப்பகுதி யாழ்ப் பாண நகரத்தவர்களின் சுற்றுலா மையமாகவிருந்துள்ளது. திருகோண மலை மாவட்டத்திலுள்ள நிலாவெளிக் கடற்கரைப் பிரதேசத்தின் அபிவிருத்தியைப்போல இப்பிரதேசத்தினை அபிவிருத்தி செய்தால் இப்பிரதேச வாழ் மக்கள் இத் துறையினூடாக பொருளாதார விருத் த யைப் பெற்றுக் கொள்ள வாய்ப்புண்டு. இப்பிரதேசத்தைச் சுற்றுலா மையமாகி விருத்தி செய்வதற்கு இங்கு காணப்படும் நன்னீர் வளமும் பெருந்துணை புரியும்.
இவைதவிர கும்புறுப்பிட்டி, அல்லைப்பிட்டி போன்ற கிராமங் கள் தொல்லியல் ஆய்வுக்குட்பட்ட பிரதேசங்களாகக் காணப்படுகின் றன. வரலாற்றுக் காலத்தில் அல்லைப்பிட்டி வர்த்தக மையமாகவும் துறைமுகமாகவும் காணப்பட்டதாகத் தெரியவருகின்றது. எனவே இப் பிரதேசங்களை அழகுபடுத்தி சுற்றுலா மையங்கள் அமைக்கப்படு மாயின் தீவக மக்கள் வளம் பெறவாய்ப்புண்டு.
புங்குடுதீவின் கிழக்கில் திக்களி (Tikali) என்ற பகுதியில் ஆதியில் குடியேற்றமிருந்ததாகத் தொல்லியற் சான்றுகள் தெரிவிக்கின்றன. கண்ணகை அம்மன் கோவிலைச் சார்ந்த பிரதேசம், இறுப்பிட்டியின் கீழுதைப்பிட்டித்துறைமுகம் சார்ந்த வெண்மணல் பகுதிகளை மக்க ளைக் கவரும் பிரதேசமாக மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
17

Page 74
இயல் - ஒன்பது
தீவகம் - இன்றைய நிலை
வரலாற்றுக்காலம் முதல் பொருளாதார, சமூக, பண்பாட்டு அடிப்படையில் மக்கள் வளமான வாழ்வு நடாத்தி வந்துள்ளனர் என்பதை இந்நூலின் ஏனைய இயல்களின் மூலமாக அறியக்கூடியதா கவிருந்தது. தீவகத்தில் வளவாய்ப்புக்கள் குறைவானதாகவேயுள்ளன. மிக நீண்டகாலமாக இப்பிரதேச மக்கள் சுயதேவைப் பொருளாதார முறைமைக்குட்படுத்தப்பட்டிருந்தனர். ஆனால் காலப்போக்கில் வள வாய்ப்புக்களுக்கதிகமான குடித்தொகை வளர்ச்சி ஏற்படவே மேற் குறித்த பொருளாதார அமைப்பு படிப்படியாக மா ற் ற ம் .ெ ற த் தொடங்கியது. அத்துடன் கைத்தொழில் மற்றும் சேவைத் தொழி லோடு கூடிய வாய்ப்புக்கள் மட்டுப்படுத்தப்பட்டனவாகவுள்ளன. இதன் விளைவாக குடாநாட்டுப் பகுதிகளுக்கும் வெளி மாவட்டங்க ளுக்கும் மக்கள் இடப்பெயர்வினை மேற்கொண்டு பொருளாதார த் தேட்டத்தினைப் பெற்றுக் கொள்ளவேண்டிய நிர்ப்பந்த நிலை உருவா னது. பொருளாதாரத் தேட்டம் பெறுவதனைக் கருத்திற் கொண்டு காலத்துக்குக் காலம் வெவ்வேறு நோக்குடன் இடப்பெயர்வினை மேற் கொண்டுள்ளனர். - -
1. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொழும்பு மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு சேவைத்தொழிலை மேற்.ொள்ளும்
''"
முகமாக இடப்பெயர்வினை மேற்கொண்டமை.
2. ஆங்கிலேயர் ஆட்சியில் மலாயா, சிங்கப்பூர் போன்ற நாடுக ளுக்குச் சென்று பொருட் தேட்டத்தினைப் பெற்றுக் கொண் டேெபC .
3. நாட்டின் சுதந்திரத்தையடுத்து குடியேற்றத்திட்டங்களுக்குச்
சென்றமை.
4. திரு. அல்பிரட் தம்பிஐயா அவர்களின் முயற்சியினால் துறை
முக சரக்கு ஏற்றி இறக்கும் கமபனியில் தொழில் வாய்ப்பி
னைப் பெற்றுக்கொள்ளும் முகமாக இடப்பெயர்வினை மேற் கொண்டமை.
5. 1950 களைத் தொடர்ந்து கொழும்பில் இந்திய வர்த்தகர் களில் கணிசமானோர் தாயகம் திருப பியமையால் அவ்
118

விடங்களை நிரப்புவதற்கு தொழில் முயற்சியாளர்களாகவும் சிப்பந்திகளாகவும் இடப்பெயர்வினை மேற்கொண்டமை.
6. அண்மைக்கால சர்வதேச இடப்பெயர்வும் மாற்றமுற்றுவரும்
பொருளாதார முறைமையும்.
7. 1992 ஆம் ஆண்டு இராணுவ அனர்த்தத்தினால் பெ ரும் எண்ணிக்கையினர் இடப்பெயர்வினை மேற்கொண்டு பொரு ளாதார, சமூக, பண்பாட்டுக் கஷ்டத்துடன் வாழும் நிலை.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நாட்டின் பொருளாதார அமைப்பு முறையானது மாற்றத்துக்குட்படவே கொழும்பு, மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு அரச தொழில்களிலும், பெருந்தோட்டத் துறை களிலும மற்றும் வர்த்தகத்திலும் ஈடுபடத் தீவுப்பகுதிகளிலிருந்து அதி
களவான மக்கள் இடப் பெயர்வினை மேற்கொண்டிருந்தனர். இவர் கள் தமது பொருளாதாரத் நேட்டத்தின் பெரும் பகுதியைத் தமது
பிரதேசத்திற்கே கொண்டு வந்தனர். கல் வீடுகளைக் கட்டல், நில புலங்களை வாங்கல், நகைகள் செய்தல் மறறும் சுகபோக வாழ்க் கைக்கும் அதனைப் பயன்படுத்தினர். தீவுப்பகுதியின் மொத்தக் குடித் தொகையில் இவர்கள் ஹிெய பங்கினராகவிருந்த போதிலும் இவர்க வால் அழைக்கப்பட்டு தொழில் வாய்ப்பினைப் பெற்றுக்கொண்டவர் களுமுளர்.
ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழரின் திறமை, நேர்மைகளைக் கருத் திற் கொண்டு பெருந் 3 நாட்டக் துறையில் அதிகளவில் ஈடுபடுத்தச் செய்தனர். ஆங்கிலேயக் கம்பனிகளின் நிர்வாகிகள் இங்கிருந்து மாற்ற லாகி மலாயா, சிங்கப்பூர் சென்ற சமயம் தமிழர்களையும் தமக்கு உதவியாளர்களாக அழைத்துச் சென்றனர். அத்தகையோரில் இந் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே தீவுப்பகுதியைச் சேர்ந்தோரும் அடங்குவ குறிப்பாக காரைநகர், கரம்பன், புங்குடுதீவினைச் சேர்ந்தோர் கணிசமாகவிருந்தனர். காரைநகரைச் சேர்ந்தோர் பெரும் பாலும் உயர் தொழில்களில் ஈடுபாடு கொள்ளச் சென்றவர்களாவர். ஆனால் ஏனைய தீவுகளைப் பொறுத்தவரை இடைத் தர வேலைக ளைப் பெறறுக்கொள்ளும் முகமாகச் சென்றிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் 1930 களிலிருந்து படிப்படியாக நாட்டுக்குத் திரும்பி விட்ட போதிலும் மிகச்சிறிய அளவினர் அங்கேயே தங்கிவிட்டனர். மலாயா, சிங்கப்பூர் சென்றவர்கள் ஏனைய சமூகங்களிலும் பார்க்கத் தம்மைப் பல்வேறு வழிகளில் உயர்ந்தவர்களாகக் கருதும் மனப் பான்மை அண்மைக்காலம் வரை காணப்பட்ட போதிலும் தற்போது மாற்றம் பெற்றுள்ளது எனக் கூறலாம்.
119

Page 75
நாடு சுதந்திரமடையவே குடி நெருக்கமான பிரதேசங்களில் இருந்து மக்களை இடம் பெயரவைக்கவும் உற்பத்தியினை அதிகரிக்கும் நோக்குடனும் வரண்ட வலயப் பிரதேசங்களில் குடியேற்றத் திட்டங் கள் அமைத்துக் கொடுப்பதன் வாயிலாக நிலமற்ற, வேலையற்ற மக்களுக்குத் தொழில் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. இந்த வகையில் வன்னிப் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்ட குடியேற்றத் திட்டங் களுக்குத் தீவுப்பகுதியைச் சேர்ந்தோர் பெருமளவிற்குத் தெரிவு செய் யப்பட்டனர். உதவி அரச அதிபர் பிரிவினடிப்படையில் குடியேற்றத் திட்டத்திற்கு மக்கள் தெரிவு செய்யப்பட்டனர். பெரும்பாலும் தீவக மக்களே வுன்னிப் பிரதேச குடியேற்றத் திட்டங்களுக்குச் சென்றிருந்த னர். (பக்கம் 25 இல் விபரமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.)
1947 - 1956 ஆம் ஆண்டுகளிடையே திரு. அல்பிரட் தம்பிஐயா இரு தடவைகள் பாராளுமன்ற அங்கத்தவராகத் தீவுப்பகுதியிலிருந்து தெரிவு செய்யப்பட்டார். அவர் துறைமுகத்தில் சரக்கு ஏற்றி இறக் கல் கம்பனியின் தலைவராகவும் இருந்தவர். அக்காலத்தில் தீவகப் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்களை அக்கம்பனியில் பட கோட்டிகள், பொருட்களை ஏற்றி இறக்குபவர்கள், அலுவலக ஊழி யர்களாகவும் சேர்த்துக் கொண்டதன் விளைவாக மேற்குறித்த வர்க் கத்தினர் தொழில் வாய்ப்புப் பெற வழிவகுத்தார். இவர்களிற் பெரும் பாலானோர் அண்மைக் காலங்களில் சேமலாப நிதியினைப் பெற்றுத் தமது சொந்தக் கிராமங்களுக்கு மீண்டனர். வேறு சிலர் கொழும்பி லேயே தங்கிவிட்டனர். இவர்களிற் சிலர் தற்போது கொழும்பில் செக்கடித்தெரு, ஆட்டுப்பட்டித் தெருப் பகுதிகளில் சிறிய குடியிருப் புக்களில் வாழ்ந்து வருவதை அவதானிக்க முடிகின்றது.
கொழும்பில் வர்த்தக நிலையங்களை நிறுவித் தொழிலில் ஈடுபட் டிருந்த இந்திய வர்த்தகர்கள் தமக்கு வழங்கப்பட்ட வதிவிட காலம் முடிவடையவே நாடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களது வர்த்தக நிலையங்களில் சிப்பந்திகளாகவும , கணக்கர்க ளாகவும் கடமையாற்றியவர்களிடம் அந்நிலையங்களை ஒப்படைத்து விட்டுச் சென்றனர். அவர்களிற் பெரும் பாலானோர் தீவகத்தைச் சேர்ந்தவர்களாகவிருந்தனர். அதனால் அவ்வர்த்தக நிறுவனங்களில் தொழில் புரியும் நோக்குடன் இப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆரம்ப, இடைத்தர கல்வி கற்ற இளைஞர்கள் இடப்பெயர்வினை மேற்கொண் டனர். இவர்களிற் கணிசமானோர் வர்த்தகர்களாகத் தம்மை உயர்த் திக் கொண்டுள்ளனர். இத்தகையோர் யாழ்ப்பாண நகரம் உட்பட ஏனைய குட்ாநாட்டுப் பகுதியிலும் தாய்நிலப் பகுதிகளிலும் இடப் பெயர்வினை மேற்கொண்டு குடியிருப்புக்களை ஏற்படுத்தியுள்ளனர்.
12O

1970 களைத் தொடர்ந்து தமிழர் பிரதேசத்தின் அரசியல் நிலையில் ஏற்பட்டு வந்த மாற்றங்களைச் சாதகமாகக் கொணடு அக திகளாக மேற்குலக நாடுகளுக்கும் தென்னிந்தியாவுக்கும் தீவக மக்க ள் இடப்பட யர்வினை மேற்கொண்டு பொருளாதாரத் தேட்டத்தினைப் பெற்றுக்கொண்டமையால் இப்பிரதேச மக்களிற் கணிசமானோரின் பொருளாதார சமூக,பண்பாட்டு நிலமைகள் மாற்றத்திற்குள்ளாயின .
ரீதியாக நோக்கும்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் இவப்பகுதியைச் சேர்த்தோரே மேற்குலக நாடுகளுக்குச் சென்றவர் களில் அதிகமானவர்களாகும். இவர்கள் தாம் அங்கு தொழிலின் மூலமாகவும் அகதிகளுக்காக வழங்கப்படும் நிவாரணம் மூலமாகவும் பெறப்படும் பணத்தின் பெரும் பகுதிகளைத் தமது உறவினர்களுக்குப் பின்வரும்நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக அனுப்பிவைத்தனர்.
1, சகோதரர், உறவினர்களை அழைத்தல் 2. கல்வீடுகளைக் கட்டல் 3. சகோதரிகளுக்கு விவாக்ம் செய்தல்
4
நிலங்களைக் கொள்முதல் செய்தல்.
போன்றவற்றிற்கே இப்பணம் பெருமளவிற் செலவு செய்யப்பட் t-ge தீவுப்பகுதியில் இருந்து 1987 ஆம் ஆண்டு வரையும் மேற்குலக நாடுகளுக்குச் சென்றவர்களிற் பெரும்பாலானோர் 15-40 வயதிற் இடைப்பட்டவர்களாவர். இவர்களில் 900 சதவீதத்திற்கு மேற்பட்ட வர்கள் ஆண்களேயாவர். 1974 ஆம் ஆண்டினைத் தொடர்ந்து மேற் கொள்ளப்பட்ட மேற்குலக நாடுளுக்கான இடப்பெயர்வில் 1983 ஆம் ஆண்டின் பின்னரான இடப்பெயர்வு புதிய பரிமாணம் எடுத்துள்ளது. அதாவதுதாம் சென்றடைந்த நாடுகளின் சட்ட திட்டங்களுக்கு அமை வாகவும் அதற்குப் புறம்பாகவும் தமது குடும்பத்தினரையும் விவாகம் செய்வதற்காகப் பெண்களையும் அழைத்துவருகின்றனர். குறிப்பாகக் கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிற்சலாந்து, பிரித்தானியா, டென் மார்க், இத்தாலி, போன்ற நாடுகளுக்கு இத்தகையோர் சென்றடைந்
தனர் எனலாம்.
தீவுப்பகுதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட மேற்குலக நாடுகளுக் கான இடப்பெயர்வானது ஏற்கனவே நலிவுற்ற விவசாய அமைப்பு தொடர்ச்சியாக வீழ்ச்சியடைய வாய்ப்பளித்தது. அதாவது மேற் படி விவசாயிகளுக்குப் பிள்ளைகளின் ‘டிறாவ்ட்" மாதாந்தம் அனுப்பப்படுவதாலும் அங்கிருந்து பெற்றோரை வி வ ச | ய த்தில்
12

Page 76
ஈடுபாடு கொள்ள வேண்டாம் என வற்புறுத்துவதாலும் வருமானக் குறைவான விவசாய அமைப்பினைக் கைவிடவேண்டிய நிலை உரு வானது எனலாம்.
அடுத்து தமிழர் பிரதேசத்திற் காணப்படும் போர் நிலமையி னை க் கருத்திற் கொண்டும் வசதியான வாழ்க்கையை விரும்பியும் யாழ்ப்டா ன நசிரம் மற்றும் கொழும்பு போன்ற பகுதிகளுக்குச் சென்று குடியிருப்புக்களை விலைக்கு வாங்கியும், பெருந்தொகைப் பணத்தினை முற்பணமாகக் கொடுத்தும் வீடு க  ைள ப் பெற்றுக் குடியிருக்கும் பண்பினைக் கா ைக்கூடியதாகவிருக்கின்றது. 1987 ஆம் ஆண்டின் பின்னர் இத்தகைய இடப்பெயர்வு அதிகரித்துள்ளதுடன் இதனால் பல்வேறு சமூக, பண்பாட்டுப் பிரச்சினைகளையும் எதிர் கொள்கின்றார்கள் என்றால் மிகைபாகாது. குறிப்பாக வெளிநாட் டிலிருந்து பெறப்படும் பணத்தினையும், தொடர்புகளையும் பெரிதா கக்கருதி கொழும்பு மற்றும் அதனைச் சார்ந் y பகுதிகளில் குடியி ருப்பதற்காகவும், வெளிநாடு செல்வதற்கு ஆயத்திப்படுத்துவதற்காக வும் சென்று குடியிருப்பதனால் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுன்ெ றது. பல குடு:ங்களில் ஆரம்பக்கல்வியைக் கூட போதிக்க முடி யாத நிலை உண்டு.
தீவுப்பகுதியையும் கைவிடாது வெளிநாட்டுத் தொடர்புகளையும் வைத்திருக்கி விரும்பும் மக்கள் தற்போதைய சூழ்நிலையைக் கருத் திற் கொண்டு கொழும்புக்குச் சென்று விடுதிகளில் மாதக்கணக்கில் தங்கி வாழும் நிலையும் காணப்படுகின்றது
எவ்வறெனினும் வளவாய்ப்புக் குறைந்த தீவுப்பகுதி மக்கள் டொருளாத ரே ரீதியில் முன்னேற்றம் காண்பதற்கு வெளிநாட்டு இடப் பெயர்வு கணிசமான பங்களிப்பினை ஆgறியுள்ளது. சமூக, பண் பாட்டு ரீதியாச நோக்கின் மேற்குலக நாடுகளுக்கான இடப்பெயர் வால் நன்மை கிடைக்கும் எனக் கூற முடியாது. குறிப்பாக ஆண் களின் இடப்பெயர்வு அதிகரித்துச் செல்வதால் ஆண் - பெண் விகிதா சாரம் பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக இங்குள்ள பெண்களிற் டலர் விவாக வயதினை அடைந்த போதிலும் விவாகம் செய்யாதி ருக்கும் நிலையைக் காணமுடிகின்றது. அத்துடன் விவாகம் செய் யும் வயதினை அடைந்த ஆண்கள் குறைவாகவிருப்பதனால் சீதனப் பேரம் அதிகரித்துக்காணப்படவே விவாகம் செய்யாது கன்னியாகவே வாழும் நிலை அதிகரித்துச் செல்கின்றது. இதனால் பிறப்புக்கள் மட்டுப்படுத்தப்பட வாய்ப்புண்டு
மேற்குலக இடப்பெயர்வில் 80, 0 சதவீதத்திற்கு மேற்பட்டவர் கள் ஆரம்ப, இடைத்தரக் கல்வியைப் பெற்றவர்களாவர். இவர்களின்
122
 
 

உயர் கல்வி பாதிக்கப்படுவதுடன் கல்வியோடு தொடர்புடைய நிபு ணத்துவத்தைப் பெறாது விடுகின்றனர். இதன் விளைவு யாதெனில் தீவக மக்களின் கல்வி மூலவளம் பெருமளவிற்குப் பா தி ப் படைந்துள்ளது. அத்துடன் மேலை நாடுகளிற் காணப்படும் பொரு ளாதார, சமூகப் பண்பானது எவ்வயதினராகக் காணப்பட்டாலும் அவர்களைத் தொழில் செய்ய திர்ப்பந்திக்கின்றது. இவர்கள் கடைத் தொழில் (தொழிலாளர்) தரத்திலேயே காணப்படுகின்றனர். அவர் களின் உழைப்பு அவசியம் வேண்டப்படுவதால் கல்வியில் எந்தவித
காட்டமம் அற்ற ஃர்களாகக் ாஃப்படுகின்றனர். தாட்டமும் அற். ᎯᏐ5 ᏍFF ↑ $ ᏧᎦ5ᎴᎦ ᏯᏐ5 ப்படுகின்ற
அத்துடன் மேற்கு நாடுகளில் வாழும் தீவக மக்கள் உ ட் பட த் தமிழர் தொடர்ச்சியாக எமது கலாசாரப் பாரம்பரியத்தைப் பேணி வருவார்கள் எனக் கூறமுடியாது. நாம் சென்றடைந்த நாடுகளிலுள்ள பொருளாதார, சமூகக் கலாசாரத்துடன் 2)63) GOOTLuis Jn. q. Lu வாய்ப்புக்கள் தற்போது நென்பட்டு வருகின்றன. தஞ்சம் கொடுக் கும் நாடுகளின் நோக்கம் நிறைவேறும் பட்சத்தில் நாட்டுக்கு மீளும் பேர்து இப்பிரதேச :ொழில்களைச் செய்வதற்குப் பின்னிற்கும் நிலை உருவாக இடம் உண்டு. நாகரிக வாழ்க்கை, தம்மைச் சமூகத்தில் உயர்வாகக் கருதிக்கொள்ளும் பண்பு, உழைப்புக்குரிய ஊதியத்தை வெளிநாட்டு நாணய மாற்றுடன் சிந்திக்கும் நிலை போன்றவற்றால் இந் நிலை ஏற்பட வாய்ப்புண்டு. அத்துடன் வெளிநாடுகளுக்குச் சென்ற டைந் கவர்களில் 5 ; 2 பேர் உளவியல் ரீதியாகத் தாக்கத்திற்குட்பட் டவர்களாகவுள்ளனர் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அவர் களின் தனிமை, தொழிலின் கடினத் தன்மை, தூக்கமின்மை, போதை வஸ்த்து பாவித்தல், 10 துபான நுகர்வு, "பாலியற் றொடர்பு போன்ற பல காரணிகளினாலேயே ஏற்படுகின்றன என்கின்றனர்.
தமிழர் பிரதேசத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரின் விளைவாக இராணுவத் திடமிருந்து தடமைப் பாதுகாத்துக் கொள்ளு வதற்காக, தென்னிந்தியாவுக்குப் படகுகள் மூலமாகவும விமான மார்க் கமாகவும் தீவுப்பகுதிகளைச் சார்ந்த மக்கள் இடப்பெயர்வினை மேற் கொண்டுள்ளனர். இவர்களில் பாருளாதார ரீதியில் நலிவுற்றவர்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ள அகதி முகாம்களில் பல்வேறு சிரமங்கள் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். நகரங்களில் வாழ்வோரைப் பொறுத் தவரை பெரும்பாலானோர் மேற்குலக நாடுகளில் உள்ள உறவினர் களின் உதவி பெற்று வசதியோடு வாழ்ந்து வருகின்றனர்.
1992 இன் பின் நிலை
மேற்குலக நாடுகளுக்கு இடப்பெயர்வினை மேற்கொண்டவர்களின் குடும்பங்கள் வசதி படைத்தவர்களாக அல்லது உறவினரின் உதவி
123

Page 77
கிடைத்தவர்களாக இருந்துள்ளனர். ஆனால் மேற்குறித்த இரண்டு பண்புகளற்றவர்களும், வெளிநாட்டு மோகத்தில் ஆர்வமற்றவர்களும், நிரந்தரத் தொழிலினைப் பெற்றிருந்தவர்களும் சர்வதேச இடப்பெயர் வில் ஆர்வம் கொண்டவர்களாகவிருக்கவில்லை. தற்போதைய மதிப் பீட்டின்படி தீவகத்தில் வாழ்ந்த மக்களில் 70.0 சதவீதத்தினர் வறு மைக் கோட்டிற்குட்பட்டவர்கள் என அறியவருகின்றது.
1991 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் தீவகத்தில் இராணுவத்தின ரின் பிடியிலிருந்து தப்பிர் கொள்வதற்காக நேரடிப் போக்குவரத்தி னைக் கொண்ட புங்குடுதீவு, வேலணைத்தீவு, மண்டைதீவு ஆ கி ய பிரதேசங்களிலிருந்து 95. சேதவீதத்திற்கு மேற்பட். வர்கள் யாழ்ப் பாண நகரத்தினுரடாக குடாநாட்டிலும் நாட்டின் ஏனைய பகுதிகளி லும் சென்று வாழவேண்டிய நிர்ப்பந்த நிலை ஏற்பட்டது. இராணுவ நடவடிக்கையின் விளைவாக இடப்பெயர்வினை மேற்கொண்டவர்க ளோடு ஒப்பிடும்போது தீவக மக்கள் யாழ்ப்பர்ண நகரத்தோடு நீண்ட காலமாக நேரடித் தொடர்பு கொண்டிருந்தபடியால் நகரப் பகுதி க்ளை நாடினர். (மேலதிக விபரங்களுக்கு இயல் மு. றினைப் பார்க் சவும்)
இத்தகைய இடப்பெயர்வாளரில் 2788 குடும்யங்களைச் சேர்ந்த 12377 மக்கள் அட்டவணை 1 இல் தரப்பட்டுள்ளவாறு குடியிருப்புக் சளில் வாழ்ந்து வருகின்றனர், இவர்கள் தவிர ஏனையோர் பல்வேறு
இடங்க ளில் பரந்து வ1 bகின்றனர் எனலாம்.
மேற்படி இடப்பெயர்வாளரில் டெ ரும்பாலானோர் را آزاق بقیه i ام-؛i தொழில்களில் ஈடுபட்டு வாழ்க்கை நடாத்துபவர்களாவர். அவர்களிற் பெரும்பாலானோர் தீவுப்பகுதிகளில் வா ழ் ந்து வந்த காலத்திற் தமக்கென தொ ழி ல் வாய்ப்புக்களைத் தேடியிருந்தது மட்டுமல் Ꮆv fᎢ Ꮿ5! வீட் டு த் தோ ட் டம், பயிர்ச்செய்கை, குடிசைக்கைத் தொழில்கள், சிறு கைத்தொழில்கள் என்பவற்றில் ஈடுபடு வ த ன் மூலம் மேலதிக வ ரு மா ன த்  ைத ப் பெற்று வந்திருக்கின்றனர். இதனால் அவர்களது வாழ்க்கை பொருளாதார ரீதியில் வலுக்குறைந் ததாகவிருந்த போதிலும் சமூக பண்பாட்டு ரீதியில் வசதியாக வாழ்ந்துவந்தனர் என்றால் மிகையாகாது. ஆனால் தவிர்க்க முடி யாதபடி திட்டமிடப்படாத ஒரு இடப்பெயர்வானபடியால் பல்வேறு வழிகளில் பாதிப்படைபவர்களாகவிருக்கின்றனர். அதாவது தொழில் வாய்ப்பு, குடியிருப்பு வசதிகள், சுகாதார மருத்துவ வசதிகள், கெளர வமான வாழ்வு, போஷாக்கு உள்ள உணவு போன்றவற்றைப் பெற்றுக் கொள்வதில் பல இடர்பாடுகளை அனுபவிக்கின்றனர். குறிப்பாக பொருளாதாரத் தடை, எரிபொருள் தடை, மீன்பிடித் தடை, போன்ற
124

பல தடைகளை அரசு விதித்திருப்பதனால் சென்றடைந்த பிரதேசங் களில் தொழில் வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. தொழில்களும் ஏற்கனவே பயிற்றப்பட்டவை அல்ல. உதாரணமாக சைக்கிள் விறகுவியாபாரம் சைக்கிள் மீன் வியாபாரம் போன்றன வற்றைக் குறிப்பிடலாம். குறிப்பாக அகதி முகாம்களில் அரசாங்கத் தினால் வழங்கப்படும் உலர் உணவுப் பொருட்கள், அரச சார்பற்ற நிறுவனங்களாற் காலத்துக்குக் காலம் வழங்கப்படும் பொருட்கள் மட் டுமே இலவசமாகு. ஏனைய அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்குப் பணம் தேவைப்படுகின்றது. அவை மட்டுப்படுத்தப் பட்டதாயிருப்பதால் போசாக்கற்ற உணவினை உட்கொள்ளவேண்டி யுள்ளதுடன் நோயாளிகளாக மாற்றமுறும் நிலையினை அவதானிக்க முடிகின்றது.
இடம்பெயர்ந்து வாழும் பிரதேசங்கள் குடிநெருக்கமானபடியால் சுகாதார வசதியினைச் செய்து கொடுப்பது மிகச் சிரமமாகவுள்ளது. அதாவது மலசலசுட வசதிகள் திருப்தியற்றவையாகவிருப்பதால் நோய்கள் பரவும் அபாயம் உண்டு. பொதுவாக இடம்பெயர்ந்தோர் வாழும் முகாம்களில் குழந்தை இறப்புக்கள் மற்றும் பருமட்டான 2றப்புக்கள் ஏ:னய பகுதிகளோடு ஒப்பிடுமிடத்து சார்பு ரீதியாக அதிகமாகவுள்ளது, வாந்திபேதி, மலேரியா, செப்சிசீமிமா போன்றன வ்ற்றால் ஏறபடும் உயிரிழப்புக்கள் அதிகமாகவுள்ளன.
அட்டவணை 響,
வேலனை, ஊர்காவற்றுறை உதவி அரசாங்க அதிபர் பிரிவிலிருந்து இடம் பெயர்ந்து வந்து குடியிருப்புக்களில் தங்கி இருக்கும் மக்கள் தொகை
குடியிருப்பின் பெயர் குடும்ப எண்ணி. மக்கள் எண்ணிக்கை
01. சாம்சன் வி/திட்டம் 237 896 02. மணியரசன் , 83 356 03. நாவற்குழிலவனிதா 592 2970 04, டயல் வீ/திட்டம 145 687 . 05. நக்கீரன் . 53 207 06. மயூரன் 76 350 07. புகையிரத நில்ைய முக்ரம் 149 565 08. பண்டிதர் குடியிருப்பு 697. 3597 . 09. மூளாய் மாவடி முகர்ம் 25 ' ' '. 93 . 10. வழக்கம்பரை s 59 240
25

Page 78
குடியிருப்பின் பெயர் குடும்ப எண் மக்கள் எண்ணிக்கை
11. பானாவெட்டி , 68 276 12. சித்தங்கேணி 43 170 13. பூதராசி j) U 34 I 75 14. சத்தியக்காடு J 92 338 15. வள்ளியம்மை 58 254 16. துறட்டிப்பளை , 57 275 17. ஆஸ்பத்திரியடி , , 22 75 18. கண்ணகையம்மன் கோவிலடி 40 I 58 19. செல்ல முத்து முகாம் மாணி 50 互 5& 20. நீதவான் வளவு முகாம் 09 4 کے I 21. ஊரத்தி 25 • I ió 22. வைரவர் கோவிலடி 30 ill 6 23. புகையிலைச் சங்கம் 30 型57 24. மாவடி வட்டுக்கோட்டை 14 65
மொத்தம் 2788 I 25 77
4,3σα ιό. வக இடம் பெயர்ந்தோர் நலன் காக்கும் கழகம், அத்தி
யடி, யாழ்ப்பாணம் 1994.
தீவுப்பகுதி மக்கள் தீவகத்தில் வாழும் போது குடிநெருக்கமற்ற பிரதேசங்களிலேயே வாழ்ந்து வந்துள்ளனர். தற்போது அவர்களுக் குப் பழக்கப்படாத குடிநெருக்கமான பகுதிகளில் வாழு ம் நிலை தவிர்க்க முடியாது ஏற்பட்டுள்ளது. இத் த  ைக ய இடர்பாடுள்ள வாழ்க்கை அமைப்புக்குள் சிக்குண்டுள்ளதால் பொருளாதர, சமூக பிரச்சினைகளை அனுபவிப்பவர்களாகக் காணப்படுகின்றனர்.
இடம் பெயர்ந்துவாழும் தீவக மக்களின் அடுத்த முக்கியமான பிரச்சினை தூய நன்னீர் பற்றாக்குறையாகும். ஏற்கனவே தீவுப் பகுதிகளில் நீரினைப் பெற்றுக்கொள்வது கடினமாகவிருந்தது. புதிய இடத்தில் பல குடும்பங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட தரைக்கீழ் நீரே காணப்படுவதால் அன்றாடம் குடிப்பதற்கும் உணவு சமைப் பதற்கும் உடுபுடவைகள் துவைப்பதற்கும் குளிப்பதற்கும் நீர் போதாத நிலையால் கஷ்டமுறுகின்றனர். இவற்றினைப் பொதுவாக எல்லா இடம் பெயர்ந்தவர்கள் வாழும் முகாம்களிலும் காணமுடிகின்றது.
தீவக மக்களின் இடப்பெயர்வினால் பாதிக்கப்பட்ட முக்கியமான அம்சம் கல்வியாகும். பொதுவாக இடம் பெயர்ந்தவர்கள் பொருளா தார ரீதியில் பலவீனமுற்றவர்களாக இருப்பதனால் பிள்ளைகளின்
126

கல்வியில் அக்கறை கொள்ளத் தவறுகின்றனர். அது மட்டுமல்லாது அவர்கள் வாழும் சூழல் கல்வியை முன்னெடுத்துச் செல்வதற்கு உகந் ததாகவிருக்கவில்லை. தீவகத்தில் பெரும்பாலும் இடைத்தரக் கல்விக்கு மேல் கற்றவர்களாகக் காணப்பட்டிருந்தனர். ஆனால் இடப்பெயர் வின் விளைவாக ஆரம்பக் கல்வியைக் கூட கற்பதில் பல்வேறு சிரமங் கள் உள்ளன. எகிர் நீச்சலடித்துக் கற்கின்ற மாணவர்களும் பொரு ளாதாரப் பிரச்சனையால் போசாக்கற்ற உணவினை உட்கொள்வதால் ஆரோக்கியமான கல்வியைப் பயிலமுடியவில்லை. உதாரணமாக uit 45 நகரில் அமைந்துள்ள இரண்டு தீவகப் பாடசாலைகளில் யாழ் லயன்ஸ் கழகத்தன் அனுசரனையுடன் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரி சோதனையின்படி 75.0 சதவீதத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் போசாக் கறறவர்களாகக் காணப்பட்டிருந்த ை1பைக் கண்டறிய முடிந் தது. கல்வியானது மாணவர்களின் ஆரோக்கியத்துடன் மிக நெருங் கிய தொடர்பினைக் கொண்டிருக்கின்றது. எனவே இந்நிலை தொட ருமாயின் கல்விப் பாரம்பரியமும் பாதிப்புக்குள்ளாகும் என்பதில் ஐய மில்லை.
உறவினர்கள் வீடுகளிலும், வாடகை வீடுகளிலும் வாழ்வோரைப் பொறுத்தவeவர கூட பல்வேறு பிரசசினைகளை அனுபவிக்கின்றேனர். உறவினர் வீடுகளில் குடியிருப்போரில் பலர் உறவினர்கள் நண்
பர்களால் பிரச்சினைக் குட்படுத்தப்பட்டுள்ளனர். கூட்டுக்குடு:ப அ:ைப்பு முறை சிக்கலைத் தருவதாகவுள்ளது. இத்தகைய நிகழ்வு
களால் உளரீதியாக மக்கள் பாதிப்படைந்தவர்களாகவுள்ளதுடன் வாழ்க்கையில் வெறுப்படைந்தவர்களாகவும் காணப்படுன்றனர்.
பொருளாதார வசதி படைத்தவர்களைப் பொறுத் த வரை திடீர் இடப்பெயர்வு பாதிப்பினை ஏற்படுத்திய போதிலும் வீடுகளை வ1 ட ை+க்கோ அல்லது சொந்தமாகவோ பெற்று வாழ்ந்து வருவது டன் பிள்ளைகளின் கல்வியில அக்கறை கொண்டவுரகளாகவிருந்து வருகின்றனர். இத்தகையோரின் பிள்ளைகள் கல்வியிற் சிறப்படைந்து வருவதாக கல்விசார் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் தீவக இடம்பெயர்ந்த மக்களிற் கணிசமானோர் கொழும் பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் வெளிநாட்டு நாணயமாற்றினைப் பெற்று வாடகை வீடுகளில் குடியிருந்து வருகின்றனர்.
தீவகப் பிரதேசத்தில் திடீர் இடப்பெயர்வுக்கு முன்னர் அங்கு வாழ்ந்த மக்களுக்கேற்ற வாய்ப்புக்கள் காணப்படவில்லை. இதனைக் கருத்திற்கொண்டு இந்நூலாசிரியர் பல ஆண்டுகளாக வெளி இடப் பெயர்வில் கணிசமான பங்கினர் ஈடுபாடு கொள்ள வேண்டுமெனத் தெரிவித்துள்ளார். ஆனால் இத்தகைய திடீர் இடப்பெயர்வினால் மக்கள் பல்வேறு வழிகளில் பாதிப்படைந்தவர்களாக விருக்கின்றனர்.
127

Page 79
இப்பிரதேசத்திற்கு மீண்டும் திரும்பிப்போகும் காலம் வரின் எல்லோ ரும் செல்வார்கள் எனக்கூற முடியாது. பொருளாதார ரீதியில் வசதி படைத்தவர்கள் சென்றடைந்த பிரதேசத்திலேயே தங்கிவிடக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன. பொருளாதாரப் பலவீனம் கொண்டவர்களிற் பெரும்பாலானோர் மீள வாய்ப்புண்டு. குறிப்பாக அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியோடு குடியிருப்பவர்கள் திரும் பிச் செல்லவே விரும்புவர்.
பொருளாதார வசதி வாய்ப்புக்குறைந்த மக்களின் நல வாழ்வில் அக்கறை கொள்வோர் அவர்கள் வளத்துடன் வாழ வேண்டும் என் புதைக் கருத்திற்கொண்டு வன்னிப் பிரதேசங்களில் குடியமர்த்தி விவ சாய உற்பத்தியில் ஈடுபாடு கொள்ளவைத்தல் அவசியம். அவர்கள் நிரந்தரமாக அங்கேயே தங்கவைக்க வேண்டுமாயின் நிலங்கள், குடி யிருப்புக்கள் ஆகியன அவர்களுக்குச் சொந்தமாக்கப்பட ல் வேண்டும். குடாநாட்டுப் பிரதேசம் ஏற்கனவே குடி நெருக்க முள்ள பகுதியாகும். எனவே இப் பரதேசங்களில் இவர்களைக் குடியமர்த்துவதால் தொடர்ச்சியாகப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பளிக்கும்.
23

உசாத்துணை நூல்கள்
அகிலேஸ்வரசர்மா. சி., பண்ணைப்பாலக்கும்மி, (பதிப்பாசிரியர் வே.
இ. பாக்கியநாதன்) காயத்திரி அச்சகம், யாழ்ப்பாணம்
1986.
அடைக்கலமுத்து. ச, , "எழுவை தீவின் வாழ்வு நாதம்" சப்ததீவு,
கலைவாணி அச்சகம், யாழ்ப்பாணம் 1979.
அம்பலவாணநாவலசுவாமி, "ஸ்தாபகர் பூரீமான் வி. கந்தப்பிள்ளை' வேலணை சைவப்பிரகாச விக்தியாலய நூற்றாண்டு விழா மலர், 1880 - 1980; வேலணை, 1980.
ரத்தினம். செ., "புளியங்கூடல்' லங்கா 15 (1) டிசம்பர் 1982
另 9.
அரச அச்சகம், கொழும்பு.
இராசரத்தினம். கு. "புங்குடுதீவு ஒரு புவியியல் நோக்கு" புங்குடு
தீவு மகாவித்தியாலயம் வெள்ளிவிழா 1975.
கல்வித்திணைக்களம்; நிர்வாக அறிக்கை - 1991, யாழ்ப்பாணம்.
கலாதேவி. த. புங்குடுதீவின் சமூக பொருளாதார ஆய்வு, கலைமாணி ஆய்வேடு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1986 • (பிரசுரிக்கப்படாத தட்டச்சுப் பிரதி)
குகபாலன். கா., "தீவுப்பகுதிப் பிரதேசத்தின் இன்றைய கல்வி நிலை",
முரசொலி, யாழ்ப்பாணம் பக். 3 - 15, 15.01.1989
بهخانه குகபாலன். கா: "தீவுப்பகுதி குடித்தொகையும், அதனுடன் தொடர் புடைய பிரச்சனைகளும்'; ஈழமுரசு யாழ்ப்பாணம், Luji. 4 - 5, 14 7. 19 & 6.
குகபாலன். கா., நயினாதீவு சமூக பொருளாதார ஆய்வு, சிறப்பு
கலைமாணித் தேர்வுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு, புவி யியற்றுறை, இலங்கைப் பல்கலைக்கழகம், பேராதனை, 1971
சரவணபவன். ஆ; “நயினாதீவு வரலாற்றுப் பின்னணி" கோமுகி,
மணிபல்லவ கலாமன்றம், நயினாதீவு, 1992,
w
129

Page 80
சன்வநாதன். அ. நா., “நர்ரந்தனை நிலக்காட்சியும் பண்பாட்டு அமை வும்" நாரந்தனை வடக்கு மறுமலர்ச்சி மன்ற பாரதி சனசமூக நிலையம், சிறப்பு மலர், 1983.
சரவணன்; "சரவணையூர் இதுவே" சரவனை நாகேஸ்வரி வித்தியா
சாலை பொன் விழா மலர், சரவணை, 1980,
சதாசிவம் சேவியர். ச; "வாணர் தாம்போதி" புங்குடுதீவு அம்பலவா
ணர் அரங்குச் சிறப்பு மலர், புங்குடுதீவு - 1971
சதாசிவம்பிள்ளை. சி. இ: "புங்குடுதீவின் கல்வி நிலை: அன்றும் இன்றும்" புங்குடுதீவு கணேச வித்தியாசாலை பழைய மாணவர் சங்க வெள்ளிவிழா மலர், 1961.
சந்திரசேகரம். பே; "வேலணையில் சைவம் வளர்ந்த வரலாறு’ உலக இந்து மகாநாடு, ஆத்மஜோதி சிறப்புமலர், யாழ்ப்பாணம்
1982.
சிவசாமி. வி; தீவகம் - ஒரு வரலாற்று நோக்கு (கிருமதி விநாயக மூர்த்தி மகேஸ்வரிப்பிள்ளை அவர்களின் நினைவாக வெளியிடப்பட்டது) புங்குடுதீவு, 1990.
சிவசாமி. வி; ‘தீவகம் - ஒரு வரலாற்றுக்கண்ணோட்டம்" மணிபல்ல வம் - 28 வது ஆண்டு நிறைவு விழா, நயினாதீவு மணி பல்லவ கலாமன்றம், 1990.
செந்தில் வடிவேல். ஆ; யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கப்பாலுள்ள தீவுப் பகுதிகளின் சமூக பொருளாதார நிலைமைகள், முதுமா ணிப் பட்டத்திற்கான ஆய்வு, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் 1985.
பரமேஸ்வரன், எஸ். கே. "நெடுந் தீவு - ஈழத்தின் காவல் தளம்"
தினகரன் வாரமஞ்சரி, கொழும்பு, 23.5.1969
பாலசுந்தரம்பிள்ளை. பொ; “தீவுப்பகுதியின் குடித்தொகை வளர்ச் சியும் பிரச்சினையும்" தமிழ் இளைஞன் இதழ் 12, பேராதனை, 1968. w
பாலசுந்தரம்பிள்ளை, பொ; “தீவுப்பகுதியின் இடஞ்சார்பு அபிவிருத் தித் திறமுறைகள்" வேலணை மேற்கு பெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலய மகாகும்பாபிஷேக சிறப்பு மலர் வேலணை, 1990.
130

நடராசா. ஆ. ச; "புங்குடுதீவு மகா வித்தியாலயத் தோற்றமும் வளர்
சியும் புங்குடுதீவு மகாவித்தியாலட் வெள்ளிவிழா ம ல 1975
தம்பையா. செ. "ஐயனார் இங்கு எப்படி வந்தார்? தேவர் விரும் பிய திருப்பதி அனலைப்பதி' அனலைதீவு ஐயனார் கோவில் சித்திரப் பெருந்தேர் வெள்ளோட்டச் சிறப்பு மலர் அனலைதீவு, 1980,
தீவகன்; சப்ததீவு, கலைவாணி அச்சகம், யாழ்ப்பாணம், 1979.
துருவ சங்கரி வீ. ச; ' யாழ்குடாநாட்டையண்டியுள்ள தீவுப்பகுதிக ளில் நன்னீர் வளமும் முகாமைத்துவப் பிரச்சினைகளும் அவற்றைத் தீர்க்க வழிவகைகளும்’ ஆய்வு, ஏப் - யூன் 1987, கொக்குவில் .
தேவராசா. செ, அ; 'நாம் நம் சமூகம், நம்மினம்’’ மண்டைதீவு புனித பேதுருவானவர் இளைஞர் மன்றம், பத்தாவது ஆண்டு சிறப்பு மலர் 1977,
ரெ: "எமது கிராமத்தின் பொருளாதாரம் - ஒரு கண்
ஸ்கந்தராசா,
ணோட்டம்’ நயினாதீவு பூரீ கணேச கனிட்ட மகாவித்தி யாலயப் பொன்விழா மலர், நயினாதீவு. 1980 .
சைவப்பிெயார் வ. பசுபதிப்பிள்ளை, வ. பசுபதிப்பிள்ளை நினைவு
மலர், விவேகானந்தா அச்சகம் யாழ்ப்பாணம், 1955
நெடுந்திவு மகாவித்தியாலயம்; வெள்ளிவிழா மலர் நெடுந்தீவு, 1972
புங்குடுதீவு அம்பலவாணர் அரங்கு திறப்பு விழாவும், மாபெரும் கலை விழாவும் - சிறப்பு மலர். 24.6.1977 கண் ணன் அச்சகம், நல்லூர். 1977.
மாவட்டச் செயலகம்; விவசாய அபிவிருத்தி செயற்படுதிட்டம் 1990
1994.
றொபேட் க புங்குடுதீவின் புவி வெளியுருவவியல், சிறப்புக் கலைத்
தேர்வுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை, புவி
யியற்றுறை யாழ். பல்கலைக்கழகம். 1987
ஹரிகரளி மா; அனலைதீவின் சமூக பொருளாதார நிலைமைகள் சிறப்
புக் கலைத்தேர்வுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை, புவியியற்றுறை, யாழ். பல்கலைக்கழகம் 1982
1 31

Page 81
Abey Gunawardena T. H. D The Ialands on the west of the Jaffna Peninsula; Cey. Geographical Society Vol. 4, No. 3, Dec. 1949.
Casiechetty, Simon Mudaliyar, The Ceylon Gazetteer, 1934. Reprinted with an Introduction by Prof. T. Vimalananda, 1972.
Hand book for the Ceylon Traveller; A Studio Times
Publication, Colombo, 1974. М
Insight Guiders Sri Lanka; APA Publication, Singapore, 1985.
Jeyarajasingam. J. F; A. L. Tha: biayah: ‘ “ Man who Mul
tiplied his talents. Sun 11-11-82, p. 2.
Planning Division; District Ministry; Intergrated Rural De
velopment Plan, Jaffna District, Jaffna. 1980.
Queyroz, Fernan; The Temporal and Spiritual Conquest of the Island of Ceylon, Vols, Tr. by Fr. S. G. Perera, Colombo. i930.
Ragupathy P.; Early Settlement in Juffna, Sutharson Gra
phics, Madras. 1987.
Rasanayagam S. Ancient Jaffna, Jaffna. Madras 926.
Robert Holmes; Jaffna 1980, Sri Lanka. The Christian Insti tute for the Study of Religion and Society of Jaffna College , Jaffna.
Silva. G. F. S. H. de. A Statistical Survey of Elections to
the Legislatures of Sri Lanka. 1991 - 1977, Marga Institute, Colombo, 1980.
132

இந்நூலாக்கத்திற்கு
தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டவர்கள்
1. திரு
2. திரு.
3. திரு.
4. திரு.
5. திரு.
6. திரு.
7. திரு.
8. திரு.
சி. இராசரத்தினம், இளைப்பாறிய அதிபர். (வேலணை )
அ. பொன்னுத்துரை, இளைப்பாறிய அதிபர் ( வேலணை )
து. மாணிக்கவாசகர் உரிமையாளர், பைனல் டீசல்
என்ஜினியர்ஸ் (புளியங்கூடல் )
ஜோசேப் பாக்கியநாதர் ( நெடுந்தீவு)
ஜி. எம். செபஸ்ரியாம்பிள்ளை, சிரேஷ்ட விரிவுரையாளர்
( நெடுந்தீவு i ó。 கனகரத்தினம், பட்டதாரி மொழிபெயர்ப்பாளர்
(நெடுந்தீவு)
மு. பரமலிங்கம், முன்னாள் கிராமசபைத்தலைவர்
(நயினாதீவு )
கா. க. கனகசுந்தரம், இளைப்பாறிய அதிபர்
(நயினாதீவு )
9. திரு. மா. வேதநாதன், சிரேஷ்ட விரிவுரையாளர் (நயினாதீவு)
10. திரு. க. மதியாபரணம், முன்னாள் கிராமசபைத் தலைவர்
(புங்குடுதீவு)
11. திரு. க. சிவராமலிங்கம்பிள்ளை இளைப்பாறிய பிரதி அதிபர்
{ புங்குடுதீவு )
12. திரு. ஏ. தம்பு,முன்னாள் கூட்டுறவாளர், ( புங்குடுதீவு)
13. வித்துவான் பொன். கனகசபை (புங்குடுதீவு )
14. "திருமதி தனலக்குமி ஐயம்பெருமாள், (அனலைதீவு),
15. திரு. நா. சுந்தரராசா, கிராம அலுவலர் (மண்டைதீவு )
133

Page 82


Page 83


Page 84