கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கோணேசர் ஆற்றுப்படை

Page 1

忽
●s.鄂*|-|- F.

Page 2

கோணேசர் ஆற்றுப்படை
ஆக்கம்
பண்டிதர் அ. ஆறுமுகம்
வெளியீடு : திருக்கோணமலை மாவட்ட
இந்து இளைஞர் பேரவை

Page 3
நூல் ஆசிரியர் முகவரி வெளியீடு p-flood அச்சகம் பிரதிகள் பக்கங்கள்
விலை
கோணேசர் ஆற்றுப்படை
: பண்டிதர் அ. ஆறுமுகம்
: பண்ணாகம் சுழிபுரம்
திருக்கோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவை திருக்கோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஜெய்ஷான் அச்சகம், 988, ரட்ணம் வீதி, கொழும்பு-13. : 000
36
: e5LIT " 30/=

நூலாசிரியர் உரை
திருவருளை முன்னிட்டு அனைவரையும் வணங்கித் தெரிவிப்பது:
சென்ற27.6.1994இல் பெருமதிப்புக்குரிய பேரன்பர் காந்தி ஆசிரியர், திருக்கோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் மதிப்பார்ந்த பொதுச் செயலாளர் சிவஞானச் செல்வர் செல்லப்பா சிவபாதசுந்தரம் என்போரின் ஆதரவில் மகேஸ்வரி மண்டபத்தில், மேலதிக அரசாங்க அதிபர் திரு. நா. புவனேந்திரன் அவர்கள் தலைமையில் "அருளமுதவள்ளம்” நூலைப் பற்றி ஆய்வுரை. பாராட்டுரை வழங்கிய பேரறிஞர்கள் கோணேஸ்வரப்பெருமானையும் பாடுமாறு அடியேனுக்குக் கட்டளையிட்டனர். அவர்களின்வேண்டுகோளுக்கு மதிப்புக் கொடுக்கும் வகையில் பெருமான் பேரில் கோணேசர் ஆற்றுப்படை என்னும் இந்த நூலைப் பாடினேன்.
இதனை தி.மா.இ.இ. பேரவையினர் அச்சிட்டு வெளியீடு செய்யும் பணியை ஆர்வத்துடன் ஏற்றமைக்காக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றேன்.
இந்த நூலை நன்கு பார்வையிட்டு அணிந்துரை புனைந்துரை வழங்கியவர்கள் இந்தமாவட்டத்திலே பெரும் புலமை படைத்தவர்களும், கோணேச்சரம் பற்றிப் பலநூல்களை ஆக்கியவர்களுமாவர். அணிந்துரை தந்தவர் ஞானசிரோன்மணி, சைவப்புலவர்,பண்டிதர் ஆர்.வடிவேல் அவர்கள். புனைந்துரை நல்கியவர் புலவர் வைத்தியகலாநிதி சோதிடமேதை வை. சோமாஸ்கந்தக் குருக்கள். இவர்கள் இருவருக்கும் எனது உளங்கனிந்த நன்றியுரித்தாகுக.
சைவத் தமிழுலகம் எனது பணியை ஆதரிக்கும் என்ற நம்பிக்கையுடையேன்.
வணக்கம்.
அ. ஆறுமுகம்.

Page 4
அணிந்துரை
ஈழ நாட்டின் இரு கணிகள் போல் விளங்குவன இரண்டு சிவஸ்தலங்கள். ஒன்று திருக்கேதீஸ்வரம், மற்றது திருக்கோணேஸ்வரம், இரண்டும் தேவாரப் பாடல்பெற்ற சிவகூேyத்திரங்கள்.
திருக்கோணேஸ்வரம் மிகவும் பழைமைவாய்ந்த வரலாற்றுப் பெருமைக்குரியது. அது தெட்சண கயிலாய மான்மியம், திருக்கோணாசல புராணம், கோணமலை அந்தாதி, கோணேசர் கல்வெட்டு, தேவாரப் பதிகங்கள். திருப்புகழ் முதலியவற்றால் தெய்வீகமாக மேன்மைப் படுத்தப்பட்டிருக்கிறது. இதற்குச் சான்றோர்கள் பலர் பிரபந்தங்கள் பாடியும், போற்றியும் துதிசெய்துள்ளார்கள்.
நாடறிந்த நற்றமிழ்க் கவிஞர் பண்டிதர், திரு. அ.ஆறுமுகனார் அவர்கள் “கோணேசர் ஆற்றுப்படை” என்னும் அரிய பிரபந்தமொன்றை ஆக்கித் தந்து கோணேஸ்வரத்தின் தெய்வீக வரலாற்றைக் கட்டியங் கூறிக் காட்டுகின்றார். அருளமுத வள்ளம் என்னும் அரிய நூலைத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு அளித்தவர் பண்டிதர் பூரீ ஆறுமுகம் ஐயா அவர்கள். தொண்ணுாற்றாறுவகைப் பிரபந்தங்கள் சார்ந்த பத்து நூல்களை அருளமுத வள்ளத்தில் அமுதமாகச் சொரிந்து வைத்துள்ள சிறந்த கவிஞர்.
கவிதை பாடுவதில் இவருடைய திறமையைப் பாராட்டிச் சான்றோர்கள் "அருட்புலவர்” என விருது வழங்கியுள்ளார்கள். தோன்றாத் துணையென இறைவனைச் சரணடைந்து வளமுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் பண்டிதர் ஐயாவுட்ைய வாக்கைக் கேட்போம். "எங்குமாய் எல்லாமாகி விரிந்து பருப்பொருளாயும், எனது இதயக் குகையில் சூக்குமப் பொருளாயும் வதிந்து, அடியேன் சிந்தித்துவந்திக்கும் எந்த வேளையிலும் திருவருள் பாலிக்கும் கந்தவேட் பெருமான்திருவடிக் கமலங்களே சரணம்” இது ஐயாவுடைய சரணாகதித் தத்துவம்.
பேராசான்களிடத்தில் கற்றுப் பண்டிதராகி, வட்டுக் கோட்டைத் தொகுதித் தமிழ்ச்சங்கத்தைத் தமது நண்பர்கள் துணையுடன் தாபித்துத் தமிழை வளர்த்தவர். தமிழறிவும் சமய ஞானமும் நிரம்பப் பெற்றவர். தமிழ்ப் பண்பாடும் சமய ஆசாரமும், அடியார்க்கடியேன் என்னும் அடக்கமும் பணிவுமுடைய ஐயா அவர்கள் “மெய்யடியார் உள்ளக்குளத்தினில் சிவமணம் விரித்திடும் கமலபாதம்”
- iv -

என்று பறாளை முருகனைத் துதிசெய்ய, முருகன் பண்டிதர் அவர்களை கோணேஸ்வரத்திற்கு ஆற்றுப்படுத்தினான் போலும். கோணேஸ்வரத்தைப் பலமுறை தரிசித்த பண்டிதர் அவர்கள் “யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் பரந்த நோக்கில் பக்தி வயப்பட்டுக் கோணேசர் ஆற்றுப்படை என்னும் நூலைச் சைவப் பெருங்குடி மக்களுக்கு வழங்கியுள்ளார்.
ஆற்றுப்படை என்பது-பாணர், முதலாயினோருள் ஒருவர், வள்ளல் ஒருவரிடத்தில் தாம் பெற்ற பொன்னும், மணியும் முத்தும் முதலிய பெருஞ் செல்வத்தை எதிரே வந்த இரவலர்க்கு அறிவுறுத்தி, அவரும் அவ்வள்ளல்பால் தாம் பெற்றவையெல்லாம் பெறுமாறு வழிப்படுத்துதல். இங்ங்னம் ஆற்றுப்படுத்துவதற்குச் செய்யுள் செய்தல் கவிமரபு.
பண்டிதர் ஆறுமுகனார் அவர்கள் கோணேசப் பெருமானிடத்தில் தாம் பெற்ற அருட்செல்வத்தை அடியார்கள் அனைவரும் பெறுக என்னும் பெருநோக்கோடு கோணேசர் ஆற்றுப்படையை ஆக்கித்தந்துள்ளார். கோணேசப் பெருமானுடைய திருவடிகளில் சரணடைந்து தாம் பெற்ற ஆன்மீக அனுபவத்தையும், ஆதங்கத்தையும் ஆற்றுப்படையில் கூறும் பாங்கு போற்றற்குரியது.
"ஆலம் அமுதாய் அருந்திய அருள் மிகு நீல கண்டரே நித்தியப் பொருளே சிறியேன் பிரபஞ்சச் சேற்றினுள் விழுந்து கரையேறும் மார்க்கம் காணாது தவிக்கிறேன் பொன் பொருள் போகம் பொறிவிலங்கென்னும் உண்மையை உணர்ந்தேன் உன்னையல்லாமல் ஒருவரை யேனும் உறுதுணை யென்றி ரேன் பின்னை ஒருவரின் பின்னும் நான் செல்லேன் அடியேற் கருள்வாய் அருளா தொழியின் ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைப்பேன் ஐயா காப்பாய் அரனே காப்பாய் துரையே காப்பாய் சுடரே காப்பாய் மெய்யர்க்கு மெய்யனே வெய்ய தீவினையினேன் உய்யக் கருணை உகந்துசெய் தென்னை வாழ்வித் தருள்வாய் வானவர் போற்றும் தாளைப் பிடித்தேன் சரணம் சரணம்”
a V

Page 5
கோணேசப் பெருமானுடைய அருளாட்சி பரந்துள்ள திருத் தலங்களின் வரலாறுகளையும், அருட் திறங்களையும் அடியவரொருவருக்கு உணர்த்தி அவ்வடியவரைக் கோணேஸ்வரத்திற்கு ஆற்றுப்படுத்துகிறார்.
திருக்கோணமலை மாவட்டத்திலுள்ள கந்தளாய்ப் பிள்ளையாரும், வெருகலம்பதி சித்திரவேலாயுதரும், தம்பலகாமம் ஆதி கோணேசரும், திருக்கோணமலை முத்துக்குமார சுவாமியும், பூரீ பத்திர காளியும், ஆலடிவிநாயகரும், விஸ்வநாத சிவனும், வில்லூன்றிக் கந்தனும், இன்னும் பல மூர்த்திகளும் கோயில் கொண்டருளிய தலங்களுக்கும், குளக்கோட்டு மன்னன் திருப்பணிகள் செய்த கோணேஸ்வரத்தோடு தொடர்புடைய வரலாறுகளைக் கொண்ட கொக்கட்டிச் சோலை, திருக்கோயில் முதலிய தலங்களுக்கும் அடியவரை நெறிப்படுத்தி முடிவில் கோணேசப் பெருமானிடம் ஆற்றுப்படுத்தும் பண்டிதர் அ. ஆறுமுகம் ஐயா அவர்கள் கோணேசப் பெருமானுடைய திருவருளுக்குப்பாத்திரராகிப்பல்லாண்டு நலமுடனும், வளமுடனும் வாழ்வாராக.
ஞான சிரோன்மணி சைவப்புலவர் - பண்டிதர் பாக்கியபதி ஆர். வடிவேல் 15. வித்தியாலயம் ஒழுங்கை திருக்கோணமலை.

புனைந்துரை
சிவநெறிச்செல்வர்,அருட்புலவர், பண்டிதர், அ. ஆறுமுகம் அவர்கள் எழுதிய “கோணேசர் ஆற்றுப்படை” என்னும் நூலைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
இந்நூலைப் படிப்பவர்களுக்கு, திருக்கோணேஸ்வரம் பற்றிய ஏனைய நூல்களைப் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும்.
சிவநெறிச் செல்வர் ஆக்கிய “கோணேசர் ஆற்றுப்படை” நூலைப் படிக்க எடுத்தால் தொடர்ந்து நூல் முழுவதையும் ஒரே முறையில் படித்து முடித்தேவைப்போம். அவர் நூலின் சிறப்புக்கு இதுவே ஒரு சிறந்த சான்றாகும்.
கைபுனைந்தியற்றாக் கவின் பெறு ஒவியமாக, இயற்கை அழகெல்லாம் ஒருங்கமைந்த "திருக்கோணேஸ்வரம்” திருக்கோணேசப் பெருமானின் திருக்கோவில் அமைந்திருக்கும் அழகுச் சூழல் இவையனைத்தையும் அருட்புலவரின் கவிதையில் படித்து உணர்ந்து சிந்தித்து மகிழலாம்.
திருக்கோணேஸ்வரம் கோரக்க சித்தர்பெருமான் முத்திபெற்ற அருட்பதி, கோரக்க சித்தர் பெருமானை மனங்கனிந்து துதிப்போம்.
ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோராக விளங்கும் பண்டிதர் பெருமகனை வாழ்த்துவோம். அவர்பெற்ற அருளனுபவங்களை அவர் எழுதிய “கோணேசர்” ஆற்றுப்படை” நூல்வாயிலாக ஆய்ந்து போற்றுவோம்.
- வை. சோமாஸ்கந்தக் குருக்கள்

Page 6
வெளியீட்டுரை
"திருக்கோணேஸ்வரம் தொன்மையும் வண்மையும் என்னும் ஆய்6 நூல் ஞானசிரோன்மணி பண்டிதர் திரு. இ. வடிவேல் அவர்களால் எழுதப்பட்டு எமது பேரவையால் அண்மையில் வெளியிட்டுவைக்கப்பட்டமையை எல்லோரு நன்கறிவர். அருட் சிறப்பும் வரலாற்றுப் பெருமையும் பாரம்பரியமும் கொண்டு விளங்கும் திருக்கோணேஸ்வரப் பெருமானுக்குப் பல நூல்களை வெளியிட வேண்டும் என்பதில் திருக்கோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஆர்வத்துடன் செயற்பட்டு வருகின்றது. எனவேதான் வட்டுக் கோட்டைத் தொகுதித் தமிழ் அறிஞர் சங்கத்தலைவரான சைவப் பெரியார் பண்ணாகம் பண்டிதர் திரு. அ. ஆறுமுகம் அவர்களால் பாடப்பட்ட கோணேசர் ஆற்றுப்படை என்ற இந்த நூலை நாம் திருக்கோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் சார்பில் வெளியிட்டுவைப்பதில் மகிழ்ச்சியும் மனநிறைவும் அடைகின்றோம். "அருளமுதவள்ளம்” போன்ற பல அரியநூல்களை எழுதியுள்ள பண்டிதர் ஆறுமுகம் அவர்கள் நிறைந்த தமிழ் மொழிப் பாண்டித்தியம் பெற்றவர் என்பதை இவ்ஆற்றுப் படையைப் படிப்போர் அறிவர்
தமது தள்ளாதவயதிலும் ஆர்வத்துடன் கோணேசர் ஆற்றுப் படையைப் படைத்துத்தந்துள்ள பெரியார் பண்டிதர் ஆறுமுகம் ஐயா அவர்களுக்குதாயினும் நல்ல கோணமாமலைப்பெருமான்திருவருள்துணையாக இருக்கப் பிரார்த்திக்கின்றோம்.
இவ் வெளியிட்டை சைவத்தமிழ் உலகம் வரவேற்கும் என்ற நம்பிக்கையில் இநநூலை பேரவையின் சார்பில் உங்களுக்கு மகிழ்வுடன் சமர்ப்பிக்கின்றோம்.
வணக்கம்
"சிவஞானச் செல்வர்” செல்லப்பா சிவபாதசுந்தரம் (மதிப்பார்ந்த பொதுச் செயலாளர்) திருக்கோணமலை மாவட்ட இந்து இளைஞர்பேரவை 393, திருஞானசம்பந்தர் வீதி, திருக்கோணமலை O4.10. 1995
- viii -

2O
9
சிவமயம்
கோணேசர் ஆற்றுப்படை வெண்கலிப்பா
சீரார் நிலவேந்தன் செந்தா மரைத்திருவை நேரான வான்மகளின் நேர்த்தி இனிமைநலம் பேரா அழகு பிறங்கக்கண் டுள்ளத்தே ஆராத காதலுறீஇ அம்மங்கை யைத்தழுவப் பேதுரு தாலகாலப் பேர்பூண் டுயர்ந்தெழலும் காரிகையும் அன்னவன்மேற் காதல் கனிந்தனளாய் நேரில் அவன்வரவை நேர்வதற்குத் தாழ்ந்துவந்து
சார, இவரில்எவர் தழுவினார் முன்னென்ன
யாரு மியம்பவொண்ணா அன்பி லிருவோரும்
ஒன்றாகிக் கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றபெரும்
இன்பமிகு போதிையில் இருவரின் மெய்யினின்றும் அன்புநீர் பொங்கி அருவி யெனப்பெருகிக் கீழிழிந்து பாய்ந்து கிடந்தமே டெங்குமுள கோப்பிதே யிலைறப்பர் கொக்கோ எனும்பல ஆய பயிர்கள் அடர்ந்தமலைச் சாரல்களும் பள்ளம் சமதரைகள் எங்கும் பரந்துமிக்க கொள்ளைவெள்ளம் சேர்ந்து குமுறிக் குதித்துப்பின் மாவலி கங்கையெனும் நாமம் வரப்பெற்று வாவிகள் செந்நெல் வயல்கள் வளஞ்செயலால் யாவரும் போற்றி இனிதாய் வரவேற்க எல்லோரும் வாழவும் இன்பமெங்கும் ஆழவும் மல்கிய மாகங்கை வளம்வாய்த்த சீரூர!
- 1 -

Page 7
3O
40
- கோணேசர் ஆற்றுப்படை -
அநாதியே தம்முடன் அத்துவித மாயமைந்த ஆணவ மலத்தின் அழுத்தத்தால் ஆன்மாக்கள் அழுக்கா றவாவெகுளி ஆதியன கொண்டு தீவினை மேன்மேலும் செய்திடலால் மூல மலக்கட் டிறுகி அலக்கண் மிகப்பல உறுவதைக் கருணையே உருவாய் அமைந்த பரம்பொருள் உணர்ந்து பரிந்து மலங்கெட மாயையின் வடிவாம் தனுகரண புவன போகங்கள் நல்கிப் புசிப்பித் தருள்வரெனக் கடவுள் நிலையுணர்ந்த காட்சியர் கட்டுரைப்பர்; நால்வகைத் தோற்றம் ஏழு வகைப்பிறப்பு எண்பத்து நான்கு இலட்சம் யோனிகள் தத்தங் கரும வினைகட்குத் தக்கவாய் ஆன்மாக்கள் கொள்ளும் அனைத்துப் பிறவியிலும் ஏற்றம் இனிமை இயைந்தது மானிடம், நல்லதன் நன்மையும் அல்லதன் தீமையும் உள்ளவா றுணரும் பகுத்தறி வுற்றநன் மானிடப் பிறவியில் வந்ததன் பேறாய் வினைகடிந் திறைநிலை மேவிட வேண்டும், பிறவாப்பே ரின்பப் பெருநிலை பெற்றிட வேண்டும் எனுமுயர் வேட்கை யுளத்தில் உறுதியாய்ப் பற்றிய உத்தம அன்பரே!

50
60
- கோணேசர் ஆற்றுப்படை -
சிவன்நிலை எய்திய சீவன் முத்தர்கள் எல்லா உயிரிலும் எல்லாப் பொருளிலும் எங்கும் இறைவன் இருத்தலைக் காண்பர்; பசுவின் உடலெங்கும் பாலுள தாயினும் பசுமடிக் காம்பினைப் பற்றிப் பெறல்போல் எங்கும் தங்கும் இறைவ னருளவன் தங்குமா லயங்கள் தரிசித் தடையலாம். அந்நெறி நின்றனன் அனுபவம் பெறநிர் விழைவதைக் கண்டு விளம்புவன் நன்றே: திருத்தலந் தோறும்நீர் சென்றுவழி பட்டுத் திருவருளில் மூழ்கித் திளைப்பதே நன்று, இற்றைக்கு நாலா யிரத்தைந்நூற் றில்வாழ்ந்த வெற்றி மனுச்சோழ வேந்தன் மரபிலுற்ற வரராம தேவனிந்த மாவிலங்கை நாட்டுத் திருக்கோண மாமலையைத் தெரிசிக்க வந்து அருத்தியுடன் ஆலயம் வீதிமதி லாய திருப்பணிகள் செய்யத் திரவியம் சேமித்துக் கிணறொன்றில் இட்டுக் குறளொன்றைக் காவல் இருத்தித்தன் நாடேகி இச்செய்தி தன்னுடைய அருமை மகன்சோழ கங்கன் அறியவைத்துச் சின்னாளில் விண்ணேகச் சேயான சோழகங்கன் பன்னும் கலியுகம் ஐந்நூற்றுப் பன்னிரண்டில்

Page 8
7 Ο
8O
- கோணேசர் ஆற்றுப்படை -
மன்னு திருக்கோண மலைவந்து தந்தைவைத்த பொன்னில் இருமடங்கு பொன்தானும் V இட்டதனால் கோவி லொடுபாவ நாசத் திருக்குளமும் ஆயதே ரோடும் அணிவீதி யும்பூசைக்(கு) , ஏய மலர்வனமும் நீள்மதிலும் ஏற்றமுற அமைத்துக் குடமுழுக்கும் ஆட்டி நிவேதிக்க நாள்தோறும் ஈரவணம் நல்லசம் பாவரிசி காய்கனிகள் தன்சோழ நாட்டினின்றும் தருவித்து நேய முடன்பூசை நேர்த்தியாய்ச் செய்தவன்; நிரந்தரம் பூசை நிறைவாய் நிகழ்த்த வருமானந் தேடும் வழிவகைகள் சிந்தித்தான்: இரண்டா யிரத்தெழு நூறவணம் நெல்விளைக்கக் காடு புதர்கள் கரம்பைகளைக் கட்டழித்துத் தரையைநன்கு பண்படுத்திச் சாலிவயல் பாய்ச்சுதற்கு அல்லைக் குளம்வெண் டரசன் குளந்தொட்டும் நெல்விளைய நீர்போதா நீர்மை யறிந்துபின்னும் கந்தளாய்க் குளத்தினையும் கட்டியபின் மாவலிநீர் வந்து நிரப்புதற்கு வாய்க்கால் வகுத்தபின்பு நீர்பெருகிக் கட்டுடையா வண்ணம் நெடுந்தூம்பு சீராய் அமைத்தபின்னும் தேங்கிநீர் மிக்கதனால் திகைத்துத் திருமாலைச் சிந்திக்க அவர்தோன்றி மிகையாக நீர்தேங்கல் விநாயகரை வேண்டியவர் அனுமதி பெறாதகுறை ஆகும் எனவுணர்ந்து

()
to O
110
- கோணேசர் ஆற்றுப்படை -
மனம்மொழி மெய்யால் வழுத்தி விநாயகரைத் தொழுது " மதகினைத் திறக்கத் தொகும்நீர் விநாயகர் கோவிலின் மேற்குத்தெற் கெல்லைகளைத் தாவிப் பரந்தோடித் தணிய, குளக்கட்டுக் காவலாய் வைரவர் காளியத் தினியம்மா அண்ணமார் நள்யமார் ஐம்பூத ரானோரும் திணணமாய் நில்லுமெனச் செப்பி அவர்களுக்கு முன்னாண்டிற் பாற்பொங்கல் பின்னாண்டில் வேள்விமடை ஆதர வாயிவர்கள் ஆண்டுதொறும் தந்திடுவர் காலமெலாம் காவலாய் நீவிரிரும் என்றுரைத்தும் மழைவேண்டிற் பச்சை நிறப்பட்டும் வெயில்வேண்டின் சிவப்புநிறப் பட்டுமிவர் சேவிக்கப் பயன்செய்வீர் என்று புகன்றும் எழில்மாயன் ஏகினரே: சோழர்குல - மன்னனுயர் சோழகங்கன் குளமும் கோட்டமும் நல்லவண்ணம் கோலிய காரணத்தால் குளக்கோட்டன் என்றுலகோர் கூறும் புகழ்பெற்றான் குளக்கோட்டன் பூசை குறைவின்றி நடப்பதற்கு ஆளணியும் நிர்வாக அமைப்பும் பொருள்வளமும் சூழலும் வாய்க்கும் துறைபலவும் ஆராய்ந்து மருங்கூருக் கேகி வரிப்பத்தார் முப்பதுபேர் ஒருங்குசைவ ஆசாரம் உண்மையுறு தொண்டுள்ளம் வாய்ந்தோரை இங்கு வரவழைத் தன்னவரில்

Page 9
120
130
- கோணேசர் ஆற்றுப்படை -
தேர்ந்த எழுவருக்கு ராயரெனும் சீர்விருது சூட்டிக் கணக்கெழுதும் தொண்டு செயவைத்து ஏனையோர்க் குற்றபணி ஈசன் உவக்கும்பூ
ஆய்தல் நிரப்பல் அழகாக மாலைகட்டல்
வீதிகள் கூட்டி மெழுகி மிளிரவைத்தல் சுண்ணம் இடித்தல் சுவாமி யுலாவீதி நண்ணும் பொழுதில் நடனமிடும் மாதருக்கு வண்ண முறப்பக்க வாத்தியங்கள் வாசித்தல் என்றின்ன பல்பணிகள் ஏற்படுத்திக் காணிவயல் நன்கு விளைவித்து நயப்போரைக் கொண்டுவரக் காரைக்கால் சென்று கடவுட் பணிக்கென்னத் தானமாய்த் தம்மை வரித்துள்ள தானத்தார் இருபத் தொருபேரை ஈண்டு வரச்செய்து கொட்டியா புரப்பற்றுத் தம்பலகா மப்பற்றுக் கட்டுக் குளப்பற்றுக் காணிகளைப் பண்படுத்தி வித்தி விளைவிக்கும் வேலைக் கமர்த்தினான். கட்டுக் குளப்பற்றார் காப்பணிந்து விழாநடத்தல் அப்பன் நிவேதனத்துக் காறவனம் நெல்கொடுத்தல் தப்பாது பால்நெய் தயிர்கொடுத்தல் வேண்டுமினி கொட்டியா புரப்பற்றார் குளிர்சந் தனம்பாக்கு வெற்றிலை முக்கனிகள் நூறவணம் நெல்தருதல்
ஆமணக்குப் புன்னைதென்னை எள்இருப்பை ஆயவற்றின்
வித்துகளை இறையாத்தீ வுள்ளா ரிடங்கொடுக்க

14 O
15O
கோணேசர் ஆற்றுப்படை ar
அத்தீவி லுள்ளார் அவற்றைச்செக் காட்டிப்பின் எண்ணெயைக் கொண்டுவந் தேய்ந்தகிண றேழுள்ளும் நண்ணும் ஒழுங்கில் நலமாக வார்த்திடுதல் வேண்டும் எனவிதித்த விதிகள் வழுவாது யாவருந் தத்தம் கடமை யியற்றுதற்குக் கல்வெட் டெழுதிக் கடவுளின் பூசைசெய்யப் பாசுபத ரானோரைப் பாங்காய் அமர்த்தினான்; தானத்தார் வரிப்பத்தார் தம்மிற் பிணக்குவரின் ஆன விசாரணைகள் ஆற்றி நடுநின்று தீர்ப்பு வழங்கித் திறம்படச் செய்தற்கு வல்ல தனியுண்ணாப் பூபால வன்னிமையைச் செல்வ மதுரைத் திருநகர்நின் றுங்கொணர்ந்து நல்ல விதமாக நடத்துதற்கு வைத்திருந்தான்: மேன்மைக் குளக்கோட்ட வ்ேந்தனே கந்தளாய் மேவும் சிவாலயமும் விதிப்படி தாபித்தான் உக்கிர ராசசிங்கன் தேவியா யுற்றவம்மை மாருதப் புரவீக வல்லியிவர் மைந்தனெனும் செயராச சிங்கனிவ் வாலயத்தைச் சீராய்த் திருத்திப் புனரமைத்துச் சிலபணிகள் செய்ததுண்டு. எங்குமாய் எல்லாமாய் இருக்கும் பரமசிவன் சிறந்தவிக் கந்தளாய்த் திருத்தலத் தினுமுள்ளார் அறமருள் வடிவான ஐயனை மெய்யன்பா காதலாய்க் கண்ணிர் கசிந்துருகிப் போற்றுவையேல் தீதில்பே ரின்பத் திருவாழ்வு பெற்றிடுவாய்

Page 10
160
17 Ο
18O
- கோணேசர் ஆற்றுப்படை -
மற்றிப் பதிக்குமுன் வழங்கிய பேர்வேறு. நான்மறை நன்குகற் றுணர்ந்து தவத்தினால் மேன்மையற்ற அந்தணர் மிகப்பலர் வாழ்ந்ததனால் சதுர்வேத மங்கல புரமென்று சாற்றும் திறம்வாய்ந்த இந்தத் திருப்பதிக்கு முன்னொருநாள் புத்தன் கயவாகு என்னப் புகலும்உன் மத்தன் சிவாலயங்கள் மண்ணோடு மண்ணாய்ச் சிதைய நொருக்குவேன் சீரழிப்பே னென்றுமிக்க கன்று சினமும் கடும்வெறியும் கொண்டிந்த மண்ணினை நோக்கிமிகு வஞ்சனை யோடுவந்து கந்தளாய்க் குளக்கட்டில் கால்வைத் திடலுமன்னான் கண்ணிரண்டும் பார்வைகெடக் கலங்கி யறிவழிந்து புண்ணாய் மனம்நொந்து தான்நினைந்த பொல்லாங்கைஎண்ணி யிரங்கியினி என்செய்வேன் אי என்றலறப் புண்ணிய வேதப் பொருளுணர்ந்த அந்தணர்கள் நண்ணி யவனயலாய் நீாடி ஒருவாறு தேற்றி யவற்குச் சிறந்த உபதேசம்
சாற்றி யவன்நினைத்த மாபா தகந்தீரச்
சாந்தி வழிபாடு தாஞ்செய்தவேளையவன் கண்ணிலொன்று பார்வையுறக் கள்ளக் குணம்விட்டு எம்பெரு மானே இறைவா கொடியன்யான் வெம்பாவம் எண்ணினேன் வேதனைக் காளானேன்
என்பூாவம் மன்னித் தெனையாண்டு கொண்டருள்வீர்

19 O
2O O
- கோணேசர் ஆற்றுப்படை -
இன்றெனக் கின்னருன் ஈந்தீரென் பாவங்கள் பொன்றி யடியேன் புதுப்பிறவி பெற்றுவிட்டேன்
தேவரீர் கோவில் திருத்தொண்டு செய்திடுவேன்
பாவமெலாம் பாறப் பரிந்துன்னைப் பாடிடுவேன் சைவனாய் வாழ்வேன் சனங்களையும் சைவமெனும் தெய்வ நெறியைக் கடைப்பிடிக்கச் செய்திடுவேன் உய்யும் வழியிதுவென் றுாருக் குரைத்திடுவேன் பொய்யர்க்குப் பொய்யனே மெய்யர்க்கு மெய்யனே ஐயாஎன் கண்ணுக் கருள்மருந்து தாருமையா என்று கசிந்துருகி ஏங்கிக் கரங்குவித்து நின்று வருந்தியழ நிமலர் இரங்கமறு கண்ணும் வெளித்துநல்ல காட்சிபெற அவ்வேந்தன் கண்ணப்பர் போன்று கனிந்தமெய் யன்பினனாய் தெய்வம் சிவனே சிவசமய மேசமயம் பொய்யை இதுவரையும் மெய்யென்று நம்பிநான் வீணே யகந்தை வெறிகொண்டு கூத்தடித்தேன் முகக்கண் வெளித்தென் அகக்கண்ணும் வெளிப்புற்றேன் குளக்கோட்டன் போன்றினியான் கோவிற் பணிசெய்வேன் உளக்கோட்டம் நீங்கி யுயர்ந்துய்ந்தேன் என்றென்று சாக்கிய நாயனார் சரித்திரமும் கேட்டவ்னாய்ப்

Page 11
21 Ο
220
- கோணேசர் ஆற்றுப்படை -
போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனை வாக்கால் மனத்தால் வழிபட்டுத் தொண்டுசெய ஆர்வம் மிகக்கொண்டான் அவ்வேந்தன் கண்தழைக்கும் பேறு கொடுத்ததனால் பின்னாளில் வேதபுரம், கண்தழை கந்தளையாய்க் கந்தளா யானதெனும் இந்த வரலாற் றினையறிவாய் மெய்யன்பா; கந்தளா யாலயத்தைச் சந்தமுறப் புனரமைத்துச் சிந்தை தெளிந்த கயவாகுச் சிவமன்னன்
முந்துமருட் கோணேசர் முதன்மைசேர் ஆலயத்தை
வந்தனை செய்ய வருகைதந்த போதங்கே பூசைசெய்த பாசுபதர் புத்தன் எமைக்கொல்ல நாசங்கள் செய்ய நலிவுசெய வந்தனனென்று ஏங்கி யிவனால் இறந்து படுதலினும் நாங்களே சாவதுதான் நல்ல தெனத்துணிந்து கடலினுள் வீழ்ந்திறக்கக் கண்ட கயவாகு வேதநா யகமுதன்மை சைவநா யகமுதன்மை என்னும்பேர்ப் பூசகரை இனிதுகோ ணேசருக்கு நன்றுதரு பூசைசெய நாட்டியங்கு நாள் தோறும் அரிசி இரண்டவணம் பதினா யிரம்விளக்கு திருக்கோயி லொன்று திகழக் குளக்கோட்டன் செய்ததிலும் மேலாகச் சீர்ச்சம்பா மூன்றவணம் இருபதி னாயிரம் எழில்விளக்குத் திருக்கோயில் மேலும் இாண்டமைத்து வேந்தன் கயவாகு சால அரும்பணிகள் தான்புரிந்தான் இவ்வெல்லாம்
- 10

230
240
- கோணேசர் ஆற்றுப்படை -
ஞாலம் புகழ்சைவ ஞானசம் பந்தரருள் தேவாரத் தெய்வத் திருப்பதி கத்தினிலே கரைகெழு சந்தும் காரகிற் பிளவும் அளப்பருங் கனமணி வரன்றிக் குரைகடல் ஒதம் நித்திலம் கொழிக்கும் கோணமலை, நித்திலம் சுமந்து குடித்னை நெருக்கிப் பெருக்கமாய்த் தோன்றும் கோண மாமலை, கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோண மாமலை, குருந்தொடு முல்லை கொடிவிடும் பொழில்சூல் கோணமா மலை,யெனப் பாடிய சான்றுகள் படித்துணர்ந் திடலாம் இவ்வா றினிதாய் இயம்பப் பெற்ற திவ்விய கோண மாமலைத் திருத்தலம் போத்துக் கேயரின் ஆட்சியிந் நாட்டில் ஏற்பட்ட காலத்தில் இயம்பவும் கூசும் ஆயிரத் தறுநூற் றிருபத்து நாலாம் ஆண்டில் தளபதி கொன்ஸ்ரன் ரைன்டிசாப் பாதக னாற்பாழ் படுத்தி யழித்திடப் பட்டதை எண்ணப் பதறுதே நெஞ்சம் தலங்கள் தீர்த்தம் இலிங்கம் மதில்பொழில் இலவாய் வெறுமையாய்க் கிலமாய்க் கிடந்த கோணமா மலையில் ஆங்கில ராட்சியில் வழிபடச் சென்ற மயல்தீர் அடியவர் அருவப் பொருளாய் அமர்ந்தகோ ணேசரைக் கண்ணுறப் பார்த்திலர் கருத்தினிற் போற்றினர்
ܚ 10 -

Page 12
260
270
- கோணேசர் ஆற்றுப்படை
இந்நிலை மாறி யாவரும் காண மன்னரின் ஆலயம் மக்களா லயமாய்ப் பரிணமித் திட்டமை பகருதற் கினிதே; இனித்தொடர்ந் துரைத்திட இருப்பவை யுரைத்தபின் இன்றைய கோணமா மலைநிலை யியம்புவேன் மட்டக் களப்புமா வட்டம் திருமலை மாவட்ட எல்லையில் வயங்கும் அருள்மிகு திருக்கோயி லூரில் திகழுமா லயத்திலும் விருப்புடன் ஈசன் வீற்றிருந் தருளுவன் அன்பனே அங்குச்சென் றவன்புகழ் பாடுதி! அன்னதன் பாங்காய் அமைந்தகொக் கட்டிச்சோலை என்னும் திருத்தலம் திருமங்க லாய்த்தலம் கிளிவெட்டி யூரிற் கிளரும் தலத்திலும் அமரும் கடவுளை அகங்கசிங் துருகி அழுதுகண் ணிர்மல்கின் ஆனந்தம் எய்துவாய் இன்னுங்கேள் கதிர்காமக் கோயிற் கதிரைமலை வள்ளிமலை அதிரவரு மாணிக்க கங்கை யமைந்ததுபோல் வெருகல் மலைபடி வெட்டுமலை சூழ வெருகல்மா கங்கைநதி மேற்குத்தெற் காகச் சுற்றி வளைந்தோடும் சுந்தரக் காட்சியினால் மூர்த்திதலம் தீர்த்தமிவை மூன்றும் சிறந்ததனால் சீர்த்தி பெறுமுபய கதிர்காமச் சேத்திரமாய் போற்றும் புகழ்வெருகல் சித்திரவே லாயுதரை ஆற்றவும் வேண்டி அருள்பெற் றுயர்ந்திடுவாய்; கதிர்காமக் கோவிலிற் கைக்கொள்ளும் பூசைமுறை இங்கேயும் கொள்ளுதலை இனிதுநீ கண்டிடுவாய்.
- 12 -

BO
29 O
- கோணேசர் ஆற்றுப்படை -
என்னினிய அன்பா இனிக்கன்னி யாய்ப்பதியும் மன்னிய பிள்ளிையார் தலமும் மகிழ்ந்துரைப்பேன். இற்றைக்கு ஏழா யிரமாண்டின் முன்னிலங்கைக் கொற்றவ னாயிருந்த கோமான் இராவணன் காலத்தும் சைவமிங்கு கவினுற் றிலங்கியது. இராவணன் தன்தாய் இனிதுவழி பாடுசெய்து
பராவச் சிவலிங்கம் பரமசிவன் வீற்றிருக்கும்
திருக்கயிலை சென்றுபெற்றுத் திரும்பி வரும்வழியில் தேவரின் சூழ்ச்சியால் சிறுநீர் உபாதைவர
வாதையுற்ற خصیبر வேளையங்கு வந்துற்ற சிறுவனை ஆவலுடன் நோக்கிமிக அன்போ டருகழைத்துச் சிறுநீர் கழித்து வருவேன் சிறுபோழ்து இந்த இலிங்கத்தை வைத்திருந்து தந்திடுவீர் மண்ணில் இதனைநீர் வையாதீர் எனவிளம்ப அந்தச் சிறுவன் அவற்குரைப்பான் இப்பாரம் தந்தாய் சிறியேன்யான் தாங்ககில்லேன் மூன்று தரமுன்னைக் கூப்பிடுவேன் வரத்தவறின் வைத்திடுவேன்
என்ற நிபந்தனையில் லிங்கத்தை அச்சிறுவன்
மன்ன னரிடம்பெற்று வைத்திருந்த வேளையவன் சிறுநீர் கழித்துவர நேரம் சிறிதுசெல்லச் சிறுவன் இராவணன்பேர் செப்பிமும் முறையழைத்தும் வாராத காரணத்தால் மண்ணிலே வைத்துவிட்டான்
13 -

Page 13
3 Ο Ο
31 Ο
320
- கோணேசர் ஆற்றுப்படை -
நேரங் கழிந்துவந்த நிருபன் அதுகண்டு கோபமுற்றுப் பையனைக் குட்டுதற்குக் கையோங்க அன்னான் மறைய அரக்கன் இலிங்கத்தைத் தன்னாண் மையினாலே சற்றும் அசைத்திடவும் ஒண்ணா நிலையில் உளஞ்சோர்ந்து நின்றோன்பால் காயாம்பூ வண்ணத்துக் கண்ணன் எதிர்வந்து மாற்றம் உரைப்பான் வணங்கா முடியோனே? வடகைலை போந்துநீ வாங்கிவந்த லிங்கத்தைத் தென்கைலை யென்னுமித் திருக்கோண மாமலையில் மன்னிய பெருமானை வழிபட்டும் பெற்றிடலாம் இதுவும் கயிலையே என்றவர லாற்றினைக்கேள் அன்றொருநாள் ஆதி சேடனுக்கும் வாயுவுக்கும் வென்றி வலிமையில் மேம்பட்டார் யாவரென வீம்பு பெருவாதம் மேலெழுந்த வேளையிலே சேடன் கயிலாயச் சிகரங்கள் தன்படத்தால் மூடி மறைத்திருக்க மூர்க்கத் துடன்வாயு மோதி யவற்றுள்ளே மூன்றைப் பிடுங்கிவிட ஒன்றுசிராப் பள்ளியிலும் ஒன்றுகா ளத்தியிலும் ஒன்று திருக்கோண மலையென்னும் இவ்விடத்தம் வீழ்ந்தன வடகைலை மேவிய சிகரங்கள் தெற்கில் விழுந்ததால் தென்கயி லாயப்பேர் பெற்றன எனுமுண்மைப் பெற்றியை நீயறிவாய்
- 14 -

330
340
- கோணேசர் ஆற்றுப்படை -
மற்றிந்தத் தென்கயிலை மாதுமையாள் பங்கினனைப் பத்திசெய் துன்னுள்ளப் படியெல்லாம் பெற்றிடுவாய் என்றுரைத்து மாலேக இராவணனும் அவ்விடத்தில் நின்று நெடுநாளாய் ஒன்றி வழிபட்டும் ஒன்றும் பெறாமையினால் ஓங்கும் பெருங்கோபம் கன்றிட வாளாற் கனவரையை வெட்டினான். அன்றவன் வெட்டியதே இன்றிரா வணன்வெட்டு என்று வழங்கி இயலுவதைக் கண்டிடுவாய் மலையினை வெட்டியும் மாறாச் சினங்கொண்ட நிலையில் நிருபன் மலையிடுக் கினையண்டி இன்றிதனைப் பேர்த்திடுவேன் என்றுவஞ் சினங்கூறிக் குன்றுபோ லுந்தோள்கள் கொண்டுகயி லைக்குன்றை ஈடாடச் செய்ய இடப்பாக மாயமர்ந்த அம்மை வெருவி யவர்ைத் தழுவுதலும் பெம்மான் வலக்காற் பெருவிரலால் ஊன்றுதலும் அட்டதிக்கும் வென்ற அரக்கன் நசுங்குண்ணக் கண்ட அமரர் கணங்கள் "இராவணன் மாண்டான்” எனlமிக்க மகிழ்ச்சி யுடனார்ப்ப ஈண்டிய ஓசை இராவணன் தாயினது செவிப்புல முறஅவள் திகைத்துக் கலங்கி உணர்வு மயங்கி உயிர்விட்டாள்; இந்நிலையில்
- 15 -

Page 14
350
360
- கோணேசர் ஆற்றுப்படை -
மலைக்கீழ் நசுங்குண்ட மன்னன் இனியஇசைக் கலையிற் சிறந்த புலமைய னாதலிற்றன் தலையொன்றும் கையொன்றும் தானே யிழுத்தெடுத்து நரம்புக ளாற்பிணித்து நல்லதொரு வீணை உருவாக்கிப் பாடி யுருகிக் கசிந்தழலும் அருள்மிக்க மாதுமை யம்மையோ டப்பன் இரங்க இராவணன் அடுக்க லிடுக்கில் நின்றும் வெளிவந்து நிமலரடி போற்றுதலும் நெடிதுநாள் வாழ்வும் கொடிய திறல்வாளும் படிம இலிங்கமும் பாங்குற நல்கினர். அந்தப் பொழுதினில் ஆங்குற்ற கண்ணனை எய்தி யிராவணன் செய்திகள் கேட்கத் தலைநக ரினிலவன் தாயிறந் தாளென்னும் கலக்கந் தருமுரை காதில் விழஅவன் அலக்கணுற் றையோ அன்னையை இழந்தேன் நொந்து சுமந்துபெற்று நோவாம லேந்திமுலை தந்து வளர்த்தெடுத்து தாழாமே அந்திபகல் கையிலே கொண்டென்னைக் காத்து வளர்த்தஅன்னை மெய்யினைக் காணா மிகுபாவி யானேனே தீக்கடன் செய்யாச் சிறுமையேன் நீர்க்கடனைச் செய்தற் கெனினுமொரு சீர்சால் வழிகாட்டாய்
- 16 - .

38O
- கோணேசர் ஆற்றுப்படை -
என்று வினவ எழில்மா யவன்புகல்வான் மன்னர்க்கு மன்னா வருத்தம் இனிவிடுக.
இந்த இடம்மிக்க தெய்வீகம் வாய்ந்தபதி மன்னும் திருவண்ணா மலையை நினைப்பவர்கள் பொன்னம் பலஞ்சென்று போற்றித் தரிசிப்போர் துன்னுதிரு வாரூரில் தோன்றுவோர் காசியிலே பொன்றுவோ ரெல்லாரும் புனிதமுத்தி யெய்திடுவர்
என்றுரைக்கும் சாத்திரங்கள் இக்கோண மலைத்தலத்தைச்
சிந்தித்தார் வந்தித்தார் வந்துதித்தார் மாய்ந்திடுவார் எல்லோரும் முத்தியின்பம் எய்துவார் இவ்வுண்மை நல்லாய் உளங்கொள்வாய் நானுன்தாய் நீர்க்கடனை இங்கேயிப் போதே இயற்ற முயன்றிடுவேன் என்றுரைத்துக் கையில் இருந்த்தொரு தண்டாலே நிலத்தினில் ஏழு நிலைகளிற் குத்துதலும் இலகிவெந் நீரூற் றெழுந்ததனைக் கண்ட நிருபன் உளம்வியப்பில் நீள அழுந்தியது ஊற்றுக்கள் வெவ்வேறு வெப்பநிலை யுள்ளனவே சாற்றுகெனக் கேட்கஇத் தன்மையே தெய்வச் சிவபூமி யென்றிதனைச் செப்பநல்ல சான்றாகும் மதிவல்ல மன்னாநின் மாதாவின் நீர்க்கடனை நீசெய்து நின்கடமை தீர்வா யெனக்கூறி மாயவனே புரோகிதனாய் மன்னன் சிரத்தையுடன் தாயின் இறுதிநீர்ச் சற்கருமம் செய்தவிடம் கன்னியாய் என்றுபுகழ் மன்னிய இடமாகும்
سه ۲۶ =

Page 15
390
4 OO
41 Ο
- கோணேசர் ஆற்றுப்படை -
அன்னதன் சீரினை அன்பனே கூறுவன்கேள் ஆங்குள்ள பிள்ளையார் ஆலயத் தயலிலே பாங்குற அந்தியேட்டிபாருளேர் செய்திடுவர் ஈங்குள் ளதுபோல்வெந் நீரூற்றெங் கேனுமிலை
யாழ்ப்பாண மாவட்ட நவாலி வரும்பெரியார்
தங்கத்தாத் தாவென்று சான்றோர் விதந்துரைக்கும் சோமசுந் தரப்புலவர் சொன்ன கவிதையைக்கேள். காதலனைப் பிரிந்தவளின் மனம்போல ஒன்று கவிபாடிப் பரிசுபெறான் மனம்போல ஒன்று தீதுபழி கேட்டவளின் மனம்போல ஒன்று செய்தபிழைக் கழுங்குபவன் மனம்போல ஒன்று நீதிபெறா ஏழைதுயர் மனம்போல ஒன்று நிறைபழித்த கற்புடையாள் மனம்போல ஒன்று காதுமழுக் காறுடையான் மனம்போல ஒன்று கனலேறு மெழுநீர்கள் உண்டுகன்னி யாயில் என்னஅவர் பாடியதும் எங்கள்மட் டக்களப்புப் புலவர் மணியென்னப் போற்றும் புகழ்வாய்ந்த பெரியதம்பிப் பிள்ளைநல்ல கன்னியாய்த் திருவென்று பாடிய பாடல்களும் நாடி உணர்ந்திடுவாய் அன்பா:இங் குள்ளதென அப்போது நானுரைத்த பிள்ளையார் பெருமானை வழிபட்டும் பேறுறலாம். அயலிலே ஆண்டான் குளத்தில் அருள்மிக்க சிவயோக புரத்துள்ள நடேசர் சிவாலயம் தவயோகி கெங்கா தரானந்தா தாபித்த நவமான அத்தலம்போல் நாட்டில்வே றெங்கும்நாம் காணவொண் ணாத தனித்துவக் காட்சியுள்ள தலமாகும் நீர்அங்கும் தங்கிவழி பாடுசெய்வீர்:
- 18 -

42O
43 O.
- கோணேசர் ஆற்றுப்படை -
தில்லை நடராசர் தெரிசனமிங்கெய்திடலாாம் அப்பால் அருள்மிகு தம்பலகா மத்தலச்சீர் செப்புவேன் மேன்மைத் திருக்கோண மலைக்கோயில் ஆயிரத் தறுநூற் றிருபத்து நான்கினில் தரைமட்ட மாகத் தகர்க்கப் படுமுன்பு கோணேசர் கோயிற் பரிசாரகர் குருக்கள் ஆங்கிருந்த மூர்த்திகளை அந்நியர்கைக் கெட்டாமல் மண்ணுட் பதுக்கி மறைத்துமொரு மூர்த்தியைத் தம்பல காமத் தலத்திற் பிரதிட்டை செய்துவழி பட்டதால் திகழும் தலம.து ஆதிகோ ணேசர் தலமாய் அமைவுபெற்ற
சேதியை மெய்யன்பா சிந்தித் துணர்ந்திடுவாய்
கோணேசர் கோவிலுக்குக் குளக்கோட்டு மன்னன்முன் நாளில் தொழும்புசெய நன்கு வகுத்துவைத்த தானத்தார் வரிப்பத்தார் தங்கிய கெவுளிமுனை கொட்டியா புரங்கட்டுக் குளப்பற்றில் உள்ளவர்கள் கோணேசர் கோவில் கொடுங்கோல ராலழிய மரபு வழுவாது தாம்செய்த தொண்டுகளை ஆதிகோ ணேசர்க் கருத்தியுடன் ஆற்றுகின்றார் பேரன்பா ஆதிகோ ணேசரையும் போற்றிடுவாய் இத்துணையும் யானுரைத்த எல்லாத் தலங்களுக்கும் மெய்த்துணைவா! நீபோந்து மெய்யன் புடன்வேண்டி இனிது வழிபட்டு இன்ப மடைந்திடுவாய் இனிக்கோண மலைநகரில் இருக்கும் தலங்களிலே
19 -

Page 16
440
45 Ο
- கோணேசர் ஆற்றுப்படை -
இற்றைக்கு நூற்றிருப தாண்டுக்கு முன்னாகச் சண்முகம் பிள்ளைவேல் தாபித் தமைத்துப்பின் சடையர் எனுந்துறவி தருலிங்க மும்சேரத் தாபித்த முத்துக் குமாரன் தலம்மிக்க நேர்த்தியாய் நேரம் தவறாது பூசைவிழா நன்கு நடைபெறலால் நல்லருட் பிரவாகம் ஈண்டிய தலமாகும் இராச வரோதயரின்
வழிவந்தார் செவ்விபெற நடத்தும் தலமிதனை
தெளிவுபெறப் பூசித்துச் சித்தம் உவந்திடுவாய் திருக்கோண மலையிலின்று தேசியக்கல் லூரியென இருக்கும்கோ ணேஸ்வரா இந்துக்கல் லூரிக்கு ベル இயைந்தமேற் கெல்லையிலே இனிதே யருள்பெருகும் ஆதிபத் திரகாளி யம்மையும் துர்க்கையும் ஆலடி விநாயக்ரும் guJ6Wuu 6VTUU60) Lobg கோலமுறு கோவில்களும் கும்பிட் டருள்பெறுவாய் அவைகளும் அற்புதம் அமைந்த திருத்தலங்கள் நவைதீர வழிபாடு நன்காற்றி ஓங்கிடுவாய் திருஞான சம்பந்தர் வீதியில் திகழ்கின்ற வீரகத்தி விநாயகர் விசுவநாத சிவபெருமான் முத்துமாரி யம்மன் முதலாந் தலங்களும் பெருந்தெருச் சமாதுப் பிள்ளையார் கோவிலும்
460 வெள்ளைவில்வ பத்திரக் கோணேசர் ஆலயமும்
- 20 -

47Ο
48O
- கோணேசர் ஆற்றுப்படை -
இலிங்க நகரிலுறும் இலிங்கவிநாயகரும்
கஸ்தூரி நகரில்வரு கஸ்தூரி மாரியம்மன்
இன்னுமின்னும் பலதலங்கள் எங்கும்நீ சென்றேகி நன்கு வழிபட்டு நன்மையெலாம் பெற்றிடுவீர் வில்லூன்றி யென்ன விளங்கும் திருப்பதியில் கந்த சுவாமிக் கடவுள் அமர்ந்திருக்கும் சிந்தைக் கினியதலம் செப்புவேன் இனிக்கேளும் இற்றைக் கிருநூற்று முப்பதாண் டின்முன்பு பொற்புமிகு திருவேர கத்திருந்த பூசுரர் நற்றவச் சிவசுப் பிரமணிய நல்லவர்தம் இல்லத்தில் தாம்வைத்து இனியவண்ணம் பூசிக்க வள்ளிதெய் வானை சமேத முருகனைப் பஞ்சலோ கங்கொண்டு பக்குவமாய் வார்ப்பித்து சிற்பி யொருவனாற் செய்வித்து வேலைக்ள் முற்றுப் பெறும்வேளை மூச்சுநின்று மாண்டிடவே ஐயரின் சுற்றத்தார் அதையேற்க மறுத்ததனால் செய்தசிற்பி யதனையொரு சிறுபேழை யுள்வைத்து ஈழநா டேகும்பாய்க் கப்பலில் ஏற்றிவிட அக்கப்பல் விரைந்துசென் றாழமுறுங் கோண மலைக்கடலை யண்டியதும் நகர மறுத்ததனால் கப்பலை யோட்டியவன் கனவிலே தான்பெற்ற
கட்டளைப் படியந்தப் பேழையைக் கடலில்விடக்
- 21

Page 17
49 O
50 O
- கோணேசர் ஆற்றுப்படை -
கப்பல் விரைந்தது; கரைசேர்ந்த பேழையைக் கண்டோர் திறந்ததனுள் கந்தவேள் திருவுருவம் கண்டு மகிழ்ந்துமிகு காதலுடன் போற்றி
அயலில் முடமாண்டானில் கொட்டிலொன் றாக்கி பயபக்தி யோடு பரிந்துவழி பாடுசெய்து வில்லூன்றிப் பதியில் வேத விதிப்படியாய்ப் பொற்புறக் கட்டிய புனிதமுறு கோவிலில் கர்ப்பக் கிருகத்துள் காத லுடன் வைத்துக் குடமுழுக்கு காட்டிக் குலதெய்வ மாய்க்கொண்டார்
சந்தமுறும் அந்தத் தலத்தும்நீர் தப்பாது
வந்தனை செய்தருள் வாழ்விற் சிறந்திடுவீர் அடுத்து மனையா வெளிக்குளத்தை யண்டி விநாயக ராலயமும் வல்லபையின் சந்நிதியும் கண்டு தொழுதுமருட் காட்சினியப் பெற்றிடுவீர் திருக்கோண மலையில் திகழ்கின்ற சாலையெங்கும் அருள்விளங்கும் தலங்கள்பல அமைந்திருத்தல் காண்பீரே அருள்வளம் மிகுகோயில் கோணேசர் ஆலயமே அதுவே தலைமைமின் நிலையமாம் ஆங்குள்ள கோவில் பிறளல்லாம் குலவுமுப மின்நிலையம் எனலாகும். அத்தகைய ஏற்றம் மிகவுடைய
- 22 -

51O.
52 Ο
- கோணேசர் ஆற்றுப்படை -
கோணமா மலைத்தலம் போத்துக்கல் கொடியோரின் ஆளுகையில் முற்றாய் அழிவுற்ற காரணத்தால் வெட்ட வெளியாய் வெறுமையாய் உற்றிடவும் எல்லாம் அழிந்தெதுவும் இல்லாத பாழ்வெளியில் ந்ள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனெங்கள் கூத்தப் பிரானென்னும் கொள்கையுள்ள மெய்யடியார் ஞானசம் பந்தரின் ஞானத் தமிழ்பாடி வெள்ளிதிங்கள் தோறும் மேவிவழி பட்டுவந்தார். ஆயிரத்துத் தொளாயிரத்து நாற்பதாம் ஆணடிலிந்த வெட்ட வெளியின் வடமேற்சில் கிணறொன்று வெட்டும் பணியையன்பர் மேற்கொண்ட வேளையிலே அம்மன் விநாயகர் அன்னம் முதலாய விக்கிர கங்களைக் கண்டெடுத்த வேகத்தில் மேலும் . பலபல இடங்களை அகழ்ந்து எடுத்தசிலை அனைத்தையுமோர் வாகனத்தி லேற்றி ஈழத் தமிழர்வாழ் இடமெங்கும் கொண்டுசென்று பொன்பொருள் பெற்றுப் புதிதாகக் கோயில்கட்டி சுவாமி சிவானந்தர் ஆசியொடு கையளித்த இலிங்கமும் கொணர்ந்து கருவறையுள் நன்கிருத்தி ஆயிரத்துத் தொளாயிரத்து அறுபத்து மூன்றினிலே குடமுழுக் காட்டியருள் குன்றாத தலமாக்கி அருளாளர் முன்போல் அமைத்து நிறைவுசெய்தார்
- 23

Page 18
530
54 O
550
- கோணேசர் ஆற்றுப்படை -
கோணமா மலைப்பெருமான் சந்நிதியை நீகுறுகி ஆலம் அமிர்தாய் அருந்திய அருள்மிகு நீல கண்டரே நித்தியப் பொருளே சிறியேன் பிரபஞ்சச் சேற்றினுள் வீழ்ந்தேன் வெளியேறும் வழிவகை தெளியா தழுங்குகின்றேன். பொன்பொருள் போகமிவை பொறிவிலங் கென்னும் உண்மையை யுணர்ந்தேன் உன்னையல் லாதுவே றெவரையும் என்துணை என்றினி எண்ணேன். அடியேற் கருள்வாய் அருளா தொழியின் ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன ஐயா காப்பாய அரசே காப்பாய் மெய்யர்க்கு மெய்யனே வெய்யதீ வினையினேன் உய்யக் கருணை யுகந்துசெய் தென்னை வாழ்வித் தருள்வாய் வானவர் போற்றும் தாளைப் பிடித்தேன் சரணம் சரணம் என்னித யத்திலும் வாக்கிலும் எங்கும் மன்னிய பொருளே மருந்தே அமிர்தே அணுவிலும் நுண்ணிய அணுவே அளத்தற்கு. அரிய பொருளிலும் அளவிட முடியாப் பரமேஸ் வரனே பார்வதி பாகா தீயினில் வெம்மையே நீருறு தண்மையே வானில் வெளியே வளியில் ஒலியே மாற்றுயர் தங்கமே போக்கறு வைரமே அன்பில் விளைந்த அமுதே யடியேன் துன்பம் விலக்கிச் சுகந்தந் தருள்வாய் எனப்பல கூறி ஏத்துவை யாயின்
- 24 -

56O
- கோணேசர் ஆற்றுப்படை -
இடமிருந் தருளும் அருளுரு வெனலாம் மடக்கொடி மாதுமை யம்மை யையற்கு இந்த அடியவன் எந்தப் பொழுதிலும் நந்தமைத் தொழுபவன் நாமெழுந் தருளும் தலங்கள் பலவும் தரிசித் திங்கே போக்குவே றின்றிப் போந்தனன் இவனை ஏற்றருள் செய்கென இதமுடன் சாற்றப் புன்சிரிப் போடு புனிதகோ னேசர் குஞ்சித செஞ்சரண் தந்திடக் கூடுவை இன்பப் பெருவாழ் வினிது.
- 25 -

Page 19
ஆற்றுப் படுத்தியவர் சிவநெறிச் செல்வர், அருட்புலவர் பண்டிதர் அ. ஆறுமுகம், பண்ணாகப் சுழிபுரம்
ஆற்றுப்படுத்தப் பெற்றவர்; தெய்வீக வாழ்வில் தீவிரநாட்டங்கொண்ட ஓர் அன்பர்.
ஆற்றுப்டுத்திய முதலாவது தலம்: கந்தளாய்ப் பிள்ளையார் கோவில்
ஏனைய தலங்கள்: 1. கந்தளாய்ச் சிவாலயம் 2. திருக்கோயில்
3
திருமங்கலாய்
கொக்கட்டிச் சோலை கிளிவெட்டி
. கன்னியாய்ப்பிள்ளையார்
சிவயோகபுரம் நடேசர் 9. தம்பலகாமம் ஆதிகோணேசர்
10.
11.
12.
13.
14,
15.
6.
7.
8.
19.
20.
21.
22.
4
5 6. வெருகல் சித்திரவேலாயுதர் 7
8
முத்துக் குமாரசுவாமி கோயில் பத்திரகாளிகோவில் ஆலடிவிநாயகர் விசுவநாதசிவன் முத்துமாரியம்மன் கஸ்தூரியம்மன் சமாதுப்பிள்ளையார் மனையாவெளிக்குளத்தடி விநாயகர். இலிங்கநகர் விநாயகர் வில்லூன்றிக்கந்தர் வெள்ளைவில்வ கோணேசர் கம்பனிப் பிள்ளையார்
கோணேசர்.
- 26 سه

இந்தப் பாசுரத்துக்கு உபகாரப்பட்ட பனுவல்கள்:
1. திருக்கோணமலை மாவட்டத் திருத்தலங்கள் - பண்டிதர் இ.வடிவேல் 9 திருக்கோணேஸ்வரம்- புலவர் வை. சோமாஸ்கந்தர்; அ, ழரீஸ்கந்தராசா
கோவிலும்கோவும்- பாலேஸ்வரி நல்லரத்தினசிங்கம் கோணேசர் கல்வெட்டு- கவிராச பண்டிகர் குளக்கோட்டன் தரிசனம்- தங்கேஸ்வரி கதிராமன் தம்பலகாமம் ஆதிகோணேசர் குடமுழுக்கு விழாமலர் 7. கோணாமலை அந்தாதி.
- 27

Page 20


Page 21
| T | |
- = - -
| : Ա Երեւ ।
- TTT
ਹੈ। L।
|L
T |L
| L
LL
|LTLTL
TLD
 
 
 
 

────────────────────────────ས།
| TITTITFL
-
:।।
|LTL |L
L।
|LTL
LL
।
| || ||
fil LI LITT-LILL-CITL, TIT LILL-CITL, FI, III
|LTL
LLLL
|LTL
| = Futi -1 || 51 61 III, IET են
ட என்னும் இந்நூல் சைவ
|
பிபா கந்தைய
காந்தி ஆசிரியர்