கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: என் நோக்கில் ஆனந்த குமாரசுவாமி

Page 1


Page 2

என் நோக்கில் ஆனந்த குமாரசுவாமி
-ஈழவேந்தன்
வெளியீடு: இரஞ்சனு பதிப்பகம்
98, விவேகானந்தர் மேடு,
கொழும்பு-13.

Page 3
என் நோக்கில் ஆனந்த குமாரசுவாமி
ஆசிரியர் ஈழவேந்தன் முதலாம் பதிப்பு: மார்ச்சு 171 படிகள்: OOO
: சதம் 50
அச்சுப்பதிப்பு இரஞ்சனு அச்சகம்
98. விவேகானந்தர் மேடு, கொழும்பு=13
 
 
 

ஆனந்த குமாரசுவாமி

Page 4

உள்ளே புகுமுன்
ஆனந்தக்குமாரசுவாமி அவர்கள் உலகப் பெருங்கலை ஞர். உலகுள்ளளவும் அவரின் கலையுள்ளம், கலையுள்ளம் படைத்த அனைவரினுலும் உவந்து போற்றப்படுவது உறுதி. எனினும் ஈழத்தில் பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த சில அறிஞர்கள் கலைக்குரிசில் ஆனந்தக்குமாரசுவாமி அவர் களின் கலைத்திறன் முழுமையையும் காய்தல், உவத்தல் அகற்றி நடுநிலைநின்று ஆராயாது கோணல் நோக்கில் நோக்கி தம் அரசியற் தேவையை நிறைவேற்ற முயல்கின் றனர். இது இப்பெருமகனின் உலகப் புகழைக் குறுக்கி இழுக்குத் தேடும் முயற்சியாகும் என்பது என் பணிவுடைய கருத்தாகும். காணவேண்டிய கண்கொண்டு - நோக்க வேண்டிய நோக்குக் கொண்டு அவரை நோக்கும்போது தான் அவரின் உலகம் பரவிய உண்மைப் புகழை உய்த்து உணரமுடியும். இந்நோக்கில்தான் ‘என் நோக்கில் ஆனந் தக்குமாரசுவாமி” என்ற இச்சிறு வெளியீடு மலர்ந்துள் ளது. இது காலத்தின் தேவையை நிறைவேற்றுவதோடு காலத்தால் சகாது ஞா லத்தில் நிலைத்து நிற்கும் சாலச் சிறப்புடைய கருத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது.
சில காலத்திற்கு முன் ஆனந்தக் குமாரசுவாமி அவர்களின் மைத்துனர் சேர். பொன். இராமநாதன் அவர்கள் பற்றி ஒரு சிறு வெளியீடு வெளியிட்டிருந்தேன். அதில் சேர். பொன். இராமநாதன் பற்றி மூடிமறைக்கப் பட்ட-இருட்டடிப்பு செய்யப்பட்ட பல பகுதிகளை எடுத் துக்காட்டி அவரின் உண்மைத் தோற்றத்தை தமிழ் மக் கள் காணும்படி செய்தேன். குறிப்பாக அவர் முன்கூட்டி உணர்ந்த அரசியல் அறிவை-தீர்க்கதரிசனத்தை தெளி வுற எடுத்து இயம்பினேன். இவ்வெளியீட்டை தமிழ் அறி ஞர்களும் தமிழ்ப் பொதுமக்களும் பாராட்டி வரவேற்ற னர். இது என் பணியின் வெற்றியென எண்ணி இறும்பூது எய்துகிறேன்.
மேற்குறித்த வெளியீட்டின் அடிப்படையில் ஆனந் தக் குமாரசுவாமி அவர்கள் பற்றி யாம் அறிய வேண்டியஆனல் இதுவரை அறிய முடியாமல் இருந்த - அறியமுடி யாது மூடிமறைக்கப்பட்ட பல பகுதிகள் இதில் வெளிக் கொணரப்பட்டுள்ளன. உண்மை சிலருக்கு கசப்பாகயிருக்

Page 5
கலாம். ஆனல் அதற்காக உண்மையைக் கூறமுடியாது இருக்க முடியாது அல்லவா? எனவே உண்மைகள் பல உல கிற்கு உணர்த்தப்பட்டுள்ளன. உலகத்தோர் ஆவந்து ஏற் பர் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உண்டு.
இச்சிறு வெளியீட்டின் கட்டுரை வடிவம் தொடர் கட்டுரையாக சென்ற ஆண்டு ‘சுதந்திரனில் வெளிவந் தது. இவ்வாய்ப்பினைத் தந்த சு த ந் தி ர ன் ஆசிரிய ரு க் கு எ ன் உ ளங் க னரி ந் த ந ன் றி . இத் தொடர் கட்டுரையை வாழ்த்தி இதனை ஒரு சிறு வெளியீ டாக வெளியிடும்படி தூண்டிய என் நண்பர் குழாமிற்கும் நன்றிகள். யான் கனவு காணும் ஈழத்தமிழகத்தின் அர சவைப் பாவலனுக விளங்கயிருக்கும் என் கெழுதகை நண் பன் திரு. காசி ஆனந்தன் உவந்தளித்திருக்கும் அருங் க வி ைத இச் சிறு நூ லு க் கு அழகு ஊ ட் டு கி றது. அவர்க்கும் நன்றி நவில்கிறேன். என் தமிழ் வெளியீடு களை விரைந்தநிலையிலும், சிறந்தமுறையிலும் வெளியிட்டு என் தமிழ் ஆர்வத்திற்கு உருவம் கொடுக்கும் இரஞ்சனப் பதிப்பகத்திற்கும் என் இதயம் கனிந்த நன்றி இயம்பப்படு கிறது.
தமிழரைத் தன்மான உணர்வுடன் வாழச் செய்ய இன்னும் பல தமிழ் வெளியீடுகளை வெளியிடுவது எனது நோக்கம். பொருள் வருவாய் எனது நோக்கல்ல. ஆனல் பொருளை இழப்பின் என்பணி தொடரமுடியாது. தமிழ் இனத்தின் மீது எனக்கு நம்பிக்கையுண்டு. தமிழ் இனத்திற் கும் என்மீது நம்பிக்கையுண்டு என்று நம்புகிறேன். அந்த நம்பிக்கையின் விளைவே இச்சிறு வெளியீடு.
வணக்கம்
அன்பன், ஈழவேந்தன் ‘தமிழகம்' 150, சுபத்திரராம வீதி, நுகேகொடை. (இலங்கை)
31-3-71

பல் நோக்கிற்குரிய பாங்காளன்
கிலைக்குரிசில் ஆனந்தக் குமாரசுவாமியின் பல் துறைப்பட்ட கலைத்திறனை பல்வேறு அறிஞர்கள் பல் வேறு நிலையில் பல்வேறு கோணங்களில் இருந்து ஆராய்ந்து தத்தம் முடிபுகளைத் தெரிவித்துள்ளனர். யானும் யான் பெற்ற அறிவு ஆற்றல் அனுபவத்திற்கு ஏற்க அவரை என் கண் கொண்டு நோக்க விழைகிறேன்.
பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, மறைவு
சேர் முத்துக்குமாரசுவாமி என்ற ஈழத் தமிழ் மக னுக்கும் எலிசபெத் கிளேபிபி என்ற ஆங்கிலப் பெண் மணிக்கும் 22-8-1877ல் ஈழத்தில் பிறந்த ஆனந்தக் குமாரசுவாமி அவர்கள் 9-9-47ல் அமெரிக்காவில் தனது 70ஆம் அகவையில் நிலமிசை நிறை வாழ்வு வாழ்ந்து நீடு புகழ் நிலைநாட்டி இவ்வுலக வாழ்வை நீத்தார்.
ஆனந்தக் குமாரசுவாமி அவர்கள் பிறந்தது ஈழத் தில், பயின்றது இலண்டனில் , சுற்றிப் பார்வையிட்டது

Page 6
உலகின் பல நாடுகளை. இறுதியில் தன் வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்து உயிர் துறந்ததும் அமெரிக்க நாட்டிலே யாகும்.
உலகிற்கு இனியவர்
பிறப்பால் தந்தை வழியால் தமிழனுகவும் தாய் வழியால் ஆங்கிலேயனுகவும் விளங்கிய ஆனந்தக் குமார சுவாமி அவர்கள், தான் டெற்ற உலகம் வியக்கும் பல் துறை அறிவினல் - கலை உணர்வினல் உலகின் பொது வுடைமையாக-ஆம்! உலகின் பொதுச் சொத்தாக விளங் கினர். 'தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம் இனிது" என்ற வள்ளுவர் கூற்று இவரைப் பொறுத்தவரை மிகப் பொருத்தமுடைய கூற்ரு கத் திகழ்கின்றது.
துறைகள் அனைத்திலும் துலங்கியவர்
இலங்கையில் தனது 26ஆம் அகவையில் மண் இயல் ஆய்வாளராக (Geologist) தன் பணியைத் தொடங்கிய ஆனந்தக் குமாரசுவாமி அவர்கள் தொர நயிற்’ (Thoranite) என்ற ஒரு தாதுப் பொருளைக் கண்டு பிடித்து இதற்காக "டாக்டர்" பட்டமும் பெற்று தன் அறிவியல் அறிவை நிலை நாட்டினர். பின்பு இதே ஆனந்தக் குமாரசுவாமி அவர்கள் அரசியல் மெய்விளக்க வல்லுனராகவும், பல்வேறு சமயங்களின் மெய் விளக்கங்களை ஒப்பு நோக்கி அவற்றின் முருகியல் பண்புகளிலே தோய்ந்தவராகவும் உலகக் கலை களை குறிப்பாக இந்தியக் கலைகளை மிக விரிந்த அடிப்படை யில் ஆராய்ந்து அவற்றின் நுண் பொருளை உலகம் வியக் கும் முறையில் எடுத்து விளக்கிய கலைக்குரிசிலாக விளங் கினர். பிறப்பால் கிழக்கையும் மேற்கையும் இணைத்த இப்பெருமகன் வாழ்ந்து காட்டிய வாழ்வும், ஆற்றிய வள மான பணியும் உலகை ஒன்றுபடுத்தும் ஒப்பற்றதன்மை உடையதாகவே விளங்கின.
2

பன்மொழிப் புலமையுடன் பல நூறு நூல்கள் எழுதியவர்
ஆங்கிலம், பிரெஞ்சு, வட மொழி, தமிழ், இலத் தீன், சிங்களம், இத்தாலி, பாளி, பாரசீகம், கிரேக்கம் என ஏறக்குறைய உலகின் பதினன்கு மொழிகளிலே தேர்ச்சி பெற்று விளங்கிய ஆனந்தக் குமாரசுவாமி அவர் கள் தனது 18ஆம் வயதிலேயே கட்டுரைகள் வரையத் தொடங்கி விட்டார். யாம் அறிந்த வரையில் அவர் எழு திய முக்கியத்துவம் வாய்ந்த முதற் கட்டுரை "டொவரோ மேட்டின் நில அமைப்பு, (Geology of Doverow Hill) என் பதேயாகும். 1895ஆம் ஆண்டு தொட்டு 1947ஆம் ஆண்டு வரை அதாவது அவர் இறக்கும் வரை ஏறக்குறைய 500 வெளியீடுகளை அவர் வெளியிட்டுள்ளார். அவரின் இறுதி வெளியீடு Time & Eternity (காலமும் முடிவற்றிருத்தலும்) எனும் நூல் எனக் கருதப்படுகிறது. அவர் எழுதிய நூல்கள் எண்ணிக்கையிலும் எடுத்தாளப் பட்ட எண் ணங்களிலும் ஏற்றம் பெற்று விளங்குகின்றன.
கலைக் களஞ்சியத்தில் இடம் பெற்ற கலைஞர்
பிரித்தானிய கலைக் களஞ்சியத்திற்கும் அமெரிக்கத் தேசிய கலைக் களஞ்சியத்திற்கும் பல நாட்டுக் கலைகள் பற்றிக் கட்டுர்ைகள் வரைந்த ஆனந்தக் குமாரசுவாமி அவர்கள் இந்திய மொழிகளிலே தோன்றித் திரிபு பெற்ற ஆங்கிலச் சொற்களையும் வெவ்சரின் (Webster) அனைத் துலக அகர வரிசையிற் பதிப்பித்தார். அத்துடன் நந்தி கேசுவரரின் நாட்டிய நூலையும் இருக்கு அதர்வண வேதங் களின் முக்கிய பகுதிகளையும் வடமொழியில் இருந்து ஆங் கிலத்தில் மொழி பெயர்த்தார். ஆக்கி அளித்த அரிய நூல்கள்
அவர் ஆக்கி அளித்த பல நூல்களுள் ஒரு சில இங்கு
வ ரு மா று 1. இந் தி ய க் கைப்பணியாளர்கள்;
3.

Page 7
2. கலையும் சுதேசியமும், 3. வீட்டிற்குரிய கைப்பணி களும், கலைகளும், 4. இந்தியத் தாதுப் படிமங்கள், 5. இந் தியத் தேசியத் தத்துவ விளக்கம், 6. இராயபுத்திர ஒவி யங்கள் 7. இந்து மதமும் புத்த மதமும், 8. இடைக்காலச் சிங்களக் கலைகள் 9. இந்திய இந்தோனேசியக் கலைகள், 10. சிவநடனம், 11. இந்தியாவினதும் இலங்கையினதும் கலைகளும் சித்திரவேலைகளும். இறுதியில் குறிக்கப்பட்ட நான்கு நூல்களில் அவர் தெரிவிக்கும் ஆழ்ந்தகன்ற கருத் துக்கள் இன்றைய சூழ்நிலையில் இந்தியாவுக்கும் இலங் கைக்கும் குறிப்பாகத் தமிழருக்கும் மிகப் பயனுடையதாக இருப்பதினல் அவற்றில் ஒரு சிலவற்றை இங்கு எடுத்து விளக்கல் எனது நோக்கமாகும்.
*சிவ நடனத்தின் சிறப்பு
ஆனந்தக் குமாரசுவாமி அவர்கள் வரைந்த நூல்
களுள் "சிவநடனம்" என்பது முதன்மை வாய்ந்த நூல்க ளுள் ஒன்ருகும். இந்தியாவில் எழுந்த மதங்களின் தத்து வங்களை விளக்குவதோடு இந்தியக் கலைகளையும் அவற்றின் உட்பொருளையும் அழகுற இந்நூல் விளக்குகிறது. 14 கட் டுரைகள் கொண்டுள்ள இந்நூலில் 'சிவநடனம் பற்றி வரையப்பட்டுள்ள 124 பக்கங்கள் கொண்ட கட்டுரை பொதுவாகச் சிந்தனையாளருக்கு நல் விருந்தாகவும் சிவ நெறிதழுவி நிற்கும் செந்தமிழ் மக்களுக்கு சிந்தை நிறைவையும் உவகைப் பெருக்கையும் தரும் கட்டுரையாக மிளிர்கிறது.
*தேன்புக்க தண்பணை தழ்தில்லைச் சிற்றம்பலவன்
தான்புக்கு நட்டம் பயிலும் அது என் ஏடி
என்ற திருவாசகத்தின் திருச்சாழல் பாடலின் முதல் இரண்டு வரிகளைப்பின்வரும் முறையில் 'The Lord of Tilat's Court a mystic dance performs; What's that my dear?'GToirp மொழிபெயர்ப்புத் தலைப்புடன் தொடங்கும் இக்கட்டுரை யில் நூலாசிரியர் பல வடமொழி நூல்களின் மேற்கோள்
4

களை எடுத்தாள்வதோடு சிதம்பரமும் மணிக்கோவை, திரு மூலர் திருமந்திரம். உண்மை விளக்கம், சிவஞான சித்தி யார், திருவருட்பயன் முதலிய தமிழ் நூல்களில் இருந்து மேற்கோள்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சிவநடன மெய் விளக்கத்தை ஆழ்ந்த ஆய்வுத் திறத்துடன் உலக மாந் தர்க்கு விளக்கும் போது எம் மெய்சிலிர்க்கிறது. நம் உள் ளத்தில் உவகை உணர்ச்சி பொங்கி வழிகிறது. உண்மையில் தமிழனின் பெருமையை-அவன்சார்ந்த சமயத்தின் அளப் பரிய உண்மைகளை உலகத்தவருக்கு விளக்கியதனுல் தமிழ னின் நன்றிக்கு அவர் என்றும் உரியவர் ஆகியுள்ளார். அவர் தன் நூலில் நடராசா வடிவின் நலன்பற்றி கூறிய முக்கிய பகுதிகளை வாசகர்கள் சுவைத்துமகிழும் முறையில் அதனின் தமிழ் ஆக்கத்தினை இங்கு தருவாம்.
நடராசா வடிவின் நலங்கள்
*நடராசா வடிவின் நலங்கள் அளப்பரியன. இத் தகையதொரு சிறந்த வடிவத்தினை இந்நாளில் எத்தகைய பெருங்கலைஞனும் கூட கருதியுணர்ந்து படைத்தல் இய லாது. இது வெறும் கவிதையன்று, அறிவியல் நலமும் அமைந்தது. இத்திருவுருவம் பக்தர்களுக்கும், பாமர மக் களுக்கும், அறிவியல் அறிஞர்களுக்கும் மெய் விளக்க அறி ஞர்களுக்கும் எல்லாம், பெருவியப்பையும் பேரீடுபாட்டை யும் விளைத்து மகிழ்வித்து வருகின்றது. காலமும் இடமும் கடந்து எல்லா நாடு மொழி சமயம் சார்ந்த மக்களாலும் போற்றப்படத்தக்கதாய்த் திகழ்கின்றது. இத்தகைய அரும்பெருஞ் சிறப்புக்கள் மிக்க இத்திருவுருவத்தினை முதன்முதற் கருத்திற் படைத்து உ த வி ய அருட் பெருஞ் சான்றேர்கள் ஆகிய கலைஞர்களின் நுண்மாண் நுழைபுலம் சாலவும் வியந்து போற்றுதற்குரியது. எனவே எத்தனையோ பல தலைமுறைகளாக நடராசர் வடிவம் மக்களின் உள்ளங்களையெல்லாம் கவர்ந்து நின்று வழிபடப்பெற்று வருதலில் வியப்பு ஒன்றும் இல்லை. எவ் வளவோ ஐயப்பாடுகள் கொள்ளுவதிலும் எத்தனையோ
5

Page 8
பல குறைபாடுகளைக் காண்பதிலுமே பழகிப் பயின்றுள்ள நாமும் கூட நடராசரை வழிபட்டுத்தான் வருகின்ருேம். இக் காரணங்களாற் போலும் தில்லை நடராசனின் திருவடிவத்தை அன்று கண்டு களித்த அப்பர் அடிகளும்
"குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில்
குமிழ் சிரிப்பும் பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால்
வெண் நீறும் இனித்த முடைய எடுத்த பொற்பாதமும்
காணப்பெற்ருல்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே என்று பாடிப் பேரின்ப நிலை எய்தினர் போலும்.
திராவிடரின் சிற்பத்திறன்
மேலும் "இந்திய இந்தோனேசிய கலைகள்' என்ற அவரின் மற்றைய விரிந்த ஆய்வு நூலில் திராவிடரின் சிற் பத்திறன் பற்றி அவர் செப்பும் செம்மொழிகள் எமக்கு பெருமித உணர்ச்சியையும் பேர் உவகையையும் தருகின் றன அவர்நூலிற் காணப்படும் சில முக்கிய பகுதிகள் இங்கு தரப்படுகின்றன:- "பொலன்னறுவை சிவன் கோவிலுக்குப் பக் க த் தி ற் கண்டெடுக்கப்பட்ட செப்புத் திருவுருவங்களான சுந்தரமூர்த்தி அடிகள், மாணிக்கவாசக அடி க ள் எ ன் னும் சிவநெறியடி யார்களினது திருவுருவங்கள் தெ ன் இந்தியாவில் உள்ள இவ்வடியார்களுடைய உருவங்களிலுஞ் சிறந்தன வாகும். ஆயினும் இவ்வுருவங்கள் யாவும் திராவிட சிற்ப முறையிலே அமைந்துள்ளன '(பக்கம் 167). மற்றும் இதே நூலில் பக்கம் 8ல் 'இந்தியக் கலையும் அறிவுச் சீர்மையும் திராவிடர்களினதும் ஆரியர்களினதும் சேர்ந்த விவேகத் தின் பயனகவே தோன்றியனவாம்’ என்றும் கூறுகின்ருர். மேலும் இகே நூலில் பக்கம் 5ல் உருவ வழிபாடும் யாகத் துக்கு வேருகிய பூசைமுறையும் என்ற இவ்விரண்டினது
6

வளர்ச்சியில் திராவிடப் பண்புகளே பெரும்பாலும் தொடர் புற்றிருத்தல் வேண்டும்' என்றும் கூறிச் செல்வதை நாம் காணக்கூடியதாக இருக்கிறது.
விபுலானந்த அடிகளும் ஆனந்தக் குமாரசுவாமியும்
முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகள்கூட தனது யாழ் நூலில் "பேரி யாழ்' என்ற பகுதியில் திரு. ஆனந்தக் குமாரசுவாமி அவர்கள் தமிழிசை மரபைப் பற்றிக் கொண் டிருந்த கருத்தைப் பின்வருமாறு கூறுகின்றர். 'அமராவதி நகரில் உள்ள சிலப்பதிகார காலத்துக் கல்லோவியம் எழில் மிக்க நரம்புகளுள்ள யாழின் உருவத்தை நமக்குக் காட்டு கிறது. இவ்வோவியத்தின் நிழற் படத்தினைச் கண்ணுற்ற திரு. ஆனந்தக் குமாரசாமி என்னும் ஈழநாட்டுப் பேரறி ஞர் பழமையான இக் கருவி சிலப்பதிகாரத்தின் காலத்தி லும் அதற்கு முன்னும் பின்னும் தமிழ் நாட்டிலே வழங்கி வந்தது என்பதையும் மிகப் பழமையான இசை மரபு ஒன்று தமிழகத்தில் இருந்து இறந்தது என்பதையும் உலகி லுள்ள பேரறிஞர்கட்கு வெளியிட்டார்.'
இந்தியாவை வெறுக்கும் சிங்கள இனம்
ஆதியில் நில அமைப்பில் இந்தியாவுடன் இலங்கைஒன் ருயிருந்தது, காலப்போக்கில் கடல் இந்தியாவை இலங்கை யினின்று பிரித்தபோதும் வரலாற்றுக் காலத்து முன்பேயே இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் பிரிக்க முடியாத பிணைப்பு இருந்தது. இதை நில அமைப்பியல் ஆய் வாளரும், புவியியல் ஆய்வாளரும் வரலாற்று ஆசிரி யர்களும் ஏற்று உள்ளனர். பண்டைய தமிழர் காலம் தொட்டு நாவலர் காலம்வரை இந்தியாவுக்கும் இலங்கைக் கும் உள்ள உறவு மிக நெருங்கிய குடும்ப உறவு போலத் தான் விளங்கியது.

Page 9
குறிப்பாக வட இலங்கைத் தமிழர்களுக்கும் தென்ன கத் தமிழர்களுக்கும் இடையில் நிலவிய உறவு மிகமிக நெருக்கமானது. மற்றும் சிங்கள இனத்தின் வரலாற்றைப் பார்க்கும் போதுகூட அவர்களின் இனத்தின் தோற்றத் திற்குக் காரணமான முதலில் இலங்கைக்கு வந்த விஜயன் காலம் தொட்டுப் பாண்டிய மதுரையில் இருந்து தனக்கும் தன் தோழர்களுக்கும் பெண்களைக் கொண்டு வந்து மனம் செய்து சிங்கள இனத்தைத் தோற்றுவித்த 2500 ஆண்டு களுக்கு முன்பேயே இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடை யில் பிரிக்க முடியாதளவு இரத்தம், மொழி, கலை, பண் பாடு, சமயத் தொடர்புகள் இருந்தும், இன்று சிங்கள மக் களிடையே குறிப்பாக அவர்களின் தலைவர்களிடை இந்தி யாவின் மீது வெறுப்பு, சிறப்பாக தமிழ் நாட்டின் மீது வெறுப்பு காட்டுத் தீ போல் பரவி வருகிறது.
சிங்கள இனத்தின் தோற்றம்
தமது இனத்தின் தோற்றத்திற்கு காரணமாய் இருந்த தந்தை வழி முன்னேரையும் தாய்வழி மூதாதையரையும் வெறுத்து மறுக்கும் அளவிற்கு எதுவித பொருளுமற்ற சிங் கள இனவெறி தோன்றியுள்ளது. இந்தியாவுக்கும் இலங் கைக்கும் உள்ள இணைப்பு-தொடர்பு முற்ருகத் துண்டிக்கப் பட வேண்டும் என்று கூக்குரல் இடும் இவர்கள் முன்கூறிய படி தம் முன்னுேரைத் துறப்பதோடு தமது புத்த சமயந் தோன்றுவதற்குக் காரணமாய் இருந்த புத்தர் யார்? அப் புத்த மதத்தைப் பரப்பிய மகிந்தன் யார்? சங்கமித்தை யார்? அவர்கள் வழிபடும் பத்தினித் தெய்வமாகிய தமி ழச்சி கண்ணகி யார்? அவர்களின் மொழி வாழ்வும் வள மும் பெறத் துணை புரிந்த வடமொழி, பாளி,தமிழ் முதலிய மொழிகளெல்லாம் எங்கிருந்து தோன்றி இங்கு பரவின என்பதைக்கூட மறந்து விட்டார்கள்.
அத்துடன் தங்கள் வசதிக்காகத் தங்களின் இன வெறிக்கு முழு உருவம் கொடுப்பதற்குப் புதிய வரலாறு
8

என்ற பெயரில் அறிஞர்கள் எள்ளி நகையாடத்தக்க முறையில் கட்டுக்கதைகள் எழுதத் தொடங்கியுள்ளார் கள். உண்மைக்கு என்றும் அழிவில்லை என்பதை அவர்கள் உணரார் போலும்.
இவ்வினவெறிபிடித்த சிங்கள மக்களுக்குச் சாட்டை அடி கொடுப்பது போல் அவர்களின் அறியாமையை அகற்றி அறிவுக்கண்ணைத் திறப்பதுபோல் ஆனந்தக் குமாரசுவாமி syairis, gir Arts and crafts of India and Ceylon" (gigu இலங்கைக் கலைகள் சிற்பங்கள்) என்ற தன் நூலின் முன்னு Goguai) 'Ceylon from the Stand Point of ethnology and Culture is an integral Part of India' ( Daig, 6it gaOT guail பொறுத்த வரையும் பண்பாட்டைப் பொறுத்தவரையும் இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கமாகவே இலங்கை விளங்குகிறது) என்று கூறியுள்ளார்.
இதே ஆனந்தக் குமாரசுவாமி அவர்கள் தூபராம டகோபாவைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிருர். 'It is a rectangular brick temple in Dravidian style' (SLT tailசிற்ப அமைப்பில் செங்கட்டியினல் அமைக்கப்பட்ட நீண்ட சதுரக் கோயிலே தூபராம் டகோபாவாகும்)
*இடைக்காலச் சிங்களக் கலைகள்’ என்ற நூலில் அவர் இடித்துரைக்கும் உண்மைகள்
சிங்கள அறிஞர் தம் உச்சி மீது வைத்து உவந்து போற்றும் இப்பெருமகன் தனது 'இடைக்காலச் சிங்களக் Sg5&av 5 6ir” (Mediaeval Sinhalese Art) GT 6&Top 15/Taớ6iv gšg) unrub 6 air sidi) “In any case it is clear that, according to the legends, the sinhalese cannot be of Pure Aryan blood as the first settlers married either the aborigines, or the women from southern India and there has been a very large amount of Tamil blood introduced at many subsequent periods, (6Tulli Luftrigg, Tg) b Lig Te007 di கதைகளின்படி, சிங்கள மக்கள் முழுக்க ஆரிய மரபினர்
9

Page 10
அல்லர் என்பதும் முதலிற் குடியேறிய மக்கள், பழங்குடி மக்களையோ " தென் இந்தியாவில் இருந்து கொண்டு வந்த பெண்களையோ மணந்தனர் என்பதும் தெளிவாகும். அத்துடன் பின்வந்த காலங்களில் இடையிடையே பெரு மளவு தமிழ் இரத்தம் புகுத்தப்பட்டும் வந்துள்ளது).
இந்தியா மீது அன்பில்லையெனில் இலங்கைக்கு வாழ்வில்லை
இப்பெருங்கலைஞர் தன் நூலின் மேற்குறித்த அதே அத்தியாயத்தில் மற்ருெரு பகுதியில் கூறும் பின்வரும் கருத்தும் சிங்கள மக்களின் ஆழ்ந்த சிந்தனைக்குரியது.
'The arts, however can only be saved in the long run by the people themselves. How are the people to be saved? How shall they be re-energised and re-inspired, how become once more socially constructive, how learn to re-express the national emotion in literature and art? The answer is by love of India there is scarcely any part of sinhalese life or religion or art which is quite comprehensible without reference to India. The sinhalese themselves are Indians. The greatness of their civilization dates from the wave of Indian influences that reached Ceylon through Asokas missionaries. The air and soil in which the nation has grown and borne good fruit are Indian. How should another soil and atmosphere be suited to it now.'
(எவ்வாருயினும் கலைகளைக் காப்பவர் மக்களே. ஆனல் மக் சளைக் காப்பது எப்படி? அவர்கள்ை எவ்வாறு ஊக்கிஉயிர் அளிப்பது? மீண்டும் அவர்கள் சமூகத்தில் ஆக்க பூர்வமான செயல்களை ஆற்றச் செய்வது எப்படி? தேசிய உணர்வை இலக்கியத்திலும் கலைகளிலும் புகுத்துவது எங் வனம்? இவற்றிற்கெல்லாம் விடை ஒன்றே ஒன்றுதான்.
O

அது தான் இந்தியா மீது அன்பு செலுத்துவதாகும். இந் தியாவோடு தொடர்புபடுத்தாமல் தனித்தியங்கங்கூடிய சிங்கள வாழ்க்கையோ சமயமோ கலையோ இல்லை யென்றே கூறலாம். சிங்களவர் கூட இந்தியரே. அவர்களது நாகரிகப் பெருமை இந்தியச் செல்வாக்குகளில் இருந்தே பெறப்பட்டதாகும். இது இலங்கைக்கு அசோகன் மூலம் வந்தது. இத்தேசம் வளர்ந்து பயன் கொடுத்த காற்றும் மண்ணும் இந்திய இனத்ததே. இப்பொழுது மட்டும் இதற்கு வேறிடத்து மண்ணும் சூழலும் எவ்விதம் பொருந்தும்).
கண்டிய சிங்களவர் யார்?
மற்றும் தன் நூலில் அத்தியாயம் மூன்றில் பக்கங்
கள் 61, 62இற் குறிப்பாக கண்டிய சிற்பிகளின் (Craftsmen)
தோற்றத்தைப் பற்றி பின் வருமாறு குறிப்பிடுகிருர்,
'At first sight it seems strange to suppose that many of them (craftsman) were of Indian origin, yet this is a point on which no doubt can be entertained - The craftsman thus from time to time imported from south India very soon became part and parcel of the Kandyan Sinhalese people & Buddhist by faith - Something of the Hindu Dravidian element being lost and Buddhist Aryan element acquired.
(பெரும்பான்மையான சிற்பிகள் இந் தி யா வில் இருந்தே தோன்றியவர்கள் என்று கூறும்போது முதலில் அது புதுமையாகவே தோன்றும் . எனினும் இவ்வுண்மை பற்றி எதுவித ஐயமும் கொள்ளத் தேவையில்லை. காலத் திற்குக் காலம் தென் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிற்பிகளே பிரிக்க முடியாதளவு கண்டிய சிங்களவராக மாறியதோடு புத்த மதத்தையும் தழுவி னர். இதனுல் திராவிட இந்துப் பண்பு இழக்கப்பட்டு புத்த ஆரியப் பண்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது.)

Page 11
கண்டிய சிற்பிகளின் தோற்றத்தைப் பற்றிய முழு விபரங்களையும் அறிய விரும்புவோர் மேற்குறித்த நூலின் அத்தியாயம் 3ஐ ஊன்றிப் படிக்கின் உண்மைகள் பல வற்றை உணர்வர். விரிவஞ்சி அவற்றை இங்கு விரிக்க வில்லை. எனினும் இறுதியாகத் தன் நூலின் முன்னுரையில் பந்தி 1 இல் சிங்களக் கலை பற்றி அவர் கூறும் கருத்தினை இங்கு நினைவுபடுத்தல் சாலவும் பொருத்தமுடையது எனக் கருதுவாம். அவர் கூறுவதாவது.
'Sinhalese art is essentially Indian but possesses this special interest that is in many ways of an earlier character, and more truly Hindu, though Buddhist in intention-than any Indian art surviving on the main land so late as the beginning of the 9th Century.
(சிங்களக் கலை அதன் அடிப்படையில் இந்தியக்கலை யையே ஒத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக 19ம் நூற் ருண்டின் தொடக்கம் வரை இந்தியக் கண்டத்தில் நிலவி வரும் மற்றைய இந்தியக் கலைகளைக் காட்டினும் இக்கலைகள் மிகப் பழமையானதாகவும் புத்த சமய நோக்கை அடிப் படையாகக் கொண்டிருப்பினும் உண்மையில் அவை இந்து முறைக் கோட்பாட்டையே தழுவி இருக்கின்றன.)
தமிழனின் பெருமையைத் தரணிக்கு உணர்த்தியவர்
இவ்விதம் ஆனந்தக் குமாரசாமி அவர்கள் தனது நூல்கள் பலவற்றுள் குறிப்பாக ஈழத்துக் கலைகள் பற்றி, தான் வரைந்த கட்டுரைகளில், நூல்களில் எல்லாம் இந்தி யாவுக்கும் இலங்கைக்குமிடையில் உள்ள பிரிக்க முடியாத பிணைப்பை-தமிழரின் தனிச் சிறப்பை சிற்பத்திறனை ஒவி யர்களின் ஒப்பிலாத் தன்மையெல்லாம் உள்ளத்தில் ஊற் றெடுக்கும் உணர்ச்சிப் பெருக்கோடு ஆணுல் நடுநிலை பிற ழாத நிலையில் கூறுகின்ற பொழுது தமிழர்களாகிய நாம்
2

இன்றைய இழிநிலையையும் அன்றைய பெரு நிலையையும் நினைந்து ஏக்க முறுவதையும் தவிர்க்க முடியாதன்றே?
தாய்மொழிக் கல்வியை நாடினுள்
இவ்விதம் உலக மொழிகள் பல கற்று உலகம் வியக் கும் முறையில் உலகக்கலைகளை ஆராய்ந்த ஆனந்தக் குமார சாமி அவர்கள் எம்மவர் எம் தாய்மொழியை மறந்து ஆங் கில மொழிக்கு அடிமையாவதை அறவே வெறுத்தார் என் பதற்கு அவரின் பின்வரும் சிந்தனையைத் தூண்டும் கருத் துச் சான்ருக அமைகிறது.
''A single generation of English education suffices to break the threads of radiation and to create a non-descript and superficial being deprived of all roots --- a sort of intellectual pariah who does not belong to the east or the west, the past or the future.
(எந்த வித அடிவேரும் அற்ற மேலேழுந்த நிலையில் என்ன வென்று குறிப்பிட முடியாத பழமைத் தொடர்பு முற்ருக அறுக்கப்பட்ட மனிதனை ஒரு தலைமுறை ஆங்கிலக் கல்வி உருவாக்கிவிடும். இவ்விதம் தோற்றுவிக்கப்படும் அறி வாளி கிழக்கிற்கோ மேற்கிற்கோ, பழமைக்கோ வருங் காலத்திற்கோ தேவைப்படாத வெறுத்து ஒதுக்கப்படுபவ ஞகவே காட்சியளிப்பான்.)
தன்னைத் தமிழனுக ஏற்கும்படி வேண்டிய தலைமகன்
ஆனந்தக் குமாரசாமி அவர்கள் தன் ஒப்பிலாக் கலை அறிவினுல் உலகப் புகழை ஈட்டிஞலும் அவர் தன்னை ஓர் இந்தியணுக, குறிப்பாகத் தமிழனுகவே கருதி வாழ்வதில் விடுதல் அறியாவிருப்புக் கொண்டிருந்தார் என்பதற்கு அவ ரின் பின்வரும் கூற்று தக்கதோர் சான்ருய் அமைகிறது.
13

Page 12
1906ஆம் ஆண்டு யூன் மாதத்தில் யாழ்ப்பாண மக்களால் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் அவர் கூறிய உள்ள முருக்கும் சொற்ருெடர்கள் இதோ:
"" என்னுடைய பெரு விருப்பம் நீங்கள் என்னை உங் களில் ஒருவனக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே. ஆகையால் நீங்கள் என்னை ஒரு தமிழனுகவும் நண்பனுகவும் ஏற்று இருப்பதற்காக உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவிக்கின்றேன். நான்கு ஆண்டுகளுக்கு முன் நான் இலங்கைக்கு மூன்ருவது முறையாக வந்த பொழுது ஆங்கி லேயனுக வந்தேன். இப்பொழுது நான் இந்தியத் , தாயின் புதல் வகை மறுபிறப்பு எடுத்து ஒரு குழந்தை தன் பெற் ருே ரிடன் செல்கின்ற மாதிரி உங்களிடம் வந்துள்ளேன். என் வாழ் நாளின் பெரும்பாகத்தை இங்கிலாந்திற் கழித்த போதிலும் இங்கு வந்ததற்குப் பின் எங்கள் பண்பாட்டின் சிறப்பை உணர்ந்துள்ளேன். ஆகையால் எங்களிற் பலர் மேல் நாட்டு. நாகரிகத்தைப் பின் பற்றுவதனல் ஏற்படும் தீமைகளை உணர்ந்து அதை நீக்க என்னல் ஆன முயற்சி களைச் செய்து வருகிறேன்.
30 ஆண்டுகளுக்கு முன் தமிழர் தலைவராக விளங் கிய என் தந்தையாரும் மேல் நாட்டாரைப் போலவே வாழ்ந்து வந்தார்.
அக்காலத்தில் அது ஒரு தேவையாக இருந்திருக்க லாம். அவர் நெடுங்காலம் வாழ்ந்திருந்தால் மேல் நாட்டு நாகரிகத்தைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதன் பிழை களை எனது மைத்துனர் திருவாளர் இராமநாதன், அருளு சலம் போல் உணர்ந்து சீர்திருத்த இயக்கத்தில் இறங்கியி ருப்பார் . ஆகையால் அவருடைய மகன் இச்சீர்திருத்த வேலையைச் செய்து வருவது பொருத்தமே. எனது தாயா ரைப் பொறுத்தவரையில் தாம் என் தகப்பனரை மணந்த தன் பயணுக ஆங்கிலேயருக்கும் த்மிழருக்கும் இடையில் நல் லுறவு ஏற்படவேண்டும் என்பதே அவருடைய விருப்பம்,
14

நான் இப்போது செய்து வரும் வேஃப் க்கு அவருடைய முழு வாழ்த்தும் உண்டு. இந்தியாவின் கடந்த 3000 ஆண்டு வர லாற்றை நமது சமயம் மெய் விளக்க நூல், கலைகள் முதலி யவற்றை விளக்கும் வரலாற்றை ஆராயும் பொழுது இதிற் காணப்படுவதிலும் சிறந்த இலட்சியங்களை வேறெங்கும் காணமுடியாது என்னும் முடிவுக்கு வந்துள்ளேன்.""
எம் கடன் என்ன?
இவ்விதம் இந்தியா நாட்டின் மீதும் தன் தந்தை வழி இனமாம் தமிழ் இனத்தின் மீதும் மாருத அன்பு பூண்டு “என்னுடைய பெருவிருப்பம் நீங்கள் என்னை உங்களில் ஒருவனுக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே! ஆகை யால் நீங்கள் என்னை ஒரு தமிழனுகவும் நண்பனுகவும் ஏற் றிருப்பதற்காக உங்களுக்குநன்றியைத்தெரிவிக்கிறேன்" என்று எம்மவரைக் கெஞ்சி - கொஞ்சும் மொழியில் எம் கண்களில் நீர் பெருகும் முறையில் வேண்டுகோள் விடுத்த அப்பெருமகன் இன்று எம்மிடையே இல்லாவிடினும் அவர் நினைவை என்றும் போற்றும் முறையில் அவரை எம்மவர் ஆக்கி, அவர் ஆக்கி அளித்த அரும்பெரும் நூல்களை அருந் தமிழில் மொழிபெயர்த்து எம் இனத்தின் ஈடேற்றத்திற் கும் எம் உயிரனைய மொழியின் வாழ்வுக்கும் வளத்திற்கும் வழி வகுப்போமா க.
15

Page 13
“The difficulty only arises when it is forgotten that nationalism implies internationalism. It is a case of 'live and let live'. Nationalism is essentially altruistic - it is a peoples recognition of its own special function and place in the civilized world; internationalism is the recognition of the rights of others to their self development and of the incompleteness of the civilized world if their special culture —contribution is missing.
A nationalism which does not recognize these rights and duties of others but attempts to aggrandize itself at their expense, becomes no longer nationalism, but a disease, generally called
imperialism'
Taken from Dr. Ananda K. Coomarasamy's
presidential address to the Social Reform league - 907.

ஆசிரியரின் பிற வெளியீடுகள்
மறைமலையடிகள் (ஆங்கிலம்) கப்பலோட்டி செக்கிழுத்த செம்மல் சேர். பொன். இராமநாதன் * மாணிக்கவாசகர் மாண்பு
வாழ்விடத்தைக் காத்த வன்னியசிங்கம் திருக்கோணமலையும் கோணேசுவரமும்
வெளிவரவிருப்பவை இலக்கியம்
என் நோக்கில் சோமசுந்தரப்புலவர்
p p. பாரதி
9 பாரதிதாசன்
( ) மறைமலையடிகள்
A) y திரு. வி. க. வீறு புகழ் விபுலானந்த அடிகள் உலக மா கவிஞர் செகப்பிரியர் செந்தமிழ் வாழாதா?
ஃமெய்விளக்கம்
என் இதயத்தில் இடம் பெற்ற இயேசு புவிக்குப் புதுவழி காட்டிய புத்தர் நல்வழி காட்டும் நால்வர் நாவலர் ஒரு மதிப்பீடு பேராற்றல் வழிபாடு கடவுளுக்குத் தமிழ் தெரியுமா?
அர சி ய ல்
என் நோக்கில் சேர். பொன். அருணசலம்
p சா. ஜே. வே. செல்வநாயகம் o, p p கு வன்னியசிங்கம்
, , அறிஞர் அண்ணு ஜவகர்லால் நேரு - ஒரு மதிப்பீடு

Page 14
-25A, -25
தTழி பி
த7
அண்ழிை
鸟一乌
ஈழவேந்:
ჩერჩჭეh) ტf
 

ய்ந்து தமிழ் தும் அழகன்! *ழ்ந்த தமிழ் ங்கு மறவன்! ஒர்ந்து தமிழ் வு தமிழன்'
தமிழ்
ܟ݂. Flyy في الثقافات
காசி ஆனந்த
தம் 50