கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புங்குடுதீவு ஸ்ரீமத். ஏரம்பு தம்பு அவர்களின் ஞாபகார்த்த வெளியீடு

Page 1
ரீமத் ஏரம்பு 蠶 ஞாபகார்த்த Bil Il PR 15-0 4.
 

தம்பு அவர்களின் 5 வெளியீடு 2000
ノ

Page 2

KO), கொழும்புத்
i". தமிழ்ச் சங்கம் _ கொழும்புத் தமிழ் சங்க நாலகத்திற்கு
சிவமயம் மி'டபிலுவி
蠶
புங்குடுதீவு நீமத் ஏரம்பு தம்பு அவர்களின் ஞாபகார்த்த வெளியீடு 15.04-2000
35598

Page 3
പി
-ܨܠܐ=

(Buu Tasñ 3.
"முழுவதும் உண்மை"
பொல்லாப்பம் இல்லை" :" ನಿಮ್ದು 1ழுமபு தமிழ்ச் تلك F15 أيا كل" | TLD
"எப்பவோ முடிந்த காரியம்'
நூலகம்

Page 4

எங்கள் குருநாதன்
என்னையெனக் கறிவித்தா னெங்கள்குரு நாதன்
இணையடியென் தலைவைத்தா னெங்கள்குரு நாதன் அன்னைபிதாக் குருவானா னெங்கள்குரு நாதன்
அவனியெல்லா மாளவைத்தா னெங்கள்குரு நாதன் முன்னைவினை நீக்கிவிட்டா னெங்கள்குரு நாதன்
மூவருக்கு மறியவொண்ணா னெங்கள்குரு நாதன் நன்மைதீமை யறியாதா னெங்கள்குரு நாதன்
நான்தானாய் விளங்குகின்றா னெங்கள்குரு நாதன் 1
தேகம்நீ யல்லவென்றா னெங்கள்குரு நாதன்
சித்தத்திற் றிகழுகின்றா னெங்கள்குரு நாதன் மோகத்தை முனியென்றா னெங்கள்குரு நாதன்
முத்திக்கு வித்ததென்றா னெங்கள்குரு நாதன் வேகத்தைக் கெடுத்தாண்டா னெங்கள்குரு நாதன்
விண்ணும் மண்ணு மாகிநின்றா னெங்கள்குரு நாதன் தாகத்தை யாக்கிவிட்டா னெங்கள்குரு நாதன்
சத்தியத்தைக் காணவைத்தா னெங்கள்குரு நாதன் 2
வாசியோகந் தேரென்றா னெங்கள்குரு நாதன்
வகாரநிலை அறியென்றா னெங்கள்குரு நாதன் காசிதேசம் போவென்றா னெங்கள்குரு நாதன்
கங்குல்பக லில்லையென்றா னெங்கள்குரு நாதன் நாசிநுனி நோக்கென்றா னெங்கள்குரு நாதன்
நடனந்தெ ரியுமென்றா னெங்கள்குரு நாதன் மாசிலோசை கேட்குமென்றா னெங்கள்குரு நாதன்
மற்றுப்பற்றை நீக்கென்றா னெங்கள்குரு நாதன் 3
இருவழியை அடையென்றா னெங்கள்குரு நாதன்
எல்லாம் விளங்குமென்றா னெங்கள்குரு நாதன் கருவழியைக் கடவென்றா னெங்கள்குரு நாதன்
கட்டுப்படும் மனமென்றா னெங்கள்குரு நாதன் ஒருவரும றியாரென்றா னெங்கள்குரு நாதன்
ஓங்கார வழியென்றா னெங்கள்குரு நாதன் நிருமலனா யிருவென்றா னெங்கள்குரு நாதன்
நீயேநா னென்றுசொன்னா னெங்கள்குரு நாதன் 4
2

Page 5
திக்குத் திகாந்தமெல்லா னெங்கள்குரு நாதன்
சித்தத்துள் நிற்கவைத்தா னெங்கள்குரு நாதன் பக்குவமாய்ப் பேனென்றா னெங்கள்குரு நாதன்
பார்ப்பதெல்லாம் நீயென்றா னெங்கள்குரு நாதன் அக்குமணி யணியென்றா னெங்கள்குரு நாதன்
அஞ்செழுத்தை ஓதென்றா னெங்கள்குரு நாதன் நெக்குநெக் குருகென்றா னெங்கள்குரு நாதன்
நித்தியன்நீ யென்றுசொன்னா னெங்கள்குரு நாதன்
தேடாமல் தேடென்றா னெங்கள்குரு நாதன்
சீவன் சிவனென்றா னெங்கள்குரு நாதன் நாடாமல் நாடென்றா னெங்கள்குரு நாதன்
நல்லவழிதோன்றுமென்றா னெங்கள்குரு நாதன் பாடாமற் பாடென்றா னெங்கள்குரு நாதன்
பத்தரினஞ் சேரென்றா னெங்கள்குரு நாதன் வாடாமல் வழிபடென்றா னெங்கள்குரு நாதன்
வையகத்தில் வாழென்றா னெங்கள்குரு நாதன்
தித்திக்கு மொருமொழியா லெங்கள்குரு நாதன்
சின்மயத்தைக் காணவைத்தா னெங்கள்குரு நாதன் எத்திக்கு மாகிநின்றா னெங்கள்குரு நாதன்
எல்லாம்நீ யென்றுரைத்தா னெங்கள்குரு நாதன் வித்தின்றி நாறுசெய்வா னெங்கள்குரு நாதன்
விண்ணவரு மறியவொண்ணா னெங்கள்குரு நாதன் தத்துவா தீதனானா னெங்கள்குரு நாதன்
சகலசம் பத்துந்தந்தா னெங்கள்குரு நாதன்
ஆதியந்த மில்லையென்றா னெங்கள்குரு நாதன்
அதுவேநீ யென்றுரைத்தா னெங்கள்குரு நாதன் சோதிமய மென்றுசொன்னா னெங்கள்குரு நாதன்
சுட்டிறந்த நில்லென்றா னெங்கள்குரு நாதன் சாதி சமயமில்லா னெங்கள்குரு நாதன்
தானாய் விளங்குகின்றா னெங்கள்குரு நாதன் வாதியருங் காணவொண்ணா னெங்கள்குரு நாதன்
வாக்கிறந்த இன்பந்தந்தா னெங்கள்குரு நாதன்
3
5
6

முச்சந்திக் குப்பையிலே எங்கள்குரு நாதன்
முடக்கிக் கிடந்திடென்றா னெங்கள்குரு நாதன் அச்சமொடு கோபமில்லா னெங்கள்குரு நாதன்
. ஆணவத்தை நீக்கிவிட்டா னெங்கள்குரு நாதன் பச்சைப் புரவியிலே எங்கள்குரு நாதன்
பாங்காக ஏறென்றா னெங்கள்குரு நாதன் தச்சன்கட்டா வீட்டிலே எங்கள்குரு நாதன்
தாவுபரி கட்டென்றா னெங்கள்குரு நாதன் 9
நாமேநா மென்றுரைத்தா னெங்கள்குரு நாதன்
நமக்குக்குறை வில்லையென்றா னெங்கள்குரு நாதன் போமேபோம் வினையென்றா னெங்கள்குரு நாதன்
போக்குவர வில்லையென்றா னெங்கள்குரு நாதன் தாமேதா மென்றுரைத்தா னெங்கள்குரு நாதன்
சங்கற்ப மில்லையென்றா னெங்கள்குரு நாதன் ஒமென் றுறுதிதந்தா னெங்கள்குரு நாதன்
ஊமையெழுத் தறியென்றா னெங்கள்குரு நாதன் ()
சிவயோக சுவாமிகள் வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்து மாவிட்டபுரத்தில் 1872ம் ஆண்டு வைகாசித்திங்கள் அவிட்டத்திருநாளன்று ஒரு திவ்வியமான குழந்தை அவதரித்தது. அக்குழந்தையை ஈன்றெடுக்கும் பேறுபெற்ற தாயார் சின்னாச்சி யம்மையார். தந்தையார் அம்பலவாணர். ஊரார் அக்குழந்தையை யோகநாதன் எனவும் சதாசிவன் எனவும் அழைத்தனர். சின்னாச்சியம்மையார் மைந்தர் சிறுவனாயிருக்கும்பொழுதே சிவபதம் அடைந்துவிட்டார். தந்தையார் மஸ்கேலியாவில் வணிகம் செய்துவந்தார். மாமியாரான முத்துப்பிள்ளை அம்மையாரே திருநாவுக்கரசு சுவாமிகளை வளர்த்து வந்த திலகவதியாரைப்போன்று, மருகனாய் வாய்த்தவரை பரிவுடன் பராமரித்து வந்தார். அவர் முதலில் கொழும்புத்துறை மிஷனரிமார் பாடசாலையிலும், பின்னர் செம்பத்திரிசியார் கல்லூரியிலும் கல்விபயின்றார். பாடசாலை படிப்பு முடிந்ததும் கிளிநொச்சியிலிருந்த நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பொருட் பாதுகாப்பாளராகத் தொழில் புரிந்து வந்தார்.

Page 6
சிறுவயதிலேயே அவரிடம் சில சிறப்பியல்புகள் தெரியலாயின. அவர் நல்லூர்க்கந்தனை நினைந்து உருகும் உள்ளமுடையவராய் இருந்தார். ஒருமுறை கொழும்புத்துறையில் இருந்து நல்லூருக்கு அங்கப்பிரதட்சணம் செய்தார். இளமையிலே சைவத்திருமுறை. தாயுமானவர் பாடல், பட்டினத்தார் பாடல். திருக்குறள் முதலிய திருநூல்களைப் படித்தார். அவர் படித்ததனைத்தையும் ஒருமு.ை” படித்த மாத்திரத்தில் மனதிலே தெளிவாய்ப் பதிந்தன. அவரது உள்ளம் பளிங்குபோன்று தூயதாய் இருந்தமையால் இவ்வாறு மனனமாவது இயல்பாயிற்று. அவர் செம்மையான மனமும், வைரித்த ஒழுக்கமும் உடையவராய் இருந்தார். அவரை உன்னிப்பாக அவதானித்து வந் 3, நீர்ப்பாசனத்திணைக்கள மேலதிகாரியான பிறவுணி என்பார் அவரைக ‘கடவுள் மனிதர் என அழைத்தார்.
அக்காலத்திலே நல்லூர்த்தேரடியில் மகத்தான ஞானியொருவர் வாழ்ந்துவந்தார். அவர் சுவாமிமாருக்குரிய வேடம் எதுவும் போடாதவர். திருநீறும், பொட்டும் கூட அவர் அணிவதில்லை. கந்தைத் துணியணிந்தவராய் தேர் முட்டிப் படியிலே தினமும் இருப்பார். தெருவால் வருவோர் போவோரை வாயில் வந்தபடி வைவார். பலரும் அவரை பைத்தியக்காரர் எனவே அழைத்தனர். ‘விசர்ச்செல்லப்பா' என்பதே அவரது நாடறிந்த திருநாமம். ஆனால் அவருடன் பலநாட்பழக்கம் பூண்ட சிலர் அவர் ஒரு பேரறிவாளன் எனக் கண்டனர். அத்தகைய சிலர் கொழும்புத்துறையூரில் இருந்தனர். ஒருநாள் அவர்களோடு சேர்ந்து செல்லப்பா சுவாமியைத் தரிசிப்பதற்காக யோக முனிவர் சென்றனர்.
செல்லப்பா சுவாமிகள் தன்னைக்கும்பிட்டு நின்ற இளமுனிவரை யாரடா நீ என்று அதட்டினார். அதட்டுதலாய்த் தோன்றியபோதும் தன்னையறியும் ஞானவெளிக்குள் நுழைவதற்கான திறவுகோலே அவ்வருண்மொழி என்பதை யோகமுனிவர் உணர்ந்துகொண்டார். பின்னர் தேரடாஉள்’ ‘தீரடா பற்று என்னும் மந்திரச் சொற்களை அருளினர். இவ்வருள் மொழிகள் தெவிட்டாத ஞானச்சுவையாக யோகமுனிவருக்குத் தித்திக்கத்தொடங்கின. அதனால் அவர் சிலநாளில் உத்தியோகம் முதலிய அனைத்தையும் உதறித்தள்ளிவிட்டு செல்லப்பாசுவாமிகளை தனது குருமணியாகக் கொண்டு நிழல் போலத் தொடர்ந்து திரிந்தார். செல்லப்பா சுவாமிகளும் தன்னைச் சரணடைந்த சீடரைக் கண்மணிபோல் ' பாதுகாத்து வளர்த்தார்.

"முழுவதும் உண்மை’ “ஒரு பொல்லாப்பும் இல்லை” "நாமறியோம்” “எப்பவோ முடிந்த காரியம்”
முதலிய மகாவாக்கியங்களை அடிக்கடி சொல்லிச் சிந்தித்துச் சிந்தித்துச் சீவலாபம் பெறச் செய்தார். தன்னை நம்பிவந்த அன்பரைத் தாமாகச் செய்வதற்காக அவர் செய்த சாலங்கள் அளவில்லாதன. ஒருநாள் குருவும் சீடரும் ஒருசோறும், ஒருகறியும் பக்குவமாய்ச் சமைத்தனர். சீடர் சுவையாகச் சமைத்த அவ்வமுதினையருந்திப் பசியாறத் தயாராகுந்தருணத்திலே குருமணியானவர் இப்போது இதற்கு (உபும் பிற்கு) சாப்பாடு எதற்கு’ எனச் சத்தமிட்டவராயப் ப் பானை சட்டிகளையெல்லாம் உடைத் துக் கொட் டி விட்டு, ஒன்றுமறியாதவராய் ஓவியம்போன்று மாறாதமெளனத் தியானத்தில் அமர்ந்தார். சீடர் வேறுவழியின்றி அவிச்சுவையை மறந்து தியானத் தமர்ந்து, தவச்சுவையில் ஈடுபட்டனர்.
செல்லப்பா சுவாமிகள் அப்போதைக்கப்போது அருள்வடிவம் காட்டி 'ஐயம் ஏன் காணும்' என நம்பிக்கையூட்டினர். சீடரும் சிவபெருமானே மனிதக்கோலம் பூண்டு நல்லூரில் தான் கண்ணினாற் காணுமாறு நடமாடுகிறார் என நம்பத்தொடங்கினர். செல்லப்பாசுவாமிகளை சிவனெனத்தேறியதும் இறைவனும் குருவும் வேறு எனும் அறியாமைத்திரை அகன்றது. இது சீடரின் ஆன்மீக மலர்ச்சியின் முக்கியபடியாகும்.
"தீதெல்லாம் நீக்கச் சிவபெருமான் என்போலப்
பூதலத்தில் நல்லூரில் போந்தான் - நற்சிந்தனை
செல்லப்பாதேசிகர் சிவபெருமானே எனத் தெளிந்தபின்னர் அவரின் கிட்ட நெருங்குகையில் சீடர் கிடுகிடென நடுங்கலாயினர். மிகவும் * விழிப்புடன் குருசொற்கேட்டும், குறிப்பறிந்தும், தப்பேதும் செய்யாது கவனமாயப் நடந்தார். சீடரின் பக்குவத் தையறிந்த குரு தீக்கைவைத்தாளத் திருவுளம் பற்றினார். ஒரு பங்குனி மாதத்து இரண்டாவது திங்கட்கிழமையன்று திருவடி சூட்டித் தீக்கை வைத்தாண்டனர். அன்றையதினமே நற்றவயோகரின் ஞானோதய தினமாம்.

Page 7
குருநாதன் தீக்கைவைத்தாண்ட பின்னர் சிறிதுகாலம் கருகிலே தேர்த்துாணடியிலிருந்து தவமியற்றுமாறு பணித்தனர். தவம் றைவுற்றதும் பூரணதுறவு நெறியில் ஈடுபடுத்துவதற்காக பரூராய்த்திரிந்து பிச்சையேற்குமாறு குறிப்பாலுணர்த்தினர். குருவின் குறிப்பினையறிந்த சீடர் கதிர்காமயாத்திரை மேற்கொண்டார். சிறிதுகாலமாக யோகநாதனைக்காணாத உறவினர் செல்லப்பா சுவாமிகளிடம் வந்து விசாரித்தனர். செல்லப்பா சுவாமிகள் “அவன் செத்துவிட்டான்’ எனக் கூறினர். பொருளறியாத உறவினர் சென்று கருமாதிகளைச் செய்தனர். கதிர்காமயாத்திரையை முடித்துக்கொண்டு வந்து தம்மை வழிபட்டுநின்ற சீடரை நோக்கிக் குருநாதன் “எங்கேனும் வேரை விராயைப்பார்’ எனக் கூறினார். குருவாக்கை அப்படியே தலைமேற் கொண்டசிடர் கொழும்புத்துறைச் சந்தியிலிருந்த இலுப்பைமரவேரிற் பகலென்றும், இரவென்றும், மழையென்றும், வெயிலென்றும் பாராது அமர்ந்திருந்தார். கண்டார் இவரொரு பித்தரோ என்று கூறுமளவு பேயாந்தன்மை பிடித்தவராய் அமர்ந்திருந்தார். ஒருநாள் இலுப்பைவேரில் ஆறுதலாய் அமர்ந்திருந்த சீடரைப் பார்ப்பதற்காகச் செல்லப்பா சுவாமிகள் சென்றனர். குருநாதன் வருகையை உணர்ந்த சீடர் கும்பிடுவதற்காக எழுந்தார். இடைமறித்த குருமணி “இரண்டாகப்பார்க்கக் கூடாது" எனக்கூறி நானென நீயென வேறில்லை' என நகைத்து நின்றார். "நீயே நான்’ என்று நேர்நேராய்ச் சொன்னார். இதன் பின்னர் குருவும் தானும் வேறு எனும் அறியாமையும் அகன்றது. செல்லப்பா சுவாமிகள் கண்மணி போல் வளர்த்த ஞானப்புதல்வன் பூரணஞானியானான். யோகமுனிவர் "ஆசான் அருளால் ஆசானாயினார்.
பூரண ஞானியான புண்ணிய யோகள் செல்லப்பா சுவாமிகள் சமாதியடைந்த பின்னர் கொழும்புத்துறை ஆச்சிரமத்திற் குடிபுகுந்தனர். பெருந்துறைப்பிள்ளையான மாணிக்கவாசக சுவாமிகள் குருந்த நிழலில் தோன்றிய பரமாசாரிய சுவாமிகளின் பணிப்பின்படி திருவடி வழிபாடாற்றி வந்தது போல கொழும்புத்துறையடிகளும் திருவடியைப் பூசித்துவந்தனர். திருமுருகாற்றுப்படை சித்தரிக்கும் பண்டைய தமிழ்நாட்டு ஞானியர் போன்று தூய வெண்ணிற ஆடையும், வெண்ணிற மாலையை நிரையாய்ச் சாத்தியது போன்ற உத்தரியப் போர்வையும், நன்றாய்ச்சீவி முடித்த வெண்ணரை முடியும், பொன்மேனியும், வீரசாந்தம் விளங்கும் திருமுகமாக ஒரு யோகிக்குத்தக்க எடுத்துக்காட்டாய்ப் பொலிந்து தோன்றிய ' அப்பெரியோரை மக்கள் சிவயோக சுவாமிகள் என அழைத்தனர்.
7

ஞான நுாற் பயிற்சியுடையோரும் , வீட்டு நெறியில் நாட்டமுடையோரும், வாழ்க்கைத்துன்பங்களால் நொந்தோரும், வாழ்வில் வெற்றியை நாடியோரும், வறியோரும் செல்வரும், சைவரும், சைவரல்லாதோரும் சிவயோகசுவாமிகளைத் தரிசிக்கச் சென்றனர். அவரைத் தரிசித் தோரெல்லாம் ஏதேனும் ஒருவகையில் பேறுபெற்றவராயினர். அவரிடம் ஏச்சுவாங்கியோரும் துன்பம் நீங்கி இன்பம் ஒங்கப் பெற்றனர். ஏச்சுவாங்கவேண்டுமென்ற நேர்த்தியுடன் அவரைத் தரிசிக்கச்சென்ற அடியாரும் இருந்தனர்.
சிவயோகசுவாமிகள் தன்னை நினைந்துருகும் அடியவர்க்கு அருளிய வணி ணம் அளவிலாதன. வைத் தி யமனையில் கவலைக்கிடமாகக் கிடந்த கணவனுக்காக இரவிரவாகச் சிவயோக சுவாமியை நினைந்துருகி வழிபட்டுவிட்டு அடுத்த நாட்காலை வைத்தியமனை சென்ற ஒரம்மையார் அங்கே கணவனின் கட்டிலருகில் அமர்ந்திருந்த சுவாமியைக்கண்டு மெய்சிலிர்த்து நின்றார். சுவாமியின் அருட்பார்வைபட்ட பின்னர் அவ்வம்மையாருடைய துணைவரின் வருத்தம் படிப்படியாகக் குறைந்தது. நாட்டு நன்மைக்காக இங்கிலாந்து செல்லவேண்டிய வேளையில் கடுஞ்சுகவீனமுற்றிருந்த சேர்துரை சுவாமி என்பவருக்காகச் சுவாமியே குடிநீர் குடித்தார். சீவனத்துக்கு உதவியான பசு காணாமற் போக நாலைந்து நாளாய்த்தேடி அலுத்துச் சிவயோக சுவாமிகளின் திருவடியேதுணையென நம்பிவந்த ஏழைப்பெண் ணொருத்திக்கு இருந்த இடத்திலே எல்லாம் பார்க்க வல்ல சுவாமி, பசு நிற்கும் இடத்தை அறிவித்து அருள்புரிந்தார். ஒருநாள் பணக்கஷடத்தினால் துன்புற்ற நாகலிங்கப்பரதேசியார் சிவயோக சுவாமிகளது திருமுன்னிலையில் வணங்கி நின்றபோது ‘சம்பந்தமூர்த்தி சுவாமிகள் திருப்பதிகம் பாடிப் பொன்பெறலாமாயின் நம்மாலேன் முடியாது? அத்திருப்பதிகத்தைப்பாடு எனப் பணித்தார். பரதேசியார் சிவசிந்தையுடன் "இடரினும் தளரினும்’ எனத் தொடங்கும் அத்திருப்பதிகத்தைப் பாடிக்கொண்டிருந்தார். திருக்கடைக்காப்புப் பாடும் பொழுது ஆச்சிரமவாயிலில் காரொன்று வந்து நின்றது. அக்காரிநின்றும் இறங்கிய தம்பதியர் பொன்முடிப்புள்ள பூசைத்தட்டுடன் வந்து சுவாமியின் திருவடிகளில் வைத்து வழிபட்டு நின்றனர். சுவாமி அப்பொன் முடிப்பிலிருந்து பரதேசியாருக்கு வேண்டியளவு அளித்து அருள்புரிந்தனர்.
சிவயோக சுவாமிகள் வேண்டுவோர் வேண்டியதை அருளினர். ஆயினும் உலகசுகம் எதனையும் வேண்டாது சிவஞானச்செல்வம்
8

Page 8
ஒன்றையே வேணி டி நின்ற மெய்யன் பர்களுக்கு அவர் மூலபண்டாரத்தையே வழங்கினார். அவ்வாறான மெய்யன்பர்களுக்கு அவரினும் அன்பராகத் திகழ்ந்தார். தம்மைச் செல்லப்பாசுவாமிகள் வளர்த்தெடுத்தது போலவே தாமும் தம்மைச் சரணடைந்த மெய்யன்பர்களைத் தாயினும் இனிய பரிவுடன் வளர்த்து ஆளாக்கினார். அத்தகைய உத்தமசிடர்களுள் மார்க்கண்டு சுவாமிகள் ஒருவர். அவர் குருதேவரையன்றிப் பிறதேவரெவரையும் அறியாதவராய்க் குருபரன் குடியமர்த்திய கைதடி ஆச்சிரமத்தில் அமைதியாயிருந்தார். குருபதம் மறவாச் சிந்தையராய் வாழ்ந்த அவர் சில வருடங்களுக்கு முன்னர் சமாதியடைந்தனர். மார்க் கண்டு சுவாமிகளைப் போலவே செல்லப்பாசுவாமிகளின் ஞானபரம்பரை உலகிலே நின்று நிலவும் வண்ணம் மற்றும் சில உத்தம சீடர்களையும் வளர்த்தெடுத்தனர். அவரெல்லாம் தாளமேளமில்லாத தொண்டராய் ஆறுதலாயமர்ந்து சிவதொண்டு புரிந்து வருகின்றனர்.
ஞானபரம்பரையொன்று தொடர்ந்து செல்வதற்கு அருள்பாலித்தது போலவே ஞானநாட்டமுடையோர் சாதனை பயின்று மேனிலையடைதற்கு வாய்ப்பான ஞானப்பண்ணையையும் நிறுவினர். சிவதொண்டன் நிலையமே அந்த ஞானப்பண்ணையாகும். யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலுமுள்ள இரு சிவதொண்டன் நிலையங்களும் தியானசாதனை பயின்று திருவடியின்பத்தைச் சுகிப்பதற்கான சிவயோகசுவாமியின் சந்நிதானங்களாகும்.
"சிவதொண்டன் நிலையத்திற் சேர் தியானஞ் செய்து கடைத்தேறிர் மெளனமா யிருந்திளைப் பாரீர்
ag 49
மந்திர மிதுவெனக் குறியீர்
என்பது சுவாமி வாக்கு.
சிவயோகசுவாமி, சாதனை பயில்வோர் ஞானநூல்களைக் கற்றும், சிந்தித்தும், எழுதியும் நாட்கழிப்பதற்கு வாய்ப்பாக சிவதொண்டன் இதழைத் துவக்கினார். பலவருடத்துப் பன்னுமார்கழிமாதம் (1934) பிறந்த சிவதொண்டன் என்னும் செல்வக்குழந்தை ஒம் எனும் தாரகம் ஒண்முடி சுமந்து நற்சிந்தனை எனும் நன்மருந்துாட்டி சாதனை பயில்வோர் சிவசிந்தனையுடையவராய் நன்னெறிச்செல்ல உதவி வருகிறது. தலைவன் தாளைத் தலைப்படுதற்கு வழி தன் நாமம் கெடுதல் ஆதலால் சிவதொண்டன் இதழிலே எழுதுவோர் எவரது பெயரும் இடம் பெறுவதில்லை.
9

சிவயோக சுவாமிகள் அப்போதைக்கப்போது அருளிய திருவாய் மொழிகள் நற் சிந்தனை என்னுந் திருநூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அவர்தம் உத்தம சீடர்களுக்கு உரைத்த மொழிகள் யோகசுவாமிகள் அருள்மொழிகள் என்னும் உரை நூலாகப் பொலிகிறது. இவ்விரு நூல்களும் வேதோபநிடத ஆகமங்களின் சாரமாயுள்ளன. ஏறக்குறைய அரைநூற்றாண்டுக்கு மேலாக இவ்வுலகில் ஞானத்தின் திருவுருவாய் நடமாடிய சிவயோக சுவாமிகள் தாம் திருவடி பூசை கொண்டாடிய தினத்திலே 1964ம் ஆண்டு பங்குனிமாத ஆயிலிய நாளில் சமாதியடைந்தனர்.
அவர் உலகவயப்பட்ட மக்களுக்கு உலக மனிதருள் ஒருவர் போலவே தோன்றினார். ஆனால் அவரைப் பெரியோன் என நம்பிப் பணிந்து நின்றவர்களுக்கு அவர் விண்ணும் மண்ணும் வியாபித்து நிற்பவராய்த் தோன்றினார். அவரை இடையறாது நினைந்துருகும் மெய்யன்பர்கள் 'சித்தத்துள் திகழ்கின்றான் எங்கள் குருநாதன்’ என உள்ளுருகினர். அவரது திருவடிகளில் தம்மை முற்றாக அர்ப்பணித்து நின்ற மெய்யன்பர்கள் அவரைச் சிவபெருமானாகவே கண்டனர்.
ஒப்பில்குரு நாதனுக்கு மங்களம்
தேவருந் தேடியே தேராத் திருவடியை ஏவருங் காணவே இவ்வுலகில் பூவார் கொழும்புத் துறையில் குருவாகி வந்து தொழுதுய்யச் செய்தாய் துணை.
1()

Page 9
பொன்னும் மெய்ப்பொருளும் தருவான்
யான் பிறந்த மொழி பயின்ற காலம் முதல் எம்மூர்க்கோயிலில் எழுந்தருளியிருக்கும் பிள்ளையாரைக் கும்பிடும் பாக்கியம் பெற்றவனாயிருந்தேன். சிறுவனாயிருக்கும் போதே சிற்றஞ் சிறுகாலையில் துயிலெழுந்து, சீதப்புனலாடி, நல்ல மலரெடுத்துச் சென்று நாடோறும் போய் வணங்கும் நியமம் பொருந்தியது. எமது ஊர்க் கற்பகப்பிள்ளையார் எனக்குக் கணியினும் கட்டி பட்ட கரும்பினும், இனியனாய்த் தோன்றினார். கோயிலை வலம் வருகையில் கருவறையின் பக்கலின் நின்று கும்பிடும் பொழுது அக்கருவறையானது, ஆனந்தத்
தேனிருக்கும் பொந்தாகவே எனக்குப் பட்டது. இவ் வண்ணம்
பக்திசெய்யும் பாக்கியம்பெற்ற எனக்கு இளமையிலேயே விநாயகர் அகவல் என்னும் தோத்திரம் கைக்கெட்டியது. அதனை இரண்டொரு தினங்களில் மனனஞ்செய்துவிட்டேன். பெருமானின் திருமுன்னிலையில் நின்று அத்திருப்பாசுரத்தை ஓதுவது பெரியமனநிறைவைத் தந்தது. அவ்வாறு ஓதுவதைப் பெருமான் தமக்குகந்த அர்ச்சனையாக ஏற்றருள்வார் எனும் நம்பிக்கையில் மனங்களித்தேன் நாளாக விநாயக கரகவலிலுள்ள
"குருவடிவாகிக் குவலயந் தன்னின்
திருவடி வைத்துத் திரமிது சிபாருசினன
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளி'
எனும் அடிகள் அற்புதசோபையுடன் மனத்தில் ஒளிரலாயின. பெருமான் என்னை ஓர் குருபரனுடன் கூட்டி வைப்பார். என்னும் நம்பிக்கை பிறந்தது. இந்நம்பிக்கை வளர்ந்து மனம் நிறைந்த வேளையில் கொழும்புத்துறையூரில் உறையும் சிவயோகசுவாமிகளைப் பற்றிப் பலரும் பேசும் பேச்சுக்கள் என்னை அருட்டலாயின. இவ்வருட்டுனர்வால் விழிப்புற்றுச் சிவயோக சுவாமிகளைத் தரிசிக்க வேண்டும் என்னும்" ஊக்கம் பெற்றேன். சிவயோக சுவாமிகளை அதிகாலையிற் சென்று தரிசிப்பதே சிறந்ததென்பது பலரது கதைகளிலிருந்தும் தெளிவாகியது. ஆதலால் எமது குலதெய்வத்தைக் கும்பிடச் செல்வது போலவே ஒரு நாள் விடியற்போதில் சுவாமியைத் தரிசிப்பதற்காகச் சென்றேன். அப்பொழுது சுவாமி ஆச்சிரம முற்றத்தைக் கூட்டிக்கொண்டிருந்தார். அவரது அங்கமெல்லாம் திருநீற்றுக்குறிகள் நிறைந்திருக்கவில்லை. புரிசடை தொங்கவில்லை. காவி உடுத்திருக்கவில்லை. எல்லோரையும்
1.
 

புங்குடுதீவு பரீமத். ஏரம்புதம்பு அவர்கள்
சீவன் சிவமாகச் சிவத்தொண்டே கோளாக தேவன் னடிசேர்ந்தான் திருத்தம்பு - சாவன்று கூண்டு துறப்பேகா தசி9iபரம் பங்குனியாம் ஆண்டுபிர மாதியிலே கான்.

Page 10

போன்ற இயல்பான கோலத்தில் நின்று பெருக்கிக் கொண்டு நின்றார். சுவாமி பெருக்கிய முற்றம் அலகுக் கோலத்தால் பொலிவு பெற்றிருந்த அழகினை நயந்த வண்ணம் சுவாமியின் அருகில் நின்றேன். அப்பொழுது சுவாமி "இதோ நான் கூட்டுகிறேன் இதற்கு இறைவன் கூலி தருவார்.” என அருளினார். சுவாமி தன்மேல் ஏற்றுச்சொன்ன இவ்வர்சகம் உண்மையில் என்பொருட்டு அருளிய உறுதிமொழியேயாம். தொண்டு செய்வார்க்கு உண்டே ஞானம் எனும் உண்மையைச் சுவாமி இப்படியொரு நுட்பமான உபாயமாக அருளினார். உழவாரப் -படையாளியான திருநாவுக்கரசு நாயனார் தாம் பாடிய
"புக்க ணைந்து புரிந்தல ரிட்டிலர் நக்க ணைந்து நறுமலர் கொய்திலர் சொக்க ணைந்த சுடரொளி வண்ணனை மிக்குக் காணலுற் றாரங் கிருவரே”
முதலாய இலிங்கபுராணக் குறுந்தொகைப் பாடல்கள் பதினொன்றிலும் திருமால், பிரமன் இருவரும் இறைவனைத் தேடிக் காணாது பட்ட கஷ்டத்துக்குக் காரணம் அவர்கள் தொண்டு செய்யாமையே என்பதை அங்கதச் சுவையுடன் அருளியிருக்கின்றார். திரவலகு கைக்கொண்டு நின்ற கொழும்புத்துறைச் சுவாமிகளும் திருத்தொண்டு செய்து திருவடிஞானம் பெறும் நெறியையே எனக்கு மேற்கண்டவாறு எளிமையாக அருளினர். அவ்வருள் வாசகம் உபதேச மொழியாகவன்றி வரமாகவே படுகிறது. இருபத்தைந்து ஆண்டுகளாக மாதந்தோறும் வரும் சிவதொண்டன் யாகநாட்களிலும் ஆயிலிய நாட்களிலும் தவறாது கலந்துகொண்டு திருத்தொண்டியற்றுதற்கான வல்லபத்தை அந்த வாக்கே அளித்திருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் "பயங்கரநிலை உச்சக்கட்டமாயிருந்த வேளைகளில் இல்லங்களிலும், கோயில்களிலும் இருந்தவர்கள் பொது முகாங்களுக்கு அழைக்கப்பட்ட வேளைகளில் சிவதொண்ட்ன் நிலையத்தில் தங்கித் திருவடிக்குப் பூச்சாத்தும் பேற்றினையும் அந்த வாக்கேயருளியது. இவ்வண்ணஞ் சுவுரமி அந்தமும் ஆதியும் இல்லா மறைஞானமொழியொன்றை மிகவும் எளிமையான முதன்மொழியாக அருளியபின்னர் எனது ஊர்பேர்களையும் விசாரித்தறிந்தார். அறிந்ததும் "உனக்குப் பொரளை நாகலிங்கத்தாரைத் தெரியுமோ? நீயும் அவரைப்போல் நல்லாய்ப் பணத்தைச் சம்பாதி” எனக் கூறினார். இந்த வாசகம் அப்போது எனக்கு மிகுந்த எரிச்சலூட்டியது. யான் என்னை வீட்டு நெறியில நாட்டமுள்ளவனாகவும், துறவுபூணுவதில்
12

Page 11
விருப்பமுடையவனாகவும் எண்ணியிருந்தேன். சுவாமி என்னிடம் முத்திக்கு வழியை மொழிவார் எனவே யான் எதிர்பார்த்தேன். சுவாமியோ புடவைக்கடை வைத்துப் பணம் சம்பாதிக்கும் ஒருவரை எனக்கு உதாரண புருடராகக் காட்டுகிறார். அருட்பிரசாதத்தை நாடிச்சென்ற அடியவருக்கு உலக போகமாகிய வாந்தியைக் காட்டுவதோ? இவரோர் சுவாமியோ, என்றவாறு மனத்துள் எண்ணினேன். ஆனால் சுவாமியின் வாக்கே உண்மையாயிற்று. என்னிடம் முகிழ்த்த துறவு மோகம் தகதகக்கும் தணலின் மேற்படர்ந்த சாம்பரைப் போன்றதே. என்னுள்ளே சருகுண்ணிபோல் தாங்கிக்கிடந்த பொருளாசையைச் சுவாமி கண்டு அவ்வாசையையும் அனுபவித்து இகசுகமடையட்டுமே என இரங்கி அவ்வாறு அருளினார் போலும் என்பதைப் பின்னர் உணரலானேன். அவ்வாறு இகசுகம் ஈந்த பின்னர் சுவாமி "நாங்கள் உணவை வாய்க்குள் போடுகிறோம்; ஆனால்” எனக்கூறி நிறுத்தினார். சில கணங்களின் பின் “செமிப்பது பரம இரகசியம்’ என நிறைவு செய்தார். எமக்கென்ற இச்சா சுதந்திரம் சிறிதுமில்லை. எல்லாம் சிவன் செயலாய் உள்ளன என்னும் உயர் ஞானத்தெளிவை இவ்வாறானதோர் எளிதில் விளங்கும் உதாரணத்தால் சுவாமி எடுத்துக்காட்டினர் என்னுந் தெளிவு இப்பொழுது உள்ளது. ஒரு பொழுது வாய்க்குள் உணவை இடுமாப் போன்று முற்றாக ஒப்படைக்கவும்; ஏனையவற்றையெல்லாம் தாங்கள் பார்த்துக்கொள்வோம் என சுவாமி அருளியதாகவும் விளங்கியது.
சுவாமியின் முதற்றரிசன வரலாறு ஒரு சிறந்த மறைஞான அனுபவமாயமைந்தது. சிவயோக சுவாமி செல்லப்பதேசிகரைத் தரிசித்த முதலனுபவத்தைக்கூறும் போது 'அன்றே யான் பெற்றேன் அருள்’ எனக் கூறியிருக்கிறார். அருள்மேனி தாங்கி நின்ற சிவயோக வள்ளலும் ஏழையடியனாகிய என்னைக்கண்ட அப்பொழுதே தமது அளப்பருங் கருணையை வரையாது வழங்கினர் எனப்படுகிறது. ஆதலால் சிவயோக சுவாமிகளின் அன்பர் சிலர் சுவாமி என்னைத் தழுவி ஆலிங்கனம் செய்தார்; சுவாமி என்னை நான் மறந்திருக்கும் வண்ணம் தன் கைகளால் தொட்டார்; என்னை அருளொழுகப் பார்த்துச் சிரித்தார்: என்றவாறு கூறி, ஆனால் இன்னும் ஞான சுகம் வாய்க்கவில்லையே என ஏங்கி நிற்கும் போது, அவர்களிடம் மேல்வருமாறு கூறக்கூடிய தைரியம் ஏற்படுகிறது. சிவயோக சுவாமி விதைத்த வித்து நல்ல வித்து; அது தக்க பருவத்தில் முளைத்து வளர்ந்து பலன் தரும் கார்த்திகைப்பூச்செடி கோடை காலத்தில் நின்ற இடந்தெரியாத வண்ணம் மறைந்துவிடும்.
13

ஆனால அதன் கிழங்கு நிலத்தின் கீழ் ஜீவசக்தியோடு. பக்குவமாயிருக்கும். கார்காலம் வந்து பருவ மழை பெய்ததும் முளைவிடத் தொடங்கும். கார்த்திகை மாதத்தில் செந்நிறமான காந்தள் மலரைப் பூத்து நிற்கும்.
சுவாமியின் முதற்றரிசனம் பற்றிய இத்தகைய விளக்கம் சுவாமியுடனும் சுவாமியின் ஞான சம்பத்தை முதுசொமாகப் பெற்றுக் கொண்ட வழியடியாருடனும் பல்லாண்டு காலமாகக் கூடி வாழ்ந்த அனுபவத்தெளிவில் கண்டதாகும். முதற்றரிசன நாளன்று இத்தகைய மறைஞான அனுபவமெதுவும் விளக்கமாகவில்லை. ஆதலால் அடுத்த சிலஅண்டுகள் சுவாமியைத் தரிசியாத ஆண்டுகளாக வீணாய்க் கழிந்தொழிந்தன. இக்காலத்தில் நல்லாய்ப் பணம் சம்பாதிக்கக்கூடிய ஒரு தொழில் வாயததது. போதுமளவும் பொருளிட்டினேன். நான் ஒரு பொருளளியாய் மாறியிருந்த அந்நாட்களிலொருநாள் நாகலிங்கத்தாரைப் போல நல்லாய்ப் பணம் சம்பாதி’ என்ற சுவாமி வாக்கு திடுமென நினைவு வந்தது. சுவாமி வாக்குப் பலித்துப்போயிருந்ததை எண்ணி ஒரு புறம் வெட்கமாகவிருந்தது. இது ஒழுக்கத்திற் சிறந்தவர்கள் எனத் தருக்கியிருந்த தாருகா வனத்து இருடிகள், மோகினி வடிவு கொண்டு வந்த விஷ்ணுவின் பின் இழுப்புண்டு சென்று வெட்கித்து நின்றமையை நினைவூட்டியது. இவ்வெட்கத்தினும் சுவாமி எனது அந்தரங்கத்தை நன்றாயறிந்தவர்; அவரே எனக்கு நல்ல வழிகாட்டி எனும் எண்ணமே மேலோங்கி எழுந்தது. அப்பொழுதே மானசீருமாகச் சுவாமியின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி நின்றேன். அன்று சுவாமியின் சிறப்புக்களை அறிந்த நண்பரொருவரோடு சுவாமியின் பெருமைகளை உரையாடி மகிழ்ந்தேன். இருவரும் சுவாமிக்கு ஏதேனும் பணிசெய்தால் சிறப்பாயிருக்குமென எண்ணினோம். அப்பொழுது சுவாமி யாழ் வை. சீ. சி. கு. தேநீர்க்கடையில் பால் வாங்கி வந்தார். பாலுக்குரிய மாதாந்தப் பணத்தைத் தேநீர்க் கடைக்குச் செலுத்துவது ஒரு நல்ல பணியென இருவருக்குந் தோன்றியது. உற்சாகத்தோடு தேநீர்க்கடைக்குச் சென்று தேநீர்க்கடை முதலாளியிடம் எமது எண்ணத்தை வெளியிட்டோம். அவர் சுவாமி ஏசுவாரோ எனத் தயங்கினார். ஆயினும் எங்களது உறுதியின்முன் அவரது தயக்கம் தளர்ந்தது. நாங்கள் பணத்தைக்கொடுத்து விட்டுக் கொழும்புத்துறைக்குச் சென்றோம். சுவாமி ஆச்சிரமத்துக் கொட்டிலில் இருந்து எங்களை வாருங்கள் என அழைத்தார். நாங்கள் ஆர்வத்தோடு சென்று சுவாமியின் திருமுன்னிலையில் அமர்ந்தோம். உடனே சுவாமி
14

Page 12
“இந்தா நான் கணக்கு வழக்குப் பார்க்க வேண்டும்; இனிமேல் கொடுக்க வேண்டாம்” எனக் கூறினார். சுவாமியின் இந்த வாசகம் என்னை அதிரப்பண்ணியது. ஒரு பழைய கொட்டிலிலுள்ள எளிமையான மனிதக்கோலத்தின் முன்னன்றி எல்லாம் அறிய வல்லவரான எண்குணத்தானின் முன் அமர்ந்திருக்கும் எண்ணமே நிறைந்திருந்தது. அக்கணத்தில் என்னைத் தெய்வப் பித்துப் பீடித்துக்கொண்டது. சில நாட்களுக்கு இத்தெய்வப்பித்து நீடித்திருந்தது. அன்றாடக் கடமைகளை வழமைபோற் செய்தபோதும் சுவாமியின் அந்த வாக்கே அந்தரங்கமாக நிறைந்திருந்தது. நான் உண்பது, உடுப்பது, உறங்குவது. தொழில்செய்வது, சோம்பியிருப்பது, எண்ணுவது, எல்லாவற்றையும் சுவாமி அறிந்து கொண்டிருக்கிறார் எனும் உறுதி பிறந்தது. சுவாமி என்னைக் கண் காணிப்பவராகவும் எனது பரிபாலகராகவும் உள்ளார் எனும் நம்பிக்கை வலுத்தது. எனக்கோர் தலைவன் உளன். அவருக்கிணங்க ஒழுக்கமானவனாகவும், உண்மையானவனாகவும் ஒழுக வேண்டும் எனும் தெளிவு பிறந்தது. ஆச்சிரமத்துக்கு அடிக்கடி சென்று சுவாமியின் திருமுன்னிலையில் அமர்ந்திருந்து ஆனந்திக்க வேண்டும் எனும் ஆசை பிறந்தது. வாரந் தோறும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் பூசைப்பொருட்களுடன் சென்று சுவாமியைத் தரிசித்து வரலானேன்.
யான் சிறுபிராயந் தொட்டுப் பிள்ளையார் உபாசகனாகவே இருந்து வந்தேன். இப்பொழுது தியான வேளையில் இடையிடையே பிள்ளையாருடன் சிவயோகசுவாமியின் திருமேனியும் முன்னிற்கலாயிற்று. குருமூர்த்தம் தியான மூர்த்தமாக அமைவது குறித்து மகிழ்ச்சியாயிருந்தது. ஆயினும் அறிவறிந்த காலம் தொட்டு வழிபட்டு வந்த பிள்ளையாருருவை விட்டுவிடுவது உய்தியில் குற்றம் எனும் அச்சமும் எழுந்தது. ஆகவே பிள்ளையாரைத் தியானிப்பதா? சிவயோக சுவாமியைத் தியானிப்பதா எனும் தரும சங்கட நிலையில் யான் அகப்பட்டுக்கொண்டேன். இவ்வண்ணம் இருமாத காலமாகச் சஞ்சலமுற்ற பின்னர் குருபரனையே தியானிப்பது எனும் உறுதியுடன் ஒருநாள் ஆச்சிரமத்துக்குச் சென்றேன். சிவயோக சுவாமி கொட்டிலுள் அமர்ந்து அன்பரொருவரிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். அவரது முன்னிலையில் எப்பொழுதும் போன்று ஒரு தண்ணீர்ச் செம்பு இருந்தது. சுவாமி என்னை உள்ளே வருமாறு அழைத்துத் தமது முன்னிலையில் அமருமாறு அருளிவிட்டு அன்பருடன் பேச்சைத் தொடர்ந்தார். அன்பருடன்
15

பேச்சைக் கொடுத்துக்கொண்டே எனது முகத்துக்கு நேராகத் தமது வலக்கைச் சுட்டு விரலையும் நடுவிரலையும் நீட்டி ஆட்டிக் கொண்டிருந்தார். இரு நிமிடங்களாக இச்சாலத்தையே நிகழ்த்திக் கொண்டிருந்தார். பின்னர் இருவிரல்களையும் ஆட்டம் அசைவின்றி நேராய்ப் பிடித்து என்னை நோக்கினார். சுவாமியின் அருள் நோக்குப் பிள்ளையார்தான் என்றிரு வரும் ஒருவரே என்பதைத் திடமுற உணர்த்தியருளியது. இதன் பின் குருவேறு இறைவன் வேறு எனும் அறியாமை அகன்றது. குருவே சிவம் என்பர் பெரியோர்.
ஆன்ம சாதனை பயில்வார்க்குச் சாதுசங்கம் வாய்ப்பான தொன்றாகும். ஆதலால் அவரிவரென்று பாராது அடியாரானோ ரெல்லாரையும் வரவேற்று அவர்கட்கு உகந்தவற்றைச் செய்வது எனது இயல்பாயிருந்தது. ஒரு சமயம் ஆத்மஜோதி ஆசிரியர் திரு. முத்தையா அவர்கள் புங்குடுதீவிலே திவ்வியஜீவன சங்கக் கிளையை அமைப்பது நல்லதெனக் கடிதம் எழுதினார். பின் அவர் நேரிற் சந்தித்தும் கேட்டுக் கொண்டார். திவ்விய ஜீவன சங்கக் கிளை நிறுவும் நாளன்று அந்நாட்களில் பிரபலமாயிருந்த கண்டிப்பகுதியில் உறையும் சச்சிதானந்த யோகிஸ்வரர் வருகை புரிவாரெனவும் கூறினார். யான் யோகீஸ்வரரின் வருகையை நினைந்து மகிழ்ந்தேன். ஏற்பாடெல்லாம் பூர்த்தியாயிருந்த வேளையில் தமிழகத்திலிருந்து குன்றக்குடி அடிகளாரும் யாழ்ப்பாணம் வந்திருந்தார். யோகீஸ்வரர் எழுந்தருளும் இடத்தில் குன்றக்குடி அடிகளையும் கலந்து கொள்ளச் செய்வது சிறப்பாயிருக்கும் என அன்பரொருவர் கூறினார். இப் பெரிய சாதுக்களின் சந்திப்பு அன்பரானவர்கட்கு ஆனந்தமாயிருக்கும் என யானும் நம்பினேன். ஆயினும் கருத்து முரண்பாடுகள் தோன்றினால் ஒழுங்கீனமாய்ப் போகும் எனும் எண்ணமும் உதித்தது. கூட்டம் நடைபெறுவதற்கு முதல் நாளன்று நல்லூர் வீதியிலிருந்து யோகீஸ்வரருடன் கதைத்திருக்கும் போது உங்களுக்கும் அடிகளாருக்கும் வேதாந்த சித்தாந்த முரண்பாடு ஏற்படாதோ எனக் கேட்டேன். அப்படியொன்றும் நடவாதென அவர் கூறினார். அடுத்த நாள் கூட்டம் கோலாகலமாய் ஆரம்பமாகியது. இருபெரும் சாதுக்களின் வேடப் பொலிவினைக் கண்டு மக்கள் பரவசமாகினர். கூட்டத்திலே யோகிஸ்வரர் பேசிக்கொண்டிருக்கும் பொழுது குன்றக்குடியடிகளார் பொறுமை இழந்தார். பேச்சிலே குறுக்கிட்டு ஆட்சேபம் தெரிவித்தார். யோகீஸ்வரரும் மறுப்புரை கூறவே கூட்டம்
16

Page 13
குழம்பலாயிற்று. பக்திப் பரவசமாயிருந்த சாமானிய மக்கள் மத்தியில் சாதுக்கள் இருவரும் தத்தம் சிறுமைகளை பறைசாற்றிக்கொண்டு நின்றனர். ஏற்பாடு செய்த நாங்கள் வெட்கித் தலைகுனியும் வகையில் கூட்டம் கலைந்தது. அடுத்தநாள் மாலையில் சுவாமிகளை தரிசிப்பதற்காகச் சென்றேன். சுவாமி அமர்ந்திருக்கும் கொட்டிலினுள்ளே நேராகச் செல்வதற்கு தயக்கமாக இருந்தது. வாசலில் கூச்சத்தோடு நின்றேன். சுவாமி என்னைக் கண்டதும் காலைத் தூக்கி பதுமாசனமிட்டு நேராய் நிமிர்ந்து அமர்ந்து என்ன வந்தது' எனக் கேட்டார். நான் பேசாமல் நின்றேன். பின்னர் "இந்தா பார் சச்சிதானந்தா, குன்றக்குடியார் இவர்களெல்லாம் ரிஷிபத்தினிகளை வைத்திருக்கிறார்கள். "நாங்கள் துறவிகள்” எனச் சுவாமி கூறினார். சுவாமி எல்லாம் அறிந்தவர் என்பதில் இப்போது வியப்பேதும் தோன்றவில்லை. சாதுக்களென நம்பிக் கண்ட நின்றவர்களையெல்லாம் கையெடுத்துக் கும்பிடுமெனது வழக்கத்தை நினைந்து வெட்கமாயிருந்தது. வேடதாரிகள் மீதுகொண்ட மாலினைக் களைந்தெறிதல் வேண்டும் எனும் உறுதி பிறந்தது. குறுநெறி செல்வார்க்குக் கொண்டானையல்லால் அறியாக்குலக் கொடிபோன்ற கற்பெனும் திண்மை அணிகலமாகும் எனும் அறிவு பிறந்தது. முன்நாட்களில் பகவான் ரமணமகரிஷி ராமக்கிருஷ்ண பரமஹம்சர் முதலாய மகான்களின் மகத்துவத்தை மதித்த போதும், இதன்பின் சுவாமிமீது கொண்ட பக்திக்கும் இணையாக ஏதுமுருவாகவில்லை. பகவான் ரமண மகரிஷி முதலானவர்கள் பெரியமகான்கள் ஆனால் சிவயோக சுவாமியோ எமக்குச் சிவபெருமான். அருங்குணமிக்க அன்னையர் பலர் இருப்பினும் மைந்தனுக்கு ஈன்றதாய் மீது உள்ள பாசம் இணையில்லாததன்றோ!
சிவதொணி டண் வெள்ளிவிழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்ட போது இலங்கையின் பலபாகங்களிலும் பரந்திருந்த சுவாமியின் திருக்கூட்டம் யாழ்ப்பாணம் வந்து நிறைந்தது திருக்கூட்டத்தினர் கொழும்புத்துறை சென்று வரிசையாய் நின்று ஒவ்வொருவராய்ச் சுவாமியைத் தரிசித்தனர். சுவாமியும் தம்மைத் தரிசித்த அன்பர்களனைவருக்கும் அவரவர் பாத்திரத்துகேற்ப அருளாரமுதம் ஈந்தனர். யானும் வரிசையிற் சென்று சுவாமியின் திருமுன்னிலையில் நின்ற பொழுது “ இந்தாரும், என்னுடைய குறையை உன்னிடம் தருகிறேன்; மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்ளும்
17

எனச் சுவாமி அருளினார். இவ்வாசகத்தின் பொருள் சுவ15 'தி அடைந்த பின்னரே ஒருவாறு விளங் கலாயிற் று. சுவாமி ஏழைத்தொழும்பனாகிய என்னையும் தனது திருக் கூட்டத்துள் ஒருவனாயேற்று என்னைப்பணிகொண்ட கருணையை எண்ணி வியந்தேன். சுவாமியின் தனிப்பெருங்கருணை " நாடறிய என்னை நல்ல தொண்டு செய்ய வைத்த, கேடுபடாத் திருவடியைக் கிளத்துதுங்காண் அம்மானாய்’ என்று பாடிப் போற்றும் படியாயுள்ளது.
ஒருமுறை சுவாமி ஏகாந்தனாய் இருந்த வேளையில் அவர் திருமுன்னிலையில் அமர்ந்திருந்தேன். சுவாமியின் உபசாந்தம் என்னையும் விழுங்கிக் கொள்ளும் உணர்வில் பேச்சேதுமின்றி என்னை மறந்த ஒடுக்கத்தில் இருந்தேன். சுவாமியின் நாதம் கேட்டு நோக்கிய பொழுது சுவாமியின் திருவாய்மொழி மேல்வருமாறு மலர்ந்தது. "இதோ நான் சும்மா இருக்கிறேன், நினைத்தவுடன் கார்வரும், எல்லாம் வரும், நீயும் சும்மா இருந்துபார். உனக்கும் எல்லாம் வரும். இம்மறை மொழியின் பொருளை எவ்வாறு ஒருவருக்கு இசைவிப்பது?
சுவாமி சமாதி அடைவதற்கு முந்திய ஓராண்டுக்காலத்துள் விளக்கமில்லாத பலருஞ் சுவாமி மாறாட்டமாகப் பிதற்றுகிறார் என எண்ணியிருந்த காலத்தில் மேலான அனுபவங்களையும் ஞானத்தெளிவில் மலர்ந்த வாசகங்களையும் பெற்றேன். 1963ஆம் ஆண்டு சித்திரை வருடப்பிறப்பன்று சுவாமியைத் தரிசிப்பதற்காகச் சென்றேன். அன்று அடியார் கூட்டம் நிறைந்திருந்தது. சுவாமியைக் கதிரையிலிருந்து இறக்கி மண்டபத்திலிருந்த கட்டிலில் எழுந்தருளவைத்தார்கள். சுவாமி கட்டிலில் வீற்றிந்தவாறு 'மா' என்று அழைத்தார். திருமதி இரத்தினம் நவரெத்தினம் அவர்கள் விரைவில் வந்துநின்றார். சுவாமி அவரிடம் வடைகொண்டு வருமாறு பணித்தார். சிறிது நேரத்தில் வடையும் தேநீரும் வந்திருந்த அன்பர்க் கெல்லாம் பரிமாறப்பட்டது. பொழுது சென்றதும் ஒவ்வொருவராகச் சுவாமியிடம் விடைபெற்றுச் சென்றனர். சுவாமி என்னைக் கூப்பிட்டுத் தமது திருவடியைச் சுட்டியவாறே இதிலே இரும் எனக் கூறினார். நான் அன்னையின் காலடியில் அமர்ந்திருப்பது போன்று நெருக்கத்தோடு சுவாமியின் அருகில் அமர்ந்தேன். சுவாமி இன்று நீர் வீட்டுக்குப் போகப்படாது' என அருளினார். இவ்வருள் வாக்கு எனக்கு மிகுந்த ஆனந்தத்தை அளித்தது. ஆச்சிரமவாசி திருநாவுக்கரசு அவர்கள் எங்களுக்கு உணவு அளித்தார்.
18

Page 14
சுவாமியோடிருந்து அமுது செய்தேன் இரவானதும் தென்பக்கச் சுவரோரத்தைக் காட்டி அதில் கிடவும்’ என அருளினார். சுவாமியின் இஷடப்படி சுவாமியின் திருமாளிகையில் கிடப்பது இணையில்லாச் சுகத்தைத் தந்தது. நான் நித்திரையின்றிச் சுவாமியின் நினைவாகக் கிடந்தேன். நடுச் சாமத்தில் சுவாமியின் குரல் கேட்டது. பின் அதிகாலையில் அதில் கிடக்கிறது யார் எனச் சுமாமி அதட்டினார். சுவாமியின் நினைவாய் விழிப்புடனிருந்தமையால் நான்’ எனச் சொல்ல நா எழவில்லை.
“ஆக்கை நீயல்லை, நீயோ ஆன்மா என்னும் அறிவில் விழிப்பாயிருப்பதற்காகவே சுவாமி அவ்வண்ணம் வினவுகிறார் என்பது உடனே நினைவு வந்தது. நான் ஒன்றும் பேசாது எழுந்து நின்ற போது தேநீர்ப் போச்சியால் எறிந்து விடப்போவதாகச் சுவாமி பாசாங்கு பண்ணினார். பின்னர் "கிட்டவா’ என்று கூப்பிட்டுப் பிடரியிற் தட்டி மேற்கு வாயிலாற் சென்று வெளியில் நிற்குமாறு அருளினார். நான் மேற்கு வாயிலால் சென்று வெளியில் நின்ற சமயம் கிழக்கு வாயிலினாலே திரு. சிவபாதசுந்தரமவர்கள் பூக்கொண்டு வந்து சுவாமியைக் கும்பிட்டு நின்றார். சுவாமி அதிகாலைப் பொழுதில் யான், அபிடேகம் ஆட்டும் நிகழ்ச்சியையும், அன்பரின் பூசனையை ஏற்பதையும், ஓரிடத்து வேலையாய் ஒருவரொருவரை அறியா வண்ணம் நிகழ்த்தி முடித்தனர்.
இவ்வாண்டிலோர் நாள் சுவாமியைத் தரிசிக்கச் சென்ற தருணம் முன்வாயில் சாளரமெல்லாம் சாத்தப்பட்டிருந்தன. பின் கதவு திறந்திருந்தது. திரு. இராசரெத்தினம் தம்பதியார் உள்ளேயிருந்தனர். சுவாமி துயில்கின்றார்; உள்ளே வரவேண்டாம் என அவர்கள் கூறினர். யான் திண்ணையில் அமர்ந்தேன். சிறிது நேரத்தில் ”வெளியில் இருப்பவரைக் கூப்பிடு” எனச் சுவாமி கூறுவது கேட்டது. யான் உள்ளே சென்றேன். சுவாமி இராசரெத்தினம் தம்பதியாரை விடைகொடுத் தனுப்பிவிட்டுப் பேசாமல் அமர்ந்திருந்தார் யானும் பயபக்தியோடு சும்மா இருந்தேன் சற்று நேரத்தில் தேவாரத்தை பாராயணம் பண்ணு என மொழிந்தார். யான் தேவாரத்தில் எந்தப் பகுதியாகுமோ என எண்ணமிட்ட போது அதுதான் திருநீற்றுப் பதிகம் என அருளினார். பின்னர் வலக்கையைப் பிடித்து “ஒரு கணமும் மறவாதிரு” எனத் தீர்க்கமான குரலில் மொழிந்து இப்படிப் போ’ என்றார். நான் வாயிற் படியைக் கடக்கும் பொழுது தம்மிடம் வருமாறு அழைத்து இடக்கையைப் பிடித்து 19

"ஒரு கணமும் மறவாதிரு” என ஒதி அனுப்பினார். வாயிலை நெருங்கும் பொழுது மீண்டும் அழைத்து வலக்கையைப் பிடித்து “ஒரு கணமும் மறவாதிரு” என அருளினார். சுவாமி முக்காலும் அருளிய இம்மறை மொழியின் அநுபூதிப் பொருளைப் பின்னர் சுவாமியின் ஞானப் புதல்வரிடமிருந்து உணர்ந்து கொண்டேன்.
மற்றுமோர் நாள் ஆச்சிரமஞ் சென்று சுவாமியின் திருவடிகளிலே வீழ்ந்து கும்பிட்டு எழுந்து நின்றேன். சுவாமி அமருமாறு அருளினார். சுவாமியின் திருமுன்னிலையில் அடியார் பலர் அமர்ந்திருந்தனர். அப்பொழுது சேர். வை. துரைசுவாமி அவர்கள் வந்து நின்றார். சுவாமி யாரது எனக் கேட்டுவிட்டு வலக்கையை உயர்த்தி நெற்றியிற் பிடித்து “ஒ சேரோ” எனக் கூறினார். பின்னர் என்னைப் பார்த்துக் கைவிரலை நீட்டினார். கதிரையை எடுத்துப் போடுமாறு சுவாமி நினைக்கிறார் எனக் கருதிக் கதிரையொன்று கொண்டு வந்து 'சேரின் அருகில் வைத்தேன். அவர் அதில் அமர்ந்தார். சுவாமி சுற்றியுள்ள அடியவரைப் பார்த்து “பாருங்கள், தீவானுக்குத் தீவான் கதிரை போடுகிறான்” எனச் கூறிச் சிரித்தார். பின்னர் என்னைச் சுட்டியவாறே சேரவர்களைப் பார்த்து " இவன் பெரிய கள்ளன் காணும்” என அருளினார். என் பக்கம் திரும்பி “நீர் தருகிறதை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என அருளினார். இவ்வருள் வாசகத்தைக் கேட்ட அக்கணமே எனது உடல்சிலிர்த்து விறைத்து விட்டது. “ அவனுடைய செயலெல்லாம் எனக்கினியனவாம்” என்று கண்ணப்பர் அன்பை உகந்தது போல என்னையுமோர் அன்பனாக ஏற்றுக் கொண்ட சுவாமியின் கருணைதான் எனக்கு இப்பிறவியிற் கிடைத்த பெறுதற்கரும் பேறாகும்.
அவ்வாண்டு தைத்திருநாளன்று சுவாமி தாம் சிவபெருமானே என்பதைச் சொல்லாமற் சொல்லி உணத்தினார். ஆண்டு தோறும் தைப்பொங்கல் நாளன்று சுவாமியைத் தரிசித்து வரும் நியமப்படி அன்றும் சென்றேன். சுவாமியைத் தரிசித்த முதல் நாளன்று தொடக்கம் செய்து வந்தது போலவே அன்றும் காகிதப்பையில் பழம் கொண்டு சென்றேன். யான் வாயிலில் கால் வைத்த பொழுது சுவாமியின் குரல் கடுமையாக ஒலித்தது. “உது என்ன” என்ற சுவாமியின் வார்த்தையைக் கேட்டு எனக்கு நடுக்கம் எடுத்தது. ”உங்களுடைய கடவுளுக்கும் இப்படித்தான் கொண்டு போவீர்களோ? கடவுளுக்கு என்றால் தட்டத்தில் வைத்துக் கொண்டு போவீர்கள்; இங்கென்றால் மீன்குடலை மாதிரிக்
20

Page 15
கொண்டு வருகிறாய்? கொண்டு போ” எனக் கடுஞ் சொற்களிற் கூறினார். யான் அழுது கொண்டு பழைய கொட்டிலுள் சென்று பழங்களை வைத்துக் கர்ப்பூரங் கொழுத்தி மெளனமாய்க் கும்பிட்டேன். அதுவரை காலமும் காகிதப்பையில் கொண்டு செல்வது பற்றி ஒன்றும் பேசாதிருந்த சுவாமி சமாதியை அண்டிக் கொண்டிருந்த காலத்தில் அதனை ஓர் சாட்டாகக் கொண்டு கோயிலில் வைத்துப் பூசனை செய்யும் கடவுளிலிருந்து தான் வேறல்லர் என்பதைத் தெளிவாயுணர்த்தினர்.
"தீதெல்லாம் நீக்கச் சிவபெருமான் என்போல் பூதலத்தில் வந்தான்’
ஏ. தம்பு தொண்டர் - புங்குடுதீவு
இருவருந் தேடிக் காணா இறைவ னென்போ லுருத்தாங்கி இணங்கி யெவரும் வணங்கும் நல்லையில் இன்னா னிவனென்ன ஒருவரு மறியா தோடியுலாவி யுவகை பூத்த முகத்தினராய் ஒருநா ளென்றனை யுற்று நோக்கிஓர் பொல்லாப்பு மிலையென்று அருவமுங் காட்டி யுருவமுங் காட்டி யப்பாற் கப்பாலாம் அருள்நிலை காட்டிக் காட்டிக் காட்டி யந்த மாதி யில்லாச் சொரூபமுங் காட்டிச் சும்மா விருக்கும் சூட்சத்தில் மாட்டி விட்டான் துன்ப மிறந்தன வின்ப மிறந்தன சோதிசோதிசிவசோதி 1
சிவத்தினை வளர்க்கும் பாக்கிய மெமக்குச் சிந்தித்த தினிமேலே தெய்வம் வேறே யுண்டென வெண்ணுஞ் சிந்தையு மிறந்ததுவே அவத்தினிற் செல்லும் மனத்தினை வெல்வோம்
ஐம்பொறி வழிச்செல்லோம் அழியா மெய்ப்பொரு ளாகிய ஆன்மா அறிவோம் நாம் நன்றாய் தவவழிச் செல்வோம் குருமொழி கொள்வோம்
தன்னைத் தானறிவோம் சாந்தம் பொறுமை யேய்ந்த நற்பணி சந்தத மணிந்து கொள்வோம் உவத்தலுங் காய்தலு மோடி யொளிந்தன ஒன்றுங் குறைவில்லோம் உண்மை முழுதும் ஒதுக தினமும் ஓம்தத் சத்ஓம் 2
21

கதிரவ னெழுமுன் காலை யெழுந்து கைகால் முகங்கழுவு கடிமல ரெடுத்து மாலை தொடுத்துக் கடவுளைப் பூசனைசெய் அதிர வராமுன் மனத்தினை யடக்கி ஐம்பொறி வழிச்செல்லாது ஆண்டவன் திவ்விய பாதத்தை வேண்டி ஆசையை வென்றிடலாம் முதிர முதிர முழுவது முண்மை யெனமுனி சொன்னமொழி முகமுக மாகக் கண்டு தெளிந்து முத்தியிற் சேர்ந்திடலாம் இதிலோர் ஐய மில்லை யில்லை யெல்லா மவன்செயலே இரவும் பகலு மிதய வெளிக்குள் ஏத்துக ஓம்தத்சத் 3
எண்ணி யெண்ணிப் பணிவார் நெஞ்சே யீசன் உறைகோயில் இருந்துங் கிடந்தும் நடந்துந் தொடர்ந்தும் ஏத்திப் பணிவோமே புண்ணிய பாவ மிரண்டுங் கற்பனை போக்கொடு வரவில்லாப் பொருளே நாங்கள் அருள்கொண் டறிநீ புத்தியை நாட்டாதே மண்ணில் வந்து பிறந்ததும் வாழ்ந்ததும் மாமா யையிதனை மாதவ ரறிவார் மற்றவ ரறிவார் மதியா யேயிதனை எண்ணில் காலம் உயிரோ டிருப்போம் ஏதுக்கு மஞ்சாதே இயைந்த படிநீ நடந்துகொ ளென்றும் ஏத்துக ஓம் தத் சத் 4
நீ உடம்பன்று மனமன்று, புத்தியன்று சித்திமன்று, நீ ஆத்மா. ஆத்மா ஒரு நாளும் அழியாது. இது மகான்களுடைய அநுபவ சித்தாந்தம். இந்த உண்மை உனது உள்ளத்தில் நன்றாய்ப் பதியக்கடவது.
ஆனால் நீ கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு.அதாவது தருமநெறியிற் பிசகாதே. எவ்வுயிரும் பெருமான் திருமுன்னிலை என்று சாதனை செய். கடவுள் உள்ளும் புறமும் உள்ளவர்.
22

Page 16
நாங்கள் சிவனடியார்கள். எங்களுக்கு ஒரு குறைவு மில்லை: சிவதொண்டு செய்வதே எங்கள் தொழில். அதற்காகவே நாங்கள் பூமியில் வாழுகிறோம்.
சந்திரன் சிவதொண்டு ஆற்றுகின்றது. சூரியனும் ஏனைய கிரகங்களும் அத்திருப்பணியையே செய்கின்றன. தேவர்களும் அசுரர்களும், கின்னரர், கிம்புருடர் வித்தியாதரர்களும் அப்படியே தொண்டாற்றி வருகின்றனர்.
அனைத்துஞ் சிவன்செயல்; அவனின்றி அனுவும் அசையாது. நாம் இழந்துபோவது ஒன்றுமில்லை. ஆதாயமாக்கிக்கொள்வதும் ஒன்றுமில்லை. இருந்தபடியே இருக்கின்றோம்.
நமக்கு ஒப்பாரும் மிக்காரும் ஒருவருமில்லை. நமக்கு இதம் அதிகமில்லை. மரணம் பிறப்பில்லை. வேண்டுதல் வேண்டாமையில்லை. மண்ணாதி ஆசையில்லை. மனமான பேய் இல்லை. காலதேச வர்த்தமானம் நமக்கில்லை. நாம் அனைத்துக்குஞ் சாட்சியாக விளங்குகின்றோம்.
ஓம் தத் சத் ஓம்
நாங்கள் சிவனடியார்கள். எங்களுக்கு ஒரு குறைவுமில்லை. சிவதொண்டு ஆற்றுவதே எங்கள் தொழில். அதற்காகவே நாம் உயிரோடு இருக்கின்றோம். உண்பதும் உறங்குவதும் அதற்காகவே. எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப்பட்டாலும் எல்லாம் அதற்காகவே செய்கின்றோம். நமக்கு ஆதியுமில்லை அந்தமுமில்லை. பிறப்புமில்லை இறப்புமில்லை. நாம் விளையாட்டுக்காகினும் பிறர்பொருளைக் கவரோம். பிறர்வசை உரையோம் எல்லாஞ் சிவன் செயலென்பதை மறவோம். பசித் தாற் புசிப்போம். பிறர் செய்யும் நிட் ரூரத்தையாவது கிருபையையாவது பொருளாகக் கருதமாட்டோம். எப்பொழுதும் தூய்மை உடையோம். துன்பத்திலும் இன்பத்திலும் கவலை அடையோம். முழுவதும் உண்மை.
ஓம் தத் சத் ஓம்.
23
 

சிவபக்தி மாத்திரந்தான் மனிதனைப் பாக்கியவானாக்கும். மற்றையவனைத்தும் பிரயோசனமற்றவை. ஆகாயால் இடைவிடாமற் சிவத்தியானம் பண்ணு. ஒன்றுக்கும் பயப்படாதே. வெற்றியுன் சொந்தம். எத்தனைமுறை தவறினாலுந் தைரியத்தைக் கைவிடாதே. தவறுதல் சடசம்பந்தமானது. நீயோ சித்துப்பொருள் (அதாவது அறிவுப்பொருள்). நீயொரு நாளும் அழியமாட்டாய். எழுந்திரு! விழித்துக்கொள்! காரியங்கைகூடுமட்டும் வழியிலே தங்கிவிடாதே! உற்சாகத்தோடு முன்னேறிச்செல். உனக்குச் சகல சக்தியுங் கட்டுப்படுவதைக்காண். வீண்வாத தர்க்கத்திலே நாளைப் போக்காதே. நீ எங்கே போகிறாயோ அங்கே உன்னுடன் பகவான் வருவார்.
வெளிமாதிரி யொன்றுஞ் செய்யாதே. உனக்குள் நீ பெலத்துக்கொள். சமயமென்பது ஒரு மாதிரியுமற்ற தனித்தநிலை. உடல், பொருள், ஆவி மூன்றையும் பகவானுக்கு ஒப்படை அதன்பின் உன்னைப் பற்றிய காரியங்களைக் கைவிட்டுவிடு. அனைத்தும் அவனே பார்.
ஒ மனிதனே! நீ உண்மைப்பொருள். கேடற்றவன். உனக்கு ஒருவருங் கேடு விளைவிக்க முடியாது.
நீ இங்கும் அங்கும் எங்கும் உள்ளவன். நித்தியன்.
உறுதியுடனே சிங்கங் கானகத்தில் திரிவது போல் உலகமாகிய கானகத்தில் திரி. எந்த விதத்திலுந் தளர்வடையாதே. ஒரு நூதனமுமிங்கில்லை. முழுவதுமுண்மை. ஒரு பொல்லாப்புமில்லை.
ஒ மனிதனே! வானம் வந்தாலும் பூமி வந்தாலும் ஆட்சிசெய்யக் கருதாதே. சாட்சியாயிரு. மாட்சி உன் பிறப்புரிமை.
அது என்ன வுபாயத்தாலு மடையப்படுவதொன்றன்று. அப்படியுள்ள காரியம். மற்றனைத்துஞ் செப்படிவித்தை. அறிவு, அறியாமை உன்னிடமில்லை. நீ பரமாத்மா.
ஓம் தத் சத் ஒம்
24

Page 17
ஒ மனிதனே! சற்று பொறுமையாயிருந்து பார். நீ யாரெனத் தெரிந்து கொள்வாய். துயருறத்தகாத காரியங்களில் துயருறாதே. துன்பமும் இன்பமும் உலக நடவடிக்கைகள். நீ சித்துப்பொருள்.
உன்னை ஒன்றுந் தாக்கமாட்டாது. எழுந்திரு. விழித்துக்கொள். சிவத் தியான மென் னுந் திறவுகோலால் மோகூடி வீட்டின் கதவைத்திறந்துபார். எல்லாம் வெளியாகும்.
ஓம் சாந்தி சாந்தி
ஓ நண்பனே! உன்னை யார்தான் பாவியென்று சொல்லவல்லான்? ஏன்?
நீ சிவத்தின் அம்சமல்லவா? மறந்து போனாய். ஓம் தத் சத் ஓம் என்று ஓயாமற் சொல்லு. உன் முழுமனத்தோடும் இறைவனுக்கு உன்னை ஒப்புக்கொடு. சிவத்தியானத்தை அசட்டை பண்ணாதே. ஈற்றில் யாவும் நன்மையாய் முடியும். சோம்பலுக்கும் சோம்பலின்மைக்கும் நீ கட்டுப் படாதே.
அதிகப் பேச்சில் என்ன பயன். பண்படுத்தப்பட்ட தரையிலன்றோ நல்ல பயன் வரும். அஞ்சாதே.
நாங்கள் சிவனடியார். சிவபெருமான் என்றுள்ளவரோ அன்று நாமுமுள்ளோம்.
வெப்பந் தட்பம், இன்பந் துன்பம், இளமை முதுமை இயற்கையின் குணங்கள்.
இவைகளின் தீண்டுதலால் நாமேன் கவலைப்படுவான். இவைகள் தோன்றி மறைவன. நாமோ தோன்றுவதுமில்லை. மறைவதுமில்லை.
உண்மை இன்மை யாகாது. இன்மை உண்மையாகாது.
எல்லாஞ் சிவன்செயலன்ற எங்களுக்குக் குறைவுமுண்டோ? நிறைவுமுண்டோ? நாம் சிவபெருமானென்ற நூலிலே கோர்க்கப்பட்ட
25

பல நிறமுள்ள மணிகளை யொப்பவர். நூலறுவதுமில்லை. நாங்கள் சிதறிப்போவதுமில்லை. பலபடக் கூறுவதால் பயனில்லை.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
ஒ சினேகிதா! நீ சிவனடியானென்று முழுமனத் தோடும் நினை, எல்லா வெற்றியு முன்னிடமுண்டு. அதற்கு மேல் வேறொன்று மில்லை. யாவு
முன் காலடியில்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
குரங்குபோல் மனங் கூத்தாடுகின்றதே.
இதன் கூத்தை எப்படி யடக்குவதென்று தெரியவில்லையே. நன்று சொன்னாய். இதற்கு நல்ல மருந்துன்னிடமுண்டு. நீ அதை மறந்து போனாய். சொல்லுகிறேன் கேள்.
சிவத்தியானமென்னும் மருந்தைத் தினந்தோறுஞ் சாப்பிட்டுவா.
மனக்குரங்கின் பிணி மாறும்.
அதைச் சாப்பிடும் போது அனுபானத்தை கூட்டிச் சாப்பிடு.
அதுவுமுன்னிடமுண்டு.
அது வென்னவென்றால்; நாவடக்கம், இச்சையடக்கமென்னுஞ்
சரக்கோடு சேர்த்துச் சாப்பிடு.
இதுவும் போதாது. பத்திய பாகத்திலே தான் முற்றுந் தங்கியிருக்கிறது. அதுவு முன்னிட முண்டு.
அது என்னவென்றால்; மிதமான ஊண், மிதமான நித்திரை. மிதமான தேக அப்பியாசம்; என்பவையே. வெற்றி நிச்சயம். ஆன்ம
இலாபத்தின் பொருட்டிதைச் செய்.
26

Page 18
மனத்தை ஒருவன் அடக்கி வெற்றி கொள்ள முழுமனத்தோடு விரும்புவானானால் சிவத்தியானத்தைத் தினந்தோறுஞ் செய்துவரக் கடவன்.
படிப்படியாக அவன் மனமொடுங்கி வருவதை அவன் கண்கூடாகக் காணுவான்.
சாந்தம், பொறுமை, அடக்கம் முதலிய நற்குணங்கள் அவனிடத்தில் துதிக்கும்.
அவன் மனமெந்த நேரமும் மகிழ்ச்சியுடையதாகவே இருக்கும். இகழ் புகழிரண்டிலும் இழிவடையான். அந்தராத்மாவிலே சுகிப்பான். பிறர் சுகந் தன் சுகமென்ற எண்ணம் பெருகும்.
கைவிளக்கை யொருவன் கொண்டு செல்வானானால் இராக்காலத்தில் அவன் மனங் கலங்குவானா? கலங்கான். அப்படியே சிவத்தியானத்தைச் செய்து வருவானானால் மாயவிருள் அவனையடையுமா? அடையா.
போதையிலுஞ் சாதனை சிறந்தது. ஒரு பொல்லாப்புமில்லை.
ஆன்ம இலாபமே பொருளெனக்கண்ட அறிஞர் அநித்தியமான இந்த உலக இன்ப துன்பத்தில் மயங்காது தாமரையிலையில் நீர் போற் சகத்துடன் கூடிவாழ்வார். ஆன்ம இலாபத்தைப்பெற நினையாதவர் இந்த உலகத்துன்ப இன்பத்தினாற் கலங்கித்தியங்கித் திரிவார்கள். ஆன்ம இலாபத்தையே குறிக்கோளாகக் கொண்டு நன்மை தீமையை வென்று நான் எனதென்னும் அகங்கார மமகாரங்களைக் களைந்த அறிஞர் இறைவன் திருவடி நிழலில் பிறப் பிறப்பற்றுப் பேரின்பத்துடன் வாழ்வார்.
அ.தறியா அறிவிலிகளே துன்பக்கடலில் வீழ்ந்து எரிவாய் நிரயத்துக் காளாவார்.
வண்டுகள் பூவைக்கிண்டித் தேனைஉண்டு ஒன்றுமறியாது கிடப்பதுபோல், பக்தனும் சித்தமாகிய பூவைச் சிவத்தியானத்தினால் கிண்டி ஆங்குவரு மானந்தத்தேனையுண்டு, ஒன்று இரண்டு, நன்று தீதென்றறியாமற் தேக்கிக் கிடக்கிறான்.
27

ஒரு கமக்காரன் தன்னுடைய நிலத்திலே நல்லவித்தையிட்டு அதிலுண்டாகுங் களையைக் களைந்து, விளையுந் தானியத்தை யொன்று சேர்க்கிறான்.
அது போலப் பக்தனும் சிவமாகிய நிலத்திலே பக்தியென்னும் வித்தை வித்திக் காமக்குரோத மோக மதமாச் சரியமென்னுங் களையைக் களைந்து சிவபோக மென்னுந் தானியத்தைச் சேர்த்து வைத்துப் புசிக்கிறான்.
பூலோகமாகிய நந்தன வனத்திலே சீவர்களாகிய மலர்கள் மலர்ந்து கிடக்கின்றன. சிவன் அதைக்கண்டு மகிழ்கிறான்.
பொற்கொல்லன் பொன்னை யெடுத்துப் பல பூண்களைப் படைக்கிறான்.
சிவனாகிய பெரிய பொற்கொல்லன் ஆன்மாவாகிய பொன்னை யெடுத்துச் சீவர்களாகிய பலபணிகளையுமாக்குகிறான்.
வைத்தியன் பல மூலிகளையு மெடுத்து ஒன்றாக்கி நோய்க்கு மருந்து கொடுத்து நோயை மாற்றுகிறான்.
பெரிய ஞான வைத்தியனும் தனு கரண புவன போகங்களை ஆன்மாவுக்குக் கொடுத்து, அதன் நோயை மாற்றி இன்ப வீட்டில் வைக்கிறான்.
தாய் தனது குழந்தைகளுக்கு விளையாட்டுச் சாமான்களைக் கொடுத்து மகிழ்விக்கின்றான்.
சிவபெருமானுந் தன் குழந்தைகளாகிய எங்களுக்குப் பல விதமான இன்பங்களையுந் தந்து மகிழ்விக்கின்றான்.
பொறி வழியே போந்து, மனம் அலைய அறிஞர் இடங்கொடார். ஏனெனில் ஆத்மாவே தானென அறிந்தவர்கள்; ஆசை நோய்க்கு இடங்கொடுப்பாரா? அன்று.
அவர்தம் பெருமையை வேத சிவாகமங்களும் புகழ்கின்றன. இவர்களைக் கண்டால் கல்லுங்கரையும்.
அனைத்திலும் வெற்றி யுண்டு.
28

Page 19
அத்துவி தப்பொருள் காப்பாம் - எனக் கடியார்க ளென்றென்னுங் காப்பாம் சித்தருந் தேவருங் காப்பாம் - என்றன் சித்தத் திலங்குந் திருவருள் காப்பாம்
அட்ட வசுக்களுங் காப்பாம் - எனக் கானந்த மான பராபரன் காப்பாம் எட்டுத் திசைகளுங் காப்பாம் - எனக் கெங்கும் நிறைந்த சிவசக்தி காப்பாம்
பிராண னபானனுங் காப்பாம் - என்னைப் பிரியா திருக்கும் பிரணவங் காப்பாம் அராவணி வேணியன் காப்பாம் - எனக் கருளை யளிக்கும் குருபரன் காப்பாம்
பஞ்சப் புலன்களுங் காப்பாம் - என்னைப் பரவு மடியவ ரனுதினங் காப்பாம் குஞ்சர முகத்தவன் காப்பான் - நல்ல குழந்தை வடிவேலன் என்றென்றுங் காப்பாம்
சந்திர சூரியர் காப்பாம் - எங்குந் தங்கு முயிர்க ளனைத்துமென் காப்பாம் மந்திரந் தந்திரங் காப்பாம் - நான்கு மறைகள் சிவாகமம் மாநிலங் காப்பாம்
29
(அத்து) 1
(அத்து) 2
(அத்து) 3
(அத்து) 4
(அத்து) 5
 

(மங்களம் ஜெயமங்களம்-1
அப்பனுக்கும் அம்மைக்கும் மங்களம் அத்துவித வஸ்துவுக்கு மங்களம் ஒப்பில்குரு நாதனுக்கு மங்களம் உத்தம பத்தருக்கு மங்களம் முப்பொழுதுந் தொழுவார்க்கு மங்களம் மூவாசை வென்றவர்க்கு மங்களம் முப்பத்து முக்கோடி தேவர்க்கும் மங்களம் முனிவர்க்கும் இருடிகட்கும் மங்களம் தன்னைத் தன்னா லறிந்தவர்க்கு மங்களம் ஐயமிட் டுண்பவர்க்கு மங்களம் ஐயமில்லாச் சாதுக்கட்கு மங்களம் ஆதியந்த மில்லாத ஆன்மாவுக்கு மங்களம் சீர்காழித் தேவக்கும் மங்களம் திருநாவுக் கரசருக்கு மங்களம் சீர்பெருகு சுந்தரர்க்கு மங்களம் திவ்விய மாணிக்கர்க்கு மங்களம் எங்குந்தங்கும் உயிர்களுக்கு மங்களம்
மங்களம் ஜெய மங்களம் மங்களம் ஜெய மங்களம்
மங்களம் ஜெய மங்களம் மங்களம் ஜெய மங்களம்
ஆதியந்த மில்லா அப்பனுக்கு மங்களம் சோதிவடி வாயுள்ள சுவாமிக்கு மங்களம்
ஆன்மா நித்தியமென்ற ஆன்றோர்க்கு மங்களம் தேன்போ லுருசிக்குஞ் சிவனார்க்கு மங்களம்
30

Page 20
காண்பதெல்லாங் கடவுளாய்க் காண்பார்க்கு மங்களம் நாண்மல ரெடுத்துப்பூசை பண்ணுவோர்க்கு மங்களம்
பொறிவழிபோ யலையாத புண்ணியர்க்கு மங்களம் நெறிவழியே செல்கின்ற நிருபருக்கு மங்களம்
நாமறியோ மென்றுசொல்லும் நாதனுக்கு மங்களம் உண்மை முழுதுமென்ற வுத்தமர்க்கு மங்களம்
தன்னைத் தன்னாலறிந்த தாபதர்க்கு மங்களம் அன்னைபிதாக் குருவான அப்பனுக்கு மங்களம்
மண்ணைப்பெண்ணை மதியா மாதவர்க்கு மங்களம் வண்ணைநகள் வாழும்வைத் தீசனுக்கு மங்களம்
திண்ணனென்ற பேர்கொண்ட அப்பனுக்கு மங்களம் சண்முக நாதனுக்குஞ் சங்கரற்கும் மங்களம்
விண்ணில்விளங்குஞ் சூரிய சந்திரர்க்கும் மங்களம் எண்ணிலடங் காவுயிர்கள் அத்தனைக்கும் மங்களம்
நித்தியகர்மந் தவறாத நின்மலர்க்கு மங்களம்
பத்துப்பாட்டும் படிப்போர்க்குங் கேட்போர்க்கும் மங்களம்10
மங்களம் ஜெய மங்களம் மங்களம் ஜெய மங்களம்
31

“சிவதொண்டு செய்வார்கள் திசையெட்டு மாளுவார் சிவதொண்டு செய்வார்கள் சென்மமல நீங்குவார் சிவதொண்டு செய்வார்கள் தேவரையு மேவல்கொள்வார் சிவதொண்டு செய்வார்கள் செத்துப் பிறவார்கள்’
என்னும் திருக்கூற்றுகளுக்கு அமைய வாழ்ந்த தொண்டர் தம்பு அவர்களாவார். பிள்ளையார் பக்தனாகிய இவர்கள் சிறுவயதினிலேயே “விநாயகர் அகவலை’ மனனஞ் செய்து விநாகரை அர்ச்சித்து வரும் பொழுது
“குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திரமிது பொருளென, வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளி”
எனும் அடிகள் இவர்களின் மனதில் மிகவும் பதிந்தன. குரு வொன்றைத் தேடிய இவர்கள் சிவயோகசுவாமிகளின் திருவருளை வேண்டி நின்றார்கள் முதற்சந்திப்பில் “இதோ நான் கூட்டுகின்றேன். இதற்கு இறைவன் கூலிதருவார்’ என சுவாமிகள் கூறினார்கள். இத் திருக் கூற்றுக்கமைய சிவதொண்டு செய்வதே தமது குறிக்கோளாகக் கொண்டார் சுவாமிகளுக்கும் இவர்களுக்கும் உள்ள தொடர்பை முற்பக்கங்களில் காணப்படும் கட்டுரையில் காண்க.
சுவாமிகள் ஸ்தாபித்த சிவதொண்டன் நிலையத்தில் தொண்டாற்றுவதில் மிகவும் ஈடுபாடு உடையவர். சிவதொண்டன் நிலையத்தில் நடைபெறும் மாதாந்தயாகம்,கால்கோள் விழா, திருவாதிரை, மகாசிவராத்திரி, திருவடிப்பூசை முதலியவற்றையும் நல்லூர்த் தேரடியில் நடைபெறும் மாதாந்த ஆயிலியம், தேர், தீர்த்தத் தினங்களில் நடைபெறும் பூசைகளையும் சிறப்பாகவும் பக்தி பூர்வமாகவும் நடாத்துவதற்கு பெரும்பங்காற்றி வந்தார். அன்றியும் இவற்றிற்குத் தேவையான பொருள்களைப் பெறுவதற்கும், பூசைகளின்
32

Page 21
முதல்நாளே நிலையத்தில் வந்து நின்று சிரமத்தைப்பாராமல் ஆயத்தங்கள் செய்வதில் ஈடுபடுவார். உணவுப்பொருள்கள், எரிபொருள்கள் பெறுவதில் கஷடமான நேரங்களில் இரவு பகல் எனபாராது அங்குமிங்கும் அலைந்து தேடியே கொண்டு வந்து விடுவார்கள்.
யாழ் குடாநாட்டவர்கள் தம்வீடுவாசல்களைவிட்டு கோயில்களிலும் இல்லங்களிலும் தஞ்சம் புகுந்த காலத்தில் சிவதொண்டன் நிலையத்தில் தங்கியிருந்து திருவடிகளுக்கு பூசை செய்து வந்தார்கள், பின்பு அவர்களே பல சிவதொண்டன் நிலையக் கடமைகளைப் பொறுப்பேற்றுத் திறம்படச் செய்து வந்தார்கள். சுகவீனமுற்றகாலத்திலும் தனது சுகவீனத்தை கவனியாது சிவதொண்டாற்றி வந்தார்.
சிறந்த சமூகத் தொண்டனாகவும் தொண்டாற்றி எல்லோருடைய அன்பையும் பெற்றிருந்தார். எட்டுத்திசைகளிலும் உள்ள பலரை தன்பால் ஈர்த்துச் சிவதொண்டையே செய்து சென்மமலம் நீங்கப்பெற்று செத்துப் பிறவா நிலைஎய்தியுள்ளார். வெள்ளிக்கிழமையும் ஏகாதசித்திதியன்றில் இப்பேறு பெற்றுள்ளார்.
இந்நிலையையடைந்த சிவதொண்டரை குடும்பத்தினர் பிரார்த்தித்துவணங்கி, அவர்களின் உயர்ந்த வாழ்க்கை நெறிகளைப் பின்பற்றித் தொண்டுகளாற்றி சீரும் சிறப்புடனும் வாழப் பிரார்த்திப்போமாக.
நாமும் அந்நெறியில் வாழக் குருநாதனின் தாள்களை வணங்குவோமாக.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
அன்பன்
33

அருள்நெறி தழைக்கும் அரும்பேரூராம் திருநிறை புங்குடுதீவினில் தோன்றி பெரியார் யோகர் சீடனாய் மாறி அரும்பெரும் தொண்டினை ஆற்றிய செம்மலாம் ஏரம்பு தம்பெனும் எழிலார் மகனை அன்பர்கள் நண்பர்கள் அனைவரும் கூடியே அன்ம ஈடேற்றம் அடைந்திடவென்று போற்றிப் புகழ்ந்து பூசித்து நின்று வாழ்த்தி வணங்கும் வான்புகழ் குறும்பா
ஐய! நீ செய்த அரும்பெரும் தொண்டினை எண்ண எண்ண இனிக்குது நெஞ்சம் ஊரினைத் துறந்து உறவினை விடுத்து வெள்ளுடை தாங்கி வேதங்கள் ஒதி நீறது அணிந்து நிமலனைப் பணிந்து சிவப்பெரும் தொண்டனாய் சீரிய பண்பனாய் ஆண்டுகள் பற்பல ஆற்றிய சேவையை சிவதொண்டன் நிலையம் சீவியம் மட்டும் நினைந்து நினைந்து நிம்மதி கானும் குழந்தை போலுளமும் குளிர்ந்த நற்பார்வையும் பசியினில் வருவோர் பசிப்பிணி போக்கியும் தாயினும் நல்லதோர் தயவினைச் சொரிந்து பக்குவத்தோடு பலரையும் போற்றி பயன்தருகதைகள் பற்பல சொல்லி சோதிட அறிவினால் சோர்வினைப்போக்கி வாழ்வது தந்தாய் வானுலகெய்துவாய்! பன்னிரண்டாம் வீடெனும் மோட்ச ஸ்தானத்தில் வியாழனும் கேதுவும் விரும்பி விற்றிருக்க அற்றது பிறப்பென அருளுவர் ஞானிகள் ஆதலின், ஐய! அடைந்தனை சிவனடி தெய்வமானாய்! தீங்கினி ஏது? வானுலகெய்த வானவர் போற்றிட நீ எமைக் காத்திடநின் அருள் சொரிவாய்!
நினைவில் நெகிழும் நெஞ்சங்கள்
டாக்டர் சி. முகுந்தன் சி. இரத்தினவடிவேல் சத்திர சிகிச்சைப் பகுதி 135/1, இராசாவினதோட்ட வீதி, யாழ். போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம். யாழ்ப்பாணம்.
34

Page 22
புங்குடுதீவில் யோக சுவாமிகளைக் குருவாகக் கொண்ட
20ஆம் நூற்றாண்டில் அரைநூற்றாண்டு கால புங்குடுதீவு வரலாற்றில் தன்னை இணைத்துக் கொண்ட அண்ணர் தம்பு சுவாமியார் என்றே மக்களிடம் தன்னைப்பதித்துக் கொண்டவர்.
கூட்டுறவாளனாகப் பணியாற்றிய அண்ணர் சமுதாயக் கூட்டுறவு கொண்டவராக வாழ்வாங்கு வாழ்ந்தார். அரசியல் சமூக, சமயப்பணிகளின் முன்னோடிகளில் ஒருவராகி ஊராட்சி மன்றில் உழைத்தார்.
வேத உபாங்கமான சோதிடக்கலையிலும் நிபுணனாகி, ஜாதகங்கணிப்பதிலும் சோதிடம் சொல்வதிலும் மக்களுக்கு பயன்கருதாப் பணிபுரிந்தார்.
வாஸ்த்துக் கலைகற்று மனையடி சாஸ்திர விதிகள் கொண்ட புதுமனைகள் கட்ட இடம் கோலி தலைமுறைகள் வாழத் தன்னிகரில்லாத் தொண்டு புரிந்தார்.
இலங்கை இந்திய யோகாசனக் கலை நிபுணர்கள் வியக்க நவுலி போன்ற மிகக் கடினமான யோகாசனங்களை மிக எளிதாகச் செய்து காட்டிப் பாராட்டும், பரிசிலும் பெற்று யோகாசன மன்னனாகத் திகழ்ந்தார்.
நீச்சல் வீரர் நவரெத்தினசாமியின் பயிற்சிக் கொத்த நீரில் மிதக்கும் நீச்சல் கலையில் எங்கள் அண்ணர் வல்லவனாகத் திகழ்ந்தார்.
அறிவியல், சோதிடம், விஞ்ஞானம், சாஸ்த்திரம், புராணம், இலக்கியம், தத்துவம், வைத்தியம், இதிகாசம், வரலாறு ஆகிய துறைகள் சார்ந்த அற்புத நூல்கள் கொண்ட அவரது நூலகம் ஐம்பது வருடங்களாக அவரால் சேகரிக்கப்பட்ட ஒரு கலைக் களஞ்சியமாகும்.
சிவனடியார்களும் சாதுக்களும் வறியவர்களும் அவரை
எப்பொழுதும் சூழ்ந்து நிற்பர். அவர்களுக்கு உணவு, உடை, பணம்
கொடுப்பதில் தனது பற்றாக்குறையைக் கூட மறந்து செய்வார். பூர்வீக
சொத்துக்களை விற்றார். குடும்ப ஆபரணங்களை விற்றார். ஆனால்
கொடையை விடவில்லை.
35
 

பூர்வ புண் ணியத் தால் 1945 ஆம் ஆணர் டளவிலி யோகசுவாமிகளைப் பின் தொடர்ந்தார். அருகிருந்து ஆசிபெற்றார். குருவாக வழிபட்டார், புங்குடுதீவு மண்ணில் யோக சுவாமிகளின் நற்சிந்தனையை விதைத்தார். யோகசுவாமிகளின் ஆலயமும் அறக்கட்டளையும் உருவாக வழிகாட்டி வைத்தார்.
யாழ்ப்பாணம் சிவதொண்டன் நிலையத்தில் யோகசுவாமிகளின் திருவடிகளை வழிபட அநேக மக்களுக்கு வழிகாட்டி சிவதொண்டனாக அங்கு வாழ்ந்தார்.
அண்ணா!
உன் பக்கத்தில் பல ஆண்டுகள் படுத்துறங்கிய நாட்களும் நான் பெற்ற அனுபவங்களும் நாள் தோறும் நான் கண்ட காட்சிகளும் கண்கள் சொரிய நிழலாடுகிறது. நீ அதிகாலை மூன்று மணிக்கே தியானத்தில் அமருங்காட்சி விடியுமுன் வீட்டு விறாந்தையில் சோதிடம் கேட்க ஒருகூட்டம் நினைந்த காரியர் கேட்க ஒரு கூட்டம் காணி அளக்க சிலபேர்- வீடு பிடிக்க சிலர் அன்றைய பட்டினியைப் போக்கக் கைமாற்றுக் கேட்போர் சிலர் பிணக்குகள் தீர்க்கவெனப் பலபேர் நல்ல நாள் கேட்க ஒருசிலர் இத்தனை தேவைகளுக்கும் மக்கள் நாள் தோறும் நாடிவந்த சமுதாய மனிதன் நீ பழமரமாய் நின்றாய் - பனந்தோப்பாய் வாழ்ந்தாய் இன்று மறைந்தாய்
புங்குடுதீவு இதுவரை கண்ட ஈடுசெய்யமுடியாத இழப்புக்களில் உன் இழப்பும் ஒன்றாகி விட்டது. எங்கள் குருநாதன் இணையடியில் சாந்தி பெறுவாயாக!
குடும்பத்தினர் அனைவரின் துயரத்திலும் புங்குடுதீவு சர்வோதய நிலையமும் அதன் பணியாளர்களும், புங்குடுதீவு மக்களும் பங்கு கொள்கின்றோம்.
சர்வோதயம் க. திருநாவுக்கரசு புங்குடுதீவு - 3. 98/1, பருத்தித்துறை வீதி, 01-04-2000 u JTpüLIT600TLb.
36

Page 23

அச்சகத்தாருக்கும் எம நவில்கின்றோம்.
தவளகிரி 433, 2வது டிவிசன், மருதானை, கொழும்பு - 10. தொ.பே : 695426
|് ീ |ീ6
எமது குடும்பத்தலைவர் சுகவீனமுற்று இருந்த காலத்தில் உதவிய யாழ் கொழும்பு வைத்திய சேவையாளர்களுக்கும், உடனிருந்து உதவிய நண்பர்களுக்கும் 31-03-2000 அன்னார் இறையடி யெய்தியதும் தொலைபேசி, தொலைநகல், தந்திகள் முலம் ஆறுதல் செய்திகள் வழங்கியோருக்கும் யாழ் பத்திரிகைகள் முலம் செய்திகள் வெளியிட்டவர்கட் க்கும், அஞ்சலி செலுத்தியோருக்கும், இன்றைய ஆத்மசாந்திப் பிரார்த்தனையில் கலந்து கொண்டவர்களுக்கும், இந்நூலை குறுகிய காலத்தில் சிறப்பாக அச்சிட்டு எமக்களித்த கொழும்பு - கைதடி அஷ்டலசுஷ்மி
འདོད༽
சிவமயம்
து உளப்பூர்வமான நன்றியை
1. குடும்பத்தினர்.

Page 24


Page 25
டேசிகேஷ்மீ பதி జీవౌ தோ,

ப்ேபகம் சிகாழும்பு - டி.
Lu = 300