கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நினைவு மலர் (ஆறுமுகம் கணபதிப்பிள்ளை)

Page 1
அமரர். ஆறுமுகம்
(கனேச அந்தியேட்டி தீ ੨੨
 

பம் |
ապա ալ
*、
W
航
魯
काळ्या =
கணபதிப்பிள்ளை
ரத்தினம்) நின வெளியீடு

Page 2

அளவெட்டியைப் பிறப்பிடமாகவும்,
குளப்பிட்டியை வசிப்பிடமாகவும்
கொண்டு வாழ்ந்து மறைந்த அமரர் திரு ஆறுமுகம் கணபதிப்பிள்ளை
அவர்களின்
சிவபதப் பேறு குறித்த
நினைவு மலர்
O8 - O8 - 2 OO4

Page 3
அறிவில் ஆற்றலில் சிறந்து
இல்லறத்தை இனிய நல்லறமாய் இணைத்து
உள்ளத்தால் உயர்ந்து, பல்லோரும் போற்ற வாழ்ந்து
கண்ணிறைந்த கணவனாய், நல்லறிவூட்டிய
தந்தையாய்
மதிப்புள்ள மாமனாய், பெருமைக்குரிய பேரனாகத்
திகழ்ந்த எங்கள் தெய்வத்திற்கு
இம் மலரைச் சமர்ப்பணமாக்குகின்றோம்
மனைவி, பிள்ளைகள்,
தெகிவளை மருமக்கள்,
பேரப்பிள்ளைகள்.
దీe=Be:B<>>>>>కe==
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

MuSueSJLLLSLSS0L0LYSS00LLSu0LSS000uS00O00S00OOLLSSuiOiO 量L சிவமயம்
அமரர் திரு.ஆறுமுகம் கணபதிப்பிள்ளை (கணேசரத்தினம்)
独
| s
徽
E.
鞑
தோற்றம் மறைவு 3O-O-19. O9-O-2004
திதி வெண்பா தாரன வருட ஆணித் திங்கள் சேரவுரு அபரபட்ச அட்டமித் திதியே ஆறுமுகம் கணபதிப்பிள்ளை நன்றே இறையடிப் பேறுபெற்றார் அன்று

Page 4

அமரர். ஆ. கணபதிப்பிள்ளை அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்
கணபதிப்பிள்ளை அவர்களின் வாழ்க்கை வரலாற்றை இங்கு
மிகவும் சுருக்கமாகக் குறிப்பிடுகின்றோம்.
இ மாதம் 30ம் திகதி ஆறுமுகம் கண்மணியம்மாதம்பதிகளுக்கு மூத்த
O A. A. \il \l f
\l \ l |A \l
|A
\il

Page 5
TJJLLLaLJJJJJJLLaLJJLHJLLJJLaLJJLLLJJJLLLLLJL 曾 அரச சேவையில் கொழும்பு, திருகோணமலை, முருங்கன், 煞 யாழ்ப்பாணம் சாவகச்சேரி, நாவற்குழி போன்று இலங்கையின் V பல பாகங்களிலும் சேவையாற்றியதால் தமிழ், ஆங்கிலம், | சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். () இலங்கையின் எப்பகுதியில் சேவையாற்றினும் \
அளவெட்டிக் கும்பளாவளைப் பிள்ளையாரின் வருடாந்த
த
திருவிழாவின் போது நேரடியாக வந்து பிள்ளையாரை வணங்கத் தவறுவதில்லை. வினைதீர்க்கும் விநாயகப் பெருமானிடம் அத்தகைய பெரும் பக்தி கொண்டிருந்தார்.
திருமணப் பூங்காவில் அரசசேவையில் இருப்பவர்கள் மீது
மணப்பருவ மடைந்த கன்னியரதும், அவர்களது பெற்றோரது
LD
Ա)]
கண்கள் வட்டமிடுவது அன்றும் இன்றும் நாம் கண்டது
கண்டுகொண்டிருப்பதுமாகும். கடவுளே திருமண மேடைை அமைத்துக் கொடுத்து இன்னார்க்கு இன்னார் எ எழுதிவைத்து விடுவார். அந்த எழுத்துப்படி
கணபதிப்பிள்ளை அவர்களுக்கும் பொன்னையா-சிவஞா
(U5
ம்
«ð
தம்பதிகளின் ஏகபுத்திரி விஜயலக்சுமிக்கும் 1953 இல் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தைத் தொடர்ந்து தனிக்குடித்தனம் நடத்தும் நாக்கில் இவர் அளவெட்டியிலிருந்து குளப்பிட்டி வந்து
G
G
AsAs
சர்ந்தார். வளமாக வாழ வடிவானதோர் வீடொன்றைக் கட்டி விஜய அகம்” எனப்பெயரிட்டு கண்ணை இமை காப்பது போல் தனது குடும்பத்தைக் காத்து வந்தார். திருமண உறவின் பலனாய் நான்கு புத்திரிகளையும் ஒரு புத்திரனையும் பெற்றார்கள்.
ள்ளைகளுக்கு முறையே தேவகி சுந்தரகணேஷ், சித்ரா, சந்திரவதனி, சுஜீதா என்று பெயர் சூட்டினார்.
O O f A. il \il
|A l \l |
\ \il l |A \l 岛
\ |A |A (O
JJJLLJJJLLJJJLLLJJJJLLLLJJLLLJJJLLLLJJLL
6
 

C
உழைத்தவர், உழைத்துக் கொண்டிருப்பவர். சுந்தரகணேஷின் பங்களிப்பு குடும்ப வளர்ச்சிக்கு பேருதவி வழங்கியதோடு அமரர் E கணபதிப்பிள்ளை அவர்களுக்கு ஆறுதலையும் மனமகிழ்ச்சி யையும் அளித்ததென்பது உண்மை. l இவர் தனது நான்கு புத்திரிகளுக்கும் ஏற்ற வரன்களைத் 煞 தேர்ந்தெடுத்துத்திருமண பந்தத்தில் இணைத்து வைத்தார். மூத்த இரு மருமகன்களும் வங்கி உத்தியோகஸ்தர்களாகவும், அடுத்த இருவரும் வெளிநாட்டில் தொழில் புரிபவர்களாகவும் உள்ளனர்.
இதன் பேறாய் விசாகன், மிதுஷா,யதுஷியா, துஷாந்தன், தாரணி,
\ \ |
\il \ |A l \il \
\l \ |
\ l
\
ஹரிணி, ஆருஷா ஆகியோர் ஏற்றிப் போற்றும் பெருமைக்குரிய
\ பேரனானார்.
குளப்பிட்டியில் வாழும் காலத்தில் தனது வளவில்
அமைந்திருந்த பிள்ளையார், வைரவர் கோயிலைத் தினமும்
ஆண்டின் பிற்பகுதியில் அமைதிகாக்க வந்த படையின் நடையால் பாதிக்கப்பட்டது. இவரது வீடுகள் இரண்டும் பாதிப்புக் குள்ளானது சகல பொருட்களும் அழிக்கப்பட்டன. ܫܼ

Page 6
இந்நிலையில் முதிர்நிலைக்கால நோய்களும் மெது மெதுவாக இவருடன் உறவாட முற்பட்டன. இருந்தபோதும் 1995 ரை தானாகவே கடைக்கு நடந்து சென்று தனக்கு வையானவற்றை வாங்கி வருவார். இதில் விசேட செய்தி என்னவென்றால் எது வாங்க மறந்தாலும் தினமும் காலையில்
உதயன்” பத்திரிகையை வாங்கிப் படிக்க மறப்பதில்லை.
1995ம் ஆண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட பெரும் போரால் தனது சொந்த ஊரை, உறவினரை, வீட்டை, கோலிலை விட்டுப் பிரிந்து இடம் பெயர்ந்தோர் பட்டியலில் இடம் பிடித்து முதலில்
வவுனியாவிலும் பின்னர் கொழும்பிலும் வாழ்ந்தார்.
இடப்பெயர்வோடு உடல் நிலை மேலும் தளர்வடைந்தது. மருந்தும் மாத்திரையுமாக சில ஆண்டுகள் வாழ்ந்த போதிலும் தன்னால் யாருக்குமே இடைஞ்சல் ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தில் மிகவும் கவனமாக இருந்தார்.
இறுதியில் ஒரு வார காலம் கடுமையாக நோயால் பாதிப்புற்று 09 - 07 - 2004 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்
He is a man of divine worth
Who lives in ideal home on earth
08-08-2004 குடும்பத்தார்.
 

தோத்திரப் பாடல்களும் பயனும் திருமுறைப் பாடல்கள் சைவர்களாகிய எமக்குக் கிடைத்த பெருஞ் செல்வம் என்றே கூறலாம். பெரிய புராணத்தில் 4286 ருத்தப்பாடல்கள் மூலம் அடியார் பெருமைகளைத் திறம்பட
டுத்துரைத்த பெருமை தெய்வச் சேச்கிழாருக்கு உண்டு.
உலகெலாம்” என்று தொடங்கி "உலகெலாம்" என்று நிறைவு செய்துள்ளார். உகரத்தில் தொடங்கி அகரத்தை உட்படுத்தி மகரமெய்யில் நிறைவு செய்கின்றார். காவியம் முழுவதுமே பிரணவ வடிவாக அமைந்திருப்பதையும் புரிந்து கொள்ளலாம்.
பன்னிரு திருமுறைகளிலும் பதினெண்ணாயிரத்துக்கும் மேலான பாடல்களைக் காணலாம். இவற்றுள் சிலவற்றையாவது பொருள் தெரிந்து பிழையின்றி மனனம் செய்தல் வேண்டும். "சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர்
சிவபுரம்” என்று மணிவாசகப்பெருமான் குறிப்பிட்டுள்ளார்.
தோத்திரப் பாடல்களைப் பாராயணம் செய்வதன் மூலம்
னவமைதி ஏற்படும் , மங்களம் பொங்கும், வாழ்வு வளம்
பெறும் என்று எம்முன்னோர் கூறுவர்.
கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்? (குறள் 2)
The lore is vain which does not fall At His good feet who knoweth all

Page 7
@
V திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் அருளியது
煞 (முதலாம்/இரண்டாம்/மூன்றாம் திருமுறைகள்)
V தோடுடைய செவியன் விடையேறியோர்துவெண் மதிசூடிக் காடுடைய சுடலைப்பொடி பூசியென் உள்ளங்கவர்கள்வன்
\ ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரமேவிய பெம்மான் இவன் அன்றே
மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக்காவுளான்
உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ
\
l
|
\l
\
( சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ்
\
煞 சடையா யெனுமால் சுரணியெனுமால்
V விடையா யெனுமால் வெருவா விழுமால்
மடையார் குவளைமலரும் மருகல்
உடையாய் தகுமோ விவஞண் மெலிவே
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே
வேயுறு தோளிபங்கன் விடமுன்ட கண்டன்
மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்
உளமே புகுந்த வதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டுமுடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
O C
|A \il \ l
\il \ |A
W மிக நல்ல வீணை தடவி
l \ | |A \
l |A |A O
 

இடரினுந் தளரினு மெனதுறுநோய் தொடரினு முனகழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோ எமை யாளுமாறிவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுனதின் னருளாவடுதுறை யரனே.
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன் பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும் அண்ணாமலை தொழுவார்வினை விழுவாவண்ணம் அறுமே. என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே யிருங்கடல் வையத்து முன்னம் நீபுரி நல்வினைப் பயனிடைமுழுமணித் தரளங்கள் மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனை வாயாரப் பன்னியாதரித் தேத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே
மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை
வரிவளைக் கைம்மட மானி பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழலுருவன் பூதநாயகனால்
வேதமும் பொருள்களும் அருளி அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த
ஆலவா யாவதும் இதுவே.
காத லாகிக் கசிந்துகண் ணிர்மல்கி ஒது வார்தமை நன்னெறிக் குய்ப்பது வேத நான்கினு மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே

Page 8
SoroO திருநாவுக்கரசு நாயனார் அருளியது (நாலாம்/ஐந்தாம் /ஆறாம் திருமுறைகள்)
சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை
பாடல் மறந்தறியேன் நலந்தீங்கினும் உன்னை மறந்தறியேன் உன்னாமம்
என்னாவில் மறந்தறியேன் உலந்தார் தலையிற்பலி கொண்டுழல்வாய் உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய் அலந்தேன் அடியேன் அதிகைக்கெடில
வீரட்டானத்துறை அம்மானே
மாதர்ப் பிறைக்கண்ணி யானைமலையான் மகளொடும் பாடிப் போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவாரவர்பின் புகுவேன் யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது காதன் மடப்பிடியோடுங்களிறுவருவன கண்டேன்
கண்டே னவர்திருப்பாதங் கண்டறியாதன கண்டேன்
பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை ஆவினுக் கருங்கலம் அருணஞ் சாடுதல் கோவினுக் கருங்கலம் கோட்டம் இல்லது
நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே
சொற்றுனை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுனைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணையாவது நமச்சிவாயவே
区北区エ○三区エでで区北区コでで以北ふエで区エ○区ギらrでビで区北区エでで区北区エ○で
12

応。ーでトで以以ーでトで区北区エで本でふ北区エで以エでトで区北江でトで区北ふエ○区北区エ○○
குனித்த புருவமுங் கொவ்வைச் செவ்வாயிற் குமின் சிரிப்பும் ! பனித்த சடையும் பவளம் போல் மேனியிற் பால்வெண்ணிறும் இனித்த முடைய எடுத்தபொற்பாதமுங் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே
மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிளவேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே
நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே எந்நாளுந்துன்பமில்லை -
தாமார்க்குங் குடியல்லாத் தன்மையான
சங்கரன் நற்சங்கவெண் குழயோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்மலர்ச்சே வடியிணையே குறுகினோமே
திருவேயென் செல்வமே தேனே வானோர்
செழுஞ்சுடரே செழுஞ்சுடர்நற் சோதீமிக்க உருவேயென் உறவேயென் ஊனே ஊனின்
உள்ளமே உள்ளத்தின் உள்ளே நின்ற கருவேயென் கற்பகமே கண்ணே கண்ணிற்
கருமணியே மணியாடு பாவாய் காவாய் அருவாய வல்வினைநோய் அடையா வண்ணம்
ஆவடுதண்துறையுறையும் அமரர்ஏறே
ܒ
以区エで本で区北区エで二で以北区エで本で区北区エで区エでビで区北区エでーで区北区エ○区北区エ○
13

Page 9
sTeYSLKLKHLS00LSLLLLLLLLuALLKKYSSLeLJLLKLLJLLLYJLL0LLuOLLJLSJ
சுந்தரமூர்த்தி நாயனார் அருளியது
(ஏழாம் திருமுறை) பித்தா பிறைசூடிபெருமானே அருளாளா எத்தான் மறவாதேநினைக் கின்றேன் மனத்துன்னை வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்
நல்லூர் அருட்டுறையுள்
அத்தா உனக்காளாய் இனி அல்லேன்எனல் ஆமே, பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே
நத்தார்படை ஞானன்பசு ஏறிந்நனை கவிழ்வாய் மத்தம்மத யானை உரி போர்த்தமண வாளன் பத்தாகிய தொண்டர்தொழு பாலாவியின் கரைமேல் செத்தாரெலும் பணிவான்திருக் கேதீச்சரத்தானே மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தான் மிகவாடி
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
வாளாங் கிருப்பீர் திருவாரூரீர் வாழ்ந்து போதீரே
மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப்
பாத மேமனம் பாவித்தேன் பெற்ற லும்பிறந்தேன்இ னிப்பிற
வாத தன்மைவந் தெய்தினேன் கற்றவர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடி நற்ற வா உனை நான்மறக்கினுஞ்
சொல்லு நாநமச்சி வாயவே.
ふ北をエ○ー以エでビで区二区エでビで区北区エで区エ○二区エでーで区北以エーで区ー以エでビで
14

மாணிக்கவாசக சுவாமிகள் அருளியது (எட்டாந்திருமுறை) கோயில் சுடுகாடு கொல்புலித்தோனல்லாடை தாயுமிலி தந்தையிலிதான்றணியன் காணேடீ தாயுமிலி தந்தையிலிதான்றணியனாயிடினும் காயிலுலகனைத்துங்கற்பொடிகாண் சாழலோ
பாரொடு விண்ணாய்ப் பரந்தவெம் பரனே
பற்றுநான் மற்றிலேன் கண்டாய் சீரொடு பொலிவாய் சிவபுரத் தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே ஆரொடு நோகேனார்க்கெடுத்துரைக்கேன்
ஆண்டநீ யருளிலை யானால் வார்கடலுலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருகவென் றருள்புரியாயே.
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்ததைலப் புலையனேன் றனக்குச் செம்மையே யாய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுத்தருளுவதினியே
பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும் பெண் சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான் விண்சுமந்த கீர்த்தி வியமண்டலத்தீசன் கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை மண்சுமந்து கூலிகொண் டக்கோவான் மொத்துண்டு புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காணம்மானாய்

Page 10
江北区エで国で区北区エ○以北区工○北区エで区エ○北区エでで区北区エでリで区北区エで中で திருவிசைப்பா பாடல்கள்
(ஒன்பதாம் திருமுறை)
அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட
அங்ங்னே பெரியநீ சிறிய
என்னையாள் விரும்பி யென்மனம் புகுந்த
எளிமையை யென்றுநான் மறக்கேன் முன்னமால் அறியா வொருவனாம் இருவா
முக்கணா நாற்பெருந்தடந்தோள் கன்னலே தேனே யமுதே கங்கை
கொண்டசோ ளேச்சரத்தானே
கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணைமா கடலை
மதிப்பவர் மன மணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்ற எம் சிவனைத்
திருவீழி மிழலை வீற்றிருந்த கொற்றவன் தன்னைக் கண்டுகண்டுள்ளங்
குளிரவென் கண்குளிர்ந்தனவே
ஒளிவளர் விளக்கே உலப்பிலா வொன்றே உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வே தெளிவளர் பளிங்கின் திரள் மணிக்குன்றே! சித்தத்துள் தித்திக்கும் தேனே! அளிவளர் உள்ளத்தானந்தக் கனியே! அம்பலம் ஆடரங்காக வெளிவளர் தெய்வக் கூத்துகந்தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே
>>EDEB>>EEB>>E-DI-BIEB>I>ED->T-TBESTE
16

திருப்பல்லாண்டுப் பாடல்கள்
மன்னுகதில்லை வளர்கநம் பக்தர்கள்
வஞ்சகர் போயகலப் பொன்னின் செய் மண்டபத்துள்ளே புகுந்து
புவனியெல்லாம் விளங்க அன்னநடை மடவாள் உமைகோன்
அடியோமுக் கருள்புரிந்து பின்னைப் பிறவி அறுக்க நெறிதந்த
பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே
குழலொலி யாழொலி கூத்தொலி
ஏத்தொலி எங்கும் குழாம்பெருகி விழவொலி விண்ணளவுஞ் சென்று
விம்மி மிகுதிரு வாரூரின் மழவிடை யாற்கு வழிவழி
யாளாய் மணஞ்செய் குடிப்பிறந்த பழஅடி யாரொடுங் கூடி
எம்மானுக்கே பல்லாண்டு கூறுதுமே
பாலுக்குப் பாலகன் வேண்டி
அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான் மாலுக்குச் சக்கரம் அன்றருள்
செய்தவன் மன்னியதில்லை தன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலமே இடமாகப் பாலித்து நட்டம் பயிலவல்
லானுக்கே பல்லாண்டு கூறுதுமே.

Page 11
திருமூலர் - திருமந்திப் பாடல்கள் (பத்தாம் திருமுறை)
யாவர்க்கு மாம் இறை வற்கொரு பச்சிலை யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை யாவர்க்கு மாம் உண்ணும் போதொரு கைப்பிடி யாவர்க்கு மாம்பிறர்க்கின்னுரை தானே
அன்பு சிவம் இரண் டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவதாரும் அறிகிலார் அன்பே சிவமாவதாரும் அறிந்த பின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம் வள்ளற் பிரானார்க்கு வாய்கோபுரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கங் கள்ளப் புலனைந்துங் காளாமணி விளக்கே
படமாடக் கோயில் பகவற்கொண் ரீயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கங் காகா
நடமாடக் கோயில் நம்பர்க்கொண்றியில்
படமாடக் கோயில் பகவற்க தாமே.
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே சென்றே புகுங்கதியில்லைநுஞ் சித்தத்து நின்றே நிலைபெற நீர்நினைந்துய்மினே
சிவசிவ என்கிலர் தீவினையாளர் சிவ சிவ என்றிடத் தீவினை மாளுஞ் சிவ சிவ என்றிடத் தேவருமாவர்
சிவ சிவ என்னச் சிவகதி தானே
 

காரைக்காலம்மையார் பாடல்கள் (பதினொராம் திருமுறை)
இடர்களையாரேனும் எமக்கிரங்கா ரேனும் படரு நெறிபணியாரேனுஞ் சுடருருவில் என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க் கன்பறா தென்னெஞ்சவர்க்கு காலனையும் வென்றோம் கடுநரகங்கை கழன்றோம் மேலை இருவினையும் வேரறுத்தோம் - கோல அரணார் அவிந்தழிய வெந்தீயம் பெய்தான் சரணாரவிந்தங்கள் சார்ந்து சேக்கிழார் நாயனார் அருளிய பெரிய புராணம் (பன்னிரண்டாம் திருமுறை)
உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன் நிலவுலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.
எடுக்கு மாக்கதையின்றமிழ்ச் செய்யுளாய் நடக்கும் மேன்மை நமக்கருள் செய்திடத் தடக்கை யைந்துடைத் தாழ்செவி நீண்முடிக் கடக்க ளிற்றைக் கருத்து விருத்துவாம்
ஆதியாய் நடுவுமாகி யளவிலா வளவு மாகிச்
சோதியா யுணர்வு மாகித் தோன்றிய பொருளுமாகிப்
பேதியா ஏகமாகிப் பெண்ணுமாய் ஆணுமாகிப் போதியா நிற்குந் தில்லைப் பொதுநடம் போற்றிபோற்றி

Page 12
என்றும் இன்பம் பெருகும் இயல்பினால் ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட மன்று உலார் அடியார் அவர் வான்புகழ்
நின்றது எங்கும் நிலவி உலகெலாம்
விநாயகர் பாடல்கள்
1. திருவாக்கும் செய்கருமங்கைக்கூட்டும் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக்
காதலார் கூப்புவர்தங் கை.
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாந் தன்மையினாற் கண்ணிற்பணி மின் கனிந்து. . یغۂ, பல்லவி ཉ
விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞான முதல்வனே (விநாயகனே)
அநுபல்லவி குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம் (விநாயகனே)
சரணம்
உமாபதியே உலகம் என்றாய் ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய் கணநாதனே மாங்கனியை உண்டாய்
கதிர் வேலவனின் கருத்தில் நின்றாய்.
 

முருகன் பாடல்கள்
அருவமு முருவமாகி அநாதியாய்ப் பலவா யொன்றாய்ப் பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகக் கருணை கூர் முகங்களாறுங் கரங்கள்பன்னிரண்டுங் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங் குதித்தன னுலக முய்ய.
அஞ்சு முகந் தோன்றி லாறு முகந் தோன்றும் வெஞ்ச மரந் தோன்றில் வேறொன்றும் - நெஞ்சில் ஒருகானினைக்கி லிருகாலுந் தோன்றும் முருகாவென்றோதுவார் முன்.
நாளென் செயுவினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந் தோளுங்கடம்பு மெனக்குமுன்னேவந்து தோன்றிடினே
விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்மைகுன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கண் முன்புசெய்த பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ்செங்கோடன் மயூரமுமே.
இறவாமற் பிறவாமல் எனையாள்சற் குருவாகிப் பிறவாகித் திரமான பெருவாழ்வைத் தருவாயே குறமாதைப் புணர்வோனே குகனேசற் குமரேசா
கறையானைக் கிளையோனே கதிர்காமப் பெருமாளே.
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் கருவாய்க் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

Page 13
以北ふエ○以区Tで中で以区エでトで区北区エで区エ○で区北ふエ○区北区エ○区北らロで甘で
சக்தி வழிபாடு
அபிராமி அந்தாதி
பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம் காத்தவளே பின்.கரந்தவளே கறைக் கண்டனுக்கு மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே.
மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த அணியே அணியும் அணிக்கழகே அணு காதவர்க்குப் பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே பணியேன் ஒருவரை நின்பத்ம பாதம் பணிந்த பின்னே
தனம் தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா மனந்தரும் தெய்வ வடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே
ஆத்தாளை அங்கள் அபிராம வல்லியை அண்டம் எல்லாம் பூத்தாளை மாதுளம் பூநிறத்தாளைப் புவி அடங்கக் காத்தாளை அங்குச பாசங்குசமும் கரும்பும் அங்கை சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே
அருட்செல்வம் செல்லத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள (குறள் 241)
The wealth of wealth is wealth of grace Earthly wealth e'en the basest has.
区北区エでトで以ミ区エでトで区北区エでで区北区エで以エ○以北区エ○区北区エでで区北区エで本で
22

தேவிகருமாரிஅம்மன் தோத்திரம்
கற்பூரநாயகியே கனக வல்லி
காளி மகமாயி கருமாரிஅம்மா பொற்கோவில் கொண்ட சிவகாமி அம்மா
பூவிருந்த வல்லி தெய்வயானை அம்மா விற்கோல வேதவல்லி விசாலாட்சி
விழிக்கோல மாமதுரை மீனாட்சி சொற்கோவில் நான் அமைத்தேன் இங்கு தாயே
சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே.
பூரீமஹிஷாஸ°ரமர்தினி ஸ்தோத்ரம்
அயி கிரிநந்தினி நந்தித மேதினி ;"
விச்வ விநோதினி நந்தனுதே கிரிவர விந்த்ய சிரோதி-நிவாஸினி
விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுறுதே! பகவதி ஹேசிதிகண்ட்ட குடும்பினி
பூரி குடும்பினி பூரிக்ருதே ஜயஜய ஹே மஹிஷாஸார-மர்தினி
ரம்யகபர்தினி சைலஸாதே!
ஸாரவர - வர்ஷிணி துர்தரதர்ஷிணி
துர்முகமர்ஷிணி ஹர்ஷரதே த்ரிபுவன போஷிணி சங்கர - தோஷிணி
கில்பிஷ மோஷிணி கோஷரதே! தனுஜ-நிரோஷிணி திதிஸ"த ரோஷிணி
துர்மத சோஷிணி ஸிந்து ஸ"தே ஜயஜய ஹே மஹிஷாஸ"ர - மர்தினி
ரம்யகபர்தினி சைலஸுதே!

Page 14
அயி ஜகதம்ப மதம்ப கதம்ப
வனப்ரிய வாஸினி ஹாஸரதே
சிகரி சிரோமணிதுங்க ஹிமாலய
ச்ருங்க நிஜாலய மத்யகதே
மதுமதுரே மதுகைடப கஞ்ஜினி
கைடப பஞ்ஜினி ராஸரதே ஜயஜய ஹே மஹிஷாஸ"ர-மர்தினி
ரம்யகபர்தினி சைலஸாதே
கமலதலாமல கோமல காந்தி
கலாகலிதாமல பாலலதே ஸகலவிலாஸ் கலாநிலயக்ரம
கேலிசலத்கல ஹம்ஸகுலே! அலிகுல ஸம்குல குவலய மண்டல மெளலிமிலத் பகுலாலிகுலே ஜயஜய ஹே மஹிஷாஸுர-மர்தினி
ரம்யகபர்தினி சைலஸ" தே!
கனகலஸத்கல விந்து ஜலைரது
ஸிஞ்சிநுதே குணரங்கபுவம் பஜதி ஸ்கிம் நசசீகுச கும்ப
தடீபரிரம்ப ஸ" காநுபவம் தவசரணம் சரணம் கரவாணி
நதாமரவாணி நிவாஸி சிவம் ஜயஜய ஹே மஹிஷாஸ"ர-மர்தினி
ரம்யகபர்தினி சைலஸுதே!
 

TJLLuJLLJJLaJHuHJLLSLL0JJLLJLLJHuHJLLaLJLHJJJHJLaLLL
திருஅருட்பா
(திரு.அருட்பிரகாச வள்ளலார்) ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும் உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும் பெருமைபெறு நினதுடிகழ் பேசவேண்டும் பொய்மை
பேசா திருக்க வேண்டும் பெரு நெறி பிடித்தொழுக வேண்டும் மத மானபேய்
பிடியா திருக்க வேண்டும் மருவு பெண் ஆசையை மறக்கவே வேண்டும் உனை
மறவா திருக்க வேண்டும் மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வில் நான் வாழ வேண்டும் தருமமிகு சென்னையில் கந்தகோட்ட த்துள்வளர்
தலம் ஓங்கு கந்தவேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே
வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்து அணையது உயர்வு (குறள் 595)
Water depth is Lotus height Mental strength is Men's merit.
JJLLLLLLLJLJLLLJLLJLLLJLJLLLJLLLJJLLLJJLJJJJLJ
25

Page 15
பட்டினத்தடிகள் அருளிச்செய்த உடற்கூற்று வண்ணம்
அன்னையின் மடியில் தொடங்கிய வாழ்க்கை மண்ணின் மடியில் முடிகின்றது. மண்ணிற்கும் பெண்ணிற்கும்
இடையினில் தான் இந்த மனிதன் பயணம் தொடர்கிறது. தந்தை சலவு செய்ய தாயார் வரவு வைக்க சேயாய் மனிதன்
G) உருவெடுப்பான் என்றெல்லாம் பல கோணங்களில் வாழ்வின் நி
லையாமை பற்றிப் பாடி வைத்தனர் புலவர்கள்.
பட்டினத்துச்செட்டியென காவிரிப்பூம்பட்டினத்திலே பொருளீட் டல் தொழில் மூலம் பெருஞ்செல்வராய் வாழ்ந்த இவர் இல்லறத்தை விட்டுத் துறவறத்தில் இணைந்து பட்டினத் தடிகளானார். துறவுவாழ்வின் போது பட்டினத்தடிகள் பல
ாடல்களை அருளிச் செய்தார்.
அவற்றுள் ஒன்றே "உடற் கூற்று வண்ணம்” எனும் பகுதியில் உள்ள இப்பாடல்களாகும். கரு, உரு, இளமை, மூப்பு, பிணி நரை,திரை என்று ஒரு மனிதனின் வாழ்க்கைப் படிகளை மிகவும்துல்லியமாகக் கூறுவதோடு மனதைத் தொடவைப்பவை யாகவும் இப்பாடல்கள் அமைந்திருப்பதைக் காணலாம். '
ஒருமடமாது மொருவனுமாகி
யின்பசுகந்தரு மன்புபொருந்தி யுணர்வு கலங்கி யொழுகியவிந்து வூறுசுரோணித மீதுகலந்து
பனியிலொர்பாதி சிறுதுளிமாது
பண்டியில்வந்து புகுந்துதிரண்டு
பதுமவரும்பு கமடமிதென்று
பார்வைமெய்வாய்செவி கால்கைகளென்ற
 

உருவமுமாகி யுயிர்வளர்மாத
மொன்பதுமொன்று நிறைந்துமடந்தை
யுதரமகன்று புவியில்விழுந்து
யோகமும்வாரமு நாளுமறிந்து
மகளிர்கள்சேனை தரவணையாடை
மண்படவுந்தியுதைந்துகவிழ்ந்து
மடமயில்கொங்கை யமுதமருந்தி
யோரறிவீரறிவாகிவளர்ந்து
ஒளிநகையூற லிதழ்மடவாரு
முவந்துமுகந்திட வந்துதவழ்ந்து
மடியிலிருந்து மழலைமொழிந்து
வாவிருபோவென நாமம்விளம்ப
உடைமணியாடை யரைவடமாட
வுண்பவர்தின்பவர் தங்களொடுண்டு
தெருவிலிருந்து புழுதியளைந்து
தேடியபாலரொடோடிநடந்து
அஞ்சுவயதாகி விளையாடியே
உயர்தருஞான குருவுபதேச
முத்தமிழின்கலை யுங்கரைகண்டு
வளர்பிறையென்று பலரும்விளம்ப
வாழ்பதினாறு பிராயமும்வந்து -
மயிர்முடிகோதி யறுபதநீல
வண்டிமிர்தண்டொடை கொண்டைபுனைந்து
மணிபொனிலங்கு பணிகளனிந்து
மாகதர்போகதர் கூடிவணங்க -

Page 16
@ら北らでーで区北ふェでビで凶区でビで区北ふエで以エ○区北区コでで区北ふエ○北区ーでーで○
மதனசொரூப னிவனெனமோக
மங்கையர்கண்டு மருண்டுதிரண்டு
வரிவிழிகொண்டு சுழியவெறிந்து
மாயில்போலவர் போவதுகண்டு
மனதுபொறாம லவர்பிறகோடி
மங்கலசெங்கல சந்திகழ்கொங்கை
மருவமயங்கி யிதழமுதுண்டு
தேடியமாமுதல் சேரவழங்கி
ஒருமுதலாகிய முதுபொருளா
யிருந்ததனங்களும் வம்பிலிழந்து
மதனசுகந்த விதனLதென்று
வாலிபகோலமும் வேறுபிரிந்து
வளமையுமாறி யிளமையுமாறி
வன்பல்விழுந்திரு கண்களிருண்டு
வயதுமுதிர்ந்து நரைதிரைவந்து
வாதவிரோத குரோதமடைந்து
செங்கையினிலோர்தடியுமாகியே
வருவதுபோவதொருமுதுகூனு
மந்தியெனும்படி குந்திநடந்து
மதியுமழிந்து செவிதிமிர்வந்து
வாயறியாமல்வி டாமன்மொழிந்து
துயில்வருநேர மிருமல்பொறாது
தொண்டையுநெஞ்சு முலர்ந்துவறண்டு
துகிலுமிழந்து சுணையுமழிந்து
தோகையர்பாலர்கள் கோரணிகொண்டு - JLJLLJLJLLLJHJLLJJJLLLJLLLJLLJLLLJJLLLLJJLL
28
C

கலியுகமீதி லிவர்மரியாதை
கண்டிடுமென்பவர் சஞ்சலமிஞ்ச கலகலவென்று மலசலம்வந்து
கால்வழிமேல்வழி சாரநடந்து -
தெளிவுமிராம லுரைதடுமாறி
சிந்தையுநெஞ்சமு முலைந்துமருண்டு
திடமுமுலைந்து மிகவுமலைந்து
தேறிநலாதர வேதெனநொந்து
மறையவன்வேத னெழுதியவாறு
வந்ததுகண்டமு மென்றுதெளிந்து
இனியெனகண்ட மினியெனதொந்த
மேதினிவாழ்வுநி லாதினிநின்ற
கடன்முேைபசு மெனவுரைநா
வுறங்கிவிழுந்துகை கொண்டுமொழிந்து
கடைவழிகஞ்சி யொழுகிடவந்து பூதமுநாலுசு வாசமுநின்று
வளைபிறைபோல வெயிறுமுரோம
முஞ்சடையுஞ்சிறு குஞ்சியும்விஞ்ச மனதுமிருண்ட வடிவுமிலங்க
மாமலைபோல்யமதூதர்கள்வந்து
வலைகொடுவீசி யுயிர்கொடுபோக
மைந்தரும்வந்துகு னிந்தழநொந்து
மடியில்விழுந்து மனைவிபுலம்ப
மாழ்கினரேயிவர் காலமறிந்து

Page 17
பழையவர்காணு மெனுயலார்கள்
பஞ்சுபறந்திட நின்றவர்பந்த ரிடுமெனவந்து பறையிடமுந்த
வேபிணம்வேக விசாரியுமென்று
பலரையுமேவி முதியவர்தாமி
ருந்தசவங்கழுவுஞ்சிலரென்று பணிதுகிறொங்கல் களபமணிந்து
பாவகமேசெய்து நாறுமுடம்பை
வரிசைகொடாம லெடுமெனவோடி
வந்திளமைந்தர் குனிந்துசுமந்து
கடுகிநடந்து சுடலையடைந்து
மானிடவாழ்வென வாழ்வெனநொந்து
விறகிடமூடி யழல்கொடுபோட
வெந்துவிழுந்து முறிந்துநிணங்க
ளுருகியெலும்பு கருகியடங்கி
யோர்பிடிநீறுமி லாதவுடம்பை
நம்புமடியேனை யினியாளுமே.
 

சித்தர் பாடல்கள்
ஊருஞ்சதமல்ல, உற்றார்சதமல்ல, உற்றுப்பெற்ற பேருஞ்சதமல்ல, பெண்டீர்சதமல்ல, பிள்ளைகளும் சீருஞ்சதமல்ல, செல்வம்சதமல்ல, தேசத்திலே
யாருஞ்சதமல்ல, நின்தாள்சதம் கச்சிஏகம்பனே
விட்டுவிடப் போகுதுயிர் விட்ட உடனே உடலைச்
சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார் - பட்டதுபட்டு
எந்நேரமும் சிவனை ஏந்துங்கள் போற்றுங்கள்
சொன்னேன் அதுவே சுகம்
ஆவியொடு காயம் அழிந்தாலும் மேதினியில் பாவி என்று நாமம்படையாதே - மேவியீசர் வித்தாரமும் கடம்பும் வேண்டா மடநெஞ்சே செத்தாரைப் போல திரி
இருப்பது பொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே ஒருத்தருக்கும் தீங்கினை என்னாதே - பருத்ததொந்தி நம்மதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய்கழுகு தம்மதென்று தாமிருக்கும் தாம்
நந்த வனத்திலோர்ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந்தானொரு தோண்டி - அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி

Page 18
நன்றி கூறுகின்றோம்
எங்கள் குடும்பத்தலைவர் அமரர். ஆ.கணபதிப்பிள்ளை அவர்களின் இறுதிக் கிரியைகளில், அந்தியேட்டிக்
கிரியைகளில் கலந்து கொண்டவர்களுக்கும், மலர்வளையம்,
மலர் மாலை, மலர் கொண்டு அஞ்சலி செலுத்திய
வர்களுக்கும் , அனுதாபச் செய்தி அனுப்பியவர் களுக்கும்,
தொலைபேசி மூலம் ஆறுதல் கூறியவர்களுக்கும் எமது
இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று (குறள் 108)
To forget good turns is not good Good it is over wrong not to brood
20,ஜெயவர்தனா அவெனியூ
- குடும்பத்தினர் -
 


Page 19
臀
எது நடந்ததோ, அது
எது நடக்கிறதோ, அ
எது நடக்க இருக்கிற
அது
உன்னுடையதை எ
எதற்காக நீஅழுகிற
எதை நீ கொண்டு வ
எதை நீ படைத்திரு
எதை நீ எடுத்துக் ெ
[9قے
எதை நீ கொடுத்தாே
எது இன்று உன்னு
அது நாளை ம
மற்றொரு நாள்
இது
E.S. Prin
 
 

リエエエエ
கீதாசாரம்
து நன்றாகவே நடந்தது
அது நன்றாகவே நடக்கிறது
தோ,
துவும் நன்றாகவே நடக்கும்
தை இழந்தாய்
ாய்?
பந்தாய், அதை நீ இழப்பதற்கு?
க்கிறாய், அது வீணாவதற்கு?
காண்டாயோ,
து இங்கிருந்தே எடுக்கப்பட்டது
தியா,
து இங்கேயே கொடுக்கப்பட்டது
டையதோ,
ற்றொருவருடையதாகின்றது
ா அது வேறொருவருடையதாகும்.
வே உலக நியதியும்
மடப்பின் சாரம்சமுமாகும்.
(பகவான் பூநீ கிருஷ்னர்)
gB-B-E-35Establiss gaatgali
257. Il E. Galle Road, Wellawul Ec.T.P: 25535-1,77-31719