கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுன்னாகத்தின் தமிழ் எழுத்து இலக்கிய முன்னோடிகள்

Page 1
Pioneering Literato
கலாபூஷணம் சு.
 


Page 2

சுன்னாகத்தின்
தமிழ் எழுத்து
இலக்கிய முன்னோடிகள்
கலாபூஷணம் சு. தரைசிங்கம் (கவிஞர் துரையர்)
LIITIDIT 666rfluffB சுன்னாகம்.

Page 3
நூல்
ஆக்கம்
DuffODD
முற்பதிப்பு:
பக்கங்கள்
சுன்னாகத்தில் தமிழ் எழுத்து
இலக்கியமுன்னோடிகள்
Pioneering Literators of Chunnakam
கலாபூஷணம் சு.துரைசிங்கம் (கவிஞர்துரையர்)
ஓய்வுபெற்ற அதிபர்
ஆசிரியருக்கு
2OO8 3GOof
4O
io elI76o/=
கிருஸ்ணாபிறிண்பீேஸ்,
Dratójnpańubsš, சுன்னாகம்
18ஸ்ரேசன்லேன், சுன்னாகம் கிழக்கு, சுன்னாகம்
இந்நூலாக்கத்திற்கு தகவல்கள் தந்துதவிய
S. அத்தனை பேருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

முன்னுரை
கலாபூஷணம் சு. துரைசிங்கம் அவர்கள் தமிழ் இலக்கியப் பரப்பில் எல்லோராலும் நன்கு அறியப்பட்டவர். ஆசிரியர், அதிபர், பத்திரிகையாளர், கவிஞர், எழுத்தாளர் எனப் பல் பரிமாணங்களை அலங்கரிக்கும் அவர், ஈழத்துக் கவிதைப் பரப்பிற்கும், சிறுவர் இலக்கியத்திற்கும் ஆற்றிய பணி போற்றுதற்குரியது. பண்சுமந்த பாடல், தெருவிளக்கு, கவிக்குரல்கள், ஆடும்மயில் என்ற கவிதை வெளியீடுகளையும், இந்து தள்மித்தில் பத்துக்கள் என்ற இறுவட்டுப் படைப்பினையும் தந்த அவர், இப்போது சுன்னாகத்தில் தமிழ் எழுத்து இலக்கிய முன்னோடிகள் என்ற நூல்ை எமக்குத் தருகின்றார்.
சுன்னாகத்து ஆக்க இலக்கிய கர்த்தாக்களின் எழுத்துப் பணியை ஆவணப்படுத்தும் பெருமுயற்சியாக அவரின் இந்நூல் அமைந்துள்ளது.
ஈழத்தமிழர்கள், வரலாறுகளை ஆவணப்படுத்தத் தவறி விட்டார்கள் என்ற குற்றச்சாட்டுக்களை மட்டும் கூறிக்கொள்ளும் சூழமைவை மாற்றி, ஒவ்வொரு பிரதேசங்களும் கிராமங்களும் தத்தம் வரலாற்றுப் பெருமைகளை நூல் வடிவில் ஆவணப்படுத்தினால்,
03

Page 4
அது எமது வருங்காலச் சநீததிக்கு நல்லதோர் வழிகாட்டியாக அமையும் என்பதை செயல் வடிவில் நிரூபிப்பதாக கலாபூஷணம் துரைசிங்கம் அவர்களின் சுன்னாகத்தில் தமிழ் எழுத்து இலக்கிய முன்னோடிகள் என்ற நூல் அமைகிறது.
ஒய்வெடுக்கும் காலத்திலும் ஓய்வின்றி தமிழ்ப்பணியாற்றும் கலாபூஷணம் துரைசிங்கம் அவர்களின் அயராத முயற்சியும், எல்லோரிடமும் அன்பாகவும், பண்பாகவும் பழகும் நயமும், இனியன பேசும் இயல்பும் அவரின் உயர் பண்புடைமைக் குறிகாட்டிகள்.
இவை அவரின் சால்பு என்பதற்கப்பால் இறைவனால் அவருக்கு வழங்கப்பட்ட பெருங்கொடை என்று கூறிக்கொள்ளலாம்.
இவற்றின் பயனாகவே அவரின் முயற்சிகள் எடுத்த எடுப்பில் வெற்றி தருகின்றன. அந்த வெற்றியின் மற்றுமோர் பயனாக சுன்னாகத்தில் தமிழ் எழுத்து இலக்கிய முன்னோடிகள் என்னும் இந் நூல் தமிழ்ச் சமூகத்திற்குக் கொடையாகிறது.
என். விஜயசுந்தரம் பிரதம ஆசிரியர், வலம்புரி.
04

என்னுரை
அடையாளங்கள் தெர்லைந்துபோகும் காலமிது. ஏன் சரித்திரங்கள் திரிபுபடுத்தப்படுகின்றன, மாற்றப்படுகின்றன. தேசங்களில் ஏற்பட்டுவரும் உலகமயமாக்கல் வாதமும் இருக்கிறது. இதனால் தனித்துவங்கள் பாரம்பரியங்கள் மறைந்துபோகும் சந்தர்ப்பங்களும் வரலாம். அந்த நேரத்தில் ஆதிக்கம்பெற்ற ஒன்று தனித்துவமாகலாம். அந்த ஒன்றின் அடையாளங்களே மேலோங்கலாம். எனவேதான் அடையாளங்களைப் பேண வேண்டிய நிலைப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆகவேதான் சுன்னாகத்தின் தமிழ் எழுத்து இலக்கிய முன்னோடிகள் என்ற உரையை நூலாக்க முனைந்தேன். ج .
உங்கள் கரங்களிலிருக்கும் இந்நூல் நினைவுப் பேருரை நூலாகும். சுன்னாகம் மயிலனி சைவ மகாவித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவில் ஸ்தாபகள் நினைவுப்பேருரையாக நிகழ்த்தப்பட்ட ஒன்றாகும். இதில் சிருஷ்டியாளர்களின் படங்களையும் அவ்வுரையுடன் சேர்த்திருக்கிறேன்.
05

Page 5
எம்பிரதேசத்தின் முயற்சிகள், பெருமைகள், ஆக்கப்பாடுகள் என்பன பதிவுகளாக ஆவணப்படுத்தப்பட வேண்டும் ஸ்ன்ற நீண்டநாள் விருப்பின் ஒரு துளியாக அமைந்ததே இந்த உரை நூலாகும்.
குறிப்பிட்ட நேரத்தில் அந்த அவையின் நிலைக்கேற்ப பேசுவதற்காக ஆக்கப்பெற்றதே இந்நூல் விரிவானதை எதிர்பார்த்தவர் களுக்கு இந்தநிலை புரியுமென நினைக்கிறேன். பிற்காலத்தில் இதனை விரிவாக எழுதக்கூடியதாக இருக்குமென நம்புகிறேன். பிரதேசத்தின் அடையாளத்தைக் காட்டுவதற்கு இதுவும் உறுதுணையாக நிற்குமென நம்புகிறேன்.
இந்நூலை ஆக்குவதற்கு தகவல்களுடன் பலநூல்களைத் தந்துதவியதுடன் ஆக்கபூர்வமான அநுபவங்களை உதவிய இயல்வாணன் அவர்களுக்கு என்றும் எனது நன்றிகள். குறிப்பாக மனமுவந்து இந்நூலுக்கு முன்னுரையைத் தந்துதவிய வலம்புரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் திரு. நா. விஜயசுந்தரம் அவர்களுக்கும், அழகுறப் பதித்துத் தந்த கிருஸ்ணா அச்சகத்தினருக்கும் இந்நூலில் அடங்கும் சிருஷ்டியாளர்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள்.
சு. துரைசிங்கம்
06

சுன்னாகத்தின் தமிழ் எழுத்து இலக்கிய முன்னோடிகள்
தோற்றுவாய்
நீர் வளமும் நிலவளமும் நிறைந்ததும் பண்டைய அரசர்களால் பேணப்பட்டதுமான பூமியே சுன்னாகமாகும். போர்த்துக்கேயர் ஆட்சி தொடக்கம் தமிழ் கற்றலும், புலமைத் தன்மைகளும், சமயப்பற்றும் மேலோங்கத் தொடங்கிய இடம் இப்பதியாகும். கற்றலும் கற்றவரும் நிறைந்ததால் கற்றாய்விடமாகவும் இது மிளிரத்தொடங்கியது.
ஈழத்துப் பூதன்தேவனார் தொடக்கம் உலகத்தமிழ் வளர்ச்சியில் முன்னணி வகித்தவர்கள் ஈழத்தவர்க்ளே என்று UGDÖBib பலவகையிலும் சொல்லி வருகிறார்கள். இலங்கையில் குறிப்பாக யர்ழ்ப்பாணத்து அரசகேசரி, பரராசசேகரன் போன்றோருக்குப் பின் தமிழ் வளர்த்த ஊராக இலங்கை பூராவும் கணிக்கப்பட்டது. சுன்னாகம் என்பது எல்லோருக்கும் தெரியும். .
சுன்னாகம் என்றால் வெள்ளியங்கிரி என்று பொருள் கொள்வர். பண்டைய கதிரமலை இராச்சியம் இருந்த இடம் சுன்னாகம் என்றும், கந்தரோடையென்றும் ஆய்வாளர்கள் கூறுவர். இதேவேளை உக்கிரசிங்க அரசன் தனது இராசதானியைக் ரமலையில் (கந்தரோடையில்) அமைத்திருந்ததாக 606L6LDT606) கூறுகின்றது. கதிரமலையை ஆண்ட உக்கிரசிங்கன் மாருதப்புரவீகவல்லியைக் கவர்ந்து வந்து இப்பொழுது கதிரமலை 07

Page 6
சிவன் கோயில் அமைந்திருக்கும் பகுதியில் தனது அரண்மனையில் வைத்திருந்ததாகச் சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுவர். இவைகள் ஆய்விற்குரியன.
உக்கிரசிங்கன் ஆட்சிசெய்த இச் சுன்னாகம் பகுதியின் தமிழ் எழுத்துத் துறைபற்றிச் சில குறிப்புகளைத் தேடித் தருவதே எனது நோக்கமாகும். போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆட்சிகளின் போதும், இக்காலத்திலும் சுன்னாகத்தில் தமிழ் நூலாக்கம் வளர்ந்தது பற்றிச் சொல்லலாமென நினைக்கிறேன், இதேவேளை சுன்னாகம் மயிலனிக் கந்தசுவாமி கோயில் 1639இல் வழிபாட்டிற்காக அமைக்கப்பட்டது என்று பிரம்மறி சர்வேஸ்வரக் குருக்கள் மயிலனி சைவ மகாவித்தியாலய நூலின் ஆசியுரையில் குறிப்பிட்டுள்ளார். வரதபண்டிதர்
ஒல்லாந்தர் காலத்தில்தான் அரங்கநாதையர் சிவராத்தில் இந்தியாவின் காசி நகரிலிருந்து யாழ்ப்பாணத் புராணம் திலுள்ள சுன்னாகத்திற்கு வந்து குடியேறினார். அர்ங்கநாதையருக்கு மகனாக 1656இல் பிறந்தவர் தேபண்டிதர் சிறு வயதிலிருந்தே தந்தையிடமும் பிறரிடமும் நூலறிவு பெற்றார். இவர் சங்கநூல்களுடன் பெரியபுராணம், திருக்குறள் போன்ற நூல்களைக் கற்றதாக குமாரசுவாமிப் புலவர் தெரிவிக்கின்றார். இவர் ஒல்லாந்தர் காலத்தில் வாழ்ந்தபடியால் சைவசமய நூல்களையே பெரிதும் ஆக்கியுள்ளார். சிவராத்திரி புராணம், ஏகாதசிபுராணம், அமுதாகர்ம், பிள்ளையார் கதை, கிள்ளை விடு தூது போன்ற நூல்களையும், மாவிட்டபுரம் கோயிற்கடவை, தெல்லிப்பளை தோதாரை போன்ற தலங்கள் மீதும் க்கள் பாடியுள்ளார். இவர் 1716 வரை வாழ்ந்து தமிழ்த்தொண்டு
', 's!.: ġi6, i f'TT.
08
 

சுன்னாகம் முத்துக்குமார கவிராயர்
சுன்னாகம் முத்துக்குமார கவிராயர் இருப்ாலை சேனாதிராசா முதலியார் காலத்தவர். உடுவில் கோயிற்பற்றைச் சேர்ந்த சுன்னாகம் பகுதியில் அம்பலவாணருக்கு மகனாக 1780இல் பிறந்தார். முறைப்படி தமிழ் கற்றவர். சேனாதிராசருக்கும் இவருக்கும் தொடர்பு இருந்திருக்கிறது. எடுத்த எடுப்பிலேயே கவிபாடும் வல்லவரான முத்துக்குமார கவிராயர் திருக்கு, மடக்கு, சிலேடைகளும் பாடும்திறன் பெற்றவர். இவர் ஊர்ப் பெயர்களை வைத்துப் பாடிய பாடல்
ஞானக்கும்மி
முடிவிலாதுறை சுன்னாகத்தான் வழி முந்தித் தாவடி கொக்குவில் மீதுவந்து
என அமைந்து தொடர்கிறது.
இவர் ஞானக்கும்மி, யேசுமதபரிகாரம், சுன்னாகம் ஐயனார் ஊஞ்சல், நடராசர் பதிகம் என்பவற்றைப் பாடியுள்ளார். சி.வை. தாமோதரம் பிள்ளைக்குத் தமிழாசிரியராகவும் இருந்துள்ளார். 1851இல் இயற்கையெய்திய இவருடைய தனிக் கவிதைகள் பிரசித்தமானவை.
முருகேசபண்டிதர்
நீதிநூறு சுன்னாகம் தமிழ் எழுத்துலகப் பிரமுகர்களில் அடுத்து வருபவர் முருகேசபண்டிதராவார். இவர் சுன்னாகம் தெற்கைச் சேர்ந்த பூதப்பிள்ளை அவர்
களுக்கும் உமைநாச்சியம்மைக்கும் மகனாக 1829இல் பிறந்தார். r 09

Page 7
இவரின் உடன்பிறப்புகள் சுப்பிரமணியர், கதிர்காமர், நன்னியம்மை என்பவர்களே. முருகேசர் தனது கல்வியை சுன்னாகம் சிவசங்கர பண்டிதரிடமும், உடுப்பிட்டி சிவசம்பு பண்டிதரிடமும் பெற்றார். இதன் பயனாக பேசுவதும் எழுதுவதும் இலக்கண அமைதியுடனே காணழ்படும். இலக்கணத்தை முறையாகக் கற்றதன் விளைவாக பிறர் நூல்களில் வரும் பிழைகளைச் சுட்டிக் காட்டத் தவறமாட்டார்.
முருகேச பண்டிதரிடம் பலர் கற்றனர். அவர்களுக்கு சுன்னாகம் மயிலனியில் அமைந்த திண்ணைப் பாடசாலையில் கற்பித்தார். முருகேச பண்டிதரிடம் கல்வி கற்றவர்களில் முக்கியமானவர்கள் சுன்னாகம் கும்ார்சுவாமிப்புலவர், ஊரெழு சரவணமுத்துப் புலவர், மானிப்பாய் முத்துத்தம்பிப்பிள்ளை என்போராவர். இவர் தொடர்ந்து பல ஊர்ப் பாடசாலைகளிலும் தமிழாசிரியராக இருந்தார். முருகேசபண்டிதர் ஆறுமுகநாவலரின் நூல்களில் தவறுகள் கண்டபோதும், நேரே சொல்லாது மெளனமாக இருந்தார். அதேபோல் ஆறுமுகநாவலரும் முருகேச பண்டிதரின் மணமறிந்து அதுபற்றிக் கூறாதிருந்தார். பின் இருவரும் ஒரே மேடையில் சந்தித்து உறவாடினர்.
முருகேசபண்டிதரும் மனைவியும் கதிர்காம யாத்திரை சென்றிருந்தனர். வழியில் நோயுற்ற மனைவி இறந்துவிட்டார். விரக்தியடைந்த முருகேசபண்டிதர் 1878இல் இந்தியா சென்றார். அங்கு கும்பகோணப் பாடசாலையில் ஆசிரியர் தொழிலுக்கு விண்ணப்பித்தார். பரீட்சை நடைபெற்றது. பரீட்சை எழுதாத முருகேசபண்டிதர் வினாப்பத்திரத்தில் உள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டி திருத்தி வெளியிடுமாறு எழுதிக்கொடுத்துச் சென்று விட்டார். முதலில் அதிர்ச்சியடைந்த தலைமையாசிரியரும்,
நிர்வாகியும் பின் அவரையே ஆசிரியராக நியமித்தனர். 10

கும்பகோணத்தில் முருகேசபண்டிதர் இருந்த வேளையில் உ.வே.சாமிநாதையர் வெளியிட்ட சீவகசிந்தாமணி நூலில் பல பிழைகளைக் கண்டு கண்டனம் எழுதினார். பதிலை உ.வே.சாமிநாதையரின் LDfT600T6(3y எழுதினார். இதனால் சீற்றமடைந்த முருகேசபண்டிதர் இருவரையும் வாதுக்கு அழைத்தார். இறுதிக்காலத்தில் அச்சகமொன்றில் நூற் பரிசோதகராக இருந்தார். பண்டிதரவர்கள் சுன்னாகம் சந்திரசேகரப் பிள்ளையார் ஊஞ்சல், மயிலணி சுப்பிரமணியர் ஊஞ்சல், வற்றாக்ககை அம்மன் ஊஞ்சல், மயிலணி விசாலாட்சி பதிகம்.சுன்னாகம் தெற்கு சிவபூதராயர் ஊஞ்சல்,பதார்த்த தீபிகை போன்ற நூல்களை வெளியிட்டார்.
சுன்னாகம் அ. குமாரசுவாமிப்புலவர்
சுன்னாகம் என்றால் குமாரசுவாமிப்புலவர் ஞாபகம் வரும். குமாரசுவாமிப்புலவரென்றால் சுன்னாகம் ஞாபகம்வரும். எனவே சுன்னாகத்தையும் குமார சுவாமிப் புலவரையும் பிரிக்க முடியாது. அம்பலவாணப் பிள்ளைக்கும் "சிதம்பரவம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர் குமாரசுவாமி. இவருக்கு நமசிவாய தேசிகர் வித்தியாரம்பம் செய்தார். பின் மல்லாகம் ஆங்கில பாடசாலையில் சில ஆண்டுகள் கல்வியைத் தொட்ர்ந்து விட்டு விலகி, முருகேசபண்டிதரிடம் பழந்தமிழ் நூல்களைக் கற்றுணர்ந்தார். நாகநாதபண்டித ரிடமும் சில நூல்களைக் கற்றுக் கொண்டார். இதேபோன்று ஆறுமுகநாவலரிடமும் தொடர்பு கொண்டு சந்தேகங்களை நிவர்த்தி :செய்துகொண்டார். ஓரளவு நூல்கள் கற்றுத் தேறிய காரணத்தால் ஆசிரியராகத் திண்ன்ணப் பள்ளிக்கூடத்திலும், ஏழாலையிலும், யாழ்ப்பாணத்திலுள்ள நாவலர் பாடசால்ையிலும் கற்பித்தார். கால்நடையாகச் சென்று கற்பித்து வந்த இவர் நாவலரைப்போல்

Page 8
கிறிஸ்துமத கண்டனங்களையும் எழுதினார். இந்தியாவிலுள்ள பல தமிழ் அறிஞர்களுடன் நெருங்கிய கடிதத் தொடர்புகள் வைத்திருந்தார்.
இலக்கண இலக்கியங்களில் ஆழ்ந்த அறிவு கொண்டதால் இலக்கண, இலக்கியக் . கட்டுரைகளை செந்தமிழ், ஞானசேகரம் ஆகிய பத்திரிகைகளுக்கும் எழுதினார். வசனநடை கைவந்த வல்லாளன் ஆறுமுகநாவலரின் தொடர்பால் உந்தப்பட்ட குமாரசுவாமிப்புலவர் தமிழ்ப்புலவர் சரித்திரம், கண்ணகி கதை, சிசுபால சரித்திரம் போன்ற வசன நூல்களையும் எழுதினார். இவர் இருநூறுக்கு மேற்பட்ட சமய, இலக்கிய, இலக்கணக்
கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
புலவர் அவர்களின் வித்துவத் திறமையை மெச்சி அரசு அவருக்கு வெகுமதி கொடுத்துக் கெளரவித்தது. இதனைப் பாராட்டும் முகமாக குதிரை வண்டியில் ஏற்றி உலாக் கொண்டுவர மாணவர்களும் பிறரும் முயற்சித்த போது மறுத்து தினமும் ஆறு மைல் நடந்து சென்று கற்பித்து விட்டு வரும் எனக்கு இன்று மட்டும் ஏன் குதிரைவண்டில் என்று கூறினாராம்.
குமாரசுவாமிப்புலவர் பதுளை கதிரேசன் பதிகம் உட்பட 23 கோயில்களுக்குப் பக்திப்பாக்கள் பாடியுள்ளார். இவற்றுடன் 13 தமிழ் இலக்கிய செய்யுள் நூல்களையும், யாப்பருங்கலப் பொழிப்புரை போன்ற 5 இலக்கண நூல்களுக்கு உரைகளையும், இலக்கண சந்திரிகை, வினைப்பகுபத விளக்கம் ஆகிய ஆராய்ச்சி நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். இதற்கும் மேலாகப் பத்து நூல்களைப் பதிப்பித்துமுள்ளார்.
12

பண்டிதர்களுக்காக பா நூல்களையும், பாமர மக்களுக்காக வசன நூல்களையும் சமகாலக் கொள்கைகளைப் பிரதிபலிப் பனவாகத் தந்தவர் குமாரசுவாமிப்புலவரே.
தென்கோவைப் பண்டிதர் ச. கந்தையாப்பிள்ளை
இருபாலை சேனாதிராச முதலியார் பரம்பரையில் வந்தவர்தான் ச. கந்தையாப்பிள்ளை. சபாபதிக்கும் | காமாட்சியம்மைக்கும் மகனாக 1880இல் பிறந்தவர் | தான் கந்தையாப்பிள்ளை, ஆசிரியர்களான சின்னப்
பாப்பிள்ளையும். உதயபானு ஆசிரியரான க. சரவணமுத்துப்புலவரும் இவருக்கு வேண்டிய நூலறிவினைக் ’கொடுத்தனர். சுண்டுக்குளி பரியோவான் கல்லூரியில் கற்றுத் தேறினார். இருபது வயது வந்ததும் கொழும்பு சென்று சிலகாலம் தங்கி, பின் மட்டக்களப்புக்குச் சென்று சரவணமுத்துப்புலவரின் உறவினரிடம் மேலும் பலநூல்கள் கற்றுவந்தார். மட்டக்களப்பில் தலைமையாசிரியர் பதவியேற்ற இவர் ஓய்வு நேரங்களில் இலக்கிய சமய சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.
மட்டக்களப்பிலிருந்து கோப்பாய் திரும்பிய இவருக்கும் கந்தரோடையைச் சேர்ந்த செல்லம்மாளுக்கும் திருமணம் செய்து வைத்தனர். இவ் வேளையில் கொழும்பு ஆங்கில ஆசிரிய கலாசாலையில் தமிழாசிரியர் நியமனம் கிடைத்தது. சிறிது காலத்தின் பின் தமிழ்ப்பிரிவு யாழ்ப்பாணத்திற்கு மாற்றப்பட்ட பாழுது கந்தையா பண்டிதர் அவர்கள் கொழும்பு கல்விக் கந்தோரில் பரீட்சகராகக் கடமையேற்றார். பண்டிதர் கந்தையா அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாத போது, ஓய்வெடுத்து,
13

Page 9
இந்தியா சென்று, திருக்கழுக் குன்றத்தில் தங்கி, சுவாமி தரிசனம் செய்தார். பின் புதுச்சேரிக்குச் சென்று சித்தாந்த வேதாந்தத் தெளிவு பெற்றார்.
அங்கிருந்தபோதுதான் புதுவை விநாயகள் ஒருபா ஒருபது, மணக்குள விநாயகர் பதிகம், மற்றும் எட்டுக்கோயில்கள் மீதும் ஊஞ்சல் என்பன பாடினார். இதுதவிர ஏழுநூல்களுக்கு முன்னுரைகள் எழுதியுள்ளார். புதுச்சேரியில் குருதரிசனம் பெற்று உண்மை முத்தி நிலை பற்றி அறிந்தவராய் குருவின் சொற்படி கந்தரோடைக்கு வந்து மனைவியுடன் வாழ்ந்து வரும் காலை “வித்தகம்” என்னும் சமயப் பத்திரிகையை நடத்தினார். ஏராளமான கட்டுரைகளை அதன் வாயிலாக எழுதியுள்ளார். ஈழகேசரியில் திருவாசக மணிகள் என்ற தொடரில் கட்டுரைகள் எழுதிவந்தார். இறுதிவரை கந்தரோடையில் பெறாமகளின் அனுசரனையுடனே வாழ்ந்து வந்தார். 1958இல் சிவப்பேறு அடையும் நாள் எல்லோரையும் அழைத்து நான் அறுபத்து மூவருடன் செல்கிறேன் என்று, கூடி நின்றோருக்குக் கைகூப்பிக் கண் மூடிவிட்டார். சிறுவனாக நானிருந்தபோது சிலவேளைகளில் இவரிடம் தமிழ் பாடத்திலுள்ள சந்தேகங்களைக் கேட்டறிந்துள்ளேன்.
14

முகாந்திரம்பிரம்மருநீ சதாசிவஐயர்
முகாந்திரம் தி. சதாசிவஐயர் அவர்கள் அளவெட் 1960)u Ji பிறப்பிடமாகக் கொண்டவர். 1882ல் தியாகராசா ஐயா அவர்களுக்கு மகனாக பிறந்தவர். ZA உரியகாலத்தில் கல்வியை ஆரம்பித்து பின் பட்டப்படிப்பிற்காக கல்கத்தா சென்று எம். ஏ பட்டம் பெற்றார். திரும்பவும் யாழ்ப்பாணம் வந்து மல்லாகம் ஆங்கிலப் பாடசாலையில் ஆசிரியராகப் பணியேற்றார். தலைமையாசிரியருமானார். இவ் வேளையில் கந்தரோடை, ஆங்கிலப்" பாடசாலை பணிக்கு அழைத்தது. சிலகாலம் அங்கு பணியாற்றிய பின் கொழும்பு ஆசிரிய பயிற்சிக்கலாசாலைப் பணிக்குச் சென்றார். படிப்படியாக பதவியுயர்ந்து மட்டக்களப்பில் உயர் கல்வி அதிகாரியானார். அங்கிருந்துதான் வசந்தன் கவித்திரட்டு நூலை வெளியிட்டார். இதனால் மட்டக்களப்பு மக்களால் பெரிதும் போற்றப்பட்டார். அங்கிருந்து யாழ்ப்பாணம் வந்த சதாசிவஐயர் ஆரியதிராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தினை சு. நடேசபிள்ளையுடன் சேர்ந்து ஆரம்பித்தார். இதனால் பல பண்டிதர்கள் உருவானார்கள். இதேவேளை அரும்பாடுபட்டு கலாநிதி என்னும் பத்திரிகையை நடத்திப் பல கட்டுரைகள் எழுதினார். சுன்னாகத்தில் நிலங்களை வாங்கி வசித்து வந்த இவர் பிராசினப் பாடசாலையை அந்தணப்பிள்ளைகளின் சமய வளர்ச்சிக்காக நடத்தி வந்தார். இவர் தேவி தோத்திர மஞ்சரி, தேவி வழிபாட்டுத் தொன்மை போன்ற நூல்களை சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்குக் கொண்டுவந்தார். பன்மொழிப்புலமையாளரான சதாசிவஐயர் 1950இல் இறைவனடி சேர்ந்தார். " '
15

Page 10
(ö. முத்துக்குமாரசாமிப்பிள்ளை
சுன்னாகம் குமாரசுவாமிப்புலவரின் இரண்டாவது மகனே முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை. இவர் |சுன்னாகத்தில் 1900 ஆம் ஆண்டு பிறந்தவர்.
ஆரம்பக்கல்வியை சுன்னாகம் அமெரிக்க மிஷன்
த.க. பாடசாலையில் தொடங்கி மல்லாகம் ஆங்கிலப் பாடசாலை, சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி, மானிட்காய் இந்துக் கல்லூரி போன்ற பாடசாலைகளில் இடைநிலைக் கல்வியைத் தொடர்ந்து இந்தியாவில் பட்டமும் பெற்றுக்கொண்டார். ஆசிரியத்தொழிலை மேற்கொண்ட இவர் பல பாடசாலைகளில் ஆசிரியராக இருந்தார். அதுமட்டுமல்லாமல் அதிபராகவும் கடமையாற்றினார். இவர் தந்தையைப் போல் தமிழார்வமும் புலமையும் கொண்டவராக இருந்தார். கடமை நேரம் முடிய கவிதை கட்டுரைகளிலும், நூலாய்வுகளிலும் ஈடுபட்டார்.
இவர் மரபுவழிக்கவிதைகள் மூலம் தனது ஆக்கங்சளை வெளிக்கொணர்ந்தார். தெய்வங்கள்மீது இரட்டைமணி hrலை, மும்ம6.ரிக்கோவை, நான்மணிமாலை, அந்தாதி 5'oாப் பல படியுள்ளார். இவற்றுடன் காசியாற்றுப்படை, கண்ணகி வெண்பா என இரு நூல்களையும், பொதுப்பாடல்களையும் வாழ்த்துக்களையும் பாடியுள்ளார். இவற்றிற்கும் மேலாக பலரின் வேண்டுகோட்படி முருகேச பண்டிதர் பிரபந்தத்திரட்டு, தென்கோவைப்பண்டிதர் கந்தையாப்பிள்ளை கவித்திரட்டு, முத்துக்குமார கவிராயர் பிரபந்தத் திரட்டு ஆகிய நூல்களையும் தொகுத்துள்ளார்.
16
 

கு. அம்பலவாணப்பிள்ளை
அம்பலவாணப்பிள்ளை. இவர் தமிழறிவும் ஆங்கில محصے அறிவும் கைவரப் பெற்றவர். சுன்னாகம் மயிலனி .T" யில் 1895ல் பிறந்த இவர் பக்தியாளன், பண்பாளன். இவர் ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் ஆசிரியராக இருந்தவேளை இவரிடம் தமிழ் கற்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. இவர் எழுதிய கட்டுரைகள் ஈழகேசரி போன்றவற்றில் அக்காலத்தில் வெளிவந்தன. பல தொகுப்பு நூல்களைச் செய்துள்ள தென்கோவைப் பண்டிதருடன் நெருக்கமாக இருந்தவர். மொழிபெயர்ப்புகள் பல செய்தவர். சம்பாசனைச் சிங்களம் என்ற நூலினை இவரும் குணரத்தினதேரோவும் சேர்ந்து எழுதி முன்பு வெளியிட்டிருந்தனர். குறிப்பாக தந்தையாரின் தண்டியலங்காரம் போன்ற பல நூல்களைப் பதிப்பித்துள்ளார். 1975இல் அம்பலவாணப்பிள்ளை இயற்கை எய்தினார்.
சுன்னாகம் குமாரசுவாமிப்புலவரின் மூத்தமகன் .Y- ع
öf. Əbü6oÖdöLITö66Ör
: சுன்னாகத்தில் சங்கரப்பிள்ளையின் மகனாக 1908இல் பிறந்தார் அம்பிகைபாகன். பட்டதாரி அதி பரான இவர் 32 வருடங்கள் வண்ணை வைத்தீஸ் வரக் கல்லூரி அதிபராக இருந்து தன்னை அர்ப் s பணித்த சேவையாளன்.
கட்டுரை எழுத்தாளரான அதிபர் அம்பிகைபாகன் எழுத்தாளர்களுடனும், கலைஞர்களுடனும் நெருங்கிய தொடர்பு 17

Page 11
வைத்திருந்தார். கல்கி அவர்கள் இலங்கை வந்திருந்தபொழுது அம்பிகைபாகனே அவரை சகல இடங்களுக்கும் அழைத்துச் சென்றவர். யோகர்சுவாமியாரிடமும் பக்தியும் அன்பும் கொண்டவர். அவருடன் இணக்கமாக இருந்தவர்.
uUTp. பல்கலைக்கழக முதற்பேரவையில் அம்பிகைபாகனும்
இருந்தார். "தமிழாராய்ச்சி மகாநாட்டிலும் பெரும்
பங்காற்றியிருக்கின்றார். இவர் 1986 இல் இறந்தபோது எண்ணற்ற மக்களின் அஞ்சலியைப் பெற்ற பெருமகனாவார்.
கலாகிர்த்திபேராசிரியர் சி. தில்லைநாதன்
சுன்னாகத்தில் பிறந்து பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்தார் என்ற பெருமை சி. தில்லைநாதன் அவர்களையே சாரும். சுன்னாகம் சின்னத்தம்பி நாகம்மா தம்பதியினரின் மகனாக . 19376) பிறந்தவர்தான் தில் லைநாதன் . ஆரம்பக்கல்வியை சுன்னாகம் திருஞானசம்பந்த வித்தியா சாலையிலும், உயர்கல்வியை ஸ்கந்தவரோதயக்கல்லூரியிலும் கற்றுத்தேறி அரசசேவையில் சேர்ந்து கொண்டார். பின் பட்டதாரி யாகித் தினகரன் பத்திரிகையில் ஆசிரியர் கைலாசபதியுடன் கடமையாற்றினார். அவ்வேளை அனேகரை எழுத்துத்துறையில் வளர்த்ததுடன் தானும் வளர்ந்தார். கவிதை, கட்டுரை, சிறுகதை, நாடகம் போன்ற துறைகளில் தன்னை இனங்காட்டிக் கொண்டவர். தினகரனிலிருந்தபோது பல போட்டிகளை நடத்தியுள்ளார். பல்கலைக்கழக சிறுகதைப் போட்டியில் முதற்பரிசினைப்
18
 

பெற்றுக்கொண்டார்.
பல்கலைக்கழக விரிவுரையாளராகிப் பின் தமிழ் பேராசிரி யராகித் தொடர்ந்து தமிழ்த்துறைத் தலைவராகவும் இருந்தார். பல்கலைக் கழகத்திற்கு உள்ளும் வெளியிலும் பல பொறுப்பு வாய்ந்த அமைப்புகளில் அங்கம் வகித்தார். வெளியிலே கலைக் கழகம், சாகித்தியக்குழு, பாடவிதானக்குழு போன்றவற்றில் அங்கம் வகித்துள்ளார்.தொடர்ந்தும் அங்கம் வகிக்கிறார்.
கலாகிர்த்தி விருது பெற்ற தில்லைநாதன் அவர்கள்
1) வள்ளுவர் முதல் பாரதிதாசன் வரை 2) இலக்கியமும் சமுதாயமும் 3) ஈழத்துத் தமிழ் இலக்கியம் போன்ற நூல்களை எழுதியுள்ளார். இலங்கையிலும்,
இந்தியாவிலும் வெளியான பல நூல்களுக்கு முன்னுரை, மதிப்புரை
என்பன எழுதியுள்ளார்.
நாடகத்துறையில் தகுதி, மானிடமென்பது புல்லோ ஆகிய நாடகங்களை எழுதியுள்ளார். சமுதாய விலங்கு என்னும் நாடகத்தை நெறியாள்கை செய்து வெற்றி கண்டவர். தமிழ் எழுத்துலகில் சுன்னாகத்தைச் சேர்ந்த இவரது பங்களிப்பு பெருமைக்குரியது.
இவருக்கு அண்மையில் “தேசத்தின் கண்” என்னும் அதி உயர் விருது அரசினால் வழங்கப்பட்டது.
19

Page 12
சிவசரவணபவன் சிற்பி)
மூதறிஞர் சிற்பியையும் கலைச்செல்வியையும் என்றும் மறக்கமுடியாது. இன்றைய தலை சிறந்த எழுத்தாளர்களில் அனேகர் கலைச்செல்விப்
பண்ணையில் வளர்ந்தவர்களே. செங்கையாழியான், செ. யோகநாதன் என்று ஒரு பட்டியலே இருக்கிறது. கலைச்செல்விக்காலம் ஒரு பொன்னான காலம் என்று சொல்லலாம்.
கலைச்செல்வி ஆசிரியர் சிற்பி அவர்கள் சிவசுப்பிரமணிய ஐயர் அவர்களுக்கும் செளந்தராம்பாள் அவர்களுக்கும் 1933இல் புத்திரராகப் பிறந்தார். தமிழ்க்கந்தையா வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வியையும், ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் உய்ர்கல்வியையும் கற்று உயர் நீதிமன்றில் லிகிதராகிப் பின் உயர்கல்வி கற்பதற்காக இந்தியா சென்றார். அங்கு பட்டப்படிப்பு பயிலும் வேளையில் எழுத்தார்வம் மிக்கவராய் இளந்தமிழன் சஞ்சிகையின் ஆசிரியராக இருந்தார். பள்ளியில் படிக்கும் காலையில் ஈழகேசரியில் பாவையர் பகுதியில் தனது ஆக்கங்களை வெளிக் கொணர்ந்தார். உதயன் பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் முதலிடம் பெற்றார்.
விளக்கு கல்வியியற் சஞ்சிகை, லண்டன் சுடரொளி சஞ்சிகை ஆகியவற்றின் ஆசிரியராகவும் பணியாற்றினார். நூல் வெளியிடும் ஆவல் மேலிட்டினால் 1955இல் சிறுகதைத் தொகுப்பு நூலினை வெளியிட்டார். இந்தியாவில் படிக்கும் வேளையில் சிறுகதைப் போட்டியிலும், கட்டுரைப் போட்டியிலும் பரிசுபெற்றார். சுதந்திரன் பண்ணையிலே சிற்பி அவர்கள் வளர்ந்தார் என்றும் கூறலாம். 1958 தொடக்கம் தொடர்ந்து வெளி வந்த இவரால் வெளியிடப்பட்ட Yச்செல்வியை என்றும் ಆಕ್ಟಿ (ԼՔԼԳԱ IIT5l. சிற்பி அவர்கள்
 

ஈழத்துச் சிறுகதைகள் (பலரின் கதைகள்) நிலவும் நினைவும் சிறுகதைத்தொகுதி, உனக்காக கண்ணே நாவல், சத்தியதரிசனம் சிறுகதைத்தொகுதி என்பவற்றினை வெளியிட்டார்.
லிகிதராய், ஆசிரியராய், கல்லூரி அதிபராய், இலக்கிய வாதியாய் உயர்ந்த சிற்பி அவர்களுக்கு வடகிழக்கு ஆளுநர் விருது கிடைத்தது. இவ்வாண்டு கம்பன்கழகக் கெளரவிப்பும், வலிதெற்கு கலாசாரப் பேரவையின் ஞான ஏந்தல் விருதும் கிடைத்தன.
திருமதி. மங்கையர்க்கரசி திருச்சிற்றம்பலம்
சுன்னாகம் குமாரசுவாமிப்புலவரின் மகன் முத்துக் குமார சுவாமிப்பிள்ளைக்கும் கமலாம்பிகைக்கும் மகளாக 1932இல் பிறந்தவர்தான் மங்கையர்க்கரசி. இவர் ஆரம்பக் கல்வியை மயிலனியிலும், உயர்கல்வியை சுன்னாகம் இராமநாதன் கல்லூரியிலும் கற்றுக்கொண்ட பின் பட்டப்படிப்பினைத் திருச்சியிலே மேற்கொண்டு சித்தியும் பெற்றார். பட்டதாரியான மங்கையர்க்கரசி திருநெல்வேலி ஆசிரியர் கலாசாலையிலும் , கோப்பாய் ஆசிரியர் கலாசாலையிலும் சேவையாற்றி தொடர்ந்து அழுத்கம முஸ்லிம் பெண்கள் கலாசாலையிலும் சேவையாற்றினார். பின் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் சிறிது காலப் பணியுடன் இராமநாதன் கல்லூரி அதிபரானார்.
கட்டுரை எழுதுவது இவருக்குக் கை வந்த கலை. சமயப் பேச்சுகளுக்கும் செல்வார். நூற்றுக்கு மேற்பட்ட சமய இலக்கி
கட்டுரைகளை எழுதிய இவர் இந்தியாவில் பல ஆலயங்களி: 21

Page 13
சொற்பொழிவாற்றியுள்ளார், சைவ மகாநாடுகளுக்கு ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளார். மங்கையர்க்கரசி 2006இல் மறையும் வரை பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். \\
ஐ. இராசரத்தினம் ஐயன்னா)
ஐயன்னா என்ற புனை பெயரில் தமிழ் எழுத்துத்
துறையில் பிரகாசித்தவர்தான் ஐயாத்துரை
இராசரத்தினம் என்ற ஆசிரியர். சுன்னாகம் அம்ப
னையில் 4.11.1924இல் பிறந்த இவர் ஆரம்பக் கல்வியைக் கந்தரோடை தமிழ்க்கந்தையா வித்தியாசாலையிலும் உயர் கல்வியை சுன்னாகம் மயிலனி சைவ மகாவித்தி
யாலயத்திலும் கற்றுத்தேறியவர். ஆங்கில மொழிமூல சிபா.த (SSC) பெறுவதற்காக ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் சேர்ந்து கற்றுத்தேறினார்.
திருநெல்வேலி ஆசிரியர் கலாசாலையில் பயிற்சியை முடித்துக்கொண்ட ஐ. இராசரத்தினம் சைவப்புலவர் பரீட்சையிலும் பாலபண்டிதர் பரீட்சையிலும் சித்தியடைந்தபோதும் இவரை நாடி வந்தது லிகிதர் பதவியாகும். DRO காரியாலய லிகிதராக இருந்த வேளையில் பொது லிகிதர் சேவைப் பரீட்சையிலும் சித்திபெற்று யாழ் கச்சேரியில் கடமையாற்றினார். தமிழ்ப்பற்றுக் காரணமாக பதவியைத் துறந்து ஆசிரியர் தொழிலை மேற்கொண்டார்.
ஹற்றன் பொஸ்கோ கல்லூரியில் தொடங்கி தமிழ்கந்தையா வித்தியாசாலை, புசல்லாவ வித்தியாசாலை, ஸ்கந்தவரோதயக்
22
 

கல்லூரி போன்ற பாடசாலைகளில் பணியைத் தொடர்ந்தார். சுன்னாகத்திலிருந்து வெளியான ஈழகேசரியில் கவிதைகள் எழுதியுள்ள இவர், நாடகத்தில் தன்னை இனங்காட்டிக்கொண்டவர்.
தினகரன், ஈழநாடு, விவேகி, சுதந்திரன் போன்ற பத்திரிகை கள் இவருடைய ஆக்கங்களைப் பிரசுரித்தன. குறிப்பாக நாட கங்களை தினகரனும் விவேகியும் பிரசுரித்தன.
இதேவேளை உயர்தர வகுப்பு மாணவர்களுக்காக இந்து சமய வினாவிடை, தமிழ்மொழி வினாவிடை போன்ற நூல்களை வெளியிட்டிருந்தார்.
ஐயன்னா அவர்கள் எழுதிய நாடக மாலை என்னும் நூல் கந்தரோடை சனசமூக நிலைய வெளியீடாக வெளிவந்தமை குறிப்பிடத் தக்கது. ஒய்வு நேரங்களிலெல்லாம் வீட்டில் இவரைச் சூழ்ந்து மாணவர்கள் கூட்டம் பாடம் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
மாணவர் நலமே தன்னலமாக வாழ்ந்த ஐயன்னா ஆசிரியத் தொழிலில் இருந்த வேளையில் 1971இல் காலமானார். சுன்னாகம் மண்ணின் நாடக முன்னோடியான இவரின் பிரிவு தமிழுலகிற்கொரு பேரிழப்பாகும்.
23

Page 14
ஆசிரியர் அ. தம்பித்துரை
உடற்பயிற்சி ஆசிரியரான அ. தம்பித்துரை விளையாட்டுத் துறையில் மாணவர்களுக்கு 8 தேசிய விருதுகள் கிடைக்கப்பயிற்சி கொடுத்தவர். இதனால் மாணவர்களும் ஆசிரியரும் வெற்றி மகிழ்வெய்தினர்.
1932இல் சுன்னாகம் கிழக்கில் பிறந்தவர். ஆரம்பக்கல்வியை மயிலணியிலும், உயர்கல்வியை ஸ்கந்தவரோத யாவிலும் பெற்று இந்தியாவில் வை.எம்.சீ.ஏ யில் பயிற்சி பெற்றவர். செந்தமிழ் வல்லாளனான இவர் இந்தியாவில் படிக்கும்போது சிங் களத் திரைப்படத்தில் நடித்தவர். இவர் தேசிய தொலைக்காட்சியில் விளையாட்டுத்துறை பற்றிப் பேட்டி கொடுத்தவர். ஏற்கனவே பல நாடகங்களில் நடித்த அ. தம்பித்துரை ஒய்வுபெற்ற பின் கனடாவில் வாழும்போது எழுத்துத் துறையில் பிரவேசித்தார். கட்டுரையாளனாகவும், சிறுகதை எழுத்தாளனாகவும் தன்னை இனம் காட்டிக் கொண்ட இவர் கனடா நம்நாடு, உதயன், தமிழர், செந்தாமரை போன்ற பத்திரிகைகளிலும் யாழ்ப்பாண வலம்புரியிலும் சிறுகதைகள் எழுதியுள்ளார். ஈரமில்லா இதயும் இவர் அண்மையில் வெளியிட்ட சிறுகதை நூலாகும். −
číf. 66ðr6Ob 6.Db (ஆதவன்)
பண்டைக்காலச் சின்னங்கள் சேர்ப்பதில் பேரார் வலராக, சித்திர ஆசிரியராக, செந்தமிழ் எழுத்தா ளராக ஆதவன் என்னும் பெயரில் மறைந்திருந்தவர் சி._பொன்னம்பலம். கந்தரோடையில் சிதம்பரப்
24
 
 

பிள்ளைக்கு மகனாக 1917இல் பிறந்த பொன்னம்பலம் ஆரம்பக் கல்வியை தமிழ்க்கந்தையா வித்தியாசாலையிலும், உயர்கல்வியை ஸ்கந்தவரோதயக் கல்லூரியிலும் பெற்றுக்கொண்டார். சித்திரம், நடனம், நாடகம் ஆகிய துறைகளில் கால் பதித்த இவர் சிறுகதைகளும், கட்டுரைகளும் எழுதியுள்ளார். இலங்கையில் பல பத்திரிகைகளில் இவரின் கதைகள், கட்டுரைகள் வெளியாயின. இந்தியப் பத்திரிகைகளிலும் இவரின் கதைகள் வெளியாயின. எனக்கு இலக்கிய ஆர்வம் ஊட்டியவர்களில் இவரும் ஒருவராவார். 1999இல் உலகப்பற்றிலிருந்து நீங்கிச் சென்றுவிட்டார்.
பெரி. சன்முகநாதன்
படிக்கும் போதே இடதுசாரிக் கொள்கையுடைய வராக வாழ்ந்தவர்தான் பெரி. சண்முகநாதன். -\ 1-\ சுன்னாகத்தில் பிறந்த இவர் உயர்கல்வியை ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் பெற்றுக்கொண்டார். படிக்கும் போதே கலைச்செல்வி, தேசாபிமானிபோன்ற பத்திரிகை களில் எழுதியவர். கவிதைவல்லாளன். சிறுகதை, கட்டுரைகளும் எழுதுவார். மரபுவழியில் கவிதையெழுதும் இவரின், அம்மா எனும்— தலைப்பில் வந்த கவிதை பாராட்டுப் பெற்றது. ரூசிய தூதுவ ராலய வெளியீடான சோவியத்நாடு காரியாலயத்தில் தொழில் புரிந்த இவர் சிறந்த சிந்தனையோட்டமுள்ளவர். சில மொழிபெயர்ப்பு வேலைகளும் செய்தவர். இவரின் இளமைக்கால மறைவு இலக்கிய உலகிற்குப் பெரும் பாதிப்பாகும்.
25

Page 15
பொ. சண்முகநாதன் (சன் அங்கிள்)
சண் அங்கிள் என்றால் வாசகர்கள் எல்லோருக்கும் தெரியும். சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் இவரது இயற்கைப் பெயர் பொ. சண்முகநாதன்." சங்கு வேலியில் 1939இல் பொன்னையாவிற்கு மகனாகப் பிறந்தார். இப்பொழுது சுன்னாகம் கந்தரோடையில்
வாழ்கின்றார். ஆரம்பக்கல்வியை சங்குவேலி சுப்பிரமணிய வித்தியாலயத்திலும், உயர்கல்வியை மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும் தொடர்ந்தார். எழுதுவினைஞராகத் தொழில் செய்தார். இவர் 1961ல் எழுத்துத்துறையில் காலடி வைத்தவர். அன்று தொடக்கம் நகைச்சுவைக் கட்டுரை, அரசியல் கட்டுரை என்ற வகையிலும், சிறுகதை, குறுநாவல் என்ற வகையிலும் இலக்கிய நடைபோட்டவர் பொ. சண்முகநாதன். வானொலிப் பிரதி ஆக்கங்களும் எழுதியவர். உதயன் பத்திரிகையில் எழுதிவந்த நினைக்க சிரிக்க சிந்திக்க என்ற பத்தித் தொடருக்கு 2004இல் சிறந்த தமிழ்ப் பத்தி எழுத்தாளர் விருதினை இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் வழங்கியது. இத்தொடர் மணிமேகலைப் பிரசுரமாக வந்துள்ளது.
சண் அங்கிள்
கொழும்புப்பெண் - நகைச்சுவை வெள்ளரி வண்டி - சிறுகதைகள் பெண்ணே நீ பெரியவள்தான் - நகைச்சுவை இதோ ஒரு நாடகம் ;Ꮡ நினைக்க சிரிக்க சிந்திக்க சிரிப்போம் சிந்திப்போம்
ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார்.
26
 

சபாபுஸ்பகாதன் r
செய்தியாளராகச் சிறுகதை எழுத்தாளராகத் தன்னை வாசகர்களுக்குக் காட்டி நிற்பவர்தான் சபா புஸ்பநாதன். சுன்னாகத்தில் 1949இல் சபாபதி
என்பவருக்கு மகனாகப் பிறந்தவர் புஸ்பநாதன். இவர் தனது ஆரம்பக்கல்வியை சுன்னாகம் LDuî6)60öf 60) ՑF6) மகாவித்தியாலயத்திலும் உயர் கல்வியை ஸ்கந்தவரோதயக் கல்லூரியிலும் தொடர்ந்து, கட்டுப்பத்தை பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலாளரானார். இவர் படிக்கும் காலத்தில் ஈழநாடு, வீரகேசரி போன்ற பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதி வந்தார். இலங்கையிலும் வெளிநாட்டிலும் பல ஸ்தாபனங்களில் பொறியியலாளராகக் கடமையாற்றி இப்பொழுது தொழிலதிபராகியுள்ளார். ஈழநாடு சிறுகதைப் போட்டியிலும், குரும்பசிட்டி சன்மார்க்கசபை நடத்திய போட்டிகளிலும் பரிசில்கள் பெற்றார். சுன்னாகம் பிரதேசசப்ை கட்டுரைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றார். இவர் தொடர்ந்து செய்தியாளராக இருக்கிறார். :
சு. ருநீகுமரன் (இயல்வாணன்)
எந்த விடயத்தையும் மிகத் துல்லியமாக, அழகாக, ஆழமாகச் சொல்லும் திறமை ஒருவருக்கு இருக்கு மாயின் அது இயல்வாணனுக்குத்தான் என்று "Yo for . . . . சொல்லலாம். சுன்னாகம் தெற்கில் பிறந்த இவரின் இயற்பெயர் சுப்பிரமணியம் பூரீகுமரன். ஆசிரியரான இவர் பயிற்றப்பட்ட வர்த்தகம் மற்றும் கலைமானி, பட்டப்பின் கல்வி டிப்புளோமா பட்டங்கள் பெற்றதோடு முதுகல்வியியல்மானி ULUL9(60) நிறைவுசெய்துள்மூர் ஆரம்பக்கல்வியை சுன்னாகம்

Page 16
நாகேஸ்வரி வித்தியாசாலையிலும், உயர்கல்வியை யூனியன் கல்லூரியிலும், மல்லாகம் மகாவித்தியாலயத்திலும் தொடர்ந்தார்.
சிறுகதை, நாவல், கவிதை, விமர்சனம், சிறுவர் இலக்கியம், ஊடகத்துறை, புகைப்படத்துறை, பத்தி எழுத்து ஆகிய களங்களில் நின்று தடம் பதிப்பவர்தான் இயல்வாணன். இவரின் சுவடுகள் (நாவல்), அற்றுப்போன அழகு (கட்டுரைகள்), இங்கிருந்து (12பேரின் சிறுகதைகள்), சிவபூதராயர் திருப்பள்ளி எழுச்சி, கதிரமலைப் பதிகம், ஆலயங்களுக்கான கவிதைகள் அச்சுருப்பெற்றவைகள். உலகளாவிய ஈழத்து எழுத்தாளர் மத்தியில் இந்தியாவின் சுபமங்களா பத்திரிகை நடத்திய நாவல் போட்டியில் மூன்றாம் பரிசினை இயல்வாணன் எழுதிய உகைப்பு குறுநாவல் பெற்றமை குறிப்பிடத்தக்கது. கவிதை சஞ்சிகை நடத்திய மஹாகவி நினைவுக் கவிதைப் போட்டியில் இரண்டாமிடம் பெற்றார். உலகளாவிய ரீதியில் ஈழத்து எழுத்தாளர்களிடையே லண்டன் பூபாளராகங்கள் அமைப்பும் தினக்குரல் பத்திரிகையும் இணைந்து நடாத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசினைப் பெற்றார்.
கலாபூஷணம் சு. துரைசிங்கம்
கந்தரோடையில் சுப்பிரமணியம் நாகம்மா தம்பதி
யர்க்கு மகனாய் 1939ஆம் ஆண்டு பிறந்தவர்தான் துரைசிங்கம். ஆரம்பக்கல்வியை கந்தரோடை
தமிழ்க்கந்தையா வித்தியாசாலையிலும், உயர் கல்வியை ஸ்கந்தவரோதயக் கல்லூரியிலும் பெற்றவர். படிக்கும்போதே பதினாறு வயதில் தனது முதற்கவிதையை
28
 

வீரகேசரியில் எழுதியவர். அன்று முதல் கவிதை, சிறுகதை, நாடகம், கட்டுரை ஆகிய துறைகளில் எழுதி வருகிறார். பத்திரிகை, வானொலி ஆகிய ஊடகங்களிலே தனது ஆக்கங்களை வெளியிட்டார். ஆசிரியராக தமிழ்கந்தையா வித்தியாசாலையில் சேர்ந்த இவர் படிப்படியாக அதிபராகப் பல மகாவித்தியாலயங்களில் பணியாற்றி ஒய்வு பெற்றார்.
1972இல் தெருவிளக்கு கவிதை நூலை வெளியிட்டார். தொடர்ந்து ஐம்பது நாடுகளை அறியுங்கள், க்விக்குரல்கள் (ஒலிப்பதிவு நாடா), ஆடும் மயில், 46 நாடுகள், பண்சுமந்த பாடல், அம்மன் கவசம் ஒலிநாடா, இந்து தர்மத்தில் பத்துக்கள் வீடியோ இறுவெட்டு போன்றவற்றை ஆக்கி வெளியிட்டார். பண்சுமந்த பாடல் நூலிற்கு இந்து கலாசார அமைச்சு 2000ஆம் ஆண்டு சான்றிதழும் வெகுமதியும் கொடுத்தது. ஒய்வு பெற்றபின் வலம்புரியில் உதவி ஆசிரியராக இருந்து பல போட்டிகள் நடத்துவதற்கு ヘご உதவியவர். 2004இல் இலங்கை கலாசார அமைச்சு கலாபூஷணம் எனும் உயர் விருதினை இவருக்குக் கொடுத்தது. இவரது பேட்டிகள் பத்திரிகைகளிலும், ஐ.தேசியத்தொலைக்காட்சியிலும், இலங்கை வானொலியிலும் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
b. ởf.öhöfb6ODjö III î66DD6
[စ္ဆမြို့စ္ကိုစွန် இவர் கந்தரோடையைச் சேர்ந்தவரென்றும்
இந்தியாவில் வாழ்ந்தவரென்றும் அறியமுடிகிறது. “பழந்தமிழர்” போன்ற நூல்களை எழுதியுள்ளார். 1957இல் பழந்தமிழர் எனும் நூல் மூன்றாம் பதிப்பாக" வந்ததால் 1900 ஆண்டுகளுக்கு முன்பே இந்நூல் முதல் பதிப்பு வெளிவந்திருக்கலாம். 29 இவரின் நூலின் பிற்பகுதியில்

Page 17
தமிழர் சரித்திரம், திராவிட இந்தியா, திராவிட நாகரீகம் போன்ற நூல்களின் பெயர்கள் இருப்பதால் இவரே அந்நூல்களை எழுதியிருக்கலாம் என நம்ப முடிகிறது. இவர் பற்றி ஆராய வேண்டும்.
செல்வி. சற்குணசிங்கம் நளாயினி
சுன்னாகம் மயிலனியில் 1976இல் சற்குணசிங்கம் அவர்களுக்கு மகளாகப் பிறந்தார். ஆரம்பக் கல்வியை மயிலனி சைவ மகாவித்தியாலயத்திலும் உயர்கல்வியை இராமநாதன் கல்லூரியிலும் தொடர்ந்தார். சிறுவயதிலிருந்தே கவிதை, கட்டுரை ஆகிய துறைகளில் எழுதத் தொடங்கினார்.
வானொலிகளும் பத்திரிகைகளும் இவரின் ஆக்கங்களுக்கு இடம் கொடுத்தன. 2000ஆம் ஆண்டு இவரது கதைகள் வானம் பாடியில் வெளிவரத் தொடங்கின. இலங்கை வானொலியின் வானம்பாடி சேவையில் மறவாத அமைப்பு, பிரிந்த உறவுகள், மீண்டும் ஒரு வாழ்வு, அண்ணனே தெய்வம், குடும்பம் ஒருகோயில், ஒன்றான உள்ளங்கள், அறிமுகம் தந்த ஆறுதல், அன்பைத்தேடி ஆகிய கதைகள் ஒலிபரப்பப்பட்டன.
இலங்கை வானொலியின் தென்றல் சேவையும், யாழ் எவ். எம்மும் இவரின் கதைகளையும் கவிதைகளையும் ஒலிபரப்பின. தென்றல் சேவை எட்டுக் கட்டுரைகளை ஒலிபரப்பியமை குறிப்பிடத்தக்கது. வலி தெற்கு கலாசாரப்பேரவை நடத்திய இலக்கியப்போட்டிகளில் புகைத்தல் என்ற கவிதைக்கு முதலாம் பரிசும், வெள்ளைப்புடவை என்னும் சிறுகதைக்கு மூன்றாம் பரிசும் கிடைத்தது. உதயன், சுடரொளி போன்ற பத்திரிகைகளிலும் இவரது
சிறுகதைகள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.
30 y
 

டாக்டர். இராசலிங்கம் சிவசங்கர்
சுன்னாகம் கிழக்கில் இராசலிங்கம் நாகேஸ்வரி தம்பதியர்க்கு மகனாக 1981இல் பிறந்த சிவசங்கர் தனது ஆரம்பக்கல்வியை சுன்னாகம் நாகேஸ்வரி வித்தியாசாலையிலும் உயர்கல்வியை யாழ். இந்துக்கல்லூரியிலும், புத் தளம் இந்துக் கல்லூரியிலும், கோணேஸ்வரா இந்துக்கல்லூரியிலும் நிறைவு செய்தார். தற்போது டாக்டராக கடைமையாற்றும் இவர் ஆதம்பத்தில் நாகேஸ்வரி வித்தியாலயத்தில் படிக்கும்பொழுது சுன்னாகம் கொத்தணிக் கவிதைப் போட்டியில் பரிசினைப் பெற்றுத் தனது எழுத்துத் துறையை ஆரம்பித்தார். திருகோணமலையில் படிக்கும்போது மீன்பிடி வளமும் நீடித்த பயன்பாடும் என்ற கட்டுரைக்கு பரிசிலைப்பெற்றார்.
மேலும் மருத்துவபீட நாடி சஞ்சிகையில் கதை, கவிதைகள் பல எழுதி வந்தார். உதயனில் தென்னிந்திய திரைப்படங்கள் தணிக்கை செய்யப் பட வேண்டும் என்ற கோசத்தில் கட்டுரையை எழுதினார். நமது ஈழநாடு பத்திரிகையில் நீரிழிவு நோயுடன் ஆரோக்கியவாழ்வு என்ற தொடர் கட்டுரையை சிவசங்கர் எழுதினார். இத்தொடர் பின் நூலாக வெளியிடப்பட்டது.
கனகாநாயகம் வேல்தஞ்சன்
கந்தரோடையில் 1971இல் சங்கரப்பிள்ளை கனகநாடகம் அவர்களின் மூத்த மகனாகப் பிறந்தவர்தான் வேல்தஞ்சன். தமிழ்க்கந்தையா வித்தியாலயத்தில் தனது ஆரம்பக்கல்வியைத்
தொடர்ந்த வேல்தஞ்சன் உயர்கல்வியை ஸ்கந்தவரோதயக் 31

Page 18
கல்லூரியிலும், சென் பற்றிக்ஸ் கல்லூரியிலும் கற்றார். யாழ்பல்கலைக்கழகத்தில் செய்தி ஊடகவியல் டிப்ளோமா கற்கையை நிறைவு செய்தார். இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் ஆங்கில மூல கலைப்பட்டத்திற்காகப் பயின்றுகொண்டிருந்தார். சென்னையில் இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்து ஆகிய பத்திரிகைகளில் ஊடகத்துறை உள்ளகப் பயிற்சியைப் பெற்றார். பிரிட்டிஷ் ஒலி - ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊடகத்துறைக் கற்கையையும் நிறைவு செய்துள்ளார். அத்துடன் டென்மார்க் ஊடகப்பயிற்சிக் கல்லூரி, பிரிட்டிஷ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் ஆகியவற்றினால் யாழ் பல்கலுைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தில் நடத்தப்பட்ட ஊடகத்துறை பயிற்றுநர் கற்கைநெறியையும் நிறைவு செய்து, யாழ் பல்கலைக்கழகத்தின் அப்பயிற்சி நிலையத்தில் ஊடகத் துறைக் கான பகுதிநேர விரிவுரையாளராகவும் பணியாற்றுகிறார். யாழ்மாவட்ட செயலகத்தில் வடக்கு கிழக்கு வீடமைப்பு புனர்நிர்மாணத்திட்ட தகவல் - கல்வி - தொடர்பாடல் ஆலோசகராகவும் பணிபுரிந்தார்.
1987இல் எழுத்துத் துறையில் ஈடுபடத் தொடங்கினார். கவிதையை தமிழ், ஆங்கில மொழிகளில் செய்தார். அரசியல், சமூக, பொருளாதார ஆய்வுக்கட்டுரைகளையும், விவரணக் கட்டுரைகளையும் எழுதினார். 2004இல் உதயன், சுடரொளி ஆகிய பத்திரிகைகளில் எழுதிய சமூக, அரசியல், பொருளாதாரம் சார்ந்த விவரணக் கட்டுரைகளுக்கு இலங்கை பத்திரிகையாளர் கழகமும் பத்திரிகையாளர் ஸ்தாபனமும் இணைந்து வழங்கிய அகில இலங்கை விருது இவருக்குக் கிடைத்துள்ளது. வேல்தஞ்சன் இலத்திரனியல் ஊடகத்துறை, அச்சு ஊடகத்துறை ஆகிய இரண்டிலும் அனுபவம் மிக்கவர்.
32

இவர் பல்வேறு துறைசார் ஆங்கில மொழிமூல ஆக்கங்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மொழிபெயர்ப்பு, உரைபெயர்ப்பு ஆகிய துறைகளிலும் இவருக்கு ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. இலங்கைப் பாராளுமன்றத்தின் உரைபெயர்ப்பாளர் தெரிவுக்கான பரீட்சையில் முதலாம், இரண்டாம் சுற்றுக்களில் சித்தியடைந்து இறுதிச்சுற்றுப் பரீட்சைக்கும் தெரிவாகியிருந்தார். இவர் அரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் உள்ளுராட்சி, கல்வி ஆகிய துறைகள் சார்ந்த திணைக்களங்களில் பணியாற்றிய அனுபவத்துடன் திகழ்கிறார்.
சின்னையாசிவஞானம் சுசிதர்)
சுசிதர் என்ற புனைபெயரில் எழுத்துத்துறையிலும்
நடிப்புத்துறையிலும் ஈடுபட்டவர்தான் சிவஞானம் அவர்கள்.
சுன்னாகத்தைச் சேர்ந்த சின்னையாவிற்கும் சிவக்கொழுந்து விற்கும் ஐந்தாவது பிள்ளையாக 21.10.1945இல் இவர் பிறந்தார். ஆரம்பகல்வியை சுன்னாகம் நாகேஸ்வரி வித்தியாலயத்திலும் உயர்கல்வியை சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியிலும்
பெற்றுக்கொண்டார்.
படிக்கும் காலத்திலும் பேச்சார்வங் கொண்டவராகவும் நடிப்பார்வங் கொண்டவராகவும் காணப்பட்டார். அவையே பின் நடிகராகவும் அரசியல் பேச்சாளராகவும் ஏன் எழுத்தாளராவதற்கும் தூண்டு கோலாக அமைந்தது. இவர் இளம் வயதிலே "கொலையுண்ட கன்னிகள்” என்னும் மர்மநாவலை வெளியிட்டார். இந்நிகழ்வுக்கும் இவரின் Udಣ್ಣ೦ಹಿ திருமணத்துக்கும் உற்?

Page 19
துணையாக நின்றவர் சோக்கெல்லோ சண்முகநாதன் ஆவார்.
நாடகங்கள் எழுதுவதிலும் நடிப்பதிலும் நெறியாள்கை செய்வதிலும் வல்லவர் என்பதற்கு எடுத்துக்காட்டாக "காதலா கடமையா” என்ற நாடகத்தின் வெற்றியைக் குறிப்பிடலாம். சுன்னாகத்தின் முதலெழுத்தையும் சின்னையா என்ற தந்தையின் முதலெழுத்தையும் தள்மாவதி என்ற மனைவியின் முதல் இரண்டு எழுத்துக்களையும் சேர்த்தே சுசிதர் என்ற புனைபெயரை வைத்ததாகச் சொல்லியுள்ளார். 08:08:2005 அன்று இயற்கை
யெய்தினார்.
டாக்டர்சு. மகாலிங்கம்
சுப்பிரமணியத்தின் மகனான மகாலிங்கம் அவர்கள் சிறுவயதில் அளவெட்டியில் வாழ்ந்தார். சண்டிலிப் பாயில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கிய இவர் உயர்கல்வியை சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரில் நிறைவு செய்து மருத்துவப்படிப்பைத் தொடர்ந்து டாக்டர் பட்டம் பெற்றுக்கொண்டார். சுன்னாகம் ஸ்கந்தவரோதயவில் படித்தவேளை இவர் சுன்னாகம் மேற்கினைத் தனது வாழ்விடமாகக்
கொண்டார்.
படிக்கும்பொழுது வீரகேசரி நடத்திய கட்டுரைப் போட்டியில் கலந்து முதலாம் பரிசினைப் பெற்றுக் கொண்டார். உயர்வகுப்பில் படித்த வேளையிலே ஆசிரியரான மாதகல் கந்தசுவாமி அவர்களுடன் இணைந்து “மேற்கோள் ஆயிரம்” எனும் நூலினை வெளியிட்டார். யாழ் இளம் எழுத்தாளர் சங்கத்தினை உருவாக்குவதில் கலா பரமேஸ்வரன், கு. தியாகராச சர்மா,
34
 

சு. துரைசிங்கம் ஆகியவர்களுடன் இணைந்து செயற்பட்டதுமன்றி தலைவராகவும் சேவையாற்றியவர். சிறுகதை, கட்டுரை ஆகிய துறைகளில் ஆழக் காலூன்றியவர். இளம் எழுத்தாளர் சங்க ஆண்டு மலர் வெளியிடுவதில் முக்கிய பங்கு வகித்தார். இப்பொழுது வவுனியாவில் பணிபுரியுமிவர் அவ்வப் பொழுது கட்டுரைகள் எழுதி வருகின்றார்.
இ. சிறீஸ்கந்தராசா
இவர் வேறுயாருமல்ல சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரின் பூட்டனாராவார். சுன்னாகம் மயிலனியில் இராமசுவாமியின் மகனாகப் பிறந்த இவர் மயில்னி சைவமகாவித்தியாலயத்தில் ஆரம்பக்கல்வியையும் ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் உயர்கல்வியையும் நிறைவு
செய்தார்.
கூட்டுறவுத் துறையில் ஈடுபட்ட இவர் மாலைதீவு சென்று சிலகாலம் தொழில் பார்த்தபின் கொழும்பில் வாழ்ந்து வருகிறார். கடந்த பத்து ஆண்டுகளாக எழுத்துத்துறையில் ஈடுபட்டுக் கட்டுரைகளை எழுதிவருபவர். தினகரனில் வெளியான திருக்குறள் பற்றிய கட்டுரைத்தொடர் நூலுருப்பெற்றது.
இதனைத் தொடர்ந்து எழுதிய நூல்கள் 1. நகைச்சுவைக்கதம்பம்
பஞ்சவர்ணக்கதம்பம் நகைச்சுவைப்பூங்கா பல்சுவைக்கதம்பம்
நகைச்சுவை முத்துக்கள் 35

Page 20
6. பல்சுவை மணிகள் 7. உலகப்பேரொளி உத்தமர் காந்தி 8. பல்சுவைச்சுரங்கம்
ஆகிய நூல்களை வெளியிட்டார். இவற்றினை விட சுன்னாகம் குமாரசுவாமிப்புலவரின் 150வது ஆண்டு நினைவு மலரையும் தொகுத்து வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
குகதாசசர்மா சிவகுமார்
சுன்னாகம் மயிலனி குகதாசசர்மாவிற்கு மகனாக 1967இல் பிறந்தவரே சிவகுமார். ஆரம்பக்கல்வியை திருகோணமலை பெருந் தெரு விக்கினேஸ்வர வித்தியாலயத்திலும், தொடர்ந்து மயிலன்னி சைவ மகாவித்தியாலயத்திலும் கற்றார். உயர்கல்வியை மகாஜனாக் கல்லூரியில் நிறைவு செய்தார்.
சிவகுமார் அவர்கள் தனது 20வது வயதில் முதலில் முரசொலியில் எழுதினார். தொடர்ந்து உதயன், வலம்புரி, ஞானச்சுடர், தாயகம் போன்ற பத்திரிகைகளில் எழுதிவருகின்றார். மரபுக்கவிதையைப் பேணும் இவர் “சிறுவர் பாடல்” என்னும் பாடல்தொகுதியையும் தரம் 5 மாணவர்களுக்கான சுற்றாடல் சார்ந்த இறுவட்டு ஒன்றினையும் வெளியிட்டுள்ளார். இது மிருகங்கள் பற்றியது
ஆகும.
36.
 

இதேவேளை சங்ககால நாடகம் பற்றி மாணவர்களுக்குரிய கையேடு ஒன்றினையும் வெளியிட்டுள்ளார். ஆசிரியர் தொழிலில் ஈடுபட்ட இவர் படிப் படியாக கல்விமுதுமானி பட்டமும் பெற்ற சிறந்த போதனையாளன். இப்பொழுது அதிபர் பதவி வகிக்கிறார்.
டாக்டர். அருமைநாயகம் ஜெயகுமரன்
சுன்னாகம் கிழக்கில் அருமைநாயகம் அவர்களுக்கு புத்திரராகப் பிறந்தவர்தான் ஜெயகுமரன் அவர்கள். ஏகபுத்திரனான இவர் ஆரம்பக் கல்வியை சுன்னாகம்
S மயிலனி 6F6 மகாவித்தியாலயத்திலும்
உயர்கல்வியை யாழ் இந்துக்கல்லூரியிலும் கற்று நிறைவுசெய்தார். படிக்கும்பொழுதே அதாவது 1987இல் தனது எழுத்தாக்கத்தைப் பத்திரிகையில் கண்டவர். அன்று தொடக்கம் கவிதை, சிறுகதை, நாடகம் ஆகிய துறைகளில் காலினைப் பதித்தவர். உதயன்
பத்திரிகைகளிலும் யாழ் இந்து சஞ்சிகையிலும் எழுதிவரத் தொடங்கினார்.
பல கவியரங்குகளில் பங்குபற்றிய இவர் டாக்டர் படிப்பிற்காக ருசியா நாட்டிற்குச் சென்றபோது இதயஒலி என்னும் பத்திரிகைக்கு பிரதம ஆசிரியராக இருந்தார். அவ்வேளையில் பிரான்சிலிருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிகையில் சிறுகதைகள் எழுதியுள்ளார்.
கல்லூரி மாணவனாக இருந்தபோது கவிதைப்போட்டியில் ۶۔ பரிசில் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
37

Page 21
சி. விஜயானந்தன்
இவர் கந்தரோடையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாசாலை, ஸ்கந்தவரோதயக்கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார்.
கல்லூரிப் படிப்பை. முடித்துக்கொண்ட இவர் அரசியல் கட்டுரைகள், பொருளாதாரம் சம்பந்தமான கட்டுரைகளை எழுதிவந்தார். தேசாபிமானி, வீரகேசரி போன்றவற்றில் இவரின் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. அமரரான இவர் பற்றிய தகவல்ககள் போதியளவு இல்லாதுள்ளது.
ச. மகேஸ்வரன்
இவர் கந்தரோடையை பிறப்பிடமாகக் கொண்டவர். བ་མ་ கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாசாலையிலும்
சுன்னாகம். ஸ்கந்தவரோதயாக் கல்லூரியிலும் கல்வி கற்றபின் இவர் இலங்கையில் லிகிதராகச்
சேவையாற்றி மாலைதீவில் இப்பொழுது தொழில் செய்கிறார். படிக்கும்போதே ஈழநாடு, வீரகேசரி போன்ற பத்திரிகைகள் மூலம் தனது எழுத்தை வளர்த்துக்கொண்டார். யாழ் இளம் எழுத்தாளர் சங்கத்திலும் இணைந்து செயற்பட்டவர்.
38
 

எழுதாத எழுத்தாளர் இளையண்ணா
DTL (66)655)ěř சவாரிப்போட்டி ரசிகர்களிடம்
இளையண்ணாவைத் தெரியுமோ என்று கேட்டால் அவரையா தெரியாது என்று சொல்வார்கள். இந்தப் ஆy - பிரபலம் இறந்து பல ஆண்டுகளாகின்றன.
சுன்னாகத்தைச் சேர்ந்த இராமநாதனுக்கும் மீனாட்சிப் பிள்ளைக்கும் மகனாகப் பிறந்தவர்தான் இளையதம்பி என்று அழைக்கப்படும் இளையண்ணா. இவர் ஆரம்பக்கல்வியை சுன்னாகம் மயிலனி சைவ வித்தியாலயத்திலும் மேற்படிப்பை சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியிலும் தொடர்ந்தார். படிக்கும் காலத்தில் நாடகத்திலும் விளையாட்டிலும் ஆர்வமுடன் ஈடுபட்டார்.
அரச மரக்காலையில் பொறுப்பாளர் பதவியேற்று வந்த இவர் இலங்கையில் முதலில் தயாரிக்கப்பட்ட வண்ணத்தமிழ்ப் படத்தில் (16 mm) நடித்தார். இவர் நடித்த காட்சிகள் பல சுன்னாகத்திலும் மருதனார்மடத்திலும் எடுக்கப்பட்டன. இவர் பல நாடகங்களில் நடித்திருக்கிறார். தினகரன் மாட்டுவண்டிச் சவாரிப்போட்டி போன்ற பல போட்டிகளை ஒழுங்கு செய்து நடத்தியுள்ளார். இவர் யாழ்ப்பாணத்தில் மாட்டுவண்டிச் சவாரிப்போட்டி என்னும் நூல் எழுத பெரும் துணையாக இருந்துள்ளார். த. சண்முகசுந்தரம் எழுதிய இந்த நூலில் இவரின் பங்குபற்றி நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். எனவேதான் இவரை எழுதாத எழுத்தாளர் என்று சொல்லவேண்டி இருக்கிறது.
இவர் 29.12.1992இல் இயற்கையெய்தினார்.
39

Page 22
கட் டுரை எழுதிவந் கட்டுரைக் போதியள
இந்நூலில் இடம்பெறும் ä60 фрайВалпgф6їldї водъ6lшqрöф!
கவிஞர் துரையரின் பிற ஆக்கங்கள்
தெரு விளக்கு (கவிதைத் தொகுப்பு) கவிக்குரல்கள் (ஒலிநாடா நூல்) ஐம்பது நாடுகளை அறியுங்கள் ஆடும் மயில் (சிறுவர் பாடல்)
46 நாடுகள் *
பண் சுமந்த பாடல்
அம்மன் கவசம் நூல் அம்மன் கவசம் ஒலிநாடா டாக்டர். S.R. பூரீதர்னன் இந்துதர்மத்தில் பத்துக்கள் (சின்னத்திரை விருந்து
சுன்னாகத்தின் தமிழ் எழுத்து இலக்கிய முன்னோடி
மயூரபதி பத்திர காளி அம்மன் மும்மணிக்கோவை
LuffLDT Lugi LJ85ub 118 ஸ்ரேசன் லே சுன்னாகம் கிழக்கு சுன்னாகம்.
40

LITIգԱ
) கள் (அச்சில்)
35,

Page 23


Page 24

s.
|×|(ŕ)|×:|-|- *) sae|-:: aes.
JFET e GTe