கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலங்கரை விளக்கு கல்விப் பணிப்பாளர் இரத்தினராசா

Page 1

அMெ.செல்லை//

Page 2
*曇 蠶 கல் தாழ்ந்துள்ளது. அதனை மேலுக்கு கொண்டு வருவது நமது கடமை.
 

கொழும்புதமிழ்ச்சங்கம்
நூலகம்

Page 3

கலங்கரை விளக்கம்
கல்விப் பணிப்பாளர்'
இரத்தினராசா
அ. பொ. செல்லையா
܊ܧܡܬ̇
'S
AC
ஆய்ங்குதிேப்பகம்
கொழும்பு - 13
மீசாலை - 2

Page 4
முதற் பதிப்பு : மே 1998
- திருவள்ளுவராண்டு வைகாசி 2029
விலை ரூபா 100/.
(இதில் வரும் ஊதியமனைத்தும் கல்விப் பணிப்பாளர் இரத்தினராசா புலமைப் பரிசில் நிதியத்தில் சேர்க்கப்படும்)
அச்சிட்டோர்.
ickram 73ripters 9, Wolfendhall Lane, Colombo - 13. T.P.: 074 - 610490

(3)
அணிந்துரை
கல்வியாளர்கள், கல்வி நிர்வாகிகள் என்று பேசப்படுபவர்கள் எவர்களாக இருக்க முடியும்?
கல்வி கேள்விகளிற் சிறந்து விளங்கி, பற்பல பட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாகப் பெற்று, தாம் பெற்ற கல்வியால் ஏனையோரை வளர்க்காது. தானென்றும் தன் குடும்பமென்றும் தன் பதவியென்றும் தன் சம்பாத்தியமென்றும் வாழுகின்ற தொகுதியினரா?
அதுவன்றி -
கை மண்ணளவு கற்றுவிட்டு, வாய்ச் சொல்லில் வீரராகவும், பாட்டாளிகளுக் குழைப்பவராகவும், உயர் கல்வி பெற்றவர்தான் கல்வியாளர்களா எனத் தமக்குள்ளே வினாவிக் கொண்டு, தாம் செயல் வீரரெனக் காட்டிக் கொண்டு உறுமின் வரும்வரை காத்திருந்து சந்தர்ப்பம் வரும்பொழுது அதனை இறுகத் தழுவிக் கொண்டு அரசியல் சாயலில் தம்மை ஏற்றமுறு நிலையில் அமர்த்திக் கொள்ளும் மற்றொரு தொகுதினரா?
அதுவுமன்றி -
உயர்கல்வி பெற்றுப் பல்தேர்வுகளில் வெற்றியீட்டி, கல்விசார் உயர்பதவிகளை வகுத்துக் கொண்டு, சமூக இசைவாக்கம் எதுவுமின்றி அரசநிதிப் பிரமாணங்கள் - ஏற்பாடுகள் - தாபனக்கோவை விதிகள் போன்ற பூதகணங்களுக்குப் பின்னே பதுங்கியிருந்து கொண்டு தற்றுணிவாக ஒன்றையும் சாதிக்காமல் சட்ட நுணுக்கங்களை நூலிடையில் கணித்து "எதுவும் முடியாது” என்ற முடிபுக்கு வந்து நாடி வருபவர்களின் குறிப்பறிய விரும்பாதவர்களான பிறிதொரு தொகுதியினரா?
இவற்றுக்கு மேலாக -
கல்வியின் நோக்கங்களை உணர்ந்து அதன் பல்
பரிமாணங்களைக் கணித்து, சாந்துணையும் கற்றலுக்கு ஊக்கமளிக்கக் கூடியதாகப் பிஞ்சு மனங்களுக்குக் கல்வி கற்பதற்கு வேண்டிய

Page 5
(4)
சூழலையும் அவா நிலைகளையும் தோற்றுவித்து, கல்விக் கூடங்கள் தோறும் கல்விச் செயற்பாடுகளுக்கான வழிவகைகளைத் தேடிக் கொடுத்து, மாசற்ற நெஞ்சம் படைத்த மாணவச் செல்வங்களுக்கு மாண்புடை ஆசிரிய அணியை நியமித்து , ஆசிரிய உலகின் துயர் துடைத்து ஆசிரிய வாண்மை மேம்பாடுகளுக்கு வழிவகுத்து, உளம் பூத்த ஆசிரியர்களின் முழுமையான பங்களிப்புடன் மாணவர்களைச் சிந்தனைச் சிற்பிகளாகவும், கல்வி மேதைகளாகவும், விஞ்ஞான மொழினுணுக்க ஆய்வாளர்களாகவும். நுண்கலை வல்லுனர்களாகவும் ஆக்கி, அவர்கள் மூலம் அவர்களும் மண்ணும் - சமுதாயமும் - தேசமும் பயன்பெற வழி சமைக்கும் தொகுதியினரா என்று சிறிது சிந்திப்போமா?
அமரர் இரத்தினராசா மேலே குறிப்பிட்ட எந்த வகையினர் என்பதை நீங்களே அறியுங்கள். இவையாவற்றிற்கும் மேலாக அமரர் இரத்தினராசா அவர்கள் மனிதநேயம் படைத்தவர், அத்துடன் ஏழைகள்பால் அன்பு பூண்டவர், திறந்த உள்ளம் கொண்டவர், வன்சொல் கூறி இன்செயல் ஆற்றியவர், கடமை வீரர், நல்விருந்தோம்புபவர், இறைபக்தி கொண்டவர். சொற்கரத்தால் மெதுவே தட்டி செயற்கரத்தால் இனிதே அனைப்பவர். வாக்கினிலொன்றாய் மனத்தினி லொன்றாய் செயற்படுபவர் அல்லர். அவர் செய்த நற்சேவைகள் யாவும் கல்வி உலகில் என்றும் அகல் விளக்காக நின்று ஒளி ஏற்றும் கல்வி அழகே அழகு, “இன்பமே சூழ்க ” என்ற கோசங்கள் நீங்காத நினைவாக நின்று நிலைத்திடத் தாய்நாடு பதிப்பகத்தாா கலங்கரை விளக்கம் எனத் தலைப்பும் கொடுத்து நூலாக வெளியிடுவது பாராட்டுக்குரியதாகும்.
அவற்றைத் தொகுத்தும் - வகுத்தும் - எழுதியும் தந்துள்ளார் நண்பர் அ. பொ. செல்லையா அவர்கள். தலைநிமிர் அதிபர் செல்லையா அவர்கள் அறிஞர் அண்ணா அவர்களின் ஆத்மப் பிரியன், பாரதியாரின் புரட்சிக் கருத்துக்களின் சாயல் படைத்தோன், கண்ணியம் மிக்கோன், கல்விப் பண்பாளன். இவனது சொல்லாண்மை கருத்தாண்மை - இந்நூலைப் படிப் போர்க்கு நல்ல வேளாண்மை u II (5 D.
இரா. சுந்தரலிங்கம் 1998-(5-20 முன்னாள் பிராந்தியக் கல்விப் பணிப்பாளர்
யாழ்ப்பாணம்

(5)
முன்னுரை
கல்விப் பணிப்பாளர் இரத்தினராசா அவர்கள் காலமாகி விட்டார் என்ற செய்தியை 31.3.98 காலை உதயன் நாளிதழில் பார்த்தவுடன் திடுக்கிட்டுப் போனேன்.
‘போயிற்று வருகிறேன் - என யாழ் மருத்துவமனையிலிருந்து புறப்படுகையில் சொன்னவர். 'போய் விட்டார்; திரும்ப வரமாட்டார் என்பதை உணர்ந்தேன்.
ஆறுமாத இடப்பெயர்வு அவரைக் குடும்பத்தில் ஒருவராக்கி விட்டது. மேலும் நல்லியல்புகள் பலவற்றைக் கண்டதால் எனது கணிப்புக் குள்ளானவரானார்.
கடமை உணர்வு அவரிடம் அளவுக் கதிகமாக இருந்தது. "செய்வன திருந்தச் செய்" அவருக்கு இயல்பாக இருந்தது.
அறிஞர் அண்ணா அவர்களின் நூல்கள் பலவற்றைப் படித்து, ஒரு பகுத்தறிவு வாதியாக மிளிர்ந்தார்.
விரலிற் புண் என்றால் அதனை வெட்டி எறிய வேண்டும் என அவர் நினைத்ததில்லை. எனினும், இரகசியம் பேணாத குழந்தையாக இருந்ததால், பரிகாரக் கற்பித்தலில் நம்பிக்கை வைத்திருந்தார். தீமையாளரை நன்னிரோட்டத்தில் கொண்டு வந்திடலாமென நம்பினார். தீர்வின் விடியலைக் காணுமுன் காலன் அவரைக் காவு கொண்டு விட்டான்.
அதனால், சிலம்பில் கண்ணகியின் கடமைபோல எனக்குச் சில பொறுப்புக்கள் இருந்தன. அதன் அடிப்படையே இந்நூல். விரிவஞ்சி - செலவஞ்சி விரும்பியது - நினைத்தது - கண்டது - அவதானித்தது - ஊகித்தது எல்லாம் இடம் பெறவில்லை.
அறியாமை அகன்றிட, கல்வியால் பகுத்தறிவு மலர்ந்திட

Page 6
(6)
விழைந்த ஒரு நல்லோனின் நினைவை நீங்காது நிலைத்திட வைத்திடும் இந்நூல் என நம்புகின்றேன்.
இதில் என்னுடன் சேர்ந்து உழைத்திட்ட விரிவுரையாளர் ஆ. ரீஸ்கந்தமூர்த்தி, சாரணிய ஆசிரிய ஆலோசகர் திரு. மா. புவனேந்திரன், அணிந்துரை வழங்கியும் ஆக்கத்தில், ஊக்கமாகவும் இருந்த அருமை நண்பர்கள் (கல்விப் பணிப்பாளர்) இரா. சுந்தரலிங்கம், பகுத்தறிவுச் செம்மல் வேலணை நா. வீரசிங்கம், அட்டைப் படத்தை அமைத்திட்ட சித்திரக் கலைஞர் சி. இராமச்சந்ரா (சாணக்கியன்); கணனியின் நகல்களை வாசித்துச் சீர்ப்படுத்திய ஆசிரியர் - இளைஞர் கே. சயந்தன், எனது கருமங்கள் யாவற்றிலும் துணையாக விளங்கிடும் குடும்பத் தலைவி செ. யோகரத்தினம், மகன் செ. கிள்ளிவளவன் (பொறியியற்றுறை, பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகியோருக்கும், கணனியில் பிரதிகளை உருவாக்கிய திரு. S. ஈஸ்வரன், ஏட்டினை அழகுற அச்சிட்ட விக்ரம் அச்சகத்தாருக்கும் - உரிமையாளர் Rராஜசேகர் அவர்களுக்கும் மிகுந்த கடப்பாடும் நன்றியும்
அன்பண் அ. பொ. செல்லையா.

(7)
கலங்கரை விளக்கம் கல்விப் பன்னிப்பாளர் இரத்தினராசா அவர்கள்
மார்ச் 30 1 1998 ஆம் ஆண்டு, தாங்க முடியாச் செயல் நடந்துவிட்ட நாள் 1 மறக்க முடியாத நாள் * மனத் துயர் நிறைந்த நாள் !
அன்புக்கு நண்பனாக - அறிவு கூறும் ஆசானாக - தோளோடு தோள் நிற்பவனாக - கல்விக்கோர் அணிகலமாக - கடமையிலே கண்ணியமாக - கட்டுப்பாட்டின் இலக்கணமாக - அஞ்சா நெஞ்சினனாக - நாடியே வருபவர்களுக்கு நயம் படக் கதைகள் கூறுபவனாக - வாடிய, வதை பட்டவர்களுக்கு வழிகாட்டியாக - கடுஞ் சொல்லால் கதைப்பதைக் கலையாக - ஆனால் பேச்சு வாங்கியவர்களுக்கு உதவிடுவதில் மலையாக விளங்கிய கல்விப் பணிப்பாளர் திரு. சுப்பிரமணியம் இரத்தினராசா அவர்களின் பண்பு கண்டு - ஆற்றலைக் கேட்டு இன்புற்றார் அனைவரும், அவர் நோயுற்றார் எனக் கேட்டுத் துன்புற்றார், துன்ப மேலிட்டினால் என்புற்றார். அந்த அளவுக்கு மானிட நேயத்தை மிகுதியும் பெற்றுத் திகழ்ந்தார்.
ஈரலில் வரிக்கோஸ் நாள நோயின் கடுமையால் கொடுமையிலிருந்து முதல் இருமுறை தப்பிப் பிழைத்த திரு. இரத்தினராசா அலுவலகப் பணிகளில் முழு வேகத்துடன் ஈடுபட்டார்.
உடுவில் கோட்டத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளராக இருந்த காலத்திலேயே இவரது புகழ் பரவத் தொடங்கியது. கல்வி அபிவிருத்தியோடு சம்பளம் வழங்கும் பணியில் நிமிட நேர தாமதத்தை யும் வெறுத்தார்! தடை செய்யும் சுற்றறிக்கைச் சரத்துக்களை அவரது அறிவுப் படை கொண்டு தற்றுணிவுடன் நொருக்கினார். ஆசிரியர்கள் மகிழ்ந்தனர்; அதிபர்கள் களித்தனர்; ஒய்வாளர்கள் பூரித்தனர். ஓய்வில் செல்பவர்களுடைய ஓய்வூதியம் வழங்குவது நாட்கணக்காகவே இருந்தது. ஓய்வூதியச் சட்டமான சிவப்பு நாடா பல சந்தர்ப்பங்களில் வெட்டித் துங்க விடப்பட்டது. இடை நிறுத்தப்பட்ட சேவையாளர்களைத்

Page 7
(8)
திருப்பிச் சேர்ப்பதில் ஒலியின் வேகமா - ஒளியின் வேகமா என்று ஐயுறக்கூடிய சுப்பர் சொனிக்காக விளங்கியவர் இரத்தினராசா அவர்கள்.
(3.b) is 56.pngs EL60)LD6ij6ir Time is my enemy 616 sp ஆங்கிலேயர்களின் கோட்பாட்டைப் பெரிதும் மதித்து கடமையில் உரிமையோடு ஈடுபட்டார். காலந் தாழ்த்துவது கடமை தவறியதற்குச் சமனாகும் என்றும், தாமதித்து வழங்கும் நீதி, வழங்கா நீதியை ஒக்கும் என்பதும் அவரது வேதாந்தம். அதனால், தானே நேரத்திற்குச் செல்லும் ஒரு வழி காட்டியானார்.
ஆசியரின் வாண்மை விருத்தி அவசியமானது. ஆசிரியர்கள் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். ஆசிரியர்கள் படித்துக் கொடுக்க வேண்டும். ஆசிரியர்கள் வீட்டின் அலங்கார அறை ஒரு நூலகமாக அமைந்திருக்க வேண்டும். ஆசிரியர்கள் பல்துறை அறிவினைப் பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர்கள் ஒரு நடமாடும் பல்கலைக் கழகமாகத் திகழ வேண்டும். தமிழ் ஆசிரியர் ஆங்கிலம் கற்பிக்கத் தெரிந்திருக்க வேண்டும்; விஞ்ஞான ஆசிரியருக்குச் சமூகக் கல்வி சரளமாக இருக்க வேண்டும். கணித ஆசிரியர் சமயம் போதித்திட ஆயத்தமாகத் திகழ வேண்டும். ஆசிரியம் ஒரு தொழிலாக அமையக் கூடாது; ஆசிரியம் ஒரு கலையாக - சேவையாக மிளிர வேண்டும். ஆசிரியர் ஒருவர் வரும்போது 'அவர் ஆசிரியர் - அதோ, வருபவர் ஆசிரியர்’ என அவரின் நடை, உடை, பாவனை, செயல் முதலியன விளங்க வேண்டும். ஆசிரியரின் முகத்தில் ஆசிரிய ஒளி விளங்க வேண்டும் என விழைந்தார் - நடாத்திக் காட்டினார்.
யாழ்ப்பாண மக்களின் சொத்து - கல்விதான் என்பதை நண்குணர்ந்திருந்தார் திரு. இரத்தினராசா.
ஊர்ந்து செல்லும் ஆமையைக் கூடப் பாய்ந்து செல்லும் புரவிகள் பூட்டிய வண்டியில் வைத்தால், போய்ச் சேர வேண்டிய இடத்திற்கு விரைவாகவும் எளிதாகவும் போய்ச் சேர்ந்து விடும். இங்கு நாம் ஆமைகள் பூட்டிய அலங்கார வண்டியில், பாய்ந்தோட வல்ல குதிரையை ஏற்றி வைத்து ஒரு விந்தைப் பயணத்தை நடாத்திப்

(9)
பார்க்கிறோம்! இது தான் நாட்டின் இன்றைய நிலை என்பதை நன்குணர்ந்திருந்தார். அதனால், அத்னை மாற்ற வேண்டும். அதற்கு நல்ல கல்விக் கூடங்கள் தேவை; நல்லாசிரியர்கள் அங்கே பயிற்றுவிக்க வேண்டும்; நன் மாணாக்கர்கள் உருவாகிட வேண்டும் என்பதே அவரது பேச்சாக இருந்தது. W
கல்வி கற்றவன் என்றால் அறிவு&ையவன், ஆற்றலுடையவன் என்பதல்லப் பொருள். ஒருவனைத் தாழ்விலும் உயர்விலும் நிதானம் தவறாது உலகிற்கேற்ப, சமூகத்திற்கமைய வாழ்ந்து ஒழுகச் செய்யுஞ் சிறந்த தெய்வீகக் குணங்கள் பொருந்தியிருக்க வேண்டும். கல்விக்கு எல்லையின்று, கற்றுக் கொண்டதைப் பெருக்கி, காலத்திற்கும் சமுதாயத்திற்கும் ஏற்பத் தம்மைத் தகுதியடையச் செய்வதுதான் உண்மைக் கல்வி என்பதை எடுத்துரைத்தார்.
அந்த உண்மையான கல்வியைப் பெற வேண்டும். அதற்கேற்றவாறு கல்விச் சாலைகள் அமைய வேண்டும்; மக்கள் மனம் மாறவேண்டும். எல்லா வளமும் பொருந்திய கல்வி நிலையங்களை உருவாக்கிட வேண்டும்; அதனை வளர்த்திட வேண்டும்’ எனத் துடித்தார்.
ஒருவனுக்குக் கல்வியே நல்ல மூலதனம், சென்றவிட மெல்லாஞ் சிறப்புத் தரும்; வாழ்வளிக்கும். அதனால், மாணவர்கள் சுயமாகச் சிந்திக்க, சுயமாக அறிவைத் தேட உதவுவதே கற்பித்தலின் பணியாகும். ஆனால், மாணவர்கள் தேர்விலுஞ் சிறப்பாகத் தேற வேண்டும். அதுதான் கல்வியின் முக்கிய நோக்கமாக இருக்கக் கூடாது எனக் கூறினார்.
உலகில் அறிவியல், தொழில் நுட்பவியல், சமூகவியல் மாற்றங்கள் அண்மையில் - எதிர்காலத்தில் முன்னரிலும் பார்க்க மிகவும் வேகமாக வளர்கிறது. இந்தச் சூழ்நிலைக்கு முகங் கொடுக்க எமது இளஞ் சந்ததியினரைத் தயார் செய்ய வேண்டும். இ.து எமது பெற்றோர்களினதும் கல்விமான்களினதும் சிந்தனையை ஈர்க்க வேண்டும் என இடித்துரைத்தார்.

Page 8
(10)
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்' என்பது போல இரத்தினராசா அவர்கள் தான் பெற்ற இன்பங்களை மற்றவர்களும் பெறவேண்டும் எனச் சிந்தித்தார். மற்றவர்களையும் சிந்திக்கச் சொன்னார்.
ஒரு நாட்டின் நிலையான செல்வம் இயற்கை வளமோ, படாடோப வாழ்வுக்குரிய கட்டிடங்களோ, பொருட்களோ அல்ல - அவை அழிந்து விடக் கூடியவை. பகுத்தறிவாளர்கள், கல்வியறிவாளர்கள், விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள், மருத்துவர்கள் போன்றோரே நாட்டின் செல்வங்கள் - உண்மையான செல்வங்கள் என்பதை உணர்ந்தார்.
கட்டிடத்திற்குச் செங்கல்போல வாழ்க்கை முன்னேற்றத்திற்குப் படிப்புத் தேவை : திறமை தேவை; தேர்ச்சி தேவை. அவற்றிற்கு நல்ல பயிற்சி தேவை எனப்பகன்றார்.
கல்வி எதற்காகக் கற்கிறோம் எனக் கேள்வி எழுப்பினார்.
பகுத்ததறிவு பெற, புதிய பொருளைக் கண்டிடக் கல்வி கற்கிறோம். நாட்டில் நல்லறிவைப் பரப்பிடக் கல்வி தேவை எனப் பதிலளித்தார்.
சமுதாயத்தை உயர்த்திடக் கல்வி - அதைக் கற்றிட நல்ல கல்விச் சாலைகள் வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும் என உரைத்தார்.
வாழ்வில் அணியாகவும், தாழ்வில் துணையாகவும் விளங்குவது கல்வி என்பதை நன்குணர்ந்து, நல்ல கல்விச் சாலைகளை
உருவாக்கிடக் கல்விபற்றிச் சிந்திக்க வேண்டினார்.
கல்வி அழகே அழகு, கல்லாதான் பெற்ற பெருஞ்செல்வம் குரங்கின் கைப்பூமாலை என அடித்துச் சொன்னார்.
கல்வி, சிந்தனையைத் தூண்டிப் புதுப் புதுக் கருத்துக்ளைத்

(11)
தருவதாகும். கல்விக்குக் கரையில்லேர்னி எதற்கு எப்படி? என்ற கேள்விகள் அறிவியல் வழிச்திந்தனையாகும். அதனால், பழையன கழிந்தன; புதியன புகுந்தன ; புதுமைகள் பல பூத்தன; மக்கள் வளர்ச்சி பெற்றனர் ; மேலும் உயர்ச்சி அடைய வேண்டும் என உரைத்திட்டார்.
சமுதாயம் முன்னேறிச் செல்வத்ற்கும், பொருளாதாரம் வளர்வதற்கும் பாடசாலையிற் பெறும் அறிவே அடித்தளமாகும். பாடசாலையின் கடமை கல்வியை Yட்ைடும் புகட்டுவதல்ல, சமுதாயத்திற்கு வேண்டுந் திறன்களைப் பாடசாலை அளிக்கிறது. இதுவே, பாடசாலையின் உயர்நிலையாகும்.
பாடசாலையில் அறிவினைத் தருபவர்கள் ஆசிரியர்கள். ஆசிரியர்கள் கலங்கரை விளக்கமென விளங்க வேண்டும். ஆசிரியர்கள் ஒழுக்கத்தின் பிறப்பிடமாக - பண்பாட்டின் சின்னமாக - தியாகத்தின் நிலைக்களமாக கைம்மாறு கருதாத கர்மவீரர்களாக ஆகிட வேண்டும் மாணவர்கள் போற்றிட, மக்கள் ஏற்றிட ஆசிரியர்கள் நல்லனவும் வல்லனவும் கொண்டிருத்தல் வேண்டும் என விரும்பிப் பாடசாலைகளின் கல்வியை உயர்த்திட - ஆசிரியர்களின் தேலையைப் பூர்த்தி செய்திடப் பம்பரமாகச் சுழன்றார்.
இரத்தினராசா அவர்களின் கல்விப் பணி யாழ் மாவட்டத்தின் அறிவு வளர்ச்சிக்கு அணியாக அமைந்திருந்தது.
யாழ்ப்பாணத்தில் நிருவாகத்தைத் திறம்படச் செய்திட வேண்டுமென்றால் திடம் வாய்ந்த தலைமைத்துவப் பண்பு இருக்க வேன்டும். அத்தகைய தலைமைத்துவப் பண்பினைப் பெற்ற கல்விப் பணிப்பாளர்கள் சிலருள் இரத்தினராசா அவர்கள் முன் வரிசையின் முதலாளாகத் திகழ்ந்தார். ஏனையவர்களைவிட எதிர்நீச்சல் அடிப்பதில் தீரனாகவும், இழிசொற்களைத் தாங்குவதில் இரும்பனாகவும் இருந்தார். காரணம் , சிறந்த தலைமைத்துவம் அவரிடம் இருந்ததுதான். அவர் செய்த-முடிக்க முயன்ற முயற்சிகட்கு சக்தி வாய்ந்த சிறந்த தலைமைத்துவம் அடிப்படையான உள்ளிட்டு அம்சமாக அவருக்கு இயல்பாக அமைந்திருந்தது. அவர் தனது பொறுப்புக்களைத்

Page 9
(12)
தெளிவாகப் புரிந்து கொண்டார். தன்னிடமிருந்து கல்வி உலகம் எதிர்பார்த்த எதிர்பார்ப்புகளை நன்கு விளங்கிக் கொண்டார். அவர், ஆசிரியராக, வட்டாரக் கல்வி அதிகாரியாக, பிரதிக் கல்விப் பணிப்பாளராக இருக்கும் காலத்தில் பெற்ற பயிற்சிகள் அவரது இயல்பான தலைமைத்துவப் பண்புகளை - ஆற்றல்களை ஒழுங்கு படுத்தின. தன்னேரில்லாத தலைவனானார்; ஈடும் எடுப்பும் இல்லாத கல்விப் பணிப்பாளர் ஆனார்.
இவரது வேகத்தினைத் தடுத்திட முயற்சித்தவர்கள் - ஓட்டத்தில் கடக்குட்பட்டு விழக் குற்றி போட்டவர்கள் - விழுந்து காயம்பட நோவடையக் குழி பறித்தவர்கள் - தெருவிலும் வழியிலும் இழிமொழி பேசியவர்கள் - நாளேடுகளில் பழி சுமத்தியவர்கள் நாடியில் விரல் வைத்துச் சிந்திக்க வைத்தது அவரது தலைமைத்துவம் காரணம், அவர் எதிரிகளாலுங்கூட விரும்பப்படக் கூடியவராகவும், அறிமுகமானவராகவும் இருந்தார். எதிரிகள் யாரையும் அவர் போட்டி போட்டு எதிர்த்திட விரும்பவில்லை. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமிருக்கும் என்ற அண்ணா தத்துவத்தை கடைப்பிடித்தார். அதனால் எதிரிகளும் அவரை மதிக்கும் நிலை ஏற்பட்டது. இரத்தினராசா அவர்களுக்குத் தலைமைத்துவத்திற்குரிய துணிவு இருப்பதை உணர்ந்தனர். தமது இயலாமைக்கு மனதிற்குள் வெட்கினர். இரத்தினராசா அவர்களின் வேகத்தையும் துணிவையும் கண்டு, காணாமற் போவதைவிட்டு, தாமும் இரத்தினராசாவைப் போல வேகத்தைக் கூட்டப் பார்த்தனர்; ஆனால், துணிவு வரவில்லை. மக்கள் இரத்தினராசாவை இரசிப்பதைப் பார்த்தனர். அதனால், இரத்தினராசாவைச் சாடுவதை விடுத்துச் சாதகமாகச் செல்லத் தலைப்பட்டனர். அதனால், அவருக்கு எதிரிகள் குறையத் தொடங்கினர்; கல்விப் பரிணாம வளர்ச்சியில் நண்பர்களுமாகினர்.
தலைமைத்துவம் என்பது வகுப்பறையில் போதிக்கக் கூடிய தொன்றல்ல! ஆனால், மாற்றக் கூடிய பண்புகள் நிறைந்திருக்க வேண்டும். அப்படி மாறுவதற்கு மாறுகிறவர்களிடம் சிறந்த தலைமைத்துவப் பண்புகள் இயற்கையாக இருந்திருக்க வேண்டும். அத்தகையதொரு தலைமைத்துவப் பண்புகள் இயல்பாக இரத்தினராசா அவர்களிடம் இருந்திருக்கின்றன.

(13)
எந்தத் தரத்தில் இருக்கும் தலைவர்களாயினும் தலைமைத்துவப் பண்புகளைக் கொண்ட தகுதிவாய்ந்தோரின் வளர்ச்சியினைத் தடுப்பது, தாம் சார்ந்திருக்கும் நிறுவனத்தின் உயர்ச்சியினைத் தடுப்பதுடன் அதனை வீழ்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வதுமாகும். இரத்தினராசா அவர்களின் வளர்ச்சியினைத் தடுக்கப் பல சென்றிகள் போட்டனர். தங்களை விஞ்சி விடுவான் என் அஞ்சினர், நடுங்கினர்; இரத்தினராசா அவர்களைப் புரிந்து கொள்லாமfல் செயற்பட்டனர். இரத்தினராசா ஒரு நல்ல தலைவன்! பிறருக்குத் தீங்கு செய்யாத தலைவன் எதிரிக்கும் உதவிடும் தலைவன் அதனை உணர்ந்தனர் இரத்தினராசாவின் பிரிவு அவர்களை வேதனைக் கடலில் ஆழ்த்தியது. காரணம், இரத்தினராசா அவர்கள் ஒரு பெரிய தலைவன் அல்ல; அவர் ஒரு சிறந்த தலைவன் ஆவார். பெரிய தலைவர்களின் ஈடுபாடு தங்களைப் பற்றியதேயாகும்; சிறந்த தலைவர்களின் செயற்பாடு பிறர் நலங்களைக் கவனிப்பதாகவே இருக்கும். இரத்தினராசா அவர்கள் நண்பர்களின் நலங்களோடு எதிரிகளின் நலங்களையும் நன்கு கவனித்தார்.
முகாமைத்துவமா தலைமைத்துவமா என்ற கருத்து மோதல்கள் இடம்பெறும் காலகட்டத்தில் ஆற்றலை வெளிப்படுத்துவதில் சிறந்த தலைவனாகவும் சனநாயகத்தைப் பேணுவதில் சீரான நிருவாகியாகவும் விளங்கியவர் இரத்தினராசா அவர்கள். இவரது தலைமைத்துவம் நிருவாகிகளிடையே சந்தேகத்தைக் கொடுத்திருந்த வேளையில் அவரது சனநாயகம் சகலரையும் சமவாய்ப்புக்கிட்டுச் சென்றதைக் கண்டதும் கலக்கந் தீர்ந்தனர். சனநாயக மென்பது சமமான சந்தர்ப்பங்களை அளிப்பதேயன்றி, சமமான ஆற்றலை அளிப்பதன்று என்பதை உணர் நீதனர் . இரத்தினராசா அவர் களின் தலைமைத்துவத்தில் மனம் ஒன்றிக்கா விடினும் ஏற்றனர். காலம் மாறியது; மாறத்தான் செய்தது; காலத்தோடு தாமும் மாறினர். நாம் கண்ட கல்விப் பணிப்பாளர் இவரே என்றனர். அத்தகையதொரு ஈர்ப்பினை மக்களிடையே இரத்தினராசா பெற்றிருந்தார்.
முகாமை என்பது தலைவன் ஒருவனிடம் உள்ள பயனுள்ள ஆயுதம் என்பது கவனிக்கப்படல் வேண்டும். ஒருவன் தலைவன் ஆகாமலே நல்ல முகாமையாளனாக இருக்க முடியும். ஆனால்,

Page 10
(14)
ஒருவன் சிறந்த முகாமையாளனாகமல் சிறந்த தலைவனாக வரமுடியாது. எனவே, முகாமையாளனுடன் தலைவனை ஒப்பிட்டுப் பார்ப்பது தவறு. குறிப்பிட்ட பதவிகளுக்கு நியமிக்கப்பட்டதன் மூலம் அதிகாரத்தினைப் பெற்ற தலைமைத்துவத்திற்கு இரத்தினராசா அவர்களின் முகாமைத்துவமாகிய சனநாயகத்தோடு கூடிய தலைமைத் துவத்தின் வேகமும் தீர்வும் சஞ்சலத்தைக் கொடுத்திருந்தாலும் சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் இரத்தினராசா அவர்களின் வேகம் காலச் சூழ்நிலையின் தாகம் மோகம் அல்ல என்பதை உணர்ந்தனர்!
இரத்தினராசா அவர்களின் வெற்றிக்கு அவரிடம் உறைந்துள்ள சில தலைமைத்துவப் பண்புகளே காரணமாக இருந்தன.
1. மற்றவர்களின் தேவைகளை உணர்ந்து அவற்றினை நிறைவேற்ற
முயன்றார்.
2. அடையக்கூடிய இலக்குகளை நிர்ணயித்து அவற்றினை எய்துவதற்கு, தனது வழிகாட்டலுக்கு உட்பட்டோரை ஊக்குவித்தார்.
3. பிர்ச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில் புதுமையான
உத்திகளைக் கையாண்டார்.
4. மற்றவர்களிடம் உதவி கோருவதில் தயக்கங் காட்டவில்லை.
5. தான் ஆற்ற வேண்டிய கருமங்களைப் பற்றியும் அவை எப்படி
நிறைவேற்றப்படல் வேண்டும் என்பதையும் அறிந்திருந்தார்.
6. நேரத்தைச் சிறந்த முறையில் பயன்படுத்தி எப்பொழுதும்
இறுதிக்கு முன்னின்றார்.
7. விட்டுக் கொடுப்பதிலும், வெற்றி தோல்வி இன்றிக் கருமங்களைச்
சாதித்தலிலும் பெருந்தன்மையைப் பேணினார்.

(15)
8. எவ்விடத்திலும் தனது பங்களிப்பை அளிப்பதில் முன்னின்றார்.
9. சகலரிடமிருந்தும் சிறந்ததைவெளிக் கொணர்ந்தார்.
10. எதிர்ப்புக்களைக் களைய மரியாதையுடனும், தந்திரத்துடனும்
சிறந்த உத்திகளைக் கையாண்டார்.
மேலும் இரத்தினராசா அவர்களில் உயர்வடைய ஆர்வமும் இலட்சியமும் - கடின உழைப்பினை விரும்புதலும் நேர்மையும் - புத்திக் கூர்மையும் - விடயங்களைத் தெளிவாக எழுதுவதிலும் பேசுதலிலும் சிந்தனை வளமும் - சந்தர்ப்பங்களை இனங் காணுதலும் விடயங்களை அறிந்து கொள்வதில் விருப்பமும் - பிறரைப் புரிந்து கொள்ளலும் திறந்த மனத்துடன் செயற்படலும் - நன்றி மறவாமையுமாகிய பண்புகள் மறைவாகவும் நிறைவாகவும் விளங்கின. அதனால், மருதனாமடம் கோட்டத்தில் தொடங்கிய பணி, யாழ் வலயம்- 1 இல் அணி செய்தது. கணிப்பான எல்லோரையும் ஈர்க்கும் பணிப்பாளராக மிளிர்ந்தார். காந்தம் இரும்பைக் கவரும் தன்மைபோல சிற்றுாழியர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், அதிகாரிகள் அனைவரின் கவர்ச்சியை, கவனத்தைப் பெற்றார். அந்த அளவுக்கு அவரின் வதனம் கவரும் தன்மையதாக இருந்தது; சிரிப்பு மகிழ்வை ஊட்டியது.
கல்விப் பகுதியில் பலர் பல காரணங்களால் நொந்துபோய் இருந்தனர். சேவையின் முதுமை கணிக்கப் படாமல், கல்வித் தரத்தின் மேலாண்மைக்கு ஆதரவு அளிக்கப் படாமல், வழங்கப்பட வேண்டிய ஊதியம் வழங்கப்படாமல் - ஒய்வு தேய்வாகக் கொள்ளப் பட்டதால் சோகக் கண்ணிர், இடமாற்றம் - நியமனம் போன்றவற்றால் பழி வாங்கப் பட்டதனால் பயந்த நிலையில் நடுங்கிய பலருக்கு, அபயமளித்து நொந்தவர்களை மகிழ்விப்பதில், சோகமே உருவானவர்களின் கண்ணிரைத் துடைப்பதில் அஞ்சியவர்களுக்குத் துணிவினை ஊட்டிச் சாந்தி அளிப்பதில், கல்வி உலகின் இருளை நீக்கி ஒளிதனை ஊட்டுவதில் ஓர் அரிமாவாக, என் கடன் பணி செய்வதே எனக் கொண்டு, வாழ்நாள் முழுவதும் வேண்டுவ வேண்டியாங்கு இயலுங் கால் தன் குணம் குன்றிப் பிறர் குணம்

Page 11
(16)
பெருகிட வாழ்ந்த பெருமகன்! கொக்குவில் லயன் கழக உறுப்பினர் லயன் இரத்தினராசா
சாரணியம் உலக ரீதியானது துள்ளும் பள்ளிப் பருவத்தில் சாரணியம் மகத்தான ஒன்று என்பதை இடப்பெயர்வு காலத்தில் அதிபர் அ. பொ. செல்லையா அவர்களின் தொடர்பால் உணர்ந்தார். சாரணியத்தின் வரலாற்றை அறிய ஆவலானார். சாரணியம் பற்றிய நூல்களைப் புரட்டுவதிலும், சாரணியர்களோடு உரையாடுவதிலும் உற்சாகங் காட்டினார். அதனால், யாருமே ஆர்வங் காட்டாத பணியை மேற்கொண்டார். பள்ளித்தல மனைத்திலும் சாரண இயக்கம் இயங்கிட வழிவகுத்தார். அதற்குச் சாரண ஆசிரிய ஆலோசகராகத் திரு. மா. புவனேந்திரன் அவர்களை வலயம் 1 இன் பாடசாலைகளுக்கு நியமித்தார். இது, திரு. இரத்தினராசா அவர்களின் தற்றுணிவான நியமனமாகும்.
அதனால், ஆரம்ப பாடசாலைகளிற்கூட குருளைச் சாரண இயக்கம் மறுமலர்ச்சி அடைந்தது. அது, ஆல்போலப் பரந்து இன்று ஏறத்தாழ எல்லாப் பாடசாலைகளிலும் சாரணியம் இயங்கி வருகின்றது. ஆசிரியர்கள் (ஆண்கள் - பெண்கள்) மிகவும் ஆர்வங் காட்டுகின்னறர்.
ஏனைய ஆசிரிய ஆலோசகர்களுக்கு உள்ள ஊக்குவிப்புப் படி போன்றன அற்ற தன்னலமற்ற சேவையினை கல்வி வலயம் 1 இல் நயினாதீவிலிருந்து பளை ஈறாகப் பயணம் செய்து, சாரணிய ஆசிரிய ஆலோசராகத் திரு. புவனேந்திரன் அவர்கள் கடமையாற்றிக் கொண்டிருக்கிறார்.!
திரு. இரத்தினராசா அவர்களின் விடா முயற்சி, திரு. புவனேந்திரன் அவர்களின் அயராத உழைப்பு 1998 பெப்ரவரி 17-22 வரை பெல்லேகலவில் நடந்த குருளை, சாரணிய ஜம்போறிக்கு நூற்றுக்கு மதிகமான ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொள்ள வைத்தது. இவர்களுக்கு இருவழி விமானச் செலவு அரசினால் வழங்கப் பட்டது. இது யாழ்ப்பாணச் சாரணிய வரலாற்றில் திரு. இரத்தினராசா அவர்களை நினைவு கூறுவதாகும். இதற்கு, உந்துசக்தியாகத் திரு. திருமதி சேவியர் அவர்களும், திரு. அ. பொ. செல்லையா அவர்களும் விளங்கினர்.

(17)
மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லலாம், பட்டதாரி ஆகலாம்; பெரிய அதிகாரிகளாகவும் விளங்கிலாம். ஆனால், அவர்கள் ஆரோக்கிய முள்ளவர்களாக இல்லை என்றால் அவர்கள் எந்த நிலையில் இருந்தும் பிரயோசனமில்லை என்பதை உணர்ந்தார் திரு. இரத்தினராசா. சுவர் இருந்தாற்றான் சித்திரம் எழுதலாம் என்பதைத் தனது பாடசாலை நிகழ்வுகளில் நிகழ்த்தும் உரைகளின் போது உரைத்திடத் தவறுவதில்லை. பாடசாலை மாணவர்கள் பாடசாலையிலுள்ள செஞ்சிலுவைச் சங்கத்தில் உறுப்பினராகி முதலுதவிப் பயிற்சியைப் பெற வேண்டும் என்பது அவரது ஆவலாக இருந்தது. சாரணியத்தில் காட்டிய அக்கறை போலவே முதலுதவிப் பயிற்சியிலும் அக்கறை காட்டினார்.
மாணவர்கள் பெறும் முதலுதவிப் பயிற்சி, அவர்களின் குடும்பங்களுக்குச் சென்று, அதனால், ஒரு சமூகமே நலமாக ஆரோக்கியமாக வாழ்வதற்கு வழியாக அமையும் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார்.
நல்ல முதலுதவிப் பயிற்சியும் நலவியல் அறிவும் பாடசாலையில் கொடுக்கப் பட்டிருக்குமானால் தான் கூட இவ்வளவு இளமைக் காலத்தில் உயிர்கொல்லி நோய் ஒன்றிற்கு ஆட்பட்டிருக்க முடியாது என்பதை உணர்ந்திருந்தார். தன் எதிரிக்குக் கூட இப்படி ஒரு வருத்தம் வரக்கூடாது என இறைவனை இறைஞ்சினார். எனவேதான், மாணவர்கள் முதலுதவி அறவினைப் பெற்றிட வேண்டுமென விரும்பினாரன்றோ!?
கல்விப் பணிப்பாளராக இவர் இருந்த காலம் மிகவும் குறுகியது. அக் குறுகிய காலத்திலும் கடுகதி வாகனம் போலச் செயற்பட்டார்.
அதனால், 'ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம்; இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்' என்பது போலச் சில சங்கடங்களும், கயிறு இழுப்புக்களும் எதிர் கொண்டன. அவற்றையும் காலங்கடத்தி, வென்று, எல்லோருடைய அன்பையும் மதிப்பையும் பெற்றிடுவதற்கு முன்னால் காலன் அவரைக் காவு கொண்டு விட்டான்.

Page 12
( 18) ;
புராணங்களில் வரும் முனிவர்கள் கோபத்தால் சினப்பர்; சினத்தில் சாபமும் கொடுத்து விடுவர். சாப விமோசனம் சாபத்தை அனுபவித்த பின்னரே கிடைக்கும். ஆனால், இரத்தினராசா அவர்களும் சினந்ததுண்டு. அது கடுமையான சத்த வெடியாகவும் இருந்ததுண்டு; ஒருவகைப் பிளாஸ்ரிக் செல்லின் வெடிச் சத்தம்போல! அது, சிலபேருக்கு எரிச்சலை ஊட்டி இருக்கலாம்! சத்தம் போட்டது உண்மை, ஆனால், முனிவர்கள் சாபம் கொடுத்ததுபோலத் தண்டனை - பழி வாங்கல் எதுவும் இல்லை! எதனால், சத்தம் உதட்டளவில் இருந்ததால், இதயத்தில் அது இருக்கவில்லை என்பதால் சத்தத்தால் சங்கடப்பட்டவர்கள் நன்மைதான் பெற்றுள்ளனர்! சத்தம் போட்டது சரி என்பதல்ல. சத்தத்திற்குக் காரணம் ஒருவகை உளத்தாக்கமே! அதனை நன்கு தெரிந்த யாருமே அவரை பிழை கண்டதில்லை. சத்தத்தையே ஒரு ரசனையாகக் கொண்டனர். பாவ விமோசனத்தில் பாவம் நீக்கப்பட்ட விமோசனம் கிடைக்கப் போகிறது ; நன்மை நடக்கப் போகிறது ; பயன் உண்டாகப் போகிறது என நம்பினர். அது நடந்தது. உதவி விரும்பினவர்களும் கூட முதலில் பேச்சு, பின்னர் உதவி, அது அவரது சுபாவம் எனக் கதைக்கத் தொடங்கினர்.
பழக்க வழக்கத்தின் விளைவாக சத்தம் வந்தது ஒன்று; தேவை இருந்தது இன்னொன்று ; உளத் தாக்கம் வேறொன்று.
ஆம். தனது மரணம் தன்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்பதை நன்குணர்ந்திருந்தார். ஆனால், இவ்வளவு விரைவில் அமையும் என்பதை அவர் மட்டுமல்ல எவரும் எதிர் பார்க்கவில்லை. அதனால், தன்னால் ஆக வேண்டியவைகளை நிலுவைகளின்றிச் செய்திடத் துடித்தது அவர் நெஞ்சு, தன்னுடைய அலுவலர்கள், துடிப்பானவர்களாக, பிறரால் புகழப்படக் கூடியவர்களாக விளங்கவேண்டுமென எண்ணினார். அவர்கள் யாவரும் தன்னலமற்ற பகுத்தறிவாளர்களாக விளங்க வேண்டுமென விரும்பினார். முதுகில் குத்துபவனும், வயிற்றில் அடிப்பவனும், பொறிக் கிடங்கு பறிப்பவனும் திருந்தி, தன்னிலை அறிந்து, நல்லவர்களாக ஆற்றல் உள்ளவர்களாக எதிர்காலச் சமூகமான மாணவ சமுதாயத்தின் வழிகாட்டிகளாக வாழ வேண்டுமென; விளங்கிட வேண்டுமென எதிர்பார்த்தார். காலம் பொன்னானது; கடமை கண்ணானது என நம்பினார். பொறுமையால்

(19)
பொறுமை இழந்தார். மறைக்க வேண்டியதை மறைக்க மறந்தார். கட்டுப்பாட்டை இழந்தார். சத்தம் தன்னையும் அறியாது வெளிப்பட்டது. ஆனாலும் இயல்பு மாறவில்லை - நன்மை செய்வது நாடியவர்கள் வாடிடவில்லை!
Check up 6T60T unpur 600T LD(big.j6JLD60)6OT, Scanning போன்றவற்றிற்காகக் கொழும்பு நவலோகா! உறவினரின் விருப்புக்காகச் சென்னை Appolo ! ஆனால், 30/3/98 மாலை 3.30 மணிக்குச் செய்தி, கல்விப் பணிப்பாளர் காலமாகிவிட்டார் எனறு.
தவறாகக் கணக்கிட்டவர்களும் மனிதநேயம் படைத்த ஒரு கல்விப் பணிப்பாளரை இழந்து விட்டோம் என வாய்விட்டு அலறினர். நல்லதோர் உடன்பிறப்பு என எல்லோர் உள்ளமும் விம்மின கல்விச் சமூகத்தின் கல்விக் கதிர், கல்வி உலகின் திசைகாட்டி - கல்விப் பணிப்பாளர் இரத்தினராசா எனும் கணங்கரை விளக்கு அணைந்து விட்டது.

Page 13
(20)
இரங்கலுரை
அமரர் இரத்தினராசா அவர்களின் ஆற்றலில் எமக்கு நம்பிக்கை உண்டு. யாழ் Zone I க்குரிய கல்விப் பணிப்பாளரைத் தெரிவதில் வேறொருவருக்கு இடமில்லாதிருந்தது. சேவையில் வேகம் அவருக்குத் தனித்துவமானது.
திரு. சுந்தரம் டிவகலாலா செயலாளர், கல்வி அமைச்சு திருகோணமலை,
யாழ் மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியில் அமரர் இரத்தினராசா காட்டிய அக்கறையைக் கருத்தில் கொண்டு கல்வி வளர்ச்சிக்குச் சகலரும் உதவுவதே அவருக்கு நாம் செய்யும் நன்றிக் கடனும் அஞ்சலியுமாகும்.
திரு. க. சண்முகநாதன் யாழ் அரச அதிபர்.
ஒரு காலத்தில் சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு விளங்கிய தீவுப்பகுதி இன்று பின்தங்கி விட்டது என்பதில் வருத்த முற்றிருந்த அவர் தனது இறுதி நாட்களிற் கூட எமது மக்களின் கல்வி வளர்ச்சி பற்றியே சிந்தித்தார்.
பேராசிரியர் திரு. பொ. பாலசுந்தரம்பிள்ளை - துணைவேந்தர், யாழ்-பல்கலைக்கழகம்.
எமது நல்வாழ்வுக்கு அணிகலனாக விளங்குவன கல்வியும் சான்றாண்மையுமாகும். இந்த வகையில் எமது யாழ் மண்ணின் கல்விச் சேவையாளராகவும் தன்னலங் கருதாப் பொது நோக்குடையவராகவும்,

(21)
எல்லோருக்கும் இனியவராகவும் வாழ்ந்து இறைவனடி சேர்ந்தவர் அமரர் இரத்தினராசா அவர்கள்.
செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி J.P - ரீ துர்க்கா தேவி தேவஸ்தானம்
தெல்லிப்பழை. . . .
இனிய நண்பர். சிறந்த பண்பாளர். தமிழ் மக்களின் அறியாமையை அகற்றிடக் கல்விப் பணிதனைச் சிறந்த அணியாகக் கொண்டவர்.
கலாநிதி அ. சணர்முகதாஸ் - கலைப் பீடாதிபதி, யாழ் பல்கலைக் கழகம்.
கடினம் என்ற ஒன்று அவருக்கில்லை; எல்லாவற்றையும் இலகுவாகக் கையாளுவதில் வல்லவர். கடமையை உரிமையாகக் கொண்டு செயற்பட்டவர். எல்லோருடனும் எளிமையாகப் பழகியவர். அதனால், அவருக்கு எல்லோரும் நண்பர்களாயினர்.
நா. சுந்தரலிங்கம் - கல்விப் பணிப்பாளர்
வலயம் 1, யாழ்ப்பாணம்.
செயற்படுத்தப்பட வேண்டிய அலுவல்களுக்குச் சுற்றறிக்கைகள் அவருக்கு ஒரு தடையல்ல, இயல்பான நடத்தைகளுக்கு இயற்கை விதிதான் அவருக்குச் சுற்றறிக்கை. அதனால், நிலுவை என்பதற்கு இடமில்லாத சேவையினை அவர் செய்தார். உதவுதல் என்பது அவருக்கு ஒரு தாகமாக இருந்தது.
எஸ். சிவராசா கல்விப் பணிப்பாளர் வலயம் II, யாழ்ப்பாணம்.

Page 14
(22)
உதயன் நாளேட்டில் கண்ணிர் அஞ்சலியை 146 நிறுவனங்கள் செலுத்தி இருந்தன. இதில் தனித்தும், கூட்டாகவும், நிறுவனங்களாகவும் இருந்தன.
விளம்பர இதழ்களில் கட்டுரையாகவும், கவிதையாகவும் 29 பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் ஒன்றியம், பெற்றார் ஆசிரிய சங்கம்,நலன் விரும்பிகள்,சாரணர் இயக்கம், லயனஸ் கழகம் ஆகியன வெளியிட்டிருந்தன.
கொழும்பிலுள்ள சில நண்பர்களும் நிறுவனங்களும் குறிப்பாக அமரரின் உற்றார் உறவினர்களும் நாளிதழ்கள் வாயிலாக (விரகேசரி, தினக்குரல்) தமது இரங்கலைத் தெரிவித்திருந்தனர்.
கொழும்பில் ஜயரத்னா மண்டபம், யாழ் கல்வி வலயம் 1, உடுவில் கோட்டம், மாணிக்கம் இல்லம் (கொக்குவில்), யா/சரஸ்வதி வித்தியாசாலை - வேலணை, சாட்டி மயானம் - வேலணை ஆகிய இடங்களில் இரங்கல் உரைநிகழ்த்தியோர் 78 பேராகும். இதில் வடக்குக் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர், யாழ் அரச அதிபர், யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர், யாழ் பல்கலைக் கழகக் கலைப் பீடாதிபதி, வலயம் 1&l கல்விப் பணிப்பாளர்கள, தெய்வத்தமிழ்ச் செல்வி, பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் அனைவரும், முக்கியமான - அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி ஆலோசகர்கள், ஊழியர்கள், சிற்றுழியர்கள், நிறுவன அதிபர்கள் ஆகியோர் அடங்குவர்.
இன்னும் ஆயிரவர் தமது இரங்கலைத் தெரிவித்திட விரும்பினர்.
இரங்கல் உரை நிகழ்த்திய பலரும் உரையைச் சரிவரச் செய்திட முடியாது நாத் தழதழத்தனர்; விம்மினர்; அழுதனர்.

(23)
கல்விப் பணிப்பாளர் இரத்தினராசா, நிதியம்
யாழ் மத்திய கல்லூரி அதிபர் க. இராச துரை அவர்கள் தலைமையில் 29/4/98 மாலை 200 மணிக்கு மேற்படி நிதியம் யாழ் மத்திய கல்லூரியில் நடைபெற்ற கூட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அண்றைய தினமே ரூ. 37500 சேர்ந்திருந்தது. w
கல்விப் பணிப்பாளர்
இரத்தினராசா புலமைப்பரிசில்
கல்வியில் சிறப்புற்று விளங்கும் ஏழைப் பிள்ளைகளுக்கு வழங்கத் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு சைவத்தமிழ் வித்தகர் ஆறு. திருமுருகன் அவர்கள் பொறுப்பாக உள்ளார்.

Page 15
(24)
இதய அஞ்சலி
26 30
12 03
1942 1998
මෙHIDIfir.
சுப்பிரமணியம் இரத்தினராசா அவர்களுக்கு
(கல்விப்பணிப்பாளர் வலயம் I.)
மனிதநேயம் கொண்டவரே இரத்தினராசா மனம் இனிமை உடையவரே இரத்தினராசா பெயருக்கேற்ற ஒளிபடைத்தாய் இராசா பயிரறுக்கு முன்னருமேன் பறந்தாய் இராசா
சாரணிய அவசியத்தை உணர்ந்தவரே முதலுதவி முக்கியத்தைச் சாற்றிடவே பணியதனை மேற்கொள்ளப் பணித்திட்டீரே பதிலதனைப் பார்க்காமல் சென்றிட்டீரே
சாரணிய ஜம்போறி தான் சிறக்க அணியணியாய் நாம் செல்ல வழிவகுத்து அன்புடனே முன்னின்று முயற்சி செய்தீர் கண்மணிபோல் சாரணரைக் காத்திட்டீரே

(25)
நவலோக தனில் இருந்த செய்தியினை அருகிருந்தும் அறிந்திலோமே பதறுகிறோம் நெஞ்சகலா நினைவலைகள் நிறைந்திருக்க தருகின்றோம் அஞ்சலிகள் பண்பாளனே
எம் பயிற்சி முடிவடைந்து வந்ததுமே நும் வரவைப் பார்த்திருந்தோம் நன்றிகூற காலனவன் கவர்ந்த செய்தி அறிந்திட்டோமே பாவலனே வருவதெப்போ நன்றி ஏற்க.
உம் உதவி தான் மறக்கமுடியாதையா உம் இழப்பால் எம் இதயம் கலங்குதையா விழியதனில் நீர் பெருக விடையளிக்க கிளிநொச்சி தென்மராட்சி சாரணர்க்கு மனம் வருமோ ஐயா
விருந்தொன்று சாரணர் நாம் உவந்தளிக்க காத்திருந்த வேளைதனில் காலனவன் விருந்தாக விண்ணகத்தே ஏற்றிட்டானே பார்த்திருந்து நாமிங்கு கதறுகிறோம்.
கிளிநொச்சி மாவட்ட சாரணர் கிளைச்சங்கம் FITSalbj (CFfI, LJUDGIT FATALÍ6) 5வத தேசிய சாரணர் ஜம்போறியில் பங்குபற்றியோர்.

Page 16
(26)
வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு
தாய் : முத்தம்மா அம்மையார்.
தந்தை : செல்லையா சுப்பிரமணியம்.
பிறப்பு : 26 - 2 - 1942.
சகோதரர்கள் : திரு. சு. பழனிவேற்பிள்ளை
திரு. சு. செல்வராசா திரு. சு. கனகநாயகம் திரு. சு. திசைநாயகம்பிள்ளை.
சகோதரி : திருமதி. அன்னலட்சுமி வல்லிபுரம்.
ஆரம்பக் கல்வி : யா/வேலணை சரசுவதி
வித்தியாசாலை.
இடைநிலைக் கல்வி : யா/சேர் வைத்திலிங்கம் துரைசாமி
மத்திய மகா வித்தியாலயம்.
உயர்தரக் கல்வி : யா/வண்ணை வைத்தீஸ்வரா ம. வி.
பட்டப் படிப்பு : யாழ்ப்பாணக் கல்லூரி,
வட்டுக்கோட்டை.
சட்டக் கல்லூரி : முதற்தேர்வு சித்தி.
ஆசிரியர் சேவையில் 艺~
1. யா/கோப்பாய் கிறீஸ்தவக் கல்லூரி 2. யா/கொக்குவில் இந்துக் கல்லூரி 3. ய/வேலணை மத்திய மகா வித்தியாலயம்.

(27)
திருமணம் ; 27/03/1975.
மனைவி : திருமதி இயோகேஸ்வரி.
பிள்ளைகள் : மகள் - செல்வி, இ. காவேரி
மகன் - செல்வன். இ. மயூரன்.
கல்வி நிருவாக சேவையில்
1980இல் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுக்கான தேர்வில் சிறந்த சித்தி பெறல். நாவலப்பிட்டி - கண்டி மாவட்டத்தில் கல்வி அதிகாரியாக நியமனம் பெற்றது. பிரதிக் கல்விப் பணிப்பாளர் - வேலணை பிரதிக் கல்விப் பணிப்பாளர் - உடுவில் கல்விப் பணிப்பாளர் - வலயம் 1, யாழ்ப்பாணம்
வாழ்வின் இறுதி :
பொது மருத்துவமனை - யாழ்ப்பாணம். நவலோக வைத்தியசாலை - கொழும்பு. அப்பலோ மருத்துவமனை - சென்னை.
இறப்பு : 30/3/98 பி.ப. 2.15 மணி - சென்னை
2/4/98 ஜெயரத்தினா மலர்ச்சாலை - கொழும்பு
அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
3/4/98 காலை - யாழ் கல்வி வலயம்,
யாழ்ப்பாணம். மாலை- உடுவில் கல்விக் கோட்டம்
3/4/98 - 5/4/98 வரை 'மாணிக்கம் இல்லம்'
கொக்குவில்
5/4/98 - பூதவுடல் இறுதி ஊர்வலம் கொக்குவில்
இந்துக் கல்லூரி, வேலணை சரஸ்வதி வித்தியாசாலை, சாட்டி மயானம், வேலணை. மாலை 3.10 மணியளவில் அமரர் அக்கினியோடு சங்கமமானர்.

Page 17
(28)
சாவு
ஒருவனின் நடத்தை பற்றி உயிரோடு இருக்கும்போது கணிக்க முடியாது; செத்த பிறகு அவன் முகத்தைப் பாருங்கள் தெரியும். - ஆங்கிலப் புலவன்
40 (d
சமயக் கருத்துக்கள் பல உண்டு. தத்துவங்கள் ஏராளம்
ஆனால், மனிதரோடு பழகிட மனித நேயம் பலரிடம் இல்லை. - ஐரோப்பிய அறிஞர்
0 0
சாவு உன்னைத் தழுவிடத் துடித்துக் கொண்டிருக்கிறது,
அதற்காக நீ அழாதே அறிவுடையவனாக மாறி, சாவை
எப்போதும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இரு.
- அறிஞர் அண்ணா
{d {
தாயின் மடியில் குழந்தை உறங்குவதுபோல, சாவின் மடியில் நாம் உறங்கிக் கொண்டிருக்கிறோம்.
- e9. GUI. G3
0 0
நெருந லுளனொருவன் இன்றில்லை எனும்
பெருமை யுடைத்ததிவ் வுலகு.
- குறள 336
= ○
Seneg

(29)
சாரணியம்
சாரணியத்தின் தந்தை ரொபேட் ஸ்ரீவின்சன் ஸ்மித் பேடன் பவல் ஆவார்.
இவர் 2221857 இல் இங்கிலாந்தில் பிறந்தார்.
சாரணியம் முதன் முதலாக 20 சாரணர்களுடன் இங்கிலாந்து பிறவுண் கடல் தீவில் பாசறையுடன் ஆரம்பிக்கப் பட்டது. 1909 இல் இங்கிலாந்தில் 80,000 சாரணர்கள் உறுப்பினர்களாக இருந்தனர்.
(SUL66 Lushus) ge6fras6ssi (335|Tg5s Miss. Agnes Baden Powell 1912 இல் பெண்கள் சாரணியத்தை ஆரம்பித்தார்.
1912 இல பேடன் பவல் அவர்களின் திருமணம் நடைபெற்றது. அப்பொழுது அவருக்கு 55 வயது, மனைவிக்கு 23 வயது. லேடி பேடன் பவல் அவர்கள் 22/2/1889 இல் பிறந்தார். அவரது பெயர் Miss. Olave St. Clair Soames 95b. 36 frab6Tg5) g(BLD600Tiff(5 605 Benze கார் சாரணர்களால் வழங்கப்பட்டது.
இவர்களுக்கு ஒரு மகனும் இரு மகள்களும் இருந்தனர்.
(SLIL6ir u66) gl6hufré6ir Chief Scout of the World 9856b, (86)L9. பேடன் பவல் அவர்கள் Chief Guide of the Worldஆகவும் திகழ்ந்தார்கள்.
பேடன் பவல் அவர்கள் 08/01/1941 இலும், லேடி பேடன் பவல் அவர்கள் 26/06/1972 இலும் காலமானார்கள்.
இலங்கையில் சாரணியம் 1912 ஆம் ஆண்டு மாத்தளை Christ Church College gig)|b, 1916.9, b 9608T(6 uJITLJT6001556) St. John's College, Jaffna Central College, Jaffna College, Vaddukoddai, Jaffna Hindu College, St. Patrics College sedu sgbgol LJTL&T606)56floo ஆரம்பிக்கப்பட்டன.

Page 18
(30)
1981இல் கிளிநொச்சி மாவட்ட சாரணியக் குழு ஆரம்பிக்கப் பட்டது. இதற்கு முன்னோடியாக உழைத்தவர்கள் அமரர் VT. நடராசா DC, அதிபர் அ. பொ. செல்லையா ADC ஆவார்கள்.
இன்று 144 நாடுகளில் 3 கோடிக்கு மேல் சாரணர்கள்
இருக்கிறார்கள். இலங்கையில் 36 சாரணர் மாவட்டங்களில் 25000 சாரணர்கள் உள்ளனர். (1995 புள்ளி விபரமாகும்)
。
se
عصبي يتمشتتة
சாரணர் வாக்குறதி
என்னாற் கூடுமான வரையில் எனது சமயத்திற்கும், தேசத்திற்கும் என் கடமைகளைச் செய்யவும், எக் காலத்திலும் பிறருக்கு உதவி புரியவும், சாரணர் விதிகளுக்கு அமைந்து, பணிந்து நடக்கவும் என் கெளரவத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
வி
திக
6
சாரணன் நம்பத் தகுந்தவன். சாரணன் பற்றுறுதி உடையவன். சாரணன் நேசமும் மரியாதையும் உடையவன். சாரணன் மற்றெந்த சாரணருக்கும் சகோதரன். சாரணன் தைரியம் உடையவன். சாரணன் பிராணிகளின் தோழன். சாரணன் ஒத்துழைப்பவன். சாரணன் மனமகிழ்ச்சி உடையவன்.
சாரணன் சிக்கனமானவன்.
O.
சாரணன் சிந்தனை, சொல், செயல் ஆகியவற்றில் தூய்மையானவன்.

சாரணர் பிரிவுகள்
1. குருளைச் சாரணன்
நிறம் சிந்தனை பெண்கள்
2. di TJ60065
நிறம்
பெண்கள்
3. Sf) TJSOOf Rovers. :
: சிவப்பு : “பரந்த நோக்கு” : திரி சாரணியர் Rangers
நிறம் சிந்தனை பெண்கள்
(31)
7 1/2 - 11 வயதுவரை
மஞ்சள் "இயன்றவரை திறமையாய்ச் செய்” சிறு தோழிகள்
; 11-18 வயதுவரை : பச்சை : சாரணியர்
18-24 வயதுவரை
சாரணர் தலைமைக் காரியாலயம் (உலகம்)
1920 - 1958 : கில்வெல் பூங்கா - இங்கிலாந்து 1958 - 1968 : Ottawa - Canada 1968முதல் : ஜெனிவாவில் இயங்கி வருகின்றது.
தற்போதைய சாரணர் பிராந்தியம்
1. அமெரிக்கா 2. ஆபிரிக்கா 3. அரபு 4. ஐரோப்பா 5. ஆசிய - பசுபிக்
பிராந்தியம்
தலைமைக் காரியாலயம்-மணிலா - பிலிப்பைன்ஸ் தீவு
இலங்கை - உட்பட25 நாடுகள்

Page 19
(32)
சாரணர் பரீட்சை
அங்கத்துவ சின்னம் சாரணர் விருது மாவட்ட ஆணையாளர் விருது வினைத்திறன் அலங்காரம் பிரதம ஆணையாளர் விருது ஜனாதிபதி விருது
சாரணர் தலைவர்கள்
Phase I as606)isting.
II
III
IV உயர் தருசின்னப் பயிற்சி V 50556160Tib Wood Badge
E

(33)
செஞ்சிலுவைச் சங்கம்
1859 யூன் 24ல் இத்தாலியில் சால்பெரீனோ (Solferino) என்னும் ஊருக்கு அருகே பிரான்ஸ் மன்னன் மூன்றாம் நெப்போலியனுக்கும் ஆஸ்திரியா மன்னன் பிரான்சிஸ் ஜேசேப்புக்கும் நடந்த மிகக் கடும் போரில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொலையுண்டும், படுகாயப்பட்டும், குற்றுயிராக முனகியும் கிடந்து துடித்தனர்; நா வறண்டு தண்ணிருக்குக் கதறினர்.
அவ்வேளை அங்கு சென்ற Henry Dunant என்னும் ஸ்விட்சலாந்து பாங்கு முதலாளி அந்தக் கோரக் காட்சியைக் கண்டு பதறினார். துன்புற்றவனுக்கு இன்பம் கொடுத்திட அவர் மனம் துடித்தது. உடன் ஸ்விட்சலாந்து சென்று உதவிக்குச் சிலரை அழைத்துப் போர்க்களம் போந்து, தண்ணிர் விடாயால் தவித்தவர்களுக்குத் தண்ணி, காயப்பட்டவர்களுக்கு மருந்து - போரின் கொடுமையில் கடுமை கண்டவர்களுக்கு என்னென்ன தேவையோ அவற்றை வழங்கினார்கள்.
'சால்பெரினா நினைவுகள' எனும் நூலில் சால்பெரினாப் போரில் தாம் கண்ட கொடுமைகளை விபரித்து 1862இல் அந்நூலை வெளியிட்டார். இந் நூலிலே தான் இன்றைய செஞ்சிலுவைச் சங்கக் கோட்பாடுகளும் உலக ரீதியான ஒருங்கிணைப்பு முறைகளும் சட்டங்களும் விபரிக்கப் பட்டுள்ளன. இச்சங்கம் எல்லா நாடுகளிலும் தோன்றுவதற்கு இந்நூலே காலாக இருந்தது.
அந்நூலை அச்சிலேற்றுவதற்கு முன்னரே இந்நோக்கத்தை 560op(36ppi65p35Tab Gustave Moynier, General Dufoeur, Dr. Appia, Dr. Maunoir என்னும் நால்வரை உறுப்பினர்களாகவும், ஹென்றி டுனான்ட்ஜ செயலாளராகவும் கொண்ட குழு ஒன்று ஜெனிவாவில் ஏற்பட்டது. இந்த ஐவர் குழு மிகவும் ஊக்கத்துடன் செயலில் இறங்கிற்று.

Page 20
(34)
பின்னர் டுனான்ட் தம் நூலை வெளியிட்டார். ஆபிரிக்கர்கள் போன்ற அயல் நாடுகளிலிருந்த வாணிக அலுவல்களை விட்டு இவ் வருட் தொண்டில் தீவிரமாக ஈடுபட்டார். ஜெர்மனியிலிருந்த ஒவ்வொரு அரசரையும் கண்டார். பின்னர் பிரான்சில் மூன்றாம் நெப்போலியனால் வரவேற்றகப் பட்டார். சென்றவிடமெல்லாம் தனது அறக் கருத்தை விதைத்தார். இவர் ஊட்டிய உணர்ச்சியின் பயனாகப் 16 நாடுகளிலிருந்து 30 பிரதிநிதிகள் கொண்ட மாநாடு ஒன்று ஐவர் குழுவினால் 1863-1026 இல் கூட்டப் பெற்றது. இதில் கூடிய 16 நாடுகளிலும் தேசிய உதவிச் சங்கங்கள் ஏற்படுத்த முடிவு செய்யப் LL-gl.
பின்னும் ஓராண்டில் 18648-22 இல் சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் ஓர் அரசியல் மாநாட்டைக் கூட்டிற்று. அதில் அமெரிக்க ஐக்கிய நாடும் 13 ஐரோப்பிய அரசாங்கங்களும் கலந்து கொண்டன. அம் மாநாட்டின் விளைவே முதல் ஜெனிவா உடன்படிக்கை ஆகும். அவ்வுடன்படிக்கையை ஐரோப்பிய அரசாங்கங்கள் அங்கீகரித்தன. ஆனால், 1882ஆம் ஆண்டிற்றான் அமெரிக்கப் பெண்மணி Clara Barton என்பவருடைய பெரு முயற்சியால் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசாங்கம் அதை ஏற்றுக் கொண்டது.
1864ஆம் ஆண்டின் உடன்படிக்கையின்படி போர்வீரர்களில் தம்மவர் - மாற்றார் என்ற வேறுபாடின்றி காயமுற்றோர் - நோயுற்றோர் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும், ராணுவ மருத்துவ நிலையங்களும் மருத்துவர்களும் தாக்குதல்களிலிருந்து காக்கப்பட வேண்டும் என்றும், வெண்ணிறத் துணியில் செஞ்சிலுவை பதிக்கப் பெற்ற சின்னம் இப்பணியின் தனிப்பட்ட சின்னமாக ஏற்றுக் கொள்வதென்றும் முடிவு செய்யப்பட்டது. இதுவே செஞ்சிலுவைச் சங்கத்தின் தோற்றமாகும்.
இப்பணியில் தலைமையான பங்கு கொண்டவர் ஹென்றி டுனான்ட் ஆவார், அவருடன் ஐவர் குழுவில் முதலில் கூடிய நால்வரும் சுவிட்ஸர்லாந்து நாட்டவர்கள். அவ்வுடன்படிக்கை ஜெனிவாவில் சுவிட்ஸர்லாந்து நாட்டுக் கொடியின்கீழ் அமர்ந்து கையொப்ப மிடப்
-35.

(35).
சுவிட்ஸர்லாந்து நாட்டுத் தேசியக் கொடி சிவப்புத் துணியில் வெண்ணிறச் சிலுவை பொறிக்கப்பட்டது. அக் கொடியை நினைவுறுத்தும் வகையில், அதற்கு நேர் மாறான வெள்ளைத் துணியில் செஞ்சிலுவை பொறித்த கொடியை இவ்வருட் சங்கத்தின் சின்னமாகக் கொண்டனர். அதனால், இச் சங்கம் செஞ்சிலுவைச் சங்கம் என அழைக்கப்பட்டு வருகிறது.
அந்நாள் தொட்டுச் செஞ்சிலுவைச் சங்கத்தின் கோட்பாடுகள் உலக நாடுகள் பலவற்றிற்கும் பரவலாயின. இன்று, 175க்கு மேற்பட்ட நாடுகளின் அரசுகள் அக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு, தங்கள் நாடுகளில் செஞ்சிலுவைச் சங்கத்தினை ஆரம்பித்துப் பயன் பெறுகின்றன. 1899இல் இக் கோட்பாடுகள் தரைப்படையில் மட்டுமல்ல கடற்படைச் சண்டையிலும் ஏற்றுக் கொள்ளப் பட்டன. போரிற் சிறைப்பட்ட கைதிகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதை 1929லும், போர்க் காலத்தில் காயமுற்ற படை வீரர்களுக்கு மட்டுமன்றி போரில் ஈடுபடாத மற்றோருக்கும் பாதுகாப்பு அளிப்பதை 1949லும் இச்சங்கத்தின் வேலைகளுள் சேர்க்கப்பட்டன.
1914-19 முதல் உலக யுத்தத்திற்குப் பின் செஞ்சிலுவைச் சங்கம் தன் அமைதிக்காலப் பணியாக அந்தந்த நாட்டு மக்களின் சுகாதாரம் பேணுதல், நோயைத் தடுத்தல், எதிர் பாராத விபத்துக்களால் துன்புறுவோரின் துயர் நீக்குதல் ஆகிய மூன்று துறைகளிலும் பணியாற்றி வருகிறது. இரண்டாம் உல யுத்தத்திற்குப் பின் (1939–45) இச்சங்கம் செய்துவரும் அமைதிக்காலப் பணி பெரிதும் போற்றத் தக்கதாக உள்ளது.
உலக நாடுகளிடையே செஞ்சிலுவைச் சங்கத்தின் அமைப்பு நிலையங்களும் அவற்றின் பணிகளும்
1. செஞ்சிலுவையின் சர்வ தேசக் குழு. ICRC (The International Committe of the Red Cross) {35), Qd655g)606.3 Frisbj,60955 தோற்றுவித்தது. இக்குழு ஜெனிவா உடன்படிக்கையின் கோட்பாடுகளை நடைமுறையில் கொண்டுவர உழைக்கிறது.

Page 21
(36)
2. செஞ்சிலுவைச் சங்கங்களின் கூட்டுக்கழகம் (The League of Red
Cross Societies) இது அந்தந்த நாடுகளில் உள்ள தேசியச் சங்கங்களின் வளர்ச்சியில் ஈடுபடுகிறது. இவைகளின் அயல்நாட்டுத் தொண்டுகளை ஒருமுகப் படுத்துகிறது. எல்லாத் தேசியச் சங்கங்களுக்கும் காப்பாக விளங்குகின்றது.
3. தேசியச் செஞ்சிலுவை, செவ்விளம்பிறை, செஞ்சிங்க சூரிய als is6i. (The National Red Cross, Rod Crespent and Red Lion and Sun Societies). g606hlab6f 966hpbb.IT' (65 (355us செஞ்சிலுவைச் சங்கங்களாகும்; இவற்றின் தொண்டர்கள் பொதுச் சுகாதார அதிகாரிகளுக்கு, சிறப்பாக இராணுவத்தில் மருத்துவத் தொண்டு புரிவோருக்கு, அங்கீகாரம் பெற்ற உதவியாளராவார்கள். இவை - இளைஞர்கள்களுக்குச் செஞ்சிலுவைச் சங்க உணர்வினை வூட்டி, இளைஞர்கள் பணியாற்ற வாய்ப்பளிக்கின்றன.
4. Fire (353& Gafsiggo)6 LDITBTG. The International Red Cross Conference இது சர்வ தேசச் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமைப் பேரவையாகும். சர்வதேசச் செஞ்சிலுவை அமைப்புக்களின் அங்கத்தினர்களுடைய முயற்சிகளை ஒருமைப் படுத்துகிறது. அவ்வவ் நாட்டுச் செஞ்சிலுவைச் சங்கங்களின் பிரதிநிதிகளை நான்காண்டுக் கொருமுறை மாநாட்டில் கூட்டுவிக்கிறது.
5. சர்வதேச செஞ்சிலுவையின் நிலையான குழு:
(The Standing Commission of the International Red Cross) இக் குழு சர்வதேச குழுக்களினால் தேர்ந்தெடுக்கப் பெற்ற அங்கத்தவர்களைக் கொண்ட அமைப்பு. சர்வ தேசத் தேசியச் சங்கங்களுடைய முயற்சிகளை இணைத்து ஒருமைப் படுத்துகிறது.
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் 1936இல் பிரித்தானிய செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கை மத்திய கிளையாக ஆரம்பிக்கப் பட்டது. 1949 இல் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் ஆரம்பிக்கப் பட்ட போதும் 1972ஆம் ஆண்டே இலங்கைச் செஞ்சிலுவைச்

(37)
சங்கமாகப் பரிணாமமடைந்தது. இன்று, மரீ லங்கா செஞ்சிலுவைச் சங்கமாகச் செயற்படுகின்றது. இலங்கையில் 25 மாவட்டங்களிலும் 25 கிளைகள் செயற்படுகின்றன. இதன் தலைமைச் செயலகம் கொழும்பில் தர்மபால மாவத்தையில் உள்ளது.
‘‘، حجھیہ
ஹென்றி டுனால்ட் ஜெனிவாவில் 1828ஆம் ஆண்டு மே மாதம் 8ந் திகதி பிறந்தார். இவர் வர்த்தக நோக்கத்திற்காக ஆஸ்திரியாவுக்குச்
செல்கையில்தான் செல்பெரினா கிராமத்தில், போரின் கொடுமையின் கடுமையைப் பார்த்தார். செஞ்சிலுவைச் சங்கம் தோன்ற வழி கண்டார்.
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் தற்போது கீழ்க் காணும்
பணிகளில் அணிசெய்கின்றது :-
:
முதலுதவிப் பயிற்சி
ஆரம்ப சுகாதாரம்
குழந்தைகளின் நலம் பேணல்
நிவாரண உதவி
முழு நேர அம்புலன்ஸ் சேவை
இரத்த தானம்
தபால் சேவை
காணாமற் போனோரைத் தேடுதல் சேவை
இளைஞர் செயற்பாடுகள்
எய்ட்ஸ் நோய் பற்றிய தகவல்
கல்வித் திட்டம்
ஆபத்துக் காலத்தில் தேவைக்கேற்பச் சகல துறைகளிலும்
சேவை
அடிப்படைக்குறிக்கோள்
மனிதாபிமானம் * தொண்டர் சேவை பாகுபாடு காட்டாமை * ஐக்கியம் நடுநிலைமை * சர்வ வியாபகம் சுதந்திரத் தன்மை

Page 22
(38)
agford, Sgarb (Lions Club)
இதிட வசதியான வாழ்வு நடத்திய மெல்வின் ஜோன்ஸ் WeServe அவர்கள் இரக்க சிந்தை படைத்தவர். ஏழைகளின் " ” மேல் நிறைந்த கண்ணோட்டம் கொண்டவராக மிளிர்ந்தார். ஒரு வகையில் நமது நாட்டைச் சேர்ந்த வள்ளல்கள் போலத் திகழ்ந்தார்.
மெல்வின் ஜோன்ஸ் அவர்கள், தான் மட்டுமல்ல, தன்னைப் போன்ற மற்றவர்களும் இரக்க சிந்தை கொண்டு ஏழைகளுக்குக் கொடுக்கும் மனப் பக்குவம் கொள்ள வேண்டும் என விழைந்தார். அதனால், அதற்கென ஒரு கழகம் உருவாக வேண்டுமென விரும்பினார்.
அதன் விளைவாக, ஐக்கிய அமெரிக்க மாநிலங்களைச் சேர்ந்த 22 பிரதிநிதிகள் 7.7.1917ந் திகதி சிக்காக்கோ நகரில் உள்ள உணவு விடுதி La Sale இல் கூடி, ஒரு கழகத்தை உருவாக்க நீண்ட நேரம் உரையாடினர்.
8.10.1917இல் பிரதிநிதிகளின் முதலாவது கூட்டம் Adolplus Hotel at Dallas-Texas g6 b60Louippg. 36 liggp5gs6i as6upbg கொண்டனர்.
13 ஆண்டு கால வளர்ச்சியில் 1930 இல் 2200 கழகங்களில் 80,000 அங்கத்தவர்கள் இருந்தனர்
01.06.1961இல் மெல்வின் ஜோன்ஸ் அவர்கள் காலமானார்.
இன்று உலகத்தில் 171 நாடுகளில் 1.415 மில்லியன் உறுப்பினர்கள் உள்ளனர்.
இலங்கையில் இன்று 40 ஆண்டு நிறைவு விழாவைக் கொழும்பு வெஸ்ற் கொண்டாட உள்ளது. அதுதான் முதன் முதலாக உருவாக்கப்பட்ட கழகமாகும் - 1957.
 

(39)
யாழ்ப்பாணக் கழகம் 1972 இல் தொடங்கப் பட்டது, லயன் J. M. சபாரத்தினம் அவர்கள் முதலாவீது தலைவராவார். 25ம் ஆண்டுக் கொண்டாட்டம் நடைபெற உள்ளது,
இப்பொழுது வட மாகாணத்தில் முன்னார், வவுனியா, சாவகச்சேரி, வட்டுக்கோட்டை, சுன்னாகம், கோப்பாய், மானிப்பாயில் - மானிப்பாய் பரிஸ் - மானிப்பாய் வடக்கு, நல்லுார், வடமராட்சி கொக்குவில் ஆகிய இடங்களில் இக் கழகம் இயங்கி வருகிறது. இவற்றுள் சாவகச்சேரி - வட்டுக்கோட்டை ஆகியன 1979இல் ஆரம்பிக்கப் பட்டன.
கழகத்தின் அர்ப்பணப் பிரார்த்தனை
நொய்த மனத்தோனை மகிழ்விப்பேனாக ஆதரவற்றோர்க்கு இன்னருள் அளிப்பேனாக ஒரு சோகக் கண்ணிரைத் துடைப்பேனாக பயந்த மனத்தைச் சாந்தி செய்வேனாக இருளை நீக்கி ஒளிதனை ஊட்ட ஆதியாம் பொருளே ! என் பணிக்கடன் இதுவே ஆகுக. வாழ்நாள் முழுவதும் வேண்டுவ வேண்டியாங்கு இயலுங்கால் என்குணம் குன்றி நிண்குணம் பெருகிட அருளே.
To all the good you can 'For all the ways you can In all the places you can At all the times you can
To all the people you can
As long as you can -7øMém Més47

Page 23
(40) .
அரிமாக் கழகத்தின் நோக்கங்கள்
உலக மக்கள் மத்தியில் புரிந்துணர்வுத் தத்துவத்தை உருவாக்குதலும், பேணுதலும்,
நல் அரசினதும், நற் பிரசைகளதும், கொள்கைகளை உயர்வடையச் செய்தல்.
சமுதாயத்தில் நகர சம்பந்தமானதும் கலாச்சார, சமூக மற்றும் அறம் பற்றிய விடயங்களில் தீவிரமான அக்கறை கொள்ளல்.
நட்புறவு, நல் ஒத்துழைப்பு, மற்றும் பரஸ்பர புரிந்துணர்வு அடிப்படையில் கழகங்களை ஐக்கியப் படுத்தல்.
பொது மக்களது அக்கறைகள் தொடர்பான சகல விடயங்களிலும் திறந்த கலந்துரையாடல்களை ஏற்படுத்தலும், பிரிவினை சார் அரசியல் மற்றும் பிரிவுக்குரிய மதம் பற்றிய விடயங்களைப் பற்றிக் கழக அங்கத்தவர்கள் விவாதம் செய்யாமையையும் பார்த்துக் கொள்ளல்.
தனிப்பட்ட நிதிகள் வெகுமதியை எதிர் பாராமலும் வர்த்தக, கைத்தொழில், பொது வேலைகள் மற்றும் தனிப்பட்ட முனைப்புகளில் திறமையை ஊக்குவித்தும், மிக உயர்வான நீதி நெறித் தரங்களைப் பேணும் சேவை மனப்பான்மை கொண்டவர்களைத் தமது சமுதாயத்திற்குச் சேவையாற்றுதலை ஊக்குவித்தலுமாகும்.

(41)
அரிமாக் கழகங்களின் அறக்கோட்பாட்டு விதிகள்
எனது தொழிலின் மேன்மையில் எனக்குள்ள நம்பிக்கையை இறுதிவரை கைக் கொண்டு, கடும் முயற்சியைப் பிரயோகித்து, அதனால் - எனது சேவையின் தரத்துக்காக தன்மதிப்பைப் பெறத் தகுதியுடையோனாதல் வேண்டும்.
வெற்றியை நாடி, உழைத்து, நியாயமாகக் கிடைக்க வேண்டிய வருமானத்தையே பெறுதலை வற்புறுத்துவேன். ஆனால், தன் மானத்தை விலையாகக் கொடுத்து இலாபத்தையோ வெற்றியையோ ஏற்க மாட்டேன். நியாயமற்ற வாய்ப்பைப் பயன்படுத்தியோ, கேள்விக்குரிய செய்கைகளைக் கொண்டோ எனது நலத்தைத் தேடமாட்டேன்.
எனது தொழிலைக் கட்டி எழுப்பும் போது மற்றொருவிடயத்தை சீர்குலைக்க வேண்டியதில்லை. எனது வாடிக்கைக் காரருக்கும் என்னுடன் தொழில் தொடர்பு கொள்வோருக்கும். எனக்கும் விசுவாசமுற்றவனாய் இருக்க வேண்டுமென்பதை மறக்க மாட்டேன்.
எனது சக மனிதர் தொடர்பாக எனது செய்கைபற்றி ஏதாவது அறக் கோட்பாட்டில் அல்லது உரிமையில் சந்தேகம் எழும்போது எப்பொழுதும் எனக்கு மாறாகவே தீர்ப்பு வழங்குவேன். பிறர் உரிமைக்கு முன்னிடம் கொடுப்பேன்.
நட்பு என்பது குறிக்கோள், ஏதாவது இலாபம் பெறுவதற்கு வழி என்று கருதமாட்டேன். உண்மையான ஒருவர் மற்றவருக்குச் செய்யும் சேவையைப் பொறுத்தல்ல உண்மை நட்பு சேவை வழங்கப்பட்ட அதே மனப்பான்மையுடன் அதனை உவந்து ஏற்பதையும், ஒன்றையும் எதிர்பாராமல் இருப்பதையும் பொறுத்திருக்கிறது என்ற உண்மையை உறுதியாகக் கடைப்பிடிப்பேன்.

Page 24
(42)
ஒரு பிரசை என்ற முறையில் எனது தேசிய இனத்திற்கு, நான் செய்ய வேண்டிய கடமைகளை மனத்தில் இருத்துவேன். எனது மனம், வாக்கு, செயல் அனைத்திலும் அசைக்க முடியாத விசுவாசம் உடையவனாக இருப்பேன்.
எனது சக மனிதருக்கு உதவும் முகமாகத் துன்புற்றோருக்கு இரக்கமும் பலவீனர்களுக்கு உதவியும், தேவையானோருக்குப் பொருளும் வழங்குவேன்.
எனது விமர்சனம் பற்றிக் கவனமாக இருப்பேன். பிறருக்குப் புகழ்மாலை சூட்டுவதில் தாராளமாக இருப்பேன். ஆக்க முயல்வேன், அழிக்க முயலமாட்டேன்.
six s’TEPs To A STRONG LIoNs cuius
A major service activity
A major fundraising project
Strong Public relation
'West organized, enjoyable meetings
Association spirit
A strong membership development and relation pro4ramme.
む
soné

(43)
கல்வி
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
- குறள் 391
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு
- குறள் 396
நுண்மா னுழைபுல மில்லான் எழினலம் மண்மாண் புனைபாவை யற்று.
- குறள் 407
கற்றில னாயினுங் கேட்க அதொருவற் கொற்கத்தி னுாற்றாந் துணை.
- குறள் 414
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருள் மெய்ப் பொருள் காண்ப தறிவு.
- குறள் 423
குஞ்சி யழகுங் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்ச ளழகு மழகல்ல - நெஞ்சத்து நல்லம்யா மென்னும் நடுவு நிலைமையால் கல்வி யழகே யழகு.
- நாலடியார் "ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் முத்தோன் வருக என்னா தவருள்
அறிவுடை யோனா றரசுஞ் செல்லும்”
— LygOLD

Page 25
(44)
"வெள்ளத்தே போகாது விெநதனலால்
வேகாது வேந்தராலும்
கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும் நிறைவன்றிக் குறைவுறாது
கள்ளர்க்கோ மிகவரிது காவலோ மிகவெளிது
கல்வி யென்னும்
உள்ளத்தே பொருளிருக்க உலகெல்லாம்பொருள்தேடி
உழல்வ தென்னே"
LLLLLLLLLLLLLLL0LLLLLLLLLLLL
மன்னனும் மாசறக் கற்றோனுஞ் சீர்தூக்கின் மன்னனிற் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத் தன்றேய மல்லாற் சிறப்பில்லை கற்றோர்க்குச் சென்றவிட மெல்லாஞ் சிறப்பு
- வாக்குண்டாம்
பிச்சைபுக் காயினும் கற்றல் மிகவினிது;
நற்சபையிற் கைகொடுத்தல் சாலவு முன்னினிது, t
-இனியவை நாற்பது.
கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே.
- வெற்றிவேற்கை
இளமையிற் கல்.
- ஆத்திசூடி
வித்தை விரும்பு
- ஆத்தி சூடி

(45)
எண்ணு மெழுத்துங் கண்னெனத் தகும்
. - கொன்றை வேந்தன்
கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி
- கொன்றை வேந்தன்
குலவித்தை கற்றுப் பாதி கல்லாமல் பாதி
- பழமொழி
கல்வியின் ஊங்கு இல்லை சிற்றுயிர்க் குற்றதுணை
- நீதிநெறி
கல்வி கரையில கற்பவர் நாள்சில மெல்ல நினைக்கிற் பிணிபல - தெள்ளிதின் ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப் பாலுண் குருகிற் றெரிந்து
- blf Gog IITT
ஆசிரியர் என்போர் ஞானவிளக்குகள் எவர்பணம் கொடுத்துக் கேட்டாலும் தம் அறிவை விற்பவர் ஞான விளக்குகள் அல்லர். அவர்கள் அறிவுப் பரத் தையர்கள் ஆவார்.
- சோக்கிரட்டீஸ்
கல்வி என்பது வாழ்க்கை.
- சோக்கிரட்டீஸ்
மனிதனிடம் மறைந்து கிடக்கும் பரிபூரணத்துவத்தை வெளிப்படுத்துவதே கல்வி
- சுவாமி விவேகானந்தர்

Page 26
(46)
கேத்திர கணிதம் அறியாதவன் இங்கே (அக்கடமி எனும் செழுங்கலை நிறுவனம்) நுழையாதிருப்பானாக
- Plato
罗
கற்பித்தல் என்பது கருத்தற்ற சொற் - கூட்டங்களை
மனனம் செய்வதல்ல, புலனனுபவத்துடன் இணைந்து
முழுமனதினை உருவாக்க அது உதவவேண்டும்
一也G于们
கல்வி ஒருவனை நல்ல மனிதப் பண்புடையவனாகவும், நற்குடி மகனாகவும் ஆக்க வேண்டும்
— e.bCés AT
அறிந்ததிலிருந்து அறியாததற்குச் சென்று விளங்கிக் கொள்ள வைத்தல் கல்வியாகும்.
- ஹேபார்ட் ஸ்பென்சர்
சுதந்திரமாகக் குழந்தைகள் தாம் விரும்பியவாறு கற்க வேண்டும். எவருடைய குறுக்கிடும் இருக்கக் கூடாது. குழந்தையின் தனித்தன்மைக்கு மதிப்பளிக்க வேண்டும்.
- மொன்டிசோரி அம்மையார்
கல்வி என்பது காலத்திற்கேற்ற சமுகப் புனரமைப்புக் கருவியாக இருக்க வேண்டும் சமுகத்தின் குறைபாடுகளைக் கல்வி முலமே நிறைவு செய்ய (tptԶարճ,
- ஜோன் டுயி
நூற் கல்வி உண்மையான கல்வியாகாது; அது அறிவினைக் கொடுப்பதற்கு வழியுமாகாது, அறிவை எடுத்துக் காட்டும் கருவியாக மட்டுமே அது அமையும்
-மகாத்மா காந்தி

(47)
பிள்ளைகள், வாழ வேண்டும் என்னும் தணியாத தாகத்துடன் இருப்பவர்களாவ்ர். அவர்களின் தாகத்திற்குப் பாடசாலைகள் நீருற்ற வேண்டும்
- கவி தாகூர்
தன்னை அறிதல் வேண்டும்
- திருமூலர்
தன் அயலானை அறிதல் வேண்டும்
- இயேசு
உலகினை அறிதல் வேண்டும்
bis
நாம் கற்க வேண்டியது அறிவையல்ல, அறிவை அறியும் அறிவையே. அந்த அறிவு வாழ்வியில் வழிகளை வகுத்திட வேண்டும் - பரலோகப் பாதையை அல்ல.
- தென்னவன் புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே, - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.
- பாரதி
கோடி புண்ணியம் ஓர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
– ШТЈh
ஏன்? எதற்கு? எப்படி? என்பனவற்றிற்கு விடை கானும் அறிவியியற் கலையே கல்வியாகும்.
- 9. GIAT. Gd

Page 27
(48)
என் இறைவனே என் கல்விஞானத்தை அதிகப்படுத்து
- இஸ்லாம்
மனிதத் தன்மையினை மனிதர்பெற உறுதுணையாயப் விளங்குவது கல்வி
- வில்லியம் சேக்ஸ்பியர்
மக்களின் பண்புகளையும் ஆற்றல்களையும் உயர்த்தி வளர்ப்பதன் முலம் மக்களின் ஆளுமை வளர்ச்சிக்கு வழி கோலுகிறது கல்வி
- அறிஞர் அண்ணா
கல்வி என்பது விளக்கேற்றல்; மக்கள் வாழ வழி
வகுப்பது
- நாவலர்
படித்தவன் எல்லாம் பண்பாளன் அல்ல பண்பாளன் எல்லாம் படித்தவன் அல்ல.
- ஒருவன்
=
e

(49)
வாழ்க்கையில் மூன்று
மதிப்பளிக்க வேண்டிய 3
விரும்ப வேண்டிய 3 -
பாராட்ட வேண்டிய 3 -
இறைமை, முதுமை, விதி (சட்டம்)
துர்க்மை, நேர்மை, வாய்மை
அழகு, அறிவு (திறமை), குணம்
வைத்துக் கொள்ள வேண்டிய 3
காப்பாற்ற வேண்டிய 3 -
விலக்க வேண்டிய 3 -
கட்டுப் படுத்த வேண்டிய 3 -
கவனிக்க வேண்டிய 3 -
ஒழிக்க வேண்டிய 3 -
0 0 ()
0 0
அஞ்சாமை, ஊக்கம்,
திருப்தி
செல்வாக்கு, நட்பு பற்று
புகைத்தல், மது அருந்துதல் சூது விளையாடல்
நாக்கு, உணர்ச்சி, இச்சை
பேச்சு, நடத்தை, செயல்
சோம்பல், பொய், புறங்கூறல்

Page 28
(50)
அ.பொ. செ - யின்
அ. நால்கள்
காலத்தின் விதி - கதை 1965 யார் கொலைகாரன் - நாடகம் 1968 தாய்க்குலமே விழி எழு - அரசியல் 1970 நான் கண்ட அண்ணன் vn 1970 இன்பத் தமிழரசு 1970 பொங்கட்டும் தமிழுணர்ச்சி - 1975 ஏன் வேண்டும் இன்பத்தமிழ் ஈழம் - 1975 solesODDŮu GBUIT - அரசியல் தொகுப்பு
s நூல் 1977 இன்பத் தமிழரசு - அரசியல் 1978
2ம் பதிப்பு கல்வி பற்றிச் சிந்திப்போம் செயற்படுவோம்
1993 கலங்கரை விளக்கம் 1998
ஆ. கலைமன்ற நாடகங்கள்
(கதை, வசனம், நெறியாள்கை, தயாரிப்பு, மேடையேற்றம், நடிப்பு)
0. மன்னார்குடி மார்த்தாண்டன் - 1959 0 நஞ்சன் நாகப்பா - 1960 0. நாகபுரி நாகேந்திரன் - 1961 0 சதிகாரன் சபாபதி - 1962 இரும்புத் தலையன் - 1963
{} 0. ஒன்றே குலம் - 1963 0 (d மணியகாரன் மகன் - 1963 கோமாளி - 1963
கடலூர் காளியப்பன் - 1964

(51)
பியோன் பீதாம்பரம் - . 1966 சிந்திய இரத்தம் - 1967 சாவின் மடியில் - 1968 மண்டுர்க் குமரன் - 1968 கோடையிடி மயிலு 1968 மருதடி மணியன் - 1979 காசிக்குப் போவோம் - 1982. மானவீரன் மாணிக்கம் - 1982
பலமுறை மேடையேற்றப்பட்டது கொழும்பிலும் மேடையேற்றப்பட்டன.
இ. பாடசாலை மாணவர்கள் நடித்த நாடகங்கள்
யார் கொலைகாரன் - 1968 காஞ்சியின் செல்வன் - 1978 மதுரை மன்னன் 1989 م மனமாற்றம் - 1990 விடிந்தால் திருமணம் - 1991 தலை எடுத்தான் தம்பி 992 அன்பே தெய்வம் - 1993
* அகில இலங்கை கலைக்கழகம் 1968இல் நடாத்திய பாடசாலை களுக்கிடையிலான நாடகப் போட்டியில், சமூக நாடகப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்றது. மட்டுவில் மகா வித்தியாலய மாணவிகள் இதனை நடித்திருந்தனர். கலையரசு
சொர்ணலிங்கம் அவர்கள பாராட்டியுள்ளார்.
ஈ. வானொலி நாடகங்கள்
ஒலிபரப்பானது ஆசையின் அவலம் கதம்பம் 982 முருகன் செயல் சிறுவர் நிகழ்ச்சி 23-5-82 நீதி நிலைத்தது 3-6-82 தீர்க்க தரிசனம் பாகம் 1 窍 1-8-82 தீர்க்க தரிசனம் பாகம் 11 努 8-8-82
வெகுமானம் * சிறுவர் நிகழ்ச்சி 22-8-82

Page 29
(52)
மாணிக்கக் குழந்தைகள் 3-O-82 மனச்சாட்சி 31-10-82
உ. மாத இதழ் - சஞ்சிகை
தாய்நாடு - 1963 கொழும்பிலிருந்து வெளியானது;
- அகில இலங்கை ரீதியாகச்
சுற்றோட்டமிருந்தது. தென்மராட்சி 1966 - சாவகச்சேரியிலிருந்து வெளியானது
ஊ. சிறுகதைகள் பல
சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன.
எ. கட்டுரைகள் பல
சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன.
ஆசிரியரின் புனைபெயர்கள்
1. சேரன் 4. பொற்செல்வன் 2. வரைபாலன் 5. தென்னவன் 3. அண்ணாதாசன்
புகழ் தோன்றிற் புகழொடு தோன்றுக அதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று.
- குறள் 236
)

(53)
கல்வி முறை மாற வேண்டும்
ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது" என்பது போல இன்றைய கல்வி, வாழ்வியலுக்கு உதவாது. ஆங்கிலேயர் காலத்திலே நிர்வாகம் நடத்திட ஆட்கள் தேவைப் பட்டன. நிர்வாகம் தெரிந்திட ஆங்கிலேயர்களால் வகுத்த கல்விமுறைதான் இன்றும் உள்ளது !
காலம் மாறியுள்ளது. காலத்தோடு நாம் மாற வேண்டாமா? மின்சாரம், இலத்திரன், கணனி, இப்படிப் பொறியியல் ரீதியாகவும், சிறுநீரகம் மாற்றுதல், 'இதயத்தில் சத்திர சிகிச்சை போன்ற உயிரிய்ல் ரீதியாகவும் - குழாய்க் குழந்தை, Cloning முறையில் உயிரியல் பொறிமுறை உற்பத்தி ஆகியன வளர்ச்சி பெற்றுள்ளன. இவைகளிற் பலவற்றை நமது அயல் நாடுகளில் மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாம் எங்கே இருக்கிறோம்? நீரிழிவால் துன்பப் படுகிறவன் தனது குருதியில் வெல்லச் சத்தின் அளவினை அறிவதற்குத் தகுந்த ஆய்கூடங்கள் இல்லை! ஏன்? .
கருவிலே குழந்தை; தாய் படுந்துன்பம்; பிரசவ அவதி; மரண பயம் - இவை நமது நாட்டில் மேலை நாடுகளில் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு வாடகைக்கு ஆள் வைத்துக் கொள்ளலாம்! குழந்தை பிறப்பது ஒரு சாதாரண நிகழ்ச்சி! சிந்தித்துப் பார்த்ததுண்டா?
சந்திரனுக்குச் சென்று, அங்குள்ள மண்ணை அள்ளிக் கொணர்ந்தனர் மேலை நாட்டு விஞ்ஞானிகள். வியாழன் பற்றிய ஆராய்வு; செவ்வாய்க் கிரகத்தில் குடியேறலாமா எனப் புள்ளி விபர மெடுத்தல் 1 இதெல்லாம் மேலை நாட்டில் நாம் என்ன செய்கிறோம்? உதயத்தில் - நாலாம் இடத்தில் - ஏழாம் வீட்டில் செவ்வாய் எனத் திருமணப் பொருத்தம் பார்க்கிறோம்! பார்ப்பது சரிதானா?
நமது கல்வி முறையில் மாற்றம் உண்டாக வேண்டும். அறியாமை நீங்கிப் பகுத்தறிவுள்ள சமுதாயம் உருவாக்கப்பட வேண்டும். பொருளியல் அறிவு பெற்றுப் பொருளாதார வளத்தைப் பெருக்கிட வேண்டும். தொழிற்றுறைப் பயிற்சி பெற்றுத் தொழில் அதிபர்களாக மாறிட வேண்டும். சோம்பேறித் தனத்திற்குரிய எந்தத் துறையையும் வெறுத்திட வேண்டும். பக்தி - சமயம் வாழ்வியலுக்குப் பயன் தருவதாக அமைய வேண்டும். அப்பொழுதான், நாம் உடல் நலமும், உள நலமும் பெற்று இன்பமாக வாழ முடியும். கல்வி, வாழ்வின் நலத்தையும் அத்தோடு பண்பாட்டையும் நல்கிட வேண்டும். ஒழுங்கு-ஒழுக்கத்தைத் தராத கல்வி வேறு எதனைத்
தந்தாலும் பயனில்லை!
அ.பொ. செல்லையா (யா/மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயப் பரிசல் நாள் உரையிலிருந்து.)

Page 30
(54)
வாழ்வு நிலையானது!
"வாழ்வா வது மாயம். இது மண்ணாவது திண்ணம்" - என்று வேதாந்தம் பேசுபவர்கள் யாருமே, ‘வாழ்வு நிலையில்லாதது எனக் கருதிக் கருமம் ஆற்றுவதில்லை. வாழ்ந்திடுவோம் - வாழத்தான் வேண்டும் . என்ற அசைக்க முடியாத எண்ணத்துடனேயே காரியத்தில் ஈடுபடுவார்கள்.
வாழ்வு என்பது உண்மையில் அழிந்து போவதில்லை. வாழ்வு தொடர்ச்சியானது; தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதன் நம்பிக்கை இயல்பாக இருப்பதாற்றான் எப்படியும் பிழைத்துக் கொள்ள வேண்டும் - தப்பி வாழ வேண்டும் என உயிர்ப்பாக இருக்கின்றார்கள்.
நீரிலிருந்து வெளியே போடப்பட்ட மீன் துள்ளுகிறதே! ஏன்? வெயிலில் இடப்பட்ட புழு துடிக்கிறதே! எதற்காக? வாழ்வதற்காக. தனக்குற்ற துன்பத்திலிருந்து தப்புவதற்காகத்தான் மீன் துள்ளியது, புழுத் துடித்தது.
அது போலத்தான் மனிதனும் வாழத் துடிக்கிறான்.
ஆனால், அவனது வாழ்வுக் காலம்தான் எவ்வளவு என்று தெரியாது! அவனது வாழ்வினைக் கொண்டு செல்லும் உடல் - உடல் ஆக்கப் படுவதற்குக் காரணமாக இருக்கும் மூலங்கள் வேற்று நிலையை அடைகிறது. ஆனால், அந்த மூலங்கள் அழிவதில்லை. மண்ணிலிருந்து - (புவியிலிருந்து) வந்த பொருட்கள் மண்ணோடு சேருகின்றன. ஒரு கடதாசியை எரித்தால் அது புகையாக, ஆவியாக, சாம்பலாக வேறுபடுகிறதேயன்றி அழிந்துவிடவில்லை. அதுபோன்றதே மனித உடலும்! ->
ஆகவே. நமது உயிர் குடி கொண்டிருக்கும் இக்குடிலாகிய உடம்பு வேறு உருவங்களை அடையுமுன் எமது உடலில் உள்ள பொருட்கள் சமநிலை குழம்பி -முதுமை காரணமாகச் செயல்நிலை குன்றி மரணம்
எய்துமுன் அறத்தைச் செய்து, புகழைத் தேடிக் கொள்ள வேண்டும்.
ஒருவன் இறந்தபின் அவன் பிள்ளைகள்தான் அவனது எச்சங்கள் என்பர். குழந்தைகள் இல்லாதவர்களுக்கு எச்சங்கள் இல்லையா? இருக்கிறது. அவன் செய்த செயற்பாடுகளால் கிடைத்த வெற்றி - புகழ் அவனது எச்சங்களாகும். எனவே, 'அறம் செய விரும்பி, ஊக்கமது கைவிடாமல்; புகழொடு தோன்றும் செயற்பாடுகளைச் செய்து நாடும் ஏடும் போற்ற வாழ்ந்திட வேண்டும். ஆகவே, வாழ்வு தொடர்ச்சியானது. இயலாமையால் தோன்றும் வரட்டு வேதாந்தங்களைப் புரிந்து கொண்டு, தொடர்ந்திடும் வாழ்வினை இனிதாக ஆக்கி, வெற்றிதனை அடைந்திட வேண்டும். இதனைக் கல்வி
தரவேண்டும். பேரறிஞர் அண்ணா

(55)
மண்ணிண் மைந்தண்
எம் ஊரின் வளமண்ணில் உதித்து பெரும் தருவாகி ஏற்றமுடன் நற்கல்வி நிலயத்தில் பயின்றிருந்து
செம்மையுறு ஆசானாய்த் திகழ்ந்துபல பணிபெருக்கி (ச்)
செழிப்புறவே எம்கல்விச் சாலையது முன்னேற,
நம்மவரை அருகழைத்து நாள்தோறும் முயன்றுவந்தாய் நாளைவரும் நாளைவரும் எனநியும் காத்திருந்தாய்
நன்மையுற நம்கல்வி நிலையதனை உயர்த்திடுமுன்
நடைநடைந்தாய் என்றாலும் உண்ஆத்ம தரிசனத்தால்
பண்மைவளம் பெருகிடவும், பாங்குறவும் மிகவேண்டி
பள்ளியெலாம் நடத்திடுவோம்! பணிப்பாளா நீ வைத்த
எண்ணமெலாம் யாழகத்தின் நிலமதனில் ஈடேறும்
என்பதொரு உறுதியுடன் எதிர்காலம் வளங்கொழிக்கும்
பண்ணமுற உண்குடும்பம் வாழ்வெய்தும், எந்நாளும்
வாழ்வாங்கு வாழ்ந்திடவே வழிபாடு நாம் செய்வோம்.
--ബ്രഞ്ഞff്കബ്

Page 31
(56)
கள்ளமிலா நெஞ்சம்
கல்விக் களத்தின்
ஆளுமை அரசே
கள்ளமிலா உள்ளழகே
எளிமை எழிலே
சிந்தனைக் கலைஞா,
ராசனரே - நீர்
இன்னும் எம்முடன்
இனிதாய் இருப்பீர்
ஏனெனில்,
இரத்தினங்கள் இறப்பதில்லை !
-நினைவரர நெஞ்சங்கர்ை


Page 32

i
స్టో
T.
.."
?ே -- -ܪ̈¬¬ ܚEوعصب *-ܡܕܡܩܘܗܡܗܝܔ ܬܡ கடமை முடியவில்லை; காலன் அழைக்கிறான்; விடைபெற்றுக்கொள்கிறேன்.

Page 33
இளமை முதல்.
படுத்
LE TIL "கல்வி
*ն ճնII
விளE
s9I. %
தன் அறிவை, ஆற்ற6ை வகித்த பதவியைப் பெருமை அ.பொ.செ அவர்களும் சென்னி பேராசிரியர் அன்பழகன் போன் ஆற்றல்களினால் தலை நகரிலு கல்விக் கூடங்களில் L புத்திமான்களையும் கலங்கள் இவருக்கு உண்டு.
"அடம்பன் கொடியும் பழமொழி இன்று "கூட்டுறவே ந குழுச் செயற்பாடுகளும், தமிழ அறிவியல், ஆய்வு - இவரின் என்பது நாம் இளமை முதல்
"பல்கலைச்செல்வர்", "மு: செம்மல்" எனும் போற்றுதலுக்! ஓட்டத்தின் ஒரு சிறு துளியே பணிப்பாளர் இரத்தினராசா"
 
 

}ரு தனி மனிதனின் செயல் ரை மட்டுமல்ல அவரின் பத்தை, அவரின் ஊரை, ரோடு இணைந்தவர்களை, ரின் நாட்டை பெருமைப் துகிறது. இப்படியான சிறந்த ம் ஆளுமையும் கொண்டவர் விப் பணிப்பாளர் இரத்தினராசா” ர்கள். இவரை கலங்கரை ங்காக ஒப்பிட்டுள்ளார் நண்பர்
பா. செ.
ல. எப்படிப் பயன்படுத்தி தான் படுத்தினாரோ, அதேபோல
னை பச்சையப்பன் கல்லூரியில் றோரிடம் பயின்று பெற்ற அறிவு, லும் வடமாகாணத்திலும் உள்ள ல பகுத்தறிவாளர்களையும் ரை விளக்காக்கிய பெருமை,
திரண்டால் மிடுக்கு" எனும் ாட்டுயர்வு" எனும் கோசமாகியது. ர் கலை, பண்பாடு, பகுத்தறிவு, இளமைக் கால இலட்சியங்கள்
கண்டறிந்தவை.
த்தமிழ்க் கலைஞர்” “பகுத்தறிவுச் குரிய "அ.பொ.செ"யின் சிந்தனை "கலங்கரை விளக்கு - கல்விப்
வேலனை வீரசிங்கம்.
SLSLS