கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார்

Page 1
Ε Ν FLORENo
 

S ー。。。 S E நைட் டி ங்கே ல் bLLIT
I GKEITING ALE
கி. சீலாம்பிகை
விலே அணு $('');

Page 2

வெளியிடு - டு
ஐரோப்பிய அருண்மாதர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல்
அம்மையார்
சென்னை கார்த்விக் மகளிர் கல்லூரித்
தலைமைத் தமிழாசிரியராயிருந்த
திரு. நீலாம்பிகை அம்மையார் எழுதி வெளியிட்ட்து.
திருநெல்வேலி, தென்னிந்திய 参见 சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட் திருநெல்வேலி G87Mdr éAur

Page 3
Third Edition: May, 1938. Fourth Edition: May, 1939. Fifth Edition : May, 1945.
PUBLISHED BY THE SOUTH INDIA SAIVA SIDDHANTA WORKS : PUBLISHING SOCIETY, TINNEVELLY, LTD., : TRUNELVELI & MADRAS July 1947
Paper Issue Card No. MS 95-B, (10-7-47).
All Rights Reserved
Printed at Kabeer Printing Works, Madras, 5. MS. 524

முகவுரை
* உடன் பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டாம் உடன் பிறந்தே கொல்லும் வியாதி-உடன்பிறவா மாமலையிலுள்ள மருந்தே பிணிதீர்க்கும் அம்மருந்து போல்வாரு முண்டு'-ஒளவையார்
உலகத்தில் பிறந்து வாழும் நாட்களில் மக்கள் பல துன்பங்களாற் பற்றப்படுகின்றனர். இத்துன்பங்களிலெல் லாம் மிகக் கொடியது 15ம் உடலுக்கு வரும் நோய்த்துன் பமேயாம். நோய்வாய்ப்பட்டு வருந்தும் நோயாளிகள் நோய் நீக்கத்தையே வேண்டி நிற்கின்றனர். தன் வீட்டில் நோய்கொண்டு வருந்தும் ஒருவற்கு அவன்றன் சுற்றத் தார் எவ்வளவோ மிகுந்த அன்பு காட்டி அல்லும் பகலும் அவனைக் கருத்தாய்ப் பார்க்கின்ற்னர் ; மருத்துவரொரு வரை அழைத்துவந்து அவரால் மருந்து கொடுத்து நோய் தீர்க்கின்றனர். ஏனெனின் ஒரு குடும்பத் தலைவன் நோயாய்க் கிடக்கும்போது, அவன் பாதுகாப்பின் கீழுள்ள அவன்றன் மனைவி, மக்கள், உடன்பிறந்தார் முதலியோர் "இவர் இறப்பின் யாம் எவ்வாறு பிழைப் போம்!" என்று பலவாருக எண்ணிக் கவலை மிகப் பெறுதல் காண்கின்ருேம். அதனுல் அவர்கள் கோயா ளிக்கு மகிழ்வன கூறி, கோய் நீங்கத்தக்க முறைகளைச் செய்ய முடியாமல் திகைக்கின்றனர். இவ்வாறு திகைக்கும் பொழுது அன்பும் இரக்கமுமுடைய அயலவரான மருத் துவர் ஒருவர் அங்கு வரின் அவர் வருகையைக் காணும் போதே நோயாளிக்கு ஆறுதலுண்டாகிறது. தன்

Page 4
4. முகவுரை
மனைவி மக்களைப் பார்த்துக் கவலையுற்றிருக்கும் கோயா ளியும் அம் மருத்துவர் பால் நம்பிக்கையுடையவனுய். * யான் இனி நோய் நீங்கப்பெறுவேன், என்று மகிழ் கின்றன். Aih
இது மட்டுமோ! யான் நேரிற் கண்ட நிகழ்ச்சி ஒன்றை ஈண்டுக் கூறுகின்றேன். பல்லாண்டுகள் பெற்றேர் தவங் கிடந்து பெற்ற ஆண்பிள்ளை ஒன்று மூன்ரும் ஆண்டில் ஒருகாற் கொடிய குளிர்காய்ச்சலாற் பற்றப்பட்டுப் படுக் கையிற் கிடந்து பெரிதும் வருந்தியது பிள் ஆள அந்நோயால் இறந்துவிடுமோ என்று ஏங்கி, அதன் பக்கத்திலேயே அதன் பெற்ருேருஞ் சுற்றத்தாரும் சூழ இருந்து வருந்தியபடியே இருந்தனர். ஒருநாட் பிற்பகல் மூன்று மணிக்கு இப்பிள்ளையின் கைகால்கள் இசிவு கொண்டன ; உடம்பு திடீரெனக் குளிர்ந்தது; விழித்த கண்கள் விழித்தபடியே இருந்தன; பற்களும் கருகிக் கிட்டிக்கொண்டன . ஆனல் கெஞ்சில் மட்டுஞ் சூடிருக் தது; உயிர் போகவில்லை. இதுகண்ட அவன்றன் அருமைப் பெற்றேருஞ் சுற்றத்தாரும் அவன் இறந்து போவா னென்றே தீர்மானித்து அவன்மேல் விழுந்து அலறி அழத் துவங்கிவிட்டனர். இயற்கையில் தத்த ளித்துக்கொண் டிருக்கும் அச்சிறுவனுக்குக் காற்றுச் சிறிதும் வர வழியில்லாமற் பெற்ருரும் உற்ருரும் அவன் மேற் கவிந்து விழுந்து அழுதல் எத்துணைக் கொடுமை!
ஐயகோ இயற்கையில் தத்தளித்துக் கொண்டிருந்த அக்குழந்தையின் உயிர் மேலுமேலுங் துடிதுடித்து வருங் தியது. அக்குழந்தையினைச் சூழ்ந்துகொண்டு அவர்கள் இடுங் கூக்குரல் கேட்டு அயல்வீட்டிலிருந்த யான் அங்குச் சென்று " ஈதென்ன ! குழந்தை உயிரோடிருக் கிறது; காற்றில்லாமல் தத்தளிக்கின்றது; அப்புறம் அகலுங்கள் ; நல்ல காற்று வீசிய உடனே குழந்தை

முகவுரை 5
பிழைக்கும்,” என்று உரக்கக்கூவி அம்மக்கட் கூட்டத்தை விலக்கினேன். விலக்கிய பின்னர்க், கைதேர்ந்த மருத் துவர் ஒருவரை வருவித்துவிட , அவர் நல்ல மருந்து கொடுத்து, அக்குழந்தை நோய்நீங்கிப் பிழைக்கச் செய்தார். m
ஆகவே, மெய்யன்புடைய இனிய சுற்றத்தவருங்கூட கோய்ப்பட்டு வருந்துந் தம்மவருக்கு நோய்நீக்க ஏலாத யிருக்கின்றமை அறியப்படும். நோயாளி களுக்கு உற்றர் உறவினரை விட, அன்பும் அருளும் உள்ள அயலவரே அவர்தம் நோய் நீக்குதற்கு மிக இசைக்தவராவர். மருத்துவத் தொழிலிற் பல்லாண்டுகள் பழகிப் பலர்க்கும் அருமருந்து தந்துதவிய் மருத்துவர் களுங் தமக்கேனுங் தம் மக்களுக்கேனுங் கடுநோய் வரு மாயின், தாம் மருந்து கொடுத்தால் எது கேருமோ என அச்சங்கொண்டு மற்ற மருத்துவர்களின் வாயிலாகவே மருந்துகொடுத்துத் தமக்குக் தம் மக்களுக்கும் வந்த கோயினை நீக்கிக் கொள்கின்றனர்.
இக் காட்களிலோ நோய்கொண்டார்க்கு நோய் மீக்க ஆண் பெண்பாலரில் மருத்துவரும் உதவி புரிவாரும் பலர் உளர். பழைய காளிலோ நோய் கொண்ட இருபாலார்க் கும் உதவி செய்யும் மருத்துவர்கள் ஆண்மக்களாகவே யிருந்தனர்.
பெண்மக்களுக்கு கோய் நீக்குவோரும் ஆண்மக்க ளாகவே யிருந்தனர். பெண்மக்கள் கருவுயிர்க்குங் காலங் களில் மட்டும், அவர்கட்கு உதவி செய்ய மருத்துவச்சி மார் என்னும் ஒரு வகுப்பார் உளர். இவர்கள் ஏனைய நோய்களுக்கு மருந்து தந்து நோய் நீக்கத் தெரிந்தவரும் அல்லர் ; நோய் நீக்குதற்கான உதவிகளைச் செய்பவரு மல்லர். என்ருலும்,அத்தி பூத்தாற்போல் இடையிடையே பெண்மணிகளிற் சிற்சிலர் ஆங்காங்குத் தோன்றி

Page 5
$ முகவுரை
நோயாளிகள் கொண்ட அருந்துயரை நீக்குவதற்கு அரிய பெரிய உதவிகள் செய்து வந்திருக்கிருர்கள். ஒவ்வொரு காட்டிலும் அத்தகைய பெண்மணிகள் தோன்றியதுண் டேனும், நம் தமிழ் நாட்டில் அங்ங்ன மிருந்த பெண் மணிகளைப் பற்றி எழுதிவைப்பார் எவரும் இருந்திலா மையின், அவரைப்பற்றி ஏதுந் தெரிந்துகொள்ளக் கூடவில்லை. ஆனல், வெள்ளைக்காரர் வாழும் மேனுட்டில் தோன்றிய மருத்துவப் பெண்மணிகள் ஆற்றிய அரும் பெருஞ் செயல்களைப்பற்றி அங்குள்ள அறிஞர்கள் விரிவான வரலாறுகள் எழுதி வைத்திருக்கின்றனர். அங்ங்ணம் எழுதி வைத்திருக்கின்ற வரலாறுகளுள் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) என்னும் மருத்துவப் பெண்மணியாரின் அரிய வரலாறு மிகச் சிறந்ததாயிருத்தலின், அதனை நம் காட்டு மாதர்களும் உணர்ந்து அவர்போல் 15ம் தமிழ்நாட்டிலுள்ளார்க்குப் பேருதவி செய்யும் பொருட்டு அவரது வரலாற்றினை என்னுலியன்றமட்டும் இங்கே சுருக்கி வரைகின்றேன்.
ஆங்கில நூல்கள் பலவற்றிலிருந்தெடுத்து மொழி பெயர்த்த வரலாற்றுக் குறிப்புக்களுடன் என்னுடைய உரைப் பகுதிகளையும் ஒருங்கு சேர்த்து இந்நூலை இறை வன் திருவருளால் எழுதிமுடித்திருக்கின்றேன். இக் நூலுக்குச் சில குறிப்புக்கள் தந்துதவிய (முன்னிர்ப் பள்ளம்) சைவத் திருவாளர் மு. ச. பூரணலிங்கம் பிள்ளை (பீ. ஏ. எல். டி) அவர்களுக்கும், இதனை மிக நுணுக்கமாக ஆராய்ந்து பார்த்துத் தந்த என் அருமைத் தங்தையா ரவர்களுக்கும் என் மனமார்க்த நன்றியைச் செலுத்து கின்றேன். பாளேயங்கோட்டை . நீலாம்பிகை.
7-5-33.

பொருளடக்கம்
பிறப்பும் வளர்ப்பும் p O , பிள்ளைமைக் காலம் O இளமைக் காலம் ) மருத்துவப் பயிற்சி * d கிரிமியாப் போர் . ஸ்குட்டாரி மருத்துவச்சாலே ஸ்குட்டாரி மருத்துவ மாதர்க்ள் தொழில்
முறை OOO அம்மையாருடைய கடவுட்பற்றும்
அறிவுரைகளும் ooo
அம்மையாரது பிற்கால வாழ்வு
Lu L - Lih
க. அம்மையார் உருவப்படம்
உ. ஸ்குட்டாரி மருத்துவச்சாலை
பக்கம்
1.
16
21 26
35
ங், மருத்துவச்சாலையில் அம்மையார்பணி
48
54.
25
29

Page 6

S KLL LLLKKK LL LLLLL LL LL LLLLLL L LL LL LL LLL LLL L S S SL L L LSL K u u uu uu uu KS L S S S S S S K S SS u K
H
t
H
பிளாரன்ஸ் ரைட்டிங்கேல் அம்மையார்
SK LLL LLKLL LLLLK LLL LLL LLL LLLL LL LLL LL LLLLL L L L L L L L LLLLKKJ LLKKKK KKK KKK K K KKS

Page 7
-
பிள1 ரன்ஸ் நைட்டி ங்கேல் 2) Lf 12) Ir
LI I Ti
 
 

பிளாரன்ஸ் நைட்டிங்கேல்
அம்மையார் (18ደ0–1910) 1 பிறப்பும் வளர்ப்பும்
பிளாரன்ஸ் நைட்டிங்கேல் என்னும் அருள்மிகு அம்மை யாரின் பெற்ருேர்கள் இங்கிலாந்து தேயத்திலுள்ள டெர்பிஷையர் என்னும் நாட்டுக்குரிய ஆங்கில மக்களே பாயினும், அவர்கள் ஐரோப்பாதேயத்தின் தெற்கேயுள்ள இத்தாலியா நாட்டிற் சென்று, அங்குள்ள பல் உண்ர்களில் வைகிவந்தனர். ஆதலால், நைட்டிங்கேல் அம்மையாருக்குப் பிறப்பிடமாபது அவ் இத்தாலியாவிலுள்ள பிளாரன்ஸ் என்னும் ஊரே யாகும். இவர் அவ்வூரிற் கி.பி. 1820-ஆம் ஆண்டிற் பிறந்தார். இவர்தம் தந்தையார் பெயர் நைட்டிங்கேல் என்பதாகும். இவர், தம் பிள்ளேகளுக்கு ஊர்ப்பெயர்களேயே பெயராக வைத்து வழங்குவதில் விருப்பமுடையவர். ஆகவே, தம் முதன் மகளுக்கு நேப்பிள்ஸ் என்றும், அவட்கடுத்த மகளுக்குப் பிளாரன்ஸ் என்றும் பெயரிட்டார்.
நைட்டிங்கேலும் அவர்தம் மனேவியாரும் இத்தாலிய நாட்டிற் பல ஆண்டுகள் வாழ்ந்திருந்தனர். ஆயினும், பிளா ரன்ஸ் என்னுங் தம்மகள் பிறந்தபிறகு அவர்கள் இத்தாலி யில் நீண்டகாலங் தங்கவில்லை; வெளியூர் சென்று வாழ் வதில் அயர்வுகொண்டு தம் பழைய ஊராகிய டெர்பிஷையர் என்னு மிடத்திற்கே திரும்பிச் சென்றனர். இவ்வூர் அழகிய மலைகளாலும், யாறுகளாலும் குழப்பெற்று அழகு மிக்கதாய் விளங்குவது. இவ்வூர் காட்டுப்புற
Derbyshire. - FIDTELLE. Napoles,

Page 8
2 பிளாரன்ஸ் கைட்டிங்கேல் அம்மையார்
மாகலின் எங்குப்பார்த்தாலும் பச்சைப்பசேலென்ற மரஞ் செடி கொடிகளே அடர்ந்து காணப்படும். இத்தகைய இயற்கைக் காட்சியின் பேரழகுமிக்க டெர்பிஷையரி லுள்ள " லீ ஆல் " " என்ற தம் வீட்டிலே நைட்டிங்கேல் தம் மனைவி மக்களோடு வாழ்ந்து வருவாராயினர்.
5ைட்டிங்கேல் ஒரு பெருஞ் செல்வக் குடியிற் பிறந்த வர் ; கல்வியறிவுடையவர்; அறிவுநூல்கள் கற்பதிற் பேரவா வாய்ந்தவர்; எங்நேரமும் நூல்களைப் பயின்ற படியே யிருப்பவர். இவர் பல ஊர்களுக்குஞ் சென்று இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழ்வதிற் பேர்வா வுடையவர். இன்னும், இவர் வெளியூர்களுக்குச் சென்றி ருந்த சாலங்களிலெல்லாம், அவ்வவ் வூர்களிற் சிறந்தன வாய் உள்ள பொருள்களைத் தெரிந்து தொகுத்து, அவை களையும் தம் வீட்டிற் கொணர்ந்து அழகுபட வைத்துப் பார்த்து மகிழ்பவர். தம் ஊரில் உள்ள மக்களில் நோய் கொண்டாரையும் வறுமைப்பட்டாரையும், அவர் தம் மனைவியாருடன் போய்ப்பார்த்து, அவர்க்கு வேண்டும் உதவிகளைச் செய்வதுடன், பொருளுங் கொடுத்து உதவுவர். கைட்டிங்கேல் கற்றறிவுடையராதலோடு கல் லியற்கையும் இரக்கமான உள்ளமும் அமையப்பெற்றவர். அவ்வூரிலுள்ள தாய் தங்தையர் தம் பிள்ளைகளைப் பள்ளிக் கூடத்திற்கு அனுப்பிக் கல்வி பயிற்றுவதிற் கருத்துக் கொண்டவரல்லர். இதுகண்ட கைட்டிங்கேல், பிள்ளைகள் சிறு பள்ளிக்கூடங்கட்காயினும் அனுப்பப்படல் வேண்டு மென்று அவர்களின் தாய் தங்தையர்க்குப் பலகால் வற்பு றுத்திக் கூறி, அவ்வூர்ப் பிள்ளைகள் பள்ளிக்கூடங்கட்குப் போய்ப் ப்யிலவும், எழுதவுங் தெரிந்துகொள்ளுமாறு செய்தார்.
Lea Hall.

பிறப்பும் வளர்ப்பும் 3.
இத்தகைய நல்லியல்பு வாய்ந்த நைட்டிங்கேலின் மனேவியாரும் அவர்போல் மிகவும் நல்லவர். இவர் அர சாளுமன்ற உறுப்பினருள் ஒருவராகிய உவில்லியம் ஸ்மித்” என்னும் பெரியாரின் மகளாராவர். இவர் இரக்கமுள்ள கெஞ்சமுடையவர். இப்பெருமாட்டி தம் ஊரவர்க்கு உதவி செய்யப் போகுங் காலங்களில் பிளாரன்ஸ் முதலிய அவர்தம் பிள்ளைகளும் அவருடன் செல்வது வழக்கம். தம் தாயார் பலர்க்குப் புலவகையில் உதவி செய்வதை அடிக் கடி கண்டுவந்த பிளாரன்சுக்கும் அவளுடன் உடன்பிறங் தார்க்கும் அவ்வுதவி செய்யும் எண்ணம் பிள்ளை மைக் காலத்திலேயே அமையலாயிற்று. தாய் தங்தையர் என்னென்ன பழக்கவழக்கங்களை மேற்கொண்டு வருகின் ருர்களோ, அன்னவைகளையே அவர்தம் இளம்பிள்ளே களும் எளிதிற் கற்றுக்கொள்வர். இங்ங்ணம் தாம் இளமையில் தம் தாய்தந்தையர்பாற் பழகிய பழக்க வழக் கங்களுக்கு ஏற்பவே நல்லவர்களாகவோ, தீயவர்க ளாகவோ அவர்கள் வளர்ந்துவிடுகின்றனர்.
எடுத்துக்காட்டாக, ஊர்ஊராகச் சென்று கூத்தாடித் திரியுங் கழைக்கூத்தாடிகளின் இளம்பிள்ளைகள் தம் தாய் தங்தையர் செய்துவரும் அஞ்சத்தக்க கூத்தாட்டுக்களே யெல்லாம் பார்த்துப் பார்த்துப் பழகி அச்சமற்று வளர் கின்றன ரல்லரோ? அக்கூத்தாடிகள் ஈராண்டு மூவாண் டுள்ள தம் குழவிகளையும் ஒரு தென்னே மரத்திற்குமேல் உயரமாய் காட்டிய மூங்கிலின் உச்சியிற் கவிழ்த்த தேங் காய்ச் சிரட்டைமேல் வயிற்றை வைத்துச் சுழலச் செய் வதையும், கயிறுகளின் மேல் அவர்கள் கடந்துசெல்லச் செய்வதையும், மனநடுக்கத்தோடு காண்கின் ருேமல்லமோ? இளம்பிள்ளைகள் தம் தாய் தந்தையருடைய செயல் களையே பின்பற்றி வளர்வராகலின், அவர் தம் தாய்
--—ത്തinത്ത
William Smith a member of Parliament.

Page 9
4 பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார்
தந்தையர் நல்லவற்றைச் செய்து நல்லராய் வாழவே முயலுதல் முதன்மையாகும்.
ஆகவே, நற்செய்கைகளையே செய்துவரும் கைட்டிங் கேலும் அவர்தம் மனைவியாரும் தம் இயற்கைக்கு ஒத்த பிளாரன்ஸ் என்னும் அரும்பெறற் புதல்வியாரை அடைக் தது வாய்வதே யாகும்.
தம் வீடு லீ ஆல் பூங்தோட்டங்களுக்கிட்ையிலும் மலை களுக்கருகேயு மிருந்தமையால், பிளாரன்ஸ் தமது இள மைக் காலத்தை அதில் மிக் மகிழ்வாகக் கழித்தார். இவரது ஊரான டெர்பிஷையரிலுள்ள கட்டிடங்களெல்லாங் கருங்கற்களாலேயே கட்டப்பட்டிருந்தன.
இத்தகைய பசுமையான சிற்றுாரில் மகிழ்வாகக் காலங் கழித்து வாழும் நைட்டிங்கேல் துரை ஞாயிற்றுக் கிழமைதோறுந் தம் மனைவி மக்களோடு பசிய வயல்கிலங் களினூடே நடந்து டெத்திக் என்னும் இடத்திலுள்ள சிறு கோயிலுக்குப் போய்க் கடவுளை வணங்குவது வழக்கம்.
பிளாரன்ஸ் ஆருண்டுப் பிள்ளையா யிருந்தபோதே க்ோயிலுக்குப் போய்க் கடவுளை வணங்குவதில் மிகுந்த விருப்பமுடையவர். இவர் டெத்திக் கோயிலுக்கு வரும்போ தெல்லாம் அக்கோயிலில் வணங்கியபிறகு அச்சிறிய ஊரைச் சுற்றிப் பார்ப்பார். சுற்றிப் பார்க்கையில் அவ் வூரிற் பழையகாலத்திற் கட்டப்பட்ட பெரிய அரண்மனை ஒன்று பாழடைந்து கிடந்தது. அதிற் பல இடங்கள் தகர்ந்து வீழ்ந்துபோயினும், சில இடங்கள் மட்டும் மக்கள் இருந்து வாழ்வதற்கு இசைவாயிருந்தன. பிளாரன்ஸ் இக்கட்டிடத்திற்குள் நுழைந்து சுற்றிப் பார்த்தபின், அங்கொரு பக்கத்திற் குடி யிருந்த காவலர் ஒருவரைப் பார்த்தார்; அவர், இன்சொல்லும் இனிய இயற்கையுமுடைய இச்சிறுமியாரைக் கண்டதும் பெரி தும் மகிழ்ந்து, இவரோடு “உரையாடிக்கொண்டே

பிறப்பும் வளர்ப்பும் 5
இவர்க்கு அக்கட்டிடத்தின் ஒவ்வொரு பகுதியையும் காட்டினர்.
சில காலத்திற்குப் பிறகு, நைட்டிங்கேல் துரை லீ ஆல் என்னுங் தமது வீடு மழை காலத்தில் வீசுங் கடுங் குளிர்காற்றுக்கு வசதியாயில்லாமை கண்டு, லீ ஆலுக்கு ஒரு கல் தொலைவில் லீ அர்ஸ்டு என்னும் மரச்செறிவுள்ளதோ ரிடத்தில் ஒர் அழகிய இல்லம் அமைத்தார். அதனைச் குழக் காடு அடர்ந்த மலைகள் 5ெருங்கி இருந்தமையாற் குளிரின் கொடுமையும், ஊதற் காற்றின் உறைப்பும் ஒலியும் அங்கே இலவாயின. நைட்டிங்கேல் தம் குடும். பத்தாரோடு இப் புதுவீட்டிலிருந்து வாழ்ந்தார்.
பிளாரன்ஸ் இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழ் வதிற் பெருவிருப்ப முடையவர். ஆதலால், தம் வீட்டின் பக்கத்தே அழகியதொரு பூந்தோட்டம் வைத்து, அதிற் கண்கவரத்தக்க பலகிறப் பூக்கள் மலரும் பல வேறு பூஞ்செடிகள் வளர்த்தார்; வளர்த்த அவைகளின் மலர் களைப் பறித்து மோந்தும், அவைகளின் அழகைக்கண்டு மகிழ்ந்தும் உலவுவார்.
என்ருலும், கைட்டிங்கேல் துரைக்கு, இப்போது அமைத்த புதிய மாளிகையுஞ் சில ஆண்டுகளுக்குப்பின் இசையாததாய்விட்டது. ஆகவே, ஆம்ஷையர்? என்னும் ஊரில் எம்பிலி என்னுமிடத்தில் தம் கருத்துக்கிசைந்த வாறு மீண்டும் ஓர் அழகிய இல்லம் அமைத்தார். இலை யுதிர் காலத்தில் மரஞ்செடி கொடிகள் பசிய இலக ளெல்லாம் உதிர்ந்து அழகற்றவுையாயிருக்கையில், ஸ் அர்ஸ்டை விட்டு எம்பிலிக்கு வந்திருப்பார். இத்துரைமகனர் புல் மரஞ் செடி கொடி முதலான இயற்கைப் பொருட் காட்சியிலேயே மனம் இழுப்புண்டவராதலாற் பச்சைப் பசேலென்று இலைகள் தழைந்த கொடிகளும், நறுமணங்
1. Lea Hurst. v * Hampshire. Embly.

Page 10
6 பிளாரன்ஸ் கைட்டிங்கேல் அம்மையார்
கமழும் பூஞ்செடிகளும், அடர்ந்த மரங்களும் நிறைந்த இடங்களின் நடுவிலேயே தம் இருப்பிடங்களை அமைப்பது இவர்க்கு இயற்கையாய் விட்டது.
மறுபடியும் லீஅர்ஸ்டிலுள்ள மரங்களும் பிறவும் பச் சென்று தழைத்த காலத்தில், 5ைட்டிங்கேல்துரை தங் குடும்பத்தாரோடு அங்கு மீண்டுஞ் செல்வார். அவ்வாறு செல்கையில் இடையிற் சிலபோது இலண்டன் மாநகரத் திலுக் தங்குவார். தங்கி அந்நகரத்தில் இசைவல்லுநர் பாடும் இசைப் பாட்டுக்களைக் கேட்கப்போவார்; திறம்பட எழுதிய ஓவியங்களைக் கண்டு மகிழவுஞ் செய்வார்; இன்னும், இவர், தமக்குத் தெரிந்த அறிவுடை யார் பலரையும் போய்க் கண்டு அளவளாவுவார். இவ்வாறு சிலகாலம் இலண்டனிலிருந்து, தமது பழைய இல்லத்திற்குத் திரும்பியவுடன் தம் ஊரவர்களைத் தம் மக்களுடன்.போய்ப் பார்த்துவருவார்.
2. பிளாரன்ஸ் அம்மையாரின் பிள்ளேமைக்காலம்
பிளாரன்ஸ் தாம் இல்லாத காலங்களிற் பிறந்த காய்க் குட்டி பூனைக்குட்டி முதலான வாயற்ற அழகிய உயிர் களைப் போய்க் காண்பதும், அவை பிணிப்பட்டால் அவற் றிற்குப் பிணிநீக்குத்லுஞ் செய்வார். அவை பசியா யிருப்பதறிந்தால், இவர் ‘தம் வீட்டிலுள்ள சர்க்கரை, சீமை இலக்தைப் பழம் (Apple), செங்கிழங்குகள் முதலான உணவுப்பொருள்களைத் தம் பெற்றேர்க்குத் தெரியாமலே எடுத்துப்போய் அவற்றிற்குக் கொடுத்து அவற்றின் பசியை யாற்றுவார்.

பிள்ளைமைக்காலம். 7 இவரது நல்லியற்கையும், இவீர்திம் நற்செய்கையுங் கண்ட அவ்வூரவர், தம் நாய் பூனை முதலியன கோய் கொண்டால் பிளாரன்சுக்கு அறிவித்து, அவரைக் கொண்டே அவ்வுயிர்களுக்கு நோய் நீக்குவர். இச் சிறுமியாராகிய பிளாரன்சுக்குச் சிறந்த நண்பர்கள் காய் பூனை, முயல், அணில், குதிரைக்குட்டி ஆகிய இவையே யாம். பிளாரன்சின் இனிய இயற்கையைக் கண்டார் கேட்டார் அனைவரும் இவர்பால் மிகுதியாய் அன்பு கொண்டார்கள். く
இவர் எம்பிலியி லிருந்தபோது, அவ்வூர்க்குச் சமய குருவாயிருந்த ஒருவர், தம் ஊரவர்களைப் பார்க்கச் செல்லும்போதெல்லாம் இவரையுங் தம்முடன் கொண்டு செல்வார். பிளாரன்சும் இவரொடு மிக மகிழ்வுடன் போவார். இவ்வாறு போவதாற் பிளாரன்ஸ் அவ்வூரவர் பெரும்பாலரையும் அறிமுகமாக்கிக் கொண்டார். அவ் வூர்ப் பிள்ளைகளின் பெயர்களையும் அவர்கள் பிறந்த நாட்களையும் மறவாமற் சொல்லுவார். பிளாரன்ஸ் தம் குருவொடு செல்லும்போது, அவர் அன்னையார் அவரிடஞ் சில நல்ல பண்டங்களைக் கொடுத்து அவற்றை நோயால் வருந்தும் மக்களுக்குத் தருமாறு அனுப்புவார். தாமே வைத்துப் பயிர்செய்த அழகிய பூஞ்செடிகளினின்றும் மணங்கமழும் மலர்களைப் பறித்தெடுத்துக் கொண்டு போய் அவர் கோயாளிகளுக்குக் கொடுப்பார்.
ஒரு நாள் பிளாரன்சும் அக் குருவும் மலைப்பிளவு களின் இடையேயுள்ள அழகிய பள்ளத்தாக்குகளின் ஊடே சென்ருர்கள். செல்லுகையில் அவர்களிருவர்க்குஞ் சிறந்த நண்பனன ஆடுமேய்ப்பான் ஒருவன், தன் அருமை காயின் உதவி யில்லாமலே ஆட்டுக் கூட்டத்தைச் செலுத்த முயன்றன். இது கண்ட அப் பிளாரன்சும் அவரை உடன் கொண்டு சென்ற குருவும் அவ் ஆடு

Page 11
8 பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார்
மேய்ப்பான கோக்கி ' கேப் என்னும் உமது அருமை நாய் எங்கே?" என்று கேட்டனர். அதற்கவன், "இரக்க மற்ற பொல்லாச் சிறுவர்கள் சிலர் என் நாயின் காலைக் கல்லால் அடித்து முறித்துவிட்டனர்; அதனல், அங்காய் தன் காலிலுள்ள கடுங் காயத்தினல் பெரிதுந் துன்புற்றுத் துடிக்கின்றது; இவ்வாறு என் நாய் துன்பத்தால் துடி துடித்து வருக்திக் கிடப்பதைவிட அதனைச் சாவச் செய்வதே மிகவும் நல்லதென்றெண்ணுகின்றேன்,' என்ருன். இது கேட்ட அச்சிறுமியார் பெருஞ்சினங் கொண்டு ஆடு மேய்ப்பான நோக்கி, " நீர் கூறுவது தகாது; அங்காய்க்கு யான் உதவிசெய்யக் கூடுமென் றெண்ணுகின்றேன் ; அது தனியே கிடந்து பெரிதுக் துன்புறுவதால் அதனருகே யானிருப்பது அதற்கு ஆறுதலா யிருக்கும்; அஃது எங்கே யிருக்கின்றது ?" என்று வினவினுர், " அஃது என்னுடைய சிறு குடிசை யின் புறத்தே படுத்துக் கிடக்கின்றது; அதனே நலப் படுத்தல் உமக்கேனும் மற்றவர்க்கேனும் முடியாது." என்று மேய்ப்பன் கூறினன். பிளாரன்ஸ், இவன் கூறி யதைக் கருத்தாய்க் கேளாமலே காய் கிடக்கும் இடத் திற்கு விரைந்தோடித் துன்பத்தால் அயர்ந்து கிடக்கும் அந்நாயைப் பார்த்து மிகவும் வருந்தி, அதன் தலையைத் தடவிக் கொடுத்தார்; அதனுல், அங்காய் பெருமகிழ் வடைந்து அவரை அண்ணுக்து பார்த்துத் தன் நன்றியைத் தெரிவித்தது. அச்சிறுமியார்க்குப் பின்னே உட்சென்ற குருவும் அவரை நோக்கி, "யான் இந்நாயின் காலைப் பார்க்கட்டும்; அது தன் காலை முறிந்ததுபோற் காட்ட வில்லை. நாம் விரைவில் அதனை கலப்படுத்திவிடலாம், மகிழ்வாயிரும்," என்றர். இதுகேட்ட அச்சிறுமியாரின் அழகிய கண்கள் பெருங்களிப்பால் மின்னின. "பெரியீர்! காய் நலமடைய யான் செய்யவேண்டுவன யாவை?"
*

பிள்ளை மைக்காலம் 9
என்று பேரவாவோடு தம் குருவைக் கேட்டார். மருத் துவஞ் சிறிது தெரிந்த அக்குருவும், "வெங்கீரில் நனைத்த மெதுவான மெல்லிய துணிச்சுற்று கொண்டு அதன் காயப்பட்ட காலைக் கட்டினல் அதன் கண்ணுள்ள வீக்கம் குறையும்" என்ருர், இதுகேட்ட அச்சிறுமியார், 'அவ் வாறு செய்ததைக் கேட்டதில்லை ; அது செய்வதறியேன், என்ருர், " சில மெல்லிய ஆடைகளின் கிழிவுகளைக் கொதித்த வெந்நீரில் நனைத்துப் பிழிந்து, பின் அவற்றை காயினது காலின் கண் வைத்துக் கட்டுக,' என்ருர் குரு. அங்கே ரத்தில் அப்பக்கமாய்ச் சென்ற ஒரு பையனது உதவியால் உடனே அவர்கள் தீமூட்டினர். பிளாரன்ஸ் அத்தீயில் நீரைச் சுடவைத்து விட்டு, மேய்ப்பவன் வீட்டில் துணிகள் கிடைக்குமா வெனப் பார்த்தார்; ஆனல், அங்கொரு சிறு கங்தையேனுங் கிடைத்திலது ; என் செய்வார் ! தம் கைக்குட்டையாயினும் அதற்குப் பயன்படுமா என்றெண்ணினர். ஆனல், அத்துணியும் சிற்றளவினதாகலின் அதுவும் பயன்படாதாயிற் று. ஆயி னும், கட்டுவதற்குத் துணி கட்டாயம் வேண்டுமே ! ஆகவே, அதனை எவ்வகையிலாயினும் பெறவேண்டுமென் றெண்ணி முயன்றர். அப்போது தம் எதிரே யிருந்த அம்மேய்ப்பனின் சட்டையைக் கண்டு, "இதனை இப் போதே என்பொருட்டுக் கிழியுங்கள்; என் அருமை அன்னை வேருேர் ஆடை அவர்க்குத் திட்டமாய்த் தருவார்," என்று அடங்காக் கிளர்ச்சியுடன் கூறினர். அவரது சொற்கேட்டுக் குருவும் அவளிடமுள்ள அதனை வாங்கித் துண்டு துண்டுகளாகக் கிழித்தார். கிழித்த அத் துணித் துண்டுகளைச் சிறுமியார் ஒன்றுசேர்த்து வெந்நீரில் நனைத்துப் பிழிந்து அங்காயின் காலில் அதனே மேல்வைத்துக் கட்டினர். கட்டிவிட்டு "அருமை நாயே, யான் உனக்கு உதவி செய்யத்தான் விரும்புகின்றேன்."
698-2 V

Page 12
10 பிளாரன்ஸ் கைட்டிங்கேல் அம்மையார்
என்று சொல்ல, அங்காயும் அவர் சொல்லியதைத் தெரிந்து கொண்டது. சூடான துணியை அதன் காலில் வைத்துக் கட்டவே, சூடு பொருத துன்பத்தால் காயின் உடல் நடுங்கியது; ஆனலும், தனக்குத் தன் தலைவி நன்மை செய்கின்ரு ரென்ப தறிந்து, அஃது அவரைக் கடிக்கவு மில்லை; துன்புற்றுக் கத்தவுமில்லை. இவர் செய்த சிறந்த மருத்துவத்தின் பயனுகச் சிறிது நேரத்துக்குள் நாயின் கால் வீக்கங் குறைந்தது; அயர்வுற்றுச் சுழன்றுகொண் டிருந்த அதன் இரு கண்களிலுமிருந்து துன்பக்குறி மறைந்தது. தாம் செய்ததை உற்று கோக்கிக்கொண் டிருந்த குருவை அவர் ஏறிட்டுப் பார்த்து, "இது முழு நலம் பெறும்வரையில் இதனை நான் விட்டகலமாட்டேன்; ஆதலால் அன்பு கூர்ந்து, நீங்கள் அப்பையனை அனுப்பி யானிங்கிருப்பதை எம் வீட்டவர்க்கு அறிவித்து விடுங் கள்; யானிருக்குமிடம் அறியாராயின் அவர்கள் கவலை யுறுவார்கள்,' என்ருர், பின் சிறுமியார் மாலைக்காலம் வரையில் அங்காயுடன் உட்கார்க்குகொண்டு அதைப் பார்த்தவாருகவே இருந்தார்.
மாலைக்காலம் அம்மேய்ப்பன், தன் குடிசையை நோக்கி வந்து அதன் கதவைத் திறப்பதற்காகத் தாழ்ப் பாளைத் தடவும் ஓசையைப் பிளாரன்ஸ் கேட்டார். அம் மேய்ப்பன் அங்காயின் தொண்டையை இறுக்கிக் கொல்வதற்காகக் கையிற் கயிறு கொண்டுவக்திருந்தான். நாயோ தன் தலைவன் எண்ணத்தை யறியாமல் வாலை அசைத்து முனகிக்கொண்டு அவன் பால் தன் மூன்று கால்களுடனும் இடர்ப்பட்டுச் சென்றது; அவனது கட்பார்வை தெளிவில்லாமையால் அவன் அங்காயின் காலைத் தெளிவாகப் பார்க்கக்கூடவில்லை.
"மேய்ப்பரே! உமது காய் எத்துணை நலத்துட னிருக் கின்றதென்பதைப் பாரும்; அதன் காலின் வீக்கம் பெரும்

இளமைக்காலம்
பாலுங் குறைந்துவிட்டது. ஆனல், இன்னுஞ் சில முறை வெய்தான ஒற்றடங்கொடுத்துக் கட்டினல் அது விரை வில் முழு கலம் பெறும்; அவ்வாறு செய்து முடிக்க எனக்கு உதவி செய்ய வாரும்,' என்று அழைத்தார்.
இதற்குள் பக்கத்திலுள்ள குடிசைகளைப் பார்க்கச் சென்று திரும்பி வந்த குரு, "காயின் தலைவனுன மேய்ப் பன் அதற்கு இனி வேண்டுவன செய்வான். நாளை அதைப் பார்க்க நீ வரலாம்,' என்று அவர்க்குச் சொல்லித் தமது குதிரைமேல் அவரை ஏற்றிக்கொண்டு வீடுபோய்ச் சேர்ந்தார். مح۔
3. அம்மையார் இளமைக்காலம்
பிளாரன்ஸ் சிறுமியார் வெளியேயுள்ள அழகிய மரஞ் செடி கொடிகளிடத்தும், வாயற்ற ஏழை விலங்குக ளாகிய நாய், குதிரை முதலியவற்றிடத்தும் பேரன்புடை யவர். ஆணுலும் இவர் தம் வீட்டில் ஓரிமைப்பொழு தேனும் வாளா யிருந்தவரல்லர். இவரது படிப்புக்கு இடையூருன தொன்றும் நிகழ இவர் பெற்ருேர்கள் விடவில்லை. இவர் அருமைத் தந்தையார் இவர்க்கும் இவர் உடன்பிறந்தார்க்குங் கல்வி கற்பித்து வந்தார். அறிவு வளர்ச்சிக் கேதுவான அருமையான நூல்களையுங் தம் பிள்ளைகள் கற்கக் கொடுத்தார் 1 இன்னும், இவர், பிரெஞ்சு, செர்மன், இத்தாலியன், கிரீக், இலத்தீன் மொழிகளேயும், கணக்கையுந் தம் மக்களுக்கு நன்ருய்ப் புகட்டிவந்தார். இதனேடு டெனிசன்" என்னும் பாவலர் அமைத்த தீஞ்சுவை மிக்க அருஞ் செய்யுட்களையும், அவர்களுக்குச் சிறப்பாகக் கற்பித்து அவர்கள் அப்பாக்களைப் பெரிதும் விரும்பும்படி செய்தார்.
* Tennyson.

Page 13
12 பிளாரன்ஸ் கைட்டிங்கேல் அம்மையார்
இவர்தம் தமக்கையான பார்த்தி என்பார் ஓவியம் வரை வதிலும், இசை பாடுவதிலுக் திறமை வாய்ந்தவர். தமக்கை யும் இவரும் தையற் ருெழிலையும் கன்ருய்க் கற்று, மெல்லிய ஆடை விளிம்புகளில் கேர்த்தியர்ன பூவேலை களுங் கண்கவரச் செய்வர்.
இன்னும், பள்ளிக் கூட்ம் முடிந்தபின்னும், மழை பெய்யும்போதும் இவ்விருவரும் பாவைகள் வைத்து விளையாடுவது வழக்கம். இவர் பாவைகள் வைத்து விளையாடுங்காலும், அவை நோயா யிருப் பன போ லெண்ணி, அவற்றின் முறிந்த கை கால்களைத் தம் தமக்கை யைப் பிடிக்கச்சொல்லி, மிகவுங் கருத்தோடு அவற்றை ஒழுங்குபட வைத்து மருந்திட்டுக் கட்டுவார். கட்டியபின், அவை உண்ணத்தக்க அருமையான பத்திய உணவு களே யுஞ் சமைத்து வைப்பார். இவர் "கேப் " என்னும் நாய்க்கு உதவி செய்வதற்கு முன்னமே இங்ங்ணம் விளை யாடினர். இவர் தம் பிற்காலப் பெருவாழ்வைத் தம் குழவிக் காலத்திலேயே விளையாட்டிற் காட்டிவிட்டார். இங்கே ஒன்று உன்னிக்கற்பாலதுளது - விளையும் பயிர் முஆளயிலே' என்றும், தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்" என்றும் போந்த தமிழ்ப் பழமொழிகட் கேற்ப, மக்கள் தம் குழவிக்காலங்களில் விளையாடும் விளையாட் டுக்களி லிருந்தே அவர்கள் தாம் பெரியரான பின் எத் தகைய ரா யிருப்ப ரென்பதைக் கண்டறியலாம்:
ஆசிரியர் மெய்கண்டார் தாம் மூன்ருண்டுக் குழந்தையா யிருந்தபோதே மணலைக் குவித்து அதனை இறைவனுகக் கருதிப் பூவும் இலையும் இட்டு வணங்குதலையே விளையாட் டாகச் செய்துவந்தார். பின்னர், அவர் பெரியராய் வளர்ந்தபிறகு 'சிவஞான போதம்' என்னும் ஞான நூலை அருளிச்செய்து, தமிழ் காட்டில் ஒப்புயர்வற்ற ஞானசிரி யராய்த் திகழ்ந்தாரல்லரோ?

இளமைக்காலம் 13
ஜான் ரஸ்கின் " என்னும் ஆசிரியர் தமது சூழின்ரும். ஆண்டிலேயே ஆங்கில மொழியிற் பாடல்கள் அழகுறப் duit lg. விளையாடினர். பின்னர், அவர் பெரியராகி ஆங்கில மொழியில் இயற்றியிருக்கும் மிக அழகிய ஓவிய ஆராய்ச்சி உரை நூல்களின் புகழ் உலகமெங்கும் பரவி விளங்குகின்றதன்ருே ?
பிளாரன்ஸ் நைட்டிங்கேலும், அவர்தம் தமக்கை யாரும் பெரியவர்களான பிறகுக் தம் பெற்ருரோடு அடிக்கடி வெளியூர்களுக்குப் போவதுண்டெனினும், இளையவரான பிளாரன்ஸ் நைட்டிங்கேல் மட்டும் வெளி யூர்களுக்குப் போவதைவிடத் தம் ஊரிலிருந்து தம் ஊரவர்க்கு உதவி செய்வதிலேயே கருத்துடையவரா யிருந்தார். y இவர் தம்மிடத்திலுள்ள நிழலுருக் கருவி* யால் தம் ஊர்ப்பிள்ளைகளை நிழலுரு எடுத்து, அப்படங்களுக்குக் கண்ணுடிச் சட்டமிட்டு அவர்களின் பெற்ருேர்க்குத் தர, அவர்கள் அவற்றைத் தம் அறைச் சுவர்களிற் ருெங்க விட்டு வைத்துப் பார்த்துப் பார்த்து மகிழ்வார்கள். இவ்வாறு இவர் அயலார் பிள்ளைகளை நிழலுரு எடுப்பது, அவர்தம் பெற்றேர்க்கு இவர்பால் எத்துணை மிகுந்த அன்பினை விளைவிப்பதாகும் ! அவ்வூரவ ரெல்லாரும் இவரது வருகையைக் கண்டவுடன் பெருங்களிப்பு எய்துவர் ; இவர்களில் நோயாளிகளா யுள்ளவர்களோ இவரது வருகையைப் பேராவலோடு எதிர்பார்ப்பர்.
இவர் அவர்களுக்கு எந்த உதவியைச் செய்தாலும் மிக அமைதியாய்ச் செய்வார்; மிகுதியாய்ப் பேசாமலும், ஆரவாரஞ் செய்யாமலும், கோயாளிகளுக்கு எவ்வாறு செய்தால் நோய் நீங்குமோ அவ்வாறே நுட்பமாய்ச் செய்து நோய் நீக்குவார். இவ்வாறு அன்பாயும் அமைதி
* John Ruskin. Photo Camera.

Page 14
14 பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார்
யாயுசிசெய்வதால் இவரது வருகையைக் காணும்போதே நோயாளிகள் தாம் அரைவாசி நோய் தணியப் பெற்றதாக எண்ணுவார்கள். அவர்களுக்குச் செய்யவேண்டியவை களை யெல்லாம் மலர்ந்த முகத்தோடு செய்துவிட்டுத் தாம் தம் இல்லத்திற்குத் திரும்பி வரும்போதும், அக் நோயாளிகள் விரும்பத்தக்க அல்லது கேட்டு நகைக்கத் தக்க சில கல்ல கதைப் புத்தகங்களைப் படித்து அவர்களே இன்புறுத்தலுஞ் செய்வார். இவர் கல்வி பயிலுங் காலத் திலும் டெர்பிஷையர், ஆம்ஷையர் என்னுங் தம் இரண்டு ஊர்களிலுமுள்ள இளைஞர்கள் இசை கற்பதற்காக ஒரு பள்ளிக்கூடம் அமைத்தார். (இன்றும் அது நடைபெறு கின்றது.) இங்ங்னமே மற்றவர்கள் எல்லாரும் கோயின்றி இனிது வாழவேண்டு மென்னும் ஆவலும் உடன் கொண் டார். தம் உதவி வேண்டியவர்க்கெல்லாம் அவ் வுத வியை மருது உடனே செய்தார் ; மருது செய்ததுமல்லா மல் அதனைச் செய்வதில் உவந்த உள்ள முங் கொண்டார்.
நடிப்பதிற் பெருந்திறனுடைய நாடகக்காரர்களும், உலகின்கணுள்ள இயற்கைக் காட்சிகள், அழகிய மக்கள் வடிவுகள் முதலியவற்றைத் திறம்படச் செவ்விதின் வரைந்து காட்டும் ஓவியக்காரர்களும், மிக எளிய முறை யில் நோய் நீக்கும் மருத்துவர்களும், கொடிய விலங்கு களையும் நச்சுப் பாம்புகளையும் இசையால் தம் வழிப் படுத்தும் இசைவல்லுகர்களும், தம் ஊழ்வினையின் பயனுல் அத்தகைய திறம் பெற்ருர்களேயல்லாமல், தாமே தம்முயற்சியால் அப் புலமைகளை வருவித்துக் கொண்டவ ரல்லரென்று உலகத்தார் கூறுவதுண்டு. இஃது ஒரு வகையில் உண்மையே என்ருலும், நாடகக்காரராயும், ஓவியக்காரராயும், இசைவல்லுநராயும், மருத்துவராயும் வந்தோர் பலர், பல்லாண்டுகள் “பொறுமையுடன் பேருழைப்பெடுத்துப் பயின்று பழகி, அதன் பின்னரே

இளமைக்காலம் 5
தான் அத்தகைய நிலையினராயின ரென்பதும் நாமறிவோ மல்லமோ? மேற்குறிப்பிட்ட கற்றறிஞர்களில் ஊழ் வினையால் அறிவுடையராவாரும் தம் அறிவாலும் பெரு முயற்சியாலும் அறிவுஃடயராவாரும் என இரு பகுப் பினர் உண்டு. எழுதமட்டுக் தெரிந்த சிறுவனெருவன் திடீ ரெனச் செய்யுளிலக்கணஞ் சிறிதும் பிறழாமற் சொற் சுவை பொருட்சுவை நிரம்பிய பாடல்களை அமைப்ப னயின், அஃது அவன்றன் ஊழின் பயனய் நிகழ்ந்த தென்று சொல்லுதல் பொருந்தும். ஆனல், இத்தகையோர் சில காலங்களில் மிகச் சிலராகவே காணப்படுவர். பொது வாக உலகிற் காணப்படும் பெரும்பாலரான பேராசிரியர்க ளெல்லாருங் தம் அறிவாலும் உழைப்பாலும் இறைவன தருளாலுமே பெரியராகிச் சிறந்து விளங்கினர்; விளங்கு கின்றனர். இவ்வுண்மையைப் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் நன்கறிந்தவர்./ -م
ஊழ்வினைப் பயனுற் பெரிய ராதல் மிக அரிது என்ப தும், தம் அறிவினலும் பேருழைப்பினலும் மக்கள் சிறந்த கிலேயை எய்துவதே மிகுதி யென்பதும் பிளாரன்ஸ் நைட் டிங்கேல் நன்கறிந்தார். அறிந்து, தம் பேரறிவைச் செலுத்திப் பெரிதும் முயன்றதன் பயனுயன்றே, இக் காலத்துப் பெண்மணிகள் கூடச் செய்யாத அரும்பெருஞ் செயல்களையும் அவர் செய்தார் ? இவர், நோயாளர்களே க் கருத்தாய்ப்பார்த்து கலப்படுத்துவதிலேயே தம் வாழ்நாள் முழுவதையும் ஒப்படைக்க எண்ணி அங்கோயாளிகளில் நீோய் நீங்குவதற்குச் செய்யவேண்டுஞ் சிறந்த பல முறை களையுங் கண்டறிய முயன்ருர், வேலைக்கார ைெருவன் தன் வேலையைத் திறமையாகச் செய்தற்கு ஏற்றபடி தன்னை எத்துணை மிகுதியாகப் பயிற்றிக்கொள் வானே, அத்துணை மிகுதியாக இவருங் தமது மருத்துவத்தொழிலுக் குத் தக்கபடி தம்மைப் பண்படுத்திக்கொள்ள முனைந்தார்.

Page 15
16 பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார்
4. மருத்துவப் பயிற்சி
இவரது காலத்தில் ஆங்கிலுகாட்டுச் செல்வக் குடிப் பெண்கள் பதினெட்டாண்டினரானற், கல்வி கற்பதை விட்டு வேடிக்கை விளையாட்டுக்களிற் காலங்கழிப்பது வழக்கம். ஆனல், நைட்டிங்கேல் அம்மையாரோ தம் இளமைக்காலத்திலேயே வேடிக்கை விளையாட்டுக்களை வெறுத்துக் கல்வி கற்பதிலும், பிறர்க்கு நன்மை செய்வதி லும் முனைந்து நின்ருர். இவர் தமது பதினெட்டாம் ஆண்டில் தம் தங்தையாரால் இலண்டன்மா நகரத்தி விருக்கும் விக்டோரியா அரசியார்க்கு அறிமுகப்படுத்தப் பட்டார். அப்போது அங்கு கரப் பெருமாட்டிகள் பலர் அம்மையாரை வாழ்த்தினர்கள். அதே காலத்தில் இவர் சில திங்கள் இலண்டன் மாநகரத்திலுள்ள மருத்துவிக் கழகங்களிலிருந்து வேலை கற்கத் துவங்கினர். அவ்விடங் களில் இவருடைய கருத்தான பார்வையும், கைத்திறமை யும், இவர் தம் காட்டுப்புறத்தாரிடத்துப் பழகிய பழக்க மும் பெயர்போன மருத்துவர்களுக்கும் உதவியாய் நின்றன. தாமெடுத்த முயற்சியை ஒழுங்காகத் துவங்கி நடத்துதலே ஒருவர் சிறந்த நிலையை அடைதற்கேற்ற வழியாகுமென்று இவர் துவக்கத்திலேயே ஏண்ணினர். அழுக்கும் புழுதியும் நிறைந்த தரைகளில் நோயாளிக ளிருப்பராயின், அவற்றின் தூசி அவர்களுடைய மூக்கு வாய்களின் வழியாய்ச் சென்று அவர்களுக்கு இருமலை உண்டுபண்ணுமென்பது அறிந்து, இவர் அவர்களுக்கு ஏதுஞ் செய்வதற்குமுன், தம் மருத்துவக் கழகத்தில் தூசி சிறிதும் படியவிடாமல் துப்புரவு செய்வார். -
இவர் இலண்டனிலிருந்து பயின்றபோது அங்ககரில் நடக்கும் விருந்து திருவிழா முதலியவற்றிற்குச் சென்று பொழுது போக்குவதை விடுத்து, அங்ககரிலுள்ள மருத்

மருத்துவப் பயிற்சி 17
துவச் சாலைகட்கும், க்ல்விச் சாலைகட்கும், அவற்றின் முன்னேற்றத்திற்காகக் கூடுங் கழகங்கட்குழ் போய் வருவர். இவர் இலண்டனிலிருந்து பயின்றபிறகு எடின்பரோ, டப்ளின்* முதலிய ஊர்கட்குச் சென்று, பின் பிரான்சு", இத்தாலி" என்னும் இரண்டு நாடுகட்குஞ் சென் முர். பிற்கூறிய நாடுகளில் நோயாளிகளைப் பார்ப்பவர்கள் மணமாகாக் கன்னிப்பெண்களா யிருந்தனர். அதன் பிறகு, இவர் செர்மனி" என்னும் பெரிய நாட்டிற்குச் சென்ருர், 1851-ஆம் ஆண்டு ஆங்குள் ள, ரைன் ஆற்றங் கரையிலிருக்கும் கெய்சர்வெர்த்" என்னுமிடத்தில் தாம் பெறவேண்டியதைக் கண்டுகொண்டார்.
அந்நகர சதில், பில்ட்னர் துரையாலும் அவர் மனைவி யாராலும் 1836-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மருத்துவச் சாலை ஒன்றிருந்தது. அதில் இவ்வம்மையார் தமது மருத்து வப் பயிற்சியைத் துவங்கத் தீர்மானிக் தார். இக்காலத்தில் இலண்டன்மா நகரத்தில் சிறந்த பல்பொருட் காட்சிச் சாலை? ஒன்று ஏற்படுத்தப்பட்டது. ஐரோப்பாக் கண்டத்தார் அனைவரும் அதனைப் போய்ப் பார்தீதுக்கொண்டு சில காலம் மகிழ்வாய் ஓய்ந்திருந்தனர். ஆனல், பெருஞ் செல்வ்க் குடியிற் பிறந்த நம் அறிவுடைப் பெருமாட் டியோ அதற்குப் போகாமல் செர்மனியிலுள்ள கெய்சர் வெர்த்தின் மருத்துவச் சாலைக்குச் சென் ருர்,
இவ்வம்மையார் அம்மருத்துவச் சாலைக்குச் சென் றிருந்த காலத்தில், அது பல கிளைகளாகப் பகுக்கப்பட் டிருந்தது. அதன் ஒரு பக்கத்தில் ஒரு பள்ளிக்கூடமும் வைக்கப்பட்டிருந்தது. அதிற் பயிலும் பிள்ளைகளுக்கு மணமாகாப் பெண்கள் கல்வி கற்பித்து வந்தனர். அப்
I Edinburgh. Dublin. France. “ Italy. Gernian w у Rhine, ” Kaisers werth, o Flincer. The First great International Exhibition,

Page 16
18 பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார்
பள்ளிக்கூடத்திற் புகுந்தபின், ஒவ்வொருவரும் மருத்துவ வேலைக்கோ, ஆசிரியர் வேலைக்கோ செல்பவர்களா யிருங் தாலும் த்ரே வகையான பாடங்களையே கற்கவேண்டிய வரா யிருந்தார்கள்./ள்ல்லாருங் தைக்கவும், சமைக்கவும், இடங்களைத் துப்புரவாகக் கழுவவும், தெளிவாய் இனி தாய்ப் படிக்கவும் நன்ருய்ப் பயின்றிருக்கவேண்டும். ஆனல் புதிதாகச் சென்ற பிளாரன்ஸ் அம்மையாரோ தாம் சிறுமியாயிருந்த காலக்தொட்டே, இவற்றை யெல்லாங் தமது இல்லத்தின்கண் நன்கு பழகி யிருந்தா ராகலான், அப்பயிற்சிகளை மிக எளிதாய்க் கற்ருர், அதனல், இவர் விரை விற் பள்ளிக்கூடத்தைவிட்டகன்று, மருத்துவச் சாலையில் நோயாளிகளைச் செவ்வனே பார்க்க விடை கொடுக்கப் பெற்ருர், அவருடனிருந்த மருத்துவப் பெண்கள் செர்மானியாவைச் சேர்ந்த காட்டுப்புறத்தவர்க ளாவர். பிளாரன்ஸ் அம்மையார் செர்மன் மொழி பேசக் கற்றுக்கொண்டமையால் அப்பெண்கள் விரைவில் அவரோடு பழகலாயினர் மருத்துவச் சாலையிலிருந்து வேலை செய்தபின்னீர் ஒய்ந்த நேரங்களில் பிலிட்னர் என் னுக் துரைமகனுரோடு அவ்வூர் காட்டுப்புறங்களுக்குச் சென்ருர் ; சென்று, அங்குள்ள ஏழை மக்களுக்கு உதவி யுஞ் செய்தார். தாம் உதவி செய்த நோயாளிகள் துப்புர வாகவும் வசதியாகவும் வைக்கப்பட்ட பின்னர்தான் இவர் தமது இல்லக் திரும்புவார். அம்மையார் அங்கிருந்த மூன்று திங்களுக்குள் கோயாளிகளுக்கு வேண்டுவன வற்றை அல்லும் பகலும் மிக அன்பாயுங் கருத்தாயுஞ் செய்து மருத்துவச் சாலையை நடாத்தும் முறைகளைத் திறம்படக் கற்றறிந்தார். " பெருஞ் செல்வக் குடியிற் பிறந்த இவ்வம்மையார் தம் செல்வ நிலையை ஒரு பொருட் படுத்தாமல் நோயாளிகளுக்குச் செய்யவேண்டியவற்றை மிக நுட்பமாயுங் திறமையாயுங் கற்றுத் தேறினர்.

மருத்துவப் பயிற்சி v 19
கூர்ந்த அறிவும் ஓயா முயற்சியுமுடைய இங்கங்கை போல்வார் வேறெவருமிலர்," என்று அம் மருத்துவச் சாலைத் தலைவர் கூறியிருக்கின்ருர்,
கெய்சர்வெர்த்திலுள்ள மருத்துவச் சாலையில் அறுத் துத் தீர்க்குங் கருவி முறைகளைக் கற்க இவர் இடம் பெற் றிலர். ஆதலால், இவர் இற்றைக்கு இருநூருண்டுகளுக்கு முன்னே பாரிஸ் மாநகரத்தில் நிறுவப்பட்ட கன்னிப்பெண் மருத்துவக் கழகத்திலுள்ள மாதர் குழுவிற் சேர்ந்து அக்கருவி முறைகளைப் பயிலத் துவங்கினர். பயின்றதுமன்றி, இவர் அம்மாதர்களோடு வெளியே போய் நோயாயுள்ள எளிய மக்களுக்குப் பேருதவியுஞ் செய்துவந்தார். இன்னும் இவர் அவ்வேழை மக்களுக்குப் பணச்செலவு வைத்து அவர்களே இரவல ராக்கிவிடாமல், அவர்களுக்குச் செல வின்றியே எல்லா உதவியுஞ் செய்துவந்தார். நோயாளி களைப் பார்க்கும் ஒவ்வொரு வேலையும் இவரது உள்ளத் தைக் கவர்ந்தது.
ஆனற் பல திங்கள் தொடர்பாக மேற்கொண்ட பேருழைப்பாலும், முன் பழகிய உணவுக்கு மாறன வற்றைக் குறைந்த அளவில் உட்கொள்ள நேர்ந்தமை யாலும் இவர் தம் உடல் நலத்தை இழக்கலானர். இவர் நோயாற் படுக்கையிலிருந்தபோது அம்மருத்துவச் சாலை மாதர்கள் இவரைக் கருத்தாய்ப் பார்த்தனர். கோயில்லாத காலங்களிற் கற்றறிந்ததைவிடத் தாம் கோய்ப்பட்டிருந்த காலங்களிலே தாம் நோய் தீர்க்கும் முறைகளை மிகுதி யாய்த் தெரிந்துகொண்டார். இவர் திரும்ப உடல் வலிமை பெறுதற்குச் சிலகாலமாவது ஓய்ந்திருக்க வேண்டுவது இன்றியமையாததாயிற்று. ஆகவே, இவர் மறுபடியும் தம் ஊரான எம்பிலிக்குச் சென்ருர், அதன் பின் லீஆலுக்குச்
* Paris

Page 17
20 பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார்
. இருப்பதாக நினைப்பதையே அறவே மறத்தல் வேண்டு
மென்று முயன்ருர், w
அப்போது, இலண்டன் மாநகரில் செல்வப் பெருமாட்டி களுக்காக முன்னமே ஏற்படுத்தப்பட்டிருந்த மருத்து வச் சாலையில் அம்மையாரது உதவி இன்றியமையாது வேண்டி யிருந்தது. ஏனெனில், அம்மருத்துவச்சாலை பொருள் முட்டுப்பாட்டாலும் மேற்பார்வைக் குறைவி ஞலுஞ், சீர்கெட்டிருந்தது. ஆதலால், இவ்வம்மையார் 1853-ஆம் ஆண்டு ஆவணித் திங்கள் அதற்குத் தலைவி யாக அமர்த்தப்பட்டார். அமர்த்தப்பட்டபின், அம்மை யார் அதனை மிகச் சீரிய நிலைக்குக் கொண்டுவந்தார். சீமாட்டிகள் பலர் அதற்குப் பொருள் மட்டுங் கொடுத்து உதவி புரிந்தார்கள். ஆணுல், பெருஞ் செல்வியாரான கைட் டிங்கேல் அம்மையாரோ தம் உடம்பினுழைப்பால் அல்லும் பகலும் நோயாளிகளுக்குப் பேருதவி செய்தார். இதுவுமன்றி, அம்மையார் அம்மருத்துவச் சாலையின் தலைவியா யமர்ந்தமையின், அங்குள்ள எல்லா வேலைகளை தாமே பொறுப்பாய்ச் செய்ய வேண்டியவரானுர்,
இதனுல், இவர்தம் உடனிலைக்குப் போதுமான அளவு இளைப்பாற மக்கள் இடந்தந்திலர். சில நாட்களில் இவர் தம் உதவி இன்றியமையாது வேண்டப் படுகின்றதென் றெழுதிய கடிதங்கள், பல இடங்களிலுமிருந்து இவர்க் குக் கட்டுக் கட்டாய் வந்து குவிந்தன. அறிவாற்றலும், உதவி செய்யும் கல்லெண்ணமும் உடையார்க்கு எந்த இடத்திலிருந்தர்லும் ஓய்வு கிடைப்பதில்லை யன்ருே ? ஆகவே, இவர் தமது உடல்நலம் இடங்கொடுத்தமட்டில், மிக அருமையான உதவிகளைச் செய்து, மற்றையோர் பிழைபடச் செய்தவைகளையுங் திருத்தி முடித்தார். அத ல்ை இவரது உடல்நலம் மறுபடியும் பழுதுபட்டது. இது நிற்க.

5. Gufufuu T’I G3Lu Ti
1854-ஆம் ஆண்டு பங்குனித் திங்களில் இங்கிலாந்து பிரான்சு, துருக்கி ஆகிய நாட்டினர் ஒரு பக்கமாகவும், ருஷிய நாட்டினர் மற்ருெரு பக்கமாகவும் நின்று பெரும்போர் துவங்கினர் கிரிமியா" என்னுந் தீவின் குறையில்? இப்போர் கடைபெற்றது.
இருபக்கமும் போர் மும்முரமாக நடந்தது. முக் காடுகளும் ஒன்று சேர்ந்து செய்த போர் வெற்றிபெற்றது. படைத்தலேவன் ஒருவன் தந்த தவருண ஆணையால் லைட்பிரி கேட்° ஆகிய அப்பெரும்படையின் ஒரு பகுதி ருஷியரை எதிர்க்கச் சென்றதுருவியரோ மிக்க திறமையோடு அப் படையைத் தாக்கி, நூற்றுக்கணக்கான ஆட்களை வெட் டிச் சாய்த்தனர். அக்கே ரத்திற் பெருமழை பெய்தது. குளிரின் கொடுமையோ மிகுதியா யிருந்தது! அப்போது மறைந்து நின்று சண்டை செய்வதற்கென வெட்டப்பட்ட நீண்ட பெருங் கால்வாய்களில் தலைபோயுங் கை கால் முறிந்துங் குவியலாய்க் கிடந்து தத்தளிக்கும் படைஞர் களின் மேல் மழைத்தண்ணீர் பாய்ந்தது. இயற்கையில் உடலுறுப்புக்க ளறுபட்டு, உண்ண உணவுமின்றி அக் குளிரால் நடுக்குற்றுத் தத்தளித்த இவர்களுக்குச் செவ் வையான உணவும் உடையுங் தருமாறு குத்தகைக்காரர்*க்குப் பெரும் பொருள் கொடுக்கப்பட்டது. ஆணுல், அவர்கள் இரக்கஞ் சிறிதுமின்றிப் பயனற்ற உணவுப் பண்டங் களையும் கெட்டுப்போன உடைகளையுங் கொணர்ந்து அப்படைஞர்களுக்குப் பயன்படாவாருய்த் தந்தனர். தாம் பெற்ற பெரும் பொருளில் ஒரு சிறு பகுதிமட்டுமே அத் துன்புறும் வீரர்களுக்குச் செலவு செய்து, எஞ்சிய பெரும் பொருளைத் தமக்கென எடுத்துக்கொண்ட அக்குத்தகைக் Crimea. Peninsula. Light Brigade. Contractors.

Page 18
22 பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார்
காரர் வன்னெஞ்சங் கல்லினுங் கடியதோ அன்றி இரும்பி னுங் கடியதோ அறிகிலம்! அப்போர்க் களத்திலிருந்த மருத்துவர்களோ படைஞர்களைப் பெரும்பாடு பட்டுப் பார்த்தனர். ஆனல், இம்மருத்துவர் தோகை மிகச் சிறிதாயிருந்தமையாற் பெருக்தொகையினரான படைஞர் கள் அனைவரையும் அவர்கள் கருத்தாய்ப் பார்க்க ஏலாத வராயினர். இவர்களுக்கு உதவியாக அங்கு மருத்துவ மாதரும் எவரும் இல்லை. ஆண்மக்கள் ஒருவர்க்கொருவர் எவ்வளவு உதவி செய்யக்கூடுமோ அவ்வளவே செய்து கொண்டார்கள் : உதவிசெய்ய வருவோர் தமக்கும் பல வேலைகளிருந்தமையாற் போர்க்களத்திலிருக்கும் அனை வரையுஞ் செவ்வனே கருத்தூன்றிப் பார்க்க அவர்கட்கு இடம் வாய்த்திலது. இதுவுமல்லாமல், போரில் வெட்டுப் பட்டு வருந்தும் நோயாளிகளைத் திறமையாகப் பார்க்கப் பழகிய அறிவிற்சிறந்த மாதர்கள் இல்லையாயின் அவர்கள் யாது செய்யக்கூடும்? மருத்துவத்திற் பழகிய பிரான்சு மாதரார் சிலர் அங்கு உதவி செய்யும் பொருட்டு வந்தன ராயினும், அவர்கள் தம் ஊரவர்கட்கே உதவி செய்ய நேரம் போதாதாயிற்று : கே ரங் கிடைத்திருப்பின், மற் றவர்களுக்கும் உதவி செய்திருக்கலாம் ; ஆங்கிலப் படை ஞர் ஒருவரிருவர் தம் மனைவிமாரொடு வந்திருந்தனர்.
காயம்பட்ட அப் படைஞர்களைக் கொணர்ந்து கொத் தளங்களின் வழிகளிலே வரிசை வரிசையாகப் படுக்க வைத்திருந்தனர். இவர்களுக்கு அம்மாதர்கள் உணவு சமைத்துக் கொடுத்துப் பார்த்தனர். அவர்கள் புண்பட்ட காயங்களைக் கட்டுவதற்குத் துணிகள் கூடக் கிடைத்தில. இரங்கத்தக்க இந் நிலைமையினைக்கண்ட இப்பெண்மணி கள் இலண்டன்மா ககரத்திலுள்ள தம் நண்பர்களுக்குப் போர்க்களத்திற் காயம்பட்ட போர் வீரனிலைமையை அறிவித்துக் கடிதங்கள் எழுதினர் காலஞ் சிறிதுக்

கிரிமியாப் போர் 23
தாழாமற் றமக்கு உடனே தக்க உதவி அனுப்பப்படல் வேண்டுமென்றும் பணிக்தெழுதிக் கேட்டனர். போர்ச் செய்திகளை எழுதி அனுப்புவோரும் அங்ங்னமே காய மடைந்த படீைஞரின் இரக்கமான நிலையினைத் தெரி வித்து வந்தனர். கிரிமியாப் போர்க்களத்திற் கடுங்காயம் பட்டுப் பட்டினியும் பசியுமாய்ச் சாவக்கிடக்கும் நூற்றுக் கணக்கான அப் போர்வீரர்களின் துன்ப நிலைகள் புதினத் தாள்களிலும் வெளிப்படுத்தப்பட்டன. இவ் இரக்கச் செய்தியை அறிந்த பெண்மக்கள் பலர், " போர் நிகழும் இடத்திற்குப் போய்ப் போர்க்களத்திற் கிடந்து துன்புறும் படைஞர்களுக்கு உதவி செய்ய விழைகின் ருேம்," என்று பரிந்து கேட்டனர். இதுகண்ட சிட்னி எர்பர்ட்* என்னும் போர் அமைச்சர் " கிரிமியாப் போர்க் களத்துக்குப் போகக் கருதும் இப்பெண்கள் மருத்துவஞ் செய்வதிற் பழகியவரல்லர்; ஆனல் இவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்னும் பேரவாவோ மிகுதியா யிருக் கின்றது. இவர்கள் அறிவுடைய தலைவி ஒருத்தியின் சொற்படி நடப்பாராயின் நன்ருகப் பயன்படுவர்" என் றெண்ணினர். ஆனல் அத்தகைய தலைவி எங்குக் காணப் படுவளென்று நினைத்துப் பார்த்தார். திடீரெனப் பிளா ரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரது நினைவு அவர்தம் உள் ளத்தே தோன்றியது.
உடனே அக்டோபர் பதினைந்தாம் நாள் சிட்னி எர்பர்ட் என்பார் பிளாரன்ஸ் அம்மையார்க்குப் போர்க்களத்தி னிலைமையினை கன்ருக விளக்கி ஒரு கடிதம் எழுதினர். அதில் அவ் அம்மையார் மருத்துவப் பெண்மக்கள் கூட் டத்தினர்க்குத் தலைவியாய் அமர அரசியலார் விரும்பு கின்றனரென்றும், அவர் தாம் வேண்டியவா றெல்லாக் தலைமை நடத்தலாமென்றுங் தெரிவித்தார். அக்கடிதங்
Newspapers. . * Sidney Herbert.

Page 19
24 பிளாரன்ஸ் கைட்டிங்கேல் அம்மையார்
கண்ட அன்றே அவ் அம்மையார் தாம் கருங்கடலுக்குப் போக இசைக்திருப்பதை எழுதித் தெரிவித்தார். இனிச் சிறிதுங் காலந்தாழ்த்தல் ஆகாமையால், தம்முடன் வரு தற்கு இசைந்த முப்பத்தெட்டுப் பெண்களையும் அழைத் துச் செல்வதற்குமுன், அவர்களெல்லாரும் மருத்துவத் தொழிலிற் சிறிதளவாவது பயின்று பழகியவரா யிருத் தல் வேண்டுமே யெனக் கருதினர். ஆகவே, இங்கிலாந்தி லுள்ள உரோமர் கோயிலிலும் ஏனைக் கிறித்துவர் கோயி லிலும் உள்ள கன்னிப்பெண்கள்பாற் சென் ருர், அங்குத் தம்முடன் வர இசைக்தவர்கள் பலரில் உடல் வலிமையும், அறிவாற்றலு முடையவர்களேயே தெரிக்தெடுத்தார். எஞ்சியவர்களை அவர்தம் நேசர்கள் அனுப்பிவைத்தனர். சிட்னி எர்பர்ட் துரை மகனர் கடிதமெழுதி ஆறு காட் கள் கழிந்தவுடன், பிளாரன்ஸ் அம்மையார் மருத்துவ மாதர் குழாத்துடன் கருங்கடற் பக்கஞ் சேர்ந்தார். அக் கடற் பயணத்திற் பெரும்பாடுபட்டுப் பின்னர் ப் பாஸ்பரஸ்* என்ற கடலிணைக் கால்வா" யின் பக்கத்தேயுள்ள ஸ்குட்டாரிக் என்னும் மருத்துவச் சாலையை அடைந்தனர்.
இக்கட்டிடம் ஒரு குன்றின்மேலுள்ளது; மிகப் பெரியது; ஆயிரக்கணக்கான மக்களிருப்பதற்கு ஏற்றது; துலுக்கர்களால் இரவலாகக் கொடுக்கப்பட்டது. ஆனல், இக்கட்டிடம் மக்கட் புழக்கமின்றி வெறுமையாய்க் கிடக் தமையின், அஞ்சத்தக்கவாறு அழுக்கும் புழுதியும் நிறைக் திருந்தது. கிரிமியாவிலிருந்து கப்பல் வழியாகக் கொண்டு வந்தகாயம் பட்டவர்கள் இருப்பதற்கும் வசதியற்றதா யிருந்தது.
அங்ங்ணம் வந்தவர்களின் முறிந்த கைகால்களை ஒழுங்குபட வைத்துக்கட்டி மருந்திடுவதற்குக் கூட அங் குள்ள மருத்துவர் சிலர் நேரம் பெற்றிலர் காயங்களை
Black Sea. Bosphorus. Strait. * Scutari.

கிரிமியாப் போர் 25
உடனே கழுவித் துப்புரவு செய்யாமையால், ஐயகோ! அப்புண்களில் அழுக்கு நுழைந்து அவர்கள் செங்ைேர (இரத்தத்தை) நஞ்சாக்கி அவர்களிற் பலரை இறக்கச் செய்தது. இன்னும் பலர்க்கு உணவுகூடக் கிடைத்திலா மையின் கப்பலிலிருந்து இறக்கப்படும்போது அவர்கள் அதிலிருந்து மருத்துவச் சாலைக்குச் சிறிது தொலைவுகூட கடந்து செல்ல ஏலாது துடித்தனர். இவ்வளவு பெரும்
ஸ்குட்டாரி மருத்துவச்சாலை.
பாடுபட்டு அவர்கள் மலைமேலுள்ள ஸ்குட்டாரி மருத்து வச் சாலைக்குக் கொணர்ந்து சேர்க்கப்பட்டார்கள்! ஆனல், அங்கு எத்தனை நோயாளிகள் இருந்தனரோ அத்தனை எலிகளுங் கூட்டங் கூட்டமாயிருந்து அவர்களைத் துன் புறுத்தின.
698-3

Page 20
6. ஸ்குட்டாரி மருத்துவச்சாலை
அம் மருத்துவச் சாலையில் அழுக்கும் புழுதியும் அள வுக்கு மிஞ்சி இருந்தமையின், அதிலுள்ள பழுதான கணக் கற்ற தட்டுமுட்டுக்களை அப்புறப்படுத்தி, நீரைக் கொதிக்க வைத்து அதனல் தரையைத் துப்புறவாகக் கழுவி, அதன்மேற் படுக்கையிட்டுக் காயம் பட்டவர்கள் மேல் தூய ஆடை போர்த்து வசதியாயிருக்குமாறு செய்வதே முதலில் ஆக வேண்டியிருந்தது. இவ்வளவு மிகுதியாயுள்ள அவ் வேலைகளையும் ஆண்பால் மருத்துவர் சிலர் செய்தல் கூடுமோ : கூறுமின்கள் ! அம்மையார் இம்மருத்துவச் சாலைக்கு வந்த காலையில் அங்கிருந்த அளவிலாச் சீர்கேட்டின் பயணுக நூற்றுக்கு நாற்பத் திரண்டுபேர் இறந்தனர். அம்மையார் வந்து அவ் வேலையை ஏற்ற பின்னர் நூற்றுக்கு இரண்டு பேர்தாம் இறந்தனர்.
வேலை மிகுதியால் களைப்படைந்திருந்த மருத்துவர் கள் அங்குவந்த பிளாரன்ஸ் அம்மையாரையும் அவர்தம் கூட்டத்தாரையும் அன்புடன் வரவேற்கவில்லை. இன் னும், மருத்துவக் கழகங்களிலுள்ள மாதர்கள் அங்குள்ள வேலைக்கு உதவியாகாமல் அவற்றிற்கு இடைஞ்சல் விளை விப்பவராயும் இருந்தமையாற், புதிதாகவந்த இம் மாதர் களிடத்திலும் இவர்கட்கு விருப்பமும் நம்பிக்கையும் உண்டாகவில்லை. என்ருலும், பிளாரன்ஸ் அம்மையார் அவர்களிடமிருந்து வந்த அன்பற்ற சொற்களையுங் கொடும்பார்வைகளையும் ஒரு பொருட்படுத்தவில்லை.
** அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை d
இகழ்வார்ப் பொறுத்தல் தலை '
என்ற தெய்வத் திருவள்ளுவர் உரைப்படி, தம்மை இகழ்வா ரைப் பொறுத்தலும், தமக்கு இன்ன செய்தார்க்குக் தாம்

ஸ்குட்டாரி மருத்துவச்சாலை 27
இனியவே செய்தலும் நற்குணங்களுக்கு உறையுளாய்த் திகழ்வாரது இயற்கையல்லவோ? கைட்டிங்கேல் அம்மை யார் தம்மை யிகழ்ந்தாரைப் பொறுத்ததல்லாமலும் அவர்க்குத் தாம் இனிய உதவிகளுஞ் செய்ததை நினைத் துப் பார்க்குங்கால்,
* இன்னு செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு" என்ற அத் திருக்குறளின் அருளுரைக்கு இலக்கிய மாவார் . உலகத்தில் இல்லாமற்போகவில்லை என்பதும், அவர் அத்தி பூத்தாற்போல் உலகத்தைக் கடைத்தேற்றுவதற்கு இடை யிடையே தோன்றுவரென்பதும் இனிது விளங்குகின்ற்ன வல்லவோ?
இன்னும், பிளாரன்ஸ் அம்மையார் சீர்கெட்ட நிலையி லிருந்த அம்மருத்துவச் சாலையை ஒழுங்குபடுத்தும் பொருட்டு, தமது வேலையை மிக அமைதியுடன் பெருமை பாராட்டிக் கொள்ளாமலே செய்துவந்தார். இவ்வாறு செய்து வந்ததால் அங்கிருந்த தாறுமாறன நிலைமையினை அறவே ஒழித்து ஒழுங்கான நிலைமையினை உண்டு பண்ணினர். அம்மையார் அங்குவந்த மூன்று திங் களுக்குள் உதவிபுரியுங் கழகங்களுக்கு கோயாளிகளின் கிலைமைகளைத் தெரிவித்தெழுதிப், பத்தாயிரம் மேற் சட்டைகளை வருவித்து அவர்களுக்குத் தந்தார். அம்மை யார் தமக்குச் செய்துவரும் பெருகலத்தைக் கண்டதும், "யாம் நலமடைவோம்" என்னும் முன்னில்லாத ஒரு கம்பிக்கை அங்கோயாளிகளின் உள்ளத்தில் எழுவ தாயிற்று. w அம்மையாரைப் புகழாத கோயாளி எவரும் அங்கில்லை. “ 5ைட்டிங்கேல் அம்மையார் வருவதற்குமுன் இம்மருத்துவச் சாலையிற் சினந்துரைக்கும் இன்னுச் சொல்லும், அடாச் செயல்களு மிருந்தன; அம்மையார்

Page 21
28 பிளாரன்ஸ் கைட்டிங்கேல் அம்மையார்
வந்த பின்னரோ, இவ்விடம் இப்போது தெய்வத்தன்மை யுடைய கோயிலாக விளங்குகின்றது," என்று அங்கிருந்த படைஞரில் ஒருவன் கூறினன். இன்னுமொருவன் போர மைச்சராகிய சிட்னி எட்பர்ட் துரைமகனரிடம், * இவ்வம்மையார் இங்குள்ள நோயாளிகள் ஒவ்வொருவ ரிடமும் இனிமையாகப் பேசுவ்ார்; இன்னும் பலர்க்கு இவர் தலையசைத்துப் புன்னகை புரிந்து செல்வார்; யாம் நூற்றுக் கணக்காகப்படுத்துக்கிடப்பதால் ஒரே காலத்தில் இவர் எல்லோர்க்கும் அங்ங்ணம் செய்தல் கூடாதாயிற்று. ஆனுல் எல்லாரும் ஓய்ந்திருக்கும் இராவேளையில் இவர் தம் கையிற் சிறு விளக்கொடு எம்மைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வருவார்; அப்போது சுவரிற்படும் அவரது அழகிய நிழலை முத்தம் வைத்துக்கொண்டு அமைதியுடன் படுத்துக்கொள்வோம்," என்று கூறினன்.
கடும் புண்களை அறுக்கவேண்டுமாயின் நோயாளி களின் உணர்வை மயக்கி அதனைச் செய்யும்பொருட்டு அக்காலத்திற்ருன் மயக்க மருந்து புதிதாகக் கண்டுபிடிக் கப்பட்டிருந்தது. புதிதானதால் இம்மயக்க மருந்தைக் காயம்பட்டவர்களுக்குக் கொடுக்க மருத்துவர்கள் அஞ்சி ஞர்கள். அவர்களின் உணர்வை மயக்காமலே மருத்து வர்கள் காயங்களை அறுக்க வேண்டியவர்களானர்கள். அந்நேரத்தில் கைட்டிங்கேல் தலைவி அக்நோயாளியின் பக்கத்தே நின்று அவனைப் பல இன்னுரையால் இன்புறச் GaFiiug தேற்றி ஆறுதல் கூறுவார்!
சண்டையிற் குண்டுபட்டும் வெட்டுப் பட்டுங் கைகால் முறிந்துங் காயம்பட்டும் உயிர் உடம்பின்கண் உள்ளதோ, அன்றிப் புறத்த்ே உள்ளதோ என்னும் நிலையில் ஆற்றெணுது வருந்தும் போர்மறவர்க்கு இவ் வம்மையாரைப்போல் அன்பான உதவி செய்து ஆறுதல்
1. Chloroform

ஸ்குட்டாரி மருத்துவச்சால்
மருத்துவச்சாலையில் அம்மையார் பணி
29

Page 22
80 பிளாரன்ஸ் கைட்டிங்கேல் அம்மையார்
சொல்லவல்லார் யார்? உலகத்தில் மக்களாய்ப் பிறந்து, துன்பத்திற்கே இடமாயுள்ள இப்பிறவியில் காம் தாங்க முடியாத் தனித்துயர் கொள்ளும்போது நம் உள்ளம் 5மக்கு ஆறுதல் சொல்வார் ஒருவரையே காடி கிற்கின்றது. ஆறுதல் மட்டுமோ? அவ்வேளையில் அன்பாகவும் அக்கரையோடும் கம்மைப் பார்ப்பவர் ஒருவர் கிடைத்தால் அவரை நாம் தெய்வமாகவே நினைந்து உருகுகின்ருேம். அத்தகையவர் ஒருவர் அருகே யிருக்கப்பெற்ருல் நமக் குள்ள துன்பம் எத்துணைப் பெரிதாயிருந்தாலும் அஃது அங்நேரத்தில் நமக்குத் தோன்றுவதில்லை. நமக்கே இப்படியிருந்தால், சண்டை முகத்திற் சென்று பசியும் விடாயும் பாராது, தம் உயிரையும், ஒரு துரும்பாக எண்ணித் தம்மை மறந்து போர் செய்து, பகைவராற் படுகாயமடைந்து, பார்ப்பவர் எவருமின்றி யாருமில் அகதியாய்க் கிடக்கும் போர்மறவர், அன்பிற்கு ஓர் உறை விடமாயுள்ள இந் நங்கையார் தம் அருகிலிருந்து உதவி செய்யப் பெற்ருல், அவ்வுதவி எவ்வளவு சிறந்ததாயிருக் கும்? அவ்வுதவியைச் செய்யும் அம்மாதரார் அவர்க்குத் தெய்வமாகவே தோன்றுவரல்லரோ?
* எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமங் துடைத்தவர் நட்பு ' என்னுந் தெய்வத் திருக்குறளின் உண்மை, அங்ஙனம் ஆறுதல் எய்து வார்க்கு உண்மையாய் விளங்கல்போல் வேறு பிறர்க்கு விளங்குமா?
கம் காட்டவர்களிலோ, தமக்கு உற்ருராயிருப்பவர் நோயுற்றுத் துன்புறுங் காலத்தும், அவரைக் கருதிப் பார்ப்பவர் மிக அரியரா யிருக்கின்றனர். தமிழ் மக்கள் இல்லங்கள் பெரும்பாலானவற்றில் ஒருவனுக்கு மனைவியா யிருப்பவள் நோய்ப்பட்டால், அவளுக்கு நெருங்கிய உறவினராயிருப்பவரும் அவள் கிட்ட அணுகினல்

ஸ்குட்டாரி மருத்துவச்சாலை 31
தீட்டுப்பட்டுவிடு மென்னும் பொய்யெண்ண முடைய வராய் அவளை அணுகாது விலகிகிற்கின்றனர்.
இனிப் பெருங் தொகையினரான நோயாளிகள் போதுமான உணவுங் கிடைக்கப் பெருமல் ஸ்குட்டாரி மருத்துவச் சாலையின் சுவர் ஓரங்களிலும் வழிகளிலும் படுக்க வைக்கப்பட்டனர். ஏனெனில், போர் மறவர்களின் தொகை அளவுக்கு மிஞ்சியது. இங்கிலைமையிற் கிடந்த அங்கோயாளிகள் கைட்டிங்கேல் அம்மையார் வந்த சில காட்களுக்குள் அவரது வருகையைப் பேராவலோடு எதிர் பார்த்தபடியே யிருந்தனர்.
இம் மருத்துவச் சாலையில், பிளாரன்ஸ் தலைவியாரும் அவர்க்குக் கீழுள்ள மாதர்களும், நோயாளிகளுக்குச் செய்த உதவிகளின் அருமையை ஆண்பாலார் அறிதல் மிக அரிதேயாகும். ஏனென்ருல் அங்கே முதலில் நோயாளிகளின் படுக்கைகளை மிக்த் துப்புரவாக வைத்தல் வேண்டும்; இல்லையேல் அவர்கள் நலங்கெடுவார்கள். அதன்பிறகு, ஒழுங்கான பத்திய உணவு அவர்களுக்குச் சமைக்கப்படல் வேண்டும் ; கல்லுணவு கொடுக்கப்பட வில்லையாயின், அவர்கள் நாளுக்கு காள் வலுக்குறைக்தே போவார்; மிகுதியாய்க் காயம்பட்டவர்களுக்குத் தனி மேற்பார்வை வேண்டுமன்ருே ? மேற்பார்வையில்லா விடின் அவர்கள் பிழைப்பதே அருமை. இவற்ருேடமை யாது, அந்நோயாளிகளின் ஆடைகளைச் சலவை செய்யு மிடமும் ஏற்படுத்தி, அதில் அவர்களுக்கு அடிக்கடி பயன் படுவதற்காகத் தூய மெல்லிய ஆடைகளும் வெளுக்கப் படல் வேண்டும். இன்றியமையாது வேண்டப்பட்ட இத்துணைப் பெரிய வேலைகளெல்லாம், பிளாரன்ஸ் அம்மையாருடைய முயற்சியாலும் ஏவலாலும் ஒழுங்கு பெற கடப்பவாயின.

Page 23
32 பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார்
இவ்வம்மையார் இம்மருத்துவச்சாலைக்கு வந்த காலை யில் அதில் இரண்டாயிரத்து முந்நூறு காயம் பட்ட வர்கள் இருந்தார்கள். இம்மருத்துவச்சாலை இவ் அம்மை யாரால் ஒழுங்குபடுத்தப்பட்ட சில திங்களுக்குட் காயம் பட்ட பத்தாயிரம் படைஞர்கள் அங்கு அனுப்பப் பட்டனர். ஆயிரக்கணக்கான இத்துணை நோயாளிகளும் இவ் அம்மையாரது மேற்பார்வையின் கீழ் நடத்தப் பட்டனர். சற்றேறக்குறைய இரண்டேகாற் கல் (மைல்) நீளமுள்ள இம்மருத்துவச்சாலை முழுதும் இரண்டரை அடி இடைவிட்டு நோயாளிகளின் படுக்கைக் கட்டில்கள் இடப்பட்டிருந்தன. நைட்டிங்கேல் அம்மையார் இவர்க ளெல்லாரையும் ஒழுங்குபெறப் பார்த்து, அவர்க்கு வேண்டுவன செய்தற்குத் தங்கீழுள்ள மருக்துவ மாதர் களை ஏவியது மன்றித், தாமும் அங்கோயாளிகள் ஒவ்வொருவரையுங் கருத்தாகப் பார்த்துவந்த செயல் எத்துணைப் பேருழைப்பை அவர்க்குத் தந்திருக்க வேண்டும்!
இம்மருத்துவச் சாலையை அம்மையார் வியத்தகு முறையில் எவ்வளவோ சீர்திருத்தி, நோயாளிகளையும் அவர்தம் இடங்களையும் மிகவுங் துப்புரவாக வைத்தும், அங்கு நோயாளிகள் கணக்கின்றி இறந்தனர். ஏனெனில் மருத்துவச் சாலையாக அமைந்த அவ்விடத்திற் காற் ருேட்டமும் தூய தண்ணிரும் இலவாயின. கோயினும் றுடிதுடிக்கும் நோயாளிகளுக்கு நல்ல காற்றுக் தூய தண்ணிரும் இன்றியமையாது வேண்டப்படுமல்லவோ? இவையிரண்டும் அங்கின்மையால் அம்மையாரது அளப் பருமுயற்சி பெரும்பயன் தரவில்லை. ஆதலால் அம்மையார் பெரிதுங் கவன்று தம் மருத்துவச் சாலையில் ஏற்படும் மிகுந்த இறப்பைத் தடை செய்ய முயன்ருர், அக் காலத்தில் ஸ்குட்டாரி மருத்துவச் சாலையைப் பார்த்து வருமாறு

ஸ்குட்டாரி மருத்துவச் சாலை 33
அரசியலார் மேற்பார்வையாளர்களை அங்கு அனுப்பி ஞர்கள். அவர்கள் வந்து பார்த்தும் அம்மருத்துவச் சாலைக்கு அவர்கள் ஏதும் உதவி செய்தாரல்லர். நோயாளிகளின் இறப்பு மேன்மேற் பெருகிக்கொண்டே வந்தது. இது கண்ட அம்மையார் இதற்குச் செய்யும்வழி யாதென்று கினைத்துப் பார்த்து முடிவிற் றமக்கு மிகப் பழக்கமான சிட்னி எர்பர்ட் துரைமகனர்க்கு, " அரசியலார் அனுப்பிய மேற்பார்வை யாளர்கள் இங்கு ஏதும் கலஞ் செய்திலர் ; ஆகலான் நோயாளிகளின் இறப்பு மிகு கின்றது; இதனைத் தடைசெய்யத் தாங்கள் பெரிதும் முயலுமாறு வேண்டுகின்றேன்," என்றெழுதினர். சிட்னி எர்பர்ட் துரைமகனுரும் இவரது வேண்டுகோட்கிணங்கி அதற்குப் பெரிதும் முயல்வாரானர். அம்மையாரும் சிட்னி துரைமகனரும் அரசியலார்க்கு அடுத் த்டுத்துக் கடிதங்கள் எழுதி வேண்டிக்கொள்ளவே, அரசியலார் திரும்பவும் மேற்பார்வையாளர்களை ஸ்குட்டாரி மருத்துவச்சாலைக்கு அனுப்பினர்கள். அவ்வாறே அவர்கள் அங்குச் சென்று காற்றேட்டத்திற்காம் சாளரங்கள் அமைத்தும், அம் மருத்துவச்சாலையைச் சூழவுள்ள இடங்களைத் துப்புரவு செய்தும், நல்ல தண்ணிருக்கு வேண்டும் வசதிகள் உண்டாக்கியுங் கொடுத்தனர். இவையெல்லாம் அம்மை யாரின் பெரு முயற்சிகளினலேயே நடப்பவாயின. * நல்ல காற்றும், தூய தண்ணீரும், இடங்களைத் துப்புர வாக வைத்தலுமே உடல் கலத்தைப் பாதுகாப்பனவாகும்; இவையின்றி, நோயாளிகளை எவ்வளவு பார்த்தாலும் பயனிலவாய் முடியும் என்பதே "அம்மையார் கருத்து.
அம்மையாரது மிகக் கருத்தான பார்வையால், அம் மருத்துவச் சாலையிற் சிலர் காயங்கள், ஆறியும், உடைந்த தலைகளின் வலி குறைந்தும் வரும்போது, நோயாளிகள் தம் வீட்டார்க்குத் தமக்காகக் கடிதங்கள் எழுதித் தாம்

Page 24
34 பிளாரன்ஸ் கைட்டிங்கேல் அம்மையார்
தம் தோழரைவிட கல்வினை யுடைமையால் உயிர்பிழைத் திருத்தலையும், ஏதோ ஒரு நாளில் தாம் இங்கிலாந்திற்குத் திரும்பும் 15ம்பிக்கை இருத்தலேயும் தெரிவிக்குமாறு தம்மை அன்புடன் பார்க்கும் மருத்துவ மாதர்களைக் கூச்சத்துடன் கெஞ்சிக் கேட்டனர்.
இஃதறிந்த பிளாரன்ஸ் அம்மையார், "நல்லது உமக்கு வேண்டியதைச் சொல்லுவீராக. நான் அதனேத் தெரிவிக்கிறேன்,' என்று கேட்டுப், பின்னர், "நீங்கள் சொல்ல கான் எழுதுவதை விட நுங்கள் கருத்தைத் தெரிந்து யானே உங்கள் பொருட்டு எழுதுவது நல்லது. அப்படிப்பட்ட பழக்கமில்லாதவர்களுக்குச் சொல்லி எழுதுவிப்பது பெருக்தொல்லையாகு" மென்று முடிவாகச் சொல்லினர்.
"ஆ! அப்படியானல்’அம்மையே, எமக்காக எழுதுங் கள், காங்கள் சொல்லுவதை விட நீங்கள் எழுதுவதே மிக மேலானதாகும்," என்றனர் நோயாளிகள். a
பெரும்பாலும் படைஞர்களாய்ப் போர்த்தொழிலைப் பயில்பவர்கள் மக்களுக்குரிய ஈர நெஞ்சமும் மென் றன்மையும் இல்லாதவர்களாகவே யிருப்பர். காட்டில் வாழும் மறவிலங்குகளாகிய புலி, கரடி, சிங்கம் முதலிய வற்றிற்கும் இவர்கட்கும் மிகுதியாய் வேற்றுமையில்லை. இத்தகையவர்களை மென்றன்மை யுடைய ராக்குதற்குப், போர்த்தொழிலொன்றே சிறந்த கருவியாகும். . “ போர் மேற் செல்லுங்காற் கரடுமுரடான நிலங்களையும், காடு களையும், காட்டாறுகளையும், மணல்வெளிகளையும், மலைத் தொடர்களையும் கடந்து செல்லுதலாலும், வெயிலிற் காய்ந்தும் மழையில் நனைந்தும், குளிரால் கடுங்கியும் பட்டினியும் பசியுமாய்க் கிடந்துக் துன்புறுதலாலும், அதன்பின் பகைவரைத் தாக்கிப் போரியற்றங்காற் கைகால் முறிந்தும் படுகாயங்கள் அடைந்தும் ஆம்

ஸ்குட்டாரி மரு த்துவச்சால் 35
ருெணது கைந்து வருந்துதலாலுமே இவர்கள் துன்பம் இன்னதென்பதனை யுணர்ந்து தமக்கு'அஃது எவ்வளவு இன்னததாயிருக்கின்றதோ, அங்ங்னமே பிறர்க்கும் அஃதிருக்கு மென்னும் உணர்ச்சி வரப்பெற்று மென் றன்மை எய்துகின்றனர். ஆதலால், அவர்களை இனிய ராகப் பழக்குதற்குப் போர்த்தொழிலே சிறந்த கருவியாக உதவுகின்றது. இத்தகைய இடர்ப்பாடுகளில் அகப் பட்டுத் துன்புறுங் காலங்களிலேதாம் கொடிய விலங் குகள் கூடத் தமது கொடுங்தன்மை மாறி மென்றன்மை வாகின்றன.
7. ஸ்குட்டாரி மருத்துவ மாதர்கள் தொழில்முறை இனி, அங்கிருந்த மருத்துவ மாதர்கள் எவ்வாறு காலங்கழித்தண ரென்பதை நீங்கள் அறிய விரும்புகின்றீர் களா? அவர்கள் நன்முய்ப் பொழுது விடிவதற்கு முன் னமே எழுந்து தம் படுக்கைகளைச் சுற்றிவைத்து, அறை களையுங் துப்புரவு செய்து, சமையலறைக்குப் போவர். போய் அங்குள்ள புளிப்பான சில அப்பங்களையும் பாலில் லாத் தேயிலைக் குடிைேரயும் குடிப்பர். அதன்பிறகு, ஆண் மக்களுக்கு வேண்டும் உணவுகளையுஞ் சமைப்பர். பிறகு இரவில் வேலை பார்க்கும் மருத்துவப் பெண்கள் இளைப் பாறச் செல்லும்போது, பகல்வேலை பார்ப்போர், காலை ஒன்பதரை மணியிலிருந்து பகல் இரண்டு மணி வரையில் நோயாளிகளுக்கு வேண்டுவனவெல்லாம் மிக ஒழுங்காகச் செய்வர் : பகல் இரண்டு மணிக்கு ஆண்மக்கள் இளைப் பாறச் செல்லும்போது, களைத்துப்போன மருத்துவமாதர் கள் தமது பகலுணவு கொள்ளச் செல்வர்; அங்கு உணவு நல்லதா யில்லாவிட்டாலும், அதனையே நிறைய உண்ண

Page 25
36 பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார்
வேண்டியவர்களானர்கள். ஏனெனில், வயிருர உண்டு தம் உடலை ஒம்பினுற்ருனே வேலை செய்ய முடியும் அதன் பின்னர், மூன்று மணிக்கு கோய் நினைவின்றி நல்ல காற்றில் வெளியே சென்று சிறிது நேரம் உலவுவர்.
ஆனல் ஐப்பசித் திங்கள் மழைகாலமாதலின், அப் போது, அவர்கள் வெளியே சென்ருல் நோய் வருமென்று கூறி, அவர்கள் தலைவியரான கைட்டிங்கேல் அம்மையார் அவர்களைத் தடுத்துவிட்டார். ஆதலால், அவர்கள் எக் காலமும் எங்நேரமும் அம் மருத்துவச்சாலையிலேயே இருக்கவேண்டியவர்களானர்கள். எந்நேரமும் வேலையி லிருக்கும் அவ்விடத்திற் சிறிது நேரமாயினும் ஒய்ந்திருத் தல் முடியுமோ? மாலை ஐந்தரை மணிக்கு மருத்துவமாதர் கள் கோயாளிகளி னிடத்தைவிட்டுப் போய்த் தேக்குடிநீர் அருந்தச் செல்வார்கள். ஆனல், இதற்குச் சிறிது நேரம் போதுமாக்லான், உடனே மறுபடியும் வந்து இரவு ஒன்ப தரை வணிவரையிற் செய்ய வேண்டியவற்றைச் செய்வர். ஆ1 ஆ! நினைத்துப் பாருங்கள் ! நல்லுணவில்லாமலுஞ் சிறிதும் ஓய்வில்லாமலும் நோயாளிகளுக்கு உழைக்கும் இம்மாத ரார் வாழ்க்கை எத்துணைக் கடுமையாயிருத்தல் வேண்டும்! ஆனல் அவர்கள் அதனைக் கடுமையா யெண் ஞனது எத்துணை உள்ளப் பொறுமையோடும், அன்போடுஞ் செய்துவந்தனர் 1 அவர்கள் அங்குக் கிடைத்த பயனில்லாச் சுவையற்ற உணவை அவ்வளவு நீண்ட காலம் உட் கொண்டு நோயாளிகளுக்கும் பேருதவி செய்துவந்தது பெரு வியப்பினேயே உண்டு பண்ணுகின்றது. மனத்திட்ப மானது ஒருவனை எவ்வளவு ஊக்குமென்பதை சினைக்க வியப்புண்டாகாதிராது. இன்னும், மனத்திட்பமும் கல் லெண்ணமும் நற்செயலும் ஒருவனுக்கு எவ்வாறு உண்டா மெனின், அவன் அவ்வியல்புகள் மிகுதியும் வாய்க்கப்

ஸ்குட்டாரி மருத்துவமாதர்கள் தொழில்முறை 37
பெற்ருளிடம் பழகுவதனலேயே அவை யுண்டாமென் றறிக. . v
அம்மருத்துவச் சாலையிலுள்ள மாதர்கள் ஓய்வின்றி மிக்க வேலை செய்பவரானுலும், பிளாரன்ஸ் அம்மையாரே எல்லாவற்றையுக் தம் பொறுப்பாகவே பார்த்தார்; இவரே அங்குள்ள எல்லாவற்றையும் கினைத்துப் பார்த்துச் செய்ய வும், இன்னும் அதனை முன்னேற்றவும் அளப்பரிய பாடு பட்டார்; அங்கேற்படுஞ் செலவுகளின் கணக்குகளையும் பிழைபடாமற் பார்த்துப், போரமைச்சராகிய சிட்னி எர்பர்க்கும் படைத்தலைவரான லார்ட் ரேக்லன் முதலானவர் கட்கும் அனுப்பினர். கிரிமியாப் போர்க்களத்திருந்த குற். றேவல் செய்யும் ஏவலாளர்கள், "நுங்கட்கு யாங்கள் உதவி செய்ய வரலாமா ?” என்று கேட்டனர். அதற்கு அம்மையார், அவர்கட்கு எதனையுஞ் சொல்லிச்சொல்லியே வேலை வாங்கவேண்டியிருப்பது கண்டு, அவர்களை அங்ங் னம் ஓயாமற் சொல்லி வேலை வாங்குவதைவிடத், தாமே அவற்றை விரைவாகவுஞ் சுருக்கமாகவும் எளிதாகவுஞ்
செய்து விடலாமென்ருர், அம்மருத்துவச் சாலையில் ஆண்
மக்களையும் பெண்மக்களையும் எவ்வெவ்வகையிற் பயன் படுத்திக்கொள்ள வேண்டுமென்பதைப் பிளாரன்ஸ் அம் மையார் கன்ருக விரைவில் தெரிந்துகொண்டார். ஆத லால், அவர்கள் செய்ய அறியாத வேலைகளில், அவர்களை ஏவி வீணே காலத்தைப் போக்கவில்லை. அவரவர்களுக்குத் தகுந்த வேலைகளைக் கொடுத்து அவ்விடத்தைச் சிறந்த நிலை மைக்குக் கொண்டுவந்தார். அவர் வந்த காலத்தில் மிக வுக் திகில் கொள்ளத்தக்க நிலையினதாய்க் காணப்பட்ட அம்மருத்துவச்சாலை,அவர் செய்த அரிய ஏற்பாடுகளினும், சில காட்களில் மிக ஒழுங்குபடுத்தப்பட்டதாகவும், மிக்க வசதியுள்ளதாகவும் மாறிற்று. '

Page 26
38. பிளாரன்ஸ் கைட்டிங்கேல் அம்மையார்
5ைட்டிங்கேல் அம்மையார் காயம்பட்ட படைஞர் களுக்கேயன்றி, எவராலுங் கருதிப் பார்க்கப்படாமல் அக் கொத்தளத்தின் ஒரு மூலையில் நெருக்குண்டு பட்டினியும் பசியுமாய்க் கிடந்துழலும் அவர்தம் மனைவிமார் பிள்ளை கட்கும் வேண்டிய உதவிகளைச் செய்யப்புகுந்தார். புகுந்து அவர்களைத் தமது பாதுகாவலின்கீழ்க் கொணர்ந்து, தம தருகிலுள்ள தூய இடங்களில் வைத்து, அம்மாதர்களிற் சிலர்க்குச் சலவை செய்யுமிடத்தில் வேலை தந்தும், ஏனைப் பலர்க்கு அங்ங்னமே வேறு பல வேலைகளைப் பகுத்துக் கொடுத்தும், அவர்களுக்கிருந்த துன்பத்தையுங் கவலையை யும் நீக்கினர்.இவ்வளவு ஏற்பாடுகளையும் ஒரு கிறித்துவ குருவின் உதவியாற் செய்துமுடித்தார். அம்மாதர்களின் பிள்ளைகளுக்கு ஒரு நாளிற் பல மணி நேரங் கல்வியுங் கற்பித்தார். இவ்வாற்ருல் அக்குழக்தைகளின் தாய்மார் தம்மைப் பாதுகாத்துக்கொள்ளத்தக்க பொருள் வருவா யைத் தாமே தேடிக்கொண்டனர். சண்டையிற் கண வரை யிழந்த மகளிர்க்குப் பொருளும் உடையுங் கொடுத் துக் கூடியவிரைவில் அவர்கள் தத்தம் ஊர்க்குத் திரும்பிச் செல்ல கைட்டிங்கேல் அம்மையார் வழிசெய்தார்.
போர்க்களத்தினின்று ஸ்குட்டாரிக்குக் கொண்டு வரப்படுங் காயம்பட்ட போர் மறவர்களில் கலம் பெறக் கூடியவர் இவர், கூடாதவர் இவர் என அறுப்புத்தொழில்" மருத்துவர்கள் தெரிக்தெடுப்பர். ஒருகால்,அவ்வாறு தெரிக் தெடுக்கப்பட்டவர்களில் கலம்பெற மாட்டாரெனக் கரு தப்பட்டவர்கள் ஐவர் அம்மையார் பார்வையின் கீழ் விடப் பட்டனர். அம்மையார் அவர்களை மிகவுஞ் செவ்வையாகப் பார்த்ததன் பயனக, அவர்கள் உயிர் பிழைத்தனர். ஆத லால் இதன்பின் இவருடைய பேரறிவின் பெற்றியையும், மருத்துவத் திறமையையுங் கண்ட பெரிய மருத்துவர்
1 Surgery.

ஸ்குட்டாரி மருத்துவமாதர்கள் தொழில்முறை 39
களும் அம்மையாருடைய கருத்துக்களையே மருத்துவ முறையில் என்றும் எதிர்பார்த்தறிய விழைந்தனர்.
ஒருநாள் காலையில், தலைவியரான இவ்வம்மையார் தம் கோயாளிகளைச் சுற்றிப் பார்த்துக்கொண்டு வருகையில், அவர்தங் திருமுகத்தில் என்றுமிராத ஒரு தெளிவும், மகிழ்ச்சியுந் துளும்புவதை அங்குள்ளவர்களெல்லாருங் கண்டு வியந்தார்கள். பிற்பகலில் எல்லாரும் ஓய்ந்திருக்கும் வேளையில் அம்மையார் முகத்தில் அத்தகைய மகிழ்ச்சி தோன்றியதன் ஏதுவை அறிந்தார்கள். அப்போது குரு மார்களில் ஒருவர், நோயாளி வரிசைகளைப் பார்த்துவரும் போது விக்டோரியா அரசியார் சிட்னி எர்பர்ட் துரைமக ர்ைக்கு எழுதிய கடிதத்தைப் படித்துக்காட்டினர். அக்கடி தம் வருமாறு:-
நைட்டிங்கேல் அம்மையாரிட மிருந்தாவது பிரேஸ், பிரிட்ஜ் அம்மையாரிட மிருந்தாவது அனுப்பப்பட்ட கணக்கு வகைகளை யான் அடிக்கடி தெரிந்து கொள்ளும்படி செய்யுமாறு தங்கள் மனைவியாரை யான் கெஞ்சிக் கேட் டுக்கொள்ளுகிறேனென்று அவர்கட்குத் தெரிவியுங்கள். போர்க்களச் செய்திகளைப் பற்றிப் படைத்தலைவர்க்ளிட மிருந்து எனக்கு அடிக்கடி செய்தி வருகின்றதேயல்லாமற் காயம்பட்டவர்களைப்பற்றிய செய்தி ஒன்றும் வரப்பெற்றி லேன் ; பின்னையதில் எனக்கு மிகுந்த அக்கரையுண்டு. காயம்பட்டிருப்பவர்களும் நோய்ப்பட்டிருப்பவர்களுமான அச்சிறந்த ஏழைப் படைஞர்கள் படுத்துன்பங்களைக் கேட்டு என்மனம் ஆற்ருெணதாகின்ற தென்றும், அவர் கள் நலமெய்துவதில் யான் மிக்க விழைவுடையேனென் அறும், அவர்களுடைய அஞ்சா ஆண்மையினையும் மனத் திட்பத்தினையும் வியந்து பாராட்டுகின்றேனென்றும், இங்ங்னம் பாராட்டுவதில் அவர்தம் அரசியைவிட மிகுந்த உருக்கமுடையவர் இராரென்றும், திரு.நைட்டிங்கேல் அம்மை

Page 27
40 பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார்
யாரும் அவருடனிருக்கும் மருத்துவ மாதரும் அவர்களுக்குத் தெரிவிக்கின்றேனென்பதை எர்பர்ட் அம்மையார் உணர் வாராக. இரவும் பகலும் அரசி தன் அன்பிற் சிறந்த படைஞர்களை நினைத்துக்கொண்டே யிருக்கின் ருர், அங்ங்னமே இளவரசரும்,
இங்ங்னம், Gii,(3L-I fu .
இக்கடிதத்தைப் படித்து முடித்தவுடன், "கடவுளருளால் அரசி வாழ்க!" என்று அக்குரு கூவினர்; நோயாளிகளுக் தம் மெலிந்த குரலிற் " கடவுளருளால் அரசி வாழ்க!” என்று கூவினர். -
விரைவில் மருத்துவ மாதரார் தொகுதி மற்றென்று, வந்து பாஸ்பரஸ் கடலிணைக் கால்வாயின் ஒரமாயுள்ள மற் றைய மருத்துவச் சாலையின் வேலையை ஒப்புக்கொண்டது. வெஸ்ட் மினிஸ்டர் கோயிற் குருவின் உடன்பிறந்தாரான ஸ்டான்லி? என்னும் மாதர் ஒருவரால் இக்கூட்டத்தினர் நடத்தப்பட்டனர். இவர்களிற் சிலர் சம்பளம் வேண்டா மலே வேலை பார்த்தனர். இன்னுஞ் சிலர் சம்பளம் பெற்று வேலை பார்த்தனர். இன்னும் அயர்லாந்திலிருந்து இரக்க முள்ள மாதரார் சிலர் அவர்களோடு வந்தனர்; இவர்கள் கன்னிமைத்துறவாடை அணிய இடம்பெற்றனர். ஆனல் மற்றவர்களெல்லாரும் அரசியலாராற் கொடுக்கப்பட்ட ஒரே வகையான உடை உடுத்திருந்தது. பார்ப்பதற்கு. வேடிக்கையாயிருந்தது. கைட்டிங்கேல் அம்மையார் தாம் கினைத்த இடங்களில் அவர்களை வேலைக்கு அமர்த்தினர்.
இந்த 5ேரத்திற் கக்கற் கழிச்சல் (வாந்திபேதி) என் னும் கொள்ளை கோய் எங்கும் பரவியது. கிரிமியாப்போர்க் களத்தில் அடித்த பெருமழையினலும், அதனுலுண்டான
Westminster. , Stanley.

ஸ்குட்டாரி மருத்துவமாதர்கள் தொழில்முறை 41
கடுங்குளிரினலும் நூற்றுக் கணக்கான படைஞர்கள் கைட்டிங்கேல் அம்மையாரது மருத்துவச்சாலைக்குக் கொண்டுவரப்பட்டனர். சொல்லொணுக் குளிரின் கொடு மையால் இவர்தம் மெல்லிய மேலாடைகள் அவருடலின் மேல் உறைந்து எடுக்கமுடியாமற் பற்றிக்கொண்டன. எண்ணெயைப் பூசி அவர்கள் உடம்போடு ஒட்டியிருந்த ஆடைகளைக் கத்தரித்து எடுத்துப் பின்னர், அவர்க்கு வேண்டுவன வெல்லாங் குறைவின்றிச் செய்தனர்; இப் படைஞர்கள் பட்ட துன்பக் கதைகளைச் சொல்லவும் பெருந்திகில் உண்டாகின்றது. பல முறைகளில் இவர் நோயாளிகளின் ஒரு வரிசைத் தொகுதியில் இருபதுமணி நேரம் நின்றபடியேயிருந்து அவர்களுக்கு வேண்டுவன செய்தார். இன்னும் அங்கு வேனிற் காலத்திலுங் கூடக் கக்கற் கழிச்சல் பரவியபடியாகவே யிருந்தது. இக் நோயாளிகளுக்குத் தம் உடம்பாலும் மனத்தாலும் உறைத்து நின்று உதவிகள் செய்து, தமக்கு கல்லுணவு கூடக் கிடையாமற் பெரும்பாடுபட்ட அம்மருத்துவமாதர் களும் உடல்நலங் கெட்டார்கள். அவர்களில் ஒருவர் கைட்டிங்கேல் அம்மையாரின் சிறந்த நண்பராவர்.அங்கே, ஐயகோ ஒரு திங்களுக்குள் ஏழெட்டு மருத்துவர்கள் இக் கொடு நோயால் இறந்தனர் ! எஞ்சியவர்கள் எட்டுப் பேர். ஆதலால், ஆயிரக்கணக்கான நோயாளிக ஆளப் பார்க்கும் எல்லாப் பொறுப்புகளும் அம்மையார்க்கே உண்டாயின; மற்றைக் காலங்களிற் சிறிதும் ஒய்வில்லா மல் உழைக்கும் அம்ழையார்க்கு இப்போது எத்துணைப் பேருழைப்பை இங்நோய் தந்திருக்கும் இக்கக்கற் கழிச்சல் நோய் எவ்வெவ்விடத்தில் மிகுந்திருந்ததோ அவ்வவ்விடத் தில் கைட்டிங்கேல் அம்மையாருங் காணப்பட்டார். இவ ரது மிகவுங் கருத்தான பார்வையால் இக் கொள்ளை நோய் விரைவில் அவ்விடத்தை விட்டகன்றது. இக் கொள்கள
698-4

Page 28
42 பிள்ாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார்
நோய் ஒருவாறு அடங்கியபின், 1855 வைகாசித் திங்களில் இவர் கிரிமியாவிலுள்ள மருத்துவச் சாலைகளைப் பார்க்கக் கப்பலிற் புறப்பட்டார். புறப்பட்டுக் கப்பலின் மேல் தட்டிற்படுத்திருந்தபோது, தாம்செய்யவேண்டிய கடமை கள் செய்யப்படாமல் வீணே கழிந்தனவே என்றெண்ணு வதற்கிடமில்லாதவாறு, அக்கடலின் நீலநிறக் காட்சி அவரை மகிழ்வித்தது. மருத்துவமாதரார் புலர் அவரோ டிருந்தனர். இவ்வாறு கடற்பயணத்தை முடித்து , மருத் துவர்கள் தம்மைத் தொடர்ந்துவர கைட்டிங்கேல் அம்மையார் கிரிமியாவின் கடல்கரையில் இறங்கினர்.
இறங்கியவுடன் கிரிமியா மருத்துவச்சாலைகளைச் சுற் றிப்பார்க்கச் சென்ருர் ; மருத்துவச் சாலைகளைச் சுற்றிப் பார்க்கும்பொருட்டு இவர்க்கு ஒரு குதிரை கொடுக்கப் பட்டது. இவர் குதிரைமேற் போகும்போது, தாம் சிறுமியாயிருந்த ஞான்று தங்குருவொடு குதிரைமேற் சென்ற நிகழ்ச்சிகளை யெல்லாம் நினைவு கூர்ந்தார். குதிரை மேற் போவதற்கென அமைந்த உடையை உடுத்திக் கொண்டார். இவ்வுடையை அங்கிருந்த ஆங்கிலப் பெண் கள் கால்வரில் ஒருவரிடமிருந்து இரவலாகப் பெற்ருர், இவர்பாற் குதிரை ஏற்றத்திற் குரிய உடுப்பு இருந்த தில்லை. இவருடைய குதிரை புதிது. பழக்கப்பட்டதாயும் நல்லியல்பு வாய்ந்ததாயு மிருந்தது. ஆனல் அஃது அச்ச முடையது ; போகும்போது அது வழிதப்பித் துள்ளி ஒடியும், உதைத்தும் பெருங்கூச்சலிடும் ; பெருக்தொல்லே யினையே உண்டுபண்ணும்; ஆனலும் இவர் தங்குதிரை செய்யும் இவ்வளவு தொல்லைகளையும் ஒரு பொருட் படுத்தினரல்லர்.
நாள் முழுதும் அம்மையார் மருத்துவச் சாலைகளைப் பார்ப்பார். சில நேரங்களிற், போர் மும்மரமாய் நடந்து

ஸ்குட்டாரி மருத்துவமாதர்கள் தொழில்முறை 43
வெடிகள் கிளம்பும்போதுங்கூட, உள்நின்று பகைவரைச் சுடுதற்கென வெட்டப்பட்ட நீண்ட குழிகளிற் படை, ஞர்கள் அடிபட்டுக் காயமடைந்து கிடக்கின்றர்களா என்று பார்க்க அவற்றினருகே போவார். இவர் இத்துணை அஞ்சாகெஞ்சினராய்த் தமக்கு வரும் ஊறுபாட்டையுஞ் சிறிதும் எண்ணுமற் போர்முகத்து வெடிகளின் ஊடே சென்று காயம் பட்டவர்களைத் தேடலானது எதனலென் ருற் கூறுதும் : ஒரு முயற்சியைச் செய்து முடித்தலி லேயே உள்ளம் உறைத்து நின்றர்க்கு, வேருென்றிலும் நினைவு செல்லாது, அம்முயற்சிக்கு வேண்டுவன செய் வதிலேயே கருத்து முனைந்து நிற்கும். இதன்ை உயர்ந்த முயற்சி செய்வார் மாட்டுந் தாழ்ந்த முயற்சி செய்வார் மாட்டும் ஒவ்வொருகாளுங் காணலாம். பொருள் தேடித் தொகுத்தலிலேயே கருத்து வைத்து வாணிகஞ் செய்வார் பலர் ஊணுறக்கமின்றித் தமது வருத்தத்தையும் பாராமல் அல்லும் பகலும் உழைத்தலை நாம் காணவில்லையா? இங்ங்னமே தாழ்ந்த முயற்சிகள் பலவற்றில் நினைவுஞ் செயலும் ஈடுபட்டு நிற்பாரும், தம் பொருட்டும், தம் மனைவி மக்களின் பொருட்டும், உழைப்பவராயிருக்க, கம் அருமை கைட்டிங்கேல் அம்மையாரோ, தமக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத காயம்பட்ட போர்ச் சேவகர் பாலும் ஏழை எளிய மக்கள் பாலும், வாயற்ற விலங்கி னங்கள் பாலும் அளவற்ற அன்பும் இரக்கமும் உடை யரா யிருந்தமையினலேயே, இவர் தமது வருத்தத்தையும் பாராது, தம் உயிரையும் ஒரு பொருட்டாக எண்ணுது வெடிகுண்டுகளின் ஊடேயுஞ் சென்று காயம்பட்டவர் களைத் தேடினர். இத்தகைய இயற்கை உயர்ந்த தெய்வத் தன்மை யுடையார்க்கே யுண்டாகும். அத்தெய்வத் தன்மை யுடையாரே அன்பு வடிவினராவர். அத்துணை அன்பு வாய்க்கப்பெற்ற உயர்ந்தோர்கள் பிறர் துயர்

Page 29
44 பிளாரன்ஸ் கைட்டிங்கேல் அம்மையார்
நீக்கத் தமது உயிரையுங் கொடுப்பர் என்பது பற்றி யன்ருே தெய்வப் புலமைத் திருவள்ளுவர்,
* அன்பிலா ரெல்லாங் தமக்குரியர் அன்புடையார்
என்பு முரியர் பிறர்க்கு"
என்றருளிச் செய்தார். அப்போது வெயிலின் கொடுமை யும் ஒருபுறம் வருத்தியது. இத்துணைப் பேருழைப்பின் பயனுய் கைட்டிங்கேல் அம்மையார் திடீரெனக் கடுங்காய்ச் சலாற் பற்றப்பட்டு மருத்துவச் சாலைக்குக் கொணரப் பட்டார்; இவர்பால் அன்புமிக்க தாமஸ் என் பாரும் இவ ருடன் சென்றர். இவர் கோய்ப்பட்டமைக்காக அங் குள்ளாரனை வரும் பெரிதுங் கலங்கித் துன்புற்றர்கள். நல்ல காலம்; அம்மையார் பதினன்கு நாட்களில் நலம் பெற்ருர், தமது கோய் நீங்கத் தம்மைப் பேரன்புடன் பார்த்தவர்கட்குப் பெரு நன்றி செலுத்தினர். உடல் வலுவேறுதற் பொருட்டு இவர் தம் ஊருக்குச் சென்று இளைப்பாறுதல் நன்றென்று மருத்துவர்கள் வற்புறுத்திக் கூறினர்கள். ஆனல், அம்மையார் தம் ஊர்க்குப் போவதை மறுத்து, மறுபடியும் ஸ்குட்டாரிக்குச் சென்ருர். சென்று, தம் அருமை நண்பரான ரக்லான் இறந்து பட்ட தைக் கேட்டுப் பெருக் திகிலடைந்தார். இங்கண்பரது இறப்பினுல் உண்டான பெருக் துன் பத்தில் அலைப்புண்டு இவர் தம் வேலையை மறுபடியுஞ் செய்யத் துவங்கச் சில நாட்களாயின. இந்நாட்களில் இவர் ஸ்குட்டாரியின் இடு காட்டுக்குச் சென்று அங்கே திரிவார். போரிற் கடுங் காயம்பட்டிறந்த படைஞர்களுக்காக நினைவுக்குறி ஒன்று அங்கு வைக்கப்படல் வேண்டுமென்றெண்ணினர். அவ ரெண்ணப்படியே சிறிது காலத்துக்குப் பிறகு, அஃது அங்கே அமைக்கப்பட்டது.
அதன் பிறகு புரட்டாசித் திங்களில் சண்டை முடிக் தது. ஆனல், அதிற காயம்பட்ட படைஞர்கள் நலம்

ஸ்குட்டாரி மருத்துவமாதர்கள் தொழில்முறை 45
பெருமலிருந்தார்கள்; தம்முடனிருந்த தம் நண்பர் பலர் கலமடைந்து தத்தம் ஊர்களுக்கு மகிழ்வுடன் போகத் தாம் மட்டுங் காயங்களாற் பெருந்துன்பமுங் களைப்பு மடைந்தவர்களாய் விடப்பட்டமைக்குப் பெரிதும் வருந்தி னர். ஆனல், நைட்டிங்கேல் அம்மையார் அவர்களை மிகவும் அன்பாய்ப் பார்த்திராராயின், அவர்கள் அங் கிருந்தது சொல்லொணுப் பெருந்துன்பத்தை யுண்டு பண்ணி யிருக்கும். முடிவில், அம்மையார் தம் ஊர் போவதற்கு முன்னரே, இப் படைஞர்கள் மிகவுங் கருத் தாய்ப் பார்க்கப்பட்டுத் தம் ஊர்கட்குச் சென்றனர். தாம் நோயாய் விழுந்தமையாற் கிரிமியாவில் முடியாது விடப் பட்ட தமது வேலையை முடிவு செய்தற்கு அம்மையார் இரண்டாம் முறையாக அங்குச் சென்ருர்,
பனிக்கட்டியால் மூடப்பெற்ற மலைகளின் மேலே ஏறிச் செல்வதற்கென்று 1855-ஆம் ஆண்டில் தமக்கு நன்’ கொடையாகத் தரப்பட்ட ஒரு சிறு வண்டியில் ஏறிச் சென்று அங்கிருந்த மருத்துவச் சாலைகளிலுள்ள காயம் பட்ட படைஞர்களைப் பார்த்து ஓம்பிய வகையாய் மழை காலம் முற்றுங் கழித்தார். சிறிது காலத்திற்கென்று ஒரு படையும் அங்கே நிறுத்தப்பட்டிருந்தது. ஏனென்ருல், ஒற்றுமை. யுடன்படிக்கை ஏற்படும் வரையில் அங்கு யாதொரு குழப்பமும் ஏற்படாமல் எல்லாம் ஒழுங்காக கடைபெறும்படி பார்க்க வேண்டியிருந்தது. படைஞர் களுக்கு மனக்கிளர்ச்சியும் பொழுதுபோக்கும் உண்டாதற் பொருட்டு நூல்களும் புதினத்தாள்களும் விடுக்கும்படி இங்கிலாந்திலுள்ள தம் நண்பர்களைக் கெஞ்சிக் கேட்டு அம்மையார் கடிதங்கள் எழுதினர். அவ்வேண்டுகோளுக் கிசைக்து முதன்முதல் அவற்றை அனுப்பி வைத்தவர்கள் விக்டோரியா அரசியாரும், அவர்தம் அன்னே யாருமாவர். கைட்டிங்கேல் அம்மையாராற் செய்ய முடியாததாகக்

Page 30
46 பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார்
கருதப்பட்டது ஏதுமேயில்லை. கல்விபயிலும் விருப்ப முடைய பிள்ளைகட்கும் பிறர்க்கும் உதவியாம்படி பள் ளிக்கூடங்கள் அமைத்ததோடு விரிவுரைகளும் நடை பெறச் செய்தார். போர் மறவர்கள் குடித்துக் கெட்டுப் போவதைத் தடைசெய்யும் பொருட்டு ஒரு விடுதியும் ஏற்படுத்தினர். பணம் அனுப்பும் நிலையம் ஒன்றமைத்துத் தம்மவர்க்குப் பணமனுப்ப விரும்புவோர்க்கு வேண்டிய வசதிகளுஞ் செய்தார்.
1856-ஆம் ஆண்டு, பிரித்தானியப் படை இங்கிலாங் துக்குச் சென்றபிறகு, பலாக்கிளேவா? மலையடிவாரத்திலே போரில் இறந்துபட்டவர்களை நினைவுகூருங் குறியாக ஒரு வெள்ளைச் சிலுவைக்கல்லை அம்மலைக் கொடுமுடிமேல் நிறுத்து தற் பொருட்டாக அம்மையார் பின்னுஞ் சிறிது காலம் அங்கே தங்கினர்.
பட்டங்களும் நன்கொடைகளும் ள் ல்லாப் பக்கங் களிலுமிருந்து அம்மையார்க்கு வந்து குவிந்தன. அவர் தமது கலங்கருதாது செய்த செயற்கரும் பேருதவிகளே வியந்து பாராட்டி ஒவ்வொருவருக் தமது கல்லெண்ணத் தைத் தெரிவிக்க முயன்ருர்கள். நைட்டிங்கேல் அம்மை யார் இங்கிலாந்து திரும்புதற்கு ஓராண்டு முன்னரே, விக்டோரியா அரசியார் தம் போரமைச்சரை நோக்கி, கைட் டிங்கேல் அம்மையாருக்குக் கைம்மாருகச் செயற்பாலது யாதென்று வினவ, அவர் "ஒரு மருத்துவக் கழகம் அமைத்து அதில் தாம் கண்டறிந்த சிறந்த மருத்துவமுறை களைக் கற்பிக்கச் செய்தல் ஒன்றையே நைட்டிங்கேல் அம்மையார் விரும்புகிருர்," என்று கூறினர். இவர் கூறி யதை எல்லாரும் மனமகிழ்வோடு ஏற்றனர். அரசியலி லிருந்தும் படைஞர்களிடமிருந்தும் பொருள் திரட்டப் பட்டு கைட்டிங்கேல் அம்மையார்க்கு அனுப்பப்பட்டது.
Money order office. * Balaklava.

ஸ்குட்டாரி மருத்துவமாதர்கள் தொழில்முறை 47
மாதரார் மருத்துவத் தொழில் பயிலுவதற்கு ஒரு பள்ளிக் கூடமும், இருப்பதற்கு ஒரில்லமும் அமைப்பதில் அப் பொருள் பயன்படுத்தப்பட்டது. 1860-ஆம் ஆண்டில் பாராளுமன்றத்திற்கு எதிரே இவரது கருத்தின்படி புதுக் கட்டிடங்கள் கட்டி அவற்றில் கோயாளிகள் வைக்கப் பட்டனர்.
முடிவாகத் தம் உடல்நலக் குறைவால் நைட்டிங் கேல் அம்மையார் தம் அத்தையோடு தாம் பிறந்த ஊர்க்கு வந்தார். அங்கும் அவர் ஒய்ந்திருக்கக் கூடாவாறு எல்லாப் பக்கங்களிலும் வணக்கக் கடிதங்களும் நன்கொடைகளும் வந்து குவிந்தன. பல்வேறு காடுகளிலிருந்துங்கூடப் பெருக் திரளான மக்கள் அம்மையாரைப் பார்க்க வந்தனர். அம்மை யார் ஒரு சிறிதும் புகழை விரும்பினவரல்லர். எவ்வா றெனில், அவர் ஸ்குட்டாரியினின்றுங் தம் ஊர்க்குப் புறப் படப்போவதை யறிந்து அரசியலார் அவர் செய்த பேரருட் பணியின் பெற்றிக்கு அறிகுறியாகச் சிறந்த படைக்கப்ப லொன்று அவர்க்கனுப்பிப் பெருஞ் சிறப்போடு அவரை வரவேற்க ஏற்பாடு செய்திருந்தனர். இஃதறிந்த அம்மை யார், இத்துணைச் சிறப்புக்களையும் வரவேற்புகளையும் ஏன்றுகொள்ளத் தாம் தகுதியற்றவரென்று கூறி அவர் கள் அறியாமல் அமைதியாய்த் தம் ஊர்போய்ச்சேர்ந்தார். இவ் அம்மையார் ஆற்றிய அரும்பெருஞ் செயலுக்காக இவன்ரப் புகழாதார் எவருமிலர். பெண்பாலாரிலும் ஆண்பாலாரிலும் எவருஞ் செய்திராத அத்துணைப் பெரிய மருத்துவ வேலையை ஏற்று, ஆயிரக்கணக்கான நோயாளி களுக்குத் தாய்போல் அன்புகர்ட்டி அவர்களின் நோய் தீர்தற்கு வேண்டுவன செய்த நைட்டிங்கேல் அம்மை யார்க்கு எத்துணைப் பெருஞ் சிறப்புக்கள் பிறர் செய்தா லுஞ் செய்யாவிட்டாலும் அவை தாமாகவே அவர்க்கு
Parliament.

Page 31
48 பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார்
அமைவ ஆயின. என்ருலும், இவர் கிரிமியாவில் இருந்த பொழுது 1856-ஆம் ஆண்டு சனவரித் திங்கள் கிரிமியாப் போர்க்களத்திற் படைஞர்களுக்கு செய்த அரும்பேருத விக்கு நன்றியறிதலாக விக்டோரியா அரசியார் தம் கைப்பட எழுதிய ஒரு வாழ்த்துக் கடிதத்துடன் ஒளிமணிக் கற்க ளிழைத்த அழகிய பதக்க மொன்றும் அளித்தார்; அப் பதக்க நடுவில் "அருளுடையார்க்கு ஆண்டவன் அருள்புரிவன் " என்ற ஒரு சொற்ருெடரும், பளபளப்பான மூன்று வைரக் கற்களால் குழப்பட்ட "கிரிமியா " என்னுஞ் சொல்லும் எழுதப்பட்டிருந்தன. இன்னுங், துருக்கி மன்னரான சுல்தானும் ஒளிமணிக் கற்கள் இழைத்த அணிகலன் ஒன்றை இப்பெருமாட்டிக்குப் பரிசிலாகக் கொடுத்தார். இது மட்டுமன்றி, 1907-ஆம் ஆண்டில் ஏழாவது எட்வர்ட் அரசர் பெருமான் இப்பெருமாட்டிக்கு, எத்தகைய பட்டம் உரித் தாகுமென் றெண்ணிப்பார்த்து இதுவரை மாதர்கள் எவர்க்கும் அளிக்கப் பெரு ததும், லார்டு மார்லி 1 என்னும் பெரியார்க்கும். அக்காலத்திற் பேர்பெற்ற அறிவு நூற்புல வர் சிலர்க்குமே அளிக்கப்பெற்றதுமான "அரசன் தகுதிச் சுற்றம் ”* என்னும் பெரும்பட்ட மளித்தார். இன்னும், இலண்டன் நகர் மன்றத் தலைவர் "நகர் மன்ற உரிமை " ? என்னும் பட்டம் அளித்தார்.
8. அம்மையாருடைய கடவுட்பற்றும் அறிவுரைகளும் அம்மையார் தாம் செய்த இத்துணைப் பெருவேலைக ளெல்லாங் கடவுளருளாலேயே நடைபெற்றன வென்
Lord Morley. The Order of Merit. s. The Freedom of City.

அம்மையாருடைய கடவுட்பற்றும் அறிவுரைகளும் 49
கின்ருர், /இவர் கிறித்துவ சமயத்தினர்; அச்சமயத்தி னிடத்துப் பேரன்பும் பெரும்பற்று முடையவர். ஆனல் இவர் பிறசமயங்களிலுள்ள நன்மைகளையும் பாராட்டு மியல்பினர்.
* எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு ’ என்னும் குறள்மொழி அம்மையார் கருத்துக்குப் பொருந்து தாயிற்று”
இறைவ னெண்ணத்தை முதலாகக் கொண்டே அவ ரவர் தத்தம் வேலைகளைச் செய்தல் வேண்டு மென்று, இவர் தம்முடன் இருந்து உதவிசெய்யும் பெண்மக்களுக்கும், மருத்துவம் பயிலும் மாதர்களுக்கும் நேரிலும் பல விரி வுரைகளிலுந் தாம் எழுதிய பல கட்டுரைகளிலும் நூல் களிலும் கூறியிருக்கின் ருர், அவற்றுட் சிலவற்றை ஈண்டு எடுத்து எழுதுவாம்:-
" நீங்கள் உங்கள் பிற்கால வாழ்வில் எவ்வேலையைச் செய்யப் பழகவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அவ் வேலையை ஆண் மக்களைப் போலவே திறமையாகச் செய் தற்கு முன்னரே பயின்றறிதல் வேண்டும்/ இன்றேல், பின்னர் அதனைச் செங்வையாக ச்ெய்ய முடியுமென்று எண்ணு தீர்கள். ஆண்மக்களைப் போலவே நீங்களும் உங்கள் வேலைக்குரிய செவ்வையான முறைகளைக் கடைப் பிடித் தொழுகுதல்வேண்டும். அவ்வாறு கடந்தாற்ருன் ங்ேகள் கடவுளுடைய பணியை முற்றச்செய்தல் முடியும். ஏனெனில், நீங்கள் அரைகுறையாகச் செய்யும் வ்ேலைக் குக் கடவுள் துணைபுரிய மாட்டார்.
மருத்துவச் சாலையில் மட்டுமன்றி, எல்லா விடங்களி லும் நோயாளிகளுக் குதவிசெய்ய்ம் ஒவ்வோர் ஆணும் பெண்ணுஞ் சமயத்தொண்டர் என்றே சொல்லுதல் வேண்டும். இவர்கள் வீணே வழக்காடுஞ் சமயகுருக்கள்

Page 32
50 பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார்
போலாது, நோயாளிகளின் உடலுக்கும் உயிருக்கும் வருங் துன்பத்தைத் தமது இனிய இயற்கையினலேயே வாய் பேசாது தீர்ப்பவராவர். இவர்களுக்கு மிகுந்த பொறுமை யும், அடக்கமும், அன்பும் வேண்டற்பாலன வாகும். இவ் வாறு துன்புற்ரு ரைக் கருத்தாய்ப் பார்ப்பவர்க்குத் தாய வுள்ளமும், மிகுந்த பகுத்தறிவும், மேலான பணிவும் உண் டாகுமல்லவோ?
* கடவுளால் அளிக்கப்பட்ட தமது வாழ்க்கையைப் பயன்படுத்தும் முறையில் ஒவ்வொருவருங் கடவுளுக்குப் பொறுப்பாளி யாவரென்றும், பிறரது நன்மைக்கோ அல்லது அதன் இன்மைக்கோ ஒவ்வொருவரது வாழ்க்கை யும் இன்றியமையாததாயிருக்கலாமென்றும் அம்மையார் கன்குணர்ந்து கூறியிருக்கின்ருர், காபேட்ாறுக் தமது பணி யைக் கடவுள் பணியாகச் செய்கிற ஒவ்வொரு மருத்துவ மாதருங் கடவுள் அருளைப்பற்றி ஒருமொழிதானும் பேசாதவராயிருந்தாலும் அவருடைய அருளே உலகில் விளங்கச்செய்யுங் தன்மையினல், அவரெல்லாருஞ் சமயத் தொண்டரேயாகின் ருர், தமது பணியைக் கடவுள் பணி யாகச் செய்யாத ஒவ்வொருவரும் பல சொற்களை விரித்துப் பேசினும், பெரியார்தம் மேற்கோளுரைகளை எடுத்துக் கூறினும் அவரெல்லாரும் உலகிற்குத் தீமை செய்பவரே யன்றி நன்மை செய்பவராகார். காம் சொல்வனவுஞ் செய்வனவும், நமது தோற்றமும் எல்லாம், பிறரை வழிப் படுத்தவல்லன அல்ல. ஆனல் நம்முடைய உண்மை வாழ்க்கையே அவ்வாறு செய்யத்தக்கதாகும்.
* நீங்கள் கடவுளுக்கு அஞ்சி ஒன்றைச் செய்தலும் இன்னது செய்தாற் கடவுள் உவப்பன் ; இன்னது செய் யாக்காற் கடவுள் வெறுப்பன் என்னும் எண்ணங்களால் உந்தப்பட்டுப் பிறர்க்குதவி செய்தலும் விழுமிய செயல்க ளாகா. அச்சத்தாற் செய்யும் பணி அன்பின்பாற் பட்ட

அம்மையாருடைய கடவுட்பற்றும் அறிவுரைகளும் 5
தன்றுw/மருத்துவமாதா யிருப்பவள் நல்லியல்பு மிக்கவளா யிருத்தல் வேண்டும். நல்ல பெண்மகளெனப்படுபவள் கடவுட் பணியை மிகக் கருத்தாயுஞ் சுறுசுறுப்பாயுஞ் செய்பவளாயிருப்பள். இன்றேல், அவள் உண்மையில் வெற்றே சையிடும் மணிக்கே ஒப்பாவள். நோயாளிகளுக் குதவிசெய்யும் கல்லெண்ணம் பெண்மகளொருத்திக் கமையுமாயின் அவளே இறைவனுக் குகந்த அடியா ளாவிள் ஏனெனில், உலகிலுள்ள எல்லா வுயிர்களுக்கும் இறைவன் அளவிலா நன்மையைச் செய்து வருகின்று னதலால் அவனைப்போல் நன்மை செய்யு மொப்பற்ற இயல்பு ஒரு சிறிது அவள் வாய்க்கப் பெறுவாளாயின். அவளே கடவுளிடத் துண்மையான அன்பு வைப்பவள். கம்முடைய வாழ்க்கையானது இறைவனை வேண்டிகிற்கும் கிலையிலமைந்திருக்கின்றது; நாம் எச்சொல்லைச் சொன் னலும், எச்செயலைச் செய்தாலும் அவையெல்லாம் இறைவனை நினைந்தே நடைபெறல் வேண்டும் 

Page 33
52 பிளாரன்ஸ் கைட்டிங்கேல் அம்மையார்
பத்தை நாம் உணர்ந்தமைபோல வேறு யார் உணரவல் லார்" என்பதைச் சொல்லவும் வேண்டுமோ ? ஆனல் * என்செயலாவது யாதொன்றுமில்லை; இனித் தெய்வமே உன் செயலே யென்றுணரப் பெற்றேன் " என்று பட்டினத் தடிகள் அருளிய திருமொழி இங்கே கினைவுகூரற்பாற்று.
"நோயாளியைப் பாதுகாக்கும் வேலை மிகவும் விழுமிய தொன் ருகும். அதன் பெருமைக் குரியவை யாவையெனின், விடாமுயற்சியுஞ் செய்வன திருந்தச் செய்தலுமேயாம். நோயாளிகளைப் பாதுகாக்கும் மருத்துவ மாதர்களுக்குத் துப்புரவும் அமைதியும் சிறந்த இயல்புகளாகும். மருத் துவச் சாலைகளில் நடமாடும் அம்மாதர்கள் தலைவாயிலிலும் படிக்கட்டுகளிலும் கின்று பேசும்போதும் மிக மெதுவாய் அமைதியாய்ப் பேசுதல் வேண்டும். நோயாளிகளின் அறை களினின்றும் மாதர்கள் வரும்போது ஒசைபடாமற் கதவு களை மெதுவாகச் சாத்தி வரல் வேண்டும். அறைகளிற் புழங்கும் எனங்களை ஒழுங்குபடுத்தும்போதும் ஓசை பிறவாவாறு அதனைச் செய்தல் வேண்டும். நோயாளியின் அறை தெய்வ உலகுபோல் தூய்மையும் அமைதியுமுடைய தாய் இலங்குதல் வேண்டும். கோயாளிகளின் உடம்பை மட்டுக் துப்புரவாக வைப்பது போதாது; அவர்களிருக்கும் அறையையும் மிகவுங் துப்புரவாக வைத்தல் இன்றியமை யாதது. இந்த முறையிற் செய்யவேண்டிய எந்தச் சிறிய வேலையையுஞ் சிறுமை தருவதென்று எண்ணுதல் சிடடTது. * நீங்கள் 5ோயாளிகளைக் கண்ணுங் கருத்துமாய்ப் பார்ப்பதைக் கடவுட் பணியாக எண்ணவில்லையா? அப்படிப் பார்ப்பதானது கடவுளைத் தொழுதலாகுமின்ருே? ஏனெனிற் கடவுள் மக்களிடத்திற் காட்டும் அருளிரக்கத் தைக் கண்டு, நீங்களும் அன்புடன் நோயாளிகளுக்குச் செய்யும் பணியானது சமயத் தொண்டின் சிறப்பியல்பாகு மன்ருே ? உங்கள் பணியை நீங்கள் திருத்தமுறச் செய்

அம்மையாருடைய கடவுட்பற்றும் அறிவுரைகளும் 53
தற்கு நீங்கள் இப்பொழுது அறிந்துகொள்ளாவிட்டாற் பின் அதனை நீங்கள் எப்படிச் செய்யமுடியும்? இந்தப் பணிக்காக நீங்கள் நாடோறும் பயிலுகிற பயிற்சி கடவுளே வழுத்துவதாகாதோ ?"
*ஒருவன் கோய் நீங்கி நலம்பெறுதல் கடவுளருளாலே யாம் என்று கூறுவது உலகவழக்கு. / ஆனல், அது மட்டு மன்று; ஒருவன் நலம்பெரு திருத்தலும், கோய்வாய்ப் படு தலும், இறத்தலுங் கூடக் கடவுளருளாலேயாம். இவை யெல்லாம் நிகழ்வது கடவுளின் ஆணைவழியா லன்றே? இவ்வாணை வழி யொழுகுதல் இறைவனுடைய பேரின் பத் தையும் பேரருளையும் பெறுதற்குரிய வழியன்ருே ? கொள்ளைநோய் வருதலும் வாராதொழிதலும் இறை செயலே யாகும். ஆனல், இவை எல்லாம் நமக்கு வருவ தானது கடவுளின் ஆணைவழி காம் ஒழுகுதற்கேயாம்."
* அவனன்றி யோயணுவும் அசையாது” என்ற அருண்மொழிக் கேற்ப அம்மையார் இறைவனை இமைப்பொழுதும் மறந்தவரல்லரென்பது அவரது வர லாற்றினற் புலனுகின்றது. அம்மையார் மற்றவர்களுக்குக் கூறிய அறிவுரைகளின்படியே தாமும் கடந்துகாட்டிப் பெரும்பயன் விளைத்தமை பெரிதும் பாராட்டற் பால தொன்றன்ருே?
* சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணஞ் செயல்' * கற்க கசடறக் கற்பவை கற்றபின்
கிற்க அதற்குத் தக" என்ற திருக்குறட் பொருள்கள் அம்மையாரது வாழ்க்கையில் கன்கு விளங்கலாயின. அம்மையாரின் கீழிருந்து வேலை பார்த்த மாதர்களும், அவருடைய அறிவுரைகளைக் கேட்ட வர்களும் அவர்போற் புனிதராக ஒழுகினர்.
* Notes on Nursing (Her best known work was published in 1860.)

Page 34
9. அம்மையாரது பிற்கால வாழ்வு
அம்மையார் நீண்டகாலமாக மருத்துவக் கழகங்களை நடாத்தி முடிவில் கோயின் மிகுதியால் அது தணித்தற் பொருட்டுத் தம் ஊர்க்கு வந்தார். அப்போதுதான் பெரும் பட்டங்கள் பெற்றுப் பெரிய வேலைகளிலுள்ளா ரெல்லாரும், மற்றுமுள்ளாரும் பெருங்கூட்டமாய் வந்து அவரை வரவேற்றனர். இத்தகைய பெருஞ்சிறப்பான வரவேற்புப் பெண்பாலர் எவர்க்கும் இதுகாறும் கடந்த தில்லை. e
அம்மையார் பல்லாண்டுகள் நோயாளிகளுக்காக உழைத்த பேருழைப்பினலும், ஆண்டின் முதிர்ச்சியாலும் மிகவும் உடல் மெலிந்தவரானர். ஆகலான், இவர் பெரும் பாலும் வெளியே போகாமல் அறைக்குள்ளேயே யிருந்தார். அவ்வாறிருந்தாலும், எங்கேரமும் எழுத்தின் வழியாய் உலகத்தார்க்குப் பல நன்மைகள் செய்து கொண்டே யிருந்தார்; பல கட்டுரைகளும் எழுதிப் புதினத்தாள்களில் வெளியிட்டார். இவர் இங்ங்னம் ஒவாது செய்யும் எழுத்து வேலையால் மேன்மேலும் உடல் நலங் கெடுமென்று அன்பர்கள் பலர் எவ்வளவோ வற்புறுத்திக் கூறியும், அம்மையார் அவ்வாழ்க்கையை மாற்ற முடியவில்லை. ஆங்கில நாட்டிலும் பிறநாடுகளிலு முள்ள மருத்துவத் தலைவர்களெல்லாரும் மருத்துவச் சாலைகளை நடாத்துஞ் சிறந்த முறைகளைப்பற்றி அம்மை யாரை எழுதிக் கேட்டறிந்தனர். உலகத்திற் பெரியவ ரென நன்கு மதிக்கப்பட்டவர்களில் அம்மையாரும் ஒருவராவர். .
அம்மையார் ஒருகால் அரசியாரைக் காணச் சென்ருர், அப்போது அரசி, அரசர், அமைச்சர் எல்லாரும் நோயாளி களுக்குச் செய்யவேண்டிய சீர்திருத்தங்களைப்பற்றி அம்மையாரோடு பேசிக்கொண் டிருந்தார். அம்மையார்

அம்மையாரது பிற்கால வாழ்வு 55
பேசியதைச் செவ்வனே பார்த்த அரசர் பெருமான் தம் காட்குறிப்புப் புத்தகத்திற், " போர் மறவர்களின் மருத் துவச் சாலைகளின் குறைபாடுகளையும் அக் குறைபாடுகளை நீக்கத்தக்க சிறந்த முறைகளையும் கைட்டிங்கேல் அம்மையார் மிகத் தெளிவாக நமக்கு அறிவிக்கின் ருர் ; அவரோடு பேசி மிக மகிழ்க்தோம் ; அவர் மிகுந்த அடக்க முடையவர் " என்றெழுதி வைத்தார்.
நாடு நகரங்களின் கலங்கள், மருத்துவம், படைஞர் களின் மருத்துவச் சாலைகள் என்னும் இவற்றின் முன்னேற்றத்திற்காக எவ்வளவு தம்மாற் செய்யக் கூடுமோ அவ்வளவும் அம்மையார் செய்தார். அம்மையார் செய்த முறைகள் போர் மறவர்களுக்கு மட்டுமல்ல; ஏனையோர்க்கும் பயன் அளிப்பவையேயாம். காட்டுப் புறங்களிலும், நெருக்கமான இடங்களிலுமுள்ள ஏழை மக்கள் தம் வீடுகளையும் இடங்களையும் துப்புரவாக வைத்துக்கொள்ளும் வழிகளை அவர்க்கறிவிக்குமாறு இங்கிலாந்திலும் ஏனையநாடுகளிலும் மேற்பார்வையாளர்கள் அரசியலாரால் அமர்த்தப்படல் வேண்டுமென்று பல புதினத்தாள்களுக்கு மெழுதினர். அம்மையார் கருத்துக் கள்ையும், நோக்கங்களையும் மிக்க ஆவலோடு எதிர்பார்த் திருந்த அரசியலார் அவர் கருத்துக்கிசைய கலத்திற்கு மேற்பார்ப்பவர்களை ஆங்காங்கு அமைத்தனர்.
இன்னுமிவர், தம் காட்டிற்கேயன்றி இந்தியாவிற்கும் இத்தகைய பல பெரு நன்மைகளைச் செய்தார். இந்தியாவி லுள்ள படைஞர்களுஞ் செவ்வனே பார்க்கப்படல் வேண்டுமென் றெழுதினர். இந்தியாவின் குடிமக்கள் கோயின்றி வாழும் வழிகளை அறிதல் வேண்டுமென்று இவர் பேராவல் கொண்டார். பாம்பே, கல்கத்தா, சென்னை முதலிய தலைநகரங்களில் மக்கட் கூட்டம் மிக நெருக்கமா யிருப்பதால் அங்குக் கொடிய நோய்கள் பரவாவண்ணம்

Page 35
56 பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார்
இடங்கள் துப்புரவாக இருக்கவுங் தூய தண்ணிர் அமைத்துக் கொடுக்கவும் ஆங்காங்குள்ள தலைவர்களுக்கு எழுதிப் பெருமுயற்சி செய்தார்.
இன்னும் இவரது அளவிடப்படா அரும்பேருழைப் பினைக் குடிமக்களெல்லாரும் பாராட்டி ஐம்பதாயிரம் பவுன் திரட்டித் தொகுத்து அவர்க்குப் பரிசாக அளித்தனர். ஆனல் தங்கலஞ் சிறிதுங் கருதாத இப்பெருமாட்டி அப் பெரும் பொருளேத் தமக்கென வரைந்து வையாமல், மருத்துவக் கழகங்களும் பள்ளிக்கூடங்களும் அமைத் தற்கு அதனைப் பயன்படுத்தினர்.
இவ்வம்மையாரைப் பற்றற்ற துறவியென்றும் அழைக்கலாம். நல்ல ஊணும் உறக்கமு மின்றி அல்லும் பகலும் நோயாளிகளோடிருந்து, அவர்களை கலப்படுத்து தற்கெனவே தம் வாழ்காள் முழுதும் ஒப்படைத்த இவ் அம்மையாரே உண்மைத் துறவியாவர். பொதுப்பட நோக்கும்போது மக்களெல்லோரும் படும் பாடெல்லாம், பொருள் தொகுத்துத் தம் மனம்போன வழிகளிலெல்லாஞ் செலவுசெய்து வாழ்தற் பொருட்டாகவே நடைபெறு இன்றன. மிகுந்த பொருள் தமக்கு வருமாயின் மக்கள் இழிதொழில்கள் பல செய்வதையுங் காண்கின்ருேம். இன்னும், எத்தகையவருங் தமக்கு வரும்பொருளைத் தமக்குங் தம்மவர்க்குமே உரிமையாக வைக்கக் காண்கின்ரு மல்லது, இவ் அம்மையாரைப் போற் றமக்கு உரிமையாகக் கிடைத்த பெரும் பொருளையும் பிறர்பொருட்டுச் செல வழிக்கக் காண்கின்ரு மில்லையே! ஆதலால், இங் கைட்டிங்கேல் அம்மையாரது தூய அருள் உள்ளத்தின் பெருமையினை எங்ங்னம் வியப்பேம்! எவ்வாறு புகழ் வேம் 1 அருளொழுக்கத்திற் றலைசிறந்த கைட் டிங்கேல் அம்மையார் 1910-ஆம் ஆண்டு ஆவணித் திங்கள் தமது 91-வது ஆண்டில் இவ்வுலகவாழ்வு நீத்து இறைவன் திருவடி நீழல் எய்தினர்.
ஆeற்றிற்ஐ.


Page 36
Ν
THE SOUTH I
KS PUF
WOR
M
6, Coral
Enst Ca
 
 

DIA SATWA SIDIDHANTA BLISHING SOCIETY
NNEWELL", LD.
erchant St. Madras.
OR
r St., Tirun elwelli,