கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஸ்தோத்திரக் களஞ்சியம் (T. S. கணேந்திரன் நினைவு மலர்)

Page 1
ஸ்தோத்திரக்
 

DRAN

Page 2


Page 3


Page 4

T.S. கனேந்திரன் ஜனனம் 15.03.1931 மரணம் 13.04.1992

Page 5

பொருளடக்கம்
1 விநாயகர்
பாடல்கள் : பிடியதன், வாக்குண்டாம்,
பாலுந் தெளிதேனும், உம்பர் தரு தேனும் .
விநாயகர் கவசம் விநாயகர் திருவகவல் அர்ச்சனை மால்ை , நாமாவளி
2 குரு
குரு ஸ்துதி எங்கள் குருநாதன் நாமாவளி
3 கிருஷ்ணர்
ராதையின் Nantik*B திருமால் வழிபாடு பூரீகிருஷ்ண கவசம் பாடல்கள்: சற்குரு பாதுகை,
பூரீ ரங்கநாதா, திருப்பதி மலைமேல்
நாமாவளி மங்களம்
4 சிவன்
சிவபுராணம் திருநீற்றுப் பதிகம்

Page 6
திருக் கூற்றுப் பதிகம் s கோளறு திருப்பதிகம் O o - - - நற்சிந்தனைப் பாடல்கள்: அப்பனும் அம்மையும்,
சொல்லு சிவமே, அத்துவிதப்பொருள் பூனி மஹாமிருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம், மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம்
5 சக்தி
சக்தி கவசம் ரோக நிவாரண அஷ்டகம் பூரீ புவனேஸ்வரி மாலை பூரீ துர்க்கா அஷ்டகம் துக்க நிவாரண அஷ்டகம் அபிராமி அந்தாதி பாடல்கள்: அன்பே சிவமாய், உள்ளமெனும் கோயிலிலே,
6 முருகன்
சுப்ரமண்ய புஜங்க ஸ்தோத்திரம் . கந்தரலங்காரம் கந்தரனுபூதி திருப்புகழ் நாமாவளி
7 அருள் விருந்து
பஜகோவிந்தம் நற்சிந்தனை தெய்வீக சிந்தனை
46
49
52
54
55
58
61
63
66
68
69
71
77
77
78
81
82
86
95

விநாயகர்
பாடல்கள்
பிடியதன் னுருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடு மவரிடக் கடிகண பதிவர வருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.
- சம்பந்தர்
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டா மேனி நுடங்காது பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதந் தப்பாமற் சார்வார் தமக்கு
ஒளவையார்
பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலஞ்செய் துங்கக்குரி முகத்துத் தூமணியே நீயெனக்குச் சங்கத் தமிழ் மூன்றுந் தா.
ஒளவையார்

Page 7
உம்பர் தருத் தேனுமணிக் கசிவாகி
ஒண்கடலிற் றேனமுதத் துணர்வூறி இன்பரசத் தேபருகிப் பலகாலும் என்றனுயிர் காதரவுற் தருள்வாயே தம்பிதனக் காகவனத் துணைவோனே தந்தை வலத் தாலருள்கைக் கனியோனே அன்பர்தமக் கானநிலைப் பொருளோனே ஐந்து கரத் தாளைமுகப் பெருமாளே
திருப்புகழ்
கணபதி துணை
விநாயக கவசம்
வளர்சிகையைப் பராபரமாய் வயங்குவிநா
யகர்காக்க வாய்ந்த சென்னி
யளவுபடா வதிகசவுந் தரதேக
மதோற்கடர்தா மமர்ந்து காக்க
விளரறநெற் றியையெந்றும் விளங்கிய
காசிபர்காக்க புருவந் தம்மைத்
தளர்வின்மகோ தரர்காக்க தடவிழிகள்
பாலசந் திரளுர் காக்க
கவின் வளரு மதரங்கச முகர் காக்க
தாலங்கணக் கிரீடர் காக்க
நவில்சிபுகங் கிரிசைசுதர் காக்கநனி வாக்கைவிநா யகர்தாங் காக்க
2

அவிர்நகைதுன் முகர்காக்க வள்ளெழிற்
செஞ்செவி பாசபாணி காக்க
தவிர்தலுரு திளங்கொடிபோல் வளர் மணிநா
வியைச்சிந்தி தார்த்தர் காக்க
ծու005ւէ முகந்தன்னைக் குணேசர் நனி
காக்ககளங் கணேசர் காக்க
வாமமுறு மிருதோளும் வயங்குகந்த
பூர்வசர்தா மகிழ்ந்து காக்க
ஏமமுறு மணிமுலைவிக் கினவிஞ சன்காக்க விதயந் தன்னைத்
தோமகலுங் கணநாதர் காக்கவகட் டினைத்துலங்கே ரம்பர் காக்க
பக்கமிரண் டையுந்தரா தரர்காக்க பிருட்டத்தைப் பாவ நீக்கும்
விக்கினகரன் காக்க விளங்கிலிங்கம்
வியாள பூடணர் தாங் காக்க
தக்ககுய்யந் தன்னைவக் கிரதுண்டர்
காக்கசக னத்தை பல்லல்
உக்ககன பன்காக்க வூருவைமங்
களமூர்த்தி யுவந்து காக்க

Page 8
தாழ்முழந்தாண் மகாபுத்தி காக்கவிரு
பதமேக தந்தர் காக்க
வாழ்கரங்கிப் பிரப்பிரசா மதனர்காக்க
முன்கையை வணங்கு வார்நோ
யாழ்தரச்செய் யாசாபூ ரகர்காக்க விரல்பதும வர்த்தர் காக்க
கேழ்கிளரு நகங்கள் விநா யகர்காக்க
கிழக்கினிற்புத் தீசர் காக்க
அக்கினியிற் சித்தீசர் காக்கவுமா புத்திரர்தென் ஞசை காக்க
மிக்கநிரு தியிற்கனே சுரர்காக்க
விக்கினவர்த் தனர் மேற்கென்னுந்
திக்கதனிற் காக்ககவா யுவிற்கசகன்
னன்காக்க திகழு தீசி
தக்கநிதி பன்கா"க்க வடகிழக்கி
லிசநந் தனரே காக்க
ஏகதந்தர் பகன்றமுழுதுங்காக்கவிர வினுஞ்சந்தி யிரண்டன் மாட்டு
மோகையின்விக் கினகிருது காக்கவிராக்
கதர்பூத முறுwவே தாள

மோகினிபே யிவையாதி யுயிர்த் திறத்தால்
வருந்துயரு முடிவி லாத
வேகமுறு பிணிபலவும் விலக்குபுபா சாங்குசர்தாம் விரைந்து காக்க
மதிஞானத் தவந்தான மானமொளி புகழ்குலம்வண் சரீர முற்றும்
பதிவான தனந்தானி யங்கிரக
மனைவிமைந்தர் பயினட் பாதிக்
கதியாவுங் கலந்துசாவா யுதர்காக்க
காமர்பவுத் திரர்முன் ஞன
விதியாருஞ் சுற்றமெலா மயூரேச
ரெஞ்ஞான்றும் விரும்பிக் காக்க
வென்றிசீ விதங்கபிலர் காக்ககரி யாதியெலாம் விகடர் காக்க
என்றிவ்வா றிதுதனைமுக் காலமுமோ
திடினிம்பா லிடையூ ருென்றும்
ஒன்றுறா முனிவர்கா ளறிமின்கள்
யாரொருவ ரோதி ஞலு
மன்றவாங் கவர்தேகம் பிணியறவச்
சிரதேக மாகி மன்னும்
விநாயகர் கவசம் முற்றிற்று.
5

Page 9
கணபதி துணை
விநாயகர் திருவகவல் நக்கீர தேவர் அருளிச்செய்தது.
திருச்சிற்றம்பலம்
சீர்தரு மூலச் செழுஞ்சுடர் விளக்கே கார்நிற மேனிக் கற்பகக் களிறே அல்லல் வினையை யறுத்திடு ஞான வல்லபை தன்னை மருவிய மார்பா பொங்கர வணிந்த புண்ணிய மூர்த்தி சங்கர னருளிய சற்குரு விநாயக ஏழை யடியே னிருவிழி காண வேழ முகமும் வெண்பிறைக் கோடும் பெருகிய செவியும் பேழை வயிறும் திருவளர் நுதலிற் றிருநீற் றழகுஞ் சிறுத்த கண்ணுஞ் சீதளப் பார்வையும் நறுந்திகழ் நாசியு நாண்மலர்ப் பாதமும் நவமணி மகுட நன்மலர் முடியுங் கவச குண்டலக் காந்தியும்விளங்கச் சிந்துரத் திலகச் சந்தனப் பொட்டும் ஐந்து கரத்தி னழகும் வீற்றிருக்க பாச வினையைப் பறித்திடு மங்குச பாசத் தொளியும் பன்மணி மார்பும் பொன்ன பரணமும் பொருந்துமுந் நுாலும் மின்னு மெனவே விளங்குபட் டழகும் உந்திச் சுழியு முசோமத் தழகுந் தொந்தி வயிறுந் துதிக்கையுந் தோன்ற வேதனும் மாலும் விமலனு மறியாப் பாதச் சதங்கை பலதொனி யார்ப்பத்
6 :

தண்டைச் சிலம்புந் தங்கக் கொலிசும் எண்டிசை மண்டல மெங்கும் முழங்கத் தொகுது துந்துமி தொந்தோ மெனவே தகுதிகு திந்திமி தாள முழங்க ஆடிய பாத மண்டலர்கள் போற்ற நாடிமெய் யடியர் நாளுந் துதிக்கக் கருணை புரிந்து காட்சி தந்தருள இருளைக் கடிந்து எங்கும் நிறையப் பொங்குபே ரொளியாய் பொன்மலைபோலத் திங்கள் முடியான் றிருவுள மகிழ வந்த வாரண் வடிவையுங் காட்டிச் சிந்தை தளர்ந்த சீரடி யார்க்கு இகபர சாதன மிரண்டு முதவி அகவினைத் துன்ப மகந்தை யறுத்து மூலா தார முச்சுடர் காட்டி வாலாம் பிகைதன் வடிவையுங் காட்டி மாணிக்க மேனி மலர்ப்பதங் காட்டி பேணிப் பணியப் பீஜ அட்சரமும் ஒமென் றுதித்த ஓங்காரத் துள்ளே ஆமென் றெழுந்த அட்சர வடிவும் இடைபிங் கலைக ளிரண்டி னடுவே கடைமுனை கழிமுனைக் கபாலமுங் குறித்து மண்டல மூன்றும் வாயுவோர் பத்துங் குண்டலிய சபை கூறிய நாடியும் பூதமும் பொறியும் புகழ்குண மூன்றும் வாதனை செய்யு மறிவையுங் காட்டி ஆழு தார வங்குச நிலையைப் பேருகி நின்ற பெருமையுங்காட்டிப் பஞ்ச மூர்த்திகள் பாகத் தமர்ந்த பஞ்ச சக்திகளின் பாதமுங் காட்டி

Page 10
நவ்வொடு மவ்வும் நடுவணை வீட்டில் அவ்வு மாக்கினை யஞதி சதாசிவம் மைவிழி ஞான மனேன்மணி பாதமும் நைவினை நணுகா நாதகி தமும் கண்டு வணங்கக் கண்ணைத் திறந்து விண்டலமான வெளியையுங் காட்டி ஐம்பத் தோரெழுத் தட்சர நிலையை இன்பச் சக்கர விதிதனைக் காட்டிப் புருவ நடுவனைப் பொற்கம லாசனத் திருவிளை யாடலுந் திருவடி காட்டி நாதமும் விந்தும் நடுநிலை காட்டிப் போதம் நிறைந்த பூரணங் காட்டி உச்சி வெளிதனி லுள்ளொளி காட்டி வச்சிரம் பச்சை மரகத முத்து பவளம் நிறைந்த பளிங்கொளி காட்டிச் சிவகயி லாயச் சேர்வையுங் காட்டிச் சத்தம் பிறந்த தலத்தையுங் காட்டித் தத்துவம் தொண்ணுாற் முறையும் நீக்கி கருவி கரணக் களங்க மறுத்து மருவிய பிறவி மாயை நீக்கி
உம்பர்க் ளிருடிகள் ஒருவருங் காணு அம்பர வெளியி னருளையுங் காட்டிச் சத்தி பராபரை சதாநந்தி நிராமய நித்திய ரூபி நிலையையுங் காட்டி அடியவர் ஞான வமிர்தமா யுண்ணும் வடிவை யறியும் வழிதனைக் காட்டி நாசி நுனியில் நடக்குங் கலைகள் வாசிவா வென்று வாங்கிப் பிடித்து நின்மல வடிவாய் நிறுவித் தப்புறம் வின்மய மான விதத்தையுங் காட்டி
8

தராதல முழுதுந் தானுய நிறைந்த பராபர வெளியைப் பணிந்திடக் காட்டி என்னுட லாவி யிடம்பொரு விரியாவுந் தன்னுடை வசமாந் தவநிலை காட்டி நானெனு மாணவ நாசம தாகத் தானென வந்து தயக்கந் தீர ஆன குருவா யாட்கொண் டருளி மோன ஞான முழுது மளித்துச் சிற்பரி பூரண சிவத்தைக் காண நற்சிவ நிட்கள நாட்டமுந்தந்து குருவுஞ் சீடனுங் கூடிக் கலந்து இருவரு மொருதனி யிடந்தனிற் சேர்ந்து ஆனந்த மாகித் தற்பர வெளியில் ஆனந்த போத அறிவைக் கலந்து புவனத் தொழிலைப் பொய்யென் றுணர்ந்து மவுன முத்தியை மனத்தினி லிருத்திப் பெண்டு பிள்ளைப் பண்டுப தார்த்தங் கண்டது மாயைக் கனவெனக் காட்டிப் பாச பந்தப் பவக்கடல் நீக்கி ஈச னிணையடி யிருத்தி மனத்தே நீயே நாஞய் நானே நீயாய்க் காயா புரியைக் கனவென வுணர்ந்து எல்லாம் முன்செய லென்றே யுணர நல்லா யுன்னருள். நாட்டந் தருவாய் காரண குருவே கற்பகக் கனிறே வாரண முகத்து வள்ளலே போற்றி நித்திய பூசை நைவேத் தியமும் பத்தியாய்க் கொடுத்துப் பரமனே போற்றி ஏத்தி யனுதின மெளியேன் பணியக் கூற்றினை யுதைத்த குளிர்பதந் தந்து
9

Page 11
ஆக மதுர வமிர்த மளித்துப் பேசு ஞானப் பேறெனக் கருளி மனத்தில் நினைத்த மதுர வாசக நினைவிலுங் கனவிலும் நேசம் பொருந்தி அருண கிரியா ரவ்வை போலக் கருத்து மிகுந்து கவிமழை பொழிய வாக்குக் கெட்டா வாழ்வை யளித்து நோக்கரு ஞான நோக்குமளித்து இல்லற வாழ்க்கை யிடையூ றகற்றிப் புல்ல ரிடத்திற் புகுந்துழ லாமல் ஏற்ப திகழ்ச்சி என்பத கற்றி காப்ப துனக்குக் கடன்கண் டாயே நல்வினை தீவினை நாடி வருகினுஞ் செல்வினை யெல்லாம் செயலுன தாமால் தந்தையு நீயே தாயு நீயே எந்தை நீயே ஈசனு நீயே போத ஞானப் பொருளு நீயே நாதமு நீயே நான்மறை நீயே அரியு நீயே அயனு நீயே திரிபுர தகனஞ் செய்தவ நீயே சத்தியும் நீயே சதாசிவ நீயே புத்தியு நீயே புராந்தக நீயே பத்தியு நீயே பந்தமு நீயே முத்தியு நீயே மோட்சமு நீயே ஏகமு நீயே என்னுயிர் நீயே தேகமு நீயே தேவனு நீயே உன்னரு ளன்றி உயிர்த்துணை காணேன் பின்னெரு தெய்வம் பேசவு மறியேன் வேதனை கொடுத்த மெய்யிது தன்னில் வாதபித்தம் வருந்திடு சிலேட்டுமம்
10

மூன்று நாடியு முக்குண மாகித் தோன்றும் வினையின் துன்ப மறுத்து நாலா யிரத்துநா னுாற்றுநாற் பத்தெட்டு மேலாம் வினையை மெலியக் களைந்து அஞ்சா நிலைமை யருளியே நித்தன் பஞ்சா சரநிலை பாலித் தெனக்கு செல்வமுங் கல்வியுஞ் சீரும் பெருக நல்வர மேதரும் நான்மறை விநாயக சத்திய வாக்குச் சத்தா யுதவிப் புத்திர னேதரும் புண்ணிய முதலே வெண்ணி றணியும் விமலன் புதல்வ பெண்ணு முமையாள் பெறுகுஞ் சரனே அரிதிரு மருகா அறுமுகன் றுணைவா கரிமுக வாரணக் கணபதி சரணம் குருவே சரணம் குணமே சரணம் பெருவயி ருேனே பொற்ருள் சரணம் கண்ணே பதியே கனியே சரணம் விண்ணே யொளியே வேந்தே சரணம் மானத வாலி மலர்த்தடத் தருகிற் முனத்தில் வாழுந் தற்பரா சரணம் உச்சிப் புருவத் துதித்துல களிக்கும் சச்சிதா னந்த சற்குரு சரணம் விக்கின விநாயக தேவே ஒம் ஹரஹர சண்முக பவனே ஓம் சிவசிவ மகாதேவ சம்போ ஓம்
திருச்சிற்றம்பலம்
11

Page 12
அர்ச்சனை மாலை
ஒளிக்கணம் உலவும் வெளியே போற்றி சிவபுரங் காக்கும் தேவர் தலைவா! மார்கழி மாச மாண்புறு சஷ்டியில் ஆர்வமோ டிந்த அர்ச்சனை மாலையைப் பாடியே உன்னைப் பணிந்தோம் காவாய்! சித்தி அருளாய், சீர்மை அருளாய், வித்தை அருளாய், வெற்றி அருளாய், சக்தி அருளாய், சமத்துவம் அருளாய், பக்தி அருளாய், முத்தி அருளாய், சரணம், சரணம், சதுர்மறை முதல்வா! சரணம், சரணம் சத்சங்கத் தலைவா! சரணம், சரணம், சற்குரு மணியே! சேஞ பதியின் ஞான பதியே, நான விதமாம், நன்மைகள் ஓங்குக, பொதுமறை பொலிக புண்ணியந் திகழ்க, விஞ்ஞானத்தின் விளக்கமே போற்றி! மெய்ஞானத்தின் வேதமே போற்றி! மரண பயத்தை மாய்ப்பாய் போற்றி! விதியை வெல்லும் மதியே போற்றி! கருத்தினிலினிக்கும் கரும்பே போற்றி அடியார் துயரங் கடிவாய் போற்றி! அன்பருக் கபயம் அளிப்பாய் போற்றி! இன்ப மளிக்கும் இறைவா போற்றி! ஓங்காரத்தின் உட்போருள் போற்றி! ஒளவைக் கருள் செய் ஜங்கர போற்றி! ஞான னந்த வானே போற்றி! அறிவே போற்றி ஆற்றலே போற்றி! இளமையே போற்றி! இன்பமே போற்றி!
12.

கண்ணே போற்றி கருத்தே போற்றி! விண்ணே போற்றி மணியே போற்றி! விமலா போற்றி! வித்தகா போற்றி! போறையே போற்றி! போதமே போற்றி! கணபதி போற்றி கரிமுக போற்றி! குணபதி போற்றி குருவே போற்றி! விக்ன விநாயக சேவடி போற்றி! சித்தி விநாயகநின் பொன்னடி போற்றி!
நாமாவளி
ஜெய கணேச ஜெய கணேச ஜெய கணேச பாஹிமாம் பூரீகணேச பூரீகணேச பூரீகணேச ரவுமாம் அன்பு நிலை ஓங்கிடவே ஜெய கணேச ஆண்டருள் இன்பு நிலை தங்கிடவே பூரீகணேச வந்தருள் மாண்புடனே மக்கள் வாழ ஜெய கணேச ஆண்டருள் மங்களங்கள் பொங்கிடவே பூரீகணேச வந்தருள்
ஓம் கனநாதா ஜெய கணநாதா ஜெய கணநாதா ஜெய குணநீதா சிவ சிவ கஜமுக கணநாதா சிவகண வந்தித குணநீதா
கணபதி கணபதி குணமதை அருள்வாய் கணபதி கணபதி ஓம் ஜெய கணபதி ஒம் கணபதி ஓம் சிவ கணபதி ஒம் மகா கணபதே குரு சரணம் மனம் மகிழ்ந்து வந்தருள் சரணம் சரணம் சரணம் தந்திமுகா சரபவன பவனுக்கு உயர்துணைவா கணேச சரணம் சரணம் கணேசா.
3

Page 13
(95(5 குரு ஸ்துதி
குருர் பிரஹம்மா குருர் விஷ்ணு குருர் தேவோ மஹேச்வர குருசாக்ஷாத் பரம் ப்ரஹ்ம தஸ்மை பூரீ குருவே நம:
த்வமேவ மாதா ச பிதா த்வமேவ த்வமேவ பந்துச் ச ஸ்கா த்வேமவ! த்வமேத வித்யா திரவிணம் த்வமேவ த்வமேவ ஸர்வம் மம தேவ தேவ
அழுந் தொறும் அணைக்கும் அன்னை அறிவிலாது ஆடி ஓடி விழுந்தொறும் எடுக்கும் அப்பன் விளையாடும் போது தோழன் தொழுந்தொறும் காக்குந் தெய்வம் சொந்தமாய் எடுப்போர்க்கெல்லாம் குழந்தை இப்படி உலாவும் என் குருநாதன் வாழி வாழி
14

எங்கள் குருநாதன்
என்னையெனக் கறிவித்தா னெங்கள்குரு நாதன்
இணையடியென் தலைவைத்தா னெங்கள்குரு நாதன் அன்னைபிதாக் குருவானா னெங்கள்குரு நாதன்
அவனியெல்லா மாளவைத்தா னெங்கள்குரு நாதன் முன்னைவினை நீக்கிவிட்டா னெங்கள்குரு நாதன்
மூவருக்கு மறியவொண்ணா னெங்கள்குரு நாதன் நன்மைதீமை யறியாதா னெங்கள்குரு நாதன்
நான்தானாய் விளங்குகின்றா னெங்கள்குரு நாதன்.
தேகம்நீ யல்லவென்றா னெங்கள்குரு நாதன்
சித்தத்திற் றிகழுகின்றா னெங்கள்குரு நாதன் மோகத்தை முனியென்றா னெங்கள்குரு நாதன்
முத்திக்கு வித்ததென்றா னெங்கள்குரு நாதன் வேகத்தை கெடுத்தாண்டா னெங்கள்குரு நாதன்
விண்ணும் மண்ணு மாகிநின்றா னெங்கள்குரு நாதன் தாகத்தை யாக்கிவிட்டா னெங்கள்குரு நாதன்
சத்தியத்தைக் காணவைத்தா னெங்கள்குரு நாதன்.
வாசியோகந் தேரென்றா னெங்கள்குரு நாதன்
வகாரநிலை அறியென்றா னெங்கள்குரு நாதன் காசிதேசம் போவென்றா னெங்கள்குரு நாதன்
கங்குல்பக லில்லையென்றா னெங்கள்குரு நாதன் நாசிநுனி நோக்கென்றா னெங்கள்குரு நாதன்
நடனந்தெ ரியுமென்றா னெங்கள்குரு நாதன் மாசிலோசை கேட்குமென்றா னெங்கள்குரு நாதன்
மற்றுப்பற்றை நீக்கென்றா னெங்கள்குரு நாதன்.
15

Page 14
இருவழியை அடையென்றா னெங்கள்குரு நாதன்
எல்லாம் விளங்குமென்றா னெங்கள்குரு நாதன் கருவழியைக் கடவென்றா னெங்கள்குரு நாதன்
கட்டுப்படும் மனமென்றா னெங்கள்குரு நாதன் ஒருவரும றியாரென்றா னெங்கள்குரு நாதன்
ஓங்கார வழியென்றா னெங்கள்குரு நாதன் நிருமலனா யிருவென்றா னெங்கள்குரு நாதன் நீயேநா னென்றுசொன்னா னெங்கள்குரு நாதன்.
திக்குத் திகாந்தமெல்லா மெங்கள்குரு நாதன்
சித்தத்துள் நிற்கவைத்தா னெங்கள்குரு நாதன் பக்குவமாய்ப் பேனென்றா னெங்கள்குரு நாதன்
பார்ப்பதெல்லாம் நீயென்றா னெங்கள்குரு நாதன் அக்குமணி யணியென்றா ணெங்கள்குரு நாதன்
அஞ்செழுத்தை ஒதவென்றா னெங்கள்குரு நாதன். நெக்குநெக் குருகென்றா னெங்கள்குரு நாதன்
நித்தியன்நீ யென்றுசொன்னா னெங்கள்குரு நாதன்
தேடாமல் தேடென்றா னெங்கள்குரு நாதன்
சீவன் சிவனென்றா னெங்கள்குரு நாதன் நாடாமல் நாடென்றா னெங்கள்குரு நாதன் -
நல்லவழி தோன்றுமென்றா னெங்கள்குரு நாதன் பாடாமற் பாடென்றா னெங்கள்குரு நாதன்
பத்தரினஞ் சேரென்றா னெங்கள்குரு நாதன் வாடாமல் வழிபடென்றா னெங்கள்குரு நாதன் , வையகத்தில் வாழென்றா னெங்கள்குரு நாதன்.
16

தித்திக்கு மொருமொழியா லெங்கள்குரு நாதன்
சின்மயத்தைக் காணவைத்தா னெங்கள்குரு நாதன் எத்திக்கு மாகிநின்றா னெங்கள்குரு நாதன்
எல்லாம்நீ யென்றுரைத்தா னெங்கள்குரு நாதன் வித்தின்றி நாறுசெய்வா னெங்கள்குரு நாதன்
விண்ணவரு மறியவொண்ணா னெங்கள்குரு நாதன் தத்துவா தீதனானா னெங்கள்குரு நாதன்
சகலசம் பத்துந்தந்தா னெங்கள்குரு நாதன்.
ஆதியந்த மில்லையென்றா னெங்கள்குரு நாதன்
அதுவேநீ யென்றுரைத்தா னெங்கள்குரு நாதன் சோதிமய மென்றுசொன்னா னெங்கள்குரு நாதன்
சுட்டிறந்து நில்லென்றா னெங்கள்குரு நாதன் சாதி சமயமில்லா னெங்கள்குரு நாதன்
தானாய் விளங்குகின்றா னெங்கள்குரு நாதன் வாதியருங் காணவொண்ணா னெங்கள்குரு நாதன் வாக்கிறந்த இன்பந்தா னெங்கள்குரு நாதன்
முச்சந்திக் குப்பையிலே எங்கள்குரு நாதன்
முடக்கிக் கிடந்திடென்றா னெங்கள்குர நாதன் அச்சமொடு கோபமில்லா னெங்கள்குரு நாதன்
ஆணவத்தை நீக்கிவிட்டா னெங்கள்குரு நாதன் பச்சைப் புரவியிலே எங்கள்குரு நாதன்
பாங்காக ஏறென்றா னெங்கள்குரு நாதன் தச்சன்கட்டா வீட்டிலே எங்கள்குரு நாதன்
தாவுபரி கட்டென்றா னெங்கள்குரு நாதன்
1,

Page 15
நாமேநா மென்றுரைத்தா னெங்கள்குரு நாதன்
நமக்குக்குறை வில்லையென்றா னெங்கள்குரு நாதன்
போமேபோம் வினையென்றா னெங்கள்குரு நாதன்
போக்குவர வில்லையென்றா னெங்கள்குரு நாதன்
தாமேதா மென்றுரைத்தா னெங்கள்குரு நாதன்
சங்கற்ப மில்லையென்றா னெங்கள்குரு நாதன்
ஒமென்று றுதிதந்தா னெங்கள்குரு நாதன்
ஊமையெழுத் தறியென்றா னெங்கள்குரு நாதன்.
நற்சிந்தனை
நாமாவளி
குரு தேவா ஓம் குருதேவா ஐய குருதேவா குரைகழல் நமஹ ஓம் குருதேவா அருள்வடிவாம் ஜகத் குருதேவா ஆனந்த மோனசற் குருதேவா (குரு)
அரிஹர பிரம்ம குருதேவா அகிலசர் வேஸ்வர குருதேவா பரிவ்ரா ஜகசிவ குருதேவா பரமக்ரு பாகர குரதேவா (குரு)
பக்த ரட்சக குருதேவா பாப விநாச குருதேவா சுத்த சுதந்திர குருதேவா ஜோதி சொரூப குருதேவா (குரு)
18

சாரதை மோகன குருதேவா சக்தி மனோகர குருதேவா வீர நரேந்திர் குருதேவா விமல சுரேந்திர குருதே (குரு)
பூரண ஞானசற் குருதேவா புகழவ தாரநற் குருதேவா பூரீ பரம ஹம்ச குருதேவா ஜயராம கிருஷ்ண குருதேவா (குரு)
குரு சரணம் பஜ குரு சரணம் ஸத்குரு சரணம் பவஹரணம்
பஜ ரே மாநஸ் போதேந்த்ரம் பவாப்திதரணம் தேசிகேந்த்ரம்
பஜ ரே குரு சரணம் துஸ்தர பவளபாகர தரணம் - மானஸ்
குரு மஹறராஜ் குரு பரப்ரம்ம ஸத்குரு ஞானதேவ ஸத்குரு ராமக்ருஷ்ண ஸத்குரு த்யாகபிரம்ம ஸ்த்குரு
19

Page 16
கிருஷ்ணர் ாாதையின் பிரார்த்தனை
ஐயனே, நான் உம்மை முதன் முதலாகக் கண்டவுடனேயே, நீர் என் பிராணநாதர் எனவும், என் தெய்வம் எனவும் உணர்ந்தேன், எனது நிவேதனத்தை நீர் ஏற்றுக் கொள்வீராக.
என் சிந்தனைகள் எல்லாவற்றையும், என் உள்ள நெகிழ்ச்சிகள் எல்லாவற்றையும், என் இதய உணர்ச்சிகள் யாவற்றையும், என் உயிரின் இயங்கங்கள் யாவற்றையும், என் உடலின் அணுக்கள் ஒவ்வொன்றையும், என் உதிரத்தின் துளிகள் ஒவ்வொன்றையும் உமக்கே சமர்ப்பணம் செய்கிறேன், நான் முற்றிலும் உம்முடையவனே சம்பூரணமாக உமது உடைமையே, யாதொரு ஒளிவு மறையின்றி உம்முடையவனே. நான் எவ்வண்ணம் இருத்தல் வேண்டும் என்பது உமது திருவுள்ளமோ அவ்வண்ணமாகவே இருப்பேன். எனது வாழ்வையோ, சாவையோ, எனது சுகத்தையோ, துக்கத்தையோ, எனது இன்பத்தையோ, துன்பத்தையோ நீர் எனக்கு எதை அளிக்கத் திருவுள்ளம் கொண்டபோதிலும் உம்மிடமிருந்து வருவது யாதாயிருப்பினும் எல்லாவற்றையும் நான் வரவேற்கிறேன். நீர் எனக்கு அளிக்கும் ஒவ்வொன்றும் எனக்கு என்றும் இறைவனின் பேரின்பத்தைக் கூடவே கொண்டுவரும் தெய்வப் பிரசாதமாக விளங்கும்.
20

திருமால் வழிபாடு
குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயர்
ஆயின் எல்லாம் நிலந்தரம் செய்யும் நீள்விசும் பருளும் அருளோடு
பெருநிலம் அளிக்கும் வலம்தரும் மற்றுந் தந்திடும் பெற்ற தாயினும்
ஆயின செய்யும் குலம்தரும் சொல்லைநான் கண்டு கொண்டேன்
நாராயணு என்னும் நாமம் *
பச்சைமா மலைபோல் மேனி பவளவாய்க் கமலச்செங்கண் அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே இன்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நக்குளானே
கொண்டல் வண்ணனைக் கோவலனுய் வெண்ணெய் உண்ட வாயன் என்உள்ளம் கவர்ந்தானை : அண்டர் கோளணி அரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்முென் றினைக் காணுவே
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோ மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமும் விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே
21

Page 17
"அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி குானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு ஞானத்தமிழ் புரிந்த நான்."
"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு. பல கோடி நுாறாயிரம் s
மல்லாண்ட திண்கோள் மணிவண்ணு உன்
செவ்வடிச் செவ்வித் திருக்காப்பு.
ரீ கிருஷ்ண கவசம்
அகர முதலே அழியாப் பொருளே ஆயர் குலமே நேயர் கரமே இகழும் பரமும் இண்ையும் இடமே ஈதல் மரபாம் இதயத் தவமே
உலகக் குடையே உயிரின் கலையே ஊதும் குழலுள் வேதப் பொருளே எரியும் கனலில் தெரியும் புனலே ஏழை மனதில் வாழும் அருளே
ஐயம் தீர்க்கும் அறிவுக் கதிரே ஐவர் துணையே அன்புச் சிலையே ஒளியே விழியே உயிரே வழியே ஒடும் நதியில் பாடும் அலையே
22

அவ்வவ் வுலகை ஆக்கும் நிலையே அடியேன் சரணம் சரணம் சரணம் அறமே அறமே அறமே அறமே திறமே திறமே திறமே திறமே
தவமே தவமே தவமே தவமே வரமே வரமே வரமே வரமே வேதம் விளையும் வித்தே விளைவே நாதம் பொழியும் நலமே நிலமே
ஒதும் பொழுதே உடனே வருவாய் உள்ளம் கேட்கும் வெள்ளம் தருவாய் அறியாக் கவலை அதிகம் அதிகம் அருள்வாய் அருள்வாய் கவசம் கவசம்
பொய்யா மொழியே பொங்கும் நிலவே பூமிக் குடையின் காவற் பொருளே.சே பார்த்தன் பணியும் பாதம் காக்க பாஞ்ச சன்னியம் பக்தனைக் காக்க
மூடர்கள் தமையும் மோகனன் காக்க ே முள்ளில் மலராய் முளைத்தோன் காக்க வாடும் உயிரை மன்னவன் காக்க தேடும் விழியைத் திருமால் காக்க
கேலிப் பொருளைக் கிருஷ்ணன் காக்க
கண்ணி நதியைக் கண்ணன் காக்க
துன்பம் என்றொரு சுமையைத் தீர்க்க
துாயோன் வருக துணையே வருக
23

Page 18
மாதர் கற்பும் மட்வார் நோன்பும் மாயோன் காக்க மலைபோல் வருக தகிடத் தகிடத் தகிடத் தகவென தறிபடு துன்பம் தறிகெட ஓட
திகிடத் திகிடத் திகிடத் திகிடத் திசைவரு கவலை பசை இல தாக
துருவத் துருவத் துருவத் துருவிடத் தொலையாப் பொருளே அலையாய் வருக
நிஷ்கா மத்தில் நிறைவோன் வருக கர்மசந் யாசக் களமே வருக ஞானம் யோகம் நல்குவன் வருக
நல்லோர் வாழ்தல் நலமே நிறைக
அடியேன் துயரம் அதிகம் அதிகம் அருள்வாய் அருள்வாய் கவசம் கவசம் பொங்கும் வேலும் புண்ணாக் காது பொருந்தும் துயரம் பொடிபடு மாறு
தாங்கும் தலைவன் தாமரைக் கண்ணன் தாளில் விழுந்தேன் சரணம் சரணம் மதுகு தனனே மனிதன் சரணம் இருடி கேசா இயலான் சரணம்
கீதாச் சாரிய கிருஷ்ணா சரணம் வேதாச் சாரிய வேந்தே சரணம் தேவகி மைந்தா சிறியேன் சரணம் யசோத குமரா அடியேன் சரணம்
24.

உன்னை விட்டொரு உறவுக ளில்லை , என்னை விட்டொரு இனியவ னில்லை நம்மை விட்டொரு நண்பர்க ளில்ளை
தன்மையில் உன்போல நாயக னரில்லை
எங்செங்கே நான் இருந்திடும் போதும் அங்கங் கேநீ அருள்செய வருக கோசலை ஈன்ற குமரா வருக கோதையின் மாலை கொண்டவன் வருக ரகுவம் சத்தின் நாயகன் வருக
யதுவம் சத்தின் யாதவன் வருக மதுவை வென்ற மாதவன் வருக மலைக்குடி கொண்ட மாலவன் வருக
திருப்பதியாளும் திருமால் வருக
திருவரங் கத்துப் பெருமாள் வருக இராவணன் கொடுமை தீர்த்தாய் துன்பம் இரா வணம் எமக்கும் இன்னருள் புரிக கம்சன் கொடுமை களைந்தோய் வருக
காலனை வெல்லக் கைவலி தருக நெற்றியில் திருமண் நெஞ்சில் வைரம் காதில் குண்டலம் கையில் வில்லொடு தண்டைக் காலில் சலங்கை குலுங்க
அண்டையில் வந்து அருளே புரிக கெளரவர் தம்மைக் களத்தில் வென்றாய்
25.

Page 19
கெளரவம் காக்கக் கண்ணா வருக பார்த்தன் மகிழப் பாடம் சொன்னாய்
படித்தவன்மகிழப் பரமே வருக மூன்று குணங்கள் முறையாய்க் கூறிய சான்றோன் பாதம் தாவி யணைத்தோன் கிக்கென உன்னைச் சேர்த்துப் பிடித்தேன்
பக்கென உந்தன் பாதம் பற்றினேன் கொக்கென நின்று குறிவைத் திருந்தேன் அக்கணம் வந்தாய் அடியில் விழுந்தேன் இக்கணம் என்னை ஏங்க விடாமல்
தக்கவ னேநீ தயவுடன் அருள்க கல்லாய்ப் போனவன் காலடி பட்டு பெண்ணாய் ஆனது பிழையே அன்று உண்ணால் தானே உலக இயக்கம்
கண்ணனி லாமல் கடல்வான் ஏது? கண்ணனி லாமல் கடவுளு மில்லை கண்ணனி லாமல் கவிதையு மில்லை கண்ணனி லாமல் காலமு மில்லை
கண்ணனி லாவிடில் காற்றே இல்லை எத்தனை பிறவி எத்தனை பிறவி அத்தனை பிறவியும் அடியேன் கொண்டால். சத்திய நாதன் தாள்களை மறவேன்
26.

தத்துவக் கண்ணன் தனிமுகம் மறவேன் உன்னை நம்பி உனையே சேர்ந்தால் பிறவிக ளிலைநீ பேசிய பேச்சு
உலகில் போதும் ஒருமுறை மூச்சு
உன்னிடம் சேர்த்து உன்வடி வாக்கு இங்கே நாங்கள் இருக்கும் வரையில் சங்கு முழங்க தர்மம் நிலைக்க அரிஓம் அரிஓம் அரிஓம் அரிஓம்
அவனே துணையென அறிவோம் அறிவோம் அரிஓம் அரிஓம் அரிஓம் அரிஓம் அவனிடம் எதையும்ங் தருவோம் ஜெயஜெய ராமா ஜெயஜெய கிருஷ்ணா
ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய
பாடல்கள்
சற்குரு பாதுகை குஞ்சல மென்மேல்
பட்ட பொழுது தானே
நிம்மதி அடைந்தேன் உலகை மறந்தேன்
ஆனந்தம் தான் அடைந்தேன் (சற்குறு)
குருவின் மலரடியே எங்கும் என் கண்ணுல் பார்த்து நின்றேன்
மற்றது எல்லாம் மாயை பொய்எனும் கனவில்
கண்ட பொருள் போல் நினைத்தேன் (சற்குரு)
27.

Page 20
பிறப்பு இறப்பாம் பவம் எனுங் கடலில் ஜலம்
முழுவதும் வற்றிப் போச்சு
அதைத் தாண்ட உபாயம் தேடும் கவலை என்னை விட்டுப் போச்சு (சுற்குரு)
மலையைக் குடையாய் தாங்கிய கோகுலங்
கார்த்த கோவிந்தனை நான்
சரணமென்று அடையவே அவன் என் பார்வையை
உள்புற மாக்கி விட்டான் (சற்குரு)
பூரீ ரங்க நாதா உனக்கு என்னைத் தெரியாதா கோவிந்த ராஜா என் ஆருயிர் நேசா
ஏழு கோபுர வாசல் தாண்டி என்னை அழைத்தது ஏன் நாடித் தேடி ஓடி வந்ததும் நீ படுத்ததும் ஏன் அரங்கன் என்று அழைக்கும் நாமம் பொருத்தம் தானைய்யா அகில உலகும் காக்கும் உனக்கு உறக்கம் ஏனய்யா
உறக்கும் ஏனய்யா (ஏழு)
ஆழ்வார்கள் கீதம் கேட்டு அயர்ந்து விட்டாயா ஆண்டாளின் அழகில் சொக்கி மயங்கி விட்டாயா பூதேவியின் பரிசம் பட்டு போதை கொண்டாயா பூரீதேவியின் யாகம் என்ன செயல் இழந்தாயா
செயல் இழந்தாயா (ஏழு)
28

காவேரி மாலையாகி காவல் இருந்தாளே தேவர் முனிவர் போற்றித் துதித்து சூழ்ந்து இருந்தாரே யார் இருந்தால் என்னய்யா பாட வந்தேனே போதும் இந்த பாவனைகள் எழுக என்றேனே
எழுக என்றேனே (ஏழு)
திருப்பதி மலைமேல் இருப்பவனே தீராத வினையெல்லாம் தீர்ப்பவனே
பூரீ நிவாசா கோவிந்தா பூரீ வெங்கடேசா கோவிந்தா
ஏழுமலை மேல் இருப்பவனே எல்லா வினைகளையும் தீர்ப்பவனே வெங்கட ரமணு கோவிந்தா சங்கட ஹரனு கோவிந்தா
உள்ளமாம் கோவிலில் உறைபவனே உலகோரை வாழ்விக்க வந்தவனே
பூரீநிவாசா கோவிந்தா பூரீ வெங்கடேசா கோவிந்தா
நாமாவளி
ggfsbarnæm பூரீநிவாசா பூரீநிவாசா பூரீநிவாசா ஏழுமலைக்கிறைவனே பூரீநிவாசா
எங்கள் குல தெய்வமே நீ பூரீநிவாசா
29

Page 21
வாழி என வாழ்த்திடுவாய் வந்தனையும் செய்திடுவோம்
பக்தர் எல்லாம் பாடிவர
பாங்குடனே தி டுப்பதிவாழ்
பத்மாவதி மனம் மகிழும் பரிந்து எமக்கே அருள் புரிவாய் பூரீநிவாசா
பூரீநிவாசா திருப்பதிவாசா புராண புருஷா பாண்டுரங்கா வேணுவிலோலா ராம கிருஷ்ணு கோவிந்தா ஹரே ஆபத் பாந்தவ பக்தவட்சலா வெங்கட்ட ரமணு
G34E Incul
ராதா ரமணு முரளிதர பூரீ நளின விலோசன
நந்த குமாரா வேணு விலோலா
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
GsInT un auvint
G395mT_u navn
கோபாலா
GastTunaun
G395 Gun
G5ILf76Uf
30
பூரீநிவாசா பூரீநிவாசா பூரீநிவாசா பூரீநிவாசா பூரீநிவாசா
பூரீவெங்கடேசா திருமலைவாசா புண்டரிகாஷா பண்டரி நாதா விஜயகோபாலா கிருஷ்ணு ராமா கோபாலா ஹரே
அஞதரகூர்க பகவதப்பிரியா
சங்கடஹரணு
கோகுல நந்தன ராஜீவ நேத்ரா முகுந்த மாதவ கோமள வசன நவநித சோரா வேதாந்த சீலா
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
கோபாலா
G35 fu fT av T
G85IIL I FIGUT
கோபாலா
கோபாலா
G95ITL III Gust.

ராதா சமேத க்ருஷ்ணு - க்குஷ்ணு
ராதா சமேத க்ருஷ்ணு (ராதா) நந்த குமார நவநித சோர பிருந்தாவன கோவிந்த முராரே (ராதா)
கோபி மனோ ஹர - கோகுல வாசா சோபித முரளி - கான விலாசா சுந்தர மன்மத - கோடிப்ரகாசா (ராதா)
ஓம் நமோ நாராயணுய ஓம் நமோ நாராயணுய ஓம் நமோ நாராயணுய ஓம் நமோ நாராயணுய (ஒம்) பிறவிதோறும் வினைமிகுந்து பெருகுகின்ற இருவினை அகலவைக்கும் அருண தீபம் ஓம்நமோ நாராயணுய (ஒம்) ஊறுதுன்பம் உடல்வியாதி ஊழ்விடாத வறுமையும் ஆறவைக்கும் அருள்மருந்து ஒம்நமோ நாராயணுய (ஒம்) ஏக்கமாம் குழிக்குளே இரண்டுருண்ட வேளையில் தூக்கிடும் துணைக்கரங்கள் ஓம் நமோ நாராயணுய (ஒம்) சோகமோஹ தாகமீறிச் சோர்வு விஞ்சும்வேளையில் கருணையான புனிதகங்கை ஒம்நமோ நாராயணுய (ஒம்) ஜனன மரண பயதரங்க சாகரம் கடத்தியே உடனுவந்து காக்கும் ஒடம் ஓம் நமோ நாராயணுய (ஒம்) கடுகடுத்து முனைதொடுத்த காலசூலம் சிறுநாள் உயிர் தடுத்த கவசமாகும் ஓம் நமோ நாராயணுய (ஒம்) ஓம் நமோ நாராயணுய ஒம் நமோ நாராயணுய உலகெலாம் முழங்க வேண்டும் ஓம்நமோ நாராயணுய
இழ்)
31

Page 22
நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழுமுண்டாம் வீடியல் வழிய தாக்கும் வேரியங் கமலை நோக்கும் நீடிய வரக்கர் சேனை நீறுபட்டழிய வாகை சூடிய சிலையி ராமன் தோள்வலி கூறு வோர்க்கே
-கம்பர்
நன்மையுஞ் செல்வமும் நாளும் நல்குமே தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே சென்மமும் மரணமும இன்றித் தீருமே இம்மையே ராமவென்றிரண் டெழுந்தினுல்
-south
ஆத்மா ராம ஆனந்த ரமணு அச்சுதா கேசவா ஹரி நாராயணு (ஆத்மா)
பூத்த மலர்போல புன்னகை புரிவாய் பூரண சக்தியை மழையெனப் பொழிவாய் (ஆத்மா) துஷ்ட ராவுதரை தூருடன் கொய்வாய் துருவாதி முனிவரை நிறைவராய் செய்வாய் (ஆத்மா) அஷ்டமா சித்திகள் அன்பருக் களிப்பாய் அவனியைக் காத்திட அவதரித் தாயே (ஆத்மா)
ரகுபதி ராகவ ராஜா ராம் பதீத பாவன சீதா ராம் சீதாராம் ஜெய சீதா ராம் பஜமன ப்யாரே சீதாராம் מוחשחgחזפ שOg מוחזק מוחש
32

ராம ராம ஜெய சீதாராம் ஈஸ்வர அல்லா தேரே நாம் சபகோ சன்மதி தேபகவான்
பூரீராம் ஜயராம் ஜயஜயராம் பூரீராம் ஜயராம் ஜயஜயராம் பூரீராம் ஜயராம் ஜயஜயராம்
நாராயண ஓம் நமச்சிவாய வெனுஞ் சாரமான நல்ல தாரக மந்திரம் (பூரீ prnub)
நாரதர் வால்மீகி முனிவர் நவின்றது ஆரமுதாய் அன்பர்க் கானந்தம் ஈன்றது (பூரிராம்)
காமாதி கள்வரைக் கட்டுட ஞெழிப்பது நேமநிஷ்டையுள்ள நெஞ்சினில் செழிப்பது (பூரிராம்)
பக்தி வைராக்யமும் பரந்த வைராக்யமும் சுத்த சச்சிதானந்த சித்தியும் அளிப்பது (பூரீராம்)
பூரீராம் ஜயராம் ஜய ஜய ராம ஓம் பூரீராம் ஜய ராம ஜய ஜய ராம ஓம் (பூரீராம்)
அயோத்யா வாழுீரீராம் தசரத நந்தன ராம்
ஜானகி ஜீவன ராம் பூரீராம ராம ஜய ராம் (அயோ) ஜானகி ஜீவன ராமராம் ராமராம ஜயராம் (பூரீராம்)
33

Page 23
ராம ராம ராம ராம ராம நாம தாரகம் ராம கிருஷ்ண வாசுதேவ பக்தி முக்தி நாயகம் ஜானகி மனுேஹரம் சர்வலோக நாயகம் சங்கராதி கீயமான புண்யநாம கீர்த்தனம் (ராம)
தசரத நந்தன ராம் ராம் தசமுக மர்தன ராம்ராம் பசுபதி ரஞ்சன ராம்ராம் பாபவி மோசன ராம்ராம் மணிபவ பூஷண ராம் ராம் மஞ்சுள பாவன ராம் ராம் ரண ஜய ரஷக் ராம் ராம் ராஷச காதக ராம்ராம்
சீதாராம் சீதாராம் சீதாராம் ஜய சீதாராம் தசரத நந்தன தேசிக ராம் கங்கா யமுன சீதாராம்
(சீதா)
பாஹி ராம பாவன ராம பலபவ பீம பாஹி பூரீராம ரகூத்தம பாஹி பூரீராம ராம சீதா ராமலிலா ராமராகா சோமவதன ராமயோகி ராமசரண ராமபாத மோஹிதராம
(பாஹி)
ஹரேராம ஹரேராம ராமராம ஹரே ஹரே
ஹரேகிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண
ஹரே ஹரே ஹரேராம)
34

மாசில் அயோத்தியில் மன்னன் தசரதன் மாதவத் தால்வந்த மைந்தனே தாலோ கோசிகனைத் தொடர்ந்து கொடியவனை வதைத்து யாகந்தனைக் காத்த தீரனே தாலோ
பாதையிலேயொரு கல்லுருவாய் நின்ற பாவைக் கருள்செய்த பாலனே தாலோ! சீதை மனம்மகிழ சோதனையில் வென்ற பூரீ தரனே ரகு ராமனே தாலோ
தந்தை சொல் காக்கவே தம்பியும் தாரமும் தொடர வனம்சென்ற ராமனே தாலோ சுந்தரியைப் பிரிந்து அந்திப்பக லலைந்து நிந்தை தளர்ந்திட்ட ஐயனே தாலோ
-நீலாராம மூர்த்தி
ராம ராம ரகு வீரா ராம சந்திர ரண தீரா ராம ராம ரகு வீரா pmLD F5gg L U55TDIl
ராம ராம ரகு நாதா ராமச் சந்த்ர ஜகந் நாதா! ராம ராம ரகு வீரா ராமச் சந்த்ர ரகுராம ராம ராம ஜய சீதா ராமச் சந்த்ர ஜய ராம!
35

Page 24
மங்களம்
பூரீராமச் சந்த்ரனுக்கு ஜய மங்களம் - நல்ல திவ்ய முக சுந்தரனுக்கு சுப மங்களம்
(பூரீராம்)
மாராபி ராமனுக்கு மன்னு பரந்தாமனுக்கு ஈராறு நாமனுக்கு ரவிகுல சோமனுக்கு
(பூரீராம)
கொண்டல் மணிவண்ணனுக்குக் கண்ணனுக்கு மங்களம் கோசலை குமாரனுக்கு வீரனுக்கு மங்களம் புண்டரீகத் தாளனுக்கு பூசக்கிர வாளனுக்குத் தண்டுளவத் தோளனுக்கு ஜானகி மஞளனுக்கு
(பூரீராம)
பகிரண்ட நாதனுக்கு வேதனுக்கு மங்களம் பரதனும் அன்பனுக்கு முன்பனுக்கு மங்களம் ஸகல உல்லாசனுக்குத் தருமந்த ஹாசனுக்கு அகில விலாசனுக்கு அயோத்யா வாசனுக்கு
(பூரீராம) - பூரீ அருணுசலக்கவிராயர்
36

சிவன் மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச் செய்த
சிவபுராணம்
தொல்லை இரும்பிறவிச் சூழுந்தளை நீக்கி அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே - எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன் திருவா சகம் என்னும் தேன்.
நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க கரம்குவிவார் உண்மகிழுங் கேர்ன்கழல்கள் வெல்க சிரம் குவிவார் ஒங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன்சே வடிபோற்றி
37

Page 25
நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடிபோற்றி ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனல் அவன் அரு ளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுரா ணம்தன்னை முந்தை வினைமுழுதும் ஒய உரைப்பன்யான் கண்ணுதலான் தன்கருணை கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி விண்நிறைந்து மண்நிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறைந்துஎல்லை இலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைதேன் எம்பெருமான் மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் உய்யன்ன் உள்ளத்துள் ஒங்கார மாய்நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணி யனே வெய்யாய் தணியாய் இயமானனாம் விமலா பொய் ஆ யின எல்லாம் போய் அகல வந்தருளி மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே
38

ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின் நாற்றத்தின் நேரியாய் சேயாய் நனியானே மாற்ற மனம்கழிய நின்ற மறையோனே கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தால் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்களோர் ஐந்துடையாய் விணணுேர்கள் ஏத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அருங்கயிற்ருல் கட்டிப் புறந்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி மலஞ்சோரும் ஒன்பது வாயில் குடிலை மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்தஅன் பாகிக் கசிந்து உள் உருகும் நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள் கழல்கள் காட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனுர் அமுதே சிவபுரனே பாசம் ஆம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
39

Page 26
நீராய் உருக்கிஎன் ஆருயிராய் நின்ருனே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாம் சோதியனே துன்னிருளே தோன்முப் பெருமையனே ஆதியனே அந்தம் நடு ஆகி அல்லானே ஈர்த்துஎன்னை ஆட்கொண்டஎந்தை பெருமானே கூர்த்தமெய்ஞ்ஞானத்தால் கொண்டுணர்வார் தங்கருத்தின் நோக்குஅரிய நோக்கே நுணுக்குஅரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வும் இலாப்புண்ணியனே காக்கும்எம் காவலனே காண்புஅரிய பேரொளியே ஆற்று இன்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள் ஊற்றன. உண்ணுர் அமுதே உடையானே
வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப ஆற்றேன்எம் ஐயா அரனேஓ என்று என்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானுர் மீட்டுஇங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்ருடும் நாதனே தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லல் பிறவி அறுப்பானே ஓவென்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லியபாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ் பல்லோரும் ஏத்தப் பணிந்து.
40

திருஞானசம்பந்தர் அருளிய திருநீற்றுப் பதிகம்
மந்திர மாவதுநீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமைபங்கன் திரு ஆலவாயான் திருநீறே
வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு ஒதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு சீதப் புனல்வயல் சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே
முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு சித்தி தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே
காண இனியது நீறு கவினைத் தருவது நீறு பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியை தருவது நீறு சேணந் தருவது நீறு திரு. ஆலவாயான் திருநீறே
பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக்கெல்லாம் ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு தேசம் புகழ்வது நீறு திரு ஆல வாயான் திருநீறே
41

Page 27
அருத்தம தாவது நீறு அவலம் அறுப்பது நீறு வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திரு ஆல வாயான் திருநீறே
எயிலது வட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு பயிலப்படுவது நீறு பாக்கிய மாவது நீறு துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு அயிலைப் பொறிதரு சூலத்தால வாயன் திருநீறே
இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு பராவண மாவது நீறு பாவம் அறுப்பது நீறு தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு அராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே
மாலோ டயனறி யாதவண்ணமு முள்ளது நீறு மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு ஆலமதுண்ட மிடற்றெம் மால வாயான் திருநீறே
குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமுங் கூடக் கண்திகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு எண்திசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு அண்டத்தவர் பணிந்தேத்தும் ஆலவா யான்திருநீறே
ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான் திருநீற்றைப் போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன் தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.
திருச்சிற்றம்பலம் 42

ருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய தேவாரம் திருநாவு (5 函
திருக் கூற்றுப் பதிகம்
கூற்று யினவாறு விலக்ககிலிர்
கொடுமை பலசெய்தன நானறியேன் ஏற்றா யடிக்கே யிரவும் பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும் தோற்ரு தென் வயிற் றினகம் படியே
குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில
வீரட்டானத் துறை அம்மானே!
நெஞ்சம் உமக்கே யிடமாக வைத்தேன்
நினையா தொருபோதும் இருந்தறியேன் வஞ்சம் இதுவொப்பது கண்டறியேன்
வயிற்ருேடு துடக்கி முடக்கியிட நஞ்சாகி வந்தென்னை நலி வதனை நணுகாயல் துரந்து கரந்துமிடீர் அஞ்சேலுமென்னிர் அதிகைக் கெடில
வீரட்டானத் துறையம்மானே
பணிந்தாரன பாவங்கள் பாற்ற வல்லீர்
படுவெண் தலையிற் பலிகொண் டுழல்வீர் துணிந்தே யுமக்காட் செய்து வாழல் உற்ருல்
சுடுகின்றது சூலை தவிர்த்தருளிர் பிணிந்தார் பொடிகொண்டு மெய் பூசவல்லீர்
பெற்ற மேற்றுகந்தீர் சுற்றும் வெண் தலைகொண்டு அணிந்தீர் அடிகேள் அதிகைக் கெடில
வீரட்டானத் துறையம்மானே
43

Page 28
முன்னம் அடியேன் அறியாமையினன்
முனிந்தென்னை நலிந்து முடக்கியிடச் பின்னை அடியே னுமக்காளும் பட்டேன் சுடுகின்றது சூலை தவிர்த் தருளிர் தன்னை யடைந்தார் வினை தீர்ப்பதன்ருே
தலையா யவர்தங் கடனுவது தான் அன்ன நடையார் அதிகை கெடில வீரட்டானத் துறையம் மானே
காத்தாள் பலர் காவலிகழ்ந் தமையால்
கரை நின்றவர் கண்டு கொளென்று சொல்லி நீத்தாய் அகயம் புகநூக்கியிட
நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்றறியேன் வார்த்தை இதுவொப்பது கேட்டறியேன்
வயிற்ருேடு துடக்கி முடக்கியிட ஆர்த்தார் புனலார் அதிகைக் கெடில
வீரட்டானத் துறையம்மானே
சலம் பூவொடு துாப மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன் நலந்தீங்கிலும் உன்னை மறந் தறியேன்
உன் நாமம் என் நாவில் மறந்தறியேன் உலந்தார் தலையிற் பலி கொண்டுழல்வாய்
உடலுள்ளுறு சூலை தவிர்த் தருள்வாய் அலந்தேன் அடியேனதிகைக் கெடில
வீரட்டானத்துறை அம்மானே
உயர்ந்தேன் மனைவாழ்க்கை மகிழ்ந்தடியேன்
வஞ்சம் மொன்றுமிலா மையினுற்
சலித்தா லொருவர் துணையாருமில்லை
சங்கவெண் குழைக்காது உடையெம்பெருமான்
44

கலித்தே என்வயிற்றின் அகம்படியே W பதித்துப் புரட்டி அறுத்தீர்த்திட நான்
அயர்ந்தேன் அடியேன் அதிகைக் கெடில
வீரட்டானத் துறையம் மானே
வலித்தேன் மனைவாழ்க்கை மகிழ்ந்தடியேன்”
வஞ்சம் மனமொன்றும் இல்லாமையினுற்
சலத்தால் ஒருவர் துணையாருமில்லை
சங்கவெண் குழைக்கா துடையெம் பெருமான்
கலித்தே என் வயிற்றிகைம் படியே
கலக்கி மலக்கிட்டு கவர்ந்து தின்ன
அலுத்தேன் அடியேன் அதிகைக் கெடில
வீரட்டானத் துறையெம்மானே
பொன்போல மிளிர்வ தொர் மேனியினர் புரிபுன் சடையீர் மெலியும் பிறையீர் துன்பே கவலை பிணி யென்று இவற்றை
கணுகாமல் துரந்து கரந்து மிடீர் என்போல் இகளும் மையினித் தெளியார்
அடியார் படுவ திதுவேயாகில் அன்பே அமையும் அதிகைக் கெடில
வீரட்டானத்துறை யம்மானே
போர்த்தாய் அங்கொரானையினர் உரிதோல்
புறங்காடரங்கா நடமாட வல்லாய் ஆர்த்தான் அரக்கன் தனை மால் வரை கீழ்
அடர்த்திட்டருள் செய்கவது கருதாய் வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால்
என் வேதனையான விலக்கியிடாய் ஆர்த்தால் புனல் சூழ் அதிகை கெடில
வீரட்டானத் துறையம்மனே
45

Page 29
திருஞான சம்பந்தரருளிய கோளறு திருப்பதிகம்
வேயுறு தோளி பங்கள் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்
னுளமே புகுந்த வதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டு முடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
என்பொடு கொம்பொ டாமை யிவைமார் பிலங்க
எருதேறி யேழையுடனே பொன்பொதி மத்த மாலை புனல் சூடி வந்தென்
னுளமே புகுந்தவதனால் ஒன்பதொ டொன்றோ டேழு பதினெட் டொறு
முடனாய நாள் களவை தாம் அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்கு மிகவே.
உருவளர் பவள மேனியொளி நீ றணிந்து உமையோடும் வெள்ளை விடை மேல் முருகலர் கொன்றை திங்கள் முடிமே லணிந்தென்
னுளமே புகுந்த வதனால் திருமகள் கலைய தூர்தி செயமாது பூமி
திசை தெவ்வ மான பலவும் அருநெறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
46

மதிநுதல் மங்கையோடு வட பாலி ருந்து
மறையோது மெங்கள் பரமன் நதியோடு கொன்றை மாலை முடிமேலணிந்தென்
னுளமே புகுந்த வதனால் கொதியுறு காலனங்கி னமனோடு தூதர் / கொடு நோய்களான பலவும் அதிகுண நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே. F
|
நஞ்சணி கண்ட னெந்தை மடவாள் தனோடும்
விடையேறு மெங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்தென்
னுளமே புகுந்த வதனால்
வெஞ்சின வவுண ரோடு முருமிடியு மின்னும்
மிகையான பூதமவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகையே,
வாள் வரி யதள தாடை வரிகோவ ணத்தர்
மடவாள்த னோடு முடனாய் நாண்மலர் வன்னி கொன்றை நதி குடி வந்தென்
னுளமே புகுந்த வதனால் காளரியுழுவை யோடு கொலையானை தேழல்
கொடு நாக மோடு கரடி ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
47

Page 30
செப்பிள முலைநன்மங்கை ஒருபாகமாக விடையேறு செல்வ னடைவார் ஒப்பிள் மதியுமப்பு முடியஅல் அணிந்தென்
உளமேல் புகுந்த வதனால் W வெப்பொடு குளிரும்வாத மிகையாள பித்தும்
வினையான வந்து நலியா அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே
வேள்பட விழிசெய்தன்று விடைமேலிருந்து
மடவாள் தனோடு முடனாய் V, வாண்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால் gy_ు சூழிலங்கை அறையன்ற னோடும்
இடரான் வந்து நலியா ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே
பல பல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறு மெங்கள் பரமன்
சல மகளோடெருக்கு முடி மேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர் மிசை யோனுமாலு மறையோடு தேவர்
வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவை நல்ல நல்ல ஆ.
அடியாரவாக்கு மிகவே.
48

கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன் மத்தள மதியு நாக முடி மேலணிந்தென்
உளமே புகுந்த அதனால் புத்தரோ டமனை வாதில் அழிவிக்கு மண்ணல்
திரு நீறு செம்மை திடமே அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல.
அடியாரவர்க்கு மிகவே
தேனமர் பொழில்கொள் ஆலை விளைசெந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கு நிகழ நான்முகனாதியாய பிரமா புரத்து
மறைஞான ஞானமுனிவன் தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய் ஆனசொன் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வராணை நமதே.
நற்சிந்தனைப் பாடல்கள்
அப்பனும் அம்மையும் சிவமே -9յIflա சகோதரரும் சிவமே ஒப்பில் மனைவியும் சிவமே ஒதரும் மைந்தரும் சிவமே செப்பில் அரசரும் சிவமே தேவாதி தேரும் சிவமே இப்புவி யெல்லாம் சிவமே என்னை யாண்டதும் சிவமே
49

Page 31
சொல்லு சிவமே சொல்லு சிவமே
சுகம்பெற மார்க்க மொன்றுசொல்லு சிவமே வெல்லும் பகை யொழியச் சொல்லு சிவமே
வேறுபொரு வில்லையென்று சொல்லு சிவமே அல்லும் பகலுமறச் சொல்லு சிவமே
அன்பே சிவமென்று சொல்லு சிவமே கல்லுங் கலையக்கவி சொல்லு சிவமே
காயமே கோயிலென்று சொல்லு சிவமே.
அல்லலற்று வாழவழி சொல்லு சிவமே
அகம்பிர மாஸ்மியென்று சொல்லு சிவமே எல்லவர்க்கு நல்லனென்று சொல்லு சிவமே
எல்லாஞ் சிவன்செயலாய்ச் சொல்லு சிவமே நில்லாதிவ் வாழ்வென்று சொல்லு சிவமே
நீயுநானு மொன்றென்று சொல்லு சிவமே பொல்லாப்பிங் கில்லையென்று சொல்லு சிவமே
புத்தடியோம் நாங்களென்று சொல்லு சிவமே
கொல்லாமை பெரிதென்று சொல்லு சிவமே
கூசாமல் எவர்முன்னுஞ் செல்லு சிவமே நல்லோர் நடுவிருக்கச் சொல்லு சிவமே
நாமே யனைத்துமென்று சொல்லு சிவமே உல்லாச மாயெங்குஞ் செல்லு சிவமே
உண்மை முழுதுமென்று சொல்லு சிவமே கல்லார்க்குங் கதியென்று சொல்லு சிவமே கட்டிம னத்தையாளச் சொல்லு சிவமே.
50.

அத்துவி தப்பொருள் காப்பாம் - எனக் கடியார்க ளென்றென்றுங் காப்பாம் சித்தரும் தேவரும் காப்பாம்-எந்தன் சித்தத் திலங்கும் திருவருள் காப்பாம். (அத்து)
அட்ட வசுக்களும் காப்பாம் -எனக் கானந்த மான பராபரன் காப்பாம் எட்டுத் திசைகளும் காப்பாம்-எனக் கெங்கும் நிறைந்த சிவசக்தி காப்பாம். (அத்து)
பிராண னபானனுங் காப்பாம்-என்னைப் பிரியா திருக்கும் பிரணவங் காப்பாம் அராவணி வேனியன் காப்பாம்-எனக் கருளை அளிக்கும் குருபரன் காப்பாம். (அத்து)
பஞ்சப் புலன்களும் காப்பாம்--என்னைப் பரவு மடியவ ரனுதினங் காபபாம் குஞ்சர முகத்தவன் காப்பாம்-நல்ல குழந்தை வடிவேலன் என்றென்றுங் காப்பாம். (அத்து)
சந்திர சூரியர் காப்பாம்-எங்கும் தங்கு முயிர்க ளனைத்துமென் காப்பாம் மந்திரந் தந்திரங் காப்பாம்-நான்கு மறைகள் சிவாகமம் மாநிலங் காப்பாம். (அத்து)
5

Page 32
பூரீ மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம்
ருத்ரம் பசுபதிம் ஸ்த்தாணும் நீலகண்ட்டம் உமாபதிம் நமாமி சிரஸா தேவம் கிம்நோம்ருத்யு கரிஷயதி
கால கண்ட்டம் கால மூர்த்திம் காலாக்நிம் காலநாசநம் நமாமி சிரஸா தேவம்கிம் நோம்ருத்யு: கரிஷ்யதி
நீலகண்ட்டம் விரூபாஷம் நிர்மலம் நிலயப்ரமம்! நமாமி சிரஸா தேவம் கிம்நோம்ருத்யு: கரிஷ்யதி
வாமதேவம் மஹாதேவம் லோகநாதம் ஜகத்துரும்! நமாமி சிரஸா தேவம் கிம் நோம்ருத்யு கரிஷ்யதி!
தேவதேவம் ஜகந்நாதம் தேவேசம் வ்ருஷ் பத்வஜம் நமாமி சிரஸா தேவம்கிம் நோம்ருத்யு: கரிஷ்யதி!!
தர்யஷ்யம் சதுர்ப்புஜம் சாந்தம் ஜடா மருட தாரினம்! நமாமி சிரஸா தேவம் கிம் நோம்ருத்யூ. கரிஷ்யதி
பஸ்மோத்துாளித ஸர்வாங்கம் நாகாபரண பூஷதம்! . நமாமி சிரஸா தேவம்கிம் நோம்ருத்யு: கரிஷ்யதி!
அநந்த மவ்யயம் சாந்தம் அஷமாலாதரம் ஹரம் நமாமி சிரஸா தேவம் கிம் நோம்ருத்யு: கரிஷ்யதி!
ஆநந்தம் பரமம் நித்யம் கைவல்ய பத தாயிதம்! நமாமி சிரஸா தேவம்கிம் நோம்ருத்யு: கரிஷ்யதி!
அர்த்த நாரீச்வரம் தேவம் பார்வதீ ப்ராண நாயகம்! நமாமி சிரஸா தேவம்கிம் நோம்ருத்யு: கரிஷயதி!
52

ப்ரளய ஸ்திதி கர்த்தாரம் ஆதிகள்த்தார மீச்வரம்! நமாமி சிரஸா தேவம்கிம் நோம்ருத்யூ; கரிஷ்யதி!
வ்யோம கேசம் விருபாஷம் சந்ந்ரார்த க்ருத சேகரம் நமாமி சிரஸா தேவம்கிம் நோம்ருத்யு: கரிஷ்யதி!
கங்காதரம் சசிதரம் சங்கரம் சூலபாணநம் நமாமி சிரஸா தேவம்கிம் நோம்ருத்யு: கரிஷ்யதி!
ஸ்வர்க்கா பவர்க்கதாதாரம் ஸ்ருஷ்டி ஸ்தித்யந்த காரணம் நமாமி சிரஸா தேவம்கிம் நோம்ருத்யு: கரிஷயதி!!
கல் பாயுர் தேஹி மே புண்யம் யாவதாயுர ரோகதாம் நமாமி சிரஸா தேவம்கிம் நோம்ருத்யு: கரிஷ்யதி!
சிவேசாநம் மஹாதேவம் வாமதேவம் ஸதாசிவம் நமாமி சிரஸா தேவம்கிம் நோம்ருத்யு: கரிஷயதி!
மார்க்கண்டேய க்ருதம் ஸ்தோத்திரம் படேத்சிவ ஸந்நிதெள தஸ்யம் ருத்யுபயம் நாஸ்தி ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்!
ஸத்யம் ஸத்யம் புநஸ்ஸத்யம் உத்ருத்ய புஜம் உச்யதே வேதாத்சாஸ்த்ராத்பரம் நாஸ்தி நதைவம் சங்சராத்பரம்!
நமஸ்தே அஸ்து பகவன் விச்வேச்வராம், மஹாதேவாய, த்ர்யம்பகாய, த்ரிபுராந்தகாய, த்ரகாலாக்கினி காலாய, காலக்னிருத்ராய, நீலகண்டாய, ம்ருத்யுஞ்ஜயாய, ஸர்வே ச்வராய , ஸதாசிவாய, ரீமன் மஹாதேவாய நம:
53

Page 33
மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம்
ஓம் த்ரயம்பகம் யஜா மஹே
ஸ"கந்திம் புஷ்டி வர்த்தனம் உர்வாருகமிவ பந்தணுத்
ம்ருத்யோர் மூக்ஷய மாம்ருதாத்
பொருள்: நறுமணமிருந்தவரும் எல்லா ஜீவன்களுக்கும் புஷ்டி அளிப்பவரும் முக்கண்ணனுமான சிவபெருமானைப் பூஜிக்கின்ருேம். வெள்ளரி தன் கொடியினின்றும் விடுவிக்கப் படுவதுபோல் அமரத்துவத்தின் பொருட்டு அன்னவர் நம்மை மரணத்தினின்றும் விடுவிப்பாராக.
நன்மைகள்: இந்த மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் ஓர் உயிர் வழங்கும் மந்திரம், இந் நாட்களில் நம் உயிர்க்குப் பலவகைகளில் எதிர்பாராத நிலையில் இன்னலகள் ஏற்படுகின்றன. இவ் மந்திரம் பாம்புக் கடி, மின்னல், மோட்டார் விபத்துக்கள் தீ விபத்து, சைக்கிள் விபத்து, வெள்ளம், விமான விபத்து, முதவிய எல்லா விபத்துக்களாலும் மரணம் ஏற்படுவதைத் தடுக்கிறது. மேலும் இதற்கு நோய் நிவர்த்திக்கும் சக்தியுண்டு. தவிரவும், உண்மையோடும் நம்பிக்கையோடும் உச்சரித்தால் மருத்துவ வல்லுனர்களால் தீராது என்று கைவிடப்பட்ட பிணிகளும் போக்கப்படுகின்றன. இம் மந்திரம் வியாதிகளை நீக்கும் ஆயுதம்: மரணத்தை வெல்லும் மந்திரம்.
54

சக்தி
சக்தி கவசம்
அங்கையிற் கரகந் தாங்கும் பிரமாணியருளினோடுந் துங்கமென் சென்னி காக்க வயிணவி துகளிலாகம் எங்கணுங் காக்கச் செய்ய வேந்தெழி லுருத்திராணி தங்கு மெண்டி சையுமன்பு தழைத்திட இனிது காக்க
கொன்னுனைச் சூலி சென்னி மயிரினைக் குறித்துக் காக்க மன்னு வெண்பிறை மடதாழ் சென்னி வயங்கொளி நெற்றிகாக்க பன்மையிற் புருவ நாளும் பரிவொடு உமையாள் காக்க என்னையாண் முக்கணிச இறைவி கண்ணினைகள் காக்க
வயமிகு இமயவல்லி மூக்கினை மகிழ்ந்து காக்க செயையொடு விசையை மேல் கீழிதழினைச் சிறந்து காக்க வயலிடைச் சுருதி துாய வஞ்செவி காக்க தண்ணென் பயின் மலருறையுஞ் செல்வி பல்லினை உவந்து காக்க
சண்டி மென்கபோலங் காக்க தவளநாண் மலரின் வைகும் ஒண்டொடி நன்னாக் காக்க விசயை மங்கலைமற்றொல்வாக் கண்கவர் நாடி காக்க காத்தியாயணி யெஞ்ஞான்று முண்டக மலரிற்றுாய முகத்தினைச் சிறந்து காக்க
55

Page 34
காள முண்டிருண்ட நீலகண்டி மென்கழுத்துக் காக்க கோளில் பூதாரசக்தி சுவற் புறங்காக்கக் கூர்மி நீளொளிச்சந்தி காக்க வயிந்திரி நெறியினோடுந் தோளினைக் காக்க பத்மை துணை மலரங்கை காக்க
கமலை கைவிரல்கள் காக்க விரசை கையுதிர்கள் காக்க திமிர முண்டொளிரும் வெய்யோன் மண்டலத் துறையுஞ் செல்வி எம திருவாகு மூலங் காக்க வானவர்களேத்த அமிர்தழகரி நாணாளு மகன் மணிமார்பங் காக்க
தரித்திரி யிதயங்காக்க தயித்தியர்ச் செகுபோண் மிக்க கருத்தொடு முலைகள் காக்க சகத்தினிலிறைமை பூண்டொடு இருத்தகு வயிறு காக்க திகழ்த போகதி தன்னுள்ளந் தருத்திய னுந்தி காக்க வசைவளர் முதுக காக்க
கருதருவி கடை காக்க கடிதலம்பாமை வாய்ந்த குருமணிச் சகனங் காக்க குகாரணி குய்யங் காக்க அருடர வருமபாய கந்தினிய பானங் காக்க தெருளுடைவிபுலை யென்றுஞ் சிறப்புடைக்குறங் காக்க
லளிதை மென்முழந்தாள் க்ாக்க வியற்சபை கணைக்கால் காக்க களிதரு கோரை வாய்ந்த பரட்டினைக் காக்க மிக்க அளிகொள் பாதலத்திற் செல்வோ ளணிகெழு புறந்தாள் காக்க ஒளிர் நகம் விரளகள் சந்திரி யுக்கிரியுவந்து காக்க
தலத்துறை மடந்தையுள்ளங் காலினைகாக்க தண்ணென் மலர்திரு மனையைக் காக்க வயங்கு கேத்திரதை யோங்கி உலப்பில் கேத்திரங்கள் காக்க பிரியகலை யொழிவறாது நலந்தரு மக்கடம்மை நன்குறக் காக்கவன்றே
56

உயர்சனா தனியெஞ்ஞான்று மொழிவறும் ஆயுள் காக்க அயர்வறு சீர்த்தியாவு மாதேவி காக்கமிக்க
செயிரறு தருமம்யாவுந் தனுத்திரி சிறந்து காக்க இயல்புடைக்குலத்தை வாய்ந்தகுலதேவி யினிதுகாக்க
சற்கதி பிரதை நல்லோ ரியைபினை தயாவிற்காக்க விற்கொடும் போரினில் வெளியினில் வனத்திற் சூதில் இற்புற மதனி லோங்கு சர்வாணி காக்க வென்னாப் பொற்றரு மலர்கள் தூவிப் புங்கவ ரேத்தினாரே
சக்திக் கவசம் முற்றிற்று
இந்த வச்சிரபஞ்சரத்தை யாவர் செபித்தாலும் அவர்களுடைய தேகத்திலுண்டாகிய வெப்பநோயொழியும். எட்டுத்தரஞ் சலத்தில் அபிமந்தரித்து அதனை உட்கொண்டால் வயிற்றிலே பொருந்திய குன்மஞ் சூலை முதலிய நோயனைத்தும் நீங்கும். இரவில் வழி நடக்கும் போது செபித்தாலும் பூதம் பேய் இவைகள் தொடர மாட் டாவாம் . பிள்ளையைப் பெறமாட் டாமல் வருத்தப்படுகின்ற மாதருடைய அருகிலிருந்து செபித்தாலும் அல்லது நீரிலோதி உட்கொள்ளக் கொடுத்தாலும், விரைவிலே வருத்தம் நீங்கிப் பிள்ளை பெறுவார்கள். யுத்தத்திலே செபித்தால் சத்துருக்கள் தோல்வியடையார்கள். சிறு பிள்ளைகளுக்கு நீரிலோதி உட்கொள்ளக்கொடுத்தால் வியாதிகள் நீங்கும். இதை யாவரோ தினாலும் அவர்கன்ள உமாதேவி காப்பாற்றுவாள், இஃது காசிக்காண்டம் வச்சிரபஞ்சகமுரைத்த அத்தியாயத்துள் இருப்பது.
எண்ணிய வெண்ணங்கள் எல்லாம் பலிக்க எனக்குனருள் பன்னிய வுற்றங்கொள் உள்ளும் புறம்பும் பரிமளிக்கும் f
புண்ணியமல்லிகைப்போதே யெழிலொற்றிப் பூரணர்பான்
மண்ணிய பச்சை மணியே வடிவுடை மாணிக்கமே. w
57

Page 35
தாயே மிகவும் தயவுடையாள் எனச் சாற்றுவர் இச்
சேயேன் படுத்துவர் நீக்கனன் னேஉளம் செய்திலையே
நாயேன் பிழை இனி நாடாது நல்லருள் நல்கவரு
வாயே எம் ஒற்றி மயிலே! வடிவுடை மாணிக்கமே.
-இராமலிங்க சுவாமிகள்
ரோக நிவாரண அஷ்டகம்
பகவதி தேவி பர்வத தேவி
பலமிகு தேவி துர்க்கையளே ஜெகமது யாவும் ஜெயஜெய வெனவே
சங்கரி யுன்னைப் பாடிடுமே ஹந ஹந தகதக பசபச வெனவே தளிர்த்திடு ஜோதி யானவளே ரோகநி வாரணி சோகநி வாரணி
தாபநி வாரணி ஜெய துர்க்கா
தண்டினி தேவி தஷிணி தேவி
கட்கினி தேவி துர்க்கையளே தந்தன தான தனதன தான
தாண்டவ நடன சசிவரியே ಆಟ್ತಿ தேவி முனை யொளி சூலி
முனிவர்கள் தேவி மணித்தீவி ரோகநி வாரணி சோகநி வாரணி தாபநி வாரணி ஜெய துர்க்கா!
58

காளினி நீயே காமினி நீயே
கார்த்திகை நீயே துர்க்கையளே நீலினி நீயே நீதிணி நீயே
நீர்நிதி நீயே நீர் ஒளியே மாலினி நீயே மாதினி நீயே
மாதவி நீயே மான்விழியே ரோகநி வாரணி சோகநி வாரணி தாபநி வாரணி ஜெய துர்க்கா!
நாரணி மாயே நான்முகன் தாயே நாகினி யாயே துர்க்கையளே ஊரணி மாயே ஊற்று தாயே
ஊர்த்துவ யாயே ஊர்ஒளியே காரணி மாயே காருணி தாயே கானக யாயே காசினியே ரோகநி வாரணி சோகநி வாரணி தாபநி வாரணி ஜெய துர்க்கா!
திருமக ளாணுய் கலைமக ளானப் 83
மலைமக ளாஞய் துர்க்கையளே பெருநிதி யாளுய் பேரறி வாளுய்
பெருவலி வாணுய் பெண்மையளே நறுமல ராணுய் நல்லவ ளாளுய்
நந்தினி யானப் நங்கையளே ரோகநி வாரணி சோகநி வாரணி தாபநி வாரணி ஜெய துர்க்கா!
59

Page 36
வேதமும் நீயே வேதியள் நீயே
வேகமும் நீயே துர்க்கையளே நாதமும் நீயே நாற்றிசை நீயே நாணமும் நீயே நாயகியே மாதமும் நீயே மாதவம் நயே மானமும் நீயே மாயவளே ரோகநி வாரணி சோகநி வாரணி தாபநி வாரணி ஜெய துர்க்கா!
கோவுரை ஜோதி கோமள ஜோதி
கோமதி ஜோதி துர்க்கையளே நாவுறை ஜோதி நாற்றிசை ஜோதி நாட்டிய ஜோதி நாச்சியளே பூவுறை ஜோதி பூரண ஜோதி
பூதநற் ஜோதி பூரணையே ரோகநி வாரணி சோகநி வாரணி தாபநி வாரணி ஜெய துர்க்கா!
ஜெய ஜெய சைல புத்திரி ப்ரஹற்ம
சாரிணி சந்த்ர கண்டினியே ஜெய ஜெய கூஷ் யாண்டினி ஸ்கந்த
மாதினி காத்யா மன்யயளே ஜெய ஜெய கால ராத்திரி கெளரி ஸித்திதா பூரீநவ துர்க்கையளே ரோகநி வாரணி சோகநி வாரணி தாபநி வாரணி ஜெய துர்க்கா!
60

பூரீ புவனேஸ்வரி மாலை
மந்திர ஒலியே மங்கள இசையே
மன்மத பாணியளே: சந்திர கேசரி சண்முகன் தாயே
சங்கரி செளந்தரியே இந்திர ஜாலம் தந்திர மாயம் இலங்கிடு விழியவளே: பொங்கிட என்றும் புன்னகை பூத்த
புவனேஸ்வரி தாயே!
பந்தனை விரலி பர்வத தேவி
பவபய ஹாரிணியே: சுந்தர ஈசன் சுருதியும் நீயே:
சுக சுக ரூபிணியே: சிந்தனை யாவும் உன்னிடம் வைத்தேன்
சித்தியின் ஒருவடி வே: எந்தனைக் காக்க எழில்நகை பூத்த
புவனேஸ்வரி தயே!
சத்திய வடிவே சத்குன உருவே
சதுர்மறை சன்னிதியே: நித்திய நிதியே நிறைபுகழ் ஒளியே
நினைத்திட வருபவளே; வைத்திய மணியே வறுமைகள் போக்க
வையகம் வாழ்பவளே: புத்தியுள சேர்ந்து புன்னகை பூத்த
புவனேஸ்வரி தாயே!
6.

Page 37
வழிபடு வோர்க்கு வரந்தரு தாயே:
வந்தருள் வேணியளே: பழிபடு துயரம் பகைதரு தீமைப் பகைகளைப் புதைத்தவளே: விழிகளின் அருளால் வினைகளை விரட்ட
விளக்கொளி யானவளே: பொழிந்திடு அருளாய்ப் புன்னகை பூத்த
புவனேஸ்வரி தாயே!
அறுபத்து நான்கு கலைகளு மானுய்*
அன்னையும் நீயாஞய்; கறுவிடு அரக்கர் கண்பகை கடிந்த
கனிமொழி நீயானப்: குறுகலர் தம்மைக் குறுந்தடி பாய்ச்சும்
குணமணி நீயாளுய்; மறுவிகள் போக்க மங்கலம் பூத்த
புவனேஸ்வரி தாயே!
வல்லவள் நீதான் வஞ்சியும் நீதான்
வசந்தமும் நீயேதான்! நல்லவள் நீதான் நன்னிதி நீதான்
நற்களை நீயேதான்; சொல்லவள் நீதான் சொர்ணமும் நீதான்
சொர்க்கமும் நீயேதான்; நல்வையம் காக்க நலநகை பூத்த
புவனேஸ்வரி தாயே!
62.

நாற்பத்தி மூன்று கோணத்தின் நடுவில்
நான்மறை நீநவின்ருய்: நோற்றிடும் நோன்பின் பலனென வந்தாய்:
நோய்களை நீதீர்த்தாய்; கார்மழை யானுய் காவலும் ஆணுய்
காத்திட நீவந்தாய்: சீர்வையும் காக்க சீவனில் பூத்த
புவனேஸ்வரி தாயே!
ஜெய ஜெய புவன ஈஸ்வரி தாயே
ஜெய ஜெய பூரீங்காரி ஜெய ஜெய மாயா மங்கள ரூபி
ஜெய ஜெய ஹ்ரீங்காரி ஜெய ஜெய துர்க்கா சண்டிகை காளி
ஜெய ஜெய க்லிம்காரி நயனங்கள் தன்னில் நன்னகை பூத்த
புவனேஸ்வரி, தாயே!
பூரீ துர்க்கா அஷ்டகம்
இன்பநலன் அளிப்பவளை இனியனவே தருபவளை
அன்புடைய அன்னையவளை
அருஞ்சிவனை மணந்தவளை
நன்மலரால் பூசித்தே
நமோதுர்க்கா யென்றிடுவேன்
63

Page 38
துங்கவெழிற் கரிமுகனைத்
துர்க்கைநீ மீன்றேடுத்தாய்: சங்கரஞர் தாண்டவத்தில்
சக்தியேநீ பங்கெடுத்தாய் பொங்குசினப் பேரரியில்:
பொருந்தநீ யிருந்திட்டாய் தங்கிடுவாய் எங்குலத்தில்:
தவஒளியே துர்க்கையளே
இசைதந்து இவ்வாழ்வின்
இடர்நீக்கிக் காப்பவளே விசையுடனே மணமாலை
விருப்பமொடு அளிப்பவளே, திசையெல்லாம் திருவிளங்கத் திருவடியால் நடந்தவளே, அசைவற்ற பொருளதையும்
ஆட்சிசெய்வாய் துர்க்கையளே!
வேண்டியன விரும்பியன
வேண்டியவா றளித்திடுவாள் காண்டிபத்தைக் கதையதனைக்
காந்திமிகு குலமதை ஆண்டருளும் அன்னையவள்
ஆட்சிசெய்ய ஏந்திட்டாள்; தூண்டாநல் மணிவிளக்கைத்
தூயதுர்க்கைத் தாயென்போம்.
உலகையிவள் ஈன்றெடுத்தாள்
உடமைமிகத் தானளித்தாள்: கலகமிடும் கள்ளரக்கக்
கலிமாய்த்துக் கலியிசைத்தாள்:
64

திலகஒளி நுதலுடையாள்
திருநிறைந்த வடிவுடையாள்
அலகில்நலம் அளிப்பவளை
அன்னைபூரீதுர்க் கையென்போம்
சுந்தரத்துக் கந்தனையே
சுடர்கூட்டி ஈன்றவளார்? விந்தைமிகப் பொங்கிடவே
விளங்குநலம் தருபவளார்? அந்தமொடு ஆதியின்றி
அன்னையென வளர்ந்தவளார்: சந்தமிகப் பொலிகின்ற
சக்திபூரீதுர்க் கையென்போம்
செல்லமொடு செல்வாக்கைச்
செயம்பெறவே தந்தவளை, நல்லறிவும் நல்லலொளியும்
நல்லனவும் நிறைந்ததவளை, வெல்லுகின்ற வழியானை
செஞ்சுடரின் விழியாளைச் சொல்மலரால் பூசித்துச்
சொர்ணஒளி பெற்றிடுவோம்!
குமரிமுனை நிற்கின்ற
குலவிளக்கே துர்க்கையளே!
சமயமதில் வழிகாட்டும்
சண்டிகையே துர்க்கையளே!
சமரிட்டு சங்கடத்தைச்
சங்கரித்த துர்க்கையளே
இமயமுகில் துர்க்கையளே:
இணையடிகள் வாழியவே!
65

Page 39
துக்க நிவாரண அஷ்டகம்
மங்கள ரூபிணி மதியணி சூலினி
மன்மத பாணியளே: சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும்
சங்கரி செளந்தரியே: கங்கண பாணியன் கனி முகங் கண்டநல்
கற்பகக் காமினியே: ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாஷி!
கானுறு மலரெனக் கதிர்ஒளி காட்டிக்
காத்திட வந்திடுவாள்; நானுறு தவஒளி தாரொளி மதியொளி
தாங்கியே வீசிடுவாள்; மானுறு விழியாள் மாதவர் மொழியாள்;
மாலைகள் சூடிடுவாள்; ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாஷி!
சங்கரி செளந்தரி சதுர்முகன் போற்றிடச்
சபையினில் வந்தவளே: பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப்
பொருந்திட வந்தவளே: எங்குலந் தழைத்திட எழில்வடி வுடனே
எழுந்தநல் துர்க்கையளே: ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாஷி!
| 66

தண தண தந்தண தவிலொலி முழங்கிடத்
தண்மணி நீ வருவாய்; கண கண கங்கண கதிர்ஒளி வீசிடக்
கண்மணி நீ வருவாய்; பணபன பம்டன. பறையொலி கூவிடப்
பண்மணி நீவருவாய்: ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாஷி!
பஞ்சமி பைரவி பர்வத புத்திரி
பஞ்சநல் பாணியளே: கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேலனைக்
கொடுத்தநல் குமரியளே: சங்கடம் தீர்த்திடச் சமரது செய்தநற்
சக்தியெ னும்மாயே: ஜெய ஜெய சங்கர் கெளரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாஷி!
எண்ணிய படிநீ யருளிட வருவாய்
எங்குல தேவியளே: பண்ணிய செயலின் பலனது நலமாய்ப்
பல்கிட அருளிடுவாய்: கண்ணுளிெ யதனுல் கருணையே காட்டிக்
கவலைகள் தீர்ப்பவளே: கண்ணுளிெ யதனுல் கருணையே காட்டிக்
கவலைகள் தீர்ப்பவளே: ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாஷி!
67

Page 40
இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை
யென்றுநீ சொல்விடுவாய்; கடர்தரு அமுதே சுருதிகள் கூறிச்
சுகமதைத் தந்திடுவாய்: படர்தரு இருளில் பாதியாய் வந்து
பழவினை ஒட்டிடுவாய்: ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாஷி!
ஜெய ஜெய பாலா சாமுண்டேஸ்வரி
ஜெய ஜெய பூரீ தேவி, ஜெய ஜெய துர்க்கா பூரீ பரமேஸ்வரி
ஜெய ஜெய பூரீ தேவி, ஜெய ஜெய ஜெயந்தி மங்கள காளி
ஜெய ஜெய பூரீ தேவி, ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாஷி
அபிராமி அந்தாதி
உதிக்கின்ற செங்கதிருச்சித்திலக முணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்க மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோய மென்ன விதிக்கின்ற மேனியபிராமியென்றன் விழுத்துணையே
சென்னிய துன்பொற் றிருவடித் தாமரை சிந்தையுள்ளே மன்னிய துன்றிரு மந்திரஞ் சிந்துர வண்ணப் பெண்ணே முன்னிய நின்னடி யாருடன் கூடி முறைமுறையே
யன்னிய தென்றுமுன் றன்பர மாகம பத்ததியே.
68

நின்று மிருந்துங் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை யென்றும் வணங்குவதுன் மலர்த்தாளெழு தாமறையி னுென்று மரும்பொரு ளேயரு ளேயுமையே யிமயத் தன்றும் பிறந்தவ ளேயழி யாமுத்தி யானந்தமே
பூத்தவளேபுவ னம்பதி ஞன்கையும் பூத்தவண்ணம் காத்தவளேபின் கரந்தவளே கறைக் கண்டனுக்கு மூத்தவளே என்றுமூவா முகுந்தற் கிளையவளே மாத்தவளே யுன்னை யன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே
un Lavascia
அன்பே சிவமாய் அணைப்பாள் நம்மை அன்னை பராசக்தி ஆறுதல் சொல்லி அமுதம் பொழிவாள் அன்னை பராசக்தி இப்புவி இன்பம் வேண்டாம் என்பாள் அன்னை பராசக்தி ஈடில்லாத சாட்சியாய் நிற்பாள் அன்னை பராசக்தி உயர்வு தாழ்வு ஒன்றும் பாராள் அன்னை பராசக்தி ஊக்கம் இருந்தால் போதும் என்பாள் அன்னை பராசக்தி எங்கும் நிறைந்த ஜோதியாய் இருப்பாள் அன்னை பராசக்தி
ஏகா கூடிரமாய் எங்கும் ஒளிர்வாள் அன்னை பராசக்தி ஐங்கர நாதனை ஆதியில் தந்தாள் அன்னை பராசக்தி ஒட்டியான பீடத்தில் அமர்வாள் அன்னை பராசக்தி ஒம் என்ருலே ஒடியும் வருவாள் அன்னை பராசக்தி ஒளவை எனவே அவனியில் வந்தாள் அன்னை பராசக்தி
அம்மா என்ருலே அணைக்க வருவாள் அன்னை பராசக்தி
6)

Page 41
உள்ளமெனும் கோயிலிலே உணர்வெனும் ஊஞ்சலிலே மெள்ள மெள்ள ஆடிடுவாய் மேன்மை யெல்லாம் நிறைந்தவளே
துள்ளி வரும் எழில் உருவே தொடர்ந்து வரும் நல்லிசையே அள்ள அள்ள குறையாத அன்பமுதே வந்திடுவாய்
கோபமில்லா உள்ளத்திலே கொஞ்சி நிற்கும் பரம்பொருளே பாபமில்லா நல்லெண்ணத்தை தூபமாக தூவிடுவேன்
பாபமில்லா உள்ளத்திலே தல்கி நிற்கும் பரம்பொருளே தீபம் என்ற நல்லறிவாய் தேவி உன்னை பார்த்திடுவேன்
பற்பலவாய் எண்ணமிடும் பாவிமன சிந்தனையை சொற்பூவாய் ஆக்கிடுவேன் அர்ச்சனையாய் கொண்டிடுவாய்
70

முருகன் பூரீ ஆதி சங்கர பகவத் பூஜ்ய பாதர் திருச்செந்தூர் 'முருகவேள்' மீது பாடிய சுப்ரமண்ய புஜங்க ஸ்தோத்திரம்
"காலமெல்லாம் பாலனவன் கணேசன் திருவுடையோன் சூலமொரு ஐம் முகத்தோன் சுரனோடு நான்முகனும் சீலமிகு திருமாலும் தேடிவரும் கரிமுகத்தோன் மூலவினை மலை நீக்கி முழுச் செல்வம் அருள்புரிவான்"
"கவியறியேன் வசனமோ கண்டறியேன் என்
செவியறியா தொலியெதையும் செப்பியுமறியேன்- பொருள் புவி புகழும் ஆறுமுகா! உன் புனித முகம் நோக்குங்கால் தெவிட்ாத தென் தமிழ்ச் சொல் தெளிந்து வரும் நெஞ்சிருந்து"
"உலகமெலாம் காக்கும் கந்தா! உளம் மகிழும் ஒளி உருவே நலமுடைசான்றோர் நெஞ்சில் நாளெலாம் வாழும் தேவே! பலர் போற்றும் சிவன் மைந்தா! பக்திமிகு அந்தணர்தம் குலதேவா வேதத்தின் தத்துவமே! கோலமயில் வாகனனே!பணிகின்றேன்"
"செந்திற் கடலுடையோன் சேவடி துணை யென்றே
வந்தவர் தம் பிறவியெனும் வரையில்லாக் கடலினையே கந்தன் திருவருளால் கடந்திடுவீர் - பராசக்தி மைந்தன் பதம் பணிவோம் மால் மருகன் சொன்னபடி"
7

Page 42
"ஓங்கி உயர்ந்தடிக்கும் ஒய்யாரக் கடலலையும்
ஆங்கென் அடிபணிந்து அமர்திடுமாம் விந்தைபோல் ஏங்கும் கவலையொடு என் முன்னே வந்திட்டால் நீங்கும் தீங்கென்பான் நெஞ்சிலுறை செந்தூரான்"
“எந்தன் மலை வந்தவர்கள் எந்தைமலை போனவர்கள்
கந்தமலை வந்தவர்கள் கைலைக்கு வந்தோர் ரென்பான் சிந்தும் ஒளிமதி முகத்தோன் செந்திலுறை ஆறுமுகன் செந்தாமரை மலரொக்கும் சேவடிகள் தாம் வாழ்க’
“எத்தனையோ பாவமெல்லாம் எளிதினிலே போக்கவல்லt&"
சித்தர் வாழ் கந்தமலை சீரலைவாய் ஓரத்தினில் புத்தொளியாய்க் குகையினிலே புனித குகன் வீற்றுள்ளான் புத்துயிராய் விளங்குபவன் பொன்னடிகள் போற்றிடுவோம்"
"மாணிக்கக் கட்டிலென்ன மாசறு பொற் கோயிலென்ன
நாணக் கண்டிலாம் நாற்கோடி ரவி ஒளியும் வானத்துத் தேவதேவன் வரம் வேண்டத் தான் தருவான் காணக் கண் குளிரும் கார்த்திகேயன் தாள் பணியும்"
"செந்நிறப் பாதமலர் சிந்தும் தேனமுதமலர்
இன்னொலி பாதசரம் இன்பமயமாக்கும் மனம் உன்னினைவில் நினைவாக உலவிவரும் வண்டெனவே என்னிதயம் இருந்தங்கே எப்போதும் களித்திடுமே”
"தங்கநிற ஒளிவீசும் தகதகக்கும் பட்டாடை
அங்க அசைவினிலே அரைஞாணும் ஒட்டியாணம் கிண்கிணிக்கும் சதங்கை ஒலி கிறங்க வைக்கும் இடுப்பழகும் எங்கும் ஒளிவடிவாம் எழில் முருகன் நாம் பணிவோம்"
72

"நங்கை குறவள்ளி தனைமால் மருகணைத்துமே கொங்கை யழகிட்ட குங்குமமும் மார்புறைந்தே அங்கும் செவ்வொளி வீச அன்பர் தமை ஆட்கொள்வான் தங்க நிற மார்புடையோன் தாரகனைக் கொன்றவனாம்"
"சூரபதுமனை க் கொன்றே சுரன்பகை தான் வென்றே
துாரயமனை ஒட்டி துண்டித்த யானை தந்தம் பாருலகம் படைத்தவனைப் பணிய வைத்த வேலவனைச் சேரும் உயிர் காக்கச் செந்தூரன் கரம் துணையே” பூ
"பனிக்காலச் சந்திரனும் பருவமெலாம் நிறைந்ததாலோ
தனித்தாறு முழுமதியின் தண்ணொளிபோல் ஆறுமுகம் தனக்குள்ளே மாசுற்று தரணியிலே தோணும் மதி கனிக்காக வலம் வந்த கந்தனுக்கு நிகராமோ”
"அன்னப்பறவைகளோ ஆறுமுகா புன்சிரிப்பு
இன்னமுத இதழழகால் இன்சொற்கள் தாம் வருமே வண்ணமலர்த் தாமரையில் வண்டுலவும் விழியழகை என்ன சொல்வேன்? சிவபாலா! எழில் தாமரை முகனே!"
"கண்விழிகள் பன்னிரண்டும் காதுவரை நீண்டிருக்கும்
நின்கருணைப் பெருவெள்ள நீர்த்துளிதான் கிட்டாதோ?
அன்பரெனத் தொழுவோருக்கு அருள்புரிந்தால் குறைந்திடுமோ?ல்
உன்பார்வை படுமாயின் உய்வேனே உமைபாலா"
"முன்னின்ற பாலகனை முகர்ந்திட்டு மகிழ்ந்த சிவன்
என்னின்றுதித்த மைந்தா என்றென்றும் வாழ்கவென சொன்னதுமே ஆறுமுறை சுகவாழ்வை நிலையாக்கும் மண்ணுலகின் சுமைதாங்கும் மணிக்கிரீடசிரம் பணிவோம்”
73、W

Page 43
"மாலை மணியணிகள் மார்பில் அசைந்தாட
கோல்மிகு காதணியும் குண்டலமும் தோள்வளையும் மேலிடை பட்டாடை மேன்ம்ை யொளி ରSaf@Gud வேலன் புரமெரித்தோன் வேத மைந்தா! நீ வருக”
"இங்குவா என்றதுமே இளைய திருக்குமரன்
சங்கரிதன் மடியிருந்து சங்கரன் கரம் தழுவும் தங்க நிற மேனி தவழும் குழந்தையவன் திங்கள் முகமாறும் தினமும் பணிந்திடுவேன்"
"குமரா ஈசன் திருமகனே! குகனே! திருமயில் வாகனனே!
அடியார் துயர்கள் நீக்குபவா! ஆறுமுகா! சமரில் தாரகனை கொன்றவனே! சரபவனபவனே! வள்ளி மணாளா! உமையாள் உருவாம் வேல் முருகா! உமைப்பணிந்தோம் காத்திடுவாய்”
"புலனடக்கி நினைவிழந்து பொறி கலங்கி கபமடைக்கப்
பலம் நலிந்து செயல் மறந்து பயம் மிகுந்து உடல் நடுங்க நலம் நசிந்து உயிர்மறைந்து நமனை நாடும் போதினில் உலகறிந்த துணைகள் வேறு உதவிடுமோ உனையல்லால்"
“வெட்டு பிள பொசுக் கென்று வெஞ்சினமாய் யமதூதர்
திட்டவரும் காலமதில் திருமயிலும் வேலுடனே கெட்டலைய விட்டிடாமல் கிட்டவந்து அஞ்சேல் எனத் தொட்டுக் காத்தருளத் தோன்றிடுவாய் வேலவனே"
"உனைப்பணிந்தே ப்ேகின்றேன் ஓம் முருகா என்றுனையே
கணப்பொழுதும் நினையாமல் கைகளையும் குவியாமல் நினைவிழந்து தவிப்பேனே நெஞ்சிலுயிர் நீங்குகையில் துணைபுரிவாய் அப்போது துதித்திடுவேன் இப்போதே"
74

"தாரகன் சிங்கமுகன் தம்பிகளின் தமையனவன்
சூரபதுமன் என்பவனும் சூழும் அண்டமாயிரத்தை வீரமொடு ஆளுகையில் வீழ்த்தியதும் வேலதனால்
பாரமன நோய் நீக்கிப் பார்த்தருள்வாய் வேலவனே"
"உமையாள் திருமகனே! உன்னடியேன் துக்கமெனும்
சுமையாள் தளர்ந்தவன் நான் சுந்தர வடிவேல்கொண்டு இமையா! அமரர் தேவா! ஏழைக்கிரங்கும் வேலா உமையன்றி வேறறியேன் உளநோய் நீக்கிடுவாய்"
“காசம் கயம் குட்டமொடு காக்கைவலி காய்ச்சலெனும் %
நாசம் செய்யும் பெருநோயும் நலிய வைக்கும் பைசாசம் வாசம் செய்ய என்னுடலில் வந்துற்ருல் வேலா உன்பூசும் இலைத் திருநீற்றால் போக்கிடுவாய் தீவினையாம்"
“கந்தனைக் காணவே கண்கள் கரங்களும் அவன் பணிக்கே
செந்தில்முருகன் புகழ் செவிபடைத்த பயனாகும் சந்ததமும் அவன் சரிதம் சந்தமுடன் வாய்பாடும் சிந்தனையும் உடல் வாழ்வும் சீரலைவாய் கந்தனுக்கே"
"பக்தி நெறி மனிதருக்கும் பரதத்துவ முனிவருக்கும்
முத்தியளித்திடுவர் மும்மூர்த்தி தெய்வங்களாம்
எத்தையும் அறிந்திடாத எளியநிலை பஞ்சமரின்
சித்த மொளிர் முருகனன்றி சிறியே னெதையும் அறியேனே"
"மனைவியோடு மக்களும் மனையில் வாழ் பசுக்களும்
மனிதரோடு பெண்களும் மற்றுமுள்ள சுற்றமும் நினைதுமையே வணங்கவும் நித்தமும் துதிக்கவும் வினைகள் நீங்க வேள்வியை விதிப்படி நடத்தியருள்வீர்”
75

Page 44
"நெடியமலை கிரெளஞ்சமதை நினைத்ததுமே வேல் கொண்டே பொடி செய்த புண்ணியனே! புண் படுத்தும் நோய்களையும் கொடிய விடப் பிராணியொடு கொத்தவரும் பறவையினம் கடுகி ஓடச் செய்திடுவீர் கைகள் தாங்கும் வேலதனால்"
"தன் மகன் செய்த பிழை தந்தை தாய் மன்னியாரோ!
உன் மகன் நானன்றோ உலகத்தின் தந்தையே நீ! தென்பதம் கிரிதேவா! தேவசேனாதிபதியே!
என் பிழை மலையெனினும் எளியேனைப் பொறுத்தருளவாய்"
“கந்தா உன்மயில் போற்றி! கடம்பா வேல் போற்றி!
சிவன் மைந்தா சேவல் போற்றி மறியாடும் தான் போற்று' சிந்தா குலத்தீர் செந்தூரா! சிந்தும் சேவடியம் போற்றி! வந்தே வரமருள்வாய் வணக்கம் வணக்கம் ஐயா!"
“வெற்றி தரும் இன்ப வடிவேலவனே! சிவன் மகனே!
வெற்றியின் திருவுருவே விளங்கும் புகழுடையோய்! வெற்றி கொண்ட திருக்கடலே வெள்ளப் பெருக்கினைப் போல் வெற்றிபுகழ் இன்பமெல்லாம் வேண்டினோர்க் கருள்வீர்!"
"கந்தனின் புஜங்கமதை கவிபாடி
வந்தித்து வாழ்ந்திடலாம் நெடுங்காலம் சிந்தைக் குகந்த இல்லாள் செல்வம் நன்மைகளுடன்
தந்திடும் பேரின்பநிலை தரணி புகழ் குகனருளே!"
7(

கந்தரலங்காரம்
பேற்றைத் தவஞ்சற்று மில்லாத வென்னைப்ரபஞ்ச மென்னுஞ் சேற்றக் கழிய வழிவிட்ட வாசெஞ்சடாடவிமேல் ஆற்றைப் பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின் கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன்க்ரு பாகரனே.
நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங் கோலக் குறத்தி யுடன்வரு வான்குரு நாதன் சொன்ன சீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார்சிவ யோகிகளே காலத்தை வென்றிருப் பாரமரிப் பார்வெறுங் கர்மிகளே.
நாளென் செயுமம்வினை தானென் செயுமெனை நாடிவந்த கோளென் செயுங் கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகந் தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.
விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்மை குன்றா மொழிக்குத் துணைமுருகா வெனு நாமங்கள் முன்பு செய்த பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி வழிக்குத் துணைவடி வேலுஞ்செய் கோடன் மயூரமுமே,
கந்தரனுபூதி
உல்லா சநிரா குலயோ கவிதச் சல்லா பவிநோ தனுநீ யலையோ எல்லா மறவேன் னையிழந் தநலஞ் சொல்லாய் முருகா சுரபூ பதியே.
77

Page 45
எந்தா யுமெனக் கருடந் தையுநீர் ஈ சிந்தா குலமா னவைதீர்த் தெனையாள் கந்தா கதிர்வே லவனே உமையாள் மைந்தா! குமரா மறைநாயகனே!
ஆதா ரமிலே னருளைப் பெறவே நீதா னொருசற் றுநினைந் திலையே வேதா கமஞா னவநோ தமனோ தீதா! சுரலோ கசிகா மணியே!
கருதா மறவா நெறிகா னவெனக் கிருதாள் வனசந் தரவன் றிசைவாய் வரதா! முருகா! மயில்வா கனனே! விரதா சுரகு ரவிபா டணனே.
திருப்புகழ்
பக்தியால் யானுனைப் Joldsfigy to பற்றியே மாதிருப் புகழ்பாடி
முத்தனா மாறெனைப் பெருவாழ்விலன்
முத்தியே சேர்வதற் கருள்வாயே
உத்தமா தானசற் குனர் நேயா
ஒப்பிலா மாமணிக் ésflatforff
வித்தகா ஞானசத் திநிபாதா
வெற்றிவே லாயுதப் பெருமாளே.
78

திருமக ளுலாவு மிருபுய முராள்
திருமருக நாமப் பெருமாள் காண் ஜெகதலமும் வானு மிதி பெறுபாடல்
தெரிதரு குமாரப் பெருமாள் காண் மருவுமடி யார்கள் மனதில் விளையாடு
மரகத மயூரப் பெருமாள் காண் மணிதரளம் வீசி யணியருவி சூழ st)
மருவுகதிர் காமப் பெருமாள் காண்
அருவரைகள் நீறு பட அசுரர் மாள
அமர் பொருத வீரப் பெருமாள்*காண் அரவுபிறை வாரி விரவுசடை வேணி
அமலர்குரு நாதப் பெருமாள் காண் இருவனையி லாத தருவினை விடாத
இமையவரகு லேசப் பெருமாள் காண் இலகுசிலை வேடர் கொடியினதி பார9
இருதனவி நோதப் பெருமாளே.
ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
ஈசனுடன் ஞானமொழி பேசுமுக மொன்றே கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே மாறுபடு சூரனை வதைத்தமுக மொன்றே வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே.
79

Page 46
நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ர சொ ரூபா நமோநம ஞான பண்டித ஸாமீ நமோநம வெகுகோடி நாம சம்புகு மாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம ...' நாக பந்தம பூரா நமோநம பரகுரர் சேத தண்டவி நோதா நமோநம
கீத கிண்கிணி பாதா நமோநம தீர சம்ப்ரம வீரா நமோநம drfigsg தீப மங்கள ஜோதி நமோநம
தூய அம்பல லிலா நமோநம தேவ குஞ்சரி பாகா நமோநம அருள்தாராய் ஈத லும்பல லால பூஜையும்
ஓத லுங்குண ஆசார நீதியும் ஈர முங்குரு சீர்பாத சேவையு மறவாத ஏழ்த லம்புகழ் காவேரி யால்விளை
சோழ மண்டல மீதே மனோகர ராஜ கெம்பிர நாடாளு நாயக வயலூரா ஆத ரம்பயி லாரூரர் தோழமை
சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில் ஆடல் வெம்பரி மிதேறி மாகயி லையிலேகி ஆதி யந்தவு லாவாக பாடிய
சேரர் கொங்குவை காவூந னாடதில் ஆவி னன்குடி வாழ்வான தேவர்கள் பெருமானே.
80

நாமாவளி
ஜய ஜய முருகா - ஜய வேல் முருகா முருகா முருகா - திருமால் மருகா! முருகா முருகா - வெற்றிவேல் முருகா மயில் வாஹனனே - கோமள குஹன்ே
மரகத மயில் மேல் வருமுருகாபி ஹரஹர சிவசிவ அரு முருகா சரவண பவனே ஷண்முகனே வரந்தர வாவா என்முன்னே அரவணி சிவனா ரருள் பாலா பரவ வரமருள் பரமதயாளா!
சம்பு நந்தன காங்கேயா ஜக - தம்பா குஹ ஓம் காங்கேயா! ஸ்கந்தம் வந்தே லோகேசம் கெளரி புத்ரம் வல்லிசம்!
81

Page 47
அருள் விருந்து
பஜ கோவிந்தம்
luéisytih இரவும் மாலையும்காலையும் பனிக்காலமும் இளவேனில் காலமும் திரும்பித் திரும்பி வந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு காலம் விளையாடுகின்றது. வயது கழிகிறது. என்றாலும் காற்றுப் போல் வியாபித்திருக்கும் ஆசை மட்டும் விடுவதில்லை.
மதி மயங்கியவர்களே! மரணசமயம் நெருங்கிய பொழுது இலக்கணச் சூத்திரம் உன்னை ஒரு பொழுதும் காப்பாற்றாது. ஆகையால் கோவிந்தனைச் சேவி கோவிந்தனைச் சேவி! கோவிந்தனைச் சேவி எதுவரை ஒருவன் பொருள் தேடுவதில் பற்றுள்ளவனாக இருக்கின்றானோ, அதுவரை அவனுடைய சுற்றம் அவனிடம் ஆசை வைத்திருக்கும். நோயினால் உடல் தளர்ந்து போன பின்பு அவன் உயிருடன் இருந்தால் ஒருவரும் அவனுடைய சமாகாரத்தை விசாரிப்பதில்லை.
சடை தரித்தவனானாலும், மொட்டை அடித்தவனானாலும், குடும்பியைக் கத்தரித்தவனானாலும், காவித்துணி அணிந்து பலவாறான வேஷம் பூண்டவனானலும், மதி மயங்கியவன் பார்த்தாலும் பார்க்காதவனே ஆகிறான். பலவகைப்ப்பட்ட வேஷம் எல்லாம் வயிற்றுப் பிழைப்பாகவே முடிகின்றது.
எவனால் பகவத் கீதை சிறிதளவாவது படிக்கப்பட்டதோ, கங்கைநீர் ஒரு துளியாவது பருகப்பட்டதோ, முராரியான பகவானுடைய பூஜை ஒரு தடவையாவது செய்யப்பட்டதோ அவனுக்கு யமபயமில்லை.
82

அங்கம் தளர்ந்து விட்டது; தலை நரைத்து விட்டது; வாய் பல் இல்லாததாகி விட்டது. கிழவன் கோலை ஊன்றிக் கொண்டு நடக்கின்றான். என்றாலும் அவனுடைய மாமிச பிண்டத்தை ஆசை விடவில்லை.
குழந்தையாய் இருக்கும் பொழுது விளையாட்டில் பற்று: யெளவனத்தில் பருவப்பெண்ணிடம் பற்று: வயது முதிர்ந்த பொழுது கவலை பரப்பிரம்மத்திடம் பற்றுக் கொண்டவன் எவனுமில்லை.
இறந்தால் மறுபடி பிறப்பு: பிறந்தால் மறுபடி இறப்பு மறுபடியும் ஒரு தாய் வயிற்றில் முடங்குதல்; கரை காணாததும் கடத்தற்கரியதுமான இல்வாழ்க்கை கடலினின்று என்னைக் காத்தருளும் பகவானே!
பகலுக்குப்பின் இரவும், இரவுக்குப் பின் பகலும், பட்சங்களும், மாதங்களும், கோடை காலமும், குளிர்காலமும், வருஷத்திற்குப் பின் வருஷமும் மாறாமல் வந்து போய்க் கொண்டி ருக்கின்றன.வீண் ஆசைகளும் சங்கல்பங்களும் எவனையும் விட்டுப் போவதாயில்லை.
வயது கடந்தால் காமக்கிளர்ச்சி என்ன ஆகின்றது? நீர் வற்றினால் குளம் என்ன ஆகின்றது? பொருள் அழிந்தால் சுற்றம் என்ன ஆகிறது? உண்மை உணரப்பட்டால் சம்சாரம் என்ன ஆகிறது?
ஸ்திரிகளின் நகில்களையும், நாபிப் பிரதேசத்தையும் பார்த்து மதி மயங்காதே. இவை மாமிசம், கொழுப்பு இவைகளின் விகாரம் என்று அடிக்கடி எண்ணி மனதில் பொருட்படுத் தாமலிரு.
83

Page 48
untP 5Tsir utto 6Tib55 65Gg5TDP 6sir gli ufo தந்தை யார்? இப்படித் தன்னுடைய பிறவித் தளைகளை நன்றாக விசாரித்துப் பார்த்து, இவையெல்லாம் கனவுக்கு ஒப்பானவை எனக் கண்டு க்ொள். ክ
எது வரை மூச்சுக் காற்று உடலில் ஓடிக் கொண்டிருக்கினறதோ அது வரை வீட்டில் உன்னுடைய நலத்தைப் பற்றிக் கேட்பார்கள். மூச்சுக்காற்றுப் போய் உடலுக்கு அபாயம் ஏற்பட்டால் மனைவி அவ்வுடலைக் கண்டு அஞ்சுவாள்.
காம சுகத்திற்கு எவன் வசப்படுகின்றானோ அவன் நோய்வாய்ப்படுகின்றான். மரணம் ஒன்றே முடிவு என்று கண்டும் ஒருவரும் பாவத்தினின்று விலகுவதில்லை.
மதிகெட்டவனே பொருள் சேர்ப்பதில் ஆசையை விட்டொழி. வீணான ஆசைகளினின்று விலகிய நல்ல எண்ணங்களை மனதில் சிந்தனை செய். உன்னுடை நிலைக்கேற்ற கருமங்களைச் செய்வதால் கிடைக்கக் கூடிய பொருளைக் கொண்டு மனதைச் சந்தோஷப் படுத்திக்கொள்.
பொருள் எப்பொழுதுமே துன்பம் விளைவிப்பது என்பதை மனதில் வைத்துக்கொள். அதனால் சிறிதளவு சுகம் கூட இல்லை என்பது உண்மை. பெற்ற பிள்ளையிடமிருந்துங்கூட, பொருள் படைத்தவர்களுக்குப் பயம் ஏற்படுகின்றது. இப்படித்தான் எல்லா இடமும் காணப்படுகின்றது.
பொருள், சுற்றம் யெளவனம் முதலியவற்றைப்பற்றிக் கர்வம்
கொள்ளாதே. காலம் ஒரு நிமிஷத்தில் எல்லாவற்றையும்
கொண்டு போய்விடும். மாயாமயமான இவ்வனைத்தையும்
விட்டு பிரம்மத்தை அறிந்து கொண்டு அதனுட் புகுவாயாக.
84

காமத்தையும் கோபத்தையும் பேராசையையும் மயக்கத்தையும் மதிமயக்கத்தையும் ஒழித்து அஞ்ஞானத்தினின்று விடுபட்ட உனது உண்மை உருவத்தைப் பார். ஆத்மஞானமில்லாத மூடர்கள் நரகத்தில் வீழ்ந்து துன்பத்திற்கு ஆளாகிறார்கள்.
சத்துருவென்றும், மித்திரனென்றும், புத்திரனென்றும், உறவினனென்றும் வேற்றுமையைப் பாராதே. விஷ்ணு பதத்தை நீவிரும்பினால் யாரிடத்தும் பகைமையும் நட்பும் பாராட்டாமல் எல்லோரையும், எல்லாவற்றையும் சமமாகப் பார்.
பிரணாயாமம், உள்முகமாகத் திரும்புதல், அழியும் பொருளையும் அழியாப் பொருளையும் ஆராய்ந்தறிதல், ஜபமும் சமாதியும்கூடுதல் ஆகியமகத்தான சாதனைகளில் உன்னுடய முழு மனதையும் செலுத்து.
தாமரையிலை மேலுள்ள தண்ணி மிகவும் சஞ்சலமானது.அதே மாதிரித்தான் உடலில் உயிரும் அதிசயிக்கும்படி சஞ்சலமானது. உலகனைத்தையும் நோயாலும் அகங் காரத்தாலும்ஜி பீடிக்கப்பட்டுத் துன்பத்தால் கொல்லப்படுகிறதென்பதை чај фајтшта.
உன்னுடைய குருவின் திருவடித் தாமரைகளைப் போற்றி உலகத்திற்கு அடிமையாக இருப்பதினின்று உன்னை விடுவித்துக் கொள். இந்திரியங்களையும் மனதையும் அடக்கி பகவானை உன் இதயத்தில் பார்.
85

Page 49
நற்சிந்தனை
குருநாதர் அருள்வாசகம்
ஒரு குறைவுமில்லை
நமது உயிருக்குயிராய் இருப்பவர் கடவுளே.
ஆகையால் நாம் அவருடைய உடைமை.
அவருடைய அடிமை.
நம்முடைய அசைவெல்லாம் அவருடைய அசைவே.
நாம் அவரை ஒருபோதும் மறந்திருக்க முடியாது.
நமக்கு ஒரு குறைவுமில்லை.
நாம் என்றும் உள்ளோம்.
எங்கும் இருக்கின்றோம்.
எல்லாம் அறிவோம்.
இப்படியே நாம் இடையறாது சிந்தித்துச் சிந்தித்துக் கீழ்மையான குணங்களைப் போக்கி மேலான தெய்வத் தத்துவத்தை அடைவோமாக.
'சந்ததமு மெனதுசெயல் நினதுசெயல் யானெனுந் தன்மை
நினையன்றி யில்லாத்
தன்மையால் வேறலேன் வேதாந்த சித்தாந்த
சமரச சுபாவமிதுவே.
என்னும் தாயுமானவர் அருமைத் திருவாக்கே இதற்குப் போதிய சான்று.
86

தவம்
தவத்திலே மேம்பட்டவரகளைக் கூட இந்திரியங்கள் வரம்பு கடந்து இழுத்துச் செல்கின்றன. ஆதலால் அவற்றை வெல்வதற்குச் சிவதியானஞ் செய்க. அதனால் மாத்திரந்தான் புலன்களைத் தன்வசப்படுத்தத் தக்கது. ஆகவே இடைவிடாமற் சிவதியானஞ் செய். மனிதன் விடயங்களைக் கருதும் போதெல்லாம் பற்றுண்டாகின்றது. பற்றுதலால் விருப்பம் உண்டாகின்றது. விருப்பத்தாற் சினம் பிறக்கிறது. சினத்தால் மயக்கம். அம்மயக்கத்தால் தவறுதல் உண்டாகும். ஆதலால் உன்னைச் சவதியானத்தால் காத்துக்கொள்.
நாங்கள் எங்கள் சிறுமைக் குணத்தினால் இயல்பிழந்து தரும வழியினின்று தவறுகின்றோம். தவறுதல் நீங்கித் திடமுண்டாகச் சிவதியானமே சிறந்த கருவியாகும். இந்த உலகத்தில் மிகுந்த செல்வம் இருப்பினும், வானோரை ஏவல் கொள்ளக் கூடிய வல்லமை இருப்பினும் நாங்கள் புலன்களை அடக்கி ஆளுதல் முடியாது. ஆதலால் திருவருளை முன்னிட்டுமனதைப் புலன் வழிச் செல்லாமல் அடக்கியாள். இதுதான் தவமென்று பெரியோர் சொல்வர். அதைவிடுத்து இடம்பமான வேள்வி முதலியவை செய்வதால் திடமுண்டாக மாட்டாது.
சன்மர்க்கம்
குரங்கு போல் மனம் கூத்தாடுகின்றதே.
இதன் கூத்தை எப்படி அடக்குவது என்று தெரியவில்லையே, நன்று சொன்னாய். இதற்கு நல்ல மருந்து என்னிடமுண்டு. நீ அதை மறந்து போனாய். சொல்கின்றேன் கேள்.
87.

Page 50
சிவத்தியானம் என்னும் மருந்தைத் தினந்தோறும் சாப்பிட்டு வா. மனக்குரங்கின் பிணி மாறும்.
அது என்னவென்றால் நாவடக்கம், இச்சையடக்கம் என்னும் சரக்கோடு சேர்த்துச் சாப்பிடு.
இதுவும் போதாது.
பத்தியப் பாகத்திலே தான் முற்றுந் தங்கி இருக்கிறது. அதுவும் உன்னிடம் உண்டு.
அது என்னவென்றால்: மிதமான ஊண், மிதமான நித்திரை, மிதமான தேக அப்பியாசம் என்பவையே. வெற்றி நிச்சயம்.
ஆன்ம லாபத்தின் பொருட்டிதைச் செய்.
அதைச் சாப்பிடும் போது அனுபானத்தைக் கூட்டிச் சாப்பிடு. அதுவும் உன்னிடம் உண்டு.
மனத்தை ஒருவன் அடக்கி வெற்றி கொள்ள முழுமனத்தோடு விரும்புவானானால் சிவத் தியானத்தை தினந் தோறும் செய்து வரக் கடவன்.
படிப்படியாக அவன் மனமொடுங்கிவருவதை அவன் கண்கூடாகக் காணுவான். V−
சாந்தம், பொறுமை, அடக்கம் முதலிய நற்குணங்கள் அவனிடத்தில் உதிக்கும்.
அவன் மனம் எந்த நேரமும்மகிழ்ச்சி யுடையதாகவே இருக்கும். இகழ், புகழ் இரண்டினாலும் இழிவடையான். அந்தராத்மாவிலே சுகிப்பான். பிறர் சுகம் தன் சுகம் என்ற எண்ணம் பெருகும்.
கைவிளக்கை ஒருவன் கொண்டு செல்வானானால்இராக் காலத்தில் அவன் மனம் கலங்குவானா? கலங்கான். அப்படியே சிவத்தியானத்தைச் செய்து வருவானானல் மாய இருள் அவனை JeOLujLoTP 960)Luli.
88:

போதனையிலுஞ் சாதனை சிறந்தது? ஒரு பொல்லாப்பு மில்லை.
ஆன்ம லாபமே பொருளெனக் கண்ட அறிஞர் அநித்தியமான இந்த உலக இன்ப துன்பத்தில் மயங்காது தாமரையிலையில் நீர் போற் சகத்துடன் கூடி வாழ்வார். ஆன்ம லாபத்தைப் பெற நினையாதவர் இந்த உலகத் துன்ப . இன்பத்தினாற் கலங்கித் தியங்கித் திரிவார்கள். ஆன்ம லாபத்தையே குறிக்கோளாகக் கொண்டு நன்மை தீமையை வென்று நான் எனதென்னும் அகங்கார மமகாரங்களைக் களைந்த அறிஞர் இறைவன் திருவடி நிழலில் பிறபிறப்பற்றுப் பேரின்பத்துடன் வாழ்வார்.
அஃதறியா அறிவிலிகளே துன்பக் கடலிலே வீழ்ந்து எரிவாய் நிரயத்துக் களாவார்.
வண்டுகள் பூவைக் கிண்டித் தேனை உண்டு ஒன்றுமறியாது கிடப்பது போல் பக்தனும் சித்தமாகிய பூவைச் சிவத்தியானத்தினால் கிண்டி ஆங்குவரு மானந்தத்தேனை உண்டு ஒன்று இரண்டு, நன்று தீதென்றறியாமற் தேக்கிக் கிடக்கிறான்.
ஒரு கமக்காரன் தன்னுடைய நிலத்திலே நல்ல வித்தை இட்டு அதிலுண்டாகுங் களையைக் களைந்து, விளையுந் தானியத்தை ஒன்று சேர்க்கின்றான்.
அதுபோலப் பக்தனும் சிவமாகிய நிலத்திலே பக்தியென்னும் வித்தை வித்திட்டுக் காமக் குரோத மோக மதமாச்சரிய மென்னும் களையைக் களைந்து சிவபோக மென்னும் தானியத்தைச் சேர்த்து வைத்துப் புசிக்கின்றான்.
பூலோகமாகிய நந்த வனத்திலே சீவர்களாகிய மலர்கள் மலர்ந்து கிடக்கின்றன. சிவன் அதைக் கண்டு மகிழ்கிறான்.
பொற்கொல்லன் பொன்னை யெடுத்துப் பல பூண்களைப் படைக்கிறான்.
89

Page 51
சிவனாகிய பொற்கோல்லன் ஆன்மாவாகிய பொன்னை யெடுத்துச் சீவர்களாகிய பல பணிகளையும் ஆக்குகின்றான்.
வைத்தியன் பல மூலிகைகளையும் எடுத்து ஒன்றாக்கி நோய்க்கு மருந்து கொடுத்து நோயை மாற்றுகிறான்.
பெரிய ஞான வைத்தியனும் நனு கரண புவன போகங்களை ஆன்மாவுக்குக் கொடுத்து அதன் நோயை மாற்றி இன்ப வீட்டில் வைக்கிருன்.
தாய் தனது சூழந்தைகளுக்கு விளையாட்டுச் சாமான்களைக் கொடுத்து மகிழ்விக்கிருள்.
சிவபெருமானுந் தன் குழந்தைகளாகிய எங்களுக்குப் பலவிதமான இன்பங்களையுந் தந்து மகிழ்விக்கின்றன்.
பொறி வழியே பேர்னது மனம் அலைய அறிஞர் இடங்கொடார். ஏனெனில் ஆத்மாவே தானென அறிந்தவர்கள்:
ஆசை நோய்க்கு இடங்கொடுப்பாரா? அன்று.
அவர் தம்பெருமையை வேத சிவாகமங்குளும் புகழ்கின்றன. இவர்களைக் கண்டால் கல்லுங் கரையும் அனைத்தினும் வெற்றி யுண்டு.
சிவத்தியானம்
ஓ மனிதனே! நீ உண்மைப் பொருள்.
கேடற்றவன். உனக்கு ஒருவருங்கேடு விளைக்கமுடியாது. நீ இங்கும் அங்கும் எங்கும் உள்ளவன் நித்தியன்.
உறுதியுடனே சிங்கம் கானகத்தில் திரிவதுபோல் உலக மாகிய கானகத்தில் திரி.
90

எந்த வீதத்திலும் தளர்வடையாதே.
ஒரு நூதனமு மிங்கில்லை முழுதுமுண்மை.
ஒரு பொல்லாப்புமில்லை.
ஒ மனிதனே! வானம் வந்தாலும் பூமி வந்தாலும் ஆட்சிசெய்யக் கருதாதே.
சாட்சியாயிரு. மாட்சி உன் பிறப்புரிமை.
அது என்ன வுபாயத்தாலு மடையப்படுவததொன்றன்று அப்படியுள்ள காரியம். மற்றனைத்துஞ் செப்படிவித்தை. அறிவு,
அறியாமை உன்னிடமில்லை.
நீ பரமாத்மா.
11 ஒம் தத் சத் ஓம் 11
ஒ மனிதனே! சற்றுப் பொறுமையாயிருந்து பார். நீ யாரெனத் தெரிந்து கொள்வாய். துயருறத் தகாத காரியங்களில் துயருருதே. துன்பமும் இன்பமும் உலக நடவடிக்கைகள். நீ சித்துப் பொருள்.
உன்னை ஒன்றும் தாக்கமாட்டாது. எழுந்திரு, விழித்துக்கொள். சிவத்தியான மென்னுந் திறவுகோலால் மோஷ வீட்டின் கதவைத்திறந்து பார். எல்லாம் வெளியாகும்.
11 ஒம் சாந்தி சாந்தி சாந்தி 11
ஓ நண்பனே! உன்னை யார்தான் பாவியென்று சொல்ல வல்லான். ஏன்?
நீ சிவத்தின் அம்சமல்லவா? மறந்து போனுய். ஓம் தத் சத் ஒம் என்று ஓயாமற் சொல்லு, உன் முழுமனத்தோடும் இறைவனுக்கு உன்னை ஒப்புக்கொடு. " --
91

Page 52
சிவத்தியானத்தை அசட்டை பண்ணுதே. ஈற்றில் யாவும் நன்மையாய் முடியும். சோம்பலுக்குஞ் சோம்பலின்மைக்கும் நீ கட்டுப் படாதே
அதிகப் பேச்சில் என்ன பயன். பண்படுத்தப்பட்ட தரையிலன்ருே நல்ல பயன் வரும். அஞ்சாதே.
நாங்கள் சிவனடியார். சிவபெருமான் என்றுள்ளவரோ அன்று நாமுமுள்ளோம்
வெப்பந் தட்பம், இன்பம், துன்பம், இளமை, முதுமை இயற்கையின் குணங்கள்.
இவைகளின் தீண்டுதலால் நாமேன் கவலைப்படுவான். இவைகள் தோன்றி மறைவன. நாமோ தோன்றுவதுமில்ல. மறைவதுமில்லை.
உண்மை இன்மை யாகாது. இன்மை உண்மை யாகாது.
எல்லாஞ் சிவன் செயலென்ற எங்களுக்குக் குறைவு முண்டோ? நிறைவு முண்டோPநாம் சிவபெருமானென்ற நுாலிலே கோக்கப்பட்ட பல நிற முள்ள மணிகளை யொப்பவர். நுாலறுவது மில்லை. நாங்கள் சிதறிப்போவதுமில்லை. பலபடக் கூறுவதால் பயனில்லை.
11 ஒம் சாந்தி சாந்தி சாந்தி 11
ஒ சினேகிதா! நீ சிவனடியானென்று முழுமனத்தோடும் நினை, எல்லா வெற்றியு முன்னிடமுண்டு. அதற்கு மேல் வேருென்று மில்லை. யாவுமுன் காலடியில்.
11 ஒம் சாந்தி சாந்தி சாந்தி 11
சிவபக்தி
சிவபக்தி மாத்திரத்தான் மனிதனைப் பாக்கியவானுக்கும், மற்றையவனைத்தும் பிரயோசனமற்றவை, ஆகையால் இடைவிடாமற் சிவத்தியானம் பண்ணு, ஒன்றுக்கும் பயப்படாதே,
92

வெற்றியுன் சொந்தம். எத்தனைமுறை தவறினலும் தைரியத்தைக் கைவிடாதே. தவறுதல் சடசம்பதமானது. நீயோ சித்துப் பொருள் (அதாவது அறிபுப் பொருள்). நீயொரு நாளும் அழிய மாட்டாய். எழுந்திரு! விழித்துக் கொள்! காரியங்கைகூடுமட்டும் வழியிலே தங்கிவிடாதே உற்சாகத்தோடு முன்னேறிச் செல். உனக்குச் சகல சத்தியுங் கட்டுப்படுவதைக் காண். வீண்வாத தர்க்கத்திலே நாளைப் போக்காதே. நீ எங்கே போகிருயோ அங்கே உன்னுடன் பகவான் வருவார்.
வெளிமாதிரி யொன்றுஞ் செய்யாதே. உனக்குள் நீ பெலத்துக் கொள். சமயமென்பது ஒரு மாதிரியுமற்ற தனித்தநிலை உடல்பொருள் ஆவிமூன்றையும் பகவானுக்கு ஒப்படை அதன்பின் உன்னைப் பற்றிய காரியங்களைக் கைவிட்டுவிடு, அனைத்தும் J9ysuG360, Luftft.
குரு வாசகம்
ஆத்துமா நித்தியமானது, பிரிவில்லாதது, பூரணமானது, சரீரமோ அழியுந் தன்மையுள்ளது. பிரிவுள்ளது, இப்படி யிருக்கையில் நாங்கள் இவ்விரண்டையும் சரியென்று சொல்ல முடியுமா? அப்படி நாங்கள் சொன்னல் இதிலும் பெரிய பாவமும் பழியும் வேறுண்டோ?
ஆத்துமா எல்லாத்துக்கு மாதியாயுள்ளது. யாவையும் ஆளுகின்றது.
சரீரமோ தொடக்கமுடையது, ஆளப்படுந் தன்மையுடையது.
இப்படி யிருக்கையில் நாங்களில்விரண்டையும் ஒன்ருேடொன்று ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா? அப்படி யொப்பிட்டால் இதிலும் வேறு பழி கிடையாது.
இயற்கையிலே ஆத்துமா அறிவுடையது. துாய்மையானது, சரீரமோ அறியாமையுடையது தூய்மையற்றது. இவ்விரண்டையும் ஒப்பிட்டால் இதிலும் அஞ்ஞானம் பிறி துண்டோ?
93

Page 53
ஆத்துமா பிரகாசமுடையது, அதாவது சயம்பிரகாச முடையது.
சரீரமோ இயற்கையிலே இருள். மயமானது, இவ்விரண்டையு GLOntul Leon LOITP
யாரொருவன் தன்னைச் சரீரியென்று நினைக்கிருனே ஐயோ, அவனிலுங் கீழ்மகன் யார்?
யார் ஒருவன் தன்னுடைய சரீரமென்று சொல்லுகிருனே அவன் மட்பிண்டத்தைத் தன்னுடையது என்று சொன்னது போலிருக்கும்.
யார் ஒருவன் தன்னைப் பூரணணென்றும், நித்தியன் என்றும், இயற்கை அறிவுடையவ னென்றும் நினைக்கிருனே அவன் உண்மை யறிவாளி, அவனுக் கிணையாக ஒரு தெய்வமு மில்லை.
யார் ஒருவன் தன்னை ஓர் அழுக்கும் பற்றமாட்டா தென்றும், மாறுபாடில்லாதவனென்றும், துாய்மையிலுந்துாய்மை யென்றும் நினைக்கிருனே அவனை அறிவாளிகள் ஞானி யென்று சொல்லுவார்கள்.
வேதம் ஆகமம் யாவும் இந்த உலகம் முழுவதும் தெய்வமே நிறைந்திருக்கிற தென்றும் அதைவிட வேறுயாது மில்லை' யென்றும் முறையிட நாங்கள் எப்படி உலக மிருக்கிறது சரீர மிருக்கிறதென்று நினைக்கலாகும். அப்படி உலகம் சரீரம் வேருயிருக்கிறதென்முல் இதைவிடப் பழி பிறிதுண்டோ? ஆன்ருேரும் நின்ஞவார் பிறரன்றி நீயே ஆணுய்" என்று சொல்லி யிருக்கிருர்கள்.
இன்னுேரன்ன பல காரணங்களாலும் கடவுளைத் தவிர? வேருென்றுமில்லை. யாவு மவன் செயல்.
சொல்லெல்லாம் மோனம் தொழிலாதியும் மோனம் எல்லாம் நன்மோன நிறைவே.
94

தெய்வீக சிந்தனை பகவான் பூரீ கிருஷ்ணன் அருளிய பூரீமத் பகவத் கீதையிலலிருந்து
குளிர், உஷ்ணம், சுகம், துக்கம் ஆகிய புலனுணர்ச்சிகள் மாறி மாறி வரும்; இவை அணித்தியமானவை, அவற்றைப் பொறுத்துக்கொள்'
மரணகாலத்தில் எவன் என்னையே "நினைத்துக்கொண்டு போகிருனே, அவன் என்னையே அடைகிறன். இதில் கொஞ்சமும் சந்தேகம் கிடையாது.
எவராவது பக்தியுடன் பத்திரம், புஷ்பம், பழம், தீர்த்தம் முதலியதில் எதையாவது எனக்கு அளிப்பரேல், சுத்த மனதுடன் அளிக்கப்பட்ட அக்காணிக்கையை நான் ஏற்றுக்கொள்வேன்.
நீ செய்வ தெல்லாவற்றையும், உண்பகையும், தீயில் ஹோமம் செய்வதையும், தானமளிப்பதையும், தவம் செய்வதையும், எல்லாவற்றையும், எனக்கே அர்ப்பணமாகச் செய்.
நான் எல்லா உயிர்களிலும் சமமாயிருக்கிறேன். ஒருவனிடமும் வெறுப்போ விருப்பமோ இல்லாதவன் ஆனல் என்னை பக்தியுடன் பூஜிப்பவர்கள் என்னிடமிருக்கிருர்கள். நானும் அவர்களிட மிருக்கிறேன். எவன் என்னை எல்லாவிடத்திலும் காண்கிருனே, என்னுள் எல்லாவற்றையும் காண்கிருனே, அவனைவிட்டு நான் விலகுவதில்லை, என்னைவிட்டு அவனும் விலகுவதில்லை. என்னிடம் சரணமடைந்து, எல்லாச் செயல்களையும் எனக்கு அர்ப்பணம் செய்து என்மேல் தன் சிந்தனையை வைப்பவனை இப்பிறவிக் கடலிலிருந்து சீக்கிரம் கரைபேற்றுகிறேன். உன் மனத்தை என்னில் பதியவை, உன் புத்தியை என்மேல் செலுத்து, இப்பிறவி தீர்ந்ததும் சந்தேகமின்றி என்னையே நீ அடைவாய் அதுவும் முடியாததென்றால். நீ செய்யும் எல்லாக் கருமங்களையும் எனக்கர்ப்பணமாகச் செய், வேருெரு சாதனமுமின்றி எனக்கர்ப் ணமாக எல்லாச் செயல்களையும் செய்து கொண்டே நீழுக்தியடைவாய் 95

Page 54
Stay by yourself, O Mindl Why wander here and there? Look within - in the inner Chamber of your heartAnd you will find, right there, Whatever you desire.........
Whoever starts upon a journey taking the name of Mother Durga, Shiva, with His almighty trident, Surely will protect him.
Every phase of the moon is auspicious; Every day an auspicious day. An auspicious day affects him only Who has forgotten the Lord.
There is an eternal struggle raging in Man's breast between
the powers of darkness and of light, and he who has not the Sheet-anchor of prayer to rely upon will be a victim to the powers
of darkness. •
The man of prayer will be at peace with himself and with the
whole world, the man who goes about the affairs of the world without a prayerful heart will be miserable and will make the world
also miserable.
Prayer is the only means of bringing about orderliness and peace and repose in our daily acts.
O Goddess of Light, the Dispeller of Darkness, Sickness and
Misery - O Mother Lakshmi, you are the Giver of happiness,
wealth and prosperity.
96

| bow to Thee. Please destroy all my internal enemies; i.e. passion, anger and greed; and accept my salutations.
From untruth lead US unto truth From darkness lead us unto light From death lead US unto life Eternal. O Thou Self-revealing One! Do Thou reveal Thy self to us. O Thou Awe-inspiring Presence Sustain us by the light of Thy
-Benign Countenance.
"Whosoever offers to me with love a leaf, a flower, Or fruit Or even water, I appear in person before that disinterested devotee of purified intellect, and delightfully partake of the article offered
by him with love.
-Gita/Ch. 9 VS 26.
"Do with me, O Lord, whatever Thou pleasest; dispense to me either good or evil, health or sickness, life or death, prosperity or adversity consolations or trials."
"Yes, Lord, i desire the dissolution of my body, in order that I may be with Thee Nothing but this hope can consoleme; it alone is my life. What signifies the world to me, and what can it give me? Thy Kingdom Thy Kingdom! O my God! I have no other country. Grant that this poor exile may be led to it, and he will celebrate
eternally. Thy mercies. - Amen."
-The limitation of Christ.
97

Page 55
"O Thou Lord supreme, bow down to Thee! For Thy sole pleasure and play didst thou bring forth this Universe.
hou art the highest in the highest! Who can sing thine infinite Glory?
Thou art the innermost ruler of every heart; Thy paths are mysterious. Thy ways are blessed.
"Lead, kindly Light, amid the encircling gloom
Lead Thou me on; The night is dark and I am far from home,
Lead Thou me on. Keep Thou my feet, I do not ask to see, The distant scene; one step enough for me.
was not ever thus, nor prayed that Thou
Shouldst lead me on; I loved to choose and see my path; but now
Lead Thou me on; I loved the garish day and, spite of fears, Pride roled my will; remember not past years. So long Thy power hath blest me, sure it still
Will lead me on; O'er moon and feen; o'er crag and torrent, till
The night is gone; And with the morn, those angel faces smile, Which I have loved long since and lost awhile."
米米米米米米
98.


Page 56