கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குறிஞ்சிக் குமரன் பிரார்த்தனைக் கீதங்கள்

Page 1
Esiae on
குறிஞ்சிக் பிரார்த்தனை
இந்து மான
1986.
பேராத
 
 

sEREEEEEEEEEEEE3Kaapse: FE;
குமரன்
ாக் கீதங்கள்
. . . . ToT FI)
1 ܦܪR

Page 2

GRALLசிவமயம்
பிரார்த்தனைக் கீதங்கள்
இந்து மாணவர் சங்கம் -1986 - 87
பேராதனைப் பல்கலைக் கழகம்

Page 3
முன்னுரை
இந்துசமயம் இறைவனை மனம், வாக்கு, காயம் மூன்றினுலும் வழிபடுமாறு எமக்குக் கூறுகிறது. ஆனல் அநேக இந்து ஆலயங்களில் மனத்தாலும் உடம்பாலும் வழிபடும் எமக்கு வாயினுல் இறைவன் புகழ்பாடி வழிபடச் சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. சரியான இசையுடன் செந்தமிழில் இறைவன் பெருமைகளைக் கூறும் பாடல்களை அவனை நினைத்து உள்ளன் போடு பாடினல் மனம் நெக்குருகும் அனுபவமே தனி. இறைவனை வாக்கினல் வழிபட்டுப் பயன் அடைவதற்கு அடிய வர்கட்கு நல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகத்தான் பேராதனைப் பல்கலைக்கழக குறிஞ்சிக்குமரன் கோவிலில் பூசைகளையும் மறுநிகழ்ச்சிகளையும் ஒழுங்கு செய்யும்போது பஜனைக்கும் 15-30 நிமி டம் வரை ஒதுக்குகிருேம். சாதாரணமாக வாசித்துப்பார்க்கும் போதே அரிய கருத்துக்களைக் கூறும் இப்பாடல்கள் உரிய இசையுடன் இனிய குரலினுற் சொல்லித்தரப்பட்டு, மனம் கனிந்து பக்தியோடு படிக்கப் பட்டால் நிச்சயமாக ஒரு தெய்வானுபாவத்தைத் தரும் என்பது எமது அனுபவத்திற் கண்ட உண்மை. இலாபநோக்கம் எதுவும் இல்லாது விற்கப்படும் இந்நூலைப் பஜனை படிக்கும் அனைவரும் வாங்கி அறையில் வைத்துப் படித்து இன்புற வேண்டும் என்பதே எமது அவா. இப் புத்தகத்தைத் தொகுப்பதற்குப் பாடல்களைச் சேகரித்தும் இயற்றியும் தந்து உதவிய முன்னைநாள் பொறியியற் போதஞசிரியர் திரு. சா. சக்திதாசன் (அக்கரைச்சக்தி) அவர்கட்கும், குறுகிய காலத்தில் குறை ந்த செலவில் அழகுற அச்சிட்டு உதவிய நாவலப்பிட்டி மிட்லன்ட் அழுத்தகத்தினருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளு கின்முேம், நன்றி
இந்து மாணவர் சங்கத்தினர் - 1986/87
குறிஞ்சிக் குமரன் கோவில் பேராதனைப் பல்கலைக் கழகம் பேராதனை
罗双-2一双987

t சிவமயம்
பிரார்த்தனைக் கீதங்கள்
5nsiT 2kmT uumIñr
பாஹி பாஹி சுஜானன பார்வதி தந்தா கஜானன மூஷிக வாஹன கஜானன மோதக ஹஸ்தா கஜானன சாமர கர்ணு கஜானன விளம்பித ஸஇத்ரா கஜானன வாமன ரூபா கஜானணு மஹேச்வர புத்ரா கஜானணு விக்ன விநாயக கஜானஞ பாத நமஸ்தே கஜானஞ
ஜயகணேச ஜயகணேச ஜயகணேச -பாஹிமாம் பூgகணேச பூgகணேச பூஜீகணேச -ரஷமாம்,
மகா கணபதே நமோஸ்துதே! வாமன ரூபா நமோஸ்துதே! விக்ன விநாயக நமோஸ்துதே ஓங்கா ரேஸ்வர நமோஸ்துதே!
கணேஸ்வரா கஜ முகேஸ்வரா! காருண்ய லாவண்ய விக்கினேஸ்வரா சுந்தர வதஞ கஜானன சங்கரி புத்ரா விநாயகா சங்கரி புத்ரா விநாயகா!
மாதங்க வதணு ஆனந்த சதன மகாதேவ சிவ சம்போ சங்கர மாதா விலாசன மூஷிக வாகன மாதா மகேஸ்வரி பவானி ரஞ்சன மகா கணபதே மங்கள ரமணு
கனதாதம் கணநாதம் ஈச்வர புத்ரம் கணநாதம்
விக்ன விராயக கணதாதம் லித்தி விநாயக கணநாதம் -பஜே
பார்வதி புத்ரம் கணதாதம் முக்திப்ர தாயக கணநாதம் "பஜே
wo-st
-கனேஸ்வரா
-иотதங்க
-மாதங்க
Gór)
ܗܵܘ܃
(கன) *

Page 4
-4-
மூஷிக வாஹன கண நாதம் மோதக ஹஸ்தா கணநாதம் - பஜே
சிவசிவ கஜமுக சுணநாதம் சிவகண வந்தித குணநாதம் - LGజ్ఞ
வாவா வாவா அங்குச பாசா வந்தருள் இன்பம் தந்திடு நேசா
உமைதரு பாலா குருமணியே உந்தன டைக்கலம் அடியோமே
மஹா கணபதே குருசரணம் மனம் மகிழ்ந்துவத் தருள்சரணம்
சரணம் சரணம் தந்திமுகா சரவண பவனுக் குயர்துணைவா
சிவன்
1. ஜெயஜெய கான மோனசபா
சச்சிதா னந்தா ஞானசபா
பணிஅணி நாதா பரம தாயா பங்கஜ பாதா பசு வாகன!
மலைமகன் பங்கா மறைமுதல்வா!
மதிதவழ் சடையா எமதிறைவா!
அலைநிறை கங்கா நதிமுடியா அறுமுகன் அப்பா அருளுபவா பிரணவ ரூபா பிறைநுதலா பிரேமா னந்தா பெருந்தலைவா
சிதம்பர தேவா சிவாயதமா திருநீற் ருெளியில் திகழுபவா
2. நமப்பார்பதிபதயே அரஹர மகாதேவ
மகாதேவ சம்பே ! நர்த்தன சுந்தர ஞான போதா! ஞான சிதம்பர சூல பாணி
கனக சபேசா கயிலை வாசா காமி சமேதா கெளரி நாதா
(கனர்
{&ଜ୪r);
{கண)
*as aw)
கண)
தமப்பாச்பதி

-5-
கங்கா தரனே சிவந. ராஜா பொங்கர வம்புனே புண்ய சீலா - நமப்பார்பதி சாம்ப் சதாசிவ சங்கர தேவா தேன்பத மேந்திய திவ்ய ரூபா - தமப்பார்பதி
சிற்பர தற்பர பூரீஜெக தீசா சின்மயா நந்தா தேவ தேவா - நமப்பார்பதி நந்தி வாகனு ஞானியர் நேசா நமஓம் நமஓம் காசி வாசா -நமப்பார்பதி
அம்பலத் தரசே அருமருந்தே ஆனந்தத் தேனே அருள் விருந்தே
பொதுநடத் தரசே புண்ணிப்னே புலவரெ லாம்புகழ் கண்ணியனே
சிவசிவ சிவசிவ சின் மயதேஜா சிவசுந்தர குஞ்சுத தடராஜா
மலைதரு மகளே மடமயிலே மதிமுக அமுதே இளங்குயிலே
ஆனந்தக் கொடியே இளம்பிடியே அற்புதத் தேனே மலைமானே
படனவிவேக பரம்பர வேதா நடனசபேச சிதம்பர தாதா
அரிபிர மாதியர் தேடிய நாதா அரகர சிவசிவ ஆடிய பாதா
தந்திர மந்திர யந்திர பாதா
சங்கர சங்கர சங்கர நாதா
கருணு நிதியே சபாபதியே கதிமா நிதியே பசுபதியே
கனக சிதம்பர கங்கர புரஹது அனேக பரம்பர சங்கர ஹரஹர
சங்கர சிவசிவ மாதேவா எங்களை ஆட்கொள வா வா வா
அரஹர சிவசிவ மாதேவா அருளமு தந்தர வா வா வா! (ryblua)

Page 5
-6-
சக்தி
தாராயணி வேத பாராயணி கருளுகரி ஜெய க்ரூபாகரி ~-5nrptnraucaia
காமாட்சி சுந்தரி தாட்சாயினி வான சரஸ்வதி பவதாரிணி ராஜேஸ்வரி ஹரி பார்வதி ஜெனணி காருண்ய லாவண்ய சிவரஞ்சினி! -p5u'r pymru 63aid
மலையர சேஇம வான் மக ளேஅர
ஞர்பலர் சூடிய மணமகளே மாத்தளை மாநகர் மாரியென் ருகிய மங்கைய ரேமன மகிழ்ந்தருனே கலையழ கேஉரு வாக விளங்கிடும்
கற்பகமே இளங் காரிகையே கந்தனை யேதிரு மைந்த னெனப்பெறும்
கண்மணி யேஉளங் கனிந்தருளே.
அலையலை யாய்ச்சுருள் கூந்த லசைந்திட
ஆடிடும் அற்புத நர்த்தகியே அம்பிகை யேஅரு ளேதர வேஎம
தாலயம் வந்து எழுந்தருளே இலைஇனி யேதுயர் என்று களித்திட
இங்கு இசைந்து இருந்தருளே ஏக பரப்ரம்ப நாரண ஞர்இனி
தேற்ற சகோதரி எழுந்தருளே.
பராசக்தி மாதா ஜெயஜெய பராசக்தி மாதா பராசக்தி மாதா ஜெயஜெய பராசக்தி மாதா - தும்
குராதி சரர்பணியும் ஞானசுபோத மயவொளியே - அம்மா மாருத நலமருளி இன்பம் வழங்கு மெனது விழியே - தாயே
-பராசக்தி
கரமலர் தனில் மகரவீணை காதினில் குண்டலமும் நல்ல உரகமணி மகுடமும் சிரசில் ஒளிவிடும் உமையவளே - அம்மா
-பாராசக்தி
அறிவெனும் உலகினிலே ஞான அமுதெனும் உணர்வினிலே-அம்மா விரிவுறு மேன்மையிலே மிளிரும் வேததுரந்தரியே! தாயே
-பராசக்தி

سے 7ے
விண்ணினில் உறை இரவி கமலமே! உனதிருவடியே! - தாயே கண்ணினில் ஒளியெனவே என்றும் கலந்திடு மிளம்பிடியே - அம்மா -பராசக்தி
மழலையின் ஒலியினிலே குழலின் மதுர சுரத்தினிலே - அம்மா வளர்ந்திடும் கலையினிலே உயிராய் வாழ்ந்திடும் இசையரசே தாயே பராசக்தி- - - ܚ
அறுசம யங்களிலே உனது ஆனந்தத் தாண்டவமே - அம்மா நறுமலர் மணமதிலே வாழும் நாயகி திருமகளே - தாயே
-பராசக்தி
எழுகடல் ஒலியினிலே இசையாய் எழுமுன தருள்மொழியே -தாயே தொழுதிடுவோர்கள் மனம் வாழும் சுபமகள் நீயலவோ- அம்மா -பராசக்தி
எண்ணெழுத் திறைவியடி நீயே எங்களின் தாயலவோ 6 அம்மா பண்ணிசைத் தேனருள் வாய் ஞானப் பாரதி கலைமகளே - தாயே -பராசக்தி
நவரசப் பாட்டினிலே விளங்கும் நாதாந்த ஏட்டினிலே - தாயே தவநிறை வீட்டினிலே துலங்கும் தாயவள் நீயலவோ -அம்மா -பராசக்தி
சுவைகளிலே சுவையாய்த் தோன்றிச் சுகமளிக்கும் பொருளே.அம்மா எவைகளிலும் நிறையும் இறைவி எழில் உருவானவளே தாயே
unt prin F dig
உலகுயிர் நீயானுய் அம்மா உறுபொருள் நீயானப் - தாயே தினமுனைப் பணிந்திடுவேன் உந்தன் இணையடி யருள்வாயே அம்மா -பராசக்தி
உமையவளே ஜெக தீஸ்வரியே உலகேழினை யாண்டிடும் நாயகியே சமய புரம்தனில் மாரியென் முகிய சங்கரியே நீ எனக்கருளே!
அன்னை சக்திமாதா என்னையாள வாவா ஒ ஓ பாரதசக்தி - தாயே பாரதசக்தி - அன்னை
விண்ணைநிகர் உண்மைநிறை வேதஒலி கூடவே வேணுகான மோடுசுர யாழினிசை பாடவே பொன்னைநிகர் உன்னடியைப் பூசனைகள் நாடவே "அன்னை

Page 6
சங்கரி பயங்கரி சடாட்சரியும் நீயே சர்வலோக ரட்சகி தயைபுரிகு வாயே ஐங்கரி யருமறையின் அம்பிகையே தாயே - அன்னை
சுத்தசக்தி தத்துவம் துலங்குமெழில் வாணி துர யசுட ராயொளியாய்த் தோன்றுமுந்தன் மேனி வித்தைகளி லேயுறையும் மெய்ப்பொருளே வேணி - அன்னை
சித்தியோக மாகவரும் தேவியேளன் தாயே சேவடி பணியுமென்னைக் காத்தருளு வாயே பக்தரை யணைக்குமருட் சக்திமக மாயே - அன்னை
பொங்குமெழில் தங்குஞான பூரண விலாசினி புண்ணிய வடிவமாய்ப் பொலியும்புகழ் லோசணி எங்கும்நலம் தங்குமிசை வாணிமலர் வாசினி - அன்னை
ஆதிநடு வாகிமுடி வான அருள் நாயகி ஆனந்த நடனமிடும் அன்னையன் பின் நாயகி சோதிவடி வாகவே துலங்கும்தெய்வ நாயகி - அன்னை
ஆசை அகங் காரங்க ளொழித்துஎன்னை ஆதரி ஆறுமுகன் மாமன்அரி அன்புடைய சோதரி தேசுலாவு மின்பமய மானதேவ மாதரி -அன்னை
அட்டசித்தி யும்அளிக்கும் ஆத்மஞான சோதியே அன்பருள்ளம் தங்குமெங்கள் அன்னையேநந் நீதியே சிட்டருக் கிரங்கும்சிவ சக்தியருட் சோதியே - அன்னை
ஆதியருட் சக்தியாகி அண்டமெல்லாம் ஆளுவாய் ஆனந்த வடிவமாகி அன்பருள்ளம் வாழுவாய் பாதியுரு வாகிப்பர னேடுஎன்றும் கூடுவாய் - அன்னை
சித்தமதி லேஅமைதி சேரவேண்டும் தாயே! சீரிய பலகலையில் தேறவேண்டும் தாயே! உத்தமியே என்மன துறையவேண்டும் நீயே - அன்னை
ச்யாமள சுகுமாரி லோகமாதா காளி - ஹரி
ச்யாமள சுகுமாரி லோகமாதா காளி - ஹரி
பக்தர் மனதில் வாழும் ஜெயபார்வதி நாயகி ராஜகுமாரி
- லோகமாதா காளி
ஓம் மாதா ஓம் மாதா ஓம் பூரீமாதா லலிதாம்பா ஓம் மாதா ஓம் மாதா ஓம் பூரீமாதா லலிதாம்பா
லோகமாதா காளி

-9-
யாது மாகி நின்றப் காளி எங்கும் நீ நிறைந்தாய் தீது நன்மையெல்லாம் நின்றன் செயல்களன்றி யில்லை போதுமிங்கு மாந்தர் வாழும் பொய்மை வாழ்க்கை யெல்லாம் ஆதிசக்தி தாயே என்மீ தருள்புரிந்து காப்பாய் - யாது
எந்தநாளும் நின்மேல் தாயே இசைகள் பாடி வாழ்வேன் கந்தனைப் பயந்தாய் தாயே கருணை வெள்ள மானுய்! மந்தமா ருதத்தில் வானில் மலையினுச்சி மீதில் சிந்தையெங்கு செல்லும் அங்குன் செம்மை தோன்று மன்றே!
-tாது
இன்பமாகி விட்டாய் காளி என்னுளே புகுந்தாய் பின்புநின்னை யல்லால் காளி பிறிது நானும் உண்டோ? அன்பளித்து விட்டாய் காளி ஆண்மை தந்து விட்டாய்! துன்பம் நீக்கி விட்டாய் காளி தொல்லை போக்கி விட்டாய்
-tunts
முருகன்
முருகா முருகா பூரீ ஜெய முருகா ஓம் சரவண பவ முருகா: ஓம் சரவண பவ முருகா சரவண பவ ஓம் சரவண பவ ஓம் ஓம் பூஜீ ஜெய சிவமுருகா.
குமரா குமரா குணமருள் குமரா ஓம் சரவண பவ குமரா ஓம் சரவண பவ குமரா குறமகள் ரமணு ஒம் சரவணு குமரா ஓம்சிவ சிவகுமரா
குசு சரவண ஒம் குக சரவண ஓம் ஓம்குக சரவணபவ ஒம் குக சரவணபவ ஓம் குன்றுதோ ருடல் கொண்டிடு மழகா ஓம் குக சரவணபவ ஓம்
சுந்தா கடம்பா கதிர்வடி வேலா ஓம் சரவணபவ தமஓம், ஓம் சரவணபவ நமஓம் சிந்தா குலந்தீர்த் தாண்டருள் செய்வாய் ஓம் சரவணபவ நம ஓம்
முருகா முருகா திருமால் மருகா ஓம் சரவணபவ நம ஓம், ஓம் சரவணபவ நம ஓம் அருகா வருவாய் அருளே தருவாய் ஓம் சரவணபவ நம ஓம்

Page 7
- 10 ܗ
ஞானகான வடிவேலா ஞானசக்தியருள் பாலா ஞானகான வடிவேலா ஞானமந்த்ரமருள் சீலா
வானநாடர் பணிராஜா மாசில்லாத குகராஜா வான நாடர் மணிராஜா வாழிவாழி அருள் ராஜா
கானவள்ளி மணவாளா கார்த்திகேய சுகுணுளா கானவள்ளி மணவாளா கருணையன்றிரு திண் தோளா
வன்னத்தோகை மயில்வீரா வானவர்க் கருளுதாரா வன்னத்தோகை மயில்வீரா மாதவர்க் கருளுதாரா
செந்தூர் வாழும் சுகுமாரா தெய்வயானை மகிழ்மாரா செந்தூர் வாழும் சுகுமாரா தேவதேவனின் குமாரா
கதிரைவாழும் ஞானக்கந்தா கருணையான அருட்சொந்தா கதிரைவாழும் ஞானக்கந்தா கருணையான அருட்சொந்தா
(ஞான) "
முருகா முருகா முருகா முருகா அரிதிரு மருகா வேல் முருகா அறுமுக முருகா வேல்முருகா கரிமுகன் துணைவா வேல்முருகா கருணை செய்வாய் வடிவேல் முருகா
(முருகா) அரகர அரகர வேல் முருகா அமரர்கள் தலைவா வேல்முருகா சரவண பவகுக வேல்முருகா சரணம் சரணம் வேல்முருகா
(முருகா) கந்தா குமரா வேல்முருகா கருஞகரனே வேல்முருகா சிந்தா குலந்தீர் வேல்முருகா திருவே ரகம்வாழ் வேல்முருகா (முருகா) பைந்தார் கடம்பா வேல்முருகா பரமகுருபரா வேல்முருகா நைந்தார் உறவே வேல்முருகா ஞான பண்டிதா வேல்முருகா (முருகா) குமரா அமரா வேல்முருகா குறமகள் கணவா வேல்முருகா சமரா திபனே வேல்முருகா சரவண பவனே வேல்முருகா
(முருகா) குகசர வணபவ வேல்முருகா குமர குருபரா வேல்முருகா மகபதி மருகா வேல்முருகா வரமருள் புரிவாய் வேல்முருகா
(முருகா) சிவபர குருவே வேல்முருகா கிவ சிவ சிவ சிவ வேல்முருகா தவநெறி தணில்வளர் வேல்முருகா சரணம் சரணம் வேல்முருகா
(முருகா)

ہے 1
தவவிரர்கள் பணி வேல்முருகா நாத கீதமணி வேல்முருகா நவநிதி யருள்புரி வேல்முருகா ஞான பண்டிதா வேல்முருகா (முருகா)
கந்த நாதவடி வேல்முருகா கருணு நிதியே வேல்முருகா சந்த நாதமணி வேல்முருகா சரவணபவகுக வேல்முருகா
(முருகா)
ஓம் சரவணபவ வேல்முருகா உமைமன மகிழ்சுத வேல்முருகா ஓம் சரவணபவ வேல்முருகா உயர்கலை தணில்வளர் வேல்முருகா
(Qpgánr)
வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வடிவேல் அழகா கந்தா கடம் 1ா வேல்முருகா கதிர்காம வேலா வேல்முருகா வேல்
சூரசம் ஹாரா வேல் முருகா சுப்பிர மண்யா வேல்முருகா வேல்
குன்றத் திறைவா வேல்முருகா குறிஞ்சிக் குமரா வேல்முருகா -GBaudo
அறுபடை வீட்டின் வேல்முருகா ஆறுதல் தருவாய் வேல்முருகா -வேல்
தேவர்தம் கோனே வேல்முருகா தேன்தமிழ் மணியே வேல்முருகா --வேல்
எங்களைக் காப்பாய் வேல்முருகா இணையடி சரணம் வேல்முருகா வேல்
அசைந்து அசைந்து வாவா அழகு மயிலில் வாவா ஆடி ஆடி வாவா ! கூடிக்கூடி வாவா! தேடிவா தேடிவா பக்தர்களைத் தேடிவா! ஒடிவா ஓடிவா ஓங்கா ரா ஒடிவா <鹦母 <级°
முருகாவா முருகாவா முருகாவா என் அப்பாவா! அருளவா அருளவா ஆறுதலைத்தர நீவா! e.g. திக்குகளெலாம் நடுதடுங்க தீரம்செய்த செந்தில்வேலா
குக்குடத்துவஜம் குக்குடத்துவஜம் குக்குடத்துவஜம் சக்தி
Gav Svnr - gg.

Page 8
- 2
பாடுகின்ற கடமைதந்த பாலஞன பண்டிதா தேடுகின்ற எங்கள்மு 5 பு திண்ணமாகவே நீவா -ஆடி
வள்ளிதெய்வ யானையோடு மகிழுகின்ற மன்னவா! மெள்ள மெள்ள எமதுவாழ்வை மேனிலைக்குக் கொண்டுவா
一<器母 குன்றுதோறும் குடியமர்ந்து கோயில்கொண்ட முருகையா! என்றுமுன்னை எண்ணுகின்ற இதயம்தந்து அருளையா -ஆடி
கந்தா னந்தா ! கார்த்திகை , மைந்தா!! காரணு தீதா ! காருண்ய ரூபா! கந்தா!
குசனே கந்தப்பா! குறவள்ளிக் கந்தா!! குறிஞ்சிக் குமாரா! கூர்வடி வேலா! கந்தா!
சேனைத் தலைவா! செந்தமிழ்த் தேவா! திருமால் பருகா! தெய்வானை நாதா!! கந்தா!
குமரேசா ஜெகதீசா வந்தித முருகேசா சிவசக்தி பாலா வடிவேலா சிவசிவ சிவசிவ ஹரஹர ஹர ஹர சரவண பவகுசு வடிவேலா! சிங்கார வேலா ச்யா மள வண்ணு ஓங்கார ரூபா சக்திவடிவேலா!
-சிவசக்தி பாலா வடிவேrை!
கந்கா கடம்பா வேல்முருகா கலியுக வரகா வேமுருகா வந்தாள் இறைவா வேல்முருகா வரமருள் புரிவாய் வேல்முருகா stra, Gunts, print முருகா அரசுரோகரா அரோகரா அரோகரா அரகரோகரா!
சங்கரன் மைந்தா வேல்முருகா சரவண பவனே வேல்முருகா ஐங்கரன் துணைவா வேல்முருகா அறுமுக முருகா வேல்முருகா அரகரோகரா முருகா அரகரோகரா அரோகரா அரோகரா அரசுரோகரா
குன்றினில் ஆடும் வேல் முருகா குறிஞ்சிக் குமரா வேல்முருகா மன்றின் தலைவா வேல்முருகா மாவின் மருகா வேல்முருகா அரக்ரோகரா முருகா அரகரோகரா அரோகரா அரோகரா அரகரோகரா

O.
13
ஓம் முருகா ஓம்முருகா ஓம்முருகா ஓம் வா முருகா வா முருகா வா முருகா வா
அம்மைகொளரி மகிழவந்த ஆறுமுகா சண்முகா எம்மையெல்லாம் காத்தருள இசைத்துவா சண்முகா
தென்கயிலை நாதர்க்குப தேசித்தவா &FéioTop 3rt அன்பகுளம் குளிரவிளை யாடிவா சண்முகா
உகந்த மலை கதிரமலை உத்தமனே சண்முகா சுகந்தரவே வந்திடுவாய் சுத்தனே சண்முகா
கொஞ்சுமெழில் சூழ்குறிஞ்சிக் குமரவேளே சண்முகா தஞ்சமெனச் சரணடைந்தோம் தயங்கியருள் சண்முகா
அருள் படைத்த வேலவா வா வா வா
அம்மை கெளரி பாலகா வா வா வா
பொருள் படைத்த ஞானியே வா வா வா
புகழ்படைத்த மேனியாய் வா வா வா
தெருள் படைத்த பாவலா வா வா வா
திறமை கொண்ட காவலா வா வா வா
இருள்படைத்த நெஞ்செலாம் ஒளிமேவ
எழில் படைத்த பயின்மிசை வா வா வா.
அம்மை நீயென் அப்பன் நீ வா வா வா அன்புமிக்க நண்பன் நீ வா வா வா
எம்மை யாளும் அரசு நீ வா வா வா
உண்மையான செல்வம்நீ வா வா வா
ஓங்குயிர்க் குயிரும்நீ வா வா வா s
உண்மைப் பொருள் உரைத்தவன் வா வா வா
செம்மையான பொலிவுடன் மயின் மீதெம்
சிந்தையில் நடஞ்செய வா வா வா.
-ஒம்
மடமையைத் தொலைத்திட வா தொலைத்திட வா வா வா
வாய்மையைத் துலக்கிட வா வா வா
மிடிமையைத் தகர்த்திட வா வா வா
வெறுமயில் தவிர்த்திட வா வா வா
கடமையை உணர்த்திட வா வா வா
கருணையைப் புகுத்திட வா வா வா
அடிமைநின் அடித்துணை கொண்டென்றும்
அமரவாழ்க்கை எய்தவே வா வா வா.

Page 9
-14s
வள்ளி யம்மை துணையுடன் வா வா வா மாதுகுஞ் சரியுடன் வா வா வா துள்ளி யாடும் மயிலுடன் வா வா வா
ஜோதிஞான வேலுடன் வா வா வா கொள்ள கொள்ளும் எழிலுடன் வா வா வா
கொஞ்சும் வெற்றிக் கழ லுடன் வா வா வா உள்ளம் இன்ப வெள்ளமாய்ப் பொங்கவே
ஒளிமலர்ச் சிரிப்புடன் வா வா வா.
கிருஷ்ணன்
. கிருஷ்ணு ராமா கோவிந்த நாராயணு
கேசவா மாதவா ஹசி நாராயணு -கிருஷ்ணு
பூரீ வேணு கோபால கிருஷ்ணு! பூரீ வேணு கோபால கிருஷ்ணு மாதவா மதுசூதன நாராயணு -கிருஷ்ணு
盛。 கமலா வல்லப பாண்டுரங்கா கமனி யானன பாண்டுரங்கா யசோத பாலா பாண்டுரங்கா யதுகுல திலக பாண்டுரங்கா வேணுவி நோதா பாண்டுரங்கா விஜய கோபால பாண்டுரங்கா பக்த வத்ஸல பாண்டுரங்கா பத்ராத்திரி வாஸ் பாண்டுரங்கா பாண்டவர் நேசா பாண்டுரங்கா பாகவதப் பிரிப பாண்டுரங்கா மாதவ கேசவ பாண்டுரங்கா மங்கல ரூபா பாண்டுரங்கா தாமோ தரனே பாண்டுரங்கா தர்மஸ் தாபன பாண்டுரங்கா
Fířenu F grrr F gr lurrior pr ši srT சத்ய சநாதன பாண்டுரங்கா மீனவ தாரா பாண்டுரங்கா கூர் மாவ தாரா பாண்டுரங்கா ராமா வ தாரா பாண்டுரங்கா கிருஷ்ணுவ தாரா பாண்டுரங்கா நரஹரி ரூபா பாண்டுரங்கா வாமன ரூபா பாண்டுரங்கா

-15
ஸஅகர ரூபா பாண்டுரங்கா ஹலதர ரூபா பாண்டுரங்கா விட்டலா விட்டலா பாண்டுரங்கா
(ஜெயஹரி விட்டலா பாண்டுரங்கா) விட்டலா விட்டலா பாண்டுரங்கா (சச்சிதானந்தா பாண்டுரங்கா) பாண்டுரங்க விட்டலா பண்டரிநாதா விட்டலா விட்டலா விட்டலா பாண்டுரங்க விட்டலா விட்டலா விட்டலா பாண்டுரங்க விட்டலா!
இன்பமுத கோவிந்தா இந்துமுக கோவிந்தா பந்த வினை தீர்க்கும் சொந்த முகுந்தா -geiru பட்சி வாகன கோவிந்தா பார்வதி சோதர கோவிந்தா பால கிருஷ்ண கோவிந்தா பாண்டுரங்க கோவிந்தா -இன்ப ராம கிருஷ்ண கோவிந்தா ராதா நாதா கோவிந்தா வாம ஞகிய கோவிந்தா மச்சவ தாரா கோவிந்தா -இன்ப மாதவ கேசவ கோவிந்தா மாயா தீதா கோவிந்தா யாதவ தேவா கோவிந்தா ஜானகி ராமா கோவிந்தா -இன்ப மோஹன முரளி கோவிந்தா முசுகுந்க ப்ரிய கோவிந்தா சோக மகற்றிய கோவிந்தா சுந்தர ரூபா கோவிந்தா -இன்ப லட்சுமி ஸேவித கோவிந்தா நாரா யணனே கோவிந்சா பக்த ஜன ப்ரிய கோவிந்தா பாகவதப்ரிய கோவிந்தா -இன்ப
மது சூதன ஹே முரளிதரா மாதவா கேசவா தேவாதி தேவா
நவமோகன ஹே நாராயணு புவன பாரம் போக்கவந்த புருஷோத்தமா - மது
பூரீகிருஷ்ணு ஹே ஹரி திருமாலவா திருவருவைப் பொழியவரும் திருமலை முகுந்தா உமது
பத்தவதாரம் எடுத்த பாண்டுரங்கா பாரினையே காவல்புரி பரமதடிாளா -LP
சங்குசக்கரம் அணிந்த சற்குணசீலா எங்குமின்பம் தங்க அருள் இன்முகநாதா -log குறைகளெலாம் தீர்க்கவந்த கோபியர் லோலா மறைகளெலாம் போற்றுகின்ற மதனகோபாலா கமது
Claugys vmr pronroer Ramos 65667Tubi 9 uu Glimt smr நாததே ரூபமான ஞான நந்தனு -tag

Page 10
-16
ஓம் நமோ நாராயணுய ஓம் நமோ நாரயணுய ஓம் நமோ நாராயணுய ஒம் நமோ நமோ (ջւծ) பிறவி தோறும் வி%னமிகுந்து பெருகுகின்ற இருளினை அகல வைக்கும் அருணதீபம் ஓம் நமோ நாராயணுய (ஒம்) ஊறு துன்பம் உடல்வியாதி ஊழ்விடாத வறுமையும் ஆற வைக்கும் அருமருந்து ஓம் நமோ நாராயணுய (ஒம்) ஏக்கமாம் குழிக்குளே இருண்டுருண்ட வேளையில் தூக்கிடும் துணைக்கரங்கள் ஒம் நமோ நாராயணுய (ஒம்) சோகமோஹ தாகமீறிச் சோர்வு விஞ்சும் வேளையில் கருணையான புனித கங்கை ஒம் நமோ நாராயணுய (ஒம்) ஜனன மரண பயதரங்க ஸாகரம் கடத்தியே உடனு/ைந்து காக்கும் ஒடம் ஓம் நமோ நாராயணுய (ஒம்) கடுகடுத்து முனை தொடுத்த காலகுலம் சீலுநான் உயர்தடுத்த கவசமாகும் ஒம்நமோ நாராயணுய (ஒம்) ஓம் நமோ நாராயணய ஒம் நமோ நாராயணுய உலகெலாம் முழங்கவேண்டும் ஓம் நமோ நாராயணுய (ஒம்)
கேசவா மாதவா மது குதஞ பூரீதரா கோவிந்தா நாராயணு முரளி மனேஹர ஜனுர்த்தணு அச்சுதா ஆனந்தா நாராயணு.
ноћ. ssmrtio தேவாதி தேவருக்கு ஜெய மங்களம் - நித்ய திவ்ய பத்ம பாதருக்கு சுபமங்களம் --தேவாதி பூீரீகஜ நாதருக்கு சிவகண பாலருக்கு 'சித்திபுத்தி தந்தருளி முத்திவர தாயருக்கு -தேவாதி
மாதா பராசக்திக்கு மங்கள மகேஸ்வரிக்கு பூரீதேவி சரஸ்வதிக்குத் திவ்விய சுபமங்களம் -தேவாதி சம்போமஹா தேவருக்கு சங்கரி மனளருக்கு பங்கஜ தாளருக்குப் பார்வதீ ஸ்மேதருக்கு --தேவாதி கோசலை குமாரருக்கு கொண்டல்மணி வண்ணருக்கு ஜானகி மணளருக்கு ஜானவி பூரீ பாதருக்கு -தேவாதி வேதாந்த கீதருக்கு வேணுவி லோலருக்கு நாதாந்த நாதருக்கு நந்த குமாரருக்கு --தேவாதி பேரா தனஉறைந்து பேணிநம்மைக் காப்பதற்குக்
கூரான வேல்தாங்கும் குறிஞ்சிக் குமாரனுக்கு -தேவாதி


Page 11
இந்நூல் இல, 77, செட்டியார் தெ உரிமையாளர் திரு. 8. சோலேமலே கப்பட்டது.
இப்புத்தகம் இலக்கம் 117, சொத் அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டு பேர வர் சங்கத்தலேவர் திரு.ப. தயாகர
 
 

ரு, கொழும்பு அம்பிகா ஜூவல்லர்ஸ் அவர்களால் அன்பளிப்பாக வழங்
மேலே வீதி நாவலப்பிட்டி மிட்லன்ட் ாதனப் பல்கஃக் கழக இந்து மான “ன் அவர்களால் வெளியிடப்பட்டது.