கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஐயாவுக்கு அஞ்சலி (K. V. மயில்வாகனம்)

Page 1
E.
உரும்
露 :
*
----- ---, -, --★ → –()=
ချွံချွံချွံချွံချွံချွံချွံချွံချွံ
L II l과
竇辯
· · · -~ |
= — : No Nors =
 

§
அஞ்சலி
திராய் வாகனம் அவர்கள்
est
LEDE

Page 2

எங்கள் இதயங்கலந்த ஐயா !
என்றென்றும்
எமது இதயங்களே
விட்டு நீங்காது
பசுமை நினைவாக
ரிஃவத்து நிற்கும்
எங்கள் ஆருயிர் ஐயாவே , உங்கள் மாண்புமிகு ஆத்மாவுக்கு
எங்கள் உளமார்ந்த அஞ்சலி.
உங்கள் அன்பு மக்கள்,
பத்மநாதன் - மாலினி தேவி (ராதா) மனேகரன் (பயா) - பொன்முகலிதேவி (சந்திரா)
段 盗
ʼV.
器

Page 3
அன்பிலா ரெல்லாந் தமக்குரிய ரன்புடையா ரென்பு முரியர் பிறர்க்கு --குறள்
இ
His life was gentle, and the elements So mix'd in him that Nature might stand up And say to all the world
This was a man '


Page 4
ിട്ടി ॥
* 、 he elen en
· A la NAT AT SA IA
werd
s 〔 (
 
 
 
 

நவயத்துள் வாழ்விTங்கு வாழ்பவன் வாலுகிறே 山卓。
தெய்வத்துள் வைக்கப்படும்
。
~
',
திரு. குமாரவேல் வைரமுத்து மயில்வாகனம் (MR. K. V. MYLVAGANAM) ஓய்வு பெற்ற ஆசிரியர் யாழ். இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம்
தோற்றம் : 08-07-1902
11 05-1989 மறைவு

Page 5

வாழ்க்கைக் குறிப்பு ... a
காலஞ் சென்ற ஒய்வு பெற்ற அதிபர், இராமநாதன், மகளிர் ஆசிரிய பயிற்சிக் கல்லூரி, யாழ்ப்பாணம், சிவபாக்கியம், அழகமுத்துவின் ஆருயிர்க் கணவரும், பத்மநாதன் (U. K.), மாலினி தேவி (ராதா) (U. K.) , மனுேகரன் (இந்தியா). பொன்முகலி தேவி (சந்திரா) (W.Germany) ஆகியோரின் அன்புத் தந்தையும், கால ஞ் சென்ற கனக ராஜா, இரத்தினசபாபதி ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஞானி பேரின்பநாயகம், ஜூடித் (Judith), மலர்ஜோதி, குந்தர் (Gunther) ஆகியோரின் அருமை மாமஞரும், காலஞ்சென்ற அப்புத்துரை, அன்னம்மா, கனகம்மா. நடராஜா ஆகியோரின் அருமை மைத்துனரும், லெயிட்டன் (Leighton) , ரேணுகா, அனுரக், ஜீவன், மதியழகி, மலர்மதி, மதியரசி, மதிமன்னன் ஆகியோரின் அன்புப் பாட்டனுருமாகிய திரு. குமாரவேல் வைரமுத்து மயில்வாகனம், மே மாதம் 11-ந் திகதி வியாழக்கிழமை அதிகாலை 12.20 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
ஏறத்தாழ 18 வருடங்களாக இங்கிலாந்தில் தனது மூன்று பிள்ளைகளிடையே வாழ்ந்துவிட்டு. பல காலமாகப் பார்க்காதிருந்த தனது கடைசி மகனைக் கண்மூட முன்னர் பார்த்துவிட வேண்டுமென்ற துடிப்பில், தள்ளாத தன்து 87-வது வயதில், திருச்சி, கே. கே. நகரில் மே 4-ந் திகதி வியாழக்கிழமை விடியற்காலை வந்து சேர்ந்தவர், தான் பிரிந்திருந்த மகன். மருமகள், பேரப்பிள்ளைகளை எல்லாம் கண்டு. மகிழ்ந்து, ஒரு வாரத்தில் ஆத்ம நிம்மதியுடன் அவரின் இஷ்ட தெய்வமாகிய நல்லூர்க்கந்தனடி சேர்ந்தார்.
அன்னர் இலங்கையில் இயற்கை அன்னையின் அரவணைப்பில் அழகுற விளங்கும் கண்டி மாநகரில். பேராதனைப்

Page 6
2.
பல்கலைக்கழக வள்ர்களல்லவில், ஹிந்தலே என்ற இடத்தில், மகாவலி ஆற்றின் கரையில் அமைந்த இல்லத்தில் தன் பெற்ருேருக்குக் கடைசி மகளுகப் பிறந்தார். இலங்கையில் புகழ்வாய்ந்த முன்னணிக் கல்லூரிகளில் அந்நாட்களில் முதன்மை பெற்று விளங்கிய கிங்ஸ்வூட் (Kingswood) கல்லூரி யில் ஆரம்ப, உயர்நிலைக் கல்வி பயின்று, பின்னர் மஹரகமவில் உள்ள அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆங்கிலத்தில் பயிற்சி பெற நிர்வாகத்தினரால் அனுப்பிவைக்கப்பட்டார். இங்குதான் அவரது வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனை ஏற்பட்டது. அதே பயிற்சிக் கல்லூரியில், யாழ்ப்பாணம், உடும்பிராய்க் கிராமத்திலிருந்து இணுவிலுள்ள இராமநாதன் மகளிர் கல்லூரியில் முதன்மையான மாணவியாகத் திகழ்ந்த, பின்னர் அதே கல்லூரியில் ஆசிரியையாகக் கடமையாற்றிப் பின்பு கல்லூரி நிர்வாகத்தினுல் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த சிவபாக்கியம் அழகமுத்து என்ற அழகும், அறிவும் நிரம்பிய பெண்மணியைச் சந்தித்துக் காதலித்தார். இரு வருக் குமிடையே மலர்ந்த காதல், யாழ்ப்பாணத்தில் திருமணத்தில் இனிதே நிறைவ்ேறியது. இக்காதற் திருமணம் அவரைக் கண்டியிலிருந்து யாழ்ப்பானம் கொண்டுவந்து சேர்த்தது.
யாழ்ப்பாணத்தில் அவரது தந்தையின் ஊர் நவாலி யாகும். நவாலியில் அவரது முன்னேர்கள் உடையார், (கிராம அரசாங்க அதிகாரி) பதவி வகித்ததனுல், அவரது குடும்பம் உடையார் குடும்பம்' என்று அழைக்கப்பட்டது. அவர்களுக்கு ஊரில் மிகுந்த செல்வாக்கும், மதிப்பும் நிலவியது. ஆனலும் அவர் தம் வாழ்நாளிற் பெரும் பகுதியைத் தனது மனைவியின் ஊரான உரும்பிராயிலேயே கழித்தார்.
ஆரம்பத்தில் ஒரிரு வருடங்கள் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் கடமையாற்றிவிட்டு, 1980-களில் யாழ் இந்துக்

கல்லூரியில் சேவையாற்றப் புகுந்தவர், ஏறத்தாழ-தாற்பது வருடங்கள் அதே கல்லூரியில் சிறந்தவொரு ஆசிரியராக, அதிபர்கள், சக ஆசிரியர்கள். மாணவர்களிடையே
நன்மதிப்புக்கும், அன்புக்கும் பாத்திரமானவராய், கல்லூரி
அமைந்துள்ள வண்ணுர்பண்ணை மக்களிடையேயும் அவர்களின்
பாசத்துக்கும் நேசத்துக்குமுரியவராய், கல்லூரியின் சகல
துறைகளிலும், நடவடிக்கைகளிலும் த drಔr இணைத்துக்
கொண்டு அரும்பெரும் சேவையாற்றினர். K. V. M." என்ற
அவருடைய பெயரின் முதல் மூன்று எழுத்துக்களும்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும் வகையில் பொறிக்கப்பட்டன. ஒழுங்கு,
கட்டுப்பாடு, கடமை, கண்ணியம் என்ற உயர்ந்த குணங்களை
மாணவர்களிடையே வளர்க்க. அன்புடன் கலந்த கண்டிப்பைக் கடைப்பிடித்த அவர், அக்குணங்களுக்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டினர். அதுவே அவரின் தனிச் சிறப்பாக அமைந்தது. தான் உயிருக்குயிராக நேசித்த யாழ் இந்துக் கல்லூரியின் நூற்ருண்டு நிறைவைப் பற்றியே, ஓய்வு பெற்ற
பின்னர் எந்த நேரமும் சிந்தித்தும், பேசியும், அகக்கண்ணுல் கண்டு மகிழ்ந்தும் கொண்டிருந்தவர், அந்த நூற்ருண்டு
காணும் வருடமாகிய 1989-லேயே இவ்வுலகத்திலிருந்து
பிரியா விடை பெற்றுச் சென்றுவிட்டார். V
அவர் ஆசிரிய உலகிற்கு ஆற்றிய சேவைகளும். பொது நலப் பணியில் ஈடுபட்டு அவர் ஆற்றிய பணிகளும் அளப்பரிய, வட மாகாண ஆசிரியர் சங்கம், வட மாகாண ஆசிரிய f சகாய நிதிச் சங்கம் ஆகியவற்றின் தலைவராகவும், செயலாள ராகவும் பல வருடகாலம் பதவி வகித்தார். கல்லூரியில் சாரணர் படை, கடெற் (Cadet) படை ஆகிய வற்றின் முன்னேடியாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். கல்லூரியின் வருடாந்த விளையாட்டுப் போட்டிகளில் முதன்மையான உத்தி யோகஸ்தராகக் கடமையாற்றினர். அதே நேரம் வட மாகாண கல்லூரிகளுக்கிடையேயான போட்டிகளிலும் முக்கிய பங் கேற்றர். ஆரம்ப காலங்களில், வட மாகாணக் கல்லூரிகளின்,

Page 7
4.
உண்தைப்ந்தாட்டப் போட்டிகளில் மத்தியிஸ்தராக்க் "கடமை யாற்றி, நேர்மைக்கும், சார்பின்மைக்கும் பெயர் பெற்ற
வரானர். பெரு நிதியைக் கல்லூரிக்குச் சேர்த்துத் தந்த
இரண்டு பெரிய களியாட்டு விழாக்களுக்குச் செயலாளராக
அல்லும் பகலும் உழைத்ததுடன், யாழ்ப்பாணம் நகரில்
அமையப்பெற விருந்த யாழ். பொது நூலகக் கட்டிடத்திற்காக
நடத்தப்பட்ட யாழ். விநோதக் களியாட்ட விழாவிலும்
செயலாளராகப் பணியாற்றி யாழ் நகருக்கும் தனது சேவையை
அர்ப்பணித்தார். அத்துடன் நில்லாது, தான் படித்த, படிப்
பித்த கல்லூரிகளான கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி, யாழ். இந்துக் கல்லூரி இவற்றின் பழைய மாணவர் சங்கங்களின் நடவடிக்கை
களிலும் பங்கேற்றுத் தன் கடமையை ஆற்றினர். கண்டியில்
சச்சிதானந்த சுவாமிகளால் ஆரம்பிக்கப் பெற்றுப் பின்னர்
சுவாமிகள் முதன் முறையாக அமெரிக்கச் சீடர்களின்
அழைப்பில் அமெரிக்கா சென்றிருந்க சமயம், தென்னக்
கும்பராவில் அமைந்துள்ள தபோவனத்தின் பொறுப்புக்களை சுவாமிகளின் அன்பு அழைப்புக்கிணங்க ஏற்று நிர்வகித்தார்.
இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்த வட மாகாண ஆசிரியர்
குழுவொன்றுக்குத் தலைமை தாங்கி இந்தியா வந்து, காலஞ்
சென்ற பிரதமர் நேரு போன்ற பெரிய தலைவர்களை நேரில்
சந்தித்துக் கலந்துரையாடி மகிழ்ந்தார். இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகைதந்த இந்தியக் கல்விமான்களையும்,
கல்விக் குழுக்களையும் வரவேற்கும் குழுக்களில் முதன்மையான
பங்கேற்றிருந்தார், இங்கிலாந்தில் இருந்தபோது கூட, அவர் தங்கியிருந்த வயோதிபர் விடுதியில் ஒரு சிக்கனச் சங்கம் ஆரம்பித்து, அதற்கு அவரே பொருளாளராகவும் இருந்தார். அவ்விடுதியில், அவரையும் அவரது மனைவியையும் தவிர மற்றெல்லொருமே வெள்ளையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சாதி, சமயம், இனம், நிறம் போன்ற வேற்றுமைகளையெல்
லாம் கடந்து நின்ற, பரந்த மனப்பான்மையும். திறந்த உள்ள மும், மனிதாபிமானமும் நிறைந்த அவரது ஆளுமைக்கு இது
ஒரு எடுத்துக் காட்டிாகும். . . .

S.
- அன்ஞர் -ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெற்றதுமே, இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களிலிருந்து வெளி யாகிய முதற் தமிழ்த் தினசரிப் பத்திரிகையான ஈழ நாடு" இதழின் நிறுவனத்தார், அவரின் நேர்மை, செயற்திறன் நிர்வாகத் திறமை இவற்றை நன்குணர்ந்தபடியால் அவரைத் தமது நிறுவனத்தில் பொது முகாமையாளர் பதவியை அளித்து கெளரவித்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தனது உற்ருர், உறவினர். சக ஆசிரியர், நண்பர். மாணவர் எல்லோருக்கும் ஒரு பாசமிகு தலைவனுக, அன்புமிகு ஆசிரியகை, பண்புமிகு வழிகாட்டியாக, நேசமிகு நண்பனுக, எப்போதும் இளமைப் புன்சிரிப்புடனும், இனி ய முகத்துட் sprib sia 6yr i 5. ' the ever-green K. V. M. -6T sir p b பசுமையான கே. வி. எம்'.என்று முதுமையிலும் இளமை பற்றிப் போற்றப்பட்ட அந்தப் புண்ணிய ஆத்மா ஆழ்ந்த துயிலிலேயே அமைதியுடன் ஈசனடி சேர்ந்து விட்டது.
முற்று முழுதாக மேற்கத்தைய கலாச்சாரத்தின் பிரதிநிதி யாக வெளித்தோற்றத்திலும், நடை, உடை, பாவனையிலும் அவர் காட்சியளித்தாலும், உள்ளுக்குள்ளே, தனது சொந்த வாழ்க்கையில் இதய பூர்வமான ஒரு சைவசமயியாக, முருக பக்தனுக விளங்கியது பலருக்கு ஆச்சரியத்தையும், வியப்பை யும், மதிப்பையும் ஏற்படுத்தியது. அதேபோல், தூரத்துச் சீமையில் பல வருடங்கள் வாழ்ந்த போதும், கடைசியில் தமிழகத்து மண்ணில் தனது இறுதி யாத்திரையை அவர் முடித்துக் கொண்டதன் மூலம், கீழைத்தேய, மேலைத்தேய கலாச்சாரங்களுக்கிடையே ஒரு பாலமாகவும், மனிதத் தன்மை யின் ஒரு தலைசிறந்த பிரதிநிதியாகவும் தன்னைக் காட்டிக் கொண்டார். . ܫ . . . ."
அவரைப்பற்றி அவரது நெருங்கிய உறவுப் பெண்மணி ஒருவர் குறிப்பிடுகையில், அது ஒரு தெய்வம்' என்று கூறியிருந்தார்.
அந்த மனித தெய்வம் தன் முருக தெய்வத்துடன் இரண்டறக் கலந்துவிட்டது. அவரது தூய ஆத்மா சாந்தி அடைவதாக,

Page 8
வாழ்வாங்கு வாழ்ந்த g éä fi ULI ÜI GLI (U5 ö g5 GD 85 岑签字
கே. வீ. எம். என்ற மூன்றெழுத்துக்கள் யாழ்ப்பாண இந்துக் கல்லூரியின் வரலாற்றிலே பதிந்துவிட்ட பொன் எழுத்துக்கள் இந்துக் கல்லூரிக்கென ஒரு தனித்துவத்தைத் தேடிவைத்த பழைய ஆசிரிய பரம்பரையைச் சேர்ந்தவர் மயில்வாகனம் அவர்கள். இன்று இந்துக் கல்லூரி இலங்கை யில் மட்டுமின்றி அகில உலகிலுமே தன் புகழ் பரப்பி நிற்கிற தென்ருல் அதற்குக் காரணமாயிருந்தவர்கள் திரு.மயில்வாகனம் போன்ற ஆசிரியர்களேயாவார்.
நாற்பது ஆண்டுக்காலம் என்பது மனித வாழ்விலே ஒரு சரித்திர காலமேயாகும். 1920-களில் தொடங்கி 1960-ம் ஆண்டுவரை திரு. மயில்வாகனம் அவர்கள் இந்துக் கல்லூரி யோடு இரண்டறக் கலந்து வாழ்ந்தவர். பொதுவாக இந்த நாற்பது ஆண்டு களி ல் முதலிருபத்தைந்து ஆண் டு களையும் இந்துக் கல்லூரியின் பொற்காலமாக்கிவைத்த சிற்பி களுள் முன்வரிசையிலே வைத்து எண்ணப்பட வேண்டியவர் கே. வி. எம்.
ஆங்கில ஆட்சிக்குட்பட்டிருந்த அந்த நாட்களிலே நடையுடை பாவனைகள் கல்வி முறைகள் எல்லாமே ஆங்கில மயம்தான். திரு. மயில்வாகனம் அவர்களும் முழுக்க முழுக்க ஆங்கிலத் துரைபோலவே காட்சியளிப் பார். ஆங்கிலே யரிடத்திலே காணப்பட்ட நற்பண்புகள் பலவும் அவரிடத்தே காணப்பட்டன. ஆ  ைட அணியிலே ஒரு மிடுக்கு; ராணுவ ரீதியிலமைந்த இறுக்கமான ஓர் ஒழுக்கக் கட்டுப்பாடு: நேர்டிை

நீதிகளத்து நிமிர்ந்து திற்கும் ஒரு ஞானச் செருக்கு; இங்ங்ணி மாக ஆங்கிலேயருடைய வாழ்க்கையிலே எவையெல்லாம் மனித வாழ்க்கைக்கு உகந்தவையோ அ வை எல்லாம்
மயில்வாகனமவர்களிடம் காணப்பட்ட அரிய பண்புகளாகும். ஆனல் சிந்தனைக்கு அடியிலே தமிழன், தமிழ்க் கலாசாரம் சமயப் பண்பாடுகள் என்றலுற்றைப் போற்றிப் பாதுகாக்கி வேண்டும்; இந்துக் கல்லூரியை இந்துக் கல்லூரியாகவே
தலைநிமிந்து நிற்கச் செய்ய வேண்டுமென்ற ஆவலும் அவரிடம்
இருந்தது.
இன்று பரவலாகப் பேசப்படும் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்பதெல்லாம் அந்தக் காலத்திலேயே இந்துக் கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு அத்துப்படியான விஷயங்கள். அதற்குக் காரண கர்த்தாவும் நமது கே. வீ. எம். தான்.
இந்துக் கல்லூரிக்கென்று ஒரு பாரம்பரியம், கலாச்சாரம் உண்டென்று ஆரம்பத்திலே கூறியிருந்தோம். அவற்று கெல்லாம் ஒரு மெருகு கொடுத்து வைத்தவர் மயில்வாகனம் sts ir G,D கூறவேண்டும்.
அவர் வாழ்ந்த இடம் நன்செய் புன்செய்கள் நிறைந்த கிராமப்புறம். கிராமத்து ஏழை மக்களிடையேயும் ஒழுக்கத்தை யும் நேர்மை 'தவருத பாதையையும் நியமத்தையும் எல்லாம் தாமே வாழ்ந்து காட்டியே பயிற் று வித் த ஆசான் திரு. மயில்வாகனம் அவர்கள் வெறும் பள்ளிப் படிப்பைப் போதிப்பவனல்ல ஆசான்; தாமே வாழ்ந்துகாட்டி மாணவர். களை மட்டுமல்லாது பெற் ருேரை யும் பெரியவர்களையுமே அத்தகைய ஒழு க்க நெறிநிற்கச் சாதனை புரிபவன்தான் உண்மையான ஆசான். இதற்கோழிலக்கணமாய்த் திகழ்ந்தவர் கே. வீ. எம். . . . . .
மாணவனுடைய சட்டைத் தெறிகள் விலகியிருந்தால் தாமே தமது கரங்களால் பூட்டி விடுவார். சட்டை காற்ருட வெளியிலே விலகி இருந்தால் அதனைக் காற்சட்டைக்குள்ளே

Page 9
8
சொருகிப் பார்வைக்குக் கம்பீரமாக இருக்கச் செய்வார். ஏழை மாணவருடைய உடையிலே ஏதாவது கிழி சல் இருந்தால் அவனைத் தனிமையிலழைத்து அதனைத் தைத்துப் புனிதமாக வைத்துக்கொள்ள வேண்டும் எ ன் று அறிவுரை கூறுவார். பள்ளிக்குவரும் மாணவர்மட்டுமல்ல ஆசிரியர்களுமே எடுப்பாகத் தோற்றமளிக்க வேண்டும் என்பது அவர் விருப்பம்,
அவருடன் கூடவே படிப்பித்துவந்த ஒர் ஆசிரியர் ஏதோ அசந்தர்ப்பத்தினுல் இரண்டுநாள் முகச்சவரம் செய்யாமல் வந்திருந்தார். இதனைக் கண்ட மயில்வாகனம், அவர் சக ஆசிரியர் என்பதையும் கவனியாமல் அவரைத் தனிமையில் அழைத்து 'அப்படியான அலட்சிய மனப்பான்மையோடு ஆசிரியர்கள் இருக்கக் கூடாது. பொதுவாக நம் தமிழரிடையே இப்படியான ஒர் அலட்சியப் போக்கு இருப்பதுண்டு. ஆனல் நாங்கள் மாணவர்களுக்கு ஓர் மாதிரியாக நடக்க வேண்டும். உருவத் தோற்றத்திலே ஒரு புனிதம் இருக்க வேண்டும். இதெல்லாம் ஒரு தீSocial obligation" என்று கூறினர்.
சின்னச் சின்ன விஷயங்களிலே கூட அவர் எவ்வளவு நுணுக்கமாக ஒழுக்க நெறிகளைப் பின்பற்றினர் என்பதற்கு இது ஓர் உதாரணம்.
உருவும் திருவும் ஆற்றலும் என்று நமது பெரிய்ோர் களும் வகுத்து வைத்திருக்கிருர்கள். மனிதனுக்கு முக்கிய மானது உரு அதாவது வெளித்தோற்றம். தோற்றத்திலே புனிதம் உண்டானுல் உள்ளத்திலும் புனித ம் தானாகவே குடிகொள்ளும். . .
அவருடைய் பழைய ஆஸ்டின்கார் பள்ளிக்கூட வாயிலில் நுழைந்தால் எங்கெல்லாமோ விளையாடிக் கொண்டிருக்கும் மாணவர்கள் தமது சட்டைகளைச் சரி செய்வர்; தலையைக் கோதி ஒழுங்குபடுத்துவர். ஏன் ஆசிரிய்ர்கள் கூடக் கலைந் திருக்கும் தமது மேலங்கிகளைச் சரி செய்வதைக் காணலாம்.

१
9
இப்படியிாக மயில்வாகனமவர்களுடிைப்பிரசன்னம் பள்ளிக்கூடத்திலே ஒரு புனித மான காற்றையும் உடன் கொண்டு வரும். இது அந்தக் காலம். இன்றைக்கும் நினைத்து நினைத்துப் பெருமைப்படக் கூடிய் ஒரு பொன்னுன காலம்,
இங்ங்னமெல்லாம் வெள்ளைக் காரத்தனமாக நடந்து
வந்த மயில்வாகனமவர்கள் உள்ளத்தால் சிறந்த சைவராகவே வாழ்ந்தார். இந்துக் கல்லூரி ஒரு தூய சைவப் பள்ளிக் கூடமாகவே இருக்க வேண்டுமென்பதில் கண்ணும் கருத்துமா யிருந்தார், சமய விழாக்களில் சமயப் பெரியாராகவே காட்சி தருவார், நல்லைக் கந்தனை மறவாத செம்மணச் செல்வரர் யிருந்தார்.
அவர் தம் கட்ைசிக் காலத்திலே இங்கு தடந்த சீரிழிவுகளை கண்ணுல் கண்டிருந்தாராஞல் அவருடைய ஆவி எப்பொழுதோ பிரிந்திருக்கும். உரும்பராவில் அவர் வாழ்ந்த வீடு இன்று சின்பிைன்னமாகச் சீரழிந்து சிதிலமாய்க் கிடக்கிறது. ஆளுல் இவற்றையெல்லாம் கண்ணுல் காணுமல் அவர் தம் பிள்ளை களோடு கடந்த பதினெட்டு ஆண்டுகளாக இங்கிலாந்திலேயே வாழ்ந்து விட்டார். JSS S S S S S S SAAAAS
அருமை மனைவியைப் பிரிந்த ஓராண்டு எல்லையில் அவரும் சிவகதிய்டைந்துவிட்டார். இதிலேகூட ஒரு சிறப்பை அவதானிக்கலாம். என்னதான் ஆங்கில, மயமான் வாழ்வை வாழ்ந்தாலும் அவருடைய ஆவி கடைசி நேரத்திலே தமிழ் மண்ணிலே அதுவும் பாரத புண்ணிய பூமியிலேதான் பிரிய வேண்டுமென்ற நியதி இருந்திருக்கிறது.
மயில்வாகனமவர்களுடைய கடைசி மகன் மனேகரன்
தமிழ் நாட்டிலேதான் தங்கியிருக்க வேண்டி வந்துவிட்டது. இந்த மகனைப் பல ஆண்டுகளாகக் காணுமல் தவித்துக் கொண் டிருந்த இந்த மயில்வாகனம், தமது வாழ்வின் கடைசி ஒரு வரீத்தை மட்டுமாவது இந்த மகனேடு அவருடைய அரவணைப்பில் இருந்து ஆறுதலடிைய முடிந்ததும் அவருடைய நல் ஊழேயாகும். எண்பத்தைந்து ஆண்டு பூரண வாழ்வு கண்ட பேராசான் மயில்வாகனமவர்களுடையே ஆன்மா சாந்தி யடையப் பிரார்த்திப்போமாக. । ।
. . . . W. ஏரம்பமூர்த்தி,
முன்ஞள் ஆசிரியர்,யா, இ. க.

Page 10
10
OTLOG"far"- Super Man
1941 தை. யாழ். இந்துக் கல்லூரி மாணவன். என் உறவினன் அமரன் முத்துக்குமரன் வழிகாட்ட நடந்து கொண்டிருந்தேன். எதிரே ஒரு ஆங்கிலேயக் கனவான் வந்து கொண்டிருந்தார். தோல் கருப்பு. யாரப்பா இவர்? " ஏடே! K.V.M. மாஸ்ரர் சத்தம் போடாதே" இதற்குள் "முத்துக்குமாரு. Who is he 'Sir, my relative. ' ' What is your name?' இப்படி ஆரம்பித்த ஆசிரிய மாணவத் தொடர்பு, ஆசிரியய்ை" உடன் ஆசிரியஞய், வழிகாட்டும் பெரியோணுய் நீடித்து ஈற்றில் நண்பனுகப் பழகிய நல்லோனை 1989 மே மாதம் 11-ம் திகதி, திருச்சி, K. K. நகரில் அவர் மகன் திரு மனேகரன் இல்லத்தில் உயிரற்ற உடலாகக் காணவைத்தது விதி.
திரு. K. V. மயில்வாகனம் ஒரு விநோதமான மனிதர். பேச்சு, நடை, ஏன் சித்தனைகூட ஆங்கில பாணியே. அறுத்து உறுத்து, சீமான் ஆங்கிலம் பேசுவதையும் எழுதுவதையும் இன்று நினைத்தாலும் பெருமையாகத்தான் இருக்கின்றது. கண்டி Kings7DWood கல்லூரிதந்த பயிற்சி அது. ஆனல் தமிழ் சைவப்பற்றும், முருக பக்தியும் விஞ்சி நின்றது எனலாம். கடமை தவருமையும், மாணவர்களிடையே ஒழுக்கம் பேணல் எல்லாவற்றிலும் முதன்மை பெற வேண்டும் என்பதும் இவர் சித்தாந்தம். ஆங்கிலம், லற்றின் இவருக்கு கைவந்தவை. புத்தகங்களின் உதவியின்றியே பாடங்களை நடத்தக் கூடிய இவர் புலமை அக்காலத்தில் எங்களை மிகவும் கவர்ந்தது. தன் சிரிப்பால் மயக்கி வேலை வாங்கும் இவர் ஆற்றல் தனியானது. இவர் கார் Horn சத்தம் கேட்டவுடன் வகுப்பறை நிசப்தமாகும். யாராவது வகுப்பில் நின்று கொண்டிருந்தால் வகுப்பினுள் நுளையமாட்டார். பார்வையால் பேசலாம் என்பநை இவர் காட்டித் தந்தவர். மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி.

1950-ஆம்ஆண்டு யூலை மாதம், கல்லூரி ஆரம்பமுதல் மணி அடித்துவிட்டது. விடுத்திச் சாலையிலிருந்து வேகமாக வந்து கொண்டிருந்தேன். திரு. K. V. M. காரைவிட்டு இறங்கி வந்து கொண்டிருந்தார். வழக்கமான Good morning siா' " Good morning Siva" மனுசன் வகுப்புக்குப் போகாமல் என்னை நோக்கி வந்தார். பூட்டப்படாமல். இருந்த என் நாஷ னல் பொத்தானை தானே பூட்டிவிட்டு முதுகில் தட்டிக்கொடுத்து விலகினர். என் உடல் வியர்வையில் தோய்ந்தது. இதைத்தான் 'நயத்தக்க நாகரிகம்" என்ருர்களோ?நான் அவர் மாணவன். * பொத்தானை பூட்டு" என்று கட்டளை இட உரிமையுடையவர். செய்யவில்லை. நானும் ஒரு ஆசிரியன் மாணவர்கள் பலர் அயலில் நின்ருர்கள். என்னே இவர் பண்பு. இதன்பின் இவரைத் தூரத்தே கண்டாலும் என்னை அறியாமல் என்கை பொத்தான்கள் சரியாக இருக்கின்றனவா என்று பார்த்துக் கொள்ளும், - 8
நான் நோய்வாய் பட்டிருந்தபோது, பலமுற்ை வந்து, ஆறுதல் கூறித் தென்புதந்ததை நினைத்து உருகுகின்றேன். மக்கள்பால் இவர் கொண்டிருந்த பாசம் தசரதனை நினைவூட்டும். தலைமகன் பத்மநாதன் சென்னை கிறித்தவ கல்லூரியில் பயின்ற காலங்களில் அக்கல்லூரி மாணவர்களாகிய பூரீ V. இராமகிருஷ்ணனையும். என்னையும் எத்தனைமுறை கல்லூரியைப் பற்றி உசாவியிருப்பார் என்று கணக்கிடமுடியாது.
காவறியாத கருணை உள்ளம்; கண்டிப்பும்; கடம்ை உணர்வும் நிரம்பிய வாழ்வு; கவலை கிட்டவும் நெருங்க முடியாத நிமிர்ந்த நன்னடை, உளமார்ந்த தெய்வபக்தி இப்பெரு மனிதனின் சீரிய வாழ்வின் இரகசியமாகும், பின்பற்றப்பட் வேண்டிய மாமனிதன் திரு. K. V. M.
a. Pagsasốojaib.
- 6 -- 1989 திருச்சிராப்பள்ளி-21.

Page 11
12
பாட்டாவின் இறுதிப் பயணம்
மே மாதம் 2-ந் தேதி இங்கிலாந்தில் ஒஸ்ேபோர் டிலிருந்து லண்டன் ஹீத்ரோ (Heathrow) விமான நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த காரின் பின் சீட்டில் எத்தனையோ கேள்விகளை மனதில் அடக்கியபடி உட்கார்ந் திருந்தேன். முன்னுல் டிரைவர்சீட்டில் என் பெரியப்பா. அருகில் 87 வயதிலும் கம்பீரமாக அமர்ந்திருந்தவர் என் அன்புப் பாட்டா-Mr. K V. M. காரில் நிலவிய ஒரு வித அமைதிக்கிடையிடையே பெரியப்பா, பாட்டாவின் தோளில் கைவைத்து "ஐயா. எப்படி இருக்கிறீர்கள்?’ என. மிகவும் அன்புடனும் அக்கரையுடனும் கேட்பார். ஆனல் தன்னுடைய அன்புக்குரிய மூத்த மகனையும் இரண்டு மகள்ம்ாரையும் மருமக் களையும் நான்கு “பேரப்பிள்ளைகளையும், 18 வருடங்களாக வாழ்ந்த அந்த அழகான ஒக்ஸ்போர்ட் நகரையும், பழகிய் நண்பர்களையும் பிரிந்து. தன் கடைசி மகனையும் பிள்ளைகளையும் (என் அப்பா, அம்மா, சகோதரர்கள்) பார்க்க வேண்டும் என்ற ஆசையில், இந்தத் தள்ளாத வயதிலும் மனத் துணி வுடன் இந்தியா புறப்பட்டுள்ள என்பாட்டாவின் உள்ளத்தில் என்னென்ன நினைவுகளோ ? . . . . . .
ப்ெரியப்பாவின் கார் ஹீத்ரோவை நெருங்கிக் கொண் டிருந்தது. காரில் மீண்டும் அதே அமைதிதிடீரென பெரியப்பா பாட்டாவைப் Luriggs, " gun the end of an 18 years' era' (ஒரு 18 வருட சகாப்தத்தின் முடிவு) என்ருர். அவர் அதைச் சொன்ன விதமும், அவருடைய குரலில் பாட்டாவைப் பிரியப் போகிறேனே எனத் தொனித்த தவிப்பும் என்னை வேதனைப் படுத்தின,

13
நாங்கள் sortst நிலையம் வ ந்து சேர்ந்ததும், பாட்டாவை எப்படி இந்தியா கொண்டுபோய்ச் சேர்க்கப் போகிறேன் என்ற, பயம் எனக்கு ஏற்பட்டது. ஆணுல், பாட்டாவின் கடைசி ஆசையை (தன் மகனையும் குடும்பத்தையும் சந்திப்பது) பூர்த்தி செய்ய வேண்டுமென்ற நினைவும், பாட்டியின் அஸ்தியைக் கொண்டு வந்து இந்தியா சேர்க்க வேண்டுமென்ற கடமை யுணர்வும், எனது அப்பா தன்னுடைய அப்பாவைக் காண, வேண்டுமெனத் துடித்துக் கொண்டிருந்தது எனக்குத் தெரித் திருந்ததாலும், என் முருகன்மீது முழுப்பாரத்தையும் போட்டு விட்டு, மன உறுதியுடன் காரைவிட்டு இறங்கினேன். பெரியப்பா காரை " பார்க்' பண்ணிவிட்டு வந்தார். பெரியப் பாவும் சக்கரவண்டி (Wheel - Chair) உத வியாளரும், பாட்டாவை அதில் இருக்க வைக்க மிகவும் பாடுபட்டார்கள், இறுதியில் நான் கொஞ்சதூரம் நடத்தி வந்தேன். பின் ஒரு. விதமாக அவர் உட்கார்ந்தார். பொருட்களைச் சரிபார்ப்பது (Checking) முடிந்துவிட்டது. அந்த உதவியாளர். பெரியப் பாவைப் பார்த்து பாட்டாவைக் கொஞ்ச நேரம் வெளியே வைத்திருக்கவா எனக் கேட்க, பெரியப்பா வேண்டாம் எனக் கூறிவிட்டார். “பெரியப்பாவிற்குப் பிரியா விடை கூறி விட்டு நான் பாட்டாவைத் தள்ளிச் செல்லும் உதவியாளரைத் தொடர்ந்தேன். ஆண்டவனில் நான் வைத்த நம்பிக்கையினுல் எனக்கு பாட்டாவைப்பற்றி எந்தவித மனப்பயமோ இருக்க வில்லை. விமானத்தில் ஏறியதும் பாட்டாவை அவரது ஆசனத் தில் அமர்த்துவது கொஞ்சம் கஷ்டமாகத்தானிருந்தது. நாங்கள் Lu 600Tib. G.Fung, 9 fliq6 6Ji-Goush) (British Airways) சிப்பந்திகள் மிக நன்ருகப் பாட்டாவைக் கவனித்தார்கள்,
மே 2-ந் திகதி லண்டனிலிருந்து இரவு 10.30 மணிக்குப் புறப்பட்ட விமானம், அடுத்த நாள் பிற்பகல் 3-15 அளவில் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்து சேர்ந்தது. சக்கர வண்டி உதவியாளரின் உதவி யு டன் சுங்கப் பகுதிப் பரிசோதனையை முடித்துக் கொண்டு வெளியே வர 5.30 மணி ஆகிவிட்டது. வெளியில் என் அப்பாவும் அவரது சகலனும்,

Page 12
14
பாட்டாவின் பழைய மாண்வரும் குடும்ப நண்பருமான ஒருவரும் காத்திருந்தார்கள். பாட்டாவைப் பார்த்ததும் என் அப்பாவின் கண்களில் ததும்பிய ஆனந்தக் கண்ணிர் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியை ஊட்டியது! பல வருடங்களாகச் சந்திக்காத தந்தையையும் ம க னை யும் ஒன்றுசேர வைத்தது அந்த ஆண்டவனின் செயல்தானே?
சென்னையில் பாட்டா இருந்த களைப் படை ந் த நிலையில் அவரை திருச்சி கே. கே. நகரிலுள்ள எனது அப்பாவின் வீட்டுக்கு உடனடியாகக் கொண்டு செல்வதே உசிதமென முடிவு செய்து, வாடகைக் கார் ஒன்றை நண்பரின் உதவியுடன் அமர்த்தி, இரவோடிரவாகத் திருச்சி கூட்டி வந்தோம். வந்தபின் இரண்டு. மூன்று, நாட்கள் நன்ருக இருந்தார். என் இரு சகோதரிமாருக்கும், என் தம்பிக்கும். தங்கள் பாட்டாவைப் பார்த்ததும் அளவு கடந்த மகிழ்ச்சி, அப்பாவுக்கோ பாட்டா தன்னிடம் வந்து சேர்ந்து விட்டதில் பரம திருப்தி, அவருக்குப் பணிவிடை செய்வதிலேயே தன் முழு நேரத்தையும் கழித்தார். இடையில் பாட்டியின் இறுதிக் கிரியைகள் செய்ய அவர் ராமேஸ்வரம் போக வேண்டி வந்து விட்டது. பாட்டாவின் உடல்நிலை சரியில்லாதபடியால், அப்பா டாக்டரை வரவழைத்தார். ஆணுல், பாட்டாவின் நிலைமை மோசமாகிக் கொண்டே போனது.
மே 9.ந் திகதி தான் பாட்டியின் முதலாவது ஆண்டுத் திவஷம். அன்று அம்மா, பாட்டாவுக்குப் பாற்சாதம் கொடுத்த போது, அதை மெள்ள மென்று கொண்டு 'நன்ருக இருக்கிறது" என்று புன்னகையுடன்-கூறினுர், அப்பாவோ, அம்மாவோ, நாங்களோ அவருக்கு நீராகாரமோ அல்லது வேறெதுவுமோ ஊட்டினுல், பெரு ந் தன்  ைம யு டன் கரங்கூப்பி நன்றி தெரிவிப்பார். அப்போதெல்லாம் எங்கள் கண்கள் குளமாகி விடும்.

s
எத்தனை யோசன்ை கவலையிருந்தாலும், ப்ாட்டா எல்லோருடனும் மிகவும் அன்பாகவே பழகுவார்; பணிவாகப் பேசுவார். எவரையுமே குறைகூறமாட்டார். அவர் உதடு களில் எந்நேரமும் தவழும் புன் சிரிப்பு விலை மதிக்க முடியாதது. இங்கிலாந்தில் அவருடன் பழகிய அனைவருக்குமே அவரிடம் தனி அன்பும் மதிப் பும் உண்டு. ஏன், உதாரணத்துக்கு நாங்கள் சென்னையில் வந்து இறங்கிய்போது, விமானத்தில் அவரைக் கவனித்த அனைவரும் - சிப்பந்திகளும் மற்ருேரும் . 6Tsirisflib. Your grandfather is a special character" 6tsor, கூறியபோது, நான் எவ்வளவு பெருமைப்பட்டேன் தெரியுமா?
ஆணுல், எங்கள் பாட்டா அதிக நாட்கள் எங்களுடன் இருக்கவில்லை. அவர் தனது கடைசி மகனிடம் தனது வாழ்வின் கடைசி யாத்திரையை மேற்கொண்டே வந்து சேர்ந்தார் என்பதை விரைவிலேயே நிரூபித்துவிட்டார். மே 10-ந் திகதி நள்ளிரவு கழிந்து ஒரு சில நிமிடங்களில், அவர் இவ்வுலக வாழ்வை நீத்து, இறைவனடி சேர்ந்தார்.
அன்றிரவு அம்மா தான் பாட்டாவின் நிலைமையை முதலில் கண்ணுற்று, அப்பாவை " இங்கே வந்து பாருங்கள்" என்று அழைத்தார். அதைக் கேட்டவுடனேயே பாட்டாவுக்கு ஏதோ ஆபத்து என்பது எனக்குப் புரிந்துவிட்டது. நானும் என் தங்கைகள் இருவரும், தம்பியும் ஆண்டவனை அழுதழுது வேண்டினுேம். அவ  ைர இங்கு கொண்டுவந்த நான் எவ்வளவோ கதறினேன். ஆணு ஸ் ஆண்டவன், பாட்டா எங்கள் அன்புப் பாட்டியுடன் சேரும் நாள் அது தான் என
எழுதி வைத்த பின் எங்களால் என்ன சொல்ல முடியும் ?

Page 13
6
பாட்டா முருகனடி சேர்ந்து விட்டார். அவரது கம்பீர மான ful-suit (கோட்டும் சூட்டுமான) தோற்றமும், புன்
சிரிப்புத் தவழும் முகமும், மிக முக்கியமாக அவர் கூறிய அறிவுரைகளும் என மனதில் ஆழமாகப் பதிந்துள்ளன.
எனது அன்புப் பாட்டாவின் ஆத்மா சாந்தியடைய, எங்கள் குலதெய்வமாகிய முருகனை, அவருடைய பிள்ளைகள், பேரப் பிள்ளைகள், சகோதர சகோதரிகள், மருமக்கள், மற்றும் நண்பர்கள், உ ற வினர் கள் அனைவருக்குமாக வேண்டிக்
கொள்கிறேன்.
-பேத்தி மதியழகி
 

17
அமைதி என்ற நிழலைத் தேடி
இயற்கை அன்னை படைத்துள்ள அழகு நிறைந்த கண்டி மாநகரில் பிறந்து வளர்ந்து படித்துப் பட்டங்கள் பல பெற்று, யாழ் இந்துக் கல்லூரியில் பணிய்ாற்றி, தன் பெற்றோர்களுக்கு நன் மகளுகவும், மனைவிக்கு நல்ல துணைவனுகவும் தான் பெற்றெடுத்த குழந்தைகளுக்கு அன்புத் தந்தையாகவும், மருமக்களுக்கு நட்பு மிக்க மாமனுகவும், பேரக் குழந்தைகளுக்கு பாசம் மிக்க பாட்டனுகவும் தன்னுடைய கல்லூரியில் பயின்ற மாணவர்களுக்கு கல்வியுடன், கடமை கட்டுப்பாடு, கண்ணியத்தைப் போதித்த சிறந்த ஆசிரிய்னுகவும், நண்பர்களுக்கு நல்ல நண்பனுகவும் வாழ்ந்தவராம் - என்"
LI ATIL "LEr K... V. M.

Page 14
1恶
ல் தடன்ைகள் பலர் அவரைப் புகழ் வதைக் கேட்டறிந்துள்ளேன் - ஆனல் நான் அவரைப் பார்த்த தில்லை.
இத்தகைய ஓர் மாமனிதனை - என் பாட்டாவை - நான் பார்க்கத் துடித்தது பலமுறைகள் - ஏனெனில் காலம் நம்மை இங்கிலாந்து இலங்கை என்ற நீண்ட இடை வெளியில் பிரித்து வைத்திருந்தது.
ஓரிரு ஆண்டுகள் است. (ol606ی 18 ஆண்டுகள் - நான் கனவிலும், கற்பனைகளிலும் தான் - எல்லோராலும்
புகழப் படும் - என் பாட்டாவை அறிந்திருந்தேன்.
நீண்ட இடைவெளியில் நாம் பிரிந்திருந்தாலும் நம்மை இணைத்தது நீண்ட அன்பு மிக்க மடல்கள்.

9
என்றாவது ஒரு நாள் காலங்கள் மாறலாம் - என் கனவுகளும், கற்பனைகளும் நிஜமாகலாம் 1-. T6്
எதிர் பார்த்திருந்து - என் கனவுகள் நிஜமாகியது உண்மை தான்.
தான் பார்க்க ஏங்கிய அன்பு மகனையும் 18 வருடங்கள் பார்க்கத் துடித்த - தன் பாசமிக்க மருமகள் பேரக் குழந்தைகளையும் பார்ப்பதற்காக, தனது தள்ளாத வயதிலும், தன்னிடம் உள்ள முழுசக்தியையும் ஒன்று திரட்டி, 18 ஆண்டுகள் சீமையில் சீமானாக வாழ்ந்த வாழ்க்கையை விட்டு விட்டு எம்மைப் பார்க்க நீண்ட பயணத்தை தொடங்கி, மே 4 ம் திகதி எம்மிடம் வந்து சேர்ந்தார்.

Page 15
இதுவரை , எல்லோராலும்
புகழக் கேட்ட- என் lumtlʼ.Lr K. . V. M - age நேரில் பார்த்தேன்.
தள்ளாத வயதிலும்
கம்பீரமாக- 蛾 கோர்ட், சூட் 6D. அணிந்து - ஒர்
கறுத்த வெள்ளைக்காரணுக காட்சிய விரித்தார்.
என் மனங்குளிரப்
ஆசை தீர பேசினேன்
அவரது புன்னகையில் மகிழ்ந்தேன் ‘ என் - பாட்டாவைப்
பார்த்த பெருமை, மகிழ்ச்சி.
இவை எல்லாம் ஒரு கிழமைக்கு பின் நீடிக்க வில்லை ஏன் என் பாட்டா தனது இறுதி ஆசையை நிறைவேற்றி விட்டு ஒரு கிழமைக்கு மேல் நீடிக்காது, எங்களைப் பார்த்து மகிழ்ந்த மகிழ்ச்சியில், அமைதியான தூக்கத்தில் முருகனடி சென்று விட்டார்.

zit
அவரது அன்பினுல் ஏற்பட்ட நட்பு
இங்கு பாசமாக பெருக்கெடுத்தது- இன்று எங்கள் பாசம் மட்டும் பரிதவிக்கிறது-, அந்த மாமனிதன் அமைதி என்ற நிழலைத் தேடி முருகனிடம் சென்
விட்டார்.
அவர் எம்மை விட்டு பிரிந்தாலும் - அவரது புகழ், அன்பு, பாசம், நட்பு என்றும் எங்கள்
இதயங்களில்
இனிய கீதமாக
ஒலித்துக் கொண்டிருக்கும்.
எத்தகைய பெருமைமிக்க என் பாட்டா
எம்மை பரிதவிக்க விட்டு, அழியாது அவரது உதடுகளில் தவழும் புன் முறுவலுடன் கண்களை மூடி விட்டார்.

Page 16
2
இங்கு அன்பு
பாசம்
நட்பு
எதுவுமே நந்தரமானதில்லையா? எங்கள் அன்புத்
தெய்வமே 1 நீங்கள் அமைதி என்ற நிழலைத் தேடி சென்று விட்டீர்கள்
முடியாத ஆத்ம
சாந்திக்காக நாங்கள் தினமும் அர்த்திக்கின்றோம்.
வேத்திகள் மலர்மதி " மதியரசி
(பெரிய மைஞ - சின்ன மைஞ)

2格
எனது இனிய பாட்டா
L. R. L. Fr
என் அன்புத் தந்தையை இவ்வுலகிற்குத் தந்த அருமைப் பாட்டா ! எட்டு வயதுவரை பாட்டாவைப் பார்த்ததில்லை. அவரின் அன்பு மடல்கள் கண்டு அன்பு வளர்த்தேன். எழுபத்தெட்டில் பாட்டாவுடன் உண்டு உறங்கும் பாக்கியம் கிட்டியது. மூன்று மாத காலம் இங்கிலாந்தில் இருந்தபோது
வெள்ளையருக்கு அவரிடம் இருந்த மதிப்பையும் மரியாதையையும்
கண்டு
வியந்தேன்.
பின்பு அவர் இரண்டறக் கலந்த யாழ் இந்துக் கல்லூரியில் படிக்கும் பேறு பெற்றேன்.

Page 17
அப்போது
எனக்குக்
கற்பித்த ஆசிரியர்கள் '' ) கேவி எம்மின் பேரன்" என விளிக்கும் போது உண்மையிலேயே பெருமைப் பட்டேன். பிறர் போற்றும். "அவரின்
e Lui பண்பையும், சீரிய் வாழ்வையும் உணர்கிறேன்: பெருமைப் படுகிறேன்.
ஆசை அய்யா 孕
என
உறவினர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட, யாவருக்கும் - தூண் போன்றிருந்தவர், இந்தியாவுக்கு எம்மைக் காண வந்தார் அன்புடன்,
கண்டார். நீண்டநாள் நினைவுகளை எமக்குத்
தந்தார்.

அவரின் ※ ஆன்மாவுக்குத் திருப்தியாக இருக்கும். எனினும்
எம் பாட்டா நீண்ட நாள்
எம்முடன் இருக்கவில்லையே
66 மனம் ஏங்குகின்றது. இருப்பினும் அந்த மாமனிதனின் கடைசி நாள்கள் எம்முடன் கழித்ததற்கு, அவருக்குப் பணிவிடை செய்யக் கொடுத்து வைத்ததற்கு இறைவனுக்கு
நன்றி!
அவர்
இறந்தாலும் இறக்காது
அவர்
நினைவுகள் !
அன்புடன் பேரன், ம. மதிமன்னன்

Page 18
2峦
ën." சிவமயம் ஒருமணியை உலகுக்கு ஓர் உறுதி தன்னை உதயத்தின் உச்சியை உருமா ஞனைப் பருமணியைப் பாலோடு அஞ்சு ஆடி ஞனைப்
பவித்திரனைப் பசுபதியைப் பவளக் குன்றைத் திருமணியைத் தித்திப்பை தேன தாகித்
தீங்கரும்பின் இன்சுவையைத் திகழும் சோதி அரு மணியை ஆவடுதன் துறையுள் Gupu
அரன் அடியே அடிநாயேன் அடைந்து உய்ந்தேன்
鐵
தாய் ஆய் முலையைத் தருவானே தாராது ஒழிந்தால்
சவலையாய் நாயேன் கழிந்து போவேனே? நம்பி இனித்தான்
நல்குதியே!
தாயே என்று உன் தாள் அடைந்தேன்; தாயா, நீ,
a . என்பால் இல்லையே?
நாயேன் அடிமை உடன் ஆக ஆண்டாய்; நான்தான்
வேண்டா வோ?
ட மணிவாசகர் -
أمه
பாந்தள்யூ னரம் மரிகலங் கபாலம்;
பட்டவர்த் தனம் எரு; தன்பர் வார்ந்தகண் ணருவி மஞ்சனசாலை: மலைமகள் மகிழபெருந் தேவி; சாந்தமும் திருநீ; நருமறை கீதம்:
சடைமுடி; சாட்டியக் குடியார்

ஏந்தெழில் இதயங் கோயில்; மாளிகை ஏழ் இருக்கையுள் இருந்த ஈசனுக்கே,
- கருவூர்த்தேவர்
இ
நிட்டையி லா உடல் நீத்தென்னை
ஆண்ட நிகரிலா, வண்ணங்களும் சிட்டன் சிவனடி யாரைச்
சீராட்டுந் திறங்களுமே சிந்தித்து அட்ட மூர்த்திக்கென் அகம் நெக.
ஊறும் அமிர்தினுக்கு ஆல நிழற் பட்டனுக்கு என்னைத்தன் பாற்படுத்
தானுக்கே பல்லாண்டு கூறுதுமே
- சேந்தனுர் -
என்றும் இன்பம் பெருகும் இயல்பினுல் ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட மன்று ளார்.அடி யாரவர் வான்புகழ் நின்றது எங்கும் நிலவி உலகெலாம்.
--சேக்கிழார் -

Page 19
28.
மொய் தாரணி குழல் வள்ளியை வேட்டவள்
முத்தமிழால் வைதாரையுமங்கு வாழவைப்போன் வெய்ய
வாரணம்போல் கைதானிருதுடையான் தலைபத்தும்
கத்தரிக்க எய்தான் மருகள் உமைமாள் பயந்த,
இலஞ்சியமே.
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச்
செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோன
விளங்கு வள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில்
வாகனனைச்
சிந்துணைப் போதும் மறவாதவர்க் கொரு
தாழ்விலையே.
உருவாயருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
s


Page 20
குரீ ராம் நாராயணி
 

■。