கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கந்தபுராண முருகப்பெருமான் தோத்திரப் பாடல்கள்

Page 1
கந்தபுராண மு
தோத்திரப்
الك بين الة الم.
T நடைபெற்ற விந்து புராவ
வழங்கப்பட்ட அ
 

*? ՀեԳ ருகப்பெருமான்
பாடல்கள்
- Tal
ā宁、r、 °莒一苇一°晕 LI L ITT L, IT, ஆகி விழாவின் டே து பூட்பிரசாத வெளியீடு
- 구 -
لطiti++ ;

Page 2

கந்தபுராண முருகப்பெருமான்
தோத்திரப் பாடல்கள்
இஃது கொழும்பு மாவட்ட
சிவதொண்டன் அன்பர்களால் 26-5-68 கடைபெற்ற கந்தபுராண படன பூர்த்தி விழாவின் போது வழங்கப்பட்ட அருட்பிரசாத வெளியீடு
கீலக வருஷம் வைகாசி மீ"
கொழும்பு

Page 3
T
மெய்கண்டான் பிறெஸ் லிமிட்டெட் 161, செட்டியார் தெரு, தொழும்பும் 11.
s z■ "

6.
காப்பு
விநாயகர் வணக்கம்
திகட சக்கரச் செம்முக மைந்துளான் சகட சக்கரத் தாமரை நாயகன் அகட சக்கர வின் மணி யாய்உறை விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்
முருகப்பெருமான் வணக்கம்
மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணை போற்றி ஏவரும் துதிக்க நின்ற சராறு தோள் போற்றி காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி அன்னுன் சேவலும் மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி.
ஆறுபடை வீடு வணக்கம் திருப்பரங்குன்றம்
இருப்பரங் குறைத்திடு எஃகவேலுடைப் பொருப்பர் அங்கு உணர்வுற புதல்விதன்மிசை விருப்பு அரங் கமரிடை விளங்கக் காட்டிய திருப்பரங் குன்றமர் சேயைப் போற்றுவாம்.
திருச்செந்தூர்
சூரலை வாயிடை தொலைத்து மார்புகீண்டு ஈரலை வாயிடு எஃகமேந்தியே வேரலை வாய்தரு வெள்ளி வெற்பொரீஇச் சீரலை வாய்வரு சேயைப் போற்றுவாம்.
திருவாவினன்குடி
காவினன் குடிலுறு காமர் பொன்னகர் மேவினன் குடிவர விளியச் சூர்முதல் பூவினன் குடிலை யம்பொருட்கு மாலுற ஆவினன் குடிவரும் அமலற் போற்றுவாம்.

Page 4
2
திருஎரகம்
நீரகத்தேதனை நினையு மன் பினோர்
பேரகத் தலமரும் பிறவி நீத்திடும் தாரகத் துருவ மாம் தலைமை எய்திய ஏரகத் தறுமுகன் அடிகளேத்துவரம்.
குன்றுத்ொறடல் ஒன்றுதொருடலை யொருவி ப்ாவிமெய் துன்றுதொருடலைத் தொடங்கி ஐவகை மன்றுதொழு டிய வள்ளல் காமுறக் குன்றுதொருடியு குமரற் போற்றுலூாம்
எழமுதிரைப் புனத் திறைவி முன்புதன் கிழமுதிர் இளநலங் கிடைப்ப முன்னவன் மழமுதிர் களிறென வருதல் வேண்டிய பழமுதிர் சோலையம் பகவற் போற்றுவாம்.
கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் முருகப்பெருமான் அருள்பெற்ற குலப்பதி குமரகோட்டம்
ஈறுசேர் பொழுதினும்இறுதி இன்றியே மாறிலா திருந்திடும் வளங்கொள் காஞ்சியில் கூறுசீர் புனைதரு குமரகோட்டம் வாழ் ஆறுமாமுகப் பிரான் அடிகள் போற்றுவாம்.
திருஅவதாரப் படலம்
மறைகளின் முடிவால் வாக்கால் மனத்தினல் அளக் கொணுமல் நிறைவுடன் யாண்டுமாகி நின்றிடு நிமலமூர்த்தி அறுமுக உருவாய்த் தோன்றி அருளொடு சரவணத்தின் வெறிகமழ் கமலப் போதில் வீற்றிருந்தருளினனே.
திருவிளையாட்டுப் படலம் குளத்தின் உலவும் நதிகுறைந்திடு துருத்திக் களத்தின் உலவும் நிரை கொள் கந்துடை நிலைத்தாந் தளத்தின் உலவும் பனவர் சாலை உலவும் என் உளத்தின் உலவும் சிவன் உமைக்கினிய மைந்தன்.

3.
பாடின் படுமணி ஆர்த்திடும் பணை மென் குழல் இசைக்கும் சோடங்கு ஒலிபுரிவித்திடும் குரல் வீணைகள் பயிலு மீடொன்றிய சிறுபல்லிய மெறியும் எவரெவரும் நாடும் படி பாடுங் களிநடனஞ் செயும்முருகன்.
கந்தநம ஐந்துமுகர் தந்தமுருகேசநம கங்கை உமைதன் மைந்த நம பன்னிரு புயத்த நம நீபமலர் மாலை புனையும் தந்தை நம ஆறுமுக ஆதிநம சோதிநபரிதற் பரமதாம் s எந்தை நம என்று மிளை யோய்நம குமார்நம என்றுதொழுதார் மண்ணளவு பாதல மெலாஞ்சரண மாதிரைவரப்பு மிகுதோள் விண்ணள வெலாம் முடிகள் பேரொளியெலாம் நயினம் மெய்ந் நடுவெலாம் பண்ணளவு வேதமணி வாய் உணர்வேலாஞ் சேவிகள் பக்கம் அயன் மால் எண்ணளவு சிந்தை உமை ஐந்தொழிலும் நல்கியருள் ஈசன் உயிரே,
திருச்செந்திப் படலம்
அறிதி எப்பொருளும் ஆவிகள் தோறும
செறிதி எங்கள் துயர் சிந்துதல் முன்னிக் குறிய சேயுருவு கொண்டனை யார்க்கும் இறைவ நின்செயலை யாருணர் கிற்பார்.
மாயைப் படலம்
ஊரிலான் குணங்குறியிலான் செயலிலானுரைக்கும் பேரிலான் ஒருமுன்னிலான் பின்னிலான் பிறிதோர்
சாரிலான் வரல் போக்கிலான் மேலிலான் தனக்கு
நேரிலான் உயிர்க்கடவுளாய் என்னுளே நின்றன்.
வீரவாகு கந்தமாதனம் செல் படலம்
விரிஞ்சன் மால் தேவராலும் வெலற்கரும் விறலோஞகி பெருஞ்சுரர் பதமும் வேத ஒழுக்கமும் பிறவுமாற்றி அருஞ்சிறை அவர்க்குச் செய்த அவுணர் கோன் ஆவிகொள்வான் பரஞ்சுடர் உருவாய் வந்த குமரனேப் பணிதல் செய்வாம்.
சயந்தன் கனவு காண் படலம்
நொய்ய சீரடியரேம் நோவு மாற்றியே ஐய நீ வலிது வந்து அளித்தியானுரை செய்வது முண்டு கொல் சிறிது நின்கனே கையடை புகுந்தனம் காத்தியாலென்ருன்

Page 5
4
வீரவாகு சயந்தனைத் தேற்று படலம்
உலமெலாம் கடந்த தோளிர் உன்னுதிர் உன்னியாங்கு
நலமெலாம் வழிபட்டோர்க்கு நல்கியகுமரன் தன்னல் . தலம்ெலாம் படைத்ததொல்லைச் சதுர்முகன் முதலாம்வானேர் குலமெலாம் உய்ந்ததென்றல் உமக் கொரு குறையுண்டாமோ
அவை புகு படலம்
எங்கணும் பணிவதனங்கள் எங்கணும் விழிகள் எங்கணும் திருக்கேள்விகள் எங்கணும் கரங்கள் எங்கணும் திருக்கழலடி எங்கணும் வடிவம் ” எங்கணும் செறிந்து அருள்செயும் அறுமுகத் திறைக்கே
சூரன் அமைச்சியற் படலம்
வேதக் காட்சிக்கும் உபநிடத் துச்சியில் விரித்த போதக் காட்சிக்கும் காணலன் புதியரிற் புதியன், மூதக்கார்க்கு மூதக்கவன் முடிவிற்கு முடிவாய் ஆதிக் காதியாய் உயிர்க்குயிராய் நின்ற அமலன்
ஞானம்தான் உருவாகிய நாயகனியல்பை யானும் நீயுமாயிசைத்து மென்ருல் அஃ தெளிதோ மோனம் தீர்கலாமுனிவரும் தேற்றிலர் முழுதும் தானும் காண்கிலன் இன்னமும் தன் பெரும் தலைமை
ஏமகூடப் படலம்
நாரணன் என்னும் தேவும் நான்முகத் தவனும் முக்கட் பூரணன் தானுமாகிப் புவிபடைத்தளித்து மாற்றி ஆரணமுடிவும் தேரு அநாதியாய் உயிர்கட்கெல்லாம். காரணமாய மேலோன் கழலிணை கருத்துள் வைப்பாம்
இரண்டாம் நாள் சூரபன்மன் யுத்தப்படலம்
முண்டக மலர்ந்ததன்ன மூவிருமுகமும் கண்ணும் குண்டல நிரையும் செம்பொன் மெளலியும் கோலமார்பும் எண்டரு கரமீராறும் இலங்கெழிற் படைகள் யாவும் தண்டையும் சிலம்பும் ஆர்க்கும் சரணமும் தெரியக்கண்:ான்

5
இரணியன் யுத்தப் படலம்
கங்கைதன் புதல்வன் என்றும் கார்த்திகை மைந்தன் என்றும் செங்கண் மால் மருகனென்றும் சேனையின் செல்வன்ென்றும் பங்கயன் முதலோர் தேருப் பரஞ்சுடர் முதல்வன் தன்னை இங்கிவை பலவும் சொல்வ தேழைமைப் பாலதன்ருே ”
மூவாயிரவர் வதைப் படலம்
ஆறுமாமுகப் பிரான் அன்றி இவ்விடை வேறெரு துணை இலை மெய்ம்மை ஈதெனத் தேறினன் அவனடி சிந்தை செய்தனன் மாறிழி யருவிநீர் வழியுங் கண்ணினன்
பானுகோபன் வதைப் படலம்
கோலநீடிய நிதிபதி வாழ்க்கையும் குறியேன் மேலைஇந்திரன் அரசினைக் கனவிலும் வெஃகேன் மால் அயன் பெறு பதத்தையும் பொருளென மதிய்ேன் சாலநின் பதத் தன்பையே வேண்டுவன் தமியேன்
சூரபன்மன் வதைப் LIL61) is
காலமாய்க் காலமின்றிக் கருமமாய்க் கருமமின்றிக் கோலமாய்க் கோலமின்றிக் குணங்களாய்க் குணங்களின்றி ஞாலமாய் ஞாலமின்றி அநாதியாய் நங்கட் கெல்லாம் மூலமாய் இருந்தவள்ளல் மூவிருமுகங்கொண் டுற்முன்
ஒதியாகியும் உணர்ந்தவர்க்கு உணர்வுமொண்ணு நீதியாகியும் நிமலமதாகியே நிகழும் சோதியாகியும் தொழுதிடும் எம்மனுேர்க்கெல்லாம் ஆதியாகியும் நின்றவன் அறுமுகன் அன்றே
கோலமா மஞ்ஞைதன்னில் குலவியகுமரன் தன்னை: பாலன் என்று இருந்தேன் அன்ஞள்:பரிசு இவை.உணர்ந்திலேன்யான் மால் அயன் தனக்கும் ஏனைவானவர் தமக்கும் யார்க்கும் மூலகாரனமாய் நின்ற மூர்த்தி இம்மூர்த்தி அன்றே

Page 6
6
நண்ணினர்க் கினியாய்ஒலம் ஞானநாயகனே ஒலம் பண்ணவர்க்கிறையே ஒலம் பரஞ் சுடர்முதலே ஒலம் எண்ணுதற் கரியாய் ஒலம் யாவையும் படைத் தாய் ஒலம் கண்ணுதற் பெருமான் நல்கும் கடவுளே ஒலம் ஒலம்
தேவர்கள் தேவே ஒலம் சிறந்த சிற்பரனே ஒலம் மேவலர்க்கிடியே ஒலம் வேற்படை விமலா ஒலம் பாவலர்க் கெளியாய் ஒலம் பன்னிரு புயத்தாய் ஒலம் மூவருமாகி நின்ற மூர்த்தியே ஒலம் ஒலம்
கந்தவெற்புறு படலம்
துய்யதோர் மறைகளாலும் துதித்திடற் கரிய செவ்வேள் செய்யபேரடிகள் வாழ்க சேவலும் மயிலும் வாழ்க வெய்ய சூர் மார்பு கீண்டவேற்படை வாழ்க அன்னன் பொய்யில் சீர் அடியார் வாழ்க வாழ்க இப்புவனம் எல்லாம்
உபதேசப் படலம்
மாயையின் வலியோனகி மான்முதலோரை வென்றே ஆயிரத் தோரெட்டண்டம் அரசு செய்து உகநூற் றெட்டுக் காயமதழிவின்ருகிக் கடவுளர்க் கலக்கண் செய்த தீயசூர் முதலைச்செற்ற குமரன்தாள் சென்னிவைப்பாம்
வள்ளியம்மை திருமணப் படலம்
ஆறிருதடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் அணங்கும் வாழ்க மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீரடியார் எல்லாம்
புன்னெறி அதனிற் செல்லும் போக்கினை விலக்கிமேலாம் நன்னெறி ஒழுகச் செய்து நவை அறு காட்சிநல்கி என்னையும் அடியனுக்கி இருவினை நீக்கி ஆண்ட பன்னிரு தடந்தோள்வள்ளல் பாதபங்கயங்கள் போற்றி
பாராகி ஏனைப் பொருளாய் உயிர்ப் பன்மை ஆகி பேரா உயிர்கட்குயிராய்ப் பிறவற்றுமாகி நேராகித் தோன்றல் இலாதாகி நின்ருன் கழற்கே ஆராத காதலொடு போற்றி அடைதும் அன்றே

7
தெய்வநாயகி அம்மையார்
தெய்வத யானை கேள் தீய குருயிர் வவ்விய வேலினன் மனைவிஆதியால் எவ்உலகிற்கு நீ இறைவியாமென அவ்வவரடி பணிந்தன் பொடேத்தினர்
வள்ளிநாயகி அம்மையார்
அன்னை யாகியிங்கிருப்பவர் பேரழகனைத்தும் உன்னியான் புனைந்துரைக்கினும் உலவுமோ உலவா என்னை ஆளுடை அறுமுகன் துணைவியாய் இருப்ப முன்னர் மாதவம் புரிந்தவர் இவரென மொழிந்தான்
வடி வே ல்
அன்ன தோர் அமைதி தன்னில் ஆறுமாமுகத்து வள்ளல் மின்னிவர் குடுமிச் செவ்வேல் விண்ணிடை வருதல் காணுர உப் பன்னரும் உவகை பொங்கப் பன்முறை பணிந்து போற்றிச் சென்னியிற் தொழுதகையார் எதிர்கொடு சென்று சூழ்ந்தார்
அந்த மில் ஒளியின் சீரால் அறுமுகம் படைத்த பண்பால் எந்தை கண் நின்றும் வந்த இயற்கையால் சத்தியாம் பேர் தந்திடும் பனுவல் பெற்ற தன்மையால் தனிவேற் பெம்மான் கந்தனே என்ன நின்னைக் கண்டுளக் கவலை நீத்தேம்.
நண்ணலன் பிணித்த மாயம் நலிந்திடயாங்க ளெல்லாம் துண்ணென அறிவின்ரு கித் தொல் புன்ற் கடலுட் பட்டேம் எண்ணரும் படைகட்கெல்லாம் இறைவரீ போந்த வாற்றல் உண்ணிகழ் உணர்ச்சிதோன்ற உய்ந்தனம் உயிரும் பெற்றேம்.
குன்றிடை எம்மைவீட்டிக் கொடியவன் புணர்ப்புச் செய்த அன்றும் வந்துணர்வு நல்கி அளித்தனே அதுவுமல்லால் இன்றும் வந்தெம்மையாண்ட்ாய் ஆதலின் யாங்கள் உய்ந்தே ம் உன்றனுக்குதவும் கைம்மாறு உண்டுகொல் உலகத் தென் முன், s .
புங்கவர் வழுத்திச் சிந்தும் பூமழை இடையினே கி அங்கியின் வடிவ நீங்கி அருளுருக்கொண்டு வான் தோய் கங்கையிற் படிந்து மீண்டு கட்வுள்ர் இடுக்கண் தீர்த்த எங்கள் தம் பெருமான் செங்கை எய்தி வீற்றிருந்த தவ்வேல்

Page 7
8
ம யி ல்
காந்தளஞ் சென்னியன் கடவுமாமயில் கூந்தொறும் கூந்தொறும் குலைந்துப்பஃறலை பாந்தளங் கசைதலும் பசலைமூக்கினல் ஆய்ந்திடுகின்றன அகிலம் குத்தியே
சேவல்
மூக்குடை அலகினல் முகிலைக்கீறியே ஊக் கொடுபரலென உருமுப்பற்றுமால் தீக்கிளர் அன்னதோர் செய்யகுட்டுடைக் கூக்குரல் வாரணம் கொடிய தாகையால்
ஆட்டு வாகனம்
ஏர்தரு குமரப்புத்தேள் இவ்வகை இசைப்ப அன்னேர் கார்தரு கண்டத்தெந்தை காதல வேள்வித்தீயில் சேர்தரு தகரின் ஏற்றைச்சிறியரேம் உய்யுமாற்றல் ஊர்தியதாகக்கொண்டே ஊர்ந்திடல் வேண்டும் என்ருர்
வாழ்த்து
வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன் முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க நான் மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்விமல்க மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்
 


Page 8
らe● (ޞ &/P