கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தர்மர் பா அமுதம் (கணபதிப்பிள்ளை தர்மலிங்கம் அவர்களின் திதி வெண்பா)

Page 1
g5 in
* sܩܐ el PR னப்திப்பிள்
அந்தியேட்டித்தி
 

ா தர்மலிங்கம் ன வெளியீடு
B21

Page 2


Page 3

$6JLDuuLib
தர்மர் பா அமுதம்
2003-08-21
யாழ். ஆவரங்கால், கொழும்பு கணபதிப்பிள்ளை தர்மலிங்கம் அந்தியேட்டித்தின வெளியீடு

Page 4
. ia IIJIri
சமர்iபனம்
அன்போ டனைத்த அப்பாவாய் அறிவை வளர்த்த ஆசானாய் என்றும் எங்கள் உடனாகி இணையில் துணையாய் இருந்த எங்கள் நன்றாம் நினைவை நிலைக்கச் செய் நலஞ் சொல் தர்மர் பா அமுதை அன்பாய் வஜிரா சுமுகன்தாள் அணைந்து சூடி வழுத்துகின்றோம்.
மனைவி பிள்ளைகள் மருமகன்
வனிதா தர்மலிங்கம் g சிவதர்மினரி இருந்தவராசா
l, fall, TTOf
I'... fill ill. TT
’lı yıllı 1-4). | c| : J-1.8

சிவபயம்
ஆவரங்கால் - கொழும்பு அமரர்
கணபதிப்பிள்ளை தர்மலிங்கம் அவர்கள்
தோற்றம்: 1)-(-1)-3 மறைவு. 2003-07-22
திதி வெண்பா
ஆண்டு சுபானுவிலே ஆடிமதி சேர்அபரம் பூண்ட நவமித் திதியதனில் - நீண்டபுகழ்ச் சான்றோன் தருமலிங்கம் சார்ந்தான் சிவபதத்தில் தான்செய்த புண்ணியமே சான்று.

Page 5

°一 சிவமயம்
பதிப்புரை
‘பொன்னும் மெய்ப்பொருளுந் தருவானைப்
போகமுந் திருவும் புணர்ப்பானைப்
பின்னைஎன் பிழையைப் பொறுப்பானைப்
பிழையெலாந் தவிரப் பணிப்பானை
அன்னம் வைகும் வயற் பழனத்தணி
ஆரூரானை
வஜிரா சுமுகனிடமாகக் கண்டு நாளும் வழிபட்டு வந்தவர் எங்கள் அப்பா. எதை மறந்தாலும் சுமுகன் வழிபாட்டினை மறவாதவர் எங்கள் அப்பா. வஜிரா விநாயகன் வழிபாடு, வழிபாட்டிடச் சரியைத் தொண்டுகளில் தம்மை ஈடுபடுத்தி நிறைந்த இன்பங் கண்டவர் அவர்.
வீட்டுத் தலைமையைத் தமதாக்கிக் கொண்டிருந்த எங்கள் அப்பா புறக் கருமங்களெதையும் எங்கள் சிந்தனைக்கு விட்டு வைக்கவில்லை. எங்கள் சிந்தனை முழுமையாகக் கல்வியுடனாக வேண்டும் என்பது அவர்கள் கருத்து. அவர் உயர்ந்த சிந்தனையை அவர் இல்லாத இந்த வேளையிற்றான் நாங்கள் சிந்திக்கின்றோம். எங்கள் நாளாந்த வேலைகள் ஒவ்வொன்றிலும் அப்பாவின் பங்களிப்பை இப்போதும் நாங்கள் உணருகிறோம். அவர் இல்லை என்ற உணர்வு எங்களிடம் இல்லை.
05

Page 6
அப்பா குழந்தைகளிடம் பேரன்பு கொண்டவர். அந்த நினைவு காரணமாகப் பாப்பாப் பா அமுதொன்றை அவர் நினைவாகத் தர்மர் பா அமுதம் என்னுந் தலைபில் வெளியிட்டுள்ளோம். இது அவர் ஆத்ம சாந்திக்கு உதவுவதாக அமையும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. இந்தப் பா அமுதை உருவாக்கித் தந்தவர் மயிலங்கூடல் இளவாலையைச் சேர்ந்த சைவப் புலவர் திருமதி
இரத்தினம் அப்புத்துரை அவர்கள் ஆவர்.
அஞ்சலி உரைகள் வழங்கிய நல்லை ஆதீனம் பூரீலழரீ சோமசுந்தர தேசிக பரமாசார்ய சுவாமிகளை, தெல்லிப்பழைத் துர்க்கை அம்பாள் ஆதீன முதல்வர் கலாநிதி சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களை, கொழும்பு இராமகிருஷ்ண மிசன் சுவாமி ஆத்மகனானந்தா அவர்களை, இந்து கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் திரு. க. பரமேஸ்வரன் அவர்களை, யாழ். கச்சேரி முன்னைநாள் மேலதிக அரசு அதிபர் து. வைத்திலிங்கம் அவர்களை என்றும் நாம் நினைக்கிறோம். ஆவரங்காலைச் சேர்ந்த சிவபூர் வே. நடராஜாக் குருக்கள் அவர்களை, அமரரின் ஆத்ம சாந்திக்கு வேண்டுதல் செய்துள்ள நீர்வேலி ஆசிரியர் த.ந. பஞ்சாட்சரம் அவர்களை, புத்துார் சட்டத்தரணி சதா, லோகேஸ்வரன் அவர்களை, ஆவரங்கால் குகன் கல்வி நிறுவன முதல்வர் குகதாஸன் அவர்களை, இணுவில் தி.சி. அமிர்தலிங்கம் அவர்களை, அமரர் கணபதிப்பிள்ளை தர்மலிங்கம்
O6

வாழ்க்கைவளம் சொல்லிய சைவப்புலவர் சு. செல்லத்துரை அவர்களை, இரங்கல்பா வழங்கிய மனைவியை, காணிக்கை வழங்கிய பிள்ளைகளை, மருமகன் இ.யூரீதவராசா அவர்களை, பொன் மனச் செல் வர் வாழ்வுசீர்பர-விய சித்தாந்த பண்டிதர் சைவப்புலவர் சு. செல் லத்துரை அவர்களை அன்புடன் நினைவுகூருகின்றோம். இந்நூலை அழகுற அச்சிட்டுதவிய கீதா பதிப்பகத்தாரையும் நினைவு கூர்கின்றோம். எல்லோர்க்கும் வஜிரா விநாயகன் திருவருள் நிறைவாகக் கிடைக்க வேண்டுமென்று வேண்டுதல் செய்கின்றோம்.
நன்றி மனைவி; பிள்ளைகள் மருமகன் வனிதா தர்மலிங்கம் குரீ.சிவதர்மினி இgதவராசா
த. சிவதாரணி 5/4, 10th Lane, த. சிவகாமி. Colombo-03. 'secl : 594383
இந்தச் சரிரம் நமக்குக் கிடைத்தது நாம் கடவுளை வணங்கி A. முத்தியின்பம் பெறும் பொருட்டேயாம். .
. நாவலர் இரண்டாம் பாலபாடம், Y *
-w k
07

Page 7
s சிவமயம்
திருச்சிற்றம்பலம்
தேவாரம்
திருஞானசம்பந்தர்:
நாலுங் குலைக்கமு கோங்குகாழி
ஞானசம் பந்தன் நலந்திகழும் மாலின் மதிதவழ் மாடமோங்கும்
மருகலின் மற்றதன் மேல்மொழிந்த சேலுங் கயலுந் திழைத்த கண்ணார்
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் சூலம்வல் லான்கழ லேத்துபாடல்
சொல்லவல் லார்வினை இல்லையாமே.
திருநாவுக்கரசர்:
முற்றாத பால்மதியஞ் சூடினானை
மூவுலகுந் தானாய முதல்வன் தன்னைச் செற்றார்கள் புரமூன்றுஞ் சென்றான் தன்னைத்
திகழொழியை மரகதத்தைத் தேனைப் பாலைக் குற்றாலத் தமர்ந்துறையுங் குழகன் தன்னைக்
கூத்தாட வல்லானைக் கோனை ஞானம் பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
O8

சுந்தரர்:
நற்றமிழ் வல்ல ஞானசம் பந்தன்
நாவினுக் கரையன் நாளைப் போவானும் கற்ற சூதனற் சாக்கியன் சிலந்தி
கண்ணப் பன்கணம் புல்லனென் றிவர்கள் குற்றஞ் செய்யினுங் குணமெனக் கருதும்
கொள்கை கண்டுநின் திருவடி அடைந்தேன் பொற்றி ரள்மணிக் கமலங்கள் மலரும்
பொய்கை சூழ்திருப் புன்கூ ருளானே.
திருவாசகம் மாணிக்கவாசகர்:
அன்ப ராகிமற் றருந்தவம் முயல்வார்
அயனும் மாலுமற் றழலுறு மெழுகாம் என்ப ராய்நினை வார்எ னைப்பலர்
நிற்க இங்கெனை எற்றினுக் காண்டாய் வன்ப ராய்முரு டொக்குமென் சிந்தை
மரக்கண் என்செவி இரும்பினும் வலிது தென்ப ராய்த்துறை யாய்சிவ லோகா
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.
திருவிசைப்பா கருவுர்த்தேவர்:
அற்புதத் தெய்வம் இதனின்மற் றுண்டோ
அன்பொடு தன்னையஞ் செழுத்தின் சொற்பதத் துள்வைத் துள்ளம் அள்ளுறும்
தொண்டருக் கெண்டிசைக் கனகம் பற்பதக் குவையும் பைம்பொன்மா ளரிகையும்
பவளவா யவர்பனை முலையும் கற்பகப் பொழிலும் முழுதுமாங் கங்கை
கொண்டசோ ழேச்சரந் தானே.
()9

Page 8
திருப்பல்லாண்டு சேந்தனார்:
ஆரார் வந்தார் அமரர் குழாத்தில்
அணியுடை ஆதிரைநாள் நாரா யணனொடு நான்முகன் அங்கி
இரவியும் இந்திரனும் தேரார் வீதுயிற் தேவர் குழாங்கள்
திசையனைத் தும்நிறைந்து பாரார் தொல்புகழ் பாடியு மாடியும்
பல்லாண்டு கூறுதுமே.
திருமந்திரம்
திருமூலர்: ۔۔۔۔
தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே.
திருப்புராணம் சேக் கிழார்:
மலர்மிசை அயனும் மாலும்
காணுதற் கரிய வள்ளல் பலர்புகழ் வெண்ணெய் நல்லூர்
ஆவணப் பழமை காட்டி உலகுய்ய ஆண்டு கொள்ளப்
பெற்றவர் பாதம் உன்னித் தலைமிசை வைத்து வாழும்
தலைமைதம் தலைமை யாகும். திருச்சிற்றம்பலம்
1()

திருப்புகழ்
அருணகிரிநாதர் :
எதிரி லாத பத்தி தனைமேவி
இனிய தாணி னைப்பை இருபோதும் இதய வாரி திக்கு ஞறவாகி
எனது ளேசி றக்க அருள்வாயே கதிர காம வெற்பி லுறைவோனே
கனக மேரு வொத்த புயவீரா மதுர வாணி யுற்ற கழலோனே
வழுதி கூனி மிர்த்த பெருமாளே.
வாழ்த்து கச்சியப்பர்:
வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்யக் குறைவிலா துயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவநிதி விளங்குக உலகமெல்லாம்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவனர் வானுறையும்
தெய்வத்துள் (வைக்கப் படும்
- திருக்குறள்
11

Page 9
சிவமயம்
குருபாதம் நல்லை ஆதீன குருமகாசந்நிதானம் வழங்கிய
பிரார் த்தனையுரை
கொழும்பு லிங்கம் உரிமையாளர் பிரபல வர்த்தகர் கணபதிப் பிள்ளை தர்மலிங் கம் அவர்கள் தனி பெயருக்கேற்ற தர்மசிந்தனையுடன் அறவாழ்வு வாழ்ந்த உத்தமர்.
வர்த்தகத் தொழில் மூலம் பொருள் சேர்த்து அப்பொருளை அறவழியிற் செலவு செய்து இம்மை இன்பத்துக்கு மட்டுமல்லாது மறுமை இன்பத்துக்கும் வழிதேடியவர்.
தோன்றிய இந்த உடல் அழியும். ஆனால் இவ்வுடலுள் உள்ள உயிர் எக்காலத்தும் அழியாது. அது அநாதியானது. மாறிமாறி உடல் எடுத்துப் பிறந்து இறந்து தான் செய்த பாவ புண்ணியங்களை அனுபவித்து ஈற்றில் தான் செய்த புண்ணிய விசேடத்தினாற் சிவபெருமான் திருவடிப் பேற்றைப் பெறும். இதுவே சைவசமயம் கூறும்
உண்மையாகும்.
இந்த உண்மையை அறிந்து மக்கள் ஒவ்வொருவரும்
தம் உடலை ஒம்புவதற்கு மட்டுமல்லாது உடலை
இயக்குகின்ற உயிரை ஓம்புவதற்குரிய புண்ணியங்12

களையும் வாழ்நாளில் செய்தல் வேண்டும்.
இவ்வுண்மையை உணர்ந்த அமரர் தர்மலிங்கம் அவர்கள் தன் குடும்பத்துக்குத்தான் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவாகச் செய்து அதேநேரத்தில் தன் உயிருக்குச் செய்ய வேண்டிய கடமைகளான தெய்வ சிந்தனை, இறைவழிபாடு, புண்ணியச் செய்கைகள் என்பவற்றையும் நிறைவாகச் செய்துள்ளார்.
அவருடைய ஆன்மா அவர் செய்த புண்ணிய விசேடத்தினால் சிவபெருமான் திருவடியில் அமைதி பெறப் பிரார்த்திப்போம்.
றரீலgசுவாமிகள்.
இலங்கை வேந்தனர் எழில்திகழ் கயிலை
எடுப்ப ஆங்கிம வரண்மகள் அஞ்சத் தலங்கு நீர்முடி ஒருபதந் தோளர்கள்
இருப தந்நெரித் திர்ைனிசை கேட்டு வலங்கை வாளொடும் நாமமுங் கொடுத்த
வள்ள லைப்பிள்ளை மரமதிச் சடைமேல் நலங்கொள் சோதிநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தெணர்நினைக் கேனே
சுந்தரர் தேவாரம்
13

Page 10
9சிவமயம் ழரீ துர்க்காதேவி தேவஸ்தானம், தெல்லிப்பளை சிவத்தமிழ்ச்செல்வி கலாநிதி தங்கம்மா அய்யாக்குட்டி J.P அவர்கள்
ஆத்மசாந்திய் பிரார்த்தனை உரை
நட்பும் கொடையும் பிறவிக் குணமாக அமைந்த குடும்பத்தில் அவதரித்தவர் அமரர் கணபதிப்பிள்ளை தர்மலிங்கம் அவர்கள். ஆலயப் பணிகளுக்கு முன்னின்று உதவும் இவருடைய மறைவு மறக்க முடியாதது. திருக்கோயிற் பணிகளோடு தொடர்புபட்டவர்கள் இவர்கள். இவருடைய மாமனார் அமரர் ஏ.கே.எஸ். சிவனேசன் அவர்கள் ஆற்றிய சைவப்பணிகளை இந்த மண் என்றும் மறவாது. கொக்குவில் மாத்தனை முருகன் கோயிலுக்கு இக் குடுமி - ப த தினரின் திருப் பணிகள் மேலும் நினைவுக்குரியன. அமரர் அவர்களின் ஈடுபாட்டை ஆவரங்கால் சிவன் கோயில் எடுத்துக் காட்டும். 'லிங்கம் சில்க் கவுஸ் நிறுவனம் இப்பெரியாரால் நடாத்தப்பட்டது. இதன் மூலம் வர்த்தகத் துறையில் சமயப் பணியை இணைத்து வாழ்ந்தவர் இவர். மனிதனைத் தெய்வமாக சேவை நோக்கி உயர்த்திக் காண்கிறோம். இந்த வகையில் அமரர் கணபதிப்பிள்ளை தர்மலிங்கம் அவர்களுக்கு அஞ்சலிகூறி அன்னாரின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கிறேன்.
தங்கம்மா அப்பாக்குட்டி
14,

. சிவமயம்
கொழும்பு இராமகிருஷ்ணமிஷன் சுவாமி
ஆத்மகனானந்தா அவர்கள்
இரங்கற் செய்தி
அன்பர் திரு. க. தர்மலிங்கம் அவர்கள் கடந்த 22.07.2003 அன்று இறையடியை எய்தினார்கள் என அறிந்து அவரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம்.
பிறந்தவர் இறப்பது திண்ணம்' என்பது உலகம் நன்கறிந்த ஒரு உண்மை. எனினும், மிக நெருக்கமானவர்களது மறைவு எவருக்குமே பெரும் துன்பத்தை உண்டாக்கும் செயலாகும். அத் துன்பத்திலிருந்து மீள, காலமும், இறையருளும்தான் உதவ முடியும்.
அமரர் திரு. தர்மலிங்கம் அவர்கள் கொழும்பு புறகோட்டைப் பகுதியில் நல்லமுறையில் வியாபாரம் செய்து பலரும் நன்கறிந்தவகையில், தர்மசிந்தனையும், இறைபக்தியும் கொண்டவராக வாழ்ந்தவர் என அறிகிறோம். அவரது பிரிவால் வாடும் அன்னாரது குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஒம் சாந்தி சாந்தி சாந்தி!
சுவாமி ஆத்மகனானந்தா

Page 11
2. சிவமயம்
ஆன்மார்த்தப் பிரார்த்தனையுரை
ஈழவழ நாடான யாழ்ப்பாணத்திலுள்ள ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும் தற்பொழுது கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திருவாளர் கணபதிப்பிள்ளை தர்மலிங்கம் அவர்கள் சிறந்த பண்பாளராகவும் எல்லோருடனும் அன்புடன் பழகுபவராகவும் இருந்தார். பலதுறை அறிவும், ஆற்றலும், சமூக சேவையாளரும் சைவத் தொண்டரும் ஆவார். இவரது திடீர் மறைவு எமக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியது. இவர் கடமை கண்ணியம் கட்டுப்பாடு இவைகளுக்கு அமைய வாழ்ந்தவர். பலராலும் மெச்சப்பட்ட திருவாளர் தர்மலிங்கம் தன்னை மறந்து நடராஜா இராமலிங்கர் பொற்பாதம் சென்றடையத் திருவாளரின் பாரியார், பிள்ளைகள், உடன்பிறப்பினர், உற்றார் ஆகியோருடன் இணைந்து அமரரின் ஆத்மா சாந்திக்கு நாமும் திரிகரண சுத்தியுடன் பிரார்த்திப்போமாக.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!
ஆவரங்கால், சிவgவே. நடராஜக்குருக்கள் புத்தூர்.
16

சிவமயம்
இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சு செயலாளர் க. பரமேஸ்வரன் அவர்கள்
நீங்காத நினைவுகள்
எனது நீண்டகால நண்பரும் முன்னாள் யாழ். மாவட்ட அரசாங்க அதிபருமாகிய காலம் சென்ற திரு. கே. மாணிக்கவாசகர் மூலமாக லிங்கம்' என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட காலம் சென்ற திரு. க. தர்மலிங்கம் 1996ஆம் ஆண்டு அறிமுகமானார். பிற்பாடு எண்ணற்ற தடவைகள் லிங்கம் அவர்களைச் சந்தித்து எமது நட்பை வளர்த்துள்ளோம், அளப்பரிய பல உதவிகளை எனக்கும், என் குடும்பத்தாருக்கும் அன்னார் செய்துள்ளார்.
குறுகிய கால நட்பாக இருந்தாலும் எம்மிடையே ஏற்பட்ட பிணைப்பு ஓர் சகோதர பாசமாக அமைந்தது. அவரிடம் எனக்கு மிகவும் பிடித்த பண்பு அன்னாரின் இறைபக்தியேயாகும். சைவசமயத்தில் மிகுந்த ஈடுபாடும், ஆழ்ந்த நம்பிக்கையும் கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் அதிகாலையில் கோவிலுக்குச் சென்று தொண்டுகள் செய்வார்.
இறைவன் மீது அவர் கொண்ட பற்றும், பாசமும் காரணமாக அவரது ஆத்மா இறைவனடி சேர்ந்திருக்கும். அவரது மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்களுக்குத்தான் பாரிய இழப்பு. ஆனால் அவருடைய நினைவுகள் என்றும் நினைவில் இருக்கும்.
ஓம் சாந்தி.
qqqqqLSqSSSJSSSSJSSSLLLLLS க. பரமேஸ்வரன்
17

Page 12
சிவமயம்
யாழ்ப்பாணம் முன்னாள் மேலதிக அரச அதிபர் து. வைத்திலிங்கம் அவர்கள் வழங்கிய
நீத்தார் பெருமை
* லிங்கம்’ என்று எல்லோராலும் அன் போடு அழைக்கப்பட்ட அமரர் கணபதிப்பிள்ளை தர்மலிங்கம் அவர்களது சடுதியான மறைவு அவரை அறிந்தவர்கள் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த் திவிட்டது. ஆவரங்காலில் குடிகொண்டெழுந்தருளி இருக்கும் சிவனில் ஆழ்ந்த பக்தியும் காதலும் கொண்ட தர்மலிங்கம் அவர்கள் ஒரு பெரிய இறை பக்தி படைத்தவராவர்.
தான் மேற்கொண்டிருந்த வர்த்தகத் தொழிலில் நேர்மையும் நிதானமும் இருக்க வேண்டும் என்று அப்படியே நடந்தவர்.
தன் ஸ்தாபனத்திற் பணியாற்றியவர்கள் மீது அக்கறையும் கரிசனமும் கொண்டவர். தான் புகுந்த இடமான கொக்குவிற் பகுதியில் உள்ள மாதனை முருகன் மீது அளவற்ற நம்பிக்கை கொண்டு சகல கோயில் காரியங்களிலும் அக்கறை செலுத்தியவர். அவர் தனது தேகத்து நோயை லட்சியம் செய்யாமல் தனது காரியங்களைக் கவனித்தார். தன் குடும்பத்தின் மேல் வெகு அக்க்றையுடன் செயற்பட்டவர். ஒரு நல்ல கணவனை இழந்த திருமதி தர்மலிங்கம், ஒரு பாசமுள்ள
18

தந்தையை இழந்த அவரது பிள்ளைகள் எல்லோருக்கும் என்ன வார்த்தையை ஆறுதலாக நாம் கூறமுடியும்?
தனது சகோதரர்கள் யாவரையும் நன்கு வாழவைத்தவர் திரு. தர்மலிங்கம். இன்று எல்லோருமே அவரது இழப்பை எண்ணித் தவிக்கின்றனர்.
ஒரு நல்ல நண்பனைப் பலர் இழந்து விட்டனர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
து. வைத்திலிங்கம்
என்ன புணர்ணியம் செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்து முனர்னம் நிபுரி நலிவினைப் பயனிடை
முழமணித் தரளங்கள் மண்ணு கரவிரி சூழ்திரு வலஞ்சுழி
வாணனை வாயாரப் பண்ணி யாதரித் தேத்தியும் பாடியும்
வழிபடும் அதனாலே,
சம்பந்தர் தேவாரம்
19

Page 13
disu dub
ஆவரங்கால் - கொழும்பு அமரர் கணபதிப்பிள்ளை தர்மலிங்கம் அவர்களின்
வாழ்க்கை வளம்
சிவனருள் சுரக்கும் திருமலி வளநகர் தவநெறிச் செல்வர் சான்றோர் மலிபதி ஆவரங் காலில் அறநெறி காத்து யாவரும் மகிழத் தாமுளம் உவந்து ஈந்து மகிழ்ந்து இல்லறம் நடத்திய கண்ணிய வாளன் கணபதிப் பிள்ளையும் பண்பின் செல்வி பாக்கியம் மங்கையும் பண்ணிய அறத்தின் பயனாய் உதித்தோன் தண்ணளி யாளன் தர்ம லிங்கம் தன்னரும் தம்பியாய்ச் செல்லத் துரையும் பொன்மகன் பின்வரும் அமிர்த லிங்கமும் தன்சோ தரிகளாய் தங்கம் மாவொடு தங்கை சரஸ்வதி கமலா தேவியும் இந்திரா தேவியோ டினிதே மகிழ்ந்து பெற்றார்க் கினிய பிள்ளை யாயும் உற்ற சோதரர்க் குறுதுணை யாயும் நன்றே வளர்ந்து நற்குணச் செல்வராய் இளமையிற் கல்வியும் கலையும் ஒழுக்கமும் செழுமைபெற் றுயர்ந்து செந்நெறி யாளனாய்
20

வாலிபம் எய்தி வளர்பொருள் ஈட்ட சொந்தமாய்ப் புடவை வர்த்தகத் தொழிலையே தேர்ந்தெடுத் துயர்ந்து சீர்தொழி லதிபராய் யாழ்நகர் லிங்கம் சில்க்கவுஸ் அதனையும் சோதி ரெக்ஸ்ரைல் தனையும் நடத்தி புத்துர் லீனா ரெக்ஸ்எனும் மின்தறி ஆலையும் நடத்தி அதிபுகழ் எய்தி கொழும்பிலும் லிங்கம்ஸ் ரெக்ஸ்ரைல் நிறுவி பொருளும் புகழும் பெருமையும் சேர வாழ்க்கைத் துணையாய் வாய்த்தனள் வனிதா. கொக்குவில் பதியில் மிக்குயர் புகழோன் சிவனே சன்துணை புவனேஸ் வரியொடு வாழ்ந்தஇல் லறத்தில் வந்தநற் செல்வி வனிதா தானும் தன்சோ தரராய் மாது சிரோன்மணி சிவனேஸ் வரியொடு இராசேஸ் வரிசிவ குமாரன் பத்மினி சாவித் திரியும் தமயந்தியும் என எழுவரோ டினிதாய் வளர்ந்த நங்கை தர்மலிங்கம் தர்மபத் தினியாய் அன்பும் பண்பும் அறமும் பயனுமாய் இன்பம் பொங்கும் இனிய வாழ்வில் முத்தென வந்த மூவர் பிள்ளைகள் மூத்தநன் மங்கை கணக்காளராம் சிவதர் மினிதன் கல்வியில் உயர்ந்து கவின்பெற வளர்ந்து காலக் கனிவில்
21

Page 14
இணுவில் இராசையா செல்வநாயகி நன்மகன் நலமார் பொறியிய லாளர்ப் புகழோன் சிறீதவ ராசாவை மணந்து நயந்து இலண்டன் நகரில் இனிதே வாழவும் கணனிப் பொறியியற் சிவதாரணியும் கணக்காளர் சிவகாமி தானும் கடிதே கல்வியில் உயர்ந்து கவின்பெற வாழவும் மனதுக் கினிய மனைவியும் மக்களும் இனியன செய்து இன்பவாழ் வினிலே குறையெதும் இன்றி நிறைவாய் வாழ்ந்து இறைசிந் தனையில் இலயித்துத் திழைத்து நிலையா வாழ்வில் நிலைக்கும் பயனாய் அறப்பணி கள்பல அன்புடன் செய்து அறுபத் திரண்டாண் டருமையாய் வாழ்ந்து ஆடி அபர நவமித் திதியில் பூவுல கத்துப் புனிதவாழ் விகந்து சிவலோ கத்துச் சிவகதி சேர்ந்தார் தர்மலிங்கம் தம்பெயர் நிலைக்கும்.
* நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு.
- திருக்குறள்.
புனிதவாசம், சைவப்புலவர் சு. செல்லத்துரை இளவாலை
22

9. சிவமயம்
தரும தீபம்
இது சுடர்விட்டுப் பிரகாசித்த இடம் புத்தூர் ஆவரங்காலாகும். புத்தூர் கிராமம் பல இயற்கை வளங்களும், அறிஞர்கள், ஆத்மஞானிகள், பரோபகாரிகள் நிறைந்த இடம். அந்த வரிசையில், சிறந்த முன்னணித் தொழிலதிபராகவும், இக் கிராமத்தின் சுவிகாரத் தவப்புத்திரனாகவும், சரசாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அமரர் திரு. கணபதிப்பிள்ளை அவர்களின் சிரேஷ்ட புதல்வனாவும் தர்மலிங்கம் வந்து உதித்தார். இவரின் பெயர் இக் கிராமத்துடன் இணைந்துவிட்டது.
1979ஆம் ஆண்டளவில் புத்தூரில் முதல் முதலில், அதிசிறந்த நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஒரு ஆடைத் தொழிற்சாலையை நிறுவினார்கள். இந்தத் தொழிற்சாலையில் புத்துாரையும் புத்துாரை அண்டியவர். களுமான ஏழைப்பெண் பிள்ளைகளுக்குத் தொழில் வாய்ப்பு அளித்திருந்தார்கள். அதன் நிமித்தம் எத்தனையோ வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்ந்த சீதனக் கொடுமையின் கீழ் அவஸ்தைப்பட்ட குமர்ப்பிள்ளைகள் திருமண வாழ்க்கையைக் காண முடிந்ததென்றால் அது மிகையாகாது.
ஆவரங்கால் - புத்தூர் பகுதிகளில் உள்ள திருத்தலங்கள் குறிப்பாக ஆவரங்கால் சிவன் கோயில்,
23

Page 15
கன்னாரை அம்மன் ஆலயம், தகரம் பிள்ளையார் கோயில் ஆகியவற்றின் சீரமைப்புப் பணிகள் நிகழ்ந்தபோது வாரி வழங்கி உதவினார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாது தொண்டமனாறு செல்வச் சந்நிதிக்குச் சென்று வருவார்கள்.
1990ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இவர் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்த விரும்பியும், பிள்ளைகளின் உயர்கல்வியை முக்கிய நோக்கமாகக் கொண்டும், கொழும்பில் வசிக்கத் தொடங்கினார்கள். அதன்பின்பும் இவரின் பொதுப்பணிகளும், தெய்வீகப் பணிகளும் தொடந்து கொண்டே இருந்தன. பம்பலப்பிட்டி பழைய நகரத்தார் பிள்ளையார் கோயிலின் முகப்பில் உள்ள தல விருட்சமான அரச மரத்தின் கீழ் குடிகொண்டிருக்கும் சுயம்புப் பிள்ளையாரை ஒவ்வொரு நாளும் காலையில் ஐந்து மணிக்குச் சென்று வணங்கிப் பின்பு தானே அந்தப் பகுதியைக் கூட்டித் துப்பரவு செய்து அவ்விடத்தில் உள்ள பூமரங்களுக்கு நீர்ப்பாய்ச்சி, மூலவர் எழுந்தருளியிருக்கும் பகுதியின் முற்றத்தையும் தண்ணிர் கொண்டு கழுவி மலர்கள் கொய்து பிரதம குருவிடம் சமர்ப்பித்து வருவது வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.
ஆவரங்கால் பகுதிலிருந்து தலைநகருக்கு வரும் சகலரும் இவர் வீட்டில் ஆறித் தங்கிச் செல்லக்கூடியதாகவிருந்தது. மிகவும் எளிமையானவர் உடையில் மட்டுமல்ல மக்களுடன் பழகிக் கொள்ளும் பாங்கிலும் அதனைக் கடைப்பிடித்தார்கள். அரசியலில் தடம் பதிக்க என்றுமே
24

அவர் விரும்பியதில்லை. ஆனால் தமிழ் மக்களின் விடிவுக்காகப் பணியாற்றியிருக்கிறார்கள். இவரை உள்ளுர் அரசியலில் ஈடுபடவைக்க எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. பட்டம் பதவி வேண்டாம் என்று வெறுத்துத் தள்ளிய பெரியார்.
ஆவரங்கால் - புத்தூர் வாழ் மக்களும், அவருடன் இஷ்டமாகப் பழகியவர்களும், இவரை முழுப்பெயர் சொல்லி அழைத்ததில்லை. பதிலாக லிங்கம் அண்ணை என்ற செல்லப் பெயர் சூட்டி அழைத்தனர். இவரின் ச் செய்தி பத்திரிகைகள் மூலம் அறிந்து ஆவரங்கால் ம் மக்கள் அந்தத் தருமன் போய்விட்டானே!’ என்று
வ்கப்பட்டார்கள். இவர் இக்கிராமத்தின் தரும தீபம் என்று கூறுவது சாலப்பொருத்தமாக அமையும்.
இராமக்கிருஷ்ண பரமாத்துமா போன்ற மகான்கள் மிகவும் இளவயதிலேயே சிவப்பேறு பெற்றுவிட்டார்கள். அந்தப் பேறு தான்இவருக்கும் கிடைத்துவிட்டது.
அன்னாரின் ஆத்மா சாந்திபெற ஆவரங்கால் இராம. லிங்கேஸ்வரப் பெருமானைப் பிரார்த்திப்போமாக.
புத்தூர் சதா லோகேஸ்வரன் சட்டத்தரணி, முன்னாள் வலிகாமம் கிழக்குப் பிரிவு பிரதேச சபைத் தலைவர்.
25

Page 16
சிவமயம்
* புகழ்நிலையடைந்த தர்மலிங்கம்
பண்டிதர் சி. அப்புத்துரை
நல்லன நினையு முள்ளம்
நாநிலம் புகழுஞ் சொற்கள் நல்லவை செய்யும் பாங்கு
நவின்றிடற் கினிதாம் வார்த்தை வல்லவன் தர்ம லிங்கம்
வளநிறை வாழ்வு கந்த சொல்வலன் சோர்வி லாதான்
தூநெறி சொலற்கொ னாதே.
அன்பினில் தோய்ந்த வுள்ளம்
அருளினை வீசுங் கண்கள் இன்பினைத் தெளிக்குஞ் சொற்கள்
இனியன காலும் வார்த்தை என்பினைக் கூட விய
இயைபுடை மனத்த னான பொன்னுளத் தர்ம லிங்கம்
புகழ்நிலை யடைந்தான் அந்தோ.
26

திண்ணிய உளத்தன் தீரன் ,
திறந்தெரி செயல்வல் லாளன் பண்ணிய செயற்குச் சான்றாய்ப்
படைத்துள குழவி காண்போம் உண்ணிறை ஒளியி னோடு
உவந்துறை துணைவி சுற்றம் எண்ணிலர் ஏத்தி நிற்க
இயல்புவாழ் வெய்தி னானே.
சுமுகனை நாளும் போற்றும்
சுந்தர வுளத்துத் தூயன் சுமுகமாய் வாழ்வைத் துய்க்கத்
தொடர்ந்திறை பணிந்து நின்றான் சமுகத்தில் ஒருவ னாகித்
தக்கோனாய் வாழ்வு கந்தே அமுதென வாழ்ந்த ஐயன்
அரனடிக் கன்பு செய்தான்.
அன்பினன் தர்ம லிங்கம்
அணைந்தரன் அடியைப் பற்றி இன்பமாம் வாழ்வை ஏற்றான்
எய்துதற் குரிய தான அன்பமர் தாள்கள் போற்றி
அமர்ந்தனன் ஒளிரு கின்றான் இன்பமோ இன்பம் என்று
எவருமே ஏத்தி நிற்போம்.
27

Page 17
சிவமயம்
பொன்மனச் செல்வர் தர்மலிங்கம்
சித்தாந்த பண்டிதர், சைவப்புலவர் சு. செல்லத்துரை
அன்பிலே மலர்ந்த உள்ளம்
அறநெறி தவறா வாழ்வு இன்பமே அளிக்கும் வார்த்தை இனியன செய்யும் பண்பு தன்னலம் கருதா தென்றும்
தக்கவர்க் குதவும் நண்பு இன்னலம் கனிந்த தர்ம
லிங்கரை எவர் மறப்பார்.
அன்புயர் மனைவி மக்கள்
அயலவர் சுற்றம் காத்து தன்புகழ் பெரிதென னாது
சாந்தமும் கனிவும் காட்டி அன்பமர் தர்ம லிங்கம்
அரனடிக் கன்பு பூண்டு பொன்மனச் செல்வர் என்னும்
புகழினை நிலைக்க வைத்தார்.
இறையின்பம் ஒன்றே வாழ்வின் இறுதியில் தேட்டம் என்று நிறைவான பொருளைச் சேர்த்து
நிலையான அருளாய் மாற்றிக் குறைவிலா நிறைவாம் ஈசன்
கழலடி சிந்தை வைத்த திறமுயர் தர்ம லிங்கம்
சிவனடி மன்னி வாழ்வார்.
28

சிவமயம்
மனைவி இரங்கல்
ஏழ் ஏழ் பிறப்பிற்கும் என்துணையே என்நாதா
வாழ்விலும் தாழ்விலும் வாடாமல் காத்தனையே
பாழான தென்வாழ்வு பதைக்கிறதே என் இதயம்
ஊழ்வினையை எண்ணி எண்ணி உலைமெழுகாய் அழிகின்றேன்.
தவமிருந்து கைப்பிடித்து
தக்கோனாய் எமைக்காத்து
அகமகிழ்வு உம்மகிழ்வாம்
உமக்காகவே வாழ்ந்த
ஒப்பரிய தெய்வமே
உன்தாள்கட் கென் வணக்கம்
மனைவி
29.

Page 18
مسع சிவமயம்
பிள்ளைகளின் அன்புக் காணிக்கை
இளமையிற் கல்வி சிலையில் எழுத்து என்ற மூதுரைக்கமைய எங்களுக்கு அழியாத கல்விச் செல்வத்தைச் சிறுவதில் இருந்து அளித்துப் பெருமைப்பட்டீர்கள் அப்பா!
உங்கள் சாதனைகள், தியாகங்கள் பெருமைகளை எவராலும் எய்த முடியாது. அன்பும், உணர்வும், பாசமும் ஊட்டி வளர்த்தீர்கள். ஆயிரம் உறவுகள் இருந்தும் என்ன, * அப்பா’ என்று அழைக்க உறவு இன்றில்லையே என ஏங்குகிறோம்.
‘நம்பினோர் கைவிடப்படார்’ என எப்போதும் சொல்வீர்கள். அதே நம்பிக்கையுடன் வாழ வழி வகுத்துத் தந்தீர்கள். நீங்கள் எங்களுக்கு கூறிய புத்திமதிகளைச் சிரமேற்கொண்டு எமது வாழ்வை முன்னெடுப்போம் என்று உறுதிபூண்டுள்ளோம். நீங்கள் என்றும் எங்களுக்கு அகலாத் துணையாய் அகல்விளக்காய் ஆத்ம ரீதியில் விளங்குவீர்கள் என்பது எமது நம்பிக்கை. உங்கள் ஆத்ம சாந்தி எங்கள் வாழ்வுக்குச் சாந்தி அளிக்கும் என்பது எமது நம்பிக்கை
நீங்கள் விட்டுச்சென்ற பணியை எங்கள் தாயார் சரிவர நிறைவேற்றி வைப்பார் என்பதும் நீங்கள் விட்டுச்சென்ற இறை தொண்டினை நாங்கள் என்றும் சிரமேற்கொண்டு ஆற்றி வருவோம் என்பதும் நாங்கள் உங்களுக்கு செய்யும் கைமாறாகும்.
உங்கள் ஆத்ம அனுசரணை எமக்கு என்றும் வேண்டும்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
பிள்ளைகள்.
3)

- ifsudub
IDITI DIT IDGODOBBIGOTUTIT?
மாமா என்றுதான் அறிமுகமானிர்கள். ஆனால் நீங்கள் மாமாதானா? இல்லையில்லை, நீங்கள் மாமாவேயில்லை, நீங்கள் தான் அப்பா! என் அன்புத் துணைவிக்கு அப்பா, எனவே யான்.? மரு மகன்தானே! அப்ப, மகன்தானே! தந்தை இல்லாதவன் யான், அந்த வெற்றிடத்தை நிறைவு செய்தவர் நீங்கள்தானே! இத்தனை நாள் எனக்குப் பூரிப்பைத் தந்த நீங்கள் இப்போது தூர விலகிவிட்டீர்களே! தொடர்ந்தும் வெற்றிடம் வெற்றிடந்தானே! இனி யாரால் அதை நிறைக்க முடியும்.? என் அதிர்ஷ்டம் அவ்வளவுதான், என்ன செய்வது?
மாமா, பிறந்தகத்தில் நீங்கள் வாழ்ந்த காலம் பற்றி யான் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் வர்த்தகப் பிரமுகர்தான். அதில் ஐயமில்லை. ஆனால் அப்படி நீங்கள் வாழ்ந்ததாகத் தெரியவில்லை. என்றைக்குமே நீங்கள் முதலாளியாக வாழ்ந்ததில்லை. உங்கள் ஸ்தாபனங்களில் உங்களுடன் தொழில் புரிந்தவர்கள் அனைவரையும் நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினராக நினைந்தே வாழ்ந்துள்ளிர்கள் என்று தெரிகிறது. வந்த வகையினாலோ தொழிலினாலோ, பணத்தினாலோ நீங்கள் உயர்வு தாழ்வு கற்பித்தவரில்லை. உங்கள் தாயகச் சூழலிலுள்ளோர் கருத்துக்கள் கொண்டு இதனை யான் உணருகின்றேன்.
கொழும்பில் வாழ்ந்த காலத்திற்கூட உங்கள் போக்கை நீங்கள் மாற்றிக்கொள்ளவில்லை. நீங்கள் உங்களை மட்டும் சிந்தித் தவரில் லை. எல்லோரும் நல் லவர்களாக வல்லவர்களாக வாழ வேண்டுமென்று சிந்தித்துள்ளிர்கள்.
31

Page 19
உங்கள் சுற்றத்தவர்களை, உங்களிடம் தொழில் புரிந்தவர்களை வாழ வைத்துள்ளிர்கள் என்பதும் எமக்குத் தெரியும்.
கோயில் திருப்பணிகளுக்காக ஆவரங்காற் சூழலில் வாரி வழங்கியிருக்கிறீர்கள். மக்கள் சொல்லிச் சொல்லிப் பெருமைப்படுகின்றார்கள். ஆவரங்காற் சிவன்கோவில் உங்கள் பணிக்குச் சான்றாகி என்றும் நிற்கும். கொழும்பு வஜிரா இடம் விநாயகர் எப்படியோ உங்களைத் தன் வயமாக்கிக் கொண்டார். ஒவ்வொருகாலையும் விநாயகர் பணிகளை நிறைவு செய்துதான் உங்கள் பணிகளைத் தொடர்ந்திர்கள். மெல்ல மெல்ல உலகியலை விட்டு உங்களை விலகச் செய்தார் விநாயகர் என்பதை அப்போதே எம்மால் உணர்ந்து கொள்ள முடிந்தது. புளியம் பழமும் ஒடும் போன்ற வாழக்கையுடனானிர்கள். அவ்வளவிற்கு இறையுடனான வாழ்வில் உயர்ந்து நின்றீர்கள் வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து பிள்ளைகளைக் கல்வியில் உயரச் செய்து வாழ்க்கையின் பயனை உணர வைத்துள்ளீர்கள். அது உங்கள் சாதனை என்றுதான் சொல்லவேண்டும். கல்வி அவர்களை ஒழுங்கான சிந்தனையாளர்களாக்கியுளது. அது ஒன்றே உங்கள் உணர்வைக் கணிக்கப் போதுமானது. உங்கள் ஆத்மா வஜிரா விநாயகன் தாள்களுடனாகி அமைதி காண்பதாக.
@.. gojb56I JITFIT
இலண்டன். (மருமகன்)
32

நான் நயக்கும் இனியவரில் ஒருவர்
‘நல்லவர் - வல்லவர் பலர் மறைந்து விட்டார்கள், அல்லது மறைந்து கொண்டேயிருக்கின்றனர். இது அமெரிக்கப் பேரறிஞன் ஒருவரின் கூற்று. சற்றுச் சிந்தித்தால் அக்கூற்றிற் பதிந்துள்ள உண்மையின் ஆழத்தை
உணரமுடியும். ズ
யாழ்ப்பாணம் - ஆவரங்கால் புகழ் அமரர் யூரீமான் கணபதிப்பிள்ளை தர்மலிங்கம் மேற்கூறிய பேரறிஞரின் முற்கூற்றிற்கு இலக்கணமாய் அமைந்துவிட்டார்! மேலும் பலகாலம் வாழக்கூடியவர்; வாழ வேண்டியவர்; பயன் கருதாப்பணி பலருக்கும் ஆற்றும் விருப்புடையவர். ஆயினும் திடீரென 'விழித்துக் கண்டான் மெய் பொருள் தன்னை அமரர் போன்று, காலம் பல இருந்தும் காலன் கைப்பட்டோரை விண்ணுலகம் அழைத்ததோ அன்றேல் அவர்கள் விண்ணுலக அழைப்பை முந்தி விரைந்தனரோ நாம் அறியோம்! என்றும் ‘இறைவர்க்கினியர் இளமையில் இறைபதம்’ என்ற கூற்று பொய்யன்று!
நோயுற்றாரல்லாமல், நொந்து பாயிற் கிடவாமல் மின்னற் பொழுதில் 'அமரர் தர்மர் விடை பெற்றமையும் அவரின் பல்வேறு பூவுலகச் சாதனைகளில் ஒன்றாய் அமைந்துவிட்டது. ‘வாழ்க்கை ஒரு நீர்க்குமிழி’ நிலையற்றது.
‘இடப்பக்கம் இறை நொந்ததே என்றார்: கிடக்கப்
33

Page 20
படுத்தார்: கிடந்தொழிந்தாரே என்ற திருமூலரின் திருவாக்கிற்கு தருமரின்’ மறைவு மேலும் சான்று பகருகின்றது. எனவே மானிடர் ஆகிய நாம் நொந்து பயனில்லை.
*எழுதிச் செல்லும் விதியின் கை எழுதி, எழுதி மேற் செல்லும்: தொழுது கெஞ்சி நின்றாலும் வழுவிப் பின்னால் நீங்கியொரு வார்த்தையேனும் மாற்றிடுமோ? அழுத கண்ணிராறெல்லாம் அதிலோர் எழுத்தை அழித்திடுமோ,
எனவே சாந்தியடைவோமாக!
நிற்க, 'அமரர் பூரீமான் தர்மலிங் கம்’ தம் பெயருக்கேற்ப ஓர் “தர்மர். வேண்ட முன்னர் வழங்கும் கையுடையவர். இரக்கமுடன் தர்மம் புரிந்தவர். பெயரைப் புகழை விரும்பாதவர். எங்கும், எவர்க்கும், நன்றே, நயமாய், பணியாற்றிய நல்லவன்: அதிவல்லவன். நண்பர் பால் பற்றுடையவர்: மூன்று தசாப்தங்களுக்கு மேலாக என்பால் சகோதரன் போன்று பழகியவர். சிவப்பணி, பொதுப்பணி, சமூகப்பணிகளிலெல்லாம் தளராமனத்துடன் ஈடுபாடு கொண்டவர். தமது கிராமத்தருகே, புத்துாரில் பாரிய நெசவாலையை நிறுவிப் பலருக்குத் தொழில் வாய்ப்பை வழங்கியவர். (அது இன்று நாட்டின் நிலையால் கிலமடைந்துளது)
34

யாழ். நகரில் அமரரின் ‘லிங்கம் சில்க் கவுஸ்" பலரையும் கவர்ந்த முதல்தரமான புடவையகம். அ.தே கொழும்பு மாநகரிலும் புடவையகம் அமைத்துத் தன் தொழில் திறன், முகாமைத்துவம் ஆகியவற்றிற்கு உதாரணமாய் அமைந்தவர். அமரருக்கு அண்மைக் காலத்தில் தம் வர்த்தகத் துறையில் சில பின்னடைவு ஏற்பட்டதென நானறிவேன். ஆனாலும், அவரோ சென்ற ஆண்டு யாழ். வந்தவேளை எம்முடன் பத்தும் பலதும் கதைத்தவேளை, தான் மனம் தளரவில்லை - வரும் - போகும் . மேலும் வரும்' - என்றே நம்பிக்கை நிரம்பப் பெற்றவராகவே காணப்பட்டார். அமரரின் உள, உள்ள, பாங்கினை மேலும் விரித்துக் கூறும் ஆற்றல் எனக்கில்லை. ‘தோள் கண்டார் தோளே கண்டார். நான் கண்டதோ ஓர் இனிய மனிதனை அவர் போன்றே, அவரின் சகோதரர்களும் மனைவி பிள்ளைகளும் எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரியவர்கள்.
அமரர் பூரீமான் கணபதிப்பிள்ளை தர்மலிங்கம் படைத்தவன் பாதமலர்களில் சாந்திபெறவும் பிறப்பிறப்பற்ற பேரின்பத்தில் திழைக்கவும் நாமும் அமரரின் பாரியார், பிள்ளைகள், சோதரர், உற்றார், உறவினருடன் இணைந்து பிரார்த்திப்போமாக!
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
நீர்வேலி. த.ந. பஞ்சாட்சரம் 2003.08.01. ஆசிரியர்.

Page 21
நினைவிருக்கும் வரை நிறைந்திருக்கும்
* தோன்றிற் புகழொடு தோன்றுக அ.திலார்
தோன்றலிற் தோன்றாமை நன்று
என்ற வாக்கினை மெய்ப்பித்த வளமான உறவு ஒன்று காலத்தின் கொடிய நியதியால் கலைந்து போய்விட்டதை எண்ணும் போது ஒருகணம் இதயம் விம்மித் தவிக்கின்றது.
அமரர் கணபதிப்பிள்ளை தர்மலிங்கம் அவர்களை எண்ணும்போது அவருடன் கொண்ட உறவினால் பெருமை கொள்கிறேன். எனது சிறுபராயத்தில் அந்தப் பெருமகனின் குடும்பத்தின் எழில்மிகுந்த வாழ்வுமுறையினால் கவரப்பட்டவன் நான். ஒரு ஒரமாக நின்று அவர்களின் வாழ்க்கை முறையின் வனப்பை ரசித்திருந்த எனக்கு அவர்களின் இன்ப உறவு ஏற்படும் என்று எண்ணியதில்லை. காலவோட்டத்தில் எல்லோருடனும் இன்முகத்துடன் உறவாடும் அவர் என்னுடன் கொண்ட நட்பின் இனிமையை இப்போது பெருமையுடன் எண்ணிப்பார்க்கிறேன்.
அமரர் அவர்கள் தன் இளமைக் காலம் தொட்டுத் தன் குடும்பத்தையும், சகோதரர்களையும் முன்னேற்றுவதில் அயராத அக்கறைகொண்டு உழைத்தவர். நலிந்தவர்க்கு உதவும் நல்லதொரு பண்பாளனாக விளங்கியவர். ஊர்நடுவே வளர்ந்த நற்கனி மரமாகி நின்று யாவர்க்கும் பயன் தந்தவர். தனது குடும்பத்தவர்களை நல்ல நல்ல பதவிகளைப் பெற்று உயர வைத்த நன்னெறியாளன்.
அமரர் தன் குடும்பத்துக்காக மாத்திரம் உழைத்தவர்
36

அல்லர் ஏழை எளியவர்களின் வாழ்வு வளம் பெற வேண்டும் என்பதற்காக அயராத பணி செய்தவர். தொழில்துறை வல்லுனராக விளங்கிய இவர் லிங்கம் சில்க் ஹவ்ஸ், லீனா ரெக்ஸ் மின்தறி நிறுவனம் என்பவற்றைத் திறம்பட நிர்வகித்து வழிநடத்திய விதம் அவரின் நிர்வாகத் திறனைத் தெட்டத் தெளிவாகக் காட்டி நின்றது. தனது மின்தறி நிறுவன மூலமாக ஏராளமானவர்களுக்குத் தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களின் வளமான வாழ்வுக்கு உதவினார். தர்மங்கள் செய்வதை தன் கடமையாகவே கருதினார்.
“அற்றார் அழிபசி தீர்த்தல் அ.தொருவன்
பெற்றான் பொருள் வைப்புழி
என்ற வள்ளுவனின் வாக்குக்கு ஏற்ப வாழ்ந்து விண்ணுலகில் தேவர்க்கு விருந்தாகி விட்டார். அன்னாரின் சமூகநல நோக்கினை எண்ணும்போது அவரின் மரணமே அவருக்கு நீண்ட வாழ்வினை தந்துவிட்டது என்று தேறுதல் அடைய முடிகிறது.
வசதிகள் அற்று நலிந்தவர்களை நையாண்டி செய்யும் இவ்வுலகிலே பலருக்கு தன் தேட்டத்தினால் வீடுகள், காணிகள் போன்றவற்றை வழங்கி அவர்களது வாழ்வில் ஒளியேற்றிவைத்த வள்ளன்மைக் குணம் மிக்க ஒருவரை இழந்துவிட்டோமே என்று மனம் பேதலிக்கின்றது.
என்னைப் பொறுத்தவரை இவரின் இன்னொரு
முகத்தினையும் தரிசிக்க முடிந்தது. கல்விக்காக எதையும்
இழக்கலாம் என்ற எண்ணம் உள்ளவர் இவர். எமது
நாடு மிக மோசமான ராணுவ நெருக்கடிகளுக்கு
37

Page 22
உட்பட்டிருந்த சமயம் தனியார் கல்வி நிறுவனங்கள் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுக் கொண்டிருந்தன. அத்தருணம் எனது நிறுவனத்தை அச்சுவேலிப் பகுதியில் இருந்து ஆவரங்காற் பகுதிக்கு மாற்றவேண்டியிருந்தது. இந்நிலையில் ஏராளமான பிள்ளைகளின் கல்வியைக் கருத்திற் கொண்டு ஆவரங்காற் பகுதியிலுள்ள தனது அழகான வீடு ஒன்றினை எமக்கு வழங்கி எமது பணிக்கு உந்துதல் தந்த இவரை நன்றியோடு நினைப்பதில் நான் பெருமையடைகின்றேன்.
இவ்வாறு குடும்பம், சமூகம், கல்வி, தொழில், வணிகம், தானதர்மம் போன்ற அனைத்து அம்சங்களிலும் மிக நேர்மையுடனும், தீட்சணியத்துடனும் செயற்பட்டு இன்று எம்மைக் கடந்து எம்முள் உறைந்துவிட்ட அமரர் க. தர்மலிங்கம் அவர்களின் ஆத்ம சாந்திக்காக நன்றியுடன் பிரார்த்திக்கின்றேன்.
* பலருக்கு வாழ்வு மரணமாகின்றது
சிலருக்கு மரணம் வாழ்வாகின்றது. மரணித்தும் வாழ்பவன் மாமனிதன் ஆகின்றான்!.
குகன் கல்வி நிறுவனம், குகதாஸன் ஆவரங்கால் O3.08.2003
38

சிவமயம்
திரவியம் தேடிய கைகளும் ஓய்ந்தன தர்மலிங்கத்தின் தலைமையும் சாய்ந்தது
செந்தமிழ்ப் பண்பும், தெய்வீக ஒழியும், தழைத்துக்
பதியாகிய கொழும்பு மாநகரில் சீரும் சிறப்புடனும் தன்னிகரில்லாத் தலைமகனாக வாழ்ந்த தர்மலிங்கத்தின் ஆவி பிரிந்துவிட்டது. மணிவாசகர் கூறியது போல வந்த வாறெங்ங்னே போமா றேதோ என்ற கூற்றுக்கிணங்க நற்கதியடைந்துள்ளார். இந்தப்பூமி சிவனுய்யக் கொள்கின்ற ஆறு என்பது மணிவாசகப் பெருமான் வாக்கு. இந்த
உண்டு உறங்கி மீண்டும், மீண்டும் இதனையே செய்வதற்கு வழிதேடி வினைசேர்த்துக் குளிக்கப் போய்ச் சேறுபூசியவன் நிலைபோலாகின்றது. ஏன் பிறந்தோம்? ஏன் கற்றோம்? ஏன் வாழ்கின்றோம்? என்பதை அறியாது சிந்திக்காது வாழ்நாளை வீணாளாக்கி மடிகின்றோம். பிறவியின் பயன் இறைவனை அடைதல். கற்றதன் பயன் கடவுளைத் தொழுதல். வாழ்வின் பயன் வற்றாத பேரின் பத்துக்கு வழிதேடல். எனும் உண்மையை உணரவைக்கவே இறைவன் துன்பத்தை தருகிறான்.
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ் சுடச்சுட நோற்கிற் பவற்கு
- திருக்குறள்
39

Page 23
ஞானம் ஒளிரும் என்பது பொய்யாமொழி. நல்ல குருநாதன் நம்மை வருத்துவது கொல்லவல் லக் கொல்லவல்லப் பொல்லா வினை போக்க என்பதும் இவ்வுண்மையையே உணர்த்தி நிற்கின்றது. உயிர்செய்யும் வினை எக்காலமும் அதனை விட்டு நீங்காது தொடரும். அதனை அனுபவித்தே தீர்க்க வேண்டும். ஆயினும் இறைவன் அருள் பெற்றால் அது தானாகவே வெய்யிலைக் கண்ட பணிபோல விலகிவிடும். அதனாலே இறைவன் அருள் புரியும் இடங்களையறிந்து அவனருளாலே அவன் தாழ் வணங்கி வினையின் பிடிப்பில் நின்றும் விடுதலை பெற்று ஈறிலாப் பெருவாழ்வாம் வீட்டின்பம் பெறுதல் வேண்டும். கற்றதன் பயனாய்க் கடவுளைத் தொழுது வாழ்வின் பயனாய் வற்றாத பேரின்பத்துக்கு வழிதேடிப் பிறவியின் பயனாய் இறைவனை அடைந்து இன்புற்றிருக்க அம்மையப்பன் அருள் புரிவாராக. பெரியார் தர்மலிங்கம் இந்த உண்மைகளை நன்கு தேர்ந்து கொண்டவர். தனது மனைவி பிள்ளைகள் உறவினர் முதலியோர் 6) Tp வழிசமைத்த அதேவேளை மற்றையோர் வாழ்வையும் செவ்விதாக்கச் சிந்தித்துள்ளார். ஆத்மீக வாழ்வையும் நினைந்துள்ளார். அந்த வகை நடைமுறைதான் அவரை இந்த நிலைக்கு உயர்த்தியது. இன்று இறைவன் திருவடி நிழலில் இன்பந்துய்க்கின்றார். அவர் ஆத்மா சாந்தி பெறுவதாக.
இணுவில் கிழக்கு, தி.சி. அமிர்தலிங்கம்
40

2
சிவமயம் நன்றி
9 எங்கள் அன்புத் தெய்வம் அருமைத் தந்தை அவர்களின் இறுதிக் கிரியைகளிற் கலந்து எங்கள் துன்பத்திற் பங்குகொண்டவர்களுக்கு,
9 இறுதிக் கிரியைகள் ஒழுங்காக நடைபெற உதவிய
வர்களுக்கு,
O இரங்கற் செய்திகளை தொலைபேசி மூலம், தந்தி
மூலம், அஞ்சல் மூலம் தெரிவித்தவர்களுக்கு,
9 மலர், மாலை, மலர்வளையம் என்பவற்றுடனாகி
அஞ்சலி செலுத்தியோர்க்கு,
9 அந்தியேட்டி சார்பான கிரியைகளிற் கலந்து
கொண்டோர்க்கு,
9 அமரரின் ஆத்மசாந்தியை நோக்காகக் கொண்டு நடைபெற்ற மதிய போசன விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கும் எமது உளமார்ந்த நன்றிகள்.
மனைவி: பிள்ளைகள் LDB LD36Geir வனிதா தர்மலிங்கம் g. சிவதர்மினி " இgதவராசா
த. சிவதாரணி த. சிவகாமி. - טוןth La()1 - 4. .15 Colombo-03. |el : 594383
41

Page 24
(Iso II (TU9sQū)
;+ ராய99ழupo9 (11 gặRolfUg9|91 (Nortolfo ĢĞgÎfngig [[[$$ųU91] ©~ -qī£IĘ199$ (gif@ 白劑—(9ஐேபபிgேடு ggコgコĻ9$3).JQ9GIÐ ழ9பிய01rெeழĢĒTU9ņ1968 Lýf(0ạ1983) || 6|(109ĪĢĒĢĒQoqo etc) Lýfloạ191093)f(9|?-IIGIglossijos Up0901199 U sg). ĐIỀUGI1헌] Ústoņ19109g)ftoh|199£109@1(9)ரா9ஐயா9ழ|119,91,9Įısı ŞTII009? occ9ĻIQI DQ9ơio11909ų9Ųıņ1991ços@>1909ų9!!1!!!?? L1091ĝosĻ9 UQ9Q95Íą9Țn@coo qu0097.1fm&soqı soğąjo11909ų9ȚıņúossoĢĒTILTlo
įsire Ioqifte
42

தர்மர் பா அமுதம்
சைவப்புலவர் திருமதி இரத்தினம் அப்புத்துரை
அமரர் கணபதிப்பிள்ளை தர்மலிங்கம் அந்தியேட்டித்தின வெளியீடு
2003-08-21.

Page 25

sede LDuuLib
ஆனைமுகன்
ஆனை முகத்தை உடையவர்
அறிவை நிறையத் தருபவர்
பானை வயிற்றுப் பிள்ளையார்
பணிந்து வணங்க நல்லவர்.
கருணை உள்ளம் படைத்தவர்
கணபதிப்பேர் உடையவர்
முருகனுக்கு அண்ணனாய்
முதன்மை பெற்ற பிள்ளையார்.
தொந்தி வயிற்றை உடையவர்
தொப்பை அப்பன் என்றனர்
தந்திரங்கள் செய்பவர்
தக்க பாடஞ் சொல்பவர்.
எலிதான் அவர்தம் வாகனம்
எங்கு மவர்தான் முன்னவர்
சலியா துருண்டைச் சாணியில்
மஞ்சள் மாவிற் குந்துவர்.
சித்தி புத்தி சக்தியை
சேர்த்துக் கருணை புரிபவர் பத்தி யுள்ள மனிதரைப்
பண்பறிந்து சேர்ப்பவர்
45

Page 26
కசிவமயம்
அன்புத் தெயப் வம் அய்பா
அப்பா எங்கள் தெய்வம்
அறத்தை வளர்த்த தெய்வம் தப்பா தெம்மை வளர்க்கத்
தவமே இருந்த தெய்வம்
எண்ணும் எழுத்துங் கற்க
என்றும் உதவும் அப்பா
கண்ணைப் போன்று எம்மை
காக்குந் தெய்வம் அப்பா
வீடும் நாடும் போற்ற
வேண்டும் உதவி செய்வார்
கூடும் நண்பர் சுற்றங்
கூடிப் போற்ற நிற்பார்.
சைவந் தமிழை நினைவார்
சாதி பேதம் பாரார்
மேன்மை ஒளிர நிற்பார்.
46

சிவமயம்
அம்மா எங்கள் தெய்வம்
அம்மா எங்கள் தெய்வம்
அன்பை வளர்குந் தெய்வம் இம்மா நிலத்தில் எம்மை
ஏற்றம் பெறச்செய் தெய்வம்
துன்பந் துயரம் பாரார்
தூக்கி அணைத்துச் செல்வார்
இன்ப மாகக் கதைகள்
இனிக்க இனிக்கச் சொல்வார்
பாப்பாப் பாட்டை அழகாய்ப்
பாடிப் பாடி நடிப்பார்
சாப்பாடுண்ணச் செய்வார்.
சத்துப் பாலும் தருவார்
என்னும் எழுத்துஞ் சொல்வார்
எழுதக் கற்றுத் தருவார்
கண்ணைப் போலக் காப்பார்
கருத்தில் எம்மை நினைவார்.
47

Page 27
s சிவமயம்
சந்திரன்
குளிர்ந்த நிலவைத் தரும்உனைக் குறுகிப் போகச் செய்ததார் வளர்ந்து வருவாய் விரைவினில் வளமார் ஒளியைத் தருகுவாய்
தேய்ந்து தேய்ந்து போகும்நீ திரும்ப வளர்ந்து வருகிறாய் தேய்ந்த போது வருந்தினேன் வளர்ந்த வேளை மகிழ்ந்தனன்
அல்லி காணச் சிரித்திடும் அலரி வாடி வதங்கிடும் மெல்லக் குமுதம் மலர்ந்திடும் மேகத் திரையுட் காணவே.
அழுத குழந்தை பார்த்துணை ஒளவை உருவைக் கண்டிடும் அமுதை விரும்பி உண்டிடும் அழுகை சிரிப்பாய் மாறிடும்.
48

寧2delupu Lib
சின்னஞ் சிறிய பாய்பா
சின்னச் சின்னக் குழந்தைப் பாப்பா சிறிய நல்ல சிவப்புப் பாப்பா அன்னம் போன்று நடையைப் போடும் அழகு ஒளிரும் அன்புப் பாப்பா.
தளர்ந்து தளர்ந்து விழுந்து எழும்பும் தங்கத் தளிராம் தவமே பாப்பா வளர்ந்து பூத்துக் குலுங்கும் போதில் அழகைச் சுவைக்க வைக்கும் பாப்பா.
குழுகுழென்று சிரிக்கும் பாப்பா குழிவிழுந்த சொக்குப் பாப்பா அழுது விழுந்த போதிற் கூட அழகைச் சுவைக்க வைக்கும் பாப்பா.
கையை அசைத்துக் கண்ணை உருட்டிக் கருத்தைக் கவர்ந்து களிக்கச் செய்யும் பையத் தவழ்ந்து பக்கம் வந்து பற்றி எழுந்து நிற்கும் பாப்பா.
ஆசையோடு படிக்கும் போது
கூடிச் சிரித்துக் குலுங்கி மகிழும்
கொள்ளை அழகு குலவும் பாப்பா.
49

Page 28
S.-
சிங்கமும் முயலும்
பெரிய காட்டிற் சிங்க மொன்று அரச னாக இருந்தது. அரிய உயிரைக் கொன்று தின்று ஆடிப் பாடித் திரிந்தது.
அங்கு வாழ்ந்த உயிரி னங்கள் அனைத்துங் கூடிச் சினந்தன தங்கள் துன்பஞ் சொல்லி மேலும்
தினமும் ஒன்று சென்று உணவாந் திரவும் தேர்ந்து கொண்டன. மனமும் ஒன்றி அனைத்துஞ் சென்று மன்ன லுக்குச் சொல்லின.
ஒத்துக் கொண்ட முறையில் முயலுக் கொதுக்கப்பட்ட நாளினில் மெத்தப் பதுங்கிப் பதுங்கி முயலும் மெல்ல மெல்லச் சென்றது.
கோபங் கொண்ட சிங்கம் முயலார் கொடுத்த தகவலுடனாகி பாவம் கிணற்று நிழலை எதிர்த்து பாய்ந்து உயிரை மாய்த்தது.
5 ()

望一 சிவமயம்
சிங்கமும் நான்கு எருதுகளும்
எருது நான்கு ஒன்று கூடி
ஒற்றுமையாய் மேய்ந்தன பருத்து வளர்ந்த உடலினோடு பலம்மிகுத்துத் திரிந்தன.
கூட்ட மாகச் செல்லும் எருதைச் சிங்கமொன்று கண்டது வேட்டை ஆடி உண்ண எண்ணி
சிங்கம் செய்த குள்ளத்தாலே சினத்தோடெருது பிரிந்தன பொங்கும் உவகையோடு சிங்கம்
புசித்துப் பசியைத் தனித்தது.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஒருமை நீங்கில் தாழ்வுதான்
என்று தேர்ந்து ஒன்று சேர்ந்து இனிதாய் என்றும் வாழ்வமே.
51

Page 29
s é6LDI Líb
காகமும் பாம்பும்
காகம் முட்டை இட்டுச் செல்லக்
கண்ட பாம்பு வந்தது. வேமாகக் குடித்துவிட்டு
விரைந்து புற்றுட் சென்றது.
கண்ட காகம் கோபத்தோடு
காகா என்றே பறந்தது குண்டுச் சிறுமி குளிக்க நகையைக்
குளத்தின் கரையில் வைத்தனள்
காகம் நகையைத் தூக்கிச் சென்று
கறையான் புற்றுட் போட்டது சோகத்தோடு துரத்தி வந்தோர்
தோண்டிப் பாம்பைக் கண்டனர்.
சினந்த பாம்பைக் கொன்று நகையைச் சிறுமி கையிற் கொடுத்தனர் மனம் நிறைந்து மகிழ்ந்த காகம் மரத்தின் கிளையில் இருந்தது.
52

@一 சிவமயம்
வட்ட வடிவப் பலுபான்
வட்ட வடிவப்பலூன்கள்
வண்ண நிறத்துப் பலூன்கள்
எட்டி எட்டிப் போகும்
எழுந்து வானிற் பறக்கும்.
பஞ்ச வர்ணப் பலூன்கள்
பலநிறத்துப் பலூன்கள் பிஞ்சுக் கையாற் பாப்பா
பிடிக்க முயலும் பலூன்கள்.
காற்று நிறைந்த போதில்
கணக்கப் பெருத்து நிற்கும்
காற்று இல்லை யானால்
கதியிழந்து போகும்.
கவனம் வேண்டுமாயின்
காற்று உள்ளே வேண்டும் கவனத்திதனை வைப்பாய்
கருத்தில் இதனைக் கொள்வாய்.

Page 30
2&l6)յլoԱյլô
கடிகாரம்
நேரங் காட்டி நிற்பது நினைவை மீட்டுத் தருவது ஆர மணியை அடிப்பது
அறிவை வளர வைப்பது.
கவலை இன்றிக் கருத்தொடு
கடமை செய்யும் முறைமையைத் தவறாதேநீ பார்த்திடு
தயக்கம் இன்றிச் செய்திடு.
விட்டுச் சுவரில் இருப்பது விரும்பும் இளைஞர் யுவதிகள் காட்டுங் கையின் அழகினை கணிப்பாய் உயர்த்தி நிற்பது.
கடிகாரத்தின் கடமையைக்
கவனமாய்நீ கண்டிடு கடிதாய் நீயும் செயல்களைக்
கருத்தாய் நிறைக்கக் கற்றிடு.
S4

s &l6)յtքայլք
சின்ன உருண்டைப் பந்து
சின்ன உருண்டைப் பந்துதான் சீராய் உருளும் பந்துதான் வண்ண நிறத்துப் பந்துதான் வடிவமைந்த பந்துதான்
விசி எறிந்து ஆடலாம் விரைவாய் உருட்டி ஒடலாம் தூசி படிந்த தாமெனில் துடைத்துத் துடைத்தே ஆடலாம்.
பந்தோடுடனாய் ஓடவே பப்பி சேர்ந்து வந்திடும் பந்தைக் கெளவித் தந்திடும் பக்கம் வந்து நக்கிடும்.
அடித்துத் தொங்க வைக்கலாம் அடித்தடித்துப் போகலாம்
துடிக்கும் மனதை நிறுத்தியே துணிவைப் பயின்று கொள்ளலாம்.
55

Page 31
á6.JLDujLö
அன்பான பாட்டி
பாட்டி கதைகள் சொல்லுவாள்
பாலர்க்குணவு ஊட்டுவாள்
வீட்டிலுள்ளோர்க்குதவிகள்
விரும்பி விரும்பிச் செய்குவாள்
வீட்டைப் பெருக்கி மகிழுவாள்
விறகு பொறுக்கிப் போடுவாள்
கூட்டுக் கறியுமாக்குவாள்
குளித்துக் கும்பிட்டுண்ணுவாள்.
புல்லுப் பிடுங்கிப் போடுவாள்
புனிதம் போற்றச் செய்குவாள் சொல்லுஞ் சுத்தம் பேணியே
சுடருமின்பம் காணுவாள்.
பல்லுப் போன பாட்டிதான்
பண்பாய்ச் செய்தி சொல்லுவாள்
அல்லும் பகலும் அன்பாக
அணைத்தெம்மோடு மகிழுவாள்.
56

2é6 ou Jð
திருக்குறளெனும் அறநூல்
திருக்குறளைநாம் படித்திடுவோம் தினமொரு குறளைத் தேர்ந்திடுவோம் விரும்பியே அதனை மனத்திருத்தி வேண்டிய போதிற் சொல்லிடுவோம்.
அறநெறி பற்றி அதுசொல்லும்
அதனால் அறநூல் என்றாகும்
புறநா னுாறு அறமென்றே புனிதமாய்க் குறளைப் போற்றியதே.
பொதுமறை என்று திருக்குறளைப் புவனியிலுள்ளோர் போற்றுவரே
எதுவுமங்குண்டென்றெல்லோரும் என்றுமே உயர்த்திப் பேசுவரே.
வள்ளுவர் தந்த குறளினைநாம் வாழ்வினிற் கொண்டு வளர்ந்திடுவோம் தெள்ளுதமிழ்ப்பாத் தித்திப்பைத் தேனெனச் சுவைத்து மகிழ்ந்திடுவோம்.
57

Page 32
சிவமயம்
வீரசுதந்திரம் வேண்டியவர்
எட்டய புரத்தினில் தோன்றியவர் இந்திய சுதந்திரம் வேண்டியவர் கொட்டிய சுதந்திரக் கவிதைகளின் குறிப்பினை விடுதலை என்றிடலாம்.
சுதந்திர உணர்வின தவருணர்வாம் சுதந்திர நினைவதே அவர்நினைவாம் சுதந்திர மேயவர் மூச்செனலாம் சுதந்திர மேயவர் உருவெனலாம்.
வீரசுதந்திரம் வேண்டி நின்றார் வீணருழைப்பினை வெறுத்துவந்தார் தீரமிகுந்ததாம் திறங்காட்டித் தேர்ந்ததோர் வாழ்வினை விரும்புகின்றார்.
பாரத மாதா பெற்றெடுத்த பாரதியேயவர் கண்டுகொண்டோம் பூரண ஞானியர் பொலிவுடனே போந்தொளிர் நாடென அறிந்துகொண்டோம்.
58

s ásjLouJLö;
நாவலரைப் போற்றுவோம்
நல்லை நகரிற் பிறந்தனையே
நாவலரென்று உயர்ந்தனையே கல்வி வளர்க்க நினைந்தனையே
கல்விச் சாலை நிறுவினையே
அச்சுக்கூடம் அமைத்தனையே
அங்கே தமிழ்நூல் பதித்தனையே
பச்சைப் பாலர் படித்தற்காய்ப்
பாலபாடம் எழுதினையே.
புனித சைவ வினாவிடையை புராண வசனப் பதிப்புகளை இனிதாம் வசனத் தெழுதினையே எவரும் போற்றி நின்றனரே.
ஆறுமுகநாவலர்வழியில் அமைதி காணப் பயின்றிடுவோம் வேறு வழியே இலையன்றோ விருப்போ டிறையை வணங்கிடுவொம்
59

Page 33
சிவமயம்
வெள்ளை நிறத்துப் பசு
வெள்ளை நிறத்துப் பசுவது
வேண்டும் பாலைத் தருவது மெள்ளக் கன்றை அனைத்தது
மெதுவாய்ப் பாலைக் கொடுத்தது.
சாது வான பசுவினம்
சாந்தம் பேணும் பசுவினம்
சூது வது இன்றியே
சுவைசேர் பாலைத் தருவது.
புல்லுந் தவிடும் உண்டிடும்
போற்றும் பாலைத் தந்திடும் அல்லும் பகலும் கன்றினை
அரவணைத்துக் காத்திடும்
சத்தி நிறைந்த உணவெனத்
தக்க பாலைத் தந்திடும் நித்தம் இறைவன் அபிஷேகம்
நிறைவு காண உதவிடும்.
60

s afe LDuuLib
அறிவை வளர்ப்பவர் அப்பா
அன்பாய் அறிவை வளர்ப்பவர் அப்பா
அகிலம் போற்றச் செய்பவர் அப்பா துன்பமிலதாய்ச் சுவைத்திடும் வாழ்வை
சுடரச் செய்பவர் எங்கள் அப்பா
அப்பா சொல்லே மந்திரம் என்பர்
ஒளவை சொன்ன அறவுரை கேட்போம்
ஒப்பில்லாத உத்தமர் அப்பா
உணர்ந்தோம் உணர்ந்தோம் உயர்வை உணர்ந்தோம்
கனிவாய்க் கல்வி கற்றிடச் செய்வார்
களங்கமிலாது கருதிட வைப்பார்
இனிதாய் நலங்கள் இயைந்திட வேண்டி என்றும் இறையை ஏத்தியும் நிற்பார்.
சான்றோனாக்கல் தந்தைகடனெனப்
புறநானூறு பொய்யில துரைக்கும்
தேன்போல் மொழியைத் தேர்ந்தனம் தெளிந்தோம்
செய்தி மகிழ்வைத் தெளிவினைத் தந்தது.
61

Page 34
2. as ILDub
சாவை எண்ணா வாழை
நல்ல கதலி வாழையாய்
நாங்கள் வைத்த வாழைதான்
கொல்லை தன்னில் நின்றுமே
கொழுத்து வளர்ந்த வாழைதான்
பொத்தி ஒன்று போட்டது.
புதிய பயனுங் கண்டனம்
நித்தம் நித்தம் நீரினை
நிறைய விட்டு வளர்த்தனம்
ஆறு மாதஞ் சென்றதும்
அறுத்தோம் வாழைக் குலையினை
மீத மாக நின்றது
மிகவுஞ் சின்னக் குட்டிதான்
காலப் போக்கிற் காய்தனைக்
கருத்திலாதளித்தது
சால வளர்ந்த குட்டியும்
சாவை எண்ணி டாமலே
தந்தை கெட்டுப் போயினர்
தருமஞ் செய்ததாலென மைந்தரிகை மறுப்பரோ
மனதிற் கொண்டு வாழுவோம்.
62

s dojLdub
விரைந்து செல்லும் பட்டம்
விரைந்தெழுந்து மேலே செல்லும்
விளக்கமில்லாப் பட்டமே
இரைந்து கொண்டு எல்லாம் தெரிந்த
எசமான் போலே செல்கிறாய்.
தம்பி நூலை விட்டுக் கொள்ளத்
தயக்க மின்றிச் செல்கிறாய்
தம்பி தரித்து நூலை இழுத்தால்
தலையைக் குத்தி வருகிறாய்
கள்ள மில்லாத் தம்பி நின்மீ
தன்பு மிகவுங் கொண்டதால் மெள்ள மெள்ள உன்விருப்பை
நிறைக்க நூலை விடுகிறார்.
விண்முகட்டை முட்டிக் கொள்ள
விரைந்து செல்லும் பட்டமே
விண்ணில் ஒட்டை போட்டு விணே
வினையைத் தேடிக் கொள்ளாதே.

Page 35
ésJupulub
பள்ளிக்கூடம் செல்லுவோம்
பாலர் நாங்கள் ஒன்று சேர்ந்து
பாடம் நன்கு கற்றுத் தேறி
பண்போடென்றும் வாழுவோம்.
எண்ணும் எழுத்தும் என்றும் போற்றி
ஏற்றம் பெற்று வாழுவோம்
கண்ணுங் கருத்துங் கல்வி மேலாம்
கவனம் போற்றச் செய்குவோம்.
வாய்மை நேர்மை ஒழுக்கம் போற்றி வணங்கி அடங்கி வாழுவோம்
தாயைக் குருவை நாளும் வணங்கி
தகுந்த நிலையைக் காணுவோம்
ஒழுக்கம் உயர்வு தந்து நிற்கும்
உயர்வு தருவ ததுவேதான்
அழுக்கை நீக்கித் தெளிந்த மனத்தோ
டணைந்தொன்றாகி வாழலாம்.
64

s சிவமயம்
மலர்த்தோட்டம்
பலரும் விரும்பும் நிறங்களில்
பார்க்க அழகு தருவதாய்
மலரும் அரிய பூக்களை
மகிழ்ந்து நெகிழ்ந்து பார்க்கலாம்.
எவரும் விரும்பிப் பறித்திட
எண்ணில் தொகையே நிறைந்திட
கவரும் வண்ண நிறங்களில்
காட்சி தந்து நிற்குமே.
முல்லை சிவந்தி மல்லிகை
மூக்கைத் துளைக்கும் மணத்தினை எல்லை இன்றித் தந்திடும்
எங்கள் புதுப்பூமலர்களே
நீரில் நிமிர்ந்து நிற்பவை
நீலம் ஆம்பல் தாமரை
நேரிற் பார்த்து மகிழலாம்.
நினைவாய் வந்து பார்க்கலாம்.
கொம்பில் மலருங் கொன்றையை
குளிர்ந்த பன்னிர் நொச்சியை செம்பருத்திச் செடியினை
சிறப்பாய் மலரக் காணலாம்.
65

Page 36
சிவமயம்
வண்ணத்துப் பூச்சி
வண்ண வண்ணப் பூச்சி
வண்ணத்துப் பூச்சி
கண்ணைக் கவரும் நிறத்தில்
காட்சி தரும் பூச்சி.
பஞ்ச வர்ணப் பூச்சி
பகட்டான பூச்சி
பிஞ்சுக் கையாற் பிடிக்க
பிடிக்க முடியாப் பூச்சி
பொட்டுப் பொட்டாய் நிறங்கள்
புள்ளியாக உண்டு
விட்டு விட்டுப் பூசி
விட்டனரோ அறியேன்.
சோலைப் பூவில் தேனை
சொகுசாய்க் குடிக்கும் பூச்சி வேலை இல்லை அதனால்
விரைந்து பறக்கும் பூச்சி.
66

2சிவமயம்
புறாக்களின் கூரிய புத்தி
மண்ணை உழுது விதைத்து வயலை தண்ணிர் ஊற்றி வளர்த்தவன் கண்ணை இமைகள் காத்தல் போன்று கருதிப் பயிரைக் காத்தனன்.
வந்து வந்து பார்த்த வேளை வளர்ந்து வந்த பயிர்களே தந்து நின்ற கதிரைக் கண்டு தனது மனத்துள் மகிழ்ந்தனன்
புறாவின் கூட்டம் பொலிந்த கதிரைக் கொத்திக் கொத்தித் தின்றது விரைந்த உழவன் சினந்து துரத்தி வெறுத்து வலையை விரித்தனன்.
பற்றை மறைவில் பதுங்கி உழவன் பார்த்துப் பார்த்து இருந்தனன் சற்று நேரத் தங்கு புறாக்கள் வலையிற் 'சிக்கித் தவித்தன.
மகிழ்ந்த உழவன் ஓடி வந்தான் மனது நொந்த புறாக்களோ நினைந்து வலையோ டெழுந்தே உழவன் நினைவைப் பழித்துப் பறந்தன.
67

Page 37
2. சிவமயம்
வானொலி
உலகம் போற்றும் வானொலி
உண்மை கூறும் வானொலி
பலருங் கேட்டு மகிழலாம்
பக்திப் பாட்டுங் கேட்கலாம்.
உலகில் நடப்ப வற்றினை
உடனே உடனே அறியலாம்
இலகுவாகச் செய்தியை
இருந்த இடத்திற் கேட்கலாம்
கோயில் குளத்துச் செய்தியை
குறித்த விழவின் சரிதையை
நோயில் வாழ்வு அறிவினை
நொடியிற் கேட்டுத் தொடரலாம்.
பாட்டுங் கதையும் பரீட்சைகள்
பண்ணிக் கண்ட முடிபுகள் கேட்டறிந்து சுவைக்கலாம்.
கிரமமாக அறியலாம்.
68


Page 38

2. சிவமயம்
கலையாத கல்வியும் குறையாத வயதும் ஒரு
கபடு வாராத நட்பும் கன்றாத வளமையும், குன்றாத இளமையும்
கழுபிணி இலாத உடலும் சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும் தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும் தொலையாத நிதியமும், கோணாத கோலும் ஒரு
துன்பமில்லாத வாழ்வும் துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப்பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய் அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவுரின் வாழ்வே அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே.
- அபிராமிப்பதிகம்

Page 39
TTTTTTTTTTTTTTTTTT * I I * (
“
嵩,
Ħwieni
■ -
 
 

#,)