கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கந்தபுராண கவிமலர்கள்

Page 1


Page 2

|(
மேத
தயவானை ச
| Ħ Ë *
|s: s.
闇
666

Page 3

கந்தபுராண கவிமலர்கள்
இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சு
02/06/2003 GúBlögi 06/06/2003 Qugor
உலக இந்து மகாநாரு வைபவத்தின்
ஞாபகார்த்த வெளியீடு: மாவையாதீனம்
சுபானு ஞ வைகாசி மீ உகூம் நாள் . விசாகம் - குருவாரம் (12-06-2003)

Page 4

- கந்தபுராண கவிமலர்கள் -
6குகமயம்
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் மாவையாதீனம் ஓர் சமர்ப்பணம்
“எண்ணரிய பிறவிதனில் மானுடப்பிறவிதான் யாதிலும் அரிது அரிது காண்” - எனப் புராண இதிகாஸங்களும், வேதாகம நூல்களும் இருவிகளும், பக்திமான்களும் உலகிற்கு அறியத்தந்து, மானுடர் யாது செல்தல் வேண்டுமென்று கூறும் போது சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற துறைகளிற் சார்ந்து, இறைவனது திருவுருவைக் கண்டு கசிந்துருகிப்பாடி, பூசை ஆராதனைகளில் ஈடுபட்டு முக்தியின்பத்தையே நாடுங்கள் என அறிவுறுத்தியுள்ளனர். அவ்வழியில் வந்தோரது சான்றோர் களை புராண இதிகாசங்கள் வாயிலாக நாமறியமுடியும். இறைவனது திருவருட் சக்திகளால் நாமுய்ய வேண்டுமாயின் சமுத்திரக்கரை, நதிக்கரை, வனம், ஆலயம் ஆதியாம் இடங்களில் ஆற்றும் ஆராதனைகள் துணைதரும்.
இறைவனுக்கு பக்தியோடு பத்ரம், புஷ்பம், மலர், மாலை, பழம், நீர் வழங்கி, ஆத்ம சமர்ப்பணம் செய்து, ஆராதனைகள் ஆற்றி உய்வடையலாமெனவும் சகல சாஸ்திரங்களும் அறியத்தருகின்றன.
"பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யாமே பக்த்யா பிரயச்சதி, ததஹம் பக்த்யுபஹற்ருத மிச்சாமி பிரயதாத்மனஹ”
(பகவத் கீதை) கண்ணுண்டு காணக் கருத்துண்டு நோக்கக் கசிந்துருகிப் பண்ணுண்டு பாடச் செவியுண்டு கேட்கப் பல்பச்சிலையால் எண்ணுண்டு சாத்த எதிர்நிற்க ஈசன் இருக்கையிலே மண்ணுண்டு போகுதையோ கெடுவீர் இந்த மானிடமே”
(பட்டினத்தடிகள்)
"வேதம் நாதம் கீதம் நிருத்தியம் லயம் ஜதீஸ்வரம் என்பன தூய இசையோடு சங்கமமாகி ஆலயங்களில் செயற்பட்டால் இறைவனது அருட்காட்சியை நாம் கண்டு கொள்ளலாம்.
1

Page 5
- கந்தபுராண கவிமலர்கள் - (இசைச் சக்கரவர்த்தி வீரமணி ஐயர் அவர்களது மனதில் பதிந்திருக்கும் சிந்தனை. இவை தியாகராஜசுவாமிகளது மனதிலும் பதிந்தவை) எனவேதான் ஆன்மாவை லயப்படுத்தும் ஸ்தலங்களாக ஆலயங்கள் எங்கும் எழுந்தன.
எங்கெல்லாம் ஆலயங்கள் காணப்படுகின்றதோ அங்கெல்லாம் மனிதர்கள் தாமாகவே முன்வந்து ஆலயங்களைச் செப்பனிட்டு, அவ்வாலய ஜீவ சக்திகள் சுடர்விட்டுப் பிரகாசிக்க ஆவன செய்யவேண்டுவது அவசியம். இது மேலான சிவ தர்மமுமாகும்.
கந்தசுவாமியரது பூரண அணுக்கிரஹத்தைப் பெற அருணகிரிநாத சுவாமிகள்.
“அருணதள பாதபத்ம மனுதினமுமே துதிக்க அரிய தமிழ் தானளித்த மயில்வீரா” என்றும்
"மகபதியாகி மகவும் வலாரி மகிழ்கழிசுட்டும் வடிவோனே
வனமுறை வேடனருளிய பூசை மகிழ் கதிர்காமமுடையோனே" என்றும் அகமுருகிப்பாடிப்பணிந்து அருள் பெற்றது போன்று நாமனைவரும் திருக்கோயில்களில் செந்தமிழ் பாக்களாலும் திருப்புகழ் கீதங்களாலும் பாடி மகிழ்ந்து அவனருள் பெறுவோமாக.
வீரவாகுதேவர் முருகப்பெருமானிடம் வேண்டிய வரம் போல நாமும் பலவரங்களைப் பெற்றுய்வோமாக.
"கோல நீடிய நீதிபதி வாழ்க்கையுங் குறியேன் மேலையிந்திர னரசினைக் கனவிலும் வெஃகேன் மாலயன் பெறு பதத்தையே பொருளென மதியேன் சாலநின் பதத் தன்பையே வேண்டுவன் றமியேன்.
(கந்தபுராணம்) மாவையாதீனம் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் மூலமாக யாவரும் தெய்வீக சிந்தனையோடு வாழும் முறைகட்கு பல வழிகளாலும் ஆலோசனைகள் தந்து ஆற்றுப்படுத்தி வருகிறது. நித்யம் முருகப் பெருமானைச் சிந்தித்து மனதை தூய்மையாக்கி, அறநெறிகளில் சிந்தனைகளை ஈர்த்து,
2

- கந்தபுராண கவிமலர்கள் -
மனிதர்களிலேதெய்வத்தை உணர்த்தும் தன்மையையும், தெய்வீகமாக வாழ்ந்து இறையருளைப் பெற்று இனிதே வாழவும் கந்தபுராணப்பாக்களிலிருந்து சிலதை தெரிந்தெடுத்து சிலபக்தர்களது கரங்களில் கந்தபுராண கவிமலர்களாகச் சமர்ப்பிக்கின்றேன். தினமும் வசதியுள்ள நேரங்களில் இதனைப் பராயணங்செய்து கருத்துகளையும் ஆராய்ந்து முருகப்பெருமானைச் சிந்தித்து எம்பெருமானது திருவருட்துணைகட்கு ஆளாகுமாறு அழைக்கின்றேன்.
இம்மலரின் அனுபந்தமாக வேல் பற்றியும் பிதிர்யஞ்ஞம் பற்றியும் அறியத்தந்துள்ளேன். சிவதர்மங்களை ஊக்குவித்து சிவமயமாகவும் சிவதொண்டனுமாகவும் அகில இலங்கை சைமகாசபை, அகில இலங்கை சைவானுஷ்டானச் சபை போன்ற ஸ்தாபனங்களை வளர்த்து சைவகலாசாரபண்பாடுகளை வளர்த்தெடுத்த மகான் காரைநகர் தியாகராசா அவர்களது மைந்தன், அமைச்சர் பூgமகேஸ்வரன் அவர்கள் இந்துசமய கலாசார அலுவல்கள் அமைச்சு மூலம் மிகவும் பயன்கொண்ட இரண்டாவது உலக இந்துமாநாட்டை மே 2ம் திகதியிலிருந்து மே 6ம் திகதி வரை வெற்றிகரமாக நடாத்தியமையை நினைந்தும் நாடெங்கிலும் எழிச்சிவிழா மூலம் சிவசிந்தனைகளை ஆற்றுப்படுத்திய திறமையை நினைந்தும், அதன் ஞாபகார்த்தமாக இச்சிறு கந்தபுராண கவிமலர்நூல் மாவையாதீனத்தில் வெளியீடு செய்யப்படுகிறது.
அனைவரும் இதனைப் பெற்று தெய்வீக உணர்வுகொண்டு
முருகப்பெருமானது திருவருள்ளுக்காளாகுக.
மஹாராஜழரீ சு.து. ஷண்முகநாதக் குருக்கள் மாவையாதீனகர்த்தா ~ பிரதம குரு

Page 6
- கந்தபுராண கவிமலர்கள் -
கந்தபுராணக் கவிமலர்கள்
திருச்சிற்றம்பலம்
திகட சக்கர செம்முக மைந்துளான் சகட சக்கரத் தாமரை நாயகன் அகட சக்கர வின் மணியாவுறை விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்.
உச்சியின் மகுட மின்ன வொளிர்தர நுதலினோடு வச்சிர மருப்பினொற்றை மணிகொள் கிம்புரிவயங்க மெய்ச் செவிக் கவரி தூங்க வேழமா முகங் கொண்டுற்ற கச்சியின் விகட சக்ர கணபதிக் கன்பு செய்வாம்
மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணைபோற்றி ஏவருந் துதிக்க நின்ற ஈராறுதோள் போற்றி காஞ்சி மாவடி வைகுஞ் செவ்வேள் மலரடி போற்றி யன்னான் சேவலும் மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி.
இந்திர ராகிப் பார்மே லின்பமுற் றினிது மேவிச் சிந்தையி னிணைந்த முற்றிச் சிவகதி யதனிற் சேர்வர் அந்தமி லவுணர் தங்க ளடல் கெட முனிந்த செவ்வேற் கந்தவேள் புராணந் தன்னைக் காதலித் தோதுவோரே.
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான்மறை யறங்களோங்க நற்றவம் வேள்விமல்க மேன்னை கொள் சைவநிதி விளங்குக வுலக மெல்லாம்.
totalog, à , திருச்சிற்றம்பலம்
斜

- கந்தபுராண கவிமலர்கள் -
10.
எமது கடமைகள்
தருமமே போற்றிடி னன்பு சார்ந்திடும் அருளெனுங் குழவியு மனையுமாங்கவை வருவழித் தவமெனு மாட்சி யெயது மேற் றெருளுறு மவ்வுயிர் சிவனைச் சேருமால் ஆதலின் மைந்தர்கா ளறத்தை யாற்றுதிர் தீதினை விலக்குதிர் சிவனை யுன்னியே மாதவம் புரிகுதிர் மற்ற தன்றியே ஏதுள தொருசெய வியற்றத் தக்கதே
காசிபனுபதேசம்.
தீங்குவந் தடையுமாறு நன்மைதான் சேருமாலுந் தாங்கள்செய் வினையினாலே தத்தமக் காயவல்லால் ஆங்கவை பிறரால்வாரா வமுதாஞ் சிரண்டினுக்கும் ஓங்கிய சுவையின் பேத முதவினார் சிலருமுண்டோ.
இன்பம் வந்தடைந்தகாலை யினிதென மகிழ்ச்சி செய்தார் துன்பம துற்றபோதுந் துண்ணெனத் துளங்கிச் சோரார் இன்பமுந் துன்பந்தானு மிவ்வுடற் கியைந்த வென்றே முன்புறு தொடர்பை யோர்வார் முழுவது முணர்ந்த நீரார்
இந்திரன் கரந்தறைபடலம்
காடு போந்தன னிந்திரன் பொன்னகள் கரிந்து பாடு சேர்ந்தது சயந்தனுஞ் சிறையிடைப்பட்டா னாகில் விண்பதச் செய்கை யீதெம் பிரானல்கும் வீட தேயலாற் றுன்பறு மாக்கம் வேறுண்டோ
இறுதியு முதலு மில்லா விப்பெரு வடிவந்தன்னைக் கறைவிட முறழுஞ் சூரன் கண்டு லிம் மிதத்தி னிற்ப * அறிவரு முணர்த் தேற்றா வாறுமா முகத்து வள்ளல் சிறிது நல்லுணர்ச்சி நல்க வினையன செப்பலுற்றான்
...'...' .

Page 7
- கந்தபுராண கவிமலர்கள் -
11.
12.
13.
14.
15.
16.
சூழுதல் வேண்டுந் தாள்க டொழுதிடல் வேண்டுமங்கை தாழுதல் வேண்டுஞ் சென்னி துதித்திடல் வேண்டுந் தானு வாழுதல் வேண்டும் தீமை யகன்று நாணிவற் காளாகி வாழுதல் வேண்டு நெஞ்சந் தடுத்தது மான மொன்றே.
தீயவை புரிந்தா ரேனுங் குமரவேடிருமுன் னுற்றார் றுயவராகி மேலைத் தொல்கதி யடைவரென்கை ஆயவும் வேண்டுங் கொல்லோ வடுசமர்ரிந்நாட் செய்த மாயையின் மகனு மன்றோ வரம்பிலா வருள் பெற்றுய்ந்தான்.
சரவணப்பொய்கையில் எழுந்தருளியது
அருவமு முருவுமாகி யநாதியாய்ப் பலவா யொன்றாய்ப் பிரம்மமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகக் கருணைகூர் முகங்களாறுங் கரங்கள் பன்னிரண்டுங்கொண்டே ஒருதிருமுருகன் வந்தாங்கு உதித்தன னுலகமுய்ய.
மறைகளின் முடிவால் வாக்கான் மனத்தினா லளக்கொணாமல் நிறைவுடன் யாண்டுமாகி நின்றிடு நிமலமுர்த்தி அறுமுக வுருவாய்த் தோன்றி அருளொடு சரவணத்தின் வெறிகமழ் கமலப் போதின் வீற்றிருந் தருளினானே.
சிவபெருமான் உமாதேவியாருக்குக் கூறிய முருகன்
திருநாம விளக்கம்
ஈங்கன நமது கண்ணி னெய்திய குமரன் கங்கை தாங்கினள் கொண்டு சென்று சரவணத் திடுதலாலே காங்கெய னெனப்பேர் பெற்றான் காமர்யூத் சரவணத்தில் பாங்கரில் வருதலாலே சரவணபவ னென்றானான்.
தாயெனவாரல் போந்து தனங்கொள் பாலருந்தலாலே ஏயதோர் கார்த்திகேயன் என்றொரு தொல்பேர் பெற்றான் சேயவன் வடிவமாறுந் திரட்டிநீ யொன்றாய்ச் செய்தாய் ஆயதனாலே கந்தனாமெனு நாமம் பெற்றான்.
6

- கந்தபுராண கவிமலர்கள் -
17.
18.
19.
20.
பன்னிரு திருக்கரங்களின் விசேஷ அமைவு இந்திரகுமாரன் கனவில் வந்த தோற்றம்
வீறுகேதனம் வச்சிர மங்குசம் விசிக மாறிலாத வேல் அபயமே வலமிடம் வரதம் ஏறுபங்கய மணிமழுத் தண்டு வில்லிசைந்த ஆறிரண்டு கை யறுமுகங் கொண்டு வேளடைந்தான்.
வள்ளிநாயகி முன் தோன்றிய திருக்கோலம்
முந்நான்கு தோளு முகங்களோர் முவிரண்டுங் கொன்னார் வைவேலுங் குலிசமு மேனைப் படையும் பொன்னார் மணி மயிலுமாகப் புனக்குறவர் மின்னாள் கண் காண வெளி நின்றனன் விறலோன்
முதன் முதல் சூரபண்மன் கண்ட தோற்றம் முண்டக மலர்ந்த தன்ன முவிரு முகமுங் கண்ணுங் குண்டல நிரையுஞ் செம்பொன் மவுலியுங் கோல மார்பும் எண்டரு கர மீராறு மிலங்கெழிற் படைகள் யாவும் தண்டையுஞ் சிலம்பு மார்க்குஞ் சரணமுந் தெரியக் கண்டான். முருகப் பெருமான் திருவருட் பெருமைகள் வீரவாகு தேவர் சயந்தனுக்குக் கூறியத
தன்னிகரின்றி மேலாய்த் தற்பர வொளியா யாரும் உன்னரும் பரமாய் நின்ற வொருவனே முகங்க ளாறும் பன்னிரு புயமுங் கொண்டு பாலகன் போன்று கந்தன் என்னுமோர் பெயரு மெய்தி யாவருங் காண வந்தான்
வீரவாகு தேவர் சூரன் தலைநகள் செல்லும் போது
21.
போதநாயகன் பரம்பொரு ணாயகன் பொருவில் வேதநாயகன் சிவனரு ணாயகன் விண்ணோர்க்கு
ஆதிநாயகன் ஆறுமுக நாயக னமலச் சோதிநாயக னன்றியார் சூரனைத் தொலைப்பார்.
7

Page 8
- கந்தபுராண கவிமலர்கள் -
22.
23.
24.
25.
26.
27.
சயந்தன் நினைத்த தொழுதமை
அறுமுக முடையதோ ராதி நாயகன் இறைதரு முலகெலா நீங்க லின்றியே உறைவதுங் கருணைசெய் திறனு முன்னியே மறைமுறை யவனடி வழுத்தி வைகினான்.
சூரபண்மன் வியந்த கூறியவை
கோலமா மஞ்ஞை தன்னிற் குலவிய குமரன் றன்னைப் பாலனென் றிருந்தேன் னந்நாட் பரிசிவை யுணர்ந்திலேன் யான் மாலயன்றனக்கு மேனை வானவர் தமக்கும் யார்க்கும் முலகாரணமாய் நின்ற முர்த்தியிம் முர்த்தியன்றோ.
ஆயிர கோடி காம ரழகெலாந் திரண் டொன்றாகி மேயின வெனினுஞ் செவ்வேள் விமலமாஞ் சரணந் தன்னிற் றுாயநல் லெழிலுக் காற்றா தென்றிடி னினைய தொல்லோன் மாயிரு வடிவிற் கெல்லா முவமையார் வகுக்க வல்லார்.
கச்சியப்ப சிவாச்சார்ய சுவாமிகள் கடறியத
ஔரிலான் குணங் குறியிலான் செயலிலா னுரைக்கும் பேரிலா னொரு முன்னிலான் பின்னிலான் பிறிதோர் சாரிலான் வரல் போக்கிலான் மேலிலான் றனக்கு நேரிலா னுயிர்க் கடவுளா யென்னுளே நின்றான்.
விரிஞ்சன்மா றேவராலும் வெலற்கரும் விறலோனாகிப் பெருஞ்சுரர் பதமும் வேத வொழுக்கமும் பிறவுமாற்றி யருஞ்சிறை யவர்க்குச் செய்த வவுணர் கோனாவி கொள்வான் பரஞ்சுட ருருவாய் வந்த குமரனைப் பணிதல் செய்வாம்.
நாரண னென்னுந் தேவுநான் முகத்தவனு முக்கட் பூரணன்றானு மாகிப் புவி படைத் தளித்து மாற்றி யாரண முடிவுந் தேறா வநாதியா யுயிர்கட் கெல்லாங் காரண னாய மேலோன் கழலிணை கருத்துள் வைப்பாம்.
8

- கந்தபுராண கவிமலர்கள் -
28.
29.
30.
31.
32.
சிவபெருமான் உமையம்மைக்குக் கூறியத
ஆதலினமது சக்தி யறு முக னவனும் யாமும் பேதக மன்றா னம்போற் பிரிவிலன் யாண்டு நின்றான் ஏதமில் குழவி போல்வான் யாவையு முணர்ந்தான் சீரும் போதமு மழிவில் வீடும் போற்றினர்க் கருள வல்லான்.
வீரவாகு தேவர் வேலாயுதத்தை முருகனாகக் காணல்
அந்தமி லொளியின் சீரா லறுமுகம் படைத்த பண்பால் எந்தை கணின்றும் வந்த வியற்கையாற் சக்தியாம் பேர் தந்திடும் பனுவல் பெற்ற தன்மை யாற்றணி வேற்பெம்மான் கந்தனே யென்ன நின்னைக் கண்டுளக் கவலை நீத்தோம்.
சுப்பிரமணியப்பெருமான் வழிபாடு
திருப்பரங்குன்றம்
இருப் பரங் குறைத்திடு மெஃக வேலுடைப் பொருப்பரங் குணர்வுறப் புதல்வி நன் மிசை விருப்பரங் கமரிடை விளங்கக் காட்டிய திருப்பரங் குன்றமர் சேயைப் போற்றுவாம்.
திருச்செந்தார்
சூரலை வாயிடைத் தொலைத்து மார்பு கிண் டீரலை வாயிடு மெஃக மேந்தியே
வேரலை வாய்தரு வெள்ளி வெற்பொரீஇச் சீரலை வாய் வரு சேயைப் போற்றுவாம்.
திருப்பழனி
காவினன் குடிலுறு காமர் பொன்னகள் மேவினன் குடிவர விளியச் சூர்முதல் பூவினன் குடிலையம் பொருட்டு மாலுற வாவினன் குடிவரும் மலற் போற்றுவாம்.
9

Page 9
- கந்தபுராண கவிமலர்கள் -
33.
34.
35.
36.
37.
சுவாமிமலை
நீரகத் தேதனை நினையு மன்பினோர் பேரகத் தலமரும் பிறவி நீத்திடுந் தாரகத் துருவமாந் தலைமை யெய்திய வேரகத் தறுமுக னடிக ளேத்துவாம்.
குன்றுதோறாடல்
ஒன்றுதொ றாடலை யொருவி யாவி மெய் துன்றுதொ றாடலைத் தொடங்கி யைவகை மன்றுதொ றாடிய வள்ளல் காமுறக் குன்றுதொ றாடிய குமரற் போற்றுவாம்.
பழமுதிர்ச்சோலை
எழ முதிரைப் புனத் திறைவி முன்பு தன் கிழமுதி ரிள நலங் கிடைப்ப முன்னவன் மழமுதிர் களிறென வருதல் வேண்டிய பழமுதிர் சோலையம் பகவற் போற்றுவாம்.
காஞ்சிபுரம்
ஈறு சேர் பொழுதினு மிறுதி யின்றியே மாறிலா திருந் திடும் வளங்கொள் காஞ்சியிற் கூறு சீர் புனைதரு குமர கோட்டம் வாழ் ஆறுமா முகப் பிரான டிகள் போற்றுவாம்.
இந்திரனாதியோர் கூறி வணங்கியது
கந்தநம வைந்து முகர் தந்த முருகேச நம கங்கையுமைதன் மைந்த நம பன்னிருபுயத்த நம நீப மலர் மாலை புனையுந் தந்தை நம வாறுமுக வாதிநம சோதி நம தற்பரமதாம் எங்கைநம வென்றுமிளை யோய்நம குமாரநமவென்றுதொழுதார்
10

38.
39.
40
41.
42.
- கந்தபுராண கவிமலர்கள் - யுத்த களத்தில் தமக்கடைக்கல மருளுமாறு தேவர்கள் முருகனை வேண்டல்
நண்ணினர்க் கினியாயோல ஞானநா யகனே யோலம் பண்ணவர்க் கிறையே யோலம் பரஞ்சுடர் முதலே யோலம் எண்ணுதற் கரியா யோலம் யாவையும் படைத்தா யோலம் கண்ணதற் பெருமா னல்குங் கடவுளே யோல மோலம்
தேவர்க டேவே யோலஞ் சிறந்தசிற் பரனே யோலஞ் மேவலர் கிடியே யோலம் வேற்படை விமலா வோலம் பாவலர் கெளியா யோலம் பன்னிரு புயத்தா யோலம் முவாருமாகி நின்ற முர்த்தியே யோல மோலம்.
புன்னெறி யதனிற் செல்லும் போக்கினை விலக்கி மேலா நன்னெறி யொழுகச் செய்து நவையறு காட்சி நல்கி என்னையு மடிய னாக்கி யிருவினை நீக்கி யாண்ட பன்னிரு தடந்தோள் வள்ளல் பாத பங்கயங்கள் போற்றி.
முருகனை வழிபட்டோர்க்கு ஒரு
குறையுமில்லையென வீரவாகுதேவர் சயந்தனுக்கு
கூறியத.
உலகெலாங் கடந்த தோளி ருன்னுதி ருன்னி யாங்கு நலமெலாம் வழி பட்டோர்க்கு நல்கிய குமரன் றன்னால் தலமெலாம் படைத்த தொல்லைச் சதுர்முகன்முதலாம்வானோர்
குலமெலா முய்ந்த தென்றா லுமக்கொரு குறை யுண்டாமோ.
முருகப் பெருமுானிடம் வீரவாகுதேவர் வேண்டிய பரிசு
கோல நீடிய நிதிபதி வாழ்க்கையுங் குறியேன் மேலை யிந்திர னரசினைக் கனவினும் வெஃகேன் மாலயன் பெறு பதத்தையம் பொரு ளென மதியேன் சாலநின் பதத் தன்பையே வேண்டு வன் றமியேன்.
11

Page 10
- கந்தபுராண கவிமலர்கள் -
43.
45.
வீரவாகுதேவர் தாது போகுமுன் கூறியத
ஆவதோர் காலை யெந்தை யாறிருதடந்தோள் வாழ்க முவிரு வதனம் வாழ்க முழுதருள் விழிகள் வாழ்க துவுடை நெடுவேல் வாழ்க தொல்படை பிறவும் வாழ்க தேவர்க டேவன் சேயோன் திருவடி வாழ்க வென்றான்.
கந்தவெற்பில் வீற்றிருந்தருளிய ஷணர்முகப்பெருமானை கச்சியப்பசிவாச்சாரிய சுவாமிகள் வாழ்த்தி வணங்கியது
துய்ய தோர் மறைகளாலுந் துதித்திடற் கரிய செவ்வேள் செய்ய பேரடிகள் வாழ்க சேவலும் மயிலும் வாழ்க வெய்யசூர் மார்பு கீண்ட வேற்படை வாழ்க வன்னான் பொய்யில் சீரடியார் வாழ்க வாழ்க விப் புவனமெல்லாம்
(தேவிமாரிருவரோடமர்ந்தருளிய திருக்கோலத்தை
வாழ்த்தியது)
ஆறிருதடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பை கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் னணங்கு வாழ்க மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீரடி யாரெல்லாம்.
பிரார்த்தனை
பாராகி யேனைப் பொருளா யுயிர்ப் பன்மை யாகிப் பேரா வுயிர் கட்குயிராய்ப் பிற வற்று மாகி
நேராகித் தோன்ற லிலதாகி நின்றான் கழற்கே ஆராத காதலொடு போற்றி யடைது மன்றே.
திருச்சிற்றம்பலம்.
12

- கந்தபுராண கவிமலர்கள் -
அநபந்தம்
முருகன் கைவேலின் மகிமை
“கிருதேது பிரும்மஜிக்ஞாஸ்யத்ரேதாயாம்
ஜனகீபதீர்த்வாபரே பகவான் கிருஸ்ண கலெள ஸ்கந்த பிரகீர்த்தித”
கிருதயுகத்தில் பிரும்மாவும், திரேதயுகத்தில் யூரிராமரும் துவாபாயுகத்தில் பூணூரீகிருஷ்ணரும், கலியுகத்தில் ஸ்கந்தனும் வரமருளும் மூர்த்திகளென மேற்ஸ்லோகம் அறியத்தருகிறது. ஸனத்குமார சம்ஹிதையும் இதனை ஊர்ஜிதம் செய்கிறது. முருகப்பெருமானது திருவவதாரம் பற்றி புராண இதிஹாசங்கள் தெளிவான விளக்கங்கள் தருகின்றன. முருகப்பெருமானது திருவவதாரம் நிகழ்ந்ததும் விஸ்வாமித்ர இருவிதான் முதன் முதலாக அவரிடம் சரணடைந்தவர். துதிகளினால் மகிழ்வைக் கொடுத்து சகல மங்கலங்களையும் உபகரித்து ஜாதகர்மா முதலான வைதீக சம்ஸ்காரங்களையும் செய்து வைத்து சக்தியை ஓர் அஸ்திரமாகவும், சேவலை துவஜமாகவும் குமரனிடம் அமைத்தார். முருகப்பெருமானும் விஸ்வாமித்ரரிடம் மிகுந்த பற்றுறிதியோடு அருள்பாலித்து அவரது தவசிரேஸ்டத்திற்கு ஆற்றுப்படுத்தினார். எதற்கும் இவ் ரிஷி முருகப் பெருமானையே உதாரண புருஷராக விவாதிப்பதும் வழமையாயிற்று. தனது யக்ஜ சம்ரக்ஷனைக்கு ராம லகூழ்மணர்களை இவ்ரிஷி அழைத்துச் செல்லும் சமயத்தில் கங்கைக்கரையிலிருந்து முருகப்பெருமானது திருவவதாரம் பற்றிக் கூறிவிட்டு வீரதீரம் கொண்டுள்ள அங்க அமைப்புக்களையும் ராமலசஷமணர்களுக்கு எடுத்துரைத்துவிட்டு, அவர்களையும் முருகப்பெருமான் மேல் பற்றுறிதியாக அமைத்து அவரது அம்ஸங்களிலிருந்து வீசும் வீரதீரங்களை பெற்றுய்யுமாறும் விண்ணப்பித்தார். பாரதப் போரிலும் துரியோதனன் கூட தனது வீரர்கட்கு முருகப்பெருமானது
13

Page 11
- கந்தபுராண கவிமலர்கள் -
திருவிளையாடல்களைக் கூறி, அவரைப்போல் வீறுபெற்று வெற்றி பெற முயலுங்கள் எனவும் விண்ணப்பித்தான். ஒர்சமயம் பீஷ்மர் போரில் தளர்ச்சியடைந்தகாலை துரியோதனன் அவர் முன் சென்று அவரை உற்சாகப்படுத்துகையில் "பீஷ்மரே, முருகப்பெருமான் எவ்வாறு தேவர்கட்கு துணையாக வீறுநடை இயற்றினாரோ, அதேபோல் நீவிர் புறப்படுவீர்களாக எனக்கூறியதும் பீஷ்மரும் புத்துணர்ச்சி மிகுதியினால்
"நாமஸ்கிருத்ய குமாராய ஸேனான்யே சக்தி பாணயே
அஹம் ஸேனாபதிஸ்தேத்ய பவிஷ்யாமி நஸம்ஸயஹ”
என்றவாறு துதி செய்துவிட்டு, துரியோதனனிடம் விடைபெற்று சேனாதிபதியாக புறப்பட்டார். பீஷ்மரும் கங்கையின் புதல்வன் முருகப் பெருமானும் மந்தாகினி கங்கைதந்த மைந்தன். எனவே வீரத்திலும் சரிசமனாகின்றார். v
பாரதவர்ஷத்தில் பாரதம், ராமாயணம், சிவரகசியம், வித்தியாரஹஸ்யம் பிரம்மஞான சுதோதயம், என ஐந்து இதிகாசங்கள் இருந்தன. இவற்றுள் மகாபாரதமும், ராமாயணமும் மகாபிரசித்தமடைந்தன. சாதாரண பிரசித்தமாக சிவரகஸ்யம் அமைந்தது. ஆனால் வித்தியாரஹஸ்யமும் பிரம்மஞான சுதோதயமும் அவ்வளவாக பிரசித்தம் பெறவில்லை இவையனைத்திலும் முருகப்பெருமான் வாசஞ் செய்ததனாற்தான், வியாஸர், வால்மீகி, விஸ்வாமித்திரர், அகஸ்தியர் என்போர் எதற்கெடுத்தாலும் முருகப் பெருமானது சாதனைகளைத்தான் தத்தமது செயற்பாடுகளில் கையாண்டுள்ளனர்.
மகாபாரதத்தில் முருகப்பெருமானது ருசிகரமான கதையொன்றுண்டு சரவணப் பொய்கையில் இவரது திருவவதாரம் நிகழ்ந்ததும் பார்வதி சமேதரராக பரமேஸ்வரன் காட்சி தருகிறார். அக்கினியும், கங்கையும் அங்கே கூடவே இருக்கின்றனர். அதோடு ஏராளமான ரிஷிசுட்டத்தினரும் நிறைந்திருந்தனர். மேற்கூறிய பார்வதியும், பரமேஸ்வரன், அக்கினி, கங்கை Aந்நால்வரும் ஒரே சமயத்தில் 'முருகா’ என்றழைத்தனர். பார்வதி பரமேஸ்வரனோ இவரது பெற்றோர். அக்கினி வளர்ப்புத் தந்தை கங்கையோ
14

- கந்தபுராண கவிமலர்கள் - வளர்ப்புத்தாய், முருகப்பெருமான் இந்நால்வரையும் சமமாகக் காண்கிறார்.
இவர் ஞானபண்டிதனாயிற்றே. எனவே ஒரே சமயத்தில் ஸ்கந்தன், விசாகன், ஸாகன், நைகமேயன் என ஒரே தன்மையான நான்கு உருவ வடிவங் கொண்டு பரமனிடம் ஸ்கந்தனாகவும், பார்வதியிடம் விசாகனாகவும், அக்கினியிடம் ஸாகனாகவும், கங்கையிடம் நைகமேயனாகவும் காட்சி கொடுத்தார். அவ்வளவு வல்லமையை முருகப் பெருமான் அவதரித்தவுடனேயே பெற்றுவிட்டார். விஸ்வாமித்திரர் தந்த சக்திவேல் மூலம் தான் முருகனுக்கு வேலாயுதர் என்ற நாமமும் விளங்கியது. "வேல்” இதுதான் என்ன.
“வீரவேல் தாரைவேல், விண்ணோர் சிறை மீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல், வாரிகுளித்தவேல், கொற்றவேல் சூர்மார்பும் குன்றும் தளைத்தவேல் உண்டே தணை” என்றதோர் திவ்வியபாடல் எமக்கு அறிவுறுத்துகிறது.
முருகனது கைவேல் அவர் ஆணையிட்டதும் சீறிப்பாய்ந்து பகைவரைத் தாக்கிவிட்டு, வெற்றியோடு கங்கை நீராடி மீண்டும் அவர் கையில் வந்தணையுமாம். இதேபோல்தான் முருகப்பெருமானது குளிஸாயுதமும் அமைந்தது. சிங்கமாசூரனிடம் குளிஸம் போய் தாக்கி, கறைபோக ஆகாஸகங்கையில் அமிழ்ந்து. வான்சென்று கற்பகச் சோலையின் நறுமணத்தில் தோய்ந்து, தமிழ் தந்த முருகப் பெருமானது செந்தளிர் கரத்தில் வந்து சேர்ந்தமையை கச்சியப்ப சுவாமிகள்
“அங்கப் பொழுதில் அடற்குலிஸம் வான் போகி
கங்கைப் புனலாழ்ந்த காமரு பூந்தாதாடி சங்கத்தவர்க்குள் தலையாம் தமிழ்ப் புலவன் செங்கைக்குள் வந்த சிறப்புற்றிருந்தத.” என்றார். இவையாவும் முருகப்பெருமானை எவ்வாறு வணங்கி பெருமிதம் கொள்ள வேண்டுமென ஆற்றுப்படுத்தி ஏவுகின்றன.
முருகப்பெருமானை வழிபட்டு இறையுணர்வோடு வாழ்ந்து அவனருள் பெற்றுய்ய வேண்டுமாயின், பக்தர்கள் புனிதநீராடி, ஆசைகளை 15

Page 12
- கந்தபுராண கவிமலர்கள் - அகற்றிவிட்டு தூயமனத்தோடு, வாசனைமிகுந்த மலர்களால் அவரது மலரடிகண்டு தரிசனம் செய்தலே மிக இலகுவான வழியாகும். இத்தகைய வழிமூலம்தான் வழிபாடும் இயற்ற வேண்டும். இதனையே சங்கப்புலவர் நக்கீரரும்
"புலராக் காழகம் புலர உட்கி, உச்சிக் கூப்பிய கையினர்
தற்புகழ்ந்த ஆறெழுத்தடக்கிய அறுமறைக் கேள்வி நாவியன் மருங்கில் நவிலப்பாடி வரையுறு நறுமலர் ஏந்த”
என ஆற்றுப்படுத்தினார். இவ்வுலகில் பிறந்தோர் ஒர்வழியில் சென்று தமது கடமைகளைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்பதும் அவ்வழியின் முடிவில் பிறப்பின் பேறுகளும் பூர்த்தி கொண்டு எவ்வாறு பிறந்தோமோ அவ்வாறே மறைகிறோம் என ஞானாச்சார்யர்கள் கண்ட தெளிவான முடிவு. வழியின் ஆரம்பம் கற்பத்திலிருந்து பிறப்பெடுப்பதே. வழியின் முடிவு இறப்பாகும். அது தான் கைலாஸவாசம். வழியில் செல்வோர் உயிர்கள், வழியின் தூய்மைகள், அன்பு, தர்மம், அறிவு, அருள், ஒழுக்கம் என்பனவாகும். வழி+பாடு -இதுதான் வழிபாடு. நாம் செல்லும் வழிக்குத்துணை முருகப்பெருமானும் அவரது கை வேலுமேயாகும். இதனையே கந்தலரங்காரத்தில்
“விழிக்குத்தணை திருமென் மலர்ப்பாதங்கள் மெய்மை குன்றா மொழிக்குத் தணை முருகா வெனு நாமங்கள் முன்பு செய்த பழிக்குத் தணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி வழிக்குத் தணை வடிவேலுஞ் செங்கோடன் மயூரமுமே.”
“சூலம் பிடித்தெம பாசஞ் சூழற்றித் தொடர்ந்த வருங்
காலன் றனக்கொருகாலு மஞ்சேன் கடன் மீ தெழுந்த ஆரங் குடித்த பெருமான் குமாரனறு முகவன் வேலுந் திருக்கையுமுண்டே நமக் கொரு மெய்த்தனையே’
“முருகப் பெருமானது திருக்கரத்து வேலாயுதம் எமக்கு தணையிருந்தால் யமனுக்கும் அஞ்சேன்” என்பதே இப்பாடல். முருகப்பெருமானது திருக்கைவேல் மும்மூர்த்திகளது சக்திகளோடு இன்னுமனந்த சக்திகளையும் கொண்டுள்ளது. இதனை வியாசர்
16

- கந்தபுராண கவிமலர்கள் - “ஸ்ருஜந்தோ வைதிகான் தர்மானு ஸ்தாபயந்தஹ
ஸஜூரோத்தமான், ஸம்ஹரந்தோ அசுரான் பாபான் 1 ப்ரும்மம் விஷ்ணும் ஹராஇவ” என்றார். இதனை முன் வைத்தே கச்சியப்ப சுவாமிகளும்,
“அறத்தை நல்கலின் அந்தணன் போல்வன அகிலத்
திறத்தை அன்பொரு போற்றலில் செங்கண்மால் போல்வ ஒறத்த மன்றுயிர் உண்குறும் அவுணரை ஒருங்கே இறுத்தல் செய்திடும் தன்மையால் ஈசன்போல்வ” என்றார்.
பதினொரு ருத்ரர்களையும் சிவபிரான் முருகனது கைகளில் ஆயுதங்களாக மாற்றியமைத்தார். கூடுதலாக ஓர் கைவேலையும் தருவதற்கு ஆழ்ந்து சிந்தித்தபோது ஒருங்கிணைந்த பிரமாண்டமானதோர் மகா சக்திவேலும் உதயமானது.
“வேதா ஏவ மயூரோ ஹிபீப்ரவைஹி ஷண்முகஸ்ததா
பிரம்ம வித்யாபி ஸக்திஸ்யாத் முக்தி ஸ்வதர்ஷணாத் ஸ்மிருதா’ என்றவாறு வேதங்கள் மயிலாகின வேதசாரமான பிரணவமே முருகன். அப்பிரணவத்தின் கருப்பொருளேயான ஞானமே வேல், அவ்வேலை சிரத்தையோடு வணங்கினால் முக்தி பெறலாம். என அருணகிரிநாதாரும்
“மரணப்ரமாதம் எமக்கில்லையாம் என்றும் ~ வாய்த்ததணை
கிரணக் கலாபியும் வேலுமே” என்றார்.
பொதுவாக நல்ல பேறுகளை ஒருவர் பெறவேண்டுமாயின் அவற்றைப் புண்ணிய கூேஷத்திரங்கள் மூலமாகவும், சமுத்திரம், நதி, ஆலயதீர்த்தக் குன்றம் வாயிலாகவும் ஒஷதீகள் நிறைந்த க்ஷேத்திரங்கள் வாயிலாகவும் பெறமுடியுமென அறியப்படுகிறது. பசஷங்களாலும், ஸம்வத்ஸரங்களாலும் ஒருவரது வாழ்வின் வயது நொடிக்கு நொடி கூடும் போதெல்லாம் நல்ல பேறுகளைப்பெற அவ்வக்கால நேரங்களில் மேற்கூறிய தீர்த்த ஸ்நானங்களோடு ஆராதனைகளை முன்னெடுக்க வேண்டுவதவசியம். வேற்படைக்கும் உச்ச சக்திவலிமைகளை கங்கா தீர்த்தங்களும் இணைத்தன. முருகப் பெருமுானுக்கு ஈஸ்வரன் தந்த வேல் அத்தகையதே. அந்த வேற்படையை கோதாவரி நதிதீர்த்தத்தில் வைத்துத்தான் ஈஸ்வரன் பராசக்தி மூலம் முருகப் பெருமானிடம் சேர்ப்பித்தார்
17

Page 13
- கந்தபுராண கவிமலர்கள் - இதனால் பராசக்தியின் வலிமையும் வேலில் இணைந்தது. இந்த நிகழ்வு நடந்த இடம்தான் திரியம்பகமாகும்.
“அனுகோதாவரி தீரம் தீரியம்பகநாம தேஷ்ருதம்
யத்ர ஸக்திம் குஹோ லேயே தாரகாசுர காதினிம்"
ஆயதன் பின்னர் ரவில் முதண்டத்த
ஐம்பெரும் பூதமும் அடுவத ஏயபல்லுயிரும் ஒருதலை முடிப்பது
ஏவர்மேல் விடுக்கினும் அவர்தம் மாயிருந்திறலும் வரங்களும் சிந்தி
மன்உயிர் உண்பது எப்படைக்கும் நாயகம் ஆவதொரு தனிச் சுடர்வேல்
நல்கியே மதலை கைக் கொடுத்தான். இதனால் முருகப்பெருமான் ஞானசக்திதரன் என்ற நாமமுங் கொண்டார். இதனையே ஸ்காந்தமும்.
அஸ?ராணாம் விநாஸாய ஸ?ராணாம் ரகடிணாயச ஸர்வலோக ஹிதார்த்தாய ஸர்வரகஷா கராயச ! ஆதிசக்தே ஸமுத்பூதம் ஷக்டயஸத்ரம் விஷ்வ வந்தினம்! பத்ரதிரயம் விஜானீயாத் இச்சா ஞான க்ரியாமகம்! இச்சாசக்தீம் தார்த்வ பத்ரம் ஞான சக்திமத மதீயமம்! அதச பத்ரம் கிரியாசக்தி ரூபம் சகட்யாயுதஸ்ய ஹி: திரயோகுணா: திரயோ வேதா: திரிதத்வம் சத்ரயோ அக்யை: திரயோ தேவா வஸந்த்ர சக்தியதிய திரயேத்வி ஜா: எனச் சிறப்பிக்கிறது.
முருகப்பெருமானது கைவேல் ஆறு முகங்களாவை. வரம்பல பெற்றவர்கள் அப்பலன்களை தீயவழியில் ஈடுபடச் செய்யும் வேளையில் அவ்வர பலன்களைக்கூட இவ்வேல் அழித்துவிடும். நல்ல மனசோடு நல்லவற்றைச் செய்வோருக்கு இவ்வேல் இரட்சித்தருளும். தன்னைச் சரணடைந்தோரை குதூகலத்தில் ஈர்த்துவிடும். கந்தபுராணம் குமாரதந்திரம் முருகனது வேல் பற்றிய உயிர்த்தன்மைகளை எடுத்துக்காட்டும்.
18

- கந்தபுராண கவிமலர்கள் - முருகனது வீரவேல் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது.
அந்தத்தில் கூரிய முனையோடு அனுசக்தியைக் கொண்டு விண் மூலம் ஆகாசத்தை ஊடுருவினிற்கும். இவ்மூன்று பகுதிகளிலும் முறையே இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்திகளோடு, ஸத்வம், ரஜஸ், தாமஸ், குணுங்களையும் தன்னக்தே கொண்டுள்ளது. இருக், யஜூர், சாம வேதாசாரமாகவும், ஜீவ, ஈஸ்வர, பிரும்ம தத்தவங்களைக் கொண்டதாகவும், கார்ஹபத்யம், தக்ஷணாக்னியம், ஆவஹனியம். இணைந்ததாகவும், பிரம்மா, விஷ்ணு, ருத்திரர்களது சக்திகளை முழுமையாக கொண்டதாகவும் அமைகிறது. பிரபா, சாந்தி, பலம், தர்மம் இவைகளும்இல்வேலில் அடங்குகின்றது. இந்த வேலின் மூலம் வெளிவரும் சுடரொளி எவ்வகை இருளையும் போக்கும். இந்த ஒளி ஆயிரம் கோடி அண்டங்களிலிலுள்ள அக்கினி ஒன்றாகுவது போன்று எப்போதும் இடர்களை அகற்றிவிடும். கர்ஷணசக்திகளை கொண்டிருக்கும். கந்தபுராணத்தின்
தேயுவின் எடுத்த அண்டத்திறன்களும் பிறந்த ஞாலத்த ஆயிரம்கோடி அண்டத்த அங்கிஆயும் ஒன்றிற்றென்ன மியுயர்ந்தொழுகி, அன்றோர் வெருவருந்தோற்றம் கொண்டு நாயகன் தனத அடைக்கலம் நடந்ததன்றோ.
என்றவாறு கச்சியப்ப சுவாமிகள் காட்டியுள்ளார்.
ஒருகால் சூரியனது பெண் ஸம்ஞா, அவரது ஒளியின் தாக்கத்தை தாங்கமுடியாது தனது நிழலை சாயையாக்கி சூரியனோடு அனைத்துவிட்டு தவம் செய்ய கானகம் சென்றாள். பலநாட்களின் பின் சூரியன் இதையுணர்ந்து ஸம்யாவை தேடிக் கண்டு அழைத்தபோது விஸ்வகர்மா சூரியனது ஒளியிலிருந்து எட்டிலொரு பாகத்தை சிதைத்தெடுத்து, அதை இருபங்காக வகுத்து ஒருபங்கை முருகனது வேலிலும் அடுத்ததை விஷ்ணுவின் சக்ராயுதத்திலும் சேர்த்துவிட்டார். இதனால் ஞான சக்தி உள்ளிருளை அகற்றுவதுடன் புற இருளையும் போக்கும் வலிமையும் இவ் வேல் பெற்றது. இந்த ஒளியின் கிரண வேகம் கோடிக்கணக்கான கிரணங்களாகி சமுத்திர நீரையம் வற்றச் செய்யும் தன்மை கொண்டுள்ளது. மலைகளையும் பொசுக்கும். ஸம்ஹார ருத்தர சக்தியையும் கொண்டிருக்கிறது. சங்கர
சம்ஹிதை இவற்றைவிரிவாக எடுத்தோதுகிறது.
19

Page 14
- கந்தபுராண கவிமலர்கள் - வாரிதியேழும் எண்ணில் வரைகளையும் பாருடன் உலகீரேழும் படைத்த பல்லண்டம் யாவும், ஒரிரை முன்னமட்டே உண்டிடும் முருகன் கைவேல். அல்லாமலும் பிரம்மாஸ்திரம் நாராயணாஸ்திரம் என்ற வலுமிக்க அஸ்திரங்களை இவ்வேல் பொசுக்கித்தள்ளும்.
கந்தபுராண சூரசம்காரத்தில் ஆக்னேயஸ்த்திரம், யமாஸ்திரம், வாயுவாஸ்திரம், வாருணாஸ்திரம், ஸௌம்யாஸ்திரம், ஐந்திராஸ்திரம் எனும் பலமிக்க அஸ்திரங்கள் யாவும் இந்தக் கைவேலுக்கு ஈடுதர இயலாது செயலிழந்தன.
முருகனது அருள்பெற வேண்டுமாயின் மயிலையம் வழிபட்டு அவரது கையில் சார்ந்திருக்கும் திருக்கைவேலையும் வழிபடல் அவசியமாம். அருணகிரிநாதர் இவ்வாறுதான் முருகதரிசனத்தைப் பெற்றார்.
தோகை மேல் உலவும் கந்தன் சுடர் காத்திருக்கும் வெற்றி வாகையே சுமக்கும் வேலை வணங்குவதே எமத வேலை
எனப் பாரதியார் அறிவுறுத்துகிறார்.
ஆதிசங்கரர்
சக்தே பஜேத்வாம் ஜகதோ ஜனத்ரீமே ~ என்ற ஸ்லோகம் மூலம் (ஆரிருமம் கிரீட ஜனனீம்) உள்ள அனைத்துயிரையம் ஈன்ற அன்னை பராசக்தியே முருகனது கைவேலாக காட்சி தருகின்றதென அறியத்தருகிறார். அறிவுக்கு மூன்று லக்கினங்களான ஆழம், அகலம், கூர்மை போன்று வேலுக்கு அடிப்பாகம்ஆழ்ந்தும் நடுப்பாகம் அகன்றம், அந்தப்பாகம ‘கூர்மையாக நிமிர்ந்தும் அமைக்கப்படுகிறது.
குமார தந்திரத்தில் “சக்தியாஸ்திரம்” பற்றிய விளக்கங்களுண்டு. மேற்கூறிய அனைத்து சக்தி வலிமைகளும் கொண்டுள்ளதே முருகனது கைவேல். முருகப்பெருமான் எங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறதோ, அங்கெல்லாம் அவரது கையில் வேலாயுதம் அணைய வேண்டும்.
20

- கந்தபுராண கவிமலர்கள் -
வலாயுதத்தோடுதான் முருகப்பெருமானுக்கு பூசைகளும் ஆற்ற வேண்டும் து மிகமிக முக்கியம். அவ்வாறு வேலாயுதமற்ற பூசனை செய்யின் அரசர்கட்டு பிரபாவ சக்தி, உத்ஸாக சக்தி மந்திர சக்தி இம் மூன்றும் 60ண்டாகாது. அதனால் அரசும் பிரஜைகளது வாழ்வும் வீழ்ச்சி காணும், நாட்டின் வழமும் குன்றும்.
த்ரயோவேதாவ ஸந்தியத்ர சக்தி பத்ரத்ரயே தவிஐதஹ
சக்தித்ரயம் கதம் ராஜ்ஜா பவஸ்சக்தியார்ச்சனம் விநாய
ஸர்வதெ வைஸ்திதம் ஸாகடிாத் ஸர்வதெவாத்மகம் பரம்
ஸர்வதெவ பர்யம்யாதி சக்தீயா ஸமர்ச்சனம்
(குமாரதந்திரம்)
பல அற்புதங்களையும், தீயவற்றை அழித்து நல்லவற்றைத் தந்து அண்டங்கள் அனைத்தும் உய்வுபெற வழிவகுத்ததுமான சம்கார வஜ்ரவேலையும் அதன் வலிமைகளையும் தேவர்கள் கண்டு தொழுத போது, "தனிவேற் சக்தியே நீவிர் அளவற்ற ஒளிப்பிரகாசம் பெற்றிருப்பதாலும் அந்த ஒளிப்பிரகாசம் மூலம் வெளிவரம் ஒளிக்கதிர்களிலிருந்து தெறித்து விசாலித்து பலவர்ணங்களோடு கூடிய கனதியையும் கொண்டிருப்பதாலும் ஆறுமுகங்களையும் , கூர்மையான அணுசக்தி கொண்டு ஆகாசத்தையே ஊடுருவினிற்றலாலும், எங்கள் பெருமான் முருகனிடம் அணைவதாலும் சக்தி என்ற நாமத்தையும் கொண்டுள்ளதாலும் துதிகளைப் பெற்றிருப்பதாலும் முருகனுக்கும் உமக்கும் வேறுபாடே இல்லை. நீவிரும் ஸ்கந்தனாகவே காட்சி தருகின்றீர்கள். எம்மை அனுக்கிரகிப்பீர்களாக", என்றெல்லாம் தினமும் துதித்தனர். இன்று நாம் அவ்வாறு துதிக்கின்றோமா என்பதை சிந்திக்கவேண்டும்.
இத்தகைய குணாதிசயங்களைக் கொண்டு அருள்பாலித்து வரும்
மகாசக்தி வஞ்ஞர வேலாயுதசாயல் வேல்தான் மாவைக்கந்தனது கைவேலாக
அமைந்தது. நாடு அல்லலுற்றபோது அடியார்களோடு ஒருவராக
இணைந்தும், தெல்லிப்பளை அன்னை துர்க்கையம்மனோடு சேர்ந்து
பூசனைகள் ஏற்றும் பின் எண்திசைகளிலும் பவனி சென்று போனவிடமெல்லாம்
பூசனைகளையேற்றும் மீண்டும் ஷண்முகப்பெருமானது கரங்களில் 21

Page 15
- கந்தபுராண கவிமலர்கள் - எண்ணற்ற வரங்கள் பலதந்துதவ வந்தமர்ந்திருக்கிறது. இந்தக் கைவேல் இவ்வாறு வந்ததும் முருகப் பக்தர்களது பக்திப்பிராாத்தனை ஆராதனைகளது தவவிஷேசமே இத்தகையதாயிற்று.
ஆறிருதடந் தோள் வாழ்க
ஆறுமுகம் வாழ்க வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க
குக்குடம் வாழ்க செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க
யானைதன் னணங்கு வாழ்க மாறிலா வள்ளி வாழ்க
வாழ்க சீரடியா ரெல்லாம்.
(ஷண்முகப் பெருமானது திருக்கோலம்)
22

- கந்தபுராண கவிமலர்கள் -
பிதிர் யஞ்ஞம்
சர்வோத்ர சுகிரஹ: ஸந்து ஸர்வோ ஸந்து நிராமயா: ஸர்வே பத்ராணி பஸ்யந்து மா கஸ்சித் துக்கபாக் பவேத்
இவ்வுலகில் உள்ளமக்கள் அனைவரும் சுகமாக இருக்கட்டும். எல்லோரும் நோயற்றவர்களாக இருக்கட்டும். எல்லோருமே நன்மைகளை காணட்டும். ஒருவனும் துன்பத்தை அடைய வேண்டாம். இவ்வாறு வேத சாரங்கள் இயம்புகின்றன. மனிதர்கள் அனைவரும் நூலில் சேர்க்கப்பட்ட மணிகள் போல இவ்வுலகத்தில் ஏதோவோர் வகையில் ஒருவரோடொருவர் பற்றிக் கொண்டுதான் உள்ளனர். அவ்வாறான பற்றுகள்போல்தான் இறைவனோடு சங்கமமாக சைவசமயிகளான நாமாற்றும் தெய்வீகக் கர்மானுஸ்டானங்கள் உதவுகின்றன.
இறைவன் எமது உள்ளத்தையடைய விரும்புகிறான். அந்த இறைவனுக்கு நாம் அர்ப்பணம் செய்யும் மனமும், அந்த உயர்ந்த மனதோடு ஆற்றும் கள்மாக்களும், சுத்தமாகவும் மகத்தானதாகவும் இருத்தல் வேண்டும். மனம் தூயதாக இருக்கவேண்டும். இன்றேல் தூய்மை கெட்டு தீமைகள் எம்முள் உறைந்து விடும். இறைவனைத் துணையாகக் கொண்டு அவரது சந்தோஷத்திற்காக (பகவத் பரீத்தியர்த்தம்) ஆற்றும் அனைத்து செயல்களாலும் எமது ஆன்ம ஈடேற்றத்திற்கு அவை பெருந்துணை தருகின்றன. இவ்வாறாக சைவக் குடும்பங்கள் இறைவனைத் துணைகொண்டு வாழ்ந்து காட்டியுள்ளார்கள்.
யே நாஸ்ய பிதரோ யாதாஹ யேந யாதா: பிதா மஹா: தேனா மார்கேண கந்தவ்யம் மார்க்கஸ்த்தோ
நாவளிததி
23

Page 16
- கந்தபுராண கவிமலர்கள் - மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனும் தனது தந்தை எவ்வழியைப்
பின்பற்றினாரோ, தனது பாட்டனார் எவ்வகையில் வாழ்ந்தாரோ அவ்வழியில் தான் செல்ல வேண்டும். பலபேர் சென்ற பாதை சுத்தமாக இலகுவாகவும் எவ்வாறு இருக்குமோ, அதே போன்று தமது பிதுர்க்களது பாதையில் செல்ல வேண்டும். அப்பாதையில் நித்தியம், நைமித்தியம், காம்யம் என்ற கர்மாக்களை அனுஷ்டித்து, பூர்வ, அபர கிரியைகளை சிரத்தையோடு செய்ய வேண்டும். இதனால் ஜன்மம் எடுத்தோரெல்லாம் இவ்வுலகிலும் மறுவுலகிலும் சுகத்தை அனுபவித்து முத்திபெறுவார். இதுவே ஆன்மஈடேற்றம். இவ்வாறுஆகம சாஸ்த்திரங்களும் ஸ்மிருதி, புராணங்களும் நன்குதெளிவாக அறியத்தருகின்றன. மனிதர்கள் ஆற்றும் பூர்வ, அபர கிரியைகளால் எழும் வேதமந்திரங்களும் அவ்வேத மந்திரங்களோடு ஆற்றும் தர்ம கைங்கள்யங்களும், அந்த தர்மங்களுடன் கலந்துணிக்கும் வஸ்துக்கள் அனைத்தும் இறைவனிடம் எவ்வாறு ஓயாக கர்மாவில் எழும் புகையானது சூரியனையடைந்து பின் மழையாக வர்ஷிக்க உதவுகிறதோ அதே போன்று தர்மம் செய்பவர்களது குடும்பத்திற்கும் அவர்களுடாக நாட்டிற்கும் இறைவன் சுபீட்சத்தை சூரியகதிர்கள் மூலம் தந்துதவுகிறார்ராம். பிதிர் தர்ப்பணங்கள் கூட பிரம்ம யஞ்ஞத்தில் தான் பலனை தருகின்றதாம்
இந்த வகையில் தான் மனிதன் தேவ யக்ஞம், பிதுர் யக்ஞம், பசு யக்ஞம், என்பன கிரமமாகச் செய்யவேண்டுமென தர்மதேவதை கூட உத்தரவு செய்கிறது. கோயில் வழிபாடு, புண்ணிய தீர்த்தமாடல் என்பன தேவ யக்ஞம் என்றும், தாய், தந்தையர்களின் சொற்படி நடந்து அவர்களை பேணுதலும் அவர்கள் இறந்த பின் அவர்களுக்கும் மூதாதையர்கட்கும் செய்யப்படும் கர்மாக்கள் பிதிர் யக்ஞம் என்றும், பசு மிருகாதிகளை வதைக்காது அவர்கட்காக ஆற்றும் கருமங்களை பசு யக்ஞம் என்றும் கூறப்படும். இவ்வாறு ஆற்றப்படும் யக்ஞ வழிபாடுகளில் ஹோமத்தால் தேவர்களும், பிராமண தானங்களால் சுவர்க்கத்திலுள்ளோர்களும். பிணிடதானத்தால் யமலோகத்திலுள்ளவர்களும், உற்றார் உறவினர்களை ராணி கொடுத்து உபசரித்தாலும் உச்சிஸ்டதாலும் பேய்பிசாசுகளும், காக்கைக்கு பிணிடம் கொடுப்பதால் நரகத்திலுள்ளவர்களும் திருப்தியடைகிறார்கள். முக்கியமாக பிதுர்களை புத்’ என்னும் நரகத்திலிருந்து கரையேற்றி அவர்களைச் சாந்திப்படுத்த இவை உதவுகின்றன.
24

- கந்தபுராண கவிமலர்கள் -
மகாபாரதம் அநுசாசன பர்வம் 143ல் தந்யம் யசஸ்யம் ஆயுஷ்யம் ஸ்வர்க்கம் சத்ரு விநாசனம் குலசந்தாரகம் சேதி சீராத்த மாகடர் மநீகழிணம் என்றபடி பித்ருக்களை உத்தேசித்து செய்யும் தர்ப்பணமானது தனம், கீர்த்தி, ஆயுள், ஸ்வர்க்கம் முதலிய நன்மைகளை அளிக்கும். சத்ருக்களை நீக்கும். தன் குலம் தளைத்தோங்கச் செய்யும் இறந்தவர்களுக்காக ஆற்றும் அபரக்கிரியைகளது மகத்துவம் பற்றி சகல நூல்களும் கூறும். அவற்றுள் மகாபாரதத்தில் தருமன் நச்சுநீரருந்தி இறந்த தம்பிமார்களின் அதிபராக்கிரமத்தை கொண்ட வீம, அருச்சுனனை விட்டு சகாதேவனை எழுப்பியது, அவன் தாயாகிய மாதுரியின் பிதுர்க்கடன்களை செய்வதற்கேயாம். இதேபோன்று கந்தபுராணத்திலும் இரணியன் யுத்தகளத்தில் புறங்கொடுத்து மறைந்ததும். சூரபத்மாவின் இறப்பையுணர்ந்து அவனது அபரக்கிரியைகளை செய்வதற்கேயாம். அகத்திய முனிவர் லோபா முத்திரையை வேட்டு சித்தன் என்பவனைப் பெற்றதும் பிதுர்க்கடன் செய்வதற்கேயாம். இதனைத்திருக்குறள்கூட தென்புலத்தார் தெய்வம் என முன்னிறுத்திக்கூறி பிறவிப்பயனும் இதுவேயாம் என்றார்.
‘தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க றானென்றாங் கைம்புலத்தா றோம்பறலை என பிதிரர்க்கும், தெய்வத்திற்கும், விருந்தினற்கும், தனக்கும் தருமம் செய்தல் தலையான தருமம் என்றார். கந்தபுராணத்தில் மார்க்கண்டேய படலத்தில்,
தறந்தவர்கள் வேண்டியதோர் தப்பரவு நல்கி இறந்தவர்கள் காமுறும் இருங்கடன் இயற்றி அறம் பலவும் ஆற்றி விருந்தோம்பு முறையல்லான் பிறந்த நெறியாலுளதோர், பேருதவியாதோ - எனவும் பிறவிப்பயனின் புண்ணிய செயல் வழியாகப் பிதிர் கடன்களது அத்தியாவசியத்தை எடுத்துக் கூறிநிற்கிறது.
25

Page 17
- கந்தபுராண கவிமலர்கள் - ஈழத்துப் பூர்வக் குடிகள் பரதேசப் பறங்கியர்களது வருகைக்கு முன்பிருந்தே சுகமாக வாழ்ந்து காட்டினர். மரபு வழிபிறழாது பரம்பரையைப் பேணி வளர்த்து ஆச்சிரம தர்மம் மூலம் வாழ்ந்தார்கள். காலக் கொடுமை
கலியுகத் தொல்லை, மேல்நாட்டு நாகரீகம் மாயா சக்தி வாதம் அன்னியரது சகவாசம் என்பன சைவச் சான்றோர்கள் அனேகரை மெல்லமெல்லத் தமக்குள் சமித்துவிட்டன. பலர் தகுந்தவனாகவும், தகாதவனாகவும் வாழவும் முற்பட்டனர். பசுவில் புல்லிலிருந்து பால் உண்டாகிறது இத்தகைமையால் வாழ்பவர்கள் தகுதியானவர்கள். பாம்பு பாலிலிருந்து நஞ்சை உண்டாக்கிறது. இத்தகைமையால் வாழ்வோர் தகுதியற்றவர்கள். தகுந்தவர்கள், தகாதவர்கள் என்ற இரு சாராருக்குமிடையே தகுந்தவனாகவும், சான்றோராகவும் ஆலயங்களின் சுற்றாடல்களில் பலர் வாழ்ந்தாலும் அப்போதும் உலோகாயதம் அவர்களைத் தொற்றினிற்க வசதிகொண்டது. தகுந்த சைவமரபினர் இன்றும் தம் குலாசாரம், கல்வியாச்சாரம், வர்ணாச்சாரம், பரம்பரை என்பவற்றைப் பேணி சைவ உலகைக் காப்பாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவ்வாறான குடும்பத்திலேதான் சான்றோர் வரிசையில் வாழ்ந்து காட்டினர் பலர். அனேகள் பண்போடும், பக்தியோடும் ஆசாரத்தோடும் வாழ்ந்து தமது குலப் பெருமையை நிலைநாட்டினர். ஊருக்கோர் அணிகலமாகத் திகழ்ந்தனர். சைவர்கள் தெய்வ நம்பிக்கையில் அசையாத பற்று கொண்டு நன்கொடைகளால் கைக்கும், பெரியோர்களைப் பேணித் தலைக்கும் உண்மைபேசி முகத்திற்கும், பராக்கிரமத்தால் புஜங்களுக்கம், நல்லொழுக்கத்தால் மனதிற்கும், நல்ல ஸ்தோத்திரம் இதிகாச புராணம் கேட்டதால் செவிக்கும், இவ்வாறானவற்றை, அழகு சாதனங்கள் கொண்டும் அருமையான சைவ மக்களாக எம்முன்னோர் வாழ்ந்தனர். இன்று இந்த அருமையான செல்வங்கள் எம்மிடமிருந்து அகல்கிறது பிறமதத்தினரது சகவாசமும், அவர்களது செய்கைகளும் நோயாக தொற்றி உலோகாயத சர்பில் மனிதனை ஈடுபட ஏவினிற்கிறது. இதிலிருந்து விடுபட நாமனைவரும்
எமது மூதாதையர்களை நினைவு கொள்வதவசியம்.
சைவ சமயிகள் அனைவரும் சரியை கிரியைகள் மூலம் சாலோகத்தையும், கிரியைத் தொழில் மூலம் சாமீபத்தையும், யோகத் 26

- கந்தபுராண கவிமலர்கள் -
தொழில் மூலம் சாரூபத்தையும், ஞானத்தின் மூலம் காயுச்சியத்தையும் அடைவரென்று சிவாகமத்துணிவு. இவையனைத்தையும் ஒருமித்து பெறும் மார்க்கமாகவே தந்தை தாயாரைக் குறித்து அவர்களது ஞாபகமாக அமாவாசை, பெளர்ணமி விரத தர்ப்பணம், சிரார்த்தம், மஹாளயமாகிய பிதிர் கர்மங்களைத் தவறாது இயற்றல் வேண்டுவது முக்கியமெனவும் சிவாகமம் அறியத்தருகிறது. இவ்வுலகை விட்டுப் பிரிந்தவர்களிற்காக நடாத்தப்படும் ஆராதனைகளே பிதிர் கர்மாக்கள் எனப்படும். வேத சிவாகமங்கள் இதிகாசங்கள், புராணங்கள் அனைத்தும் பிதிர் தர்ப்பன மகிமைகளைக் கூறி அதை தவறாது ஆற்ற வேண்டுமென எமக்கு ஆனையிடுகின்றன. பிதிர் தர்ப்பனங்களால் பூமிகூட யௌவனமடைகிறதாம். இன்றும் ஆலய கும்பாபிஷேகம், மற்றம் ஆலய கள்மாக்களில் அந்தணர்கள் உலகம் உய்யும் பொருட்டும் இறந்தோரது ஆத்மசாந்திக்கும், ரிஷிகளின் ஆசிக்கும் தர்பண கர்மாக்கள் செய்வதை நாமறிவோம். இவ்வாறான தர்பண காரியங்களை முன்னெடுத்து அனைவரும் இப்பூமியைக் காப்பாற்றுவதோடு தத்தம் குலம் நிறைவுடன் செழித்து வாழ முயன்று பிரார்த்தியுங்கள் என்றும் வேண்டினிற்கின்றோம்.
“புத்” என்ற தாதுவிலிருந்துதான் “புத்திரன்” என்ற பதம் உண்டானது. இறந்தோர் தாம்தாம் செய்த கன்ம வினையின் காரணமாக நரகத்திலும் சேர்ந்திருப்பார். உயிர்கள் உடம்பைவிட்ட பின் சூக்கும சர்வத்தோடு யமலோகஞ் சென்று பிரமதண்டம் பெற்றுத் தான் செய்த கன்மங்களை விளங்கி அதற்கேற்ற போகங்களை அனுபவிக்கும் பொருட்டுத் தென்பூமியில் உள்ள எண்கோடி பிதிர் தேவர்களுள்ளே ஒரு வகுப்பினரிடத்தில் தனது அதிகாரத்தைக் கொடுத்து "ஒ பிதிர்களே! என்னை நினைத்து எனது புத்திரர்கள் அல்லது எனக்கு இசைந்தவர்கள் செய்யுங் கர்ம பலனைப் பெற்று, எனக்குரிய பாகத்தை நான் எங்கு பிறவியெடுத்திருப்பினும் அங்கே அவன், அவள், அது முன்னிலையாகப் பெறும்படி உதவுங்கள்” என்று புத்திரர்களை நம்பி ஒப்புவித்து உத்தரவு பெற்றுச் செல்லுகிறது. இதனால் இறந்தோர் எங்கு பிறப்பெடுத்திடினும், பாவங்கள் நீங்கி, வேதனைகள் அகன்று நல்ல பேற்றைப் பெற்று மீண்டும் மீண்டும் பிறந்து மரணமடையாத நிலையைப் பெற்று தமக்கு ஆற்றிய புண்ணிய கர்மாவால் அவற்றைச் 27

Page 18
- கந்தபுராண கவிமலர்கள் - செய்தவர்களும் செய்வித்தோரும் எந்நாளும் சுகமாக வாழ வேண்டுமெனவும் ஆசீர்வதிப்பார்கள். பிதிர் தேவதைகளும் எம்மை அனுக்கிரகிப்பர். இது உண்மை ஆறுமுகநாவலர் கூட பிதிர்கர்மங்களைத் தவறாது செய்யுங்கள்
என வேண்டியுள்ளார்.
5000 ஆண்டுகளாக சைவர்கள் தத்தமது பிதிர்க்கடன்களை இடைவிடாது ஆற்றியே வருகிறார்கள். இப்போது இத்தர்மகாரியம் அருகி வருவது போல் தெரிகிறது. பிதிர்கர்மாக்களை இயற்றும் புண்ணிய தீர்த்தக்கரையோரங்களும், மூர்த்தி, தல விசேஷங்கள் கொண்ட ஸ்தலங்களிளும் சைவர்கள் அணுக முடியாதவாறு அந்நியர் ஆக்கிரமிப்பினால் தடையாகிவிட்டது. இவ்வாறு விசேட புண்ணிய ஸ்தலங்களை இடித்துத்தள்ளியும் தீர்த்தக்கரைகளை ஆக்கிரமிப்பு செய்தாலும் சைவசமயிகளாகிய நாமனைவரும் நாயன்மார்கள் காட்டிய வழியினின்று எமது பிதிர் கடன்களை எங்கெங்கு வசதிகள் உண்டோ அங்கேனின்று துணிந்து எமது பிதிர்கர்மாக்களை சிரத்தையோடு ஆற்றவேண்டியதவசியம்.
உத்தராயண காலத்தில் சிவராத்திரி அமாவாசையும், தகூழிணாயன காலத்தில் ஆடி அமாவாசையும் பிதிர்களுக்குரிய மிகமிக விசேஷமான தினங்களென சிவாகமங்கள் எடுத்துக் கூறுகின்றன. ஆடி அமாவாசை வட ஈழத்தின் கேந்திர ஸ்தலமான மாவைக்கந்தனின் தீர்த்ததினமாகும். இதில் நகுலேஸ்வரத்தில் கண்டகி சமுத்திர தீர்த்த மகிமையும் கொண்டதாகும். பிதிர் கடன்கள் நிறைவு செய்ய அருளப்பட்ட தீர்த்த தினமுமாகும். இரு அயனங்களில் வரும் இரு அமாவாசை தினங்களும் மிகுந்த மேன்மையுடையதாகும். உயிர்ச்சத்துக்கள் நிறைந்த அம்ஸங்களையும் இத்தீர்த்த தினங்கள் மனிதனுக்கு இணைத்துவிடுகிறது.
இந் நாட்களில் பரமசிவம் தீர்த்தக்கேணி, ஆறு, குளம், சமுத்திரம்
எனும் இடங்களில் திருவுலாக் கொண்டு எழுந்தருளி ஆன்மாக்களுக்கு
அருள் செய்யும் திருவருளும் ஆங்கு கூடினிற்கும். அஷ்ட மூர்த்திகளுள்
"பவன்" எனும் திருநாமங்களையுடைய சிவனது வல்லமையாகிய சியேட்டை 28

- கந்தபுராண கவிமலர்கள் - சலருபமாக அமைந்து தன்னை அடைந்து தரிசித்து ஆசமித்து சங்கல்ப ரூபமாக தீர்த்த ஸ்னானஞ் செய்து பிதிர் கர்மானுஷ்டங்களைச் செய்த அடியார்களது பிறவிகளாகிய வெப்பத்தை நீக்கித் தன்னிடத்தில் அமிழ்ந்தச் செய்து தத்துவாதீதராய் விளங்கும் சிவத்துடன் அவர்களைக்
கூட்டுவிக்குமென சிவாமங்கள் விளங்க வைக்கின்றன.
“இத்தரு கடவுட் சாறு நோக்கியங் கிறைஞ்சுவோரும்
அதற்கு விழவினிற்றித் தீர்த்த நீராடுவோரும் பைத்தபாம் பல்குற் செவ்வாயப் பனிமொழி யொருபான்மேய வித்தகன் கயிலை நண்ணி விறந்த கண நாதராவார்”
(காஞ்சிப்புராணம்) ஈழத்தின் சைவப்பெருமக்களே!
உயர்ந்தாலும், தாழ்ந்நதாலும் நாம் சைவர்களாகவே வாழ வேண்டும். 5000 ஆண்டுகளுக்கு எமது அனுஷ்டானங்களை துணிந்து தொடர்ச்சியாக நடாத்தி நிலை பெற்று வருவது கண்கூடு. கால வினோதங்களால் வரும் துயரங்களும் துன்பங்களும் கஷ்ட நஷ்டங்களும் வந்து கொண்டேயிருக்கும் நாம் மனம் தளராது இவற்றினை எதிர்த்து “எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே, அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து செழித்ததும் இந்நாடே” என்று தாம் பிறந்த புண்ணிய பூமியின் புகழ் பாடிய கவி பாரதியின் வழியை பின் பற்றி எங்களது நாடு செழிக்க நாம் உய்ய, எமது மக்கள் இன்புற்று வாழ சைவம் தழைத்தோங்க நாமனைவரும் மாசி சிவராத்திரி, ஆடி அமாவாசை இவைகளிலாவது எங்கெல்லாம் வசதிகள் உண்டோ அங்கெல்லாம் அமாவாசை சங்கல்ப தீர்த்தஸ்னானம் செய்து பிதிர்தர்ப்பன கர்மாக்கள் என்பவற்றைத் தவறாது இயற்றி சிவபெருமானின் திருவருளுக் காளாகுவோமாக. சைவசமயிகளது வாழ்வு தெய்வீக வாழ்வாக அமைந்து சிறப்போடு அவர்கள் வாழ தினமும் பிரார்த்திக்கும் அந்தண சிரேஷ்டர்கள் கூட தத்தமது தர்பணகாரியங்களில் கூட
“ஏஷாம் ந மாதா ந பிதா ந ப்ராதா ந ச பாந்தவா:
29

Page 19
- கந்தபுராண கவிமலர்கள் -
தே எoர்வே திருப்தி மாயாந்த மயோத் ஸ்ருஷ்டை குசோதகை: என எவர்களுக்கு தாயோ, தந்தையோ, நண்பர்களோ, தாயாதிகளோ, பந்துக்களோ தர்ப்பணஞ்செய்ய இல்லையோ அவர்கட்கெல்லாம் எனது தர்ப்பணத்தில் என்னால் இத்தர்ப்பைகள் மூலம் விடும் தர்ப்பண தீர்த்தம் மூலம் திருப்தியடையட்டும். என தர்ப்பைக் கூர்ச்சத்தின் மூலம் தர்ப்பணம் செய்யும் புண்ணியத்தையும் ஆற்றுகிறார்கள்.
பறங்கியரும் ஒல்லாந்தர்களும் ஈழநாட்டு சைவர்களையும் துன்புறுத்திக் கொன்றும் சைவாலயங்களை இடித்து அதன் மேல் தமது கிறிஸ்துவ ஆலயங்களை எழுப்பியும் சைவக் கலாச்சாரங்களை அடியோடு அழித்தும் சைவர்களை இல்லாதொழிக்க அயராது முயன்றனர். இன்று அந்த அனியாய துஷ்டர்கள் எங்கே. தத்தம் நிலையில் அமைதியாக அடங்கி இறைவனை நினைத்து ஆராதித்தனர் சைவர்கள். இதன் பயனால் வீறு கொண்டெழுந்தது சைவம். இருந்தும் அப்பறங்கியரது வழித்தோன்றல்கள் இன்றும் எம்மிடையே நச்சுக் கிருமிகள் போன்று வாழ்ந்து கொணி டு மேற்கத்தைய குருசாமி ஆசாமிகளை இங்குவரவழைத்தும் மாயாவாத போதனைகளைப் பரப்பியும் உலோகாயத வாழ்வினை புகுத்தியும் அருமையான சைவ சமயத்தையும் சைவர்களையும் இல்லாதொழிக்க அம்ஸடக்கமான மிலேச்சச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.இவற்றினை அடிசாய்க்க சைவர்களாகிய நாமனைவரும் எம்மை இரட்சித்தருளும் சிவசின்னங்களான வீயூதி கொண்ட நெற்றியுடனும் உருத்திரகூடி மாலை கொண்ட கண்டத்தோடும் சிவ சக்திமயமான வேட்டி சால்வையோடு இணைந்த உடலோடும், மகளிர் திரெளபதிக்கு கிருஷ்ண பரமாத்மா அருளி வழங்கியதுபோல சேலைவகைகளோடும் காட்சி கொடுத்து சிவதர்மங்களையும், ஆச்சிரம தர்மங்களோடு இணைந்த கர்மாக்களையும் சைவக்கலாச்சாரங்களையும் முன்னெடுப்பின் நாமும் இறையருள் பெற்று அருமையான சிவபூமியாக எமது இந்தப் பூமியை வளர்த்து நாமிருக்ககும் நாடு நமதே என்ற பாரதியாரது வேதவாக்கிற்கமைய வாழ முடியும். அவ்வாறு வாழவே நாமனைவரும் சங்கற்பிப்போமாக.
- சுபமஸ்து -
30


Page 20