கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நினைவு மலர் (காந்தி வேலாயுதபிள்ளை)

Page 1
醫腳
홍 影 ܚ ܕ 器 கடவுள் தி |繼 ဌိဝံ့၊
J9 LDU
காந்தி வேலா!
அவர்கள்
நினைவு
வெளியி
அகில இலங்கைக் கா திருக்கோணமை
ESRB
 

|× |× 翌圈圈圈圈圈圈圈圈圈
涩器圈圈圈圈圈圈
密
密E
密
辨?•}= 器引 3* s; 密臼= No 密3凤 密|-历V河邬倩 圈#开山,q=|-如 静默

Page 2

சி. க. வேலாயுதபிள்ளை
(தலைவர், அகில இலங்கைக் காந்திசேவா சங்கம், காந்தி நிலையம், உருத்திரபுரம், கிளிநொச்சி.)
அவர்களின்
நினைவு மலர்
III-04-1994
வெளியீடு அகில இலங்கைக் காந்திசேவா சங்கம் திருக்கோணமலைக் கிளை
முத்துக்குமாரசுவாமி கோயிலடி, திருஞானசம்பந்தர் வீதி, திருக்கோணமலை,

Page 3

திரு. சி. க. வேலாயுதபிள்ளை cD Cy) அவர்கள் ' (ဟိန္m ကိုကု(? \ooorgo, ჯ\ \O \ \ Cl9ბმზ \, l, 1913

Page 4

6.
கடவுள் துணை
ஓராண்டு நிறைவு அஞ்சலிக் கூட்டம்
அமரர் காந்தி வேலாயுதபிள்ளை
அவர்கள் (சி.க.வே) SLS LkekL0LK0KOLLSSSSSSSSeSGGOLLLLLLLL0LLLLLLLeeeTeS eSS
அன்புடையீர்!
அகில இலங்கைக் காந்தி சேவாசங்கத்தின் ஸ்தாபகரும் தலைவருமான அமரர் திரு. சி. க வேலாயுதபிள்ளை
அவர்களை நினைவு கூர்ந்து,
ஓராண்டு நிறைவு அஞ்சலிக் கூட்டமும், நினைவு மலர் வெளியீடும் எதிர்வரும் 11-4-1994 திங்கட்கிழமை பிற்பகல் 5.00 மணிக்கு
திருக்கோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் மகேஸ் வரி மண்டபத்தில் நடைபெறும்.
நிகழ்ச்சிகள்
கூட்டுவழிபாடு: தி. மா. இ. இ. பேரவை மாணவர்கள்
காந்தீயப் பாடல்கள்: தெட்சணகானசபா மாணவிகள்
தலைமையுரை: ஞானசிரோன்மணி பண்டிதர்
திரு. இ. வடிவேல் அவர்கள்
மலர் வெளியீடு: திரு. அ. சிவலோகநாதன் அவர்கள்
முன்னாள் அதிபர், கோணேஸ்வரா இந்துக்கல்லூரி

Page 5
முதற் பிரதி பெறுபவர்: திரு. கா. விநாயகசோதி அவர்க
அதிபர், குறளமுதம், திருக்கோணமடிை
பேச்சு: மகாத்மாகாந்தி
செல்வி. சிவச்செல்வி செல்வரத்தினம் அவர்கள்
விக்நேஸ்வர மகா வித்தியாலய
அஞ்சலி உரைகள்:
தொண்டர் இ. சண்முகராசா அவர்கள் இளைஞர் அருள்நெறி மன்றம் திருகோணமலை திரு. வே. ஜீவராஜ் அவர்கள்
மாகாண இணைப்பாளர், சர்வோதய மாகாணர்
தலைமையகம் திருக்கோணமலை
திரு. செ. சிவபாதசுந்தரம் அவர்கள் மதிப்பார்ந்த பொதுச் செயலாளர் தி.மா.இ.இ. பேரண்
நன்றியுரை: திரு. பொ. கந்தையா அவர்கள்
காந்தி ஆசிரியர்
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
முத்துக்குமாரசுவாமி கோயிலடி இவ்வண் திருஞானசம்பந்தர், வீதி அகில இலங்கை காந்தி சேவாசங் திருக்கோணமலை இருக்கோணமலைக் கி

பெ ாருளடக்கம்
விடியம் m பக்கம்
வாழ்த்துரை
குன்றக்குடி அடிகளார்
வாழ்த்துச் செய்தி 2
பூரீமத் சுவாமி ஆத்மகனானந்தாஜி
ஆசியுரை SSSS 3
பூமத் சுவாமி கணேசானந்த மகாதேவ சுவாமிகள் காந்திஜியின் அடிச்சுவட்டில் 4
தொண்டர் இ. சண்முகராசா
APPRECATION 5
Dr. A.T. Ariya ratne
உயர்மதிப்பீடு 7
கலாநிதி ஏ.ரி. ஆரியரத்ன
கர்மவிரர் காந்தி வேலாயுதபிள்ளை 10
கலாநிதி க. கனகராசா ஜே.பி மில்க்வைற் திரு.சி.க. வேலாயுதபிள்ளையும் காந்தீயக் கொள்கையும் 12
திரு. R. கந்தையா BA அன்பகம் கொக்குவில்
காந்தீயத்துடன் ஐந்து ஆண்டுகள் 22
பண்டிதர் அ. ஆறுமுகம்
எமது இதய அஞ்சலி 26
பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி
காந்தீயப்பழம் 27
திரு. நாகராசா கணபதிப்பிள்ளை

Page 6
தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் திரு. அ. சரவணமுத்து BA
காந்தியப் பெரியார் அமரர் வேலாயுதபிள்ளை
செல்லப்பா சிவபாதசுந்தரம்
அமரரின் பணி மீண்டும் தொடரும்
பண்டிதை பொ. பாக்கியம்
சேவையின் சிகரம்
திரு. ந. புவனேந்திரன்
காந்தி வேலாயுதபிள்ளை
திரு.பொ. கந்தையா காந்தி ஆசிரியர்
பெருந்தகைப் பெரியண்ணா
திரு. நா. சோதிநாதன், அதிபர்
திரு. சி. க. வேலாயுதபிள்ளையின் கட்டுரை
மகாத்மா காந்தியடிகளின் அருள் மொழிகள்
சர்வோதய பிரதிக்கிஞை
 

6. இசிவ சிவ தன்கடன் அடியேனையும் தாங்குதல் என்கடன் பணிசெய்து கிடப்பதே
தவத்திரு குன்றக்குடி
orr- T-Str awrA - , 8 தமிழ் நாடு குனறககுடி அடிகளாா 26-05- 93
வாழ்த்துரை
நம்முடைய தலைமுறையிலும் காந்தீயத்தை நினை வூட்டும் நிலையில் ஒருவர் வாழ்ந்தார். எளிமை; சட்டை அணியாத திருமேனி; கவடு இல்லாத நெஞ்சம்! சிரித்த முகம்! இனியபேச்சு அயரா உழைப்பு! தொண்டு தூய கதரே உடுத்திய அழகு! சர்வோதய சமுதாயம் காண்பதில் ஈடுபாடு கனவிலும் வன்முறை நினையா இயல்பு வன் முறைக்கு எதிர்ப்பு இவ்வளவு இலக்கணமும் பொருந்தி வாழ்ந்தவர் காந்தி வேலாயுதபிள்ளை
நல்ல மனிதர், பழகுதலுக்குரிய பண்பாளர், உளம் கொள உறவு நலம் காட்டுபவர் இலங்கையில் மாறி மாறிச் சுடும் துப்பாக்கிகள் அவரைச் சுடவில்லை. ஆனால், காலன் எடுத்துக் கொண்டான். துப்பாக்கிக் கலாசாரம், வன்முறை தாண்டவமாடும் இலங்கைக்கு காந்தி வேலாயுதபிள்ளை பயன்படமாட்டார் என்று எண்ணி எடுத்துக்கொண்டானோ?
அமரர் காந்திவேலாயுதபிள்ளை ஒரு மனிதர்! Dmt LD6of
தர்! அவர்புகழ் வளர்க! வாழ்க! அவர்தம் வழியில் பணி களைச் செய்வோமாக!
அடிகளார்
* திருக்குறளே நமது பொது மறை * திருமுறைகளே நமது மறை *

Page 7
ஒம் வாழ்த்துச் செய்தி
ශක්‍යුහුස්‍යභුද්දාදං)
பூனிமத் சுவாமி ஆத்மகனானந்தாஜி அவர்கள் இராமகிருஷ்ண மிஷன், கொழும்பு.
இன்றையூ லெளகிக உலக சூழலிலே பொய்யும், சுயநலமும், பதவி மோகமும் தலைவிரித்தாடும் காலகட் டத்திலே, கரந்தி வேலாயுதபிள்ளை போன்ற இலட்சிய மனிதர்களை நினைவு கூரல் மிக்க பயனுள்ள காரியமாக அமையும். ×
அகில இலங்கைக் காந்தி சேவா சங்கத்தை ஸ்தாபித்த திரு. வேலாயுத பிள்ளையவர்க்ள் தனது கடைசி மூச்சுவரை காந்தீயவாதியாக வாழ்ந்தது நழுது அனைவருக்கும். ஒடு எழுச்சியைத் தரும் விடயமாகும்.
சைவமும் காந்தீயமும் அவரது இரு கண்களாக அமைந்திருந்தன. சதாமக்கட்சேவையில் தன்னை அர் Lù பணித்திருந்த அவரைப் போற்ற நாம் என்றும் கடமைப் பட்டவர்கள் அத்தகைய் இலட்சிய மனிதர்களைக் காண்பது மிக அரிது இன்றைய இளைஞர்களுக்கு அவர் ஓர் நல்ல எடுத்துக்காட்டு. هم"
அவரது முதல் ஆண்டு அஞ்சலி மலருக்கு எனது அன்பையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது நினைவைக் கொண்டாடும் அன்பர்களுக்கும் எனது வணக்கத்தையும், பாராட்டுதல்களையும், அர்ப்பணிக்
கிறேன்.

-س- 3 -س--
ஒம்
ஆசியுரை
பூனிமத் சுவாமி
கணேசானந்த மகாதேவ சுவாமிகள்
மகாதேவ ஆச்சிரமம், கிளிநொச்சி.
£Ꭷ ଗଅଁ (ର o e V « தொண்டு சய்தவர் சீவன் முத்தரே என்னும் யாழ்ப்பாண
த்துச் சிவயோக மகா முனிவரின் தற்சிந்தனைக்கமைவாக
*******************r...............
உல்கியலில் தன்னலமற்ற பன்முகப்பட்ட பற்பல சேவை களைச் செய்தும் செய்வித்தும் கண்கூடாகப் பிரட்தியட்ச மாகச் சமூகத்திற்கும் சைவசமயத்திற்கும் தொண்டாற்றிய புண்ணிய புனிதராம் உயர்திரு சி.க.வேலாயுதபிள்ளை அவர்களின் சேவையை விதந்து வருங்காலம் வாழப்போகும் நடமாடும் தெய்வங்கட்கு நினைவுபடுத்தும் நோக்கமாக ஞாபகார்த்த மலர் அச்சுவாகனமேறி வெளிவருவது அறிந்து இறும்பூதெய்துகின்றோம். - -
இல்ங்கையில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் வட நாட் டிலும் அவர்கள் பணி பரவியுள்ளது அங்குள்ள பல பெரியோர் களும் அவரைப் போற்றி, வாழ்த்தி வணங்கினார்கள். ஆகவே - திருக்கோணமலை அன்பர்கள் வெளியிடும் மலர் நறுமணங்கமழ எமது நல்லாசிகளைத் தெரிவித்துக் கொள் கின்றோம்.
மங்களம் ஜெய மங்களம்

Page 8
- 4 -
Ø.
காந்திஜியின் அடிச்சுவட்டில் நம்மவர்
தொண்டர் இ. சண்முகராசா இளைஞர் அருள் நெறிமன்றம், திருக்கோணமலை.
தர்மத்தின் நீதியையும் மாட்சிமையையும், மனிதாபி மான ஆன்மநேய ஒருமைப்பாட்டினையும் வலியுறுத்தி உபதேசித்தருளிய ஞானிகளின் அடியவர்கள் எண்ணற்றோர். இவ்வடியவர்களின் எண்ணங்களையும், எண்ணிக்கைகளையும் இனம், மதம், மொழி, நாடு, சாதி என்கின்ற சுவர் களுக்குள் அடக்கிவிட முடியாது. காரணம் என்ன? தர்ம நீதியின் அடிச்சுவடே இத்தனை ச் சிறைச்சுவர்களையும் கடந்து கருணையின் புனித இருப்பிடமாகிய இறைவனின் விண்ணரசின் மாட்சிமையில் மாண்பு பெற்றுள்ளமையே.
இப்படியான அடிச்சுவட்டின் மாட்சிமையில், இறை வனின் கருணையையும், மனிதகுலத்தின் ஆன்மநேயத்தையும் அமைதி வாழ்வுக்குச் சாந்தியளிக்கும் மனித குலச் சுதந்திரத் தையும். தேடித்தந்தவர் மகா உத்தமர் காந்தியடிகள் என்பது மண்ணரசும் விண்ணரசும் கண்டு களித்துள்ள பேருண்மை.
இப்படியான பேருண்மையின் விளக்கத்துக்கு அமைந்து காந்தீயத்தின் அடிச்சுவட்டில் வாழ்வுப் பயணஞ் செய்தவர், வாழ்ந்தவர், வளர்ந்த வர் தான் நமது காந் தீயம் சி. க. வேலாயுதபிள்ளை ஐயா அவர்கள். மகாத்மாகாந் தியின் அடிச்சுவட்டின் நெறி நின்று உண்மைக் காந்தீயத்தின் உத்தம அ டிய வர ாக விளங்கியவர்; பணியாற்றியவர். பணிகள் மூலம் பல்லாயிரவரின் பசியைப் போக்கியவர். மனிதப் பண்பினை தனித்து நின்று நிலை நிறுத்திய தீரர். காந்தியத்தின் தேசியவாதி. அன்னாருக்கு மனிதகுலம் என்றென்றும் நன்றியுடையதே.

- 5 -
APPRECIATION
DR. A. T. Ariyaratne
President, Sarvodaya - Sri Lanka.
Shri S. K. Velauthapillai was a unique personality. One had to see him only once and he will be ever remembered. He was dressed in a brown Kadi Vetti and a towel and a cloth sling thrown over his bare bodied shoulder. His baldhead and the few hairs he had at the back, tied into a small knot gave one the impression of a Sadhu and truly he was a Sadhu amongst us ordinary laymen.
It was in the mid 1950s that I got to know him. He was an active member of the Gandhi Sewa Sangam and held different offices in the organisation. His Ashram in Kilinochchi where he looked after dozens of orphaned children was the place that Sarvodaya workers from the South and North used frequently before the unfortunate outburst of violence took place in that part of the country. He was a true Gandhian
whoma I was fortunate 1 come across in Sri Lanka. He spent every minute of his life to serve his fellow human beings. He was a
familiar figure in all social programmes not only in the Neth but also in the Sarvodaya villages.jn (the South.
i
When in Vavuniya in 1984 a great, tragedy: took place where the Sarvodaya Field Co-ordinator Káthiramalai and his family were killed, Mr Velauthapillai who was on the spot walked across fires and lived to tell the story. Nothing deterred him to continue his Gandhian service to the end of his life.

Page 9
- 6 -
He may have been the only Sri Lankan to have participated in all the Annual Sarvodaya Sammelana in India from the time of Mahathma Gandhi until he passed away after a long illness. During the last few years of his life all we could do was to attend to his needs in the best possible way. As a member of the Sarvodaya Elders' Council and a Co-ordinator in the Kilinochchi District he performed yoeman service to inspire the younger people on Gandhian ideals of sacrificial service. The humane and friendly side of Shri Velauthapillai was such that he used to bring me my share of the mangoes every season from his Kilinochchi Ashram from a tree that he got me to plant in 1960s.
In a funeral palour in Colombo when F last saw Shri Velauthapillai and paid my last respects to him the thought that came to my mind was ' ' Here lies the remains of a great human being. His heart and mind were light as he carried no burdens of caste, race, religion, national boundaries or material possessions. Long before he left the physical world he had already cast aside everything that would have hindered his path to the bliss of eternity. What a fortunate man' '. May the memory of Shri Velauthapillai inspire us to greater heights of service to humanity and the living world.
 

- 7 -
உயர் மதிப்பீடு
கலாநிதி ஏ.ரி. ஆரியரத்னா அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்
தலைவர், சர்வோதயம், பூணிலங்கா,
திரு சி. க. வேலாயுதபிள்ளை அவர்கள் ஒரு ஒப்பற்ற மனிதராக வாழ்ந்தவர். ஒருவர் அவரை ஒரு தரம் பார்த் தாலே போதும், அவர் எப்பொழுதுமே ஞாபகத்துக்குரிய வராகிவிடுவார். அன்னார், ஒரு பழுப்பு நிற கதர் வேட்டியும் திறந்த மேனியின் தோளில் பரந்து தொங்கிகொண்டிருக்கும் சால்வையும் அணிந்தவராகவே இருந்தார். அவருடைய வழுக்கையான தலைக்குப்பின்னால் இருந்த சிறுமயிர்கள் குடுமியாக கட்டப்பட்டிருக்கும் நிலைலையைப் штid:6)6irp ஒருவருக்கு, அவரை ஒரு சாது என்ற எண்ணத் தையே தரக்கூடியதாக இருந்ததோடு மட்டுமல்லாமல், உண்மை யிலேயே எம் போன்ற சாதாரண மக்களுக்கு முன்னால் அவர் ஒரு சாதுவாகவே இருந்தார்"
1950ம் ஆண்டின் நடுப்பகுதியில் தான் எனக்கு அவ ரைத் தெரிந்து கொள்ளக் கிடைத்தது, அவர் காந்திசேவா சங்கத்தின் ஒரு சுறுசுறுப்புள்ள அங்கத்தவராக இருந்து அச் சங்கத்திலுள்ள வேறுபட்ட பதவிகளையும் வகித்தார். கிளிநொச்சியில் இருந்த அவரது ஆச்சிரமத்தில், எத்தனையோ அனாதைக் குழந்தைகள் அவரினால் பராமரிக்கப்பட்டு வந்த இடத்திற்கு, துர்ப்பாக்கிய வசத்தினால் அந்தப்பகுதியில் ஏற். பட்ட வன்செயல்களுக்கு முன்புள்ள க்ாலங்களில், தெற்கிலும், வடக்கிலுமிருந்து சர்வோதய சேவகர்கள், அடிக்கடி போய்
வந்து கொண்டிருந்தார்கள் எனக்குக் கிடைத்த பெரும்

Page 10
- 8 -
பேறானது, ஒரு உண்மையுள்ள காந்தீய சேவகனை, அப்படி யான ஒருவரை பூரீ லங்காவிலேயே கண்டு கொள்ளக் கிடை த்தமைதான். அவர் தன் வாழ்நாளில் ஒவ்வொரு நிமிடத் தையும் தன் சக மனிதவர்க்கத்தினருக்காக அர்ப்பணித்துக் கொண்டிருந்தார். அன் னார் எல்லா சமூக சம்பந்தமான நிகழ் ச்சிகளிலும், வடக்கில் மட்டுமல்ல தெற்கெங்கிலுமுள்ள சர்வோதயகிராமங்களிலும் நடைபெறுகின்றநிகழ்ச்சிகளில் கலந்து, நன்றாக இனம்கண்டுகொள்ளக்கூடிய ஒருவராகவே இருந்தார். -
1984ம் ஆண்டு, வவுனியாவில், சர்வோதயத் துறையின் இணைப்பதிகாரி கதிரமலையும் அவரது குடும்பத்தினரும் கொல்லப்பட்ட ஒரு மாபெரும் துக்ககரமான நிகழ்வின் போது, கொலை நடைபெற்ற இடத்திலேயே பிரசன்னமா யிருந்து, துப்பாக்கி வேட்டுக்கள் பாய்ந்து கொண்டிருந்த வண்ணம் இருக்கும் போதே திரு. வேலாயுதபிள்ளையவர்கள் அந்த இடத்திலிருந்து அவற்றினூடாகவே நடந்து சென்று, அந்தக்கதையைச் சொல்வதற்காகவே வாழ்ந்த ஒருவராவார். அவருடைய வாழ்வின் முடிவுகாலம் வரை, எந்த ஒரு சக்தியும் அவர் தொடர்ந்து செய்து கொண்டிருந்த காந்தீய சேவைக்கு இடைஞ்சலாயிருக்கவில்லை
மகாத்மா காந்தியின் காலம் தொடக்கம் இந்தியாவில் நடைபெற்ற எல்லா ஆண்டு நிறைவு சர்வோதய சம்மேளனங் களிலும் (நீண்டநாட்களாக சுகயினமாயிருந்து இவ்வுலகை விட்டுப் போகின்றவரைக்கும்) பங்குபற்றிய ஒரே ஒரு இலங் கையைச் சேர்ந்த நபர் இவர் ஒருவராகத்தான் இருந்திருக்க வேண்டும் கடைசியாக அவர் வாழ்ந்த சில வருடங்களில் எங்களால் செய்யக்கூடியதாகவிருந்தது முடிந்தவரைக்கும் அவருக்கு வேண்டியவைகளை நன்றாகத் தெரிந்து செய்தமை யே. சர்வோதய முதியோர்கள் ஆலோசனைச் சபையின் ஒரு அங்கத்தவராகவும், அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தின்

- 9 -
இணைப்பாளராகவும் செயலாற்றி, காந்தியடிகளின் எண் ணங்களைப்பிரதிபலிக்கும் அர்பணிப்புச்சேவையில் இளை ஞர்களை ஊக்கத்துடன் உட்புகுத்தும் நோக்குடன் அளப் பெரிய சேவை ஆற்றினார். பூரீ வேலாயுத பிள்ளையின் மனிதநேயமும் அத்துடன் நட்பின் பிரதிபலிப்பும் எப்படிப் பட்டதாயிருந்ததென்பதற்கு அவர் தன்னுடைய கிளிநொச்சி ஆச்சிரமத்தில் 1960ம் ஆண்டில் என்னைக்கொண்டு நாட் டுவித்த மரத்திலிருந்து ஒவ்வொரு பருவகாலங்களிலும், என்னுடைய பங்கான மாம்பழங்களை எனக்கு கொண்டு வந்து தந்து கொண்டிருந்தமையே சான்றாகும்.
கொழும்பிலுள்ள ஒரு பிரேத மண்டபத்தினுள்ளே கடைசியாக நான் பூரீ வேலாயுத பிள்ளையைப்பார்த்து அன்னாருக்கு எனது இறுதி மரியாதையை செலுத்தியபோது என் மனதில் வந்துதித்த எண்ணமானது.
‘ஒரு உயர்ந்த மனிதப்பிறவியின் உயிரற்ற சடலம் இங்கே கிடத்தப்பட்டிருக்கின்றது. அவரது இதயமும் மனதும் பழுவற்றதாகவே இருந்தது ஏனெனில் அவர் எந்தவிதமான சாதி, இனம், சமயம், தேசாபிமான எல்லைகள் அல்லது உலகியல் சொத்துக்கள் முதலியவைகளைச் சுமந்துகெண்டி ருக்கும் பொறுப்புக்களை வைத்திருக்கவில்லை அவர் இந்த ஜட உலகை விட்டுப்போவதற்கு வெகுகாலத்திற்கு முன் பாகவே தான் சென்று அடையப்போகும் ஆனந்தத்துடன் கூடிய, நிலையான பாதைக்குத் தடையாகவிருக்கும் எல்லா வற்றயுமே ஏற்கனவேயே துறந்து விட்டார். எவ்வளவு கொடுத்து வைத்த மனிதன்”
பூரீ வேலாயுதபிள்ளையவர்களுடைய வாழ்நாள் ஞாப கங்கள் எங்கள் எல்லோருக்கும், மனித சமுதாயத்திற்கும் வாழ்கின்ற உலகிற்கும் உயர்நலமான சேவைகளைச் செய்
வதற்கு ஊக்கமளிக்கட்டும்.

Page 11
---- 10 س
.ெ
கர்ம வீரர் காந்தி வேலாயுதபிள்ளை.
(கலாநிதி க. கனகராசா ஜே. பி. மில்க்வைற் யாழ்ப்பாணம்)
பிறக்கிறோம், நாமும் நமது குடும்பமும் வசதியாக வாழவகை தேடுகிறோம் எமது இயல்புக்கு ஏற்பப் பிறருக்கு எவ்வகையில் நாம் உதவலாம், என்ற சிந்தனை எம்மிடம் பிறப்பதில்லை. 'கற்றபின் அதற்குத்தக நிற்க” என்று 'படித்ததெல்லாம் காற்றோடு காற்றாகக் கலந்துவிடுகிறது. வசதிகளை எமக்கு மட்டுமே பெருக்கிக்கொள்வதில் ஆர்வம் கொள்கிறோம் வசதிகள் பெருகப்பெருக நிம் மதியும் குறைந்து கொண்டே போகிறது. இந்தப்பின்னணியில் அமரர் காந்தி சி. க.வேலாயுதபிள்ளை வா ழ த் தெரியா த வர். மகாத்மா காந்தியடிகளின் போதனையாலும் வாழ்க்கை முறையாலும் ஈர்க்கப்பட்ட அமரர் வேலாயுதபிள்ளை அவர் களும் முழங்கால் உயரத்தில் வேட்டிகட்டி மேலுடம்பை ஒரு துண்டினால் போர்த்துக் கொள்வதுதான் அவருக்கு வசதியாகப் பட்டது. போதாதென்று காவியும் ஏ ற் றி க் கொண்டார். Y\,
தன் தேவைகளை ஒறுத்தார் பேச்சில் இதம் சேர்த்தார் அபலைகளையும் அநாதைகளையும் தோழமை கொண்டார் தன்னிலும்வசதி குறைந்தவர்களுக்கு வசதியளிக்க வ  ைக தேடினார் வளம்தேடி இடம்பெயர்பவர்கள் போலன்றி நலிந்தோரின் வளம்பேண இடம்பெயர்ந்தார். நீர்வேலியை விட்டு உருத் திர புரத்திற்குப் பெயர்ந்தார். ஆச்சிரமம் அமைத்தார். கஸ்தூரிபா இல்லம் அமைத்தார் - வாழ வழி காட்டினார்.

- 11 -
வன்னிப்பிரதேசத்தில் குடியேற்றங்களும் குடிப்பரம் பலும் ஏற்பட்டகாலமது. வெளியான இடங்களில்திட்ட மிட்டுப் பனைமரங்களை நட்டார் அவற்றின் பராமரிப்பில் கவனம் செலுத்தினார். அவை \ வளர்ந்து பயனளிப்பதைக் காணக்கொடுத்துவைத்தவர். எமது பனைவளர்ப்புமுயற்சிக்கு 三塾空 TG's தந்தார். விழாக்கள் ஒழுங்கு செய்து பனையின் பயனை மக்கள் உணர உதவினார். வரட்சிக்காலத்தில் தண்ணி ருக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டால் பாதிக்கப்பெற்ற கஸ்துரிபா இல்லத்தில் வற்றாது நீர் சுரக்கும் கிணறு ஒன்றை தோண்டு விப்பதற்கு அவர் மில்க்வைற் நிறுவனத்தின் உதவியை நாடி அதில் வெற்றியும் கண்டார்.
அமரர் வேலாயுதபிள்ளை அவர்கள் சர்வோதயத்தில் கொண்ட ஈடுபாட்டினால் தம்மை அவ்வியக்கத்துடன் இணைத்துக்கொண்டு தமது இறுதி மூச்சுவரை நலிந்தோரின் உயர்ச்சியிலும், தமது பணியின் வளர்ச்சியிலும் ஈடுபட்டார். சைவ வித்தியா விருத்திச்சங்கத்தினால் திருநெல்வேலியில் நடாத்தப்படும் சிறுவர் நிறைவாழ்வு இல்லம் அமரர் வேலாயுதபிள்ளை அவர்களை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்திருந்தபடியால் அவர் நினைவாக அவ்வில்லச் சிறார் களுக்கு மதிய போசனமளித்ததுடன் அஞ்சலிக்கூட்டமும் நடத்துவதில் மில்க்வைற் நிறுவனம் உதவியது.
மில்க்வைற் நிறுவனத்தின் பனை அபிவிருத்திக்குக் கைகொடுத்த அமரர் வேலாயுதபிள்ளை அவர்கள் நினை வாகப் பனையேட்டில் அவர் பெயரும், பிறப்பும், இறப்பும் அச்சிட்டு வழங்கி மகிழ்ந்தது மில்க்வைற் றுவனம்.
கர்மவீரர் காந்தி வேலாயுதபிள்ளை அவர்கள் காட்டிய பாதையில் பணியாற்ற யார் வருவார்?.

Page 12
- 12 -
-ه
o).
திரு.சி.க வேலாயுதபிள்ளையும்
འ w காந்தீயக் கொள்கைகளு
35(5.R. 3, b5) by T B.A. அன்பகம், கொக்குவில்
'யாழ்ப்பாணம் ஒரு மணற்றிடல், ஆறு இல்லை, பனைமரங்கள் தான் உண்டாகும்;” எனச் சிலர் நினைக்கி றார்கள். நீரூற்றுக்கள் நிறைந்த கிணறுகள், குளங்கள் நீர்வளத்தையும் தோட்டங்கள் செய்யக்கூடிய நிலங்களையும் யாழ்க் கமக்காரரின் கைவண்ணத்தையும் நல்ல நிலவளங்க ளையும் உண்டாக்குவதாகவும் பலர் பெருமைப்படுகிறார்கள், நல்ல உருசியான மாம்பழங்கள், பலாப்பழங்கள் மாத்திரமல்ல நல்ல பலவிதமான காய்கறிகளும், புகையிலை, திராட்சை யுங்கூடச் செய்கை பண்ணுகிற ஒரு இடமாக வடபகுதி விளங்குவதைப் புகழாதவர்களில்லை. நிலத்திற்குப் பெருமை தருவது ஆங்கு வாழும் மக்கள் என்பதுதான் எம் பழம் பெரும் தமிழ்க் கிழவி ஒளவையாரின் கருத்தாகும்.
நாடா கொன்றோ, காடா கொன்றோ அவலா கொன்றோ, மிசையா கொன்றோ எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே” எனக் கூறினார்.
யாழ்ப்பானத்தில் மிகப் பழைய காலந் தொட்டு நல்ல பெருமக்கள் பலர் வாழ்ந்துள்ளார்கள். “கல்வெட்டுச் சாத னங்கள் இல்லை’ எனக் கூறுப்வர்களுமுண்டு. அவைதான் தனிய ஒரு நாட்டுச் சரித்திரமல்ல. யாழ்ப்பானத்தில் கல் வெட்டக் கூடிய பெரிய கருங்கற்களுமில்லை. பழைய ஓலைச் சுவடிகளுண்டு. அவை நல்ல நூல்கள் பலவற்றைக் காட்டும் ஆரியச் சக்கரவர்த்திகள் காலம் முதல் ஐரோப்பியர் வரும் வரை திண்ணைப் பள்ளிகளில் படித்துப் பலர் புலவராயினர். மருத்துவம், சோதிடம், இலக்கியம், சரித்திரம் படைத்து மறைந்தவர் பலராவர் மிகப் பழைய கதை.

- 13 -
19ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம் மறுமலர்ச்சி பெற்றுச் சைவமும் தமிழும் தழைத்த தெனலாம். கிறீஸ்துவ மிஷனரிகளும் பல பாடசாலைகளையும் கோயில்களையும் ஸ்தாபித்து, நாட்டைச் சிறப்பித்தனர். சமூகத்திலும், சமயத்திலும், அரசியல், பொருளாதாரம் போல மாறுதல் களும் நிகழ்ந்தன. ஈழத்துப் பூதந் தேவனார் போலப் புகழ் பூத்தவர்கள் இக்காலத்திலும் இருந்து விளங்கினார்கள். தமிழ் நாட்டுக்குச் சிறிதும் கூட பின்னில்லாது யாழ்ப்பாணம் இருபெருங் கண்மணிகளை இக்காலத்தில் உதவியதெனலாம். நல்லூர் பூரீலபூரீ ஆறுமுகநாவலரும், பூறிலழறீ சிவசங்கர பண்டிதரும் இக்காலத்தில் புகழ் பூத்து விளங்கினர் நம் நாட்டைப் போலத் தமிழ்நாடும் சைவ உலகமும் இவர் களைப் போற்றினர். பூரீலபூரீ ஆறுமுகநாவலர் பெருமான் பலரும் அறிய வாழ்ந்தவர். பூரீலபூனி சிவசங்கரபண்டிதர் மிகவும் அடக்கமானவர். இருவரும் தமிழ்ப்புலமை மிக்க வர்கள். தமிழுக்கும் சைவத்துக்கும் பெருத்தொண்டாற்றினர். பல நூல்களைத் தந்துதவினர் பூரீ சிவசங்கரபண்டிதர் வட மொழியிலும் மிக வல்லவர். ‘சிவஞானசுவாமிகளுக்குப் பிறகு சிவசங்கரபண்டிதர்’ என்று கூறுபவருமுண்டு இவர் கள்விருவரும் யாழ்ப்பானத்தைக் கந்தபுராணக் கலாசார த்தில் வாழ வழி காட்டினரெனலாம். இருவரும் இள வயசுகளில் இறைவனடி சேர்ந்தனர்.
20ம் நூற்றாண்டுக்கு முன்பு, இருவித சிந்தனைகள் ாழ்ப்பாணத்தில் தோன்றத் தொடங்கின. மிஷனரி மாருடைய ஐரோப்பிய கலாசரம் கலந்த ஒரு வித மனப் பாக்கும், கந்தப் புரணத்தை அடிப்படையாகக் கொண்ட சவ தமிழ்க் கலாசாரமும், பழமையும் கலந்த ஒரு வித ரிந்தனையுமெனலாம். வேதாந்தச் சிங்கமென உலக ம் பாற்றும் இந்து மத வீரத் துறவி பூரீமத் சுவாமி விவேகானந் கருடைய யாழ்ப்பாண விஜயம இன்னொரு விதமான உந்து லான சிந்தனையாகப் பரிணமித்தது மாத்திரமல்ல, சர்வமத மயச மார்க்கமாகவும் நோக்கப்பட்டமை குறிப்பிடத் க்கது. அவ்வளவு உடன் பலன்களில்லாவிட்டாலும் அடுத்து

Page 13
- 14 -
ருஷ்யாவிலும் இந்தியாவிலும் பின் ஏற்பட்டி சிந்தனை களுக்குத் துணையாயிருந்ததெனலாம். கார்ல்மாக்ஸ் சித் தாந்தங்களும், இந்தியாவின் மகாத்மா காந்தியின் சிந்தனை களும் மெல்ல யாழ்ப்பாணத்தில் புகுந்தன. கற்ற பெரி யோர்களை மாத்திரமல்ல, இளைஞர்களையும் மாணவர் களையும் ஏன் பொதுமக்களையும் இந்தச் சிந்தனை கள் உலுக்கிவிட்டன, பாட்டாளிமக்கள், கமியூனிசம், சமதர்மம், புரட்சி என்ற சொற்களும், சத்தியம், அகிம்சை சத்தியாகிரகம், பகிஷ்கரிப்பு, உண்ணாவிரதம், காந்தீயம் என்ற பதங்களையும் யாழ்ப்பாணம் ஆராயத் தொடங்கிய தெனலாம்.
1927ம் ஆண்டு மகாத்மாகாந்தியின் யாழ்ப்பாண விஜயம் இந்திய தேசிய காங்கிரஸ், தேசிய இயக்கங்கள், பாரதியார் பாடல்கள் எல்லாம் காந்தீயக் கொள்கைளை யாழ்ப்பாண த்தில் ஏற்றம் பெறச் செய்தன. ஆசிரியர்களும் சட்டத் தரணிகளும் மாணவர்களும் சிந்திக்கத் தொடங்கினர். யாழ்ப்பாணக் கல்லுரி, மத்தியகல்லுரி, சட்டத்தரணிகள் வாசிகசாலை, வண்ணார்பண்ணைக் கடைகனெல்லாம் “காந்தீயம்’ பேசினர். இந்தியப் பத்திரிகைகள் நிரம்ப யாழ்ப்பாணம் வந்தன. கீரிம்லையில் கூடிய மாணவர் மகாநாடு - வலிபர் மகாநாடாகியது. திரு. ஹன்டிபேரின்ப நாயகம் A.E. தம்பர், கலைப்புலவர் நவரெத் தினம் M. S.இளையதம்பி, N. சுப்பையா, M.பாலசுந்தரம் போன்ற பெயர்களும் பிரசித்தமாயின, வண்ணார் பண்ணையில் கலா நிலையமும் திருநெல்வேலி பண்டிதமணி கணபதிப்பிள்ளை யின் காவிய பாடசாலையும் தோன்றின. 1928ம் ஆண்டு டொனமூர் அரசியற்றிட்டப் பகிஷ்கரிப்புடன், அந்நிய நாட் டுத்துணி, பொருள்கள் பகிஷ்கரிப்பு, தீண்டாமை ஒழிப்பு, மது விலக்கு எனப் புதுச் சிந்தனைகளும் சேர்ந்து கொண்டன அரசியல் சமூகம், சமயம், பொருளாதாரம் மாற்றமடையச் சிந்தனைகள் தோன்றினாலும் வழிநடத்தக் கூடிய கூட்டம் ஒன்று இல்லை, நல்ல இயக்கங்களோ, அரசியல் கட்சிகளோ, தனிப்பட்டவர்களோ வழி காட்டத் தவறி விட்ட நிலை 676876)|Tië.

- 15 -
பல மாணவர்கள் இளைஞர்கள் துடித்தனர். செய் வதறியாது வெறும் மேடைப் பேச்சுக்களுடனும், வெறுங் கதைகளுடனும் மாக்சீய சிந்தனைகளும், காந்தீய சிந்தனை களும் நீறு பூத்த நெருப்புப் போல யாழ்ப்பாணத்தில் இருந்தன திருநெல்வேலிச் சூழலில் ஒரு ஆசிரிய கலாசாலை, முத்துத்தம்பி வித்தியாசாலை, மாணவரில்லம், காவிய பாடசாலை என ஒருங்குள்ள இடத்தில், நல்ல மனிதர் களும் இருந்தனர். அதிபர் சுவாமிநாதன் உப அதிபர் பொ. கைலாசபதி, பண்டிதர் கணபதிப்பிள்ளை, வியாகரண சிரோமணி சீதாராமசாஸ்திரிகள் போன்ற இவர்களை இந்து போர்ட் சு. இராசரத்தினம் அங்கு ஆசிரியர்களாக வைத்திருந்தனர். அக்கால ஆசிரியர்கள் வெறும் பாடங்கள் சொல்லிக் கொடுப்பவர்களல்ல, மாணவரின் ஆளுமையை வளர்த்து, அவர்களின் ஆற்றலை, அறிவை வெளிக்கொணரக் கூடிய கல்வியையும் வளர்த்தனர். பரீட் சைகளுக்கு மாத்திரம் விடைகள் எழுதப் படிப்பிக்கிறவர்களாக மாத் திரமில்லை. கடவுளை நம்பிக் கடமைகளைச் செய்பவர்கள், நாட்டுப் பற்றும் மிக்கவர்கள். z
ஆங்கிலக் கல்லூரிகளில் மாத்திரமல்ல, தமிழ்க்கலா சாலைகளிலும் புது எண்ணங்கள் மிகவும் வேகமாகப் பரவின. பண்டிதமணியின் சூழலும், அவருடைய மாணாக் கர்களாகிய பண்டிதர் கா. தம்பையா, பண்டிதர் செ. துரைசிங்கம் போன்றவர்களின் போதனைகளும், திருநெல்வேலிக் காவிய பாடசாலையும் அக்காலத்தில் மாணவரில்லத்திலும் சாதனா t።'' #Ñ#ಣ್ಣೆ மாணாககாகளைப புது எணணங் டூப் ச"ச்ெய்த்ன் சைவத்தமிழ்ப் பண்பில் வளர்ந்த காந்தியச் சிந்தனைகளை வரவேற்றனர்; கதரணிந்தனர். அகிம்ஓசத்கு.ழுதல் ; t யாக - பலிநிறுத்தம், மதுவிலக்கு, Tழ் డ్రగడాపోత சிலவற்றையும் கைக்கொண்டனர். நீர்விேலி சி. க. வேலாயுத பிள்ளையும் அந்த இளைஞர்களில் ஒருவர், நீர்வேலியில் பிறந்த இந்த இளைஞர், இளம் வயசில் பெற்றோரை இழந் தார் திருநெல்வேலி சைவ வித்தியாவிருத்திச் சங்கப் பாட சாலையில் கல்வி கற்றார். சைவத் தமிழ் மரபில், பூரீ சிவ சங்கர பண்டிதரின் கிராமத்தில் நல்ல பெற்றோருக்குப்பிள்ளை யாக இருந்த வேலாயுதபிள்ளை மிக விரைவில் காந்தீயத்தில் பற்று வைத்தனர். அவர் கடைசி வரை குடுமியை இழக்க

Page 14
- 16 -
வில்லை, ஆங்கிலம் படிக்கவில்லை, மது மாமிசம் புசிக்க வில்லை, விபூதியை மறக்கவில்லை. சைவத்தமிழ்ப் பழக்கவழக் கங்களுடன் காந்தீயத் தொண்டராகத் தம்மை அர்ப்பணித் துக்கொண்டாரெனலாம். நாலுமுழ வேஷ்டி, ஒரு சால்வை, காலில் செருப்பு, கையில் துண்டுப் பிரசுரங்களடங்கிய ஒரு பை, நெற்றியில் விபூதியுடன் ஊர்த் தொண்டுகள் செய்து வந்தார். ஆசிரியகலாசாலை புகவோ, மேற்படிப் புப் படிப்பதிலோ நாட்டம் செல்லவில்லை அவர் முதல் தொடங்கிய பணி கோயில்களில் பலி நிறுத்தம். யாழ்ப்பாணத் தில், அக்காலத்தில் சைவக்கோயில்களில் சிலவற்றில் ஆடு, கோழிகளை நூற்றுக் கணக்கில் வெட்டிப் பலி கொடுப் பார்கள், இது பெரும் விழாவாக மேளதாளங்களுடன் ஆரவாரமாக நடக்கும். இதை நிறுத்துவது மிகவும் கஷ் டமாயிருந்தது திரு. வேலாயுதபிள்ளை, திரு ஆ. மார்க் கண்டன் B.A, BSc போன்ற தொண்டர்களின் முயற்சியால் பெரும்பாலான கோயில்களில் பலி நிறுத்தம் நடந்தது. காந்தீயக் கொள்கைகளின் அடிப்படையில் மது விலக்கு, தீண்டாமை ஒழிப்பு, சம போசனம், ஆலயப் பிரவேசம் எனப் பல வேலைகள் தொடங்கின. பெரும் வெற்றிகளை ஈட்டவில்லை சில எதிர்ப்புகள் தோன்றினாலும் ஓரளவு முன்னேற்றங்களும் இருந்தன ‘காந்திஜீயின் நிர்மாணத் திட்டம்’ வேலாயுதபிள்ளையின் மனதில் நிலை கொண்டி ருந்ததெனலாம்.
1948ல் காந்திஜி அமரத்துவமடைந்தவுடன், பல நண்பர்களைச் சேர்த்து “அகில இலங்கைக் காந்தி சேவா சங்கம்” கொக்குவிலில் உதயமாகியது. திரு. வேலாயுத பிள்ளை காரியதரிசியாகவும், திரு. ஹன்டி பேரின்பநாயகம் தலைவராகவும் மலர்ந்த இச் சங்கம் 44 ஆண்டுகளாக, காந்தீயம் வேலாயுதபிள்ளையை நிரந்தர முழு நேரத் தொண்டராகக் கொண்டிருந்தது. (காந்தி மாஸ்டர் மலர் 92) இச்சங்கம் உருத்திரபுரத்தில் காந்தி நிலையத்தையும், தர்மபுரத்தில் கஸ்தூரிபாய் இல்லத்தையும், அக்கராயனில் காந்தி நிகேதனத்தையும் நன்கு இயக்கிய தெனலாம். காந்தி நிலையத்தில் ஒரு மாணவரில்லம், கஸ்தூரிபாய்

- 17 -
இல்லத்தில் மாதரில்லம், அக்கராயன் 300 ஏக்கர் பரப்பில் நிலப்பரப்பில் விவசாயம், கைத்தொழில், மாடு வளர்ப்பு எனத் திட்டங்கள் இருந்தன. எல்லாவற்றுக்கும் திரு. வேலாயுதபிள்ளை மேற்பார்வையாளராக இருந்தார். செனேட்டர் நடேசன் QC உதவிய (Tractor) டிராக்டரும் பலதொழிலாளிகளும் தொண்டர்களும், இந்த நிலையங் களில் வேலைகளுக்கு உதவினர் இந்தியத் தலைவர்களும், இலங்கைத்தலைவர்களும் இந்த நிலையங்களுக்கு வந்து போயினர். (சங்க ஏடுகள் 1948 - 86) பூரீ J.C. குமரப்பா பூரீ ஜெயப்பிரகாஸ் நாராயண், தவத்திரு குன்றக்குடி அடிகள், பூரீமான் / பூரீமதி அரியநாயகம், திவாகர், இலங் கையிலுள்ள இந்திய ஸ்தானிகர்கள் சிலர், அமைச்சர் S. தொண்டமான் இன்னும் பலரின் குறிப்புகள் சங்கத்தின் குறிப்புப் புத்தகத்தில் இருப்பதாகவுள்ளன. அரசாங்க உதவிகளும் இந்த வேலைக்குச் சில காலங்களில் உபயோ கிக்கப்பட்டன.
அகில இலங்கை அருள் நெறிமன்றம், டாக்டர் ஆரியரத்தினாவின் சர்வோதயம் என்பன சில காலங்களில் அகில இலங்கை காந்திசேவா சங்கத்துடன் இணைந்தும் செயல்பட்டன. இலங்கையின் பல இடங்களிலும் கிளைகளும் கொண்டு இயக்க திரு. வேலாயுதபிள்ளையும் காந்தீய அன்பர்களும் முயற்சித்தனர். கொழும்பில் முதலியார் சின்னத்தம்பி, திரு. சோ. க. தம்பிப்பிள்ளை, திருதங்கராசா போன்றவர்களும், திருக்கோணமலை காந்தி இராஜகோபால், காந்தி மாஸ்டர் கந்தையா முதலியவர்களும், மட்டக்களப்பில் திரு. வ. சிவசுப்பிரமணியம் போன்றவர்களும் மிகவும் அண்மைக் காலங்கள் வரை இக்கிளைகளை நடத்தி வந்தனர். யாழ்ப்பாணக் கல்லூரிகளிலும், வாசிகசாலைகளிலும், பொதுஸ்தாபனங்களிலும் காந்தி ஜெயந்தி, காந்தி அமரத் துவதினம், பாரதி தினம் போன்ற தேசியக் கொண்டாட் டங்களும் மிகச் சிறப்பாக நடந்தன. செனேற்றர் இரத்தின நாயகா வெளிப்படுத்திய ஒரு மலரில் திரு வேலாயுதபிள்ளை சம்பந்தமாக திரு. K. C. தங்கராசா எழுதிய கட்டுரை இன்னும் பல சிறப்புகளைக் கூறு கின்றது. மேலும்

Page 15
A. T. ஆரியரத்னா, செனேற்றர் இரத்தினாக்கா போன்ற சிங்க ளத் தலைவர்களும் திரு. வேலாயுதபிள்ளையையும் காந்தி சங்கத்தையும் பாராட்டியுள்ளார்கள். கெளரவ S, தொண்டமான் அவர்கள் கைத்தொழில் அமைச்சராகத் தரும புரத்தில் நெசவு சாலையையும், உருத்திர புரத்தில் தும்புத் தொழிற்சாலையையும், அக்கராயனில் மரவேலைத் தொழிலையும் ஆரம்பித்து வைத்தனர். காந்தி நிலைய முள்ள 6 - 7 ஏக்கரில் மாரி காலத்துக்கு நெல்லும் ஏனைய காலங்களுக்கு எல்லாவிதமான காய்கறிகளும் கொடுக்கக் கூடியதாக விவசாயம் நடந்தது. 100, 150 பசு மாடுகளும் நிலையத்திலும் அக்கராயனிலும் வளர்க்கப்பட்டன. எல்லா வற்றுக்கும் சூத்திரதாரியாகக் காந்தீயம் வேலாயுதபிள்ளை விளங்கினார். திருநெல்வேலியில் கண்ட குடுமி, நாலுமுழம், சால்வை, விபூதி, கைப்பை மாறவில்லை , “காந்தீயம்” என ஒரு பத்திரிகையும் நடத்தியமை குறிபிடத்தக்கது.
1983ல் நாட்டு நிலைமைகள் எல்லா வேலைகளையும் பாதித்தன. 1987 - 90 வரை ஒரே மந்தமான நிலைமை 1992 முழுவதும் திரு. வேலாயுதபிள்ளை இந்தியாவில் கழித்தார். 1993ல் இலங்கை திரும்பினார். ஒய்வு எடுத்துக் கொண்டார். காந்திTயின் பெயரைக் கூறிக்கொண்டு சிலர் கதர் மாத்திரம் அணிவர், கூட்டங்களில் அழகாகப் பேசுவர். காந்திஜியின் அகிம்சை, சத்தியாக்கிரகம், உண்ணாவிரதம், சர்வோதயம் என்பன போன்ற பதங்கள் மிகவும் புனித மானவை. ஊன்றிச் சிந்திக்காவிட்டால், ‘விளங்க முடியா தவை” என்றும் கூறலாம். இந்தியாவிலும் இலங்கையிலும் காந்திஜி உயிர் வாழ்ந்த காலத்தில் விளங்கிய ‘காந்தீயம்" இன்று இல்லை. யாழ்ப்பாணத்தில் மாத்திரமல்ல, ஏனைய இடங்களிலும் காந்திஜீயின் படம் ஒவ்வோர் வீட்டிலும் இருந்தது. இப்போ பத்திரிகைகளில்கூட காந்தி ஜெயந்தி, காந்தி அமரத்துவதினம் வருங்காலங்களில், ஒரு கட்டுரை வருவதில்லை. 'றேடியோ? கூட ஒன்றும் கூறாது. திரு. வேலா யுதபிள்ளை இருக்கும் வரை ‘காந்திஜீயின் நிர்மாணத் திட்டம்” அவரின் பேச்சாகவும் மூச்சாகவும் இருந்தது. இளைஞர்களை இந்தியாவுக்குப் பயிற்சிக்கு அனுப்பவும்,

- 19 -
இந்திய கைத்தொழில் பொருட் காட்சியை இலங்கையில் வைக்கவும் தாம் வேண்டிய ஒழுங்குகள் செய்வதாகவும் 1993 ஜனவரியில் கூறிய ஞாபகமுண்டு.
காந்தீயம் வேலாயுதபிள்ளை நம்முடன் இல்லை. அவருக்கு ஆயுட்காலக் காந்தீயத் தொண்டுபுரிய ஊக்குவித்த ஒரு இந்திய காந்தீயப் பெரியாரை அதிகமாகப் புகழ்ந்து கூறுவார். ஆசியாவின் சிறந்த பொருளாதார நிபுணரெனவும் காந்திஜீயின் நெருங்கிய நண்பரெனவும், காந்தீயப் பொருளாதாரத்தை நன்கு விளக்கியவர் எனவும், அகிம்சை முறைப்படி இந்தியப் பொருளாதாரத்தை எங்ங்ணம் வளர்க்கலாம் எனவும் காந்திஜிக்கும் காங்கிரசுக்கும் விளக்கியவர் டாக்டர் J. C. குமரப்பா, அவரின் ஆலோ சனைகளை ஆரம்பத்தில் பெற்று, காந்தீயக் கொள்கைகளை இலங்கையில் பரப்ப முயன்றவரைச் சிறிது அறிய, டாக்டர் J. C. குமரப்பாஜியை அறிமுகப் படுத்துதல் போதுமானது (டாக்டர் J. C. குமரப்பா BY. M. விநாயகம்) திரு. குமரப் பாஜியின் வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டிருப்பவை, டாக்டர் குமரப்பாஜியிடம் காந்திஜீயின் நிர்மாணத்திட்டம் கற்ற காந்தீயம் வேலாயுதபிள்ளையை அறியவும் சிறிது உதவக்கூடும். பேரறிஞர் டாக்டர் குமரப்பாஜி ஒரு அதிசய மனிதர். காந்திஜி இறந்தபின்பும், அவரைப் பின்பற்றும் ஒரு பெரியார் அவர் காந்தீய வழியில் நின்றதால், அவருக்கும் சுதந்திர இந்தியாவின் அரசாங்கத் தலைவர்களுக்கும் முரண் பாடு ஏற்பட்டது. அரசாங்கத்தின் பல செயல்களைத் தமது “கிராம உத்தியோக பத்திரிகா’ வில் டாக்டர் கண்டித்துள்ளார். **தேச மக்களின் நலன்களுக்கு அரசாங்கம் முன்னேறவில்லை” என்பது அவருடைய வாதம். ‘காந்தி ஜீயின் பெயரைத் துஷ் பிரயோகம் செய்யக் கூடாது, நிலத்தில் வேலை செய்பவனுக்கு நிலம் சொந்தம்’ என்பதைப் போன்ற கருத்துக்கள் மிகவும் புரட்சி கர மானவை,’ எனப் பலர் கருதினார்கள். அதிகம் ஏன்? திரு. குமரப்பா காந்தியடிகளின் அத்தியந்த சீடர் குரு விஷயத்திலும் தயவு தாக்ஷணியம் இல்லாத மகான். ஒரு முறை காந்திஜியும் இவரிடம் பேச வந்துள்ளார். *பேச அவகாச மில்லை” எனக்கூறிவிட்டார்.

Page 16
- 20 -
மற்றொருமுறை 'தம் குருநாதருக்குச் சாப்பாட்டுச் செலவு செய்யத் தமக்கு இயலாது” என மறுத்து விட்டார்.அப்புறம் அந்த வகையில் செலவிட நேர்ந்த போது அந்தச் செலவுத் தொகையை தம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறிவிட்டார். காந்திஜியின் நிர்மாணத் திட்டங்களுக்கும் பொருளாதாரத் திட்டங்களுக்கும் டாக்டர் குமரப்பாஜியே தந்தை. சீடர்காந்தீயம் வேலாயுதபிள்ளையும் ஒரு குட்டிக் குமரப்பா. அதனால் திரு. வேலாயுதபிள்ளையவர்களும் யாரிடமும் முரண்படும் சுபாவமுள்ளவர். மிகவும் நல்லவர்நல்ல விவேகி.
1983 க்குப் பின் நாட்டு நிலைமைகள் இலங்கை முழுவதும் கஷ்டமான தென்பதைக் கண்டு மிகவும் கஷ்டப் பட்டார். திரு. ஹன்டி பேரின்ப நாயகம், பேராசிரியர் K. நேசையா, முதலியார் சின்னத்தம்பி போலப் பின் வந்த நிர்வாகத்துக்கும் தமது வழமையான தொண்டுகளைச் சரிவரச் செய்து வந்த திரு.வேலாயுதபிள்ளை 86ல் தலைமைப் பொறுப்பையும் ஏற்க நேர்ந்தது முன் பொதுக் காரிய தரிசியாகவும், தனாதிகாரியாகவும், எல்லாவற்றுக் கும் நிரந்தர முகாமையாளராகவும் சேவையாற்றிய காந்தீயம் வேலாயுதபிள்ளை அக்கராயனிலும், உருத்திரபுரத்திலும், தருமபுரத்திலும் தொடர்ந்து வேலைகளைச் செய்ய முடியா ததை உணர்ந்தார். சர்வோ தயத்துடன் இணைந்து 1990-91 வரை வேலை செய்து பார்த்தார். தேகசுகம் குறைந்தும், கண் வருத்தமும் சேர இந்தியாவில் 1992 இல் வாழ முயன்றார். பல முறை இந்தியா போய் வந்தமையாலும் காந்தீயத் தொண்டர்கள், தலைவர்கள் பலரும், தவத்திரு குன்றக்குடி அடிகளாரும், மற்றும் பல பெரியோர்களும் அங்கு இருந்தமையாலும் சிறிது ஆறுதலடைந்தார். தாய் நாட்டு பற்றும், அவரது காந்தீயப் பணிகளும் 1993ல் இலங்கை வரச் செய்தன. கொழும்பில் திரு. யோகேந்திரா துரைசாமி, திரு. சோ. சண்முகசுந்தரம் போன்ற பெரியவர் களுடன் சேர்ந்து ‘இந்துக் குரல்’ நடத்த முயன்றார் இராமகிருஷ்ணமிஷனில் தங்கி சர்வோதயம் மற்றும் பல நண்பர்களுடன் அளவளாவி வரும் பொழுது நோய் பிடித்துக்

- 21 -
கொண்டதை உணர்ந்தார். ட்ாக்டர் ஆரியரத்னாவின் பாதயாத்திரையில் பங்கு பற்றவும் இந்தியா போகவும் துடித்தார். விதி சதி செய்து கொழும்பு ஆஸ்பத்திரியில் சிவபதமடைந்தார். ஒரு குறிப்பிட்ட சிலருடன் இறுதிக் கிரியை நடந்தது. டாக்டர் "ஆரியரத்னாவும் நண்பர்களும் கலந்து கொண்டனர் மிக அமைதியான வாழ்வு, அமைதி யாகவே முடிந்தது.
அரசியலில் அவர் சேரவில்லை. பட்டங்கள் பதவிகள் பெற விரும்பவில்லை. பத்திரிகை விளம்பரங்களை விரும் பவில்லை. அதனால் அரசியல் கட்சிகளும் அவரைப் போற்ற வில்லை. கூட்டங்கள் பல வைத்து யாரும் அவரைப் புகழ வில்லை. பத்திரிகைகளிலும் அவரைப் புகழ்ந்து யாரும் எழுதவில்லை. "யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனவும் ‘என்கடன் பணி செய்து கிடப்பதே’ எனவும் ஐம்பது, அறுபது வருடங்கள் காந்தீயத் தொண்டனாக வாழ்ந்து வந்தார் உண்மைக்கும் அகிம்சைக்கும் உயர் இடமளித்து வாழ்ந்து காட்டினார். காந்தீயம் வேலாயுதபிள்ளைக்கு தமிழ்க்கலாசாரத்தில் தனிப்பற்று. தாமும் வாழ்ந்தார்மற்றவர்களையும் வாழவழி காட்டினார் அவருக்கு அவரே
நிகர்.
பிறந்தவர் இறப்பது திண்ணம் 1993 ஏப்ரல் மாதம் 11ந் திகதி உடலை உகுத்தார். மரணமிலாப் பெருவாழ்வு எய்தினார். தனக்கென வாழாத் தனிப் பெருந்தகை காந்தீயம். வேலாயுதபிள்ளை அவர்களை நம்மால் மறக்க முடியுமா? காந்தீயத் தொண்டர்கள் நினைவு கூராமலிருக்க முடியுமா? யார் மறந்தாலும் நீர்வேலியும், உருத்திரபுரமும், அக்கராயனும், தருமபுரமும் மறக்க முடியாது. அன்னாரின் காந்தியத் தொண்டின் உயிர் நாடிகளவை.
காந்தீயம் வேலாயுதபிள்ளையவர்களின் தொண்டு வாழ்க! அவர் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போமாக வாழ்க காந்தீயம்! வளர்க காந்தீயம் வேலாயுத பிள்ளையவர்களின் தொண்டு.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!

Page 17
- 22 - .
6
காந்தீயத்துடன் ஐந்து ஆண்டுகள் பண்டிதர். அ. ஆறுமுகம் பண்ணாகம், சுழிபுரம்.
உலகம் போற்றும் உத்தமர் காந்தியடிகளின் கொள் கைகளைத் தமது வாழ்க்கையில் இயன்ற வரை கடைப் பிடித்து நைட்டிகப பிரமசாரியாய் வாழ்ந்தவர் காலஞ் சென்ற திரு. சி. க, வேலாயுதபிள்ளை அவர்கள் அவருடன் தொடர்பு பூண்ட அன்பர்கள் ‘காந்தீயம்’ என்று அவரை அழைப்பது போன்றே அடியேனும் அழைப்பேன் நான் அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்ட 1949 ஆம் ஆண்டுமுதலாக ஐந்து ஆண்டுகள் கூடியிருந்து கருமங்கள் செய்த துண்டு. அக்காலம் அவரிடம் விளங்கிய சேவை மனப் பான்மையையும், தியாகத்தையும், செயற்றிறனையும் ஈண்டுக் குறிப்பிடுகின்றேன்.
1949
யாழ். மாதகலிற் பிறந்து இன்று திருக்கோணமலையை வசிப்பிடமாகக் கொண்டுள்ள காந்தியாசிரியர் திரு. பொ. கந்தையா அவர்கள் 1949ல் கொக்குவில் இராமகிருஷ்ண சங்க வித்தியாலய ஆசிரியராக இருந்தார். அந்த வித்தியாலய வளவுக்குள் இருந்த ஒலைக்கொட்டிலில்ஆச்சிரமத்தில் அவர் தங்கினார். நீண்ட கால நண்பராகிய அவரிருந்த இடத்துக்கு, நான் விடுமுறை நாட்களிற் சென்று அவருடன் தங்கி உண்டு அளவளாவுவதுண்டு. அவருடைய தத்துவக் கருத்துக்களைக் கேட்கவும், கண்டு உரையாடவுமென அந்தக் கிராமத்திலும் பிற இடங்களிலு முள்ள அன்பர் பலர் அங்கு வந்து கூடுவர் வித்தியாலய அதிபர் திரு. இ. கந்தையா, திரு. முத்துக் குமாரசாமி, திரு. அப்பையா, திரு. காசிப்பிள்ளை, பண்டிதர் சரவண முத்து என்போர் அந்த ஊரில் உள்ள சிலர். நீர்வேலியிலிருந்து பண்டிதர் துரைசிங்கம் காந்தீயம் போன்றோரும், சுன்னாகம் திரு. அ. மார்க்கண்டன், புங்குடுதீவு வித்து வான் அ. கனகசபை, தொல்புரம் புலவர் சிவபாதசுந்தரம் போன் றோரும் அங்கு அடிக்கடி வருபவர்களில் குறிப்பிடத் தக்க
வர்கள்.

- 23 -
காந்தியடிகளின் தத்துவங்களை நடைமுறைப்படுத்து வதற்காக அகில இலங்கை ரீதியில் காந்திசேவா சங்கம் என்ற பெயரில் ஒரு நிறுவனம் அமைத்தல் வேண்டும் என்ற கருத்தை முன்மொழிந்தவர் காந்தீயம் கூடியிருந்த அன்பர்கள் வழிமொழிந்தனர். திரு. காந்தீயம் விரைவாக விண்ணப்பப் பத்திரங்கள் பற்றுச் சீட்டுகள் அச்சிட்டுக் கிராமந்தோறும் சென்று காந்தீயக் கொள்கைகளில் ஆர்வமுடையவர்களை உறிப்பினராக்கினார். ஒரு நல்லவசதியான நாளில் சங்கப் பொதுக் கூட்டத்தை வண்ணை வைத்தீஸ்வர வித்தி யாலயத்தில் கூட்டினார். கருத்துக்கள் பரிமாறிய பின் நிர்வாகசபைத் தெரிவு நடைபெற்றது. புகழ் பெற்ற காந்திய வாதி திரு. ஹன்டிபேரின்பநாயகம் தலைவராகவும்,காந்தீயம் செயலாளராகவும், காந்தி ஆசிரியர் பொருளாளராகவும் ஏனையோர் நிர்வாகசபை உறுப்பினராகவும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டனர்.
1950
நீர்வேலியைச் சேர்ந்த கரந்தன் குறிச்சியில் சர்வோ தய விழா நடத்தத் திட்டமிடப்பட்டது. இந்தியத் தலைவர் களான மொரார்ஜிதேசாய் சர்தார் வேதரத்தினம்பிள்ளை முதலாகப் பலர் வருகை தந்தனர். இலங்கைப் பெரியார் களான முதலியார் சின்னத்தம்பி, கலைப்புலவர் நவரத்தினம் அதிபர் அம்பிகைபாகன் போன்ற பலரும் விழாவில் இடம் பெற்றனர். திறந்த வெளியில் பெரிய கொட்டகை போட்டு விருந்தினர் தங்க விடுதிகளும் அமைத்து அனைவருக்கும் உணவு வழங்கிய பெரிய எடுப்பில் நடத்திய அந்த விழா வைக் காந்தீயம் கச்சிதமாக நடத்தினார். அவ்விழாவினால் ஏற்பட்ட மேலதிகப் பெருந்தொகைக் குறையைப் பண்டிதர் துரைசிங்கம் தம்பதிகள் தங்கள் நகைகளை விற்றும் கடன் பட்டும் நிறைவு செய்தனரென்பதனைப் பலர் அறியாதி ருக்கலாம். இத்தனை கருமங்களையும் எங்கள் காந்தீயம் பம்பரம் போலச் சுழன்று திரிந்து நடத்திய அருமையை அறிந்தவர்கள் மறக்கமாட்டார்கள்.

Page 18
- 24 -
1951
திருநெல்வேலிப் பரமேஸ்வரக் கல்லூரியில் தமிழகத்து அறிஞரும் இந்நாட்டு அறிஞரும் சேர்ந்து தமிழ்விழா நடத்தினர். அங்கிருந்து பேராசிரியர் சேதுப்பிள்ளை, கல்கி கிருஷ்ணமூர்த்தி, சித்திர விற்பன்னர் மாலி, புலவர் ஞானசம் பந்தன் போன்றோர் வந்தனர் rேங்கள் பண்டிதமணி கணபதிப்பிள்ளை ஐயாவும் ‘தமிழ்நுதலியது களவு’ என்ற நூதனமான விரிவுரையாற்றினார். பந்தல் வேலை, பாய் கம்பளங்கள் பரப்புதல், விருந்தினரை உபசரித்தல் போன்ற rrhu I வேலைகளைக் காந்தீயம் என்போன்றோர் பலரின்חLI உதவியுடன் அழகாகச் செய்தமை இன்றும் பசுமையாக உள்ளத்தில் உள்ளது.
1952
அகில இலங்கைக் காந்திசேவா சங்கத்தின் ஆண்டு விழா பண்ணாகத்தில் நடைபெற்றது. நாவலர் அமிர்தலிங்கம்? முதலியார் ஐயா, வித்துவான் கனகசபை போன்ற பலர் பங்கு பற்றினர். அனைவருக்கும் விருந்து நடந்தது. காந்தீயம் இந்த ஆண்டில் பலதினங்கள் எங்கள் விருந்தினராக விளங் கினார். சர்வோதய நிதி சேகரிப்பதற்காக அவருடன் நாங்கள் சிலர் சேர்ந்து வீடு வீடாகத் தொல்புரம், பண்ணாகம், சுழிபுரம், வடலியடைப்பு, சித்தன்கேணி என்ற கிராமங்களுக் குச் சென்று கணிசமான தொகை சேர்த்தோம்.
1953 பண்ணாகத்தில் நடத்திய சர்வோதய விழாவுக்கு சுத்தானந்தபாரதியார், குன்றக்குடி அடிகளார் போன்ற பெரிய ஞானிகள் வருகை தந்தனர். அலை பரந்த சமுத்திரம் போல மக்கள் வெள்ளமாகத் திரண்டிருந்து ஆர்வத்துடன் பங்கு பற்றினர்.

- 25 -
இக்காலகட்டத்தில் அகில இலங்கை காந்தி சேவா சங்கம் உருத்திரபுரம் காந்தி நிலையத்தை உருவாக்கி அனாதைச் சிறுவர்களை ஆதரிக்கும் பணியை மேற் கொண்டது. அனாதை இல்லம், நெசவுசாலை, வயல், தோட்டம் என்பவற்றைச் செப்பமாக அமைத்த பின் மகளிருக் கெனத் தருமபுரத்தில் ஒரு நிலையத்தையும், கோணாவளையில் தொழிற் பயிற்சி நிலையத்தையும், தொடக்கி நடத்தியதில் காந்தீயம் பட்ட சிரமங்கள், செலவு கள ஏராளம.
எங்கள் காந்தீயம் சங்கத்தாபகராய், செயலாளராய் ஈற்றில் தலைவராயும்மிருந்து தொண்டுகளைத் திறம்படச் செய்தார். இவர் செய்த சேவைகள் என்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும் அவரின் நினைவாக மிகச் சுருக்கமாகச் சம்பவங்களைக் குறிப்பிட வேண்டுமென்ற கட்டளைக்குப் பணிகின்றேன் மலர்க்குழுவினருக்கு நன்றி. வணக்கம்.
பெண்ணின் உண்மையான ஆபரணம் புனிதமான ஒழுக்கமேயாகும், தங்கமும் வைரமும் உண்மையான ஆபரணங்கள் ஆகாது. சிதை, தமயந்தி என்கிற பெயர்கள் அவர்கள் மாசு மாவற்ற கற்புடைய வர்கள் என்கிற முறையில் நம்மிடையே புனிதத் தன்மையைப் பெற்றிருக் கின்றன.
- காந்தியடிகள்
யாருக்கு நன்மை செய்கிறோமோ அவரை நேசிக்கிறோம். யாருக்குத் தீமை செய்கிறோமோ அவரை வெறுக்கிறோம்.
- டால்ஸ்டாய்
எவன் தன்னைத் தாழ்த்திக் கொள்ளுகிறானோ அவன் உயர்ந்தப்படு வான், "எவன் உங்களுக்குத் தலைவனாக இருக்கிறானே அவனே உங்களுக்குத் தொண்டனாகவும் இருக்கட்டும்.
- யேசுநாதர்

Page 19
- 26 -
o
அம்பாள் துணை தொண்டர் வேலாயுதபிள்ளைக்கு
எமது இதய அஞ்சலி
SSS SLL000LLsLsL0ssY சிவத்தமிழ்ச் செல்வி பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி
( அவர்கள்
பூறி துர்க்காதேவி தேவஸ்தானம் - தெல்லிப்பழை
எல்லாப் பிறப்புகளிலும் உயர்ந்ததான மனிதப்பிறவி யை எடுத்த நாம் சிந்தித்துச் செயலாற்ற வேண்டிய கடமைக்கு உட்பட்டுள்ளோம். இந்த வகையில் வாழ்பவர் களே மனிதர்கள் என்ற பெருமைக்கு உரியவர்கள், நமது நாட்டில் வாழ்வாங்கு வாழ்ந்து மக்கள் நலன் பேணி மறைந்த ஒரு சிலரில் தொண்டர் வேலாயுதபிள்ளையும் ஒருவர். கிளிநொச்சிப்பகுதியில் இவர் ஆற்றிய மனித நேயப் பணிகளை நான் நன்றாக அறிவேன். எளிமை யான வாழ்வும் இதய சுத்தியும் கொண்ட இப்பெரியார் தவத்திரு குன்றக்குடி அடிகள் போன்ற ஆதீன முதல்வர் களால் பாராட்டப்பட்டவர். தொண்டில் அடிப்படையில் சைவ சமய இயக்கத்தை வளர்த்தவர். மகாத்மா காந்தி யடிகளின் சீரிய வாழ்வைப் பின்பற்றி வாழத் துடித்தவர் அன்பு, சேவை, தியாகம் ஆகிய நெறிகளைப் பின் பற்றிப் பணிபுரிந்த பெரியார் இவர் .
*உலகத்தவர்க்கு நீ தொண்டனாக உலகத்தவர் உன க்கு தொண்டராவர்*என்ற வாக்கியம் தொண்டர்களுக்கு உற்சாக மூட்டுவதாகும். அணைந்து போன விளக்கு இன் னொரு விளக்கை ஏற்றி வைக்காது. ஆகவே தொண்டு செய்யும் உணர்ச்சி வேகம் இல்லாதவர் மற்றொரு தொண் டனை உருவாக்க முடியாது இவற்றையெல்லாம் கடைப் பிடித்துவாழ்ந்து, இன்று அமரராகி விட்ட பெரியாரை, நினைத்து அஞ்சலி செலுத்துவது எமது பெருங் கடனாகும்.

- 27
6a
காந்தீயப்பழம் வேலாயுதபிள்ளை ஐயா
திரு. நாகராசா கணபதிப்பிள்ளை . உவர்மலை, திருக்கோணமலை
அவருக்காக எப்பொழுதுமே ஒரு உள்ளம் துடித்துக் கொண்டிருக்கும். அவரைப்பற்றி அது அடிக்கடி பேசும். அவரின் சேவைகளைப் பாராட்டும் அன்னாரது எளிமை யான வாழ்க்கைக்கு இந்த அடிக்கடி பேசும் உள்ளமும் ஒரு எடுத்துக் காட்டு. இருவருமே காந்தி சேவா சங்கத்தை வரட்சியான கால்ங்களிலும் பட்டுப் போக விடாமல் தூய்மை யான உள்ளத்திலேயிருந்து ஊற்றெடுக்கின்ற தெய்வீக அமிர்தத்தினால் நனைத்து காப்பாற்றிக் கொண்டிருந்த உத்தமர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
ஆண்டவன் நியதியின் படி காந்தீய சேவைகளைமுடித் துக்கொண்டு போவதற்கு முன் காந்தி வேலாயுதபிள்ளை ஓடோடியும் திருக்கோணமலைக்கு வந்தார். எதற்காக? தன்னேடு தோள் கொடுத்து உழைத்த திருக்கோணமலை காந்தி மாஸ்ரருக்கு 75 வயது பிறந்ததின விழா பெரிய விழா திருக்கோணமலை கண்டிராத விழா மனித சமுதா யத்தில் தெய்வீக சேவையை மதிப்பீடு செய்யும் விழா, இராமகிருஷ்ண மிஷனைச் சேர்ந்தடிாழி:ஆத்ழகிஜானந்த்சும் குலமை தாங்கும் விழாவுக்கு எப்படியும் வந்து சேரவேண்டும் என்பதற்காக.
சுகவீன முற்ற தனது தேகத்தித்" "இன்னும் சில நாட்களில் விடப் போகின்றேன் என்பதை முன்கூட்டியே தெரிந்து தானோ என்னவோ உடல் நிலை இடங் கொடுக்காத நிலையிலும் சுவாமிபூரீ வந்த காரிலேயே கொழும்பிலிருந்து வந்து சேர்ந்தார். காந்தி ஆசிரியரின் விழாவில் கலந்து கொண்டார். விழா மேடையில் ஏறி ஆன் ஆசிகளை அள்ளி வழங்கினார். எவ்வளவு அன்பு,

Page 20
- 28 -
பார்க்கக்கிடைக்குமோ பேசக்கிடைக்குமோ என்று ஏங்கிக்கொண்டிருந்த காந்திஐயா, வேலாயுதபிள்ளை ஐயா வைத் தனது வீட்டிலேயே ஒரு வார காலம் விருந்தினராக வைத்துக்கொண்டார் \ கடைசிக்காலத்தில் காந்தீயக் கருத் துக்களைப் பரிமாறிக் கொண்டனர். ஒரே ஆனந்தம் அகில இலங்கை காந்திசேவா சங்கத்தின் எதிர்காலத்தைப் பற்றி யும் காந்தீய ஆக்க வேலைகளைப் பற்றியும் பேசினார்கள்
இரண்டு முதிர்ந்த பழங்களும் சேர்ந்து எடுத்த தீர்மானம் நாட்டில் இன்னும் வெளிச்சம் பிரகாசமாக இல்லாவிட்டாலும் காந்தியின் இலட்சியங்களை எடுத்துச் சொல்லாமல் கை விடுவதா? ஏதோமூச்சிருக்கின்ற வரைக் கும் முயற்சிப்போம். எல்லோரையும ஒன்று கூட்டுவோம் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவோம் என்றனர். பாரதி சும்மாவா கூறினான் பாழ்பட்டு போனதாமோ பாரததேசம் தன்னை வாழ்விக்க வந்த காந்தியின் வழித் தோன்றல்களல்லவா இந்த இரு முதியவர்களும்.
இறைவனின் சோதனை - நன்றாகப் பழுத்த பழம் வேலாயுதபிள்ளைக்கு “போதும் புறப்படு” என்ற கட்டளை வந்தது. மேலும் துன்பத்தைக் கொடுக்க விரும் பாத காலன் “வாருங்கள், மகாத்மாகாந்தி எங்கள் ஊரில்தான் இருக்கின்றார். அவரோடு சேர்ந்து தொண்டு செய்யுங்கள்’ என்று கூட்டிக் கொண்டே போய்விட்டான்.
காந்திஐயா தன்னால் முடிந்ததைச் செய்கின்றார் மற்றவர்களும் செய்கிறார்கள், வேலாயுதபிள்ளை ஐயாவுக்கு நினைவுமலர் கூட வெளியிடப்படுகிறது. காந்தீய ஒளி மங்கிவிடவில்லை, பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும், காந்திஐயாவுடன் பழகக் கிடைத்தமைக்கு அடியவனுக்குக் கிடைத்த பரிசு வேலாயுதபிள்ளை ஐயாவை அறியக்கிடை த்தது - பழகக்கிடைத்தது. அன்னாரைப் புகைப்படங்கள் எடுக்கக்கிடைத்தது தான். வாழ்க காந்தி வேலாயுதபிள்ளை! வளர்க காந்தீயம்!

-- 29 سس
Gl
சிவமயம்
தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் திரு. அ. சரவணமுத்து BA சாந்தி நிலையம், கொக்குவில்
மேனாட்டுக் கொள்கைகளும் நாகரீகமுமே மனித குல முன்னேற்றத்திற்கு உகந்தவை என்று கீழைத்தேச மக்களிற் பலர் கருதியிருந்த காலம். மக்களுள் ஒரு சாரர் சுகபோகங்களை அநுபவித்து உல்லாச வாழ்க்கையில் மூழ்கியிருந்தனர் அதே காலத்தில் பெரும்பாலான மக்கள் வாழ்க்கையின் அவசிய தேவைகளான உணவு, உடை, வசிப்பிடம் என்பவற்றைக் கூடப் பெற முடியாமல் அல்லற் பட்டுக் கொண்டிருந்த காலம்.
"தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டு பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசந்தன்னை வாழ்விக்க வந்தவதரித்தவர்” மகாத்மா காந்தியடிகள்.
மக்கள் எல்லோரும் இன்பமாக வாழ வழி வகுத்தவர் காந்தியடிகள் அதுவே “காந்தீயம்’ என்று அழைக்கப்படுவது.
காந்தீயத்தின் சிறப்பம்சங்களைப் புத்திபூர்வமாக ஆராய்ந்து அகன் உண்மைத் தத்துவத்தை ஈழ நாட்டறிஞர் சிலரும் உணர்ந்தனர். காந்தீயக் கொள்கைகளை ஈழ நாட்டிலும் பரப்ப வேண்டுமென்ற வேணவாக் கொண் டனர். அந்த அறிஞர்கள். காந்தியடிகளை ஈழத்திற்கு அழைத்து நாட்டின் பல பாகங்களிலும் சொற்பொழிவாற்றச் செய்து அவர்தம் கொள்கைகளை பரவச்செய்தனர்.
இளம் பருவத்திலேயே காந்தீயக் கொள்கைகளினால் ஈர்க்கப்பட்ட6ர்களுள் எமது மதிப்புக்கும் அன்புக்குமுரிய காந்தீயம் வேலாயுதபிள்ளையும் ஒருவர். உயர்கல்வி பயின்று, உயர் பதவி பெற்று இல்லற வாழ்க்கையிற் புகுந்து வாழக்கூடிய வாய்ப்புகளிருந்தும் அவற்றைத் துச்சமாகக் கருதினார். கல்வி கற்கும் பருவத்தில் இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிபிள்ளை அவர்கள், பண்டிதர் செ. துரைசிங்கம் அவர்கள் ஆகியோரின் தொடர்பு வேலாயுதபிள்ளையை

Page 21
- 30
நற்பண்பாளனாக்க வழி வகுத்திருக்கலாம். நைஷ்டிகப் பிரமச்சாரியாகவே வாழ்ந்தார் ‘மக்கள் சேவையே மகேஸ் வரன் சேவை? என்ற உண்மை மொழி அவருடைய தாரக மந்திரமாயமைந்தது. மக்கள் சேவைக்காகத் தமது கக போகங்களைத் துறந்தார் அவரது வாழ்க்கை ஒரு துறவு வாழ்க்கை அவருக்கென்று சொந்தமாக வீடு வாசல்
பொருள் பண்டம் ஒன்றுமில்லை. Va −
*உடுக்கக் கவிக்கக் குளிர் காற்று வெய்யில் ஒடுங்கி வந்தால் தடுக்கப் பழையவொரு வேட்டியுண்டு, சகமுழுதும் படுக்கப் புறந்திண்ணை யெங்கெங்குமுண்டு; பசித் து வந்தால் கொடுக்கச் சிவனுண்டு-நெஞ்சே நமக்குக் குறைவில்லையே’ என்ற பட்டினத்தடிகள் திருவாக்கு வேலாயுத பிள்ளையின் வாழ்க்கைக்கும் பொருந்தும். ܢ
அகில இலங்கைக் காந்தீய சேவாசங்கத்தை நிறுவ மூல காரணராயிருந்தவர் காந்தீயம் வேலாயுதபிள்ளை யவர்களே. திருவர்ளர். ஹன்டிப் பேரின்ப நாயகம், பேராசிரியர் - நேசையா, முதலியார் - சின்னத்தம்பி, திரு. பொ. கந்தையா (காந்திஉபாத்தியாயர்), பண்டிதர் துரைசிங்கம் ஆகிய காந்தீய வாதிகளின் நல்லா லோசனைகளைப் பெற்று காந்தீய சேவா சங்கம் மூலம் பல சமூகத் தொண்டுகளைச் செய்து வந்தார். ஆச்சாரிய வினோபாவே அவர்களின் சர்வோதய மகாநாடுகளுக்க்கு சென்று அவர்களின் அருளாசியையும் பெற்றுள்ளார். நீர்வேலியில் கரந்தன் என்ற கிராமத்தில், காந்தீயசேவா சங்க வருடாந்த மகா நாடுகளை நடத்தினார். அந்த மகா நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து சிறந்த காந்தீயத் தொண் டர்களை வர வழைத் தார். காந் தீயத் தொண்டர்களின் பேச்சுக்களும் அவர்களது எளிமையான வாழ்க்கை முறையும் யாழ்ப்பாண மக்களுக்குக் காந்திய தத்துவத்தில் ஆர்வத்தை ஊட்டின.
காந்தீய சேவாசங்கத்தின் வேலைகளைப் பன்முகப் படுத்தும் நோக்கத்தோடு கிளிநொச்சி உருத்திர புரத்தில் சங்கத்தின் தலைமைக் காரியாலயத்தை நிறுவிக் காந்தீய நெறியிற் பல பணிகளை ஆற்றி வந்தார். பெற்றோரை

- 31 -
இழந்த சிறுவர்க்காக உருத்திரபுரத்தில் இல்ல மனமத்து சிறந்த முறையிற் பராமரித்து வந்தார். அவர் வகுத்த பல திட்டங்களை நடை முறைப்படுத்த காந் தீயத் தொண்டர் பற்றாக்குறையிருந்தது. அதனால் திட்டங்கள் பல நிறைவேறவில்லை. அவர் பயன் கருதாப் பணி செய்த கர்மயோகி. -
அன்பர் பணி செய்ய ஆளாக்கி விட்ட ஆண்டீவன் அவரைத் தம்முடன் அரவணைத்துக் கொண்டார். அவர் ஆற்றிய பணிகள் நிறை வெய்தியனவா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்க நாம் யார்? அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போமாக ஓம் சாந்தி சாந்தி!! சாந்தி!!!
மரணம் உனக்காக எப்பொழுதும் காத்துக் கொண்டிருக்கிறது. உ பில் உயிர் உள்ள பொழுதே நல்வினை செய், உயிர் போன பிறகு உனக்கு ஏதும் செய்யச் சாத்திய மிராது.
- மார்க்க ஒளிரேலியன் - வாழ்வாகிய வஸ்திரத்தில் எப்பொழுதும் இரு வகை நூல் இருக்கும் நன்மை தீமையே அவை .
- ஷேக்ஸ்பியர் - எரிந்து கருகிப்போன கயிறு தன் பழைய உருவத்தோடு இருந்தாலும் ஒன்றையும் கட்டுவதற்கு உதவாது பிரம்ம ஞானத்தால் எரிக்கப்பட்ட அகங்காரமும் அப்படிப்பட்டதே.
- பூரீராமகிஷ்ணர் - எளிய வாழ்வு உன்னை இறைவனுக்கருகில் சேர்க்கும். ஆகையால் உனது தேவைகளை நாளுக்கு நாள் குறைத்துக் கொள். உதாரணமாக நான்கு சட்டைகள் வேண்டுமாயின் அதனை மூன்றாகக் குறைத்தல் எளிய வாழ்க்கையின் விதி.
- சுவாமி சிவானந்தர் - தமக்கு எதை விரும்புகிறாரோ அதையே பிறர்க்கும் விரும்புகிறவர்தான் உண்மையான கடவுள் பக்தர் ஆவார், தமக்கோ பிறர்க்கோ உழையாதவர் கடவுள் அருளைப் பெறமாட்டார்.
- முஹம்மதுநபி - எவன் தனக்குத் தானே சில கட்டுப் பாடுகளை ஏற்படுத்திக் கொள்கிறானோ அவனே சுதந்திர புருஷன்.
- காந்தியடிகள் -
f

Page 22
- 32 -
G
ஒம் **மேன்மைகொள் சைவரீதி விளங்குக உலகமெல்லாம்"
காந்தியப் பெரியார் அமரர் வேலாயுதபிள்ளை.
செல்லப்பா, சிவபாதசுந்தரம் - மதிப்பார்ந்த பொதுச் செயலாளர், திருக்கோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவை.
உருத்திரபுரத்தில் காந்தியப் பண்ணை அமைத்து வாழ்வாங்கு, வாழ்ந்த கர்மவீரர், காந்தியப் பெரியார் அமரர் சி. க. வேலாயுதபிள்ளை ஐயா அவர்களை அறியா தார் எவரும் இருக்கமாட்டார்கள், அன்னார் அண்ணல் காந்தி காட்டிய அகிம்சாவழியில் நின்று கிராமஎழுச்சித் திட்டங்களைத் தமிழ்ப் பிரதேசங்களில் நெறிப்படுத்தியவர் என்றால் அது மிகையாகாது.
தனது பாடசாலைக் காலத்திலேயே சமூதாயப் பணி யில் தான் ஈடுபட்டு வந்ததாக அன்னார் என்னிடம் அன்மைக் காலங்களில் நேரில் கூறியுள்ளார். 1992ம் ஆண்டு கொழும்பு இராமக்கிருஸ்ணசங்கத்தில் அன்னார் தங்கியிருந்த அதே அறையில் நானும் சில நாட்கள் தங்கியிருந்தேன், அச்சந்தர்ப்பத்தில் பெரியாரோடு நான் கலந்துரையாடி யுள்ளேன், தான் தமிழகம் சென்று வந்ததாகவும் அங்கு குன்றக்குடி அடிகளாரால் மேற்கொள்ளப்படுகின்ற சமூக நலத்திட்டங்களைப் பற்றியெல்லாம் விரிவாக விளக்சினார் அத்துடன் சில இளைஞர்களை தமிழ் நாட்டிற்கு அனுப்பி அவர்களுக்கு காந்தியக் குடில்களில் பயிற்சி அளித்து மீண்டும. உருத்திரபுரத்தில் செயற்பாடுகளை மேற்கொள்ள அன்னார் நாட்டம் கொண்டிருந்தார்: துணிச்சலும் ஆளுமையும் மிகுந்து காணப்பட்ட இவர் தனது இறுதிக் காலத்தில் நோய்வாய்ப் பட்டார். அச்சந்தர்ப்பத்திலும் அடிக்கடி “எல்லாம் தெய்வ சித்தம்” என்றே கூறிவந்தார். இந்து மதத்தில் ஆழ்ந்த பற்றுக் கொண்ட இவர் அகில அலங்கை ரீதியாக சில புதிய சிந்தனைக் கண்ணோட்டத்துடனான பணிகளை இந்து

-- 33 سس
இளைஞர்களாகிய நீங்கள் மேற்கொள்ள வேண்டுமென எனக்குக் கூறியதோடு மட்டுமல்லாது இத்தகைய செயற் பாடுகலுக்கு உருத்திரபுரம் காந்தீய நிலையத்தில் உள்ள காணியில் இருபத்தைந்து ஏக்கர் நிலத்தை இலங்கை இந்து இளைஞர்பேரவைக்கு நன்கொடையாக வழங்கவும் இணக்கம் தெரிவித்தார். ஆனால் அன்னார் எண்ணியதை நிறைவேற்ற காலம் அவருக்கு இடம் கொடுக்கவில்லை என்செய்வோம் எல்லாம் விதிவசம், அன்னார் எம்மை விட்டுச் சென்று விட்டார். அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் தலை வராக இருந்த இப்பெரியாரை நாம் என்றும் மறவாமல் அன் னாரை நினைவு கூர்ந்து உருத்திரபுரம் காந்தீயப் பண்ணையில் அன்னாரின் பெயரில் ஏதாவது நிலையான பணியினை காலம் சாதகமாகவரும்போது மேற்கொள்ளவேண்டியது இன்றியமை யாததாகும். அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் திருக்கோணமலைக் கிளையினர் அதிலும் குறிப்பாக மற்றுமொரு காந்தியப் பெரியாரான காந்தி ஆசிரியர் பழம் பெரும் சமய சமூகத் தொண்டன் திரு. பொ. கந்தையா ஜயா. அவர்கள் எமது அனுசரணையுடன் பெரியார் வேலாயுதபிள்ளை ஜயாவுக்கு எமது பேரவை மண்டபத்தில் ஓர் நினைவஞ்சலிக் கூட்டத்தை நடாத்தினார்கள்.
அத்தோடு நின்று விடாது ஓர் நினைவுமலரையும் வெளியிடுகின்றார்கள், இத்தகைய முயற்சி பாராட்டுக்குரிய தாகும்; எனினும் அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தினர் எமது மண்ணில் நாம் சுதந்திரமாக வாழும் நிலைமை ஏற்படும் போது எப்படியாவது முயற்சி எடுத்து அமரர் வேலாயுதபிள்ளை அவர்கள் மனதில் உறைந்திருந்த காந்திய சிந்தனையை செயற்படுத்த முயல நாமும் எம் மால் இயன்றதைச் செய்ய முன்வருவோம் என்பதைத் தெரியப் படுத்துகின்றோம். அமரர் வேலாயுதபிள்ளை ஐயாவினுடைய ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.

Page 23
-- 34 -س-
அமரரின் பணி மீண்டும் தொடரும்
பண்டிதை பொ. பாக்கியம் அவர்கள் சுழிபுரம்
1955ம் ஆண்டு அகில இலங்கை காந்தீய சேவா சங்கத்தினரால் யாழ்ப்பாணம் பண்ணாகம் மெய்கண்டான் வித்தியாலயத்தில் நடைபெற்ற சர்வோதய விழாவிற்கும் எனக்கும் ஒரு நெருங்கிய தொடர்புண்டு.
நூல்களிலே கற்ற அறநூற் கருத்துக்களை வாழ்வில் சாதகம் செய்து காட்டியவர் காந்தியடிகள் ஆதலாற் றான் உலகம்போற்றும் உத்தமர் ஆனார். அந்த உத்தமர் காட்டிய வாழ்க்கைப் பாதையில் அடியெடுத்து வைத்தவர்கள் உலகம் முழுவதும் பரவியிருக்கின்றார்கள். நமது ஈழவள நாட்டிலுள்ளவர்களுள்ளும் பலர் அந்நெறியில் தம்மை ஈடு படுத்தினர். அத்தகையவர்கள் சேர்ந்து எடுத்ததுதான் 1955ம் ஆண்டு நடத்திய மேற்கூறிய சர்வோதய விழாவாகும். அவ் விழாவில் அடியேனும் ‘சர்வோதயமும் மாதர் பங்களிப்பும்? என்னும் தலைப்பில் ஒரு சிற்றுரை நிகழ்த்தினேன், இவ்வுரை எனது ஆசிரியபயிற்சிப் புகுமுகத் தேர்வுக்கான நேர்முகப் பரீட்சையில் வெற்றியீட்டித் தந்தது.
மேற்கூறிய சர்வோதய விழாவின் அச்சாணியாக விளங்கியவர் காந்தீயம் சி. க. வேலாயுதபிள்ளை அவர்கள் தம்முடைய உடல், பொருள் அத்தனையையும் அர்ப்பணித்துக் “காந்தீயமே வாழ்வு’ என்ற நிலையில் பிரமசரியங் காத்த பெரியார் அவர். உருத்திரபுரத்திற் காந்தி நிலையமும், தர்மபுரத்தில் அன்னை கஸ்தூரிபாய் இல்லமும் அமைத்து, பல தொழில் சார்ந்த கல்வியினைச் சிறாருக்கு அளித்ததோடு அநாதை இல்லமும் நடாத்திப் பலருக்கு வழிகாட்டிக் கொண்டு வாழ்ந்தவர் அமரர் வேலாயுதபிள்ளையவர்கள், தம்மோடு பல அன்பர்கள் தொண்டர்களைச் சேர்த்துக்

-- 35 س
காந்தீயத்தை இந்த நாட்டில் எழுச்சி பெறச் செய்வதற் காகப் பல்லாற்றானும் பாடுபட்டவர். ஆனால் Lorts) 7 போன சூழல் காரணமாக நினைத்தவற்றைத் %ܐܶLLLܥ மிட்டவற்றைச் செயலிற் காட்டமுடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டு விட்டது.
ஆன காரணத்தினால் உருத்திரபுரம் காந்தி ஆச் சிரமத்தை விலகி வாழ வேண்டிய நிர்ப்பந்த நிலை காந்தியம் வேலாயுதபிள்ளை அவர்களுக்கு உண்டானது மனவேதனையையும் உடலிலும் வேதனையையும் உருவாக் கியது. அதனால் அவர் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலை யில் தங்கி அமரத்துவம் அடைந்தார்.
இறையனார் களவியல் உரையில் பாண்டிய மன்னன் தனது அவைக்களப் பொருள் நூற் புலவர்களைப் பார்த்து பார்த்து ‘நாடுநாடாகிய ஞான்று நீங்கள் திரும்பி வாருங்கள்’ என்று கூறுகின்றான். இந்த நாடும் நாடாகிய பின் அமரர் அவர்களால் தொடக்கி வைக்கப்பட்ட நற்கருமங்கள் யாவும் மீண்டும் தொடரும் என்ற அசையாத நம்பிக்கையுடன் பெரியாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக் கின்றேன்.
வணக்கம் சாந்தி!
மாதர்க்குரிய மதிப்பை அளிப்பதன் மூலமே எல்லாத்தேசத்தாரும் சிறப் பெய்திருக்கிறார்கள் எந்த நாடு பெண்களைச் சரியாக மதிக்கவில்லையோ அந்த நாடு எப்போதும் சிறப்பெய்தியதில்லை; இனிமேலும்சிறப்படையாது.
-சுவாமி விவேகானந்தர்
தன்னைத்தான் வென்றவனே தனக்கு நண்பனாவான் தன்னைத்
தான் தான் வெல்லாதவன் தனக்குத்தானே பகைவனாகி கெடுதலை விளைவித்துக் கொள்கிறான்.
-ழரீ கிருஷ்ணர்

Page 24
- 36 -
6சேவையின் சிகரம் சி. க. வேலாயுதபிள்ளை.
திரு. ந. புவனேந்திரன் அவர்கள் மேலதிக அரசாங்க அதிபர்.
“சொல்வது யார்க்கும் எளிது? தத்துவங்கள் பேசலாம், திட்டங்கள் வகுக்கலாம். ஆனால் சொல்லிய வண்ணம் செய்வது அரிதான செயல். அரிய பெரிய செயல்களைச் செய்த பெரியார்கள் இன்றும் உலகில் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் மறைந்தொழிந்து போகவில்லை. வாழ்வாங்கு வாழத் துடித்த அரிய பெரியார்களுள் காந்தீயம் வேலாயுதபிள்ளையும் ஒருவரே.
யாழ்ப்பாணக் கச்சேரியில் நான் கடைமையாற்றிக் கொண்டு இருந்த காலம் நினைவுக்கு வருகிறது. நமது அலுவலகத்துக்கு தத்தம் அலுவலாக வருவோர் சிலர் நலிந்து, மெலிந்து வந்து காரியம் பார்ப்பர், சிலர் தோழமை ரீதியுடன் வந்து தம் அலுவல்களை முடித்துக் கொள்வர் இன்னும் ஒரு வகையினர் அதிகாரத் தன்மையுடன் வருவர். அவ்வவருக்கு ஏற்ற பாணியில் நாம் நமது கடமையைக் கட்டுப்பாட்டுடனும் கண்ணியத்துடனும் செய்வதே வழக்கம் யாருக்கும் அஞ்சியதேயில்லை. ஆனால் அஞ் சினோ ம் யாருக்கு? காந்தீயம் சி. க. வேலாயுதபிள்ளை ஒருவருக்கு என்று கூறினால் அவரின் காந்தீயத் திருப்பணியின் பெருமை கூறாமலே விளங்கும்.
அழகான வசீகரத் தோற்றம், சிறு குடுமி, விபூதிப் பூச்சு, கதர் வேட்டி, மடித்த சால்வைத் துண்டு, தோளில் வலது கையில் குடைதூங்கும்; பை ஒன்று அவர் பொக்கிஷம், புன்னகை தவழ்ந்த கூரிய கண்களுடன் கூடிய முகத்தோற்றம் 'நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்ற கம்பீரமான நடை. ‘துறவிக்கு வேந்தனும் துரும்பு’’ என்பதைப் பிரதிபலிக்கும் கைப்பை.

ー37ー
“காந்தீயம் வருகிறார்? என்று கூறிக்கொண்டு நம்மை நாமே தயார் செய்யும் நிலையில் இருப்போம். எளிமையும், தூய் மையும் நிறைந்த அரிய பெரிய திட்டத்தின் சம்பாஷணைகளும் திட்டங்களும் நமக்கு முன் சமர்ப்பிக்கப்படும். தட்டிக் கழிக்கவோ ஆறுதலாகவோ செய்யமுடியாத படி அவரின் தொடர்பு இருந்தது. உருத்திரபுரம், தருமபுரம், அக்கராயன் போன்ற காடுகள் நாடாக் கப்பட்ட பணியை முதலில் கட்டாயக் கடமையாக்கிய அமரர் காந்தீயம் வேலாயுதபிள்ளையவர்கள் அடிக்கடி அவரின் பணிக்கு அன்பினால் என்னையும் ஆளாக்கிய பெருமை அவருக்கே உரியது.
தனிமனிதன் இத்தனை பணிகளையும் செய்தாரே என்ற பிரேமை வாகன வசதியில்லாத நேரங்களில் மைல் கணக்கில் நடப்பார். பசி பாரார், கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற் கொள்ளார், கருமமே கண்ணாயின கர்மவீரரே நமது காந்தீய வேலாயுதபிள்ளையவர்கள்.
ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஒரு இல்லம்; அடக்கம் வேண்டி விழைந்த மகளிர்க்கு ஒரு இல்லம்; வேலை வாய்ப்புத் தேடிய ஆண், பெண் இருபாலருக்கும் வேலைத்திட்டம். இவைதான் காந்தீயம் வேலாயுதபிள்ளையின் உடமைகள் இதனால் அவர் உலகப்பாரமற்ற காந்தீயப் பெரியாராகவே அமரத்துவம் அடைந்தார். அன்னார் பணி சிறக்க வேண்டும். அவர் ஆத்மா சாந்தியடையப் பிரார்த் திப்போம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
உலக வாழ்க்கையில் உண்மையையும் அன்பையும் போற்றி வாழ்ந்த பெரியோர்களின் வரலாறுகண்ளக் கற்பதால், பெரும்பயன் உண்டு கற்ப வரின் வாழ்வைத் தூய்மைப் படுத்த வல்ல ஆற்றல் அவற்றிற்கு உண்டு.
. டாக்டர் வரதராசன்

Page 25
- 38 -
6.
காந்தி வேலாயுதபிள்ள்ளை
திரு. பொ. கந்தையா காந்தி ஆசிரியர் திருக்கோணமலை.
இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் காந்தி வேலாயுதபிள்ளை என்றால் எல்லோருக்கும் தெரியும் சிலர் சுருக்கமாக ‘காந்தீயம்’ என்றும் சி. க.வே. என்றும் அன்புடன் அழைப்பார்கள் படிக்கும் காலத் திலேயே சேவையில் ஈடுபட்டவர். தூய பிரமச்சாரியாக வாழ்ந்து எழுபதாவது வயது வரையும் தொண்டு செய்வதையே தனது மூச்சாகக் கொண்டவர். ܫ
சைவ மணங்கமழும் யாழ்ப்பாணத்து நீர்வேலியில் பிறந்த இவர் 'சைவமும் தமிழும் தழைத்தினிதோங்குக என்றபடி சைவத் தொண்டையே ஆரம்பித்தார். நல்ல சமுதாயத்தைக் காண்பதற்கு சைவத் தொண்டு மட்டும் போதாது என்று உணர்ந்து சமுதாய மேம்பாட்டுக்கும் சமூக சீர்திருத்தத்துக்கும் காந்திவழியே உகந்தது என்று கண்டு அதிலும் ஈடுபாடு கொண்டார்.
சைவ நெறியும் காந்திவழியும் காந்தி வேலாயுதபிள்ளையின் இரு கண்கள். அவரது தோற்றத்திலும் நடையுடை பாவனைகளிலும் இரு வழிகளும் -பிரதிபலித்தன. வெள்ளை நிறம், சிரித்த முகம், சிறு குடுமி, திரு தீற்றுப் பூச்சு, நான்கு முழக்கதர் வேட்டி, கதர்ச் சால்வை; சட்டை அணிவதில்லை. 'மடியில் பல விபரக்குறிப்புகளுடன் திருநீற்றுச் செப்பு கையில் குடை, பஸ்வண்டிகளில் இவரைக் கேட்காமலே இவரை ஒர் சைவக்குருக்கள் என எண்ணி விசேட ஆசனம் கொடுத்து விடுவார்கள்.
சி. க.வே. எல்லோருடனும் அன்பாகப் பழகுவார் சிறு குழந் தைகளுடன் தமசாகப் பேசிவிளையாடுவார். காந்தி நிலையப் பிள்ளைகள் இவரை பெரியண்ணா என்று அன்போடு அழைப்பார்கள். இதனால் வெளியிலும் பலர் பெரியண்ணா என்று அழைப்பதுண்டு.
பிரச்சினைகளைக் கண்டு விலகிச் செல்ல மாட்டார். பிரச் சனைகளுக்கு முகங் கொடுத்து நிதானமாக அவற்றை அணுகி நல்ல முறையில் தீர்வு காண்பார். 'சாந்தி’, ‘சாந்தி’ என்பது அவரது தாரக மந்திரம். எது வரினும் 'சாந்தி’, ‘சாந்தி’ என்று கூறிஅமைதி அடைவார். மற்றவர்களையும் அமைதி அடையச் செய்வார்.

- 39 -
சி. க. வே. கோபிக்கமாட்டார். ஆனால் அக்கிரமங்கள் கொடுமைகள் தலைதூக்கும் போது சிறிது சினங்கொள்வார். பதட்ட மின்றி உரிய நடவடிக்கைகளை எடுப்பார். தேவைப்படின் மேலதி காரிகளுடனும் முட்டிக் கொள்வார். கொள்கையளவில் விட்டுக் கொடுக்கவே மாட்டார். மனச்சாட்சிக்கு நீதிக்குச் சரியென்றதைச் செய்து முடிப்பார் நல்லதைச்செய்யும் சர்வாதிகாரியாகவும் இருந்தார்.
வைதீக சைவர்கள் சிலருக்கு காந்தியடிகளின் சில கொள் கைகள் பிடிக்காது ஆனால் சி. க. வே இரண்டு வழிகளையும் இணைத்து முற்போக்கான சமுதாயத்தைக் காணத் துடித்தார். சைவ சமய சங்கங்கள் மூலம் தொண்டு செய்த இவர், பல காந்தீயத் தொண்டர்களையும் காந்தீய வாதிகளையும் அணுகி அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தை 1949ல் அமைத்தார். 1923ல் காந்தியடிகளை இலங்கையில் வரவேற்ற சட்ட அறிஞர் ஹன்டி பேரின்பநாயகம் அவர்கள், முதல் தலைவர் ஆனார் அடுத்த தலைவர் பேராசிரியர் நேசையா மாஸ்ரர் அவர்கள் அடுத்த தலைவர் திரு. சின்னத்தம்பி முதலியார் அவர்கள். அடுத்த தலைவர் அதிபர் இ. கந்தையா மாஸ்ரர் அவர்கள். கடைசியாக சி. க வே. அவர்களே தலைவராக இருந்தார்.
சங்கம் 44 ஆண்டுகளிலும் ஆயிரக்கணக்கான அங்கத்தவர் களையும் நூற்றுக்கணக்கான தொண்டர்களையும் கண்டிருக்கும் ஆனால் 44ஆண்டுகளும் தொடர்ந்து தொண்டாற்றியவரும் நிர்வா கத்தில் இருந்தவரும் சி. க. வே தான். அகில இலங்கைக் காந்தி சேவா சங்கம் என்றால் காந்தி வேலாயுதபிள்ளை; காந்திவேலாயுத பிள்ளை என்றால் அகில இலங்கை காந்திசேவா சங்கம் என்ற அளவுக்கு சி. க. வே. சங்கத்தில் சங்கமித்துவிட்டார்.
இவரது விடாமுயற்சியால் கிளிநொச்சியிலுள்ள உருத்திர புரத்தில் ஆறு ஏக்கர் காணியில் 1958ல் காந்தி நிலையம் ஆரம்பிக் கப்பட்டது. இங்குள்ள மாணவர்களுக்கு கமத் தொழில், கைத்தொழில், பசுவளர்ப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. சங்கத்தின் கேந்திர ஸ்தானமாகவும் தலைமைக் காரியாலயமாகவும் இந்நிலையம் அமைந்து பல காந்தீய சர்வோதயத் திட்டங்களை நடைமுறைப் படுத்தியது. நிலையப்பணிகளில் திரு. சோ. க. தம்பிப்பிள்ளை அவர் கள் பெரிதும் ஈடுபட்டுழைத்தார். காந்தி நிலையத்துக்கு தவத்திரு குன்றக்குடி அடிகளார், டாக்டர் ஜே. ஸி. குமரப்பா, கல்கி கிருஷ்ண மூர்த்தி, கலைமகள் கி. வா. ஜகந்நாதன் ஆகிய பல பெரியார்கள் வந்து ஆசி கூறினர். காந்தி நிலையம் பூரண மனிதர்களைச் சிருஷ் டிக்கும் சிறந்த குருகுலமாக விளங்கியது.

Page 26
- 40 -
பூதானத்தந்தை வினோபாஜி காட்டிய வழியில் திரு.சி.க.வே நீர்வேலியில் இரண்டு ஏக்கர் நிலத்தை காந்தி சேவா சங்கத்துக்கு வழங்கினார் இந்த இடத்தில் தான் முதலாவது சர்வோதய மகா நாடு 1953ல் நடந்தது. இந்தியாவிலிருந்து பூரீ சங்கரராவ்தேவ், சர்தார் அ. வேதரத்தினம், பூg நா. இராமசுவாமி ஆகிய சர்வோ தயத் தலைவர்கள் வந்து பங்கு பற்றினார்கள். 1955ல் பண்ணா கத்தில் இரண்டாவது சர்வோதய மகாநாடு நடந்தது. இதில்
தவத்திரு குன்றக்குடி அடிகளார் வந்து கலந்து கொண்டார்.
தருமபுரத்தில் (பரந்தன் முல்லைத்தீவுப் பாதையில்) மூன்று ஏக்கர் காணியில் பெண்கள் முன்னேற்றத்துக்கான திட்டங்களுடன் கஸ்தூரிபாய் இல்லத்தை நிர்மாணித்தார். இதில் பல பெண்பிள் ளைகளும், விதவைகளும் பயிற்சிகளும் தொழில் வாய்ப்புகளும் பெற்றனர்.
சர்வோதய இயக்கத்துடனும் அதன் பெருந் தலைவர் டாக்டர் ஆரியரத்தினா அவர்களுடனும் தொடர்பு கொண்டார். சர்வோதய ஆலோசகர் ஆகவும் பணியாற்றினார். சிரமதான இயக் கங்களில் பங்கு கொண்டார். சிங்கள, தமிழ் சிரமதானத் தொண் டர்கள் மூலம் நீர்வேலி கைதடி வீதியை அமைத்தார். இதேமாதிரி சிங்கள தமிழ் சிரமதானத் தொண்டர்கள் குருநாகலைச் சேர்ந்த குளியாப்பிட்டியில் நெல்வயல்களில் நாற்றுகளை நட்டனர்.
சி. க. வே. அரசியலில் ஈடுபடவில்லை. ஆக்கப்பணிகளுக்காக அரசியல் தலைவர்களையும் பயன்படுத்துவார் இலங்கை இந்தியச் காங்கிரஸ் தலைவர்களான திரு. தொண்டமான், திரு. இர்ாசலிங்கம் திரு. செல்லச்சாமி ஆகியோருடன் தொடர்பு கொண்டு பலபணிகளை ஆற்றினார். வகுப்பு வாதத்தை வெறுத்து தேசிய ஒருமைப்பாட் டையே விரும்பினார்.
காலந்தோறும் மகாநாடுகளையும் கருத்தரங்குகளையும் பிரசாரக்கூட்டங்களையும் நடத்தி காந்தீய சர்வோதயக் கருத்துக் களைப் பரப்பினார். தீண்டாமை ஒழிப்பு ஆலயப் பிரவேசம் பலி நிறுத்தம் மது ஒழிப்பு ஆகிய சீர்திருத்தங்களுக்காகப் பாடுபட்டார். சமயத்துக்கும் இந்து கலாசாரத்துக்கும். ஒவ்வாத நடையுடை பாவனைகளைக் கண்டித்தார் பூலோக கற்பகதருவான் பனை மரத்தை விருத்தி செய்தார் அதனை அழிப்பதைக் கண்டித்தார்.
சங்க அறிக்கைகளை வெளியிடவும் சங்கப்பிரசாரங்களைச் செய்யவும் காந்தீயம் பத்திரிகையை மாதந்தோறும் வெளியிட்டார் இதற்கெனச் சிறிய அச்சுக்கூடம் ஒன்றும் பயன்படுத்தப்பட்டது. காந்திநிலையப் பிள்ளைகளே இதனை அச்சிட்டு வெளியிடப் பயிற்சி பெற்றிருந்தனர்.

காந்திஜியை விநோபாஜியை நேரில் தரிசித்து அவர்கள் ஆசியைப் பெற்றார் இந்தியாவில் பல காந்தீய சர்வோதய நிலையங்களுக்கும்
ஆச்சிரமங்களுக்கும் சென்று பயிற்சி பெற்றார் பல மகாநாடுகளிலும் கருத்தரங்குகளிலும் கலந்து கொண்டார். தன்னை நல்ல தொண்ட னாகத் தகுதிப் படுத்திக் கொண்டு மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பதே அவரது கொள்கை.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது சி.க.வேயின் பரந்த நோக்கு எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என்ற தாயுமானாரின் வாக்கே அவரது குறிக்கோல் சுயநலத்தின் அடிப்படையாகத் தோன்றும் போட்டி பொறாமை முதலிய குனங்களும் இக் குணங்களினால் ஏற்படும் சமூக இன்னல்களும் அவ்வின்னல்களினால் ஏற்படும் நாட்டுப் பிரச்சினைகளும் தீர திரிகரண சுத்தியுடன் சர்வோதயம் பணியில் இறங்குவோமாக என்று சி.க.வே. காந்திசேவா சங்க பதினாறாவது ஆண்டு அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
காந்தி வேலாயுதபிள்ளையுடன் சேர்ந்து தொண்டாற்றிய சிலர் பண்ணாகம் பண்டிதர் ஆறுமுகம் தொல்புரம் வித்துவான் சிவபாதசுந்தரம் புங்குடிதீவு வித்துவான் அ. கனகசபை, கொக்கு வில் பண்டிதர் அ. சரவணமுத்து, சுண்ணாகம் அதிபர் ஆ.மார்க்கண்டன் வதிரி ஆசிரியர் செல்லத்துரை, சங்கானை கந்தசாமி வவுனியா தொண்டர் த. நல்லதம்பி, கொழும்பு பெ. கனகநாத பிள்ளை, யாழ்ப்பாணம் வினாயகம், வவுனியா கதிரைமலை, திருக்கோணமலை தியாகி காந்தி இராஜகோபால் இப்படிப்பலர்.
நீர்வேலி பண்டிதர் துரைசிங்கமும் இவரது பாரியார் சத்தியதேவியும் ஓர் முன்மாதிரியான சர்வோதயக் குடும்பம் இவர் களது வீடு சி க. வேயின் கிளைக் கந்தோராக தொழிற்பட்டது கோப்பாய் இராசையா உபாத்தியாயரின் வீடும் அப்படியே கொக்குவில் இராமகிருஷ்ணமிஷன் பாடசாலையில் நான் வசித்த குடிலும் சி. க வேயின் காரியாலயமே என்னைக் காந்தி வழியில் தீவிரப்படுத்திய பெருமையும் அவருக்கே உரியது.
வவுனியா வன்செயலின் போது சுட்டுக் கொல்வதற்காக சி. க. வே வரிசையில் நிறுத்தப்பட்டார் சிவனே என்று திருநீற்றை அணிந்தார் தெய்வாதீனமாக உயிர்தப்பினார். செத்துப் பிழைத்த தாக எண்ணினார் இதனால் மறுபிறவி எடுத்ததாக உணர்வு பெற்றார் அதிலிருந்து காவி உடை அணியத் தொடங்கினார். காவியும் கதராடையே.

Page 27
- 42 -
* கடமை செய் பலனை எதிர்பாராதே" என்ற கீதையின் உபதேசப்படி வாழ்ந்த சி. க. வே கடையனுக்கும் கடைத்தேற்றம் என்ற சர்வோதயக் கொள்கையில் ஊறித்திழைத்து ஊருக்குதவினார். இதனால் ஊரார் உள்ளத்திலெல்லாம் வீற்றிருக்கிறார்.
சிலமாதங்கள் இரத்த அழுத்த நோயினால் பீடிக்கப்பட்டு எழுபதாவது வயதில் 11-4-93ல் கொழும்பில் சிவபதமடைந்தார் ஐயாவின் பிரிவால் வருந்தும் உற்றார், உறவினர், நண்பர்கள் தொண்டர்கள் எல்லோரும் ஆறுதல் பெறவும் ஐயாவின் ஆத்மா சாந்தியடையவும் எல்லோரும் ஒன்றிணைந்து பிரார்த்திப்போமாக.
நாட்டில் ஏற்பட்ட வன்செயல்கள் காரணமாக அகில இலங்கைக் காந்திசேவா சங்கம் செயல் குறைந்து கிடக்கின்றது. நாடு நல்ல நிலைக்குத் திரும்பியதும் சங்கத்தைத் தொடர்ந்து செயற்படச் செய்வது காந்தீய சர்வோதயத் தொண்டர்களின் பெருங் கடமையாகும் இதுவே நாம் எல்லோரும் காந்தி வேலாயுதபிள்ளை அவர்களுக்குச் செய்ய வேண்டிய நன்றிக் கடனாகும்.
சைவ நெறியையும் காந்தி வழியையும் ஒன்றாகக் கண்ட
பெரியார் சி. க.வே. அவர்கள் புகழ் பல்லாண்டு நிலவுக. சைவநெறி வளர்க. காந்திவழி வெல்க.
இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க!
35, சாரதா வீதி பொ. கந்தையா திருக்கோணமல்ை, காந்தி ஆசிரியர்
நாம் இனிச் செய்யவேண்டிய மாறுதல் பணத்தை நம்பு வதை விடுத்து உடலுழைப்பு ஒன்றையே நம்பியிருத்தல் வேண்டும் உடலுழைப்பினால் முடிந்ததைச் செய்து அத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய் வோமேயானால் நமது வாழ்க்கை முழுவதுமே ஒளிபெற்று
ஒங்கும்.
--வினேபாஜி R

- 43 سس--
G.
அமரர் சில க. வேலாயுதபிள்ளை கிளிநொச்சியின்
பெருந்தகைப் பெரியண்ணா.
திரு. நா. சோதிநாதன் அதிபர் மத்தியமகா வித்தியாலயம் கிளிநொச்சி
திரு. சி. க. வேலாயுதபிள்ளை 1950களின் மிக ஆரம்ப காலத்திலேயே சேவைசெய்யவென கிளிநொச்சிக்கு வந்தவர். அக்காலம் கிளிநொச்சிப் பிரதேசம் அடர்ந்த பெருங் காட்டுப் பிரதேசம். வனவிலங்குகள் இயல்பான வாழ்க்கை வாழ்ந்த பகுதி. வனவளம் திரட்ட உரியகாலத் தில் மக்கள் வந்து போன இடமாகும். இப்போது இருப் பதுபோல் பாரிய பல குடியேற்றத் திட்டங்கள், கிராம விஸ்தரிப்புத் திட்டங்கள், வர்த்தக நிலையங்கள், அரச நிறுவனங்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள் அன்று இருக்க வில்லை.
இவர் யாழ் முத்துத்தம்பி வித்தியாசாலையில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் போதே இவரது சகபாடியான அமரர் திரு. த. நல்லதம்பியுடன் கிளிநொச்சிக்கு வந்து பொதுத் தொண்டாற்ற விருப்பம் தெரிவித்திருந்தார். அப்படியே இருவரும் வந்து சேர்ந்தனர். அப்போது தவ யோகி யோகர் சுவாமிகளின் வேண்டுதலின் படி சமாதி நிலை அடைந்துவிட்ட வடிவேற் சுவாமிகள் கிளிநொச்சி யில் ஆன்மீகப்பணி ஆரம்பித்த காலம் சுவாமிகளுக்கு திரு. த. நல்லதம்பி, திரு. சி. க. வேலாயுதபிள்ளை ஆகிய இரு நண்பர்களும் அணுக்கத் தொண்டர்களாக இருந்து இனப்பற்றோடும் நாட்டுப்பற்றோடும் சமய சமூகப் பணி களை மேற்கொண்டார். திரு. சி. க. வேலாயுதபிள்ளை அவர்களுடைய ஆதரவுடனும் ஜெயந்தி நகரில் வடிவேற் சுவாமிகளின் குருவினுடைய பெயரில் மகாதேவா ஆச்சிரமம் உண்டாயிற்று.

Page 28
- 44 -
இவ்வாச்சிரமத்தில் தேவாரப் பண்ணிசை வகுப்புக் கள், சமய வகுப்புக்கள், சமய சந்தேகம் தெளியும் *சத்சங்கங்கள்” என்பன நடைபெறும். சமய ஈடுபாடுடைய அரச பணியாளர்களும் வர்த்தகர்களும் விவசாயப் பெரு மக்களும் அடிக்கடி இங்கு கூடும்போது ஒரு வேலைத் திட்டம் உருவானது. ஏழைமக்களுக்கு ஆதரவு, சமயக்கல்வி, கிராமந்தோறும் ஆலயம் அமைத்தல், விவசாயம், தொழில் அபிவிருத்தி, கால்நடை, அபிவிருத்தி இளந் தொண்டர் களுக்கு பயிற்சி, பெற்றோர் அற்ற சிறுவர்களைப் பராமரித் தல் இப்படியான நல்ல பல அம்சங்களைக் கொண்ட நிகழ்ச்சித் திட்டம் வகுக்கப்பட்டது. திரு. த. நல்லதம்பி சமயத் திட்டங்களைப் பொறுப்பேற்றார். திரு. சி.க. வேலா யுதபிள்ளை சமூக மேம்பாட்டுத் திட்டங்களைப் பொறுப் பேற்றார்.
காந்திய நெறிகளில் சமூகத் தொண்டாற்ற விரும்பிய திரு. சி. க. வேலாயுதபிள்ளை அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தை உருத்திரபுரத்தில் 8ம் வாய்க்காலில் நிறுவினார். அது செயற்பாட்டாலும் செல்வாக்காலும் விரைவாக வளர்ந்தது. யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் இருந்து மேலும் பல பணியாளர்களை இணைத்து சுய தொழில், விஞ்ஞான விளக்கமுள்ள விவசாயம், பயன்தரு கால்நடை வளர்ப்பு, நல்லின தென்னம்பிள்ளை நாற்றுக் கள் விநியோகம், சுதேச வைத்திய முறை அறிமுகம் இன்னோரன்ன செயற்பாடுகள் கோணாவில் காந்தி கிராமம் (150 ஏக்கர்) இரத்மலானை தொழில் பயிற்சி (அச்சுக்கூடம்) நிலையம் என வளர்ச்சி பெற்றது. இதனால் முதலியார் திரு. செ. சின்னத்தம்பி பண்டிதர் திரு. துரை சிங்கம், திரு. க. கந்தையா. திரு. விசுவலிங்கம் திரு. சோ க. தம்பிப்பிள்ளை போன்ற செயற்திறன் கொண்ட பெரி யார்களை இணைத்து மேற்கொள்ளப்பட்ட இவரது செயற் பாடுகள் இந்திய அறிஞர்களையும் கவரச் செய்தது.
சாதாரனமான உயரம், நல்ல நிறம், பரந்த நெற்றி சிறிய குடுமி, நாலுமுழ வேட்டி, மேலாடை அற்ற தோளில் சால்வை, இப்படியான தோற்றப்பாடுடைய திரு. சி. க. வேலாயுதபிள்ளை இந்திய பூதான இயற்கைத் தலைவர்

- 45
வினோபாபுஜி, குன்றக்குடி அடிகளார் போன்ற சமய சமூகப்பணித் தலைவர்களுடன் ஈடுபாடுடையவராக மாறி னார். பூதான இயக்கத்தின் இதழான ‘கிராமராஜ்யம்” போன்ற பத்திரிகைகளை இங்கு விற்று இவரது கொள்கை களைப் பரப்பினார். தவத்திரு குன்றக் குடிகளார் அவர் களை அழைத்து இலங்கையில் அவரது நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பாக இருந்து இலங்கையின் பல பாகங்களிலும் பிரசாரம் செய்தார்.
தமிழர்கள் இந்துசமயத்தினர் என்பது இவருக்குப் பிடிக்க்ாத காரியம். இதற்காக குன்றக்குடி அடிகளார் மூலம் சைவசித்தாந்தக் கருத்துக்களை வலுவாகப் பரப்பி வந்தார். பாடநூல் வெளியீட்டுச் சபையில் இந்து சமய நூலுக்குப் பொறுப்பாக இருந்த திரு. கி. லக்ஷமணஐயா, திரு. வை. க. சிவப்பிரகாசம் திரு. நடராசா போன்றோரு டன் கடுமையான வாதாட்டத்தை மேற்கொண்டு தமிழ் மாணவர்களுக்கு “சைவநெறி” பாடப்புத்தகம் வெளிவரப் பாடுபட்டார். அத்துடன் தமிழ் மாணவர்கள் கல்வித்தரா தர சாதாரண பரீட்சைக்கு இந்து சமயத்திற்கு தோற்ற முடியாத நிலைமையையும் உருவாக்கினார். அதன்பின்பு தான் எங்களுடைய சமயம் என்ன என்பதை பல சமயப் பாட ஆசிரியர்கள் தெரிந்து கொண்டனர்.
குடியேற்றத் திட்டங்கள், சுகாதாரவசதி, போக்கு வரத்து வசதி, தபால் விநியோகம் போன்றவை இல்லாமல் பின்னடைகின்றன என்ற கருத்தை முன்வைத்து அரச பணியாளர்கள் மத்தியில் வாதாட்டம் நடாத்தி இவ்வசதி களைப் பொதுவாக எல்லாக் குடியேற்றத் திட்டங்களுக்கும் குறிப்பாக உருத்திரபுரம் திட்டத்திற்குப் பெற்றுக் கொடுத் தவர். உருத்திரபுரத்தில் இருந்து குறிகட்டுவான் வரை ஒரு பஸ்சேவை காலை 4.09 மணிக்கு ஆரம்பமாகி நாளொன் றிற்கு இரண்டு சேவை நடாத்த வழிவகுத்தவர். இதனால் மற்ற, யாருக்கும் இல்லாத வசதியை இம்மக்கள் அனுப வித்து வந்தனர். \

Page 29
- 46 -
இவர் வரலாற்றுப் பெருமை மிக்க உருத்திரபுரம் சிவாலயப் புனரமைப்பு வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டார். இப்புனரமைப்புச் சபையின் தலைவராக கலைப்புலவர் நவரத்தினம் செயற்பட்டார். இதன் அங்கத்தவர்களாக திரு. அம்பிகைபாகன், திரு. செல்லையா, திரு. ம. பூரீகாந்தா, திரு. தி. முருகேசபிள்ளை ஆகியோர் செயற்பட்டனர் இக் கூட்டங்கள் பெரும்பாலும் யாழ்ப்பாணத்திலேயே நடை பெற்றன. ஆலயப் புனரமைப்பு வேலைக்ள் ஆமை வேகத் திலேயே நடைபெற்றன. இதனால் ஆத்திரமடைந்த திரு. சி க. வேலாயுதபிள்ளை அவர்கள் இக் கூட்டங்களை உருத்திரபுரத்திலேயே கூடவைத்து இப்புனரமைப்புச் செயற் பாடுகளை தாமே நேரடியாக மேற்பார்வை செய்து விரைவாக வளர்ச்சியடையச் செய்தார். இத்துடன் இவ் வாலயச் சூழலில்- 1000 ஏக்கர் காணியைப் பெற்றுக் சைவக் குடும்பங்களை குடியமரச் செய்வித்தார். இதனால் இவருக்கு 6R) ஆபத்துக்கள் ஏற்பட்டன. இவற்றைத் துச்சமென மதித்து செயற்பட்டு வெற்றி கண்டார்.
இவருடைய ஒழுக்கம், கட்டுப்பாடு, தொண்டு என்பன பலரைக் கவர்ந்தது. இதனால் மற்ற எந்த அமைப்புக்கும் கிடையாத வசதியான தொலைபேசி வசதி தொண்டர் நிலையமான இவ்நிலையத்திற்குக் கிடைத்தது. வழக்க மாகவே எழுத்து மூலம் காரியம் சாதித்துப் பழகிய இவர், தொலைபேசியைப் பயன்படுத்தி இன்னும் விரைவாகவும் விரிவாகவும் தொண்டு செய்தார். சாதாரணமான போக்கு வரத்துச் சாதனங்களைப் பயன்படுத்தியே பிரயாணம் மேற்கொள்வார். நேரந்தவறாமல் கூட்டங்களுக்குப் ப்ோவார் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். இவர் எல்லாராலும் எல்லாக்காலமும் மதிக்கப்பட்டதால் “பெரியண்ணா” என்று அன்பாக அழைக்கப்பட்டார். மேலும் பிற்காலத்தில் தமது

தன்னலம் சிறிதுமில்லாத சமூகப் பணியைவிரிவாக்க வேண்டி காலநியதி இறையருள் கூட்டியுள்ளதால் ‘சர்வோதயம் 61 - 1
னும் மகா பரந்த உலகளாவிய நிறுவனத்தில் அங்கம் வகித்து
நலிவுற்ற இடம் பெயர்ந்த, பாதிக்கப்பட்ட, ஊறு விளைந்த
குடுபங்கட்கு உதவி புரிய ஏற்பாடு செய்துள்ளார். அன்னார் முழுநேரப்பணியாற்றிய உருத்திரபுரம் எட்டாம் வாய்க்
காலில் அமைந்த காந்தி நிலையத்தில் (தற்போது காந்திவிடுதி) உருவச் சிலை வடித்து நிறுவி வணங்கினாலும் போதுமான
தாகாது, அவர் இறுதிக் காலத்திலும் தமிழ் நாடு சென்று தமக்கு உறுதுணையாக இருந்து. இப்பாரிய பணிகளுக்கு
ஆக்கமும் ஊக்கமும் தந்து ஆலோசனைகளும் உதவிய
பெரியார்களையும் நேரில் அளவளாவியும் அப்புண்ணிய
பூமியில் அருளாட்சி நடத்தும் குன்றக்குடி அடிகளாரையும்
சேத்திரங்களையும் தரிசித்து புண்ணிய தீர்த்தங்களாடியும்
வந்த பெருமையுமுண்டு. அன்னாரின் ஆத்மா பரமாத்து
மாவுடன் ஒன்றிணைய யாம் அனைவரும் சேர்ந்து இறை
யருளைப் பிரார்த்திப்போமாகுக.
தொண்டு செய்வாருக் குண்டே ஞானம்
மாங்களம் ஜெய மங்களம்

Page 30
- 48 -
el அகில இலங்கைக் காந்திசேவா சங்கத்தின் 16 வது ஆண்டு அறிக்கைப் புத்தகத்தில் 1965ம் ஆண்டில் காந்தி நிலையத்தைப் பற்றி திரு.சி.க. வேலாயுதபிள்ளை அவர்கள்
எழுதிய கட்டுரையில் இருந்து சில குறிப்புகள்
விவசாயத்திலும் குடிசைக் கைத்தொழில்களிலும் இளைஞர் களுக்குப் பயிற்சி அளிப்பதன் அவசியத்தை உணர்ந்த காந்தி சேவா சங்கம் கிளிநொச்சி உருத்திரபுரம் 8ம் வாய்க்காலில் அரசினர் கொடுத்த ஆறு ஏக்கர் நிலத்தில் கமத்தொழில், கைத்தொழிற் பயிற்சி நிலையமொன்றை நிறுவத் திட்டமிட்டது.
இதற்கான ஆரம்பக்கூட்டம் திரு. கு. நேசையா அவர்களின் தலைமையில் வெள்ளவத்தை சைவமங்கையர் கழக மண்டபத்தில் 11-03-56ல் நடைபெற்றது. அக்கூட்டத்திற்குப் பல பெரியார்கள் சமூகமளித்தனர். திருவாளர்கள் டாக்டர் குமரன் இரத்தினம், கலாநிதி பொ. செல்வநாயகம், ஏ. இராஜேந்திரன் ஆகியோர்கள் நிலையத்தின் அவசியம் பற்றி அபிப்பிராயம் தெரிவித்தனர். பயிற்சி நிலையத்திற் கான திட்டத்தை உருவாக்கவும் பயிற்சி நிலையத்தைப் பரிபாலிக் கவும் ஒரு சபை நிறுவப்பட்டது.
சபையின் தீர்மானப்படி காந்தி நிலையம் 1958ம் ஆண்டு உருத்திரபுரத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந் நிலையத்திற்கு அகில இந்திய ஆதாரக் கல்விச் சங்கத் தலைவர் திரு. ஈ. டபிள்யு அரியநாயகம் அவர்கள் 1957ல் அத்திவாரமிட்டார்கள். இப்போது நிலையத்தில் அனாதரவான 30 பிள்ளைகள் இருக்கின்றார்கள். இங்கு சாதி, மத, இன வர்க்க பேதமின்றிப் பிள்ளைகள் பராமரிக் கப்பட்டுக் காந்தீய சர்வோதய இலட்சிய நெறிகளுக்கமையப் பயிற்றப் படுகின்றனர் எல்லாமத விசேடதினங்களையும் பண்டிகைகளையும் மதித்துக் கொண்டாடச் சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது. மாணவர் காலையும் மாலையும் பிரார்த்தனை செய்கின்றனர்.
மாணவர்கள் காட்டை அழித்து வரம்பு போட்டு, வேலியிட்டு, கட்டைகளைத் தோண்டி அகற்றி நிலத்தைச் சீர் செய்யவும், நெல்விதைத்தல், நாற்று நடுதல், களைபிடுங்குதல், அருவி வெட்டுதல், சூடு அடித்தல், நெல்லை மூட்டைகளாகத் தைத்துக் கொள்ளுதல் ஆகிய சகல துறைகளிலும் பயிற்சி பெற்று வருகின்றனர் மேலும்

سے 49 حس۔
காய்கறித் தோட்டம் அமைத்தல், வாழை பயிரிடுதல், பிரயோசனகி களைச் சேமித்தல், உபயோகத்திற்கு எடுத்தல், விற்பனவு செய்தல், இயந்திரத்தின் மூலம் நீர்ப்பாய்ச்சுதல் ஆகிய துறைகளிலும் பயிற்சி பெற்று வருகின்றார்கள்.
காந்தி நிலையத்தில் 'கோகுலம்’ உண்டு இதில் இருபத்தைந்து மாடுகள் உள மாடுகளை மேய்த்தல், குளிப்பாட்டுதல், சாணியைச் சேமித்தல், பட்டியைச் சுத்தம் செய்தல், பால்கறத்தல், உணவிடுதல் நோய்களைக் கவனித்து வைத்தியம் செய்தல் ஆகிய துறைகளிலும் மாணவர் பயிற்சி பெறுகின்றனர்.
காந்தி நிலையத்தில் சுமார் 300 புத்தகங்கள் உள்ளன பிள்ளைகள் அவற்றை வாசித்து அறிவு பெறுகின்றனர். இங்கு மட்டரகமான நூல்களும் சஞ்சிகைகளும் இல்லை. வானொலிப் பெட்டி ஒன்றுண்டு. தரக்குறைவான நிகழ்ச்சிகளைப் பிள்ளைகள் கேட்கச் சந்தர்ப்பம் அளிக்கப்படுவதில்லை. மாணவர்கள் பேசிட் பழகவும் சபைகளை நடாத்தி அனுபவம் பெறவும் மாணவர் மன்றம் நடாத்தப்படுகின்றது நிலையத்திற்கு வரும் அறிஞர்கள், பெரியோர்கள் மன்றத்தின் மூலம் அறிவுரைகளை வழங்குகிறார்கள் அதிகாலையில் யோகாசனப் பயிற்சியும் உடற்பயிற்சியும், மாலையில் தேசிய விளையாட்டுக்களும் உள
காந்தி நிலையக் குரு குலத்தில் தாவர உணவு மாத்திரம் அளிக்கப்படுகின்றது. உணவு சமைக்க உதவுதல், உணவுகளைப் பரிமாறுதல், சிக்கனமாகப் பகிர்ந்து உபயோகித்தல் ஆகிய துறை களிலும் மாணவர் பயிற்சி பெறுவர், குருகுலத்தில் தாக சாந்திக் காக வேண்டிய நேரத்தில் மல்லி நீர் உபயோகிக்கப்படுகிறது. மல்லி, நற்சீரகம், சுக்கு, வெந்தயம், நன்னாரி முதலியவற்றைச் சேர்த்து வறுத்து இடித்து மல்லி நீர் தயாரிக்கப்படுகின்றது. மாணவர் அதிகாலை 4.30 மணிக்கு நித்திரை விட்டெழுந்து. இரவு 8.00 மணிக்கு நித்திரைக்குச் செல்கிறார்கள்.

Page 31
- 50 -
காந்தி நிலையத்தில் ஒரு நெசவுசாலை ஒழுங்காக நடை பெற்று வருகின்றது. கிராமத்திலுள்ள பெண்பிள்னைகள் வந்து நெசவு செய்கின்றனர் வடபகுதியிலுள்ள சிறிய நெசவு சாலைகளில் உற்பத் தித்துறையில் காந்தி நிலைய நெசவுசாலை முன்னணியில் நிற்கின்றது.
காந்தி நிலையத்தில் தும்புக் கைத்தொழில் ஆரம்பிக்கப் பட்டுள்ளது, குருகுல மாணவர்கள் இத்துறையில் பயிற்சி பெற்று பொருட்களை உற்பத்தி செய்யவும் அப்பகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் இம்முயற்சி வாய்ப்பளிக்கும்.
காந்தி நிலையக் குருகுலத்துக்கு கிளிநொச்சிப் பகுதியில் உள்ள கமக்காரர்கள் வருடந்தோறும் நெல்லுத்தானமாக உதவி வருகிறார்கள். இலங்கையின் பலபாகங்களிலுமுள்ள அன்பர்கள் மாதவீதம் சம்பத்துத்தானம் அளித்து வருகின்றனர். இதில் திருக்கோணமலை அன்பர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
காந்தீய சர்வோதய இலட்சியங்களுக்கமைய இலங்கையில் தொண்டர்களையும் ஊழியர்களையும் உருவாக்கும் பணியை அகில இலங்கைக் காந்தி சேவா சங்கம் காந்தி நிலையம் மூலம் தொடங் கியுள்ளது படித்த வாலிபர்கள் முன்வந்து தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியையாவது இவ் இலட்சியங்களுக்காகப் பயன் படுத்தல் வேண்டும்.
 

01.
02.
03.
04.
05.
06.
07.
- 51 -
கடவுள் துணை
மகாத்மா காந்தியடிகளின் அருள் மொழிகள் சத்திய சோதனையிலிருந்து தொகுக்கப் பெற்றவை.
சுத்தமான அகிம்சை எல்லாவற்றிலும் வியாபிக்கும் போது அது தொட்டதையெல்லாம் தன்மயமாக்கி விடுகிறது. அதனுடைய சக்திக்கு ஓர் எல்லையே இல்லை, குழந்தைகளுடன் கூடியிருப்பதில் எனக்கு அதிகப்பிரியம். அவர்களுடன் விளையாடி வேடிக்கை செய்து கொண் டிருக்கும் வழக்கம் இன்றைக்கும் என்னிடம் அப்படியே இருந்து வருகிறது. ஏழைகளுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதே என் உள்ளத்தின் அத்தியந்தஅசை. அந்த ஆசை என்னை எப்பொழுதும் ஏழைகளின் நடுவில் கொண்டு போய்ச் சேர்த்தது. அதனால் அவர்களில் ஒருவனாக என்னை ஆக்கிக் கொள்ளவும் முடிந்தது. சேவையின் மூலமே ஆண்டவனை அஉைய முடியும் என்பதை அறிந்தேன். ஆதலால் சேவையையே என்னு டைய மதம் ஆக்கிக் கொண்டேன். v °. " . சத்தியம் என்பது ஒரு பெரிய மரத்தைப் போன்றது. அதை நீர் ஊற்றி நாம் வளர்க்க வளர்க்க அது மேலும் மேலும் கனிகளை அதிகமாகக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறது
தொண்டு என்பது கண்ட படியெல்லாம் உடனே முளைத்து விடக்கூடியதன்று. இதற்கு முதலில் மனத்தில் விருப்பம் வேண்டும் பிறகு அனுபவமும் தேவை. மகாயோகியான கடவுள் தம் தெய்வீகப் பெயரைக் கொண்டே செய்யப்படும் எவ்வளவு வஞ்சகங்களையும் அதர்மங்களையும் சகித்துக் கொண்டிருக்கிறார். மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்கிறான் என்று ஆண்டவனே கூறியிருக்கிறார். கரும பலனை அனுபவிக்காமல் யாரும் தப்பிவிடவே முடியாது.

Page 32
10.
ll.
13.
14.
‘ س- 52 -۔
ஏழைகள் கடவுளின் கருணையில் நம்பிக்கை வைத்தி ருப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு கதி இல்லை.
யானைக்கு எறும்பினிடம் நல்லெண்ணமே இருக்கலாம். ஆனால் எறும்பின் தேவையையும் செளகரியத்தை யும் கொண்டு சிந்திக்கும் சக்தி யானைக்கு இல்லை.
சரியோ தவறோ மனிதன் மாமிசம் முட்டை போன் றவைகளைத் தின்னக்கூடாது என்பதை, என்னு டைய மதக் கொள்கைகளில் ஒரு பகுதியாகக்கொண் டிருக்கிறேன். நாம் உயிர்வாழ்வதற்கென்று மேற் கொள்ளும் சாதனைகளுக்கு ஒர் எல்லை இருக்க வேண்டும். உயிர் வைத் திருப்பதற்கு அவசியம்ான்றாலும் காரியங்களை நாம் செய்யக்கூடாது.
சத்தியமாக இருக்கும் கடவுளைத் தவிர மற்ற எல்லா மும் நிச்சயமற்றதாயிருக்கும் இவ்வுலகத்தில் நிச்சய மான வாழ்வை எதிர்பார்ப்பது தவறு பரம் பொருள் ஒள்றே நிச்சயமானது. t
. நிச்சயமான பரம்பொருளை ஒருகணமேனும் தரிசித்து
அதனுடன் தன்னை இணைத்துக் கொண்டு விடுபவனே பெரும் பாக்கியசாலி அந்தச் சத்தியப் பொருளையும் தேடுவதே வாழ்வின் நித்தியானந்தமாகும்.
மோட்சத்தை அடைய விரும்புகிறவர்கள் தம்மிடம் இருக்கும் உடைமைகள் விஷயத்தில் தருமகர்த்தா போன்று நடந்து கொள்ள வேண்டும் தர்மகர்த்தாவின் ஆதிக்கத்தில் எவ்வளவுதான் சொத்துக்கள் இருந்தாலும் அதில் ஒரு சிறிதும் தனக்குச் சொந்தமானதல்ல என்று அவர் எண்ணுவது போல எண்ண வேண்டும்.
மனதிலிருக்கும் காமவிகாரங்களைத் தீவிரமான ஆன்ம சோதனையினாலும் ஆண்டவனிடம் அடைக்கலம் புகுவதினாலும் அவன் அருளினாலும் மன்றிப் போக்கிக் கொண்டு விடவே முடியாது.

15.
6.
7.
I 8.
19.
20.
-- 53 س
ஒவ்வொரு மாணவனும் தன் சமயத்தைக் குறித்த மூலாதாரமான விஷயங்களை அறிந்திருப்பதோடு **
சமய சம்பந்தமான நூல்களைப் பற்றியும் பொதுவாகத்
தெரிந்திருப்பது அவசியம்
ஆன்ம சாதனப் பயிற்சியோ முழுக்க முழுக்க உபாத்தி யாயரின் வாழ்க்கையையும் ஒழுக்கத்தையும் பொறுத் தது ஓர் உபாத்தியாயர் குழந்தைகளின் நடுவில் இருக் , போதும் சரி தனியாக இருக்கும் போதும் சரி தம் முடைய குணத்திலும் செயலிலும் எப்பொழுதும் அதிகக் கவனத்துடன் இருக்க வேண்டும்.
சத்தியத்தை நாடிச் செல்லும் போது கோபம், சுய நலம், துவேஷம் முதலியன. இயற்கையாகவே நீங்கி விடுகின்றன. ஏனெனில் அவை நீங்காவிட்டால் சத்தி யத்தை அடைவது இயலாததாகும்.
சமயங்கள் பல இருந்து வரும் வரையில் ஒவ்வொரு சமயத்திற்கும் வெளிப்படையான சின்னம் ஏதாவது அவசியமாக இருக்கலாம். ஆனால் அந்தச் சின்னமே பிரமாதமாக்கப்பட்டு இன்னொரு மதத்தை விடத் தன்
மதமே உயர்வானது என்று காட்டுவதற்கு அது பயன் படுத்தப்படுமாயின் அப்பொழுது அச்சின்னம் புறக் கணிக்கப்படுவதற்கே ஏற்றதாகும்.
LPG, சம்பந்தமான விடயங்களில் நம்பிக்கைகள், மாறு படுகின்றன. அவரவரின் நம்பிக்கைதான் அவரவர் களுக்கு மேலானதாகும். மத சம்பந்தமான விஷயங்களி
லெல்லாம் எல்லோருக்கும் ஒரேவிதமான நம்பிக்கை
இருக்குமானால் உலகில் ஒரேயொரு மதந்தான் இருக்கும். r
சத்தியத்தைத் தவிர வேறு கடவுள் இல்லை என்பதை ஒரேமாதிரியான’ என்னுடைய அனுபவங்கள் எனக்கு உறுதியாக உணர்த்தி இருக்கின்றன. சத்தியத்தைத் தரிசிப்பதற்குள்ள ஒரே மார்க்கம் அகிம்சைதான்.

Page 33
21.
22.
23.
24.
25.
- 54 -
நாம் தினந்தோறும் கண்ணால் பார்க்கும் சூரியனை விட கோடிமடங்கு அதிகப் பிரகாசம் உடையது சத்தியத்தின் ஜோதி அகிம்சையைப் பூரணமாக அடைந்தால் மாத்திரமே சத்தியத்தின் பூரணமான சொரூபத்தையும் தரிசிக்க முடியும்.
பிரபஞ்சம் அனைத்திலும் நிறைந்து நிற்பதான சத்திய சொரூபத்தை நேருக்கு நேராக ஒருவர் தரிசிக்க வேண்டுமாயின் மிகத் தாழ்ந்த உயிரையும் தன்னைப் போலவே நேசிக்க முடிந்தவராக அவர் இருக்க வேண்டும்.
சத்தியத்திடம் நான் கொண்டிருக்கும் பக்தி என்னை ராஜியத்துறையில் இழுத்து விட்டிருக்கிறது. சமயத் துறைக்கும் ராஜியத்திற்கும் எந்தவிதமான சம்பந்த மும் இல்லை என்று கூறுவோர் சமயம் என்பது இன்ன தென்பதையே அறியாதவர்கள்ாவர்.
தன்னைத்தானே தூய்மைப்படுத்திக் கொண்டு விடா
மல் எல்லா உயிர்களிடத்திலும் தன்னை ஒன்று
படுத்திக் கொள்வது என்பது முடியாத காரியம் தம்மைத்தாம் தூய்மைப் படுத்திக் கொள்ளாமல் அகிம்சா தருமத்தை அனுசரிப்போமென்பது வெறும் கனவாகவே முடியும்.
ஆன்மத் தூய்மைக்கான மார்க்கம் மிகவும் கஷ்டமான தாகும். பூரணத் தூய்மையை ஒருவர் அடைவதற்கு அவர் எண்ணத்திலும் சொல்லிலும் செயலிலும் காமக் குரோதங்களை அறவே நீக்கியவராக இருக்க வேண்டும்.

- 55
சர்வோதய பிரதிக்கினை
கதர் அபிவிருத்தியும் கைத்தொழில் வளர்ச்சியும் மத ஒற்றுமையும் மாதர் முன்னேற்றமும் மதியினை மயக்கும் மதுவினை விலக்கலும்
புதுமுறைக் கல்வியும் பொது ஜனக் கல்வியும் நம் தாய் மொழியும் தேசிய மொழியும் ஊர்ச் சுகாதாரமும் உடற் சுகாதாரமும் ஹரிஜன சேவையும் சரிசம உடைமையும் வையம் வாழும் வகை செயும் உழவர் குஷ்டம் என்னும் கொடு நோய் கொண்உோர் மலைவாழ் மக்கள் மாணவர் தம்மொடு தொழில் செய் மக்கள் துயரம் தீர்த்தலும் ஆபவிப் பதினெண் அரும்பணி வாயிலாய் சர்வோதய நற் சமுதாயத்தினை
நிர்மாணம் செய நித்தமும் உழைப்போம்.
35603

Page 34


Page 35
ki gła, ki rk. 4 km i *大大大火火、
3G
-يا انجي=
y
స్థలలలt 5 ly RGAE F J #Rଦ୍ଦମ
_ー丁
a st; (f ഭം
فيه ليصلك؟
ქლ --51 մ
R
§
*
大
次
大 s ჟლეტkლ-ტუტლქლქალქლქლქლ
Ni
 

eeరుe+
ரச்சகம், திருக்கோணமலை,
పెN N N N N NY N N N