கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காசிநாதர் மான்மியம் (ஆ. க. காசிநாதர்)

Page 1
உ ந. கந்தம் காசிரு
சிநா 証 ဓမ္ယာေၾဆီ#ညိုဖွံ့ရွှံ့tUစ္သစ္ႀ
PR களின் சிவபகுப்பேறு (
豐 OO 5
2
 
 

*歐 Pł
*
[်နိ{

Page 2


Page 3

சிவமயம்
காசிநாதர் மாண்மியம்
யா/மட்டுவில் வடக்கு
சந்திரமெளலிச வித்தியாசாலையின் ஆசிரியரும், தர்மகர்த்தாவுமாகிய
உயர்திரு. ஆ. க. காசிகாதர் உபாத்தியார் அவர்களின்
நினைவு வெளியீடு
பதிப்பாசிரியர்- திரு. கா. சிவபாலன் அவர்கள்
தாரண வருடம் மாசி மாதம்
@丑-@2-2@@岳

Page 4
நூற் குறிப்பு
நூலின் பெயர்:. காசிநாதர் மான்மியம்
முதற்பதிப்பு. 2005 LDrá?
பதிப்பாசிரியர்:. திரு. கா. சிவபாலன்
e fold:- திரு.க. காசிநாதர் குரும்பம்
కళ s 99 மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி
கணனிப் பதிப்பு:. திருக்கணித பதிப்பகம்,
114, டச்சு வீதி, சாவகச்சேரி.
BILD BGBRAPHDW
Title: KASINATHER MANIMAUM
First Edition:- February 2005
Author: Mr. K. SIVABALAN
Copyright:- Mr. K. Kasinather Family
AYAM Madduvil North, Chavakachcheri.
Computer typeset & Printing:
THI RUKKANTHA PATHI PAHAM, 114, Dutch Road, Chavakachcheri.

修翁>... 须 32833
மட்டுவில் பல்வேறு பெருமைகளையும், சிறப்புக்களையும் தன்னகத்தே கொண்டது. காசிநாதர் மான்மியம் என்னும் நூல் தந்தையாரை நினைவு கொள்ளும் வகையில் வெளி வருகின்றது. பகுதி, பகுதியாக 5 இயல்களைக் கொண்டு வெளிவருகின்றது. தந்தையாரைப் பற்றிய ஆத்ம சாந்திகளையும், அஞ்சலிச் செய்திகளையும், மட்டுவில் சந்திரமௌலீச வித்தியாசாலை பற்றிய தகவல்களையும், பேரறிஞர்கள், சான்றோர்கள் பற்றிய விபரங்களையும் ஒன்று திரட்டி காசிநாதர் மான்மியம் வெளிவருகின்றது.
கடந்த 19 நாட்கள் எடுத்த முயற்சியே இதுவாகும். 2000-ம் ஆண்டு மே மாத யுத்தத்தின் பின்னர் மட்டுவிலில் எந்தவொரு ஆவணங்களையும் என்னால் பெற முடியவில்லை. எனினும் யான் தெரிந்தவற்றை மாத்திரம் இங்கு ஆவணப் படுத்தியுள்ளேன். இதற்குப் பேருதவியாக இருந்த திரு. க. கந்தையா உபாத்தியாயர், என்னைப் பல இடங்களுக்கும் கூட்டிச்சென்ற ச. முரீறமணன், இந்நூலின் கையெழுத்துப் பிரதிகளை எழுதி உதவிய செல்வி தாரணி சிவகடாட்சம், செல்வி பிரதீபா சிவஞானசுந்தரம் ஆகியோருக்கும் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். அவர்கள் அனைவருக்கும் நன்றி உடையேன். இந்நூல் வெளிவர வரவேற்புத்தந்த எங்கள் கலாநிதி சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அம்மா அவர்களுக்கும் பெரு நன்றியுடையேன்.
விண்ணவர் உலகில் இருக்கும் எங்கள் தந்தையாரது ஆத்மா சாந்தியடைய உங்கள் அனைவரையும் பிரார்த்திக்குமாறு வேண்டுகின்றேன். அவரது நினைவாக வெளிவரும் இந்நூலினை அவரது பாதக்கமலங்களில் சமர்ப்பணஞ் செய்கின்றோம். ۔۔۔۔۔۔۔
ததிரு. கா. சிவபாலன்

Page 5
தெல்லிநகர் உழுகுடைப் பதி துர்க்காதேவி பதிகம்
喀※
: Helppaa Sri Lanka
மாருதப் புரவல்லி திசையுக்ரசோழனருள் மகளுற்ற குன்மவலியும் மாமுகமுநீக்கியவர் மகளென வனப்பருளி மாவிட்ட புரமென் றுநற் பேருலவ விட்டுலகினிற்கொடிய மிடிகவலை பிணியொன்று மணுகாமலே பேறுதரு கோயில் கொண்டாசகல் விழாப்பவனி பேசுமயில் மீது வந்து ஆருமயல் தீரவருள் விளையாடல் செய்து வரு மறுமுகக் குமரேசனை ஆர்வமொடெதிர்ந்துபசரித்திடவுமடியருறு மாகுல மகற்றிமேலாஞ் சீருமுயர் கல்வி ஞானம்பேறளிக்கவுந் திருவுளங் கொண்டெழிலுறுங் தெல்லிநகருமுகுடைப்பதியிலுறைநிறைசெயச் செல்வி துர்க்கா தேவியே.
 

திருச்சிற்றம் பலம் uébortori> தேவாரம் தில்லைவா ழந்தணர்த மடியார்க்கு மடியேன்
றிருநீல கண்டத்துக்குக் குயவனார்க் கடியே னில்லையே யென்னாத வியற்பகைக்கு மடியே
னினளயான்றன் குடிமாற னடியார்க்கு மடியேன் வெல்லுமா மிகவல்ல மெய்ப் பொருளுக் கடியேன்
விரி பொழில் சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியே னல்லிமென் முல்லையந்தா ரமர் நீதிக் கடியே
னாரூர னாரூரி லம்மானுக் காளே.
திருவாசகம் மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்(து)
உன்விரையார் கழற்(கு) என் கைதான் தலை வைத்துக் கண்ணிர் ததும்பி
வெதும்பி உள்ளம் பொய்தான் தவிர்ந் (து) உன்னைப் போற்றி
சய சய போற்றி என்னும் கைதான் நெகிழ விடேன் உடையாய்
என்னைக் கண்டு கொள்ளே.
திருவிசைப்பா ஏக நாயகனை யிமையவர்க் கரசை
யென்னுயிர்க் கமுதினை யெதிரில் போக நாயகனைப் புனல் வண்ணர்க் கருளிப்
பொன்னெடுஞ் சிவிகையா வூர்ந்த
حے1ے

Page 6
மேக நாயகனை மிகு திரு விழி
மிழலை விண்ணிழி செழுங்கோவில்
யோக நாயகனை யன்றிமற் றென்று
முண்டென வணர்கிலேன் யானே.
திருப்பல்லாண்டு மிண்டு மனத்தவர் போமின் கண்
மெய்யடியார்கள் விரைந்து வம்மின் கொண்டுங் கொடுத்துங் குடிகுடி யிசற்காட்
செய்மின் குழாம் புகுந் தண்டங் கடந்த பொருளள வில்லதோ
ரானந்த வெள்ளப் பொருள் பண்டு மின்று மென்றுமுள்ள பொருளென்றே
பல்லாண்டு கூறுதுமே.
பெரியபுராணம் இறவாதவின்ப வன்பு வேண்டிப் பின்
வேண்டு கின்றார் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டே(ல்)
உன்னை யென்றும் மறவாமை வேண்டு மின்னும் வேண்டும் நான்
மகிழ்ந்து பாடி அறவா நீ யாடும் போதுன் னடியின் கீ (ழ்)
இருக்க வென்றார்.
அபிராமி அந்தாதி நாயகி நான்முகி நாரா யணிகை நளினபஞ்ச சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கியென் நாயகி யாதி யுடையாள் சரண மரணமக்கே.
தீதுச்சிற்றம்பலம்
-ii

நி
சிவமயம்
மலர்வு:
13.03, 1909 22.01.2005
யா/மட்டுவில் வடக்கு சந்திரமௌலீச வித்தியாசாலை ஆசிரியரும், தர்மகர்த்தாவும் ஆகிய மட்டுவில் மைந்தன்
அமரர் திரு. கந்தர் காசிநாதர்
அவர்கள்
திதி நிர்ணய வெண்பா மாண்டகைய தாரணத்தில் மலர்ந்திலங்கு தைமாதம் பூண்டதிதி பூர்வத்துத் திரயோதசியே - மாண்புடைய சந்திர புரத்துத் தலையாசான் காசிநாதர் தன்னுயிரை ஈந்த தினம்

Page 7

சந்திரபுரதல வரலாறு
(நீ தட்சிண கைலாயமெனப் பெயர் பெற்ற விளங்கும் இலங்கையின் வட பாகமாகிய யாழ்ப்பாணத்தைச் சார்ந்த மட்டுவிலுக்கு சந்திரபுரம் என்ற பெயர் வந்த வரலாறு)
இற்றைக்கு இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் சோழ நாட்டை ஆண்டு வந்த சோழ அரசனுடைய குமாரன் ஒருவன் வட நாட்டிலுள்ள திருக்கேதாரம் என்னும் தலத்திற்கு வடமொழி பயிலச் சென்றிருந்தான். சிவபக்தன் ஆகிய அவன் நாள்தோறும் திருக்கேதார நாதரை வழிபடுவது வழக்கம். கேதாரப் பெருமான் சந்நிதியில் மன்மதனால் பூசிக்கப்பட்ட ஒரு தெய்வீக சிவலிங்கம் இருந்தது. அச் சிவலிங்கத்தில் மனதைப் பறிகொடுத்த இளவரசன் ஆங்குள்ளார் அனுமதியோடு எடுத்து வந்து தன் அரண்மனையில் ஒரு சிறு ஆலயம் அமைத்து பூசித்து வந்தான்.
அதனி பின் அவ்வரசிளங் குமரன் பாணி டிய இராசாவினுடைய இராசதானியாகிய மதுராபுரியில் வில் வித்தை முதலியவைகளை அதி தீவிரமாகக் கற்றுக் கொண்டிருந்தனன். அது சமயத்தில் யாழ்ப்பாணம் பரிபாலிக்க அரசன் இல்லாமல் இடர்ப்பட்டது. அதனால் இங்கு வாழ்ந்த சைவ வேளாண் பிரபு ஒருவர் சோழநாடு சென்று சோழ மகாராசாவைக் கண்டு யாழ்ப்பாணம் அரசன் இல்லாமல் சீரழிவதைக் கூறி அரசை ஏற்கும் படி விண்ணப்பித்தார். சோழ மகாராசனும் பாண்டிய இராசனுக்கு தன் மைந்தனை அனுப்பும் படி தெரிவித்தான். பாண்டிய இராசாவும் அவ் இராச குமாரனை அழைத்து விடயத்தைக் கூறி சோழ நாட்டிற்கு அனுப்பி வைத்தான். அவனும் அங்கு சென்று தந்தையார் கொடுத்த பல
--

Page 8
வரிசைகளோடும், அச் சிவலிங்கப் பெருமானுடனும் யாழ்ப்பாணம் வந்து நல்லூரிலே ஓர் அரண்மனை கட்டுவித்து சிவலிங்கப் பெருமானுக்கும் ஓர் ஆலயம் அமைத்து கைலாயநாதர் என்னும் திருநாமம் சூட்டி பிரதிட்டை செய்து வழிபட்டு அரசியற்றி வரலானான். இவனுக்கு “சிங்கை ஆரிய சக்கரவர்த்தி” என்னும் பட்டமும் சூட்டப்பட்டது. பல ஆண்டுகளின் பின் ஆரிய சக்கரவர்த்திகளின் அரசு அழிந்து இற்றைக்கு முந்நூற்றைம்பது வருடங்களுக்கு முன் போர்த்துக்கீசர் ஆட்சி ஆரம்பமாகியது. அவர்கள் சைவ சமயத்தையும், சைவ ஆலயங்களையும் அழிக்கத் தொடங்கினர். அந் நேரத்தில் பல சைவ ஆலயங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. கைலாயநாதர் கோவிலும் அழிக்கப் படுவதற்கு முதல் நாள் அதனை அறிந்த கோவில் குருக்கள் கைலாயநாதராகிய சிவலிங்கப் பெருமானையும் கைலாய நாயகியாகிய தேவியையும் ஓர் சிறு உருளை பூட்டிய வண்டியில் வைத்து தம்முடைய ஊராகிய மட்டுவிலுக்கு கொண்டு வருவதற்காக இழுத்துவர முற்பட்டார். பாரம் அதிகமாக இருந்தமையால் அவரால் இழுத்து வர முடியவில்லை. அக் காலத்தில் பாதைகளும் சீரானதாக இருக்கவில்லை. எனவே தேவி விக்கிரகத்தைக் கோவில் திருமஞ்சனக் கிணற்றுள் இறக்கிவிட்டு சிவலிங்கப் பெருமானை மாத்திரம் இரவோடிரவாக மட்டுவிலுக்கு கொண்டு வந்தார். அக் காலத்தில் மட்டுவிலில் செங்கல் திருப்பணியாக புதுக்குவாரின்றி இருந்த சிவாலயத்தின் திருமஞ்சனக் கிணற்றுக்குள் இறக்கிவிட்டார். இரண்டொரு தினத்திற்குப் பின் அந்த ஆலயமும் போர்த்துக்கீசரால் அழிக்கப்பட்டது. திருமஞ்சனக் கிணறும் தூர்ந்துவிட்டது. அத் திருக்கோவில் கட்டிடம் இப்போதும் சிதைவுபட்டு இருப்பதை காணலாம்.
-IV

பல ஆண்டுகளின் பின்பு அக் காலத்தில் சைவப் பிரபுவாக இருந்த மட்டுவில் வன்னியசிங்க முதலியாருடைய கனவில் சிவலிங்கப்பெருமான் தான் இருக்கும் இடத்தைக் காண்பித்து தம்மை பிரதிட்டை செய்து வழிபடும் படி ஆஞ்ஞாபித்தருளினார். முதலியாரும் மகிழ்ச்சியுற்று விடிந்தவுடன் வேலைக்காரரை உடன் கொண்டு சென்று தூர்ந்து நிலமாய்க் கிடந்த அத் திருக் கிணற்றை மெதுவாகக் கல்லுவித்து அவ்விடத்து பெருமானைக் கண்டு ஆனந்த பரவசமாகி அவரை எடுத்து பாலாலயத்தில் வைத்து வழிபட்டார். பின்பு இந்தியாவிலிருந்து சிற்பாசிரியர்களை வரவழைத்து சிவாகம விதிப்பிரகாரம் சிவலிங்கப் பெருமானுக்கும் தேவிக்கும் கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், நிர்த்த மண்டபம் ஆகியன வகுத்து பிரதிட்டை செய்து மகாகும்பாபிசேகம் செய்தார். அப் பிரதிட்டையில் சிவலிங்கப் பெருமானுக்கு சிவசந்திர மெளலீசர் என்றும் தேவிக்கு சாந்தநாயகி என்றும் திருநாமம் சூட்டி வழிபட்டனர். அக் காலம் தொடக்கம் சிவசந்திர மெளலீசர் எழுந்தருளி யிருக்கும் காரணத்தால் மட்டுவிலுக்கு சந்திரபுரம் என்று பெயர் உண்டாயிற்று. சந்நிதானத்தில் இருக்கும் தீர்த்தம் “சந்திர புஸ்கரணி” தலவிருட்சம் பலா திருமஞ்சனக் கிணறு இரண்டு உள்ளன. அவை சிவதீர்த்தம், சக்தி தீர்த்தம் ஆகும். சிவஸ்தலம் இருக்குமிடம் ‘கல்வம்' என்று பெயருடையது. திருக்கோவிலுக்கு ஈசான பக்கத்தில் நூற்றெட்டு இதழ்களுள்ள செந்தாமரை உள்ள தடாகம் உள்ளது. இதுவே சந்திரபுர வரலாறு.
சிவருஅ. சிவசாமிக்குருக்கள் நன்றி. மட்டுவில் கல்வம் ழரீ வீரகத்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக மலர் - 1976
-V-

Page 9
மட்டுவில் கல்வம் சிவசந்திர மெளலீஸ்வர சிவாலய பிரதம குருவும், கல்வம் பிள்ளையார் கோவில் பிரதம குருவுமாகிய சிவநீ இ. பரமேஸ்வரக்குருக்கள் அவர்கள் வழங்கிய
பிரார்த்தனை உரை
மட்டுவிலிலே சிவசந்திர மெளலீசப் பெருமான் சாந்தநாயகி அம்மையாரோடு ஆன்மாக்களுக்கு திருவருள் பாலித்து எழுந்தருளியிருப்பதனால் மட்டுவில் சந்திரபுரம் எனும் பெயரைப் பெறுகின்றது. எனது மாமனாரான பிரமறி விஸ்வநாத ஐயா முன்னாள் குருக்கள் சிவறி அ. சிவசாமி குருக்கள், சிவரீ சபாரத்தினக்குருக்கள், பிரசித்தி பெற்ற நடுவில் ஐயா போன்ற மூதாதையர்களான அந்தண சிரேஷ்டர்கள் வாழ்ந்த பதி செல்லப்பிள்ளையார் கோவிலடியாகும். இவர்கள் அனைவரும் இன்று நம்மிடையே இல்லை. இந்த பெரியவர்களோடு அண்மையில் அமரத்துவம் அடைந்த பெரியார் “காசிய உபாத்தியாயர்’ மிகுந்த தொடர்பும் ஈடுபாடும் கொண்டவராவார். இவர்கள் நூற்றாண்டில் வாழ்ந்த பூரண வாழ்வு கொண்டவர். எனது மாமனாரும் இராசா ஐயா குடும்பத்தினரும் இவர்களின் புரோகிதர்கள். திரு. காசிய உபாத்தியாயரின் ஆத்ம சாந்திக்காக சாந்த நாயகி சமேத சந்திர மெளலிச பெருமானையும், கல்வம் விநாயகப் பெருமானையும் பிரார்த்திப்போமாக.
கல்வம், சிவழறி இ. பரமேஸ்வரக் குருக்கள் மட்டுவிலி

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன 2-வது குருமகா சன்னிதானம் வழங்கிய பிரார்த்தனை உரை
சீர் நிறைந்த சைவத்தமிழ் பெரியோரை இம் மண்ணுக்குத் தந்த பெருமை மட்டுவில் திருவூரைச் சாரும். இத் திருவுரில் ஆன்மீகப் பணி அறிவுப் பணியாற்றிய பெருந்தகை பூரீமான் காசிநாதர் அவர்களின் பிரிவு ஊருக்கும் உலகுக்கும் கவலை தரும் விடயமாகும். அனுபவ ஞானம் மிக்க பெருந்தகை, தொண்ணுாற்று ஏழு வயது வரை வாழ்ந்து எமக்கு வழிகாட்டியுள்ளார். இப் பெருந்தகையின் புதல்வர் சிவத்திரு கா. சிவபாலன் அவர்களை யான் நன்கு அறிவேன். தெல்லிநகர் பூரீ துர்க்கை அம்பாளின் தொண்டனாக பல ஆண்டுகள் ஒப்பற்ற பணியாற்றி பலரது பாராட்டைப் பெற்று தவ வாழ்வு வாழ்பவர். அத்தகைய மைந்தரை இவ் அவனிக்குத் தந்த பெருந்தகை நிறை வாழ்வு வாழ்ந்து இறையடியில் ஆறுதல் பெற்றுள்ளார். அவரது ஆத்மா நித்தியானந்த நிலையில் நிரந்தர அமைதி பெற பிரார்த்தித்து அமைகிறோம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
சுபம்
பூனிலழறீ ஞானசம்பந்த சோமசுந்தர
IL u Lorraġ= FTfu GresarTL 556mi
குருமகா சன்னிதானம்.

Page 10
வேதாரணிய பரம்பரை தர்மகர்த்தாக்களில் ஒருவரான கரணவாய் ஆதீன சிவத்திரு இரகுநாதக்குருக்கள் சுப்பிரமணியக் குருக்கள் அவர்கள் வழங்கிய
ஆத்ம சாந்தி உரை
மட்டுவிலில் “காசிய வாத்தியார்” என்று அழைக்கப் படும் ஆசிரியர் அவர்களை 1958-ம் ஆண்டு முதல் யான் அறிந்திருக்கின்றேன். அவர்கள் சைவ பாரம்பரியத்தில் வாழ்ந்து ஆசிரியத் தொண்டை சிறப்பாக ஆற்றி இருக்கின்றார். அவரை அனைவரும் அறிவார்கள். இவர் ஆவரம்பிட்டி வைரவர் கோவிலுக்கு பல தடவை என்னைச் சந்திக்க வந்திருக்கிறார்கள். இந்த நிறை வாழ்வு வாழ்ந்த பெரியவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல சிவ பரம்பொருளைப்
பிரார்த்திக்கின்றேன்.
மட்டுவில் ஆவரம்பிட்டி, சிவத்திரு இரகுநாதக்குருக்கள்
வைரவர் கோவில் சுப்பிரமணியக்குருக்கள்

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் ஆதீனகர்த்தாவும் பிரதம குருவும் ஆகிய மஹாராஜழறி சு.து ஷண்முகநாதக் குருக்கள் அவர்கள் வழங்கிய பிரார்த்தனை உரை
“மண்ணினிற் பிறந்தார் பெறும்பயன் மதிசூடு மண்ணலார் அடியார் தமையமுது செய்தல் கண்ணிலவர் நல்விழாப் பொலிவு கண்டார்கல் உண்மையா மெனினுலகர்முன் வருகெனவுரைப்பார்” எனும் ஞானசம்பந்தரது வழியில் வாழும் மக்கள் அரிதிலுமரிது.
மட்டுவில் வாழ் மக்கள் நல்ல ஆக்கம் செய்பவர்களும், நல்ல ஊக்கம் உடையவர்களும் இருக்கிறார்கள். இவ்வாறு வாழ்ந்தவர்களுள் மட்டுவில் பெரியவர் திரு. கந்தர் காசிநாதர் ஆசிரியர் அவர்கள் சிவநெறிக் காவலராக தொண்ணுாற்றேழு வருடங்களாக வாழ்ந்து காட்டி, இறைவனடி சேர்ந்தும்விட்டார். நல்லாசிரியனாகவும், நல்ல அறநெறியாளனாகவும், சிவ தரும சிந்தனைகளை ஊக்குவித்தவருமான இப் பெரியார், இது தான் இவ்வுலக வாழ்வு, இது போல் தான் வாழுங்கள் எனச் சைவ உலகிற்கு அறிவுட்டி விட்டு எம்மிடமிருந்து அகன்று விட்டார். நாடு நல்லதோர் ஆத்மாவை இழந்து நிற்கின்றது. கவலையும் துக்கமும் மக்களிடம் குடிபுகுந்தும் யார்தான் இழப்பைத் தடுக்க முடியும்? வினைப்பயன்படி விதியும் தன் கடமைகளைச் செய்தே தீரும். எல்லோரும் இதனின்றும் தப்ப இயலாது. அன்னாரது ஆத்ம சாந்திக்கு யானும் மாவைக் கந்தனிடம் இரந்து பிரார்த்திக்கின்றேன்.
மஹாராஜழறி சு.து.ஷண்முகநாதக் குருக்கள்,
மாவையாதினம்.

Page 11
“வேதாகம சோதிட பூஷணம்”, “கலாபூஷணம்”, “திருக்கணித முதல்வர்” சிவழீரீ சி. சிதம்பரநாதக்குருக்கள் ஐயா அவர்கள் வழங்கிய
அஞ்சலியுரை
மட்டுவில் வடக்கைச் சேர்ந்த ஆசிரியர் காசிநாதர் அவர்கள் 22-ம் திகதி இறைபதம் எய்திவிட்டார். மட்டுவிலில் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, சிறந்த சிவாச்சாரியார் பொன்னுச்சாமிக் குருக்கள், திருக்கணித பஞ்சாங்க கணிதர் சி. சுப்பிரமணிய ஐயர் ஆகிய பெருந்தகைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவராவார்.
நான் சிறுவனாக சுப்பிரமணிய ஐயருடன் இருந்த காலத்தில் ஆசிரியர் அவர்கள் அடிக்கடி எமது இல்லத்துக்கு வந்து போவது வழக்கம். அப்போதெல்லாம் அவர்களுடன் பேசி எமது உறவினர் போல நடந்து கொண்டோம். ஆசிரியர் அவர்கள் எப்பொழுதும் முயற்சியுடையவராகவே காணப்படுவர். பாடசாலை நேரம் தவிர்ந்த நேரங்களில் வாழைத்தோட்டம், கத்தரித்தோட்டம் எல்லாம் அவர் முயற்சியால் பலன் கொடுத்தன. அதன் ஒரு பகுதி எப்போதும் எமது இல்லத்திற்கு வந்து சேரும். இவ்வாறு நெருங்கிப் பழகிய ஆசிரியரை என்றும் நினைவு கூருகிறோம். அவருடைய மக்கள் பல நிலைகளில் இருக்கின்றனர். சிவபாலன் அவர்கள் பிரம்மச்சாரியாக இருந்து தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்தில் தொண்டுபுரிகின்றார். ஒருவர் வன்னியில் தொழில் புரிகின்றார். இன்னுமொருவர் சாரதியாகப் பணிபுரிகின்றார்.
a-X-

இளையவர் சிவஞானம் அவர்கள் எம்முடன் சேர்ந்து அச்சகத் தொழில் செய்து தற்போது எமது திருக்கணித பதிப்பகத்தை நன்கு நிர்வகிக்கின்றார். இரு பெண் பிள்ளைகளும் சிறப்பாக வாழ்கின்றனர்.
ஆசிரியர் அவர்கள் சிலகாலம் நோய்வாய்ப் பட்டிருந்தாலும் இறுதியில் எவ்வித சிரமமுமின்றி இறைவனடி சேர்ந்தார்.
எல்லோருடனும் இனிமையாகப் பழகிய ஆசிரியர் அவர்கள் மறைந்தாலும் எல்லோர் உள்ளத்திலும் நீங்காத இடத்தைப் பிடித்துக் கொண்டவர்.
ஆசிரியரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதோடு அவருடைய மறைவின் துயரினால் வருந்தும் மனைவி, மக்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்து அமைகின்றேன்.
“நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமையுடைத் திவ்வுலகு”
மட்டுவில், சி. சிதம்பரநாதக் குருக்கள், சாவகச்சேரி. திருக்கணித நிலையம்

Page 12
தெல்லிப்பழையூரீதுர்க்காதேவி தேவஸ்தானம் பிரதம குருக்கள் சிவழீரீ இ. சுந்தரேஸ்வரக் குருக்கள் அவர்கள் வழங்கிய
ஆத்ம சாந்தி உரை
மட்டுவிலில் வாழ்ந்து சிவபதமடைந்த ஆசிரியர் திரு. க. காசிநாதர் அவர்கள் சந்திரமெளலிச வித்தியாசாலையின் கல்விப்பணிக்கு பெருந் தொண்டாற்றி இருக்கிறார்கள். அவர்களின் உறவினர்கள் எங்கள் உசன் கந்தசாமி கோயில் முதலாளி குடும்பத்தைச் சார்ந்தவர்கள். இப்போது உசன், கந்தசாமி கோயில் தர்மகர்த்தா திரு. குகதாசன் விமலதாஸ் அவர்கள் கந்தர்மடம் திரு. ஆ. க. வல்லிபுரம் வாத்தியார், காசிநாத வாத்தியார் ஆகியோருக்கு ஒர் மருகர் முறையானவர். காசிநாத ஆசிரியருக்கும், உசன் கந்தசாமி கோயில் பெருஞ் செல்வந்தரான சட்டத்தரணி திரு. இராஜரட்ணம் அவர்களுடன் தொடர்புகளிருந்த செய்தியை நான் அறிந்து இருக்கிறேன்.
இத்தொடர்புகளை எல்லாம் இன்று துர்க்கை அம்மன் கோயிலில் பணிபுரியும் திரு. கா. சிவபாலன் அவர்கள் தொடர்பு படுத்துகிறார். இந்த வயது முதிர்ந்த பெரியார் இடம் பெயர்ந்து வந்து தெல்லிப்பழையில் இரு ஆண்டுகள் வாழ்ந்து இருக்கிறார். அக் காலத்தில் இவருடன் பழகி உள்ளேன்.
அன்னாரின் புனித ஆத்மசாந்தியடைய எல்லாம் வல்ல துர்க்கை அம்மனையும், கலியுக தெய்வமாகிய உசன் கந்தசாமி கோயில் முருகப்பெருமானையும் பிரார்த்திக்கின்றேன்.
லோகா சுகினோ பவந்து
இ. சுந்தரேஸ்வரக் குருக்கள்
-хіі

தெல்லிப்பழையூரீதுர்க்கா தேவி தேவஸ்தான உதவி சிவாச்சாரியார் சிவழி வா. அகிலேஸ்வரக் குருக்கள் வழங்கிய
ஆத்ம சாந்தி உரை
மட்டுவிலை பிறப்பிடமாக கொண்ட சைவப் பெரியார் அமரர் கந்தர் காசிநாதர் ஐயாவின் மறைவு செய்தி கேட்டு பேரதிர்ச்சியடைந்தோம்.
அன்னார் அவர்கள் இல்லறத்தை நல்லறமாக வாழ்ந்து சமய சமூக சேவைகளுக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த பெரியார் ஆவார்.
இதன் பயனாக ஐயாவின் மகனார் சிவபாலன் எமது தேவஸ்தானத்தில் பிரதம இலிகிதராக பணியாற்றி சமூகத்திற்காக தன்னை அர்ப்பணித்து அன்னை சிவத்தமிழ் செல்வி அம்மாவின் வழியிலே தன்னை ஈடுபடுத்தி பணியாற்றுவது பெரியாரின் இல்லற வாழ்வுக்கு எடுத்துக்காட்டாக அமைகிறது. இளைய மகனார் சிவஞானம் அவர்கள் மட்டுவில் திருக்கணித அச்சக பொறுப்பாளராக இருந்து சமூகத்திற்கு ஆற்றும் தொண்டு அளப் பெரியது.
“இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவற்கும்
நல்லாற்றின் நின்ற துணை” என்ற வள்ளுவன் வாக்குக்கமைய வாழ்ந்த பெரியாரின் இழப்பில் துயருறும் மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர் அனைவருக்கும் ஆறுதல் கூறி ரீ துர்ல்காதேவியின் திருவருளால் அன்னாரின் SjöLDT ಫ್ಲಿಜಿ பிரார்த்திப்போமாக.
ܘ .
ኣቓቋ சாந்தி சாந்தி
வா. அகிலேஸ்வரக் குருக்கள்
-хііi

Page 13
கீரிமலை பூறி நகுலாம்பிகை சமேத பூgநகுலேஸ்வர சுவாமி கோவில் கீரிமலை நகுலேஸ்வர கோவில் பிரதம சிவாச்சாரியார்
'இராஜராஜ ரூ’ சிவரு. கு. நகுலேஸ்வரக் குருக்கள் ஐயா அவர்களின் ஆத்மசாந்தி உரை
தென்மராட்சியில் மட்டுவில் கிராமம் பலவகையான சிறப்புக்களைக் கொண்டு இருக்கிறது. இங்கு பிரசித்தி பெற்ற ஆலயங்கள் இருக்கின்றன. உரையாசிரியர் ம.க. வேற்பிள்ளை அவர்கள், இலக்கிய கலாநிதி பண்டிதர் சி. கணபதிப்பிள்ளை அவர்கள் போன்ற பெரும் அறிஞர்கள் மட்டுவிலிலே பிறந்து சிதம்பரத்திலும், ஈழத்திலும் பெரும் தொண்டாற்றி இருக்கிறார்கள்.
கீரிமலை நகுலேஸ்வரப் பெருமானை வழிபாடு செய்வதற்கும், கீரிமலைக் கடலில் தீர்த்தம் ஆடுவதற்கும் தென்மராட்சியில் இருந்து மக்கள் பன்னெடுங் காலமாக வருகிறார்கள். அண்மையில் சிவபதம் எய்திய திரு. க. காசிநாத உபாத்தியாயரும் சிறாப்பள் மடத்தில் தங்கி இருப்பவர்களைச் சந்திக்க வருகின்ற போதெல்லாம் என்னிடம் வந்து சந்தித்து இருக்கிறார்கள். அக்காலத்தில் கொடிகாமம் - கீரிமலை பஸ் (றுாட் 769) இருந்தது.
உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை அவர்கள் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாகிய கீரிமலை நகுலேஸ்வரர் கோவில் மீது தாம் இயற்றிய ஈழமண்டல சதகத்தில் நான்கு செய்யுள்களை பாடி உரையும் செய்து இருக்கிறார்.
தெல்லிப்பழை முறி துர்க்காதேவி தேவஸ்தானத்தில் பணிபுரியும் திரு. கா. சிவபாலன் அவர்களின் தந்தையாரான திரு. கந்தர். காசிநாதர் சிவபதம் எய்தியமையை அறிந்தோம். திரு. க. காசிநாத உபாத்தியாயர் அவர்கள் உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட மட்டுவில் சந்திர மெளலீச வித்தியாசாலைக்கு தமது காணியை தர்மதானம் செய்திருக்கிறார். அப்பாடசாலையில் கல்வி கற்று, நீண்ட காலம் ஆசிரியராக கல்வி கற்பித்து தமது 97-ம் வயதில் சிவபதம் எய்தினார். திரு க. காசிநாத உபாத்தியாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல நகுலாம்பிகை சமேத நகுலேஸ்வரப் பெருமானை பிரார்த்திக்கின்றேன்.
இங்ங்னம், சிவநீ கு. நகுலேஸ்வர குருக்கள்
-xiv

தெல்லிப்பழை ழரீ துர்க்காதேவி தேவஸ்தானப் பெருந்தலைவர் சிவத்தமிழ் செல்வி, கலாநிதி செல்விதங்கம்மா அய்யாக்குட்டி அவர்கள் வழங்கிய பிரார்த்தனை உரை
மட்டுவிலைச் சேரர் ர் கந்தர் காசிநாதர் அவர்களுக் இவ்வுரையைச் சமர்ப்பிப்பதில் திருப்தியடைகிறேன்.
தொண்ணுாற்றி ஆறு ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்து கல்விப்பணி, பொதுப்பணி ஆகியவற்றைச் செய்து மகிமை பெற்றவர் இவர். மட்டுவிலில் விளங்கும் சந்திர மெளலிச வித்தியாலயத்தின் அறங்காவலராக விளங்கியவர் இவர். அங்கு கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதி தனது சொந்த நிலத்தின் ஒரு பகுதியை அப் பாடசாலைக்கு இலவசமாக வழங்கியவர் இவர். மேலும் வாழ்நாள் முழுவதும் சைவவாழ்வு வாழ்ந்து எமது சமயக் கோட்பாடுகளுக்கு மதிப்புக் கொடுத்தவர் இவர். இவரது வாழ்க்கைத் துணைவியின் தவவாழ்வு மிகவும் பாராட்டுதற்குரியது. அதுமட்டுமன்றி சைவ ஒழுக்க நியமங்களில் இம்மியளவும் பிசகாது நெறியான வாழ்வு வாழும் சைவத்திரு சிவபாலன் அவரகளுக்கு தந்தையாக விளங்கிய பெருமையும் இவருக்குண்டு. இவர் பெற்ற ஏனைய பிள்ளைகளின் அறவாழ்வை நான் நன்கு அறிவேன். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் போற்றுதற்குரியவர்கள். இந்த வகையில் மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் ஆகியவர் களைக் கண்டு நிறை வாழ்வு வாழ்ந்து அமரத்துவ மடைந்துள்ளார். இவர் ஆசிரியராகப் பணியாற்றிய காலம் மட்டுவிலுக்கு ஒரு பொற்காலமாகும். மேலும் ஆசிரியரின் நினைவாக மட்டுவிலில் வாழ்ந்த பேரறிஞர்கள், சான்றோர்கள், சந்திரமெளலீச வித்தியாசாலையின் வரலாறு என்பவனவற்றின் தொகுப்பு "காசிநாதர் மான்மியம்" என்னும் பெயரில் மலர் வெளிவருவது காலத்தின் தேவையாக உள்ளது. எனவே அமரர் காசிநாதர் ஐயாவை வணங்கி அவருடைய ஆத்மாவுக்கு நன்றி கூறி அமைகின்றேன்.
ரீ துர்க்காதேவி தேவஸ்தானம், கலாநிதி செல்விதங்கம்மா அய்யாக்குட்டி தெல்லிப்பழை, சூரீ லங்கா. தலைவர், J.P.
-XV

Page 14
யாழ்ப்பான பல்கலைக்கழக தமிழ்த்துறையைச் சார்ந்த சிரேஷ்ட பேராசிரியருமான பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் வழங்கிய
ஆத்ம சாந்தி உரை
திரு. காசிநாதர் உபாத்தியாயர் ஆயிரம் பிறை கண்டவர். தொண்ணுாற்றேழு ஆண்டுகள் இந்த உலகிலே வாழ்ந்து சென்றவர். “தக்கார் யார் தகவிலார் யார்” என்பதை அவரவர் எச்சத்தாலே அறியலாம் என வள்ளுவர் கூறியுள்ளார். இவருடைய பிள்ளைகள் யாவரும் உத்தம குணசீலர்களாக வாழ்கின்றனர். குறிப்பாக எமக்கு நன்றாக அறிமுகமான திரு. சிவபாலன் துர்க்கா துரந்தரி கலாநிதி சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் வழிகாட்டலுடன் துர்க்கை அம்மன் ஆலயத்திலே தொண்டு செய்கிறார். எல்லோருடனும் அன்புடனும் அமைதியுடனும் பழக வல்லவர். இத்தகைய ஒரு சான்றோனைப் பெற்ற தந்தையின் தகைமை பற்றிச் சொல்லவும் வேண்டுமோ?
திரு. காசிநாதர் உபாத்தியாயர் யாழ்ப்பாணத்துக் கல்விக் கொடை வள்ளல்கள் பட்டியலிலும் சேர்கிறார். மட்டுவில் சந்திர மெளலீஸ்வரர் வித்தியாசாலைக்குக் காணி நிலத்தை அறக் கொடையாக வழங்கியவர். இவர் போன்ற அறவாளர் இந்த மண்ணிலே வாழ்ந்தபடியால் தான் யாழ்ப்பாணம் கல்வியிற் சிறந்த பகுதியாக அமைந்தது.
சைவப் பெரியார் சு. சிவபாதசுந்தரம் அவர்களிடம்
கல்வி பயின்ற பெருமையுடையவர் இந்து போர்ட்
இராசரத்தினம். அவர்களுடைய நட்புக்குரியவராயிருந்துள்ளார். -xvi

சைவப் பெரியார் சிவபாதசுந்தரம் சைவ சித்தாந்தம் பற்றி எழுதி எங்களுக்கெல்லாம் பெருமை தேடித் தந்தவர். அத்தகைய பெருமகனிடம் பாடங் கேட்கும் பாக்கியம் பெற்றவர் காசிநாதர் உபாத்தியார் யாழ்ப்பாணத்துக் கல்வி வளர்ச்சிக்கும் சைவ மக்களுடைய மேம்பாட்டுக்கும் உழைத்தவர். இந்துபோர்ட் இராசரத்தினம் நிறைவாழ்வு பெற வேண்டிய பிள்ளைகளுக்கு ஆதரவு வழங்கியவர் பெரியார் இராசரத்தினம் அவர்கள். அவருடன் நட்பாக இருந்த காசிநாதர் உபாத்தியாருடைய ஆளுமையினை நாங்கள் நன்கு விளங்கிக்
கொள்ளலாம். T
பெரியார் காசிநாத உபாத்தியாயருடைய ஆத்மா பார்வதி உடனுறை பரமேசுவரனுடைய இணையடிகளிலே அமைதி பெற அப் பெருமானையே வேண்டுகிறேன்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், பேராசிரியர் அ. சண்முகதாஸ், திருநெல்வேலி.

Page 15
திருநெல்வேலி சைவவித்தியாபிவிருத்திச் சங்க இந்து போர்ட் ஸ்தாபகர் திரு. சு. இராசரத்தினம் அவர்களின் மருமகனும், சாவகச்சேரி இந்துக் கல்லூரி முன்னைநாள் அதிபருமான திரு. எஸ். கே. மகேஸ்வரன் அவர்கள் வழங்கிய செய்தி
“மட்டுவில் மைந்தன்”
மட்டுவில் கிராமத்துக்கு பெருமை தேடித்தந்த பல ஆலயங்கள் உண்டு. குறிப்பாக பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் கோவில், கல்வத்து சிவன் கோவில் போன்றன. அதே போல் இம் மட்டுவில் மண் தந்த பல மாமனிதர்களில் குறிப்பாக உரையாசிரியர் ம.க. வேற்பிள்ளை, இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளை, கவிஞர் மகாலிங்கசிவம், லோச் செல்லப்பா, ஆசிரியமணி வே. சுப்பையா வாத்தியார், புராண படன மேதை ச. சங்கரப்பிள்ளை உபாத்தியார் போன்றோர் அடங்குவார்.
செந்தமிழும், சிவநெறியும் செழித்து ஓங்கும் மட்டுவில் கிராமத்தில் 1909-ம் ஆண்டு கந்தர் காசிநாதர் அவதரித்தார். இவர் பண்டிதமணியின் ஓர் கிட்டிய உறவினர் ஆவார். அக் காலத்தில் பாடசாலைகள் இல்லாத காரணத்தால் திண்ணைப் பாடசாலையில் கல்வி கற்றார். சைவப் பாடசாலை இல்லாத குறையை நீக்குவதற்கு பன்றித் தலைச்சி அம்மன் ஆலயத்திற்கு அருகில் தன்னுடைய பேரனார் காணி வழங்கி நிறுவிய பாடசாலைக்கு தானும் காணிகளை வழங்கியிருந்தார். இப் பாடசாலையில் தானும் ஓர் ஆசிரியராக இணைந்து கொண்டார். மட்டுவில் சந்திரமெளலீச வித்தியாசாலையில் எண்கணிதம், தமிழ், சைவநெறி, நாட்டு சீவன சாஸ்திரம், பன்ன வேலை ஆகிய பாடங்கள் கற்பிக்கப்பட்டன. சில காலத்துக்குப் பின் சைவ வித்தியாபிவிருத்தி சங்கத்துக்கு தர்ம சாதனம் செய்து கொடுத்தார்.
-xviii

எனது மாமனாருக்கும் இவருக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. இவர் அங்கு ஓய்வு பெறும் வரைக்கும் ஓர் ஆசிரியராகக் கடமை புரிந்தார். இந்தப் பாடசாலையின் வளர்ச்சிக்கு இறக்கும் வரைக்கும் தன்னால் ஆன உதவிகளைச் செய்தார். தனது கடைசிக் காலம் வரை விடாமுயற்சி, சுறுசுறுப்பு, வாழ்க்கையின் சிக்கனம், இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டினார். 96 (560) Lu இறைபக்தி, தொண்டு மனப்பான்மை ஆகியவற்றை அவருடைய மகன் சிவபாலனிடம் நன்கு காணக் கூடியதாக இருக்கின்றது. சைவ வித்தியாவிருத்திச் சங்கத்திற்கும், சிறுவர் இல்லத்திற்கும் பல உதவிகள் செய்த ஒரு பெரியார்.
அன்னாரின் பிரிவால் துயருறும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், சுற்றத்தார் அனைவரினதும் மனம் அமைதியடையவும் , அன்னாரினர் ஆன்மா சாந்தியடையவும் சரசாலை இலந்தைத்திடல் வீரமாகாளி அம்மனி அருள் கொடுத் தருள வேணி டுமெனம் பிரார்த்திக்கிறேன்.
சாந்தி சாந்தி சாந்தி!
سن. تم ان يهم """مة.
‘‘அயோத்தியா” க. மகேஸ்வரன், சரசாலை தெற்கு, ஓய்வு பெற்ற அதிபர், ’ FIdfla)6). சாவகச்சேரி இந்துக் கல்லூரி.
-xix

Page 16
மட்டுவில் சந்திரமௌலீச வித்தியாசாலையின் முன்னைநாள் அதிபரும், பிரசித்தபெற்ற லோச் செல்லப்பாவின் பெறாமகனுமாகிய திரு. ஆ. நடராசா அவர்கள் வழங்கியது சைவப் பாரம்பரியத்தில் வந்த சான்றோன்
மட்டுவில் வடக்கில் வாழ்ந்த காசிநாதர் என்பவர் 1884 ஆம் ஆண்டு தனது காணியில் சைவப்பிரகாச வித்தியாசாலை என்ற பெயரில் ஒரு பாடசாலையைக் கட்டினார். ஆரம்பத்தில் அப் பாடசாலையில் ஆசிரியராகக் கடமையாற்றியவர் உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை அவர்கள். உரையாசிரியர் சிறிது காலத்தின் பின் சிதம்பரத்திலுள்ள நாவலர் பாடசாலைக்குத் தலைமை ஆசிரியராகச் சென்றார். காசிநாதர் காலமானார். பாடசாலையை நடத்துவதற்கு எவருமே முன்வரவில்லை.
பாடசாலைக் கட்டிடத்தின் பின் உரித்தாளரிடமிருந்து அதைப் பெற்றுக் கொண்ட மிசனரிமார் அதில் அரசாங்க உதவிபெறும் பாடசாலை ஒன்றை ஆரம்பித்து நடாத்தி வந்தனர்.
1923 மார்கழியில் சைவவித்தியாபிருத்திச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. 1924-ல் லோச் செல்லப்பா என வழங்கும் நா. செல்லப்பா தமது சாதுரியத்தால் மிசனரிமாரின் நிர்வாகத்திலிருந்த பாடசாலையை மீட்டெடுத்து, சந்திரமெளலிச வித்தியாசாலை என்ற பெயரில் அதன் நிருவாகத்தைச் சைவ வித்தியா விருத்திச் சங்கத்திடங் கையளித்தார். இது பற்றிய விபரங்களைப் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் எழுதிய ‘மறைகின்ற பழைய நினைவு என்னும் கட்டுரையிற் காணலாம்.
-XX

சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் அதிபராக இருந்தவர் சைவப் பெரியார் சு. சிவபாதசுந்தரம் அவர்கள். இவர் ம. க. வே. யின் மனைவியின் சகோதரர். அக் காலத்தில் மட்டுவிலிலிருந்து சுழிபுரத்துக்குச் சென்று விக்ரோறியாக் கல்லூரியிற் கற்றவர்களில் திருவாளர்கள் பொ.தாமோதரம்பிள்ளை, வ. வேலுப்பிள்ளை, க. காசிநாதர் என்னும் மூவரும் முக்கியமானவர்கள். மட்டுவிலைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தால், சைவப் பெரியார் இவர்கள் மீது விசேட கவனஞ் செலுத்தினார். இவர்கள் நெறி பிறழாத சைவ சமயிகளாக இறுதிவரை வாழ்ந்து சமயப்பணி புரிந்தனர்.
உடன்பிறவாச் சகோதரராகிய இவர்களில் பொ. தாமோதரம்பிள்ளை மலேசியாவுக்குச் சென்று அரச சேவை செய்தவர். இவராற் கட்டப்பட்டதே மட்டுவில் மகா முத்துமாரி அம்பாள் ஆலயம்.
பன்றித் தலைச்சிக் கண்ணகி அம்மை கோயிலின் தெற்குப் பக்கத்தில் வீதியோரத்திலிருக்கும் மடத்தைக் கட்டியவர் வ. வேலுப்பிள்ளை.
2005-01-22-ல் சிவகதியடைந்த காசிநாதர் சந்திரமௌலீச வித்தியாசாலையில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அப்போது ஒரு பரப்புக் காணி மாத்திரமே பாடசாலைக்குரியதாயிருந்தது. 1961-ல் இப் பாடசாலையை அரசாங்கம் பொறப்பேற்ற போது ஆரம்பத்தில் பாடசாலைக்குரியதாயிருந்த காணியில் 69(5 பரப்புக் காணியைத் தவிர்ந்த மிகுதிக் காணி முழுவதும் ஆசிரியர் காசிநாதர் அவர்களால் பாடசாலைக்கு நன்கொடையாகக் கொடுக்கப்பட்டதேயாகும். இது இவர் செய்த வித்தியாதருமம் - சமயப்பணி.
XX

Page 17
நான் சந்திர மெளலிச வித்தியாசாலையில் மூன்றாண்டுகள் மாத்திரமே கல்வி கற்றேன். அக்காலத்தில் இவர் எனது ஆசிரியராகவிருந்தார். அதனால், எனது உறவினராகவிருந்த போதிலும் நான் இவரை ‘உபாத்தியார்’ என்றழைப்பதே வழக்கம்.
இவர் என்னைப் பலமுறை அச்சுவேலி சிவரீ ச. குமாரசாமிக் குருக்களிடம் அழைத்துச் சென்றார். ஒரு நாள் குமாரசாமிக் குருக்கள் ஐயா தாம் எழுதிய ‘முப்பொருள் விளக்கம்' என்னும் நூலை எனக்கு அன்பளிப்புச் செய்தார். அந்நூலும் குருக்களுடைய தொடர்பும் எனக்குச் சைவசித்தாந்த அடிப்படை உண்மைகளை விளங்கிக் கொள்வதற்குப் பேருதவி புரிந்தன.
இவ்வாறு, சைவப் பாரம்பரியத்தில் வந்து, சைவப் பாடசாலையின் வளர்ச்சிக்குதவிய உபாத்தியாயரின் வழித் தோன்றல்களும் சைவப் பணிபுரிவது கண்டு நான் பெருமகிழ்வடைகின்றேன்.
இவருடைய ஆன்மா பேரின்பப் பெருவாழ்வு பெற வேண்டுமெனச் சாந்தநாயகி சமேத சந்திர மெளலீசப் பெருமானை வேண்டுகின்றேன்.
சுபம்
ce. 5f-JA6FA, மட்டுவில். அதிபர்.
-xxii

தேசிய கல்வி நிறுவக முன்னைநாள் உதவிப் பணிப்பாளர் நாயகமும், முன்னாள் கல்விப் பணிப்பாளருமாகிய கலாநிதி குமாரசாமி அவர்கள் வழங்கிய
அஞ்சலியுரை
சைவமும் தமிழும் செழித்து விளங்கும் தென்மராட்சிப் பிரிவில், சான்றோர் பலர் தோன்றிய மட்டுவில் பதியில் தோன்றி, நல்லாசிரியனாகத் திகழ்ந்து, முழுவாழ்வு வாழ்ந்து, அண்மையில் ஈசன் எந்தை இணையடி நீழலை எய்தப் பெற்றவர் அமரர் காசிநாதர் அவர்கள். .
ஆசிரியர் என்போர் அறவோர். அவர்கள் எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகுபவர். ஆசிரியர் என்போர் அறிவோர். அவர்கள் அறிவு மிகப் பெற்றவர்கள். பிறர் துன்பங்களைத் தன் துன்பங்களாகக் கருதி, விரைந்து அவர்கள் துன்பங்களைக் களைய உதவுபவர்களே அறிவோர்.
“கல்விக்குப் பயன் அறிவு அறிவுக்குப் பயன் ஒழுக்கம்" - இது நாவலர் பெருமானின் அமுதவாக்கு.
மட்டுவில் சந்திரமௌலீச வித்தியாசாலையின் வளர்ச்சிக்கும் அதன் வழி அவ்வூர் மக்களின் கல்வி விருத்திக்கும் உறுதுணையாக நின்றவர் அமரர்.
அன்பு, அறம், கல்வி, ஒழுக்கம் என்பன நல்லாசிரிய இலட்சணங்கள். அவற்றை அணிகலன்களாகப் பூண்டு விளங்கியவர் அமரர் என்றால் மிகையாகாது. அவரின் நிறை வாழ்விற்கு அவர் கடைப்பிடித்த வாழ்க்கை முறையே
காரணம் எனலாம்.
-xxiii

Page 18
“தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்” என்கிறார் வள்ளுவப் பெருமான்.
அமரர் காசிநாதர் அவர்கள் தமது அருந்தவப் புதல்வன் சிவபாலனை தெல்லிப்பழை யூரீ துர்க்கை அம்பாள் கோவிலுக்கு சிவத்தமிழ் செல்வி அம்மாவிடம் இறை சேவைக்கென அர்ப்பணித்துள்ளார். நைட்டியப் பிரமச்சரிய விரதங்காக்கும் சைவத்திரு சிவபாலன் தமது மனம், மொழி, மெய்யினால் தூய்மையுடன் ஆற்றிவருகின்ற இறைபணிகள் போற்றுதற்கு உரியவை. அமரர் காசிநாதர் ஈட்டிய மகாபுண்ணியம் இதுவாகும்.
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்” அமரர் காசிநாதர் ஆத்ம சாந்திக்குப் பிரார்த்திப்போமாக.
ஓம் சாந்தி
24,2/1, இனிஷியம் வீதி, குமாரசாமி சோமசுந்தரம் தெஹிவளை. முன்னாள் கல்விப் பணிப்பாளர்
-xxiv

தென்மராட்சி கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. த. பூரீஸ்கந்தராஜா அவர்கள் வழங்கிய
ஆத்ம சாந்தி உரை
மட்டுவில் பகுதியில் கல்வத்துச் சிவன் கோவில் அமைந்துள்ளது. இங்கே எழுந்தருளியிருக்கும் எம் பெருமான் சந்திரமெளலிசர், அம்பிகை சாந்தநாயகி இவ்விரு திருநாமங்களிலும் பாடசாலைகள் மட்டுவிலில் உண்டு. உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை அவர்கள் வாழ்ந்த இடம் மட்டுவில் கல்விமான்கள் பலரும் வாழ்ந்து வழி வழியாய் கல்வி பாரம்பரியமுள்ள பதி. பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களைப் பாரினிற்கே தந்து வான் புகழ் கொண்டது மட்டுவில். மட்டுவிலுக்கு சந்திரபுரம் எனவும் வழங்கும் தென்மராட்சிப் பிரதேசத்திலேயே 150 ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஒரே பாடசாலை சந்திரமெளலீச வித்தியாலயம். இது திண்ணைப் பள்ளிக்கூடமாக ஆரம்பித்தது. பண்டிதமணி அவர்கள் படித்த பாடசாலை. பண்டிதமணியின் திருநெல்வேலி ஆசிரிய கலாசாலை, மட்டுவிலில் வீட்டுக்கொரு ஆசிரியரைத் தோற்றுவித்தது. ஒவ்வொரு ஆசிரியரும் சைவப்பாரம்பரியத்தின் இலட்சணப் பொலிவுடனான தமிழாசிரயர்களாக மிளிர்ந்தனர். அந்தக் காலம் உபாத்தியாருக்கு சமூகத்தில் தனிமதிப்பு நீதிபதியாக, தோழனாக, உடனிருந்துதவுபவராக, மாணாக்கனுக்கு வழிகாட்டியாக எல்லாவற்றுக்கும் மேலாக எழுத்தறிவிக்கும் தெய்வங்களாக ஆசிரியர்கள் விளங்கினர். 150 வயதை தாண்டிய மட்டுவில் சந்திர மெளலிச வித்தியாலயத்தின் முதுபெரும் ஆசான் திரு. கந்தர் காசிநாதர் அவர்கள் தனது 97-ம் வயதில் 22.01.2005 அன்று சிவபதம் எய்தினார்.
சந்திர மெளலீச வித்தியாலயத்தில் ஆசிரிய வாழ்வை
ஆரம்பித்து அதே பாடசாலையிலேயே இளைப்பாறிய பெருமை
ஆசிரியருக்குண்டு. என்னுடைய அம்மம்மா-தில்லையம்பலம்
சின்னத்துரை அவர்களும், எனது அம்மா - பவானியம்மா
தம் பையா அவர்களும், அடியேனும் ஆசிரியரிடம் -XXV

Page 19
பயின்றுள்ளோம். சுட்டுவிரலைப் பிடித்து மண்ணில் அழுத்தி எழுதி எழுதி “அ” படிப்பிக்கும் அழகே தனி அக் காலத்தில் ‘'சிலேற்றில்” இரட்டை நூள் கோட்டை உபாத்தியாயர் அவர்களே ஆணியால் கிறித்தருவது வழக்கம். அவரிடம் பயின்றோர் கணிசமானோர் நல்ல உத்தியோகங்களில் உள்ளனர்.
மட்டுவில் இயற்கை விவேகத்துக்குப் பெயர் போனவர் லோச் செல்லப்பா என்னும் சட்ட வல்லுனர். ஆசிரியரிடமும் “லோ” எனப்படும் சட்ட நிபுணத்துவ வாசனை இருந்தது. கருணையுள்ளம் இருந்தமைக்குச் சான்றாக சந்திர மெளலிச வித்தியாசாலையின் இரண்டு மாடிக் கட்டிடம் இவருடைய காணியிலேயே நிமிர்ந்து நிற்கிறது. இவரது பிள்ளைகள் பேரப்பிள்ளைகளோடிருப்பதை கண்டு களித்த இவருக்கு ஒரு பிள்ளை துர்க்கா துரந்தரி அம்மாவின் துர்க்கை அம்மன் சந்நிதியில் பணி புரிவதோடு பிரம்மச்சாரியாக தன்னையே அர்ப்பணித்தமையும் காணக் கூடியதாகவுள்ளது.
வெள்ளை வேட்டி, நாஷனல் அணிந்து “காசிய உபாத்தியாயர்” எனப் பெயரெடுத்த புண்ணியர் கடைசிக் காலத்தை யான் பிறந்த வீட்டில் கழித்தார். என்னையும், அம்மாவையும், அம்மம்மாவையும் படிப்பித்த அந்தப் புண்ணியரின் ஆத்மா தம்பையா உபாத்தியாயர் வீடு எனப்படும் சிவன் இல்லத்தில் பண்டிதமணி அப்பா அவர்கள் உலாவிய "மண்ணில் நிம்மதியாக மீளாத்துயிலில் ஆழ்ந்தது.
உபாத்தியாயரது ஆத்மா சிவன் கழல் சேர ஐந்தொழில் விலாசனாம் சாந்தநாயகி சமேத சந்திர மெளலிசனின் பொற் பாதங்களை ஆராதிப்போமாக.
அன்பு மாணவன், த. நீஸ்கந்தராஜா
-xxvi

மட்டுவில் ஆயம் திரு. இ. ஆறுமுகம் விதானையாரின் மகனும், ஓய்வுபெற்ற கணக்காய்வு அத்தியட்சகருமான திரு. ஆ. சுந்தரலிங்கம் அவர்கள் தமது சிறிய தந்தையாருக்கு வழங்கிய ஆத்மசாந்தி உரை
“வையத்துள் வாழவாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்”
அமரர் கந்தர் காசிநாதர் அவர்கள் எனது சிறிய தந்தையாரும், ஆசிரியருமாவார். இவர் ஆசிரியப் பணியினை சிறப்பாக மேற்கொண்டு இக் கிராமத்தில் ஒர் மூத்த பிரஜையாக வாழ்ந்து இறைவனடி எய்தினார். நீண்ட கால யுத்த அனர்த்தங்கள், இயற்கை அனர்த்தங்கள் தினமும் அதிகரித்து வரும் விபத்து மரணங்கள் மலிந்த இந் நாட்டில் ஒருவர் தொண்ணுற்றேழு ஆண்டுகள் வாழ்ந்து இயற்கை மரணமெய்தியதே ஓர் பெரும் சாதனையாகும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
“தக்கார் தகவிலார் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்படும்.”
ஆறுமுகம் சுந்தரலிங்கம், (ஒய்வு பெற்ற கணக்காய்வு அத்தியட்சகர்)

Page 20
ஓய்வுபெற்ற அதிபரும் 'இலக்கிய அமுதம்’ நூலாசிரியரும் எழுத்தாளருமாகிய திரு. நா. நல்லதம்பி அவர்கள் வழங்கிய ஆத்மா சாந்தி உரை
எனத முதல் ஆசான் மறைந்தம் மறையாத திரு. க. காசிநாத உபாத்தியாயர்
யா/மட்டுவில் சந்திரமெளலீச வித்தியாசாலையில் ஒரு கையில் ஏடும் மறுகையில் அரிவரிப் புத்தகமும் கொண்டு மினுங்கிய வதனம் சிணுங்கிச் சிணுங்கி மெள்ளச் சென்ற பள்ளிப்பருவம் எனது ஞாபகத்தில் உள்ளது.
இன்று புகழுடம்பெய்திவிட்ட திரு. க. காசிநாதர் அவர்கள் படிப்பித்தார்கள். இரு என இருந்து, சொல் எனச் சொல்லி, எழுது என எழுதி . இப்படிப் பலமுறை அழித்து அழித்து எழுதவும், சொல்லவும் வைப்பார் எங்கள் உபாத்தியாயர்.
எழுத்து உறுப்பாக எழுதச் செய்வதில் ஆசிரியர் அதிக கவனஞ் செலுத்துவார். இன்றும் எனது எழுத்துக்கள் உறுப்பாக இருப்பதினால் நான் ஆசிரியர் அவர்களை அடிக்கடி நினைத்துக் கொள்ளுவேன்.
இன்று பாடசாலைகளில் உறுப்பெழுத்துப் பற்றி அதிகம் கவனிப்பதில்லை. அச்சுப் பதிப்புகளிலேயே உறுப்புக் குறைந்த எழுத்துக்கள் காணப்படுகின்றன.
தமிழ் நெடுங் கணக்கிலுள்ள எழுத்துக்களை உறுப்பாக
எழுதவும் பிழையின்றிச் சொல்லவும் கற்பித்த, அறிவித்த
ஆசிரியரை இறைவன் என்று சொல்ல வேண்டும். நாம்
கற்றுணர்ந்தவற்றை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதற்கு
உதவியாக எழுத்தறிவும், சொல்லறிவும் கற்றக் கொடுத்தவர்
-XXVs

ஆசிரியர் தாமே. நாங்கள் சந்திர மெளலீச வித்தியாசாலையில் படித்த காலத்தில் அநேகமாக அதிபர்கள், உதவி ஆசிரியர்கள் மாறிச் செல்வதும், வருவதும் அடிக்கடி நடைபெறும்.
ஆனால் மறைந்த ஆசிரியர் திரு. க. காசிநாதர் அவர்கள் தொடர்ந்தும் இப் பாடசாலையிலேயே ஓய்வுபெறும் வரை இருந்தார்கள். அப்போது எங்களுக்கு ஒரு உண்மை நிலை தெரியவந்தது. இந்தப் பாடசாலை அமைந்த இடம், காலஞ் சென்ற எமது ஆசிரியர் அவர்களது காணியிலிருந்து பெறப்பட்டதாகவும் அதனால் இவரை இப் பாடசாலையிலே தொடர்ந்து சேவையாற்ற வாய்ப்புக் கொடுத்ததாகவும் அறிந்தோம்.
இன்று பாடசாலை விஸ்தரிப்புக்காக மேலும் ஒரு பகுதி காணியை இவர்கள் கல்விப் பகுதியாருக்குக் கையளித்த விஷயம் இந்த ஊரறிந்த ஒன்றாகிவிட்டதே.
இவ்வாறு தாம் கல்வி கற்பித்ததோடு ஏனையோரின் கல்விக்காக கட்டிடங்கள் கட்டுவதற்குத் தனது காணியிலிருந்து வேண்டும் போதெல்லாம் கொடுத்துதவிய காலஞ்சென்ற திரு. க. கா. அவர்களை இப்பாடசாலை உள்ளளவும் கல்வி உலகம் நினைவு கூருமென்பது உறுதியாகும்.
இவ்வாறு, மறைந்தும் மக்கள் மனதில் மறையாது
புகழுடம்பு பெற்ற திரு. க. கா. அவர்களது ஆத்மா
சாந்தியடைவதாக. அன்னாரது குடும்பம் ஆறுதல் பெறுவதாக.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
ஒருமையிற் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து. (குறள்)
மட்டுவில் வடக்கு நா. நல்லதம்பி

Page 21
கந்தரோடை சுன்னாகம் ஸ்கந்தவரோதயகல்லூரி உபஅதிபர் செஞ்சொற் செல்வர் ஆறுதிருமுருகன் வழங்கிய அஞ்சலி உரை
மகிமை மிக்க மட்டுவில் திருப்பதியில் வாழ்ந்த பழம் ஒன்று விழுந்து விட்டது. புராணபாரம்பரியம் பேணிவந்த புனித குடும்பத்தின் விருட்சம் சரிந்து விட்டது. சைவ சமயத்தின் மெய் வாழ்வுக்கு உதாரணம் கூறக்கூடிய மட்டுவில் மண்ணில் 97 வயது வரை சிற்றரசாக கொலுவிருந்த காசிநாத உபாத்தியாயரின் பிரிவு வேதனைக்குரியது. சந்திரமெளலிச வித்தியாலயத்தில் பல நூறு மாணவர்களுக்கு ஏடு தொடக்கி எழுத்தறிவு கொடுத்த ஆசிரியத் தெய்வத்தின் பிரிவு அவ்வூர் மக்களை வாட்டுகிறது. அன்னாரின் இறுதி வைபவத்தின் போது அவரிடம் கற்று உயர் நிலையில் வாழும் சான்றோரின் இரங்கலுரைச் செய்திகள் ஆசானின் அருந்தொண்டை எம் போன்றவர்களுக்கு தெளிவு படுத்தியது. எங்கள் துர்க்கா தேவஸ்தானத்தில் பிரதமலிகிதராக ஆலயப் பணிகளைச் சீராகச் செய்து வரும் சிவத்திரு. கா. சிவபாலன் அவர்களின் தந்தை என்பதால் காசிநாத உபாத்தியாயரின் பெருமை மேலும் சிறப்புற்றது. வாழ்நாளில் தெய்வப்பணி, கல்விப்பணி செய்து நிறைவாழ்வு வாழ்ந்த இப் பெருந்தகை நினைவாக அவரது பிள்ளைகள் “காசிநாதர் மான்மியம்” என்ற அற்புத வரலாற்று நூலை வெளியிடுவது அறிந்து மிகவும் ஆனந்தம் அடைகிறேன். காலத்திற்கேற்ற நல்ல கைங்கரியம் ஊர்ச்சிறப்பு, உயர்பணி செய்த உத்தமர் வரலாறு உள்ளடங்கி வெளியிடப்படும் இந்நூல் வரவேற்கத்தக்கது. அன்னாரின் ஆத்ம சாந்தி பெற பிரார்த்திப்பதோடு இம் மலர் வெளியிடும் பிள்ளைகளையும் வாழ்த்தி அமைகிறேன்.
ரீ துர்க்காதேவி தேவஸ்தானம், செஞ்சொற் செல்வர் ஆறுதிருமுருகன் தெல்லிப்பழை. இணைச் செயலாளர்
sXXX

மட்டுவில் யா/சந்திரமௌலீச வித்தியாலய அதிபர் திரு. செ. சிவஞானம் S.L.P.S. அவர்களின்
நீங்கா நினைவுரைகள்
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்”
என்றார் வள்ளுவப் பெருந்தகை. பிறந்தவர் யாவரும் இறப்பது நியதி. இதற்கு விதிவிலக்காக யாரும் இருக்க முடியாது. ஒரு மனிதன் எவ்வளவு காலம் வாழ்ந்தான் என்பதல்ல அவன் எப்படி வாழ்ந்தான் என்பதைக் கொண்டே வரலாறு நிலைக்கின்றது.
அமரர் திரு. காசிநாதர் அவர்கள் யா/மட்டுவில் சந்திர மெளலீச வித்தியாலய மாணவனாகவும், தனது ஆசிரியப் பணியை முதன் முதல் இப் பாடசாலையில் ஆரம்பித்து நாற்பத்திரண்டு வருடங்கள் சிறப்புறச் சேவையாற்றித் தமது 60-ம் வயதில் ஓய்வு பெற்றார். இக் காலப்பகுதியில் நானும் அவரிடம் கல்வி கற்றேன் என்பதில் பெருமை அடைகின்றேன். அமரரவர்கள் எமது பாடசாலையின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்ட ஒருவராக விளங்கினார். இதன் காரணமாக பாடசாலையின் நலன்கருதி காலத்திற்குக் காலம் அவர் தமது சொந்தக் காணியை தந்துதவியுள்ளமை இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.
இவ்வாசான் இவ்வுலகை விட்டு மறைந்துவிட்ட போதிலும் இவரது நினைவுகள் பாடசாலைச் சமூகத்தின் உள்ளத்தை விட்டு நீங்காது. அமரர் அவர்களின் இழப்பால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டி எல்லாம்வல்ல அம்பிகையைப் பிரார்த்தித்து அமைகின்றேன்.
யா/மட்டுவில் சந்திர மெளலீச செ. சிவஞானம், வித்தியாலயம், அதிபர் சாவகச்சேரி.

Page 22
முள்ளியவளை, மு/தண்ணிரூற்று தமிழ் கலவன் பாடசாலை அதிபர் Sub. Ji. Gafi GaffgassTriasar B.A.Com Trd. S.L.P.S. Quprasu
ஆத்மசாந்தி உரை
எமது அன்புக்கும் பெருமதிப்புக்குமுரிய மட்டுவில் வடக்கில் வாழும் பெரும்பாலான மக்களுக்கு அறிவு ஒளி ஏற்றிய தீபம் அணைந்த செய்தி அவரது மாணாக்கர் அனைவரது இதயத்தையும் நெருடியது.
அணைக்க வேண்டிய இடத்து அணைத்து, கண்டிக்க வேண்டிய இடத்து கண்டித்து, வழிகாட்ட வேண்டிய இடத்து வழிகாட்டி, பலரை உருவாக்கிய சிற்பியின் ஆத்மா எங்கள் இதயத்திலும், சிவத்திலும் என்றும் பிரியாது இருக்க பிரார்த்திக்கின்றோம்.
ஆங்கிலம், தமிழ், கணிதம், சமயம் என சகல பாடங்களும் எமது பழக்க வழக்க ஒழுக்கங்களிலும் கண்டிப்பாக இருந்து செயற்பட்டவர் என்பதும் எனது தந்தையாரின் நெருங்கிய நண்பராகவும், அவர் அதிபராக இருந்த காலத்தில் இவர் ஆசிரியராக அருகிலிருந்து பாடசாலை வளர்ச்சிக்கு உழைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏணியாக இருந்து தம் மாணவர் உயர்ந்திருக்கும் நிலையில் அகம் மகிழ்ந்து வாழ்த்தி ஆசீர்வதிப்பார் . ஒளவையார் வாக்குப்படி மாணவர்களைத் தம் மைந்தர் போல் உயர்விலும் தாழ்விலும் கையாண்டு ஆற்றுப்படுத்தி நல்வழிப்படுத்திய மூத்த எம் ஆசானின் ஆத்மா சாந்தி பெற பிரார்த்திக்கின்றோம்.
அன்பு மாணவன், சு. சேய்சோதிநாதன்

மட்டுவில் சிவபூரி ந. கிருஷ்ணசாமிக் குருக்கள் ஐயாவின் புதல்வர்களாகிய சிவழீரீ கி. சோமசுந்தரக்குருக்கள், சமஸ்கிருத பண்டிதர் சிவழீரீ கி. சதாசிவக்குருக்கள் ஆகியோர் வழங்கிய
அஞ்சலியுரை
தென்மராட்சிப் பதியில் மட்டுவில் ஓர் சிறிய கிராமம். ஆனால் பண்டிதர்கள், புராணிகர், ஆசிரிய மணிகள் நிறைந்த பெருமை மிக்க ஊர். அத்தோடு அனைவரையும் அருளாட்சி செய்கின்ற அருள்மிகு பன்றித்தலைச்சி அம்பாளின் கருணை கொண்டு வாழ்ந்த, வாழ்கின்ற பெரியார்கள் பலர். அவர்கள் வரிசையில் ஆசிரியர் ம.க. வேற்பிள்ளை, பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள், புராணவித்தகர் சங்கரப்பிள்ளை அவர்கள், சிறந்த நாட்காட்டியை அறிமுகம் செய்த மெய்கண்டான் கந்தையா அவர்கள் இப்படிப் பெருமை மிக்க பேராசான்களோடு பல ஆசிரிய மணிகளும் சிறந்து விளங்கினார்கள். அவர்கள் பல மாணவர்களைக் கல்விமான்களாக்கி எமது நாட்டிற்குத் தந்தார்கள். அவர்கள் வரிசையில் உயர்திரு. அமரர் கந்தர் காசிநாத வாத்தியார் அவர்களும் நினைவிற்குரியவர். கல்வி கற்பிப்பதென்பது சிறந்த ஓர் புண்ணியமாகும். அத்தோடு உலகைக் காக்கும் கை காராளர் கை என்கின்ற தன்மைக்கேற்பச் சிறந்த விவசாய மன்னராகவும் வாழ்ந்தவர் ஆசிரியர் அவர்கள். அவர் பத்தினியார் இதே சிறப்பைக் கொண்ட கல்வயலூரைச் சேர்ந்தவர். இந் நிலையிலேயே வாழ்வை வளம் படுத்தி வாழ்ந்தவர். புத்திரச் செல்வங்களும் அவருடைய சீரிய சிறப்பைக் கொண்டவர்கள். மகன் சிவபாலன் அவர்கள் செய்யும் அம்பிகையின் தெய்வீகப்பணி சிறப்புடைத்து. மற்றும்
i -XXX .

Page 23
சிவஞானசுந்தரம் அவர்கள் திருக்கணித அச்சகத்தின் கணித முதல்வர் அவர்களின் ஆணைப்படி எக் கஷ்டம் வந்த காலத்திலும் அவர்களோடிணைந்து உயர்ந்தவர். ஏனையோரும் அப்படியே. இவையெல்லாம் அமரர் ஆசிரியரின் சீரிய வழிநடத்தினால் ஏற்பட்டவை. வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வம் அழைத்த நேரம் போய்விட்டார். இது இயற்கையின் நியதி என்றோ எடுத்த (plg6). எனவே கலங்காதீர்கள். 96uj 9,6óíLDT சாந்தியடையவும் ஏனைய மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மனம் தெளிந்து நன்கு வாழவும் எல்லாம் வல்ல விநாயகரையும், மட்டுவில் பன்றித்தலைச்சி அம்பாளையும் பணிந்து அமைகின்றோம்.
இவ்வண்ணம், குருக்கள் குரும்பம்
கி. சதாசிவக்குருக்கள், கி. சோமசுந்தரக்குருக்கள், ஸ்கொட் றோட், 66/23, ஹில் வீதி, மரீ முருகன் ஆலயம் தெஹிவளை
LoGasluit.

இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களின் நூல் வெளியீட்டுச் சபை - செயலாளர் ஆசிரியமணி திரு. அ. பஞ்சாட்சரம் அவர்கள் வழங்கிய
அஞ்சலிச் செய்தி
தென்மராட்சியில் நீர் வளமும், நில வளமும் நிறைந்த பதி மட்டுவில் சான்றோர் பலரை ஈன்றெடுத்த பதி
தென்மராட்சியில் முதல் முதல் ஸ்தாபிக்கப்பட்ட பாடசாலை சந்திர மெளலிச வித்தியாசாலை "இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை புலவர்களது ஆரம்பக் கல்விக்கு வித்திட்ட பெருமையும் சந்திர மெளலிச வித்தியாசாலைக்கு உண்டு.
பணி டிதமணி அவர்கள் சநீ திர மெளலிச வித்தியாசாலையில் நடத்திய கலைவிழா பாடசாலை பரிசளிப்பு விழாவுக்குப் பிரதம விருந்தினராக சமூகமளித்த சேர். பொன்னம்பலம் இராமநாதன் துரை அவர்கள் சந்திர மெளலீச வித்தியாசாலையின் வளர்ச்சியைப் பாராட்டியதுடன், குறித்த வித்தியாசாலை மேலும் சிறப்படைய வேண்டுமென்று வாழ்த்தினார். அவரது வாழ்த்து நிறை வாழ்த்தாக அமைந்து விட்டது. •. −
இவ் வித்தியாசாலையின் வளர்ச்சிக்கு
உழைத்தவர்களில் ஆசிரியர் ஆறுமுகம் கந்தர் காசிநாதர்
அவர்கள் மிக மிக முக்கியமானவர். சந்திர மெளலிச
வித்தியாசாலையில் ஆசிரியராக நியமனம் பெற்ற திரு.
காசிநாதர் அவர்கள் ஓய்வு பெறும் வரை அங்கேயே
கடமையாற்றினார் என்பது தனிச் சிறப்பிற்குரியது. சந்திர -XXXV

Page 24
மெளலீச வித்தியாசாலையில் அவரது சேவைக்காலம் “நாற்பத்திரண்டு” ஆண்டுகள் என்று அறியும் போது மனம் மிகவும் மகிழ்கிறது.
சந்திர மெளலிச வித்தியாசாலை என்றால் கந்தர் காசிநாதர், காசிநாதர் என்றால் சந்திர மெளலீச வித்தியாலயம் என்ற பிணைப்பு மிகவும் இறுக்கமாக இருந்தது.
ஒருவர் வாழ்க்கையில் ஆயிரம் பிறை காண்பது பெரிய பாக்கியம் என்பார்கள். ஆசிரியர் காசிநாதர் அவர்களோ ஆயிரம் பிறைகளுக்கு மேலேயும் பல பிறைகளைக் கண்ட மூதறிஞராக விளங்கினார். அவ்வாறு நிறை வாழ்வு வாழ்வதற்கு எத்துணைத் தவம் வேண்டும்.
ஆசிரியர் ஆறுமுகம் கந்தர் காசிநாதர் அவர்கள் தென்மராட்சியில் ஒரு சீலர்.
ஆசிரிய மணி, உரும்பிராய் அ. பஞ்சாட்சரம்

யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தெல்லிப்பழைப்பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவருமாகிய திரு. சி. சிவமகாராஜா அவர்கள் வழங்கிய
ஆத்ம சாந்தி உரை
தமிழும், சைவமும் தழைத்தோங்க பணியாற்றி பெரியார்கள் பலரைத் தந்த கிராமம் மட்டுவில் கிராமமாகும். இந்த கிராமத்தில் நல்லாசிரியராக புகழ் பூத்த பெரியாராகத் தான் அமரர் காசிநாதர் அவர்கள் திகழ்ந்தார். அன்னார் சுகயினமுற்றிருப்பதை அறிந்து அவரைப் பார்க்கச் சென்றேன். பார்த்தேன் - அவருடைய சுக நலம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் அவர் இவ் உலகத்திலிருந்து மறைந்து விட்டார்.
ஒருவருடைய சிறப்புக்களை அவர்களின் எச்சத்தினால் காணலாம் என்பது வள்ளுவர் வாக்கு. அந்த வகையில் அவரின் மைந்தன் சைவ ஆசார சீலராக பூரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் சிறந்த பணியாற்றும் சைவத்திரு கா. சிவபாலன் அவர்களின் பணிகள் எமக்கு எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கின்றன.
அன்னாரது இழப்பு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல தமிழினத்திற்கே பேரிழப்பாகும். அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கும், சுற்றத்தவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
அன்னாரின் ஆத்மா சாந்தி பெறப் பிரார்த்திப்போமாக.
தெல்லிப்பழை, சி. சிவமகாராஜா,
S.02.2005 தெல்லிப்பழை - ப.நோ.கூ. சங்கம்

Page 25
P. Sivagurunathan 83/9, Palaly Road, Director of Education (Emeritus) Thirunelvely,
Jaffna. s 2005.02.12
In memory of Late Mr. Kanthar. Kasinathar
Mr. Kanthar Kasinathar lived in Madduvil for ninety Seven years and left his body there on 22.01.2005. Everyone in the village whether young or old loved and revered him.
As Yogaswami Says, ་་༢༠༠༥་༧་༢ -
"Learn to remain always happy, you must have the capacity to endure-everything'.
Thus I had seen him always happy with a smiling face; God gave him the capacity to endure everything he came across in his long period of life. As a teacher he rendered signal services to the Community. In the School community he remained a very popular teacher. He loved and understood friend and foe alike. He was a simple man who led a simple life.
Society gave him nothing. He was born great and God created him for a purpose. He gave the Society a priceless pearl, one of his sons, Mr. K. Sivapalan, a devoted servant to God, Serving at the humble abode at Tellippalai “Thutgai Ampal Thevasthanam”. Besides this he donated one of his lands to the Hindu Board Education Trust to build a School for the children of Madduvil to have a good education. The School is now known as Madduvil Chandramouleesa Vidyalayam.
Thus the late Mr. Kasinathar justifies the saying of the remarkable Athenian sage, Plato,
"The names of great men remind us
That we can make our lives Sublime' May his soul rest peace. Shanthi! Shanthi! Shanthi!
Mr. P. Sivagurunathan.
iii- -

நீள நினைந்து நீள வாழ்ந்து இறைபதம் இணைந்த காசிநாதர் ஜயா பற்றிய சிந்தனை
பிறப்பெடுத்தோர் இறப்பது நியதி. எனினும் எமக்கு இனியார் ஒருவர் பிறந்து வாழ்வாங்கு வாழ்ந்து மறையும் போது ஏற்படும் துயரம் தாங்கொணததொன்று.
நமது குருவாகத் தோன்றிய ஆசிரியர் அவர்களிடம் , மட்டுவிலிற் தோன்றிய எவரும் படித்திருக்காமல் இருக்க முடியாது. அவரது தோற்றம் அன்று தொட்டு இன்று வரை அழகிய மெல்லிய உருவம் வண்டி தொந்தி எதுவுமின்றி செய்த விக் கிரகம் போன்று அமைந்திருந்தமை வியப்புக்குரியதே. ஏறத்தாழ ஆயிரத்திற்கு மேற்பட்ட பிறை கண்ட உத்தமர் அவர்கள் எமது ஊர்மக்கள் ஒவ்வொருவர் இதயத்திலும் அழியாத இடம் பெற்றுள்ளார். என்பதை நான் தெரிந்து கொள்ளலாம்.
ஆரம்பக் கல்வியை ஊட்டுவதென்பது எல்லாராலும் எளிதாகச் செய்து முடிக்கக் கூடியதன்று இவரோ. அதற்கென விசேட பயிற்சி பெற்றவர் போன்றே கற்பித்து கொண்டமை உற்று நோக்கற்குரியது. இவரின் மணிமணியான கையெழுத்து இன்றும் எனது மனக் கண்முன் ஊசலாடுகின்றது. இன்னும் தானே தனது சொந்தக் காணியை மனமுவந்து வழங்கிப் பாடசாலை ஒன்றினை நிறுவச் செய்து வித்தியாதானஞ் செய்து புண்ணிய சீவனாக வியங்கியமை ஊரே அறிந்த உண்மை.
நமது மதிப்புக்கும் அன்புக்கும் உரிய ஆசிரியர் அவர்கள் இல்லறமாம் நல்லறத்திலீடுபட்டு புதல்வர் நால்வரையும் புதல்வியர் மூவரையும் பெற்றெடுத்து வளர்த்து அவர்களை பல்வேறு துறைகளில் கற்பித்து வாழ்வாங்கு வாழ வைத்தார். இவர்களுள் சிவபாலன் என்பார் தெல்லியூர் துர்க்கை அம்பாள் ஆலயத்திற்குத் தொண்டு செய்வதையே தம் தலையாய பணியாயக் கொண்டு அம்பாளின் அருளாட்சிக்கு -XXXX

Page 26
உள்ளாகி பிரமச்சரிய விரதங்காத்து தோற்றத்தில் பண்டிதமணி ஐயா போன்று காட்சி தந்து கொண்டிருக்கிறார். இவரை ஈன்றெடுத்து வளர்த்துக் கொடுத்த மட்டுவில் உலகப் புகழினையே ஈட்டிக்கொண்டதெனலாம்.
இவற்றை எல்லாம் விஞ்சிக் கொண்டு விட்டேனோ பார் என்ற ரீதியில் இரண்டாமவரான சிவஞானம் என்பார் சமய சமூகத் தொண்டுகளிற் தம்மை முழுவனே ஈடுபடுத்திக் கொண்டு சிறப்பாக வாழ கெ து வைத்தது மட்டுவிற்பதி. ஆசிரியர் அவர்களது ஏனைய பிள்ளைகளும் தத்தம் திறமைகளுக்கும் இயல்புகளுக்கும் அமைய சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
ஆசிரியர் அவர்கள் இளம் பராயத்தில் வீட்டுத் தோட்டத்தில் காட்டிய கரிசனை அவரை தலைசிறந்த விவசாயியாகவும் கூட மிளிர வைத்தது. தோடம்பழம் வாழைப்பழம், எலுமிச்சம்பழம், மாதுளம்பழம், கரும்பு, செவ்விளநீர் போன்றவற்றை நாடி வருவோருக்கு எதுவிதமான வெறுப்புமின்றி ஈந்து வந்த செயல் என்றென்றும் மறக்கக் கூடியதன்று தமது இல்லம் நோக்கி வருவோரைப் புன்சிரிப்போடு அழைத்து குசலம் விசாரித்து தானும் மகிழ்ந்து ஏனையோரையும் மகிழவைப்பது இவரது பண்பாகவே அமைந்திருந்தது.
தமது இறுதிக் காலத்தை அமையாக வாழ்ந்து இறைபதம் ஏய்தினார். அவரைப்பிரிந்து வருந்தும்; மனைவி, மக்கள், பேரப்பிள்ளைகள் யாவருக்கும் ஆறுதல் கூறி அவர் தம் ஆத்ம சாந்திக்கு எல்லாம் வல்ல இறைவனை துணை வேண்டி அமைகின்றேன்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!
திரு. ச. சின்னத்தம்பி மட்டுவில். ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர்
-XL

கொழும்பு - நிதி ඡනtnර්ෂ திறைசேரிப் பணிப்பாளர் திரு. கா. வீரசிங்கம் அவர்கள் வழங்கியது எனது ஆசான் காசிய வாத்தியார்
சகல வளங்களும், சைவநெறியும், தமிழும் தழைத்தோங்கும் தென்மராட்சிப் பகுதியிலுள்ள மட்டுவில் வட 13.03.1909 இல் திருவாளர் கந்தர் காசிநாதர் அவதாரித்தார். இவருக்கு வேலுப்பிள்ளை என்ற மறுபெயரும் வழங்கியது.
இவர் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை போன்ற பெரியார்கள் உதித்த ஊரில் அவர்களின் பரம்பரையில் உதித்த உத்தமனார். எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய இவர் சகலராலும் அன்பாக *காசிய வாத்தியார்’ என்று அழைக்கப்பட்டார்.
திருவாளர் க. காசிநாதர் அவர்கள் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை கல்வி கற்ற பாடசாலையாகிய மட்டுவில் வடக்கு ‘சந்திரமெளலீச வித்தியாசாலையில் ஆசிரியராக இறுதிவரை சேவையாற்றி பல மாணவச் செல்வங்களை உருவாக்கினார்.
1952 தொடக்கம் 1954 காலப்பகுதியில் நான் இவரிடம் தமிழ், சமயம் போன்ற பாடங்களை இரண்டு, மூன்று, நாலு ஆகிய வகுப்புக்களில் கற்கும் பாக்கியம் கிடைத்ததுடன் அவரின் அன்புக்குரிய மாணவனாகவும் திகழ்ந்தேன்.இவர் ஆங்கிலக் கல்வியையும் எமக்குக் கற்பித்ததுடன் எமது வகுப்பு ஆசிரியராகவும் இருந்தார்.
“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்”
என்ற வள்ளுவர் வாக்குக்கும், “நோன்பென்பது கொன்று தின்னாமை” என்ற ஒளவை முதாட்டியின் வாக்குக்கும் ஏற்ப இவர் குடும்பமே பிறவிச் -XLI

Page 27
சைவர்களாகத் தாவரபோசணிகளாக வாழ்ந்தனர். இவர் பன்றித்தலைச்சி அம்மனைத் தனது குலதெய்வமாகக் கொண்டு வாழ்ந்த சமயப் பெரியார். தம்மை நாடிவந்த சகலருக்கும் தன்னாலான உதவிகளை வழங்கிய உத்தமராக திகழ்ந்தார்.
ஆயிரம் பிறை கண்ட இந்த உத்தமனார். வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து சகலரும் புகழும்வண்ணம் பண்பாளனாக வாழ்ந்த பெரியார் ஆவார்.
இன்றிருப்பார் நாளை இருப்பது நிச்சயமில்லை. புவியில் பிறந்த சகலரும் என்றோ ஒருநாள் இறப்பது திண்ணம். இந்த நியதிக்கு திருவாளர் க. காசிநாதர் அவர்களும் விதிவிலக்காக முடியாது. கடவுள் கிருபையால் எந்தவித நோயாலும் வாடாது திடீரென தமது 97 ஆவது வயதில் 22.01.2005 இல் இவ்வுலக வாழ்வை நீத்து அமரரானார்.
“நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து இவ்வுலகு” என்பது வள்ளுவர் வாக்கு. இவரது இழப்பு இவரது குடும்ப அங்கத்தவர்களுக்கு மட்டுமன்றி சகல மக்களுக்கும் ஏற்பட்ட ஒர் பேரிழப்பாகும். அன்னாரின் இறுதிக்கிரியையில் வந்து கலந்து கொள்ள முடியவில்லையே என ஏங்கினேன். இவரது பிரிவினால் கலங்கும் இவரது அன்பு மனைவி, மக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் சகல குடும்ப அங்கத்தவர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக.
'உறங்குவது போலும் சாக்காடு;
உறங்கி விழிப்பது போலும் பிறப்பு”
ஓம் சாந்தி ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
(திறைசேரி) திரு. கா. வீரசிங்கம், (SLAa.A) நிதி அமைச்சு, B.A (Hons), D.P.F.M.F.P.F.A
கொழும்பு - 01 பணிப்பாளர்
, -XLII

மட்டுவில் ரீ முத்துமாரி அம்மன் ஆலய பரிபாலன சபைத் தலைவரும், கிராம முன்னேற்றச்சங்கத் தலைவருமாகிய வைத்திய கலாநிதி நா. சின்னத்தம்பி
அவர்கள் வழங்கியது
காலஞ்சென்ற திரு. க. காசிநாதர் அவர்கள், யா/ சந்திரமெளலிச வித்தியாசாலையில் ஓர் ஆங்கில ஆசிரியராகவும் விளங்கினார்கள். அவரிடத்திலே தான் நான் எனது ஆரம்ப ஆங்கில அறிவைப் பெற்றுக் கொண்டேன் என்பதில் பெருமைப்படுகின்றேன்.
இவர் தமிழ்க் கலப்பில்லாமல் ஆங்கிலத்தில் உரையாடுவதில் வல்லவர். அதனால் பாடசாலைக்கு வருகை தரும் உயர் அதிகாரிகளுடன் பேசுவதற்கு இவர் அழைக்கப் படுவார்.
பாடசாலை நேரந் தவிர்ந்த வேளைகளிலும் இவர் பாடசாலை வளவிலேயே பொழுதைக் கழிப்பதுண்டு. ஏனென்றால் பாடசாலை அமைந்த காணியும், அயற்காணியும் இவருக்குச் சொந்தமானவை. மேலும், பாடசாலை மாணவரின் விளையாட்டுத் தேவைக்காகவும், பிற தேவைகளுக்காகவும் தனது காணியின் எந்த இடத்தையும் உபயோகப்படுத்த உடன் படுவார். மேற்பார்வையாளராகவும் இருப்பார்.
ஆசிரியப் பதவியோடு சிறந்த கமக்காரனாகவும் விளங்கியவர் காலஞ்சென்ற திரு. க. கா. அவர்கள்.
எனது தகப்பனார் காலஞ்சென்ற திரு. வ. நாகமுத்து அவர்களுடன் கூட்டுக் கமக் காரனாகச் சேர்ந்து தொழில்புரிந்தமை இந்த நாடு அறிந்ததே.
-XLII

Page 28
அந்த நேரங்களில் இவர்களின் ஆங்கில உரையாடல்களை இவர்கள் செய்த பயிர்களும், இவ்வூர் மக்களும் அறிவர்.
காலஞ்சென்ற திரு. க. கா. அவர்கள், யா/ சந்திரமெளலீச வித்தியாசாலையின் ஆரம்பத்தினையும், இன்றைய வளர்ச்சியையும் தமது காலத்திலேயே கண்டு பெருமைப் பட்டுச் செல்கின்றார் என்றால் அது அவரது
பெருமைக்குச் சான்றாகும்.
அன்னாரது ஆத்ம சாந்திக்கு அதுவே துணையாகும். அன்னாரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறி அமைகின்றேன்.
நன்றி வணக்கம்
மட்டுவில் வடக்கு, Dr. நா. சின்னத்தம்பி சாவகச்சேரி.
-XLIV

ஜெயந்திநகர் மகாதேவ ஆச்சிரமம் - கிளிநொச்சி தவத்திரு கணேசானந்த மகாதேவ ஆச்சிரம சுவாமிகள் வழங்கிய பிரார்த்தனை
மட்டுவில் திரு. கந்தர் காசிநாதர் ஆசிரியர் அவர்கள் அண்மையில் சிவபதம் எய்திய செய்தியறிந்தோம். அவர்கள் நீண்ட காலம் எங்களுடன் தொடர்பு கொண்டவராவர். அவர் மட்டுவில் சந்திர மெளலீச வித்தியாசாலையில் ஆசிரியராக கல்விப் பணியாற்றியவர். இவரது பிரிவை முன்னிட்டு அன்னாரின் மனைவியார், பிள்ளைகள் அனைவருக்கும் ஆறுதல் கூறி அன்னார் சாந்தியடைய எம்பெருமானை வேண்டுதல் செய்கின்றோம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி!
இறைபணியில், ஜெயந்தி நகர், தவத்திரு கணேசானந்த ിബിബൈbre; e. மகாதேவ சுவாமிகள்
-XLV

Page 29
Gusb a 02
பேரறிஞர்கள்
1. உரையாசிரியர் ம.க. வேற்பிள்ளை அவர்கள்
2. பண்டிதர் ம.வே. குருகவி மகாலிங்கசிவம் அவர்கள்
3. இலக்கியகலாநிதிபண்டிதமணிசி.கணபதிப்பிள்ளை அவர்கள்
4. பண்டிதர் ம.க. வே. திருஞானசம்பந்தர் அவர்கள்
தந்தையாரின் நட்புக்குப் பாத்திரமான
இந்துபோர்ட் திரு.சு.இராசரத்தினம் அவர்கள்
தந்தையாரின் குரு
சைவப்பெரியார் சு.சிவபாதசுந்தரம் அவர்கள்

பேரறிஞர்கள்
உரையாசிர்யர் ம.க. வேற்பிள்ளை அவர்கள் (1848 - 1930)
உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை அவர்கள் தென்மராட்சிப் பிரிவின் மட்டுவில் பழம்பதியில் பிலவங்க வருஷம் 08-01-1848 அவதரித்தார். தந்தையார் கணபதிப்பிள்ளை புலோலியைச் சேர்ந்தவர். தாயார் மகேஸ்வரி அம்மையார் மட்டுவிலை சேர்ந்தவர். இவருடைய தாயார் நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆதீனகர்த்தரான பூரீ இரகுநாத மாப்பாண முதலியார் மரபிற் பிறந்துள்ளார். சைவப் பெரியார் சிவபாதசுந்தரனார் அவர்களின் மைத்துனர் இவர் நூல்களுக்கு எல்லாம் சிறந்த உரை எழுதுவதில் வல்லவராகையால் உரையாசிரியர் என அழைக்கப்பட்டார். ம. க. என்பதில் 'ம' என்பது மட்டுவிலையும் , * க’’ என்பது கணபதிப்பிள்ளையையும் சுட்டி நிற்கின்றது.
உரையாசிரியர் அவர்கள் 5-ம் வயதில் வித்தியாரம்பம் செய்த பின் தாய் மாமனாரான சண்முகம்பிள்ளை அவர்களிடம் தமிழ்மொழி நீதி நூல்கள், நிகண்டு என்பவற்றை ஐயம் திரிபற கற்றுக்கொண்டார். இவரின் புலமையின் காரணமாக நல்லூர் கார்த்திகேசு ஆசிரியரிடம் கல்வி கற்க சென்றார். செஞ் ஞாயிறு ரீலறி ஆறுமுக நாவலர் பெருமானிடத்தும் அவரின் மருகர் வித்துவ சிரோண்மணி ந. ச. பொன்னம்பல பிள்ளையிடமும் தமிழ் மொழி இலக்கணத்தையும், இலக்கியத்தையும் கற்றுத் தேறினார். உரையாசிரியரும் கோப்பாய் சபாபதி நாவலரும் நாவலர் பெருமானிடத்து ஒருங்கு கல்வி கற்ற மாணவர்களாவார்.
-1-

Page 30
1875-ம் ஆண்டில் மட்டுவிலிலே காசிநாதர் என்கின்ற நைட்டிக பிரம்மச்சாரியாக ஒருவர் இருந்தவர். இவருடைய காணி நிலத்திலே உரையாசிரியர் அவர்கள் ஒரு சைவ பிரகாச வித்தியாசாலையை ஸ்தாபித்தார். தென்மராட்சியிலே ஆரம்பிக்கப்பட்ட கல்விச் சாலையிலே இதுவே முதலாவது பாடசாலை ஆகும்.
உரையாசிரியர் அவர்களிடம் தென்மராட்சியிலுள்ள கல்வயல், மீசாலை, சாவகச்சேரி, நுணாவில், சரசாலை ஆகிய இடங்களிலிருந்து மாணவர்கள் கல்வியைப் பயின்றனர். இங்கு மொழி இலக்கணம், இலக்கியம், சைவசித்தாந்தம் போன்ற பாடங்கள் மாண்வர்களுக்கு கற்பிக்கப்பட்டது. இங்கு இராக் காலங்களில் புராண இதிகாசங்கள் விளக்கவுரை, சைவப் பிரசங்கம் என்பவற்றை சைவப் பெரியார் நிகழ்த்துவார்.
1907-ம் ஆண்டளவில் உரையாசிரியரவர்கள் சிதம்பர தலயாத்திரை செய்ய சென்றார். அங்கு சிதம்பரத்தில் நாவலர் பாடசாலை அறங்காவலரின் வேண்டுகோளுக்கிணங்கி தலைமை ஆசிரியப் பணியை பொறுப்பேற்றார். இதனால் தமிழ்நாட்டு அறிஞர் பெருமக்களின் தொடர்பு உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை அவர்களுக்கு ஏற்பட்டது. இவர் சிதம்பரத்தில் வாழ்ந்த காலத்தில் திருவாதவூரடிகள் புராணத்துக்கு விருத்தி உரையையும் பொழிப்புரையையும் எழுதினார். இந் நூலுக்கு சமன்ான ஒரு உரையை திருவாதவூரடிகள் புராணத்துக்கு இன்று வரை எவருமே எழுதவில்லை. திருவாதல்பூரடிகள் புராணத்துக்கு சிறந்த உரையை எழுதிய பெருமை நம் ஈழநாட்டு யாழ்ப்பாணத்தவ ராகிய உரையாசிரியருக்கே உண்டு.
மேலும், உரையாசிரியர் அவர்கள் “அபிராமி அந்தாதி” பொழிப்புரை “கெளரி நூல்" உரை கெளரி நூல் : விளக்க உரை, "வேதாரணிய புராண" குறிப்புரை “புலோலி பர்வத பத்தினி அம்மை” தோத்திரம் "புல்ோலி வைரவ கடவுள் தோத்திரம்’ என்பவற்றின் உரைகளையும் நூல்களையும் எழுதினார்.
. -2-

மட்டுவிலிலே தமது குல தெய்வங்களாக மட்டுவில் மருதடிப் பிள்ளையாரையும், மட்டுவிலி சிவசந்திர பெருமானையும், ஆவரம்பிட்டி வைரவர் கோவிலையும் சென்று வழிபாடு செய்பவர். சிதம்பரத்தில் இருந்த காலத்தில் 1922-ம் ஆண்டு மட்டுவிலுக்கு வருகை தந்து சிவசந்திரமெளலிச பெருமாளை வழிபாடு செய்ததாக தகவல்கள் கிடைத்துள்ளது.
மட்டுவிலுக்கு பிறிதொரு பெயர் 'சந்திரபுரம்” என்பதாகும். ஆன்ம வர்க்கங்களுக்கு திருவருள் பாலிப்பதற்காக சாந்தநாயகி சமேத சந்திரநாயகி பெருமான் கோவில் கொண்டு எழுந்தருளியுள்ளமையால் மட்டுவில்பதி “சந்திரபுரம்” எனும் சிறப்பு பெயரைப் பெறுகின்றது.
ஈழமண்டல சதகம் அல்லது சந்திர மெளலிச சதகம் என்னும் சதகச் செய்யுளை பாடிய உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை அவர்கள் சந்திரமெளலிச பெருமானையும் சாந்தநாயகி அம்மையாரையும் பாட்டுடை தலைவராக கொண்டே பாடியுள்ளார்.
இவர் இயற்றிய சதகச் செய்யுள்கள் அனைத்தும் “. சாந்தநாயகி சமேத சந்திர மெளலீசனே யைந்தொழில் விலாசனே சந்திரபுர தல வாசனே' என பூர்த்தி பெறுகின்றமையை அவதானிக்கலாம். இந்த ஈழமண்டல சதக நூல் 1923-ம் ஆண்டு சிதம்பரசபாநடேசர் சந்நிதானத்திலே அரங்கேற்றப்பட்டது. இச் சதக நூலுக்கு அன்னாரின் மைந்தர் குருகவி மகாலிங்கசிவம் அவர்கள் வாழ்த்துப்பாயிரம் செய்துள்ளார். ஈழமண்டல சதக நூலுக்கு உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை அவர்களே சதகமும் இயற்றி உரையும் செய்துள்ளார். இதனை பல்வேறு சந்தர்ப்பங்களில் முன் மொழிந்து எழுதியும் சொற்பொழிவும் செய்துள்ளார் பண்டிதமணி.
-3-

Page 31
உரையாசிரியர் அவர்களின் புதல்வர்கள் ஐவர். ஒருவர் குருகவி கவிஞர் மகாலிங்கசிவம் ஆவார்கள். அவர்களை பரீட்சை எடாத பண்டிதர் என இன்றும் அழைப்பர். மற்றையவர் இந்து சாதனம் பத்திரிகையில் பல ஆண்டுகள் பத்திராதிபராக கடமையாற்றிய ம. க.வே. திருஞானசம்பந்தபிள்ளை ஆவார். ஒருவர் சட்டத்தரணி மாணிக்கவாசகர். இவர் கொக்குவிலில் பிரசித்தி பெற்ற சபாரத்தின்ம்' முதலியாரின் மகளை திருமணம் செய்தவர். மேலும் ஒருவர் நடராஜா உபாத்தியாயர் அவர்கள். இவ் வேற்பிள்ளை நடராஜா உபாத்தியாயரவர்கள் காரைநகர் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாண இந்துக் கல்லூரியிலும் கல்வி கற்பித்தார். இவரே பண்டிதமணி அவர்களை நாவலர் பாடசாலையில் ஒப்புவித்த பரோபகாரி ஆவார்.
இன்று உரையாசிரியரின் குடும்பத்தின் நிகழ்கால சின்னமாக விளங்குபவர் கவிஞர் மகாலிங்கசிவம் அவர்களின் ஏக புத்திரன் புலவர் பார்வதிநாதசிவம் ஒருவரே இன்று பிரகாசித்து வருகின்றார். மேலும் இவரின் கடைசி மகன் மருதானை ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியராகவிருந்தார். உரையாசிரியர் அவர்களுக்கு இந்தியாவிலும் நம் ஈழநாட்டிலும் தலைசிறந்த நன் மாணாக்கர்கள் இருக்கிறார்கள். தம் வாழ்நாளின் இறுதிக் காலத்தை சிதம்பர நடராஜர் சந்நிதானத்துக்கு சென்று வழிபாடியற்றி வந்தார். மகான் சுவாமி ஞானப்பிரகாசர் குளத்தில் தீர்த்தம் ஆடியும், நடராஜரை சிவவழிபாடு செய்தும் வந்த இவர் தமது 82-ம் வயதில் 07. 02-1930ம் ஆண்டு தை மாதம் சிதம்பர நடராஜப் பெருமான் திருவடிகளை அடைந்தார்.
உரையாசிரியரின் பெரும்புகழ் தமிழ்நாட்டிலும், நம் நாட்டிலும் இன்றும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.
k k k k
-4-

பண்டிதர் ம. வே. குருகள் மகால்வ்கசிவம் அவர்கள்
1891 - 1941
கவிஞர் குருகவி மகாலிங்கசிவம் 1891-ம் ஆண்டு கரவருடம் உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை அவர்களுக்கு மகனாக பிறந்தார். உரையாசிரியரின் பிள்ளைகள் ஐவர். சட்டத்தரணி மாணிக்கவாசகர், இந்து சாதனம் பத்திராதிபர் வே. திருஞானசம்பந்தபிள்ளை அவர்கள், கவிஞர் மகாலிங்கசிவம் அவர்கள், நடராஜா உபாத்தியாயர் அவர்கள், கந்தசாமி ஆசிரியர் ஆகியோராவார். இவர்க்ளில் குருகவி தந்தையாரிடம் இலக்கிய இலக்கணங்களை ஐயந் திரிபறக் கற்றவர்.
சக்தி வழிபாடு, கம்பராமாயணம், திருக்குறள் விளக்கங்கள், சொல் ஆராய்ச்சி என்பன பற்றி மேடைகளிலே வாரி வழங்கும் சிறந்த பேச்சாளர். இவருடைய கவி ஆற்றலினாலே இவரை பண்டிதமணி அவர்கள் குருகவி கவிஞர் மகாலிங்கசிவம் என்றே அழைப்பார். பண்டிதமணிக்கும் குருகவிக்கும் இடையில் ஏற்பட்ட தொடர்பு பண்டிதமணியின் 11-ம் வயதில் ஏற்பட்டது. கவி இயற்றுவதில் சிறந்த கற்பனா சக்தியை கொண்டவர். இவர் தமது 12-ம் வயதில் பழனிப் பதிகம் பாடியவர். இவர் பாடிய தனிப்பாடல்கள் அநேகமுண்டு. இவரைப் பற்றிய செய்திகள் ‘ஈழகேசரி வெள்ளிவிழா மலர்' ‘வித்துவ சிரோமணி கணேசஐயர் மல்ர்" என்பவற்றில் பரக்கக் காணலாம். இவர் கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையிலும் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியிலும் தமிழ் விரிவுரையாளராக பணி புரிந்து பெரும் தொண்டாற்றியவர்.
இவருடைய கவித்துவத்தைப் பற்றி பல்வேறு
இடங்களிலும், பல மேடைகளிலும் பண்டிதமணி அவர்கள்
எழுதியும், பிரசங்கம் செய்துமுள்ளார். ஈழத்து இலக்கிய
வழியை புலப்படுத்தும் பண்டிதமணி அவர்கள் g5 D5
-5- ." ،"

Page 32
‘இலக்கிய வழி என்ற நூலில் கவிஞர் மகாலிங்க சிவம் பறறி ஓர் அத்தியாயம் எழுதியுள்ளார். இவர் ஈழமண்டல * தக நூல், இராமநாத மான்மியம், கணேசஐயர் மலர், ஈழகேசரி மலர் என்பனவற்றில் எழுதியுள்ள சிறப்புப் பாயிரம் அவருடைய தமிழ்மொழிப் புலமையை எடுத்தியம்புகின்றது.
இவர் 1926-ம் ஆண்டு சைவப்பெருவள்ளல் சேர். பொன். இராமநாதன் அவர்கள் மட்டுவில் சந்திர மெளலீச வித்தியாலயத்தில் நடைபெற்ற பரிசளிப்பு வைபவத்தின் வருகையின் போது பாடிய வரவேற்புப் பா சேர். பொன். இராமநாதனையே கவர்ந்தது. மாவிட்டபுரத்திலே திருமணம் செய்த இவருக்கு இரு பிள்ளைகள். ஒருவர் பண்டிதமணி மணிமண்டபத்தில் மணிவிழாவில் சொற்பொழிவாற்ற வந்த பாரதி மகாலிங்க சிவம் அவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்ட அம்மையார் ஒரு வாரம் கழிய சிவபதம் எய்தினார். மற்றையவர் புலவர் ம. பார்வதிநாதசிவம் அவர்கள். இவர்கள் உரையாசிரியர் பரம்பரையின் நிகழ்கால சின்னமாக விளங்குபவர். இன்றைய காலத்து புலவர் பரம்பரையின் மூதறிஞராக காணப்படுபவர். புலவர் பார்வதிநாதசிவம் அவர்களின் செய்யுள்கள் ஈழத்துக் கவிஞர் உலகத்தில் முதன்மை பெறுகின்றது. கவிஞர் மகாலிங்கசிவம் அவர்கள் சிறந்த சக்தி உபாசகர். இவர் மட்டுவிலிலே அமைந்த முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு வெள்ளிக்கிழமைகளில் வழிபாட்டுக்கு செல்வார். இவர் அங்கு அடியார்களுக்கு வழங்கப்படும் அம்பாள் பிரசாதமான “பாற் கொழுக் கட்டையை” அருந்தும் பொருட்டாகவே மிகப் பிரியமாக செல்வாராம். இத்தகைய செய்திகளை எல்லாம் பண்டிதமணி வாயிலாக கூறக்கேட்டிருக்கிறேன்.
கவிதை உலகில் சஞ்சரித்து வாழ்ந்த கவிஞர்
மகாலிங்கசிவம் அவர்கள் 13-03-1941-ம் ஆண்டு சிவபதம்
எய்தினார்கள். கவிஞர் மகாலிங்கசிவம் அவர்கள் மறைந்து -6-

45 ஆண்டுகள் கழிந்து 13-03-1986-ம் ஆண்டு பண்டிதமணி அவர்களும் சிவபதம் எய்தினார்கள். பண்டிதமணி அவர்களினதும் குருகவி அவர்களினதும் தொடர்பு மிக நீண்டது. அவை பற்றி விரிவஞ்சி விடுக்கப்பட்டுள்ளது.
சிறந்த சக்தி உபாசகரான முகாந்திரம் தி. சதாசிவ ஐயா அவர்களும், கவிஞர் மகாலிங்கசிவம் அவர்களும் நட்புக்கு பாத்திரமாக இருந்தனர். சுன்னாகம் பிராசீன பாடசாலை அதிபரான முகாந்திரம் தி. சதாசிவம் ஐயா அவர்கள் கவிஞர் மகாலிங்கசிவம் அவர்களின் மறைவையிட்டு “தேவி மானச பூஜை அந்தாதி” எனும் நூலை வெளியிட்டு அன்னாரின் நினைவை வெளிப்படுத்தினார். எனவே எதிர்வரும் சந்தர்ப்பங்களில் கவிஞர் மகாலிங்கசிவம் அவர்களின் செய்யுள்கள் நூல் வடிவம் பெற்றால் பலருக்கும் பயன்தரும் செய்திகளாக அமையும்.
கவிஞர் மகாலிங்கசிவம் அவர்களின் பாடல்களில் ஒன்று. இங்கு தரப்பட்டுள்ளதை அவதானியுங்கள்.
படைபல கூட்டிப் பிறதேசம் கவர்ந்து பலாத்கரித்தே அடையம் நிருபத் துவமோ மனிதர் அகங்குழையும் படிபல தேசத் தொண்டால் நீ பெறும் நிரு பத்துவமோ நெடிய தென்போ மிராம நாத விதூமணியே.
米米米米米

Page 33
தமிழ் மூதறிஞர் இலக்கிய கலாநிதி பண்டிதமணி
சீ. கணபதிப்பிள்ளை அவர்கள்
(1899- 1986)
சாந்தநாயகி சமேத சந்திர மெளலிச பெருமானைக் கொண்ட சந்திர மெளலீச சிவாலயம் மட்டுவிலிலேயே அமைந்துள்ளமையால் மட்டுவில் பதி “சந்திரபுரம்” என்னும் சிறப்புப் பெயரை கொண்டதாக மிளிர்கிறது. தென்மராட்சியில் தமிழுக்கும் சைவத்துக்கும் பெருந் தொண்டாற்றிய பேரறிஞர்கள் கூட்டம் ஒன்று இருந்திருக்கின்றது. அத் தொடர்பில் உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளைக்கு பின் மட்டுவிலுக்கு பெரும் புகழை ஈட்டித் தருபவர் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை என்றால் அதில் மிகை ஒன்றுமில்லை. பண்டிதமணி அவர்கள் யூரிலழரீ ஆறுமுகநாவலர் பெருமானின் நிகழ்கால சின்னமாக விளங்கியவர். நாவலர் பெருமானுடைய தர்மத்துள் மூழ்கியவர். நாவலரின் நீதியை தம் உயிரிலும் மேலாக நேசித்தவர். மேலும் நாவலரின் கண்டன பரம்பரையின் கடைசித் தமிழ் மகன்.
யாழ்ப்பாணத்திலே தென்மராட்சிப் பகுதி வயலும் வயல் சார்ந்த மருத நிலப்பகுதியாகும். இங்கு மட்டுவிலிலே தர்மர் என்று மக்கலால் அன்போடு அழைக்கப்படும் சின்னத்தம்பி அவர்களுக்கும், தனங்கிளப்பு வள்ளியம்மைக்கும் மகவாக சென்ற விகாரிக்கு முந்திய விகாரி வருடம் 27-06-1899-ம் ஆண்டு சதய நட்சத்திரத்தில் பண்டிதமணி அவர்கள் அவதரித்தார். இவருக்கு “கணபதிப்பிள்ளை” என பெயரிட்டாலும் “சட்டநாதர்” என்ற பெயர் மரபுவழிப் பெயரும் இருந்திருக்கிறது. மட்டுவிலிலே உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட சந்திரமௌலீச வித்தியாசாலையில் தமது ஆரம்பக்கல்வியை கற்றார். இப் பாடசாலை ஒரு காலத்தில் அமெரிக்கன்மிஷன்
-8-
 

பாடசாலையாக இருந்தது. இவருடைய ஆசிரியர்களான சாவகச்சேரி பொன்னையா உபாத்தியார், பொன்னம்பல புலவர், பொன்னப்பாபிள்ளை, வித்துவான் பொன்னம்பலப்பிள்ளை ஆகியோரிடத்தில் பாடம் கேட்டிருக்கிறார்.
பண்டிதமணி அவர்கள் தமது 19-ம் வயதில் வண்ணார் பண்ணை நாவலர் காவிய பாடசாலையில் சேர்க்கப்பட்டார். அதற்கு முன்னர் நாவலரைப் பற்றி எதுவுமே தெரியாது. நாவலர் இப்போதும் இருக்கிறாரா? என கேட்டவர் தான் பணி டிதமணி. பண்டிதமணி அவர்களை நாவலர் பாடசாலையில் சேர்ப்பதற்கு பெருமுயற்சி எடுத்த பெருமகனார் ம. க. வே. யின் புதல்வரான விஞ்ஞான பட்டதாரி நடராஜா உபாத்தியாயரே ஆகும். இவர் பண்டிதமணியை நாவலர் பாடசாலையில் ஒப்புவித்த பரோபகாரியாவார். அக் காலத்தில் இந்து சாதனம் பத்திரிகையில் வெளிவந்த நாவலர் பாடசாலையில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பச் செய்தியுடன் வந்த நடராஜா உபாத்தியாயரின் பெரு முயற்சியே பண்டிதமணிக்கு என்றும் பெரும் புகழைத் தேடியது. அக் காலத்தில் நாவலர் காவிய பாடசாலையில் பேரறிஞராக இருந்தவர் சுன்னாகம் அ. குமாரசாமி புலவர் ஐயா அவர்கள் இவர்களிடம் பாடம் கேட்கும் பெரும்பேறு பெற்றவர் பண்டிதமணி. அப்பொழுது நாவலர் காவிய பாடசாலையின் மனேச்சராக இருந்தவர் ரீமத் த. கைலாசபிள்ளை அவர்கள்.
நாவலர் பாடசாலையில் 19 வயது இளைஞனாக சேர்ந்த பண்டிதமணி அவர்கள் 1929-ம் ஆண்டு வரை நாவலர் பாடசாலையிலிருந்து றிமத் கைலாசபிள்ளை அவர்களினால் பிள்ளை போல பராமரிக்கப்பட்டவர். நாவலர் பாடசாலையில் நிர்வாக பணிகளிலும் வரவு, செலவு கணக்குப் பதிவுகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்.
1929-ம் ஆண்டு தொடக்கம் 1959-ம் ஆண்டு வரையுள்ள
30 ஆண்டு காலப்பகுதியில் திருநெல்வேலி சைவ ஆசிரிய
கலாசாலையில் தமிழ்ப் பெரும் விரிவுரையாளராக தமிழ்த் -9-

Page 34
தொண்டாற்றினார். இக் கால கட்டத்தில் பல்லாயிரக் கணக்கான ஆசிரிய மாணவர்களுக்கு தமிழிலக்கியத்தையும், தமிழ் மொழியையும் சிற்ப்பாகக் கற்றுக் கொடுத்தார். திருநெல்வேலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் விரிவுரையாற்றிய காலம் நாவலருக்கு எவ்வாறு நாவலர் பரம்பரை உண்டோ அதே போன்று பண்டிதமணி அவர்களுக்கும் ஒரு மாணவர் பரம்பரையை உலகுக்கு தந்தது. ஆசிரிய பயிற்சி கலாசாலையில் மயிலிட்டி சி. சுவாமிநாதனுடைய தொடர்பு அதிபர் தவமுனிவரான தத்துவஞானி மெளன தவமுனிவர் திரு. பொ. கைலாசபதி உப அதிபர் ஆகியோரின் தொடர்பு பெருஞ் சிறப்பை தந்தது. சைவாசிரிய கலாசாலையை தலைமைப் பாடசாலையாக கொண்டு ஊர்கள் தோறும் தோன்றிய சைவப்பாடசாலைகள் அநாதைசாலைகள் என்பனவற்றை நிறுவிய சைவ பெரியார் சு. இராஜரட்ணமுடைய தொடர்பும் பண்டிதமணி அவர்களுக்கு ஏற்பட்டது. . . .
பண்டிதர் கணபதிப்பிள்ளை என்ற பெயர் 1951-ம் ஆண்டு யாழ்ப்பாணம் திருநெல்வேலி பரமேஸ்வரா கல்லூரியில் இடம்பெற்ற தமிழ்விழாவின் பின்னர் “பண்டிதமணி” ஆகினார். தமிழ்நாட்டிலிருந்து வருகைதந்த பேரறிஞர்கள் மத்தியில் தமிழ் பற்றிப் பேசிய பேச்சே மிகவும் உச்சமாக அமைந்தது. அவருடைய பேச்சுக்களை எல்லாம் ஈழத்திலும் தமிழ் நாட்டிலும் வெளிவந்த பத்திரிகைகள் அனைத்தும் பாராட்டியும், புகழ்ந்தும் எழுதியுள்ளார்கள். பேச்சின் சாரத்தை 'தினகரன்' பத்திரிகையும் அதன் ஆசிரியர் திரு. V. K. P. நாதன் அவர்கள் ‘தமிழ்சாறு என்ற தலைப்பில் பொருள் பொதிந்த ஆசிரிய தலையங்கம் இட்டு பேச்சுக்களை வெளியிட்டார். அக் காலத்தில் முதன் முதலில் ‘பண்டிதமணி’ என்ற பெயரைச் சூட்டிய பெருமை தினகரன் பத்திரிகைக்கும், பத்திரிகை ஆசிரியருக்கும் உரித்தாகும். இதனை பின் தொடர்ந்தே தமிழ்நாட்டில் கல்கி ஆசிரியர் பண்டிதமணி என குறிப்பிட்டு கட்டுரை எழுதினார்.
-10

கேட்டார் பிணிக்கும் தகைவாய் கேளாரும் வேட்ப மொழியும் எனப் பேசும் ஆற்றல் மிகுந்த பண்டிதமணி அவர்களும் சமயம் பற்றியும் சமூகம் பற்றியும் தமிழ்மொழி பற்றியும் ஆற்றிய சொற்பொழிவுகள் நாட்டின் நாலாபுறமும் ஒலித்திருக்கின்றது.
1927-ம் ஆண்டு கோப்பாய் ஆசிரிய பயிற்சி கலாசாலையில் காரைநகர் அருணாசல உபாத்தியாரின் அழைப்பின் பேரில் சென்று இரு வருடம் ஆசிரிய பயிற்சி வழங்கியிருக்கின்றார்.
பண்டிதமணி அவர்களின் தமிழ்ப்பணி, சமய தத்துவப் பணி, நூல் உரை செய்த பணி போன்றவற்றை கெளரவித்து இலக்கிய கலாநிதி பட்டம் வழங்க வேண்டுமென்று முதன் முதலில் அரசை தூண்டி நின்றவருள் ஒருவர் முன்னை நாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. வே. குமாரசாமி அவர்கள். அவர்களின் கனவு நனவாகவில்லை. ஆயினும் மீண்டும் யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர்கள், வளாக தலைவர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள் பெரு முயற்சி எடுத்தார்கள். இதற்கமைய இலங்கைப் பல்கலைக் கழகம் 31-05-1978-ம் ஆண்டு பண்டிதமணி அவர்களுக்கு பண்டார நாயக்க சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் பட்டம் வழங்கி கெளரவித்தது. இவ் விழாவுக்கு பண்டிதமணி அவர்கள் சமூகமளிக்காத நிலையிலும் இப் பட்டம் வழங்கப் பட்டது. பண்டிதமணி பற்றிய அறிமுக பேச்சை யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் சு. வித்தியானந்தன் அவர்கள் வழங்கியிருந்தார். பண்டிதமணி அவர்கள் தத்துவஞானி திரு. பொ. கைலாசபதி, திரு. க. வச்சிரவேலு முதலியார், திரு. கி. வா. ஜெகநாதன் ஐயா, நவாலியூர் சோமசுந்தரப் புலவர், புலவர்மணி ஏ. பெரியதம்பி புலவர் அவர்கள், தமிழறிஞர் -11

Page 35
ச. அம்பிகைபாகன் அவர்கள், வித்துவான் FX.C. நடராஜா அவர்கள் போன்ற அறிஞர் பெருமக்களால் கவரப் பெற்றவர். பண்டிதமணி அவர்களுக்கு பெரும் கேண்மைத் திருக்கூட்டம் ஒன்று அன்றும் இருந்தது. இன்றும் இருக்கின்றது. பெருங் கேண்மை கூட்டத்தில் பண்டிதர் வே. மகாலிங்கம், சாவகச்சேரி பொன்னம்பலப்புலவர், சாவகச்சேரி பொன்னப்பாபிள்ளை உபாத்தியாயர், சாவகச்சேரி பொன்னையா, சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர், மனேஜர் த. கைலாசபிள்ளை, வித்துவான் ந. சுப்பையாபிள்ளை, உப அதிபர் தத்துவஞானி திரு. பொ. கைலாசபதி என்போர் உள்ளனர். அதே போன்று பல்கலைக் கழக பேராசிரியர்களிலும் பண்டிதமணி அவர்களின் நட்புக்கு பாத்திரமாக உள்ளனர். இவர்களில் பேராசிரியர் சுவாமி விபுலானந்த அடிகள், பேராசிரியர் கனகசபாபதி அவர்கள், பேராசிரியர் அ. சின்னத்தம்பி அவர்கள், பேராசிரியர் ஆ. வி. மயில் வாகனம் அவர்கள், பேராசிரியர் ச. கணபதிப்பிள்ளை அவர்கள், பேராசிரியர் வி. செல்வநாயகம் அவர்கள், பேராசிரியர் க. கைலாசபதி அவர்கள், பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை அவர்கள், பேராசிரியர் கா. கைலாசநாத குருக்கள் போன்றோர் உளர். மேலும், பண்டிதமணி அவர்களின் நாவலர் பற்றிய உயிர் மூச்சுக்களை எல்லாம் ஆராய்ந்து வெளியிட்டவர் பேராசிரியர் ச. தனஞ்சயராசலிங்கம். அதே போன்று இன்றும் நாவலர் பெருமானையும், பண்டிதமணியையும் இணைத்து பெருமை பேசி வருபவர் பேராசிரியர் பொ. பூலோகசிங்கம். மேலும் பண்டிதமணி அவர்கள் காலத்திலும் பின்னரும் அவருடைய ஆக்கங்களை பயின்று பண்டிதமணி அவருடைய மொழிநடை சிறப்பையும் உரைநடை ஈடுபாட்டையும் போற்றி வருபவர் போராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள். மேலும் பண்டிதமணி அவர்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட பேராசிரியர் அ. சண்முகதாஸ்
-12

அவர்கள் “யுகபுருடர் பண்டித மாமணி” என்ற கட்டுரையை எழுதிப் பெருமை பெற்றிருக்கின்றார். இவ்வாறாக மேலும் பல பேராசிரியர்கள் இருக்கின்றார்கள். இவற்றை விரிவஞ்சி விடுத்துள்ளோம்.
பண்டிதமணியின் வரலாறு பற்றி “வாழையடி வாழை” என்ற பெயரில் திரு. S. ஜெபரத்தினம் அவ்ர்களும் ‘மூன்றாவது கண்” என்ற பெயரில் இரசிகமணி கனக செந்திநாதன் அவர்களும், “மட்டுவில் தந்த பண்டிதமணி சி. க.” எனும் பெயரில் நீர்வேலி இ. சிதம்பரப்பிள்ளை ஆசிரியர் அவர்களும், “ ஈழத்து பண்டிதமணி” என்ற பெயரில் பேராசிரியர் சு. சுசிந்திரராஜா அவர்களும் வரலாறுகளை எழுதி உள்ளனர். அண்மையில் காலமாகிய சொக்கன் அவர்கள் 1978-ம் ஆண்டு வெளிவந்த கட்டுரை மிகுந்த சிறப்பு வாய்ந்தது. மேலும் பண்டிதமணி பற்றி வெளிவந்த மணிவிழா மலர் பாராட்டு மலர், ஆசிரியமணி அ. பஞ்சாட்சரம் அவர்களின் பெரு முயற்சியால் வெளிவந்த நினைவு மலர், நூற்றாண்டு மலர் என்பவற்றில் பண்டிதமணி அவர்களின் வரலாறும் பணிகளும் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. பல்கலைப் புலவர் குலரத்தினம் பண்டிதமணி அவர்கள் பற்றி முரசொலி பத்திரிகையில் எழுதியுள்ளார்.
பண்டிதமணி அவர்கள் இலக்கியம் பற்றி வெளிவந்த நூல்களில் இலக்கிய வழி நூல் வரதர் வெளியீடாக வெளிவந்தது. மேலும் பாரத நவமணிகள், அன்பின் ஐந்திணை கம்பராமாயண காட்சிகள். இருவர் யாத்திரிகர்கள் போன்றவை உள்ளன. அதே போன்று சமயம் பற்றி எழுதியவை சமய கட்டுரைகள், சைவ நற்சிந்தனை, கந்தபுராண கலாசாரம், கந்த புராண போதனை, கோயில், அத்வைத சிந்தனைகள் போன்றவை சமய தத்துவங்களை எல்லாம் விளக்கி நிற்கின்றன.
-13

Page 36
இவற்றிலே கந்த புராண தட்ஷ காண்டத்திற்கு செய்த உரை பண்டிதமணிக்கு பெரும் பேரையும், புகழையும் தந்தது. கந்தபுராண தட்ஷ காண்ட உரைநூல் பேராதனை பல்கலைக் கழகத்துக்கு இந்து மாணவர்களால் 1967-ம் ஆண்டு வெளிவந்தது. “கதிர்காமவேலன் பவனி வருகிறான்” என்ற நூலை மட்டுவில் மெய்கண்டான் நிலைய அதிபர் திரு. ஆ. கந்தையா அவர்களால் வெளியிடப்பட்டது. மட்டுவில் கண்ணகை அம்மை தோத்திரம் திரு. ஆ. நடராஜா அவர்களால் தமது தந்தையார் ஆறுமுகம் அவர்களின் நினைவாக மட்டுவிலில் 1966-ம் ஆண்டு வெளிவந்தது.
நாவலர் பெருமானை தன் உயிரிலும் மேலாக மதித்து வாழ்ந்து வந்த பண்டிதமணி அவர்கள் நாவலர் பெருமான் பற்றி நாவலர், நாவலரும் கோவிலும், ஆறுமுக நாவலர் என்னும் பெயரில் நாவலர் பற்றிய ஆராட்சிகளைச் செய்து உலகுக்கு தந்துள்ளார். இவ்வாறாக பண்டிதமணி அவர்கள் பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகள் ஆயிரக் கணக்கானவை. நூல்களுக்கு பண்டிதமணி அவர்கள் எழுதிய அணிந்துரைகள் ஏராளமானவை.
தமிழ் கூறும் நல்லுலகில் 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த யூரீலறி ஆறுமுக நாவலருக்குப் பின் சைவத்துக்கும் தமிழுக்கும் பெரும்பணி ஆற்றிய பெருமை பண்டிதமணி அவர்களுக்கு яр —60ії06. நாவலர் பரம்பரையின் இறுதிச் சின்னமான பண்டிதமணி அவர்கள் தமது 87-ம் வயதில் குரோதன வருடம் மாசி மீ 28-ம் நாள் 13-03-86 புதன்கிழமை அதிகாலை பூர்வபக்கத் திருதியைத் திதியில் சிவானந்தப் பெருவாழ்வு பெற்று சிவபதம் எய்தினார்கள். மாசி மாதத்துப் பூர்வபட்ச ரேவதி நட்சத்திரத் தினமே இவரது குருபூசைத் தினமாகும்.
本体米米米米
-14

இந்த சாதனம் ஆசிரியர் பண்டிதர் ம. க. வே. திருஞானசம்பந்தர் (1885-1955)
உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை அவர்களின் மூத்த மகனார் பண்டிதர் ம. க. வே. திருஞானசம்பந்தர் அவர்கள் 1885-ம் ஆண்டு மார்கழி மாதம் பிறந்தார். இவர் தமது ஆரம்பக் கல்வியை ஆங்கில மொழிமூலம் புலோலி பாடசாலையிலும், சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியிலும் கல்வி கற்றார். தந்தையார் ம. க. வே. யிடம் தமிழ், இலக்கியம், இலக்கணம், புராணம் என்பனவற்றைக் கற்றார். மேலும், திருகோணமலைப் பதிகத்தையும் அதன் பொருளையும் கற்றார். இதனால் தமிழ்மொழி இலக்கிய வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றினார். இவருடைய பணிகளில் நாவல், சிறுகதை, நாடகம், நூற்பதிப்பு, நூல் முகவுரை, பாடநூல் போன்றவை குறிப்பிடத்தக்கதாகும். மட்டுவில் அமெரிக்கமிஷன் பாடசாலையில் (சந்திர மெளலீச வித்தியாசாலை) தராதரப் பத்திரமற்ற உதவி ஆசிரியராகவும் ஆசிரியப் பணியாற்றிய காலத்தில் தமிழையும், சைவத்தையும் கற்பித்தார். இவருடைய மாணவராக பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களும் இருந்தார்.
“உலகம் பலவிதம்” எனும் கதை நூலை 1921 இலும், நாவல் நூல்களான “கோபால - நேசரத்தினம்”, “காசிநாதர் - நேசமலர்” என்பனவற்றை 1924 இலும் எழுதியுள்ளார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 1912 - 1947 வரை ஆசிரியப் பணியாற்றினார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இந்து இளைஞர் கழகத்தின் தொடக்க கால வழிநடத்துனராகப் பணிபுரிந்தார். சைவசமயப் குரவர், நாவலர், சேக்கிழார் குருபூசைகள், மாணவர் பேச்சுப் போட்டிகள், பாடசாலைகளில் திங்கட்கிழமைகளில் அறிஞர் சொற்பொழிவு ஏற்பாடு போன்ற பல பணிகளைப் புரிந்தார்.
-15

Page 37
அக் காலத்தில் இந்துசாதனம் பத்திரிகை சமயப் பிரசார ஏடாக வெளிவந்தது. நாவலர் பெருமானின் பெறாமகனாகிய பூரீமத். த. கைலாயபிள்ளை அவர்களும், நாவலர் மாணாக்கர் களும் இணைந்து இந்து சாதனம் பத்திரிகையை 11.09.1889 ஆம் ஆண்டு புதன்கிழமை ஆரம்பித்தனர். இந்து சாதனம் பத்திரிகை தமிழிலும், ஆங்கிலத்தில் Hindu Organ என்ற பெயரிலும் வெளிவந்தது. இதன் ஆசிரியர் கைலாசபிள்ளை அவர்களுக்கு ம. வே. திருஞானசம்பந்தர் அவர்கள் 1912 - 1920 வரையுள்ள எட்டு ஆண்டுகள் உதவி ஆசிரியராகப் பணி புரிந்தார். பெரியார் த. கைலாசபிள்ளை அவர்கள் 19.06.1920 ஆம் ஆண்டு சிவபதம் எய்தினார்கள். அன்று முதல் ம. வே. திருஞானசம்பந்தர் அவர்கள் இந்துசாதனம் பத்திரிகைக்கு ஆசிரியராக 32 ஆண்டுகள் பணிபுரிந்தார். இதனால் இப் பத்திரிகையின் பொன்விழா மலர், வைரவிழா மலர் என்பனவற்றுக்கு ஆசிரியராக இருந்து மிகச் சிறப்புற வெளியிட்ட பெருமை இவருக்குண்டு.
சைவபரிபாலன சபையில் 40 ஆண்டு காலம் பணி புரிந்து அதன் வளர்ச்சிக்கு பெருந் தொண்டாற்றினார்கள். இவர் தமது இறுதிக் காலத்தில் சைவபரிபாலன சபையின் செயலாளராக இருந்து பெரும் பங்காற்றினார்கள்.
இவர் எழுதிய நூல்கள் அநேகமானவை. இவற்றில் உரை செய்த நூல்கள் கதிர்காமவேலன் திருவருட்பா, கல்வளையந்தாதி, நமச்சிவாய மாலை, அரிச்சந்திர புராண மயான காண்டம், திருக்குறளில் 20 அதிகாரம், வில்லிபாரதம், கந்தபுராணம் போன்றனவாகும். பதிப்பித்த நூல்கள் தோவார திருவாசகத் திரட்டு, ஈழமண்டல சதகம், புலியூர் அந்தாதி, கல்வளை அந்தாதி போன்றவையாகும். நாடக நூல்கள்
-16

அயோத்தியா காண்டம், சகுந்தலை, அரிச்சந்திரன், சீதா கல்யாணம், ஆரணிய காண்டம் போன்றவை ஆகும். இவர் எழுதிய சமய நூல்களில் சோமவார விரத மான்மியம், பிரதோஷ விரத மான்மியம், சமய குரவர், சந்தான குரவர், சரித்திர சுருக்கம், மாணிக்கவாசகர் சரித்திர சுருக்கம் போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும்.
மேலும் இலங்கை அரசாங்கத்தால் வெளியிட்டு வந்த ரீலங்கா சஞ்சிகைக்கு பல கட்டுரைகள் எழுதி வந்துள்ளார். பண்டிதர் திருஞான சம்பந்தர் அவர்கள் பல நூல்களுக்கு உரை செய்துள்ளார். பல நூல்களை அச்சுப் பதிப்புச் செய்துள்ளார்.
இவர் அமரத்துவம் எய்திய 1955-ம் ஆண்டில் இவர் ஆற்றிய முக்கிய இரு பணிகளில் ஒன்று தமிழகத்திலிருந்து முத்தமிழ் செஞ்சொற் கொண்டல், புரிசை முருகேசு முதலியார், பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன், கி. வா. ஜெகநாதன் ஐயா போன்ற பேரறிஞர்கள் அகில இலங்கை சைவ மகாநாட்டின் பேரில் சொற்பொழிவாற்ற அழைத்தமையாகும். இவர் சைவத்திற்கும், தமிழுக்கும் ஆற்றிய சேவை அளவிடற்கரியது.
米米米米米
-17

Page 38
இந்துபேர்ட் திரு. சு. இராசரத்தினம் அவர்கள் (1884 - 1970)
எங்கள் தந்தையாரின் நட்புக்கு மிகவும் பாத்திரமாகவிருந்த சைவப்பெரியார் இந்துபோர்ட் திரு. சு. இராசரத்தினம் ஆவார். இவர்கன்ள எங்கள் குடும்பத்தார் “இராசர் அப்பா” என்று அன்பாக அழைப்போம்.
மனேஜர் ராசரத்தினம் மன்றுலகம் சென்றுவிட்டார்
தனே தனியரசு சாய்ந்ததே - மனேகேள் பன்னிரண்டு மூன்று பகரெழுப தாமாண்டு
மன்னும் மறைவு தினம் மற்று.
பண்டிதமணி சி. க.
திரு. சு. இராசரத்தினம் அவர்கள் சுப்பிரமணியம்
தம்பதியினருக்கு 04-07-1884 ஆம் ஆண்டு மகனாக பிறந்தவர்.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்வி பயின்ற இவர்
கல்கத்தா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி கற்றார். சட்ட - 18
 

வல்லுநரான சு. இராசரத்தினம் அவர்கள் கொழும்பு சட்டக் கல்லூரியில் கல்வி பயின்று சட்டவல்லுநரானார். இவர் யாழ் மாவட்ட நீதிமன்றங்களில் பதில் நீதிபதியாக பணியாற்றியவர்.
சைவத்தையும், தமிழையும் வளர்த்த நாவலர் பெருமானைப் போல் அவரைப் பின் தொடர்ந்தவர். சைவ நீதியைப் பின்பற்றி இராசரத்தினம் அவர்கள் சைவப் பெருவள்ளல் சேர். பொன். இராமநாதன் இவர்களுடன் இணைந்து 1923-ம் ஆண்டு சைவவித்தியாவிருத்தி சங்கத்தை ஸ்தாபித்தனர். தமிழ்க் கல்வியையும் சைவத்தையும் அபிவிருத்தி செய்யும் நோக்கமாக 147 தமிழி வித்தியாசாலைகளையும், 7 ஆங்கில வித்தியாசாலைகளையும், இரண்டு அநாதைப் பிள்ளைகளின் விடுதிப் பாடசாலை களையும், 15 நெசவு பாடசாலைகளையும், 16 கூடை இழைக்கும் பாடசாலைகளையும் நிறுவி பெரும் பணியாற்றினார். இவற்றைப் போல திருநெல்வேலி சைவ ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை பல்லாயிரக் கணக்கான ஆசிரிய மாணவர்களை நம் நாட்டிற்கு தந்தது. இவ்வாறாக சைவத்துக்கும், தமிழுக்கும் தொண்டாற்றிய பெரியார் சு. இராசரத்தினம் அவர்கள் 1923-ம் ஆண்டு தொடக்கம் 1970 வரை இந்த நிறுவனத்திற்கு முழு நேர தொண்டனாக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தார். இவ்வாறாக தொண்டாற்றிய சைவப் பெருமகன் சு. இராசரத்தினம் அவர்கள் 12.03.1970 ஆம் ஆண்டு சிவபதம் அடைந்தார்கள். இவரால் நிர்வகிக்கப்பட்ட சைவப் பாடசாலைகள் எல்லாம் இன்று அரசாங்கப் பாடசாலைகளாக மாறியுள்ளது.
ikk k g :
-19

Page 39
βακείο - O3
சான்றோர்க்ள் வரிசையில்.
01. சங்கர உடையார் அவர்கள் 02. அற்புதவிவேகிலோச் செல்லப்பா அவர்கள் 03. சிவகுரீஅ. சிவசாமிக்குருக்கள் அவர்கள் 04. திரு.வி.குமாரசாமி அவர்கள் 05. திரு.வே.சுப்பையா உபாத்தியார் அவர்கள் 06. சமூகத் தொண்டன் வ. நாகமுத்து அவர்கள் 07.திரு.ச.மகாலிங்கம் ஆசிரியர் அவர்கள் 08. முடவன் வயல் வ. வேலுப்பிள்ளை அவர்கள் 09. திரு. பொன். நாகமணி அவர்கள் 10. திரு.மு. சுப்பிரமணியவாத்தியார் அவர்கள் 11. திரு. வை. சரவணமுத்து வாத்தியார் அவர்கள் 12. வித்துவான் இராமலிங்கம் அவர்கள் 13. திருக்கணித பஞ்சாங்க கணிதர் பிரம்மgசி சுப்பிரமணியஐயா அவர்கள் 14. மெர்கண்டான் அதிபர் திரு.ஆ.கந்தையா அவர்கள் 15. வைத்தியர் திரு. பேதுறு அவர்கள் 16.சிற்பாசாரியர் திரு.வி.ஆறுமுகம் அவர்கள் 17. ஆயக்காரன் இராமலிங்கம் அவர்கள் 18. அறங்காவலர் பொ.தாமோதரம்பிள்ளை அவர்கள் 19. நொத்தாரிசு சிகந்தர் அவர்கள் 20.புராணபடன வித்தகர்சி சங்கரப்பிள்ளை உபாத்தியார் அவர்கள் 21. திரு.ச.கோபாலபிள்ளை உபாத்தியார் அவர்கள் 22.திரு.க.முத்துக்குமாரு உபாத்தியார் அவர்கள் 23. வலம்புரிமுத்து முத்துத்தம்பி உபாத்தியார் அவர்கள் 24. சிவகுந. கிருஷ்ணசாமிக்குருக்கள் அவர்கள் 25. திரு. சின்னப்பா பூசாரி அவர்கள் 26.அறங்காவலர் திரு. வீரகத்திப்பிள்ளைஅவர்கள்

asFmaspir 9 Gouluu mrr
மட்டுவில் செல்லப்பிள்ளையார் கோவில் சூழலில் வாழ்ந்த பெரியார். இவரே செல்லப்பிள்ளையார் கோவில் தர்ம பரிபாலகரும் ஆவார். 1984-ம் ஆண்டு மன்மத வருடம் கும்பாபிசேகம் செய்தார். இவர் தமக்கு ஒரு பிள்ளையாக நினைத்து விநாயகப் பெருமானுக்கு செல்லப்பிள்ளையார் எனப் பெயரிட்டு தனக்கு உரிமையான வளவுகளை கோயிலுக்கு தர்மதானம் செய்து நித்திய, நைமித்திய பூசைகள் நடைபெற ஒழுங்கு செய்தார்.
சங்கர உடையார் பற்றிய மேலதிக தகவல் விடயங்களைப் பெறுவது மிகவும் கஸ்டமானது. கடந்த 2000ம் ஆண்டு மே மாதம் மட்டுவிலில் நடைபெற்ற பேரழிவு, யுத்தம் காரணமாக எந்த வித ஆவணங்களையும் பெற முடியாதிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் மட்டுவில் சிவன் கோவில் பிரதம குருக்கள் அ. சிவசாமி குருக்கள் ஐயா அவர்களின் செல்லப்பிள்ளையார் கோவில் வரலாற்றிலிருந்து அறிய முடிந்ததை இங்கு மீள்பிரசுரிக்கின்றோம்.
செல்லப்பிள்ளையார் கோவில் கும்பாபிசேகத்தின் பின்னர் சங்கர உடையார் சிதம்பரம் யாத்திரை செய்ய விரும்பினார். சிதம்பர யாத்திரை செல்லுமுன் சிதம்பரம் பூரீ நடராஜப் பெருமானுக்கு சில வயல் வளவு நிலங்களையும் தர்ம சாதனம் செய்தார். அக் காலத்தில் இந்தியா செல்வோர் காங்கேசன்துறையிலிருந்து கோடிக் கரைக்கு மரக்கலத்தில் செல்வார்கள். அவ் வண்ணமே சங்கர உடையாரும் மனைவியும் காங்கேசன்துறையை அடைந்தார்கள். சங்கர உடையார் பெரிய சமுத்திரத்தையும், அதைக் கடக்கும் மரக் கலத்தையும் பார்த்து அஞ்சினார். நான் இச் சமுத்திரத்தைக் கடப்பதற்கு இம் மரக்கலத்தை நம்பி வரமாட்டேன் என்று மறுத்து மனைவியாரை போக அனுமதித்தார். அம்மையார் கோடிக்கரை அடைந்து அங்கிருந்து வேதாரண்யமும் வேறு சில தலங்களையும் தரிசித்து ஞானப்பிரகாச குளக்கரையில் செவ்வாய்க்கிழமை மடம் என்னும் பெயருடன் ஒரு மடத்தையும் கட்டுவித்தார். இதற்கு மாதகல், தனங்கிளப்பு முதலிய இடங்களில் இருந்து சென்று அங்கே வசித்து வந்த சில பெரியோர்களும் உதவினார்கள். அம் மடத்திலும் செல்லப்பிள்ளையார் என்ற திருநாமத்தோடு ஓர் விநாயகரை ஸ்தாபித்தார். மேற்கூறிய வரலாறு மூலம் அறிய முடிகிறது.
-21- •> -ቻ ~ ~

Page 40
அற்புத விவேகி லோச் செல்லப்பா அவர்கள் (1870 - 1950)
அற்புத விவேகியான லோச் செல்லப்பா அவர்கள் ஓர் ஊர் அப்புக்காத்து. கவிஞர் குருகவி மகாலிங்கசிவம் அவர்கள் லோச் செல்லப்பா அவர்களை “மிக அற்புதமான விவேகி' என்றே அழைப்பார்கள்.
1924-ம் ஆண்டு தென்மராட்சிப் பகுதியில் சைவ வித்தியாவிருத்திச் சங்கத்தின் ஸ்தாபகராகHindu Board திரு. சு. இராசரத்தினம் அவர்கள் பல நூற்றுக்கணக்கான பாடசாலைகளை தொடக்கி வைத்தார். அவருக்கு பேருதவியாக இருந்து பெரிய பெரிய காரியங்களுக்கு உறுதுணையாக இருந்தவர் லோச் செல்லப்பா. அக் காலத்தில் பல கிறிஸ்தவ பாடசாலைகளுக்கு அதிகாரியாக இருந்தவர் பிரசித்தி பெற்ற திரு. சின்னத்தம்பி போதகர் ஆவார்.
நாட்டில் நல்ல பணிகளை எல்லாம் ஆற்றிய லோச் செல்லப்பா பற்றி இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “லோச் செல்லப்பாவுக்கு ஆங்கில மொழியில் ஒரு அட்சரம் கூடத் தெரியாது. தமிழிலே 5-ம் வகுப்பு வரை கற்றவர். கோட்டிலே வழக்குகளில் வெற்றி பெறுவது தான் இவருடைய பெரிய இரசனை. அக்காலத்தில் யாழ்ப்பாணத்து வழக்கறிஞர் களில் அவரைப் பாராட்டாதவரில்லை. “சிவில் லோ” என்றால் அவருக்கு தண்ணிர் பட்ட பாடம் என்பார்கள். தமிழ் மூதறிஞர் பண்டிதமணி அவர்கள். .
இவரின் ஞாபக சின்னமாக மிளிர்வது ஆயத்தடியின் அருகே பசுக்கள் தண்ணிர் குடிக்கும் கேணியும், ஆவுரஞ்சிக் கல்லும், கிணறும் ஆகும். இவை இவரின் நினைவாக ஆயக்காரரால் நிறுவப்பட்டன. மேலும் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் மீது பண்டிதமணி அவர்களால் பாடப்பெற்ற கண்ணகி அம்மை தோத்திரம் வெளிவர காரணமாய் இருந்தவர் இவர்.
-22

சிவ பூசாதுரந்தரர் சிவழுநீ அ. சிவசாமி குருக்கள் (1907-1995)
மட்டுவில் செல்லப்பிள்ளையார் கோவிலடி சூழலில் வடமொழியிலும், தென் மொழியிலும் நன்கு பாண்டித்தியம் பெற்று சிறந்து விளங்கியவர் சிவறி அ. அப்பாசாமிக்குருக்கள் ஆவார்கள். இவருக்கு மகனாக 21.11.1907-ம் ஆண்டு ஜனனம் ஆனவரே சிவபூரி அ. சிவசாமிக்குருக்கள் ஆவார். இவர் தமது ஆரம்பக் கல்வியை மட்டுவில் சந்திரமெளலிச வித்தியாசாலையிலும், டிறிபேக் கல்லூரியிலும் கற்று பாண்டித்தியம் பெற்றார். தமது உயர் கல்வியையும், ஆங்கிலக் கல்வியையும் 1920-ம் ஆண்டு முதல் 1925-ம் ஆண்டு வரையுள்ள காலப்பகுதியில் திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரியிலும் கற்று தேறினார். இதனால் தமது வாழ்வில் சந்திக்க வேண்டிய அறிஞர் பெருமக்களை எல்லாம் சந்தித்து இருந்தார். புராண படனம் படித்தல், பயன் சொல்லல், வேதசிவாகம பயிற்சி, சிவபூசை நியமங்கள், மகோற்சவம், கும்பாபிஷேகம் பற்றிய பயிற்சிகள் எல்லாவற்றையும் தந்தையாரிடமும், பெரிய தந்தையான நடுவில் ஐயாவிடமும் கற்றுணர்ந்தார். ஐயா அவர்கள் திருமுறைகளிலும், புராணங்களிலும், சைவாகமங்களிலும் சைவ சித்தாந்த உண்மைகளிலும் கொண்ட அறிவுப் புலன் காரணமாக சிறந்த சமய சொற் பொழிவாளராகவும் தலை சிறந்த கட்டுரையாளராகவும் பிரகாசித்தார். இவருடைய தொடர்புகள் அச்சுவேலி சிவறி ச. குமாரசாமிகுருக்கள், சுன்னாகம் மயிலனி குருக்கள் என்போருடன் உண்டு.
1936-ம் ஆண்டு மாத்தளை முறி விக்னேஸ்வரா
ஆலயத்தில் பூசகராகப் பணி புரிந்தார். மேலும் 1942-ம்
ஆண்டு முதல் அங்கு 1957-ம் ஆண்டு வரை இன்று பிரசித்தி -23

Page 41
பெற்று விளங்கும் மாத்தளை முரீ முத்துமாரியம்பாள் ஆலயத்தில் பூசகராகவும், நாவலர் மரபு பேணிய சமய சொற் பொழிவாளராகவும் பெரும்பணியாற்றி பெரும் புகழ் ஈட்டினார். அன்னாரின் அறிவையும், ஆற்றலையும் அறிந்து கொண்ட ரீ பாக்கிய வித்தியாசாலை ஸ்தாபகர் ஆசிரியப் பணியாற்ற பல தடவை கேட்டிருந்த போதும் ஐயா அவர்கள் இதனை ஏற்கவில்லை. இவர் தமக்கு ஆலயப் பணி தான் கை கொடுக்கும் என்ற பூரண நம்பிக்கை கொண்டிருந்தார்.
1958-ம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட இனக் கலவரத்தால் தனது ஜென்ம பூமியான மட்டுவிலுக்குத் திரும்பினார். இங்கு பிரசித்தி பெற்ற மட்டுவில் சிவசந்திர மெளலீச சிவாலயத்தில் பிரதம குருவாக அமர்ந்து சிவப்பணி செய்து வரலாயினார். அத்துடன் யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல ஆலயங்களில் மகோற்சவம், கும்பாபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகளை சிறப்புற ஆற்றி சிவவழிபாட்டை செம்மையுறச் செய்தார். இவருடைய கட்டுரைகள் அனைத்தும் செந்தமிழ் இலக்கணச் செறிவு பெற்றிருப்பதை அவதானிக்கலாம்.
சைவாகம கருத்துக்களையும், சைவ சித்தாந்த உண்மை விளக்கங்களையும் தமது சொற் பொழிவாலும், கட்டுரைகளாலும். தெளிவுபடுத்தி வந்த குருக்கள் ஐயா அவர்களை பாராட்டி 1992-ம் ஆண்டு மட்டுவில் இந்து இளைஞர் மன்றமும், 1994-ம் ஆண்டு நல்லை ஆதீனமும் பாராட்டி கெளரவம் செய்து விழா எடுத்தனர். தாம் இறக்கும் வரையம் தமது தள்ளாத வயதிலும் சாந்த நாயகி சந்திரமெளலிச பெருமானை முப்போதும் திருமேனி தீண்டி பூசை செய்தும், வழிபாடு செய்தும், திருமுறைகளை ஒதியும் வந்த ஐயா அவர்கள் 07.05.1995-ல் சிவபதம் எய்தினார்கள்.
-24

மலாயன் பென்சனர் திரு. வி. குமாரசாமி அவர்கள்
(1891 - 1978)
மட்டுவிலிலே விஸ்வநாதர் என்பவருக்கு மகவாக வி. குமாரசாமி அவர்கள் 09-12-1891-ம் ஆண்டு பிறந்தார். புலோலியிலிருந்து மட்டுவிலுக்கு வந்த கணபதிப்பிள்ளை உடையாருக்கு இருவர் ஆன் மக்கள். மூத்தவர் சரவணமுத்து இளையவர் பிரசித்திபெற்ற உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை அவர்கள். மூத்தவரான சரவணமுத்து அவர்களின் தெளகித்திரர் வி. குமாரசாமி அவர்கள் என்பது தமிழ் மூதறிஞர் பண்டிதமணி அவர்களின் பழைய நினைவுகளில் இடம்பெறும் செய்தியாகும். மலாயன் பென்சினியரான விஸ்வநாதன் குமாரசாமி அவர்கள் தமது ஆரம்பக் கல்வியைக் கற்று விக்ரோரியாக் கல்லூரியில் கல்விபெற்று மலேசியாவுக்கு சென்று பெரும் அரச பதவிகளில் பணிபுரிந்தவர். மலேசியாவில் மட்டுவில் சந்திரமெளலிச வித்தியாசாலையின் கட்டிட திருப்பணி செய்வதற்கு நிதி சேகரித்து அனுப்பி வைத்திருக்கிறார் என்ற செய்திகளை அறிய முடிகின்றது. மேலும் மலேசியாவிலிருந்து ஓய்வு பெற்ற பின் தமது தாயக பூமியான மட்டுவிலுக்கு வந்திருந்தார். இங்கு கிராமத்தின் முன்னேற்றத்திற்காக பல பணிகளை யாற்றியிருக்கின்றார். வீதிகளுக்கு தெரு அமைக்கும் பணி, சாவகச்சேரி ப.நோ.கூ. சங்கத்தின் வளர்ச்சிக்குரிய பணி போன்றவற்றைச் செய்திருக்கிறார். பங்குனித் திங்கள் பொங்கல் காலத்தில் அடியார்களுக்கு தாக சாந்தி செய்யும் பொருட்டு பன்றித்தலைச்சி அம்மன் கோவில் வடக்கு வீதியில் ஓர் தண்ணிர் தொட்டி நிறுவி தண்ணிர்ப்பந்தற் தர்மம் செய்திருக்கிறார்கள். மேலும் உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை பூசித்த மட்டுவில் மருதடிப் பிள்ளையார் கோவிலுக்கு நித்திய பூசைக்கு அமுது வைக்க வயல் நிலங்களை தர்மசாசனம் செய்திருக்கிறார். மேலும் உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை அவர்களின் ஞாபக சின்னமாக விளங்கும் மட்டுவில் ரீ வேற்பிள்ளை சனசமூக நிலையம் அமைக்க காணி, நிலம் தர்மசாசனம் செய்திருக்கிறார். இவரின் அதி உச்சப் பணியாக இன்றும் நினைவுக்குரியது மட்டுவில் ஊரிப்பிட்டி சுடலை மயானத்தில் அமைக்கப்பட்ட அந்தியேட்டி மண்டபம் ஆகும். இவ்வாறாக வாழ்ந்த மலாயன் பென்சனர் ஐயா அவர்கள் 19-05-1978-ம் ஆண்டு சிவபதம் எய்தினார்கள்.
-25

Page 42
ஆசிரியமணி திரு. வே. கப்பையா உபாத்தியார் அவர்கள் (1901 - 1980)
மட்டுவில் வேலுப்பிள்ளை சேதுப்பிள்ளை தம்பதிகளுக்கு மகவாக 1901 சுப்பையா உபாத்தியாயர் பிறந்தார். இவர் தமது ஆரம்பக் கல்வியை கல்வயல் இராமுப்பிள்ளை வாத்தியாரால் ஸ்தாபிக்கப்பட்ட சைவப்பிரகாச வித்தியா சாலையில் கற்று ஆசிரியராக ஆசிரியப் பணியாற்ற முன்வந்தார். அக் காலத்தில் வித்துவான் க, இராமலிங்கம் அவர்களால் மட்டுவில் கமலாசனி வித்தியாசாலை ஸ்தாபிக்கப் பட்டது. இதே பாடசாலையில் ஆசிரியப் பணியாற்றி வந்த இவர் தலைமை ஆசிரியராகப் பதவியேற்றார். இந்துபோட் சு. இராசரத்தினம் அவர்களும், திரு. வே. சுப்பையா ஆசிரியர் அவர்களும் உற்ற நண்பர்கள். திருநெல்வேலி சைவவித்தியா விருத்திச் சங்கத்தினர் இவரின் ஆசிரியப் பணிகளைப் பாராட்டி ஆசிரியமணி’ என்ற பட்டத்தை இவருக்கு வழங்கினர். அன்றிலிருந்து ஆசிரியமணி சுப்பையா உபாத்தியாயர் என அனைவராலும் அழைக்கப்பட்டு வந்தார். 360) Luur உபாத்தியார் காலத்தில் பாடசாலையில் மக்களின் ஆதரவுடன் மண்டபங்களையும் கட்டிடங்களையும் கட்டி பாடசாலையை உயர்நிலைக்கு கொண்டுவந்தார். இவரே பாடசாலையின் ஸ்தாபகரான இராமலிங்கம் மண்டபத்தை கட்டி, திறந்து வைத்தார். ஆசிரியமணி சுப்பையா உபாத்தியாயர் அவர்கள் மட்டுவில் சரசாலையில் மட்டுமல்லாமல் சாவகச்சேரியிலும் தமது சமுதாயப் பணிகளை சிறப்புற ஆற்றி இருக்கிறார்.
திருநெல்வேலி சைவ வித்தியா விருத்தி சங்கத்திலும்,
வட மாகாண தமிழ் ஆசிரியர் சங்கத்திலும் உயர்ந்த
பணிகளையாற்றி யாழ்ப்பாணத்தவர் மத்தியில் பெருமதிப்பை
பெற்றிருந்தார். இதனால் ஆசிரியமணி அவர்களை
அறியாதவர்கள் யாழ்ப்பாணத்தில் இல்லை எனலாம்.
-26

ஆசிரியமணி அவர்கள் சமூகப்பணிகளிலும், சமயப் பணிகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். சாவகச்சேரி பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம், வேற்பிள்ளை சனசமூக நிலையம் போன்ற பல்வேறு அமைப்புக்களுடன் இணைந்து பல தொண்டுகள் செய்தார். சமயப் பணியில் திருக்கேதீச்சர சிவாலயத்தில் நடைபெறும், மகா சிவராத்திரி விழா, கார்த்திகை சோமவார விழா போன்ற விழாக்களிற்கெல்லாம் தென்மராட்சி மக்களை அழைத்துச் சென்று வழிபாடு செய்ய - வைத்திருக்கின்றார். மட்டுவிலிலும் மருதடிப் பிள்ளையார் திருப்பணி, பன்றித்தலைச்சி அம்மன் தீர்த்தகேணித் திருப்பணி, கல்வம் சிவன் கோவில் திருப்பணி போன்றவற்றில் திருப்பணிகளைச் செய்துள்ளார்.
இவருடைய காலத்தில் பரீட்சை நடாத்துவதற்காக சுன்னாகம் பிராசீன பாடசாலை அதிபரும் வித்தியாதரிசியுமான திரு. முகாந்திரம் சதாசிவம் ஐயா அவர்கள் குதிரை வண்டியிலே வருவதை இன்றும் பலர் கூற கேட்கக் கூடியதாக இருக்கின்றது. ஆசிரியமணி வே. சுப்பையா வாத்தியார் நினைவாக அன்னாரின் மறைவின் பின்னர் கமலாசனி வித்தியாலய கல்விச் சமூகம் அன்னாருக்கு நன்றி செலுத்தும் முகமாக ஆசிரியமணி சுப்பையா அரங்கை, நிறுவியுள்ளனர்.
-27

Page 43
சமூகத் தொணிர்டனி வ. நாகமுத்து (1907 - 1982)
சமூகத் தொண்டர் திரு. வ. நாகமுத்து அவர்கள் எமது தந்தையாருடைய மிக நெருங்கிய நண்பராக இருந்தார். அத்துடன் இவருடைய காலத்தில் வாழ்ந்த எல்லோருடனும் இணைந்து வாழ்ந்தார். ஊரிலும், கோயிலிலும் நடைபெறும் பொது நிகழ்ச்சிகளில் அழைப்பின்றியே பங்குபற்றிப் பலனை எதிர்பார்க்காமல் உழைத்த உத்தமர் என்று சொல்லத் தகுந்தவர். கோயிற் தொண்டிலே தனது ஓய்வு நேரத்தைச் செலவிட்டவர்.
சிறந்த ஆங்கிலக் கல்வியைக் (ELSC வரை) கற்றவரான காலஞ்சென்ற திரு. வ. நா. அவர்கள் அரச உத்தியோகங்களில் இறங்காமல் கமத் தொழில் செய்வதிலேயே வாழ்நாளைக் கழித்தார்.
ஆங்கிலக் கல்வி கற்போர் அரிதாகவிருந்த அக் காலத்தில், ஆங்கிலத்தில் வரும் கடிதங்களை வாசித்தறிந்து கொள்ள, கமக்காரனாக இருக்கும் வ. நா. விடம் பலர் வருவார்கள். இவர் சிறந்த ஆங்கில புலமையாளர்.
இவருடன் கல்வி கற்று அரச பதவியிலிருந்த காலஞ்சென்ற திரு. இ. ஆறுமுகம் (விதானையார்), காலஞ்சென்ற திரு. இ. வல்லிபுரநாதன் (ஆசிரியர்) அவர்களோடு இவர் ஆங்கிலத்தில் உரையாடும் போது இவ்வூர் மக்கள் அதனை ஆச்சரியமாகப் பார்ப்பதுண்டு.
இவர் தான் அரச பதவியிலில்லாத போதும் பிள்ளைகளை நன்கு படிக்க வைத்து அரச பதவிகளைப் பெறச் செய்து அவர்கள் சிறந்த அதிபர்களாகவும், வைத்திய கலாநிதிகளாகவும்அரச நிர்வாக சேவையில் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கதாகும்.
எந்த விதமான பொது நிகழ்விலும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்பதில்லை. தன்னால் முடிந்ததைச் செய்து விட்டு விளம்பரமில்லாது சென்றுவிடுவார். நீதி, நியாயம் என்று பேச்சு வரும் போது இவர் நண்பர், உறவினர், அயலூரான் என்று பாகுபாடு காட்டவே மாட்டார். நீதியை எடுத்துக் கூறுவதில் தயங்கமாட்டார்.
-28

திரு. ச. மகாலிங்கம் ஆசிரியர் அவர்கள்
மட்டுவிலில் சபாபதி வள்ளியம்மை தம்பதிகளுக்கு
மகவாக மகாலிங்கம் ஆசிரியர் அவர்கள் பிறந்தார். இவருக்கு கந்தையா என்னும் பிறிதொரு பெயரும் உண்டு. மட்டுவிலிலே செல்லப்பிள்ளையார் கோவில் அறங்காவலராக இருந்த காலத்தில் கோயில் நிர்வாகம் மிகவும் சிறப்பாக இருந்தது. 1925-ம் ஆண்டு கல்வம் சிவன் கோயில் சாந்தநாயகி அம்மையார் பெயரில் சாந்தநாயகி வித்தியாசாலையை நிறுவினார். மேலும், பாடசாலை வளர்ச்சிக்காக தமது சொந்தக் காணியை வழங்கியிருந்தார். இப் பாடசாலையின் அதிபராகப் பணியாற்றியபோது பாடசாலையின் வளர்ச்சிக்கென அல்லும் பகலும் அரும்பாடுபட்டு உழைத்தார். இங்கு இவர் பெயரில் விளையாட்டரங்கு ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
சிவபெருமானின் அநுபூதி பெற்ற பரம்பரையில் உதித்தவர் இவர். இவரின் தந்தையார் திரு. சபாபதி அவர்கள் செல்லப்பிள்ளையார் கோயிலுக்குப் பெரும் திருப்பணிகள் செய்தவர். இதே போன்று மட்டுவில் கல்வம் சிவன் கோயிலில் ஆலயத்திற்கு கிணறு வெட்டிய போது மண்வெட்டியில் இரத்தம் தெரிந்ததாகவும் மேலும் தொடர்ந்து வெட்டும்போது சிவலிங்கப் பெருமானைக் கொண்ட சிவலிங்கம் இருப்பதைக் கண்டதாகவும் அறிய முடிகிறது. இதைக் கண்ணுற்ற இவர் பெரும் ஆனந்தம் அடைந்தார். இந்த சிவலிங்கமே சிவன் கோவிலில் வழிபாட்டுக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
மேலும் இவ்வடியாராகிய சபாபதி அவர்கள் திருவெம்பாவைக் காலத்தில் அபிஷேகம் செய்ய பலாப்பழம் இல்லையே என மிக வருத்தத்துடன் ஆலயத்தை வலம்வந்தார். அப்போது வாசலருகே நின்ற பலாமரத்தின் அடியில் ஒரு வட்டம் கீறி அதை வெட்டும்படி பணிக்கப்பட்ட ஒரு தரிசனம் கிடைத்தது. நிலத்தை வெட்டினார். நிலத்தின் அடியில் பலாவின் வேரில் பழுத்த பலாப்பழம் நறுமணத்துடன் காட்சியளித்தது. அதனை எடுத்து சிவபெருமானின் அபிஷேகத்திற்கு பஞ்சாமிருதமாக பயன்படுத்தப்பட்டது. இன்றும் இந்த நிலங்கீழ் வேர்கோட் பலாமரம் ஆலயத்தில் இருப்பதை அவதானிக்கலாம். இந்த செய்திகள் உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை அவர்கள் இயற்றிய 'ஈழ மண்டல சதக” செய்யுட்களில் இருப்பதைக் காணலாம்.
-29

Page 44
முடவனி வயல் வ. வேலுப்பிள்ளை அவர்கள் (1906 - 2000)
மட்டுவிலில் வல்லிபுரம் தம்பதிகளுக்கு மகவாக 25.12.1906ஆம் ஆண்டு வேலுப்பிள்ளை அவர்கள் பிறந்தார். இவர் தமது ஆரம்பக் கல்வியை சந்திர மெளலீச வித்தியாசாலையிலும், விக்ரோரியாக் கல்லூரியிலும் பெற்றார். சிறந்த ஆங்கில மொழிப் புலமையாளர். மட்டுவில் மருதடிப் பிள்ளையார் கோவில், பனையடிப் பிள்ளையார் கோவில், கல்வம் சிவன் கோயில் போன்ற ஆலயங்களில் தமது சிறப்பான சரியைத் தொண்டுகளை ஆற்றியிருக்கின்றார். மாவிட்டபுரம் கந்தசாமி கோவில், கீரிமலைச் சிவன்கோவில், செல்வச் சந்நிதி, வல்லிபுரக் கோயில் போன்ற கோயில்களுக்கு வருடாந்த உற்சவ வேளையில் அன்னதானப் பொருட்களை வழங்கி, பன்றித்தலைச்சி அம்மன் வருடாந்த பங்குனித் திங்கள் காலங்களில் தண்ணிரப் பந்தல் அமைத்து தண்ணிர் தொட்டி உருவாக்கி, அடியார்களுக்கு தண்ணிர் தொட்டி தர்மம் செய்திருக்கிறார். மேலும் பன்றித் தலைச்சி அம்மன் கோவிலில் தெற்கு வீதியில் ஒரு மடம் அமைத்து தண்ணிர் தொட்டியை உருவாக்கியிருக்கிறார். உற்றார், உறவினர், ஊரவர்களின் அபரக் கிரியை நிகழ்வுகளிலே தம்மை முழுமையாக அர்ப்பணித்து தொண்டு செய்துள்ளார். 2000-ம் ஆண்டு தென்மராட்சியில் பாரிய யுத்த அனர்த்தம் நடைபெற்றது. அக் காலத்தில் மட்டுவிலை விட்டு நகராது விடாக்கண்டனாக தனது வீட்டிலே இருந்து உணவு சமைத்து, உணவு பரிமாறி வாழ்ந்து வந்த இவர் நவம்பர் மாதம் 25-ம் திகதிக்கும் டிசெம்பர் மாதம் 3-ம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் பயங்கர யுத்த ஷெல் வீச்சினால் காயமுற்று இறந்துள்ளார். இவரின் பிள்ளைகளில் திரு. வே. வல்லிபுரம் அவர்கள் இலங்கை அரச வெளியீட்டு திணைக்கள சைவநெறி, தமிழ்மொழி பாடங்களுக்கு பிரதம பதிப்பாசிரியராக பணிபுரிந்து சைவத்துக்கும், தமிழுக்கும் பெருந் தொண்டாற்றி அண்மையில் சிவபதமடைந்திருக்கிறார்.
திரு. வல்லிபுரம் அவர்கள் திருக்கேதீஸ்வர அன்னதான மடம், கதிர்காம யாத்திரிகர் மடம் என்பனவற்றுக்கு பெரும் தர்மங்களை செய்துள்ளார். மேலும் கொழும்பிலுள்ள அகில இலங்கை இந்துமா மன்றம், கொழும்பு தமிழ்ச்சங்கம் விவேகானந்த சபை போன்ற பல்வேறு நிறுவனங்களுடன் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்.
-30

திரு. பொன். நாகமணி அவர்கள் (1936 - 1996)
தென்மராட்சியில் மட்டுவில் கிராமம் வடக்கு, தெற்கு என இரு பெரும் நிலப்பரப்புக்களைக் கொண்டது. இங்கு மட்டுவில் தெற்கில் வளர்மதி சனசமூக நிலையம் தன்னாலான பெரும் பணிகளை மக்களுக்கு ஆற்றிவருகின்றது. இந்த சனசமூக நிலையத்தை ஸ்தாபித்த பெருமகனார் திரு. பொ. நாகமணி அவர்கள். மேலும் இவர் ஒரு சங்கீத ஆசிரியரும் ஆவார். அன்னார் மக்கள் சமூகத்துக்கு ஆற்றிய சமூகத் தொண்டு அமரராகிய பின்னரும் மக்களின் உள்ளத்தில் நிலைத்து நிற்கின்றது. இன்று வளர்மதி சனசமூக நிலையம் தனது பணியில் கல்விக் கழகம், கலைக்கழகம், மாதர் கழகம், விளையாட்டுக் கழகம் எனப் பல்வேறு அமைப்புக்களை உருவாக்கி சமூக இளைஞர்களும், மாணவர்களும் வளமூட்டப்படுகிறார்கள். இம் மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்று பட்டதாரிகளாக உயர்வு பெற வளர்மதி சனசமூக நிலையம் கல்வித் தொண்டுக்கு பெரும் பங்காற்றியுள்ளது. மட்டுவில் வைரவர் கோயிலடி சந்தியையும், பன்றித்தலைச்சி அம்மன் கோவில் மேற்கு வீதியையும் இணைக்கும் பெருவீதியில் வளர்மதி சனசமூக நிலையம் அமைந்திருக்கின்றது. இச் சனசமூக நிலையத்தின் திறந்த வெளியரங்கு பிரமாண்டமானது. அறுபது ஆண்டுகள் தான் இந்த மட்டுவில் தெற்கு மண்ணில் வாழ்ந்த சமூகத் தொண்டர் பொன். நாகமணி அவர்களின் நினைவுச் சின்னம் “வளர்மதி சனசமூக நிலையம்” ஆகும். இவர் 05.12.1996-ம் ஆண்டு இயற்கையெய்தினார்.
-31

Page 45
திரு. மு. சுப்பிரமணியம் வாத்தியார் அவர்கள் (1915-1980)
மட்டுவிலிலே முத்தர் தம்பதிகளின் புத்திரர்களில் ஒருவராக 24.12.1915-ல் ஜனனமானவர் சுப்பிரமணிய வாத்தியார் அவர்கள். மட்டுவிலில் ஆரம்ப கல்வியை கற்ற இவர் தமது 17-ம் வயதில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் சேர்ந்தார். அங்கு பண்டிதமணியினுடைய தொடர்பு இவருக்கு ஏற்பட்டது. இவரிடம் கற்று பண்டித பரீட்சையில் தேறி பெரும் புகழைப் பெற்றார். தமது ஆசிரியப் பணியை மட்டுவில் கமலா சனி வித்தியாசாலையில் ஆரம்பித்தார். இங்கு தலைமை ஆசிரியராக இருந்த ஆசிரியமணி வே. சுப்பையா உபாத்தியாயருக்கு கல்விப் பணிகளுக்கெல்லாம் வலக்கரமாக இருந்தார். பின்னர் மட்டுவில் சந்திர மெளலிச வித்தியாசாலை, சரஸ்வதி வித்தியாசாலை என்பவற்றில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவர் சமய சமூகப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். சமயப் பணிகளில் மட்டுவில் மருதடிப் பிள்ளையார் ஆலயம், மட்டுவில் முத்துமாரி அம்மன் ஆலயம், கல்வம் சிவன் ஆலயம் என்பவற்றின் திருப்பணி வேலையில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். மட்டுவில் முத்துமாரி அம்மன் கோவில் திருப்பணிச் சபையின் செயலாளராகவிருந்து அறங்காவலர் பொ. தாமோதரம்பிள்ளையுடன் இணைந்து தொண்டாற்றினார். சமூகப் பணிகளில் மட்டுவில் சந்திரமெளலீச ஐக்கிய நாணய சங்க செயலாளராகவும். சாவகச்சேரி ப.நோ.கூ. சங்க உறுப்பினராகவும். கிராம முன்னேற்றச்சங்க செயலாளராகவும், உயர் நீதிமன்ற பஞ்சாய நடுவராகவும் அமர்ந்து சமுதாய மேம்பாட்டுக்காக பெரும் பணியாற்றினார். கல்விப் பணியில் அயலிலுள்ள மாணவர்களுக்கு இலவசக் கல்விப் பாட போதனையை ஏற்படுத்தி கல்விப் பயிரை வளர்த்தார். லோச் செல்லப்பா அவர்களின் மருகரான சுப்பிரமணிய வாத்தியார் அவர்கள் 30.01.19S0-ம் ஆண்டு சிவபதம் எய்தினார்.
-32

வை. சரவணமுத்து உபாத்தியாயர் அவர்கள் (1917 - 2002)
திரு. வைத்திலிங்கம் தம்பதிகளுக்கு மகவாக சரவணமுத்து ஆசிரியர் 18.08.1917-ம் ஆண்டு பிறந்தார். சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற இவர் தமது ஆசிரியப் பணியை மண்கும்ப்ான் மெதடிக் பாடசாலையில் 1940-ம் ஆண்டு ஆரம்பித்தார். நாட்டிலுள்ள சகல பாடசாலைகளிலும் பணியாற்றிய' இவர் 1962-ம் ஆண்டு தொடக்கம் 1973-ம் ஆண்டு வரை மட்டுவில் சந்திரபுர ஸ்கந்தவரோதய மகா வித்தியாலயத்தில் கல்விப் பணியைச் சிறப்புற ஆற்றினார். ஆசிரியப் பணியோடு மட்டுமல்லாது தென்மராட்சியிலுள்ள பல ஆலயங்களிலும் புராண படன வைபவங்களில் கலந்து கொண்டு சிறந்த பெளராணிகராக பயன் கூறும் பணியை ஆற்றி மக்கள் மத்தியில் பெரும் பற்றுதலை ஏற்படுத்தியிருந்தார். இவர் ஆசிரியராகவும், பெளராணிகராகவும் இருந்த போதிலும் சோதிடராக மக்களுக்கு சோதிடம் கூறி வாழ்ந்தார். வீடு கட்டுதல், நிலையம் எடுத்தல், குறிப்புப் பார்த்தல் போன்றவற்றில் இவர் நிகரற்ற பணிகளை யாற்றியிருந்தார். இதனால் மக்கள் மத்தியில் சாஸ்திரியார் என்ற நிலையில் உயர்த்தப்பட்டார். இதன் பொருட்டு எவரிடமும் எதையும் எதிர்பாராது தொண்டாகவே செய்து வந்தார்.
இவர் கிராமத்தவர்களின் காணி நிலங்களை எல்லாம் நில அளவை செய்து காணிகளுக்கு எல்லை இடுவதற்கும், காணிகளைப் பிரிப்பதற்கும், காணி நிலங்களை நில அளவை செய்து சமுதாய பணியாற்றியுள்ளார். மட்டுவில் ம. க. வேற்பிள்ளை சனசமூக நிலையத்துடன் நீண்ட கால தொடர்புடைய இவர் தமது 85-ம் வயதில் சிவபதம் எய்தினார். இவருடைய திருமகளாரான வைத்திய கலாநிதி ம. சரவணமுத்து அவர்கள் யாழ் போதனா வைத்தியசாலை கண் சிகிச்சைப்பிரிவில் சிறப்பான வைத்திய பணியை ஆற்றிவருகின்றார்.
சரவணமுத்து உபாத்தியாயர் அவர்கள் தாம் இறந்த பின்பும் தமது பணி தொடர தமது கண்கள் இரண்டையும் “கண்தானம்” செய்து வைத்தமை அவருடைய வாழ்வில் ஒரு சிறப்பம்சமாகும். . . .
• ዯ -33

Page 46
வித்துவானி இராமலிங்கம் அவர்கள்
மட்டுவிலுக்கும் சரசாலைக்குமிடையே உள்ள எல்லைக் கிராமத்தில் கந்தையா - அபிராமிப்பிள்ளை தம்பதிகளுக்கு மகவாக இராமலிங்கம் அவர்கள் பிறந்தார். இவர் கல்வி கற்று சிறந்து விளங்கினார். திண்ணைப் பாடசாலையில் கல்வி கற்ற மாணவர்களை எல்லாம் முன்னேற்ற வேண்டும் என்ற பெரு விருப்பினால் 1917-ம் ஆண்டு ஐப்பசி மாதம் 25ம் திகதி கமலாசனி வித்தியாலயத்தை ஸ்தாபித்தார். இப் பாடசாலை ஆரம்பித்து ஒரு வருடத்தின் பின் ஆசிரியமணி வே. சுப்பையா வாத்தியார் தலைமை ஆசிரியராக பணியாற்றினார். வித்துவான் இராமலிங்கம் அவர்கள் யாழ்ப்பாணம் நீராவியடியில் வாழ்ந்த போதும் மாதந் தோறும் பல தடவை பாடசாலைக்கு வருகை தந்து பாடசாலைத் தேவைகளை நன்கறிந்து நிறைவு செய்தார். இவர் இந்தியா அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சென்று சங்கீதம் கற்று சங்கீத ஆசிரியராக பல பாடசாலைகளில் பணியாற்றியுள்ளார். இவர் உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளையுடன் நீண்ட தொடர்பு உள்ளவர். புராண படனம் செய்வதிலும், கதா பிரசங்கம் செய்வதிலும், கலாசார நாடகங்களை மேடையேற்றுவதிலும் வல்லவராகத் திகழ்ந்தவர் வித்துவான் அவர்கள். பூரணை நாட்களில் தமது நாடகங்களையும், கூத்துக்களையும் வண்ணாத்திப்பாலத்தடியில் மேடையேற்றும் போது மக்கள் அங்கு சென்று பார்வையிட்டு மகிழ்வார்கள். உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை அவர்கள் இயக்குனராக அமைத்த சைவ சித்தாந்த நாடகத்தை இங்கேயே நெறியாண்டு பிரதம கதாநாயகனாக நடித்தவர் வித்துவான் அவர்கள். இந்த சைவ சித்தாந்த நாடகத்தின் பெயர் நமசிவாயம் அல்லது நான் யார் என்பதாகும். இந்த நாடகம் நூலுருப் பெற சிறப்புப் பாயிரம் வழங்கியவர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தடிகள் ஆவார். வித்துவானின் தொடர்பினால் சுவாமி விபுலானந்தடிகள் மட்டுவிலில் சொற்பொழிவாற்றியுள்ளார். வித்துவான் அவர்கள் "சரஸ்வதி விலாச சபை” என்ற நாடக சபையை தென்மராட்சியில் உருவாக்கினார். வித்துவான் அவர்கள் நாடகத் துறைக்கும், சங்கீத துறைக்கும் ஆற்றிய பணிகளை யாழ்ப்பாணத்தவர்கள் அனைவருமே அறிவர். இவரை அறியாதவர்கள் யாழ்ப்பாணத்தில் இல்லை எனலாம்.
-34

திருக்கணித பஞ்சாங்க கணிதர் tipribuDUŠ af. asičnipruD68fu gumo (FR.RS) (1896-1970)
கோப்பாயைச் சேர்ந்தவரான சிவபூரி சு. சிவகடாட்சக் குருக்கள் அவர்களின் மூத்த மகனாக 19-01-1896-ல் பிரம்மறி சுப்பிரமணிய ஐயா அவர்கள் அவதரித்தார். சிறு வயதிலே தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளையும் கற்று அவற்றில் தேர்ச்சி பெற்றிருந்தார். இவர் ஒரு ஆங்கில ஆசிரியராக சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் கல்வி கற்பித்தார். மேலும் இவர் அக் காலத்தில் பிரசித்தி பெற்று விளங்கிய அந்தணப் பெருமகனார் சிவழி பொன்னுச்சாமிக் குருக்கள் ஐயாவின் சகோதரியாகிய தில்லைநாயகி அம்மையாரைத் திருமணம் செய்தார். இவரின் மாமனாராகிய பிரம்மறி ப. குமாரசாமி ஐயாவின் மறைவுக்குப் பின் அவர் செய்த திருக்கணித பஞ்சாங்கம் கணிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
பிரம்மறி சி. சுப்பிரமணிய ஐயா அவர்கள் தமது 33-ம் வயதில் ஆசிரியப் பணியினின்று விலகி தாமும் பிரம்மறி ந. கந்தசாமி ஐயாவும் இணைந்து இந்தியா சென்றனர். அங்கு ஜூயேந்திர பூஷணம் T.S. விஸ்வநாத சிரெளதிகரிடம் திருக்கணித கணிப்பு நுட்பங்களை கற்றார். 1933-ம் ஆண்டு பூரீ முக வருடம் முதல் மட்டுவிலிலேயே திருக்கணித பஞ்சாங்கத்தை ஐயா அவர்கள் வெளியிட்டு வந்தார். இதற்கென மட்டுவில் “ஜோதிஷ ரத்னாகர அச்சகம்’ என்ற பெயரில் அச்சு இயந்திரசாலையை நிறுவினார். இவர் ஸ்தாபித்த அச்சியந்திர சாலையே இன்று திருக்கணித பதிப்பகம் என்ற பெயரைப் பெறுகின்றது. பஞ்சாங்கத்துடன் வான சாஸ்திரம், சோதிடம் என்பவற்றில் ஈடுபாடு கொண்டு பல ஆராய்ச்சிகளையும் செய்தவர். இங்கிலாந்திலுள்ள வானியற் கழகத்தில் அங்கத்தவராகிய இவர் FR.A.S என்னும் பட்டத்தைப் பெற்றவராவார். பஞ்சாங்க ஐயா என இவரை மட்டுவிலில் உள்ளோர் பலரும் அன்பொழுக அழைப்பார். இவ்வாறாக மட்டுவிலுக்குப் பெருமை சேர்த்த பிரம்மழரீ சி. சுப்பிரமணிய ஐயா 19-08-1970-ல் சிவபதம் எய்தினார். இவருக்கு பின் பிரசித்தி பெற்று விளங்கும் அவரின் மைத்துனரான கலாபூசணம் சிவபூரி சி. சிதம்பரநாதக் குருக்கள் ஐயா அவர்களால் திருக்கணித பஞ்சாங்கம் வெளியிடப்பட்டு வருகிறது.
-35

Page 47
மெய்கண்டான் அதிபர் திரு. ஆ. கந்தையா அவர்கள் (1892 - 1968)
உலக நாடுகளில் மெயப் கண்டான் கலண்டர் மெய்கண்டான் டயறி என்பன இன்று பெரும் செல்வாக்கினைப் பெற்றுள்ளன. இதனை ஸ்தாபித்த பெருமகனார் ஆ. கந்தையா அவர்கள் 1892-ம் ஆண்டு பிறந்தார். 1919-ம், 1920-ம் ஆண்டுக் காலப் பகுதியில் மெய்கண்டான் அச்சியந்திரசாலை மட்டுவிலிலே மருதடிப் பிள்ளையார் கோவிலுக்கு அருகே உள்ள நிலத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. இவரின் தமையனார் திரு. விநாசித்தம்பி அவர்கள் இவருடன் இணைந்து நிதி உதவி வழங்கினார். பெரியார் ஆ. கந்தையா அவர்களின் மாமனார் சிறந்த புராணபடன ஆசிரியரான பெளராணிகவித்தகர் பொன்னம்பலம் அவர்கள். உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை அவர்களின் நன்மாணாக்கர். இவர் தமிழ் மூதறிஞரான பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களின் “கதிர்காம வேலன் பவனி வருகிறான்” என்ற நூலை வர்ணப்படத்துடன் அழகுற அச்சிட்டார். இந்தப் பெருமை முதலில் மெய்கண்டான் கந்தையா அவர்களுக்கே உண்டு. இவர் தமது இருபதாம் வயதில் வாக்கிய பஞ்சாங்க கணித பிரம்மறி இரகுநாத ஐயா அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தினார். 1920-ம் ஆண்டிலே தமது மெய்கண்டான் அச்சியந்திர சாலையை கொழும்புடன் விரிவுபடுத்தினார். அக்காலம் முதல் மெய்கண்டான் டயறி, மெய்கண்டான் கலண்டர் என்பன வெளிவந்தன. அன்னாரின் மருமகரான பெரியார் மெய்கண்டான் நா. இரத்தினசபாபதி காலத்திலும் இந்நிறுவனம் உச்ச நிலை கண்டது. 1969-ம் ஆண்டு முறிலறி ஆறுமுகநாவலர் பெருமானின் சிலை நல்லூருக்கு வர சூத்திரதாரியாக இருந்தவர் மெய்கண்டான் அதிபர் நா. இரத்தினசபாபதி அவர்களே என்றால் அதில் மிகை வேறொன்றுமில்லை.
மெய்கண்டான் திரு. ஆ. கந்தையா அவர்களின் காலத்தில் உருவாக்கிய மெய்கண்டான் கட்டிடம் கடந்த 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்த பேரழிவால் சிதைவுற்ற நிலையில் இருப்பதை இன்றும் காணலாம்.
-36

வைத்தியர் திரு. பேதுறு அவர்கள் (1853 - 1933)
திரு. பேதுறு அவர்கள் 18-ம் நூற்றாண்டின் li) பகுதியான 1853-ல் மட்டுவிலில் பிறந்தார். இவர் மட்டுவிலில் வாழும் மக்களுக்கும் அல்லாமல் யாழ் குடாநாட்டிலுள்ள மக்களுக்கு எல்லாம் நாட்டு வைத்தியப் பணியை தமது சிறந்த பணியாகச் செய்து பேர் பெற்றவர்.
தற்பொழுது இவர் பணியை மகன் வைத்திய கலாநிதி பேதுரு - பிலிப்ஸ் அவர்கள் "ஆரோக்கியவாச வைத்தியசாலை' என்னும் பெயரில் திறம்பட மேற்கொண்டு வருகின்றார். இவ் வைத்தியசாலை 30.08.1950-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பெற்றது.
இவ் வைத்தியசாலை மட்டுவிலில் ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வைத்தியப் பணியாற்றி வருகின்றது.
கிராம வைத்திய முறையில் தொடங்கி இவர் ஆயுள்வேத வைத்தியராக அரச அங்கீகாரம் பெற்றார். தற்பொழுது நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் வைத்திய கலாநிதி திரு. பே. பிலிப்ஸ் அவர்கள் ஐந்தாவது பாரம்பரியமாக பணியாற்றி வருகின்றார். இவர் பொது அமைப்புக்களின் அங்கத்தவராகவும் சமூகப் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
2000-ம் ஆண்டு மே மாதம் தென்மராட்சியில் நடைபெற்ற யுத்த அனர்த்தத்தின் விளைவால் பேரழிவை இவ் வைத்தியசாலையும் சந்தித்தது. ஆயினும் இவர்களின் வைத்தியப் பணி இன்றும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
-37

Page 48
சிற்பாசாரியார் திரு. வி. ஆறுமுகம் அவர்கள் (?...... - 1964)
கலை உலகிலே சிறந்த சிற்ப கலைச் செல்வராக பிரகாசித்தவர் மட்டுவில் திரு. வி. ஆறுமுகம் அவர்கள். திருநெல்வேலி, மட்டுவில், வட்டுக்கோட்டை என்னும் பழம்பதிகள் பரம்பரை பரம்பரையாக பல சிற்பிகளை உருவாக்கி தந்திருக்கின்றன. இந்த வகையில் சிற்பாசிரியார் திரு. வி. ஆறுமுகம் அவர்கள் பழம்பதியான மட்டுவிலிலே பிறந்தமையால் நாம் பெருமை பெறுகின்றோம். இவரின் வாழ்க்கை அனைத்தும் திருநெல்வேலியில் அமைந்தது. இங்கு இவர் ஆற்றிய கலைத் தொண்டுகள் அனைத்தும் பாராட்டுப் பெறுகின்றன. யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல்வேறு ஆலயங்களில் காணப்படும் தேர், மஞ்சம், தெய்வ ஊர்திகள் அனைத்தும் இவரை ஞாபகம் செய்கின்றன. கோவில்களில் அமைந்த வாகனங்கள், சித்திரதேர்கள் அனைத்தும் அவரின் கை வண்ணத்தையே காட்டி நிற்கின்றது. இவரின் சிற்பக் கலையைப் பாராட்டி பிரித்தானியா அரசின் சோல்பெரி பிரபு அவர்களினால் கெளரவம் அளிக்கப்பட்டமை எமது நாட்டிற்கு பெருமை தருகின்றது. சிற்ப கலைஞர் ஆறுமுகம் அவர்களை பற்றி “கலை மடந்தையின் தவப்புதல்வன்” என்னும் பெயரில் 1964-ம் ஆண்டு குரும்பசிட்டி இரசிகமணி கனக செந்திநாதன் அவர்கள் ஒரு நூலை எழுதி வெளியிட்டுள்ளார்கள். மேலும் அன்னாரின் புதல்வர்களில் ஒருவரான கலாகேசரி ஆ. தம்பித்துரை அவர்களின் கலை வாழ்வின் வெள்ளிவிழாவை கொண்டாடும் முகமாக “கவின் கலைக்கு ஒர் கலாகேசரி” என்னும் பெயரில் இரசிகமணி கனக செந்திநாதன் அவர்கள் 1974-ம் ஆண்டில் நூலினை வெளியிட்டார். இவ் வைபவத்தினை செய்த குரும்பசிட்டி சன்மார்க்க சபை பெருமை தேடிக் கொண்டது. சிற்ப கலாகேசரி தம்பித்துரை அவர்கள் மகாஜனா கல்லூரியின் ஓவியக் கலை ஆசிரியராகவும், சித்திரப் பாடத்துக்கு யாழ்ப்பாண கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றினார்.
சிற்ப கலைஞர் ஆறுமுகம் அவர்களின் புத்திரர்கள் ஆறுபேர் இவர்களில் கலாகேசரி ஆ. தம்பித்துரை அவர்களும், திருநெல்வேலி சிற்ப கலாமணி ஆ. ஜீவரத்தினம் அவர்களும் நாட்டில் பெரும் புகழை தேடிக் கொண்டவர்கள். சிற்பாசிரியர் ஆறுமுகம் அவர்களுக்கு மேலும் ஒரு புகழைத் தேடித் தந்தவர் கலாபூசனம் ஸ்தபதி ஆ. ஜீவரத்தினம் ஆச்சாரியார் அவர்கள். ஈழநாட்டில் பல தேர்களையும் தெய்வ ஊர்திகளையும் செய்த இவர் மலேசியாவில் 14 சிறிய தேர்களையும் உருவாக்கிய பெருமையை பெற்றுள்ளார். சிற்பாசிரியார் ஆறுமுகம் அவர்களுக்கு கலைப் பரம்பரை என்று ஒன்று இன்றும் உண்டு.
-38

ஆயக்காரனி இராமலிங்கம் அவர்கள்
இலங்கையை போர்த்துக்கீசர் கி. பி. 1505 - 1658 காலத்திலும், ஒல்லாந்தர் 1659 - 1796 காலப்பகுதியிலும், ஆங்கிலேயர் 1796 - 1947-ம் ஆண்டு வரையும் அரசாட்சி செய்தனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆய வரி வாங்கும் முறை நிலவியது. இதனால் வண்ணாத்திப் பாலம், கைதடிப் பாலம், வல்லைப் பாலம், செம்மணிப் பாலம் என்பனவற்றின் நுழைவாயில் ஆய வரியை இடுவதற்காக ஆயங்களை அமைத்தனர். இந்த வகையில் நாட்டில் தரம் மிக்க வசதியான ஒருவராக ஆயக் காரணி இராமலிங்கம் அவர்கள் நியமிக்கப்பட்டார். இவருக்கு ஆறுமுகம், கந்தர் சகோதர முறையினர். இந்த ஆயக்காரன் இராமலிங்கத்தின் மகனே மட்டுவிலை ஆட்சிசெய்த கிராம விதானையார் ஆறுமுகம் அவர்கள் என்றால் மிகையொன்றுமில்லை.
-39

Page 49
அறங்காவலர் பொ. தாமோதரம்பிள்ளை அவர்கள் (1906 - 1977)
மட்டுவிலிலே 1868 - 1949-ம் ஆண்டு காலப் பகுதியில் வாழ்ந்த பெரியார் திரு. வேலுப்பிள்ளை பொன்னையா அவர்களுக்கு 22.10.1906-ம் ஆண்டில் ஜனனமானவர் அறங்காவலர் தாமோதரப்பிள்ளை அவர்கள். உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை அவர்களால் ஸ்தாபிக்கப் பெற்ற சந்திர மெளலிச வித்தியாசாலையில் ஆரம்பக்கல்வியை கற்றவர். இவர் தமது ஆங்கிலக் கல்வியை சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியிலும், உயர்தரக் கல்வியை திருநெல்வேலி பரமேஸ்வரா கல்லூரியிலும் கற்றார். மலாயன் பென்சனர் வி. குமாரசாமி அவர்கள் 1927-ம் ஆண்டு மலேசியாவுக்கு கூட்டிச் சென்று ஓர் உத்தியோகத்தை எடுத்துக் கொடுத்தார். இவர் அங்கு சிறைச்சாலை அதிகாரியாகவும் பல்வேறு அரச நிறுவனங்களிலும் பணிசெய்து பெரும் செல்வத்தை ஈட்டிக் கொண்டார்.
திருவாவடுதுறை ஆதீன வித்துவான் கோப்பாய் சபாபதி நாவலரின் பேரனான ஆறுமுகம் செட்டியாரின் மகள் வேலாம்பாளை திருமணம் செய்து கொண்டார். கோப்பாயில் பிரசித்தி பெற்ற கல்விமானாயிருந்து, திருவாவடுதுறை ஆதீனத்தில் மகாவித்துவானாக விளங்கிய சபாபதி நாவலருக்கு மருகர் சிவகுருநாதன், தாமோதரம்பிள்ளை அவர்களுக்கு சிவகுருநாதன் சகலர் முறையினர். திரு. சிவகுருநாதர் அவர்கள் சைவ பெரியார் சிவபாதசுந்தரர் அவர்களின் அதி உத்தம மாணவ சீடர். திரு. சிவகுருநாதர் அவர்கள் “ஞானமிர்தம்” மாதாந்த சஞ்சிகை வெளியிட்டவரும், “திராவிட பிரகாசிகை” போன்ற அரிய பெரிய நூல்களை அச்சிட்டும், வெளியிட்டும் வந்த பெருமைக்கு உரியவர்.
-40

1960-ம் ஆண்டு திரு. தாமோதரம்பிள்ளை அவர்கள் சிங்கப்பூரில் இருந்து ஜென்ம பூமியான மட்டுவிலுக்கு திரும்பினார். சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக புற்றுக்களாலும், பற்றைகளினாலும் சூழ்ந்த பனையோலைக் கொட்டிலிலிருந்த முத்துமாரி அம்பாளை கண்ணுற்றார். பெரும் செல்வந்தரான தாமோதரம்பிள்ளை அவர்களுக்கு பிள்ளைச் செல்வம் இல்லை. இவர் தாம் ஈட்டிய செல்வங்கள் அனைத்தையும் பயன்படுத்தி முத்துமாரி அம்பாள் ஆலயம் ஒலைக் கொட்டிலாக இருந்து வானளாவும் இராஜகோபுரத்தை கொண்டதாக மாற்றினார். பரிவாரகோவில்கள், திருக்கிணறுகள் போன்ற திருப்பணிகளை செய்து 1965-ம், 1971-ம் ஆண்டுகளில் மகா கும்பாபிஷேக ப்ெருவிழாவைக் கண்டார்.
பரோபகாரியான திரு. தாமோதரம் பிள்ளை அவர்கள் மட்டுவில் சிவசந்திரமெளலீச சிவாலயத்தின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தனது நட்புக்கு பாத்திரமாக இருந்த கோவிலின் பிரதம குருவாகிய சிவபூர் அ. சிவசாமி குருக்கள் ஐயாவின் வேண்டுதலுக்கு இணங்கி சந்திரசேகர மூர்த்தத்தை தாம்பிர விக்கிரகமாக செய்து ஆலயத்துக்கு வழங்கினார்.
தாமோதரம் பிள்ளை அவர்கள் திருமுருக கிருபானந்த வாரியார் தென்நாட்டு தமிழ் அறிஞர்கள் போன்றவர்களுடன் மிக இறுக்கமாக தொடர்பு கொண்டவர். அதே போன்று இந் நாட்டிலும் உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளையின் பிள்ளைகளான குருகவி மகாலிங்கசிவம் நடராஜா வாத்தியார் மற்றும் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் சிதம்பரம் நாவலர் பாடசாலை அதிபர் சரசாலை ச. பொன்னுச்சாமி அவர்கள் (தேவாரப் பொன்னுச்சாமி) ஆகியோருடனும் தொடர்பு கொண்டவர். இத்தகைய பல்வேறு பெருமை கொண்ட இவரின் பெருமையை பண்டிதமணி கூறுமிடத்து “முத்துமாரி அம்மன் கோவில் கட்டடமும் இராஜகோபுரமும் அன்னாரின் இருதய நிலையை எடுத்துக்காட்டும் ஞாபக சின்னமாக மிளிர்கின்றது” என்பார். திரு. தாமோதரம்பிள்ளை 25.08.1977-ல் ஆவணி மூல நன்நாளில் சிவபதம் எய்தினார்கள்.
-41

Page 50
நொத்தாரிசு சி. கந்தர் அவர்கள் (1867 - 1939)
மட்டுவில், மடத்தடிப் பகுதியில் திருவாளர் சின்னத்தம்பி அவர்களுக்கு மகனாக 22.02.1867-ம் ஆண்டு கந்தர் அவர்கள் அவதரித்தார். இவர் தமது கல்வியைக் கற்றுக் கொண்ட பின்னர் நொத்தாரிசு தொழிலை தம் கிராம மக்களின் நலன் கருதி சேவையாக செய்து வந்தார். யாழ்குடா நாட்டின் வல்லிபுர ஆழ்வார் கோவில், செல்வச் சந்நிதி ஆலயம், மாவிட்டபுரம், கீரிமலை ஆலயங்கள் பன்றித்தலச்சி அம்மன் கோவில் போன்ற ஆலயங்களுக்கு பாதயாத்திரிகையாக செல்லும் அடியார்கள் இளைப்பாறுவதற்கும்,. தாகசாந்தி செய்வதற்கும் ஒருமடத்தினை நிறுவினார். இதனால் இந்த மட்டுவில் சந்தி, மடத்தடி சந்தி என்று இன்றும் பெயர் பெறுகிறது. மேலும் நொத்தாரிசு கந்தர் அவர்கள் தமது ஏக்கர் கணக்கான காணி நிலத்தில் ஒரு சைவப் பாடசாலையை நிறுவினார். இந்த நாற்சந்தி அருகே இருக்கும் மடத்தினருகே இருப்பதனால் இந்த பாடசாலை மடத்து பள்ளிக்கூடம் என பெயர் பெற்றது. இந்த பாடசாலையை 1925-ம் ஆண்டு கார்த்திகை மாதம் 25-ம் திகதி நொத்தாரிசு கந்தர் அவர்களால் நிறுவப்பட்டதாக இந்து சாசனம் பத்திரிகையில் செய்தி வெளிவந்துள்ளது. இப் பாடசாலை நிறுவாகத்தை பின்னர் சைவ வித்தியா விருத்திச் சங்கம் பொறுப்பேற்றதாகவுள்ள செய்திகள் இருக்கின்றது. இந்த நொத்தாரிசு கந்தர் அவர்களால் நிறுவப்பட்ட மடத்துப் பள்ளிக்கூடம் பிற்காலத்தில் சந்திரபுர ஸ்கந்தவரோதய மகாவித்தியாலயம் என்னும் பெயர் பெற்று இன்று விளங்குகிறது. கடந்த 2000-ம் ஆண்டு மே மாதம் 10-ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பேரழிவு யுத்தத்தினால் தென்மராட்சி பாரிய அழிவை சந்தித்தது. இந்த நொத்தாரிசு கந்தர் அவர்களின் ஆத்ம சக்தியின் பெறுபேறாக வெளிநாட்டு அரச நிறுவனங்கள் இப் பாடசாலையில் பெரிய மாடிக் கட்டடங்களை நிறுவ முன்வந்துள்ளமை சிறந்த வரப் பிரசாதமாகும்.
-42

புராணபடன வித்தகர் af. armiasprürisirso6r p-umršj5umruti goriras6ir (1902 - 1988)
மட்டுவில் சின்னத்தம்பி அவர்களுக்கு ஏகபுத்திரனாக அவதரித்தவர் சங்கரப்பிள்ளை உபாத்தியாயர் அவர்கள். நாவலர் பெருமான் ஆரம்பித்து வைத்த புராணபடன மரபு யாழ்ப்பாணத்தில் பெரும் செல்வாக்கைப் பெற்றுள்ளது. இதனால் கந்தபுராணம் பிறந்தகத்திலும் பார்க்க புக்ககமாகிய யாழ்ப்பாணத்தில் பெரும் பெருமை பெற்றுள்ளது. இதனால் *யாழ்ப்பாணக் கலாசாரம் கந்தபுராண கலாசாரம்' என்பது தமிழ் மூதறிஞரான பண்டிதமணி அவர்களின் திவ்விய கருத்தாகும். இந்த புராணபடன மரபினை உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளைக்கு பின்னர் பேணிய ஒரு பெருமகன் சங்கரப்பிள்ளை உபாத்தியாயர். சங்கரப்பிள்ளை உபாத்தியாயர் புராணங்களுக்கு பயன் சொல்லும் வெண்கலக் குரல் எமது நாட்டிலும் யாழ்ப்பாணத்திலுமுள்ள கோவில்கள் தோறும் புராணத்தை கேட்டவர்களின் காதுகளில் இன்றும் ஒலித்த வண்ணமாகவே இருக்கின்றது.
பெரியபுராணம், கந்தபுராணம், திருவிளையாடற் புராணம், திருவாதவூரடிகள் புராணம், விநாயக புராணம், சிவராத்திரி புராணம் என்பனவற்றுக்கு உரை சொல்லுதல் பெளராணிகரான சங்கரப்பிள்ளை உபாத்தியாயருக்கு ஒரு தனியான கலையாகும். புராணங்கள் நன்கு ஐயம் திரிபறக் கற்றுக் கொண்ட பெருமகன். மட்டுவிலிலே வேம்படி கந்தசாமி கோவிலில் தொடர்ச்சியாக நடைற்ெற கதாப்பிரசங்க சொற்பொழிவில் பெரும் பாராட்டையும் கெளரவத்தையும் பெற்றார். இலங்கை வானொலியிலும் இவருடைய குரல் ஒலித்திருக்கின்றது. இவருடைய குரல் தனித்துவம் மிக்கது. யாழ்ப்பாண புராணபடன வரலாற்றில் இவருடைய பெயர் முதன்மை பெறுகின்றது. மாத்தளை முத்துமாரி அம்மன் கோவிலில் மாசிமக பெருவிழா காலங்களில் சொற்பொழி வாற்றச் சென்று எங்கள் நாட்டிற்கு பெருமை தேடித் தந்துள்ளார். இவ்வாறாக புராணபடன மரபுபேனிய பெளராணிக வித்தகர் சங்கரப்பிள்ளை உபாத்தியாயர் அவர்கள் 06.07.1988ஆம் ஆண்டு சிவானந்தப் பெருவாழ்வு பெற்றார்.
-43

Page 51
திரு. ச. கோபாலபிள்ளை உபாத்தியாயர் அவர்கள் (1910 - 1984)
மட்டுவிலில் சங்கரப்பிள்ளை தம்பதிகளுக்கு மகவாக கோபாலபிள்ளை ஆசிரியர் 1910-ம் ஆண்டு பிறந்தார். இவர் மட்டுவில் சந்திரமௌலீச வித்தியாசாலையிலும், கமலாசனி வித்தியாசாலையிலும் தமது கல்வியைக் கற்றார். இவர் தமது ஆசிரியப் பணியை வண்ணார் பண்ணை விவேகானந்தா வித்தியாலயம், யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரி என்பவற்றில் மேற்கொண்டார். தமது இறுதிக் காலத்தில் மட்டுவில் சந்திரபுர ஸ்கந்தரோதய வித்தியாலயத்தில் கல்வி கற்பித்து ஓய்வு பெற்றார். யாழ்ப்பாணத்தில் வைத்தீஸ்வராக் கல்லூரியில் கல்வி கற்பித்த காலம் அவருடைய பொற்காலம் ஆகும். அங்கு சிறந்த தமிழ் அறிஞர்களையும் பெரியவர்களையும் தரிசித்திருக்கிறார். வைத்தீஸ்வரா வித்தியாலய அதிபர் ச. அம்பிகைபாகன் அவர்களின் எழுத்துப் பணிகளுக்கெல்லாம் பக்கபலமாக நின்று உதவி செய்துள்ளார். யோகர் சுவாமிகள் பற்றி தமிழறிஞர் அம்பிகைபாகன் அவர்கள் எழுதிய நூலுக்கு செய்த எழுத்துப் பணியை நூலாசிரியர் நன்றி தெரிவித்துப் பாராட்டியுள்ளார்.
1926-ம் ஆண்டு மட்டுவில் சந்திர மெளலீச வித்தியாசாலையில் சேர். பொன். இராமநாதனுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது. இதன் போது திரு. ச. கோபாலபிள்ளை ஆசிரியர் அவர்களுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. இச் செய்தியை பலரும் கூறக் கேட்டிருக்கிறோம். வைத்தீஸ்வராவில் கல்வி கற்பித்த காலத்தில் சுவாமி விபுலானந்த அடிகள் முகாமையாளராக இருந்த போது ஆசிரியர் அவர்கள் அடிகளாருடன் மிகவும் நட்புக்கு பாத்திரமாக இருந்தார். இவருடைய தமிழ் மொழி நடை மிகவும் சிறப்பாகவுள்ளது. தமிழறிஞரான திரு. ச. கோபாலபிள்ளை ஆசிரியர் அவர்கள் 02.06.1984-ல் சிவபதம் எய்தினார்கள்.
-44

திரு. க. முத்துக்குமாரு உபாத்தியார் அவர்கள் (1906 - 1981)
மட்டுவில் கந்தையா முத்துப்பிள்ளை தம்பதிகளுக்கு மகவாக 29.06.1906-ம் ஆண்டு முத்துக்குமாரு வாத்தியார் அவதரித்தார். இவர் தமது ஆரம்ப கல்வியை கோப்பாய் ஆசிரிய பயிற்சி கலாசாலையில் பெற்றார். 1926-ம் ஆண்டு மட்டுவில் கமலாசனி வித்தியாசாலையில் நியமனம் பெற்று நான்கு ஆண்டுகள் ஆசிரியப் பணியாற்றினார். 1930-ம் ஆண்டு முதல் 1941 வரை யாழ். இந்து கல்லூரி ஆரம்ப பாடசாலையில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார். அன்னாரின் கல்விப் பணியின் பெறுபேறாக மேற்படி கல்லூரியில் 1942 - 1966 வரை தலைமை ஆசிரியராக சிறப்புற பணியாற்றினார். இதனால் இந்துக் கல்லூரி அதிகாரசபை, சக ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் என்போரிடத்து பெருமதிப்பை தேடிக் கொண்டார். சைவபரிபாலனசபை கூட்டங்கள், சைவ மகாநாடுகள், கல்லூரி விழாக்கள் எல்லாம் சிறப்புற நடைபெற பம்பரம் போன்று சுழன்று பணியாற்றினார்.
இவரின் பணிகளை எல்லாம் பாராட்டி பெரும் அறிஞர்கள் எல்லாம் அன்னாரின் நினைவு மலரில் எழுதியுள்ளார். அந் நினைவு மலரில் முன்னை நாள் யாழ் மேஜர் திரு. இராசா விஸ்வநாதன், சிறிகாந்தா அச்சக முதல்வர், மறுவன்புலோ மு. கணபதிப்பிள்ளை ஐயா அவர்கள், அமரர் பொ. ச. குமாரசாமி அதிபர் அவர்கள், வித்துவான் க. சொக்கன் (சொக்கலிங்கம்) ஐயா அவர்கள் போன்ற பெருமக்கள் வழங்கிய அஞ்சலிக் குறிப்புக்கள் அன்னாரின் கல்விப்பணிகளை காட்டி நிற்கின்றது. இவர் தமது வாழ்நாளில் மிக முக்கியமான காலப்பகுதிகளை யாழ் இந்துக் கல்லூரியின் தமிழ் வித்தியாசாலையின் கல்விப் பணிக்கு செலவிட்டுள்ளார். அன்னாரின் கல்விப்பணியை பாராட்டும் முகமாக இந்துக் கல்லூரி சமூகம் அன்னாரின் திருவுருவப் படத்தை மண்டபத்தில் பொருத்தியிருப்பதை இன்றும் காணலாம். அவர்கள் கற்பித்த மாணவ சமூகம் யாழ் குடாநாட்டில் மட்டுமல்லாது பிற இடங்களிலும் பெரும் பதவி வகித்து வருவதே மகிழ்ச்சிக்கு உரியது. இவ்வாறு வாழ்ந்த ஆசிரியர் 14.10.1981-ம் ஆண்டு சிவபதம் எய்தினார்கள்.
-45

Page 52
“வலம்புரி முத்து" முத்துத்தம்பி உபாத்தியாயர் (1881 - 1964)
மட்டுவிலிலே முருகேசு சிவகாமப்பிள்ளை தம்பதிகளுக்கு மகவாக முத்துத்தம்பி உபாத்தியாயர் 25-08-1881-ல் அவதரித்தார். இவர் தமது இளமைக்காலத்தில் உரையாசிரியர் ம.க. வேற்பிள்ளையிடம் குருகுல கல்வியைக் கற்றார். முத்துத்தம்பி எனப் பெயர் கொண்ட இவர் ம. க. வே. இடம் சென்று அவரது திண்ணைப் பாடசாலையில் இலக்கியம், கணிதம், வரலாறு, தத்துவம் போன்றவற்றைக் கற்றார். இவரிடம் காணப்பெற்ற சமயப் பற்றும். இலக்கிய இலக்கணங்களிலுள்ள ஈடுபாடும் காரணமாக உரையாசிரியரை நேசித்தார்.
1904-ம் ஆண்டில் தாம் இருந்த வீட்டில் ஒரு காவிய பாடசாலையை ஆரம்பித்தார். அங்கு ஊரிலுள்ள மாணவர்களை அழைத்து ஆத்திசூடி, மூதுரை, நல்வழி முதலான நீதி நூல்களையும் கற்பித்தார். அக் காலத்திலேயே இவர் “முத்து வாத்தியார்” என அழைக்கப்பட்டார். அன்னார் கல்வி மேம்பாட்டின் உயர்ச்சியாக 1908-ம் ஆண்டு வைகாசி மாதம் 8ம் திகதி தமது காணியில் ஒரு சைவப்பிரகாச வித்தியாசாலையை ஸ்தாபித்தார். இதுவே இன்று சரஸ்வதி வித்தியாசாலையாக மிளிர்கிறது. உரையாசிரியர் அவர்களுக்கு பின் மட்டுவில் குருகுல பாடசாலையை நிறுவிய பெருமை முத்து வாத்தியாருக்கே உண்டு. மட்டுவில் சாந்தநாயகி சமேத சந்திரமெளலிச பெருமான் திருக்கோவில் மீது மிகுந்த பக்தி கொண்டவர். இவர் ஒவ்வொரு சோமவார நாளான திங்கட்கிழமை தோறும் மாலைப் பொழுதிலே சிவபெருமானை வழிபடச் செல்லும் காட்சி பிரமாதமானதாகும். சோதிடத்தில் நிபுணத்துவம் பெற்ற முத்து வாத்தியார் தமது மகன் இறக்கும் நேரத்தை கணித்து அந்த நேரத்தில் சிவாலயம் சென்று சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து பக்தி கொண்டவர். இவரைப் பற்றி பண்டிதமணி முத்து வாத்தியார் ஞாபகம்' என்ற கட்டுரையை எழுதியிருக்கிறார். மேலும் அவர் மறைந்த பொழுது “மட்டுவில் குருகுலம் தந்த வலம்புரி முத்து” என முத்து வாத்தியார் நினைவாக ஈழநாடு பத்திரிகையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். மட்டுவில் சரஸ்வதி வித்தியாசாலையை ஸ்தாபித்த முத்து வாத்தியார் அவர்கள் 13-10-1964-ம் ஆண்டு சிவபதப்பேறு எய்தினார்கள்.
-46

“மட்டுவில் பொன்னுச்சாமிக் குருக்கள்” என அழைக்கப்படும் சிவழுநீ. ந. கிருஷ்ணசாமிக் குருக்கள் (1898 - 1962)
தென்மராட்சிப் பகுதியில் சைவமும் தமிழும் தழைத்தோங்க பெரும் தெண்டாற்றியவர்களில் சிவறி பொன்னுச்சாமிக் குருக்கள் முக்கிய இடத்தைப் பெறுகிறார். இவர் சரசாலை நுணுவில் சிதம்பர விநாயகர் ஆலய பரம்பரை ஆதீன கர்த்தாவாகிய சிவபூரீ. நடராஜக் குருக்கள் தம்பதிகளுக்கு மகவாக 1898ம் ஆண்டு ஐப்பசி மாதம் மிருகசீரிட நட்சத்திரத்தில் அவதரித்தார்.
இவர் சிறுவயதிலேயே வேதாகமங்களைப் பயின்று குருப்பட்டம் பெற்றவர். இதுமட்டுமன்றி வடலியடைப்பு சிவரீ அருணாசலம் சாஸ்திரிகளிடம் வைதீகக் கிரியை முறைகளை நன்கு பயின்று அந்தணப் பெருமக்களின் பூர்வக் கிரியைகளை விளக்குவதிலும், அபரக் கிரியைகளை செய்து வைப்பதிலும் சிறந்த குருவாக விளங்கியவர்.
மட்டுவில் நெல்லியடிப் பிள்ளையார் திருவடிகளுக்கு பூசை வழிபாடு செய்து வந்த குருக்கள் அவர்கள் ஆலயத்தின் அருகே தமது இல்லத்தை அமைத்துக் கொண்டார். சிரித்த முகத்துடனும் அன்பாகப் பேசும் தன்மையுடனும் இனிமையான குரலுடன் எல்லோரையும் தன்வசம் கவர்ந்தவர். சிறந்த பெளராணிகராகிய இவர் சங்கீதத்திலும் வித்துவத் தன்மை படைத்தவர்.
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, கொக்குவில் உயர்
திரு. குமாரசுவாமிப் புலவர், கல்வயல் இசையரசு விநாசித்தம்பி
ஆகியவர்களின் பெருமதிப்பும் தொடர்பும் கொண்டவர் ஆவார். -47

Page 53
பொன்னுச்சாமிக் குருக்கள் ஐயா கொழும்பு கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலில் பிரதம குருவாக பணியாற்றிய காலத்தில் கொழும்பு வாழ் மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றார். திருமுறைகளை இசைப்பதிலும் மந்திரங்களை உச்சாடனம் செய்வதிலும் எவரையும் கவர்ந்துவிடும் இயல்புடையவராய் விளங்கினார். கல்வயல், மட்டுவில், சரசாலை போன்ற இடங்களிலும் வெளிமாவட்டங்களிலுள்ள கோயில்களிலும் சென்று புராணங்களுக்கு பயன் சொல்லும் பெளராணிகராக விளங்கினார்.
கல்வயலில் பிரசித்தி பெற்ற இராமுப்பிள்ளை உபாத்தியாயருடன் மிகுந்த மதிப்பும் அன்பும் கொண்டு அவர் நிர்வகத்து வந்த கல்வயல் பெருங்குளத்துப் பிள்ளையாருக்கு குருக்களாக அமையப்பெற்றார். இவருடைய வாழ்வில் புத்திரச் செல்வங்களாக மூன்று பெண் மக்களையும், இரண்டு ஆண் மக்களையும் பெற்றார்கள். இவர்களில் சிவாகம பூஷணமாகவும், சமஸ்கிருத பண்டிதராகவும் விளங்கும் சிவறி. சோமசுந்தரக் குருக்கள் ஐயாவும், சிவறி. சதாசிவக் குருக்கள் ஐயாவும் ஆவார்கள். இவரின் ஒரு மகளை இன்று பிரசித்தி பெற்று விளங்கும் சிவாகம பூஷணம், கலாபூசணம் சிவறி சி. சிதம்பரநாதக் குருக்கள் ஐயா அவர்கள் ஆவார்கள். இவர் சோதிடத் துறையில் முன்னணியில் நின்று திருக்கணிதப் பஞ்சாங்கத்தை மிகச் சிறப்பாக கணித்தும், அச்சிட்டும் வருகிறார்.
மட்டுவிலுக்கு பெருமை தேடித் தந்த பெருமதிப்புக்குரிய சிவபூரி. பொன்னுச்சாமிக் குருக்கள் ஐயா அவர்கள் சாவகச்சேரி நுணாவில் வைரவர் கோவில் கிரியையின் போது கற்பூர நிதாச்சனி காட்டுகையில் உயிர் நீத்தார்.
-48

திரு. சின்னப்பா பூசாரியார் அவர்கள் (?..... - 1934)
மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் கோவில் கி.பி 1750-ம் ஆண்டளவில் அமைக்கப் பெற்றதற்கான வரலாறுகள் காணப்படுகின்றன. அக் காலத்தில் வெள்ளைக்கற் திருப்பணியாக நீராழி மண்டப தூண்களுடன் காணப்பட்ட கட்டடத்தில் கண்ணகை அம்பாளைக் கொண்ட ஆலயம் இருந்தது. இதன் பின் 240 வருடங்களின் பின்னர் பல திருப்பணிகள் நிகழ்ந்ததாக வரலாறுகள் சான்று பகர்கின்றன. கோயிலை திரு. நாகர் கதிர்காமர் அவர்கள், பின் திரு. கதிர்காமர் அப்பாக்குட்டி போன்றவர்கள் முகாமையாளராக இருந்தனர்.
இவர்களின் வழி வந்த சின்னப்பா பூசாரியாருக்கு திரு. செல்லத்துரை, திரு. சிவகுரு ஆகியோர் இருந்தனர். மேலும் சின்னப்பா பூசாரியாரின் சகோதரரான குழந்தைவேல் அவர்களும் கோயிலை நிர்வகித்தனர். இவர்களுக்கிடையில் 1943-ம் ஆண்டு தங்களுடைய உரிமை சம்பந்தமான வழக்கு நடைபெற்றது. நீதிமன்ற தீர்ப்பின்படி 1946-ல் ஒரு வருடத்திற்கு ஒருவர் என்ற முறையில் கோயிலைப் பரிபாலித்தனர். கோயிலின் காணி உறுதியில் ‘அத்தாய் வளவு” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் கோவிலும், ஆலடிப் பிள்ளையார் என்றழைக்கப்படும் பன்றித் தலைச்சி பிள்ளையார் கோவிலும், கந்தசுவாமியார் கோவிலும் இருந்ததாக செய்திகள் கூறுகின்றன. இவற்றினையெல்லாம் நிர்வகித்த பெருமை சின்னப்பா பூசாரியாருக்கே உண்டு.
-49

Page 54
சின்னப்பா பூசாரியார் கல்வயலில் இருந்து வந்த சைவப் பூசாரிமார்களைக் கொண்டு அம்பாளுக்கு கும்பம் வைத்து, ஆவாகனம் பண்ணி, பூசை செய்து, பொங்கல் படைத்து,
அடியார்களுக்கு அன்னதானமிட்டும் வந்தார்.
இவர் பன்றித்தலைச்சி அம்பாளுக்குரிய காணிகளைத் தானே பராமரித்தும், வயல்களில் நெல் விதைத்தும் சேவையாற்றினார். இவர்கள் 1934-ம் ஆண்டு செப்டெம்பர் மாதமளவில் சிவபதம் எய்தினார்கள். இவர்கள் சிவபதமடையும் போது தற்போதைய தர்மகர்த்தா சிவகுரு அவர்களுக்கு வயது ஒன்பதாகும். சின்னப்பா பூசாரியார் காலத்தில் பன்றித்தலைச்சி பங்குனித் திங்கள் காலத்தில் இரவுத் திருவிழாக்கள் சிறப்புற நடந்தேறியது.
தமிழ் நாட்டிலிருந்து மங்கள வாத்திய கலைஞர்கள் எல்லாம் இங்கு வருகை தந்து தமது இசை மழையைப் பொழிந்திருக்கிறார்கள். வான வேடிக்கைகளும் அக்காலத்தில் நடைபெறத் தவறவில்லை.
இன்று சின்னப்பா பூசாரியாருக்குப் பின் அவரின் மகனார் திரு. சி. சிவகுரு ஐயா அவர்கள் அம்பாள் ஆலயத்தைப் பரிபாலித்து வருகின்றார்.
-50

அறங்காவலர் திரு. வீரகத்திப்பிள்ளை அவர்கள் (18-ம் நூற்றாண்டு)
மட்டுவில் பனையடிப்பிள்ளையார் கோவிலின் தற்போதைய மனேச்சர் சின்னத்துரை சதாசிவம் அவர்கள். இதற்கு முன் சின்னத்துரை அவர்களின் மகள் பவானியம்மா (திருமதி பவானியம்மா தம் பையா) அதன் முன் தில்லையம்பலம் சின்னத்துரை அதன்முன் தில்லையர் எனப்படும் தில்லையம்பலம். இவரின் தகப்பனாரின் தகப்பனார் பெயர் தான் வீரகத்திப்பிள்ளை அவர்கள். அறங்காவலர் வீரகத்திப் பிள்ளை என்பவர் நல்லூர்க் கந்தசுவாமி கோவிலின் வடக்கேயுள்ள கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் வைரவர் தேவஸ்தானத்தின் மனேச்சராவார்.
நல்லூர்த் தேவஸ்தான வளர்ச்சியின் போது இந்த வைரவர் கோவில் உள்வாங்கப்பட்டு மூலஸ்தான மூர்த்தியையும் வைரவரும் ஒரு முகமாக கிழக்கு நோக்கி இருப்பதை இன்றும் காணலாம். இது சாதாரண ஆலய விதிகளுக்கு முரணானது. இந்த வீரகத்திப் பிள்ளையாரது ஆலயத்தை நல்லூரார் பொறுப்பேற்றதுடன் நல்லூர்க் கோயிலின் தாம்பாளம் பூசைப் பொருட்கள் இடமாணம், சேமக்கலம், அழகிய பெரிய எருத்து வாகனம் என்பனவற்றை
வண்டிகளில் ஏற்றி மட்டுவிலுக்கு அனுப்பி வைத்தனர். இதற்குச் .
சான்றாக இன்றும் பனையடிப் பிள்ளையார் கோவில் தாம்பாளங்களில் “தெய்வானைப்பிள்ளை உபயம் - நல்லூர்க் கந்தசுவாமி கோயில்” என்றுள்ளமையை அவதானிக்கலாம்.
-51

Page 55
மட்டுவில் பண்டிதமணி மணிமண்டபமும் கண்ணகை சனசமூக நிலையமும்
தமிழ் மூதறிஞர் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் மட்டுவிலில் பிறந்தவர். இவர் சைவத்துக்கும், தமிழுக்கும் ஆற்றிய பங்கு அளவிடற்கரியது. திருநெல்வேலி சைவாசிரியர் பயிற்சிக் கலாசாலையில் 1929-ம் ஆண்டு முதல் 1959-ம் ஆண்டு வரையுள்ள சுமார் முப்பது ஆண்டு காலம் ஆசிரிய மாணவருக்கு எலி லாம் குருவாகவும் , நல்லாசிரியனாகவும் கல்விப் பணியாற்றினார். அக் காலத்தில் மட்டுவிலிலே 80 வீதமானவர்கள் பண்டிதமணி அவர்களின் ஆசிரிய மாணவர்கள். பண்டிதமணி அவர்கள் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையிலிருந்து ஓய்வுபெற்ற 1959-ம் ஆண்டு அவர்களை நாடெங்கனும் கெளரவித்து விழாவெடுத்தனர்.
இதனைக் கருத்திற் கொண்டு பணி டிதமணி அவர்களுக்கு மட்டுவிலிலும் கெளரவிக்க பெரியாரின் மாணவர்கள் முற்பட்டனர். இதன் பயனாக ஆசிரியர் சி. கந்தசாமி (J.P), ஆசிரியர் வி. ஆறுமுகம், ஆசிரியர் க. சுப்பிரமணியம் உள்ளிட்ட பலரின் முயற்சினால் பண்டிதமணி மணிமண்டபம் உருவாகியது. இந்த மண்டபத்திலே 30-101759-ம் ஆண்டு பண்டிதமணி அவர்களுக்கு விழாவெடுத்து மணிவிழாவைக் கொண்டாடினர். இந்த மண்டபத்திலே இயங்கி வருவது தான் கண்ணகி சனசமூக நிலையம் ஆகும். 2000-ம் ஆண்டு மே மாதம் தென்மராட்சியில் நிகழ்ந்த யுத்தப் பேரழிவினால் மேலதிக விபரங்களைப் பெற எத்தகைய தகவல்களையும் பெற முடியவில்லை. ஆயினும் மேற்படி சனசமூகத்தினர் 27.08.1969-ம் ஆண்டு தபாற்கந்தோர் சேமிப்பு வைப்புப் புத்தகத்தின் படியும், 12.07.1979ம் ஆண்டு சாவகச்சேரி மக்கள் வங்கியில் ஆரம்பிக்கப்பட்ட கணக்குப் புத்தகத்தின் படியும் ஒரு சில தகவல்கள் பெறக் கூடியதாகவுள்ளது.
-52

அக்காலத்தில் தலைவராக திரு. ஆ. நடராசா அவர்களும், செயலாளராக திரு. செ. சிவராஜா அவர்களும் இருந்த செய்திகளை மட்டும் அறிய முடிகிறது. தற்பொழுது கண்ணகை சனசமூக நிலையம் 17-01-2004 முதல் கண்ணகை முன்பள்ளி, கண்ணகை விளையாட்டுக்கழகம் என இரு கழகங்களை உருவாக்கி சமூகத்திற்கு சேவை செய்து வருகிறது. தற்சமயம் சங்க அங்கத்தவர்கள், விளையாட்டுத்துறை அங்கத்தவர்கள் உதவியுடன் சமூக முன்னேற்றப் பணிகளுக்கு முன் நிற்கின்றனர். யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. நடராஜா ரவிராஜ் அவர்கள் நிதியுதவி வழங்கி ஊக்குவித்துள்ளார்.
தற்போது இக் கண்ணகை சனசமூக நிலையத்தின் தலைவராக திரு. அ. த. அருணாசலம் அவர்களும், செயலாளராக சீ. சிவாஞ்சன் அவர்களும், பொருளாளராக திரு. ஆ. சுந்தரலிங்கம் அவர்களும் இச் சனசமூக நிலையத்தை முன்னிலைக் கொண்டுவர முயற்சி செய்து வருகின்றனர். யுத்த அழிவு அனர்த்தத்தினால் சிதைவுற்றிருக்கும் கிராம முன்னேற்றப் பணிகளுக்கு மற்றும் ஏனைய அங்கத்தவர்களும் முன்னிற்பார்கள் என்பதில் ஐயமில்லை.
-53

Page 56
இயல் - 04
யா/மட்டுவில். சந்திர மெளலீச வித்தியாசாலை பற்றிய செய்திகள்
1. தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர்
உயர்திரு. வ. செல்வராசா அவர்களின் ஆத்ம சாந்திச் செய்தி
2. ழறிலழறீ ஆறுமுகநாவலர் பெருமானின் வேண்டுதல் - விண்ணப்பம்
3. திரு. க. காசிநாதர் ஆசிரியர் அவர்கள் மேற்படி பாடசாலைக்கு
காணி வழங்கிய தர்மசாதன உறுதி
4. சந்திர மெளலிச வித்தியாசாலை - வரலாறு
இந்துசாதனம் - 22.07.1926
5. 15 காணி பாடசாலைக்கு வழங்க கல்வி அமைச்சிள்
மத்தியஸ் தீர்ப்பு - Award
.ே சந்திரமௌலீச வித்தியாசாலையும்
திரு. க. காசிநாத உபாத்தியாயரும்
7. APPRECIATION
-54

தென்மராட்சிக் கல்வி வலய கல்விப்பணிப்பாளர் உயர் திரு. வ. செல்வராசா அவர்கள் வழங்கிய செய்தி
கல்விக்கதிர் தந்த கந்தர் காசிநாதர்
ஈழவளநாட்டின் மட்டுவிற் பெரும்பதி மாண்புடை மாந்தர் பலரைத் தரணிக்குத் தந்த வரலாறு கொண்டது. மரணத்தின் பின்பும் மறக்கப்படாத மாந்தர் பலர் மட்டுவிலில் வாழ்ந்துள்ளனர். இத்தகு மாந்தர்களின் எழுச்சிக்கும் ஏற்றத்துக்கும் எருவாகவிருந்த பெரியோர்கள் பலர். இவர்களின் அயராத முயற்சியால் மட்டுவிலில் பல கல்விப் கூடங்கள் தோன்றின. இப்பள்ளிகளில் மட்டுவில் சந்திரமெலிச வித்தியாலயத்தின் அமைவுக்கு அடிநாதமாக விளங்யவர் அமரர் கந்தர் காசிநாதராவர்.
அமரர் காசிநாதர் இப்பள்ளி அமைவதற்கான நிலத்தை வழங்க, திரு. ம. க. வேற்பிள்ளை அவர்கள் சிறிய தொரு திண்ணைப்பள்ளியாக இதனை ஆரம்பித்தார். திண்ணைப்பள்ளியாக ஆரம்பித்த இக்கல்விக்கூடம் இன்று ஆலவிருட்சமாக வளர்ச்சி கண்டுள்ளது. இக்கிராமத்து ஏழைமாணவரின் அறிவுக் கண்ணைத் திறக்கவைத்த பெருமை இப்பள்ளிக்கே உரியது. இப்பள்ளியின் வளர்ச்சிக்கு உதவிய அமரர் காசிநாதரை எண்ணும் போது மகாகவி பாரதியின் -
“இன்னறுங்களிச்சோலைகள் செய்தல் இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல் அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல் அன்ன யாவினும் புண்ணியம்சோடி ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்”
என்ற பாடலே நினைவில் வருகிறது. எவ்வித பிரதிபலனும் பாராது அமரர் காசிநாதர் செய்த அரும்பணி போற்றுதற்குரியதே. இப்பள்ளியின் வரலாறு அமரர் காசிநாதரை என்றென்றும் கூறிக்கொண்டேயிருக்கும்.
அன்னாரது ஆத்மா சாந்தியடைக.
திரு. வ. செல்வராசா வலயக்கல்விப்பணிப்பாளர். தென்மராட்சி. -55

Page 57
நாவலர் பெருமான் வித்தியாலய ஸ்தாபிக்க திருச்சிற்றம்பலவனை வேண்டுதல் விண்ணப்பம்
மணிகொண்ட கடல் புடைகொள் இந்நாட்டில் உன்சமய
வர்த்தனமி லாமை நோக்கி மகிமைபெறு நின்புகழ் விளக்குவான் கருதி, இம் மைப் பொருட் பேறோ ழித்தே, கணிகொண்ட வித்தியா சாலைதா பித்திவ் ஆர்க்
கயவர்செயும் இடர்கள் கண்டும், கல்லூரி யதைநடாத் தப்பொருட் டுணைசெயக் கருதுவோ ரின்மை கண்டும் அணி கொண்ட சாலைய தொழிப்பின. துணையிகழும்
அந்நிய மதத்தர் சாலை யாமென நினைந்தெனெஞ் சற்பகற் றுயருறல் அறிந்து மொரு சிறிதும் அருனாத் திணிகொண்ட நெஞ்சவினி நின்முன்யான் உயிர்விடுதல்
திண்ண நீ யறியா ததோ! சிறியென தன்பிலர்ச் சனைகொள்அழ கியதிருச்
சிற்றம் பலத்தெந்தை யே’
-ழரீலழறி. ஆறுமுகநாவலர் பெருமான்ட்
-56
 

RS. 20O/= Prior Registration, Jaffna.
NO. 1229
భస####జహాiజిజి
To all to whom these presents shall come I Kanthęr. Kasitambyalias Kasinatharof Madduvil North, Send Greetings:-
Whereas by right of Inheritance from my grandfather
Kathiresar Kasinather, who held and possessed the same under and by virtue of a transfer deed dated 17th September 1875 attested by V. Appakuddy N. P. under No. 166, I am seised and possessed ofan undivided onesixth shareofapiece of land called "Kayaddaikinatady-valavu” in extent 1,1/4Lms.V. C. situated at Madduvil North and more fully described in the Schedule Ihereto. And whereasunder and by virtue of adonntion deed dated 17th February 1917 and attested by S. Kanther Kasinather, No.2224, I am seised and possessed of a divided extent of4 Lms.V. C. & 7% kulies on the North out of a piece of land called "Kayaddaikinatady-valavu” in extent 9 Lms. V.C. and 7%kulies situated atMadduvil North and more fully described in the Schedule II hereto. . . . . . .
Andwhereas Iam desirous ofdonatingthe saidtwopieces of lands to the Hindu Board for the promotion of Education, Jaffna forthepurpose ofputting up a school, subject to the condition that
-57

Page 58
the title to the saidlands shall revert to me in the eventofthe said school ceasing to function foran unbroken and continous period offive years.
Andwhereas the HinduBoard for the Promotion of Education is willing to accept the said donation subject to the conditions aforesaid. -
Now know all men by these presents that the said Kanther
Kasitambyalias KasinatharofMadduvil North forandin consid Now know all men by these presents that I the said Kanther
Kasitambyalias Kasinathar ofMadduvil North forandin consid
eration of the premises aforesaid do hereby make over and confirm unto the said Hindu Board for the Promotion of Education, the said (1) an undivided one-sixth share of a piece of land called "Kayaddaikinatady valavu in extent 1, 1/4 Lms.V. C. and (2) A divided extent of4 Lms.V. C. and 7%kulies on the Northout of apiece of land called "Kayaddaikinatadyvalavu” in extent 9Lms. V. C. and 7%kulies both situated at Madduvil North and more fully described in the Schedules I and II respectively.
To have and to hold the said two pieces of lands of the aggregate value of Rs.200/= unto the said Hindu Board for the Promotion of Education, suhject to the condition that the title to the saidlands shall revert to me in the event of the said school ceasing to function foran unbroken and continuous period offive years.
Now again know all men by-these that the said Hindu Board for the Promotion of Education through its Manager Suppiramaniam Rajaratnam of Jaffna so herebythankfully accept the said donation subject to the aforesaid conditions.
In witness whereofwe the said Kanther Kasitamby alias Kasinatharand Suppiramaniam Rajaratnam, havehereunto and to
-58-. -

two others of the same tenor and date as these presets set our hands at Jaffnathis Twenty FifthdayofAugustone thousand nine hundred and thirtyfour.
The Schedule I referred to above.
An undivided one-sixth share of a piece of land called "Kayaddaikinatadyvalavu'in extent 1,1/4Lms.V.C. withits buildings and otherappurtenances situated at Madduvil Northin the parish of Chavakachcheri in the Division of Thenmaradchyin the District of Jaffna Northern Province and bounded on the East by the property of Muttar Vaitialingam and shareholders, on the North by Road, on the West and South by the property of the Donor hereof.
The Schedule II referred to above
A divided extent of 4 Lims. V. C. and 7% kulies on the Northoutofapiece of land called "Kayaddaikinatadyvalavu” in extent 9 Lms.V. C. and 7%kulies with its appurtenances situated . at Madduvil North aforesaid and which divided extent of4Lms. V.C. and 7% kulies is bounded on the East by the property of Hindu Board of Education and the Donor hereof, on the Northby the property of the Hindu Board of Education and Road, on the Westby lane and on the south by the property of the Lonor hereof. Signed in the K. Kasinathar. Presence of us:-
۲۰۰۳ -سسته محمدمحسن خمسه محاسباتیسمچججام جدید شیمیایی برنامه

Page 59
I Chanmugam Subramaniam of Jaffna Notary Public do hereby certify and attest that the foregoing instrument was read over and explained by me to the said Kanthar Kasitamby alias Kasinather, who signed this deed as "K. Kasinathar' and was read overbythe said Suppiramaniam Rajaratnam, both ofwhom are known to me, in the presence of Sabapathy Mahalingham and Arumugam Elyathambyboth of Madduvil North, the subscribing witnesses hereto, both of whom are known to me, the same was signed by the said Kasitamby alias Kasinathar and Rajaratnam and also by the said witnesses in my presence and in the presence of one another all being present at the same time at Jaffna this Twenty fifth day of Augustone thousand nine hundred and thirty four.
Ifurther certify and attest that in line 9 of page 1 or the Original the words"situated at madduvil North' were inserted, in lines 9 & 13 ofpage 1, in lines 7,9,10,14 & 19 and inlines 4 & 11 ofpage3 ofthe sametheletters “lavu” &”se”; “lavu”, “1”, “lavu”, n”, “bo”, “H”, “k” & “t” and “di” & “b” wereretyped, inline 18 of page 2 & in line 12 of page 3 of the same the words “for” an unbroken and continuous' and “extent of' were erased and retyped, inline 16 of page 2 ofthe same the letter"e" was cutoff, in lines 2 & 16 of page 1 and in lines 5 & 14 of page 2 of the Duplicate and Protocol the letters “u' & '7' and 'u' & 'b' were retyped, in line 15 of page 1 of the same the word "called' was inserted, in line 18 of page 2 of the same the words "by these” were out off and that in line 2 of page 1 & in lines 2 & 23 of page 2 of the 3 copies the words “alias Kasinathar" were respectively
-60

interpolated, before the foregoing instrument was read over and explained by measaforesaid to the said Kasitambyalias Kasinathar and was read over an aforesaid by the said Rajaratnam, that the Duplicate of this instrument bears 3 stamps of the value of Rs. 4.50 and that the stamps were supplied by me.
Date ofattestation. 25th August 1934. Notary Public.
fats, ** kožéřiktské koz žštíže Akažka v 92.
・ 、 ممسنگ میبر ല്പ്
* vir owahil ä o 2 ***
-61

Page 60
சந்திர மெளலிச வித்ததியாசாலை
(அறுபது ஆண்டுகளுக்கு முன் இந்துசாதனத்தில் அமைந்த - கட்டுரை -)
“உரை ஆசிரியர் என உவந்தழைக்கப்பட்டவரும், இந்துசாதனத்தின் முப்பத்துமூன்றாண்டு ஆசிரியராகச் சிறந்த அரிய தொண்டாற்றிய பண்டிதர் ம. வே. திருஞானசம்பந்தர் சுயமாகவே தமிழ்ப்புலமை மயமான அறிஞர். மகாலிங்கசிவம், சட்டத்தரணி மாணிக்கவாசகர் ஆசிரியர்கள் கந்தசுவாமி, நடராசா ஆகியோரின் தந்தையும் சைவப்பெரியார் சிவபாதசுந்தரப்பிள்ளையின் சகோதரியின் பத்தாவும் ஆகிய பெரியார் ம. க. வேற்பிள்ளையவர்களின் ஊர் மட்டுவில் பண்டிதமணி ‘இலக்கிய கலாநிதி சி. கணபதிப்பிள்ளை அவர்களின் ஊர். இங்கு சந்திரமெளலீச என்ற சிறந்த நாமந் தாங்கும் வித்யாலயம் மேலே அநுமதிக் கப்பட்ட கட்டுரையடங்கிய இந்துசாதன இதழை எமக்குப் பார்வையிட்டு ஞாபகம் கொள்ள வைத்தவர் துர்க்கா தேவஸ்தானத் தூயதொண்டர் சிவபாலன் அவர்கள்”
10.10.1986 - ஆசிரியர் திரு. நம. சிவப்பிரகாசம்
மட்டுவில் வடக்கிற் பிரசித்தி பெற்ற கண்ணகையம்மை கோயிலுக் கணித்தமாக இற்றைக்கேறக்குறைய நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் ஆசிரியர் றிமத். ம. க. வேற்பிள்ளை அவர்களால ஒரு சைவப் பிரகாச வித்தியாசாலை ஆரம்பிக்கப்பட்டுச் செவ்வனே நடைபெற்று வந்தது. அக்காலத்துச் சரசாலை, மீசாலை, சாவகச்சேரி, நுணாவில், கல்வயல் முதலிய இடங்களிலிருந்து வந்து குறித்த ஆசிரியரவர்களிடம் இலக்கணவிலக்கியங்களும் சித்தாந்த சாஸ்திரங்களுங் கற்றுத் தேறினோர் பலர். இராக் காலங்களில் இராமாயணப் பிரசங்கம், சமயப்பிரசங்கம் முதலியன ஆசிரியர்களாற் கிரமமாகச் செய்யப்பட்டன. இங்ங்னமே பாஷாபிமான சமயாபிமான மேலிட்டினாற் பரோபகாரம் புரிந்து
-62

வந்த ஆசிரியர்கள் சிறிது காலத்தின் பின் சிதம்பரத்துள்ள சைவப் பிரகாச வித்தியாசாலைக் குத் தலைமைப் போதகாசிரியராக நியமிக்கப் பெற்று அவ்விடம் செல்ல வேண்டியவர்களாக, மேற்படி வித்தியாசாலை நடாத்துவாரின்றி நிலை தளர்வதாயிற்று.
இந்நிலைமையில் வித்தியாசாலைக் கட்டிடச் சொந்தக்காரர் பாதிரிமார்களுக்கு வாடகையாகக் குறித்த கட்டிடத்தைக் கொடுக்க, ஏறக்குறைய 35 வருஷ காலம் வரையில் அவர்கள் வசப்பட்டிருந்தது. முன்னமே மேற்படி யாசிரியர் அவர்களால் சைவமுற் தமிழுந் தலையெடுத்திருந்த இவ்வூரில் கிறீஸ்தவர்களின் காரியம் ஒன்றும் பலிக்கவில்லை. மட்டுவில் வடக்கில் மருந்துக்குமொரு கிறிஸ்தவனில்லை யென்பது உலகப் பிரசித்தம் எங்ங்னமாகினும் இவ் வித்தியாசாலை கிறீஸ்தவர்கள் வசப்பட்டு இருப்பதால் எக்காலத்திலாயினும் சைவசமய விருத்திக்கு இடையூறு வருமென்று அஞ்சி இவ்வுபூர் சமயாபிமானிகளின் பெருமுயற்சியால் மேற்படி வித்தியாசாலைக் கட்டிடமும் அதனைச்சேர்ந்த நிலமும் அவற்றின் சொந்தக்காரரால் கெளரவ சேர். பொன். இராமநாதன் துரையைத் தலைவராகக் கொண்ட யாழ்ப்பாண சைவவித்தியாலய விருத்திச் சங்கத்துக்குச் சென்ற வருடம் தரும சாதனஞ் செய்யப்பட்டன. கட்டிடம் காலம் கடந்தமையால் அதனைப் புதுக்குவித்து வேண்டிய தளபாடங்களை அமைத்துக்கொள்வது இவ்வூரிலும் பிறவூரிலும் உள்ள சைவாபிமானிகளின் கடனாகும். அது மேற்படி சங்கத்தார் கடனன்று.
இவ் வித்தியாசாலை மேற்படி சங்கத்தாரால் சென்ற வருடம் கார்த்திகை மாசம் 25 சந்திரமெளலிச வித்தியாசாலை என்னும் பெயருடன் பழைய நிலைமை யெய்தியது. சந்திர மெளலிசரென்பது மட்டுவிலிற் கோயில் கொண்டெழுந்தருளி யிருக்கும் தைவிகஸிங்கப் பெருமானின் திருநாமம்.(தேவியின் திருநாமம் சாந்தநாயகி. சாந்தநாயகி வித்தியாசாலை என்னும்
-63

Page 61
பெயருடன் ஒரு சைவ வித்தியாசாலை, மேற்படி வித்தியாசாலை ஆரம்பித்த தினத்திலன்று நொத்தாரிசு ரீ கந்தர் அவர்களின் பெருமுயற்சி காரணமாக மட்டுவிலில் மற்றோரிடத்தில் மேற்படி சங்கத்தாரால் ஸ்தாபிக்கப்பட்டது)
மேற்படி சந்திரமௌலீச வித்தியாசாலையின் பூர்வ வரலாறுகளையெல்லாம் விரித்து, சென்ற மாசி மீ எஉ வெளிவந்த 64-ம் இலக்க இந்துசாதன அநுபந்தத்தில் ஒரு வியாசம் எழுதப்பட்டிருக்கின்றது. அதனை ஞாபகஞ் செய்விக்கும் நோக்காக, ஐக்கிய மலாய் நாட்டு நண்பர் சிலர் கேள்விப்படி இவ் வியாசத்தையே சங்கிரகித்து இதுவரையும் எழுதப்பட்டது.
இவ் வித்தியாசாலையில் இப்பொழுது பகலில் அரசினர் சட்டப்படி விதிக்கப்பட்ட பாடங்களும், சமய நூல்களும் நீதி, நூல்களும் படிப்பிக்கப்படுகின்றன. இரவில் ஒரு காவிய வகுப்பு, ஒரு ஆயத்த வகுப்பும் வைத்து நடத்தப்படுகின்றன.
இவ் வித்தியாசாலையைப் புதுக்குவித்தற்காக வேண்டிய முயற்சிகள் செய்தும், வேண்டிய தளபாடங்கள் செய்வித்தும் இந்த விஷயத்தில் இடையறாது முன்னின்றுழைப்பவர் இவ்வூர் முரீ நா. செல்லப்பா அவர்களும் மற்றும் சில அபிமானிகளுமே இவர்களை இம் முயற்சியில் மேன்மேலும் கிளரச் செய்தல் சைவாபிமானிகளின் கடனாகுமென்பதை யான் சொல்லி வைக்க வேண்டியதில்லை.
சந்திரமௌலீச வித்தியாசாலை, ஆ. கிருஷ்ணன் மட்டுவில் வடக்கு. காவியவகுப்பு 22.07. 1926
-64

Proceedings of the Arbitration Inquiry held in respect of J/ Madduvil North Sandramouleesa Vidyalaya on 13.01.77
Place :-J/Madduvil North Sandramouleesa Vidyalaya
Date :- 13.01.1977 Time :- 2.40 p.m.
Before :- S. K. Thiravianayagam Esq.
S. Thanikasalam Esq.
Appoarances:- K. Veluppilai Esq. objector prosent, S. P.
Shivapatham Esq. Ch. E. O.Jaffna reprosenting the Director Genaral of Education.
Submissions tendered by the objector and the D. G. E. S representative were read and discussed and the position taken by the partios were clarified. The arbitrators deliberated and arrived at a unanimous decision. Thereaftermeasurements were takenin terms of the decision. The award was completed.
AWARD
According to the evidence of the objector, the school was in possession ofan extentof51msand 12 kulies. Originallythe school had only 11/41ms of land which was donated by him and his relatives. Later he donated 41ms 7%kulies making the total extent 51ms 12 kulis. He was the owner of51ms of land to the south of the school land referred to above. The MinisterofEducation vested a total extent of 10% lims of land and it is againat the vesting of the 5 lims of land he has objected. He produced the donation deed.
The representative of the Director General did not claim ownership of the 51ms of land under dispute but sought to prove that the land was used by the school and there had been a lavatory or urinal in that land and a part of the land had been used as a
-65

Page 62
playground by the schoolchildren, thereby implying that this vesting order came under para 1 of the first schedule (see 33) of the class ofproperty which were liable to vesting.
In addition to the written objection handed overto us on the first day of the sitting the objector gave cvidence denying that the school ever used the southernportion of the land. He called Messrs. S. Viswalingam, M. Subramaniam, S. Eliyathamby and V. Nagamuttu in support of his case. Mr. S. Viswalingam was the Headmaster of the school for 3 years from 1929 and for about one year in 1942 or 1943. He said that he worked for 3 spells in the school but could not rememberwhen he served the third spe11. He did not however serve from 1956 onwards. Mr. M. Subramaniam was the Headmaster from Jan. 1962 to 30th April 1964. Mr. S. Eliyathamby was the Headmaster from 1.11.32 to 30.11.35. It would thus be seen that these gentlemen could not reasonably be expected to have any knowlodge of the position on the relevant date viz. 21.7.60. Mr. V. Nagamuttuis aparent who said he lived about 1/4 ml from the school and had visited the school as aparent. He also said thathehad helped the objector to put up the boundary fence in 1934. His evidence was not convincing.
The Director General's representative called Mr. S.U. Somasegaram, retired Asst. Dircctor of Education, Mr.V. Nadarajah retired Director of Education and Mr. S. K. Subramaniam the Headmasterofthe school for 1956 to Dec. 1961.
Mr. Somasegaram hadited the school on 9.6.61 and questioned the Headmaster and some Assistant Teachers and made a log entry giving arough sketch of the land which sould be vested. In his sketchis included the land to the south of the school land and some portion of the land east of the school land. He has shown also a latrinc in the southern land. In reply to aquestion"will this nkrtch include any portion of the southern land'he stated "I don't
-66

think that anyportion of the south ofthelavatoryis included in the sketch. Mr. Somasegaram is 74 years old and his mental grasp appeared to be below normal. He appeared to be thoroughly confused and his evidence was notone which could be noted on.
Mr. V. Nadarajah on the other hand was quite alert and explained the position taken up by him at the time he prepared a fresh form ofparticulars rejecting the one prepared by the Headmaster earlier. According to Mr. Nadarajah he had questioned the Headmaster and some assistants and had gathered the information that there had been a uninal (latrine?) in the southern land and also apartoftheland to the south of the school land and apart of land to the east of the school land had been used by the school ohildren for games. He had also the impression that he saw a squating plate. According to him the extent of the southern land used for the lavatory and playground was about 1/4 lims, while the extent of land used in the land east of the school was about 31/4 1ms. Instead of vesting the actual land used by the school he rocommended the vestingofthe entire 51ms, ofthe southern land and excluded completely the land to the east or the school, on the ground that his information was that both the land to the south of the school and the land to the east of the school land bolonged to the objector. No evidence was led to show that the land east of the school belonged to the objector. Evenifthe land to the Eastofthe school belonged to the objector what the land the department was ontitle to vest was land that was used by the school and not land in lieu ofit.
The onlyperson other than the objector who was in the school on 21.7.60 was Mr. S. K. Subramaniam the Headmaster at that time. According to the sketch given in the form ofparticulars furnished by him (D6) he had shown alatrine in the land to the south of the school. He has given the extent to be vested as 12 1ms. In the "NES’ forms prepared by him to be signed by the Manager for
-67

Page 63
submission to the Department also be has given the extentliable to vesting as 12 1ms. He said he could how us the spot which was indicated in the sketch of the latrine. He did show it to us. It was between 4 to 5 yand of the boundary fence. In his evidence he stated that there was no latrine. Asked why he gave the extent to be vested as 121ms. When he said that only 51ms 12 kulisbelonged to the school, he replied that both the manager and the Asst. Director had instructed him to give the extent as 121ms. He however said that the teachers now and then went into that land for urinating purposes. He seemed to be like a reed shaken by the wind. He is prepared to do what others wanted. ኣ
We accept the evidence of Mr. V. Nadarajah ragarding the existing of aurinal (or lavatory) in the land under dispute and that a small portion of the land was used as playground. We cannothowever agree to vestingany portion of the land to the south of the school land in liou of the land to the esstofthe school land said to have been used as playground as it is notinaccordance with the law. Hencewedeterminethatthedepartmentisentitled tokeepl/41m, of the land under dispute and should divest the rest of the land in extent about 41/4 lms.
The entire extent vested has been surveyed on behalf of the survey General by Mr. S. P. Nawaratnam Surveyor and is depicted in P. P. uf308 dated 20.8.70. Lot 1 of the plan is the land on which the school stand and lot 2 is the land under dispute. We award that areetangular portion in Lot2 along the northern boundary of Lot2 and ofwidth 15 ft, be retained by the department and the restofthe land in Lot2 may be divested.
N.B. whathas been described as Northern boundary of Lot 2 is the NorthEastern boundary as shown in the plan referred to.
S. 3K. 3 katawa
Arbitrators -(68

மட்டுவில் சந்திரமெளலிச வித்தியாசாலையும் திரு.க.காசிநாத உபாத்தியாயரும்
தந்தையாரும் முன்னோரும்
மட்டுவில் வாழும் மக்கள் சைவத்தமிழ் கலாசாரப் பண்பாடு களைத் தழுவி வாழந்திருக்கின்றார்கள். குருகுலக் கல்வியை நடாத்தி முன்னோடியாக இருந்துள்ளனர். இவர்கள் உழவுத்தொழிலுக்கு முதன்மை அளித்து வேளாண்மையை மேற்கொண்டிருக்கின்றார்கள். 19-ம், 20-ம், நூற்றாண்டு முற்பகுதிக் காலங்களில் ஆயக்காரர்களின் முன்னோர்கள் வாழ்ந்து வந்து பெரும் பணியாற்றியிருக்கின்றார்கள். இவர்களில் ஒருவர்தான் “கதிரேசர் காசிநாதர்”. இவரின் சகோதரர் ஆறுமுகம். ஆறுமுகம் அவர்களின் பிள்ளைகள் இராமலிங்கம், கந்தர், பார்வதிப்பிள்ளை என்பவர்களாவர். இவர்களுள் கந்தரின் பிள்ளைகள் வல்லிபுரம், காசிநாதர் ஆகிய இருவருமே. இவர்களின் பெற்றோர் சிறுவயதிலேயே இறந்துவிட்டனர். ஆதலினால் இவர்கள் பெரிய தந்தையாராகிய ஆயக்காரன் இராமலிங்கம் அவர்களால் வளர்க்கப்பட்டார்கள். இவர்களில் ஒருவரான திரு. ஆ. க. வல்லிபுரம் அவர்கள் யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் வாழ்ந்து 1991 ம் ஆண்டு இயற்கை எய்தியுள்ளார். இவரின் சகோதரரான திரு. க. காசிநாதர் அவர்கள் 1909.03.13 ம் திகதி பிறந்து 2005.01.22ஆம் திகதி சிவபதம் எய்தியுள்ளார்.
கல்வி பயில்தலும், ஆசிரியப்பணியும்.
தந்தையார் அவர்கள் தமது ஆரம்பக் கல்வியைச் சந்திரமெளலிச வித்தியாசாலையிலும், உயர்கல்வியை சாவகச்சேரி இந்துக்கல்லூரி, சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி என்பவற்றிலும் பெற்றார். சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரியில் படித்த காலத்தில் தமது குருவாகப் புலோலி சைவப் பெரியார் சு.சிவபாதசுந்தரம் அவர்களை ஏற்றார். வாரந்தோறும் விடுமுறை நாட்களில் மட்டுவிலுக்கு வரும்போதும் திரும்பும் -69

Page 64
போதும் கால்நடையாகத்தான் வருவதாக அடிக்கடி கூறுவார். ஏனைய நாட்களில் விக்ரோறிக் கல்லூரி விடுதியிலேயே தங்கி நின்று படித்திருக்கின்றார்கள்.இதனால் சைவப்பெரியாரின் கண்டிக்கும் தன்மையையும் ,கருணைகாட்டும் தன்மையையும், கல்வியில் கருணைகாட்டும் பெருமையையும் கூறிய தமது அநுபவத்தை வெளிப்படுத்துவார்.
ஆசிரியப்பணி
சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரியில் தமிழையும், சைவத்தையும் பெற்றுக்கொண்ட இவர் கந்தர்மடத்திலுள்ள சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஓரிரு மாதம் கற்பித்தல் பயிற்சியைப் பெற்று மட்டுவில் சந்திரமெளலீச வித்தியாசாலை யிலேயே ஆசிரிய நியமனத்தைப் பெற்றார். இவர் தமது ஒய்வுபெறும் காலம் வரை (1969.03.13) இப்பாடசாலையிலேயே சேவை செய்து ஓய்வு பெற்றார். இதனால் மட்டுவில் சமூகத்திலுள்ள மூன்று தலைமுறை சந்ததியைச் சார்ந்த மக்களுக்கு கல்வியை ஊட்டியிருக்கின்றார். அவரிடம் கல்வி கற்றவர்கள் தமது உயர்நிலைப் பதவியில் இருந்தாலும் விடுமுறைக் காலத்தில் மட்டுவிலுக்கு வரும் போது இவரைச் சந்தித்தே திரும்பிச் செல்வார்கள்.
லோச் செல்லப்பாவும் தந்தையாரும்
இவர்கள் இருவரும் தாய்வழிச் சகோதரர்கள். தந்தையார் வயதில் குறைந்தவராக இருந்தமையால் சந்திர மெளலீச வித்தியாசாலையின் நிர்வாகத்தை இந்துபோர்ட் காலத்தில் தமையனாரான லோச் செல்லப்பா நடத்தினார். சைவ வித்தியாவிருத்திச் சங்கத்தின் கீழ் பாடசாலை இயங்கியமையால் லோச் செல்லப்பா அவர்கள் லோக்கல் மனேச்சராக மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினார் அக்காலத்தில் தந்தையாருக்கும் லோச் செல்லப்பா அவர்களுக்கும் இடையில் இருந்த சொரியல் காணியை இந்துபோர்ட் இராஜரட்னம் அவர்கள் சமரசம் பேசி எங்கள் மூத்த சகோதரருக்கு 1942 ம் ஆண்டு எழுதினார்.
-70

இந்து போர்ட்டும் தந்தையாரும்
சைவ வித்தியாவிருத்திச் சங்க ஸ்தாபகரான இந்துபோர்ட் சு.இராசரத்தினம் அவர்களுக்கும் எமது தந்தையார் அவர்களுக்கும் மிகநீண்ட தொடர்பு உண்டு. இவர் தென்மராட்சி பாடசாலையைப் பார்வையிட வரும்போது தந்தையார் இல்லத்தில் தங்கி நின்றே செல்வார். இதனால் எங்கள் குடும்பத்திலுள்ள அனைவரும் இராசரத்தினம் அவர்களை "இராசர்அப்பா' என்றே அழைப்போம். மட்டுவில் சந்திரமெளலீச வித்தியாசாலையின் கல்வி வளர்ச்சி விருத்தி கருதி பல உதவிகளை தந்தையாரும் செய்திருக்கின்றார். இதனால் இந்துபோர்ட் இராசரத்தினம் அவர்களுடைய தொடர்பு அன்னாரின் மறைவுக்குப் பின்னரும் நின்று நிலவுகின்றது.
பாடசாலைக்கு காணிதர்மதானம் செய்தல்
ஆரம்ப காலத்தில் சந்திரமெளலிச வித்தியாசாலைக்கு ஒருபரப்புக் காணி மாத்திரமே இருந்தது. இரண்டு,மூன்று தடவை பாடசாலைக்குக் காணி தர்மதானம் செய்தார். இது சம்பந்தமான உறுதி ஒன்று இல. 1229 விபரம் பின்னிணைப்பாகச் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த உறுதியைப் பார்க்குமிடத்து தர்மதானம் செய்யப்பட்ட காணிகளின் விபரம் அறியலாம். அந்தக்காணி உறுதியில் பின்வருமாறு ஒரு நிபந்தனை கூறப்பட்டுள்ளது. அது என்னவெனில், “தந்தையார் தர்ம தானமாக அளித்த இருகாணிகளையும் பள்ளிக்கூடம் ஒன்று கட்டி அதனால் யாழ்ப்பாணம் கல்வி அபிவிருத்திக்காக சைவ வித்தியா விருத்திச் சங்கத்திற்கு அளிக்கின்றேன் என்றும் ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக இயங்காது விட்டால் காணிகள் இரண்டும் எனக்கே திரும்பவும் உரிமையுடையது” என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிபந்தனையை சைவ பரிபாலன சபையும் ஏற்றுக்கொண்டதாகவும் ஒரு உறுதி ஒப்பந்தத்தை இந்து போர்ட் இராசரட்னம் ஐயா அவர்களும் எமது தந்தையாரும் செய்திருந்தார்கள் என்பதை அறிய முடிகின்றது.
-71

Page 65
பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்றலும் காணிசுவீகரித்தலும்.
இலங்கையிலுள்ள தனியார் பாடசாலைகளையும் சைவ வித்தியாவிருத்திச் சங்கப் பாடசாலைகளையும் 1961, 1962 ம் ஆண்டுக்காலப்பகுதியில் இலங்கை அரசு பொறுப்பேற்றது. இந்தவகையில் சந்திரமெளலீச வித்தியாசாலையை இல 1491 சட்டத்தின்படி சுவீகரித்தது. இதனை 1962.06.15-ந் திகதி வெளிவந்த இலங்கை அரச வர்த்தமானி இல 13369 எனும் இலக்கத்தில் வெளிப்படுத்தியது. சந்திரமௌலீச வித்தியாசாலை அமைந்த காணியின் பெயர் “கயற்றைக் கிணற்றடி வளவு” என்பதாகும். இதன் பிரகாரம் ஆறுமுகம் இராமலிங்கம், ஆறுமுகம் பார்பதிப்பிள்ளை, கந்தர் வல்லிபுரம் சொரியலாக இருந்த காணிப்பகுதிகளையும் சேர்த்து தனது சந்திரமெளலிச வித்தியாசாலைக்கு அளித்திருக்கின்றார்கள். இதன் பிரகாரம் அக் காலத்தில் ஐந்தேமுக்கால் பரப்பு மாத்திரமே இருந்திருக்கின்றது. இதன் வருமானம் ஆறு பனையும், ஒரு மாமரமும் ஆகும். தென்மராட்சியில் அரசியல் போட்டிகள் அக்காலத்தில் இருந்திருக்கின்றது. இதனால் சாவகச்சேரி பாராளுமன்ற உறுப்பினர் திரு. வி. என். நவரத்தினம் சார்பாக ஒருபகுதியினரும் திரு. வே. குமாரசாமி சார்பாக ஒரு பகுதியினரும் அரசியலில் இருந்திருக்கின்றார்கள். அக்காலத்தில் சாவகச்சேரி பாராளுமன்ற உறுப்பினர் திரு. வே. குமாரசாமி அவர்களுக்கு தேர்தல் பிரசாரக்கூட்டம் ஒன்று நடாத்த பாடசாலை அருகேயிருந்த காணியைக் கொடுத்திருக்கின்றார். இதனால் கருத்து வேறுபாடு கொண்டவர்களால் பாடசாலைக்குரிய காணியையும் தந்தையாருக்குரிய காணியையும சேர்த்து வருமானத்தை ஆறுபனையும், ஒரு மாமரமும் எனக் கொடுத்திருக்கின்றார்கள். ஆனால் இவர்கள் பாடசாலையை சுவீகரிக்கும் போது கொடுத்த காணியில் தந்தையாருடைய காணியிலிருந்த 40 ற்கு மேற்பட்ட பனைகளும் இருந்தன. இக்காணி சுவீகரிப்பதை எதிர்த்து தந்தையார்கல்வி அமைச்சுக்கு முறையீடு செய்திருந்தார். இதே போன்ற பிரச்சினை சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியிலும் ,தெல்லிப்பழை யூனியன் கல்லூரியிலும் இடம்பெற்றிருந்தது. தந்தையார் அவர்களுக்கு மத்தியட்ச தீர்ப்பிற்காக அழைக்கப் பட்டபோது திரு. எஸ். கே. திரவியநாயகம் அவர்கள் சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டார்.
-72

Djurf int-Arbitration Inquiry - Award.
தந்தையார் வழங்கிய கல்விக் கொடைக்கு பங்கம் விளைவிக்கும் முறையில் நடந்த தர்மசங்கடமான நிகழ்வு இதுவாகும். அவர் ஒரு நீதியை வேண்டினார். இதன் பிரகாரம் மத்தியட்ச தீர்ப்பு ஒன்று கல்வி அமைச்சினால் 13.01.1977-ல் வழங்கப்பட்டது. இதன் விபரம் காய்தல் உவத்தல் இன்றி அனைவரும் அறியும் நோக்குடன் இங்கு சேர்த்துள்ளோம்.
மறக்கமுடியாதமாமனிதன்திரு. நா.சிவசோதிஅதிபரும்தந்தையாரும்
சந்திர மெளலீச வித்தியாசாலையின் பெரு வளர்ச்சிக்கு தொண்டாற்றிய பெருமனிதன் திரு. நா. சிவசோதி அவர்கள். இவர் சேவைக் காலத்தில் 2000 மே மாதம் கொடிய யுத்தத்தில் சிக்குண்டு சிவபதம் எய்திவிட்டார். சந்திர மெளலிச வித்தியாசாலைக்கும் தந்தையாருக்குமிடையில் பாடசாலைக் காணி விடயமாக 1961 முதல் 1977 வரை முரண்பாடுகள் இருந்தது. 1977-ம் ஆண்டு 1-ம் மாதம் 13-ம் திகதி காணி சம்பந்தமான மத்தியட்சத் தீர்ப்பு வழங்கப்பட்டது. எனினும் இது நிறைவேறவில்லை. திரு. நா. சிவசோதி அவர்கள் இப் பாடசாலைக்கு அதிபராக 1993-ல் பதவியேற்றார். இவ் விபரம் அறிந்ததும் எமது தந்தையாருடன் தொடர்பு பட்டு அனைவரையும் இணைத்தார். தென்மராட்சிக் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி புஷ்பா கணேசலிங்கம் அம்மையாருடன் தொடர்பு கொண்டார். இவர் பெரும் முயற்சி எடுத்து எமது தந்தையாருடன் இணைந்து மத்தியட்சத் தீர்ப்பு வழங்கப்பட்ட 15 காணி நிலத்தையும் அன்பளிப்பாகவும், மேலும் தெற்குப் புறக் காணியையும் பாடசாலைக்குப் பெற்றுக் கொண்டார். இவர் அதிபராக இருந்த காலம் பல இடர்களைக் கண்ட காலம். இந்தப் பெருமகனார் திரு. நா. சிவசோதி அவர்கள் சந்திர மெளலீச பாடசாலை வரலாற்றில் ஒரு பெருஞ் சாதனையாளர். இவர் ஒரு முடிசூடா மன்னன். இவர் சமரசம் பேசிய காணி நிலத்திலேயே இன்று இரு மாடிக் கட்டிடம் அமைந்துள்ளதைக் காண்கின்றோம். அன்னாரின் புனித கல்விப் பணிக்கு பெரு நன்றியுடையோம்.
-73

Page 66
தந்தையாரின் காலத்தில் வாழ்ந்த சக ஆசிரியர்கள்
1. திரு. சி. கந்தசாமி - மட்டுவில் 2. திரு. வி. ஆறுமுகம் - மட்டுவில்
3. திரு. இ. ஆறுமுகம், - மட்டுவில் 4. திரு. சு. கணபதிப்பிள்ளை - மட்டுவில் 5. திரு. பொ. கணபதிப்பிள்ளை - மட்டுவில் 6. திரு. சிதம்பரப்பிள்ளை - மீசாலை
7. திருமதி தம்பாப்பிள்ளை - நுணாவில் 8. திருமதி சிவக்கொழுந்து - மீசாலை
9. திருமதி ஞா.வைரப்பிள்ளை - சரசாலை 10. திருமதி மகேஸ்வரி பதஞ்சலிநாதன். மட்டுவில் 11. திருமதி அன்னம்மா - கோப்பாய் 12. திருமதி ஜானகி சம்புலிங்கம் - சரசாலை 13. திருமதி சுப்பிரமணியம் - சரசாலை 14. திரு. தி. சோமசுந்தரம் - மட்டுவில் 15. திருமதி நாகம்மா நாகராசா - மட்டுவில்
மட்டுவில் சந்திரமௌலீச வித்தியாசாலையில் அரசினர் பொறுப்பேற்ற பின்னர் கல்விப்பணியாற்றிய தலைமை ஆசிரியர்கள்.
1. திரு. க. சுப்பிரமணியம் -மட்டுவில் -1956-1961 2. திரு. மு. சுப்பிரமணியம் -மட்டுவில் -1962-1964 3. திரு. சிதம்பரப்பிள்ளை -மீசாலை 4. திரு. எஸ். பொன்னையா - கல்வயல் 5. திரு. எஸ். படைவீரசிங்கம் - நுணாவில் 6. திரு. அ. குமாரவேலு - மட்டுவில் 7. திரு. ஆ. நடராசா - மட்டுவில் 8. திரு. ஈ. இராசசேகரம் - மட்டுவில் 9. திரு. வே. சண்முகராசா - சாவகச்சேரி -1992 10. திரு. செ. சிவசோதி - நுணாவில்
-1992-2000 11. திரு.செ.சிவஞானம் - மட்டுவில்
-2001 முதல் இன்று வரை -74

மட்டுவில் சந்திரமௌலீச வித்தியாசாலையில் இந்துபோர்ட் நிர்வாகம் நடக்கும் வரை கல்விப்பணியாற்றிய தலைமை ஆசிரியர்கள் விபரம்.
. உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை
தம்பையா உபாத்தியாயர்
திரு
. பூதத்தம்பி உபாத்தியாயர் . வேலுப்பிள்ளை உபாத்தியாயர் . சின்னத்துரை உபாத்தியாயர் . கந்தையா உபாத்தியாயர் . ந. கந்தசாமி ஐயா உபாத்தியாயர் - மட்டுவில் . முருகேசு உபாத்தியாயர்
ஆ.கிருகஷ்ணசாமி இளையதம்பி
á
@
திரு. திரு. . திரு.
க. நமசிவாயம்
சு. விஸ்வலிங்கம்
12. திரு.சுப்பிரமணியம் 13. திருதம்பாப்பிள்ளை 14. திரு.சிவக்கொழுந்து 15. திரு.பொன்னையா
- மட்டுவில் -1875-1906 ~ நணாவில்
~ நணாவில்
~ நணாவில் - தென்மட்டுவில் ~ நணாவில்
~ கொடிகாமம்
1935 ~ 932 I سے
- மட்டுவில்
- கல்வயல்
-I929-31, 1942-43
-நணாவில்
-நணாவில்
-நல்லூர்
-தனனாலை
தந்தையார் காலத்தில் எழுந்த பாடசாலைக் கட்டிடங்களின் விபரம
5);b60تھے
I929
1956
1977
1979
1991
-75
கட்டிடம் அளவு
சுண்ணாம்புக் கட்டிடம் 4ol gÄsTtib
30 அகலம்
7ol fontö மேற்குக்கட்டிடம்) 18 அகலம் கிழக்குக்கட்டிடம் 40 நீளம்
20 அகலம்
தெற்குக்கட்டிடம் 60 நீளம்
20 அகலம்
மேற்குக்கட்டிட 70 p56Tib இணைப்பு 12 அகலம்

Page 67
2.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
யா / மட்டுவில் சந்திரமெளலிச வித்தியாசாலை அதிபர்,ஆசிரியர் விபரம்-2005
திரு. செ. சிவஞானம் திருமதி வி. பரமேஸ்வரன்
திரு.அ.கனகசபை திரு.சொ.நந்தகுமாரன் திரு.நா.விஜயகுமார் திரு.வி.கணேசலிங்கம் திரு.பொ.இராசேந்திரா திருமதி த.சிவகுமாரன் திருமதி ச.இரவிக்குமார் திருமதி இ.கதிர்காமநாதன் திருமதி சு.ஆனந்தராஜா திருமதி ஜெ.பரஞ்சோதி திருமதி இ.ஆனந்தராஜா திருமதி அ.கஜேந்திரகுமார் திருமதி க.திருவருட்செல்வன் செல்வி சி.கமலாம்பிகை திருமதி வி.சத்தியசீலன் செல்வி க.தவமலர்
- giguj 5jib 2-1 SLPS
- உபஅதிபர் சமூகக்கல்விப் பயிற்சி - கணிதப்பயிற்சி - விவசாயப்பயிற்சி - வர்த்தகப்பயிற்சி sa கணிதப்பயிற்சி - தொழில்நுட்பப்பயிற்சி - பி.ஏ. டிப்ளோமா - விஞ்ஞானப்பயிற்சி
- தமிழ்ப்பயிற்சி - சங்கீதப்பயிற்சி - ஆரம்பக்கல்வி - ஆரம்பக்கல்வி - பி.ஏ.டிப்ளோமா - பி.ஏ.டிப்ளோமா
- தமிழ்ப்பயிற்சி
- மனையியல் பயிற்சி - பகுதிநேரஆங்கிலம்

APPRECATION
Consequent to the ongoing conflictextensive damage had been caused to schools,hospitals and private buildings in Thenmaradchi Division.J/Madduvil Shandramouleesa Vidiyasalai, Madduvil North,Chavakachcheri was no expeption.The buildings of this school had beencompletely destroyedbeyondeconomicrepairs inmay,2000.My father late Mr.Kanthar Kasinathar was a teacher of Chandra Mouleesa Vidyasalai and trustee of the same school.The land to construct the school was donated by him.This is a famous school and the first one opened in Thenmaradchidivision.Commentator late Mr.M.K.Vetpillai was the founder of this school and late PandithamaniKanapathipillai.close relation of my father was a student of this school.The University of ceylonin recognition of his splendid service to education in Tamil Lanqugae and Literature awarded him the title Doctorate of Literature in 1978.My father together with the school authorities approached Swiss Development Co-operative Society and they benevolently accepted to construct an upstair building 11025 under School Rehabiliation on programme costing Rs 5,000,000/= Rupees Five Millionto accomodate Scinence Laboratory,new classes and Principal's office who gave the contract to Messrs Pookkal Engineering.The construction was direcly supervised by the Department of Education,Jaffna.The Director of Education,Thenmaradchitooklotofintrest in this project.
International G.T.Z was gracious enough to renovate the damaged buildings spending Rs 1,00,000.00 (Rs one million).
As there was no library facilities,the Government of Sri Lanka was good enough to construct a building 60'25 to accomodate the library.
The School authorities and the students have expressed their profound thanks to each and every one for the magnimous grant of funds to recommence education at this School.
A good deed in time of need is great indeed.
K.Sivapalan
-77

Page 68
ஓய்வுபெற்ற யாழ். மாவட்ட நீதிபதி புலவர். மு. திருநாவுக்கரசு அவர்கள் வழங்கியது
உவமை சொல வாழ்ந்த உத்தமர்
“அரிது, அரிது, மானிடராகப் பிறத்தல் அரிது"
ஒளவை கூறிய அருந்தமிழ் வார்த்தையிது. அதனாற் போலும், இப் பிறவி தப்பினாலி இனி எப்பிறவி வாய்க்குமோ? என ஆன்மீக வாதிகள் அஞ்சி மிக ஏங்கினர். ஞானப்பாலுண்ட ஞானசம்பந்தர் இதற்கு பதில் தந்தார்.
“மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவில்லை
1. ஆதலால்
99
காவியுடுத்து கமண்டலம் ஏந்தியோ மொட்டை அடித்து முற்றும் துறப்பதோ வீட்டை விட்டு கானகம் செல்வதோ இல்லறம் துறப்பதோ துறவறம் பூண்பதோ ஆண்டவன் தன்னை அடைந்திடும் மார்க்கமல்ல இத்தனை கடுந்தவம் இயற்றினால் மட்டுமே அத்தன் ஆனந்தனை அடையலாம் என்று உத்தம ஞானிகள் உரைத்ததும் இல்லை சித்தம் அழகுற சிவனை நினைந்து நித்தம் வாழ்ந்திட நீங்கிடும் வல்வினை இந்த உண்மையை இன்புறக் கண்டவர் கண்ணியம் மிக்கதோர் கந்தர் தந்த காசினி வியக்கும் காசிநாதப் பெருந்தகை தூய சைவனாய் துலங்கிடும் நீறுடன் இல்லறம் தன்னை நல்லற மாக்கியோன் அன்பொடு பண்பும் அறநெறி வாழ்வும் கண்ணியம் நேர்மையும் கடமையும் மிக்கோன் -78

பண்பின் சிகரம் பார்ப்பதற் கெளியவன் எழுத்தறிவித்தான் இறைவனோடினைந்தான் வண்ணமார் தமிழ் வான்புகழ் எய்திடும் பன்றித்தலைச்சியாள் பார்புகழ் தாயிவள் நண்ணி வாழ்ந்த நலம் மிகு மட்டுவில் தந்த தலைமகன் கண்ணியம் மிக்க காசிநாதனாம் பசுவின் பாலினை உண்டிடா பண்பினன் பசுவின் பாலது கன்றுக்கு உரியதால் பசுவின் பாலுண்ணல் பழிமிகு செயலெனும் பண்பில் ஊறிய பழந்தமிழ் குடிமகன் மட்டுவில் சந்திரமௌலீசர் கலாசாலையில் இட்டமுடன் கல்வி போதித்த மேலோன் நாற்பத்திரண்டு ஆண்டுகள் ஒன்றாய் நயம்பட கல்வி நயந்திவன் ஊட்டினான் தக்கநல் ஆசானாய், தனிப்பெரும் தொண்டனாய் தக்கநல் காணியை தர்மசாதனமுமே செய்தனன் உத்தமன் குடும்பம் உயர்வுற கண்டான் பெற்ற நல் மகவால் பேறுகள் பெற்றான் ஆண்டுகள் தொண்ணுாற்றேழு அகவையும் வாழ்ந்து புண்ணியன் ஈசன் புகழ் உடம்பெய்தினான் அன்னவன் வாழ்வும் அறநெறித் தொண்டும் இன்றுள எமக்கெல்லாம் உமையாமன்றோ பிறவா வரமதும் பெற்ற இப் பெற்றியன் அறவாளி அந்தணன் அடியினில் வாழ்வான்.
ஓம் சாந்தி
உறவினர் விகடகவி. மு. திருநாவுக்கரசு (ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி)
-79

Page 69
எமது ஆசிரியப் பெருந்தகை காசிநாதர்
அமரர் கந்தர் காசிநாதர் மட்டுவில் வடக்கு சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டவர். 97 வருடங்கள் வாழ்வாங்கு வாழ்ந்து காட்டியுள்ளார். தக்கார் தகவிலர் என்பதவரவர் எச்சத்தால் கொள்ளப்படும். சிறந்த ஆசிரியர் திலகம். மட்டுவில் சந்திர மெளலீச வித்தியாலயத்தின் முதுபெரும் ஆசிரியராக விளங்கினார். இவர் சிறந்த தமிழ்ப் புலமையுடன் ஆங்கிலப் புலமையும் மிக்கவர். இவரிடம் கல்வி கற்ற பலர் ஆசிரியர்களாகவும், அதிபர்களாகவும், பல்வேறு துறைசார் நிபுணர்களாகவும் கடமையாற்றுகின்றனர். காசிநாத உபாத்தியாயர் எமது கல்விக்கு வித்திட்ட ஆசான்.அவர் நாமம் சொன்னால் கல்வி தானாக வரும் .சந்திரமெளலிச வித்தியாலயக் காணிகட்டடம் அவர் பெயர் சொல்லும்.ஆரம்ப கால வித்தியாலயத்திற்கும் தற்பொழுது விளங்கும் வித்தியாலயத்திற்கும் நடுநாயகமாகவும் பாலமாகவும் அமைந்தவர்.அவரது உத்தம மாணவனே தற்பொழுது கடமையிலுள்ள அதிபர் திரு. செ. சிவஞானம். எல்லாத்தானங்களிலும் வித்தியாதானம் என்ற கல்வித்தானம் சிறந்தது , அழிவற்றது நிலைத்து நிற்கக்கூடியது. இதற்குப் பாத்திரமாக அமைந்தவர் அமரர் பெருந்தகை.
அமரர் காட்டிய வழியிற் சிந்தித்துப் பார்க்கலாம். தற்பொழுது நடைபெறும் கலியுகம் சண்டை சச்சரவுகளும் கபடமும் நிறைந்ததாகும். யாரும் எவருடனும் சமாதானமாகப் போகமாட்டார்கள். ஒவ்வொருவரும் தமது சொந்த தத்துவவாதங்களை உடையவர்களாக இருப்பார்கள். நான் உங்களோடு ஒத்துப்போகாவிட்டால் நீங்கள் என்னிடம் Fணி டையிடுவீர்கள். இதுவே கலியுகத்தின் அறிகுறி.கடவுளின் புனித நாமங்களை உச்சரிப்பதே கலியுக தர்மமாக அமையும்.நம்முடைய வாழ்க்கையில் உடல் சம்பந்தமான வாழ்க்கை , மனம் , அறிவு , ஆன்மீக சம்பந்தமான வாழ்க்கை என வேறுபடுகின்றன. உண்மையில் நாம் ஆன்மீக எண்ணத்தோடு தான் சம்பந்தப்பட்டுள்ளோம். நான் இந்த உடல் அல்ல ஆத்மா என்பதை நாம் கற்க வேண்டும்.
அமரரின் பிள்ளைகள் துறைசார் புலமையுடைய வர்களாக
விளங்க வைத்துள்ளார். மூத்த மகன் பாலசுப்பிரமணியம்
கிளிநொச்சியில் சமூக சேவைத்துறையில் பணிபுரிகின்றார். மகள் -80

சறோஜினிதேவி இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக பாலர் கல்வி ஆசிரியையாகப் பணியாற்றியவர். சிவபாலன் தமிழ்,சைவத் தொண்டுகளைச் செய்யவும் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் பணியாளராகவும், அருள் ஒளி சஞ்சிகை உதவி ஆசிரியராகவும்,இருந்து இலக்கிய கலாநிதி பண்டிதமணி அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி வாழ்கின்றார்.சிவஞானசுந்தரமும் அவர் குடும்பமும் சமுகப்பங்களிப்பாக 0வாழ்வகம்0 விழிப்புலனற்றோர் இல் ல இயக் குநர் சபை உடனிருந்தே செயற்பட்டு வருபவரும்,திருக்கணித பதிப்பக நிர்வாகியாகவும், மட்டுவில் இந்து இளைஞர் மன்ற தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும், கருவூலமாக இருந்து செயற்பட்டு வருகின்றார். அமரர் ஈஸ்வரிதேவி, சிவகடாட்சம், கிருபாதேவியும் அவரின் பிள்ளைகளும் இறுதி மூச்சு வரை உடனிருந்து பணிசெய்ய அமரர் கொருத்து வைத் தவர். மக்கள் பேரப்பிள்ளைகளுடன் சிறப்பாக வாழ்ந்தார். பிள்ளைகள் தமிழ், சமயத் துறைகளில் மட்டுமன்றி சமுக பொருளாதாரத் துறையின் மூலமாகவும் மட்டுவிலுக் குப் பெருமை சேர்க்க வைத்தவர் அமரர் பெருந்தகையேயாவார். 0கடமையைச் செய் பலனை எதிர்பாராதே0 என்பதற்கேற்ப ஆசிரியப் பெருந்தகை கல்வியின் மூலம் அறிவுக்கண் திறந்து வைத்து பலரும் வாழ வழிகாட்டியுள்ளார்.சிவன் அகம் சேர்ந்து சிவனடி சேர்ந்தார்.மஹாமிருத்தியுஞ்சய மந்திரம் கூறிய கருத்திற்கேற்ப அவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.அன்னாரின் குடும்பத்தினர்க்கு எமது அனுதாபங்களைத் தெரிவிக்கின்றோம்.நாம் சார்ந்த நிறுவனம், மன்றம், கழகம் சார்பாககவும் அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி ! ஓம் சரர்தி !! ஓம் சாந்தி !!!
LDIT600T66ir − லயன் செ.சுப்பிரமணியம். B.A(cey) Dipl.in. Edu.SLPSI, A.D.C அதிபர், வரணி ம.வி, தலைவர், மட்டுவில் இ. இ. மன்றம், செயலாளர் - அரிமாக்கழகம்,
சாவகச்சேரி
-81

Page 70
சைவப் சிமரியார் சு. சிவபாதசுந்தரம் அவர்கள்
சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி அதிபரும், அமரர் க. காசிநாதருடைய குருவும் ஆவார்கள்
அமரர் கந்தர் காசிநாதருடைய அருமைச் சகோதரர் அமரர் கந்தர் வல்லிபுரம் அவர்களாவார்கள்
-82.--
 
 

அமரர் திரு.மட்டுவில் கந்தர்காசிநாதர் அவர்களின்
தகப்பனார் : திரு. ஆறுமுகம் கந்தர் அவர்கள் தாயார் ; திருமதி கந்தர் சின்னக்குட்டி
D606ore : திருமதி காசிநாதர் சிவகாமசுந்தரி LDITLDeoTITij : மானாவளைக் கணபதிப்பிள்ளை
Drfumy : . கணபதிப்பிள்ளை முத்துப்பிள்ளை சகோதரன் : திரு. ஆ. க. வல்லிபுரம் (ஓய்வு பெற்ற ஆசிரியர்) கந்தர்மடம் பிள்ளைகள் : பாலசுப்பிரமணியம்
சறோஜினிதேவி ஈஸ்வரிதேவி (அமரத்துவம் - 16.08.1994) சிவபாலன் சிவகடாட்சம் சிவஞானசுந்தரம் கிருபாதேவி
மருமக்கள் புஸ்பகாந்தி
g56.JITSFIT தவரத்தினம் மனோன்மணி விமலினி சண்முகானந்தம் (அமரத்துவம் - 06.07.1983)
பேரப்பிள்ளைகள்: அரவிந்தன் - வள்ளிநாயகி
ego))3Fst - அமுதா - யோகநாதன் அஜந்தன் - தயாளினி உமா - சத்தியேந்திரன் சுகிதா - சர்வநாதன் சுதன் சுரேகா
-83

Page 71
அபிராமி Jefoort குமணன்
ஆரணி பிரதீபா யூரிறமணன் தாரணி பிரபூர்ணா
ԼDպՄ6ծi பிரணவீ
பிரசன்னா
பூட்டப்பிள்ளைகள்:
அபிநயா கினோஷன்
விதுஷன் சஜீவன் தேனுகா , லக்ஷாஜினி
திலக்ஷன் தானுகா
ஹிஷானி தான்ஜா
சகோதரர் திரு. ஆ. க. வல்லிபுரம் அவர்களின் பிள்ளைகள்
விசாகநாதன் - குணவதி கேதீஸ்வரன் - மீனலோஜினி சேதாம்பிகை - சண்முகசோதி தில்லைநாதன் - பவளராணி
சகோதரரின் பேரiபிள்ளைகள் :
tքաU6ծi யசோதா - மோகன்ராஜ் மணிவண்ணன் ஷாமினி - குமரகுருபரன் மனோகரி பூட்டப்பிள்ளை - திரிசூலா
ஆருரன் கரன்
-84

நண்றி நவில்கிண்நோம்
பாசம் மிக்க குடும்பத் தலைவராய்,
நல்லாசானாய், நல்ல வழிகாட்டியாய் வாழ்ந்து, எம்மையும் வாழ வழிகாட்டிய
எம் அன்புத் தெய்வம் அமரர் திரு. கந்தர் காசிநாதர் ஆசிரியர் அவர்கள் சிவபதமடைந்த செய்தி அறிந்து, தங்களுடைய மெய்வருத்தம் பாராது எங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய அனைவருக்கும் நன்றி கூறவேண்டியது எமது தலையாய கடமையாகும். அந்த வகையில் யாவருக்கும் நன்றி கூறுகின்றோம். * கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அம்மா அவர்களுக்கும், துர்க்காதேவி நிர்வாக சபையினருக்கும்,
* மட்டுவில் சிவன் இல்லம் திரு. மு. தம்பையா உபாத்தியாயரின் குடும்பத்தினருக்கும், தந்தையார் நோய் வாய்ப்பட்டிருந்தபோது அவருக்கு வைத்தியப் பணிபுரிந்த Dr. நா. சின்னத்தம்பி அவர்களுக்கும், அயலவர்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் ஆகியோருக்கும், "
* நேரில் சமுகமளித்தோர், துண்டுப்பிரசுரம், பத்திரிகை மூலம் கண்ணிர் அஞ்சலி செலுத்தியோருக்கும், தபால், தந்தி, தொலைபேசி மூலம் எமக்கு அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும்,
* இறுதிக்கிரியைகளைத் திறம்பட நிகழ்த்திய குருமார் களுக்கும், இறுதி நிகழ்வின் போது அஞ்சலி உரை நிகழ்த்திய பெரியார்களுக்கும், எமது அன்பிற்குரிய திரு. செ. சுதாகரன் அவர்களுக்கும்,

Page 72
* காசிநாதர் மான்மியம் நூலுக்கு பிரார்த்தனை உரைகள், ஆத்மசாந்தி உரைகள், அஞ்சலி உரைகள் தந்து உதவியவர்களுக்கும், இந்நூலில் இடம்பெறும் சான்றோர் வரிசையில் அறிஞர்கள் பற்றிய தகவல்களைப் பெறப் பேருதவி வழங்கிய பேராயர் கலாநிதி சு. ஜெபநேசன், ஒய்வு பெற்ற அதிபர்களான திரு.க. கந்தையா, திரு. நா. நல்லதம்பி, மயிலங்கூடலூர் பி. நடராஜன் ஆகியோருக்கும்,
* பல்வேறு வழிகளிலும் உதவி புரிந்த ஒவ்வோர் பிள்ளைகளின் துறைசார் நீத நிறுவனங்களுக்கும் , அவர்களின் நண்பர்களுக்கும் - ، "
* அட்டைப்பதிப்புக்கு நிழற்படங்கள் எடுத்துதவிய S.T.கஜன், மற்றும் ஹரிஹணன் பிறின்டேர்ஸ் ஆகியோருக்கும்,
* காசிநாதர் மான்மியம் நூலை மிக அழகாகவும், சிறந்த அச்சமைப்பு முறையிலும், மிகக்குறுகியகால இடை வெளியில் அச்சிட்டு வழங்கிய திருக்கணித பதிப்பக உரிமையாளர் வணக்கத்துக்குரிய கலாபூஷணம் சிவறி. சி. சிதம்பரநாதக்குருக்கள் ஐயா அவர்கள் குடும்பத்தினர்களுக்கும், பதிப்பக நிர்வாகி, மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் எமது நன்றியினைத் தெரிவிக்கின்றோம்.
* மேலும் எம்மால் நன்றி கூறத்தவறிய அனைவருக்கும்
நன்றியைக் கூறுகின்றோம்.
இங்ங்னம், மட்டுவில் வடக்கு, மனைவி,மக்கள் சாவகச்சேரி மருமக்கள், பேரப்பிள்ளைகள்
21.02.2005 பூட்டப்பிள்ளைகள்.


Page 73


Page 74
]ܙܵܐ
چ
&
山 E
■