கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆசி மணிகள் (திருமண மணி விழா மலர்)

Page 1


Page 2


Page 3

s ஜ்
ஆசி மணிகள்
k3-k3-k-k-k-k-k-k3-2
B-B-B-B-B-P-E-B-ళి
影签

Page 4
.__ܠܐ
. ܠ ܕ
 

திருமணத் தம்பதிகளாக
மட்டுநகர் புனித தெரேசா கன்னியர்
மடத்து முன்றில்
12 OS - 1936

Page 5

அர்ப்பணம்
விருத்தம்
செந்தமிழின் துறைகண்ட யாழ்ப்பா ணஞ்சேர் திருமறையின் தலைவராய்த் திகழ்ந்து தூய சிந்தனைசொற் செயல்களுடன் ஞான ஆட்சித்
தேர்செலுத்தி வந்த எமில்" ஆயரே! நீர் அந்தமிலான் பதமடைந்த இருபத் தைந்தாம்
ஆண்டதனில் எமதினிய மணிவி ழாவும் வந்ததுவோர் தேவசித்தம். மறைந்தும் மறவா
மாதவ நும் பதவிணைக்கிம் மலரை வைத்தோம்.
ஞானி-றெஜினா குடும்பத்தோரி'

Page 6
கடவுள் வாழ்த்து
விருத்தம் அறக்கடல் நீயே அருட்கடல் நீயே!
அருங்கருணாகரன் நீயே! திறக்கடல் நீயே! திருக்கடல் நீயே திருந்துளம் ஒளிபட ஞான நிறக் கடல் நீயே நிகர்கடந்துலகில்
நிலையும் நீ உயிரும் நீ! நிலைநான் பெறக்கடல் நீ ய! தாயும் நீ! எனக்குப் பிதாவும் நீ! அனைத்தும் நீயன்றோ
தேம்பாவணி - வீரமாமுனிவர்.
அடைக்கல மாதா
- கட்டளைக் கலித்துறை,
கன்றுக் கிரங்குங் கறவைகண் டேன் கருங் காக்கையுடன் ஒன்றித் துயிலுறு குஞ்சுங்கண் டேன் உயர்ந் தோங்கு மலைக் குன்றிற் சிலுவை சுமந்துயிர் விட்ட குருபரனார் அன்றிங் கெமக்களி தாயே! நின் பாதம் அடைக்கலமே.
LorraJirr LondrřLD mravnav
- ஞானி -

அருளுரை
பண்டிதர் ஞானப்பிரகாசம் யாழ் மறை மாவட்டத்திற் பல பாடசாலைகளில் ஆசிரியராகவும் அதிபராகவும். பணியாற்றிக் கல்வி வளர்ச்சிக்கும், திருமறைக்கும் நம் அன்னையாம் தமிழ் மொழிக் கும் அளப்பரிய தொண்டுகள் ஆற்றியுள்ளார் என்பது யாவரும் அறிந்ததே.
அவருடைய திருமணத்தின் அறுபதாவது ஆண்டு மலருக்கு எமது அருளுரையை வழங்கு வதிற் பெரு மகிழ்ச்சியடைகின்றோம்.
அவர் ஆற்றிய அரும் பெரும் பணிகளைப் பின் பற்றித் தமிழ் பேசும் கத்தோலிக்க மக்களுட் பலர் நம் திருமறைக்கும் தமிழ் மொழிக்கும் நற் பணிபுரிய முன்வரவேண்டும்.
இந்நினைவு மலர் வாயிலாக இவ்விலட்
சியங்கள் நிறைவேற இறைவன் அருள்புரிவாராக.
* வ. தியோகுப்பிள்ளை இளைப்பாறிய யாழ் ஆயர்

Page 7
ஆசிச் செய்தி
ஆயர் இல்லம் LD6ifornrith
எல்லார்க்கும் இனிது கிடைத்தற்கரிய திருமண மணிவிழாக் காணும் ஆசிரிய தம்பதிகளின் வாழ்வு நலன் குறித்து, அதிகம் எழுத வேண்டிய கடப்பாடுடையேன், ஆயினும் காலப் பிரச்சனைகள் குறுக்கே நிற்கின்றன.
இவர்கள் ஆற்றிய சமய மொழிச் சேவைகளுக்கு, இறை வனின் அருட்பேற்றோடு-ஆயர் குரவர் கன்னியர்கள்- ஆன் றமைந்த சான்றோர்களின் பாராட்டும் - உற்றார் உறவின ரின் ஒத்துழைப்பும் உங்களுக்கு இருந்ததென்பதை யாழ்/மறைக் கல்வி நிலையத்தில் நிகழ்ந்த பாரதி பிள்ளைத்தமிழ் நூலின் அரங்கேற்று விழாவுக்கு நான் சமுகம் அளித்தபோது நேரிலே கண்டுணர்ந்தேன்.
கவிமாமணி க. த. ஞானப்பிரகாசம் தம்பதிகள் தேவ ஆசியையும் மனிதநேயத்தையும் என்றும் குன்றாமற் பெற்றமை யால், உளநிறைவோடும் மன அமைதியோடும் நீடிய ஆயுள் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்துவருகின்றனர். இவர்கள் ஆற்றிய திருமறைத் திருப்பணியும், தமிழ்த்தாய்ப் பெரும் பணியும் காலத்தைக்கடந்து இவர்களுக்குப் பெருமை தேடிக்கொடுக்கும்.
இவர்களின் உறவினரும் மாணவனும் அபிமானியுமாகிய நான் பெருமையுடன் இச்சந்தர்ப்பத்தில் எனது நல் ஆசிகளை யும், நிறை வாழ்த்துக்களையும் தெரிவித்து மணிவிழா மகிழ்ச்சி யில் எல்லோருடனும் கலந்து கொள்வதிற் பெரும் மகிழ்ச்சி யடைகின்றேன்.
மடு அன்னையின் திருப்பதியில் இருந்து உங்களுக்கு ஆசிர்
* ஆயர். இரா. யோசேப்பு
மன்னார் மறைவட்டம்

திருமண வாழ்வின் மணி விழா வாழ்த்துக்கள்
இறைவனின் அருள் வரங்கள் ஏராளம்! ஏராளம் அவற்றில் நீண்ட ஆயுளும் ஒன்று.
தமது திருமணவாழ்வின் ‘மணி விழாக்கானும், எனது பங்கின் மக்கள் திரு. திருமதி K. T. ஞானப்பிரகாசம் தம்பதியினரை மனமார வாழ்த்துவதிற் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.
இவர்கள் இருவரூடாகவும், இறைவன் எமது மண்ணின் கல்வித் துறைக்கும், தமிழுக்கும், சமயத்திற்கும் ஆற்றிவருகின்ற அளப்பரிய சேவைக்காகவும் இறைவனுக்கு நன்றி கூறுகின்றேன்.
இவர்கள், இன்னும் நீண்ட ஆயுளையும் பிள்ளைகள், உறவினர்கள் மாணவச்செல்வங்கள் நண்பர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று நிறைந்த மகிழ்வோடு வாழ வாழ்த்தி இறையருள் வேண்டுகின்றேன்.
பங்குத்தந்தை, அருள் திரு. அ. பெ. பெனற்
கரவெட்டி, 39-79.7
இல்லற வாழ்க்கையின் இமயம்! நல்லாசிரிய சேவையின் நன்மணிகள்
புனித. நீக்கிலார் ஆலயம்,
மிருகவில் இயந்திரமயமாகிவிட்ட சமூகம் இதயத்தை மறந்து விட்ட மனிதர்கள்.
மணமுறிவுகளும், குடும்பப்பிளவுகளும் சகஜமாகிவிட்ட வாழ்க்கை. இத்தகைய பண்புகளுக்குப் புகவிட மாகிவிட்ட உலகில், இறைவனின் அருளாசியுடன் இல்லறத்தில் கலந்து, கருத்தொருமித்துக் கண்ணிய மாகக் குடும்பத்தைக் கட்டியெழுப்பி அன்புக்கும் - பண்புக்கும் இலக் கணமாகத் தம் திருமணவாழ்வில் அகவை அறுபதைத் தொட்டு மணி

Page 8
8
விழாக் காண்பது வரலாற்றுச் சாதனையாகும். இல்லற வாழ்வில் இத்தகைய இமயத்தைத் தொட்டுவிட்ட பண்டிதர். க. த. ஞானப்பிரகாசம், திருமதி. றெஜினா மேரி. மக்டலின் ஞானப்பிரகாசம் தம்பதிகளை வாழ்த்துவது மட்டுமன்றி, போற்றவும், வணங்கவும் வேண்டும். --
இவர்களின் குடும்பத்தைப் பன்னெடுங்காலமாக நான் அறிவேன். நெடுந்தீவிற் பிறந்து-வளர்ந்து, யாழ், குடாவின் பல பாகங்களிலும் விழுது பரப்பி வாழ்ந்த இக்குடும்பம் சத்திய மறைக்கும், முத்தமிழிற் கும் நற்பணி செய்து இல்லறத்தின் முன்னுதாரணமாகத் திகழ்ந் துள்ளது.
"கே. ரி" என்று பலராலும் அறியப்பட்ட பண்டிதரி. க. த ஞானப்பிரகாசம் அவர்கள் ஆசிரியராக, அதிபராக கல்வித்துறைக்குத் தன்னை உரமாக்கியவர். தமிழ் மொழியியல் வல்லுநர். தன் எழுத் தாற்றலால் சர்வதேச தேசிய விருதுகள் பல பெற்ற பெருமகன். இவரின் இத்தகைய பணிகள், பெருமைகள் யாவற்றிற்கும் உந்து சக்தியாய், உறுதுணையாய் விளங்கியவர், அவர் தம் மனையாள் மக்டலின் என்பதை உலகே அறியும்.
இறைபக்தியும், பிறரன்பும், சேவை மனப்பாங்கும் நிறைந்த இத் தம்பதிகள் இல்லறத்தின் இலக்கணமாய், குடும்பவாழ்வின் குலவிளக் காய்த் திகழ்கின்றார்கள். தம் திருமணவாழ்வில் மணி விழாக் காணும் இத் தம்பதியினருக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் என் நல்லாசி களும், இறை ஆசீரும் உரித்தாகுக.
அருள் திரு. இ, பீற்றர் துரைரத்தினம்
பங்குத்தந்தை, மிருகவில்,
இறைவன் அளித்த பேருபகாரம்
மறைக்கல்வி நிலையம் யாழ்ப்பாணம்.
புலவர் க. த. ஞானப்பிரகாசம் தம்பதிகளின் அறுபதாவது திருமண நிறைவுவிழாவையொட்டி, அவர்களை இதயபூர்வமாக வாழ்த்திப் பாராட்டுவதிற் பெருமகிழ்வு கொள்கின்றேன்.
மானிட வாழ்க்கையில் எல்லோர்க்கும் எளிதாகக்கிடைத்திடாத திருமண மணி விழாவைச் சந்திக்கக் கிடைத்த பாக்கியம், இறைவன் இவ்வன்புத் தம்பதிகட்குச் செய்த பேருபகாரமே.

கல்வித்துறையிலே நல்ல ஆசான்களாக, ஆர்வத்தோடும், கடமை
யுணர்வோடும், இதயசுத்தியுடனும், பிரமாணிக்கத்துடனும் பணி யாற்றியமை இறைவன் தந்த நற்கொடையேயாகும்.
திரு. க. த. ஞானப்பிரகாசம் கற்றுத்தேர்ந்த பண்டிதர். நல்ல எழுத்தாளராகவும், சிறந்த கவிஞராகவும் நான் அவரைச் சந்தித்திருச் கிறேன். அவரது அருமையான, கருத்தாழம் நிறைந்த கவிதைகள் அனைத்திலங்கையிலும் வெளிநாடுகளிலும் தரம்மிக்கவையாகக் கணிக் கப்பட்டுப் பாராட்டுதல்களையும் பரிசுகளையும் பெற்றிருக்கின்றன.
அவரிடத்தில் நிறைந்துள்ள வளங்களால், திருமறைக்கும், தமிழ் மொழிக்கும் அவர் ஆற்றிய சேவைகளை வியந்து பாராட்டுகிறேன்.
அறநெறியிலும் ஆழ்ந்த இறைபக்தியிலும், திருமணத்தின் புனிதத் திற்கும் சான்றாக வாழ்ந்த இத்தம்பதிகளை இறைவன், நிறைவான அருள்வளங்களுடனும், நீடித்த சுகபலத்துடனும் அருள்பாலிக்க வேண்டி மணிவிழா நல்வாழ்த்துக்களை இயம்புகிறேன்.
அருள்திரு ஆர். எச். சகாயநாயகம் அடிகள்
இல்லறத்துக்கோர் இலக்கணம் அறிவுலகுக்கோர் அச்சாணி
ஆசிரிய ஆசிரியைகளை மறந்து விடும் மாணவ மாணவிகளும் உண்டு. மாணவ மாணவிகளை மறந்து விடும் ஆசிரிய ஆசிரியைகளும் உண்டு. மாணவ மாணவிகள் மறப்பினும், தம் மாணவ மாணவி களைத் தம் மனதில் இருத்தும் ஆசிரிய ஆசிரியைகளும் உண்டு. ஆசிரிய ஆசிரியைகள் மறப்பினும் தம் ஆசிரிய ஆசிரியைகளை மறக்காத மாணவ மாணவிகளும் உண்டு. இந்த நான்கு விதத்திலும், பண்டி தர் க. த. ஞானப்பிரகாசம் அவர்கள் என்னை மறந்ததுமில்லை, என் உடல் மண்ணோடு மறையும்வரை நான் அவரை மறக்கப் போவது மில்லை, பண்டிதர் க, த. ஞானப்பிரகாசம் றெஜினா மேரி மக்டலின் நாகம்மா அவர்களின் 60வது திருமண நிறைவு மணி விழாவிற்கு ஆசிச்செய்தி அனுப்புவதில் பேரானந்தமும், பேருவுகைபும், அடை கின்றேன். ' எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் ". என்ற ஆன்றோரின் திருப்பணியை எத்தனையோ ஆண்டுகள் செய்து, இன்னும் தங்களது சிந்தனையாலும், எழுத்தாலும் சொல்லாலும்

Page 9
10
செயலாலும், அதே புனித பணிகளை ஆற்றிக்கொண்டிருக்கும்
இத்தம்பதிகள் நிச்சயமாகப் பாராட்டப்பட வேண்டியவர்களே.
"அன்ன சத்திரம் ஆயிரம் கட்டல்"
ஆலயம் பதினாயிரம் நாட்டல் அன்னையாவிலும் கோடிபுண்ணியம் ஆங்கோர் ஏழைக் எழுத்தறிவித்தல்”.
என்ற தூய தெய்வீகப் பணியைக், குருவும், அரசரும், ஆசிரிய ருமான கிறிஸ்துவின் மீட்புப் பணியைச் செய்த இத்தம்பதி யருக்குக் கோடி புண்ணியம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. நான் அவரின் பழைய மாணவன் என்ற ரீதியிலே, இவ் ஆசிச் செய்தியை அளிப் பதிற் பெருமையும், பேருவுகையும் அடைகின்றேன். இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து பவள விழா கண்டு, உடல் நலமும், உளச்சுகமும் ஆன்மீக பலமும் பெற்று வாழ மனமார வாழ்த்துகிறேன்.
அன்புடன் அருள் திரு. பற்றிக் ஞானப்பிரகாசம்
(பங்குத் தந்தை)
சாவகச்சேரி.
*தான்பெற்ற இன்பம் GLI3 SGil 6))) II35ii'
5டமைகளை ஒழுங்காய்ச் செய்வதே கடவுள் வழிபாடு என் பதைக் கருத்தாய்க்கொண்டு. நல்லாசிரிய அதிபர் பதவிகளைப் பூண்டு மனம் மொழி மெய்களாற் கல்வியுலகுக்கும் . வீட்டுக்கும், நாட்டுக்கும் செய்த மணிமணியாஞ் சேவைகளை இன்று, அறிஞர் உலகம் பாராட் டுவதை ஓர்ந்து உவகை பூக்கின்றேன். நானும் அவர்களுடன் சேர்ந்து வாழ்த்தியும் மன்றாடியும் வருகின்றேன்.
கடவுள் பற்று "மாதா மலர்மாலை"யென நீங்கள் முதல் முதல் யாத்த கவிதை நூலைத் தவத்திரு தனிநாயக அடிகள் போன்ற பல குருமணிகள் வாழ்த்துக்களிலும், பிறந்த நாட்டுப்பற்று. குரவர் கன்னி யர் ஆசார் பற்று.
"நல்லாயர் அருட் குரவர் கன்னியர்கள் ஆசார்
ஞானநெறிப்பாலருத்துந் தேனமுத நாடு:
எல்லார்க்கும் இனியபல வளங்கள் நிறை நாடு
இமையவர்க்கும் விருந்தளிக்கும் நாடு நெடுத் தீவே,

1í
என வாழ்த்திய கவிதைகளிலும், தேசப்பற்று - "பாரதிபிள்ளைத் தமிழ்" என்றநூலிலும் இன்னும் பலவேறுபட்ட நல்லார் இணக்க வாழ்த்தியல் நூல்களும் - மற்றும் பத்திரிகைகளும். சுட்டிப் புகட்டியிருப் பதை வாசித்தபோது விளங்கிற்று.
கொழும்புத் தமிழ்ச் சங்கம் ‘கவிமணி யென்றும் - சென்னைப் பாரதிகழகம். இலக்கியக் கழகங்கள் 'கவிமாமணி யெனவும் வழங்கிய விருதுகள் தமிழ் கூறும் நல்லுலகம் எவ்வாறு மதிக்கிறதென்பதை யும் உணர்ந்தேன். இவற்றின் மேலாய் உங்கள் சகோதரியும், எனது அன்னையாரும் ஆகிய திருமதி விக்ரோறியாப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள், "எனது தம்பி ஒரு சுடுதண்ணி, , யென அளித்த விருது மிகவும் சிந்திக்கப்பாலது ஒழுங்காய்க் கற் கா த வர்கள். சொற் கேளாதவர்கள் களவு. பொய் கபடு உடையோர்க்கு உண்மையிற் சுடுதண் ணிதான். சுடு நீரும் வெந்தீயை அடக்கவல்லது ஆதலின் நீதியை நிலைநாட்டி நன்மனதாய் ஏற்கச் செய்வதும் அவர் வகித்த கிராமசபை கி.மு. சபை. இணக்கசபைச் சேவைகளிலிருந்தும் பலர் கூறியதையும் கேட்டிருக்கிறேன்.
தான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்பதற் கொப்ப மாணவர்க்கும் பிறர்க்கும் - கல்விச் செல்வத்தையும் நற்பழக்க வழக் கங்களையும் பயிற்றினீர்கள். அதனால் மனதுக்கு நிம்மதியும். நல்ல சம்பாவனையும் கிடைக்குமென்பதில் ஐயமில்லை.
நல்லாசிரிய தம்பதிகளுக்கு எல்லாம்வல்ல இறையாசியை வேண்டு கின்றேன்.
அருட் சகோதரி ஞா.புஸ்பம். B. A. (Lond)
வட கீழ் மறைவட்ட லண்டன், திருக்குடும்பக் கன்னியர் மடத்து 2&,7。97。 முன்னாள் தலைவி.
இல்லற வாழ்வில் இனிதான மணி விழா
என் பாலப்பருவம், பள்ளிப்படிப்பு-அது பல நினைவுகளை என் மனத்தினில் எழுப்பும்
பத்தாவுக்கேற்ற பதிவிரதையாகப் பாடசாலை அதிபரும் துணைவியுமாக முத்தான அறிவை முதன்மையெனக் கொண்டு அன்புடன் பண்பும், அறிவுடன் ஆற்றலும்

Page 10
12
எதற்கும் மேலாய்க் கடமை உணர்வுடனே கண்டித்தும், திருத்தியும் கல்வியைப் புகட்டிட்ட பண்டிதமணி க. த. ஞானப்பிரகாசம் அவர்தம் பாரியார் நாகம்மா
நம் கல்வி உலகிற்குப் பெருமையாய் நல்லதோர் கொடையாய் நல்கிய இறைவனுக்கு நாவார நன்றி கூறி, நலமாக உமை வாழ்த்தி நல்ல பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், சுற்றம் சூழலுடன்
நன்னாளைக் கொண்டாட நயமாக வாழ்த்துகின்றேன் உம் துணையால் வளர்த்த கல்வியால் புகழ்கின்றேன் மலர்க உங்கள் இனிதான இல்லற வாழ்வு மிளிர்க இவ்வையகத்தில் இன்னும் பல ஆண்டு
இறைகரம் வழிநடத்தி இனிதான சுகத்துடனே குறையின்றி வாழ உங்கள் குழந்தையாய் வாழ்த்துகின்றேன்
அருட்செல்வி யோலன்ட் மத்தியாஸ் அதிபர் யா/திருக்குடும்பக்கன்னியர் மடம்
யாழ்ப்பாணம்,
திருஞானத் தம்பதிகள்
இறையருளால் மணிவிழாக் காணும் கே. ரீ. ஞாப்பிரகாசம் தம் பதிகளின் வாழ்வு ஞானத்திலும், கல்வி அறிவிலும் ஒழுக்க நெறியிலும் மிளிர்வதை அவர்களின் வாழ்விற் கண்டுணர்ந்தேன். இவர்களின் குடும்ப வாழ்வில் 60வது ஆண்டை நினைவு கூரும் இந்நாளில் இறை வனின் ஆசி வேண்டி வாழ்த்துகிறேன்.
நான் அதிபராக இருந்த காலத்தில் திருமதி. நாகம்மா மேரி மக்ட லின் ஞானப்பிரகாசம். மயிலிட்டி சென் மேரிஸ் பாடசாலையில் ஐந் தாண்டுகளுக்கு மேற் பணிபுரிந்த வேளை நல்லாசிரியருக்குரிய பண்பும் பணிவும், இறை அன்பும் நிறைந்த ஒர் ஆசிரியராகவும், அன்பும் அர வணைப்பும் பரிவும் கொண்ட நற்சேவகியாகவும் பணிபுரிந்ததைக் கண்டுகொண்டேன்.
நற்பணியாளர்கள் நம் மண்ணில் துலங்க நன்றி மனத்துடன் இவர்களின் இல்வாழ்வு இறை ஆசீராற் பெருகி வர இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.
திருக்குடும்பக் கன்னியர்மடம், அருட்சகோதரி எமிலி
யாழ்ப்பாணம்,

பாடறிந் தொழுகும் பண்புடையோர்
திருமதி நாகம்மா றெஜினா மேரிமக்டலின் ஞானப்பிரகாசம் இவ் வித்தியாலயத்தில் என்னோடு உப அதிபராய்ப் பணியாற்றியவர்: அல்வாய் தெற்கிலிருந்து அதிகாலையில் மூன்று பஸ் எடுத்தும் நேரர் தவறாத நிபுணியாக அதிகாரிசளுக்கு உவந்த அமைச்சலாக ஆசிரியர் பெற்றார் மகிழும் கடமையுணச்சி மிக்கவராகக் கடவுள் பத்தியோடு பல்லாண்டுகாலம் நல்ல பணிபுரிந்தவர்.
அவரின் துணைவர் க. த. ஞாப்பிரகாசம் அவர்கள் புலமையுள்ளம் படைத்தவர். இவ் வித்தியாலயத்தில் வற். ஆயர்கள், குரவர்களின் வரவேற்பு விழாக்கள், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் எது நடத் தாலும் இவரது இனிமையான பாக்களே ஒலிக்கும்.
மக்களெல்லாம் படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள், சிலர். ஊரோடும் வெளிநாடுகள் சென்றும் உழைப்பவர்கள்; ஒழுக்கத்தை உயிராகப் பேணுபவர்கள், பாடறிந்த பெற்றோருக்குப் பக்கபலமாயி ருந்து பணியாற்றும் பண்புமிக்கவர்கள். வாய்த்த மருமக்களும் அப்படியேதான்.
ஆண்டவனால் அருளப்பெற்ற இம் மணவினை மணிவிழாத்தினத் தைக் காணும் பாக்கியம் பெற்ற இத்தம்பதிகள், இன்னும் பல்லாண்டு காலம் ஆன்ம நலனோடும், ஆரோக்கிய பெலனோடும் வாழ இறை யருணை வேண்டுகின்றேன்,
அருட் சசோதரி மேரி வலன்ரைன் மயிலிட்டி, யாழ் \ கன்னியர் வித்தியாலயங்களின்
முன்னாள் அதிபர்.
"இனந்துயார்க் கெல்லாம் நன்றாகும்"
மாசற்ற ஆசிரிய சேவையின் மாமணிகள்
பிறந்த மண்ணின் சிறப்பாற் சிலர் பெருமையடைகிறார்கள் - சிலரின் சிறப்பால் மண்பெருமையடைகிறது. இரண்டாலும் பெருமை யளித்தவர்கள். இன்று திருமண மணி விழாக் காணும். எனது சிறிய தந்தையாரும் சிற்றன்னையுமாகிய பண்டிதர் ஞானியும் - பாரியார் நாகம்மா றெஜினாவும், ---

Page 11
14
தெய்வநம்பிக்கையோடும், தெளிந்தமன உணர்ச்சியோடும் செய்த சேவையால் நாடு மகிழ்ந்தது. நாமும் மகிழ்ந்தோம்.
எமது அன்னை தந்தையர், உயிரோடிருந்த காலங்களில் ஆற்றிய உதவிகள் பொன்னட்சரங்களாற் பொறிக்கப்படத்தக்கன-அவர்கள் ஆவி 'பிரிந்த வேளைகளில், காடுகரம்பைகளில் நீங்கள் இருந்தபோதும் ஓடோடிவந்து உஞற்றிய சேவைகள் ஒருபோதும் நெஞ்சிலிருந்து நீங்காதவை. அன்னை தந்தையர் 'நினைவு மலரை'-நீங்களே எழுதி யும், உங்கள் அன்புமக்கள் தங்கள் செலவில், அச்சகச் செலவை அன்பளிப்பாய்ச் செய்தவைகளும் எம்மால் மறத்தற்கரியன.
"மனந்தூயார்க் கெச்சம் நன்றாகும்
இனந்தூயார்க் கெல்லாம் நன்றாகும்" என்ற வாக்கு உங்களுக் கும், எங்கள் இனத்தவர்களுக்கும் உண்டாக்கிய பெருமை, பாராட் டற்குரியது. அதற்கொரு கட்டளைக் கல்’ ஆக விளங்குகின்றீர்கள்.
உங்கள் திருமண மணி விழாக் காணும் இந்நேரம் நாங்கள் வர மனமிருந்தும் - போர்க்காலச் சூழல் பெருந்தடையாக விருக்கின்றது. எனது செபதவமூலம் இறைவன் அருள் எல்லாவிதத்திலும் இருக்கும் என்ற நம்பிக்கையும் விசுவாசமும் உண்டு.
தினமும் மன்றாடித் திருக்குடும்ப ஆசியை வேண்டி முடிக்கும்
அருட்சகோதரி ஒலிவியா யோசேப் திருக்குடும்பக்கன்னியர்மடம்
தாண்டவன் வெளி மட்டக்களப்பு.
மறக்கமுடியா மணிவாக்கு
இன்று 'திருமண மணிவிழாக்" காணும் தம்பதிகளை எல்லோரும் விழிபபதுபோல் விழிக்க என் மனம் ஏவவில்லை. என் அன்புக்கினிய குஞ்சி - குஞ்சியம்மா என்றே விழிக்க ஆசைப்படுகிறேன்.
நான் அறிவறிந்த காலந் தொடங்கி இன்றுவரை எங்கள் குடும்பத் துக்கு என்றும் பேருதவியாக இருந்திருக்கிறீர்கள் என்பதை ஒருகணமும் மறப்பதற்கில்லை. குஞ்சி ஐயாவின் கூடப்பிறந்த அண்ணா திரு. K.S. பேதுருப்பிள்ளையோடுதான் எங்கள் ஐயாவின் தொழில்துறை அக்காலத்

S
திலிருந்தது. சந்தர்ப்பம் நோக்கிச் சகலருக்கும் சாலவும் உதவிசெய் யும் பெருங்குணம் படைத்த அவர், அகாலத்தில் ஆண்டவன் அடியிற் சேர்ந்ததும் எனது ஐயாவே உங்களோடு சேர்ந்து இறுதிக்கடன்கள் யாவையும் முன்னின்று நடத்தியவர்.
எங்கள் ஞானக் குஞ்சியாகிய உங்களின் திருமண நாள் மட்டுநகரில் நடந்தபோதும், எனது ஐயாவே அழைப்பிதழ் அனுப்பிச் சிறப்பித்தவர். அற்றைநாள் தொடக்கம் எனது அருமை ஐயாவின் ஆருயிர் பிரியு மட்டும், உங்கள் வாழ்வின் முக்கிய நிகழ்ச்சிகளிலெல்லாம் பெரும்பங்கு கொண்டு ஆற்றினவர். அவர் சுகத்தாழ்வு அடைந்து அல்வாயில் - உங்கள் அழகு மனையில் எனது அம்மாவுடன் மாசக்கணக்காய் இருந்த போது நீங்கள் இருவரும் மனங்கோணாது பார்த்தெடுத்த நன்றியை அவர் எங்களுக்கு அடிக்கடி கூறுவார். இப்படி இராம இலட்சுமணர் போல் வாழ்ந்ததை உற்றார் உறவினரன்றி ஊரேயறியும்.
மேலும், எனது ஐயாவின் அந்தியேஷ்டிக்கிரிகைகள் யுத்தகாலத்தில் நெடுந்தீவில் நடந்தபோதும்-இரண்டு வாரங்கட்கு முன்னரே வந்து நின்று சகல ஆயத்தங்களையும் ஒழுங்காய்ச் செய்தீர்கள். நினைவு மலரும் சொந்தச் செலவிலே வெளியிட்டீர்கள். அதில் நீங்கள் குறிப் பிட்ட ஒரு சொற்றொடர் இன்று வாசிக்கும் போதும் எங்கள் கண் கள் குளமாகின்றன. அதை இச்சந்தர்ப்பத்திற் சுட்டிக்காட்டினால் தான் என் மனம் சாந்தியடையும். அது
'தங்கத்தைக் குழிதோண்டி யெடுப்பதே உலகியற்கை. எனது ஆருயிர்ச் சோதரனாகிய மத்தியாஸ் பெனடிக்ற் ஆகிய தங்கத்தை ஐயோ! குழிதோண்டிப் புதைத்தார்களே" என்பதுதான். முன்னோர் கள் பொன்னேபோற் போற்றும் மறக்கமுடியாமணி வாக்கு,
என்னே சகோதரபாசம் என்னே உள்ளத்தின் உயர்வு இன்னும் விரித்தெழுதப் பலவுண்டு, இந்தமலர் அதற்கு இடங்கொடா தென்பதை உணர்கிறேன்.
எங்கள் அருமைக் குஞ்சி ஐயாவுக்கும்-குஞ்சிஅம்மாவுக்கும் எல் லாம் வல்வ இறைவன், நீடிய சுகபெலத்தையும் நிரந்தர சமாதானத் தையும் அளித்தருள வேண்டுமென வேண்டி முடிக்கும்
அன்புக்கினிய பெறாமகள் அருட் சகோதரி மேரியோண் பப்ரீஸ் (மேரி குணமணி)
அச்சுவேலி அமலிவனம் செபமாலைக் கன்னியர் சபைத் தலைவி.

Page 12
念@G密 徽班忍 冷血 © 篮压望總 斑洲露 念彻欧 念-ı念 淞%洲瑙 g * ? 窗忍
ō정S的

1.
அஞ்சலிப் பூ.
விருத்தம்
சொல்வினிலே முல்லைப்பூ உடைஅல் லிப்பூ!
சுவையினிலே தேன் தொடுப்பு: துடிதுடிப்பு நல்லிதயந் தாமரைப்பூ உயர்ந்த பண்பு:
நாடிவந்தாற் புன்னகைப்பூ தமிழ்வி ரிப்பு: எல்லையற்ற எழுத்துக்களின் விறுவி நுப்பு
இலக்கியத்தின் சிந்தனையே அவரி னிப்பு எல்லாப் பூ வுஞ்சேர்ந்தால் அர்ப்ப னிப்பு
ஈழத்தின் கவிமணிப்பூ ஞானிப் பூவே.
ஒலமிடும் உணர்வுகளின் சிந்தனையில் தொட்டு
ஊற்றெடுக்குங் கவிதைகளின் தோற்றமெனும் புலவன்: கோலமிடும் பூஞ்சொற்கள் கருத்தின் அத்தர்
குடியிருக்கும் நெஞ்சினிலே எடுத்துப் பார்த்தால் ஞாலமெல்லாம் மணம் வீசும் நனைக்குங் கண்ணை
நாளெல்லாம் நெஞ்சோரம் கொஞ்சுஞ் செஞ்சொல்; நிலவெளிப் பற்தரின் கீழ்க் கவிதைக் கன்னி
TTTTTLLLLLTTTT TTTTLTtLLL LLL LLLLLT TT TTLT TLLLLSSS
அன்பினையான் அன்னையிடம் அன்று கண்டேன்;
அறிவினையான் குருநாதர் இடத்திற் பெற்றேன்; துன்பமதைப் பிரிவினிலே கண்டு கொண்டேன்
தூய்மையதைத் துறவிகள்பாற் கண்டு வந்தேன் பொன் பொருளில் எனக்காசை அதிகம் இல்லை;
புலவனென வருவதற்கே கொள்ளை ஆசை: என்னையிளம் வயதினிலே கவர்ந்தார் ஞானி;
இளம்புலவர் அவரடிகள் தொடர்ந்து சென்றேன்.

Page 13
t
d
குயிலினங்கள் பாடுதற்குக் கோடைகாலம்
குவிந்தஅல்லிப் பூவுக்கு இரவுக் காலம்; மயிலினங்கள் ஆடுதற்கு வாடைக் атериb;
மருதநிலப் பயிர் செழிக்க வசந்த காலம்; தயிருடைந்து மோராக விடியற் காலம்;
சஞ்சலத்தின் நீர்துடைக்க அமைதிக் காலம் : துயர் மறந்து பாட் டெழுத “ஞானி, யென்ற
சுடர்மணியாங் கவிமணிக்குக் கால முண்டோ?
மண்ணினிலே தாய்மாரின் தியாகங் கேட்டல்
மரங்களெல்லாம் இலைகளையே மலராய்ச் சிந்தும் அன்னையெனும் இளைய பிள்ளை குலத்தின் தெய்வம்:
அரியபண்பின் ஆலயமாம் மூத்த பிள்ளை: மன்னவனாங் கந்தப்ப பிள்ளை யோடு
மாதரசி அளித்தகனி கவிஞன், ஞானி; கண்ணெனவே நங்குலத்தின் நெஞ்சில் என்றுங்
கதிரைபொன்று அவர்க்குண்டு; காலம் போற்றும்.
கங்கைநதி அவர்கவியில் நடந்து செல்லும்
கடலலைகள் தாலாட்டிக் கண்ணிர் சிந்தும்: திங்கள் வந்து ஒளியேற்றும்: கோடி விண்மீன்
தூங்காமல் வாசித்துக் கண்சி மிட்டும்: மங்காத மலரினத்தின் மாலை மீது
மல்லிகையின் சொல்லனைத்தும் மனத்தைக் கொட்டும்: திங்கமணி நாவுகளிற் பாடல் தோயும்
தமிழன்னை கவிமணியே என்பாள் கண்டீர்.
நீலமணிக் கடல் குழ்ந்த பசுத்தீ வென்பாள்
நெஞ்சினிலே அணியவென முடிந்த முத்து; சூழவுள்ள தீவுகளும் ஈழ நாடும்
சொந்தமெனக் கொண்டாடும் உரிமைச் சொத்து தாழைமலர் மணஞ்சொரியுஞ் சொற்கள் நெய்து
தமிழ்ச்சங்கப் பலகையிலோர் கவிதைக் கொத்து வாழுமெங்கள் குலத்துக்குத் தமிழின் வித்து:
வணங்குகின்றேன் மணிவிழா வாழ்த்துக் கூறி.
வித்துவான் "அமுது" லண்டன.

.9
மங்கலம் பொங்க வாழ்க
கவிஞர் யாழ் எ ஜெயம்
இளமையெழில் மனநிறைவு இரும்பு மேனி எண்பதையு மேகடந்த திறலின் வாகை வளமை புகழ் வள்ளன்மை வனைந்த வாழ்க்கை வற்றாத கலைச்சுரங்கப் புலமை ஞானம் முழநிலவின் வதனமலர் நாகம் மாவின்
முதிர்காதல் மனைமாண்பும் நுகருஞ் செல்வன் செழுமைதவழ் மணவாழ்வின் மணிவிழாவோன்
செந்தமிழ்போல் நீடூழி வாழ்க வாழ்க.
女
பேசுகின்ற ஒவியமாய்க் கவிதை யாக்கும்
பேராற்றல் பெற்றுலகோர் போற்றும் ? ஞானி , வீசுபுகழ் வெகுமதிகள் பாராட்டுக்கள்
விளையாட்டாய்க் கருதுமுள வித்தகத்தோன் ஆசிரியர் அரங்கினிலே அதிபர்க் கெல்லாம்
அதிபரெனத் தலைநிமிர்ந்த ஆட்சியாளன் ஈசனருள் பெற்றுயர்ந்தே தேசு லாவும்
எளிமை பணி வெனுமணிகள் புனைந்தோன் வாழ்க
★
எந்நாளும் இலக்கணத்தை இலக்கியத்தை
இருகண்ணாய்க் காப்பதிலே இனிமை காண்போன் பொன்னான காலமதை விற்று மேலாம்
பொருளான கலைதேடிப் புகழிற் பூத்தோன் மின்னான புவிவாழ்வின் இயல்பு தேர்ந்தே
மேலோனை உளமாரப் பூசிக் கின்றோன் தன்னான்ம நலமேவ மனைவாழ் வின்பம்
தங்கசுப மங்கலமே பொங்க வாழ்க,
uu Tyb - Oguld 67. வேம்படி வீதி,
யாழ்ப்பாணம்.

Page 14
20
வற்றா நதியென வாழ்க!
கரம்பொன் கவிஞர் யுவன்,
நேரிசை வெண்பா
நாவல்லன் பாவல்லன் ஞானப் பிரகாசன் பூவண்ண நாகம்மா பூண்டமணம்-தேவனிலே ஆண்டறப தானாலும் ஆயுள் அவனாலே ஈண்டினிநூ றாக இனிது.
அறுசீர் விருத்தம்
ஊரெல்லா மாநிரைகள்: உறியெல்லாம் தயிர்க்கலங்கள்:
ஒடு கின்ற நீரெல்லாம் நித்திலங்கள்: நிலமெல்லாம் மூலிகைகள்: நிமிர்ந்து பார்த்தால் ஏரெல்லா மெறும் பொழுக்கு எங்கணுமே பரிக்கூட்டம்: எல்லை யில்லாப் பாரெல்லாம் போற்றுகவி ஞானிதனைப் பெற்றெடுத்த '#
6.
தரணிபுகழ் கந்தப்ப தந்தை தாய் இளையபிள்ளை தவத்தின்
பேறோ? மரபுயர்ந்த நாகம்மை மனமுவந்து செய்ததரு மத்தின் பேறோ? பரவுமிகு கவிபாடிப் பரிசுபல வென்றெடுக்கும் பாவல் லோனாம் கரவறியா ஞானப்பிரகாசமகான் நம்மிடையே கனிந்து வந்தான்
வள்ளுவர்க்கு வாசுகிபோல் வசிட்டருக்கு அருந்ததிபோல் வாய்த்த பெண்ணை எள்ளளவும் மனங்கோணா தெவர்வரினும் விருந்தோம்பி ஈயும் Lonels. தள்ளாத வயதினிலும் தன் கணவன் நலம்பேணும் தாய்போன் றாளைத் தெள்ளமுத “ஞானி’மகான் தேவியெனப் பெற்றதுவும் தேவன் பேறே,
பளிங்கற்ைபுட் பரிதியென ஞானியெனும் புனைபெயரில் பாவை " .ده யாக்கத் தெளிவுபெறு சொல்லழகு பொருளழகு செறிந்தகவிச் சிறப்பி − sw mrCarv

0.
2.
ஒளிப்பிரபை தொடர்நாமம் ஒளிக்கமுடி யாவாறு ஒளிரப் பார்த்த வெளியுலகு ஞானப்ர காசனெனும் நாமமதே விளம்பக்
G3s , "GBunrh
பரமனுக்குப் பலதுதிகள் பாடியவ னருட்கொடையாற் பாரை fiscssitt சரமகவி யாயிரமாயிரம்பாடிச் சான்றோர்தம் சபையின் கண்ணே அரசகவி பாரதிபிள் ளைத்தமிழைப் பாடியரங் கேற்றி வெற்றி முரசறைந்த ஞானப்ர காசாவி நாயகனார் முதுமை வாழி.
அறிவினிலே யகத்தியனே யானாலும் அணுவளவு மகந்தை
யற்றோன் சிறியவரோ டினிமைபெறச் சிரித்தறிவு புகுத்தியவோர் சிறப்புச் செம்மல் வறியவர்தம் நிலைகண்டால் மளங்குழைந்து கன்னனைப் போல் வழங்குஞ் சீரோன் நெறிதவறா ஞானியிவர் நெஞ்சத்தின் நெகிழ்வுதனை நினைக்க ஈர்க்கும்
கம்பனவனின்றிருந்தால் கைகொடுப்பான் கவிவாணக் காள மேக வம்பனவன் கண்டானேல் வாரியணைத் தொருமுத்தம் வழங்கி நிற்பான் செம்புலவன் நக்கீரன் கண்டாற்றன் சிரந்தாழ்த்திச் சிறப்புச் செய்வான் எம்புலவன் குருஞானப் பிரகாச னுக்கவன்பா ஏற்றங் கண்டே
வாழமுத கவிஞானி மூவேந்தர் ஆட்சியிலே வாழ்வா னென்றால் சோழன்றன் அரியணையின் அருகினிலே அமரவைப்பான்
துலங்கு சேரன் வேழமதன் மேலிருத்தி வீதியெலாம் வலம்வருவான் வெற்றிவீரர் சூழவரப் பாண்டியனும் பல்லக்கில் ஏற்றிடுவான் சொல்லப்
GurrGBuorr! கட்டளைக் கலித்துறை
நற்றா யருந்ததி நாகம்மா ஞானி Op- ன
பெற்றா தரித்தநற் பிள்ளைக
வற்றா நதியென மங்கா ஒ
முற்றா தரவளிப் பாரிஏ
** مايي صميم
* அ, ஆவக்கிம்பிள்ளை
முன்னர்ஸ் ஆசிரியஅதிபர்.
۵۰ Y y*. m

Page 15
22
குலம்விளங்க இருவீரும் வாழ்க நன்றே
கலையரசி காதலிலே கண்மயங்கிக்
கருத்தெல்லாம் அவளுக்கே சுடப்பாடாக்கி வலைபிணித்த மான்போன்ற மணாளன் தன்னை
மணமறிந்தோ கைப்பிடித்தாய் மங்கை நல்லாப் கலைமோகம் கருத்தழியச் செய்யா தென்று
கண்டுகொண்டாய் கவிஞானப் பிரகா சன்தன் தலைமணியே ஆசிரியை நாகம்மா f
தலம்புகழ மணிவிழாப் பூண்க நன்றே
நேர்த் திமிகு நெடுந்தீவு மாவின் கன்றில்
நிலவளஞ்சேர் அல்வையூர்த் த்ேமாங் கொம்பைக் கீர்த்திமிக ஒட்டவைத்தார் அதுதான் ஓங்கிக் கிளைபரப்பி நிழலோடு கணியும் ஈந்து பூர்த்திபெறும் அறுபதெனும் ஆண்டு காலம்
பொங்குபுகழ் தங்கிடவே பொலிந்த (து) இன்னும் பேர்த்தி பெறும் இன்மகவின் மனமுங் காணப்
பெருமையொடு பல்லாண்டு வாழ்க வாழ்க
பாரதிக்குப் பிரபந்தப் பாடல் குடிப்
பரிசுபெற்ற நற்கவிமா மணியே மிக்க
பேரமைந்து கவிபுனையும் அரச போட்டிப்
பெருஞ்சபையிற் பொற்கிழியைப் பரிசாய்ப் பெற்றீர்
ஊரவர்கள் உவந்தேத்தப் பாடல் கூட்டி t
உளம்மகிழும் ஞானப்பிர காச நேசா
சீரமைந்த மனையறத்தில் மேம்பட் டோர்க்குத்
தெரிந்தளிக்கும் முதற்பரிகம் நுமக்கே வாழ்க
உளமார உளம்ஒன்றிக் கருத்தொன் றாகி
உழவின்சால் இழுக்கின்ற சோடி போலும் வளமார வாழ்வுதாழ் விரண்டும் நோக்கா
மனநிறைவே உயர்வாழ்வாய் நெஞ்சில் எண்ணி இளமைதவழ் நெஞ்சினொடு மேலும் மேலும்
இரு சிறகும் எழுப்பளழும் பறவை போலும் குளம் பூத்த மணமலரின் வண்டு போலும்
குலம் விளங்க இருவீரும் வாழ்க நன்றே.
பண்டிதர் மு. மயில்வாகனன் மோட்டஞ்சீமா - தென் அல்வை.

(1)
(2)
(3)
(4)
(5)
(6)
23
மணி விழா நாயகற்கு மங்கல வாழ்த்து மாலை
கரவையம் பதியில் முன்னாள் கலைவளர் மதியம் ஒப்பத் திரவியத் தமிழ் கற்பித்த தீஞ்சுவைத் தேனா சானைப் பரவிசை விருத்தம் பாடிப் பதமலர் துதிக்க வாய்த்த விரைகமழ் நாளை எண்ணி விம்மிதம் அடைவார் பல்லோர்,
வித்துவக் கலைகள் கற்றும் விழைந்ததை வழங்கும் திண்மை எத்தனை பேருக்குண்டோ ? இறைவனே ஏக சாட்சி !
சித்தமேல் ரசனை கூட்டிச் செய்யுள் தன் திறம் பாராட்டிப் புத்துணர்வோங்க நல்கும் புரவலன் ஞானவள்ளல்.
al மணிகளென்றால் மனத்திலப் UQp Sadiyant sitt வேணவா மிகு ந்து பாடம் விளங்கிட வினவுந்தோறும் கோணுதல் வதனம் நீக்கிக் குலநலப் பாங்குதேக்கி, ஏணுறஉதவுந்தூய இதயனே ஞானவள்ளல்.
தனமொடு, புவனி, தாயம் தழைத்த சீராளர் பல்லோரி மனமுவந் தறிஞர் வாழ்த்த வயங்கித் தம் சேவை கண்டார் நினைவினில் அகலா நின்ற நிர்ம லத் தமிழை நல்கிப் பனையினுக் குவமைசான்ற பண்புளார் ஞானவள்ளல்
வெண்ணையூர்ச் சடையனோடு, விளைபுகழ் வேந்தாட்
கொண்டான் தண்மயத் தாரோன் பூமிச் சந்திரன் சுவர்க்கி வண்மை மண்ணவர் மானங்காக்க மதிநலக் கவிஞர் வாழ்ந்தார்; புண்ணியப் பெயரோன் ஞானி புரிந்தெம்மிற் புகழும் சந்தார்
அசைவில் செந்தமிழைப் பேணும் ஆற்றலுக் கவர்.அச் சாணி, இசைவுறெவ் விடயமேனும் எழுதுதற்கவர் ஓர் ஏந்தல் 1 தசை தளர் வுணராமேனி, தார்மிகமனை, உற்றார். எண் டிசைதொறும் முரசம் ஆர்க்கத் திருமலி தேவ தோத்(தி)ரம்.
சீடன் அ. பர்னாந்து Wintedir.

Page 16
கட்டு జ్ఞ
ட்டுரை மஞ்சரி
怒
#######

25
பண்டிதஞானி s க. த. ஞானப்பிரகாசம் அவர்கள்
பண்டிதஞானி க. த. ஞானப்பிரகாசம் அவர்கள் இலங்கைத் திருநாட்டிற்றோன்றிய தமிழறிஞர்களுள் ஒருவர். வரலாற்றுப் புகழ் படைத்த நெடுந்தீவு தந்த நல்லறிஞர். சுவாமி விபுலானந்தர், புலவர் tocf g பெரிய தம்பிப்பிள்ளை ஆகிய பேரறிஞர்களிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றவர். நற்றமிழ் ஆசிரியராகவும் அதிபராகவும் பல்லாண்டு காலம் பணிபுரிந்து கல்வி, பண்பாடு, தமிழ் ஆகியவற்றை வளர்த்தவர், தன் மாணாக்கர் பலரை உருவாக்கியவர்.
பண்டித ஞானி அவர்கள், சொல், பொருள், ஓசை ஆகிய மூவகை நயமும் அமைய ஆற்றொழுக்குப் போலக் கவிதைகளைப் பாடும் ஆற்றல் உள்ளவர். கவிதைகளால் தமிழன்னைக்கு அணிசெய்து உலகத் தமிழர் அனைவர் உள்ளங்களிலும் இடம்பெற்ற மகாகவி பாரதிக்குக் காவியம் படைத்த முதற்பெருமை தமிழுலகிற் பண்டித ஞானிக்கே உரியது. இவர் படைத்த பாரதி பிள்ளைத்தமிழ் உலகு உள்ளளவும் நிலைத்து நிற்கும், மகாகவி பாரதியைப் பல்வேறு கோணங்களில் உலகத் தமிழர்களின் முன்னிலையிற் காட்டுகின்றார். இப்பாடல்கள் பண்டித ஞானியின் ஆழ்ந்தகன்ற அறிவு, உயர் சிந்தனை உணர்வுகள் நுண் மான் நுழைபுலம், கவிதை ஆற்றல் ஆகியவற்றை உணர்த்துகின்றன.
பேராசிரியர் சு. வித்தியானந்தன்.பெருங் கவிக்கோ சேதுராமன்' கலாநிதி க. செ. நடராசா வித்துவான். ஒவAல்க்ஸ், go. 15 prirer fr ஆகிய நல்லறிஞர்கள் இவரது புலமை ஆற்றலை மிகவும் பாராட்டி யுள்ளனர். இந்நூல் அரங்கேற்றம் யாழ்/ பேராயர் வ. தியோ குப் பிள்ளை அவர்கள் தலைமையில் பேரணிகள் தமிழறிஞர் அவையிற் சிறப்பாக நிகழ்ந்தது. கொழும்புத் தமிழ்ச் சங்கம் பெரும் புலவர் சிவங் கருணாலய பாண்டியனார் பரிசில் இந்நூலுக்கு வழங் கி இவரைப் பாராட்டியது. இதேபோல 153 மணிகளடங்கிய மாதா மலர் மாலை போன்ற பல சிறந்த நூல்களை இவர் பாடியுள்ளார்.
இலங்கை அரசு நடாத்திய இலங்கைச் சுதந்தர தின மரதன் தமிழ்க் கவிதைத் தேர்வில் இரண்டாம் பரிசிலும். சுவாமி விவேகா னற்தர் சிகாகோ பேருரை நூற்றாண்டு விழா நடாத்திய தமிழ் கவிதைத் தேர்வில் இரண்டாம் பரிசிலும், "உலகத் தமிழ்க் கவிஞர்

Page 17
26
பேரவை நடாத்திய உலகக் 'கவிதைத் தேர்விலும், கொழுப்புத் தமிழ்ச் சங்கம் நடாத்திய உலகக் கவிதைத் தேர்விலும் சிறப்புக் கவி தைப் பரிசில்களும் பெற்ற பெருமைக்கு இவர் உரியவர்.
கவிதைப் புலமை இவருக்கு இயல்பாக அமைந்தது, ஒருமுறை முற்பகல் இச்சங்கத்திற்கு இவர் வந்தார். அன்று பிற்பகல் இச் சங்கத்தில் தமிழ்நாடு அமைச்சர் நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்களின் சிறப்புச் சொற் பொழிவு. அமைச்சருக்கு வரவேற்புப் பா இதழ் வழங்க விரும்பியதை இவரிடம் தெரிவித்தேன். உடனே அதி சிறந்த பத்துப் பாடல்களைச் சில நிமிட நேரத்தில் எழுதித் தந்தார். எனக்கு இது பெரும் அதிசயமாக இருந்தது. அன்று முதல் இவரிடம் பெருமதிப்பு எனக்கு ஏற்பட்டது. 'இம்மென்னும் முன்னே எழுநூறும் எண்ணுரறும், அம்மென்றால் ஆயிரம் பாட்டாகாதா? எனக் காளமேகப் புலவர் பாடல் நினைவுக்கு வந்தது.
பண்டித ஞானி அவர்கள் தமிழ் மொழிப்பற்றும், தமிழ்ச் சமுதாயப் பற்றும் மிக்கவர். கொழும்புத் தமிழ்ச் சங்கத்திலும் எம்மிடத்துப் பெரும் பற்று உள்ளவர். இச்சங்கத்திற்குப் பலமுறை நிதிகள் உதவியுள் ளார். எமது உள்ளுணர்வுகளையும் சிந்தனைகளையும் தமது உள்ளத்து ணர்வால் நன்குணர்ந்து தமது சொல்லாலும், எழுத்தாலும் எமக்குத் தெரிவித்தார். இதுவும் இவரிடம் உள்ள சி ற ந் த பண்பு. இவரிடம் எமக்குப் பெருமதிப்பு ஏற்பட்ட தற்ரு இஃது இரண்டாவது காரணம் ஆகும். எம்மை உள்ளத்தால் நன்குணர்ந்த ஒருவர் இவரே. பண்டிதஞாளி என்னும் சிறப்பு இவருக்குத் தகுந்த ஒன்றேயாம்.
இன்னல்கள் உற்ற நேரங்களிற்கூட எமக்கு அடிக்கடி கடிதங்கள் எழுதி எமக்குத் தமிழ்ப்பணிகளில் ஊக்கந் தந்தார். இவருக்கும் எனக் கும் உள்ள தொடர்பு இறையருள் வழித் றொடர்பு ஆகும். இவ ரைப்போலவ்ே இவரது பிள்ளைகளும், மனைவியும் மிகப் பண்பு உள்ள வர்கள். இவர் சங்கப் புலவர் மரபினர்.
இத்தம்பதிகளது அறுபது ஆண்டு பூர்த்தியான திருமண நிறை வுக்கு அறிஞர் உலகு விழா எடுத்துப் போற்றுவது அறிந்து மிகப் பேருவகை எய்துகின்றேன். கொழும்புத் தமிழ்ச்சங்கத்தினதும் எமதும் நற்பெரும் வாழ்த்துக்களை உளமுவந்து தெரிவிக்கின்றேன். இவர் தமிழுலகிற்கு உரியவர். இவரது சிந்தனைகளும் பணிகளும் தமிழுல கிற்குப் பெரும் பயன் தருவன. இவரது பணிகள் வளர்க, உயர்க,
தமிழவேள் க. இ. க. கந்தசாமி
பொதுச் செயலாளர் கொழும்புத் தமிழ்ச் சங்கம்

27
வாழ்வும் வளனும்
ஈழமணித் திருநாட்டின் தமிழ்ச் சான்றோர்களில் ஒருவராகிய ஞானியைத் தமிழ்கூறு நல்லுலகத்துக்கு அறிமுகஞ் செய்ய வேண்டி யதில்லை. புகழையும் பெருமையையும் விரும்பாமல் இலைமறை காய்போல் வாழும் ஒரு மரபுக் கவிஞர் ஞானி. இவரது இயற்பெயர் கந்தர் தம்பிப்பிள்ளை ஞானப்பிரகாசம் என்பது.
இந்நாள்களிற் செய்யுள் இலக்கணங்களை யறியாது தங்கள் கவிதை ஆயுதத்தால், தமிழ்ச் செல்வியின் கழுத்தில் கைவைப்பவரி கள் பலர். ஓரளவு யாப்பிலக்கணங்கவள யறிந்து கொண்டு, சார மற்ற காவோ லைப் பாடல்கள் பாடுவோரும், கொட்டுப் பனையிற் குருத்தெடுக்க முயல்வோரும் நம்மிற் பலர். பண்டைய இலக்கியச் செல்வங்களையோ இலக் சணங்களையோ ஒரு சிறிதும் அறியாமற் கவிஞர் கூட்டத்தில் தலைப்பாகையோடு தோற்றம் அளிப்பவரும்
6).
பண்டிதஞானி'' இந்தக் கூட்டத்துக்கு அப்பாற்பட்ட இயற் கைக் கவிஞன். மரபுவழிக் கவிதைகளைக் கடந்த 50 ஆண்டுகளாக எழுதி வருசிறார். நவாலியூர் க. சோமசுந்தரப்புலவர் - முதுதமிழ்ப் புலவர் மு, நல்லதம்பி இவர்கள் வரிசையில் வைத்துப் போற்றக் கூடிய சிறந்த கவிஞர் இவராவர். 1949 ல் இலங்கை அரசியலாளர் நடத்திய சுதந்திர மரதன் ஒட்டப் போட்டிக் கவிதையில் முதலாம் பரிசை முது தமிழ்ப் புலவர் திரு மு. நல்லதம்பி அவர்களும் அடுத்த பரிசைக் கவிஞானி அவர்களும் பெற்றுக் கொண்டனர் என்பதை இங்கு குறிப்பிடுதல் பொருத்தமாகும்.
பசுத்தீவு என்று வரலாற்றிற் குறிப்பிடப் பெற்றிருக்கும் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர் - கொலம்பகம் புனித வளனார் சாதனா கழகத்தில் சிரேட்ட வகுப்பை முடித்துக் கொண்டு மட்டு நகர் புனித அகுஸ்தீனார் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையிலி ருந்து 1933 ல் வெளியேறியபோதே கவிதைகள் எழுத ஆரம்பித்தார். மட்டுநகர் உப்போடை புனித தெரேசா கன்னியர் சாதனா கழகத் தில் முதன்முதல் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய போதே, முத் தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகள் - புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை, அருட்சகோதரர் P. இன்னாசிமுத்து S. S.J. என்பவர்களி டம் பண்டித வித்துவான் பரீட்சைகளுக்குப் பாடங்கேட்ட போதே கற்றுத் தெளிந்த இலக்கண அறிவினாலும் - பின்னர் சென்னைப் பல் கலைக்கழக வித்துவான் முதனிலை - இடைநிலைத் தேர்வுகளில்

Page 18
28
சித்தியடைந்த தன்மையினாலும் இவ்வாறான செய்யுள்களை எழு தும் ஆற்றல் பெற்றாரென்று சிலர் குறிப்பிடக் கேட்டிருக்கிறேன். ஆனால் மேற்கூறிய பரீட்சைகளிற் தேறிய பலரையானறிவேன். செய்யுள் செய்யுந் திறமையில் அத்துணைச் சிறப்பாகப் பிரபலியம் அடையவில்லை. உள்ளொளியினால் வெளிப்படும் ஆதர்சம் கவிதை.
1939 ம் ஆண்டில் மட்டுதகரிலிருந்து விலகி, மன்னார், அடம்பன் விடத்தல்தீவு, பருத்தித்துறை, கரவெட்டி உயர்தர தமிழ் வித்தியால யங்களிலும், யாழ் சென் சாள்சு மகா வித்தியாலயத்திலும் அதிபராக விருந்து அரும்பணியாற்றியவர். இறுதியாக நெடுந்தீவு மத்திய வித்தி யாலயத்தில் அதிபராயிருந்து பெருஞ்சேவை செய்து 1971 ல் மதிப் புடன் ஒய்வு பெற்ற போதே, அவ்வித்தியாலயத்தின் 95 வது நிறைவு விழாமலரை வெளியிட்டு. அவ்வூர் மக்களாலும் கல்வியதிகாரிகளா லும் பெரிதும் பாராட்டப் பெற்றவர்.
1954 ல் " மாதா மலர் மால்ை” யென்று கவிஞர் வெளியிட்ட கவிதைநூல் தவத்திரு தனிநாயக அடிகள் போன்ற பல குருமணி களாற் பாராட்டப் பெற்றுக் கத்தோலிக்கர் மத்தியிற் பெரும் புகழ் ஈட்டியது. பாத்திமத் தாயைப்பற்றி அந்நூலில் எழுதிய செய்யுளில் (இல. 142) ஞாயிறு முதல் சனிவரையும் உள்ள நாள்களை மாதா பேரில் ஏற்றிப்பாடிய வனப்பு நவில்தொறும் இன்பம் பயப்பதாகும். அச் செய்யுள்,
திகழுசெஞ் ஞாயிற் றுடையினைத் திங்கட்
திருப்பத மலரைச்செவ் வாயை மகிழவற் புதனை வழங்கிய தாயை வாய்ந்தவி யாழனின் வனப்பைப் புகலுமெய்ஞ் ஞான வெள்ளியைச் - சனியைப்
போக்கியே நன்மை ளாக்கி இகபர மிரண்டும் ஏற்றுபாத் திமத்தை
இனிதுறக் காண்பதெந் நாளோ?
எனபது பாடாண்டிணை வாழ்த்தியல் துறையும் - காஞ்சித் திணைகையறுநி லைத் துறையும் அமையக் கவிபாடுவது இவருக்குக் கைவந்த கலை யாகும். பாடாண்டிணை வாழ்த்தியல் துறையில் எத்தனையோ வந், ஆயர் வண. குருமணிகள் அருட்கன்னியர் திலகங்களை யும் முன்னாள் அமைச்சரும் உலக சட்ட மேதைகளில் ஒருவரு மாகிய ஜீ. ஜீ. டொன்னம்பலம் முன்னாள் உபசபாநாயகரும் - தற் போது நல்லூர் பா. உறுப்பினராகவிருக்கும் சட்ட மேதையுமாகிய

29
மு. சிவசிதம்பரம் - அமைச்சர் தொண்டமான் - தமிழக அமைச்சரி நெடுஞ் செழியன் போன்ற அரசியல் தலைவர்களையும் - தமிழகப் பெருங்கவிக்கோ வா. மூ. சேதுராமன் எம். ஏ. போன்ற பேரறிஞர்க ளையும் பற்றிப் பாடிய கவிதைகள் பல.
காஞ்சித்திணை கையறுநிலைத் துறையில் தவஞ் செய்த தவம் போன்ற இவரது அருமைத் தாயார் மீதும் - மகாத்மா காந்தி பிரதமர் D. S. சேனநாயக்கா - வித்தியாதிபதி H. S. பெரேரா முத் தமிழ் வித்தகர் விபுலானந்தர் - புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை மட்டுநகர் ஆயர் காஷ்டன் றொபிஷே - யாழ் ஆயர் ஜே. எமிலியானுஸ் பிள்ளை - நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் - தனிநாயக அடிகள் முகாந்திரம் தி, சதாசிவஐயர் - ஈழகேசரி அதிபர் நா. பொன்னையா நெடுந்தீவின் நேசதலைவர் சுப்பிரமணியர் நாகேந்திரர் போன்ற மகான்கள் மீதும் பாடிய சரம கவிகளோ அளப்பில - இவைகளைப் பத்திரிகைகளிற் கண்ட பொதுமக்கள் பலர் இன் நும் படித்துப் பாராட்டுவதைக் கேட்கிறோம். தற்காலம் அந்தியேஷ்டியின் போது பாடப் பெறும் 1500 க்கு மேற்பட்ட நினைவு மலர்களில் ஐம்பதி னாயிரத்துக்கு மேற்பட்ட மரபுக் கவிதைகள் எழுதித் தள்ளிய பெரு மையால் “ கைக்கூர் மழுங்கக் கல்வெட்டுப் பாடிய கவிமணி’ யென்றும் அறிஞர்களால் பாராட்டப் பெற்றார்.
பத்திரிகைகள் காலத்துக்குக் காலம் நடத்தி வந்த கவிதைப் போட்டிகள் பலவற்றில் பரிசு பெற்ற வரலாறுகளை விரிப்பிற் பெரு கும் - 1935 ல் அவருக்கு வயது 20. அந்த ஆண்டில் வீரகேசரி பத் திரிகை மூலம் திரு சாலி முகமது சுலைமான் (2ம் குறுக்குத்தெரு 169 கொழும்பு) என்னும் முஸ்லீம் பெரியார், புடைவை பற்றி ஒரு கவிதைப் போட்டி நடத்தினார். கன்னிக் கவிதையாக 5 வெண்பாக் கள் பாடி முதற் பரிசைத் தட்டிக் கொண்ட ஆர்வமே இந்த 82 வயதிலும் உலகளாவிய கவிதைப் போட்டிகள் இருபதுக்கும் மேலா கப் பரிசு பெறக் காரணமாயிருந்ததெனலாம்.
கவிமணியவர்களுடைய பாடல்கள், இந்தியக் கவிஞர்களுடைய, கவித்திரட்டுக்களில் வெளிவந்திருப்பதோடு ஒரு சில பாடல்கள் ஆங் கிலத்தில் மொழிபெயர்க்கப் பெற்றிருப்பது ஈழநாட்டுக்குப் பெருமை தருவதாகும். அறிஞர் அண்ணாத்துரையவர்கள் சென்னையில் நடாத் திய "பூம்புகார்’ கவிதைப்போட்டியில், பரிசும் பாராட்டும் பெற்ற கவிஞர் பாக்களின் தொகுதியில் "" தேன்துளிகள் " என்னும் பகுதி யில் பண்டிதஞானி இலங்கை யெனும் பெயரில் இவரது கவியும் ஒன்றுண்டு . தமிழக த் தி ல் பெருங்கவிக் கோகலாநிதி வா. மு

Page 19
30
சேதுராமன் எம். ஏ. அவர்கள் உலகளாவிய தேர்வில் பங்குபற்றிய 3000 ம் கவிஞர்களில் சுமார் 300 கவிஞர்களைத் தெரிவு செய்து அன்னார் பாக்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து Tamil poets today என்னும் நூலைத்தொகுத்து அமெரிக்க சான்பிரான்சிஸ்கோ தகரில் நடந்த உலக கவிஞர்கள் ஐந்தாவது மகாநாட்டில் அரங் கேற்றியிருக்கிறார். அந்நூலில் இடம்பெற்ற 5 ஈழநாட்டுக் கவிஞர் களில் எங்கள் " ஞானியும் " ஒருவரென்பது குறிப்பிடத்தக்கது. பரி சுமா நகர்ப்பாரதி றுாற்றாண்டு விழாவிலும் மரபுக் கவிதைகளில் முன்னிடம் வகித்துச் சிறப்புப் பரிசில் பெற்றமையும் குறிப்பிடத்தக் கது. இவர் பங்குபற்றிய மாநாடு வானொலிக் கவியரங்குகள் பல விரிக்கிற் பெருகுமென்றஞ்சி விடுத்தாம்.
எவருடனும் பழகுதற்கு இனிமையானவர். நல்லுளம் படைத்த நாவலன். அவருடைய சின்னஞ் சிறு வரையாடலிலுந் தமிழ்ப் புலமைத் துளிகள் சிந்தும்: புன்சிரிப்பும் பொன் மொழியும் அவருடைய சித்தி யின் இரு கண்கள். பண்டைய இலக்கியங்களில் இவருக்குள்ள புலமை இவருடைய செய்யுள் வரிகளிலே இழையோடும். நயம்பட உரையாற் றுவதில் நாடறிந்தவர் அறிவும் ஆற்றலும் பண்பும் நிரம்பிய ஆசிரிய Lo Gooi .
"அலக்கியம் யாரையுஞ் செய்யா அடக்க வாளன்’ என்றும் 'உள்ளத்தால் உயர்ந்த ஓர் கவிஞர்' என்றும், முதுபெரும் புலவர் களாற் பாராட்டப் பெற்றவர். சாதிமத பேதம் பாராது, தனைய டைந்தவரைத்தன் மேலாக்கும் நினைவுபடைத்த நேர்மையானது ஆசான் என்றும் இலங்கை யெங்கும் பரந்து கிடக்கும் அவரது பழை மாணவ சமுதாயம் பாராட்டுவதையுங் கேட்டிருக்கிறேன்.
சமய அறிவில் இரண்டு டிப்பிளோமாப் பட்டம் பெற்ற இவர் நெடு கிழக்கு கி. மு. சங்க செயலாளராகவும், கிராமச் சங்க உறுப் பினராகவும் இருந்து ஆற்றிய சமய சமூகப்பணிகள் மறக்க முடி யாத மாண்பு பெற்றன.
அடியேனுங் கவிதை வட்டத்திற் கால்வைக்கக் காரணமாக இருந்த கவிஞரை நான் என் இதய கமலத்தில் என்றும் போற்று கிறேன். மூதறிஞருடைய கைவிரல்கள் இன்னும் பல இலக்கிய மலர் களைத் தமிழுலகுக்குத் தந்துதவவேண்டுமென இறைவனை இறைஞ் சுகிறேன்.
கவிஞர் அவர்களின் பாரியார் திருமதி நாகம்மா றெஜினா அவர்களும் உயர் வித்தியாலயங்களில் ஆசிரிய உப அதிபர் பதவி

31
தாங்கிப்பல்லாண்டுகாலம் பணியாற்றிய பண்பு நிறைந்த ஓர் ஆசிரியை. இலக்கிய இதயம் படைத்த அம்மையார், கவிமணி இயற்றும் பாடல்களுக்கு இசையமைத்துப் பாடுவதினால் கவிஞரின் கவிதா சக்தி மேலும் உயர்வடைய வாய்ப்பாயிற்று. "தக்கார் தகவிலர்" என்பதை அன்னார்தம் மக்கள் இருக்கும் உயர்நிலையை நோக்கி al600rpfarth.
தமிழ் நாட்டுப் புலவர் வேந்தனாகிய பெருங்கவிக்கோ கலாநிதி வா. மு. சேதுராமன் M A. அவர்களுர், அவருடன் பிரபல கவிஞர் திலகங்களும் எழுவர் வீடுதேடி வந்து உண்மைப் புலமை தேர்ந்து பாராட்டும் திறமை பெற்ற ஞானியை நாம் எவ்வாறு வாழ்த்தினா அம் பொருந்தும்.
** மகத்துவம் நிறைந்த மனிதரி யாரையும் பிறந்த ஊரார் பேணுவதில்லை " என்று ஆஸ்தானக் கவிஞர் கண்ணதாசன் கூறியது சிந்திக்கத்தக்கது.
சீருந் திருவுங் கல்வியும் செழித்த வடமராட்சி தென் அல்வையில் திரு வல்லிபுரம் சின்னப்பிள்ளையின் ஏகமகளாகப் பிறந்து நெல்லியடி அரசினர் பாடசாலை யாழ்/ வேம்படி மகளிர் கல்லூரிகளில் ஆரம்பக் கல்வி பயின்று - இளவாலைக் கன்னியர் மடத்து ஆசிரிய கலாசாலையிற் பயின்று - மட்டக்களப்பு உப்போடை புனித தெரேசா சாதனா பாடசாலை தொட்டு யாழ்/ மயிலிட்டிக் கன்னியர் மடம் ஈறாகப்பல பாடசாலையிற் படிப்பித்து ஓய்வு பெற்றவர்.
சொல்லின் செல்வன் வித்துவான் ச. அடைக்கலமுத்து
"தேவன் தம்மை நோக்கி இரவும், பகலும் கூழ்ப்பிடுகிற வர்களாகிய தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்
களுக்கு நியாயஞ் செய்யாமலிருப்பா ரோ?
லுாக், 18 : 17

Page 20
s2
செய்யுந் தொழிலிலே தெய்வத்தைக் கண்ட தம்பதிகள்
வடமராட்சிப் பெரும் பரப்பிலே கல்விப் பணியும் கத்தோலிக்க மறைப்பணியும் தளர்விலாது இயற்றிய இருபெரும் கலைக்கூடங்களாக விளங்கியவை வதிரி தெற்கு றோமன் கத்தோலிக்க பாடசாலையும், வதிரி திருஇருதயக் கல்லூரியுமாகும்ென்றால் மாறுபட்ட கருத்துக்கு இடமேயில்லை.
இத்துணைப் பழம் பெருமை வாய்ந்த வதிரி தெற்கு றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை (இன்று வதிரி திருஇருதயக் கல்லூரியுடன் இணைந்துள்ளது) க்கு 1944இல் தலைமை ஆசான் என் னும் தகவுறு பணிபுரியப் பொது முகாமையாளரால் பணிக்கப்பட்டார் திருவாளர் (கே. ரீ. என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும்) கே. ரி. ஞானப்பிரகாசம் அவர்கள். தனியே அவரை மட்டும் அனுப்பி வைக்கவில்லை. அவர்தம் துணைவியர் றெஜினா நாகம்மா அம்மை யாரையும் இணைத்தே அனுப்பிவைக்கப்பட்டார். இவ்வரிய வாய்ப்பு 1945 இல் நிறைவுபெற மீண்டும் 1948இல் அதேபதவியில் துணைவி யருடன் நியமனம் பெற்றார். இக்காலவெல்லை 1951 இறுதிவரை நீடித்தது. இவ்விரு வேறுபட்ட காலகட்டங்களிலே நம்பதி யில் ஆறு ஆண்டுகள் கல்விப் பணிக்காகத் தம்மை அர்ப்பணித்து ஆற்றிய அளப் பரும் சேவைகளை உளத்துவகையோடு மீட்டிங்கு புகல்வதே நமதருங் கடனாயமைந்துள்ளது.
1944 - 1951 ஆண்டுகட்கிடைப்பட்ட காலம் இரண்டாம் உல கப்போரின் இறுதிக்கட்டமான காலம். இவ்வித இடர்மிகு காலத்திலே, தான் இன்று மணவினையின் மணிவிழாக் காணும் தம்பதியினரின் சேவை நமக்குக் கிட்டியது.
அந்நாள்களில் க. பா. த. (J.S.C.) சி.பா. த, (S.S. C.) என்னும் இரு வகுப்புக்களுமே சாதாரணமாகக் கல்விக் கூடங்களின் உயர் இறுதி வகுப்புக்களாயிருந்தன. வதிரி தெற்கு றோ, க. பாடசாலையிலும் இவ் வகுப்புக்கள்நீண்டகாலமாகநிலைபெற்றிருந்தனவென்றுவரலாறு கூறும் இன்று பரீட்சை முடிவுகளைப் பத்திரிகைகள் வாயிலாகப் பகிரங்கப் படுத்திப் பாராட்டுகின்றனர், அக்காலத்தில் இவ்வாய்ப்புக் கிடைத்தி

331 Voo- – : خنة هي" * * *
லது. ஆனால், அன்று தேர்வு முடிவுள்வுனியசிடன் அவ்வுப்பாட
சாலைகளில் கேட்கும் வெடியொலிக்ள்ைக் ஆாடு ه پخواj முடிவு களை மற்றவர்கள் மட்டிடக் கூடியதாயிருக்குவ்ேதிரி இதற்குற்ோக, பாடசாலையிலும் வெடியதிர்வுகள் வெகுவரவாலித்தனவென்றால்
அதற்குக் காரணியாயமைந்தவர்களில் ஒருவரழ்விங்கிய பெருமை இன்றைய விழாநாயகர்க்குரிய தெள்பதில் இரு வேறுபட்ட கருத்திற்
விடமேயில்லை.
இன்று இப்பதி யிலே தமிழ்மொழி கைவந்த ஆசிரியர் திலக்ங்" களாகப் பலர் மிளிர்கின்றார்கள் என்றால்.அதற்கு வித்திட்டபெருமை இவர்களையே சாரும். அக்க்ாலையில் கல்விக்கூடங்களுக்கிடையே a do e a r v tb, சுகாதார வாரமென விழாக்கள் கொண்டாடப்படும். அவ்விழாக்களிலே பேச்சு,பாட்டு, கும்மி, கோலாட் நடனம், தாடகம், கண்காட்சி என்பவற்றிடையே பேர்ட்டிகள் ,ف - நடைபெறும்,1945ஆம் ஆண்டு வடமராட்சிப் பாடசாலைகளிடையே நடைபெற்ற சுகாதார வாரவிழாவில் வதிரி தெற்கு றோ. க. பாட சாலை பத்து முதற் பரிசுகளைத் தட்டிக்கொண்ட தென்றால் அது விழாநாயகனின் வியத்தகு சேவைக்கு நயத்தகு எடுத்துக்காட் டாகும். அத்நாள்களில் இப்படியும் பேசுவர். 'மனைவியார் விஜய பொறுப்பாளர் நிலையப் பொறுப்பேற்க் பண்டித்ர்ஞானி பாட்டெழுத பறுநாந்து குரல் வளம் சேர்க்க, அக்னெஸ் இராசம்மா ஆர்மோனிய மிசைக்க வதிரி ஆர், சி. வாகைசூட வேறென்ன வேண்டும்."
1948 மாசித் திங்களில் இலங்கை சுதந்திரம்பெற்றதென்பது சில, அருணங்களில் பலர் மனதை விட்டகன்றாலும் மரதன் ஒட்டற் தொடர்: பாக நடைபெற்ற கவிதைப் போட்டியிற் பண்டிதர் ஞானி பரிசுபெற்று , மரதன் புலவர்,என்னும் மகுடம் சூட்டப்பெற்றமையை இலகுவில் மறந்துவிடமுடியாது. அந்நிகழ்வை அலங்கரிக்கு முகமாகத் திருவாளர் வி. ஏ. பிலிப் அவர்களைச் செயலாளராகக் கொண்டி விழாக் குழு, வொன்று பரந்த அளவில் பாராட்டு விழாவொன்றை நடத்தி அந், நாளைய ஊர்காவற்றுறையின் பாராளுமன்றப் பிரதிநிதி ஆசிரியர், q f . F7dÄ). தம்பிஐயா அவர்களைக் கொண்டு பொன்னாடை போர்த் டுப் பொற்கிழி வழங்கிச் சிறப்பித்தமையெல்லாம் பசுமரத்தாணி போன்று நெஞ்க்சவிட்டகலா நினைங்லைகளாகும். ' , '
கவித்துவம் நிறைந்த ஞானபண்டிதனெனும் கவிக்குயில் பாடாத பாட்டுமொரு பாட்டாமோ? இல்லறத்தோர்க்கும் துறவறத்திோர்க்கும்.

Page 21
34.
ஏற்படும் எவ்வித நிகழ்வுகளிலெல்லாம் ஏற்புடைக் கவிதைகள் அகச் சுவையும் இகச்சுவையும் மிளிர அள்ளிச் சொரிந்து அகமும் முகமும் மலர வாழ்த்திடும் கைவண்ணத் திறன்படைத்த கார்மேகக் கவிவஸ்ளல் பாடிப்புனைந்திட்ட பாவெல்லாம் சேர்த்தடக்க வாரிதியுமாற்றாதே. மணவிழா மங்கல வாழ்த்தென்றால் அவை வகைக்கடங்கா. வெள்ளி விழா, பொன்விழா வைரவிழா, பவளவிழா, நூற்றாண்டு விழா துறவு பூண் தூயவிழா அப்பப்பா, இப்படி எத்துணை விழாக்கள். அத்தனை யிலும் இவர் கவிதை இடம்பெறவில்லையென்றால் விழாவிலோர் குறை யுண்டென்பர்
1987இல் யான் அப்பொழுது ய ழ், வதிரி திரு இருதயக்கல்லூரி யில் அதிபராகப் பணிபுரிந்த வேளை அனைத்துலகத் தமிழாராய்ச்சிக் கவிஞர் மாநாட்டிற்கெனக் கவிதைபாடி அதிலே கீர்த்தி பெற்று அக்கவிதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, கலிபோனியா மா நாட்டில்நுாலுருவாய் அரங்கேறியது படிக்கப்பெற்றுப்பாராட்டும் பரிசி லும் பெற்றார் பண்டிதர் ஞானி. அவர்தம் கவிதையின் கவினுறு மாண்பை மதித்து, அவர் புகழை ஊரறியவும், அவரிடம் கல்வி பயின்ற மாணவன் என்ற நன்றியுணர்வைக் காட்டவும் கல்லூரியின் சார்பில் பாராட்டு விழாவொன்றை ஒழுங்கு செய்து, கல்லூரியின் முன்னாள் அதிபர் அருள்திரு ஜே. ஏ. கருணாகரர் அடிகனாரைக் கொண்டு பொன்னாடை போர்த்திப் பொற்கிழி வழங்கிய நிகழ்வு பசுமையாக இன்றும் சிற்தையில் களி தடம் புரிகின்றது.
யாழ். மறைமாவட்டக் கத்தோலிக்க ஆசிரியர் சங்கப் பொதுச் செய லாளராகக் கடமை புரிந்த காலை கத்தோலிக்க ஆசிரியர்களில் பல் வேறு துறைகளிலும் திறமை காண்பித்து, தம் மறைக்கும் ஆசிரியர் சமூகத்திற்கும் மங்காப் புகழீட்டித் தந்தோரை ஆண்டுப் பொதுக்கூட் டங்களிலே அழைத்துக் கெளரவிப்பது என்ற முடிவிற்கிணங்க, ஆண்டுப் பொதுக் கூட்டத்திலே ஆயர் பேரருட் கலாநிதி வ. தியோகுப்பிள்ளை ஆண்டகையால் பொன்னாடை போர்த்திப் பொற்கிழி வழங்கப்பட்ட பேராசான் பண்டிதர் கே. ரீ. ஞானப்பிரகாசர் அவர்கள் ஆவர். அன் னார் பெற்ற பட்டங்கள் எத்துணையென்றியம்புவது? பெற்ற பட்டங் களாற் பெருமை பேசாத பெருந்தகை,
அந்தநாள் ஞாபகம் இன்னும் என் மனத்திரையில் ஒடிக்கொண் டிருக்கிறது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்தோராம் ஆண்டு ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள். யாழ், மறைமாவட்டக் கத்தோ விக்க ஆசிரியர் சங்கம் தவத்திரு தனிநாயக அடிகளாருக்கு அஞ்சலி,

3S
செலுத்தி மாட்சி நயப்பு மலர் வெளியிட்ட தினம். ஆசிரியரி சங்கத் தின் பொதுச் செயலாளராக நான் பணிபுரிந்தவேளை, அஞ்சலி நிகழ் வின் ஒரங்கமாகக் கவியரங்கொன்றை ஒழுங்கு செய்திருத்தோம். எனது குருவும் பண்டிதர் வித்துவானுமாகிய திரு. கே. ரீ. ஞ்ானப்பிரகாசம் அவர்களைக் கவியரங்கின் தலைமைப் பதவியைத் தாங்கக் கேட்டிருந் தோம்" அவரும் அதற்கு இசைவு தந்திருந்தார். விழாவின் பிரமுகர்கள் மேடையைவிட்டிறங்கி முன்னணியில் அமரிகின்றனர். கவிஞர்கள் மேடையை அலங்கரிக்க கே. ரீ. அவர்கள் இறைவணக்கத்தையும் தலைமைக் கவிதையையும் மலரீமாரியன்ன கவிமாரியாற் சொரிந்து நிற்கிறார். கன்னியாய் வெந்நீரூற்றுப் போலக் கனன்றெழுந்த கவி யொருவர் கதித்துக் கொதித்தெழுத்து பண்டிதர் வித்துவானென்று பாரி னிலே பட்டங்கள் பெற்றவர்யாருமில்லை என்று பாடத் தொடங்கி விட்டார். கன்னியா வெந்நீரூற்றை உவமித்த கவிவேந்தன் "கவி பாடிப் பரிசுபெறான் மனம் போலொன்று" நயம்படக் கூறியதுதான் எனது ஞாபகத்திற்கு வந்தது. கவியரங்கு வசையரங்காய் மாறிடுமோ என்ற கவலை எம்மை ஆட்கொண்டது. இத்தனைக்கும் வந்தவினை தலைமைப்பதவி தனக்கில்லையே என்ற ஆதங்கமே.
தலைமைக் கவிஞரின் முகத்தை உற்று நோக்குகிறேன். மாற்றுக்
கவி சீற்றமுடன் மேடையிலே முழங்கு மென்று பார்த்திருந்த மக்கள்
வெள்ளம் நோக்க மனத்தை மாற்றிவிட்டார் அவை முதற் கவிஞர் அரும்பியதோரி புன்னகை அவர் வதனத்தில் 'இடுக்கண் வருங்கால் நகுக"என்ற வள்ளுவன்வாக்கிற்கோர் இலக்கணமாய் அமைந்திருந்தார்.
காடேகுவாயென்று கைகேயி கூறிய வாசகம் உரைக்கக்கேட்டதும்" "அப் பொழுதலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா". என்று கம்பன்
இராமனைக் கண்டவாறு யானும் தலைமைக் கவிஞனிற் கண்டேன் அப் பொழுது அவர் வாய்வெடித்த அற்புதக் கவிதை ஈதோ.
* கனிமதுரத் தேம்பாவணிக் காவியமோர் துறவி;
கற்று வல்லோர் போற்றும் ஒப்பு - லக்கணமோர் துறவி; இனிய "தமிழ் ஆதிமொழி" என்றவனோர் துறவி;
"இறைவன் பக்தி மொழி யென்றே ஏற்றினனுந் துறவி.
கரவொலி அவையிருந்து ஆர்ப்பரிக்கச் சலசலப்போய்ந்து கவியரங்கு களைகட்டியது. கவிஞரின் பெருந்தன்மையினை என்னென் றெடுத்தியம்பு
1953 ஆம் ஆண்டு ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல் லூரியில் ஆசிரியப் பணிபுரிய யான் மாற்றம் பெற்று வந்த காலம், கல்லுரி ஆரம்பமான முதற்றவனை முதலாம் நாள், புதிதாகக் கல்

Page 22
36
லூரியிற் கற்க அனுமதி பெறுவோர் கல்லூரி எழுதுவினைஞரால் அழைத்துச் செல்லப்பட்டு வகுப்பாசிரியரிடம் அறிமுகப்படுத்தப்படு வது கல்லூரி மரபு. நான் நாலாம் வகுப்பு ஏ பிரிவின் வகுப்பாசிரி யன். எனது வகுப்பறையை நோக்கி எழுதுவினைஞர் அவர் பின்னே ஒரு மாணவன், இருவருக்கும் பின்னால் இன்னுமொருவர் வெளியே நிற்கிறார். எழுதுவினைஞர் மாணவர் பெயர், சேர்வு இலக்கம் அவ
ருக்குரிய இல்லம் முதலியவை அடங்கிய அதிபரின் கையொப்பத்து டனான அனுமதிப் பத்திரத்தை என்னிடம் தந்து வெளியே செல்ல தம்பியென்றொரு அழைப்பு வெளியிலிருந்து கேட்டது. வெளியே வந் தேன் எனது குருநாதர் பக்கத்துப் பள்ளியின் முதல்வர் அவர்தான் திருவாளர் கே. ரி. ஞானப்பிரகாசம். உங்களையெல்லாம் உருவாக்கி னேன். என்மகனை இன்று உன்னிடம் ஒப்படைக்கின்றேன் என்றார், அப்பொழுதுதான் அறிந்தேன் வந்த மாணவன் எனது குருவின் பிரிய மைந்தனென்று.
பக்கத்துப் பாடசாலை அதிபர் பத்திரக்கில் குறிப்பெழுதி அனுப்பி முடிக்கக்கூடிய பணியாயிருந்தாலும் பதவியையோ பட்டத்தினையோ பெரிது படுத்தாது படியிறங்கித் தனது 17 வைனிடமே வந்து 'செய்யுந் தொழி லே தெய்வ"மெனக் காட்டிய பண்பாளன் பண்டிதர் கே. ரி. என்று சொன்னால் அதை மறுக்கவோ, மறைக்கவோயாருளர்?
' தோள்கண்டார் தோளே கண்டார்,
தொடு ‘சுழல் கமல மன்ன தாள் கண்டார் தாளே சுண்டார்;
தடக்கை கண்டாரும் அஃதே" மிதுலாபுரி நகர் மீது வலம் வந்த இராமனைக் காணத் திரண்டெழுந்த மக்கள் கூட்டம் கண்டகாட்சி கம்பனின் கைவண்ணத்தில் மேலே மிளிர்கிறது. அதனுடன் ஒப்பநோக்கின் நமது மணிவிழா நாயனிகன் கவிவண்ணம் கண்டார் அதனையே ஒப்பிட்டுக் காணக் குணமென்னும் குன்றைக் கண்டு மலைத்தொருகால் நோக்கா நிற்க, மாறுபட்ட கருத் துளுடயோர் இளமுறுவல் நகைநோக்க இவர் தம் வடிவினை முடியக் கண்டார் யாரே என்று கம்பருடன் யாமும் திகைக்கின்றோம்.
மணவினையின் மணிவிழாக்கண்ட மங்கை நல்லாளுடன் மாசிலா சற்புத்திரர் சுகங்கண்டு பெருமிதமாய்ப் பேசரிய கவிதை நயம் சிந்தும் காப்பியத்தின் கதாநாயகனே, வேண்டுதல் வேண்டாமையிலான் அடி பணிந்து வேண்டுவன யாவும் நிறைவாகப் பெற்று வாழ்க வாழ்கவென வாழ்த்தி அமைகிறேன்.
நன்றி - வணக்கம் கரவெட்டி மாணவன் சி, dat Gipciasi)

முற்றத்தில் மல்லிகை பூத்துச் சொரிகிறது.
கடதாசிப் பூக்காட்டின் நடுவே ஒரு மல்லிகைப் பந்தல், அது திங்கள் தோறும் மலர்ந்து மணம்பரப்பி ஆண்டவன் பாதங்களிற் சரமகவியாகச் சொரியப் படுகின்றது.
கவிமாமணி க. த. ஞானப்பிரகாசம் அவர்கள் ஒரு கிறிஸ்தவர், வீரமாமுனிவரின் வழிவந்தவர். அவரொரு பொற்கிழிப் புலவர் ஆனால் தருமியல்லரிவர். புலவரது பல்துறைக் கவிதைகள் ஞானக் களஞ்சியமாகத் திகழ்வன. அவற்றினைப் பேரறிஞர்களும் பெருங்கவிக் கோக்களும் எடைபோட்டுரைத்த பின் சாதாரணன் மாற்றுரைக்க முனைவது ஒரு சிறு பிள்ளைத் தனம்.
புலவர் பெருமகனாரின் சரம கவிதைகள் பலவற்றைக் கேட்டும் படித்துமிருப்பவன் யான்.
மறைந்த மன்னுயிரிகட்கு எல்லாம்இலகுவாகக் கவிதையில் அமரபத மளிக்கும் திறனை என்னாற் புகழாதிருக்க முடியவில்லை.
சகல சமயங்களையும் தத்துவரீதியாக ஆராய்ந்து உணர்ந்த ஞானம் இவரிடம் கைவரப் பெற்றுள்ளமையால் இக் கவிவல்லானை "ஞானி’ என அன் பொழுக அழைக்கின்றோம்.
சைவர் எனப் பெருமை பேசிடும் நாம், கிறிஸ்தவ கவிஞரான ஞானியிடம் சில தத்துவங்களைக் கேட்டறிய வேண்டியவர்களாயுள் ளோம். அவ்வளவு சமய சன்மார்க்க ஞானம் அவருக்கே உரித்தானது.
அக்கால அரசர்கள் தம் மெய்க் கீர்த்திகளைக் கல்வெட்டுக்களில் பொறித்துப் போயினர். அந்த வகையிலே மானிடர் இறந்தும் இறவாத புகழ்தனைக் கவிதையாக்கித் தருவதிலே ஞானிக்கு ஒப்பாக, யாம் எங்கும் காண்கிலோம். சரமகவி எனப்படும் இக்கவிதைகள் ஆய்வில் தொகுத்துப் பகுத்துப் பார்க்குமிடத்து, தெய்வம். நாடு- கீர்த்தி இரங்கல் என்று தொகுத்துக் காக்கவேண்டியது, புலவர். பெருமக்களின்,
கடனேயாகும்.
கவிம 7 மணியவர்கள் ஊர் மட்டத்திலன்று உலகமட்டத்திலேயே புகழப்படும் புலவராவர். ஒட்டப்போட்டியன்று பாட்டுப்போட்டிஅதாவது கவிதைப்போட்டி என்றாற் கண்துஞ்சாக்கவிஞரிவர்.

Page 23
\“ 3S
இலக்கணக் கவிஞர் க, த. ஞானப்பிரகாசம்.அவர்களின் ஆக்கங்கள னைத்தும் செய்யுள் இலக்கியங்களே, உதாரணத்துக்குக் குறிப்பிட வேண்டுமாயின் அன்னாரின் 'பாரதி பிள்ளைத் தமிழைக்" கூறலாம்.
எனவே கடதாசிப் பூக்காடாய் ஆகிவிட்ட கவிதாஉலகில் இப் பொற்கிழிப்புலவரின் மல்லிகை, வீட்டில் மணக்காது நாட்டில் மணக்கும்
இறுதியாக வாழ்த்து, அன்னாரின் தாலாட்டுப் பாடல் வார்த் தைகளிலே.
நம் தமிழாம் பூங்காவில் கமழ் மலரின் மென்மையாக்கிக் காதினிலே செந்தேனைப் போல் இனிக்க வார்த்து 'சரம கவிதைக்கோர் தாரகை” யான கவிஞன் ஞானி புகழ் விளங்க,
இன்று திருமண மணிவிழாக்கா னும் தம்பதிகள் இன்னும் பல்லாண்டு வாழ்க
வணக்கம்.
"சுகனா' அல்வை யூரன்
LLLLSLLLLLLSSMSLSLSLSLMLSSLSLSSLSLSSLSiLiLiLLTTSLLSSLSLLLLSLLLMiLSiiiLiLiLiSMLiiLiLiLiSMiLiiLiiiLSiMMiMMLSLLiiiLSTiMiLiiiiiiiLLLSiiiLiiLiiiLiiLiiMSMiMiSiMLSSLMiLSLLiiiLiiLiLiSLSLTSSiSiLiiLiTiLLieiiiLiLiiiiiiSiSiiSiiSeSeieMSLL
'மனிதனை மேன்மைப் படுத்தவே கிறிஸ்து எம் மதில் எழுந்தருளினார். ஆகையால் அவரால் மனிதன் எல்லாத் துறைகளிலும் உயர்வடையலாம். ஆன்மசாந்தி அளிப்பதுடன் அவனுடைய இலெளகீக பண்பாட்டைச் சேர்ந்த யாவற் றிலும் கிறிஸ்துவில் அவனுக்குயர் வுண்டு.
ஜே. ஸ்லிேயானுஸ்பிள்ளை முன்னாள் யாழ், ஆயர்
LSLSLYSLLLLLLLS LLLSLYS LLSLLS LLSL MLSSLLLLSLLLLLLSS LMM LSLSLLTLSTMMSLT S0MSTMSLMTSLTMTSTMTLTLSLTLSLTSLTMSLMLSSTLSSTLTLSTTMTMSLMMMSTeS MSMMSTSLTLL LLL LLSLLLS SSTTTSLLLTTTTTSLLL

39. "இராணி மனை ?
“OL//fair பூச்சொரியும் கொன்றை மரமொன்று வாயிலில் நிற்கும் வீடுதான்-புலவரின் வீடு ’ என்றான் பிற்காலப் புலவனா கிய சிறுவன் ஒருவன், அதேபோன்று - தேங்கனி மாமரமொன்று, வருவோரை வரவேற்க, நிற்கும் வாயிலை உடையதுதான் இராணி மனை' எனும் வீடு-என-எவரும் எளிதாக வழிகாட்ட வாய்ப்பா பமைந்ததுதான் எமது அல்வையூர் பண்டிதர் ஞானி'யின் பண்புறு ** இராணி மனை " எனும் இல்லம்.
மாலிசந்தி - வியாபாரிமூலை வீதியில் அமைந்த, அடையா நெடுங் கடவையையுவடய இம் மனையிலே-எக்கொடுமை வரினும் - LTLSS LCH TTTTL LSLTT TTTSSSL0LTTTLLLLLLaL SSAS TTLTLS aaLLaT TCTLTLT பேறுபெற்று வாழ்ந்து வருகின்றார். ஆசான் திரு. க. த. ஞானப் பிரகாசம் அவர்கள், இவர்களுக்கு மூவிராணிகளும், முத்தாசன்சளு மாக, பிள்ளைகள் அறுவர் உளர். பெண்மக்களின் நாமாவளியின் சுருக்கமாகவே இம்மனை " இராணி மனை' எனும் பெயரைப் பெற்றதெனலாம்.
மட்டக்களப்பு நகரின் கண்ணமைந்த ஆசிரிய பயிற்சிக் கல்லூரி யிலே ஞானப்பிரகாசரும் நாகம்மா அம்மையாரும் சந்தித்து, காதல் திருமணம் புரிந்து, அல்வை யூருக்கு மீண்டவேளை ஒரு குடிசையாக இருந்த இந்த "மா"மனை , காலப்போக்கில்-சிறுகக் கட்டிப் பெருக வாழ்ந்ததன் பேறாக - பெரியதோர் அழகிய இல்லமாயிற்று.
* கற்றார்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு " என்பதற் கிணங்க ஆசிரிய தம்பதிகளின் ஆசிரிய சேவையின் நற்பணியினால் அவர்களின் புகழ் தானா திசைகளிலும் பரவத் தொடங்கியது. கல்வி கரையிலத' என்பதை யுணர்ந்த ஞானி’ அவர்கள் பண்டிதர் பரீட் சையில் தேறியதோடு நிற்காது “ தமிழ் வித்துவான் " பரீட்சைக்கும் ஆயத்தம் செய்ய அருமையான-ஒப்பான-சூழலையும் உடையதாய் "" இராணி மனை " அமைந்துவிட்டது. பத்தாவுக்கேற்ற பதிவிரதை பாக - படிதாண்டாப் பத்தினியாகவிருந்த நாகம்மாவின் புரிந்து ணர்வும், புன்னகைபூத்த பணிவிடையும் தமது ஆசிரியரின் புலமையை உயர்த்தின. "நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்

Page 24
40.
நமே " என நக்கீரன் கூறியதுபோல் நாகம்மா அம்மையாரும் தாம் கண்ட குற்றங்களை இடித்துரைக்கும் ஓசைகளும், இந்த இராணி மனையிலே அவ்வப்போது ஒலிக்கத் தவறுவதில்லை. கொடைக்குக் கன்னனாகவும், இனிய தமிழ் நடைக்கு மன்னனாகவும் “ஞானி அவர் கள் திகழ, பேருதவியாயிருந்தார் திரும்தி நாகம்மா அவர்கள் என் ரால் அதற்குக் கிாானம் அம்மையாரின் பிறந்தகத்திலே க ட் டி யெழுப்பப்பட்ட இந்த இராணி மனையின் இராசிப் பலனே எனலாம்.
அகில உலக தமிழ் மன்றங்கள் நடத்திய போட்டிகளிலே, தலைப் புக்கேற்ற பாக்களாலே கருப்பொருளமைத்து முதன்மைப் பரிசில்களைப் பெற வைத்த பெருமை இம் மனைக்கும் - இம் மனையாளுக்கும் உண்டு என்றால் மிகையாகாது. அடிசிற் கிளியாளான அம்மையை எண்ணும்போது கவிஞர் கண்ணதாசனின் " ஒரு கோட்பையிலே என் குடியிருப்பு ஒரு கோல மயில் என் துணையிருப்பு." என்னும் அர்த்தமுள்ள இனிய பாடல்தான் எனக்கு நினைவுக்கு வரு கிறது. ஆம், ஆறிய பால் கோப்பியுடன் வந்து, இராணி மனையின் முன்புறத்தே-தன் கணவனின் அரியாசனத்தின் பக்கலில் உள்ள சரியா சனத்தில் காலில்மேற் கால்போட்டு அமர்ந்துவிடுவார் அம்மையார். பிறகென்ன. ஞானி அவர்கள் எழுதிய பாடல்கள். கொண்டு கூட், டாக வாசிக்கப்படும், முதலில்-அதனைத் தொடர்ந்து தன் மெல் லிசையிற் தொனி எடுத்து-தேன் கு ர லி ல் பாடிக் காட்டுவார் நாகம்மை, இராணி மனையின் சுவர்கள் எதிரொலி பரப்பி நிற்கும் -உள் அறையினிலே பிள்ளைகளின் கரவொலியும் சிரிப்பொலியும் காதைப் பிளக்கும் - “ வெற்றி உறுதி ' புண்டிதரே என இராணி மனையும் வாழ்த்தும், ... t. w ༣.
* மனை பொருந்துமாப்போல் மக்கள் பொருந்தார்" என்பது ஆன்றோரின் அனுபவம், இல்லறம் காத்து நல்லறம் பேணும் இயல்: புடையது இம் மனை. கூக்குரல் கேட்கும் வீட்டிற்கு - கும்மிருட்டு வேளையாயினும்-குளிர்மிகு காலமாயினும்-அச்சம் தவிர்த்து -பகை மையைக்கூட மறந்து, ஒரு கையில் விளக்கும் மறு கையில், செபமா. லையும் சுமந்து-கம்பளிப் போர்வையுள் உடலை மறைத்து , மாதா பிதா வென அங்கு சென்று, அவர்களுக்கு உற்றது உசாவி உறு துணை செய்யும் பண்பு பண்டிதர் குடும்பத்தாரின் கைவந்த கலை யாகும். இன. சனங்களின் இன்னல் தீர்க்க இம்மியளவும் பின் நின்ற , தில்லை . இவர்கள். பொருளுதவியோடு சரீர உதவிகளையும் வழங்கி.

4t
வரும் இயல்பு இராணி மணையாரிடம் மிகையாகவுள்ளது. இவ்வரிய தொண்டுகளை ஆற்ற, ஏற்ற இடமாகத் திகழ்வதும் இராணி மனை
Cau untuh.
கற்றாரும் அஃதற்றாரும் காமுறும் இராணிமனையிலே குடும்ம் செப உச்சாடனம் தப்பாது நாடோறும்?ம்சம் றப்புடையதாகும். * மாதாவே 1 மாதாவே 1 - இயேசுவே ! இயேசுவே! ’ எனும் நாம பஜனை ஓயாமல், நாகம்மையின் வாய் ஒலிக்கும். இது இராணி மனையின் பாவசங்கீர்த்தனமாகும்,
தேசுறு கல்விமான்களைத் தந்த நெடுந்தீவு வென்கண்ணமும், மாசறு நல்லாசான்கள் மலிந்த அல்வாய் மண்ணும் இனிதே இணைந்த நற்கலவை கொண்டு எழுப்பிய கோபுரமே எங்க ள் " இராணி மனை " என்றால் அதன் பெருமையை எடுத்தியம்பவும் GBavariowG)Buorr ?
பன்நெடுங்காலம் " இராணி மனை ? சிறக்கவும், நிலைக்கவும் வாழ்த்துவோமாக,
女 ★ எனது அன்புக்கினிய ஆசான்
மாதா பிதா குரு தெய்வம் - அவர் மலரடி தினந்தினம வணங்குதல் செய்வோம்.
என்னும் பாடல் வரிசைகளுக்கமைய ஏறக்குறைய நான்கு தசாப் தங்களுக்குமுன் எனது அன்புக்கினிய ஆசானாய், அதிபராய்ப் பாரி லுள்ள பல அறிஞராலும் பாராட்டுக்கள் பல பெற்ற பைந்தமிழ் பாவலனாய், அகில உலகரீதியில் புகழ்பூத்த அருங்கவிவாணனாய், பிள்ளைத் தமிழின் மூலம் சி ற ந் த நூலாசிரியனுமாய் விளங்கும் பண்டிதர் திரு. க. த. ஞானப்பிரகாசம் ஐயா அவர்களை என்றும் நினைக்க முடிகிறதென்றால் அன்னார் சேவையில் இருந்தபோது ஆற்றிய உன்னதமான தன்னலமற்ற பணிகள் என் மனக்கண்முன் வந்து நிழலாடுகின்றன. அக்காலத்தில் இன்றுபோல் உலக ஆசிரிய தினம் நடைமுறைப்பட்டிருந்தால் ஆசானின் பாதங்களை நீர்கொண்டு கழுவிப் பட்டுத்துணியால் துடைத்திருப்பேன்.
1957 - 58ஆம் ஆண்டுகளில் யா/கலட்டி றோ. க. ஆண்கள் சிரேஷ்ட வித்தியாலயத்தில் அன்னார் அதிபராக இருந்த காலத்தில்,

Page 25
42
யூசன் என்றால் என்னவென்று அறிந்திராத அந்தநேரத்தில் தனது ரீஅயராத சேவையாலும், உடன் ஆசிரியர்களின் ஒத்துழைப்போடும் சி. பொ. த வகுப்பில் கற்ற எம்மில் பலர் சித்தியெய்தவும் கணிச மான தொகையினர் பல வேறுவகையான பதவிகள் பெற்று இன்று சீர் சிறப்போடு திகழச் செய்யவும் வைத்த பெருமை எங்கள் பேரா சானையே சாரும். எல்லோரும் மனிதர்களே என்னும் சிறந்த சிந்த னையோடும் உண்மைக் கிறிஸ்தவனுக்குரிய உயரிய கொள்கைகளோ டும் மறு சமயத்தையும் மதித்து வாழும் மாண்போடும் விளங்கும் ஆசான் அவர்கள் மனிதகுலத்தின் மாணிக்கம். அன்னார் ஓய்வு பெற் றுப் பல ஆண்டுகள் கழிந்த பின்னாலும் ஆசியர், மாணவர், பெற் றோர் அனைவரும் இன்றுவரை நல்ல மனத்துடன் நேசிக்கின்றார்கள் என்றால் அது அவரின் உதாரகுணந்திற்குக் கிடைத்த மதிப்பே ஆகும்.
ஆசானுடைய தலைமையிலே பாடசாலையிலே நடந்த பெற் றோர் தினவிழாக்கள், கலை விழாக்கள். விளையாட்டுப் போட்டிகள் என்பன எமக்கெல்லாம் அழியா அனுபவங்களாகவும், பெற்றோருக் குப் பெருவிருந்தாகவும், அதிகாரிகளுக்குப் பாராட்டுக் களங்களாக வும் விளங்கியதென்றால் மிகையாகாது. அக்காலகட்டத்தில் ஆசா னின் சேவை நலம் பாராட்டி எடுக்கப்பட்ட வெண்பொன் விழாவில் பண்டித வித்துவான் திரு. க. கிருஷ்ணபிள்ள அவர் கள் ஆற்றிய பாராட்டுரை அறிஞர்களின் ஆய்வுக்கு உட்படுத்தக்கூடிய ஒன்று என்றே எண்ணுகின்றேன். ஆசிரியர்களுக்கு நண்பனாகவும், மான வர்களுக்குத் தந்தையாகவும் பெற்றோருக்கு வழிகாட்டியாகவும் தொழிற்பட்டுப் பாடசாலை வேலைகள் அனைத்தையும் இலகுவாக வும் திறமையாகவும் நடத்தி முடித்தமை என்போன்றோருக்குச் சிறந்த பாடமாகவே அமைந்தது.
நக்கீரரைப்போல * நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றங் குற்றமே” என்று தனது மேலதிகாரிகள் சிலருடனும் முனைப்போடு நீதிமொழிந்து வெற்றி கண்டவரும், எனது இளமைக் காலத்தில் ஏற்பட்ட துன்பத்தின்மோது துணை நின்றவருமாகிய எனது அன் புக்கினிய ஆசான் தனது எண்பத்துமூன்றாவது அகவையில் சஷ்டி பூர்த்தி விழா4 கொண்டாடும் இந்தன்னாளிலே இன்னும் பல்லாண்டு காலம் பலநலமும் பெற்றுச் சீரும் சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சி நிற்கின்றேன்.
நன்றி வணக்கம்.
இதயம் நிறைந்த மாணவன்
ஆ. வடிவேலு
ஆசிரிய அதிபர்

43
கலங்கரை விளக்குகள்
திருமண மணிவிழாவில் கால் பதிக்கும் எம் ஆசான் கே. ரீ. ஞானப்பிரகாசம் தம்பதிகளின் விழாமலரில் என் செய்தியையும் இணைப்பதில் பெரும் மகிழ்வடைகின்றேன்.
நிறை குடம் தளம்பாது என்பதற்கு மணி விழாக் காணும் தம்ப திகளின் நல்மன ம் நற்பணியுமே சான்று எனலாம். தன் பிள்ளை கள், பேரப் பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகள் என்ற செல்வங்களுக்குக் கல்விச் செல்வத்தையும் ஊட்டி, குடும்பத்தின் மகிழ்வில் மட்டும் குறுகி நின்றுவிடாது, தன் பிள் கைளள் போலவே இத்தரணியில் பல கல்வி மான்களையும், கண்ணியம் காக்கும் மனிதர்களையும், வழிகாட்டும் குருக்களையும் கன்னியர்களையும் கல்வியறிவூட்டி வளர்த்து விட்ட பெருமையினை அவர்களின் மாணவச் செல்வங்களே இன்று சான்றாய்ச் சொல்வர்,
மணி விழாத் தம்பதியரின் கல்விப் பெருக்கைச் சுவைத்து வளர எமது குடும்பமும் பெரும் பாக்கியம் பெற்றதை எண்ணிப் பூரிக்கி றேன். எனது சகோதரிகள் மூவரின் கல்வியில் திருமதி. ஞானப் பிரகாசத்தின் கற்பித்தல் தூய்மையும், திறமையும் தம் பிள்ளைகள் போல் ஏற்று வழிகாட்டலில் கொண்ட அக்கறையும் ஆசிரியத்துக்கே பெருமை தரும் நற்குணங்களாகக் கண்டோம். இதே போன்று நெடுந் தீவு மத்தி றோ. க. வித்தியாலயத்தில் எனது முதல் நியமனத்தின் போது அதிபராயிருந்த திரு. கே. ரீ. ஞானப்பிரகாசம் அவர்களுடன் கடமையாற்றச் சந்தர்ப்பம் கிடைத்ததைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்." அந்நாட்களில் அவரது நிர்வாகத்திறன், கறபித்தல் தூய்மை, புலமைச் சிறப்பு என்பவற்றைச் சுவைக்க முடிந்தது.
இம் மணிவிழர் நாயகர்களின் வைரவிழாவையும் எம் மண்ணில் நாம் காண இறை ஆசீர் வேண்டி இத்தம்பதியரின் உடல் உள சுகபல நலன்கள் பெருக நன்றிப் பூக்களால் அர்ச்சித்து நிற்கும்.
சென் யோசவ்ஸ் வித்தியாலயம், பி. பெனடிக்ற்
கொழும்புத்துறை. அதிபர்
)4
* பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டா லொழிய அவன் ஒன்றையும் பெற்றுக் கொள்ள மாட்டான்"
. Gunravirsir 3 : 27”

Page 26
மணவாழ்வில் மணிவிழா
திரு. திருமதி ஞானப்பிரகாசம் அவர்களின் இல்வாழ்வினது அறுபதாம் ஆண்டு நிறைவினையொட்டி வாழ்த்துக் கூறுவதிற் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.எனக்கு ஆரம்பக்கல்வி புகட்டி ஏற்றம் அளித்த ஆசிரியத் தம்பதியினர்க்கு என் உனங்கனிந்த வாழ்த்தினையும் நன்றியினையும் தெரிவிப்பதில் பேருவகை கொள்கிறேன்.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது என்ற வள்ளுவனின் வாக்கிற்கு ஏற்ப வளமாக வாழ்ந்து வரு கின்ற இத் தம்பதியினர்;
"மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன் நன்கலம் தின்மக்கட் பேறு."
என்பதையும் இப்பூவுலகில் நிலைக்கச் செய்து அழகுடனும் பண்பு டனும் உயர்வுடனும், இளமையுடனும் வாழ்ந்து வருகின்றார்கள், இவர்கள் வாழ்வாங்கு வாழ, பல்லாண்டு வாழ, இறைவனை இறைஞ் சுகிறேன்"
இப்படிக்கு இ. சுந்தரலிங்கம் உதவிப் பிரதேச முகாமையாளர் மக்கள் வங்கி, யாழ்ப்பாணம்.
மணிவிழாக் காணும் தம்பதிகாள் வாழி
செந்தமிழ்ப் பற்றும் செழுங்கலை ஆர்வமும் சொந்த மாய்க் கொண்ட சீர்சால் அறிஞ! ஞான பண்டி-தி என்னும் நாடறிந்த பெரியோய்.
இடம் பெயர்ந்தலைந்தோர் தங்கட்கெல்லாம் பயன் கருதாத வானம் போல எமக்கும் எமது சகவின் எஸ். பத்மநாதன் குடும்பத்துக்கும் உதவிகள் பலவும் புரிந்த செல்வமணிவிழாவினைக் காணும் நீங்களும் மாதவத் துணைவியாரும் அன்பு மக்களும் எல்லாம் வல்ல தெய்வ அருளால் வாழிய நீடு வாழிய நீடே.
நன்றி மறவா **உதயன்' பணிமனை. கு, பரம்சோதி

45
மணி விழாக் காணும் மனமொத்த தம்பதியர் உயர் திரு க. த. ஞானப்பிரகாசம் (கவிமண / ஓய்வு பெற்ற அதிபர்; திருமதி ஞா. நாகம்மா ஒய்வு பெற்ற உப அதிபர் ஆகிய இரு வரினதும் அன்பு மாணவன் தரும்
நினைவுப் படையல்
7ெண்பதுகளை எட்டி எவர்க்கும் இனியவராய் வாழ்ந்து கொண் டிருக்கும் எனது ஆசிரிய மணிகள், அறுபது ஆண்டு அன்புடன் ஒன் றாய் வாழ்தல் கண்டு என் உள்ளம் உவகை உறுகின்றது. திருமணங் கள் மோட்சத்தில் நிச்சயிக்கப்படுவதாகக் கூறப்படும் மெய்வாக்கை மெய்யாகக்காட்ட மேய்ப்பன் உங்கள் இருவரையும் எம்மிடை வைத் தான். தேவன் 83 அகவையில் வாழ்வாங்கு வாழும் இவ்விரு திவ்விய அருட் குல ஆசிரிய மணிகளையும் என் ஆசிரியையாகவும், அதிபராக வும் தந்து "தாரமும் குருவும் தவையெழுத்து' எனக்கூறிய முது மொழி என் நற்றலையெழுத்தாக இருக்கத் திருவுளம் கொண்டமைக்கு அவன் தாள் பணிகின்றேன்.
அவசரமான உலகில் அவள் பாதி அவன் பாதியாகிவிடுவது கண் கூடு. இங்கு இருபாதிசேர்ந்து ஒன்றானது உண்மை, நீரும் நெருப்பும் நெருங்கிய நண்பர்கள். வெப்பத்தால் ஆவி, ஆவி குளிர்வதால் நீரி, இங்கு கடமை தவறா நெருப்பு என் அதிபர், இதயத்தில் சவுகாட்டும் தாயாக, தண்ணிராக எனது ஆசிரியை திருமதி. ஞா. நாகம்மா ரிச்சர், இவர்கள் இருவரும் ஆறு முத்துக்களை சரிபாதி ஆணாகவும் பெண் ணாகவும் தந்து பெரும் பேறு பெற்றார்கள். இலங்கைந்தீவின் நெடும் தீவில் பிறந்த எனது அதிபர் அறிஞர் சூழ் அல்வாயில் அழகான அறிவான எனது ஆசிரியையைத் திருமணம் செய்தமை இறைவன் சித்தமென்பதே பொருத்தம்,
"கற்றாரைக் கற்றாரே காமுறுவர்' இவர்கள் பெருமை கரவைமாநகர் மக்கள் பால் கேட்கின் புலப்படும் . இவர்கள் ஆக்கிய விருட்சங்கள் அறிவு தரும் விருட்சங்கள். இவை கிளைவிட்டுப் பரந்து பன்னெடும் காலம் பல பிரதேசங்களுக்கும் வியாபித்து நல் நிலத்தில் விதைத்த விதைகளாகப் பலன் தருவதைக் கண் கூடாகக் காணலாம்.

Page 27
46
சிறியேன் வாழ்வில் சில நிகழ்வுகள் இன்றும் வந்து என் தலை யில் மோதுவதுண்டு. அதை இங்கு பகிர்வதில் ஒர் உவகையுண்டு.
பள்ளிப் பருவத்தில் ஒரு கெட்ட பையன் எனச் செல்லமாக கூறப்பட்ட நான் இரசிப்பது நாகம்மா ரீச்சரின் குழந்தைசளுக்காக அவர் பாடும் பாட்டுக்கள், கரும்பலகையில் வரையும் சித்திரங்கள், கூறும் கதைகள் கதைகூறும் வேளையில் அவர் திரையில் கீறிய படங் களைக் காட்டத் தவறுவதில்லை. அவற்றைக்காண எங்கள் கருத்துகள் நீண்டு நிற்கும். இனிய கவிதைகளைச் செவிகள் நாடி நிற்கும், கண்கள் விழித்திருக்கும், எப்போதும் இங்கு தூக்கத்துக்கு இடமில்லை ஓர் உற்சாக மயப்படுத்தப்பட்ட மாணவசிறார் கூட்டம் இவர்கள் சிரிக்க வும் வைக்கப் பெற்றனர். எனது வகுப்பில் நாகம்மா ரீச்சர் அடித்து அழுததை நான் அறியேன்.
அந்தக் காலத்தில் நாங்கள் சிலேட் எனும் பலகையில் எழுதுவது வழக்கம். அதை அழிக்க எச்சில் தொட்டு சிந்தியாவது அழிப்போம். அதேமாதிரி ஒரு நாள் மாணவன் வரவேடு பதிந்த பின் ரீச்சர் மேசை யில் வரவேட்டை வைத்து விட்டு வேறு விடையமாகச் சென்ற வேளை நான் சிலேட்டை அழிப்பது போல வரவேட்டை எச்சிலைப் பயன்படுத்தி கையினால் அழித்து விட்டேன். திரும்பிய ரீச்சர் வரவேட்டின் கதி கண்டு கலங்கிய போது நானே எனது கெட்டித்தனத்தை ஒப்புக் கொண்டேன்.
எனது செயலின் பாரிய விளைவை நான் அறியவில்லை. ஆனால் ஆசிரியை மிகவும் வேதனைக்கு உள்ளானதையும் அவர் என்னை தண்டிக்காததையும் நான் உணர்ந்தேன். .அதனால் மிகவும் குறும்பு செய்யும் எனது குணம் மாறிவிடக் காரணமானது.
பெற்றோர் ஆசிரியர் தினம் மிகமிக விமரிசையாக கொண்டாடப் பட்டது. 25 சத ரிக்கெற் விற்கப்படடது. மண்டபம் நிரம்பி வழிந்தது. எனக்கு ஒரு பாரதிப் பாட்டு 'யாமறிந்த மொழிகழிலே தமிழ்" என்ற விடையமும், "புத்தியுள்ள நீதிபதி' என்ற நாடகத்தில் நான் கடன் காரனாகவும் நடிக்கும் இரு நிகழ்வுகளில் பங்கு கிடைத்தது. எமது நிகழ்ச்சிகள் முடிவடைந்ததும் பரிசளிப்பு வைபவம் பெரியவகுப்புக் ளுக்குப் பரிசு கொடுக்கப்படும் நேரம், எனக்குப் பொறுமையில்லை. ரிச்சரின் சேலையைப்பிடித்து இழுத்து எனக்குப் பரிசு எனக் குளறிச் சத்தமிட்டேன். அவர் இவன் கெட்ட பையன் என்னைப்படுத்தும் பாடு

47
என அதிபரிடம் (அவரது கணவரிடம்) கூறினார். எனது பெயர் கூப்பி டப்பட்டு ஒரு அலுமீனியம் செம்பு பரிசு கிடைத்தது.
இச் சம்பவங்கள் எதைக்காட்டுகின்றன - ஒரு மன வோட்ட தொடர் நிகழ்வுகள் ஆசிரிய மாணவ தொடரோட்டம் குளிர் நீராக, சூடாக இதமான தென்றலாக குழந்தை, தாயாக, தந்தையாக வளர் வின் முதிர்வில் நண்பர்களாக இழைந்த இணைந்த தொடர்புகள். இவை விலை பேசத்தக்கவையல்ல. மனங்கள் ஒடுங்காத குழந்தைகளை உருவாக்கும் சீரிய ஆசிரியர்களுக்கு உதாரணம் எனது ரீச்சர் திருமதி ஞா. நாகம்மா அவர்கள்.
ஓர் இரகசியத்தைப் பகிரங்கப்படுத்துகின்றேன். இவர் கணவர் கடமையில் கண்டிப்பானவர் ரீச்சர் பிந்திவந்தால் சிவப்புக்கோடு போடப்பட்டுவிடும். வெளிக்கதவு பூட்டப்பட்டுவிடும், ால் திரும்பிச் சென்ற நாள்களும் உண்டு. வீடு வேறு கடமை வேறு என்று உறுதி யானவர் எமது அதிபர்.
இவர் நாஷனல் வேட்டி சால்வையுடன் வரும் கம்பீரமான ஒருவர். சால்வை மடிப்பு குலையாது. மாணவர்கள் பெற்றோர்கள் மதிப்புப் பெற்றவர். இவர் காலத்தில் வதிரி. றோ. க. பாடசாலையில் S.S.C வரை வகுப்பு உண்டு. அக்காலத்தில் வெளியேறிய பலர் பல துறைகளில் சிறந்து விளங்குகின்றார்கள். கவித்துவம் வாய்ந்த எமது அதிபர் தமிழ் மொழியின் பால் மிகவும் ஈடுபாடு கொண்டவர். ஆளுமை கொண்ட அவர் சேவை ஈடுஇணையற்றது.
எனது இனிய இதயம் கலந்த ஆசிரிய மணிகளின் மணிவிழா சிறக்க எல்லாம் வல்ல இறைவன் ஆசிவேண்டி என்து வணக்கத்து உன் நிறைவு செய்கின்றேன்
இவ்வண்ணம் ஆழ்வார் செல்லத்துரை கரவெட்டி. முன்னாள் முகாமையாளர், மக்கள் வங்கி,
"கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்துவிடு. அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாட விடமாட்டார்”
− FA 55 : 22

Page 28
48
வாழ்க! வாழ்க ! வாழ்க !
திரு. க. த. ஞானப்பிரகாசம் அதிபர் அவர்களும் தி ரு மதி றெஜினா மேரிமக்டலீன் நாகம்மா உப அதிபர் அவர்களும் மேலும் பல்லாண்டு வாழ்க என வாழ்த்தி எனது சிறு குறிப்பை ஆரம்பிக் கிறேன். திரு. க. த. ஞானப்பிரகாசம் அவர்களின் பெருமையையும் சிறப்பையும் சொற்களில் சொல்லி முடியாது. சுமார் இருபதிற்கும் மேற்பட்ட பரிசுகளைப் பெற்று பெருமை பெற்றிருக்கிறார் திரு. க. த. ஞானப்பிரகாசம் அவர்கள் அண்மையில் கொழும்புத் தமிழ்ச் சங் கத்தால் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் "பாரதி பிள்ளைத் தமிழ் என்ற நூலை எழுதி “கவிமணி’ என்ற பட்டத்தையும் முதலாம் பரிசையும் பெற்றுக்கொண்டார். மேலும் ஆரிய திராவிட பாஷா விருத்திச் சங்கம். யாழ். பல்கலைக் கழகம். முதலியன நடாத்திய கவிதைப் போட்டிகளில் முதல் இடங்களைப் பெற்றார்.
மேலும் நோர்வே, பிரான்ஸ், அவுஸ்திரேலியா முதலிய நாடுக வில் இயங்கும் தமிழ்ச் சங்கங்கள் நடாத்திய கவிதைப் போட்டிகளில் முதல் இடத்தைப் பெற்றார். மட்டக்களப்பில் சுவாமி விபுலானந் துரிடம் கல்வி பயின்றார். அவர் வாழ்வில் அவருக்குச் சிறந்த குரவர் பலர் வாய்க்கப் பெற்றது அவர் செய்த புண்ணியயாகும். *இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை " என்ற வாக்கிற் கேற்ப இவர் பெற்ற புகழுக்கெல்லாம் காரணம் அவர் மனைவியார் ஆவர். இவர்களின் 60ஆம் ஆண்டு திருமண விழா சிறப்பாக நடை பெறுவது போற்றுதற்குரியது. இவரின் சிறப்புக்களை அடுக்கடுக்கா கக் கேட்கும்போது " தோன்றிற் புகழொடு தோன்றுக’ என்ற அடிதான் ஞாபகத்திற்கு வருகிறது. மேலும் அவர் பெற்றெடுத்த பிள்ளைகள் கல்வியில் மேன்மை பெற்று விளங்குகிறார்கள், அவரின் பெருமைக்கு மிக மேலான காரணம் அவரின் கடவுட் பக்தி ஆகும். தள்ளாத வயதிலும் சுவாமிமாரைச் சந்திப்பதற்கும் அவர்களின் ஆசியைப் பெறுவதற்கும் பின்நிற்கமாட்டார். மேலும் பல பரிசு களைப் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
திருமதி. இ. சரவணமுத்து
B. Sc. (Madas) SP. Td. Maths
(ஒய்வு பெற்ற ஆசிரியர்)
யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரி

(9
பேரறிஞர் பாராட்டுரைகள்
பாரதியார் பாடினார்,
"இறவாத புகழுடைய புது நூல்கள்
தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்" என்று
நமது கவிஞர் இறவாத புகழுடைய மணங்கமழும் மூன்று நூல்களை - " மாதா மலர் மாலை ", " பாரதி பிள்ளைத் தமிழ் "- ஈழமணிச் சுதந்திர மரதன்' பாக்கள் என்பவற்றை இயற்றியமை யாலும், பிற தனிச் செய்யுள்களை இயற்றியமையாலும், திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும் என்னும் பாரதி கூற்றுக்கு இணங்க கவிஞரைத் திறமான புலமை யுடையாரென நம்நாட்டு அறிஞர்களால் மட்டுமன்றிப் பிறராட்டு நல் லறிஞர்களாலும் பாராட்டும், வாழ்த்துக்களும், பாராட்டு விழாக் களும், பாராட்டுக் கடிதங்களும் அளிக்கப்பட்டிருப்பதனை எடுத்து நோக்குங் கால் கவிஞரின் புலமை எத்தகையது என்பதனையும் அவருடைய உலகளாவிய புகழினையும் நாம் துல்லியமாக அறியும் வாய்ப்பு உண்டாகும் என்று கூறின் தகும். ஒருவரது திறமை அவசி சொல்லின் மாட்டு உள்ளது அன்று. புலமையினையும் திறமையினை யும் கற்றோராலும், சான்றோர்களாலும் பிறநாட்டு நல்லறிஞர்களா லும் எடுத்துக் கூறப்படும் போதே அவை ஒருவரை அணி செய்வன வாக அமைகின்றன. அவ்வாறே இக்கவிஞரை அணி செய்வனவாகப் பற்பல வாழ்த்துப் பாக்களும், பாராட்டு விழாக்களும், பாராட்டுக் கடிதங்களும் மலிந்திருப்பதைக் காணலாம். இவ்வாறு கவிஞரை அணி செய்யும் அணிகலன்கள் யாவையும் திரட்டிப் கவிஞர் அதனைக் "பேரறி ஞர் பாராட்டுரைகள்" என்னும் தலைப்பில் வெளியிட உள்ளார். அவ் வெளியீட்டின் ஒரு முன்னோடியாகவே "பேரறிஞர் பாராட்டுரைகள்' என்ற இப்பகுதி அமைகின்றது.
பேரறிஞர் பாராட்டுரைகளை வாழ்த்துப் பாக்கன், பாராட்டு விழாக்கள், பாராட்டுக் கடிதங்கள், ஆசியுரைகள், ஆய்வுரைகள் எனப் பல்வேறு வடிவங்களிற் காணலாம். பல்வேறு துறைகளிலும், பொருள் களிலும் தமது கவிதைகளைக் கவிஞர் வடித்திருப்பதால் வாழ்த்துக் களும் பல்வேறு வடிவங்களைப் பெற்று அமைந்திருக்கின்றன
வாழ்த்துப் பாக்கள் கவிஞர் பெற்றுள்ள வாழ்த்துப் பாக்களில் குறிப்பிடப்பட வேண்டிய ஒருசிலவற்றை இங்கு எடுத்து நோக்குதல் கவிஞரின் பல்துறைப் புலமை பற்றிய ஆய்வுக்கு ஒரு சான்றாக அமையும்.

Page 29
50
வித்துவான் இளவாலை-அமுது கவிஞரைப் பற்றி ! இவரைத் தெரியுமா " என்ற தலைப்பில் 1971ல், யா / நெடுந்தீவு நடுக்குறுச்சி, றோமன் கத்தோலிக்க ஆண்கள் வித்தியாலயம், 95-ம் ஆண்டு நிறைவு விழா மலரில் 12 ஆம் பக்கத்தில், பாராட்டுப் பாடுகையில் பின் வருமாறு புகழ்ந்து பாடுகின்றார்.
இவரைத் தெரியுமா?
முக்கணியின் சாறெடுத்துத் தீங்கவிதை செய்வான்
மொழியரசி கண்சிமிட்ட வழி மறந்து செல்வான் தக்கோரின் பேரவையில் சொல்விருந்து வைப்பான்
சங்கத்தின் தமிழ் வடித்துச் செங்கரும்பிற் றொட்டு எக்காலும் எழுத்துக்கு உயிர் கொடுத்து வைப்பான்
இளநங்கை போற் சிரித்து இதயத்தைத் தொடுவான் இக்கால ஆசிரிய தீபமெனக் கூறும்
எம்ஞானப் பிரகாச பண்டிதனார் இவரே
இற்றைக்கு முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன்னர் கவிஞரின் இருபத்தைந்தாண்டு ஆசிரிய சேவை நிறைவுற்ற வெண்பொன் விழா வின் போது வாழ்த்திய பாடல்கள் சிலவற்றை இவ்விடத்தில் நோக்கு தல் அவருடைய புலமை அக்காலத்தில் எப்படி இருந்தது என்பதற் குச் சான்றாக அமையும்.
படிதாங்கும் உயர்தலைமை ஆசிரிய பதவியும்
பகர் பண்டிதப் பட்டமும் பாங்குடைய வித்துவான் பெருமையும் மெத்து புகழ்
பரவிய விலங்கா புரிக் குடிதாங்கு சுதந்திரத் தினம் நினைவு கூர்ந்திடக்
குறித்தமர தன் போட்டியில் கோதிலாப் புலவரென வேசேன நாயக்க
கொற்றவன் தந்த பரிசும் கொடிதாங்கும் ஆரியதி ராவிடபா ஷாவிர்த்தி
குலவுசங் கத்தி லக்கியம் கொண்டு மிளிர் பாடல்தனில் முதன்மையும் நற்தேவ
குமரனைப் பெற்றெடுத்த முடிதாங்கு தேவமா தாவுக்கு மலர்மாவை
முன்னின் றிசைத்த வகையில் மூதறிவு தேர்ந்த பெரி யோர்மதிப் புங்கொண்ட
முதல்வனே நீ வாழ்கவே

51.
இவ்வாறு கரவை நாடக கவிமணி எம். வி. கிருஷ்ண ஆழ்வாரி அவர்கள் வாழ்த்துவதனையும் அவருடன் இணைந்து கட்டை வேலியூர்ப் பன்மொழிப் பண்டிதமணி. ஜே. எஸ். ஆழ்வாப்பிள்ளை அவர்கள் வாழ்த்துவதையும் நாம் நோக்குதல் வேண்டும். கவிஞரின் புலமைச் சான்றுக்கு அவசியமாகின்றது!
இலக்கணமும் இலக்கியமும் சமய நூலும்
எல்லையின்றித் தேக்க முற்றே யிலங்கும் முந்நீர் கலக்கியதில் அமுதமெடுத் துண்டு தேறிக்
கவியரசாய்ப் பலபரிசு கையிற் கொண்டோய் ! அலக்கியம் யாரையும் செய்யா அடக்க வாள
ஆதவன் போற் றமிழ் மலரை யலர்த்துஞ் சோதி துலக்கிய ஞானப்பிரகா சப்பேர் வாய்ந்த
துகள1றுசீர் நாவலவ'வாழி! வாழி!
இவ்வாறு கவிஞரை வாழ்த்துவது கவிஞரின் புலமைக்கு ஒரு முத்திரை பதிப்பது போன்று உள்ளது.
கவிஞர் ஞானியின் சக ஆசிரியர் கரம்பொன்அ. யுவக்கீம்பிள்ளை அவர்களின் வாழ்த்தினையும் நோக்குவோம்.
கந்தப்ப முதலிதவக் காளை எழில் இளையபிள்ள்ை கனிந்த செல்வன் எந்தப்பேர் பெற்றவொரு புலவனுக்கும் இளைக்காச்சிங் கேறுதுள்ளும் சந்தப்பா புனைசமர்ந்தன் அரசியலில் சாணக்கியன் சான்றோர்
கூட்டம் முந்தப் பொற் கிழியளித்துக் கெளரவித்த “ஞானி நலம் முற்றி வாழி வாக்கினிலே யருணகிரி வாதத்தில் நக்கீரன் வாழ்வை ஆழ்ந்து நோக்கலிலே வள்ளுவனார் நுண்பொருளில் இளங்கோவன்
நோகாவண்ணற் தாக்கலிலே கார்மேகன் தத்துவத்தி லகத்தியனார் தாய்ப்பா லென்ன நாக்கினிலே சுவையூற மொழிவதிலே திருத்தக்கன் "ஞானி’ வாழி "ஞானி யெனும் புனைபெயரில் கவிமலரை விளக்கு மொரு ஞாயிறாகி மானினமே மயக்கு மெழில் நாகம்மா மயங்கு மொரு மாரனாகி ஆணினம் போற் றன்குலமும் பிறர்குலமும் வளர்த்தெடுக்கும்
அறவோனாகித் தேனினிய வுரை தொடுத்து நல்லறிவு வழங்கு கலைச் செல்வன் வாழி
கவிஞர் யுவக்கீம்பிள்ளை அவர்கள் கவிாழுதுவதற்கு ஆசானாக இருந்தவர் கவிஞர் ஆதலின் இக்கவிஞரின் கவிதை அம்சங்கள் ஒவ்

Page 30
52
வொன்றும் எப்படிப் படைக்கப்பட்டுள்ளன எனப் பிறபெரும் கவிஞர் களுடன் ஒப்பிட்டு-அருணகிரி, இளங்கோ, வள்ளுவர், கார்மேகம், திருத்தக்க தேவர், பார்த்திருப்பது மேற்கூறிய ஒவ்வொரு பெரும் கவிஞரும் ஒவ்வோர் துறையில் சிறப்புடன் விளங்குவதையும் இக் கவிஞர் அவர்களுடைய வெவ்வேறு சிறப்பம்சங்கள் எல்லாம் சேர்ந்து விளங்குவதையும் நாம் காணலாம். எம் தமிழ் மரபில் முன்னிருந்த கவிஞர்களின் சிறப்புக்களைப் பின்வருகின்ற கவிஞர்கள் பின்பற்றுவதும்
prf ayub8VuonTaJ a.6ñ76N7ği.
கவிஞர் 'பாரதி பிள்ளைத் தமிழ்" இதனைப் பாடிய போது அவருடைய நண்பன் மகா வித்துவான் எவ். எக்ஸ். ஸி. நடராஜா அவர்கள் வாழ்த்துகையில்
பாட்டுக் கொரு புலவன் பாரதியடா-அந்தப் பாரதிக்கு
நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்- என்றே பாடிக்
காட்டினான் பிள்ளைத் தமிழ்-பார் புகழ் "ஞானி" என் நண்பன் என வாழ்த்துகின்றார்,
திருமகளும் கலைமகளுஞ் சேர்ந்தொன்றாய் வாழுஞ்
சிறப்பமைந்த நெடுந்தீவைப் பிறப்பிடமாய்க் கொண்டோன்
அரிய தமிழ் நூற்கடலிற் திரவியங்கள் சேர்த்தோன்
அத்தனையும் பிறர்க்களித்தே ஆன்மநலம் பூத்தோன்
வரிசை பெறுங் கவிபொழியும் நவகாள மேகம்
மன்னு புகழ் அல்வை நகர் வாழு தமிழ் மணியாம்
.திருஞானப் பிரகாசன் பாரதி மேற் பாடு
தேமதுரப் பிள்ளைத் தமிழ் வாழ்க புவி நீடு.
என்றார் 'மிருசுவில் கவியரசு பி. எம். ஞானப்பிரகாசம்,
*திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும்" எனக் கூறிய பாரதியின் வாக்கு கவிஞர் பாரதி யைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடியியற்றிய "பாரதி பிள்ளைத் தமிழுக்கு" வெளிநாட்டாரும் வணக்கம் செய்தல் காண்க. அயல் ராட்டுத் தமிழகத்து நல்லறிஞன் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலகந் தழுவிய நிரந்தரத் தலைவரும் அமைப்பாளருமாகிய பெருங் கவிக்கோ-கலாநிதி வா. மு. சேதுராமன் அவர்கள் வாழ்த்துகையில்

'S
ஞானப் பிரகாசம் நாடு தமிழ் தானுயர வானப் புகழ் தந்த வல்லவனைத் - தானப்பேரி பிள்ளைத் தமிழ்பாடிப் பெட்பாம் அறம்பாடி வள்ளல் அமிழ்தீந்தான் வாழ்த்து.
அம்புலிப் பேர்ப் பருவம் ஆர்த்த புலவர்க்கும் "தம்தினத்தோம்' காட்டித் தவிக்க விடும்-எம்கவியாம் ஞானப் பிரகாசன் நாடுலகைத் தான் வென்று மானப் புகழ் படைத்தான் வாழ்த்து
ஈழநாட்டுப் புலவன் எல்லையில் நல்நண்பன் தாழ நினையாத தண்டமி ழ்க்கோ-ஆழநெடுஞ் சீருள்ளம் ஓங்கு சிறப்புள்ளம் கொண்டிலங்குந் தேருள்ளம் நல்லுள்ளம் தேர்.
கவிஞரை வாழ்த்திய பற்பல கவிஞர்களும் கவிஞரின் பல்துறை அறிவையும் பல்துறைச் சிறப்பையும் தம் வாழ்த்துதலில் வாழ்த்து தலைக் கண்ட நாம் கவிஞரின் ஆற்றல்கள் அனைத்தையும் நேரில் கண்டு சுவைப்பது போல் அழகுறப்பாடியிருப்பது அக்கவிஞர்களின் சிறப்பாகும். கவிஞர்கள் மட்டுமல்லர் அறிஞர்களும் வாழ்த்துதல் கண்டோம். திறமான புலமையெனில் தாமும் வாழ்த்துதல் கடனே. ஆகவே இவ்வாய்வுக் கட்டுரையில் "பேரறிஞர் பாராட்டுரைகள் என்னும் இப்பகுதியில் வாழ்த்துப் பாக்கள் அமைவது பொருத்தமே.
ஈழத்துக் கிறிஸ்தவ தமிழ்க் கவிஞர் க. த. ஞானப்பிரகாசம் என்னும் தலைப்பில் ஆய்வு நூற் கட்டுரை யொன்று 150 பக்கங்களில் எழுதிப் பட்டம் பெற்ற யாழ்/பல்கலைக்கழக மாணவி.
யோர்ஜ் வலன்ரன்-வலரின்னா அணற்ரொனிக்கா
லண்டன் B. A. Luntavusavig.60s
- 7.97 கு. பு. இது மேற்குறிப்பிட்ட ஆய்வுக்கட்டுரையின்
ஐந்தாம் இயல்
4.
'அவன் நீர்க்கால்களின் ஒரமாய் நடப்பட்டு தன்காலத்தில், தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்"
ar iš 13
- - - *íor

Page 31
இடம் பெயர்ந்தோருக்கு இருப்பிடம் அளித்த தம்பதிகள்
இருவரும் ஒய்வு பெற்ற காலத்தில் தாங்கள் தனியே வசிப்பதற் காசு, கொடிகாமத்தில் ஒரு காணியை வாங்கி, இந்த இல்லத்தைப் புதிதாக நிருமானித்தார்கள். பிரச்சனையான காலத்தில் அதை முற் நாகக் கட்டியெழுப்ப முடியாது போனாலும் ஐம்பதுபேர் தங்குவ தற்கு வசதியான இடம்.
நாம் 1995 ம் ஆண்டு ஐப்பசி இறுதியில் இரவோடிரவாய் எத் தைைரயோ தடைதாண்டி அலைந்து சென்று சுேட்டபோது, அட்டி யின்றி அன்போடு தங்கள் இல்லிடத்தைத் தந்துதவினார்கள் கொடிகாமச் சந்திக்கு அருகே பருத்தித்துறை வீதியில் பன்நோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைமை அகத்துக்கு முன்பாக, அவர்கள் மரம் போல. நல்லதண்ணிர் - வெதுப்பகம்- சந்தை= அஞ்சலகம்- கிராம சேவகர் பணிமனை, போக்குவரத்து சகலவசதிகளுடனும் பொருந்திய இடம், அதுதான் அவர்கள் ஓயாது வணங்கும் சூசைமாதவன் பேரினைக் கொண்ட"புனித வளனார் பொன் இல்லம்'ஆகும்.
நாங்கள் மூன்று குடும்முடம்- தம்பதிகளின் மகள் குடும்பமும் சேர்ந்து சுமார் இபத்திைந்து பேர்களும் ஆறுமாசகாலமாக இருந் தோம், தம்பதிகளின் தண்முகமும்- இன் சொல்லும், தகைசான்ற உதவிகளும் எமக்கு நல்ல மன அமைதியைத் தந்தன. இடைக்கிடை அருட்குரவர்கள்-அருட்சகோதரிகள் வந்து மன ஆறுதல் அளித்துப் போவார்கள். பொருள் இழந்து வந்த கவலைக்கும்- போர்க்கால அவலத்துக்கும் நன்மருத்து கொடுக்கும் ஒரு வைத்தியசாலை போல வும் கருதினோம் பி.ப 6-7 மணிமட்டும் - செபமாலை - மற்றுஞ் செபங்கள், தேவதோத்திரப் பாடல்கள் மனத்துக்கு மிக்க சாந்தியளித் தன.
பிரதி நன்றியை விரும்பாத பெரியமனம் படைத்த இத்தம்பதிகள் காலத்தினாற் செய்த உதவிகள் ஞானத்திலும் மானப் பெரிய தெனலாம்.
இவர்கள் திருமண மணிவிழாக் காணும் இற்றை ஞான்று அவர்களை இனிதே வாழ்த்கி - நூற்றாண்டு விழாவுங்கான எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.
எம். ஜென்றிக் எஸ். மரியதாஸ், ஆசிரியர் அரச பெற்றோவிய கூட்டுத்தாபனம் யாழ்/ புனித சாள்ஸ் மகா
யாழ்ப்பாணம். வித்தியாலயம்.
 

பொன் விழாவின் போது
தென் இந்திய வேளாங்கண்ணித்
திரு n'나 முன்றில்
21-12-1986

Page 32

எமது பெற்றோர்
அ/ன்னையின் அன்புக்கு நிகரான அன்பு இவ்வுலகில் எமக்கு எதுவுமேயில்லை. நாம் சிரித்தால் சிரிப்பதற்குப் பலர் உள்ளனர். ஆனால், நாம் அழுதால் அழுவதற்கு அம்மா மட்டும் ஒருவர்தான் உலகிலுளர். அம்மா செய்யுங் கடமைகள் எண்ணில் அடங்கா. என் னிடம் மட்டுமன்றி ஏனைய எனது சகோதரர்களிடத்திலும் அதே அன்புதான்.
எமது தந்தையரை " அந்நாள் அகத்தியரின் அவதாரம் " என கவிஞர் ஒருவர் பாடினார். அது உண்மைதான். உருவத்தில் மாத் திரமன்று - தத்துவத்தில் தமிழில் அவரின் எண்ணம் எமக்குண்டு. " சிறியன சிந்தியார்” என்ற கம்பர் பெருமானின் கூற்றிற்கும், உள்ளுவவெல்லாம் உயர்வே உள்ளல் ' என்ற வள்ளுவர் கூற்றுக் கும் எடுத்துக்காட்டானவர்.
கல்வியே சீதனமாகக் கருதுபவர், தானுஞ் சீதனம் பெறாமலே திருமணஞ் செய்தவர். இருவரதும் ஆரம்ப சம்பளம் ரூபா 43/-ம் 38/-ம். இதை நம்பித் திருமணஞ் செய்து எட்டுப் பிள்ளைகளைப் பெற்ற னர். எனக்கடுத்த ஆண்கள் இருவரும் பெற்றோர்க்கு உதவி செய் வதற்காக வானதூதர் கீதம் பாட மலர்ப் பாதந் சேர்ந்தனர். பின் வந்த ஐவரும் சேர்ந்து என்னுடன் அறுவரையும் வாழ்வுக்குரிய கல்வி, பொன், பொருள், புகலிடம் அளித்துப் போஷித்தனர்.
தான் சீதனம் வாங்காதது போலவே, மருமக்கள் பேரப்பிள் பிள்ளைகளிடமும் அன்றும், இன்றும். நன்கொடைகள், அன்பளிப் புக்களை எதிர் பாராதவர். “தந்த தெய்வம் தானே தரும்' என்ற உதயணன் கூற்றை எண்ணி, எண்ணி உளம் பூரிப்பவர். இறைவ னுக்கு நன்றி கூறுபவர்.
அம்மா அதிகம் அன்புட்ைைேவ என்றாலும், ஐயா அன்போடு கண்டிப்பும் உடையவர் என்பதைக் கூறத்தான் வேண்டியுள்ளது. நாம் படிக்கும் காலத்தில் தவணைப் பரீட்சைகளிற் 1ம் 2ம் இடத் தைப் பெற்ற பிள்ளைகளின் 'றிப்போட்டில்” கையொப்பமிடுவர். அதற்கு மேல் என்றால் அம்மாவிடம் கையொப்பத்தை வாங்கிக் கொண்டு போங்கள் என்பார். பருவம் எய்திய வேளையில் கவரில் ஒரு சினிமாப்பாட்டின் அடியை எழுதித் தொங்க விட்டிருப்பார். அது - " போனபக்கம் போகவிட்டேன் பார்வையை - அவன் பொறுத்திருந்தே புரிந்து விட்டான் வேலையை ே

Page 33
56
இது இப்போதும் எங்கள் இதயத்தில் பதிந்து இருப்பது போல் இன்று எமது பிள்ளைகளுக்கும் அது பேருதவியாக இருக்கிறது.
இன்று 22 பேரப்பிள்ளைகளையும், 3 பூட்டப்பிள்ளைகளையும் கண்டு ஆயிரம் பிறை கண்ட பெற்றோராக வாழ்கின்றனர். 22 பேரப்பிள்ளைகளில் 14 பேரப்பிள்ளைகள் வெளிநாட்டில் வாழ்கிறார் கள். எஞ்சிய 9 பேரப்பிள்ளைகளில் எனது இளைய சகோதரியின் பிள்ளைகளாகிய இருவர் பிரியா, பத்மா என அன்புடன் அழைக் கப்படுவார்கள். இவ்விருவரும் பிறந்த நாள்தொட்டு இன்று வரை யிலும் எமது பெற்றோருக்குச் சகல விதத்திலும் உதவியாக இருந்து வருகின்றார்கள். உதாரணத்துக்கு ஒரு சம்பவத்தைக் கூறவிரும்புகின் றேன். 1987 ம் ஆண்டு அப்போது பிரியாவுக்கு வயது 11 பத்மாவுக்கு வயது 7. பாடசாலை விடுமுறை நாள்களில் எப்போதும் எமது பெற் றோருடனே வந்து இருப்பது போல் அப்போதும் அல்வாய் வந்திருத்தார் கள். திடீரென 'வடமராட்சி ஒப்பறேஷன் ஊர்மக்கலெல்லாம் பாது காப்புக்காக அல்வாய் முத்துமாரி அம்மன் கோவிலில் தஞ்சம்புக ஒடி னார்கள். அம்மாவுடன் கூடவே இவ்விருவரும் சென்றார்கள். ஐயா தாமதமாகவே சென்றார். இரவு 11.00 மணி மட்டில் அம்பாள் முன் னிலையில் அபயம் கோரி அடைக்கலம் புகுந்த பல ஆயிரம் மக்கள் மீது "ஷெல்" தாக்குதல், மின்சாரம் துண்டிக்கப்பட்டு எங்கும் கும் இருட்டு. நாலா பக்கமும் ஐயோ! ஐயோ! அம்மாளே என்ற அவ லக் கூக்குரல்கள் வாணைப்பிளக்கின்றன. இறந்தவர்கள் பலர். காயப் பட்டவர்கள் அநேகர். இவர்களுள் எமது அம்மாவும் ஒருவர். காலில் காயப்பட்ட அம்மாவைக் கைத்தாங்கலாக இவ்விருவரும் பிடித்த படியே அப்பப்பா! அப்பப்பா! எனக்கூவி அழுதபடியே அந்த அகால வேளையில் எமது தந்தையாரைத் தேடிக் கண்டு பிடித்து உடனே தானே துவிச்சக்கர வண்டியில் அம்மாவை இருத்தித் தள்ளிக் கொண்டே மந்திகை வைத்திய சாலைக்கு எடுத்துச் சென்ற எமது தந்தையாருக்கு உதவியாக இருந்தது மட்டுமல்ல, 17 நாள்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அம்மாவுக்குப் பணிவிடிை செய்து பலவிதத்தாலும் எமது தந்தையாருக்கு உதவியாக இருந்த அந்த இரு பிஞ்சு உள்ளங்களை எக்காலமும் எம்மால் மறக்கமுடி &lunr257.
இந்நிகழ்வின் பின் நிலமை சீரானதும் எனது மற்றச் சகோதரி புஸ்பராணியும் கணவரும் வைத்தியசாலையிலிருந்து நேராக அம்மா வைக் கொடிகாமத்திற்கும் பிற்பாடு இந்தியாவுக்கும் கூட்டிச்சென் றார்கள். "ஷெல்" பட்டகால் நடக்க முடியாது போய்விடுமோ என்ற கவலை எல்லோருக்கும் இருந்தது. எமக்கு நேரே வரமுடியாத நிலமை. ஐயா தனித்து அல்வாயில் விடப்பட்டார். இந்நிலமையில் சகோதரி புஸ்பரானியும், அவவிள் பிள்ளைகளும் அம்மாவில் அதி கூடிய கவ

ST
னம் எடுத்து வேண்டிய சிகிச்சைகளை மேற்கொண்டதன் பலனாக 3 மாதங்களுக்குள்ளாகவே அம்மா இலங்கைக்கு மீண்டும் சுகமாக வரமுடிந்தது.
இறுதியாக 1986ம் ஆண்டு எமது பெற்றோரின் 50 வது வருட திருமண ஞாபகார்த்தமாக அவர்களை இந்தியாவுக்கு அழைத்துச் சென்று வேளாங் கண்ணிமாதா திருத்தலத்தில் புது மங்கல நாண் அணிவித்தது மட்டுமன்று, 1892 ம் ஆண்டு எமது அம்மா மீண்டும் காவில் நோய்வாய்ப்பட்டிருந்த போதும் செலவு கஷ்டம், எதனை யும் பொருட்படுத்தாது ஓடிச்சென்று தேவையான வைத்திய உதவி செய்து, 2 மாதங்களுக்குமேல் அம்மாவுடன் கூடவே இருந்து ஒர ளவு குணப்படுத்திய பின் மீண்டும் தனது கடமையைத் தொடரச் சவூதிக்குத்திரும்பிய எனது பெரிய தம்பி திரு. அன்ரன் யேசுதாச னையும் எம்மால் மறக்க முடியாது. தற்பொழுதும் நீண்ட விடு முறையில் அம்மாவுடன் நிற்பதாகவும், அவருக்கு உதவியாக எனது கடைசித் தம்பி திரு. அருள் சூசைதாசனும் கூடவே இருக்கின்றார் என்றுங் கேள்விப்பட்டபோது மன நிறைவு அடைகின்றேன். எப்படி யும் எமது பெற்றோரின் இந்த 'மணிவிழா" சிறப்பாக நடக்கும் என்ற நம்பிக்கையும் அடைகின்றேன்.
இந்த மணிவிழாவிற் கலந்து கொள்ளத் தனது குடும்பத்துடன் கொழும்பு மட்டும் வந்து - போக்குவரத்துச் சீரழிவினால் யாழ் செல்ல முடியாமல் மீண்டும் ஜேர்மனிக்குத் திரும்பிய எனது இரண்டாவது தம்பி திரு. ஜோஸ் மரியதாசனை நினைக்கும் போது கவலையாக இருந்தாலும் எஞ்சிய 4 உடன்பிறப்புக்களாகிய திரு. அன்ரன் யேசுதாசன், திருமதி: புஸ்பராணி செபஸ்தியாம்பிள்ளை, திருமதி. செல்வராணி சிவலிங்கம் திரு. அருள் சூசைதாசன் ஆகியோருக்கு நேரில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு மன நிறைவு அடைகின்றேன்.
இந்த 'மணி விழாவில்" என்னால் நேரடியாகக் கலந்து கொள்ள முடியாதபடியினால் இ9வகளை மனந்திறந்து எழுதுகின்றேன்.
மிக்க முதுமை எய்திய எமது பெற்றோரை மேலும் அன்புடன் பராமரிக்க எல்லாம் வல்ல இறைவன் ஆசி அருள்வாராக
வணக்கம்
திருமதி மேரி பவுலினா ஜெயராணி ராஜசூரியர்
சிரேஷ்ட மகள் Liptmrešteň) · (முன்னாள் ஆசிரியை)

Page 34
58
அன்புமிக்க ஞானப்பெற்றோருக்கு
இல்லற வாழ்க்கையில் அறுபது வருடங்கள் பூர்த்தி யாகி மணிவிழாக் கொண்டாடும் தங்களுக்கு வாழ்த்துக் கள் கூறிநிற்பதில் பெருமையடைகிறேன். .
எனது குடும்பம் கல்வியிலும் ஒழுக்கத்திலும் செல் வாக்கினைப் பெற்று இன்று தலை நிமிர்ந்து நிற்பதில் தங் களது பங்கும் உண்டென்று உறுதியாகச் கூறுகிறேன். எனது மனைவியுடன் சேர்ந்து 1986 ம் ஆண்டு தொட்டையா வின் “ கவிமணி விருது வழங்கும் வைபவத்தில் கலந்து சிறப்பிக்க வாய்ப்புக் கிடைத்தது பெரிய பேறாகக் கருது கிறேன். ஆனால், தற்போது நாட்டின் போக்குவரத்து நிலைமையால் நேரே வந்து வாழ்த்த முடியாமையை யிட்டு மனம் வருத்தமாயிருக்கிறது.
அடுத்தடுத்த ஆண்டுகளிலாவது நேரே வந்து தொட் டையா, தொட்டம்மாவைக் கண்டு வாழ்த்துக்கள் கூற ஆண்டவன் அருள் புரிவானாக.
Dr. J. Alosius Jeyaratnam
Australia t Dr. அலோசியஸ் ஜெயரட்ணம் 0 ፭- 0 7- 97
DAX -
"இறை ஞான ஈர்ப்பு, எனும் நூலில்
பாவத்தை விதைப்பது மனித இனம்- அதன் பயனை அறுப்பது இறைவன் மகன் காய்த்த கொப்புத் தாழ்ந்து நிற்கும்
அருள் திரு பற்றிக் ஞானப்பிரகாசம்

'S9 எனது அன்பான மாமன் மாமி
இல்லோரின் கவலைகளுடன் எமது தொடர்புகள் ஆரம்பித்தன. உங்கள் மகன் தொலைந்து போய்விட்டான் என்ற கவலை உங்க ளுக்கு, நீங்கள் தொடர்பை நிறுத்திவிட்டீர்கள் என்ற கவலையுடன் வாழ்ந்த கணவரைக் காணும்போது எனக்குள் ஏற்பட்ட மனக்கவலை வேறு. என்னை அறியாமல் தெரியாமல் நீங்கள் தந்த வரவேற்பு களை நான் நேரே கண்டபோதும் அனுபவித்தபோதும் மேலே எழு திய கவலைகள்யாவும் மறைந்து போய்விட்டன.
அன்பு மாமி, உங்களின் உண்மையான உள்ளத்தில், பிள்ளை களுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும், மருமக்களுக்கும் இடம் கொடுத் துள்ளீர்கள். இந்தச் சுறுசுறுப்பான பிள்ளைகளைக் கட்டுப்படுத்துவதற் குத் தேவைப்பட்ட கடுமை உங்களுக்கும் இருந்தும் உங்களின் சிரிப்பு முகத்தை விட்டு மறையவில்லை. பாஷையால் விளங்க முடியாதமையாக், வின்சன்ட் பேரப்பிள்ளைகளுடன் உளம்விட்டுப் பழகியவிதம் மறக்க முடியாது. இந்தப் பாசத்தைப் "பற்றிக்'கும் அனுபவிக்கக் கொடுத்து வைக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையில் எவ்வளவோ கடுமையான வேலைகள் இருந்தன. தற்போதைய நிலை நாட்டில் இல்லாவிடில் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளின் உதவியும் ஆறுதலும் உங்களுக்கு நன்கு கிடைக்கும். அவை பிரச்சனைகளையும் கவலைகளையும் குறைக்கும். உங்கள் பாசத்தால் பிள்ளைகள் உள்ளம் நிறைந்த உணர்ச்சிகளைத் தெரியப்படுத்தவும் கற்றுக்கொண்டார்கள். எனது கண வருக்கு இந்தப் பெரிய கொடையை நீங்கள் கொடுத்ததற்கு எனது நன்றிகள்.
அன்பான மாமா! நீங்கள் ஒரு மதிப்புள்ள மனிதர். உங்களைப் பொறுத்தவரையில் எல்லாப் பிள்ளைகளுக்கும் படிப்பு, கல்வி, வேலை செய்யும் அத்திவாரம் போட்டீர்கள். இவைகளை நீங்கள் பிள்ளைக ளுக்குச் செய்தால் உங்கள் விருப்பங்களை நீங்கள் குறைக்க வேண்டியிருக்கிறது. தொடக்கத்தில் கஷ்டமாக இருந்த போதிலும் என்னையும் எனது சமூகத்தையும் நீங்கள் ஏற்றுக்கொண்டது மதிப் புக்குரியது. இதற்கு நான் நன்றி கூறக் கடமைப்பட்டவள். உங்களின் அறிவிலும் அனுபவத்திலும் நான் பங்கு பெற முடியாமல் இருப்பதை யிட்டு மிகவும் கவலை. மணித்தியாலங்கள் உங்களுடன் சமூகம் கல்வி, கட்டுப்பாடு இவை குறித்துக் கதைக்க பாஷைமட்டுமன்று நிலைபரங்களும் தடுக்கின்றன. கடமைகளுக்கு முதலிடம் கொடுத்து, எம்மெல்லோருக்கும் இங்கு பொறுப்பெடுத்துக் குடும்பத்தைக் கொண்டு இழுக்கும் மகனை எனக்குக் கணவராகத் தந்ததற்கு நன்றி.
அன்பு மருமகள்
Gaurhoof. - - - - டொறத்தி. மரியதாசன்

Page 35
எங்கள் இனிய அப்பப்பா அம்மம்மா!
7ெமது அம்மாவும் அப்பாவும் வெளியிடங்களுக்குச் சென்றுவிட அம்மம்மாவின் அரவணைப்பிலும் அப்பப்பாவின் முழுமையான வழி நடத்தலிலும் வளர்ந்த காலங்களை நினைவு கூருகிறோம்.
தலைவாரிப் பூச்சூடிப் பட்டுச்சட்டையிட்டுப் பாலர் வகுப்புக்கு அனுப்புவது மட்டுமா - சோறு தீத்தி - கதைகள் சொல்லி - பாட்டுப் பாடி நித்திரையாக்குவதும் அம்மம்மாதான். எம்மால் இலகுவில் மறந்துவிட முடியுமா? இருவரும் கண்டிப்பில் வழிநடத்தினாலும் கல்வியிற் காட்டிய அக்கறைதான் எம்மை இன்று தலைநிமிர்ந்து நிற்க வைக்கிறது. 'அ' வுக்குச் சுழிபோட்டு அம்மம்மா தொடக்கி விடுவா. உறுப்பெழுத்துக் கொப்பிகளை வாங்கித்தந்து குண்டுபட் டவர்களின் பான்மையாய் கரம் இழந்த - சிரம்இழந்த - கால் இழந்த எழுத்துக்களாக இல்லாத உறுப்பான எழுத்துக்கள் எழுத அப்பப்பா வழிகாட்டினீர்கள். உங்கள் எழுத்துக்கள் போல, உங்கள் பிள்ளைக ளின் எழுத்துக்கள் போல எங்கள் எழுத்துக்களும் அமைய அத்தி வாரமிட்டீர்கள்.
* படிப்பு - உத்தியோகம், முடிப்பு' - மூன்றும் வரிசையாக வர வேண்டும். வரிசைக் கிரமம் ஒன்று மாறினாலும் வாழ்க்கையே மாறி விடும்" என்ற மூலமந்திரத்தைப் பிள்ளைகளுக்கும் தங்கள் மாணவர் களுக்கும், பேரர்களாகிய எமக்கும் அடிக்கடி போதித்து வந்தீர்கள். அதனால் தங்கள் மாணவர்களும் இன்று பல இடங்களில் சிறப்பான இடங்களிற் பதவி வ கி தி து - பல சந்தர்ப்பங் களில் உங்களைப் பற்றிக்கூறக் கேட்டிருக்கிறோம்; சந்தோஷமடை கிறோம். காலமெல்லாம் கடினமாக உழைத்து எம் பெற்றோரைப் படிப்பித்து ஆளாக்கி வைத்த உங்களுக்கு - நாம் பொருளாக ஏதும் தந்துவிட்டாலும் ஏற்க மறுக்கிறீர்களே - காரணத்தையும் மறுக்க முடியாது செய்கிறீர்கள். உங்கள் கொள்கையும் குறிக்கோளும் எமக்கு வியப்பையே ஊட்டுகின்றன.
ஓய்வு பெற்றபின் எத்தனையோ ரியூட்டரிகளில் பாடம் கற்பிக் கப் போயிருக்கலாம். பிற நாடுகளுக்கும் சென்றிருக்கலாம்.
"பெற்றதாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே" என்று பிள்ளைகளுக்காக - பேரர்களுக்காக - ஒரு குறிக்கோளுடன் நாட்டிலேயிருந்து உலகளா விய போட்டிகளில் கலந்து பரிசுபெற்று ஈழத்தை நினைவூட்டிக் கொண்டிருக்கும் அப்பப்பாவுக்கும் அவருக்கு எல்லா விதத்திலும் துணையாக இருந்த அம்மம்மாவுக்கும் நாம் செய்யும் கைம்மாறு பேரர்களும் நல்ல பிள்ளைகளாக வாழ்ந்து இவர்களது பெயருக்கு மெருகூட்டுபவர்களாக இருப்பதேயாகும்.
தொடர்ந்து அம்மம்மாவும் அப்பப்பாவும் நூற்றாண்டு விழா வையும் காண எல்லாம் வல்ல ஆண்டவன் ஆசி அளிக்க வேண்டுகி றோம்.
அன்புக்கினிய பேரர்கள்

61
S. ஜோசேப் தேவகுமார்
2-JSGäw L-T அன்பான அப்பப்பா ! அம்மம்மா
னெது பெற்றோர் இங்கிலாந்தில் இருந்த வேளையில் என் னையும் எனது இரு சகோதரிகளையும் அல்வாயில் வைத்து அன்போடு ஆதரித்து வளர்த்த அருமையை என்னால் மறக்க முடியாது. அப் போது எங்சளுக்குக் கதைகள் சொல்லித் தாலாட்டுப் பாடி அரவ ணைத்த அம்மம்9ாவையும். ஆடியோடி விழும்போது சைதூக்கி u அப்பப்பாவையும் நினைக்காத நாளில்லை.
படி, படி யென்று பகலிரவாய்ப் பாடுபடுத்தும் அப்பப்பாவின் பயம் இன்றுந்தான் இருக்கிறது. நான் நாலாந்தரம் கரவை திரு இருதயக் கல்லூரியில் படித்தபோது மறைக்கல்விப் பரீட்சையொன்று யாழ்/ மேற்றிராசனத்தால் நிகழ்த்தப்பட்டது. பல வினா விடைகளைத்தந்து வீட்டில் பயிற்சியளித்தார். பரீட்சைக்கு 2, 3 நாள்களுக்கு முன்னரி 6 னக்கு நல்ல காய்ச்சல் - சற் று ப் படுக்கத்தான் விட்டாரா? * சோதனையை நினைத்தால் எனக்குங் காய்ச்சல் அப்போது வந் ததுதான்-கள்ளம்போட மனமிருந்தும் நான் அதைக் கையாடாமல் பரீட்சை யெடுத்தே வந்தேன் என்று கூறி மருந்தையும் குடி, பாடத்
தையும் படி யென்று கூறினார். பரீட்சைக்காக என்னைத் துவிச் சக்கர வண்டியில் ஏற்றிச் செல்லும் போதும் மறைக்கல்வி வினா விடைகளைக் கேட்டுக் கொண்டே சென்றார். நான் பரீட்சை
யெழுதி முடியுமட்டும் வெளியில் காத்திருந்து வீட்டிற் சேர்த்தார். பெரும்பாலும் அவர் பயிற்சிசெய்த கேள்விகளே பரீட்சைக்கு வந்தி ருந்தன. இதனால் நான் சித்தியடைவேன் என்று கூறினேன். * சித்தியா ? பரிசல்லவாடா பெற வேண்டும் " என்று ஒரு பார்வை பார்த்தார். இறுதியில் நான் ஒருவனே அக்கல்லூரியில் பரிசு பெற்று அப்போதைய அதிபர் திரு. தோமாஸ் ஈப்பனால் பாராட்டப்பட்ட போது என் காய்ச்சலும் பறந்தது. அப்பப்பாவின் மனக் காய்ச்சி லும் பறந்தது.
பின்பு நான் இளவாலை புனித கென்றிக் கல்லூரியில் படித்த போதும் அப்பப்பாவிடம் படித்தவை மிக்க பயனளித்தன அப்போது நன்றியாக நான் ஒரு கடிதம் எழுதினேன். அது இப்போதும் உறுதிக் கட்டுப்போல் தப்பாது வைத்திருப்பாரென்று எண்ணுகிறேன்.

Page 36
62
அப்பப்பா, அம்மம்மா இருவரதும் பொன் விழாவைப் பெரிய மாமாவும், இளைய மாமாவும் வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் முன்னின்று நடத்தியபோது நானும் நேரிற் கண்டு களித்தேன். இந்த மணி விழாவை ஆபிரிக்காக் கண்டத்திலிருந்து என் மனக்கண் ணாற் பார்த்து மகிழ்ந்து மன்றாடி வருவேன்.
இறையருள் என்றும் நிலவுவதாக !
இப்படிக்கு அன்புப் பேரன்
றோய் '
R. ரியூடர் றஞ்சித் A. M. B.
பொறியியலாளர்
பிரான்ஸ் அன்புள்ள அப்பப்பா அம்மம்மா !
உங்களின் பொன்விழாவை வேளாங்கண்ணி மாதாவின் திருத் தலத்தில் காணும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. ஆனால் * மணி விழா " வைக் காண மனதிருந்தும் நாட்டு நிலைமை இடங் கொடுக்கவில்லை,
* எமது பெற்றோர் " என்ற தலைப்பில் மம்மி எழுதியிருப்பதி னால் நான் அதிகம் எழுதவில்லை. என்மனதில் என்றுமே நீங்கா மல் இருக்கும் " அப்பப்பா கூறிய ஒரு வசனம் " உண்டு. அதை மட்டுமே குறிப்பிடுகிறேன்.
நான் ஜி. சீ. ஈ. சாதாரணம் படிக்கும் காலத்தில் ஒருநாள் அப் பப்பாவிடம் " அப்பப்பா தமிழ் இலக்கணம் கொஞ்சம் சொல்லித் தாருங்கள் " என்று கேட்டேன். " எலி ஒன்று தானாகவே தேடிப் பொறி பில் மாட்டப்பட்ட நிலை பில்தான் அன்று நான் இருந்தேன் " என்பதைப் பின்புதான் உணர்ந்தேன். காரணம் அப்பப்பா கேட்ட கேள்விகளுக்கெல்லசம் என்னால் விடைசொல்ல முடியாமற் போனதே
என்னடா தினமும் பள்ளிக்கூடம் போகிறாய்-இதற்குள் ரியூஷன் வேறு-என்ன படிக்கிறாயா ? அல்லது படிப்பது போல் நடிக்கிறாயா?" என்றார். நான் உண்மையைக் கூறிவிட்டேன். அதாவது என து * ரியூஷன் ஆசிரியர் " இலக்கணப் பகுதிக் கேள்விகளை விட்டு விட்டு ஏனைய பகுதிகளைச் செய்தாலே போதும் சித்தியடைவீர்கள்"என்று

63
கூறியதாகக் கூறினேன். உடனே 'ஓ ! அப்படியா ? சங்கதி. அப்போ காசு கரியாகுதேயொழிய பாசு சரியாகுதில்லை " என்று கூறியதுடன் நின்றுவிடாமல் எனது மம்மியையிட்டும் ஒரு சம்பவம் கூறினார். அது ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் சேர்வதற்கான போட்டிப் பரீட்சை, அப்பப்பாவே வீட்டில் வைத்து மம்மியைப் பயிற்றிவிட்டார். பரீட் சையிலும் அப்பப்பாவினால் உதாரணமாகக் கூறப்பட்ட செய்யுளே வந்திருந்தது. எப்படி நயம் எழுதினாய் என்று " உனது மம்மியை தான் கேட்டேன்” அப்போது அவள் ?? ஐயா ! அள்ளிச் சொரிந்து விட்டேன்" என்று பதில் கூறினாள். "நீ என்ன அள்ளிச் சுெற்ரிய வா போகின்றாய்?" என்று கூறி இலக்கணப் பகுதியை மிகச் சில நாள்கள் சீராகக் கற்பித்தார். இதன் பலன் என்க்கும் திறமைச் சித்தி கிடைத்தது. என்னால் இன்றுவரையிலும் இந்த வசனத்தை " அள்ளிச் சொரிந்தது " மறக்க முடியவில்லை. இப்படித்தான் அவரி டம் கற்ற மாணவர்கள் பலரும், நோகாமல் நகச் சொல்லும். நுட்ப மதி படைத்தவர் என்று கூறக் கேட்டிருக்கிறேன்.
அப்பப்பா, அம்மம்மா இருவருக்கும் நல்ல சுகத்தைக் கொடுக்க வேண்டுமென்று லூர்து அன்னையிடம் வேண்டுகின்றேன்.
இப்படிக்கு அன்புப் பேரன்
றஞ்சன்
J. GypsiTeh) Gpg|GeoTrroisie B E. (Civil)
பொறியியலாளர்
ஊட்டி, தென். இந்தியா.
அன்பான அப்ப்பபா அப்பம்மா அறிவது
உங்களின் கடிதம் கிடைத்தது. உங்களின் மணிவிழாவுக்காக அப்பா உவ்விடமே இருக்கிறார் என்று அறிந்து மிகவும் சந்தோஷப் படுகிறேன்,
அப்பப்பா எனது கல்லூரி வாழ்க்கை முடிந்து விட்டது. எனது கல்வி எதுவித தடங்கலுtல்லாமற் சீராக இருந்தற்கு நீங்களும் ஒரு காரணம் எதற்கு எடுத்தாலும் எனது அப்பா உங்களைத்தான் உதாரணமாகக் கூறுவார். பள்ளி வாழ்க்கையில் இவைகளை நாள் சரியாகச் சிந்தியா விட்டாலும் இப்போது அவைகளின் அர்த்தங்களைப் புரிந்து கொள்ள முடிகின்றது. உதாரணமாக நான் கல்லூரி விடுதி

Page 37
64")
யிலேயே அதிக வருடங்கள் தங்கிப் படித்தேன். 'விடுதிச் சாப்பாடு சரியில்லை" என்று அப்பாவிடம் நான் முறையிடுவதுண்டு. அதற்கு அவர் கூறும் பதில் "ஊணன் கருமம் இழந்தான்" என்று. பரீட்சை யில் கேட்கப்படும் வினாக்களுக்கு எழுதும் விடை விபரமாகவும், விளக்கமாகவும் இருக்க வேண்டும். விடைகளைத் திருத்துபவருக்குப் புரியும் என்று நீங்கள் விடையைச் சுருக்கி எழுதினால் "அவரும் புள்ளி களைச் சுருக்கி விடுவார்' என்று கூறுவார்.
இம்முறை பணம் அனுப்பும் போது கொஞ்சம் கூடுதலாக அனுப்புங்கள் என்று எழுதினால் 'என்ன வேறு யாரையும் படிப்பிக் கிறாயா?" என்று கேட்டு எழுதுவார்.
அன்றைய பாடங்களை அன்றே மீட்டல் செய்து மனத்திற் பதித்து வைத்துவிட வேண்டும். தவறினால் 'குருவித் தலையில் வைத்த பனங்காய் மாதிரி இறுதியில் வரும்" இதன் அர்த்தத்தை நான் எனது இறுதி ஆண்டில் மஞ்சள் காமாளை நோயினால் பீடிக்கப்பட் டிருந்தபோது நன்கு உணர்ந்தேன்.
கல்வியின் வளர்ச்சி மாட்டுக் கொம்பு போல் மேல் நோக்கி வளரவேண்டுமே தவிர, மாட்டு வால்போல் கீழ் நோக்கி வளரப்ப டாது" என்பார். இப்படி எழுதினால் எவ்வளவோ எழுதலாம். இவைகள் யாவும் உங்களால் எனது அப்பாவுக்கு கூறப்பட்டவை என்று புரிந்து கொண்டாலும், இன்றுவரை புரியாத ஒரு வசனமும் உண்டு. இது பற்றி அப்பா, பவானிச் சித்தா, பாப்பாமாமியிடமும் கேட் டேன். அவர்களும் விளக்கம் கூறவில்லை. 'அப்பப்பாவிடமே கேள்" என்று கூறிவிட்டார்கள். அதாவது ஆங்கிலம் கற்கவென்று (எனது அப்பாவை) கல்லூரிக்கு அனுப்பினேன். இறுதியில் அவள் வேறு ஒரு புதுப்பாஷையைக் கற்றுக் கொண்டு வந்திருக்கிறான் என்று நீங்கள் கூறியது. நிச்சயமாக உங்களை நேரில் காணும் போது இதன் அரித் தத்தை நீங்கள் எனக்குக் கூறத்தான் வேண்டும்.
நாட்டு நிலைமை சீராகவேண்டும்- உங்கள் எல்லோரையும் காண ஓடிவருவேன்.
இறுதியாக எல்லாம் வல்ல இறைவன் அப்பப்பா, அப்பம்மா இருவருக்கும் நீடிய ஆயுளையும் நல்ல சுகத்தையும் கொடுத்தருள வேண்டுமென்று இரந்து மன்றாடி இக்கடிதத்தை முடித்துக் கொள் கிறேன்.
s இப்படிக்கு உங்கள் அன்புப் பேரன்
"றெஜி"

தேன் துளிகள்
(திருமண மணிவிழாக் காணும் பாக்கியம் பெற்ற இரு வரதும் வாழ்க்கையில் மாதவ சீலர்கள் பல்லோர் பற்பல மணிவாக்குகளைப் பத்திரிகைகள் - விழாக்கள், கடிதங் களிலும்-நேரிலும் உதிர்த்திருக்கிறார்கள். அவற்றையெல் லாம் எழுதமுடியாவிட்டாலும், நன்றியைக் காட்டுவான் விரும்பி, ஒருசிலவற்றை யென்றாலும் இரத்தினச் சுருக்கமாக தேன் துளிகள் என்னும் பகுதியில் தொகுத்திருக்கிறோம்.1
மட்டக்களப்பு மறைமாவட்டத்தில்
1933 ல் எங்கள் சமயபாட ' டிப்புளோமா 'ப் பரீட்சையில் திறமைச் சித்தியடைந் தள்ளிர், அதற்காக இச் சான்றிதழை வழங்கு கின்றேன். உங்களுக்குள்ள வேத அறிவை யாவர்க்கும் பகிர்ந்தளித்துஒழுக்கத்தை வளர்ப்பீராகவென ஆசீர்வதிக்கிறேன்.
X காஷ்டன் றொபிஷே முன்னாள் ஆயர் மட்டக்களப்பு-1933
"இன்று உங்கள் திருமண முதற்பூசைப்பலியை ஒப்புக்கொடுத் தேன். நீங்கள் இருவரும் நான் மதிக்கும் நல்லாசிரியர்கள், மட்டக்களப்பு கோட்டைமுனைப் புனித தேரேசம்மாள் கன்னியர் மடத்து முதல்வி அருள்திரு மேரி அல்டெற் றுாட் F. M. M.-இந்த வித்தியாலய பிரதம மேற்பார்வையாளர் அருள் சகோதரி - மேரிபிளசர் சக்கிறமென்ற் F r. M. இருவரும் உங்களில் வைத்த நம்பிக்கை விசுவாசத்தினால் இத் திருமணத்தை ஒழுங்குசெய்திருக்கிறார்கள்-இந்த மகத்தான தேவ திரவியனுமானத்தை மதித்து முன்னோடியாகத் திகழுங்கள்" என்று ஆசிர்வதிக்கிறேன்.
எல். டுப்போண்ட் S, J. முன்னாள் கத். ஆசிரிய பிரதம பொது முகாமையாளர்
LDL Liaonil 1 2-8-1936
என்னிலை அறிவாய் திருமண வாழ்த்துநான்.
ஈதலிற் சுணங்கினுஞ் சினவாய்:
தன்னிலைத் தலைவி மக்டலின் துணைவா
ஞானப்ர காசநன் வேளே!

Page 38
66
pf96ŝvarovo iš svaurit GTOs). GT6iv. GBurrdo aumtsår
நிரந்தரம் இரந்தனன் சுகமே'
அருட் சகோதர் S. S. போல் S. S. . புனித வளனார் சபை, கொழும்புத்துறை 15-8-1936
இருக்கு மட்டும் இருந்துவிட்டு, நாள் கோள் பார்க்காது திருமணஞ் செய்தாய்: சகலவகை அஞ்ஞானம் பில்லி சூனியம் முகூர்த்தம் நிமிர்த்த மெல்லாம் உன் சமயத்தில் விலக்கப்பட்டவை யென்று நீ சொல்வாய், உன் குணம் எனக்கு விளங்கும்.
செந்தமிழும் அதன் சுவையும் போல் இணைபிரியாது நீங்கள் இருவீரும் விளங்கி-நீடுழி வாழ்வீர்களாகவென இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்,
பண்டிதர் செ. பூபாலபிள்ள்ை
முன் 63ாள் அதிபர் கோட்டைமுனை புனித செபஸ்தியார் வித்தியாலயம்
மட்ட க்களப்பு
“வந்தநாட் தொடக்கம் வகைதொகையாய்ப் பாடுபட்டீர்
மனந்தூய அறிவீந்து மாசித்தி பெறச் செய்தீர்!
செந்தமிழின் சொற்பொழிவாற் சேயர்மனங் குளிர்ந்தோம்: சந்தக் கவிச்சுவையால் சந்தாபம் தீர்ந்துவிட்டே7 ம்:
அந்தப் பரம் பொருளின் அருளோங்க வாழுகநீர்
ஏழுவருட சேவையின் இறுதியில் புனித தெரேசம்மா கன்னியர் சாதனா வித்தியாசாலையின் அதிபர், ஆசிரியர், மாணவர்கள் 1939
யாழ் மறைமாவட்டத்தில்
எங்கள் ஆயர் ஜே. எமிலியானுஸ் பிள்ளையவர்கள்-சமுகம் அளிக்கச் சந்தர்ப்பங் கிடையாதபடியால், என்னை நெடுந்தீவு மத்திய வித்தியாசாலை 95-ம் ஆண்டு நிறைவு விழாவுக்கு அனுப்பியிருக்கிறார் எல்லாம் வல்ல இறைவன், இத்தீவிலும், தமது மிஷனரிமார்மூலம், இப்போது இளைப்பாறும் அதிபர் க. த. ஞானப்பிரகாசம் போன்ற தகுதிவாய்ந்த, சுயநலங்கருதாத-தேவனுக்கும் தேசத்துக்குந் தேவை யான உத்தம நல்லாசிரியர்களை உருவாக்க இறைவனை இறைஞ்சி அவர் ஆசியை அளிக்கின்றேன்.
L. R. Josiðir Jaaf துணை ஆயர்-யாழ் மறைமாவட்டம்

67
எனக்குச் சொற்கலைப் புலவர்" பட்டம் வழங்கியதைப் பாராட்டி நீங்கள் பாதுகாவலன் பத்திரிகையில் எழுதிய பாக்களைப் படித்தேன் நன்றி, எனது ஆசீர்.
நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்
கத்தோலிக்க பக்திப்புலவர் மரபிற் தோன்றிய “மாதாமலர்மாலை" ஆசிரியர்-பண்டிதர் க. த. ஞானப்பிரகாசம் 153 மணிகளடங்கிய வாடாத பூமாலை யொன்றைத் தேவதாயின் திருவடிகளில் வைத்து வணங்கியுள்ளார்.
தவத்திரு தனிநாயக அடிகள்
நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் செய்த சொற்கலைப்பணி யைத் தொடர்ந்து செரியும் எனக்கு, ஒருசில கைப்பிரதிகளை அழகுறப் பிரதிபண்ணித் தந்த உங்களுக்கும் உங்கள் கனிஷ்ட மகள் செல்வராணிக் கும்-நீங்கள் எழுதித்தந்த இனிய வாழ்த்துக் கவிக்கும் எனது நன்றி.
தாவீதடிகள் தும்பளை
இற்றைக்குப் பதினொரு வருடங்களுக்கு முன்பு-நான் திரு. கே. ரி. ஞானப்பிரகாசத்தை நெடுந்தீவு மத்தி சிரேஷ்ட ஆண்கள் வித்தியாலயத்துக்கு அதிபராக நியமித்தேன். அவர் கல்வியையும் ஒழுக்கத்தையுங் கண்போல் மதித்து ஆற்றிய தொண்டினைப் பாராட்டு வதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
T. M. J. மதுரநாயகம் ஆசிரியர்களின் யாழ்/மறைமாணில பிரதம
பொது முகாமையாளர்
மன்/விடத்தல் தீவில் நீர்கற்பித்துச் சித்தியடைந்த லூயிஸ் ஞானப்பிரகாச மென்னும் மாணவனை எமது ஆசிரிய கலாசாலையிற் சேர்க்க நீர் அழைத்துவந்ததினால் உண்மையில் இவன் திறமையும் ஒழுக்கமும் வாய்ந்த உத்தம மாணவனாய் இருப்பான் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. வேறு சிபாரிசு வேண்டியதில்லை. நான் சேர்த்துக் கொள்ளுகிறேன்.
அருள்.திரு. L.A. சிங்கராயர் M. A. (Lon.)
அதிபர் புளிதவளனார் ஆசிரியகலாசாலை, கொழும்புத்துறை
இலக்கியத் துறையில் தமிழ்க் கிறீஸ்தவக் கவிஞர்களின் பங்களிப்பு பாராட்டக்கூடியதே. இதில் முன்வரிசையில் இடம்பெறுபவர் நெடுந்தீவு ஞானி (கவிமாமணி க. த. ஞானப்பிரகாசம்) - யாழ் ஜெயம்-வித்து வான் அமுது போன்றோர்
அருள் திரு. ஏ. ஜே. வி. சந்திரகாந்தன் அடிகளார்
யாழ்பல்கலைக்கழகம்.

Page 39
68
கரவையில் நிகழ்ந்த எனது முதற் திரு ப் பலி நிறை வேற்று விழா ம வெண் பொன் யூபிலி விழா இரண்டினுக்கும் வாழ்த்துக் கவி தைகள் யாத்து மகிழ்வித்தீர். கொழும்பு கத்தோலிக்க பேரவை வெளி யிட்ட நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரது நூற்றாண்டு விழா மலரில் குருவே! நான் வணங்குகின்றேன்" என்று பத்துக் கவிதைகள் பாடிச் சிறப்பித்தீர் - இந்தப் பேரவை நடாத்திய அகில இலங்கைக் கவிதைப் போட்டியில், "ஞானப்பிரகாச மாமணியே” என எழுதி முதலாம் பரிசினைத் தட்டிக் கொண்டீர். வெள்ளவத்தை பூருரீராமக் கிருஷ்ண மண்டபத்தில் நிகழ்ந்த கவியரங்கில் தலைமைதாங்க அழைத்தும் - பக்கத்தில் வானொலிக் கவிஞர் - எங்கள் குருநாதர் கலாநிதி கே.எஸ் நடராசா இருக்கையில் நான் ஏற்பது சரியில்லை யென்று கூறி, அவ ரையே தலைமை வகிக்க ஒழுங்கு செய்தீர் - இவை போன்ற மறை மொழிச் சேவைகளை நீரும் உமது பாரியாரும், எம்மூர்க்கலவன் வித்தியாலயத்தில் அதிபராயிருந்து ஆற்றினீர்கள் - யாவற்றுக்கும் இறைவன் பேரால் நன்றிகூறுகின்றேன்.
அருள். திரு. சா. ம. செல்வரட்ணம் அடிகளார்
(கரவையூர்தி செல்வம்)
நான் மடுமாதா ஆலயத்தில் ஆடித்திங்கள் இரண்டாம் திகதி நிகழ்ந்த திருவிழா முதல் நாள் ஆற்றிய பிரசங்கத்தின் சாரத்தை மதுரத்தேனாய் வடித்துப் பாதுகாவலனில் பாடியிருந்தமையை என் னால் என்றும் மறக்க முடியாது - யான் கொழும்புத்துறைச் சூசையப்பர் தாபன முதல்வராயிருந்த காலத்தில் சாதனா பாடசாலையில் நீரி காட்டிய திறமைகளை நினைவுகூருகின்றேன். கரவைப் பங்குத்தந்தை யாயும் - கல்லூரி அதிபராகவும் இருந்தகாலத்தில் - உங்கள் அரும் பெருஞ் சேவைகளை நன்கறிந்தேன் - உமது பாரியாரின் விருந்தோம்பல் பண்பும் - பிள்ளைகளின் அன்பும் என் நெஞ்சுக்கு நீங்காத நினைவுகள் தான் - இறைவன் பேரால் உங்கள் குடும்பத்துக்கு நல்லாசி உண்டாகுக.
அருள்திரு. எஸ். எம். நல்லையா அடிகளார்
நாங்கள் தினகரன் மூலம் நடத்திய கவிதைப் போட்டியில் 'திவ்விய பாலன் திருப்பள்ளி எழுச்சி" எனுங் கவிதை இயற்றி முதற் பரிசும் "எக்கொட்டன்’ விருதும் பெற்றமையை - எங்கள் முன்னாள் ஆயர் வ. தியோ குப்பிள்ளையவர்களும் - பிரதம விருந்தினராக வந்தி ருந்த தினகரன் பத்திராதிபர் கலாநிதி சிவகுருநாதன் அவர்களும் மற்றோரும் பாராட்டியதை நினைவுகூருகின்றேன்.
உங்கள் திருமண மணிவிழாச் சிறக்க இறைவனை வேண்டு கின்றேன்.
அருட்திரு ஜீவாபோல் அடிகளார்
தொடர்பகம் - யாழ்ப்பாணம்

69
நான் குருமாணவனாய்ப் படித்தகாலத்தில் கரவை திருவிருதயக் கல்லூரிக்கு வந்தபோது, அப்போது அதிபராக இருந்த அருள்திரு. வ. தியோகுப்பிள்ளை அடிகளாரின் திருநாள் வைபவத்தின்போது நீங்கள் பாடிய
"வள்ள லெனுந் தியோகுப் பிள்ளைக் குரு வாழுக
வையகத்தில் வான்பயிரை வைத்தேயர சாளுக! கரம்பொன் காவின் நாண்மலரே! கரையில்லாத கலைக்கடலே! வரம்பற் றுயர்ந்த பட்டமெலாம் வாரிக்கொணர்ந்த
வள்ளலன்றோ நீர்?" இவ்வரிகள் இன்றும் எனக்கு மனனமாய் இருக்கின்றன.
அருள்திரு குணசீலன் அடிகளார்
யாழ்ப்ாணத்தில் நிகழ்ந்த எமது அருமை அன்னையாரின் அமர தின நினைவு விழாவில் குடும்பத்துடன் நீங்கள் பங்குபற்றி மகிழ்வித் தது மன்றி, ஞானமணங்கமழும் தேனமுத நினைவு நூலையும் கவிதாஞ்சலிப்பூக்களால் அலங்கரித்தீர்கள், அதற்காக என் நன்றி.
தொட்டனைத்தூறும் மணற்கேணிப் பேரூர்தான் நெடுந்தீவு:
தொடாமலே ஊறும் கவிக்கேணிகளைக் கொண்ட தூயஊரும் அதுதான். இதற்கு "நெடுந்தீவு ஞானி’-"வித்துவான் அமுது" போன்ற வர்கள் நல்லலுோர் எடுத்துக்காட்டு.
இன்றைய மணவினை மணிவிழாக்காணுந் தம்பதிகள் இருவரும் பல்லாண்டு வாழ இறையருளை வேண்டுகின்றேன்.
அருள்திரு. A, F. ஜெயசேகரம் அடிகளார்
Guringof. 27-7-97
சுதந்திர தினவிழா மரதன் கவிதைப் போட்டியில் பங்குபற்றி முதலாம் இரண்டாம் பரிசுகளைப் பெற்ற சிங்கள - தமிழ்க் கவிஞர்கள் நால்பேருக்கும் எனது வாழ்த்துக்கள். ஒவ்வொருவரும் சில கவிதை களைப் பாடிக்காட்டினிர்கள். பரிசுத்தொகையை அன்பளிப்புச் செய்த வர்களுக்கும் பெறும் உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
கெளரவ D. S. சேனநாயக்கா முன்னாட் பிரதமர் - 1952
யாழ்/ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச்சங்க விழாவுக்குத் தலைமை தாங்க அழைத்தமைக்கு என் நன்றி. இங்கே சமுகமாயிருக் கும் சொற்கலைப்புலவர் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாச அடிகளுக்கு

Page 40
70; ع,
என் பாராட்டுக்கள். இச்சங்கத்தால் நடாத்தப்பட்ட இலக்கியப் í umu-óv (25) கவிதைப் போட்டியில் 1-ம் 2-ம் பரிசுகளைப் பெற்ற அதிபர் க. த. ஞானப்பிரகாசம்-ஆசிரியர் பீ. எம், ஞானப்பிரகாசம் என்பவர்களுக்கும் ' என் வாழ்த்துக்கள்.
H. S. GuGygn வித்தியாதிபதி
கொழும்புத் தமிழ்ச் சங்க இன்றைய விழாவுக்குத் தலைமை தாங்க அழைத்தமைக்கு மிக்க நன்றி. பாரதி "பிள்ளைத் தமிழ்ப்" பிரபந்தம் பாடிப்பரிசு பெற்ற பாவலர்களை நேரிற் கண்டு - அவர் களுக்குப் பரிசளித்துப் பாராட்டுகிறேன்.
ሉ
மாண்புமிகு M. A. பாகீர் மரக்கார் இலங்கைப் பாராளுமன்ற சபாநாயகர்
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் நடாத்திய 19வது மாநாட்டு விழாவில் 'தமிழர்க்குவேண்டும் தகைமைகள்" எனுங் கவிதைப் போட்டியில் 1-ம் பரிசு பெற்றமைக்காக இந்தத் தங்கப்பதக்கத்தைச் சூட்டுகிறேன்,
தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலம்
(அமைச்சர்)
சில மாதங்கள் எனக்கு இலக்கணக் குருவாக இருந்து பல ஐயந் திரிபுகளைத் தெளிவாக்கினீர்கள். நீங்கள் பாடும் 'மரதன் கவிதைக்கு வீரர்கள் ஓடிய இலங்கைப் பாதைப் படத்தை வரைந்து இத்துடன் அனுப்புகின்றேன். "முயற்சி திருவினையாக்கும்'என்பது எனது நம்பிக்கை.
Ề LU, ஜெகநாதன் முன்னாள் மேலதிக அரச அதிபர்
யாழ்ப்பாணம்.
மரபு வழித் தமிழ்ப் புலமையும்-சவிதைப் போட்டிகள் பலவற்றிற் கலந்து பரிசில்களும் - பதக்கங்களும் பெற்றுள்ள அனுபவமும் இவரைப் பிரபந்தங்கள் எழுதுஞ் சாதனைக்குத் தூண்டி நின்றன.
கலாநிதி சு. வித்தியானந்தன் முன்னாள் துணைவேந்தர் யாழ்/பல்கலைக்கழகம்
அரச பொற்கிழிப்புலவரென முன்னமே பாராட்டப்பட்டுவரும் ஈழப்புலவர் ஒருவர் - பாரதிபிள்ளைத் தமிழ் என்னும் நூலைச் செப் துள்ளார் என்பதை அறியும்போது எனது உள்ளம் உவகை கொள்ளு கின்றது. அந்நூலை ஊன்றிப் படிப்பவர்களுக்குக் கிறுகிறுப்பை ஏற்

ད། - "اهن بنا
படுத்தாமல், நல்ல கிளுகிளுப்பை ஆண்டுபண்ணும் မှုံစံ(၂d# எனத் நம்பிக்கை. 1 ,3 أحد لكلe.
, *
unprg)uinti Lunt -svæ6fie) 浣த்திக்கொ ள்ாள்கொண்ட
პ%;:t' ''
பாட்டு, கண்ணன் பாட்டு - தீரா விளையாட்இடிபிள்ளை, "தின்னப் பழங் கொண்டுதருவான்? எனத் தொடங்கும் பாடல்.
பொற்கிழிப் புலவர் பண்டிதர் க. த. ஞானப்பிரகாசம் அவர் களும் தமது பாரதி பிள்ளைத்தமிழ்க் கவிதைகள் மூலம் எம்மைப் பெரிதும் ஈர்த்துள்ளார். சிறுபறைப் பருவத்தில் நான்காம் பாடலில் பாரதியாரின் நாட்டுச்சேவையை விளக்குகிறார்.
"நாரதரும் மாரீசன் சகுனிகளும் நடமாடி
நல்லவரைத் துன்புறுத்தும்
நாட்டுக்கோர் தலைவனென நீநின்று பட்டவெலாம்
தலித்தசிறைக் கோட்ட மறியும்" என்றபகுதி
என்உள்ளத்தில் அப்படியே பதிந்து விட்டது. அர்த்த புஷ்டியானபகுதி. இவ்வாறு சுவைமிக்க இன்னும் பல பகுதிகளை இந்நூலை வாசிப்பவர் கள் கண்டறியலாம். (தினகரன் சிந்தாமணி)
இலக்கியக் கலாநிதி பண்டிதமணி. சி. கணபதிப்பிள்ளை யாழ்ப்பாணம்.
நெடுந்தீவு அரசமகா வித்தியாலயம் நடாத்திய திருக்குறள் மாநாட்டு விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்க லைக் கழகத்திலிருந்து என்னை அழைத்திருக்கிறீர்கள். மெத்தநன்றி. கவியரங்குக்குத் தலைமை தாங்கிய புலவர் க. த. ஞானப்பிரகாசம் அவர்கள் என்னை வரவேற்றுப் பாடிய மேல்வரும் பாடல் எனது உள்ளத்தைக் தொட்டது. கற்பனா சக்திமிக்க இதனைத் தமிழகத் துக்கு எடுத்துச் செல்வேன்.
அண்ணா மலையிலிருந்து "அழகாறு" பெருக்கெடுத்து உண்ணிர் குறைவின்றி ஊட்டுதற்காய் வந்ததுபோல் வடவேங் கடம்போன்ற மாநகரம் யாழ்தங்கித் தென்குமரி நெடுந்தீவாம் திருமகளிற் கண்வைத்து மலையடியைத் தாண்டிவந்து மரக்கலமார் "புகார்" நகரம் மாவலியிற் கால்வைத்து மாநாட்டுக் கடல்படிந்த காவலரே! கலைக்ககூடலே கலாநிதியே பேராசா நேசமிகு என்வணக்கம்: நீடூழி வாழியரோ !
கலாநிதி ஆறு அழகப்பன்
Guptmr6urř.

Page 41
72
பாரதிபிள்ளைத் தமிழ் நூல் அரங்கேற்றுப் பேரவையில் கொழும்புத் தமிழ்சங்கச் சார்பாகப் புலவர் க. த. ஞானப்பிரகாசம் அவர்களுக்கு ‘கவிமணி" என்னும் விருதையளிக்கிறேன்.
இரா - சுந்தரலிங்கம்
பிரதம கல்விஅதிகாரி யாழ் கல்வித் திணைக்களம்
25. S. I985
புலவர் க. த. ஞானப்பிரகாசத்தினால் முதல்நூலாக யாக்கப் பெற்ற பாரதிபிள்ளைத் தமிழ் நூல் அரங்கேற்று விழாவை யாழ்ப்பாணத் தில் நடத்தும்படி கொழும்புத் தமிழ்ச் சங்கத்தார் எனக்கும் யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர், ஜி. எம். செபஸ்தியாம் பிள்ளை M. A. அவர்களுக்கும் நல்லூர் வட்டாரக் கல்வியதிகாரி எஸ். சிவநாயகமூர்த்தி B, A அவர்களுக்கும் அன்புப் பணிப்புரை வழங்கினார் கள். அதற்கேற்க இங்கு சமூகமளித்த ஐந்நூற்றுக்கும் அதிகமான அறிஞர்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
புலவர்க்கும், அருகில் இருக்கும் அவர் துணைவியார் குடும்பத் தினர்க்கும் என் வாழ்த்துக்கள்.
கலாநிதி சபா ஜெயராசா யாழ்/ பல்கலைக் கழகம்.
தமது சிறந்த சேவையை நன்றிக்கடனாக மட்டக்களப்புக்கும் - யாழ்ப்பாணத்துக்கும் பகிர்ந்தளித்த புலவர் க. த. ஞானப்பிரகாசமும் அவர் பாரியாரும் ஈரிடங்களையும் இணைக்கும் தாம்போதி போன் றவர்கள்
இவர் எழுதிய பாரதி பிள்ளைத் தமிழை ஆய்ந்து படித்து" சிறந்த ஆய்வு ஒன்றைச் சிந்தாமணியில் வெளியிட்டிருக்கிறேன். 2. அம்புலிக்கோர் ஞானிதான், கலாநிதி. G·unwa响5mö, tun 55 ،لطمه கழகடி
**ஆரா அன்பினால் அளப்பருஞ் சேவையை வாழ்பதிக் காக்கிய வளர்மதிக் கலைஞன் ஞானபண் டிதனென ஞாலம் போற்றும் நயனுடைய ஆசான்"
s. 9 56isn6vun B. A முன்னாட் கல்வி ஆலோசுகர் - யாழ்ப்பாணம்.
... அள்ளிச் சுவை பெய்து உள்ளக் கிளர்வின் வெள்ளங் காட்டிக் கவிக்கமம் சட்டிச் செவிப்பசி யோட்டிப்

ア3
புவிக்கவி சூட்டிப் புகழுறு நன்நெடுந் தீவகம் ஈன்ற தீந்தமிழ்ப் பண்டித பாவலன் ஞானப் பிரகாசன்”
கலாநிதி க. செ. நடராசா M. A. - Ph.D
கொழும்புத் தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர்.
எனது காலத்தில் பாதுகாவலன் பத்திரிகையில் நூற்றுக்கணக் காண கவிதைகளை எழுதிய இவரையும் - வித்துவான் அமுதையும் இந்த மேடையில் ஒரு சேரக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி - நான் சுக வீனமுறுங் காலத்தில் மகா - வந். ஜே. எமிலியானுஸ்பிள்ளை ஆயர் அவர்களால் துணை புரியவும் அனுப்பப் பெற்றவர். இவரது சேவை யின் இறுதி நாட்களின் (1 2.71) முன் நடந்த பெருவிழாவில் என்னையும், பல நூல்களை எழுதியும் பதிப்பித்தும் வந்த "விவேகி" ஆசிரியர் எம். வி. ஆசீர்வாதத்தையும் நெடுந்தீதிவுக் கழைத்துக் கெளர வித்தவர். அன்றைய கவியரங்கில் என்னைத் தலைமை தாங்கச் செய்து சிறப்பித்தவர். நன்றியைக் கொன்று தின்னா "ஞானியை" எவ்வகையில் வாழ்த்தினும் தகும்.
ஏ. எஸ். ஞானப்பிரகாசம் பாதுகாவலன் முன்னாள் பத்திராதிபர்.
பலாலி - கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கல்லூரியில் நிகழ்ந்த முத்தமிழ் விழாவுக்குப் புலவர் “ஞானியை" அழைத்தேன். கவிதையைப் பற்றிய "நேர்காணல்" நிகழ்ச்சியில் ஆண் பெண் ஆர பதின்மர் பத்துக் கேள்விகள் கேட்டபோது, அவரளித்த விடைகள் அவையில் இருந்த அறிஞர்களைக் கவர்ந்தமையை நேரிற் கண்டேன்.
R. S. 5LJ raft முன்னாள் அதிபர்
புலவர் “ஞானியின்' ஆசிரிய அதிபர் சேவைத் திறமையை என்னோடொத்த வட்டாரக் கல்வியதிகாரிகள் பலர் பாராட்டிய தைக் கேட்டு மகிழ்ந்தேன். நெடுந்தீவு அரச மகா வித்தியாலய ஆசிரிய சேவையில் நான் இருந்த போது நேரிலுங் கண்டேன். யாழ்/ மறைக் கல்வி நிலையத்தில் நிகழ்ந்த நூல் அரங்கேற்று விழாவில் உங்களது கவிதையாற்றலைச் சபையில் பாராட்டிக் கூறுஞ் சந்தர்ப்பமும் வாய்த் 255.
நீங்களும் குடும்பமும் இறை ஆசியுடன் என்றும் வாழ்க
எஸ். சிவநாயகமூர்த்தி நல்லூர் வட்டார முன்னாட் கல்வியதிகாரி

Page 42
Z
நெல்லியடி கரவெட்டிப் பட்டினசபை முன்னாள் தலைவரும் J. P. யும் ஆகிய திரு S. B. தேவசகாயம் அவர்களும், நெல்லியடிப் பிரபல புத்தக நிலைய அதிபர் 8. லுக்கேஸ்பிள்ளையும், அடியேனும், பண்டிதர் க. த. ஞானப்பிரகாசம் அவர்களோடும் அவர் பாரியாரோ டும் கோயில், பாடசாலை, சமூக முன்னேற்றங்களில் உள்ளன்புடன் ஒன்று பட்டுச் செயற்பட்ட காலத்தை இன்றும் நினைவு கூருகின்றோம்.
இன்றைய மணிவிழாவில், எனது குடும்பத்தோடு வாழ்த்துக் களைச் சமர்ப்பித்து இறை ஆசியை வேண்டுகின்றேன்.
நீ, அந்தோணிமுத்து இளைப்பாறிய ஆசிரியர் = நெல்லியடி
யாழ்/ புனித சால்ஸ் மகா வித்தியாலயத்தில் ஐம்பது வருடங் களுக்கு முன் உங்களோடு சேவை செய்த காலத்தில் கற்ற நிர்வாகத் திறமைகள் . பிற்காலத்தில் யான் அதிபர் ஆனபோதும் பின்பற்றக் கூடியதாயிருந்தது; தான் உங்கள் விழாக்கள் பலவற்றிலும் பங்குபற் நியது போல் உளனது விழாக்களிலும் பங்குபற்றிச் சிறப்பித்தீர்கள். ஒத்துழைக்கும் உள்ளப் பண்பை மறக்க முடியாது.
இறையருளால் மணிவிழாக்காணும் உங்கள் இருவர்க்கும் எனது w வாழ்த்துக்கள்.
றொகேஷன் யோசேப்பு
ஓய்வுற்ற அதிபர்
பாரதி பிள்ளைத் தமிழ் எனும் நூலை முதன் முதலாக இலங்கை யில் எழுதிப் பரிசு பெற்ற யாழ்ப்பாணப் புலவர் க. த. ஞானப்பிரகாசம் அவர்களுக்குச் சென்னை ஐயப்ப நகரில் வைத்து எங்கள் கழகச் சார் பாகக் ,கவிமாமணி’ என்னும் விருதையளிக்கிறோம்.
சென்னை பாரதி இளைஞர் சங்கம் சென்னை தமிழ் இலக்கியக் கழகம்.
பெருங்கவிக்கோ கலாநிதி வா. மு. சேதுராமன் பாரதி அடிப் பொடி கலாநிதி வி. எஸ். மணி பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் கலாநிதி
இரா. குமாரவேலன் பூறி இராமக்கிருஷ்ண உ. நி. ப. இ. அதிபர் வே. முகாத்திரம் கலைவாணி நிலையப் பதிப்பாசிரியர் - சீனி திருதாவுக்கரசு
QpseGunt it
22. . 87

JSÜy
அடியேன், கொடிகாமம் ப. நோ.கூ. சங்கங்களின் பொது முகா மையாளரான காலத் தொடக்கம் சங்க அருகாமையில் வசித்து என். னோடும், மற்றவர்களோடும் இயன்ற வழிகளிலெல்லாம் ஒத்துழைத்த பண்டிதர் க. த. ஞானப்பிரகாசம் அவர்களைப் பாராட்டுவதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். அறிவறிந்த நல்ல படித்த பழகுதற்கினிய பண்பான மக்கள் மருமக்களைக் கொண்ட குடும்பம் இது எனலாம்.
இவர்கள் மணிவிழாக்காணும் இந்நாளில் இறைவன் பேரால் என் இனிய வாழ்த்துக்கள்.
க. கணேசலிங்கம்
நான் ஈழத்துப் பல இடங்களில் அரச சேவை புரிந்தேன்: இப் போதும் புரிகின்றேன். நெடுந்தீவு மக்கள் சிலர் என்னுடன் பணியாற் றியும் இருக்கிறார்கள்: பொதுவில் பழகுதற்கிணிய பண்புடையவர்கள். சேடமாகத் தவத்திரு தனிநாயக அடிகளைப்பற்றியும், உங்களைப் பற்றியும் நூலொன்றிற் குறிப்பிட்டும் இருக்கிறேன் அல்வாயில் எனது மாமியார் அமரரான போது, நான் கேட்டதும் நீங்கள் விரைந்து எழுதி உதவிய “நினைவு மலர்' உங்கள் ஞாபகத்தை என்றும் நினை வூட்டிக் கொண்டிருக்கும்.
த. மாற்கண்டு உதவி ஆணையாளர்
அல்வையம் பதியில் அறுபதாம் மணவினை மணிவிழாக் காணும் அன்புத் தெய்வங்களுக்கு எம் இனிய வாழ்த்துக்கள். எங்கள் மகளின் பூப்புனித நீராட்டு விழாவுக்கு உளக்கமலம் மலர நீங்கள் எழுதி உத விய "ஊஞ்சல் பதிகத்தை" உங்கள் நினைவாகப் பூசிக்கின்றோம்.
இன்னும் பல ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறேன்.
இரா. சோமசுந்தரம் கிராமசேவை உத்தியோகஸ்தர்.
நெடுந்தீவிற் பிறந்து அல்வாயிற் புகுந்து கற்றோரும் மற்றோ ரும் மதிக்கும் கடமைகளாலும், கருத்தாழம் மிக்க எழுத்தாற்றலா லும் ஈரகத்தும் பிரகாசமாய் வாழுகிறீர்கள் என்பதை ஊரறியும். எனது மாமா உற்றார் உறவினர்களுக்கு எழுதிய நூல்கள் இதயக மலக்கை சர்க்கும். நீங்களும் உங்கள் அன்புக்குரிய மனைவியாரும் அறிவறிந்த நன்மக்களும் எல்லா நலனும் பெறுக என வாழ்த்துகின் Qyv jöv.
க. சண்முகநாதன் 95.

Page 43
76.
அல்வாய் தெற்கு பாரதிதாசன் படிப்பக "வெண் பொன் விழா மலரில்" முதல் விடயமாக உங்கள் வாழ்த்துப் பாக்களைப் படித்து மிக இன்புற்றேன். காய்தல் உவத்தல் அற்று அனைத்துங் கடந்த ஞானியாக நடுநின்று வாழ்த்தியமை கண்டு மனம்நிறைந்தேன். "தீந்தமிழைக் குடித்துக் கவிதைப் பொற்றேரில் கொலுவிருந்த பாரதிதாசன்" பெயரிலே படிப்பகம் பிறந்த கதை வளர்ந்த கதை அனைத்தையும் எதிரிலிருந்து கண்முன்னே கண்ட அனுபூதி வழிவந்த ஆன்றவிந் தடங்கிய சான்றோன் என்ற தகுதி உங்களுக்கு மட்டுமே உண்டு. ஏனெனில் அடிப்படையிலிருந்து அனைத்தும் அறியும் ஆற்றல் இருந்தது உங்களுக்கு: எனவே, வாழ்வை வாழ்த்தும் பெற்றிக்கு அனைத்து வழியிலும்தகுதியுள்ளவர்கள் நீங்களே, அதை நிலைநிறுத்தி யும் விட்டீர்கள். மகிழ்ச்சி.
சரவணை - திரவியம் பீ. ஏ.
மக்கள்வங்கி மன்னார். 18 - 5 - 1990
கொடிகாமத்துக்கு நீங்கள் செல்லுமுன், எத்தனை சோலிகள் இருந்த போதிலும், எங்கள் படிப்பக முன்றிலில், பி. ப 7-8 வரை யும் எங்களோடு தங்கி அளவளாவி நகைச்சுவை விருந்தளிப்பீர்கள். இடையிடை நோகாமற் தாக்கும் நுட்பமதியும் இழையோடும். உங்கள் இல்லத்துக்கு ஒருமுறை கொள்ளைக் கோஷ்டி வந்ததை நாங்கள் விரட்டியடித்த நன்றியை ஒயாமல் இன்னும் பாராட்டுவீர் கள். உங்கள் மணவினை மணிவிழா மகிழ்ச்சியோடு நிறைவுபெற மனமார வாழ்த்துகின்றோம்.
எங்கள் செல்லப்பேர் சொல்லியழைக்கும்
அப்பு, தம்பி, புவி, குலம் ஆதியோர்
எனது வேண்டுகோளை மதித்து, அல்வை வேவிலந்தைமுத்து மாரி அம்பாள்மீது பாடியருளிய திருவூஞ்சல் பாமாலை தெவிட்டா இனிமை வாய்ந்தது - அதற்கு என் நன்றி.
உங்களின் திருமண மணிவிழா சிறப்பாய் நடைபெற எங்கள் ஒத் துழைப்பு என்றும் இருக்கும்.
முருகு முத்தையா குடும்பம்
தீர்க்கதரிசன சிந்தையுடன் கவிதையாப்பவர்களே உண்மைக் கவிஞர்கள். இந்த வகையில் எங்கள் கிராமத்துக்கு ஒரு வரப்பிரசாத மாகத் திகழ்பவர் புலவர் ஞானி அவர்கள். எனக்குத் தொழில் கவிதை என்னும் பாரதி கூற்றை இலட்சியமாகக் கொண்டவர், இவர் கவிதை களைப் படித்தும் சபைநடுவிற் பாடியும் இருக்கிறேன். இவரை எம் பதிக்குத் துணைவராகக் கூட்டிவந்த அம்மையாரும் இசை ஞானம்

7ל
மிக்க ஆசிரியை. இருவரும் இன்று காணும் மணிவிழாவை வாழ்த்தி இறைவன் ஆசியையும் வேண்டுகின்றேன்
சி. க ஆறுமுகம்
இளைப்பாறிய அரச களஞ்சியப் பொறுப்பாளர்
அல்வாய்.
நெடுத்தீவில் உங்கள் வித்தியாலயத்தில் என்ன கலை நிகழ்ச்சிகள் நடந்தாலும் பெரும்பாலும் என்னைத் தலைமைதாங்க அழைப்பீர் கள் - பொதுநிகழ்ச்சிகளில் நீங்கள் மேடைகளிற் பங்குபற்றும் போதும் என்னைத் தவறாது நினைவு கூருவீர்கள். நெடுந்தீவு பற்றி நீங்கள் எழுதிய நூல்கள் சிலவற்றிலும் அதை வாசித்தேன் பிரதானமாய் நாட்டுக்கோர் தலைவர் நாகேந்திரர் என உங்கள் சிரேஷ்டமகனார் ஞா. அ. யேசுதாசன் எழுதிய விரிந்த கட்டுரை எனக்கோர் ஆன்ம சாந்தி. என்னை மதித்ததுபோலவே எனது அருமை மக்களையும் மதிக்கிறீர்கள் என்பதை உணர்ந்தேன்.
சுப்பிரமணியர் நாகேந்திரர் முன்னாட் கிராமசபைத் தலைவர்.
கைக்கூர் மழுங்கக் கல்வெட்டுப் பொழியும் கவிஞர் ஞானியின் முயற்சியால் மண்ணோடு மண்ணாய் மறைந்து போனவர்களும் அரங் கிற்கு இழுக்கப்பட்டு, அவரவர் இறவாப் புகழ் நிலைநாட்டப்பட்டி ருக்கிறது,
ச. சின்னப்பு நாயகம்
முன்னாள் அதிபரி
"இதம் பெறு தகைமைகள் இயையப்பெற்றோன்: சிறந்த புலமைப் பரிசில்க ளுற்றோன்: மறந்துஞ் சீற்றங் கொள்ளா மாட்சியன்: ஆசில் லாத அறநெறி அறிவினன்: மாசில் ஞானப் பிரகாச அதிபன்
உடல் பொருள் ஆவி ஒருங்கே மூன்றையும் திடமுடன் இப்பதிக் கெனவே அளித்தோன்: பண்புகள் பலவும் படியப் பெற்றோன்: பண்டிதன் புலவன் பலதுறை பயின்றோன் உத்தம கிறிஸ்துவ ஒழுக்கமே தனது நித்திய வாழ்க்கையில் நிலவிட நின்றவன்"
- (95ம் ஆண்டு மலரில்.)
மதுரைப் பண்டிதர் க. யோ, ஆசிநாதர்.

Page 44
எங்கள் இனசனம் அத்தனைக்கும் கவிதைகளால் மலர் அள்ளித் தூவியது புலவர் ஞானியின் 'கைகள் அவர்கனை நினைப்பதற்கு அச் சாற் கல்லறைக் கோயில் கட்டியதும் அவரின் கைகள் - அவர்களை நெஞ்சத்தில் நிலைக்கச் செய்து நீடூழி வாழவைத்தது அவரின் இதயம் நினைவுத்தம்பத் தீபம் சுடர்விட்டெரிய எண்ணெய் ஊற்றித் திரிவிட் டது அவரின் அறிவு. இதைவிட எங்கள் சந்ததிக்கும் ஊருக்கும் உலகுக்கும் வேறென்ன அவரால் செய்ய முடியும்?
ச. அ. செபரத்தினம் கொழும்பு தபால் தந்தி முன்னாட் பொறியியலாளர்.
'கவியரங்குகள் பலவற்றிற் பங்கு பற்றியும் தலைமை தாங்கி யும் நிறைந்த அநுபம் உடையவர் கவிமாமணி ஞானி"
(யாழ்/புனித பத்திரிசியார் கல்லூரியில்தவத்திரு தனிநாயக அடிகள் பற்றிய கவியரங்கில்)
Lịoũ6uử A. W. 2ịứìu,5Tusử)
யாழ்ப்பாணம்- கொழும்புத்துறை பாண்டியன்தாழ்வு போன்ற இடங்களுக்கு நீங்கள் இந்த வயதிலும் இடையிடையே வந்து குசலம் விசாரிப்பது, உங்கள் பிறந்த மரபின் பண்பு. அது உங்கள் வயதும் உடம்புமல்ல. உங்கள் பேரன்பே கொண்டு திரிகிறது. நமது பழைய தெய்வங்களில் காணும் அந்த அன்பு, தொட்டால் ஒட்டிப்பிடிக்கும் அன்பு. உங்களின் ஒவ்வொரு அணுவிலும் அது உட்கார்ந்திருக்கிறது. அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்”
சு. இராமநாதன். (முன்னாள் மரண விசாரணை அதிகாரி.அதிபர்) நெடுந்தீவு.
நீங்கள் எங்கள் குலத்து வேருக்குள் இருந்து தோன்றி எல்லாக் கிளைகளும் பூத்து மணம் வீசச் செய்தவர்கள். கொஞ்சம் படித்தவர் கூட உங்களை மறக்கமுடியாது. உங்கள் இதயம் பூவிதழ்போல் மெல் லியது. சிறிது காற்றுப் பட்டாலே ஆடி அசைந்து மணம் வீசும். உங்கள் அம்மையாரும் அப்படித்தான். ஆண்டவன் ஆசி அருள்க.
இரா. ஜெயசிங்கம், சி. சவுந்தரநாயகம்.
சட்டத்தரணி. சமாதான நீதிவான், ஆசிரியர் யாழ்/ புனித சாள்ஸ் பாண்டியன்தாழ்வு, யாழ்ப்பாணம். மகா வித்தியாலயம்.

79
தானம் எவ்வகையுளுஞ் சிறந்த வித்தியா தானத்தைச் சுமார் நாற்பது ஆண்டுகளாக வழங்கிவந்து, இன்று திருமண மணிவிழாக் காணும் புலவர் ஞானப்பிரகாச தம்பதிகளை வாழ்த்துவதிற் பெரு மகிழ்ச்சி யடைகின்றேன்.
றொகேஷன் யோசேப்பு முன்னள் ஆசிரிய அதிபர்
நெடுந்தீவு புனித யுவானியார் ஆண்கள் வித்தியாலயத்தில் உங் களிடம் பயின்று முதன்முறை S. S C. யில் சித்தியடைந்த ஐவருள் நானும் ஒருவன், இவ்வித்தியாலயத்தின் 95-ம் ஆண்டு நினைவு மலர் எவரும் கனவிலும் நினைத்திருக்காத சாதனை ,
பி. நீக்கொலாஸ் முன்னாள் A. G. A. நெடுந்தீவு
மலைதாட்டிற் குடும்பத்தோடு வசித்துப் பல கஷ்டங்களை அணு பவித்த எனக்கு எத்தனையோ எதிர்ப்புகளின் மத்தியிலும் அஞ்சாமல் நின்று-நீங்கள் தந்த ஒரு சிபாரிசுக் கடிதத்தில் யாழ்/கல்விப்பணிப்பாளர் உடனே நியமனந்தந்தார். உங்களோடு சேவைபுரிந்த காலத்தில் உச்சி வரை நல்ல உயர்குணங்கள் பூண்ட உத்தம அதிபர் என்பதை உணர்ந் தேன்.
யோ. கொன்ஸ்ரன்ஸ் முன்னாள் உதவி ஆசிரியர், 1971
மன்னார்/விடத்தல்தீவு றோ, க வித்தியாலயத்தில், பண்டிதர் க. த. ஞானப்பிரகாசம் அவர்கள் அதிபராயிருந்த காலம் -ஒரு பொற் காலம். வித்தியாலய தரத்தை S S. C. வரை உயர்த்திப் பல மாணவ மணிகளை ஆசிரியராகவும், அரசபணியாளர்களாகவும் வர முன்னின்று, ஆர்வத்தோடு உழைத்த பெருந்தகை, பேதமின்றி எல்லோராலும் urg'tı'lüGLuföp61f.
ஓர் அன்பன்
விடத்தல்தீவு
(இன்னும் நூற்றுக்கு மேற்பட்ட "தேன் துளிகள்" உண்டு. இடமின்மை கருதி விடுத்தோம்; மன்னிக்கவும்.)
தொகுத்தவர்கள்
மக்கள்-மருமக்கள்

Page 45
so
கவிமாமணி க.த. ஞானப்பிரகாசம் அவர்களோடு ஒரு நேர்காணல்
1. உங்கள் வாழ்வின் வளர்ச்சிக்குக் காரணமாகியவர்கள் யாவரி?
முதலில் ஆண்டவர்தான்.
ஆரம்பக் கல்விக்கு unir
ஆரம்பக் கல்வி நிலையம் நெடு கிழக்கு புனித சவேரியார் வித்தி யாலயம். அப்போது அதன் அதிபர் திரு சுவாமிநாதன் றொகேசுதியன் அவர்கள். இவர் என்னோடு யாழ்/புனித சாள்ஸ் மாவித்தியாலயத்தில் உதவி ஆசிரியராய்ப் பின்னர் யா/சென் மேரிஸ் வித்தியாலயத்தின் அதிபராய் இருந்து ஓய்வுபெற்ற யோசேப்பு அவர்களின் தந்தையார், பண்டிதர் க. யோ. ஆசிநாதனின் சகோதரியைத் திருமணஞ் செய்தவர். கடவுள் பக்தி கைவரப் பெற்றவர் - இவர்தான் எனது ஆரம்ப கல்வி யின் மூலகர்த்தா.
பின்னர் 1925ஆம் ஆண்டுவரையில் - நெடுந்தீவின் பங்குத் தற் தையாய் இருந்த அருள்திரு பிரான்சிஸ் சேவியர் அடிகளார் 5ஆம் வகுப்பில் கொழும்புத்துறைப் புனித யோசேப்வி த்தியாலயத்தில் கொண்டுபோய்ச் சேர்த்தார். அங்கு புனித சூசையப்பர் சபைத் துறவிகள் பலர் கற்பித்தனர். அதிபர் அருட் சகோதரர் பேதுருப்பிள்ளை ஆவார். ஆசிரியப் புகுமுகப் பரீட்சை சித்தி வரையுங் கற்றேன். எனது மவைவியார், நெல்லியடி அரசினர் முன்மாதிரி வித்தியாலயம். யாழ். வேம்படி மகளிர் வித்தியாலயங்களிலும் கற்றுத் தேறினார். ஆசிரியகலாசாலைக்கு
வயது பற்றாக்குறை காரணமாகக் கொழும்புத்துறை ஆசிரிய கலாசாலையில் என்னைச் சேர்க்க முடியவில்லை. தெய்வாதீனமாக இந்தச் சாதனா வித்தியாலயத்தில் எனக்குக் கல்வியூட்டிய அருள் சகோதரர் உவிலியங்கன்னங்கரா அவர்கள் மீன்பாடும் தேன்பதியாம் மட்டுநகர்ப் புளியந்தீவு புனித அகுஷதீனார் ஆசிரியப்பயிற்சிக் கல்லூ ரிக்கு அதிபராய்த் தெரியப்பட்டார். இந்த அதிபரோடு இன்னும் மூன்று அருட்துறவிகளும் - இங்கிருந்து திரிகோணமலையூடாக மட்டு நகருக்குக் காரிற்சென்றனர். அதேகாரில் என்னையுங் கூட அழைத்துச் சென்றனர். ஆசிரிய மாணவ பற்றாக்குறை அப்போது அதிகம் இருந்த காலமாக்கும் - என்னையும் வகுப்பில் சேர்த்துக்கொண்டனர். அரசி

8,
னர் முதலாம் வருடம் பயிற்சியும் சித்தியடைந்து இரண்டாம் வருடத் தில் பிரவேசித்த போதுதான் வித்தியாகந்தோர் நன்கொடைப் பணம் அனுப்பும் நேரத்திலே எனது வயது பற்றாக்குறைப் பிரச்சனை எழ - அதிபர் கொழும்பு வித்தியா கந்தோருக்கு அழைக்கப்பட்டு விசாரணையின் தீர்வாக - அதிபரின் அஞ்சா நெஞ்ச முயற்சி யால் நன்கொடைப் பணம் மாத்திரம் வெட்டப்பட்டு வகுப் பைத் தொடர்ந்து படிக்க உத்தரவும் வழங்கப்பட்டது. அப்போது வித்தியாசர்த்தராய் விளங்கியவர் வெள்ளையினத்துக் கொட்விறேத் துரையவர்கள். என்னே அதிபரின் இனிய சாதனை இந்த அதிபர் "கம்பகா" நகரைச் சேர்ந்தவர். சிங்களம். தமிழ், ஆங்கில முப்பாஷை விற்பனர். கொழும்புத்துறைப் புனித சூசையப்பர் சபைத் துறவிகளில் ஒருவர், நமது மனைவியார்க்கும் - இளவாலைக் கன்னியர் டிடத்து ஆசிரியகலாசாலையிற் பயில இடங்கிடைத்தது. ஆங்கு பண்டிதர் W. A. யோண்பிள்ளை, S. பீற்றர் - மற்றுங் கன்னியர் திலகங்களும் மடத்து முதல்வி சலமோன் தாயார் காட்டிய அன்பாதரவும். இவரைக் கத் தோலிக்க சமயத்திற் சேரப்பற்று வைத்தது; ஆதிரிய சேவைக்கு -
ஈதோர் தேவ அழைத்தல். ஆசிரிய பதவிக்கு 1933ஆம் ஆண்டுபுரட் டாதித் திங்கள் 15ஆந் திகதி, மட்டக்களப்பு கல்லடி உப்போடை புனித திரேசா கன்னியர் சாதனா வித்தியாலயத்தில் உதவி ஆசிரிய நியமனங் கிடைத்தது. நமது மனைவியார்க்கும் அடுத்த ஆண்டு 1934 புரட்டாதித் திங்கள் இந்த வித்தியாலயத்திலே முதல் நியமனமுங் கிடைத்தது.
2. ஆசிரிய சேவை புரிந்த ஏழு வருட காலத்திலும் என்ன நடந்த தெனக் கூறமுடியுமா? அது முக்கிய காலம்: முன்னேற்றமான காலம்: அமைதியும் சமாதானமும் நிலவிய ஆனந்தமான காலம், கற்பித்தலோடு மேலுங் கற்கவும் கிடைத்த காலம் - புழிரவேச பால பண்டித - சுகாதார டிப்ளோமாப் பரீட்சைகளைச் சித்தி யடைய வைத்தகாலம், பண்டித - வித்துவான் பரீட்சைகளுக்குப் பாடங்கேட்கவும் கவிதைகள் பலவும் முத்தமிழ் வித்தகர் விபுலா னந்த அடிகள் . புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை - அருட்சகோ தரர் பி. இன்னாசிமுத்து போன்ற பெருங்குரவர்களோடு குரு சீடர் முறையிற் பயிலவும் வாய்த்த காலம்.
திருமணமும் அக்காலத்திலேதான் நிறைவேறிய திருவருட்காலம் , இதற்குப் பேருதவியாகவிருந்த புனித திரேசம்மா மடத்து முதல்வி அருட்தாயார் மேரி அல்டெற்றுாட் F.M.M. -வித்தியாலயப் பிரதம

Page 46
82
மேற்பார்வையாளரான அருட்சகோதரி க மேரி விளசற் சக்கிறமென்ற் F.M M. - மீன்பாடும் மட்டுநகர் வாவி அருகே அழகுற அமைந் திருக்கும் புனித செபஸ்தியார் ஆலயத்தில் - திருமணத் திருப்பலி ஒப்புக்கொடுத்த பிரதம பொது முகாமையாளர் அருட் திரு எல். டுப் போண்ட் அடிகளார் மூவரையும் இற்றைநாள் நினைவுகூர வேண்டிய இனியகாலம்.
3. நன்று. ஏழு வருஷம் முடிந்ததும் யா/மேற்றிராசனத்துக்கு எப்படி
வந்தீர்?
நல்ல காத்திரமான கேள்வி. நன்றியறிதலைக் காட்ட வேண்டிய கேள்வி.
1939 ஆணியில் அப்போது யாழ் மறைமாவட்டத்தில் பிரதம முகாமையாளராக (பின்னர் ஆயராக) இருந்த மகாவற். ஜே. எமிலியா னுஸ்பிள்ளை அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அக்கடிதத்தின் இரண்டொரு வரிகள் அவரின் இதயகமலத்தைத் தொட்டிருக்க வேண்டு மென நம்புகிறேன். 15 நாட்களுக்கிடையில் மன்னார் அடம்பன் மறத்தி கன்னாட்டிக்கு அதிபராக நியமித்திருக்கிறேன் எனத் தந்தியொன்று வந்தது. பதவியை ஏற்ற பத்துநாட்களுக்கிடையில், அப்பாடசாலை யின் வருடாந்த பரீட்சையும் வந்தபடியால், அடம்பன் பங்குத்தந்தை யர் M. C, மரியாம்பிள்ளை அடிகளாரோடு தங்கிப் பரீட்சை முடிந் ததும் நேரிற் சென்று அவரிடம் நன்றி தெரிவிக்கையில் "நீர்தானா அந்த ஞானப்பிரகாசம்" என்று கேட்டு “உமது எழுத்தில் முதுமை யானவர்களின் அறிவையே கண்டேன். அதை வாழ்வில் பிரயோசனப் படுத்திக்கொள்ளவேண்டும்" எனக்கூறி ஆசீர்வதித்தனுப்பினார். அதன் பலன் ஆக்கும் அவ்வாண்டு நடந்த யாழ் பெரிய சற்பிரசாதச் சமாகம மறைக்கல்விப் போட்டியில்,எனது சிறிய பாடசாலையே முதற்பரிசைத் தட்டிக்கொண்டது. அதனை நினைத்துப் போலும் ஒருவருடத்தில் அடுத்த பெரிய வித்தியாலயமாகிய விடத்தற் தீவுக்கு மாற்றிவிட்டார். அங்குபுரிந்த அயராத நற்சேவையின் பயனால் வதிரி தெற்கு நெடுந்தீவு மத்தி, யாழ், புனித சாள்ஸ் வித்தியாலயம் முதலாகிய பெரிய நிலை யங்களுக்கு மாறி மாறிச் சேவைபுரிய அனுப்பினதன்றிப் பாதுகாவலன் பத்திராதிபர் உயர்திரு A. S. ஞானப்யிரகாசம் அவர்கள் சுகவீனம் அடையுங் காலத்தில் இைையிடை அவருக்கு உதவிசெய்யுமாறுந் தெரி வித்து விட்டார். பிரதம பொதுமுகாமையாளராக ஆயராக அவரிருந்த 33ஆண்டுகளையும் நினைக்கையில் யேசு பெருமானின் நினைவே வரு

83
கின்றது. இவ்வாறே எனது மனைவியார்க்கும் ஆசிரியை உதவி அதிபர் பதவிகளையும் வழங்கிச் செய்த நன்றி உதவிகள் ஒன்றிரண்டல்ல, காவியத்தில் அடக்கினால்தான் மனஞ் சாந்தியடையும். அவரை என் றும் நினைக்கையில்.
"ஆரென்றறியத் தகாதவெனை அரசுமாக்கி முடிசூட்டிச் சீருஞ் சிறப்புந் தனது பெருஞ் செல்வமனைத்துந் தேர்ந்தளித்தான்' என்று அன்று கன்னன் கூறிய அமுத மொழியே இன்றும் நெஞ்சில் நிழலிடு கின்றது.
ஆண்டவன் அருளால் திருச்சபைத் தாய் பெற்ற சீமோன் வழி வந்த திருமகன் - ஆவியின் அருள்பொங்கும் ஆளுமை - உயிரோட்ட முள்ள விசுவாசம். மதிநுட்பீ மதை - உவமை கூற முடியாத ஒரு தனித்துவ மகாத்துமா - எனது சேவை இறுதி 21.2.1971 இல் நிகழ்ந்த விழாப்போதும், துணை ஆயர் வந். L. R. அன்ரனி அவர்களை அனுப்பி வைத்துச் சிறப்பித்த தீர்க்கதரிசி. ஆண்டவன் பதமடைந்த 25ஆம் வருட விழிவை இவ்வருடம் 17.797இல் மெய்யடியார்கள் யாவரும் நினைவுகூர்ந்து கொண்டாடினது பேருவகையளித்தது. இவ் வாண்டிலேயே எனது திருமண மணிவிழாவும் நேர இருப்பது தேவ சித்தமே.
4. இப்படியெல்லாம் எமில் ஆண்டகையைப் பற்றிக் கூறுகிறீர்களே! அவரைப்பற்றி ஒரு நினைவு மலரோ காவியமோ எழுத உங்க ளான் முடியுமோ?
விரும்பத்தக்க கேள்விதான்: அவர் வாழ்ந்த காலத்தில் - பாது காவலன் - ஈழகேசரி - நினைவு மலர்களில் எழுதியவை அறிஞர் உலகம் அறியும். அதை மீண்டுஞ் சொல்வதற்கில்லை - "காவி யம்" என்று கேட்டீர்கள் - பிள்ளைத் தமிழ் - ஆற்றுப்படை - தூது என்ற பிரபந்தங்கள் எழுதிய அநுபவம் சிறுக உண்டு. கவிஞர் கண்ணதாசன் யேசுகாவியம் எழுத எத்தனையோ குர வர்கள் அவருக்கு உதவினார்கள் - அப்படி எங்கள் குரவர்களும் இதய பற்றுள்ள மெய்யடியார்களும் உதவினால் முயன்று பார்க் கலாம் - வெண்ணை கையில் இருக்க மோருக்கலையாமல் - நமது மண்ணிலேயே சிறந்தகவிஞர் திலகங்களாகப் பன்னூல்கள் எழுதிய பாவலர்களாக வித்துவான் அமுது - யாழ்/ஜெயம் - கரம்பொன் யுவன் - நெடுந்தீவுப் புலவர் A. W. அரியநாயகம் போன்ற

Page 47
84
பக்க பலமாக என்றும் பணியாற்றும் பண்பில் உயர்ந்தவர்கள் - பாரிய ஆற்றல் படைத்தவர்கள்.
5. உங்களுக்கு 82 - 83 வயது என்கிறார்களே! இதற்குக் காரணம்
கூறமுடியுமா?
நேரம் அதிகம் எடுக்குமாதலின் சுருக்கமாய்க் கூறின்.
i வது காரணம் பரம்பொருள். i வது காரணம் பணம் பொருள், i வது காரணம் பிறந்த மண்வாசி ; பெரியோர்களின் நல்லாசி
ஆதியன.
மிகவும் நன்றி - வணக்கம்
பேட்டி கண்டவர் -
எஸ். ஸ்ரனிஸ்லாஸ் முன்னாள் வங்கி ழுகாமையாளரி, பாண்டியன்தாழ்வு
★ ★ 大
உன் பிள்ளைகளெல்லாம் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப் பார்கள். உன்பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாக இருக் கும். நீதியினால் ஸ்திரப்பட்டிருப்பாய், கொடுமைக்குத் தூர மாவாய், பயமில்லாதிருப்பாய், திகிலுக்கு தூரமாவாய். அது உன்னை அணுகுவதில்லை"
gJ4 rrum 54:13, 14

நல்லிதய நன்றி
திருமண மணிவிழாத் தேமலர் பெரு மணங்கமழ, ஆசி மணி களையும் - கவிதைப் பூக் களையும் - கட்டுரை மஞ்சரி யையும் கழிபே ருவகையுடன் எழுதி உதவிய மகா. வந். ஆயர் திலகங்கள் - அருட் குருமணிகள் - சங் - கன்னிகாரத்தினங் கள்-கவிமன்னர்கள் ஆன்ற பேரறிஞர்கள்-மற்றும் அகங் கலந்த அன்புள்ளங்கள் அனைவருக்கும் - செம்மையுற இம் மலரினைச் சீரிய முறை யில் படைத்த யாழ். புனித வளனார் பொற்புறு அச்சக முதல்வர். போற்றற்குரிய பொறுமை, நிதானம், வேகம், விடா முயற்சி, பூண்ட
பெரும் பணி ulu T enmir Tif 95 ளுக்கும்
** இராணிமனை" நெஞ்சம் நிறைந்த அல்வாய் தெற்கு s நேச நன்றி
அல்வாய். மக்கள் மருமக்கள் 6. 08, 1997

Page 48
குடும்ட
க. த. ஞ
றெஜினா மேரி ெ
1. மேரி பெளவினா 2. பிரான்சிஸ் 4. அன்ரன் 5. ஆன் ஜெயராணி ஜெயரட்ணம் யேசுதாசன் ւյ6ն):
大 விண்ணகம் - 1940 J. E. W. ராஜசூரியர் அக்னஸ் G. M.
3. ஜோசப் திருமதி- ராகினி 事 குணரட்ணம் றெஜினோல்ட்
மோகன் விண்ணகம் - 1942 ஜெரால்ட் தேவகும திருமதி. றோகினி றேமன்ட் திருமதி
ரவிராஜ் 米 ரியூட்டர் ரஞ்சித் έ. Ο ί திருமதி. டயானி சுதர் லிமலநாதன் 5.
esse ERIN arraf FRANNI அருண்

விபரம்
திருமண நாள் 12. 08, 1936
ாணப்பிரகாசம்
★ மக்டலின் நாகம்மா
(Buforf) 6. மேரி அல்போன்ஷா 7. ஜோஸ் . அருள் r60oh செல்வராணி மரியதாசன் சூசைதாசன்חזjp_
★ 女 女 ܐܡ செபஸ்தியாம் அன்ரன் போல் டொறத்தி ரஞ்சினி
பிள்ளை சிவலிங்கம்
மைக் கீதவாணி frfo பிரியதர்ஷிணி வின்சன்ட் விஜயவாணி தி. சுபாங்கி பத்மதர்ஷிணி பற்றிக் சத்தியவாணி பற்றிக் * சாரங்கவாணி ங்கலி ர்ஷினி up GOT sa 6ofuunT
அன்ரனி *

Page 49


Page 50


Page 51