கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அங்கையன் கயிலாசநாதனின் நினைவாஞ்சலி

Page 1
. . . . .
3: அங்ை
கயிலாக,
25 - O
***에
 
 
 

에
ω E II 15όΤ
நாதரிைன்
|| SkLSLLLTATTSL L SLL LLS kkS kkSSSSASASSSLS S S S SLLSS SLL -- ܡܕ -- ܕ ". . . . . . . . . . . . . . . . . .
7Sھا ۲۱مبر2

Page 2
f' ( ; 8.

அமரர்
அங்கையன் கயிலாசநாதன்
ভূক্ত ক্রািভক্রোিভক্রেeেংক্রাভে-ভে-ভে->
ଐଶ୍ବି
媒 ()
() ()
() 敬
(). ()
() )媒 () ()
() 敬
() 敬
敬
侧 f
() ή ό
() 勋
ప్రాత్రాత్రాత్రాఆఆ ఆఅ ఆఆ ఆశ్రీ
தோற்றம்: மறைவு:
14-0泌-1942 O5-04-976
3569

Page 3

6 கேட்டிருப்பாய் காற்றே ”
அமரர் அங்கையன் கயிலாசநாதனுக்கு அஞ்சலி நிகழ்ச்சி)
ஈழத்தின் பிரபல தமிழ்க் கவிஞரும் எழுத்தாளருமாகிய அங்கையன் கயிலாசநாதன் அமரராகிவிட்டார். அங்கையன் கயி லாசநாதன் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக ஈழத்தின் தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டு, சிறு கதைகள், நாவல்கள், கவிதை கள், நாடகங்கள் முதலாம் ஆக்க இலக்கியங்களைப் படைத்தது டன், சிறந்த விமர்சகராகவும் இசைப்பாடல் ஆசிரியராகவும் திகழ்ந்தார்.
இலங்கைப் பல்கலைக் கழக கலைப்பட்டதாரியாகிய இவர் எழுதிய ‘கடற்காற்று’ என்ற நாவல் நாவற் போட்டி ஒன்றில் வெள் ளிப் பதக்கப் பரிசு பெற்றது. நூலுருவில் வெளிவந்துள்ள இந்த நாவலைத் தவிர ‘செந்தணல்’ என்ற இவரின் மற்ருெரு நாவல் அப ரிமிதமான பாராட்டுக்களைப் பெற்றது. ܵܕ
இலங்கையின் முக்கிய முன்னணித் தேசியப் பத்திரிகைகள் இரண்டில், துணை ஆசிரியராக 6) ஆண்டுகள் பணிபுரிந்த அங் கையன் கயிலாசநாதன் ஏராளமான இலக்கிய ஆராய்ச்சிக் கட்டு ரைக2ளயும், தனிக் கவிதைகளையும், சிறு கதைகளையும் பல்வேறு பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் படைத்தவர். இரண்டு சஞ் சிகைகளின் ஆசிரியராக இருந்து அவற்றை நடத்தி ஓர் இலக்கிய பரம்பரையையும் உருவாக்கியவர் என்று பாராட்டுப் பெற்ற அங் கையன் இலங்கையின் தேசிய இலக்கிய வளர்ச்சியை இலட்சியமா கக் கொண்டு உழைத்தவர்.
வானெலியில் பல கதை நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கி யுள்ள இவரின் மெல்லிசைப் பாடல்களும் கவிதைகளும் இவருக்குத் தனிப் புகழைச் சம்பாதித்துக் கொடுத்தன. கவிதைத் துறையிலே தான் அவருக்கு மிகுந்த ஈடுபாடு. கவிதைகளை ஆராய்வதிலும் ரசிப்பதிலும் அவர் மிகவும் ஈடுபட்டு வந்தவர். அவருடைய ஆத் மாவின் மணிக்குரலாகத் திகழ்ந்ததே கவிதை என்று சொல்லலாம். கவிதையை நயப்பதில் அவருடைய குரல் இவ்வாறு ஒலித்தது.
* கவிச் சக்கரவர்த்தி கம்பரை உங்கள் எல்லாருக்கும் தெரி யும். அவர் ஒரு நாள் தோட்டங்களின் வழியாகப் போய்க் கொண் டிருந்தாராம். எங்களைப்போல ஏர் பிடித்து உழுவதும், பட்டைக்

Page 4
( 2)
கிடங்குகளில் துலாக் கொடியையும் பீலிப் பட்டையையும் பிடித்து துலா மிதித்துத் தண்ணிர் இறைப்பதுமாக, கமக்காரர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள் சூரியன் உதிக்க முன்னமே அவர் கள் எல்லாரும் வேலைக்குப் போயிருந்தார்கள் மூங்கில் மர இலைக ளிலே பனிபடர்ந்திருந்ததாம். கம்பனுக்குக் காலையிலேயே கவிதை பிறக்கத் தொடங்கிவிட்டது. எடுத்த எடுப்பிலேயே “மூங்கில் இலை மேலே தூங்கு பனிநீரே” என்று அடியெடுத்த கம்பருக்கு அடுத்த அடி எடுக்க முடியவில்லையாம். ஏற்றம் இறைத்துக் கொண்டிருந்த கமக்காரர்கள் தங்கள் களை ப்பை மறப்பதற்காகப் பாடத் தொடங் கிர்ைகளாம். கடலிலே மீன்பிடிக்கப் போகின்ற மீனவ மக்களும் ஏலேலோ” பாடுவார்கள் தானே! அதேபோல உழவமக்களும் பாடி ஞர்களாம் 'மூங்கில் இலைமேலே தூங்கு பனிநீரே” என்று ஒரு வன் பாட மற்றெருவன் அந்தப் பாடலை உடனே பூர்த்தி ஆக்கி விட்டானும், 'தூங்கு பனிநீரை வாங்கு கதிரோனே’’ இப்படி இவர் கள் பாடியதைக் கேட்டதும் கம்பர் அப்படியே பிரமித்துப் போன ராம் 'அடடா கிராமிய மக்களிடம் இத்தனை உயர்ந்த கற்பணு சக் தியும் கவிதா சக்தியும் குடி கொண்டிருக்கின்றன. 51 ல் ைைடய சிந்தனைக்குக்கூட இந்தக் கற்பனை தட்டுப்படவில்லையே’ என்று வியந்து பாராட்டினுராம். இது கதையாக இருக்கலாம். அல்லது உண்மையாகவும் இருக்கலாம் ஏனென் ருல் எல்லாரும் எக்காலத் திலும் வல்லவர்களாக இருப்பதில்லையே! இதிலிருந்து நாங்கள் ஒரு உண்மையைத் தெரிந்து கொள்கின் ருேம் அல்லவா? கல்வியிற் பெரியவனுன கம்பனிடம் காணக்கிடைக்காத கற்பனை நயங்கள் கூட, கிராமிய மக்களிடம் அதிக அளவாக மண்டிக் கிடக்கின்றன என்பதே அந்த உண்மை பெருங் கவிஞர்களிடம் காணக்கூடிய இலக்கிய சுத்தமான சொல்லாட்சியும் செய்யுள் அமைதியும் கிரா மிய மக்களிடம் இல்லாமல் இருக்கலாம் ஆணுல் அவர்களுடைய பாடல்களில் உண்மையான உணர்ச்சிகளும் ஆசாபாசங்களும் அபி லாஷைகளும் வெளிப்படையான மனப் பக்குவமும் வெகுவாகப் பரிணமிக்கின்றன. அத்தகைய மக்கள் மொழியில், மக்களால், மக் களுக்காகப் பாடப்பெற்ற சில நாட்டுப் பாடல்களில் ஈடுபாடு கொண்ட அங்கையன் கயிலாசநாதன் இந்த இலட்சியத்தை அடி நாதமாகக் கொண்டு எழுதிய கவிஞர்கள் என்று கருதப்படுகின்ற கம்பரிலும் பாரதியிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவர்களைப் பின்பற்றி மக்களுக்காக மக்கள் மொழியில் கவிதைகள் பாடுவதில் ஈடுபாடு காட்டி வந்தவர்.
பாரதியின் பாடல்களில் ஒன்றில் ‘கேட்டிருப்பாய் காற்றே” என்ற சொற்றெடர் வருகிறதல்லவா? அந்தச் சொற்ருெடரையே

( 3 )
தலைப்பாகக்கொண்டு தொடர்ந்து, பல இனிமையான ரசனை சொட் டும் கட்டுரைகளை தமிழர்களைப் பற்றியும் தமிழர்களின் வாழ்க்கை பற்றியும் அவர்களின் கலை, சமூகம், சமயம் போன்ற துறைகளில் நிலவியுள்ள சூழல்கள் பற்றியும் உருக்கமான விமர்சன ரீதியான ஆராய்ச்சி அடிப்படையுள்ள கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார். ‘கேட்டிருப்பாய் காற்றே” என்ற அந்தச் சொற்ருெடரே அவர் இலக்கியத் துறையில் ஆற்றிய சில பணிகளுக்குப் பல விதத்திலும் பொருத்தமானதாக அமைகிறது.
காற்றேடு அவருடைய ஆத்மாவின் மணிக்குரல் கலந்து விட்ட போதிலுங்கூட அந்தக் குரல்கள் பலர் நெஞ்சங்களிலும் பலர் செவிகளிலும் என்றும் நிறைந்துதான் இருக்கின்றது. அவ ரது கவிதைகளிலே ஒருவிதமான ஆத்ம சோகம் இழையோடுகிறது பாடுபடும் மக்களுக்காகவும் கிராமத்து ஜனங்களுக்காகவும் குழை ந்து உருகும் பாடல்கள் பலவற்றை அவர் யாத்தபோதிலும் குடும் பப் பாங்கான மெல்லிசைப் பாடல்களிலே லேசாக இழையோடும் சுவைகள் மிகவும் மனுேரம்மியமானவை. பட்டு இதழ் விரித்து சிரிக்கும் வட்டமுகம் ஒன்றினைப் பார்த்து அவர் இப்படிப் பாடு
ព្រោះ}.
1. பட்டு இதழ் விரித்து - சிரிக்கும்
வட்ட முகம் அனைத்து - நான் தொட்டு மகிழ்ந் திருப்பேன் - உன்னைத் தெய்வ மென உரைப்பேன் (பட்டு)
2 வட்ட நிலா முகமும் - நெஞ்சில்
வாஞ்சை எழும் சுகமும் - உன்னைத் தொட்டதால் வந்த தம்மா - சுவை சொட்டிடும் தேன் பழமே (பட்டு)
3 கான மயில்களின் ஆட்டம் - உன்றன்
கைகளிலே அங்கு தோற்றும் - தேவ கானக் குயிலின் பாட்டும் - நிந்தன் கிள்ளை மொழி நினை வூட்டும். (பட்டு
ஆங்கில இலக்கியத்திலும் பிறமொழி இலக்கியங்களிலுங் கூட அங்கையன் கயிலாசநாதன் மனம் ஈடுபட்டுத் திளைத்தவர். பல வெளிநாட்டு இலக்கியங்களைத் தமிழிலே மொழி பெயர்த்து அளித்தவர். இவான் துர்கானே (Ivan Turgenow) வின் கரும்பூமி’

Page 5
(4)
என்ற நாவல் அவருடைய சிறப்பான மொழிபெயர்ப்பாக வெளி வந்து பலரின் பாராட்டுதல்களையும் பெற்றது. வெளிநாட்டுத்தானி கர் அலுவலகத்தின் தமிழ்ப் பிரிவிலும் வானெலித் துறையிலும் தொழில் புரிந்த அங் கையன் கயிலாசநாதன் ஆங்கிலத்திலும் தமிழ்க்கலை பற்றி எழுதி வந்தார்.
இத்தகைய நவீன இலக்கிய ஈடுபாடுகொண்ட அங்கையன் கயிலாசநாதன், பழந்தமிழ் இலக்கியத்திலும் மிகுந்த பரிச்சயம் கொண்டவர். சங்க இலக்கிய நூல்கள் பற்றிப் பல ஆராய்ச்சிக் கட் டுரைகளை அவர் எழுதினுர். குறிப்பாக, சங்க இலக்கியத்தில் அகத் தினைப் பிரிவுகள் பற்றி அவர் எழுதிய கட்டுரைகள் ரசமானவை அகத்தினை என்ருல் அங்கையன் கயிலாசநாதனுக்கு ரசனை சற்று அதிகம். அவருடைய பாடல்கள் பலவற்றிலும் மெல்லிசைப் பாடல் கள் பலவற்றிலும் இந்த ரசனை சொட்டும்.
இதோ "காலை மலரே கனிவுடைய செண்பகமே
சோலைக் குயிலே சுவைநிறைந்த தேன் பழமே”
என்று அகத்தினைப் பாடல் ஒன்றில் அவருடைய மணிக்குரல் இவ் வாறு ஒலிக்கிறது.
1. காலை மலரே கனிவுடைய செண்பகமே
சோலேக் குயிலே சுவை நிறைந்த தேன் பழமே வேலைப் பழிக்கும் விழிபடைத்த பொற்குடமே நூலைப் பறித்து நுண்ணிடையில் ஏன் வைத்தாய்?
(காலை மலரே)
2. ஆனந்த ராகத்தின் அற்புதத் தேனிசையே
நானந்தப் பொருளென்றே நாவாற் சுவைதருவாய் தேனுந்தன் இதழென்றே தெவிட்டாத இதமளிப்பாய் ஏனுந்தன் இதழ்ச் சிவப்பை விழியேற்றுக் கொண்டதுவோ?
(காலே மலரே)
3. அன்னம் நடைநடக்கும் உன்னடையைக் கண்டதனுல்
ஆதவன் ஒளிபெற்றன் உன்னெழிலைக் கேட்டதனுல் தென்னன் தமிழ் நிலைத்தாள் உன் குரலின் இனிமையதால் இன்னும் எதைச் சொல்ல என்னிதயத்தின் ஒளியே?
(காலை மலரே)

(5)
தன்னம்பிக்கை மிகுந்த வர் அங்கையன் கயிலாசநாதன். நாவல்கள் பலவற்றை அவர் எழுதி இருந்தாலும் ‘கடற் காற்று' அவருடைய முக்கியமான நாவல். அந்த நாவலின் முன்னுரையில்
'இந்த நாவல் என்னுடைய முதலாவது படைப்பன்று. கன்னி முயற்சியுமன்று நான் எழுத வேண்டும் என்ற இனிய ஆவ லைப் பெற்று 1959 ஆம் ஆண்டு முதல் சவலைப் பிரசவம் செய்தி ருந்தும் பெயர் விளம்பரத்துக்காக மட்டுமே அதனையே உரைத்து ணர்த்தும் தர மாக க் கருதி கதைகளைப் படைத்தவர்களுடைய கதைகளை மட்டுமே கரம் நீட்டி அணைப்போம் என்ற கவைக்குத வாப் பத்திரிகைகளின் புறமுதுகைப் பார்த்துப்பெருமூச்சுவிட்டது கிடையாது” என்று அடித்துச் சொல்கிருர்,
"பத்திரிகைகள் தாம் கதாசிரியனைத் தீர்மானிக்கின்றன என்ற பத்தாம் பசலிக் கனவை மறுத்து, உத்வேகம் உள்ள எவ னும் எழுதலாமே என்ற உணர்வு பெற்று, இந்த நாவலுக்கு முன்பு ஒரு முழு நாவலை எழுதி முடித்து அதனை அழகாக படியெடுத்து, என் நூல்நிலையப் பெட்டிகளின் அடியிற் பக்குவமாக வைத்திருந் தேன். எனது ஒலை வீட்டில் நீக்கமற நிறைந்துள்ள கறையான் களுக்கு அக்கதைத்தாள்களுட் பெரும்பாலானவை இ ைர யாகி விட்ட சோகம் அண்மையில்தான் தெரிய வந்தது. ஒ. கறையா னுக்குத் தமிழ் நூல்கள் என்றல் மிகவும் பிடிக்குமா?’ என்று எழு து கிருர்.
கடற்கரை சார்ந்த மண் டை தீ வைப் பிறப்பிடமாகக் கொண்ட அங்கையன் கயிலாசநாதன் கடற்காற்று என்ற நாவலை எழுதியிருப்பது தான் வாழ்ந்த சூழலிலே வாழும் மக்களின் வாழ்க் கையை படம் பிடித்துக் காட்டுவதில் அவருக்கிருந்த அக்கறையை எடுத்துக் காட்டுகிறது. தான் பிறந்து, வளர்ந்து, விளையாடி மகிழ்ந்து வாழ்க்கையில் பங்கு கொண்டு உறவாடிய மக்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை அவர் தன்னுடைய மெல்லிசைப் பாடல் களிலுங்கூடப் படம் பிடித்துக் காட்டினர். மழை சிந்தும் கடலோ ரத்தில் இளநண்டு ஒன்று படம் கீறும் காட்சியினை அவர் இவ்வாறு வர்ணிக்கிருர்,
1. மழை சிந்தும் கடலோரம்
இள நண்டு படங் கீறும் நிலை கண்டு என் நெஞ்சில் நிதம் உந்தன் நினை வூறும் - (மழை சிந்தும்)

Page 6
(6) .
2. கலை கண்ட உருவாகிக்
களி கொண்ட நிலவே - உன் கழல் சிந்தும் ஒளி கண்டு கவியென்று மகிழ்வேன் - (மழை சிந்தும்)
3. நிலை மாறும் புவிமீதில்
நிதியாக வந்தாய் - உன் நிழல் மீது என் வாழ்வும் நிலையாகு மென் பேன் - (மழை சிந்தும்)
காதல் திருமணம் செய்து கொண்ட அங்கையன் கயிலாச நாதனின் குடும்பப் பிணைப்பு அவருடைய இலக்கிய ஆக்கங்களி லும் பிரதிபலிக்கத் தவறவில்லை. ‘முக்கண்ணன்’ ‘புதுமைப் பண்டி தன்’, முதலாம் பல்வேறு புனை பெயர்களிலுங்கூட அவர் பல்வேறு பொருள்கள் பற்றி இலக்கியப் படைப்புக்களை ஆக்கியிருந்தாலும் ‘லட்சுமிநாதன்’ என்று தம் இல்லாளின பெயரையும் தம் பெயரோடு இணைத்து அவர் எழுதிய கட்டுரைகள், கவிதைகள் அவர் எவ்வ ளவு தூரம் தம் குடும்பத்தில் பிணைப்புக் கொண்டிருந்தார் என்ப தனை விளக்கும். அவர் எழுதிய மெல்லிசைப் பாடல்கள் பலவற் றில் தெறிக்கும் கா தற் சுவை அவருடைய சுய வாழ்க்கையின் ரேகைகளைக் காட்டுவது என்று கருதலாம் ‘கண்ணுக்குள் தவழ் ந்து வந்த ஓவியமே ...” என்று தொடங்குகின்ற பாடல் மிகவும் நுட் பமான மென்மையான காதல் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒரு மெல்லிசைப் பாடல் இதோ!
1. கண்ணுக்குள் தவழ்ந்து வந்த ஓவியமே - என் கருத்துக்குள் மறைந்து நின்ற காவியமே பெண்ணுக்குள் புகுந்து வந்த போதிலும் நான் - உன் எண்ணத்துள் நீந்திடத் துடிப்பேனடி - (கண்ணுக்குள்)
2. வாழ்வது உனையன்றி வேறு இல்லை - உன்
வர வது தவிர்தங்கு பாதை இல்லை சூழ்வது உனையன்றிச் சுற்றம் இல்லை - என் சுகத்துக்கு உனையன்றி யாரும் இல்லை - (கண்ணுக்குள்)
3. கரும் பென்ருல் உன் குரலின் கனிவு அன் ருே? - இரு
கயலென் ருல் உன் விழியின் சாயலன் ருே? அரும்பென்ருல் உன் முல்லைக் கோலமன் ருே? - என் அறமென் ருல் உன்னுேட வாழ்தலன் ருே? - (கண்ணுக்குள்) என்று பாடுகிறர் அங்கையன் கயிலாசநாதன்.

( 7 )
தம் மனைவி. தம் குழந்தைகள், தம் குடும்பம் என்ற அகத் திணை வாழ்வின் சாயல்களை அவருடைய பாடல்கள் பெரும் அள விற்கு எடுத்து ஒதும். மூன்று குழந்தைகளுக்கு தந்தையான அங் கையன் கயிலாசநாதன் குழந்தைத் தெய்வங்களின் குரல் ஒசை யைத் தம் வாழ்க்கையின் இன்ப ஈடேற்றத்தை அளிக்கும் உவகை என்று கருதுபவர். ஒ1 மணிக்குரல் ஒலித்ததே.” என்று அந்தக் குழந்தைகளின் குரல்களையே அவர் பாடுகிறர்
1. ஒ1 மணிக்குரல் ஒலித்ததே
நினைத்ததும் உணர்ந்ததும் மணந்ததும் நடந்ததே ஆ1 ஆ அது இனிமை (ஓ! மணிக்குரல்)
2. பொன் நிகர்த்த நம் கணுக்கள் கைகூடும் நாளிதே
கனிந்த கன்னி வாழ்விலே நினைக்தவர் அகத்திடை சு கித்திடும் முகூர்த்தமே
(ஓ! மணிக்குரல்)
3. நல் வாழ்க்கையின் இன்பம் ஈடேற்றும் ஓசையே குழந்தைச் செல்வம் வீட்டிலே களிப்பிடை உதிர்த்திடும் சிரிப்பினில் ஒலிக்குமே
ஆ1 ஆ! அது இனிமை (ஒ1 மணிக்குரல்)
களிப்பிடை சிரிப்பினை உதிர்த்த திலகங்கள், குழந்தைகள் வாழ்ந்த தம் குடும்பமாகிய சின்னஞ்சிறு உலகத்தை மட்டுமன்றி பரந்த உலகத்தை பார்த்து பஞ்சை பாரதிகளுக்காகவும் பாடல் களும் இலக்கியங்களும் ஆக்கி மறைந்த அங்கையன் கயிலாசநா தன் எழுதிய “செந்தணல்” என்ற நாவல் மக்களுக்காக அவர் எவ் வாறு உள்ளங் கொதித்து உருக்கமான பார்வையினைச் செலுத்தி இலக்கியங்களைப் படைத்தார் என்பதனை வெளிப்படுத்தும். “உல கத்தைப் பார்ப்பதுடன் மட்டுமல்லாமல் அந்த உலகம் இப்படிப் பட்டதுதான் என்று அனுபவித்து அறிவதிலும் இன்பம் இருக்கி றது” என்று செந்தணல் நாவலிலே ஓர் இடத்தில் அவர் குறிப்பிடு கிருர் உலகத்தில் இன்பங்களை அனுபவித்து அறிவதிலும் நாட்டங் கொண்டு விளங்கிய அங்கையன் கயிலாசநாதன் தமிழுக்காகச் செய்த சேவைகள் குறிப்பிடத் தக்கவை. அவரே ஒரு கவிதையிற் குறிப்பிட்டது போல,

Page 7
(8)
"தண்ணளித் தமிழைக் காத்துத்
தரணியிற் புகழிற் பூத்து விண்ணுயர் பெருமை சேர்த்து விளங்கிடும் கவிஞன் தன்னை எண்ணியே தமிழின் மக்கள் இரங்கியே நிற்கும் போது மண்ணிலே ஈரஞ் சேர மாந்தர்கள் அழுவார் தாமே
99
அவருடைய பாடலே அவருக்குப் பொருந்துவதாக ஆகி விட்டது. அவருடைய குரல் காற்றிலே கலந்துவிட்டது. ஆணுல், அவருடைய கருத்துக்களோ எங்கள் நெஞ்சங்களில் நிறைந்திருக் கின்றன.
ஆக்கம்: சில்லேயூர் செல்வராசன். தயாரிப்பு: எம். ஏ. குலசீலநாதன்.
(இது அங்கையன் கயிலாசநாதனின் அகால மரணத்தை யடுத்து 10-04-76 இல் காலை 11-00 மணி முதல் 11-30 மணி வரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் சேவையில் ஒலிபரப் பாகிய அஞ்சலி நிகழ்ச்சியாகும்.)
 

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன மா அதிபர் திரு. றிஜ்வே திலகரத்ன அங்கையன் கயிலாசநாதனின் முதலாண்டு நினைவு தினத்தையொட்டி அன்னரது குடும்பத்தினருக்கு அனுப்பிய அனுதாபச் செய்தி
illth March, l977.
When young Kailasanathan joined us at Broadcasting five years ago, it would appear that he had already distinguished himself through his many - fa, c et ed contribution to the Tamil Arts . As a journalist, poet and dramatist he seemed to possess the right background for a career in Broadcasting.
It is sad to think that his tragic untimely death has deprived the Corporation of a talented broadcast er and the country of a promis ing young art, ist .
On the occasion of Kailasanathan's first death anniversary our thoughts go to Mrs. Raj Kailasanathan and children with a de ep s ens e of the “tears of things’.
Sgd. Ridgewap Tillekeratne Dir e c t or - General Sri Lanka, Broadcasting Corporation.

Page 8
என் நெஞ்சில் நிதமுந்தன் நினைவூறும்
என். சண்முகலிங்கன்
'மழை சிந்தும் கடலோரம் இள நண்டு படம் கீறும் நிலை கண்டு என் நெஞ்சில் நிதமுந்தன் நினைவூறும்’.
என்றே ஒருநாள் நீ எழுதிய கவிதை இது . அன்ருெருநாள் நீஇந்த அழகான கவிதந்து
நன்ருன இசையில்
பாடடா! என்றிட்டாய் ஆனந்த ராகத்தில் நான் பாடப்பாட அழகாக, மேசையில் நீதாளம் போட ஆனந்தலோகத்தில் மிதந்தோமே அண்ணு
இன்றும் அதே பாட்டை என்னுள்ளே இசைக்கின்றேன். ஆனந்தமில்லை . அழகானராகமில்லை அன் போடு கேட்டுத் தாளமிட நீயில்லை. என்றலும்.
இந்த உலகும் இனிய கவின் கலையும் இருக்கின்ற நாள் வரையில் நீயும் வாழ்வாய் எந்தனின் அண்ணன் நீ என்றும் வாழ்வாய் *கலைஞன் கயிலாசநாதன்” என்றே நீ ஒளிர்வாய்! ‘மழை சிந்தும் கடலோரம் இள நண்டு படம் கீறும் நிலை கண்டு என் நெஞ்சில் நிதமுந்தன் நினைவூறும் ”
இப்பாடல் அங்கையன் கயிலாசநாதன் அகால மரண மடைந் ததை அறிந்து ஆற்றெணுத் துயரில் மூழ்கிய திரு என். சண் முகலிங்கன் மனமுருகி எழுதி வீரகேசரி வார வெளியீட்டில் (11-04-76ல்) வெளியாகியது இப் பாடலுக்கு குரல் கொடுத்த வர். என். சண்முகலிங்கனே என்பதும் குறிப்பிடத்தக்கது.
35649حساس ہسحس صحس
குமார் அச்சகம் பருத்தித்துறை


Page 9
Mamu k

汗牙