கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: முருகப் பெருமான் பிரார்த்தனை

Page 1
FT சிதம்பரப்பிள்ளை
அவர்
இயற்றப்
கொழு தாளேயான்
பதிப்பிக்க 19
 

பெற்றது
ஜம்பு அச்சகத்தில் ப்பெற்றது 79.
§ ප්‍රීඝ්‍ර
స్గ

Page 2

k&&&&ର୍ଦୋଽ
3. : (o) 影 å - சிவமயிதா : 發 ଖୁଁ
線 3. గ్ద స్ధ శ్లో O ଓଗi 錢 ஐ முருகப் பெருமான ஐ 繼 . . 接 3. பிரார்த்தனை 3. $ స్థ ଖୁଁ Š ఫ్ల Š 級 இஃது 殺 3. சாவகச்சேரி 3. గ్ట 錢 சிதம்பரப்பிள்ளை அருணுசலம்
அவர்களால் 繼
3. 3. వ్లో && 33 : தாளையான் அச்சகத்தில்
பதிப்பிக்கப்பெற்றது 3 1979 錢
......န္တီ::::::းနှီးနှိုး
l

Page 3

G சிவமயம்
புங்குடுதீவில் அன்பருக்கன்பனய் விளங்கும் வித்துவான் திரு. பொன். அ. கனகசபை
அவர்கள் வழங்கிய முகவுரை
* முருகப் பெருமானது இணையற்ற கீர்த்தியும், அவர்மேல் உண்டாகும் பக்தியுமே கலியுகத்தில் வரும் பாவங்களையும் துன்பங்களையும் போக்க வல்ல ன " என்பது திரிகாலமு முணர்ந்த வேதவியாச முனிவரது அருள்வாக்காகும்.
இன்று இவ்வுலகில் அசுரகுணச்செயல்கள் அளவிறந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. மனிதகுலம் துன்ப விருளில் மூழ்கி அமைதிகுன்றி விடிவு காண்ப தற்குத் துடியாய்த் துடிக்கின்றது. இவ்வேளையில் முருகப் பெருமான் பிரார்த்தனையினலேதான் மக்கள் அசுரப்பிடியிலிருந்து விடுதலையடைந்து ஆத்மீகபாதை யில் சுலபமாக முன்னேற முடியும்.
முருக பக்தர்களில் ஒருவராக விளங்கும் திரு. சி. அருணுசல சுவாமிகள் இயற்றிய முப்பத்திரண்டு பாடல் கொண்ட முருகப் பெருமான் பிரார்த்தனை என்னும் நூலை அடியேன் பார்வையிட ஒரு நல்ல சந்தர்ப்பம் வாய்த்தது. இந்நூல் பக்தர்கள் பாராயணஞ் செய்யத் தக்க முறையில் அமைந்துள்ளது. இதைத் தினமும் பாராயணஞ் செய்துவர பாவந்தேயும். இளம்பிறை போல மனதில் சாத்வீக குணங்கள் வளரும், நோயற்ற வர்ழ்வும் பூரண ஆயுளும் உண்டாகும். இம்மையில் செல்வவளமும், மெய்யருளில் மூழ்கும் பாக்கியமும், சீவபோதம் நீங்கிச் சிவபோதந்தானுய் விளங்குஞ் சீவன் முத்தி நிலையுங் கைகூடு மென்பது எனது அபிப்பிராயம்.

Page 4
ஆகவே நாம் முழுமனத்துடன் இம்முருகப் பெருமான் பிரார்த்தனை நூலைப் பாராயணஞ் செய்து, முருகபக்தியை வளர்த்து, அவனருளாலே சொரூப நிலையை உணர்ந்து, அகம்புறமற்ற முடிவிலாப் பேரின்பந் துய்ப்போமாக! வாழ்க வாழ்க! இனிது வாழ்க சீரடி ரெல்லாம் !
பொன். அ. கனகசபை,
" தமிழகம்",
புங்குடுதீவு, 27-3-1979,
ஆருெத் திலங்கு சமயங்கள் ஆறுக்கும் ஆழ்கடலாய் வீறிப் பரந்த பரமான ஆனந்த வெள்ளமொன்று தேறித் தெளிந்து நிலைபெற்ற மாதவர் சித்தத்திலே ஊறிப் பரந்தண்ட கோடியெல் லாம்நின் றுலாவியதே,
(தாயுமான சுவாமிகள்)
 

6சிவமயம்
முருகப்பெருமான் பிரார்த்தனை
விநாயக வணக்கம்
*a-wajowa Shas------
ஓங்கும் பெருவெளியாய் ஒங்காரத் துட்பொருளாய்த் தேங்கும் விநாயகனே சீரருளைப் - பாங்குறவே பெற்று முருகப் பெருமான் புகழ்பாட உற்றுநீ காப்பாய் உவந்து
சற்குரு வணக்கம்
அழியா வவித்தை யழிந்தொழிய ஞான
விழியா லெரிக்கும் விமலன் - மொழியதனை நெஞ்சே நினைந்துருக நீங்காக் குருபரன்றன் கஞ்சமலர்த் தாளே கதி.
குறிப்பு : همه
அழியா அவித்தை - (ஞானத்தாலன்றி வேறென்றற்) கெடாதி அஞ்ஞானம். ஞான விழி - ஞானக்கண் (மெய்யுணர்வு). விமலன் - மூன்றுமலமும் இல்லாதவன் (நிர்மலன்). மொழியதன - அஞ்ஞானத்தை நீக்கும் மெய்ஞ்ஞான உபதே சத்தை. கஞ்சமலர்த்தாள் - தாமரைமலர் போன்ற திருவடி
உபாசனமூர்த்தி வணக்கம்
ஒருமொழிக்க னற்ற பயனறியே னுண்மை தருநெறியுந் தானறியேன் தான்நேர் - திருமுருகா முன்னே யருணகிரி முத்தர்க் கருள்புரிந்தாய் இன்னே யருளா யெமக்கு.

Page 5
i. 2 -
குறிப்பு:
ஒருமொழி - மலத்தை யொழிக்கும் ஞானசற்குருவின் மோன மொழி. பயன் - பிரயோசனம் (மோட்சம்). m உண்மைதருநெறி - ஞானத்தைக் கொடுக்கக்கூடிய சன்மார்க்க வழி. முன்னே - முற்காலத்திலே. இன்னே - இப்பொழுதே. அருணகிரி-அருணகிரிநாதர். இவர் பதினருவது நூற்றண்டிலே திருவண்ணுமலையில் வீற்றிருந்த ஒப்பற்ற சிவஞானி. முருகப் பெருமானின் கிருபையாற் சிவானுபூதி பெற்றுக் கந்தரலங்காரம் கந்தரனுபூதி, திருப்புகழ் பதினருயிரம், திருவகுப்பு, கந்தரந்தாதி, வேல் விருத்தம் முதலிய நூல்களைப் பாடியருளினர். சந்தக்கவி பாடுவதில் மிகவுஞ் சிறந்தவர். . . w முத்தர் - சீவன்முத்தர், உயிருடன் இருக்கும் பொழுதே விடுதலை (முத்திநிலை) யை யடைந்தவர். அஃதாவது தேகாதிப் பிரபஞ்சந் தோன்றிக் கொண்டிருக்கும் பொழுதே அகண்டத்தில் மனங் கரைந்து தன்னைச் சிவசொரூபமாகக் கண்டு கொண்டிருக்கும் நிலையை யடைந்தவர்.
பிரார்த்தனை
முருகா முதல்வா வெனையாளு முத்தா தரமேது மில்லாத் தமியேன் - வருதுயரந் தீர்த்தருள வேண்டுந் திருநோக்கா லெந்நாளும் பார்த்தருள வேண்டும் பரிந்து. Ο (1) .
குறிப்பு
தரம் - தகுதி; மேன்மை. தமியேன் - தனித்தவன்; உதவி யில்லாத வறியவன். பரிந்து - இரங்கி. w
நின்னருள் வேண்டும் நிலைகண்டு வாழ்வதற்குப் பின்னமுண்டோ எங்கள் பெருமானே-நின்னருட்சீர் இல்லையேல் ஏழைக் கிரங்குவா ரார்முருகா வல்லை துயரகற்ற வா. (2)
குறிப்பு: 8
நிலை - நன்னிலை; அத்வைத நிலை. வல்லை - விரைந்து; gai Sprth.
தடையாவும் நீக்கியெனைத் தாங்கியரு TrrGu T படைவீடு கொண்ட பரனே - விடையேதுங் கண்டிலேன் நின்றன் கனிவாய் யமுதமொழி அண்டர் பிரானே யருள். w (3)

குறிப்பு: ངེ;་་་་་་་་་་་་་་་་་་་
தடை-மூன்று தடை; அவையாவுஞ்அஞ்ஞானம்,சந்தேகம், விபரீதம் ஆகிய மூன்றும். படைவீடு - ஆறு படைவீடு. அவையாவன (1) திருப்பரங்குன்றம், (2) திருவேரகம் (சுவாமி மல்) (4) திருவாவினன்குடி (பழனி) (5) குன்று தோருடல், (6) பழமுதிர் சோலை என்னும் ஆறு ஸ்தலங்கள். அண்டர் - வானுேர்; தேவர்கள்,
இன்னும் ஒழியவில்லை யென்மயக்க மெந்தையே பின்னை ஒழிப்பாரார் பெம்மானே-மென்மேலும்
நின்னையே நித்தம் நினைந்துருகி நிற்பதல்லா ற் பின்னைத் துணையுண்டோ பேசு. (4).
என்ன விளங்கு மெளியேன் தனக்கிங்கு நின்னருள் இல்லாக்கால் நிர்மலனே -என்னகத்தில் ஐயந் தவிர்த்தாள்வாய் ஆனந்த வாரியுற
துய்யனே நீயே துணை. (5)
குறிப்பு !
நிர்மலன் - நின்மலன்; மூன்று மலமும் இல்லாதவன் (கடவுள்). ஆனந்தவாரி - இன்பக்கடல்,
குற்றம் பலவுடையேன் கூறுகுணஞ் சற்றுமிலேன் எற்ருற் பிழைத்திடுவேன் எங்கோவே - சற்றிரங்கிக் கண்ணருளாய் வானிற் கரைந்துமணம் இன்புருவாய்
விண்ணருவி தோய விழைந்து. (6)
குறிப்பு:
கூறுகுணம் - சான்றேரால் சிறந்ததாகச் சொல்லப்படுஞ் சாத்துவீகக் குணங்கள் (அருள், ஐம்பொறியடக்கல், ஞானம், தவம், பொறை, மேன்மை, வாய்மை, மெளனம் முதலியன). கண் - ஞானக்கண் (மெய்யுணர்வு). விண்ணருவி - அகண்டத்தில் மனங்கரைதலால் ஏற்படும் இன்பவெள்ளம்,
அன்பும் அறியேன் அருட்டாகந் தானறியேன் வன்பிறவி வாதனையால் வாடுகின்றேன் - என்குருவே துன்பகலத் தூங்காத தூக்கமது நான்தூங்க நன்கருளிச் செய்வாய் நயந்து. (7)

Page 6
குறிப்பு
தாங்காத தூக்கம் - (அல்லும் பகலும்) அருளுடன் தூங்குதல். بر தேகாதி நாட்டஞ் சிதைந்து திருவருளால் மோகாதி யல்லலறு மோனநிலை - தாகமறக் காண்பனே கந்தா கடம்பா கருதியென யாண்ட குருவே யருள். - (8)
இன்புருவாய் நின்ருெளிரும் ஏகபரி பூரணத்தை நன்குறநான் காண்பதென்று நாயகனே - துன்பகலத் தேவர் பயந்தீர்த்த தெய்வமே தெள்ளமுதே ஆவலைத் தீர்த்தாள் அமர்ந்து. (9)
ஆவலோ மிக்க வதிகம் அநுபூதி மேவயான் சீராக மென்மேலும் - பாவலர்கள் போற்றும் பதியே புகலிடமே பூரணமே ஏற்றரு ளென் சொல் லிசைந்து. W (10)
குறிப்பு:
புகலிடம் - தஞ்சம்; அடைக்கலம்; புகுமிடம்.
வாழ்வனைத்துந் தந்துதவும் வள்ளலே வாழ்முதலே பாழ்கடந்த பூரணத்திற் பண்பாய்நான்-வாழ்ந்திருக்க நோயால் மிகவாடி நொந்து மெலியாமல் தாயாகிப் பேரருளைத் தா. (11) குறிப்பு :
வள்ளல் - வரையாது கொடுப்போன். பாழ் - சீவப்பாழ்.
பெரியோர் தரமறியேன் பெம்மானே நின்றன் அரியநிலை எங்ங்ண் அறிவேன் - தெரிவரிய தெய்வமே சற்றுந் திகையாமல் தேற்றிவை உய்யவே தற்பதத்தை யுற்று. (12) குறிப்பு: ر
தற்பதம் (தத்பதம்) - ஏகபரிபூரணமாய் விளங்குஞ் சிவ சொரூபம்.

- 5 - துய்யனே நீயே துணையெனவுந் தீதகல ஐயநீ வைத்த அடிமலரை - மெய்யெனவும் இன்புறுவ ரன்புடையோர் எந்நாளும் வேருனேர் துன்புறுவர் தொல்லுலகிற் ருேய்ந்து. (13)
என்ற னிடர்களைய யாருமிலை யிவ்வுலகில் உன்றன்னை ஓயாதே உன்னுவன்யான்-அன்னையே சும்மா விருந்து சுகம்பொருந்து மோனநிலை இம்மையிலே தந்தாள் இசைந்து. (14) .
குறிப்பு :
இம்மையிலே - இப்பிறப்பிலே.
அல்ல லொழிய அருட்டாகந் தானுெழியத் தொல்லிருளுந் தோன்ரு தொழியவே-எல்லையிலா இன்பநிலை தேக்கியிடும் ஏகாந்தத் தேயிருக்க அன்புருவாந் தேவே யருள். (15)
குறிப்பு :
தேக்குதல் - நிறைதல். மன்னுசிவ மைந்தச மயக்கொழித்து வாழ்வருள உன்னைவிட உற்றதுணை உண்டுகொலோ-இன்னமுதந் தான்தேக்கித் தாக்கற் றிருக்கத் தயைசெய்வாய் வான்கருணை வள்ளலே வந்து. (16)
வான்கருணை வள்ளலே வாழ்முதலே யென்னகத்தில் தேன்சுரந் தூறத் திகைப்பொழிப்பாய்-ஊன்பொதிந்த பொய்யுடலம் வீழுமுன்னே போதபரி பூரணத்தை எய்த அருளாய் இனி. . (17)
தந்ததெல்லாம் நன்றே தனிவெளியைத் தான்காட்டாய் வெந்துயரம் வேரற்று வீழவே-சந்ததமும் தாஞன தன்மையினைத் தந்தருளாய் வீடுறவே ஞான கரனே நயந்து. − (18)
குறிப்பு :
ஆகரம் - உறைவிடம். ஞானகரன் (ஞான+ஆகரன்) - மெய்ஞ்ஞானத்திற்கு உறைவிடமாயிருப்பவன்.

Page 7
- 6 -
கண்கண்ட தெய்வமே காருண்ய மூர்த்தியே பண்டைமயல் போயொழியப் பார்த்தருள்வாய்-தண்ணிறைத்த நின்னன்பே வேண்டும் நிலையாக வென்னகத்தில் மன்னுசுக வாரியாய் வந்து. (19) குறிப்பு 1 *ご
மயல் -- மயக்கம் (அஞ்ஞானம்). தண் - குளிர்ச்சி.
மன்னு சுகவாரி - நிலைபெற்ற இன்பக்கடல்.
சிந்தனைக் கெட்டாச் சிவஞான தேசிகனே கந்தா கடம்பா கலிவரதா - எந்தையே பேருக நிர்விகற்பப் பேறதனைத் தந்தாள்வாய் மாருக் கருணையுடன் வந்து. (20) குறிப்பு :
சிவஞான தேசிகன் --சிவஞானத்தைப் போதிக்கும் ஆசிரியன்.
நீயே துணையென்று நீக்கமறக் காண்பேனே தாயான தத்துவனே தற்பரனே - நாயேன்றன் கள்ளமனம் விண்ணிற் கரைந்துவினைக் கட்டறவே உள்ளதனைக் காண வுணர்த்து (21) ருறிப்பு : V
வினைக்கட்டு - சஞ்சிதவினையின் கட்டு (பந்தம்).
அற்ருர் அவாவற்ருர் அன்னவரே நின்னருளை யுற்றுணர்வார் பேறதனை உண்ணிறையப்-பெற்றிடுவார் நேசா முருகா நிலையாகத் தந்தாள்வாய் பேசா வநுபூதிப் பேறு. (22)
புன்செய லற்ற புலனெடுக்கம் பெற்றக்கால் தன்செய லற்ற தவமாகும்-மென்மேலும் ஆன்மநிலை தேர்ந்தே அருளாகில் இன்பநிலை தோன்றுந் துகளறவே தோய்ந்து (23)
குறிப்பு :
புன்செயல் - தீய செயல்: பழிப்புக்குரிய ஒழுக்கம். Hலன் - ஐம்புலன் (சத்த பரிச ரூப ரச கந்தம்). புலனெடுக்கம் - ஐம்புலன்களும் அந்தர் முகமாக ஒடுங்குதல். புலனெடுக்க மென்னும் போது அதன் இனமாகிய ஐம்பொறிகளையும் மனதையும் சேர்த்துக்கொள்க. தேர்தல் - தெளிதல். ஆன்மநிலை தேர்ந்தே ட ஆன்மாவின் நிஜசொரூபத்தை அநுபவத்தில் அறிந்தே,

சுட்டற்ற பூரணத்தைச் சுட்டா தியான்பார்த்து மட்டற்ற ஆனந்தம் வாய்மடுத்துக்-கட்டறவே போதபரி. பூரணமும் புந்தியுற மெய்ஞ்ஞான நாதநனி நல்காய் நயந்து. (24)
குறிப்பு : W - * شهر -بیه میدهد ه ش با
மட்டற்ற - எல்லையில்லாத, கட்டறல் - பந்தம் நீங்குதல்.
ஐய மொழிய அருள்வெளியில் மன்னிமிகத் துய்யநிலை தோன்றத் துயரொழிய-ஐயநின் ஆனந்த வாரிதனில் ஆழ்ந்தக்காற் பேசாத மோனமன்றி யுண்டோ முடிவு. (25) குறிப்பு :
மன்னுதல் - சேர்தல்; நிலைபெறுதல்; தங்குதல். துய்யநிலைபரிசுத்தமான நிலை.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
சாதனையின் மர்மமதை யறிந்திலேன்
சான்ருேர்தம் மோன மொழி தன்னையும் வாதனை மாளயான் தேர்ந்திலேன்
மாதவர்தம் மயலொழிக்கும் மாநிதியே சோதனையோ அஃதுந் தெரிந்திலேன்
தோன்றத் துணையே சோதியே பேதமறப் புந்திநிலை பேசாத
அநுபூதிப் பெருவாழ்வை அருள்வாயே. . குறிப்பு : e
மர்மம் ட இரகசியம். வாதனை ட வாசனை: வாசனமூவ? படும்; அவையாவன தேகவாசனை, பிரபஞ்ச வாசனை, சாஸ்திர வாசனை. அல்லும் பகலும் அருளுடன் தூங்கினல் மூ?* வாசனையுங் கெட்டுப் பரமானந்த நிலை உதயமாகும்,
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
(26)
பத்தியால் நின்றனைப் பாடித் துதிக்கவும்
பாழான வென்மனம் பரவச மாகவும் முத்தர்மேல் அன்புளம் மோகித்து நிற்கவும்
மூவாசை தேய்ந்து பின் முளையா தொழியவுஞ் சித்தந் தெளிந்துநற் சின்மயந் தோன்றவுஞ்
சிற்சுகா னந்தஞ் சீருடன் பெருகவும் அத்துவித வானந்த'அநுபூதி வாய்க்கவும் -.م அருள்வேண்டும் ஐயனே ஆனந்த வரசே (27)

Page 8
குறிப்பு :
சின்மயம் - ஞானமயம்; அனைத்துஞ் சுயம்பிரகாசமாக
ஆரறிவார் நின்பெருமை ஆனந்த முருகா
அருட்சோதிப் பிழம்பான ஆதிபர வடிவே பேரறிவாய் நின்றுனது பேசரிய அநுபூதிப்
பேறதனைப் பெற்றுய்ந்தா ரெங்கோன் அருணகிரி சீரறியாச் சிறியேனுன் நொந்துதிகைக் கின்றேன்
திகையாத் திறந்தந்தென் மயல்தீர அருள்வாய் நேரறிய நின்றென்னைத் தேற்றிவை நிமலா
நீங்காத நிலைபெற்று நித்தமும் வாழவே. (28)
அந்நாள் ஐயன் அருணகிரிக் கிரங்கியைய மறவே பேசா. வநுபூதி யளித்தசேயே செந்தூர் முருகா சிவகுமரா கலிவரதா
தீது வாரா தெமைநாளுங் காத்தருள்வாய் மைந்தா வுருகி மனங்கரைந்து பரவெளியில்
மன்னி யொன்ருய் மகிழவுளஞ் செறிந்திடுவாய் தொந்தங் கடந்த துரியமேயத் துரியநிறை
சோதியே சுடரே சுகவாரி யடிபோற்றி. (29) குறிப்பு : Α தொந்தம்-தொடர்பு; சம்பந்தம். அடிபோற்றி-திருவடி போற்றி.
அன்புடையாய் இருளகற்றும் அருளுடையாய் உனை நினைந்தே
அகமுருகும் அடியவர்தம் அயர்வகற்றுஞ் செயலுடையாய் - அன்பிலனுய் அடியடைந்தேன் அகநெகிழப் பகலிரவாய் ஆனந்தந் தழைத்தோங்க அருள்தருவாய் அகலாது என்னகத்தில் இன்புருவாய் இலங்கிடுவாய் யான்சும்மா
விருக்கின்ற நெறியதனை இயைவுறவே உணர்த்திடுவாய் மன்னுதவக் கொழுந்தாக மாதவத்தோர் பணிந்தேத்தும் v
மறைஞான தேசிகனே மாமணிநின் னடிபோற்றி. (30)

- 9 -
சிவனடியாருக்குச் செய்யுந் தொண்டின் சிறப்பு
9ylglu Imrti தொண்டே அருவினை தேய்த்திடும் அடியார் தொண்டே அரும்பக்தி வளர்த்திடும் அடியார் தொண்டே அருள்ஞானம் நல்கிடும் அடியர்ர் தொண்டே அளிக்கும் அருள்வீடே. (31)
அருவினை தேய்ந்திட அகநாட்டம் அரும்பிடும் அரும்பக்தி வளர்ந்திட அகவொளி மின்னிடும் அருள்ஞானம் ஓங்கிட ஆனந்தம் விளைந்திடும் அருள்வீ டுற்றிடில் அகன்றது பிறப்பே. (32)
முருகப் பெருமான் பிரார்த்தனை முற்றிற்று

Page 9
- 10 -
6)- சிவமயம்
பக்தியின் முதிர்ச்சியால் அந்தக்கரண சுத்தி யேற் பட்டு ஞானசாதனை மூலம் தத்துவ ஞானத்தையடைய விரும்பும் அன்பர்களுக்குச் சகாயமாகும் நோக்கத்துடன் பின்வரும் பாக்கள் h
ஈசூர்-பூரீ சச்சிதானந்த சுவாமிகளால்
அருளிச் செய்யப்பட்ட பலநூல்களிலிருந்து தெரிவு செய்யப்பெற்றன.
வஸ்து நிச்சயமும் அநுபூதி நிலையும்
கட்டளைக் கலித்துறை
உள்ளும் புறம்பு மொழியா
வெளியன்றி யொன்றுமிலை உள்ளும் புறம்பெனச் சொல்லாத
தெப்பொரு ளொன்றுமிலை உள்ளும் புறம்பெனச் சொல்லல் வெளிபற்றி யோர்ந்திலமோ உள்ளும் புறம்பும் வெளிநாட்டங்
கொண்டுய்ம்மி னுத்தமரே. (1)
குறிப்பு: எப்பொருளையும் ஆராய்ந்துபார்த்தால் முடி வில் லா ஆகாயமே உள்ளும் புறம்பும் இருக்கிறது. நாமரூபம் எல்லாவற் றிற்கும் ஆதாரம் ஆகாயமே. நாமரூபம் ஆதேயமெனப்படும். ஆகாயத்தைச் சுட்டாது பார்க்கும் பார்வையால் ஆதேயமான நாமரூபம் மறைந்து ஆகாயஞ் சுயஞ்சோதியாகப் பிரகாசிக்கும்" இச்சுயஞ் சோதியே சுத்தவறிவென்று சொல்லுவார்கள்.

- l l -
நேரிசை வெண்பா
வெளிமயமா முட்புறம்பை வேருகக் காணில் வெளிமயக்கே யன்றியிலை வேறே - வெளிமயமும் இல்லை யறிவன்றி யீங்கிரண்டாக் காட்டவலார் இல்லையா னமென் றிரு. (2)
குறிப்பு: அணுமுதல் மகத்திருகக் காணப்படுவன அனைத்தும் எங்ங்ணம் வெளியையன்றி வேருக வில்லையோ, அங்ங்ணமே அறிவையன்றி வெளியும் வேருகவில்லை எனப்பட்டது.
வெளியையே அகத்திலும் புறத்திலும் நீக்கமறப்பெற்றுள்ள அனத்தையும் அவ்வெளிக்கன்னியமாகக் காணில் அவை வெளி. யையன்றித் தாமொரு முதலாகாமையால் உருவெளித்தோற்றம் போல்வதேயன்றி யதார்த்தம் ஆகாவாம். அதுபோல அந்த வெளிமயமும் அறிவையன்றி வேருெரு முதலாகாமையானும், அதனை முதலாக்கிய அறிவு இது, வெளி இதுவென இரண்டாகக் காட்டிக் கூறவல்லார் இல்லாமையானும் வேருக வில்லவேயில்லை. இஃதன்றியும் நாமோ உணர்வு வடிவாகையால் நம்மையன்றி அறிவுவேருெரு முதலாகாது. முதலாகாமையான் நம்மை அறிவே வடிவாகக் கண்டு அந்நிலையில் நிற்றி.
இதனல் உருவாய் அருவாய் உருவருவாய் நின்றும் நில்லாதது
அறிவெனவும், அவ்வறிவே வடிவாய் அவ்வவ் வவத்தைக்கண்
நின்று சுகதுக்கங்களைக் கண்டனுபவிப்பது நாமாகையால் நாமும் அறிவெனவுங் கண்டிருக்க வேண்டுமென்பது கருத்து,
வெளியொளிய தாகி வெறுந்தெரிவாய் நிற்குந் தெளிவே யறிவென்னத் தேர்தற் - கொளிவிழியென் ருiர்வள் ஞவரு மறிந்ததற்கு மாருகப் பார்ப்பார்க்கிங் கேன்வாய் பகர். " . (3)
குறிப்பு: வியாபக விளக்கமாகியும், வெறுந் தெரிவு மயமாகியும் இருக்கின்ற களங்கரகிதமான சுத்த சைதன்னியமே அறிவென்று யாவருங்கண்டு தெளிதற்குத் தெய்வப்புலமைத் திருவள்ளுவருஞ் சிற்பிரகாசமே கண்ணுமெனக் கூறினர். அய்ங்ணம் கூறியதை வாசித்துணர்ந்தும் அதற்கு மாரு க ரூபமாகவேனும் அரூபமாக வேனும் அதனைப் பாவித்துப்பார்க்கும் அவிவேகிகட்கு இங்கறிந் காற்போற் பேசும் வாயேன் ? நீயிதனைச் சொல்லுதி.

Page 10
a- 12 -
வெறுஞ் சொல்லாற் பயனின்றென்பார் மாருகப் பார்ப்பார்க்கு இங்கு ஏன் வாய் என்ருர், ப்ரக்ஞா சொரூபமே சைதன் னியமென்பது தோன்ற வெளியொளியதாகி வெறுந்தெரிவாய் நிற்குந் தெரிவே அறிவெனப்பட்டது.
வெளிமகத்தைக் கண்டுநிற்கில் வேறெங்கே ஞானம் வெளிமகத்தைக் கண்டுநிற்கில் வேறே - தெளிதில் மனநசிக்கக் கற்பதிது மற்றவைகள் ஆமோ
மனிதர்காள் என்னே வகை. (4)
குறிப்பு: மகத்தாகிய ஆகாயத்தில் உள்ளம் கரையில் ஞானப்பிரகாசம் உதயமாகும். மனேநாசம் உண்டாவதற்கு இதுவே இலகுவான சாதனையாகும்.
நினைவெழுதல் எங்கே நினைவொடுங்கல் எங்கே அனையவிடந் தேடாதிங் கந்தோ-தனையடியார் போனடித்துக் காட்டிப் புதுமைசெயின் நிற்குமோ மானதத்தின் சற்றே வகை. (5)
குறிப்பு: மான தம்-மனம்; நினைவு. நினைவினது உதயத்துக்கும் ஒடுக்கத்திற்கும் இடம் ஆன்மாவின் நிஜசொரூபம். ஆன்மாவின் நிஜசொரூபத்தை அநுபவத்தில் உணராவிடத்து மனதினது சேட்டைகள் நீங்காதென்க.
வெற்ற வெளியன்றி வேருென்றிங் காயிலிலை வெற்றவெளி நாட்டமதில் வேருகா - துற்றுணர்ந்து தீர்ப்பதுவே தீர்ப்பா ந் திரிபாகு மேனையவை தீர்ப்பெனின் மேலோந் திகைத்து. (6)
குறிப்பு : வெற்றவெளி - சிதாகாசம் ( ஞானகாசம்). ஆயில் - ஆராய் க் து பார்க்குமிடத்து. வெற்றவெளிநாட்டமதில் வேரு
காது-அன்னிமா கத்தோன்றும் காமரூப மனைத்தும் மனம் ஏகவெளி யில் கரைவதினல் சிதாகாச மயமாகவே விளங்கும். திரிபு - வேறுபாடு, விபரீதம்

سر -- 13 سے
வேற்றுருவ மெல்லாம் வெளியதனிற் கற்பிதமே வேற்றுருவ நோக்கால் விபரீதம் - நீத்து வெளிநாட்ட மாகில் விபரீத மின்றி எளிதிற் சுகநிலையா மிங்கு. (7)
குறிப்பு: வேற்றுருவமெல்லாம் - (வெளியில் தோன்றும்) காமரு மனத்தும் வேற்று ரு வ நோக்கால் வீபரீதம் - நாமரூபத்தைப் பொருளெனச் சுட்டிப்பார்க்குமிடத்து விளைவது விபரீத வுணர்வு. ஒன்றை மற்ருென்ருக நினைப்பது விபரீதம்; அதாவது பொருளல்ல வற்றைப் பொருளாகக் கொள்ளும் நினைவு; கட்டையைக் கள்வனென நினைத்தல் போன்றது. W
வெளிநாட்டஞ் சிந்தனையு மீக்கொள்ளக் கொள்ள வெளியுருவாஞ் சிந்தனையு மீளா - தொளிமயமாய் நின்றுசிதா நந்தமதாய் நீங்காச் சுபாவமதாம் என்றுஞ் சிவோக மிது. (8)
குறிப்பு: மீக்கொள்ளக் கொள்ள - மேலோங்க மேலோங்க. சிதா கந்தம் (சித்+ஆநந்தம்)-ஞானனந்தம்; சுபாவம்-தனது நிஜவடிவம். சிவோகம் (சிவ8+அகம்) - ஒவோகபாவனை; அதாவது எங்கும் நிறைந்திருக்கும் ஞானகாசமே நான் என்னும் பாவனை.
வெளியுலகாக் காணின் வெளியிருளாத் தோன்றும் வெளியை வெளியாக மெய்யாத் - தெளிந்துணர்ந்து காணிற் சதாகாலங் காணு திருளெங்குங் காணுஞ் சுயஞ்சோதி காண். (9)
இதுவேநஞ் சொந்தவுரு வீதன்றிக் காணேம் இதுவே சுருதியுத்திக் கேற்றல் - புதியதல என்றும் பழமையதே யீதாக நீபழகில் என்றுங் கவலை யிலை. (10)
உயிர்சுயஞ் சோதியென வுண்மையாக் snr 60of6iiiiT மயலனைத்து மக்கணமே மாயுங்-பயகம்ப ணுதியிலை யென்சொல்வ ஞனந்தப் பேறதனை யாதியந்த மற்றநிலை யால். (11)
குறிப்பு: ஆன்மாவைச் சுயஞ்சோதியென அநுபவத்தில் உணரில் மயக்கமனைத்தும் நீங்கும். பயகம்பன்-பயமும் நடுக்கமும்.

Page 11
- 14 -
பந்தமுத்திக் கேது பகரசுத்த சுத்தகுணம் சந்ததமு நிற்குமிடஞ் சைதன்யம் - இந்தவறி வல்லா வுயிரிலையா லாயாது நிற்பதெவன் வல்லா யிதிலென் மயல், (12)
குறிப்பு: பந்தத்துக்குக் காரணம் அசுத்த குணம். முத்திக்குக் காரணம் சுத்தகுணம். இவ்விருவகைக் குணத்திற்கும் ஆதாரமாய் விளங்குவது சைதன்யம்: சைதன்யமென்பது அறிவு. எல்லா உயிர்களினது நிஜசொரூபம் அறிவாகிய ஞானகாசம். ஆதலால் அறிவு எத்ததையதென்று தீரவிசாரியாது அவ்வறிவில் ஸ்திரமாக விற்பது எங்ங்ணம் அமையும்? அமையாதென்க.
உடலிலக்கு மூன்று மொருங்கே யொழிக்கத் திடவுணர்வு தானே திகழும் - இடமில்லை ஐயமுறற் காதலின லாய்ந்துணர்ந்து நிற்றியேல் டைய வகலும் பயம், (13)
குறிப்பு: உடலிலக்கு மூன்றும் ஒருங்கே ஒழிக்க-தூலம், சூக்குமம், காரணம் ஆகிய மூன்று தேகங்களையும் பொருளாகக்கொண்ட அபிமானத்தை நேதிசெய்து முற்ருக நீக்க. திடவுணர்வு - அஞ் ஞானம், சந்தேகம், விபரீதம் மூன்றும் நீங்கிய ஆன்மாவின் நிஜ சொரூபம். தானே திகழும்-தானகவே பிரகாசிக்கும்.
சிதம்பரமே சீவன் சிதம்பரமே யீசன் சிதம்ட்ரமே யெவ்வுலகந் தேரில் - சிதம்பரமோ சிற்சோதி வெற்றவெளி தீர்வையிதி லையமிலை கற்பிதமே மாமுக்கில் காண். (14)
குறிப்பு: சிதம்பரம்-சிதாகாசம் (ஞானகாசம்). சிற்சோதி-ஞானப் பிரகாசம். தேரில் - சாதனைசெய்து தெளிந்தவிடந்து. தேரில் சிதம்பரமே சீவன், தேரில் சிதம்பரமே ஈசன் எனக்கூட்டுக.
அண்டபிண்டம் யாவு மறிவாக் கரைதலினல் அண்ட பிண்டம் யாவு மறிவுருவே - அண்டபிண்டம் ஆவதுவே பந்த மழிவதுவே முத்திநெறி ஆவதழி வல்ல வறிவு. (15)

- 15 -
குறிப்பு: அண்டம்-உலகம். பிண்டம்-தேகம், மனம் அகண்ட வெளியில் கரைவதால் அண்டபிண்டம் யாவும் அறிவுமயமாகச் சாதகனுக்கு விளங்கும். ஆவதழிவல்ல அறிவு-அறிவு ஒருகாலத் தில் உண்டானதுமல்ல, ஒருகாலத்தில் அழிவதுவுமல்ல.
ஆனதொன்று மில்லை யழிந்ததொன்று மில்லையெனத் தானுணர்காட் சித்தெளிவே தாணுகும் - ஈனமுரு தென்று மொருபடித்தா மிவ்வறிவே நாணுகில் அன்றின்ப பேத மறும். (16)
சகமாதி யுண்டென்று சாற்றலு நாமே இகழ்தலு நாமே யிலையென் - றகமலவே மூடந் தெளிவளவே முன்பின் னிலையிரண்டும் நாடறிவை நானென்ன னன்கு. (17)
குறிப்பு: சகமாதி-சகசிவபரம்.
அல்லவற்றை நானெனலும் அன்றெனலும் அவ்வறிவே அல்லவே யுண்மையிவை ஆரோபம் - மெல்ல அறிவுருவைக் கண்டிங் கதுவாகி லின்பம் பிறிதாகா யென்றும் பிறழ்ந்து. (18)
குறிப்பு: ஆரோபம்-கற்பிதம்,
அறிவாஞ் சுயஞ்சோதி யன்னியம்போற் ற்ேன்றி அறிவை மறைத்தகலு மன்றிப் - பிறிதன்றே அன்னியமாக் காண்பவெலா மையோ வெறுந்துயரே எந்நிலையாற் றுய்த்திடினு மிங்கு. (19)
குறிப்பு: துய்த்திடல்-அநுபவித்தல்.
உயிருருவா நிற்கி லுலகுருவாத் தோன்றும் உயிரருவா நிற்கிலதா வொன்றும் - வியனுலகும் சிற்சொருப மாநிற்கிற் சிற்சொருப மாவிளங்கும் தற்சொருப பேதமதாற் ருன். (20)
குறிப்பு: உயிர் சிற்சொருபமா நிற்கில் வியனுலகும் சிற்சொரு
பமா விளங்கும் எனக்கூட்டுக.

Page 12
- 16 -
உருவமெலா முற்றுணரி லோயா வெளியாம் அருவாம் வெளியி லழுந்தித் - திரிபின்றி ஆயுங்காற் சங்கற்ப மன்றி யிலையதனை ஆயுங்கால் மெய்யுணர்வே யாம். (21)
(3) (մlւնւյ: ஓயாவெளியாம்-முடிவில்லாத -gas reructub. Siu-69ufastb.
மெய்யுணர்வை யுற்றுணரில் மேல்கீழொப் பின்றியே ஐயந் திரிபின் றகன்ருெளிரும் - பையப் பழகப் பழகப் பறக்குந் துயர்கள் பழயபற் ருேடே பணிந்து. (22)
நானெனற்கு மெய்வடிவம் ஞானமே வேறில்லை ஏனையவை பொய்வடிவ மீங்கழியும் -- ஞானமதைக் கண்டதுவா நின்றக்காற் காணுமோ சாவச்சம் பண்டுருத்தா ஞகியதாற் பண்பு. (23)
அறிவின்ப மாயி னயலின்ப மாக அறிவே னலைவதெனி னந்தோ - பிறிதாகத் தன்னை யறிவதினற் முனறிவ தாவிளங்கிற் பின்னசுகம் வேருே பிழை. (24)
குறிப்பு: அறிவுசொரூபம் இன்பமயமென்னில், தானல்லாத தேகா திதத்துவங்களை இன்பமாகக்கண்டு அறிவு எதற்காக அலைகிறது ? அறிவு தனது நிஜ சொரூபத்தை மறந்த மறதியினல் அன்னியத்தைத் தானென அபிமானித்து, அன்னியத்தில் இ ன் பம் இருப்பதாக எண்ணி அ லை கி ன் றது. ஞான ச ற்கு ரு வின் கிருபையால் தனது நிஜவடிவை உணர்ந்து தன்னை இன்பவடிவாகக் கண்டு விளங்கினல் சுகசொரூபம் தானும் அறிவைவிட்டு வேருே?, அறிவே ஆனந்தம்; ஆனந்தமே அறிவு. இரண்டும் அபேதமெனச் சாதனை மூலம் உணர்வதுவே அநுபூதி.
நாமே யறிவாகி ஞஞ்சச்சி தானந்தம் நாமே யசத்தாதி நாமயங்கில் - நாமாரென் றுன்னும் விசார மொழியாது நிற்றியேல் தன்னந் தனியாவை தான். (25)

- 17 -
குறிப்பு: அசத்தாதி-அசத்து, சடம், துக்கம், கண்டம், அகித்தம் முதலியன. நாமயங்கில் நாமே அசத்தாதி எனக் கூட்டுக,
தன்னை யயலாக்கித் தான்காண்டல் தன்னுலே தன்னைத்தா னுள்ளபடி தான்காண்டல்-தன்னதன்ருே சித்துருவந் தானே சிறிதுமிதி லையமிலை எத்தடையு மில்லாம லே. (26)
அந்தர்முக நாட்டத் தறிவகண்ட மாவிளங்கும் வந்த வுடலளவா மற்றையர்க்குச் - சந்ததமுந் தேசபரிச் சேதமிலை சிந்திக்கி லில்வறிவுக் கTசடைவர் ஏலாத வார். w (27)
குறிப்பு: அக்தர்-உள். அந்தர்முக நாட்டம் - உள்ளுணர்வைப் பார்க்கும் பார்வை. அறிவு அகண்டமாவிளங்கும்-அறிவு ஏகவெளி யாகப் பிரகாசிக்கும். வந்தவுடலளவா மற்றையர்க்கு - அக் த ர் முகநாட்ட மில்லாது பகிர்முககாட்டத்தில் இருப்பவர்களுக்கு அறிவு எடுத்த தேக அளவாகத்தோன்றும்.
சுகவடிவ மெல்லாஞ் சுகசா தனங்காண் சுகவடிவஞ் சித்தே சுயம்பிங் - ககமமதை யற்றறிவா னுருக் கறிவே சுகபோகம் மற்றையருக் கேதிவ் வகை. (28)
குறிப்பு: சுகவடிவமெல்லாம் - முன்னிலையரிகத்தோன்றும் இன்ப வடிவமெல்லாம். சுகசாதனம் - விடய இன்பத்தை விளக்கும் கருவிகள். சுக வடிவம் சித்தே சுயம்பிங்கு- முன்னிலையாவுமற்று இன்பவடிவமாக விருப்பது அறிவு சொரூபமே.
அறிவே சுகசொருப மன்னியமொன் றுண்டேல் அறிவன்றி யுண்டென்ன லாகும் - நெறிமுறையில் ஆயுங்கா வில்லையதா லாநந்த மேயறிவாந் • தூயநிலை யீதே துணிவு. (29)

Page 13
- 18 -
நானுவ தேதென்று நாடுங்காற் சிற்சோதி ஆணு வமிர்தால் அதுநானும் - ஆனற்போல் நானதுவா மென்னுநிலை நண்ணிற் பிரமமதாம் ஆனதுவே முத்தியென்ப தாம். (3C
குறிப்பு: அது நான் என்னும் அநுபவBலை வாய்க்கிற். பிரஹ். மாவதன்று; நான் அது என்னும் அநுபவதிலையும் வாய்க்க வேண்( மெனக் கூறப்பட்டது.
யானெனப்படுவதியாது பொருளென நிட்டையிற் சிந்திக்குமிடத்து உதயமாவது சிற்பிரகாசமாகிய கெடா த ஞானமிர்தமாதலால் அதனைக் கண்டு கண்டு பழகப்பழக அது நானக (ஆன்மாவின் நிஜ செரூபமாக) விளங்கும். இங்ங்ணம் அது நானக விளங்கியது போல நான் அதுவாம் என்றும் அநுபவ நிலையும் பின்னர் வாய்க் கும், அங்ங்னம் வாய்க்குமாயின் அங்கிலையதே பிரஹ்மமெனப் படுவதாம். அங்ங்னமாயதே நிரதிசயாநந்த வாழ்வாம்: அந்நிரதிச யானந்த வாழ்வாக விளங்குவதே முத்தியெனப்படுவதாம்.
சிற்பிரகாசம் விளங்குவது பொறிகரணங்கள் ஒடுங்கிய விடத் தாதலால் நிட்டையையும், முத்தியென்பதற்கு வேறு பொருள் இல்லாமையால் நிரதிசயாநந்தத்தையும் வருவிக்கப்பட்டது. அது நாகைாவிடத்து நான் அதுவாகேன். நான் அதுவாகாவிடத்து, பிரஹ்மமென்பது நினைப்பு மாத்திரமாகவும் சொல்மாத்திரமாகவும் முடியும். முடியவே, நிரதிசயாநந்த வாழ்வுஞ் சொல்லாநந்தமாக முடியும். முடியவே விடயானந்தப்பெருக்கே மேலிட்டுச் செனன மரணப் பிரவாகத்தில் அழுத்தும். ஆதலின் இங்ங்னம் கூற்ப் பட்டது. அதுநானென் ருகு மனுபவமீ தூர அதுநழுவி நானதுவா மப்பால் - எதுவுமல தாகிமன வாக்குக் கடங்காது நிற்பதுதா ணுகு நிலை முத்திமுடி வாம். V (31)
குறிப்பு: அனுபவம் மீதூர-சுவானுபூதி மேலோங்க.
சிற்சொருபம் வாழி சிறந்த மறை நால்வாழி சற்குருவின் ருள் வாழி சற்சனர்கள் - அற்புதமாம் ஆன்மசங்கம் வாழி öoಾöಗ್ಗೆ வாழியவே
లో* ***. *.
தான்ருன தாகவுயிர் தான். (32)


Page 14