கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கந்தையனார் கருத்து மலர் (எம். ஏ. கந்தையா நினைவு மலர்)

Page 1
5OIT 9
ತ55ನತ್ತು U150TT
韃
 
 
 


Page 2


Page 3

ஆனைமுகனும் ஆறுமுகனும்

Page 4

G. சிவம்
காரைநகர் - பயிரிக்கூடல் 'ஆறுமுக வாசம்” வாழ்நரும்
அமரர் மு. ஆறுமுகம் - சிதம்பரம் தம்பதிகளின் அருந்தவப் புதல்வனும்,
தங்கரத்தினத்தின் அன்புக் கணவரும்,
உயர் சைவ வேளாள குலச்சீலரும்,
சிறந்த சிவபக்தரும், நல்லாசானுமான,
சைவப் பெரியார் உயர்திரு. எம். ஏ. கந்தையா ஜே. பி.
அவர்களின்
சிவபதப்பேறு குறித்த
நினைவு மலர்
23-05-1994

Page 5
திருச்சிற்றம்பலம்
மகாமிருத்தியுஞ்ஜய மந்திரம்
ஒம் திரியம் பகம் யஜா மஹே சுகந்திரம் புஷ்டி வர்தனம்
உர்வாருக மிவ பந்த நாத்
மிருத்தியோர் முஹீய மாம்மிருதாத்
காயத்திரி மந்திரம்
ஓம் பூர்வஸ்வ ஒம் தத்ஸவிது வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோ ந பிர சோத யாத்.
அழியப் போகும் இவ்வுடலிற்காக மனம் வருந்துகின்றவன் என்னை ஒரு போதும் சேர மாட்டான்
- பகவத்கீதை
திருச்சிற்றம்பலம்
பேராதரிக்கும் அடியவர் தம்பிறப்பை ஒழித்து பெருவாழ்வும் பேறும் கொடுக்கவரும் பிள்ளைப் பெருமாளென் பேராளா தேரா நிருதர் குலகழகா சேவற் கொடியாய் திருச்செந்தூர்தேவா
தேவர் சிறைமீட்ட செல்வா என்று உன் திருமுகத்தை பாரா மகிழ்ந்து முலைத்தாயர் பரவிப்புகழ்ந்து விருப்புடன் அப்பா வாவா என்றுனைப் போற்றி பரிந்து மகிழ்ந்து வரவழைத்தால் வாராதிருக்க வழக்குண்டோ வடிவேல் முருகா வருகவே
வளரும் கழபக் குரும்பை முலை வள்ளி கனவா வருகவே.
திருச்சிற்றம்பலம்

பிரார்த்தனை
eeeooOOO60O3OODeeedee
இறைவா என் மனம் எப்போதும் உன் திருவடி யையே நினைக்கட்டும். என்னைச் சூழ்ந்துள்ள மாயையினால் நான் அல்லலுறாதிருக்க ஞான தீபமாகிய உன் பேரருட்சத்தியை என்மீது பதிய வைத்தருள்வாயாக. தாயினும் நல்ல தலைவ னாகவே உன்னையான் காண்கின்றேன்; நிலை யில்லாத இவ்வுலகத்தில் நித்திய ஞானசொரூப னாய் நீயொருவன் மட்டுமே நிலைத்திருப்பாய் என்பதை என் உள்ளுணர்வினால் நான் உணர்ந்து கொண்டேன். என் கண்ணினாலே உன் ஞான ஒளியினைக் காண வேண்டும். என் நாவினாலே நித்தம் உன் புகழ் பாட வேண்டும். என் செவி களோ உன் நாம கீர்த்தனங்களைக் கேட்க வேண்டும். உன் செய்யதிருவடியைச் சிந்தித்திருக் கும் சித்தத்தினை எனக்கு அருள்வாயாக.
நான் உன்னையே பூரண சரணாகதியடைந்து விட் டேன். என்னை எல்லா வகையான துன்பங்களி லிருந்தும் பாவங்களிலிருந்தும் விடுவித்து பிறப்பற்ற பேரின்ப வாழ்வினை தருவாயாக.
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி,
**பற்றுக்கள் அனைத்தையும் துறந்து விட்டு என்
னையே பற்றிப் பிடிப்பவர்களை நான் சக ல
பாவங்களிலிருந்தும் விடுவித்து விடுவேன்” -
(பகவத்கீதை - 4ம் அத்தியாயம்)

Page 6
திதி நிர்ணய வெண்பா
பவ வருடத்து ஆனதோர் சித்திரை தனில் பூண்ட அபரபட்சத்து திரயோதசிதனில் - ஈண்டிருந்து சென்றார் சிவபுரத்தே சைவப்பெரியோன் கந்தையா கன்றாவைப் போற்கதற நாம்,
ஆண்டுபவ சித்திரைபத் தாயசனி நாளத்தம் பூண்டதிர யோதசி பூர்வபக்கம் - நீண்டபுகழ்க் கந்தையா என்கின்ற கண்ணியவான் தில்லைநகர் சிந்தையால் சேர்ந்த தினம்.
HIDİLIGIDOILÎ
ஊருக்கோர் உத்தமராய் உழைப்புக்கோர் வித்தகராய் அன்பின், அறிவின், பொறுமையின் இருப்பிடமாய் என்றும் விளங்கிய எம் குடும்பத்தலைவர் எம்மை ஆறாக் கவ்லையில் ஆழ்த்தி விட்டு வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துள் கலந்து விட்ட அவருக்கு நாம் ஆற்றும் நன்றிக் கடனாக இச்சிறிய வாடாத பொன்மலரை அவர் பாதங்களிற் சூட்டி ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம்.
--- །
வணக்கம்
இங்ங்னம்
குடும்பத்தினர்
 

攀
續 後
திரு. எம். ஏ. கந்தையா மாஸ்ரர்
அன்னை மடியில் ஆண்டவன் அடியில்
I 2-0 f-I9I I 2 - 0 - 1994

Page 7

Gåசிவமயம்
அமரர் உயர்திரு. எம். ஏ. கந்தையா அவர்களின்
வாழ்க்கை வரலாறு
ஈழமணித் திருநாட்டின் இலங்குமுடியாம் யாழ்குடாவில் காராளர் வாழ்பதியாம் காரைநகர் - பல தாராள சிந்தையுள்ள படித்தவரைப் பண்புடனே தந்தபதி அக்காரை நகரினிடை அழகான வோர் பதியாம் பக்கத்தில் வயல்கள் சூழ்ந்த பயிரிக்கூடல் என்பதைப் பலபேரும் அறிந்திடுவார் செந்தண்மை பூண்ட சிறந்த அந்தணர்கள் சிறப்புடனே யாங்கே சீராக வாழ்வதனால் அந்தப் பயிரிக்கூடல் முருகனும் அழகான பத்தர்கேணிப்
பிள்ளையாரும் சிந்துமருட்பார்வையினால் நாளும் சீர்பெற்ற அப்பதியும் பாரோர் போற்றும் பத்தர் கேணிப் பதியினிலே சீராக நீதிவழங்கும் சிறப்பான கிராமக் கோட்டு
நீதவானாம் நேரான குணமுள்ள நிலையான கணபதி - தில்லைச்சி
வழிவந்த - முதற் பாராதவர்கள் கூடப் பட்டெனவே கண்டுவிடும் வேரான குலவாழையென்று வித்துவத்தோடழைக்கும் முருகேசு ஆறுமுகத்திற்கும் முதுபெரும் பரிகரியார் வழிவந்த சீர்முத்து சிதம்பரத்திற்கும் அரியவொரு புத்திரனாய் அவதரித்தார் - கந்தையா ஆயிரத்துத் தொளாயிரத்து பதினோராமாண்டுதனில்
ஆசைமிக்க புத்தாண்டு மாதத்தில் பன்னிரெண்டாம் நாளில் வந்து பிறந்திட்டார் வளமிகு மைந்தனென்று தந்தை தாய் மகிழ்ந்திட்டார் தமக்கை இராசம்மாவோ சிந்தையில் மகிழ்ந்தே சீராட்டித் தம்பிதனை v எந்நாளுமே இன்பமுடன் ஏற்றிட்டார் ஐந்தாம் வகுப்பில் அருங்கலைகள் கற்கவென தந்தையார் அனுப்பிட்டார் சாமிப் பள்ளிக்கு

Page 8
எந்த நேரமும் இலட்சிய வீரனாய் இருந்திட்ட கந்தையா சிந்தையிற் கல்வி கொண்டான் சிறப்பாக உயர்ந்திட்டான் ஆரம்பக்கல்விதனை அருமையுடன் கற்றபின்னே அடுத்து நேராக அடியெடுத்து வைத்தான் நிலையானவுயர்
கல்விபெற
சீரான யாழ் இந்துக் கல்லூரியிலே சேர்ந்தவர் வரிசையிலே சிறப்பான மாணவனென்று எல்லோரும் அழைத்திட இலக்கணனாய்த் - திகழ்ந்திட்டான் கண்ணான கல்விதனைக் கருத்துடனே கற்றதனால் எண்ணிலாதார்க்கு அதை இயம்புதலில் ஆசையுற்று பொன்னான தொழிலெனவே நினைந்து போதிக்கும் ஆசிரியராய் ஆனான் - அன்று முதல் என்ன தன்னால் இயலுமோ அத்தனையும் பின்னமின்றிச் சொன்னான் பெயர் விளங்க அறிவுச் சுடர் பரப்பும் ஆசிரியராய் ஆனபின்பு செறிவாகச் சீர்பணிகள் செய்தே சீடர்களைச் சீர்திருத்தி குறிக்கோளை மனத்திருத்தி கொள்கையிற்
திடங்கொண்டான் நன்னூலார் நல்லாசிரியனுக்கு நன்றாக வகுத்திட்ட தொன்னூலின் இலக்கணத்திற்கோர் தூய ஆசிரியரானான் வெண்ணிற ஆடைதனை விரும்பி நிதம் அணிந்திடுவார் தண்ணளியான் தற்பெருமை இல்லாதான் கண்ணிலே கருணை பொங்கும் கற்றாரைக் கண்டே
காமுறுவான் நண்ணியே இறைவணக்கம் நாளுஞ் செய்தபின்னே உண்ணுதல் முறையென்ற உயர்ந்த ஒழுக்கத்தை மண்ணுலகிற் போதித்தே நல் மாணாக்கர் - பரம்பரையை திண்ணமாய் வளர்த்திட்டான் திறமை மிக்க கந்தையா நெஞ்சிலே நேர்மை நிலையான கொள்கை கொஞ்சு மொழி பேசிக் குலவுகின்ற நற்பண்பு கெஞ்சுகின்ற இரவலர்பால் இரக்கம் கேட்டவர்க்குப்
பொருளுதவி பஞ்சுபோல் மென்மையுள்ளம் பசித்தாரை அரவணைத்தல் நஞ்சுச் சொற்களை நாவிற் கண்டறியான் நல்ல கந்தையா ஆசிரியப் பயிற்சிதனை அசலாக முடித்தபின்னே(தான்) நேசித்த இடமெல்லாம் நீண்டபணி செய்திட்டான்.

ஏழாலை வித்தியாலயத்தில் இன்முகத்துடன் பணியேற்று எத்தனையோ மாணவரை கற்றவராய் மாற்றி விட்டார் வவுனியா வித்தியாலயமதில் வகைவகையாய்ப் பணி
செய்தே - பலர் தாவு மேனியாய்த் தரையில் யுயர்ந்திட்டான் ஆசானாய் அந்நாளில் ஆசையுடன் பணிதொடர்கையிலே பாசமுள்ள தந்தை மைந்தனுக்கு மணம் முடிக்க நேசம் நிறைந்தவொரு குணவதியை நீண்ட நாளாய்த் தேடிவந்தார் பயிரெல்லாம் செழிக்கும் பயிரிக்கூடல் பதிதன்னில் மயிலெனவே வளர்ந்திட்ட வண்ணக் குணவதியாள்
w தங்கரெத்தினம் உயிரெனவே ஆறுமுகம்-சின்னாச்சிப்பிள்ளை பெற்றெடுத்த உத்தமியார்தன்னை கைப்பிடித்தார் கந்தையா காலமெலாம் வாழ்வதற்கு இல்லறமாம் நல்லறத்தை இனிது நுகர்ந்திருந்து சொல்ல்றத்தைக் கடைப்பிடித்து தூயபதிவிரதை
தங்கரெத்தினத்தை செல்லமாய் ஆதரித்தே செல்வங்களைத் தேடிக்
கொடுத்திட்டார் அன்புள்ள கணவராய் ஆசைதனை நிறைவேற்றும்
அற்புதப்பிறப்பாய்
பண்புள்ள குடும்பத்தராய் பக்தியுடன் வாழ்ந்திருந்தார் இன்பமுடன் சண்முகநாதனையும் இனிதான சுப்பிரமணியனையும் பண்பான மைத்துனரென்றே பாசமுடன் ஏற்றிட்டார். ஆறுமுகவாசம் என்ற அழகான மனைகட்டி ஊருக்குள் நன்மகனாய் உயர்ந்திட்டவந் நாளில் ஆறு பெண் குழந்தைகளை அன்புச் சின்னமதாய் அன்னை தங்கரெத்தினமும் அன்புடனே ஈன்றெடுத்தாள் தெய்வ நாயகியோடு, தேவகுஞ்சரியும் புவனேஸ்வரியும் கமலாம்பிகையும் அன்னலெட்சுமியும் அடுத்து பங்கயச் செல்வியும் அவதரித்தனர் ஆண்டவன் பரிசாக - பின் வெள்ளிக்கிழமையுடன் கந்தசஷ்டி விரதமது அனுஷ்டித்து நல்ல புதல்வர் மூவரை நன்றாக பெற்றெடுத்தார்
பெற்றார்க்ள்

Page 9
செந்தில்நாதன், தெய்வேந்திரன், தெட்சணாமூர்த்தி சுந்தரப் புதல்வர் தொடர்ந்தனர் கல்விதன்னை - அந்தத் தமக்கையர் அடிவருடி தந்தை தாய் கண்டிதனை தமக்குள்ளே மகிழ்வு கொண்டார் மக்கள் வளர்ந்து வருநாளில் மாண்புள்ள கந்தையா - தன் தக்க பணி தொடர்ந்தார், தரணியுயர்ந்திடவே ஆயிரத்து தொளாயிரத்து நாற்பத்து ஒன்றில் காத்தான் குடிமத்திய கல்லூரியின் கண்ணியத் தலைவர் காத்தான்குடியில் கல்லூரியைக் காத்தவர் கந்தையா வந்தாறுமூலை நெல்லியடியிலே வளர்ந்தன பணிகள்
v நன்றாய் இறுதிக் காலத்தில் தன் இனிய சேவையை சுழிபுரக் கலாசாலை விக்டோரியா தனிலே சுகமுடன் செய்தார் உதவி ஆசிரியராய் உறுதியான பகுதித் தலைவராய் இதமாகப் பணியை இளைக்காது செய்தார் இதனாலன்றோ மாணவ உலகம் மலையென மதித்தது தமிழினைச் சமயத்தை தக்க இரசாயனத்தை பூமியில் இலங்கும் புகழாங்கிலத்தை ஒட்டுமொத்தமாய் ஒப்புவிக்கும் உயர்ந்த ஆசானாய் உயர்ந்தார் கந்தையா ஒழுக்க சீலரை கல்வியில் உயர்ந்தோரை பழுதற்ற பண்புடைச் சீடரை விழுமியமிக்க விலைமதிக்க முடியா மாணவ உலகை ஒழுக்கமுடனே உருவாக்கியே எழுபத்தொன்றில் என்பணி முடிந்ததென்று ஒய்வினிற் சென்றார் ஊருக்காயுழைத்தார் அவர்தம் பணியை கற்றோர் மற்றோர் களிப்புடின் மதித்து பாராட்டு விழாவைப் பணிவுடன் வைத்து சீராட்டிப் பாராட்டிச் சிறப்புச் செய்தனர் அவையத்து முந்தியிருக்க அத்தனை பிள்ளைகளையும்
அழகாய் வைத்தவர்
மூத்த பிள்ளை தெய்வ நாயகியை பத்திரமாய் தன்பணி தொடர ஆசிரியையாக்கி அனுப்பி வைத்தார் காரைநகர் யாழ் கலாசாலையில்

தந்தையார் தன்பணி தொடர்ந்தார் தவப்புதல்வி தெய்வ நாயகி தெய்வநாயகிக்கு சிறந்த ஆசிரியர் வேலுப்பிள்ளை
-செல்லாச்சி மகன் தொலைத்தொடர்பதிகாரியாம் பாலசுந்தரத்தைப்
- பக்குவமுடன் கட்டிவைத்தார் சேந்தன், மயூரன், அம்பிகை, அமலன் ஐயா அப்பாவென்றே அன்புடன் அழைக்கும் பேற்றினைப் பெற்றார், பேரனானார் கந்தையா
இரண்டாம் மகள் இனிய தேவகுஞ்சரியை இன்னல் பிணியகற்றும் இங்கித வைத்தியராக கற்க வைத்தே கண்ணெனப் போற்றிப் - பின் இங்கிலாந்திலே உயர் கணக்காளராய் உத்தியோகம்
מולffébgחנL மங்காப்புகழ் மாண்புள்ள பண்டிதர் அருளம்பலம்
செளந்தரத்தின் மதிநிறை மகன் தியாகராசநாதனை திருமணம் செய்து வைத்தே திளைத்தார் இன்பமதில் இலட்சுமி, கிருஸ்ணா எனவிரு மழலைகள் ஐயா அப்பாவென்றேவழைக்க அருகதையானார்
விவசாயத்திணைக்களத்தில் வினையாற்றும் கணக்கியல் இலிகிதராம் புவனேஸ்வரிதனை மருந்தாளராக மகத்தான பணிபுரியும் மலாயன் உத்தியோகத்தர் வேலுப்பிள்ளை அன்ன
பூரணத்தின் மகன் வீரசிங்கத்திற்கு திருமணம் செய்வித்தே திளைத்தார்
மகிழ்ச்சியில் ஐங்கரன், கேசவன், கலைமகள் என அவர்களின் அருந்தவப் புதல்வர்கள் ஐயா அப்பாவென செல்லமாய் அழைத்திட சிறப்புடன்
திகழ்ந்தார்
எழுதுநர் பணிபுரியும் இனிய கமலாம்பிகைதனை கணக்காளர் கந்தப்பு, புவனேஸ்வரி மகன்

Page 10
சீமெந்துக் கூட்டுத்தாபன சிறப்பான மின்முகாரி
சிவநேசனுக்கு கன்னிகாதானம் செய்தே களிப்புடனிருந்தார்
ஐந்தாம் மகள் அன்னலெட்சுமிதனை மக்கள் வங்கியில்
நிருவாக அதிகாரி பதவி வகிக்கச் செய்து
பின்னமின்றிப் பிள்ளைகளை பெருமையுடன் விளங்கச்
செய்தார்
இளையவள் பங்கயச் செல்வியை ஏற்றமுடன் ஆசிரியப் பணிதொடர அனுப்பி வைத்தார் இங்கிலாந்து நாட்டில் இலங்குகின்ற ஆசிரியர்
பொன்னம்பலம் கனகம்மாவின் அரிய புத்திரன் தொழினுட்பவல்லுநராம் உருத்திரனை பங்கயத்திற்கு பண்பான கணவராக்கி தங்கடமைதன்னை தரணியில் நன்றாய் செய்தார்
செம்மையோங்க அங்கே மூவர் அவர் பிள்ளைகள் செந்தூரன், அபிராமி, தேவகி ஆகியோர் ஐயா அப்பா என்றே அன்புடன் அழைத்தே
ஆசை கொண்டனர்
அன்புப் புதல்வன் செந்தில் நாதன் அதியுயர் கணக்காளராக இங்கிலாந்து நாட்டில் இனிது பணிசெய்ய வைத்தார்
அடுத்த புதல்வன் தெய்வேந்திரனோ w இங்கிலாந்து நாட்டில் தொடர்ந்தார் பணியில்
அதற்கடுத்த புதல்வர் தெட்சணாமூர்த்தி ஆரும் போற்றும் பொறியியலாளராக்கி உயர்த்தி வைத்தார் உயர்திரு கந்தையா அத்தனை பிள்ளைகளையும் அன்புத்தந்தை உத்தமராக்கி உயர்பணி செய்த

தந்தை கந்தைய தன் மகற்காற்றுமுதவி அவையத்து முந்தியிருக்கச் செய்தலேயென முகமலர்ந்தாரே
செம்மை சார்ந்த செந்தில் நாதனை முன்னாள் வர்த்தகப் பிரமுகர் கந்தையா, கணேசபாக்கியத்தின் புதல்வி கணக்கியல் இலிகிதராம் கிருஷ்ணகுமாரிக்குத் திருமணம்
செய்வித்தே சிரித்தே மகிழ்ந்தார் சிறந்த கஜன், கபிலனை பேரப்பிள்ளையாய்ப் பெற்றே
பெருமை கொண்டார்
அன்பு மகன் தெய்வேந்திரனும் இனிய மனோன்மணியை இல்லக் கிழத்தியாய்க் கைப்பிடித்தே கனிவுடனிருப்பதைக் கண்டு மகிழ்ந்தனர்
கந்தையாவும் அவர் இனிய பிள்ளை காந்தன் தானும் ஐயா அப்பாவென்றே அழைக்க அருமையுடன் அருகதையானார் அன்பர் கந்தையா
உயர்ந்த எண்ணமும் உள்ளத்தில் கள்ளமில்லாவுயர்
பண்பும்
தெளிந்த சிந்தையும் தீர்க்கதரிசியும் நயம்பல தரும் நற்கற்பக தருவென வாழ்ந்தேயிருந்த வளனார் கந்தையா பொதுநலத் தொண்டில் புகழுடனிருந்தார் சைவமகாசபையின் சாத்வீகத் தலைவர் இணக்க சபையின் இதயத் தலைவரென பிணக்கமின்றிப் பெரும்பணி செய்தே இன்முகத்தோடு எண்பத்து மூன்றுவரையிருந்து எல்லோரையும் ஏற்றி இரும்புகழ் படைத்த எங்கள்
குலக்கொழுந்து நல்லாயிரத்துத் தொளாயிரத்துத் தொண்னுாற்றி நாலில் நாலாறு திகதி தன்னில் stநல்விருந்தாய் வானவர்க்குச்

Page 11
சொல்லாமற் சென்றார் நாம் துயர் கொண்டோம் இவ்வினியவாத் மாஎன்றென்றும் சாந்தியடைய இருகரங் கூப்பி இறைவனை வேண்டுகிறோம்
சுபம் 3r Lu LiD 3r Lu LiD
(முற்றும்)
 

பேரனும், பேரமக்களும்

Page 12

இரங்கற் பாக்கள்
மனைவி புலம்பல்
மனைவியெனநீ கைப்பிடித்த நாள் முதலாய் துணையெனவே நீயிருந்தாய், தொந்தரவை நான் கண்டதில்லை கணப்பொழுதும் நீயெனக்குக் கவலையினைத் தந்ததில்லை காலை மாலை யென்றிராமல் கனிவுடனே பேசியென்னை பாலையொத்த மனத்தினனாய்ப் பண்புடனே பழகி பாடைதனிர் சென்று விட்டாய் பதறுகிறேன் பாவியேனும் சாலை தணிலுன் வரவு பார்த்து சந்தோசித்திருந்ததை யெண்ணி உள்ளத்தால் வாடுகிறேன் நீ ஒருத்தரிடமும் சொல்லாமற் சென்றதென்ன? உன் சுந்தரவதனமினிக் காண்பதெப்போ? அந்த வழி நானும்வந்து அமைதிபெறும் வரைக்கும் உந்தன் முகம் கண்டிருப்பேன் அதுவரை
ஓயாதிப் புலம்பல்
மக்கள் புலம்பல்
பெற்றாய், வளர்த்தாய், பெயரிட்டாய் கற்றோனாக்கியே கண்மணிபோல் காத்திட்டாய் உற்றவரைப் பேணும் உயர்குணத்தை உதிரத்தில்
ஊட்டிவிட்டாய் சற்று மெதிர்பாராத வேளையிலே இறைவன் சந்நிதியை யடைந்தாயோ? ஐயாவென்றழைத்தே ஆறுதலடைந் திருந்தோம் இனி எப்போது காண்போமய்யா அவ்வினிய முகந்தன்னை எப்பொழுதுமிங்கே ஏங்கித் தவிக்கின்றோம் ஐயா உங்கட்காய் அனுதினமும் ஆண்டவனை வேண்டுகிறோம்
இளைய மகள் (பங்கயச்செல்வி) புலம்பல்
ஆறாயிரம் மைல்கள் அயல் நாட்டில் வாழும் நான் மாறாத் துயருழக்க வந்ததையா அச் செய்தி நீறாகி வெந்து நினைந்து நினைந்தழுவேன் தீருமே இத் துயரம் திருமுகமும் காணேனே

Page 13
மருமக்கள் புலம்பல்
அன்பும் பண்பும் நிறை மக்கள் தனைப் பெற்று அருமையுடன் எங்களுக்கு தந்த மாமா தென்பு தரும் உன் சொல்லை எப்போ கேட்போம் பண்புநிறை அச்சொல்லை எங்கே பார்ப்போம் மண்புகழ வாழ்ந்த உன்வாழ்வு தன்னை பொய்யாக்கி
சென்றவிதம் நல்லதல்ல நல்லதல்ல கண்ணை அதை இழந்தது போல் கதறுகிறோம்
உன் ஆசியது வேண்டும் எங்களுக்கு
பேரப்பிள்ளைகள் புலம்பல்
தத்தித் தவன்ற காலை தாங்களுடனிருந்து புத்திபல சொல்லியெமை புனிதனாக்கி வளர்த்திட்டீர் செத்து விட்டாயென்ற செய்திதனைக் கேட்டவுடன் கத்துகின்றோம் கதறுகின்றோம் இக் கண்ணிரை
யார்துடைப்பார் இதய சுத்தியுடன் இறைவனை இறைஞ்சுகிறோம் எங்கள் ஐயாப்பாவின் ஆத்ம சாந்திக்காய்
முதற்பேரன் (சேந்தன்) புலம்பல்
உங்கள் அறிவுரைகளும் பழமொழிகளும் எங்கள்
நினைவெல்லாம் நிறைந்திருக்கும் ஐயா அப்பா இனி எப்போதையா உங்கள் அறிவுரைகளை கேட்கப் போகின்றோம்! எத்தனை காலம் சென்றாலும் எங்கள் ஐயா அப்பாவுக்கு ஈடு இணையாக யாராலும் இயலாது ஐயா அப்பாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை இறைஞ்சி நிற்போம்
சகோதரி பிள்ளைகள் புலம்பல்
ஆதரவு செய்வதற்கே ஆருமின்றி நிற்க விட்டுச் மாமாவே சென்றாயோ! சோகத்தீ சாதனையும் சுட்டெரிக்கும் எம்மை! சுடுகாட்டில் மாமாவை
இல்டெரித்த காலா! இற!

சிறிய தாயின் மக்கள் மருமக்கள் புலம்பல்
இப்படியொரு பிறப்பு எப்பவாய்க்கும் ஐயா உன்
சொற்படியே எந்நாளும் நடந்து வந்தோம் அப்படியே நீயும் அருமையுடன் பேணி வந்தாய்
தப்புக்கள் பல செய்தாலும் புத்திகள் பல சொல்லி அன்பைப் பொழிவாயே எங்கள் தெய்வமே
இல்லை என்று சொல்லாத ஏந்தலே எம் அல்லல் தீர்த்த அருமைத் தெய்வமே உன்
ஆத்ம சாந்திக்கே பிரார்த்திக்கின்றோம் என்றும்!
மைத்துனர் புலம்பல்
எமதருமை அத்தானே அன்புநிறை அத்தானே நமது துயர் தாழாது தாழாது அத்தானே உமது நல்வாழ்வை கண்டு மனம் களித்திருக்க
எமதரும ராசன் பொறுக்காமல் செய்தவினை நமது உளம் இருக்கு மட்டும் மாறாது மாறாது
தருமம் அது இருந்தால் தண்டிக்கும் தானே ஐயா இயமனும் ஒருநாள் இல்லாமல் போனவன் தானே
என்றே மனத்தினை மாற்றுகின்றோம்
உறவினர் புலம்பல்
ஆலமரமாய் அனைவருக்கும் நிழல் தந்த சீவனே எம்முடைய செல்வமே எமை விட்டுக் காலனுனைக் கொண்டானோ கலங்கிப் புலம்புகின்றோம் கோலத் திருவாயாற் கூறீர் ஒரு வார்த்தை
நண்பர்கள் புலம்பல்
அறிஞனாய் எமக்கோர் நண்பன் உள்ளான் என்றே எல்லோரிடமும் இறுமாந்து செல்வோம் யாம் நல்லவா எம்முன்னர் எமனுன்னைக் கொண்டானோ ஆசிரியனே உந்தன் திருவுடலங் கானேனே
V

Page 14
பழைய மாணவர்கள் புலம்பல்
குருவே என அழைக்க ஆருண்டு இவ்வுலகில் சும்மா நீ இருந்தாலும் எம்ஐயம் தீர்த்திடுவோம் இம் மானிலத்தில் நாம் இருந்து கொண்ட முவதற்கோ எம் குருவே எமைப் பிரிந்து எங்கு சென்றாய்
அயலவர்கள் புலம்பல்
எதற்கெடுத்தாலும் ஆண்டவன் செயல் அவன்
செயல் என்று கூறி விட்டு இன்று அளவில்லாக் கண்ணிரை எம் விழி ஒரங்களில் நிறைத்து விட்டு சென்றீர்களே ஐயா எம்மை விட்டுப் பிரிந்தும் எம்முடன்
இருப்பதைப் போன்ற உணர்வைத் தந்து இதயத்தில் நீங்கா இடம் பெற்றுச்
சென்று விட்டீரே ஐயா
தேற்றம்
இறப்பை இற என்றே எவர் தான் சபித்தாலும் இறப்புக்கு இறப்பில்லை இறப்பே இறுதி விதி சிறப்பீட்டி வாழ்ந்தால் அச்சீரே நிதம் நிலைக்கும் மறப்பாற் கவலை மடியும் மனிதர்களின் மாண்பு மடியாது மரணம் உடலுக்கே! வீண் கவலை வேண்டாம் விடும்!
 

சைவ வாழ்க்கை வாழ்ந்த உத்தமர்
யான் திரு. எம். ஏ. கந்தையா அவர்களோடு நாற்பது ஆண்டுகள் நெருங்கிப் பழகியிருக்கின்றேன். அவர் நாவலர் பெருமான் காட்டிய வழியில் நின்று சைவ வாழ்க்கை வாழ்ந்த உத்தமர் அவரது வாழ்க்கை முழுவதும் சைவத்தோடு பின்னிப்பிணைந்தே இருந்தது அன்றியும்அன் னாரது குடும்பத்தினர் அனைவரும் சைவத்தில் ஊறித்திளைத் தவர் கள் அவரது இல்லத்தில் சைவ மணம் எப்போதும் கமழ்ந்து கொண்டேயிருக்கும்.
ஆலய தரிசனம் செய்வதிலும், திருமுறைகளை ஒதுவதிலும் பேரார்வம் உள்ள அமரர் கந்தையா சைவ அனுஷ்டானங்களைப் பேணி நடந்து வந்ததுமன்றி ஏனையோரையும் அவ்வாறு நடக்கச் செய்தார்.
காரைநகர்ச் சைவ மகா சபைத் தலைவராக இருந்து அவர் செய்த தொண்டுகள் பலப்பல. 'என் கடன் பணி செய்து கிடப்பதே" என்பதைக் குறிக்கோளாகக் கொண்டது அவரது வாழ்க்கை,
பயிரிக்கூடல் என்ற திருப்பதியில் கோவில்கொண்டெழுந்தருளியிருக் கும் சுப்பிரமணியப் பெருமான்மீது பிள்ளைத்தமிழ் பாடு வித் து அதனைத் தமது சொந்தச் செலவில் அச்சேற்றி அன்பர்களுக்கு இல வசமாக வழங்கி, அவர்கள் மனத்தில் முருகபக்தியை வளர்த்த அருளாளர் அவர்.
அமரர் கந்தையா, கோயிற் கிரியைகள் ஒழுங்காகவும் சிறப்பா கவும் நடைபெறவேண்டுமென்பதில் அதிக நாட்டம் உள்ள வ ர். ஈழத்துச் சிதம்பர தேவஸ்தானத்தில் தைப்பூச உபயகாரராகவும் சிவராத்திரி (மூன்றாஞ் சாம அபிஷேகம்) உபயகாரராகவும் இருந்தார். அவ்வைபவங்களுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரே அபிஷேக திரவியங்களைத் தேடுவதற்கும் ஏனைய ஒழுங்குகளைக் கவனிப்பதற்கும் தொடங்கி விடுவார்என்பதை யான் நன்கறிவேன்.
நன்கு ஆழ்ந்து சிந்தித்துத் தாம் சரியெனக் கண்டதை துணி ந்து செய்யும் மனோபலம் உள்ளவரும், எடுத்த முயற்சிகளைப் பத்தி சிரத்தையுடன் செய்து முடிப்பவருமாகிய திரு. கந்தையாவின் மறைவு ஈடு செய்யமுடியாத ஒன்றாகும். அவரது ஆன்மா கூத்தப்பிரானின் குஞ்சிதபாத நிழலின்கீழ் இருந்து இன்புறுவதாக.
சிவபூரீ. க. மங்களேஸ்வரக் குருக்கள் பிரதம சிவாசாரியர், ஈழத்துச் சிதம்பரம்

Page 15
எமது ஆசானுக்கு இறுதி அஞ்சலி
‘‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் - வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்”* -குறள்
காரைநகரைச் சேர்ந்த திரு. எம். ஏ. கந்தையா இளைப்பாறிய ஆசிரியர், சைவப் பெரியார் அவர்களின் மறைவு பற்றி கேள்வியுற்று மிகுந்த கவலையும் வேதனையும் அடைகிறோம். அமரர் அவர்கள் எமது பாடசாலையாகிய விக்ரோறியாக் கல்லூரியில் ஏறத்தாழ இருபது வருடங்களுக்கு மேலாக கல்வி கற்பித்து இளைப்பாறியவர். நாம், அவர் அப்பாடசாலையில் ஆசிரியராக பணிபுரிந்த காலத்தில் கல்வி பயின்ற மாணவர்கள், எமக்கு நல்லமுறையிலே பாடங்களை யும், ஒழுக்க நெறிகளையும் கற்றுத்தந்து மேலான நிலைக்கு வரு வதற்கு மிகவும் உதவி புரிந்த ஒருவர்.
"கற்க கசடறக் கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக' -குறள்
என்னும் பொய்யா மொழிக்கு அமைய வாழ்ந்த பெரியவர். அன்பு, பாசம், கண்டிப்பு, கருணையுடன் கலந்த கல்வியை மாண வர்களுக்கு அள்ளி வீசிய ஆசான். அவருடைய காலத்தில் பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் இப்பாடசாலையில் கல்வி பயின்று சிறந்த மாணவர்களாக வெளியேறி தற்போது அரசாங்க சேவையிலும், மற்றும் தொழில் துறைகளிலும் மேல் நிலையில் இருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.
அமரர் அவர்கள் ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் மிகுந்த புலமை பெற்றிருந்தது மாத்திரமல்லாது வர்த்தக பாடங் களையும், மாணவர்களுக்கு சிறந்த முறையில் போதித்துள்ளார். அன்னார் இளைப்பாறிய பின்பும் பல்வேறு சமய சமூக பணிகளில் ஈடுபட்டு காரைநகர் வாழ் மக்களுக்கு அரிய பல பணிகளை ஆற்றியமை இங்கு குறிப்பிடத்தக்கது. மனிதப்பிறவி எடுத்ததன் பலாபலன்களை இப்பெரியார் நன்கு பயன்படுத்தி மனித சமுதாயத் துக்கு அருந் தொண்டாற்றியுள்ளார். வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து காட்டியவர். சிறந்த கல்விமானாகவும், சைவப் பெரியார் ஆகவும் பலராலும் மதிக்கப்பட்ட ஒரு பெரியாரின் மறைவு காரை நகர் வாழ் மக்களுக்கு மாத்திரமன்றி, தமிழ் மக்கள் அனைவருக்கும் ஓர் ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும்.
அவருடைய பிள்ளைகள் சீரும் சிறப்புமாக சகல செல்வங்களுட னும் வாழ்ந்து வருவதை நாம் அறிவோம். அன்னாரின் பிரிவுத் துயரால் வாடுகின்ற மனைவி, மக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார்.

உறவினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரி வித்துக் கொள்ளுகின்றேன். அவருடைய ஆத்மா இறைவனடி சேரும்
கான்பதில் ஐயமில்லை. ஆன்மசாந்திக்காக நாங்கள் யாவரும் பிரார்த்திப்போமாக.
ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி
கா. சந்திரராசா பிரதேச செயலாளர் மேலதிக அ. அதிபர், வலிகாமம் மேற்கு, சங்கானை.
அன்றே என்றன் ஆவியும்
உடலும் உடைமை எல்லாமும் குன்றே அனையாய் என்னை ஆட்
கொண்ட போதே கொண்டிலையோ இன்றோர் இடையூ றெனக்குண்டோ
எண்டோள் முக்கண் எம்மானே நன்றே செய்வாய் பிழை செய்வாய்
நானே இதற்கு நாயகமே
- திருவாசகம்

Page 16
காரைநகருக்கு பெருமை தந்த பெரியார்
சைவமும், தமிழும், அறமும் செழிப்பாயமைந்த புண் ணிய பூமியாம் காரைநகரில் வாழ்ந்து, பிறந்த பொன் னாட்டிற்கு பெருமை சேர்த்த பல பெரியவர்கள் இன்று நம்மிடையே இல்லை. வாழையடி வாழையாக பல பெரி யவர்கள் வாழ்ந்து பெருமை சேர்த்தார்கள். இந்த வகை யில் அமரர் எம். ஏ. கந்தையா ஆசிரியர் அவர்களின் மறைவு நம் எல்லோருக்கும் ஒர் பேரிழப்பாகும்.
அன்னார் ஆசிரியராக அயலூரில் பலகாலம் கடமை யாற்றிய போதிலும் நம்மூர் வளர்ச்சியில் பல வழிகளிலும் பாடுபட்ட உத்தமர். காரைநகர் சைவமகா சபையில் பல காலமிருந்து பல சேவைகள் புரிந்ததை நம் உலகம் நன்கு அறியும். தெளிந்த திருநீற்று குறியோடு பல சைவ ஆலயங் களில் அவரது சேவை சிறப்பாக அமைந்தது, பல ரு க் கு முன்மாதிரியாசு வாழ்ந்த இவரது வாழ்வு, நமக்கு ஒரு பாடமாக அமைவதுடன், அன்னாரின் பிரிவு காரை வாழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத ஒன்றாகும்.
உலகில் பிறப்பவர் என்றோ ஒரு நாள் இறப்பது உண் மை. இது விதியின் கை. அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல வாரிவளவு கற்பக விநாயகரை சிரம் த ரா பூழ் த் தி இறைஞ்சுவோமாக
நின்மதி கண்டு காரைநகர் போற்றுமுன்னே நிம்மதி வேண்டி நீர்கொழும்பு சென்றனையோ காலன் உனைக்கவர - இந்நாளில் காலனுக்கு என்ன அவசரமோ - ஓ உன் பணி அங்கும் தேவையோ!
ச. பத்மநாதன்
செயவாளர், 148/10, புகையிரத நிலைய வீதி, வாரிவளவு நல்லியக்கச் சபை யாழ்ப்பாணம், காரைநகர்.

A Saiva Devotee - M. A. Kandiah
Murugesu Arumuqam Kandiah, a retired educationist and Saiva gentlemen of Karainagar passed away on 24th April, 1994. His mortal remains was cremated in Negombo a few days later
Mr. Kandiah lived till the ripe age of 84, a period sufficiently long enough to acquire the graces of Saiva Hindu Culture and in turn perform one's duties to the gods and fellow-men. The du titul Son, the loyal and dedicated student, the informed and devoted teacher, the commited householder, the concerned citizen and Cutting right across all these phases was his role as a farmer that help classify the eventful years of his life, would provide materia enough to write the biography of a truly village gentleman.
Mr. Kandiah hailed from the once prosperous and yet conservative island - village of Karainager, - the first among the cluster of islands of the Jaffna Peninsula. And Jaffna as a Sub - national or cultural entity consisted of a cluster of villages, each one of which was in many respects comparable to a the rest and yet everyone of them proudly maintaining its distinct identity. Mr. Kandiah was nu tured in such an environment; where every act of a person was tested for its ritual purity that often bordered on the puritanical. The relat ve isolation of the village made the inhabitants conscious of their heritage and Convinced them that it never was tarnished by unheolthy alien influences. To the qualities of frugality and industry therefore was added, what could be characterised as haughtiness. Along with his fellow Island - villagers, Mr. Kandiah convinced himself that he was heir to what is pristine in Tamil and Saiva culture.
Karainagar stood firm against all the subtle attempts of the European inv 4 ders to Smuggle in rheir religion and cultureThis was the basis on which their national resistance movement was built. It was however integral to the overal movement in the North, who e genesis. Could be traced to the underground intellectual movement begun in Portuguese times. (It had its cutural and religious linkages up to Banaras in the far north and Buddhist Centre in the far south.) K

Page 17
And the Jaffna teacher came to represent the continuity of this nationalist movement symbolised by his white Vesti and Shawl along with the books he carried in one hand and the umbrella in the other. His was a shrewd response to Colonial education. He picked their literature and Science but dropped their religion and attire. Mr. Kandiah lived a life that was sample to this resistance. More important was the resistance in the minds of men.
The year 1932 was in the nature of a water-shed in his career. This was the year when he passed the Senior Cambridge examination with exemption in the London Matriculation examination a remarkable feat for a young man not exposed to very many opportunities for a good secondary education. it was limited guidence made good by maxiinum self-effort,
The year 1932 was also significant for another important event That was the year Udayar Nagalingam brought Manatma Gandhi to Karainagar. This is being referred to, to enable the reader gain a feel of the times. It was the period of a nationalist upsurge When good many intellectuals in Jaffna pioneered the cause of Sri Lanka's political independence. (Some contemporary historians in the South Strive hard to conceal this fact, and this with little or no pang of conscience). They did not opt for the more prestigious jobs in government Service. Instead they went to teach in village Schools. It is this sense of mission that accounted for Jaffna's lead in education in that phase of the country's history. Mr. Kandah was also one of those who opted to become a teacher.
Teaching to Mr. Kandiah was in the nature of missionary service. He taught in Katankudi and Eravur, the Wanni and finally wound up his career at Victorin College in Chupuram.
it was a long and proud record of efficient and dedicated teaching. (The consumer ist onslauqht and the tutory system was yet to set in. The teacher earned the respect and love of all sections of the community. In a Sense he was seen as the spiritual leader at the grassroots.) Mr. Selvanayagam, an elderly retired school Head-Master and a commited social worker in Batticaloa was an old student of his, who would often speak of him with love and reverence. That was the calibre of students he produced.

Commitment induced him to replenish his resources at two stages of his teaching career. He entered the Tami Training College at Kopay in the mid-thirties and later at Maharagama in the late forties. This enabled him acquire the unofficial 'double - trained ' title, Mr. Kandiah was by now an accompolished teacher in almost all the subjects covered in the school's curriculum. He had earned the respect and regard of his students and with it the envy of his rivals in the profession. The emotional send-off on the day of retirement at Chulpuram was testimony to a successful professional career. And this grounds for the assertion that it is the 'Kandahs' in the teaching service who could assure discipline among the young, provided of course they are not harrassed by the system.
Retirement enabled Mr. Kandiah devote more time to public affairs. He was among the the dwindling few who felt that education received at public expense involved an obligation and therefore a responsibility to serve the people he lived with. There was the village temple and the Saiva Maha Sabai that gave him the opportunities he was Seeking.
Worship of Pillaiyar, the god of wisdom, is basal to the Saiva religion, More Specific to Karainagar was the Cult of Murugan, which at a macro-level bound the people to the regions reaching out to Kathirgamam (Kataragama.) Almost all the names of his fellow-villagers sprung from Kanthapurana culture. His grand father was Murukesan, his father Arumugan (the six-faced), while he himself was blessed with the name Kantha yah (Kandiah) - the youth God of Tamil learning. He took over the management of the Murugan temple his ancestors built, popularly known as 'Moddaiyar Kovil'. The temples history and reference to its sanctity was composed as a lengthy poem and the annual festivals conducted to ritual purity all under the personal supervision of Mr. Kandah. To the Saiva, the temple with its sacred architecture, regular daily services (Nithiyapooja) and annual festivals presents itself as a social organiser. True, its a loosely Knit congregation, But Mr Kandiah as a devout Saiva presented it a model worthy of emulation.
Mr. kandiah also served as the President of the Saiva Maha Sabai for a decade or more it was perhaps the oldest lay institution rated next in importance to the Village temples and Schools. This was central to the Winole village where regular

Page 18
religious meetings and cultural programmes were organised as part of an adult education programme, Learned men from Sri Lanka and India, including Mahatma Gandhi, had once graced this Centre. The president of this Sabai was also the acknowledged leader of the people living in the village and Mr. Kandah held this office with due dignity and decorum
A short review of this kind cannot afford to miss Mr. Kandiah's role as a farmer. And the farmer in Jaffna society - the Kamakkaran - was comparable to the type or model referred to in the sacred kural. He was a man of independent means and therefore in no need of bowing before anyone else. He possessed a sense of human dignity and constituted the bedrock of Tamil democracy. And the Farmer's experience, which was also an extension of experience inherited, Constituted the agricultural science of the community. To this inherited experience as base, the science learnt at School and higher educational institutions was grafted to lend Jaffna's agriculture the prestige it had earned in the country. Mr. Kandiah won his Colours in this area of attainment as well.
To the Northerner, its the family more than the individual that matters. He is obsessed with the genetic factor - the "pedigree' or 'stock', to revert to terms in common parlance. Mr Kandiah's was ' 'Pariyariyar Kudumbam', the traditional practitioners of the Science of Siddha Medicine, He, however never took to this vocation. But he carried with him the acquisition of traditional learning and the qualities of Leader ship that lent reputation to members of this clan. In passing however, it may be of interest to note that there is, among his educated and cultured children, a Lady who is now a Member of the Royal College of Physicians (MRCP). Could it be genetics in operation or it is the karmic law that a dedicated teacher is blessed with educated children.
A final few words on the fate of the village as the outcome of the current on - going civil war. What was once a prosperous and thickly populated village that earned the envy of the rest in the Notrhern region is now almost desert. d. The large and beautiful houses, the schools, the temples, the farms, cattle and fishing craft all lie in a state of negligence The people sought refugee in other parts of the country in the fervant hope that they could safely return one day.

Mr, Kandiah and his family too sought refugee in far away Negombo. As the funeral pyre was lighted and his mortal remains went aflame, once thoughts moved to reflect upon the fete of a proud Community and Civilisation it had inherited from its fore - fathers. As the sons went through the final rituals at the cemetry, friends, and relations stood by in absdute silence. Was it gloom borne of helplessness or were they opting to take a firm resolve to return to the land of their ancestors - that's the question.
Dr. P. V. Ramakrishnan

Page 19
சமய உணர்ச்சி மிக்க பெருந்தகை
ஈழத்துச் சிதம்பரம் என பலராலும் போற்றப்படும் திருத்தலத்தினை தன்னகத்தே கொண்டு மிளிரும் காரைந கரில் தோன்றி வாழ்ந்து மறைந்த பல நன்மக்களில் அம ரர் எம். ஏ. கந்தையா அவர்கள் ஒர் தனிப் பண்புடைய வராக வாழ்ந்தவர் என்று கூறினால் மிகையாகாது. அம ரர் கந்தையா அவர்களை எனது சிறு பிராயத்திலேயிரு ந்து தெரிந்திருந்தும் அவருடன் நெருங்கிப் பழகும் வாய் ப்பு காரைநகர் சிவன் ஐயனார் இராஜகோபுரத் திருப் பணி வேலை நடைபெற்ற பொழுது கிடைக்கப் பெற்றது. திருப்பணி வேலைகள் நடைபெற்றகாலத்தில் திருப் பணிக்கு வேண்டிய பல நல்லாலோசனைகளை வழங்கிய துடன் அவ்வப்பொழுது நிதியுதவியினையும் செய்து எம் மையெல்லாம் உற்சாகப்படுத்திவந்த ஒர் உத்தமர் திரு. கந்தையா அவர்கள். சிவன்கோயில் திருப்பணிக்கு உதவிய துடன் மட்டும் நில்லாது வருடந்தோறும் பல அபிஷேகங் களையும் பூசைகளையும் தனது குடும்பத்தவரின் சார்பில் செய்து கோவில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியவர்.
காலரநகர் சிவன் கோவிலில் 1988 மார்ச் 21ம் திகதி நடந்த திருட்டினைத் தொடர்ந்து நடைபெறவேண்டிய பிராயச் சித்த (அந்தரீத கும்பாபிஷேகம்) அபிசேகம் நடை பெறுவதனை சில விஷமிகள் தடுத்து நிறுத்திய பொழுது ஆதீனகர்த்தாக்களுடனும் திருப்பணிச் சபையாருடனும் சேர்ந்து பிர்ாயச் சித்த அபிஷேகத்தினை வெற்றிகரமாக நடத்தி கோவிலின் நித்திய பூசை தொடர்ந்து நடை பெறுவதற்கு மிகவும் ஒத்தாசைகளை வழங்கியதை அவரின் இந்த நினைவுச் செய்தியில் கூறுவது மிகவும் பொருத்தம் ஆனது.
அமரர் கந்தையா அவர்களின் மறைவால் வாடும் அவர்தம் குடும்பத்தவர்கட்கு எனது சார்பிலும் காரைநகர் சிவன் கோவில் திருப்பணிச் சபையார் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
சரணம் ஐயப்பா
வே. செல்வநாயகம் செயலாளர் காரைநகர் சிவன்கோவில் திருப்பணிச்சபை

இனிய இதயத்திற்கு உளமார்ந்த அஞ்சலி
ஈழத்தீவின் யாழ்ப்பாண மண்ணின் புண்ணிய தலங்க னில் தலைநிமிர்ந்து நிற்பது ஈழத்துச் சிதம்பரம் எனப் புண்ணியப் பெயர் பூண்ட காரைநகராகும்.
தமிழையும் சைவத்தையும் காலங் காலமாகப் பேணிப் பாதுகாத்த பெருங் குடும்பங்களை காரைமாதா உருவாக் கினாள். அக்குடும்பங்களில் இருந்து தோன்றிய அறிஞர் பெருமக்கள் தமது அறிவையும் ஆற்றலையும் தாய் மொழிக்காகவும் இறை பணிக்காகவும் அர்ப்பணித்து வந்துள்ளனர்.
அமரர் ஆசிரியர் எம். ஏ. கந்தையா அவர்களுடன் பல ஆண்டுகள் அன்பு பூண்டு பழகியுள்ளேன். அவர்கள் 'பழைய” ஆசிரியப் பரம்பரையைச் சேர்ந்தவர். அவர்களு டைய நிறை அறிவு ஆழ்ந்த அடக்கத்தைக் கொண்டது. அங்கே சலசலப்பில்லை, வெறும் வேடங்கள் போலித் தன்மைகள் இல்லை. அப்படியான பரம்பரையைச் சேர்ந்த ஆசிரியர்கள் வளர்த்த கல்வி மரங்களே இன்றும் இறவாமல் நிலவுகின்றன. அந்த அரிய பரம்பரையும் ஐயா அவர்களை போன்றவர்களின் இழப்புடன் அழிந்தொழிகின்றது. ஐயோ தமிழே! சிவமே!!
ஆசிரியப் பெருந்தகை அவர்கள் தனது தாய் மண்ணின் சகல சமூகத் தொண்டுகளிலும் தனது சேவை முத்திரை யைப் பதித்தவர். மணிவாசகர் சபை, சைவ மகாசபை போன்ற சபைகளின் வரலாறுகளில் அவரது சேவையும் பல அத்தியாயங்களில் நிச்சயமாக இடம் பிடிக்கும்.
ஐயா அவர்களின் குடும்பம் அறிவு நிரம்பியது. அமைதி யும் அன்பும் நிறைந்தது அவரது மனைவியாரையும் பிள்ளை களையும் நன்கறிவேன். அவர்களும் அமரரின் அன்பு வழி நடத்தலில் சிறந்து நின்றவர்கள். நிற்பவர்கள்.
ஆசிரியப் பெருந்தகையுடன் உறவு கொள்ள இறைவன் அளித்தவரத்திற்கு நன்றி கூறி அவரின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திப்பதே மனிதராகிய நாம் செய்யக்கூடியது.
எஸ். ஏ. ஈ. ஏகநாதன் சிவானந்த நிகேதன் காரைநகர்

Page 20
எங்கள் குருநாதர் அமரர் ஆவார்
எங்கள் குருநாதர் எம். ஏ. கந்தையா அவர்களை நினைக்கும் பொழுது அவர் ஒருநடமாடும் சர்வகலாசாலை என்றே நான் எண்ணுகின்றேன். காரணம் அவர் ஒரு பல்துறை சார்ந்த விற்பன் னர். கலை, வர்த்தகம், விஞ்ஞானம் இத்துறைகளோடு சமயமும் கலந்த ஒரு அற்புதமான பொக்கிஷம் ஆவார்.
சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியில் பல்லாண்டு காலம் சேவை யாற்றி நம்மையெல்லாம் உயர் நிலைக்குக் கொண்டு வந்த உத்தமர் அவர். கல்வியில் ஊக்கம் தந்து கலைகளில் ஆர்வம் கொள்ளச் செய்தவர்.
நான் மேற்கூறிய கல்லூரியில் மாணவனாக இருந்த வேளையில் எங்கள் ஆசிரியர் பிரார்த்தனை மண்டபத்திற் பல சொற்பொழிவு களை நிகழ்த்துவார். ஏதோ ஆண்டவன் அளித்த சங்கீத ஞானத் தின் உதவியினால் அவர் பேச்சுக்கு நான் பாடுவதுண்டு. இந்த அடித்தளத்தை வைத்துக் கொண்டு அண்ணாமலை சென்று சங்கீதத் துறையில் பட்டம் பெறுவதற்கு உந்து சக்தியாக எங்கள் ஆசிரியர் அமரர் எம். ஏ. கந்தையா அவர்கள் விளங்கினாரென்றால் அஃது L+85Çıp60)(T'u 6öTipi.
சீரிய ஒழுக்கம் சைவ ஆசார வாழ்க்கை விருந்தோம்பும் பண்பு என்பவை அமரர் அவர்களிடத்தும், அன்னாரின் குடும்பத்தாரிடத் தும் நிரம்பியிருந்தன. தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத் தாற் காணப்படும்" என்கின்ற வள்ளுவப் பெருமானின் பொருள் பொதிந்த குறளைத் தமது வாழ்க்கையில் மெய்ப்பித்துக் காட்டியவர் அவர்.
மனையறம் மிக்க இல்லக்கிழத்தியை வாழ்க்கைத் துணைவியாகப் பெற்ற பாக்கியவான் உள்ளும் புறமும் தூய்மையான இல்லற வாழ்க்கை வாழ்ந்து இன்று வானுறையும் தெய்வமாகிவிட்ட எங்கள் ஆசானின் பிரிவு அன்னாரின் குடும்பத்துக்கு மாத்திரமன்றிக் கல்வி யுலகுக்கே பேரிழப்பாகும்.
மனிதருக்குள் மாணிக்கமெனப் போற்றத்தகும் எங்கள் ஆசானின் ஆத்மா திண்ணபுரத்து ஈசனது குஞ்சிதபாதங்களின் கீழ் சரணடையப் பிரார்த்திக்கின்றேன்.
ஓம் சாந்தி.
மாணவன் சங்கீதபூஷணம் வ. உருத்திரன் யாசுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி ஆசிரியர்

நிறை மனம் குளிர்ந்த ஞானி
நல்வளம் விளங்கும் காரைநகரிலே பண்பு யர்ந்த கல்வியும் கல்விகற்ற கவினுயர் குணமும், சான்றோர் சொல்வழி செயலும் தாங்கித் துதிதரு தொண்டனாய் செல்வனுமாகி வாழ்ந்தான் திருக்கந்தையாவாம் மேலோன்
★
பலகலை தோய்ந்த செம்மல் பக்தியில் பழுத்த நெஞ்சன் குலவுவேற் பயிரிக்கூடல் குமரனைப் பிள்ளையாக்கி நிலை , பிள்ளைத் தமிழ்யாப்பித்து நிறைமணம்குளிர்ந்தஞானி உலகுணர் கலைஞர் போற்றும் உத்தமன் கல்விச் சீமான்"
大
சுற்றத்தார் மனைவிமக்கள், தொடர்மருமக்கள் பேரர் மற்றுளோர் மனங்கலங்க, மழவிடை யோன்தாள் பெற்றான் முற்றுயர் பத்தர்கேணி முன்னவன், முருகன், மாரி
பற்றுயர் பணிக்குச் சென்றான் பாதத்தேன் பருகி வாழ்க.
அளவையூர்
அருட்கவி சீ. விநாசித்தம்பிப் புலவர்

Page 21
நாடு நலம் பெற நாமம் சொன்ன நற்தொண்டர் அமரர் கந்தையா
காரைநகர் பக்தர்கேணி எம். ஏ. கந்தையாவை தெரியாதவர்கள் யாரும் இல்லை எனலாம். ஏனெனில் கடந்த 1983 ஆண்டு நடந்த வன் செயலால் அமைதியிழந்த மக்களுக்காக முதன்முதலாக மணற்காடு மாரியம்மன் கோவிலிலும் மற்றும் அனைத்து கோவில்களிலும் நாடு நலம் பெற நாம பஜனையை உருவாக்கிய பெருந்த கையாளர் இன்று அவர் மறைந்தாலும் அவர் உருவாக்கிய நாம பஜனை தொடர்ந்து என்றென்றும் மாரியம்மன் கோவிலில் நடைபெற்று வருகிறது. பயிரிக்கூடல் சுப்பிரமணியசுவாமிக்கும் 'பிள்ளைத்தமிழ்" அச்சிட்டு வெளியிட்ட அப் பெரியார், முருகன் கோவிலுக்கும் நித்திய பூஜையும் நாமபஜனையும் நடக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் என்னிடம் ஒவ்வொரு மாதமும் பக்தர்கள் மூலம் தகவல் அனுப்புவார். எல்லா ஒழுங்குகளும் புதுவருடத்துடன் ஆரம்பம் செய்ய எண்ணிய வே ளயில் யாரும் அறியா வண்ணம் முருகன் பாதாரவிந்தத்தை சென்றடைந்து விட்டார்கள். அன்னாரின் மறைவு சைவாலய உலகிற்கு ஈடு செய்ய முடியாத ஒன்றாகும். பயிரிக்கூடல் முருகன் ஆலய தர்மகர்த்தாவாக இருந்த போதிலும் ஏனைய கோவில்களான ஈழத்துச் சிதம்பரம் சிவன் கோயில், மணற்காடு மாரியம்மன் கோவில், பத்தர் கேணி பிள்ளையார் கோவில் அரசடிகாடு கதிர்காம சுவாமி கோவில் இன்னும் அநேக கோவில்களில் வருடா வருடம் விழா எடுக்கும் சைவப்பெரியார் ஆவார். அவரை எல்லோரும் முன் கோபக்காரர் என்பர் ஆனால் ஒருநாள் கூட என்னிடம் சினம் காட்டாத சிறந்த பண்பாசிரியராக தான் என் கண்முன் திகழ்ந்தார். தனது இல்லத்திலும் சரி கோவில்களிலும் சரி என்னை ஒரு குரு வாகவோ பூசகராகவோ ஒரு மாதத்துக்கு முன்பாகவே ஏற்பாடு செய்து விடுவார். அப் பெரியாரின் ஆத்மா சாந்தியடைய என்றென் றும் மாரியம்மன் சன்னிதானத்திலும் ஈழத்துச் சிவன் சுந்தரேஸ் வரன் சன்னிதானத்திலும் அவர் தொடங்கி வைத்த நாமபஜனையை தொடர்வதே நாம் செய்யும் சிறந்த பணியாகும்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
நா. ஞானசம்பந்த குருக்கள் பிரதம குரு மாரியம்மன் கோவில், மணற்காடு
காரைநகர்

சைவப் பெரியார் திரு. எம். ஏ. கந்தையா
காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட இளைப்பா றிய ஆசிரியர் திரு. எம். ஏ. கந்தையா நீர்கொழும்பில் தனது மருமகனின் இல்லத்தில் 24-04 1994 இல் காலமான செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.
இப் பெரியார் ஈழத்துச் சிதம்பரத்துடன் பல வருட காலமாக நெருங்கிய தொடர்பு உடையவர். பல ஆண்டு களாக இக் கோவிலில் தைப்பூச திருவிழா உபயம், இவ் அன்பரால் செய்யப்பட்டு வந்தது எல்லோரும் அறிந்த விசயமாகும். கோவில் திருத்தொண்டு வேலைகளில் இவர் மிகவும் உதவி செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல வருடங்களாகக் கோவில் சம்பந்தப்பட்ட விசயங் களில் என்னுடன் வந்து ஆலோசிப்பார். அதனால் இவர் என்னுடைய நெருங்கிய நண்பரானார்.
அன்னாருடைய ஆத்மா சாந்தி அடைய செளந்தராம் பிகை சமேத சுந்தரேஸ்வரப் பெருமானை வேண்டிக் கொள்கிறேன்.
து. முருகேசு ஆதீன கர்த்தா, ஈழத்துச் சிதம்பரம், காரைநகர்.

Page 22
நினைவில் நிறைந்த ஆசிரியர்
நவீன கற்பித்தல் முறைகள் தொடர்பாக பெரிதாகப் பேசிக்கொள்ளும் இக்காலத்தில் அன்றைய மரபு முறையில் அமைந்த கற்பித்தலிலும், ஆசிரியத்தத்துவத்தின் சிறப்பு களுக்கு சான்றாக விளங்கியவர்களில் ஒருவர் திரு. M. A. கந்தையா. அன்னார் சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரியில் நீண்ட காலமாக ஆசிரியராகப் பணிபுரிந்து இளைப்பாறி னார். அவர் சேவையாற்றிய காலத்தில் நான் மாணவனாக இருந்ததை எண்ணிப் பெருமிதம் அடைகிறேன். மாணவர் களின் நலனில் அக்கறை கொண்டு விளங்கினார். அவர் கற்பித்த கணித பாடம் எல்லா மாணவர்களுக்கும் விரும்பிய ஒரு பாடமாக விளங்கியமைக்கு அவரின் கற்பித்தல் சிறப் புற்று இருந்திருத்தல் ஒரு காரணமாகும்.
'தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்படும்” என்ற குறளுக்கு ஏற்ப அவரின் பிள்ளைகள் எல்லோரும் வாழ்க்கையில் மிக உயர்ந்த தரத்தில் இருக்கின்றனர்.
திரு. கந்தையா அவர்கள் ஒரு ஆன்மீகவாதி. எப் பொழுதும் அவர் வசம் ஒரு பையில் திருநீறு இருப்பதைக் காணலாம். எல்லோருக்கும் எப்போதும் ஏதும் அறிவுரை வழங்கி வழிப்படுத்துவதில் ஆர்வம் உள்ளவர். வளர்ந்து வரும் இன்றைய நாகரீக உலகில் இருந்து மெல்ல மெல்ல மறைந்து கொண்டு போகும் மறக்க முடியாத ஒரு தலை முறையினரில் திரு. M. A. கந்தையா அவர்கள் உயர்ந்த இடத்தில் விளங்கினார் என்பது உறுதி. அன்னாரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதோடு அவரின் குடும்பத்தின ருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்கிறேன்.
Lu. SF6ðITGypsTTSFmt ஒய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் யாழ்ப்பாணம்

வளம் பல கண்ட பெருமகனார்
ஆண்டுகள் பல கழிந்த பின்னும் நெஞ்சில் நிறைந்து நிற்கும் அன்பரின் மறைவு நெஞ்சை நெகிழ்விக்கிறது. சைவமும் தமிழும் வளம் பெற வாழ்ந்த தொல்பதி காரை நகர். அருட்செல்வமும், பொருட்செல்வமும் ஒருங்கே எய்தி வாழ்பவர்கள் அவ்வூர் மக்கள்.
அறிவும் ஆற்றலும் பண்பும் படைத்த சான்றோர் பலர் வழிகாட்ட வாழ்ந்தவர்கள். அச்சான்றோர் வரிசை யில் முன்னிலையில் நின்று தொண்டாற்றிய பெருமகன் அமரர் எம். ஏ. கந்தையா அவர்கள். உருவத்தால் மட்டு மல்லாது உள்ளத்தாலும் மிக உயர்ந்தவர்.
முதல்முதல் காரைநகரில் சமயச் சொற்பொழிவு ஒன் றைச் செய்ய வாய்ப்பளித்த பெருமை அமரர் கந்தையா அவர்களுக்கே உரியது. காரைநகர் சைவமகா சபைக்கு என்னைக் கூட்டிச் சென்று பெருமைப்படுத்திய நினைவு என் நெஞ்சில் இன்றும் பசுமையாக இருக்கிறது.
காரைநகரில் நடந்த சமய, சமூக நிகழ்வுகளில் எல் லாம் அமரர் கந்தையா அவர்களின் பங்களிப்பு கணிசமா னது. ஆன்றடலமை, அதனால் பெற்ற அடக்கம், கூர்ந்த மதிவளம், அன்புகனியும் சொற்செல்வம் இவரை என்றும் நினைக்க வைக்கும் பண்புகளாம்.
வாழ்வாங்கு வாழ்ந்து, வளம் பல கண்ட பெருமக னார் கந்தையா அவர்கள் மாதொருபாகன் மலர்த்தாள் நீழல் இனிது உறைகின்றார். என்று திடமாக நம்பி சாந்தி கொள்வோமாக.
வாழ்க, வளர்க கந்தையனார் தமிழ்ப்பண்பு
க, சிவராமலிங்கம்
கந்தர்மடம், முன்னாள் பதில் அதிபர் யாழ்ப்பாணம். யாழ். இந்துக் கல்லூரி

Page 23
நேசத்தால் நிறைந்த நெஞ்சம்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த எங்கள் எல்லாரது அன்பிற்குரியவரான எம். ஏ. கந்தையா ஆசிரியர் அவர்கள் வானுறையும் தெய்வமாகி விட்டார். அவரது வாழ் வு தூய சைவத் தமிழ் வாழ்வு. நெடிதுயர்ந்த தோற்றம் நேசத்தால் நிறைந்த நெஞ்சம், எல்லாரையும் தம் அமை திப் பண்பினால் வசீகரிக்கும் சுபாவம், இவையே எமது பேராசான் அவர்களின் இயல்புகள்.
காரைநகர் கம்பன் கழக செயற்பாடுகளில் தானாகவே அக்கறையுடனும் முன்னின்றும் ஊக்கம் தந்து த மிழ் வளர்த்த சிறப்பை இப்போது எண்ணிப் பார்க்கிறேன்.
ஆல் போல் தழைத்த அறிவு நிறைந்த குடும்பத்தின் தலைமகன். வருவிருந்து காத்திருந்து, கற்றார் முன் கற்றது செலச் சொல்லி, குணமெனும் குன்றேறி நின்று, மங்கலம் என்ற மனைமாட்சியைப் பொலிவுற கண்டு வாழ்ந்த சான் றோர் அமரர் எம். ஏ. கந்தையா அவர்கள்.
அன்னாரது இழப்பு காரைநகர் மக்களுக்கு, ஏன்? சைவத் தமிழ் உலகிற்கே ஒர் பேரிழப்பாகும். ஆயினும் அந்த 'நேசத்தால் நிறைந்த நெஞ்சம்’ வானுலகில் இருந் தும் எம்மை நெறப்படுத்தும் என்ற நம்பிக்கையில் எம் வாழ்வை நெறிப்படுத்தி நிற்போமாக!
அப் பேராசானுக்கு எனது சார்பிலும் காரைநகர் கம்பன் கழகம் சார்பிலும் இதயபூர்வமான அமரத்துவ அஞ்சலிகளைச் செலுத்தி அமைகின்றேன்.
த. சிவகுமாரன் ஆசிரியர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (அமைப்பாளர், காரைநகர் கம்பன் கழகம்)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த சீலன்
அமரர் எம். ஏ. கந்தையா அவர்களை அறியாதார் இலர். ஆசிரிய உலகிற்கு ஒர் முன்னுதாரணமாகத் திகழ்ந் தவர். சைவ ஆசாரங்களைக் கடைப்பிடித்தது மட்டுமல்ல சைவ உலகிற்கு முன்மாதிரியாகவும், சைவத்தையும் தமி ழையும் ஏற்றிப் போற்றி வந்த பெரியார். காரை நகர் சைவமகா சபையின் தலைவராகப் பதவியேற்று ஆற்றிய சேவையை சைவ உலகு ஏற்றிப் போற்றி வருதல் கண்கூடு.
சமயப்பணி, சமூகப்பணி இரண்டினையும் தன் இருகண் போலப் போற்றியதுடன் குடும்பக் கடமைகளையும் முட் டின்றி நிறைவு செய்த பெரியார். இவரின் தமிழ், ஆங்கில புலமையை மற்றோர்க்கும் வழங்கிய பெருந்தகையர்
“நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகை என்ப வாய்மைக் குடிக்கு” என்பதற்கு ஏற்ப வாழ்ந்த செம்மல் வெள்ளை வேட்டி, வெண்ணிற மேற் சட்டை கழுத்தை சுற்றிய மடிப்புச் சால்வை நிமிர்ந்த நடை. அடக்கமான பண்பு, அறிவொழுக்கம், முகமலர்வு தனித்தோற்றத்தை அன்னார்க்கு மேன்மை ஊட்டியது.
அத்தகைய பெரியார் நம்புறக் கண்ணில் மறைந்தா லும் ஒவ்வொருவர் அகக் கண்ணிலும் நிறைந்துள்ளார் என்பதில் ஐயமில்லை. அன்னார் சிவகாமி சமேத சிதம்பர நடராஜர் சேவடிக்குள் சென்றுறைவார் என்பதில் ஐய மில்லை.
அன்னாரது ஆத்மா சாந்தியடைவதாக ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
ந. பரமசிவம்
அதிபர், யாழ்ற்ரன் கல்லூரிகாரைநகர்,

Page 24
ஆசிரியர்திலகம் அமரர் எம். ஏ. கந்தையா
விக்ரோறியா அன்னையின் எழுச்சிக்கு அரும்பணியாற் றிய பெருமக்களில் மறைந்த ஆசிரியப் பெருந்தகை எம். ஏ. கந்தையா அவர்கள் தலை சிறந்தவர் ஆவார்கள். 1950ம் ஆண்டு முதல் 1970 வரையில் யா/விக்ரோறியாக் கல்லூரி யில் பணியாற்றிய காலத்தில் யாவரினாலும் மதிக்கப் பெற்ற நல்லாசானாகத் திகழ்ந்தார். கற்பிக்கும் ஆற்றல், இறைபக்தி, கடமையுணர்வு ஆகிய சிறந்த குணங்களால் சகலர்க்கும் முன்மாதிரியாக திகழ்ந்தார். சிறந்த கணக்கி யல் ஆசிரியராகவும், கணித, ஆங்கில ஆசிரியராக வும் கடமையாற்றிய பெரியார் சிறந்த மாணவ சமுகத்தை இக் கல்லூரியிலிருந்து உருவாக்கி அளித்துள்ளார்கள் எம். ஏ. கே என அன்புடன் அழைக்கப்பட்ட இவ்வாசிரியரை அவரிடம் கல்வி பயின்ற மாணவர்கள் என்றும் நினைவில் கொள்வர்.
அன்னாரின் மறைவினால் விக்ரோறியாக் கல்லூரி வேதனையடைகிறது. அன்னாரை இழந்து நிற்கும் குடும் பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்ப தோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய கல்லூரியில் எழுந்தருளியிருக்கும் சிவகாமி சமேத நடேசப் பெருமானை வேண்டுகிறோம்.
அதிபர், ஆசிரியர்கள்,
DIT GOÛT 6 IT 35 GMT பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம். விக்ரோறியா கல்லூரி, சுழிபுரம்

என் ஆசிரியர் பற்றி.
"தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலிற் றோன்றாமை நன்று' - தமிழ்மறை
புகழொடு தோன்றி புகழொடு வாழ்ந்து புகழுடம்பெய்திய என் ஆசிரியப் பெருந்தகை பற்றி நானறிந்தவை மிகச் சொற்பமே. எனி னும் இரண்டு வருடங்கள் அன்னாரிடம் கற்றுக்கொண்டவை மிக அதிகம். இன்று வரை ஏன் மரண பரியந்தம் நினைவில் நிற்பவை அவையே. 1940ம் ஆண்டு மட்டக்களப்பிற்கு ஒரு மத்திய மகாவித் தியாலயம் காத்தான்குடியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சூழலி அலுள்ள பாடசாலைகளிலிருந்தெல்லாம் ஆறாவது வகுப்பிற்கு மேற் பட்ட வகுப்புக்கள் யாவையும் இவ்வித்தியாலயத்தில் ஒன்று சேர்த்து இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. நான் 8ஆம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த வேளை என்னுடன் ஆரையம்பதியைச் சேர்ந்த தமிழ் மாணாக்கர்களும் காத்தான்குடி, மருதமுனைன ஆகிய இடங்களைச் சேர்ந்த முஸ்லீம் மாணாக்கர்களும் ஒன்றாகவே கல்வி கற்றனர்.
1942ல் சிரேட்ட தராதரப் பத்திரப் பரீட்சை எடுத்து அதில்
சித்தியடைந்தேன். என்னுடன் படித்த பலரும் சித்தியடைந்தனர் அவர்களுள் பலர் அதிபர்களாகச் சிறப்பான பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளனர். அவ்வாறே அடியேனும் முதலாந்தர அதிபராகப் பணியாற்றி சேவை நலன் பாராட்டு விழாவில் 'ஆசிரியர் சிரோமணி' எனப் பாராட்டப் பெற்று ஓய்வு பெற்றுள்ளேன்.
எனது பாடசாலை வாழ்க்கையில் பல ஆசிரியர்களைச் சந்தித் தும், கல்வி கற்றுமுள்ளேன். அவர்களுள் பலர் மனதுள் மறைந்து விட்டனர். பலரை மறந்து விட்டேன். ஆனால் என்னுள் நிலை யான இடம் பெற்ற ஆசிரியப் பெருந்தகை, எனது ஆதர்ச குரு, என்றும் அன்பகலாத ஞான சிரோமணி அமரர் எம். ஏ. கந்தையா அவர்களே. எனது முன்னேற்றத்திற்கு அவரே வழிகாட்டி அவர் துரோணர். நான் ஏகலைவன் அவர் காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயத்தில் கடமையாற்றிய பின்னர் மற்றுமொரு மத்திய வித்தியாலயத்திற்கு வந்தாறுமூலையில் அடிகோலிய பெருமைக்குரிய வராவர். வந்தாறுமூலையிலிருந்து சென்ற பின்னர், அவரைப் பற்றிய செய்திகள் எனக்குக் கிடைக்கவில்லை.
சுமார் அரை நூற்றாண்டு காலம் கடந்த பின்னர் அவருடைய முகவரி கிடைக்கப் பெற்றது. அவர் எனக்களித்த மனைவி, மூத்த மகள் (ஒருவயது) இருவருடன் சேர்ந்த புகைப்படம் என்னிடம்

Page 25
இன்றுமுள்ளது. என்னை அடையாளம் காட்டுவதற்காக அப்புகைப் படத்தின் புகைப்படப் பிரதியுடன் ஒரு கடிதம் அனுப்பினேன். அதற்கு அவரிடமிருந்து பதில் கிடைக்கப் பெற்றமை என்னுள் என்றுமே நினைவில் நிலைத்து நிற்குமொரு சம்பவமெனலாம் : பின்னர் அவரை நீர் கொழும்பு இல்லத்தில் சந்தித்தது அவரை வீழ்ந்து வணங்கியது அறுசுவை உண்டி உண்டது. எல்லாம் அன்று போல் இன்றும் என்றும் மனதினின்றும் நீங்காதவை.
அமரர் எம். ஏ. கந்தையா அவர்களின் உடல் நிலையை அடிக்கடி தொலைபேசி மூலம் அறிந்து கொள்வேன். அன்றும் அவ்வாறு தொலைபேசித் தொடர்பு கொண்ட போது அன்னவரின் உடல்நிலை சீரற்று விட்டமையை அறிந்து மிகமிக வருந்தினேனாயி னும் நேரில் சமூகமளிக்க இயலாத நிலை எனது வீட்டிலும் உருப் பெற்றது. அதன் காரணமாக அமரரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்ள முடியாத அசக்தனாகி விட்டேன். என்னே விதி மிகவும் கொடியது. துன்பமயமானது.
அவரைப் பற்றி எழுத்தில் வடிக்கவொண்ணாது. அவரை அனு பவத்தில் அனுபவித்தவர்கள் அவரை அறிந்தவர்களேயாவர். "அவ ரின் ஆன்மா என்றென்றும் நித்திய இன்பம் பெறுக" எனக் கூறு வதைத் தவிர வேறு வார்த்தைகள் என்னிடம் இல்லை.
அன்பு மறவாத மாணவன்
ஆசிரியர் சிரோமணி த. செல்வநாயகம்
37. திசவீரசிங்கம் சதுக்கம், எல்லை வீதி, மட்டக்களப்பு. l 0 - 05 - 94.
 

சொர்க்கத்தில் இடம் பிடிக்க சொந்தங்களை விட்டகன்ற
அண்ணலுக்கோர் அஞ்சலி
சொர்க்கத்தில் இடம் பிடிக்க சொந்தங்களை மறந்து சென்றீர் சந்ததம் கண்ட அன்பாலே சாந்தியின்றித் தவிக்கின்றோம்
ஆறொடு மூன்று செல்வம் ஆதரிக்க வாழ்ந்த செம்மல் , ஆறாகக் கண்ணிர் வடிக்க ஆகாயம் சேர்ந்தனையோ
நெடு மரமாய் நிமிர்ந்து நின்றீர் நீறுடன் நெற்றி கொண்டீர் நீங்காச் சம்மந்தியாய் மகள் தந்தீர் - இன்று நீங்கிச் சென்றெமைத் துடிக்க வைத்ததேனோ
தந்தைவழி சொந்த மென அன்னை உரைத்திடுவாள் - எம் தந்தையவர் மாணாக்கன் என்றும் புகழ்ந்திடுவாள் கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கோடுதல் சிறப்பென்று சம்மந்தி ஆக்கினரோ
வாசலிலே வருமுன்னே வாயார வரவேற்பீர் வண்ணமொழி பேசுமுன்னே வாரீவழங்கிடுவீர் வதங்கி நிற்கும் சைவமும் தமிழும் கண்டு வழியில்லை அதன் துயர் தீர்க்க
எம். ஏ. அப்பாவெனும் அன்பு மொழியை இனி என்று அழைப்போம் என ஏங்கித் தவிக்கின்றோம் கன்றுகளாய்க் கதறியழ கலந்தனையோ காற்றினிலே கண்ணுறக்கம் கொள்ளாமல் கலங்கித் தவிக்கின்றோம்
காலத்தின் கோலமது இடையினிலே பிரித்தாலும் பாசத்தின் கோலமது சேர்த்ததுவோ இறுதியிலே நேசத்தை மறக்கலாமோ நெஞ்சிருக்கும் வரையினிலே நாம் பூசித்த சுந்தரனின் சுகம் நாடிச் சென்றனையோ?
அமரர் திரு. திருமதி. வீ. வேலுப்பிள்ளை
(உபாத்தியாயர்) குடும்பத்தினர் சிதம்பராமூர்த்தி கேணியடி, காரைநகர்.
:

Page 26
வாழ்வாங்கு வாழ்ந்த சைவப் பெரியார் அமரர் உயர்திரு எம். ஏ. கந்தையா
* எல்லோரும் இன்புற்றிருக்க
நினைப்பதுவேயல்லாமல்
வேறொன்றறியேன் பராபரமே'
நிறைந்த வாழ்வு, பரிபூரண இறைபக்தி, அன்பு கொண்ட
உள்ளம், இறக்க சுபாவம், தொண்டு செய்யும் மனப்பான்மை எல் லோரும் இன்புற்றிருக்க வேண்டுமென்ற உயர்ந்த சிந்தனை யாவும் முழுமையாக உருப்பெற்ற சைவபெரியார் அமரர் உயர்திரு எம்.ஏ. சுந்தையா அவர்கள் இன்று பூதவுடம்புடன் எம்மத்தியில் நடமாட வில்லை. அன்னார் மங்காப் புகழுடன் மரணமில்லாப் பெருவாழ்வு பெற்று ஈழத்துச் சிதம்பரம் செளந்தராம்பிகை சமேத சுந்தரேசப் பெருமானின் பெருங்கருணையுடனும், மணற்காடு முத்துமாரியம்பா ளின் அருளாசியுடனும், பயிரிக்கூடல் சுப்பிரமணிய சுவாமிகளின் திருப்பொற்பாதங்களில் ஐக்கியமாகி சங்கமாயியுள்ளார். புண்ணிய சீலர் சைவ பெரியார் அமரர். எம். ஏ. கந்தையா அவர்களின் புகழ் பாடித் துதிப்போம்.
' வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்.
தெய்வத்துள் வைக்கப்படும்'
காரைநகர் புனித மண்வாசனை தனிப்பெருமையும் மகத் துவமும் வாய்ந்தது காரை மாதா பல புகழ்மிக்க சைவ சமயப் பெரியார்களையும் கல்விமான்களையும், பலதரப்பட்ட விற்பன்னர்க ளையும் உருவாக்கி கீர்த்திப்பெற்றுள்ளது. இந்த வரிசையில் அமரர் எம். ஏ. கந்தையா அவர்கள் சிறந்த கல்விமானாகவும், சைவப் பெரி யாராகவும் காட்சியளிக்கின்றார்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்றபடி தமிழிலே மிகவும் பாண்டித்தியம் பெற்று மிக நீண்ட காலம் ஆசிரியப் பெருந்தகையாக மாணவ மணிகளுக்கு தமிழையும் சைவத்தையும் ஊட்டினார். பல கல்லூரிகளில் கற்பித் துள்ள ஆசிரியப் பெருந்தகை சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியில் தனி முத்திரை பதித்துள்ளார். இன்றும் சுழிபுரம் வாழ் மக்கள், அவரது சேவையை போற்றி கெளரவித்து வருகின்றார்கள். இரா ணுவ நடவடிக்கை காரணமாக காரைநகர் மக்கள் புலம் பெயர்ந்த போது அவர்களை ஆதரித்து புகலிடம் கொடுத்தும் சைவப் பெரியா ரின் பெயர் சொல்லி புகழ்ந்துள்ளார்கள்.
சைவப் பெரியார் அவர்களின் சமயப்பணி என்றுமே பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதொன்றாகும். அன்னார் நீண்டகாலமாக சைவமகா சபையில் தலைவராக பணிபுரிந்து ஆற்

றிய சேவை இன்றும் எங்கள் மனக்கண்களிலே ஆடிக்கொண்டிருக் கிறது. சமயகுரவர் குருபூசை, சமய விழாக்கள், சமயப் போட்டி வைபவங்கள் யாவற்றிலும் தலைமைதாங்கி நிகழ்த்திய பேருரைகள் யாவும் காலத்தால் மறக்க முடியாத கருவூலங்களாகும். எங்களுக் கெல்லாம் வழிகாட்டியாக, உந்து கோலாக அமைந்து பேரொலி யாக விளங்கியவர் சைவப்பெரியார் அவர்கள். காரைநகர் மணிவாச கர் சபையின் வளர்ச்சியில் மிகவும் ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து ஈழத்துச் சிதம்பரத்தில் மார்கழி திருவாதிரையில் நடைபெறும் மணிவாசகர் விழாவிற்கு பல்வேறு உதவிகளையும் புரிந்துள்ளார். காரைநகர் மாணவர்களுக்கு நடைபெறும் சைவ சமயப் பரீட்சையி லும், பரிசளிப்பு விழாவிலும், தமது பங்களிப்பை மனபூர்வ மா க ச் செய்து உற்சாகப்படுத்தியுள்ளார். அத்துடன் காரைநகர் மணிவாசக சபையினர் தவத்திரு ஆத்மஜோதி நா. முத்தையா அவர் க ளி ன் தலைமையில் நடாத்திய திருத்தல பாத யாத்திரையிலும் பங்கு பற்றி சிறப்பித்துள்ளார்கள். காரைநகர் மணிவாசகர்சபையும் சைவ மகாசபை போல் சிறப்புற நீடுழிகாலம் பணி செய்வதற்கு வாழ்த் து தெரிவித்து பிரார்த்தனை செய்துள்ளார்கள்.
காரைநகரில் அமைந்துள்ள கோவில்களுக்கு அன்னார் புரிந்துள்ள தொண்டும், பணிகளும் எண்ணிலடங்காதவை. பயிரிக்கூடல் சுப்பிர மணியப் பெருமான் மீது அவர் கொண்ட பக்தியினாலும் அன்பினா லும் பாடப்பட்ட பிள்ளைத் தமிழ்ப் பாடலும் எடுக்கப்பட்ட பெரு விழாவும் என்றுமே காலத்தால் மறக்கப்பட முடியாததாகும். மணற்காட்டு அருள்மிகு கும்பநாயகி அம்பாள் கோவிலுக்கு செய்த பணிகளும், தொண்டுகளும் அன்னாருக்கு நிறைந்த வாழ்வு கொடுத்து மரணமில்லா பெருவாழ்வு கொடுத்துள்ளது. ஈழத்துச் சிதம்பரம் நடராஜப் பெருமானின் திருவரூட்கடாட்சம் எப்பிறப்பும் அவருக்கு பரிபாலித்துள்ளது. لار
இன்று நாங்கள் சைவப் பெரியார் அமரர் உயர்திரு. எம். ஏ. கந்தையா அவர்களை இழந்து திகைத்து நிற்கின்றோம். அன்னாரது குடும்பத்தவர்களுக்கு ஆறுதல் மொழி பகருகின்றோம். சைவப் பெரியாருக்கு நாம் செய்யவேண்டிய கைமாறு. நாங்கள் எமது தாய் நாடாகிய காரை மாதாவை விட்டுப்பிரிந்து அல்லலுற்று அரற்றுகின்றோம், விரைவில் சமாதானமும் சாந்தியும் ஏற்பட்டு எமது தாய்நாட்டிற்குச் சென்று பெரியார்கள் செய்த பணிகளை உமீண்டும் தொடர்வதாகும்,
ஓம் சாந்தி. சாந்தி. சாந்தி
எஸ். ஆர். எஸ். தேவதாசன் முன்னாள் காரைநகர் கொத்தணி அதிபர் உதவிக் கல்விப் பணிப்பாளர் - சங்கானை

Page 27
அமரரான ஆசானுக்கு அன்பு அஞ்சலிகள்
எங்கள் அனைவரது மதிப்பிற்கும் போற்றுதலுக்கும் உரிய அமரர் M. A கந்தையா அவர்கள் காரைநகர் சைவ மகாசபையில் 1975 முதல் 85 வரை தலைவராக இருந்து அரும் பெரும் பணிகளை ஆற்றியவர். சிறந்த ஆன்மீகவாதி, சமூக சேவையாளர். எண்ணிய எண்ணியாங்கு முடிக்கும் வினை வல்லாளர். சிறந்த மனித நேயம் மிக்கவர்.
நான் முல்லைத்தீவு கச்சேரியில் பணிபுரிந்த காலத்தில் எம்மைத் தமது அன்பினால் ஈர்த்து காரைநகர் சைவ மகாசபையில் ஓர் நிரந் தர உறுப்பினன் ஆக்கிப் பின்பு செயலாளராகவும் பொருளாளராக வும் உயர்த்தி அகம் மகிழ்ந்தார். அவருடன் பணிபுரிந்த காலத்தில் அவ்வப்பொழுது எமக்கு வேண்டிய அறிவுரைகளைக் கூறியும் தம்முடன் இணைத்துக் கொண்ட பெரியவர் திரு. கந்தையா அவர்கள்.
யாழ் குடா நாட்டின் புகழ் பூத்த கல்லூரிகளில் ஒன்றான சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரியில் தமிழிலும் ஆங்கிலத்திலும் போதிக்கவல்ல ஒர் பயிற்றப்பட்ட நல்லாசிரியராக கடமையாற்றிய வர். செயல் திறம், நுண்ணறிவு, சொல்லாண்மை அனைத்து நற் பண்புகளையும் தன்னகத்தே கொண்டு அடக்கமாக பணி புரிந்தவர். தம்மிலும் மேம்பட்டவர்களையும் ஆற்றல் குறைந்தவர்களையும் தனது பண்பினால் அனுசரித்து அவர்கள் மனம் நோகாமல் கடமையாற்றினார்.
தாம் மேற்கொள்ளும் பணிகளிலே தெளிவு, நிதானம் அத்துடன் கூட மிகச் சிறந்த அணுகுமுறை இவருக்கே உரிய இயல்பான வரப்பிரசாதம். மேலும் ஆலயங்களிலும், சைவமகாசபையிலும் விர தம் அனுஷ்டித்தல், திருமுறை ஓதல், கூட்டுப் பிரார்த்தனை செய்தல் போன்ற நற்காரியங்களில் மேம்பாடுடையவர்.
* தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும் என்பதற்கமைய அவரின் சீரிய செயல்களையும் நற்பண்புகளையும் அவரின் பிள்ளைகளிலும், மனைவியிலும் காணக் கூடியதாகவிருக் கின்றது.
இப்படிப்பட்ட பெரியாரின் இழப்பு எமக்கும் அவரது குடும்பத் தவர்கட்கும் இழக்கப்படாததொன்றாகும். உத்தமனாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல எம்பெருமானை பிரார்த்திப்போமாக. - ஓம் சாந்தி -
முன்னைநாள் செயலாளர். 9. 8660 T68F60) U காரைநகர் சைவ மகா சபை. இளைப்பாறிய பிரதம லிகிதர்.கச்சேரி

நான் கண்டறிந்த மலை சரிந்து விட்டது
'ஒரு நல்லவன் 100 ஆண்டு வாழ்ந்தாலும்
இன்னும் எத்தனையோ 100 டேர் அவரால் வாழலாம்'
காரை மாதா பெற்றெடுத்த சைவப் பெரியார் வரிசையிலே தனியான ஒரு இடத்தை தழுவிக்கொண்ட பெருமைக்குரியவர் திரு. M. A. கந்தையா J. P. அவர்கள்
மாலை நேரம் கம்பீரமான ஒரு தோற்றம். தமிழருடைய தேசிய பாரம்பரியத்தை தழுவிய தூய வெண்மையான உடை அலங்காரம் அதற்கு மெருகூட்டியதாக நெற்றியிலே அழகிய விபூதி குறி மூன்று வாசனை பொருந்திய சந்தனப் பொட்டு கையிலே பாதுகாப்பான ஊன்று கோல் எத்தனை அலங்காரங்கள் எங்கே ஐயா செல்வது?
சைவ மகாசபையிலே ஒரு விழா? ஆசிரியர் M A. கந்தையா தலைமையில் நடைபெறும் என்ற வாசகம் பொருந்திய அறிக்கை? இது காந்தியைப் பற்றிய விழாவா? அல்லது பாரதிக்கு விழாவா? குறளை வகுத்த வள்ளுவனுக்கு விழாவா? அல்லது சமயத்தை கட்டி வளர்த்த நாயன்மாருக்கு நன்றி செலுத்தும் பூசை. அதுகும் இல்லை திருவாசகத்தை பற்றிய ஆய்வுரைகள். இது மட்டுமல்ல பல அறிஞர்களை, சைவப் பெரியார்களை, சிறந்த மேடைப் பேச்சாளர் களை எல்லாம் வரவழைத்து அதனாலே அவர்களை பார்ப்பதற்கு நல்ல பெறுபேறுகளை கேட்டு அறிவதற்கு எமது கிராம மக்களுக்கு நல்ல அறிவை சிந்தனையை வளர்ப்பதற்கு அன்னார் செய்த தொண்டை எவராலும் மறக்க முடியாது. இவர் காட்டிய சமயப் பற்றினாலே காரைநகர் சைவ மகாசபை தரம் உயர்ந்தது அதைக் கட்டி வளர்த்த பெருமை அன்னாரையே சாரும்.
சிறந்த கல்விமான் சைவப் பெரியார் என்றெல்லாம் ஏடும் நாடும் போற்றுகின்றதே. சிறந்த விவசாயி என்று அன்னாரை புகழ்ந்து அஞ்சலி சூட்டுகிறேன்
காரணம் அவர் விவசாயம் செய்கின்ற பூமியை தெய்வமாக மதித்து உரிய போதிய பசளை போட்டு சுபநேரத்திலே தானியம் போட்டு அறுவடை செய் யு ம் கா லம் சூ ரிய ப க வானுக்கு பொங்கலிட்டு, தொழிலாளருக்கு நிரம்பிய உணவு குறைவில்லாத சம்பளம் கொடுத்து அதனாலே கூடிய விளைச்சலைப் பெறுகின்ற ஒரு பெருமைக்குரிய கமக்காரர் என்று பலராலும் புகழ்ந்து பேசப் படுபவர். அன்னாரைப் பின்பற்றியே ஏனைய கமக்காரர்கள் தங்கள் கமத்தை செய்து கொள்கிறார்கள்.

Page 28
இவ்வளவு சிறப்புகள் பொருந்திய பெரியார் மிகவும் தெய்வ பக்தி கொண்டவர். ஆலய திருப்பணிகளுக்காக பெரும் பணத்தை வாரி வழங்குபவர். குறிப்பாக மணற்காடு முத்துமாரி அம்பாளுடைய திருப்பணிக்கு பெரும்பணத்தை கொடுத்து உதவி செய்து அங்கு நடைபெற்ற திருப்பணிகளை கண்டு மகிழ்ந்து பாராட்டிய ஒரு Guflutrri.
‘'தோன்றில் புகழுடன் தோன்றுக' வாசகத்திற்கு அமைய அன்னார் மண்ணுலக வாழ்க்கையை சிறப்புடனும் பெருமையோடும் இனிதே வாழ்ந்து விண்ணுலக வாழ்க்கையிலும் அதே சிறப்புடன் வாழ்ந்து கொள்வார் என்ற பெருமையுடன் எல்லாம் வல்ல காரையம் ப்தி மணற்காடு முத்துமாரி அம்பாளுடைய பாத கமலங்களை வணங்கி அன்னாருடைய ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.
T. K. LumravnT மணற்காடு முத்துமாரியம்மன் ஆலய அறங்காவலர்
திருப்பணிச்சபை உறுப்பினர் வாரிவளவு - காரைநகர்

ஆரவாரமின்றி அமைதியாக வாழ்ந்த
தொண்டர் கந்தையா அவர்கள்
உலகில் சிலர், சிறந்த கல்வியறிவுள்ளவர்களாக இருக்கின்றார்கள். ஆனால், அவர்களுட் பலர், வறுமை என்னும் நோயினால் பிணிக்க கப்பட்டுத் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். செல்வமுள்ளவர்கள் எல்லோரும் கல்வியறிவுள்ளவர்களாக இருப்பதில்லை. வேறு சிலர் கல்வியறிவும் செல்வச் சிறப்பும் உள்ளவர்களாக இருந்தும் அவர்க ளுட் பலரை எப்படிப் பார்ப்பதற்குக்கூட, புகழ் பின்னிற்கின்றது. மற்றுஞ் சிலருக்குக் கல்வி, செல்வம், புகழ், செல்வாக்கு என்பவற் றோடு கூடிய வாழ்க்கை வாய்க்கப் பெற்றிருப்பினும், அவர்கள் எல் லோரது வாழ்க்கையும் வளமாகவும் பூரணமாகவும் அமைவதில்லை. இவற்றையெல்லாம் நாம் நாடோறும் காண்கிறோம். எனவே, எல் லாச் சிறப்புகளுடனும் வாழுகின்ற பாக்கியம் ஒருசிலருக்குத்தான் உண்டு என்பது புலனாகின்றது. முற்பிறப்பிற் புண்ணியஞ் செய்த வர்களுக்கே அத்தகைய பாக்கியம் கிடைக்கப்பெறும். அப்புண்ணிய சீலர்களுள் ஒருவராக இருந்தவர்தாம் அண்மையில் அமரத்துவம் அடைந்த திரு. எம். ஏ. கந்தையா ஜே. பி. ஆவர்.
திரு. கந்தையா அவர்கள், சிறந்த கல்விமானாக விளங்கி, அரச பணியாற்றி, செல்வச் சிறப்புடன் திகழ்ந்து, புகழுடன் வாழ்ந்து, நன்மக்களைப் பெற்று, மக்களும் பேரப் பிள்ளைகளும் உயர் பதவி யிலிருக்கும் சிறப்பைக்கண்டு மகிழ்ச்சியடைந்து, தமது வாழ்க்கையை முழுநிறைவோடு முடித்துக்கொண்ட சைவப்பெரியார் ஆவர்.
சமூகத் தொண்டுகள் பலவற்றிற் கலந்துகொண்டு பல்வேறு நிறுவனங்களில் தலைவர், செயலாளர் முதலான முக்கிய பதவிகளை அலங்கரித்த பெருமையும் இவருக்கு உண்டு.
உதவிகோரி வருபவர் யாராக இருந்தாலும் இல்லையென்னாது தம்மாலான உதவிகளை விருப்புடன் செய்யும் மனப்பக்குவம் உடை யவர் அமரர் கந்தையா இவரை நினைக்கும்போது,
"நகையீகை இன்சொல் இகழாமை நான்கும் வகையென்ப வாய்மைக் குடிக்கு’’
என்ற திருக்குறள்தான் நினைவுக்கு வருகிறது.
எந்தக் கருமத்தையும் ஆரவாரமின்றி அமைதியாகச் செய்து, தம் பெருமை தாமறியாத் தலைவராக வாழ்ந்த அமரர் கந்தையா வின் உரைகள், காத்திரமானவையாயும் சிந்தனையைத் தூண்ட க்கூடியனவாயும் இருந்தன.

Page 29
**நல்லொழுக்கம் உடையவரே உண்மையான சமயவாதியாவர் அறிவு முழுமை பெறும்போது சமயம் தொடங்குகிறது. தூய்மை யற்ற உள்ளம், போலித்தனமான அறிவு ஆகியவற்றால் சமயத்தின் நோக்கைப் புரிந்துகொள்ள முடியாது' என்றார் சுவாமி சிவான ந்தர். இதனை நன்குணர்ந்து தமது வாழ்க்கையைச் சிறந்த முறை யில் அமைத்துக் கொண்டவர் அமரர் கந்தையா.
பழைமைக்கும் புதுமைக்கும் இணைப்புப் பாலமாக விளங்கிப் பலரை ஆற்றுப்படுத்திய பெருந்தகையாளராகிய ஆசிரியர் திரு. கந்தையா அவர்களின் மறைவினால் காரைநகரில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டு விட்டது.
அவரது ஆன்மா சாந்தியடைவதாக.
பிரம்மபூரீ. க. வைத்தீசுவரக் குருக்கள்
தமிழ் வளர்ச்சிக் கழகம், காரைநகர்
ఫ్రో
அம்மையே அப்பாவொப் பிலாமணியே
அன்பினில் விளைந்த வாரமுதே பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் றனக்குச் செம்மையே யாயசிவபத மளித்த
செல்வமே சிவபெருமானே இம்மையே யுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ திணியே.
- திருவாசகம்

அமரர் எம். ஏ. கந்தையா அவர்கள்
புண்ணிய வசத்தால் வாய்ந்த பொருள் வளமும் கண்ணியமாக ஈந்துதவும் அருள்வளமும் மிகுந்த நல்லோர் பலர்க் குறையுளாய்த் திகழ்வது யாழ். காரைநகர். மருத வளமும் நெய்தல் வளமுங் குன்றாத அந்நகரில் மரபுவழி வந்த வேளாண் குலதிலகராற் பேர் பெற்ற பத்தர்கேணிப் பகுதியில் தோன்றி விளங்கியவர் திரு எம். ஏ. கந்தையா ஆசிரியர் அவர்கள். பல்லாண்டுகளாகி நல்லாசிரியனாய்த் திகழ்ந்து தமிழீழத்துப் பலவேறு பகுதிகளில் பன்மாண் நலங்களும் வாய்ந்த நன்மாணாக்கர் பரம்பரை உருவாக வகை செய்தவர் உயர்ந்த தமிழ்ப்பற்றும் உண்மையான சைவப்பற்றும் மிக்கவராய்த் தமிழ் மன்றங்களும் சைவநிலையங்களும் தழைத்தோங்க உதவியவர். ஆரையுந் தகுதியறிந்து அரவணைத் தொழுகும் பண்பும் நண்பும் வாய்ந்தவர்.
அவர்தம் அருமை பெருமைகளைப் பலகால் கேட்டறிந்திருந்தும் ஒரு கால் மட்டும் அவரை நேரிற் கண்டு பழகும் வாய்ப்புற்றவனா னேன். மகிமைக்குரிய சிவபூனி. க. வைத்தீஸ்வரக் குருக்கள் அநுசர ணையில், திருக்கேதீச்சர மான்மியம் 2. பொற்பொளிர் காண்டப் பிரசுரத்துக்கு உதவி கோரி ஒரு தடவை சென்ற போது அவரது குலதெய்வமாகிய மாரியம்மன் கோயிலில் வைத்தே அவரைச் சந்தித் தேன். ஒரு நாளும் நேரிற் பயின்றறியாத என்னையும் பன்னாட் பழகிய பழங்கேண்மையாளன் போல அன்பாதரவாக வரவேற்றார். அதிஷ்டவசமாக அன்று கோயில் உற்சவ தினமாயுமிருந்தமையால் அன்றைய விசேட பூசை வைபவங்கவில் விருந்தினனாக என்னை மதித்தேற்று வழிபட வைத்து மகிழ்ந்தார். கோயிற் பிரசாதங்களும் வழங்குவித்து என்னை ஆசீர்வாதப் பேறுள்ளவனாக்கி மகிழ்வித்தார் வெகு அன்பாதரவாக என் குறையை விசாரித்துச் சிறிதுந் தயக்க மில்லாமலே மனங்குளிர பொருளுதவியுமீந்து, தமது தொடர்புள்ள பயிரிக்கூடல் சுப்பிரமணிய சுவாமி பேரில் தாம் ஆக்குவித்து வெளி யிட்ட பிள்ளைத் தமிழ்ப் பிரதியுமொன்று கையோடே எடுப்பித்து தவி மனமார வாழ்த்தி விடையளித்தார். பெருநன்றிப் பொறை யோடு மீண்டேன்.
இருப்பிடஞ் சேர்ந்து பிள்ளைத் தமிழ் நூலைப் பார்த்த போது அந் நூலுக்கு அவர் வழங்கியிருந்த விமர்சனம் என்னை முற்றாகக் கவ்விக் கொண்டது. அத்தகையது அவ்விமர்சனத்தில் தழும்பும் தமிழாழமும் அகலமும் இவர் தொடர்பைப் பேண வேண்டும். என் புத்தக அச்சு வேலை முடிந்ததும் அவருக்கே முதற் பிரதி கொண்டு சென்று கொடுத்துக் காணவேண்டும் என்றிருந்தேன். அவர் நல்ல கைராசிக்காரனும் கூட அவர் தொடக்கிவிட்ட நிதிப்பட்டியல் எப்

Page 30
படியோ விரைவில் நிறைவுற்றுப் புத்தகமும் வெளிவந்தாயிற் று. ஆனால் அதிக்கிரமித்து வந்த அரசபடைக்கெடுபிடியால் என் எண் ணங் கைகூடாதொழிந்தமை நெடுநாட்கவலையாகத் தொடர்ந்திரு க்கையில் சிலநாட்களின் முன் அவர் நீர்கொழும்பிலிருந்தவாறே நினைவுமலர்க்களாகி விட்டார் என்ற செய்தியைத் தினசரியொ ன்று செப்பக் கேட்டுத் திகைத்தேன். உலகநிலையாமையின் துடுக் குத்தனம் தலையிட்டு விட்டது.
இம்மையின் வாழ்நிலைப் பண்பே மறுமையினுந்துலங்கும் என் பர் மறுமையிலும் அவர் உயர் பண்பாளனாய்த்திகழ்தல் உறுதி ஆனால் என் மறுமையில் அவரை எய்தக் கிடைக்குமோ என்பதே ஏக்கம்.
சித்தாந்தகலாநிதி, பண்டிதர் வித்துவான் மு. கந்தையா 8. A.
பாணினைத் தூட்டுந் தாயினுஞ் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த
செல்வமே சிவபெரு மானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ திணியே.
திருவாசகம்
 

புகழ் பூத்த பெரியார்
அமரர் எம். ஏ. கந்தையா அவர்கள்
மனிதவாழ்வு என்பது பொருளிலும் போகத்திலும் மலர்வதன்று அது அருளிலும் ஆன்மீகத்திலும் மலர்வதாகும். இந்த உயர்நிலை ஒரு சிலருக்குத்தான் இவ்வுலகில் கிட்டுகிறது. \,
**நடலை வாழ்வு கொண்டென் செய்தீர் நாணிலீர்
சுடலை சேர்வது சொற்பிரமாணமே'
என்ற அப்பர் வாக்கை அடியொற்றி வாழ்பவர்களுக்கு இவ்வுலக வாழ்வு அமைதியைத் தருகிறது என்பது முற்றிலும் உண்மை. காரைநகர் எம் ஏ. கந்தையா அவர்கள் தனது வாழ்வு முழுவதை யும் தூய்மையாக்கித் தொண்டு வழியில் செலுத்தி நின்றவர். அவை பல கண்டவர், ஆசிரியப் பணியை அணிகலமாகக் கொண்டவர். சைவத்தையும், தமிழையும் இரு கண்களாகப் போற்றியவர்; சிவ தொண்டுக்குத் தன்னை அர்ப்பணித்தவர்; இத்தகையோரைப் பெற்றெடுத்ததால் காரைநகர் மண் பெருமையடைகிறது என்றால் அதில் மிகையொன்றுமில்லை.
அறிவுக்கும் ஆன்மீகத்துக்கும் முதன்மை கொடுத்த ஒரு சூழ் நிலையிலே காரைநகர்ப் பெருமக்களோடு நான் மிகவும் நெருங்கிப் பழகினேன் வாரத்தில் ஒரு நாளாவது எனது பயணம் பொன்னாலைப் பாலத்தைக் கடப்பதாக இருந்த ஒரு காலம் அங்கு கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அமரர் கந்தையாவின் தலைமை அதிகமாக இடம் பெறும். காரைநகர் மக்களின் உயர் பண்புகளுக்கு இவர் ஒரு எடுத்துக்காட்டாக விளங்கினார். உறுதியாகவும் தெளிவாகவும் பேசுவார். நல்லதையே சிந்தித்து நல்லதையே பேசி நல்லதையே செய்து நல்லவராக வாழ்ந்தவர் இவர். இதனாலே நன்மக்களை ஈன்றெடுத்த பெருமைக்கும் உரியவரானார்.
‘'நீ எதனை இவ்வுலகுக்கு வழங்குகிறாயோ
அதுவே உனக்குச் சொந்தமானது' என்றார் சுவாமி சிவானந்தர் எனவே தான் நல்லனவற்றை விதைத் து அறுவடை செய்ய நாம் பழகிக் கொள்ள வேண்டும். இதற்கெல்லாம் அமரரின் புகழ் பூத்த வாழ்வு எடுத்துக் காட்டாக அமைகிறது என்பதைக் கூறி இப்பெரியாரின் குடும்பத்தவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்து அமைகின்றேன்.
'ஓம் சாந்தி சாந்தி சாந்தி’
செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி J. P. தலைவர், துர்க்காதேவி தேவஸ்தானம் தெல்லிப்பளை.

Page 31
பண்புக்கு ஒருவர்
"நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்திற் பிறந்தார் வாய்ச்சொல்" -குறள் யுகதர்மங்களுள் கலியுகம் மிகப் பொல்லாதது. நல்லோர் நல்லது செய்ய இயலாது துன்புறுவர், மாட்சிமை குன்றும், பஞ்சம் பெருகும், சிவனை மதியார். இக்கால கட்டத்தில் நல்லவர்களாகவாழ நல்லகுடிப்பிறப்பும் நல்லார் இணக்கமும் அவசியம் அறிவொழுக்கம், நல்லடக்கம். சாந்தகுணம் பொதுநல விருப்பு, அடியார் பக்தி சிவனடியே சிந்திக்கும் திருவுளப் பாங்கு ஆகியன நற்குடிப் பிறந்தார்க் கண்ணே மட்டும் உண்டு என்பதற்கு அமரர் M. A. கந்தையா அவர்கள் தக்க சான்று.
'இந்தச் சரீரம் கிடைத்தது இறைவனை வணங்கி
முத்தியின்பம் பெறும் பொருட்டே' -நாவலர் என்ற நாவலர் வாக்கிற்கிணங்க மானிடப்பிறவி தானும் அரன் பணிக்கு என்ற வாக்கை வாழ்விலே கைக்கொண்டு ஒழுகியவர்.
நற்குடிப் பிறந்து, சுற்றந் தழுவும் பண்பினால் பாரிடை உயர் ந்து, அன்பினால் எல்லோர் உள்ளும்நிறைந்து, பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றாற் போல பயன்கருதாது பணிகள் பல புரிந்து தர்மம் ஒன்றையே நெஞ்சினில் நிறுத்தி தெய்வம் தொழுதலும். சீரியோர்ப் போற்றலும் குறைவறச் செய்த ஞான்றும் குடும்பம் என்ற பெரிய விருட்சத்தின் அடிமரம் ஆக நின்று, குடும்பப் பாரத்தைத் தாங்கி வாழ்வில் வெற்றி பெற்றவர்.
* தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்”* --குறள்
வயது முதிர்ந்த காலத்திலும், தள்ளாமை நிறைந்த நிலையிலும் ஆலய வழிபாட்டில், இப்படித்தான் வாழவேண்டும் என்ற தனது உயர்ந்த கொள்கையில் தவறவில்லை. ஆலயமணி ஓசை அரவ ணைக்க வாழ்ந்தவர். பத்தர்கேணிப் பிள்ளையார் கோவில், மணற் காட்டு முத்துமாரியம்மன் கோவில் அவர் காலை, மாலை, நண்பகல் எந்நேரமும் நடைபயிலும் இடங்கள். பூரீ சுப்பிரமணியசுவாமி கோவில் அவரது ஆத்மார்த்த தலம் அமைதியான நடை, தூய்மை யான உடை, கையில் கர்ப்பூரம் (பெட்டியுடன்) தீப்பெட்டி சகிதம் தள்ளாமை தள்ளவும், ஆசை முந்தித் தள்ள, மெல்ல, மெல்ல ஒவ்வொரு வாயிலிலும் கற்பூரம் கொளுத்தி வழிபட்டு வரும்காட்சி மனதில் இன்றும் பசுமையாக நிறைந்திருக்கின்றது தன் தவத்தால் உலகைச் செழிக்கச் செய்த புண்ணியவான், தவம் செய்வார் ஒருவரை இழந்து விட்டோம்.

அமரர் M. A. கந்தையா அவர்கள் ஒழுக்கசீலர் பக்திமான் மட்டுமல்ல சிறந்த கல்விமானும் ஆவார். ஆங்கிலத்திலும் தமிழிலும் புலமை மிக்கவர். சுருக்கெழுத்து, தட்டச்சுக்கலை அவருக்கு கைவந்த கலை. சிறந்த சமாதான நீதவான். ஆனால் இன்று அவர் நம் மத்தியில் இல்லை.
'இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு' -தமிழ்வேதம்
தெளிந்த உணர்வினையுடைய இலட்சியவாதியும், பரோபகாரி யும், கல்விமானும், ஞானவானும் ஆகிய அமரர் M. A. கந்தையா சிற்றம்பலத்தில் நடராஜப் பெருமானது குஞ்சித பாதத்தின் கீழ் இறுமாந்திருப்பாரென எண்ணி ஆறுதல் அடைவோம்.
அன்னாரது ஆத்மா சாந்தி அடைவதாக,
ஓம் சாந்தி!!! சாந்தி!!! சாந்தி!!!
பண்டிதை யோகலட்சுமி சோமசுந்தரம் B. A. Dip. in Ed.
பாரொடு விண்ணாய்ப் பரந்தவெம் பரனே
பற்றுநான் மற்றிலேன் கண்டாய் சீரொடு பொலிவாய் சிவபுரத்தரசே திருப்பெருந் துறையுறை சிவனே ஆரொடுநோகே னார்க்கெடுத் துரைக்கே
னாண்டநீ யருளிலை யானால் வார்கட லுலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருகவென் றருள்புரி யாயே.
- திருவாசகம்
கொழும்பு தமிழ்ச் சங்கம்
நூலகம்

Page 32
நெஞ்சில் நிறைந்த நேர்மையாளன்
அமரர் திரு. எம். ஏ. கந்தையா அவர்களின் இழப்பு காரைநகர் மக்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பெரியதொரு இழப்பாகும். மரணம் என்பது மனிதருக்கு நிச்சயம் தான், ஆனால் அது சில வேளைகளில் ஜீரணிக்க முடியாததாகி விடுகிறது திருவாளர் எம்.ஏ. கந்தையாஅவர் கள் தன்னுடைய ஆசிரியர் சேவையில் இருந்து தமிழ் மணி தசமுதாயத்தில் எத்தனையோ மாணவர்களுக்கு கல்வியை ஊட்டினார். ஒரு தீபத்தைக் கொண்டு பல தீபங்களை ஏற்றி வைக்கமுடிவதுபோல் இவரால் அறிவொளி பெற்றவர் கள் பலர். இத்தோடு நில்லாது சமூகசேவையிலும் கோயில் தொண்டிலும் தன்னை இணைத்துக்கொண்டவர்.இவர் சமு தாயதிற்கு ஆற்றியதொண்டுகள் பற்பல. அன்னார் கடமை யுணர்சியும் பிறருக்கு உதவும் மனப்பாங்கும் கொண்டவர். சுறுசுறுப்பு மிக்க அவர் எக்காரியத்தையும் மனத்துணிவுடன் நேர்மையான முறையில் செய்து முடிக்கும் ஆற்றல் உடை யவர். பிறருடன் உள்ளன்புடன் பழகும் பண்புடையவர். அன்னாருடைய இழப்பு அவர்களின் குடும்பத்தினருக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அன்னாரின் இழப்பால் துயருறும் அவரின் மனைவி மக்கள் உற்றாருக்கு இறைவன் அமைதியை கொடுத்து அன்னாரின் ஆன்மா சாந்தியுற்று நல்நிலையை அடைய இறைவனை இறைஞ்சுவோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தி. செல்வராஜா 12/3, வைமன் வீதி, இளைப்பாறிய அதிபர் நல்லூர், யாழ்ப்பாணம். யாழ்ரன் கல்லூரி கனிஸ்ட பிரிவு
女

அன்பே வடிவான ஆசிரியப் பெருந்தகை
காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்டு சைவ ஆசார சீலங்க ளில் ஒன்றித்துத் தமிழுக்கும் சைவத்திற்கும் அரும் பெருந் தொண் டாற்றிய ஆசிரியப் பெருந்தகையே அமரத்துவம் பெற்ற கந்தையா ஆசிரியர் அவர்கள். நாமத்திற்குப் முன்னாலே எம். ஏ. எனும் சொற் பட்டம். யாவரும் எம். ஏ. கே எனச் சிறப்புற எம் குருவை அழைப்
சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி மாதாவினை அலங்கரிக்க வந்தமை ந்த அறிவுக் கொழுந்தே எம் ஆசிரியர். அன்புக்கு இருப்பிடமாய்ப் பண்பிற்கு உறைவிடமாய் அறிவுக்குச் சுடரொளியாய் சைவாசாரங் களுக்குக் கலங்கரையாய்த் துலங்கியவர் எம்மாசான். "எழுத்தறி வித்தவன் இறைவன் ஆவான்’ எனும் நல்வாக்கிற்கு அமைய, எம் போன்ற பல மாணவச் செல்வங்களை உருவாக்கிய ஏந்தலே, எங்கள் எம். ஏ. கே. சங்கங்கள் பலவற்றில் அங்கங்கள் பெறவைத்து, எமது யர்ச்சிக்குப் பாடுபட்டவர் என்பதை விக்ரோறியாக் கல்லூரி மாதா என்றும் மறக்கமாட்டாள்
அன்பின் ஆசிரியர் இளைப்பாறிய பின்பும் சைவமகாசபை சைவ நெறிச்சங்கம் கோயில் நிர்வாகங்கள் பலவற்றில் ஈடுபாடு கொண்டு தொண்டாற்றினார் அடியேனையும் அழைத்துப் பல சங்கீத கதாப் பிரசங்கங்களை யான் நடாத்த ஆவன செய்ததோடு, உற்சாகமும் ஊக் கமும் நல்கினார் தன் மாணவன் நன்றாகப் பேசுகின்றான் என்று புன் சிரிப்புடன் என் முதுகைத் தடவிக் கொடுத்துப் பாராட்டிய அந்த நாள் ஞாபகம் நெஞ்சினுள் இப்பொழுதும் அடியேனுக்கு வருகின்றது.
தானும் உயர்ந்து தம் சமுதாயத்தையும் உயர்த்திய ஆசிரிய சீலர் தன் பெற்ற பிள்ளைகளையும் நல் நிலையில் வைத்துள்ளார் தள்ளாத வயதிலும் லண்டன் மாநகர்க்குச் சென்றுதன் பிள்ளைகள் பேரப்பிளளைகளுடன் குதூகலித்தார். இன்னும் எத்தனையோ ஆண் டுகள் வாழவேண்டிய நம் ஆசான் அமரத்துவம் பெற்றதை பத்திரிகை மூலம் அறிந்து கவலையில் மூழ்கினேன் நேரடியாகப் பங்குபற்ற முடியாமையையிட்டு மனம் வாடினேன் பிறவிப் பெருங்கட லை த் தாண்டலாம். ஆனால் தாண்டிக்குளத்தை தாண்டுவது இதிலும் கடினம் என நினைத்து இங்கிருந்தே இறைவனை இறைஞ்சினேன்.
ஆசிரியர் அவர்களது இழப்பு எமக்குப் பேரிழப்பு சைவவுலகிற்குத் தனியிழப்பு. என் செய்வது? என் குருநாதராகிய திருமுருக கிருபா னந்த வாரியார் சுவாமிகள் கூறியது போல

Page 33
"அவனே படைத்தான்
அவனே அழைத்தான்'
என ஆறுதல் கொள்வதே சால்புடைத்து. நம் ஆசானின் ஆத்மா சாந்திபெற என் குல தெய்வமாகிய சுழிபுரம் பறாளை முருகனை வந்திக்கிறேன். சிந்திக்கிறேன்.
ஓம் சாந்தி சாந்தி!! சாந்தி!!!
இங்ங்ணம் அன்புள்ள மாணவன் பிரசங்கபூஷணம், இசைப்பேருரைச் செம்மல், கதாகாலேட்ஷப வாரிதி சுழிபுரம் நடேசன் சிவசண்முகமூர்த்தி B, A, தொல்புரம் கிழக்கு, (ஆசிரிய அறிவுரையாளர் சுழிபுரம். கல்வி வலயம் யாழ்ப்பாணம் 2)
திருநாமமஞ் செழுத்தும் செப்பாராகில்
தீவண்ணர் திறமொருகாற் பேசாரா கில்
ஒருக்காலுந் திருக்கோயில் சூழாராகில்
உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணாராகில்
அருள்நோய்கள்கெட வெண்ணீ றணியாராகில் அளியற்றார் பிறந்தவாறேதோ வென்னில்
பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ்செத்துப்
பிறப்பதற்கே தொழிலாகி யிருக்கின்றாரே,
திருத்தாண்டிகம்

அவரின் ஆத்மா சாந்தியட்ையட்டும்
**எம். ஏ. கந்தையா மாஸ்டர்’ என்று அனைவராலும் அழை க்கப்படும் முருகேசு ஆறுமுகம் கந்தையா அமரத்துவம் அடைந்து 31ம் நாள் ஆகிய இன்று அவரின் அந்தியேட்டியும். சபீண்டிகரணக் கிரியைகளும் நடைபெறுகின்றன.
*வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்'
என்னும் குறளுக்கிணங்க வாழ்ந்து வழிகாட்டியவர் gjuDrri N1. A கந்தையா அவர்கள். அவர்களின் அழிகின்ற உடல் அழிந்துவிட்டது ஆனால் அவர்களின் அழியாத படைப்புகள் எம்மோடுள்ளனவே. தூய வெண்ணிற ஆண்ட, சைவ அனுட்டானம் செய்து திரிபுண்டரீ கமாகத் தரித்த திருநீற்றுப் பூச்சு மென்மையான பேச்சு, ஆறுதலான நடை எம் கண்களை விட்டு அகலாது வந்தாரை உபசரித்தல் பழை மையைப் பேணுதல் ஆகிய பண்புகளை இரு கண்களாகக் கொண்ட செம்மல்.
வாழ்க்கையில் தன் குடும்பப் பொறுப்புக்கள் கூடக் கூட சலி யாது அதையெல்லாம் தாங்கி வெற்றி கண்டவர் மக்கள் எல்லோ ரையும் நல்ல நிலையில் வைத்து மறைந்துள்ளார் அதோடுமட்டு மின்றி உற்றார் உறவினர், அயலவர்களையும் அன்புடன் ஆதரித்து அவர்களையும் உயர்த்த தம்மாலான உதவிகள் புரிந்தமைக்கு, இன்று அவர் மறைவை அறிந்து வடிக்கும் கண்ணிர் சான்றாகும்.
இவர் ஒர் சைவப்பழம் காரைநகர் சைவமகாசபையின் தலைவராய் விளங்கிய காலத்தில் சமயகுரவர்களின் குருபூசையைத் தவறாது நடாத்திவந்தார். அத்துடன் காரை வாழ் சிறார்களிடையே நாயன் மார்கன் தொடர்பான பேச்சுப்போட்டிகள், தேவாரங்கள் பிழை யற எழுதுதல், பண்ணுடன் பாடுதல் ஆகிய போட்டிகள் நடத்திப் பரிசில்கள் வழங்கி இளஞ்சிறார்களிடையே சைவவாழ்வு சுடர்விட்டுப் பிரகாசிக்க ஆற்றிய திருத்தொண்டுகள் இன்றும் நினைவுகூரத் தக்கன. இவர் அநுட்டிக்காத விரதங்களோ, தரிசிக்காத கோயில்களோ இல்லை என்றே கூறலாம் ஆறுமுகநாவலர் அவர்களின் கூற்றின் படியே ஆசாரமாகக் கோயிலுக்குச் சென்று விரதங்கள் அநுட்டித்து கோயிற்பணிகள் புரிந்து நிறைவுசெய்தவர்.
பிற்காலத்தில் தனது பரம்பரைக் கோயிலாகிய பயிரிக்கூடல் சுப்பிரபணியப் பெருமானுக்கு எவ்வளவோ திருத்தொண்டுகள் செய்து உள்ளார் இன்னும் எத்தனையோ திருப்பணிகள் செய்ய இருந்தார் அதற்கிடையில் அரசியற் சூழ்நிலை எம்மையெல்லாம் ஊரைவிட்டு

Page 34
இடம்பெயரச் செய்தது. அதனால் அவர் எண்ணிய பணிகளும் செய்யமுடியாமற் போயின. இருந்தும் தகைமைசால் தந்தையாரின் தெய்வப் பணிகள் யாவும் அவரின் அன்புசால் பிள்ளைகள் மூலம் நிச்சயம் நிறைவேற்றப்படும்,
இவ்வாறு பணிகள் பலபுரிந்து நல்லாசிரியனாகவும், சைவப் பெரியவராகவும் விளங்கிய அமரர் எம். ஏ. கந்தையா அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல திண்ணபுரத்து செளந்தராம் பிகை சமேத சுந்தரேஸ்வரப் பெருமானை வேண்டுகின்றேன்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
திருமதி. சரஸ்வதி யோகலிங்கம்
யாழ்ற்றன் கனிஷ்ட பிரிவு வட்டுக்கோட்டை(காரைநகர்)
நாமார்க்குங் குடியல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம் ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை தாமார்க்குங் குடியல்லாத் தன்மையான
சங்கரன்நற் சங்கவெண்குழையோர் காதின் கோமாற்கே நாம்என்றும் மீளா ஆளாய்க்
- கோய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகினோமே.
- திருத்தாண்டகம்
 

AN APPERCATION
late M. A. Kandiah Esqr. Emiritius Teacher J|Victoria College, Chulipuram.
The late Mr. M. A. Kandiah, a devoted Teacher, Philanthropist, Hindu Educationist of High order was born on 12.04.1911 in an illustrious, Hindu family in Karainagar.
He departed from the Society which he built for, by his devotion to Religious Educational and Socio - Economic development to his birth place, KARANAGAR on 24 - 04. 1994 in Negombo.
He was humble, modest and sincere in his ways of living. He was a devoted Hindu to the last letter of the word. He was a devoted husband, a pious and grateful father, who was always keen that his children are well nourished, educated, brought up in the best traditions, in keeping with the religious social and intelletual life of the land of his birth.
He was devoted to the Lord Murugan of Payarikoodal, Lord Pillayar of Paththarkorny, guardian deity Muthu mari Amman of Manatkadu, Karainagar. He had an inspiration to be with Lord Eee lathu Chithambaran Deity Nadarajah Peruman and his Console
Above all, he was involved in the Weifare of the Karainagar Saiva Maha Sabai, which institution has had the previllage of the association of most respected Indian leaders, a rare opportunity Karainagar (Karaitivu as fondly remembered by all) had a unique gift.
Though he was simple village Teacher, starting life as a secondary School teacher, initially at Karainagar, he taught many a children in different parts of Ceylon and was satisfied that he did his duty as a teacher. His final mission was at Victoria College, Chulipuram, where he was not only a teacher, but a friend of all, a guide, a guardian of the area, where he produced many a brilliant scholars, Professionals, who stand

Page 35
as testimony to the valuable services - The late Mr. M. A. Kandiah rendered to the institution.
Coming on to his family life:- He married Thangaratnam, a devoted housewife a Saintly mother. He was a father of nine children. He along with his devoted wife took a the troubles to educate their children even under very trying financial strain. As you all know a village teacher has many an obligation apart from the domestic side.
The late Mr. Kandiah did not leave any stone unturned to see that his children are well nourished not only in the kitchen but also in the field of education. He has left behind Teachers, Administrators, Doctors, Banker. Accountant, Engineer from among his children.
He has to his credit Son-in-Laws and Daughter-in-Laws who are equally educated and well placed in various fields of Peofessions in Ceylon as well as aboard. These speak for the hard, sincere and honest services Mr. Kandiah rendered to Society which ultimately brought pride and honour to him.
The writer of this appreciation, wishes to pen few words of appreciation of Late Mr. Kandiah on behalf of Late Mr. & Mrs. Vinasithamby of Varivalavu, Karainagar and their children.
Late Mr. Kandiah was a contemporary of our late parents, being Teachers themselves. Late Mr. Kandiah's family havc had many a similarity in life style, financial and social standards. He was a friend, a guide and above all a trusted gentleman of the highest degree, who, one loved all cf us as equals of his children. He was there to guide our parents on all occassions as to how the children should be brought up, educated even under trying, social and financial odds.
We, the children of the Vinasitham by family are always grateful to the Late Mr M. A. K., as he was fondly remembered by all of us. I shell be failing in my duty on behalf of our family members, if I do not mention a few words about Mrs. Kandiah and her children. They have heen very affectionate and helpful. Late Mr. , Kandiah, had

a special love and affection towards our late mother - Packiam. He was so fond of her. Equally our mother was so fond of him and used to remind me. , நீ போய் கூட்டுறவுத்தையா ைபார்த்தாயா'
We all pray the soul of Kandiah master will have eternal peace which peace he has reached at the ripe age having seen for himself all the best in his life.
With love and regards to our great master.
Mr. V. Selvaratnam (Postmaster) For and behalf of Late Mr. & Mrs. Vinasithamby, and their children.
Varivalavu
Karainagar.
9.05.1994.

Page 36
flnother listan en 9andhian Dalk
Tall, Slim, and slow in speech, Honestly practised what he preached; MAK an image never to be bleached To call him Karai Gandhi isn't a breach.
Humane, amiable and sober was he, A Guru in multitude hearts shall be; His reluctant words, and austere life, And immense faith in Muththumari Urge me to hail him Karai Gandhi.
At Salva Maha Sabbal that still echoes Mahatma Gandhi's name and fame, MAK'S kind look that reaches to soothe your heart
Through lenses on a frail frame Proclaims him another man on Gandhian path.
by
Vijian. John. Manoharan Kennedy
(His admires)

Says the Brook for ever:
"Men may come and men may go. But I go on for ever'
So says the poet of all times of men and brooks, But
am of the opinion that teachers of real calibre continue to remain like the everflowing rivers. They live perpetually flowing through the lives of many generations of students in whom they have kindled the inspiring love for knowledge born of Learning. Such appears to me to be the position of the late Mr. Murugesu Arumugam Kandiah, a distinguished son of our proud lsland Home. have continued to hear over the years from infancy to my present Bibilical age many voices in active praise of many Kandiahs of our native village of Karanagar. But now the names of many of them are osing their resonance, and I have reason to believe that in course of time, most likely, may not be heard any more. But MAK will remain an exception to this oblivion. The piously honest and unselfish services rendered by MAK as a teacher and man of the people during his rather long life will continue to Send forth their rays to illuminate the lives of several thousa nds throughout the world for many generations to come. Referring to his service as teacher for wellower two decades at Victoria College, have no hesitation to state with confidence that his then colleagues, and Messers. Thambu and Sivasubramaniam, two of the eminent Principals of Government Victoria College, Chulipuram would indeed be too proud and happy to have their worthy assistant MAK to occupy a place of honour with them through the Corridors of Eternal time. MAK has had added lustre to Victoria College, and expect that his children would always cherrish the name and fame of Victoria College as their father MAK did. will be failing in my duty if I do not mention that Mr. K. K. Nadarajah has done his share of that duty to Victoria College by his worthy kinsman MAK. 1 could hear very frequent references by parents, teachers and old students to the contribution made by MAK it is difficult for me to judge whether as a teacher hailing from the same village as MAK had lived up to his standards during the short period of three years. taught at Victoria College from 1975 to 1977 (inclusive).

Page 37
After his retl rement, he continued to serve his community in all activities. Though he appeared... feeble a physically, his will had not in least post the temper of steel of his youth. He would never, not even for gold, blow his own trumpet.
MAK hails from two families prominent in Karainagar. One moddai Kanpathippiilai chairman and Neethiwan of the village court. The other family is ''Periyapariyariar'',
'' Mak, is the father of nine children of whom six are daughters. * Contrary to the popular dictum that even a king would become a pauper in case he begets five female children. MAK is more than blessed because his daughters, have proved to be. Worthy assets. Every family is not lucky or fortunate that way, as in the case of the MAK family. More significant than the prosperity which his daughters have brought him in terms of earning, earning and bringing him sons-in-law, and through them, presenting him and his wife dear, delightful grand-children, ... is their marriage - alliances which have brought almost the entire main localities of Karatnagar into the MAK family, perimeter. Let me illustrate further; -་་་”
His eldest daughter, Theivanayaki, is the wife of Mr. V. i. Balasuntharam, who is the son of the grand-old school-master of the first three decads of the present Century. He was no other -than the vel tuppillal i Upathiyayar of Sithampara moorthy Kerniyadi, New Road in Karainagar North. I had the good fortune to have learnt at his feet in 1932 in the First year at the American Mission English School. It was he who taught me the letters of the English alphabet. and l gratefully acknowledge my success to him as a fairly good and tolerable teacher of English even to this veryday. . . . . . . . .
His second daughter, Thevakunchari, MBBS qualified, is married to Mr. Thiyagarajanathan, an Accountant. His father is the late Pandithamani Arulampalavanar of Thiruvasagam Research and "Sahitiya. Mandalaya Award fame. Thiyagarajanathan gains significance as being one of the sons of the eldest daughter of the Kuala Lipis Natlathamby family of .Neelippanthanai, namely: Mrs. Vijaya Soundaramalar. Arulambalam. The Arulampalam family hails from Sampaotharkandy - in Karainagar rowthr. ་ བ་ག་ར,་ཆ་༢་༠, , - . . .

MAKS third daughter, Puvaneswary is married to one of my favourite students at Skandavarodaya College, Mr. Veluppilla Veerasingam of Kalapoomy. He is the son of Mr. Veluppillai, who is loving called as Vellai appah, Kalapoomy is a locality in the south east of Karainagar.
The next is Pangayachchelvi MAK'S daughter, who is married to Mr. Ponnampalam Uruththiran one of the sons of my former Colleague at J Yarlton College, and later friend and adviser, the late Mr. M. Ponnambalam of -Thangodai, He died just five days ahead of his Sampanthi, M.AK. I am sure he would have made arrangements to accod his Sampanthi, MAK, a happy and rousing welcome at the great Nadarajan Hall in the expance of Cosmos.
The next, rexus shifts to Mappanavoori in the extreme North-east of our village. MAK'S another daughter, Kamalampikai, become the wife of Mr. Kanthappu, Sivanesan, Son of the late Mr. Veluppillai Kanthappu, the popular youth hero of our young days, and an Accountant; later in his exteemed career under Government. ,ن ""
think the above citation are quite sufficient to prove the sagacity of Mr. & Mrs. MAK. They do not appear to have had much faith-in entering into consanguinous marriage alliances for their children. By avoiding such aliances Mr. MAK has widened very much the compass, and Varied very much the Sameness and monotony of the family circle.
l, on behalf of all people like me, convey my feelings of pride and satisfaction that Mrs. Thangarethinam Kandiah, their children and - in - laws, and grand-children have been blessed on this Earth to have had him preside over the MAK brood
May his tribe increase like that of Abou Ben Adhem! May God bless you all ༦. ། ་་་་་་་་་་་་
3.
By
A. G. N. Vijia Ratnam B. A. (London) Prensenty of ʻʻShanrmt#-ganin Vasamʻʻ *2~ - *"Jeya bal NMansion · Neelippanthanai, Velikulam, Karainagar.
Vavuniya.

Page 38


Page 39

அன்பும் பாசமும் மிக்க எங்கள் ஐயா
பாசமும் அன்பும் மிக்க எங்கள் ஐயாவை நாங்கள் பாடிப்படி த்து அனுப்பி வைத்தோமே என நினைக்க நினைக்க நெஞ்சத்தை உருக்குகிறது. அவர் மறைந்த நாட்களில் இருந்து ஏற்பட்ட உணர்வு களை அடக்கியடக்கி இன்று முடியாத நிலையில் ஏதும் எழுத்தில் எழுதியாவது ஆறுதல் அடையலாமோ என நினைக்கிறோம்.
ஐயா நாளாந்தம் நகைச்சுவையாகப் பேசுகின்ற பேச்சுக்களையும் சிற்சில காரியங்களையும் நினைவுகூரும் போது, நாங்கள் பாடசா லையில் கல்விபயிலும் போது வகுப்பில் முதலாம்பிள்ளை அல்லது பாடங்களில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றோம் என்று வீட்டில் வந்து சொல்லுவோமேயானால் மகிழ்ச்சியுடன் கேட்பார் சற்றுப் பின்னர் ஒருமென்சிரிப்போடு "சப்பாணிக்குள் இழுப்பாணி" என்றோ" அல்லது 'பனைகள் எல்லாவற்றையும் தறித்தால் வடலி தானே பெரியது' என்றே கூறி எங்களை மட்டம் தட்டுவார்.
கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடன் செய்வது என்று சொன்னால் ஐயா செல்லுவார் 'கடவுளைக் கைக்கூலிக்காரன் ஆக்காதீங்கோ' என்று கூறி 'இறைவனுக்கோர் பச்சிலை" என்று சொல்லுவார். அடுத்து எங்கள் எல்லோருக்கும் உடுபுடவைகள் தேடிப் பார்த்துத் தரமானதும் அழகானவைகளையுமே வாங்கி வருவார். வீட்டுக்குக்கொண்டு வந்தவுடன் எங்களுடன் சேர்ந்து நிறம், தோற்றம், வடிவம் போன்றவற்றையும் இரசித்து விட்டுப் பின்னர் ,
"குஞ்சியழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சளழகும் அழகல்ல நெஞ்சத்து நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வியழகே அழகு"
என்று பாடுவார். நகைச்சுவையோடு கூடிய கருத்துக்களிலும் பார்க்க பாடசாலையிலே மாணவரைக் கண்டித்துப் பேசியவார்த் தைகள் எல்லாம் பின்னர் யாவரும் இரசித்துச் சுவைக்கத்தக்கவை யாகவும், சிரிப்பூட்டுவனவாகவும் இருக்கும். எங்களில் சிலர் ஐயா வின் மாணவர்களாக இருந்தோம் அம்மாணவர்கள் எல்லோரும் ஐயாவைக் கடவுள் என்றும் எங்களைக் கடவுளின் குழந்தைகள் என்றும் அழைப்பார்கள் நான் ஐயா பாடசாலையில் பேசுவதை வீட்டில் வந்து 'பாவனை' செய்வேன் பின்னர் அம்மாவுடனும் ஏனையவர்களுக்கும் ஐயாவாகப் பாவனை செய்து காட்டி, எல்லோ ரையும் சிரிக்க வைப்போம். aw

Page 40
‘ஆட்டுத்தோலாலும் மாட்டுத் தோலாலும், செய்ததை உருட்டிக் கொண்டு திரிந்த நேரம் கணக்கைச் செய்திருக்கலாம் தானே' என மாணவர்களைப் பகிடியாகக் பேசுவார்.
இவ்வாறகப் பலவற்றைக் கூறி என்னையும் ஏனையோரையும் மகிழ்வித்தது மாத்திரமல்லாமல் எங்களுக்கும் ஏன் பேரப்பிள்ளைக ளுக்குத் தானும் கட்டுரை, பேச்சுக்கள் எழுதுவதிலும் இவற்றினைப் பேசிப் பழக்குவதிலும் திறமை வாய்ந்தவர் நாளாந்தம் பேசும் போதும் கதைக்கும்போதும் தர்மம் செய்தல் விருந்தினரை உபசரி த்தல், செய்வன திருந்தச் செய் போன்ற போதனைகளையும் கூறி இவற்றையெல்லாம் எவ்வாறு செய்தல் வேண்டும் என்றும், பற்பல அறிவுரைகளையும் கூறுவார்.
ஐயா மருமக்களையும் பிள்ளைகளோடு சேர்த்தே கணக்கு வைப்பார் அவர்களை எல்லாம் தேடும் போது விவேகம், பண்பு என்பவற்றைக் கருத்தில் கொண்டே தெரிந்தெடுப்பார் உழைப்பு, பதவி என்பவற்றைக் கவனித்ததில்லை. சொந்தக்காரர், அயலவர் கள், உதவி நிற்பவர்களையும் ஐயாவின் பிள்ளைகளோ அல்லது பேரப்பிள்ளைகளோ என்று தெரியாதவர்கள் கேட்பதுண்டு.
இவ்வளவு காலமும் எங்களுடன் இருந்த ஐயா, எங்களை விட் டுப் பிரிந்து சென்றது மிக்க கவலைக்கிடமாகவே இருக்கின்றது இவர் மறைவதற்குச் சில நாட்களுக்கு முன்னர் என்னுடன் தொலைபேசி மூலம் கதைத்துச் சில காரியங்களைச் சொன்னார். இனி மே ல் நாங்கள் செய்ய வேண்டியவற்றையும் கூறினார். நான் எல்லாவற் றிற்கும் ஓம் என்று சொன்னேன். அவரின் போதனைகளைக் கடைப் பிடித்து அவர் எதிர்பார்த்தவற்றையும் செய்து முடிக்க முயல்வோம். அவர் விண்ணுலகத்தில் இருந்து எமக்கு ஆசி வழங்குவார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஐயாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.
ஓம். சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
அன்பு மகன்
இலண்டன் க. செந்தில்நாதன்
 

நெஞ்சமதில் சிலை எழுப்பி நினைவு கூர்ந்தேன்
தாயுமாகித் தந்தையாகி
யாவுமாகி நின்ற பெரியோய் ஐயாப்பா என்றும் எந்தன்
அன்பே அறிவே எங்கே சென்றாய் கையில் வைத்துக் கதைகள் சொல்லி
கண்ணாய் மணியாய் வளர்த்தீர் என்னை நீர்கொழும்பிற்கு அனுப்பி வைத்தீர்
நின்தன் பிரிவுத்துயர் வாட்டியதே என்னை வந்துசேர வதந்தி அனுப்பவே
வருவேன் என்றே பதில் சொன்னீர் படுக்கை மீது பள்ளி கொள்வீர்
திடுக்குற்றே சேந்தனைக் காணேன் என்பீர்
தொண்ணுாற்று மூன்றுதனில் சீமை செல்ல அனுப்பி விட்டீர்
சிறப்பாய் வாழ் என வாழ்த்தி விட்டீர் தீரப் பார்த்தே எனை காணேன் இனி உன்னை யென்றீர் தீர்க்க தரிசனம் சொல்லியே கண்ணிர் விட்ட ழுதிட்டீர் வையம் விட்டுச் சென்ற போதில்
வந்தேனில்லைப் பாவியானேன், ஐயா உம்ப்ோற் பேரன் தன்னை
அறியேன் சிறியேன் வையந்தன்னில், செய்கை எண்ணம் செல்லும் பாதை
தெய்வம் என்று எல்லாம் சொன்னீர், வையம் தன்னில் வாழும் வாழ்வின்
உள்ளும் புறமும் உரைத்தீர் குருவாய், மேவும் உலகின் மாயம் அறிவேன்
மேனியழியும் என்பதறிவேன்

Page 41
சாவும் பிறப்பும் சகடச் சுழற்சி
சாற்றினீர் அறிவேன் தெரிவேன்
ஆனபோதும் ஐயாப்பா
ஆற்ற மாட்டாத் துயரம் நெஞ்சில்
காலன் மீதும் காலம் மீதும்
கவலை கலந்த கோபம் என்னுள்,
செல்லா நிற்கும் பிறப்பின் சுழற்சி
மீண்டும் ஒருநாள் சுழன்று வரலாம்
அன்றும் நீரே என் அருமைப் பேரன்
அன்று வரைக்கும் என் ஐயாப்பா
வானமீதில் ஒளியாய் நின்று
வாழ்த்த வேணும் என் வாழ்க்கை எல்லாம்
அன்புப் பேரன்
 

6. சிவமயம்
தோத்திரப் பாடல்கள்
விநாயகர் வணக்கம்
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்முொற் பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் ஆதலால் வானேர்கள் ஆனை முகத்தோனை காதலாய்க் கூப்புவர் தங்கை,
ஐந்து கரத்தனை யானை முகத்தனை - இந்தி னிளம்பிறை போலு மெயிற்றனை நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே.
திருஞானசம்பந்த சுவாமிகள் அருளியவை
காத லாகிக் கசிந்துகண் ணிர்மல்கி ஒது வார்தமை நன்னெறிக் குய்ப்பது வேத நான்கினு மெய்ப்பொரு ளாவது நாத னாம நமச்சி வாயவே.
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே
இருங்கடல் வையத்து முன்னைநீபரி நல்வினைப் பயனிடை
முழுமணித் தரணங்கள் மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி
வாணனை வாயாரப் பன்னியாதரித் தேத்தியும் பாடியும்
வழிபடும் அதனாலே.
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்
னுளமே புகுந்த வதனால்

Page 42
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி
சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல வவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியவை
சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே.
சலம்பூ வொடு தூப மறந்தறியேன்
தமிழோ டிசைபாடல் மறந்தறியேன் நலந்தீங் கிலுமுன்னை மறந்தறியேன்
உன்னாமம் என்நாவில் மறந்தறியேன் உலந்தார் தலையிற் பலிகொண் டுழல்வாய் உடலுள் ளுறுசூலை தவிர்த் தருள்வாய் அலந்தேன் அடியேன் அதிகைக் கெடில
வீரட் டானத் துறையம்மானே.
வாயானை மனத்தானை மனத்துள் நின்ற
கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் தன்னைத் தூயானைத் தூவெள்ளை ஏற்றான் தன்னைச்
சுடர்திங்கட் சடையானைத் தொடர்ந்து நின்றென் தாயானைத் தவமாய தன்மை யானைத்
தலையாய தேவாதி தேவர்க் கென்றும் சேயானைத் தென் கூந்திரு வாலவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளியவை
பித்தாபி றைசூடி பெருமானே யருளாளா எத்தான் மற வாதேநினைக் கின்றேன் மனத்துன்னை வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்
நல்லூர ருட்டுறையுள் அத்தாவுனக் காளாயினி யல்லேனென லாமே.

தில்லைவா ழந்தணர்தம் மடியார்க்கு மடியேன் திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன் இல்லையே யென்னாத வியற்பகைக்கு மடியேன்
இளையான்றன் குடிமாற னடியார்க்கு மடியேன் வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில் சூழ் குன்றையார் விறன் மிண்டற்
கடியேன் அல்லிமென் முல்லையந்தா ரமர்நீதிக் கடியே னாரூர னாரூரி லம்மானுக் காளே.
நிரைகழல் அரவம் சிலம்பொலி அலம்பும்
நிமலர் நீறணி திருமேனி வரைகெழு மகளோர் பாகமாய் புணர்ந்த
வடிவினர் கொடியணி விடையர் கரைகெழு சந்துங் காரகிற் பிழவும் அளப்பருங் கனமணி வரன்றிக் குரைகடல் ஒதம் நித்திலங் கொழிக்கும்
கோணமாமலை அமர்ந்தாரே.
மாணிக்கவாசக சுவாமிகள் அருளியவை
முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணஞ் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தண் எனக்கருளிய வாறார் பெறுவார் அச்சோவே
போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள் போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம்பூங்கழல்கள் போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம் போற்றியாம் உய்யஆட்கொண்டருளும்பொன்மலர்கள் போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்

Page 43
போற்றியென் வாழ்முத லாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்டு ஏற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம் சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே ஏற்றுயர் கொடியுடை யாயெனை உடையாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
தந்ததுன் தன்னைக் கொண்ட தென் தன்னைச்
சங்கரா ஆர்கொலோ சதுரர் அந்த மொன் றில்லா ஆனந்தம் பெற்றேன்
யாதுநீ பெற்றதொன் றென்பால் சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்
திருப்பெருந் துறையுறை சிவனே எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய்
யான்இதற் கிலன்ஒர் கைம்மாறே.
திருவிசைப்பா
வைத்த பாதங்கள் மாலவன்
காண்கிலன் மலரவன் முடிதேடி எய்த்து வந்திழிந்து இன்னமும்
துதிக்கின்றார் எழில்மறை அவற்றாலே செய்த்தலைக் கமலம் மலர்ந்தோங்கிய
தில்லை யம்பலத் தானைப் பக்தியாற் சென்று கண்டிட
எம்மணம் பதைபதைப் பொழியாதே.
திருப்பல்லாண்டு
மிண்டு மனத்தவர் போமின்கண் மெய்யடியார்கள்
விரைந்து வம்மின்
கொண்டுங் கொடுத்துங் குடிகுடியீசற்காட்
செய்மின் குளாம் புகுந்

தண்டங் கடந்த பொருளளவில்லதோ
ரானந்தவெள் ளப்பொருள்
பண்டு மின்று மென்று முள்ளபொருளென்றே
பல்லாண்டு கூறுதுமே.
திருமந்திரம்
சிவசிவ என்கிலர் தீவினையாளர் சிவசிவ என்றிடத் தீவினைமாளுஞ் சிவசிவ என்றிடத் தேவருமாவர் சிவசிவ என்னச் சிவகதிதானே.
திருப்புராணம்
ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள
அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆகக்குணம் ஒருமூன்றும் திருந்து சாத்துவிகமே ஆக இந்துவாழ் சடையான் ஆடுமானந்த
எல்லையில் தனிப்பெருங் கூத்தின் வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்.
இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின்
வேண்டு கின்றார் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்
நான் மகிழ்ந்து பாடி அறவா! நீ ஆடும்போதுன் அடியின்
கீழ் இருக்க என்றார்.
திருப்புகழ்
சந்ததம் பந்தத் 8 தொடராலே
சஞ்சலந் துஞ்சித் திரியாதே கந்தனென் றென்றுற் றுனைநாளும்
கண்டு கொண்டன்புற் றிடுவேனோ

Page 44
தந்தியின் கொம்பைப் புணர்வோனே
சங்கரன் பங்கிற் சிவைபாலா செந்திலங் கண்டிக் கதிர்வேலா தென்பரங் குன்றிற் பெருமாளே
பத்தியால் யானுனைப் பலகாலும்
பற்றியே மாதிருப் புகழ்பாடி முத்தனா மாறெனைப் பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற் கருள்வாயே உத்தமா தானசற் குணர்நேயா
ஒப்பிலா மாமணிக் 6)fountar வித்தகா ஞானசத் திணிபாதா
வெற்றிவே லாயுதப் பெருமாளே
திருவருட்பா
முன்னவனே யானை முகத்தவனே முத்திநலம் சொன்னவனே தூய்மெய்ச் சுகத்தவனே - என்னவனே சிற்பரனே ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே தற்பரனே நின்தாள் சரண் .
அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டு கொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம் பொருட்சாரும் மறைகள் எலாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்தத் தெய்வம் உயர் நாதாந்தத் தெய்வம் இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளும் தெய்வம்
எண்ணியநான் எண்ணியவா றெனக் கருளும் தெய்வம் தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்
அபிராமி அந்தாதி
தனந்தரும் கல்வி தரும்ஒரு நாளும் தளர்வறியா
மனம்தரும் தெய்வ வடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சமில்லா இனம்தரும் நல்லன எல்லாந்தரும் அன்பர் என்பவர்க்கே கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.

பூத்தவனே புவனம்பதி னான்கையும் பூத்தவண்ணம் காத்தவளே பின் கரந்தவ ளேகறைக் கண்டனுக்கு மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம்
வந்திப்பதே
அபிராமி அம்மைப் பதிகம்
கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடுவா ராத நட்பும் கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணி இலாத உடலும் சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தா னமும் தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் - தடைகள் வராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
துன்பமில்லாத வாழ்வும் துய்யநின் பாதத்தில் அன்புமுதவிப் பெரிய தொண்டரோடு கூட்டு கண்டாய் அலையாழி யறிதுயில்கொள் மாயனது தங்கையே
ஆதிகட வூரின் வாழ்வே அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே.
முருகன் துதி
மூவிரு முகங்கள் போற்றிமுகம்பொழி கருணை போற்றி ஏவருந் துதிக்கநின்ற ஈராறு தோள் போற்றி காஞ்சி மாவடி வைகுஞ் செவ்வேள் மலரடி போற்றி அன்னான் சேவலும் மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி
போற்றி
புன்னெறிய தனிற் செல்லும்போக்கினைவிலக்கிமேலாம் நன்நெறியொ முகச்செய்து நவையறு காட்சி நல்கி
என்னையுமடி யனாக்கி யிருவினை நீக்கியாண்ட * பன்னிருதடந் தோள்வள்ளல் பாதபங்கயங்கள் போற்றி

Page 45
அறுபத்து மூவர் துதி
தத்து மூதெயில் மூன்றுந் தழல்எழ முத்து மூரல் முகிழ்த்த நிராமய சித்து மூர்த்திதன் தாளிணை சேர்அறு பத்துமூவர் பதமலர் போற்றுவோம்.
வாழதது
வாழ்க அந்தணர் வானவர் ஆணினம் வீழ்க தண்புனல் வேந்தனும் ஒங்குக ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே.
வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை யரசுசெய்க குறைவிலாது யிர்கள் வாழ்க நான்மறை யறங்கள்ஓங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்
ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க மாறிலா வள்ளி வாழ்க வாழ்கசீரடியா ரெல்லாம்.
 

6. சிவமயம்
காரைநகர் - பத்தர்கேணி அருள்மிகு யூனி வன்மீக விநாயகர்
திருப்பொன்னூஞ்சல்
காப்பு
பொன்னெடுமால் வரையினிலே நான்குவேதப் பொருண் மருப்பால் வந்தெழுதும் மகா கணேசா அன்னபரி பூரணியின் ஆதி மைந்தா அப்பனது தேரிறுத்த விக்ன ராஜா முன்னவனே காரைநகர்ப் பத்தர் கேணி முதன்மைதரு தான்றோன்றீஸ் வரனாய் நின்ற மன்னவனே நின்னுரஞ்சற் கவிதை பாட மருவுதிரு வடிபிடித்தேன் காப்பதாமே
நூல்
ஒளிர்மகுடம் நிலவெறிப்ப, ஒங்கு சோதி யுற்றசடை கலைபரப்ப, பவள மேனி கிளர்கிருபைக் கதிர்வீசச் சப்த நாதக் கீதஒலி கிண்கினித்தா மரைத்தாள் பேச குளிர் முகமும் திருவிழியும் கரங்க ளைந்தும் கும்பிடுவார் குறைதீர்க்க, சைவ மாண்பு வளர்காரை நகர்ப்பத்தர் கேணி மேவும் வன்மீக விநாயகரே ஆடீ ரூஞ்சல்
பணச்சிரத்தி ரத்தினத்தால் கால்கள் நாட்டி பயில் சாம்பு நதத்தாலே பலகை மாட்டி அணித்தரள நிரையாலே கயிறு பூட்டி அமரபதிக் கற்பகத்தால் அழகு தீட்டி

Page 46
பிணைத்தபா ரிசாதமலர் மாலை சூட்டி பிரணவரூ பத்தீபம் வகுத்தார் விண்ணோர் மணிக்காரை நகர்ப்பத்தர் கேணி மேவும் வன்மீக விநாயகரே யாடீ ரூஞ்சல்
ஒருநான்கு சுருதிகளே உருவ மாக உணர்நான்கேழ் ஆகமங்கள் செயல்களாக தருநாதம் கலைவிந்து காட்சியாக தவநான்கெட் டறங்கள் சிவ னாட்சியாக அருளாதித் திருமுறைக ளிருக்கையாக அமைந்தசிவ தத்துவத்தின் பொருளுணர்த்தி வருகாரை நகர்ப்பத்தர் கேணி மேவும் வன்மீக விநாயகரே யாடீ ரூஞ்சல்
கலைமதியும் கதிரவனும் கவிதை தாங்க கற்புயர்ந்த அரம்பையினர் கவரி வாங்க மலைமகளும் விடையவனும் மாலை பூண மறையனும் மாதவனும் விருது பேண அலைமகளும் நாமகளு மிசை விளக்க ஆதிகந் தருவர்முழ வொலிக்க, இன்பம் மலிகாரை நகர்ப்பத்தர் கேணி மேவும் வன்மீக விநாயகரே யாடீ ரூஞ்சல்
குருக்கோலத் திருமுறையை யெமக்களித்த குஞ்சரனே இடர்தீர்க்கும் கொடைவல் லானே கருக்கோல வினைபுதுக்கும் மருப்பி னானே கரும்பிளநீர் கனிகளவல் விருப்பி னானே பெருக்கேறு காவிரியைப் புவிக்கு நல்கும் பெருமானே மலர்ச்சோலை நறையா றோடும் மருக்காரை நகர்ப்பத்தர் கேணி மேவும் வன்மீக விநாயகரே யாடீ ரூஞ்சல்
கயற்கண்ணி தருசாபச் சேட னாகிக் கவலையுறு திரும்ாலுக் கருள் செய்தோனே தயக்கமுறு நம்பிக்குக் கைகொடுத்த தற்பரனே தண்ணடியார் சார்மலத்தில்

மயக்கமுறா தணைத்தருளும் தேவ தேவா மனம்வாக்குக் கெட்டாத கனியே செந்நெல் வயற்காரை நகர்ப்பத்தர் கேணி மேவும் வன்மீக விநாயகரே யாடீ ரூஞ்சல்
ஏழ்கதிரின் சூரியனை அரைக்க சைத்த எழிற்பாம்பின் சிரமணியாய்த் தரித்த செல்வா சூழ்வரத்தி ராவணன்கைக் கொணர்ந்த லிங்கம் தொழுதிடுகோ கர்ணமென அமைத்த நாதா ஆழ்கடலிற் கலமெனநெஞ் சலையும் தொண்டர் அன்புவலைப் புகச்செய்யும் கணேசா, நீதி வாழ்காரை நகர்ப்பத்தர் கேணி மேவும் வன்மீக விநாயகரே யாடீ ரூஞ்சல்
கொழுக்கலப்பை யொடுவந்த பக்தனுக்குக் குலவுநீர்க் கரைப்புற்றி னருகே முந்திப் பழக்கமுறு குழந்தையாய்க் காட்சி காட்டிப் பணிகோயில் கொண்டவனே வந்து போற்றும் வழக்கமுறு சீரடியார் நோய் தணித்த வைத்தியனே, வல்லபையின் கணவா, அன்பு வழிக்காரை நகர்ப்பத்தர் கேணி மேவும் வன்மீக விநாயகரே ஆடீ ரூஞ்சல்
அதிகாரக் கஜாசூரனை அடக்கி ஞானம் அமைந்தபெருச் சாளியாய் ஏற்றமர்ந்தாய் மதியாத மதிநீச னாகச் செய்து வருசதுர்த்தி பூசிப்பார்க் கினித்த தாளா துதியேறு வேதவா கமத்துப் பூசைத் தொண்டுவரன் முறைகொண்டு புரிய வானோர் வதிகாரை நகர்ப்பத்தர் கேணி மேவும் வன்மீக விநாயகரே யாடீ ரூஞ்சல்
முடிச்சோதி மணியாட விழிக ளாட முந்நூலும் மாலைகளும் முயங்கியாட அடிச்சோதிக் கழலாடச் செவிகளாட ஆறாதா ரப்பூத உதரமாட

Page 47
நடுச்சோதிக் கரத்துடனங் குசபாசங்கள் நயந்தாடத் துவர்மேனி யாட நன்னீர் மடுக்காரை நகர்ப்பத்தர் கேணி மேவும் வன்மீக விநாயகரே யாடீ ரூஞ்சல்
அகக்கோயில் கொண்டவரே யாடீ ரூஞ்சல் அறுமுகற்கு மூத்தவரே யாடீ ரூஞ்சல் சுகக்கீத நடத்தினரே யாடீ ரூஞ்சல் தொழுவாரின் மனத்தினரே யாடீ ரூஞ்சல் வகுத்தோது திருமுறையீர் ஆடீ ரூஞ்சல் மால்விகட சக்கரத்தீர் ஆடீ ரூஞ்சல் மகக்காரை நகர்ப்பத்தர் கேணி மேவும் வன்மீக விநாயகரே யாடீ ரூஞ்சல்
எச்சரீக்கை
மான்கரத்தர் மனமகிழும் மகனேனச்ச ரீக்கை வல்லபைம ணானகஜ முகனேனச்ச ரீக்கை மீன்விழியள் மடியிருக்கும் விமலாஎச்ச ரீக்கை வியாசனுக்குத் துணைபுரியும் விஜயா எச்ச ரீக்கை தேன்பால்முக் கனிதெங்குப் பிரியாஎச்ச ரீக்கை சிந்திப்பார் இடந்தோறும் திரிவாய்எச்ச ரீக்கை வான்பொழியும் பத்தர்கேணிவரதாஎச்ச ரீக்கை வன்மீக விநாயகஜங் கரனேளச்ச ரீக்கை
பராக்கு
பாரொடுவிண் ணாயகண பதியே பராக்கு பரவுமறை யாகமநன் னிதியே பராக்கு போரினன லாசுரை வென்றாய் பராக்கு பொங்குதலைக் குட்டேற்று நின்றாய் பராக்கு வேரனுகு மந்தாரை புனைவாய் பராக்கு மெய்யடியர் தொண்டெலாம் நினைவாய் பராக்கு காரைநகர்ப் பத்தர்கேணிக் கணேசா பராக்கு கற்பகவன் மீகவிநா யகரே பராக்கு

லாலி
அன்னையப்ப னானவரே லாலி ல்ாலி லா லி அகிலவுயிர்க ணாயகரே லாலி லாலி லா லி முன்னைவினைகள் தீர்ப்பவரே லாலி லாலி லாலி முத்திவீடு சேர்ப்பவரே லாலி லாலி லாலி இன்னலில்லா நிதிதருவாய் லாலி லாலி லாலி ஏத்துமின்ப மதிதருவாய் லாலி லாலி லாலி மன்னுபத்தர் கேணியரே லாலி லாலி லாலி வன்மீகவி நாயகரே லாலி லாலி லாலி
வாழி
சேண்பரவு மறைவாழி பசுக்கள் வாழி செப்புமிதி காசபுரா ணங்கள் வாழி பேண்சைவ சமயநெறிப் பண்பு வாழி பெருகுதவ தானங்கள் நிறைந்து வாழி காண்கருணை அடித்தொண்டர் கூட்டம் வாழி கற்பகமா கலைமலர்ந்த பொற்பு வாழி மாண்காரை நகர்வாழி பத்தர் கேணி வன்மீக விநாயகர்தாள் வாழி வாழி
மங்களம்
மங்களம் மங்களம் மங்களம் மங்களம் சுந்தரலிங் கேசனுக்கும் சுந்தரிக்கும் மங்களம் துதிபடைத்த பத்தர்கேணிவன் மீகர்க்கு மங்களம் கந்தனுக்கும் முத்துமாரிக் காரணிக்கும் மங்களம் கண்ணனுக்கும் செல்வநாக பூஷணிக்கும் மங்களம் சிந்துவீர பத்திரர்க்கும் ஐயப்பற்கும் மங்களம் சிலம்புச்செல்வி கண்ணகிக்கும் வைரவர்க்கும் மங்களம் சந்தவருட் கவிசுரக்கும் சரஸ்வதிக்கு மங்களம் தங்குதொண்டர் யாவருக்கும் மங்களம் மங்களம்

Page 48
காரைநகர் - பயிரிக்கூடல்
மரீ சுப்பிரமணிய சுவாமி பிள்ளைத் தமிழ்
எக்காலத்திலும் இளமை குன்றாது கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டு உலகமுய்ய உதித்தருளிய திருமுருகனை ஒப்பற்ற பயிரிக் கூடல் பூரீ சுப்பிரமணியப் பெருமானைத் தம் குல தெய்வ மாகக் கொண்டு வழிபட்டுப் பலபேறுகளும் பெற்ற சைவப் பெருந்தகை அதிபர் எம். ஏ. கந்தையா ஜே. பி. அவர்கள் அப்பெருமானைக் குழந்தையாக வைத்துப் பிள்ளைத்தமிழ் பாடுவிக்க எண்ணி, அளவையூர் அருட்கவி சீ. வினாசித் தம்பிப் புலவர் அவர்களால் பாடுவித்த பிள்ளைத்தமிழில் இருந்து 'சப்பாணிப் பருவம்” என்னும் ஒரு பகுதியை இங்கு தருகின்றோம்.
காப்புப்பருவம்
பேர்பெருகு கணபதிப் பிள்ளையா ரப்பனே
பிறைசூடி தந்த மகனே பெற்றவன் வருதேரி னச்சிறுத் தருளாடல்
பேணுமொரு விக்ன ராஜா நீர்பெருகு காவிரி யழைத்துலகு காத்தமரர்
நிறைவுபெற நின்ற களிறே நித்திய சுமங்கலை வல்லபை மணாளனே
நினையுமவர் மன விளக்கே சீர்பெருகு வேலா யுதம்வாங்கி எண்ணரிய
சினவகரர் குல மழித்துச்
 

செந்திலம் பதியிலே சிவபூஜை மலர்கொண்டு
திகழ்கின்ற வடிவி னரசன்
கார்பெருகு திரையாழி கைதொழுங் காரைநகர்க்
கண்ணனைய பயிரிக் கூடல்
கார்த்திகே யக்குழந் தைப்பிள்ளைத் தமிழ்பாடக்
கருத்திருந் தெமைக் காக்கவே
சப்பாணிப்பருவம்
எண்ணரிய வண்டத்தும் எண்டிசை யனைத்தினும்
எல்லாச் சரா சரத்தும் இயங்குவான் அனல்புனல் வளிபூமி என்றுநின்
றிசைவாகி யசை வடிவிலும் விண்ணிறையு மீனினும் கோளிலும் இவற்றுக்கு
வித்தான மூல மென்ற விரிகதிர்ப் பிழம்பினும் விதம்விதம் வெளிவரும்
மிகுபிறவி யழகு களிலும் கண்ணொன்றி நின்னுருவம் கண்டுகண்டெம்மனக்
கல்லிலே எழுதவருள்வாய் கைலைமலை யுறைகின்ற தியாகரா ஜன்தந்த
காருண்ய சோதி மகனே தண்ணருள் பொழிகாரை நகர்ப் பயிரிப் பதிக்குமர
சப்பாணி கொட்டியருளே. சரவண பவானந்த சிவசுப்ர மணியரே
சப்பாணி கொட்டியருளே
மட்டவிழ் மலர்க்குஞ்சி மாலையழ குஞ்சென்னி
மன்னுமிரத் தினத்தி னழகும் வளர்சடையி னழகுமிரு குழையின ழகும்செய்ய
வாய்மல ரரும்பு மழகும் பொட்டின ழகும்பட்டுக் கட்டின ழகும்நீதி பொழிகருணைக் கண்ணி னழகும் பொன்மேனி நீற்றழகும் புனையகல மேற்றவழும்
புரிநூலின் அருமை யழகும் திட்டமிடு வேல்முத லாயுதந் தாங்கிவரு
சிங்காரக் கையினழகும்

Page 49
சீரடியர் வாடாமல் தேடிவந் தருள்கின்ற
சேவடியினழ குங்காண
சட்டியில் மாவறுக் கும்பயிரிப் பதிக்குமர
சப்பாணி கொட்டியருளே
சரவண பவானந்த சிவசுப்ர மணியரே
சப்பாணி கொட்டியருளே
எங்கெங்கும் நின்றடியர் இதயம்நைந் தழைக்கின்ற
இடமெலாம் நின்றுகாப்பாய் இருமூன்று படைகளிலும் இமயமுதல் மலைகளிலும்
இளம்பரிதி யாயிருப்பாய் சிங்கத்தி லேறிவரும் சியாமளை பராசக்தி
திருமடியில் விளையாடுவாய் சிந்துரத் தமையனுட னந்தரங் கம்பேசிச்
சிறக்குமைந் தொழிலாற்றுவாய் மங்கைகுஞ் சரிஞான வள்ளியொடு சல்லாப
வார்த்தைக்குப் பள்ளிசெல்வாய் வந்துனைச் சந்திக்க வழியொன்று மறியாத
மருளணுக் கருளொணாதோ சங்கமுறு செந்தமிழ் வளர்பயிரிப் பதிக்குமர
சப்பாணி கொட்டியருளே சரவண பவானந்த சிவசுப்ர மணியரே
சப்பாணி கொட்டியருளே.
முப்பத்து முக்கோடி தொகையான தேவரும்
மொழிநாற்பத் தெண்ணாயிரம் முனிவரும் விரதமிகு சித்தரும் வழுவாத
முறைகொண்ட தொண்டர்குலமும் செப்பரிய நான்மறைச் சிகரமும் பயில்கின்ற
சீராகமக் கிரியையும் திட்டமிட் டுணரவும் உரைக்கவும் முடியாத
சிவதத்து வாதீதனே ஒப்புட னினைப்பவர்க ளுடையதவ நிறையளவில்
உருவருவம் உருவம் அருவம் உற்றமுக் காட்சிதரும் பற்றாரைப் பற்றுபரன் .
உதவுசண்முக ராஜனே

தப்பின்றிப் பூசைமுறை நிகழ்பயிரிப் பதிக்குமர
சப்பாணி கொட்டியருளே
சரவண பவானந்த சிவசுப்ர மணியரே
சப்பாணி கொட்டியருளே
இருநாழி நெல்லினால் எண்ணான்கு தருமங்கள்
இயற்றியுல கீன்ற செல்வி இலட்சுமி கலாவாணி துர்க்கைபார் வதிகெளரி
என்றெங்கும் நின்றஉமையாள் வருவாள ரக்கர்குலம் ஒருநாழிகைப் பொழுதில்
வழுவாதழித்த விறலி மழுமான் பிடித்தவனின் ஒருபாதி பெற்றவளின்
மதிப்பால் குடித்த மகனே கருவாதை தீர்க்குமொரு குருவாகி வந்துநறுங்
கணிஞானங் கூறுமரசே கதிர்காம நற்பதியி லதிகார முற்றசமர்
கடிதாடி வென்றகுகனே தருவா ரிதிக்கருகில் நிகழ்பயிரிப் பதிக்குமர
சப்பாணி கொட்டியருளே சரவண பவானந்த சிவசுப்ர மணியரே
சப்பாணி கொட்டியருளே.
ஏங்காம விரவாம லெங்களுக் கினிதான
இனியவருள் செயுமையனே எமதுாதர் தாக்காமல் சமயானுட் டானவிதி
இதயத்துணர்த்து மிறையே தூங்காமல் தூங்கும்சு கானந்த வமுதுண்ணத்
துவாதசாந் தத்துவெளியில் சொல்லரிய சோதியுட் சுடராகி வழிகாட்டித்
துணைநிற்கும் யோகேஸ்வரா தேங்கா யுடைத்திருகைக் குட்டிட் டிருந்தெழும்
சித்தர்களிடத்து மகிழும் செல்வக் கணேசனெனு மண்ணனைப் பணிவாரைத்
தெரிந்துநலந் தரும்தம்பியே தாங்கானில் ஏறுமரன் மகிழ்பயிரிப் பதிக்குமர
சப்பாணி கொட்டியருளே சரவண பவானந்த சிவசுப்ர மணியரே
சப்பாணி கொட்டியருளே.

Page 50
பேணுசிவ மதமலரப் பிரகாச நீறொளிரப்
பேசுமறை நான்குதிகழப் பெற்றெடுத் தான்மணங் குளிரவும் மூன்றாண்டுப்
பிள்ளைதிரு முறைபாடவும் தோணிபுரக் கோபுரங் காணுமெழில் விடையேறித்
துணைபெரிய நாயகியுடன் தோடுடைய செவியனாய் வருகள்வன் அன்றிருவர்
துளைத்துப் பறந்துகாணா மாணதிக சோதியன் மார்பிலும் தோளிலும்
மணிமுடியி லும்சுமக்கும் வண்ணக் குழந்தையே பண்ணுக் கியைந்தநட
மயிலேறி வருவீரனே தாணினையு மன்பருக் கருள்பயிரிப் பதிக்குமர
சப்பாணி கொட்டியருளே சரவண பவானந்த சிவசுப்ரமணியரே
சப்பாணி கொட்டியருளே.
ஒராம லீயிருக் கின்றஇட மேனுமிலை
உறுதியிது வெனவுரைத்த உக்கிர சுயோதனன் முதலாய நூற்றுவரு
முயிரழிந் தொழியஐவர் பாராளும் பாக்கியம் பற்றமனு நீதிக்குப்
பண்புற்ற பரிசு காட்ட பாரதப் போரிலுயர் தேரினிற் கீதையைப்
பார்த்தனுக் கோதுகண்ணன் நீராடு செங்கமல நேந்திரந் தணில்வந்த
நேரிழையர் வேண்டிநிற்க நீடசுர குலமழித் தாடல்மணம் பூண்பனென
நிறைவாக் குரைத்தகந்தா தாராளக் கொடையடியர் வாழ்பயிரிப் பதிக்குமர
சப்பாணி கொட்டியருளே. சரவண பவானந்த சிவசுப்ர மணியரே
சப்பாணி கொட்டியருளே.

இருளறையி லுண்பதற் குணவின்றி உடையின்றி
இருந்தாறு மிடமுமின்றி எண்ணங்கள் பலவெண்ணி இதயங் கலங்கவே
இரவுபகல் துயிலுமின்றி உருகுசிறைக் கூடத்தில் ஓங்கார வள்ளலே
ஓங்குவேற் கந்தையனே உன்னுமவர் முன்னிலையில் ஒருநொடியில் வருகின்ற
உத்தமியை ஒத்தமகனே வருகவென இந்திரன் மைந்தன் சயந்தனுயிர்
வாடியழைக் கின்றபோதில் மயிலேறி மலர்ஆறு முகசோதி காட்டிவரும்
வரோதய மகாமூர்த்தியே தருகழனி வளர்செந்நெல் பொலிபயிரிப் பதிக்குமர
சப்பாணி கொட்டியருளே சரவண பவானந்த சிவசுப்ர மணியரே
சப்பாணி கொட்டியருளே.
வந்தபிற விக்கேற்ற சிந்தனை மருந்துநீ
வறுமைசுக செல்வங்கொடுநோய் V வாழ்வு தாழ் விவையாவும் வகுப்பவன்நீ வினையை
மாற்றிடும் வைத்தியன்நீ முந்துமிதி காசம்பு ராணங்கள் முதலாய
மொழிகின்ற கலைகளும் நீ முத்திக்கு வித்துநீ மோனத்தி லாடிடும்
முக்கண்ணன் மூர்த்தியும்நீ சொந்தம்நீ சொந்தத்தை வேரறுப் பானும்நீ
சொல்லுமந் திரம்யாவும்நீ துணைவன்நீ என்றுனைத் தேடிவந் தேநித்தம்
தொழுதழுது கெஞ்சுகின்றோம் சந்தனம் குங்குமம் கமழ்பயிரிப்பதிக்கு மர
சப்பாணி கொட்டியருளே சரவண பவானந்த சிவசுப்ர மணியரே
சப்பாணி கொட்டியருளே.

Page 51
Golகுகமயம்
தேவராஜ சுவாமிகள் அருளிச் செய்த கந்தர் சஷ்டி கவசம்
காப்பு
அமரா இடர்தீர் அமரர் புரிந்த குமரன் அடி நெஞ்சே குறி
துதிப்போர்க்கு வல்வினைப்போம், துன்பம்போம் நெஞ்சிற் பதிப்போற்கு செல்வம் பலித்துச்-கதித்(து) ஓங்கும் நிஷ்டையும் கைகூடும், நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை
நூல்
சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மைய நடஞ்செயும் மயில் வாகனனார் கையில்வே லால் எனைக் காக்கவென் றுவந்து வரவர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா எண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவேன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக சரவண பவனார் சடுதியில் வருக TalGoor LtaleF TD「s灰 TTT Irfanu Goor Lu GusF frffff? Iffffff

விணபவ சரவண வீரா நமோ நம நிபவ சரவண நிறநிற நிறென வசர வணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக உன்னை ஆளும் இளையோன் கையில் பன்னிரண் டாயுதம் பாசஅங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் செளவும் உய்யொளி செளவும் உயிரையும் கிலியும் கிலியுஞ் செளவும் கிளரொளி யையும் நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும் சண்முகன் தீயும் தனியொளி யொவ்வும் குண்டலி யாம்சிவ குகன்தினம் வருக ஆறு முகமும் அணிமுடி ஆறும் நீறுடு நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும் நன்னெறி னெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகுகுண் டலமும் ஆறிரு தண்புயத் தழகிய மார்பில் பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து நண் மணிபூண்ட நவரத்ன மாலையும் முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழ குடைய திருவயிறு உந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் நவரத்னம் பதித்த நற்சீ ராவும் இருதொடை அழகும் இணைமுழந் தாளும் திருவடி யதனில் சிலம்பொலி முழங்க செககன செககன செககன செகண மொகமொக மொகமொக மொகமொக மொகென நகநக நகநக நகநக நகென டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண תפישת תשתתפת - "עת עתק זק עתקת (fitfitfiifi ffፃffፃffiñክ ffፃዘፃffፃtfi fitክዘፃ டுடு(நிடு டுடு(நிடு டுடுருடு டுடுரு டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு

Page 52
விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேள் முந்து என்தனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா விநோதனென்று உன் திரு வடியை உறுதியென் றெண்ணும் என்தலை வைக்துன் இணையடி காக்க என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றியைப் புனித வேல் காக்க கதிர்வேல் இரண்டு கண்ணினைக் காக்க விதிசெவி யிரண்டும் வேலவர் காக்க நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத் திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை இரத்ன வடிவேல் காக்க சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதி னாறும் பருவேல் காக்க வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க நாணாங் கயிற்றை நல்வேல் காக்க ஆண் பெண் குறிகளை அயில்வேல் காக்க பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க வட்டக் குதத்தை வல்வேல் காக்க பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க கைக ளிரண்டும் கருணைவேல் காக்க

முன்கை யிரண்டும் முரண்வேல் காக்க பின்கை யிரண்டும் பின்னவள் இருக்க நாவில் சரஸ்வதி நற்றுணை யாக நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பால் நாடியை முனைவேல் காக்க எப்பொழு தும் எனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனகவேல் காக்க வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க அரையிருள் தன்னில் அனையவேல் காக்க ஏமத்திற் சாமத்தில் எதிர் வேல் காக்க தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை அகல வல்ல பூதம் வலாட்டிகா பேய்கள் அல்லற் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழுக்குடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரமராக் கதரும் அடியனைக் கண்டால் அலறி கலங்கிட இரிசிகாட் டேறி இத்துன்ப சேனையும் எல்லிலும் இருட்டிலு எதிர்ப்படும் அண்ணரும் கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும் விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டாளங்களும் என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட ஆனை அடியினில் அரும்பா வைகளும் பூனைமயிரும் பிள்ளைகள் என்பும் நகமும் மயிரும் நீண்முடி மண்டையும் பாவைக ளுடனே பலகல சத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டிய பாவையும் ஒட்டிய செருக்கும் காசும் பணமும் காவுடன் சோறும்

Page 53
ஒதுமஞ் சனமும் ஒருவழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட அஞ்சி நடுங்கிட அகன்று புரண்டிட வாய்விட் டலறி மதிகெட் டோடப் படியினில் முட்டப் பாசக் கயிற்றால் கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டுக் கட்டி உருட்டு கால்கை முறியக் கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட செக்கு செக்கு செதில்செதி லாக சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு குத்து குத்து கூர்வடி வேல்ால் பற்று பற்று பகலவன் தணலெரி தணலெரி தணலெரி தணலது வாக விடுவிடு வேலை வெருண்டது வோடப் புலியும் நரியும் புன் னரிநாயும் எலியும் கரடியும் இனித்தொடர் தோட தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடுவிட விஷங்கள் கடித்துய ரங்கம் ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம் சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி பக்கப் பிளவை படர்தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத்து அரணை பரு அரை யாப்பும் எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் நில்லா தோட நீ எனக் கருள்வாய் ஈரேழ் உலகமும் எனக்குற வாக ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்காய் மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும் உன்னைத் துதிக்க உன் திருநாமம் சரவண பவனே சைவொளி பவனே

திரிபுர பவனே திகழொளி பவனே பரிபுர பவனே பவமொழி பவனே அரிதிரு மருகா அமரா வதியைக் காத்துத் தேவர்கள் கடுஞ் சிறை விடுத்தாய் கந்தா குகனே கதிர்வே லவனே கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை இடும்பனை யழித்த இனிய வேல் முருகா தணிகா சலனே சங்கரன் புதல்வா கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா பழநிப் பதிவாழ் பால குமரா ஆவினன் குடிவாழ் அழகிய வேலா செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா சமரா புரிவாழ் சண்முகத் தரசே காரார் குழலாள் கலைமகள் நன்றாய் என்நா இருக்க யானுனைப் பாட எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப் பாடினேன் ஆடினேன் பரவச மாக ஆடினேன் நாடினேன் ஆவினன் பதியை நேச முடன்யான் நெற்றியில் அணியப் பாச வினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன்ன ருளாக அன்புடன் இரவி அன்னமுஞ் சொன்னமும் மெத்தமெத் தாக வேலாயுதனார் சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைகுற மகளுடன் வாழ்க வாழ்க வாரணத் துவசன் வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை யடியேன் எத்தனை செயினும் பெற்றவன் நீகுரு பொறுப்ப துன்கடன் பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித் தஞ்சமென் றடியர் தழைத்திட அருள்செய் கந்தர் சட்டி கவசம் விரும்பிய -

Page 54
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக் காலையில் மாலையில் கருத்துடன் நாளு ஆசா ரத்துடன் அங்கத் துலக்கி நேச முடனொரு நினைவது வாகிக் கந்தர் சட்டி கவச மிதனைச் சிந்தை கலங்காது தியானிப் பவர்கள் ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு ஒதியே செபித்து உகந்து நீறணிய அட்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங்கருளுவர் மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் நவமத னெனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளுமீ ரெட்டாய் வாழ்வர் கந்தர்கை வேலாம் கவசத்தடியை வழியாய்க் காண மெய்யாய் விளங்கும் விழியாய்ற் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்துரு சங்கா ரத்தடி அறிந்தெனதுள்ளம் அட்டலட் சுமிகளில் வீரலட் சுமிக்கு விருந்துண வாகச் சூரபத் மாவைத் துணித்தகை யதனால் இருபத் தேழ்வர்க்கு உவந்தமு தளித்த குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும் சின்ன குழந்தை சேவடி போற்றி i எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம் மேவிய வடிவுறும் வேலவா போற்றி தேவர்கள் சேனா பதியே போற்றி குறமகள் மனமகிழ் கோவே போற்றி திறமிகு திவ்விய தேகா போற்றி இடும்பா யுதனே இடும்பா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி வெட்சி புனையும் வேளே போற்றி உயர்கிரி கனக சபைக்கோ ரரசே மயில் நட மிடுவோய் மலரடி சரணம் சரணஞ் சரணஞ் சரவண பவலும் சரணஞ் சரணம் சண்முகா சரணம்

டெ சிவமயம்
ஈழத்துச் சிதம்பர புராணம்
அணிதரு தில்லை அம்பலக் கூத்தா
அனைத்தையும் இயக்கிடும் அரசே பிணிதரு மலத்தாற் பிணிப்பு நீக்கி நின்று
பிறவியில் அலைவுறும் எமக்குத் தணிவருள் மருந்தே சலதியிற் பிறவா
தபுதியில் அமுதமே தயங்கு மணிதரு மிடற்று மாணிக்க மலையே
வண்திண்ண புரத்துநின் றருளே.
செண்டமருங் கையுடைய யோகா போற்றி
செப்பரிய கடல் வண்ணச் செல்லா போற்றி விண்டினொடும் அரன் அருளும் விமலா போற்றி
வித்தகனே அறங்காக்கும் வீரா போற்றி புண்டரிகக் கண்ணான்றன் குமரா போற்றி
பூரணைக்கும் புட்கலைக்கும் மணாளா போற்றி அண்டர் புகழாண்டி கேணிப்பதி யமர்ந்த
அரிகர புத்திராய போற்றி போற்றி.
எழுவகைப் பிறவி என்னும்
இருங்கடற் சுழியுள் பட்டே உழல்வரும் பாவி யேற்குத்
தாப்புனை உதவிக் காப்பாய் மழவிடை ஊர்தி யாளன்
மைந்தனே வியாவில் நீங்கி அழகுறு சோலைத் திண்ண
புரமிசை அமர்ந்தாய் போற்றி.

Page 55
சிவமயம்
**வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்"
என்ற வள்ளுவன் வாக்குக் கிலக்கணமாய் வாழ்ந்து இறை யடி எய்திய எனதருமைக் கணவரும், ஆருயிர்த் தந்தையும் பாசமிகு மாமாவும் அன்புப் பேரனுமாகிய திரு. எம். ஏ. கந்தையா அவர்களின் இறுதிச் சடங்கின் போது நேரில் கலந்து அனுதாபம் தெரிவித்தும், இரங்கலுரை நிகழ்த்தி யும், கடிதங்கள், தந்திகள், தொலைபேசி மூலம் அனுதா பம் தெரிவித்தும், மலர்வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தியும். எமது துக்கத்தை பகிர்ந்து கொண்ட உற் றார், உறவினர், நண்பர்களுக்கும், அமரரின் மாணவர் கட்கும், வேறு பற்பல உதவிகளை வழங்கியோருக்கும், இந் நினைவு மலருக்கு எமது வேண்டுகோளுக்கிணங்கவும், தாமாகவும் ஆசி உரை வழங்கியோர்க்கும், இம் மலரினை தொகுத்து வெளியிட உதவிய ‘வத்தளை பிரிண்டேர்ஸ்" அவர்களுக்கும் எங்கள் மனமுவந்த நன்றியைத் தெரிவித்துக்
கொள்கின்றோம்.
நன்றி?
இங்ங்ணம் அன்புடன் மனைவி - மக்கள்
மருமக்கள் - பேரப்பிள்ளைகள்
★

We, the beloved Wife, Children, in-laws, grand Children, of late Mr. M. A. Kandiah, wish to thank our dear relatives, friends, neighbours and old students who attended the funeral, of our late father Kandiah, sent messages of condolence over phone, telegrams and letters, and floral tributes and those who made funeral orations. We are grateful to those who voluntiered to help us in numerous ways on the funeral day and to the arrangements of the 31st Ceremony. We are thankful to all who sent messages to the Athmasanthy Malar printed in his memory. The 'Wattala Printers was good enough to print the malar and we thank them for the Co-operation given to us.
Wife, Children in-laws and grandchildren
രത്യെ
அச்சுப் பதிவு : வத்தளை அச்சகம் 17/10 நீர்கொழும்பு வீதி, வத்தளை. தொலைபேசி: 530301

Page 56


Page 57
முருகேசு
ஆறுமுகம்+சிதம்பரம்
கந்தையா 9)TiræubLont
தெய்வநாயகி தேவகுஞ்சரி புவனேஸ்வரி கமலாம்பிகை அன்னலச்சுமி
se -- -- -- 'w பாலசுந்தரம் தியாகராஜநாதன் வீரசிங்கம் சிவனேசன்
சேந்தன் லக்ஷிமி ஐங்கரன் மயூரன் கிருஷ்ணா கேசவன் அம்பிகை கலைமகள்
அமலன்

சாவழி
கந்தர்
ஆறுமுகம்+சின்னாச்சி
தங்கரத்தினம் சண்முகநாதன்
சுப்பிரமணியம்
பங்கையச்செல்வி செந்தில்நாதன் தெய்வேந்திரன் sh -H -H உருத்திரன் கிருஷ்ணகுமாரி исхоћ
செந்தூரன் கஜன் காந்தன் அபிராமி கபிலன்
தேவகி
தெட்சணாமூர்த்தி

Page 58


Page 59


Page 60