கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மதுமானிடக் கும்மி

Page 1


Page 2

மதுமானிடக் கும்மி.
காப்பு பூமணம் போலறி வாநந்த மாகிய புண்ணியன் தன்னடி சிந்தை செய்து தீமைத ரும்மது பானத்தைக் கும்மியிற் செப்பத் திருவருள் காப்பாமே.
Effod கள்ளுச்சா ராயங் குடியாதே யபின் கஞ்சா வெறியால் மயங்காதே உள்ள மகிழ்ந்திடுங் கண்கள் சிவந்திடும் ஒட்டாண்டி யாகுவாய் மானிடனே. 1.
புத்தி மயங்கிப் பொருள்கெட்டு கிக்கமும் போக்கிரி யென்றுபேர் கொள்ளாதே செத்த பிணமும் மதுவெறி யாளரும் வித்தியா சமிலை மானிடனே. 2
காசைக் கொடுத்துக் கருத்தழிங் தேகெட்டுக் கைப்பொரு ளற்றுக் கவலையுடன் நீசத் தனமான பேரைப் பெறுவது நீதியோ சீசொல்லு மானிடனே, 3
நீதி யறிவு கியாயமொ ழுக்கங்கள் நேர்மை யெலாங்கெட்டு நெஞ்சழிந்து தீயவ னென்று பலபே ரிகழ்ந்திடச் சேர்வது நீதியோ மானிடனே, 4.

Page 3
2
பூச்சி புழுமயிர் சோற்றி விருந்திடிற் புத்திகெட் டேயதை புண்ணுவிரோ நாற்றமுள் ளபல வியெறும் பேசெத்து நாறும் மதுவல்லோ மானிடனே.
பித்தனைப் போலப் பிதற்றி யறிவற்றுப் பேசா தெலாம்பேசி மான மின்றி இத்தரை மீதினிற் சீயென யாவரும் எசத் திரிவாயே மானிடனே.
கண்ணிய மற்றுக் கதியற்று மாந்தர்கள் காறி யுமிழக் கடையவனுய்ப் புண்ணிய மில்லாத , கள்ளை யருந்துதல் புத்தியோ நீசொல்லு மானிடனே.
பாடுபட் டுக்காலை யந்தி வரைக்கும் பசியுடன் வேர்வைகி லத்தில்விழக் கூலிக்கு வேலைசெய் யற்ப பணத்தைக் குடித்து வெறிக்காதே மானிடனே.
பஞ்சத்தி னலும் வறுமையி னஅலும் பலவித துன்பப் படும்போதும் அஞ்சாமற் கள்ளை யருந்திக் கெடுவது ஆகுமோ நீதியோ மானிடனே.
உண்ணுதற் காகிய நல்ல பொருள்கள் உலகிற் பலவா யிருக்கையிலே தன்னறி வற்று மயக்கும் வெறிநீரைத் தாகமாய்க் கொள்ளாதே மானிடனே.
ஆயிர மாயிரம் நாளும் உழைத்து அரசனு யோங்கி யிருந்தாலும் - தீய மதுவை யருந்துவோர் சம்பத்துக் தீமுன்பஞ் சாய்விடும் மானிடனே.
10
1.

3
தாங்காத சீதள பூமியாம் வெள்ளையர் தங்நாட்டுக் காகமுன் செய்ததனைத் தீங்கான தென்றவ ரேவிடும் போது நீ தீண்டுதல் நல்லதோ மானிடனே. 12
நோய்க்கு மருந்துக்குத் தேக வலுப்புக்கு நோவுக்கு வாய்வுக்கு ஒய்வுக்கெனச் சாக்குகள் போக்குகள் சொல்லிக் குடிப்பது தான்கெடப் பந்தயம் மானிடனே. 13
காசுடன் சேரும் விலைமா அங்குடி கள்ளுடன் குதுமொ ருவருக்குத் தாயமு டனென்று வந்திடின் மற்றதும் தானே வருமறி மானிடனே. 14
வேட்டி துணியற்று வீதிக்கு விதி
விழுந்து புரண்டு வெறிமிகுந்து நாட்ட மிலாது சுவாச மியங்கும் நடைப்பிண மாகாதே மானிடனே. 5
கொஞ்சம் மறைவாய்க் குடித்து முதலிலே கூட்டாளி சேர்ந்தபின் நாட்டமுடன் அஞ்சாமற் கள்ளுக் கடைக்கேயுன் னுயுளை அர்ப்பணஞ் செய்திடும் மானிடனே. 16
கள்ளுச்சா ராய மதுவர்க்க முண்ணுங் கடையர்தம் வீட்டில் கதறியழும் சொல்லும் பசியும் வறுமையுந் துக்கமுஞ் குழ்ந்து அயர்செயும் மானிடனே. 17
ஆசையு டன் தாலி கட்டின பெண்டிரும் அன்பான பிள்ளையும் பாராதே தோசித் தனமான லாகிரி வஸ்துவைத் தொட்டாலுங் கேடுண்டே மானிடனே. 18

Page 4
4.
சொந்தமா யென்றும் மனிதர்க்குப் புத்தி சுவாதீன மின்றி யிருக்கையிலே மந்தமாய்ப் புத்தி யறிவுகெட் டுச்செத்து
மானங் கெடாதேரீ மானிடனே. 19
மாமுட்டஞ் செய்து மனிதர்க்கு முன்னிலே மானங் கெடுத்து மதிகெடுத்து முேய்ப் பணத்தை யழிக்கும் மதுவினை நீங்கிக் கரையேறு மானிடனே. 20
கஞ்சி குடிக்க வழியற்ற பேருங் கடன்பட்டுக் காசை முடிந்துகொண்டு கொஞ்சமும் வெட்கமி லாமல் வெறிநீர் குடிப்பது புத்தியோ மானிடனே. 21
ஏழைக் குடியிற் பிறந்துமா தாபிதா இல்லாத பாடெல்லாம் பட்டுழைத்து நேரத்துக் கன்னமி லா துஞ் சிலநேரம் கித்திரை கொண்டவர் மானிடனே. 22
வீட்டுப் பொருளை நகையை நிலத்தையே விற்றுப் படித்து வெளிக்கிட்டவர் மாற்றி யுடுப்புத் தரித்தா லவர்புத்தி
மாறுவ தென்னகாண் மானிடனே. 23
கள்ளுக் கடையும் பிறண்டிக் கடையுமே கண்டது லாபங் கருணையினும் கொள்ளக் கடவுள் அறிவுடை மக்களிற் கூட்டிவைத் தாாறி மானிடனே. ... 24
தாயும் பசியாற் தவித்தே யலைந்திடத் தன்பெண்டிர் பிள்ளை தயங்கிநிற்கத் தீய மதுவை யருந்துங் கடையர்
திறமென்ன கீசொல்லு மானிடனே, 25

5
ஆன தவிடும் அடுப்பு நெருப்பும்போ யங்குமிங் குங்கெட்டே யல்லலுற்று மான மழிந்து கடன்கார ணுக்கும் மதுவை யருந்தாதே மானிடனே. 26
என்ன நினைப்புடன் ஒவ்வோர் முயற்சியை ஏற்று நடத்த வியைந்துகின் முய் பின்னதை மாற்றிப் பிறண்டியைக் கொண்டி.டிற் பேதைமை யல்லவோ மானிடனே. 27
கொஞ்ச மெடுப்பது சம்பள மக்தைக் குடிக்கவுங் கூட்டாளி வீணருடன் அஞ்சாமற் கூடி யழித்துக் தெருவி லலைந்திட வந்தாயோ மானிடனே. 28
ஊரிற் கொலையு மடிபிடி சண்டையு முண்மையி லெத்தால் வருவதென்று தீர விசாரிப்பின் கட்குடி யாலென்று தேர்ந்து கொளலாமே மானிடனே. 29
நன்மை புரியவுங் தீமை யொழிக்கவும் நாளுங் கடவு ளடிதொழவும் இம்மை மறுமை யிரண்டிலு மின்பமே எய்தவும் தேடிக்கொள் மானிடனே. 30
ஆவேசங் கொள்ளு மனியாய நீரினில் ஆசைவைத் தல்லும் பகலுமதை நேசித் ததன்மய மாகித் தெருவினில் கிற்காதே கிற்காதே மானிடனே, 31
சாராயங் கள்ளுப் பிறண்டி விசிக்கி சவமாகச் செய்யும் மதுவகைகள் தீராக் கடனுங் களவுஞ் சிறையுமே
சேர்க்குங் கருவியாம் மானிடனே. 32

Page 5
6
பேய்வடி வாக்கு மொருபோது புத்தி பேதமற் ருே?ரெனக் காட்டுமுயிர் போய்விட்ட செத்த பிணமாக் குமதைப் போற்ற தகற்றிடு மானிடனே. 33
ஆருக்குங் தீங்கு புரியச்செ யும்நன்மை ஆனது மாகாதும் தோணுது பாருக்குள் ளேகுடி காரனைப் போலப்
படுபாவி வேறிலை மானிடனே. 34
கேடுசெ யும்மந்தி ராலோ சனச்சபைக் கேற்றசிங் காசன மாகுமிதை ஆருந் தொடாவிடிற் கோட்டு வழக்கு மதிகப் படாதறி மானிடனே. 35
உள்ளுக்குப் போனபி னென்னென்ன மாதிரி புற்பத்தி யாக்கிடும் நற்புத்தியைக் கொல்லுங் களவுங் கொலைகாமங் கைத்தளை கொண்டு வருந்தூது மானிடனே. 36
செத்தபின் நாலுபேர் தூக்கும் பிணம்போற் தெருவிற் கிடந்து பலர்கடி t மெத்த விகழ்ந்து வெறுக்கவுங் காவவும் மேன்மை யிழக்காதே மானிடனே. 37
சீயென்று நாயென்று பேயென்று பேர்கொண்டு தேசத்திற் கெட்ட வெறியனென்று தாயும் வெறுக்கும் மதுபானஞ் செய்து தாழ்வு படலாமோ மானிடனே. 38
நல்ல குலத்திற் பிறந்தா லுங்தந்தை நானு விதத்திற் சிறந்தாலும் பொல்லாத கெட்ட குடிய னெனப்பெயர் பூண்டால் மதியாரே மானிடனே. 39

t
சோற்றுக் கில்லாமல் மனைவியும் மக்களும்
துன்புற்றுச் சோர்ந்து பசிகிடக்க மோட்டுத் தடியர் குடித்து வெறிக்கும் முடிவென்ன நீசொல்லு மானிடனே.
தாலியை வாளியை வீட்டுப் பொருளையே தன் புத்தி கெட்டுக் குடிக்கவெண்ணி வேலையில் லாமலே விற்றுக் கெடுகின்ற வீணர் மதியென்ன மானிடனே.
எந்த கியாயத்தி னுலும் மதுவை இதமென்று கொண்டு மதியாதே கிங்தையும் கேடும் வறுமையும் துக்கமும் கித்த முனைச்சூழும் மானிடனே.
அன்பும் பொறையும அறிவும் தயாளமும் ஆற்றலும் நேர்மையும் உண்மையுமெப் பண்புங் தினையள வேனுங் குடியரைப் பற்றது பற்றது மானிடனே.
நீதிக்கு மாறு செய்யவே னுமென்று கினைப்பவர் கொஞ்சங் குடிக்கவேணும் ஏது செயவேணு மாகிலும் செய்விக்கும் என்ப தறிந்துகொள் மானிடனே.
பஞ்சமா பாதகம் என்பர் மதுபானம் ஐந்தையுஞ் சேர்ப்பிக்கும் கூட்டாளி கொஞ்சநே ரமதை யோசிக்கில் புத்திமான் அஞ்சுவா னேதொட மானிடனே.
துட்ட மிருகமும் பாம்புஞ் சிலபோது துன்பஞ் செய்யாமல் விலகிவிடும் கெட்ட குடிகாரன் நேசமெப் போதுமே
கேட்டை விளைவிக்கும் மானிடனே.
40
41
42
43
44
45
46

Page 6
8
அஞ்சாமற் கள்ளு முதலாம் மதுவகை ஆமான யோக்கியர் தீண்டார்கள் நெஞ்சுணர் வற்ற முழுமூட ரேயதை நேசித்துப் பூசிப்பர் மானிடனே. 47
மக்கள் எதிரில் வரக்கூசும் ஆண்மையும் மானமும் கெட்டு மதிப்பிழந்து துக்கப் படச்செயும் கேட்டைத் தொடாமலே தூர விலகிக்கொள் மானிடனே. 4S
வேடிக்கை யாக முதலில் இருந்திடும் மெல்லமெல் லக்கூடிப் பள்ளத்திலே தேடி விழுத்தி யெதற்கு முதவாத தீபவ னுக்கிடும் மானிடனே. 49
சந்தோஷங் கொண்டாட வேண்டிக் குடித்தபின் சண்டைகள் மூண்டு கொலையாகி வந்த பழிகள் அனேகம் அறிவுளோர்
வாயிலும் வைப்பாரோ மானிடனே. :50
கொண்டாட்ட மென்பது போத்தலுக் குள்ளே குடிகொண் டிருப்ப தெனச்சிலபேர் கண்ட வுடனே காங்குலுக் கிமுதற் காரியம் பார்க்கிருர் மானிடனே. 51
நண்பரை கேசரைக் கண்ட விடத்திலே நற்சுக சேம விசாரணைக்காய் பண்பிலா மூடர் மதுக்கடை தேடும்
பரிசு கெடுகாலம் மானிடனே. 52
வேலையி னின்றும் இளைப்பாறு வோருக்கும் வேந்த ரளித்தபட் டத்தினர்க்கும் சீல மரியாதை கூட்டம் விருந்துக்குத் தேனீரென் முேர்பெயர் குட்டிக்கொண்டு. 53

9
பெட்டிக் கணக்கில் மது நீருக் கேபணம் பின்னடை யாமலே வாங்கிவைத்துக் குட்டிச் சுவராய் குடித்து வெறிக்கும் குணமென்ன கீசொல்லு மானிடனே. 54
அன்புடன் வேறு வழிதெரி யாமல் அறிவுகெட் டல்லற் படுவதையே
இன்ப மெனக்கொண்டு கூடிக் குடிக்கும் இழிஞர் மதியென்ன மானிடனே. 55
பித்தனைப் பேயனை மாற்றி வழிகொளப் பேசு மருந்துண்டு மானிலத்தில் சித்த முடன் மானங் கெட்ட குடியரைச் செய்வதென் மீசொல்லு மானிடனே. 56
கற்றுவிட் டோமென நாலா றிரண்டையும் காலுறை யோடு முடிவாக்கிச் சற்றும் மதியின்றிப் பெற்ருே ரை யும்விட்டுத் தான்சாமி யென் கிருர் மானிடனே. 57
சாராயம் கள்ளுப் பிறண்டி விசிக்கி தனிமையி லுட்செல்ல மாட்டாது காராடு கோழிமீ னேதேனு மொன்று
கலந்திட வேணுமே மானிடனே. 58
பொல்லா மது வினைக் கொள்ளிடின் தீய புலையும் கொலையும் வலியவரும் நல்லாரும் தீயவர் போலவே தோற்றுவர் ஞாய மறிதியோ மானிடனே. 59
சொன்ன சொல் காப்பதும் நீதியும் உண்மையும்
தூய்மையும் அன்பும் தொழுதகையும் இந்நெறி யாவும் குடிகாறர் பக்கலில் எட்டியும் பாராதே மானிடனே. 60

Page 7
10
தீங்கைச் செயுமொன்று பின்னும் பலவகைத் தீங்கையும் தன்னுடன் சேர்த்துவைத்துப் பாங்காய் உலகில் பழிபாவம் உண்டாக்கும் பாவியைத் தீண்டாதே மானிடனே. 61.
முன்னுக்கு நல்லது போலவே தோற்றி முழுக்குடி காரணுய் ஆனபின்பு மன்னிய கேடுகள் யாவுமுன் விட்டில் மலிந்து கிடக்குமே மானிடனே. 62
நல்லறி வுச்சுடர் உள்ள மனிதர் நமனுகுந் தீய மதுவகையை உள்ளவும் செய்வரோ பொல்லாத மூடரே உச்சியில் வைப்பவர் மானிடனே. 63
நல்ல முறையில் உடலைக் கவனித்து நாதங் கெடாமலே வைத்துக்கொண்டால் எல்லையில் லாத வலிமையும் ஆயுளும் எய்தும் அறிந்துகொள் மானிடனே. 64
மேட்டு கிலத்திலே வீட்டை யமைத்தலும் மேவிய நல்லுண வுண்ணுதலும் காட்டிய தூய்மையாய் ஆடை உடுத்தலும் கண்ட சுகவழி மானிடனே. 65
நாளு முலாவலும் வேர்வை கழித்தலும் நன்னீரிற் தோய்தலும் சொன்னபடி மாளும் மயக்க வெறிநீரை நீக்கலும் மாண்புடை யார்செயல் மானிடனே. 66
தன்மனை தாய் தங்கை வேற்றுமை யற்றுத் தடுமாறி யுள்ளுணர் வில்லாதே இன்னிலை கெட்டு விலங்குகள் போல விருப்பர் குடிகாரர் மானிடனே. 67

11
உண்ணும் உணவில் ஒருகூறு நன்மனம் ஒன்றுவ தென்னும் உரைப்படியே தின் மை தரும்மது நீரின் குணம்போலச் சேரும் மனநிலை மானிடனே. 68
தீயவர் கூட்டமே கெட்ட குடியணுய்ச் செய்வ தனுபவம் ஆதலினல் நேயமாய் அவ்வை பெரியார் துணை தனை நீதியாய் கூறினள் மானிடனே. 69
நன்மை புரிவதும் தீமை தவிர்ப்பதும் ஞாலத்தில் யார்க்கும் உடன்பாடே தின் மைக் குரிய வழியைத் தவிர்த்தல் சிலர்க்கேன் உடன்பாடு மானிடனே. 70
மாய மயக்கம் இயல்பாய் மனிதரை வாட்டி வருத்தி யிருக்கையிலே நேய மிலாத மதுவினை உட்கொண்டு சீர்மை யழியாதே மானிடனே. 71
பேச்சுத் தடுமாறி மூச்சுத் திணறிப் பிதற்றி மனித நிலையைவிட்டுச் சீச்சீயென் றெல்லோரும் ஏசுங் குடிவகை தீண்டாதே தீண்டாதே மானிடனே. 72
எப்படி யானலும் அற்பத் தனமான இங்கிதம் அற்ற குடிவகைகள் செப்பிய யோக்கியம் அற்றவன் ஆகவே
செய்திடும் செய்திடும் மானிடனே. 13
எந்த வகையான நற்குணம் சேரினும் இந்திரன் போலவே வாழ்ந்தாலும் அங்கரம் ஆகும் குடிகாரன் வாழ்வுதான் ஆரும் அறியலாம் மானிடனே. 74

Page 8
12
மதுபான மாந்தர் இறந்தாலும் குக்கும வாழ்க்கை உடலில் வருந்திகிதம் கதியற் றலைந்து வெறியிச்சை யாலே கதறித் திரிவாசே மானிடனே.
மங்கள மான மணஞ்செயு நாளினும் வாழ்வினுந் தாழ்வினும் பாழான இங்கித மற்ற மதுபானம் உட்கொண்டு ஏன்கெட்டுப் போகிருய் மானிடனே.
தீபா வளியெனும் தெய்வத் திருநாளைச் செப்பிய மார்க்கம் புனிதவழி பாதக மான வழியில் அதை வைத்துப் பண்பு கெடலாமோ மானிடனே.
புண்ணிய நாளில் விரத மிருக்கின்ற புத்தியைக் கொண்டந்த நன்னுளில் கண்ணிய மாகக் கடவுளை வேண்டியக் காலத்தைப் போக்குநீ மானிடனே, "
சாராய வர்க்கமும் கோழியும் ஆடுடன் சம்பார வர்க்கமும் சேர்த்துவைத்துப் பூசாய மாகக குடித்தனி (LJ fl7f til JLD fl iiL J போவது நன்றல்ல மானிடனே.
ஆட்டினைக் கோழியை ஆபாச நீரினை அன்புள்ள தெய்வம் விரும்பாது
76
77
S
7. 9
மோட்டுக்குள்ளேயிடத்தெய்வத்தைச்சாட்டியே
மோசம்போ காதேரீ மானிடனே.
80
மெய்வாய்கண் மூக்குச் செவியும் நிலைகெட்டு
மேவும் புலனைந்தும் மாய்வதினுல்
உய்வழி கெட்டிங் கிருப்பினும் சாகினும்
ஒன்ருகும் ஒர்ந்தறி மானிடனே.
Sl

13.
தந்நாடு பிச்சை யெடுக்கப் பிறநாடு தாங்கிப் பணம்படைத் தோங்கிநிற்கப் பின்னலும் முன்னுலும் இல்லா வழக்கத்தைப் பேணிக் கெடாதேரீ மானிடனே. 82
தேறித் திருந்தினுே மென்று செருக்குற்றுத் தீநீர் அருந்தும் மடையரைப்போல் ஆறுதல் அற்ற வறிஞரும் உட்கொண்டு
அல்லற் படுகிருர் மானிடனே. 83 மேசைக் குடிவகை வெள்ளைச் சிகறற்று
மேன்மையென் றெண்ணியே புத்திகெட்டுக்
காசைக் கொடுத்துப் பழியோடு தீமையைக் கைக்கொள்ள லாகுமோ மானிடனே. S4
கள்ளுச் சாராய்க் கடைக்குத் தவறணே கண்டதோர் பேரின் கருத்தையறி உள்ள தவறுகள் எல்லாம் ஒருங்கே உருக்கொள் இடமாகும் மானிடனே. 85
சாந்த நிலையில் இருக்கும் ஒருவர்க்குச் சாராய வர்க்கத்தில் ஒன்றளித்துக் கூர்ந்து கவனித்தால் அன்னவர் தன்மை குணதோஷம் காணலாம் மானிடனே. 86
பல்வித துன்பம் உடலுக் கிருக்கையில் பாழான கெட்ட மதுவருங்கி நல்வினை யற்றுச் சுகங்கெட்டு மாந்தர் நகைக்கத் திரியாதே மானிடனே. 87
கோடிபெற் முேருங் குவலய மீதினில் கூடி மகிழ்வுடன் வாழ்வதுதான் நாடி அறிவதுண் டேலற்ப காலமே நண்ணநீ காணுவாய் மானிடனே. 88

Page 9
14
பிள்ளை வயதினில் நல்லார்பொல் லாரெனப் பேச முடியாது கேசமுடன் கொள்ளுஞ் சினேகமும் கூட்டமு மேயவர்
குற்றப் படுவது மானிடனே. S9
சந்தன மாமரம் தன்னரு கேகிற்குக் தாலமும் சந்தன வாசனையே அந்த விதம்போல் அவரவர் சேர்க்கை
அளிக்கும் பலனறி மானிடனே. 90
குது களவு மது விப சாரம் சுகமாய் இருக்குங் துவக்கத்திலே வேதனை செய்து வரவரத் துன்பமாய் மேவி யழித்திடும் மானிடனே. 91
பொல்லாங்கு செய்யும் வினைகள் எவற்றையும் போக்கி மனத்தினைத் தூய்மையுடன்
எல்லாரும் இன்புறத் தன்னுயிர் போலவே
எண்ணுதல் வீடாகும் மானிடனே. 92.
தன்னை யுலகில் வழியில் நடத்தலும் தான்செலும் மார்க்கத்தை யெண்ணுதலும் இன்னிலை வேண்டிய மாந்தர்க் குரியவை . யிதன்றி வேறிலை மானிடனே. 93
தீய பழக்கங்கள் வாசனை யாய்கின்று சேர்ந்து வருமெனும் உண்மையினுல் நேய முடனவை யொன்று மிலாமலே
நீதியைக் கண்டுகொள் மானிடனே. 94
புண்ணிய மேன்மையி னுலே மனிதப் பிறவி யெடுத்து வரவேண்டும் கண்ணிய மற்ற குடிவகை யாலே கடைப்பட் டுழலாதே மானிடனே. 95

15
சாராயங் கள்ளபின் தீய குடிவகைச் சாப்புடன் குத்தகை கொண்டுபல ஏராள மாகப் பணம்படைத் தோர்கனும்
ஈற்றில் நிலையில்லை மானிடனே. 96
தீய வழியில் வரும்பொரு ளெந்நாளும் தீமையைச் செய்து சிலநாளில் மாயமாய் கின்ற பொருளையுங் கொண்டு வருந்த வொழிந்திடும் மானிடனே. 97.
பொய்யுங் கொலையும் இருகா மாகிடும் போக்கிலித் தன்மை புருவாகும் செய்யும் விபசாரம் கண்ணுகு மந்தத் தீய மதுவுக்கு மானிடனே. 9S
காமாதி யாறு குணங்களும் அந்தக் காரணமா யோங்கிப் பரிணமிக்கும் காம வுருவான ஆவேச நீரினை நல்லோர் தொடுவாரோ மானிடனே. 99
கல்லாத மாந்தருக் கெத்தனை தான்புத்தி காதி லுரைத்தாலும் எருது அல்லாத மாந்தரே கெட்ட மதுவை யருந்திக் கெடுபவர் மானிடனே. 100
தீமை குடிவகை யென்று பல்லோரும் திறம்படப் பேசுவர் சொற்பொழிவும் நாம மளவினில் நிற்பதல் லாதோர் நலமுமுண் டோசொல்லு மானிடனே. 101
அவ்வகை போலிந்தக் கும்மியைப் பாடி அடுப்பாங் கரையி லெறிந்துவிட்டுச் செய்வதை முன்போலச் செய்து கெடாமலே
சீர்பெறச் செல்லைப்ா செப்பினனே. 102

Page 10
16
செய்தோனும் காலமும்,
செந்தமிழ் ஆசிரியன் யாழ்ப்பாணம் வண்ணே சேரும் பதியில் ஒளிநிலவ வந்தசெல் லையனர் கும்மியைச் சுக்கில வாண்டினிற் கூறினர் வாழ்ந்திடவே.
 


Page 11

|-
『エ |-