கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: முத்துத்தாண்டவர்

Page 1

|-
|- |-│ │ │ |- s.
_s|)| 1.
No|-

Page 2

இஃது கொழும்பு பூனி. சேர். அருணுசலம் மகாதேவா அவர்களின் புத்திரரத்தினமும் இலங்கை அரசாங்க றப்பர் தேயிலைக்கட்டுப்பாட்
டதிபரும் சற்குணதீபமுமாகிய ரீ. பாலகுமாரன் மகாதேவா
C. C. S.
அவர்களுக்கு
அர்ப்பணம் செய்யப்பட்டது

Page 3

பண்டித நட ராஜபிள்ளை

Page 4

அணிந்துரை
யாழ்ப்பாணம் இராமநாதன் கலாசாலை இசைக்கலைத் தல வரும் சங்கீத கலாநிதி, சங்கீத பூபதி 1 ன்னும் பட்ட வர்த்தனரும் ஆகிய மகாராஜபுரம்
பிரம்மறி விஸ்வநாத ஐயரவர்கள்
எழுதியது கொழும்பில் வசிக்கும் யாழ்ப்பாணத்து ர்வே லிச் சங்கரபண்டிதர் மகன் சிவப் பிரகாச ண்டிதரின் மகனுகிய பண்டிதர் நடராஜ பிள்ளை யவர்களால் எழுதப்பட்ட முத்துத்தாண்டவர் சரித்திரம் எ ன் றும் இச்சிறுநூலைப் பா ர் த் தேன். நாஸ்த்திகம் பரவித் தலை விரிந்தாடும் இக் காலத்தில் இவ்விதமான நூல்கள் வெளி வருவது மிகவும் விரும்பத்தக் க தொன்ற கும் இந்நூலாசிரியர் இந்தத் தாண் டவருட ன் சம் பந்தப்பட்ட சீர்காழி சிதம் பரம் என்னுந் திருத்தலங்களையும் அவ்வத்தலங்களின் தேவா ரங்களிற் சிலவற்றையுஞ் சுட்டிக் காட்டி யிருக்கிருர், . . . ."
இதைக் கற்பவர்கள் பத்திவலையிற் புகு ந்து ஆநந்த சாகரத்தில் நின்று ஆடுவார்கள் என்பதற்கையமில்லை ப க் த ர் க ள் இந்நூலை வாங்கிப்படித்து இன்புறுவார்கனாக.
இங்கனம் மகாராஜபுரம் 5-10. 60 விசுவநாதய்யர்

Page 5
யாழ்ப்பாணம் பரமேஸ்வரக்கலாசாலை அதிபரும் சேர். பொன்னம்பலம் இராமநாதனவர்களின் மருமகனும் ஆகிய சு. நடேசபிள்ளை B. A. அவர்கள்
எழுதியது
முத்துத்தாண்டவர் இயற்றிய பதங்களும் கீர்த்தனைகளும் பக்திரசம் ததும்பும் இசைப் பாடல்களாகப் போற்றப்படுவன. முத்துத் தாண்டவரது சரித்திரத்தைச் சுருக்கமாகத் திரு. சி. நடராஜப்பண்டிதர் எழுதி வெளியிடு கின்றர். இதில் முத்துத் தாண்டவர் இயற்றிய சில கீர்த்தனங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இசையைத் துணையாகக் கொண்டு முத்துத் தாண்டவர் இறைவன் திருவடி எய்திய வரலா ற்றை இந்நூல் விளக்குகின்றது.
சு. நடேசபிள்ளை 1 6-1 2-60

டெ சிவமயம்
உ போற்காதம்
-- ---ܡܗܚ----
பரந்த கடலிசூறற் சூழப்பட்ட இந்தப் பூவுலகமா னது சுவாத்திய வேறுபாட்டினல் ஒன்றற்கொன்று முரணுன நடை உடை பழக்கவழக்கம் என்பனவற்றை யுடைய மக்கள் வசிக்கின்ற அநேக தேசங்களைத் தன் னகத்துட்கொண்டுள்ளது. இந்தத் தேசங்கள் ஒவ்வொன் றிலும் பண்டு தொட்டுப் பேசப்பட்டு வழங்கிவந்த பாஷைகளே அவ்வத்தேசங்களின் பர்ஷைகளாகும். சில தேசங்களில் ஒன்றிற்கு மேற்பட்ட பாஷைகளும் பேசப்படுகின்றன. எனினும் ஏறக்குறைய நூற்றைம் பது வருடகாலமாக ஆங்கிலம் உலக மொழியாக எங் கும் பேசப்படுகின்றது இ த ன் காரண மென்னையோ வெனின் ஆங்கிலேயர் தங்கள் பலத்தினலே உலகம் முழுவதிலுமொவ்வோர் இடங்களைக் கைப்பற்றி வர்த்த கத்தை விருத்தி செ ய் து ஆங்காங்கு தங்களாதிக் கத்தை நிலை நிறுத்தியமையினலும் இந்த ஆங்கிலம் கற்பவர்ளுக்கு மிகுலகுவாக இருப்பதனலுமேயாகும். அபிமானம் என்பது மானுடர்கள் யாவரிடத்திலுமுள்ள ஓர் குணமாகும், இது சாதியபிமானம் சம யாபிமானம் தேசாபிமானம் பாஷாபிமானம் எனப்பலதிறப்படும்` இதுவரையிற் சிலவருஷங்களாக அந்நியர் ஆதிக்கத்தில் அடங்கி ஒடுங்கிக் கிடந்த கீழைத்தேசத்தவர்களுட்பலர் சுயராச்சிய மடைந்தமையாற் பாஷாபிமானம் பெ ரிது முற்றுத் தொழில் புரிகின்றனர். ஒவ்வொரு சாதி யத் தாரும் கிணற்றுத்தவளையே போன்று தத்தம்பா ஷையே மிகப்புராதனமான தென்றும் விசேஷமுற்ற தென்றும் தனித்தனிவாதிக்கின்றனர். பலபாஷா பண்

Page 6
டிதர்களே இதனை நிர்ணயஞ்செய்யும் பெற்றிவாய்ந்த வர் இவர்களுள் எங்கள் இலங்கையிலும் இந்தியாவிலு முள்ள தமிழ்த்தலைவர்களின் தொண்டு புகழப்படத்தக் கதேயாகும் முற்காலத்திலே எங்கள் யாழ்ப்பாணத் திலே ஆரிய திராவிட பாஷா பண்டிதர்கள் பலரிருந்து தமிழ் நூல்களே ஆக்கியும் சைவப்பிரசங்கங்களைச் செய் தும் தமிழ் மொழியைப் பெரிதும் விருத்தி செய்தார் கள். இவர்களுள் சேணுதிராஜ முதலியார், ஆறுமுக நாவலர், அவரின் மருமகன் வித்துவசிரோமணி பொன் ஆனயபிள்ளை, அவரிடத்திற் கலை பயின்ற சுவாமிநாத பண்டிதர், எனது தந்தையாரின் தந்தையார் சங்கரபண்டிதர் அவரிடத்திற் கலை பயின்ற கோப்பாய்ச் சபாபதிநாவலர், எந்தையார் சிவப்பிரகாச பண்டிதர், அவரிடத்திற் கலை பயின்ற அம்பலவாண நாவலசுவாமிகள், மேலேப்புலோ விச்சதாவதானம் கதிரவேற்பிள்ளை, புதுக்கோட்டைச் சமஸ்த்தானப் பிரதம நீதிபதியாக இருந்த சி. வை. தாமோதரம் பிள்ளை, சென்னையில் வசித்த திரிகோண ஜக் கனகசுந்தரம்பிள்ளை, நீர்வேலிப்பீதாம்பரப் புல வர் கன்ஜனக் குமாரசுவாமிப் புலவர், என்பவர்களே மிகப்பிரசித் தி பெற்றவர்களாகும். இவர்கள் சம்ஸ்கி; ருதம் தமிழ் என்னுமிருபாஷைகளிலுமுள்ள இலக்கண இலக்கியதர்க்கநூல்களை ஐயந்திரிபறக்கற்று எங்கள் ஈழ மண்டலத்திலும் இந்தியாவிலும் பலராலும் மதிக்கப்பட் டவர்கள். இந்தியாவிலிருந்த திரிசிரபுரம் மீனுகூFசுந்த ரம்பிள்ளை, குடந்தைத்தியாகராஜச் செட்டியார் பண்டி தமணி கதிரேசச் செட்டியார் போன்ற பெரும் புலவர் களேயல்லாது மற்றைய சில குட்டிப்புலவர்களும். உண் மைககல்வியறிவுற்றிருந்தும் . .
S. m. நூலுரை போதகாசிரியர் மூவரு
முக்குணவசத்தால் முறைமறைந்தறைவரே 3வத்தை வசத்தால் அலகுவர் திடனே அதி மதிநுட்பமோ அதிகல கற்பினும் விதியது வசத்தால் லிதிவிலக் கயாப்பார்

எனத் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த ஈசான மடாதிபதியாக இருந்த ஈசானதேசிகர் எள்னுஞ் சுவா மிநாததேசிகரவர்களியற்றிய இலக்கணக்கொத்திற் கூறி யாங்கே மனச்சாட்சிக்கு மாருகப்புகலும் வேதாகமப் புரட்டர்களும் இந்த யாழ்ப்பாணப் புலவர்களின் பெயர் களைக் கேட்டவுடனேயே நடுங்கினர்கள். இவர்களேயல் லாமல் நவாலிச் சோமசுந்தரப்புலவர், பாதர் ஞானப்பிர காசர், இராசநாயக முதலியார், சுவாமி விபுலானந்தர், சுதேச நாட்டியப் பதகிராதிபராய துஷ்ட நி க கி ர க , வேலுப்பிள்ளை என்பவர்களும் பாஷாபிவிருத்தியின் பொ ருட்டரும் பாடுபட்டுள்ளார்கள்.
இவர்களின் போதனைகளினலே மாழ்ப்பாணத்தவர். களிற் பெரும்பகுதியினர் கல்வியறிவுற்றவர்களாகவும் சை வாசாரப் பழங்களாகவும் விளங்கினுர்கள் கிராமங்கள் தோறும் ஆலயங்களை அமைத்து அறிவும் ஒழுக்கமு முள்ள குருக்கள் மாரைக்கொண்டு நித்தியநைமித்தியங் களை நடத்துவித்தார்கள். மறப்பினு மோத்துக் கொள லாகும் பார் ப் பா ன் பிறப்பொழுக்கங்குன்றக்கெடும் என்ருர் திருவள்ளுவர். பதிதன் என்னுஞ்சொல் சாதி சயய ஒழுக்கங்களிற்தவறினவன் என்னும் பொருளை உடையது. “பதிதஸ் ய நதாஹ" என்பது அகநிர்ணயச் சுலோகப்பகுதி. இதன் பொருள், ஒருவன் பதிதஞய் விட்டானுகில் அவனுடைய ஞாதியர்கள் அவனே இறந்த வனுகப் பாவித்துத் தர்ப்பை சுட்டு ஸ்நானஞ் செய்து அவனைக் கழித்துப் போட்டார்களேயாயின் அதன் பின் னர் அவனுல் வரும் ஆசௌசங்கள் யாவும் ஞாதியர் களுக்கு இல்லிை என்பதாகும். இது தமிழ் நாட்டுமர பாகும். இவ்விதமான் சம்பவங்க்ள் சிலாங்கள் யாழ்ப் பாணத்தில் நடந்ததை யான்நேரே கண்டுள்ளேன்.
இஃதிவ்வாற்ருனே இருக்கத்தற்காலத்திலெங்களின் சைவசமயாபிமானம்' விரைந்தெழுத்து ஓடித்தேசாபி மானத்துடனிரண்டறக் கலந்து அதன் ம்யமாகிச்சைவச

Page 7
மயாசாரப் பழக்க வழக்கங்களையெல்லாங்கெடுத்தற்கு ஆரம் பித்து வி ட் டது. இது இங் ங் னே யாக த் தெய்வ வழிபாடு குறைந்து தெய்வ நிந்தனையும் மறை கள் நிந்தனையும் ஆரம்பித்துவிட்டன, இளைஞர்களெல் லோரும் அரசியலிற் கவனஞ் செலுத்துகின்ருர்களன்றிக் கல்வியிற் சற்றேனுங் கவனங்கொள்கின் ருர் களில்&ல, அந்தணர்கள் முன்போன்று தங்கட்குரிய ஆறுவகைத் தொழில்களையுஞ் செய்கின்றர்களில்லை, அவர்களை முன் னரே போன்று ஆதரித்து ஊக்கப்படுத்துபவர்களும் அருகிவிட்டார்கள். இதல்ை அவா களும் இந்தியாவி லுள்ள பிராமணர்களில் ஒருசாரார் பேர்ன்று அரசின ருத்தியோகங்களை நாடுகின்றர்கள், ஐயையோ, அவர் கள்தான் என்ன செய்வார்கள், தமிழ்ப்பாஷையிலாவது வேறு எந்தப்பாஷைகளிலாவது பிரதானமாகக் கற்க வேண்டியது இலக்கணமேயாகும் இலக்கணங் கற்கா விடில் பிழையறப் பேசவாவது எழுதவாவது முடியா தென்பது பலருமறிந்ததொன்ற கும், முற்காலத்திருந்த ஆசிரியர்கள் நிகண்டு நன்நூல் தொல்காப்பியம் பார தம் இராமாயணம் திருவள்ளுவர் திருக்கோவையார் புறநாநூறு முதலனவாய இலக்கண இலக்கிய நூல் களைக் கற்பித்தார்கள், கற்பவர்களும் மாணுக்கமுறை யானே இருந்து கற்ருரர்கள் இனி இடைக்காலத்தில் அரசினரின் உதவிபெற்ற பாடசாலைகளில் ஆரும் வகுப்பு மாணவர்களுக்கு நன்நூலில் எழுத்தியல் பதவியல்களும் ஏழாம் வகுப்புக்கு பெயர் வினை பொது இடை உரியி யல்களும் எட்டாம் வகுப்புக்கு உயிரீற்று மெய்யீற்று உருபுபுணரியல் களும் கட்டாயமாகவே படிக்க வேண் யனவாக இருந்தன, அக்காலத்தில் அரசினரின் தரா தரப்பத்திரம் பெருதவர்களாக இருப்பினும் முறை யானே கலைபயின்று அறிவுமுதிர்ந்த ஆசிரியர்களும், அவ்வாற்ருனே நிரம்பிய கல்வியுடன் தராதரப் பத்தி ரம்பெற்ற ஆசிரியர்களும் செவ்விதே கற்பித்தார்கள். வித்தியா பரீக்ஷகர்கள் ஆங்கிலப் பட்டதாரிகளாக இருந் தமையால் அவர்களிற் சிலா இலக்ண இலக்கியங்களை நன்கறியாதிருந்தார்களெனினும் தெரிந்தவர்கள் போன்று வெகு சாதுரியமாகக் கருமமாற்றினூர்கள். சில பாட சாலைகளில் எட்டாம் வகுப்பிற் படித்த பிள்ளே கள் கந் தபுராணம் முழுவதிற்குமே பயன்சொன்ன பெருமை யையும் பெற்றிருந்தார்கள். தற்காலமோவெனின் இலக் கணம் என்ற பாடம் அரசினர் பாட அட்டவணையி

லிருந்தும் மறைந்தோடிவிட்டது. அது எங்ங்குே ஓடி யது எங்குப்போய்த்தங்கியிருக்கின்றது என்பது பரமரக சியமே. ஆசிரியர்களுட் சிலர் பாஷை என்னும் பாடத் தினுள்ளே இலக்கணமமைகின்றதே எனக்கூறுகின்ருர் கள். ஐயையோ, மதுரைத் தமிழ்ச் சங்கத்திற் பெரும் புலலர் திலகமாக இருந்துகொண்டு தருமி என்னுமந்தணச் சிறு வன் கொண் டு வந்த சோமசுந்தரக்கடவுளின்
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமஞ் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற் செறி யெயிற்று அரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீயறியும் பூவே என்னும் செய்யுளிற்கும் பிழை கூறிய நக்கீரதேவருக் கும் தமிழிலக்கணஞ் செவ்விதே தெரியாதென்று அகத் திய முனிவர் கற்பித்தாரென்ருல் அந்த இலக்கணத் தினைப்பாஷை என்னும் பாடத்தினுளடக்கித் தற்கா லத்திலாசிரியர்கள் படிப்பிப்பதெங்ங்ணுே என்பதனை யும், இந்த ஆசிரியர்களுள் நூற்றிற்கு எத்துணைவிகித மானேர் இலக்கண இலக்கியங்கற்பிக்குமாற்றல் பெற் றுள்ளனரென்பதனையும் ஆராய்ந்து ஆவன செய்தல் தமிழ்ப் பாஷையை விருத்தி செய்யக்கருதும் பெரி யோர்களின் கடமையேயாகும்.
தற்காலத்தில் விஞ்ஞானம் (சயன்ஸ்) மிருகநூல் (சூலோசி) தாவரதூல் (பொற்றணி) முதலியன ஆங்கி லத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்னன. இவைகள் சாலவும் வரவேற்கப்படவேண்டியனவேயா கும். இவைகளில் முன்னரே தமிழ்ப் பாஷையில் வழ ங்கப்படாத புதுப் புதுச் சொற்கள் சில மொழிபெயர் பாக எழுதப்பட்டுள்ளன. இச்சொற்களுக்குப் பக்கத் திலே அவ்வவற்றிற்குரிய ஆங்கிலச் சொற்கள் குறிப் பிட்டிருத்தல் வேண்டும். இங்ங்னே சிலர் குறிப்பிட் டுள்ளனர். சிலர் குறிப்பிடாமையாற் கற்போர் பலருங் கற்பிப்போர் சிலரும் இடர்படுகின்றர்கள்.
தற்பொழுது சைவ சமயமும் தமிழ்ப்பாஷையும் எத் துணைச்சீர்கேடு அடைந்துள்ளன என்பதனை இதுவரை யில் யான் குறிப்பாகவே எடுத்து விளக்கியுள்ளேன். ஆறுமுகநாவலர் போன்ற உண்மைச்சைவாபிமானிகள்

Page 8
தற்காலத்திருப்பார்களேயாயின் காவி யுடுத்துக்கொண் டு கூச் சமயத்திற்கேற்றமாதிரிப்பேசி வயிறுவளர்க்கும் வேதாகமப்புரட்சர்களாகிய வேடதாரிகள் இங்குவந்து த லே காட்டுவார்களா, இனித் தற்பொழுதுள்ளவர்களிற் பலர் சிறிய சிறிய இ லகு வா ன  ெச | ற் க ளி ன லேயே நூல்களியற்றுகின்றாகள். பொதுமக்கள் விரும் புவதும் அஃதேயாகும், நான் அங்ங்னே செய்யாது இச் சிறுநூலினும் இதற்குமுன்னரே வெளியிட்ட அரு ணகிரி நாதருங் கதிர்காமமும் என்னும் நூலினும் சே னவரயர் நச்சினர்க்கினியர் போன்ற பேராசிரியர்களின் வசன நடையைத் தழுவி முற்காலங்களில் வ ழ ங் கி ய அரும்பதங்களைச் சிறு க ப் பெய் து இயற்றியுள்ளேன். இஃதெக்காரணம் பற்றியோ வெனின், மிகப்புராதன காலத்தனவாய சங்க நூல்களிலேயுள்ள அருஞ்சொற்கள் பல இக்காலத்தில் வளங்கிவராமையாலும் இன்னுஞ் சில்லாண்டு களிலவை அழிந்தொழிந்து போகுமே என அஞ்சியமையாலுமேயாம். இதற்கு தாரணமாக நக்கீர தேவராலியற்றப்பட்ட திருமுருகாற்றுப்படை யென்னும் நூலில் திருவேரகம் என்னுஞ் சுவாமி மலைக்குரிய செய் யுளில் ' புல ராக்காளகம் புலர உடீஇ உச்சிக்கூப்பிய கையினர் " என்றவரியில் உடுக்கின்ற வஸ்திரம் என் றுங் கருத்தினையுடைய காளகம் என்னுஞ் சொல் இக் காலத்தில் அநேகருக்குத் தெரியாத தொன்றேயாகும், இன்னும் இதுபோன்றன பல வுள, இந்நூல் சைவ சமய சம்பந்தமான தாதலால் எங்கள் பாடசாலைகளில் மேல் வகுப்புக்குரிய சமய பாடமாகக் கற்பிக்கப்படல் வேண்டும் இதன் பொருட்டாக இதனிறுதியில் அரும்பதவிளக்க மும் எழுதி வெளியிட்டுள்ளேன். இதனைக்கற்பவர்களும் கற்பிப்பவர்களும், அச்சு வாகன மேற்றி வெளிவரச் செய் தற்காதார புருஷர்களாக இருந்து பொருளுபகரித்தவர் களும் அ ழ குற அச்சிட்டளித்த அச்சகத்தார்களும், அரியான என்னுந் தேவாரத் திப்பதிகத்திற் கூறிய வண்ணமே பெரும்பற்றப்புலியூரானைப்பற்றிப் பேசுபவர் களும் இஷ்டசித்திகளையெல்லாம் பெறுவார்களாக,
38, கொட்டபோம் தெரு இங்ங்னம்
கொழும்பு-13 சிவ. பண்டிதநடராஜா
23-1 2-60.

6. சினிமாக்களிலும் நாடகங்களிலும் படிக்கின்ற
மாதிரிப்பதம் முதன்முதலியற்றியருளிய
முத்துத் தாண்டவர்
-mത്ത്, ബത്തn
நடராஜத்தாண்டவத் துதி
அநந்த நவ ரத்னவில சத்கடக கிங்கிணிஜ்ஜலம்
ஜலஜலம் ஜலவரம் முகுந்த வி தி கஸ்தகத மத்த ள வயத்துவனி திமி திமித நர்த்தனபதம் சகுந்தர த பர்ஹ ரத நந்தி முக தந்தி முக ப்ரிங்கிரிஷி சங்க நிகடம்
சநந்தசன கப்ரமுக வந்தித பதம் 11 பர
சிதம்பர நடங் கிறுதிபஜ
சுவயம்புலிங்கங்களையும் தேவ விங்கங்களையும் பா ணலிங்கங்களையும் உடையனவாய், அநேக நூதன சித்தி ரவேலைப்பாடுகளுடன் பொலிந்து சிறந்து விளங்குகின்ற பல சிவாலயங்களையும் குகாலயங்க க்ள யும் அநேக நீதி களை யுந் தன்னகத்துட் கொண்டுள்ள தாயும், முற்றத் துறந்த பெரும் ஞானிகளையும் சாதுக்களை யும் சமயபோ தகர்களே யுந் தோற்றுவித்த தனலும், புண்ணிய பூமி என் ப்பலராலும் புகழ்ந்து கூறப்படும் இந்தியாவிலே, ஓர் காலத்தில் அகத்தியமுனிவர் குடகமலையின் மேலே வைத் துக்கொண்டிருந்த கெண் டி யி லே உள்ள தண் ணி  ைப விநாயகக் கடவுளானவர் தே வே ந் தி ர னி ன் வேண்டு

Page 9
(2)
கேர்ளின்படியே காகவடிவமுடையவராகச் சென்று அந் தக்கெண்டியின் மேலிருந்து சரித்து வீழ்த்தியமையினலே அதிலிருந்து உற்பத்தியாகிப்பாய்கின்ற கா வே ரி ஆற் றின் நீர் வளமுடையதாகிய சோழமண்டலத்திற் தஞ்சா வூர்ப்பெரும் பிரிவில், சைவாசார சீலர்களாய் வருணச் சிரம ஒழுக்கங்களிற் சற்றேனும் பிறழாத சற் சனர்கள் வசிக்கின்ற சீர்கர்ழி என்னும் நகரம் ஒன்று சரித்திரப் பிரசித்தி பெற்றதாய் நிலை பெற்று விளங்குகின்றது. இதற்குப் பிரமபுரம், வேணுபுரம், பெரும் புகலி, வெங் குரு, திருத்தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை நகர், கொச்சைமயம், சீர்காழி, கழுமலம் என் னும் பன்னி - ன்டு திருப்பெயர்கள் உள் ள ன . இந்நக ரம் தனுஸ்கோடியிலிருந்து த ஞ் சா வூர் மா ய வ ர ம் மார்க்கமாகச் சென்னபட்டணத்திற்குச் செல்லு ம் பு கைரதவீதியில் இருநூற்றறுபதாவது மைலிலும், சென் னபட்டணத்திலிருந்து  ெத ற் கே நூற்றறுபத்திரண் டாவது மைலிலும், சிதம்பரத்திலிருந்து தெற்கே பத்தா வது மைலிலும், திருச்சிராப்பளி ஆகாயவிமான நிலைய த்திலிருந்து மா ய வ ர ம் வழியாகச் சென்ன பட்டணத் திற்குச் கிசல்லும் வீதியில் எண் பத்தெட்டாவது பைலி லுமிருக்கின்றது இந்த நகரத்திலே ஓர் மிகப்பிரபலிய மா ன சிவாலயமிருக்கின்றது.
இந்த ச் சிவா ல யமான து திருச்சிராப்பளிக்கும் சிதம்பரத்திற்கும் இடையிலே உள்ளது மாயவரத்திற்குக் கிழக்கே நான் கு மை ல் தொலைவிலிருக்கும் தருமபுர மடாதிபதியவர்களின் நிர்வாகத்திற் குட்பட்டதாக இரு க்கின்றது. இந்த ஆதீனம. மானது பாண்டிய நாட்டில் பூரீ வில்லிபுத்தூரிற் கார் காத்த வேளாள குலதிலகரா

( 3 )
ய்ச் சிவநேயச்செல்வராக இருந்த சுப்பிரமணிய பிள்ளை அவர்களுக்கும் மீனுகழி அம்மையாருக்கும் புத் திர ராக உதித்தவரும் மதுரைச் சோமசுந்தரப் பெருமா னுரைப் போற்றி வழிபாடு செய்து அப்பெருமானரின் திருவுள் ளத்தின்படியே திருவாரூரிலே இருந்த பூரீ ல யூனி ஞானப் பிரகாச தேசிகர வர்களிடத்தில் தீகூைடியும் ஞானுேபதே சமும் பெற்றவருமாகிய மரீலழறீ குருஞானசம்பந்த சுவாமி களவர்களினல், யமதர்மராஜனலும் அகஸ்திய மகா மு னி வரி ஞ லும் பிரதிஷ்டைசெய்து பூசிக்கப்பெற்ற தர்மபுரீஸ்வரர் ஆலயத் தி ன் பாங்கரிலேயே ஸ்தாபிக் கப்பட்டது. இந்தக் குருமூர்த்திகளைக் கண்ணுற்ற அகஸ் திய முனிவரின் சி ஷ் யர் கள் தருமபூரீஸ்வரர் ஆலயத் தையும் இவரிடமே ஒப்புவித்துவிட்டனர். இவ்வாற்ற னே இவர் திருக்கயிலாய பரம்பரை மெய்கண்டதேவர் வழிச்சந்தனுகாரியராகி ஆலய பரிபாலனஞ் செ ய் து கொண்டும் தம்மைவந்தடைந்தோரின் பக்கு வநிலையினை யறிந்து அன்னுேர்க்கு ஞானேபதேசஞ் செய்து கொண் டும் அருளாட்சி 15 டா த் தி னர் . இக்குருமூர்த்திகளின் பின்னரே சி ஷ் ய முறையானே ஆசாரியர்கள் ஆ தீ ன கர்த்தர்களாக இருந்து பற்பல அற்புதச் செயல்களே யுஞ் செய்து சைவசமய பரிபாலனஞ் செய்துள்ளனர்.
இஃது இங்ங்னே யாகத் தெய்வவிசுவாசம் அருகி அஞ்ஞான இருள்பரவியிருக்கின்ற இக்காலத்திலே சாட் சாத் பரமபதியே சடாமகுடத்திலேயுள்ள கங்கா நதியை யும் பாலசந்திரனேயும் நெற்றிக் கண்ணினையும் மறைத் து மா னுட யாக்  ைக யு  ைட ய வ ரா ய் வந்தருளினரென ஆன்ருே ராற் சிற்சிலசமயங்களிற் கருதப்படும் பெரும் த கை மை யை உடையவரும், சிவகாமசுந்தf சமேத

Page 10
(4)
மரீ நடராஜப் பெருமாளுரைத் திருத்தில்லையினிற் பலநாட் பராவிய பெருந்தவத்தினருமாகிய பூரீ ல பூரீ சுப்பிரமணிய ஞானசம்பந்த பரம ர் சா ரிய சுவாமிகளவர்களே தற் பொழுது இந்தத் தருமபுர ஆதீன கர்த்தராக இருந்து ஞானச் செங்கோலாட்கி நடாத்துகின்றனர். இவர் வேத வேதாந்த த த் துவ விசா ர வைதிகசைவாசார சீலசி ரேஷ்ட சமரச நிலையின் இ லக்சிய ப் பேற்றினராயும் , தேவார தி ரு வா ச கா தி களை இசைமுறை பிறழா தோதும் சங்கீத விற்பன்னரத்தினமாயும், அருள் வேண் டிஞர்க்கும் பொருள் வேண்டினர்க்கும் அருளும் பொரு ளும் வேண்டினர்க்கும் அவ்வவர் வேண்டி யாங்கே ஈந்த ருளும் பெருவள்ள லாயும், ஆ ரி ய திராவிட கலாசாலை களையும் வேதாகம கலாசாலைகளையும் நிறுTஉவியும் தே வார திரு வாச க சைவசித்தாந்த நூ ல் களை அச்சுவா கன மே ற் றி யு ம் இன்னேர ன்ன பற்பலவற்றினுலும் சைவபரிபாலனஞ் செய்பவராய்க் கிரியிற்தீபம் போல ஞானஒளிவீசி விளங்குகின்றனர்.
இந்த நகரத்திலே ஏற க்கு  ைற ய இரு நூற்றைம்பது வருடங்களின் முன்னரே பரம்பரையாகவே மேள வாத் தியத் தொழில் செய்யும் பிரிவினருள் இளைமைப்பராயத் திலேயே தந்தையாரையும் தாயாரையு மிழந்த தாண் டவன் என்னும் பெயரினையுடைய சிறுவனுெருவனிருந் தான். இந்த இளைஞனே எங்கள் டக் தமுத்துத் தாண்ட வ ராகு ம் , அநாதையாக இருந்த இவரை வறுமைப் பிணியேயல்லாமல் திரே கப்பிணியும், இவரின் பிறவிப் பிணியை நீக்குவான் விரும்பிப்போலும் மிகு சீக்கிரமா கவே வந்து பற்றிவிட்டது. இதல்ை இவர் தனது பரம் பரைத் தொழிலைச் செய்யப் பழகவுமில்லை, அவ்வாறே

(5)
பயில எண்ணவுமில்லை, இ வ ர் தனது சுற்றத்தவர்களி னில்லங்களிற் சென்று உணவருந்திக்கொண்டு பிரதிதின் முந் தோணியப்பராலயத்திற்குச் சென்று தனது இன்னல் களை நினைந்து நினைந்து குறை இரந்து வணங்கி வருவாரா யினர். தற்காலத் திளைஞர்களுட் சில ர் சினிமாப்படக் காட்சிகளிலே படிக்கப்படுகின்ற சிற்றின்பப்பாடல்களை யே மனனம் பண்ணிக்கொண்டு சுதா முணுமுணுத்துக் கொண்டு திரிகின்ற தன்மையையே போன்று இவரும் கல்வி கல்லாதவராயினும் அந்த ஆலய த் தி ற் கு வரு கின்ற மெய்யடியார்கள் பாடித்துதிக்கின்ற பேரின் பப் பாடல் களாகிய தேவார திருவாசகப்பாடல்களைக் கேட்டு மனம் லயப்பட்டு அவற்றை மனனம் பண்ணிக் கொண்டு வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டே திரிவா ராயினர். இவர் தனது சுற்றத்தவர்களாகிய மேளகாரர் களின் வாத்தியங்களைக்கேட்டு மகிழ்ந்து தானும் அவர் களைப் போன்றே இடையிடையே தலையை அசைப்பார் உருத்திர கணிகையர் ம ர பி லே உதித்த சிவபாக்கியம் என்னும் பெயரினையுடைய ம ங்  ைக நல்லா ளொருத்தி இந்தக்கோவிலுக்கு நாடோறும் வந்து இறைவன் முன் நிலையிலே பரதநாட்டிய முறை சிறிதும் வழுவாது ஆடிப் பாடி வணங்கிவந்தனள். இதனைக் கண்ணுற்ற இந் த த் தாண்டவருங்கிரமமாகவே இவ்வாடலைக் கண்டும் பாடலைக் கேட்டும் இவற்ருற்சொக்கி ம ன ம் நெக்கு நெ க்குருகிப் பரவசமடைந்து நின்றனர். இந்தச் சிவ சம்பந்தமாய அன்பின் காரணுர்த்தமாகவே இ வ. ர் இடையிடையே, இந்தச் சிவபாக்கியம்மாள் வீட்டிற்குச் சென்று ஆங்குத் த ங் கி நி ன் று பாடல் கேட். ராயினர். இதனை க் கண் ணுற்ற அவ்வூராருட்சிலர் இவரை நையாண்டி செ ய் து

Page 11
(6)
பழித்துரைத்தார்கள். " ஊருக்கெழியவன் பிள்ளையார் கோவில் ஆண்டி " எ ன் னு ம் பழமொழிக்கிலக்காகவே அநாதையாகிய இவருக்காகப் பரிந்து பேசுவார் தானும் அக்காலத்திருந்திலர் போலும் "* தட்டிப்பேசுவார் இல் லாவிட்டால் தம்பி சண்டப்பிரசண்டம் ” என்னும் முது மொழிப்படியே இவரின் மேற்குறை கூறுபவர்கள் பெரு கிவிட்டார்கள். இக்காரணத்தினலேயே இவரின் சுற்றத் தவர்களும் இவரை வெறுத்தனர். அதனு லிவரும் சுற் றத்தவர் கணினில்லங்கட்குச் சென்று போசன மருந்தும் வழமையையும் படிப்படியாகவே நிறுத்திவிட்டனர். போ சனங் கிடைத்த நேரங்களிலேயே உணவருந்தினர். அங் கனே கிடைக்காத நேரங்களில் “ சிவ, சிவ ' என்றே பல மு  ைற கூறிக்கொண்டிருந்தனர், இங்ஙனமாகவே ஒரு நாளிரவு பசிக்களையுடனே ஆலயத்தின் உட்பிரகாரத் திலே உள்ள ஓர் மண்டபத்திற் படுத்துறங்கிவிட்டனர். இதனை அறியாத கோயிற்குருக்களும் பணிவிடைகாரர் களும் அர்த்தசாமப்பூசை முடிந்தவுடனே கபாடபந்த னஞ் செய்து கொண்டு த த் தம் இ ல் ல ங் க ட் கு ச் சென்றுவிட்டார்கள்.
இஃதிங்ங்னமாகவே, இ த ற் கு ச் சில்லாண்டுகளின் முன்னரே இவ்வாலயத்தின் முன்பாகவே உள்ள திருக் குளத்தின் கரையிலே நி ன் று கொண்டு கோ யி ற் கோபுரத்தைப்பார்த்து " அம்மே அப்பா ' என்று அழுத வரும் அவ்வூரிலே இருந்த  ைவ தி க ப் பிராமணர் பரம் பரையில் கெளனியர் கோத்திரத்திலு தித்த சிவ பா த விருதையரதும் பகவதி அம்மையாரதும் சு த னு ம் , முவாண்டுப்பரர் யத்திலேயே "தோடுடைய செவியன்’ என

(7)
ஆரம்பித்து அமிழ்தினு மினியனவாய் வேதாகம சுத்தா த்து விதசைவ சித்தாந்த நூல்களின் சாரங்களை உள்ள டக்கியனவாய் மிளிர்கின்ற தேவாரத்திருப்பதிகங்களைப் பாடியருளிய திருஞானசம்பந்த மூ ர் த் தி நாயனருக்கு ஞானப்பாலூட்டியருளிய உலகமாதாவாகிய உமாபிராட் டியாரும் அருள் வள்ளலாகிய சிவபெருமானும் இந்தத் தாண்டவருடைய பசிநோயைத் தீர்த்து ஆட்கொள்ளத் திருவுள்னங் கொண்டார்கள். ஆகவே உமர் பிராட்டியார்
ஒர் மானுடவடிவங்கொண்டு செ ன் று உறங்கிக்கொண் டிருந்த த ர ண் ட வ  ைர எழுப்பி ஞானப்பாலடி சிலைக்
கொடுத்தருளித் திருநோக்குத் திஷை யுஞ் செய்தருளி ** நீ தில்லைக்குப்போ, ஆ ங் கே நடராஜப் பெருமாஞர் உ ன க் கு ச் சர்வா பீஷ்ட சித்திகளையுங் கொடுத்தருள் வார் ' எனக்கட்டளை இட்லாகிய வாக்குத்தீகூைடியுஞ செய்து மறைந்தருளினர்.
பூர்வ ஜென்ம புண்ணிய வசத்தினலே இப்பெரும் பேறுபெற்ற தாண்டவர் சிவசந்நிதானத்திலே ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருந்தனர். வழமை போன்று பிரா தக்காலத்தில் ஆலயக் கதவைத் திறந்துகொண்டு உள் ளே புகுந்த குருக்கள் தாண்டவரைக்கண்டு ச ர ல வு ம் இறும்பூதெய்தி அந்தத்தாண்வர் மூலமாகவே நடந்த சம்பவங்களை யெல்லாமறிந்து அவருக்குப்பொருளுதவி செய்து விபூதிப்பிரசாதமும் ந ல் கி முத்துத்தரிண்டவர் எ ன் னு ம் நாமகரணமுஞ் செய்து சிதம்பரத்திற்குப் போக வழியனுப்பினர். இவ்வாற்றனே ஆங்குகின்றும் புற ப் ப ட் டு த் தில்லைத்திருநகரை அடைந்த முக்துத் தாண்டவர், முன்னேர் காலத்திலே கெளடதேசத்தரச

Page 12
(8)
ஞகிய இரணியவர்மன் வடஇந்தியாவிலே உள் ள அந் தர்வேதி என்னும் இடத்திலிருந்து பல வரிசைகளோடும், ஆகவயேம், காருகபத்தியம, தகFணுக்கினி என்னும் மூவகைச் சிவாக்கினி சகிதமாக ரதத்திலேற்றி அழைத் துவந்த ஒரையில் தி ல் லை மூவாயிரவர்கள் எ ன் னும் எண்ணிக்கையில் ஒன்று குறைந்தமையால் மனம் வருந் திய அரசனும் வியாக்கிரபாத மு னி வ ரு ம் , பிறருங் கேட்ப " நாமும் அவர் களி ல் ஒருவர் ' என அந்தக் கூத்தப்பிரானுராலேயே அசரீரியாகக் கூறப்பட்ட பெரு மையையும், திருநாவுக்கரசு நரபணுரவர்களால்,
பொருவிடை ஒன்றுடைப் புண்ணிய
மூர்த்தி புலியதளன் உருவுடை அம்மலை மங்கை
மளைன் உலகுக்கெல்லாம் திருவுடை அந்தணர் வாழ்கின்ற
தில்லச்சிற் றம்பலவன் திருவடி யைக்கண்ட கண்கொண்டு
மற்றினிக் காண்பதென்னே. என்னுந்தேவா
ரச்செய்யுளில் ' உலகுக்கெல்லாந் திருவு  ைட அந்தணர் " என்றும், திருஞானசம்பந்த மூர்த்திநாயனுரவர்களால்.
இராகம், யது குல காம் பே ா தி, தாளம், திரிபுடை
கற்றங் கெரியோம்பிக் கலியை வாராமே செற்றர் வாழ்தில்லச் சிற்றம் பலமேய முற்ற வெண்டிங்கண் முதல்வன் பாதமே பற்ற நின்றரைப் பற்ற பாவமே.

(9)
எ ள் னு ந் தேவாரச் செய்யுளில், வேதாக மங்களை முறைப்படியே கற்றுக்கிரியா பாகமாகிய நித்தியாக்கினி யை வளர்த்து, அதன் வாயிலாகவே பசி மிடி நோய் முதலாயின நாட்டினுட்புகுந்து பிறவுயிர்கட்கெல்லாம் இன்னல் விளைக் காதபடி அவற்றை நாசஞ்செய்பவர் களாகிய அ ந் த ண ர் க ள் என்னுங்கருத்தினை உடைய “கற்று ஆங்கு எரி ஒம்பி கலியை வாராமே, செற்ருர்" 6ான்றும் புகழ்ந்து பாடப்பட்ட பெருமையையும், திருவா ரூர்ச்சிவாலயத்தில் நி ன் று சிவனடியார்களைத் துதிக்க விரும்பியவராயே திரு முனை ப் பா டி நாட்டுத்திருநாவ லூரில் பிராமண குலத்திலுதித்த சடையனரதும் இசை ஞானி அம்மையாரதும் புதல்வராகிய சுந்தரமூர்த்தி நாயரைவர்களச்கு அந்த வன்மீக நா த ரே " தில்லை வாழந்தணர்தம் அடியார்க்கும் அடியே ன் " எ ன் று அடியெடுக் துக்கொடுத்ததனலளவாய மிக ப் பெ ரு ம் பெருமையையும் உடையவர்களாகிய தில்லைவாழ் அந்த ணர்கள் வசிக் கி ன் ற வெளிப்பிரகாரங்களை வலஞ் செய்து கொண் டு வந்து சிவகங்கைத் தீர்த்தத்தை அடைந்து ஷ் நானஞ் செய்து அதிலிருந்து புறப் பட்டு வல்விரைந்து ஆலயத்தினுட் புகுந்து 15 ட ராஜப் பெரு மானரின் திவ்விய சந்நிதியில் நி ன் ற ன ர். அதே சமய த்தில் பெருமானுரூக்குப் பூசை நடைபெற்றுக் கொண் டிருந்தமையில்ை ஆலயக் குருக்களாகிய தீ கழித  ைர யா அவர்கள் கர்ப்பூர தீபத்தைக் காட்டினர்கள் அதே சம யத்தில் ஆங்கு வணங்கிக்கொண்டு நின்ற அடியார்கள் * பூலோக கைலாசகிரி சிதம்பரம் ' என்றர்கள. இது முத்துத் தாண்டவருக்குக் கேட்டது, இறைவன் கட்டளை
ப்படியேபோ லுங் கலைவாணிதாண்டவரின் நாவிற்புகுக்

Page 13
( 10 )
து நி ன் று தாண்டவமாடத்தொடங்கி விட்டாள். உட னேயே அவர் பவப்பிரியா இராகத்தில் மிச் ர சாதி ஐம்பைதாளத்தில்.
பல்லவி பூலோக கயிலாசகிரி சிதம்பரம் அல்லால் புவனத்தில் வேறும் உண்டோ பூலோக
அனுபல்லவி சாலோக சாமீப சாரூப சாயுச்ய சபைவாணர் ஆநந்தத் தாண்டவம் புரிவதால்
பூலோக சரண ம - நாலு மக மேருவெனும் நாலுகோ புரநிலையும்
நவரத்ன மணிகளால் ஒளிர்சித்ர மதில்களும் மேலுலகை அளந்திடல்போல் உயர்ந்து வெயில்
விரித்த கம் பத் திரள்களும் காலுலவும் ஆயிரக்கால் மணிதரள மண்டபமும்
கங்கையின் நிறைந்த சிவ கங்கையின் விலாசமும் ஆலிலையில் மாலும் அய ஞலுமறி யாதபேர்
அம்பலமும் மேவுவோர்க் அற்புதம் புரிதலால்
பூலோக வேதமுதல் எனுமூல நாதர்தூ பியுமேரு
வில்லியார் சிவகாம வல்லியார் கோயிலும் மாதவர்கள் விண்ணவர் தீதகன் றிடவந்து
வாழ் வுறும் மாளிகை களும் ஏதம் ஒரு சற்றும் அணுகாத கட்டளைகளும்
இரவிபோல் இலங்கிடும் இந்திர விமானங்களும் காதலுற் றேகண்ட பூதலத் தோரெலாம்
காணநூ ருயிரங் கண்வேண்டும் என்கையால்
GauiT s

11
மேவாருந் தொழுந்தில்லை மூவாயிரம் புனிதர்
விதியுஞ் சைவர் , திருவீதியின் மடங்களும் தாவாப் பசிதவிர வாவா எனுஞ்சத்ர
சாலை யும்பல சோலையும் நறும் பூவாவியும் வயலும் ஒவாம லேபெருகு
பொன்னி நதி யுந்தெருவும் மன்னிய வளங்கண்டு தேவர் முதல்மூவர் பாவாணர் அனைவரும்
சிவத்தலத் திற்திலகம் தில்லைவன மென்கையால்
பூலோக
என்னும் பாவி ஆன ப் பாடித் துதித்தனர். இவர் சிந காட்தொடங்கிப் பிரதி தினமும் அந்த ஆநந்தத் தாண்ட வராகிய நடராஜப்பெருமானரைப் பகழ்ந்து டாடிப் பாடிப் பரவிக்கொண்டு அந்தச் சிதம்பரத்திலேயே இருந்தனர். இவ்வாற்ருனே சிள்ட்ைகள் செல்ல இவர் மாணிக்கவாசக சுவாமிகளம், திருநந்தனரும் அந்தப் பரம்பரனுடன் இரண்டறக் கலந்த தன்மையேபோன்று தானும் சாரூபபதவியை அடைதல் வேண்டுமென்னும் பேரவாவுடைய ராய் ஒரு தினம் இறைவன் சந்நிதியிலே நின்று கோகிலப்பிராயா இராகத்தில் ரூபகதாளத்தில்
பல்லவி மாணிக்க வாசகர் பேறெனக்குத்தர வல்லாயோ அறியேன் மாணிக்க
அனுபல்லவி காணிக்கை யாகக் கொடுத்தேன் உனக்கென்ன ஆணிப்பொன் னேதில்லை அம்பல வாணு மாணிக்க

Page 14
( 12 )
சரணம்
நோயும் வறுமையும் சண்டையி டாதே
நோக்கரை நோக்காக நோக்கி விடாதே தாயும் தமரும் சலித்து விடாதே
சந் தியில் வை யாதே ஆயும் இளம்பிறை சூடிய மூர்த்தி
அத்வித மூர்த்தி புத்தி அளித்து தீயும் மறுமை எதிர் நின்று தள்ளும்
சிற்சபை மந்திர சிதம்பர தேவா மாணிக்க
கட்டில விட்டுக் கிடத்துமென் னுதே
காலைக் கரங்களைக் கட்டுமென் ேைத கொட்டி முழக்கிட்டு கூகூவென் னுே தோ ரணி கொள் ளாதே ܢ எட்டி யொருவர் புலம்ப வராதே
ஏழைப் பிணத்தை எடுமென்றி டாதே சிட்டர் தொழுந்திருக் கட்டளை மேவும். ,
சிதம்பர தேவா திருநட ராஜா மாணிக்க
கட்டையின் மேல்வைத்துச் சுட்டுவி டாதே கள்ளக் குழியிற் புதைத்துவி டாதே பட்டும் பணியுந் தரித்தய லோர்வந்து பால் அள்ளிக் குத் தாதே கிட்டி ஒருவர் சடங்குசெய் யாதே
கேட்டவ ரெல்லாம் கிடைக்கத் தருமென சிட்டிப் பவன்பணி சிற்சபை மேவும்
சின்மய ரூபா சிதம்பர நாதா மாணிக்க
சிற்பர தற்பர மெய்ப்பொரு ஞங்கண்ட
சித்தரெல் லோரும் நிறைந்து தெரிசிக்க தற்பத நான்கெனும் சத்தினி பாதமும்
சாயுச் சிபா மும் பெறவே பொற்பூ மாரியை இமையோர் சொரிந்திட
பொன்னூ சலாடும் ஆதிரை நாளினில் கற்பூர தீபம் போல் என்தன் உடலினை
கனக சபையினில் கலந்து கொள்வாயே மாணிக்க

( 13)
என்னுஞ் செய்யுளைப்பாடிக் குறை இரந்து வணங் கினர். இ ஃ தே இவருடைய இறுதிச் செய்யுள். அச்சம யத்தில் பிருதுவி அப்பு தேயு வாயு ஆகாசம் என்னும் பஞ்ச பூதசம்பந்தமாகிய இவருடைய யாக்கையானது மின்னென மறைந்துவிட்டது ஆன்மா பா லுட னே கலந்த நீரினைப்போன்று சிவபிரானரின் பாதார விந்தங் களிற் கலந்து விட்டது, ஆங் கு நின் ருேர் யா வ ரு ம் இறும்பூதெய்தினர்கள். இவர் திருவாய் மலர்ந்தருளிய செய்யுட்கள் ஏறக்குறைய நூறு என ஆன் ருே ர் கூறு கின்றனர்.
முற்காலத்திலே எ ங் க ள் பரத கண்டத்திலே நிகழ் ந்த விசேஷித்த செயல்களிற் சிலவற்றை அவ்வக் காலங் களிலே இருந்த அரசர்கள் பெரும் பெருங்கற்களிலும் செப்புத் தகடுகளிலும் செதுக்கி எழுதி வைத்தார்கள், ஸ்தலபுராணங்களைப்பாடிய புலவர்களோவெனில் ஏடு களில் எழுதி வைத்தார்கள். இவைகளை யெல்லாம் பிற் காலத்தில் சைவசமயாபிமானிகளிற் சிலரும் சரித் திரா ராய்ச்சியாளர்களுட் சில ரு ம் அச்சு வாகன மே ற் றி வெளியிட்டுள்ளனர். இந்த முத்துத் தாண்டவரோ வெ னின் தாம்பாடிப்பாடித் துதித்தனரே அல் லா து பிற் காலத்தவராகிய நம்மஞேர்க்குபயோகமாகும் பொரு ட்டாக எழுதி வைக்காதே பரபதமடைந்து விட்டனர். எனினும் அவ்வச் சமயங்களில் அப்பாடல்களைக் கேட்ட மெய்யடியார்கள் மூலமாகவே அவரின் பாடல்கள் உல கவழக்கில் வந்து எழுத்துமூலமாகிப் பிரசித் தி அடைந்து விட்டன. இவற்றுட் சிலவற்றைச் செந்தமிழ்ப்பா ஷாபி மானச் சிவனேயச் செல்வர்களுட்சிலர் அச்சிட்டு வெளி யிட்டுள்ளனர். இவற்றின் சொற்பொருட்தாள அமைப் பின் நயத்தை ந ன் குணர் ங் த பிர பல நாதசுரவித்து

Page 15
( 14)
வான்கள் இச்செய்யுட்களுட் சில வற்றிற் குச் சுரம் வகுத்துத் தத்தம் குழல் மூலமாக வாசித் து உலகத் தினரை ஆனந்த சாகரத்தில் அமிழ்த்துகின்றனர். சங்கீத விற்பன்னர்களும் சி னி மா நடிகர்களும் நடிகைகளும் இவற்றி னு ட் சில செய்யுட்களைப் பாடி அதற் கே ற் ப ஆட்டங்களும் புரிந்து தாங் க ஞ ம் மகிழ்ந்து பொது ஜனங்களையும் மகிழ்விக்கின்றனர். இவற்றிற்கெல்லாம் எடுத்துக் காட்டாக இந்தப்பக்த முத்துத் தாண்டவரின் பாடல்களிற் சிலவற்றை ஈண்டுக் குறிப்பிடுகின்றனன்.
(1) இராகம் தாளம்
GDIT36) to ஏகதாளம் பல்லவி
அருமருந் தொரு தனி மருந்திது அம் பலத்தே கண்டேனே. (அருமருந்)
அனுபல்லவி
திரு மருந்துடன் வரு மருந்து தில்லை அம்பலத் தாடும் மருந்து இருவி னகள் அறுக்கும் மருந்து ஏழை அடியார்க் கிரங்கும் மருந்து (அருமருந்)
சரணங்கள்
கொன்றை தும்பை அணிந்த மருந்து கோதை மீதில் படர்ந்த மருந்து மன்று ளேநின் ருடும் மருந்து மாணிக்க வாசகர் கண்ட மருந்து ( அருமருந்) இந்திர ரானவர் வானவர் போற்றும் இருடிகள் தங்களுக் கெட்டா மருந்து சந்திர சூபியர் காணு மருந்து தானே முளைத்துத் தழைத்த மருந்து (அருமருந்)

(2)
(3)
( 15 )
திரித்தி தித்தியென் ருடும் மருந்து தேவாதி மூவர்கள் காணு மருந்து கருத்தைத் திருத்தி இருத்தும் மருந்து காலனக் காலால் உதைத்த மருந்து ( அருமருக்)
இராகம் மணிரங்கு தாளம் சாபு
இனிச் சுமக்க முடியாது தேகம் - தில்லை அனுபல்லவி அம்பல வாணு
வனத் துறையுஞ் சிவகாம வல்லியுமை பாகா,
சரணம் மலத்தினுல் விளைந்த புழுக் கூடு - துன்ப வாரியைம் புலவேடர் வாழும் பெருங் காடு சலத்துளி யினுல்மலிந்த வீடு - இருமை தளத்தசன னத்துயரம் தனை எடுத்துப் போடு இணிச் ஒருநாலு பேர்சுமக்கும் மூட்டை - நான் ஒருவனுே சுமப்பன்இந்த உடல்மாயக் கூட்டை மருவிலாப் பழங்காய்க் கோட்டை - சின்ன வாசலொன்ப தாகியே வரும் பழைய வீட்டை இனிச் வருவாத வூரனையுங் காத்தீர் - ரண்ய வன்மனுக்குத் தனதாகம் வரவேநிர் பார்த்தீர் திருநாளைப் போவானச் சேர்த்தீர் - நாளும் சிற்சபையில் ஆனந்தத் தெரிசனக் தேற்றீர் இனிச்
இராகம் தாளம்
சுத்ததன்னியாசி ரூபகம்
Lugüნზ6მ) சித்தர் இன்னம் உண்டோ பூலோகத்தில் சித்தர் இன்னம் உண்டோ

Page 16
( 16)
அனுபல்லவி அத்தர் தில்லை வாழும் அம்பலவாணர் ஆனந்தத் தாண்டவ ராஜர் அல்லாமல் (சித்தர்)
. சரணம்
ஒப்பிடு வித்தைகள் எப்படி உலகத்தில் உடலே செப்பாக உயிரே பந்தாக செப்பிடு வித்தைகள் விளையா டினபிள் செப்புவதில்லை சென்றறி வீரென் ருெளிக்கும் (சித்தர்)
இதஞ் சொலிக் கின்னரர் கிம்புரு டர்பாட இடந்தனில் அம்பிகை கண்களி கூடப் பதஞ்சலி வெம்புலி அஞ்சலி நாடப் பதஞ்சலி யாமலே நிதமும் நின்றடும் ( சித்தர்) மாலொடு பிரமனும் தேடரி தான மலர்ப்பதங் கண்டு வணங்கித் துதித்திட சாலோக சாமீப சாரூப சாயுச்யம்
தந்தருள் தாண்டவ ராஜர் அல்லாமல் ( சித்தர்)
இராகம் ܗܝ தாளம் மாயாமாளவகெளள ஆதி
பல்லவி
ஆடிக் கொண்டார்.அந்த வேடிக்கை காணக்கண் ஆயிரம் வேண்டா மோ
O அணுபல்லவி நாடித் துதிப்பவர் பங்கில் உறைபவர் நம்பர் திருச்செம்பொன் அம்பல வாணர்
( ஆடிக்கொண்டார் ) சரணம் மங்கயப் பாதச் சிலம்பசைந் தாட
பாதச் சதங்கைகள் கிங்கிணென் ருட பொங்கம் உடனே உரித்துத் தரித்த
புலித் தோல் அசைந்தசைந் தாட

(17)
செங்கையி லேந்திய மான்மழு ஆட
செம்பொற் குழையொடு முயலகன் ஆட
கங்கை இளம்பிறைச் செஞ்சடை ஆட
கனக சபை தனிலே ( ஆடிக்கொண்டார்)
ஆர நவமணி மாலைகள் ஆட
ஆடும் அரவம் படர்விரித் தாட சீரணி கொன்றை மலர்த்தொடை ஆட
சிவ சிதம் பரத்தேர் ஆட பேரணி வேதியர் தில்லைமூ வாயிரம்
பேர்களும் பூசித்துக் கொண்டுநின் ருட காரணி காளி எதிர்த்துநின் ருட
கனக சபை தனி லே ( ஆடிக்கொண்டார்)
நிர்த்தக் கணபதி வேலர்நின் றட
நின்றயன் மாலுடன் இந்திரன் ஆட முப்பத்து முக்கோடி தேவுக்கள் உடனே
முனி வரும் நின் றட மெய்ப்பத்தி மேவும் பதஞ்சலி ஆட
வியாக்கிர பாதரும் நந்தியும் ஆட கொப்புற்ற காதாள் சிவகாமி அம்மையும்
கூ டவே நின் ருட ( ஆடிக்கொண்டார்)
5. இராகம் தாளம்
கல்யாணி ஆதி
ஆடின தெப்படியோ நடனம் ஆடின தெப்படியோ அனுபல்லவி தேடிய மெய்ப்பொ ருளே வளமேவும் சிதம்பரத் தே ஒரு சேவடி தூக்கிநின் ( ஆடின)

Page 17
( 18)
சரணம்
ஒன்றல்ல ரண்டல்ல ஒன்றிரண்டும் அல்ல நன்றல்லத் தீதல்ல நாதவிந் துவுமல்ல அன்றல்ல இன்றல்ல ஆதியந் தமுமல்ல மன்றுள் மரகத வல்லிகொண் டாட ( ஆடின )
ஆணல்லப் பெண்ணல்ல அன்றி அலியுமல்ல காணும் உருவல்லக் காணு அருவு மல்ல சேணல்ல வேயொரு தேவர்க்குள் ளேதேவ வாள்நுதற் பச்சைம டந்தைகொண் டாட ( ஆடின )
பூதங்கள் அல்லப் புறம்பல்ல உள்ளல்ல வேதங்க ளாலே விளங்கும் பொருளல்ல ஆதவன் போலே அசையும் வடிவல்ல மாதுமை யாள்பச்சை வல்லிகொண் டாட (ஆடின)
சீர்காழித் திருப்பட்டினத்திலவதரித்தவராகிய இந்த முத்துத் தாண்டவர் சிதம்பரத்தை அடைந்த பின் னரே வேறெந்த ஸ்தலத்திற்காவது சென்று சுவாமி. தரிசனஞ் செய்யாததன் காரணந்தான் என்னையோ என்பதனையும் ஈண்டுச் சுருக்கிக் காட்டுகின்றனன். இந் தச் சிதம்பரம் விராட்புருஷனுக்கு இருதய ஸ்தான மாகும். ராட் என்னும் வடமொழி தேசம் என்னும் பொருளுடையது. வி. என்பது உபசர்க்கமாகும், எனவே உலகத்தை ஒரு புருஷ னக நிர்ணயஞ் செய் துள்ளனர், பொது வகையானே மானுடர்களாகிய எங் களுடைய நடமாட்டம் முதலாய தொழில்கள் யாவும் இருதயத்தின் இயக்கத்திலிருந்தே நடைபெறுகின்றது இதளேயே போன்று உலகபுருஷனுடைய இயக்கமும் இந்த இருதய ஸ்தான மாகிய சிதம்பரத்திலெழுந்தருளி யிருக்கின்ற பூரீ நடராஜப் பெருமான ரிடத்திலேயே தங்

( 19 )
கியிருக்கின்றது, பிண்டமாகிய சரீரத்தையும் உலகத தையும் ஒப்பிடுகையில் சரீரத்தில் இடைக்கும் பிங்கலைக் கும் இடையிலே உள்ன சுழுமுணு நாடிபோல இந்தச் சிதம்பரம் உலகத்திற்கு சுழு முனு நாடித்தலமாக விளங் குகின்றது. இக்காரணத்தினுலேயே சுழுமுணுவழி ஞான சுகோதயம் என்னும் மறு பெயருமுடைத்தாயிற்று. எங் களுடைய ஆன்மாவானது இராக்காலங்களிலே இரு தயத்தை அடைந்து ஒடுங்கியிருக்கின்ற தன்மையையே போன்று இப்பூவுலகத்திலே உள்ன சிவாலயங்கள் பல வற்றிலுமெழுந்தருளியிருக்கின்ற மூர்த்திகளின் கலேகள் யாவும் இராக்காலங்களில் இங்குவந்தொடுங்கி பிருத்து விடியற்காலங்களிற் தத்தம் யதாஸ் தானங்கட்குச் செல் கின்றன. இதனுலேயே இங்கு அர்த்த ஜாமபூசை மிகமிக விசேஷ முடைத்தெனப் பண்டைக்காலந்தொட்டே பலரும் வழிபடுகின்றனர், இவற்றினுண்மையை வேதா கம உபநிஷத்துக்களிற் பரக்கக்காண்க. எம்மால் விரை வில் வெளியிடப்படவிருக்கின்ற சிவபெருமான் திரு நட னம் என்னும் நூலினும் என் சிற்றறிவிற் கெட்டி யாங்கே விபரித்துக் காட்டியுள்ளனன்.
இஃதேயல்லாது சைவசமயாசாரியர்களுளொருவரா கிய திருநாவுக்கரசு சுவாமிகள் இந்தத்தில் லைக்கூத்தப் பிரானின் ஆடலையும், திருவடியையும், அணிந்த துகிலி ளேயும், சிரித்த முகத்தினையும், நெற்றிக்கண்ணினையும் மலை எடுத்த இராவணனை நெருக்கி மிதித்தவிரலினையும் தரிசித்த கண்களினுலே மீன்டுதரிசிக்க வேண்டியது யாதொன்றுமில்லையே என்னுங்கருத்தினையுடையதாய், யாளை யுடைக்கமு கோங்கிப்பன் மாடனெருங்கி யெங்கும் வாளை யுடைப்புனல் வந்தெறி வாழ்வயற்றில்லை தன்னுள் ஆளவுடைக்கழற் சிற்றம் பல த் த ர னு 1 ல் கண்டால் பிளேயுடைக் கண்க ளா ற் பின்னைப் பேய்த் தொண்டர்
காண்பதென்னே.

Page 18
(20)
என்ற ற் ருெடக்கத்தனவாய பத்துத்தேவாரச்
செய்யுட்களை அருளிச் செய்துள்னனர், அவரே இந்தத் தில்லையம்பதியில் தான் கண்ட காட்சிகளை அப்படியே படம் பிடித்தாற்போன்று,
1.
மங்குன் மதிதவழு மாடவீதி
மயிலாப்பி லுள்ளார் மருக லுள்ளார்
கொங்கிற் கொடுமுடியார் குற்றலத்தார்
குடமூக்கில் உள்ளார்போய்க் கொள்ளம்பூதூர்
தங்கு மிடமறியார் சால நாளார்
தரும புரத்துள்ளார் தக்களுரார்
பொங்குவெண் ணிறணிந்து பூதஞ்சூழப்
புவியூர்ச்சிற் றம்பலமே புக்கார்தாமே,
காதார் குழையினர் கட்டங் கத்தர்
கயிலாய மாமலையார் காரோணத்தார் மூதாயர் மூதாதை இல்லார் போலும்
முதலும் இறுதியும் தாமே போலும் மாதாய மாதர் மகிழ அன்று
வன்மதவேள் தன்னுடலுங் காய்ந்தார் இந்நாள் போதார் சடைதாளப் பூதஞ் சூழப்
புவியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே
இறந்தார்க்கும் என்றும் இறவா தார்க்கும்
இமையவர்க்கு மேகமாய் நின்று சென்று பிறந்தார்க்கும் என்றும் பிறவா தார்க்கும்
பெரியான் றன் பெருமையே பேச நின்று மறந்தார் மனத்தென்று மருவார் போலும்
மறைக்காட் டுறையும் மழுவாள் செல்வர் புறந்தார் சடைதாழப் பூதஞ் சூழப்
புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார் தாமே.

( 21 )
4. காரார் கமழ்கொன்றைக் கண்ணி சூடி
கபாலங் கையேந்திக் கணங்கள் பாட ஊரா ரிடுபிச் சைகொண்டு உழலும்
உத்தமராய் நின்ற ஒருவ ஞர்தாம் சீரார் கழல்வணங்குந் தேவ தேவர்
திருவாரூர்த் திருமூலட் டான மேயார் போரார் விடையேறிப் பூதஞ் சூழப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே
5. சந்தித்த கோவணத்தர் வெண்ணுால் மார்பர்
சங்கரனைக் கண்டிரோ, கண்டோம் இந்நாள்
பந்தித்த வெள்விடையைப் பாய ஏறி
படுதலையில் என்கொலோ ஏந்திக் கொண்டு
வந்திங்கென் வெள்வளையுந் தாமு மெல்லா
மணியாரூர் நின்றந்தி கொள்ளக் கொள்ள
பொன் தீ மணிவிளக்குப் பூதம் பற்ற
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே
6. பாதங்க ணல்லார் பரவி ஏத்த
பத்திமையாற் பணிசெய்யும் தொண்டர் தங்கள் ஏதங்கள் தீர இருந்தார் போலும்
எழுபிறப்பும் ஆளுடைய ஈச ஞர்தாம் வேதங்கள் ஒதியோர் வீணை ஏந்தி
விடையொன்று தாமேறி வேத கீதர் பூதங்கள் சூழப் புலித்தோல் விக்கி
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே 7. பட்டுடுத்துத் தோல்போர்த்துப் பாம்பொன் றர்த்து பகவனுர் பாரிடங்கள் சூழ நட்டம் சிட்டராய்த் தீ ஏந்திச் செல்வார் தம்மை
தில்லைச்சிற் றம்பலத்தே கண்டோம், இந்நாள் விட்டிலங்கு சூலமே வெண்ணுால் உண்டே
ஒதுவதும் வேதமே வீணை உண்டே கட்டங்கங் கையதே சென்று காணிர்
கறைசேர் மிடற்றெம் கபாலி யார்க்கே
என்னுந் தேவாரச் செய்யுட்களாற் பாடியிருக்கின்றனர். இச்செய்யுட்கள் திருவாரூர் , வேதாரணியம் திருக்கயி லாயம் கும்பகோணம் குற்ருலம் திருவீழி மிழலை முத லன வாய பல ஸ்தலங்களிலுமுள்ள ஏ கனகிய இறை வன் சிற்றம்பலத்தினுட் புகுந்தமையைச் செவ்வி தே விளக்கிக்காட்டுகின்றன.

Page 19
( 22 )
இவர் "பட்டுடுத்து' என்னுஞ் செய்யுளில்தான் உல கத்திலே பல இடங்களிலேயுமுள்ள இறைவனை அந்தச் சிற்றம்பலத்தினுள்ளே கண்டேன் என்பதனுேடமையாது இந்தத் தேவாரத்தையே ஒர் ஆற்றுப்படையாக்கி உல கத்தினரை விழித்து, நீங்களுஞ் சென்று காணுங்கள் என்று கட்டளையுமிட்டிருக்கின்றனர். இஃதேயல்லாது திருவாதவூரிலே அமாத்தியப்பிராமண குலத் தி லே பிறந்து மதுரையிலே மந்திரி உத்தியோகம் வகித்துத் திருப்பெருந்துறையில் உபதே சம் பெற்றவராகிய மாணிக்கவாசக சுவாமிகளும் இந்தச் சிதம்பரத்திலேயே பெருமானரின் திருவடிகளிலிரண்டறக்கலந்தனர். இவர் பாடியருளிய திருவாசகச் செய்யுட்களில் நூற்றிற்கு அறுபதிற்கு மேற்பட்டவை இந்தச் சிதம்பரத்திற்குரி யனவே யாகும். பட்டனத்தடிகள் பாடல்களுமிங்ங்னே, தற்காலத்திலேயும் இங்கு உற்சவகாலங்களில் தேவர் கள் முனிவர்களாதியோர் வேற்றுருவங்களுடன் வந்து நின்று தரிசனஞ் செய்கின்றர்கள்.
ஆரார்வந்தார் அமரர்குழாத்தில் அணியுடை ஆதிரைநாள் நாராயணணுெடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும் தேரார் வீதியிற் தேவர்குழாங்கள் திசையனத்தும் நிறைந்து பாரார் தொல்புகழ்பாடியும்ஆடியும்பல்லாண்டு கூறுதுமே
என்பது திருப்பல்லாண்டுச் செய்யுள், இனி எத் துணைப்பெரும் பாதகங்களைச் செய்தவர்களாயினும் அவர்கள் பெர்துவ கையானே சிவசந்நிதானங்களிலும் சிறப்பு வகையானே மதுரையில் ஒரு குரோச தூரத்துக் குள்ளும். சிதம்பரத்தில் இரண்டு காத வழி தூரத்திற் குள்ளும் வசிப்பார்களாயின் அவர்களைத் தீண்டப்படாது என்பது இயமதர்மராஜனுக்குச் சிவபிரானுற் கொடுக் கப்பட்ட கட்டளை யாகும்.

(23)
* சிட்டர் வானவர் சென்று வரங்கொளுஞ் சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலத்துறை சிட்டன் சேவடி கைதொழச் செல்லுமச் சிட்டர் பால்அணு கான்செறு காலனே "
என்பது திருநாவுக்கரசு நாயனுரவர்களருளிய தேவாரசி செய்யுள். இதன் சுருக்கப்பொருளாவது, நடராஜப் பெரு மானரைத் தரிசித்தற்காகப் பிரயாணஞ் செய்கின்ற வர்களுக்குச் சமீபத்திற்ருனும் இயம தர்மன் செல்ல மாட்டான்' என்பதாகும். இவற்றையெல்லாஞ் செவ் விதே உணர்ந்தவரும் யாழ்ப்பாணத்துத் திருநெல்வே லியில் ஜெனித்தவருமாகிய பூரீ ல பூரீ ஞானப்பிரகாச சுவாமிகள் அவர்கள் இன்றைக்கு ஏறக்குறைய நூற்றைம் பது வருடங்களின் முன்னரே இந்தச் சிதம்பரத்தை அடை ந்து நாடோறுஞ் சுவாமி தரிசனஞ் செய்து கொண்டிருந் தனர். அக்காலத்திலே அவர் பரோபகர் ர்த்தமாக ஓர் சிறிய குளத்தைத் தோண்டிவைத்தனர். இக்குளமே தற்பொழுது ஞானப்பிரகாசத்திருக்குளம் என வழங் கப்படுகின்றது. இவர் தமிழ்க் கடலிலும் வடமொழிச் சமுத்திரத்திலும் இறங்கி நீங்கி விளையாடி அநேக நூல்களை இயற்றியுள்ளனர் இவரின் சமாதி ஆலயம் ஞானப்பிரகாசக் குளத்தின் வடபாகங்கலிலேயே நிறுவப் பட்டு இன்றும் பூகிக்கப்படுகின்றது. இதன் பின்னரே பூநீலபூரீ ஆறுமுக நாவலர வர்கள் ஆங்குச் சென்று வழிபாடு செய்து ஒர் வித்தியா சாலையையும் ஸ்தாபித் தனர் இத்துடன் எங்கள் யாழ்ப்பாணத்தவர்களுக்கும் சிதம்பரத்திற்கும் தொடர்பு வர வர அதிகரித்தது. சிதம்பராலய அர்ச்சனை பூசைகள் செய்வதற்காக வென்றே யாழ்ப்பாணத்திற் சில காணிகளை முன்னேர் கள் எழுதிவைத்துள்ளனர் ஞானப்பிரகாசக்குளத்தின் வடகரையிலுங் கிழக்குக்கரையிலும் யாழ்ப்பாணத்தவர் களின் மடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. இவற்றிற்குச் சொத்துக்களுமுள்ளன ஆணுல் இவைகள் சரிவரப்பரி பாலிக்கப்படுகின்றனவா, இல்லையா என்பதனைச் செவ் விதே ஆராய்ந்து ஆவன செய்யவேண்டியது நம்மவர் களின் முக்கிய கடமைகளுள் ஒன்ரு கும்.
எங்கள் ஈழமண்டலத்தின் சிரமெனப் புகழப்படு கின்ற யாழ்ப்பாணமானது கண்டிப்பகுதியைப் ப்ோன்று இயற்கையாகவே நீர் வளம் நிலவளம் பொருந்தியதன்று, இதனல் இங்குள்ளவர்களுட் சிலர் கொழும்பு கண்டி

Page 20
( 24 ) - முதலிய இடங்களுக்குச் சென்றும் சிலர் ஐக்கிய மலாய் நாட்டிற்குச் சென்றும் உத்தியோகங்களை வகித்துப் பெரும் பொருளீட்டித் தாங்களுமனுபவித்துப் பிறர்க்கு முபகரித்து யாழ்ப்பாணத்திற் காடுகலடாக இருந்த இடங்களில் மாடமாளிகைகளை அமைத்து அதனைப் பொன்னுலகாக்கினர்கள். தற்பொழுதுமா க்குகின் ருர் கள்- இவ்வாற்றனே மலாய் நாட்டிற்குச் சென்றவர் களின் பணவுதவியைப் பெருத வித்தியாசாலைகளாவது ஆலயங்களாவது வேறு எந்தப் பொது ஸ் தாபனங்களா வது யாழ்ப்பாணத்தில் இல்லவே இல்லை. இங்கு மோட்டார் ரதங்களின் எண்ணிக்கை கூடியதற்கும் அவர்களே காரணகர்த்தாக்களாகும். இங்கனே மலாய் காட்டிலிருந்து பென்சனர்களாகி இங்குவந்து இளைப் பாறியிருக்கின்ற சற் சனர்களாகிய பிரபுக்கள் யாவரு மொருங்கு சேர்ந்து மலாயர் பென்சனர் சங்கத்தை ஸ்தாபித்து நடாத்துகின்றனர். இது சாலவும் மெச் சத்தக்க தொன்றே யாகும். இச்சங்கத் தலைவர்களும் இலங்கையிலுத்தியோகம் வகித் திளைப் பாறியிருப்பவர் களும் ஒருங்கு சேர்ந்து ஞானப் பிரகாச மடங்களைச் சீர் படுத்தி , இங்கிருந்து ஆங்குச் செல்லும் சிவநேயச்செல் வர்கள் வேற்றிடங்கட்குச் சென்று அலைந்து உலைந்து அல்லற்படாது மிகவுஞ் செளகரியமாகத் தங்கியிருந்து சுவாமிதரிசனஞ் செய்தற்காகியவழிவகைகளை வகுத்து, அதனை ஒருவாற்ருனே இலங்கை அரசினருடன் சம்பந் தப்படுத்துங்கா ரஞர்த்தமாகவே இந்து அறநிலயப் பாதுகாப்புச் சபையாரின் அனுசரணையுடன் நிறைவுற செய்தல் மிகவும் அத்தியாவசிய கம் வேண்டப்படுவ தொன் ரு? கும். பெளத்த சமயத்திலும் சாது புத்தா விலும் மிக விசுவாசமும் பத்தியுமுடையவர்களும் இந்தி யாவில் யாத்திரீகர் விடுதியை ஆக்கியவர்களுமாகிய இல ங்கை அரசினர் அ ந் த ச் சித்தார்த்தரின் ஜனன காலத் திmை) வகிைய சிவபிரானின் திருத்தலங்களிற் செய்ய வேண்டிய கைங்கர் யங் கட்கு சற்றேனுமட்டியின்றி ஆவன செய்து அவர்களும் இறைவனருட்க டாட்சம் பெறுவர்.
வாழதது மழைவ முங்குக மள்னவ னுேங்குக பிழையில் பல்வளன் எல்லாம் பிறங்குக தழைக வைந்தெழுத் தோசை தரையெலாம பழைய வைதிக சைவம் பரக்கவே.
(உமாபதி.சிவாசா ரியர்)

அரும்பதப்பொருள் விளக்கம்
1-ம் 2-ம் பக்கங்கள் அநந்த - அளவில்லாத நவரத்தினம்--ஒன்பதுகற்கள் சுவயம்பு - தானகத்தோ ன்றியது குடகமலை - மேற்குமலை பிறழாத - குறையாத
சற்றனர் - நல்லவர்கள்
பிரபலியம்-எல்லாராலும்
அறியப்பட்ட புகழ் நிர்வாகம் - ஆட்சி
3-ம் 4-ம் பக்கங்கள் பிரதிஷ்டைசெய்து-தாபித்து கர்த்தர் - தலைவர் அருகி - குறைந்து வள்ளல் - கணக்கில்லா மல் கொடுப்பவன் ஆரியம் - சம்ஸ்கிருதம் கிரி - மலை
6-ம் 7-ம் பக்கங்கள்
அருந்தினர்-உண்டார்கள்
பராயம் - வயது அடிசில் - உணவு நாமகரணம் - பேயர்
8-ம் 9-ம் 10-ம் பக்கங்கள் எரி - நெருப்பு மிடி - வறுமை வெளிப்பிரகாரம்-வெளி வீதி கலைவாணி - சரஸ்வதி
புவனம் - உலகம்
11ம்- 12ம்-13ம்-பக்கங்கள்
இரண்டற-இரண்டில்லாமல் ஒன்ருக பிருதுவி - மண் அப்பு - தண்ணிர் தேயு - நெருப்பு பாதாரவிந்தம் - காலா கியதாமரை அரவிந்தம் - தாமரை
14-ம் 18-ம் 22-ம் பக்கங்கள்
எடுத்துக்காட்டு - உதாரணம்
நிர்ணயஞ்செய்தல் - முடி
வுசெய்தல் ஆற்றுப்படுத்தல் - வழி காட்டுதல் ஆதிரை நாள் - திருவாதி ரைநாள்
நாராயணன் - விஷ்ணு
Čpri 55 இரவி - சூரிய முர்த்தி
23-ம் 24-ம் பக்கங்கள்
பரிபாலித்தல் - விருத்தி
செய்தல் சிரம் - தலை அன்று - அல்ல சாலவும் - மிகவும்

Page 21


Page 22

. . .|×|-| s. |||-|)|-sae|-
|-|-|''''', ; T , : : : : : . . . ----| 1|()|| || | ()sos,
, !
|-
|- |-|-- )sae| |-|- |-|- s',, ,|-,| – |-
| () sosis. : , 「, ) : - - **'' |-soos : || ()|-
- - - -o|-| ()| ||'', |
|-