கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: என் அப்பாவின் கதை

Page 1
| .
 


Page 2

என் அப்பாவின் கதை
என். கண்முகலிங்கன்
நாகலிங்கம் நூலாலயம் "நகுலகிரி", மயிலிட்டி தெற்கு, தெல்லிப்பழை, யாழ்ப்பாணம்,

Page 3
EN APPAVIN KATHA
Life of my father)
By N. Shanmugalingan (C) Mrs. Naguleswary Nagalingam.
First Edition : 30th March 1988
Cover Design : A. Rasiah
Kalaimakal Printograph
Cover Photograph : „Mano, Shan
Printed at : Catholic Press, Jaffna.
Published by : Nagalingam Noolalayam
“Nagulagiri', Myliddy South Tellippalai, Jaffna,

முன்னுரை
GuJ n9 fluñr கலாநிதி சு. வித்தியானந்தன், துணைவேந்தர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
சண்முகலிங்கன் அவர்களின் அப்பா திரு. க. நாகலிங் கம், இளைப்பாறிய ஆசிரியர், அவர்களின் திடீர் மறைவுபற்றி அறிந்து மிகவும் கவலைப்பட்டேன். சண்முகலிங்கன் அவர் களுக்குத் தகப்பன் மீது அதிக வாரப்பாடு. சில பிள்ளைகள் போலத் தகப்பனை அவமதித்தோ எட்டியெறிந்தோ நடப்ப தில்லை. பெற்றேர்மீது மிகுந்த பக்தியும் மரியாதையும் 20.6
நாகலிங்கம் அவர்களும் தன் மகன் மீது அளவிலா அக் கறையும் பற்றும் உடையவர். அவரின் கல்வி வளர்ச்சிக்கா கத் தன்னுடைய வாழ்க்கையில் அனுபவிக்கக்கூடிய சுகங் களையும் கட்டுப்படுத்தி மிக இறுக்கமாக வாழ்ந்து வந்தவர். இன்று அவரின் திடீர் மறைவு சண்முகலிங்கன் அவர்களுக் குப் பேரிழப்பாகும். என்து வீட்டிலிருந்து கட்டுவன், மயி லிட்டி தெற்கு மிக அண்மையில் உள்ளன. சிறு வயதிலி ருந்தே அவ்விடங்களுக்குச் சென்று அங்குள்ள பலரைச் சந் திக்கும் வாய்ப்பு எனது தகப்பனர் வழக்கறிஞர் சுப்பிரமணி யத்தின் மூலம் எனக்குக் கிட்டியது. அங்குள்ள பலர் எனது

Page 4
தந்தையார் நிறுவிய பாடசாலையில் ஆசிரியராகக் கடமை யாற்றியிருக்கின்றனர். அவர்களுள் ஒருவரும் எங்கள் பாட சாலையாகிய வீமன்காமம் மகாவித்தியாலயத்துடன் நீண்ட காலத் தொடர்பு உடையவரும், நெருங்கிப் பழகிவருபவரு மாகிய இலக்கண வித்தகர். இ. நமசிவாயம் அவர்களுடன் நெருங்கிப்பழகி பல சமூகத் தொண்டுகளில், கிராம அபி விருத்திச் சங்கங்களின் வழிநடத்தலில் முக்கிய பங்குகொண் டவர் திரு. நாகலிங்கம் அவர்கள். அவரது தமையன் கூட்டுறவாளர் அமரர் க. பொன்னம்பலம் அவர்களும் நாக லிங்கம் அவர்களும் இணைபிரியாது பல சமூகத்தொண்டு களின் உயிர் நாடிகளாயினர். தமது குடும்பங்களின் அபிவி ருத்தியிலும் இருவரும் இணைந்தே செயலாற்றி வந்தனர்.
நாகலிங்கம் அவர்களுடைய திடீர் மறைவு கட்டுவன், மயிலிட்டி தெற்கிற்கு மட்டுமல்ல, வலிகாமம் வடக்கு மக்கள் சமூகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
தன் அப்பாவின் கதையை இலக்கியமாக்கும் மகன் சண்முகலிங்கனின் "என் அப்பாவின் கதை’என்ற இந்த நூல் அவர் தந்தையாரின் 31ஆம் நாள் நினைவுடன் வெளியாகின் றது. கல்வெட்டு மரபினின்றும் விலகி ஆக்க இலக்கியங்களை யும், பயனுன பல பிரசுரங்களையும் தரத் தொடங்கியுள்ள புதிய மரபினிடை சண்முகலிங்கனின் என் அப்பாவின் கதை யும் ஒரு புதிய தொடக்கம்.
தந்தையின் நினைவாக நாகலிங்கம் நூலாலயம் என்ற பெயரில் ஒரு பதிப்பகத்தையும் இந்த நூல் வெளியீட்டுடன் அவர் தொடங்குவதாக அறிகிறேன். அவரின் முயற்சிக்கு எமது வாழ்த்துக்கள்.
1 W

தொடக்கவுரை
இலக்கண வித்தகர் பண்டிதர் இ. நமசிவாயம்
கட்டுவன் சந்தியை மையமாகக் கொண்டு அதனைச் சூழ்ந்திருக்கின்ற, மயிலிட்டி தெற்கில் குரும்பசிட்டி தவிர்ந்த பகுதியும், கட்டுவன் வடபகுதியும், வருத்தலைவிழானும், இனசனக் கலப்பு முதலிய ஏதுக்களால் ஒர் ஊராகவே கரு தப்பட்டு வருவன. கமக்காராகளே அதிகமாக வாழ்கின்ற இவ்வூர் ஏறக்குறைய 1924ஆம்ஆண்டுக்கு முற்பட்ட காலப் பகுதியில் கல்வி, பொருளாதாரம் முதலியவற்றில் வசதிக் குறைவானதாக இருந்தது. மேற்குறித்த ஆண்டளவில் அவ் வூர் வாசிகளான கற்ற இள்ைளுர் சிலர் ஊரபிமானத்தில் ஊக்கம்கொண்டு பொதுப்பணி புரிகின்ற நோக்கில் பாலர் ஞானுேதய சங்கமென்ற பெயரில் ஒரு சங்கத்தை அமைத்த னர். அக்காலத்தில் எமது வீட்டின் தெருவை அண்டிய அறைகள் வியாபாரியார் க. கந்தையா அவர்களின் வியா பாரத் தானமாகவும், அவரின் தமையனர் க. மயில்வாகனம் நொத்தாரிஸ் அவர்களின் கந்தோராகவும் அவரின் பின் நொத்தாரிஸ்மாரின் கந்தோராகவும் விளங்கின. அவற்றின் முன்புறமி ைமந்த விருந்தையே மேற்படி சங்கத்தின் ஆரம்பக்
, ` v

Page 5
கூட்டங்கள் நடைபெறுவதற்கு இடமாக இருந்தது. அத ஞல் இக்காலத்து எட்டு ஒன்பது வயதுச் சிறுவனக இருந்த எனக்கு அச்சங்க ஆரம்பகால நிகழ்ச்சிகள் இப்பொழுதும் மனதில் பசுமையாகவே இருக்கின்றன. அச்சங்கத்து வியா பாரியார் க. கந்தையா முதலிய பெரியவர்களின் ஆதரவும் இருந்தது. அச்சங்கம் ஆல்போல் தழைத்து தன்கீழ் வேறு பல சங்கங்களையும் அமைத்துப் பெருந்தொண்டு புரிந்து அவ்வூரை முன்மாதிரியான ஓர் ஊராக்கியது. பாடசாலை அமைத்து நடத்தியது. தபாற்பெட்டி அமைப்பித்தது. வாசிகசாலை அமைத்தது. விளையாட்டிடம் அமைத்தது. அரசினர் வைத்தியசாலை அ  ைமத்தது. நெசவுசாலைகளை அமைத்தது, அரசினர் பாடசாலையை அமைக்குமுன்னேயே தானெரு பாடசாலையை அமைத்தது. கமக்காரரின் நன்மை கருதி ஐக்கியநாணய சங்கத்தை அமைத்தது. (அவ்வைக்கிய சங்கம் அக்காலத்தில் இலங்கையில் முன்மாதிரியானதாகக் காட்டப்பட்ட சங்கமாக விளங்கியது.) வெங்காயச்சங்கம் அமைத்தது. அந்திய சகாய நிதிச் சங்கமமைத்தது. பல பெரிய மகாநாடுகளை நடத்தியது. இங்கினம் அது செய்த பணி சொல்லில் அடங்காது.
சங்க ஆரம்ப காலத்திலிருந்து தான் அமரத்துவம் எய்தும்வரைக்கும் அச்சங்கத்துக்கும் அதன் கிளைச் சங்சங் களுக்கும் காரியதரிசியாகவோ, தளுதிகாரியாகவோ இருந்து பணி முழுவதற்கும் மூலகாரணமாக விளங்கியவர் கிளாக்கர் கந்தவனம் பொன்னம்பலம் ஆவர். பொதுத் தொண்டின் சிறப்பால் அவர் எல்லோராலும் அறியப்பட்டவர். மதிக்கப் பட்டவர். அவரின் உடன் பிறந்த தம்பியாரே இந்நினைவுக் குரிய அமரர் க. நாகலிங்கம் ஆசிரியர் ஆவார்.
அக்காலத்தில், தமிழ்ப் பாடசாலை, ஆங்கில பாடசாலை என பாடசாலைகள் இருவிதப்பட்டு நடந்தன. ஆங்கில
wi

Lunt Lyrtaudi) படிப்பவர்க்கு தொழில் வசதியும், மதிப்பும் அதிகம். நாகலிங்கமவர்கள் ஆங்கில பாடசாலையிலேயே கற்றவர். மலைநாட்டுப் பகுதியில் ஆசிரியராகச் சில ஆண்டு காலம் தொழில்புரிந்து ஆசிரியச் சேவைக் காலத்திலேயே மேலும் கற்று, ஆசிரியத் தராதரம் பெற்று. இடமாற்றம் பெற்று ஊருக்கு வந்தவர். தன்மயன் மேலும் அவரின் பணிகள் மேலும் மிக்க பிரியம் உள்ளவர். இங்கு மாற்றம் பெற்றுவந்த காலம் தொட்டு அமரத்துவ்ம் எய்தும்வரையும் தமைய்னின் பொதுப்பணிகளுக்கு உதவியாளராகவும், அவ ரின் பின் அவரின் இடத்தை நிரப்புபவராகவுமிருந்து தமை யன்போலச் சேவை செய்தவர். இதனல் அவரை நாங்கள் சின்னப் பொன்னம்பலம் என்று அழைப்பதுண்டு.
ஒருகாலப் பகுதியில் பாலர் ஞானேதய சங்கத்துக்கும் அதன் கிளைச் சங்கங்களில் வெங்காயச் சங்கமொழிந்த மற் றெல்லாவற்றிற்கும், இந்துசமய விருத்திச் சங்கம், கணே சையர் நினைவுச் சங்கம் என்பவற்றுக்கும் நான் தலைவராக இருந்தேன். ஆனல் ஆசிரியர் நாகலிங்கமவர்கள் அச்சங்க மெல்லாவற்றுக்கும் வெங்காயச் சங்கத்துக்கும், காரியதரிசி யாகவோ, தளுதிகாரியாகவோ இருந்திருக்கிருர், எந்த நேரமும் கணக்கும் கையுமாக இருப்பார். சங்கங்களின் தொகை மிகுதியால் ஒருநாளைக்கு ஒரு திருவாகச்சபைக் கூட்டமாவது இருக்கும். நேரம் பிந்தாது தவருது சமுகமா யிருப்பார். நாங்கள் மறந்துபோயிருந்தாலும் விடமாட் டார். தேடிப்பிடித்து சபையை நடக்கச்செய்வார். பொதுத் தொண்டில் மட்டுமல்ல தன்வீட்டுக் கடமைகளிலும் அவர் சோர்ந்து குறை விட்டதில்லை. ஆசிரியர் என்றுகிட்மையி லும் அவர் நற்பணிபுரிந்தவர் என்பதை அ சின் கற்பித்த ஆசிரியர் மூலம் நான் கேள்விப்பட்டிருக் ன். நித்திரை கோம்போக எனைய நேரங்களில் அவர்கியேராக ே I நேரம ஏ நர ஜூஅயராத ஒ
V1

Page 6
ளன். நித்திரையில்கூட அவர் கனவு காணுவதில் சேவை பற்றியே கனவு கண்டிருப்பார். தான் சரி என எண்ணியதை எத்தகையோர் எதிர்த்தாலும் அஞ்சாது நிலைநாட்டும் இயல் புடையவர். சுற்றத்தவர், அயலவர், நண்பர் என்பவர்களின் மங்கல அமங்கல நிகழ்ச்சிகளில் வல்விரைந்து அயராது உதவி புரிபவர். ஆலயக்கடமைகளிலும் நியதமாக உழைப்பவர். சகல வகையிலும் அவர் சோராத முயற்சியுள்ள ஒரு நல்ல மனிதன். -
அவர், இக்காலத்தில் சோதிட அறிவுள்ள வைத்திய ராக விளங்கிய வேலுப்பிள்ளை நாகமுத்து அவர்களின் மூன் ருவது மகள் நகுலேஸ்வரியை மணம் புரிந்தவர். இந்த நகு லேஸ்வரியின் மூத்த தமக்கையாராகிய விசாலாட்சியே அம ரர் க. பொன்னம்பலத்தின் மனைவி என்பது இங்கு குறிப் பிடத்தக்கது. எனது வீட்டுக்கு அடுத்தவீடு, நாகலிங்கம் அவர்களின் வீடானபடியால் அவரின் இல்வாழ்க்கை சிறப் பானது என்று கூற எனக்குத் தகுதியுண்டு.
இல்லறத்தின் பயணுக அவருக்கு குழந்தைகள் இருவ ருளர். மூத்தவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விரிவுரை யாளராக விளங்கும் திரு. சண்முகலிங்கன் அவர்கள். இளைய வர் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் பயின்று வைத்திய ராக விளங்கும் செல்வி காந்தா அவர்கள்.
இங்கினம் எல்லாவிதத்தாலும் சிறந்து வாழ்ந்த நாக லிங்கமவர்களின் பெரும்பிரிவு நட்டமும் துக்கமும் தருவது. அவரின் ஆன்மா சாந்தியுறும், சாந்தியுறும்படி நாமும் கட வுளை வேண்டுவோம்.
சண்முகலிங்கன் எழுதும் " என் அப்பாவின் கதையின் வழி நாகலிங்கம் அவர்களின் பெயரும், நமதூர் வரலாறும் நின்று நிலைக்க வாழ்த்துகின்றேன்.
viii

பதிப்புரை
திருமதி நகுலேஸ்வரி நாகலிங்கம் அதிபர், நாகலிங்கம் நூலாலயம்
நன்றி.
அப்பா,
என்னை ஒரு பதிப்பாலயத்தின் தலைவியாகவும் பணித்
தன. அரை நூற்ருண்டுகாலப்பயணத்தில், உங்கள் தொண்
டுகளில் தொடர்ந்த என்னிடம் ஒடத்தையே செலுத்தும்
பொறுப்பினையும் தந்தன.
உங்கள் பெயர் சொல்லி பணியாற்றும் நாகலிங்கம் நூலாலயத்தின் இந்த முதனுரலை ஆசீர்வதியுங்கள்.
இந்நூலுக்கு முன்னுரை வழங்கிய பேராசிரியர் சு. வித்தியானந்தன், தொடக்கவுரை ஈந்த பண்டிதர் இ. நமசிவாயம், நிறையுரை நல்கிய கலாநிதி சி. மெளனகுரு ஆகியோருக்கு எங்கள் நன்றி.
ix

Page 7
அப்பாவை ஒவியத்தில் மீட்டுத்தந்த ஆ. இராசையா, ஒளிப்பதிவு நுணுக்கம் தந்து கலைமகள் பிரின்போ கிராப் தவம் பதிப்பதில் துணை நின்ற கத்தோலிக்க அச்சகம் என்பனவற் றினுக்கும் நன்றி சொல்லுகின்ருேம்.
எங்கள் அப்பாவின் சடங்குகளில் கலந்து, எங்க ள் தனிமையிடை கூடவிருந்த அன்புக்குரியவர்கள் எல்லோருக் கும் இந்த இடத்தில் நன்றி சொல்ல விரும்புகின்ருேம்,
அப்பாவின் கதையில் அவரின் உற்பத்திமுதல் துணை நின்ற குடும்ப, சமூக பாத்திரங்கள் அனேத்தினுக்கும் என் றென்றும் நாங்கள் கடப்பாடுடையவர்களாகவே இருப் போம். அவரின் பெயரிலமையும் நாகலிங்கம் நூலாலயம் கனவான வாழ்விற்கு அர்த்தங்கள் காட்டும் என்பது எங்கள் நம்பிக்கை,
எழுதுவதற்குப் பதிலாக அழுதுகொண்டிருந்த சண் முகனே ஒருமாதிரி இயங்க வைத்திருக்கிறேன். எங்கள் கவிதைகள் நிச்சயம் அவன் காவியமாக்குவான்.
உங்கள் பொன்னடிகளில் அர்ப்பனம்,

சிஜப்பொழுதும் அஃபிகச்சி
ங்ேகர் தரிசிநாள் து: "TT-- - 1ங்கள் அன்பின் அப்பா
நசுங்குளே 3*ார்டும் வங்சுஆ, f:24 வரடிட்பீர் கார் . اء ه م 遇 புதி -rf+r ன்ேடினபதி தொடநிறுதி அர்த்தங் கார் காசுஜஓநாய் டோடிக்கி இநீத đtsở q
இங்கு நூரே ப் சடித்து டங்கிங் விசிசுங்களே பிரான்சு டிட் மீச்கிரிகா " சிப்பர். ஆபுேரி. அப்பா, !
3ாநிதி பிபுதுக், சரிநிதி திங்
சிசின் டிஅேதி இேங்
PJ, a
ka dari శేష24

Page 8

அப்பாதுணை வாழ்வு முற்றும் கனவெனக் கூறிய மறைவலோர் தம் உரை பிழையன்று காண்
- பாரதி
ன்ெ அப்பாவின் கதையை இப்படிச் சடுதியில் எழுத கனவு கூடக் கண்டதில்லை. என்னுடைய முதலாவது புத்த கத்தை அப்பாவின் கையிலே கொடுத்து ஒருநாள்தானே கழிந்தது. ஆயிரமாயிரம் புத்தகங்களைப் படித்துச் சேகரித்த என் அப்பா, எனது புத்தகத்தின் அட்டையை மட்டும்தான் பார்க்கக் கிடைத்தது. ஒரு வரிகூடப் படியாமல் இருளா கிப் போனது.
அந்தப் புத்தகத்தின் பின்புற அட்டையில் இருந்த படங்களில் ஒன்றைக் காட்டி 'யார் சொல்லுங்கோ பாப் பம்" என்று மனே அக்கா கேட்கிருள். தெரியாது என்ற மாதிரி ஒரு நளினம், அதைத் தொடர்ந்து ‘என்ரை மேன் தான்’ என்று சொன்ன கணத்தில் என்ன மகிழ்ச்சி. என்ன மலர்ச்சி.
56kg.j60 -tt சுயசரிதையை அப்பா எழுத ஆரம்பித்து கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் வரையிலான கதையுடன்

Page 9
தொடராமலேயே நிறுத்திவிட்ட கதை யாரும் அறியாதது. நான் பிறந்த காலத்துடன் நின்றுபோனது அந்தக் கதை, மஹாகவி சொன்ன மாதிரி "அப்பனே மகளுகி வளர்ந்து உயிர் ஒய்தல் அற்று உயர்வு ஒன்றினை நாடும் உண்மையைச் சொல்லாமல் சொல்லி அதனை அந்தளவில் நிறுத்தியிருந் தாரா ? இந்த உண்மைகளைத் தெளியும் பக்குவம் எனக்கு இல்லை. இல்லையென்ருல் அப்பா எழுதிய அந்த உண்மைக் கதையைக் கட்டுவனில் அழிய விட்டிருப்பேன ?
அப்பாவின் எழுத்து மட்டுமா அழிந்தது. அப்பாவின் உயிர் மூச்சுடன் கலந்து நின்ற எங்கள் வீடும், சுற்றமும், ஊரும் என்னென்ன பாடுகள்பட்டன. “பதியெழு அறியாப் பழங்குடி வாழ்க்கை"போன அன்றே அப்பா வின் மனம் தளர்ந்துதான் போயிருந்தது. ஆனலும் கூடவே நாங்கள் இருந்து தந்த உற்சாகத்தில் அவற்றினை மறக்கும் ஒரு வேள்வி யில் கழிந்த காலங்களிடை, அண்மையில் இடம்பெயர்ந்து குடியிருந்த வீட்டிலும் இருக்கமுடியாமல் நாயாய் அலைந்து நொந்துபோன அவலங்கள். ஆனலும் அனைத்தையும் வென்று விடும் நினைப்பினிடை திடீரெனத் தோற்றுப்போனேம். எங் கள் வீட்டுக்குத் திரும்பாமலேயே அப்பா போய்விட்டார்.
சின்னனில் அப்பாவின் 'ரலிசைக்கிளில் பின்னுக்கிருந்து கட்டுவனிலிருந்து மகாஜனவுக்குப் போகிற காலம், கொத்தி யாகல் சுடலையைத் தாண்டும்வேளை 'இதுதான் அப்பு எங். கட சுடலை எள்நு அச்சம் போக்கியும், எங்கள் உரிமை நிலத் தைக் காட்டியும் அப்பா தந்த விளக்கங்கள் அர்த்தமில்லா மற் போயின. இன்றைக்கும் ஒரு சுடலை கிடைத்ததுதான். எத்தனை சடங்குகளை முன்னின்று நடத்திய அப்பாவின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ள ஊரிலிருந்து ஒருசில உறவுகள் மட்டுமே வந்துசேர காலம் அனுமதித்தது.
2

"வீடும் வளவும் வீதியும் சுடலையாய் போன காலங்க ளிடை உன் கடமைகளைச் செய்ய நீ கொடுத்து வைத்திருக் கிருய், இந்தியாவிலிருந்து நீ வரும்வரை காத்திருந்து உன் னுடன் கலந்து களித்தபின்தானே அப்பா விடைபெற்றிருக் கிருர்’ என்ற ஆறுதல் மொழிகளிடை கல்லான என் இத யத்தை மேலும் கல்லாக்கி, பித்தன்ன என் அப்பாவின் கதை யைச் சொல்ல முயலுகிறேன்.
அப்பாவின் சிதைக்குத் தீமூட்டிய அந்தக்கணத்தில் நான் கண்ட அப்பாவின் விஸ்வரூப தரிசனத்தில் அப்பா என்ற அந்த ஆளுமைக்குள் அடங்கியிருந்த அந்தக் காவியத் தை ஒரு பெரும் நாவலாய்ப் படைக்கும் உறுதி எனக்குள் வளர்கின்றது. கால நிர்ப்பந்தத்திடை அந்தக் காவியக் கரு வின் ஒரு சிறு வீச்சாகவே இந்தக் கதையை எழுதுகின்றேன்.
யாழ்ப்பாணத்தின் வலிகாமம் வடக்குப் பகுதியிலே கட்டுவன் என்ருெரு விவசாயக் கிராமம். அதிலே தண், னிர்த் தாழ்வு என்ருெரு குறிச்சி. அங்கேதான் என் அப்பா வின் உதயம்.
கந்தவனம் என்ற ஒரு கமக்காரனுக்கும் கண்ணுத்தைக் கும் கடைசி மகன். சிதம்பரம், வல்லி புரம், பொன்னம் பலம், வள்ளிப்பிள்ளை என்ற வரிசையில் கடைக்குட்டியாக நாகலிங்கம்.
கடைக்குட்டிக்குரிய செல்லம் இருந்திருக்கிறது, ஆன லும் வறுமையின் எல்லைக்குள்தான். அறியாப்பருவத்து அடாவடித்தனங்களுக்கும் குறைவில்லைத்தான். ‘அண்ணக்கு மட்டும் இடியப்பம் புட்டு, எனக்கு மட்டும் பழஞ் சோறு" என்று அக்கா வள்ளிப்பிள்ளையை உரலோடு தள்ளி விழுத்
13

Page 10
திய சம்பவத்தை உள்ளம் வருந்த தன் கதையில் அப்பா குறிப்பிட படித்திருக்கிறேன். வறுமை, அதிலும் இளமை யில் வறுமை.
அண்ணை இரவில் கட்டும் வேட்டியை காலையில் எழுந் திருக்கும்வரை காத் திருந்து தான் பள்ளிக்கூடத்துக்குக் கட்டிப்போகும் காலங்களென அப்பாலின் இளமையில் வறு மையின் பாடங்கள் பல இருந்திருக்கின்றன.
அழிவுகளிடையேயும் எங்கள் கைக்குக் கிடைத்துள்ள அப்பாவின் கடிதச் செல்வங்களின் பிரதிகள் சிலவற்றில் இந்தக் கதைகள் புலப்படும். அண்ணன் பொன்னம்பலத் துக்கு எழுதிய கடிதமொன்றில் பின்வரும் அடிகள்,
"கடவுள் பல அறிவையும் கொடுத்திருக்கிருர். ஆனல் பொருள் ஒன்றைத்தான் கொடுக்கவில்லை. ஏதோ வரவேண்டிய காலத்தில் வரும். தொல்லைகளை நினைந்து வருந்துவதில் பயனில்லை’
(9-3-42 இல் பெல்மதுளை எஸ்ரேற்றில் படிப்பித்துக் கொண்டிருந்தபோது எழுதியது)
இந்தப் பாடங்களினடியாகத்தான் எளிமையான ஒரு வாழ்வினை அப்பாவால் வெற்றிகரமாக வாழ முடிந்திருக்க வேண்டும்.
தன்னுடைய இந்த வறுமையின் சுவடுகள் எங்களைக் கொஞ்சமேனும் பாதிக்க அப்பா விட்டதில்லை. ‘பிச்சை புகி னும் கற்கை நன்றே" என்று சொல்லாமற் சொல்லி நின்ற அப்பாவின் அனுபவத்தால் நானும் நிமிர்ந்தேன்; நாங்கள் நிமிர்ந்தோம்.
l4

தண்ணீர்த் தாழ்வுக் குறிச்சியிலேயே பள்ளிக்குப் புறப் பட்ட இரண்டாவது ஆள் அப்பாவாகத்தான் இருக்கவேண் டும். அப்பாவின் அண்ணை பொன்னம்பலம்தான் முதலா வது ஆள். அண்ணைக்குப் பின்னல் தம்பி. ராமனுக்கு லட்சு மணன்; பொன்னம்பலத்துக்கு நாக்லிங்கன். ܀ 2 ܐܝܟ
氰 * ܗܝ * இந்த உறவின் இறுக்கம் அப்பாவின் வாழ்வு முழுவதி லும் வியாபித்திருந்தது. பொன்னம்பலம் என்ற ஆளுமை எங்கள் கிராமத்தையே குறியீடுபடுத்தி, அதன் விருத்திகள் அனைத்திலும் உயிரென நிற்பது. அந்த ஆளுமையின் இயக் கத்தில் இன்றியமையாத அங்கமாக அப்பாவின் பணியும் தொடர்ந்தது.
இந்தப் பணிகளில் வெளியே தெரிந்தவை சில,உள்ளே மெளனமாய் விரிந்தவை பல.
சங்கம் வளர்த்த, சங்கங்களால் வளர்ந்த கட்டுவன்மயிலிட்டி தெற்கு-வர்த்தலை விளான் கிராமங்களின் வரலாற் றுடன் அப்பாவின் உழைப்பும் சங்கமமாகி நிற்பது.
இருபதுகளிலேயே பாலர் ஞானுேதய சங்கம் என்ற பெயரில் ஊரில் பொன்னம்பலம் தலைமையில் கூடிய இளைஞர் கள் கிராம அபிவிருத்தியில் கண்ட உச்சங்கள் இன்று வர லாருகிப்போனது. கிராமத்து வளர்ச்சிக்கெல்லாம் ஆதார அமைப்பாக பாலர் ஞானுேதய சங்கம் விளங்கிநிற்க அதன டியாக பல நிறுவனங்கள் பிறந்தன. கமக்காரர்களின் நன் மைக்கென மத்திய மயிலிட்டி ஐக்கிய நாணய சங்கம் விவசாயிகளுக்குக் d5L-6ir கொடுத்தலையே நோ க்க மாகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. நியாய விலையில் மக் கள் பொருட்களைப் பெற்றுக்கொள்ள்வென மத்திய மயிலிட்டி
5

Page 11
ஐக்கிய பண்ட சாலை. 1939 உலகயுத்தகால நெருக்கடி களிற்கு கூட்டுறவுச் சங்கங்களின் வழி தீர்வு காணப்பட்டது.
தொடர்ந்த வளர்ச்சிப்படியிலே சிகரெற் புகையிலைச் சங்கம், கிராமத்து விவசாயிகள் வளர்ச்சியில் கொண்டிருந்த இன்றியமையாத இடம் குறிப்பிடத்தக்கது. மற்றயது வெங் காயச் சங்கம் என அறியப்பட்ட விளைபொருள் உற்பத்திக் கொள்வனவுச் சங்கம். அந்திய காலத்துக் கைகொடுக்க அந்திய காலச் சகாயநிதிச் சங்கம்,
இவற்றினைவிட மக்களின் ஆன்மீக நலனைக் கருத்திற் கொண்டு அமைக்கப்பட்ட இந்து சம ய விருத்திச்சங்கம், திவ்விய ஜீவன சங்கம் என விரியும் சங்கங்களிடை அப்பா சம்பந்தப்படாத அமைப்புகள் என்று எதுவுமில்லை.
பெரும்பாலான சங்கங்களில் தொடர்ந்து தஞதிகாரி யாக அப்பாவே தெரிவுசெய்யப்பட்டமையில் அப்பாவின் நாணயத்தில் ஊர் கொண்ட நம்பிக்கையைக் காண்கின் றேன். சங்கக்கடைக் கணக்குகளை இரவில் மீள எழுதிச் சரி பார்த்து அப்பா நித்திரைக்குப்போக நள்ளிரவாகும். சில வேளைகளில் நான், அம்மா, தங்கைச்சியும் விழித்திருந்து சிட் டைகளைச் சரி பார்க்கவேண்டும். நான் கணக்குப் படித்த களமாகவும் இதனைச் சொல்லமுடியும்,
அப்பாவுக்குள் இருந்த அனுபவ அக்கவுண்டன் ஆற்றலை கணக்குப் பரிசோதனைக்கென வருகின்ற கூட்டுறவுப் பரிசோ தகர்களின் அறிக்கைகளில் கண்டதுண்டு. நேரில் அவர்கள் கூறவும் கேட்டதுண்டு.
விவசாய, தொழிலாளர்களின் நேரடி உழைப்புடன் சம்பந்தப்பட்ட அனைத் து மக்களையும் அரவணைத்தலின்
6

இன்றியமையாமை கொண்ட வெங்காயச் சங்கம், சிகரெட் புகையிலைச் சங்கம் போன்றவற்றின் தலைமைப் பொறுப் னுக்கு அப்பா தேர்ந்தெடுக்கப்பட்ட் பொருத்தத்தினயும் இங்கு நினைத்துப் பார்க்கின்றேன்.
அப்பாவின் விசுவாசமான உழைப்புக்கு தப்பான அர்த்
(ኝ
தங்கள் கண்டவர்கள், கண்டனங்கள் சொன்னவர்களும் இல்லாமலில்லை. இந்தக் கண்டனங்களால்,நாங்கள் பாதிக் கப்பட்டதுண்டு. ஆனல் அப்பாவோ ஒரு கர்மயோயெய் உறுதியாய் தன் பணி தொடர்ந்தார். எல்லாம் சரி; நாக லிங்கம் கதைக்கிறதுதான் அவ்வளவு சரியில்லை என்றும் சிலர் சொல்லக் கேட்டதுண்டு. பொய்முகம் காட்டி நடிக்கத் தெரியாத அப்பாவை அறியாமல் நானே பல சந்தர்ப்பங்க ளில் தோற்றிருக்கையில் ஊர்முழுதும் சரியாகப் புரிதல் எப் படி எதிர்பார்க்க முடியும். அப்பாவின் உயிராய் இணைந்து வாழ்ந்த ஐஐயா (பெரியப்பாவை நாங்கள் இப்படித்தான் அழைப்போம் ) பொன்னம்பலத்துக்கு அன்று எழுதிய ஒரு கடிதம் அப்பாவின் இந்த இயல்பையும் அ த ஞல் அவர் நொந்த அனுபவங்களையும் சுட்டும்.
7

Page 12
Denawake , Pelmadulla
9-3-42
எல்லாம் வல்ல வைரவசுவாமி திருவருளை முன்னிட்டு வாழும் பட்சமுள்ள அண்ணை, மச்சாள், தம்பிமாருக்கு,
19
ஒரு மாசமாய் என்னவோ, ஏதோ எழுதவில்லையே
என்று அடித்துக் கிடந்ததற்கு நீங்கள் போட்டபோடு சரியான போடாகும். நான் ஒரு பேயன். சிலசமயங் களில் என்பாட்டிலிருந்து பலதையும் யோசிக்கிறபோது, ஏற்படும் மனவருத்தங்களின் நிமித்தம் மன 一鹦巫y岛 லுக்குப் பலர் தன்மைகளையும், உண்மையை ஒளியாது உங்களுக்கு சொல்வது என் கடன் என்று அறிவிப்பது, மனவஞ்சகமாய் எழுதுவதில்லை. r
அதற்காக என் மனதையும் கடிதத்தையும் பார்த் துப் பார்த்து வருந்தும்படி எழுதுவது சரியில்லையென்று நினைக்கிறேன். எழுதவேண்டம் என்ருல் நான் ஒன் றுமே எழுதமாட்டேன். ஆனல் உங்களுக்கு அறிவிக்கக்
கூடியது எதுவோ அதனை அறிவியாமல் மனதில் வைத்
திருந்தால் எனது மண்டை வெடிக்குமாப்போல் இருக்கு மென்பதையும் அறிவிக்கின்றேன். மேலும் எனது கடமையை உரிய நேரங்களில் செய்துதான் முடிப்பேன். சகோதர வாஞ்சைக்கு ஏற்றுத்தான் தீரவேண்டும்.
மறுத்தால் என்னேப் பிரிப்பதே எனது விளக்கம்.
மறுவிபரம் பின், ஊர்ப்புதினம் எழுதவும். குற்றம் குறையிருப்பின் மன்னிக்கவும்."
பட்சமுள்ள தம்பி
க. நாகலிங்கம்,

தன் அன்புக்குரியவர்களின் துன்பங்களைக்கண்டு துடித்த அப்பா, தன்னைப்போலவே பிறரையும் எதிர்பார்த்துத் துவண்டுபோனதுண்டு. இந்த தன்மனித உறவுகளுக்கு மேலாக, தாங்கள் கட்டிக் காத்த சிங்கங்கள் எல்லாம் தனி பன்களாப், தீவுகளாகிக்கொண்டிருக்கும். வாழ்வினிடை அழிதலில் அப்பாவின் ஆத்மா பட்ட வேதனைகள் கொஞ்ச மல்ல. இன்றைய எங்கள் அவலங்களுக்கெல்லாம் விடிவாக "அப்பாவை" கண்ட சங்கமும், கூட்டுறவும் கிதையாகப்போன ஒரு நிலையில் நாங்கள் எழுத நினைக்கும் புதிய வரலாறு எங்கே, எப்படித் தொடங்கும்?
சமுக நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கி விட்டு மனிதனுக வாழ அப்பா நிர்ப்பந்திக்கப்பட முதுமையின் தளர்ச்சி மட் டுமா காரணமானது ? அல்லது இந்த ஒதுங்கி வாழ்தலில் அப்பாவில் முதுமைத் தளர்ச்சி விளைந்ததா?
ஒன்றுமட்டும் நிச்சயம். இந்தப் பருவம் அப்பாவில் ஏற் படுத்திய தாக்கங்களில் எங்கள் சமூகத்து அப்பாமார் பலரி கதைகளே என்னல் காண முடிந்திருக்கிறது. சமூகமுப்பியல் (Social gerontology) argv to துறையில் நான் ஆர்வம்காட்டிய தன் அடிப்படையும் இதுவே. என் மாணவர்களுடன் கைதடி சாந்திநிலையத்தில் ஆய்வாளனய் நான் கழித்த நாட்களில் 4 கள் சமூகத்தின் வஞ்சகங்களை கதைகதையாக கேட்க முடித் தது. சர்வதேச முதியோர் ஆண்டில் முல்லை மண்ணில் நிகழ்ந்த தமிழாராய்ச்சி மாநாட்டில் நான் படித்த முதுமைப் பருவம்பற்றிய கட்டுரைக்கு உயிரும் உணர்வும் தந்த எ அப்பா. 8 x 4
குரும்பசிட்டி சனசமூக நிலையத்தில் அன்று நிகழ்ந்த சர்வதேச முதியோர் தினவிழாவும்,அதன் முன்னுேடி நிகழ்ச்சி
19

Page 13
யாக வாசிகசாலையில் நடந்த பெரியார்கள் படத்திறப்பு விழாவும் என் நினைவுகளை ஆக்கிரமிக்கின்றன. இப்பொழுது கட்டுவன் மயிலிட்டி தெற்கைச் சேர்ந்த இளைப்பாறிய ஆசிரி யர் திரு. க. நாகலிங்கம் அவர்கள் காந்திஜியின் படத்தைத் திறந்து வைப்பார்கள் என்ற கணத்தில் எத்துணை உற்சாகத் துடன் அப்பா அந்தப் பணியைச் செய்தார். அப்பாவின் நிழலில் லெனினின் படத்தைத் திறந்துவைக்க எனக்கும் அழைப்பு. காந்திஜியை அப்பாவும், லெனினை நானும் திறந் தவைத்த சங்கதிபற்றி அன்று கூட்டம் முடிந்து வரும் வழி யில் அப்பாவும் நானும் கலந்துரையாடியதெல்லாம் அர்த் தம் நிறைந்தது.
ஆனலும் பரபரப்பான இன்றைய போட்டி வாழ்வி னிடை அர்த்தத்துடனும், அர்த்தமில்லாமலும் இந்த உல கமே என் ஞ ல் இயங்குகின்றதான கற்பனைகளில் திரிந்த பொழுதுகளில் என் அப்பாவுடன் இடைவினை கொள்ளுதல் அருகித்தான் போனது காலையில் பல்கலைக்கழகத்துக்குப் புறபபடுகையில் த வ ரு து வாசல்வரை வந்து கைகாட்டி அனுப்பிவைத்தல், இரவில் சாப்பிடுவதற்கு முன்னுல் காத் திருந்து விபூதி பூசிவிடல் என்ற இந்த இரண்டு சந்தர்ப்பங் களின் சந்திப்புடனேயே கழிந்த நாட்கள் பல. என் போலிச் சட்டைகளையும், பாக்கையும் களைந்து அப்பாவுடன் மேலும் அதிகளவில் நான் இடைவினை கொண்டிருக்க முடியும். காலங் கடந்த என் ஞானம் அப்பாவை வைத்திருக்கும் பாக்கியம் கொண்டவர்களுக்காவது பயன்படட்டும்.
அப்பாவுக்கு மகளுக, குழந்தையாகவே நான் என்றும் இருக்க விரும்பினேன். எனது இந்த விருப்பத்தினிடை,
என்னையும் பெரியவனாய் காண விளைந்த அப்பாவின் எண்
20

ணங்களில் சிலவற்றை என் ஞ ல் நிறைவேற்ற முடியாது போனது.
அப்பா எழுதிய சுயசரிதையின்" சில பக்கங்களாவது அகப்படாதா என்ற ஏக்கத்தில் நீேற்று நானும் சுரேனும் வீட்டுக்குப் போயிருந்தோம். என்ன என்ரை வீட்டிலே யிருக்கவிடுங்கோ, சாகிறதெண்டாலும் நான் இங்கையிருந்து சாகிறன், நீங்கள் மூண்டுபேரும் வேணுமெண்டால் போங் கோ' என்று அடம்பிடித்த அப்பாவுடன் சண்டைபிடித்து சமாதானப்படுத்தி இடம் பெயர்ந்த அந்தநாள் நினைவுகள் என்னை உறுத்தி நிற்கும். கடைசியில் அப்பாவை போக விட்டிட்டு நாங்கள் இருக்கின்ருேம்.
அப்பாவின் இலட்சியமாய் நகுலகிரி உரு வானது. உண்மையில் அப்பாவின் உழைப்பில் அது ஒ "கிரி"தான். ஆமாம், மலை ஏறுதலின் உடல் வலியும், அதற்கு மேலான பொருட்கமையும்.
பத்து பன்னிரண்டு தென்னைமரங்களுக்கு மத்தி யில் நிமிர்ந்த அப்பாவின் உழைப்பு மாளிகை நகுலகிரி.
இலந்தைக் காடாய் கிடந்தக் அந்த காணியை தன் உட அலுழைப்பால் சோலையாக்கி, தன் ஆசிரிய சம்பளத்துக்கு அப்பாற்பட்ட நகுலகிரி இலட்சியத்துக்காய் வீடமைப்புக் கடன்பட்டு, அந்தக்கடனை அடைத்தற்காய் தன் பள்ளி, சங்க நேரங்கள்போக ஊனினை உருக்கி தோட்டமும் செய்ய வேண்டியிருந்தது.
எங்கள் வீடு விழாக்களுக்கென்றே கட்டப்பட்டது போல. அப்பா முன்னின்று நடத்தும் விழாக்களின் பின் தடக்கும் விருந்துகளில் எத்தனை ஆளுமைகளுடன் பழகும் வாய்ப்புக்கள், கருத்தரங்குகளின் தொடர்ச்சி எங்கள் வீட்டி லும் தொடரும்.
Ο Η

Page 14
கவிஞர்கள் செ. கதிரேசர்பிள்ளை மாஸ்டர், காரை. சுந் தரம்பிள்ளை, வி. கந்தவனம், அரியாலையூர் ஐயாத்துரை, ஆ. சிவநேசச்செல்வன், தேவன் யாழ்ப்பாணம், சிவராம லிங்க மாஸ்டர், வள்ளிநாயகி ராமலிங்கம், வி. பொன்னம் பல மாஸ்டர், எஸ். ஆறுமுகராஜா மாஸ்டர், செ. செல் லத்துரை மாஸ்டர், பூ. சோதிநாதன், சி. தயாபரன் சு. பாலச்சந்திரன், சச்சியண்ணை யென நீள இருந்து விருந் துண்ணும் களங்களிடையும் நாளும் நான் வளர்ந்தேன், கவி ஞர்கள், கட்டுரையளர்கள் மட்டுமா எங்கள் வீட்டுஹோலில் கூடினர். மாவிட்டபுரம் மணி ஐயரும், கொல்லன்கலட்டி இசைமணி செல்லத்துரை மாஸ்டரும் நடத்திய சங்கீத வகுப்புகளில் நான், இந்திரா, இசைஞானவதிஎன வரிசையில் இருந்து பயின்ற நாட்களில் கீதங்களாலும், கிருதிகளாலும் வீடே நிறைந்திருக்கும். விருந்தையிலே சச்சியண்ணையும் நானும் பாலச்சந்திரனும் குஞ்சனும் வில்லுப்பாட்டு பழ கிய பொழுதுகளில் ஹோலுக்குள் இருந்தபடி தாளம் போட்டு உற்சாகம் தந்த அப்பா இன்றில்லை.
நாடக ரிஹேசல், மேக்கப் களமாவும் கூடத்தான் நகுல கிரி விளங்கி நின்றது. செல்லத்துரை மாஸ்டர் சிவஞயும், நான் சுந்தரஞயும் வன்ருெண்டன் நாடகத்துக் கென மேக் கப்புடன் வீட்டிலிருந்து ஞானுேதய வித்தியாசாலைக்குப் புறப்பட்ட நாட்கள். . . . . w
விழா ஏற்பாடுகளில் ஒடியாடித் திரிந்தாலும், நான் கவிதை பாடும் போதோ, நடிக்கின்ற போதோ பூனைமா திரி ஒர் ஒரத்தில் நின்று மெய்மறக்கும் அப்பாவை நான் எப்படியும் கண்டுபிடித்து விடுவேன்.
வீட்டில், ஊரில் மட்டுமென்ன, நான் மேடைகண்ட ளமெதனையும் அப்பா தவறவிட்டதில்லை. நள்ளிரவாகட்
22

டும், அதிகாலையாகட்டும் அப்பா சலித்ததில்லை. மகாஜனு கலையரங்கம், வீரசிங்கம் கலையரங்கம், முற்றவெளி கலைய ரங்கம் என விரிந்த பரப்பினிடை, அப்பாவும் அம்மாவும் தங்கச்சியும் தவழுமல் வந்துவிடுவசர்கள்.
நாடகப் பித்தில் படிப்பில் என்கவனம் குறைகின்ற வேளைகளில் மெள்ள நாகுக்காய் கண்டிக்கவும் அப்பா தவ றியதில்லை. மேலே நான் குறிப்பிட்ட அந்த வன்ருெண்டன் நாடகத்து முதல் காட்சி, மணவினைக்காய் ஆரூரண் இரண்டு பெண்கள் ஆராத்தி எடுத்து வாழ்த்துப் பாடும் இந்தக்காட் சியின் புகைப்படத்தை ஆவலோடு அப்பாவுக்கு காட்டிக் கொண்டிருந்த அந்த பொழுது என் நினைவில் நேற்றுப்போல் இருக்கிறது.
"கடைசியிலை ஆலாத்தி எடுத்தது தான் மிச்சம் போலை இருக்கு" என்று ஒரே ஒரு வசனம்தான். அந்தத் தவணை யில் கெமிஸ்ரிக்கு இருபத்தெட்டு மாக்ஸ் வாகியதற்கான கண்டிப்பு, அவ்வளவுதான்.
யாழ்ப்பாணத்தின் அன்றைய ஒரே தெரிவுகளாக எங்களுக் குத் தெரிந்த டாக்குத்தர் எஞ்சினியர் என்ற இரட்டை களில் எஞ்சினியராக என்னை அப்பா காண விரும்பியதுண் மைதான். ஆயினும் நான் எனக்கு விருப்பமான கலைத்து றையின்வழி ஒலிபரப்பு கலையில் ஈடுபட விளைந்த போதும் அப்பாவின் அங்கீகாரத்தை பெறுவதில் சிரமம் இருந்ததில்லை.
அப்பு பரியாரியார் நாகமுத்துவின் அடிச்சுவட்டின் தேடுதலில் தங்கைச்சியை ஆயுள்வேதவைத்திய துறையில் ஈடுபடுத்த நான் விரும்பிய போதும் அதேவிதமான சம்ம தம்தான்.
23

Page 15
ஆஞலும் ஒன்று. ‘உழைப்புக்காய் படிப்பை விட்டு விடாதே" என அம்மாவும் அப்பாவும் மேற்கோள் குறள் களுடன் எழுதுகின்ற ஒவ்வொரு கடிதங்களினலும் நான் வழிப்படுத்தப்பட்டேன்.
"மகன் தந்தைக்காற்றும் உதவி" அப்பாவின் எழுத்திலும் 'ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் அம்மாவின் எழுத்திலும் தவருது எனச்சேரும்.
நான் கொழும்புக்குப் போய் சிலநாட் கழிந்தபின், சின்னக்கிளியண்ணையின் கலியாணத்துக்காக கொழும்புக்கு வந்த அப்பா அந்த மட்டக்களப்புப் பாய்க்குள் மடித்துச் சுற்றி சுமந்து வந்த என்னுடைய புத்தகங்கள், குறிப்புகளை கண்டபோது உண்மையிலே நான் அந்தரப்பட்டேன். அந்த அந்தரமும் கொழும்பில் எனக்குக் கிடைத்த அறிஞர்களின் நட்பும் தந்த ஊக்கலிலேதான் பல்கலைக்கழக பாக்கியமும் பெற்றேன்.
என்னுடைய கலையரங்கங்களைப் போலவே கல்வி அரங் கேற்றமான என் பட்டமளிப்பு விழாவையும் அப்பா தவற விட்டதில்லை. "பெஸ்ற் கிளாஸில்" என் மகன், என்ற பெரு மிதத்துடன் அப்பாவும் நானும் அம்மா, மனே அக்கா, சிங்கண்ணை, காந்தா, சுசி. கண்ணன், பாலச்சந்திரன் என எல்லோருமா, என் மதிப்புக்குரிய பேராசான்களுடன் மகிழ்ச்சியின் உச்சியில் களித்திட்ட அந்த நாட்கள். எல்லோ ரு மா முன்னேஸ்வரம் சென்ற அனுபவம்.
வழியிலே போக்குவரத்து பிரச்சனையிடை ஒருமாட்டு வண்டியில் பயணம் தொடர்ந்ததும், அந்த மாட்டு வண்டிக் காரணுடனுனி இடைவினையில் அப்பாவின் சிங்கள மொழிப்
24

புலமையை நாங்கள் கண்டு வியந்ததுமாய் எத்தனை நய மான நினைவுகள் -
தமிழோடு, ஆங்கிலம், சிங்க்ள்ரம் ஆகிய மொழிகளிலும் அப்பா கொண்ட ஆற்றலின் அடிப்படைக் களம் மலையகம் அப்பாவின் ஆளுமை விருத்தியின் தளிமாக அமைந்தது கூட அப்பாவின் இந்த மலையகத்து அநுபவங்கள்தான் என் பதில் தவறில்லை என்று நினைக்கின்றேன்.
மல்லாகம் ஆங்கில பாடசாலைக் கல்வியுடன் தொழில் தேடி மலையகம் புறப்பட்ட அப்பாவின் உலகம் அங்கே விரிந்தது. குடும்பத்துச் சுமை இறக்கப் புறப்பட்ட இளைஞன், சமூகத்தின் சுமைகளையும் இறக்கும் ஆசையும் ஆற்றலும் கொண்டவணுக உருவாக்கப்பட்ட காலம் அது.
"மனச்சாட்சிக்குப் பிழையில்லாமல் உழைக்கும் அப்பா வின் போக்கும், ஆங்கில அறிவும் வெள்ளைக்காரத்துரை மாருக்குப் பிடித்துக்கொண்டபோது சொல்வாக்கும், செல் வாக்கும் கொண்ட ஒரு ஆசிரியராக அப்பாவால் அங்கே பரிணமிக்க முடிந்தது.
தன்வழியில் எங்கள் கிராமத்திலும், அயற்கிராமங் களிலுமிருந்து எஸ். எஸ். ஸி. சித்திபெற்ற ஏனைய இளைஞ ருக்கும் ஆசிரியத் தொழில் கிடைக்க அப்பா காரணஞகி நின்ற கதையை அழுதழுது கந்தையா அத்தான் சொல்லு வார். அப்பா பற்றிய தன் உள்ளக்கிடக்கையை என் அப்பா வின் கதைக்காக மகன் கேதீசன் மூலம் நேற்றுத்தான் அனுப்பிவைத்திருந்தார். அதிலே இடம் பெற்ற பின் வரும் பகுதி அப்பாவின் இந்தக் காலத்தைப் படம்:இத்துக் காட்டும்.
25

Page 16
"இரத்தினபுரி மாவட்டத்தில் பெல்மதுளையில் தென வத்தைத் தோட்டத்தில் முதன் முதல் ஆசிரிய நிய மனம் கிடைத்தது. அவ்வாசிரியத் தொழிலினல் தோட்டத்துரைமாரினதும், பிள்ளைகளின் பெற்றேரின தும் பகுதி வித்தியாதரிசியினதும் நன்மதிப்பைப் பெற் முர். அவருடைய ஆங்கில மொழியின் திறமையால் பல தோட்டங்களில் உள்ள ஆங்கிலத்துரைமாருடன் பேசும் தகுதி உடையவராக இருந்தார். இதன் கார மாக தன் கிராமத்திலும் உள்ள எஸ். எஸ். ஸி. சித்தி யடைந்த மாணவர்களை வரவழைத்து அவர்களைத் தன் இல்லத்தில் வைத்து ஆதரித்து ஒவ்வொரு தோட்டத்தி லும் வெற்றிடம் வரும்போது அவர்களுக்கு ஆசிரிய நியமனம் செய்து கொடுத்தார்.
அவ்வாறு நியமனம் பெற்ற ஆசிரியர்களுடன் தானும் சேர்ந்து படித்து ஆசிரியதராதரப் பத்திரப் பரீட்சையில் சித்தியடைந்தார். பின் இந்துபோட் மனேச்சர் இராச ரத்தினத்துடன் தொடர்புகொண்டுதான் யாழ்ப்பாணத் தில் அரசாங்க பாடசாலை ஆசிரியரானுர், தான் எப்படி அரசாங்க பாடசாலையில் நியமனம் பெற்ருரோ அதே போல் தன்னுடன் சித்தியடைந்த மற்ற ஆசிரியர்களை யும் அழைத்து அரசாங்கப் பாடசாலையில் ஆசிரிய நிய மனம் பெற பல உதவிகள் புரிந்து ஆசிரியர்களாக வரச் செய்தார். இவர் சொந்த ஊருக்கு ஆசிரியராக வந்தபின் கிராம மக்களுக்காக பல தொண்டுகளைச் செய்தார்.
என அவரின் மனப்பதிவுகள் நீளும்.
கந்தையா அத்தானுக்கு ஆசிரிய நியமனம் கிடைத் தமை பற்றிய அப்பாவின் உள்ளக்கிடக்கை என்ன?
26

25-8-42-ல் தெனவத்தையிலிருந்து அம்மாவுக்கு எழுதிய அந்த கடித வரிகள்,
g
“...மேலும் வைரவ சுவாமியின் திருவருள் திருவருள் தான். மருமகன் கந்தையர் உவ்விடமிருந்து வந்தது போன மாசம் 24-ம் திகதி. இந்த 24ம் திகதி பள்ளிக் கூடம் ஒழுங்கு செய்துபோட்ட்ேன். இன்ஸ்பெக்ரரே அவ் விடம் சென்று ஒழுங்கு செய்தார்.’ என அனைத்தையும் தண்ணீர்த்தாழ்வு ஞானவைரவரின் அருளாகவே காண்பார் அப்பா.
தண்ணீர்த் தாழ்வு வைரவசுவாமியிடத்து அப்பா கொண்ட பக்தி ஆழமானது, எங்கள் குல தெய்வமென்று அதன் வளர்ச்சியிலே தன்னையும் பிணைத்துக்கொண்டார். தண்ணீர்த்தாழ்வு வைரவர் கோயில் திருவிழாக் காலத்து அப்பாவிடம் காணப்படுகின்ற உற்சாகமே தனியானது. சிவபுராணமும், பஜனைப் பாடலும், பிரசங்க ஒழுங்குபடுத் தல்களும், வீரபத்திர வசந்தன் நாடக காட்சிகளுமாய் நடையோடும் அற்புதமான காலங்கள் அவை.
நாவுக்கரசரை நினைவுபடுத்தும் அப்பாவின் பக்திநெறி. ஐஐயாவுக்கு வருத்தம் கடுமை என்ற அந்தவேளை கட்டுவன் சந்தியிலிருந்து மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலுக்கு நாங்க ளெல்லாம் அழுதபடி பின்தொடர பிரதிட்டை செய்த அப்பாவின் ஆத்ம வலிமை சாதாரணமானதல்ல.
அன்று மதுரை மீனுட்சியின் தரிசனத்தில், குருக்களின் அபிராமி அந்தாதிபாடல் அடிகளிடை அம்மனில் அப்பா வைக் கண்டு என்னை அறியாமலேயே நான் அழுத நிகழ் வுக்கு தூரம் கடந்து வந்த அப்பாவின் ஆத்ம அலைகள்தான்
TpT6T DIT
27

Page 17
இதனை நான் எழுதிக்கொண்டிருக்கையில் அப்பாவின் நினைவாய் எரிந்துகொண்டிருக்கும் அந்தத் தீபத்தின் ஒரத்து நின்று "அன்பினுல் அடியேன் ஆவியோடாக்கை" என்று மெல்லிய குரலில் கசிந்துருகி அம்மாபாடும் திருவாசகம் என் நெஞ்சையும் பிழியும்,
அம்மாவின் கலைஞானம், அம்மாவின் அப்பா பரியாரி யார் நாகமுத்து அவர்களின் வழிவந்தது. சோதிடம், வைத்தி யம், இலக்கியம் எனப் பல்கலை ஞானங்களைக்கொண்ட நாகமுத்துவின் பேரன் என்ற உரிமைக்குமேல் அவர்முகம் நேரில் பார்த்ததில்லை. ஆனலும் அப்புவின் அச்சிலேயே தானிருப்பதாகக் கண்டு "அப்பு" என்றே நான் அழைக்கப் பட்டேன். சண்முகலிங்கம், சண்முகனகி, நவீனமயமாக்க மாய் சண் ஆகிய காலத்தும் அப்பாவின் அழைப்பில் நான் அப்புவாகவே இறுதிவரை இருந்தேன்.
அப்புவின் மூன்ருவது மகளான அம்மாவை அப்பா கைப்பிடித்த கதைக்குள்ளும் காவிய நிகழ்வுகள் கலந்திருக் கும். அம்மாவின் "தென்னசிய சந்திரவிம்ப முகமலர் அழகும், அறிவும் அப்பாவைக் கவர்ந்ததில் வியப்பில்லைத் தான். அப்பாவின் இந்த விருப்பத்திற்கு அண்ணன் பொன்னம்பலத்திடமிருந்து வந்த எதிர்ப்பின் அடிப்படை களை அப்பா ஏற்கும் நிலையில் இல்லை. ' எங்கட குடும்பத் திலை ஒரு பெட்டையை எண்டாலும் படிப்பிக்கவேணும் " ஐஐயாவின் முயற்சியில் கல்லூரியில் படித்துக்கொண் டிருந்த அம்மாவின் படிப்புக் குழம்பிவிடும், மற்றையது. ஒன்றுக்குள் ஒன்ருன திருமணம் என்பதனல் விளையக்கூடிய சராசரி சச்சரவுகள் பற்றிய அச்சம். ஆமாம் அப்பாவின் அண்ணன் மனைவியான அம்மம்மா (பெரியம்மாவை இப்
2&

படித்தான் அழைப்போம்) விசாலாட்சியின் தங்கைதான் அம்மா நகுலேஸ்வரி.
அம்மா மீது கொண்ட ஜப்பாவின் காதல் உறுதி, பழநியிலிருந்து உரக்கக் கேட்ட்து.
* அண்ணை, திருமணம் எனழுல்’ நகுலையுடன்தான்; இல்லையென்ருல் எனக்குத் திருமணமே வேண்டாம். என்னை என்பாட்டில் விட்டுவிடுங்கள் - பழநியிலிருந்து தம்பி நாகலிங்கம்
இந்தத்தந்தி ஐஐயா பொன்னம்பலத்தை உலுக்கிவிட் டிருக்க வேண்டும்.
பிறகென்ன, அப்பாவின் வெற்றி நாதஸ்வரம்தான்.
அம்மா அப்பாவின் குடும்ப வாழ்வு தெனவத்தை தோட்டத்திலேயே தொடங்கியது.
வெள்ளைக்காரத்துரை குடும்பத்திலிருந்து, தேயிலைத் தோட்டத்து மலையகச் சகோதரர்கள், சிங்களச் சகோதரர் கள். யாழ்ப்பாணத்து உறவுகள், நண்பர்கள் என உலகளா விய ஒரு பெரும் சடும்பக்களமாக தெனவத்தை தோட் டத்து பங்களாவில் அப்பாவின் குடும்பராஜ்ஜியம் சிறந்தது. உலகயுத்த வேளையிலே, பெண்டுகளை ஊருக்கு அனுப்பி, ஆம்பிளேயன் தனிக்குடித்தனம் கண்ட வேர்ை யிலும் இணைபிரியாத இவர்களின் குடும்ப வாழ்வு.
பின்னலே சிலகாலம் அம்மா ஊரிலும் அப்பா மல்ை யகத்திலும் இருக்க நேரிட்டபோது அம்மாவுக்கு அப்பா எழுதிய அந்தக் கடிதங்களில் காவிய ராமனைக் கண்டேஞ ! தன்னை நாயகனுகவே காணும் அந்தக் காவியத்தன்மையும், காதலின் ஆழமும் அவற்றிலே பளிச்சிடும்.
9.

Page 18
* எல்லாம் வல்ல வைரவசுவாமியின் திருவருளால் வாழும் அருமை ஆசைக்கண்ணே.? என்று ஆரம்பித்து * உங்கள் அன்பான ஆசை நாயகன்" என நிறைவு பெறும் இந்தக் கடிதப் பிரதிகளை அப்பாவின் அந்தரங்கம் என இது நாள்வரை நான் படித்ததில்லை. இப்பொழுதும் கூட தயக் கத்துடன்தான் ஒன்றிரண்டைப் படிக்கும் முயற்சியிலே அங்கே அந்தரங்கமாக நான் கண்டதெல்லாம் அப்பாவின் புனிதமான அன்பின் ஆழத்தைத்தான்.
அப்பாவின் குடும்ப வாழ்வில் அம்மாவுடன் எழுந் திருக்கக்கூடிய இயல்பான நேச முரண்பாடுகளில் அம்மாவின் விட்டுக்கொடுத்தல் அதிகமாக இருந்திருக்கலாம். ஆன லும் அப்பாவுக்கும் எனக்கும் இடையிலான முரண்பாடு களில் எனது பக்கத்துக்கு அப்பா விட்டுத்தந்த நிகழ்வு களே அதிகம். அப்பா அளவு பெருந்தன்மை எனக்கு இருந்ததில்லை அப்பாவிடமிருந்து படிக்க நிறைய இருந்
» lت
அப்பாவின் தோளிலிருந்து உலகைப் பார்க்கத் தொடங்கிய எனது பயணத்தில், கோயிலும் குளமும், கொண்டாட்டங்களுமாய் எத்தனை தரிசனங்கள். தண் ணிர்த்தாழ்வு வைரவர் ஆலய முதற் திருவிழாத் தெற்பை போடலில் இருந்து தென்னிலங்கைக் கதிர்காமம் வரை குஞ்சுவயதிலேயே என் சமூகமயமாக்கற் பரப்பு விரிந்திருந் தது. கருத்தரங்கங்கள், கலையரங்கங்கள், கண்காட்சிகள் என எதனையும் தவறவிட்டதில்லை. ‘நாலு இடமும் அடி படவேணும், நாலு பேரோடை பழகவேணும், அனுபவம் தான் பெரிய படிப்பு " என்று அடிக்கடி சொல்லுகின்ற அட்பாவின் அனுபவப்படிப்பு எங்களுக்கும் பாடமாகியது.
30,

1936ல் இரத்தினபுரி தெனவாக்க, பத்தகட தமிழ்க்கலவன் பாடசாலைத் தலைமைப் பொறுப்பில் தொடங்கிய ஆசிரியப் பணி, இந்துபோர்டில் சேர்ந்தபின், முள்ளியவளை தனி. யூற்று இந்து போர்ட் பாடசாஃ சுழிபுரம் ஆறுமுகம் வித்தியாசாலை, காரைநகர் மெய்கண்டான் turtl-&frta), நெடுந்தீவு இராமநாத வித்தியாசாலை, வசாவிளான் பூரீ வேலுப்பிள்ளை வித்தியாசாலை, யாழ்ப்பாணம் சேணிய தெரு ஆங்கிலப் பாடசாலை, ஆனக்கோட்டை xபாலசுப்பிரமணிய வித்தியாசாலை, நயினுதீவு பூரீ கணேச வித்தியாசாலை, வட்டுக் கோட்டை திருநாவுக்கரசு வித்தியாசாலை, மன்னர் திருக்கே தீஸ்வர வித்தியாசாலை, மீசாலை விக்னேஸ்வர வித்தியாசாலை, கொழும்புத்துறை இந்து தமிழ்க் கலவன் பாடசாலை என நீண்ட பயணங்களின் பின் வர்த்தலைவிளான் அமரிக்கன்மிஷன் பாடசாலையில் நிறைவுகண்டது பத்துப் பன்னிரண்டு பள் ளிக்கூடங்கள் என் கையில் பத்துப்பன்னிரண்டு ஊர்களின் சீவியம். பல்லாயிரம் மாணவ அறிமுகம். ஆசிரிய, பெற் ருேர் நட்புகள். நேரந்தவருது, வீவு எடுக்காது, தன்பாடங் களைத் தயாரித்துக் கற்பித்துவந்த அப்பாவின் அடிச்சுவடு எனது கற்பித்தலிலும் தோன்ருத்துணையாவது. அந்தக் காலத்திலிருந்தே அனைத்துக் குழந்தைகளையும் ஒரேவண் ணம் தழுவிநின்ற அப்பாவின் உளச்சார்பும் நெஞ்சில் நிலைத்து நிற்கும். சகல சமூக அடுக்கமைவுகளையும் ஊடறுத் துப் பழகிய அப்பாவின் மனித நேயத்தின் வழிதான் மயி லிட்டி உடையாரிலிருந்து சாத்தனவத்தை பட்டாணிரத் தினம்வரை நேசிக்கப்படுகின்ற ஒருவராக அப்பாவால் வாழமுடிந்தது. யாழ்ப்பாணத்து கிராமச் சமூக அடுக் கமைவு பற்றிய என் அண்மைக்கால ஆய்வினை புறவய மாக நிறைவு செய்தலில் அப்பாவிடம் நான் கற்ற இந்த உளப்பாங்கும் அடிப்படை.
3.

Page 19
என் அனுபவப் பயணத்தில் என்னேடு நெருங்கிய உறவுகள் எல்லாம் தங்கள் அப்பாவாகவே அப்பாவைக் கண்ட மந்திரக் கவர்ச்சி அப்பாவின் அன்பில், டொக்டர் களாக வந்த கிருஷ்ணசாமி, பூரீ விக்னேஸ்வரா எல்லாம் பிள்ளைகளாகிவிட்ட அற்புதம்.
இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர்தான் மட்டக் களப்பில் குகனும் முதலியும் * அப்பா எப்படியடா " என்று கேட்டதும், நல்லாயிருக்கிருர் " என்று நான் சொன்ன தும். சவுதியிலிருந்து எனக்காக முதலி கொண்டுவந்திருந்த அந்த நவீன அலாரமணிக்கூட்டை அன்று என்னிடம் தந்த போது அப்பாவிடம் அதைக்காட்டி * இனி நீங்கள் காலை யில் எழுப்பிவிடாவிட்டாலும் என்னிடம் அலார மணிக்கூடு இருக்குதணை " என்று செல்லச்சண்டை பிடிக்க நினைத் தேனு ? பரீட்சைகளென்ன, பல்கலைக் கழகப் படிப்பித்தற் தயாரிப்புகளென்ன அனைத்திலும் நேரம் குறித்து எழுப்பி விட்டு, கூடவே தம்பிக்குக் கோப்பி " என அம்மாவையும் விழிக்கச்செய்யும் அப்பாவின் திருப்பள்ளி எழுச்சி.
இன்று அப்பாவின் இந்தக்கதை எழுத என எழுப்ப அந்த யந்திர மணிக்கூடுதான்.
உசங்கும் சிலமணித் துளிகள் போக ஓயாது யந்திர மாக.ே உழைத்த அப்பாவின் பொழுதுகளிடை, ஆயிர மாயிரமாய் என்னுள் விளைந்த கேள்விகளுக்கும் பதில்கள் காட்ட அப்பா தவறியதில்லை.
அந்தக் குஞ்சுப்பருவத்திலே, அப்பா காட்டித்தந்த 'Twinkle Twinkle little star” aguyi, yahusalotuonrapa

யும் தானே பின்னலே என் வானத்து வண்ணத்தாரகை” யில் நான் உருவகப்படுத்தியது. *
۔ ۔ ۸*'۔۔۔ :
கவிதை இலக்கணம் அறியீாம்லேயே பாடத்தொடங் கியவன் நான். குஞ்சு வயதில், விளையரட்டாக அப்பா சொல்லித்தந்த " தகதக தெய்ய தகதக' என்ற காவடி யாட்டத் தாளக் கட்டுகளிலேயே, என்னுடைய இசைப் பாடல்களின் சந்த மூலங்களைக் காண்கின்றேன். என் அப்பா வுக்குள் ஒரு கிராமியக் கலைஞன் ஒளிந்திருந்ததை உலகம் அறிந்ததில்லை. எங்கள் கிராமத்து வீரபத்திரர் வசந்தன் ஆட்டக் களரிகளில் மட்டும் அவ்வப்போது குறிப்பாகத் தண்ணிர்த்தாழ்வு வைரவர் கோயில் திருவிழாக்காலத்து அப்பாவும் கலந்துகொள்வதுண்டு. ' எங்கடை வசந்தன் " என்று பெருமைப்படும் அப்பா, பின்னர் அண்ணன் பரராஜ சிங்கமும், நானும் ஏனைய கலைஞர்களும் ஒன்றிணைந்து வீரபத்திர வசந்தனை நவீனப்படுத்தி பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக ஒலிக்கச் செய்தபோது வானெலியைப் பெரிய சத்தத்தில் கூட்டிவிட்டு ஆரவாரப்பட்டதை காத்தா நினைவுபடுத்துவாள்.
அப்பாவுக்கு பைலா கூட அடிக்கத் தெரிந்திருக் கிறது. மலையகத்து வாழ்வினிடை சிங்கள மக்களிடம் வாழ்ந்த காலத்துப் பயின்றிருக்க வேண்டும். இன்னும் என் கண்முன்னல் நிழலாடும் எங்கள் நகுலகிரிக்கு மின்சார லஷ்மி வந்த அந்த நாள். அப்பாவின் ஆனந்தக் கூத்தாக பைலா. குட்டியாய் பின்னுலே நானும் கூத்தடித்ததெல் லாம் திரும்பி என்றுமே வாரா.
கோப்புகளைப் பேணி முக்கிய ஆவணங்களை, و?و மன்றி கடிதங்களையும் பாதுகாக்கும் ஒழுங்கான க்கத்
7 334

Page 20
தில் அப்பா வெள்ளைக்காரன் என்றே சொல்லவேண்டும், வெள்ளைக்காரனேடு இருந்த வேளையில்தான் இதனைத் தொடங்கியதாகவும் அப்பா சொல்லுவார். தவருது தினக் குறிப்பு எழுதுதல், செலவுகளுக்கு வரையறையான கணக்கு வைத்தல் என என்னல் பின்பற்றமுடியாமற் போய்விட்ட அப்பாவின் நல்ல பழக்கங்கள் பல. ஆனலும், ஆழ நீள அப்பா எழுதுகின்ற விவரண பாணியை அப்பாவின் அருமை யான மொழி நடையை என்ன அறியாமலேயே நான் சிக்கெனப் பிடித்துக்கொண்டுவிட்டேன்.
அப்பாவிடம் நான் பெற்ற பெருமுதுசம் நூலகம். என்னுடைய இந்த முதுசத்தில், முக்கியமான ஒரு தொகு தியை அண்மைய அழிப்புகளிடை இழந்த சோகத்தை இறுதிவரை அப்பாவுக்குத் தெரியாமலேயே மறைக்க வேண்டியிருந்தது. எங்கள் வீட்டின் எனது படிப்பறை, சாமியறை, என எல்லா இடங்களிலும் புத்தக அலுமாரி களின் தரிசனம்தான். எத்தனை எத்தனை புத்தகச் செல்வங் கள். இலக்கியம், இலக்கணம், வரலாறு, உளவியல், கலை, சம யம், ஆக்க இலக்கியங்கள் என பலதுறை நூல்கள். பல்கலைக் கழக நூலகங்களிலேயே கிடைக்காத சில பழைய சஞ்சிகை கள் - பண்டிதர் பரீட்சைக்குப் படித்த முத்துலிங்கம் அண் யிைலிருந்து பல்கலைக்கழகப் படிப்புச் சுசீலாவரை அப்பா வின் நூற்பயன் பரந்தது. அப்பா தந்த இந்த முதுசத்தின் வழி நான் தேடிய தேட்டமும் நூல்கள்தான்.
எங்கள் நூலகங்களில் எனது பெயரிலும் ஒரு நூலைச் சேர்க்கும் பெருமையில் மிதந்த என்னை இரண்டாவது நூலாக ' என் கதையை எழுதடா " என்று சடுதியில் அப்பா விட்டுப் போனதென்ன ? நேற்றுக்கூட அப்பாவின்
品á

அழிக்கப்பட்ட நூலக குவியல்களைக் கிளறிக்கொண்டிருந் தேன். பாதி அழிந்த நிலையில் நாற்பதுகளில் கைப்பதிப் பாக வெளியான புதிய ஒப்பாரி என்றெரு பிரசுரம் கையிற் தட்டுப்படுகிறது. முற்பக்கத்தைத் திருப்பினேன்.
" அப்பாவுக்குச் சொல்லும் என்ற தலைப்பில், என் அப்பாவுக்கென்றே எழுதப்பட்டது'போன்ஜ, எனக்காகவே அழுகின்றதான அடிகள்.
சந்தனப் பொட்டழகா
சந்தனப் பொட்டழகா என்னைப் பெத்த அப்பா சாயிந்த
நடை ஒய்யாரா நீங்கள் சாயின்னு படுக்கணுமா
உங்கள் உயிர் சட்டென்று போகணுமா.
அன்று காலையிலும் குளித்து தினம்போல அம்மா சந்தனமும், குங்குமமும் இட்டுவிட, கதிரையிலே சாய்ந் திருந்து இடியப்பம் சாப்பிட்டுக்கொண்டிருந்த எங்கள் சந் தனப் பொட்டழகா ... என்னைப் பெத்த அப்பா .
நீங்கள் சாயின்னு படுக்கணுமா உங்கள் உயிர் சட்டென்று போகணுமா.
அன்புக்குரிய உறவுகளின் பிரிதலும், அதன் வழியான வருத்தமும் விதியாய்ப்போன என் காலங்களிடை மூன்றே வாரத்தில் வந்துவிடுவதாகச் சொல்லிப் புறப்பட்ட என் பயணத்தை மேலும் சிலகாலம் தாமதிக்க நேரிட்ட கொடு மையிடை அப்பாவுடன் வாழும் நாட்களையும் இழந்து போனேன்.
35

Page 21
தாமதித்தலில் அப்பாவை வருத்திய என் கதைத் தொடக்கம் இப்பொழுதுதான் நிகழ்ந்ததல்ல. என் அப்பா வினதும், அம்மாவினதும் கனவுகளில் ஒரு பெரும் இலட் சியமாய் இருந்த நான் இங்கு வருவதற்கு ஒரு தசாப்தத் துக்குமேல் தாமதித்திருக்கின்றேன். திருமணமாகிப் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பிள்ளையில்லாத மனக்குறையுடன் அப்பாவும் அம்மாவும் செய்த யாத்திரைகள் . மலைக் கோட்டைப் பிள்ளையார், மதுரை மீனுட்சி, பழநிமுருகன், கதிர்காமக் கந்தன் என நீண்டநேர்த்திக்கடன்களிடை, ‘மல டன் "மலடி” என்ற ஊர்வதை நீங்க, தவப்புதல்வன் ’ என்று அதே ஊர்வாழ்த்த நான் வந்து சேர்ந்தேன்.
திருவோணத்தில் பிறந்திருக்கிருன் ஒரு கோணம் ஆளுவான் மாஸ்டர் " என்று வைத்திலிங்கமாஸ்டர் சாஸ் திரம் பார்த்துச் சொல்லுவாராம். ஒரு கோணத்தையென்ன, இந்த உலகினையே ஆள வல்ல ஆளுமை விதைகளை என்னுள் விதைத்து நின்ற என் அப்பாவின் மறைவுடன் என் சாம் ராஜ்ஜியத்தில் சக்கரவர்த்தியின் ஆசனம் வெறுமையானது,
தோளிலும் தலையிலும் சதா நெஞ்சிலும் எனச் சுமந்த என் அப்பாவின் சிதைக்குத் தீமூட்டிய நான் இன் னும் சாகவில்லை. வாழ்க்கை இவ்வளவு கொடியதென்று நான் நினைத்ததில்லை.
- 36

தோளிலே தூக்கிவைத்து தூரங்கள் காட்டிவிட்டு நீளவே போன தென்னப்பா.இங்கு நீங்கள் இல்லா வாழ்வு என்னப்பா
அப்பா அப்பா எனக் கேட்கவில்ல்ைய்ா அம்மாவைத் தங்கைச்சியைத் தெரியவில்லையா எப்பநாம் நாலுபேரும் சந்திக்கிறம் - 2 L-6ôr அப்பு என்று சொல்லிவிட வந்திடுங்கள்.
தனிமையில் நானழுது கண்டதென்ன - உங்களை தனிமையில் போகவிட்ட கொடுமையென்ன இனியிந்த வாழ்க்கையிலே அர்த்தமென்ன -
எல்லாம் கனவென வெளித்த பின்னல் கவிதையென்ன
சாந்தி பெறுக.. gs UIT சாந்தி தருக
- சண்முகபாரதி
ஒருவனே போற்றி ஒப்பில் அப்பனே போற்றி வாஞேர் குருவனே போற்றி எங்கள் கோமளக் கொழுந்து போற்றி வருகவென் றென்னை நின்பால் வாங்கிட வேண்டும் போற்றி தருகநின் பாதம் போற்றி தமியனேன் தனிமை தீர்த்தே.
- மணிவாசகர்,
37

Page 22
நிறைவுரை
கலாநிதி. சி. மெளனகுரு நுண்கலைத்துறை விரிவுரையாளர்,
ԱյTէb. பல்கலைக்கழகம்
*சண்ணின் ‘என் அப்பாவின் கதை' முடிந்துவிட்டதா? இல்லை. சண் குடும்பத்தின் நீண்டு செல்லும் பெரும் கதை யின் ஒரு தலைமுறையின் படப்பிடிப்பு இது. அது தொட ரும். அப்பனே மகனகி வளர்ந்து உயிர் ஒம்புதலே இயற்கை நியதி.
குலப்பெருமை செல்வாக்கு, குணதிசயங்கள் கூறுகின்ற யாழ்ப்பாணக் கல்வெட்டு மரபு சிறிது மாறிவருகிறது. இறந்தோரின் ஞாபகார்த்தமாக அண்மைக்காலமாக சிறு வர் பாடல்கள், கவிதைகள், நாடகங்கள் வெளியிடப்படு கின்றன. அம்மரபு மாற்றத்தின் இன்னுமொரு பரிணுமம் சண்ணின் என் அப்பாவின் கதை. இறந்தவரே இங்கு இலக்கியப் பொருளாகி விடுகிருர். ஒவ்வொரு தனயனுக்கும் அவனவன் தந்தை இலக்கியநாயகனே. தனயர்க்கும் தந் தையர்க்கும் பெரும்பாலும் இடைவெளியினை ஏற்படுத்தும்
38

இறுகிப்போன, மூடுண்ட நமது சமூக அமைப்பில் ஒவ் வொருத்தரும் அப்பாவாகி அந்தநிலையை முழுமையாக வாழ்ந்து கடக்கும்போது தான் நழ் அப்பாவை முழுமை யாக உணரத்தலைப்படுகிருேம். அத்தலைவன்தாளை மனதார வணங்குகிருேம். இந்நூலை படித்த ஒவ்வொருவரும் சண் னின் அப்பாவின் பின்னணியில் தம் அப்ரமாரின் அசை வுகளையும் இனங்காண்ர்ே.
சண் நமது நீண்டகால நண்பர்; ஆனல் ஆளுமையும் அறிவும் மிகுந்த அவரது தந்தையார் மிகப்பிற்காலப் பகு தியிற் தான் நமக்கு அறிமுகமானர். அதுவும் சாய்வு நாற் காலிக்குள் தன்னை முடக்கிக் கொண்டு மேலே மோட்டைப் பார்த்தபடி சிந்தனைக்குள் ஆழ்ந்திருக்கும் ஒருவராக, ஒரு ஆளுமை அதற்குள் கிடக்கிறது என்பதை எனக்கு முன் னரேயே அறிவுறுத்தாமையையிட்டு எனக்குச் சண்ணின் மீது மகா கோபம். யாழ்ப்பாணக் கிராமியப் பண்பாட்டின் மிகச் சிறந்த பிரதிநிதியான அவரை அருகில் வைத்துக் கொண்டு நான் எங்கெல்லாமோ பேட்டிக்காக ஆட்க ளைத் தேடினேனே. சண் தனது தந்தையின் அந்தப் பக் கத்தை எனக்கு அறிமுகம் செய்யாததற்குக் காரணம் தன்னடக்கமா? அல்லது சண்ணின் இயல்பான கவலை uføST DIT ?
எப்படியும் ஆகுக'. என் அப்பாவின் கதை மூலம் தண்ணீர்த்தாழ்வு நாகலிங்கம் என்ற ஒரு நல்ல மனிதரைப் பூரணமாக - அவரின் முழுப் பரிமாணத்துடன் அறிகிருேம். மகன் தந்தைக்காற்றும் பெரும் உதவி இது.
என் அப்பாவின் கதை கண்ணுக்கு உள்ளுணர்வுகளை வெளியிட்டு மனஆறுதல் பெறக் கிடைத்த ஒரு வடிகால்.
39

Page 23
நமக்கோ அது ஒரு தலைமுறை மனிதனைப் பிரதிநிதித் துவப்படுத்தும் இலக்கியம். நான் அறிந்தவரை தன் அப்பா வின். இழப்பினல் தாக்குண்டு அவரை இலக்கியப் பொரு ளாக்கிக் கெளரவித்துத் தாமும் கெளரவம் பெற்ற முதல் ஈழத்துத் தமிழ் புனைகதை ஆசிரியர் எஸ். பொ. அவரது நூல் அப்பையா இப்போ சண். இவரது நூல் என் அப் பர்வின் கதை. இந்த இலக்கியப் பாரம்பரியம் தொடர வேண்டும். * a
இலக்கியகாரனை மகளுகப் பெற்ற அப்பாமார்க்கு வாய்க்கும் வாய்ப்பு இது
எல்லோர்க்கும் வாய்க்காது இது.
நாகலிங்கம் கொடுத்து வைத்தவர்.
புனிதவளன் கத்தோலிக்க அச்சகம், யாழ்ப்பாணம்
Ao

** இந்தியாவின் கடைசியாண பாறையின்மீது அமர்ந்து குமரி அன்னையின் முன்னர் நான் ஒரு திட்டம் தீட்டினேன். நமது குரு (இராமகிருஷ்ணர்) 'வாடிய வயிறு சமயவாழ்விற்கு ஏற்றதன்று”என்று சொன்னுர் அன்றே. இவ்வேழை மக்கள் விலங்கு வாழ்க்கை வாழ்கின்றர்கள் என்ருல், அதற்கு அறியாமையே காரணம், பற்றில்லாத சந்நியாசிகள் மக்களுக்கு நலம் செய்யக் கருதுவோர் கிரNமந் தோறும் சென்று கல்வி பரப்பினுல் என்ன? அவர் களது நிலையை உயர்த்தப் பாடுபட்டால் நன்ருகாதா? இப் போதனையும் நற்செயலும் சண்டாளன்வரைக் கும் எட்டுதல் வேண்டும். இந் நாட்டு மக்களாகிய நாம் நமது தனித்தன்மையை இழந்துவிட்டோம். இதுவே இன்றைக்கு உள்ள அவல நிலைக்கு மூல காரணமாகும். நாம் நமது மக்களை அணுகி அவர் கள் இழந்ததை மீட்டுத்தர வேண்டும். பாமர மக் களின் நிலையை உயர்த்தவேண்டும்."
- சுவாமி விவேகானந்தர்

Page 24