கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வண்ணம் (நாகேஸ்வரி தில்லைமுகிலன் நினைவு மலர்)

Page 1
| Α.
 

N
A
". . . .

Page 2


Page 3


Page 4

வண்ணம்
யாழ் வடமராட்சி பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் பொலிகண்டியை திருமணத்தால் இணைப்பிடமாகவும் திருக்கோணமலையை வாழ்விடமாகவும் கொண்ட நற்பாதை நின்றொழுகிய பெண்ணார் elupg
திருமதி. நாகேஸ்வரி தில்லைமுகிலன் அவர்கள்
நினைவுக்குத் தந்தோம் வண்ணம்
-1-

Page 5

பாழ் வடமராட்சி பருத்தித்துறைகியப் விருப்பிடமாகக்பும் LLLLkTLMuCCCLC TTLLCCCCLTTTTT LTeMLLLTTeL LaLCCTTT திருக்கோணமலையை வாழ்விடமாககிலும் கோகான்ட் ஆற்பாதை நிகர்கிறாழுகிய தீபகர்கினாள் அமரக் திருமதி. தாககளில்வர் தில்லைமுகிலன் அவர்கள் நினைவுக்குத் தந்தோம்
அன்னச்

Page 6

ஆறுதலாய் இரு, அது போதும்.
s
慧
藻
*
பருத்தித்துறை
கோட்டுவாசல்
அர்டினிடர் கேட்டவரர் ரீ எனியாய்
கோடை முலையானி
கோணேசரிடமும் கேட்டேன் வரம் எண்றாய்
62UrotatDai
கந்தவனத்தான்
காரீயானி எண்றாய்
கூட்டிச் சென்றவர் யாரென்று எனக்குத் தெரியாது எங்கிருந்தாலும் அங்கு ரீ ஆறுதாைய் இரு அது போதும்.

Page 7


Page 8

இறந்த நாள் விெண்Uா
பெருவிய ஆண்டது மாமார்கழி ஈரேழுநாளில் திருவாட்டி தில்லைமுகிலன் நாகேஸ்வரி - அமரபட்ச திதிதனில் எல்லையற வான்விரிவில் இறையோர்
பதிதனற்கு சேருதலானார் நிறைவே.
மஞ்சள்
மஞ்சள் நிறமது மாது உனக்கு நெஞ்சை அள்ளும்
புதுக் கோலமிடும் மஞ்சளும் மாவாகிக் களியாய் உன்னுடல் மீதினில் உரிமைகொள்ளும் மஞ்சளும் ஆகினோம் மனமது வேகினோம் வாஞ்சைக் குரிய உங்கள் நெஞ்சிற் கினியார் இங்கு நொந்து மடிகின்றோம்.
球 。鱼事 GlöUlö
மாவிலை தோரணம்
பூரண கும்பம்
நோர்க்கும் நோன்பில்
காத்து நின்ற பக்தி மகளே
மாவிலை தோரணம்
பூரண கும்பம் யாவும் ஆகி
தேவியே உந்தன் பாசப் பூசைக்கு
நிரந்தரமானோம் நீ ஒரு காவிய நாயகி
காலத்தால் அழியா உந்தன் நினைவூல்ம் என்றும் நாம்.

Page 9
பட்டும் மாலையும்
பட்டும் மாலையும் - நீ தொட்டு அணியாத கடவுள் படங்கள் இல்லை எம்வீட்டில் வீடே கோயிலாய் விளங்கவைத்த எம் பட்டே மாலையே நீ பொட்டென்று போனதாலே பட்டமரமாய் போனோம் நாம் விட்டேகிப் போனாலும் நீ தினம் பட்டும் மாலையாகும் எம் உயிர் விட்ட்ேகிப் போகும் வரை பட்டும் நாமாவோம் மாலையும் நாமாவோம் கொட்டும் மேளமும் நாமாவோம் உன் நாமம் நிதமுதும் நாதஸ்வரமும் நாம்தானே.
திடுநீறு
திருநீறு நின் திருமுகத்தை ஒரு நூறு அழகூட்டும் பெருமாட்டி நீ நீறிட்டால் தன்பாட்டில் நுதல் துலங்கும் முக்கீற்று முகம் பார்த்து முன் நிற்போர் உங்கள் பக்கத்தில் வந்தணைவர் பக்தியில் முகிழ்வர் எக்காலம் அம்முகம் காண்போம் நீறாகிப் போனதம்மா எங்கள் நெஞ்சம் தினம் தோறும் உன் திருமுகம் தனிற்கு திருநீறாய் எமைத் தரிப்போம்.
-4-

logró
இதயமணி நீ அறுந்து போனதாலே கண்மணியை நாமிழந்தோம் அம்மா உதயமது இனிஎங்கே எங்களுக்கு சிதைவான எம் மனங்கள் மீளுமோ அம்மா சதை உயிர்க்கலவையல்ல நீர் எதையுமே பிறர்க்கியும் பிறவியம்மா வதைபட்ட போதும் உந்தன் உயிர்நாம் மணியாக மாறி உனை ஒலியாக்கும் கதைமாந்தரானோம் காண்.
്യത്
பண்ணும் இசையும் பிரியாப் பிணைந்தது போல் பண்பும் அன்பும் நெஞ்சிற் பிறப்பித்திருந்தாய் பாசக்கை கொண்டே தழுவி பார்வைப் பெருவிரிவில் நேசப் பிறப்பானாய் நெஞ்சப்பூசை செய்கின்றோம்.
தீபம்
நிலம் நீள் வானம் கடல் நிறைந்திருந்த இருளினை சீலம் தளைக்க சிறை மீட்க வலம் வந்த சூரியனாய் காலமாகும் வரை நீ கலந்திருந்த உற்றவனை கோல வடிவான நீ பெற்றவரை ஊனை உருக்கி உதிரம் ஈய்ந்து நாலும் நாமறிய நல்லறிவாகி கோயில் கொண்டிருந்த தெய்வமே வேலும் வில்லும் பட்ட நெஞ்சமாய் நாளும் பொழுதும் நாம் துடிக்க
سـ5-

Page 10
கொல்லும் கூற்றுவன் கூட்டிச் சென்றதுமெங்கே சொல் ஞாலம் முழுதும் தேடுகின்றோம்.
சென்றவழி தெரியா செயலிழந்த நிலையாய் சேய்களுடன் நானும் சேர்ந்தே பிறந்த உன்னவரும் சாய்ந்து வந்த பந்தமானோரும் சோர்ந்தே விழுந்தோம் சோகம் நீங்கா நிலையானோம் சீர்கொள் தீபப் பூசையை தினமது தவறா நீசெய்வாய் பார்த்திருந்து பரவசமாவோம் நாம் திரியின்றி நெய் இன்றி எரிகின்ற தீபமானோம் நிகரிலா உந்தனுக்கே.
பூவே நீ கொய்த பூ எண்ணப்பட முடியாது தாயே பூவுலகுக் கோயில் தெய்வங்கள் நீ பூ சூட்டியதை ஏன் மறந்தார், பூ வண்ணப் பெருநிதியே பூவால் பூசிக்கா நாள் ஏது நேசித்திருந்த எங்கள் நெஞ்சங்கள் இனி சுவாசிப்பதும் உன் நினைவே பாசத் திரள் நாம் தாயே வாசப் பூக்களானோம் உன் காலடிக்கு

lofjõgõgõ
மெளன மந்திரம் மொழியும் சுந்தர நிறை மதியே இறைபக்தி கொண்ட நிதியே அருமைப் பெரும் குருதியே நிரந்தரமாய் உடலால் அகன்றது உண்மையே அன்னவன் அனல் மூட்ட அகன்றெம்மைச் சென்றாயோ அனல் மூட்டிய அன்னவர் - தனியார் ஆனார் உன்னவர் உன் நெஞ்சில் உள்ளவர் எல்லோரும் சொல்லும் மந்திரம் நீயானாய் கல்லும் உந்தன் பிரிவில் கண்ணி வடிக்குதம்மா.
JT65
நூலிடைத் தேவியே நின்தன் நால் நிலை பூசையாவும் பாலதில் ஊறித் திளைக்கும் - அதில் பக்திப் பரவசம் புதுவித்தை அங்கு விதைக்கும் பார்கும் மனங்கள் பரவசமாகும் நீ சிதையாய்ப் போனாய் சிதைந்தோம் நாம் வதைபட்டாலும் உனக்கு தினமது வார்கும் பாலாய் ஆனோம்.
se LJlgð
வளமது மிகுந்து வாழ பிறருமே நலமேயாக
வரமதைக் கேட்ட நீயோ பழமுடன் பத்தி கற்பூரம் சாம்பிராணி
-7-

Page 11
வெற்றிலை பாக்குத் தேங்காய் பற்றுதலுடனே படைப்பாய் அற்புதத்தாயே நீ எங்கே பொற் பதம் வேண்டி அழுகின்றோம் இத்தனை பூசைப் பொருள்யாவும் எமையே ஆக்கித் தருகின்றோம்
Gissourgo
ஓயாது உந்தன் நா பாராயிரம் பண்ணும் தேவாரங்கள் எங்கள்
தேகத்தை சுட்டெரிக்கின்றது செவிப்பறை தன்னில் பறை ஒலி என பரப்புகிறது - உன் இன் குரல் எங்கள் இதயத்தைக் குடைகின்றது பண்ணோடு இசைபாடும் பாலமுதுக் குரலெங்கள் காதில் விண்ணதிர முழங்குகின்றது கண்ணெதிரே நீ இருந்து இசைத்தகானம்
விண்ணதிர வியாபித்தது முளங்குகின்றது விண்ணவர்கள் என்று சொன்னவர்கள் விளங்கினாரோ விதி என்று விதைந்துரைப் பாரோ வருந்தி அழுவோர் நிரந்தரமானோர் நாமே தான்
உன் நினைவில் என் நிலையானாலும் தேவாரம் உனக்கே யானோமே நாம்

தீர்த்தம்
நீராய்
நீருடன் பாலும் கலந்தே தீர்த்தமாய் காத்திரமாக உள்ளங் கைநிறைய வாயோடு கண்ணும் நனைய உடல் சிதறலில் சிலிர்க்க உந்தனுக்கே ஆத்மாத்த தோத்திர தீர்த்தமாய் ஆனோம் நாமே கார்த்திகைப் பூவே வண்ணச் சித்திரமே.
சந்தணம்
சந்தணம் சாற்றிய உன்முகம் தன்னில் சாந்தமும் அன்பும்
சேர்ந்தே கமழும் தெய்வப் பொலிவு இழையோடும் எத்தனை அர்த்தங்கள் சேர்ந்த முகத்தினில் சார்ந்த சந்தணம் சந்தோசம் கொள்ளும் பார்த்து மகிழ்ந்தவர் சேர்ந்தவர் சோர்ந்து விழுந்திட சோகத்தில் ஆழ்ந்திட சேர்ந்து வந்ததே சந்தணம் உன்னோடு வெந்திடும் எம் உள்ளம் சந்தணம் ஆகுது தாயே உனக்கே.

Page 12
G|HðCloð
எழில்நிறை உன் நுதல் தனில் ஏறி அமர்ந்திடக் குங்குமம் என்ன தவம் செய்தது சொல்லம்மா ஏழுதிசை அடர்இருள் அகலவரும் பகலவன் போல் உன்முகப் பரப்பினில் மெருகூட்டி திலங்கியது பொய்யில்லை 660dreott LibLDT குங்குமம் கொண்டுமே எங்கு நீ சென்றாயோ எங்களின் இரத்தமே உறைந்திங்கு குங்குமம் ஆகுதே குலவிளக்கே உந்தன் நிரந்தர குங்குமம் நாமுமே.
அறுடு, துளசி
அன்பும் காதலும் ஆதரவுப் பாசமும் என்பும் ஈயும் கொடையது கொண்டும் எந்தனுக்கின்றி எவர்க்கு மீயும் பாத்திரமாத்து தங்கமென்றுன்னை நித்தமும் வருவோர் சொன்னார் கண்ணே கண்ணே முதலாய் மேனிக்கு முன்னே இருக்கும் மூலிகை அறுகைத் துளசியை ஆண்டவர்க்கும் வேண்டி நிற்போர்க்கும் வேண்டிய பூசை செய்தாய் - நாம் அறுகாய்த் துளசியாய் ஆக்கினோம் இறுதிவரையும் இருந்தாய் இவ்வுலகில் இனி நாம் அவையானோம்
-10

15 sJafsT55
பாலும் பழமும் பஞ்சாமிர்தமும் நால்வகை அமுதும் படைத்தே நல்கி உருகியே வாழ்ந்த நீ தெய்வமானாய் உந்தனுக்கே எம்மனம் உள்ளன்பு நினைவுகள் பிரசாதமாகுதம்மா.
நேர்த்தி
உன் வயிற்று உயிர்ப்புகள் நாம் நால்வர் அருகினில் தந்தையொடு மூத்தான் அப்பன் உன் முத்து தூரத்தில் சுந்தரப் பெண் மக்கள் மூவர் நாம் நிரந்தர நித்திரையில் நீங்கள் அண்ணன் அழுதகுரல் தொலைபேசியில் மனம் அழியும் வெளிப்பாடானது நாங்கள் அழவில்லை அப்பாவும் தான்.
எங்கள் அழுகையை நீ அழுதல்லவா நிறுத்தி நிலையுயர வைத்தீர்கள் நாங்கள் அழுதால் நீங்களும் அழுவீர்கள் இனி ஒருபோதும் நீங்கள் அழக்கூடாது நாங்களும் அழமாட்டோம் புனிதப் பயணம் புறப்பட்டு விட்டீர்கள் நாங்கள் அழுதால் யார் இனி எமக்காக அழுவார் அம்மாதான் எங்கள் தந்தையும் உங்கள் பிள்ளைதான் நீங்கள் தந்த உறுதிமிக்க சக்தி எங்களை உரமாக்கும்
-11

Page 13
எங்கள் வாழ்வு மகிழ்வாகும் உங்கள் பாதத்தில் என்றும் நாங்கள் நேர்த்தி, பொங்கல், குளிர்த்தி, படையல், ஆராத்தி, அவல்கடலை, வடைமாலை, பாயாசம், இளநீர் அத்தனையும் நாங்களே அம்மா பெற்றவளே பெரும்பேறே தாயே.
பிள்ளைகள் வாகனம்
அம்மம்மா நீங்கள் தெய்வமாம் நாங்கள் உங்களை நெஞ்சில் இருத்தி வீதிவலம்வரும் வாகனங்கள் உங்களை எப்போதும் சுமந்து திரிவோம்.
பேரன் பேத்தி
பக்தி
பெரியதொரு இழப்பு
இரு தாயினரை நாம் உங்களை மாமியாக்கியதால் அடைந்தோம் நாமினி உங்கள் நினைவுப் பக்தியாக வாழ்வதே பெரிது
மருமக்கள்
-12

losh) களம்
திங்களாய்த் திலங்குகின்ற எங்கள் பொங்கு நெஞ்சத்தின் அங்கமே ஆருயிரே எங்கும் நிறைபொருளே தங்கு தடையின்றிப் பாயும் பெருநதியே தங்கமனதாளே தாயே பொங்கிச் சொரிகின்ற அன்பு ஊற்றே எங்கள் இதயமதில் நின்று நிலைத்துப் பொங்கிச் சரிபவளே எல்லார்க்குமாய் பொதுமைபாடும் நின்தன் கணவன் உந்தனுக்கு வடிக்கின்ற நினைவுமலரில் உன் நினைவில் நின்றார் அனைவரையும் ஒன்றாக்கி - துயரை மென்று விழுங்கி கன்றைப் பிரிந்த தாயாய் நின்று மங்களம் பாடுகின்றோம் வண்ணவளே என்னவளே எனக்கு எல்லாமாகி நின்றவளே எல்லோர்க்குமாய் உனக்கு நீ பெற்ற முத்துக்கள் நான்கும் - நாம் கோர்த்த மருமக்கள் பேரன் பேத்திகள் பாசநெஞ்சின் கீதமானாய்.
மங்களம் பாடுகின்றோம்.
-13

Page 14
சரஸ்வதி சரணம்
ஞான சரஸ்வதி ஞால பாமினி கோல வடிவினள் தூல மெய்ஞான ஆய கலையாழும் கால நிருத்திகை
தூய நிலையாகி ஆய கலையினை மேயும் மனதாக்கி பாயும் அறிவாரம் யாவும் எனதாக்கி தாயும் ஆனவளே
தாழை எனதாக்கி வாழ்வை உனதாக்கி மீழ வென்மனமே தமிழை உயிராக்கி அமுதாய் சொரிவாக்க அருளைத் தருபவளே
ஆதியும் நீயாகி அந்தமும் தானாகி ஓதி நிற்பவளே போதினி யான நீ
ஏதினி எல்லாம் நீயே. பாதனில் பரந்தவளே.
உனக்காக நான் படைக்க நீ பாடியது.
-14

ஒரு மூச்சின் சிறு வரைவு
நான் பருத்தித்துறை எனும் ஊரில் 1950ம் ஆண்டு 8ம் மாதம் 18ம் திகதி பிறந்தேன். எனது தந்தை வேலுப்பிள்ளை தங்கவேலாயுதம் தாயார் முத்துச்சாமி அருந்தவம். இவர்களின் முதல் மகவும் மூத்த மகளும் நானே. பரமநாதன், இராமநாதன், நாகநாதன், செல்வசிவம், நந்தகோபால், கெளரிஅம்மாள், முத்துக்குமார் ஆறு சகோதரர்கள் பாசப்பிறப்புக்கள் என் தந்தையின் சகோதரர் சுப்பிரமணிய எனது சிறியதந்தை. சிறியதாய் சின்னமணி. இவர்கள் வழி எனக்குப் பல சகோதரர்கள் உண்டு. எனது தாயாரின் தம்பியார் முத்துவேல் மாமா இவர்மனைவி என் மாமியின் வயிற்றில் பிறந்தவர்கள். மச்சான், மச்சாள், மாறாத அன்பு கொண்டவர்கள். என் அம்மாவின் சகோதரிகள் மனோன்மணி, சண்டிகாபரமேஸ்வரி, பெரிய சின்னம்மாவை சின்னக்காச்சி என்றுதான் கூப்பிடுவேன். சின்னம்மாவை மணி அக்கா என்று கூப்பிடுவேன். இவர்கள் என்மேல் உயிர் எனக்குப் பல வழியில் பாசமுடன் குருநிலையிலும் இருந்தவர்கள். மணியக்காவின் கணவன் இளையையா ஆனந்தம் என்னை முதல் மகளாக நேசித்தவள். மணியக்கா இளையையாவின் பிள்ளைகளும் நாங்களும் ஒரே வீட்டில் ஒரே பிறப்பாய் வளர்ந்தவர்கள். அவர்கள் என்னை வண்ணமக்கா என்று அழைப்பது வாஞ்சை மிக்கதாக இருக்கும். செல்வமலர், கெங்காதரன், கலைச்செல்வி, தமிழ்ச்செல்வி, இரத்தினசோதி, கிரீதரன், ராதாகிருஷ்ணன் அக்காள் தங்கை பிள்ளைகள். எங்களுக்கு படிப்பு, அறிவு, பண்பு சொல்லித்தந்தவள் எங்கள் சின்னம்மா டீச்சர் சின்னக்காச்சிதான்.
எனக்குக் கலியாணம் பொலிகண்டி கந்தவனக் கோயிலில் நடந்தது. மாப்பிள்ளை திருக்கோணமலையில் இருப்பவள். என் கணவரின் தந்தை எனது மாமா தம்பிப்பிள்ளை மாமியார் தெய்வானைப்பிள்ளை. நான் திருமணம் முடிக்கும்போது அவர்கள் உயிரோடில்லை. என் கணவரை வளர்த்தவரான என் பெரியம்மா செல்லமுத்து பெரியமாமா வடிவேல் மாமி தங்கம் சின்னமாமா மகாலிங்கம் மாமி செல்வரத்தினம் சின்னம்மா தங்கம் சிறிய தந்தை நடராசா என்னை தங்கள் பிள்ளையைவிட நேசித்தனர். அதில் பெரியம்மாவின் மகள் அக்கா இலட்சுமியம்மா எங்களுக்காய் தன் வாழ்நாள் முழுவதையும் தன்னை அர்ப்பணித்து தனது சொத்துக்களும் எமக்குத் தந்து என்றும் நிலையாய் நின்றவர். சின்னமாமா சின்னமாமியின் பிள்ளைகள் தங்கவேல், இந்திராணி, சந்திராதேவி, செந்திவேல் என்னை தாயாக்கி மகிழ்வித்தனர். இவர்களில் இந்திராவின் கணவர் கணேசரெத்தினம் அன்பான தம்பி. சின்னம்மா தங்கம்மாவின் மக்கள் கெங்காதரன், வள்ளிக்கொடியும் என்னில் பிரியம் மிகுந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் வழி கதிரவேல், ரஞ்சி மிக அன்புக்குரியவர்கள்.
என் கணவர் பிறந்த திருக்கோணமலை வழியில் என் கணவரின் சிறிய தாயார் வள்ளிநாயகம் மாமனார் சண்முகத்தார் இருவரும் என்னுடன்
-15

Page 15
பாசம் வள்ளிநாயகம்மாமி எனக்குத் தாயாக இருந்தவர். வள்ளிநாயகம் மாமியின் பிள்ளைகள் இராசலக்ஷிம் மச்சாள் கணவர் இராமச்சந்திரன் முதல் அமரன் வரை என்னில் அன்புள்ளவர்கள். இவரின் மாமனார் சண்முகத்தார் பிள்ளைகளும் அவ்வாறே.
என் உடன்பிறப்பு சகோதரர் சகோதரி வழி மைத்துனன் மைத்துனிமார் அதிகம் கெளரியின் கணவர் சந்திரசேகள் முதல் ராசாத்தியின் கணவர் அருட செல்வன் மேலாய் என் தம்பிமார் மனைவியர் சாந்தரூபி, லீலாதேவி, சசிகலா, அருணாஞ்சலா, உமாசுதனி எல்லோரும் என்னில் மிகப்பாசம்.
எனக்கு மூத்த பிள்ளை மகன். அவன் முகிலாதித்தன். அவனை அப்பன் என்றுதான் அழைப்போம். இரண்டாவது என்னைப்போல் ஒருத்தி அகிலமதி அடுத்தவள் அருமைத்திருமகள் மதுரமதி இளையவள் இனியவள் வான்மதி. இவர்களில் நான் என்றுமிருப்பேன். மகன் அப்பனின் மனைவி சரண்யா ஆங்கிலம் தந்த அருமைப்புதல்வி. இவர்கள் வழி அகிலன், தர்ஷன் பேரரிருவள். பேத்தி லலிதா ஒருவர். மூத்த மகளின் கணவர் கருணாகரன் என் மகனைவிட என்மேல் பாசத்திலும் மரியாதையிலும் கலந்து நிற்பவர். இவர்கள்வழி என் இரத்த முத்துக்கள் ராகவன், கவிசாலி என் மனநோய்க்கு மருந்தாய் மடிதவழ்ந்தவர்கள். வான்மதி கணவர் சிவநாதன் சின்ன மருமகன் மனதிற்கினிய மகன். அவர்கள் வழி வந்துதித்த முத்து மோஷனா பேத்தி என் நெஞ்சை அள்ளிய குஞ்சு. என்னிலும் என் கணவரிலும் இருந்து பேர்ந்த மக்களில் இருந்து பேர்ந்த பேரன் பேத்திகள் என் உயிர்கள்.
அதைவிட என் கணவரின் தந்தையார் எனது மாமனார் செட்டியார் கதிரிப்பிள்ளை தம்பிப்பிள்ளை அவர்களின் இரண்டாவது தாரத்தின் மகள் கமலாதேவி அவரும் எனக்கு மச்சாள். என்மேல் பாசம் அதிகம். பாசம் என்றால் என்ன என்று எனக்கு மழலையிலேயே ஊட்டி ஊட்டி உணர்த்தியவர்கள் எனது அப்பாவின் தகப்பனார் என்பேரர் வேலுப்பிள்ளையும் பேத்தியார் மாணிக்கமும் அம்மாவின் அம்மா நாகரெத்தினமும்தான். அவர்கள் நான் என்றும் மறக்காத பாசப்பிறவிகள். மேலும் எனது மைத்துனர் கணவர்வழி நிறைய மருமக்களும் பெறாமக்களும் எனக்கிருக்கிறார்கள். அவர்களையும் சொல்ல விருப்பம் நேரமில்லை கோவில் மணி அடிக்கிறது நான் போக வேண்டும். ஆனால் ஒரு முக்கியமான விடயம் என்னவென்றால் என் கணவர் அவருக்குப் பதிவுப்பெயர் தம்பிப்பிள்ளை துரைவிரசிங்கம். பல புனைப் பெயரிலும் எழுதுவார். ஒருபெயரில் என்னை இணைத்தும் வைத்திருக்கிறார். பிரபலமான பெயராக நிலைத்திருப்பது தம்பி தில்லைமுகிலன், அந்தப் பெயரில் எனக்கு நல்ல விருப்பம். அவர் ஒரு கொள்கை வெறியர். எனக்காக ஒரு நாளாவது திருநீறு பூச மாட்டேன் என்றார். நான் போட்டிபோட்டுப் பார்த்தேன் போட்டி சண்டையாகவும் மாறியது அவருக்குத்தான் வெற்றி ஆனால் அவள்தான் இறுதியில் தோற்றுப்போனார். அவர் இனி எதிலும் தோற்கக் கூடாது அதற்காக நான் கோயிலுக்குப் போகிறேன் பூசை மணி கேட்கிறது.
நான -16

எல்லோர்க்கும் நன்றி என்னவளிடம் அன்புடன்
கலந்திருந்தோருக்கும் அன்னவள் இறப்பில்
இதயம் நொந்தோர்க்கும் கலந்து எமக்கு கனிவுடன்
ஆறுதல் பகன்றோர்க்கும் இன்னும் பல தேவையறிந்து
நல்கி நின்றோர்க்கும் எம் நன்றிகள்
பணிவுடன் பலவாகும் என்றுமே எங்கள் நினைவாவிர் ' ا قعہ نہ و بد لطف و رحrوی 3& تھی.ITI
இAேறசதம். கணவன், 322/6சி) மக்கள், மருமக்கள்,
பேரர்கள், பேத்திகள்
-17

Page 16
Uாயிரம் Uாழயே பூமிக்கு வருகிறேன்
ஆழ்கடலில் மூழ்கி
மூச்சுப் பிடிக்கின்றேன் திணறுகின்றேன் திக்கெல்லாம் நீரடியிருட்டு
நீந்த முடியாது மூட்டுக்கள் இழந்து மூழ்கும் நிலை
சோர்ந்து அறும் நிலையிலும் நீருக்குள்ளும் நெருப்பு ஆக்கி
வேள்விக் குண்டமது மூட்டுகின்றேன் ஆவிபோன பின்பும் மீள உயிர்த்து
வியாபித்துப் பரந்து வீச்சாய் எழுகின்றேன் வாழத்துடித்திடும் வாஞ்சை எனக்கில்லை
நேசத் திருமேனியாள் உன் நினைவினில் மீளப்பிறப்பெடுத்து இவ்வுகினில்
ஆளுமை மிக்கதான சாதனை வெறிகொள் பாத்திரமாகின்றேன் என் முளுமை அழித்து
போனவள் சக்தியில் புதுவடிவமாகின்றேன் வண்ணவள் அவள் எண்ணப் படுக்கையில்
துன்பத்தில் சிரிக்கின்றேன் துணிவுமிக்க போர்வீரனாகின்றேன் இனி
ஏதுஎனக்கென்ற கேள்வியில் நானொரு விடையைத் தேடுகின்றேன் தேவியின் மேலொரு
பாயிரம் பாடியே பூமிக்கு வருகிறேன்.
-18


Page 17


Page 18

திருமணப் பதிவுநாள்
அன்றுதான் உன் முகத்தை
நன்றாக உற்றுப் பார்த்தேனி.
உன் கன்னத்தில் விழுந்த குழி என்னை முற்றுகையிட்டது.
முதல் முதல் உனக்கு ஒன்று தந்தேன். அதனை என்றும் மறக்காது எடுத்து வந்தாய். அது எரியுண்ட வீட்டோடு போனது. அந்தப் பேனாவை நான் தரும்போது நான் சொன்னதற்கு நீ மாறின்றி இறுதிவரை என்னோடு கூடிவந்தாய் என்முன்னாலே ஒடி நின்றாய். நாடகம், கலை, அரசியல், எழுத்து ஆகியவற்றை உனக்கு முன்னே மணந்து விட்டேன் நீ எனக்கு இரண்டாவது என்றதை ஏற்றுக்கொண்டு அத்தனைக்கும் நீ ஊற்றாய் உந்துசக்தியாய் உள்ளவரை என்னை உயிர்ப்பித்து நின்றாய்.
எங்கள் வாழ்க்கை கலை நதிக் கரையின் பெருமரத்தில் கூடுகட்டி குடியிருந்த வானம்பாடிகளின் சுதந்திரப் பெருக்காய் பரந்து விரிந்திருந்தது. வறுமையிலும் நீ சிரித்து எனக்கு தைரியமருந்தையும் இன்பத் திரவிய விருந்தையும் அள்ளி வழங்கியே வாழ்ந்தாய். வறுமையில் வேலையிழந்த நிலையில் என் தோழ் நிமிர்த்தி உலவவிட்டாய். என் அரசியல் செயலிலும் சமபங்கு கொண்டு சிவப்புக்கொடியும் பிடித்து நடந்தாய். கலைஞர்களுடனும், அரசியல் தோழர்களுடனும், போராளிகளுடனும் நீ காட்டிய அன்பும், பண்பான உறவும், ஆதரவும், துணிவுமிக்க செயலும் எத்தனை நெஞ்சங்களில் அழியாப் பொறிப்பாக இன்றும் இருக்கின்றது. என் நிலையை உணர்ந்து நடிகையாகவும் நடித்துக் கலைக்கும் உன் கணவன் எனக்கும் காப்பாகி நின்று தோப்பாக விரிந்தவள் நீதானே.
எதற்கும் அஞ்சாது ஆயுதப் புரட்சிக்கு என்னை அர்ப்பணிக்க நான் தூக்கிய கொள்கையை நீயும் தூக்கி நின்றாய். அதனால் நியும் ஒரு போராளியானாய். என் பேனாவும், நாவும் என் போர்க்குண
-19

Page 19
வீரியமும் ஒருபோதும் சோராதிருக்க ஆதரவாய் அத்தனைக்கும் மூல விசையாக இருந்தவளும் நீதான். நூல் வடிவில் என் படைப்புகளான கவிதை, கட்டுரை, நாடகம், பாடல்கள் வெளிவரவில்லை என்பதால் நீ மனதால் கரைந்ததும் நான் நன்கு அறிவேன். நீ சொல்லியதும் இன்றும் காதில் ஒலிக்கின்றது. ஏனெனில் பல நூல் அறிமுக விழாவிற்கு தலைமைக்குரியவனாய், விமர்சகனாய், கருத்துரைப்பவனாய், வாழ்த்துரைப்பவனாக நான் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் என்னோடு கூட வந்தவள் நீ என் எல்லாவற்றிற்கும் சுவாசக் காற்றாக இருந்த நீ என்னோடு வாசிப்பதிலும் சமனாக நின்றாய். மாவோவின் நீண்ட படை எடுப்பை போராளிகளுக்கு பாடமாக எடுத்து ஒதியது இன்றும் என் கண்ணில் படும் காட்சிகளில் புனிதமாகத் தெரிகிறது.
மதங்களை நீ மதித்ததும் உன் இறைக் கொள்கையில் இறுக நின்றதும் பெரிதுதான். என்னுடன் முரண்பட்டும் என்கொள்கைக்கு நீ தடைபோடவில்லை. படையணிக்கும் முன்நின்றாய். நீ வாசிப்பில் இந்து மதம். இன்னும் ஏனைய மதங்களிலும் யாவிலும் தோய்ந்து மானிடம் பேசியவள் எல்லாத் துயரும் உனக்கு எடுத்து எல்லா மகிழ்வும் எனக்குக் கொடுத்தவள் நீ உனக்காக நான் என் நெற்றியில் திருநீறு இட்டிருந்தால் இன்னும் ஒருநூறு வருடம் உயிர்வாழ்ந்திருப்பாய். என்ன செய்ய என்னை என் கொள்கையில் இரும்பாய், உருக்காய் உருவாக்கியவள் நீதான். அதனால் நான் நீறிடவில்லை. அதனால்தானே எனக்கு நிரந்தரமான தண்டனையும் தந்துவிட்டுப் போய்விட்டாய் நீ கோபப்படாத நாள் இல்லை. அந்தக் கோபத்திலும்கூட காதலும், அன்பும், மோகமும், காமமும் கூடவந்து என்னையும், உன்னையும் யாசித்ததை நீயும் நானும் தான் அறிவோம். .
எல்லாமாக நின்ற உனக்கு நான் உன் எண்ணத்தில் இருந்த பலதில் ஒன்றை முதல் காணிக்கையாக்குகின்றேன் - வண்ணம் அதுவே சிறுவர் வண்ணம்
நீ என்னுள் வாழும் தெய்வம்
உன்னோடு வாழும் வண்ணம்
வரம்பெற்ற
-20

சின்னச் சின்னக் குருவிகாள்
சிங்காரக் குருவிகாள் தின்னச் சின்ன தினை தருவேன் 2ھ مت
சீக்கிரமாய் வாருங்கள்
வண்ண வண்ணச் சிறகடித்து
வட்டமிடும் குருவிகள்
கண்ணைச் சிமிட்டி பார்ப்பதேன்
எண்ணம் கவரும் குருவிகாள்
கூடிக் கூடிக் பறக்கிறீர்
கூட்டமாக வாழுறிர் ஒற்றுமையின் பெருமையை
ஒன்று கூடிப் பாடுறீர்
உங்களைப் போல் சுதந்திரம்
எங்களுக்கு இல்லையே எங்களுக்கும் சிறகுகள்
கொண்டுவந்து தாருங்கள்
05.07.2005
-21

Page 20
நீலக்கடலே
நீலக் கடலே நீலக் கடலே
நீண்டு விரிந்த நீலக்கடலே
காலைச் சூரியன் உன்னில்தான்
கண்டு கலந்து வருகின்றான்
காற்றும் கலந்து உன்னோடு
கதைத்துப் பேசி வருகிறது நேற்றுப் பெய்த மழை கூட ஊற்றிய நீரும் உன்னில்தான்
இடியும் மின்னலும் உன்னில்
இறங்கிக் குளிர்ந்து போகிறது
வெடித்துச் சிதறும் எரிமலையும்
குறுகிக் குளிருது உன்மடியில்
-22
 

எல்லா வளமும் தரும் நீயோ
என்ன செய்வோம் நீ பாவம் வல்ல நிலங்கள் இடப்பெயர்வால்
எல்லையின்றி நீ எழுந்தாய்
எங்கள் வாழ்வே நீ தானே
வீணாய் பழியைச் சுமந்தாயே என்றும் உன்தன் பிள்ளைகள் நாம்
விட்டுப்பிரிந்து வாழ்வோமோ.
07.07.20)
-23

Page 21
d ( ) ஒன்றால்ச் ச004ல் வாழ்வோமே
நல்ல பழங்கள் நாம் உண்போம்
பலமாய் உடலை ஆக்கிடுவோம்
பொல்லப் பிணிகள் தடுத்திடவே
எல்லாச் சுத்தமும் பேணிடுவோம்
ஒழுக்கத்தைப் பழக்கமாய் கொள்வோம்
ஒதாதிருப்பதைத் துறப்போமே வழக்கப்படுத்தியே தேகப்பயிற்சி
வளமையாய் நாளும் செய்வோமே
பெரியார் தம்மை பெரிதாக
பேணிப் பணிந்து மதிப்போமே
உரிமையற்ற எப்பொருளும்
உடமையாக்க நினையோமே
பொய்யும் புறமும் புகலாமல்
புனிதமாக இருப்போமே
மெய்யைக் காக்க மெய்யாக
மேன்மைத் தியாகம் புரிவோமே
அன்பாய் அனைவரும் ஒன்றாகி
ஒருதாய் மக்கள் ஆவோமே நன்றாய் உணர்ந்த அறிவோடு ஆ, ஒன்றாய்ச் சமமாய் வாழ்வோமே.
07.07.2005
-24
 

கூடுகளில் பறவைகளை
அடைத்திட வேண்டாம்
காட்டில் திரியும் மிருகங்களை
கட்டிப்போட வேண்டாம் க் 纥
பறந்து திரியும் பறவைகளை
மறந்தும் தடுக்க வேண்டாம்
பிறந்த குஞ்சு குருவிகளை
பிடித்து அடைக்க வேண்டாம்
சுதந்திரமாய் மிருகம் பறவை பரந்து வாழ விடுவோம்
யந்திரமாய் வாழ்வதையும்
நிரந்தரமாய் விடுவோம்
உயிர்கள் யாவும் ஒன்று
உணர்ந்து கொள்வோம் நன்று
உயர்வு அன்பேயாகும்
மனதில் கொள்வோம் நாமும்.
19.07.2005
-25

Page 22
பாருங்கள் அங்கே
பரந்த வானில் பரவும் முகில் கூட்டம்
படங்களாகுது முகிலோட்டம்
அள்ளி எறிந்த
பருப்புகள் போலே
பளிச்சிடும் வெள்ளிகள்
ஒளித்தோட்டம்
முகிலைக் கிழித்து
முகத்தைக் காட்டும்
வானத்து விளக்கு
நாளொரு தோற்றம்
வளர்வது தேய்வது
பிறையாய் வருவது மாதத்தில் நடைபெறும்
காலத்தின் மாற்றம்
2007. 2005
- -26
 

C GMCsOečð 6k X" (?- அணிலே அணிலே ஒடிவா
அன்ரனா வயரில் ஏறிவா எங்கள் வீட்டு TV யில்
எல்லாப் படமும் பார்க்கலாம் வண்ண வண்ணப் படங்கள்
வடிவான படங்கள் எண்ணம் கவரும் நிறங்கள்
கண்ணைப் பறிக்கும் விதங்கள்
சின்னச் சின்னப் பூக்கள்
விண்ணில் பறக்கும் பறவைகள் சிங்கம் புலி கரடி யானை
சிறுத்தை பலதும் பார்க்கலாம்
நதியும் கடலும் மலையும்
உதயமாகும் சூரியனும்
இதயம் கவரும் பெரும்காட்சி
பதியும் மனதில் நிலையாக
உலகில் உள்ள அழகெல்லாம்
வீட்டுப் பெட்டியில் தெரியும் நிலவும் இன்னும் பலதும்
உலகமுழுதும் காணலாம் வீட்டு அறையின் உள்ளே
விபரம் பலதும் காட்டும் , கேட்கும் பாட்டின் நடிப்பும்
காட்டும் விந்தைப் பெட்டி
21.07.2005
-27

Page 23
Cad ed c cap ФКОO. GEODOSNA GROPOSгроко
நிலவே நிலவே நீ வரமாட்டாய்
நிலத்தில் நின்று அழைக்கின்றோம் நீயும் நிலமே நீல் ஆம்ஸ்ட்ரோங் வலது காலை வைத்தாரே
ஒளவையாரும் உன்னோடு
இருப்பதென்று காட்டிடுவார்
எங்கள் பூமி நிழல்தானே
உன்மேல் விழுந்தால் கிரகணமாம்
பால்போல் நீயெனப் புகழ்வாரே
பாடலில் உன்னைப் புனைவாரே
பகலாய் படரும் சூரியக் கதிரே
- பட்டுத்தெறிக்க ஒளிபெற்றாய்
உன்னால் இன்பம் அடைவோமே
உன்னில் குடியாய் வருவோமே
எங்கள் பூமித்தாய் போலே
நீயும் ஒருநாள் எமதாவாய்.
21.07.2005
-28

அனைவரும் ஒன்றாய் alreayreo
அன்பை மதமாய்க் கொள்வோமே
அனைவரும் சமமாய் வாழ்வோமே
உலகம் முழுதும் உள்ளோர்கள்
உறவினர் மனிதர்கள் மறவோமே
எல்லா மொழியும் எங்களது
சகோதர மொழியே அறிவோமே
இனங்கள் என்ற அடையாளம் உயர்வு தாழ்வு பிரிவல்ல
மனிதப் பிறவி உலகெங்கும் புனிதமான பிறப்பாகும்
உடலின் தோற்றம் பலதாகும்
உயிரும் உளமும் ஒன்றாகும்
மனித நேயம் பொதுவாகும்
இனிய வாழ்வு பெரிதாகும் அன்பே மதமாய் கொள்வோமே
அனைவரும் ஒன்றாய் வாழ்வோமே.
80.08.20
-29

Page 24
(S g GOOద్ర
போரில் பெரிதாய் யாரிங்கே
பெருமை பெற்றார் என்பார்கள்
இருள்ைப் போக்கும் ஒளி போலே
இனிதாய் போரைக் கொள்வோமா
மனிதரை மனிதர் கொல்வதிலே
புனிதம் ஏதும் கண்டாரா
கனிவும் இரக்கமும் அன்புடனே
கலந்து பெருக போர் வருமா
மனிதரை மனிதர் மதிக்காமல்
மதத்தைப் பேசிப் பயன் என்ன
மதமே போரின் கருவானால்
மதமும் சமயமும் பொய்தானே
அறிவாய் நாமும் உணர்வோமே
வளரும் பயிர்கள் நாமே தான் நிறைவாய் அன்பு சமாதானம்
பெருகப் போரைத் தடுப்போமே
30.08.2005
-30

சொல்லிய பெரியர் வழி
நடப்போம்
எல்லோரும் எல்லாம் பெறவேண்டும்
நல்லோராய் நாளும் வாழ வேண்டும்
பொல்லாத குணம் யாவும் நீங்கி
வல்லோராய் நாம் வளர வேண்டும்
கல்லாதார் என்றெமை யாரும்
சொல்லாத நிலையிங்கு வேண்டும்
பல்கலை யாவும் படித்தே தேறி
மேலுயர் ஞானமது பெறுவோம்
இல்லாதார் இங்கில்லை என்ற
பல்லின மக்களும் சமத்துவமாக
நல் மனதுடையோராய் வாழ்வோமே
பால் நிலை பேதங்கள் போக்கிடுவோமே
எல்லைகள் இன்றியே இதயம் சேர
வல்ல நல் அறிவுவழி நடப்போமே தொல்லைகள் இன்றியே பூமியில் நாம்
சொல்லிய பெரியார் நல்வழி செல்வோமே.
03.09.2005
-31

Page 25
கண்ணுக்கு முன்னாலே ஒரு தெய்வம்
அன்புக்கு முதலான பெரும் கோவில்
என்ணங்கள் எல்லாமே அவளாகும்
எங்களை ஈன்றவள் எம்தெய்வம்
பாலுண்ணும் போதே படித்திட்ட பள்ளி
தாலாட்டும் போதே இசைதந்த கூடம்
சோறுட்டும் போதே இயல் தந்த மேடை
நடை போடும் போதே நாடகமாடிய அரங்கு
அணைக்கின்ற போதே பாசத்தின் சுரப்பி
இணைப்பினில் அன்னை இரத்தத்தின் துடிப்பு
முன்னையே எமக்காய் தனையிந்த பிறப்பு
அன்னை அடிநிதம் நாம்தொழும் சந்நிதி.
09.09.2005
-32
 

த்திருவேல்ை
விழித்திடுவோம் விழித்திடுவோம்
இளம் குருத்துச் சிறுவர் நாம்
எழுந்து நிமிர்ந்து விழித்துமே
எங்கும் அறிவு தேடிடுவோம்
உலகம் அது எங்களது
உரிய தொன்றாய் ஆனதே
இலகு வழியில் உணர்ந்தே
பலதும் அறிந்து உயர்வோம்
இயற்கை யாவும் இங்கு
அறிவுக்கான விடயமே
இளவயதில் கற்றுத் தேற
விழித்திடுவோம் விரைவுடனே
விஞ்ஞானம் விந்தை புதுமைகள்
துலக்கமாக விளங்கியே மெய் ஞானம்தான் அறிய
விழித்திடுவோம் விழித்திடுவோம் நாமுமே
09.09.2005
-33

Page 26
ஏன் என்று கேள்வி கேட்போம்
எங்களது அறிவு வளரக் கற்போம்
அப்படித்தான் அது என்பதையும்
எப்படித்தான் அது எனக் கேட்போம்
விஞ்ஞான அறிவு புரிந்த விந்தை
விரிவான அறிவுள் வியாழனும் ஆச்சு
பொய்ஞானம் மெய்ஞானம் ஏதென அறிய ஏன் எதற்கென்ற கேள்வி கேட்போம்
சிறுவர்கள் எங்கள் சிந்தை வளர
புதியதை நோக்கிய தேடலுமாக
விருப்புடன் யாவுமே நோக்கிடுவோம்
ஏன் எதற்கென்ற கேள்வி கேட்போம்
கேட்காது என்றும் நிற்பது தவிர்ப்போம்
அறிவூட்டும் அனைத்துமே தவறாது படிப்போம்
சிறு பூக்கள் எங்களது எதிர்கால வாழ்வு
பெரிதான அறிவில் புதிதான உலகில் காண்போம்.
21.09.2005
-34
 

பூ உலகெங்கும் பூ
பூ தினம் தினம் புதிது
வாசம் தேகம் முழுதும் பூசும் புதுமை பூ
لالالاولیا - لا نفا5 لة606l5|Iھ لیا
பூவுலகெங்கும் - பூ
வடிவு வடிவம் பலது
நொடியில் மனதைக் கவரும் பல திணுசு திணிசு
நோய் நொடியை மாற்றும் அரிய பெரிய மருந்து
لالالالا - لا ظا5 لئ5fi 606ھ لیا பூவுலகெங்கும் - பூ
இறைவன் காலில் சொரிவார் இதயம் மகிழத் தருவார்
சூரிய ஒளியில் மலரும்
சுக மாலை வேளையில் விரியும்
-35

Page 27
لالالالا - لا bازgل606l5|Ifھ لیا
பூவுலகெங்கும் - பூ
நிலவு சிரிக்கும்போது
w நீள் இதழ்கள் இங்கு பிரியும்
உலவு தென்றல் மீதும்
வாசம் வந்து சேரும்
காலமெல்லாம் மகிழும்
لاول الاولیا - لا bاز9 ل60615ff 2 لا
பூவுலகெங்கும் - பூ
நீரில் நீந்திச் சிரிக்கும் நிலத்தின் எங்கும் மலரும்
பாரில் பெரிதாய் ஆட்சி பரப்பும் இனவிருத்தி
இன்ப துன்பமதற்கும் சாட்சி لاول الاولیا - لا ظفا5 لئ606l5Ifے لیا
பூவுலகெங்கும் - பூ
21.09.2005
-36s
 

6ίουουφό υGοδυφαίο
பாலகர் நாங்கள் பாருலகில்
பண்புகள் அறிய வேண்டுமே
சீலர்களாக வளர்ந்து நாம்
சிந்தை உயர்வு கொள்வோமே
அறிவில் அன்பில் உயர்வடைய
நெறியில் நின்ற பெரியோரை
அறிந்து கற்றுத் தெளிவோமே
அனைவரும் அன்பில் இணைவோமே
ஆடல் பாடல் நாடகமும்
அனைத்துக் கலைகள் யாவுமே
தேடல் கொண்டு பயில்வோமே நாடல் நமக்கு நல்லறிவே
பண்பு விளையும் பலதினையும்
பாலகர் நாமும் பயில்வோமே எண்ணம் எல்லாம் பண்பாக
திண்ணம் கொண்டே நாமிருப்போம்.
10. 09.200
-37

Page 28
எங்களது பாதையது புதிதாக வேண்டும் தங்குதடை இல்லாத சுதந்திரமாக
எங்கிருந்தாலும் அது எல்லோர்க்கும்
சொந்தமான பொருளாக உரிமையாக
ஆங்காங்கே இருக்கின்ற பாலகர்கள் - நாங்கள் பூங்கொத்தின் பூக்களே புரிந்திடுவீர் நீங்கள்
தேசங்கள் எங்களுக்கு தடைகள் இல்லை வாரீர் நேசங்கள் மலர்கின்ற நெஞ்சங்கள் நாங்கள்
உலகமது எங்களது பொதுவான வீடு
உள்ளங்கள் விரிந்தங்கு உறவினைப் பாடு
எல்லாமே எமக்கென்ற உயர்வினைத் தேடு
நல்லோர்கள் வழிதன்னில் நல்லதை நாடு
வளர்கின்ற மனிதர் நாம் எல்லோரும் ஒன்று
புலர்கின்ற பொழுதெல்லாம் எமக்கே என்று புவியெல்லாம் கை சேர்ப்போம் நன்று
புரிந்துணர்வில் ஒன்றாவோம் அறிவோடு நின்று
22.09.2005
-38
 

எங்கள் தமிழ்
எங்கள் தமிழ் எமதுயிராம்
பொங்கும் தங்கப் பெறுமதியாம்
சங்கத் திருவழி வளர்மதியாய்
எங்கும் வளர்ந்த பெருநிதியாம்
போற்றிப் புகழ்ந்தார் பிற நாட்டார்
ஆற்றல் நிறைந்த உயர்வதனால்
பற்றிப் படர்ந்த பைந்தமிழாம்
காற்றிலும் கலந்து வலம் வருமாம்
நாற்றிசை எங்கும் போற்றிடவே
வீற்றிருக்கும் எம் மொழி முதலாயே கற்றுத் தெரிந்து தெளிவாயே
அற்புதப் பெருநிதி தமிழ்த்தாயே
11.10.2005
-39

Page 29
பார்க்கும்போது பரவசமே
பூத்து மலர்ந்த பிரசவமே
வார்த்து எடுத்த வடிவமது
கோர்த்த முத்து உருவமது
பேசாமல் பேசும் பொற்சிலையே
பெரிதான படைப்பின் அற்புதமே
வீசாமல் வீசும் தென்றலது
பாசம் பெருக்கும் திருவிளக்கு
வாயொலி தருவது பேரின்பம்
மாயும் மனதுக்கு மருந்துமது
பாயும் தேனாய் மழலையுமே
யாவும் குழந்தைக்கு ஈடில்லை.
2010, 2005
-40
 

LOTŮ LOTŮ (0606)č56Ť
சிறிது பெரிது பறவைகள்
சிட்டு கழுகு பல பெயர்கள் *
பட்டு மேனி பல வர்ணம் :نسیجیۓ
கொத்தும் அலகு பல வடிவம்
கத்தும் குரலும் வித ஒலிகள்
கொத்திக் கொறித்து உணவுண்ணும்
எத்தனை எத்தனை பறவைகள்
அழகும் இசையும் அவைகளுக்கு இயற்கை தந்த புதுமைதான்
பழகும் விதமாய் பழகினால்
சிலது எம்போல் பேசுமே
அரிய இயற்கைப் படைப்புத்தான்
பெரிதாய் புகழ்ந்து எழுத்துக்களால்
பாரில் யாவரும் உயர்வாக்கும்
பிரியம் மிகுந்தது பறவைகளே.
2.10.2005
-41

Page 30
ஞ்ஞானம்
உலகில் புதுமை பலவாகும்
எல்லாம் தருவது விஞ்ஞானம்
எளிதில் தெரியா சிறு பொருளும்
பெரிதாய்க் காட்டும் விஞ்ஞானம்
ஒலியில் ஒளியில் பெரிதான
விந்தை வீட்டிலும் தெரிகிறது
மெல்லிய கம்பிச் சுருள்வழியே
வந்திடும் சக்தி பெருமறிவு
பூமியைத் தாண்டி வான்மீதில்
புரிந்த செயல்கள் அதிசயமே தாவிப் பாயும் அறிவுலகு
தருவது எல்லாம் பெரும் கொடையே
அறிவை வளர்த்து உயர்வோமே
அனைவர் வாழ்வும் பெரிதாக
அறியும் விஞ்ஞானம் அனைத்துமே ஆக்கம் ஆக்கி மகிழ்வோமே.
20.10.2005
42۔۔--
 

பிறந்து வளர்ந்து நிமிர்ந்தாலும்
பிரியம் மிகுந்த விளையாட்டே
திறமும் பலமும் தான்தருமே
தெரிந்து நாமும் தினம் கொள்வோம்
ஓடி ஆடி விளையாடி
உடலில் வியர்வை வழிந்தோட
நாடி நரம்பு உரமேறி
உளமும் மகிழும் விளையாட
பாரதி சொன்னதை மறவோமே
பாலர் நாமும் உணர்வோமே
ஒடி ஆடி விளையாடி
ஒய்ந்து இருப்பதைத் தவிர்ப்போமே
22.10.2005
-43

Page 31
ஒடி விளையாட உரிமை பாடி ஆட உரிமை
தேடிக் கூடிட உரிமை
தேசம் எங்கும் உரிமை
உரிமை எமக்கு சரியாய் வேண்டும்
பெரியார் பேசும் நீதி வழியே
சிறியோர் எங்கள் மனம் சிரிக்க
சிறிய தடையும் வேண்டாம் வேண்டாம்
எல்லா உரிமையும் இங்கு கிடைக்க
எல்லோர் வாழ்வும் சமமே சிறக்க
சிறியவர் நாங்கள் தேசம் எங்கும்
சேர்ந்து வாழ உரிமை வேண்டும்
இனங்கள் மொழிகள் தேசம் யாவும்
தினமும் சிறுவர் உரிமை நிலைக்க மனங்கள் மலர்ந்து மனிதர் ஒன்றென்று
நினைவில் நிறைவாய் உரிமை வேண்டும்
22.10.2005
-44
 

எங்கும் எதிலும் உண்மைகளே
தங்கும் வாழ்வைக் காண்போமே
சொல்லும் செயலும் விளைவுகளும்
நன்றாய் உண்மையில் வரவேண்டும்
பிள்ளைகள் நாங்கள் சிறுவயதில்
பிழைகள் இன்றிப் பல வழியில்
வெள்ளை மனமாய் உண்மைகளை
நாளும் நமதெனக் கொள்வோமே
உண்மை வாழ்வில் உயர்ந்தோரை
எண்ணம் நிறைவாய் ஆக்கிடுவோம் திண்ணம் மிகுந்த உறுதியுடன்
கண்ணாய் உண்மை காத்திடுவோம்.
22.10.2005
-45

Page 32
இதுவென்ன அன்பு தெரியாதா
புதிதாய் என்ன சொல்வதற்கு எது முதல் அன்பைச் சொன்னார்கள்
ஒருமுறை நினைத்துப் பாருங்கள்
எல்லா மதமும் புனிதர்களும்
போதனை செய்தது அன்புதான்
நல்லாய் அதனை நாமறிவோம்
நாளும் பொழுதும் தானுணர்வோம்
அன்பெ முதலாய் அதுவாகும்
மனிதத் துடிப்பில் பெரிதாகும்
உயிரைக் கொடுக்கும் உயர்வதுவே
உண்மை அதுவே வேறில்லை
எல்லாம் எவர்க்கும் என்றாகி
சொல்லும் செயலும் ஒன்றாகி நல்லாய் நாங்கள் வாழ்வதற்கு
நாளும் அன்பை வளர்ப்போமே.
22.10.200
-46
 

மனிதம் என்பது தெரியுமா
புனிதம் அதுவென சொல்கின்றார்
சிறுவர் நீங்கள் புரிவீரா
பெரியோர் பெரிதாய் சொல்கின்றார்
அடுத்தவர் எமக்கு உறவாமே
தடுத்திடல் மிகவும் பிழையாமே
உலகம் முழுதும் வாழ்பவர்கள்
மனிதர் இன்றி வேறிலையாம்
இறைவன் படைப்பில் பெரிதென்பார்
இதயமும் இரத்தமும் ஒன்றென்பார்
மனிதப் பிறவி உயர்வென்பார்
இன்னும் பலதாய் எழுதிடுவார்
சிறுவர் நீங்கள் புரிவீரா
மனிதம் என்பது தெரிவீரா
சிறுமை பேதம் இல்லாது
இறுகிப் பிணைவதே மனிதம்.
22。10。2{}0歇
-47

Page 33
அறிந்துவகாள்வோம்
அனைத்தும் தேடி அறிந்து கொள்
அறிந்து அறிந்து வளர்ந்துகொள்
நினைத்துப் பார்த்து அறிவுலகை நிதமும் நியும் புரிந்துகொள்
அறிவில் வளரும் இவ்வுலகில்
நெறியும் நேர்மையும் தெரிந்துகொள்
அறியும் யாவும் இங்கேதான்,
அனைவரின் பொதுவாய் ஆக்கிக்கொள்
உலகம் முழுதும் உள்ளோர்கள்
உலவும் அறிவில் பெரிதாக பலதும் பத்தும் பெற்றேதான்
பலனை அடைந்து வாழ்வோமே.
25.10.2005
-48
 

பத்திரமாக பாதை
கடப்போம்
வீதி பாதைகளில் சிறுவர்கள் நாங்கள்
வீதி ஒழுங்கை மீறாது நடப்போம்
விரைந்து வரும் வாகனம் தன்னில்
விழிப்பாய் பெரிதாய் கவனம்கொள்வோம்
வலது புறமே நடந்தே போவோம்
பராக்குப் பாரா பாதையில் செல்வோம்
உலவும் போதும் உற்றுப் பார்த்து
நிலமை அறிந்து நிதானம் கொள்வோம்
சந்திகள் தோறும் நின்று பார்த்து
வந்திடும் வாகனம் போன பின்பே
புத்தி மிகுந்த பக்குவமாக
பாதைகள் கடப்போம் பத்திரமாக
மஞ்சள் கோட்டை தேடியே நாம்
மறந்து விடாது நாடியே போவோம் பாதைகள் எங்கும் போகும்போது ஒழுங்கு விதியை ஒரு போதும் மறவோம்.
31.10.200s
-49

Page 34
உடைத்திடு எறிந்திடு
தினமது மனமதை வதைக்குது மயக்குது
இனமதை மதமதை மொழியினை விதைக்குது
மதியதை சிதைவுற மனிதத்தைப் புதைக்குது விதியென சதிதனை புதினெப் புகட்டுது
மதித்திடு பகுத்திடு புகித்திடு புதிதினை
விதித்திட்ட புரட்டினை புரட்டிடப் புறப்படு
தேடிடு கூடிடு பாடிடு நாடிடு
வாடுது வதங்குது வாழ்வது பெரும்பாடு
மூடிய கேடினை சாடியே வீசிடு
வாழ்வது நமக்கென நல்லதைக் கொண்டாடு
பாழினை மேவிடும் பாதகள் வீழ்ந்திடு
ஊழ்வினை யென்பதை உடைத்திடு எறிந்திடு.
02.11.2005
-50
 

தோட்டக் கலையது நாடிக் கற்றிடு
நாளும் நமக்கு அது பெரிதாம்
நாட்டை நிமிர்த்தும் பெரு உயர்வில்
வாழும் வளமும் தரும் பெரிதாய்
வீட்டில் தோட்டம் போட்டிடுவோம்
கூட்டிக் குப்பையை எரு இடுவோம்
பாட்டிகள் சொல்லும் மூலிகையை
நாட்டி வளர்த்து உதவிடுவோம்
அழகாய்ப் பூத்து மலர் குலுங்கும்
பூக்கும் மரங்கள் நாட்டிடுவோம்
பழகிய தோட்டக் கலையாலே
பலரும் போற்ற நாம் மகிழ்வோம்
08.11.200
-51

Page 35
மரங்கள் எங்கள் பெரு வாழ்வில்
நிரந்தரமானது நாமுணர்வோம்
அரண்கள் அதுவே எமைக்காகும்
மரங்கள் பேணி வளர்ப்போமே
உண்ணும் உணவு தரும்செல்வம்
உடமைகள் தருகின்ற பெருநிதியே
உணர்வோம் அவைதனின் பயன்பெறவே உற்பத்தி செய்வோம் மரம்தனையே
சுற்றுச்சூழல் அழகுபெற
சகிக்கும் காற்று சுத்தம்பெற
பற்றுதல் கொண்டே அதைக் காப்போம்
அற்புத இயற்கை பெருவளமாம்
சொல்ல முடியா பயன்தருமே
நல்லாய் வாழ்வின் உறுதுணையே எல்லா மரமும் எங்களது
என்றும் எமக்கே சொந்தமது
09.11.2005
-52
 

{ கி 令 43
ஆகா மழையது பேரின்பம்
அள்ளிப் பொழியுது ஆனந்தம்
மேகம் சொரியும் தண்ணில்
தேகம் நனைவது பேரின்பம்
குழியில் நிரம்பும் நீரதிலே
குதித்து நாமும் விளையாடி
கூடிப் புரண்டு கூத்தாடல்
தேடக் கிடைக்கா ஆனந்தம்
தெருவில் ஓடுது பெருவெள்ளம்
அதிலே போகுது எம் கப்பல்
விடுவது காகிதக் கப்பல்தான்
வருவது எமக்கு ஆனந்தம்
-53

Page 36
நீரால் நிறையும் குளங்களிலே
நீந்துதல் ஆகா ஆனந்தம்
பாயும் வெள்ளம் கடலினிலே
சேருதல் பார்த்தால் பேரின்பம்
வாரிப் பொழியும் மழைதானே
வாழ்வு செழிக்க வைத்திடுமே
மாரி மழையும் சோவெனவே
வாரிப் பெய்வது பெருமகிழ்வே
09.2005
-54
 

6 ங் V క Ak
மழலைப் பூக்களின் சங்கீதம்
குவலயம் எங்கும் சங்கமம்
மனங்கள் மகிழும் ஒளிவீச்சு
நிலையாம் எங்கள் புது உலகில்
கைகள் சேரும் கலை மிளிரும்
காலம் விரிக்கும் புதுவசந்தம்
அகிலம் பரப்பில் ஒளிவிளக்காய்
நிலவும் நிரந்தர பெருவாழ்வாய்
போரும் பேதமும் ஒரு போதும்
சேரும் காலம் இனி எதற்கு வளரும் பயிர்கள் எதிர்கால
வாழும் உலகாய் மலரட்டும்
09. 11, 2005
-55

Page 37
எங்களது உள்ளங்கள் எந்நாளுமே
பொங்குமது உயர்வான புதுவெள்ளமே
தங்குதடை இன்றியே தான் பாயுமே
சங்கெடுத்து ஊதியே மனம் மேவுமே
பல நிறத்து மனிதர்களின் சிறு குஞ்சுகள்
பரந்தநிலம் விளைத்திட்ட உயிர்ப் பிச்சுகள்
மனதாலே அறியார் வீண் வஞ்சங்கள்
எதிர்கால உலகத்தின் பெரும் நெஞ்சங்கள்
வேறாக்கி நிற்கின்ற பாதக வேலிகள்
வேடங்கள் தங்கின்ற கேடான போலிகள்
வேண்டாது ஒரு போதும் திண்டாது போக்கி
வேண்டுவது நாங்கள் தர்ம வாழ்வே
முளைவிட்டு இலைவிட்டு பெரிதாகும் முன்னே
நிலை கெட்ட செயலாலே கருகிடல் நன்றோ விளைகின்ற பயிர் எம்மை பெரியோரே நீவிர்
தளைக்கின்ற பெரு வாழ்வில் செழிப்பாக்குவீரே.
09.11.2005
-56
 

பாரெங்கும் போர் முரசு பாரும்
பாலகர்கள் பேர் வாழ்வு கவரும்
கொடுமையது ஏன் இங்கு தானும்
மடமையது மனிதரே உணர்வீரே.
உலகமது எங்களது பெரிதான சொத்து
உணர்விரே பெரியோரே எங்களைப் பார்த்து
உயர்வான பிறப்பான மனிதர்கள் நாங்கள்
உண்மைக்கு புறம்பாக வாழ்த்துவதும் சரியோ
நீராலே சூழ்ந்த நிலமெங்கும் நாங்கள்
எதிர்கால வாழ்வுக்கு ஏங்குகின்ற சிறார்கள்
வீணான போராலே வாழ்நாள் எல்லாம்
விடியாத இருளாக ஒரு நாளும் வேண்டாம்.
11.11.2005
-57

Page 38
பங்கள் ஏற்றுவோம் வாருங்கள்
6JDO) (5 திக்கெல்லாம் துயரான போதிலும்
தீபங்கள் ஏற்றுவோம் வாருங்கள் - இதய
தீபங்கள் ஏற்றுவோம் வாருங்கள்
பூக்களும் உதிர்ந்தன தன்னாலே
இதயங்கள் அதிர்ந்தன அந்நாளே
இறந்தாலும் இருக்கின்றார் எம்மோடே
தீபங்கள் ஏற்றுவோம் வருவீரே
எல்லைகள் எங்களுக்கு இல்லையே
சிறுபிள்ளைகள் நாங்களும் முல்லையே
இல்லையே எங்குமே பேதமே
என்றுமே அன்பேதான் வேதமே
உலக மாதாவின் பிள்ளைகள்
உறவில் இணையும் கிள்ளைகள் :
மலரும் வாழ்வில் ஒன்றாயே
சேருவோம் இவர்கள் நினைவோடே
2005ம் ஆண்டு 26ம் திகதி ஆழிப்பேரலை ஆண்டு நினைவு ஒளிவிழாவுக்காக எழுதப்பட்டது
24.11.2005
 

ஒள்விளக்கான்
நீர் அலையால் நீர் மறைந்தீர்
போர் அலையால் பெருந்த துயர்தான் நினைவெல்லாம் நீராக
நின் முகங்கள் தேடுகிறோம்.
(நீர் அலையால்)
மறவாது நெஞ்சம் வாழ் நாளில் என்றும்
பிரிவாகி போனாலும் பிரியாது நினைவு இனமென்ன மதமென்ன மனிதர்க்கு - இங்கு
இதயங்கள் சேர்ந்தாலே மனிதம் மலரும்
(நீர் அலையால்)
பூலோகம் எங்கும் புதிதாக நெஞ்சம் - உம்
நினைவோடு கலந்து நிதமாக இனி எங்கும் எந்நாளும் இன்னல்கள் இன்றி
நிலையான பெருவாழ்வு யாவர்க்கும் வேண (நீர் அலையால்)
கரங்களை சேர்ப்போம் நாம் கவலை தீர்ப்டே
எதிர்காலம் எல்லோர்க்கும் சமமாக ஆக என்னாளும் நீங்களே ஒளிவிளக்காவீர்
என்றென்றும் நினைவாகி நிறைவீரே நீ"
w (நீர் அலைU
2005ம் ஆண்டு 26ம் திகதி ஒளிவிழாவுக்காக எழுதப்
-59

Page 39


Page 40


Page 41

திதிஆதினதுநிஜதி