கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓமம் வளர்த்தல் திருமந்திர விளக்கம்

Page 1
ộ LDLi
தி
(b.
D
'[[:5്

Page 2

முன்னுரை
ஓமம் வளர்த்தல்
திருமந்திர விளக்கம்
ஓம் என்னும் இறைநாமத்தை ஓதி ஓமில் இயங்கும் இறைப் பொருளை வளர்த்து உணர்வதையே ஒமம் வளர்த்தல் என்று திருமந்திரம் கூறுகிறது. இறைவனை அறிந்து உணர்ந்து அவன் அருள் பெறுவதற்கு இதுவே சன் மார்க்கம். திருமந்திரம் மிகத் தெளிவாக விளக்குகிறது.
2986. பூதக் கண்ணாடியிற் புகந்திலன் போதுளன்
வேதக் கண்ணாடியில் வேறே வெளிப்படும் நீதிக் கண்ணாடி நினைவார் மனத்துளன் கீதக் கண்ணாடியிற் கேட்டுகின்றேனே.
நிலம், நீர், நெருப்பு, வாயு, ஆகாயமாகிய பூதங்களில் இறைவனைக் காணவோ உணரவோ முடியாது. உடலும் உயிரும் இணைந்து நிற்கும் வேதப் பொருள்களில் உடல் வேறாய் உயிர் வேறாய் யோகிகளுக்கு வெளிப்பட்டு நிற்கும். எல்லா உயிர்களிலும் ஐந்தெழுத்தே நீதியாய் உயிர் வாழ்கின்றன. ஐந்தெழுத்தின் இயக்கமே நாதமாய்க் கீதமாய் யோகிகள் அனுபவிப்பர்.
ஓமம் வளர்த்து அடையும் பலனைத் திருமந்திரம் விளக்குகின்றது.
2987. நாமம் ஓராயிரம் ஒதுமின் நாதனை
ஏமம் ஒராயிரத்துள்ளே இசைவீர்கள் ஓமம் ஓராயிரம் ஒதவல்லார்க்கு காமம் ஓராயிரம் கண்டொழிந்தார்களே.
விந்து நாதத்தில் விளைந்த ஆத்ம சக்கரத்தை அகாரம், இகாரம், உகாரம், ஓங்காரம், மகாரமென ஐந்தெழுத்தாய் பஞ்சாக்சர மந்திரமாய் பிரித்து நந்தீஸ்வரன் தனது சீடர்களுக்கு விளக்கிக் கூறியுள்ளார். திருமந்திரத்தைக் கற்று உணர்ந்தவர்களுக்கு அல்லது சற்குருவின் தீட்சை பெற்றவர்களுக்கு ஐந்தெழுத்தில் இயங்கும் பிரான வாயு அகார உகார மகாரமாகிய முப்பதத்தில் ஆத்ம

Page 3
தண்டாய் கோதண்டமாய், ஏகம்பமாய் இயங்குவதை உணர்வார்கள். சீவன் சிவலிங்கமென்று திருமந்திரம் கூறுகிறது. ஆத்மா முப்பதத்தில் இயங்கும் பொழுது இறை நாமமாகிய ஒம் என்னும் திருநாமத்தை ஒதிக்கொண்டே செயல்படுகின்றது. இந்த உணர்வோடு அணைந்து ஐந்தெழுத்தை ஒதுவதே சன்மார்க்கம், மானிடப் பிறப்பின் நோக்கம். இதைக் காணாதவர்கள் பிறப்பதும் அழிவதுமாய் நிற்பர். திருமூலர் விசனப்படுகின்றார். ஓம் என்னும் மெய்ப்பொருளைக் காணாதவர்கள் கழிந்து அழிவார்கள்.
64. அண்ணல் அருளால் அருளும் இவ் ஆகமம்
எண்ணிலி கோடி தொகுத்திடுமாயினும் அண்ணல் அறைந்த அறிவு அறியாவிடில் எண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே.
அண்ணல் அறைந்த அறிவு = இறைப் பொருளான ஆத்மா கூறும் உரைக்கும் "ஓம்" என்னும் அறிவு அறியாவிட்டால் கோடிக் கணக்கான தொகுப்புக்களும் ஒரு பலனும் அளிக்காது.
761. காணகிலாதார் கழிந்தோடிப் போவர்கள் காணகிலாதார் நயம் பேசித் திரிவார்கள் காணகிலாதார் கழிந்த பொருளெல்லாம் காணகிலாமற் கழிகின்ற வாறே.
ஓமத்தை ஓதி வளர்த்து ஆத்ம உய்வு பெறுங்கள். சி. இராமநாதன்
திருமூலர் சங்கம் 3, றிட்ஜவே பிளேஸ்.

221.
327.
ஓமம் வளர்த்தல்
ஒண் சுடராணை உலப்பிலி நாதனை ஒண் சுடராகி என் உள்ளத்திருக்கின்ற கண் சுடரோன் உலகேழுங் கடந்த அத் தண் சுடர் ஒமத்தலைவனுமாமே.
கண் சுடர் = நெற்றிக் கண்ணில் வெளிப்படும் சோதி. ஓமத் தலைவன் = இறை நாமத் தலைவன்.
ஒமத்துள் அங்கியின் உள் உளன் எம்இறை ஈமத்துள் அங்கி இரதங் கொள்வான் உளன் வேமத்துள் அங்கி விளைவு வினைக்கடல் கோமத்துள் அங்கி குரைகடல் தானே.
அங்கி = ஆத்ம சுடர்.
தானே வீடும் பற்றிரண்டுந் தரித்திட தானே விடப்படும் ஏதொன்றை நாடாது பூமேவு நான்முகன் புண்ணிய போகனாய் ஒமேவும் ஒராகுதி அவி உண்ணவே.
பூமேவு நான்முகன் = கருவில் மிதித்த கமலத்தில் எழும் நான்கு முகம் உடைய ஆத்மா.
வாமத்தோர் தாமும் மதுவுண்டு மாள்பவர் காமத்தோர் காமக்கள் உண்டே கலங்குவர் ஒமத்தோர் உள் ஒளிக்குள்ளே உணர்வர்கள் நாமத் தோர் அன்றே நணுகுவர் தாமே.
நாமத்தோர் = ஒம் என்னும் இறைநாமத்தை ஒதுபவர்.

Page 4
326.
424.
725.
ஓமம் வளர்த்தல்
காமமுங் கள்ளும் கலதிகட் கேயாகும் மாமலமும் சமயத்துள் மயலுறும் போமதியாகும் புனிதன் இணை அடி ஒமய ஆனந்தத் தேறல் உணர்வுண்டே
தேறல் = அமுதம்,
கொண்டல் வரை நின்று இழிந்த குலக்கொடி அண்டத்துள் ஊறி இருந்து எண் திசையாகி
ஒன்றின் பதஞ் செய்த ஒம் என்ற அப்புறக் குண்டத்தின் மேல் அங்கி கோலிக் கொண்டானே.
அங்கி = ஆத்ம சுடர்
ஒமம் ஒலிக்கும் உலகை வலம் வந்து
பாதங்கள் நோவ நடந்தும் பயனில்லை காதலில் அண்ணலைக் காண இனியவர் நாதன் இருந்த நகர் அறிவாரே.
ஒம் என்னும் ஒலி உலகம் முழுவதும் வியாபித்து கடந்து நிற்கின்றது. அண்ணல் = ஆத்மாவாக அண்ணி நிற்கும் இறைவன்.
உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன் உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று உடம்பினுள்ளே நான் இருந்து ஒம்புகின்றேனே.
உறுபொருள் = அழியாத மெய்ப்பொருள், உத்தமன் இறைவன். ஒம்புகின்றேன் = ஒம் என்னும் மந்திரத்தை ஒதுகின்றேன்.

943.
973.
1073.
ஓமம் வளர்த்தல்
பரந்தது மந்திரம் பல்லுயிர்க்கெல்லாம் வரந்தரும் மந்திரம் வாய்த்திட வாங்கித் துரந்திடும் மந்திரம் சூழ்பகை போக உரந்தரும் மந்திரம் ஒம் என்று எழுப்பே.
ஒம் என்னும் மந்திரம் எல்லா உயிர்களுள்ளும் பரவி நிற்கின்றது. அது வரங்கள் தரும். பகையையும் துரத்திடும். வல்லமை தரும்.
ஒமென்று எழுப்பித் தன் உத்தம நந்தியை நாமென்று எழுப்பி நடு எழு தீபத்தை ஒமென்று எழுப்பி அவ்வாறு அறிவார்கள் மாமன்று கண்டு மகிழ்ந்திருந்தாரே.
உத்தம நந்தி = ஆத்மா. நடு எழு = சுலுனை நாடியில்
எழும். மாமன்று = பெரும் சித்தாகாச வெளி.
ஆமத்தினிது இருந்த அன்ன மயத்தினை ஒமத்திலே உதம் பண்ணும் ஒருத்தி தன் நாம நம சிவ என்று இருப்பாருக்கு நேமத் தலைவி நிலவி நின்றாளே.
ஆமத்து = எல்லாப் பொருட்களிலும் அன்ன மயம் = எது மெய் எது பொய் என்று அறியும்.
ஓங்காரி என்பாள் அவள் ஒரு பெண் பிள்ளை நீங்காத பச்சை நிறத்தை உடையவள் ஆங்காரியாகியே ஐவரைப் பெற்றிட்டு ரீங்காரத்துள்ளே இனிது இருந்தாளே.
ஓங்காரி ஒம் என்னும் நாமத்தை உரைப்பவள். ஐவரை = ஐந்தெழுத்தில் இயக்கும் உயிரை,

Page 5
0.91.
306.
1206.
213.
ஓமம் வளர்த்தல்
தாமக் குழலி தயைக் கண்ணி உள் நின்ற வேமத்து இருள் அற வீசும் இளங்கொடி ஒமப் பெருஞ்சுடர் உள் எழு நுண்புகை மேவி அமுதொடு மீண்டது காணே.
வேமத்து = அஞ்ஞானம். சோதி மயமான ஒம் என்னும் மந்திரம் உள்ளிருந்து எழும்.
உணர்ந்தெழும் மந்திரம் ஒமெனும் உள்ளே மணந்தெழும் ஆங்கதியாகிய தாகும் குணர்ந்தெழு சூதனும் சூதியுங் கூடிக் கணந்தெழுங் காணும் அக்காமுகையாமே.
சூதனும் சூதியும் = சிவனும் சத்தியும், விந்துவும் நாதமும்,
ஆமை ஒன்று ஏறி அகம் படியா னென ஒம என்று ஒதி எம் உள் ஒளியாய் நிற்கும் தாம நறுங் குழல் தையலைக் கண்ட பின் சோம நறுமலர் சூடி நின்றாளே.
அகார உகாரக் குழலில் இயங்கும் சத்தி.
ஆமத்து இனிதிருந்து அன்ன மயத்தினள் ஒமத்திலேயும் ஒருத்தி பொருந்தினள் நாம நம சிவ என்று இருப்பார்க்கு நேமத் துணைவி நிலாவி நின்றாளே.
நாம நம சிவ = ஒமெனும் சிவ நாமம். நேமத் துணைவி = கருணை காட்டும் சத்தி.

1罗家爵,
556.
258.
2233.
ஓமம் வளர்த்தல்
தானந்த மேலே தருஞ் சிகை தன்னுடன் ஆனந்த மோகினியாம் பொற் திருவொடு மோனையில் வைத்து மொழி தருகூறது வானவை ஒமெனும் அவ் உயிர் மார்க்கமே.
மோகினி = சத்தி. பொற்திருவொடு = ஒளிமயமான இறை பாதத்தொடு உயிர்மார்க்கம் = உயிர் இயங்கும் வழி.
ஓங்காரத்துள் ஒளி உள்ளே உதயமுற்று ஆங்காரமற்ற அனுபவம் கைகூடார் சாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார்
நீங்காச் சமயத்துள் நின்று ஒழிந்தார்களே.
அகார உகாரத்தில் எழுந்த ஓங்காரத்துள்ளே உதயமான ஆத்மசோதி, ஒழிந்தார்கள் = அழிந்தார்கள்.
ஊமை எழுத்தொடு பேசும் எழுத்துறில் ஆமை அகத்தினில் அஞ்சும் அடங்கிடும் ஒமயமுற்றது உள் ஒளி பெற்றது நாமயமற்றது நாம் அறியோமே.
ஊமை எழுத்து = அகாரம். ஓம் என்னும் நாமம் அற்று சமாதிநிலை பெற்றது. நாம் அறியோம்.
ஆமவரிற் சிவனார் அருள் பெற்றுளோர் போமலந் தன்னாற் புகழ் விந்துநாதம் விட்டு ஒமயமாகி ஒடுங்கின் நின்மலந்து ஒமறு சுத்தா அவத்தைத் தொழிலே,
போமலம் = மலம் அற்றுவிடும். விந்து நாதம் அற்று ஒமயமாகி ஒடுங்கில் ஓம் அறுந்து சுத்த சமாதிநிலை அடையும்.

Page 6
2352.
2476.
2486.
2578.
ஓமம் வளர்த்தல்
ஒம்புகின்றான் உலகேழையும் உள் நின்று கூம்புகின்றார் குணத்தின்னோடுங் கூடுவர் தேம்புகின்றார் சிவஞ் சிந்தை செய்யாதவர் கூம் பகில்லார் வந்து கொள்ளலு மாமே.
ஒம்புகின்றான் = ஆத்மாவானது ஒமெனும் ஒதிக் கொண்டே இயங்குகின்றான்.
சிவமாகி மும்மலம் முக்குணச் செற்றுத் தவமான மும்முத்தி தத்துவத்து அயிக்கியத்து உவமாகிய நெறி சோகமென்போர்க்குச் சிவமாம் அமலன் சிறந்தனன் தானே.
சிவமாகி = சிவன் ஓம் என்னும் மந்திரத்தை ஒதித் தவம் செய்து சிவமாய் மாறி.
ஒளியை ஒளி செய்து ஒமென்று எழுப்பி வளியை வளி செய்து வாய்த்திட வாங்கி வெளியை வெளி செய்து மேலெழ வைத்துத் தெளியத் தெளியுஞ் சிவபதந்தானே.
ஒளி = சித்தாகாசத்தில் வெளிப்படும் ஆத்ம சோதி. வெளி = பரவெளியான சித்தாகாசம். சிவபதம் =
கருவில் மிதித்த இறைவன் பாதம்.
உயிர் பரமாக உயர் பரசீவன் அரிய சிவமாக அச்சிவ வேதத்து திரியிலுஞ் சீராம் பராபரன் என்ன உரிய உரையற்ற ஒமய மாமே.
உயிர் பரமாக = சிவன் சிவனார்.

2676.
2677.
2798.
2824.
ஓமம் வளர்த்தல்
ஒமெனும் ஒங்காரத்துள்ளே ஒருமொழி ஒமெனும் ஓங்காரத்துள்ளே உருவரும் ஒமெனும் ஒங்காரத்துள்ள பல பேதம் ஒமெனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே.
உருவரும் = சீவன் சிவலிங்கமாகும்.
ஓங்காரத்துள்ளே உதித்த ஐம்பூதங்கள் ஓங்காரத்துள்ளே உதித்த சராசரம் ஓங்காரா தீதத்து உயிர் மூன்றும் உற்றன. ஓங்கார சீவ பர சிவரூபமே.
அகார உகாரம் விரிந்த ஓங்காரமே ஐம் பூதங்களையும் அசைவு அசைவற்ற எல்லாத் தோற்றங்களையும் படைத்தது.
மருவும் துடியுடன் மன்னிய வீச்சு மருவிய அப்பு மனதுடன் இசையும் கருவில் மிதித்த கமலப் பதமும் உருவில் சிவாய நமவென ஒதே.
வீச்சு = பிராண வாயுவின் ஓட்டம். கருவில் மிதித்த கமலப் பாதத்திலிருந்து எழுந்த பிராணவாயுவே ஒம் என்னும் சிவநாமத்தை உரைக்கிறது. அதை ஒது.
ஒமெனும் ஒரெழுத்துள் நின்ற ஓசை போல் மேல் நின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள் சேய் நின்ற செஞ்சுடர் எம்பெருமான் அடி ஆய் நின்ற தேவர் அகம்படியாமே.
விழுப்பொருள் = அரிய மெய்ப்பொருள்.

Page 7
翠臣晶晶一
? HE7,
உரையற்ற ஆன்நத மோன கரையற்ற சத்தி ஆதி கான மருவுற்று DE TITLD LIJFTIJL DI உரையற்ற தாரத்தில் உள்
மோண் = பனை, உன
இறைபாதம்.
நாமம் ஓராயிரம் ஒதுமின் ந ஏமமோராயிரத்துள்ளே இ! ஓமம் ஓராயிரம் ஒதவல்லா காமம் ஓராயிரம் கண்டொ
நாமம் = ஓம் என்னும்
ஏமம் - நன்மை அளிச் ஓமம் = ஒம் என்னும் காமம் = உலக ஆசை
 

ர்த்தல்
சொரூபத்தன்
iਮ
T. ஒளியாமே.
ரயற்ற தாரம். கருவில் மிதித்த
tigಿಫ್ಟ್ಬT ਕੁੜੀ Tallii
ழிந்தாரே.
இனறநாமம் கும் கொடைகள்
நாமம்
" హారో
திருமூலர் சங்கம்