கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பள்ளிக்கூட வெள்ளாடு

Page 1


Page 2

பள்ளிக்கூட வெள்ளாடு
(குழந்தைப் பாடல்கள்)
குழ. கதிரேசன் B.A.
சிற்பனை உரிமை
ஐந்திணைப் பதிப்பகம்
தொலைபேசி-849410 279, பாரதிசாலை திருவல்லிக்கேணி, சென்னை-5

Page 3
முதற்பதிப்பு : நவம்பர் 1990 உரிமை : ஆசிரியருக்கு யாழ் வெளியீடு-1
விலை : ரூ. 4-00
PALLIKKUDA VELLADU Children Poems By KUZHA. KATHIRESAN 20 + 24 = 44 Pages 10pt Letters.
Sales Right :
Phone : 8494.10 AINTHINAI PATHIPPAGAM 279, Pycrofts Road Triplicane, Madrias-5
இந்நூலில் உள்ள பாடல்களை கல்விக் கூடங்களிலும் பொது மேடைகளிலும் பயன்படுத்தலாம். ஆசிரியரின் ஒப்புதல் தேவையில்லை.
இப்பாடல்களைப் பள்ளிப் பாட நூல்களிலோ மற்ற நூல்களிலோ சேர்க்க விரும்புவோர் ஆசிரியரின் ஒப்புதலைப் பெற வேண்டுகிறோம்,
ஆசிரியர் முகவரி :
AP. I 108 தென்றல் குடியிருப்பு , 3ஆவது தெரு, மேற்கு அண்ணா நகர், சென்னை-40.
அச்சிட்டோர் : பூர் கோமதி அச்சகம் சென்னை-5

8.
9.
10.
Il
2.
13.
14.
15.
6.
17.
18.
19. 20.
21.
22。
பொருளடக்கம்
வணங்குங்கள் குரங்குக் குட்டி ஒடிவா தொப்பைக் கோழி அழுக்குகள் அகற்றுவோம் மழையே! மழையே வா! வா! வா! தென்றல் காற்று பள்ளிக்கூட வெள்ளாடு கொழுக்கட்டைப் பிள்ளையார் பேசும் கிளியே இங்கே வா! வெள்ளைப்பசு அன்பு வேணுமா?
ஒடும் வண்டியில் ஏறாதே! உண்மைதானா? ஆகாயத்தை அடித்தது யார்? நிலா மின்சாரம் மண்புழுவே ஒளிந்துகொள் தொலைக்காட்சி அமைதி காப்போம் உலகிலே! ஆழமாய் எண்ணு! நூறு ஆண்டுகள் வாழ்ந்திடுவோம்!
கருணை மழை வெள்ளிப் பந்து
12
13
14
15
ᏗᏮ
17
18
19
21
23
24

Page 4
முன்னுரை
"எலி கடித்த பூனை” நூல் வெளி வந்து 9 ஆண்டு களுக்குப் பிறகு பள்ளிக்கூட வெள்ளாடு அச்சாகிறது.
இந்நூலை ருஷ்யப் புத்தகங்களுக்கு இணையாக அட்டைப்படம் மட்டுமல்லாது ஒவ்வொரு பக்கத்திலும் 5 வண்ணத்தில் அச்சிட்டு மலிவு விலையில் வெளியிட ஆவல் கொண்டு படங்கள் முழுமையும் வரைய ஏற்பாடு செய்து அப்பணியும் சிறப்புற நடைபெற்று வருகிறது.
பொருளாதாரச் சிக்கலால் நூல் வெளிவரக் கால தாமதம் ஆகியதால், நண்பர்கள் பலர் கவிதைகளைச் சிறிய அளவில் அச்சில் கொண்டு வரும்படிக் கேட்டுக் கொண்டதால் உடன் படங்கள் இல்லாமல் அச்சிட்டு உள்ளோம்.
படங்கள் இல்லாத குழந்தை நூல்களைக் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்கள் மலர்கள் இல்லாத தோட்டம் என்று குறிப்பிடுவார்கள்.
இந்த 9 ஆண்டு காலத்திலும் எழுதிய கவிதைகளைப் பாடிப் பாடித் திருத்தியும் பதிப்பகத்துக்கு வருகிற, மற்றும் இத்துறையில் சிறந்து விளங்குகிற ஏராளமான நண்பர்களிடமும் கவிதைகளைக் காண்பித்துப் பிழை களைத் திருத்தியும் அச்சிட்டுள்ளேன்.
இந்நூலைப் பார்வையிட்டு நல்ல கருத்துக்களை வழங்கி இந்நூலுக்குச் சிறந்த முறையில் முகவுரை எழுதித்

தந்த இந்து மேல்நிலைப் பள்ளித் தமிழாசிரியர் திரு. இரா. சுப்பிரமணியன் அவர்களுக்கும் சிறந்த முறையில் அணிந்துரை வழங்கிய சாஹித்திய அகாதெமி பரிசு பெற்ற முதுபெரும் எழுத்தாளர் திரு. லா.ச. ராமாமிருதம் அவர் களுக்கும் கவிதைகளைச் செப்பனிட்டு வாழ்த்துக் கவிதை வழங்கிய சந்தக் கவிமணி திரு. தமிழழகன் அவர்களுக்கும் கவிதைகளைப் படித்துத் திருத்தி என்னை உற்சாகப் படுத்திய புலவர் திரு. அண்ணாமலை அவர்களுக்கும் டாக்டர் மின்னூர் சீனிவாசன் அவர்களுக்கும் கவிதை எழுத உந்து சக்தியாக விளங்கி நின்ற திருவாளர்கள் பேராசிரியர் டாக்டர் இளவரசு, டாக்டர் பொற்கோ, பேராசிரியர் மது ச. விமலானந்தம், டாக்டர் தமிழண்ணல் என் தாய் தந்தையர், என் அன்பு மக்கள் நாகம்மை, விசாலாட்சி, மனைவி திருமதி. நாச்சம்மை மற்றும் ஏட்டில் அடங்காத எண்ணற்ற அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
இச்சிறு நூலுக்கு அட்டைப்படம் வரைந்து தந்த ஓவியர் கலைமணி அவர்களுக்கும் சிறந்த முறையில் அச்சிட்டுத் தந்த கோமதி அச்சகத்தாருக்கும் இந்நூலை ஆர்வத்துடன் வாங்கிப் படிக்கின்ற கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் கொண்ட பிஞ்சு நெஞ்சங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
இந்நூலில் காணும் குறைகளையும் தங்களுடைய மேலான கருத்துக்களையும் தயங்காமல் எழுதுங்கள். அடுத்த பதிப்பில் திருத்தி அச்சிடுவதற்கும் குழந்தை இலக்கியத்துறையில் வளருகின்ற இளம் கவிஞன் தன்னை நெறிப்படுத்திக் கொள்வதற்கும் வழிகாட்டியாக விளங்கும் சிஎன்பதை அன்புடன் தெரிவிக்கும்
உங்கள் நண்பன்
குழ. கதிரேசன்

Page 5
முகவுரை
அருந்தமிழ் நூல்களை வெளியிட்டும் விற்பனை செய்தும் வருகின்ற ஐந்திணைப் பதிப்பகம் தமிழகத்தின் தலைநகரில் அமைந்த ஒர் எழிலார்ந்த நற்றமிழ்க் கழகம் எனக் கூறுவதே பொருந்தும். இன்றும் அது தன் மரபை யொட்டியே 'யாழ் வெளியீடு' என்னுமோர் ஒப்பற்ற வெளியீட்டை முன் வைத்துள்ளது. இம்முதல் வெளியீடு 'பள்ளிக்கூட வெள்ளாடு' என்னும் புதுமையான தலைப்பையேற்று குழந்தைகளுக்குரிய இசைப்பாடல் களைத் தாங்கிவருகிறது. இதனுள் இருபத்திரெண்டு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இப்பாடல்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இசைத்து இன்புறத் தகுந்த, எளிய சொற்களைக் கொண்டும், இனிய கருத்தும் ஒசை யும் கொண்ட கட்டமைப்பில் விளங்குகின்றது. இதன் ஒவ்வொரு பாடலும் படிப்பார், கேட்பார் உள்ளத்தை மகிழ்விப்பதோடு நெகிழ்விக்கவும் செய்கிறது. இதனுள் உள்ள பாடல்கள் ஒவ்வொன்றின் எழிலையும் ஏற்றத்தை யும் எடுத்துரைக்கின்ற முகவுரையாகவே இக்கட்டுரை அமைகின்றது.
நம் கண்ணுக்குத்தெரிந்த தெய்வங்களாக விளங்குகிற அம்மா, அப்பா, ஆசிரியர் மூவரையும் இன்றளவும் மாதா பிதா, குருவே தெய்வம் என புரியாத சொல்லில் அமைந்த தொடரை, இனிய தமிழில் எளிய முறையில் ஆசிரியர் எடுத்துரைக்கும் பான்மையினால் நம் உள்ளம் முதலில் அவரை வணங்கத் தூண்டுகிறது. திருக்குறள் காட்டும் இயல்புடைய மூவர் யார் என்பதை விளக்கும் உரையாகவும் இச்செய்தியைப் பாங்குடன் பாடலில் அமைத்திருப்பது பாவலர் தனது ஓங்கியபுலமையை நமக்கு உணர்த்துகிறது. முதலில் குழந்தைகளை வணங்குமாறு

7
நெறிப்படுத்தும் ஆசிரியர் "சொல்லிய முறையால் சொல்லவும் படுமே" என்ற முறைப்படி இப்பாடலைத் தொகுதியின் முதலில் வைத்துள்ளமை ஆசிரியரின் நுண்மாண் நுழை புலத்தைக் காட்டுகிறது.
குரங்குக்குட்டி ஓடி வா என்னும் தலைப்பில் அதன் இயல்புகள் அனைத்தையும் கூறுவதோடு நில்லாது குரங்கு பற்றி முன்பே வழங்கி வரும் ஒர் அறநெறிக் கதையை ஒரே தொடரில் சுட்டி நம் மனக்கண்முன் கதை முழுவதை யும் கொண்டு வருவதும் ‘என் பள்ளிக்கூட சீருடை நீ போடலாம் வா' எனக் கூறுவதனால் பாவேந்தரின் பாங்கிலேயே பள்ளிக்குச் செல்லும் குழந்தை சீருடையில் தான் செல்ல வேண்டும் என்பதும் அது மிகச் சிறந்த ஆடை என்பதும் குழந்தையின் உள்ளத்தில் எளிமையாகப் பதிய வைக்கும் பாவலர் ஆற்றலை எவ்வளவு வேண்டு மானாலும் பாராட்டலாம்.
'தொப்பைக் கோழி என்னும் தலைப்பில் கோணல் தென்னை போல நீ குறும்புத்தனம் பண்ணாதே’ என்னும் தொடரால் *ஆசிரியர் ஆகாதார் இலக்கணமாக நன்னூலார் எடுத்துக் காட்டும் முடத்தெங்கு என்பது புலவர் க்கு மட்டுமே பொருள் விளங்கும். இத்தகைய அரிய மேற்கோளைக் கூட குழந்தைகளும் அறியுமாறு;
கோணல் தென்னை போல நீ குறும்புத் தனம் செய்யாதே! அடுத்த வீட்டில் முட்டையிட்டு அப்பாவி போல் வாராதே! என எளிய தொடரில் அமைத்து அடுத்த அடியிலேயே அதன் பொருள் யாவருக்கும் விளங்க பாட்டினைப் புனைந் துள்ளமை மிகவும் போற்றத் தகுந்தது.
நம்ம வீட்டில் முட்டையிடு; நன்றாய் குஞ்சு பொரிக்கலாம்!
எனக் கூறும்போது இவ்வடி ஏதோ பாட்டிற்கு எழுதியது போல இயல்பாக இருந்தாலும் அடுத்த வீட்டில் முட்டை

Page 6
8
யிடும் கோழி கட்டாயம் குஞ்சு பொரிக்க முடியாது என்பதையும் இதன் வாயிலாக உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யக் கூடாது என்பதனையும் அவ்வாறு செய்பவர் உருப்படமாட்டார் என்பதையும் ஆசிரியர் இலை மறை காயாகக் குழந்தைகளுக்கு எடுத்துரைப்பது அவரின் ஆழமான உள்ளக்கருத்தை நமக்கு வெளிப்படுத்து கிறது.
*அழுக்குகள் அகற்றுவோம்' என்னும் தலைப்பில் நோய் வருவது எதனால் என்பதும் நோயை போக்குவது எப்படி என்பதும் மிக அழகாகக் கூறப்பட்டுள்ளது இஃது உடல் நலம் காக்கவும், உயிர் நலம் பேணவும் நம்மை வழிப்படுத்தும் ஒர் மருத்துவ நெறியென்றே கூறுவது சாலப் பொருத்தமுடையதாகும்.
'மழையே மழையே வா வா’ என்னும் பாடலில் நீரின் இயல்பை, "பாம்பாய் நெளிந்து விரைந்தோடும் பள்ளம் பார்த்தால் புகுந்தோடும்’ என மிக அழகானதொரு உவமையால் படம் பிடித்துக் காட்டு கிறார்.
நீரைக்கண்டாலே குழந்தைகளுக்கு அளவற்ற மகிழ்ச்சி தோன்றும். இந்நிலையில் குழந்தைகள் ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளுக்குச் செல்லும் போது பொறுப் புள்ள பெரியவரின் துணை வேண்டுமென்பதும் அவ்வாறன்றிச் செல்லக் கூடாது என்பதும் குறிப்பிடும் ஆசிரியர் இதே போன்று பாடல் 7-இல் ‘அம்மா அப்பா கூட நான் அருகில் மேயப் போகிறேன்" என்று குறிப் பிடுவது எண்ணிப் போற்றத் தக்க ஒன்று எனலாம். மேலும் நீச்சல் பழக்கம் மிக மிகத் தேவை என்பதை வெளிப்படையாக
அப்பா துணையுடன் நானுமே ஆறு, குளமும் சென்றிடுவேன்! ஆட்டம் போட்டுக் குதித்திடுவேன்! அக்கரை நீந்தி வந்திடுவேன்! எனக் கூறுகிறார்.

g
ஒர் அஃறிணை (வெள்ளாடு) வாயிலாகவும் உயர்திணை (தந்தை) வாயிலாகவும் "பெரியாரின் துணை தேவை என்பதையும் ஆசிரியர் வலியுறுத்திச் சொல்வது, குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் திருக்குறளில் வரும் “பெரியாரின் துணைக் கோடல்" என்னும் அதிகாரத்தின் விளக்கமாக-சாறாக * அப்போதக்கிப்போதே சுதி வைப்பதைப் போல்" சொல்லியிருப்பது ஆசிரியரின் வரும் முன் உரைக்குந் திறனையும் வருங்கால வாழ்வின் பயனையும் நமக்குத் தருவதாக அமைந்துள்ளது. தென்றல் காற்று எனும் தலைப்பில் ஏற்றத் தாழ்வே யில்லாமல் எல்லோ ரிடமும் வருகின்றாய்' என்னும் அடி யால் இங்கேயிருக்கும் தனியுடைமைக் கொள்கையைத் தாக்கி தகர்த்துத் தரைமட்டமாக்கிப் பொதுவுடைமைக் கொள்கையைத் தென்றல் காற்றால் மலரச் செய்வதும் பாடல் 15-இல் குளிர்ந்த நிலவை "உலகில் ஏற்றத்தாழ்வே பாராமல் ஒளியைத் தருகின்றாய்' எனும் பொதுமையுணர் வால் சுரணையற்ற மக்களுக்குச் சூடு கொடுப்பதும் ஆசிரி யரின் குமுகாயப் பார்வைக்கு ஏற்ற எடுத்துக்காட்டு: களாகும். அஃறிணைப் பொருளாகிய தென்றல் காற்றுக்கு. இருக்கும் பொதுமையுணர்வு மிகுதியானவர்க்கு இல்லை என்னும் இழி நிலையைப் பற்றிப்பேசும்போது உனக்குத் தெரிந்த வாழ்க்கை முறை ஒவ்வொருவருக்கும் தெரிய லையே எனக் கூறி ஏங்கிப் பெருமூச்சு விடுகிறார்.
“பள்ளிக்கூட வெள்ளாடு" பாட்டில் சிறுவன் வழி ஆட்டுக்குட்டியைப் படிக்க அழைக்கிறான். இங்கு. ஆட்டுக்குட்டி கட்டாயம் படிக்க வாராது என்று தெரிந்தும் அதையேன் ஆசிரியர் படிப்பதற்கு அழைக்க வேண்டும் என எண்ணும் போது ‘மானிடராய் பிறப்பது அரிது எனச்சொல்லும் ஒளவையார், கல்வியையும். ஞானத்தையும் பெறுவது அதைவிட அரிது’ எனக் குறிப்பிடுவதை ஒப்பு நோக்கி உண்மை உணர்ந்து மகிழ் கிறோம்.

Page 7
10
தாய்மொழிக் கல்வியின் தனிச்சிறப்பையும், தமிழ் வழிக் கல்வியின் தனிச் சிறப்பையும் பாவேந்தர் பாரதிதாசன் போன்ற பலர் நமக்கு விரிவாகக் கூறியிருப் பினும் கல்லும் கரைந்துருகுமாறு கனிந்து- கசிந்து குழந்தைகட்கு ஏற்ற முறையில் ‘அம்மா என்று கன்றைப் போல் அழகு தமிழில் பேசணும்; ஆனந்தமே நம் வாழ்வில் அணையா விளக்கு ஆகணும்' எனும் பாடலடி களால் தெளிவாக்கியிருப்பது படிப்பார் உள்ளத்தைப் பண்படுத்தித் தமிழ் மீது தன்னிகரில்லாப் பற்றுக் கொள்ளச் செய்கிறது.
* இன்பத்தமிழின் பெருமையை உலகம் எங்கும் சொல்லணும்" என்னும் அடியின் மூலம் "தேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்னும் பாரதியின் பாடலை பச்சிளங் குழந்தைகளுக்குப் பக்குவப்படுத்திக் கொடுத்துள்ளமை வாயில்லிட்ட கற்கண்டாய் இனிக்கிறது.
"கொழுக்கட்டைப் பிள்ளையார்' வழியாக உடற் பயிற்சியின் உயர்வை உணர்த்த வந்த ஆசிரியர் * ஒடியாடும் போது நமது; உடலில் வலிமையேறுமாம்" எனவும் முதுமையடைந்தவர் கூட உடற்பயிற்சியினால் இளைஞரைப் போல் சுறுசுறுப்பாக இயங்குவர் எனவும் நகைச்சுவை ததும்ப தம் கருத்தைப் பாடலாக வடித் துள்ளமை போற்று தற்குரியது.
'பேசுங்கிளியே இங்கே வா!' எனக் கொஞ்சும் மொழி யால் கூவி அழைக்கும் ஆசிரியர், குருவிக்காரர் போல் உன்னைக் கூண்டில் அடைக்க மாட்டேன் நான்" என்னும் அடிகளால் நம்முடைய இழிவான செயலைக் கிளியின் வழிப் படம் பிடித்துக் காட்டிக் குழந்தைகளின் எதிர்கால வாழ்வில் அன்புணர்வைத் தூண்டுகிறாரென்றே சொல்லத் தோன்றுகிறது.
அமிழ்தினும் இனிய தமிழினை மறந்து குழந்தைகள் "அம்மியும் மம்மியுமாக பயின்றுவரும் இந்தக் காலத்தில்

11.
இப்படிப்பட்ட பாடலின் தேவை நமக்கு மிகுதியாகவே வேண்டியுள்ளது.
ஒவ்வொரு மாணவரும் மற்றவரும் வண்டிகளில் செலவு (பயணம்) மேற்கொள்ளும் போது மனப்பாடம் செய்து கொண்டு தங்கள் வாழ்க்கையில் இன்றும் என்றும் நடைபோட வேண்டிய ஒர் ஒப்பற்ற அறிவுரை நிரம்பிய பாட்டு ஒடும்வண்டியில் ஏறாதே’ எனக் கூறலாம். என்னைப் பொருத்த வரையில் இப்பாடலை நாட்டின் நலங்காக்கும் ஒரு விதியாகவே (சட்டம்) நான் கருது கிறேன்.
அறிவியலின் ஆக்கப் பணிகளுக்கே பொருளைச் செலவிடுதல் வேண்டும் என்னும் நெறியை உணர்த்த,
"ஆம்ஸ்டிராங்கு போல் நிலவில் நாமும்
"ஆழக்கால்கள் பதித்திடலாம்!" என மிகத் தெளிவாக சுவைபடக் கூறியுள்ளமை அவர் தம் அறிவியல் ஆர்வத்தை நமக்குப் புலப்படுத்து கிறது.
மழை மிகுதியாகப் பெய்து ஏரிகுளம் உடைப் பெடுத்து வெள்ளம் பெருக்கெடுத்து வரும் போது ஊர் 'களில் மக்கள் வீட்டுக்குள் இருப்பதை விட்டு, வீட்டின் மேல் காணும் ஒட்டின் மேல் உணவின்றிப் பட்டினியாய் இருப்பார்கள் என்பது வெள்ளம் கண்டார்க்கு வெள்ளிடை மலை. மேலும் ஆசிரியர் இவ்வளவும் சொல்லிவிட்டு யாருக்காகப் பாட்டு எழுதுகிறோம் என்பதை நினைவிற் கொண்டு அவர்களுக்குரிய பயனைநோக்கத்தை நிறைவேற்றும் வகையில் அழும் குழந்தையை சிரிக்கச் செய்வது போல்
சுட்டெரிக்கும் சூரியனே சுடர் ஒளியை வீசிடு! பள்ளிக் கூடம் போக வேணும் பக்கத் துணை ஆகிடு!

Page 8
12
எனக் கூறியிருப்பது ஒரு பாவலர்க்குரிய 5L_gö}LD@出」。 மிகக் கருத்தாகவும் கவனமாகவும் நிறைவேற்றியுள்ளார் என்பது மகிழ்வை அளிக்கிறது.
ஆசிரியர் இவ்வளவு சிறப்பாக பொதுமையுணர்வு, மொழித்தூய்மை, நடைமுறை வாழ்வு, அறிவியல் உலகு, மருத்துவ தோக்கு என்னும் பல்வேறு கருத்துக்களைக் கருவாகக் கொண்டு பாடல் புனைந்திருப்பது இன்றைய உலகில் அனைவர்க்கும் பயன் தரக்கூடியதாகும். இவ்வாசிரியரின் மொழித் தூய்மையும் வழக்குச் சொற் களும் எளிய, இனிய தொடரமைப்பும் பாடல் தோறும் காண முடிகிறது. இதனை மிகைநாடிப் பார்க்கையில் ஒரு தனித்தமிழ்ப் பாவியம் என்றே பாராட்டலாம். இவர் ஒரு சிறந்த குடும்ப மரபில் தோன்றியவர். அதனைத் தம் பாடல் வழியாகவும் அறிவு சான்ற பண்புடையோர் திருவாளர்கள் பொற்கோ, இரா. இளவரசு, தமிழண்ணல் மது. ச. விமலானந்தம் போன்றோர் நட்பின் வழியாகவும் நிலைநாட்டி வருகிறார். மேலும் குழந்தைப் பாவலர் என்ற பட்டியலில் பாவேந்தர், கவிமணி, வள்ளியப்பா போன்றோர் வரிசையில் பின்னே வருபவராயினும் தன் பா எழுதும் திறத்தால் இன்றைய குழந்தைப் பாவலர் களில் முன்னே சென்று கொண்டிருக்கிறார் என்பதற்கு இந்நூலே முற்றிலும் சான்றாக விளங்குகிறது. இந்நூல் இளைஞர்களுக்கு என்று மட்டுமே எண்ணாது அனைவரும் வாங்கிப் படித்துப் பயன் பெறுவது தமிழ் கூறும் நல் உலகுக்குத் தனி உயர்வாகும்.
மலர்க பொதுமை!
இந்து மேல்நிலைப் பள்ளி, அன்புள்ள,
திருவல்லிக்கேணி, இரா. சுப்பிரமணியன் GEFeir swbsor---600 005. 6.10.90

சாஹித்திய அகாதெமி பரிசு பெற்ற மாபெரும் எழுத்தாளர் திரு.லா.ச. ராமாமிருதம் அவர்களின்
அணிந்துரை
குழந்தைகளுக்கு நியாயம் வழங்காத யுகம் இது. தாயும், தகப்பனும் உத்யோகத்துக்குப் போய்க் கொண்டு, குழந்தைக்குத் தொட்டிலிலிருந்தே துரோகம். தாய்ப்பாலும் இல்லை- பெற்றோர்களின் அன்பும் கொஞ்சலும், ஆதரவும் பராமரிப்பும் - முக்கியமான உயிர் வளர்ப்பான்கள் கிடையாது. குழந்தை எடுப்பார் கைப்பிள்ளை ஆகிவிட்டது. பிஞ்சிலிருந்தே, திக்குமில்லை திசையுமில்லை.
தாயின் மடியில் அரிச்சந்திரன் கதை, பிரஹலாதன் கதை, ராமன் கதை கேட்கப் பேறு இல்லை, சொல்ல தாய்க்கு இல்லை.
ஏதெல்லாம் இயல்போ, இருக்க வேண்டுமோ அவை யெல்லாம் சேதியாகவும் அதெல்லாம் அந்தக் காலம்? எனும் எளக்காரமும் ஆகிவிட்டன.
ஆரிரரோ ஆராரோ? தூளியை ஆட்டிக்கொண்டே, தொன்றுதொட்டு வந்த பழக்கத்தில் யார் யாரோ? என்ற தத்துவத்தைப் பாடி ஊட்டுகிறாள். இது தத்துவம் மட்டு மில்லை 'நான் யார்? ஆத்மாவின் தேடல் கேள்விக்கு முளைநட்டாகிறது.
முட்டமுட்டத் தாய்ப்பாலைக் குடித்துவிட்டு தூளியுள் **Go, Ga Goo Goo?? என்று தன் முதல் ஒசைகளுடன் எச்சிலைக் கொப்புளித்துக் கொண்டு விளையாடுகிறது. அப்படியே தூங்கியும் விடுகிறது. அதன் முற்பிறப்புகள் நாங்கள் ஏணையுள் எங்கள் தலைகளை நுழைத்துக் கொண்டு, பார்க்கிறோம்.பாப்பா தூக்கத்தில் சிரிக்கிறது.

Page 9
且4
பாப்பாவுக்கு சாமி பூ காண்பிக்கிறார்டா! நாங்களும் குழந்தைகள் தானே!
இப்போது குழந்தையின் சிரிப்பைப் பார்க்க. ஆளில்லை. பார்க்க வேண்டியவர்கள் ஆபிஸில் ஃபைல் களைப் புரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
ஐம்பதுகளில் இல்லை, அதற்கும் சற்று முன்னாடியோ முழுக்க முழுக்கக் . குழந்தைகளைப் பற்றியே இருக்க வேணடும் எனும் ஆசையில், இதழ்கள் என்கிற பொதுத் தலைப்பில் வரிசையாக சில கதைகள் எழுதினேன். அவை களின் தனித்தனி முறையில் அவை வெற்றிகரமாக அமைந்தன என்ற போதிலும், போகப் போக அவை பூரா பூரா குழந்தைகளைப் பற்றி வரவில்லை. இனம் தெரிந்த சிறுவர்கள். அச்சிறுவர்களின் வெம்பல் பார்வையில் பெரியவர்களின் சேட்டைகள் எனப் படிப்படியாக மாறுவதை உணர்ந்ததும் என் முயற்சியைக் கைவிடும்படி ஆயிற்று. முழுக்க முழுக்கக் குழந்தைகளின் துல்லியமான மனதுள் பிரவேசித்து, அவர்கள் எழுத்தில் பிரதிபலிக்க. அவசியமான சுருதி சுத்தத்தைக் காப்பாற்ற என்னால் முடியவில்லை. அதுவே ஒரு உத்தியாகக்கூட (Technique) இருக்கலாம். ஆனால் அது எனக்குப் பிடிபடவில்லை.
அக்குரல் வந்து பிருந்தாவனத்திலிருந்து கிருஷ்ணனை மதுராவுக்குக் கூட்டிச் சென்ற அன்றே கிருஷ்ணனும் தன் குழந்தைப் பருவத்தை இழந்தான். பாகவதாரத்தில் பாதிக்கு மேல் பிருந்தாவனத்திலேயே பிழிந்தாயிற்று என்பது என் கருத்து. அந்த நாட்கள் இனி திரும்பாது என்று கிருஷ்ணனுக்கே தெரியும். அதனாலேயே அவன் வெகு காலம் அங்கு திரும்பவேயில்லை.
எனக்கு ஸ்வர்க்கம் வேண்டாம். பிருந்தாவனம் இருக் கிறது. ஸ்வர்க்கத்தில் அத்தனை சுகமும், எத்தனை வயதாகியும் பிருந்தாவனத்துக்கு, ஏக்கத்துக்கு ஈடாகுமா?

15
ஒரு முன்னுரைக்கு இத்தனை பீடிகை எதற்கு எனும் கேள்விக்கு இதுதான் என் பதில், மனித் வாழ்க்கையில் குழந்தைப் பருவம் மதிப்பிடவொணாதது. நல்லதோர் வீணை நலம் பெற உருவாகும் பக்குவநிலை அதுதான். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவானோ, அல்லது சமுதாயத்தின் தக்க அங்கத்தினராக ஆவானோ அவனுடைய இயல்பான ஆக்க சக்திகளை ஏற்றபடி வளையும்,வளைக்கும்,பெரியவர்களின் மிக்கப் பொறுப்பான நேரம் அது.
ஆனால் என்ன நடந்து கொண்டிருக்கிறது.
திரு கதிரேசனுக்கும் எனக்கும் தொடர்பு ஆரம்பித்த புதிதில், இதற்குமுந்திய அவருடையகவிதைத் தொகுதியைப் படிக்க எனக்கு வாய்ப்புக் கிடைத்தது.
கவிதையில் அதிக ஈடுபாடு உடையவன் என்று என்னை நான் சொல்லிக் கொள்வதற்கு இல்லை. கவிதை என்பது அதன் நடையில் அன்று, அது மனிதனின் தன்மையில் சேர்ந்தது, சிருஷ்டியில் Creation எப்பவுமே உள்ள கவிதையின் ஏராளத்தினின்றுதான் அதன் ராசி களுக்குச் சிந்தியது என்று என் துணிபு. ஆக்கத்தின் ஆராஸ்ருதி, முகங்கள், விதங்கள் வெவ்வேறாயினும் உயிரின் ஒருமைப்பாங்கு-அதுதான் கவிதை ஆகவே வெறும் சொல்லடுக்கைத் தாண்டிய விஷயம்.
ஐயா, உரை நடைதான் சிறந்தது. கவிதை அதற்குப் பின் நாற்காலியென்றெல்லாம் நான் கட்சி கட்டவில்லை, கவிதையின் தன்மை, தன்மைக்கேற்ற ஸ்வரூபம் இவைப் பற்றி நான் கொண்டுள்ள அபிப்பிராயத்தை சொல்கிறேன். இந்தப்பார்வையில், நான் கதிரேசனின் முதல் தொகுதியைப் படிக்கையில்
கருத்துச் செறிவடங்கிய அவருடைய சொல் சேர்க்கை களும் சொற்களின் எளிமையும் படிக்கையிலேயே உதடு

Page 10
16
களைப் புன் முறுவலில் வளைக்கும் லேசான நகைச்சுவை யும் என் கவனத்தை ஈர்த்தன என்பதை ஒப்புக் கொள்கிறேன்.
இந்தத் தொகுதியையும் ஏறக்குறைய அதனுடைய தொடர்ச்சி என்றே சொல்லலாம். இதிலும் கவிதைகள் போதனா, முறையிலும் சாட்சிகளின் வர்ணணைகளாகவும் சுலபமாக சொற்கள் சொல்லும் சித்திரத்தில் உடனேயேr மனதில் எழுவனவாகயும் இருக்கின்றன.
கருணை மழை அனலாய்ப் பறக்கும் வெய்யிலிடை அத்தனை உயிர்களும் வேகிறதே! அம்மா தாயே மனமிரங்கு ஆலங்கட்டி மழை வழங்கு! இதில் வேகிறதே என்கிற வார்த்தையைக் கவனியுங் கள். வேகிறது என்றும் முடிக்க முடியும். ஆனால் கடைசி எழுத்தில் ஏகாரத்தை ஏற்றினதும் உயிர்கள் அத்தனையின் வேதனை கூக்குரல் குழந்தை மூலம் வெளிப்படுவதை ஒரு நுணுக்கமான, அதே சமயத்தில் மிகவும் இயல்பான சொல்லாட்சியை உணர முடிகிறது.
இந்தக் கவிதையிலேயே மூன்றாவது பாட்டில் குழந்தை மழையிடம் முறையிடுகிறது.
அம்மா, அப்பா நீரின்றி அங்கும் இங்கும் அலைவதுபார் உடனே கடைசிப் பாட்டில் அம்மாதாயே மனமிரங்கு, என்று அதற்கு கூப்பிடத் தெரிகிறது. தன் அம்மாவுக்கு, பெரிய அம்மா ஒருத்தியிருக்கிறாள்; அவளைக்கேட்டால் நடக்கும். அதற்கு அந்த வுணர்வும், முழு நம்பிக்கையும் உடனே வந்து விட்டதைப் பார்க்கையில் நமக்கு தென்பா யிருக்கிறது. அவள் செவியில் நம் சொற்கள் ஏறா விட்டாலும் குழந்தை சொல்லைக் கேட்பாள். குழந்தை தான் நமக்கு வக்காளத்து. <

17
நான் அலசல் விமர்சனத்தில் இறங்கப் போவதில்லை படித்ததும் சட்டென மனதில் பட்டதைச் சொல்கிறேன். இதெல்லாம் அவரவர் பூத்ததற்குத் தக்கப்படி. அது மாதிரி வியாக்யானங்கள் பாராட்டுக்களாலேயே தளிர் போன்ற இந்தக் கவிதைகளின் நயங்கள் நறுங்கிப்போவதை நான் நிச்சயம் விரும்பமாட்டேன்.
ஆனால் அங்கும் இங்கும் தெளித்த மாதிரி விழுந் திருக்கும் சில அழகுகளைப் பங்கிட்டுக் கொள்ளாமலும் இருக்க முடியவில்லையே! ۔۔۔۔
அன்பு வேண்டும் நெஞ்சினில்
இது ஜீவகாருண்யத்தைப் போதித்தாலும், என்னை மிகவும் ஈர்த்தது. முதல் நான்கு பாட்டுகளில், ஒன்றை ஒன்று தின்று வரும் அவசியத்தில்- (ஆசிரியர் அவசிய மில்லை என்று சாதிக்கிறார். அதற்காக நான் ஒப்புக் கொள்ள முடியுமா?) ஏற்படும் நாசச் சங்கிலி வெகு கம்பீர மாக வெளிப்பட்டிருக்கிறது. எளிய, ஆனால் அர்த்த புஷ்டி உள்ள வார்த்தைகள். சித்திரம் உடனேயே மனத்திரையில் உயிரோடு விழுகிறது. உரை நடைக்காரனாகிய எனக்கு இதெல்லாம் ஒரு சாதனை தான்.
கோழிக் குஞ்சு உன்னைக்கொத்தக் காத்திருக்குது-அட ஆபத்துன்னைத் தேட நேரம் பார்த்திருக்குது.
கதிரேசன் வார்த்தைகளுக்கு சிரமப்படுவதாகத் தெரியவில்லை. இந்த வரிகளைப் பாருங்கள்! அனேகமாக வசனமே தான்.விஷயத்தை நேரிடையாக உடனே அணுகல் A direct simple immediate approch)35 (T6) Loirof Guit Götg பிராசம் - அட எனும் சொல்லைக் கவனிக்க. இசை பாஷையில் இது ஒரு அனுஸ்வரம்.
சபாஷ் கதிரேசன்!
சிக்கனம், தண்ணிர்ப் பஞ்சம், பண்டங்களை வீணாக்காமல் இருப்பது, தேசப்பற்று, அளவை வகைகள்
سمی

Page 11
18
இத்யாதி விஷயங்களைப்பற்றியும் கவிதைகள் புனையப் பட்டிருக்கின்றன. இவைகளில் பிரசாரம் இல்லையென்று மறுக்க முடியாது. ஆனால் குழந்தைகளுக்கு இவைபற்றியும் தெரிய வேண்டிய அவசியுமிருக்கிறதே!
வள்ளுவரைப்பற்றி ஒரு கவிதை ரத்னசுருக்கமாக, சிறப்பாக அமைந்துள்ளது.
கூண்டுக்கிளியை ஒரு குழந்தை விடுதலை செய்கிறது. குழந்தை இனிக்கச் சொல்லும் ஆறுதல், ஊட்டும் நம்பிக்கை, விடுதலை அளிக்கும் பெருந்தன்மை. கவிதை யின் ஆரம்பவரிகளில் சிறைக்கிளியின் ஏக்கம் அத்தனையுமே நெஞ்சத்தைத் தொடுகின்றன.
இந்த அளவுக்குக் குழந்தை மனதுள் புகுந்து அதன் தூய்மையான வடிவுத் தோற்றங்களில் சொல்லில் வடிக்கும் கடினத்தை ஓரளவு யாராலும் யூகிக்க முடியும். ஆனால் ஆசிரியருக்கு இது நேர்த்தியாகக் கைவருகிறது. அது எப்படி? இது எனக்குத் திகைப்புத்தான்.
கவிதையை அவர் சிருஷ்டிக்கும் முறையைப் பற்றி ஆசிரியரைக் கேட்டேன். மைய எண்ணத்தை தன்னுள் அடக்கிய ஒரு சொல்லோ வரியோ முன்னால் தோன்றும் அதைத் தொற்றிக் கொண்டு முன்னேறினால் அதைச் சுற்றி மற்றவரிகளும் ஒன்றொன்றோடு ஒன்றாக அடை அடையாகும். விழுந்துவிடும் என்கிறார். அதுப்பற்றி அவர் பெரிது பண்ணிக்கொள்ளவில்லை. எல்லாம் பழக்கம் தான் என்று பாவிக்கிற மாதிரி தெரிகிறது.
நான் சொல்லிக்கொண்டே போகப் போவதில்லை. ருசியைப் பற்றிப் பேசுவதனாலே ருசிப்பவர்க்கு ருசி சப்பிட்டுவிடக்கூடும். ஆகையால் இன்னும் ஒரு உதாரணம் என எடுத்துக்காட்டை முடித்துக்கொள்கிறேன்.
நிலா மின்சாரம் என்கிற கவிதையில் குழந்தை நிலாவை நிலாச் சாப்பாட்டுக்கு அழைக்கிறது. இந்த ஒரு பாட்டில், ஆசிரியர் குழந்தை உள்ளத்தில் புகுந்து

19
அதன் எண்ணத்தின் தூய்மையை, அந்யோந்யத்தை சாதித்துவிடுகிறார். ஆம் இதைவிட ஒரு தருண சாந்நித்தியம் எப்படி இருக்கமுடியும். இளம்பருவத்தில் மொட்டைமாடியில் பட்டை வீறும் நிலாவில் என் உடன் வயது உறவுகள், நண்பர்களுடன் நான் சாப்பிட்ட நிலாச்சாப்பாடுகள் நினைவில் எழுந்து உளம் நெகிழ்ந்து போனேன். இனி அந்த நாட்கள் வரா. என் பிருந்தாவன நாட்கள் எனும் எண்ணத்தினாலேயே அது தூண்டிய சிந்தனையில் மூழ்கிப் போனேன். நல்ல எழுத்தின் அடையாளமே என்னவென்றால் உள்ளதை உள்ளபடிக் காட்டுவது மட்டுமல்ல. அது கார்வைகள் (Vibrations) ஏற்படுத்த வேண்டும். வெண்கலத்தைத் தட்டிய உடனே எழும்பும் ஒலியினின்று, படிப்படியான அலைகள். பழைய நினைவுகளின் ஓயாத அலைகள் சுண்டப்படுவதைவிட இலக்கிய அனுபவம் எது?
கதிரேசனின் இந்த இரண்டு கவிதைத் தொகுதிகளை யும் படித்தவுடன் எனக்குத் தோன்றிய எண்ணங்கள்.
1. இலக்கியத்தில் குழந்தை இலக்கியம் ஒரு மகத் தான பிரிவு
2. ஒலிகளின் முதல் மூர்க்கங்கள் ஆ! ஊ! மா! ஓ!- ங்கா அதன் அழுகையிடையே சாத்தியங்கள் இருக் கின்றன!-குழந்தையிடம் தான் தம் முதல் எழுச்சியை காண்கின்றன. இலக்கிய ரீதியில், இந்த ஒசையின் அடிவாரமே எத்தனையோ சோதனைகளுக்குக் கூடமாக எழுத்தாளனுக்கு அமையக்கூடும்.
3. போதனா முறையில் பிரசாரம் கலந்திருந்தாலும், இது போன்ற கவிதைகள், படிக்க, அபிநயமாகப் பிடித்துக் காட்ட இது மாதிரி வழிகளில் குழந்தையின் குணத்தை, தன்மையை உருவாக்க அவசியம்தான்.
கூட்டுக் குடும்பத்தில் குழந்தை நல்லபடியாக வளர சூழ்நிலை ஏற்றதாக இருந்தது. கூட்டுக்குடும்பம் அதுவே

Page 12
20
ஒரு சின்ன சமுதாய வாழ்வுதான். கூடவே சமவயது குழந்தைகள் பெரியவர்கள், முதியவர்கள் என்ற மரியாதை சமயத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவேண்டிய அவசியம், பாசம், பந்தம் கடமை, நீதிக்கதைகள் தாத்தா, பாட்டி தலைமுறையின் பெருமை இவையெல்லாம் அறிய, உணர சந்தர்ப்பங்கள் கூட்டுக்குடும்பம்தான். ஆனால் கூட்டுக் குடும்பம் சிதைந்து போயிற்று.
அப்பா, அம்மா, குழந்தை எனும் தனிக்குடும்பம் எனும் ஸ்தாபனமும் ஆட்டம் கண்டாகி விட்டது. தங்கள் சுயநலத்தில் பெற்றோர்கள் உத்யோகத்துக்குப் போய்க் கொண்டு, குழந்தையைக் கவனிக்காமல் இந்த அவலத்தில் இது போன்ற குழந்தைக் கவிதைகள் தோள் கொடுக்கு
D66)6. IT
இந்த துறையில் குழந்தைக் கவிஞர் கதிரேசன், இது வரை செய்திருப்பதைக் கொண்டு பார்த்தால், அவர் இன்னும் வெகுதூரம் போவார் என்றே தோன்றுகிறது. அந்த தூரம் அவர் போக வேண்டும் என்று என் வயதின் உரிமையில் ஆசீர்வதிக்கிறேன்.
6uT. gr. Trioruól(55úb

வணங்குங்கள்
அமுதத் தமிழைப் பாலோடும் அன்பாய் ஊட்டிய நம்அம்மா பரிவாய் நம்மைத் தோள்சுமந்து பள்ளிக் கனுப்பிய நம்அப்பா
கல்வி அறிவும் பண்பாடும் கற்றுக் கொடுத்த ஆசிரியர் மூவரும் நமக்குத் தெய்வங்கள் முதலில் இவரை வணங்குங்கள்!

Page 13
குரங்குக் குட்டி ஓடிவா!
குரங்குக் குட்டி! குரங்குக் குட்டி!
கிட்ட ஓடிவா! - நீ
கொய்யாப் பழம் பறித்துக் கொண்டு
தாவி ஓடிவா!
குச்சிமிட்டாய் உனக்குப் பாதி
கடித்துத் தருகிறேன்;-நீ
குருவிக் கூட்டைக் கலைத்திடாமல்
விலகி ஓடிவா!
பலூன் தாரேன் ஊதிஊதி
உடைக்கலாம் வாவா! - நாம் பலவிதமாய்க் குட்டிக்கர்ணம் அடிக்கலாம் வாவா!
பொம்மைப் பாப்பா பக்கத்திலே பார்க்கலாம் வாவா! - என் பள்ளிக் கூடச் சீருடை நீ
போடலாம் வாவா!
பாடப் போறேன் நீயுமிப்போ ஆடலாம் வாவா - என் பாட நூலில் நீயிருக்கே;
பார்க்கலாம் வாவா!
O O D

தொப்பைக் கோழி
தொப்பைக் கோழி இங்கே வா தூர ஓடிப் போகாதே! வெட்ட வெளிப் பொட்டலில் விளையாடத்தான் போவோமா?
கோணல் தென்னை போலநீ குறும்புத் தனம் செய்யாதே! அடுத்த வீட்டில் முட்டையிட்டு அப்பாவி போல் வாராதே!
நம்ம வீட்டில் முட்டையிடு; நன்றாய்க் குஞ்சு பொரிக்கலாம்! அம்மா தரும் தீனியைநாம் ஆசை தீரக் கொரிக்கலாம்!

Page 14
அழுக்குகள் அகற்றுவோம்
குளத்து நீரைக் குடிப்பதனால்
கெடுதல் வந்திடும் - அதைக்
காய்ச்சி நாளும் குடிப்பதனால்
தீமை நீங்கிடும்!
தூய்மையான தண்ணிரையே
தொடர்ந்து அருந்தனும் - நம்மைச் சூழ்ந்து உள்ள நோய்களை நாம்
தூர விலக்கணும்! வீட்டைத் தூய்மை ஆக்கியே நாம்
வெளியில் குப்பை இறைக்கிறோம்! வெளியில் குப்பை இறைப்பதனால்
வேண்டா நோயைப் பெறுகிறோம்!
சேர்த்த குப்பை அத்தனையும்
சுருக்காய் ஒடி அகற்றுவோம்! நோய்களை நம் அருகிலேயே
நெருங்கிடாமல் விரட்டுவோம்!
 

மழையே! மழையே வா! வா! வா!
மழையே மழையே வா வா வா! மகிழ்வை அள்ளித் தா தா தா! காகிதக் கப்பல் விடவேண்டும்; கடல்போல் நீரைத் தா தா தா!
பாம்பாய் நெளிந்து விரைந்தோடும்! பள்ளம் பார்த்தால் புகுந்தோடும்! நீரில் மீன்கள் விளையாடும்! நிறையப் பிடித்து மகிழ்ந்திடுவேன்!
அப்பா துணையுடன் நானும்மே ஆறு குளமும் சென்றிடுவேன்! ஆட்டம் போட்டுக் குதித்திடுவேன்! அக்கரை நீந்தி வந்திடுவேன்!

Page 15
தென்றல் காற்று
உருவம் இல்லாக் காற்றே நீ உயிர்மூச் செனக்குத் தருகின்றாய்! வியர்வை சிந்தும் போதெல்லாம் விரைந்து வந்து துடைக்கின்றாய்!
வாசனை ஏந்தி வருகின்றாய் வஞ்சனை இன்றித் தருகின்றாய் ஒய்வே இல்லாக் காற்றே நீ ஒலியை வாங்கித் தருகின்றாய்!
ஏற்றத் தாழ்வே இல்லாமல் எல்லாரிடமும் வருகின்றாய்! உனக்குத் தெரிந்த வாழ்க்கை முறை ஒவ்வொரு வர்க்கும் தெரியலையே!
தென்றல் காற்றே, என்னைநீ தினமும் தொட்டு விளையாடு! உன்மேல் கோபம் கொள்ளேன்நான்" உயிரைக் காக்கும் கடவுள் நீ!
 

சிறுவன் :
ஆடு :
சிறுவன் :
பள்ளிக்கூட வெள்ளாடு
வெள்ளாட்டுக் குட்டியே நீ வெளியில் எங்கே போகிறாய்?
அம்மா அப்பா கூட நான் அருகில் மேயப் போகிறேன்!
பள்ளிக்கூடம் நான் போறேன்! படிக்க நீயும் வாறியா? துள்ளிக் குதித்து விளையாடத் துணைக்கு நானும் வருகிறேன்!
அம்மே, அம்மே” என்றேநீ அழகாய் நீட்டிப் பாடுறே! ஆங்கில மே? சொல்லுறே! அருமையான வெள்ளாடே!
அம்மா? என்று கன்றைப் போல் அழகு தமிழில் பேசணும்! ஆனந்தமே நம் வாழ்வில் அணையா விளக்கு ஆகணும்!
இளமையிலே எல்லா மொழியும்
எளிதில் கற்றுக் கொள்ளணும்!
இன்பத் தமிழின் பெருமையை உலகம் எங்கும் சொல்லணும்!
O O

Page 16
கொழுக்கட்டைப் பிள்ளையார்
குண்டு வயிற்றுப் பிள்ளையாரே! கொழுக் கட்டைகள் வேணுமா? அம்மா வச்சு இருக்காங்க ஓடிவா, நாம் உண்ணுவோம்!
இடத்தை விட்டே அசைந்திடாமல் இருந்து விட்டால் எப்படி? எழுந்து நிற்க முடியலியா? இன்றே கேள் என் சொற்படி!
ஒடியாடும் போது நமது உடம்பில் வலிமை ஏறுமாம்! கோடி வீட்டுத் தாத்தாகூடக் குடுகுடென்றே ஒடுறார்!
உனக்குத் தாத்தா நல்ல சோடி; உடனே நீயும் சேர்த்துக் கொள்! உடம்பு இளைத்த பிறகேஎன்
உறவாய்க் கையைக் கோத்துக்கொள்!

பேசும் கிளியே இங்கே வா!
கிளியே கிளியே வந்திடுவாய்! கேட்கும் முத்தம் தந்திடுவாய்! பச்சை, கண்ணைப் பறிக்கிறது! பளபள வென்றே இருக்கிறது!
அணில் கடித்த கொய்யாவில் அன்பாய் பாதி தருகின்றேன்! பெயரைச் சொல்லிக் காட்டிடுவாய்! பேசக் கேட்டுச் சிரித்திடுவேன்!
குருவிக்க்ாரர் போல் உன்னைக் கூண்டில் அடைக்க மாட்டேன்நான்! விளையாட்டுக்கே அழைக்கின்றேன்; விரைந்தே நீயும் வந்திடுவாய்!

Page 17
10
வெள்ளைப் பசு
வெள்ளி ரதம் போல வரும்
வெள்ளைப் பசுவே-எங்கள் வீட்டுக்கு நீ தெய்வமடி நல்ல பசுவே! பருத்திக் கொட்டை பிண்ணாக்கையே
உனக்குத் தருகிறோம்-அதைப் பக்குவமாய்ப் பால்வடிவில்
எமக்குத் தருகிறாய்! *அம்மா பாடம் சொல்லும்போது
கன்றும் துள்ளுது-அது அருகில் வந்து சும்மா சும்மா!
அம்மா சொல்லுது!
பக்கம் வந்து முட்டி முட்டிப்
பால் குடிக்குது-தாய்ப் பாசமங்கே பொங்கி வந்து
கொப்புளிக்குது! அறிவியலும் சாணத்தையே
ஆவியாக்குது -அதை அடைத்து வைத்து நிறுவனங்கள்
உதவி செய்யுது நல்ல பாம்பும் உன்னிடத்தில் விலகி ஓடுது!--உன் நீரு பட்டால் பூச்சி, புழு
மறைந்து போகுது! OOOld

அன்பு வேணுமா?
அம்மா என்னிடம் வழங்குகிறாள்; அளவில்லாத அன்பையே! சும்மா நானும் இருப்பேனா?
சுறுசுறுப்பாகப் படிப்பேனே! அள்ள அள்ளக் குறையாத
அன்பை அள்ளித் தாருங்கள்! கள்ளம் இல்லா அன்பினிலே
கடவுள் உண்டு பாருங்கள்!
t

Page 18
ஒடும் வண்டியில் ஏறாதே!
ஒடும் வண்டியில் ஏறாதே-தம்பி உனக்கேன் அவசரம் போகாதே! ஒருவண்டி போனால் மறுவண்டி உண்டு என்பதை நீயும் மறவாதே!
படிக்கட்டுப் பயணம்சறுக்கி விடும்; பாதியில் உயிரைக் குடித்து விடும்! உயிருக்குச் சக்கரம் பகையாகும்; உயிரைத் திரும்பவா பெறலாகும்? உள்ளே வருபவர்க் கிடம்விட்டு ஒவ்வொரு மனிதரும் முன்சென்றால், பின்னே வருபவர்க் கெளிதாகும்-அது ஒருவழிப் பாதை முறையாகும்! உலகில் சிறந்த நாடாக ஒருநாள் இந்தியா வரவேண்டும்; உண்மை உழைப்பை அதற்கே நீ ஒவ்வொரு நாளும் தரவேண்டும். நாளைய உலகம் உனக்காக - தம்பி நம்பிக்கை கொள்நீ அதற்காக! கடமை இருக்குது பலவாக-நெஞ்சில் கவனம் வைக்கணும் நினைவாக!
12

உண்மைதானா?
சிறுவன் : அப்பா, அப்பா, வானூர்தி;
ஆகாயத்தில் பறக்குது பார்! எப்போ அதிலே போவோம்நாம்? இப்போதே நீ சொல்லிவிடு!
கடுகு, மிளகு டப்பியிலே காசை அம்மா சேர்க்கிறாள்! " ஒடிஅதை வாங்கி வாரேன், உயரப் பறந்து வரலாமா?
அம்மா : சிக்கனமாய்ச் செலவு செய்தால்
சேரும் காசு மலைபோல! உலகம் முழுதும் காசுக்குத்தான் ஓடி யாடுது அலைபோல! g கையில் நிறையக் காசிருந்தால் உலகைச் சுற்றி வந்திடலாம்! ஆம்ஸ்டிராங் போல் நிலவில் நாமும் ஆழக் கால்கள் பதித்திடலாம்!
'ாதுவன் : சிறுகச் சிறுகக் காசைநீ
சேரு கண்ணா என்கிறாள்! உலகம் காசில் இருக்கிறதாம் உண்மை தானா? சொல்லிவிடு!

Page 19
ஆகாயத்தை அடித்தது யார்?
சூரியனே சூரியனே
சுருக்கா ஒடி வந்திடு! தொலை தூரம் எங்கே சென்றாய்? சேதி எனக்குச் சொல்லிடு! காற்றழுத்த மண்டலம்
கட்டி உன்னைப் போட்டதோ? கடும்புயலும் எழுந்து வந்து
நெருப்புத் துண்டை அணைத்ததோ? இடிமுழக்கம் ஏதுமின்றி
அடை மழையும் பெய்யுதே! ஒடியாடும் உயிர்கள் எல்லாம்
பாதுகாப்புத் தேடுதே! ஏரி,குளம் உடைப்பெடுத்து ஊருக்குள்ளே பாயுதே! இரண்டு நாளா ஒட்டுமேலே
எங்கள் வயிறு காயுதே! அலைகடலும் கரையைவிட்டு
ஊரை எட்டிப் பார்க்குதே! ஆகாயத்தை அடித்தது யார்?
அமுது ரொம்ப வடியுதே! சுட்டெரிக்கும் சூரியனே
சுடர் ஒளியை வீசிடு! பள்ளிக் கூடம் போகவேணும்
பக்கத் துணை ஆகிடு!
O

நிலா மின்சாரம்
நீல வானக் கடலுக் குள்ளே
நிலவே நீந்தி வா-நீ நீந்தி வரும் போது வைரம்
நிறைய அள்ளி வா!
வைர மாலை மின்னல் நூலில்
கட்டித் தருகிறேன்-எங்கள் வீட்டுக்கு மின்சாரமாகி
விரைந்து ஓடி வா! நிலாச்சோறு உனக்கு நானும்
பொங்கித் தருகிறேன்-அதை நீயும் நானும் சேர்ந்து உண்போம்
நிலத்தில் ஓடி வா! வெள்ளை உள்ளம் உனக்குமட்டும்
தந்தது யாரு?-அதை எல்லாருமாய் பங்குகொள்ளும்
வழியினைக் கூறு! இரவைப் பகலாய் ஆக்கி நீயும்
இன்பம் தருகிறாய்-உலகில் ஏற்றத் தாழ்வு பாராமலே
ஒளியைத் தருகிறாய்!
ם ם ם
15

Page 20
16
மண்புழுவே ஒளிந்துகொள்
உழைத்து வாழும் மண்புழுவே
உண்மைத் தோழனே - உலகில் உன்னைப்போல உழைத்துவாழக்
கற்றுக் கொண்டேனே! 'மண்ணைக் கிளறி உழவருக்கு
நன்மை செய்கிறாய்-நானும் மற்றவர்க்கு உதவிசெய்து
மகிழ்ச்சி கொள்ளுவேன்!
அப்பா உன்னைப் பிடிக்கச்சொல்லி
ஆணை இடுகிறார்-தூண்டில் முள்ளில் உன்னை மாட்டி மீனைப்
பிடிக்கப் போகிறார்!
கோழிக்குஞ்சு உன்னைக் கொத்தக்
காத்திருக்குது-அட ஆபத் துன்னைத் தேடி நேரம்
பார்த்திருக்குது
சும்மா சும்மா நீயும் இப்போ
வெளியில் வராதே-என் அம்மா அப்பா கண்ணில்பட்டு
அவதிப் படாதே!
DOD

தொலைக் காட்சி
தொலைக் காட்சிதனை நாமும் தொலைவில் இருந்து பார்க்கணும்! கலை அழகைக் கண்டு நாளும் கண்கள் குளிர ரசிக்கணும்!
நமக்கு மட்டும் கேட்குமளவு ஒலியைக் குறைத்து வைக்கணும்! நெஞ்சைத் தொடும் நிகழ்ச்சிகளை நிறைய பேர்க்கு சொல்லணும்!
பறவை விலங்கு வாழ்க்கையினைப் பார்த்துப் பாடம் கற்கலாம்! வயலும் வாழ்வும் வாழ்க்கையோடு இணைந்து இருக்கக் காணலாம்!
உலகநடப்பை ஒரு நொடியில் வீட்டில் இருந்து பார்க்கலாம்! நமது அறிவை படிப்படியாய் நாளும் இதனால் வளர்க்கலாம்!
பலமொழியில் திரைப்படங்கள் பார்த்து நாமும் மகிழலாம்! ஒருமைப் பாட்டைக் காக்கும் இது உயர்வு மிக்க கருவிதான்!
1.
ப, வெ-2

Page 21
8
அமைதி காப்போம் உலகிலே!
பறவை போல உரிமையுடன்
பாடி ஆட்னும்-உலகில்
பாடங்களைப் படித்து நல்ல
மனிதன் ஆகணும்!
அன்பினாலே அனைவரையும்
அணைத்துச் செல்லணும்-தம்பி
அகிலம் போற்றும் தலைவனாகி
நீடு வாழனும்!
அழிவுதரும் போரை முழுதும்
நிறுத்த முயலணும்-அதனால்
உலகமேங்கும் உயிர்கள் வாழ
வழிகள் செய்யனும்!
அறிவியலால் முன்னேற்றமே நாடு காணனும்-அணு
ஆயுதப் போர் சிந்தனைக்கு
முழுக்குப் போடணும்!
கதிர் இயக்கம் பெருகிவிட்டால் கல்லறை மிஞ்சும்-இதைத்
தடுக்க வேண்டும வாழ்க்கையிலே
தம்பி நீ கொஞ்சம்!

ஆழமாய் எண்ணு!
ஒடியாடும் பிள்ளைகளே
கூடி வாருங்கள்! உலகில்அமைதி காணவழி தேடி வாருங்கள்!
உண்மை, அன்பு கல்வி நெஞ்சில்
இருந்திடும் போது, உலகம் உம்மைத் தேடிவந்து
வணங்கும் அப்போது!
அன்பு இல்லா உலகத்திலே
அடிக்கடி போரு ஆசைதானே அத்தனைக்கும்
அடிப்படைக் கூறு!
சாதி, மதம், பிரிவினைகள் ஒழியும் வரையிலே, சமத்து வங்கள் வந்திடாது
இந்த உலகிலே!
19

Page 22
கொத்தடிமையாக உள்ள
நதிகளை எல்லாம்
உரிமையோடு எங்கணுமே ஒடிடச் சொல்லு!
நீதி, நேர்மை நிலைப்பதற்கு
நீ துணை நில்லு!
தீமை வந்து நுழைகையிலே
தீயினில் தள்ளு!
இதயம் உள்ள மனிதனர்க
வாழனும் கண்ணு! உலகம் உன்னை மதிக்கவேண்டும்
ஆழமாய் எண்ணு!
 

நூறு ஆண்டுகள் வாழ்ந்திடுவோம்!
கண்ட கண்ட இடத்தில் எக்சில்
துப்பக் கூடாது - கண்ணே
காலை வைத்து மிதித்து அதில்
நடக்கக் கூடாது!
எச்சில் தொட்டி எதற்கிருக்கு
மறக்கக் கூடாது-அன்பே
எந்த நோயும் ஒண்ட இடம் கொடுக்கக் கூடாது!
குப்பை பெருக்கித் தொட்டியிலே
கொட்டிட வேண்டும்-கண்ணே குடும்பத்தூய்மை காப்பதில் நாம்
முந்திட வேண்டும்! குளித்து நாமும் துப்புரவாய்
இருந்திட வேண்டும்-முத்தே கலகலப்பாய்ப் பேசி நன்றாய்ச்
சிரித்திட வேண்டும்!
21

Page 23
சுற்றுப்புறத் தூய்மை நமக்குத்
தேவையே யாகும் - தேனே!
சோம்பல் வந்தால் நோய் அதற்கு
அடிப்படை யாகும்!
ஒன்றுபட்டு நாட்டைத் தூய்மை
ஆக்கிட வேண்டும் - நோய்
இல்லாமல் நாம் நூறாண்டுகள்
வாழ்ந்திட வேண்டும்
22
 

கருணை மழை
மழையே மழையே மாமழையே! மண்ணில் இறங்கி வா மழையே! கண்ணிர்த் துளிகளைக் காண்மழையே கருணை மழை நீ தாமழையே! வயல்கள் எல்லாம் வாய்பிளந்து வோவா’ என்றுனை அழைக்கிறது! கடல் அலை கைகளைக் கொட்டி உனைக்
கன மழை பெய் பெய்' என்கிறது!
அம்மா, அப்பா நீரின்றி அங்கும் இங்கும் அலைவது பார்! எத்தனை தொல்லைகள் உன்னாலே எழுந்து நீ ஓடிவா முன்னாலே!
மேகத்தைக் காற்றே ஒன்றாக்கு! மின்னலை இடையிடை உண்டாக்கு! இடிதனை அடித்து முரசாக்கு! ஆல்போல் மழையினை விழுதாக்கு!
அனலாய்ப் பறக்கும் வெயிலிடை அத்தனை உயிர்களும் வேகிறதே. அம்மா தாயே மனமிரங்கு ஆலங்கட்டி மழை வழங்கு!
23

Page 24
வெள்ளிப் பந்து
வெள்ளிப் பந்து வானத்திலே உருண்டு ஓடுது-அதை விழுந்து கவ்வ மேகமெலாம் திரண்டு ஓடுது கோடி மீன்கள் காட்சி காணக் கூட்டம் போடுது-அந்தக் கூட்டமெலாம் கண்சிமிட்டி ஆட்டம் ஆடுது பாம்பு போல மேகம் பந்தை விழுங்கப் பார்க்குது! அந்தப் பாம்பை ஏய்த்துப் பந்து மீண்டும் நழுவப் பார்க்குது! முடிவு இல்லாப் போட்டி கண்டு மனசு சிரிக்குது-போட்டி முடிவுகண்டு போவதற்கு மீன்கள் துடிக்குது.
24
 

ஆசிரியரின் பிற நூல்கள்
எலி கடித்த பூனை
தமிழக அரசின் பரிசு பெற்றது 5 00 " விடுதலைக் கிளி
கதைப் பாடல்கள்
உள்ளம்கவர் பாடல்கள்
துள்ளித் திரியும் சிறுவர்களும்
தோய்ந்து கற்கும் விதமாக
பள்ளிக்கூட வென்ளாட்டுப்
பாடல் நூலை உங்களுக்குக்
கொள்ளை அன்பாய் நம்கவிஞர்
குழகதிரேசன் தந்துள்ளார்;
உள்ளம் கவர்அப் பாடல்களை
உணர்ந்து பயூடி மகிழ்வோமே! - - - -
சந்தக்கவிமாமணி தமிழழகன்

Page 25
ဒြို . . . .။ நூல் ஆசி குழந்தைக் கவிஞர் பிறந்த ஊராகிய புதுக்கோ இராயவரத்தில் 17-10-194 திருமதி விசாலாட்சி இருவ இவருடைய பாட்டனா பும் காந்தி உயர்நிலைப் பவு
இவர் மதுரைத் தியாக யத்தைப் பாடமாகக் கொன் பதிப்புத் துறையில் 1 பெற்ற இவர் ஐந்தினைப் பு இவரது முதல் நூலாகி அரசு பரிசு பெற்றுள்ளது 7வது வகுப்பில் தமிழ்நாட்டு பாடமாக வைக்கப் பெற்று வானொலி தொ பல கவிதைகள் இசைப் பா நண்பர்கள் கலைக் க கோ" என்று பாராட்டப் கூடியவர்.
தமிழ்க் கவிஞர் மன் பாடல்கள் அனைத்தும் அ பலரது பாராட்டுக்களைப்
 
 

ரியரைப் பற்றி
அழ. வள்ளியப்பா அவர்கள் "ட்டை மாவட்டத்தைச் சார்ந்த 9ல் திரு. சு. கதி. குழந்தையன் ருக்கும் மகனாகப் பிறந்தவர். ர் கதிரேசனார் கணித மேதை ாளி நிறுவனரும் ஆவார்.
ாசர் கல்லூரியில் தமிழ் இலக்கி எடு B.A. பட்டம் பெற்றவர். 5 ஆண்டுக் காலம் அனுபவம் திப்பக உரிமையர் ய எலி கடித்த பூனை தமிழக இத்தலைப்புடைய கவிதை }ப் பாடநூல் நிறுவனத்தாரால் பள்ளது. நவக்காட்சியில் als (56.0LL டலாக இடம் பெற்றுள்ளன. ழகத்தாரால் குழந்தைக் கவிஞர் பெற்ற இவர் இசையுடன் பாடக்
நத்தில் இவருடைய குழந்தைப் ரங்கேற்றம் செய்யப் பெற்றுப் பெற்றுள்ளன.