கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பன்னிரு திருமுறைத் தோத்திரத்திரட்டு கிருஷ்ணபிள்ளை மாணிக்கமலர் நினைவு வெளியீடு

Page 1

இந்ஜ்றல: శొ

Page 2


Page 3

பன்னிரு திருமுறைத் தோத்திரத்திரட்டு
மாவிட்டபுரம் திருமதி கிருஷ்ணபிள்ளை மாணிக்கமலர் நினைவு வெளியீடு
15.06.2005

Page 4
சமர்ப்பணம்
"மாவைக்கந்தன் திருப்பாதக் கமலங்களுக்கு இம்மவரினைச் சமர்ப்பத்து
e'b0ffമ്മി’ ஆத்மா சாந்தியடையப்
பிரார்த்திக்கின்றோம்."
அன்புக்கணவன் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

ஆசியுரை
பன்னிரு திருமுறைகளில் இருந்து தோத்திரப் பாடல்களைத் தெரிந்து ஒரு தொகுப்பாக வெளியிடப்படும் இந்த நினைவு மலரானது சைவ இல்லங்கள் தோறும் கைநூலாகப் பயன்படுத்தக் கூடிய ஒன்றாகும்.
சைவ வாழ்வியற் கருமங்கள் சிலவற்றில் பொதிந்துள்ள சைவ சிந்தனை விளக்கத்தை இம்மலரில் காண்கிறோம். இது நல்ல முயற்சியாகும்.
மறைந்த அன்பு நெஞ்சங்களை நினைவு கூரும் பொருட்டு சைவ மக்களால் வெளியிடப்படும் சமயம் சார்ந்த மலர்கள். இம்மலரைப் போன்று சமய வளர்ச்சிக்கு பயன்படக்கூடியதாக அமைவது நன்று.
இச்சமயப் பணியானது அமரர் திருமதி. கிருஸ்ணபிள்ளை மாணிக்கமலரின் ஆத்மாவிற்கு புண்ணியம் சேர்க்கும் ஒரு நற்பணியாகும்.
இச்சமயப்பணியில் பங்கு கொண்ட அனைவரையும் பாராட்டி அவர்களின் சமயப்பணி தொடர முருகப் பெருமானின் அருளை வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்.
இங்ங்ணம், வை.சுப்பிரமணியக் குருக்கள் பிரதம சிவாச்சாரியார் ஜிந்துப்பிட்டி பூரீ சிவ சுப்பிரமணிய சுவாமி கோவில்.
98, ஜிந்துப்பிட்டி வீதி கொழும்பு - 13

Page 5
பதிப்புரை
“பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவானிலும் நனி இனிது” என்று மகாகவி பாரதியும் “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்று ஒளவைப் பிராட்டியும் பெற்றோரின் உயர்வான தெய்வீக நிலையை எமக்கு உணர்த்தி உள்ளார்கள்.
எங்களுக்கு எல்லாம் முன்னறி தெய்வமாகி இருந்து கல்வியால், பண்பால், பக்தியால், ஒழுக்கத்தால், அன்பால் தன் பிள்ளைகள் வையத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்ற இலட்சியத்தோடு இரவு, பகல் பாராது தன் வருத்தம் பாராது தன்னையே உருக்கி எம்மை எல்லாம் வளர்த்த எங்களின் அன்புத் தெய்வத்தை இழந்து இன்று தவிக்கின்றோம்.
தனது பெண் பிள்ளைகள் நால்வரும் திருமணம் முடித்து சிறப்பாக வாழ வேண்டும் என்ற அம்மாவின் பிரார்த்தனைகள் எங்கள் குல தெய்வங்களான மாவை அம்பாளினதும் , மாவை விநாயகரினதும் அருளால் கைகூடியது. மருமக்களாக கிடைத்த நால்வரையும் தன் பிள்ளைகளைப் போல் மிக்க பாசம் காட்டி அவர்களின் அன்பையும், ஆதரவையும் நிறைவாகப் பெற்று மகிழ்ந்தார். தனது பேரப்பிள்ளைகள் மீது அவர் கொண்டிருந்த பாசம் எம்மால் என்றும் மறக்க முடியாது.
கடந்த மூன்று ஆண்டு காலமாக நோய் வாய்ப்பட்டு படுக்கையாக இருந்த வேளையிலும் தன் கணவர் மீதும், தம் பிள்ளைகள் மீதும், தன் மருமக்கள் மீதும், தன் பேரப்பிள்ளைகள் மீதும் கொண்டிருந்த பாசவுணர்வும், கரிசனையும், துளியேனும் குறைய வில்லை. உற்றார், உறவினர்கள், அயலவர்கள், நண்பர்களை வரவேற்று உபசரிக்கின்ற பண்பும் நோய்வாய்ப்பட்டிருந்த காலத்திலும் குன்றாது தொடர்ந்திருந்தது.

குடும்பத்தீபமாக இருந்து எப்பொழுதும் கரிசனை குன்றாது எம்மை ஆதரித்து வளர்த்த எங்கள் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டியும், அம்மாவை என்றென்றும் நினைவுகூரும் பொருட்டும் எமது சமயம் சார்ந்த ஒரு மலரை சிறிய அளவில் வெளியிட விரும்பி எங்கள் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய பொல்கொல்ல கூட்டுறவு கல்லூரியின் முன்னாள் விரிவுரையாளர் RM நாகலிங்கம் அவர்களுடன் கலந்து ஆலோசித்ததன் பயனாக இப் 'பன்னிரு திருமுறைத் தோத்திரத் திரட்டு” அம்மாவின் நினைவு வெளியீடாக வெளிவருகிறது.
இம்மலர் வெளிவர துணை புரிந்த R.M. நாகலிங்கம் அவர்களுக்கும், கீதா அச்சகத்தினருக்கும் எங்களின் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்கனம் கணவர் : சி. கிருஷ்ணபிள்ளை பிள்ளைகள் : இந்துமதி, கலாவதி, பிறேமாவதி,
றேவதி, பகீரதன். மருமக்கள் : ஜெயதாஸ், வேதநேசன்,
சிவநாதன், கமல்ராஜ்
* கிறேஸ்கோட்” 79/1-3/4 ஜம்பட்டா லேன், கொழும்பு - 13
IV

Page 6
பொருளடக்கம்
பன்னிரு திருமுறைத் தோத்திரத்திரட்டு பட்டினத்தடிகளின் திருப்பாடல்கள்
கந்தர் அலங்காரம்
கந்தர் அனுபூதி
அபிராமி அந்தாதி
சிவபுராணம்
சைவ வாழ்வு
குடும்ப சடங்குகள்
அபரக்கிரியைகள்
மரணத்தின் பின் மனிதன் நிலை
மாவைப்பதி கிருஷ்ணபிள்ளை மாணிக்கமலர் ஞாபகார்த்த புலமைப்பரிசில் நிதியம்

பன்னிரு திருமுறைத் தோத்திரத் திரட்டு முதலாந்திருமுறை திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார்
திருச்சிற்றம்பலம்
தலம்- திருப்பிரமபுரம் கட்டளை - 1
பண் - நட்டபாடை இராகம் - கம்பீரநாட்டை தாளம் - ரூபகம்
தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக் காடுடையசுட லைப்பொடிபூசிஎன்னுள்ளங்கவர்கள்வன் ஏடுடையமலரான்முனைநாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. 01.
தலம்- கோயில் (சிதம்பரம்) கட்டளை -3
பண் - குறிஞ்சி இராகம் - அரிகாம்போதி தாளம் - ஆதி
கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே 02
தலம் - திருச்சிராப்பள்ளி கட்டளை-5
பண் - குறிஞ்சி இராகம்-அரிகாம்போதி தாளம்- திஸ்ர திரிபுடை
நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளேறு ஒன்றுடையானை உமையொருபாகம் உடையானைச் சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக் 03 குன்றுடையானைக் கூறளன்னுள்ளங் குளிரும்மே
O1

Page 7
தலம்- திருமருகலும், திருச்செங்காட்டங்குடியும் கட்டளை -3
பண் - நட்டயாடை இராகம்-கம்பீரநாட்டை தாளம்- ஆதி
அங்கமும் வேதமும் ஒதுநாவர் அந்தணர் நாளும் அடிபரவ மங்குல் மதிதவழ் மாடவீதி
மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் செங்கய லார்புனற் செலவமல்கு
சீர்கொள் செங் காட்டங் குடியதனுள் கங்குல் விளங்கெரியேந்தியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே. .' 04
தலம்-திருக்கோலக்கா கட்டளை -1
பன்ை -தக்கராகம் இராகம்-கம்பீரநாட்டை தாளம்- ரூபகம்
மடையில் வாழை பாய மாதரார் குடையும் பொய்கைக் கோலக் காவுளான் சடையும் பிறையும் சாம்பற் பூச்சுங்கீழ்
உடையும் கொண்ட உருவ மென்கொலோ 05
தலம்- திருப்பாச்சிலாச்சிரமம் கட்டளை -1 பன் - தக்கராகம் இராகம்-காம்போதி தாளம்-ஆதி
துனிவளர் திங்கள் துளங்கி விளங்கச்
சுடர்ச்சடை சுற்றி முடித்து பணிவளர் கொள்கையர் பாரிடம் சூழ
ஆரிடமும் பலி தேர்வர் அணிவளர் கோலமெலாஞ் செய்து பாச்சில்
ஆச்சிராமத்து உறைகின்ற மணிவளர் கண்டரோ மங்கையைவாட
மயல்செய்வதோ இவர்மாண்பே. 06
O2

தலம்- திருவோத்தூர் கட்டளை - 2
பண் -பழந்தக்க ராகம் இராகம் - ஆராபிதாளம் தாளம் - ஆதி
பூத்தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி ஏத்தா தாளில்லை எண்ணுங் கால் ஒத்தூர் மேய ஒளிமழு வாளங்கைக்
கூத்தீ ர்உம்ம குணங்களே 07
தலம்- திருவலிவலம் கட்டளை - 3
பண் -பழந்தக்க ராகம் இராகம் - ஆராபி தாளம் - ஆதி
தாயுநீயே தந்தைநீயே சங்கரனே அடியேன் ஆயுநின்பால் அன்புசெய்வா னாதரிக்கின்றதுள்ளம் ஆயமாய காயந்தன்னுள் ஐவர்நின் றொன்றலொட்டார் மாயமேயென்றுஅஞ்சுகின்றேன் வலிவலமே யவனே 08
தலம்- திருமறைக்காடு கட்டளை -8
பண் - நட்டயாடை இராகம் - கம்பீரநாட்டை தாளம் - ரூபகம்
சிலைதனை நடுவிடை நிறுவியோர்
சினமலி அரவதுகொடு திவி தலவரி சுரர் அசுரர்களொலி
சலசலகடல் கடைவுழிமிகு கோலைமலிவிடமெழ அவருடல்
குலைதர அதுநுகள் பவனெழில் மலைமலி மதில்புடை தழுவிய
மறைவனம் அமர்தருபரமனே. 09
தலம்- திருகொளலி கட்டளை -1
பண் - பழந்தக்க ராகம் இராகம் - ஆராபி தாளம் - ரூபகம்
நாளாய போகாமே நஞ்சணியும் கண்டனுக்கே ஆளாய அன்புசெய்வோம் மடநெஞ்சே அரன்நாமம் கேளாய் நம்கிளை கிளைக்கும் கேடுபடாத்திறம் அருளிக் கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமானே 10.
O3

Page 8
தலம்- திருவையாறு கட்டளை -1
பண் - மேகராகக்குறிஞ்சி இராகம்-நீலாம்பரி தாளம்- கண்டசாபு
புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி
அறிவழிந்திட்டு ஜம்மேலுந்தி
அலமந்த போதாக அஞ்சேலென்
றருள்செய்வான் அமருங் கோயில்
வலம்வந்த மடவார்கள் நடமாட
முழவதிர மழையென்றஞ்சி சிலமந்தி அலமந்து மரமேறி
முகில்பார்க்கும் திருவையாறே 11.
தலம்- பொது கட்டளை - 3 பண் - வியாழக்குறிஞ்சி இராகம்-செளராஷ்டிரம் தாளம்- ஆதி
அவ்வினைக் கிவ்வினையாம் என்றுசொல்லும் அ.தறிவீர் உய்வினை நாடாது இருப்பதும் உந்தமக்கு ஊனமன்றே கைவினைசெய் தெம்பிரான் கழல்போற்றுதும் நாமடியோம் செய்வினை வந்தெமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம், 12
தலம்- திருப்பராய்த்துறை கட்டளை -2
பன்ை - மேமாகனராகக் குறிஞ்சி இராகம்-நீலாம்பரி தாளம்- ஆதி
நீறு சேர்வதோர் மேனியர் நேரிழை கூறு சேர்வதோர் கோல மாய பாறு சேர்தலைக் கையர் பராய்த்துறை ஆறு சேர்சடை அண்ணலே. 13
04

தலம் - திருக்கழுமலம் கட்டளை -7
பண் -மோகனக்குறிஞ்சி இராகம் - நீலாம்பரி தாளம் - ஆதி
பிறையணி படர்சடை முடியிடை
பெருகிய புனலுடை அவனிறை
இறையணி வளையினை முலையவள்
இணைவன தெழிலுடை இடவகை
கறையணி பொழில்நிறை வயலனி
கழுமலம் அமர்கனல் உருவினன்
நறையணி மலர்நறு விரைபுல்கு
நலமலி கழல்தொழல் மருவுமே 14
தலம் - திருத்தூங்கானைமாடம் கட்டளை -7
பண் - பழந்தக்க ராகம் இராகம் - ஆரபி தாளம் - ஆதி
ஒடுங்கும் பிணிபிறவி கேடென்றிவை
உடைத்தாய வாழ்க்கை ஒழியத்தவம் அடங்கும் இடங்கருதி நின்றீரெல்லாம்
அடிகள் அடிநிழற்கீழ் ஆளாம் வண்ணம் கிடங்கும் மதிலும் சுலாவியெங்கும்
கெழுமனைகள் தோறும் மறையின்ஒலி தொடங்கும் கடந்தைத் தடங்கோயில்சேர்
தூங்கானை மாடந் தொழுமின்களே. 15
தலம் - திருவெங்குரு கட்டளை -7
பண் - குறிஞ்சி இராகம் - அரிகாம்போதி தாளம் - ஆதி
காலைநன் மாமலர் கொண்டடிபரவி
கைதொழு மாணியைக் கறுத்த வெங்காலன் ஒலமதிடமுன் உயிரொடு மாள
உதைத்தவன் உமையவள் விருப்பன்எம் பெருமான் மாலை வந்தணுக ஒதம் வந்துலவி
மறிதிரை சங்கொடு பவளமுனுந்தி வேலை வந்தனையும் சோலைகள் சூழ்ந்த
வெங்குரு மேவிஉள் வீற்றிருந்தாரே 16
05

Page 9
தலம் - திருக்கழுமலம்(சீர்காழி) கட்டளை -7 பண் - வியாழக்குறிஞ்சி இராகம் - செளராஷ்டிரம் தாளம் - ஆதி பந்தத்தால் வந்தெப்பால் பயின்றுநின்ற உம்பரப்
பாலே சேர்வா யேனோர்காண் பயில்கன முனிவர்களும் சிந்தித்தே வந்திப்பச் சிலம்பின் மங்கை தன்னோடும்
சேர்வார் நாள்நாள் நீள்கைலை திகழ் தரு பரிசதெலாம் சந்தித்தே இந்தப்பார் சனங்கள்நின்று தங்கணாற்
தாமே காணா வாழ்வாரத் தகவுசெய்தவனதிடம் கந்தத்தால் எண்டிக்கும் கமழ்ந்திலங்கு சந்தனக்
காடார் பூவார்சீர்மேவும் கழுமலவள நகரே 17
தலம் - திருத்தருமபுரம் கட்டளை -1 பண் - யாழ்மூரி grymas5b - JoursesoTTT தாளம் - ரூபகம்
மாதர் மடப்பிடியும் மட அன்னமும் அன்னதோர்
நடையுடை மலைமகள் துணையென மகிழ்வார் பூதஇனப் படைநின்றிசை பாடவும் ஆடுவர் அவர்படர் சடைநெடு முடியதொர் புனலர் வேதமோ டேழிசை பாடுவார் ஆழ்கடல் வெண்டிரை இரை நுரை கரைபொருது விம்மி நின்றயலே தாதவிழ் புன்னை தயங்குமலர்ச் சிறைவண்டறை
எழில்பொழில் குயில்பயில் தருமபுரம் பதியே 18
திருச்சிற்றம்பலம்
06

இரண்டாந் திருமுறை திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார்
திருச்சிற்றம்பலம்
தலம் -திருவாலவாய்(மதுரை) கட்டளை -2
பண் - காந்தாரம் இராகம்-நவரோஜ் தாளம்- ரூபகம்
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு செந்துவர் வாய்உமை பங்கன் திருவால வாயான் திருநீறே. 19
கோளறு பதிகம் - பொது
கட்டளை- 1
பண் - பியந்தைக் காந்தாரம் இராகம்-நவரோஜ் தாளம்- திஸ்ரதிரிபுடை
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டு முடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே 20
07

Page 10
தலம் - திருவரத்துறை கட்டளை- 1 பன் - காந்தாரம் இராகம் - நவரோஜ் தாளம் - ஆதி
எந்தை யீசனெம் பெருமானேறமர்
கடவுளென் றேத்திச் சிந்தை செய்பவர்க் கல்லாற்
சென்றுகை கூடுவதன்றால் கந்த மாமல ருந்திக் கடும்புனல்
நிவாமல்கு கரைமேல் அந்தண் சோலைநெல்
வாயிலரத்துறையடிகள் தம் அருளே 21
தலம் -திருமருகல் கட்டளை -2 Usori - gög5aTb இராகம்-மாயாமாளவகெளளை தாளம்- ஆதி
சடையாயெணு மால்சர ண்நீயெனுமால் விடையாயெனு மால்வெரு வாவிழுமால் மடையார்குவளைமலரும்மருகல்
உடையாய் தகுமோஇவளுன்ைமெலிவே 22
தலம் -திருவலஞ்சுழி கட்டளை -1 பண் - நட்டராகம் இராகம்-பந்துவராளி தாளம்- ஆதி
என்ன புண்ணியஞ் செய்தனை
நெஞ்சமே யிருங்கடல் வையத்து முன்னநீபுரி நல்வினைப்பயனிடை
முழுமணித் தரளங்கள் மன்னுகாவி சூழ்திரு வலஞ்சுழி
வாணனை வாயாரப் பன்னியாதரித் துஎத்தியும் பாடியும்
வழிபடு மதனாலே 23
08:

தலம் - கூேடித்திரக்கோவை கட்டளை-4 பண் - இந்தளம் இராகம் - மாயாமாளவகெளளை தாளம் - ஆதி
ஆரூர் தில்லை யம்பலம் வல்ல நல்லம் வடகச்சி யும்அச்சிறு பாக்கம் நல்ல கூரூர் குடவாயில் குடந்தை வென்னி
கடல்சூழ் கழிப்பாலை தென்கோடி பீடார் நீரூர் வயல்நின்றியூர்குன்றியூரும்
குருகாவை யூர்நாரையூர்நீடு கானப் பேரூர் நன்னீள் வயல்நெய்த் தானமும்
பிதற்றாய் பிறைசூடி தன் பேரிடமே 24
தலம் - திருக்கபாலீச்சரம் கட்டளை- 1 பன்ை -சீகாமரம் இராகம் - நாதநாமக்கிரியை தாளம் - கண்டசாபு
மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக் கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான் ஒட்டிட்ட பண்பின் உருத்திரபல் கணத்தார்க்கு
அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய் 25
தலம் - திருப்புள்ளிருக்கும் வேளூர் கட்டளை-1 Lu6osir - diamuoyub இராகம் - நாதநாமக்கிரியை தாளம்- திஸ்திருபுடை
கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தம் கதிர்மதியம் உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானார் உறையுமிடம் தள்ளாய சம்பாதி சடாயுயென்பார் தாமிருவர்
புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கம் வேளூரே 26
தலம் - திருக்கேதாரம் கட்டளை - 1 பண் - செவ்வழி இராகம் - யதுகுலகாம்போதி தாளம் - திஸ்ரதிரிபுடை
தொண்டரஞ்சு களிறுமடக்கிச் சுரும்பார்மலர் இண்டைகட்டி வழிபாடு செய்யுமிடம் என்பரால் வண்டுபாட மயிலாழட மான்கன்று துள்ளவரி கெண்டைபாயச் சுனைநீல மொட்டலரும் கேதாரமே 27
திருச்சிற்றம்பலம்
09

Page 11
மூன்றாந் திருமுறை திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் திருச்சிற்றம்பலம்
தலம் - திருக்கழுமலம்(சீர்காழி) கட்டளை- 1 பண் - கொல்லி இராகம் - நவரோஜ் தாளம் - மிஸ்ரசாபு மண்ணில்நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில்நல்ல கதிக்கியாதுமோர் குறைவிலைக் கண்ணிநல் லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணிநல் லாளொடும் பெருந்தகை இருந்ததே 28
தலம் - திருவாலவாய் கட்டளை- 1 பண் - கொல்லி இராகம் - நவரோஜ் தாளம் - மிஸ்ரசாபு
மானினேர்விழி மாதராய்வழு திக்குமாபெருந் தேவிகேள்
பானல்வாயொரு பாலனிங்கிவன் என்றுநீ பரிவெய்திடேல்
ஆனைமாமலை ஆதியாய இடங்களிற் பல அல்லல்சேர்
ஈனர்கட்கெளியேனலேன்திரு ஆலவாயரன் நிற்கவே 29
கட்டளை- 1
பண் -கெளசிகம் இராகம்-பைரவி தாளம்- ஆதி
காதலாகிக் கசிந்து கண் னிர்மல்கி
ஒது வார்தமை நன்நெறிக் குய்ப்பது வேதம் நான்கினு மெய்ப்பொருளாவது
நாத னாம நமச்சி வாயவே. 30
தலம் - திருவாலவாய்(மதுரை) கட்டளை- 1 பண் - கெளசிகம் இராகம்-பைரவி தாளம்- ரூபகம்
வீடலால வாயிலாய் விழவியார்க ள்நின்கழல் பாடலால வாயிலாய் பாவநின்ற பண்பனே காடலால வாயிலாய் காவிநீள்க டிம்மதில் கூடலால வாயிலாய் குலாவிதன்ன கொள்கையே 3.
10

pasup 6zobdaril
தலம் - திருவாவடுதுறை கட்டளை- 1
பண் - காந்தார பஞ்சமம் இராகம்-கேதார கெளளை தாளம்- ஆதி
இடரினும் தளினும் எனதுதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் கடல்தனில அமுதொடு கலந்த நஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோ எமையாளுமாறு:ஈ வதொன்றெமக் கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே. 32
தலம் - திருக்கோணேஸ்வரம் கட்டளை- 1
பண் - புறநீர்மை இராகம்-பூபாளம் தாளம்- ஆதி
தாயினும் நல்ல தலைவர்என்று அடியார்
தம்மடி போற்றிசைப் பார்கள் வாயினும் மனத்தும் மருவிநின்றகலா
மாண்பினர் காண்பல வேடர் நோயிலும் பிணியும் தொழிலர்பால் நீக்கி
நுழைதரு நூலினர் ஞாலம் கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த
கோணமாமலை அமர்ந்தாரே ... , 33.
பன்ை - சாதாரி இராகம் - பந்துவராளி தாளம் - கண்டசாபு
எந்தமது சிந்தை பிரியாத பெருமானென இறைஞ்சி இமையோர் வந்துதுதி செய்யவளர் தூபமொடு தீபமலிவாய்மை அதனால்
அந்தியமர் சந்திபல அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அழகன் சந்தமலிகுந்தளநன் மாதினொடு மேவுபதி சண்பைநகரே 3.
11

Page 12
தலம் - திருச்செங்காட்டங்குடி கட்டளை-1 பண் - பஞ்சமம் இராகம் - ஆகிரி தாளம் - கண்டசாபு பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள் பயப்பூரச் சங்காட்டந் தவிர்த்தென்னைத் தவிராநோய் தந்தானே செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன் பணிசெய்ய
வெங்காட்டுள் அனலேந்தி விளையாடும் பெருமானே 35
frup &iob øvoning
தலம் - திருக்கொள்ளம்பூதுர் கட்டளை- 1 பண் - காந்தார பஞ்சமம் இராகம் -கேதாரகெளளை தாளம் - ஆதி
கொட்டமே கமழும் கொள்ளம் பூதூர் நட்ட மாடிய நம்பனை யுள்க செல்ல வுந்துக சிந்தையார் தொழ நல்கு மாறருள் நம்பனே 36
தலம் - திருப்புகலி கட்டளை- 1 பண் - காந்தார பஞ்சமம் இராகம் - கேதாரகெளளை தாளம்-திஸ்ரதிட்டை கண்ணுதலானும் வெண்ணிற்றினானும் கழல் ஆர்க்கவே, பண்ணிசை பாடநின்று ஆடினானும் பரஞ்சோதியும் புண்ணிய நான்மறையோர்கள் ஏத்தும் புகலிநகர்ப் பெண்ணின் நல்லாளொடும் வீற்றிருந்த பெருமானன்றே 37
தலம் - திருநெல்வேலி கட்டளை- 1 பண் - சாதாரி இராகம் - பந்துவராளி தாளம் - திஸ்ரதிரிபுடை மருந்தவை மந்திரம் மறுமைநன் நெறியவை மற்றுமெல்லாம் அருந்துயர் கெடும்அவர் நாமமே சிந்தைசெய் நன்நெஞ்சமே பொருந்துதண்புறவினிற் கொன்றையொன் சொரிதரத் துன்றுபைம்பூஞ் செருந்திசெம் பொன்மலர் திருநெல்வேலியுறை செல்வர்தாமே 38
12

தலம் - திருச்சிறுகுடி கட்டளை- 4
பண் - சாதாரி இராகம் - பந்துவராளி தாளம் - ஆதி
திடமலிமதிளணி சிறுகுடிமேவிய படமலி அரவுடை யீரே படமலி அரவுடையீர் உமைப்பணிபவர்
அடைவதும் அமருல கதுவே 39.
தலம் - திருஆலவாய் கட்டளை- 6
பண் -பழம்பஞ்சுரம் இராகம் - சங்கராபரணம் தாளம்- மிஸ்ரசாபு
வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆதமில்லி அமனொடு தேரரை வாதில் வென்றழிக்கத் திருவுள்ளமே பாதி மாதுடனாய பரமனே
ஞால நின்புகழேமிக வேண்டுந்தென்
ஆலவாயில் உறையுமெம் ஆதியே 40
தலம் - சீர்காழி திருமாலை மாற்று
பண் - கெளசிகம் இராகம் - பைரவி தாளம் - ஆதி
யாமாமாநீ யாமரமா யாழிகாமா கானாகா 65T66OTIT5TLDIT 5Tëur LDITLDITUJTË LDITLOTuJIT நேரகழாமித யாசழிதா யேனனியேனணிளயுழிகா காழியுள வினையேனினையே தாழிசயாத மிழாகரனே 41
13

Page 13
தலம் - திருநல்லூர்ப்பெருமணம் கட்டளை- 1
பண் - அந்தாளிக்குறிஞ்சி gymTasub - ar TLDT தாளம் - ஆதி
கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம் பல்லூர்ப் பெருமணம் பாட்டு மெய்யாயத்தில சொல்லூர்ப் பெருமணம் சூடலரே தொண்டர்
நல்லூர்ப் பெருமணம் மேய நம்பானே 42
நறும்பொழில் காழியுள் ஞானசம்பந்தன் பெறும்பத நல்லூர்ப் பெருமணத் தானை உறும்பொருளாற்சொன்ன ஒண்தமிழ் வல்லார்க்கு
அறும்பழிபாவம் அவலம் இலரே. 43
திருச்சிற்றம்பலம்.
14

நாலாந் திருமுறை திருநாவுக்கரசு நாயனார்
திருச்சிற்றம்பலம்
தலம் - திருஆலவாய் கட்டளை- 1 பண் - கொல்லி இராகம்-நவரோஜ் தாளம்- ஆதி
கூற்றாயினவா றுவிலக் கதிலீர்
கொடுமை பலசெய் தனநானறியேன் ஏற்றா யடிக்கே இரவும் பகலும்
பிரியா துவணங்குவன்எப் பொழுதும் தோற்றா தென்வயிற்றின்அகம் படியே
குடரோடுதுடக் கிமுடக் கியிட ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில
வீரட் டானத் துறையம் மானே 44
தலம் - திருவதிகை வீரட்டானம் கட்டளை- 1
பண் - கொல்லி இராகம் - நவரோஜ் தாளம் - ரூபகம்
சுண்ணவெண் சந்தனச் சாந்தும் சுடர்திங்கள் சூளாமணியும் வண்ண உரிவைஉடையும் வளரும் பவள நிறமும் அண்ணல் அரண்முரனேறும் அகலம் வளாய அரவும் திண்ணன் கெடிலப்புனலும் உடையார் ஒருவர் தமர்நாம் அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்சவருவதுமில்லை. 45
நமசிவாயத் திருப்பதிகம்
கட்டளை- 1 பண்- காந்தார பஞ்சமம் இராகம்-கேதாரகெளளை தாளம்- ஆதி
சொற்றுனை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணை பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுனையாவது நமச்சிவாயவே. 46
15

Page 14
கட்டளை- 1 பண் - சாதாரி இராகம் -பந்துவராளி தாளம் - ரூபகம் தலையே நீவனங்காய் - தலை மாலை தலைக்கணிந்து தலையா லேபலி தேருந் தலைவனைத்
தலையே நீ வனங்காய் 47
தலம் - திவாரூர் கட்டளை- 1 பண் - குறிஞ்சி இராகம் -அரிகாம்போதி தாளம் - திஸ்ரதிரிபுடை
முத்துவிதான மணிப்பொற் கவரி முறையாலே பத்தர்களோடு பாவையர்சூழப் பலிப்பின்னே
வித்தகக்கோல வெண்டலைமாலை விரதிகள்
அத்தன்ஆரூர்ஆதிரை நாளால் அதுவண்ணம் '' 48
தலம் - திருக்கழிப்பாலை கட்டளை- 1 பன் - காந்தாரம் &jeb -pഖjള தாளம் - கண்டசாப்பு
பன்னார்ந்த வீணை பயின்ற விரவலனே என்கின்றாளால் என்னார் புரமெரித்த எந்தை பெருமானே என்கின்றாளால் பண்ணார் முழவதிரப் பாடலோ டாடலனே என்கின்றாளால் கண்ணார் பூஞ்சோலைக் கழிப்பாலை மேயானைக் கண்டாள்
கொல்லோ 49
தலம் -கோயில்(சிதம்பரம்) கட்டளை- 1
பண் - திருநேரிசை இராகம் -நவரோஜ் தாளம் - ஆதி
பத்தனாய்ப் பாடமாட்டேன் பரமனே பரமயோகி எத்தினால் பத்திசெய்கேன் என்னைநீ இகழவேண்டாம் முத்தனே முதல்வாதில்லை அம்பலத் தாடுகின்ற அத்தாஉன் ஆடல்காண்பான் அடியனேன் வந்தவாறே. 50
16

திருவிருத்தம் குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமின்சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வென்னிறும் இனித்தமுடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே. 5.
கருவாய்க் கிடந்துன் கழலே நினையும் கருத்துடையேன் உருவாய்த் தெரிந்துன்றன் நாமம் பயின்றேன் உனதருளால் திருவாய் பொலியச் சிவாய நமளன்று நீறணிந்தேன் தருவாய் சிவகதிநீ பாதிரிப் புலியூர் அரனே. 52
கோவாய் முடுகி அடுதிறல் கூற்றங் குமைப்பதன்முன் பூவாரடிச் சுவடென்மேற் பொறித்துவை போகாவிடின் மூவா முழுப்பழி மூடுங்கண்டாய் முழங்கும் தழல்கைத் தேவா திருச்சத்தி முற்றத்துறையும் சிவக்கொழுந்தே 53
பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் போற்றிசெய்யும் என்னாவி காப்பதற்கிச்சையுண்டேல் இருங்கூற் றகல மின்னாரு மூவிலைச் சூலம் என்மேற் பொறிமேவு கொண்ட துன்னார் கடந்தையுட் தூங்கானை மாடச் சுடர்க் கொழுந்தே. 54
கட்டளை- 1 பண் - பழந்தக்க ராகம் இராகம் -சுத்த சாவேரி தாளம்-திஸ்ரதிருபுடை
(மடக்குகளுடன்)
மனைக்காஞ்சி இளங்குருகே மறந்தாயோ மதமுகத்த பனைக்கைமா உரிபோர்த்தான் பலர்பாடும் பழனத்தான் நினைக்கின்ற நினைப்பெல்லாம் உரையாயோ நிகழ்வண்டே சுனைக்குவளை மலர்க்கண்ணாள் சொல்தூதாய்ச் சோர்வாளே. 55
திருச்சிற்றம்பலம்
17

Page 15
ஐந்தாந் திருமுறை திருநாவுக்கரசு நாயனார்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
தலம் - திருமறைக்காடு
பண் - திருக்குறுந்தொகை இராகம்-மாயாமாளவகெளளை தாளம்- ஆதி
பண்ணின் நேர்மொழி யாளுமை பங்கரோ மண்ணி னார்வலஞ் செய்மறைக் காடரோ கண்ணி னாலுமைக் காணக் கதவினைத் திண்னமாகத் திறந்தருள் செய்மினே 58
இராகம்-பூர்வகல்யாணி தாளம்- ஆதி
மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிளவேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தையிணையடி நீழலே 59
திருச்சிற்றம்பலம்
18

ஆறாந் திருமுறை
திருநாவுக்கரசு நாயனார்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
தலம் - திருக்காளத்தி கட்டளை - 1
இராகம் - அரிகாம்போதி
மனத்தகத்தான் தலைமேலான் வாக்கினுள்ளான்
வாயாரத் தன்னடியே பாடுந் தொண்டர் இனத்தகத்தான் இமையவர்தம் சிரத்தின் மேலான்
ஏழண்டந் தப்பாலான் இப்பாற் செம்பொன் புனத்தகத்தான் நறுங்கொன்றைப் போதினுள்ளான்
பொருப்பிடையான்நெருப்பிடையான் காற்றினுள்ளான் கனத்தகத்தான் கைலாயத்துச்சிஉள்ளான்
காளத்தியான் அவன்என் கண்ணுளானே 58
தலம் - திருநல்லூர் கட்டளை-1
இராகம் - அரிகாம்போதி
நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார் நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார் சினந்திருகு களிற்றுஉரிவைப் போர்வை வைத்தார் செழுமதியின் தளிவைத்தார் சிறந்து வானோர் இனந்துருவி மணிமகுடத் தேறத்துற்ற
இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி நனைந்தனைய திருவடிஎன் தலைமேல் வைத்தார்
நல்லூர்எம் பெருமானார் நல்லவாறே. - 59
19

Page 16
தலம் - திருவையாறு கட்டளை-1
இராகம் - அரிகாம்போதி ஓசை ஒலியெலா மானாய் நீயே
உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே வாச மலரெலாம் ஆனாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே தேச விளக்கெலா மானாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ 60
தலம் - திருப்பூம்புகலூர் கட்டளை-1
இராகம் - அரிகாம்போதி எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ
எம்பெருமான் திருவடியே எண்ணினல்லால் கண்ணிலேன் மற்றோர்களைக் கண்இல்லேன்
கழலடியே கைதொழுது காணினல்லால் ஒண்ணுளே ஒன்பது வாசல்வைத்தாய்
ஒக்க அடைக்கும்போது உணரமாட்டேன் புன்னியா உன்னடிக்கே போதுகின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே. 61
திருச்சிற்றம்பலம்
20

ஏழாந் திருமுறை சுந்தரமூர்த்தி நாயனார்
திருச்சிற்றம்பலம்
தலம்- திருவெண்ணெய் நல்லூர் கட்டளை -1 பண் - இந்தளம் இராகம்-மாயாமாளவகெளளை தாளம்- ரூபகம்
பித்தாபிறைசூடிபெருமானே அருளாளா எத்தான்மறவாதேநினைக் கின்றேன் மனத்துன்னை வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூ
அருட்டுறையும் அத்தா வுனக்காளாய்இனி அல்லேன் எனலாமே. 62
தலம்- திருக்கேதீச்சரம் கட்டளை -1
பண் - நட்பாடை இராகம்-கம்பீரநாட்டை தாளம்- ரூபகம்
நத்தார்படை ஞானன்பசு வேறிந்நனை கவிழ்வாய் மத்தம்மத யானையுரி போர்த்தமண வாளன் பத்தாகிய தொண்டர்தொழு பாலாவியின் கரைமேல்
செத்தார்எலும் பணிவான்திருக் கேதீச்சரத் தானே. 63
நமச்சிவாயத் திருப்பதிகம்
தலம்- திருப்பாணடுக்கொடுமுடி கட்டளை -2
பண் - பழம்பஞ்சுரம இராகம்-சங்கராபரணம் தாளம்- ரூபகம்
மற்றுப் பற்றெனக் கின்றிநின்திருப் பாதமேமனம் பாவித்தேன் பெற்ற லும்பிறந்தேன் இனிப்பிறவாத தன்மைவந் தெய்தினேன் கற்றவர் தொழு தேத்துஞ்சீர்க்கறை யூரிற்பாண்டிக் கொடுமுடி நற்றவாஉனை நான்மறக்கினுஞ் சொல்லுநா நமச்சிவாயவே. 64
21

Page 17
திருத்தெண்டத் தொகை
தலம்- பொது 6'Lഞണ് -1 பண் - கொல்லிக்கெளவாணம் இராகம்-நவரோஜ் தாளம்- கண்டசாப்பு தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன் இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன் வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க்கடியேன் அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
ஆரூரன் ஆரூரிலம்மானுக் காளே. 65
தலம்- திருக்கோளிலி W கட்டளை -1
பண் - நட்டராகம் இராகம்-பந்துவராளி தாளம்- ரூபகம்
நீள நினைந்தடியேன் உமை நித்தலுங் கைதொழுவேன் வாளன கண்மடவாள் அவள்வாடி வருந்தாமே கோளிலியெம்பெருமான குண்டையூர்ச் சிலநெல்லுப் பெற்றேன்
ஆளிலை யெம்பெருமான் அவை அட்டித் தரப்பணியே. 66
தலம் - திருக்கலய நல்லூர்
கட்டளை -1 பணி -தக்கராகம்
இராகம்-காம்போதி தாளம்- கண்டசாப்பு
செருமேவு சலந்தரனைப் பிளந்தசுடர் ஆழி
செங்கண்மலர்ப் பங்கயமாச் சிறந்தானுக் கருளி இருள்மேவும் அந்தகன்மேல் திரிசூலம் பாய்ச்சி
இந்திரனைத் தோள்முரித்த இநையவன்ஊர் வினவில் பெருமேதை மறையொலியும் பேரிமுழவு ஒலியும்
பிள்ளையினந்துள்ளிவிளையாட்டொலியும் பெருகக் கருமேதி புனல்மண்டக் கயல்மண்டக் கமலங்
களிவண்டின் கணம்இரியும் கலயநல்லூர் கானே. 67
22

தலம் - திருப்புன்கூர் கட்டளை -1
பண் -தக்கேசி இராகம்-காம்போதி தாளம்- திரிபுடை
அந்தணாளனுன் அடைக்கலம் புகுத அவனைக் காப்பது காரணமாக வந்த காலன்றன் ஆருயிரதனை வவ்வினாய்க் குன்றன் வண்மைகன் டடியேன் எந்தை நீயெனை நமன்தமர் நலியில் இவன்மற் றென்அடி யானென விலக்கும் சிந்தையால் வந்துன் திருவடி யடைந்தேன்
செழும்பொழில்திருப் புன்கூரு ளானே 68
தலம் - திருமுருகன் பூண்டி கட்டளை -1 Lussi -பழம்பஞ்சுரம் இராகம்-சங்கராபரணம் Tamb- SarögerITŮL
கொடுகுவெஞ்சிலை வடுகவேடுவர் விரவலாமை சொல்லித் திடுகுமொட்டெனக் குத்திக்கூறை கொண்டா றலைக்குமிடம் முடுகுநாறிய வடுகர்வாழ் முருகன் பூண்டிமாநகள்வாய் இடுகுநுண்ணிடை மங்கை தன்னொடும் ஏத்துக்கிங்கிருந்தீர்
r எம்பிரானிரே. 69
தலம் - திருக்கச்சியேகம்பம் கட்டளை -3
பண் - தக்கேசி இராகம்-காம்போதி தாளம்- ஆதி ஆலந்தான் உகந்தமுது செய்தானை ஆதியை அமரர் தொழுதேத்தும் சீலந்தான் பெரிதும் உடையானைச்
சிந்திப்பார் அவர் சிந்தையுளனை ஏலவார்குழலாள் உமைநங்கை என்றுமேத்தி
வழிபடப் பெற்ற காலகாலனைக் கம்பனெம்மானைக் காணக்கண்
அடியேன் பெற்றவாறே. 70
23

Page 18
தலம் - திருவையாறு கட்டளை -1 பண் -காந்தார பஞ்சமம் இராகம்-கேதாரகெளளை தாளம்- ஆதி பரவும் பரிசொன்று அறியேன்நான் பண்டே உம்மைப் பயிலாதே இரவும் பகலும் நினைந்தாலும் எய்தநினைய மாட்டேன்நா கரவில் அருவி கமுகுண்னத் தெங்கங்குலைக்கீழ்க் கருப்பா அரவந்திரைக் காவிரிக்கோட்டத்து ஐயாறுடைய அடிகளே. 71
தலம் - திருக்கழுக்குன்றம் கட்டளை -1 ш60d - bi Lшто இராகம்-கம்பீரநாட்டை தாளம்-மிஸ்ரசாபு கொன்று செய்த கொடுமையாற்பல சொல்லவே நின்ற பாவ வினைகள் தாம்பல நீங்கவே சென்று சென்று தொழுமின் தேவர்பிரானிடம்
கன்றினோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே. 72
தலம் - திருக்கொகுடிக்கோயில் கட்டளை -2
பண் -நட்டராகம் இராகம்-பந்துவராளி தாளம்- கண்டசாபு
சிம்மாந்து சிம்புளித்துச் சிந்தையினில் வைத்துகந்து திறம்பா வண்ணம் கைம்மாவின்உரிவை பேர்த்துஉமைவெருவக்கண்பானைகருப்பறியலுர்க் கொய்மாவின் மலர்ச்சோலைக் குயில்பாடமயிலாடும் கொகுடிக் கோயில்
எம்மானை மனத்தினால் நினைந்தபோதவர்நமக்குஇனிய வாறே. 73
தலம் - திருவாலங்காடு கட்டளை -3 பண் -பழம்பஞ்சுரம் இராகம்-சங்கராபரணம் தாளம்- ஆதி முத்தா முத்திதரவல்ல முகிழ்மென் முலையாள் உமைபங்க சித்தா சித்தித்திறங்காட்டும் சிவனே தேவர் சிங்கமே பத்தா பத்தர்பலர் போற்றும் பரமா பழையனுர்மேய அத்தா ஆலங்காடாஉன் அடியார்க் கடியேன் ஆவேனே. 74
24

தலம் - திருவாரூர் கட்டளை -1
பண் -காந்தாரம் இராகம்-நவரோஜ் தாளம்- ஆதி
கரையும் கடலும் மலையும் காலையுமாலையு மெல்லாம் உரையில் விரவிவருவான் ஒருவன் உருத்திர லோகன் வரையின் மடமகள்கேள்வன் வானவர் தானவர்க்கெல்லாம்
அரையன் இருப்பதும் ஆரூர் அவர்நம்மையுமாள்வரோ கேள். 75
தலம் - திருவாரூர் கட்டளை -1 பண் - செந்துருத்தி இராகம்-மத்தியமாவதி தாளம்- ரூபகம்
மீள அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி
ஆள யிருக்கும அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
வாளங் கிருப்பீர் திருவாரூரீர் வாழ்ந்து போதிரே. 76
தலம் - திருநொடித்தான்மலை கட்டளை -1 பண் - பஞ்சமம் இராகம்-ஆகிரி தாளம்- ரூபகம்
தானெனை முன்படைத்தான் அதறிந்துதன் பொன்னடிக்கே நானென் பாடலந்தோ நாயினேனைப் பொருட்படுத்து வானெனை வந்தெதிர்கொள்ள மத்தயானை அருள்புரிந்து ஊனுயிர் வேறு செய்தான் நொடித்தான்மலை உத்தமனே. 77
திருச்சிற்றம்பலம்
25

Page 19
எட்டாந் திருமுறை மாணிக்கவாசக கவாமிகள்
திருச்சிற்றம்பலம்
திருவாசகம்
இராகம்-மோகனம் (சுத்தாங்கமாகப் பாட வேண்டியது)
மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்துஉன்
விரையார் கழற்குஎன் கைதான் தலைவைத்துக் கண்ணிர் ததும்பி
வெதும்பி உள்ளம் பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றிசயசய
போற்றி என்னும் கைதான் நெகிழவிடேன் உடையாய் என்னைக்
கண்டு கொள்ளே. 78
ஆடுகின்றிலை கூத்துடையான் கழற்கு
அன்பிலை என்புஉருகிப் பாடுகின்றிலை பதைப்பதும் செய்கிலை
பணிகிலை பாதமலர் சூடுகின்றிலை சூட்டுகின்றதும்இலை
துணையிலி பினநெஞ்சே தேடுகின்றிலை தெருவுதோறு அலறிலை
செய்வதொன்றறியேனே. 79
இன்றெனக் கருளி இருள்கடிந்து உள்ளத்து
எழுகின்ற ஞாயிறே போன்று நின்ற நின்தன்மை நினைப்பற நினைந்தேன்
நீயலாற் பிறிது மற்றின்மை சென்று சென்றணுவாய்த் தேய்ந்து தேய்ந்து
ஒன்றாந் திருப்பெருந்துறைஉறை சிவனே ஒன்று நீயல்லை அன்றி ஒன்றில்லை
யாருன்னை அறியகிற் பாரே. 80
26

பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும் பென்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான் வின்சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன் கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை மண்சுமந்து கூலிகொண்டு அக்கோலால் மொத்துண்டு புண்சுமந்த பொன்மேனிபாடுதுங்காண் அம்மானாய். 81
நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனை பேயேன துள்ளப்பிழை பொறுக்கும் பெருமையனை சீயெது மில்லாதென் செய்பணிகள் கொண்டருளும் தாயான ஈசற்கே சென்றுதாய் கோத்தும்பீ 82
பால்நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்துநீபாவியே னுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த செல்வமே சிவபெருமானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. 83
திருக்கோவையார்
திருவளர் தாமரை சீர்வளர் காவிகள் ஈசன் தில்லைக் குருவள் பூங்குமிழ் கோங்கு பைங்காந்தள் கொண்டோங்கு தெய்வ மருவளர் மாலையொர் வல்லியி னொல்கியனநடை வாய்ந்து உருவள் காமன்றன் வென்றிக் கொடிபோன் றொளிர்கின்றதே. 84
27

Page 20
பூரண பொற்குடம் வைக்க மணிமுத்தம் பொன்பொதிந் தோரணம் நீடுக தூரியம ஆர்க்க தொன்மால் அயற்கு காரணன் ஏரணி கண்ணுத லோன்கடல் தில்லையன்ன வாரணவும் முலைமன்ற லென்றெங்கும் மனமுரசே 85
சிறைவான் புனற்றில்லைச் சிற்றம்பலத்து மென்சிந்தையுள்ளு உறைவானுயர்மதிற் கூடலினாய்ந்த ஒண்தீந தமிழின்
துறைவாய் நுழைந்தனையோ அன்றி யேழிசைக்சூழல்புககே இறைவா தடவரைத் தோட்கென் கொலாம்புகுந் தெய்தியதே 86
திருச்சிற்றம்பலம்
28

ஒன்பதாந் திருமுறை
திருச்சிற்றம்பலம்
திருவிசைப்பா திருமாளிகைத் தேவர் பாடியது
இராகம் - ஆனந்த பைரவி
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே தெளிவளர் பளிங்கின் திரண்மணிக் குன்றே
சித்தத்துள் தித்திக்குந் தேனே அளிவளர் உள்ளந்து ஆனந்தக் கனியே
அம்பலம் ஆடரங்காக வெளிவளர் தெய்வக் கூத்துஉகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே. 87
கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியை
கரையிலாக் கருணைமா கடலை மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்றளம் சிவனைத்
திருவிழிமிழலை வீற்றிருந்த கொற்றவன் தன்னைக் கண்டுகண் டுள்ளங்
குளிர என் கண் குளிர்ந்தனவே. 88
கருவூர்த் தேவர் பாடியது
29

Page 21
புவனநாயகனே அகவுயிர்க் கமுதே
பூரணா ஆரணம் பொழியும் பவளவாய் மணியே பணிசெய்வார்க் கிரங்கும்
பசுபதீபன்னகா பரணா அவனி ஞாயிறுபோன்று அருள்புரிந்து அடியேன்
அகத்திலும் முகத்தலை மூதூர்த் தவளமா மணிப்பூங் கோயிலும் அமர்ந்தாய்
தனியனேன் தனிமை நீங்குதற்கே. 89
பவளமால் வரையைப் பனிபடர்ந்தனையதோர்
படரொளி தருதிருநீறும் குவளை மாமலர்க் கண்ணியும் கொன்றையும்
துன்று பொறகுழல் திருச்சடையும் திவள மாளிகை சூழ்தரு தில்லையுட்
திருநடம் புரிகின்ற தவள வண்ணனை நினைதொறும் என்மனம்
தழல்மெழுகு ஒக்கின்றதே 90
பின்னு செஞ்சடையும் பிறைதவழ் மொழும்பும்
பெரியதங் கருணையும் காட்டி
அன்னை தேன்கலந்து இன்னமுது உகந்து
அளித்தங்கு அருள்புரி பரமர்தங் கோயில்
புன்னை தேன்சொரியும் பொழிலகங் குடைந்து
பொறிவரி வண்டினம் பாடும்
தென்ன தேன் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே 91.
30

திருப்பல்லாண்டு - சேந்தனார்
மன்னுகதில்லை வளர்கநம் பக்தர்கள்
வஞ்சகள் போயகலப் பொன்னின்செய் மண்டபத்துள்ளே புகுந்து
புவனியெல்லாம் விளங்க அன்னநடை மடவாள் உமைகோன்
அடியோமுக்கு அருள் புரிந்து பின்னைப் பிறவியறுக்க நெறிதந்த
பித்தர்க்குப் பல்லாண்டு கூறுதுமே 92
சொல்லாண்ட சுருதிப் பொருள் சோதித்த தூய்மனத் தொண்ட ருள்ளீர் சில்லாண்டிற் சிதையும் சிலதேவர்
சிறுநெறி சேராமே வில்லாண்ட கனகத்திரள் மேருவிடங்கன்
விடைப்பாகன் பல்லாண் டென்னும் பதங்கடந் தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே 93
பாலுக்குப் பாலகன் வேண்டி யழுதிடப்
பாற்கட லீந்த பிரான் மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்
மன்னிய தில்லை தன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற
சிற்றம் பலமே யிடமாகப் பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
31

Page 22
குழலொலி யாழொலி கூத்தொலி ஏத்தொலி
எங்கும் குழாம் பெருக விழவொலி விண்ணளவுஞ் சென்று
விம்மிமிகு திருவாரூரின் மழவிடை யார்க்கு வழிவழியாளாய்
மணஞ்செய் குடிப்பிறந்த பழவடியா ரொடுங்கூடி எம்மானுக்கே
பல்லாண்டு கூறுதுமே
ஆரார் வந்தார் அமரர் குழாத்தில்
அணியுடை யாதிரை நாள் நாராய னனொடு நான்முக னங்கி
இரவியும் இந்திரனும் தேரார் வீதியிற் தேவர் குழாங்கள்
திசையனைத்தும் நிறைந்து பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும்
பல்லாண்டு கூறுதுமே
திருச்சிற்றம்பலம்
32

பத்தாந்திருமுறை
திருமந்திரம்- திருடுலர் திருச்சிற்றம்பலம்
சிவனோ டொக்கும் தெய்வம் தேடினுமில்லை அவனோ டொப்பா ரிங்கு யாவருமில்லை புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னும் தவளச் சடைமுடித் தாமரை யானே 97
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது யாருமறிகிலார் அன்பே சிவமாவது யாருமறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே 98
நாடும் நகரமும் நாற்றிருக் கோயிலும் தேடித் திரிந்து சிவபெருமான் என்று பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின் கூடிய நெஞ்சத்துக் கோயிலாக் கொள்வனே 99
சிவசிவ என்கிலர் தீவினையாளர் சிவசிவ என்றிடத் தீவினை மாளும் சிவசிவ என்றிடத் தேவருமாவார் சிவசிவ என்னச் சிவகதி தானே 100
சைவ சமயத் தனிநாயகன் நந்தி உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு தெய்வச் சிவநெறிச் சன்மார்க்கம் சேர்ந்துய்ய வையத் துளார்க்கு வகுத்து வைத்தானே 101.
33

Page 23
பதினோராந் திருமுறை
கபிலதேவர்
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினாற் கண்ணிற் பணிமின் கனிந்து 102
நக்கீரர்
முருகனே செந்தி முதல்வனே மாயோன் மருகனே ஈசன் மகனே- ஒருகைமுகன் தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்போழுதும்
நம்பியே கைதொழுவேன் நான் 103
சேரமான் பெருமானாயனார்
சிந்தனைசெய்ய மனம்அமைத்தேன் செப்பநா
அமைத்தேன் வந்தனை செய்யத் தலை அமைத்தேன் கைதொழ
அமைத்தேன் பந்தனை செய்வதற் கன்பமைத்தேன் மெய்அரும்ப
வைத்தேன் வெந்த வெண்ணிறனி ஈசற்கு இவையான்
விதித்தனவே 104
34

பட்டினத்தடிகள்
வாழ்வாகவும் தங்கள் வைப்பாகவும் மறையோர்
வனங்க ஆள்வாய் திருத்தில்லை யம்பலத்தா உன்னையன்றி
ஒன்றைத் தாழ்வாரறியாச் சடிலநஞ்சை உண்டிலையாகில்
அன்றே
மாள்வார் சிலரையன்றோ தெய்வமாக
வணங்குவமே 105
நம்பியாண்டார் நம்பி
என்றும் அடியவர் உள்ளத் திருப்பன இவ்வுலகோர் நன்று மலர்கொடு தூவித் துதிப்பன நல்லசங்கத்து
ஒன்றும் புலவர்கள் யாப்புக் குரியன ஒண்கலியைப் பொன்றும் கவுணியன் சைவசிகாமணி பொன்னடியே 108
திருச்சிற்றம்பலம்
35

Page 24
பன்னிரண்டாந் திருமுறை
பெரிய புராணம்- சேக்கிழார் சுவாமிகள் திருச்சிற்றம்பலம்
இராகம் - மத்தியமாவதி
உலகெலாம் உணர்ந்து ஒதற்க அரியவன் நிலவுலாவிய நீர்மலி வேனியன் அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவாம் 107
ஐந்துபேரறிவும் கண்களே கொள்ள
அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையே யாகக் குணமொரு மூன்றும்
திருந்து சாத்துவிக மேயாக இந்துவாழ் சடையானாடும் ஆனந்த எல்லையில்
தனிப்பெருங் கூத்தின் வந்தபேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார் 108
நன்மைபெருகு அருள்நெறியே வந்தணைந்து
நல்லூரின் மன்னுதிருத் தொண்டனார் வணங்கி மகிழ்ந்துஎழும்
பொழுதில் உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றேன்
என்றுஅவர்தம் சென்னிமிசைப் பாதமலர் சூட்டினான்
சிவபெருமான் 109
36

இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின்
வேண்டுகின்றார் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல்
உன்னை என்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான்
மகிழ்ந்துபாடி அறவாநி ஆடும்போது உன்னடியின் கீழ்
இருக்க என்றார்
ஆலமே அமுதமாக உண்டு வானவர்க் களித்துக் காலனை மார்க்கண்டர்க் காகக் காய்ந்தனை
அடியேற்கின்று ஞாலம் நின்புகழேயாக வேண்டும்நான் மறைகள்
ஏத்தும் சீலமே ஆலவாயிற் சிவபெருமானே என்றார்.
மண்ணிற் பிறந்தார் பெறும்பயன் மதிசூடும் அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தல் கண்ணினால் அவர்நல் விழாப்பொலிவு கண்டார்தல்
என்று மின்பம் பெருகும் இயல்பினால் ஒன்று காதலித்துள்ளமும் ஓங்கிட மன்றுளார் அடியார் அவர் வான்புகழ்
நின்ற தெங்கும் நிலவி உலகெலாம்.
திருச்சிற்றம்பலம்
37
110
111
112
113

Page 25
திருப்புகழ் - அருணகிரிநாதர்
gJTTesub-plTeoL தாளம் - ஆதி
கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் அடிபேணி கற்றிடும் அடியவர் புத்தியினுறைபவர்
கற்பக மெனவினை கடிதேகும் மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள்புய மதயானை மத்தள வயிறனை உத்தமிபுதல்வனை
மட்டவிழ் மலர்கோடு பணிவேனே முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
அச்சது பொடிசெய்த அதிதீரா அத்துயரதுகொடு சுப்பிரமணிபடும்
அப்புன மதனிடை இபமாகி அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் பெருமாளே. 114
gyjTöbb- armon தாளம் - கண்டசாபு சந்ததம் பந்தத் தொடராலே சஞ்சலம் துஞ்சித் திரியாதே கந்தனென் றென்றுற் உனைநாளும் கண்டுகொண் டன்புற் றிடுவேனோ தந்தியின் கொம்பைப் புணர்வோனே சங்கரன் பங்கிற் égo)6).JLJTGot செந்திலங் கண்டிக் &bjIFT (36) GADIT
தென்பரங் குன்றிற் பெருமாளே. 115
38

இராகம்- சண்முகப்பியா தாளம் -மிஸ்ரசாப்பு
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபரன் எனவோது முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரு முப்பத்துமூ வர்க்கத் தமரரும் அடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடும்
ஒற்றைக்கிரிமத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப் பத்தற்கிரதத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பகூடித்தொடு ரகூழித் தருள்வதும் ஒருநாளே தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொக்க நடிக்கக் கழுகொடு கழுகாடத் திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தோக்குத் தொகுதொகு சித்ரப்பவுரிக்குத் ரிகடக எனவோதக் கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு குந்திப்புதை புக்குப் பிடியென (UDgold).605 கொட்புற்றெழ நட்பற்றவுணரை வெட்டிப்பலியிட்டுக் குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே 116
39

Page 26
இராகம்- தேஷ தாளம் - ஆதி
பத்தியால் யானுனைப் Lഴൈളുഥ பற்றியே மாதிருப் புகழ்பாடி முத்தனா மாறெனைப் பெருவாழ்வில் முத்தியே சேர்வதற் கருள்வாயே உத்தமதான சற்குனர் நேயா ஒப்பிலா மாமணிக் கிரிவாசா வித்தகா ஞானசத் திணிபாதா வெற்றிவேலாயுதப் பெருமாளே
இராகம்- சக்ரவாகம் தாளம் - கண்டசாப்பு அபகார நிந்தைபட் டுழலாதே அறியாத வஞ்சரைக் குறியாதே உபதேச மந்திரப் பொருளாலே உனைநான் நினைந்தருள் பெறுவேனோ இபமா முகன் தனக் கிளையோனே இமவான் மடந்தை உத்தமிபாலா செபமாலை தந்தசற் குருநாதா திருவா வினன்குடிப் பெருமாளே
இராகம்- சுபபந்துவராளி தாளம் - கண்டசாப்பு எதிரிலாத பத்தி தனைமேவி இனியதாள் நினைப்பை இருபோதும் இதய வாரிதிக்குள் உறவாகி எனதுளே சிறக்க அருள்வாயே கதிரகாம வெற்பில் உறைவோனே கனக மேருவொத்த புயவீரா மதுர வாணயுற்ற கழலோனே வழுதிகூன் நிமிர்த்த பெருமாளே
40
117
118
119

பட்டினத்தடிகளின் திருப்பாடல்கள்
நல்லார் இணக்கமும் நின்பூசை நேசமும் ஞானமுமே அல்லது வேறு நினைவுளதோ அகமும் பொருளும் இல்லாளுஞ் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழிலுடம்பும்
எல்லாம் வெளிமயக்கே இறைவாகச்சி ஏகம்பனே.
பிறக்கும் பொழுது கொடு வந்ததில்லைப் பிறந்து மண்மேல் இறக்கும் பொழுதுகொடு போவதில்லை இடைநடுவிற் குறிக்குமிச் செல்வஞ் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்கும் குலாமருக் கென் சொல்லுவேன் கச்சியேகம்பனே
ஐயுந் தொடர்ந்து விழியுந் சொருகியறிவழிந்து மெய்யும் பொய்யாகி விடுகின்ற போதொன்று வேண்டுவன் யான் செய்யுந் திருவொற்றியூருடையீர் திருநீறு மிட்டுக் கையுந் தொழப்பண்ணி ஐந்தெழுத் தோதவுங் கற்பியுமே.
கந்தர் அலங்காரம்
நாள் என்செய்யும் வினைதான் என்செய்யும் எனை நாடிவந்த கோள் என்செயும் கொடுங் கூற்றென்செயும் குமரேசரிரு தாளும் சிலம்புஞ் சலங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடிலே.
41

Page 27
கந்தர் அனுபூதி
எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ சிந்தா குலமானவை தீர்த்து எனையாள் கந்தா கதிர்வேல் அவனே உமையாள்
மைந்தா குமரா மறை நாயகனே.
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
அபிராமி அந்தாதி
ஆத்தாளை எங்கள் அபிராமி வல்லியை அண்டமெல்லாம் பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளை புவியடங்கக் காத்தாளை அங்குச பாசாங்குசமும் கரும்பும் அங்கை சேத்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு
தீங்கில்லையே
தனம்தரும் கல்விதரும் ஒருநாளுந் தளர்வு அறியா மனந்தரும் தெய்வ வடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சமில்லா இனம்தரும் நல்லன எல்லாம்தரும் அன்பர் என்பவர்க்கே கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.
42

சிவபுராணம்
திருச்சிற்றம்பலம்
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமனிதன் தாள்வாழ்க ஆகமம் ஆகிநின்ற அண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
ஈசனடி போற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடிபோற்றி நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி
ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தாள் வணங்கி சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஒய உரைப்பன்யான்
43.

Page 28
கண்ணுதலான் தன் கருணை கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற்கு எட்டா எழிலார் கழலிறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் என் இறந்து எல்லை இலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
வெய்யாய் தனியாய் இயமான னாம்விமலா பொய்யாயின எல்லாம் போயகல வந்தருளி மெஞ்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே
ஆக்கம் அளவு உறுதி இல்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய் போக்குவாய் என்னை புகுவிப்பாய் நின்தொழும்பின் நாற்றத்தின் நேரியாய் சேயாய் நனியானே மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே
44

கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறிநின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப் புறந்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி மலம்சோரும் ஒன்பது வாயில் குடிலை மலங்கப் புலன்ஐந்தும் வஞ்சனையைச் செய்ய
விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்த அன்பு ஆகிக் கசிந்துஉள் உருகும் நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்கு
தாயிற் சிறந்த தயவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனார் அமுதே சிவபுரனே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள் புரிந்து நெஞ்சில்வஞ்சங் கெடப்
பேராது நின்ற பெருங்கருணைப் பேர் ஆறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்துள் ஒழிக்கும் ஒளியானே
நீராய் உருக்கிஎன் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
45

Page 29
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய் சோதியனே துன் இருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்தமெய்ஞ்ஞானத்தால் கொண்டுணர்வார் தங்கருத்தின்
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்உணர்வே போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணயனே காக்கும் எம் காவலனே காண்பரிய பேர்ஒளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற தோற்றச் சுடர்ஒளியாய்ச் சொல்லாத நுண்உணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனையுள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப ஆற்றேன்எம் ஐயா அரனேயே என்றென்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார் மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே நள் இருளில் நட்டம் பயின்றாடும் நாதனே தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லற்பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளர் சிவன் அடிக்கீழ் பல்லோரும் ஏத்தப் பணிந்து
திருச்சிற்றம்பலம்.
46

சைவ வாழ்வு
சைவப் பண்பாடு என்று பெருமையாகப் பேசிக் கொள்கிறோம். உண்மையில், பேச்சோடு நிறுத்திக் காற்றோடு விட்டு விடாமல், சைவப் பண்பாட்டினை நாம் வாழ்க்கையோடு இணைத்துக் கொண்டு வாழ்ந்து வருவோமானால், அது எம்மைப் பெருமையுடையவர்கள் ஆக்கும்.
சைவத்தின் முழுமுதற் கடவுள் சிவம். சிவத்தை நம் உள்ளத்தில அமர்த்தி, அதன் அருள் நிறைந்த காட்சியை என்றும் தரிசித்தபடி இருந்தால், நம் வாழ்வில் ஆனந்தம் நிறைந்திருக்கும். சைவப்பண்பாட்டின் அதிஉயர் சிகரமாக விளங்குவது, சிவத்தை நமது இதயகமல பீடத்தில் இருத்தி வழிபடுதல் ஆகும்
எமது இதயகமலத்தில் வீற்றிருக்கும் பரம்பொருள், அன்பு ஊற்றாக இருக்கும். கருணை வெள்ளமாகப் பாயும், அருள் பிரவாகமாகவே அமையும். இறைவன் வீற்றிருக்கும் இடம் தூய்மையானது. தூய்மையான இடத்திலேயே இறைவன் இருப்பான்.
சிவம் அமர்ந்திருக்கும் உள்ளம் தூய்மை, அன்பு, கருணை, அருள் நிறைந்திருக்கும். அவையாவும் செயல்களில் தோன்றும். அங்கு மலர்வதுதான் சைவப்பண்பாடு.
சிவத்தை உபாசனை செய்தல் என்பது அன்பினை உபாசித்தல் ஆகும். நீதியினை ஆராதித்தல் ஆகும். தெய்வீக வாழ்விற்கு அவையே ஆதாரம். எனவேதான், சிவத்தை மறத்தலாகாது என்றும், சிவத்தை அடைதலையே குறிக்கோளாகக் கொள்ள வேண்டும் என்றும் அருளாளர்கள் எமக்குக் கூறிவைத்துள்ளனர். அப்படியாயின் அன்பை மறத்தல் ஆகாது. நீதியைப் புறக்கணித்தல் கூடாது என்று பொருள்படுகின்றது. அன்பையும் நீதியையும் நாம் வாழ்வில் அடைந்தால், ஆனந்தம் ததும்பும் என்பது உறுதி.
உன்மையான சைவப் பண்பாட்டின் அடி அத்திவாரமாக அன்பும் நீதியும் விளங்குகின்றன. வாழ்வில் அன்பினைப்
47

Page 30
பேணுபவர்களும் நீதியை கடைப்பிடிப்பவர்களும் சைவர்கள் ஆவர்.
சைவப்பண்பாட்டில் சரியான சிந்தனை, முறையான பேச்சு, நீதியான செயல்கள் என்னும் அடிப்படையில் சரியானதும், ஒழுங்கானதும், நீதியானதுமான வாழ்க்கை கட்டியெழுப்பப்படுகிறது. அத்தகைய சைவவாழ்வு தன்னலமற்றதும், பிறர் நலம் பேணுவதும், எவர்க்கும், எவ்வுயிர்க்கும் தீங்கு நினைக்காததும் ஆன ஓர் உயர்ந்த பண்பாட்டு வாழ்வாக அமையும்.
“என் கடன் பணி செய்து கிடப்பதே" என்னும் அப்பர் சுவாமிகளின் வாக்கு சைவப் பண்பாட்டினைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. பணி செய்தல், அதுவும் கைம்மாறு எதிர்பாராது பணிசெய்தல், பிற உயிர்களின் மீது கொண்ட எல்லையற்ற அன்பின்ால் நடைபெறுவது சைவம். அன்பின் வடிவமாக இறைவனைக் காட்டுகிறது. அதேவேளை, அன்பின் வழியாக இறைவனை அடைய வழிகாட்டுகிறது.
சைவர்கள் இறைவனைக் கும்பிடுவதும் உலக நலத்திற்காகவே நமது சமயநெறி அடிப்படையில் அன்பு நெறியாகும். மக்கள் தொண்டையே சைவப்பண்பாடு. “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்னும் திருமூலர் வாக்கு. சைவப்பண்பாட்டின் பிழிந்த சாரம் ஆக உள்ளது.
இவ்வுலகின் கண் உள்ள எல்லா உயிர்களிடத்தும் இறைவன் வியாபித்து இருப்பதை வற்புறுத்தி, எல்லா உயிர்கள் மீதும் அன்பு வைத்து, அவற்றை ஓம்பிப் பாதுகாக்கத், தொண்டு புரிவதே இறைவனுக்குச் செய்யும் பெரும்பணி என்பதை அடிநாதமாகக் கொண்டது சைவப் பண்பாடு.
“விருந்து புறத்ததால் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று” என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. வீட்டின் புறத்தே பசியோடு ஒருவர் இருக்கத் தக்கதாக, தான் மட்டும் உண்பது, அது
48

சாவாமருந்தாகிய அமிர்தமாக இருந்தாலும், அது விரும்பத்தக்கது அன்று. “பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல்” சைவப்பண்பாடு. எவரையும் வெறுக்காமலும், எல்லோருடனும் நட்புப் பூண்டும் வாழ்தலே சைவத்தின் வாழ்க்கை நெறி. உலகினையோ, உலக வாழ்வினையோ வெறுக்கவோ, ஒதுக்கவோ வேண்டிய அவசியமில்லை. உலகப் பற்றற்ற நிலையில் , உலகிலேயே வாழ்ந்து, தத்தம் கடமைகளை ஒழுங்காகப் புரிந்து, பிறர் வாழத் தொண்டுகள் செய்து, நல்லன எல்லாவற்றையும் வளர்க்கலாமெனச் சைவம் வலியுறுத்துகின்றது. சைவப்பண்பாடு மக்களை செம்மையான, சீரான நல் வாழ்க்கை வாழ்வதற்கு இட்டுச் செல்கிறது.
“உண்மையுள்ளவனாக இரு. எளிமையாக வாழ். நேர்மையாக நட. பிற உயிர்களில் அன்பு செலுத்து. பொறுமையை கடைப்பிடி. நல்லதை துணிந்து செய். தருமம் செய். நாணயமாக இரு. எல்லோருக்கும் தொண்டு செய். இனிமையாக நடந்து கொள். நீதி நெறியில் நில். நன்மையை நாடுக. நலமே புரிக.” இவற்றில் தான் சைவப்பண்பாடு தங்கியுள்ளது.
சைவப்பண்பாட்டுடன் வாழ்பவர்களே சைவர்கள். சிவத்தை முழுமுதற் கடவுளாக வழிபடுபவர்கள். அவர்களே சிவநேசச் செல்வர்கள் ஆவர்.
49

Page 31
குரும்பச் சடங்குகள் அன்னப் பிராசனம்
பிறந்து ஆறாம் மாதம் முதல் இரட்டை மாதங்களில் ஒன்றில் ஆண் குழந்தைக்கும், ஐந்தாம் மாதம் முதல் ஒற்றை மாதங்களில் ஒன்றில் பெண் குழந்தைக்கும் அன்னப் பிராசனம் செய்யலாம். பிள்ளையார் பூசை செய்து சிவாக்கினி காரியங்களுடன் நவக்கிரக பூசையும் இக்கிரியைகளில் இடம் பெறுவது சிறப்பு: அக்கினி முன் கிழக்கு முகமாக குழந்தையை இருத்தி, நெய் கலந்த பாயாசத்தைச் சிவாக்கினியில் ஓமஞ் செய்து சிவபீஜ மந்திரத்தால் அப்பாயாசத்தையே குழந்தைக்கு ஊட்டுவது முறை. பெண்குழந்தைகள் ஆயின் அக்கினிகாரியம் வேண்டியதில்லை என்றும் சொல்வார்.
இதற்கு பால் பருக்கல், சோறு தீற்றுதல் எனப் பேச்சு வழக்கில் கூறப்படுவதுண்டு. ஆண்களுக்கு ம்ே, 8ம், 10ம், 12ம் மாதமும், பெண்களுக்கு 5ம்,7ம், 9ம், 11ம் மாதமும் சுபமுகூர்த்தம் பார்த்து, உப்பு நீக்கிய, சர்க்கரை அமுது அல்லது கற்கண்டு அமுதுபொங்கி, ஆலயங்களில் அல்லது வீட்டில் வைத்துப் பூஜை செய்து தந்தை மூன்று தடவை எடுத்து ஊட்டி மற்றோரும் எடுத்து ஊட்டி ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழக் குழந்தையை ஆசீர்வாதிப்பர்
வித்தியாரம்பம்
கல்வி பயிலத் தொடங்குதல். இது ஐந்தாம் வயதில் நடைபெறலாம். சுபவேளையில் பிள்ளையார் பூசை, சரஸ்வதி பூசை செய்து வித்தியாரம்பம் செய்தல் வேண்டும். குழந்தைக்கு முதன் முதலில் கல்வி கற்க ஆரம்பித்தல். பெரும்பாலும் எம்மவர்கள் விஜயதசமி எனப்படும் நவராத்திரி விழாவின் பூர்த்தியன்றே வித்தியாரம்பத்தை மேற்கொள்வார்கள். இருப்பினும் தைப்பூசத்தன்று மற்றும் உத்தராயணத்திலே ஜாதகரின்
50

நட்சத்திரத்திற்கு ஏற்ப அமைந்த சுபநாளிலும் இதைச் செய்யலாம். தந்தை அல்லது ஆலய குரு, ஆசிரியர் யாரேனும் ஒருவர் இந்த வித்தியாரம்பத்தைச் செய்யலாம். கல்வியில் மேன்மை அடையவே முதற் கல்வியைச் சுபநாளில் சுபநேரத்தில் செய்வது எம்மவர் மரபு.
கோயில் வழிபாடு
மூன்று தரம் அல்லது ஐந்து தரம் அல்லது ஏழு தரம் அல்லது ஒன்பது தரம் கோயிலை வலம் வந்து வழிபாடு செய்யலாம். ஒரு தரம் அல்லது இரு தரம் கோயிலை வலம்
வருதல் குற்றமாகும். அத்திவாரமிடல்
நாம் வீடுகட்டத் தேர்ந்தெடுக்கும் நிலத்திற்குள் முதன்முதலில் செய்யும் பூஜையானது அத்திவாரமிடல், அதற்கு நாம் முறையாக புரோகிதரை (பிராமண குருவை) அணுகி அவருடைய அறிவுரை ஆசியுடன் புண்ணியஷேத்திரங்களாய் விளங்கும் ஆலயங்களின் வீதி மண், மலைமண், ஆற்றுமண், புற்றுமண் ஆனைக் கோட்டுமண் (ஆனை பாதம் பட்ட மண்) எருதுக் கோட்டுமன் (எருது பாதம் பட்ட மண்), குளத்துமண் போன்றவற்றை ஒரே அளவில் எடுத்துக் குழைத்து பெட்டி செய்து, அடிப்பேழையில் பள்ளஞ் செய்து அவற்றில் நவரத்தினக் கற்களைப் போட்டு தங்கத் தகட்டில் “வாஸ்து யந்திரம்” போட்டு ஈசான மூலையில் (வடகிழக்கு மூலையில்) வைத்துப் பூஜை செய்ய வேண்டும். வீட்டின் பெரியார் கையால் அதைக்குழியில் இட்டு அத்திவாரமிடல் வேண்டும்.
இதற்குரிய விளக்கம் யாதெனில் காலங்காலமாக எம் சந்ததியினரை வாழவைக்கும் “கிரகலக்சுமி” எனப்படும். வீட்டையும் எம்மையும் தாங்கி நிற்கும் பூமா தேவியே எம்மால் இயன்ற நவரத்தின, பொன், பொருள், தானங்கள் உமக்கு அர்பணிக்கின்றோம். அதை காலை வேளையில் சூரியபகவான்
51

Page 32
சாட்சியோடு மக்களுக்காகவே தம்மை அர்பப்பணித்து அவர்களுக்காகவே என்றும் இறைவனைப் பிரார்த்திக்கும் சிவாச்சார்யர்களின் துணையோடு முறையாக உமக்கு அர்ப்பணிக்கிறோம். எமது வீட்டு நிலத்தில் நீர்வளம், நிலவளம், பயிர்வளம் நிறைந்து நிற்க அருளவேண்டும் எனப் பிரார்த்திக்கும் பூஜை ஆகும்.
அதேபோன்று வீட்டு வேலைகள் நடைபெறும் காலம் வீட்டுக்கு முதல் நிலை, வளை என்பன வைக்கும் போது அதற்குரியவர்களுக்கு தச்சு வேலையாளிக்கு வஸ்திரம், தட்சணை, தாம்பூலம் கொடுத்து உபசரித்து அவர் மனம் மகிழ எமை வாழ்த்திட வழி செய்யும் உபசாரமாக இது அமையும்.
வீட்டிலே வழிபாட்டறை அமைக்கும் போது கிழக்குமுகமாக அல்லது வடக்கு முகமாக அமைப்பது உத்தமமாகும். பொதுவாகவே வழிபாட்டறை தனிமையான தாகவும், பரிசுத்த இடமானதாகவும் அமைவது வீட்டிற்குச் செல்வ போகங்களைக் கொடுக்கும். தீட்டுகள் (ஆசௌசம்) வரும் காலங்களில் வழிபாட்டறையை யாரும் அணுகாது மூடிவிடுதல் உத்தமம். கிரஹப் பிரவேசம்
கிரஹப் பிரவேசம் எனப்படுவது ஒரு புதிய வீட்டைக் கட்டி முடித்து முதல் முதலாய் வீட்டினுள் பிரவேசிப்பதாகும். இதற்கு முதல் நாள் இரவில் வாஸ்துசாந்தி, நவக்கிரஹ ஹோமம், பூஜை என்பன செய்து அடுத்த நாள் காலையில் கணபதி ஹோமம் லக்ஷ்மி ஹோமம் செய்து வீட்டில் பால் காய்ச்சி அமுது பொங்கிப் பட அறையில் விஷேட பூஜைகள் செய்து குரு பெரியார் ஆசிபெற வேண்டும்.
முதல் நாள் இரவில் செய்யப்படும் பூஜையானது "வாஸ்து சாந்திப் பூஜை” எனப்படும். தேவதை வீட்டின் காவல் தெய்வமாய் போற்றப்படுவர். அந்த வாஸ்த்துவைக் கும்பத்தில் “ஆவாகனம் செய்து” (மந்திரகிரியா நெறியால் வரவழைத்து)பிரியமாய் பூஜையும்
52

ஹோமத்தில் ஆகுதியும் கொடுத்து, வைக்கோலிலே பொம்மை கட்டி, அப்பொம்மைக்கு தீ மூட்டி வீட்டைச் சுற்றியும் வீட்டினுள்ளும் சுற்றி இழுத்து, துஷ்ட தேவதைகள், கண்ணுாறுகள் எல்லாம் அந்த நெருப்பில் ஈர்த்து, மீண்டும் அணுகா வண்ணம், வாஸ்த்து கும்பஜலம் எங்கும் தெளித்து, அந்த வைக்கோல் பொம்மையை முற்சந்தியில் போட்டு எரித்து அந்த துஷ்டதேவதைகளுக்கு உயிர்ப்பலிகொடுக்கும் முகமாய் நீற்றுப் பூசணி வெட்டி அர்ப்பணித்து விடுதல் வேண்டும்.
அடுத்த நாள் காலையில் மங்களமாய், கணபதி, மஹாலஷ்சுமி ஹோம பூஜைகள் செய்து அந்தணர்கள், சுமங்கலிகள் முதலியோர்க்கு தட்சனை, வஸ்திரம் முதலிய தானம் கொடுத்து அவர்கள் திருப்தி அடைந்து மனப்பூர்வமாய் ஆசி வழங்க வேண்டும்.
கிரஹப் பிரவேசத்தில் செய்யப்படும் கிரியை, புண்ணியாக வாசனம், வாஸ்து சாந்தி, நவக்கிரக ஹோமம், மிருத்தியஞ்ச ஹோமம், மற்றும் கணபதி, லக்சுமி ஹோமங்கள் என்பனவாம். மற்றும் வீட்டின் சொந்தக்காரர் அவரவர் வசதிக்கேற்ப விரிவாய், சுருங்கச் செய்யலாம். கும்பங்களிலே அவ்வவ் தெய்வங்களை வரித்துப் பிராமனோத்தமர்களால் வேதமந்திரங்கள் பாராயணம் செய்தும் மருந்து வகை நிறைந்த சமித்துக்கள் ஹோமக்கினியில் இட்டு, வீட்டிலே தெய்வ சானித்தியம் நிறைந்த ஹோம புகைமண்டலம், மந்திரசக்தி கொண்ட கும் பஜலம் போன்றவற்றினால் வீடு பரிசுத்தமாகின்றது. தெய்வீக அருள் நிறையப் பெருகுகின்றது.
கிரஹப் பிரவேச விதிகள்
01. வாசல்கால் வைக்காமலும், தரை பூசாமலும், சுவரில் சுண்ணாம்பு அடிக்காமலும், மனைவிகள்ப்பமாக இருக்கும் காலத்திலும், இயற்கை உபவாதம் நடக்கையிலும், வேதம்
53

Page 33
02.
03.
04.
05.
06.
07.
08.
சொல்லாமலும், வாஸ்து ஹோமம் செய்யாமலும் புதிய வீட்டில் கிரஹப் பிரவேசம் செய்யக் கூடாது.
இயற்கை உத்பாதம் என்பது இடியுடன் கூடிய மழை காலம் மற்றும் புயல்காற்றுநிலநடுக்கம் உண்டாகும் காலம் வானத்தில் வால் நட்சத்திரம் தோன்றும் காலம் போன்றவை. இவை விலக்க வேண்டும். கிழமைகளில் செவ்வாய், சனி விலக்கத்தக்கவை. கிரஹப் பிரவேசம் செய்யும் வீட்டுத் தலைவனின் ராசிக்கு எட்டில் சந்திரன் இருக்கும் காலமும் விலக்கத்தக்கவை. மேலும் நல்ல நாளும் கோளும் அறியாமல் பிரவேசிக்கக் கூடாது. முதலில் பசு செல்வதால் லட்சுமி தேவி சந்தோஷம் அடைகிறாள்.
அடுத்து தம்பதிகள் குல தெய்வ, இஷ்ட தெய்வப் படங்களுடன் பிரவேசிப்பதால் முன்னோர்களும் கிரக தேவதைகளும் பிரியமடைகின்றன. சுமங்கலிப் பெண் இல்லத்தில் உள்ளே செல்வதால் மஹா லஷ்மி வாசம் உண்டாகின்றது. (ஸ்வஸ்தி வசனம் வேத கோஷம்) இவை இரண்டாலும் அசப சகுனங்கள் விலகுகிறது. நண்பர்கள் அன்று விருந்து உண்பதால் அக்னி அருளும் வாஸ்து தோஷமும் நீங்குகிறது. கூடுமானவரை பூஜை அறையும் கழிவறையும் பக்கத்தில் இல்லாமலும், சமையலறை கடந்து கழிவறை அடையாமலும் வாசலுக்கு நேர் கிணறு வைக்காமலும் முதலில் கட்டிய பிரதான வாயிலை மூடாமல் இருப்பதுவும் நல்லது.
54

அபரக் கிரியைகள்.
தகனக் கிரியை
ஒருவர் இறந்தால் பின் அவருடைய நன்மைக்காகச் செய்யப்படுவது அபரக் கிரியை. (அபரம் -பிந்திய) ஒவ்வொரு மனிதனின் ஆன்மாவும் நிலையானது. உடல் நிலையற்றது. உயிரான ஆன்மா பிரிந்ததும், உடல் வெறும் கூடாகி விடுகிறது. பிறப்பிலிருந்து இறப்பு வரை அந்த ஆன்மா வாழ்ந்த உடலை மந்திரங்களோடு சேர்ந்த தகுந்த உபசாரங்கள் செய்து, அந்த ஆன்மாவின் புத்திரர்களால் அல்லது இரத்த உறவு கொண்ட உறவினரால் தகனம் செய்யப்படும் போது, அந்த ஆன்மாவுக்கு அங்கலாய்ப்புஅல்லது தொடர்ந்து செய்யவிருக்கும் கிரியைகளின் பலன் கிடைக்க வேற்று உடல், யமன், வருணன், அக்னி போன்ற தேவர்களால் கொடுக்கப்படுகின்றது என்பது ஐதீகம். அதற்காகவே இங்கு தகனக்கிரியை செய்து, அங்கு தக்க கூடு பெறும் ஆத்மாவாகின்றது. காடாற்றல் (அஸ்தி சஞ்சயனம்)
இது மரணச்சடங்கு நடந்த 5ம்,7ம்,9ம் நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் செய்யத்தக்கது. இதற்கு எலும்பைச் சேர்த்தல் என்று பொருள்படும். ஒரு பாத்திரத்தில் பாலைவிட்டு அதற்குள் கால் பங்கு, நெஞ்சுப்பகுதி, முகம், தலை போன்ற இடங்களில் இருந்து எலும் பை எடுத்து (அந்தந்த இடங்களுக்குரிய மந்திர உச்சாடனங்களோடு எடுத்து) அப்பாத்திரத்தில் போட்டுப் பின்பு புண்ணிய தீர்த்தங்களில், நதிகளில் விடவேண்டும். இறந்த ஆன்மாவின் பாவகர்ம வினைகள் சென்று மோட்சம் பெற வேண்டி இக் கிரியை செய்வது மரபு.
ஆசௌசம்
இதை துடக்கு என்றும் கூறுவதுண்டு. இறந்த ஆத்மாவின் இரத்த உறவு தொடர்புண்ட்ய்ேர் அந்த ஆத்மா சாந்தி பெற வேண்டி கிரியை செய்து பிரார்த்திக்கும் நாட்கள் ஆசௌசம்
55

Page 34
எனப்படும்.இந் நாட்களில் வேறு சிந்தனைகள் இன்றி மங்கள நிகழ்வுகள் தவிர்த்து, தனியாய் அவர் சார்ந்த குடும்பத்தினர் (ஆ- ஆன்மா, செள- செளக்கியம்) சேஷம் பெற ஒடுங்கியிருக்கும் நாட்கள் (இது ஜனனம், மரணம், தகனம்) என மூவகைக்கும் பொருந்தும்.பூமியில் புதிதாய் ஜனனிக்கும் ஒரு ஆன்மாவின் புவிவாழ் செளக்கியத்திற்காகவும், ஆசௌசம் கடைப்பிடிக்கப் படுகின்றது. இது பிராமணர்களுக்கு 11 நாட்களும், இசை வேளாளர்களுக்கு 16 நாட்களும், முறைப்படி சமயத்தீட்சை பெற்றோருக்கு 16 நாட்களும், மற்றையோருக்கு 31 நாட்களுமாய்க் கடைப்பிடிக்க வேண்டியதாகும்.
அந்தியேட்டி
இறந்த ஆன்மாவை நினைத்து ஒரு கல்லிலே பூஜை செய்தல். இதை பாசன பூஜை என்றும் கூறுவர். 12 அங்குல நீளம் 6அங்குல அகலமுடைய ஒரு கருங்கல், அல்லது செங்கல் எடுத்து அதில் மனித உரு வரைந்து இறந்த ஆத்மாவை ஆவாகித்து தகுந்த உபசாரம் மந்திரங்களோடு கொடுத்து, அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிந்து, பூஜை தர்ப்பணம் செய்து குடும்பத்திலே சிவனை ஆவாகித்து பூஜை செய்து கல்லிலே ஆவாகித்து ஆன்மாவிற்கு “பிரபூதபலி” அதாவது பெரிய அளவிலான சாதம், கறி, தயிர்,நெய், பாயாசம் முதலியவைகளைப் படைத்து, பூஜை செய்து கல்லையும், சிவ கும்பத்தையும் படையல் (பலிஉருண்டை) இவற்றைக் கடலில் அல்லது நதியில் இடுதல் ஆன்மா சிவ மோட்ச பதவியடைய வேண்டி அந்தியேட்டி செய்யப்படும்.
சபின்டீகரணம் (ஏகோதிட்டம்)
இது அந்தியேட்டி செய்த அடுத்த நாளில் செய்வதாகும். இறந்த ஆத்மாவிற்கு “திருப்திஉண்டாகும் வண்ணம்” சிவபூஜை செய்யும் சிவாச்சாரியார்களைக் கொண்டு, அந்த ஆன்மாவை
56

சேரும் பொருட்டு ஏகோ திட்டம் ஏக ஒருவரை, உத்தஸ்டம் கருதல். அதாவது இறந்த ஒருவரை கருத்தில் கொண்டு செய்யப்படுவது ஏகோதிட்டம். வரிக்கும் அந்தணரைத் தமது இறந்த ஆன்மாவாகக் கருதி கொடுக்கப்படுவது. சாப்பாட்டுப் பொருட்கள்,உடை, செபமாலை, காலணி, குடை,பொன் பொருள் என் அவர் நித்திய கருமங்களுக்கு உபயோகிக்கக் கூடியதாயும், நித்தம் அவர் பூஜை செய்யும் போதும், அந்த நினைவில் அவர் ஆன்ம சாந்திக்கும் ஒரு பிரார்த்தனை செய்யக் கடவர். அதனாலேயே “ஏகோதிஸ்டம்” கொடுப்பவரும் திருப்தியாய்க் கொடுக்க வேண்டும். வாங்குபவரும் அந்த ஆத்மா சாந்தி பெறப் பிரார்த்திக்க வேண்டும். இருவரும் ஏக ஒருவரை உத்திஸ்டம் கருதிச் செய்வது எனப்படும்.
இந்நாளிலே நான்கு தேவர்கள் எனக் கூறப்படும் விசுவதேவர், அப்பியாகதர், பிதுர்தேவர், நிமித்தர் என நால்வகைப்படும். தேவருக்கும், கொடுக்கும் பூஜை உபசார தானங்களே சபீண்டீகரணம் எனப்படும். இதற்கு அவரவர் வசதிக்கேற்ப இரண்டு அல்லது நான்கு பிராமண சிவாச்சாரியர்களுக்கு முறையான உபசாரங்களோடு உபசரித்து அவர்களின் மந்திர உச்சாடனங்களோடு திருப்திகரமான தானாதிகள் செய்து, பிண்டங்களை ஒரு வடிவமாக்கிதன்னில் விடுதல் அல்லது கரைத்து பசு மாட்டிற்கு வைத்தல் உத்தமமாகும். ஒவ்வொரு வர்க்கமாய் பிதுர்வர்க்கம் 3, மாத்துரு வர்க்கம் 3, நிமித்தர் 1, தகப்பன் வழி, தாய்வழி, இறந்தவர் என7 பிண்டம் பிடித்து வைத்து பூஜித்து எல்லாவற்றையும் சேர்த்து பிதுர் தேவர் ஆக்கிவிடுதல் சபிண்டீகரணம் எனப்படும்.
மாசிய சிரார்த்தம்.
இறந்த ஆன்மாவானது ஓர் ஆண்டு ஆட்டத் திவசம் எனப்படும். ஆண்டுத்திவசம் முடியும் வரை, அந்த இறந்த திதியில் தனது இல்லம் நாடும் என்கிற மரபுக்கேற்ப ஒவ்வொரு மாதமும், அந்த ஆன்மா இறந்த திதியில் அந்தணர்களுக்குத் தானம்
57

Page 35
கொடுத்து வீட்டிலே ஆன்மாவிற்குப்படையல் வைத்துப் பூஜிப்பது மாசியம் எனப்படும்.
ஆட்டத்திவசம்
வருட சிரார்த்தம் இந்தச் சிரார்த்தமே ஆன்மாவிற்கு ஓரிட ஓய்வு தருவது. அங்குமிங்கும் இடை நடுவாய் அல்லாது, அந்தியேட்டி, ஏகோதிட்டம், சபிண்டீகரணம், மாசியம் என முறையாக ஆன்மாவிற்கு மகிழ்ச்சி தரும் கிரியைகள் செய்து, ஆண்டுத் திவசத்தில் ஆன்மா மோட்சம் பெறும் என்பது ஐதீகம். எனவே இத்திவசமும் முற்கூறியவை போல் திருப்திகரமாய் செய்யப்பட வேண்டியது முக்கியமாகும்.
வருடச் சிரார்த்தம்
ஒவ்வொரு வருடமும் இறந்த ஆத்மாவின் திதி செய்யப்படுவது இதுவாகும். இதற்குக் கணக்கு இல்லை. எம் உயிருள்ளவரை எம்மால் இயன்றவரை இதைத் தொடர்ந்து செய்வதால் எம் வம்சம் தழைத்தோங்கவும், எமக்கு எமது பிள்ளைகள் கிரியைகள் செய்யாவிடினும், அந்தப் பலாபலன் எமக்குக் கிடைக்கின்றது.
மஹாளயம்
புரட்டாதி மாதத் தேய்பிறை பிரதமை முதல் அமாவாசை வரையிலான பதினைந்து அல்லது பதினாறு நாட்கள் பிதுர்களுக்குரிய பிரியமான பண்டதானம், தர்ப்பணம் முதலியன செய்யும் காலமே “மஹாளயம்” எனப்படுகின்றது.
தட்சணயத்திலே சூரியன் தெற்கு நோக்கிச் சஞ்சரிக்கும் காலம் அதன் நடுப்பாகம் புரட்டாதி மாதம். அதாவது பூமிக்கு நேரே நிற்கும் காலமும் சந்திரன் தென்பகுதிக்கு நேராகவும் நிற்கும்
58

காலமாக அமைவதாலும், இக்காலம் பிதுர்களுக்குப் பிரியமான, விஷேடமான காலமாக அமைகின்றது. சில வேளைகளில் வருஷ சிரார்த்தம் நாம் செய்யத் தவறியிருப்பின், செய்யமுடியாத நிலைமைகள் அமைந்து விடினும், அதை இந்த மஹாளய பட்ச நாளில் செய்து கொள்ளலாம்.
அமாவாசை விரதம்
இது ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி திதி முடிந்த 15ம் நாளில் வருவது. இந்த நாளில் “தாமகு” தந்தை, பாட்டன் வழியினருக்கும் தர்ப்பணம் செய்து விரத அனுட்டானம் செய்வது மரபு. இந்த அமாவாசை விரதங்களிலே ஆடி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நாளில் தந்தை வழியினர் சிரார்த்தங்கள் செய்யத் தவறியோர் இந்நாளில் செய்யலாம். பிதுர்களுக்குரிய திசையாகிய தெற்குத் திசைப் பக்கமாய் சூரிய பகவான் உதயமாகும் காலமும், சந்திரனின் ஆட்சி வீடான கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலமும் கொண்ட இந்நாள் பிதுர்களின் பிரிய நாள். எனவே இந்த ஆடி அமாவாசை புனிதத்துவம், மகிமையும் நிறைந்த நாளாய் மிளிர்கின்றது.
பூரணை விரதம்
இவ்விரதம் ஒவ்வொரு மாதமும், அமாவாசைத் திதி முடிந்த 15ம் நாளில் வருவது. இந்நாளில் தாயாருக்கும் தாய் வழி உறவினர்களுக்கும் விரதமிருந்து தர்ப்பணம் செய்து, அன்னதானம் செய்வது உத்தமம். பெளர்ணமி விரதங்களிலே மிகவும் சிறப்புவாய்ந்த “சித்ரா பெளர்ணமி” சூரியன் தனது உச்சம் பெற்ற வீடாகிய மேஷ ராசியில் சஞ்சரிக்கும் காலம். அதே நேரம் மாத்துருகாரன் சந்திரன் 7ம் இடம் சஞ்சரிக்கும் காலம். சூரியன் பிதா கிரஹம், சந்திரன் மாதா கிரஹம் என்பது ஜோதிட நூல்கள் கூறும் விதி. இந்த இரு கிரஹங்களின் சேர்க்கைப்பார்வை பெறும்
59

Page 36
நாட்கள், பிதுர்களின் பிரிய நாளாகின்றன. எனவேதான் ஆடி அமாவாசை, சித்ரா பெளர்ணமி சிறப்புப் பொருந்திய சிரார்த்த தினங்களாகப் பேணப்படுகின்றன.
ஆசார முறைகள்
எமது இந்து சமயத்திலே முதன்மை பெறுவது "ஆசாரம்” அதை நல்ல முறையில் பேணிக் காப்பது முக்கிய கடமையாகும். தினமும் சூரிய உதயத்தின் முன் கண்விழித்துக் காலைக் கடன்கள் முடித்து ஸ்நானம் செய்து தோய்ந்துலர்ந்த ஆடை தரித்து, விபூதி தரித்து, சுகந்த சந்தனம் பூசி, இறைவழிபாடு செய்து புலால் தவிர்ந்த உணவு உட்கொண்டு உடற்சுத்தி, உளச்சுத்தியோடு இருப்பதே முறையான ஆசாரம். முக்கியமாக ஆலய வழிபாடு செய்யுங் காலங்களிலாவது இவற்றை முறையாக மேற்கொள்ள வேண்டும். நாம் வாழும் இல்லத்தைக் கோயில் போல் ஆசாரமாக வைத்திருக்க வேண்டும். நாம் தீட்டுக்களுடன் வீட்டுக்குள் பிரவேசிப்பதைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாக ஒரு மரணச் சடங்கு வீட்டிற்கு சென்றால், திரும்பி இல்லம் வந்ததும் முறைப்படி “ஸ்நானம்” செய்தே வீட்டிற்குள் பிரவேசிக்க வேண்டும். காரணம் மரணச் சடங்கில் கண்ட துயரங்களும், அழுகை, துன்ப ஒலிகளும் மனம், வாக்கு, காயங்களில் பதிந்து நிற்கையில் ‘ஸ்நானம்” செய்து நித்திய அனுஷ்டானம் மூலம் மனம், வாக்கு, காயங்களைச் சுத்தமாக்கிசெல்லுதல். அத்தோடு இறந்த பிரேத கிருமிகள் தொற்றா வண்ணம் உடற்சுத்தம் முறையாகச் செய்ய வேண்டும்.
60

மரணத்தின் பின் மனிதர் நிலை
உலகில் பிறந்த எந்த உயிர்களும் இறப்பது உறுதி. *எப்போதாயினும் கூற்றுவன் வருவான்.” “இறப்பு” என்பது உறங்குவதை ஒக்குமெனவும் “பிறப்பு” என்பது உறங்கி விழிப்பதைப் போன்றதெனவும் வள்ளுவர் கூறுகின்றார்கள்.
"உறங்குவதுபோலும் சாக்காடு உறங்கிவிழிப்பதுபோலும் பிறப்பு" நாம் காணும் இப்பரு உடலினுள் ஒரு நுண்ணுடல் உளது. அதனைச் சூக்கும சரீரம் என்பர். இதனை யாதனா சரீரம், ஆவி, நுண்ணுடல், உள்ளுடம்பு என்றும் கூறுவர். ஸ்தூலத்திலிருந்து சூக்குமம் பிரிந்து செல்வதைப் "பாபரக்” என்னும் ஆங்கிலேயர் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். ஸ்தூலசரீரத்தில் சூக்குமசரீரமும், சூக்குமசரீரத்தில் குணசரீரமும், குணசரீரத்தில் கஞ்சுகசரீரமும், கஞ்சுகசரீரத்தில் காரணசரீரமும் உள்ளன.
சூக்குமசtரம் கனவு காணும் சரீரம். அதற்கு எவ்வித பாரமும் இல்லை. ஒரு நிழல்போல எங்கும் போக்குவரவு புரியும். காரண உடம்பு உயிரைப் போன்று காணமுடியாததாகும். ஸ்தூல, சூக்கும, உடம்பு வருவதற்குக் காரணம் காரண உடம்பேயாகும். சூக்குமஉடல்ஸ்துல உடலை இயக்குகின்றது. கனவில் ஸ்தூல உடலின் துணை சூக்கும உடலுக்கு வேண்டியதில்லை.ஜாக்கிரநிலையில் இரண்டு உடல்களும் ஒத்து இயங்குகின்றன. சூக்கும உடலின் துணையின்றி கனவு காணமுடியாது. நமது ஐம்புலன்களும் உணர்வற்றுக் கிடக்கும் பொழுது சூக்கும உடல் தொழிற்படுகின்றது. உள்ளுடம்பை அழிக்க முடியாது. அகால மரணம் அல்லது துர் மரணம் அடைந்தோர் சூக்கும சரீரத்தைக் கொண்டு ஆயுள் வரையறுக்கப்பட்ட காலம் வரும் வரை பலவித இன்னல்களை அடைந்து திரிவர்.
ஸ்துல உடலை விட்டு உயிர் பிரிவதை மரணம் என்கின்றோம். சூக்கும சரீரத்தில் சப்த, ஸ்பர்ச, ரூப, இரஸ், கந்தம் என்ற தன் மாத்திரை ஐந்தும், மனம், புத்தி, அகங்காரம் என்ற மூன்றும் உள்ளன. ஆன்மா செய்த புண்ணிய பாவங்களுக்குத் தக்கவாறு அருள்
61

Page 37
உலகங்களுக்கோ அல்லது இருள் உலகங்களுக்கோ செல்கிறது.
“தான் அவனாகிய தற்பரந் தாங்கினேன் ஆனவை மாற்றி பரமத்தி அடைந்திடும் ஏனை உயிர்வினைக்கெய்தும் இடம் சென்றும் வானும் நிலனும் புகுந்து வருந்துமே”
(திருமந்திரம்). அருளாளர்கள் இருள் உலகம் புகாரெனக் குறள் கூறுகிறது.
*அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கில்லை இருள் சேர்ந்த இன்னா உலகம் புகல்”
பாம்பு தோலாகிய சட்டையை விட்டுப் போவதைப் போலவும், கூடுவிட்டுக் கூடு பாய்பவர் அல்லது பரகாயப பிரவேசிகள் முன் உடம்பினை விட்டு வேறு சரீரத்தில் புகுவது போலவும் உயிர் ஸ்தூல உடம்பினை விட்டுப் பிரிகின்றது.
"பன்னகம் அண்டசங்கள் பரகாயந் தன்னில் பாய்வோர் துன்னுதோல் முட்டையாக்கை துறந்து செல்வதுவே போல உன்னிய உயிர்கள் தூல உடல்விட்டு வானினூடு மன்னிடும் நனவு மாறிக் கனவினை மருவுமாபோல்”
(சித்தியார்) 6- . . ரித்தொழியப் புட்பறந் தற்றே உடம்போடு உயிடை நட்பு"
(குறள்)
முட்டையைப் பிரிந்த பறவையும், சட்டையை விட்டுப்போனபாம்பும் எப்படித் திரும்பவும் முட்டையிலும் சட்டையிலும் நுழையாவோ அது போல ஸ்தூலத்தை விட்டுப் பிரிந்த சூக்கும உடலும் திரும்ப ஸ்தூலத்தில் பிரவேசிக்காது. நனவுமாறிக் கனவுநிலை அடைவதைப் போல ஸ்தூல உடல்விட்டு சூக்கும உடலானது வானினுTடு செல்கின்றது. சூக்கும சரீரத்தோடு இருக்கும் ஆன்மாக்களுக்கு ஸ்தூல சரீரத்தோடு இருப்பவர்களிடத்தில் பேசவும், விஷயங்களை
62

அறிவிக்கவும், தொடர்பு வைத்துக் கொள்ளவும் முடியும். மரணத்தின் பின் இருள் உலகம் சார்ந்தவர்களுக்கு எவ்வித விடுதலையும் இல்லை. விருப்பம் போல் போக்குவரவு செய்ய இயலாது. புண்ணியப் பகுதியில் சென்றவர்களுக்குச் சுதந்திரம் உண்டு. எமலோகம், பிரமலோகம், விஷ்ணுலோகம், சிவலோகம் முதலிய இடங்களுக்குப் போய்வரவும் வழிபடவும் முடியும். சூக்கும உடல்பற்றிச் சென்ற உயிர்கள் புண்ணிய பாவங்களுக்குத் தக்கபடி இன்ப துன்பங்களை நுகர்ந்த பின்னர் ஐசுவரியம் நிரம்பியவர்கள் மனையிலோ தரித்திரமிக்கோர் மனையிலோ வந்து பிறக்கும்.
“உண்டு நரக சுவர்க்கத்தில் உள்ளன
கண்டு விடும் சூக்கம் காரணமாச் செல்ல
பண்டு தொடரப் பரகாய யோகிபோல்
பிண்டம் எடுக்கும் பிறப்பு இறப்பெய்தியே
(திருமந்திரம்)
“பூதனா சரீரம் போனால் புரியட்ட ரூபந்தானே யாதனா சரீரமாகி இன்பத் துன்பங்களெல்லாம் நாதனார் ஆணையுய்க்க நரகொடு சுவர்க்கந்துய்த்துத் தீதிலா அணுவாயோநி சேர்ந்திடுஞ் சீவனெல்லாம்”
(சித்தியார்)
*வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந் தெய்வத்துள் வைக்கப்படும்.” (திருக்குறள்)
என்ற குறளுக்கு உரையெழுதிய பரிமேலழகர் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவன் பின் தேவனாய் அவ்வறப் பயன் நுகள்தல் ஒரு தலையாகலின் தெய்வத்துள்வைக்கப்படும் என்றார். இதனால் உத்தம மனிதன் தேவனாவான் என்றும், அறப்பயன் நுகள்தற்குத் தேவர்களின் இடமாகிய தேவலோகம் ஒன்று உளதென்றும் நன்கறியலாம்.
"யானென தென்னுஞ் செருக்கறுப்பான் - வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.” (திருக்குறள்)
63

Page 38
யான் எனதென்னும் அகங்காரம் இல்லாதவன் வானோர்க்கும் உயர்ந்த உலகத்தை அடைவான் என்பது இக்குறளின் கருத்தாகும். வானோர்க்கும் உயர்ந்த உலகம் என்பதற்கு, வானோர்க்கும் எட்டுதற்கரிய வீட்டுலகம் எனப் பரிமேலழகரும், தேவர்தம் மேலாகிய உலகத்தின் கண்ணே செல்லும் என மனக்குடவரும், வானோர்க்கு உயர்ந்த சிவலோகம் புகும் எனப் பரிதியாரும், வானோராகிய கடவுளர்க்கெல்லாம் மேற்பட்ட முழுப் பேரின்பமாகிய முத்தியைப் பெறுவான் எனக் காளிங்கரும் உரை கூறுகின்றார்.
“கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி
(குறள்)
"ஈண்டுவாரா நெறி” என்றது பிறப்பற்று வீடுபேறெப்தலாம். உயிர்கள் தந்தம் தகுதிக்கேற்ப அந்தந்த உலகங்களுக்குச் சென்று திரும்பவும் பிறப்பெடுக்கும் என்றும், மெய்ப்பொருள் கண்டவர் பிறப்பினை நீத்து வீடுபேறெய்திப் பெருவாழ்வு பெறுவர் எனவும் விளங்குகின்றது.
இவற்றிலிருந்து புண்ணிய உலகங்களும், இருள் உலகங்களும், அதற்குமேல் தேவலோகமும் அதற்கப்பால் பல உலகங்களும் உள்ளன என்பதும், மரணத்தின் பின் உயிர்கள் அங்கு சென்று இன்ப துன்பங்களை அனுபவித்து மீண்டும் வந்து பிறக்கின்றன என்பதும், பரிபக்குவமுள்ள ஆன்மா மீண்டுவாரா நெறியாகிய பரமுத்தியை அடைந்து இறைவனோடு ஒன்றி வாழும் என்பதும் விளங்குகின்றது.
64

மாவைப்பதி \ கிருஸ்ணபிள்ளை மாணிக்கமலர் ஞாபகார்த்தப் புலமைப்பரிசில் நிதியம்.
“அன்னதானம், அறிவுத்தானம் முதலியவை களை ஒருவன் பிரதிபலனை எதிர்பாரது செய்வது நல்லது. அதனால் அவன் ஈஸ்வரன் பால் அழைத்துச் செல்லப்படுகின்றான்” -
பகவான் பூரீ ராமகிருஸ்ணர்
“கல்வித்தானத்தின் புண்ணிய பலனை உணர்ந்து நலிவுற்ற பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டிற்கு உதவும் பொருட்டு சிவபதமடைந்த திருமதி கிருஸ்ணபிள்ளை மாணிக்கமலர் அவர்களின் பெயரால் கல்வித்தானம் வழங்க முன்வந்த அவரின் அன்புக்கணவர் சி. கிருஸ்ணபிள்ளை, அன்புப் பிள்ளைகளின் குடும்பத்தினரான இந்துமதி ஜெகதாஸ் குடும்பத்தினர், கலாவதி வேதநேசன் குடும்பத்தினர், பிறேமாவதி சிவநாதன் குடும்பத்தினர், ரேவதி கமல்ராஜ் குடும்பத்தினார், பகீரதன் ஆகியோரின் நல்லறப் பணியை நன்றியுணர்வோடு பாராட்டுகிறோம்.
அமரரின் சிவபதம் குறித்த 31ம் நாள் நினைவஞ்சலியை முன்னிட்டு 15.06.2005 ஆம் திகதியன்று கொழும்பில் நடைபெற்ற அஞ்சலிக் கூட்டத்தில் குறிப்பிட்ட கல்வித் தானத்திற் காக வழங்கப்பட்ட நன்கொடைப் பணத்தைக் கொண்டுமாவைப்பதி
கிருஸ்ணபிள்ளைமாணிக்கமலர் ஞாபகார்த்தப் புலமைப்பரிசில்
65

Page 39
நிதியம்”புனர்வாழ்வு கல்வி அபிவிருத்திநிதியத்தின் கீழ் தாபிக்கப் பட்டுள்ளது. இந் நன்கொடைப் பணத்தை முதலீடு செய்து திரட்டப்படும் வருமானமானது உதவி செய்ய வேண்டி நிற்கும்
பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்படும்.
கல்வித் தானம் வழங்கும் கலாச்சாரம் எம் மக்கள் மத்தியில் மென் மேலும் வளர்ந்து வருவது கண்டு மகிழ்ச்சியடைகின்றோம்.
சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசத்தினதும், புனர்வாழ்வு கல்வி அபிவிருத்திநிதியத்தினதும் சமூக மேம்பாட்டு பணிகளுக்கு அமரர் கிருஸ்ணபிள்ளைமாணிக்கமலர் அவர்கள் குடும்பத்தினரின் பங்களிப்பை இச் சந்தர்ப்பத்தில் நன்றியுணர்வோடு நினைவுகூருகிறோம்
இங்ங்ணம் பனிப்பாளர் சபை
புனர்வாழ்வு கல்வி அபிவிருத்திநிதியம் 15.06.2005
 


Page 40


Page 41
மாவிட்டபுரம்
கிருஷ்ணபிள்ளை மாணிக்கா
கிருஷ்ணபிள்ை மாவிட்டபுரம் சின் வரணி இளைய வரணி சிதம்பரி மகன் கிருஷ்ண்
is இந்துமதி கலாவதி பிறேமாவதி ரேவதி பகீரதன்
சகோதரன் சகோதரி
15.08.1950 15.08.1969 15.05.2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I Dissetilpassi (uDays) ன்னத் தம்பி மகன் முருகேசு
-மாவிட்டபுரம் -மாவிட்டபுரம்