கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெரும் புயற் காவியம்

Page 1

அப்துல் மஜீது தமுனே.
eso

Page 2
என்னுரை
அன்பர்களே!
நமி யாவருடைய மனங்களிலும் கடந்த 23-11-1978ம் நாள் ஏற்பட்ட பயங்கரப் புயலின் தாக்கம் இன் றும் அழியாது, நீங்காத நினைவாக அடிக்கடி தோன்றிக் கொண்டேயிருக்கும், என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அ ப் பேராபத்தினுல் அழகுமிக்க நம் நாட்டின் பல பகுதிகள் பெரி தும் பா தி ப் புற் ற ன. அப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் அடைந்த இன்னல்கள் சொல்லுந்தரமன்று அச் சூறவளியின் கோரத் தாக்குதலை அனுபவித்தறியாத ஏனைய பகுதிகளில் வாழும் மக்களும், குறிப்பாக நமது பின் சந்ததியினரும் அக் கொடுமையில் சிலவற்றையாவது அறிவதற்கு வாய்ப்பேற்ப டுத்த வேண்டுமென ஆவல்கொண்டு, பாதிப்புற்ற சில பகுதி களில் வாழ்ந்த மக்கள் பட்ட கஷ்ட நஷ்டங்களில் சிலதை என் சிற்றறிவுக்கெட்டிய வகையில் முதல் முயற் சி யாக க் காவிய வடிவில் எழுதி உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். இதைக் கண்ணுறும் தாங்கள் பெருமனதுடன் இதிலுள்ள குற்றங்களை நீக்கிக் குணங் கொள்ளுமாறு பணி வன் புட ன் கேட்டு நிற்கின்றேன்.
*அறபா ஹோட்டல் உ.லெ. அப்துல் மஜீது
மருதமூன-1. 1-1-1979.
புலவர் அல்-ஹாஜ் ஆ. மு. ஷரிபுத்தீன் அவர்கள் அருளிய
VA சாற்று கவி
பேருணர்வு தந்த பெரும்புயற்பா வொன்றதனை யூரறிய வப்துல் மஜீதுரைத்தான் - கூர்மதியான், கன்னி முயற்சியதைக் கற்பாரி நிறைகாண்பார் இன்னும் வளர்ந்திடுக வென்று.
 

Sபெரும் புயற் கிஜி
பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம் -
தந்தனதி ஜதினதினதினதி னகு தினகுதி ஞதந்த ஞதந்த னன
அல்ஹமீது லில்லாஹி என்றுனைப் புகழ்ந்தே
அல்லும் பகலுமுன் நினைவோ டிருந்தே அல்லாஹ" என்றய ராது துதிக்க . அல்லலொன்றும் வாராது அருள்மாரி சொரிவாய்.
ராஜாதி ராஜர்நபி மார்களின் ராஜர் ராஜரிற சூல்நபி தம்பொருட் டாலும் ராஜாதி ராஜர்வலி மார்களின் ராஜர் ராஜர்முஹ் யித்தீன் வலிபொருட் டாலும்.
முன்னேனே உன்னுடைய முஹம்மதிற சூல்
முன்னுக்கிப் புயற் காவி யம்மொன்று பாடி,
மன்னுயிரும் மற்றுயிரும் காக்கும்வல் லோனே முன்னெனக்கு நல்லருள் தரவேணு நீயே
மிக்கறிவு பெற்ற ஹிழுர் நபிபொருட் டாலும்
மிகுதவம் புரிமீற ஞெலிபொருட் டாலும்
மகிமையுறு தவத்தினர் தம்பொருட் டாலும்
மாபுயற் கவிசாற்ற மன்ஞேனே காப்பு. சீர்பெருகு செய்லாலென் சரந்தீபு நாட்டில்
சீறியே வந்த பெருஞ் சூருவளியால் சார்கிழக் கில்பட்ட துன்பங்கள் பலவுஞ் சாற்றவே அடிமையெனக் கருள்புரிகு வாயே.
அழகுநிறை பொருளுநிறை செல்வநிறை நகரில்
அன்புநிறை பண்புநிறை இன்பநிறை ஊரில்
பழகுநிறை தெரியுமுறை பாங்குநிறை பாலில்
பன்னெடுங் காலமிலாப் புயல்வந்த தம்மா.
--س- 1-سے

Page 3
O.
11.
2.
13.
ஆயிரத்துத் தொளாயிரத் தெழுபத்து எட்டாம் ஆண்டதனில் வந்துற்ற கார்த்திகை மதியில் ஆயிர மாயிரம் உயிர்கள்பலி கொண்ட ஆனதோர் தேதியது இருபத்து மூன்ரும்.
அன்று வியாழனும் பிற்பகல் தனிலே அன்ருட வேலைகளை அனைவருஞ் செய்தே நன்ருக வீடுசேர் நேரம்நால் மணிக்கே நின்றனவே மரம்மட்டை வழமைபோ லெல்லாம்.
நான்கரை மணிமுதல் நின்றமர மெல்லாம் நன்றக நிற்கமுடி யாமலே யசைந்து
நீண்டு வளைந்தூஞ்ச லாடியதன் பின்னும் நின்றவிடம் விட்டுப் பெயர்ந்தனவே யம்மா.
பொழிந்ததே புயலோடு பெரிதான மழையும் பொருந்தாதே காலோடு கையு GPL-S) tb
கெளிந்ததே வீட்டுடன் பெரிதான மரமும் . கழிந்ததே அனைவரது வாழ்க்கையின் விருப்பும்.
ஒலைவீ டுடையவர்கள் வீடுகள் இழந்தே ஓடினர் புகலிடம் தேடினர் வெளியே காலை எடுத்துமறு கால்வைப்ப தெங்கே கதறினர் புலம்பினர் காற்றேடு வெளியே.
தட்டுத்தடு மாறியே தாவிப் பிடித்துத் தத்தியும் தெத்தியும் தள்ளாட்ட 'மிட்டுக் கிட்டிய மனை தனிற் புகுந்திடுவ மென்று
கேவியே *ẳštfiro L-60)upẳossor Juồuor.
யாருடைய சத்தமது யாருக்குக் கேட்கும் யாருடைய முகந்தானும் யாருக்குத் தெரியும் யாருடைய பிள்ளையென யாருக்குப் புரியும் யாருடைய பேச்செனவே யாருமறியாரே.
-2-

14.
5.
6.
7.
18.
19.
20.
உறுமியே வந்தபெரும் புயலோடு மழையும்
உருண்டதே கல்வீட்டின் ஒடுகளு டைந்தே பறந்ததே கல்வீட்டுத் தகடும்பல் சீற்றும் பிறந்ததே உலகம்பொய் எனும்ஞானம் பலவும்
அனைவரது வாய்களுமே அய்ராது ஓதும்
அனைவரது மனங்களுமே ஒயா திறைஞ்சும் அனைவரது உள்ளமுட னுடலதுவு மஞ்சும் அனைவரது நெஞ்சமும் பதறியே கெஞ்சும்.
விதியோ இதுவென்று வெம்பியழு வாரும்
வினைப்பயன் இதுவோவென் றழுதிடு வாரும் சதிபதிகள் சேயுட னழுதிடு வாரும் சத்தமிட் டேயலறி யழுதிடு வாரும்.
ஹ-Cஹ-0 எனச்சொல்லிக் கூவிடு வாரும் ஹாஹ" எனக்கூறிக் கத்திடு வாரும் ஹக்கே எனச்சொல்லிக் கதறிடு வாரும் ஹக்கல்லா ஹ"oவென்றே கவன்றிடு வாரும்.
பகுதாதில் வாழ்ந்திடும் வலியேயென் பாரும் பயஹாம்ப ரேமுகம் பாருமென் பாரும் மிகுபய மாகுதே குதுபேயென் பாரும் மெய்யாக எனைக்காக்க வேணுமென் பாரும்.
எனைக்காரு மென்றிடு வாரும் ירשA"ש யாஹிழுர் நபியேயென் றழுதிடு வாரும் ஷாஹ"0ல் ஹமீதுநல் வலியேயென் பாரும்
சோகம் நிறைந்தமுகம் பாருமென் பாரும்.
மிக்கபுக முக்குரிய ஹக்கேயென் பாரும் மக்கநகர் முஹம்மதே காருமென் பாரும் திக்கெங்கும் காக்கும் குதுபேயென் பாருமி தக்கதரு ணமெம்மைக் காருமென் பாரும்.

Page 4
21.
22.
23.
24.
25.
26.
27.
எங்குமே தண்ணிரா யிருக்குதே அல்லாஹ்
எப்படி நாங்களுயிர் பிழைப்போமோ அல்லாஹ்
எங்குமே யிருளா யிருக்குதே அல்லாஹ் எப்பொழுது இந்தநிலை நீங்குமோ அல்லாஹ்.
தப்பிதம் செய்தபிழை பொறுத்திடுவாய் அல்லாஹ்
எப்போது மினிப்பிழை செய்யோமே அல்லாஹ்
இப்போது எங்களைக் காத்திடுவாய் அல்லாஹ் எப்பொருளு மழிந்தாலு முயிரைக்கார் அல்லாஹ்.
இந்தவித மாகவே ஏங்கியழு வாரும் இந்தவிதி ஏணுேவென் ருேங்கியழு வாரும் தந்தங்கள் கிட்டித் தவித்தேயழு வாரும் தந்திரங்க ளெதுவுமே பலியாதென் பாரும்.
ஆழிக் கடலிதோ வந்ததென் பாரும் ஆரவா ரத்துடன் வருகுதென் பாரும்
ஊழிகா லமில்லாப் புதுமையென் பாரும்
ஊரே அழிந்துபோய் விட்டதென் பாரும்.
அல்லாஹ்வே அவலமே நிறுத்திடென் பாரும் அல்லாஹ்வே புயலதை அமர்த்திடென் பாரும் அல்லாஹ்வே மழையினை யகற்றிடென் பாரும் அல்லாஹ்வே எங்களைக் காத்திடென் பாரும்.
கால்களும் கைகளும் விறைத்துமர மாகிக்
காலென்றும் கையென்றும் தெரியாத தாகி
மேல்களும் தோள்களும் வெதும்பிப்புண் ணுகி மேல்பார்வை பலருக்கு மேலதிக மாச்சே,
பத்தோடி ரண்டுமணித் தியாலங்க ளாகப் பயங்கர நிகழ்ச்சிகள் நடந்துமுடி வாகப் புத்துயி ரளிப்பதுபோல் புலர்நேர மாகப் புயலகும் ஓய்ந்ததே ஓரள வாக,
a 4 سے--

28,
3).
34.
கொஞ்சம் வெளுத்ததும் நின்றநிலை பெயர்ந்து கெஞ்சிப் புகுந்தவிடம் தன்னைத் துறந்து நெஞ்சினில் சஞ்சல மள்ளிச் சுமந்து
நெஞ்சம் துடித்ததே இருந்தநிலை கண்டு.
அல்லாஹ்வே புயலுடைய அகோரநிலை எல்லாம் அறியவே நன்ருகக் கூற முடியாது நல்லருளு முன்னுடைய நாட்டமு மிருந்தால் நாவாரச் சிலசெயலைக் கூறலாம் அல்லாஹ்.
நம்முடைய வீடெங்கே என்றுகேட் பாரும் நம்முடைய வளவுஎது என்றுகேட் பாரும் நம்முடைய வீட்டுக்கு வழியெதுயென் பாருமி நம்முடைய வீதியெது என்றுகேட் பாரும்.
அங்கே அவர்மவ்த்து என்றுசொல் வாரும் அங்கும் பலர்மவ்த்து என்றுசொல் வாரும் இங்கே இவர் மவ்த்து என்றுசொல் வாரும் இங்கும் அங்கும்எங்கு மொப்பாரி யாச்சே,
சுழன்றுவரும் காற்றினுல் தூக்கியெறி பட்டோர் சுவர்கள் விழுந்துதுடி துடித்திறந் தோரும்
கழன்றுவரும் மரத்துண்டு பட்டுமடிந் தோரும் கவலமுடி யாதவக் கொடுமையை யறிந்தோர்.
மாடாடு கோழிகள் வீட்டுமிரு கங்கள்
மாண்ட, கணக்கது யாருக்குத் தெரியும்
மாடமா விரிகைகளுடன் மற்றுள்ள வீடும் மடமடென மண்ணினில் சரிந்ததே யம்மா.
பாரிய மரங்களை வேருடன் பிடுங்கிப்
பாரோர் திகைக்கவே வீசி எறிந்து
துாறு தூ ருகவே தூக்கி எறிந்து துாறுப ரத்தியே வைத்தபுய லம்மா.
سس-5--

Page 5
35.
36.
37.
38.
38.
40.
41.
நாட்டுக்கு ஒளிதரும் நீள் இரும்புத் தூணை நாட்டியே வைத்தனர் நல்லாழ மாகப் பூட்டிய தொலைபேசித் தொடர்புகொள் தூணும் போட்டுக் கிடந்ததே நடுவீதி தன்னில்.
தறிகளும் மால்களும் தவிடுபொடி யாகித் தரைமட்ட மாக அழிந்தபொருள் கோடி
தரணியிலே உள்ளவர்கள் ஒருமித்துக் கூடித்
தருவாரோ நஷ்டமது பெறுமானம் கோடி.
மக்கமது தப்பினுல் மருதமுனை என்று முன்னேர்கள் கூறிய மொழியினைக் கேட்டு மிக்காவல் கொண்டதொரு யானையும் தானே முன்ணுேடி வந்ததே அழிவினைப் பார்க்க.
ஓடிவந் தேயானை குளத்தினி லிறங்கி
ஒடிய களைநீங்க நீரு மருந்தி வாடிய முகத்துட னேறிட்டுப் பார்த்து வாட்டமாய் வேறுவழி சென்றதே யமமா.
இறந்தவர்கள் மையமதை எடுத்தே யடக்கி இருந்தயில் லங்களைத் துப்புரவ தாக்கிச் சிறுசிறு குடிசைகள் சீக்கிர மமைத்துச் சறுகினுேர் தங்களுக் குதவிஞ ரம்மா.
தெரியாத தெருக்களைத் தெளிவாக்கு நிலையில் தருமசிந் தையுள்ளோ ருதவிசெய் நோக்கில் பெரிதான சிரமதா னம்மூல மாகப் பெருமனது கொண்டோடிப் பணிசெய்தா ரம்மா.
அரசாங்க அதிபர்கள் மந்திரி மார்கள் அரசாளும் கனவான்க ளுயர்பதவி யுள்ளோர் ஒருமன துடன்வந்து ஊரூராய்ப் பார்த்து ஒருமித்துக் கூறினர் நிவாரணம் வழங்க.
سے 6 سے

42.
43.
44.
45.
46.
47.
48.
அழிவென்று கேட்டநம் மயலூர்ச்சி மான்கள் அள்ளியே கொடுவந்தா ரவசியப் பொருட்கள் துள்ளிக் குதித்தேதுய ருற்றவர்க ளுக்குத் தள்ளியே பாராது தயவுடன் கொடுத்தார்.
அரிசிமுதல் பருப்புடன் மிளகுஞ் சரக்கும் அரிதான பால்மாவும் சீனியுங் கொடுத்துப் பெரிதான பார்சலில் தேங்காயும் சேர்த்துப் பெருமன துடன்நின்று வழங்கினு ரம்மா.
உப்போடு மசலாவும் கருவாடு மீந்து உகப்பான டின்மீனும் பாணுமே தந்து தப்பாது எல்லோரும் வாங்குங்க ளென்று தக்கதரு ணத்தில்பே ருதவிகள் செய்தார்.
சட்டையொடு பிடவையும் சாறமுங் கொடுத்துச் சட்டியொடு பானையும் முட்டியும் குடமும்
பிட்டுக் குழலுமிடி யப்பமுமிழ் உரலும் பிரியமாய்க் கொடுத்தனர் கனதன வான்கள்.
கொடும்புயல் வீசியதால் அவதியுறு கின்ற கொடுமையினை அரசாரும் கூடியே பேசித் திடமான முடிவுக்கு வந்தவர்க ளாகத் தெரிந்திடா தனைவர்க்குந் நிவாரணம தென்ருர்,
ஊழுழி காலமா யில்லாத புயலால் ஊர்கள்பல சேதமே உரைக்கின்றேன் பேரை ஆழிக் கடலிலே அரும்பிய புயலும்
ஆரவா ரத்துட னடித்ததே யம்மா.
காற்றுடைய சுற்றளவோ மைல்நாற்ப தாகக்
கற்றறிந் த்வர்சொன்னுர் சிறுகணக் காகக்
காற்றுடைய வேகமோ மைலெண்ப தாகக் காற்றே அடித்தது இருமடங் காக,
-7-

Page 6
49.
50.
51.
52.
53,
54。
55.
அட்டாளேச் சேனைமுத லடியினை வைத்து
அடிக்குஒ "ரடியாக அடிதூக்கி வைத்துக்
கெட்டியா யெங்கு மகல விரித்துக்
கிட்டிய ஊர்களைத் தட்டியே நொறுக்கி.
பால முனையினைப் பார்த்தவர்க ளெல்லாம் பேராபத் தென்ருர்க ளிருந்தநிலை கண்டு சாலச் சிறந்தஒலு வில்லென்னு மூரைச்
சாரிசா ரியாக அழித்ததே யம்மா.
நேரான நிந்தவூர் தன்னிலு மடித்தே நேராக சம்மாந் துறையையும் பிடித்தே பேரான காரைதீ வெங்கும் தொடுத்தே பேரதிர்ச்சி கொள்ளத் தொடர்ந்ததே யம்மா,
சாந்தந் தவழ்ந்திடும் சாய்ந்த மருதூரில் சாந்தமே யின்றி யடித்தபுயல் தானும் சேர்ந்திடும் கல்முனைக் குடியூர் புகுந்து சேர்த்தே யழித்தபின் நகர்வந்த தம்மா.
கல்முனைப் பட்டினம் தன்னையே கண்டால் கல்மனது கொண்டோரும் கலங்கியழு வாரே நெல்மணி நிறைந்தநற் பிட்டிமுனை யதிலும்
s நேசமுறு கொலனியிலும் நிற்கா தழித்தே.
பாண்டவரைக் கொண்டாடும் பாண்டியூர் தன்னைப் பார்த்தால் கலங்குமே உள்ளமு மஞ்சித் தாண்டியே வாரும் தயவுடனே பாரும் தார்வீதி எங்கேதா னென்றேநிர் பாரும்.
எங்குமே மங்களம் பொங்கி நிறைந்து
எங்குமே மங்காத புகழோ டிலங்கும்
சங்கைமிகு மருதமுனை யழிவினைப் பார்க்கச் சார்ந்தன ரரசியல் தலைவர்க ளம்மா.

56.
57.
58.
59.
60.
61.
62.
பெரியநீ லாவணையினில் பெரிதான சோகம் பெரிதா யழித்ததே புயலுமோ வேகம் பெரியகல் லாறுதுறை நீலா வணயும்
பெரிதா யழிந்ததே எங்குமே மோசம்.
கோட்டைக்கல் லாற்றிலோ கொடுமையின் சோகமீ s கேட்டீர்க ளாயின்நீர் அழுதிட நேரும்
ஒந்தாச்சி மடத்திலும் ஓயாத வேகம் ஓங்கார மாயங்கும் வீசியே போகும்.
களுவாஞ்சிக் குடியினைக் கலக்கி யடித்துக் களுதா வளையையும் விலக்கா தடித்துக்
கரைஊரும் உள்ளூரும் அகலப் பிடித்துக் கருதமுடி யாததுயர்க் கடலினி லாழ்த்தி.
காத்திருந் தேநன்மை செய்திடு மூராம் காத்தாங் குடியினைக் கவல்வதெங் ங்னமோ பார்த்திட முடியாது நேத்திரம் கொண்டு பார்ப்பவ ரவைகு மத்திடு வாரே. மட்டுநக ரென்றுபுகழ் பெற்றதொரு நகராம் மட்டிட முடியாத செல்வமிகு நகராம் கட்டடம் பலநிறை கெட்டிமிகு நகரைக் கட்டவிழ்த்து விட்டபுயல் சுற்றியதே யம்மா.
அடுக்கிய இரும்பின லடித்தளம திட்டு அடுக்கடுக் காகவே தூண்களு மமைத்து
அடுத்தடுத் திருந்த மேலான மாளிகையும்
அடுக்கடுக் காகச் சரிந்ததே யம்மா.
நஇல்மாடிக் கட்டடமும் நகரிலுள கடையும் நீள்மாட கூடமும் மேல்மாடி வீடும்
சாலைநெடு மரமுமழ கானபல விடமும்
சரித்துவிட நினைத்தோபுயல் வீசியது அம்ம்ா.
--9-س-

Page 7
63.
64.
65.
66.
67.
68.
69.
கண்ணுக்கு அழகான கட்டடங்க ளெல்லாம் கண்டவர் திகைக்கவே துண்டுதுண் டாக மண்மீது சரிந்து விழுந்தபின் மற்ற மண்வீடு கல்வீட்டின் நிலையென்ன உணரே.
ஒன்றைப் பிடித்துமற் றென்றி லடித்து ஒன்றையும் பாராது எல்லாம் தகர்த்து
ஒவ்வொரு பொருளாக உடைத்தே எறிந்து ஒவ்வொரு ஊராக வீசி யடித்தே.
கவர்ந்திடும் ஏருவூர் தன்னையும் தாக்கிக்
கவலமுடி யாவாழைச் சேனையும் தாக்கி
ஒட்டுமா வடிமிரு வோடையு முதறி
ஒருபக்க மானதே குரு வளியும்.
இத்தனே ஊர்சளிலும் இன்னும்பல் ஊரில் இத்தரையில் வேகமுடன் வந்தபுயல் தானும்
சித்தமதை செலுத்திவிளை யாடியதன் விளைவால்
செத்த்துமல் லால்பல சொத்துகளும் போச்சே,
மறைபக்தி நிறைந்து விளங்கிய மேதை மறைநீதி சொற்படி வாழ்ந்த மூதாதை
சின்னுலி மப்பாவின் மரபிலிவ் வேழை
சொன்னனப் துல்மஜிது சொகுசான கவிதை,
ல மடங்கலையும் படைத்த வல்லோனே ஆலமதி லனை வரையுங் காக்கும்வல் லோனே ஆலநபி மீதில்சல வாத்துரையெங் கோனே ஆலமதில் கவிபிழை பொறுக்கும் றஹ்மானே.
முன்னகும் முஹம்மதிற சூல்பொருட் டாலும் முன்னிற்கும் முஹ்யிதீன் குதுபுபொருட் டாலும் முன்னறியும் ஹிழுறுநபி தம்பொருட் டாலுமி முன்னுேர்க ளானமீறன் வலிபொருட் டாலும்,
حس-10سه

70.
7.
72.
73.
74.
75.
76.
தாலமதில் வாழ்ந்தநபி மார்களின் பொருட்டால் தாலமதி லுற்றநால் யார்களின் பொருட்டால் ஆலமதில் வந்தவ்லி யாக்களின் பொருட்டால் ஆலஸ்" ஹாபிக ளனைவரின் பொருட்டால்.
குருவுக்குங் குருவான குருவின் பொருட்டால் குவலயத் துற்றவலி மார்களின் பொருட்டால் உரின்மயுள பாவலர்க ளனைவரின் பொருட்டால் உவந்தே உரைத்தேனென் றப்பருட் பெருக்கால்.
எழும்கதிரோன் பக்கமுள இலங்கைபுலம் தன்னில் எழில்வள மிகுந்தநல் மருதமுனை யதனில் எழிலுகு மாலெவ்வை யப்துல்மஜி தென்பான் எழுதிய கவிபிழை பொறுப்பாய் றஹ்மானே.
நால்வகைப் புகழதும் நாயனுக் குரிமை நான்கூறுங் கவிபுகழு முனக்கே யுரிமை ஆலமதி லுள்ள அனைத்துமுன் னுடைமை ஆனதால் கவிகூறும் நானுமுன் னடிமை.
இறைவாளங் கள்பாவ மெல்லாம் பொறுத்தே
இறைமறை தனைப்போற்று மறிவினைக் கொடுத்தே குறைவேது மில்லாத நிறைவாழ்வைத் தந்தே கறையின்றி வாழவழி செய்வாய்வல் லோனே.
முன்னேனின் தூதர்நபி முஹம்மதும் வாழி முன்னூற்றுப் பதின்மூன்று முறுசல்களும் வாழி அன்புநிறை அஸ்-ஹோபி மார்களும் வாழி அன்பியா அவுலியா சகலரும் வாழி.
பால்போல நாச்சியார் பாத்திமா வாழி பாலகராய் வந்தஹசன் ஹ"சைனுமே வாழி நால்ஹலீ பாக்களெனும் நல்லோரும் வாழி நாலிமாம் களும்நால் மதுஹபும் வாழி.
-سن-11--

Page 8
77. பகுதாது நாயகமே வள்ளலே வாழி . . . பஹ"முநிறை , ஹிழுறுநபி தானுமே * வாழி மிகுதவம் புரிமீருன் வலியுமே வாழி மிகுதியுள வலிமார்க ளனைவருமே வாழி.
78. மங்காத தீனுலிஸ் லாத்தைப் பரப்பி -
மங்காது தீனநிலை நாட்டினேர் வாழி
தங்கள் மன முருகிஒரு சலவாத்துத் தானும் திங்கள் நபி மீதிலுரைத் தோர்களும் வர்ழி.
w ༥, ། " " ༽ ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་།༽ 79. அரிதாக உயிர்தப்பிப் பிழைத்த மனிதர்க்கு
அருமைய்ா யுபகாரம் செய்தோரும் வாழி பெரிதாயும் சிறிதாயு முதவிகள் செய்த பெருமனது கொண்டவரும் தொண்டரும் வாழி. 80. உரைத்த கவிகளினைச் சரிபிழை பார்த்து
உரைதந்த பெரியோரும் பாவலரும் வாழி பெருமனது கொண்டிதை யச்சிற் பதிக்கப் பொருளுதவி தந்தோரும் நண்பரும் வாழி.
81. எந்தனைப் பெற்றதாய் தந்தையரும் வாழி
எந்தனுக் கறிவுகற் பித்தோரும் வாழி எந்தனுடற் பிறப்புக்க ள ைவருமே வாழி எந்தனுடைச் சந்ததியும் குடும்பமும் வாழி.
82. கற்றவரும். மற்றவரும் கழறுவரும் வாழி
குற்றம் களைபவரும் கேட்பவரும் வாழி சீர்பெறவே இக்கவி இயற்றினேன் வாழி சீருடன்மூ மின்முஸ்லிம் அனைவருமே வாழி. கொழும்புதமிழ்ச்சங்கம்
முற்றும் அல்ஹம்துலில்லாஹ்.
DIGO35ED
\, அச்சிட்டோர்: இளம்பிறிை அச்சகம், மருதமுனை.


Page 9
|
|-|-
| |- |-