கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை நினைவுப்பணி மன்றம் (பதினோராவது ஆண்டறிக்கை)

Page 1
ܡ .
蠶墨暑* 壘
புலவர்மணி
நினைவு 鷹
Li Li,
ܕܬ
|
懿
絮
萎
蠶■專
பதினுேராவது
ஆண்டுப் G
3C)
■ மன்றத்தின் தோற்ற
மன்றத்தின் பதிவில
수s-r
 
 
 
 

தம்பிப்பிள்ளை வி மன்றம்
களப்பு
蠶
量
பாதுக்கூட்டம் 2, 1989
18-11-1978. i Frihi : HA || 4 || BT || 145
| + ste ר

Page 2

புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை நினைவுப்பணி மன்றம் நடாத்தும் 1. வருடாந்தப் பொதுக்கூட்டம். 2. வீதிப்பெயர் சூட்டல். 3. பதினுேராவது நினைவுதினக் கவிதை -
கட்டுரைப் போட்டிகளின் பரிசளிப்பு விழா.
இடம்: மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற மண்டபம். காலம்: 30-12-89 சனிக்கிழமை முற்பகல் 9-00 மணி.
தலைமை: மகாவித்துவான் F. X, C. நடராசா அவர்கள்.
(மன்றத் தலைவர்) முற்பகல் 9-00 முதல் 9-30 வரை: ፵ ‘புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை வீதி" என்னும் பெயர்ப்பலகையை
மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் திரு. த. அருணகிரிநாதன் அவர்கள் திரைநீக்கஞ் செய்துவைப்பார்கள். முற்பகல் 9-30 மணிக்கு பொதுக்கூட்டம் ஆரம்பமாகும்.
பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் தமிழ்மொழி வாழ்த்து. வரவேற்புரை. தலைமையுரை. சென்ற பொதுக்கூட்ட வரலாறு வாசித்து உறுதிப்படுத்தல். மன்ற உறுப்பினர்கள் அங்கீகாரம். செயலாளரின் பதினேராவதாண்டு நிருவாக அறிக்கை. பொருளாளரின் வரவு செலவறிக்கை.
போட்டிகளிற் Lifs, பெற்றவர்ால கப் பரிசுகள் வழங்கல்.
உபசரிப்பும் இது 8. புதுவருட உத்தியோகத்தர், -வாகிகள் தெரிவு. 9. பிரேரணைகள் - (பிரேரணைகள் அனுப்பவிரும்பும் உறுப்பினர்கள் 23-12-89 ஆம் திகதிக்கு முன்னர் செயலாளருக் குக் கிடைக்கக்கூடியவாறு அனுப்பவும்.) 10. சபையோர் குறிப்புரை. 11. நன்றியுரை - செயலாளர்.
அங்கத்தவர்கள் அனைவரையும் தவருது சமுகமளித்து நிகழ்ச்சிகளைச் சிறப்புறச் செய்யுமாறு அன்புடன் அழைக்கிறேம்.
த. செல்வநாயகம்
37, திசவீரசிங்கம் சதுக்கம், மன்றச் செயலாளர் எல்லை வீதி, மட்டக்களப்பு,
0-12-89.

Page 3
புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை நினைவுப்பணி மன்றம்
மட்டக்களப்பு
女
பதினேராவதாண்டு நிருவாக அறிக்கை
பேரன்புடையீர்!
1. முன்னுரை:-
புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை அவர்களின் மறைவைத் தொடர்ந்து 18-11-1978ல் மட்டக்களப்புத் தொகுதியின் முன்னுள் முதலாவது பாராளுமன்றப் பிரதிநிதியும், பிரதேச அபிவிருத்தி தமிழ் மொழி அமுலாக்கல், இந்துகலாசார அமைச்சருமான இலக்கிய கலாநிதி திரு. செல்லையா இராசதுரை அவர்கள் தலைமையில் மட்டக்களப்பு ஆனைப்பந்தி பெண்கள் மகாவித்தியாலயத்தில் கூடிய இரங்கற் கூட் டத்தில் புலவர்மணியின் அரிய பணிகளைத் தமிழுலகுக்கு அறியச்செய்ய அமைக்கப்பட்டதுதான் 'புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை நினைவுப் பணி மன்றம்".
திருவாளர்கள் அ. கி. பத்மநாதன் அவர்களைத் தலைவராகவும் எம். சிவநேகராசா அவர்களைச் செயலாளராகவும், எல். நடராசா அவர்களைப் பொருளாளராகவும் கொண்ட ஒரு நிருவாக சபையினர் தொடர்ந்து பத்தாண்டுகள் பணியாற்றியபின் மகாத்மா காந்தி அவர் களின் 120 ஆவது பிறந்ததினமான 02-10-88 ஞாயிறு காலை 10-00 மணிக்கு மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில் மன்றப் பொதுக்கூட்டத்தைக் கூட்டினர்.
அப்பொதுக்கூட்டத்தில் மன்ற அமைப்பு விதிகள் வாசித்து
ஏற்றுக்கொள்ளப்பட்டதும், அதற்கமையப் பின்வரும் புதிய உத்தி யோகத்தர்களும், நிருவாக உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.
தலைவர் மகாவித்துவான் F. X, C. நடராசா அவர்கள் ஓய்வுபெற்ற அரசகரும மொழித்திணைக்கள மொழி பெயர்ப்பு அத்தியட்சகர்.
--2-سے

உப தலைவர்கள் ரு. அ. கி. பத்மநாதன் சிரேட்ட உதவிச் செயலாளர், கல்வி, கல்வி, கலாசார விளையாட்டுத்துறை அமைச்சு வடக்கு-கிழக்கு மாகாண அரசு.
திரு. எம். சிவநேசராசா ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி.
செயலாளர் திரு. த. செல்வநாயகம் ஓய்வுபெற்ற அதிபர். பொருளாளர் திரு. கே. கார்த்திகேசு மட்டக்களப்பு மாநகரசபை பிரதி ஆணையாளர்.
உப செயலாளர் திரு. த. யுவராஜன் பட்டதாரி ஆசிரியர்,
நிருவாகக் குழு திரு. எஸ். எதிர்மன்னசிங்கம் உதவிப்பணிப்பாளர், கல்வி கலாசார விளையாட்டுத்துறை அமைச்சு, வடக்கு-கிழக்கு மாகாண அரசு, திரு. இரா. நாகலிங்கம் தலைமையக உதவி அரசாங்க அதிபர். திரு. பி. வேலுப்பிள்ளை ஓய்வுபெற்ற மாவட்டக் இராமாபிவிருத்தி அதிகாரி.
திரு. பெ. தருமலிங்கம் ஒய்வுபெற்ற தலைமையகக் கூட்டுறவுப் பரிசோதகர் .
ரு. எம். பவளகாந்தன் செயற்றிட்ட் அதிகாரி, கல்வித்திணைக்களம். திரு. கே. தங்கவேலாயுதம் கிராமாபிவிருத்தி உத்தியோகத்தர். திரு. காசு இ நடாாசா உள்ளூராட்சி :) தவி ஆணையாளர். திருமதி. தனபாக்கியம் குணபாலசிங்கம் முன்னுள் பல்கலைக்கழக விரிவுரையாளர்.
செல்வி. சந்திரகெளரி வேலுப்பிள்ளை
பட்டதாரி ஆசிரியர்.
மன்றக் கணக்குப் பரிசோதகர் திரு. இ. இரத்தினசிங்கம்
ஒய்வுபெற்ற எழுதுவினைஞர்.
-س 3--

Page 4
*புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்களின் ஆக்கங்களை வெளி யிடுதல்; அன்னரின் பெயரில் பல்கலைக் கழகத்துக்கான புலமைப் பரிதில்களை ஏற்படுத்தல்; புலவர்மணி அவர்களின் நினைவை நிலை நிறுத்துவதற்கு ஆவணசெய்தல்; மற்றும் பொதுவான இலக்கியப் பணிகளில் ஈடுபடுதல்' என்பவற்றை நோக்கங்களாகக்கொண்ட இம் மன்றத்தில், "மேற்படி நோக்கங்களை நிறைவு செய்வதற்கு உழைக்கக் கூடிய ஊக்கமும் இலக்கிய ஆற்றலுமுள்ளவர்கள் அங்கத்தவர்க ளாகலாம்' என்ற விதிக்கமையச் சேர்ந்த அங்கத்தவர்கள் மத்தியி லிருந்து தெரிவுசெய்யப்பட்ட மேற்கூறிய உத்தி யோகத் தர்கள், நிருவாகிகளின் ஒருவருட நிருவாக அறிக்கையை உங்கள் முன் சமர்ப் பிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
2. மன்றப் பதிவு:-
எமது மன்றம் மத்திய அரசாங்கத்தில் பிரதேச அபிவிருத்தி, இந்துசமய, கலாசார தமிழ் அலுவல்கள் அமைச்சில் இயங்கும் இந்து சமய, கலாசார, அலுவல்கள் திணைக்களத்தில் HA/4/BT/145 ஆம் இலக்கத்தில் பதிவுசெய்யப்பட்ட ஒரு மன்றமாக அரச அங்கீகாரத் துடன் இயங்குகின்றது. மேலும் வடக்கு-கிழக்கு மாகாண அரசிலும் எமது மன்றத்தைப் பதிவுசெய்ய விண்ணப்பித்திருந்தோம். வடக்குகிழக்கு மாகாண அரசின் கல்வி, கலாசார விளையாட்டு அமைச்சு 1989-05-10 ஆம் திகதியைக்கொண்ட என்ஈ/பிசி/கலா/பி/2 ஆம் இலக்க கடிதமூலம் மாகாண அமைச்சின்கீழ் மன்றங்களைப் பதிவுசெய்யும் போது எங்கள் மன்றத்தினையும் பதிவுசெய்வதற்கு நடவடிக்கை மேற் கொள்ளப்படுமென்றும், அத்தோடு தமிழ் வளர்ச்சிக்காக நாங்கள் எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஊக்கம் அளிக்கப்படும் என்றும் அறி வித்துள்ளது.
அத்துடன், இதுவரை காலமும் தனக்கென வங்கிக் கணக் கொன்றினைக்கொண்டிராத இம்மன்றம் மட்டக்களப்பு இலங்கை வங் இக் இ%ளயில் C 9494 ஆம் இலக்க நடைமுறைக் கணக்கொன்றை ஆரம்பித்துள்ளது.
3. மன்ற அங்கத்துவம்:-
இன்று மன்றத்தில் 86 சாதாரண அங்கத்தவர்களும் 06 ஆயுட் கால அங்கத்தவர்களும், 06 கெளரவ அங்கத்தவர்களும் அங்கம் வகிக் இன்றனர். (ஆண்டுதோறும் ரூபா பத் துச் செலுத்துவோர் சாதாரண அங்கத்தவர்கள். மேலும் ரூபா நூறினைச் செலுத்துபவர்கள் ஆயுட் கால அங்கத்தவர்கள். புலவர்மணியின் சந்ததியினர் கெளரவ அங் கத்தவர்கள்.) V
4. நிருவாகக் குழுக் கூட்டங்கள்:-
இவ்வருட காலத்துள் மாதமொன்றென்ற அடிப்படையில் 12
நிருவாகக் குழுக் கூட்டங்கள் கூட்டப்பட்டுள்ளன. இக்கூட்டங்கள்
யாவும் மன்றத் தலைவரின் இல்லத்திலேயே நடைபெற்றன.
-4-

5. செயற்றிட்ட்ங்கள்:-
16-10-88 அன்றுகூடிய முதலாவது நிருவாகக் குழுக் கூட்டத் தில் செயலாளரினல் முன்வைக்கப்பட்ட பின்வரும் செயற்றிட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் ஏற்ற நடவடிக்கைகள் எடுக்குமாறுஞ் செயலாளர் பணிக்கப்பட்டார்.
1.
புலவர்மணி அவர்களின் நினைவு விழாக்களை ஆண்டுதோறும் அவர் அமரரான தினமான நவம்பர் 02ஆம் திகதி ஏற்ற முறையில் எடுத்தல். யாழ் பல்கலைக் கழகத்தில் ஆரம்பிக்க உத்தேசித்துள்ள புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை நினைவுப் பரிசிலுக்கான பணத்தினை அனுப்பி அப்பரிசிலை ஆரம்பித்து நடைமுறைப் படுத்துதல். புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்களின் முழு உரு வச் சிலையொன்றினை மாநகரசபை எல்லையுள் பட்டினத்தில் நிறுவுதல். மாநகர ஆட்சிக்குட்பட்ட பொருத்தமான வீதியொன்றிற் குப் 'புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை வீதி' எனப் பெயரிட ஆவன செய்தல். புலவர்மணி அவர்களின் வாழ்க்கை வரலாறு நூலெழுதுதல். பாடசாலைகளில் புலவர்மணி அவர்களின் திரு உருவப் படங்களைத் திரைநீக்கஞ்செய்ய வழிசெய்தல். பாடசாலைகட்கு அன்னரின் பெயரினைச் சூட்டுதல்
6. செயற்றிட்ட அமுல்:-
6. 1. புலவர்மணி அவர்களின் நினைவு விழாக்கள்:
நிருவாகக்குழுக் கூட்டத் தீர்மானப்படி புலவர்மணி அவர் களின் பத்தாவது நினைவு விழா 02-11-88 புதன்கிழமை முற்பகல் 9-30 மணிக்கு மன்றத் தலைவர் மகா வித்துவான் F. X. C. நடராசா அவர்கள் தலைமையில் மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை மண்டபத்தில் கொண்டாடப்பட்டது.
ஆசிரியர் கலாசாலைப் பயிற்சி ஆசிரியர்கள் தமிழ்மொழி வாழ்த்துப்பாட, நிருவாக உறுப்பினர் செல்வி. சந்திரகெளரி வேலுப்பிள்ளை அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, திருவாளர் கள்: செ. எதிர்மன்னசிங்கம், பெ. தருமலிங்கம், திருமதி: சுபாஷினி சக்கரவர்த்தி (ஆசிரியர், புனித சிசிலியா மகளிர் கல்லூரி) என்பவர்கள் சொற்பொழிவாற்ற, கவிஞர்கள்: திரு. சி. கிருஷ்ணபிள்ளை (திமிலைத்துமிலன்), திரு. செ.
-5-

Page 5
குணரெத்தினம் என்பவர்கள் கவிதாஞ்சலி செலுத்த செய லாளரின் நன்றியுரையுடன் விழா இனிது நிறைவுற்றது.
இவ்வாண்டும் இதே தினத்தில் அதாவது 02-11-89 வியாழக்கிழமை மு. ப. 9-30 மணிக்கு அன்னருக்கு நினைவு விழா எடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு பிரதிக் கல்விப்பணிப்பாளர் திருவாளர் கு. சோமசுந்தரம் அவர்கள் தலைமைதாங்கிய இவ்விழாவில் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்களின் உருவப் படத் திற்கு மன்றத்தின் சார்பில் தலைவர் மகாவித்துவான் F. X, C. நடராசா அவர்களும், ஆசிரியர் கலாசாலை முத்தமிழ் மன் றத்தின் சார்பில் முத்தமிழ் மன்றத் தலைவர் திரு. ந. ஜெயராஜா அவர்களும் புலவர்மணியின் குடும்பத்தின் சார் பில் அன்ஞரின் மக்கள், மருமக்கள், பேரக்குழந்தைகளும் மலர்மாலை அணிவித்தனர். மட்டக்களப்பு இராமக்கிருஷ்ண மிஷன் தலைவர் பூரீமத் சுவாமி ஜீவனுனந்தஜி அவர்கள் மங்கல விளக்கேற்றி ஆசியுரை வழங்க, சங்கீதபூஷணம் திரு. N. ராஜ" அவர்கள் தமிழ்மொழி வாழ்த்துப்பாட, உள்ளூராட்சி உதவி ஆணையாளரும், எமது மன்ற நிருவாக உறுப்பினருமான திரு. காசுபதி நடராசா அவர்கள் வர வேற்புரை கூற, விழாத் தலைவரின் தலைமையுரையைத் தொடர்ந்து, மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி அதிபர் திரு. ஏ. ஏ. அருளன்னராஜா அவர்களும், புளியன் தீவு கொத்தணி அதிபரும், வின்சென்ற் மகளிர் கல்லூரி அதிபருமான திருமதி. ப. பாக்கியராஜா அவர்களும் சொற் பொழிவுகளாற்ற, சங்கீதபூஷணம் திருமதி.சாந்தா நாகையா அவர்கள் புலவர்மணி அவர்களின் பாடல்களை இனிமையாக இசைத்து விழாவினை மெருகூட்ட விழாத் தலைவரின் நிறை வுரையுடனும் செயலாளரின் நன்றியுரையுடனும் விழா இனிது நிறைவுற்றது.
இந்த விழாவும் மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை விபுலா நந்தர் மண்டபத்திலேயே நடைபெற்றது என்பதையும் இவ்விரண்டு விழாக்களும் சிறப்பாக நடைபெற ஆசிரியர் கலாசாலை அதிபர், விரிவுரையாளர்கள், பயிற்சி ஆசிரியர் கள் பூரண ஆதரவு நல்கினர் என்பதையும் நன்றியுடன் நினைவு கூருகிருேம்.
மேலும், இவ்விழாக்களுக்கு எமது வேண்டுகோளின்படி தமது கல்லூரி மாணவர்களை அனுப்பிவைத்த இந்துக் கல்லூரி, அரசடி மகா வித்தியாலயம், புனித சிசிலியா மகளிர் கல்லூரி, மெதடிஸ்த மத்திய கல்லூரி அதிபர்களுக்
-6-

கும், மாணவர்களுக்ரூம், மாணவருடன் வந்த ஆசிரியர் களுக்கும் எமது நன்றி உரித்தாகுக. விழா அழைப்பில் வித்தியாலய அதிபர்களுக்குப் புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை அவர்களின் நினைவு விழாவினை ஏற்றவகையில் தங் கள் தங்கள் வித்தியாலயங்களில் கொண்டாட ஆவன செய்யுமாறு எம்மால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமையப் பல பாடசாலைகளில் அன்று புலவர்மணி அவர் கள் நினைவுகூரப்பட்டமையை அறிந்து மன்றம் மகிழ்ச்சி யோடு நன்றிகூறிக்கொள்கிறது. அத்துடன் எதிர்காலங்களி லும் இஃது கடைப்பிடிக்கப்படவேண்டுமெனவும் விரும்பு கிறது.
நினைவுதினக் கவிதை - கட்டுரைப் போட்டிகள்
புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்களின் பதினே ராவது நினைவுதினத்தை முன்னிட்டு வீரகேசரியின் ஆதர வுடன் அகில இலங்கை முறையில் கவிதை - கட்டுரைப் போட்டியொன்றினை ஏற்பாடு செய்தோம். "புலவர்மணி ஒருபா ஒருபஃது' என்ற தலைப்பில் கவிதையும் ''வெண் பாவிற் புலவர்மணி' என்ற தலைப்பில் எண்ணுாறு சொற் களுக்குக் குறையாத ஆயிரம் சொற்களுக்கு மேற்படாத ஒரு கட்டுரையையும் எழுதிப் பரிசுபெறும் போட்டியாளர் களுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் பணப் பரிசாக முதலாம் பரிசு ரூபா 700/-, இரண்டாம் பரிசு ரூபா 500/- மூன் மும் பரிசு ரூபா 300/-, இவற்றுடன் சான்றிதழ், நூல்கள் என்பனவும் வழங்குவதாகவும் ஞாயிறு வீரகேசரிமூலம் விளம்பரம் செய்திருந்தோம். எமது முதலாவது விளம்பரம் 28-05-89 அன்று ஞாயிறு வெளியீட்டில் பிரசுரமாயிற்று. இதன்முடிவுத் திகதி 30-08-89 எனக்குறிப்பிட்டிருந்தும் நாட்டில் நிலவிய சீரற்ற தபாற் போக்குவரத்து காரண மாக மேலும் இருவார காலம் முடிவுத் திகதி நீடிக்கப்பட்டு 15-07-89 வரை பின்போடப்பட்டது. இவ்விரு போட்டி களுக்கும் 14 கவிதைகள், 20 கட்டுரைகள் மாத்திரமே கிடைத்தன. வீரகேசரி வாராந்த வெளியீட்டு ஆசிரியர் திரு. பி. இராஜகோபால் அவர்களை உள்ளடக்கிய ஒய்வு பெற்ற அதிபர் வித்துவான் சா. இ. கமலநாதன், B, A, மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் கவிஞர் சி. கிருஷ்ணபிள்ளை, B. A., ஓய்வுபெற்ற அதிபர் திரு. ஐ. சாரங்கபாணி. B. A., ஓய்வுபெற்ற ஆசிரியர் திரு. வ. சிவசுப்பிரமணியம், B. A. என்பவர்களைக்கொண்ட நடுவர் குழுக்களின் தீர்ப்பின்படி பின்வருவோர் பரிசுக்குரியவர்க ளாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
-7-

Page 6
கவிதை - முதலாமிடம்: திரு. வி. விசுவலிங்கம்
இரண்டாமிடம்: திரு. த. கனகரத்தினம்
மூன்ருமிடம்: Dr. A. 1. செரிபுடீன்
கட்டுரை - முதலாமிடம்: திரு. வி. விசுவலிங்கம்
இரண்டாமிடம்: திரு. சோ. வளவன்
மூன்ருமிடம்: திரு. ஆ. அரசரத்தினம்
இவர்களுக்குரிய பரிசுகள் இன்று வழங்கப்படுகின்றன. இப்போட்டிகளில் பரிசு பெற்றவர்களுக்கு எமது பாராட்டு களும், கலந்த கொண்ட அனைவருக்கும் மன்றத்தினரின் நன்றிகளும் உரித்தாகுக.
பல நெருக்கடிகள் நிறைந்த இக்காலங்களிலும் எமது வேண்டுகோளை ஏற்று, தமது வார வெளியீட்டில் இலவச மாகப் பிரசுரித்துத் தமக்குக்கிடைத்த போட்டிக் கவிதை களையும் கட்டுரைகளையும் எமக்கனுப்பியதோடு மற்றும் சகல வழிகளிலும் உதவிய வீரகேசரி வாராந்த வெளியீட்டு ஆசிரியர் திரு. பி. இராஜகோபால் அவர்களுக்கும், வீர கேசரி தாபனத்திற்கும் சரியாக மதிப்பீட்டினைச் செய்து உதவிய மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்களுக்கும் மன்றத்தின் சார்பில் நன்றியை உரித்தாக்குகிறேன்.
6. 2. புலமைப் பரிசில்:
முந்திய நிருவாகிகளால் ஆரம்பிக்கப்பட்ட புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை நினைவாக யாழ் பல்கலைக் கழகத்தில் தமிழ்மொழியில் விசேட சித்தி பெறும் மாணவனுக்கு ஆண்டுதோறும் பரிசு வழங்கும் திட்டத்தை 10-01-1989ல் யாழ் பல்கலைக் கழக சிரேட்ட உதவிப் பதிவாளருக்கு ரூபா பத்தாயிரம் நிரந்தர வைப்பிலிடுவதற்காக அனுப் பியதன்மூலம் நடைமுறைப்படுத்தியுள்ளோம்.
6. 3.4 முழு உருவச்சிலை நிறுவுதலும் வீதிப் பெயரிடலும்:
மட்டக்களப்பு மாநகர எல்லையுள் பட்டினப் பாக்கத்தில் புலவர்மணி அவர்களின் முழு உருவச்சிலை ஒன்றினை நிறு வும் திட்டத்திற்கமைய யாட் வீதி, ஆசுபத்திரி வீதி, சேப்பல் வீதி ஆகிய முன்று வீதிகளும் சந்திக்கும் சந்தியில் அன்னரின் சிலையை நிறுவ அனுமதி கோரியும்,
வீதியொன்றிற்குப் பெயர் மாற்றம் செய்யும் திட்டத் திற்கமையத் தற்போது மட்டக்களப்பு அரசாங்கச் செய
-8-

லகக் கட்டடம் அமைகின்ற காணி ஒரமாக, நீர்ப்பாசன இலாகாவிற்குச் செல்லும் 'யாட் ருேட்' என அழைக் கப்படும் வீதியின் பெயரை,
‘புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை வீதி” என மாற்றி அமைக்க அனுமதிகோரியும், மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளருக்கு எம்மால் விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள் அன்ன ரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுப் பின் வடக்கு - கிழக்கு மாகாண அரசின் அங்கீகாரத்திற் காக அனுப்பப்பட்டன. அங்கும் எமது கோரிக்கைகள் ஏற் றுக்கொள்ளப்பட்டு, ‘வடக்கு - கிழக்கு மாகாண அரசின் உள்ளூராட்சி ஆணையாளர் அவர்கள் தனது பிசி117 ஆம் இலக்க 30-10-89 ஆம் திகதியைக்கொண்ட கடிதமூலம் அங்கீகாரம் அளித்துள்ளார்' என மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் தனது எம். டபிள்யூ. ஈ./சென/19 இலக்க 13-11-1989 ஆம் திகதிக் கடிதமூலம் அறிவித்துள்ளமையை மிக மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதன் பிரகாரம் வீதிப் பெயர் சூட்டும் வைபவம் இன்று நடை பெறுகின்றது; சிலை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றன.
. புலவர்மணி அவர்களின் வாழ்க்கை வரலாறு நூல் எழுதுதல்: புலவர்மணி அவர்களின் முழுமையான வரலாற்று நூல் ஒன்றினை எழுதி மன்றத்தின் பிரசுரமாகப் பிரசுரிக்க வேண்டு மென்ற விடயம் கலந்துரையாடப்பட்டவேளை, நூல் எழு தும் பொறுப்பினைத் தாமாகவே விருப்பத்தோடு ஏற்றுக் கொண்டவர் எமது மன்ற நிருவாகிகளில் ஒருவரும், தலைமையக உதவி அரசாங்க அதிபருமான திரு. இரா. நாகலிங்கம் (அன்புமணி) அவர்கள். அதற்கான ஆரம்ப நட வடிக்கைகள் சிலவும் அன்னரால் மேற்கொள்ளப்பட்டன. ஆஞல், ஆர்வங்காரணமாக ஏற்றுக்கொண்ட அப்பொறுப் பினை, வேலைப்பளு காரணமாக நிறைவேற்றமுடியாது போகவே, அவ்வேலை தற்போது வடக்கு - கிழக்கு மாகாண அரசின் கல்வி, கலாசார, விளையாட்டுத்துறை அமைச்சில் உதவிப் பணிப்பாளராகப் பணிபுரியும் எமது மன்ற நிரு வாகக் குழு உறுப்பினர் திரு. செ. எதிர்மன்னசிங்கம் அவர் களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அப்பணியை அவர் செவ்வனே நிறைவேற்ற இறையருள் பாலிப்பதாக.
. பாடசாலைகளில் புலவர்மணி அவர்களின் திரு உருவப் படங்
களைத் திரை நீக்கம் செய்தல்:
மேற்படி விடயமாக மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள
மகாவித்தியாலயங்கட்கும், மன்றங்களுக்கும் எம்மால்
--9س-

Page 7
விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள், சில மகா வித்தியாலயங் களிஞலும்,மன்றங்களினலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
ஆரம்பத்தில் மன்ற அங்கத்தவர்களுள் ஒருவராயிருந்து, தற்போது நிருவாக உறுப்பினருள் ஒருவராகப் பணியாற் றும் ஓய்வுபெற்ற அதிபர் திரு. சி. சபாரெத்தினம் அவர் களின் முயற்சியினல் கல்லாற்றுப் பகுதியிலுள்ள மகா வித்தியாலயங்களுக்கும், மன்றங்கட்கும் புலவர்மணி அவர் களின் படங்கள் 20 விநியோகம் செய்யப்பட்டுள்ளன. அமிர்தகழி சித்திவிநாயகர் வித்தியாலயம், கருவேப்பங் கேணி விபுலானந்தர் வித்தியாலயம் என்பவற்றிலும், மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையிலும் எம்மால் வழங் கப்பட்ட புலவர்மணியின் படங்கள் திரைநீக்கஞ் செய்ய பட்டுள்ளன. ஏனைய வித்தியாலயங்களும் இவற்றைப் பின் பற்றித் தத்தமது வித்தியாலயங்களில் புலவர்மனியின் Il-ds தினைத் திரைநீக்கஞ் செய்யுமென எதிர்பார்க்கிருேம்.
6, 7, பாடசாலைகட்கு அன்ஞரின் பெயரினைச் சூட்டுதல்:
இவ்விடயத்தில் மன்றம் மேற்கொண்ட முயற்சிகள் (A(p வெற்றியளிக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். குருக்கள் மடம் கலைவாணி வித்தியாலயத்தில் ஒரு மண்டபம் <புல வர்மணி பெரியதம்பிப்பிள்ளை மண்டபம்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளதுடன் அமைக்கபபடவுள்ள நூல் நிலையத் திற்கும் 'புலவர்மணி படிப்பகம்’ எனப் பெயர் குட்டுந் தீர்மானமுமுள்ளதாக அறிகிருேம். எதிர்காலத்திலாவது நாடறிந்த எம்மறிஞனின் பெயரையும் தங்கள் பாடசஆ பெயர்களுடன் இணைத்து வழங்கப் பாடசாலை அபிவிருத் திச் சங்கங்கள் முன்வரவேண்டுமென வேண்டுகோள் விடுக் கிருேம்.
7. அன்பளிப்புகள்:-
எமது மன்றத்தின் வளர்ச்சிக்கும் செயற்பாடுகளுக்கும் நினைவு தினப் போட்டிகளுக்கான பரிசுகள் வழங்கவும், விழாவெடுக்கவும், மலர் வெளியிடவுமென நாம் பல பொது நிறுவனங்களிடமும் சபை களிடமும் அன்பளிப்பு வழங்குமாறு வேண்டுகோள்கள் விடுத்தோம். அவைகளுள் வடக்கு - கிழக்கு மாகாண அரசின், கல்வி கலாசார விளையாட்டுத்துறை அமைச்சு எமது வேண்டுகோளை ஏற்று ரூபா பத்தாயிரம் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. மட்டக்களப்பு ருேட் டறிக் கழகக் கிளை ரூபா ஆயிரம் வழங்கியுள்ளது. போரதீவுப்பற்றுப் பிரதேச சபையும் ரூபா நானூறு வழங்கியுள்ளது. இந்நன்கொடை கள் கிடைக்க யார் யார் காரணர்களாக இருந்தார்களோ அவர் களனைவருக்கும் எமது நன்றிகள் உரித்தாகுக. இவைகளைவிட, புலவர்
-10

மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்களின் குடும்ப உறுப்பினர்களான மகன் திரு. பெ. விஜயரெத்தினம் - ஆசிரியர் அவர்கள் ரூபா ஆபிர மும், மருமகன் திரு. சி. குமாரசாமி - அதிபர் அவர்கள் ரூபா ஆயிர மும் அன்னரது பதினேராவது நினைவு விழாவன்று அன்பளிப்புச் செய்துள்ளனர் என்பதையும் மிகவும் மனமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு நன்கொடை வழங்கிய புலவர்மணியின் குடும்பத்தினருக்கும் இச்சந்தர்ப்பத்தில் மன்றத்தின் உளமார்ந்த நன்றி களை உரித்தாக்குகிறேன். இவர்களைப் பின்பற்றி புலவர்மணிமீது பற் றும், பாசமும் உள்ள உறவினர்கள், அன்பர்கள், ஆதரவாளர்களும் நிறுவனங்களும் தாராளமாக நிதி வழங்கி மன்றத்தின் செயற்பாடு களுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.
8. பாராட்டுகளும் பிறவும்:-
மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற மாவட்டக் கலாசாரப் பேரவை 09-01-1989ல் நடத்திய தனது மாதாந்தக் கூட்டத்தில் எமது மன்றம் ஆற்றிவரும் தமிழ்ப் பணிகள் தொடர் பாகத் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுப் பேரவை யின் சார்பாகப் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
எமது மன்றக் காப்பாளரும் முன்னுள் பிரதேச அபிவிருத்தி இந்துசமய, இந்து கலாசார, தமிழ்மொழி அமுலாக்கல் அமைச்சரு மான திரு. செல்லையா இராசதுரை அவர்கட்கு ஐக்கிய அமேரிக்க நாடுகளின் மனித கல்விக்கான பல்கலைக் கழகம் ‘இலக்கிய கலாநிதி' பட்டம் வழங்கியும், சென்னை பார்த்த சாரதி உலகளாவிய பல்கலைக் கழகம் ‘ஆன்மீக வள்ளல்" என்ற பட்டம் வழங்கியும் கெளரவித்த ஞான்று, நாமும் அன்னரைப் பாராட்டும் செய்தியொன்றினை அனுப் பிப் பாராட்டினுேம்.
மட்டக்களப்பு கலாசாாப் பேரவையின் 'இலக்கியமணி' என்ற கெளரவம் பெற்றவரும் தற்போது கனடாவில் வசிப்பவருமான திரு. க. தா. செல்வராஜகோபால் அவர்கள் கடல் கடந்தும் தமிழன்னைக்கு ஆற்றும் தமிழ்ப்பணியையும் அதனல் ஈழத்திற்கும், குறிப்பாக மட்டக் களப்பிற்கும் ஈட்டித்தரும் பெருமையினையும் பாராட்டி **செல்வராஜ கோபாலின் இமாலய சாதனை' என்னும் தலைப்பில் பாராட்டுத் தீர்மானமொன்றையும் அனுப்பியுள்ளோம்.
மேலும், இலக்கியவாருதி, வாகீசகலாநிதி, கலைமகள் ஆசிரியர் திரு. கி. வா. ஜகந்நாதன் அவர்கள் இறைபதமடைந்த காலை அன் ஞரின் குடும்பத்தினருக்கும், கலைமகள் காரியாலயத்தினருக்கும் எம் மன்றத்தின் கண்ணீர்க் கவிதாஞ்சலியினைச் சமர்ப்பித்துள்ளோம்.
-11

Page 8
எமது மன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு பொது நூலகத்தின் நூலகருமாகவிருந்து பொதுப்பணி, சமயப்பணி, இலக்கியப்பணி முதலியன புரிந்து 02-03-89 அன்று அகாலமரணமுற்று அமரராகி விட்ட திருவாளர் எஸ். ஜே. செல்வராஜா அவர்களின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தித்து இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்திய நிர்வாகக் குழு, மன்றத்தின் சார்பில் அன்னரின் மனைவி, மக்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொண்
--தி
'தமிழ் அறிஞ்ர்கள் பரம்பரை அருகிவருவதுடன் தமிழ் இலக் கியத்தில் ஈடுபாடும் அக்கறையும் குறைந்துவருவது மிகவும் கஜலக் குரியதாகும். இந்நிலை நீடித்தால் எதிர்காலச் சந்ததியினர் தமிழ் இலக்கியங்களின் மகத்துவத்தையும் மகோன்னதத்தையும் அறிந்து கொள்ள வாய்ப்பு இல்லாமல் போகலாம். தமிழ் இலக்கியம் அழிந்து படுதற்கு இந்தத் தலைமுறையினராகிய நாம் காரணமாக அமைவது மிகவும் வருந்தத்தக்கதாகும்' - மேற்படி சிந்தனைகளின் உந்துதல் காரணமாக தமிழ் இலக்கிய வகுப்புகளை ஆரம்பித்து எமது மன்றத் தலைவரின் மேற்பார்வையில் தமிழ் இலக்கியத்தில் சிறப்புப் பட்டம் பெற்ற பட்டதாரிகளைக்கொண்டு நடாத்துவதற்கான ஆரம்ப |5ւவடிக்கைகள் சிலவற்றை மன்றம் மேற்கொண்டது. எனினும் நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையை முன்னிட்டு இத்திட்ட நடைமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இத்திட்ட அமுலையும் எதிர்பார்க்கலாம்.
9. நன்றிகள்:-
இம்மன்றம் செவ்வனே செயற்படவேண்டிய ஆலோசனைகளை நிருவாக சபையிலும், அதற்கப்பாலும் வழங்கும் எம் மன்றத் தலை வரும் என்து பெருமதிப்பிற்குரிய நல்லாசானும் எல்லோராலும் மகிழ்ச்சியுடன் 'ஐயா' என அன்பாக அழைக்கப்படுபவருமான மகா வித்துவான் F. X, C. நடராசா ஐயா அவர்களுக்கு என் சார் பிலும், மன்றத்தின் சார்பிலும் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன். புலவர்மணி மீதுள்ள குருபத்தி காரணமாக அவர் பெயரில் நிறுவப் பட்டுள்ள மன்றச் செயற்பாடுகள் எக்காரணங்கொண்டும் 560 -Lill-di கூடாதென்ற ஒரே நோக்கத்தில் தலைமைப் பதவியை ஏற்றதோடு, மன்றத்தின் நிருவாகசபைக் கூட்டங்களைத் தம் இல்லத்தில் நடைபெற ஏற்ற ஒழுங்குகளைச் செய்து, எங்கள் எல்லோரையும் இன்முகங்காட்டி வரவேற்று, இனிது உபசரித்தும், எனது செயலாளர் பணிக்கு உறு துணையாயுமிருந்து தவிய அப்பெருமகனுக்கு மன்றத்தின் சார்பிலும், நிருவாகக் குழுவின் சார்பிலும், அடியேனின் சார்பிலும் வணக்கத் துடன் உளம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கின்றேன்.
எமது மன்றத்தின் உப தலைவர்களான திரு. அ. கி. பத்ம நாதன் அவர்களும், திரு. ம. சிவநேசராசா அவர்களும், முன்னுள்
-12

தலைவரும் செயலாளருமாவார். இம்மன்றம் தோன்றுவதற்கு அவர் கள் இருவருமே முக்கியகாரண கருத்தாக்களாக அமைந்தவர்கள் எனின் மிகையாகாது. அன்னவர்கள் தற்போது மன்றச் செயற்பாடு களுக்கு அவ்வக்காலங்களில் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கு பவர்கள், அவர்களின் வழிகாட்டுதல் எனக்கு வெகுவாக உதவின, அவர்கட்கும் மன்றத்தின் சார்பிலும் என் சார்பிலும் நன்றிகூறிக் கொள்கிறேன்.
எமது பொருளாளர் திரு. கே. கார்த்திகேசு அவர்கள் கடந்த நிருவாகத்திலும் பொருளாளராகவிருந்து திறமையுடன் செயலாற்றிய வர். இப்போதும் அதே செயற்றிறமையுடன் செயலாற்றிவருபவர் மாநகரசபையில் பிரதி ஆணையாளராகப் பணிபுரியும் அவரின் சேவை என்றும் எமக்குத்தேவை. அவரின் சேவைக்கும் அயராத பணிக்கும் மன்றத்தினதும் எனதும் நன்றிகள் உரித்தாகுக.
உப செயலாளர் திரு. த. யுவராஜன் அவர்கள் எனக்கு உத விச் செயலாளராகப் பணிபுரிந்தார். நினைவுதினப் போட்டிகள் என் னும் சிசு அவர் சிந்தனையில் தோன்றிய கருவாகும். போட்டி தொடர் பான பலவிடயங்களிலும் ஈடுபாடுடன் உழைத்து அஃது செவ்வனே நடந்தேறப் பெருமுயற்சி எடுத்த அவருக்கும் மன்றத்தின் சார்பிலும் என் சார்பிலும் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.
அடுத்ததாக, நிருவாகக்குழு உறுப்பினர்கள் நிச்சயமாக எமது நன்றிக்குரித்துடையவர்கள். எந்தநோக்குடன் அவர்கள் மன்ற உறுப் பினர்களாகச் சேர்ந்தார்களோ, எந்த நோக்குடன் அவர்கள் நிரு வாகிகளாகத் தெரிவுசெய்யப்பெற்ருர்களோ, அந்நோக்கத்திற்கு எவ் வித குறையும் ஏற்படாவண்ணம் செயற்பட்டார்கள். மாதந்தோறும் நடைபெற்ற நிருவாகசபைக் கூட்டங்களுக்கு மூன்றிலிரண்டு பங்கிற் குக் குறையாதோர் சமுகமளித்துள்ளமையை நான் குறிப்பிட்டாக வேண்டும். மன்றத்தின் தட்டச்சுப்பதிவு முதலான வேலைகளைச் செய் துதவுவதிலும், நினைவுதினப் போட்டி தொடர்பாக வீரகேசரி ஆசிரிய ருடன் நேரடித் தொடர்பினை ஏற்படுத்துவதிலும், நினைவு விழாக்களை ஒழுங்கு செய்வதிலும், வேறு பலவழிகளிலும் தனது சேவையை எனக்கு நல்கி, எனது பணி சிறக்க வழிவகை செய்த நிருவாக உறுப்பினரும், தலைமையக உதவி அரசாங்க அதிபருமான திரு. இரா. நாகலிங்கம் (அன்புமணி) அவர்கள் விசேட நன்றிக்குரியவர் எனலாம். அவ்வாறே வடக்கு - கிழக்கு மாகாண அரசில் பணிபுரியும் எமது நிருவாகக் குழு உறுப்பினர் திரு. செ. எதிர்மன்னசிங்கம் அவர்களும் விசேட நன்றிக் குரியவர் எனக் குறிப்பிடுவதும் சாலப்பொருந்தும். அங்கு எமது நலன்களைக் கண்காணித்து ஆவன செய்வதில் மிகவும் சிரத்தையுடன் பணியாற்றுபவர். அவ்வாறு ஊக்கமுடன் உழைக்கும் உறுப்பினர்களைக் கொண்ட நிருவாகக் குழு உறுப்பினர்களுக்கும் என்னுடையதும் மன்றத்தினுடையதுமான நன்றிகளைச் செலுத்துகிறேன்.
-13

Page 9
அத்துடன், மன்ற உறுப்பினர்களாகவுள்ள சகல உறுப்பினர் களுக்கும் நன்றிகூறுவதோடு எதிர்காலத்தில் அவர்கள் அனைவரையும் ரூபா நூறினைச் செலுத்தி ஆயுட்கால உறுப்பினர்களாக மாறும்படி யும், மன்ற உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க ஒத்துழைப்பு நல்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன். எமது மன்றக் கணக்குப் பரி சோதகராகக் கடமைபுரியும் திரு. இ. இரத்தினசிங்கம் அவர்கட்கும் எமது நன்றியறிதலைக் கூறிக்கொள்கிருேம். மட்டக்களப்பு இந்து இளை ஞர் மன்றச் செயலாளராகச் சிறந்த சேவைபுரியும் அன்னர் பல வேலைகளுக்கு மத்தியிலும் இப்பணியைச் சிறப்பாகச் செய்தமை பாராட்டுக்குரியதாகும்.
மேலும், மன்றத்தின் சகல பணிகளுக்கும் ஆதரவு நல்கும், வடக்கு - கிழக்கு மாகாண அரசின் கல்வி, கலாசார விளையாட்டுத் துறை அமைச்சர், அமைச்சின் செயலாளரை உள்ளடக்கிய ஏனைய அதிகாரிகள், வடக்கு - கிழக்கு மாகாண அரசின் உள்ளூராட்சி ஆணை யாளர், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், மாநகரசபை ஆணை யாளர், கலாசாரப் பேரவையினர், அரசதிணைக்களங்களின் அதிபர் கள், சமூக நல இயக்கங்கள் - மன்றங்களின் உறுப்பினர்கள், பாட சாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரும் எம்மால் நன்றியுடன் நினைவுகூரப்படவேண்டியவர்களே. அவர்கள் அனைவருக் கும் எமது நன்றிகள் உரித்தாகுக.
இறுதியாக, நினைவுதின விழாக்கள் நடைபெற்ற காலங்களில் அவ்விழாவினை நடத்துவதற்குக் களமமைத்துதவிய மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையினருக்கு மீண்டுமொருமுறை நன்றி கூறுவதோடு, விழாவின்போது ஆசிகூறி எம்மன்றத்தை வாழ்த்திய எமது ஆத்மீகத் தலைவர் பூணூரீமத் சுவாமி ஜீவனனந்த குருமகராஜ் அவர்களுக்கும், விழாவிற்குத் தலைமைதாங்கியும், சொற்பொழிவுகளாற்றியும், பாடல் கள் பாடியும், சிறப்புச் செய்த பெரியோர்களுக்கும் எனது இதயபூர்வ ம்ான நன்றிகளைச் செலுத்தி புலவர்மணி ஐயா அவர்களின் நல்லர்சி யுடன் இவ்வறிக்கையை நிறைவுசெய்கிறேன்.
“புலவர்மணி புகழ் நின்று நிலவுக’
த. செல்வநாயகம்
37, திசவீரசிங்கம் சதுக்கம், மன்றச் செயலாளர், எல்லை வீதி, புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை மட்டக்களப்பு, நினைவுப்பணி மன்றம். 30ーI2ー】989.
-14


Page 10
புலவர் மணி பெரியதம்பிப்பி
to Liġi
1989ம் வருடம் நவம்பர் மாதம் 30ந் திக
வரவுகள் 30-09-88ல் வங்கி இருப்பு - nuwe -25 س-077, 2 -س 30-09-88ல் கையிருப்பு - - - 229-40 30-09-88ல் நிலையான வைப்பு - - 8,000-00. 30-09-88ல் நிலையான வைப்பின் வட்டி awan 5,795-60 முன்னள் செயலாளர் திரு. ம. சிவநேசர்ாசா
அவர்களிடமிருந்து - 23 Iー35, 92 சாதாரண அங்கத்துவப் பணம் - - 920-00, 06 ஆயுட்கால அங்கத்துவப் பணம் - omas 600-00 உள்ளதும் நல்லதும் 10 புத்தகங்கள் விற்பனவு - 200-00
நன்கொடைகள்:-
(அ) போரதீவுப்பற்று பிரதேச சபை 400-00 (ஆ) திரு. பெ. விஜயரத்தினம் ஆசிரியர் 1000-00 (இ) திரு. சி. குமாரசாமி அதிபர் 1000-00 (ஈ) மட்டக்களப்பு ருேட்டறி கழகம் 1000-00 3,400-00
2I,453-60
தொடர்புடைய ஆவணங்கள் காசுப்புத்தகம், பற்றுச்சி டியவரையில் சரியென உறுதிப்படுத்துகின்றேன்.
01-12-1989.

lárar நினைவுப்பணி மன்றம்
களப்பு.
தி முடிவடைந்த வரவு செலவுக் கணக்கு
செலவுகள்
புலமைப் பரிசு நிதி - Annus 10,000-00 2. அச்சடித்தல் செலவு:
(அ) கடிதத் தலைகள் - - - 220-00 (ஆ) பற்றுச்சீட்டுப் புத்தகங்கள் Ardur 35-00 (இ) 10ம் ஆண்டறிக்கை 00-1,160 مصمد (ஈ) 10ம் ஆண்டு கூட்ட அறிவித்தல் - 00-120 ۔ (உ) அங்கத்தவர் விண்ணப்பப் படிவம் - 1 1 0-00 (ஊ) நிருவாகசபைக் கூட்ட அறிவிப்பு Mwana 100.00 (எ) 11வது ஆண்டு நினைவு விழா அறிவிப்பு 225ー00 (ஏ) 11வது ஆண்டறிக்கை முற்பணம் - 700.00 3. பொதுக்கூட்டத்திற்கான தேநீர்ச் செலவு 228-00 4. காகிதாதி உபகரணங்கள் ma UMNO 27.75 5. தபாற் செலவு - 21 1-75 6. வங்கிக் கட்டணம் - - - 76-25 7. புகைப்படங்கள் (1laugi விழா) - 40-00 8. கசெற் ரேப் (1) ܫ - amma 38-00 9. வங்கி இருப்பு 30-1-89ல் - 5 9-2 766 -سس 10. கையிருப்பு 30-11-89ல் - - 198-90
31,459-60 ബത്ത
கே. கார்த்திகேசு
கெளரவ பொருளாளர். ட்டுக்கள் ஆகியவைகளுடன் பரிசீலிக்கப்பட்டு எனது அறிவுக்கெட்
இ. இரத்தினசிங்கம்
கெளரவ கணக்காய்வாளர்.

Page 11
மட்டக்களப்பு புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை
நினைவுப் பணிமன்றம் வீரகேசரியின் ஆதரவுடன் அகில இலங்கைமுறையில் நடாத்திய புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை பதினுேராவது நினைவுதினக்
கவிதை / கட்டுரைப் போட்டி முடிவுகள்
கவிதைத் தலைப்பு: புலவர்மணி ஒரு பா ஒரு பஃது.
Lufaj பெறுவோர்:
முதலாமிடம்: திரு. வி. விசுவலிங்கம்
*" குறிஞ்சி' மணல் வீதி, களுவாஞ்சிக்குடி. இரண்டாமிடம்: திரு. த. கனகரத்தினம்
(மயிலங்கூடல் த. க.) 30, பஸ்ஸெல்ஸ் லேன், வெள்ளவத்தை. மூன்ருமிடம்: Dr. A. J. Gaffluefit
(ஜின்னஹ்) 12, Old Waidya Road, Gossaiah).
கட்டுரைத் தலைப்பு : வெண்பாவிற் புலவர்மணி.
பரிசு பெறுவோர்: முதலாமிடம்: திரு. வி. விசுவலிங்கம்
'குறிஞ்சி' மணல் வீதி, களுவாஞ்சிக்குடி. இரண்டாமிடம்: திரு. சோ. வளவன்
செல்வாநகர் - ஆரையம்பதி, காத்தான்குடி. மூன்ருமிடம்: திரு. ஆ. அரசரத்தினம் (அன்பரசன்)
முதலாம் குறிச்சி, களுதாவளை, களுவாஞ்சிக்குடி.
குறிப்பு: பரிசுகளும், சான்றிதழ்களும் 30-12-1989 சனிக்கிழமை முற் பகல் 9-30 மணிக்கு மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில் நடைபெறும். புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை நினைவுப்பணிமன்ற வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் வழங் கப்படும்.
- Glausопетir.
-16


Page 12
D. L. புலவர்மணி பெர் நினைவுப்பணி
புலவர்மணி
gmul TE
நினேவை நிலநிறுத்
ஆக்கபூர்வமான ெ
அறிஞர்கள், அன்பர்களே ம
நல்லாதரவு நல்கும்
莆
மண்டூரும் முகிற்குக் மருகர் திருப் மழைபொறி
In Giar (BFlgy GTIII (Incipatië
திருப்பதிகம் கண்டுருமினிய மொழி பிள்ளேயென் 'பரீமத்
ைேத கவிசெய்து நீர் ஏபெரிய தம்பிஎனத
i। பாட்டுக்கிவனென்பன்
இலங்கை மளித்திரு நா இனிய உணர்ச்சி பெற்ற
சென் ஜோசப் கத்தோவிச்
 

затташ ரியதம்பிப்பிள்ளை
ரி மன்றம்
பபியதம்பிப்பிள்ளே
துமுகமாக எடுக்கும்
செயற்பாடுகளுக்கு
ன்றத்தின் உறுப்பினர்களாகி
படிஅழைக்கிறது
தள் எதிறைய 11교
பும் சிறப்பதனுள் து மிகுந்து தோன்றும்
丐广ā* 飞 . - 1 ப்ெ பெரிய தம்பிப்
றும் கவேவ்வோனே
u, al III F 71 in TTT is 5 || 14 1571 TITI"
ਸੇ॥
பன் - ஒதக்கேள்
பாரதியென்ருரொருவர் 山rā。
பண்டிதமணி சி. கன பதிப்பிள்ளே
|L
புலவர்மணி"
|T