கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமூகஜோதி எஸ். வி. தம்பையா

Page 1
*
| ||
சமூக முன்னே புனர்வாழ்வு
 

றக் கழகங்களின் சமாசம்
ல்வி அபிவிருத்தி நிதியம்

Page 2

நூல்
வெளியீடு
பதிப்பு:
அச்சிட்டோர்
; சமூக ஜோதி எஸ். வி. தம்பையா
; சமூக முன்னேற்றக்கழகங்களின் சமாசமும்
புனர்வாழ்வு கல்வி அபிவிருத்தி நிதியமும்
: ஜனவரி 2003
மயூரி என்டர்பிரைசஸ்
இல, 12 ஆண்டிவால் வீதி, கொழும்பு - 13.
இலங்கை. தொ. இல. : 440501 தொ.நகல் : 434157 E-mail: mayooriQdialogsl.net

Page 3

அணிந்துரை
லங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் சமூக சமத்துவம் வேண்டி 3. நடந்த இயக்க வராலாற்றுள் பேசப்படாத ஆனால் நிச்சயம் பேசப்பட வேண்டிய ஒரு நிறுவன அமைப்பு உண்டு. அதுதான் 1981ல் நிறுவப்பட்ட மக்கள் நிறுவனமான சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசமும் அதற்கு நிதி வளங்களை வழங்கும் பொருட்டு 1993ல் நிறுவப்பட்ட சமூக வங்கியான புனர்வாழ்வு-கல்வி அபிவிருத்தி நிதியமுமாகும்.
சட்டரீதியான சமூக சமத்துவம், சாதிக்கொடுமை ஒழிப்பு ஆகிய வற்றுக்கென நடந்த சமூக-அரசியல் போராட்டங்களின் பின்னர் அதாவது ஒரு அலை 30-40 களிலும், 68ல் மறு அலையுமாக நடந்த உக்கிரமான போராட்டங்களின் பின்னர் உணரப்பட்ட ஓர் சமூக- யதார்த்தத்துக்கு இந்தச் சமாசமும் முகங்கொடுக்க முனைந்தது. சமூக அரசியல் போராட்டங்களினால் அவ்வச் சமூகங்களினூடே காணப்பட்ட பொருளாதாரச் சமவீனங்களையும் குறிப்பாக பொருளாதாரக் குறைபாடுகளையும் அகற்ற முடியவில்லை. இந்த அகற்றுகை அந்த அரசியல் போராட்டங்களின் எண்ண வட்டத்தினுள் வந்திருக்க நியாயமுமில்லை. ஆனால் உண்மையில் இந்த அரசியல் சமூகப் போராட்டங்களின் பெறுபேறுகள் நன்கு பயன்படுத்தப்படுவதற்கு பொருளாதாரக் குறைபாடு அகற்றப்படுவது முக்கியமாகும். அத்தகைய பொருளாதாரக் குறைபர்ட்டை நீக்கும் முயற்சிகள் சமூக-அரசியல் போராட்டங்களின் வழியாக வரமுடியவில்லை. ஒரு காரணம் எழுபது முதல் காணப்படுகின்ற அரசியல் போக்கு மாற்றங்களாகும். ஆனால் அடிப்படைப் பிரச்சினை பொருளாதார பலவீனம் மாத்திரமல்ல. பொருளாதார முன்னேற்றத்துக்கான சாத்தியப்பாடுகளும் இல்லாதிருந்தது.
G1).

Page 4
இந்தப் பிரச்சினைக்கு சமூகக்குழும அடிப்படையில் தோன்றியதுதான் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம். இதன் அமைப்பு வேர்கள் அரசியலுக்குள்ளிருந்து வராமல் அரசியலால் வந்த பெறுபேற்றை ஊர்ஜிதப்படுத்துவதற்கு உதவுகின்ற கூட்டுறவு இயக்கத்தின் வழியாக வந்ததாகும். கூட்டுறவு இயக்கம் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் வலுமிக்க சமூக-பொருளாதார நிறுவனமாக விளங்கியது. அந்த வரலாறு மிக நீண்டது. இங்கு அதனைச் சுருக்கிக் கூறுவது கூட முடியாது. அரசியல் போராட்டங்கள் தந்த சமத்துவ உணர்வின் அடிப்படையில் அதனைத் தளமாகக் கொண்டு பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட தன்னுணர்ச்சி (Voluntary) நிறுவனமாக இந்தச் சமாசம விளங்குகிறது. கூட்டுறவு இயக்க அமைப்புக்கு உதவுகின்ற வங்கி அமைப்பு முறையை பின்பற்றி இந்தச் சமூக வங்கியாக விளங்கும் புனர்வாழ்வு - கல்வி அபிவிருத்தி நிதியம் தோற்றுவிக்கப்பட்டது.
இந்தச் சமாசம் 1981லும், நிதியமானது 1993லும் நிறுவப்பட்டதென்னும் உண்மை இந்த தன்னுணர்வு வளர்ச்சியின் படிமுறையைக் காட்டுகிறது உண்மையில் இந்த சமாசமும் நிதியமும் ஒரு சமூக பொருளாதார நிறுவனமாகும். அரசியல் இயக்கங்கள் விட்ட இடத்திலிருந்து இந்த சமூக பொருளாதார இயக்கம் தொடர்கிறது.
இத்தகைய ஒரு நிறுவனமயப்படுத்துவதற்கு இரண்டு விடயங்கள் முக்கியமான தேவைகளாகும். ஒன்று சமூக-பொருளாதார வளர்ச்சிக்கான திட்டமிடல் முறையாகும். அடுத்ததாக திட்டத்தை அமுல்படுத்துகின்ற முகாமையாகும். அத்துடன் மூன்றாவது தேவையும் ஒன்று உண்டு. இது சமூக ஒடுக்குமுறைகளிலிருந்து முற்றாக விடுபடுவதற்கான முயற்சியாதலால் இவற்றைக் கொண்டு நடாத்துவதற்கான தீட்சணியமும் சாதுரியமும் வேண்டும். இது வளர்ச்சிக்கு அச்சாணியாகும்.
2 ) محمگ\

வரலாற்றில் வெற்றி என்பது சரியான மனிதர்கள் சரியான காரியத்தை சரியான நேரத்தில் செய்வதாகும். இந்தப் பெரும் வாய்ப்பு இந்தச் சமாசத்திற்கும் நிதியத்திற்கும் கூட்டுறவுத்துறையில் ஆழ்ந்த அனுபவமுள்ள நண்பர் நாகலிங்கம் மூலமும் அவரின் நண்பர்கள் மூலமும் கிடைத்துள்ளன.
இந்த நடைமுறையின் வரலாறு நன்கு அறியப்பட வேண்டும். ஏனெனில் சமூக மேலாதிக்கப்பாட்டின் இந்தக் கட்டத்தில் தலைமையின் முக்கியத்துவத்தில் மாத்திரமல்லாமல் மக்களின் அறிவுபூர்வமான உணர்வுபூர்வமான ஒத்துழைப்பும் வேண்டும். இந்தச் சமாசத்தினதும் நிதியத்தினதும் வெற்றியில் நான் இந்தப் பண்பை காண்கிறேன்.
சமத்துவம் ஏற்கப்பட்டாலும் பொருளாதார வலுவில்லாமல் அது நடைமுறைப்படுத்தப்படமாட்டாது. அரசியல் சமத்துவத்தை தாங்கி நிற்கிற சமூக சமத்துவமும் அதனைத் தாங்கி நிற்கிற பொருளாதார சமத்துவமும் மிக முக்கியமானவை. இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அரசியல் போராட்ட வெற்றிகளின் பின்னர் சமூக சமத்துவம் வேண்டுவோர் முன் மாதிரியாகக் கொள்ள வேண்டிய மாதிரி நிறுவகத்தை நண்பர் நாகலிங்கமும் அவர் நண்பர்களும் தந்துள்ளதை நாங்கள் நன்கு உணர வேண்டும். 1960ல் கூட்டுறவு அரசமயப்படுத்தப்பட்டதன் மூலம் அதில் ஒரு நளினப்பாடு ஏற்பட்டது. நண்பர் நாகலிங்கம் அந்த நளினப்பாடுகள் அற்ற நியமான கூட்டுறவு நடைமுறையை முன்வைத்துள்ளார். இதனை நாங்கள் உற்று அவதானித்தல் வேண்டும். இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பல விடயங்கள் உண்டு. சிறப்பாக தொழில் பெயர்வு பற்றி அவர்கள் கூறுவது மிக மிக முக்கியமானது.
முகாமைத்துவம் முக்கியத்துவம் பெற்றுள்ள இன்றைய கால கட்டத்தில் இவர்களின் அமைப்பு உன்னிப்பாக நோக்கப்படவேண்டிய ஒரு மாதிரி
அமைப்பாகும்.
C3) NS/

Page 5
இறுதியாக ஒரு வர்த்தை, இத்தகைய தன்னுணர்ச்சி முன்னேற்றங்களுக்கு சம்பந்தப்பட்ட அங்கத்தவர்களின் உடன்பாடு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. கூட்டுறவு இயக்க முறையில் சுய ஒழுக்கம் இல்லையேல் கூட்டுறவு வெல்லாது. அந்த விடயத்தை இவர்களின் “ஆறு அம்சக் கோட்பாட்டில்” ஆறாவது கோட்பாடாக வலியுறுத்தி வந்துள்ளனர். இதனை நன்கு உணர்ந்து கொள்ளல் வேண்டும்.
இந்த நூல் நண்பர் எஸ். வி. தம்பையா நினைவாக வெளியிடப்படுவதாக அறிகிறேன். நண்பர் தம்பையா அவர்கள் இச்சமாசத்தின் உணர்வுகளுக்கும் குறிக்கோளுகளுக்கும் ஒரு உன்னத உதாரணமானவர். தனது வளர்ச்சியில் பிறர் மேன்நிலைப்பாட்டையும் கண்டவர். அவர் சமூக ஒற்றுமையில் நம்பிக்கை கொண்டிருந்தவர். அந்த ஒற்றுமையைப் பேண சுய ஆளுமையால் முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டியவர். இந்தச் சமாசத்தினதும் நிதியத்தினதும் வரலாற்றில் அவர் பெயர் நின்று நிலைக்கும்.
இந்த நூலினை நண்பர் நாகலிங்கமும் அவர் நண்பர்களும் அவர்களுக்கே உரிய தொலைநோக்குத் தெளிவுடனும் முகாமைத்திறனுடனும் வெளிக் கொணர்ந்துள்ளார்கள். நண்பர் நாகலிங்கத்திடம் இருந்து நாம் பின்பற்ற வேண்டிய பல சிந்தனைத்திறன் சிறப்புகளும் முகாமைத்திறன்களும் உள்ளன. இவர்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
இந்தச் சமாசமும் நிதியமும் மென்மேலும் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்.
பின்குறிப்பு : தமிழர்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு பற்றிய ஆலோசனைகள் நடைபெறும் இவ்வேளையில் உண்மையான கூட்டுறவு இயக்கம் தரக்கூடிய சாத்தியக்கூறுகளை நாம் மறந்துவிடக்கூடாது என்பதை இவர்களின் வெற்றி வற்புறுத்தி நிற்கின்றது.
- கார்த்திகேசு சிவத்தம்பி தகைசார் ஓய்வுநிலைப் பேராசிரியர்
O4) V3 M

சுவாமி ஆத்மகணானந்தாவின் பார்வையில் சமூகப்பணி
னித வாழ்க்கையை முன்னேற்றப் பாதையிலே செலுத்த, கல்வியும், சமயமும் இரு கண்களாக இருந்து மனித குலத்திற்குப் பெரும் தொண்டாற்றி வருவதை யாரும் மறுக்க இயலாது.
ஆனால் இங்கு முன்னேற்றம் என்ற பதத்திற்கான தெளிவான விளக்கம் தேவை.
மனித முன்னேற்றம் இரு நிலைகளில் அமைகிறது. ஒன்று உலகியல் அல்லது பெளதிக முன்னேற்றம், மற்றது ஆன்மிக முன்னேற்றம்.
ஆனால் இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவெனில், பெளதிக முன்னேற்றம், ஆன்மிக முன்னேற்றத்தில் நிறைவு பெற வேண்டும். இல்லையெனில் வெறும் பெளதிக முன்னேற்றம் வாழ்க்கை வசதிகளைப் பெற்றுத் தந்தாலும், மனக் கவலைகளைப் போக்கி மன அமைதியை
வழங்காது. அது ஆன்மிக வளர்ச்சியின் மூலமே ஆக வேண்டும்.
பெளதிக முன்னேற்றத்திற்கான வழிமுறைகளை இன்றைய நவீன விஞ்ஞானம் பலவாறாக வகுத்துள்ளது. இவ்வழிகளின் வாயிலாக மனித குலமும் பல்வேறு வசதிகளை அனுபவித்து வருகிறது. ஆனால் இன்று அதே அளவிற்கு பல பிரச்சினைகளும் சமுதாயத்தில் பெருகியுள்ளன. அதன் காரணத்தினால் மனித மனமும் பலவாறாக பாதிக்கப்பட்டு துன்புறுவதைக் காணலாம். இதற்கு விஞ்ஞானத்தின் வாயிலாக எந்த பரிகாரமும் இது வரை கிடைத்ததில்லை.
இங்குதான் ஆன்மிகத்தின் பயன் மிகவும் தேவைப்படுகிறது. ஆன்மிகம் என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.
C5)- V SPV

Page 6
மனிதனின இன்ப துன்பங்களுக்குக் காரணம் அவனது மனதே. தூய்மையான மனது இன்பத்திற்கும், மாசுடைய மனது துன்பத்திற்கும் காரணமாக அமைகிறது.
சுயநலமற்ற, அகங்காரமற்ற மனது தூய்மைக்கு இலக்கணமாக அமைகிறது. அத்தகைய மனது தன்னலமற்ற தூய அன்பை நிலைகளனாகக் கொண்டு வாழ்க்கையை இனிமையுடையதாக்குகிறது. அதே சமயம், எத்தகைய துன்பத்தையும் தாங்கும் வலிமை
கொண்டதாகவும் விளங்குகிறது.
பேராசை, பொறாமை, அகங்காரம், சுயநலம் போன்ற குணங்கள் மனதின் மாசுகளாய் அமைந்து, உலகின் சுக, துக்கங்களுக்கு அடிமைப்பட்டு,
பேயாய் அலைந்து, மன அமைதியை இழந்து அவதிப்படுகிறது.
மனதைத் தூய்மைப்படுத்துவதே சமயத்தின் பணியாகும். சமயத்தின் அனைத்து முயற்சிகளுக்கும் நோக்கம் ஒன்றேயாயினும் அந்த முயற்சிகளில் படிமுறைகள் உள்ளன.
ஒரு குழந்தை ஆண்டு ஒன்றில் தனது கல்வியைத் தொடங்கி படிப்படியாக கல்வியில் முன்னேறுவதைப்போல, ஆன்மிக வாழ்க்கையிலும் இத்தகைய படிமுறை உண்டு. இப்படிகளில் முதற்படியாக விளங்குவது தன்னலமற்ற சேவை என்பது.
எந்த பலனையும் எதிர்பாராது, பிறர் நன்மையின் பொருட்டு செய்யப்படும் ஒவ்வொரு காரியமும், மனதின் மாசுகளாகிய சுயநலம், அகங்காரம் போன்ற குணங்களைப் படிப்படியாக நலிவடையச் செய்து, மனது அன்பிலும், அமைதியிலும் நிலைபெற உதவுகின்றது.
(16) VSV

ஆனால், ஆன்மிக வளர்ச்சிக்கு மிக்க பொறுமை, நம்பிக்கை தேவை. எத்தனை தடைகள் வரினும், மனச் சேர்வு கொள்ளாது, இறை நம்பிக்கை, நல்லோர் இணக்கம் முதலியவற்றைக் கைக்கொண்டு, தொடர்ந்து உழைத்து முன்னேறுதல் அவசியம்.
தனி மனித ஆன்மிக வளர்ச்சிக்கும், சமுதாய முன்னேற்றத்திற்கும் உதவும் வகையில் இன்று பல பொதுத்தாபனங்கள் இயங்கி வருகின்றன. அவர்களின் பணி உண்மையில் பாராட்டத்தக்கதே. அந்த பொது நிறுவனங்களின் பணி சிறக்கும் அளவிற்கு சமுதாயம் பல நன்மைகளைப் பெறும் என்பதில் ஐயமில்லை.
இராமகிருஷ்ண மிஷன் இலங்கை கிளை.
○

Page 7
சமூக நிறுவனங்களுக்கூடாகச் சமூக மேம்பாடு அமைப்புகள் நிறுவனங்கள் பற்றிய நவீன கருத்துக்கள்
- பேராசிரியர் சோ. சந்திரசேகரன்
கொழும்புப் பல்கலைக்கழகம்
வீன வாழ்க்கை முறையில் நிறுவனங்கள், அமைப்புகள் என்னும்
சொற்கள் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. நிறுவனங்கள் குறிப்பானவையாயும். அமைப்புக்கள் பொதுவானவையாயும் அமைவன எனப் பொருள் கூற முடியும். நிறுவனம் என்பதும் ஒருவகை அமைப்பே நாலு பேர் மைதானத்தில் சந்தித்தால் அது ஒரு அமைப்பு (Organisation). அதே அமைப்பு சில அடிப்படையான கட்டுமான அம்சங்களைக் கொண்டு ஒரு நிறுவனமாக (Institution) உருப்பெற முடியும். இத்தகைய நிறுவனங்களும் அமைப்புகளும் உற்பத்திப் பணியிலும் சேவைப்பணியிலும் இலாப அடிப்படையிலும் இலாபநோக்கற்ற முறையிலும் நவீன உலகில் செயற்பட்டு வருகின்றன.
விவேகம், ஆற்றல், சமூக ஈடுபாடு என்னும் பண்புகளைக் கொண்ட தனியாட்கள் சமூக மேம்பாடு நோக்கிய தமது பங்களிப்பை நிறுவனங்களினூடாகவே செய்ய முடியும். தனியாட்களின் ஆற்றல்களை ஒருங்கிணைத்து, சில நோக்கங்களை அடையும் வகையில் செயற்படவே அமைப்புக்கள் உருவாகி உள்ளன.
சமூகம், சமுதாயம், குடும்பம் என்பனவும் ஒருவகையான அமைப்புகளேயாகும். இவை யாவும் இருப்பனவற்றை - பண்பாடு, மொழி, விழுமியங்கள் என்பனவற்றைப் பேணிப்பாதுகாக்கும் பணியை ஆற்றும் அமைப்புக்கள். இவை மிக மெதுவாகவே மாற்றங்கள் ஏற்படுவதைப் பெரிதும் விரும்புவன; உறுதிப்பாட்டைப் பேணுவதே அவற்றின் பிரதான தொழிற்பாடு. ஆனால் நவீன அமைப்புகளின் இயல்புகளும்
Ca) M91

பணிகளும் வேறுபட்டவை. இவை புத்தாக்கங்களை முன்னெடுத்துச் செல்வதை நோக்கமாகக் கொண்டவை; நவீன அமைப்புகள் எவையெல்லாம் இதுவரை இருந்து வந்தனவோ அவற்றில் மாற்றங்காண விளைபவை, பரீட்சையானவை, வழமையானவை; வசதியானவை என எவையாயினும் சரி அல்லது பொருட்கள், சேவைகள், செய்முறைகள், திறன்கள், மனித உறவுகள், சமூக உறவுகள் என எல்லாவற்றிலும் மாற்றங்காண விளைபவை; அமைப்புகள் தொடர்ச்சியாக எதிலும் மாற்றங்காணும் நோக்குடன் செயற்படுபவை. மரபுவழி சமூகத்தில் அமைப்புக்கள் தமது பொருள் சேவை தொடர்பான உற்பத்தி நோக்கங்களை நிறைவேற்ற பழைய பொருளியலாளர் இனங்கண்ட நிலம், உழைப்பு, முயற்சி, மூலதனம் ஆகிய மூலவளங்களையே இனங்கண்டனர். நவீன அமைப்புக்களின் பிரதான வளமாக விளங்குவது அறிவு, ஏனைய மூலவளங்கள் தேவையற்றன; அவை மறைந்து விடும் என்பது இதன் பொருள் அல்ல; அவை யாவும் இரண்டாம் நிலை மூலவளங்களாகிவிடும். ஆயினும் விசேட அறிவினூடாகவே அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும். விசேட அறிவும் தானாகவே எதனையும் உற்பத்தி செய்து விடுவதில்லை. அவ்விசேட அறிவு ஏதேனும் பணியுடன் தொடர்பு படுத்தப்படும் போது அங்கு உற்பத்தி நிகழுகின்றது. ஒவ்வொரு அமைப்பினதும் நோக்கமும் தொழிற்பாடும் விசேட அறிவை ஒரு பணியுடன் இணைப்பதேயாகும். எனவே தான் புதிய அறிவார்ந்த சமூகம் என்பது அமைப்புகளைக் கொண்ட சமூகமாகப் பணியாற்ற வேண்டியுள்ளது.
ஏற்கனவே கூறியது போல அமைப்புகள் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவன. அமைப்புகளின் தொழிற்பாடு அறிவைப் பயன்படுத்தி மாற்றங்களை ஏற்படுத்துவதாகும்.
ஒரு அமைப்பு சிறந்த வினைத்திறனுடன் இயங்க அது ஒரு குறிப்பிட்ட நோக்கை அல்லது பணியைக் கருத்திற் கொண்டு இயங்க வேண்டும். சமூக நல சங்கங்கள் சமூக மேம்பாட்டிலும் மருத்துவ நிலையங்கள் உடல் நல மேம்பாட்டிலும் பாடசாலைகள் கல்வி மேம்பாட்டிலும்
/^n Q99

Page 8
நீதிமன்றங்கள் பிணக்குகளைத் தீர்ப்பதிலும் இராணுவ அமைப்பு எதிரிகளுடன் போரிடுவதிலும் கருத்தைச் செலுத்த வேண்டும். இவை தவிர்ந்த வேறுபணிகளில் அமைப்புகள் ஈடுபட முடியாது.
பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் பல்வகை அமைப்புகள் நீண்ட காலமாகக் சமூகத்தில் இயங்கி வந்த போதிலும் அறிஞர்கள் அவற்றை ஒரு சமூக யதார்த்தமாக ஏற்றுக் கொள்ள நீண்ட காலம் சென்றது. ஒக்ஸ்போர்ட் அகராதியானது தனது 1950 ஆம் ஆண்டுப் பதிப்பிலேயே இன்றைய பொருளில் “அமைப்பு” என்ற சொல்லைப் பயன்படுத்தியது. சமூகவியல் மற்றும் அரசறிவியல் அறிஞர்கள் நீண்ட காலமாக அரசாங்கம், சமுதாயம், குடும்பம் மற்றும் தொழிற்றுறை பற்றிப் பேசி வந்தாலும் இன்றைய பொருளில் அமைப்பு என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை.
இதற்குச் சில காரணங்களும் கூறப்படுகின்றன. இராணுவம், கோயில், பல்கலைக் கழகங்கள், மருத்துவ நிலையங்கள், பாட சாலைகள், தொழிற் சங்கங்கள், தொழில் நிறுவனங்கள் பற்றி அறிஞர்கள் நீண்ட காலமாக நுணுக்கமாக ஆராய்ந்துள்ளனர். ஆனால் இவை ஒவ்வொன்றும் தனித்துவமான இயல்புடையவை (Unique) என இவ்வறிஞர்கள் கருதினர். ஆனால் இவை அனைத்தும் கொண்டிருந்த பொதுத்தன்மை நீண்ட காலமாக இவ்வறிஞர்களால் உணரப்படவில்லை. கோயில்கள் கோயில்களாகவும் பாடசாலைகள் பாடசாலைகளாகவும் சமுதாய அமைப்புக்கள் சமுதாய அமைப்புகளாகவும் நோக்கப்பட்டனவே யொழிய இவையாவும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை, இலாப நோக்கற்ற அமைப்புகள் என்ற முறையில் நோக்கப்படவில்லை.
அமைப்புகளின் மற்றொரு பண்பு அவற்றின் பெறுபேறுகள் எப்போதுமே அவற்றுக்கு வெளியே தான் பெறப்படுகின்றன. இதற்கு மாறாக, குடும்பங்கள், சமூகங்கள், சமுதாயங்கள் என்பன சுய நிறைவு நோக்குடன் இயங்குபவை. பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், கோயில்கள் என்பனவற்றின் பெறுபேறுகளை அவற்றுக்கு அப்பால் உள்ள வெளி
1SN -C10)

உலகில் பெறப்படுகின்றன. உதாரணமாக, பாடசாலைகளின் பெறுபேறு ஆசிரியர்களின் பதவி உயர்வு அன்று; அங்கு கற்றவர்களின் அறிவு சமூக மேம்பாட்டுக்கு உதவுவதால் பெறுபேறுகள் பாடசாலைகளுக்கு வெளியிலேயே பெறப்படுகின்றன.
அமைப்புகளின் மற்றொரு பண்பு அவை தம்மைக் காலப் போக்கில் மாற்றிக் கொள்வதற்கான நிர்வாக ஒழுங்குகளைச் செய்து கொள்ளல் வேண்டும். அதாவது அமைப்புகள் தாம் இதுவரை செய்து வந்தவற்றைக் கைவிட்டுப் புதியனவற்றை ஏற்றுக் கொள்வதற்கு ஆயத்தமாக இருத்தல் வேண்டும். இதுவரை பின்பற்றி வந்த கொள்கைகள், நடைமுறைகள் என்பவற்றைத் தொடராது அவற்றைக் கைவிட்டுப் புதியனவற்றைப் பின்பற்றவும் உருவாக்கவும் ஆயத்தமாக வேண்டும்.
அதாவது இதுவரை காலமும் செய்து வந்த பணிகள், உற்பத்திப் பொருட்கள், சேவைகள் என்பவற்றில் முன்னேற்றங்களைச் செய்து கொள்வது நவீன நிறுவனங்களின் பண்பாக இருத்தல் வேண்டும். ஜப்பான் நாட்டின் பொருளாதார வெற்றிக்கு இத்தகைய பண்பே உதவியது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தொடர்ச்சியான முன்னேற்றங்காணுங் கொள்கையே ஜப்பானிய மொழியில் Kaizan என அழைக்கின்றனர். ஜப்பானியர்களின் ஸென் பாரம்பரியம் (Zen) காரணமாகவே அவர்கள் தமது அனைத்துத் தொழில் அமைப்புகளில் மட்டுமன்றி நாளாந்த வாழ்விலும் இக் கொள்கையைக் கடைப்பிடித்து வருகின்றனர். இதன் காரணமாகவே அவர்களுடைய உற்பத்திப் பொருட்களின் வடிவமைப்பு
இரண்டு அல்லது மூன்று வருடங்களில் மாற்றம் பெறுகின்றன.
அவ்வாறே ஒவ்வொரு அமைப்பும் தான் இதுவரை சேகரித்த அறிவை நன்கு பயன்படுத்தவும் புத்தாக்கச் செயற்பாட்டில் (innovation) ஈடுபடவும் கற்றுக்கொள்ள வேண்டும். அமெரிக்கக் கண்டு பிடிப்பான Tape Recorder பற்றி அறிந்த ஜப்பானியர்கள் அதனடிப்படையில் தொடர்ச்சியாகப்
G11)

Page 9
புதுப்புது இலத்திரனியல் பொருட்களைச் சந்தையில் அறிமுகம் செய்ய முடிந்தது. இவ்வாறான செயற்பாடுகளில் அமைப்புகள் கவனஞ் செலுத்தாவிட்டால் விரைவில் அவை காலாவதியாக வேண்டி வரும்.
அமைப்புகளும் சமூக கலாசாரமும் என்னும் விடயம் பற்றியும் சில புதிய சிந்தனைகள் உண்டு
சமூகத்தில் தான் அமைப்புகள் தொழிற்படுகின்றன. அதற்காக அமைப்புகள் சமூகத்திற்குள் மூழ்கி விடவோ அல்லது சமூகத்தால் விழுங்கப்பட்டு விடவோ கூடாது, சமூகத்திற்கு அடிபணிந்தும் போகக் கூடாது.
: இப்பின்புலத்தில் அமைப்புகளின் கலாசாரம், சமூகக்கலாசாரத்தை அப்படியே பிரதிபலிக்காது அதனைக் கடந்ததாகவும் அதனைத் தனது அறிவினால் செம்மைப்படுத்துவதாகவும் அமைய வேண்டும். இதற்கு எடுத்துக் காட்டு பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைப்புகளாகும்.
米 அமைப்புகளின் நோக்கங்களுக்கும் பணிகளுக்கும் ஏற்பவே அவற்றின் கலாசாரம் அமைய வேண்டும். அமைப்புகள் இயங்குகின்ற சமூக தளங்களின் கலாசாரம், அமைப்புகளின் கலாசாரமாக முடியாது.
sk அவ்வாறே அமைப்புகளின் பணிகளுக்கும் செயற்பாடுகளுக்கும் ஏற்ப அவற்றின் விழுமியங்கள் (எதுமிகச் சிறந்தது என்பது) தீர்மானிக்கப்படும். இதனை அமைப்புகளின் Value System என்பர்; உதாரணமாக உலகில் உள்ள சகல கல்வி நிலையங்களும் மிகச் சிறந்த விடயம் கல்வி மேம்பாடு என்றும் சகல சமூகசேவை நிறுவனங்களும் - மிகச் சிறந்த விடயம் மக்களின் வாழ்க்கைத் தரமேம்பாடு என்றும்
கொள்கின்றன. இதில் சமூக விழுமியங்கள் சம்பந்தப்படுவதில்லை.
G12)

来 சகல அமைப்புகளும் இன்று சமூகப் பொறுப்பு வாய்ந்தனவாக இருத்தல் வேண்டும் என்று கருதப்படுகின்றது. அத்துடன் அவை தீர்மானங்கள் மேற்கொள்ளவும் மக்கள் மேம்பாடு பற்றி முடிவுகளைச் செய்யவும் சிறந்த விளைவுகளை ஏற்படுத்தத் தேவையான நிர்வாக ஒழுங்கு முறைகளை வளர்த்துக் கொள்ளவும் போதிய சமூக அதிகாரம் உடையனவாக இருத்தல் வேண்டும்.
来 தொழில் முறை அமைப்புகளை விட இலாப நோக்கற்ற அமைப்புகள் இத்தகைய சமூக அதிகாரத்தைக் கூடுதலாகக் கொண்டவை; இலாப நோக்கற்ற சமூக அமைப்புக்கள் - எடுத்துக்காட்டாக “1980 ல் உதயமான சமூக எழுச்சி இயக்கம்” போன்றவை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் இயங்கும் போது கூடிய சமூக அதிகாரத்தைப் பெறுகின்றன. இவ்வாறே பல்கலைக்கழகம் போன்ற தொழில் முறை சாரா, இலாப நோக்கற்ற அமைப்புகள் பெற்றிருக்கின்ற சமூக அதிகாரம் போன்று வரலாற்றில் வேறு எந்த அமைப்புகளும் பெற்றதில்லை.
சமூக ஜோதி எஸ். வி. தம்பையா அவர்களின் சமூக அமைப்புப் பணிகள்
அமைப்புகளின் பண்புகள், தொழிற்பாடுகள், செயற்பாடுகள் பற்றி இச்சிறு குறிப்புகளுடன் கூடிய பின்புலத்திலிருந்து மறைந்த பெரியார் தம்பையா அவர்களின் பணிகளை நோக்குதல் வேண்டும். அன்னார் சாதாரண குடும்பத்தில் பிறந்தவராயினும் தனது சீரிய சிந்தனை, விடா முயற்சி, உழைப்பு என்பவை காரணமாகச் சமூக வாழ்விலும் தனிப்பட்ட வாழ்விலும் தம்மை உறுதிப்படுத்திக் கொண்டவர். சுயமேம்பாட்டுக்கான தொழில் அதிபர் என்ற தமது அந்தஸ்தை மட்டும் கட்டிக்காக்க முற்படாது இலக்கியம், சமூக முன்னேற்றம், மனித நேயம் எனப் பல பரிமாணங்களை அன்னார் தமது ஆளுமையின் கூறுகளாகக் கொண்டிருந்தார்.
-G13)

Page 10
தான் சார்ந்திருந்த சமூகமேம்பாடு குறித்தும் காலங்காலமாக ஒடுக்கப்பட்டிருந்த சமூகப் பிரிவினரின் முன்னேற்றம் குறித்தும் சிரத்தையுடன் சிந்தித்த தம்பையா தனித்துச் செயலாற்றாது சமூக
முன்னேற்ற அமைப்புகளாக ஆர்வலர்களின் உழைப்பையும்
சிந்தனைகளையும் ஒன்றிணைக்கக் கருதினார். முக்கியமாக 1980 - 2002 க்கு உட்பட்ட இரு தசாப்த காலத்தில் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் மற்றும் புனர்வாழ்வு-கல்வி அபிவிருத்தி நிதியம் முதலிய அமைப்புகளினூடாகக் காத்திரமான சமூகப் பணிகளில் ஈடுபட்டார். தாம் சார்ந்த சமூகத்தின் முன்னேற்றம் பற்றி மட்டும் சிந்தியாது ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்தின் மேம்பாட்டையும் பற்றிக் கருத்திற் கொண்டு 1980 ல் சமூகஎழுச்சி இயக்கம் ஒன்று தோன்ற ஆர்வம் மிகக் கொண்டு உழைத்தார். இவ்வாறு உருவாக்கப்பட்ட சமூக முன்னேற்ற அமைப்புகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசத்தை தாபிக்கவும் அவர் அரும்பாடுபட்டார்.
அவர் சார்ந்த சமூகத்தின் முக்கிய பிரச்சினையாக இனங்காணப்பட்ட கல்வி வாய்ப்புகளுக்கு அவர் பெரு முக்கியத்துவம் அளித்தர். கல்வியினூடாகச் சமூக மேம்பாடு என்ற இலட்சியத்துடன் அவர் பணியாற்றினார். உணவு மற்றும் அடிப்படை மனித தேவைகளை விடக் கல்வித் தேவையே பிரதானமானது என்ற சிந்தனைக்கு முக்கியத்துவமளித்து வகுக்கப்பட்ட ஆறுஅம்ச சமூக முன்னேற்றத் திட்டத்தில் பட்டினி கிடக்க நேரிட்டாலும் படிப்போம் எனப் பிள்ளைகளும், படிக்க வைப்போம் எனப் பெற்றோர்களும் சபதம் பூண்டு செயற்பட ஊக்குவித்தல் என்பதை ஒரு அம்சமாகச் சேர்க்க அன்னாரும் பாடுபட்டார். இதனை விட சமூகரீதியான அடிமைத் தொழில் முறையை ஒழித்தல், தொழில்சார் தகைமைகளையும் திறன்களையும் பெருக்குதல் போன்ற உயர்ந்த சிந்தனைகள், இந்த ஆறு அம்சத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டன.
G14)

கிராமமாகச் சென்று அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடல்களை நடாத்தினார். இவ்வகையில் யாழ் மாவட்டத்தில் அவர் கலந்து கொள்ளாத
கூட்டங்களே இல்லை எனலாம்.
ஒன்றிணைக்கப்பட்ட சமூக அமைப்புகளின் சமாஜத்தின் சமூக, கல்வி, 56) II FIT அபிவிருதி திதி திட்டங்களை, சிறப்புற நடைமுறைப்படுத்துமுகமாக சமூக வங்கி யொன்றின் தேவையை அவர் உணர்ந்தார். இதற்காக உருவாக்கப்பட்ட புனர்வாழ்வு-கல்வி அபிவிருத்தி நிதியம் ஒன்றின் செயற்பாடுகளுக்குத் தம்பையா அவர்கள் பேருதவி புரிந்தார். இந்நிதியமானது இன்று வரை சமூக கல்வி அபிவிருத்திப் பணிகளுக்கு இருபது இலட்சம் ரூபா வரை நிதி உதவி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அன்னாரின் முயற்சியால் வெளிநாடுகளில் திரட்டப்பட்ட பல இலட்சம் ரூபா இந்நிதியத்துக்குச் செலுத்தப்பட்டது. தமது சொந்த செலவில் வெளிநாடு சென்று, ஆர்வலர்களைச் சந்தித்து அவர்களின் பங்களிப்பையும் உறுதி செய்தமை தம்பையா அவர்களின் பாராட்டப்பட வேண்டிய பணிகளுள் ஒன்றாகும். அன்னாரின் சமூகப்பணிகள் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை என்பதால் அவை பற்றிய தனியான, முறையான ஆவணப்படுத்தல் அவசியம். இத்தகைய முயற்சியானது எதிர்கால சந்ததியினரில் ஆர்வம் மிக்கவர்களின் சமூகப் பணிகளுக்குத் தேவையான தத்துவப் பின்னணியையும் உரிய வழிகாட்டல்களையும் வழங்கும் என எதிர்பார்க்கின்றோம். சமூகப் பணியாற்றிய “சமூக ஜோதி தம்பையா’ அவர்கள் பற்றிய ஞாபகார்த்த விழாக்கள் சமூக மேம்பாடு பற்றிய விரிவான விழிப்புணர்வுக்கு வழிகோலும் என எதிர்பார்க்கின்றோம்.
(15)

Page 11
墊一
சிவமயம்
சமூகப்பணி ஒரு தெய்வீகப்பணி
- பண்டிதர் சி. அப்புத்துரை ஓய்வுபெற்ற அதிபர்
gFமூகம் என்பது மக்கள் கூட்டத்தைக் குறிப்பதொரு சொல். எனவே சமூகப்பணி என்பது மக்கள் தொகுதியினர்க்கு அவர் முன்னேற்றங்
கருதிச் செய்யப்படும் முயற்சி என்று தெரிகின்றது. அதாவது மனித
மேம்பாட்டிற்கான முயற்சி என்று சொல்லலாம்.
மனித மேம்பாடு என்பது மனிதனை மனிதனாக வாழவைப்பது அல்லது மனிதனாக வாழ வழிகாட்டுவது என்று சிந்திக்கலாம். அதனையே மனிதம் என்ற சொல்லால் அழைக்கின்றனர். மனிதராகப் பிறந்த நாம் மனிதராகத்தான் வாழவேண்டும். பகுத்து உணரக்கூடிய வல்லமை உள்ளவன் மனிதன். எனவே நல்லது எது கெட்டது எதுவென்றோ, செய்யக்கூடியது எது, செய்யக்கூடாதது எதுவென்றோ பகுத்துணர்ந்தே எதையுஞ் செய்ய வேண்டும்.
‘அரிது அரிது மானிடராதல்’ என்பதொரு தொடர், எங்கள் தமிழ்க் கிழவி ஒளவை மூதாட்டி சொன்ன தொடர், நங் காதில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய் எத்தனையோ பிறவிகளைப் பெற்றுத் துன்பத்தில் உழன்று கிடைத்தது இந்தப் பிறவி. இதை நாம் பக்குவமாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். நாம் மட்டும் உயர்ந்துவிட்டாற் போதாது. மனிதத் தொகுதியே முன்னேற வேண்டும். அதற்கான உழைப்பு எம்முடையதாக வேண்டும்.
மனிதனை முன்னேற்றுவதான உழைப்பு என்பது அவனை மனிதனாக வாழ வைப்பதுதான். மனிதராகப் பிறந்த எத்தனையோ பேர் தம் பிறப்பை
G16)

உணர்ந்துகொள்ளாது, தமது சூழலை அறிந்துகொள்ளாது, பிறவிகளுள் உயர்ந்தவோர் தரம் தமக்குக் கிடைத்தது என்று தெரிந்து கொள்ளாது
சமூகத்திற்குப் பொருந்தாத வாழ்வு முயற்சிகளில் தொடர்புபட்டுக்
கொணடிருக்கின்றனர். அவர்கள் பிறப்பினி உயர்வை அவர்களுக்குணர்த்தி அவர்தாமும் மனிதர்தான் என்று சிந்திக்க வைத்து மனிதராக வாழ வைப்பது சமூகப் பணியாகும். சூழல்
கெட்டுவிடக்கூடாது, அது பாதுகாக்கப்பட வேண்டியது உயர்ந்த சமூகப்பணிஎன்பது கருத்திலிருக்க வேண்டும். அந்த உயர்ந்த
இலட்சியம் என்றுந் தொடர்புபட்டுக்கொண்டே இருக்க வேண்டும். இந்தச் சிந்தனைகளைச் செயற்படுத்துவதற்கான கருத்துக்களை வள்ளுவரிடமிருந்து பெரிதாகப் பெறமுடிகின்றது. திருக்குறளில்
அறன் வலியுறுத்தல் என்றொரு அதிகாரம். அந்த நூலிடத்து நான்காவதாயமைந்த அந்த அதிகாரத்திலே எமது வாழ்வின் அடித்தளம் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது. அறம் என்ற அடித்தளத்திற் கட்டி எழுப்பப்பட வேண்டியது எமது வாழ்வு என்றும், அறத்துடனாகாத வாழ்வு வாழ்வாக முடியாது என்றும் அந்த அதிகாரத் தருங்
கருத்துக்கள் கொண்டு தெளிய முடிகின்றது. இந்த வேளை அறமென்றால் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டிய தேவை ஏற்படுகின்றது. இதை முன்பாகவே உணர்ந்துகொண்ட வள்ளுவர் அதற்காகிய பதிவையும் சொல்லி வைத்துள்ளார்கள். அருமையான எளிதான பதில், எல்லோரும் விரும்பி ஏற்றுக்கொள்ளக்கூடிய பதில். குற்றங் குறையில்லாத மனத்துடனாகி இருப்பது தான் அறம் என்பது தான் அவர் சொல்லி வைத்த உண்மை. “மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன்” என்று மிக மிக எளிதாகச் சொல்லிவிட்டார்கள். இது என ன பிரமாதமான விடயமா? எலி லோரும் எளிதாகப்
பின்பற்றக்கூடியதுதானே உண்மைதான்: ஏற்றுக் கொள்ளக்கூடிய சிந்தனையுந்தான். அந்த நிலையை உருவாக்க வேண்டுமே! அதற்குக் கல்வி இன்றியமையாதது. இளமையிலிருந்தே போதிக்கப்படவும் வேண்டியது. பாடசாலைகளில் வழங்கப்படும் வகுப்பறைக் கல்வியால்
○

Page 12
மட்டும் எமது எண்ணம் நிறைவு செய்யப்படக்கூடியதன்று. பிள்ளையுடன் தொடர்புடைய ஒவ்வொருவராலும் இது நிறைவு செய்யப்படவேண்டியது. விளையாட்டிடம், வழிபாட்டிடம், விழாக்கள் நடைபெறுமிடம் என்று எல்லா இடங்களிலுங் கவனிக்கப்படவேண்டியது. ஆகவே இது பல உறுப்பினர்களாற் கவனிக்கப்பட்ட வேண்டியதொரு சமூகப்பணியாகின்றது.
எங்கள் நடைமுறைகள் எவையானாலும் அவை மற்றையார்க்குத் துன்பம் தராதவையாக அமையவேண்டும் என்று எம் சிந்தனை அழுந்தச் சிந்திக்குமானால் அது அறத்தின் வழி நிற்பதாகவே அமையும் என்பதிற் சந்தேகமில்லை. பொதுத் தொண்டுதானே நாம் செய்கின்றோம்; எங்களுக்காக நாம் இதைச் செய்யவில்லையே என்று எண்ணிக்கொண்டு தொடர்பில்லாதவர்களுக்குத் துன்பங் கொடுத்துவிடக்கூடாது. இந்த எண்ணம் உள்ளம் முழுவதும் நிறைந்திருக்க வேண்டும். உள்ளத்தில் உண்மையொளி உண்டானால் வாக்கிலும் செயலிலும் உண்மையாந் தன்மையே பிரதிபலிக்கும். “மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்கவேண்டாம்” என்று பேசப்படுவதையுங் கேட்டுக் கொண்டே இருக்கின்றோம். மனம் செம்மையானதாக வேண்டும். எந்தவித அப்பழுக்கும் இல்லாததாக வேண்டும். அதற்குக் கல்வி அறிவு வளர்ச்சி வேண்டியது. இந்தக் கல்விப் பணி செவ்விதானதாக அறிவை, நினைவைச், செயலைப் புனிதஞ் செய்வதாக அமைய வேண்டும். புனிதமான உள்ளத்துத் தோன்றும் சிந்தனைகள் புனிதமானவையாகவே இருக்கும். தொடர்ந்த சொல் செயல் எல்லாமே புனிதமானவையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
“கல்லார் நெஞ்சில் நில்லான் ஈசன்’
என்பது எம் நினைவில் ஒலித்துக் கொண்டிருப்பது. இங்கேயும் கல்வி என்பது புனிதமான அறிவு வளர்ச்சியைத்தான் குறியீடு செய்கின்றது. கல்வி என்னும் புனித ஆற்றல் மூலம் தூய்மையதான உள்ளத்தையே
-G18)-

இறைவன் உறைவிடமாகக் கொள்வான். 'மலர்மிசை எகினான்’ என்னுங் குறள் அடிப் பகுதிக்கு உரை எழுதிய பரிமேலழகர், “அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின் கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின்’ என்று குறிப்பிடுவார். இங்கே குறிப்பிடப்படும் மனித முயற்சிப் பணிகள் தெய்வீகமானவை என்பதில் ஐயமில்லை.
மனிதவாழ்வின் நோக்கமே மேலான நிலையை அடைதல் என்பதுதான். எனவே அவர்கள் மேம்பாட்டிற்கான உழைப்புக்களும் அதே எண்ணப் பாங்கினைப் பின்னணியாகக் கொண்டவையாகத்தானே கருதவேண்டும். ஆனால் அந்தவகையில் உழைப்பவர்கள் எல்லோரும் தமது பயன்கருதி உழைக்கவில்லை என்பது தெளிவாக வேண்டும்.
யாழ்ப்பாணத்து நல்லூர் பூரீலg ஆறுமுகநாவலர் செய்த பணிகள் எமது சிந்தனையை வளம் செய்வன. எமது பிள்ளைகள் சைவச் சூழலிற் கல்வி பயில வேணி டுமெனக் கருதிய அவர் சைவப்பாடசாலைகளை அமைத்தார். மற்றையோரைக் கொண்டும் அமைப்பித்தார். எல்லோருக்கும் முன்னாகத் தானோர் சைவனாகக் காட்சி தந்தார். எல்லோருக்கும் நம்பிக்கை தருவதாக அமைந்தது. அவர் ஆசானுபாகுவான தோற்றம். சொந்தமாக அச்சியந்திரசாலையை அமைப்பித்துச் சைவத் தமிழ் மாணவர்க்கான நூல்களை அமைப்பித்து வெளியிடச் செய்தார். ஆரம்ப நிலை மாணவர்க்கான நூல்களாகச் சைவ வினாவிடை, பாலபாடம், இலக்கண வினாவிடை முதலான நூல்களைத் தாமே எழுதி அச்சுவாகன மேற்றி வெளியிட்டு வைத்தார். பாடசாலைகள் சைவநெறி முறைகளுடனாகித் தொடரவும் வழி சமைத்தார்.
ஆலயங்களில் நித்திய நைமித்திய விழாக்கள் ஒழுங்காக நடைபெற வேண்டியன செய்தார். ஆலயங்களின் நிர்வாகத்தினருடன் தொடர்பு கொண்டு பரிபாலனம் சிறப்பாயமைய, ஒழுங்காய் அமைய நல்ல
-(19)

Page 13
கருத்துக்களை வழங்கினார். மக்களின் நம்பிக்கை வளர்ச்சிக்கு ஆலய நிர்வாகம் ஒழுங்காக நடைபெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். ஆலயங்களிற் புராண படனம் சைவப் பிரசங்கங்கள் செய்து மக்கள் உள்ளங்களில் தெளிந்த உணர்வை வளர்த்தார். நம்பிக்கை உடனான வழிபாட்டு முயற்சியில் எல்லோரும் ஈடுபடக் கூடியதொரு நிலைமையை உருவாக்கி நாவலர் எல்லோர் உள்ளங்களிலும் இடம்
பெற்று விட்டார்கள்.
சங்ககாலத்திருந்தே இவ்வகைச் சமூகப்பணி நடந்துள்ளமைக்கான ஆதாரங்களைப் பெற முடிகின்றது. “தன்னகம் புக்க குறுநடைப்புறவின் தபுதி கண்டஞ்சிச் சீரை புக்க” சிவியையும், "ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் பெண்போற் புதல்வர்ப் பெறாதீரும் எம்மம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின்” என்று வழிப்படுத்திய பாண்டியன் ஒதுகுடுமிப் பெருவழுதியும் அத்தகையோர்க்குச் சான்றாக நிற்கின்றனர். நாயன்மார்கள் காலத்தில் அப்பூதியடிகள் தண்ணீர்ப்பந்தல் அமைத்துப் பணி செய்தமை எமக்குத் தெரிந்ததே. மக்களின் நிறைந்த வாழ்விற்காகச் சம்பந்தர் அப்பர் செய்தவையும் நாமறிந்தவைதான். கடந்த நூற்றாண்டில் ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை, தமிழ்ப் பேரறிஞர் உ.வே. சாமிநாதையர், நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் முதலியோர் உலகம் உள்ளளவும் நின்று நிலைக்கக் கூடிய பணிகளை இயற்றியுள்ளார்கள். ஏட்டுப் பிரதிகளாகவே மறைந்து போகக்கூடிய பல நூல்களை அச்சேற்றிய பெருமை முன்னிருவருக்கும் உண்டு. பசு வதையை எதிர்த்துச் சைவ வாழ்வு பற்றிச் சிந்திக்க வைத்த பெருமை சுவாமி ஞானப்பிரகாசருக்குண்டு.
இன்றுங்கூட எங்கள் ஆலயச் சூழல்களில் இவ்வாறான உயரிய பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. யாழ் தெல்லிப்பளைத் துர்க்கா தேவி தேவஸ்தானச் சூழலில் கலாநிதி சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் தலைமையிற் பல உயரிய பணிகள்
-(20)-

நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆலய நிர்வாகத் தலைமையை ஏற்று ஆலயச் சூழலை வழிபாட்டிற்கு ஏற்றதாக்கியதுதான் சிவத்தமிழ்ச்செல்வி அவர்களின் முதற் பணியாக அமைந்தது. தொடர்ந்து வேண்டிய கட்டிடங்களை அமையச் செய்தது, ஆதரவற்ற குழந்தைகளைப் பொறுப்பேற்று அவர்களுக்குக் கல்வி வாய்ப்புக்களை அளிதிது சமூகதி தில் அவர்களையும் பொருதீதமான உறுப்பினர்களாக்குவது, வயோதிபர்களை ஏற்று அவர்களை நல்லவகை பராமரிப்பது, நூல் நிலையத்தை அமைத்து வாசிப்புப் பழக்கத்தை வளர்ப்பது என்று பல்வேறு கோணங்களிலும் பணிகள் தொடருகின்றன. இவற்றுக்கு மேலாக அண்டை அயலிலுள்ள ஆலயங்களுக்கு, பாடசாலைகளுக்கு, வைத்திய நிலையங்களுக்கு, நூல் நிலையங்களுக்கு வேண்டிய பொருளுதவி செய்து அவற்றையும் வளர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. போர்க்கால நிலைமையில் எல்லாவற்றையும் இழந்து நின்றவர்களுக்கு உணவு கொடுத்து ஆதரித்தன்மையையும் யாம் அறிவோம். இத்தனையும் தெய்வ சந்நிதியில் தெய்வப் பணியாகவே தொடர்கின்றன என்பது எல்லோர் மனத்திலும் படுவதொன்று. பல்கலைக்கழகமெனும் உயர் கல்வி நிறுவனத்திற்குக் கூட இங்கிருந்து உதவி கிடைக்கின்றது என்பதும் எல்லோரும் அறிந்ததுதான்.
பெற்றோரை இழந்து ஆதரவற்று நிற்குஞ் சிறார்களைப் பொறுப்பேற்று வளர்த்தெடுக்கும் பணியில் நிற்கும் திருகோணமலை அன்பு நிலையம், கொழும்பு இந்துமாமன்றத்தினரின் அனாதைச் சிறுவர் இல்லம், மன்னார் சித்திவிநாயகர் அனாதைச் சிறுவர் இல்லம், திருநெல்வேலி சைவபரிபாலனசபை அனாதைச் சிறுவர் விடுதி என்பவற்றின் பணி பாராட்டிற்குரியது. இவற்றின் பணியெல்லாம் மானிட வாழ்வின் உயர்சிந்தனைக்கு உரியவைகளே. இவ்வரிசையில் 1981 ல் உதயமான சமூக முன்னேற்றக்கழகங்களின் சமாசத்தின் மனித மேம்பாட்டுப் பணிகள் - நலிவுற்ற தாய் தந்தையருக்கு உதவுதல்; இடம் பெயர்ந்து அவதியுறு மக்களுக்கு உதவுதல்; அனாதைப்பிள்ளைகளுக்கு உதவுதல், கல்வி
-(21)

Page 14
மேம்பாட்டுக்கு உதவுதல்; சமூக ஐக்கிய வளர்ச்சிக்கு உதவுதல்; சமூகத்தில் உயரிய ஒழுக்க பண்பாட்டு நியமங்களை வளர்த்தல், சமூகக் கொடுமைகளை ஒழிக்க உழைத்தல் அனைத்தும் சிறந்த சமூகப் பணிகளாகும். இப்பணிகளை வளர்ப்பதற்கு 1993ம் ஆண்டில் தாபிக்கப்பட்ட புனர்வாழ்வு - கல்வி அபிவிருத்தி நிதியத்தின் அனைத்துப் பணிகளும் மகத்தானது. சமாசத்தினதும் நிதியத்தினதும் அனைத்துப் பணிகளும் தெய்வீகப்பணிகள் என்பதை எமக்கு உணர்த்தி நிற்கின்றன.
இந்த இடத்தில் ஒரு முக்கியமான விடயத்தை நாம் மனதிற் கொள்ளவேண்டும். பணிகள் எல்லாவற்றுக்கும் வேண்டியதான அந்த அந்தஸ்தை நாம் எமதாக்கிக் கொள்ள வேண்டும். மக்கள் எம்மை நம்பக்கூடிய இடத்தில் நாம் எம்மை வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுவே அது. பொது மக்களுக்கு எம்மிடம் நம்பிக்கை வளரவேண்டும். மக்கள் உயர்விற்காக நாம் செய்யும் பணிகளை அவர்கள் நம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும். அப்போது தான் அவை தெய்வீகப் பணிகளாக முடியும். நம்பிக்கை என்னும் உயர்ந்த அந்தஸ்திற்கு உரியவர்களாக நாம் எம்மை வைத்திருந்தாற்றான் எங்கள் பணிதெய்வீகப்பணியாக முடியும்.
அண்மைக் காலத்தில் எங்களை விட்டுப் பிரிந்த இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, இலக்கணவித்தகர் இ. நமசிவாய தேசிகர், சிந்தாந்த வித்தகர் மு. ஞானப்பிரகாசம், பண்டிதர் வ. நடராசன், இலக்கியகலாநிதி பண்டிதமணி மு. கந்தையா என்போர் பணி தெய்வீகப்பணியே. இந்த வரிசையில் அமரர் சமூக ஜோதி எஸ். வி. தம்பையா அவர்களையும் சேர்த்துக் கொள்ளாமல் விட முடியாது. மக்களிடையே சகோதரத்துவம், ஒருமைப்பாடு, சேர்ந்து வாழல் என்னும் இயல்புகளை வளர்க்க முனைந்த மகான் என்று அவரைச் சொல்லலாம், மனித விழுமியங்களைப் பேணும் அதே வேளை கல்வி மேம்பாட்டின்
MSN 一(22)ー

மூலமே நலிவுற்ற மக்கள் சமூகத்தில் உயர்வு பெற முடியும் என்ற சித்தாந்தத்தை ஏற்று உழைத்தவர். திருமதி. நாகம்மா தம்பையா அவர்களும் துணைவரைப் போற்றி அவர் சேவைகளுக்குத் துணையாகி வளர்த்தவர். கணவன் மனைவியராக உழைத்த உழைப்பு தெய்வீக நினைவை வரிப்பதாக அமைந்தது.
இந்த மனித மேம்பாடு சம்பந்தமான உழைப்புக்கள் சம்பந்தமான நோக்கங்கள் எந்த ஒரு இடத்திலும் வெளிப்படவில்லை. மனித வாழ்வின் நோக்கம் பேரின்பப் பெருவாழ்வு என்பதால் மனித மேம்பாடு நினைந்த பணிகளும் தெய்வீக சிந்தனையுடனானவை என்பது சொல்லாமலே பெறப்படுந்தானே! சிவ சேவை சீவ சேவைதான். மறுபுறம் சீவ சேவை சிவ வாழ்வை நோக்கியதாகவே அமையும்.
18/1, ஒன்பதாவது ஒழுங்கை கொழும்பு 13 இலங்கை.
C23)

Page 15
சமூக ஜோதி அமரர் எஸ். வி. தம்பையா ஞாபகார்த்த வேலைத் திட்டம்
நோக்கம்
அமரர் எஸ். வி. தம்பையா அவர்கள் 1980.09.12 முதல் அவர் 2002.01.09 ல் மறையும் வரையுள்ள 21 ஆண்டுகளுக்கு மேலான காலப்பகுதியில் அன்னாரின் காத்திரமான சமூக, கல்வி, பண்பாட்டு, ஐக்கிய வளர்ச்சிப் பணிகளை கெளரவித்துப் பாராட்டுவதையும் நன்றி உணர்வோடு நினைவு கூருவதையும் நோக்ககமாகக் கொண்டு எஸ். வி. தம்பையா ஞாபகார்த்த வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்கி அமுல்படுத்த தீர்மானித்துளளோம்.
கூட்டுப்பொறுப்பு :
சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசமும், புனர்வாழ்வு கல்வி
அபிவிருத்தி நிதியமும் இணைந்து இத்திட்டத்திற்குக் கூட்டுப்
பொறுப்புடைய நிறுவனங்களாகச் செயற்படும்.
மூன்று அம்ச ஞாபகார்த்தத் திட்டம் :
1. சமூக ஜோதி எஸ். வி. தம்பையா என அழைத்தல். சமூக ஜோதி என்னும் கெளரவப்பட்டத்தை மக்கள் சபை ஒன்றில் உத்தியோக பூர்வமாகப் பிரகடனப்படுத்தி சமூக ஜோதி என்ற கெளரவப்பட்டதைச் சூட்டி அவரை சமூக ஜோதி எஸ். வி. தம்பையா என அழைத்துக் கெளரவிக்கத் தீர்மானித்துள்ளோம்.
2. ஞாபகார்த்த நூல்வெளியீடு
அமரார் எஸ். வி. தம்பையா அவர்களின் சமூகப் பணிகளையும், அவர் நேசித்துக் கடைப்பிடித்தொழுகிய முக்கிய சமூக எழுச்சிக் கோட்பாடுகளையும் பிரதான தொனிப்பொருளாகக் கொண்டு சமூகஜோதி
(24)

எஸ். வி. தம்பையா என்ற தலைப்பில் ஞாபகார்த்த நூல் ஒன்றை
வெளியிடுவதற்கு தீர்மானித்துள்ளோம்.
3. சமூக ஜோதி எஸ். வி. தம்பையா ஞாபகார்த்தப் புலமைப்பரிசில் அமரர் எஸ். வி. தம்பையா அவர்கள் மறைந்த ஆண்டான 2002ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் அரசினால் நடாத்தப்படும் 5ம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சையில் சமூக முன்னேற்றக்கழககங்களின் சமாசமத்தில் அங்கம் வகிக்கும் மாணவர்களிலிருந்து ஆகக் கூடுதலான புள்ளியைப் பெறும் மாணவரைத் தெரிந்து அம்மாணவருக்கு இத்திட்டத்தின் கீழ் சமூக ஜோதி எஸ். வி. தம்பையா ஞாபகார்த்தப் புலமைப்பரிசில வழங்கத் தீர்மானித்துள்ளோம்.
சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசமும் புனர்வாழ்வு கல்வி அபிவிருத்தி நிதியமும்
9
சமூகஜோதி அவர்கள் தனது நூலான “நினைவின் அலைகள்
என்ற நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றுகிறார் - 1997
(25)

Page 16
சமூக ஜோதி எஸ். வி. தம்பையா
- எஸ். பத்மநாதன்
S6 L
(ଗ ம்மண் பூமி எனத் திகழ்ந்த செம்பாட்டுக் கிராமமான உரும்பிராயில்
வடக்குப் பகுதியில் வீரகத்தி சின்னாச்சி தம்பதிகளின் மூன்றாவது மகனாக 1932ம் ஆண்டு ஒக்டோபர் 25ம் திகதி பிறந்தவர் அமரர் எஸ். வி. தம்பையா அவர்கள். வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் எதிர்நீச்சல் புரிந்த அந்தக் குடும்பத்தில் இவருக்கு முன்பாக மூவரும் பின்பாக ஐவருமாக மொத்தமாக ஒன்பது பிள்ளைகள். இவர் ஒரு செல்லப்பிள்ளையாகவே ஆரம்பத்தில் வளர்ந்தவர். பல்வேறு அனுபவங்களையும், உணர்வு அலைகளையும் பெற்றுக் கொண்ட இவரது ஆரம்பக்கல்வி உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாசாலையில் ஆரம்பமாயிற்று. பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் கல்வி கற்ற எஸ். வ. கல்விக்காக ஏங்கினாலும் சில சூழ்நிலைகள் அவரை மாற்றி விட்டன. எனவே ஆரம்பக்கல்வியுடன் அதற்கு முழுக்கப் போட்டுவிட்டார் அவர்.
குடும்பத்தில் சிறிய பங்காளியாக மாறி 13 வயதில் தனது தாய் மாமனாருடன் பதுளைக்குச் சென்று அவரது தொழிலகத்தில் தொழில் புரிந்தாலும் திருப்திப்படாத மனசுடன் கொழும்புக்குச் சென்று அங்கும் அவருக்கு தனது நிதர்சனத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த சமயத்தில் மலேசியாவில் தனது தமையனாரின் இடத்தினை நோக்கிய நகர்வு இடம் பெறுகின்றது. மிகவும் இளவயதில் - அதாவது 18 வது வயதில் மலேசியாவில் இவர் வாழ்வு மலர்கின்றது. அப்போது தான் இவருக்குள் உறங்கிக் கிடந்த இவரது திறன்கள் வெளிவர ஆரம்பிக்கின்றன. கடந்த காலத்தில் படிக்க முடியாத அந்த ஏக்க உணர்வுகள் சீறிக்கிளம்பின.
С26)

மலேசியாவில் இவரது தொழிலகத்தில் இலக்கிய கலகம் மலர்கின்றது. இவருக்குக்கிடைத்த சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொண்டு தான் பல்வேறு திறன்களை வளர்க்க ஆரம்பிக்கின்றார். இதில் கிடைத்த இன்பம் மிகவும் பெரிதாகின்றது. இவருக்குள் இலக்கிய தாகம் புகுந்து கொள்கின்றது. நண்பன் பாலகிருஷ்ணனின் உதவியுடன் தமிழ் நாட்டு எழுத்தாளர்கள் கவிஞர்கள் பற்றி அறிந்து கொள்ளுகின்றார். நடிகர் ச60ண்முகத்துடன் சேர்ந்து நாடகத்தில் நடிக்கின்றார்: வசந்தனுடன் சேர்ந்து மேடைகளில் சினிமாப் பாடல்கள் பாடுகின்றார்: வீரமோகனுடன் சேர்ந்து மேடைப் பேச்சாளராகின்றார்: சங்கீத பூஷணம் பாக்கிய நாதனிடம் இசை கற்கின்றார். இப்படிச் செல்கிறது இவரது மலேசியா வாழ்வு. தமிழ் இலக்கியத்தில் தணியாத தாகம் கொள்கின்றார்.
இவரது வாழ்வில் அடுத்த திருப்பம் தமிழ்முரசு ஆசிரியர் தண்டபாணியின் தொடர்பினால் ஏற்படுகிறது. இவர் மூலம் தமிழக அறிஞர்களின் தொடர்பு இவருக்குக் கிடைக்கின்றது. 1954 ல் ஈ.வே.ரா பெரியாரை சந்திக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைக்கிறது. அத்துடன் இவரது பகுத்தறிவும் சிந்தனையிலும் மாறுதல்கள் நிகழ்கின்றன. சிரம்பான் நகரத்தில் வெளியான தமிழ்முரசு பத்திரிகையில் சிறுகதைகள் கட்டுரைகளை எழுதினார். தமிழ் நேசன் பத்திரிகை இவரது கதைகளை பிரசுரிக்கின்றது. இப்படியாக இவரது இலக்கிய சொத்துக்கள் விரிந்து பெருகினாலும் மீண்டும் இலங்கைக்கு திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகின்றது.
1958ல் இலங்கைக்கு திரும்பிய இவர் அப்போது கொண்டு வந்த சொத்துக்கள் அனைத்தும் புத்தகங்கள் தான். பாரதியார், பாரதிதாசன் கவிதைகள், புதுமைப்பித்தன், காண்டேகர் கதைகள், ஈ.வே.ராவின் சிந்தனை நூல்கள், திரு. வி. க. வின் தமிழ் நூல்கள் இவைகள். தனது உழைப்பாக இந்த நாட்டுக்கு நூல்களை மட்டும் கொண்டு வந்த வேளையில் அந்தக் காட்சியில் கலந்து கொண்டவர்களுள் நானும்
(27)-

Page 17
ஒருவர். எனது இலக்கிய சிந்தனைகளை கிளறும் முன்னோடியாக அன்று அவர் திகழ்ந்துள்ளார். உண்மையில் அவர் ஒரு படிக்காத மேதை போல் திகழ்ந்து எங்களை சிந்திக்க தூண்டியவர் என்று கூட கூறலாம். அவரது ஞாபகசத்தி, கற்பனைத்திறன் இன்னும் என்னை வியப்பில் ஆழ்த்துகின்றது.
கலிங்கத்துப் பரணி முதல் பல இலக்கியங்களை விளக்குவார், புதுமைப்பித்தன் முதல் பலரது கதைகளை அப்படியே கூறுவார், காண்டேகரின் மொழிபெயர்ப்பினை விமர்சிப்பார். திரு. வி. க. தமிழ் எழுத்துக்களை ரசித்து கூறுவார். உண்மையில் நெஞ்சுக்கு நீதியுடன் கூறுவதானால் இன்றுள்ள எனது இந்த இலக்கிய எழுத்துக்களுக்கு முதல்வர் அவர்தான்.
இவரது திருமணத்துடன் புதியதொரு அத்தியாயம் மலர்கிறது. 1956ம் ஆண்டு செப்டெம்பர் 8ம் திகதி அச்செழு கிராமத்தில் வாழ்ந்த நாகம்மாவை தனது விருப்பத்திற்குரிய மனைவியாக ஆக்கிக் கொண்ட இவர் தனது பிள்ளைகளுக்கு கூட அழகு தமிழ் பெயர்களை சூட்டி மகிழ்ந்தார். முல்லை, சாந்தி, பவானி, ரவீந்திரன், வாசுகி ஆகியவை இவரது பிள்ளைகளின் பெயர்கள். இந்த நிலையில் ஏற்பட்ட பொருளாதார நிலைகாரணமான தொழில் நிறுவும் முயுற்சியில் இறங்கினார். கொழும்பில் தன் தொழிலகத்தினை நிறுவி அதில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் ஓய்வு நேரங்களில் இலக்கியதாரர்களைச் சந்திக்க தவறுவதில்லை, எழுதுவதில் கூட ஆர்வம் செலுத்தினார். இந்த நேரத்தில் தான் ஈழத்தில் பிரபல எழுத்தாளரான டொமினிக் ஜீவாவை சந்தித்து நட்புக் கொள்கின்றார். இந்த நட்பு சம்பந்திகளாக மாறும் அளவுக்கு வளர்ந்து விடுகின்றது. ஜீவாவின் மகன் திலீபன் இவரது இளைய மகளான வாசுகியை மணந்து
கொள்கிறார்.
(28メ

கொழும்பில் இவரது இலக்கிய தேடலில் இணைந்து கொண்டவர்கள் நூற்றுக்கணக்கானவர்கள். பலருக்கு தூண்டுதலை அளித்தார், தானும் தினகரன் பத்திரிகையில் எழுதலானார், பல இலக்கிய சந்திப்புக்களை மேற்கொண்டார். இதன் விளைவாக 1984 ஜனவரியில் இவரது சிறுகதைத் தொகுதியான “கடலில் கலந்தது கண்ணீர் வெளியீடு செய்யப்பட்டது. இந்நூலில் இவர் ஏற்கணவே எழுதிய தமிழ் முரசு, தமிழ் நேசன், பொன்னி ஆகியவற்றில் வெளிவந்த சிறுகதைகளும் இடம்பெற்றன. இந்நூலுக்கு முன்னுரை எழுதிய தெணியான் கூறியது போன்று எஸ். வி. தம்பையா அவர்கள் படைப்புத்துறையில் தொடர்ந்து ஈடுபடாது போனமையால் தமிழிலக்கிய உலகில் மக்கள் பக்கம் சார்ந்து நின்று மக்கள் இலக்கியம் படைக்க தகுந்த ஒரு படைப்பாளியை இழக்க நேர்ந்து விட்டது. இக்கருத்து நெருடலைத்தருகின்றது.
இவரது அடுத்த கட்ட வாழ்வு 1980 செப்டெம்பரில் 12ம் திகதி உருவான சமூக எழுச்சி இயக்கம், 1981 ஏப்ரல் 15ல் உருவான சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாச இயக்கம் என்பவற்றுடன் ஆரம்பிக்கின்றது. இதன் அமைப்பு முந்நோடிகளில் ஒருவராகி புனர்வாழ்வு கல்வி அபிவிருத்தி நிதியத்தின் ஆயுட் கால உறுப்பினராகவும் விளங்கினார். இச்சமாசத்தலைவர் இ.மு. நாகலிங்கம் அவர்களது வழிகாட்டலில் ஒரு சமூக சேவையாளராக இவர் மாறினார். 1982 ல் மலேசியாவுக்கு சென்று சமாசத்திற்காக 38,000/= ரூபாய்களை திரட்டி உதவினார், 1995 பெப்ரவரி 20ல் ஜேர்மன் நாடு சென்று மூன்று லட்சம் ரூபாய்களை திரட்டி உதவினார். 1996 ல் கனடாவுக்கு சென்று 64000 ரூபாய்களை திரட்டி உதவினார். எனவே தான் தலைவர் இவரை ‘சமூகஜோதி” என்று அடிக்கடி நினைவு கூர்ந்து அந்த பட்டத்தினை சூட்டி நிற்கின்றார்.
சமாச வேலைகளுக்கு அப்பால் தன் வாழ்க்கை வரலாற்றினை ஒரு நூலாக எழுதும் ஆசை கொண்டு அதன் மூலம் நினைவின் அலைகள் 1997ல் வெளியாகின்றது. இந்நூல் ராஜபூரீகாந்தன் எழுதிய
G29)-

Page 18
முன்னுரையில் எதிர்கால இளங்தலை முறையினர் அறியக்கூடிய ஆவண நூலாக இதனை கருத முடியும் என்று விதந்து கூறியுள்ளார். டொமினிக் ஜீவாவின் மல்லிகைப்பந்தல் வெளியீடாக மலர்ந்த இந்நூல் ஒரு சாதாரண மனிதனின் சரித்திரம் எப்படி அசாதாரண சாதனைகளை உருவாக்கிற்று என்பது வியப்புக்கு உரியது. ஆர்ப்பரிப்பு இல்லாத எஸ். வி. அவர்கள் தனது மனவடுக்களை இந்நூலில் இறக்கி வைத்துள்ளார்; வாழ்வின் பலதுறை அனுபவங்களை இந்நூலில் காட்டியுள்ளார்.
இலக்கியவாதியாக, சமூகவாதியாக, தொழிலதிபராக, மனிதநேயம் படைத்தவராக வாழ்நத இவர் ஒரு ஆன்மிகவாதியாகவும் மாறி குருமகராஜியை தனது குருவாக ஏற்றுக்கொண்டார். எந்தக் காலத்தினும் மனந்தளராத வகையில் அவரது இலட்சியங்களை அடிக்கடி நினைவு கூர்ந்து கொள்வார். குரு மகராஜியை சந்திப்பதற்காக பல தடவைகள் இந்தியாவுக்கு சென்று திரும்பியதுடன் தனது தொழிலகத்தில் பல வருடங்களாக அவரது உருவாக்கப்படத்தினை வைத்து மகிழ்ந்துள்ளார். தனது நிலையத்தில் உள்ளவர்களை படிக்கத்தூண்டி அதற்காகவே வகுப்புக்களையும் ஒழுங்கு செய்தவர். படிப்பின் அருமை தெரிந்த இவர் பலரையும் படிக்கத் தூண்டியதில் வியப்பில்லை. எனது முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட இவர் நான் பல்கலைக்கழகம் சென்றது பின்பு விரிவுரையாளராக வந்தது அனைத்தினையும் பெருமையுடன் கூறுவர். இதனால்தான் நான் கூட அவரது சம்பந்தியாகும் பாக்கியம் பெற்றேன். எனது மகள் மீரா அவருடைய ஒரே மகன் இரவீந்திரனை திருமணம் செய்து கொண்டது மூலம் இருவரும் சம்பந்தியாகினோம்.
இவர் காலம் சென்ற போது இவரைப்பற்றி குறிப்பிட்ட பலர் எவ்வாறு இவரை அறிந்து வைத்திருந்தனர் என்பதனை உணர்ந்து கொள்ள முடிந்தது. கம்பர் கழக இ.ஜெயராஜ் இவரைப்பற்றி குறிப்பிடும்போது “மானுடத்தின் சிகரம் தொட்ட ஒரு மாமனிதனை
G30)

இழந்து விட்டோம்” என்கிறார். தலைவர் இ.மு.நாகலிங்கம் அவர்கள் குறிப்பிடும்போது நாம் ஒரு சமூக ஜோதியை இழந்துவிட்டோம் என்கிறார். தினக்குரல் பத்திரிகை எழுதும்போது “பலநெருக்கடிகளுக்கு மத்தியிலும் தனது வாழ்வினை செப்பனிட்ட எழுத்தாளர், சமூக சேவையாளர்” என்று குறிப்பிட்டது. எழுத்தாளர் செங்கையாழியான் மறக்க கூடிய ஆத்மாவா அவர்? என்று கேட்கிறார். ஜீவா குறிப்பிடுவது போன்று 'அச்செழுப்பண்ணையாராக வாழ்ந்த இவர் தனக்காக மட்டுமின்றி சமூகத்தின் ஒவ்வொரு துறையிலும் நுழைந்து சாதனை பல புரிந்த ஒரு செயல் வீரராக இருந்துள்ளார். உண்மையில் எம் இதயத்தில் சமூகஜோதியாய் அவர் என்றும் பிரகாசித்துக் கொண்டிருப்பார்.
எஸ். வி. யின் மனைவியும், பிள்ளைகளும்
G31)

Page 19
சமூகஜோதி எஸ். வி. தம்பையா அவர்களின் சமூகப் பணிகள்
மூகஜோதி எஸ். வி. தம்பையா அவர்கள் 19321025ல் ஒரு சாதாரண
குடும்பத்தில் பிறந்து, சிறுவயதிலேயே குடும்ப நலனை முன்னிட்டுக் கல்வியை இடைநிறுத்தி வருமானத்திற்காகத் தொழிலில் ஈடுபட்டவராவார். சுயநம்பிக்கை, சுயபலம், சுயமுயற்சி ஆகியவற்றை மூலதனமாகக் கொண்டு படிப்படியாக முன்னேறிய அவர் 25.10.2001 ல் தனது 70 வது பிறந்த தினத்தை ஒரு பெருவிழாவாகக் கொண்டாடி அவருடன் அனைவரும் மகிழ்ந்த சூழ்நிலையில் 09.01.2002 ல் இவ்வுலக வாழ்வை விட்டு நீங்கியுள்ளார். இவர் ஒரு இலக்கியவாதியாக, ஒரு சிறந்த சமூகத் தலைவராக, ஒரு சிறந்த தொழிலதிபராக, ஒரு சிறந்த மனித நேயம் படைத்தவராக உயர்ச்சி பெற்ற புகழுக்குரியவராவார்.
எஸ். வீ. தம்பையா அவர்கள் கடைப்பிடித்த கொள்கைகளும் வளர்த்துக் கொண்ட சேவை உணர்வுகளுமே அவரைச் சமுதாயத்தில் உயர்வு பெறச் செய்துள்ளது என்று கூறினால் மிகையாகாது. தானும் தன் குடும்பமும் என்ற எல்லையைக் கடந்து, தான் சார்ந்த சமூகத்தின் எழுச்சிக்காகவும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் சமூக சமத்துவத்திற்காகவும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகவும் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அவர் ஆற்றிய தொண்டுகள் என்றென்றும் நினைவில் கொள்ளத்தக்கவை ஆகும். எனினும் 12.09.1980 முதலான கடந்த இரு தசாப்த காலமாக சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசத்தினூடாகவும், புனர்வாழ்வு கல்வி அபிவிருத்தி நிதியத்தினூடாகவும் அவர் ஆற்றிய சமூகப் பணிகள் மிகவும் காத்திரமானவை ஆகும்.
ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது தனி மனிதனிலிருந்து ஆரம்பமாகிக் குடும்பம், சமூகம், இனம், தேசம் என்ற தொடர்ச்சியான படிமுறை வளர்ச்சியைக் கொண்டதாகும். ஒருவர் எவ்வளவுதான் கல்வியால், தொழிலால், செல்வத்தால், தனிமனித ஆளுமைகளால் வளர்ச்சி பெற்றாலும்
-(32)

அவருடைய சமூகக் கெளரவமும், சமூக அந்தஸ்தும்அவர் சார்ந்த சமூகமானது ஏனைய சமூகங்கள் மத்தியில் பெற்றுள்ள அந்தஸ்து, கெளரவம் என்பவற்றின் அளவிற்கே மட்டுப்படுத்தப்படும் என்பது யதார்த்த பூர்வமான நடைமுறை ஆகும். இந்தக் கோட்பாட்டினை அடிப்படையாகவும் நலிவுற்ற சமூகங்களினதும், தமிழினத்தினதும் உயர்ச்சியை மூல நோக்கமாகவும் கொண்டு "சமூக எழுச்சி இயக்கம்” ஒன்று மாவிட்டபுரம் பாரதி மறுமலர்ச்சி மன்றத்தின் வெள்ளிவிழாவில் 12.09.1980 ல் உதயமானது. எஸ். வி. தம்பையா அவர்கள் இந்த எழுச்சி இயக்கத்தின் முன்னோடித் தலைவர்களில் ஒருவராவார்.
சமூக எழுச்சி இயக்கத்தின் இறுதி இலக்குகளாவன - முதன்மையாக சமூக முன்னேற்றக்கழகங்களின் சமாசத்தின் அங்கத்தவர்களினதும், சிறப்பாக தமிழினத்தினதும், பொதுவாக தேசத்தினதும் எழுச்சி, வளர்ச்சி, சுதந்திர உரிமைகள் ஆகியவற்றை அடைதலாகும். அவற்றை அடைவதற்கான அடிப்படைத் தந்திரோபாயங்களை “ஆறு அம்சத் திட்டம்” என மகுடமிட்டு அதற்கான செயல் திட்டமொன்றை வகுப்பதன் பொருட்டுச் சமூக உறுப்பினர்களின் கருத்துக்களைத் திரட்டுவதிலும், அத்திட்டத்தை வரையறுப்பதிலும் எஸ். வி. தம்பையா அவர்களின் பங்களிப்பு மகத்தானது. குறிப்பிட்ட ஆறு அம்சத் திட்டத்திற்கு மக்களின் அங்கீகாரத்தைப் பெறும் பொருட்டு 25.12.1980 ல் கொழும்பு விவேகானந்த சபை மண்டபத்தில் மகாநாடு ஒன்றை நடாத்தி ஆறு அம்சத் திட்டத்தை சமூக எழுச்சி இயக்கத்தின் உறுப்பினர்களின் அங்கீகாரத்துடன் பிரகடனப் படுத்துவதில் அமராரின் பங்களிப்பை மறக்க முடியாது.
ஆறு அம்சத் திட்டமானது, பின்வரும் அம்சங்களைக் கொண்டதாகும்.
ஜனநாயக நடைமுறையைக் கொண்ட நிறுவன ரீதியான
தலைமையைத் தாபித்து, இறுதி இலக்குகளை அடைதற் பொருட்டு திட்டமிட்ட முறையில் செயற்படல்.
-(33) -~~~~

Page 20
2. பட்டினி கிடக்க நேரினும் படிப்போம் எனப் பிள்ளைகளும், படிக்க வைப்போம் எனப் பெற்றோரும் சபதம் பூண்டு செயற்பட ஊக்குவித்தலும் ஆதரவு வழங்குதலும்.
3. தொழிற் பெயர்வின் நிமித்தம் தகைமை சார் தொழில் வளம் கொள்ளும் திறனையும் உரிமையையும் பெருக்குதல்
4. கிராம ரீதியாகவும், பிரதேச ரீதியாகவும் மக்கள் மத்தியில்
ஐக்கியத்தையும் சகோதர உணர்வுகளையும் வளர்த்தல்.
5. சமூக ரீதியான அடிமைத் தொழில் முறையையும் சமூகக் கொடுமைகளையும் ஒழித்து ஏனைய சமூகங்களுடன் சமத்துவத்தை வளர்த்தல்.
6. உயர்ந்த தனிமனித சமூக ஒழுக்க விழுமியங்களையும்
பண்பாட்டையும் பேணி வளர்த்தல்.
ஆறு அம்சத்திட்டத்தின் அடிப்படையில் கிராமங்கிராமமாகச் சென்று மக்களைக் கூட்டி அவர்கள் விழிப்புணர்ச்சி பெறவும், மனமாற்றமடையவும், செயற்படத் தூண்டவும் கருத்துப் புரட்சி இயக்கம் ஒன்றை நடாத்திக் கிராமங்களில் 24 சமூக முன்னேற்றக் கழகங்களைத் தாபிக்கும் பொருட்டு எஸ். வி. தம்பையா அவர்கள் ஆற்றிய பங்களிப்பு மகத்தானது. கொழும் பிலிருந்து வந்து யாழி மாவட்டத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் பரவியிருக்கும் கிராமங்கள் தோறும் நடைபெற்ற அனைத்துப் பிரச்சாரக் கூட்டங்களிலும் பங்குபற்றி அவர் வழங்கிய கருத்துரைகள் மிகவும் கனதியானவை.
இவ்வாறு உருவாக்கப்பட்ட சமூக முன்னேற்றக் கழகங்களை இணைத்து சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசத்தினைத் தாபிக்கும் பொருட்டுத் தொண்டமனாறு செல்வச்சந்நிதியில் மகாநாடொன்றை ஏற்பாடு செய்யவும், 15.04.1981 ல் நடைபெற்ற அம்மகாநாடு வெற்றி பெறவும் அமரரும் அவரது துணைவியாரும் இணைந்து வழங்கிய பங்களிப்பு சிறப்புக்குரியதாகும்.
-(34)-

மேலும் கிராமமட்டங்களிலும், பிரதேச மட்டங்களிலும் சமூக உறுப்பினர்கள் மத்தியில் ஐக்கியத்தையும் சகோதரத்துவத்தையும், வளர்ப்பதில் எஸ். வி. தம்பையா அவர்களின் செல்வாக்கு, தொடர்புகள், சகோதர உணர்வுகள்,
செயற்பாடுகள் மிகவும் நல்ல பலனை அளித்துள்ளன.
எங்கள் எழுச்சி இயக்கத்தின் "கல்வி இலக்குகளின் பரிணாமமும்
விரிவடைந்தது.
1980 ல் - “பட்டினி கிடக்க நேரினும் பத்தாம் வகுப்பவரை படிப்போம்,
படிக்க வைப்போம்.
1993 ல் - பட்டினி கிடக்க நேரினும் பல்கலைக்கழகப் பட்டம் பெறுவோம்
பெற வைப்போம்".
2000 ல் - பட்டினி கிடக்க நேரினும் பல்கலைக் கழகப் பட்டத்துடன்
உயர் தொழிற் புலமை பெறுவோம், பெற வைப்போம்.
இலக்குகளைப் படிப்படியாக உயர்த்திச் சென்று பயன்படக்கூடிய நிதி மக்குவிப்புத் திட்டங்களை அமுல்படுத்திச் செயல்பட அமரர் சலிக்காது உதவி வந்துள்ளார். ஆரம்பத்தில் தொழில் நிலையங்களினூடாக உண்டியல் முறை மூலமும், அதிர்ஷ்டலாபச் சீட்டு முறை மூலமும், சிறு நன்கொடைகள் மூலமும் நிதி திரட்டுவதற்கு முன்னின்று உழைத்த எஸ். வி. தம்பையா அவர்கள் 1989 ல் தனது பெற்றோரின் பெயரில் "ஞாபகார்த்தப் புலமைப் பரிசில் நிதி” ஒன்றை தாபித்து உதவியமை குறிப்பிடத்தக்கதாகும். எஸ். வி. ரி. அவர்கள் 1983 ம் ஆண்டு மலேசியாவுக்குச் சென்றிருந்த வேளையில் அப்பயணத்தை சமாசத்தின் கல்வி வளர்ச்சித் திட்டத்திற்கு நிதி சேர்க்கப் பயன்படுத்தியதன் விளைவாக 114 நலன் விரும்பிகளைச் சந்தித்து 38000/- ரூபாயை திரட்டி வழங்கிய நிதி, சமாச நிருவாகத்திற்குப் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. இந் நிதியின் பலத்தைக் கொண்டு 1983 ல் கல்வி ஊக்குவிப்புக்கான நிதித் திட்டம் ஒன்று முதல் முதலில் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டமை
সুৰক্ষকেক VISSV

Page 21
குறிப்பிடத்தக்கதாகும். 1995ம் ஆண்டு ஜேர்மனிக்கு ஒரு பயணத்தை மேற்கொண்டிருந்த வேளையில் அப்பயணத்தைப் பயன்படுத்தி 25 நலன் விரும்பிகளைச் சந்தித்து 300000/= ரூபா வரை நிதியைத் திரட்டி வழங்கியுள்ளார். 1996 ஆண்டில் கனடா சென்ற பயணத்தைப் பயன்படுத்தி 14 நலன் விரும்பிகளிடமிருந்து 64000/= ரூபாவைத் திரட்டி வழங்கியுள்ளார். இவ்வாறு எமது முதலை வளர்த்து வருவதற்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் எஸ். வி. ரி. சேவையாற்றியுள்ளார். எங்கு சென்றாலும் சமூக எழுச்சி இயக்கத்தின் வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக இருந்து செயற்பட்டுள்ளார். 'நலிவுற்றோருக்குக் கைகொடுத்து வாழ வழிசமைத்தல் - ஒரு தெய்வீகப் பணி’ என்ற உணர்வோடு ஆதரவற்ற பிள்ளைகள், ஆதரவற்ற தாய்மார்கள் முதலியோர்கள் இடம் பெயர்ந்தோர் எனப் பலதரப்பட்ட நலிவுற்றோருக்கும் உதவி வழங்குவதற்கு முன்னின்று உழைத்த எஸ். வி. ரி. உயர்ந்த ஒழுக்க - கலாச்சார - பண்பாட்டு - மனிதநேய - ஆன்மீக விழுமியங்களைப் பேணாத வளர்ச்சி நிலையானதல்ல என்ற உணர்வோடு எஸ். வி. ரி. அவர்கள் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை நெறி சமூக தலைமைத்துவத்திற்கு ஒரு முன்மாதிரியானதாகும். சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசத்தின் கல்வி, சமூக, கலை, கலாச்சார அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு 'சமூக வங்கி ஒன்று அவசியம் என்ற நோக்கோடு 04.09.1993 ல் ‘புனர்வாழ்வு கல்வி அபிவிருத்தி நிதியம்’ ஒன்றை ஸ்தாபித்து வளர்த்து வரும் முன்னோடித் தலைவர்கள் வரிசையில் எஸ். வி. ரி. அவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். புனர்வாழ்வு - கல்வி அபிவிருத்தி நிதியம் இதுவரையில் சமூக - கல்வி அபிவிருத்திப் பணிகளுக்குப் இருபது இலட்சம் ரூபாவரையில் நிதி உதவி வழங்கியுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
1980 ல் ஆரம்பமான சமூக எழுச்சி இயக்கத்தினதும் 1981 ல் தாபிக்கப்பட்ட சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசத்தினதும், 1993 ல் தாபிக்கப்பட்ட புனர்வாழ்வு - கல்வி அபிவிருத்தி நிதியத்தினதும் தாபகத் தலைவர்களின்
C36Ю—

ஒருவராகவும், சமாசத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் நிதியத்தின் ஆயுட்கால பணிப்பாளர்களில் ஒருவராகவும் இருந்து கடந்த 21 ஆண்டுகளாக கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, ஆன்மீக உணர்வு, மற்றும் தியாக சிந்தையுடன் செயற்பட்ட அமரர் எஸ். வி. தம்பையா அவர்களை "சமூகஜோதி” என கெளரவிப்பதில் பெருமையும், மனநிறைவும் அடைகின்றோம்.
மேலும் எஸ். வி. தம்பையா அவர்கள் தமது மரணத்தின் பின்னரும் தான் மக்களுக்குப் பயன்பட வேண்டுமென்ற தியாக உணர்வுடனும் உயர்ந்த மனித நேயத்துடனும் தனது இரு கண்களையும் தானமாக வழங்கியமை மிகவும் பெருமைக்கும் போற்றுதற்கும் உரியதாகும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.
சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசமும் �) புனர்வாழ்வு -
கல்வி அபிவிருத்தி நிதியமும்
சமூகஜோதி அவர்கள் யாழ் மாவட்ட பாராளுமன்ற அங்கத்தவர் உயர்திரு. மாவை. எஸ். சேனாதிராஜா விடமிருந்து புனர்வாழ்வு கல்வி அபிவிருத்தி நிதியத்தின் பாராளுமன்ற கூட்டிணைப்புச் சட்டத்தின் முதல் பிரதியை நிதியத்தின் தலைவர் திரு. RM. நாகலிங்கத்தின் முன்னிலையில் பெறுகிறார் - 2001.
கொழும்புதழிழ்ச்சங்க்:
(37)

Page 22
மானுடத்தில் நான் கண்ட மாமனிதர்
Fமூக ஜோதி தம்பையா அண்ணர் இந்த பூவுலக விஜயத்தை முடித்துக் கொண்டு திரும்பவும் அன்புலகத்துக்குச் சென்று ஒரு வருடமாகின்றது. காலங்கள் விரைவாக செல்லலாம். காலத்தால் பற்றிக் கொள்ள முடியாத அவரின் அன்பு இப்போதும் நம்மோடு இருந்து வழி நடத்துவதை என்னால் உணர முடிகின்றது. அவரின் புனிதமான சிந்தனைகள், அவர் வடித்த காவியங்கள், அவரின் சேவை, அவரின் அரவணைப்பு எல்லாவற்றிலும் தூய்மையான அன்பு மையமாக இருந்ததால் அவர் இன்றும் சூட்சுமமாக நம் உள்ளத்தில் உள்ளத்தோடு உறவாடுவதை உணரக் கூடியதாக இருக்கிறது. அவருடைய எளிமை, நாட்டுப் பற்று ஒன்றை உள்ளதை உள்ளபடியே பார்க்கும் தெளிவு, அவர் நிறைவு அவருடைய படைப்புகளில் வெளிப்பட்டுள்ளது; எதையுமே ஆழ்ந்து இயற்கையை ரசிக்கும் குழந்தை உள்ளம் அவருடைய உன்னதமான பண்பாடாகும்.
வாழ்க்கையில் நடுக்கடலில் தத்தளித்த என்னை கரை சேர்த்து தொழில் எனும் ஏடு தொடக்கி வைத்தவர். அவருடனான எனது உறவு மிகப் புனிதமானது. அவர் புற வாழ்க்கையிலும் அக வாழ்க்கையிலும் சம நிலையை பேணியவர். இவருடைய இந்த எல்லாப் பண்புகளுக்கும் ஆதாரமாக இருந்தது, அவர் சற்குருவிடம் பெற்றுக் கொண்ட ஆத்மஞானம் ஆகும். அதனால் அவர் என்றுமே பிறக்கவுமில்லை இறக்கவுமில்லை. அன்பு உலகத்தில் இருந்து சிறிது காலம் விருந்தாளியாக இந்த பூவுகலத்துக்கு விஜயம் செய்து திரும்பவும் அன்புலகத்திற்கே சென்று விட்டார் என்பதை நான் உணர்கின்றேன்.
என்றும் நினைவுடன் க. சுப்பிரமணியம்
இளவாலை.
(38)

என்றும் என் மனதில் வாழும் அன்புருவே
-வேலாயுதம் திருச்செல்வம் (ஈசன்) B.B.A (Hons)
பூரணமாகவே புன்னகை காட்டும் தந்தையே
ஆயிரம் அன்பு காட்டும் அன்புருவே
ார் உலகம் புகழ் தெய்வமே - இன்று
திர்ந்து விட்டதால் - என்
மாதினில் ஆற்றாத வேதனை
கொண்டு அலைகின்றேன் - அருள் வடிவே.
மனதில் சூதுவாது மருந்துக்கும் இன்றி என்னை கண்ணிரில் ஆழ்த்திவிட்டு நிற்கின்றீர்
நான் உமது பிரிவால் வேதனை அடைவது போல் இங்கு ஆயிரம் ஆயிரம் பேர் தினம் தினம் வேதனைப் படுகின்றனர். அது தான் நீர் செய்த சாதனை. ஒருவர் இறந்த பின்னும் அவரை நினைத்து ஏங்க வராளம் உள்ளங்களை வெல்வது இவ் உலகில் சாதனையே. இதற்கு காரணம் நீர் காட்டிய அன்பும், அரவணைப்பும் தான் என்றால் வேறில்லை.
என் கல்வி முயற்சியிலும் இடம் பெயர்வு காரணமாய், உங்கள் வீட்டில் தங்க உதவி செய்து, உபசரித்த நேர்த்தியிலும் என் சிந்தை கவர்ந்தது போல் இவ் எழுபது ஆண்டில் ஏராளம் என்னைப்போன்றோர் சிந்தையில் உறைந்து விட்டீர்கள்.
ஒன்றா, இரண்டா ஏராளம் ஏராளம் அறிவுரைகள், எனக்கு கூறி என் வளர்ச்சிக்கு, உறுதுணையாய் நின்று இன்று என்னை ஓர் பட்டதாரியாக ஊர் பார்க்க வழி சமைத்தீர்கள்.
தந்தையே இனி எனக்கு உம்மைப் போன்று அறிவுரை கூற யார்
உள்ளார்? மரணத்தை வென்றவர் யாருமில்லை மகா தேவனான பரம்
பொருளுக்கேயல்லாமல் மற்றொருவர்க்கும் நித்தியப் பெருவாழ்வும் இல்லை (39)

Page 23
என்பது இந்து சமயத்தின் முடிந்தமுடிவு.
மரணம் என்பது உருமாற்றமே அன்றி வேறில்லை. கூட்டுப்புழு, வண்ணத்துப் பூச்சியாக மாறுவது போன்றதே மரணம் என்பர் அறிஞர்.
அந்நிலைக்கு நீங்களும் ஆட்பட்டு விட்டீர்களே.
இன்றைய இடம் பெயர்வுகளினால் வேறு வேறு இடங்களுக்குச் சென்று வேறு வேறு வீடுகளில் வாழ்ந்து வாழ்வை முடித்துக் கொள்வது போன்றதுதான் ஆன்மாவின் செயற்பாடும். எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்துவிட்டால் தனக்குரிய இடத்திலே வீடு கட்டி சந்தோசமாக இருப்பது போன்றதுதான் முத்தி.
முத்தி என்பது விடுதலை என்ற பொருள் தரும் சொல். ஆன்மா வேறு உடம்பெடுக்காது விடுதலை பெறுவதே முத்தி என்பர்.
அந்த நல் நிலைக்கு நீங்கள் சென்று விட்டீர்கள் என எண்ணி நான் மனதை தேற்றிக் கொள்கின்றேன். பிறந்தார், இறந்தார் என்பது மட்டுமின்றி இடைநடுவில் ஏராளம் சாதனைகள் படைத்தீர்கள். தானத்துள் சிறந்த கண்தானமும் செய்தீர்கள். அன்பால், அரவணைப்பால், அறிவுரையால் ஏராளம் உள்ளங்களை வென்றீர்கள். நல்ல தந்தையாய், கணவனாய், பேரனாய், என்னைப் போன்ற பலருக்கும் ஆசானாய், அறிவுரை கூறுபவனாய் வாழ்ந்து சீருடன் சென்று விட்டீர்கள்.
நீங்கள் எம்மை விட்டு போய் விடினும் தந்தையே உம் நினைவலைகள் என்றும் எம்மனதை விட்டுப் போய் விடாது.
என் மனத்தினில் அதே துடிப்புடன், அதே அழகுடன், அதே சிரிப்புடன் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். 8 :
GO

எஸ். வி. ரி. முன்னணியில் நின்று ஆதரித்து வளர்த்த
சமூக எழுச்சி இயக்கத்தின் சின்னம்.
சின்னத்தின் பொருள்
உயர்த்திய கரங்களுடன் நிற்கும்மனிதன் முதன்மையாக சமூக முன்னேற்றக்கழகங்களின் சமாசத்தின் அங்கத்தவர்களினதும், சிறப்பாக தமிழ் இனத்தினதும், பொதுவாக தேசத்தினதும் எழுச்சி, வளர்ச்சி, சுதந்திர உரிமைகள் ஆகியவற்றை அடைவதை இறுதி நோக்கமாகக் கொண்டு செயல்பட உறுதியோடும் நம்பிக்கையோடும் முனைப்போடும் துணிந்து முன் நிற்கும் சமூக அங்கத்தவர்களைக் குறிக்கிறது. ஆறு கோடுகள்
இறுதி இலக்குகளை அடைவதற்கான ஆறு அம்சக் கோட்பாடுகளை குறிக்கிறது.
முதலாம் கோடு ஜனநாயக வழியில் நிறுவன ரீதியான தலைமையின் கீழ் திட்டமிட்ட முறையில் செயல்படுவோம் என்ற கோட்பாட்டை குறிக்கும்.
இரண்டாம் கோடு கற்றோராய் உயர்ச்சி பெற பட்டிணி கிடக்க நேரினும் படிப்போம். படிக்க வைப்போம் என்ற கோட்பாட்டை குறிக்கும்.
மூன்றாம் கோடு தொழிற்பெயர்வு உரிமை உண்டென்பதை நிலைநாட்டி உயர்தொழிற் புலமை பெருக்கி வளமான தொழில் கொள்வோம் என்ற கோட்பாட்டை குறிக்கும்.
/12 NA Q41)

Page 24
நான்காம் கோடு சமூக அடிமை கொடுமைகளை ஒழித்திட்டு சமூக கெளரவம், சமூக அந்தஸ்து, சமூக சமத்துவம், சமூக நீதி காத்திடுவோம் என்ற கோட்பாட்டை குறிக்கும்.
ஐந்தாம் கோடு இன, சமய, சாதி, அரசியல், தொழில், பிரதேச கசப்புணர்வுகளாகக் களைந்து சமூக இன ஐக்கியத்தை வலுப்படுத்துவோம் என்ற கோட்பாட்டை குறிக்கும்.
ஆறாம் கோடு
உயரிய ஒழுக்க-பண்பாட்டு நியமங்களைப் பேணி வளர்த்து கடமை, கணிணியம், கட்டுப்பாட்டுடனும் மனிதநேய உணர்வுடனும் செயல்படுவோம் என்ற கோட்பாட்டை குறிக்கும்.
அணைக்கும் இருகரங்கள்
வரையறுக்கப்படட இறுதி நோக்கங்களை அடைவதன் பொருட்டு பயன்பாடுள்ள செயல்பாட்டிற்கு பொறுப்பான இரண்டு தலைமை நிறுவனங்களான சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசத்தையும், புனர்வாழ்வு-கல்வி அபிவிருத்தி நிதியத்தினையும குறிக்கும்.
அணைக்கும் வலக்கரம்
மக்கள் நிறுவனமாக விளங்கும் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசத்தைக் குறிக்கும்.
&loTeFéálsi அங்கத்தவர்களை ஜனநாயக முறையில் ஒன்று திரட்டி கருத்துப் புரட்சியின் மூலம் சமூக எழுச்சிச் சிந்தனை உணர்வுகளை வளர்த்து அபிவிருத்தி திட்டங்களில் அவர்கள் பங்காளிகளாக இருந்து செயல்பட வைக்க இந்தச்சமாசம பொறுப்பாக இருக்கும்.
17 N. (42)

அணைக்கும் இடக்கரம்
சமூக வங்கியாக விளங்கும் புனர்வாழ்வு கல்வி அபிவிருத்தி நிதியத்தைக் குறிக்கும்
அபிவிருத்தி திட்டங்களை வெற்றிகரமாக அமுல்படுத்தத் தேவைப்படும் அவசியமான நிதியை வழங்கும் பொருட்டு மூலதனத்தைத் திரட்டவும், திரட்டிய மூலதனத்தை வருமானத்தை உழைக்கும் வகையில் முதலீடு செய்யவும், நிதியைப் பாதுகாக்கவும், உழைத்த வருமானத்தைக் கட்டுப்பாட்டுடன் சமூக அபிவிருத்திக்கு பயன்படுத்துவதற்கும் இந்த நிதியம் பொறுப்பாக இருக்கும்.
G3)

Page 25
Éi.
எஸ். வி. பி. வரித்துக்கொண்ட சமூக எழுச்சிக் கோட்பாடுகள்
தேசிய வளர்ச்சியும் எழுச்சியும் தனிமனிதனிலிருந்து குடும்பம், சமூகம், இனம், தேசம் என்ற சங்கிலித் தொடர்ச்சியான வளர்ச்சிப்படிமுறையைக் கொண்டதாகும்.
ஒருவரின் கெளரவமும், அந்தஸ்தும், அவர் சார்ந்த குடும்பமும், சமூகமும், இனமும் வளர்த்துக் கொணிட அந்தளிப்தில் தங்கியுள்ளன.
தானும் தன்குடும்பமும் என்ற சுயநல எல்லையைக் கடந்து சமூகத்தினதும் இனத்தினதும் வளர்ச்சியில் கரிசனையுடைய மக்களைக் கொண்ட சமூகமும் இனமுமே உயர்வு பெற முடியும்.
இன, மத, பிரதேச, சாதி, சமூக அரசியல், கசப்புணர்வுகளை ஒழித்துக்கட்ட மனித நேயம், மதிப்புணர்வு, புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, பரஸ்பர உதவி ஆகியன இன்றியமையாத பண்புகளாகும்.
பட்டினி கிடக்க நேரினும் உயர்கல்வியோடு உயர் தொழிற் புலமை பெருக்கித் தகைமைசால் தொழில் வளம் கொள்வது வளர்ச்சிக்கு அடிப்படையாகும்.
நளிவுற்றோருக்குக் கைகொடுத்து வாழவழி சமைத்தல் எம்கடனே - இது ஒரு தெய்வீகப் பணி
உயர்ந்த ஒழுக்க நியமங்களைப்பேணி கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் செயல்படும் கூட்டுறவு முறையே வெற்றிபெறும்.
ஒரு சமூக எழுச்சி இயக்கத்தின் பாதுகாலர்கள் அதன் முன்னணித் தலைவர்களுகம், நிருவாகிகளும் தொண்டர்களுமாவார்கள்.
நாம் நல்லதையே சிந்திப்போம, நல்லதையே நாடுவோம், நல்லதையே சொல்வோம், நல்லதையே செய்வோம் - நன்மை நம்மைத் தேடிவரும்.
C44)

----------------------------- 디「
"siosasun of ottostingoạo (no orosīs,***· = sIngolosjonsfie (s.| : ( )唱母顺眼us@@Is画眼员egr\sions rosīgi-ig) sae som i too olleerisis + -groņgshqip'ın唱电凉宫n母Polystosos ... ...olmnusqio “Jo qisis| === '(√∞influssrı sontouefis) qimpossuminn •(生民軍官民義) 역半國安民u臣 :F. 홍{ạions sự sụı-ığ} | } ===='(||||ouriņųotori널道院) Plaus院事 :* gmumismmüne *
1 ss.Hills|sssssssss:Tae藏藏|-
ராgg圈自99G!ssoso kosìLRsığırsh - ricosaeıyıcsoqomoOs segi

Page 26


Page 27
சின்னட்டி
பிதா - சின்னட்டி வீரகத்தி மாதா - நாகமுத்து சின்னாச்சி மனைவி - வயிரமுத்து செல்லம்மா மக்கள் - முல்லை, சாந்தி, மருமக்கள் - நற்குணம், இளங்கோவன் வதிவிடம் - பிறப்பு உரும்பிராய், இள் இலக்கியப்பணி - சிந்தனையாளர், பேச்சாளர் வெளியீடு - கடலில் கலந்தது கண்க
நினைவின் அவைகள் ( மொழி இன உணர்வு - தமிழ் மொழி உ!
அரசியல் உணர்வு - போதுவுடமை 1
அடக்குமுறைகீடு
ஆண்மீக உணர்வு - d LIL, sifd,
ஈடுபட்டவர். குரு
୍ମଞ୍ଛTHi! - சிறந்த குடும்பத் தலை5
பிரகாசித்தவர்.
மூலதனம் - சுயபலம், சுயமுயற்சி சுய சமுகப்பணி - எஸ். வி. ரி சமுக முன்னே
IIIB IE8D - மாவிட்டபுரம் மகாநாட்டி 5. - கொழும்பு மகாநாட்டில் தை-சித்தி 1981 - கருத்துப் புரட்சி மூலம் - தொண்டமானாறு செல்க முன்னேற்றக்கழகங்களின் மாசி-சித் : - எளப் வி ரியின் மலே CIA: - சமூக வங்கி அமைக்க - கொழும்பில் புனர்வாழ்வு 19.1394-2002-A5 — Tarů, rás. Mi faši sgïLI - X. Timi. 5ß, F Lf5ÄT 35IL . 4.99 - புனர்வாழ்வு கல்வி அபி சட்டத்திற்கு பாராளுமன்
TIL : 25.10.1932 திருமணம் :
Le:grid.3
 
 

சமூகஜோதி
வீரகத்தி தம்பையா
தம்பதிகளின் புத்திரி நாகம்மா
Liu Taf, ரவீந்திரன், வாசுகி * அழககேஸ்வரன், மீரா, திஃப்பன் லறம் அச்செழு, மறைந்த வேளை கொழும்பில் f, எழுத்தாளர், அனுசரணையாளர், விமர்சகர் சமீர் (சிறுகதைகள்) - 1984 சுயசரிதம்) - 1997 3ணர்வு, தமிழ் இனப்பற்றுடனும் செயல்பட்டவர் உணர்வுடன் செயல்பட்டவர், சாதி ருக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர். டனர்வுடன் வாழ்ந்தவர், திருப்பணிகளில்
மஹாராஜின் பக்தர். பராக, சமூகத் தலைவராக, தொழில் அதிபராக
நம்பிக்கை மூலம் உயர்ந்தோன். ாடியாகப் பங்களிப்புச் செய்த வரலாற்று நிகழ்வுகள்.
ள் சமூக எழுச்சி இயக்கம் உதயம் எழுச்சிக்கான ஆரம்சத்திட்டம் பிரகடனம்
கிராமங்களில் கழகங்கள் அமைத்தல் வச்சந்நிதி மகாநாட்டில் சமூக சமாசம் தாபிக்கப்பட்டது. ய விஜயமும் சமூகப்பணிக்கு ஆதரவும்
கொழும்பில் முன்னோடிகள் தீர்மானம்
கல்வி அபிவிருத்தி நிதியம் தாபிக்கப்பட்டது ன் விஜயமும் சமூகப்பணிக்கு ஆதரவும். ா விஜயமும் சமூகப்பண்ணிக்கு ஆதரவும் விருத்தி நிதியம்-கூட்டிணைப்புச் பத்தின் அங்கீகாரம் பெறப்பட்டது.
OS 9.95. மறைவூ 2ே01:2002