கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புன்னாலைக்கட்டுவன் ஆயாக்கடவை சித்திவிநாயகர் சரணாகதி மலர்

Page 1

EzSEE, lá
As
କୃଷ୍ଣ
قطاراتيجية في مجموعة 1
帕 N.
- E=== E
651,31858). E2,
LLLLSLLLLLL SLLLLLSSLLLLLSSLLLLLSSL LLSSLLLLSLSSLS
量 IEEE
BLIR

Page 2

t
ஒத்திவிநாயகர் துணை
புன்னலைக்கட்டுவன் ஆயாக்கடவை
சித்திவிநாயகர்
சரணு கதி மலர்
கொழும்பு தமிழ்ச்சங்கம்
1990
us-91 seAsA முற்கே 96.9 pasa ib'
மற7 பாபிஷேச
s
9 ثقهالعه های

Page 3
புன்ஞலைக்கட்டுவன் ஆயாக்கடவை, சித்திவிநாயகர் சரணுகதி மலர்
முதலாம் பதிப்பு
பக்கங்கள் : 48
பிரதிகள் : 500
ஆக்கியோன் : Հ
டக்டர் இ. நன்னித்தம்பி
உரிமை :
ஆக்கியோனுக்கு உரியது
அச்சுப் பதிவு: ,岑添
திருமகள் அழுத்தகம், சுன்னக்ம்.

புன்குலைக்கட்டுவன் ஆயாக்கடவை
சித்திவிநாயகர் சரணுகதி மலர்
காப்பு ஐங்கரத்தான் நால்வாயான் மும்மதத்தான் ஈர்செவியான் பொங்குமருள் சித்தி விநாயகர்க்குப் - பாங்காய்ச் சரணு கதிமலரைச் சாத்தி வணங்கச் சரணுர விந்தமே காப்பு.
மு. வைத்தியலிங்கம்

Page 4
• A.
". . முன்னுரை
வானிற் பிறந்த மதிதவ ழும்பொழில் மாட்டளிசூழ் தேனிற் பிறந்த மலர்த்திரு நாரைப் பதிதிகழுங் கோனிற் பிறந்த கணபதி தன்னக் குலமலையின் மானிற் பிறந்த களிறென் றுரைப்பரிவ் வையகத்தே.
- திருநாரையூர் விநாயகர் திருவிரட்டை மணிமாலை
நம்பியாண்டார் நம்பி பன்னிரு திருமுறைகளை வகுக் கத் திருவருள் புரிந்தவர் திருநாரையூரில் கோயில் கொண்டெழுந்தருளும் பொல்லாப்பிள்ளையார் பெருமானே. திருமுறைகளை நாம் ஓதி உய்தி பெறுவதற்கு வழி செய்தது பொல்லாப்பிள்ளையார் திருக்கருணையே.
தனக்கு மேலே ஒரு தலைவர் இல்லாத பெருமைக்கு உரியவரான விநாயகப் பெருமான் அடியார்க்கு அருள்பாலிக்கும் திருவாலயங் களில் திருநாரையூர் பொல்லாப்பிள்ளையார் ஆலயம் பிரசித்தி வாய்ந்தது. அவ்வாலயம் போல ஈழநாட்டில் பிரசித்தி பெற்ற விநாயகர் ஆலயங்களில் புன்னலைக்கட்டுவன் ஆயாக்கடவை சித்தி விநாயகர்ஆலயமும் ஒன்ருகும்.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முப்பெருமைகளும் ஒருங்கு அமைந்துள்ள இவ்வாலயத்தின் பூர்வ சரித்திரத்தை இதுவரை யாவ ரும் பூரணமாக அறியாத காரணத்தினுல் வருங்காலச் சந்ததியினரும் அறிந்து பயன்பெற வேண்டுமென விரும்பியதால், அதனைச் சுருக்க மாகவாயினும் எழுதி வெளியிடும் எண்ணம் எனது உள்ளத்தில் பல்லாண்டுகளாகப் பதிந்திருந்தது. அவ்வெண்ணத்தின் பிரதிபலிப்பே இச்சிறிய நூலாக மலர்ந்துள்ளது.
இவ்வூர் அடியார்கள் இவ்வாலயத்தைச் சிறப்பாகப் பரிபாலனஞ் செய்து வந்தார்கள், வருகின்ருர்கள். அவர்களிற் பலரின் உதவியும் ஒத்தாசையும் இந்நூலை எழுதுவதற்குத் தூண்டுகோலாக இருந்தன. ஆலயத்துடன் சம்பந்தப்பட்டவர்களின் ஆலோசனைகள் பெரிதும் வரவேற்கப்பட்டன.
இந் நூலின் கையெழுத்துப் பிரதியைப் பார்வையிட்டு வேண்டி யன செய்தவர்கள் இருவர் பெரியார்கள். ஒருவர் பண்டிதமணி : நூல் வெளியீட்டுச் சபையின் காரியதரிசி ஆசிரியமணி திரு.

அ. பஞ்சாட்சரம் அவர்கள். மற்றவர் இளைப்பாறிய அஞ்சலக அதிபர் திரு. மு. வைத்தியலிங்கம் அவர்கள். இவர்களிருவரும் எமது நன்றிக்கு என்றென்றும் உரியோராவர்.
கம்பருக்கு ஒரு சடையப்ப வள்ளல் போலப் புன்னுலைக்கட்டுவனில் நடக்கும் நல்ல கருமங்களுக்கெல்லாம் சடையப்ப வள்ளலாகத் திகழ் பவர் திரு. ச. இராசரத்தினம் (S. R.) அவர்கள். இந்நூலை அச்சிட்டு வெளியிடுவதற்கு ஆக்கமும் ஊக்கமும் வழங்கியவர் அவர்களே. இந்நூல் வெளியீட்டுக்கென திரு. இராசரத்தினம் அவர்கள் மன நிறைவுடன் வழங்கியுள்ள நன்கொடையை இந்நூல் என்றென் றைக்கும் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும். அவர்களின் சேவை மேலும் மேலும் வளர்ச்சியும் உயர்ச்சியும் பெற எல்லாம் வல்ல ஆயாக்கடவைச் சித்திவிநாயகப் பெருமானின் திருவடிகளை மனமார வணங்குகின்றேன்.
சமீபத்தில் மங்களகரமாக நிறைவுபெற்ற இவ்வாலய மஹா கும்பா பிஷேகத்தை அடுத்து இந்நூலை வெளியிட விரும்பினுேம், சுன்னகம் திருமகள் அழுத்தகத்தினர் மிக அழகாகவும், விரைவாகவும் அச்சிட்டு எமது விருப்பத்தை நிறைவேற்றி வைத்தார்கள். அழுத்தகத்தினர் அனைவருக்கும் எமது மனப்பூர்வமான நன்றி உரியதாகுக.
இச் சிறிய நூலுக்குக் கட்டுரை, வாழ்த்துரை, பாராட்டுரை ஆகியவற்றை வழங்கியுதவிய பெரியோர் அனைவரும் ஆயாக்கடவைச் சித்திவிநாயகரின் திருவருளுக்குப் பாத்திரமானவர்கள். சம்பந்தப் பட்ட அனைவருக்கும் எமது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்ருேம். S.
இந் நூலில் இன்னும் சேர்க்கப்படவேண்டிய விஷயங்கள், தவிர்க்கப்பட வேண்டியன இருக்கலாம். வாசகநேயர்கள் அவற்றைத் தெரிவித்தால் அக்கருத்துக்களை அடுத்த பதிப்பில் தெரிவிக்க முடியும் என்பதனையும் குறிப்பிட விரும்புகின்றேன்.
எம்மை என்றும் வழிநடத்திக்கொண்டிருக்கும் அருளாளரான ஆயாக்கடவைச் சித்திவிநாயகப் பெருமானின் திருவடிகளில் இந் நூலைச் சமர்ப்பணஞ் செய்து அவரது திருவருளை மேலும் வேண்டு கின்றேன்:
ஞாலநின் புகழே யாக வேண்டும் ஆயாக் கடவை யண்ணலே.
டக்ரர் இ. நன்னித்தம்பி மகோற்சவகால நாலாம்நாள் a Liu sniprit

Page 5
அணிந்துரை
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே விண்ணுக்கும் மண்ணுக்கும் நாதனுமாந் தன்மையினுல் கண்ணிற் பணிமின் கனிந்து. புன்னலைக்கட்டுவன் கிராமம் யாழ்ப்பாணச் சைவத் தமிழ் வரலாற்றில் சிறந்த ஒரு இடத்தைப் பெற்றுள்ளது. பக்தியினலும் பண்பாட்டினலும் சிறந்த நன்மக்கள் வாழும் இடம் இதுவாகும். வித்துவசிரோமணி சி. கணேசையரின் பிறப்பிடமும் வதிவிடமும் இதுவென்ருல் இக்கிராமத்திற்கு வேறு சிறப்புகளை விதந்துபேச வேண்டியதில்லை. ஆலயத் திருப்பணி, அன்னதானத் திருப்பணி, சமய வகுப்புகள், புராண படலங்கள், இசை நிகழ்ச்சிகள் ஆகியவற் முல் பெருமை பெற்ற திருக்கோவில் ஆயாக்கடவைச் சித்திவிநாயக ராலயம் ஆகும். இவ்வூர் மக்களுக்கு வாழ்வும் வளமும், சீரும் சிறப்பும் வழங்குபவர் பிள்ளையார். இவருடைய கருணைநிழலில் ஆனந்தங் காண்பவர்கள் புன்னுலைக்கட்டுவன் மக்கள். இதனை மனத்துட் கொண்டு ஆயாக்கடவைச் சித்திவிநாயகனுக்கு, அழகும் பொலிவும், அற்புத சிற்பத் திறனும் நிறைந்த திருக்கோயிலை அமைத்துள்ளனர். அத்துடன் அங்கு நித்திய நைமித்திய ஒழுங்குகள் செம்மையாக நடைபெறவும் ஒழுங்குகளை மேற்கொண்டு வருகின்றனர்
இவ்வாண்டு மகோற்சவ காலத்தில் வெளியிட இருக்கும் " ஆயாக் கடவை சித்திவிநாயகர் சரணுகதி மலர்' என்னும் ஆலய வரலாற்று நூல் மிகவும் பயனளிப்பதாக அமைந்துள்ளது. ஆலயத்தின் பழமை, வரலாறு, திருப்பணிகள், பணிபுரிந்த அன்பர்கள், அந்தணர்கள், பாமாலைகள் அனைத்தையும் இணைத்து நல்லதொரு வரலாற்று நூலை டாக்டர் இ. நன்னித்தம்பி அவர்கள் யாத்துள்ளார்கள். இவ்வூர் விநாயக பக்தர்கள் அனைவரும் அறிந்து மகிழ வேண்டிய ஒரு வரலாறு இது. அத்துடன் திருமதி வசந்தா வைத்தியநாதன் அவர் களின் கட்டுரை விநாயகரைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தையும் தருகிறது. எனவே பயனுள்ள இந்த நன் முயற்சியை நான் பாராட்டுகிறேன். மேலும் இத்தன் கய சுருக்கமும், வரலாறும் நிறைந்த நூல்கள் ஆலயங்கள் தோறும் வெளிவர வேண்டும். புன்னலைக்கட்டுவன் கிராமம் இதற்கு ஒரு வழிகாட்டி வைத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் பாராட்டுகிறேன்.
* எப்போ தகத்தும் நினைவார்க் கிடரில்லைக்
கைப்போ தகத்தின் கழல்.’
செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி, J. P. துர்க்காதேவி தேவஸ்தானம், தெல்லிப்பழை.

ஆசியு ரை
பேரன்பு மிக்க பெருந்தகையீர்!
புன்னலைக்கட்டுவன் ஆயாக்கடவை, பூரீ சித்திவிநாயகர் ஆலயம், எமது நெஞ்சை விட்டகலாத பெருநிகழ்ச்சி ஒன்றினை நினைவுகூர வைக்கிறது. எமது குருநாதர் நல்லைக் குருமணி பூநீலபூரீ ஸ்வாமிகள் மதுரை ஆதீனத்தில் துறவு நிலைக்கான காஷாயம் பெற்று பூநீலழரீ சுவாமிநாத தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய ஸ்வாமிகள் என்ற தீக்ஷா நாமத் தோடு முதன்முதலாக விஜயம் செய்த திருவிடம் இவ் வாலயமே. இத் திருவாலயத்தின் சிறப்பை எடுத்து விளக்கும் வகையில் ‘சரணுகதி மலர்' வெளியிடுவது அறிந்து பெரு மகிழ்ச்சி. இம்மலரில் தலவரலாறும், இதன் வளர்ச்சியை முன்னிட்டு ஆதரித்தவர்கள், தொண்டுகள் புரிந்தவர்கள் பெருமைகள், வித்துவசிரோ மணி பிரம்மபூரீ கணேசையர் இயற்றிய ஊஞ்சற் பதிகம் ஆதியனவும் உள்ளடங்கியுளது. இதற்கு மூலகாரணமாகத் தலவரலாறுகளைத் தொகுத்து நூல் வடிவமாக வெளியிடுபவர் வைத்தியகலாநிதி இ. நன்னித் தம்பி அவர்கள். நான்காம் திருவிழா உபயகாரர்களினதும் ஏனையவர்களினதும் அயரா முயற்சிகளையும் பாராட்டுகிருேம். விநாயகப் பெருமான் திருவடிகளைத் தியானித்து எல்லோ ருக்கும் எமது உளமார்ந்த நல்லாசிகளை வழங்குகிருேம்,
என்றும் வேண்டும் இன்ப அன்பு.
பூநீலபூரீ ஸ்வாமிகள்
ஆதீன முதல்வர், நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம்

Page 6
வாழ்த்துரை
புன்னைநகர் அடியார்கள் போற்றும் ஐங்கரனே, உத்தமி புதல் வனே, சித்தி விநாயகனே, செய்யும் செயல்கள் இனிதே நடந்திட நின் திருவடிக்கமலம் தொழுதோம் சரணம்.
சைவ சமய வழிபாட்டுத் தெய்வங்களுள் முதன்மையும் கீர்த்தி யும் பெற்றவர் விநாயகப் பெருமான். அவர் கோயில் கொண்டெழுந் தருளி இல்லாத கிராமங்கள் இல்லையெனலாம். யாழ்ப்பாணத்திலுள்ள விநாயகர் ஆலயங்களினுள் புராதனமும் தெய்வீகச் சூழலும் திருவருட் பொலிவும் நிரம்பியது புன்னை நகர் ஆயாக்கடவைச் சித்தி விநாயகர் திருக்கோயிலாகும்.
இவ்வாலயத்தின் தொன்மையையும் பெருமையையும் நினைவு கூரக்கூடிய வகையில் தல வரலாற்றையும், அதனுள் உள்ளடக்கி ஆலய தோற்றம், அதன் வளர்ச்சி, வளர்ச்சிக்குப் பணி செய்தவர்கள், இன்னும் இவ்வாலயத்தில் தெய்வீகப் பணி செய்தவர்களின் விபரத் தையும், தொண்டினையும், காலத்தையும், அதன் பயனையும் சிந்திக்கச் கூடிய முறையில் ** சரணுகதி மலர் * வெளிவருவது காலத்திற்கு உகந்த பணி.
எதிர்காலச் சந்ததியினர், சிந்தனை ஆராய்ச்சியாளர் வரலாற்றை, பிற்காலத்தில் அறிவதற்கும்-ஆய்வு செய்வதற்கும் இது பேருதவியாக இருக்கும். இந் நூலாசிரியராகிய டாக்டர் இ. நன்னித்தம்பி அவர்கள் சைவகலாசாரப் பண்பின்படி வாழ்பவர், நல்ல சிந்தனையாளர், சமூக சேவையாளர், சித்தி விநாயகர் 4ஆம் திருவிழா உபயகாரர், எல்லா வற்றிற்கும் மேலாக விநாயகர் பெயரில் முன்னரும் இவ்வாறன பல பணிகள் செய்தவர்.
சித்தி விநாயகர் தெய்வீகம் துணைபுரிய டாக்டர் அவர்களின் நற்சிந்தனையால் உருவாகும் இந் நூலின் மூலம் நம்மவர் பயனும் பெருமையுமடைவர் என்பது திண்ணம். அவர்கள் இவ்வாருன பணிகள் பல ஐங்கரன் பெயரில் செய்ய வேண்டும், அவரும் அவர் சார்ந்த குடும்பத்தினரும் இறையருளால் சகல செல்வயோகம் மிக்க பெருவாழ்வு வாழ வேண்டு மெனப் பிரார்த்தித்து ஆசிகள் வழங்கு கிருேம்.
சிவபூதி கு. ஜெகதீஸ்வரக் குருக்கள் புன்னுலைக்கட்டுவன்.

பாராட்ருரை
எல்லோரும் செய்யும் சகல கருமங்களுக்கும் முதல்வராய், புன்னுலைக்கட்டுவன் கிராமத்துக்குத் தலைமை நாயகராய் அமர்ந்து, எமது முன்னேராலும், அவர்கள் வழித்தோன்றல் களாலும் ஏழு தலைமுறைக்கும் மேலாக அர்ச்சித்தும் ஆரா தித்தும் வருகின்ற குலதெய்வமாகிய சித்திவிநாயகப் பெருமா னின் ஆலய வரலாறு தொகுக்கப்பெற்று முதன் முதலாக மலராக மலர்கிறது.
க்கியோன் டக்ரர் இ. நன்னித்தம்பி அவர்கள் பல நாட்க ளாகச் சேகரித்த குறிப்புக்களைப் பல்வேறு வகைகளிலும் ஆராய்ந்து, நிரல்படுத்தி பலரின் காலகட்டங்களில் நடந்த நிகழ்ச்சிகளைத் தெளிவாக விபரித்துள்ளார். அதனுல் ஆலயம் ஆரம்பமுதல் இன்றுவரை எவ்வாறு வளர்ந்தோங்கித் திகழ் கின்றது என்பதை நன்கு அறிந்துகொள்ளலாம்.
நூலாசிரியரின் குடும்பத்தினர் சித்திவிநாயகர் பால் பெரும் பற்றுடையவர்கள். வருடம்தோறும் எடுக்கும் மகோற்சவ காலங்களில் நான்காம் திருவிழா உபயகாரருமாவர். அரிய கைங்கரியங்களில் பெரும் பங்கு ஏற்பவர்கள். விநாயகர் பேரில் பாடப்பெற்ற பல திருப்பதிகங்களைத் தொகுத்து * விநாயகர் தோத்திரத் திரட்டு’ என்னும் அரிய சிறுநூல் ஒன்றையும் முன்னர் வெளியிட்டுள்ளார்கள்.
இவர்கள் குடும்பம் மேன்மேலும் தழைத்து ஓங்கிச் சகல செல்வங்களும் பெற்று, ஆயாக்கடவைச் சித்திவிநாயகப் பெருமானுக்கு அரும்பெரும் தொண்டுகள் ஆற்றுவதற்குத் திருவருள் கூட்டவேண்டுமென்று சித்திவிநாயகப்பெருமானின் தாள் பணிந்து வேண்டுவோமாக.
வந்தே சிவம் சங்கரம்.
சித்திவிநாயகர் தேவஸ்தானம், A. (Ssurgiur ஆயாக் கடவை, பிரதமகுரு புன்னுலைக்கட்டுவன். (தேவஸ்தான அர்ச்சகர் சார்பாக)
ii

Page 7
L
பிரார்த்தனை உரை
நம்பியாண்டார் நம்பி, நக்கீரதேவர், ஒளவையார் உள்ளிட்ட பெரியவர்கள் ஓங்கார மூர்த்தியாகிய விநாயகரின் திருவடிகளைப் பூசித்துச் சரணடைந்தார்கள்.
வெண்ணி றணியும் விமலன் புதல்வ பெண்ணு முமைய்ாள் பெறுகுஞ் சரனே அரிதிரு மருகா அறுமுகன் றுணவா கரிமுக வாரணக் கணபதி சரணம் குருவே சரணம் குணமே சரணம் பெருவயிற் றேனே பொற்ருள் சரணம்
என்று நக்கீரதேவர் விநாயகரை வேண்டும் பாங்கு மெய்சிலிர்க்க வைக்கின்றது.
புன்னலைக்கட்டுவன் வைத்தியகலாநிதி இ. நன் னித் தம் பி அவர்கள் ஆயாக் கடவை, சித்திவிநாயகர் மீது கொண்ட முறுகிய பக்தியினல் அப்பெருமானை முழுமுதற் கடவுளாகத் தம் மனசிலிருத் தித் தாம் எழுதிய நூலுக்கே ** சரணுகதி மலர்' என்ற நாமத்தை யுஞ் சூட்டியுள்ளார். உயர் சைவத் திருவாளர் இ. நன்னித்தம்பி அவர்களது விநாயகர் பக்தி இருந்தவாறு !
நூல் பல தந்தோர் பரம்பரையில் வந்தவரான நூலாசிரியர் அவர் கள் ஆயாக்கடவையின் சிறப்புப்பற்றியும் விநாயகரின் திருவருட்டிறம் குறித்தும் சுவை குன்றமல் நயம்பெற எழுதியுள்ளார்கள்.
மஹா வித்துவ சிரோமணி சி. கணேசையரவர்கள் விநாயகர் பேரில் அன்புகனிந்து பாடிய திருவூஞ்சற் பாக்களையும், வாகீச கலாநிதி கி. வா. ஜகந்நாதன் அவர்கள் முன்னெருபோது பிள்ளையார்மீது பாடிய கவிதைகளையும், திருமுறை அரசி வித்துவான் வசந்தா வைத்தியநாதன் அவர்கள் விநாயகர் பற்றி எழுதிய கட்டுரையையும் நூலில் பின்னிணைப்பாகச் சேர்த்திருப்பது பாராட்டத்தக்கது.
புன்னுலைக்கட்டுவன் ஆயாக்கடவை, சித்திவிநாயகரின் சரித் திரத்தை வருங்காலத்தில் விரிவாக எழுத இருப்பவர்களுக்கும், தல புராணஞ் செய்ய முன்வருபவர்களுக்கும் சிறந்ததொரு கையேடாக இந்நூல் அமையலாம் என்பது எமது கருத்தாகும்.
புன்னுலைக்கட்டுவன் ஆயாக்கடவை, சித்தி விநாயகரின் பாதார விந்தங்களைப் பிரார்த்தித்து இந் நூலை ஆக்கியளித்த பெருமைக்கு உரியவரான வைத்தியகலாநிதி இ. நன்னித்தம்பி அவர்களைப் பாராட்டுவோமாக.
உரும்பிராய் ஆசிரியமணி அ. பஞ்சாட்சரம்

ίί ής
6. பஞ்சபுராணம் திருச்சிற்றம்பலம்
தேவாரம் பொருந்தாத செய்கை பொலியக் கண்டேன்
போற்றிசைத்து விண்ணுேர் புகழக் கண்டேன் பரிந்தார்க் கருளும் பரிசுங் கண்டேன்
பாராகிப் புனலாகி நிற்கை கண்டேன் விருந்தாய்ப் பரந்த தொகுதி கண்டேன்
மெல்லியலும் விநாயகனுந் தோன்றக் கண்டேன் மருந்தாய்ப் பிணிதீர்க்கு மாறு கண்டேன்
வாய்மூ ரடிகளை நான் கண்ட வாறே.
திருவாசகம் உருத்தெரியாக் காலத்தே உள்புகுந்தென் உளம்மன்னிக் கருத்திருத்தி ஊன்புக்குக் கருணையினல் ஆண்டுகொண்ட திருத்துருத்தி மேயானைத் தித்திக்கும் சிவபதத்தை அருத்தியினுல் நாயடியேன் அணிகொள்தில்லை கண்டேனே.
திருவிசைப்பா நையாத மனத்தினனை நைவிப்பான் இத்தெருவே ஐயா நீ உலாப்போந்த அன்றுமுத லின்றுவரை
கையாரத் தொழுதருவி கண்ணுரச் சொரிந்தாலுஞ் செய்யாயோ அருள்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே,
திருப்பல்லாண்டு தாதையைத் தாளற வீசிய சண்டிக்கிவ்
அண்டத் தொடுமுடனே பூதலத் தோரும் வணங்கப்பொற் கோயிலும்
போனகமும் அருளிச் சோதி மணிமுடித் தாமமும் நாமமும் தொண்டர்க்கு நாயகமும் பாதகத் துக்குப் பரிசுவைத் தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.

Page 8
xii
புராணம் வானுலகும் மண்ணுலகும் வாழமறை வாழப் பான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க
ஞானமத ஐந்துகர மூன்று விழி நால்வாய் ஆனைமுக னைப்பரவி அஞ்சலிசெய் கிற்பாம்.
திருப்புகழ் கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக 3ண்டிபேணிக் கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மென வினை கடிதேகும் மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள் புய மதயானை மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு பணிவேனே முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த அதிதீரா அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை யிபமாகி அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள் பெருமாளே.
வாழ்த்து
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான்மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம்.
திருச்சிற்றம்பலம்

ografąjugog) șHıņof) mðficorn . 1p&##mœuro@go somugí gogoșự forsø-ışș um@>Igore@7732?dog@ış9H

Page 9
சித்திரை வருஷப் பிறப்பிலன்று உபயகாரருக்கு ஆசீர்வாதம் நடைபெறுகிறது.
அறுபதாண்டு காலம் கந்தபுராணத்தைப் படித்துவந்த பிரம்மறி து. குமார சாமி ஐ ய ர வர்களுக்குப் ப்ொற்கிழி வழங்கிய வைபவத்தில் எடுக்கப்பட்ட்பட்ம்,
 
 
 

புன்னுலக்கட்டுவன் ஆயாக்கடவைச் சித்திவிநாயகர் ஆலயம்
இற்றைக்குப் பல நூற்றுண்டுகளுக்கு முன்னர் இலங்கையின் பல பாகங்களிலும், தமிழ் மன்னர்கள் அரசாட்சி செலுத்தி வந்தனர். மேலே குறிப்பிட்ட மன்ன்ர்கள் சைவநெறியே தலே நெறியெனக் கொண்டு அந்நெறியை அனுட்டித்து வந்திருக்கிருர்கள் என்பதைச் சரித்திரவாயிலாக அறிய முடிகிறது. மன்னர்களும் அவர்களது பரம் பரையினரும் சைவத்தை வளர்க்கும் நோக்கமாக ஊர்கடோறும் சிவாலயங்களே அமைத்தனர்.
ஈழமணித்திருநாட்டில் தேவாரப்புகழ் மிக்க திருக்கேதீசுவரமும் திருக்கோணேசுவரமும் தமிழர் பிரதேசங்களில் அமையப் பெற்றமை நாம் செய்துவைத்த தவத்தின்பேறேயாம். திருக்கேதீசுவரத்தைத் தேன்பொந்து" என்று குறிப்பிட்டிருக்கின்ருர் நாவலர்பெருமான் அவர்கள். கோணமாமலேயமர்ந்தாரை வழிபடுவோர் பேரானந்தப் பெருவாழ்வு பெறுவார்கள் என்கின்ருர் ஞானசம்பந்தப் பெருமான்.
மஹைஸ்வரி மஹெளதரிய மஹாப் பிரபுவாகிய வைத்தியலிங்கச் செட்டியாரவர்கள் வண்ணுர்பண்னேச் சிவன்கோயில் சிறப்புற அமை வதற்குக் காரணராயிருந்தார். நகுலேசுவரம், மாவிட்டபுரம், செல்வச் சந்நிதி, நல்லூர், தெவ்விப்பழை துர்க்கா தேவஸ்தானம் முதலான ஸ்தலங்களும் வடக்கே இன்றும் விளங்குகின்றன.
ஆலய அமைப்புக்களைப் பொறுத்தமட்டில் தாய்நாட்டுக்கும் சேய்நாட்டுக்கும் சிறிது வேறுபாடு உண்டு என்று கூறலாம். தாய் நாட்டில் பெரும்பான்மையான ஆலயங்கள் சிவாலயங்களே ஈழ நாட்டிற் சிவாலயங்கள் ஆங்காங்கே அமைந்திருப்பினும் அம்பாள், பிள்ளையார், சுப்பிரமணியர், வைரவர் ஆலயங்களே அதிகமாக உள்ளன. ஐயஞர், வீரபத்திரர் முதலான தெய்வங்களுக்கும் சிற்சில இடங்களில் ஆலயங்களே அமைத்துள்ளனர்.
'வேழ முகத்து விநாயகனேத் தொழ
வாழ்வு மிகுத்து வரும்."
лтайт.Jлггїдієїт -

Page 10
- 2 -
** நற்குஞ் சரக்கன்று நண்ணிற் கலைஞானங்
கற்குஞ் சரக்கன்று காண் "
என்கின்ருர் உமாபதி சிவாசாரியர். யானைமுகத்தைப் டோலும் முகத்தையுடைய விநாயகப்பெருமான மனமொழி மெய்களினல் துதிப்போமேயானல் விநாயகப்பெருமான் எம்மீது திருவருளைப் பொழிந்து நமக்கு நல்வழி காட்டுவார்.
ஆயாக்கடவைச் சித்தி விாகாயகர் :
வேண்டுவார் வேண்டுவதையெல்லாம் வேண்டியTங்கு ஈந்தருள் புரிபவரான சித்திவிநாயகப் பெருமான் புன்னலைக்கட்டுவன் என்னும் திருப்பதியில் ஆயாக்கடவை என்று விதந்து ஒதப்பெறும் திவ்விய க்ஷேத்திரத்தில் கோயில் கொண்டு எழுந்தருளியிருப்பது இக்கிராமத்தில் வாழும் மக்கள் செய்துவைத்த பூர்வபுண்ணியப் பயனேயாம்.
தமிழ் நாட்டில் மதுரையில் எழுந்தருளியிருக்கும் சித்திவிநாயகர் திருவாலயம் எவ்வளவுக்குச் சிறப்புடையதோ அவ்வளவுக்கு ஈழ நாட்டில் புன்னலைக்கட்டுவன் ஆயாக்கடவைச் சித்திவிநாயகர் ஆலய மும் பெரும் சிறப்புக்கு உரியது.
புன்குலைக்கட்டுவன் பதி:
ஈழநாட்டின் சிரமென விளங்கும் யாழ்ப்பாணத்தின் வடபால் யாழ்ப்பாணம் - பலாலி வீதியில் பத்தாவது கிலோமீற்றர் தொலைவில் உள்ளது புன்னலைக்கட்டுவன். செல்வச்சிறப்பு மிக்க யாழ்குடாநாட்டின் மத்தியில் நடு நாயகமாக அலங்காரத்துடன் அமைந்து விளங்குகின்றது
புன்னுலைக்கட்டுவன்.
** இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும் "
என்பது வள்ளுவர் வாக்கு.
எம்மிடம் எல்லாம் உண்டு என்று மக்கள் அனைவரும் நிமிர்ந்து சொல் லத் தக்க வகையில் சிறப்புடன் காட்சி தருவது புன்னுலைக்கட்டுவன். விவசாயிகளைக் கைதுக்கிவிடும் செம்மை இச்செம் மண்ணுக்கு உண்டு. வானளாவ வளர்ந்து பயன் செய்யும் தென்னை, பனை, கமுகு முதலான அகவளர் விருட்சங்களும், மா, பலா, வேம்பு, ஆல், அரசு, மருதாகிய புறவளர் விருட்சங்களும் அழகுக்கு அழகு செய்கின்றன. கமநிலங்களிற் காணப்பெறும் வாழை, இராசவள்ளி, தினை, குரக்கன் ஆதியாம் பயிர்கள் வாருங்கள், எம்மையுண்டு சுவை யுங்கள் என்பன போன்று பரந்து நிறைந்து பெருங்காட்சியளிக் கின்றன.

س- 3 ----
நீர்வளம் நிலவளம் மலிந்த இப்பகுதியில், தாழ்விலாச் செல்வர்கள், கல்விமான்கள், அறிஞர்கள், சைவமெய்யடியார்கள் நிறைவுறப் பெற்று வாழ்ந்தார்கள், வாழ்கின்றர்கள். பூதராயர், நாச்சிமார், துர்க்கை, ஐயனுர், வைரவர் முதலான தெய்வங்களின் திருக்கோயில்கள் நான்கு திசைகளிலும் செவ்விதாக அமைந்திருக்கப் பொன்னின் குடத்துக்குப் பொட்டிட்டவாறு அழகாக வீற்றிருந்தருளுகின் ருர் ஆய7க்கடவைச் சித்திவிநாயகப் பெருமான்.
ஆயாக்கடவை:
பருத்தித்துறை, நெல்லியடி உள்ளிட்ட தூர இடங்களில் இருந்து வியாபார நோக்கமாக யாழ்ப்பாணம் செல்லும் வழக்கம் மக்களுக்கு இருந்தது. இளவாலை முதலான மேற்குக் கிராமங்களில் இருந்து வன்னிப் பகுதிக்குச் செல்பவர்களும் இருந்தார்கள். இவர்கள் யாவரும் இவ்வாலயப் பிரதேசத்தாலேயே செல்வது வழக்கம். சிந்திவிநாயகர் ஆலயச் சாரலில் உள்ள மரநிழல்களில் தங்கிச் செல்வதும் இவர்களது வழக்கமாகி விட்டது. அவ்விடத்தில் ஆயம் ஒன்றை அமைத்து ஆயநிதியையும் வசூலித்து வந்தனர். வியாபாரிகளும், கால்நடைகளைக் கொண்டு செல்வோரும் ஆயநிதி செலுத்திச் சென்றதாகக் கர்ண பரம்பரைக் கதையுண்டு. அதன் காரணமாகவே **ஆயக்கடவை”* என்ற பெயரும் ஏற்பட்டதென்று கூறுவாருமுளர்.
ஆயாக்குளம் இருந்த காரணத்தினலேதான் ஆயாக்கடவை என்ற பெயர் வந்ததென்று இன்னெரு சாரார் இயம்புவர். ஆயாக் குளம் தூர்ந்து போகக் காலகதியில் குளம் இருந்த இடத்தில் திரு மஞ்சனக்கிணறு தோண்டப்பட்டது.
புன்னைமரம், புன்னகம் - நாகம் என்ற பெயர்களையும் பெறும். புன்னைமரத்தில் ஓர் இனம் சுரபுன்னை ஆகும். புன்னை மரங்கள் ஒரு காலத்தில் இங்கு நிறைந்திருத்தல் வேண்டும். புன்னுலைக்கட்டுவன் ஆயாக்கடவைச் சித்திவிநாயகர் ஆலய தல விருட்சம் புன்னை என்றே அறியக் கிடக்கின்றது. சித்தர்கள் புன்னைமரம் போன்ற உருவிற் காட்சி கொடுத்தனர் என்பர் அறிஞர். இக்காரணங்களினல் புன்னுலைக்கட்டுவன் என்ற பெயர் புனிதம் பெறுகின்றது.
ஆயாக்கடவைச் சித்திவிநாயகர் ஆலய முகப்பில் சவுக்கு மரங்கள் விரவியிருந்ததினல் சவுக்கு மரத்தடிப் பிள்ளையார் என்றும் வழங்குவதுண்டு.
மஹா வித்துவசிரோமணி சி. கணேசையர் அவர்களினலே சிறப்புப்பெறுகிறது புன்னலைக்கட்டுவன். கணேசையர் அவர்கள் எழுதிய இரகுவமிச உரைக்குச் சிறப்புப்பாயிரம் கொடுத்த புலவர்

Page 11
- 4 -
சிகாமணி சுன்னகம் பூரீமத் அ. குமாரசுவாமிப் புலவரவர்கள் * புன்னை நகர்ச் சின்னைய நாதன் மைந்தன்" என்று குறிப்பிட்டிருக் கின்ருர், புன்னைநகர் - புன்னலைக்கட்டுவன். பூரீ கணேசையர் அவர்க ளது குலதெய்வமும் ஆயாக்கடவைச் சித் தி விநாயக ரே. சின்னத்தம்பிப்புலவர், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை முதலாம் அறிஞர்களின் குலதெய்வங்களும் சித்திவிநாயகரே என்பது அவர்க ளது சரித்திரங்களில் இருந்து தெரியவருகிறது.
கணேசையர் அவர்களது தொல்காப்பிய உரைக்குறிப்பு ஈழகேசரி திரு. நா. பொன்னையா அவர்களது பெருமுயற்சியால் நூல் வடிவில் வெளிவருதற்குத் திருவருள் கூட்டியவரும் புன் ன லைக் கட்டுவன் ஆயாக்கடவைச் சித்திவிநாயகரே என்பது ஈண்டு விசேடமாகக் குறிப்பிடத்தக்கது.
பெரியார் பலரை ஈன்றெடுத்த புன்னலைக்கட்டுவனில் எழுந்தருளி அடியார்களின் பழவினைகளைப் போக்கியருளும் ஆயாக்கடவைச் சித்திவிநாயகராலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முப் பெருமைக ளோடும் கூடியது. ஆலயத்தைச் சூழப் புன்னை மரங்கள்; அயலிலே ஆயாக்குளம்.
காலமுங் தோற்றமும் :
ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சோழநாட்டில் இருந்து வந்த காசிபகோத்திர அந்தண சிரேட்டர்களும், முதலிவழி மாப்பாணர்வழி வேளாண்குல திலகர்களும் புன்னுலைக்கட்டுவனில் பல பகுதிகளிலும் குடியேறினர். அந்தணர்கள், விசேடமாகப் புன்னலைக்கட்டுவன் வடக்கில் மாப்பாணர் வளவிலும், தெற்கில் கிரியப்புலம் அயலிலும், இதன் தென்பகுதியில் உள்ள பிராமண வளவிலும், தற்போது பாடசாலை அமைந்துள்ள பகுதியின் அயலிலும் குடியமர்த்தனர்.
குடியிருப்பாளர்களான அந்தணர்களின் இருப்பிடங்களுக்குச் சமீபத்திலேதான் ஆயாக்குளம் இருந்தது. குளத்தின் நான்மருங் கிலும் தருப்பைப்புல் நிறைய இருந்தது. அந்தணர்கள் அங்கு சென்று தருப்பை கொய்வது வழக்கம்.
குளத்தின் மேற்குத்திசையில் கருங்கல்லாலான விநாயகர் விக்கிரகம் ஒன்று இருப்பதைக் கண்டார்கள் அந்தணர்கள். அந்தப் பிள்ளையார் விக்கிரகத்தை அங்கேயிருந்த ஆலமரத்தடியில் குமாரசாமி ஐயர் சோமையர் ஸ்தாபித்துத் தினசரி பூசையையும் ஆரம்பித்தனர். விசேட நாட்களில் ஊர்மக்கள் இந்த ஆலயத்துக்குச் சென்று பொங்கிப் படைத்துப் பூசையும் செய்தனர் என்று பலரும் கூறுவர்.

- 5 -
நாளடைவில் ஆயாக்குளம் தூர்ந்து போயிற்று. அப்பொழுது சோழநாட்டில் இருந்து வந்த குமாரசாமிஐயர் வழிவந்த க. சோமையர் சங்கரையர் மண்ணுலாகிய கோயிலை அமைத்தார்.
இக் கோயில் கிழக்கு நோக்கிய வண்ணம் அமைக்கப்பட்டு ஒலையால் வேயப்பெற்றுப் பூசைகளும் ஒழுங்காக நடக்கத் தொடங்கின. கச்சேரியில் உள்ள பதிவேட்டின் 276ஆம் பக்கப் பிரகாரம் 1710ஆம் ஆண்டில் இவ்வாலயம் ஆரம்பிக்கப்பட்டதாகப் பதியப்பட்டுள்ளது. பின்னர் ஆலயம் மேலும் கிழக்கு நோக்கி விஸ்தரிக்கப்பட்டது. புராணபடனமும் அக்காலத்திலே ஆரம்பமாயிற்று.
܇ 1920 - 1900
இக்கால எல்லையில் சங்கரஐயர் பரம்பரையில் வந்தவரான பொன்னுச்சாமிஐயர் (இளையதம்பிஐயர்) அவர்களால் புன்னலைக் கட்டுவன் உயர்குடித் தோன்றல்களான வேளாண்குடி மக்களின் சீரிய ஒத்துழைப்புடன் புதிய ஆலயம் அமைப்பதற்கான அஸ்திபாரம் விகாரி வருடத்தில் இடப்பட்டது. பழைய பிள்ளையார் இருந்த இடம் சற்றும் நூல் பிசகாமல் புதிய கர்ப்பக்கிருகம் கருங்கல்லுப் பதிக்கப் பட்டதுடன் ஏனைய பகுதிகள் வெள்ளைக்கல் வேலையாக நடைபெற்றன. ஐயரவர்களது இப்பெரு முயற்சிக்கு ஊன்றுகோலாய் உதவியவர்கள் புன்னலைக்கட்டுவனில் வசித்த சைவ வேளாண் குடிமக் களும், வயாவிளான், மயிலிட்டி, பன்னலே, இளவாலை, மல்லாகம், சுன்னுகம் முதலான இடங்களில் வசித்து வந்த புன்னுலைக்கட்டுவன் தொடர்பு உள்ளவர்களும் என்பதைக் கூறுதல் அவசியமாகும். ஐயரவர்களது பணிகளுக்குத் தோள்கொடுத்து உதவியவர் திரு. நா. அகிலேசர் என்பது நினைவுகூரத்தக்கது.
திருமதி சின்னப்பா சிவகாமியின் பேருதவி புன்னலைக்கட்டுவன் சார்பில் ஐயரவர்களுக்கு நிறைய இருந்தது. சிவன், அம்மன் விக் கிரகங்களையும் திருமதி சின்னப்பா சிவகாமி அளித்தார் என்பதும் விசேடமாகக் குறிப்பிடத்தக்கது.
சிறந்த ஸ்தபதிகளான சேதுராக்கரும் இராசுவும் சேர்ந்து சிற்பாகம முறைக்கு அமைவாக ஆலய மண்டபங்களையும் அமைத் தனர். அர்த்தமண்டபம், மகாமண்டபம், ஸ்நபண்மண்டபம், சபா மண்டபங்கள் என்பனவற்றைச் சுண்ணும்பு கொண்டு சுவர்களை அமைத்துப் பூர்த்தியாக்கினர்.
ஆயாக்கடவைச் சித்திவிநாயகர் திருவருளினல் 1920-εξιό
ஆண்டுக்குச் சமமான ரெளத்திரி வருடம் சித்திரை மாதம் அத்த நக்ஷத்திரம் பொருந்தி வந்த புண்ணிய வேளையில் மஹாகும்பாபிஷேகம்

Page 12
- 6 -
விமரிசையாக நடைபெற்றது. வண்ணை வைத்தீசுவரக் குருக்கள் தலைமையிலே குப்பிளான் பிரம்மபூரீ செல்லையரும், புன்னலைக்கட்டுவன் பிரம்மபூரீ செல்லையாக்குருக்களும் உடனின்றுதவ இடம்பெற்ற இக் குடமுழுக்கு விழா பல்லாற்ருனும் நன்கு நடைபெற முழுமூச்சாக உழைத்தவர் பிரம்மபூரீ சி. கணேசையர் அவர்களே.
விகாயகர் அற்புதம் :
மண்சுவராலான ஆலயம் ஒலையால் வேயப்பட்டுப் பூசைகள் நடந்துகொண்டிருந்த காலத்தில் தெருவருகே தாகசாந்திக்கு ஏற்ற தொரு கிணறும், வழிப்போக்கர்கள் தங்குவதற்கு ஏற்றதான ஆல விருட்சமும் அமைந்திருந்தன. ஆலயத்தைச் சுண்ணும்புக் கட்டட மாக அமைக்க அப்பொழுது அர்ச்சகராக இருந்த பொன்னுச்சாமி ஐயரவர்கள் விரும்பினர். ஆலமரத்தைத் தறித்துச் சூளை வைக்க லாம் என்ற ஒரு எண்ணமும் அவருக்கு ஏற்பட்டது. இந்த எண்ணம் அகிலேச உடையாருக்கும் தெரிவிக்கப்பட்டது. நிழல் தரும் மரத்தைத் தறிப்பதற்கு அகிலேச உடையார் அவர்கள் இசையவில்லை. அன்றிரவு வீசிய கடும் புயற்காற்றினல் ஆலமரம் வீழ்ந்துவிட்டது. இதுவும் பிள்ளையார் செயல்தானே என்று ஊரவர்கள் எண்ணினர். அந்த ஆலமரத்தைக் கொண்டே சுண்ணும்புச்சூளை வைக்கப்பட்டது. ஆல யத்துடன் தொடர்புள்ள இவ்வாறன கதைகள் பலவுண்டு.
ஆலயத்தில் அலங்கார உற்சவம் 1920ஆம் ஆண்டு சித்திரை மாதம் அத்த நட்சத்திரத்தில் ஆரம்பமானது. அலங்காரத் திருவிழா பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வண்ணம் அமைந்து விட்டது எனலாம்.
எழுந்தருளிப் பிள்ளையார் விக்கிரகத்தைச் செய்து கொடுத்தவர் திரு. சி. செல்லப்பா அவர்கள். வித்துவான் கணேசையர் சார்பில் அவரது தந்தையாரான சின்னையரினல் வார்க்கப்பட்ட வேல் ஒன்று ஆலயத்துக்கு வழங்கப்பட்டது.
சிவன், அம்மன் விக்கிரகங்களும் வள்ளி தெய்வநாயகி சமேதரான சுப்பிரமணிய சுவாமியின் விக்கிரகமும் செய்வதற்குத் திருமதி சிவகாமன் அவர்களும் வித்துவான் சி. கணேசையர் அவர்களும் முன் வந்தனர். திருமதி இராசரத்தினம் இலக்குமி விக்கிரகத்தைச் செய் வித்துக் கொடுத்தனர். இன்னும் பலர் தங்கள் தங்கள் மனம் நிறைந்த நன்கொடைகளை வழங்கியதுடன் மற்றவர்களையும் ஊக்குவித்தனர். அத்துடன் பிள்ளையாருக்கான திருமுடியை அழகுபெற அமைப்பித்துக் கொடுத்தார் பிரம்மபூரீ வித்துவான் சி. கணேசையர் அவர்கள். 1961ஆம் ஆண்டுக்குச் சமமான பிலவ வருஷம் ஆனி மாசம் மிருகசிரிட நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

- 7 -
நீர்வேலி சிவபூரீ பிச்சாடனக் குருக்கள் (சுப்பிரமணியக் குருக்கள்), சித்தங்கேணி சிவபூரீ மு. குமாரசுவாமிக் குருக்கள். இணுவில் சிவபூரீ இராமநாதக் குருக்கள், புத்தூர் சிவபூgரீ மா. வைத்தியநாதக் குருக்கள், கீரிமலை சிவபூg நகுலேசுவரக் குருக்கள் முதலான பலர் சிவாசாரியர்க ளாக இருந்து கும்பாபிஷேகத்தைச் சிவப் பொலிவுடன் நடத்தி வைத்தமை இப்பொழுதும் மனதில் பசுமையாகவே காட்சி தரு கின்றது.
ஆலயத்தின் பின் வரலாறு :
காலப் போக்கில் உள்வீதியில் சுற்றுக் கொட்டகைகள் அமைக்கப் பட்டன. மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மஹா மண்டபம், ஸ்நடன மண்டபம், கொடிஸ்தம்ப மண்டபம், தரிசன மண்டபம், வசந்த மண்டபம் என்பன நிறைவாக அமைக்கப்பட்டன. யாகசாலை பாகசாலை, வாகனசாலை, குருக்கள் அறை, களஞ்சிய அறை என்பன வும் நிறுவப்பட்டன. பரிவார தெய்வங்களாக நாகதம்பிரான், முருக மூர்த்தி, வைரவமூர்த்தி, சண்டேஸ்வரமூர்த்தி, நவக்கிரகநாயகர் கோயில்களும் அமைக்கப்பட்டன.
இவ்வாலயத்தில் குதிரை, இரட்டைக்குதிரை, சிறிய, பெரிய எலி, காமதேனு, இடபம், யானை, விமானம் போன்ற வாகனங்களும் அம்சங்கள் குறையாமல் இருக்கின்றன. பிள்ளையார், சிவன், அம்மன், சுப்பிரமணியர், வேல், மகாலட்சுமி முதலான விக்கிரகங்களும் சீர்பெற அமைந்திருக்கின்றன.
முக்கிய திருப்பணிகளில் தேர்த்திருப்பணியைக் குறிப்பிடலாம். ஊர்ப்பெருமக்களின் பண உதவியோடு சித்திவிநாயகரின் திருவருளையும் மக்கள் சக்தியையும் கூட்டிச் சிவதர்மச் செல்வர் திரு. ச.இராசரத்தினம் (8. R. அவர்கள் தம் பெரும் பணத்தைச் செலவிட்டு திருநெல்வேலி ஆறுமுகம் சிற்பாலய முதல்வர்களான கலாகேசரி ஆ. தம்பித்துரை, சிற்பக்கலாமணி ஆ. சீவரத்தினம் சகோதரர்கள் வாயிலாகத் தேரை நிர்மாணித்தனர். இலங்கையில் உள்ள சிறந்த சித்திரத் தேர்களில் புன்னலைக்கட்டுவன் ஆயாக்கடவைச் சித்திவிநாயகர் திருத்தேரும் ஒன்று என்பது யாவரும் அறிந்தது. 18-06-1970இல் புதிய சித்திரத் தேரின் வேலைகள் நிறைவுற்றன. விநாயகரின் சித்திரங்களைக் கதை பேசும் வகையில் தமது கைவண்ணத்தினல் அமைத்த ஆறுமுகம் சிற்பாலயத்தினர் என்றும் பெருநன்றிக்கு உரியவர்கள். சித்திவிநாயகப் பெருமான் திருத்தேர் மீது ஆரோகணித்து வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இக்காட்சி கண்டு மெய்யடியார்கள் விம்மித முறுவர்.

Page 13
திருத்தேர்க் கும்மி
அன்ன வயற்செந்தூர் வாச னருளால் அழகான புன்ஞலேக் கட்டுவன்
மின்னுமா யாக்கடவைப் பிள்ளையார் தேர் விமரிசைக் கும்மி படிப்பமடி,
எங்கள் செந்தில்வடி வேல னுக்குத்தே வேந்திரன் விமான மளித்ததுபோல் மங்கள மான புன்னுலேக்கட்டுவன் வாசிகள் செய்துவைத்தா ரத்திருத்தேர்.
கைலாச நாத னுமையாள் மகிழ்ந்திடும் கனேசன் திருத்தே ரெழுந்தருளி உல்லாச மாகப் பவனி வருகிரும் ஊரார்கள் வந்து வடம் பிடிக்க,
பாவ மகற்றிட வாருமென் பார்நல்ல பாக்யம்பெற ஓடி வாருமென்பார்
தேவ ருலகம் புகழுந் திருத்தேரைச் சேவித் திழுத்திட வாரு மென்பார்.
மாவிலே வாழைபூ மாலேக ளோடு வகைவகை யாகத் தோரணங்கட்டிச் சேவிக்கு மன்பர் திருவிதிக ளெல்லாம் செல்வத்தே ரோடி வருவதைப்பார்.
ஆயாக் கடவை விநாயக மூர்த்தி அழகு திருத்தேர் வரும்போது நேய முடன்வான வர்கள் வந்துநின்று நிறைந்த மலர்மாரி பெய்தனரே
சிருந் திருவு மடியார்க் கருள்செய்து சிறந்த விநாயக மூர்த்தியின்றேர் பாரும் விசும்பும் புகழ ஓடிவந்து பதிவு நிலையத்திற் சேர்ந்ததுவே
தேருந் திருநாளுந் தேவால பங்கள் திருப்பணி செய்திடு மன்பரெல்லாம் பேருங் கீர்த்தியுடன் வாழிவாழி இந்தப் பேருல கோர்வாழி வாழியவே

தண்ண் :
ான
திருத்தேரும், உருவாக்கிய சிற்
பிகளும், ஆக
ܩܢܕܐ
"

Page 14
ர்த்
ஆவணிச் ச ம்பம் வீதி வலம்வரும் காட்சி. 貂、 ܘ ܘ
: :
கும 巒
܀
=
T է : : ":" திவிநாயகப் பெருமான் கு அபிஷேகம் திருத்தேருக்கு ாாமங்க ங் கு எழுந்தருளுங் IGITL "F).
* 人
வசந்தமண்டபத்தில் உற்சவமூர்த்திக்குத்
தீபாராதனே நட க்கிறது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ui+= [] ==
கோபுர தரிசனம் :
"கோயில் இல்லாவூரிற் குடியிருக்க வேண்டாம்" என்பது முது மொழி அழகு தருங் கோயிலுக்கு மேலும் அழகு தருவது இராஜ கோபுரம், இராஜகோபுரம் தூலலிங்கம் என்ற சிறப்புக்கு உரியது. தூலலிங்கமாகிய கோபுரத்தை வனங்கும் பேறு ஒருவருக்குக் கிடைக்குமேயானுல் அது பெரும் பேருகும். ' கோபுர தரிசனம் கோடி புண்ணியம்." கோபுரத்தின் உச்சியில் அமைக்கப்படும் கலசங்கள் மூர்த்திகரமானவை. அடியார்களினுல் வணங்கப்படும் சிறப்புக்கும் உரியவை. பூரண கும் அமைப்பைக் கொண்ட கவசங்களேத் தரிசித்து வணங்கும் ஒருவரின் வாழ்வும் பூரணம் அடையும் என்பார் பெரியோர்.
இதன் காரணமாக எல்லாம் வல்ல ஆயாக் கடவைச் சித்தி விநாயகர் திருவாலய முன்றவில் இராஜகோபுரம் ஒன்று அமைய வேண்டும் என்பது அடியார்களின் நீண்டகாலப் பிரார்த்தனே. இப்பணியைப் பூர்த்தி செய்வதற்கு முன்னுக்கு வந்தவரான திரு. இ. விக்கினராசா அவர்கள் விநாயகரில் ஆராத பக்தி கொண்டவர். இந்தியச் சிற்பிகளின் மேற்பார்வையில் இயற்றப்பட்ட பஞ்சதள இராஜகோபுரத்தின் குடமுழுக்குவிழா 30-04-1980 இல் செம்மையாக நடந்தேறியது.
இதற்குச் சிலநாள்கள் முன்பாக (21-4-1980) திருப்பணிச் செல்வர் திரு. எண். இராசரத்தினத்திஞல் அமைக்கப்பட்ட மணிக் கூட்டுக் கோபுரத்தில் இங்கிலாந்தில் இருந்து தருவிக்கப்பட்ட நவகண்டாமணி (ஆசைபாமணி) ஏற்றப்பட்டது. இராசகோபுரத்தை அழகுற அமைத்துக் கொடுத்த சிற்பி மாயூரம் எஸ். பி. கேசவாச்சாரி பரிவர்.
திருக்கோபுரத்தை அமைப்பதற்கு மிகவும் காரன்னராக இருந்தவ ரான திரு. இ. விக்கினராசா அவர்களே மாகேஸ்வர பூசைக்குரிய விக்கினேஸ்வர மணிமண்டபத்தையும் நிர்மாணிப்பதற்கு மூல காரணராக இருந்தார் என்பது முக்கியமாகக் குறிப்பிடக் கூடிய விஷயமாகும்,
ਹLਤ :
ஆலயங்களில் இறுதியான பூசைக்கு உரியவர் சண்டேசுரப் பெருமான். அவரையே இறுதியாக வழிபட்டு அடியவர்கள் செல்வது வழக்கம். சண்டேசுர மூர்த்தியை ஆலயத்தில் வைத்துப் பூசிப்பதற்கு வழிசெய்தவர்கள் திரு. கு. நாகமுத்து குடும்பத்தினர். சண்டேசுரர் எழுந்தருளி விக்கிரகத்தைச் செய்து கொடுத்தவர்கள் திரு.ஆறுமுகம் தாமோதரம்பிள்ஃ பரம்பரையினராவர்.
சண்டேசுரப் பெருமானுக்குரிய திருத்தேரினே தமது மூத்த மகள் திருமதி வனஜா இராமலிங்கம் உபயமாகச் செய்து உதவினுர் வள்ளல் திரு. சி. இராசரத்தினம் அவர்கள்.

Page 15
- 10 -
இசையும் இறைவனும்:
இறைவனுக்கு உரிய பெயர்களில் சாமகானப் பிரியன் என்பதும் ஒன்ருகும். ஆயாக்கடவைச் சித்திவிநாயக மூர்த்திக்கும் இசைக்கும் உள்ள சம்பந்தம் பழைய சம்பந்தம்.
இவ்வாலயத்தில் நடைபெறும் உற்சவங்களில் இலங்கை இந்திய நாதஸ்வர தவில் வித்துவான்கள் பெருமளவிற் கலந்து கொள்வது உண்டு. வருடப் பிறப்பின்போது தமது இசையை முதன்முதலிற் பிள்ளையாருக்கே அர்ப்பணம் செய்து கைவிசேஷம் பெற்றுச் செல்லும் இசைக்கலைஞர்கள் அநேகரே ! அநேகரே!!
பிரபலம் பெற்று விளங்கும் நாதஸ்வர கலாநிதி கலாசூரி அளவெட்டி என். கே. பத்மநாதன், சாவகச்சேரி நாதஸ்வர மேதை மு. பஞ்சாபிகேசன், லயஞான குபேர பூபதி இணுவில் வி. தட்சணுமூர்த்திப்பிள்ளை, எம். கே. கணேசன், என். ஆர். சின்னராசா உள்ளிட்ட அனைவரும் சித்திவிநாயகரின் திருவருளைப் பெற்ற இசைக் கலைஞர்களே. ஆலய முன்றிலில் நாதஸ்வர கலாநிதி கலாசூரி என். கே. பத்மநாதன் அவர்களுக்குப் பொன்னடை போர்த்திக் கெளரவித்த நிகழ்ச்சி ஆலய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது.
பிரபல பாடகர்களான டாக்டர் மதுரை எஸ். சோமசுந்தரம், டாக்டர் சீர்காழி எஸ். கோவிந்தராசன் முதலான இசைப் பேரறிஞர்கள்" ஆயாக்கடவைச் சித்திவிநாயகர் திருமுன்றிலில் அமர்ந்திருந்து பலமணி நேரம் பாடிப் பரவி அருள் பெற்ருர்கள்.
கூட்டுப்பிரார்த்தனை :
ஆயாக்கடவைச் சித்திவிநாயகர் ஆலயத்தில் கூட்டுப் பிரார்த்தனை வழிபாட்டினைத் தொடக்கிவைத்த பெருமை மூவருக்குண்டு. பண் னென்ற இசைபாடும் அடியார்கள் உள்ளத்தில் கோயில் கொண்டு அருளுபவர் இறைவன். அந்த இறைவனைப் பாடிப் பரவுவதே எமது பிறவியின் நோக்கம் என்று சொல்லிக் கொண்டு முன்வந்தவர் இளைப்பாறிய தலைமை ஆசிரியர் திரு. பொ. பொன்னம்பலம் (அமரர்) அவர்கள். அவர்கள் கூட்டுப் பிரார்த்தனையைத் தொடக்கி வைக்க அவருடன் சேர்ந்து பிள்ளைகளும், பெரியோர்களும் பாடி மகிழ்வது
வழக்கம்.

- 11 -
இக்கூட்டுப் பிரார்த்தனை முறை வெள்ளிக்கிழமைகள் தோறும் நடந்து வருகின்றது. கதிர்காமையர் சோமையர், சங்கரையர் வழி வந்த இக்கால அர்ச்சகர்களும் இம்முயற்சிக்கு மிகவும் அநுசரணையாக இருந்தார்கள்.
திரு. பொன்னம்பலம் ஆசிரியருக்கு உதவியாக இருந்தவர்கள் இருவர். ஒருவர் புகையிரத நிலைய அதிபராய் இருந்த திரு. க. ஆறுமுகம் அவர்கள், அடுத்தவர் இளைப்பாறிய அதிபர் திரு. அ. முதலித்தம்பி, B. A. அவர்கள்.
திரு. அ. முதலித்தம்பி அவர்கள் திரிகரணசுத்தியுடன் ஆலய வளர்ச்சிக்கு நீண்ட நாள்களாக உதவி வரும் பேரன்பராவர்; கோயிலில் நடைபெறும் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளுவார்; திருத் தேர் உருவாவதற்கு நன்கு உழைத்தவர்; புராணபடனத்தில் ஊக்க முடன் ஈடுபடும் ஒரு மெய்யன்பர் ஆவர்.
புராணபடணம் :
ஆலயங்களிற் புராணபடனம் நடைபெற வேண்டியதன் முக்கியத் துவத்தை நாவலர் பெருமான் அவர்கள் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஆயாக்கடவைச் சித்திவிநாயகர் ஆலயத்தில் புராணப்படிப்பு முட்டின்றி நடைபெறுவதற்கு ஏலவே வேண்டிய வழி வகைகளைச் செய்து வைத்தவர் திரு. நா. அகிலேசர். இவர் மகன் திரு. சிவசம்பு அவர்கள் தமது தந்தையாரால் வந்த ஆஸ்தியின் ஒரு பகுதியை விற்று அப்பணத்தை நீதிமன்றச் சேமிப்பில் வைத்து வரும் வட்டி யைக் கொண்டு காலத்துக்குக் காலம் கந்தபுராணப் படிப்புக்கு உதவும் வண்ணம் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துள்ளார் என்பதும் விசேடமாகக் குறிப்பிடத்தக்கது.
புன்னைநகர் திரு. கதிரிப்பிள்ளையும் பிரம்மபூரீ சோ. குமாரசாமி ஐயர் அவர்களும், கந்தபுராணப்படிப்பில் வெகு அக்கறையுள்ளவர்கள். மேலும் அச்செழு திருவாளர்கள் சங்கரப்பிள்ளையும், வே. அருணுசலமும் பல காலம் புராணப்படிப்புக்கு உதவி வந்தார்கள். ኁ
புராணப்படிப்பில் அக்கறை காட்டிய இன்னெருவர் திரு. அப்பாப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை அவர்கள். இவர்கள் தமையனர் திரு. சிவசம்பு கந்புராணம் முழுவதையும் தம் கையாலேயே ஏட்டில் எழுதி விநாயகப் பெருமான் சந்நிதியில் அர்ப்பணித்த அன்பர். திரு. நா. அப்பாத்துரை அவர்களும், மலாயன் பென்சனர் திரு. இ. செல்லப்பா அவர்களும் புராணப்படிப்பில் மிகவும் ஈடுபாடு கொண் டவர்கள். w x

Page 16
- 12 -
ஏழாலையூர் சைவப்பெரியார் சிவசண்முகவடிவேல், புன்னலைக் கட்டுவன் ஆசிரியர் அருளம்பலம், திரு. வே. இராசையா முதலான வர்கள் புராணப்படிப்பின் ஆரம்பத்தில் இருந்து புராணம் பூர்த்தி வரும் வரை வாசித்தும் பயன் சொல்லியும் வருபவர்கள், தை மாசம் ஆரம்பமாகும் இப் புராணப்படிப்பு தினசரி நடைபெற்றுப் பங்குனி இறுதியில் பூர்த்தியடையும்.
விசேடகாலங்களில் வெளியிடங்களில் இருந்தும் புராணகாரர்கள் வந்து பங்குபற்றுவதுண்டு. பத்தைமேனியூர் திரு. காராளசிங்கம், பண்டிதர் கா. நமசிவாயம் என்பவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
துரைச்சாமிஐயர் குமாரசாமிஜயர் பிரபல சோதிடரும் ஆசிரியரு மாவர்.புராணபடன வித்தகருமாவர். ஆயாக்கடவைச் சித்திவிநாயகர் ஆலயத்தில் கடந்த அறுபதாண்டுகளாகக் கந்தபுராணப் படிப்பில் ஈடுபட்டு உழைத்தவர். புராணபடன மகிமையைப் பாராட்டிப் பொற்கிழி வழங்கிக் கெளரவிக்கப் பெற்ருர். இதையொட்டி வழங்கிய வாழ்த்து வருமாறு,
** புன்னைநகர் நல்லாயாக் கடவை தன்னில்
புகழ்பூத்த விநாயகரின் ஆல யத்தில் கன்னலெனும் கந்தபு ராணந் தன்னைக்
கவினுெழுகப் புராண படனஞ் செப்பி மன்னும்அறு பத்துப் பெரும்ஆண் டுகளாய்
மாபுராணப் படனம் பக்தி யோங்கச் சொன்னமறை நூலோன்கு மார சாமிச்
செந்தண்மை அந்தணனும் வாழி வாழி.”
** கவிமாமணி”*
கந்தவேள் புராணந்தன்னைக் காதலித்து ஒதுபவர்கள் எல்லா வகையான செல்வங்களையும் பெறுவார்கள் என்பது கச்சியப்பசிவாசாரி யரின் வாக்கு. கந்தபுராணத்தை மெய்யன்புடன் ஒதுபவர்கள் சிவகதி G3Fri:Guntrř 35 Gir.
திரு. செல்லப்பா அவர்களால் உபகரிக்கப்பெற்ற கந்தபுராணநூல் (ஆறுமுகநாவலர் பதிப்பு) இன்றும் உபயோகப்படுத்தப்பட்டு வரு கிறது என்பது யாவரும் மகிழவேண்டிய ஒரு விஷயமாகும்.
கந்தசஷ்டி காலங்களில் திருச்செந்தூர்ப் புராணமும், அடுத்துப் பிள்ளையார் கதையும், திருவெம்பாவை காலத்தில் திருவாதவூரடிகள் புராணமும் படிப்பது வழக்கம்.

- 13 -
மஹோற்சவம் :
ஆணிப் பூரணை தினத்தைத் தீர்த்த நாளாக் கொண்டு இங்கே கொடியேற்றுவிழா நடைபெறும். மஹோற்சவ நாள்கள் பதினென்றும் புன்னுலைக்கட்டுவன் மக்களுக்குப் புண்ணிய நாள்களாகும். தீர்த் தோற்சவத்தையடுத்துப் பூங்காவனம் வைரவர் சாந்தி இடம்பெறும்.
இம் மஹோற்சவ நாள்களில் விரதம், ஜெபம், தவம் என்பன வற்றை நியமமாகக் கொள்ளும் அடியார்கள் தெய்வீகமான இசை யையும் நல்வழிப்படுத்தும் கதாப்பிரசங்கம் உபந்நியாசம் என்ப வற்றையும் கேட்டு மன நிறைவு பெறுவர்.
அடியார்கள் காவடி (பாற்காவடி, ஆட்டக்காவடி, துரலாக்காவடி) எடுத்தும் மாவிளக்கிட்டும் தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவர்.
தேர்க் காட்சி, தீர்த்தக் காட்சி தெய்வீகமானவை. தேர், தீர்த்த காலங்களில் அன்னதானம் வழங்கும் வழக்கம் நடைமுறையிலுண்டு.
இன்னும் விநாயக சதுர்த்திகள், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, திருவெம்பாவை, தைச்சங்கிராந்தி, தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்தரம், சித்திரை வருடப் பிறப்பு, சித்திராபூரணை, ஆனி உத்தரம் முதலானவை இவ்வாலயத்திற் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரு கின்றன. முன்னைய கும்பாபிஷேக தினங்களான சித்திரைமாச அத்த நட்சத்திரமும், ஆனிமாச மிருகசிரிடமும் விசேட விழாக்களுக்குரிய தினங்களாம். இக்காலங்களிலும் அடியார்கள் நோன்பிருந்து தங்கள் தங்கள் நேர்த்திகளை நிறைவேற்றுவர்.
நினைவில் நீங்காதவர்கள் :
இவ்வாலயத்தின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் அயராது உழைத்த அந்தணர்களை அவர்களது தொண்டுகளை எண்ணும்பொழுது கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பர் பெருமான்தான் நம் மனக்கண்முன் தோன்றுகின்ருர்,
இராமன் முடிசூடுவதற்கு முன்னர் வசிஷ்டமஹரிஷி பூனி ராமனுக்கு அரசியலறம் பற்றிப் போதிக்கும் இடம் தருமத்தைப் பற்றிச் சிந்திக் கின்ற ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டியதொன்று.
** கரிய மாலினுங் கண்ணுத லானினும் உரிய தாமரை மேலுறை வானினும் விரியும் பூதமொ ரைந்தினும் மெய்யினும் பெரிய ரந்தணர் பேணுதி உள்ளத்தால்."

Page 17
- 14 -
மஹா விஷ்ணுமூர்த்தி, சிவபெருமான், பிரமதேவர், ஐம்பூதங்கள், உண்மைப்பொருள் யாவற்றிலும் பெரியவர்கள் அந்தணர்கள். அந்தணர்களைப் பேணுவதே சிறந்த அறம். அதுவே சிறந்த செங்கே லாட்சிக்கு வழி என்று உபதேசஞ் செய்கின்ருர் வசிட்டர்.
புன்னலைக்கட்டுவன் ஆயாக்கடவைச் சித்திவிநாயகர் ஆலயத்தின் இன்றைய வளர்ச்சிக்குக் காரணராக இருந்தவர்களின் முன்னேர்களை நோக்குங்கால் அவர்கள் சோழநாட்டு அந்தணர்கள் என்பது தெரிய வருகிறது. “சோழ வளநாடு சோறுடைத்து" என்பதற்குக் காரணராக உள்ளவர் சிதம்பரம் நடராசப் பெருமான் ஆவர். கோயில் என்ற பெயர் விசேடமாகச் சிதம்பரத்தையே குறிக்கும். சிதம்பரம் சோழ நாட்டுத் தலங்களில் முதன்மையானது. சோழநாட்டுத் தல முதல்வ ரான சிதம்பர நடராசப் பெருமான்தான் சோழநாட்டு அந்தண முதல்வர்களை ஈழநாட்டுக்கு, அதுவும் புன்னலைக்கட்டுவன் ஆயாக் கடவைக்கு அனுப்பிவைக்கத் திருவுளங் கொண்டார் போலும்!
சோமையர் வழிவந்த சங்கரஐயர் கதிர்காமையர் செந்தமிழும், வடமொழியும் நன்கு பயின்றவர். சைவப் பாடசாலை ஒன்றை நிறு வியதுடன் சிறப்பாக நடத்தியும் வந்தார். அந்தச் சைவப்பாடசாலையே இப்பொழுது அரசினர் பாடசாலையாக மாறியுள்ளது. கதிர்காமையர் அமைத்த சைவப்பாடசாலையிலேயே கணேசையர் அவர்கள் ஆரம்பக் கல்வியைப் பெற்ருர்கள்.
ச. சோ. பொ ன்னு ச் சாமி ஐயர் எனப் பெயர் பெறும் இளையதம்பிஐயர் அவர்கள் சோதிடவிற்பன்னர். சிற்பசாஸ்திரங்களை யும் நன்கு கற்றிருந்தார். அந்தக் காலத்திற் குரக்கன், சாமை முதலிய தானியங்களைச் சேர்த்து கோயில்வேலைகளைச் செய்தவர்களுக்கு அவை களைத் தானமாக வழங்கியவர். இவரது பணி என்றென்றும் மறக்க முடியாதது.
இவரது மகன் சிவாநந்தக் குருக்களும் வடமொழி, தென்மொழி யாகிய இருமொழிகளிலும் நல்ல பாண்டித்தியம் உடையவர். ஆங்கில முந் தெரிந்தவர். இவரது புத்திரரே புகையிரதப் பகுதியில் இருந்து ஒய்வு பெற்ற பிரதம லிகிதர் பிரம்மபூரீ சோமசர்மா ஐயரவர்கள்ஆலய அர்ச்சகருமாவர்.
சோமசர்மாவின் மைத்துனரும் சிவானந்தக் குருக்களின் மருகரு மான பூரீ சி. சுவாமிநாதஐயரும் (சர்மா) ஆலயத்துடன் நெருங்கிய தொடர்புகொண்டு திருப்பணி வளர்ச்சிக்கு உழைத்திருக்கின்றர்கள். சுவாமியை அலங்கரிப்பதில் திறமை வாய்ந்தவர் சுவாமிநாதஐயர்.

- 15 -
இவர் வித்துவான் கணேசையர் அவர்களின் ஆயாக்கடவை சித்தி விநாயகர் ஊஞ்சற் பாக்களை விசேஷ நாள்களில் பலகாலமாக இசை யோடு பாடிவந்துள்ளார் : வித்துவசிரோ மணி பிரம்மபூரீ கணேசையர் அவர்களின் நினைவாக அவரது திருவுருவச் சிலையையும் அமைப் பித்துள்ளார்.
மணிஐயர் எனப் பெயர்தாங்கிய சுவாமிநாதத்தம்பிரான் அவர்கள் தமது வாழ்நாளில் முதன் முதலாகக் கதாப்பிரசங்கத்தை ஆரம்பித்த இடமும் ஆயாக்கடவைச் சித்திவிநாயகர் ஆலயமே என்பதைப் பலர் அறியமாட்டார்கள். m
தாய்நாட்டில் காஷாயம் பெற்றுப் பிறந்தகத்துக்கு விமான மூலமாகப் பலாலி விமான நிலையத்தையடைந்து அங்கிருந்து பலாலி வீதி வழியாக யாழ்ப்பாணம் சென்றுகொண்டிருந்த நல்லூர் ஞான சம்பந்தர் ஆதீன முதல்வரைச் சகல சீர்வரிசைகளுடனும் இவ்வாலயத் தில் முதலில் வரவேற்று விசேடபூசை செய்து உபசரித்த பெருமையும் முன்னர் குறிப்பிடப்பெற்ற சுவாமிநாதஐயரவர்களையே சாரும்.
பிரம்மபூரீ ச. க. செல்லையாக்குருக்களும் சித்திவிநாயகரின் மெய்த் தொண்டராவர். நித்திய நைமித்தியங்கள் நல்லபடி நடக்க வழி செய்தவர். மலாயாநாடு சென்று பொருள் சேர்த்து ஆலயத் திருப் பணிக்கு உதவியவர்.
செல்லையாக்குருக்களின் புத்திரர்கள் இருவர். முதல்வர் கே. சி. பாலசுப்பிரமணியஐயர். ஆலயத்தின் சகல விருத்திகளுக்கும் உள மார உழைத்தவர். உபதபால் நிலையம், அரசினர் மருந்தகம் என்பன பாலசுப்பிரமணியஐயரவர்களின் ஞாபக சின்னங்கள். கே. சி. பாலசுப்பிரமணியஐயர் அவர்களுக்கு புதல்வர்கள் இருவர். இளையவ ரான கனகசபாபதிஐயர் அவர்கள் இவ்வாலய அர்ச்சகராயுமிருந்தார்.
அடுத்தவர் சோமசுந்தரஐயர். அவரது புத்திரர்களில் ஒருவரான பாலகிருஷ்ணஐயர் அவர்கள் இக்கால அர்ச்சகர்களில் ஒருவராவர்.
சங்கரஐயர் சின்னையர் மகனே வித்துவசிரோமணி கணேசைய ரவர்கள். பெரியபுராணம், கந்தபுராணம் என்பனவற்றை நியமமாக ஒதிச் சித்திவிநாயகரின் அருளைப் பெற்றவர். தமக்கு அளிக்கப்பட்ட பொற்கிழி கொண்டு விநாயகப்பெருமானுக்குப் பொற்கிரீடம் சூட்டி மகிழ்ந்தவர். சித்திவிநாயகர் திருவூஞ்சற்பாக்களை யாத்தவரும் கணேசையர் அவர்களே. ,, . .

Page 18
வர்த்தலைவிளான் மருதடி விநாயகரைத் தோத்திரிக்கும் ஐயரவர்கள் ஆயாக்கடவைச் சித்திவிநாயகரை முன்னுக்கு வைக்கும் பாங்கு வெகு அற்புதமானது.
** என்குலத் தந்தனர் நின்னடித் தொண்டினை
வழிவழி செய்து வாழும் புன்னமா நகரின் மேவிய நற்றளி யிற்போல் வீயா மருதடி மேவு மூலத்தும் உற்றே யருள்செயும் உயர்பரம் பொருளே. ' இப்பாடலின் மூலம் வித்துவசிரோமணி அவர்கள் புன்னலைக் கட்டுவன் ஆயாக் கடவைச் சித்திவிநாயகர் மீது கொண்ட பக்தியை யாம் உய்த்துணர முடிகிறது. 17-04-1984இல் புன்னலைக்கட்டுவன் நலன்புரிச்சங்கம் கணேசையர் அவர்களது நூற்றண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடியது. ஆலய வளர்ச்சிக்கு உழைத்த அந்தண சிரேட்டர்கள் இன்னும் பலர் உளர்.
க. சிவஞானக்குருக்களின் மகன் தங்கசாமி ஐயர் சிறந்த கல்வி மான். கவிஞருமாவர். ஆசிரியரான இவர் ஒய்வு நேரங்களில் மாணவர் களுக்கு இலவசமாகப் பாடஞ் சொல்லிக் கொடுத்தவர். தங்கசாமி ஐயரிடம் பாடம் கேட்டவர்கள் அதிபர்களாகவும், ஆசிரியர்களாகவும் விளங்குகின்றனர். ஐயரவர்களுக்கு ஆண்பிள்ளைகள் இருவர். மூத்தவர் மகாலிங்கஐயர். இளையவர் சுப்பிரமணியஐயர். அர்ச்சக உரிமை உடையவர்கள்.
ஊரெழு சிவபூg பா. வைத்தியநாத சிவாசாரியர் அவர்களுக்கும் ஆயாக்கடவைச் சித்திவிநாயக மூர்த்திக்கும் நெருங்கிய திருவருட் டொடர்பு உண்டு. அர்ச்சகராகவும் குருக்களாகவும் அவர்கள் ஆற்றிய சேவை வெகு புனிதமானது. தொடர்ந்தும் அவர்கள் சித்திவிநாய கரின்மீது வைத்த பேரன்பினல் சேவை செய்து வருவது பெரு மகிழ்ச்சிக்கு உரியதாகும்.
கொடிமரத்துக்கான நா க ம ரத் தைப் பெற்றுக் கொடுத்தவர் புகையிரத நிலைய அதிபராகப் பணியாற்றிய திரு. செ. அருந்தவநாயகம் அவர்கள். அவரது குடும்பத்தினரே கொடியேற்று விழாவினை நடத்தி வருகின்றர்கள்.
மரக்குற்றியில் நாட்டப்பட்ட அசையாமணியைப் பெற்றுக் கொடுத்தவர் திரு. த. பூதப்பிள்ளைப் பரிகாரியாரவர்கள். இவர்கள் வழிவந்தவர்கள் மணிக்கூட்டுக் கோபுரத்தை ஆரம்பத்தில் சுண்ணும்புக் கட்டடமாக அமைத்தனர். பரிபாலன சபையினரின் ஆதரவுடன் இவர்களின் வழிவந்தவர்களின் அயரா உழைப்பினல் இப்பொழுது உறுதியான கொங்கிறீற் கட்டடமாகப் பிரகாசிக்கின்றது.

- 17 -
மஹோற்சவ காலங்களில் சித்திவிநாயகப் பெருமான் எழுந் தருளி வீதிவலம் வருவதற்கான சித்திர சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய சப்பரத்தைச் செய்வித்து உதவியவர் திரு. வேலுப்பிள்ளை செல்லத்துரை அவர்கள்.
* சிவதர்மச் செம்மல் " திரு. ச. இராசரத்தினம் (S. R.) அவர்கள் நமது ஊருக்குக் கிடைத்த செல்வம் என்றே கூறிவிடலாம். அவரது பெருமை எங்களது பெருமை. " திருப்பணிச் செம்மல்" என்ற விருது அவருக்கு மிகவும் பொருத்தமானது. சித்திவிநாயகர் திருவாலயத் திருப்பணிகள் அனைத்துக்கும் ஒத்துழைப்பு வழங்குபவர். திரு. இராசரத்தினம் அவர்களது ஊதியத்தின் ஒரு பகுதி சித்தி விநாயகர் திருவாலய வளர்ச்சியிலேயே சென்று சேர்கின்றது. #
தேர்த் திருப் பணி நிறைவின் பொருட்டு உழைத்த திரு. ச. இராசரத்தினம் அவர்கள் இவ்வாலயத்தில் தேர்த்திருவிழா, வருடப்பிறப்பு உற்சவம் ஆதியன சிறப்புற நடைபெற அச்சாணியா யிருந்து வருகின்றர்கள். திரு. முருக கிருபானந்தவாரியார் முதலான சைவ நல்லறிஞர்களின் ஆசியையும் பெற்று இருக்கின்றர்கள். யாழ் குடாநாட்டில் முதன்முறையாக வருடப்பிறப்பு நிகழ்ச்சிகளை ஒரே நேரத்தில் இலங்கை வானெலியில் ஆலயத்திலிருந்து நேரடியாகத் தமிழ், சிங்கள மொழிகளில் ஒலிபரப்பச் செய்தார்கள்.
*" தந்தை எவ்வழி மைந்தனும் அவ்வழி " என்றவாறு திரு. ச. இராசரத்தினத்தின் அன்பு மகனர் இ. வரதராசன் சித்தி விநாயகரின் திருவருளுக்குப் பாத்திரரானவர். இங்கிலாந்தில் ஆலயமணி வார்ப்பில் பெரும் புகழ் பெற்ற கொம்பனியால் உரு வாக்கப்பெற்ற அசையாமணி-நவகண்டாமணி, தம் செலவிலேயே இங்கு வந்து சேர்வதற்குக் காரணராயிருந்தவரும் திரு. இ. வரதராசன் அவர்களே. சித்திவிநாயகரின் திருவருள் இவர்களுக்கு என்றும் பெருகுவதாக.
சிறிதும் சலசலப்பில்லாமல் தொண்டு புரிபவர் திரு. சின்னத்தம்பி அரசரத்தினம் அவர்கள். திருவீதியைச் செப்பனிட உதவியவர் ஆலயச் சூழலை எப்பொழுதும் தூய்மையாக வைத்திருப்பதில் இன்பங் str star Luanini.
திருவாளர்கள் க. வேலுப்பிள்ளையும், மா. இராசாவும் அன்னதானம் சிறப்பாக நடைபெறுவதற்கு ஊக்கமாகச் செயற்பட்டார்கள்.
கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக வாகனங்களைத் துப்புரவு செய்தல், குத்துவிளக்குகள் சட்ட விளக்குகளைத் தூய்மைப்படுத்தி வைத்தல், தீவட்டி பிடித்தல் முதலான பணிகளை மனம் விரும்பிச் செய்தவர் வல்லிபுரம் தம்பு அவர்கள். அவரது அமரத்துவம் அவரின் நல்ல சேவையை எடுத்துக் காட்டுவதாகும்.
2

Page 19
ہس~~۔ 20 ----
** புல்லினுற் பத்துக் கோடி
புவிமண்ணுல் நூறு கோடி
செல்லுமாங் காலந் தன்னிற்
செங்கல்லா யிரமாங் கோடி
அல்லியங் குழலாய் கேண்மோ ஆலய மடால யங்கள்
கல்லினுற் செய்த பேர்கள்
கைலைவிட் டகலார் தாமே. *
தேவஸ்தான பரிபாலனசபை:
வருங்கால வழிகாட்டிகளான இளைஞர்கள் பலர் இப்பொழு துள்ள பரிபாலனசபையில் அங்கம் வகிக்கின்றர்கள். இளைஞர்களே நாட்டின் மூலக் கருவாக உள்ளனர். அப்படியான இளைஞர்களுக்கு உந்து சக்தியாக இருப்பது ஆவசியகம்.
தேவஸ்தானத்தின் மதிப்பார்ந்த பரிபாலனசபை ஆலயத்தின் பல பகுதிகளைத் திருத்துவதுடன் அர்த்த மண்டபம், ஸ்நபன மண்1பம் முதலான மண்டபங்களுக்கு மூடுசாந்திட்டும், வசந்த மண்டபம், யாக மண்டபம், வைரவசுவாமி ஆலயம் முதலியனவற்றைப் புன ரமைப்புச் செய்யவும் திட்டந்தீட்டி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கோபுர வாசலிற் சிற்ப, சித்திர வேலைப்பாடுகளுடன் மணிமண்டபம் வளர்ந்துள்ளது. இத்திருப்பணிகளெல்லாம் மிகமிகச் சிறப்பாய்ப் பூர்த்தியடையப் பல இலட்ச ரூபா செலவாயிற்று.
சகல திருப்பணி வேலைகளும் நிறைவுபெற்றபின்னர் புனராவர்த் தன மகா கும்பாபிஷேகமும் இனிது நிறைவுபெற்றுள்ளது.
இறை தொண்டில் ஈடுபட்டிருக்கும் பரிபாலன சபைத் தொண் டர்கள் என்றும் எப்பொழுதும் பாராட்டுக்கு உரியவர்கள்.
சித்திவிநாயகப் பெருமான் அடியார்களுக்குச் சர்வசித்திகளையும் அளித்து அருளுவாராக !
தந்திமுகப் பிள்ளாய் சரண் :
* சிற்றுணர்வாற் குற்றமென்ன செய்துளே னேனுமவை
முற்றுமினி நீபொறுத்தென் முன்னிற்பாய் - கற்றுயர்ந்தோர் புந்திதனிற் றேன்றிப் பொழியுங் கருணைமதத் தந்திமுகப் பிள்ளாய் சரண்.’
- மாம்பழக் கவிராயர்

- 19 -
ஆலயம் ஆகம விதிப்படி அலங்காரமாக அமைதல் வேண்டும். அங்கு பூசைகள் ஒழுங்காக நடைபெற வேண்டும். அதே நேரத்தில் அர்ச்சகரையும் தகுந்தவாறு பேணி நடத்தல் வேண்டும். புன்ன?லக் கட்டுவன் ஆயாக்கடவைச் சித்திவிநாயகர் ஆலயத் திருத்தொண்டுகள் என்றும் சிறந்தமுறையிலேயே செய்யப்பட்டு வருகின்றன.
பரிவார தெய்வங்கள் :
சுவாமி 2-Luth
நாகதம்பிரான் - சுப்பிரமணியம் - நாகேந்திரம் வள்ளி, தெய்வநாயகி சமேத
முருகப் பெருமான் - முத்துத்தம்பி - வன்னித்தம்பி
நவக்கிரகம் - சங்கரப்பிள்ளை - இராசரத்தினம் வைரவசுவாமி - சீனிவாசகம் - கந்தையா சண்டேசுர மூர்த்தி - குட்டித்தம்பி - நாகமுத்து
வெளிப்புறக் காட்சிகள் :
கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது இராஜகோபுரம். கடம்பு, வன்னி, நாகம், பன்னீர், வில்வம், நெல்லி முதலிய தெய்வாம்சத் தருக்கள் நிறைந்து பொலிகின்றன. மகிழ், ஆல், சவுக்கு, அரசு போன்ற நன்மரங்கள் பெருஞ்சாலையை அலங்கரிக்கின்றன.
தேரோடும் வீதியின் மருங்குகளில் மருதநிலக் காட்சி மகிமை பொருந்தியது. அந்தணர்சாலை ஒரு புறம். அன்னதான மண்டபம் இன்னுெருபுறம். அருகே திருத்தேர் முட்டி. சித்திவிநாயகர் ஆலய முகப்பில் வித்தியாலயம் அமைந்திருப்பது பெருங்காட்சி. இந்த அழகு தருங் காட்சிகளையெல்லாம் மெளன தவ முனிவரான மஹா வித்துவ சிரோமணி சி. கணேசையர் அவர்கள் தென்கிழக்குத் திசை யில் சிலை உருவில் இருந்து பார்த்து மகிழ்ந்துகொண்டிருக்கின்ருர்கள்.
பரிபாலன சபை:
காலத்துக்குக்காலம் ஆலய பரிபாலன சபையைச் சேர்ந்தவர்கள் மிகவும் கண்ணியமாகத் தமது கடமைகளை நிறைவேற்றிவந்துள் ளார்கள். வீட்டுக் கருமம்போல எண்ணுது தெய்வகாரியம் என்ற நம்பிக்கையுடன் பரிபாலன சபை தொழிற்பட்ட காரணத்தினல் ஆலயம் பலவழிகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளது. ஆலயத் தொண்டு களில் ஈடுபடுபவர்களுக்குக் கைலாசவாழ்வு கிடைக்கும்.

Page 20
- O -
"புல்லினுற் பத்துக் கோடி
புவிமண்ணுல் நூறு கோடி
செல்லுமாங் காலத் தன்னிற்
செங்கல்லா யிரமாங் கோடி
அல்வியங் குழலாய் கேண்மோ - Holl I FILT IIIAET
கல்வினுற் செய்த பேர்கள்
கைலேவிட் கலார் தாமே."
தேவஸ்தான பரிபாலனசபை:
வருங்கால வழிகாட்டிகளான இளேஞர்கள் பலர் இப்பொழு துள்ள பரிபாலனசபையில் அந்த வகிக்கின்றர்கள். இளைஞர்களே நாட்டின் மூலக் கருவாக உள்ளனர். அப்படியான இஃாஞர்களுக்கு உந்து சக்தியாக இருப்பது ஆவசியகம்
தேவஸ்தானத்தின் மதிப்பார்ந்த பரிபாலன சபை ஆலயத்தின் பல பகுதிகளேத் திருத்துவதுடன் சீர்த்த மண்டபம், ஸ்தபா மண்ட பம் முதலான மண்டபங்களுக்கு மூடுசாந்திட்டும், வசந்த மண்டபம், பாக மண்டபம், வைரவசுவாமி ஆலயம் முதலியனவற்றைப் புன ரமைப்புச் செய்யவும் திட்டந் நீட்டி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கோபுர வாசளிற் சிற்ப, சித்திர வேலேப்பாடுகளுடன் மணிமண்டபம் வளர்ந்துள்ளது. இத்திருப்பணிகளெல்லாம் மிகபிதழ் சிறப்பாய்ப் பூர்த்தியடைப்ப் பவு இலட்ச ரூபா செல்வாயிற்று.
சகல திருப்பணி வேலைகளும் திறைவுபெற்றபின்னர் புனராவர்த்
கிசி மிசா கும்பாபிஷேகமும் இனிது நிறைவுபெற்றுள்ளது.
இறை தொண்டில் ஈடுபட்டிருக்கும் பரிபாலன சபைத் தொண்
டர்கள் என்றும் எப்பொழுதும் பாராட்டுக்கு உரியவர்கள்.
சித்திவிநாயகப் பெருமாள் அடியார்களுக்குச் சர்வசித்திகளையும் அளித்து அருளுவாரா;
தந்திமுகப் பிள்ளாய் சரண் :
"சிற்றுணர்வாற் குற்றமென்ன செய்துளே னேனுமவை
முற்றுமினி நீபொறுத்தென் முன்னிற்பாய் - கற்றுயர்ந்தோர் புந்திதனிற் ருேன்றிப் பொழியுங் கருணமதத் தந்திமுகப் பிள்ளாய் சரன்."
- மாம் முக் கவிராயர்

剧目g哥ngn@@@n温的温的 ș@s@somnia się dogol figo@g; quo seus
- |-
--~~~~----------_________

Page 21
ప
&& 8.
ΣΕ: 喇噶鞘蔷
மீ திருவிழாவிலன்று விநாயகர் திருவிமானத்தில்
எழுந்தருளுகின்ருர்,
 
 
 

ஐங்கர வரதன் (வித்துவான் திருமதி வசந்தா வைத்தியநாதன்)
உருகும் அடியார் அள்ளுற
உள்ளே ஊறும் தேன்வருக உண்ணத் தெவிட்டாச் சிவானந்த ஒளியே வருக புலன்வழிபோய்த் திருகும் உளத்தார் நினேவினுக்கும்
சேயாய் வருக எமையாண்ட செல்வா வருக உமைஈன்ற
சிறுவா வருக இணவிழியாற் பருகும் அமுதே வருகஉயிர்ப்
பைங்கூழ் தழைக்கக் கருணமழை பரப்பு முகிலே வருகநறும்
பாகே வருக வரைகிழித்த முருக வேட்கு முன்னுதித்த
முதல்வா வருக வருகவே மூரிக் கலேசைச் செங்கழுநீர்
முனியே வருக! வருகவே!!
நாதத்திலிருந்துதான் இவ்வுலகம் தோன்றியது என்பது ஆராய்ச்சி பாளர்களின் முடிபு. சப்தம் இல்லேயேல் உலகம் இல்லே. உலக இயக் கத்திற்கு ஆதாரமானவை ஒலி, ஒளி ஆகியவை. சாதாரணமாக ஓர் பயிரை நாட்டி நாம் சோதனை செய்தால் ஒலி, ஒளி ஊடுருவாக இடத்தில் அவைகள் செழிப்பதில்லை. பயிருக்கு மட்டுமல்ல உயிருக்கும் அவை தேவைதான் இதனை நன்கு உணர்த்தும் முகமாக ஒலிக் கடவு ளாக விநாயகப்பெருமானையும், ஒளிக் கடவுளாக முருகப் பெருமானே யும் அமைத்துப் போற்றியமை நமது முன்னேரின் நுனிப்புணர்விற் குச் சான்ருகும்.
வேதம் அனுதியானது; அறிவுமயமானது. இந்துமதத்தின் அரிய பொக்கிஷமே வேதம்தான். அப்படிப்பட்ட மாண்புமிகு வேதமும் பிரணவ ஒலியை முன்கூறியே துவங்குகின்றது. பிரணவ ஒலிக்குள் இப் பிரபஞ்சம் அடங்கும். இத்தகைய பெருமைபொருந்திய பிரணவ வடிவமே விநாயகரின் தனித்த வடிவம். பிரம்மம் ஆனந்தத்தின் நிறைவு. குழந்தை முதல் பெரியோர்வரை அனவருக்கும் மகிழ்வைக் கொடுப்பது, எத்துனே முறை பார்த்தாலும், மீண்டும் மீண்டும் பார்க்கத்
3.

Page 22
- 22 -
தூண்டுவது, நிலவு, கடல், யானை இவைகள். இவைகளை அலுக் காமல் சலிக்காமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம். பார்க்கப் பார்க்க மனச்சுமை குறைந்து மகிழ்வு மீதூறும். அதனுல்தான் மேலும் யானை வடிவத்தை உடைய பெருமானப் பிரணவத்திற்குப் பொரு ளாக்கினர் நம் முன்னேர்.
** அணேரணியான் மஹதோ மஹியான் ' என்ற வாக்கி யத்திற்கு இலங்க சிறிய பலமில்லாத சிற்றெலிமீது மிகப்பெரிய வடி வத்தை உடைய **ஸ்துரலகாயரான" விநாயகர் ஆரோகணிக்கின் ருர். இதில் மற்ருெரு பொருளுமுள்ளது. எழுத்துக்களின் மூலம் ** ஓம்" காரம் நெடிய ஒலிகொண்ட ‘ஓ’ என்ற உயர் முயற்சியின் றித் தோன்றும் மிகச்சிறிய மெய்யின் மேல் இவர்ந்திருப்பதும் சிந்திப் பதற்கு இனியது.
ஓங்காரம் என்பதன் பொருள் உயர்த்துவது என்பதாகும். முறைப் படி உச்சரிப்பவனை உயர்ந்த நிலையில் சேர்ப்பது. உபதேசம் பெற்ற ஆன்மா பருவுடல், நுண்ணுடல், காரணவுடல் என்ற மூன்று நிலை யையும் அகற்றி பிரகிருதி மண்டல அளவிற்கு உயரும் என்பது அதர்வசிகோபநிஷத் கூறும் உண்மைப் பொருளாம்.
விலங்கினங்களுள் தலைமையால் தன்னை உயர்த்திக்கொண்ட யானை நாதத்திற் தோன்றியதென நச்சினர்க்கினியர் கூறுவர். விநாயகப் பெருமான் யானைமுகம் கொண்டதற்கும் பல பொருத்தமான கார ணங்களை திருஆவடுதுறை ஆதீன வெளியீடாகிய **கணபதி” என்னும் நூலில் அதன் ஆசிரியரான மகாவித்துவான் ச. தண்டபாணிதேசி கர் அவர்கள் சுட்டுகின்றர்கள்.
யானை விலங்கினங்களுள் மிகப் பெரியது; ஆற்றல் மிக்கது. எத னையும் வருத்தமின்றிச் சுமப்பது. எத்துணை பெரியபடை ஆயினும் அஞ்சாது அழித்து வெற்றிகாணும் இயல்புடையது. படைக்கெல் லாம் தலைமைப்படையாய் இயங்குவது. காலம் வருந்துணையும் காத் திருந்து எதிரியை அழிக்கும் பெற்றியையுடையது. இதனை "ஒளித்த துப்பு' என்று புறநானூறு புகழ்ந்து பேசும். மும்மதம் உடையது. ஏழுமுழம் உயர்ந்தது. ஐந்துறுப்பும் நிலனுறத் தாழ்ந்தது. வனசரம், நதிசரம், கிரிசரம் என்ற மூன்று பகுப்பு உடையது. உணவு கொடுத்து அன்புடன் பாதுகாக்கும் பாகர் தன் காலில் அடிவைத்தால் முடி மேல் வைத்து உயர்த்துவது. அவர்கள் கட்ட விரும்பினுல் சங்கிலி யையும் எடுத்துக் கொடுத்து கட்டுக்குள் விரும்பி அகப்படுவது. இசைக்கு வயப்படுவது. இத்துணை ஒற்றுமையையும் விநாயகர்மேல் ஏற்றிப் பார்ப்போம்.

۔۔۔۔ 23 ہس۔
விநாயகர் தனக்குத் தானே தலைவனப் வேறு தலைவரின்றி விளங் குபவர். தேவர்கள் யாருக்குமில்லாத அளவிறந்த ஆற்றல் வாய்ந் தவர். இவ்வுலகம் யாவற்றையும் தனது வயிற்றகத் தடக்கி இடையூறு புகுதாமல் காப்பவர். எப்படிப்பட்ட இன்னல்களையும் பொடிப்பொடி யாக்கி அடியாரைக் காப்பவர். விக்னராசர், கணங்களுக்கெல்லாம் பதியாயிருப்பவர். ஆன்மாக்களுக்குப் பக்குவம் வருந்துணையும் பார்த் திருந்து அவர்கள் பரிடா கந் தெரிந்து வினை எதிரியை வேரறத் தொலைப் பவர். குண்டலியில் விளங்கி மூலாதாரம் முதல் ஆஞ்ஞா சக்கரம் ஈருக ஓங்கி, அதனையும் கடந்து துவாதசாந்தமாகிய ஏழாம் இடத்திலும் உயர்ந்து விளங்குபவர். திருவடிகளும், அபய வரத கரங்களும், திரோ தனத்தைச் செய்யும் துதிக்கையுமாகிய ஐந்து உறுப்புக்களும் மிக நீண்டு தன் அடியவர் எங்கிருந்தாலும் தேடிக்காக்கும் சிறப்புடையவர். பிரகிருதி தத்துவம், சுத்தவித்யா தத்துவம், ஈசுவர தத்துவம் என்ற மூன்றிடங்களிலும் விளங்கிப் பிரகிருதி, தெய்வம், பரஞானம் என்ற மூன்று நிலையில் அவரவர்களுக்குத் தக தோற்றம் தருபவர். பூவும், நீருங் கொண்டு, பொழுது வழுவாமல் தோய்ந்த அன்போடு திருவடி யைத் தொழுதால் அவர்களைத் தலேயாய இன்பவுலகில் ஏற்றி வைப் பவர். தன்னுலும், பிறவுயிர்களாலும், தெய்வங்களாலும் துன்பம் வராமல் பாதுகாப்பவர். தன்னைக் கட்ட அன்பாகிய தொடரைத் தாமே கொடுத்து அவர்களது உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமாகிய தறியில் கட்டுண்டு நிற்பவர். மேலும் அவர்கள் அளிக்கும் வினைகளும் பசுபோதமுமாகிய உணவையுட்கொண்டு அவர்களது கனிந்த தோத் திரப் பாக்களுக்கு வயமாகி வேண்டிய வரமீபவர்.
இத்துணை அற்புத ஒற்றுமைகள் வேழத்திற்கும், வேழமுகக் கடவுளுக்கும் அமைந்திருப்பது சிந்தனைக்கோர் அரிய விருந்து.
கால ஆராய்ச்சியிலும் கணபதிக்கோர் தனி இடமுண்டு. ரிக் வேதத்தில் "கணபதி” என்ற சொல் ஆளப்படுவதால் வேதகால முதலே விநாயக வழிபாடு இருந்தது என்பதை உடன்படுவாரும், முரண்படுவாரும் என இரு பிரிவினர் உண்டு. தைத்ரீய ஆரண்யகத்தில் தந்நோ தந்திந் பிரசோதயாத்" என்ற கணபதி காயத்திரியில் வரும் தந்திந்' என்ற சொல் கொம்புள்ள விநாயகரையே குறிக்கும் என்பது ஆராய்ச்சியாளர்களின் துணிபு.
சங்கநூற் குறிப்புக்களில் விநாயகரை வெளிப்படையாய்க் குறிக்கா விடினும் மணிமேகலையில் "கரகங் கவிழ்த்த காவிரிப் பரவை’ என்ற வரியில் காக வடிவங்கொண்டு அகத்தியரின் கமண்டலத்தைக் கவிழ்த்த விநாயகப் பெருமானின் வரலாறு உள்ளிடையாய் அறிய முடிகின்றது. தொல்காப்பியச் செய்யுளியல், தண்டியலங்கார உரை, கல்லாடம் முதலிய பழந்தமிழ் நூல்களிலும் பிள்ளையாரைப் பற்றிய குறிப்புக்கள் ஆங்காங்கே பளிச்சிடுகின்றன. . . . .

Page 23
سسے 24 سس۔
இவைகளை வைத்துப் பார்த்தால் பிரணவ வடிவினரான ஓங்கார ரூபனின் வழிபாடு காலஏணியில் முன்னிடத்தை அடைகின்றது.
விநாயகருடைய உருவம் எப்படி தனிச்சிறப்பு. ள் ஒளிர்கின்றதோ அதுபோல அவரை வழிபடும் முறையும் தனித்து இலங்குகின்றது. சிரசிலே மும்முறை குட்டிக் கெ: ண்டு காதைப் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போடுவது இப்பெருமானுக் கென்றே ஏற்பட்ட தனித்த வழிபாடு. தோர்பி-கர்ணம் என்பதே தோப்புக் கரணம் என மருவியது. "தோர்பி’ என்ருல் கைகளால் எனப்பொருள். ** கர்ணம்' என்ருல் காது. அதாவது கைகளால் காதுகளைப் பிடித்துக் கொள்வது.
அறிவியல் வழியாகப் பார்த்தால் நாம் பெற்ற உபதேசங்கள் செவிவழியாகச் சென்று மூளையில் குட்டிக்கொண்டு, தோர்புக் கரணம் செய்கின்ருேம். இதனை ஞானஸ்வரூபியான கணநாதனின் முன்பு செய்வது, சாலவும் பொருத்தமுடையதே.
இன்னெரு பொருளும் உண்டு. கரணம் என்றல், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற அந்தக்கரணங்கள் நான்கும் தம் வய மிழந்து ஞான நாயகன் முன் தோற்று நிற்பதாலும் இது தோற்புக் கரணம் என்று பெயர் பெற்றதாகவும் கொள்ளலாம்.
வழிபாட்டு முறை எப்படித் தனித்தன்மையுடன் விளங்குகின்றதோ அதுபோன்று வேழமுகனின் நிவேதனப் பொருட்களும் சிறப்பிடம், பெறுகின்றன. 'கவவு’ என்று பழந்தமிழ் நூல்களில் குறிக்கப் பெறும் மோதகம் முதன்மை இடத்தைப் பெறுகின்றது. ‘முதம்" என்றல் மகிழ்ச்சி. மகிழ்ச்சியை அளிக்கக் கூடியது ஆதலால் அது மோதகம். அதுமட்டும் மல்ல,
* வாழைக் கணிபல வின்கனி மாங்கனி தாஞ்சிறந்த
கூழைச் சுருள்குழை யப்பம்எள் ஞண்டைஎல் லாம்துறுத்தும் பேழைப் பெருவயிற் றேடும் புகுந்தென் உளம்பிரியான் வேழத் திருமுகத்துச் செக்கர் மேனி விநாயகனே."
-மூத்தவிநாயகர் இரட்டைமணிமாலை. முக்கனி வகைகளும், பருப்பு வகைகளும் பெருமான் உகப்பவையே. **கடலை பயருேடு" என்ற திருப்புகழில் அருணகிரிநாதர் ஓர் பெரிய பட்டியலே போட்டுத் தருகின்ருர்,
لأسد * *

- 25 -
ஆகமங்களாலும், அஷ்ட சித்திகளாலும் அறியப்படாத அந்தப் பரம் பொருள் அன்பர்களின் அப்பழுக்கற்ற அன்பிற்குக் கட்டுப்படு கின்ருன். மஞ்சள் மாவிலோ, மண்ணிலோ, பசுஞ்சாணத்திலோ, புற்று மண்ணிலோ பிள்ளையார் பிடித்து வழிபடுவதன் பொருள் அரிதில் அரிதாய் விளங்குபவன் எளிமையில் எளிமையாய் அருள் செய்கின்ருன் என்பதே.
விநாயகப் பெருமானின் ஏகாக்ஷர மந்திரத்தைத் தியானித்து உலகம் உய்யப் பதிணெண் புராணங்களையும் ஆக்கித் தந்தவர் வியாச முனிவர். தகூடின் முத்கல முனிவரின் உபதேசப்படி கணபதியை வழிபட்டு சிவநிந்தை செய்த பாவத்தைப் போக்கிக் கொண்டான். மேலும், பிரமன், விஷ்ணு, இந்திரன், முருகன், மன்மதன், கிருஷ்ணன், ஆதிசேஷன், ஞனகன், கார்த்தவீரியன், பரசுராமன் முதலிய தேவ சிரேஷ்டர்களும், நர சிரேஷ்டர்களும் கணபதியை வழிபட்டே நலம் பெற்றனர்.
**கணபதி பூசை கைமேற் பலன்’ வெகு விரைவாக அருள்புரியும் ' கழிப்ரப் பிரசாத’ மூர்த்தியான
ஐங்கர வரதனை வழுத்தி அழியாவிடு பெறுவோம். அருள் நலம் பெறுவோம்.

Page 24
铨_ முருகன்துணை
வாகீச கலாநிதி பூரீ கி. வா. ஜகந்நாதன் சூட்டிய ஆயாக்கடவைச் சித்திவிநாயகர்
செஞ்சொல்மால
பொன்னர் மார்பன் சதுர்முகத்தோன்
பூபன் இந்தி ரத்திருவன் நன்ன மத்தைத் தினம்சாற்றி
நன்மை பெறுவார்; ஆதலினல் புன்ன லைக்கட் டுவப்பதியில்
புனித ஆயாக் கட்வையில்ே எந்நா ளும்கோ யில்கொள்ளும்
ஏரம் பன்தாள் வணங்குவமோ ?
நாளும் நாளும் வயிற்றுக்கா
நலிந்து தொழில்கள் பலசெய்தோம் : ஆளும் பொருள்கள் பலபடைத்தோம் :
ஆயின் அவற்ருல் பயன்என்னும் ? நீளும் வாழ்வு முடிந்துவிட்டால்
நீலக் கடாவில் மேல் காலன் ஆளும் பாசத் துடன்வருவான்
ஆயாக் கடவை விநாயகனே.
மலங்க ளெல்லாம் போக்குதற்கும்
மனிதர் அன்பு கொள்வதற்கும் தலங்கள் பலவும் எழுந்தருளித்
தயையை வழங்கும் பெருமானே : புலங்கொள் பெரியோர் போற்றுகின்ற
பொற்பார் ஆயாக் கடவையினில் நலங்கள் வழங்க எழுந்தருளும்
நல்ல விநாயக னேபோற்றி.

- 27 -
சொத்துச் சேர்த்துச் சுகம்பெற்றுத்
தொகுத்த பண்டம் பலவைத்தும் மெத்தத் துக்கம் அடைவதன்றி
மேலாம் நன்மை ஏதுமுண்டோ! வித்தை பலவும் வழங்குகின்ற
மேலோய் ஆயாக் கடவையினில் அத்தா நின்றன் அடியன்றி
அரணம் உண்டோ வேறெமக்கே.
பெரியோர் தம்மை நாடிஅவர்
பேசும் அரிய உரைகேட்டுத் தெரிந்தே நல்ல வழிதன்னில்
சிதையா வண்ணம் நடக்கின்ற அரிதாம் வாழ்வைத் தந்தருளாய்
ஆயாக் கடவை தனிலுறையும் கரிமா முகத்துப் பண்ணவனே
கருணை மலையே போற்றியரேr.
மங்கை மார்கள் தரும்சுகமும்
மண்ணும் பொன்னும் தரும்வளமும் இங்கே பெற்ருல் என்பயனும்?
எருமை மேலே காலன்வந்தால் அங்கே அவைவந் தெமைக்காக்க
ஆகும் கொல்லோ? ஆதலினல் எங்கள் ஆயாக் கடவையினில்
ஏரம் பன்றன் தாள்தொழுவோம்.
அரச போகம் மிகப்பெரிதென்
றவாவு கின்ருர் மனிதர்கள் ; சுரர்தம் தலைவன் இந்திரற்கும்
தொல்லை வந்து சார்வதுண்டே நரர்கள் தம்மைக் குழந்தைகளா
நல்ல வண்ணம் பேணுகின்ற துரையாம் ஆயாக் கடவையினில்
சுமுகன் தாளை இறைஞ்சுவமே.

Page 25
சொல்லச் சொல்ல இனிக்கின்ற
தூய நாமம் பலகொண்டான் : மெல்ல அவற்றை நாவினிக்க
மேவிச் சொல்லப் பழகுமினுே அல்லல் இல்லை ; அம்மைக்கண்
அரிய முத்தி வாழ்வெய்தும் ; நல்லோர் பேணும் பெருமானை
நாளும் நாளும் புகழ்வோமே. 8
போற்றி போற்றி என்றுசெல்வர்
புறத்தே சென்று நலியாமல் ஏற்றி லேறும் எம்பெருமாற்
கினிய புதல்வன் வேழமுகன் ஆற்றல் மிக்கான் புன்னைநகர்
ஆயாக் கடவை தனிலுள்ளான் ஏற்றம் அறிந்து வணங்கிநின்ருல்
யமனும் வருதற் கஞ்சுவனே. 9
தொல்லை போகும் ; வறுமை அறும் ;
துன்பம் யாவும் அகன்றுவிடும் ; நல்ல மனிதர் இணக்கம் வரும் ;
நாளும் நாளும் மனச்சாந்தி புல்லும் ; ஆயாக் கடவையினில்
புனிதன் வேழ முகத்தோன வல்ல படியே போற்றுமின்கள்
வாழ்வில் இன்பம் காண்பீரே. 0 167-1982

சிவமயம்
புன்னுலைக்கட்டுவன், ஆயாக்கடவை ஐங்கரனுரஞ்சல்
வித்துவசிரோமணி பிரம்மபூரீ சி. கணேசையரவர்கள் பாடியது
srůL
வெண்பா
சித்தி யுறுவார் தெளியுங் கலையுறுவார் பத்தி யுறுவார் பயனுறுவார் - அத்திமுக முன்னவனை யைங்கரனை முத்திதரும் புன்னை நகர் மன்னவனை முன்போற்று வார்.
நூல் ۔۔۔۔۔۔۔ சீர்பூத்த பூசுரர்வம் மிசமு மேலாஞ்
செல்வமிகும் வேளாளர் குலமு மோங்கும் பேர்பூத்த புன்னமா நகரந் தன்னிற்
பெருமைகொளா யாக்கடவைப் பதியின் மேவும் நீர்பூத்த செஞ்சடையு மூன்று கண்ணும்
நிலவுமொரு கோடுமிரு செவியுங் கொண்ட கார்பூத்த கரிமுகவன் பாதம் போற்றிக்
கருணையுட னவற்கூஞ்ச லோது வாமே.
மாமேவு பவளத்தாற் கால்க ளாக்கி
மதிவயிர ரத்தினத்தால் விட்டம் போக்கித் துரமேவு தங்கமணிப் பலகை தேக்கிச்
சுடர்மலியுந் தரளத்தாற் கயிறு வீக்கிப் பூமேவு சித்திரங்கள் பொலியச் செய்த
புட்பகநேர் தருமூஞ்ச லினிது மேவிக் காமேவு புன்னைமா நகரி லாயாக்
கடவையுறு மைங்கரரே யாடீ ரூஞ்சல்,

Page 26
- 30 -
சந்திரனுஞ் சூரியனுங் குடைக டாங்கச்
சதா கதிவெண் கவரிமிளிர் கரத்தில் வாங்க முந்துசல பதிகொண்ட வட்டந் தூங்க
முன்னுதிறன் மறலிகொளும் வாளு மோங்க அந்தரர்கள் சொரிதருபூ மாரி தேங்க
J96öilçıpurf மாதியவாச் சியங்க ளேங்க கந்திகள்குழ் புன்னைமா நகரி லாயாக்
கடவையுறு மைங்கரரே யாடீ ரூஞ்சல்,
மண்ணுலகு முதலான வுலகம் யாவு
மற்றுனையே முதற்பூசை செய்து போற்ற எண்ணுமவர் கருமமெலா மினிதி ஞங்கே
இடரின்றி முற்றுறுமா றியற்றுந் தேவே உண்ணிலவு மொருபொருளே யுலக மூர்த்தீ
ஓங்கார வடிவாகி யுற்ற சோதீ கண்ணியஞ்சேர் புன்னமா நகரி லாயாக்
கடவையுறு மைங்கரரே யாடீ ரூஞ்சல்.
குலையோங்கு தெங்கினுயர் காலாற் சூழ்ந்து
கொடியேறு செங்காந்தண் மலர்க்கை கூப்பி இலையோங்கு பூங்கொம்பாற் றலைவ ணங்கி
இசைமருவுஞ் சுரும்பினின நாவாற் பாடி நிலையோங்கு கருவிளையி னலர்க்க ளுேக்கி நிதஞ்சோலை வழிபடுவ போல மேவுங் கலையோங்கு புன்னைமா நகரி லாயாக்
கடவையுறு மைங்கரரே யாடீ ரூஞ்சல்,
பெருமைதிகழ் நாதமுத லான வாடப் பேசலுறுங் காலமுத லாக மாயை வருவனவாந் தத்துவத்தின் வகையு மாட
வளமருவும் பிரகிருதி தானு மாட உருவுபெறும் பிரணவமாம் பீட மேறி
யுகந்திணிதங் காடுகின்ற வொருமைத் தேவே கருதலுறும் புன்னமா நகரி லாயாக்
கடவையுறு மைங்கரரே யாடீ ரூஞ்சல்,

- 31 -
நிதிமருவு குழையினெடு செவியு மாட
நிலவுதரும் பிறையினெடு சடையு மாட மதிபுயமும் வலையமொடு மருவி யாட
மணிபொலியும் மதாணியுடன் மார்பு மாட நதிபெருகும் மதமுடைய கரமு மாட
நறைமருவுங் கமலநிக ரடியு மாட கதலிமிகும் புன்னமா நகரி லாயாக்
கடவையுறு மைங்கரரே யாடீ ரூஞ்சல். 7
கொற்றவயி லத்தனுக்கு முன்வந் தோனே
குஞ்சிதபா தத்தனுக்கு முன்வந் தோனே உற்றவறக் கண்ணுருக் கருள்செய் வோனே
ஒதியுனைக் கண்ணுருக் கிருள்செய் வோனே பற்றலஞங் கயமுகனைச் செற்ற மைந்தா
பண்ணமையும் மொழியுமையாள் பெற்ற மைந்தா கற்றவர்சேர் புன்னமா நகரி லாயாக்
கடவையுறு மைங்கரரே யாடீ ரூஞ்சல். 8
அருளுறுமைங் கரத்தாரே யாடீ ரூஞ்சல்
அறையுமொரக் கரத்தாரே யாடீ ரூஞ்சல் தெருளினர்.நம் பிறையவரே யாடீ ரூஞ்சல்
திகழ்சடையிற் பிறையவரே யாடீ ரூஞ்சல் மருளினருக் கண்ணுரே யாடீ ரூஞ்சல்
மருவியமுக் கண்ணுரே யாடீ ரூஞ்சல் கருளிலர்சேர் புன்னைமா நகரி லாயாக்
கடவையுறு மைங்கரரே யாடீ ரூஞ்சல், 9
வாழி
நவிலுமிசை மறையவர்வம் மிசமும் வாழி
நண்ணுமுடி மன்னர்கள்பின் னேர்கள் வாழி தவமுமுயர் வேள்வியுநல் லறமும் வாழி
தகைமைபெறு மானினமும் முகிலும் வாழி சிவசமய நெறியினெடு நீறும் வாழி
செழுமறையா றங்கமொடு பிறவும் வாழி கவிஞருறை புன்னமா நகரி லாயாக்
கடவையுறு மைங்கரரும் வாழி வாழி. 10

Page 27
- 32 - .
எச்சரிக்கை சிவஞர்தரு கயமாமுகத் தேவே யெச்சரிக்கை w 1 தேனர்மொழி யுமையாடருஞ் செல்வா வெச்சரிக்கை
தவமேவிய முனிவோர்பெறுந் தவமே யெச்சரிக்கை
சாராரிடர் தீராததொர் த ைகயா யெச்சரிக்கை
கயமாமுக வவுணற்கொரு காலா வெச்சரிக்கை கடிமா மலர் நிகர்மேவிய காலா வெச்சரிக்கை
அயமேறிய வறுமாமுகற் கண்ணு வெச்சரிக்கை அவிருஞ்சுடர் வடிவாயமுக் கண்ணு வெச்சரிக்கை
நலமேவிய வலவைக்கொரு நாதா வெச்சரிக்கை
நாராயணன் பூசித்திடு நம்பா வெச்சரிக்கை
அலையார்நதி புனையுஞ்சடை யமலா வெச்சரிக்கை அணிமேவிய புன்னைப்பதி யரசே யெச்சரிக்கை.
பராக்கு தும்பிமுகங் கொண்டருளுஞ் சோதீ பராக்கு சுடர்சடையி னதிகொண்ட துரயா பராக்கு அம்பிகைமு னின்றருளுமன்பா பராக்கு அரவினெடு மதிபுனைந்த வாதீ பராக்கு.
நாதநிலை கடந்துநின்ற நாதா பராக்கு ஞானமகல் மூடரக நண்ணுய் பராக்கு போதநிலை யோர்களுளம் புகுவாய் பராக்கு புலவோர்கள் பாடலுறும் பொருளே பராக்கு.
வேதமுடி வாகிநின்ற விமலா பராக்கு விண்ணேர்கள் தொழநின்ற மேலோய் பராக்கு ஆதிநடு முடிவாய வமலா பராக்கு அணிகொள்புன், னைப்பதியி லரசே பராக்கு.

மங்களம்
அத்திமுக முன்னவற்கு மங்களம் - மிக்க அருள்வடிவ மாயவற்கு மங்களம் முத்திதரு மேலவற்கு மங்களம் - தேவ முதல்வர்பணி தேவனுக்கு மங்களம்.
சுத்தபரி பூரணற்கு மங்களம் - தூய சோதிவடி வானவற்கு மங்களம் சித்திதரு செல்வனுக்கு மங்களம் - செம்பொன் சிமயமயி லீன்றவற்கு மங்களம்.
ஆதிபர மானவற்கு மங்களம் - செங்கை அங்குசபா சத்தனுக்கு மங்களம் பூதகண நாதனுக்கு மங்களம் - எங்கள் புன்னைநக ரீசனுக்கு மங்களம்.
b தவவியப்பு
தகைகொளைங்கரன் றரிசன மளித்த சாலுறு முன்னத் தவத்தினை வியத்தல்.
கலிநிலைத்துறைகள் பன்னு மாமறை முனிவர்க ளமரர்கள் பலருஞ் சென்னி யாற்றெழு தேத்திடுங் கயமுகத் தேவைப் பின்னு வார்சடைப் பெருமனைத் தொழுதிடப் பெரிது முன்னை யாஞ்செயுந் தவமெனே மூதுல கத்தே.
ஊர ராமுடிப் பிஞ்ஞக லுருவமே யுலகென் முரு மோர்வுற வவன்றன வலஞ்செய்தங் கையினிற் சேரு மாங்கனி வாங்கினேன் றனைத்தெரி சிக்க நேரி லாதியாஞ் செய்திடுந் தவமெனுே நிலத்தில்
பன்னி ரண்டுகை யுடையதோர் பகவன்மேற் பரிவான் மின்னை நேரிடை வள்ளிமுன் வேழமாய் மேவுந் தன்னை நேரிலா முதல்வனை யிறைஞ்சிடத் தமியேம் என்னை மாதவஞ் செய்தமோ விப்புவி யிடத்தே.

Page 28
- 34 -
அஞ்சு மாமுக னளித்திடு மைங்கரத் தமலன் செஞ்ச டாடவிக் கற்றையுந் திருமுகச் சிறப்பும் கஞ்ச மாமலர் நிகரெழிற் கழல்களுங் காண விஞ்சு மாதவ மென்கொலோ செய்தன மேஞள். 4.
மூரி மால்விடைப் பாகனர் மும்மதின் முருக்கச் சாரும் போதினி லூர்ந்திடுந் தேரினச் சறுத்த யாரு நேரிலா முதல்வனை யிறைஞ்சிட வினிதே பாரின் மீதியாஞ் செய்திடுந் தவமெனே பலநாள்,
வான வேசனை யமரரை யுயிருக வருத்தும் தான வேசனத் தன்னெரு கோட்டினுற் சயங்கொள் மான வேதனை யொருவரில் லான்றனை வழுத்த ஆன வேதவம் முன்னைநா ளுலகினி லமைத்த 6
காக மாகியே குறுமுனி கமண்டலம் கவிழா மேக வாகனன் மகிழ்வுறக் காவிரி விடுத்த ஏக மாகிய கடவுளை வணங்கிட வெமக்கு மாக லாயின வேதவம் முன்னைநா ளமைத்த 7
இலங்கை யீசனைப் பந்தென வாடிய விறையை நலங்கொள் பாரதந் தீட்டியே மேருவா நகமேற் றுலங்கு மாசெயும் பெருமனைக் கண்டியாந் தொழவே நிலஞ்செய் மாதவ மென்னையோ முன்னைநா னிட 8
வந்தி யாதவர் செயற்கிடை யூறுறு மாசெய் தந்தி மாமுகக் கடவுளை யுலகெலாந் தனைமுன் சிந்தை மேற்கொள நின்றவன் றனைந்தொழச் செகத்தில் முந்தி யாஞ்செயுந் தவத்தினை மொழிந்திட முடிமோ 9
கன்னல் சான்மொழி மலைவரு பிடிதருங் கன்றை மன்னு தானவ மாவினை வெல்வய மாவைப் புன்னை மாநகர் செய்தபுண் ணியந்தனைப் போற்ற முன்னை யாஞ்செயுந் தவமெனே விப்புவி முகத்தே. 10

(6)
சித்திவிநாயகன் துணை
சரணகதி மலர்ச் சுகந்தம்
அறுசீர் விருத்தம்
தொன்மைமிகு தீந்தமிழின் இலக்கணமாம்
தொல்காப்பி யத்தமிழின் உரைசமைக்க நன்னயமாய்ப் பத்தியொடு பூசனைசெய்
நல்லீழத் தமிழ்முனிவன் கணேசஐயர் புன்னைநகர் நல்லாயாக் கடவையுறை
பூரணஞம் வாரணனைப் போற்றிசெய்ய வன்னமுற அருள்செய்தே சரணமலர்
வழங்குவிநா யகன்சரணு கதிசுகந்தம்.
எண்சீர் விருத்தம்
புன்னை நகர் மக்களெல்லாம் பூரிப் பெய்த
பொன்கொடுத்துப் புகழ்கொடுத்துக் கல்வி ஈந்தே கன்னலென இனிக்குவள மெல்லாம் நல்கிக்
கருணைபுரி நல்லாயாக் கடவை வைகும் வன்னமருப் பழகன்வர லாற்றைக் கூறும்
வரம்நிறைமுத் தமிழ்ச்சர ஞகதி மலரில் பன்னவரும் கட்டுரைகள் கவிதைப் பூக்கள்.
பூத்திருந்தேன் மலர்ச்சரணு கதிசு கந்தம்.
இடைகலையும் பிங்கலையும் சுழுமு னயும் இன்பமாய் நுகர்பரம சுகமே நல்கும் தொடைமலரின் சுகந்தமணம் தெய்வீ கத்தின்
துரியநிலை தனையருளும் துதிக்க ரத்தான் படையனைத்தும் இடர்வினைகள் வேர றுக்கும் பரமசுகம் பாரினிலே பக்தர்க் கீயும் நடையழகுத் தமிழ்ச்சர னகதி மலரின்
நாயகன்தாள் மலர்ச்சரணு கதிசு கந்தம்.
-- sung Libou

Page 29


Page 30

排 靴
靴 翻 拙 靴 排 排
曲 邯 H. կի 曲 曲
|Hի
Hի
群 (
H H
靴
靴 1 群 翻
勘
叶 邯 翻 排 靴 排
邯 ( 排
北 靴
靴
睦
辑
虾 排
排
壮