கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிவபாக்கியம் காசிநாதன் அவர்களின் ஆத்ம சாந்தி மலர்

Page 1
Departed on 1st
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
ܘܥܠܬܐܡܶܗ.
 
 
 

~
雷)。
二
1-1 | م |
и " . | زیر | is R
- -
| LDol
-
F -
. . . ܝܐ ہیے۔ سے ہیں۔ ADEO ! 「」 て・ Fire
. " ----- 2.
. . .
S

Page 2

r
台左于
suኔ@ቻTፀሣ தமிழ் M
OO
* சிவமயம் g{{ଙ) is D
காலஞ்சென்ற திருமதி சிவபாக்கியம் காசிநாதன்
The Late
Mr.S. SIWAPAKIAM KASINATHAN
O2-12-1913 - O -09-1998
. دا 3 تنه ا خO
11

Page 3
OM SVAMAYAM
Anaimugan Aru Mugan Ambikai Ponnampalavan Jnana Guru Vanipatham Nadu
OM OM OM OM OM OM OM OM OM
 
 
 

சிவமயம்
ஆனைமுகன் ஆறுமுகன் அம்பிகை
பொன்னம்பலவன்
ஞானகுரு வாணிபதம் நாடு
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்

Page 4
NAMAVAZH
Jaya Ganesa, Jaya Ganesa, Jaya Ganesa Pahimam, Sri Ganesa, Sri Ganesa Sri Ganesa Rachamam Kantha Muruga, Kathirvelavanae Maintha Kumara Marainayaganae Kurubara Kuha Shanmuga Vetti Vella Vaa Va Valli Theiva Yaanai Maruvum Mayil Muruga Vaa Va Kumara Gurubara Muruga Saravana Kuha Shanmuga Jai Jai Jai Sivaya Nama Om, Sivaya Namaha Sivaya Nama Om, Namachi Vaaya Om Sakthi, Om Sakthi Om, Om Sakthi Om Aathi Sakthi, Maha Sakthi, Parasakthi Om
 
 
 
 

நாமாவளி
ஜெய கணேச ஜெய கணேச
ஜெய கணேச பாஹிமாம்,
பூரீ கணேச பூg கணேச
பூரீ கணேச ரக்ஷமாம்.
கந்தா முருகா கதிர்வேலவனே,
மைந்தா குமரா மறைநாயகனே.
குருபரா குகா சண்முகா
வெற்றி வேலா வாவா.
வள்ளி தெய்வயானை மருவும்
மயில் முருகாவாவா.
குமர குருபர முருக சரவண
குக சண்முக ஜே ஜே ஜே ஜே. சிவாய நமஓம் நமச்சிவாய.
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஒம்
ஆதிசக்தி, மகாசக்தி, பராசக்தி ஓம்.

Page 5
AUM SVAMAYAM THRUCHITTAMPALAM
VINAYAGAR VANAKKAM
1. Ainthu karaththanai aanai muhath thanai
Inthin ilampirai pohlum eitranai Nanthi mahan thanai ginaanak kolunthinaik Punthiyil valithth adi pohtu hinranae
— Thirumulular
2. Thiruvaakkum Seikarumam Kaikootum Sengncho
Peruvaakkum: Peedum Perukkum - Uruvaakkum Aathalaa Vaanorum Aanai Mugaththaanaik Kaathalaa Koopuvartham Kai
- Kabilatheva Naayanaar
3. Vaakundaam, nallamanamundaam maamalaraal Nokkundaam mayninudangathau pookundu Thupparthirumayni thumbikkaiyaan paadam Thappamal Sarvar thamakku
- Avvaiyaar
 
 

l.
விநாயகர் துதி
ஜந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்து அடி போற்று கின்றேனே.
- திருமூலர் திருமந்திரம்
திருவாக்கும்: செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் பெருவாக்கும்: பீடும் பெருக்கும் - உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக் காதலால் கூப்புவர்தம் கை.
- கபிலதேவ நாயனார்
வாக்குண்டாம், நல்லமனமுண்டாம் மாமலரான் நோக்குண்டாம் மேனிநுடங்காது பூக்கொண்டு துப்பார்திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு
- ஒளவையார்

Page 6
Aum Sivamayam
INTRODUCTORY SLOKAS
GANAPATHY STOTRUM
Wakra thunda maha kaya Soorya kodi Samapraba Nirvignam gurume theva Sarva karyesu Sarvatha Om shreem gam ganapathaye namaha (3)
GURU STOTRUM
Guru Brahma Guru Vishnu Guru Deva Maheswaraha Guru Saakshat Parabrama Thasai Shree Guruve namaha Om gum gurubyo namaha (3)
SAKTI STOTRUM
Sarvamanagala mangalye Sive Sarvartha saathike Sharanye thryambake gowri Narayaninamosthuthe Om thum thurgaye namaha (3) Om I'm saraswathye namaha (3) Om Shri mahaletchumiye namha (3)
 
 
 

ஒம் தியான சுலோகங்கள்
கணேஷா ஸ்த்தோத்திரம் வக்ர துண்ட மஹா காய சூர்ய கோடி ஸ்மப்ரப நிர்விக்னம் குருமே தேவா ஸர்வ கார்யேசு ஸர்வதா ஓம் பூரீம் கம் கணபதயே நமஹ (3)
குரு ஸ்த்தோத்திரம்
குரு ப்ரம்மா குரு விஷ்ணு குருதேவா மஹேஸ வரஹ குரு சாஷாத் பர ப்ரம்மா தஸ்மை பூg குருவே நமஹ ஓம் கும் குருப்யோ நமஹ (3)
சக்தி ஸ்த்தோத்திரம்
சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதிகே சரண்யே திரியம்பகே கெளரி நாராயணி நமோஸ்துதே ஓம் தும் துர்காயே நமஹ (3) ஓம் ஐம் சரஸ்வதியே நமஹ (3) ஓம் பூரீ மகாலட்சுமியே நமஹ (3)

Page 7
THEVARAM
1. Thodudaya Seviyan Vidai
Yerior Thooven Mathi SOodi Kadudaya Sudalaip Podi POOsiyen Ullang Kavar Kalvan Edudaya Malaran Munai Nadpaninth Thettha Arul Seitha Peedudaya Peramapura Merviya Pemman Nevanandray
– Thirugnana Sambanthar
Veitha Mothi Vennool Poondu Vellai Yeru Ther Pootham Choolap Polia Varuvar Puliyin Uri Tholar Nathaa Enavum Nakka Enavum Nanba Ena Nindru Paatham Tholuvaar Paavam Theerpar Palana Nagarareh
- Thirugnana Sambanthar
. Maiyaadiya Kandamalai Magalpaagamathudaiyaan
Kaiyaagiya Kedilkari Urimoodiya Voruvan Seiyaadiya Kuvalaimmalar Nayanaththavalodum Neiyaadiya Peumaanidam Neiththaanamenirey
- Thirugnana Sambanthar
 
 

தேவாரம்
திருஞானசம்பந்தநாயனார் பாடியவை
தோடுடைய செவியன் விடை யேறியோர் தூவென் மதி சூடி காடுடைய சுடலைப் பொடி பூசியென் உள்ளங் கவர் கள்வன் ஏடுடைய மலரான் முனை நாட்பணிந் தேத்த அருள் செய்த பீடுடைய பிரமாபுர மேவிய • , பெம்மான் இவனன்றே
- (திருஞானசம்பந்தர்)
வேதமோதி வெண்ணுால் பூண்டு வெள்ளை யெருதேறிப் பூதஞ்சூழப் பொலிய வருவார் புலியினுரித் தோலார் நாதா வெனவு நக்கா வெனவு நம்பாவென நின்று பாதந் தொழுவார் பாவந்தீர்ப்பார் பழன நகராரே.
-(திருஞானசம்பந்தர்)
மையாடிய கண்டன்மலை மகள் பாகமதுடையான் கையாடிய கேடில்கரி உரிமூடிய வொருவன் செய்யாடிய குவளைம்மலர் நயனத்தவளோடும்
நெய்யாடிய பெருமானிடம் நெய்த்தானமெனிரே

Page 8
THEVARAM
Waieyuru tholipangan vidamunnda kanndan Mihanalla Veenai thadavi Massaru thinggal ganggai mudimael anindhen valame puhuntha athanaal Nyaaiyiru thinggal SeVVaai buthan viyaalan velli Sani paambirandum udanae Asaru nala nala avai nala nala adiyar avarku mihivae
(Thirugnana Sambanthar)
Manthira - Mavathu- Neeru
Vanavar- Melathu- Neeru
Sunthara- Mavathu- Neeru
Thuthikkap- Paduvathu- Neeru
Thanthira- Mavathu- Neeru
Samayathi- Ullathu- Neeru
Senthuwar-Vayumai-Pangan
Thiru- Valavayan- Thiruneerey
(Thirugnana Sambanthar)
Pidiyathan uruvumai kolamigu kariyathu Vadikodu thanathadi Vazipadum avaridar Kadikana pathivara arulinan migu kOdai Vadivinar payilvali Valamurai yiraye
(Thirugnana Sambanthar)
12
 
 

தேவாரம்
வேயுறு தோளி பங்கன் விடம்உண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால், ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பு இரண்டுமுடனே ஆசறு நல்ல நல்ல, அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்குமிகவே.
- திருஞானசம்பந்தர்
மந்திரம் ஆவது நீறு வானவர்மேலது நீறு சுந்தரம் ஆவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன்திரு ஆலவாயான் திருநீறே.
- திருஞானசம்பந்தர்
பிடியதன் உருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர் கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே . . .
- திருஞானசம்பந்தர்

Page 9
THEVARAM
Utrumai servathu meiyinaiyeh - Unarvathu
ninnarul meiyinyeh Katravar Kaaivathukaamanaiyeh -kanalvighi
kaaivaithu kaamanaiyeh Atram maraippathum unpaniyeh - Amararkal
Seivathum unpaniyeh Petrum ukanthathu kanthanaiyeh - Brahma
purathai ukanthanaiyeh (Thirugnana Sambanthar)
Kaadhalaahi Kasindhu kann neer malghi
Oadhuvar thamai nannerik kuippadhu
Naathan naamam Namah chi vaayavae
(Thirugnana Sambanthar)
Mangaiyarkarasi Valavarkohn paavai varivalaikkaimmada maani Pangayach chelvipaandimaathayvi paniseithu naadhrum paravap Pongal(h)aluruvan pootha naayanganaal vaythamum porulkalumaruli s Angayarkkannithannodu mamarntha aalawaai yaawathu mithuvay
ldarinum thalarinum enadhuru moai Thodarinum Vunakallzha thoizhuthel(zh) uvaen Kadalthanilamuthodu kalantha nanjai Midarrinil adakkiya vaethiyanae ldhuvoa emai aalumaaru ilivathondremak killayael Adhuvoa vuna dhinnarul aavadhu thurraiaranae
(Thirugnana Sambanthar)
14
 
 
 

தேவாரம்
உற்றுமை சேர்வது மெய்யினையே உணர்வது நின்னருள்
மெய்யினையே கற்றவர் காய்வது காமனையே கனல்விழி காய்வது காமனையே அற்றம் மறைப்பதும் உன்பணியே அமரர்கள் செய்வதும்
உண்பணியே பெற்றும் உகந்தது கந்தனையே பிரம புரத்தை உகந்தனையே.
- திருஞான சம்பந்தர்
காத லாகிக் கசிந்து கண் ணிர்மல்கி ஒது வார்தமை நன்னெறிக்கு உய்ப்பது; வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது; நாதன் நாம நமச்சி வாயவே.
- திருஞான சம்பந்தர்
மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை வரிவளைக்
கைம்மடமானி
பங்கயச் செல்வி பாண்டி மாதேவி பணிசெய்து நாள்தோறும்
பரவப் பொங்கழல் உருவன் பூதநாயகன் நால் வேதமும் பொருள்களும் அருளி அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும்
இதுவே.
இடரினும் தளரினும் எனது உறுநோய் தொடரினும் உனகழல் தொழுதொழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே. இதுவோன்மை யாளுமா றிவதொன்றெமக் கில்லையேல் அதுவோஉன தின்னருள் ஆவடுதுறை யானே.
- திருஞான சம்பந்தீர்

Page 10
THEVARAM
Kootra-Yina-Vaaru-Vilaka-Kileer Kodumai-Pala Seithana Naa-Nariyane Yetra-Yadikkaay Yeravum Pagalum Pireyathu Vananguwen - Eppoluthum Thoahra-Then Vayitrina-Gambadiyeh Kudorodhu Thodaki-Mudakki-Ylida Aatraen-Adiyaen-Athikai Kedila Veerattaana-Thurai-Ammaneh
(Thirunavukarasar) Sotrunai Vaethiyan Sothi Vaanavan Potrunai Thirunthadi Porunthak Kaitholak Katrunai Pootiyohr Kadalil Paaichinum Natrunai Yaawathu Namachivaayaway
(Thirunavukarasar)
Kuniththa puruvamum kovaichevayit kumin
chiriippum Paniththa chadaiyum pavalampohl mayniyum paal
Veneerum liniththamudaiya edutha potpaathamum
kaana petral Maniththa piraviyum venduvathy intha
manilathay (Thirunavukarasar) Puluvaipirakkinum punniya unnadi
ennmanathay Valuvathirukka varanthara vaendum
ivvaliyahathay
Tholuvarkku irangi irunthu arusei
pathiripulyurch Seluneer punat kangai senchadai maylvaitha
theevannanay (Thirunavukarasar)
16
 
 
 
 
 
 

தேவாரம்
திருநாவுக்கரசநாயனார் பாடியவை
கூற்றாயினவாறு விலக்ககிலீர் கொடுமை பல
செய்தன நானறியேன் ஏற்றாயடிக்கே யிரவும் பகலும் பிரியாது
வணங்குவ னெப்பொழுதுந் தோற்றாதென் வயிற்றினகம் படியே
குடரோடு தொடக்கி முடக்கியிட ஆற்றே னடியேனதிகைக் கெடில
வீரட்டானத்துறை யம்மானே.
- (திருநாவுக்கரசர்)
சொற்றுணைவேதியன் சோதி வானவன் பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச் சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே.
- (திருநாவுக்கரசர்)
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற்
குமின் சிரிப்பும் பனித்த சடையும் பவளம் போல் மேனியும் பால்
வெண்ணிறும் இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும்
காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.
- (திருநாவுக்கரசர்) புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி
என் மனத்தே வழுவாதிருக்க வரந்தர வேண்டும் இவ்வையகத்தே தொழு வார்க்கு இரங்கி இருந்து அருள் செய்
பாதிரிப்புலியூர்ச் செழுநீர்ப் புனற் கங்கை செஞ்சடை மேல்வைத்த
தீவண்ணனே. -(திருநாவுக்கரசர்)

Page 11
THEVARAM
Maadhar pirai kanni yaanai malaiyaan mahaloadhum paadi Paadhoadu ni ir sumandhaetthip puhuvaar avar pin puhuvaen Yaadhum Suvadu padaamal aiyaar adaighindra podhu Kaadhal madappidi yoadum kaliru Varuvana kanndaen Kannden avar thirup paadham kanndari yaadhana kanndaen
(Thirunavukarasar)
Appan nee Ammai nee lyanum nee Anpudaiya maamanum maamiyum nee Oppudaiya maatharum Onporulum nee Oru Kulamum Suttamum Orr Oorum nee Thuipanavum ooipanavum thotuvainee Thunaiyai en menjam thurappipai nee Ippon nee Immani neelmmuthum nee Iraivan nee Er Oorntha Selvan neeyeh
(Thirunavukarasar)
Thiruveh en Selvameh Theneh Vaanor Selumsudareh Selumsudanat sothimika Uruvehen uravehen Ooneh OOnin ullameh ulaththin ulleh ninra Karuveh en katpagameh kanneh Kannit karumaniyeh Maniyadu paavai
kaavai Aruvaya vulvinai noy adaya Vannam Aavadu thundurai yuraiyum amararereh
18
(Thirugnana Sambanthar)
 
 
 
 

தேவாரம்
மாதர் பிறைக்கண்ணி யானை மலையான்
மகளொடும் பாடி போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவார் அவர்
பின்புகுவேன் யாதுஞ் சுவடு படாமல் ஐயாறடைகின்ற
போது காதன் மடப்பிடி யோடும் களிறு
வருவன கண்டேன் கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன
கண்டேன்
- (திருநாவுக்கரசர்)
அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ
அன்புடைய மாமனும் மாமியும் நீ ஒப்புடைய மாதரும் ஒன்பொருளும் நீ
ஒரு குலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ
துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்தும் நீ
இறைவன் நீ ஏறுார்ந்த செல்வன் நீயே -
- (திருநாவுக்கரசர்)
திருவே என் செல்வமே தேனே வானோர்
செழுஞ்சுடரே செழுஞ்சுடர்நற் சோதிமிக்க உருவே என் உறவே என் ஊனே
ஊனின் உள்ளமே உள்ளத்தின் உள்ளே நின்ற கருவே என் கற்பகமே கண்ணே
கண்ணிற் கருமணியே மணியாடு பாவாய் காவாய் அருவாய வல்வினை நோய் அடையா வண்ணம் ஆவடு தண்டுறை யுறையும் அமரரேறே.
- (திருநாவுக்கரசர்)

Page 12
THEVARAM
Masil veenaiyum maalai madhiyamum Veesu thendralum veengila vaenilum Muusu Vandarrai poihayum pOandradhae Esan enthai inaiyadi neelallae
(Thirunavukarasar)
Ella ulahamum aanaineeay Erhambam mervierunthi neeay Nallarai nanmai arivai neeay Gnanachudar vilakkai ninrai neeay Polla Vinaihalaruppaineeay Puhalchayvadi enmay vaithaineeay Selvaya Selvam tharuvai neeay Thiruvaiaru ahalatha sembot sohthi
(Thirunanvukarasar)
Munnam avanudaiya naamam kerttari Moorthy avanirukkum vannam kertarl Pinnai avanudaiya aarur kerttar Peyarthum avanukkay pitchiarnarl Annaiaiyum aththanaiyum antray neethaal Ahanraalahalidaththar aasaarathai Thannai maranthar thannaamam kerttarl Thalaippattarl nangaki thalaivanthalay
(Thirunan vulkarasar)
 
 
 

தேவாரம்
மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே.
-(திருநாவுக்கரசர்)
எல்லா உலகமும் ஆனாய் நீயே, ஏகம்பம் மேவி இருந்தாய் நீயே நல்லாரை நன்மை அறிவாய் நீயே ஞானச்சுடர் விளக்காய் நின்றாய் நீயே பொல்லா வினைகள் அறுப்பாய் நீயே புகழ்ச்சேவடி என்மேல் வைத்தாய் நீயே செல்வாய செல்வம் தருவாய் நீயே திருவையாறு அகலாத செம்பொற் சோதி.
-(திருநாவுக்கரசர்)
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள் பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள் அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை தன்னை மறந்தாள் தன்நாமம் கேட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன்தாளே.
-(திருநாவுக்கரசர்)
*

Page 13
THEVARAM
Pittha Pirai Soodi Perumaneh Arulala Aththan Maravaathe Ninaikinren Manathunnai Vaithat Pennai Tenpal Vennai Nalur Arud Thuraiyul Aththa Unakarla ini Allane Enalameh
-Suntherar
Matru pattenak kinri nin thirup pathamey
manam pavithen Petralum piranthen, ini piravatha thanmai
vantheythinane Katraver tholu thethum Seerkaraiyurit
paandik kodumudi Natravaa vunai naan marakinum solum
nah Namachivayaveh
-Suntherar
Ponnaar menianeh pulitholai araikasaithu Minnaar sensadai male milir konrai
taninthavaneh Manneh mamaniyeh mala padiyul
manickameh Anneh unnai allal ini yarai ninaikeneh
-Suntherar
 
 
 

தேவாரம் \ சுந்தரமூர்த்திநாயனார் பாடியவை
பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்
நல்லூரருட்டுறையுள் அத்தாவுனக் காளாயினி அல்லேன் எனலாமே. • - (சுந்தரர்)
மற்றுப் பற்றெனக் கின்றிநின்றிருப்
பாதமே மனம் பாவித்தேன்.
பெற்றலும் பிறந்தேன் இனிப்
பிறவாத தன்மை வந்தெய்தினேன்
கற்றவர் தொழுதேத்துஞ் சீர்க்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்றவாவுனை நான் மறக்கினுஞ்
சொல்லும் நா நமச்சிவாயவே.
- (சுந்தரர்)
பொன்னார் மேனியனே புலித்தோலை யரைக்கசைத்து மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை
யணிந்தவனே
மன்னே மாமணியே மழ பாடியுள் மாணிக்கமே அன்னே யுன்னை யல்லால் இனி யாரை நினைக்கேனே.
- (சுந்தரர்)

Page 14
THEVARAM
Thillai vaal andhanardham adiyaarkum adiyaen Thiru neela kanndatthu kuyavanaark kadiyaen Illaye ennaadha iyarppaghaikkum aidyaen Iliyaanthan Kudimaaran adiyarkkum adiyaen Vellumaa migahavalla meip porulukkadiyaen Viripolil suulkundraiyaar viranmindarkkadiyaen Allimen mullaiyandhaaramarneedhik kadiyaen Aaruuran aaruuil ammaanukkaalae
Pattharaai panivaarhal ellaarkumaidyaen Paramanaiye paaduvar adiyaarkum adiyaen Chitthatthai sivbanpaalley valithaarkkum adiyaen Paramanaiye paduvar adiyaarkkum adiyaen Thiruvaaruur piranthaarhal ellaarkkum adiyaen Muppoathum thirumaeni theenduvaarkkadiyaen Mulu neer puusiya munivarkkum adiyaen Appaallumadisaarnthaaradiyaarkkumadiyaen Aaruuran aaruuil ammaanukkalae
-Suntherar
 
 

தேவாரம்
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் திருநீலகண்டத்துக் குயவனார்க் கடியேன் இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன் வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன் விரிபொழில் சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன் அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன் திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன் முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன் அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே
-(சுந்தரர்)

Page 15
THIRUVASAGAM
Mutthi nerri ariyaadha muurkkarodu muyalvaenai Paththi nerri arivithithu pal(zh)a vinaihal paarum vannam Chiththamalam aruviththu sivamaakki enaiyaanda Aththanenakkaruliyavaaryaar perruvaar achchoavae
- Manickavasagar
PooSuvathum Venniiru poonpathuvum ponggaravam Paesuvathum thiru-vaayaal marai pohlum kaanedi Poosuvathum pesuvathum poonpathuvum kondennai Esan avan eVVuikum iyal paanaan Saa-la-loh
– Manickawasagar
Meithaan arumbi vithir vithirththu un
Viraiyaarkalarkku en
Kaithaan thalivaiththuk kannir
Thathumbi vethumbi ullam
Poythaan thavirnththu unnaip Pohtri "saya saya pohtrri" ennum
Kaithaan nekila vidaen
Udaiyai ennaik kandu kollae – Manickavasagar
Ammaiyae appaa oppilaa maniyae Anpinil villaintha aaramuthae Poymmaiyae perukkip polyuthinaich Surukkum Puluththalaip pulaiyanaen thanakkuch Semmaiyae aaya siva pathamaliththa Selvame siva perumaanae Immaiyaeunnaich sikkenappidiththaen Engkelyunthu aruluvathu iniyae
– Manickavasagar
 
 
 

திருவாசகம்
\ முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணம் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தனெனக் கருளியவாறு யார் பெறுவார் அச்சோவே.
- (மாணிக்கவாசகர்)
பூசுவதும் வெண்ணிறு பூண்பதுவும் பொங்கரவம் பேசுவதும் திருவாயால் மறைபோலும் காணேடீ பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டென்னை ஈசன் அவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ.
- (மாணிக்கவாசகர்)
மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன்
விரையார் கழற்கு என் கைதான் தலைவைத்துக் கண்ணிர்
ததும்பி வெதும்பி உள்ளம் பொய்தான் தவிர்ந்து உன்னைப்
போற்றி "சயசய போற்றி" என்னும் கைதான் நெகிழ விடேன்
உடையாய் என்னைக் கண்டு கொள்ளே.
- (மாணிக்கவாசகர்)
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச் செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவ பெருமானே இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடிச்தேன்
எங்கெழுந் தருளுவ திணியே.
- (மாணிக்கவாசகர்) "

Page 16
THIRUVASAGAM
Paalninainthuutum thaayinum saalap Parinthuni paawiyaenudaiya Uuninai urukki ulloli perukki Ulappilaa aananthamaaya Thaeninaich Sorinthu puram puramthirintha Selvamae sivaperumaanae Yaan unaith thodarnthu sikkenap pidiththaen Engkelluntharuluvathu iniyae
– Manickavasagar
In iisai viinaiyar yaalinar Orupaal Irukodu thohthiram iyampinar orupaal Thunniya pinaimalar kaiyinar orupaal Tholukkaiyar alukaiyar thuvalkaiyarorupaal Senniyilanchali kuuppinar Orupaa Thirupperrunth thuraiyurai sivaperu maanae Ennaiyum aandukondu innarul puriyum
Emperu maan palli elutharu laayae
– Manickavasagar
>-193ら。
28
 
 
 
 

திருவாசகம்
பால்நினைந் தூட்டும் தாயினுஞ் சாலப்
பரிந்து நீ பா வியே னுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த
செல்வமே சிவ பெருமானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்.
எங்கெழுந் தருளுவ திணியே.
-(மாணிக்கவாசகர்)
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் திருட்பெருந்துறை உறை சிவபெரு மானே
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும் எம்பெரு மான் பள்ளி எழுந்தருளாயே.
- (மாணிக்கவாசகர்)

Page 17
THIRUVISAPA
Katravar Vilungum katpakak kaniyaik Karaiyilaak karu naima kadalai Matravar ariya maanika Malayai Mathippavar manamani vilakkai Setravarpurangal setraem sivanaith Thiruvilli milai viitiruntha Kotravanthannaik kandu kandu ullam Kulira en kankulirnth thanavae
– Senthanaar
Olivalar vilakkaeulappilaa ondre Unarvusuul kadanthathohr unarvae Thelivalar palingkin thiralmanikkundrae Siththaththul thiththikum thanae Alivalar ullaththu annanththak kaniyae Ampalam ada arangakah Velivalar theyvakkuuththuukanth thaayaith Thondanaen Vilampumaa Vilampae
- Thirumalikai Thevar
Thaathaiyaith thaalara viisiya sandikkum Andaththoddu mudianae Puuthalath thohrum vanargappot kohyilum Pohnakamum arulich Sohthi manimudith thaamamum naamamum Thondarkku naayakamum Paatha kaththukkup parisuvaith thaanukkae Pallaandu kuuruthumae
– Senthanaar
 
 
 

திருவிசைப்பா
கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியை
கரையிலாக் கருணை மாகடலை மற்றவர் அறியா மாணிக்க மலையே
மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்றவெம் சிவனைத்
திருவீழிமிழலை வீற்றிருந்த கொற்றவன் தன்னைக் கண்டுகண்டு உள்ளம்
குளிரவென் கண் குளிர்ந்தனவே.
-(சேந்தனார்)
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே
சித்தத்துள் தித்திக்கும் தேனே அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே
அம்பலம் ஆடரங் காக வெளிவளர் தெய்வக் கூத்து கந்தாயை
தொண்டனேன் விளம்புமா விளம்பே.
-(திருமாளிகைத் தேவர்)
தாயைத் தாளற வீசிய சண்டிக்கும்
அண்டத்தொடு முடனே
பூதலத் தோரும் வணங்கப் பொற்கோயிலும்
போனகமும் அருளிச்
சோதி மணி முடித் தாமமும் நாமமும்
தொண்டர்க்கு நாயகமும்
பாத கத்துக்குப் பரிசுவைத் தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
-(சேந்தனார்)

Page 18
THRUPALLANDU
. Paalukku Paalagan Veendi yaluthidap
Partkadal eenthaperaan Maalukku chakaramandrarul seithavan Manniya thillai-thannul Aalikkumanthanar vaalkindra Chittrampalamae idamaagap Paalithu natam payila-walaanukkay Pallandu kooruthumae
— Senthanaar
. Mannuka thillai: valarkanam paktharkal:
Vanchakar pohhyakalap Ponnitsei mandapath thullae pukunthu Puvani yellam villangka Annanadai madavaal umaikkohn Adiyyohmukku aru purinthu Pin nae piraviyarukka nerithantha piththatkup Pallaandu kuuruthumae
— Senthanaar
. Kulal oli Yaa Oli Kootholi Eetholi
Engkum kuzaam Peruki Vila Oli Vinnalavum Sendru Vimmi Miku Thiruvaar Oori
Malavidai Yaarku Vali valiaalaai Manam Sei kudip Pirantha Palavadi Yaarodum koodi Em-maanukeh Pallandu kooruthumeh
– Senthanaar
32
 
 
 

திருப்பல்லாண்டு
பாலுக்குப் பாலகன் வேண்டியழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான் மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன் மன்னிய தில்லைதன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலமே இடமாகப் பாலித்து நட்டம்பயில வல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே
(சேந்தனார்)
மன்னுக தில்லை வளர்க நம்பத்தர்கள் வஞ்சகர் போயகலப் பொன்னிற் செய் மண்டபத்துள்ளே புகுந்து புவனி எல்லாம் விளங்க அன்னநடை மடவாள் உமைகோன் அடியோ முக்கு அருள் புரிந்து பின்னைப் பிறவியறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே.
-(சேந்தனார்)
குழல் ஒலி யாழ் ஒலி கூத்தொலி ஏத்தொலி எங்கும் குழாம் பெருகி விழல் ஒலி விண்ணளவும் சென்று விம்மி மிகு திருவாரூரில் மழவிடையார்க்கு வழிவழி ஆளாய் மணம் செய் குடிப் பிறந்த பழவடி யாரொடும்கூடி எம்மானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
-(சேந்தனர்)

Page 19
THIRUPURANAM
Ulahellam Unarnthu ohtharku ariyavan Nilavu ulaaviya neermali verniyan Alahil Sothiyan ampalathu aadluvaan Malar silampadi vaalthi vanangkuvaam
— Sekkilaar
Katpanai Kadantha Sohthi karunaiyae uruvamaaki Atputhak kohlam niidi arumaraich siraththin maelaam Sitpara viyohma maakum thriuchsitram palaththulninru Potpudan nadam seikinra puungalal pohtri pohtri
— Sekkilaar
Vedanerithalaithongak mikusaiva thuraivilanga Puthaparam paraipoliya punithawaay malarnthazhutha Sithavala Vayatrpukali thirunyana Sambanthar Paathamalar thanaikonduthiruthondu paravunaam
— Sekkilaar
 
 
 

திருப்புராணம்
உலகெலாம் உணர்ந் தோதற் கரிய்வன் நிலவுலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்.
- (சேக்கிழார்)
கற்பனை கடந்த சோதி கருணையே உருவமாகி அற்புதக் கோலம் நீடி அருமறைச் சிரந்தின்
மேலாம் சிற்பர வியோம மாகும் திருச்சிற்றம் பலத்துள்
நின்று பொற்புடன் நடம்செய்கின்ற பூங்கழல் போற்றி
போற்றி.
- (சேக்கிழார்)
வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்
துறைவிளங்கப் பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர் பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.
- (சேக்கிழார்)

Page 20
THIRUPURANAM
Vaanmuhil valaathu peiher malivalanchurakka mannan Konmurai arasuseiher, kurai vilathu uyirha varlha Naanmarai arangal ohnga natavam verlvi malha Meinmaikohl saiva neethi vilanguha ulahamellam
– Kachiyapa Sivachariar
Muviru muhangal pohtri muhampoli karunai pohtri Eavarunththuthikka nintra eeraru thohl pohtri Kaanchimaavadi vaikum cheivel malaradi pohtriannaan Seivalum mayilum pohtri thirukkaivel pohtri pohtri
– Sekkilaar
Aariru thadanthohl varlha arumugam varlha vetpai Kuruseithaniveil varliha kukudam variha seiveil Eria manjai varlha aanai than anangu varlha
Maarrilaa valli varlha varla sir adiyir ellam
— Sekkilaar
Mannula gaiththinir piravee maasara Yenniya porulelam yelithinil mutrurak Kannuthal udayathor kalitru maamuka Pannavan malaradi panindhu potruwam
- Kantha Purana
 
 
 

திருப்புராணம்
வான்முகில் வழாது பெய்க, மலிவளஞ் சுரக்க '
மன்னன் கோன்முறை அரசு செய்க, குறைவிலாது
உயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க, நற்றவம் வேள்வி
மல்க, மேன்மைகொள் சைவநீதி, விளங்குக
உலகமெல்லாம்.
-(கச்சியப்ப சிவாச்சாரியார்)
மூவிரு முகங்கள் போற்றி, முகம்பொழி
கருணை போற்றி ஏவருந்துதிக்க நின்ற ஈராறு தோள் போற்றி காஞ்சி மாவடி வைகுஞ் செவிவேள், மலரடி
போற்றி அன்னான் சேவலும் மயிலும் போற்றி, திருக்கைவேல்
போற்றி போற்றி
-(சேக்கிழார்)
ஆறிரு தடந்தோள் வாழ்க, அறுமுகம் வாழ்க
வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க
செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க, யானை தன் அணங்கு
வாழக
மாறிலா வள்ளி வாழ்க, வாழ்க சீர் அடியார்
எல்லாம்.
-(சேக்கிழார்)
மண்ணுல கத்தினிற் பிறவி மாசற எண்ணிய பொருளெலாம் எளிதினில் முற்றுறக் கண்ணுதல் உடையதோர் களிற்று மாமுகப் பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவாம்
-கந்த புராணம்
37

Page 21
THIRUPPUHAL
Kaithala niraikani appomod avalpori Kappiya karimugan adiperni Katridum adiyavar putthiyil uraipava Karpagam yenavinai kadithekum Matthamum mathiyamun vaithidum aranmagan Matporu thiralpuya mathayaanai Matthala Vayiranai uthhami puthalvanai Mattavil malarkodu panivenae Muthamil adaivanai matpadu kirithanil Mutpada eluthiya muthalvohnae Mupuram eriseitha achivan urairatham Achchathu poddiseitha Athithiraa Atthuyar athukOdu Suppira manipadum Appunam athanidai ipamaki Akkura magaludan achchiru muruganai Akkanam manamarul perumaalae - Arunagirinathar
Aerumayil aerivilai yaadumugam ondray Eesarudan nynamozhi peysumugam Ondray Kuurum adiyaargal vinaitheerkum mugam ondray Maarupadu Soorarai Vathaitha mugamondray Valliyai manampunara Vanthamugam ondray Aarumuga maanaporul nee arulal veindum Aathi aranaasalam amarntha perumaalae
– Arunagirinathar Pakthiyaal yaanunai palahaalum Patriyeh mahthiru puhalpaadi Muththanaa mahrenai peruvarlvin Muththiyeh Saervathat karulvayeh Uththama thaanasat kunar neyaa Oppilaa maamanik kirivaasaa Viththahaa! Yaanasath Thinipaathaa Vettrive laayutha perumaalae - Arunagirinathar
38
 
 
 
 
 
 
 
 

திருப்புகழ்
கைத்தல நிறைகனி அப்பமொ டவல் பொரி கப்பிய கரிமுகன் அடிபேணிக் கற்றிடும் அடியவர் புத்தியி லுறைபவர் கற்பகம் எனவினை கடிதேகும் மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன் மற்பொரு திரள்புய மதயானை மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டவிழ் மலர்கொடு பணிவேனே முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம் அச்சது பொடி செய்த அதிதீரா அத்துயர் அதுகொடு-சுப்பிரமணிபடும் அப்புனம் அதனிடை இபமாகி அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கணம் மணமருள் பெருமாளே
-அருணகிரிநாதர்
ஏறுமயில் ஏறிவிளை யாடுமுகம் ஒன்றே ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே கூறும் அடியார்கள் வினை தீர்க்குமுகம் ஒன்றே குன்றுருவ வேல்வாங்கி நின்றமுகம் ஒன்றே மாறுபடு சூரரை வதைத்தமுகம் ஒன்றே வள்ளியை மணம்புணர வந்தமுகம் ஒன்றே ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும் ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே.
-அருணகிரிநாதர்
பக்தியால் யானுனைப் பலகாலும் பற்றியே மாதிருப் புகழ்பாடி முத்தனா மாறெனைப் பெருவாழ்வின் முத்தியே சேர்வதற் கருள்வாயே உத்தமா தானசற் குணர்நேயா ஒப்பிலா மாமணிக் கிரிவாசா வித்தகா ஞானசத் திநிபாதா வெற்றி வேலாயுதப் பெருமாளே
-அருணகிரிநாதர்

Page 22
THIRUMULAR THIRUMANTHIRAM
Siva Siva Yenhilar Thivinai Aalar Siva Siva Yenridath Thivinai Malum Siva Siva Yenridath Thevarum Aavar Siva Siva Yenna Sivagadhi Thane.
- Thirumular
Avanai oliya amararum illai Avan Andrich Seiyum Arunthavam illai Avan Andri Moovaraal Aavathu Ondrillai Avan Andri Oorpugu Maaru Ariyeneh.
- Thirumular
Anpum Sivamum Erandenpar Arivilar Anpeh Sivamavathu Yarum Arivilar Anpeh Sivamavathu Yarum Arinthapin Anpeh Sivamai Amarnthu runthar.
- Thirumular
 
 
 

திருமூலர் திருமந்திரம்
சிவசிவ என்கிலர் தீவினை ஆளர் சிவசிவ என்றிடத் தீவினை மாளும் சிவசிவ என்றிடத் தேவரும் ஆவார் சிவசிவ என்னச் சிவகதி தானே
- திருமூலர்
அவனை ஒழிய அமரரும் இல்லை: அவன் அன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை: அவன் அன்றி மூவரால் ஆவது ஒன்றில்லை: அவன் அன்றி ஊர் புகு மாறு அறியனே:
- திருமூலர்
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது யாரும் அறிகிலார் அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந் திருந்தாரே.
- திருமூலர்

Page 23
THIRU ARUDPAA Aruljothi theivam ennai aandukonda theivam Ambalatheh aadukindra aanantha theivam Porutchaarum maraikhelelam potruhindra theivam Pothantha theivamuyar naathaantha theivam lrupaadu neeki yoli eendrarulum theivam Enniya nan eniyavaar enakarulum theivam Therupaadelu vanthenaiyum sivamaakum theivam Chirsabayil velanguhindra theivamathei theivam
– Ramalinga Swamigal Kallarkum katravarkum kalipparulung kalipeh Kaanarkkum kandavarkkum kannalikkum kanneh Vallarkum matarkkum varamalikkum varameh Mathiyaarkkum mathippavarkkum mathikodu kkum mathieh Nalarkkum polarkkum nadunindra naduveh Nararkalukkum Surarkalukkum nalamkodukkum nalameh Ellarkkum pothuvil nadam edukindra Sivame Ennaraseh yanpuhalum esaiumanith tharuleh
– Ramalinga Swamigal Orumaiudan ninathu thirumalaradi ninaikkindra Uthamartham uravu vaendum Ullonruvalithu puramontru paesuvaar Uravu kalavaamai vaendum Perumaiperu ninathu puhal pesa vaendum Poimaipesathirukka vaendum Peruneri pidditholuka vaendum Mathamaana peipiddiathirukka vaendum Maruvu pennasai yai marakka vaendum Unaimaravaathirukka vaendum Mathi waendum nikarunai nithi waendum Noiyattavarvu naan valavendum Tharumamihu sennaiyit kanthakotta thulavalar Thalamohngu Kanthavelay Thanmuhattuiamani un muhachaivamani Shanmuhatheivamaniay - Ramalinga Swamigal
42
 
 
 
 
 
 
 

திரு அருட்பா
அருட்ஜோதித் தெய்வமெனை ஆண்டு கொண்ட தெய்வம் அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம் பொருட்சாரு மறைகளெல்லாம் போற்றுகின்ற தெய்வம் போதாந்தத் தெய்வம் உயர் நாதாந்த்தத் தெய்வம் இருட்பாடு நீக்கியொளி யீந்தருளுந் தெய்வம் எண்ணிய நா னெண்ணியவா றெனக்கருளும் தெய்வம் தெருட்பாட லுவந்தெனையுஞ் சிவமாக்குந் தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
-(இராமலிங்க சுவாமிகள்) கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளுங் களிப்பே காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே எல்லார்க்கும் பொதுவில் நடம் இடுகின்ற சிவமே என்னரசே யான்புகலும் இசையுமணிந் தருளே.
-(இராமலிங்க சுவாமிகள்)
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும் பொய்மை பேசாதிருக்க வேண்டும் பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் மருவு பெண்ணாசையை மறக்க வேண்டும் உனை மறவாதிருக்க வேண்டும் மதி வேண்டும்; நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற வாழ்வு நான் வாழவேண்டும் தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள்வளர் தலமோங்கு கந்தவேளே. தண்முகத்துய்யமணி, உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே.
(-இராமலிங்க சுவாமிகள்)

Page 24
THRUM URUGATRU PADDA
Muruganeh senthil muthalvaneh maayohn Maruganeh eesan mahaneh - orukaimugan Thampiyeh ninnudaya thandaikkal eppoluthum Nampiyeh kaithooluvehn naan
— Nakkeerar
Piranthu Molipayindra pin ellam kaathal Siranthu nin sevadiyeh Seirnthen - Niranthikalum Mainj-gnandra kandathu vaanor Perumaneh Enj-gnandu theerpathu idar?
- Kaaraikaal Ammaiyar
 
 
 

திருமுருகாற்றுப்படை
திருமுறை 11
முருகனே செந்தில் முதல்வனே மாயோன் மருகனே ஈசன் மகனே - ஒருகைமுகன் தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான்.
-(நக்கீரர்)
பிறந்து மொழிபயின்ற பின் எல்லாம் காதல் சிறந்து நின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும் மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே எஞ்ஞான்று தீர்ப்பது இடர்?
-(காரைக்கால் அம்மையார்)

Page 25
Aum Sivamayam Thiruchittampalam
THIRUVASAKAM
Tholai irum pravi sооlum thalai neeki Alalaruththuaanantham aakiathey -ellai MaruVaa neri yalikum VathavOOrenkone Thiruvasakam ennum thane.
SVAPURANAM
Namachivaya Varlga - Nathan tharl Varlga Imaippolluthum en nencil - Neengathan thar varlga Kokali aanda - Kurumanithentharl varlga Aakamam aaki ninru - Annippaan thar varlga Ekan anekan — lraivan adi Varlga
Vekam keduth thaanda - Venthan adi velga Pirapparukkum pinjakan then - Peykalalkal welga Purathatharkuch Seyon then - poongkalalkal velga KaranguVivar ul magilung - koan kalalkal Velga Siranguvivar ornguvikkum - seerohn kalal Velga
Esan adi pohtri - Enthai adi pohtri Thesan adi pohtri - Sivansevadi pohtri Neyathe nindra - Nimalan adi pohtri Maya pirapparukkum - Mannan adi pohtri Seerar perunthurai nam - Thevanadi pohtri
 
 
 

9
சிவமயம்
ச்சிற்றம்பலம் திருச்சிற்ற
திருவாசகச் சிறப்பு
தொல்லையிரும் பிறவிச் சூழுந்தளைநீக்கி அல்லலறுத் தானந்த மாக்கியதே - எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன் திருவாசகமென்னும் தேன்.
சிவபுராணம்
நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில், நீங்காதான் தாள் வாழ்க! கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க! ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க! ஏகன் அநேகன், இறைவன் அடி வாழ்க!
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞ கன்தன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரங்குவிவார் ஒங்குவிக்கும் சீரோன்கழல் வெல்க.
ஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றி தேசன் அடி போற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தேநின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறைநம் தேவன் அடி போற்றி

Page 26
Aaratha inpam - arulum malai pohtri Sivan avan en sinthaiyul - Nindra athanaal Avan arulale-avan tharl vananki Sinthai Mahillach - Sivapuranam thannai Munthai vinai muluthum - oya uraippan yan
Kannuthalaan then karunai - Kann kaadda vantheithi Ennuthatku eddaa - elilar kalal iranchi Vinnirainthu mannirainthu - mikai vilangoliyai Enniranthellai - ilathaney nin peruncheer Polla vinaiyane - pugalumaru onrraiyane
Pullaaki poodai-puluvai maramaahi Pal virugam aaki - paravaiyaip pampahi Kalai manitharai - peyai kanangalai Vall asurar aaki - Munivarai thevarai Sella ninra ith - thavara Sangamathul
Ellappirappum -piranth iliathane emperumaan Meiye unn ponnadigal - Kandu inru veedutaen Uya enn ullathul - omgaramai nindra Meiya vimala - vidaippaga vethangal Aya ena ongi - arinthu akandra nunniyanae
Veyai thaniyai - iyamaana naam vimala Poyayina elam - poyagala Vantharuli Meyjnanam aaki - Milir kindra meychudaray Enjinanam illathane - inpap permaney Anjnanam thannai – akalvikum nalarivey
 
 
 

ஆராத இன்பம் அருளு மலைபோற்றி சிவனவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுரா னந்தன்னை முந்தை வினைமுழுதும் ஒய உரைப்பன்யான்
கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி விண்நிறைந்து மண்நிறைந்து மிக்காய் விளங்கு ஒளியாய் எண் இறந்து எல்லை இலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யேஉன் பொன் அடிகள் கண்டு இன்று வீடுற்றேன் உய்யன்ன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்அறிவே

Page 27
Aakam alavu iriuthi - illai anaithulakum Aakuvai kaappai- alippaiarultharuvai Porkkuvai ennai - pukuvippai nin tholumpin Naattaththin neriai – seyai naniane Maatam manam kalia - nindra marayoney
Karantha paal kannalodu - nei kalanthat pola Siranthadiyar sinthanaiyul - tenoori nindru Pirantha piraapparukkum - engal perumaan Nirangal ore eyenthu udayai - vinnorgal eththa Marainthirunthai emperuman - Vulvinai yane thannei
Marainthida mOOdia - maya irulai Arampaavam ennum - arung kaitaal kaddip , Puranthol porthu engum - pulu aluku moodi Malam sorum onpathu - Vayil kudilai Malankap pulan eyenthum - vanjanaiyai Seya
Vilanku manaththal - viimala unaku Kalantha anpakik - kasinthu ul urugum Nalanthaan ilatha - siriyetku nalki Nilanthan male Vantharauli - Neer kalalkal kaaddi Nayit kadaiyaik - kidantha adiyetkuth
Thaayit sirantha - thayavaana thatthuvaneh Maasata Sothy - malarntha malarSudareh Thesaneh thaenar-amuthey sivapuraneh Paasamaam pattaruthup - paarikumaarineh Nesa arul purinthu - nenchill Vanchang kedap
 
 
 

ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின் நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே
QP
கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன் ஊறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஒர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப் புறந்தோல் போர்த்து எங்கும் புழுவழுக்கு மூடி மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலன்ஐந்தும் வஞ்சனையைச் செய்ய
விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்தஅன் பாகிக் கசிந்துள் உருகும் நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள் கழல்கள் காட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனார் அமுதனே சிவபுரனே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ் சம்கெடப்

Page 28
Perathu nindra - perung karunaip peraray Aara amuthey - alavilaap pemmaneh Orathar ullathul – olikum oliyaney Neerai urukien - aaruyirai nindraneh Inpamum thunpamum - illaneh ullaneh
Anparukku anpaneh - yavaiyumai alayumaam Sothiyaneh thun iruleh - thonraap perumaiyaneh Athiyaneh antham - naduvaki allaneh Eerthennai artkonda - enthai perumaaneh KOortha menjnathaal - kondunarvaar thangkaruthin
Nokaria nokeh - Nunukaria nunnunarveh Pokum varavum - punarvumi lappunnianeh Kakum em kavalaneh - kaanparia per oliye Aatinpa vellameh - aththamickaininra Thottach sudaroliyai - solatha nunnunarvali
Maattamaam vyakathin - vevereh vantharivaam Thetaneh thetah - thelivehensinthanaiyul Oottana unnar - amuthey udaiyaneh Vetu vigara - vidakudampin udkidappa Antane em aya - aranehyoh enrenru
Pohtri pugalnthirunthu - poi keddu meyanar Meedingu Vanthu- vinaippiravi Saarameh Kallap pulakurambai - kaddalika Vallaneh Nalirulil naddam - pyinradumnaathaneh Thillayul koothaneh - thenpaandi naaddaneh
 
 
 

பேராது நின்ற பெருங்கருணைப் பேர் ஆறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஒராதார் உள்ளத்துள் ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாம் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்து என்னை யாட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின்
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே போக்கும் வரவும் புணர்வும்இலாப் புண்ணியனே காக்கும் எம் காவலனே காண்பரிய பேர் ஒளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவேயென் சிந்தனையுள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப ஆற்றேன் எம் ஐயா அரனே ஒ என்றென்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார் மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
ல்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
t தத த

Page 29
Allal piravi - Aruppaaneh oh enru Sollatku ariaanai solli thiruvadikeel Sollia paaddin - porul unarnthu Solluvar Selvar sivapurathin – ullar Sivan adikeerl Pallorum - ethap paninthu
Thirusittampalam
 
 

அல்லற் பிறவி, அறுப்பானே ஓவென்று சொல்லற்கு அரியானைச், சொல்லித் திருவடிக் கீழ் சொல்லிய பாட்டின், பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின், உள்ளார் சிவனடிக்கீழ் பல்லோரும் ஏத்தப், பணிந்து.
திருச்சிற்றம்பலம்
55

Page 30
JOTHY VALIPADU
Jothy Jothy Jothy Suyam Jothy Jothy Jothy Param Jothy Jothy Jothy Aru
Jothy Jothy Jothy Sivam
Vaama Jothy Sohma Jothy Vaana Jothy Gnana Jothy Maaha Jothy Yoha Jothy Vaatha Jothy Naatha Jothy
Ehma Jothy Viyohma Jothy Ehru Jothy Veeru Jothy Ehka Jothy Ehka Jothy Ehka Jothy Ehka Jothy
Aathy Neethy Vethaneh Aadal Needu Paathaneh Vaathy Gnana Pohthaneh Varliga Varlga Naathaneh
Jothy Jothy Jothy Suyam Jothy Jothy Jothy Param Jothy Jothy Jothy Aru
Jothy Jothy Jothy Sivam
 
 
 

ஜோதி வழிபாடு
ஜோதி ஜோதி ஜோதி சுயம் ஜோதி ஜோதி ஜோதி பரம் ஜோதி ஜோதி ஜோதி அருள் ஜோதி ஜோதி ஜோதி சிவம்
வாம ஜோதி சோம ஜோதி வான ஜோதி ஞான ஜோதி மாக ஜோதி யோக ஜோதி
வாத ஜோதி நாத ஜோதி
ஏம ஜோதி வியோம ஜோதி ஏறு ஜோதி வீறு ஜோதி ஏக ஜோதி ஏக ஜோதி ஏக ஜோதி ஏக ஜோதி
ஆதி நீதி வேதனே ஆடல் நீடு பாதனே வாதி ஞான போதனே வாழ்க வாழ்க நாதனே
ஜோதி ஜோதி ஜோதி சுயம் ஜோதி ஜோதி ஜோதி பரம் ஜோதி ஜோதி ஜோதி அருள் ஜோதி ஜோதி ஜோதி சிவம்

Page 31
VARLITHOLY
Then naadu udaiya Sivaneh pohtri En naaddavarkumiraivaa pohtri
Siththamum sellach serdhian kankaPakthi valaiyil paduVohn kanka
Kuvalaik kanni kooran kanka Avallum thaanum udaneh kanka
Annamalai en annaa pohtriKannar amuthak kadaleh pohtri
Erkampaththurai enthai pohtri Paaham pennuru vaanai pohtri
Paraaththuraimervia paraneh photri Siraali palli mervia Sivaneh pohtri
Namap Parvathy pathayeh Arahara maha Thevaa
Sitsapehsaa Siva Sithamparam
Sri Vallikaantha smaraneh Siva Supramaniam
Sri Letchumy kaantha smaraneh Jeya Jeya Ram
Goventha Naama sankeerthanam Govinthaa Govinthaa Inbame Soozha! Ellorum Vazhha!!
58
 
 
 

வாழ்த்தொலி
தென் நாடு உடைய சிவனே போற்றி எந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி
சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க பக்தி வலையில் படுவோன் காண்க.
குவளைக் கண்ணிக் கூறன் காண்க. அவளும் தானும் உடனே காண்க.
அண்ணாமலை எம் அண்ணா போற்றி கண்ணா ரமுதக் கடலே போற்றி.
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி பாகம் பெண்ணுரு வானாய் போற்றி.
பராய்த்துறை மேவிய பரனே போற்றி சிராப் பள்ளி மேவிய சிவனே போற்றி.
நமப் பார்வதீ பதையே அரகர மகா தேவா
சிற்சபேசா சிவ சிதம்பரம்.
பூரீ வல்லீ காந்த ஸ்மரணே சிவ சுப்ரமணியம்.
பூரீலெட்சுமி காந்த ஸ்மரணே ஜெய ஜெய ராம்.
கோவிந்த நாம சங்கீர்த்தனம்
கோவிந்தா கோவிந்தா. இன்பமே சூழ்க! எல்லோரும் வாழ்க!!

Page 32
MSANATHAN FAMI
PON NAHI KASI NATHAN NALLATHAMBY SVAPAKAM
SEENIAR THAMBU PATHIMIN GUNAPAKIAM " P KANDIAH (Diseased)
SATKUNAM SELVARAN
*輔戴輸;|轎
GOUR NIRMAYAN RAMANAN YASODA
ARAN S. DAYALAN JANANI J. SOLANKI
ARUNAN SATKUNAM DHARIN KASINATHAN
SIVAKAMI DAYALAN SAHANA NIRMAYAN
Զ | Գ 2, .
N Z
60
 
 
 
 
 
 
 
 
 

காசிநாதன் தம்பதிகள் \ பொன்னையா காசிநாதன் நல்லதம்பி சிவபாக்கியம்
சீனியர் தம்பு பத்மினி குணபாக்கியம் பொ. கந்தையா (காலஞ்சென்ற)
சற்குணம் செல்வராணி
கெளரி நிர்மயன் ரமணன் யசோதா ஆரணி s சி. தயாளன் ஜனனி ஜெ. சொலங்கி
அருணன் சற்குணம் தாரனி காசிநாதன்
சிவகாமி தயாளன்
சகானா நிர்மயன்

Page 33

type st and Panta ,ش..., سلسله