கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிவயோக சுவாமிகளை நினைவோம்

Page 1
நல்லூரான் திரு
 

IL ILLI LI
ii.6) Jubisg)6
(36 mi)
வடியே சரணம்

Page 2

af)(3).JIras சுவாமிகளை j്തതബേIb w
முழுவதும் உண்மை
ಟ್ಲಿ
S) 6.
2 ع•
으| @节 E
影
நாம் அறியோம்

Page 3
சிவயோக சுவாமிகளின் 40 வது ஆண்டுக் குரு பூஜையை முன்னிட்டு அவருடன் நேரடியாகப் பழகிய, பேராசிரியர் தமிழ்நாடு இந்தியா அ.ச. ஞானசம்பந்தன் அவர்கள் மூலம் வெளிவந்த இக்கட்டுரையை யோகள் சுவாமிகளின் அடியவர்கள் படித்துப் பரவசமடையும்படி அறியத்தருவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
ஆதாரம் : சித்தயோக சுவாமிகள் வெளியீடு - கனடா.
லஷமி அச்சகம், கொழும்பு- 13. 1-04-2004.

என்பிழைகள் பொறுப்பானை யெங்குமா
யிருப்பானை அன்பிலரை யடையானை அஞ்செழுத்துப்
பொருளானை நன்மலர்கொண் டெந்நாளும் நாட்கழித்தல்
நலமென்றே சொன்னவர்தந் திருப்பாதம் தொழுவேனே
எந்நாளும்
ஈவது விலக்காதே யிழிதொழில்கள் செய்யாதே சாவது வந்தாலுஞ் சத்தியத்தை மறவாதே ஆவதும் அழிவதும் நமக்கில்லை யெனவறிந்து தேவர்கள் தொழுதேத்துஞ்சிவனடியைச்
சிந்திநெஞ்சே!
சிவனடிக் கன்பு செய்பவம் போக்கும் சிவனடிக் கன்பு திருவருளாக்கும் சிவனடிக் கன்பு சிவகதி யாக்கும் சிவனடிக் கன்பு செப்புந் தகைத்தோ!
தேசம் புகழுஞ் சிவன்திரு வடிதுணைஒம் வாசம் மருவும் மலரடி எம்துணைஒம் பாசம் அகலும் பரன்திரு வடிதுணைஒம் ஈச னெந்தை எம்பிரா னடிதுணைஒம்!
நற்சிந்தனை)

Page 4
நல்லைப் பதிக்கரசே
நல்லைப் பதிக்கரசே நல்லைப் பதிக்கரசே நல்ல வழிகாட்டி நாயேனை யாண்டிடடா
கல்லை நிகர்த்தமனங் கரையவருள் தந்திடடா எல்லையில்லா வின்பத்தே யெனையிருத்தி
வைத்திடடா
ஆன்மாவை நித்தியமென் றறியவரந் தந்திடடா வீண்பா வனையெல்லாம் விலக்க வருள்தாடா மாயப் பிணியகல மருந்தெனக்குத் தந்திடடா காயங் குலையுமுன்னர் காண வருள்தாடா சித்தத்தி னுள்ளே சிவலிங்கங் காட்டிடடா சத்தத்தி னுள்ளே சதாசிவங் காட்டிடடா எல்லா ரையுமீச னிடத்திலே காட்டிடடா எல்லா ரிடத்திலும் ஈசனைக் காட்டிடடா
கொல்லா வரமெனக்குக் குவலயத்தில்
(36,160)LDLT
எல்லா ரிடத்துமன்பாய் இருப்பதெனக்
d5ë60ëFujL/T
என்றும் மறவா வரமெனக்கு வேணுமடா குன்றுபோ னிற்கக் குருவே வரந்தாடா!

சித்த யோகசுவாமிகள் (பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன், தமிழ்நாடு, இந்தியா)
இந்த நாட்டைப் பொறுத்தவரை பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாகச் சராசரி மனிதரிலும் பன்மடங்கு உயர்ந்து நின்ற மகாத்மாக்கள் பலர் உண்டு. ஒரு சிலர் பாடல்கள் மூலம் தாம் யார் என்பதை உலகத்திற்கு அறிவுறுத்தி உள்ளார்கள். திருமூலர், பாம்பாட்டிச் சித்தர், சிவவாக்கியர் போன்றவர்கள் தம் பாடல்கள் மூலம் மக்கள் சமுதாயத்திற்கு வழி காட்டியவர்கள் ஆவார்கள். இதன் எதிராக வேறு பல சித்தர்கள் தாங்கள் வாழ்கின்ற காலத்தில் தம்மை வந்தடையும் மக்களின் குறைகளைப் போக்கி நல்வாழ்வு வாழ வழி செய்தவர்கள் ஆவார்கள்.
யாழ்ப்பாணத்தில் நீண்ட காலம் வாழ்ந்து 1964 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 23 ஆம் திகதி ஆயிலிய நாளன்று வீடுபேறடைந்தவர் இச்சுவாமிகள். இவர் ஒரு தனிப்பட்ட இடத்தில், சிறிய குடிசையொன்றை அமைத்துக் கொண்டு அதனுள் இருந்து வந்தார். அந்தக் குடிசைக்குள் நுழைய வேண்டுமானால் யாராக இருந்தாலும் குனிந்து
1.

Page 5
இடுப்பை வளைத்துக் கொண்டுதான் உள்ளே செல்ல முடியும். மீண்டும் வெளியே செல்வதும் இதே முறையிற்றான். அந்த நாட்டை ஆண்ட பிரதம மந்திரி முதல் ஆங்கிலேயர் வரை மிகப் பலர் சுவாமிகளிடம் அளவில்லாத அன்பு பூண்டு வாழ்ந்தனர். சிங்களவர்; இஸ்லாமியர், தமிழர், ஆங்கிலேயர்கள் என்ற எந்த வேறுபாடுமின்றி சுவாமிகளிடம் ஒவ்வொரு நாள் மாலையும் மக்கட் கூட்டம் திரண்டு நிற்கும். குடிசைக்குள் அதிகமாக நின்றால் பதினைந்து அல்லது இருபது பேர்தான் நிற்கமுடியும். இவ்வாறு நிற்பவர்கள் தம் வழிபாட்டை முடித்துக் கொண்டு வெளியே சென்ற பிறகுதான் அடுத்த கூட்டம் உள்ளே [b] 600 լք եւ ] (Մ Iգ պլք , ஒவி வொரு வருமி காணிக்கையாகப் பழங்களை வாங்கி வந்து சுவாமிகளின் திருவடிகளில் வைத்து வணங்கு வார்கள். எந்த ஒன்றையும் சுவாமிகள் எடுத்து வாயில் போட்டதாக வரலாறு இல்லை.
குறைதீர்க்க வேண்டி வந்தவர்கள் வாய்விட்டுத் தம் குறைகளைச் சொல்லும் பழக்க மில்லை. எனவே பதினைந்து இருபது நிமிஷங்கள் ஒரு கூட்டம் உள்ளே நின்றாலும்
2

ஒருவர் கூட வாயப் திறந்து எதனையும் சுவாமிகளிடம் கூறியதில் லை. இந்த நடைமுறையின் பொருளை நான் தெரிந்து கொள்வதற்குச் சிறிது காலம் பிடித்தது. 1950 இல் முதன் முறையாகச் சுவாமிகளைத் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. அதற்கு முன்னர் சுவாமிகளைப் பற்றி அதிகம் ஒன்றும் தெரிந்து கொண்டதில்லை. முதன் முறையாக என்னை அழைத்துச் சென்றவர் வழக்கறிஞர்ப் பணிபுரியும் ஒரு அன்பராவார். உள்ளே சென்று சுவாமிகளை விழுந்து வணங்கி விட்டு ஏனையோர்களுடன் நானும் நின்று கொண்டிருந்தேன். திடீரென்று சுவாமிகள், பொடியன் இங்காலை வந்திருக்கட்டும்” என்று கூறிவிட்டு வலப்புறம் கையைக் காட்டினார்கள் என்னைத்தான் என்பதை அறியாத நான் “பொடியன்” என்று கூறியது யாரென்று தெரியாமல் நின்று கொண்டிருந்தேன். சுவாமிகள் விரலினால் சுட்டிக்காட்டி “பொடியா! உன்னைத்தான்” என்று கூறினார்கள். இப்பொழுது என்னை ஒரு பயம் கெளவிக் கொண்டது. சுவாமிகளிடம் நிற்பவர்கள் யாரும் எதிரே உட்காருவதில்லை என்பதைக் கேள்விப் பட்டிருக்கின்றேன். அப்படியிருக்க நான்
3

Page 6
மட்டும் எப்படி அமர்வது என்று அஞ்சி நிற்கையில் கருணை நிறைந்த பார்வையோடு “வா மகனே! இங்கே வந்து உட்கார்”என்று கூறிவிட்டு வலக்கையால் அமரவேண்டிய இடத்தையும் தொட்டுக் காட்டினார்கள். அன்று முதல் எத்தனையோ தடவைகள் சுவாமிகளிடம் சென்றுள்ளேன். ஒவ்வொரு முறையும் வீழ்ந்து வணங்கியவுடன் அமரச் செய்வார்கள். முதல் இரண்டு தடவைகளில் சுவாமிகள் சொல்லிக் கொண்டிருந்தவை என் மனதில் குழப்பத்தை விளைவித்தன. சுவாமிகள் விடாமல் நீளமாகப் பாடிக்கொண்டே இருப்பார்கள். கூர்ந்து கவனித்த பொழுது திருவாசகத்தில் ஒரு அரையடி, தேவாரத்தில் ஒரு ஒன்றரையடி, திருவிசைப்பாவில் நாலு சொற்கள் என்று மாறி மாறிப் பாடிக்கொண்டே இருப்பார்கள். என் போன்ற விபரம் புரியாதோருக்கு ஏன் சுவாமிகள் இப்படி அரையடி, முக்காலடி என்று பாடுகிறார்கள் என்ற சந்தேகம். வெளியே வந்து நண்பர்களைக் கேட்ட பொழுது எப்போதும் சுவாமிகள் இப்படித்தான் பாடிக்கொண்டே இருப்பார்கள் என்றார்களே தவிர யாரும் என் ஐயத்தைப் போக்கவில்லை. உள்ளிருந்து வெளியே வந்த அன்பர்களைக் கண்டு பேசும் போது
4

ஒரு உண்மை தெரியலாயிற்று. தாங்கள் பெரும் குறையோடிருந்ததாகவும், சுவாமிகள் பாடிக் கொண்டிருக்கையில் குறிப்பிட்ட சில வார்த்தைகள் தம் மனத்துள் புகுந்து பெரிய அமைதியைத் தந்ததாகவும் தம்முடைய பிரச்சினைகட்கு அவை விடையாக அமைந்ததாகவும் கூறினார்கள். வருபவர் வாய்விட்டுக் குறைகளைக் கூறுவதும் இல்லை. அந்த மகா புருஷர் கேட்பதுமில்லை. ஆனாலும் வருப வர்க்குஅமைதி கிடைத்து விடும். கம்பநாடன் "வாராதே வரவல்லாய்” என்று கூறுவதன் பொரு ளைச் சுவாமிகளிடம் இருக்கும் போது தெரிந்து கொள்ள முடிந்தது.
ஏறத்தாழ இருபது தடவைகளுக்கு மேல் சுவாமிகளைத் தரிசித்திருக்கின்றேன். ஒவ்வொரு முறையும் நான்கைந்து நாட்கள் யாழ்ப்பாணத்தில் இருப்பேன். ஆதலால் அன்றன்று என் சொற்பொழிவு முடிந்தவுடன் அந்த மகானின் சந்நிதிக்குச் சென்று அரை மணியோ ஒரு மணியோ அவரின் திருவடிக் கீழ் அமர்ந்து அவரின் அருளைப் பெறும் வாய்ப்புப் பெற்றிருந்தேன். அவற்றைத் தொகுத்துக் கூறுவ தானால் ஒரு நூலாகவே ஆகிவிடும். எனவே மூன்று நிகழ்ச்சிகளை மட்டும் அடியேன் தருகிறேன். இப்பெரு
5

Page 7
மகனார் எல்லாம் வல்ல சித்தர் என்பதை நிரூபிக்க இந்நிகழ்ச்சிகள் துணைபுரியும் என்று நம்புகின்றேன்.
ஒருமுறை திருவாளர் சிறீகாந்தா என்பவர் யாழ்ப்பாணத்தில் கலெக்டராகப் பணிபுரிந்து வந்தார். அவரும் அவர் மனைவியாரும் சுவாமிகளிடம் பெரும் பக்தி கொண்டவர்கள். அவர்களுடன் தங்கியிருந்த நானும் சுவாமிகளைப் பற்றி அவர்களிடம் பேசிக் கொண்டிருப்பதில் பெரு மகிழ்ச்சி அடைவேன். இம்முறை கதிர்காமத்தில் ஆடிவேல் விழா நடைப் பெறுகின்ற முறையாகும். திருவாளர் சிறீகாந்தா எங்கிருந்தாலும் ஆடிவேலுக்குக் கதிர்காமம் செல்வது வழக்கம். ஆனால் இம்முறை ஊரைவிட்டுப் போகக்கூடாது என்று அரசு ஆணை கட்டிப் போட்ட தால் போகமுடியவில்லை என்று வருந்தினார். நெருங்கிய நண்பராகிய அவர் அ. ச.ஐயா! யோகர் சுவாமிகள் தவறாமல் ஆடிவேலுக்குக் கதிர்காமம் போய்விடுவார்கள் இந்த ஆண்டும் போயிருப்பார்கள். நமக்கோ போகமுடியவில்லை. சுவாமிகள் தங்கியிருக்கும் குடிலுக்குச் சென்று ஒரு கும்பிடு போட்டு வரலாம். வாருங்கள்” என்றார். அதை ஏற்றுக் கொண்டு நான் புறப்பட நானே காரை ஓட்ட ஏற்றுக் கொண்டேன். முதல் இருக்கையில் சிறீகாந்தாவும்
6

நானும் இருக்க பின் இருக்கையில் திருமதி சிறீகாந்தா அமர்ந்தார்கள். உறுதியாகச் சுவாமிகள் இருக்க மாட்டார்கள் என்ற துணிவுடன் சென்றோமாதலால் குடியின் வாயிலை நெருங்குகின்ற வரையில் பேசிக் கொண்டே சென்றோம். மூவரும் நுழைந்தவுடன் மிகப்பெரிய அதிர்ச்சிக்குள்ளானோம். நாங்கள் வாய்திறந்து ஒன்றும் பேசவில்லை; பேசவும் முடியவில்லை. அந்த நிலையிலும் அந்த அருளாளர் "பொடியா உன்னுடைய இடத்தில் வந்திருக்கட்டும்” என்றார்கள். நண்பர் சிறீகாந்தாவும் அவர் மனைவி யும் சுவாமிகள் கூட ஆடிவேலுக்குப் போகவில்லை என்பதைக் கண்டு ஒன்றும் புரியாமல் நின்றார்கள். சுவாமிகள் அவர்களைப் பார்த்து “ஏன் மகனே! நீ ஆடிவேலுக்குப் போகவில்லையா?” என்று கேட்டார் 'கள். நண்பர் சிறீகாந்தா, கண்ணிர் ஆறாக பெருக வாய் குழறி அரச ஆணையின் காரணமாகத் தான் யாழ்ப்பாணத்தில் தங்க நேரிட்டது என்று சொல்லி அழுதார்கள்.
உடனே சுவாமிகள் பின்வருமாறு கூறி னார்கள். "கவலை வேண்டாம் மகனே, நமக்கென்ன வாகனமா இருக்கிறது? அந்த மடையனுக்குத் தான் மயில் வாகனம் இருக்கிறது. வேண்டுமானால்
7

Page 8
அவன் தான் நம்மிடம் வர வேண்டும். நாமெங்கே போவது? என்று சொல்லிவிட்டுச் சிரித்துக்கொண்டே பாட ஆரம்பித்து விட்டார்கள். ஒரு மணிநேரம் இங்கே தங்கிய பிறகு சுவாமிகளிடம் விடைபெற்றுக் கொண்டு வீடு திரும்பினோம் வரும் பொழுது நண்பர் சிறீகாந்தா சொல்லியது இன்னும் என் கவனத்தில் உள்ளது. "அ.ச. ஐயா! பல ஆண்டுகளாகத் தவறாமல் ஆடிவேலுக்குக் கதிர்காமம் செல்லுகின்ற நான் இந்த ஆண்டு போகமுடியவில்லையே என்று வருந்தினேன். ஆனால் சுவாமிகளும் போகவில்லை என்பதை இப்போ கண்டு விட்டோம். அவரைத் தரிசித்ததால் கதிர்காமத்தைத் தரிசித்து விட்டோம் என்ற எண்ணம் மனதில் நிறைந்து விட்டது.” என்றார்.
இரண்டு நாட்கள் கழித்துக் கொழும்பிற்குச் சென்றேன். அங்கு ஐந்து நாட்கள் பேச ஏற்றுக் கொண்டிருந்தேன். முதல் நாள் போய் இறங்கியவுடன் வழக்கம் போல் சேர். கந்தையா வைத்தியநாதன் உட்படப் பலர் விமான நிலையம் வந்திருந்தனர். அன்று மதியம் செய்தி விளம்பரத்துறைச் செயலாளர் வீட்டில் மதிய உணவிற்கு ஏற்பாடாகி இருந்தது. சாப்பிடுவதற்கு முன் "ஆடிவேல் விழாவைச் சினிமா எடுத்திருக்கின்றோம் பார்க்கிறீர்களா என்று கேட்டார்?

நான் சரி என்றவுடன் ஜன்னல்களை எல்லாம் மூடிவிட்டு 14.மி.மீ புரஜெக்டர் (Projector) கருவி வைத்து மூன்று நாட்கள் முன்னர் நடந்த ஆடிவேல் விழாவில் எடுத்த படத்தைப் போட்டார்கள். சில நிமிடங்கள் கழிந்தவுடன் என்மூச்சே நின்றுவிடும் போல் ஆகிவிட்டது. காரணம் யாழ்ப்பாணத்தில் சிறீகாந்தா உட்பட எங்கள் மூவரிடமும் ஒரு மணி நேரம் காட்சி தந்த யோகர்சுவாமிகள் அதே நேரத்தில் கதிர்காமத்தில் ஒலிவாங்கியின் முன்னர் பேசுவதை அந்த சினிமாப் படம் காட்டிற்று.
அதிர்ந்து போன நான் செயலாள நண்பரைப் பார்த்து "இது என்ன பழைய படம். இதைப் போட்டுக் காட்டினிர்களே?” என்றேன். அதை மறுத்த அவர் முந்தநாள் எடுத்தது தான் இது என்பதற்கு அத்தாட்சியாக அந்தப் படச்சுருளை வைக்கும் தகர டப்பாவின் மேல் எழுதியிருந்ததைக் காட்டினார். எப்பொழுது எடுக்கப்பட்டது எந்த மணியில் இருந்து எதுவரை என்றெல்லாம் அதில் எழுதியிருந்தது.
பொறுமை இழந்த நான் உடனே தொலைபேசி மூலம் யாழ்ப்பாணத்தில் சிறீகாந்தாவுடன் தொடர்பு கொண்டேன். நான் எவ்வளவு எடுத்துக் கூறியும் சிறீகாந்தா நம்ப மறுத்து
9

Page 9
விட்டார். அ.ச. ஐயா! நாம் மூன்று பேரும் சுவாமிகளிடம் ஒரு மணிநேரம் இருந்ததையும் அவரது பொன்மொழிகளைக் கேட்டதையும் நன்றாய் அறிவோம். "நமக்கென்ன வாகனமா இருக்கிறது? அந்த மடையனுக்குத் தான் வாகனம் இருக்கிறது” என்று கூறியது நினைவில்லையா? என்று கேட்டார். எவ்வளவு சொல்லியும் நண்பர் சிறீகாந்தா படச் சுருளை நம்பத் தயாராக இல்லை. அரசுப் பணியாளர்கள் ஏதோ தவறு செய்து விட்டார்கள் என்றே உறுதியாக நம்பினார். இந்நிலையில் நானே ஒரு முடிவுக்கு வந்தேன். ஐந்து நாட்கள் சொற் பொழிவு முடிந்ததும் கொழும்பிலிருந்து நேரே சென்னை வருவதற்கு என்னிடம் பயணச் சீட்டு இருந்தாலும் அதை மாற்றி யாழ்ப்பாணத்தில் ஒரு நாள் தங்கிச் செல்ல முடிவு செய்தேன். அன்று கூட்டத்திற்கு வந்திருந்த பலரும் கதிர்காமம் சென்று மயில்வாகன முருகனையும் மானுட வடிவில் யோகர் சுவாமிகள் என்ற பெயரில் இருந்த முருகனையும் கண்டவர்கள் ஆவர். சுவாமிகள் அங்கு பேசியதை இவர்கள் அனைவரும் நேரே கேட்டவர்கள். ஆதலால் அவர்கள் என்னை நம்பத் தயாராகவில்லை.
இந்நிலையில் என்பணி முடிந்தவுடன்
10

ஆறாம் நாள் புறப்பட்டு யாழ்ப்பாணம் வந்தேன். விமான நிலையத்திற்கு வந்த சிறீகாந்தா இதுபற்றி அவசரமாக என்னிடம் பேச விரும்பியதால் ஒட்டுனரை விட்டுவிட்டுத் தானே வண்டி ஒட்டி வந்தார். பலாலி நிலையத்திலிருந்து கலெக்டர் பங்களா செல்லும் வரையில் நடந்தவற்றையெல்லாம் கூறினேன். நண்பர் சிறீகாந்தா அவர்கள் உறுதியாக அந்தச் சினிமாப்படம் பழைய படம் என்ற முடிவிலிருந்து மாறவேயில்லை. அன்று மாலை ஒரு மணியளவில் நாங்கள் மூவரும் சுவாமிகளைத் தரிசிக்கச் சென்றோம். விழுந்து வணங்கியவுடன், சுவாமிகள் “பொடியா! நீ ஏன் பட்டணம் போகாமல் இங்கே வந்தாய்?" என்றவுடன் நான் அச்சத்தோட நடந்தவற்றைக் கூறினேன். சுவாமிகள் கடகட வென சிரித்து விட்டு "அந்த மடையனுக்குத் தான் மயில் இருக்கிறது. நாங்கள் எப்படி அங்கே போக முடியும் மயிலா இருக்கிறது நமக்கு” என்று கூறிச் சிரித்தார். அட்டமா சித்திகளில் வேறொருவர் காணாமல் ஒரே நேரத்தில் பல இடங்களில் இருக்கும் சிறப்பு சித்தர்களுக்குரியது என்பதைப் படித்திருக்கின்றேன். ஆதலால் மனதில் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “சுவாமிகள் அங்கே இருந்ததும் உண்மை. இது
11

Page 10
29
அட்ட. என்று தொடங்கினேன். அந்த வார்த்தையை முழுவதும் கூறவிடாமல் சுவாமிகள் உரத்த குரலில் “பொடியா! செருப்படி வேண்டுமோ மகனே உனக்கு? வாயை மூடடா” என்றார்கள். பிறகு அன்பொழுகப் பேசிக்கொண்டிருந்தார்கள். மறுநாள் நான் சென்னை மீண்டுவிட்டேன். யோகர் சுவாமிகள் எல்லாம் வல்ல சித்தர் என்பதற்குத் தலையாய எடுத்துக் காட்டு இதுவாகும்.
என்நினைவில் ஆழமாக நின்றதைக் கூறலாம். ஒரு முறை யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் சொற்பொழிவு ஆற்றுவதற்காக பல்கலைச்செல்வர் டாக்டர் தெ. பொ.மீனாட்சி சுந்தரனார், டாக்டர் டி. எம். பி. மகாதேவன், நான் ஆகிய மூவரும் சென்றிருந்தோம் அமைச்சர் நடேசன் அவர்கள் வீட்டில் தங்கியிருந்தோம். திரு. தெ. பொ. மீயும் நானும் சுவாமிகளிடம் செல்லும் வாய்ப்பை முன்னரே பெற்றிருந்தோம். திரு. மகா தேவனுக்கு இது புதிய அனுபவம். நான்கு நாட்களும் சொற்பொழிவுகள் முடிந்தவுடன் சுவாமிகளிடம் சென்று ஒரு மணி நேரம் தங்கி அவர்கள் ஆசீர்வாதத்துடன் திரும்புவது வழக்கம் முதல் மூன்று நாட்களிலும் பல திருவிளையாடல்களைச் சுவாமி
12

செய்தருளினார். திரு. மகாதேவன் ஏதாவது பலகாரம் செய்து சுவாமிகளுக்கு அதை நைவேத்தியமாகப் படைத்து விட்டு அந்த உச்சிஷ்டத்தை நாங்கள் உண்ண வேண்டும் என்று விரும்பினார். அமைச்சர் நடேசனாரிடம் இதைச் சொல்ல அவர் சமையற்காரனை அழைத்து "ஏழு அல்லது எட்டு மணிக்குக் குளித்துச் சுத்தமாக இடியப்பமும் சொதியும் தயார் செய்து வை” என்று உத்தரவிட்டார். மகாதேவனிடம் திரும்பி “உங்கள் ஆசைக்காக இதனைச் செய்யச் சொல்லி விட்டேன். சுவாமிகள் எதனையும் வாயிற் போட்டு நானறியேன். இருந்தாலும் இப் பலகாரத்தை எடுத்துக்கொண்டு சென்று உங்கள் விருப்பத்தை விண்ணப்பம் செய்யுங்கள். சுவாமிகள் மறுத்து விட்டால் அதற்காக வருந்த வேண்டாம்."என்று கூறினார் நடேசனார்.
திடீரென்று ஒரு அதிசயம் நிகழ்ந்தது. நான்கு மணிக்கு அமைச்சர் உட்பட நாங்கள் நால்வரும் கல்லூரிக்குப் புறப்படத் தயாராக இருந் தோம். சமையற்காரனுக்குத் திடீரென்று காக்கை வலி கண்டுவிட்டது. அவனை மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு நாங்கள் சொற்பொழிவுக்குச் சென்று விட்டோம். எங்களுக்கே உணவில்லாத போது
13

Page 11
சுவாமிகளுக்கு நைவேத்தியம் கொண்டு போவது நடக்காமல் போய்விட்டது .எங்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை, என்ற மனவருத்தத்துடன் பத்து மணியளவில் நாங்கள் மூவரும் சுவாமிகளிடம் வீழ்ந்து வணங்கி விட்டு நின்றோம். திடீரென்று சுவாமிகள் “அட மகாதேவா! யோகனுக்குச் சாப்பாடு போடவேண்டும் என்று நினைத்தாயல்லவா? கவலைப் படாதே" என்று கூறிவிட்டு மூவரையும் அமருமாறு செய்தார்கள். திடீரென்று குடிசையில் ஒரு மூலையைச் சுட்டிக்காட்டி, “டேய் பொடியா! அங்கே இடியப்பமும் சொதியும் இருக்கிறது. நான்கு இலைகளும் இருக்கின்றன. எடுத்துப் போடு” என்றார்கள். சுவாமிகளுக்குப் படைக்கப்பட்ட இலைகளில் இருந்த இடியப்பத்தை நன்கு பிசைந்து கடுகளவு தம்முடைய திருவாயில் போட்டுக்கொண்டு எஞ்சியவற்றை உருண்டைகளாக உருட்டி எம் மூவர் இலைகளிலும் போட்டு உண்ணுமாறு பணித்தார்கள். இவை முடிந்த பிறகு திடீரென்று “டேய் மகாதேவா! நீ என்ன செய்யப்போகிறாய் நாளைக்கு?”என்றார்கள். அவர் தெ. பொ.மீ யும், தானும் மறுநாட்காலை விமானத்தில் சென்னை செல்லப் போவதாகக் கூறினார்கள். நான் கொழும்பு செல்லப்போவதாகக்
14

கூறினேன். சுவாமிகள் சிரித்துக் கொண்டே "அடே பொடியா இவர்கள் இருவரும் பறவை மாதிரிக் கைகளை இறக்கையாகப் பரப்பிக் கொண்டு பறக்கப் போகிறார்கள் தெரியுமா? என்றார்கள். எங்கள் வயிற்றில் புளியைக் கரைத்து விட்டது. இவர்களைப் போக வேண்டாம் என்று சுவாமிகள் கூறுகின்றார்களா என்ற சந்தேகம். சுவாமிகளின் எதிரே வருகின்ற பெரியவர்கள் பிரதம மந்திரியிலிருந்து சாதாரண மனிதர்வரை யாரும் பேசுவதில்லை. தொடக்கத் திலிருந்தே அவர்கள் பேசும் உரிமையை எனக்கு வழங்கியிருந்தார்கள். நான் பேசாதிருந்தாற் கூட “டேய் பொடியா ஏன் சும்மா நிற்கின்றாய் ஏதாவது சொல் என்பார்கள்." அந்த உரிமையை வைத்துக் கொண்டு “இப்பொழுது இவர்கள் பயணத்தை நிறுத்தி விடட்டுமா?” என்று கேட்டேன். சுவாமிகள் சிரித்துக் கொண்டே “அவர்கள் போவதை யோகன் ஏன் நிறுத்த வேண்டும். பறவை போலப் பறப்பார்கள்.” என்று கூறினார்கள். சுவாமிகளை விட்டு வரும்போது நடுநிசி ஆகிவிட்டது. நடந்தவற்றைக் கூறியவுடன் அமைச்சர் நடேசனார் இவர்களைப் போக வேண்டாம் என்று எவ்வளவோ கூறிப்பார்த்தார். இருவரும் கேட்பதாக இல்லை. வேறு வழியில்லாமல் மறுநாட்காலை
15

Page 12
ஏழேகால் மணிக்கு இவர்களை வழியனுப்ப அமைச்சரும் நானும் சென்றோம். இருவரும் விமானத்தில் ஏறி அமர்ந்து விட்டனர். ஒடு பாதையின் தொடக்கத்திற்குச் சென்ற விமானம் பலமுறை விசிறிகளையும் சுழலவிட்டுக் கொண்டிருந்ததைக் காணமுடிந்தது. அது டக்கோட்டா விமானம். சிறிது நேரத்திற்கெல்லாம் ஒலிபெருக்கியில் பின்வருமாறு பேசப்பட்டது. "விமானம் பழுதடைந்து விட்டதால் இன்று சென்னை செல்லும் வாய்ப்பு இல்லை. நாளை இதே நேரத்திற்கு இதே பயணச் சீட்டுகளுடன் பயணிகள் வரலாம்.” விமானத்தைக் கட்டி இழுத்துக் கொண்டு வந்தார்கள், தெ.பொ.மீ யும், மகாதேவனும் கீழே இறங்கினார்கள் அமைச்சர் நடேசனுக்குப் பெரிய ஆனந்தம், மகாதேவனுக்கு வருத்தம், வழக்கம் போல் அன்று மாலை சுவாமிகளைக் காணச் சென்றோம். சுவாமிகள் சிரித்துக் கொண்டே “என்னடா! மகாதேவா! இறக்கையை விரித்துப் பறக்கவில்லையோ!” என்றார்கள். மகாதேவன் அவர்கள் கண்ணி ததும்ப விழுந்து வணங்கி விட்டுத் தான் அவசரப்பட்ட காரணம் கூறினார். அன்று சென்னை போயிருந்தால் தான் இரவு டெல்லி சென்று (TW.A) விமானம் மூலம் ஹவாய்த் தீவிலுள்ள ஆனலுலுவுக்குச்
16

(Honolulu) செல்ல வேண்டும். அதற்கு மறுநாள் அங்கு நடைபெறப் போகும் அகில உலக வேதாந்த மகாநாட்டிற்குத் தான் தலமை வகிக்க வேண்டும். எல்லாம் கெட்டு விட்டது. என்று வருந்தினார்.அதைக் கேட்ட சுவாமிகள் "கவலை வேண்டாம் மகனே. இம்மகாநாட்டைப் பதினைந்து நாள் தள்ளிப்போட்டு விட்டார்கள். நீ அமைதியாகச் சென்று தலைமை ஏற்று நடத்தலாம்.” என்று கூறினார்கள். சுவாமிகளிடம் இருந்து விடைபெற்று வந்து நடேசன் வீட்டில் தங்கிய போது மகாதேவன் கூறிய வார்த்தைகள் அவர் துயரத்தை எடுத்துக் காட்டின. "இந்த மகா நாடுகள் ஒரு வருஷத்திற்கு முன்பே அட்டவணை போட்டுத் தயாரிக்கப் பட்டவையாகும். உலகம் முழுவதிலிருந்தும் பலர் வருவார்கள். ஆகையால் இரண்டு நாள் முன்னர் அதைமாற்றுவது இயலாத காரியம்” என்று கூறி வருந்தினார். மறுநாள் அவர்கள் இருவரும் சென்னை சென்றனர். நான் கொழும்பு வந்து பதினைந்து நாட்கள் தங்கி விட்டுச் சென்னை வந்து ஒரு மாதம் கழிந்த பின் மகாதேவனைச் சந்தித்தேன். நாத்தழுதழுக்கச் சுவாமிகள் எவ்வளவு பெரிய சித்தர் என்பதை நான் அனுபவித்து விட்டேன். அங்கே விமானம் தடைப்பட்ட
17

Page 13
அதே நேரத்தில் சென்னையில் என் வீட்டிற்கு ஒரு தந்தி வந்திருந்தது. பதினைந்து நாட்கள் மகாநாடு பல்வேறு காரணங்களால் தள்ளி வைக்கப்பட்ட தென்றும், பதினாறாவது நாள் விழா தொடங்கும் என்றும் தந்தியில் அறிவித்திருந்தார்கள். அப்படியே பதினாறாவது நாள் தொடங்கிய விழாவில் தலைமையேற்று என் பணி முடித்து வந்து விட்டேன்” என்று கூறினார்கள். யேர்கள் சுவாமிகள் என்ற சித்தரிடம் நாங்கள் அனுபவித்த இந்த நிகழ்ச்சி அவர் யார் என்பதை எடுத்துக் காட்ட உதவும்.
மேலே கூறிய இரண்டு நிகழ்ச்சிகளிலும் உடனிருந்து சுவாமிகளின் யோகசித்தியையும் பக்தர்களுக்கு அருளுகின்ற திறத்தையும் என்னால் காண முடிந்தது. இனி நான் சொல்லப் போகும் நிகழ்ச்சி எனக்கு நேரடியாக நடந்த அனுபவமாகும். சுவாமிகள் இருக்கும் காலத்திலேயே இதுபற்றி எழுத வேண்டும் என்று ஈழகேசரி, தினகரன் போன்ற பத்திரிகைகள் வேண்டியும் மகானின் உத்தர வில்லாமல் அதைச் செய்யமுடியாது என்று கூறிவிட்டேன். இப்போது அதை எழுதுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவது அப்பெருமகனார் சித்தியடைந்து விட்டார்.
18

இரண்டாவது என்னுடைய வயதும் எண்பதைக் கடந்து விட்ட காரணத்தால் பின்வரும் சமுதாயம் எத்தகைய அருளாளர்களை இந்தத் தமிழினம் பெற்றிருந்தது என்பதை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும். ஆதலால் தான் இதனை விரிவாக எழுத முற்பட்டேன்.
1955 வாக்கில் யாழ்ப்பாணத்தை அடுத்துள்ள கரணவாய் தெற்கு என்ற ஊரில் பத்து நாட்கள் தொடர்ந்து சொற்பொழிவு செய்வதாக ஒப்புக் கொண்டு சென்றேன். மலாய் நாட்டு ஓய்வூதியம் பெறும் முருகப்பு என்பவர் வீட்டில் தங்கியிருந்தேன். பகல் முழுவதும் வேலையில்லை ஆதலாலும், இரவு ஒரு மணிக்குச் சொற்பொழிவு தொடங்குவதாலும் அன்பர்கள் சிலர் எனக்காக ஒரு காரைக் கொடுத்துப் பகலில் எங்கு வேண்டுமானாலும் போய்வர ஏற்பாடு செய்தார்கள். முதல் நாள் சொற்பொழிவு முடிந்து வழக்கம் போல் சுவாமிகளிடம் சென்று வணங்கி வழிபட்டு மீண்டு விட்டேன்.
மறுநாள் பொழுது விடிந்தவுடன் பல் தேய்த்துக் கொண்டு நின்றேன். நண்பர் முருகப்பு வாலாயமாகக் கேட்கின்ற "நன்கு உறங்கினிகளோ ஐயா” என்ற கேள்வியைக் கேட்டார். அவருக்குப் பதில் கூறத்தொடங்கினேஜ் ஆனால் வாயிலிருந்து

Page 14
ஒரு சொல்லும் வரவில்லை. காற்றுத்தான் வெளிவந்தது. எவ்வளவோ முயன்றும் ஒரு எழுத்தைக் கூட உச்சரிக்க முடியவில்லை. அதிர்ந்து போன நான் என்ன செய்வது என்றறியாமல் திகைத்தேன். ஒன்பது மணியளவில் காரை நானே ஒட்டிச்சென்று சாவகச்சேரியில் ஓய்வு பெற்றிருந்த தொண்டை, காது, மூக்கு, நோய் நிபுண மருத்துவரைக் காணச் சென்று என் குறையை அவரிடம் எழுதிக் காட்டினேன். அவர் சோதனை செய்து விட்டு “இன்று மாலை உங்களுடன் ஒருவரை அனுப்புகின்றேன் கொழும்பில் சென்று சில சோதனைகள் நடத்திய பிறகு மருத்துவம் செய்யலாம்.” என்று கூறினார். அவரிடம் எழுதிக் காட்டும் பொழுதுParalysis ofVocalchord என்று எழுதிக் காட்டினேன். அவருடைய வாக்கை ஏற்றுக் கொண்டு மாலை கொழும்பு போவதற்குத் தயாராகக் காரில் ஏறி அமர்ந்தேன். கண்ணிர் மாலை மாலையாக வந்தது. காரணம் என் பிழைப்பே வாயின் மூலம்தான் நடை பெற்றது. கல்லூரிப் பேராசிரியர், தொடர்ந்து சொற்பொழிவு செய்பவர் என்ற இரண்டும் போய்விட்டனவே. என்னுடைய பெரிய குடும்பம் என்னாவது. என்ற கவலை மனம் முழுவதையும் சூழ்ந்து கொண்டது. இந்த நிலையில் காரை
20

ஆயத்தப் படுத்தச் சாவியைச் செருகிய நிலையில் அந்த மருத்துவ நிபுணர் வெளியே வந்து காரின் கதவைப் பிடித்துக்கொண்டு "அ.ச. ஐயா! யோக ருடைய சீடர்தானே தாங்கள். அவரைப் போய்ப் பாருங்களேன்” என்றார். அந்த வினாடி வரை சுவாமிகளின் நினைவே என் மனதில் தோன்றவில்லை. அவர் கூறியவுடன் அங்கு செல்லப்புறப்பட்டேன்.
அக்காலத்தில் பகலில் யாரும் சுவாமி களிடம் செல்வதில்லை. அவருடைய தியானம் முதலியவற்றுக்கு இடையூறாக யாரும் போவ தில்லை. மாலை ஆறு மணிக்கு மேற்றான் செல்வார்கள். அனைவருக்கும் தெரிந்த இச் செய்தி எனக்கும் தெரிந்திருந்தது. எனவே ஒரு வினாடி சிந்தித்து உடனடியாகச் சுவாமிகளிடம் போவதே சரி என்ற முடிவிற்கு வந்தேன். நேரே வண்டியை ஒட்டிச் சென்று ஆச்சிரமத்தின் பக்கத்தில் நிறுத்தி விட்டு எதிரே உள்ள கேணியில் கை, கால்களைச் சுத்தம் செய்து விட்டு மகானின் குடிலுக்குள் நுழைந்தேன். அடக்கமுடியாத அழுகையும், கண்ணீரும் என்னை ஆட்கொண்டிருந்தன. விழுந்து வணங்கிய நான் எழுந்திருக்க விரும்பவில்லை. ஓரிரு நிமிடங்கள் கழித்து “ஏண்டா! பொடியா அந்த
21

Page 15
மருத்துவர் என்ன முருகன் என்ற நினைப்பா? எதற்காக அவரிடம் போனாய்” என்று ஏசியதோடல்லாமல் என்னுடைய அறியாமை" பற்றியும் வெகுவாக ஏசினார்கள். கடைசியில் “பொடியா இங்கே உட்கார்” என்று நான் வழக்கமாக அமரும் இடத்தைக் காட்டினார்கள். அப்பொழுது இருந்த மனநிலையில் சுவாமிகள் பேசியது எதுவும் என் மனதிற் பதியவில்லை. ஏதேதோ பேசிவிட்டு அரைமணி நேரம் கழித்து அவர்கள் சொல்லிய வார்த்தைகளை ஏறத்தாழ அப்படியே கீழே தந்துள்ளேன். ஒரு சில சொற்கள் முன் பின்னாக இருக்கலாம். இத்தனை ஆண்டுகள் கழித்தும் அச்சொற்களை மறக்க முடியவில்லை. காரணம் என்னுடைய வாழ்க்கையில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்திய சொற்கள் அவை. “பொடியா வழக்கம் போல் மாலையில் பிரசங்கம் செய்துவிட்டு இங்கே வா.” என்று கூறிய சொற்கள் ஒரு பெரிய அதிர்ச்சியைத் தந்தன. அப்படியானால் நான் பேச முடியும் என்பதைச் சுவாமிகள் குறிப்பாக உணர்த்தி விட்டார்கள். எழுந்து வணங்கி விட்டு "உத்தரவுப் படியே செய்கிறேன்” என்றேன். அந்த இரண்டு வார்த்தைகள் தான் அப்போது புதிதாகப் பிறந்த என் வாயிலிருந்து வந்த முதலிரண்டு
22

சொற்கள் ஆகும். என்னை மறந்து அந்த சித்த புருஷன் எதிரே நிற்கும் போது திடீரென்று சுவாமிகள் பின் வருமாறு கூறினார் கள் . "பொடியா சேக்கிழாரையும் கம்பனையும் நாங்கள் தானே வெட்டிப் புதைக்கணும் கவலையில்லாமல் போய்வா" என்றார்கள். இதன் பொருள் என்ன என்பதைப் பின்னர் விளக்குகின்றேன்.
வெளியில் வந்து காரை ஓட்டிக்கொண்டு சுவாமிகளிடம் என்னைப் போகுமாறு பணித்த அந்த மருத்துவப் பெருந்தகையைக் காணச் சென்றேன். தெருவிலிருந்தபடியே “டாக்டர்” என்று பெருங்குர லெடுத்துக் கூவினேன். அந்த முதியவள் வீட்டிலிருந்து வெளியே வந்து சாஷடாங்கமாக விழுந்து என்னை வணங்கினார். சற்றும் எதிர்பாராத இதனைக் கண்ட நான் பெரிதும் அதிர்ச்சியடைந்து, "இவ்வளவு முதியவராகிய தாங்கள் என்னைக் கும்பிடலாமா? இது முறையன்று என்று கூறினேன். என்னுடைய இரண்டு கைகளையும் பிடித்துக்கொண்ட அவர் உள்ளே அழைத்துச் சென்று அமரவைத்தார். அதே நேரம் அவர் பணியாளர் ஒருவர் இரண்டு விமான டிக்கடடுக்களைக் கொண்டு வந்து அவரிடம் தந்தார். ஏதோ அவருக்கு அந்த டிக்கட்டு என்று நினைத்தேன்.
23

Page 16
அப்பெருமகனார் டிக்கட்டை என்னிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார். யாழ்ப்பாணத்திலிருந்து சென்னை செல்வதற்கு என் பெயரிலும் அப்பணியாளர் பெயரிலும் இரண்டு டிக்கட்டுகள் இருந்தன. ஒன்றும் புரியாமல் திகைத்த என்னைப் பார்த்துப் பின்வருமாறு பேசினார். “அச. ஐயா! இங்கு செய்த சோதனையிலேயே தாங்கள் எழுதிக் காட்டியது உண்மை என்பதைத் தெரிந்து கொண்டேன். இதற்கு இதுவரை மருத்துவ உலகம் ஒன்றும் செய்ய முடியவில்லை. கோடிக்கு ஒருவருக்கு இது வரலாம். வந்து விட்டால் அதுதான் அவருடைய முடிவு. ஆக உங்களிடம் சொல்லாமல் நாளைக்கு உங்களைச் சென்னைக்கு அனுப்ப முடிவு செய்தேன். பேச முடியாத தாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. ஆதலால் இந்த அன்பரையும் உங்களோடு அனுப்ப முடிவு செய்தேன். காரில் உங்களை ஏற்றுகின்ற வரை எனக்கும் சுவாமிகளின் நினைவு வரவில்லை. எப்படி உங்களை ஊருக்கு அனுப்புவது என்ற எண்ணம்தான் என் மனதில் மேலோங்கி நின்றது. தாங்கள் வண்டியில் ஏறிய பிறகு வண்டிக் கதவைத் தொட்டுக் கொண்டு “நீங்கள் சென்று வாருங்கள் " என்று விடைகொடுக்க முயலும் போது
24

தான் சுவாமிகளின் எண்ணம் திடீரென்று மனதில் தோன்றிற்று. நாற்பது வருடங்களுக்கு மேல் ENT மருத்துவராகக் கொழும்பில் பணி செய்த எனக்கு அந்த வினாடி ஓர் எண்ணம் தோன்றிற்று. மருத்துவ உலகம் உதவமுடியாத தங்களுக்கு இறைவனின் அருள் ஒன்றுதான் உதவமுடியும். அப்படியானால் இந்த அருளை வழங்கக் கூடிய இறைநேசர் சுவாமிகள் ஒருவராகத்தான் இருக்கமுடியும். அதனாற்தான் பகலில் யாரும் சுவாமிகளிடம் செல்வதில்லை யென்று தெரிந்திருந்தும் தங்களைப் போகுமாறு பணித்தேன். சுவாமிகளே என்மனதில் அந்த எண்ணத்தைத் தோற்றுவித்திருக்க வேண்டும். இத்தகைய அற்புதங்கள் பலவற்றைப் பிறர் அறியாமல் ஒரு சிலருக்குச் சுவாமிகள் செய்கி றார்கள்” என்பதைத் தழுதழுத்த குரலில் கூறிவிட்டு, என்னை அங்கேயே தங்கி மதிய உணவு உட்கொண்ட பிறகு போகலாம். என்று பணித்தார்கள்.
அன்று மாலை வழக்கம் போலப் பேசி னேன். பின்னர் சுவாமிகளிடம் சென்று ஆசி பெற்றேன். ஏனைய ஒன்பது நாட்களும் இதே முறையில் சுவாமிகளைச் சென்று தரிசனம் செய்து வந்தேன். இந்த நிகழ்ச்சி நடைபெற்ற காலத்தில் கம்பனைப்
25

Page 17
பற்றி “இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்” என்ற நூலையும், "நாடும் மன்னனும்” என்ற நூலையும் எழுதி வெளியிட்டிருந்தேன். அதன் பிறகு ஏறத்தாழ முப்பது நூல்களை எழுதியுள்ளேன். என்றாலும் சுவாமிகளின் வாக்குப் பொய்க்கவில்லை. அந்நூல்களில் முக்கால் பங்குக்கு மேல் கம்பனையும் சேக்கிழாரையும் பற்றிய நூல்களே ஆகும்.
இவற்றோடு இல்லாமல் எஸ். ராஜம் அவர்கள் வெளியிட்ட கம்பராமாயண மூலத்திற்கு ஆசிரியர் குழுவில் ஒருவனாக இருந்தேன். அடுத்து சென்னைக் கம்பன் கழகம் வெளியிட்ட "கம்ப இராமாயணம்” பதிப்பிற்கு பல்கலைச் செல்வர் தெ.பொ.மீ அவர்களுடன் சேர்ந்து பணியாற்றினேன். சென்ற நான்கு ஆண்டுகளாகக் கோவைக் கம்பன் கழகம் வெளியிடும் இராமாயண நூலுக்கும் முதன்மைப் பதிப்பாசிரியனாக இருந்து வருகின்றேன். தஞ்சைப்பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்த வி.ஐ. சுப்பிரமணியம் அவர்கள் எதிர்பாராத விதமாக என்னை அழைத்துச் சேக்கிழாரைப் பற்றிய விரிவான நூலொன்றை எழுதுமாறு பணித்தார்கள். மூன்று ஆண்டுகள் பல்கழைக்கழகத்தின் ஏற்புப் பணியாக "பெரியபுராணம் ஓர் ஆய்வு” என்ற நூலை
26

எழுதி முடித்தேன்.
1996 இல் என்னுடைய எண்பதாவது வயது நிறைவு நாளில் இராமனைப் பற்றிப் புதிய கோணத்தில் ஒரு நூல் எழுதுமாறு "தானசூரகள்ணன்" திரு. ஆர்.துரைசாமி நாயுடு அவர்கள் (கோவை) பணித்தார்கள். “இராமன் பன்முக நோக்கில்” என்ற நூலை எழுதினேன். திரு. நாயுடு அவர்கள் தம் செலவில் அதை வெளியிட்டார்கள். அது 1997 பிப்ரவரியில் வெளியாயிற்று. சேக்கிழாரின் பெரியபுராணத்தைப் பக்தி அடிப்படையில் இல்லாமல் சமுதாய அடிப்படையில் காணவேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றியதுண்டு. அதற்கு வடிவு கொடுக்கத் தொடங்கி 1997 ஜூலையில் " சேக்கிழார் தந்த செல்வம்” என்ற நூலை வெளியிட்டேன்.
நூல்கள் எழுதும் பழக்கமுடைய நான் இவை இரண்டையும் எழுதியதில் என்ன புதுமை என்று பலர் நினைக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை யோகர் சுவாமிகள் இட்ட கட்டளை என்று ஒவ்வொரு விநாடியும் நினைக்கின்றேன். என்ன காரணத்தாலோ சென்ற நாற்பது ஆண்டுகளாக இவ்விருவரையும் தாண்டி வெளியே செல்ல முடியவில்லை. தொல்காப்பிய பொருளதிகாரத்திலுள்ள
27

Page 18
மெய்ப்பாட்டியல், உவமவியல் என்ற இரண்டிற்கும் புதியமுறையில் பேராசிரியரிடம் மாறுபட்டு உரை எழுதும் எண்ணம் பல்லாண்டுகளாக இருப்பினும் ஏனோ எழுதமுடியவில்லை. தமிழ்த் தென்றல் திரு. வி.க அவர்கள் திருவாசகத்திற்கு என்னால் ஓர் உரையெழுதப்படவேண்டும் என்று பலமுறை என்னிடம் கூறியதோடு அவருடைய வாழ்க்கைக் குறிப்பிலும் இதனை எழுதியுள்ளார்கள். என்ன காரணத்தாலோ அதுவும் முடியவில்லை. எண்பது வயது பூர்த்தியாகும் போதும் இராமனைப் பற்றியும் சேக்கிழார் பற்றியுமே அடுத்தடுத்து இரண்டு பெரிய நூல்களை எழுதி வெளியிட முடிந்ததென்றால், அதன் உண்மையான காரணம் அ.செ.ஞா. என்ற தனி மனிதனுடைய முயற்சியோ, விருப்பமோ, காரணமல்ல. எந்த விநாடி அந்த மகான் வாயைத்திறந்து "இருவரையும் வெட்டிப் புதைக்க வேண்டும் ” என்று சொன்னார்களோ அந்த விநாடியிலிருந்து அதே பணி என்னையும் அறியாமல் நடந்து கொண்டிருக்கிறது.
என்பது வயதைக் கடந்தாலும் என்னுடைய
குரல் வளத்தைக் கண்டு வியப்படைந்து "எப்படி உனக்கு இந்தக் குரல் இருக்கிறது” என்று என்னிடம்
28

கேட்பவர்கள் பலருண்டு. இதற்காக நான் ஏதோ தனிப்பட்ட முறையில் மருத்துவம் செய்து கொள்கிறேன் என்றோ, குரலை நெறிப்படுத்தும் (Voice culture) முறையைக் கையாள்கிறேனோ என்றும் பலர் என்னிடம் கேட்பதுண்டு. எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் கண்டதையெல்லாம் உண்டு வாழும் எனக்கு இந்தக் குரல் இன்னும் இருக்கிற தென்றால் அது என்னுடையதன்று. அரசங்குடி சரவண முதலியாருக்கு 1916இல் மகனாகப் பிறந்த நான் பெற்றிருந்த குரல் யாழ்ப்பாணத்தில் 1955இல் இழக்கப்பட்டது. அந்தச் சித்த புருஷரைச் சந்தித்த பிறகு இன்று வரை நான் பேசும் குரல் அப்பெருமகன் இட்ட பிச்சையாகும். எனவே இதில் ஆச்சரியப் படுவதற்கோ பெருமையடைவதற்கோ ஒன்றுமில்லை. இந்தமகான்களின் திருவருள் எத்தகையவர்களையும் காக்கும் திறன் உடையது என்பதற்கு இது ஓர் சிறந்த எடுத்துக் காட்டாகும்.
மேலே கூறிய மூன்று நிகழ்ச்சிகளும் என்னோடு நேரடித் தொடர்புடையவை. இனிக் கூறப்போகும் நிகழ்ச்சிக்கும் எனக்கும் நேரடித் தொடர்பில்லை. சுவாமிகளிடம் மாபெரும் பக்தி
29

Page 19
பூண்டிருந்த யாழ்ப்பாண நண்பரொருவர் அவருடைய வாழ்க்கையில் நடந்ததைக் கூறினார். அதைப்பிறரிடம் சொல்லும் பழக்கம் அவரிடம் இல்லை. ஆனால் என் அனுபவங்களை அறிந்த பிறகு அவருடைய அனுபவத்தை என்னிடம் சொல்லுவதில் தவறில்லை என்று கருதிக் கூறினார். இப்போது பெரிய பதவியிலிருந்து ஓய்வுபெற்ற அந்த நண்பரும் இல்லை. சுவாமிகளும் இல்லை. எனவே நண்பர் கூறியதை அப்படியே தருகின்றேன்.
அ.ச.ஐயா! சுவாமிகளின் மாபெரும் ஆற்றலுக்கு ஓர் உதாரணம் சொல்லப் போகின்றேன். மனதுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். பிறரிடம் இதுபற்றிப் பேசத் தேவையில்லை. ஒரு முறை யாழ்ப்பாணம் சென்று சுவாமிகளைத் தரிசித்த பொழுது சிரித்துக் கொண்டே "மகனே சிவனொளி பாதம் போய் வரலாமோ?” என்று கேட்டார். நான் கொஞ்சம் அஞ்சினேன். மலையின் மேல் இருக்கும் அந்த இடத்திற்குச் செல்வதற்குச் சரியான பாதையொன்றும் அப்பொழுது இல் லை. பாறைகளைக் கடந்து தாண்டிக்கொண்டு செல்ல வேண்டும் சுவாமிகளோ முதிர்ந்த பருவத்தினர். என்ன செய்வது என்று திகைத்து இறுதியில்
30

ஒப்புக்கொண்டேன். அந்த மலையின் மேல் ஏறிச் செல்வதானால் போக வரவே பல மணிகள் ஆகும். வழியில் சாப்பிடுவதற்கு ஒன்றும் இராது. எனவே சுவாமிகள் குறித்த நாளில் சட்டி நிறைய இடியப்பமும் சொதியும் தயார் செய்து காரின் பின்புறம் வைத்து விட்டுச் சுவாமிகளும் நானும் மலையடிவாரம் போய்ச் சேர்ந்தோம். அங்கே காரில் இருந்து இறங்கிய இரண்டு பாத்திரங்களையும் பார்த்து “என்ன மகனே இது” என்று கேட்டார்கள். மதிய உணவிற்காக என்று நான் கூறியவுடன் கடகடவென்று சிரித்த சுவாமிகள் "போகும் வழியில் பாதிதூரத்தில் அழகான டீக்கடை இருக்கிறது. வேண்டுமானால் பண்டங்களை வாங்கிச் சாப்பிடலாம்; டீ குடிக்கலாம்” என்றார்கள். எனக்குத் தலை சுற்றியது. ஒரு மாதம் முழுவதும் ஏதோ இரண்டொருவர் தவிர வேறு யாரும் அந்த மலைமீது ஏறிச் செல்வதில்லை. அந்த வழியில் “யாரை நம்பி எந்தப் பயித்தியக்காரன் டீக்கடை வைத்திருப்பான்” என்று நான் திகைத்தாலும் சுவாமிகளிடம் எடுத்துச் சொல்லும் துணிவு எனக்கில்லை. ஆனாலும் சுவாமிகள் நான் கொண்டு வந்த உணவை வண்டியிலேயே வைத்து விடுமாறு பணித்தார்கள்.
வேறு வழியில்லாமல் அரைமனதுடன்
31

Page 20
வண்டியிலேயே உணவை வைத்துவிட்டு இருவரும் மலை ஏறினோம். பாதிவழி சென்றதும் ஓர் அதிசயக் காட்சி, என்னென்று சொல்வது? பாண், ரொட்டி, பலகாரங்கள் இவை அனைத்தும் வைக்கப்பட்டிருந்த ஒரு டீக்கடை அங்கே இருந்தது. "பார்த்தாயா மகனே வேண்டுமானதைச் சாப்பிட்டு விட்டு மேலே போகலாம் என்றார் அந்த சித்த புருஷர். இருவரும் உண்டு விட்டு மேலே சென்றோம். மீண்டும் வரும்பொழுது அதே டீக்கடையில் மறுமுறையும் சாப்பிட்டு விட்டு டீ குடித்துவிட்டுக் கீழே வந்து விட்டோம். “இதுவரையில் இல்லாத பெட்டிக்கடை அங்கே எப்படி வந்திருக்கும். அவ்வளவு பலகாரங்கள் அங்கிருந்தும் எங்களைத் தவிர வேறுயாரும் அங்கில்லையே. அக்கடைக்காரன் யாரை நம்பி இவ்வளவு பலகாரங்களையும், கடையையும் வைத்திருக் கின்றான்.” என்ற எண்ணம் என் மனதை உலுப்பிக் கொண்டிருந்தது. சுவாமிகள் சிரித்துக் கொண்டே "பார்த்தாயா மகனே இந்த இடியப்பத்தையும் சொதியையும் சுமந்து செல்ல வேண்டிய வேலையே இல்லாமற் போய்விட்டது. பார்த்தாயா?” என்றார்கள். சுவாமிகளைக் கொண்டு போய் யாழ்ப்பாணத்தில் விட்டுவிட்டுக் கொழும்பு மீண்ட எனக்கு மனத்தில்
32

அமைதி ஏற்படவில்லை.
இரண்டு நாட்கள் கழித்து உற்ற நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு சிவனொளிபாதம் போய்ச் சேர்ந்தேன். நண்பரிடம் இதைப்பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை. டிக்கடை இருந்த இடத்தின் அடையாளம் நன்கு தெரிந்து வைத்திருந்தேன். அப்படி ஒரு கடை அங்கிருந்த சுவடு கூடத் தெரியவில்லை. நான் சுற்றும் முற்றும் பார்ப்பதைப் பார்த்த நண்பர் “என்ன பார்க்கிறீர்கள்” என்று சொல்லிக் கேட்டார். இங்கு ஒரு டீக்கடை இருந்ததாக ஞாபகம். அதனாற்றான் அது எங்கே போய்விட்டது என்று தேடுகின்றேன் என்றேன்.நண்பர் சிரித்து விட்டு இந்த "இடத்தில் டிக்கடையா? முழுப் பைத்தியமாக இருந்தால் கூட இந்த இடத்தில் டீக்கடையைத் தேடமாட்டாய். மனித நடமாட்டமே இல்லாத இந்த இடத்தில் எந்தப் பைத்தியக்காரன் டீக்கடை வைப்பான் வா போகலாம்" என்று அழைத்துப் போனார்.அந்த நண்பரிடம் நடந்தது எதனையும் நான் சொல்ல வில்லை. காரணம் அதனைப் புரிந்து கொள்ளும் பக்குவம் அவருக்கில்லை என்பதை நான் அறிந்திருந்ததால் அவரிடம் ஒன்றும் கூறவில்லை. "அ.ச.ஐயா, மகானின் திருவருளுக்குத் தாங்கள்
33

Page 21
99.
பாத்திரமானது போல நானும் பாத்திரமாயினேன் என்று கூறி மெய் சிலிர்த்தார்.
அன்று இரவு கொழும்பில் பேசும் பொழுது இந்தநிகழ்ச்சியைச் சொல்லாமல் திருப்பைஞ்ஞீலியில் நாவரசர்பெருமானுக்கு இறைவன் கட்டமுது அளித்ததையும், சுந்தரர்க்கும் அவ்வாறே அளித்த தையும் கூறிவிட்டு இதில் வியப்பொன்றும் இல்லை. "விச்சது இன்றியே விளைவு செய்குவான் ” ஆகிய இறைவன் திருவிளையாடலில் இது ஒரு சாதாரண நிகழ்ச்சி. இது போன்ற நிகழ்ச்சிகளை அனாயாசமாகச் செய்து காட்டும் மகான்கள், சித்தர்கள் இப்பொழுதும் இருக்கிறார்கள். நல்வினை உடையவர்கள் அவர்களைக் கண்டு ஆசி பெறமுடியும். என்று கூறி முடித்தேன்.
அருளாளர்கள் என்பவர்கள் எப்போதும், எல்லா இடங்களிலும் இருந்து கொண்டு இறைவன் கட்டளைகளை நிறைவேற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை இனங்கண்டு கொள்வதும், காண்பதும் அவர்களுடைய அருளாசிகளைப் பெறுவதும் பல பிறப்புக்களிலும் நாம் செய்த புண்ணியத்தின் பயனேயாகும். “கந்துக மக்கரியை வசமாய் நடத்தலாம்” என்று முந்நூறு
34

ஆண்டுகளுக்கு முன்னர் தாயுமானவப்பெருந்தகை கூறியதை 1955லும் செய்து காட்டும் அருளாளர்கள் இருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டவே இப் பெருமகனாருடைய வாழ்வில் அவர் நிகழ்த்திய நான்கு அற்புதங்களை மேலே கூறியுள்ளேன். அப் பெருமானின் அருளாசி அனைவருக்கும் கிட்ட வேண்டும் என்று அவருடைய திருவடிகளில் வேண்டி அமைகின்றேன்.

Page 22
சிவத்தியான மென்னும் ந்தைத் தினந்தோறுஞ் சாப்பிட்டுவா, மனக்குரங்கின்பிணி மாறும். அதைச் சாப்பிடும் போது அனுபானத்தை கூட்டிச் சாப்பிடு. அதுவுமுன்னிடமுண்டு. * அது என்னவென்றால், நாவடக்கம், இச்சையடக்க மென்னுஞ் சரக்கோடு சேர்த்துச் சாப்பிடு. இதுவும் போதாது, பத்திய பாகத்திலேதான் முற்றுந் தங்கியிருக்கிறது. அதுவு முன்னிட முன்ைடு. அது என்னவென்றால், மிதமான ஊண், மிதமான நித்திரை மிதமான தேக அப்பியாசம் என்பவையே. வெற்றி நிச்சயம். ஆன்ம இலாபத்தின் பொருட்டு இதைச் செய். யோகன் பொற்பத மென்றுந் தணையே
அன்பே சிவமென வறிவா ரவல மவனியி லடையார் தன்போ லெவரையும் நினைவார் சாந்தம் பொறுமை
யுடையார்
துன்பே கவலை பிணிகள் தொடரா திவர்களை நாளும் பொன்போ லிலங்கையில் யோகன் பொற்பதமென்றுந்
துணையே! (நற்சிந்தனை)
எழிற்குரு திருத்தாள் போற்றி!


Page 23
Så LIF
லஷ்மி அ 195, ஆட்டுப்பு Ը&TլքL தொலைபேசி: 24485 தொலைநகள்

rī :
*ச்சகம், பட்டித் தெரு, եւ 13, -코, 247353표, 고
33583