கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தி. த. கனகசுந்தரம்பிள்ளை

Page 1
晏帝******
置
|- திருககான மட்டு
தி. த. கனகசு
శస్త్రి ஆசிரி
 
 

茜F壟罩嵩層學韋嵩審壘馨學層 *****
Fria
曹...
། - *蕾 இந்து இளஞர் பேரள்வு :
FLIELI LI JT Go Jr.
-
譬如崑韋*曇華墨層晏富置層疊

Page 2
** ‰',ቋኝጂ¢m*Bሄፉ,%ዳm$‰%ኛm*ጿ,ቋኝሄፉጆ&ንፉ.%'ጳ‛ (*'ጽ,ጂ'ፉ'ቆቁ ̇ ቋኝ st 。導 t
。實 感
ši:
st
r * y
芯、家名冢名
 

திருக்கோணமலைத் தமிழறிஞர்
தி. த. கனகசு ຫຼິນ ດr
ஆசிரியர் மகாவித்துவான் F. X, C. நடராசா.
வெளியீடு: திருக்கோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவை,
393, திருஞானசம்பந்தர் வீதி, திருக்கோணமலை.

Page 3
விடயம் தி. த. கனகசுந்தரம்பிள்ளை.
நூலாசிரியர் : மகாவித்துவான் F. X. C. நடராசா,
வெளியீடு : திருக்கோணமலே மாவட்ட
இந்து இளைஞர் பேரவை,
முதற் பதிப்பு: 1991, புரட்டாதி.
பிரதிகள் : IOOO.
அச்சகம் புனித வளஞர் அச்சகம்,
10, அட்வகேட் ருேட், மட்டக்களப்பு.
ரூபா 15

திருக்கோணமலேத் தமிழறிஞர்
தி. த. கனகசுந்தரம்பிள்ளை

Page 4

osoofsēsıEirigo qisoruşsız susț¢ru mogąons, sąsiutuMoun sự; Juscolae fog nosēstosuushs, Juliuse işsı,ągłışıpsıp & quonnors fissie (plgijo osog) 1915 „Jūs motī£,, ,siuosikolo qo'yigbɛ ɑmɑsuriĝos, assuuresiją gęsīg; giisīışsẽ Two so osoɛru upoụtwie legų, grantaessaeleso · s ·ĝ Ĥgsfigis monikologae@g
ョeasQ ヒgangaシg

Page 5
@. Idir. §. g). Gusmail sorsfirși susji,Ghirssoricos\'sı ısır); Trīs sī£ LT sü
திருக்கோணமலேயில் தமிழறிஞர் தி. த. கனகசுந்தரம்பிள்ளேயின் ஞாப கார்த்தமாக நடத்தப்பட்டுவரும் நினைவு நூலகத்தில் பாடசாலே மான
suffærir +355’55), ni Tsüusy,5ú LILġ,@si) Eiro:Tsvīrs.
 

*
',
முன்னுரை
திருக்கோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட பல சான்ருேர் தமிழ் மொழிக்குத் தொண்டாற்றிவந் திருக்கின்ருர்கள். அவர்களுள் தி. த. கனகசுந்தரம்பிள்ளே அவர்களும் ஒருவராவர். அன்னுரை நினைவுகூருமுகமாக இந்நூல் வெளியிடப்படுகின்றது.
திருக்கோணமலைபற்றிய செய்திகளே நாம் அறிய வேண்டுமானல் திருக்கோணமலையில் தோன்றிய அறிஞர் களின் வரலாற்றினே நாம் படிக்கவேண்டும். இதற்குரிய வாய்ப்பின மக்களுக்கு வழங்குவதே இவ்வெளியீட்டின் முக்கிய நோக்கமாகும். தி. த. கனகசுந்தரம்பிள்ளை அவர் கள் தமிழ்நாட்டில் பணிபுரிந்த காலத்தில் தமிழ்மொழிக் காற்றிய தொண்டினுல் தனது பிறப்பிடமாகிய திருக் கோணமலைக்குப் பெருமையும் சிறப்பும் தேடித்தந்துள் ளார் என்ருல் அது மிகையாகாது.
திருக்கோணமலே பெற்றெடுத்த பிள்ளே அவர்கள் பற்றிய இந்நூ லினே எழு திய மகாவித்துவான் எவ். எக்ஸ். ஸி. நடராசா அவர்கட்கும். நூலைச் சிறப்புற அச்சிட்டு வழங்கிய மட்டக்களப்பு சென். ஜோசப் கத்தோ லிக்க அச்சகத்தினருக்கும் தமிழ் கூறும் நல்லுலகம் என் றும் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளது.
வ, தங்கராசா தஃலவர், F-R-9. தி. மா. இ. இ. பேரவை.

Page 6
நூலாசிரியரின் முன்னுரை
தமிழ் கூறும் நல்லுலகம், திருக்கோணமலை தம்பிமுத் துப்பிள்ளை கனகசுந்தரம்பிள்ளை அவர்கள் வரலாறு அங் கொன்றும் இக்கொன்றுமாக அறிந்திருக்கிருர்கள் என்பது புலப்படுகின்றது. திருக்கோணமலை, திரிகோணமலை பரியாய்ப் பெயர்கள்.
ஆறுமுகநாவலர், சி.வை. தாமோதரம்பிள்ளை, டாக்டர் உ. வே. சாமிநாதையர் என்பவர்கள் பழைய ஏட்டுப் பிரதி களை நூல் வடிவமாகப் பதிப்பித்தார்கள். பண்டைய ஏடுகளை உதவியவர் தி. த. கனகசுந்தரம்பிள்ளை அவர்களேயாவர். நாவலருக்கு உதவியவர் அல்லர். பின்னிருவரும் போற்றி யுள்ளார்கள். உ. வே. சாமிநாதையர் போற்றியும் தூற்றி யும் உள்ளார்.
ஆறுமுகநாவலர், சி. வை. தாமோதரம்பிள்ளை, சுவாமி விபுலானந்தர் இவர்களின் திருவுருவப் படங்களை அண்ணு மலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திறந்துவைத்தார். சிதம்பரம் அண்ணுமலைப் பல்கலைக்கழகத்திலமைந்த ஈழத்து மாணக்கர் சங்கம் ஏற்பாடு செய்தது. புலவர் நா. சிவபாத சுந்தரனர் மாணுக்கருளொருவர். ۔
புலவர் நா. சிவபாதசுந்தரஞர் படிப்பித்த பாடசாலை மகாசனக் கல்லூரி. தெல்லிப்பழையில் உள்ளது. தி. த. க. அவர்கள் தெல்லிப்பழையில் மணம் முடித்தவர். புத்திரர்களை அணுகி தி. த. க. அவர்களின் படத்தைத் திறந்துவைத்தார், புலவர் நா. சிவபாதசுந்தரஞர். தி. த. க. அவர்களின் வரலாற்று நூலினை வெளிப்படுத்தினுர், 1976ல் இவை நடந்தவை. புலவர் நா. சிவபாதசுந்தரனர் என் நட்பாளர்; தொல்புரவாசி.
ஞானசம்பந்தர் திருக்கோணமலைக்கு வராதவர். பதிகம் பாடினர். தேவாரப் பாடல் பெற்றதலம். பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை திருக்கோணமாமலையைப் பாடிய 11ம் பாட லில் ஈற்றடி இரண்டடியிற் புகழ்ந்து பாடினர் என்று நவின் ருர். இவ்வாறுயர்ந்து சிறந்த திருக்கோணமலையிற் தி. த. க. அவர்கள் பிறந்தவர்.
திருக்கோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவை யின் மதிப்பார்ந்த பொதுச் செயலாளர் திரு. செ. சிவபாத சுந்தரம் அவர்களை 1982ல் கொழும்பில் சந்தித்தேன். துடிப்

பான பேச்சாளர். பேச்சினைக் கேட்டு மகிழ்ந்தேன். தேடிப் பிடித்துக் கதைத்தேன். புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையின் உள்ளதும் நல்லதும் என்ற நூலினை அறிமுகஞ் செய்ய மலைக் குப் போனேன். வேண்டிய உபசாரத்தோடு உவந்து வர வேற்ருர், W
தி. த. கனகசுந்தரம்பிள்ளையின் வரலாற்றினைப் பேச வாய்ப்பினைக் கொடுத்தார். அன்றுமுதல் தி. த. க. அவர்கள் வரலாற்றினை எழுதுதற்கு என் வாக்கினைப் பெற்ருர். திருக் கோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் பேரில் இந்த வெளியீடு திகழ்வதில் பெரு மகிழ்ச்சியுற்றேன்.
திரிகோணமலையிலே, கனகசுந்தரம்பிள்ளையின் பேரிலே இயங்கிக்கொண்டிருக்கின்ற நூல் நிலையம் கேள்விப்பட்டதும் பூரிப்படைந்தேன். இவ்வாறு போற்றிப் புகழும் தி. த. க. அவர்கள் ஆற்றிய தமிழ்த்தொண்டுகண்டு பேருவகை கொண் டேன்.
தி. த. கனகசுந்தரம்பிள்ளையின் புதல்வர்கள் நால்வரும் வீ. ஏ. (B. A.) பட்டதாரிகள்.
ஈன்றுபுறந் தருத வென்றலைக் கடனே சான்றே னுக்குத றந்தைக்குக் கடனே.
- புறநானூறு: செய்: 312. எனுங் கூற்றுப்படி பேரறிஞர்களாக்குதல் தந்தையாகிய தி. த. க. அவர்கள் கடப்பாடு, தந்தை மகற்காற்று நன்றி, மகன் தந்தைக்காற்றுமுதவி என்னும் திருவள்ளுவர் வாக்கு என் மனதில் உதிக்கின்றது.
அணிந்துரை வரைய முன்வந்திருப்பவர்களுக்கு நன்றி. அணிந்துரைகள்மூலம் என்னைக் கணஞ்செய்தவர்களை என்றும்
மறவேன். கடப்பாடுடையேன்.
\
அச்சுவாகனம் ஏற்றிய புனித வளனர் அச்சகத்திற்கும் நன்றி.
F. X. C. pug TJ T. 127, மத்திய வீதி,
மட்டக்களப்பு. . 1991 س-9-3

Page 7
ஏன் இந்த வெளியீடு?
திருக்கோணமலை தந்த தமிழறிஞர் தி. த. கனகசுந்தரம்பிள்ளை அவர்களைப்பற்றியும், அவர் களின் தமிழ்ப் பணியைப்பற்றியும் எம்மவர்களில் பலர் அறியமாட்டார்கள் இப்படி ஒரு அறிஞர் இருந்தார் என்பதையே நாம் மறந்திருந்த வேளை யில்தான் 1961ம் ஆண்டில் திருக்கோணமலை தமிழ் எழுத்தாளர் சங்கம் அன்னுருக்கு ஒரு நினைவு விழாவை எடுத்தார்கள். ஆனல் அதற்குப்பின் எவ ரும் இப்பெரியாரை நினைவு கூறவில்லை என்பது வேதனைக்குரியதாகும். எமது பேரவை 1974ம் ஆண்டு உருவாக்கப்பட்டது; நாம் திட்டமிட்ட அடிப் படையில் சில பணிகளை மேற்கொண்டோம், இத ஞல் விழாக்களில் எமது கவனத்தை நாம் செலுத்த வில்லை. இருந்தும் 1982ம் ஆண்டு தி. த. கனக சுந்தரம்பிள்ளை அவர்களுக்கு ஒரு விழாவெடுத்து அன்னுரை நினைவுகூர்ந்தோம் இவ்விழாவிற்கு வருகை தந்து சிறப்புரையாற்றிய தமிழ்ப் பெரியார், மூதறி ஞர், மகாவித்துவான் உயர்திரு. எவ். எக்ஸ். ஸி. நடராசா அவர்கள் தமிழறிஞர் தி. த. கனகசுந் தரம்பிள்ளை அவர்களைப்பற்றி ஒரு நூலை எழுதுவ தற்கு எமது வேண்டுகோளை ஏற்று முன்வந்தார். இருந்தும் எமது மாவட்டத்திலும் வடக்கு-கிழக்குப் பகுதிகளிலும் 1983ம் ஆண்டு முதல் ஏற்பட்ட வன் முறைச் சம்பவங்களினுல் எம்மால் இப்பணியை நினைக்க இயலவில்லை. நாம் 1987ம் ஆண்டு முதல் தி. த. கனகசுந்தரம்பிள்ளை அவர்களின் நினைவாக ஒரு நூலகத்தை நடத்திவருகின்ருேம். மேலும் தற் போது பேரறிஞர் திரு. எவ். எக்ஸ். ஸி. நடராசா அவர்கள் தனது தள்ளாத முதுமைப் பருவத்திலும் இந்நூலை ஆக்கித்தந்தமைக்காகத் திருக்கோணமலை மாவட்ட்த் தமிழ் அன்பர்கள் சார்பில் அன்னுருக்கு எமது மேலான நன்றிவறிதலைப் பேரன்புடன் தெரி யத்தருவதில் மனநிறைவடைகின்ருேம். அவருக்கு

நாம் என்றும் கடமைப்பட்டவர்கள் என்பதையும் தெரியத்தருகின்ருேம். இவ் வெளியீட்டை நாம் வெளியிடுவதின்மூலம் ஒரு தமிழ்ப் பெரியாரின் வரலாற்றை எம்மவர்கள் குறிப்பாக எமது வருங் காலச் சந்ததியினர் அறிவதற்கு வழிவகை செய்துள் ளோம் என்ற மனநிறைவுடன் இவ்வெளியீட்டைத் திருக்கோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவை யினராகிய நாம் உங்கள் முன் சமர்ப்பிக்கின்ருேம்.
மேலும் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய சைவ அறிஞர் - பண்டிதர் திரு. இ. வடிவேல் அவர் களுக்கும், பிரபல எழுத்தாளரும் தி. த. கனகசுந் தரம்பிள்ளையின் நெருங்கிய உறவினருமான திருமதி பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கன் அவர்களுக்கும் எமது நன்றியைத் தெரியத்தருவதோடு இந்நூலைச் சிறப்புற அச்சிட்டு வழங்கியுள்ள மட்டக்களப்பு சென். ஜோசப் கத்தோலிக்க அச்சகத்தினருக்கும் எமது மேலான நன்றியினைத் தெரிவிப்பதில் மகிழ் வடைகின்ருேம்.
நன்றி.
செல்லப்பா சிவபாதசுந்தரம் மதிப்பார்ந்த பொதுச் செயலாளர்
திருக்கோணமலை மாவட்ட
இந்து இளைஞர் பேரவை
தி. மா. இ. இ. பேரவை, 393, திருஞானசம்பந்தர் வீதி, நிருக்கோணமலை.
0-09-09

Page 8
அணிந்துரை
திரு. ஆலவாய்ச் சொக்கேசர் தருமிக்கு எழுதிக் கொடுத்த கவிதையொன்று கடைச்சங்கப புலவர் நக்கீர ருடைய வரலாற்றுடன் தொடர்புடையதாயிருப்பதைத் தமி ழறிஞர்கள் நன்கு அறிவார்கள்.
*" கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமஞ்செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீய நட்பின் மயிலியற் செறியெயிற்றரிவை கூந்தலில் நறியவுமுளவோ நீயறியும் பூவே.' என்பது அக்கவிதை, வங்கிய சூடாமணியென்னும் சண்பக மாறனுடைய மனைவியின் கூந்தலிலிருந்தெழுந்த நறுமணம் இயற்கை மணமா ? செயற்கை மணமா ? என்பதை மன்னன் அறிய விரும்புகிருன். சங்கப் புலவர்களால் தீர்க்கமுடியாத சந்தேகத்தைச் சொக்கேசர் தீர்த்துவைக்கிருர், பூக்களிலுள்ள தேனை உண்ணச்செல்லும் வண்டுகள் அம்மலர்களிலுள்ள நறுமணத்தையும் நன்முக நுகர்ந்துணர்ந்த அனுபவமுடை யவை. இதனுல் திருவாலவ்ாய்ச் சொக்கேசர் இக்கவிதை மூலம் வண்டினைக் கட்டியங்கூற அழைக்கிருர்.
திரு. தி. த. கனகசுந்தரம்பிள்ளை அவர்களுடைய வர லாற்றை மலரச்செய்யும் இந்நூலிலே இரண்டு வண்டுகள் கட்டியங் கூறுவதைக் காண்கிழுேம். இரண்டும் தமிழ்த் தேனை உண்ண நூல்களைக் குடையும் வண்டுகள். காமஞ் செப்பாது கண்டது மொழியும் அஞ்சிறைத் தும்பிகள். ஒன்று புலவர் சிகாமணி தி. த. கனகசுந்தரம்பிள்ளை அவர்கள். மற்றது மகாவித்துவான் எப். எக்ஸ். ஸி. நடராசா அவர்கள்.
சரித்திர நாயகராகிய தி. த. கனகசுந்தரம்பிள்ளை அவர்கள் திருக்கோணமலையிற் பிறந்து, தெல்லிப்பளையில் திருமணஞ் செய்து, தென்தமிழ் நாட்டில் பைந்தமிழ்த் தேனுண்ட தமிழ் வண்டு, பிறந்த மண்ணை மறவாமல் திகாரத்தையும் - திருக்கோணமலை - தந்தையையும் தமிழன்னை யையும் - தம்பிமுத்துப்பிள்ளை + அம்மணி - மேம்படுத்த தகா ரத்தையும் இரண்டு இறக்கைகளாகக்கொண்ட கனகசுந் தரம்பிள்ளையாகிய வண்டு, ஈழத்திலும் தமிழ் நாட்டிலு முள்ள நுண்மாண் நுழைபுலம்மிக்க சான்றேர்களுக்குத் தமிழ் இலக்கியச் சுவடிகளைக் குடைந்து தமிழ்த் தேனை நுகர்ந்

தெடுத்து வழங்கிய மும்மொழிப் புலமைமிக்க தமிழ் வண்டு. பிள்ளை அவர்களுடைய தமிழ்த்தொண்டு இலக்கியப் பூஞ் சோலையில் மலர்ந்து நறுமணங் கமழ்வதை இந்நூலில் பரக் கக் காணலாம். •
இந்நூலைப் படைக்கும் கதாநாயகராகிய எப்.எக்ஸ்.ஸி. நடராசா அவர்களும் நூல்களைத் தேர்ந்தெடுத்து அனுபவிக் கும் பண்பில் காமஞ்செப்பாது கண்டது மொழியும் தமிழ்த் தேன் வண்டு. இயல்பாகவே நூல்களைத் துளைத்துக் குடைந்து தமிழ்த் தேனைச் சுவைக்கும் பாங்குடைய இந்த வண்டு, தி. த. க. பறந்துசென்ற இடமெல்லாம் தொடர்ந்து சென் றிருப்பதை இந்நூலிற் காணலாம். ஒரு நூற்ருண்டுக்கு முன் னர் பிள்ளையவர்கள் சென்ற இடங்களையும், தொடர்பு கொண்ட பேரறிஞர்களையும், சான்றேர்களையும், ஆய்வு செய்த சுவடிகளையும், ஆக்கங்களையும் தேடித்தேடிச் சிரமப் பட்டுச் சேர்த்த வரலாற்றுத் தேனை இந்தத் தேன் கூட்டில் நிரப்பித்தந்து கட்டியங்கூறும் தமிழ் வண்டாகிய மகாவித்து வான் எப். எக்ஸ். ஸி. நடராசா அவர்களுக்குத் தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது.
சமய, சமூக, தமிழ்ப் பணிகளுக்குத் தன்னை அருப் பணித்துச் செயலாற்றும் திருக்கோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவை வெளியிடும் இந்நூலையும், பேரவை உறுப் பினர்களையும் கோணேசப் பெருமான் என்றும் அருள்புரிந்து காப்பாராக,
சைவப் புலவர் - பண்டிதர் இ. வடிவேல்
15, வித்தியாலயம் ஒழுங்கை, திருக்கோணமலை, V
5-08-91.

Page 9
அணிந்துரை
திரு. தி. த. கனகசுந்தரம்பிள்ளை ஈழத்தின் தலைசிறந்த இயற் கைத் துறைமுகமும் தேவாரம் பாடப்பெற்ற திருத்தலமுமாகிய திருக்கோணமலை பெற்ற தவப்புதல்வனக இருந்தும் இத்தனை காலத் துக்குப் பின் திருக்கோணமலை மக்களுக்கு அன்னரை அறிமுகம் செய்து வைக்கவேண்டிய நிலை வருத்தத்துக்குரிய ஒரு விடயமாகும். 1863ம் ஆண்டு திருக்கோணமலை மண்ணிற் பிறந்த தி. த. க. 1880ல் தனது பதினேழாவது வயதில் பிறந்த மண்ணை விட்டு உயர் கல்வி கற்க தமிழகம் செல்லவேண்டிய ஒரு துரதிர்ஷ்ட நிலை ஏற் பட்டது. இதன் காரணமாக தமிழகத்திலேயே அவர் தன் வாழ்நாள் முழுவதும் தங்கவேண்டி ஏற்பட்டது. ஆயினும் திருமண சம்பந்தங் கள் ஈழத்திலேயே செய்து கொள்ளப்பட்டது. அவரது பரம்பரை யினரும் அதையே கைக்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக அவரைப்பற்றித் திருக்கோணமலை மக்கள் அறியக்கூடிய வாய்ப்பு ஏற்படவில்லை.
ஆயினும் இங்கு பிறந்த தமிழ் அறிஞர்கள் சிலர் அவரைப் பற்றி அறிந்து அவரைப்பற்றிய சில குறிப்புக்களை வெளியிட்டுள்ளனர். யாழ்ப்பாணத்துக்கு ஒரு ஆறுமுகநாவலர். மட்டக்களப்புக்கு ஒரு விபுலானந்தர். திருக்கோணமலைக்கு யார்? என்ற விஞவுக்கு இடமின்றி அன்னரை திருக்கோணமலைத் தமிழ் அறிஞன் என்று இம்மண்ணுக்கு அறிமுகஞ்செய்து அவரது பெயரின் நினைவாக ஒரு வாசிகசாலையையும் நிறுவியுள்ள திருக்கோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவையினரின் அரிய சேவையைப் பாராட்டவேண்டும். மேலே குறிப்பிடப்பட்ட மூன்று தமிழ் அறிஞர்களையும் நாம் மூன்று தராசிற் போட்டுப் பார்ப்போமாக இருந்தால் அவர்கள் நிறைகள் சரிசமனக இருக்கும் என்பது உறுதி.
இது உண்மைதான என்ற சந்தேகம் உங்களுக்கு எழுமாக இருந் தால் தி. மா. இ. இ. பேரவை செயலாளர் திரு. செ. சிவபாதசுந்தரம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மட்டக்களப்பைச் சேர்ந்த மகா வித்துவான் எப். எக்ஸ். ஸி. நடராசா அவர்களால் ஆய்வுசெய்து எழுதப்பட்ட தி. த. கவின் வரலாற்றைக் குறிக்கும் இந்நூலை வாங் கிப் படியுங்கள் என்று கூறினுல் அது மிகையாகாது.
தி. த. க. வின் நூற்ருண்டு கழிந்து முப்பது ஆண்டுகளின்பின் அன்னுரைப்பற்றிய வரலாற்று நூல் வெளிவருவது போற்றுதற்குரியது. தி. த. க. வைப்பற்றி ஆராய்ச்சி செய்து அன்னாரின் தமிழ்ப் பணியை உலகறியச் செய்ய சகல முயற்சிகளையும் எடுக்கும் தி. மா. இ. இ. பேரவையினரின் பணி வாழ்க! வளர்க!
திருமதி பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கன் திருக்கோணமலை.

திருக்கோணமலை தம்பிமுத்துப்பிள்ளை கனகசுந்தரம்பிள்ளை
தி. த. கனகசுந்தரம்பிள்ளை சுருக்கமாகக் கூறுவார்கள். பிறப் பிடம் திருக்கோணமலை. தந்தை பெயர் தம்பிமுத்துப்பிள்ளை. தாயார் பெயர் தெரியுமாறில்லை. மோகனங்கி எழுதிய சரவணமுத்துப்பிள்ளை இளைய சகோதரன் என்று சொன்னர்கள் என்பதில் ஐயமில்லை.
சரவணமுத்துப்பிள்ளை தந்தை விடு தூது, வாகைமாலை, பிரி வாற்றமை, காதலாற்ருமை, பச்சையப்பன் கல்லூரி என்ற நூல் களைப் பாவடிமாக்கி 18921, 18952 ஆண்டுகளிற் பதிப்பித்தார். அவர் காதலிற் சிக்கி, அலைமோதி வாழ்ந்தார். அவர்களும் வீ. ஏ. (B. A.) பட்டதாரி.
கனகசுந்தரம்பிள்ளை 1880 சென்னைக்குச் சென்ருர்; படித்தார்; முன்னேறினர்; பட்டதாரியானர். பதினேழு வயதிற் சென்னை மாநகரஞ் சென்று பாடசாலையிற் சேர்ந்தார். உயர்நிலைப் பாடசாலைக்குத் தகுதி யாக்கினர். பச்சையப்பன் கல்லூரியிற் F A. வகுப்பிற் பயின்ருர். F. A. வகுப்பென்ருற் தெரியாது. அக்கல்லூரி அதிபராக D, M. குறுக்சாங்கு (D. M. Curukshank, M. A) இருந்தார். கற்பிக்கும் வன்மையும், இனிய குணமும் உடையவர்.
அதிபர் நோய்வாய்ப்பட்டனர். அபாயகரமான நோய். உயிர் பிழைப்பாரோ என்ற பயம் எல்லாருக்கும் உண்டு. ஆவி அகத்ததோ, புறத்ததோ என்ற ஆபத்து. ஆண்டவர் அருளால் ஆபத்து நீங்கி யது. அதிபர் உயிர் பிழைத்து வந்தார். மாணுக்கருக்கு ஆரவாரம் பொங்கி எழுந்தது. தி. த. க. உயர்ந்து நின்றர்.
குயிற்பத்து பாடினர். அப்பாட்டுகளில் சொற் சுவையும்மிக்கன. அக்காலத்திலேயே தமிழ்மொழிப் பற்றும், புலமையும், கவிபாடும் வன்மையும் பெற்றிருந்தார். குயிற்பத்து என்று மகுடஞ் சூட்டிய கவிகளில் ஏழு பாட்டு மட்டும் கிடைக்கக் கூடியதாக இருந்தன. முதலாம்பாட்டு வருமாறு:
ཡམས 1 --

Page 10
சீர்மேவு சோலையின்கட் சேர்ந்துறையும் பூங்குயிலே பேர்மேவு பச்சையப்பப் பிரபுபெய ரானிலகும் ஏர்மேவு கல்விபயி லெழிற்கழகத் தேமுதலாம் நீர்மேவு புண்ணியனை நீநினைந்து கூவாயே
நேமிபுகழ் குறுக்சாங்கை நேயமொடு கூவாயே.
இந்த முதலாம் பாட்டையும் மிகுதி ஆறு பாக்களையும் சேர்க்கை எனும் பாகத்திற் பார்க்குக.
சுவாமி விபுலானந்தர் நெருப்புக் காய்ச்சலாகி 1944 மருத்துவ மனையில் இருந்தார். அப்போது புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை பாடியது மீட்சிப்பத்து. சுவாமியும் மீண்டார், குறுக்சாங்கும் மீண் டார். தி. த. க. அவர்கள் பாடியது குயிற்பத்து. புலவர்மணி பாடி யது மீட்சிப்பத்து. இருவருங் குயில் கூவாய் என்று ஈற்றிற் பாடி ஞர்கள். மாங்குயிலே, ஒண்குயிலே, இன்குயிலே விளித்துப் பாடுகிறர் கள். புலவர்மணி பாடியது குயிற்பத்து என்பர். குயிலை விளித்துப் பாடுதல் மரபுபோல. குரு பத்தி மிகுதியாக மிளிர்கின்றது.
எவ். ஏ. பரீட் சையிலுஞ் சித்தி. வீ. ஏ. பரீட்சையிலும் (Bachelor of Arts) பாராட்டத்த க சித்தியடைந்தார். ஏடது கை விடேல் என்பதற்கியைய புத்தகமும் கையுமாக இருந்தவர். உண்மை யாராய்ச்சியில் நோக்கமுடையவர். சென்னைக் கிறித்தவ கல்லூரியில், பின்னர் பச்சையப்பன் கல்லூயிரில் தமிழ்த்துறை ஆசிரியராக இருந் தவர்.
1887ல் கவித்தொகை சி. வை. தாமோதரம்பிள்ளை பதிப்பித் தார். அப்பதிப்புக்கு தி. த. க. உதவி செய்தார். அதனைத் தருவாம்.
* திரிகோணமலை பூரீ த. கனகசுந்தரம்பிள்ளையவர்கள் சென்னைப் பிராசிய கிரந்த மண்டபத்திற்ருன் நெய்தற் கலி பார்த்தே னென்று உறுதியாகச் சொன்னமையால் மீளவும் அவ்விடஞ் சென்று முன் யான் நீக்கிவைத்த ஏடுகளே இப்பொழுது எனக்கு வேண்டிய நெய்தற் கலியுடையவாயிருத்தல் கண்டு அளவற்ற சந்தோஷமடைந்தேன். அதல்லாமற் பின்னும் ஒரு பிரதி நெய்தற் கலி 23ம் செய்யுள் வரைக்கும் அம்மண்ட பத்தே அகப்பட்டது. உடனே )ே பிள்ளையவர்களும் யானுமாக இருந்து அதனை எனது பிரதியோடு ஒத்துப் பார்வையிட்டு ஆங்காங்கு கண்ட பாடபேதங்களைக் குறித்துக்கொண்டோம்.”*
(1) பிள்ளை - தி. த. கனகசுந்தரம்பிள்ளை, டாக்டர் உ. வே. சாமி நாதையர் தமது ஆசிரியர் - மீனுட்சி சுந்தரம்பிள்ளையை 'பிள்ளை" என்று எழுதுகிருர், இது விளக்கந் தரப்பட்டது.
- 2 -

கடைசியில் நன்றி கூறுகையில்:
'இந்நூலைப் பதிப்பிக்கும் பொருட்டு ஏட்டுப் பிரதியளித்த கன
வான்களுக்கும், இதனைப் பரிசோதித்து அச்சிடுவதில் எனக்கு அப்போதப்போது சகாயஞ் செய்த பூரீமத் ந. க. சதாசிவம் பிள்ளையவர்கட்கும், பூறி யாழ்ப்பாணம் சிந்தாமணி உபாத்தி யாயர் வேலுப்பிள்ளையவர்கட்கும், பூg நல்லூர் சிற். கைலாச பிள்ளையவர்கட்கும், பூரீ திரிகோணமலை த. கனகசுந்தரம் பிள்ளையவர்கட்கும் என் நன்றி கூறுகின்றேன்."
இது 1887க்கு முன்னர் நிகழ்ந்தது.
சி. வை. தாமோதரம்பிள்ளை "இலக்கண விளக்கம்” என்ற நூலினைப் பதிப்பித்தபோது - 1889 - தி. த. க. பற்றிக் குறித்துள் ளார். "தாமோதரம் பக்கம் 89,
"இஃதெழுதிய பின்னர் பூரீ திரு. த. கனகசுந்தரம்பிள்ளையவர் கள் தமக்கு அகப்பட்டதோர் மிகப் பழைய கீழ்க்கணக்குச் சுவடியில் 'நாலடி நான்மணி’ என்னுஞ் செய்யுள் அதிகஞ் சிதைவுபட்டுக்கிடப்பதில், ஐந்திணை என்பதற்கு ஐந்திணை யைம்பது ஐந்திணையெழுபது திணைம்ொழியயைம்பது திணை மாலை நூற்றைம்பது என்னும் நான்குமே உரையிற் குறிக்கப் பட்டிருக்கின்றனவென்றும், முப்பால் என்பதன் உரை நாய ஞர் திருக்குறளை ஒருவாற்ருனும் சுட்டாது முப்பாலென்றே கூறப்பட்டிருக்கின்றதென்றும், கைந்நிலையென்பது அப்பெயரான உரையோடு உள்ளதோர் தனி நூலாகக் கண்டிருக்கிறதென்றும் எழுதியறிவித்தனர்.'
1888 தொடக்கம் தி. த. க. அவர்கள் டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்களுடன் தொடர்புக் கடிதங்கள் எழுத ஆரம் பித்தார்கள். "என் சரித்திரம்" என்ற நூலை 1940ம் ஆண்டுமுதற் ருேடங்கி ஆனந்த விகடனில் வெளிவந்தது - நூல் வடிவமாக 1950ல் வெளிவந்தது.
தி. த. கனகசுந்தரம்பிள்ளையைப்பற்றிய குறிப்புகள் இருக்கின் றன. அவற்றை நம்புவதற்கில்லை. தி. த. க. அவர்கள் கால்பட்ட புல் சாகாது. ஒழுக்கம் நிறைந்தவர். மற்றவர்கள் இழுக்கம் பேசுவ தில்லை. உதவி செய்வதில் பின்தங்குவதில்லை. பரோபகாரி, உபகார மாக இருப்பவர். அபகாரம் புரிவதில்லை. உபத்திரவம் புரிபவர்கள் வழியில் நடப்பவரில்லை.
- 3 -

Page 11
"தீங்கினர் கண்ணிற் தெரியாத தூரத்தே
நீங்குவதே நல்ல நெறி,"
என் சரித்திரம் என்ற நூலிலே பக்கம் - 892, 901, 1003 பார்க்குக. ஒருபால் மேன்மையாக எழுதுகிருர்; இன்னெருபால் குறை கூறுவார். வாய்ப்பான நேரம் ஆண்டு குறிப்பதில்லை. தேதி கிடை யாது. வரலாறு முறிந்துபோதலுமுண்டு.
தி. த. க. அவர்கள் உத்தியோகம் பார்த்தார். ஒய்வு நேரங் களில் பழந்தமிழ் வடமொழி நூல்களை ஆராய்ந்து காலங்களிப்பவர். சென்னையிலிருந்த வித்துவான் இராசகோபாலப்பிள்ளையவர்கள் உதவி கொண்டு கம்பராமாயணத்திற் சில பாகங்களையும் நுண்ணிதாக ஆராய்ந்துவைத்தனர்.
தொல்காப்பியம் - எழுத்து, சொல், பொருள் - சங்க இலக்கி யங்களாகிய எட்டுத்தொகை பத்துப்பாட்டு இவற்றை ஏட்டுப் பிரதி கள் பலவற்றேடு ஒப்புநோக்கிக் குறிப்புகள் எழுதினர். இவற்றி லுள்ள உண்மைப் பாடல்கள், உண்மைப் பொருள், நுண்கருத்துக் கண்டறிதல் ஒப்புயர்வு இன்றி விளங்கினர்கள்.
செய்யுள்கள் தனிப் பாடல்களாகவும், தொடர் பாடல்களாக வும் யாக்கக் கற்றுக்கொண்டனர். ஒழுகிய ஓசையுமுடையன. விழு மிய பொருளின.
திங்கள் கழியென்பு தேன்பிலிற்றும் நறையார் கங்கையணி சங்கரன் காதலா - செங்கண் அரிமருகா கோணை வைகுமுருகா வுன்னைத் பரிமருகா வென்றே பகர்.
திருக்கோணமலை முத்துக்குமாரசுவாமி வெண்பா. ஆக்கியோன்: தி. த கனகசுந்தரபிள்ளை. திருக்கோணமலை மாவட்ட திருத்தலங்கள். ஆசிரியர்: சைவசித்தாந்த சிகாமணி, சைவப் புலவர், பண்டிதர் இ. வடிவேல் - பக்கம்: 284.
இந்தச் செய்யுள் ஒசை நயமுடைத்தாய் பொருள் நயமுடைத்தாய் மிளிருகின்றது.
கனகசுந்தரம்பிள்ளையவர்கள் தாங்களாக அரிதிற் கற்றுணர்ந் தார். பிறர்க்கும் பயனடையச் செய்யும்படி ஆவன செய்தார். கைம் மாறு கருதாது சிரமம் பாராது உழைத்தார். கற்றறிந்த பலருக்குச்
- 4 -

சந்தேகம் வருகிறது இயல்பு. சந்தேகத்தை நீக்கினர். கற்றறிந்த நூல்களுக்கு வழுக்களைந்து துணைபுரிந்தார். பரிசோதித்துத் திருத்த வேண்டியவற்றைத் திருத்தியும் செவ்வனே நூல் நிலைநிற்க ஆவன செய்தார்.
S. வையாபுரிப்பிள்ளை - இளமைமுதலே இவருக்குத் தமிழ் கற்பது வழக்கம். கற்றவர்களுடன் நல்லாகப் பழகிக்கொள்வார். தி. த. க. அவர்களிடம் ஏடுகள் இருத்தல்வேண்டுமென்று அறிந்திருந்தார். கல்லூரி மாணுக்கராயிருக்கும்போது தி. த. க. அவர்களிடம் தொல் காப்பியப் பொருளதிகார இளம்பூரண உரைப் பிரதியைப் பெற்று அதனைப் படிசெய்துகொண்டார்.
காவேரிபாக்கம் நமச்சிவாய முதலியார் தொல்காப்பியம் சொல் லதிகாரம் - இளம்பூரணம் உரையில் - 1927 - தி. த. க. அவர்களிடம் பெற்ற உதவியைக் குறிப்பிடுகிறர். முன்னுரையிலே
'இந்நூலை யான் அச்சிட முயன்றகாலத்து என்னுடனிருந்து சுவடிகளை ஒப்பிட்டுத் தூய்மை செய்யத் தொடங்கினவர் செந் தமிழறிஞர் தி. த. கனகசுந்தரம்பிள்ளையவர்கள். இந்நூல் 64 பக்கங்கள் முடியுமுன்னரே அவர் காலஞ்சென்றனர். அதன்
பொருட்டு யான் பெரிதும் கவல்கின்றேன்"
என்று துக்கிக்கின்ருர்,
1917ல் சென்னைக் கிறித்தவ கல்லூரியில் தமிழ்ப் போதகாசிரி யர் ஆனர். தி. த. க. அவர்கள் நெடுங்காலமாகச் சென்னைப் பல்கலைக் கழகத்தோடு பரீட்சைத் தொடர்புடையவராக இருந்தனர். பரீட்ச கர் சங்கத்துத் தலைவராக நான்கு ஆண்டுகளாகப் பணிபுரிந்தனர்.
தமிழ் அகராதி என்று தமிழில் வழங்கும் - Tamil Lexicon இன்னுமோர் பெயருண்டு; சென்னைத் தமிழ் அகராதி என்றும் வழங்கு வர். பொதுவாக Madras Lexicon என்று ஆங்கிலத்திற் சொல்லுவர்.
மானிப்பாய் அகராதி ●姆曾 S: , 842 உவின்சுலே அகராதி X e y at a 1862 (யாழ்ப்பாணத்தில் தமிழ்ச் சொல் அகராதி . 1904, 1910 ( உருவாகியன.
சொற்பிறப்பு ஒப்பியல் அகராதி - ஏமட்டும் 1932 -
யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டு முடி வுற்ற ஆண்டு தெரியுமாறில்லை. ஆனல் , () யாழ்ப்பாணத் தமிழ்ச்
(1) செந்தமிழ்: 11 தொகுதி 6 பகுதி பக்: 199.
سے 5 سے

Page 12
சங்கம் 1913ம் வருடம் ஏப்பிரல் மீ" 4 வட கூடியது என்று நிச்சய மாகத் தெரியும். அப்போது அக்கிராசனதிபதி த. கைலாசபிள்ளை, மதுரையிலிருந்த தமிழகராதி சபைத் தலைவர் வண. J. S. சாண்டவர் எழுதிய கடிதம் வாசித்துக் காட்டப்பட்டது.
ou600T. J. S. FIT6a7 laii 5Lisp 9) suit 5d(5 - Tamil Lexicon தலைவராக இருந்தவர். அவர் 1913-1918. தலைவர்: S. வையாரிபுரிப் பிள்ளை 1926ல் தலைவரானுர். அகராதி பதிப்பாசிரியரும் அவர்.
உதவிப் பதிப்பாசிரியர்கள்:
தி. த. கனகசுந்தரம்பிள்ளை
S. சிறிணிவாசாச்சாரிய |மாசி 1919 - வைகாசி 1920,
குடும்பம் :
திருக்கோணமலையிற் பிறந்தார். உருதிரோற்காரி டு ஆவணி மீ" 24 உ (கி.பி 1863) திரிகோணமலை என்றுமழைப்பார். தந்தையார் பெயர் - தம்பிமுத்துப்பிள்ளை; தாயார் பெயர் - அம்மணி. வேளாளர் மரபு. திருக்கோணமலையிற் பிறந்து வளர்ந்து ஆரம்பக் கல்வி கற்ருர், சகோதரர்கள் இருவருங் கூடிச் சென்னைக்குச் சென்ருர்கள். சென்னை யில் இருவரும் வீ. ஏ. (B. A.) பட்டதாரிகள். w
ஒருவர் மோகளுங்கி - சரித்திர நாவல் - 1892 - இடையிடையே பாக்கள். சரித்திர நாவல்களுக்கு முன்னுேடி. மதுரை நாயக்கருடைய கதை
சரித்திரநாயகர் - தி. த. க. அவர்களுடைய குடும்ப வரலாறு களைப் பார்ப்போமாக. யாழ்ப்பாணத்திலே, தெல்லிப்பழையில் மணம் முடித்தார். கிராமக்கோட்டு நீதவான் பெயர் சிதம்பரநாத முதலி யார். அவர் புதல்வியாகிய சுந்தரம் என்னும் பெண்மணியை விவா கஞ் செய்தனர்.
இல்லறமாகிய நல்லறத்தின் பேருகிய நால்வர் புதல்வர்கள்; புதல்வி ஒருவர். புதல்வர்கள் நால்வரும் பட்டதாரிகள். நால்வரும் வீ. எ. - B. A. பட்டம் பெற்றவர்கள். பெயர்கள் வருமாறு:
1. இராசராசன், B. A. சங்கீதத்திலும் வல்லவராய்ப் பலருக்
கும் ஆசிரியர்.
2. இராசசேகரன், M. A. சென்னைக் கிறித்தவ கல்லூரியில்
ஆசிரியர்.
- 6 -

3. (1) இராசேசுவரன், B, A, சென்னை மாநகர சங்கப் பரிசோ
தகர். 4. இராசமார்த்தாண்டன், B. A. சென்னை அகராதி சபை
யில் எழுத்தர். எங்கெங்கு விவாகஞ் செய்தனர் என்று தெரியாது:
செல்வநாயகி பெயர்தாங்கிய புதல்வி இரங்கநாதனை விவாகம் முடித்துச் செல்வஞ்சீருமாக இல்லறத்தை நடாத்தினர். குமாாசுவாமிப் பிள்ளையும் வாழ்த்தினர். - குமாரசுவாமிப் புலவர் வரலாறு: பக். 165.
தி. த. க. அவர்களின் மனைவி 28 வயதில் தேகவியோகமாயி னர். மனைவி இறந்தும் மறுமணஞ் செய்யாது வாழ்ந்தனர். கண்ணுங் கருத்தும் பிள்ளைகள். வளர்த்து வீ.ஏ. பட்டதாரிகளாக்க முயன்றனர்.
புலவர் சிகாமணியாகிய தி. த. க. அவர்கள் 1863ல் பிறந்து கல்விமானகி 1922ல் தேகவியோகமாயினர். குமாரசுவாமிப் புலவரும், திருக்கோணமலை தம்பிமுத்துப்பிள்ளை கனகசுந்தரம்பிள்ளையும் ஒருவர் பின்னுெருவராக மாசியிலும், ஆணியிலும் - 1922 - உயிர்நீத்தனர். இருவரும் பெரும் புலவர்கள்.
மாணுக்கர் :
மாணுக்கராயிருந்து பின் ஆசிரியராகத் திகழ்தல்வேண்டும். கி. பி. 1863 - பிறந்தவர். பிறந்து ஐந்து வயதானவுடன் ஏடு தொடங்கி கதிரைவேற்பிள்ளை உபாத்தியாயர், கணேச பண்டிதர் என்பவர்களிடம் கல்வி கற்றனர்.
இலக்கணம் கற்ருர் இலக்கியங்களாகிய திருவாதவூரர் புரா ணம், மறைசையந்தாதி படித்தார். ஆங்கிலமும் கற்றுக்கொண்டார். சென்னைக்குப் போய் தமிழும் ஆங்கிலமும் கற்றுத்தேறி வீ. ஏ. பட்ட மும் பெற்றர்.
நல்மாணக்கராயிருந்து நல்லாசிரியராகத் திகழ்ந்தார். புகழுரை சென்னை மாநகர் எங்கணும் பரவியது. நுண்மாணுழைபுலம் மிக்கவ ராக விளங்கினர். இலக்கண இலக்கியம் விளங்கினவர்கள் சூழ்ந்தார்கள்.
瓦豪
(1) 1971ல் சிதம்பரத்திற்குப் போனேன். சிதம்பரம் நாவலர் பாட சாலைக்குச சென்றேன். அங்கேயு 1ள ஆறுமுகநாவலர் நிலபுலங் களைப் பராமரிப்பவராகவும், பாடசாலை முகாமையாளராகவும் இருக்கிருர், பாடசாலைக்கு அன்று வந்தார். என்னைக் கண்டதும் உவகைபூத்தனர். திருமுருகாற்றுப்படை - ஆறுமுகநாவலர் உரை - புத்தம் புதிய பதிப்பு (தாம் பதித்த பதிப்பு) அன்பளிப்பாகத் தந்தனர். 1849ல் பதிப்பித்த சூடாமணி நிகண்டைக் காட்டினர் நாவலா.

Page 13
புலோலி நா. கதிரைவேற்பிள்ளை தொல்காப்பியம், சங்க நூல்கள் இவற்றை தி. த. க. அவர்களிடம் கற்றுத் தேறியவர் என் முல் மற்றவர்கள் படிக்க முயன்றர்கள்
தி: த. கனகசுந்தரம்பிள்ளை
S.
கா. ர.கோவிந்தராச முதலியார் கந்தசாமி முதலியார் -
மணி. திருநாவுக்கிரசு மே. வீ. வேணுகோபாலப்பிள்ளை முதலியார் 1888 - 1931.
w சுப்பிரமணியசிவா எதிராசலுநாயுடு.
காஞ்சிபுரம் ரங்கசாமி முதலியார் மகளுய் 1874ல் பிறந்தவர். தி. த. க. அவர்களிடம் படித்தார். கார் நாற்பது பதிப்பித்தது 1917. கா. ர. கோவிந்தராச முதலியார் உரை எழுதினுர், சென்னைப் பச்சை யப்பன் கல்லூரி தமிழ்ப் பண்டிதர். முகவுரையிற் தன்னசிரியருக்கு - தி. த. க. அவர்களுக்கு நன்றி சொல்லுவதாவது:
'ம-றி-ற-பூரீ T. T. கனகசுந்தரம்பிள்ளை அவர்கள், B. A. தம் மிடமிருந்த கையெழுத்துப் பிரதியைக்கொண்டு எஞ்சிய (29, 30, 31, 32 ஆகிய) நான்கு செய்யுள்களின் திருத்தமான பாடத்தைத் தெரிவித்து அவற்றிற்கு ஒருவாறு உரையுங் கூறி ஞர்கள். அதுகொண்டு அந்நான்கு செய்யுள்களுக்கும் உரை எழுதி இந்நூலின் உரையை முடித்தேன். நான் சென்று கேட்ட வுடன் இங்ங்ணம் உதவிபுரிந்த மேற்படி பிள்ளையவர்களுக்கு யான் என் மனமார்ந்த வந்தனத்தைப் புரிகின்றேன்.”
காஞ்சிபுரம் ர. கோவிந்தராச முதலியார் பச்சையப்பன் கல்லூரி முன்னுள் தலைமைத் தமிழாசிரியர். வித்துவான் மே வீ. வேணு கோபாலப்பிள்ளை பெப்ரிசியசு உயர் கலாசாலை தலைமைத் தமிழாசிரி யர். இருவருஞ் சேர்ந்து இறையனர் அகப்பொருள் - 1939 - பதிப் பாசிரியர்கள். இருவரும் தி. த. க. அவர்களிடம் படித்தார்கள்.
சி. கு. நாராயணசாமி முதலியார் இரட்டைப் புலவர் சரிதம் எழுதினர்கள். 1922ல் எழுதப்பட்டது. பக்கம் 48ல் காளமேகப் புலவர் காலம் கி. பி. 1453 - 1468 எனத் திருவாளர் தி. கனகசுந்தரம்பிள்ளை யவர்கள் ஆராய்ச்சி முகத்தால் விளக்கியிருப்பதாலும், காளமேகப் புலவரும் இவர்கள் காலத்தவரெனறறியப்படுகிறது.
-س 8 س--

மணி. திருநாவுக்கரசு முதலியார் 4பாமணிக் கோவை இரண் டாம் பாகம் 1925ல் அச்சேற்றினர். சென்னை பச்சையப்பன் கல்லூரித் தமிழாசிரியர் அவர்களது நூலில் X1. குயிற்பத்து குறித்துள்ளார். ஏழு பாட்டுகள் ஞாபகம். அவற்றை இந்நூலிற் சேர்க்கையிலே சேர்த் துள்ளேன். மணி. திருநாவுக்கரசு முதலியார் பல நூல்கள் எழுதி யுள்ளார். பிறப்பு: 1888 - மரணம்: 1931. விரிவு: செந்தமிழ்ச் செல்வி சிலம்பு: 9. பால்: 5. பக்: 227 - 239. மறைமலையடிகள் எழுதியது.
ஏடுகள் உதவியமை :
1. புறத்திரட்டு - சென்னைச் சர்வகலாசாலை தமிழாராய்ச்சித்
துறைத் தலைவர் S. வையாபுரிப்பிள்ளை. 1 - 1232 - ஏடு - 1938,
2. இலக்கிய தீபம் - எஸ். வையாபுரிப்பிள்ளை - 1952. பக்கம்: 114. 3. இலக்கிய மணிமாலை - sp - 1954 பக்கம்: 114. 4. அகராதி நினைவுகள் - - 1954. பக்கம் 6. 5. குறுந்தொகை - டாக்டர் உ. வே. சாமிநாதையர் - 1937,
そ பக்கம்: 10 6. பதிற்றுப்பத்து - - l94l... u_uäosub: l 2.
நற்றிணை - அ. நாராயணசாமி ஐயர் - 1915 -
முகவுரை - பக். 2. தி. த. க. - 2 பிரதிகள். நாராயணசாமி ஐயர் மரணித்தபின்னும்
தி. த. க. பரிசோதித்து அச்சிடுவித்தார். 1
8. சீவகசிந்தாமணி - நான்காம் பதிப்பின் முகவுரை:
சீவகசிந்தாமணி சம்பந்தமாக ஒரு தனிப் பாடல் ஒரு சுவடியில் காணப்படுவதாகத் திருக்கோணமலை த. கனக சுந்தரம்பிள்ளை அவர்கள் தெரிவித்து அதனை ஒரு கடிதத் தில் எழுதியனுப்பியிருந்தார்கள். அச்செய்யுள் வருமாறு பனகமாற்ற முன்னிருய்ப் பத்திலம்பத் தோடு நகைமாற் றியதுறவி னேடும் - தொகையேற்றின் மூவா யிரத்தோடு முந்நூற்று மூவைந்தே கோவாய சீவகன்மேற் கூற்று.
ஆறுமுகநாவலர் சரித்திரம் - த. கைலாசபிள்ளை - 1919.
" " இச்சரித்திரத்தை விரிவாக எழுதுதல்வேண்டுமென்று பூரீ தி. த. கனகசுந்தரம்பிள்ளை பி. ஏ. முதலானவர்கள் சிலர் என்னைக் கேட் டார்கள்.”
- 9 -

Page 14
0.
11.
12.
13.
பதித்த
அகநானூறு : மூலமும் பழைய உரையும் : உ. வே. ரா.
ராகவையங்கார பரிசோதித்தது. வத்ஸ்சக்ர
வர்த்தி ராஜகோபாலாரயன் பதிப்பு: 1933. பக்கம்: 15. முகவுரை.
புறப்பொருள் வெண்பா மாலை. இரண்டாம் பதிப்பு:
டாக்டர் உ. வே. சாமிநாதையர் பதிப்பு: 1915. முதற் பதிப்பின் முகவுரை: பக். 8.
ஆசாரக்கோவை: T. செல்வக்கேசரவாய முதலியார் பதிப்பு: 1918. பூரீமான் தி. கனகசுந்தரம்பிள்ளையவர்கள் B.A. உதவிய பிரதியுமேயாம்.
கயாதரம் : S. வையாபுரிப்பிள்ளை B.A. B.L. சென்னை சர்வ கலாசாலை 1939. திரு. த. கனகசுந்தரம்பிள்ளையவர் களுக்குரியது. பக். X11. Mr. T. T. Kanagasundaram Pillai and was kindly placed at my disposal by his son, Sri Rajeswaran, B. A. Page: VIII.
நான்மணிக்கடிகை: ச. வையாபுரிப்பிள்ளை. ஒப்புநோக்கிய ஏட்டுப் பிரதிகள்: திரு. தி. த. கனகசுந்தரம்பிள்ளை - இராஜசேகரன் ஏடு எழுதி முடிந்தது. பக். 16.
நூல்கள் :
1. தமிழ் நாவலர் சரிதை: 1921.
2.
இனி இந்நூலை இயற்றிஞர் யாவரென்பது ஒருவாற் முனும் புலப்படவில்லை. A. நாராயணசாமி முதலியார் பதிப்பு: 1916 - கரந்தைக் கட்டுரை: வெள்ளி விழா நினைவு மலர் பக்: 121. தமிழ்நூல் விபர அட்டவணை 1916 - 1920. பக்: 449. நூல் எண்: 2231.
வால்மீகி ராமாயண வசனம் - சுந்தரகாண்டம் - தி. த. கனக சுந்தரம்பிள்ளையால் தமிழில் மொழிபெயர்க்கப்பட் டது. 1923.
- 10

எழுதிய கட்டுரைகள் :
2. யாப்பிலக்கணம். செந் தமிழ்ச்செல்வி: சிலம்பு: 8. பரல் 7.
பக்கம் 388 - 395,
2. இராமாயணம். செந்தமிழ்ச் செல்வி: சிலம்பு: 9. பரல் 2.
циф: 53 - 60.
3. திருவள்ளுவர். செந்தமிச் செல்வி; சிலம்பு: 9. பரல்: 3.
Luis; 12 - 133.
4. தமிழ் வரலாற்றின் ஆராய்ச்சி: தஞ்சை சீனிவாசபிள்ளை. இது 26-3-1922ல் தஞ்சை K. S. சீனிவாசபிள்ளையவர் கட்குத் திருவாளர் தி. த. கனகசுந்தரம்பிள்ளையவர் கள் B. A. எழுதிய கடிதத்தினின்றும் எடுத்துப் பதிப் பிக்கப்பட்டது. செந்தமிழ்ச்செல்வி: சிலம்பு: 8. பரல் 10, 11. uji: 610 - 618. uji: 677 - 686.
பதிப்பித்த நூல்கள் :
1. ஈழமண்டலத் திருத்தல தேவாரமும் திருப்புகழும் - 1910.
தமிழ்நூல் விவர அட்டவணை - தமிழ்நாட்டு அரசினர் தமிழ் வளர்ச்சி இயக்க வெளியீடு - 1911-1915; கி.பி. 1978 இதனைப்பற்றிக் குறிப்பிடுவதாவது:
முதற் பதிப்பு. i. தி. த. கனகசுந்தரம்பிள்ளை; வித்தியா நுபாலன யந்திரசாலை, சென்னை, ii, நவம்பர் 1910. ஈழ மண்டலத்தின்கண் உள்ள சிவன்கோயில்கள், முருகன் கோயில்கள் பேரில் சைவ சமயக் குரவர்க ளான திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோராலும் அருணகிரிநாதராலும் இயற்றப்பட்ட தேவார திருப் புகழ்களை ஒருங்குதிரட்டி அவற்றை நாடோறும் படிக்க விரும்புபவர்க்காக இது அச்சிடப்பட்டுள்ளது. படிப்பவர்கள் தேவாரங்களின் பொருளையுணர்ந்து படிப்பதன் பொருட்டுத் தேவாரங்களுக்கு ஒருவாறு வினே முடிபும் குறிக்கப்பட்டுள்ளது.
தொல்காப்பியம்: எழுத்ததிகாரம்: நச்சினர்க்கினியர் உரை.
س- 11 ---

Page 15
3. அகப்பொருள் விளக்கம்: 1912 - உரையாசிரியர்கள்.
அ. குமாரசுவாமிப்பிள்ளை, திருக்கோணமலை த. கனக சுந்தரம்பிள்ளை என்பவர்களாலே திருத்தியும் விளக்கியும் புதுக்கப்பட்ட உரையுடன்.
சென்னப் பட்டணம் வித்தியாதுபாலன யந்திரசாலையில் அச்சிற் பதிப்பிக்கப்பட்டது. பரிதாபி (u) கார்த்திகை மீ" முதலாம் பதிப்பு: 1912.
4. கம்பர் இயற்றிய இராமாயணம் - பாலகாண்டம்.
சுன்னகம் அ. குமாரசுவாமிப்பிள்ளை, திருக்கோணமலை
* த. கனகசுந்தரம்பிள்ளை என்பவர்களாலே பல பிரதிகளைக் கொண்டு பரிசோதித்து அரும்பதவுரையுடன் சென்ன பட்டணம் வித்தியா நுபாவன யந்திரசாலையில் அச்சிடப் Lull-gi) - 1918.
5. பதிப்பித்த நூல்களாகிய சிவஞானபாடியம், திருமந்திரம் என்னும் நூல்கள் ஒதப்பட்டிருக்கின்றன. உண்மையோ பொய்மையோ தெரியுமாறில்லை.
அணிந்துரைகள் :
1. ஊ. சா. வேங்கடராம ஐயர்.
அரிச்சந்திரன் முதற்பதிப்பு: தி. த. கனகசுந்தரம்பிள்ளை யவர்கள் ஆங்கிலத்தில் அணிந்தரை வரைந்துள்ளார். அணிந்துரையினைத் தெரியுமாறில்லை. தமிழ் நூல் விவர அட்டவணை 1916 - 1920 11, பக்: 408.
2. அ. குமாரசுவாமிப்புலவர்:
இதோபதேசம் 1920 , 1940 ?. சுன்னகம் அ. நாக நாத பண்டிதர் மொழிபெயர்ப்பினின்று சுருக்கி இயற்றி யது. அபிப்பிராயம் ஆங்கிலத்தில் கொடுத்தவர்கள்:
1. தி. த. கனகசுந்தரம்பிள்ளை, 2. S. அளவரதவிநாயகம்பிள்ளை.
1920, 1940ம் ஆண்டுப் பதிப்புகளிலிருக்கின்றன.
- 12

குமாரசுவாமிப்புலவர்:
யாப்பருங்கலக்காரிகை: 1899 1, 19082, 19253, 19384
1899ல் உரை புதுக்கப்பட்டது. தி. த. க. அவர்கள் முக
வுரை 2ம் பதிப்பில் 1908 உரையில் இணைக்கப்பட்டிருக்
கிறது." பிந்திய பதிப்புகளிலும் சேர்க்கப்பட்டிருக்கிறது. உபக்கிரமணிகை என்பது முகவுரை, பாயிரம். தி.த.க.
அவர்கள் முகவுரை எழுதினபடியால் உரையாசிரியர்
உபக்கிரமணிகை எழுதினர். பின்வருமாறு தி. த. க. அவர்களுக்கு நன்றி பாராட்டுகிருர்,
"" அங்கில திராவிட பண்டிதரும், வித்தியாவிநோதரும்,
அதிகாரபுருடருமாய்,இப்போது சென்னை நகரில் வசிக்கும் |gரீமான் திரு. த. கனகசுந்தரம்பிள்ளையவர்களும், இவ் வுரையைப் பலமுறை பரிசீலனஞ்செய்து பல திருத்தங்க ளோடு எடுத்துக்காட்டுக்கள் சிலவற்றிற்கு நூற்பெயர் காட்டியும். அச்சிடுகையிற் பரீக்ஷித்தும் வண்ணங்களைச் சேர்ப்பித்தும் பலவாறு சிறப்பித்தனர்.
குமாரசுவாமிப்புலவர் வரலாறு என்ற காலை 1970ல் அவருடைய மகன் கு. முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை B A. இயற்றியது. தி. த. க. அவர்களைப்பற்றி எழுதிய எழுத் துக்களைப் பார்த்தல்கூடும். பக்கம்: 121, 137, 143,
Ꭵ Ꮾ5 , 169 , 175 .
- 13 -

Page 16
சேர்க்கை :
குயிற்ப்த்து - தி. த. க. அவர்கள்.
.
சீர்மேவு சோலையின்கட் சேர்ந்துறையும் பூங்குயிலே, பேர்மேவு பச்சையப்பப் பிரபுபெய ரானிலகும் ஏர்மேவு கல்விபயி லெழிற்கழகத் தேமுதலாம் நீர்மேவு புண்ணியனை நீநினைத்து கூவாயே
நேமிபுகழ் குறுக்சாங்கை நேயமொடு கூவாயே. (1)
பரவைசூழ் ஸ்காட்லாண்டுப் பதியினின்று மிங்குவந்தே இரவையெறி யொள்ளிரவி யெனநமகங் கொண்டிருக்கும் கரவைமுத லாயபொல்லாக் காரிருளை யேயெறிவோன் வரவையுள மகிழ்ந்துகொள வந்துநின்று கூவாயே
வலியநோ யகன்றதென்று மாங்குயிலே கூவாயே. (2)
பேர்பெற்ற பச்சையப்பப் பிரபுமண்ட பத்திருந்து கூர் பெற்ற மாணவகர் கொள்வகைகண் டேயறிய ஏர்பெற்ற நூல்களெல்லா மினிமையுட னேதுவிக்குஞ் சீர்பெற்ருேன் றனைநாடிச் செவ்வேநீ கூவாயே
சேர்ந்தவினை தீர்ந்தபடி சீர்க்குயிலே கூவாயே. (3)
இலகுமொளி விண்மீனின் இடைநாளும் ஒளிர்தருவெள் அலகில்கதிர் மதியமென அன்பின்மா னக்கரிடை நிலவுபுகழ் குறுக்சாங்கு நிவப்போடு பச்சையப்பன் உலவுமொளி மண்டபத்தி னுாடிருத்தல் கூவாயே
உங்தியென யாம்மகிழ ஒண் குயிலே, கூவாயே. (4)
இடமகன்ற இக்கழகத் தின்போடு மாணவகர் மடமகற்று நமது துரை மதிமுகத்தைக் காணுமே இடருழக்கும் எமதுநிலை தனையின் பாம் மாங்குயிலே, கடல்புடைசூழ் ஸ்காட்லாண்டுக் கண்ணியர்க்குக் கூவாயே. காமன்நிகர் அழகனுக்குக் கனிவாய்நீ கூவாயே. (5)
--- 14 س

என்புருக்கி யறிவுருக்கி யெழிலார்நல் லுடலுருக்கி வன்புருக்கித் தீங்கிழைத்த வன்னேய்கள் தீர்ந்தனனல் அன்புருக்கி மாணவகி ரவன்வந்த வாபாடி இன்புருக்கி மலர்சொரிந்தே யிறைஞ்சிரென்று கூவாயே.
ஏதமிதல்லை யினுலென் றின்குயிலே, கூவாயே. (6)
மருமேவு தண்சோலைத் தேமாவில் வாழ்குயிலே, திருமேவு பச்சையப்பச் சீமான்கல் விச்சாலை குருமேவு மெங்கடுரை குறுக்சாங்கு நிதம்வாழி உருமேவு மாணவகர் வாழியென்றே கூவாயே
உலகமுறை நெறிவாழி யென்றென்றே கூவாயே, (7)
- 15 -

Page 17
திருக்கோணமலை முத்துக்குமாரசுவாமி வெண்பா. தி. த. க. அவர்கள்.
விநாயர் வணக்கம்
கங்கை யணியுங் கணபதியைக் கைதொழுது மங்குல் படி கோணை மாமலையில் - தங்குமொரு முத்துக் குமார முதல்வன் கழலிணைக்கோர் பத்துப் பகர்வல் வெண்பா.
திருமாலு நான்முகனுந் தேடியுங் காணுப் பெருமா னருள்புதல்வ பேசு - மொருமான் வயிற்றுதித்த நங்கை மணவாளா கோணை யயிற் கரத்தா யாற்ற வருள்.
தேனேங்கு சோலைத் திகழிமய கன்னியருள் வானேங்கு சோலை மலையோனே - தானுேங்கு வேலனே கோணை விலங்க வினிதமர்வாய் காலனுறு போதுவந்து கா.
வானேர் நிலைகலங்க வந்தெதிர்த்த தாருகனைத் தானேர் கணத்திற் றபவெறிந்த - கோனர் அடியார்க் கருளுமண்ணல் வாழுங் கோணைப் படியார்க்கு முண்டோ படர்.
வாரியாய் மண்ணுய் வளியாய் வசுவன லாய் பாரி லெடுத்த பலவுருவம் - போரில் இமைப்பொழுதின் முன்னே யிறந்துபட வென்றேன் சிமைக்கோணை வெற்பனென்றே செப்பு.
சயந்தன் முதலமரர் தம்மைச் சிறையில் : நயந்து வைத்தகுர னடுவமரில் - பயந்து சரந்தொடுத் தோயோடத் தனிக்கோணை வெற்ப கரந்தூக்கி யஞ்சலென்றே கா.
- 16 -

திங்கள் கழியென்பு தேன்பிலிற்றும் நறையார் கங்கையணி சங்கரன் காதலா - செங்கண் அரிமருகா கோணை யசலமினி தமர்வாய் பரிமருகா வென்றே பகர்.
செங்கயற்கண் மாதறத்தின் செல்வியுமையாள் புதல்வா அங்கயற்கண் வள்ளிதெய் வயானையாம் - மங்கையர்கள் வாழவரைக் கோணை வைகுமுருகா வுன்னைத் தாழவர நிதம்யாண்டுந் தா. w
பூதப்படையள்ளிப் போசனமா யுண்டுவந்த ஏதத்தரி யெறிந்த வேந்தல் - சீதந்து மேகம்படி சோலை விண்ணுேங்கு கோணையார் மாகந்த னென்றே வழுத்து.
ஓராறு சென்னி யுடையானைக் கோணையா ரீராறு கண்களுடை யெம்மானைத் - தேராது போக்காதே வீண்காலம் பொங்கும் பழவினையை நீக்கு மனனே நினைந்து.
கங்கை மகனைக் கருமான் மருமகனைச் செங்கை யயிலுடைய செவ்வேளைத் - தங்கடியார் துன்பந் தீர்கோணைச் சுரரிறையை வாழ்த்தினுல் இன்பம் பெறலா மினிது.
سس~-- \17 - س -۔

Page 18
உசாத்துணே நூல்கள் :
.
.
2.
அச்சும் பதிப்பும் - மா. சு. சம்பந்தன் - 1980,
இரட்டைப் புலவர் சரிதம் சி. கு. நாராயணசாமி முதலியார் - 교 .
ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் - வித்துவான் சி. கணேசையர் - .
கார்நாற்பது மூலமும் கா. ர. கோவித்தராச முதலியார் உரை பும் - 1917.
செந்தமிழ்ச் செல்வி: சிலம்பு 8, 298 - 303. தமிழ் நாவலர் சரிதை - தி. த. க. 1921.
தமிழ் நூல் விவர அட்டவனே 1867 - 1920. தமிழ் நாட்டு அர சினர் தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்ற வெளியீடுகள். தாமோதரம் - யாழ்ப்பாணம் கூட்டுறவு தமிழ்நூற் பதிப்பு விற் பஃனக் கழகம் -1971.
திருக்கோணமலே த. கனகசுந்தரம்பிள்ளே சரித்திரச் சுருக்கம் - தமிழ் மன்றம், மகாசனக் கல்லூரி, தெல்லிப்பழை - 1976.
பத்தொன்பதாம் நூற்ருண்டில் தமிழ் இலக்கியம்: மயிலே சீனி, வேங்கடசாமி - 1988 - கீழ்க்கணக்கு நூலாராய்ச்சி.
பாமணிக் கோவை - இரண்டாம் பாகம் - மணி திருநாவுக்கரசு முதலியார் - 1985.
யாப்பிலக்கணம் - தி.த.க. செந். செல்வி, 8. பக்கம் 388 - 395,
 
 


Page 19
ததுவான
வி
LOT
ஆகி1
= "T at: 3
சென். ஜோசப்
 

F. X. C. E. LTT3 IT
ர்கள்.
சு அச்சம் , மட்டக்களப்பு.