கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நினைவு மலர் (க. இ. க. கந்தசுவாமி)

Page 1


Page 2
E:.iրgւՒւլմն
:
1ங்க டால கத்திற்கு
- - .. . = ..." , یی ..." 17-",''' ".12;&#g!ද්::::::::
r---
।
في أربعة آلة ، و لم يدم سد ل = : الة * ل = - الدقه.
ප්‍රී 5 · || || • ෆි, ද්‍රාෆ8
E. LSLLSS S C LSL SLLLSS L LSLSSSL L L L L L L SS SS LLLLLLS SSSS SCC SLL LSSLSL LS S LSSSC LL L C LLLSS SSS
 
 
 
 

இணுவில் தமிழவேள் இ.க.கந்தசுவாமி அவர்கள்
மணி மகிழ
2008
O9
()
At
திதி:ஐப்பசிமாத அபரபக்கப் பஞ்சமி
வெண்பா
ஆண்டுசர்வ சித்துமதி ஐப்பசியைச் சேர்அபரம் பூண்டதிதி ஆகிவரு பஞ்சமியில் - நீண்டபுகழ்
சேர்இணுவில் செம்மல் தமிழவேள் கந்தசுவாமி சேர்ந்தார் சிவகதியென் றோது.
சிகழுமபு தமழச சங்கவி
நுலகம்

Page 3

இணுவில் தமிழவேள் க.இ.க.கந்தசுவாமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம் (1919-09.01 - 2008.10.10.19)
செந்தமிழும், சைவமும் தீந்தமிழ்க் கலைகளும் வளர்ந்த திருநெறிய மன்றங்களும், செந்நெறித் தமிழ்க்கவிப் பெருக்கை அலையலையாய் வழங்கிய அருந்தமிழ்ப் புலவர்களும்; கலைமரபும் இசைமரபும் செறிந்து வளம் கொழிக்கச் செய்யும் கலைஞர்களும் அன்றுமுதல் இன்றுவரை வாழ்கின்ற இடம் இணுவில் திருவூர்.
வடஇலங்கையாம் யாழ் மண்ணின் மையப்புள்ளியாய் விளங்கும் இணுவிலின் கீழ்திசையில் அமைந்த சிவகாமியம்மன் கோயிலடியில் அம்மையின் அருட்காடாட்சத்தில் உதித்தவர்கள் தமிழவேள் அவர்கள். இவர் யாழ்ப்பாண மன்னன் கருணாகரத் தொண்டைமான் மரபுவழிவந்த கந்தப்பு எனும் சைவவேளாள் குலதிலகர் பரம்பரையில் வந்த இலகுப்பிள்ளை கந்தையா அவர்களுக்கும் அவரின் வாழ்க்கைத் துணைவி சிவக்கொழுந்துக்கும் தவமைந்தனாய் வாய்க்கப் பெற்றார். அண்ணன் செல்லத்துரையும் சகோதரிகள் கண்ணகிப்பிள்ளை, அன்னபூரணம், இராசேஸ் வரி ஆகியோரும் இவருக்கும் சகோதரர்களாகக்கிடைத்தனர். ሁ
1919 செப்ரெம்பர் 01 இல் பிறந்த இவர் தனது ஆரம்பக்கல்வியைக் கோண்டாவில் சைவத்தமிழ் வித்தியாலயத்தில் பெற்றார். உயர்கல்வியை கொக்குவில் இந்துக்கல்லூரியில் பெற்றார். க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையிற்சித்தி பெற்றதும் ஆசிரிய கலாசாலைப் புகுமுகத்தோர்விலும் சித்தியடைந்து கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் (1936-1937) பயிற்சி பெற்று பயிற்றப்பட்ட ஆசிரியரானார்.
1938இல் இணுவில் சைவமகாஜன வித்தியாலயத்தில் ஆசிரியப் பணியில் இணைந்து கொண்டார். மரபு வழிக் கல்வியிலும் ஆர்வமுடைய இவர் மாணிக்கச் சட்டம்பியார், முத்துச் சட்டம்பியார், கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபர் செல்லையா மற்றும் கதிரித்தம்பி ஆசிரியர்

Page 4
ஆகியோரிடத்தில் தனிப்பட்ட முறையிலும் கற்றார். இடையறாது கற்றதன் பயனாக 1946இல் மதுரைப் பண்டிதர் தேர்வில் சித்தியடைந்து பண்டிதரானார். 1957இல் சென்னை சைவசித்தாந்த மகாசமாசத்தின் சைவப் புலவர் தேர்விலும் சித்தி பெற்றுச் சைவத் தமிழ் அறிஞரானார். மிகுந்த தெய்வபக்தியும் கொண்ட இவர் பாடசாலைக் கற்பித்தலுடன் மட்டும் நில்லாமல் சமய, சமூகத்தொண்டுகளிலும் ஈடுபடலானார். இணுவில் கிழக்கு சிவகாமியம்மன் கோயிலில் ஆரம்பமான இவரின் நற்பணிகள், பல மன்றங்கள் உருவாகவும் அவற்றின் மூலம் சமூகப்பணிகள் செய்யவும் வாய்ப்பாயிற்று.
இணுவில் கிழக்குச் சிவநெறி மன்றம், இளைஞர் விளையாட்டுக் கழகம், கமத்தொழில் மன்றம், ஐக்கிய நாணய சங்கம், இணுவில் மத்திய சந்தை ஆகியவற்றைத் தொடக்குவதில் முன்னின்றுழைத்தார். முன்னர் மருதனார் மடம் புகையிரதம் நிலையம் என்றிருந்த பெயரை இணுவில் புகையிரத நிலையம் எனப் பெயர் மாற்றம் செய்வதிலும் இவரின் சேவை பாராட்டத்தக்க வகையில் அன்மந்தது.
இணுவில் சின்னத்தம்பிப்புலவர் வீதி திறப்பதற்கு அல்லும் பகலும் பாடுபட்டுழைத்தார். இவ்விதி ஆறு மாதகால அயராத உழைப்பால் அக்கால அரசாங்க அதிபராயிருந்த முருகேசம்பிள்ளை அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.
இணுவில் தபாற்கந்தோர், சிகரட்பாம் முதலியவற்றை திறப்பதற்கும் முன்னின்று பணியாற்றினார். சிகரட்பாமுக்குத் தேவையான மூலப் பொருளான புகையிலைச் செய்கையில் தானும் ஈடுபட்டு மற்றவர்களையும் ஊக்குவித்தார்.
அரசியலில் 1947முதல் தமிழ் அரசுக் கட்சியில் இணைந்து தந்தை செல்வாவின் விசுவாசமிக்க தொண்டனாக விளங்கினார். கட்சியின் செயற்பாடுகளில் பங்கேற்றுத் தனது சுயநலம் பாராது உழைத்தார்.
தனது 19ஆம் வயதில் ஈழத்துச் சித்தர் பரம்பரையினருடன் தொடர்பு கொண்டார். குப்பிழான் யோகம்மா சிவநெறி அம்மா ஆகியோரின்

ஆன்மீகத் தொண்டனாக இருந்தார். இவரது மாமனார் இணுவில் தியாகராசாச் சுவாமியார் மற்றும் வடிவேல் சுவாமியார் யோகர்சுவாமிகள் ஆகியோரில் அதிக சக்தியுடையவராயும் அவர்களைத் தன்குருவாகக் கொண்டு தொண்டுகள் செய்வதிலும் தியானம் முதலான
தவவிரதங்களிலும் மன ஒருமைப்பாட்டுடன் ஈடுபட்டார். அவர் இறக்கும் வரை தவவிரத அனுட்டானங்களிலும், மன ஒருமைப்பாடு, தியானம் மெளனம், உபவாசம் என்பவற்றிலும் பக்தி வைராக்கியம் உடையவராய் தனது ஆன்மீக பலத்தினால் பல சாதனைகளைச் செய்யவல்லவராயும் விளங்கினார்.
இணுவில் சிவகாமியம்மன் கோயில், கந்தசுவாமி”கோயில், இவரது அயலில் உள்ள கோவில்களான இளந்தாரியார், அணுர்ணமார், வைரவர் பத்திரகாளியம்மன் காரைக்கால் சிவன் கோயில் என்பவற்றின் திருப்பணிகளுக்கு முன்னின்று உதவினார். சமயச் சொற்பொழிவுகள், இசைநிகழ்ச்சிகள், பஜனை வழிபாடுகள், கோயிற் தொண்டுகள் நடைபெறச் செய்வதிலும் உதவிநல்கினார். ஊர்ப்பாடசாலையில் பணியாற்றிய காலத்தில், தான் பிறந்த ஊருக்காக இவ்வித அரும்பணிகள் பலவற்றைச் செய்தமையை இன்றும் அங்குள்ளோர் சொல்லக் கேட்கலாம்.
பாடசாலை இடமாற்றம் காரணமாக 1962இல் கொழும்பு இசுபத்தான கல்லூரிக்கு வந்து தன் ஆசிரியப் பணியை மேலும் வளமாக்கிக் கொணர் டார் . . அதனி பேறாக 1967இல் கலி வி வெளியீட்டுத்திணைக்களத்தின் பாடவிதான அபிவிருத்திப் பகுதியில் தமிழ்ப் பாடப் புத்தகப் பதிப்பாசிரியர்களில் ஒருவராக இருந்து பணியாற்றினார். அக்காலப் பாடப்புத்தகங்களில் இவரது பெயரும் இடம்பெற்றிருப்பதை காணலாம்.
மீண்டும் ஆசிரிய சேவைக்குவந்து. கொழும்பு றோயல் கல்லூரியில் ஆசிரியர் பணியைத் தொடர்ந்தார். கொழும்பு இசுப்பத்தான, றோயல் கல்லூரிகளில் கடமையாற்றிய காலங்களில் தமிழ் மன்றங்களுகளுக்குப் பொறுப்பாசிரியராகவிருந்து தமிழ் மாணவர்களின் தமிழ் மொழி கலைத்திறன்களை வளர்ப்பதற்கு அரும்பாடுபட்டார். அத்துடன் எவ்வித

Page 5
ஊதியமும் பெறாமல் மேலதிக வகுப்புகளை நடத்தி உதவினார். இதன் பேறாக பல தமிழறிஞர்கள் கொழும்பில் உருவாகக் காரணமாயிருந்தார்.
கொழும்பில் இருந்தாலும் தான் ஊரில் கற்பித்த பாடசாலையான இணுவில் சைவமகாஜன வித்தியாலயத்தை இணுவில் மத்திய கல்லூரியாகத் தர முயர்த்துவதற்குத் தனது செல்வாக்கைப் பயன்படுத்திப் பெரும்பங்காற்றினார்.
தனது அறுபதாவது வயதில் ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெற்றார். பாட நூலாக்கச் சபையிலிருந்து பாடநூல்களைத் தயாரித்தது மட்டுமன்றி மாணவர்களுக்குப் பயனளிக்கவல்ல பல பயிற்சி நூல்களையும் அவ்வப்போது எழுதி வெளியிட்டார்.
சிறுவர் இலக்கிய நூல்கள், சமய பாடப்பயிற்சி நூல்கள், தமிழ் மொழி, இலக்கியப் பயிற்சி நூல்கள் என முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை ஆக்கியுள்ளார். ஒரு நல்லாசிரியன் பிரதிபலன் கருதாமல் மாணவர்களுக்குச் செய்யக்கூடிய அத்தனை உதவிகளையும் தமிழ்த் தொண்டாகவே இவர் செய்தார் எனில் மிகையல்ல.
தமிழ்ச் சங்கப்பணிகள்
இவர் கொழும்பில் இருக்கும் காலத்தில் 1963இல் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் அப்போதைய செயலாளர் திரு.மு.வ.வயிரப்பிள்ளை அவர்கள் இவரது தமிழ்ப் பற்றைக் கண்டு இவரைத் தமிழ்ச் சங்க அங்கத்தவராக்கினார். 1964இல் இவரைச் சங்க நூலகச் செயலாளராக்கிச் சங்கத்தில் தங்கியிருந்து பணி செய்ய வைத்தார். அப்பொறுப்பை இவர் ஏற்றுப் பத்தாண்டுகாலம் நூலக வளர்ச்சிக்கு பெரும் பாடுபட்டுழைத்தார். புத்தகத்துடன் புத்தகமாகி இருந்து தனது உயிர் போலப்புத்தகங்களை சேர்த்து பாதுகாத்து நூலகத்தை வளர்த்தார். இன்று இந்நாட்டில் முதல்தர நூலகமாக இதுவிளங்குவதற்கு இவரது உழைப்பு முக்கியமானது என்பது மிகையல்ல.

1974ஆம் ஆண்டு ஏப்ரல் தொடக்கம் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்று 1997ஆம் ஆண்டு வரை இருபது ஆண்டுகளுக்கு மேலாகச் செய்த சேவைகள் கணக்கிலடங்கா. கொழும்புத் தமிழ்ச் சங்கத்தை இந்த நாட்டில் மட்டுமன்றிக் கடல்கடந்த தமிழ்கூறும் நல்லுலகமெல்லாம் புகழ் பரவ வைத்த பெருமை இவருக்குரியது.
சிறுகுடிசை வீட்டில் இருந்த சங்கத்திற்குப் புதிய கட்டடம் தேவை என்பதை உணர்ந்தார். 1974 ஆணி மாதம் நூலகத்தின் முதற் கட்டடத் தொகுதி வேலைகள் ஆரம்பமாயின. ஆரம்பிக்கும் போது தலைவராக இருந்த திரு.மு. வயிரவப் பிள்ளை அவர்களும் நிதிச் செயலாளராகவிருந்த திரு.விக்னராசா, திரு.செல்லையா ஆகியோர் இவருடன் சேர்ந்து கொழுப்பில் வாழும் தமிழ்க் கொடை வள்ளல்கள், தமிழ் நலன் விரும்பிகளின் வீடுதோறும் சென்று நிதிசேர்த்து மாடிக்கட்டட வேலையை நிறைவு செய்தனர். இவர் தனது சொந்த வேலைபோலவே இரவு பகல் பாராது பாடுபட்டார். இவரது பெறாமகன் மனோகரன் இவரின் பணிகளுக்கு பெரிதும் உதவியாக இருந்தார்.
மூன்றாம் மாடிக் கட்டடவேலையும் 1989இல் தொடங்கி 1992 நடுப்பகுயில் நிறைவு பெற்றது. கட்டட வேலைகளுக்கு தனது சொந்தப்பணம் ஒரு இலட்சத்து முப்பத்தையாயிரம் வழங்கினார். 1979இல் மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழா சங்கத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப் பெற்றது. தமிழ் நாடு அமைச்சராக இருந்த இரா.நெடுஞ்செழியன் பிரதம விருந்தினராக வந்து சிறப்புரையாற்றினார். அவர் கந்தசுவாமி ஆசிரியரை சங்கத்தின் “தமிழ்க் காவலன்’ என்று பாராட்டினார்.
அக் காலகட்டத்தில் தமிழ் நாடு முதலமைச்சராயிருந்த எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களைத் தமிழ்நாட்டுக்குச் சென்று நேரில் சந்தித்து சங்க நூலகத்திற்குப் பதினையாயிரம் புத்தகங்களை அன்பளிப்பாகப் பெற்றுவந்தார்.
இந்தியாவிலிருந்து தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், இசை அறிஞர்கள், கலைஞர்களை அழைத்துத் தமிழ்ச் சங்கத்தில் நிகழ்ச்சிகளை

Page 6
நடத்திவந்தார். இதன் காரணமாகக் கொழும்பில் வாழும் தமிழர்கள் எல்லார்க்கும் சங்கத்துடன் தொடர்பு வளர்க்கத் தொடங்கியது. இதனால் சங்கத்தின் பின் கட்டடப் பணிகளையும் தொடர்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. சங்கத்திற்கென மாங்குளத்தில் முப்பது ஏக்கர் காணியும் இவர் காலத்தில் வாங்கப்பட்டது.
சங்கத்தின் தலைவராயிருந்த பொருளியல் அறிஞர் பொ.சங்கரப்பிள்ளை அவர்கள் இவரை மிகவும் நேசித்தார். இவரைத் தனது தமிழ் ஆசானாகக் கருதினார். இதன் பேறாக அவரதுபிள்ளைகளும் சேர்ந்து நாற்பது லட்சம் ரூபா அன்பளிப்பு செய்து சங்கரப்பிள்ளை மண்டபத்தைப் பூர்த்தி செய்ய உதவினார்.
இவரைத் தொடர்ந்து வந்த ஆட்சிக்குழுவினர் இன்று நாம் காணும் கொழும்புத் தமிழ்ச சங்க ஏனைய கட்டங்களையும் நூலகத்தையும் இவர் காட்டிய வழி நின்று பூரத்தி செய்தனர். இவர் மீண்டும் (20062007) பொதுச் செயலாளராகப் பணியப்ாற்றினார்.
இவர் தமிழ்ச் சங்கத்திற்குச் செய்த சேவைக்கு நன்றிகடனாகச் சங்கத்தின் ஓர் அறையில் சீவிய காலம் வரை இருக்கவும் வசதி செய்து கொடுத்தனர்.
நாற்பத்தைந்து ஆண்டு காலம் சங்கத்தின் பாரிய வளர்ச்சிக்கு உதவியாக இருந்தார். சங்கத்தின் பிதாமகன் என்றுபெருமையுடன் வாழ்ந்து 2008/10/19 ஞாயிறு காலை 7.20க்கு சிவகாமியம்மன் திருவடி சேர்ந்தார்.
தமிழ்ப்பணி
பாடசாலை ஆசிரியர்பணி, கொழும்புத் தமிழ்ச் சங்கப்பணி என்பவற்றுக்கு அப்பால் இவர் செய்த தமிழ்ப்பணிகள் அளப்பரியன.
உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளில் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்துப் பாராட்டப் பெற்றார். 1974இல் யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழாராய்ச்சி

மாநாட்டில் இவரைப் பாராட்டித் ‘தமிழவேள்’ எனும் பட்டம் வழங்கிக் கொளரவிக்கப்பட்டார்.
1987இல் மலேசியாவில் நடந்த ஆறாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிலும், 1989இல் மொறிசியசில் நடந்த ஏழாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிலும, தென்னிந்திய கிழக்கரையில் நடந்த இஸ்லாமியத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிலும், ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்துப் பாராட்டப் பெற்றார்.
1994இல் இந்து சமய கலாசார அமைச்சு இவருக்குத் ‘தமிழ்மணி எனும் பட்டம் வழங்கிக் கெளரவித்தது.
தமிழ்ச் சங்கப் பொன்விழாவை மிகச் சிறப்பாக நடத்திப் 1992இல் பொன்விழா மலரும் வெளியிட்ட பெருமைக்குரியவர். 2000ஆம் ஆண்டில் திருக்குறள் மாநாட்டையும் வெகுசிறப்பாக நடத்தித் தமிழுக்குப் பெருமை சேர்த்தார்.
ஈழத்துப் பூதந்தேவனார் புலவர்கழகம்
தமிழ் மீதும் தமிழப்புலவர் மீதும் அளப்பரிய பக்தி கொண்ட தமிழவேள் 2003 இல் ஈழத்துப் பூதந்தேவனார் தமிழ்ப் புலவர் கழகத்தை உருவாக்கினார். அதன் செயலாளராக இருந்து 2005இல் ஈழத்துத் தமிழ்ப் புலவர் மாநாட்டை நல்லை ஞானசம்பந்தர் ஆதீன மண்டபத்தில் நடத்தி மாநாட்டு மலரையும் ஈழத்துப் பூதந்தேவனார் வரலாறும் பாடல்களும் எனும் நூலையும் வெளியிட்டார்.
2004இல் இக்கழகத்தின் சார்பில் கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் தொல்காப்பியர் மாநாட்டை நடத்தியதுடன் “ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியக் கட்டுரைகள்’ எனும் பெருநூலையும் வெளியிட்டார்.
2007ல் தமிழறிஞர் சைமன் காசிச் செட்டி நினைவு மன்றச் செயலாளராயிருந்து அவரது ஊரான புத்தளத்தில் பெருவிழா எடுத்து நூலும் வெளியிட்டார்.

Page 7
2007இல் இணுவைச் சின்னத்தம்பி புலவரின் பஞ்சவன்னத்துாது எனும் இவருடைய ஆழமான உரையுடன் கனடா இணுவில் திருவூர் ஒன்றியம் வெளியிட்டது மட்டுமன்றி இவருக்குத் ‘தமிழ்க் காவலன்’ எனும் பட்டமும் ஒரு இலட்சம் ரூபா கொண்ட பொற்கிழியும் வழங்கி கெளரவித்தது.
2008இல் ஈழத்துப் பூதந் தேவனார் தமிழ்ப் புலவர் கழகத்தின் சிலப்பதிகார விழாவை அக்டோபர் 11,12,13ந் திகதிகளில் கொழும்புத் தமிழ்ச் சங்கச் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் முத்தமிழ் விழாவாக நடத்தினார். பெரும் பேரிறிஞர்களும் பேராசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர். ‘சிலப்பதிகாரக் கட்டுரைகள்’ எனும் பெருநூலும் வெளியிடப்பெற்றது. பெருவிழா நடத்திய பூரிப்புடன் இறயைடி சேர்ந்தார்.
செயற்கரிய தமிழ்ப்பணி செய்த தமிழவேள் “நாற்பதுக்கு மேற்பட்ட நூல்களையும், ஐம்பதுக்கு மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதிப் பதிப்பித்துத் தமிழ்த்தாய்க்கு அவற்றைக் காணிக்கையாக்கிச் சொல்லாலும் செயலாலும் தமிழ்த் தொண்டு செய்து இறைவாப் புகழ்படைத்தார்.
சர்வசித்து ஐப்பசி அபரபக்கப் பஞ்சமித்திதியில் அமரரானார் (2008.10.19)
சைலப்புலவர் க.செல்லத்துரை

கப்பித்தாவத்தை ரீபால செல்வ விநாயகர் தேவஸ்தான பிரதம குருவின் அனுதாபச் செய்தி
“நிலையின் திரியது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணல் பெரிது”
அடக்கம் நிறைந்த புலமையாளன் தமிழவேள் க.இ.க.கந்தசுவாமி அவர்கள் ஆற்றிய தமிழ்த் தொண்டினை தமிழ் கூறும் நல்லுகம் நன்கறியும். என்னோடு நீண்ட நாட்கள் பழகிய அப்பெருமகன் தமிழ்ச் சங்க முன்புறக்கட்டிட அடிக்கல் நாட்டு வைபவத்தை என்னுடைய சமயச் சடங்குகளுடன் தொடங்க வேண்டுமென்ற பெருவிருப்போடு என்னை அணுகி சிறப்புறத் தொடக்கி வைத்தார். கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் எந்தவொரு வளர்ச்சியிலும் அவர் தம் முயற்சியி இல்லாதிருக்க முடியாத அளவிற்கு தனது சொந்த விடயமாகக் கருதி நிறைவேற்றும் பண்புடையவர். பிரதிபலன் எதுவும் எதிர்பார்க்காது தமிழே மூச்சாகக் கொண்டு கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாது அனைத்துத் தமிழர்களுக்கும் முத்தமிழின் பெருமையை உணர்த்தும் வகையில் பெருந் தொண்டாற்றியமைக்கு பல சான்றுகள் உண்டு. ஈழத்து பூதந்தேவனார் தமிழ்புலவர் கழகம் எனும் அமைப்பை நிறுவி திருக்குறள் மாநாடு, தொல்காப்பிய மாநாடு, சிலப்பதிகாரப் பெருவிழா ஆகியவற்றை நடாத்திய பெருமை மிக்கவர். எங்கும் தர்மம் நிலைபெற வேண்டும். அதனால் எம் சமுதாய விடிவு ஏற்பட வேண்டும் என்று அடிக்கடி கூறுவார். அப்படிப்பட்ட பெருந்தகை அவர் இனி வளரும் தமிழ்த் தொண்டர்கள் அவர் வழிகாட்டி விட்டுச் சென்ற பணியைத் தொடர்ந்து நிறைவேற்றி அவருக்கு நன்றிக் கடன் செலுத்த வேண்டியது எம் அனைவரதும் கடமையாகும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல மருதானை கப்பித்தாவத்தை ரீ பால செல்வவிநாயகரை வணங்கி வேண்டுகின்றேன்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!
பிரம்மறி பா சண்முகரெத்தினசர்மா பிரதமகுரு முறிபால செல்வ விநாயகர் தேவஸ்தானம்
9

Page 8
தமிழவேளுடன் சில சந்திப்புகள்
*கந்தசாமி மாஸ்டர்’ என எல்லோராலும் மிக மரியாதையுடன் அழைக்கப்படும் தமிழவேள் க.இ.க.கந்தசுவாமி அவர்களுடன் ஓரளவுக்கு நெருங்கிப்பழகும் வாய்ப்பு 1991ம் ஆண்டின் நாவம்பர் மாத முதல் தான் கிடைத்தது.
எனது சிறுகதைத்தொகுதியின் வெளியீட்டு விழாவை 05.12.1991 கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நிகழ்த்துவதற்காக மண்டப ஒழுங்குக்காக "மாஸ்டரை”சந்தித்தேன். மண்டப ஒழுங்கு, தலைவர் உட்பட பேச்சாளர் ஒழுங்கு, அழைப்பிதழ் தயாரிப்பு என எல்லாவிடயத்திலும் ஆலோசனையும் முழுஒத்துழைப்பும் தந்தார். அப்போது வடகிழக்கு மாகாண கல்வி அமைச்சில் கடமையாற்றியதால் கொழும்புத் தமிழ்ச் சங்க நூல்களையும் வாங்கி விநியோகிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அதனைப் பெரிதென மதித்து சங்க நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்தினார். மண்டப வாடகை, ஒலிபெருக்கிக் கட்டணம் எதுவும் என்னிடமிருந்து அறவிடப்படவில்லை. பிரபல பாடகி ஒருவரின் தமிழ்வாழ்த்து பாடலுடன் நிகழ்ச்சியை ஆரம்பிக்கத்திட்டமிட்டும், உரிய நேரத்தில் பிரபல பாடகி வருகைதராததால் தமிழவேள் அவர்கள் திடீரென சிறுமி ஒருவரை ஒழுங்கு செய்து தமிழ்வாழ்த்தை சிறப்பாகப் பாடவைத்து நிகழ்ச்சியைக் களைகட்ட வைத்தார். விழா முடிவில் தமிழவேள் பணம் கொடுத்து பத்துப்பிரதிகள் வாங்கியபோது காரணத்தைக் கேட்டேன். நல்ல நூல்களாக இருந்தால் அவற்றின் பத்துப்பிரதிகளை பணம்கொடுத்து வாங்கி, பிறர்க்கு விற்பதில் அல்லது அன்பளிப்புச் செய்வதில் திருப்தி கண் டதை உணர முடிந்தது. இலங்கையில் வெளியாகும் தமிழ்நூல்களைக் காட்சிப்படுத்த வேண்டும். விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக தமிழ்ச் சங்கத்தில் அவர் ஒரு பகுதியை ஆரம்பித்து நடாத்தியதையும் நினைவூட்டிக்கொள்கின்றேன்.
1992 ஜனவரி மாதம் இந்தியாவில் நடைபெறும் போட்டி ஒன்றுக்காக சிறுகதை நூலின் ஐந்து பிரதிகளை திருக்கோணமலை அஞ்சல் அலுவலகத்திலிருந்து அனுப்பமுடியவில்லை. போட்டி முடிவு திகதி நெருங்கியதால் ‘புத்தகங்களை எப்படியும் அனுப்பி வைக்கும்படி’ தமிழவேளுக்கு ஒரு சிறு வேண்டுகோள்.
10

அப்போதிருந்த நடைமுறைகளின் பிரகாரம் அவர் வெள்ளவத்தை அஞ்சலக அதிபரின் முன்னால் சிறுகதைத் தொகுப்பு நூலின் ஐந்து பிரதிகளையும் காட்டி பொதி செய்து அனுப்பியதால் 1991ம் ஆண்டின் உலகில் தமிழ்மொழியில் வெளியான சிறந்த சிறுகதைத் தொகுதிகள் பன்னிரெண்டில் எனது ‘நிர்வாணம்’ நூலும் தெரிவு செய்யப்பட்டு இந்தியாவில் பரிசும்பெறும் வாய்ப்பும் பல நாடுகளில் அறிமுகமாகும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது.
பலர் பல பரிசில்கள் கெளரவங்கள் பெறவும் நன்கு அறிமுகம் பெறவும் காரணமாக இருந்த கந்தசுவாமி "மாஸ்டர்’ பூமாலை-புகழ்மாலைபொன்னாடை-பொற்கிளி ஆகியவற்றில பற்றற்றவர்ாகவே வாழ்ந்தார்.
1994 டிசம்பர் மாதம் வவுனியாவிலிருந்து கிளிநொச்சிக்கு இடமாற்றம் கிடைத்ததை "மாஸ்டருக்குச் சொல்லியதும், நல்ல கடமை செய்யப் போகின்றீர்கள். கிளிநொச்சி ஒரு காலத்தில் யாழ்ப்பாண மக்களுக்கு சாப்பாடும் தங்க இடமும் கொடுக்கும் இடமாக வரும் என யோகர்சுவாமிகள் சொல்லியிருக்கிறார் என்று சொல்லி என்னை வாழ்த்தி அனுப்பினார்.
ஒரு வருடத்துக்குப்பின் 1995ல் யாழ்ப்பாணத்திலிருந்து 5 லட்சத்துக்கும் அதிகமானோர் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்த போது - தமிழவேள் கந்தசுவாமி அவர்கள் சொன்னதை தினமும் நினைக்க வேண்டிய சூழ்நிலை எழுந்தது. இப்படி சர்வசாதாரணமாக அவர் சொல்லும் வார்த்தைகள் பல பின்னர் நிதர்சனமானதையும் உணர்ந்து கொண்டேன்.
கொழும்பு, கண்டி போன்ற நகரங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அடிக்கடி பல போட்டிகளில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பமும் பரிசில் பெறும் சந்தர்ப்பமும் தமிழவேளின் மனதை நெருடியது. கிளிநொச்சி, முல்லைத்தீவு உட்பட தமிழ்பேசும் மாணவர்களை ஊக்குவிக்க போட்டிகள் நடாத்தி பரிசில்கள் வழங்கி அவர்களின் ஆக்கங்களை உள்ளடக்கியதாக நூல்களும் வெளியிட்டார். அந்தவகையில் புத்தளம் மாவட்டத்தில் கற்பிட்டியில் கல்விபயிலும் மாணவி எழுதிய ‘தமிழறிஞர் சைமன் காசிச்செட்டி’ பற்றிய கட்டுரையும் கந்தசுவாமிடிமாஸ்டரின் கவனத்தைக் கவர்ந்தது?
11

Page 9
சைமன் காசிச்செட்டி பற்றிய தகவல்களை சேகரித்து நூலாக்கியதுடன் அவர் எழுதிய ஆங்கில தமிழ்மொழி நூல்களையும் மீண்டும் பிரசுரித்தார். மூன்று தடவைகள் பல அறிஞர்களை கொழும்பிலிருந்து கற்பிட்டிக்கு அழைத்துச் சென்று விழாக்களை நடாத்தினார். நூல்களை அன்பளிப்புச் செய்து கற்பிட்டியில் நூலகத்தையும் ஆரம்பித்தார். மாகாண சபைப்பிரதிநிகளையும் ஈடுபாடு கொள்ளச் செய்து அவர்கள் நிதி வழங்கவும் கட்டிடங்களைக் கட்டவும் உந்து சக்தியாகத் திகழ்ந்தார்.
சங்கத் தமிழ் இலக்கியங்களில் ஈடுபாடு மிகக் கொண்ட தமிழவேள் பழங்காலப் புலவர்கள் அறிஞர்கள் மேல் வைத்த பக்தியினால் ‘ஈழத்துப் பூதந்தேவனார் புலவர் கழகத்தையும் நிறுவிப்பல பணிகள் புரிந்தார்.
தொல்காப்பிய நாட்காட்டி - தமிழவேளின் புலமைக்கும் சாதனைக்கும் ஒரு சான்று.
நான்கு ஆண்டுகளுக்கு முன் "தொல்காப்பிய விழாவை பெரிதாக நடாத்தி புத்துணர்ச்சி ஊட்டினார். அதேபோல இவ்வாண்டு ‘சிலப்பதிகார விழாவை பெரிதாகக் கொண்டாட ஒழுங்கு செய்து அவ்விழாவை நடாத்துவதிலும் சாதனை செய்துள்ளார்.
போலிகளால் கொண்டாடப்படும் ஆடம்பர விழாவாக அமையாமல், உண்மையான ஆர்வலர்கள் பங்கேற்கும் அறிவுபூர்வமான விழாவாக அமைய வேண்டுமென்பதில் ஒவ்வொரு விடயத்திலும் அக்கறைசெலுத்தி ஒழுங்குகளை மேற்கொண்டார்.
இலங்கைப் பல்கலைக்கழக, இந்தியப் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பங்குபற்றவேண்டும், அவர்களுக்கு பொருத்தமான தலைப்புகளைக் கொடுத்து உரையாற்ற வைக்க வேண்டும். பெறுமதியான கட்டுரைகள் அடங்கிய சிறப்பு நூல் வெளியிட வேண்டும். இசை, நடன, நாடக நிகழ்வுகள் கூட களிப்பூட்டலாக அமையாமல் கருத்துள்ளவையாக அமைய வேண்டும். நேர ஒழுங்கு உட்பட எல்லாம் ஒழுங்காக சீராக இருக்க வேண்டும் என எண்ணி தன்னை வருத்தி விழாவைச் சிறப்பாக்கினார்.
12

'சிலப்பதிகாரப் பெருவிழா” நிகழ்வு வெற்றிக்குப் பங்களித்தவர்களைப் பாராட்டி ‘பாராட்டுப்பத்திரம்’ வழங்கி, ஒவ்வொருவரின் தரத்தையும் தேவையையும் எடைபோட்டு தனித்தனியாகப் புத்தகங்களைத் தெரிந்தெடுத்து பரிசளித்ததும் அவரது தனித்துவத்தைச் சிறப்பாகப் புலப்படுத்தியது.
புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ்பேசுவோர் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தைப்பற்றியும், சங்கப்பணிகள் பற்றியும்அடிக்கடி விதந்துரைத்து மகிழ்ச்சியடைவதைக் காணும் போதெல்லாம்'கொழும்புத் தமிழ்ச் சங்க வளர்ச்சிக்குத் தன்னை அர்ப்பணித்து திருப்தி கண்ட தமிழவேள் கந்தசுவாமி அவர்களைச் சந்தித்த சந்தர்ப்பங்கள்ெல்லாம் நினைவுக்கு வருகின்றன.
நெஞ்சார தமிழ் மொழியையும் தமிழ்மொழி பேசுவோரையும் நேசித்து, மதித்து நேர்மையாகவும் கெளரவமாகவும் வாழ்ந்த தமிழவேள் கந்தசுவாமி அவர்களின் முன் மாதிரியைப் பின்பற்றினால் தமிழும்
வாழும்! வளரும்! தமிழர்களும் உயர்வடைவர்.
உடுவை எஸ்.தில்லைநடராசா
நினைவேட்டிலிருந்து
“சிலப்பதிகார விழாவதனின் வெற்றிகண்டு நிம்மதி கொண்டு
விண்ணேகினையோ ஏந்தலே”
உடுவை-கலாபூஷணம். M.S. பூரீதயாளன்
13

Page 10
தமிழவேள் க.இ.க. கந்தசுவாமி திருக்குறள் மாநாட்டில் ஆற்றிய உரை
தமிழ்ச் சங்கத் தலைவர் அவர்களே அறிஞர்களே அவையோர்களே முன்னாள் பா.உ.பண்டிதர்.கா.பொ.இரத்தினம் அவர்கள் வழங்கிய அறக்கட்டளை நிதி உதவியினால் இத்திருக்குறள் விழா இன்று இங்கு நிகழ்கிறது. இவர் இத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்து இத் தமிழ்ச் சங்கத்தைப் புகழ் பெறச் செய்த பெருமைக்கு உரியவர்.
உலக மொழிகளுள் தமிழ் தொன்மை வாய்ந்த உயர் மொழிகளுள் ஒன்று. இத்தமிழ் மொழியின் பெருமை உலகில் உயர்வு பெறச் செய்யும் சிறப்பினை உடையது திருக்குறள். உலக மொழிகள் பலவற்றில இத்திருக்குறள் மொழி பெயர்க்கப் பெற்றிருப்தே இதன் சிறப்பை உணர்த்தும். இதனாலேயே வள்ளுவன் தன்னை உலகிற்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என மகாகவி பாரதி பாராட்டியுள்ளார். தமிழர் வாழும் நாடுகள் அனைத்திலும் திருக்குறட் கழகங்கள் அமைத்து திருக்குறள் அறிவுரைகளைப் பரப்புவதோடு திருக்குறள் விழாக்களை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளுவர் அறக்கட்டளை நிதியை இத்தமிழ்ச் சங்கத்தில் ஏற்படுத்திய பண்டிதர் வித்துவான் கா.பொ.இரத்தினம் அவர்கள் புகழ் பெற்ற பேரம்பலப் புலவரின் மரபினர் ஆதலின் இளமையில் தமிழைக் கற்று யா.ஆ.தி.பா.வி.சங்கத்தின் பண்டிதர் ஆனார். பின்பு தமிழகத்தில் வித்துவான் ஆனார். அங்கு பல தமிழ் நாடுகளில் உரை நிகழத்திப் புகழ் பெற்றார்.
தொடக்க காலத்தில் நாவலர் என்னும் சிறந்த சஞ்சிகையை வெளியிட்டார். இச்சஞ்சிகை இத் தமிழ்ச் சங்க நூலகத்தில் இருக்கின்றது. தொடக்கத்தில் தமிழாசிரியராகப் பணிபுரிந்த பண்டிதர் தமது முயற்சியினால் இலங்கை அரசகரும மொழித் திணைக்களத்தில் பணிபுரியும் உயர்வைப் பெற்றார்.
தலைநகரில் இவர் பணிபுரிந்த போது கொழும்புத் தமிழ்ச்சங்க உறுப்பினராகி இச் சங்கப் பணிகளுக்குப் பெரிதும் உதவினார். இச்சங்கத்
14

தலைவராகி இச்சங்கப் பணிகளை பயன் உள்ளனவாக ஆக்கினார். இவர் இச்சங்கத் தலைவராக இருந்த காலம் இச்சங்கத்தின் பொற்காலமாகும். பலன் உள்ள பல பணிகள் நடைபெற்றன. முருகு என்னும் சிறந்த வெளியீடு வெளியாகியது. சிறந்த மாநாடுகள், கவியரங்குகள் , கருத்தரங்குகள் நடைபெற்றன. அரச திணைக்களங்களில் கருமங்கள் தமிழிலே நடைபெறச் செய்தார்.
புதுடில்லியிலும் நிகழ்ந்த உலக மொழிகள் ஆராய்வு மாநாடுகளில் இச்சங்கப் பிரதிநிதியாகப் பங்குபற்றினார். 'உலகத் தமிழாராய்ச்சி மாநாடு தொடங்குவதற்கு வழிவகுத்தார்.
திறக்குறளில் பெரும்பற்றுக் கொண்ட இவர் கழகத்தை நிறுவித் திருக்குறள் தேர்வுகளை நடத்தியதோடு திருக்குறள் மாநாடுகளை ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தினார்.
இக்கழகத்தின் அமைப்பு ஒன்றை அமைத்து அதனை நிலைபெறத் திட்டம் இட்டார். ஆனால் இவர் அரசியலில் பங்குபற்றியதனால் இத்திட்டம் நடைபெறவில்லை.
பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது அங்கு தமிழில் உரை நிகழ்த்திய பாராளுமன்ற நிகழ்வுகள் தமிழிலும் நடைபெற வழிவகுத்தார். இவரது பாராளுமன்ற உரைகள், பாராளுமன்ற உறுப்பினர் அனைவரையும் கவர்ந்தன.
அரசியற் தொடர்புகளால் தமிழகத்தில் சில ஆண்டுகள் தங்கியிருந்தார். அண்மையில் நாடு திரும்பிய இவர் “திருக்குறள் அறக்கட்டளை நிதியம்’ ஒன்றை இச்சங்கத்தில் ஏற்படுத்தினார்.
எமது 30 ஆண்டுகால அர்ப்பணிப்பால் இச்சங்க வளர்ச்சிக்கு உதவிய நான் 2005இல் பொதுச் செயலாளராகிப் பல ஆண்டுகள் நடைபெறாமல்
இருந்த தமிழ்த் தேர்வுகளை நடத்திப் பரிசில்கள் வழங்கச் செய்கிறேன்.
பண்டிதரிடம் தமிழ் கற்ற காரணத்தினால் அவரது திருக்குறள் அறக்கட்டளை நிதியத்திற்காகத் திருக்குறள் எழுத்துத் தேர்வுக்குச்
15

Page 11
சிறந்த வினாத்தாளினை அமைத்து நாடு முழுவதும் பங்குபற்றச் செய்தேன். பரிசில் நிதியச் செயலாளர் திருமதி அ.புவனேஸ்வரி உறுதுணையாக இருந்தார். இத்தேர்வு முறை மிகக் கடினமானது. இதில் பரிசில்கள், சான்றிதழ்கள் பெற தெரிவு செய்யப்பெற்ற மாணவர்களும் பாடசாலைகளும் மிகவும் பாராட்டுக்கு உரிய இப்பரிசில்கள் காலங்கடந்து 2008ஆம் ஆண்டு வழங்க ஒழுங்கு செய்யப் பெற்றுள்ளது. பண்டிதரின் ஆசியோடு இந்நிகழ்வு நிகழ்கிறது. இந்நிகழ்வுக்கு உதவிய தேர்வுத்துறைச் செயலாளரும் ஆட்சிக்குழுவும் பாராட்டுக்கு உரியவர்கள். தேர்வுச் செயலாளர் எமது தமிழ் வகுப்பில் தமிழ் பயின்றதனால் தமிழுணர்வு உள்ளவர்.
இப்போது உள்ள திருக்குறள் அறக்கட்டளை நிதி இன்றைய நிலையில் போதியதன்று. இதனை அதிகரிக்கும்படி பண்டிதர் அவர்களை வேண்டுகின்றேன். இத்திருக்குறள் எழுத்துத்தேர்வு விழாவும் தொடர்ந்து நிகழச் சங்கம் செயற்பட வேண்டும். இன்றைய தலைவர் முன்பு இச்சங்கப் பணிக்கு உதவியாக இருந்தார்.
இந்த நாட்டில் தமிழும் தமிழ்ச் சங்கமும் உயர்வு பெற வேண்டி நாவலர் வழியில் எனது வாழ்வை அர்ப்பணித்து பணிகள் செய்து வந்துள்ளேன். தலைநகர் வந்த நான் பயப்படாமல் இந்நிலையத்தில் தமிழ்ப் பணிகளை 40 ஆண்டுகள் மேற்கொண்டதனால் இச்சங்கம் இந்நாட்டிலும் உலகிலும் புகழ் பெற்று விளங்குகிறது.
இன்று இந்த நாடு மிக அமைதியற்று உள்ளது. இடம்பெயர்ந்த வசதியற்ற மாணவர்களுக்கு இச்சங்கம் உதவ ஆர்வமாக உள்ளது. தமிழ் உணர்வு உள்ளவர்கள் இச்சங்கத்தை வழிநடத்த வேண்டும். 24 மணி நேரமும் தமிழைச் சிந்திப்பவன், நீண்டகால அனுபவம் உள்ளவன். ஆக்கபூர்மான தமிழ்ப் பணியை இச்சங்கம் மேற்கொள்ள வேண்டும். சங்க வருங்காலத்திற்காக தொடங்கிய பணிகள் பல ஆண்டுகளாகச் செயற்படாமல் உள்ளன. வருங்காலத்தில் இச்சங்கம்
இந்நாட்டில் உயர் தமிழ்ப் பணிகள் செய்யும் ஸ்தாபனமாக வளரவேண்டும்.
16

தமிழவேள் ஐயா எங்கு சென்றுவிட்டீர்கள் இனிதமிழ் காக்க யார் வருவார்.
இணுவில் மண் ஈன்றெடுத்த தவப்புதல்வன் தமது ஆற்றல்மிகு ஆளுமையால் ‘சானி றோனி ' எனர் று உலகத் தவர் களால் போற்றப்படும்போது எமக்கும் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இணுவில் சின்னத்தம்பிப் புலவரைத் தந்த அந்த மண்ணின் மைந்தனான தமிழவேள் இ.க.கந்தசாமி ஐயா 1919ஆம் ஆண்டு புரட்டாதித் திங்கள் முதலாம் நாள் கந்தையா சிவக்கொழுந்து தம்பதியினரின் கனிஷ்ட புத்திரராக அவதரித்தார். சைவமும் தமிழும் தீந்தமிழ்க் கலைகளும் வளர்த்த திருநெறிமன்றங்களால் பெருஞ்செல்வுப் பெருக்கை வழங்கிய அருந்தமிழ்ப் புலவர் அவையினரால் கலைமரபும், இசைமரபும், புலமை மரபும் நிரம்பிய சான்றோர் திருக்கூடலினால், தென் பொதிகைச் சந்தனமாய் மணம்வீசும் பெரும்பேறு பெற்ற பொற்கம்லத்திருவூராக விளங்குவது இணுவை என்னும் அழகுப் பேரூர். பல ஆலயங்களைத் 'தன்னகத்தே கொண்ட திருவூர் அத்தகைய பெருமைமிக்க மண்ணில் தமிழறிஞர் இ. க.க நீ தசாமி ஐயா வால் பார் போற் ற வாழமுடிந்துள்ளதென்றால் தன்னலம் கருதாத அவரின் பொதுப்பணியே காரணம்,
கோண்டாவில் சைவ வித்தியாலயத்தில் கல்வி கற்ற காலத்தில் தொடக்கநிலை, உயர்நிலை மாணவ சங்கங்களின் செயலாளராக இருந்து செயற்பட்டு மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் பாராட்டுப் பெற்றவர். அங்கு பெற்ற பாராட்டுகளும், அனுபவங்களும் அவரைப் பொதுப் பணியில் ஈடுபட ஊக்குவித்தன. கோப்பாய் அரசினர் ஆசிரிய கலாசாலையில் சேர்ந்து பயிற்றப்பட்ட ஆசிரியராக வெளிவந்தார். இணுவில் சைவ மகாஜன வித்தியாசாலையில் (தற்பொழுது இணுவில் மத்திய கல்லூரி) ஆசிரியராகப் பணியேற்று நல் மாணாக்கர் பரம்பரையை உருவாக்கிய பெருமைக்குரியவரானார். இன்று உலக நாடெங்கும் வாழுகின்ற அவரின் மாணவ மாணவிகள் அவர்மேல் அளவுகடந்த மதிப்பும் கொண்டுள்ளனர். இதன் காரணமாகக் கனடாவில் வாழுகின்ற இணுவில் திருவூர் ஒன்றியத்தினர் சென்ற வருடம் அங்கு அவருக்கு விழா எடுத்து விருதும் பொற்கிளியும் வழங்கிச் சிறப்புச் செய்துள்ளனர். அவர் அங்கு செல்லமுடியாத நிலையில் அவர்களின் சார்பில் இணுவில் திருவூர் ஒன்றியக் கொழும்புக் கிளையினர் கொழும்புத்
17

Page 12
தமிழ்ச் சங்கத்தில் பெருவிழா நடத்தி விருதினையும், பொற்கிளியையும் வழங்கி அவரைப் பெருமைப்படுத்தினர்.
ஆசிரியராக இருந்த காலத்தில் பல்வேறு பொது அமைப்புகளின் செயலாளராகவும் செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றி அனைவர்களினதும் பெருமதிப்பையும், பாராட்டுகளையும், பெற்று தலைநிமிர்ந்து நின்றார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வந்து றோயல் கல்லூரியின் ஆசிரியராகப் பணியாற்றும் காலத்தில் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகி அச்சங்கப் பணிகளில் பங்குபற்றிச் செயற்பட்டபோது, அங்கு தமிழறிஞர்களின் தொடர்பு ஏற்பட்டது. தமிழ்ச் சங்கத்தின் முதுகெலும்பாக நின்று அவர் ஆற்றிய பணிகள் பல 1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தின்போது எல்லோரும் உயிர்காக்க ஓடியவேளையிலும் தன் உயிரைத் துச்சமென மதித்து தனி ஒரு மனிதனாக நின்று சங்கத்திற்கு எதுவித இழப்பும் ஏற்படாத வண்ணம் பாதுகாத்த பெருமை அவரையே சாரும். கொழும்பு வாழ் தமிழ்ப்பிள்ளைகள் தமிழ் மொழியையும், இலக்கிய இலக்கணங்களையும் தமிழர் தம் பண்பாடுகளையும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலில் இலவச வகுப்புகளை முன்னின்று நடத்
தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அரும் பாடுபட்டார்.
தமிழ் நாட்டில் எம்.ஜி.இராமச்சந்திரன் முதலமைச்சராக இருந்த காலத்தில் அவருடன் தொடர்பை ஏற்படுத்தி பன்னிராயிரம் அரிய நூல்களை கொழும்புத் தமிழ்ச் சங்கத்திற்குப் பெற்றுக்கொள்ள உறுதுணையாக இருந்து செயற்பட்டார். தமிழ்மொழிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் பங்கேற்றியவர்களைப் பற்றி நூல்களையும், அவர்களின் ஆக்கங்களையும் தமிழ்ச் சங்க வெளியீடாக கொண்டுவர அரும்பாடுபட்டார். கொழும்புத் தமிழ் சங்கத்தின் பொதுச் செயலாளராக பல ஆண்டுகள் பணியாற்றி அதன் ஒவ்வொரு வளர்ச்சிக்கும் படிக்கல்லாக இருந்து செயற்பட்ட பெருந்தகை தமிழவேள் இ.க.கந்தசாமி ஐயா ஆவார்.
வயது முதிர்ந்த வேளையிலும் ஓயாது, உறங்காது தமிழேதன் மூச்சென வாழ்ந்த செம்மல் பல நூல்களை எழுதியும் பதிப்பித்துமுள்ளார்.
18

“ஈழத்துப் பூதந்தேவனார் வரலாறும் பாடல்களும்” என்னும் நூலை வரலாற்றுப் பதிவுகளுடன் யார்த்துத் தந்துள்ளார். சங்கப் புலவர்களுள் குறிப்பிடத்தக்கவராகிய, ஈழத்துப் பூதந்தேவானர் தமிழ்ப் புலவர் கழகத்தின் செயலாளராக இருந்து அரும் பணியாற்றி வந்தார். சைமன் காசிச்செட்டி பணிமன்றத்தின் செயலாளராக இருந்து அவர் பெருமையை உலகறியச் செய்ய பெருவிழா எடுத்து அவர் நூல்களையும் அவரைப் பற்றி எழுதிய நூலையும் வெளிக்கொணர்ந்தார். தமிழவேள் இ.க.கந்தசாமி கல்வி அமைச்சின் தமிழ் நூற் பாடத்திட்டப் பகுதியிலும் பணிபுரிந்து பல பாடநூல்களை உருவாக்க உதவியவர். தமிழ்ப் புலவர்கள் கழகத்தை அமைத்து'அதன் செயலாளராகவும் பணியாற்றினார். யாழ்ப்பாணத்தில் தமிழ்ப் புலவர் மாநாட்டையும் உலகம் போற்ற நடத்திக் காட்டினார். கனடாவிலுள்ள இணுவில் திருவூர் ஒன்றியம் அவருக்கு விழா எடுத்து ‘தமிழ்க்* காவலன்’ என்னும் விருதையும் வழங்கிச் சிறப்பித்துள்ளது. கொழும்புத்தமிழ்ச் சங்கம் தனது 66ஆவது நிறுவுனர் தின விழாவில் ‘சங்கச் சான்றோர்’ விருது வழங்கியது. பட்டங்களையோ, விருதுகளையோ, கெளரவங்களையோ, விரும்பாத ஒரு கொள்கைப் பிடிப்புள்ள மனிதராக வாழ்ந்து காட்டினார்.
அவர் இவ்வுலகைவிட்டு பிரிவதற்கு ஒரு கிழமைக்கு முன், இந்திய, இலங்கை அறிஞர்களை அழைத்து தொடர்ந்து மூன்று நாட்களாக சிலப்பதிகார முத்தமிழ் விழாவை மிகப் பெரிய அளவில் தனி ஒரு மனிதனாக நின்று திறம்படச் செய்து காட்டினார். தமிழுக்கு விழா எடுத்து அம்மொழியின் பெருமைகளை உலகறியச் செய்யும் பேரறிஞரை தமிழ்கூறும் நல்லுலகம் இழந்து நிற்கின்றது. அப்பெரியாரின் இழப்பை தாங்கமுடியாமல் தவிக்கின்றோம். அவர் பணி தொடர் யார்தான் பிறப்பாரோ?
திரு தம்பு சிவசுப்பிரமணியம்
19

Page 13
தமிழ் முனிவர்
சீர் இணுவைத் திருவூரின் தவப்பரப்பில் தமிழ் முனிவராய்த் தோற்றம் பெற்ற அமரர் தமிழவேள் அவர்கள் தமது வாழ்க்கைக் கால நீட்சி முழுவதும் தமிழ் திறம்பட வாழ்ந்தவர். தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ்க்கல்வி முதலாம் துறைகளிலே தமது இயக்கப்பாட்டை இணுவில் சைவமகாஜனாவின் வாண்மைத் தடத்திலிருந்து ஆரம்பித்தவர். கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் எழுத்தாளராகப் பணிபுரிந்த வேளை வழுவற்ற பாடநூல் ஆக்கப்பணிகளை மேற்கொள்வதிலே புலமை முனைப்புடன் செயற்பட்டவர். மரபுவழி இலக்கண வேர்களை ஆழப்பற்றி நின்றவர். கொழும்பு றோயல் கல்லூரியில் ஆசிரியராகப் பணி புரிந்த வேளை ஆற்றல் மிக்க பெரும் மணவர்களை உருவாக்கித் தருவதிலே வினையாற்றலுடன் பணியாற்றியவர் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் நீண்ட வாழ்க்கையோடு தம்மை இணைத்துக் கொண்டு பல பரிமாணங்களிலே தொண்டாற்றிய அவரது நினைவுகள் அழியா அமரத்துவம் வாய்ந்தவை. இணுவையூரின் சித்தர் மரபினைச் சிறப்பிக்கவந்த அவரின் தவவாழ்க்கை காலச் சுவடுகளோடு தொடர்ந்த வண்ணமிருக்கும்.
(3Lugrffu surr (oggu gTFE தலைவர் கொழும்புத் தமிழ்ச்சங்கம்
20

கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் அனுதாபம்
கொழும்புத் தமிழ்ச்சங்க முன்னாள் செயலாளர் தமிழவேள் இ.க.கந்தசுவாமி அவர்கள் 2008.10.19 அன்று கொழும்பில் சிவபதம் அடைந்தார்.
தமிழி மொழிக் காகவும் , தமிழ் ச் சமுதாயத் திற்காகவும் , சைவசமயத்திற்காகவும் பிரமச்சாரியாக வாழ்ந்து, தன்னையும் தன் வாழ்நாளையும் முற்று முழுதாக அர்ப்பணித்து வாழ்ந்து காட்டியவர். தமிழையும், சைவத்தையும் தன் இருகண்கள்ாகக் கொண்டு இறுதிவரை வாழ்ந்தவர். வாய்மையும் நீதியும், நேர்ம்ையும், ஒழுக்கமும் தனது இறுதி வாழ்நாள் வரையும் இம்மியும் தவறாது வாழ்ந்து காட்டிய உத்தமர், அவர் இன, மத, மொழி வேறுபாட்டை மறந்து உலகுவாழ் தமிழ் பேசும் மக்களை ஒன்றிணைத்து, தமிழ்மொழி வளர ஆற்றிய பணிகள் சொல்லிலடங்கா. தமிழ்ச்சங்கத்தைக் கட்டிக் காத்த நீண்டகாலச் செயலாளராகவும் விளங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்மொழியின் வளர்ச்சியிலும், தமிழ் இலக்கியப் பணியிலும் தன் இறுதி மூச்சுவரை தளராது உழைத்த பெருமகன்.
திருக்குறள்விழா, தொல்காப்பியவிழா, சிலப்பதிகார விழா, என்பவற்றைச் சிறப்புற நடத்தியவர். இலங்கை பூராவும் தமிழ்மொழியில் பேச்சு, எழுத்து,கவிதைப் போட்டிகளை நடத்தி அதன்மூலம் தமிழ்மொழித் திறமையாளர்களை இனங் கண்டு பரிசளிப்பு விழாவை நடத்தி மகிழ்ந்தவர். ஓரிரு நாட்களுக்கு முன் சிலப்பதிகாரப் பெருவிழா நடாத்தி அதன்பெருமையையும், அருமையையும் பலரும் பராட்டிக் கெளரவித்துக் கொண்டிருக்கும் வேளையில் யாரும் எதிர்பாரா வகையில் திடீரென எம்மைமீளாத்துயரில் ஆழ்த்தி பிரிந்துவிட்டார். அவரது பூவுடல் எம்மை விட்டுப் பிரிந்தாலும் புகழுடல் என்றும் எம்முடன் நிலைத்திருக்கும். அன்னாருக்கு கொழும்புத்தமிழ்ச் சங்கத்தின் அஞசலிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அவரது ஆன்மா சாந்தி அடைய அனைவரும் பிரார்த்திப்போமாக!
ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி பொதுச் செயலாளர்.
21

Page 14
கொழும்பு தமிழ்ச்சங்கத்துக்கு காலத்தால் அழியாத சேவைகள் ஆற்றிய தமிழவேள்
கலாபூஷணம் செல்வத்தம்பி மாணிக்கவாசகர்
என்றும் நிலைத்து நிற்கக் கூடிய தமிழை எழுதிய கை நின்று விட்டது. ஒய்வின்றிச் சிந்தித்த மனம் ஒடுங்கிவிட்டது. இன்று பல்லாயிரக்கணக்கான தமிழ் எழுத்துலக மக்கள் ஆறாத்துயரில் ஆழ்ந்து விட்டனர். இத்தனைக்கும் காரணம் கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் செயலாளர் தமிழவேள் க.இ.க.கந்தசுவாமி அவர்கள் காலமாகிவிட்டார் என்ற செய்தி கேட்டபோது ஆறாத்துயரத்திற்கு நாம் என்ன ஆறுதல் சொல்லமுடியும்.
இன்று கொழும்புத் தமிழ்ச்சங்கம் ஆல் போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி நிற்கின்றது என்றால், அதற்குக் காரண கர்த்தாவாக விளங்கியவர் தமிழவேள் கந்தசுவாமி என்றால் தமிழ்ச் சமூகம் என்றென்றும் மறப்பதற்கில்லை. தமிழ்ச் சங்கம் சாதித்த சாதனைகள் எல்லாம் இவரையே சாரும். தனது வாழ்க்கையை தமிழ்ச் சங்கத்தோடு பிணைத்ததோடு, சங்கத்தின் வாழ்வே தனது வாழ்வெனக் கொண்டவர் இப் பெருமகன். தமிழின் அருமை, பெருமைகளை எல்லாம் இலங்கையின் மூலை முடுக்குகள் எங்கும் பரப்புவதற்காக கொழும்பில் மட்டுமன்றி உலகளாவிய ரீதியில் பல அறிஞர்களையும், கல்விமான்களையும் தொடர்பு கொண்டவர். பெரியோர்களையும, சான்றோர்களையும் அன்பு பாராட்டி அழைத்து அவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டும் அவர்களை கெளரவித்த பெருமை இவரையே சாரும். இத்துடன் அண்மையில் தமிழ்ச் சங்கத்தில் சிலப்பதிகாரப் பெருவிழாவை மிகவும் சிறப்பாக யாவரும் வியக்கும் வண்ணம் மூன்று நாட்கள் நடாத்தி பேச்சாளர்களையும், பேராசிரியர்களையும், பெருமக்களையும், அறிஞர்களையும், சான்றோர்களையும், மற்றும் கல்விமான்களையும் கெளரவித்த பெருமை இவரையே சாரும். y
தமிழவேள் கந்தசாமி கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக செயலாளராகவும் 40 ஆண்டுகளுக்கு மேலாக
22 -

கல்விப் பணியாற்றிய பெருமை மிக்கவர். உண்மையில் இலங்கைத் திருநாட்டின் நற்றமிழ் அறிஞர்களுள் இவரும் ஒருவர் என்பதை தமிழ் உலகம் என்றும் மறக்க முடியாது. நல்ல இலக்கியப் புலமையும் கவிதைப் புலமையும் பெற்றவராக வாழ்ந்தார்.
தமிழவேள் கந்தசுவாமி அவர்கள் தமிழ் ஆசிரியராக 1963ஆம் ஆண்டு கொழும்பு நகர் வந்து மகத்தான கல்விப் பணி ஆற்றிக் கொண்டிருக்கும் பொழுது அன்றைய கால கட்டத்தில் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக விளங்கிய க.வைரமுத்து இவரை தமிழ்ச் சங்கத்தின் ஒரு உறுப்பினராகச் சேர்ந்து பணியாற்றும்படி பணித்தார்கள். இவரின் வேண்டுகோளின் படி இச்சங்கத்தின் வளர்ச்சிக்காகவும் இச் சங்க நிலத்தில் இருந்த பழையவீட்டில் மாணவர்களுக்காகத் தமிழ் வகுப்புகளை கட்டணம் பெறாமல் நன்கு நட்த்திவந்தார். இதன் காரணமாக தமிழவேள் கந்தசுவாமி அவர்களுக்கு பேரும், புகழும் ஏற்பட்டு யாவரின் பாராட்டையும் பெற்றார்.
இக்காலகட்டத்தில் 1965ஆம் ஆண்டளவில் நூலகப் பொறுப்பையும் இவரிடத்திலேயே ஒப்படைத்தனர். இதனை அங்கிருந்த சிறிய அறையிலேயே அமைத்து நல்ல சேவையாற்றி வந்தார். இவரின் தமிழ்ப் பற்றையும் தன்னலமற்ற பணியையும் உணர்ந்த தமிழ்ச் சங்கம் 1975ஆம் ஆண்டு பொதுச் செயலாளர் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்தது. இப்பொறுப்பை ஏற்றதும் புதிய கட்டிடம் ஒன்று இச்சங்கத்திற்கு தேவையென உணர்ந்து இப்பணியில் ஈடுபட்டார். போதிய நிதி இல் லாமல் இருந்தபோது அனி றைய தலைவரும் , ஆட்சிக் குழுவினரும் இவருக்கு ஆதரவு நல்கினர். மேலும் சிறுசிறுதொகையாக ஆர்வலர்கள் பலர் உதவிய நிதியினால் இச்சங்க நிலத்தின் முற்பகுதியில் முதலிருமாடிகள் அமைந்தன. இவை அமைந்ததும் சங்க நிகழ்ச்சிகள் முதன் முதலாக இச் சங்கத்தில் தொடங்கின. இத்துடன் இந் நிகழ்வுகள் இச் சங்கத்திற்கு எழுச்சியை ஊட்டின. சங்கப் பணிகள் விரிவடைந்தன. சொற்பொழிவுகள், தமிழ்த் திறன் தேர்வுகள், நூற்பதிப்பு ஆகிய பணிகள் யாவும் இங்கு இட்ம்பெற்றன. சில ஆண்டுகளில் மேல் இரு மாடிகளும் நிறைவாகின.
இத்துடன் கலை, இலக்கிய, சமூக அமைப்புக்களின் நிகழ்வுகளும்,
23

Page 15
சங்கத்தில் நிகழ சங்கம் உதவியது. இச் சங்க நூலகத்திற்கு தமிழவேள் அவர்களின் பெரும் முயற்சியினால் தமிழக அரசு பல இலட்சம் ரூபாவை வழங்கியதால் இந் நூலகம் இன்று இந்நாட்டின்பெரும் நூலகமாக விளங்குகின்றது.
1983ஆம் அண்டு அமைதியற்ற நிலை கொழும்பு மாநகரில் ஏற்பட்ட போது பலர் இங்கிருந்து வேறிடம் செல்ல நேர்ந்த போது தமது உயிரையும் துச்சமாக மதித்து இந்த தமிழ்ச் சங்கத்தை பாதுகாத்த பெருமை தமிழவேள் இ.க.கந்தசாமி அவர்களையே சாரும்.
உண்மையிலேயே அமரர் கந்தசுவாமி அவர்களின் தன்னலமற்ற மகத்தான சேவைகள் பொன்னெழுத்துக்களினால் பதிவு செய்யப்பட வேண்டியவை. 1980ஆம் ஆணர்டு அன்றைய அரசாங்கம் இந்தியாவிலிருந்து நூல்களை இறக்குமதி செய்வதற்குத் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது. அப்போது தமிழ் நாட்டில் முதலமைச்சராக விளங்கியவர் காலம் சென்ற எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள். அப்போது நாவலர் நெடுஞ்செழியன் மகாகவி பாரதியின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்வதாக இலங்கை வந்திருந்தார். அப்போது இலங்கையிலே இந்துசமய அமைச்சராக விளங்கிய சி.இராஜதுரை அவர்களும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடந்தேறிய பாரதி விழாவிலே கலந்து சிறப்பித்தார். அத்தருணம் தமிழவேள் கந்தசாமி அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியனிடத்தில் இந்தியாவில் பதிக்கின்ற நூல்களை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் கொண்டுள்ள தடையுத்தரவை அவருக்குக் கூறினார். இதைக் கேட்டறிந்த அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் தாம் எம்.ஜி.இராமச்சந்திரனோடு கதைப்பதாகவும் கடிதம் ஒன்றை அவருக்கு எழுதும் படியும் கந்தசுவாமியிடம் கூறினார்.
இதன்படி தமிழவேள் கந்தசாமி முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை
எழுதி அவர் மூலம் 3 இலட்சத்திற்கும் பெறுமதியான நூல்களை வாங்கி இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் மூலம் சங்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு தமிழ் நாட்டு நூலகத்துறைக்கு முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரன் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி இன்று அநேக
24

நூல்கள் இந்தியாவிலிருந்து பெறப்பட்டு வாசகர்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் கந்தசாமி அவர்களின் பெரு முயற்சியினால் ஜேர்மனி, ஹொலண்ட், ஐக்கிய இராச்சியம், ஜப்பான், கனடா, நோர்வே போன்ற நாடுகளிலிருந்து பல்லாயிரக் கணக்கான நூல்கள் பெறப்பட்டு தற்போது தமிழ்ச் சங்கத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன.
உண்மையிலேயே கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் வளர்ச்சிக்காக தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்த பெருமகன் அமரர் தமிழவேள் கந்தசாமி என்றால் மிகையாகாது. தமிழகத்தில் வாழுகின்ற மக்களின் நாவிலே காவேரி ஆற்றின் நாமம் நிலைத்து நிற்பது போல இலங்கை வாழ் தமிழ் மக்களின் மனதில் அமரர் தமிழவேள் கந்தசுவாமி அவர்களின் நாமம் என்றும் நிலைத்து நிற்கும் என்பது திண்ணம்.
அன்புடையார் என்ற உரியர் பிறர்க்கு என்ற குறள் நெறிக்கு அமைய எல்லார்க்கும் இனியவனாய், நல்லவனாய், வல்லவனாய் எம்மத்தியில் வாழ்ந்த ஒரு பெருமகன் தமிழவேள் கந்தசாமி அவர்கள். மேலும் பின்வரும் கண்ணிர் அஞ்சலி கந்தசாமி அவர்களுக்கு சாலப்பொருந்தும்.
“அகம் நிறைந்து எழுந்திடும் அன்பினாலே முகம் மலர்ந்து ஒளிர்ந்திடும் கந்தசாமி ஐயா நாம் இனிச் செய்வதை அறியோம். இல்லை என்கிற சொல்லையே அறியாப் பொன்மனச் செல்வனே, எங்கு நீ போயினை! உமது பிரிவை எங்ங்ணம் ஆற்றுவோம்!
அமரர் தமிழவேள் கந்தசாமி அவர்கள் தமிழுக்கும, தமிழ்
மக்களுக்கும் சமயத்திற்கும், சமூகத்திற்கும் ஆற்றிய சேவைகள் என்றும்
அமரத்துவம் பெற்று நிலைத்து நிற்கும். ஆகையினாலே அவரின்
ஆன்மா எல்லாம் வல்ல ஆண்டவருடன் இரண்டறக்கலக்கவும் அவர்கள்
ஆசிகள் தொடர்ந்து நின்று மக்கள் நலன் காக்கவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். 25

Page 16
பிரார்த்தனையுரை
தமிழ் வேந்தர் காலம் முதல் தமிழ் மொழிக்கும் சைவப் பாரம்பரியத்துக்கும் உயர்மதிப்புக் கொடுக்கும் உன்னத திருவூர் இணுவில். இத்திருவூரில் உதித்த உத்தமர் தமிழவேள் கந்தசுவாமி ஐயா அவர்களின் பிரிவுச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைகிறேன். தள்ளாடும் வயதிலும் தமிழ் மொழியின் மேன்மைதனைக் காப்பதற்காக தம்மை அர்ப்பணித்த பெருமகன். கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் இருதயமாகச் செயற்பட்ட செயல்வீரன். வேட்டி, நாஷனல் தரித்து தலைநகர் வீதியெல்லாம் கால்நடைய்ாகத்திரிந்து தமிழ்காத்த தீரன். தமிழ் மொழி மேல் கொண்ட அபிமானத்தால் தன் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்து, உயிர் பிரியும் வரை தன் லட்சியத்தைக் காத்த நற்காவலன். இவரைப் போல் ஒருவரை கொழும்பில் இனி மேல் காண்பது கடினம். இறைவனின் இனிய படைப்பு. ஆடம்பரமின்றி அர்த்தமுள்ள பணிகள் பல செய்த இப் பெரியாரின் ஆத்மாசாந்தி பெற இறைவனை வேண்டி அமைகிறேன்.
ஆறு. திருமுருகன் தெல்லிப்பழை தலைவர் துர்க்காதேவி தேவஸ்தானம்.
26

இணுவில் மத்திய கல்லூரி அதிபர்
கொழும்புத் தமிழ்ச்சங்க செயலாளர் தமிழவேள் அமரர்
இ.க.கந்தசுவாமி அவர்கள் இணுவில் கிராமத்தில் பிறந்து வளர்ந்து சைவத்திற்கும், தமிழுக்கும் அரும்பணியாற்றியவர் என்பது தமிழ் உலகம் நன்கறியும். இவர் எமது கல்லூரியில் ஆசிரியராக உழைத்து மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை காட்டிய நல் ஆசானாக திகழ்ந்தவர். இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக தமிழ்ச் சங்கத்தில் இணைந்து தொண்டாற்றியவர். காலத்தின் தேவைக்கு ஏற்ப கொழும்பிற்கு சென்று வசித்து வந்த காலத்திலும் பல இடர் பாடுகளின் மத்தியிலும் கொழும்பிலும் தமிழ்ச் சங்கம் உருவாக்கி தனது இறுதிக்காலம் வரை நீண்டகாலமாக தன்னாலான பணியை தமிழின் லுளர்ச்சிக்கும் தமிழ் சமூகத்திற்கும் உறுதியுடன் பலரும் போற்ற வழங்கி வந்தவர். பல நூல்களை ஆக்கிய பேராசான் என்றும் சொல்லலாம்.
உடல் வலுவிழந்த வயதில் முதிர்ச்சி அடைந்த நிலையில் அவரது உணர்வும் சிந்தனைகள் என்றும் தமிழ் சங்கத்தின் வளர்ச்சியை மையமாகவே கொண்டிருந்ததை கொழும்பு வாழ் தமிழ் மக்களும் பேராசிரியர்களும் அறிவர். அவர் பேரும் புகழையும் பெரிதாக விரும்புவதில்லை தன் பணி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணங்கொண்டு வாழ்ந்து பலரும் போற்ற உழைத்த செம்மல் ஆவர்.
அவரது இழப்பு சைவத்திற்கும் தமிழுக்கும் பேரிழப்பாகும். அவரது ஆத்மாசாந்திக்காக எல்லோருடனும் சேர்ந்து நானும் எனது பிரார்த்தனையை வழங்குகின்றேன்.
அ.சதானந்தன்
அதிபர் இணுவில் மத்திய கல்லூரி
27

Page 17
இணுவில் கந்தசாமி, இணையில் கந்தசாமி அவரே தமிழவேள் கந்தசாமி
வாடலான உயர்ந்த உருவம் ஆசிரியருக்கான உடை,
மெல்லிய நடை, மலர்ந்த முகம்
இது தான் கந்த சுவாமியின் தோற்றம். கந்தசுவாமியை அறியாதார் இல்லை. வானாள் முழுவதுமே, தனக்கென வாழாது பிறர்க்குரியன்ாகவே வாழ்ந்த கந்தசுவாமி சாதித்தன பல பல. சுமார் 16 வருடங்களின் முன் முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளாரின் நூற்றாண்டு விழாவை இலங்கைத் தமிழரன்றி தென்னிந்தியத் தமிழரும் அகமகிழச் சிறப்புடன் நடாத்தி அகமகிழ்ந்தார்.
கொழும்புத் தமிழ்ச்சங்கம் என்றுமே கண்டிராதபடி அகில இலங்கை ரீதியாக மாணவ மணிகளும் ஆசிரியர் முதலான பிறரும் பங்கு பற்றும் படி பெருவிழா எடுத்தவர் அவர்.
கொழும்பு, கண்டி, முதலிய தலை நகரங்களிலும் சிறப்பாக, திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம், தீவுப்பகுதியிலுமுள்ள மாணவர்கள் பங்கு பற்றும்படி, போட்டி வைத்தது மன்றி, வெற்றி பெற்ற அத்தனை மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கிய தன்றி ஒவ்வொரு பெரியவர் சார்பாகப் பதிவும் கொடுப்பித்தார். இந்நிகழ்வு எதிர் காலத்திலும் நடக்குந்தானே.
இவற்றையெல்லாம் தொகுத்து “விபுலானந்தம்” என்றொரு நூலினையும் யாவருக்குமே அனுப்பி வைத்தாரே.
ஈழத்துப் பூதந்தேவனார், பற்றிய நூல், சிவகாமியம்மை தமிழ், பஞ்சவன்னத்தூது, உரை, யாவையும் அவரது கையினால்
வெளிவந்தனவே,
தமிழ்ப்புலவர், சைவப்புலவர்கள் கூட்டாக சுமார் 400 புலவர்களைப் பற்றிய தமிழ்ப்புலவர், என்ற நூலையும் வெளியிட்டார்.
28

ஆரம்பமாக ஆசிரியத் தொழிலிலிடுபட்ட போது, காந்திஜியின் போக்கும், வாக்கும் பாராளுமன்ற உறுப்பினர் மதிப்புக்குரிய S.J.V.செல்வநாயகம் அவர்களில் படிந்திருக்கக் கண்டு, அன்னார் அடிச்சுவட்டைப் பின் பற்றி நடந்தார்.
ஏ! கால தேவனே! இவ்வாறான பெரிய தியாகியை, கொஞ்சமும் யோசியாமல், அழைத்துச் சென்று விட்டாயே, இது நியாயமா!.
அம்பிகையே! இணுவை சிவகாடி"சுந்தரியே! நீயுமா சேர்ந்து தமிழவேளை அழைத்துச் சென்றாய்! நிலை பெயராத மலையென நின்ற மாமனிதன் கந்தசுவாமி.
நல்லா ரொருவ ருளரேல் அவர் பொருட் டெல்லார்க்கும் பெய்யும் மழை
என்று ஒளவை கூறியதை வாய்ப்பாகக் கொண்டு இன்னும் இங்கே சில தியாகிகள் இருப்பதைக் கண்டு தான் சென்றனையோ! உண்மையைச் சொல். அன்னை சிவக்கொழுந்துவும், அப்பா கந்தையாவுக்கும் பெரிய பெயரைத்தந்த நீ மைந்தரை வித்துவான், பண்டிதர், சைவப்புலவர், அதிபர் இ.திருநாவுக்கரசுவுடன் மற்றைய மைத்துனர் ஆசிரியர் மார்க்கண்டுவோடு, அண்ணன் செல்லத்துரையும் சென்ற வழி பார்த்துச் சென்று விட்டாயோ?
சித்தப்பா என்றும், மாமா என்றும் எத்தனை குரல்கள் உன்னை நோக்கி இங்கே ஏங்கித் தவிக்கின்றன.
எனதன்புக்குரிய மண்புடைய கந்தசாமியே! நீ சுவர்க்கத்தில் அம்பாளது திருவடிகளிற் சேர்ந்து சிவகதியடைய பிரார்த்திக்கிறேன்.
கலாபூஷணம் சிற்றம்பலம்
29

Page 18
தமிழவேள் இ.க.கந்தசுவாமியின் தமிழ்பணி
தமிழவேள் இ.க.கந்தசுவாமி அவர்கள் தமிழ்த் தாயின் அரும் பெறல் முத்து, தமிழன்னையைத் தரணிமீது முன்னிலைப்படுத்த வேண்டும் என்றும் பேராவிருப்புடன் பெரும்பணியாற்றிய பெருந்தமிழ் நாவலர். தமிழ்மொழி, தமிழ்ப் பண்பாடு, கலாச்சாரம் என்பவற்றை தமிழ் நிறுவனங்கள் மூலம் தளராது நிலைநாட்டிய தனித்தமிழ் செயல்வீரன்.
தமிழ் மொழியின் பண்டைய இலக்கண இலக்கியங்களைப் பாரினில் பாங்குற ஓங்கச்செய்ய வேண்டும் என்னும் பெருவிருப்பினால் பல்துறைச் செயற்பாடுகளையும் பன்னெடுங்காலமாக தனித்தும் இணைந்தும் பல்வேறு தமிழ்ப்புல அறிஞர்களின் பங்களிப்போடு நடத்தித் தமிழ்ச் சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்ற பெருந்தகை.
கருவிலேயே திருவுடையராக, தமிழும் சைவமும் தழைத்தோங்கும் இணுவில் மண்ணில் தோன்றிய இத் தமிழ்மகன் ஆன்றவிடந்தடங்கிய கொள்கைச் சான்றோன். உயர் இலட்சியமும், அவ்விலட்சியத்தை அடையக் கையாளும் நெறி முறைகளும்,செல்நெறியில் தீவிர உறுதிப்பாடும், வழித்தடங்களில் ஏற்படும் இடர்பாடுகளை வெற்றிகரமாக நீக்கவல்ல சதுரப்பாடும், கொண்ட கொள்கையை எச்சந்தர்ப்பத்திலும் சோரம் போக்காத மனத்திண்மையும், எடுத்த கருமத்தை இனிதே முடித்து வைக்கும் ஆற்றலும் வாய்ந்தவராக தமிழவேள் நம்மிடையே வாழ்ந்த சீர்மையினை அவருடன் நெருங்கிப் பழகிய தமிழ் ஆர்வலர் யாவரும் அறிவர்.
நற்றமிழாசானாகக் கல்லூரியில் பணியாற்றிய காலத்திலேயே கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் இணைந்து அதன் வளர்ச்சிப்படிகளில் ஒப்புயர்வற்ற பங்களிப்பினைச் செய்து தம் வாழ்நாள் இறுதிவரை சங்கப் பணிமனையில் வாழ்ந்து தன்கடன் தமிழ்ப்பணி செய்வதே என்ற இலட்சியத்தை இம்மியளவும் குறைபடாது நிறைவு செய்து சென்றுள்ளார்.
30

ஈழத்துப் புலவர்களின் பெருமையை உலகறியச் செய்ய வேண்டும் என்ற பெருநோக்கோடு ஈழத்தின் மூத்த தமிழ்ப்புலவராய்ச் சங்க நூல்களில் போற்றப்பட்ட ஈழத்துப் பூதந்தேவனார் பெயரை முன்னெடுத்து
“ஈழத்துப் பூதந் தேவனார் தமிழ்ப் புலவர் கழகம்”
ஒன்றினை 2004-02-01 நீ திகதி யாழ்ப்பாணம் நாவலர் மகாவித்தியாலயத்தில் தமிழ்ப் புலவர்கள், ப்ண்டிதர்கள், சான்றோர்கள் பலரையும் பேரவையில் கூட்டி நிறுவினார். அக்கழகத்தின் அமைப்பாளர் செயலாளராக தெரிவு செய்யப்பெற்ற தமிழவேள் அவர்கள் கடந்த நான்கு வருடங்களில் அக் கழகச் செயற்பாடுகளாக் பல்வேறு பணிகளை ஆற்றிச் சென்றுள்ளார்.
2004ம் ஆண்டில் உயர் இலக்கியத் தேர்வினை ஆய்வுக்கட்டுரை, இலக்கிய நாடக ஆக்கம், சிறு பிரபந்த ஆக்கம் என்னும் துறைகளில் நடத்தி வெற்றி பெற்றோருக்கு பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
“ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பிய மகாநாடு ஒன்றினை கொழும்புத் தமிழ் சங்கமண்டபத்திலே 2004-11-20, 21ந் திகதிகளில் இந்திய இலங்கை தமிழ்ப் பேரறிஞர்கள் பங்கேற்க சிறப்புடன் நடத்தியதோடு “தொல்காப்பியக் கட்டுரைகள்’ என்னும் ஆய்வுக் கட்டுரைகள் தொகுப்புநூலும் வெளியிடப்பட்டது. “ஈழத்துப் பூதந்தேவனார் நான்மணிமாலை” யும் “பூண்க நின்தேரே” எனும் நாடகப் பிரதியும் 2006-3-05 வெளியிடப்பட்டன.
2005-05-25ந் நாள் திருஞானசம்பந்தப் பெருமான் குருபூசைத் தினத்தை முன்னிட்டு “இடர்நீக்கும் பதிகங்கள்’ என்ற நூலும் வெளியிடப்பட்டது.
தமிழவேள் அவர்கள் பண்டைத் தமிழ் இலக்கிய கருவூலங்களை இக்காலத் தமிழ்ச் சமுதாயத்தினர் குறிப்பாக இளஞ்சந்ததியினர் அவற்றின் பெருமையினையும், உயர்வினையும் அறிந்து தம் வாழ்வினை
31

Page 19
அவைகாட்டும் செந்நெறியில் அமைத்துக் கொள்ள வேண்டும் என்னும் பெருவிருப்புடையவர். அதற்காக நாளும் பொழுதும் சிந்தித்துச் செயலாற்றியவர். தமிழ் மொழிச் சிறப்பு பல்லாற்றலாலும் பார்மிகை பரபப்ப்பட வேண்டும் என்பதையே தமது இலட்சியமாகக்கொண்டு வாழ்ந்த தமிழ்ப் பேரார்வலராகிய தமிழவேள் தமது இறுதித் தமிழ்த் தொண்டாக “சிலப்பதிகாரப் பெருவிழா” ஒன்றை கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் ஈழத்துப் பூதந்தேவனார் புலவர் அரங்கிலே 2008ஒக்டோபர் 11, 12, 13ந் திகதிகளில் வெகு சிறப்பாக, பல்லோரும் போற்ற நிறைவு செய்து உளம்மகிழ்ந்தார்.
“என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்செயும் ஆறே” (திருமந்திரம்)
என்ற மந்திரத்திற்கிணங்கத் தமிழில் அயரா அன்பு கொண்டு அதற்காகவே தமது உடல், பொருள், ஆவி அத்தனையாலும் பணிசெய்து கிடந்த தமிழவேள் அவர்களின் தமிழ்ப்பணி தமிழ்ப் புலவர் சரிதத்தில் - ஈழத்துத் தமிழ்ப்புலவர் சரிதத்தில் சிறப்பாகப் பதியப்பட வேண்டியதாகும்.
தன்னைத் தரணியில் தமிழனாகப் பிறக்கச் செய்து, தமிழ் அறிவையும் உணர்வையும் ஓங்க உள்ளேயிருந்து நல்லனவும் தீயனவும் காட்டி நின்ற இறைவனைத் தமிழால் அன்புபோற்றித் தமிழ் தொண்டினைத் தளராது இறுதிக் காலம் வரை ஆற்றிய தமிழவேள் இ.க.கந்தசுவாமியினது ஆத்மாசாந்தி பெற எல்லாம்வல்ல ஆடல் வல்லான் திருவருள் போற்றுவோமாக.
சைவப்புலவர் சித்தரந்தபண்டிதர் மு. திருஞானசம்பந்தபிள்ளை தலைவர் ஈழத்துப்பூதந் தேவனார் தமிழ்ப்புலவர் அகில இலங்கைச் சைவப்புலவர்கள்
32

இணுவில் கிராமத்தின் பிதாமகர் இ.க.கந்தசுவாமி
தமிழறிவினால், சிவநெறியினால், கலைமரபினால், அயராத விவசாயப்பணியினால் பார்போற்றும் சீர்இணுவைத் திருவூர் தமிழ்கூறும் நல்லுலகுக்கு உவந்தளித்த மாண்புடையோன் கந்தசுவாமி என்னும் தமிழவேள் என்றால் மிகையாகாது.
இணுவில் கிழக்கில் கந்தையா - சிவக்கொழுந்து தம்பதியினரின் தவக்கொழுந்து மருக்கொழுந்தின் சிறப்பைப் பெற்றார். பெற்றோரின் தூயபணியும், இறைபக்தியும் பள்ளிப்பருவம் முழுவதும் உறுதுணை புரிந்தது. கோண்டாவில் சைவப்பிரகாச வித்தியாசாலையின் அடிப்படைக் கல்வியும், கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் பயிற்சி நெறியும் இவரை இணுவில் சைவமகாஜன வித்திய்ாசாலையில் ஆசிரியர் பணியாற்ற உதவின. கல்விப்பணியின் திறமையால் பாடசாலைச் சமூகத்தில் நன்மதிப்புடைய நல்லாசிரியர் என்னும் சிறப்புடன் திகழ்ந்தார்.
இக்குறுகிய காலத்தில் ஏட்டுக்கல்வியுடன் இயற்கையான தூய தமிழின் இயல்புநிலை உலகமறிந்த சைவப்பெரியாரும், சிறந்த கல்விமானுமாகிய இணுவில் மைந்தர் சபா. ஆனந்தரின் தொடர்பும் வழிகாட்டலும் இவரின் உள்ளத்தில் அடித்தளமாக அமைந்தது.
இணுவில் சிவகாமி அம்பாள் ஆலயத்தில் இளைஞர் சேவா மன்றம் அமைத்து பிரதி வெள்ளிக்கிழமை மாலை தோறும் திருமுறை, பஜனைபாடுதல், சமயச்சொற்பொழிவு, ஆலயப் புனிதம் பேணுதல் போன்றவற்றை ஆரம்பித்து செயற்பட்டார். ஆன்மீகம் இங்குள்ள மக்களை மேலும் கவர்ந்தது.
சமயப்பணியுடன் கல்விப்பணியையும் கண்ணெனப் போற்றியவர் பொதுமக்களின் தேவை கருதிச் சமூகப்பணியிலும் ஈடுபட்டார். இணுவில் கிராமத்தின் முன்னேற்றங் கருதியவர் சனசமூக நிலையங்கள், கூட்டுறவுப் பண்டகசாலைகள், தபால் நிலையம் போன்றவற்றை நிறுவும் பணியில் தம்மை இணைத்துக் கொண்டார். இக்கிராமத்தில் மருதனார்மடம்
33

Page 20
என்னும் பெயரில் இயங்கிய புகையிரத நிலையத்தை “இணுவில் புகையிரத நிலையம்” என மாற்றவும் முயற்சித்து வெற்றியும் கண்டார். பொதுமக்களின் வசதி கருதி பல ஒழுங்கைகளையும் திறந்து பாவிக்க உதவினார். பாதைகள் திறந்ததுடன் போக்குவரத்துக்காகச் சிரமதானம் மூலம் தொண்டர்களின் உதவியுடன் நிறைவுசெய்தார்.
எமது கிராமத்தில் முன்னுாறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த சின்னத்தம்பிப்புலவரின் கைவண்ணமான படைப்புக்களை எதிர்காலச் சந்ததியினரின் தேவை கருதி சிவகாமி பிள்ளைத்தமிழ், பஞ்சவன்னத்துது ஆகிய நூல்களைத் தொகுத்து வெளியிட்டார்.
நல்லாசிரியனான தமிழவேள் கொழும்பு றோயல் கல்லூரிக்கு இடமாற்றஞ் செய்யப்பட்டார். அங்கு இவரின் திறமையும் அரியசேவையும் அங்குள்ள பிள்ளைகளின் பெற்றோர்களான பிரமுகர்களின் அன்பையும் இணைத்தன. தன்னாலாய அபிவிருத்தி வேலைகளைப் பொதுச் செயலாளர் என்ற நிலையில் நன்கு திட்டமிட்டுப் பல தனவந்தவர்களின் பேருதவியுடன் செயற்படுத்தினார். பல மாடிக் கட்டடங்கள் உருவமைக்கப்பட்டன. கல்வி நிறுவனம், நூலகம் போன்றவற்றை நிறுவிக் கல்வியே கருத்தனம் என உணர் வித்தார். உள்ளுரிலும் வெளிநாடுகளிலிருந்தும் கொழும்புக்கு வரும் கல்விமான்கள், சமயப் பெரியார்கள், கலைஞர்கள், பல்லின அறிஞர்கள், சமூக மேம்பாட்டு நிபுணர் களையெல்லாம் அழைத்து வந்து அவர்களினி சொற் பொழிவுகளை ஒழுங்கு செயப் வித்தார் . இவ்வாறு சமூகமளிப்பவர்களின் அன்பையும் தமிழ்ச்சங்கத்துக்கான பல உதவிகளையும் வழங்க வகைசெய்தார். அவ்வாறு பேருதவியும், ஆதரவும் தருவோரை நன்கு மதித்துக் கெளரவித்தும் பெருமையடைந்தார்.
தமிழோங்க வித்திட்ட கல்விப் பெரியார்களின் திறமையையும், சிறப்பான பணியையும் மதிக்கும் நோக்கில் மாநாடுகளும், நினைவுப் பேருரைகளும் வழங்க உதவினார். சைவப்புலவர்களை ஒருங்கிணைத்து சைவப் புலவர் மாநாட்டை நடத்தியதுடன் அனைவரதும்
34

பதிவேடுகளையும் தொகுத்து நூல் வெளியிட்டார். ஈழத்துப் பூதந்தேவனார் பெயரில் சங்கம் நிறுவி மாநாடு நடாத்தினார். பண்டைய இலக்கிய இலக்கணக் கல்வியை மேம்படுத்த சிலப்பதிகார மாநாடு, தொல்காப்பிய மாநாடு, திருக்குறள் விழா போன்றவற்றைத் தமது தள்ளாத வயதிலும் நிறைவேற்றி வெற்றிகண்டவர்.
கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் பொதுச்செயலாளராக இருந்து புகழோங்கிய காலத்தில் இச்சங்கம் மூல்ம் இலங்கைப் பிரதிநிதியாக மொறிசியசில் நடைபெற்ற உலகதி தமிழாராய்ச்சி மாநாட்டில் பங்குபற்றும் அரிய பேறுபெற்றார். அங்கு சென்று இணுவிலில் உள்ள இளந்தாரி கோயிலின் வரலாற்றை ஆய்வுசெய்து “நடுகல் வழிபாடு” என்னும் கட்டுரையைச் சமர்ப்பித்துப் பெரும்ையடைந்தார்.
கொழும்பில் அரும்பணியாற்றினாலும் எமது மண்ணையும் நேசித்து இடையிடையே இங்கு வந்து தமது குலதெய்வங்களை வணங்குவார். தமது விட்ட பணிகள் இயங்குவதை எண்ணி மகிழ்வார். எமது இணுவில் சிவகாமி அறநெறிப் பாடசாலையின் முன்னேற்றத்துக் கான ஆலோசனைகளையும் கூறுவார். எம்மை உற்சாகப்படுத்துவார். என்னால் எழுதப்பட்ட நூல்களுக்கு ஆசியுரை, வாழ்த்துரை, கட்டுரைகள் தருவார்: ஆசீர்வதிப்பார். எமது நூல்களின் சிறப்பையிட்டு பெருமிதமடைவார். எனது சகோதரரான இவரை எங்கள் குடும்பம் மூதறிஞராகவே நோக்குகின்றோம். இவரை இணுவிலின் “பிதாமகனாகவே” போற்றி மதிக்கிறோம்.
எமது சிற்றறிவுக்கேற்ப இவரைப் பற்றிய சிறுதகவல்களை நோக்குவோம். இலகுப்பிள்ளை கந்தையாவும் சிவக்கொழுந்துவும் செய்த நற்றவப்பயனாக ஓர் சற்புத்திரராக 01.09.1919 அன்று பிறந்தவர். இளமையிலிருந்து குறுநடை பயின்று ஏட்டுக்கல்வி நாடி பாடசாலைக் கல்வியுடன் சமய நெறியும், தூயதமிழ் மரபும் தக்க ஆசானிடம் கசடறக்கற்றவர். பயிற்சிபெற்ற ஆசிரியராகப் பணியாற்றியவர். பவணந்தி முனிவரின்
35

Page 21
“குலனருள் தெய்வம் கொள்கை மேன்மை
கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை
நிலமலை நிறைகோன் மலர்நிகர் மாசட்சியும்
உலகியல் அறிவோடு உயர்குண மிணையவும்
அமைபவன் நூலுரை யாரிசி யன்னே” என்னும் பாடலுக்கேற்ற இலக்கணப்படி அமைந்து அரும்பணியாற்றியவர். சமயப்பணியை மேம்படுத்த எண்ணிச் சபையூடாக தமிழோடு இசைபாடவும். சிவநெறியை உரையூடாகவும் கேட்கச் செய்தவர். தமிழுக்காக “கல்விகரையில கற்பவர் நாள்சில” என்றெண்ணி நற்பெரும் நூல்களைத் தேடிக்கற்று கல்விப் பணியாற்றினார். சமூகப்பணிக்காக ஊரின் தேவைகளுக்கேற்ப செயற்பட்டார். கிராமசபை உறுப்பினராகவும் அலங்கரித்தார்.
தந்தை செல்வாவினால் ஈர்க்கப்பட்டு அவருடன் ஒன்றியபோது அகிம்சை, சத்தியம், உண்ணா நோன்பு, மெளனவிரதம் ஆகியவற்றைப் பேணியவர். காந்தியநெறியைத் துலக்கியவர். பண்பாட்டின் பேரில் செய்யும் தொழிலைத் தெய்வமாகப் பேணியவர். மண், பொன், பெண் இவற்றை நாடாத அகத்துறவியானவர். மும்மலங்களை வென்றவர். சினம் கடிந்து புன்முறுவலை வரவழைப்பார். தன்னுயிர் போல் மன்னுயிரையும் மதித்தவர். யாவரையும் கற்கத் தூண்டியவர். தம்மை அணுகும் சிறியோர் முதல் பெரியோர் வரை அவரவர்க்கேற்ற அரிய நூல்களை அன்பளித்தவர். அறம்நாடி அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் யாவற்றையும் விலக்கியவர். அழிவுறு நிலையிலுள்ள புராதன நூல்கள், ஏட்டுப் பிரதிகள், நாகரிகம், பண்பாடு சொல்வழக்கு, இசைமரபுடன் தோத்திரங்கள், சிறக்க சிவநெறி கற்றோரை, முதியோரை நன்கு மதித்தவர்.
எப்பணியையும் பணிவுடன் செய்வார். பெருமை தேடார்: புகழுரையை விரும்பார். அன்றுமுதல் இறுதி வரை பல சிறப்புக்களுடன் வாழ்ந்தார். தமிழுக்கென்றே அர்ப்பணித்தார். சங்கம் வளர்த்துச் சங்குநாதம் முழங்க வைத்தார். அறம் வளர்த்து அனைவரையும் நலமுடன் பேணினார்.
36

இணுவிலில் பிறந்து இங்குள்ள 21 கோயில்களிலும் பக்தியுடன் வழிபட்டு, கொழும்பில் சங்கத்தினைப் பேணிவளர்த்த அவரின் ஜீவாத்மா என்றும் இவ்விடத்தில் நிலையாக இருந்து வளர்ச்சிப்பாதையை வளப்படுத்தும்.
கொழும்பில் இவருக்காக எடுக்கப்படும் பல்வேறு நிகழ்வுகளும்
இணுவில் கிராமத்தின் ஒரு சற்புத்திரருக்கே உரியதென அன்னை சிவகாமி பேரருள் புரிவாராக.
“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்”
மூ. சிவுலிங்கம்
ஓய்வுபெற்ற கிராம அலுவலர், இணுவில்.
37

Page 22
சிறந்த தமிழ் இலக்கியவாதி. தமிழவேள்
தமிழவேள் கந்தசுவாமி அமரரான செய்திகேட்டு நானும் எனது துணைவியாரும் மற்றும் உறவினர்களும் மிகுந்த கவலை அடைந்தோம். அமரர் கந்தசுவாமியும் நானும் கொழும்பு தமிழ்ச் சங்கத்தோடு ஆரம்பகாலம் தொட்டு தொடர்புடையவர்கள். தகரக் கொட்டகையாக ஆரம்பிக்கப்பட்டு இன்று மூன்று மாடிக் கட்டிடமாக உயர்ந்து நிற்கிறது. இத் தகரக் கொட்டகையில் கல்வி சார்ந்த வகுப்புக்களை நடாத்தி அதன் மூலம் பெற்ற நிதியைக் கொண்டு தற்போதுள்ள கட்டிடத்திற்கு அத்திவாரமிட்டு இன்று அது சொந்தக் காணியில் தமிழர்பெயர் சொல்லும் கட்டிடமாக வானுயர நிற்கின்றது.
இதற்கெல்லாம் காரணமானவர் நிறைவாழ்வு வாழ்ந்து முடித்த ஆசிரியர் கந்தசுவாமி என்றும் நினைவுகூரப் படவேண்டியவர். அவரது நாமம் அங்கு பொறிக்கப்பட வேண்டும்.
கொழும்புத் தமிழ்ச்சங்கத்திலுள்ள நூல் நிலையமாக இன்று அனைவராலும் பேசப்படுகின்ற ஆசியாவின் சிறந்த நூல் நிலையம் நாற்பதினாயிரத்திற்கு அதிகமான நூல்களை இன்று கொண்டுள்ளது. தமிழக முதல்வராக இருந்த அமரர் M.G. இராமச்சந்திரன் அவர்களின் ஆட்சிக்காலத்தில் பதினோராயிரம் நூல்கள் தமிழக அரசினால் இந்நூல் நிலையத்திற்கு வழங்கப் பெற்றது. எல்லாவற்றிற்கும் மேலாக கறுப்பு யூலை 83ல் இந்த நூல்களை தீயிலிருந்து காப்பாற்றிய பெருமை அமரர் கந்தசுவாமியையே சாரும். இந் நூல்நிலையத்திற்கு அமரர் பெயர் கூட்டப்படுவது சாலப் பொருந்துமென அறிவு சார்ந்த அனைவரும் விரும்புகிறார்கள்.
கந்தசுவாமி மாஸ்ரருக்கு எல்லாமே தமிழ்ச்சங்கம் தான். அவரின் நினைவு முழுவதுமே தமிழ்ச் சங்கந்தான் தமிழை மூச்சாகக் கொண்ட தமிழ் முனிவர் ஆவார். தமிழை மட்டுமல்ல தமிழ் பேசுபவர்களையும் அவர் நேசித்தார்.
38

இவரது மூச்சு நிற்பதற்கு சில தினங்களுக்கு முன்பாகக் கூட தமிழ்ச்சங்கத்தில் மூன்று தினங்களாக தமிழகத்தில் இருந்தும் சிலரை வரவழைத்துச் சிலப்பதிகார விழா எடுத்தார். பழந்தமிழ் இலக்கியங்களில் மிகுந்த ஈடுபாடு காட்டிய அமரர் கந்தசுவாமி அது பற்றிப் பேசுவதிலும் அதிலே ஈடுபாடு காட்டியுள்ளவர்களிடம் அன்பு காட்டுவதிலும் தனது வாழ்நாள் முழுவதையும் செலவிட்டுள்ளார்.
மெளனவிரத மூலம் பல சாதனைகளைப் புரிந்து தமிழ்ச்சித்தர் தமிழவேள் கந்தசுவாமி நினைவு எங்கும் நிலைத்திருக்கும். அவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம்.
இ. விக்னராஜா முன்னாள் நிதிச்செயலாளர் கொழும்பு தமிழ்ச்சங்கம்.
39

Page 23
கொழும்புத் தமிழ்ச்சங்க முன்னாள் செயலாளரின் மறைவுக்கு பேராசிரியர் அ.சண்முகதாசின்
இரங்கல் செய்தி
தமிழவேள் இ.க.கந்தசுவாமி அவர்கள் 19.10.2008 ஞாயிற்றுக் கிழமையன்று தன்னுடைய 90 ஆவது வயதிலே கொழும்பில் காலமானார். கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் செயலாளராக நீண்டகாலமாகப் பணியாற்றியவர்.
அவருடைய காலத்திலே கொழும்புத் தமிழ்ச்சங்கம் பல அரிய பணிகளை ஆற்றுதற்கு அவர் பெரு முயற்சிகள் செய்தார். எங்களுடன் தொடர்புடைய ஒரு விடயத்தினை இவ்விடத்திலே சுட்டிக்காட்டுதல் பொருத்தமாயிருக்கும்.
கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ், ஜப்பானிய இலக்கியமாகிய மன்யோசுவிலிருந்து ஒரு பகுதியினைத் தமிழில் மொழி பெயர்த்தார். அப்பாடல்களுள் 30 பாடல்களை 30 சங்கப் பாடல்களுடன் ஒப்பிட்டு ஒரு நூலினை எழுதினார். இந்நூலை வெளியிட ஜப்பான் நிறுவனத்திடம் நூல் வெளியீட்டு நிதி கேட்டு விண்ணப்பித்த பொழுது கேட்ட நிதியினை அந் நிறுவனம் வழங்கியது.
ஆனால் இலங்கையிலுள்ள ஒரு நிறுவனத்தினூடாகவே அதனை வெளியிடலாம் எனக் கூறினர். அவ்வேளை கொழும்புத் தமிழ்ச் சங்க செயலாளர் தமிழவேள் இ.க.கந்தசுவாமி அவர்களுடன் தொடர்பு கொண்டோம். i
அவருடைய வேகமான அணுகு முறையாலே அந்நூல் விரைவாக அச்சிடப்பட்டு வெளிவந்தது.
தமிழவேள் கந்தசுவாமி அவர்கள் ஈழத்துப் பூதந்தேவனார் தமிழ்ப் புலவர் கழகம் ஒன்றினை நிறுவி அதன் செயலாளராக நீண்டகாலமாகப்
பணியாற்றி வந்தவர். அக்கழகம் சார்பாக தொல்காப்பியர் ஆய்வரங்கு
40

ஒன்றினை ஒழுங்குசெய்து தமிழ்நாட்டு அறிஞர்களும் பங்குபற்றிய ஒரு பெரு விழாவாக அதனை நடத்தியதுடன் அதிலே படிக்கப்பட்ட கட்டுரைகளையெல்லாம் தொகுத்து நூலாகவும் வெளியிட்டுள்ளார்.
இம்மாதம் 11ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் சிலப்பதிகாரப் பெருவிழாவினை மிகச் சிறப்பாக நடத்தி முடித்தார். தன்னுடைய தள்ளாத வயதிலும் இப்படியொரு விழாவினை, தமிழக அறிஞர்களான பேரர்சிரியர்களான அறவாணன், தாயம்மாள் அறவாணன், புதுவைப் பல்கலைக்கழக அறிவுநம்பி, மு.பி.பாலசுப்பிரமணியம் ஆகியோர் பங்குபற்றிச் சிறப்புச் செய்த விழாவினை நடத்தி முடித்த மகிழ்ச்சியுடனே அப்பெருமகனார் இவ்வுலக வாழ்வை நீத்துச் சென்றுள்ளார்.
தனிமரம் தோப்பாகாது என்று கூறுவர். ஆனால் தமிழவேள் கந்தசுவாமி அவர்களைப் பொறுத்தவரையில் தனிமரம் தோப்பாகி விந்தையினைச் சிலப்பதிகாரப் பெருவிழாவில் பங்கேற்ற நானும் மனோன்மணியும் சிவலிங்கராஜாவும் பிறரும் கண்டு கொண்டோம்.
தன்னை முன்னிலைப்படுத்ததாது பிறர் எண்ணாத பெரும் பணிகளை ஆற்றி வந்தவர் அவர். இறைவனுடைய தாமரைத் திருவடிகளிலே அப் பெரியாருடைய ஆன்மா அமைதி பெற்று இன்புற்றிருக்க வேண்டுகிறேன்.
41

Page 24
தலைநகரில் தமிழ்ச் சங்கம் வளர்த்த தமிழ் பெரியார்
சைவமும் தமிழும் கலைகளும் சிறந்து விளங்கும் சீர்இணுவைத் திருவூரின் கிழக்குப் பகுதியில் பாரம்பரிய விவசாயக் குடும்பத்தில் கந்தையா சிவக்கொழுந்து தம்பதியினருக்கு 01.09.1919ல் மகனாகப் பிறந்த இவர் இறை பக்தி நிரம்பியவராகக் காணப்பட்டதோடு கல்வியிலும் சிறந்து விளங்கினார். தமிழ் சமயம் என்பவற்றில் பாண்டித்தியம் பெற்றதோடு ஆசிரியப் பணியில் இணைந்து நல்லாசிரியரான தன்னை வளர்த்துக் கொண்டார்.
கிராமத்தின் அபிவிருத்திப் பணியில் தன்னை இணைத்துச் சமயப் பணி, தமிழ் பணி ஆற்றியதோடு சிரமதான வேலைகளிலும் ஈடுபட்டு, வீதிகள் திறத்தல், புனரமைத்தல் பணிகளில் செயலாற்றினார். உயதபால் கந்தோரின் உருவாக்கத்திற்கும் மருதனார்மடம் என எழுதப்பட்ட புகையிரத நிலையப் பெயர்ப் பலகையை இணுவில் புகையிரத நிலையம் என மாற்றுவதற்கு அன்னார் ஆற்றிய பணிகள் அளப்பரியது. தமிழ் இனத்தின் பால் பற்றுக்கொண்ட இவர் தந்தை செல்வாவின் வழியில் அவர் சார்ந்த அணியில் அயராது உழைத்து வந்தவராவார்.
1963ல் அரச இடமாற்றம் காரணமாக கொழும்பு சென்ற இவர் றோயல் கல்லூரியில் ஆசிரியப் பணியை தொடர்ந்ததோடு கொழும்புத் தமிழ்சங்கத்தில் தன்னை இணைத்து பணியாற்றத் தொடங்கினார். வாழைத்தோட்டம் அதற்கு மத்தியில் பழைய வீடு அங்கேதான் தமிழ் சங்கம் இயங்கியது. நிகழ்வுகள் எல்லாம் அருகில் உள்ள கல்வி நிலையத்திலே நிகழ்ந்தன. பெரியார் அவர்களே அந்த வீட்டைச் சுத்தம் செய்து நிகழ்வுகளை அந்த வீட்டிலேயே ஆரம்பித்தார்.
மாணவர் நலன் கருதி தமிழ், சமயம், கணிதம் ஆகிய பாடங்களை இலவசமாகவே கற்பித்தார். 1975ல் சங்கத்தின் பொதுச்செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டார். 1983ல் ஏற்பட்ட அசம்பாவிதங்களின் போது தமிழ்ச்சங்கத்தை தனது உயிரினும் மேலாகப் பாதுகாத்த
42

பெருமைக்குரியவராவார். கால் நூற்றாண்டு காலம் செயளாளராக கடமையாற்றிய பெரியார் தனிமரமாய் நின்ற தமிழ்ச்சங்கத்தை பெரு விருட்சமாகவும், தோப்பாகவும் மாற்றுவதற்கு அயராது இறை பக்தியுடன் உழைத்தார். சங்கம் மாடிக் கட்டடங்களையும், நூலக வசதிளையும் ஆய்வு நூல்களையும் கொண்டு நூல்வெளியீடுகளையும் செய்து பல வழிகளில் பணியாற்றுகின்றது.
தமிழ், சமயம், வரலாறு சமிழந்தமான அரிய பல நூல்களைவெளியிட்ட பெரியார். இணுவில் சிவகாமி அம்மன், இளந்தாரிகள் மீதும் பக்தி கொண்டு சிவகாமியம்மை தமிழ், பஞ்சவன்னத்தூது ஆகிய நூல்களை வெளியிட்ட்தன் மூலம் இளைய சந்ததிக்கும் எதிர்கால சந்ததிக்கும் பேருதவி புரிந்துள்ளார்.
அமரத்துவம் அடைவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் தலை நகரிலே தலை சிறந்த சிலப்பதிகார விழாவினை உள்நாட்டு, வெளிநாட்டு அறிஞர்களையும் கல்விமான்களையும் இணைத்து நடாத்தி முடித்தமை முதிர்ந்த வயதிலும் அவரது உறுதியான தமிழ்ப்பணி, சமயப்பணி என்பவற்றை எடுத்துக் காட்டுவதாக அமைந்தது. பெரியாரது பணிகள் அவர் இல்லாவிட்டாலும் தொடர்ந்தும் சிறப்புற இறைவனை பிரார்த்திப்பதோடு பெரியாரின் ஆத்மா சாந்தியடை சிவகாமி அம்பாளை பிரார்த்திக்கிறேன்.
ந.காசிவேந்தன் தலைவர் இணுவில் கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கம்.
43

Page 25
கொ/தொண்டர் வித்தியாலயம் அனுதாபச் செய்தி
என் கடன் பணி செய்து கிடப்பதே என்பதற்கிணங்க இளமையிலிருந்தே தமிழ்ப் பற்றின் காரணமாக தமிழும், தமிழரும் உலகில் முதன்மை பெறவேண்டும் என்பதற்காக தன் வாழ்வை அதற்கு அர்ப்பணித்து பல்வேறு வழிகளிலும் பெரும் பங்களிப்புச் செய்த இம் ‘மாமனிதர் அமைதியும் அடக்கமும் எளிமையும் கொண்ட பெரும் புலமையாளன் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. அவர் பாராட்டுக்கள் விளம்பரங்கள் விரும்பாத சிறந்த செயல்வீரனாக வாழ்ந்து காட்டியதை நாம் கண்கூடாகக் கண்டோம். எத்தனை இடர்வரினும் சற்றும் கலங்காது அவற்றைச் சவாலாக ஏற்று எதிர்த்து வெற்றிகண்ட சாதனையாளர். தனிமரம் தோப்பாகுமா என்ற கேள்விக்கு ஆகும் என்று அண்மையில் ஈழத்து பூதந்தேவனார் புலவர் கழகம் நடாத்திய சிலப்பதிகார விழாவிலே தமிழவேள் க.இக.கந்தசுவாமி பற்றி ஒலித்த கூற்றே சாட்சியாகும். அவர் மிகச் சிறந்த இலக்கிய விழாக்களை தனி ஒருவராக இருந்து நடாத்தி வெற்றிகண்டது மட்டுமல்லாமல் மற்றையோருக்கும் அதனுTடாகச் சிறந்த அனுபவத்தையும் பெற உதவியமை குறிப்பிடத்தக்கதாகும். அவர் எமது காலத்தில் வாழந்து சாதனைகள் பல புரிந்து தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் ஆற்றிய சேவையைக் கண்டு நாம் வியந்து நிற்கிறோம். கடந்த நாற்பதாண்டுகளுக்கு மேலாக கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்து சேவை செய்த தமிழவேள் க.இ.க.கந்தசுவாமி அவர்களை சட்டப் புத்தகத்தைக் காட்டி மிரட்டிய போதும் தலை வணங்காது தமிழையும் இறையருளையும் நம்பி போராடி வெற்றி கண்ட துணிச்சல்மிக்க வீரர். அவரின் தமிழ்ப் பணி போற்றுதற்குரியதே. அவ்வாறான இப் பெருந்தகையின் அன்பும், ஆசியும் எமக்கும், எமது பாடசாலை மாணவர்களுக்கும் கிடைத்தமை மிகப் பெரிய பாக்கியமாகும். அவரின் ஆத்மா சாந்தியடைய எமது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், சார்பாக இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
க.ஞானசேகரம்
உப அதிபர் கொழும்பு தொண்டர் வித்தியாலயம்
44

இரண்டாந்திருமுறை
கோளறு திருப்பதிகம் திருஞானசம்பந்தர் தேவாரம்
திருச்சிற்றம்பலம்
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்திெ
னுளமே புகுந்த்த அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டு முடனே ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே
என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க
எருதேறி யேழை யுடனே பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தெ
னுளமே புகுந்த அதனால் - ஒன்பதொ டொன்றொடேழு பதனெட் டொடாறு
முடனாய நாள்க ளவைதாம் அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே 2
உருவாளர் பவளமேனி ஒளிநீ றணிந்து
வுமையோடும் வெள்ளை விடைமேல் முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தெ
னுளமே புகுந்த அதனால் திருமகள் கலையதுார்தி செயமாது பூமி
திசைதெய்வ மான பலவும் அருநெதி நல்லதல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவரக்கு மிகவே. 3
45

Page 26
மதிநுதல் மங்கையோடு வடபா லிருந்து மறையோது மெங்கள் பரமன் நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தெ
னுளமே புகுந்த அதனால் கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய்க ளான பலவும் அதிகுண நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
நஞ்சனி கண்டனெந்தை மடவாள்த னோடும்
விடையேறு நங்கள் பரமன் துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்ெ
னுளமே புகுந்த அதனால் வெஞ்சின அவுணரோடு முருமிடியுமின்னு
மிகையான பூத மவையும் அஞ்சிடும் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே
வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர் மட வாள்த னோடு முடனாய் நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தெ
னுளமே புகுந்த அதனால் கோளரி யுழுவையோடு கொலையானை கேழல்
கொடுநாக மோடு கரடி ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
செப்பிள முலைநன் மங்கையொரு பாகமாக
விடையேறு செல்வ னடைவார் ஒப்பிள மதியுமப்பு முடிமே லணிந்தெ னுளமே புகுந்த அதனால் வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும்
வினையான வந்து நலியா அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே
46

வேள்பட விழிசெய்தன்று விடைமே லிருந்து
மடவாள்த னோடு முடனாய் வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தெ
னுளமே புகுந்த அதனால் ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடு
மிடரான வந்து நலியா ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல.
அடியா ரவர்க்கு மிகவே. 8
பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறு மெங்கள் பரமன் சலமக ளோடெருக்கு முடிமே லணிந்தெ
னுளமே புகுந்தஅதனால் மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும் அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 9
கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன் மத்தமு மதியுநாக முடிமே லணிந்தெ னுளமே புகுந்த அதனால் புத்தரொ டமணைவாதி லழிவிக்கு மண்ணல்
திருநீறு செம்மை திடமே அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. O
தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி
வளர்செம்பொ னெங்கும் நிகழ நான்முக னாதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன் தானுறு கோளுநாளு மடியாரை வந்து
நலியாத வண்ண முரைசெய் ஆனசொல் மாலையோது மடியார்கள் வானில்
அரசாள்வ ராணை நமதே 11
திருச்சிற்றம்பலம்
47

Page 27
பஞ்ச புராணங்கள்
திருச்சிற்றம்பலம் தேவாரம் உருவமு முயிருமாகி யோதிய வுலகுக்கெல்லாம் பெருவினை பிறப்புவீடாய் நின்றவெம் பெருமான்மிக்க அருவிபொன் சொரியுமண்ணா மலையுளா யண்டர்கோவே மருவிநின பாதமல்லான் மற்றொரு மாடிலேனே.
திருவாசகம் கேட்டாரும்அறியாதான் கேடொன் றில்லான் கிளையிலான் கேளாதே பொல்லாங் கேட்டான் நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத்துள்ளே நாயினுக்குத் தவிசிட்டு நாயினேற்கே காட்டா தனவெல்லாங் காட்டிப் பின்னுங் கேளா தனவெல்லாம் கேட்பித் தென்னை மீட்டேயும் பிறவாமற் காத்தாட் கொண்டான் எம்பெருமான் செய்திட்ட விச்சைதானே.
திருவிசைப்பா அற்புதத் தெய்வம் இதனின் மற்றுண்டோ அன்பொடு தன்னைஅஞ் செழுத்தின் சொற்பதத் துள்வைத் துள்ளம் அள்ளுறும்
தொண்டருக் கெண்டிசைக் கனகம் பற்பதக் குவையும் பைம் பொன்மா விகையும்
பவளவா யவர்பனை முலையும் கற்பகப் பொழிலும் முழுதுமாங் கங்கனை கொண்டசோ ளேச்சரத் தானே.
திருப்பல்லாண்டு சீரும் திருவும் பொலியச் சிவலோக நாயகன் சேவடிக்கீழ் ஆரும் பெறாத அறிவு பெற்றேன் பெற்றதார் பெறுவாருலகில் ஊரும் உலகுங் கழற உழறி உமைமண வாளனுக்காட் பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம் பல்லாண்டு கூறுதுமே.
48

திருப்புகழ் (அருணகிரிநாதர் அருளியது)
பக்தியால் யானுனைப் பலகாலும் பற்றியே மாதிருப் புகழ்பாடி முத்தனா மாறெனைப் பெருவாழ்வில் முத்தியே சேர்வதற் கருள்வாயே உத்தமாதான சற்குணர் நேயா ஒப்பிலா மாமணிக் फlf6uाऊा வித்தகா ஞானசத் திணிபாதா வெற்றிவே லாயுதப் பெருமாளே
அபகார நிந்தைபட் டுழலாதே அறியாத வஞ்சரைக் குறியாதே உபதேச மந்திரப் பொருளாலே உனைநான் நினைந்தருள் பெறுவேனோ இபமா முகன்தனக் கிளையோனே இமவான் மடந்தை உத்தமிபாலா செபமாலை தந்தசற் குருநாதா திருவா வினன்குடிப் பெருமாளே
திருப்புராணம்
ஆதியாய் நடுவுமாகி அளவிலா அளவுமாகிச் சோதியாய் உணர்வுமாகித் தோன்றிய பொருளுமாகி பேதியா ஏகமாகிப் பெண்ணுமாய் ஆணுமாகிப் போதியாய் நிற்குந்திலண்லப் பொதுநடம் போற்றிபோற்றி.
திருப்புராணம் ஐந்துப்பே ரறிவும் கண்களே கொள்ள அளப்பருங் கரணங்கள் நான்கும் சிந்தையே யாக குணமொரு மூன்றும் திருந்து சாத்துவீகமே யாக இந்துவாழ் சடையான் ஆடும்ஆ னந்த எல்லையில் தனிப்பெருங் கூத்தின் வந்தபேரின்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்.
49

Page 28
தென் புலத்தே சீர் செய்ய சென்றிரே
தமிழவேள் கந்தசாமி ஐயா அவர்கள் “தென்புலத்தோர் வசம்’ என்னும் பதவியை அடைந்த செய்தி கேட்டு நாம் வருந்தினோம். அன்னாரின் இறுதிக்கிரியைகளிலும் கலந்து கொண்டோம். பூவுலகில் வாழ்ந்தவர் காலத்தால் குறைவு, அதிலும் வாழ்வாங்கு வாழ்ந்தவர் அதிலும் குறைவு. அவ்வாறு வாழ்வாங்கு வாழ்ந்த அன்னார் தமது செயல் சிந்தனை அனைத்திலும் தமிழும் சைவமும் என சான்றோர் வழி நின்று வாழ்ந்து வழிகாட்டியவர். இன்று சேவை என்ற பெயரில் தன்னை வளர்ப்போரும் தன்னையும் சமூத்தையும் வளர்ப்போம் என இருவகையினர் உலாவலம் வரும் காலத்தில் சமூகத்தை மட்டும் வளர்த்த பெருமை ஐயா அவர்களையே சாரும்.
கொழும்புத் தமிழ்ச்சங்கத்துடன் மாத்திரம் நின்று விடாமல் சேவை செய்ய பல வழிகளை தெரிவு செய்தவர். அந்த வகையில் எமது கழகமாகிய சனாதனதர்ம யுவ விழிப்புணர்ச்சிக்கழகத்தின் அன்று தொட்டு தனது இறுதி மூச்சு வரை ஆலோசகராக நல் வழிகாட்டியவர் எமது புதிய புதிய முயற்சிகள் எல்லாவற்றுக்கும் புத்துயிர் தந்தவர். குறிப்பாக எமது சஞ்சிகையான சங்கநாதத்துக்கு சிறப்புத் தந்தவர், கழகத்தில் நடைபெறும் இலக்கண, இலக்கிய வகுப்புக்களை திறம்பட நடாத்தியவர். இவ்வாறான இன்னோரன்ன் சிறப்புக்களை செய்த எமது ஆலோசகரை என்றும் நினைவு கூருவோம்.
ஐயாவின் சிந்தனைகளுக்கு நாம் செயல் வடிவம் கொடுப்போம். தலைநகரில் தமிழ் வாழ வழி வகுத்த தமிழ் தந்தை என எதிர் காலத்தில் ஐயாவின் புகழ் போற்றப்பட வேண்டும். இதற்கு எமது பங்களிப்பு எப்போதும் இருக்கும்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
பரமக்குட்டி றிறிஸ்கந்தராஜா செயலாளர் சனாதன தர்ம யுவ விழிப்புணர்ச்சிக் கழகம்.
50

சுடரொளி வெளியீட்டுக்கழகத்தின் அனுதாபச் செய்தி தமிழ் வளர்த்த மேதையின் மறைவு
பிரமச்சாரிய விரதம் பூண்டு, தமிழ்த்தாயை உளமார நேசித்து தமிழை வளர்த்து வந்த அறிவு மேதை தமிழவேள் கந்தசாமி அவர்கள் அன்னாரின் மறைவு தமிழ் மக்களுக்குப் பேரிழப்பு, தம் வாழ்நாள் முழுவதும்தமிழ் தழிழ் என்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்துடன் சங்கமாகி தமிழ்ப் பணியாற்றியவர் அமரர் கந்தசாமி, அவர்களின் தமிழ்ப் பணி அளப்பரியது. ኵ*
ஆசிரியராக நீண்டகாலம் பணியாற்றி பல மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்ட பெருமகனார். தமிழின் உயர்வுக்காக ஓய்வின்றி உழைத்த தமிழ்ச் செம்மல் இவர்.
தமிழ் வளர்த்த சான்றோர்களின் வரலாறுகளைப் போற்றிப் பேணிப் பாதுகாத்து வந்தவர். கொழும்புத்தமிழ்ச் சங்கத்திற்கு நெருக்கடி ஏற்பட்ட காலங்களில துணிவுடன் சங்கப் பணிமனையில் தங்கியிருந்து சங்கத்தை அதன் எதிர்பார்ப்புக்கு அமைய வளர்த்தெடுத்த பெருமை அமரர் கந்தசாமி அவர்களுக்குரியது.
எப்பொழுதும் தமிழே சிந்தனையாக வாழ்ந்த தமிழ் அறிஞர் தமிழ் வளர்ச்சிக்காகத் தம்மை அர்ப்பணித்தவர்.
அன்னார் மறைந்தாலும் அவர் தமிழ் மக்கள் மனதில் என்றும் நிலைத்திருப்பார். தந்தை செல்வாவின் அகிம்ஷையையும் தமிழ்த் தேசியத்தையும் நேசித்த நாட்டுப்பற்றாளர் தமிழவேள் கந்தசாமி அவர்களின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திப்போமாக.
தமிழவேள் அவர்களின் மறைவால் ஆழ்ந்த கவலையடைந்திருக்கும் கொழும்புத் தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து சுடரொளி வெளியீட்டுக்கழகம் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
ஐ.தி.சம்பந்தன் செயலாளர்
51

Page 29
தமிழ்ச் சங்கத்தை கட்டிக்காத்த பெருமை தமிழவேள் க.இ.க.கந்தசுவாமிக்குரியது.
மே.ம.மு.பொதுச்செயலாளர் கலாநிதி குமரகுரபரன்
தலைநகர் வாழ் தமிழ் மக்களின் தனித்துவச் சின்னமாம் கொழும்புத் தமிழ் சங்கத்தின் சிருஷ்டி கர்த்தா இணுவையூர் தந்த தமிழவேள் கந்தசுவாமியின் மறைவில் பெருந்துயரடைவதாக மேலக மக்கள் முன்னணியின் சார்பாக அதன் பொதுச் செயலாளர் கலாநிதி குமரகுருபரன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இன்று பலர் கொண்ட ஒரு குடும்பமாக தலைநகர் வாழ் தமிழ் மக்களின் சொத்தாக தனித்துவச் சின்னமாக விளங்கும் தமிழ்ச் சங்கத்தை ஸ்தாபித்து இடைக்காலம் வரை கட்டிக்காத்த பெருமை தமிழவேள் இ.க.கந்தசுவாமிக்குரியது. இவர் தமிழ்ச்சங்கம் சார்பாக பல வெளிநாட்டு மாநாடுகளிலும் பங்குபற்றி பல நூல்களை வெளியிட்டுப் பெருமை சேர்த்தவர். தமிழ்ச்சங்கத்தின் உயிரோட்டத்தில் க.இ.க.கந்தசுவாமி அவர்களின் உதிரம் ஓடிக் கொண்டிருக்கின்றது என்றால் மிகையாகாது. மே.ம.மு.சார்பாகவும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் சார்பாகவும் அன்னாரின் குடும்பத்தார்க்கு எமது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். எனவும் அவர் அவ் அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
52

கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் உயர்வுக்கு உந்துசக்தியாக விளங்கியவர் தமிழவேள் கந்தசுவாமி
ஜனாதிபதியின் ஆலோசகர் அஸ்வர் அனுதாபம்
பண்டைத் தமிழகத்து முத்தமிழ் கருவூலங்களை உணர்த்தும் சிலப்பதிகாரக் கட்டுரைகள் அடங்கிய நூலையும், முனைவர் அ.அறிவு நம்பி எழுதிய “செந்தமிழ்ச் செம்மயில்கள்’ என்ற நூலையும் ஈழத்துப் பூதந்தேவனார் அரங்கில் வைத்து கூன் விழுந்திடினும் கூப்பிய கைகளோடு கடந்த 11ஆம் திகதி நடைபெற்ற சிலப்பதிகாரப் பெருவிழாவில் மேடைக்கு வந்து எனக்கு அன்பளிப்புச் செய்தார் தமிழவேள் இ.க.கந்தசுவாமி. இன்று 9 நாட்களுக்குப் பிறகு அவர் எம்மையெல்லாம் விட்டு இவ்வுலகிலிருந்து விடைபெற்றுச் சென்றதையிட்டு அதிர்ந்து போனேன். என்று ஜனாதிபதியின் ஆலோசகர் ஏ.எச்.எம்.அஸ்வர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
கடந்த 40 ஆண்டுகளாக கற்கண்டு சுவையில் எனக்கு தமிழ் அறிவூட்டியவர் அவர். அவர் மேல் எனக்கு ஏற்பட்ட அன்பும், மரியாதையும் காரணமாகத்தான் நான் கொழும்புத் தமிழ்ச்சங்க மேடையைக் காண நேர்ந்தது. தமிழ்ச்சங்க மேடையில் நான் ஏறியபொழுதெல்லாம் கந்தசுவாமி ஐயா அவர்கள் என்மீது செலுத்திய நட்பின் உயர்வினை நான் விதந்து கூறத் தவறுவதில்லை.
தமிழ்ச்சங்க மேடையில் பேசுவதென்றால் எனக்கொரு தனி இன்பம். இதற்கு வழி சமைத்துத் தந்தவர் தமிழையே உயிராகக் கொண்டு வாழ்ந்த கந்தசுவாமி ஐயா.
தமிழே என் உயிர், தமிழே என் மூச்சு என்ற உயரிய சிந்தனையைத் தன்னுள் வைத்து வாழ்ந்துவந்தவர் தமிழவேள் கந்தசுவாமி, தமிழ்ச்சங்கத்தின் உயர்வுக்கு ஓர் உந்துசக்தியாக விளங்கியவர் அவர். தமிழ் வளர, தமிழ்ச் சங்கம் உயர நீருற்றிப் பசளையிட்டவர்.
உள்ளுரிலும், வெளிநாட்டிலுமுள்ள அநேக பேராசிரியர்களையும், இலக்கியப் படைப்பாளிகளையும், கலைத்துறை விற்பனர்கள், மேதாவிகள் முதலானோரையும் தமிழ்ச்சங்கமேடை மூலம் எமக்கெல்லாம் அறிமுகம் செய்து வைத்தவர் அவர்.
53

Page 30
நான் அமைச்சராக இருந்த காலத்திலும், தற்பொழுது ஜனாதிபதியின் ஆலோசகராக இருக்கும் வேளையிலும் எம்மோடு அடிக்கடி தொடர்புகொண்டு தமிழ்ச்சங்க வட்டாரத்தில் எழும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தள்ளாத வயதிலும் எம்மைத் தள்ளாது எம்மை நாடி ஓடி வருவார். மதத்தால் வேறுபடாமல, மொழியால் பிளவுபடாமல, இனத்தால் இரண்டுபடாமல் நல்ல மனத்தால் ஒன்றுபட்ட ஒரு மாமனிதரை நான் கந்தசுவாமியினுள் கண்டேன்.
30 அண்டுகாலம் தமிழ்ச்சங்கத்தின் பொதுச் செயலாளராக அவர் சிறப்பான பணியாற்றிய பொழுதுதான் தமிழ் மொழியை நேசித்த பல முஸ்லிம் பெரியோர் தமிழ்ச்சங்க வட்டத்தினுள் நுழைந்தனர் என்பதையும் நான் இன்று நினைத்துப் பார்க்கிறேன்.
அகில இலங்கை திருக்குர்ஆன் இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர் சமுதாயச் செம்மல் எஸ்.எம்.சஹாப்தீன் தமிழ்ச்சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராக இணைந்து கொண்டதும் இவர்காலத்திலேயே. பேரறிஞர்களான ஏ.எம்.ஏ.அஸிஸ், அல்லாமா டாக்டர் ம.மு.உவைஸ். ஹாபிஸ் எம்.கே.செய்யத் அஹமத் (காயல் பட்டணம்), எஸ்.எம்.கமால்தீன், ஏ.எம்.சமீம் போன்ற சான்றோர்கள் தமிழ்ச்சங்க மேடையை அலங்கரித்ததும் இவர் காலத்திலேயேயாகும்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காயிதே மில்லத் முஹம்மத் இஸ்மாயில் ஸாஹிப் உட்பட சென்னையின் பிரபல நீதிபதி எம்.எம்.இஸ்மாயில், இரவணசமுத்திர எம்.எல்.ஏ., எம்.எம்.பீர்மஹம்மத், திருப்பூர் முஹிதீன், இறையருட் கவிமணி கா.அப்துல் கபூர் போன்றவர்களைப் பாராட்டி, பொன்னாடை போத்தி, அப்பெரியோர் தமிழுக்கு ஆற்றுகின்ற சேவையினைப் பாராட்டி மகிழ்ந்தவர் கந்தசுவாமி.
கிழக்கு மாகாண மருதமுனை மணி தந்த புலவர் மணி ஆ.மு.ஷரீபுத்தீனின் அருந்தவப் புலவர் டாக்டர் ஜின்னாஹற் ஷரீபுத்தீன் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகப் பதவி ஏற்பதற்கு வழிசமைத்த தமிழ்ச்சங்கத் தலைவர்களுள் முக்கியமானவர்தான் எம்மை விட்டுப்பிரிந்த கந்தசுவாமி ஐயா என்றும் அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
54

தமிழுக்கும் சைவத்திற்கும் இறுதி மூச்சுவரை அளப்பரிய சேவையாற்றியவர் தமிழவேள்கந்தசுவாமி
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் அனுதாபம்
எமது நாட்டின் மூத்த அறிஞரும், சமூக சேவகருமாகிய தமிழவேள் கந்தசுவாமியின் மறைவு தமிழ் உலகிற்கு பேரிழப்பாகும். என்ற இந்து சமய கலாசார அலவல்களி*திணைக்களப் பணிப்பாளர் சாந்தி நாவுக்கரசன் தெரிவித்துள்ளார். சி.
கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளராக நீணி டகாலம் பணிபுரிந்து பல செயற் கரிய பணிகளை நிறைவேற்றியுள்ளார். கொழும்புத் தமிழ்ச்சங்கம் தலைநகரில் இத்துணை வளர்ச்சியுற்ற காரணகர்த்தாக்களில் மூத்த ஸ்தாபக உறுப்பினராக இருந்து வந்ததுடன், காலத்திற்கு காலம் தமிழ்மொழி கலாச்சார நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்திய பெருமகனுமாவார்.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் நீண்ட காலமாக தொடர்புகள் கொண்டதுடன் எமது திணைக்களத்தின் அனைத்து கலை, கலாச்சார நிகழ்வுகளுக்கும் தமது பூரண ஒத்துழைப்பினை வழங்கியவராவார்.
இப்பணியில் மட்டுமல்லாது கடல் கடந்த அறிஞர்கள் பலருடன் தொடர்புகளை வைத்திருந்ததன் மூலம் பல இலக்கிய விழாக்களை திறம்பட நடத்திய பெருமை இவரையே சாரும். ஈழத்து பூதந்தேவனார் தமிழ் புலவர் கழகத்தின் மூலம் திருவள்ளுவர் விழா, தொல்காப்பிய விழா, சிலப்பதிகார விழா என பெருவிழாக்களை சிறப்புற நடத்தியுள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 11ஆம், 12ஆம, 13ஆம் திகதிகளில் சிலப்பதிகாரப் பெரு விழாவினை சிறப்பாக நடத்தி முடித்த சில தினங்களுக்குள் இயற்கை எய்தியமை எம்மை மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.
தமது வாழ்வின் இறுதி மூச்சுவரை தமிழுக்கும், சைவத்திற்காகவும் வாழ்ந்து அளப்பரிய சேவையாற்றியவராவார் என்றும் அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
55

Page 31
தமிழவேளின் மறைவு தமிழ் உலகிற்கு பேரிழப்பாகும்.
செல்வி.க.தங்கேஸ்வரி எம்.பி.அனுதாபம்
கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் நீண்டகாலச் செயலாளராக கடமையாற்றிய தமிழவேள் க.இ.க.கநதசுவாமியின் மறைவு தமிழ் உலகிற்கு பேரிழப்பாகும் என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் க.தங்கேஸ்வரி விடுத்துள்ள அனுதாப செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அச்செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழ் அறிஞராகவும் தமிழ்ப் பணியாளராகவும் வாழ்ந்த இவர் ஆற்றிய பணிகள் அளப்பரியவை. கொழும்புத் தமிழ்ச் சங்கத்தை வளர்ப்பதில் இவர் தன் வாழ்நாளையே அர்ப்பணித்துள்ளார்.
கொழும்புத் தமிழ்ச்சங்க நிர்வாக சபை காலத்துக்கு காலம் மாற்றம் பெற்றாலும் தமிழவேள் கந்தசுவாமியின் பணி என்றும் தொடர்ந்து வளர்ந்ததை நாம் என்றும் மறக்க முடியாது.
தமிழ்ப் புலவர் மாநாடு, சிலப்பதிகார மாநாடு முதலியவற்றை வெற்றிகரமாக நடத்திய இவர், பல அரிய நூல்களையும் வெளியிட்டுள்ளார். இச்சங்கத்தில் இவர் மாணவர்களுக்குத் தமிழ் வகுப்புகளை இலவசமாக நடத்தி உள்ளார். சங்க மண்டபத்தை நிறுவுவதிலும் சங்கத்தைக் கட்டி எழுப்புவதிலும் இவர் இரவு, பகல் பாராது பல பிரமுகர்களை அணுகித் தேவையான உதவிகளைப் பெற்று அர்ப்பணிப்பான சேவையைச் செய்துள்ளார்.
தன்னலம் கருதாத பொதுநலப் பணியாளர் தமிழ் கூறும் நல்லுலகில் தனக்கென்று ஒரு தனியான இடத்தைப் பிடித்தவர். அன்னாரது மறைவு எவராலும் ஈடு செய்ய முடியாத ஒன்று. அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக.
56

கண்ணிர் அஞ்சலி
தமிழவேள், இ.க.கந்தசுவாமி
தமிழவேள் இ.க.கந்தசுவாமி அவிர்க்ள் (19.10.2008) ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் காலமான செய்தியறிந்து ஆழ்ந்த கவலையடைகின்றோம். யாழ்ப்பாணம் இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தன்னையும் தன் வாழ்நாளையும் முற்று முழுதாகத் தமிழுக்காகவும் சைவத்துக்குமாகவே அர்ப்பணித்து வாழ்ந்து வந்தார். தமிழே மூச்சாக சைவமே வாழ்வாக வாழ்ந்து மறைந்த அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதோடு எமது கண்ணீர் அஞ்சலியினையும் தெரிவிக்கின்றோம்.
அண்ணா தொழிலகம் இணுவில்.
57

Page 32
கண்ணிர் அஞ்சலி
ஈழத்துப் பூதந்தேவனார் தமிழ்ப் புலவர் கழகச் செயலாளர் தமிழவேள் இ.க.கந்தசுவாமி
அவர்கள் (19.10.2008) ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் காலமான செய்தியறிந்து ஆழ்ந்த கவலையடைகின்றோம்.
அன்னால் 2003 மே மாதம் நல்லை ஆதீனத்தில் ஈழத்துத் தமிழ்ப் புலவர் மகாநாட்டினை முதலில் ஆரம்பித்து பின்னர் 01.02.2004 ல் ஈழத்து பூதந்தேவனார் தமிழ்ப் புலவர் கழகத்தை அமைத்து அதன் செயலாளராக விருந்து யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் கழகத்தின் செயற்பாடுகளுக்கு மூலகாரணமாகவிருந்தவர். தொல்காப்பிய மகாநாடு, சிலப்பதிகாரப் பெருவிழா போன்றவற்றை கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் நடத்தி தமிழின் பெருமையை வெளிக்கொணர்ந்தவர். அவரின் இழப்பு தமிழியலாளருக்குப் பேரிழப்பு. அவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதோடு எமது கண்ணிர் அஞ்சலியினையும் தெரிவிக்கின்றோம்.
சைவப்புலவர் மு. திருஞானசம்பந்தபிள்ளை தலைவர் -ஈழத்து பூதந்தேவனார் தமிழ்ப்புலவர் கழகம் அகில இலங்கை சைவப்புலவர் சங்கம்.
58

assignify sig5565 IDEAL ACADEMY
தமிழவேள் இ.க.கந்தசுவிரிமி அவர்கள் (முன்னாள் கொழும்பு தமிழ்ச்சங்க செலாளர், ஓய்வுபெற்ற ஆசிரியர் கொழும்பு றோயம் கல்லூரி)
எமது கல்விநிறுவனர் - நிர்வாக பணிப்பாளிர் கேளுஸ்.மனோகரன் அவர்களின் சிறியதந்தை தமிழவேள் க.இ.க.ந்தசுவாமி அவர்களின் மறைவினால் ஆறாத்துயரில் ஆழ்ந்திருக்கும் அன்னாரின் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறோம்.
விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள்,மாணவர்கள் 240-3/1 (2nd Floor), Galle Road, Colombo - 06.
Te: 2363060
59

Page 33
தமிழவேள் இ.க.கந்தசுவாமி அவர்களின் மறைவையொட்டி மட்டக்களப்பு புலவர் மணி நினைவுப்பணி மன்றம் - அஞ்சலி
கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் வளர்ச்சியில் பல தசாப்தங்கள் பாரிய பங்களிப்புச் செய்தவரும் இலங்கை தமிழறிஞர்களுள் ஒருவருமாகிய கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் செயலாளர் தமிழவேள் இ.க.கந்தசுவாமி அவர்கள் 19.10.2008 அன்று கொழும்பில் காலமான செய்தியறிந்து துயருற் றோம் . புலவர் மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை அவர்களின் புலதல்வர்களான திரு.தர்மலிங்கம், திரு.விஜயரத்தினம் ஆகிய இருவரும் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் முக்கிய பதவிகளில் முறையே பொருளாளர், தலைவர், பதவிகளில் இருந்து பணியாற்றியவர்கள் என்பதை இக்கட்டத்தில் நினைவு கூறுகின்றோம். புலவர்மனியுடன் அமரர் கந்தசாமி அவர்கள் நெருங்கிய தொடர்புடையவராகவும் விளங்கியவர். மேலும், புலவர்மணி கவிதைகள் நூல் மீள்பதிப்புக்கு (2004) அமரர் தமிழவேள் இ.க. கந்தசுவாமி அவர்கள் பாராட்டுரை ஒன்றும் வழங்கியிருந்தார் என்பதும் நினைவு கூரத்தக்கது. அன்னாரின் மறைவையொட்டி புலவர்மனி நினைவுப்பணி மன்றம் தன் அஞ்சலியைச் செலுத்துவதுடன் அன்னாரின் இழப்பால் துயருறும் அவரது உறவினர்களுக்கும் கொழும்புத் தமிழ்ச்சங்க உறுப்பினர்களுக்கும் தனது அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றது.
தலைவர் செயலாளர் த.கோபாலகிருஸ்ணன் கதிர்பாரதிதாசன்
60

ஓம் சிவகாமியம்மை திருத்தாள் போற்றி
சிவகாமியம்மை திருவூஞ்சல் (எண்சீர் ஆசிரிள விருத்தம்)
1.
திருமார்ப னயன்முனிவர் தேவர் நாதன்
சித்தர்வித் தியாதரர் ஆதித்தர் போற்ற மருமாலை யிதழிபுனை பரமர் பாகம்
மருவுசிவ காமிதன்மே லூசல் LT நாராசர் புகழினுவை நகரில் வாழும்
நம்பனடி யவர்நினைந்த வரங்க் -ணல்க பரராச சேகரபூ சிதனாம் முன்னோன்
பதுமமல ரடியிணைகள் பரவுவோமே
கொண்டல்வரை கனகவரை விட்ட மாகக்
குலவுகுலா சலங்கள்மணிக் கால்க ளாகப் பண்டைமறை யொருநான்குங் கயிற தாகப்
பலபுவன கோடிகள்பொற் பலகை யாக அண்டநடு மன்னுவிராட் புருடன் நல்ல
அணிகொள்ந வரத்னமணிப் பீடமாக மண்டலமெல் லாம்புகழ் மினுவை வாழும்
மாதுசிவ காமவல்லி ஆடீ ரூஞ்சல்
விண்ணுலவு மிருசுடர்கள் தீப மாக
விளங்குபல தாரகைகள் விதமான மாக தண்ணுலவு சந்தனமா முதல வைந்துந்
தருமலர்கள் நறுமலர்ப்பூம் பந்த ராக எண்ணுலவு மிளந்தென்றல் கவுரி யாக
இலங்குபகி ரண்டம்மணி மஞ்ச மாக அண்ணல்வளந் திகழினுவை தன்னில் வாழும்
அம்மைசிவ காமவல்லி ஆடீ ரூஞ்சல்
6

Page 34
செய்யவெண்டா மரைமலரிந் திரைசீ ராணி
செகமுழுது நிழற்றுவெள்கைக் கவிதை கொள்ளத் துய்யபகி ரதிதவளக் கவரி வீசத்
தோகையuபி ராணிசெம்பொற் படிக மேந்த ஐயைபை ரவிமுதலோ ரடப்பை ஏந்த
அஞ்சுகமஞ் சக்குயில்கொண் டருகு நிற்பப் பெய்யுமுகில் வளர்சோலை யினுவை வாழும்
பெண்ணரசி சிவகாமி ஆடீ ரூஞ்சல்
தகரமணங் கமழ்மணிப்பொன் மவுலி மின்னச்
சசிக்லைகள் மானுநெற்றி யணிகள் துன்ன மகரவணி குண்டலத்தோ டிகல நீல
வரிக்கயல்கள் பாயமணி யாம்பல் மேவ நிகரிலாமைந் தர்சொரிநீ லப்பூ வார
நிரைவடமுத் தரியமிசை நிழல்கள் வீச அகவளமும் பெருகிவள ரினுவை வாழும்
அம்மைசிவ காமவல்லி ஆடீ ரூஞ்சல்
தும்புருநா ரதர்முதலோர் கீதம் பாடத்
துய்யவுருப் பசிமுதலோர் நடனமாட அப்பரமே வலர்பாரி சாத மேவு
மலர்மழைபொன் மழைபோல அள்ளி வீசச் செம்பதுமக் கன்னியொடு நாவின் மாதும்
திகழ்மாத ரிருகையினால் வடந்தொட் டாட்ட அம்புவியில் வளஞ்சேர்நல் இணுவை வாழும் அம்மைசிவ காமவல்லி ஆடீ ரூஞ்சல்
62

மந்திரமே முதலான ஆதி தேவர்
மன்றினட ராசரன்பர் மனதில் வாசர் சிந்தைவந் திணிதிருக்கும் வானுலாவும்
திங்கள்வகி ரெனத்திகழகிம் புரிசே சொற்றைத் தந்தனொடு கந்தன்மடி மிசையே மேவச்
சகலவுயிர் களும்வானத் தவரு முய்யச் செந்திருவா ழினுவைநகர் தன்னில் வாழும்
சிவகாம சுந்தரியே шце, ரூஞ்சல்
கதிராகு மணியணிகுண் டலங்களாடக்
கனகமணி யணிவளைகொள் கவின்க ளாடப் புதிதான கொண்டையணி குச்சு மாடப்
பொற்றருவின் மலர்மாலை பொலிந்தே யாட மதிபோலும் நுதலிலனிச் சுட்டி யாட
வனசமல ரடியிணைகள் சிலம்பு மாட அதிகவளம் பெருகிவள ரினுவை வாழும்
அபிராமி சிவகாமி யாடீ ரூஞ்சல்
பவர்முதலா முருத்திார்பண் ணவர்கள் மூன்று
பத்துடனே முக்கோடி பதுமன் மாலோன் இவர்களுட னிந்திரன்கா லன்தீப் பேரோன்
இனியகூர்மாண் டன்வாயு வொடள கேசன் தவர்களாக மங்கள்சதுர் வேத மோதத்
அவனிபுக பூழினுவைநகர் தன்னில் வாழும் அபிராமிசிவ காமவல்லி ஆடீ ரூஞ்சல்
63

Page 35
10.
11.
தத்துபரி ரவியுதயாத் தமனங் காட்டித்
தருமருண இருவரையாங் தம்பம் நாட்டிச் சுத்ததம னியவரையாம் விட்டம் பூட்டித்
துருவமெனு மிருடங்கள் தொட்டே யாட்டி வைத்தசெக மண்டலமாம் ரத்ன பீடம்
மலரினுவைச் சிதம்பரமாம் வளவில் மேவும் சித்தமகிழ் நித்யநட ராச ரோடு
சிவகாம சுந்தரியே யாடீ ரூஞ்சல்
ஐயையே யம்மையே யாடீ ரூஞ்சல்
அருளுதவும் ஆரமுதே யாடீ ரூஞ்சல் துய்யவுப நிடதப்பொருளே யாடீ ருஞ்சல்
சோதியேயெம் ஆதியே யாடீ ரூஞ்சல் வையகத்தைப் பெற்றவரே யாடீ ரூஞ்சல்
வானோர்கட் கரியவரே, யாடீ ரூஞ்சல் செய்யசிவகா மப்பொருளே யாடீ ரூஞ்சல்
தேவர்தொழு சிவகாம யாடீ ரூஞ்சல்
ஓம் இணையிலிச் சிவகாமி அம்மை திருத்தாள் போற்றி
ஓம் ஓம் ஓம்
64

உயர்திரு தமிழவேள் கந்தசுவாமி அவர்களின்
சத்தியத் தோடுண்மை சாந்தமொடு குணமெல்லாம்
சார்ந்தநல் லொருவ ராக பத்திர மாகவே கந்தசு வாமியென்னும்
பாத்திர மாய் மலர்ந்தார் எத்தனை நற்றருமம் எதனையும்;அவையெல்லாம்
ஏற்றவை செய்து வந்தார் அத்தனை அம்மையை அகத்தினி லிருத்தியே
அருளமயார் கந்தசுவாமி.
வந்தனைக் குரியராம் நந்தமிழ் மக்களின்
வாட்டத்தால் வாடி நிற்பார் சிந்தனைக் கினியராம் செல்வநாயகத்திடம்
சித்தத்தைப் பறிகொ டுத்தார் அந்தநாள் தொடக்கமாய் வந்தநா ளனைத்திலு
வாழ்விலும் சிவகாமியைத் புந்தியில் வைத்தவர் போற்றித் தொழுதவர்
பொன்மகள் கந்தசுவாமி
வாசிக சாலையுடன் வாழ்சங்கக் கட்டடம் வழிவழி அமைத்து வைத்தார் ஆசிலா தேதுார்ந்த அனைத்து நல் லொழுங்கைகளை
அனைத் தொன்றா யாக்கி விட்டார் மாசிலா அன்பராம் சின்னத்தம் பிப் புலவர்
வகுத்துநற் பிரபந்தங் களை தாசனா யட்சேற்றிச் சிவகாமித் தமிழாக
மதித் திட்டார் கந்த சுவாமி
65

Page 36
மண்ணாசை பெண்ணாசை யென.
மறந்து மே பாரா தவர் கண்ணான பெரியாரென கனடா ஒன் றியர் தார்கள்
களித்துத் தமிழ்ச் சங்க மூடாய் பொன்னாடை போர்த்தநன்றிப் பொற்கிளியும் வாழா.
புவனியில் தமிழ் வேளுக் கே என்னுாரான் தமிழ் வாணள் இனிய என்னறு லகம்
இனிது நன்கு பாராட்டிப் புகழவே.
மைத்துனர் வித்துவாளன் பண்டித ராகிய
மதிஞ் திரு நாவுக் கரசுடன் சித்தத்தில் மிக்கவர் சிறந்தநல் லாசிரியர் திருவாளர் மார்க்கண்டு போல் வித்தகர் தமிழவேள் கந்தசுவா மியவர்கள்
மே விடவே தானு நடந்தார் உத்தமர் அவர் ஆத்மா உயர்சிவ காமிபதம்
உயர்வுற வாழ்க சாந்தி
முதுபெரும்புலவர் கலாபூஷணம ஆசிரியர் வை.க.சிற்றம்பலம்
நினைவேட்டிலிருந்து
“வேரென நீயிருந்தாய் சங்கம் வீழ்ந்து விடாதிருக்க”
எஸ்.குணரத்தினம்
முன்னாட் தலைவர் கொழும்புத் தமிழ்ச்சங்கம்
66

பொய்கெட்டு மெய்யானார்.
ஆழ்ந்த தமிழ்ப் பேரறிஞர் அருள் கந்தசுவாமிப் பெயரோன் - கடல் சூழ்ந்த புவியரங்கில் பொய்கெட்டு மெய்யானார்.
தெள்ளு தமிழ்ச் சங்கமதுைத் தீர்க்கமுடன் நீ வளர்த்தாய் தேர்ந்து பல நூல் தேடி" பள்ளி வயதினற்கும் பாவலர்க்கும் நாவலர்க்கும் நவில் தொறும் நூல் நயம் உரைக்க அள்ள அள்ளக் குறையாத அறிவு நூல்நிலை காத்தாய்.
பள்ளி செல்லும் மாணவர்க்காய் பாடநூல் பல படைத்தாய்; பதிகங்கள் பாடிவைத்த உன் உள்ளம் மகிழ் ஊர்ப்புலவன் உவந்தளித்த நூல்பதித்தாய், ஊர்போற்ற உயர்ந்து நின்றாய்.
தள்ளாத வயதினிலும் தமிழ்த் தெய்வக் காப்பியர்க்கும் சிலம்பிசைத்த இளங்கோவிற்கும் நல்லிதயத்தோர் மகிழ நன்மாநாடு கண்டாய்; தமிழறிந்தோர் போற்ற நின்றாய்.
உள்ளத்தின் தூய்மைபோல் உடையாலும் தூயவரே, பள்ளத்தில் வீழ்ந்தோர்க்குப் பகுத்தறிவு தந்தவரே, தமிழ் வள்ளல் தமிழவேளே, தமிழ்ச்சங்கக் காவலரே, உள்ளம் நிறைந்து சொன்னோம் பொன்னகரம் நீ சேர்க.
பழைய மாணவர் சங்கம் இணுவில் மத்திய கல்லூரி 67

Page 37
அமரர் இணுவில் தமிழவேள் கந்தசுவாமி அவர்களின் மறைவு குறித்து கனடா தமிழ் மக்களும்,
இணுவில் திருவயூர் ஒன்றியமும் செலுத்தும் கண்ணிர் அஞ்சலி
அமரத்துவம் சேர்ந்த
அருந்தமிழ்ப் பணியாளர் தமிழவேள் கந்த
sonImrufi Onufourcar இணுவை மன்தந்த
எழுச்சித்தமிழ்மகனேயூ பணிந்தேத்தும் படியாகப்
கொழும்புத்தமிழ்ச் சங்கமெனக் கூறும்போ தெம்முள்ளம் எழும்புவதுஉம்நினைவேயூ
இப்படியே உமைக்கானக் கொழும்புத் தமிழ்ச்சங்கம்
கொள்பணிகள் நினைவுவரும் இழந்தோம் உம்மையென்று
எண்ணமனம் ஒiயவில்லையூ சால்இணுவைச் சின்னத் தம்பிப்புலவன்தன் நூல்பஞ்ச வன்னத்து
துரைந்தருண்மதியோய்யு நல்லைநகர் நாவலர் போல் நயந்துபிரமச்சரியம் அல்லும் பகலும் தமிழ்
அரும்பணிகள் முனைந்தோனேயூ கலங்கிஇணு வைமக்கள்
கையறுநிலையுற்றாயூ புலங்களிலும் ஊர்மக்கள்
புலம்பிஅழுகின்றோமயூ முதறிஞன் உன்றனுக்கும் முத்திதரச் சிவகாமி பாதங்கள் ஏத்துகிநோம்யூ
பணிந்தஞ்சலிக்கின்றோம்
68

தமிழும் சைவமும் வளர்த்த தமிழவேள் இ.க.கந்தசுவாமி
வேலெடுத்த கடவுளன்ன தமிழவேள் கந்தா வெற்றிவிழா பலவெடுத்தீர் சங்கந் தன்னில் நூலெடுத்து தமிழ்வளர்த்த இணுவை மைந்தா நின்பணிகள் முடிந்ததென்றா சென்று விட்டீர் பாலெடுத்து ஆடையது செய்தவுறு என்றும் நீயுடுத்துச் செல்லுவதை நாமும் கண்டோம் யாருடுத்து வருவார்கள் உமைப்போல்” மீண்டும் காலந்தான் பதில் சொல்லும் அப்போ காண்போம் சேலொத்த கண்ணியளாம் கண்ணகித் தாய் சிலம்பினிலே செய்திகளாய்ச் சொன்னவற்றை நியெடுத்த விழாவினிலே காண வந்தோர் நெஞ்சார வாழ்த்தியுனைப் போற்றக் கண்டோம்
தமிழ் மணக்கும் சங்கமது சமைத்து வைத்து அமிழ்தினிய தமிழ்வளர உழைத்து வந்தீர் உமதியின வாழ்வு தனைத் தமிழுக்காக்கி உத்தமனாய் சத்தியனாய் வாழ்ந்து சென்றீர் எமதரிய பணிகளுக்கோர் எடுத்துக்காட்டாய் இருந்திட்டீர் என்றென்றும் தமிழும் வாழும் சமமாக சமயத்தை வளர்த்து வாழ்ந்தீர் சாம்போதும் விரதத்தைப் பற்றி நின்றீர் எமையாளும் ஈசனவன் அடிகள் சேர்ந்து எம்பணியை நாம் தொடர வாழ்த்துவீரே
ப.க.மகாதேவா ஆட்சிக்குழு உறுப்பினர் கொழும்புத் தமிழ்ச்சங்கம்.
69

Page 38
தமிழ்ச்சங்கமான தமிழவேள் கந்தசுவாமி ஐயாவுக்கு எமது கண்ணிர் அஞ்சலி !!! !!! !!!
தமிழ்ச்சங்கமாய் தலைநிமிர்ந்து நிற்கும் தமிழவேள் ஐயா
தேனியாய் திக்கெலாம் பறந்து பல்கலை நூல்கள் பக்குவமாய் பெற்று தரணியிலே தரமுயர்த்த
ஒப்பில்லா நூல்நிலையம் தலை நகரில் உருவாக்கி திக்குத் தெரியாது திகைக்கும் சமூகம்
சிக்கலின்றி சிறப்பாய் கற்று உயர்ந்திடச் செம்மலே அல்லும் பகலும் அயராது உழைத்தீர்
உடல் பொருள் ஆவி ஒப்பற்ற முத்தமிழ் அன்னைக்கு முழுமையாய் ஒப்படைத்த
தங்கத்தாத்தா சரித்திரத்தில் தனிஇடம் பெற்றீர் அறுபடை உறைகின்ற அழகன் அடிகளில்
இன்பமாய் இணைந்து இணையற்ற பேறடையீர்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
கொழும்புத் தமிழ்ச்சங்கம் பணிமனை அலுவலர்களும், நூலக அலுவலர்களும்.
70

கண்ணிர் அஞ்சலி
சங்கந் தழைக்கத் தமிழும் சைவழும் காத்த தமிழவேள் இ.க.கந்தசுவாமி அவர்களின்
மறைவு குறித்த இரங்கற்பா (எண்சீர் ஆசிரியவிருத்தம்)
*ܘ 1. முச்சங்கப் பணிதொடர முன்னவரும் ஏத்த
மெச்சுபணி தலைக்கொண்டாய் மேவியவர் வாழ்த்த துச்சமெனப் பணம்பண்டம் தூசியெனக் கண்ட்ாய்
இச்சகத்தில் இல்வாழ்வும் ஏற்றிடாதே வாழ்ந்தாய் உச்சமதாய்த் தமிழ்காத்தாய் ஊரவரும் ப்ோற்ற
ஊதியமும் வேண்டாத தொண்டனாக நின்றாய் கச்சிதமாய்த் தமிழ்ச்சங்கம் கட்டிக்காத் தாயே
காணாதே மக்களெல்லாம் கலங்கவேவிட் டாயே.
2. சின்னவீடு கொண்டகாணி சீராகத் தட்டில்
சேர்த்துவைத்த நூல்களெல்லாம் தூசிதட்டிக் காத்தாய்
தன்னமில் சேவையால் தமிழ்ச்சங்க நூல்கள்
தாங்கிடுமோர் நூல்நிலையம் தழைத்திருக்கக் கண்டாய்
பொன்னுலகும் போற்றிடவே சென்றதமிழ் வேளே
போனவிடம் எங்கணமே பேசிமுன் சாவே
பின்னவரும் உன்சேவை போற்றிநிற்க மண்ணில்
இன்னுமெண்பத் தொன்பதிலென் செய்யநினைத் தாயே!
3. வானளாவ வளர்ந்திடுமெம் வண்சங்கம் வாழ்த்த
வீதியுலா விழாவுகளும் வேண்டவே செய்தாய்
மோனவிர தமொடுயர்தொல் காப்பியமும் ஏத்தி
மானமொடு பெருவிழாவும் மாட்சிபெற வைத்தாய்
தேனளாவு சிலப்பதிகா ரம்தேர்ந்த நூற்கு
வானளாவப் பெருவிழாவும் வையகத்தித் கண்டாய்
வானவரும் வானுலகில் விழாக்கான வென்றோ
வேண்டியுனை அழைத்தனரோ விரும்புதமிழ் வேளே.
71

Page 39
4. சங்கமேத்து மோர்புலவன் சீரீழம் பூதந்
தேவனாரின் பேர்விளங்கச் சங்கமொன்று வைத்தாய்
பொங்குமெழில் விழாக்கண்டாய் புலவரெலாம் போற்ற
இங்குமினி யாருளரே இனியபணி ஈட்ட
மங்குல்தோய் கற்பிட்டிச் செட்டியவர் சைமன் V
மாண்புசிலை யின்றெழுந்து மாநிலத்தில் மாட்சி
தங்கவழி சமைக்காதோ தாங்கிடுமுோ சங்கம்
திங்களனி சிவபதமே செய்றாயோ தேர்ந்தே.
பாவாக்கம் : பன்மொழிப்புலவர் த.கனகரத்தினம் (துணைக்காப்பாளர் - கொழும்புத் தமிழ்ச்சங்கம், ஈழத்துப் பூதந்தேவனார் தமிழிப்புலவர் கழகம் செயற்குழு உறுப்பினர்)
நினைவேட்டிலிருந்து
தமிழுக்கும் சைவத்திற்கும் மானிடக் கல்விமேம்பாட்டுக்கும் பிரதிபலன் கருதாது பணியாற்றிய பெருமகனாரின் பிரிவு ஈடுசெய்வதற்கரியது
பேராசிரியர் .சி.தில்லைநாதன்
1998 ஆம் ஆண்டு தமிழ்ச்சங்க இரண்டாம் கட்டிடவேலை ஆரம்பமானபோது அவரைக்கண்டு அவரின் அன்பால் ஈர்ந்து போனேன். அன்று முதல் இன்றுவரை அவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றது.சிலப்பதிகார விழாவின்போது உலக அமைதிக்காக பிரார்த்தனை செய்யவேண்டும் என்று கூறியவர் இன்று அமைதியாகி விட்டார்.
எஸ் ராமதாஸ்
72

89 ஆண்டுகள் வாழ்ந்து அரும்பணியாற்றிய
உறுதிபடைத்த தமிழுள்ளம் தமிழவேள் கந்தசுவாமி
ஈழவேந்தன் அனுதாபம்
“மெலிந்த உடல், கூனிக்குறுகிய வடிவம், வெளித்தோற்றத்தில் எவ்விதக் கவர்ச்சியும் இல்லை. ஆனால் அந்த உடல் தாங்கிய உள்ளம் உறுதிபடைத்த தமிழுள்ளம். இதிதான் மூதறிஞர் தமிழவேள் இ.க.கந்தசுவாமியின் இனிய உள்ளம். இவரின் பெருமையை பலர் அறிந்திருக்கவில்லை. ஆனால், அறிந்தவர்கள் அவர் பாதங்களில் விழுந்து வணங்கவும் தயங்கமாட்டார்கள். 89\ஆண்டுகள் வாழ்ந்து தமிழுக்கும் சைவத்துக்கும் அரும்பணியாற்றிய அவர் இன்னும் 11 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் அவரது நூற்றாண்டு பிறந்தநாள் விழாவைக் கொண்டாடும் பேற்றைப் பெற்றிருப்போம். ஆனால், அதற்கு எமக்கு கொடுத்து வைக்கவில்லை.
இவ்வாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தன் தமிழவேள் இ.க.கந்தசுவாமியின் மறைவு குறித்து விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார். அச்செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் திகதி இந்தியா என்னை இலங்கைக்கு நாடு கடத்திய போது நான் முதலில் சந்தித்து வாழ்த்துப் பெற்ற பெருமகன் கந்தசுவாமி அவர்களாவார். “தந்தை செல்லாவிடமிருந்த உள்ள உறுதி உங்களிடமிருப்பது கண்டு நான் பெருமைப்படுகின்றேன்’ என்று அவர் சொன்ன நற்றமிழ் சொற்கள் எம் நெஞ்சில் நிலைத்தவையாகும். கொழும்புத் தமிழ்ச்சங்கத்திற்கு நான் வரும் போதெல்லாம் அவரது கைகளைப்பிடித்து முத்தம் சொரிந்து விடைபெறுவது எனது வழமையாகும்.
73

Page 40
1-9-1919 தோன்றிய இவர், 19-10-2008 சென்ற ஞாயிறு அன்று நிறைவாழ்வு வாழ்ந்து நிலமிசைநீடு புகழை நிலைநாட்டி மீளாவுலகு சென்றுள்ளார். சில வரலாற்று ஆய்வுகளின் படி தமிழிசையின் முன்னோடியாக விளங்கிய காரைக்காலம்மையாரின் வழித்தோன்றல்கள் இணுவிலை வதிவிடமாகக் கொண்டு வாழ்ந்துள்ளனர் என்பதை அறியக்கூடியதாக உள்ளது. அந்த ஊரில் பிறந்து செந்தமிழ் உடல் சிவநெறி உயிர் என வாழ்ந்த புகழ் பூத்த குடும்பத்தில் பிறந்த இவர், இணுவில் சைவமகாஜனா கல்லூரியிலும் பின்பு கொழும்பு றோயல்கல்லூரியிலும் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார்.
ஏறக்குறைய கால்நூற்றாண்டுக்கும் மேலாக கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் செயலாளராகவும் ஆட்சிக்குழு உறுப்பினராகவும் மற்றும் வெவ்வேறு துறைகளிலும் இவர் ஆற்றிய பணியை கொழும்புத் ‘தமிழ்சங்கத்தின் பதிவேடுகள் எடுத்துக்காட்டுகின்றன. 1983இல் இனக்கலவரம் நடைபெற்ற மிக நெருக்கடியான காலகட்டத்தில் தன் உயிரைத் துச்சமெனமதித்து தமிழ்ச்சங்கத்தையும் சுற்றாடலையும் பாதுகாத்த பெருமை இவரையே சாரும். கொழும்புத் தமிழ்சங்க வரலாற்றில் மிக நெருக்கடியான காலகட்டத்தில் மிகத் துணிவோடு இவர் ஆற்றிய பணி பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியதாகும். கொழும்புத் தமிழ்ச்சங்கத்தை மட்டுமன்றி ஈழத்துப் பூதந்தேவனார் புலவர்கழகம்,
சைமன்காசிச் செட்டி பணிமன்றம் ஆகியவற்றை தோற்றுவித்த பெருமை இவரையே சாரும். சங்கச்சான்றோன் ஈழத்துப்பூதந்தேவனார் பற்றியும் புத்தளம் சைமன்காசிச்செட்டியார் பற்றியும் இவர் வரைந்துள்ள கட்டுரைகள் இவருக்கு அழியாப்புகழைத்தருவன. சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் செந்தமிழ்ச் செல்வி இதழில் இவரது கட்டுரைகளை வெளியிட்டு தமிழ் கூறும் நல்லுலகம் இவரின் புகழை உரிய முறையில் அறியச் செய்தது.
ஈழத்துப் பூதந்தேவனாரையும் சைமன் காசிச் செட்டியாரையும் எம் நினைவுக்கு கொண்டு வந்த இவர், திருமுறை விழாக்களை
74

நடத்தி இன்பத்தமிழால் இறைவனைப் பாடச் செய்தவர். ஒல்காப்புகழ் வாய்ந்த தொல்காப்பியருக்கு தமிழறிஞர்களை அழைத்து விழா எடுத்த இப்பெருமகனார் நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்திற்கும் சிந்தை நிறைவோடு விழா எடுத்தும் தமிழ் ப் பணியை அவரினி வழித்தோன்றலாகிய நாம் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டுமென்று சொல்லாமல் சொல்லி எம்மிடமிருந்து விடை பெற்றுள்ளார். அவர் இறுதியில் சிலப்பதிகாரக் கட்டுரைகள் என்ற மலரில் “தமிழகத்துக்கு செந்தமிழ்க்காப்பியம் சிலப்பதிகாரம்” என்ற தலைப்பில் வரைந்த கட்டுரை அவரின் தமிழாய்வுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக.
75

Page 41
சர்வதேச மொழியியல் வரலாற்றிலும் சமயவிழிப்புணர்விலும் தமிழ் மொழியில் சங்கச் சான்றேன்
ஆசிரியர் அவர்கள் அமரத்துவம் அற்புதமாகும்!
யுக தர்ம நிலையில் தர்மம் நிலைபெறும் காலம் கலியுகத்தில் நினைக்க நிறைவுறும் காலமாகும்.
பஞ்சாங்க மரபில் கலியுகம் 5110 சர்வதாரி வருடம் ஐப்பசிமாதம் ஈழத்து பூதந்தேவனார் அரங்கு அவரின் அருஞ் சாதனை நிகழ்வாகும். பாரதமும் ஈழமும் தொன்மைமிகு பண்புமையமாகும். திருமூலர் திருமந்திரம் சிவனடியே சிந்திக்கும் சிகரமாய் யாழ்ப்பாணம் இணுவிலூர் இந்துசமய விழிப்புணர்வுகள் முத்தமிழ் வளர்க்கும் நித்திய மையமாகும்.
தமிழ்ச் சங்கங்கள் பலவாக அமையும் . அவை நிலையான இடஅமைவுடன் கொழும்பு மாநகரில் ருத்திராமாவத்தையில் அமர்வு அறுபத்தாறு வருடத்தொடர்பாகும்.
இவரின் தொடர்புகள் நாற்பத்து ஐந்து வருடங்களுடையது. எனவே இவரது காலத்தில் ஐம்பது வீததத்திற்கு மேலாகும். இவற்றில் கப்பித்தாவத்தை பிரதம குருக்கள் சண்முகரெட்ண சர்மாவினதும, திரு.மு.வைரவப்பிள்ளையினதும், அமரரினதும் தொடர்புகள் சிலப்பதிகார விழாப் பதிவும் மண்டப விரிவாக்கமும் நூலகப் பணிவிரிவாக்கமும் சான்றாகும், சமயங்கள் மொழிகள் மனிதப்பண்பில் தர்மம் நிலைபெற தொன்மை வழிகளாகும். இவற்றில் சிறப்புகள் உலக அமைதிக்கு வழிகாண அமரரின் சிந்தனை வழியில் சிந்திப்போமாக..!
76
 

அவரின் ஆத்மா என்றும் நிலைபெற அவரின் பணிகள் தொடர தமிழ்ச் சங்கம் வழிகாட்ட பிரார்த்திப்போமாக!
ஓம் சாந்தி
இந்து சமய நிறுவனங்கள் சார்பாக இலங்கை இந்து இளைஞர் பேரவை திருகோணமலை இந்து அரச் "ஊழியர்கள் இணையம் வவுனியா
கலியுகம் 5110, சர்வதாரி வருடம், ஐப்பசி ஆறு புதன் கிழமை
அமரரின் இறுதிக் கிரியைகள் தமிழ்ச் சங்க மண்டபத்தில் புதன்கிழமை
இடம்பெற்று கல்கிசை இந்துமயானத்தில் அக்கினியுடன் சங்கமாகும் (22.10.2008)
77

Page 42
தமிழ்மொழி மிகத்தொன்மையானது. இலக்கியவளம் உள்ளது. இவ்வகைச் சிறப்புகள் உள்ள தமிழ் மொழியில் உள்ள நூல்களுள் சிலப்பதிகார காவியம் தனித்துவமான பல சிறப்புகளும் பயன்களும் உள்ளது. இவைகளைத் தமிழுலகு உணர்தற்காக இச்சிலப்பதிகாரப் பெருவிழாவை ஈழத்துப் பூதந்தேவனார் புலவர் கழகம் ஒழுங்கு செய்தது.
இச்சிறப்பு நிகழ்வில் தமிழகத்துத் தமிழ்ப் பேரறிஞர்களும் இலங்கைத் தமிழ்ப் பேரறிஞர்களும் அரசசார் அமைச்சர்களும்,கல்வி அமைச்சின் முன்னாள் மேலதிகச் செயலாளர், இந்துசமயப் பணிப்பாளர், மொறிசியசு நாட்டுக் கெளரவத்துாதுவர், கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் ஆகியவர்களும், தமிழறிஞர்கள் தமிழ் ஆர்வலர்களும் பங்குபற்றுவது பேருவகை தருகிறது. அனைவரையும் உளங்கனிந்த பணிவொடு வரவேற்கின்றேன்.
ஈழத்துப் பூதந்தேவனார் என்பவர் மதுரைத் தமிழ்ச் சங்க காலத்தில் இந்நாட்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர் இவர் மதுரைத் தமிழ்ச்சங்கப் புலவர்களுள் ஒருவராகித் தமிழ்ப்பணி புரிந்தார். இவரது ஏழு பாடல்கள் அதிசிறந்த எட்டுத்தொகை நூல்களில் உள. இதனால், இலங்கைத் தமிழர் தொன்மையையும் இவர்களின் தமிழ்ப்புலமைத் திறனையும் உலகு உணர வாய்ப்பு ஏற்பட்டது.
இவற்றை அனைவர்க்கும் உணர்த்தற்காகப் பூதந்தேவனார் புலவர் கழகம் 2003ஆம் ஆண்டு நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் ஆதீன முதல்வர் ஆசியோடு நிறுவப்பெற்றது. புகழ்பெற்ற ஈழத்துத் தமிழ்ப்புலவர் மாநாட்டை யாழ்ப்பாணத்திலும், தொல்காப்பிய மாநாட்டைக் கொழும்பிலும் இக்கழகம் நடத்தியது. திருவாவடுதுறை ஆதீன முதல்வர் பாராட்டுப்பெற்ற தொல்காப்பியக் கட்டுரைகள் நூல் வெளியிடப் பெற்றது.
78
 

தமிழர் தொன்மையை உணர்த்தத் தமிழக அறிஞர்கள் திருவள்ளுவர் ஆண்டை அமைத்தனர். திருவள்ளுவருக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் தொல்காப்பியர் வாழ்ந்தவர். இவரது தொல்காப்பிய நூல் தமிழின் முதன்மை நூலாக நிலைபெற்று விளங்குகிறது. ஆகவே தமிழர் தொன்மையை உணர்த்தத் தொல்காப்பிய ஆண்டே உரியது. இதனை நிலை நிறுத்தற்காக இக்கழகம் 2004,2005 ஆண்டுகளில் வெளியிட்டது.
தமிழும் தமிழினமும் உலகில் புகழ்பெற உதவிய தமிழ்ப் புலவர் மரபு இன்று அருகி வருவதால் இம்மரபை நிலைபெறச் செய்தற்காக நாவலர் வழியில் தமிழ்ப் புலவர் கல்வி நிலையத்தை நிறுவ இக்கழகம் திட்டமிட்டுள்ளது. மலேசியத் தமிழர் தமிழுணர்வு உள்ளவர்கள். மலேசியத் தமிழ் இலக்கியக் கழகம் தமிழ்ப்புலவர் மணித்தேர்வை நன்கு நடத்திவருகிறது. இன்று இங்கு வந்துள்ள பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியன் அவர்கள் இவர்கள் அழைப்பை ஏற்று அங்கு சென்று இப்புலவர் மணித்தேர்வு விழாவில் உரை நிகழ்த்தினார்.
பண்டைத் தமிழ் இலக்கியங்கள் மக்கள் வாழ்க்கைக்கு உரிய உயரிய சிந்தனைக் கருவூலங்கள் நிறைந்து உள்ளதால் இவற்றைப் பரப்புவதில் ஈடுபட்டுள்ள இக்கழகம் இன்று இச்சிலப்பதிகார விழாவை நடத்துவதற்கு இதுவே காரணம். சங்க இலக்கியங்களைக் கற்காதவர் தமிழர் எனச் சொல்வதில் பயனில்லை என்பது பெரும் அறிஞர் ஒருவரின் கருதது.
சிலப்பதிகாரம் தமிழர்காப்பியம். ஒரே ஒரு முத்தமிழ்க் காப்பியம். சிலப்பதிகாரம், திருத்தொண்டர் புராணம், திருவிளையாடல் புராணம் மணிமேகலை ஆகியவையே தமிழர் காப்பியங்கள். ஏனையவை தமிழர் காப்பியங்கள் அல்ல. பிறமொழிக்காப்பியங்களை மதித்தல் மக்கட்பண்பு. மதித்தல் வேறு போற்றுதல் வேறு. சிலப்பதிகாரம் நன்கு போற்றப் பெறாமல் இருப்பது மிக வேதனைக்கு உரியது. கோவலன் கண்ணகி கதையைப் பலர் அறிவர். ஆனால் இக்காவியத்தின் விழுமியங்கள் நன்கு அறியப்படாமலும் பயன்படுத்தப்படாமலும் உள. சிலப்பதிகாரம் மக்கள் காவியம்.
79

Page 43
சீவகசிந்தாமணி சிறந்த காப்பியம் ஆயினும் அக்காப்பியத்தினால் தமிழகம் பாதிப்புறும் என்பதை நன்கு உணர்ந்த சோழப் பேரரசு முதலமைச்சர் சேக்கிழார் திருத்தொண்டர் புராணத்தை அமைத்துத் தமிழகத்தைப் பாதுகாத்தார். தமிழ்மொழியை இறைவனே அருளினார். இறைவன் தமிழ்ப்பாடல்களை விரும்பும் இயல்பினன் எனப்புலவர்கள் தெரிவுபடுத்தினர். திருஞானசம்பந்தர் முதலியோர் தமது பாடல்கள்மூலம் அற்புதங்களை நிகழ்த்தித் தமிழகத்தை வேற்றினத்தவர் ஆட்சியில் இருந்தும் காத்தனர். எனினும் சங்க காலத்தின் பின் ஏற்பட்ட மதப்பூசல்களினால் தமிழக அரசர்களும் தமிழகத்தவரும் வைதீக நெறியை அதற்கு உரிய வட மொழியை மதித்தனர். சோழ அரசர்கள் சிலர் வடமொழித் தொடர்புகள் மூலம் தம் மெய்க்கீர்த்திகளை எழுதினர். வடமொழியும் வடமொழி நூல்களும் உயர்ந்தவை என்னும் நிலை ஏற்பட்டது. கவியரசர் கம்பர் வடமொழியைத் தேவபாடை எனக் கூறினார். தமிழகத்திற்கு வேதங்கள் ஆயின.
சோழர் ஆட்சிக் காலத்தின் பின் தமிழகம் வேற்றினத்தவரான விசயநகர ஆட்சிக்கு உட்பட்டது. இவர்கள் வடமொழிப்பற்றாளர். இவர் காலத்தில் வடமொழிக் கிரந்த எழுத்துக்கள் தமிழிற் கலந்தன. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மறைமலையடிகள் முதலாய அறிஞர்கள் முயற்சியினால் வடமொழிக் கலப்பு நீக்கப் பெற்றது. எனினும் தமிழ் செம்மொழி ஆனபின்பும் கிரந்த எழுத்துக்கள் தமிழில் தொடர்ந்து இடம் பெற்றுவருகின்றது. இது உலகில் எம்மொழியிலும் இல்லாத நிலை தமிழில் இருக்கிறது. வேற்றினத்தவர் ஆட்சிகள் நீங்கிய பின்பும் பிறமொழிகளில் ஆதிக்கத்தில் இருந்து தமிழ் விடுபட முடியாமல் இருக்கிறது.
இதனை எம்மவர்க்கு உணர்த்த இச்சிலப்பதிகார விழா பயன்படும். பிறமொழிகளில் இருந்தும், பிறமொழிக் கலாசாரத்தில் இருந்தும் விடுபட்டால் தான் தமிழும் தமிழினமும் உலகில் உயர்வு பெறும். இப்பொழுது பெற்றோர் சிலர் தம்பிள்ளைகளுக்கு புரியாத வேற்றுமொழிப் பெயர்களை இடுகிறார்கள். இதனால் சில ஆண்டுகளின் பின் தமிழினத்தை இனம் காண்பது அரிதாகிவிடும்.
80

சிலப்பதிகாரத்தின் சிறப்புகளையும், பயன்களையும, உணர்த்தும் சிறந்த கட்டுரைகள் உள்ள நூல் வெளியிடப்பெறுகிறது. இளங்கோ அடிகள் கடவுள் வாழ்த்தை இடம்பெறச் செய்ததைக் காஞ்சிபுரப் புலவர் நடேசுநாராயணர் விளக்கினார். கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் மாலை என்னும் சொல்லை இக்காவியத்தில் ஆராய்ந்துள்ளார். காவியநாயகி கண்ணகி என்றும் கட்டுரையில் பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் சொல்லாற்றல் புலனாகிறது. சிலப்பதிகாரத்தில் இசைத்துறைப்பாடல்களைப் பேராசிரியர் திருமதி ஞானாகுலேந்திரன் அவர்கள் விளக்கியுள்ளார். பொதுவாக இதில் உள்ள கட்டுரைகள் போற்றத்தக்கவை. இந்நூல் வெளியீட்டுரையை கிழக்குப்பல்கலைக்கழக மொழித்துறை தலைவர் திருமதி ரூபி வலன்றினா பிரான்சிஸ் அவர்களும, ஆய்வுரையை பேராதனைப் பல்கலைக்கழக முனைவர் வ.மகேஸ்வரன் அவர்களும் நிகழ்த்தவுள்ளனர்.
இத்தொடக்க நாள் விழாவுக்கு வாழ்க்கைத் தொழில்நுட்பத்துறைப் பயிற்சித்துறை அமைச்சரும் மக்கள் நலன்களுக்கு உதவுபவரும் ஆகிய மாண்புமிகு பொ.இராதாகிருஷ்ணன் அவர்கள் பிரதம அதிதியாகவும் இந்நாட்டின் இன்றைய நிலையில் சைவமும் தமிழும் வளரப் பயன் உள்ளபணிகளைப் பலரும் போற்ற ஆற்றிவரும் இந்து சமய கலாசாரத் திணைக்களப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் அவர்கள் சிறப்பு அதிதியாகவும், மொறிசியசு நாட்டுத் கெளரவத் தூதுவர் தெ.ஈசுவரன் அவர்கள் கெளரவ அதிதியாகவும் பங்குபற்றுகின்றனர்.
இத் தொடக்க விழாவுக்குக் கல்வி அமைச்சின் முன்னாள் மேலதிகச் செயலாளர் உயர்திரு சிதில்லைநடராசா அவர்கள் பெரும் பதவிகள் வகித்து தமிழும், கல்வியும், கலைகளும் வளரப் பெரும்பணிகள் செய்தவர். மிக இடர்ப்பாடான நிலையில் மாணவர்க்கான தேர்வுகள் வன்னிப் பிரதேசத்தில் நிகழ நன்கு உதவியவர். ஆங்கிலேயர் ஆட்சியின் தொடக்கத்தில் பெரும்பதவிகள் வகித்தவரும் தமிழ் வரலாறு, தமிழ்ப்பண்பாடுகள் பற்றி ஆங்கிலத்தில் பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதி ஆங்கில அரசின் விருது பெற்றவருமான அறிஞர் சைமன் காசிச்செட்டி அவர்களின் இருநூறாம் ஆண்டு நிறைவு அவர் வாழ்ந்த கற்பிட்டியில சிறப்பாக நிகழ முன்நின்று உழைத்தவர்.
81

Page 44
தமிழகத்திலிருந்து உலகப் புகழ்பெற்ற தமிழ்ப் பேரறிஞர்கள் நால்வர் வந்துள்ளார். இவர்களுள் பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் தமிழகச் செம்மொழி ஆய்வு நிறுவன உறுப்பினர் தமது மகனின் திருமண நிகழ்வை நிறைவு செய்து எமது அழைப்புக்காக இங்கு வந்துள்ளார். தமிழறிஞர்களை அறிமுகம் செய்யவும் தமிழாலயம் இலக்கிய இதழின் சிறப்பு ஆசிரியர், பேராசிரியர் அறவாணன் அவர்கள் இந்திய மத்திய அரசின் செம்மொழி ஆய்வு நிறுவன உறுப்பினர் பல உலக நாடுகளில் சென்று தமிழ்ப் பணிகள் செய்தவர். 50க்கு மேல் நூல்களையும் 500 கட்டுரைகளயும் எழுதியவர். திராவிட ஆபிரிக்க மொழிகளின் ஒப்பீட்டு ஆய்வு செய்தவர். பேராசிரியர் தாயம்மாள் அறவாணன் தமிழ்த்துறை வளர்ச்சிக்குப் பல பணிகள் செய்தவர். தமிழ்த் தொடர்புள்ள மேற்கு ஆபிரிக்கச் செனகல் நாட்டுக்குச் சென்று பணிபுரிந்தவர். பேராசிரியர் அ.அறிவுநம்பி அவர்கள் புதுச்சேரிப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையிற் பணிசெய்பவர். கடந்த எமது தொல்காப்பிய மாநாட்டுக்குக் கட்டுரை அனுப்பியவர். எமது வேண்டுதலால் வந்துள்ளார்.
சிலப்பதிகார காவியத்தின்படியும் தொல்காப்பியத்தின் படியும் பெருவிழாவில் அறுமுறை வாழ்த்தை அறிமுகம் செய்துள்ளோம். இளங்கோஅடிகள் சிலப்பதிகார காவியத்தின் மூலம் மூவேந்தர் நாடுகளொடு இலங்கையையும் இணைத்துள்ளார். இலங்கைக் கயபாகு அரசனால் கண்ணகி வழிபாடு இலங்கையில் தமிழ்ப் பகுதியிலும் பெளத்த மக்கள் வாழும் பகுதிகளிலும் பரவி இன்றும் நிலைபெற்றுள்ளது. கண்டியில் மகா தேவாலயப் பகுதியில் பத்தினித் தெய்வம் என்னும் பெயரொடு கண்ணகிக்குக் கோயில் ஒன்று உள்ளது. ஆண்டுதோறும் ஆடிமாதத்தில் பெரகரா என்னும் பெயரோடு நிகழும் பெருவிழாவில் பத்தினித் தெய்வமும் இடம்பெற்றுள்ளது. கண்ணகிவழிபாட்டை நிலைபெறச் செய்ததினால் சேர அரசன் செங்குட்டுவனும் இலங்கை கயவாகு அரசனும் என்றும் போற்றுதற்கு உரியவர்கள் ஆவர்.
கண்ணகி கோவலன் எனக் கிராமங்களில் படிக்கப் பெறும் கதையில் கண்ணகி அம்மன் அவதாரமாகக் கூறப்படுகிறது. கண்ணகி வழிப்பாட்டால் மழைபெய்து நாடுவளம் பெறுதலால் கண்ணகி மாரி அம்மன் எனப் பெயர் பெற்று வழிபட பெறுகிறார். பல பிரதேசங்களில் மாரியம்மன் கோயில்கள் புகழ்பெற்று விளங்குகிறது.
82

இப் பெருவிழா சிலப்பதிகாரக் காவியச் சிறப்பைப் பரவச் செய்வதை நோக்கமாகக் கொண்டது போல இந்நாட்டில் விரைவில் அமைதி ஏற்படச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டது. ஆத்மீகவாதிகளால் நாட்டில் நல் அமைதி ஏற்பட முடியும் என அண்மையில் அம்பாறை மாவட்டத்தில் சர்வமத மாநாட்டில் உரை நிகழ்த்திய தேசபந்து ஜெசீமா இஸ் மெயில் அம்மையார் தெரிவித்துள்ளார்.
தமிழ் வாழ்ந்தால் தமிழர் வாழ்வர். நாடுவாழும். உலகு வாழும். தமிழர் காப்பியத்தைப் போற்றுதற்காக இவ்விழாவில் பங்குபற்றப் பல பகுதிகளில் இருந்து அறிஞர்களும, ஆர்வலர்களும் வந்துள்ளனர். தமிழும் தமிழினமும் உலகில் பண்டுபோல் உயர வாழ்வை அர்ப்பணித்துப் பணிகள் செய்யும் இப்பெருவிழாவுக்கு வந்துள்ள அனைவரையும் உளம்கனிந்த பணிவோடு பேருவகையோடு வரவேற்கின்றேன்.
தொல்காப்பிய மாநாட்டில் பேருதவிபுரிந்த பேராசிரியர் அகத்தியலிங்கம் அவர்களும் அவர் மனைவியும் எதிர்பாராவகையில் உலகு நீத்தள்ளனர். இதே போன்று தொல்காப்பிய மாநாடு சிறப்புற நிகழ உதவிய இருவர் இன்று இல்லை. இப்புலவர் மாநாடு உருவாக உதவிய ஆசிரியர் பஞ்சாட்சரம் அவர்களையும் வித்துவான் க.சொக்கன் அவர்களையும் நினைவு கூருகிறோம்.
83

Page 45
நினைவஞ்சலி அழைப்பிதழ் (இணுவில் கல்விச் சமூகம் பொதுமக்களும் இணைந்து செலுத்தும் காணிக்கை)
காலம் : 09.11.2008 ஞாயிற்றுக்கிழமை பி.பி 2.00 மணி இடம் : இணுவில் மத்திய கல்லூரி ஆரம்பப்பாடசாலை மண்டபம் தலைவர் : திரு.அ.சதானந்தன் அவர்கள்
(முதல்வர், யா/இணுவில் மத்திய கல்லூரி)
நிகழ்ச்சி நிரல் 01. மெளனப் பிரார்த்தனை 02. தலைவர் அவர்கள் நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தல் 03. பிரார்த்தனையுரைகள்
திரு.செ.இலகுநாதன் அவர்கள் (தலைவர், சிக்கனக் கடன் வழங்கு கூட்டுறவுச் சங்கம்) திரு.பெ.கனகசபாபதி அவர்கள் (தலைவர், யாழ் மாவட்டக் கூட்டுறவுச் சபை) திரு.வை.க.சிற்றம்பலம் அவர்கள் (முதுபெரும்புலவர், இணுவில்) திரு.மு.திருஞானசம்பந்தபிள்ளை அவரகள் தலைவர், அகில இலங்கை சைவப்புலவர் சங்கம்) திரு.க.தேவராஜா அவர்கள் (பீடாதிபதி, முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) திரு.செ.குபேரநாதன் அவர்கள் (கோட்டக் கல்விப்பணிப்பாளர், உடுவில்) திருமதி.ச.மஞ்சுளாதேவி அவர்கள் (பிரதேச செயலாளர், வலிதெற்கு, உடுவில்) பேராசிரியர்.அ.சண்முகதாஸ் அவர்கள் (வாழ்நாள் பேராசிரியர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) செல்வி. சசிகலா நாகலிங்கம் அவர்கள் (ஆசிரியை) செஞ்சொற்செல்வர். ஆறு.திருமுருகன் அவர்கள் (தலைவர், துரக்காதேவி தேவஸ்தானம்) ஆசிரியரின் பணியினை நெறிப்படுத்தும் பிரமுகர்கள் உரை 04. நன்றியுரை
திரு.சி.சரவணபவன் அவர்கள்
84

தமிழ்சங்கத்தைத் தாங்கிய தமிழவேள்!!!
தலைநகர் தமிழ்ச்சங் கத்தைத்
தாங்கிய தமிழவேள்! நீ நிலையிலா வாழ்வை நீத்து
நீள்துயில் கொண்ட சேதி தொலைபேசி யூடு பெற்றுத்
துயரத்தில் தோய்ந்தேன்! ஐயா! தலைவன் நீ! தந்தை போல்வாய!
தாளினைப் பணிந்தேன் போய்வா!
தமிழிலே தோய்ந்த சான்றோன்!
தமிழுக்காய் வாழ்ந்து மாண்டோன்!
அமிழ்தமாம் மொழிக்குத் தன்னை
அடிமையாய் ஆக்கிக் கொண்டோன்!
தமிழுக்கு விழாக்கள் நூறு
w தலைநகர் கொழும்பில் கண்டோன்!
தமிழுள்ள வரைக்கும் உன்பேர்
தரணியில் வாழும்! வாழும்!
உருவமோ மெலிந்த போதும்
உள்ளத்தில் உறுதி; கொண்ட கருமமே கண்ணாய் நின்று
காரியம் பலதை வென்றோன்! அருமையாய் நாவில் வார்த்தை
அளந்துமே பேசு முந்தன் பெருமையைப் பேசுதற்கு
பெற்றோம் நாம் பெரிய பேறே!
*செங்கதிரோன்? த.கோபாலகிருஷ்ணன் முன்னாள் இலக்கியக்குழுச் செயலாளர்
85

Page 46
சிவபதமடைந்த முன்னாள் கொழும்புத் தமிழ்ச் சங்கப் பொதுச் செயலாளர் அமரர் தமிழவேள் கந்தசுவாமி அவர்களின் பிரிவாற்றாமை குறித்துச் சங்கத்தார் சார்பாகப் பாடப்பெற்ற
அஞ்சலிப் பா
புண்ணாகிப் போனதுள்ளம் சேதி கேட்டுப்
புலனைந்தும் அடங்கியபோல் உணரலானோம்
“கண்ணாகத் தமிழ்காத்த தமிழவேளைக்
காலன்தன் கைகொண்டான்'சேதி கேட்டே
மண்ணிலுயிர் வாழுமட்டும் தமிழ்தொண்டிற்கு
முற்றுந்தன் உடல்பொருளை ஆவி ஈந்த
புண்ணியத்தைச் செய்தமகான் கந்தசசுவாமி புவியுள்ள வரைநெஞ்சுள் வாழு வாரே.
தலைநகரில் தமிழோங்கச் சைவம் ஓங்கச்
சான்றோர்கள் தோற்றுவித்த தமிழ்ச்சங்கத்தை நிலைபெறுத்தத் துயிலழிந்து சேவை செய்தாய்
நன்றிகொல்லா மக்கள்நாம் நினைவில் கொல்லோம் வலிந்துன்றன் வாழ்வுதனை அர்ப்பணித்தாய்
வரலாறு சாற்றுகின்ற உண்மை உன்போல் சலியாது பாடுண்ட தமிழன் சங்கச்
சரித்திரத்தில் வேறில்லை தமிழவேளே!
மண்குடிலுள் தொடங்கியதாம் சங்கம் அன்று
மாடங்கள் பலகொண்ட கட்டிடங்கள் இன்றுள்ள நிலைமைக்குத் தோற்றுவாய்நீ
இதயகத்தி கொண்டவர்கள் ஏற்கும் உண்மை விண்புகழின் காரணமும் நிதான் சங்க
வரலாறும் நீயேதான் மறுப்பாருண்டோ கண்மறைந்து போனாலும் காலமெல்லாம்
கந்தசுவாமி எனும்நாமம் அழியமாட்டா.
கல்விக்குத் தொண்டுசெய்தாய் கற்போர் தம்மின்
கல்விஞானம் பெருகவெனத் தமிழ்ச்சங்கத்தில் தொல்பெருமை கொண்டதமிழ் நூல்கள் சேரத்துத்
தொடக்கிவைத்தாய் நூலகத்தை உன்றன் நாமம் இல்லாது போகாது என்றும் வாழும்
இயலிசையும் நாடகமும் (தமிழ்) வாழ்தல் போல வல்லகல்வி ஞானத்தோர் தோன்றுதற்கு
வழிசமைத்த காரணத்தால் வாழ்வாய் ஐயா!
தமிழவேளே! சான்றோனே! தமிழின் செல்வா!
தாங்காத மனங்களொன்றிக் கண்ணிர் பெய்ய எமைவிட்டுப் போகின்றாய் இயற்கை வெற்றி
எய்தியது என்றாலும் என்றும் மங்காச் சுமைபெரிது நீசுமக்கும் புகழை மாய்க்குஞ்
சக்தியதற் குண்டாமோ தோற்றே போகும் தமக்கென்று வாழாத சான்றோர்க் கென்றுஞ்
சாவில்லை சத்தியமே துயரில் தோய்ந்தோம்.
கவிதையாப்பு:ஜின்னா ஹர் ஷரிபுத்தீன்
86

கொழும்பு தமிழ்ச்சங்கம் அமரர் தமிழவேள் இ.க.கந்தசுவாமி அவர்களின் நினைவுப்பரவலும் அஞ்சலிக்கூட்டமும்
இடம் : சங்கரப்பிள்ளை மண்டபம்
காலம் : 21.11.2008 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி
தலைமை: பேராசிரியர் சபா ஜெயராசா, (தலைவர், கொழும்புத் தமிழ்ச்சங்கம்)
நிழ்ச்சி நிரல் தமிழ் வாழ்த்து: திருமதி பூமணி நடராசா மெள அஞ்சலி உருவப்படம் திறத்தல், மாலை அணிவித்தல், ஈகைச்சுடர் ஏற்றல். வரவேற்புரை : திரு.எஸ்.எழில்வேந்தன்
(இலங்கியக் குழுச் செயலாளர், கொழும்புத் தமிழ்ச்சங்கம்) உரை நிகழ்த்துவோர் :
. கலாநிதி வ.மகேஸ்வரன்
வைத்தியகலாநிதி ஜின்னாஹற் ஷரிபுத்தீன் உடப்பூர் திரு.என்.நடராஜா . கலாசூரி ஆ.சிவநேசச்செல்வன் சைவப்புலவர் சு.செல்லத்துரை வைத்தியகலாநிதி விக்னவேணி செல்வநாதன் நன்றியுரை : ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி தமிழ்வாழ்த்து: திருமதி றஜனி சந்திரலிங்கம்
அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்.
ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி பொதுச்செயலாளர் இல.7. 57வது ஒழுங்கை கொழும்பு - 06. தொலைபேசி இல : 2363759
87

Page 47
Message of Dr.S. Manoharan
I am writing this letteronbehalfof Sangarapillai Family uponhering the sad demise of Mr.Kandasamy we all fondly call him kandasamy Master.
Our family's association with Kandasamy Master spans moreover 50 years. Our late father Sangarapillai-had first methim in the early fifties of the last century when he became an ordinary member of the Sangam, since then, Kandasamy Master has been closely associated and intimately known not only my father but each and every member of our family.
Istill vividly recall when I was a teenager and attended the tution class at Sangam;he was a very familiar figure since he was the one who wore the traditional Tamil vertithroughout his life.
when my father became the president of the Colombo Tamil Sangam (19801983), Kandasamy Master was the secreatary. Both have closely worked to propagate Tamil culture. During their time, many new and novel ideas were implemented at the Sangam, which is continued eventoday.
when my father migrated to USA in 1983, Master kept in tough with my father. I still recall my father reading Master's letter to me. Every letter contained his concerns and ideas for the good of Tamil Sangam. my father wrote most of his Tamil books while he was in USA. Master gave all the moral support to my father to write these books.
When my father passed away in 1990, it was at the persuasion and request ofmaster thatmy family decided to fund the hall and the library at the sangam. Since our family was Srilanka, Master was the one and only link that we had at Tamil Sangam. it was Master who asked us that we should do some thing in memory of our father. Giving money inonething. However forus to
88

fund such alage amount of money-especially when we were outside and did not know most of the commitee members of Tamil sangam-came to truition only because of Master.
Masterhad keptincommunication withme ever sincemy fatherpassed away. Iwould geta letteratleastevery six months from him. Mostofthese letters were about his ideas to develop Tamil sangarpin facthe had writtentome about a month ago before he passed away ąþout an even that he was actively master, organizing. Ihad asked my sisterin law (Yogiponnampalam) toget intouch with masterin regards to his master. She had asked one of her friend-Thigaraja-togetintouch withmaster. when he had called sangam, he was told that master was admitted to the hospital when he had gone to the hospital next day, he was told that he had passed away.
Master tirelessly worked for the upliftment for the Tamil sangamand tamil culture. Sure, he would have occasional differences with the Sangsm members over the way some of the things were done. but he never had his personal ambtions in any of these conflicts. Now that he had passed away; I want to say something. Both myself and my brother-Dr.Nagendran had wanted to help masterfinancially, every time when we offered, he refusednot once but many times. He would always say that what he wanted from us istohelp Sangam to propagate Tamil culture. I had even sent SOMe clothes for him from India sometime back-through Mr.Subramanium. He would not even take this.
He was a great soul and peace loving Tamil gentelman. Isincerely hope his name would be etched as long as Colombo Tamil Sangam survives. His contribution to the Tamil culture is immense and I hope the Eelam Tamils would be thankful for this. He worked hard every minute in his life for the good of thesangam. we sincerely hopesangam would reconize this in a fitting way.
89

Page 48
for our family, we had losta dear and loving friend. He was fatherfigure for us, though we had lost him, we hope our asdsociation with Colombo Tamil sangam will conntinue and blossom.
Eeelam Tamils are going through avery bad period. I hope Sangam members would work closely and amicably and propagate the Tamil culture and adhere to the visions of the founding fathers of the sangam.
I am not sure whether master has any relatives in Colombo. Ifso please handover a copy of this letter to them. I would also like you to place this letter at the next sangam meeting.
Due to the political situation, we avoid coming. ifsituation permits, I will meetyouinColombo when I come next time.
May Kanfidasamy master's Athma attain Moksha Dr.S. Manoharan (U.K)
90

மலர் வடிவமைப்பு
திரு. சி. சரவணப்வன்
திரு.மா.சடாட்சரன்
திருமதி ஹம்சகெளரி சிவஜோதி
திருமதி ஜெயறி அசோக்குமார்
செல்வி. து. தாரணி
செல்வி க.ஹேமலதா
செல்வன். தெ.சத்தியசசீலன்
திரு.க.குமரன்
91

Page 49
நன்றி நவிலல்
19.10.2008ல் காலஞ்சென்ற திரு.தமிழவேள் கந்தர் இலகுப்பிள்ளை கந்தையா கந்தசுவாமி அவர்களின் இறுதிக்கிரியைகளில் பங்குபற்றிய கெளரவ அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், பணிப்பாளர்கள், பாராளுமன்ற மாகாணசபை உறுப்பினர்கள, அன்பர்கள், ஆதரவாளர்கள், உறவினர்கள், பண்ணிசைத்த பெரியோர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், கல்விநிலையத்தவர்கள், மலர்வளையங்கள் வைத்து அஞ்சலி செய்தோர், அனுதாயச் செய்திகள் அனுப்பியோர் அவர்களைப் பற்றி செய்திகைள் பிரசுரித்த பத்திரிகை ஸ்தாபனங்கள், ஒளி, ஒலி பரப்பிய ஊடகங்கள் இறுதிக் கிரியைகளின் போது இரவு பகல் பாராது அயராது உழைத்தோர் கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர், பொதுச் செயலாளர், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் இம்மலர் வெளிவர உதவிய அனைவருக்கும். குடும்பத்தினரின் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி
தமிழவேள் குடும்பத்தினர்
92


Page 50
| -
 

ாள்
ಇಂಕ್ jiijiiiii t|1| ||r|lii Fiiiiiiiiiij fiftyFiff LIITTYIIII i Itji Trinistri Trini
டகிபதிகங்கள் ",
புதிதா ungain" த ந பர் Italijiћи цвti
filii