கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தேரடி செல்லப்பா சுவாமிகள்

Page 1
யாழ்ப்பான
GJ5 JIQ GJ@QĪi
 
 

த்து நல்லூர்
LITT JIGI II Ifab6iiI
| கொழும்புத் தமிழ்த் வளித நிலச் क लोकन। 蔷
-
క్రికి Afi 堑
ー t

Page 2

i ·
யாழ்ப்பாணத்து நல்லுரர்.
தேரடிச் செல்லப்பா சுவாமிகள் திவ்விய சரித்திரம்
வெளியிடுவோர்:
சிவதர்ம வள்ளல், சிவநெறிப் புரவலர், மில்க்வைற் தொழிலதிபர் க. கனகராசா J. P. அவர்கள்
1984

Page 3
.ெ சிவமயம்
"ஒரு பொல்லாப்பும் இல்லை நாமறியோம். ஆரறிவார் எப்பவோ முடிந்த காரியம் முழுதும் உண்மை"
V7
"There is not one wrong thing
We do mot know. Who kmotrys? It is as it is All is truth.'

டெ சிவமயம்
இலங்கை சிவபூமி
உலகத்தின் மையத்தில் இந்துசமுத்திரத்தால் சூழப் பெற்றுப் பொன்போல் இலங்குவது எங்கள் நாடு. இது பொன் என்னும் பொருளில் ஈழம் எனவும் வழங்கும். இலங்கை ஒரு சிவபூமி என்பது திருமூலர் வாக்கு. சிவனுக் குரிய ஈஸ்வரங்கள் மலிந்த நாடு, சித்தர்கள் உலாவிய சிறப்புடைய நாடு.
சித்தத்தைச் சிவன்பால் வைத்த சித்தர்களின் பாரம் பரியம் பெரிது. முத்தியானந்தர் என்னும் கடையிற் சுவாமி கள் முதல் யோக சுவாமிகள் வரை யோகியர், ஞானிகள், துறவியர், சித்தர்கள் யாழ்ப்பாணமெங்கும் தங்கள் ஞானச் சுவடுகளை விட்டுப் போயிருக்கிருர்கள். சித்தர்களின் சமாதிக் கோயில்கள் இலங்கையின் நாற்புறங்களிலும் அமைந்த அளவிற்பார்க்க, வடபிரதேசமாய யாழ்ப்பாணத்திலேயே அதிகமாக அமைந்துள்ளன. சித்தர்களின் சமாதிகளை மைய மாகக் கொண்டமைந்த மடங்கள் யாழ்ப்பாணத்தில் பல பாகங்களிலும் பண்பாட்டிடங்களாக மலர்ந்துள்ளன. அவை, குருபூசை மடங்கள் என்னும் பெயரில் அன்னம்பாலிப்பன. வாகவும் உள்ளன. ஞானவொடுக்கத்துக்குரிய நல்ல சூழ லமைந்த இடங்களாகவும் உள்ளன. : ,
நல்லூரை நனைத்த ஞானவெள்ளம் யாழ்ப்பாணத்து நல்லூர் தமிழ்நாட்டு திருவெண் ணெய் நல்லூர், ஆதித்த நல்லூர் போன்ற அரும்பெரும் " சிறப்பு வாய்ந்த பழைய நகர். நல்லூரைத் தலைநகராகக்" கொண்டு ஆரிய சக்கரவர்த்திகள் அகன்ற பெரு நிலப் பரப்பை அரசு செய்தபோது, தமிழ்நாட்டு இராமேஸ்வரத் தையும் பரிபாலித்து, சேதுகாவலர் என்னும் சிறப்புப்

Page 4
(4)
பட்டமும் பெற்றிருந்தார்கள். செந்தமிழும் சைவ நெறியும் தலையெடுத்த நல்லூரின் பழைய அரசிருக்கைக்கு அருகி லமைந்த நல்லூர்க் கந்தனுலயத்தைச்சூழ நாற்றிசைகளிலும் காவற் கோயில்கள் அமைந்திருந்தன. கிழக்கில் வெயி லுகந்தபிள்ளையார் கோயில், தெற்கில் கைலாசநாத சிவன் கோயில், மேற்கில் வீரமாகாளி அம்மன் கோயில், வடக்கில் சட்டைநாத சிவன் கோயில் அமைந்திருந்தன. அரசர்கள் நந்திக் கொடியும் நந்தி முத்திரையுங் கொண்டவர்களாய்ப் பரிபாலனஞ் செய்தனர்.
இத்தகைய புகழ் பூத்த நல்லூரின் அருமை பெருமை கள் யாவற்றையும் பதினேழாம் நூற்ருண்டின் இடைக் காலத்தில் போர்த்துக்கேயர் என்னும் பறங்கியர் பாழ் படுத்தி தரைமட்டமாக்கி விட்டனர். பின்னர் ஒல்லாந்தர் என்னும் உலாந்தாக்கள் அரசாட்சி செய்த காலத்தில் சைவ மறுமலர்ச்சி விடிவெள்ளிபோல மெதுவாக ஒளிவீசியது. புல வர்கள் பலர் பக்திப் பிரபந்தங்கள் பாடுந்தகைமையுடைய வர்களாய்த் தலையெடுத்தார்கள். நல்லூரை ஞான வெள்ளம் நனைத்தது. -
இன்றைய நல்லூர் - பண்டைய நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைப் பறங்கிய்ர் பாழ்படுத்தி, அத்திபாரத்தையும் கிளறிவிட்டபின், மறு மலர்ச்சிக் காலத்திலே 1734ஆம் ஆண்டளவில் ஒல்லாந்தர் ஆட்சியின்போது, யாழ்ப்பாணக் கச்சேரியில் உயர்ந்த உத்தி' யோகம் வகித்த பூரீமத் இருகுநாத மாப்பாண முதலியார் என்னும் பெரியார், அதிகாரிகளிடம் உத்தரவு பெற்று ஒரு வேற் கோட்டம் அமைத்து, வேல் வைத்து வழிபடுவதற் கான முறையை ஆரம்பித்தார். மக்கள் வழிபட்டுய்யும் வகையில் சிவத்திரு சுப்பையாக் குருக்கள் என்னும் செம்: மனச் செல்வர் பரார்த்த பூசையை முட்டுன்றிச் செய்து வந்தார். நல்லூருக்குக் கிழக்கிலிருந்த மிடத்தில் சிவத்திரு கங்காதரக் குருக்கள் கந்தபுராண படனஞ் செய்து பக்தி . நெறியைத் தூய்மைப்படுத்திவந்தார். -

( 5 )
நல்லூர்த் தேரடி
நாள்தோறும் வளர்ந்து வந்த நல்லூரின் சிறப்புவனப்பு புகழ்பெற்றனவாயின. கிழக்குப் புறத்தில் அமைந்த தேரடிக் குத் தணிச் சிறப்பு உண்டாயது. அங்கே காவல் தெய்வ மாய வைரவக் கடவுளின் ஆனந்த கோலாகல அருள் வீச் சும், அதனல் கவரப்பெற்ற அடியார் கூட்டமும் கருங்கல் மனத்தையும் கரையப்பண்ணின. கற்பூர வரிசையும், காவடி கள் வரிசையும், கந்தன் மீது பக்திப் பாடகர் வரிசையும் தேரடியைத் தெய்வலோகமாக்கின.
தேரடிக்குத் தென்புறம் நல்லூர்த் தேரடிக்குத் தென்புறத்தில் வயல் நிலங்கள் இருந்தன. பத்தொன்பதாம் நூற்ருண்டின் நடுப்பகுதியில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த வ ல் லி புரம் என்னும் வேளாளன், நல்லூரைச் சேர்ந்த பொன்னம்மா என்னும் பொன்னரை மணந்து, வயலோரத்தில் சிறு வீடு அமைத்து, வேளாண்மை செய்து நல்ல முறையாக வாழ்ந்துவந்தார்.
அவர்களுக்கு ஆண்கள் இருவரும், பெண்கள் இருவரு
மாகப் பிள்ளைகள் நால்வர் பிறந்தனர். ஆண்களுள் ஒரு
வரின் பெயர் செல்லப்பா, பெண்களுள் ஒருத்தியின் பெயர் செல்லாச்சி. செல்லப்பா இளமையில் கந்தமடத்துச் சைவப் பிரகாச வித்தியாசாலையில் ஆரம்பக்கல்வி கற்றபின், யாழ்ப் பாணம் மத்திய கல்லூரிக்குச் சென்று ஆங்கிலங் கற்று வந்தார்.
பூர்வாச்சிரமப் புதினம் ஓரளவு கல்வி கற்றபின் உண்டான சூழ்நிலை காரண மாகப் படிப்பை நிறுத்தி, உத்தியோகம் பார்க்க வேண்டியவ ரானர். யாழ்ப்பாணக் கச்சேரியில் ஆராய்ச்சி உத்தி யோகம் பெற்று, வெகு திறமையாகக் கடமையாற்றிய காலத்தில், அதிகாரிகளின் அபிமானத்துக்காளாகிப் பல முறை, களஞ்சியப் பொறுப்பதிகாரியாகவும் பதிற்கடமை

Page 5
( 6 )
பார்த்து வந்தார். வெள்ளைக்காரர்கள் பாராட்ட மதிப் புடன் உத்தியோகம் வகித்த செல்லப்பரின் போக்கு, எல் லோருக்கும் ஒரு புதிராகவே இருந்து வந்தது.
அகத்திலும் புறத்திலும் உண்டான மாற்றங்கள்
செல்லப்பர் தமது உத்தியோகங்களை நேர்மையாகவும் திறமையாகவும் ஒழுங்காகவும் அதிகாரிகள் மெச்சும் வகை யில் பார்த்து வந்த காலத்தில், அரசவுத்தியோகம் ஆதிக் கம் செல்வாக்கு முதலிய சிறப்புக்களில் மனங்கொள்ளாது, உள்ளத்தில் ஊற்றெடுத்து வந்த ஒரு வேகத்தின் பால் சென்ற வண்ணம் வாழ்ந்து வந்தார்.
ஞான நாட்டங் கொண்ட செல்லப்பரின் நடையுடை பாவனைகளில் நாளிலும் பொழுதிலும் மாற்றங்கள் உண் டாயின. அவரின் போக்கு பெரிய புதிராகவே இருந்தது. எவருக்கும் பிடிகொடாமல், தாமும் தம் கடமையுமாக வெளியே நடந்த வண்ணம், தம் அகநாட்டத்தில் கருத் தூன்றிக் கந்தசுவாமியாரும் தாமும் அர்த்த சாமத்தின் பின் அந்தரங்கத் தொடர்புகொண்டு வந்தார். ‘பிதாவே பிதாவே' என்று பிதற்றியும் வந்தார்.
உள்ளே ஊறிவந்த ஒருவகை ஞானப் பெருக்கு, வெளியே வழியத் தொடங்கிய வேளையில் அவரின் போக்கு பித்தர் போலவும், பிசாசு பிடித்தவர் போலவும், குழந்தை போலவும் இருந்தது. தமக்குள்ளேயே பேசிக்கொள்ளுதல், “ஒமோம்” என்று தலையசைத்தல், வலக்கையை மேலே உயர்த்தி விசுக்கி உரத்துப் பேசி, வருவோர் போவோரைத் தம்மை அண்டவிடாது துரத்தி வந்தார். அவர் தமக்கு அண்மையிற் சென்ருேரைத் துரத்தத் தொடங்கிய காலத் திலேயே தமது உத்தியோகத்தையும் உதாசீனம் செய்து கச்சேரித் தொடர்பையும் துண்டித்துக் கொட்டிலின் மூலை யில் குந்தியிருக்கத் தொடங்கினர்.
மூலையிலிருந்து முற்றம் வரை செல்லப்பா சுவாமிகள் வெளியே உலகத் துறவில் விசர்க்கோலமும், உள்ளத்திலே ஒடுக்கமும் ஞான நாட்ட

( 7 )
மும் சிந்தனையுங் கொண்டு, நல்லூரான் திருவருள் வெள் ளத்தில் நாளும்நனைந்து மூழ்கியிருந்த காலத்திலே, நல்லூரை வட்டமிட்ட கடையிற் சுவாமிகளின் கடைக்கண் பார்வை யும் தீட்சையும் உபதேசமும் கிடைத்தன என்று நம்புதற்கு இடமுண்டு.
குருவருள் பெற்ற பேற்றினலே புறக்கோலம் நீங் காமலே அந்தக் கரணசுத்தி பெற்று, பசுகரணங்கள் பதி கரணங்களாக மலரப் பெற்ருர், முன்னர் மூலையில் முடங் கிக்கிடந்தவர், குருவருட் பிரகாசத்தாலே முச்சந்திக்கு வந் தாற்போலத் தேரடியில் வந்து குந்தியிருந்து யாவருந் தரி சிக்கக் கூடியவராயிருந்தார்.
“மூலையிருந்தாரை முற்றத்தே விட்டவர் சாலப் பெரி யார் என்றுந் தீபற தவத்திற் தலைவர் என்றுந் தீபற’’ என்பது பதினன்கு சித்தாந்த சாத்திரங்களுள் ஒன்ருன திருவுந்தியார்.
தேரடியிற் குந்தியிருந்து சிந்திக்கத் தொடங்கிய காலத் திலேயே அடியார்கள் பலர் அவரிடம் ஏதோ அற்புத சக்தியுண்டென்று அனுமானித்து, அவரை ச் சூழ்ந்து மொய்க்கத் தொடங்கினர்கள். அதேவேளையில் அவர் தமக் குள்ளே சிந்தனைப் பேச்சுக்களை முணுமுணுக்கக் கண்ட சிறு வர்கள், விசரன் என்று கூறிக் கல்லெறியவுந் தொடங்கினர். அதனுல் உறவினர் அவரை விலங்கில் மாட்டி வைத்ததும் உண்டு.
உலகத் துறவும் உண்மத்தர் போக்கும் - உள்ளத்தில் எழுந்த துறவு மனப்பான்மையால் உல கத்தை அறவே துறந்த செல்லப்ப சுவாமிகள், வெளியுல கத்தவருக்கு விசரணுகவும், ஆன்ம ஈடேற்றங் கருதிய பெரியவர்களுக்கு ஞானியாகவும் காட்சியளித்தார். அவர் பொது மக்களிடம் வாங்கிய பட்டத்துக்கமைய மேலும் பைத்தியக் கோலத்தை மிகைப்படுத்தி வந்தார்.

Page 6
(8)
தலைமயிரைப் பரட்டையாகத் தொங்கவிட்டு, நீராடு தலை வெகுவாகக் குறைத்து, தண்ணிர் படாத கந்தைத் துணிகளை அழுக்கோடு அலங்கோலமாக அணிந்து, கண்ட படி கையுயர்த்திச் சிரித்து, ஒட்டியுலர்ந்த உடம் பின் மெலிந்த முகம் மலர, உதட்டை விட்டு வெளியே மிதந்து தோன்றிய பற்கள் புறந்தெரிய செல்லப்பா சுவாமிகள் காட்சியளித்தார்.
இவ்வாருக உடன்பிறந்த சகோதரி செல்லாச்சி சகோதர பாசத்தால் ஈர்க்கப் பெற்று உரிய வேளைகளில் ஆகாரங் கொண்டு சென்று, கூவியழைத்தால், “போ! போ! கொண்டு போ, நீ நஞ்சுபோட்டுக் கொண்டு வந்தாய்' என்று அதட் டிக் கலைத்துவிட்டு, எழுந்து எட்டி எட்டி நடந்து நெடுந் தூரம் சென்று, மீண்டும் வந்து குந்தியிருப்பார். தமக்கு விருப்பமுள்ளபோது ஏதாவது உண்டு, பெரும் பகுதியைக் காகம், கோழி, நாய் உண்ணுமாறு வைத்து வேடிக்கை பார்ப்பார். உயிரினங்களோடு உறவு கொண்டாடியும் வந் தாா.
முத்துப்போன்ற சிந்தனைத் துளிகள்
பகல் முழுவதும் விசர்க்கோலம் கொண்டிருக்கும் செல் லப்பா சுவாமிகள், இரவில் அர்த்தசாமப் பூசை நிறைவுற்று எல்லோரும் அகன்றபின், மெதுவாக இருக்கைவிட்டெழுந்து கோபுர வாசற் பக்கம் சென்று, முருகனைத் தேடுவார் போல், பிதாவே பிதாவே! என்று கூவியழைத்து, அவரு டன் சொல்லெதிர் பெற்றும் பெருமலும் உரையாடி வந் தார். அவரின் உள்ளத்தில் முத்துப்போன்ற சிந்தனை வாக் கியங்கள் உருண்டு திரண்டு வெளிவரக் காத்திருந்தன. பக்குவமுள்ள சீடன் ஒருவன் வருவான், அவன் காதில் இந்த மகா வாக்கியங்களை வார்த்துவிடலாம், அவன் மூலம் இவ்வாக்கியங்கள் சுருதியென எல்லோருக்கும் கேட்கும், எங்கும் கேட்கும் எனக் கருதிச் சற்பாத்திரரான சீடன் வரவுக்குக் காத்திருந்தார்.

(9)
புத்தாடை புனைந்த வண்ணம்
சுவாமிகளின் முகத்தில் ஒளிவட்டம் வீசுவதையும், அவரின் அழுக்கேறிய உடம்பில் கந்தையாடை அலங்கோல மாகக் கிடந்ததையும் கண்டு, மெய்யடியார் ஒருவர் தாம் புதிதாக வாங்கி வந்த வேட்டியையும் சால்வையையும் எடுத்துச் சென்று, சுவாமிகளைத் தொழுது, பணிந்து மன் ரூடி ஏற்றருள் செய்தல் வேண்டும் என்று இரந்தார். சுவாமிகள் அவர்மீது இரங்கி அவற்றை வாங்கிக் கிழித்து, அழுக்குப்படுத்தி, அலங்கோலமாக அணிந்து, ‘‘சரி நீ போகலாம்' என்று விடைகொடுத்தனுப்பினர்.
சித்துக்கள் வரத்தொடங்கின
சித்தத்தைச் சிவன்பால் வைத்தவர்கள் சித்தர்கள். அவர்கள் அட்டாங்க யோகம் முதலிய அரும்பெரும் சாதனை களாலும் இறையருளாலும் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மாண்புடைய சக்திகளைப் பெற்றுச் சித்து விளையாட்டுக் காட்டுவதும் உண்டு. அத்தகைய சித்துக்கள் சுவாமியிடம் வந்ததும், அவர் வெளி வெளியாக, 'செல்லப்பன் சாமி காட்டமாட்டான். விசரன் என்று பெயர் வாங்கிப் போவான்’ என்று கூறியதும் உண்டு. எப்படிப்பட்ட சித்தர் களுக்கும் சில சமயம் அவர்களையறியாமலே சித்துக்கள் தலைகாட்டிப் போவதுமுண்டு.
செல்லப்பா சுவாமிகளிடம் அன்புகொண்டிருந்த குருக் கள் ஒருவர், திருநெல்வேலியிலிருந்து இறைவனின் தேவா மிர்தமனய பிரசாதத்தைப் பக்குவமாகக் கொண்டு வந்து நீட்டியபோது, அவரின் பக்தியை மெச்சியபோதிலும், அதனை வாங்கியுண்ண விரும்பாமல், உண்மையைக் கூறி ஞர். “கொண்டு போங்கள் உது எச்சிற்படுத்தப்பட்ட பிர சாதம் எனக்கு வேண்டாம்.'
குருக்கள் ஏமாற்றமும் வியப்பும் அடைந்து வெட்கித் தலை குனிந்தவாறு வீடு சென்று, பிரசாதம் எச்சிற்படுத்தப் பட்டதோ என விசாரித்தபோது, அங்கே குழந்தைகள் ೫ಖ್ಯತ್ಯ அசூசிப்படுத்தியதாக அறிந்து பிரமித்துப் போனர்;

Page 7
(10)
சுவாமிகள் நல்லூருக்கு மேற்கில் உள்ள வைமன் வீதி வழியாகக் கான் போக்கில் போனபோது, எதிர்ப் பக்கமாக இளைஞன் ஒருவன் நன்முக முறுகி வளர்ந்த காளை மாட் டுக்கு நடை பழக்கியவாறு மிடுக்காக வந்தான். காளையின் போக்கைக் கவனித்த சுவாமிகள் "குத்தவல்லவோ போகி றது. மெத்தக் கவண்ம்' என்ருர், இளைஞன் விசரன் பேச்சு என்று உதாசீனமாகப் போனபோது, காளை மிரண்டு திரும்பி எதிர்த்து அவனைத் தாக்கி வீழ்த்தியது.
சுவாமிகளின் சகோதரியார் குடும்பத்தில் குழந்தை யொன்றுக்குக் கடும் சுகவீனமானபோது, அயலில் பெயர் பெற்றிருந்த வைத்திய நிபுணரிடம் காட்டி, உயர்ந்த மருந்து எடுத்துப் பருக்க முயன்றபோது, குழந்தை மருந் துண்ண மறுத்து, ஒடிச் சென்று சுவாமிகளின் மடியில் வீழ்ந்து கிடந்தது. சுவாமிகள் குழந்தையைத் தேற்றித் தமது கொட்டிலின் முற்றத்தில் வளர்ந்த தோடையில் கனி பறித்துக் கரைத்துப் பருக்கியதும், குழந்தையின் கடுமையான நோய் உடனடியாகத் தணிந்து, அடுத்த நாள் பூரணமாகக் குணமாயிற்று.
செல்லப்பா சுவாமிகள் உண்பதற்கு உணவை எடுத் துக்கொண்டு நடந்தப்ோது, நாய்க்குட்டியொன்று அவரின் காலடியை நக்கியவாறு பின்தொடர்ந்தது. அதன் கர்ம பலனை உடனடியாக உணர்ந்த சுவாமிகள், தாம் கொண்டு சென்ற உணவில் ஒருபகுதியை எடுத்து நாய்க்குட்டிக்கு குனிந்து வைத்துவிட்டு, “நீ உண்டபின் உன்வழியே போ’’ என்று விடைகொடுத்தார். நாய்க்குட்டி உண்டபின் நடந்து போன வழியில், கார் நெரித்து உடனடியாக இறந்து போயிற்று.
கொழும்புத்துறையில் வாழ்ந்த இராமலிங்கரின் பிள்ளை யொன்றுக்குக் கடுஞ் சுகவீனம், அதைச் சுவாமிகளிடம் காட்டுவதற்கு தகப்பனுக்கும் தாய்க்கும் அதிக விருப்பம். ஆனல் இராமலிங்கரின் மனைவியின் தாய், அந்த விசரன் என்ன சாதியோ தெரியாது, எங்கள் பிள்ளையை அங்கே

( 11)
கொண்டு போகாதே என்று எச்சரிக்கை செய்தார். இராமலிங்கர் கிழவி சொல்லை அலட்சியம் செய்துவிட்டு மனேவியுடன் குழந்தையைக் கொண்டு செல்லப்ப்ா சுவாமி களிடம் வந்தார். அவர்கள் வரவைக் கண்டதும் சுவாமி கள் “கணகம்மா! பிள்ளையை இங்கே கொண்டு வா. தமிழ்ப் பரிகாரியிடம் காட்டி இன்ன மருந்து வாங்கிக்கொடு: உன்னுடைய கொம்மா சாதி பேசுகிருர், நாங்கள் சந்திர சூரியரறிய வட்டுக்கோட்டை வேளாளர். வந்தார் வரத் தார் அல்லோம்' என்ருர், சுவாமிகள் குழந்தையைத் தொட்டதும் காய்ச்சல் குறைந்தது. தமிழ் வைத்தியஞ் செய்ததும் முற்ருகக் குணமானது. • «
செல்லையாப்பிள்ளை என்பவர் ஐந்து பெண்பிள்ளைகளுக் குத் தந்தை. தனக்கு இறுதிக்கடன் செய்வதற்கு ஆண் பிள்ளை இல்லையே என்ற கவலையால் வருந்தி, செல்லப்பா சுவாமிகளிடம் வந்து, அவரை இறுகக் கட்டிப்பிடித்து, ‘சுவாமி எனக்கு ஆண் குழந்தையொன்று வேண்டும். அருள் செய்த பின்னரே இந்தப் பிடியை விடுவேன்' என்று கூறினர். “செல்லையா உனக்கு ஆண் குழந்தை கட்டாயம் பிறக்கும். விடு விடு" என்று விடு வித் து க் கொண்டார். செல்லையருக்கு அடுத்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. l
சுவாமிகள் ஒரு நாள் அவசரம் அவசரமாக உலை வைத் துக் காற்படி அரிசி கொண்டு சோருக்கி, ஒரு கறியும் காச்சியபின், தென்னங் கிடுகுகளை அடுக்கி ஐந்து வாழை யிலைகள் பரப்பி, அவற்றில் உணவு படைத்து நிமிர்ந்த வேளையில் நால்வர் வந்தார்கள். “உங்களை எதிர்பார்த்துத் தான் உணவு படைத்தேன்' என்று கூறி ஐவருமாகக் காற்படியரிசிச் சோற்றை வயிறு நிரம்ப உண்டு மகிழ்ந்தார்
áj6ቮ ̇. V .
நன்னியர் என்பார் சுவாமிகள் மீதுகொண்ட பக்தி Հ மிகுதியால் அவரை இறுகப் பிடித்து மரத்திற் கட்டி வைத்து

Page 8
( 12 )
நல்ல முறையில் நீராட்டினர். ‘எட எட நீ நல்லூரானுக்கு அபிடேகஞ் செய்தது போதும் போதும் அவிழ்த்துவிடு' என்று மன்ருடி விடுவித்துக் கொண்டு ஒடினர்.
அண்டி வந்த அடியவர் கூட்டம் செல்லப்பன் சாமி காட்டமாட்டான் என்று அவர் வெளி வெளியாகக் கூறியதையும் பொருட்படுத்தாமல் அடியவர்கள் கூட்டம் அவரை மொய்த்துச் சூழத்தொடங் கியது. நெடுந்தூரத்திலிருந்தும் அடியவர்கள் ஆராமை யோடு என்னப்பன் செல்லப்பன் எனக்கருளும் நல்லப்பன் நல்லூரின் பொன்னப்பன் என்று நம்பிவரத் தலைப்பட்டனர்.
கொழும்புத்துறை, திருஞானசம்பந்தர், இராமலிங்கர், துரையப்பர், பொன்னையர், கந்தமடத்து ஆறுமுகம், இளைய தம்பி, தாமோதரம்பிள்ளை, கம்பந்தறை முருகேசு முதலா னுேர் சுவாமிகளை மொய்க்கத் தொடங்கினர். தமது அன் பர்கள் எனவுணர்ந்து அவர்களோடு அன்பாகப் பேசிய அவர், சீடருள் சிலர் உலகத்தைத் துறந்து சந்நியாசியாகப் போவதாகக் கூறினல், “உனக்கும் அதற்கும் வெகுதூரம் ஒடிப்போய் கலியாணம் முடி' என்று துரத்துவார். சிலர் சுவாமி என்னைக் கலியாணம் முடிக்குமாறு உறவினர் நெருக்குகிருர்கள் என்று அநுமதி கேட்டாற்போல விண் ணப்பித்தால், “ஏன் என்னைக்கேட்டே நீ கலியாணம் முடிக்க வேண்டும், ஓடு ஒடு' என்று துரத்துவார். யாரேனும் கலியாணக் கதை பேசினல், “கேட்டியே கவுண்மென்ட் ஏசண்டுத் துரை என்னைத் தன் மகளைக் கலியாணம் முடிக் கட்டாம். பண்ணட்டாம் பண்ணட்டோ?’ என்று பச்சை யாகக் பேட்பார்.
முல்லைத்தீவுச் சீடன் முத்திபெற்றமை முல்லைத்தீவில் வாழ்ந்த பெருங் கமக்காரன் ஒருவர், செல்லப்பா சுவாமிகளின் சிறந்த சீடர்களில் ஒருவராக ஒழுகியவர். அவர் சுவாமிகளிடம் சோறு பெற்றுண்பதைப் பெரும் பிரசாதமாகக் கருதி வருபவர். ஒருமுறை அவர்

( 13 )
சுவாமிகளுக்கு அருகிலமர்ந்து உண்ணும் பாக்கியம் பெற்ற போது, இடையிடை சுவாமிகள் உண்ட இலையை உற்று நோக்கினர். சுவாமிகள் உண்டபின் இலையை வழித்து உச்சிட்டதை உண்ணவேண்டும் என்று உள்ளத்தெழுந்த உணர்ச்சிவயப்பட்டிருந்தார். அவரின் கருத்தைக் குறிப் பாலுணர்ந்த சுவாமிகள், தாம் உண்டபின் இலை  ைய மடித்து எடுத்துக்கொண்டு கிழக்கு நோக்கி, செம்மணிவரை
நடந்து அங்கே ஒரு பாழ்ங் கிணற்றில் இலையை எறிந்தார். சுவாமிகள் கண்ணிற் படாமல் அவரைப் பின்தொடர்ந்த
சீடர், கிணற்றில் குதித்து இலையை வழித்துத் தாம் நக்கிய
பின், கைகால் கழுவி விபூதி பூசி ஒரு பூவரச மரத்தின்கீழ்
தியானஞ் செய்ய பத்மாசனத்தில் இருந்தார். அவர் இருந்த
வாறே அங்கே சமாதியான செய்தி ஊர்ப் பிரசித்தம்.
அவரின் சமாதி இன்றும் வயல் வெளியில் மிகச் சிறிதாகக் கட்டப்பெற்றுள்ளது.
ஆளுமைவாய்ந்த அருமையான சீடர்
கொழும்புத்துறையில் வாழ்ந்து மஸ்கேலியாவில் வியா பாரஞ் செய்த அம்பலவாணர் என்பார், மாவிட்டபுரத்தில் சின்னச்சி அம்மையாரைத் திருமணஞ் செய்து 1871ஆம் ஆண்டில் பெற்ற மைந்தன் சதாசிவம். சிலகாலஞ் செல்ல அம்பலவாணர் இறந்துபோனதும், அவரின் தம்பியார் சின்னையா என்பவர் சதாசிவத்தை சென்பற்றிக்ஸ் கல்லூரி யில் சேர்த்து நல்லமுறையில் கல்வி கற்பித்துவந்தார். சின்னை யர் கிறிஸ்தவ சமயச் சூழலில் யோசேப் ஏன்னும் பெயர் பெற்று வாழ்ந்தவர். அந்தவகையில் சதாசிவத்துக்கும் யோகநாதன் என்னும் பெயர் வழங்கியது.
சென்பற்றிக்ஸ் கல்லூரியில் யோகநாதன் பயின்ற காலத்திலேயே விவேகியாய்த் தாம் பயின்றவற்றை ஏனைய மாணுக்கர்களுக்கு விளக்கிக் குட்டிப் பிரசங்கியாராயும் இருந்தார். தாம் சுயமாக உழைத்து வாழ்தல் வேண்டும் எனக் கருதிப் படிப்பை நிறுத்திவிட்டு, கிளிநொச்சியில் இரணைமடுக் குளத்துத் திருத்த வேலைகள் பிரவுண் என்னும்

Page 9
( 14 )
வெள்ளைக்காரன் தலைமையில் நடைபெற்ற காலத்தில் பண்ட சாலையில் வேலை கிடைக்கப்பெற்ருர்,
உத்தியோகத்தில் ஈடுபட்ட காலத்திலேயே அகநோக் கில் ஆழமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த யோகநாதனின் பார்வை காந்த சக்திவாய்ந்ததாக வளர்ந்தது. அதை அநுபவத்தில் உணர்ந்திருந்த மேலதிகாரி பிரவுண் தமது பிரதம எழுத்தாளரிடம், யோகநாதன் தன்னைப் பார்க்கும் போது, தனக்கு என்னமோ செய்வதாகக் கூறி, அவர் தம் மைப் பார்க்காதிருக்குமாறு சொல்லுமாறு எச்சரிக்கை செய்திருந்தார் என்ப.
இவ்வாருகக் கொழும்புத்துறை திருஞானசம்பந்தர், இராமலிங்கம் முதலானேர் செல்லப்பா சுவா மிக ளின் பெருமையைக் கூறக்கேட்ட யோகநாதன், ஒருநாள் அவர் களோடு சேர்ந்து, செல்லப்பா சுவாமிகளைத் தெரிசிப்பதற் காக நல்லூருக்குச் சென்ருர், குருநாதனைக் கண்ட யோக நாதன் கொண்ட மனநிலை எப்படியானதென வெறுஞ் சொற்களால் கூறமுடியாது. யோகநாதன் தமது மனநிலை யைத் தாமே குருவணக்கமாகப் பாடிக்குவித்த நற்சிந்தனைப் பாடல்களில் நன்கணம் விளக்கியுள்ளார்.
நேரிசை வெண்பா ஆசானக் கண்டேன் அருந்தவர்வாழ் நல்லூரிற் பேசா தனவெல்லாம் பேசினுன் - கூசாமல் நின்றேன் நீ யாரடா வென்றே யதட்டினுன் அன்றேயான் பெற்றே னருள்.
மலைத்து நின்ற வென்னை மனமகிழ நோக்கி அலைத்து நின்ற மாயை யகலத் - தலைத்தலத்திற் கைகாட்டிச் சொல்லலுற்றன் கந்தன் திருமுன்றில் மெய்மறந்து நின்றேன் வியந்து. தேரடியில் யோகநாதனின் செவியில் ஒலித் த  ைவ ஆரடாநீ? தேரடாவுள்! தீரடாபற்று! ஆரென்ருராய்வதற்கு

( 15 )
உள்ளே தேடவேண்டும், உள்ளே தேடுமுன் பற்றுக்கள் பாசங்களை நீக்குதல் வேண்டும்.
மலைத்து நின்ற சீடனைச் சூழ நின்றவர்கள் வியப்பெய்த மனமகிழ்ச்சியோடும் பெருங்கருணையோடும் நோக்கிய குரு நாதன், “உன்னைத்தான் பார்த்திருந்தேன், உனக்கே பட் டஞ் சூட்டப்போகிறேன், வா வா' என்று அருகிலழைத்து அன்போடு அருள்கலந்த அறவுரைகளை அகம்மலரவும் புறம் புளகாங்கிதமெய்தவுங் கூறியருளினர்.
செல்லப்பா சுவாமிகள் சிரித்துச் சிரித்துச் சொன்னவை யெல்லாம் சீடனுள்ளத்தில் தொகுதி தொகுதியாய்ச் சென்று படிந்தன. அவர் மனத்திற் படிந்து பதிந்தவை யாவும் பிற் காலத்தில் பாடல்களாக வெளியே வந்து பல்லாயிரவர் கருத்தைக் கவர்ந்தன.
வெண்பா
தன்னை யறியத் தவமுஞற்றும் மாதவரை அன்னையைப்போ லாதரிக்கு மாறுமுகன் - சந்நிதியில் தேரடியிற் தேசிகனைக் கண்டு தெரிசித்தேன் - தேரடாவுள் ளென்றன் சிரித்து.
வண்டு பண்செய்யும் வளம்பெருகு நல்லூரில் மிண்டு மனத்தவரை மேனிலைக்குக் - கொண்டுவரும் தேரடியிற் தேசிகனைக் கண்டு தெரிசித்தேன் திரடாபற் றென்றன் சிரித்து.
கலிவிருத்தம் சிரித்து நல்லூர்த் தெருவிற் றிரிபவர் வெறித்த பார்வையர் வேடம் விரும்பிலர் கறுத்த மேனியர் கந்தைத் துணியினர் எரித்த னர்பவ மினியெனக் கில்லையே.

Page 10
( 16)
முன்னரே அறிந்த திருமுகம்
செல்லப்பா சுவாமிகளை யோக சுவாமிகள் முன்னரே கண்டிருந்தார். ஒரு சமயம் அவருடைய கால் விரலில் காயம் ஏற்பட்டிருந்தபோது அவர் மருந்து கட்டுவதற்கு நொண்டியவாறு நடந்து போன வழியிற் கண்டு, “உதற்கு மருந்து வேண்டாம். அந்த இலையைத் துவைத்து வைத்துக் கட்டு' என்று கூறி அதனுற் குணமடைந்ததும் உண்டு.
கொழும்புத்துறை நன்னியர் கட்டிவைத்தபோது செல் லப்பா சுவாமிகள் கூக்குரல் போட்டபோது ஓடிச் சென்ற அயலவர்களுள் யோகநாதனும் ஒருவர்.
ஞானமுறுக்கேற்றியமை
செல்லப்பா சுவாமிகளைக் கண்ட மாத்திரத்தே தம் வய மிழந்த யோகநாதன் நாளடைவில் ஞானமுறுக்கேறி யோக சுவாமிகளானர். ஞானம் கைவந்த பின்பும் குருநாதனை விடாது பின் தொடர்ந்து அவரின் கடைக்கண் பார்வையிற் பட்டு இரும்பு பொன்னுற்போல மாறியமைந்ததோடு, அவ ரிடம் கேட்ட ஏச்சிலும் பேச்சிலும் நல்லுபதேசங்கள் மலிந்துகிடந்த விந்தையையுணர்ந்து சிந்தையிற் கொண்டு செம்மாந்திருந்தார்.
சோதனைக்குமேற் சோதனை
யோக சுவாமிகளின் பரிபக்குவத்தை உலகத்தவர் அறிந் துணரும் வண்ணஞ் செய்வதற்குச் செல்லப்பா சுவாமிகள் கையாண்ட சூழ்ச்சிகள் சோதனைகள் மிகப்பல. தம்மருமைச் சீடரை அன்புடன் விளித்து, ‘யோகா! வா! இன்றைக்குக் கீரிமலைக்குச் சென்று நீராடி, மடத்திற் சோறுண்டு வரு வோம்’ என்பார். இருவரும் ஒருவர் பின் ஒருவராக விரைவாக விரைந்து நடந்து கீரிமலைக் கடற்கரையை அடைந் ததும், செல்லப்பா சுவாமிகள் சீடரைப் பார்த்து, “யோகா நீராடி விட்டோம். வா போவோம்’ என்று சென்ற வேகத்தில் திரும்புவார். சீடர் வேருென்றும் பேசாது மெளன மாகக் குருநாதன் திருவடிகளைப் பின் தொடர்ந்து மீண்டு வருவாா. ܫ

( 17 ).
'யோகா இன்று பங்குனித் திங்கள். வா நாங்கள் பன் றித்தலைச்சிக்குச் சென்று, பொங்கிச் சாப்பிட்டு மீள்வோம்?? கான்று கூறிச் செல்லப்பா சுவாமிகள் எட்டி நடப்பார். சீடரும் நிழல்போல் அவரைப் பின்தொடர்ந்து போவார்.
“யோகா வா! இன்றைக்குப் பிச்சை எடுத்து வரு வோம்’ என்று கூறி அழைத்துச் சென்று நாட்டுக்கோட் டைச் செட்டிமார் கடை வாசல் ஒன்றில் கால் நோவை யும் கவனிக்காது, தூரத்தில் நிற்பார். குருவின் நிலை கண்ட சீடரும் ஒதுங்கிக் கைகட்டியவாறு நிற்பார். ஒரு நாள் கடையிற் கணக்கப்பிள்ளை நீண்ட நேரத்தின் பின் அவர்களைக் கண்டு ஆளுக்கொரு செம்புக் காசு கொடுத்தார். காசைக் கையேற்ற செல்லப்பா சுவாமிகள் அதனைக் கண்களில் ஒற்றி “இன்று நல்ல உழைப்பு' என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
“யோகா வா! இன்று ஒரு சோறும் ஒரு கறியும் சமைத்து உண்போம்” என்று கூறிக் குந்தியிருந்து பெரிய அடுக்குகள் எடுத்து விசித்திரமாகச் சுவைபடச் சமைத்து இருவரும் உண்பார்கள்.
சொன்னவண்ணம் செய்த பணிவு
யோகசுவாமிகள் குருவாக்கைத் தட்டாது, தேவ வாக் காகக் கொண்டு ஆசான் சொன்னவண்ணம் பணிவோடு கீழ்ப்படிந்து வந்தார். முன்னர் திருவண்ணுமலையில் குகை நமச்சிவாய தேவர் என்னும் முனிவர், குகையில் தங்கி யிருந்து தவஞ் செய்து, அருணசல ஈஸ்வரனேடு அடிக்கடி உரையாடி வந்தார். ‘அருணுசலா! சுகமா?’ என்று முனி வர் கேட்க, இறைவன் 'சுகம் சுகம்' என்று விடைபகர் வது வழக்கம். ஒரு சமயம் குகை நமச்சிவாயரிடம் நமச்சி வாயர் என்னும் பெயருடைய சீடர் ஒருவர் வந்தார். வந்தவரின் பக்குவத்தை அறிவதற்குக் குரு அவரை ஓரிடத் தில் நிற்கச் சொன்னர். குரு சொன்னவண்ணம் சீடர் ஆடாது அசையாது இரவு பகலாக நின்றபோது மழை பெய்தது. சீடர் அசையவில்லை. பெய்த மழை அவரை நனைக்காது விலகிப் பெய்தது. சீடரின் பக்குவமறிந்த குரு
3

Page 11
( 18)
சீடருக்கு குருநமச்சிவாயர் எனப் பட்டங்கட்டி இரு யானை களை ஒரு தறியிற் கட்டமுடியாது எனக் கூறி வேறிடத்துக்கு அனுப்பிவிட்டார்.
இங்ங்ணமே செல்லப்பா சுவாமிகள் தம் சீடரைப் பார்த்து ‘யோகா! இங்கே இரு' எனப் பணித்துப்போனர். யோகசுவாமிகள் இருந்தார்கள். செல்லப்பா சுவாமிகள் மூன்று நாள்கள் கழித்து வந்து அவரைத் தட்டி எமுப்பினர்.
நாற்பது நாள் நற்றவம்
அன்ருெரு நாள் 1910ஆம் ஆண்டில் செல்லப்பா சுவாமி கள் யோகசுவாமிகளையும் கதிரவேலுச் சுவாமிகளையும் அழைத்து, அருகருகே அமரச் செய்து தவஞ் செய்யுமாறு பணித்தார். அவர்களுக்கு வேண்டிய பணிவிடைகளையும் பாதுகாப்பையும் கொழும்புத்துறை திருஞானசம்பந்தர் கவனித்து வந்தார்.
தியானத்தமர்ந்த சீடர்கள் இருவரும் இரவு பகல் தெரியாமல் நாற்பது நாள்கள் தவத்தில் இருந்தார்கள். நாற்பதாம் நாள் முடிவில் செல்லப்பா சுவாமிகள் அவர் களைத் தட்டியெழுப்பி, 'ஒடுங்கள்’’ என்ருர் . இருவரும் கிழக்கு நோக்கி விரைந்து நடந்தபோது, யோகசுவாமிகள் தாம் கதிர்காமம் போவதாகக் குறிப்பால் உணர்த்தி உத்தரவும் பெற்று நடந்தார். அந்த இரகசியம் எவருக்கும் தெரியாது போகவே, பல நாள்களாக யோகசுவாமிகளைத் தேடியும் காணமுடியாது கலங்கிய உறவினர்கள் செல்லப்பா சுவாமிகளிடம் சென்று கேட்டார்கள்.
யோகன் செத்துப்போனுன்
உறவினர்கள் செல்லப்பா சுவாமிகளிடம் யோகசுவாமி களின் இருப்பிடத்தைக் கேட்டபோது, சுவாமிகள் தீடீரென ‘‘யோகன் செத்துப்போனுன்’ என்று அழுத்தமாக அறைந் தாற்போல் அறிவித்தார். அதனைக் கேட்ட உறவினர்கள் அழுது புலம்பி, கொழும்புத்துறைக்கு மீண்டு, யோக சுவாமிகளுக்கான அபர கிரியைகள் அத்தனையையும் செய்து கவலையோடிருந்தார்கள்.

( 19 )
கதிர்காம யாத்திரை கால்நடையாகக் கதிர்காம யாத்திரை செய்த யோக சுவாமிகள் திருக்கோணுமலையில் வணங்கிக்கொண்டு மட்டக் களப்புக்குச் சென்ருர். அங்கே மந்திரவாதியாய சந்நியாசி யொருவர் தாமும் கதிர்காமம் வருவதாகக் கூறி இவருடன் காட்டு வழியாகச் சென்றனர்.
வழியில் பொத்துவில் பிரதேசத்தில் பற்றைக் காட்டி லிருந்து வேகமாக வந்த எருமைக் கடாக்கள் இவர்களைத் தாக்க வந்தன. மந்திரவாதி தன்னலானவரை தமது மந்திர உச்சாடனத்தை உதடசையக் கடுமையாகச் செய்தார். மந்திரங்கள் பலிக்காது போகவே அவர் விரைவாக ஒடிச் சென்று பெரிய மரத்தில் தாவியேறிக் கொண்டார்.
யோக சுவாமிகள் தாம் நின்ற நிலையை விட்டு ஆடா மல் அசையாமல் தன்னைத் தாக்க வந்த எருமையை இமை வெட்டாமல் பார்த்தார். இவர் பார்வையைக் கண்ட எருமை, மூர்க்கந் தெளிந்து, சாந்தமாகக் கான்போக்கில் செல்லவே, ஏனைய எருமைகளும் அதனைப் பின்தொடர்ந்து மறைந்தன. மரத்திலிருந்த மந்திரவாதி மெதுவாகக் கீழே இறங்கியதும் யோக சுவாமிகளின் தவவலிமையை வெகு வாக மெச்சினர்.
கதிர்காமத்தில் சில வாரங்கள் தங்கி வழிபாடாற்றிய பின், யோகசுவாமிகள் மாத்தறை, காலி வழியாகக் கொழும்பு சென்று, அங்கிருந்து கண்டி, மாத்தளை முதலான மலைநாடுகளையும் கண்டார். அவர் மாத்தளையை அடைந்த போது ஆறுமாதகாலம் நீராடாமல், மாற்றுடையணியாமல் இருந்தார். அவரை மேலும் அந்நிலையில் திரிவதற்கு இறை யருள் இடங்கொடுக்கவில்லை.
சிவ பக்தியுள்ள ஒவசியர் ஒருவர் ஒருநாளிரவு அற்புத மான கனவு கண்டார். கனவில் ‘என்னன்பன் கதிர்காமஞ் சென்று கடுந்தவத்தணுகி மிகவும் கஷ்டப்பட்டு மாத்தளை யில் வந்து தங்கி ஒதுங்கி இருக்கிருன், அவனை அணுகித்

Page 12
( 20 ) தெய்வ சித்தம் இது என்பதை விளக்கி நீராடச் செய்து, புத்தாடையுடுத்தி, உணவூட்டி யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்தல் உன்கடன்' எனப் பிறந்த அருளாணையை உணர்ந்தார்.
விழித்தெழுந்த ஒவசியர் தமது அயலிலேயே யோக சுவாமிகளைக் கண்டு கண்ணிர் வழிய வணங்கிக் கணுத்திறனை உரைத்தார். அதைக்கேட்ட யோகசுவாமிகள், தெய்வ சித்தம் இதுவாயின் என்னுலாவனதினியொன்றும் இல்லை’’ எனக் கூறி உபச் ரிப்புகளுக்கு உடன்பட்டார். யாழ்ப் பாணத்துக்குப் புகையிரதச் சீட்டைப் பெற்று மீண்டு வந்து குருவை வணங்கித் தம் உறைவிடஞ் சென்றர்.
மீட்சியில் உவகையும் உற்றதறிந்து தெளிந்ததும்
யோக சுவாமிகளின் வரவைக் கண்டு மகிழ்ந்த உறவினர் செத்தவர் மீண்டார் என உவந்து, செல்லப்பா சுவாமிகள் சொன்னதற்காக வருந்தி, அவர் செய்த வம்புத்தனத்துக்கு அவரைக் கண்டு வருவதற்காகச் சிலர் அங்கே சென்ருர்கள்.
அவர்களைக் கண்டதும் செல்லப்பா சுவாமிகள் ஒன்றும் அறியாதவர்போல் அவர்களை நோக்கி, ‘நான் பொய் பேச மாட்டேன். உண்மையைத்தான் சொன்னேன், இப்போதும் சொல்லுகிறேன், யோகன் செத்தே போனன்’’ என்ருர், அவர் ஒமோம் என்று தலையசைத்தவாறு உறுதியாகக் கூறியதைக் கேட்ட உறவினர் சிரித்து, ‘விசரணைவிட்டு வாருங்கள்’’ என்று கூறித் தம்வழியே போனர்கள்.
சீவாத்மாக்கள் பற்ருேடும் பாசத்தோடும் வாழும் நிலை பெத்த நிலை. சீவத்துவம் போனல் உண்டாகும் பேரின்ப நிலை முத்திநிலை. அது சிவத்துவநிலை, நித்தியானந்தநிலை முத்தி நெறியறிந்த முத்தர்கள் தங்கள் சஞ்சிதவினை குரு' வருளால் சாம்பராகிப்போக, ஆகாமியம் என்னும் புதுவினை ஏருமல், கொண்டுவந்த பிராரத்துவவினை புசித்து முடியும் வரை சீவன் முத்தராய், அணைந்தோர் தன்மையில் வாழ் வர். அவர்கள் நான் செத்தவர்கள். யோக சுவாமிகளிடம்

( 21 )
நான் என்னும் அகங்காரம் செத்துப்போனது. அவருக்கு சித்தமலம் அறுத்து அவரைச் சிவமாக்கியவர் செல்லப்பா சுவாமிகள். குருவருளே திருவருள்.
திருச்சிற்றம்பலம் வான்கெட்டு மாருத மாய்ந்தழல்நீர் மண்கெடினுந் தான்கெட்ட லின்றிச் சலிப்பறியாத் தன்மையனுக்கு) ஊன்கெட்டுயிர் கெட்டுணர்வு கெட்டென் உள்ளமும்போய் நான்கெட்ட வாயாடித் தெள்ளேணங் கொட்டாமோ. திருச்சிற்றம்பலம்
ஆகாயம் ஒடுங்கி, காற்று ஒடுங்கி, தீயும் நீரும் மண் ணும் ஒடுங்கினுலும், தான் ஒடுங்குதலின்றி, தளர்வறியாமல் இருக்கும் சிவபெருமான் பொருட்டு; உடம்பு அழிந்து, ஆவியடங்கி, அறிவு ஒடுங்கி, என் மனமும் அழிந்து, தற் போதம் இறந்த விதத்தைப் பாடி, தெள்ளேணங் கொட்டு (3ςλμπτLE .
சிவனிடத்தில் அடைந்து நிற்கும் பெரும் பேருகிய உயர்நிலையை யோகசுவாமிகள் பெற்றிருந்தார் என்பதைக் குறிப்பால் உணர்த்துவதற்குக் குருவான செல்லப்பா சுவாமி கள் கூறிய வாசகத்தை ஞான நாட்டம் கொண்டவர்கள் உணர்ந்திருந்தனர். அஃதில்லாதவர்கள் அவர் சொன்ன வற்றைப் பைத்தியக்காரன் பேச்சு எனக் கருதியிருந்தனர்.
இத ஒரு பாலைவனப் பசுந்தரை
சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் அகிலவுலக சமய மாநாட்டில் இந்து சமயம் சார்பாகப் பேசிவிட்டு மீண்டபோது, இலங்கையில் இறங்கி கொழும்பு, கண்டி, மாத்தளை, அநுரதபுரம், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலும் பேசினர். அவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மண்டபத் திற் பேசியபின், பெரியவர்கள் அவரைக் குதிரைவண்டியி லேற்றி வடங்கட்டித் தாமே இழுத்துச் சென்றனர். அவர் கொழும்புத்துறை முச்சந்தியை அணுகியதும், வண்டியை
ኣ

Page 13
(22 ) .
விட்டு இறங்கி நாற்றிசையும் நோக்கி, “ஆகா இது ஒரு பாலைவனப் பசுந்தரை" என்னும் பொருளில் "Oh this is an Oasis’ என்று ஆங்கிலத்திற் கூறி உவகை கொண்டார். அக்காலத்தில் அவ்விடத்தில் எ வ் வி த புது  ைம யோ மகிமையோ உண்டாகவில்லை. வெறும் இலுப்பை மரத் தடியாயிருந்தது. அந்த இடத்துச் சூழல் வெகு விரைவில் புனிதமாகப் போகிறது என்பதே விவேகானந்தரின் தீர்க்க தரிசனம்.
இலுப்பை மரத்தடியைப் பார்
செல்லப்பா சுவாமிகள் யோகசுவாமிகளைச் சோதனைக்கு மேற் சோதனைக்குட்படுத்திப் புடம் போட்ட பொன்னக்கி பசுகரணங்களை நீக்கி, பதிகரணங்கள் பதியச் செய்து பக்கு வப்படுத்தியபின், யோகசுவாமிகளைப் பார்த்துக் கூறினர். “யோகா இரண்டு யானைகளை ஒரு முளையிற் கட்டமுடி யாது. நீ ஓடிப்போய் வேறிடம் பார்’ என்ருர். ‘சுவாமி நான் எங்கே போவது? எனக்குப் புகலிடம் எது?’ என்று ஆவலாகக் கேட்டார்.
‘யோகா! நீ கொழும்புத்துறைச் சந்தியில் இலுப்பைமர வேரைப் பார்' என்ருர், குருநாதன் சொன்ன வண்ணம் கொழும்புத்துறை இலுப்பை மரத்தடியைப் பார்த்துக் குந்துவதற்கு முன், குருநாதனின் கையில் இருந்த பிச்சைப் பாத்திரத்தை யோகசுவாமிகள் ஆசையோடு பார்த்தார். *எட இது பெரிய பந்தம்' என்று கூறி அதனை யோக சுவாமிகளின் தலையில் அடித்து நொருக்கினர். யோக சுவாமிகள் அவ்விடத்தை விட்டுப் பெயர் ந் த போது, “யோகா அங்காலை கொட்டிலையும் பார்.’’ என்று கூறி வழிவிட்டார்:
நல்லூரான் நனையப் போகிருர் நல்லூர்க் கந்தசுவாமியார் வெளி வீதியுலா வந்த வேளை யொன்றில் பார்த்து நின்ற யோகசுவாமிகள், ‘இன்றைக்கு நல்லூரான் நனையப் போகிருர்’ என்று சொன்னர். அதைத் தூரத்தே நின்ற செல்லப்பா சுவாமிகள் கேட்டு,

( 23 )
"உப்படிப் பலர் சொன்னவர்கள்' என்று சிரித்தார். அன்று சுவாமி வடகிழக்கு மூலையில் எழுந்தருளியபோது, மழை பெய்தது. இந்த அடிப்பன்டயிலேதான் செல்லப்பா சுவாமி கள் யோக சுவாமிகளிடம் “செல்லப்பன் சாமி காட்டமாட் டான். சாமி காட்டினல் யாழ்ப்பாணத்தான் விடமாட் டான். செல்லப்பன் விசரன் என்னும் பெயரோடு சாவான்' என்று கூறினர் எனக் கருத இடமுண்டு.
கைத்திறன் வாய்ந்த கலைஞன்
யாழ்ப்பாணத்தார் கடின உழைப்புக்கும் கமத்தொழி லுக்கும் கைத்திறனுக்கும் பெயர் பெற்றவர்கள். பனையோடு பழகிய பண்பாட்டில் யாழ்ப்பாணத்தாருக்குப் பன்ன வேலை பன்முகப் பழக்கம். ஒலைகொண்டு விசிறி செய்தல், தட்டு வம், பட்டை, குடை, கூடை, பெட்டி, கடகம், பாய், உறி, திருகணி, உமல் முதலியன இழைப்பதிலும், பொத்து வதிலும் தமிழர் இணையில்லாதவர்கள். பனை யாலே வந்த நாகரிகம் தமிழர் நாகரிகம். கழுத்துக்குத் தா லி யும், காதுக்கு ஒலையும் தந்த பனை, ஐந்து வயதுப் பிள்ளைக்கு அரிவரி ஏடும், அதிகம் படிப்பவர்களுக்கு ஏட்டுருவிலமைந்த நூல்களும் தந்தது பனை. பனையோலையில் அன்று எழுதிப் பாதுகாக்காவிட்டால், தமிழரின் பாரம்பரிய நூல்கள் எங்கள் சந்ததியினருக்குக் கிடைத்திரா.
செல்லப்பா சுவாமிகள் தட்டுவங் கோலுதல், பட்டை இழைத்தல், பொத்துதல், /தென்னே?ல கொண்டும் பலா விலை கொண்டும் கல்லை ச்ெய்தல், வாழையிலை கொண்டு தொன்னை செய்தல், பனையோலை விசிறி செய்தல், ஒடியல் மாவிற் கூழ் காய்ச்சுதல் முதலியவற்றில் திறமைவாய்ந்த வர். பனையோடு தொடர்புடைய பலவகையான கைவேலை களைவிட அவரின் கைப்பணித் திறமை அரியது. சுவாமி கள் செய்த கைவேலைகள் பல. அவர் அழகாகப் பூமாலை
கட்டவும் அறிந்திருந்தார்.

Page 14
( 24 )
சேர் இராமநாதன் தலைவணங்கியமை
செல்லப்பா சுவாமிகள் சேர் இராமநாதனிடம் அன்பு பூண்டவர். அவர் இலங்கை வாழ் மக்களின் ஏகப் பிரதிநிதி யாக 1910ஆம் ஆண்டில் தெரியப் பெற்றபோது பெரிதும் மகிழ்ந்து பாராட்டியவர். ஒரு சமயம் தூரத்தில் கூடிநின்ற ஒரு சிறு கூட்டத்தவர் வெகு இரகசியமாக இராமநாதனின் போக்கைக் கண்டித்துப் பேசினர். அதனை உணர்ந்த சுவாமி கள், “இல்லை இல்லை அவர் நல்லவர், நல்லவர்' என்று உரத்துக் கூறினர். அதைக் கேட்ட கூட்டத்தவர் நாணிக் கோணித் தம் கொள்கையை மாற்றிக் கொண்டனர்.
சேர் இராமநாதன் 1913ஆம் ஆண்டில் தமது இராம நாதன் கல்லூரியை ஆரம்பித்த வேளையில், சுவாமிகள் தாம் திறமையாகச் செய்த பனையோலை விசிறியொன்றைக் கொண்டு சென்று அவரிடம் அன்பளிப்பாகக் கொடுத்து கல்லூரியையும் அவரையும் வாழ்த்தினர். இராமநாதன் நன்றியுள்ளத்தோடு தலைதாழ்த்தி வணங்கியதும் சுவாமிகள் விரைந்து மீண்டு வந்தார்.
محرم
நோயுறுவது உடம்பா? உயிரா? u 356 TGör இராமகிருஷ்ண பரமஹம்சர் நோயுற்றிருந்த வேளையில் சீடர்களுக்குக் கூறிய ஆறுதல் வாக்கியம் "இந்த நோயும், இது பீடித்த உடம்பும் ஒன்ருேடொன்று மோதிக் கொள்ளட்டும். இந்த மோதுதலால் என க் கொன்றும் இல்லை' என்பதாகும்.
செல்லப்பா சுவாமிகள் தமக்குச் சில சமயம் உடம்பு நன்முகவில்லை என்று கண்டால், தமக்குப் பணிவிடை புரிந்து வந்த உறவினர் சபாரத்தினம் அவர்களை அழைத்து, கீரிமலைக் கடற்கரைக்குச் சென்று நீர்முள்ளி பிடுங்கி வந்து, நல்லூர்க் கோபுரவாசற் கிணற்று நீரள்ளி அவித்துத் தரும் படி கூறினர். அவர் சொன்ன வண்ணம் அவித்துக் கொண்டு வந்தபோது ‘உதற்குள் நஞ்சு போட்டுள்ளாய், வெளியே மாற்று' என்று கட்டளையிட்டார்,

(25)
இதன் பின் பணிவிடை செய்யும் சபாரத்தினம் அவர் களைக் கூவி நாவற்குழியில் ஆமணக்கு இலைகளும் செம்மணி யில் பூவரசம் பழுத்தலும் பறித்து வந்து நல்லூர்க் குரு பூசை மடத்துக் கிணற்று நீரில் அவித்துத் தரும்படி கூறி ரூர். அங்ங்ணம் செய்து கொடுத்ததற்குள்ளும் நஞ்சு கலந்த தாகக் குற்றஞ்சாட்டி வெளியே ஊற்றச் செய்தார்.
இவ்வாறெல்லாம் தம்முடைய வேகத்தைத் தணித்தும், பணிவிடை செய்தவரின் பக்குவத்தைச் சோதனை செய்தும் கொண்டபின், வைரவ கோயிலடி வேம்பின் இலை பறித்துத் தம்முடைய வளவுக் கிணற்று நீரில் அவித்துத் தரும்படி செய்து உடம்பைக் கழுவினர் என்பர்.
வேகங்கெடுத்தாண்ட வேந்தன்
மனித மனம் வாயுவேகத்திலும் கூடியதாகையால் மனுேவேகம் என்று அதனை உயர்த்திக் கூறுவர். வாயு வேகத்தை அளந்தறிய விஞ்ஞானக் கருவிகள் உள்ளன. மனே வேகத்தை மட்டுப்படுத்த மெய்ஞானம் உண்டு. ஞானம் கைவரப் பெற்ற ஞானிகள் மனுேவேகத்தைத் தடுக்கவும் தணிக்கவும் வல்லவர்கள்.
செல்லப்பா சுவாமிகள் தமது வேகத்தைத் தாமே தடுத்ததும் உண்டு. சில வேளைகளில் அவர் தாமே ஒரு சோறும் கறியும் சமைத்து உண்பதும் வழக்கம். ஒரு சமயம் அவர் மட்டுவிலுக்கு நடந்து சென்று ஒரேயொரு கத்தரிக் காய் வாங்கி, நுனிக்காம்பில் இரண்டு விரல்களால் பிடித்த வாறு விரைந்து மீண்டு, வந்த வழியில் முத்திரைச் சந்தை யில் காற்படி அரிசி வாங்கித் தம் கந்தையான சால்வை துணியில் முடிந்தபின், ஒரு சதம் குறைத்துக் கொடுத்து, வியாபாரஞ் செய்த பெண்ணிடம் ஏச்சு வாங்கி மகிழ்ந்த வாறு கொட்டிலுக்கு மீண்டு, பக்குவமாகச் சமைத்தார். சமையல் முடிந்ததும் அங்கும் இங்குந் தேடி ஒரு தடியெடுத் துச் சட்டி பானைகளை அடித்து நொருக்கி எல்லாவற்றை யும் அள்ளிக்கொண்டு சென்று காகம் கோழி தின்ன வீசி விட்டுச் சிரித்தவாறு குந்தியிருந்தார்.
s

Page 15
( 26)
உண்மை முழுதுமென் றேயா துரைப்பவன் நன்மை தீமையைக் கடந்த நாதன் என்னையுந் தன்னையு மொன்ருய்க் காண்பவன் சென்னியில் சேவடி சூட்டினன் அன்பால்.
ஆரறி வாரென அடிக்கடி ஒதும் பேரறி வாளன் பேர்செல் லப்பன் பாரறி யாத பயித்தியக் காரன் தேரடிப் படியில் தினமு மிருப்பான்.
பின்னர் மனமே அவசரப்படாதே. வயிறே உனக்கு நல்லபசி என்று கூறியவாறு எழுந்து மூலையிற் கிடந்த கமுகம் மடலை எடுத்துக் கொண்டு பெரியவர் ஒருவர் வீட்டுப் படலையில் நின்று, "எசமாட்டி அம்மா பசிக்கிறது’’ என்று கேட்டார். எசமாட்டியம்மா அந்தரங்க பக்தியோடு சுத்த மாக சோறு கறி கொடுக்க அவற்றைப் பெற்றுக் கொண்டு கொட்டிலுக்கு மீண்டு, சிறிதளவு உண்டு எஞ்சியவற்றை வெளியே வீசியவாறு “நஞ்சு நஞ்சு' என்று கூவி நகைத் தார்.
கூழ்ப்பான பட்டபாடு
செல்லப்பா சுவாமிகள் பனையன்பர் என்று பெயர் பெற்றவர். அவர் ஒடியல்மாகொண்டு அருமையாகக் கூழ் காய்ச்சுவதில் நிபுணர். அவரிடம் கூழ் ப ரு கி ச் சுவை கண்ட சீடர் சிலர் கூடியிருந்து கூழை நினைத்தார் கள். அவர்கள் நினைப்பு வேகத்தை உணர்ந்த சுவாமிகள் அவர்களை ஒவ்வொருவராக அழைத்துச் சில்லறைக் காசு கொடுத்து நீ அரிசி வாங்கி வா, நீ பயற்றங்காய், நீ மிள
காய், நீ புளி, நீ உப்பு என்று அவர்களுக்கு வேலை கொடுத்து
விட்டுப் பானை கழுவி அடுப்பேற்றினர். சீடர்கள் கொண்டு வந்த பொருள்களைக் கொண்டு வெகு திறமையாகக் கூழ் காய்ச்சிர்ை. கூழ் கொதித்து வந்தபோது கமகம என நன்ருக மணம் வீசியது. சீடர்கள் நாவில் நீரூறியது. அவர்கள் பலாவிலை கோலுவது பருகுவது முதலாகப் பாவனை பண் ணத் தொடங்கிஞர்கள். சுவாமிகள் அவர்கள் வேகத்தை

( 27 )
உணர்ந்து மூலையில் இருந்த பெரிய தடியை எடுத்தார். கூழ்ப்பான பொடி பொடியாக நொருங்கியது. சீடர்களின் வேகமுந் தணிந்து கெட்டது.
வெளியே நின்று பார் செல்லப்பா சுவாமிகளிடம் ஞான முறுக்கேறிய யோக சுவாமிகள், தமது குருநாதன் நோயுற்றிருந்தபோது, அவருக் குப் பணிவிடை புரிவதற்கு விரைந்து சென்ருர், விரைந்து சென்றவரின் வருகையை உணர்ந்து, அவர் உள்ளே செல் வதன் முன், அவருக்குக் கேட்கும்படியாக உரத்த குரலில், ‘வெளியே நின்று பார்' என்ருர்,
யோகசுவாமிகளும் குருநாதன் சொற்கேட்டு, உள்ளே போகாமல் வெளியில் நின்று, அகக் கண்ணுல் அவரைக் கண்டு வணங்கினர்.
ஐந்து ஆண்டுக் காலப் பயிற்சி செல்லப்பா சுவாமிகளின் செல்வப் பெருக்கான ஞான ஆற்றை நன்கறிந்து நனைந்து தோய்ந்து உருமாறி உய்தி பெறுவதற்கு ஐந்தாண்டுக் காலம் யோகசுவாமிகள் பின் தொடர்ந்து திரிந்தார்கள். இந்த நீண்டகாலத் தொடர் பினுல் யோகசுவாமிகள் முற்றிப் பழுத்த ஞானியாராகி விட்டார்.
மகா சமாதிப் பேறு.
செல்லப்பா சுவாமிகள் சீவன் முத்தராய், அணைந்தோர் தன்மையில் வாழ்ந்து, நல்லூர்த் தேரடியில் அடியார் பலருக்கு ஆத்ம போதமூட்டி, அரும்பெரும் சீடராகக் கொழும்புத்துறை யோகசுவாமிகளை உருவாக்கி, அவர் தம் அருமை பெருமைகளையெல்லாம், உற்றுக் கவனித்து, அவரால் யாழ்ப்பாணத்திலிருந்து உலகெங்கும் ஒளிக் கதிர் கள் விரிந்து விசாலித்து வியாபித்து உலகத்தை உய்விக்கும், “ஒரு பொல்லாப்பும் இல்லை' என்பது முதலான ஆப்த வாக்கியங்கள் உலகெலாம் ஒலிக்கும் என்று தேறியிருந்து தமது தேகத்தை விடுத்துச் செல்லும் நாளையுணர்ந்து, தமது

Page 16
(28)
அணுக்கத் தொண்டராயிருந்து கடமையாற்றி வந்த வினை வித்தகர் சபாரத்தினம் அவர்களைத் தமது இறுதிக் கிரிகை கள் செய்து தகன காரியஞ் செய்யுமாறு பணித்து, மூன்று நாள்கள் லீவு எடுத்துச் சுவாமிகளைப் பார்க்க வந்திருந்து மகிழ்ந்த இராமலிங்கரிடம், “இன்னும் இரண்டு நாள் லீவு எடுத்தாலல்லவோ விழா முடிவையும் பார்க்கலாம்' என்று கூறி, மற்ருெரு சீடரான சாமி ஆறுமுகம் என்பவரிடம் இன்றைக்கு இராத்திரி வேளையில் விளையாட்டுக் காட்டப் போகிறேன் என்று கூறி, அன்று 1915ஆம் ஆண்டு பங்குனி மாதத்து அச்சுவினி கூடிய வெள்ளிக்கிழமை இராவேளை யில் நீட்டி நிமிர்ந்து படுத்தவாறு ஒரு காலை மடித்து மறு காலின் தொடைமீது வைத்து, வலக்கையின் பெருவிரலை வாயில் வைத்து ஓம் என்னும் ஒலியெழுப்பியவாறு கண் களை மூடிக் கிடந்தார்.
“உண்மை முழுது மென்றுரை செய்யும்
ஒருவன் கழல் வாழ்க’
குருநாதன் செல்லப்பன் சீர் செல்லப்பா சுவாமிகளின் இயல்பு, போக்கு, பெருமை, மகிமை, சீர் எல்லாவற்றையும் அவர் தம் சீடர் யோக சுவாமிகள் பல கோணங்களில் அவதானித்து நற்சிந்தனைப் பாடல்களில் தந்துள்ளார்கள்.
ஒதாமல் வேதம் உணர்ந்த குருநாதன், நீறணியான், காவியுடையணியான், தேரடியில் வீற்றிருப்பான், சிரிப்பான், சினந்திடுவான், ஆசையுடன் கொடுக்க வந்த அடியவரைச் சீர் கேடாய்ப் பேசுவான், மாருட்டமாகவே வந்தபடி பிதற்று வான், மகிழ்ச்சியும் இகழ்ச்சியும் ஒன்ருகக் காண்பவன், சிங்கார நடையொடு சிரிப்பினையுடையான், ஆரறிவார் என்று அடிக்கடி சொல்லுவான், தேரடிப் பாதையில் சிங்கார மாய்க் கிடப்பான், சாதி சமயமென்னும் சங்கடத்துக் குள்ளாகான், என்னை எனக்கறிவித்த எங்கள் குருநாதன், பாதிச் சாமத்தின்மேற் படுக்கைக்குப் போபவர், வீதியிற் செல்லும் வீணரைப் பேதிக்கும்படி பேசுவார்.

(29)
முனி சொன் மொழி
வடமொழியில் உள்ள வேதங்கள் தோறும் அமைந்த பிரிவுகளான சாகைகளின் முடிவில் உபநிடத வாக்கியங்கள் உள்ளன. அவற்றை வேதசிரசு, வேதாந்தம், வேதமுடிவு என்றெல்லாம் வழங்குவர். உபநிடதம் என்ருல் குருவுக்கு அண்மையில் பணிவாயிருந்து கேட்ட உபதேசம் என்பது பொருள். அவை மகாவாக்கியங்களாக அமைந்துள்ளன. அவற்றுள் ஒன்று "சத்தியமேவ ஜயதே' என்பது. அஃதா வது உண்மையொன்றுதான் வெல்லும் என்பது. இது இந்திய
வேதாந்த விளக்கமாக, அதன் உச்சியாக, முடிபாக, சாரமாகவுள்ளது சைவசித்தாந்தம். சைவசித்தாந்தத் திற னுரைக்கும் நூல்கள் பல. அவற்றுள் ஒரு தொகுதியாக மெய்கண்ட சாத்திரங்கள் பதினன்கு நூல்கள் உள்ளன. அவற்றின் முடிமணியாகவுள்ளது மெய்கண்டார் அருளிய சிவஞானபோதம். சிவஞானபோதம் மிகச்சிறிய சூத்திரங் கள் பன்னிரண்டு கொண்ட ஒரு கை நூல்.
சிவஞானபோதம் உரைத்த முப்பொருள் உண்மையை விரித்து விளக்குவன. ஏனைய சைவசித்தாந்த நூல்கள். மெய் கண்டாரின் ஞான பரம்பரையில் வந்த சீடர்கள் இந்த நூற்களை விரிவாக எழுதியுள்ளார்கள். முப்பொருளை விளக்கு வதற்கு ஒரு நூல் போதாதோ, இத் த னை நூல் கள் வேண்டுமோ என்னும் ஒரு கேள்வியை எவருமே கேளா திருக்கவும், உமாபதிசிவாசாரியார் அதற்கு விடை கூறியுள் ளார். தாமே எட்டு நூல்களைச் சித்தாந்த அட்டகம் எனச் செய்துள்ளார்.
பொன் என்னும் பொருளுக்கு ஆடகம், காஞ்சனம், தங்கம், இரணியம், தனம், கனகம், ஈழம், தமனியம், பீதம், சாம்புனதம் முதலிய பெயர்கள் வழங்கினுற்போல ஒரு பொருளை விளக்கப் பல நூல்கள் எழுந்தன என்பர்,

Page 17
(30)
இவ்வாருகச் செல்லப்பா சுவாமிகள் நல்லுரில் தவஞ் செய்து கண்டுணர்ந்த வாக்கியங்கள் நான்கும் உபநிடதங் கள் போன்றவை. திருமூலர், தாயுமானவர் வழியில் வந்த அத்துவித உண்மைகள். இந்த உண்மைகள் அடங்கிய உயர்ந்த வாக்கியங்களைச் செல்லாப்பா சுவாமிகள் தமது உத்தம சீடராய யோகசுவாமிகள் செவியில் உபதேசித் தருளினர்.
ஒரு பொல்லாப்பும் இல்லை முழுதும் உண்மை - நாமறியோம். ஆரறிவார் எல்லாம் எப்பவோ முடிந்த காரியம்.
இந்த மகாவாக்கியங்களைச் சீடரின் செவியிற் கொட்டிய பின், செல்லப்பா சுவாமிகள் வெறும் கோதாயினர். இராம கிருஷ்ணர் விவேகானந்தரிடம் கொடுத்தபின் வறியவரானர். 露 கொடுப்பதிலும் கொள்வதிலும் உண்டாகும் ஒருவித
தற்சிந்தனை
யோகசுவாமிகள் அப்பர் அடிகளைப்போல நீண் ட காலம் வாழ்ந்து நமக்குத் தந்த நற்சிந்தனைப் பாடல்கள் எங்களுக்கும் நாட்டவருக்கும் உலகத்தவருக்கும் பெரு விருந்தாயுள்ளன. இவற்றை ஐரோப்பியர், ஆங்கிலேயர், அமெரிக்கர் தங்கள் மொழிகளில் அரிதில் மொழிபெயர்த் துப் பயன்படுத்திப் பக்குவமடைந்துள்ளார்கள். இவற்றை முதலில் முறைப்படி கேட்டுணர்ந்த யோகசுவாமிகள் தாம் என்னவாஞர், இவை தம்மை என்ன செய்தன என்பன வற்றை விளக்கமாகப் பாடியருளியுள்ளார். தாம் உய்தி பெற்று உயர்ந்தமையைக் கூறியருளியுள்ளார்.
*சிந்தையில் வெந்துயர் தீரவெனக் கொரு
மந்திரந் தந்தா னென்றுந்தீ பற மாயை யறுந்த தென்றுந்தீ பற."

( 31)
மகாவாக்கியங்களை நன்கு விளக்குவதற்குப் பலவகை யான பிரபந்தப் பாடல்களைப் பாடியருளியுள்ளார். மயிலை யும் குயிலையும் சுட்வியழைத்துத் தூது விடுத்து மகிழ்ந்தாட வும் கூவவும் வைத்துள்ளார். குருபரனை மறப்பேனே குதம் பாய் என்று கும்மி கோலாட்டங்கள் அடித்து மகிழ்ந்துள் ளார். இணையடி வாழ்க என்று ஆசிரியப்பாவில் இனிமை யாக விளக்கி இன்புற்றுள்ளார். செல்லப்பா சுவாமிகளின் திருவடி கண்டு மகிழ்ந்தாடும் மயிலுக்கு ஒரு பொல்லாப்பும் இல்லையென்றருளினர். குருநாதன் திருவடி காண்பதற்கு ஆற்றுப்படுத்தியதோடு, கிளிக்கண்ணி மூலம் வழி நடைச் சிந்து பாடியருளியுள்ளார். வழிகாட்டி அழைத்த வண்ணம் கிளிமொழியாயுள்ளது.
“திேர் முட்டிப் படிமேலே - கிளியே
செல்லப்பன் என்ற சீமான் ஆர்வமுடன் இருக்கிருண்டி - கிளியே அங்கு போவோம் வந்திடடி.”
"நாமறியோம் என்று சொல்லி நகை செய்வான் நாளுதே, ஆரறிவார், என்று சொல்லி அதட்டுவான்' என்றெல்லாம் முன் எச்சரிக்கை செய்வார்.
செல்லப்பா சுவாமிகள் சொன்ன மகாவாக்கியங்களை
யோகசுவாமிகள் திருக்குறள் போன்ற இரண்டடிகளில் திறமையாக விளக்கியுள்ளார்.
செல்லப்பன் என்னுந் திருவுடையான் தேரடியில் பொல்லாப் பில்லே யென்றன் போற்று.
V முழுது முண்மை என்று முனிவனவன் சொன்னுன்
எழுத முடியா திதை.
நாமறியோம் என்னும் நறிய திருவாக்குச் சேமமுறச் சொன்னுன் தெரி.
முடிந்த முடிபென்று முன்னுளிற் சொன்னுன் அடியார்கள் முன்னர் அவன்.

Page 18
(32)
முனி சொன் மொழி கலி விருத்தம் ஒருபொல் லாப்பு மில்லையென் றுரைத்தவன் திருவ டிதனைச் சிந்தை மறுக்குமோ?
ஒருவடி வன்றி யுள்ள முவக்குமோ? கருவ பூழியினிற் சென்று கலங்குமோ?
நாம றியோமெ னச்சொலு நன்மொழி தாம றிந்தவர் சஞ்சலங் கொள்வரோ? சாம ளவுமத் தண்ணருள் வாசகம் சேம நன்னிதி செப்புந் தகையதோ?
ஆர றிபவ ரென்ன வடிக்கடி வீர மாக நகைத்து விளம்புவார் ஈர கத்தொடு நின்று வணங்கினும் வார மற்றவர் போல இகழ்வரோ.
எப்ப வோமுடி வானதென் றெங்கட்குச் செப்பு வாரவர் சிந்தை தெளிந்திட ஒப்பில் லாதபல் வார்த்தைக ள்ோதுவார் அப்பில் உப்பென வானதென் சிவனே.
முழுது முண்மை யெனமுனி சொன்னவை எழுதிக் காட்டிட என்னு லிசையுமோ? அழுது வாழ்த்தியு மேத்தியு மன்பர்காள் தொழுது கொள்வதல் லாலென்ன சொல்லுகேன்.
ஆசான் அருள்
ஆசா னருளால் அகந்தை யழிந்தது ஆசா னருளால் அருண்மழை பொழிந்தது ஆசா னருளால் ஆனந்தம் விளைந்தது ஆசா னருளால் ஆசா னுயினேன்.
o

( 33),
My Master
(The following English version are from SONGS AND SAYINGS of Yogaswami translated by members of the Sivathondan Society.)
The exalted seer, my master who by the name of
. Chellappan
is called, the madman
I saw my guru at Nallur
“Hey who are you?' he cried
' Dive deep within and realize'. “" Give up attachment' “ “ All is well my son”.
“As the Divine Guru
to bestow true life upon me He appeared and showed to me
His feet and made me His man.
If sufferings crowd in on you in hordes
If your short comings seek you out
and drown yon , Think of the feet of Chellappan
they will take to their heels and fly.
Wisdom in Couplets
Near the house of the car,
holi Chellappan would teach: “There is not one wrong thing"

Page 19
( 34 )
That sage the saying has declared: * All that is truth'
This no one can describe.
Know that for our benefit
he gave the sweet and sacred word: Nothling do we know' W
Before his devotees
he formerly would say “This all perfected and complete'
Come, Oh My Mind
Come, offer worship, Oh my mind,
To gurunathan's holy feet, w
Who said: “There is not one wrong thing
And comforted my heart.
Come swiftly, swiftly Oh my mind
That I may adore the lord,
Who on me certainly bestowed,
By saying “ All is truth'
Let us with confidence, Oh my mind,
Hasten to visit him, Who at Nallur upon that day,
“We do not know' declared
Come soon and quickly, Oh my mind,
Chellappan to see,
Who ever and anon repeats It is as it is '

( 35 )
Come Oh my mind, to sing of him, Who near the car proclaimed ' ' Who knows?' with glad and joyful heart
For all the world to know.
Chellappan, The Sivaguru
He who is devoid of form,
As the guru at Nallur Came and bestowed on me
His grace - The Lord Supreme,
Who has become the universe entire, Came Himself to great Nallur
and said "“We do not know' He, who in writing
cannot be described As a guru came to this world In nothing we are lacking.
Mahavakyas
All is truth -
this word devoid of defect Will paradise reveal to you
Give praise and worship and in joy abide
“ “ It is so”- this matchless sin yn
that the guru told
Will impart to you right untier Niant
Live, ever strewing flower in re , , , , ,

Page 20
(36)
Who knows”? - this utterance of the master
The highest knowledge will bestow. Live guarding it
with honour in your heart
We do not know” -
these words in virtue shining Will grant prosperity and bless devine vouchafe
Rely on them without delay and live!
All finished' this statement of the sage
Will to a settled mind the supreme state disclose
Live, offering flowers with love at the dawn
w
These words will banish birth,
Which in Tamil pure are sung
By the devotee, who ne’er
forgets his master's lotus feet.
இ
SqSLqLAMLMAqLALAMMALALAMMAqLMLMMqLALMSLALLSLLLAALLLLLALMALALMLALM LMLqLLLAALLLLLAqLALLS
ஆக்கம்: } க. சி. குலரத்தினம் 8
AMMLSLALALSLqMTALAMAMLSLqqMMALAMALALMAMLMALAAMAALMALSLALM


Page 21
ಘೇಠೇಲೇ!
- 、翡 ההווה
貂”,人通 ਨੂੰ �*
క్రో இ. 雷 三 g
}
fiii.6) ali) : உங்கள் ஆ
III, T : 91 GLID T35LDT35
용
ஞானிகள், 囊 துறவிகள்,
(5) 6)
夔 இன்னும் விெ 용 இவ
5 உங்கள் ஆதர
5 மில்க்வைற்
--
囊
ծնձնձնձնձնձնձնձնձն:
சாத்தி அச்சகம், யாழ்

ຮີ່
,ை
BIT fill 35,555 தரவு பெருகினுல் 患 }]][III8]]fñổi 露 அதிகரிக்கும். : யோகியர், பெரியவர்கள் 3
- JUJOJở55 JJ 澄 பளிவரவுள்ளன. ற்றுக்கு 澄 வே மூலகாரணம் :
தொழிலகம் UI50 L. 器 232 33 洛
նձնձնձնձնձն:}նձնձնձնձն
Liri. GLITT 2002